Wednesday, January 31, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - பிப்ரவரி 2007

பிப்ரவரி 2007ல் நான் மற்ற வலைப்பூக்களில் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

183 comments:

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/7.html

திரும்பவும் கோழி வந்துருச்சா? அப்ப பிரியாணி போட்டுற வேண்டியதுதான்.

கோழி என்ன பிள்ளையாரா? வெறும் க்யூப்பிக்கிளை மட்டும் சுத்தி வந்து ஞானப்பழம் மாதிரி வேலைய வாங்குறதுக்கு?

G.Ragavan said...

http://oosi.blogspot.com/2007/01/vijakanth-napolean.html

அரிவாளை மட்டுந்தான் தூக்கத்தெரியும் நெப்போலியனுக்குன்னு நெனைச்சேன். ஆனா இப்பிடி கேணைத்தனமா பேசவும் முடியுமோ! விஜயகாந்துக்கு என்னோட ஆதரவு இல்லைங்குறது வேற விஷயம். ஆனாலும் நெப்ஸ் நல்லா காமெடி பண்றாரு.

1. தேவையில்லாம கருணாநிதியின் நிதியைப் பத்திப் பேசுறாரே.....ஏற்கனவே நதிப்பிரச்சனையை விட நிதிப்பிரச்சனைக்கு அங்க மதிப்பு உண்டுங்குறது தெரிஞ்சதுதானே.

2. அப்ப கருணாநிதியை எதுத்துப் பேசுனா தமிழன் இல்லையாமா? ஏன் நெப்போலியனுக்கு புத்தி இப்பிடிப் போகுது? பகுத்தறிவுங்குறது கொஞ்சமாவது வேணும் நெப்ஸ் ஒங்களுக்கு.

3. இவரு மேடையில ஆடிக் கடனை அடைப்பாராம். அவரு கைக்காசைப் போட்டு அடைக்கனுமா? வாழ்க. வளர்க.

4. இதுதாங்க சூப்பர் காமெடி. 2007ன் சிறந்த நகைச்சுவை வசனமா இதை எடுத்துக்கலாம்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/01/blog-post_31.html

ஹா ஹா ஹா சீவிச் சிங்காரிச்சு மூக்கறுக்குறதுன்னு சொல்வாங்க. ரொம்பச் சரியாச் செஞ்சிருக்கீங்க.

வரவர மாமியா கழுத போல ஆனாளாங்குறது விஜய்க்குப் பொருந்தும்னே நெனைக்கிறேன். திரும்பத் திரும்ப ஒரே படத்தைப் பாக்குற மாதிரி இருக்கு. இப்படியே இன்னும் ரெண்டு படம் குடுத்தாப் போதும். வேற ஒன்னும் நான் சொல்லலை. அவருக்கு வேற மாதிரி ரோல்களும் பொருந்தித் தொலைய மாட்டேங்குது. படிச்சவன் வேசமும் சரியில்லை. பட்டிக்காட்டு வேசமும் பொருந்தி வரலை. ரவுடி கெட்டப்பு மட்டுந்தான் பொருந்தி வருது. என்ன செய்றது!

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/01/1.html

இன்பத்துப் பாலின் துன்பத்தையெல்லாம் பிழிந்தெடுத்துக் கவிதையாக் கொடுத்து காதல் மாதத்தைக் கொண்டாடுகிறார்ப் போலத் தெரிகிறது. காதாற் திங்கள் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://vurathasindanai.blogspot.com/2007/01/blog-post_31.html

ரெண்டு கொரங்குகளும் பழங்களத் திங்குது. அதுனால அது நடக்கலை. நான் நெனைக்கிறேன் இது ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குரங்குகள்னு நெனைக்கிறேன். மனிதர்கள்ள மட்டுந்தான் இப்படி இருக்கனுமா? யாராவது ஒட்டிப் பிறந்த ரெண்டு குரங்குகளைப் பார்த்தேன்னு சிற்பிகிட்ட சொல்லீருக்கலாம். அவரும் அதை யோசிச்சுச் செதுக்கீருக்கலாம்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/02/1.html

பாமரள்...ம்ம்ம்..சரிதான். நல்லாத்தான் இருக்கு. நானும் பாமரந்தான்.

கேண்டீன் போய் ஒரு காப்பி மட்டுந்தானா?

ஒங்கள மாதிரியே தற்செயலா நான் ஒரு நடன நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. மயிலைக் கோயிலில். யாரு தெரியுமா? அனிதா ரத்னம். அந்தரின்னு ஒரு நிகழ்ச்சி. ரொம்பப் புதுமையா நல்லா இருந்தது. பொதுவா எல்லா நாட்டிய நாடகங்கள்ளயும் சிவன் நெளிஞ்சிக்கிட்டே வருவாரு. இதுலதான் சிவன் நல்லா வெறப்பா வந்து ஆடுனாரு.

G.Ragavan said...

http://vurathasindanai.blogspot.com/2007/01/blog-post_31.html

// சாணக்கியன் said...
ராகவன்,
ஒட்டிப் பிறந்ததா இருந்தா, எப்படிங்க ஒன்னு தலைகீழ? //

அதுனாலதாங்க இப்படிச் சொல்லீருக்கேன்.

"யாராவது ஒட்டிப் பிறந்த ரெண்டு குரங்குகளைப் பார்த்தேன்னு சிற்பிகிட்ட சொல்லீருக்கலாம். அவரும் அதை யோசிச்சுச் செதுக்கீருக்கலாம்."

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/01/39.html

மக்களே...இனிமே சினிமா தேட்டர் பக்கமா ஒரு நாளைக்குப் போகாதீங்க. என்னோட அறிவுக்கு எட்டிய வரைக்கும்...அந்தப் படம் அடுத்த நாள் வரைக்குமெல்லாம் ஓடாது.

G.Ragavan said...

http://eenpaarvaiyil.blogspot.com/2007/02/blog-post.html

யெய்யா நல்ல செய்தி சொன்னீங்கய்யா. ரொம்ப சந்தோசம். இந்த விசயத்துலயோவது கருணாநிதியும் வைகோவும் ஒரு நல்லதச் செஞ்சாங்களே. ராணுவத்துக்கும் அவங்களுக்கும் நன்றி. இதுல உதவியா இருந்த அத்தன பேருக்கும் நன்றி.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/02/blog-post.html

வாங்க சார் வாங்க. கடைசியா புது பிளாகருக்கு மாறுனதும் எளம திரும்புது பாத்தீங்களா? வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சேந்துட்டீங்களே. கலக்குங்க. கலக்குங்க. இந்த மாதம் இனிய மாதமாக அமைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/02/032007.html

மற்றுமொரு சந்திப்பா. இந்த முறை என்னால் கலந்து கொள்ள முடியாது. அனைவரும் நன்றக கலந்து கொண்டு மகிழுங்கள். நடந்தவைகளைப் பதியுங்கள்.

நடேசன் பார்க்குக்குப் பக்கத்தில் இரண்டு புகழ் பெற்ற இடங்கள் உண்டு. ஒன்று Red Roses House. ஆம். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ஸ்ரீதேவி வீல் என்று கையைப் பார்த்து அலறுவாரே. அந்த வீடுதான். அந்தச் சுற்றுலாத்தலம் பூங்காவில் வலப்புறம் என்றால் இடப்புறம் கண்ணதாசன் மெஸ். தகுந்த விலையில் நல்ல டிபன் ஐட்டங்கள் கிடைக்கும். தோசை, அடை, இட்டிலி போன்றவை மிகச்சுவை. கண்டிப்பாக அங்கு செல்லுங்கள். ரத்னா கபேக்குக் கொஞ்சம் நடக்க வேண்டும். ஆனால் கண்ணதாசன் மெஸ் பூங்காவின் சுற்றுப் பகுதியிலேயே உள்ளது. அருகிலேயே இருப்பது கண்ணதாசன் பதிப்பகம். இதைத்தான் சிவப்பதிகாரம் படத்தில் கண்ணதாசன் பதிப்பகத்தின் மதுரைக் கிளை என்று காட்டிச் சிரிப்புக் காட்டினார்கள்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/02/032007.html

ரத்னா கபேயும் நல்லா இருக்கும். சாம்பாரை ஜக்கில்தான் குடுப்பார்கள். இரண்டாவது ஜக்கு வாங்காவிட்டால் கோவித்துக் கொள்வார்கள். :-))

G.Ragavan said...

http://trc108umablogspotcom.blogspot.com/2007/01/5.html

நல்ல உள்ளம். எளிமைதான் சிறப்பு என்று சொல்லாமல் சொல்லி வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.

திருவாரூர் சென்றதில்லை. இன்னொரு முறை அந்தப் பக்கம் போனால் கண்டிப்பாகச் செல்ல வேண்டும்.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/01/35.html

ஏலேய்...யாருல அங்க...அந்தச் செல்வாப் பயலப் பிடிங்கல...ரொம்பப் பெரிய இவம் மாதிரி ஒளர்ராம்ல. அவனச் சாக்குல கெட்டி தண்ணீல முக்குங்கல. அப்பந்தாம் திருந்துவாம்ல. ரொம்பப் பேசுனான்னா செல்வாங்குற அவம் பேரச் செல்வீன்னு மாத்தீருங்கல!

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/01/blog-post_29.html

நல்லாயிருக்கு கவிதை.

அது சரி. இது நட்பா? காதலா?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_31.html

ஒன்னும் சொல்றதுக்கில்லை.

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி

G.Ragavan said...

http://vettrikandaswamy.blogspot.com/2007/01/blog-post_31.html

வெற்றி.....என்னிடமும் மற்ற வலைப்பூ அன்பர்களிடம் தமிழ் படிப்பதாக நீங்கள் சொன்னது நினைவில் உந்த நீங்கள் எழுதிய கவிதை என்று மனமும் உந்த வந்த என்னைப் பாராட்ட வைத்தது கவிதை நடை. கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு எதிர் விளக்கம் சொல்லலாம் என்று நினைக்கையில் சொல்லி விட்டீர் இது உமது கவிதையில்லை என்று. ம்ம்ம்...நீங்கள் கவிதை எழுதுங்கள். காத்திருக்கிறேன். :-)

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/02/blog-post.html

பேரன் ஹாரிபாட்டர் படிக்கிறானா? இந்த வயதில் நானே அதைப் பயித்தம் போல படிக்கையில் குழந்தை தாராளமாகப் படிக்கலாம்.

கொத்ஸ் சொன்னது போல....தமிழ் ஹாரிபாட்டரை நீங்கள் ஏன் எழுதக் கூடாது?

G.Ragavan said...

http://pangaali.blogspot.com/2007/02/blog-post.html

வாங்க பங்காளி வாங்க.

புனித பிம்பங்களா எல்லாரும் இருக்கமோ இல்லையோ நல்ல நண்பர்களா இருக்க முயலனும். அதுல தொடங்குனா...எல்லாமே நல்லதாவே நடக்கும்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/12/017.html

மிகவும் அருமையான பாடல். கேட்கக் கேட்க பாட்டிலுயர் ஆறுபடை வீட்டிலுயர் முருகனின் திருவுருவக் காட்சி உள்ளத்தில் மேவும்.

அதிலும் சீர்காழியாரின் கணீர்க் குரலில் பாடல் மிகவும் இனிமை. கவியரசரின் கனிந்த தமிழ். திரையிசைத்திலகத்தின் பொருத்தமான இசை. அவருக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வாங்கித் தந்தது. அதாவது கந்தன் கருணையால் மகாதேவனுக்குக் கிடைத்தது விருது.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/02/032007.html

// வெற்றி said...
செந்தழல் ரவி,
அப்பிடியே ஏப்பிரலில் பெங்களூரில் ஒரு குட்டிச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்க, O.K? இராகவன், நீங்கள், நான் O,K யா? //

கண்டிப்பா வெற்றி. கீழ பாருங்க ரவி என்ன சொல்லீருக்காருன்னு. :-) கலக்கீருவோம்.

// செந்தழல் ரவி said...
கண்டிப்பாக...வெற்றி....வாலிப வயோதிக அன்பர்களுக்கு அறிவிப்பும் கொடுத்திடலாம்...நல்லா கலாட்டாவா இருக்கும்...கலக்கலாம் வாங்க..!!! //

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/02/blog-post_02.html

கண்டுபிடிச்சிட்டோம்ல. விடுவமா? அவரு டொம்லூர்ல இருந்து எ.சிட்டி வர்ரதுக்குப் பஸ் தெரியாம....சிவாஜி நகருக்குப் போய் பஸ் ஏற நெனச்சு...மெஜஸ்டிக்கு போயிட்டாராம். அங்க இருந்து எ.சிட்டி பஸ்சப் பிடிச்சு 1.30க்கு வந்து எறங்கீருக்காரு. இதுக்காக அவர் எடுத்துக்கிட்ட நேரம் மூன்று மணி நேரம் மட்டுமே!

புரியாதவங்களுக்கு விளங்குறாப்புல சொல்றேன். டி.நகர்ல இருந்து தாம்பரம் போறதுக்குப் பஸ் கிடைக்காம பாரீஸ் போய் வந்த மாதிரி. அவ்வளவுதாங்க விஷயம்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/02/blog-post_02.html

// செந்தழல் ரவி said...
பல சிங்கங்களில் குகை இது...ஒரு முறை நடத்தினோம்....அது ஒரு இளமை மீட்டிங்காகி, பதிவு போட முடியாமே போச்சு...(ஒவ்வொரு செண்டஸ்ஸும் ஏ ) //

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/02/blog-post.html

இந்தப் படத்துக்கு நான் விமர்சனம் எழுதனும்னு நெனச்சேன். நீங்க எழுதீட்டீங்க. அதுனால நான் வாபஸ் வாங்கிக்கிறேன். (நேரமில்லைன்னு வேற எப்படிச் சொல்றது)

இந்தப் படத்த நானும் பாத்துட்டேன். விஷால் ரெட்டி கதாநாயகனா நடிச்சிருக்காரு. ஆனா செய்றது முழுக்க வில்லத்தனம். ஆனா நடுவுல திருந்தீர்ரதால அவரு கதாநாயகரு. அப்பக் கடைசியில திருந்துற வில்லன்?

இந்தப் படத்துல எனக்குப் பிடிச்சது தூத்துக்குடி. வீட்டுல எல்லாருமாப் போய்ப் பாத்தோம். ஏ...ஒன்னோட ஸ்கூலு. ஒன்னோட காலேஜு. இந்தா...ரோச் பார்க்கு...சின்னக்கோயிலக் காமிக்கான். அது இதுன்னு தேட்டருக்குள்ள ஒரே கும்மரிச்சம். :-) அதுதான் சந்தோசம்.

இந்தப் படத்துல நல்லா நடிச்சவங்க மூனு பேரு. நதியாவும் ரோகிணியும் பிரபுவும். நதியாவே பேசுனாரா...இல்ல ஆள் வெச்சிப் பேசுனாங்களான்னு தெரியலை....ரொம்பப் பொருத்தம். தூத்துக்குடித் தமிழு ரொம்பத் திருத்தம்.

அதுலயும் ஏரோப்பிளேன் வெச்சுக்கிட்டுப் போகச் சொல்லுலேன்னு சொல்லும் போதும்....அண்ணே இவன் என்ன சொல்லுதான்....அப்படீங்குற வசனத்தப்பவும் நல்லாவே ரசிச்சேன். மனோரமா....ம்ம்ம்...என்ன சொல்றதுன்னு தெரியலை.

விஜயகுமார்....சுத்த போர். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடிக்கிற ஒரே நடிகர் அவராத்தான் இருக்கனும். நாசரை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. நிழல்கள் ரவிக்குப் படத்துல ஒரே ஒரு வசனந்தான். "அது என்னோட தங்கச்சி". ஐயோ பாவம்.

கதாநாயகி....மேக்கப் சரியாப் போடலைன்னு தெளிவாத் தெரியுது. ஆனா ஓரளவுக்கு நீங்க சொன்னாப்புல நடிக்க வருது. அக்செப்டேடு.

இசை....இரைச்சல். யுவன் சங்கர் ராஜா தான் ஒரு trend setter இல்லை. trend followerன்னு இப்பவாவது புரிஞ்சுக்கனும். பாட்டெல்லாம்...வாரான் வாரான்லே மட்டும் ஓகே ரகம். கற்பூர நாயகியே பாட்டை இப்படித் திரித்தது..கொடுமையான காப்பி. இது மாதிரி வேறு யாரும் செய்ததேயில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் இன்ஸ்பிரேஷனில் செய்வார்கள். எ.கா என் மனது ஒன்றுதான் என்று ஒரு பாடல். ஒரு ஆடும் பொம்மையில் இசை வரும். அதை அடிப்படையா வெச்சி மெல்லிசை மன்னர் செஞ்சிருப்பாரு. இசைஞானியும் ஏறுமயில் ஏறிவிளையாடும் திருப்புகழை மாங்குயிலே பூங்குயிலேன்னு அழகா மாத்தீருப்பாரு. இசைப்புயலும் நாத விந்து கலாதி திருப்புகழை என் வீட்டுத் தோட்டத்தில்னும் முத்தைத் தரு பத்தித் திருப்புகழை வெற்றிக் கொடி கட்டுன்னும் மாத்தீருப்பாரு. ஆனா இப்பிடி காப்பியடிக்கலை.

படம் மொத்தத்துல சுமார்தான். ஆனா வந்த படங்கள்ள கொஞ்சமாச்சும் பாக்குற மாதிரி இருக்கிறது இதுதான். ஒரு வாட்டி பாக்கலாம்.

(கடைசியா ஒரு செய்தி. கஞ்சா கருப்பு இப்பிடியே போனா....காஞ்ச கருப்பா மாறீருவாருன்னு சொல்லுங்க.)

G.Ragavan said...

http://valai.blogspirit.com/archive/2007/02/06/karnataka.html

ம்ம்ம்....பிரச்சனைதான். இன்று அலுவலகம் வந்திருக்கிறோம். நாளையும் வர வேண்டும். அடுத்த நாள் முழு அடைப்பு என்று தெரிகிறது. அப்படியானால் வெளியே வரவே கூடாது. வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டியதுதான். அதுக்கு மேல ஆண்டவன் இருக்கான். வேறென்ன சொல்ல.

G.Ragavan said...

http://puthuyugam.blogspot.com/2007/02/blog-post.html

மதுசூதனன் எழுதியது உண்மையோ பொய்யோ எல்லது அவரது டெக்னிகல் புரியாமையோ என்பதைப் பற்றியெல்லாம் விவாதிக்காமல் ஒரு செய்தி மட்டும் சொல்லிச் செல்கிறேன்.

பெங்களூரில் ஒருமுறை இப்படித்தான் ஒருவர் வீட்டுக் கதவைத் தட்டினார். அவர் தேவனென்றெல்லாம் தொடங்கிவில்லை. ஆங்கிலத்தில்தான் உரையாடல். அதுவும் நாட்டு நடப்பின் பிரச்சனைகளைப் பற்றி. அவர் தன்னை ஒரு சர்வே எடுப்பவராக அடையாளப் படுத்திக் கொண்டார். ஆகையால் அவருடன் உரையாடினேன். (எந்த) மதம் தொடர்பானது என்றால் வேறு வேலை இருக்கிறது என்று சொல்லியிருப்பேன்.

எனக்குத் தோன்றிய விடைகளை நான் சொல்லிக் கொண்டு வந்தேன். ஆனால் அந்த விடைகளை அவரால் ஏற்க முடியவில்லை என்று நினைக்கிறேன். "நல்ல விடை. ஆனால் ஏன் இப்படி இருக்கக் கூடாது" என்று கேட்டார். பிறகு சில புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். புரட்டிப் பார்த்ததும் உண்மை புரிந்தது. பொய் சொல்லி விட்டீரே என்று புத்தகங்களைத் திரும்பக் கொடுத்து விட்டேன். பிறகு மதம் தொடர்பாகப் பேச்சு திரும்பியது. ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும். அவர் வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார். "ஏன்? பேச்சை ஒழுங்காக முடித்துக் கொள்ளலாமே. என்ன அவசரம். நமக்கு ஒரு தெளிவு கிடைக்குமே" என்றேன். "இல்லை.இல்லை. எனக்கு வேலை இருக்கிறது" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/02/blog-post.html

சூப்பர் காபி. இன்னும் கொஞ்சம்.

வேட்டையாடு விளையாடு - Bug கண்டுபிடிச்சிச் சரி செய்றது.

காக்க காக்க - எழுதுன code ஒழுங்கா வேலை செய்யாம crash ஆகும் போது சொல்றது.

சகலகலா வல்லவன் - மேனேஜருக்கு நல்லா சோப் போடுறவன்

முதல் மரியாதை - டீமில் நமக்குக் கிடைக்காதது

டாட்டா பிர்லா - கம்பெனியை விட்டுப் போகும் போது சொல்றது.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/02/blog-post.html

ஜோசப் காண்ஸ்டண்டைன் பெஸ்கி...பிந்நாளில் வீரமாமுனிவர். இவர் தமிழ் மீது காட்டிய ஆர்வம் அளவிட முடியாயது. வேறொரு நாட்டிலிருந்து மொழியிலிருந்து வந்து எடுத்துக்கொண்ட சிரமம் பாராட்டத்தக்கது. மதம் என்ற போர்வை இருந்தாலும் தமிழைக் கொண்டு அதைக் கடக்க முற்பட்டமை பாராட்டத்தக்கது.

இவரது காலமும் திருமலை மன்னரின் காலமும் ஒன்று என்று நினைக்கிறேன். இன்னமும் சரியாகச் சொல்லப் போனால் குமரகுருபர சுவாமிகள் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றிய பொழுது இவரும் இருந்திருக்க வேண்டும் என்று எங்கோ படித்த நினைவு.

சுப்ரதீபக் கவிராயரும் திருமலையின் காலத்தவரே. திருமலை நாயக்கன் காதல் கதை என்று ஒரு நூலை எழுதிக் கொண்டு போய் வாங்கிக் கட்டிக் கொண்டதாகக் கூடச் சொல்வார்கள். பிறகு அந்த நூலையே கூளப்ப நாயக்கன் காதல் கதை என்று பெயர் மாற்றி விட்டதாகவும் சொல்வார்கள்.

தேம்பாவணியைக் கூட சுப்ரதீபர் எழுதியிருக்கக் கூடும் என்று கூட ஒரு கருத்து உண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. அகத்தியர் குழுமத்தில் இயங்கும் மலேசிய ஜே.பீ ஐயாவிடம் கேட்டால் நிறைய தகவல்கள் கிடைக்கும்.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/02/blog-post.html

தேம்பாவணியை ஒரு சிறந்த நூல் என்று ஒப்புக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. "குகை செய் இன்பெழக் கோலமிட்டொத்ததே" என்று கவிச்சுவை ததும்பும் நூல். ஆனால் பரமார்த்த குரு கதைகள் சிரிக்க வைப்பதை விட மதப்பணிக்குப் பெரிதும் உதவும் வகையில் இருந்தன என்பது என்னுடைய கருத்து.

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/02/blog-post.html

மூலிகை இட்டிலி பிரமாதம். இந்த இட்டிலிக்கு இளகுன கருப்பட்டியோட கூட்டணி அமைச்சா சி(ர)றப்பா இருக்கும். அதே போல பொடிப்பொடியாக நறுக்கிய அகத்தி, முருகைக் கீரைகளையும் சேர்க்கலாம். தூதுவளை மிகச் சிறப்பு. குப்பைமேனியும் சேர்க்கலாம்.

G.Ragavan said...

http://wethepeopleindia.blogspot.com/2007/02/blog-post.html

அடக்கொடுமையே! உலகம் எப்பத் திருந்தும்னே தெரியலையே. பெருங்கொடுமையா இருக்கே! ஒத்துக்கவே முடியலைங்க. நம்மூர்ல சாதீன்னா. இன்னோர் ஊர்ல மதம். இன்னோர் ஊர்ல நெறம். இன்னோர் ஊர்ல பணம். அப்பப்பா! சாதி இரண்டொழிய வேறில்லைன்னு ஔவை சொன்னதை தப்பாப் புரிஞ்சிக்கிட்டாங்க போல. நமக்கு மேல ஒரு சாதி கீழ ஒரு சாதின்னு. மிதி வாங்குதலும் மிதித்தலும் சாதியத்தின் கருப்பொருள் போலும். கொடுமையடா சாமி. கொடுமை.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/029.html

இது ரொம்ப நல்லாயிருக்குதுங்க. எனக்குத் தெரிஞ்ச நான் சொல்ல முடிஞ்சதெல்லாம் ஏற்கனவே சொல்லீட்டு....நான் சொன்னதையும் சொல்லீட்டு எனக்கு வேலையே வைக்காம இருந்தா எப்படிப் பின்னூட்டம் போடுறதாம்?

குறளை என்பது குறளி என்று மருவி இப்பொழுது கொரளியாகியிருக்கிறது. இதற்கும் திருக்குறளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

தீங்குறளை என்றால் இனிமையானது. தீக்குறளை என்றால் தீயது.

// இராகவன் எழுதியதற்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது வெற்றி. அவருடைய நடையே தனி. எட்டுவது முடவன் கொம்புத்தேனுக்குப் பிடிவாதம் பிடித்தாற்போலத்தான். :-) //

இது எதுக்குங்க. நானே என்னவோ தமிழைக் கண்டுபிடிச்சி எழுதுறாப்புல சொல்றீங்களே. நான் கிளிப்பிள்ளை. சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை.

// வல்லிசிம்ஹன் said...
தீக்குறளை,
இத்தனை இயல்பாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
எத்தனை தரம் இந்தப் பாவைப் பாடலைப் பாடும்போது நானும் என் தோழிகளும் அஞ்சி அஞ்சிப் பாடி இருக்கிறொம் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
நீங்க ஒரு 50வருஷம் முன்னாலேயே சொல்லி இருக்கலாம்.:-) //

என்னது அம்பது வருசத்துக்கு முன்னாடியா...அப்ப எங்கப்பாரு ரொம்பச் சின்னப் பிள்ளைங்க. :-))))

G.Ragavan said...

http://eenpaarvaiyil.blogspot.com/2007/02/blog-post_06.html

ஒரு நாலு நாள் வலைப்பூ பக்கம் வராம வெளியூர் போனா என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது. முத்துக்குமரன்...இது தொடர்பா விஷயம் இருக்குற தொடுப்பு இருந்தாக் கொடுப்பா. படிச்சுத் தெரிஞ்சிக்கிறேன்.

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/02/40.html

நல்லபடியாப் போய்ச் சேந்ததுல ரொம்பச் சந்தோசம். கோவையில எல்லாம் நலமா?

// இராம் said...
சிபி,

உங்களை பெங்களூரூ'லே சந்தித்தது மிக்க மகிழ்ச்சி....

நம்மளோட போண்டா இல்லாத சந்திப்பை பற்றி பதிவு போடுங்க :) //

16 வயதினிலேன்னு ஊர் சொல்லி முதல் மரியாதை வேணும்னா என்ன செய்யனும்னு தெரியுந்தானே? அப்பந்தான் பதிவு. :-))))))))

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2007/02/it.html

மிகவும் நல்ல பதிவு உதய்.

எனக்குத் தெரிந்து ஐடி துறையில் நிறையப் பேர் குடிப்பழக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். பொதுவாகவே இளைய சமுதாயம் குடிப்பழக்கத்தோடே வளரத் தொடங்குகிறது என்பதே உண்மை. நானும் கல்லூரியிலும் ஆரம்பப் பணிக்காலத்திலும் குடிப்பழக்கத்தோடு இருந்தேன். ஆனால் இப்பொழுது அறவே நிறுத்தி விட்டேன். ஆக ஐடிக்கு வந்த பிறகு ஒருவன் குடிகாரன் ஆகிறான் என்பதெல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்துதல். வருமுன்னமே அப்படித்தான் வருகிறான். காசு துணிச்சலைக் கொடுக்கிறது என்று வேண்டுமென்றாலும் சொல்லலாம்.

பப் கலாச்சாரம் - இது தப்புன்னு சொல்றது எவ்வளவு சரின்னு தெரியலை. குடிப்பழக்கம் உடல்நலத்திற்குக் கேடு என்பதில் மறுகருத்து கிடையாது. அது பப்பில் கள்ளச்சாராயத்தில், டாஸ்மாக்கில் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அது பொதுப் பிரச்சனை. ஐடிக்கான தனிப்பிரச்சனை கிடையாது.

புதிதாக சம்பளம் வாங்குகிற அத்தனை பேரும் அதைக் கொண்டு போய்க் குடியில் கொட்டுவதில்லை. நீங்கள் சொன்னது போல பலர் குடும்பங்களில் அது முறையாகப் பயன்படவும் செய்திருக்கிறது. சம்பளம் வந்ததும் லேட்டஸ்ட் மாடல் மொபைலும் பைக்கும் வாங்குகிறவர்களும் உண்டு. ஆனால் எல்லாரும் அப்படியல்ல என்பதே உண்மை.

காரில் கல்லெறிவது தங்கையைக் காப்பாற்ற என்று சிறுவன் சொன்னான். பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு உன்னைக் காப்பாற்ற என்று பாமரன் சொல்கிறார். பெயர்ப் பொருத்தம் அபாரம். உள்ள என்னவெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு எழுதுங்க சார்.

டாலரை நம்பிய பொருளாதார வளர்ச்சி நல்லதல்ல என்பதும் சரி. அதுக்காக அதையும் செய்யாம இருந்தா வர்ரதும் வராமப் போயிருமே! இப்ப சம்பாதிக்கிறவனும் சம்பாதிக்காமப் போயிருவான். அதுதான் பாமரன் விரும்புறதா? நாட்டோட மக்கள்தொகையில 3 சதவீதங் கூட இருக்காது ஐடி தொகை. அப்படி இருக்குறப்போ மத்த 97 சதவீதமும் முழிச்சிக்கிட்டு ஆக்கபூர்வமாச் சிந்திச்சு ஒரு அருமையான பொருளாதாரத்தைக் கொண்டு வந்தா எவ்வளவு நல்லாயிருக்கும். அடுத்தவன் வண்டி இழுக்கனும். நம்ம மட்டும் சொல்லிக் கிட்டே இருக்கனும். நல்ல நாயமய்யா.

G.Ragavan said...

http://poar-parai.blogspot.com/2007/01/it.html

உதயின் கீழ்க்கண்ட பதிவில் நானிட்ட பின்னூட்டம். அது இங்கும் பொருந்தும் என்பதால் இடுகிறேன்.
http://soundparty.blogspot.com/2007/02/it.html

மிகவும் நல்ல பதிவு உதய்.

எனக்குத் தெரிந்து ஐடி துறையில் நிறையப் பேர் குடிப்பழக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். பொதுவாகவே இளைய சமுதாயம் குடிப்பழக்கத்தோடே வளரத் தொடங்குகிறது என்பதே உண்மை. நானும் கல்லூரியிலும் ஆரம்பப் பணிக்காலத்திலும் குடிப்பழக்கத்தோடு இருந்தேன். ஆனால் இப்பொழுது அறவே நிறுத்தி விட்டேன். ஆக ஐடிக்கு வந்த பிறகு ஒருவன் குடிகாரன் ஆகிறான் என்பதெல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்துதல். வருமுன்னமே அப்படித்தான் வருகிறான். காசு துணிச்சலைக் கொடுக்கிறது என்று வேண்டுமென்றாலும் சொல்லலாம்.

பப் கலாச்சாரம் - இது தப்புன்னு சொல்றது எவ்வளவு சரின்னு தெரியலை. குடிப்பழக்கம் உடல்நலத்திற்குக் கேடு என்பதில் மறுகருத்து கிடையாது. அது பப்பில் கள்ளச்சாராயத்தில், டாஸ்மாக்கில் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அது பொதுப் பிரச்சனை. ஐடிக்கான தனிப்பிரச்சனை கிடையாது.

புதிதாக சம்பளம் வாங்குகிற அத்தனை பேரும் அதைக் கொண்டு போய்க் குடியில் கொட்டுவதில்லை. நீங்கள் சொன்னது போல பலர் குடும்பங்களில் அது முறையாகப் பயன்படவும் செய்திருக்கிறது. சம்பளம் வந்ததும் லேட்டஸ்ட் மாடல் மொபைலும் பைக்கும் வாங்குகிறவர்களும் உண்டு. ஆனால் எல்லாரும் அப்படியல்ல என்பதே உண்மை.

காரில் கல்லெறிவது தங்கையைக் காப்பாற்ற என்று சிறுவன் சொன்னான். பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு உன்னைக் காப்பாற்ற என்று பாமரன் சொல்கிறார். பெயர்ப் பொருத்தம் அபாரம். உள்ள என்னவெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு எழுதுங்க சார்.

டாலரை நம்பிய பொருளாதார வளர்ச்சி நல்லதல்ல என்பதும் சரி. அதுக்காக அதையும் செய்யாம இருந்தா வர்ரதும் வராமப் போயிருமே! இப்ப சம்பாதிக்கிறவனும் சம்பாதிக்காமப் போயிருவான். அதுதான் பாமரன் விரும்புறதா? நாட்டோட மக்கள்தொகையில 3 சதவீதங் கூட இருக்காது ஐடி தொகை. அப்படி இருக்குறப்போ மத்த 97 சதவீதமும் முழிச்சிக்கிட்டு ஆக்கபூர்வமாச் சிந்திச்சு ஒரு அருமையான பொருளாதாரத்தைக் கொண்டு வந்தா எவ்வளவு நல்லாயிருக்கும். அடுத்தவன் வண்டி இழுக்கனும். நம்ம மட்டும் சொல்லிக் கிட்டே இருக்கனும். நல்ல நாயமய்யா.

G.Ragavan said...

http://poar-parai.blogspot.com/2007/01/it.html

அசுரன், இப்பிடி ஆங்கிலத்துக்கு ஓடீட்டீங்களே. :-) படிச்சிட்டேன்.

உண்மையைச் சொல்லப் போனா...இந்தியா வளர்கிறது என்பது பொய். அதை நானும் ஒத்துக் கொண்டிருக்கிறேன். நான் முன்பே சொன்னது போல வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் பரவலாக்கப்படவில்லை. அது மிகவும் அபாயகரமானது. மறுக்க முடியாத உண்மையும் கூட.

நான் சுட்டிக்காட்ட வருவதெல்லாம் ஐடியில் இருப்பதே ஒரு தவறு என்கின்ற தொனியைத்தான். It is easy to use the word musing. but tough to convince. ஐடியில் குடிகாரர்கள் உண்டு. பேரம் பேசாமல் கிடைக்கின்ற விலைக்கு அப்பார்ட்மெண்ட் வாங்குகிறவர்கள் உண்டு. மறுப்பதற்கில்லை. ஆனால் ஐடியில் இருக்கும் எல்லாருமே அப்படித்தான் என்று முடிவு கட்டி விடாதீர்கள். அதைத்தான் நான் தவறு என்கிறேன். உதயும் சொல்ல வருவது அதைத்தான். மற்றபடி பொருலாதாரம் பற்றி எனக்குச் சரியாகத் தெரியாது. ஆகையால் அது பற்றியும் நான் விவாதிக்கத் தயாராக இல்லை. தெரியாததைப் பத்திப் பேசக் கூடாது இல்லையா. அதான்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/02/200-200.html

(இரு)நூறாண்டு காலம் வாழ்க
போலிகள் இல்லாமல் வளர்க
பதிவுலகில் புலவன் உன் போலே
கேள்விகளைக் கேட்பதில் உன் போலே
(இரு)நூறாண்டு காலம் வாழ்க
போலிகள் இல்லாமல் வளர்க

அருமையான விமர்சனம். உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் ஐயா. எடுத்து விடுங்கள். பெனாத்தலார் அருமையான விமர்சனங்கள் செய்திருக்கிறார். பொருத்தமாகவும் கூட.

G.Ragavan said...

http://priyan4u.blogspot.com/2007/02/03.html

இரண்டாவது கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ப்ரியன். எல்லாமே தாள்கள்தான். ஆனால் வரிசைப் படுத்த அதில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கப்படத்தானே வேண்டியிருக்கிறது.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் என்று வள்ளுவனார் சொன்னது சரியாக வருகிறது இந்தக் கவிதையில்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/02/devil-show.html

அடியாத்தீ! என்ன இது? இப்படியெல்லாம் கவுண்டர் செஞ்சா எப்படி? வருத்தப்படாதீங்க கவுண்டரே (சாதிப்பேரைச் சொல்லலாமா? இல்ல மணின்னு சொல்லனுமா?) உங்கள சொல் ஒரு சொல்லுல வெச்சி மரியாத செஞ்சிருவோம். அடுத்த சொல்லொரு சொல்லும் நீங்கதாங்கோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2007/02/blog-post_7502.html

உங்களுக்கு நோ கமெண்ட்சாக இருக்கலாம் இட்லி வடை. ஆனால் ஒரு கர்நாடகத் தமிழன் என்ற வகையில் என்னுடைய கமெண்ட்டை நான் பதிவு செய்ய வேண்டும்.

கர்நாடகத்தில் இதுதான் உண்மை நிலை. அதுதான் எங்களுக்கும் பாதுகாப்பு. தமிழ்ச்சங்கமும் கர்நாடக அரசிற்கு முழு ஆதரவினை வழங்கியிருக்கிறது. அது சரியா தவறா என்பதனை விட இங்கிருக்கும் தமிழருக்கு அது எவ்வளவு பெரிய உதவி என்று உங்களுக்குப் புரிய நியாயமில்லை.

கருணாநிதியை நான் உத்தமர் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் தீர்ப்பு வந்த பிறகு அவர் சொன்னவை அனைத்துமே எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத சொற்கள். ஆனால் அவர் பக்கத்தில் இருந்த கத்துக்குட்டி தயாநிதி மாறன் உணர்ச்சி பொங்கப் பேசுகையில் எனக்கெல்லாம் அடிவயிறு கலங்கியது உண்மைதான். இதற்கெல்லாம் உச்சகட்டமாக தமிழ்நாட்டுக்குள் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு ஐநூறு டி.எம்.சி தண்ணீர் வாங்கித் தராத கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று உளறிக் கொட்டினாரே ஜெயலலிதா....அவர் பேச்சு மாதிரி இருந்தால் போதும்....எங்கள் நிலமை உருப்படும்!

G.Ragavan said...

http://neo-lemurian.blogspot.com/2007/02/blog-post.html

// லக்கிலுக் said...
மேலே அனானியாக GR என்பவர் பின்னூட்டமிட்டு இருக்கிறார். அவர் ஜி. ராகவனா என அறிய விரும்புகிறேன். //

ஐயா சாமி. இப்படியெல்லாம் சந்தேகமிருந்தா எனக்கு மயிலனுப்பிச்சிக் கேட்டுக்கிருங்கய்யா. நான் அனானிமஸ் கமெண்டுகள் போடுறதில்லை. சரியோ தப்போ உளறலோ நல்லதோ...என்னோட பேர்லதான். இந்தப் பதிவையே இன்னைக்குத்தான் பாக்குறேன்.

நாலு நாள நான் ஊருல இல்ல. இந்தச் செய்தியே இன்னைக்கு முத்துக்குமரன் லிங்குகளைக் கொடுத்தப்பதான் தெரியும். நான் என்னத்தச் சொல்றது. ஒரே சிரிப்பா இருக்கு போங்க. :-))

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/02/44.html

சரிங்க. நல்லபடியாப் போயிட்டு வாங்க.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/02/blog-post.html

எனக்கும் இந்த இந்தியெல்லாம் தெரியாது. பந்திதான் தெரியும். கர்நாடகா வந்தப்புறந்தான் தெரியும் கொடகுல பந்தின்னா பன்னியாம். கன்னடத்துல ஹந்தின்னா பன்னியாம். அப்பவே ஹிந்தியும் வேணாம் ஹந்தியும் வேணாம்னு ஒதுங்குனவந்தான்.

ஒங்க கம்பெனி சட்டதிட்டங்களின் படி....அலுவலகப் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். இல்லைன்னா நீங்க ஒங்க மனிதவள மேம்பாடு கிட்ட புகார் கொடுக்கலாம். எதுவும் உதவி வேணும்னா சொல்லுங்க. நான் செய்றேன். (புகார்னதும் ஓடி வந்துருவீங்களேன்னு கேக்குறது புரியுது)

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2007/02/blog-post_7502.html

// IdlyVadai said...
ஜி.ராகவன், எதுக்கும் சிகப்பு சொக்காய், மஞ்சள் பேண்ட் ஒன்று வாங்கி போட்டுக்கொள்ளுங்கள். //

அதுகூட என் காசில்தான் வாங்க வேண்டும் என்று தெரியும் இட்லிவடை. ஆனால் தேவையில்லை. ஒரு பேட்ஜ் வாங்கிக் குத்திக் கொண்டாலே போதும். என்னை விடுங்கள். தேவைப்பட்டால் என்னுடைய நிறுவனத்திற்குள்ளேயே தங்கிப் பாதுகாப்பு பெற முடியும். ஆனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது கீழ்த்தட்டு மக்களே. அவர்களுக்குக் கர்நாடக திமுக, தமிழ்ச்சங்கம் ஆகியவைகளின் அறிவிப்புகள் ஓரளவு பாதுகாப்பே.

// திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் பேச்சு உசுப்பிவிடுவதாக தான் இருந்தது. கலவரம் எதுவும் நடக்காதது டிவி சேனல்களுக்கு ஏமாற்றம் என்று நினைக்கிறேன். அவர்கள் கொடுத்த செய்தி அது மாதிரி இருந்தது. யாரும் முழு தீர்ப்பை படிக்கவில்லை. //

இளங்கோவன் பேசியது தெரியாது. இங்கு தமிழ்ச் சேனல்க்கள் தெரியாது. பேசியிருக்கலாம். எல்லாரும் உணர்ச்சிப்பூர்வமாக இதை அணுகுவது வருத்தமாக இருக்கிறது.

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2007/02/blog-post_7502.html

// Anonymous said...
தமிழகத் தமிழன் தண்ணீர் கிடைக்காமல் செத்தாலும் பரவாயில்லை. தமிழகத்திற்கு துளி பிரயோஜனம் இல்லாத கர்நாடகத்தமிழன் உயிரோடு இருப்பதுதான் முக்கியம். //

தமிழகத்துக்குத்தான் துளிப் ப்ரயோஜனம் இல்லையே. அப்புறம் அவன் என்ன செஞ்சா ஒங்களுக்கென்ன. மொதல்ல தமிழ்நாட்டுத் தலைவர்களை ஒழுங்கா பேசச் சொல்லுங்க.

// லண்டனில் குண்டு வெடித்த போது அங்கு பிறந்து வளர்ந்து அந்த நாட்டு குடியுரிமையுடன் எல்லா சலுகைகளையிம் அனுபவத்து வரும் சில இளைஞர்களிடம் பிபிசி நிறுவனம் பேட்டி எடுத்த போது.

எங்கள் மக்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் உங்களால் மாண்டுபோனபோது வராமல் இப்போது வெறும் நாற்பது பேர் கொல்லப்பட்டதற்காக வந்து கேட்கிறீர்களே? என்று பேட்டியெடுத்தவர்களையே கேட்டனர் அந்த முஸ்லீம் இளைஞர்கள்.

அந்த தைரியம் கூட கர்நாடகா வாழ் தமிழர்களுக்கு இல்லையே!. //

எப்படீங்க இருக்கும்? நீங்களே அனானிமஸ்சாத்தானே வந்திருக்கீங்க. அந்த முஸ்லீம் அடிபட்டா உலக முஸ்லீம்கள் உதவிக்கு வருவாங்க. ஆனா இங்க? இலங்கைல அடி வாங்குறானே. அதுக்கு நீங்கள்ளாம் செய்ற உதவியைப் பாக்கும் போது எங்களைக் காப்பத்த நீங்கள்ளாம் இருக்கீங்கன்னு நெனைக்கும் போது துணிச்சல் பிச்சுக்கிட்டு வருதுங்க. சரி. காவிரித் தமிழர்களுக்கு நீங்க என்ன செஞ்சீங்க?

G.Ragavan said...

http://karuppupaiyan.blogspot.com/2007/02/blog-post_03.html

பாரதியின் கவிதை மிக அருமை. நல்லதொரு கருத்து. இதை அருணகிரியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். வள்ளலார், தாயுமானவர், மூலர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஓலமறைகள் அரைகின்ற ஒன்றது மேலை வெளியில் படரும் சுடரது - திருப்புகழ்

மேலைவெளின்னா இங்க வானமில்லை. நம்முடைய அறிவாகிய மேலை வெளியில்...அறிவு மேன்மையா இருக்கனும். அதுக்குத்தான் மேலைவெளி. அந்த மேன்மையான அறிவு..அறிவுன்னா மெய்யறிவு. அந்த மெய்யறிவில் சுடராக நின்று வாழ்விப்பதுதான் மறைகள் ஓலமிட்டுத் தொழும் இறைவன். இப்படிச் சொன்னவர்தான் வைதாரையும் அங்கு வாழவைப்போன்னு முருகனைப் பத்தியும் சொல்லீருக்காரு. சுருக்கமாச் சொன்னா கும்பிட்டவனுக்கு மட்டுந்தான் கடவுள் இல்லை. கும்பிடலைன்னாலும் கடவுள் கடவுள்தான். அவர் அன்பு அன்புதான்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2007/02/blog-post.html

கவனிக்காமல் விட்டிருந்தால் காணாமல் போயிருக்க வேண்டிய போலி அந்த அளவிற்கு வளர்ந்ததற்கு தவறாக எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பதுதான் எனது கருத்தும். நீங்களும் அதைத்தான் விரிவாகப் பதிவாக இட்டிருக்கின்றீர்கள் ஜோ.

டோண்டு, இதற்காக நீங்கள் மனம் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரிந்திருக்கிறது. ஆகையால் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/02/182-1.html

ரொம்ப நாள் கழிச்சி ஒரு பயணக்கட்டுரை. முந்தி திருச்செந்தூர் போனதப்பட்டி நீங்க போட்ட பதிவெல்லாம் நினைவுக்கு வருது.

செட்டிநாடுன்னு கேள்விப்பட்டதோட சரி. போனதெல்லாம் இல்லை. ஆனா நீங்க போட்டுருக்குற போட்டோக்களப் பாத்தா அப்படித் தோணலையே.

என்னது கோயில இடிப்போம்னு சொல்லி மெரட்டிப் பிடிச்சாங்களா? அடப்பாவிகளா? கண்டிப்பா மருதுபாண்டியர்கள் வீடுபேறு வாங்கியிருப்பாங்க. எந்தச் சந்தேகமும் இல்லை.

பூலித்தேவன முடிச்சிட்டு...அப்படியே தூத்துக்குடிப் பக்கந் திரும்பி கட்டபொம்மன முடிச்சிட்டு அப்படியே இங்குட்டு மருதுபாண்டியரப் பிடிச்சான் வெள்ளக்காரன். ம்ம்ம்..நடக்க வேண்டியது நடந்தே தீரும்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/02/182-2.html

அதெப்படிங்க. சரியா உள்ள விடாத எடமா வந்து ஒங்களுக்கு மாட்டீருக்கு! :-))

முத்துராமலிங்கரோட படஹ்ட்தையும் போட்டிருக்கலாமே. எடுக்கலையா?

செட்டிநாட்டுப் பொண்ணு இங்கிலீஸ் பேசுனாங்களா. ஆகா. எனக்குத் தெரிஞ்ச ஒரு செட்டியார் வீட்டுல ஒரு அம்மா ஜப்பான் மாதிரி இருந்தாங்க. அப்புறம் தெரிஞ்சது அந்த அம்மாவை அவங்க அப்பாம்மா தத்தெடுத்திருக்காங்கன்னு. ரங்கூன் மாதிரி வேற நாட்டுல தத்தெடுத்திருக்காங்க. ஏன்னா அந்த ஊர்லதான் இருந்திருக்காங்க. அவங்க தமிழ்தான் பேசுறாங்க. தமிழர் மாதிரிதான் நடப்பு செயல் எல்லாமே. அவங்க பிள்ளைங்களும் நல்லாத் தமிழ்த்தான். ஆனா பாக்க மட்டும் ரெண்டும் கலந்த மாதிரி இருப்பாங்க.

G.Ragavan said...

http://neo-lemurian.blogspot.com/2007/02/blog-post.html

// முருகா முருகா முருகா! said...
// லக்கிலுக் said...

மேலே அனானியாக GR என்பவர் பின்னூட்டமிட்டு இருக்கிறார். அவர் ஜி. ராகவனா என அறிய விரும்புகிறேன்.
செவ்வாய், பிப்ரவரி 06, 2007 4:16:00 PM //

ஜிரா இதுக்கு பதிலே சொல்லலியா இன்னும்? //

யாரது இப்படிக் கேட்டது. என்னப்பன் முருகப் பெருமானா! ஆகா! கேள்வியைக் கேட்டுவிட்டு உடனே என்னைப் பின்னூட்டம் போடச் செய்தக் கந்தன் கருணையை என்னவென்று சொல்வது? :-))))))

ஜிரா, அனானிமஸ் பின்னூட்டம் போட மாட்டாரு முருகா. அத நம்புங்க.

என்னுடைய கருத்து தப்புந்தவறுமா இருக்கலாம். ஆனா அதை நான் நானாத்தான் சொல்வேன்.

G.Ragavan said...

http://neo-lemurian.blogspot.com/2007/02/blog-post.html

// நியோ / neo said...
ஜிரா! :)

வாங்க! நானும் அதேதான் நினைத்தேன். உங்க 'பாணியே' அலாதிதான்!

"தாமரை இலைத் தணணீர் போல் நீ - ஒட்டி ஒட்டாமல் இரு!" பாட்டு நினைவுக்கு வரும் நீங்க சில நேரம் எழுதுவதைப் பார்க்கையிலே! :) (சிரிப்பான் - தான்!) //

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் அப்படீன்னு வள்ளுவரு சொல்லீருக்காரு. இந்தப் பிரச்சனையை ஒரு பொருட்டாவே நான் மொதல்ல இருந்து கண்டுக்கலை. இப்ப கண்டுக்கிட்டு என்ன வந்திரப் போகுது. அதான் அப்படி. ஏன்னா..இதுல என்னவோ ஐபி டிராக்கர், என்னென்னவோ டெக்னிகல் சமாச்சாரங்களச் சொல்றாங்க. அப்படியிருக்கைல தெரியாத டெரிடெரியில ஏன் கால விடனும்னுதான்.

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/02/blog-post.html

ஆகா...ராமும் பதிவு போட்டாச்சா? சுடர் நல்லாத்தான் எரியுது.

அன்னைக்கு வீட்டுக்கு வந்ததுல இருந்து பம்பிக்கிட்டு உக்காந்திருந்தது இதுனாலதான. உண்மை வெளியில வந்துருச்சே!

அன்னைக்கு உங்கள எல்லாத்தையும் சந்திச்சதுல மகிழ்ச்சி.

அடுத்து கவிதா என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/02/blog-post.html

// தேவ் | Dev said...
//இந்தப் படத்துக்கு நான் விமர்சனம் எழுதனும்னு நெனச்சேன். நீங்க எழுதீட்டீங்க. அதுனால நான் வாபஸ் வாங்கிக்கிறேன். (நேரமில்லைன்னு வேற எப்படிச் சொல்றது)//

உங்களூக்குன்னு நம்ம பதிவுலக் மக்கள் ஒதுக்கிய படம் வீ யில் ஆரம்பித்து மி யில் முடியும் வீராச்சாமி என்ற திரைக்காவியம்.. அது மட்டும் நீங்க விம்ர்சனம் எழுதினாப் போதும் மத்ததை நாங்கப் பாத்துக்குறோம். //

ஏன் இப்பிடி? என்ன பாவம் செஞ்சேன் நானு? நல்லவேளைக்கி பெங்களூர்ல தமிழ்ப்படங்கள் கெடையாது. காவிரியாத்தா காப்பாத்தீட்டா! :-)

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_09.html

// அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா said...
Don't tell that Manithan also is me after reading the below comment.

டோண்டு செய்த தவறு என்ன? மனச்சாட்சியிடம் பேசிப்பாருங்கள்.
கலப்புத் திருமணத்தில் தமிழ் சமூகத்தில் சர்ச்சை உருவாகவில்லையா? //

இதென்ன கொடுமைங்க? கலப்புத் திருமணத்தால சர்ச்சையா? முதலில் கலப்புத் திருமணங்குற சொல்லே தப்பு. திருமணமே கலக்குறதுக்குத்தான். அப்படிக் கலக்காமத் திருமணம் செஞ்சாத்தான் தப்பு.

கலப்புத் திருமணத்தால் சர்ச்சை உருவாக்குகிறவர்கள் மூடர்கள் என்பதில் ஐயமில்லை. அந்த மூடத்தனத்தைத் தூக்கிப்பிடிப்பதுதான் தவறு.

// அவருடைய அனுபவத்தில் ஆயிரம் பார்த்திருப்பார். அவர் அதை எழுதுவதில் என்ன தவறு? அவரை ஐயங்கார் எனப் பார்க்காமல், ஒரு அனுபவமிக்க மனிதனாக பார்க்க ஏன் முடியவில்லை? //

அனுபவம் ஒவ்வொருவருக்கும் உருவாவதுதான். அந்த அனுபவங்களில் இருந்து நாம் கற்பது எது என்பதே முக்கியம். ஆகையால் அவரை அனுபவமிக்க மனிதனாகப் பார்ப்பதில் யாருக்கும் தடையிருப்பதாக நான் நினைக்கவில்லை. டோண்டு என்ற தனிமனிதரைத் தாக்கி இதுவரையில் நான் பின்னூட்டம் இட்டதில்லை. இனிமேல் இடப்போவதும் இல்லை. ஆனால் ஒரு கருத்து தவறு என்று இருக்கும் பொழுது அதைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.

// ஏனைய சாதிகளுக்குள் உருவாகும் கலப்பு திருமணங்களில் குழப்பம் உருவாகியதை நீங்கள் அறியவில்லையா? இதை நீங்கள் அறியாவிடின்,
ஒன்று உங்களுக்கு வயது போதாது இல்லாவிடின் அனுபவம் இல்லை.
அவ‌ர் முக‌மூடியுட‌ன் வ‌ரவில்லை. //

மன்னிக்க வேண்டும் நண்பரே. இது முழுக்க முழுக்க ஏற்க முடியாத கருத்து. சென்ற தலைமுறையிலேயே மாநிலம் விட்டு மாநிலம் நடந்த திருமணம் எங்கள் குடும்பத்தில் உண்டு. இதை ஏற்கனவே தீபாவளிக்கான பதிவில் நான் சொல்லியிருக்கிறேன். இதுவரையில் குடும்பம் நல்லபடி நடந்து சிறப்பாகப் பெருகியிருக்கிறது. அதே போல நடந்த பல திருமணங்கள்....(என் நண்பர்களே உண்டு) நான் அறிவேன். அறிவில்லாதவன் ஒரு வேலையைச் செய்யும் பொழுதுதான் பிரச்சனைகள் வரும் என்பது என் கருத்து.

// ச‌ரி, பிராமணர்களைவிடுங்க‌ள், ஏனைய‌ சாதிக‌ளுக்கிடையே சாதிய‌ம் நீங்க‌ள் பார்ப்ப‌தில்லையா? உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள்? பலருக்கு பாரதித‌ச‌ன் கூறிய‌து போன்று காத‌ல் திரும‌ண‌ம் இல‌க்கிய‌த்தில் இனிக்கும், வாழ்க்கையில் கச‌க்கின்றது. //

வாழ்க்கையில் கசக்கிறதா? எப்படித் தெரியும்? கலப்புத் திருமணம் செய்து பார்த்தீர்களா என்ன?

G.Ragavan said...

http://neo-lemurian.blogspot.com/2007/02/blog-post.html

// Anonymous said...
// யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் அப்படீன்னு வள்ளுவரு சொல்லீருக்காரு.//

அது உண்மையிலயே 'துறந்தவருக்கு' பொருந்தும்..துறவி போல நடிக்கறவுங்களுக்குப் பொருந்தாதுங்ணா! //

துறவியா? ஐயோ...அந்த லிஸ்ட்ல என்னையச் சேக்காதீங்க. அதெல்லாம் பெரிய விஷயம். நம்ம பக்தியெல்லாம் சாமி கும்புடுறதோடயும் இலக்கியங்களைப் படிக்கிறதோடையுந்தான். அதுக்கு மேல ஒரு சாதாரண மனிதந்தான். வலைப்பூவில் நேரடியாக என்னோட பழகுற நண்பர்களுக்கு இது நல்லாத் தெரியும்.

//// இந்தப் பிரச்சனையை ஒரு பொருட்டாவே நான் மொதல்ல இருந்து கண்டுக்கலை. இப்ப கண்டுக்கிட்டு என்ன வந்திரப் போகுது. //

அப்டின்னு நம்ம ஜிரா சொல்றாரு..ஆனா 'இந்த புனுகுப் பூனையும் பால் குடிக்கு்மா'ன்னு இந்த லிங்கு கேக்குது! //

ஆமா. அந்தப் பின்னூட்டம் நான் போட்டதுதான். என்னோட பேர்லதான் போட்டிருக்கேன். அந்தப் பதிவுல சொன்ன கருத்து சரியானதுன்னு தோணிச்சு. அதான் போட்டேன். அது எதுவும் உள்குத்துப் பதிவா என்ன? தெரியாமப் போச்சே. இன்னும் சொல்லப் போனா. வலைப்பூவுக்கு வந்த புதுசுல இந்த லிங்கு குடுக்குறதுன்னு சொல்வாங்களே. அதாவது வலைப்பூ பக்கத்துல...அதுல முகமூடியோட லிங்கும் இருந்ததுன்னு. ஆனா அப்புறமா அதை எடுக்குறதுதான் சரீன்னு தோணுச்சு. எடுத்துட்டேன். ஆனா இன்னமும் என்னுடைய வலைப்பூவில் மூர்த்தியின் வலைப்பூ தொடுப்பு இருக்கும். என்னை வலைப்பூவிற்கு அழைத்து வந்தவர் அவர்தான். முதன்முதலில் டெம்பிளேட், போட்டோ என்று அத்தனை உதவிகளையும் செய்தவர் அவர்தான். இன்னமும் நன்றி மறக்கவில்லை.

// மனசுல பட்டத படால்னு சொல்லிறனும்னு தோணுது..ஆகையால ஜிராவுக்கு ஒரு குறள்:

அச்சம் உடையார்க்கு அரணில்லை; ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.

;))) //

நிச்சயமாக. அதனால்தான் நீங்க மேல கொடுத்துருக்குற லிங்குல என்னோட பேரைப் போட்டே அப்படி ஒரு கமெண்டைப் போட்டிருக்கேன். அந்தக் கமெண்ட்டுல நான் சொல்றதுதான் சரீ தப்புன்னு வாதாட வரலை. ஆனால் அது எனக்குச் சரீன்னு தோணுச்சு போட்டேன். அவ்வளவுதான். விடாது கருப்பின் ஆரம்பகாலப் பதிவுகளில் கூட என்னுடைய பின்னூட்டங்கள் இருக்கும். சமீபத்தில் கூட ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய கருத்து தவறெல்லாம் தாராளமாகச் சுட்டிக்காட்டுங்கள்.

நான் சாதாரண மனிதன். நானும் தவறு செய்திருக்கிறேன். செய்துகொண்டிருக்கிறேன். செய்வேன். ஆனால் அது தவறு என்று சுட்டிக்காட்டப் படுகையில் கண்டிப்பாக உணர்ந்து கொண்டு திருந்த முயல்கின்றவந்தான். ஆகையால் சாமி கும்பிடுவதால் துறவியாக்காதீர்கள். நிம்மதியா பொறிச்ச மீனைக் கூடத் திங்க முடியாமப் போயிருமய்யா :-))))

G.Ragavan said...

http://baavaa.blogspot.com/2007/02/blog-post_09.html

என்னது சாய்பாபாவைப் போய்ப் பார்த்துதான் சச்சின் இத்தன ரன் அடிச்சாரா! அடக்கடவுளே! மேட்ச் பிக்சிங் அவ்வளவு தூரம் போயிருச்சா!

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/blog-post_30.html

ரொம்ப அருமையான சொல் கோவி. இதுல பாருங்க...துணிவுங்குற சொல் ரொம்பச் சுவாரசியமானது.

எண்ணித் துணிக கருமம். அதாவது எண்ணிய பிறகு செய்ய வேண்டும் கருமம். ஆக இங்கு செய்கை துணிவாகிறது. எதையும் செய்வதற்கு துணிவு வேண்டும் பாருங்கள். என்ன நயம்!

என்ன துணிச்சல் ஒனக்குன்னு கேக்குறது நல்லாருக்கும். இனிமே எல்லாரும் அப்படியே கேக்கனும்னு கேட்டுக்கிறேன்.

G.Ragavan said...

http://neo-lemurian.blogspot.com/2007/02/blog-post.html

// நியோ / neo said...
jஜிரா!

அந்த அனானி உங்களைக் கலாய்க்க நினைக்கிறாற் போலத்தான் தெரியுது! நான் முன்பே சொன்னது போல உங்களை எந்த குரூப்பிலும் யாரும் சேக்க நினைக்க மாட்டார்கள். உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள் :) //

அது உண்மைதான் நியோ. இப்பத்தான் இட்லி வடை பதிவுல எதிர்க்கருத்தோட பின்னூட்டம் போட்டு மானரோசமில்லாத ஜிரான்னு பட்டம் வாங்கீட்டு மானரோசமில்லாம வந்தேன். :-) இங்க இப்பிடி. :-)

// அந்த 'சொல் ஒரு சொல்' பதிவு இப்போல்லாம் போடறதில்லையா? குமரன் ஒன்று எழுதினார் போன மாதம் - பிறகு பார்க்கவில்லை. அது போல செய்வதெல்லாம் சிறப்பான காரியம் - அதற்கு உங்கள் இருவரையும் மனமாறப் பாராட்டுகிறேன் :) //

நன்றி நியோ. சொல்லொரு சொல் திட்டம் குமரன் எண்ணத்துல உதிச்சது. அத ரெண்டு பேரும் சேந்து செயல் வடிவம் கொடுத்தோம். இப்ப நம்ம கோவியும் அதுல சேந்திருக்காரு தெரியும்ல. :-) துணிவே துணைன்னு (http://solorusol.blogspot.com/2007/01/blog-post_30.html) ஒரு பதிவு போட்டிருக்காரு. நானும் இப்பத்தான் அருணாக்கொடின்னு(http://solorusol.blogspot.com/2007/02/32.html) ஒரு பதிவு போட்டிருக்கேன்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/02/3.html

இந்தக் கதையப் படிக்கும் போது எனக்கு ஒரு நிகழ்ச்சி நெனவுக்கு வருது சார். முந்தி தூத்துடி மதுரை அகல ரயில்பாதை போடுறதுக்கு முன்னாடி பெங்களூருக்கு லீவுக்கு வரனும்னா....தூத்துடில ரயிலேறி மதுரை வந்து மாறனும். மீனாட்சி எக்ஸ்பிரஸ்னு பேரு.

ஒரு வாட்டி அதுல ரொம்பக் கூட்டம். நின்னுக்கிட்டு போறோம். பொதுக்கம்பார்ட்மெண்டு. சாத்தூர்ல யாரோ ஒரு அம்மா எறங்குனாங்க. அது பெரிய சீட்டு. அதுல பாதைய ஒட்டுன சீட்டு. படக்குன்னு அதுல உக்காந்தேன். அப்பப்பா! எனக்குப் பக்கத்துல உக்காந்திருந்த ஒரு அம்மாவும் அந்தப் பக்கம் இருந்த அவரு வீட்டுக்காரரும் சண்டைக்கு வந்துட்டாங்க. எப்பிடி ஒரு பொம்பள பக்கத்துல உக்காரலாம்னு. எனக்குக் கோவம்னா கோவம். வர்ரது பொதுக்கம்பார்ட்டுமெண்டு. "ஏன்? ஒங்க அண்ணந் தம்பிங்கள்ளாம் ஒங்க பக்கத்துல உக்கார மாட்டாங்களா? அப்படி ஆம்பளைங்க பக்கத்துல உக்காரக் கூடாதுன்னா லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டுக்குப் போங்கன்னு" கத்தீட்டு நல்லா உக்காந்துக்கிட்டேன். அப்புறமும் அவங்க குடும்பத்துல அப்படி இப்பிடி மாறி உக்காந்து அந்த ஐயா என்னோட பக்கத்துல உக்காந்தாரு. என்ன மனுசங்கடா சாமீன்னு நெனச்சுக்கிட்டேன்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/02/blog-post.html

வள்ளலாரின் மிக அருமையான பாடல் இது. தமிழ் விரும்பிகள் அனைவரும் விரும்பும் பாடல் இது என்பதில் ஐயமில்லை. எனக்கும் இந்தப் பாடலும் அது சொல்லும் கருத்தும் மிகவும் பிடிக்கும்.

இந்த மயில் குயில் ஆச்சுதடி என்ற சொற்றொடர் மிகப் பொருள் வாய்ந்தது. விரித்துச் சொன்னால்...சொல்லிக் கொண்டே போகலாம்.

நான் சரியான பொருள்ளதான் பின்னூட்டம் சொல்லியிருக்கேன். இதை எப்படி எடுத்துக்கிட்டாலும் சரியாத்தான் வரும். :-)

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/blog-post_30.html

// நியோ / neo said...
ஒரு சிறிய அய்யப்பாடு - "குறிச் சொற்கள்" / குறிசொற்கள் - இரண்டில் எது சரி? //

குறிச்சொற்கள் என்பதுதான் சரி. ஒற்று வரும்.

// பிறகு - 'தனித்தமிழ்ச் சொற்கள்' -ஆ அல்லது 'தனித்தமிழ் சொற்கள் -ஆ? //

தமிழ்ப் பூவில் வரும் ஒற்று தமிழ்ச் சொல்லிலும் வரும் நியோ. தனித்தமிழ்ச் சொற்கள் எனச் சொல்வதே சரி.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/blog-post_30.html

// நியோ / neo said...
ஓ! இது கோவி. கண்ணன் எழுதிய பதிவா? நான் தவறுதலாக ஜிரா என்று நினைத்துவிட்டேன். பதிவுக்கு நன்றி கண்ணன்!. //

நியோ, கோவியும் சொல்லொரு சொல்லில் ஒரு அங்கம். சொற்களைக் கற்களைப் போல அடுக்கிக் கோட்டை கட்டி மின்னும் தமிழ்த் தங்கம்.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/32.html

// தெனாலி said...
சுப்பரப்பு.. நல்லா சிரிச்சாச்சு.. //

வாங்க தெனாலி. சிரிக்கவும் சிந்திக்கவும் சொல்லிக் குடுத்தா நல்லதுதானேன்னுதான் இந்த மாதிரி பதிவு. :-)

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/32.html

// தங்கவேல் said...
ஜி. ரா. நான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டபோது மறந்தது இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம். //

எண்ணெய் தேச்சிக் குளிக்கிறது...நானும் அத விட்டாச்சு. தலையில இருந்து கால் வரைக்கும் எண்ணெயத் தேச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் அப்படியே விட்டுட்டு சீவக்காயைத் தேச்சுக் குளிச்சா....ஒடம்பு குளுகுளுந்து குளுந்து போகும். அப்படியே மதியம் கோழிக் கொழம்பு ஊத்தி...சரி. சரி. இது சொல்லொரு சொல் பதிவு. இதெல்லாம் கூடாது.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/32.html

// ஜெயஸ்ரீ said...
ஞாண் என்றால் கயிறு என்று பொருள். அருணாக்கயிறு (அரை ஞாண் கயிறு) . ஞாண் கயறு என்பது நடுcenter, உச்சிtop போல .... )))

அரைஞாண் என்பதே போதுமானது... //

ஆகா. ஜெயஸ்ரீ சரியாச் சொன்னீங்க. மேல கல்வெட்டு ஞானுக்கு வெளக்கம் கேக்கும் போது தேடத் தொடங்குனதுதான். வேலை நெறைய இருந்ததால முடிக்கலை. நீங்க திருத்துனதும் தெரிஞ்சிருச்சு. ஜெயஸ்ரீ வாழ்க.

மக்களே அரைஞான்னு சொல்லாதீங்க. அரைஞாண்னு சொல்லுங்க. சரியா? யாரும் தொரத்த மாட்டாங்க.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/02/blog-post_09.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//மேலும் இவர் காவி நிற உடை அணிந்து//

அடக் கடவுளே! - முடிவே கட்டிட்டீங்களா பாலாஜி?
நல்ல வேளை காவியோடு நிறுத்தினீங்களே! நன்றி!!
இப்பல்லாம் காவின்னால்லே ஒரே பயமா இருக்கு!

ஆனா தில்லு முல்லு படத்தில் தலைவர் காவி கட்டிக்கினு தான் அமெரிக்க விமானத்தில் இருந்து இறங்குவார். ஞாபகம் வைச்சுக்குங்க! :-) //

மன்னிக்கனும். அது தில்லு முல்லு கெடையாது. தில்லு முல்லு படத்துல அமெரிக்காவுக்கெல்லாம் போகவே மாட்டாங்க. அது வேற படம். ராதிகா ஈரோயின்.

கண்ணபிரான் ரவிசங்கரைக் காணவில்லை என்று அவருடைய தந்தைக்குத் தொலைபேசியில் செய்தியைத் தெரிவித்தேன். அவர் ரவி இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை என்றும்...இன்னும் அமெரிக்காவில்தான் இருக்கிறார் என்றும்...அனால் எப்பொழுது வருகிறார் என்று சரியாகத் தெரியாது என்றும் கூறினார். அவருக்கு இங்குள்ள தகவல்களைத் தெரிவிப்பதே நல்லது என நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/02/blog-post.html

எல்லாரும் மயில் குயில் ஆறதப் பத்திக் கேக்குறதால முழுப்பாட்டுக்கும் பொருள் சொல்லாம அந்த ஒரு வரிக்கு மட்டும் சொல்றேன்.

மயிலு மயிலு மயிலம்மான்னு ஏன் சொல்றாங்க? ஜிஜ்ஜிலுஜிலுஜிலுன்னு பாக்க இருக்குறதாலதான. நல்லா மினுமினுன்னு இருக்கும். அது நடக்குற நடையப் பாத்தா அதுதான் பெரிய இது மாதிரி இருக்கும். கண்டுக்காம விட்டுருந்தா காணாமப் போயிருக்கும். ஏன்னா அதோட கொரல் அப்படி. கத்துனாக் கேக்க முடியாது. கேக்குறவனெல்லாம் என்னடா கத்தல் இது....கொடுமையா இருக்கேன்னு சொல்வாங்க. ஒடனே மயிலு ஜில்லுன்னு தோகையை விரிச்சு என்னைப் பார் என்னழகைப் பார்னு படம் காட்டும். ஆனா படம் காட்டிக்கிட்டே இருக்க முடியுமா? திடீர்னு பாத்தா குரல் இனிமையாகி கேக்குறவங்கள்ளாம் என்னடா மயில் இப்பிடிக் கத்துதேன்னு பாத்தா....மயில்தான் குயில். குயில்தான் மயில். ஆனா இப்ப அது ஜிஜ்ஜிலுஜிலுஜிலுன்னு இல்லை. குட்டியாக் கருப்பா அசிங்கமா இருக்குது. ஆனா கொரல் மட்டும் வெல்லம். அப்பத்தான் எல்லாரும் தெரிஞ்சிக்கிட்டாங்களாம்....இதுதான் மயில் குயிலான கதை. :-)

இப்பயாவது எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். இன்னும் புரியனும்னா இனியது கேட்கின்லதான் போடனும்.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2007/02/blog-post_08.html

கலப்புத் திருமணம் என்று சொல்வதே என்னைப் பொருத்தவரை தவறுதான் என்று தோன்றுகிறது.

என்னுடைய இரண்டு வங்க நண்பர்களுக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. இரண்டுமே சாதி பார்க்காமல் நடந்த திருமணங்கள். அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. விட்டுக்கொடுத்துப் போகும் எண்ணம் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

என்னுடைய அலுவலகத்திலேயே இந்த மாநிலம் விட்டு மாநிலக் கல்யாணங்கள் நிறைய இருக்கின்றன. நிறைய. மென்பொருள் நிறுவணங்களில் வேலை செய்கின்றவர்கள் அனைவரும் இப்படிப் பார்த்திருப்பார்கள்.

எல்லாம் நம்முடைய நடவடிக்கையில்தான் இருக்கிறது. முருங்கை மரத்துக்கு வீட்டில் பார்த்து வைத்தாலும் திருமணம் இனிக்காது. விட்டுக் கொடுத்து அனுசரித்து அணைத்துப் போகின்றவர்களுக்கு எந்த நாட்டிலும் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுக்கலாம்...ஜாதி பார்க்காமல்.

கண்டிப்பாகக் கலப்புத் திருமணம்தான் செய்வேன் என்று சொல்கின்றவர்கள் மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால் இந்தக் காதல் வந்து விட்டால் அப்படிச் சொல்லாதவர்கள் கூட செய்து கொள்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

அனுபவஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் பல பிரச்சனைகள் வரும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்குக் காரணம் அவர்களது பிடிவாதமாகத்தான் இருக்கும். சைவ வைணவக் கலப்பு என்று வைத்துக் கொள்வோம்மே. திருநீறுதான் பூச வேண்டும் என்று அப்பாவும் நாமம் போட வேண்டும் என்று அம்மாவும் சண்டை போட்டால் பிரச்சனை வரும். பையனுக்குப் பிடிக்கிறதைப் போட்டுக் கொள்ளட்டும் என்று இருவரும் விட்டு விட்டால் பிரச்சனை விலகும். இந்த அப்ரோச் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/02/80.html

கோ, அந்தக் காதலும் நாணமும் ரெட்டைக் குழந்தைதாங்க. ஒரு சங்கப்பாட்டு. காதல் வந்துருச்சு. ஆனா காதலன் பக்கத்துல இல்ல. இப்ப என்ன செய்யனும்? பொலம்பனும். காமத்துக்குப் பொலம்பனும். அதுதான் இது.

கன்றும் உண்ணாது
கலத்தினும் படாது
நல்லான் தீம்பால்
நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது
என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை என் மாமைக் கவினே

பொருள் புரியலையா?

பால் இருக்கே பால். அது ஒன்னு கன்னுக்குட்டி குடிக்கனும். இல்லைன்னா கலத்துல சேமிச்சு வைக்கனும். அப்படியில்லாம நிலத்துல சிந்தீருச்சுன்னா?

அது மாதிரி இந்த ஒடம்பு இருக்கே. அது எனக்கும் உதவாது. என் காதலனுக்கும் உதவாமல் இங்க இருக்கு. இப்படிப் பசலை வந்து வாட்டுறதுக்கா இந்த அழகான மாநிற கவின்மிகு மேனி.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/02/blog-post.html

கால்காரி சிவா, மயில் குயில் ஆவதற்கு நான் இங்கிட்ட விளக்கம் தத்துவார்த்தமான விளக்கமல்ல. பதிவுக்கான விளக்கம். மயில் குயில் ஆவதைப் பெரிய மெய்ஞானநூல்களில் காணலாம். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்த நாதவிந்து தத்துவம்தான் சைவசித்தாந்தத்தின் மூலம். அதுதான் நாத விந்து கலாதீ நமோ நம. ஒளியும் ஒலியும் காட்டும் முருகன் என்று இனியதில் ஏற்கனவே ஒரு பதிவு எழுதினேன். மறுபடியும் இதைப்பற்றியும் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://blog.thamizmanam.com/archives/84

மிகவும் வருந்தத்தக்க செய்தி. சமீபத்திய சென்னைச் சந்திப்பின் போது இனிப்புகளோடு வந்து அறிமுகப்படுத்திக் கொண்டவர். அதற்குப் பிறகு ஒரு சில தொலைபேசிகள். சில மின்னஞ்சல்கள். மிகவும் இளைஞரான இவரது இழப்பு நிச்சயம் வருத்தத்திற்குரியது. முத்தமிழ்மன்றம் (www.muthamilmantram.com) உருவாகுவதில் முக்கிய உதவியாற்றிய இவரது இழப்பு வருத்தத்தைத் தருகிறது.

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/02/blog-post.html

:-) ஆகா. கோ, வாரவிழா வாரவிழான்னு சொல்வாங்களே...அது இதுதானா? ;-) காதல் நெஞ்சில் வார விழா போலத் தெரியுது.

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எல்லாம் சரிதான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொருவர்தானே?

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/02/110.html

ம்ம்ம்...முதல் கவிதை ஒன்றே போதும் காதலுக்கு விளக்கமாக. நட்பில் பிறந்து காதலிப்பதில் வளர்ந்து காதலிக்கப்படுவதில் பருவமடைகிறது காதல். உண்மை. மிகவும் ரசித்தேன்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_3228.html

இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள். ஆனா வாரத்தொடக்கமே சோகம். நாளை பார்க்கலாம்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/02/blog-post_11.html

நேற்று நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கு மேட்ச் நடந்து கொண்டிருந்தது. வாயை வெச்சுக்கிட்டு சும்மாயிருந்திருக்கக் கூடாது. மேட்சா...இன்னைக்கு இந்தியா மேச்சில் தோத்துப் போகும்னு சொன்னேன். ஒடனே டெண்டுல்கர் அவுட். எல்லாரும் அப்படி ஒரு மொற மொறச்சாங்க. அப்புறம் பாத்தா கடைசியில இந்தியா கிரிக்கெட்டில் தோத்துப் போச். எல்லாரும் சேந்து குமுறுனாங்க பாருங்க..........ம்ம்ம்ம்...ஒன்னும் சொல்லக்கூடாது.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/02/blog-post_03.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்

பாலமுரளி வாக்யேக்காரரா? //

அப்படியென்றால்?

// அவர் மற்ற பாடல்களையும் தாருங்களேன்;
சந்தானம் முருகன் மீது இயற்றிப் பாடிய பாடல் ஒன்று உள்ளது; அடியேன் இட முனைகிறேன்! //

காத்திருக்கிறோம்

// குந்தளவராளி = குந்தளம் என்றால் என்னவோ? //

குந்தளம் என்றால் கூந்தல் என்று பொருளும் உண்டு. மஞ்சு நிகர் குந்தளம் என்று அண்ணாமலைக் கவிராயர் எழுதியிருக்கிறாரே.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/02/blog-post_03.html

முருகா முருகா முருகா வாயெனச் சொல்லும் வாயும் தொழுதிடும் கையும் உழுதிடும் நெஞ்சமும் கொண்டார்க்குத் தஞ்சம் எனத் தந்தண் கஞ்சம் தரும் கதிர்வேலன் பாவைப் படிப்பதில் கேட்பதில் மெத்த மகிழ்ந்தேன் குமரன். சொல்லச் சொல்ல இனிக்குதடா என்றார். நினைக்க நினைக்க உருக்குதடா என்றார். படிக்கப் படிக்கப் பெருகுதன்பென்பேன் நான்.

G.Ragavan said...

http://tamizhachchikal.blogspot.com/2007/02/blog-post.html

ஷோரனூர்.....இந்தப் பெயரை முன்பே ஒரு கதையில் படித்திருக்கிறேன். ஜாவர் சீதாராமனின் ஒரு கதை....ஆமாம். மின்னல் மழை மோகினி என்ற கதையில் ஷொரனூர் வரும். உங்கள் கதையில் மீண்டும் படித்ததும் ஏதோ தெரிந்த ஊரைப் பற்றிக் கேள்விப்படுவது போல ஒரு உணர்வு.

கதையை முழுதாகப் படித்தேன். ஒரு மாதிரியான ஒழுங்கில்லாத ஒழுங்கு தெரிகிறது. அது படிப்பதைக் கொஞ்சம் கடினமாக்கினாலும் ஆர்வத்தைத் தடுக்கவில்லை. ஏனென்றால் உங்கள் விவரணைகள் கண்ணால் கண்ட காட்சிகள். சரிதானா?

(gragavan.blogspot.com - இது மகரந்தம்)

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/12/blog-post_13.html

புகையிலை கெடுதல் என்னும் பொழுது அதை இவ்வளவு புழங்குவதும் கெடுதலாகாதா? ஏனென்றால் இவர்கள் புகைப்பிடிக்கின்றவர்களை விட அளவுக்கு அதிகமாகவே புகையிலையைச் சுவாசிக்கின்றார்கள். அதனால் இவர்களுக்கு எதுவும் பிரச்சனைகள்?

புகைப்பிடிக்கின்ற அன்பர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். தயவு செய்து புகைப்பிடிக்காதீர்கள். மீறிப் பிடித்தால் உங்கள் மகனோ மகளோ மனைவியோ புகைபிடித்தால் அதைக் கேட்கும் தார்மீக உரிமையை நீங்கள் இழக்கின்றீர்கள்.

G.Ragavan said...

http://jeyachchandran.blogspot.com/2007/02/3.html

ஜெயச்சந்திரன்...ஒமேகா3...என்னைப் போன்ற சொரியாசிஸ் உள்ளவர்களுக்கு ஒமேகா3 நல்லது. அதை உண்பது நல்ல பலனைத் தரும்.

என்னென்ன மீன்வகைகள் என்றும் சொல்லுங்களேன். தமிழ்ப் பெயர்களாக இருந்தால் வசதி.

G.Ragavan said...

http://jeyachchandran.blogspot.com/2007/02/3.html

ஜெயச்சந்திரன்...ஒமேகா3...என்னைப் போன்ற சொரியாசிஸ் உள்ளவர்களுக்கு ஒமேகா3 நல்லது. அதை உண்பது நல்ல பலனைத் தரும்.

என்னென்ன மீன்வகைகள் என்றும் சொல்லுங்களேன். தமிழ்ப் பெயர்களாக இருந்தால் வசதி.

G.Ragavan said...

http://tamizhachchikal.blogspot.com/2007/02/blog-post.html

// Madura said...
ராகவன், "மின்னல் மழை மோகினி"யா பயங்கரமான (:)!!!) தலைப்பா இருக்கே! நல்ல கவித்துவமான/தத்துவமான கதையாயிருக்கும் அதான் சொல்லிருக்கீங்க. மன்னிச்சிக்குங்க - எனக்கு புத்தக ஞானம் ரொம்ப கம்மி. சான்ஸ் கிடைச்சா படிக்கிறேன் கட்டாயமா. //

நல்ல கதைதான் அது. மோகினியின் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை திருப்பங்களும் மின்னலும் மழையும் வருகின்ற நாட்களிலேயே நடக்கும். அதுவும் குழந்தையாக இருக்கும் பொழுதிலிருந்து. ஜாவர் சீத்தாராமன் எழுதிய கதை இது.

// "ஒழுங்கில்லாத ஒழுங்கு"? எழுத்துல ஒழுங்கு இல்லன்றீங்களா (எல்லாரையும் போல) இருக்குன்றீங்களா (என் நப்பாசை போல! :) ...)
எழுத்துப் பயிற்சி செய்யணும். திருப்பிப் படிக்கவே சோம்பலா இருக்கு! எப்படி நான் உருப்பிடறது?! :) //

:-) கதைக்குன்னு சில அமைப்புகள் இருக்கு. அதுக்குள்ள அடங்கீரும் கதைகள் பெரும்பாலும். அப்படியில்லாம பிரச்சனையில் தொடங்கி அதற்கு முடிவில் முடியாம....எல்லாம் கலந்தாப்புல வர்ரது இந்தக் கதை. எழுதீட்டுக் கண்டிப்பாப் படிங்க. திரும்பத் திரும்ப.

// உங்க பேருதானா கதை வர்ற ப்ளாகுல, அய்யோ இதை யோசிக்கவே இல்லையே. நான் கேணையே தான்! //

அதை நான் சொல்லலை. நான் சொல்லலை. நான் சொல்லலை. :-)))

G.Ragavan said...

http://dondu.blogspot.com/2007/02/blog-post_12.html

வணக்கம் டோண்டு. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்குப் பின்னூட்டமிடுகிறேன்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். இப்பொழுது புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கெட்ட பெயரை மிகவும் எளிதாக எடுத்து விடலாம். ஆனால் நல்ல பெயரை எடுப்பது மிகக் கடினம். இந்த ஒரு பதிவை மட்டும் படித்து விட்டு எல்லாம் மாறிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சற்று அதிகம்தான். இது கூட உங்கள் யுத்தத்தில் ஒரு உத்தி என்று நாளை நீங்கள் சொல்லக் கூடும் என்று கூட நினைக்க வைக்கும். அப்படி நினைத்தாலும் அது தவறாகாது. ஆகையால் இனிமேல் நீங்கள் இடும் பதிவுகளும் அதில் சொல்லும் கொள்கைகளும் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும். கண்டிப்பாக நடுவில் பிரச்சனைகள் வரும். அவைகளை எப்படி நீங்கள் எதிர்கொள்கின்றீர்கள் என்பதும் மிகமுக்கியம். என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/02/complete-man.html

திரும்பத் திரும்ப என்னைய காப்பாத்தீட்டிருக்கும் ஆண்டவனுக்கு நன்றி பல. அப்பாடி..தப்பிச்சேன்.

G.Ragavan said...

http://sriramprasath.blogspot.com/2007/01/blog-post.html

திருப்பரங்குன்றம் திருக்கோயில்..மதுரை வளநகரில் அமைந்துள்ள அருமையான படை வீடு. நக்கீரரால் பாடல் பெற்ற முதற்கோயில். அதனால்தான் ஆற்றுப்படை வீடுகளில் பரங்குன்றத்திற்குச் சிறப்பு.

இது குடவரைக் கோயில். கோயில் அமைந்திருப்பது மலைமேல் அல்ல. மலைக்குள்ளே. அங்குள்ள தெப்பத்தில் பொரியும் உப்பும் காலங்காலமாக போட்டு வருவதுண்டு. மீன்கள் பெருகித் துள்ளி விளையாடும் பொய்கை அது.

இங்கு முருகப் பெருமானுக்குச் சிலை கிடையாது. புடைப்புச் சிற்பந்தான்.

எனக்கு இந்தக் கோயிலைப் பற்றி ஒரு ஐயம் உண்டு. இங்கு தெய்வயானை திருமணம் நடந்ததாகச் சொல்லப்பட்டாலும் அது வள்ளியோ என்று ஒரு ஐயம். காரணம்...முருகப் பெருமானின் வலத்தில் ஒரு ஆணும் இடத்தில் ஒரு பெண்ணும் உண்டு. அந்த ஆணை நாரதர் என்றும் பெண்ணைத் தெய்வயானை என்றும் கூறுவர். ஆனால் அந்த ஆணின் ஆடைகளும் பாவனைகளும் குறவர் போலவே இருக்கும். நாரதர் போலக் கையில் வீணை இருக்காது. அடர்ந்த தாடி இருக்கும். இது நாரதர் என்று வடக்கத்தி நண்பனிடம் சொன்னால் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதுவுமின்றி திருப்பரங்குன்றத்தைப் பற்றி நக்கீரர் சொல்கையில் தெய்வயானையம்மையைப் பற்றி ஒன்றும் சொல்லியிரார்.

முருகன் அடியவனாக இருந்து கொண்டு இதையெல்லாம் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/02/blog-post.html

// அருட்பெருங்கோ said...
வாங்க ராகவன்,

காதல் விழாக் கொண்டாடனும்னா... காதல்் விழாம இருக்கனுமே!!! :-( //

ஓ! மடியில் விழா(க்) காதலா ;-)

////ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எல்லாம் சரிதான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொருவர்தானே?//

ஒருத்தர்க்கே இங்க வழியக்காணோமாம்... இதுல ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருத்தரா?

உங்கள மாதிரியே என்னையும் நெனச்சுட்டீங்க போல... //

தன்னைப் போலப் பிறரையும் நேசின்னு ஏசுநாதரு சொல்லீருக்காருப்பா!

G.Ragavan said...

http://karuppupaiyan.blogspot.com/2007/02/blog-post_13.html

இராம.கி ஐயா, தமிழறிஞர். வந்தவர் மொழியல்ல...அது செந்தமிழ்ச் செல்வமே என நிரூபிக்கும் முத்தமிழ்ப் பண்பர். அவரை இப்படிச் சொல்லியிருப்பது வருந்தத்தக்கதே.

மணிப்பிரவாளத்திலிருந்து இன்று மீண்டு வந்திருக்கிறோம் என்றால் அதற்குப் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அருணகிரியே தமிழையும் தமிழ்க்கடவுள் வழிபாட்டையும் காப்பாற்ற மணிப்பிரவாளத்தில் தொடங்கித் தமிழுக்குத் தாவியதை மறக்க முடியுமா? சிகராத்ரி எனத் தொடங்கி கூரிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ என்று முடித்தமை அறியாததா? மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், உ.வே.சாவும் பாரதியும், பாரதிதாசனும், மு.வவும், பரிதிமாற்கலைஞரும், வாரியாரும் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் நடுநிலை தவறாது தமிழ் கற்றுத் தர இருக்கிறவர் இராம.கி ஐயா. அவரைப் பாராட்டாமல் இருக்கலாம். திட்டாமல் இருக்க முடியவில்லையா!

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/02/blog-post_13.html

ப்ரபா, தொலைவில் போனவையெல்லாம் தொலைந்து போனவையாகாது என்று சொல்ல வருகின்றீர்கள். உண்மைதான். தொலைவில் போனவைகளே தேடிப் பார்க்கத்தான் ஆசை. பழைய நட்புகளாகிப் போன பழகிய நட்புகள் மீண்டும் அழகிய நட்புகளாக மாற ஆசைதான். நடக்கிறதா என்று பார்க்கலாம்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_13.html

பாரதியின் முடிவு உடல்நலக்குறைவினாலும் போதைப் பழக்கத்தாலும் என்று தெரிந்ததுதான். இப்படிப்பட்ட கோணத்திலும் பார்க்கலாம்தான். ஆனால் தற்கொலை என்று எண்ண முடியவில்லை. ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சியவனில்லை அவன் என்பது திண்ணம். மானம் வருத்த உதிர்ந்து போயிருப்பார் என்றே நினைக்கிறேன்.

// ஆழியூரான் said...
அதுசரி....எட்டையபுரம் மன்னரைப்பற்றி சீட்டுக்கவி எழுதிய பாரதி, அருகில் இருந்த விடுதலை போராட்ட மாவீரன் கட்டபொம்மனைப்பற்றி தனது எந்த பாடல்களிலும் குறிப்பிடாதது ஏன்...? //

ஆழி, கட்டபொம்மனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் எட்டப்பனையும் பற்றிச் சொல்ல வேண்டும் என்ற அறத்துன்பமாக இருக்குமோ!

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/02/38.html

சாகரனை இழந்து தவிக்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் கல்யாணை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/01/blog-post_13.html

மிகவும் அருமையான பாடல். அதிலும் காருகுறிச்சி அருணாச்சலத்தின் நாத மழை. அடடா! இது அந்தக்காலத்து டிராக் முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காருகுறிச்சியார் வாசித்ததும் ஜானகி அவர்கள் பாடியதும் தனித்தனியாம். இரண்டும் ஒன்றாக்கிப் பதிந்திருக்கின்றார்கள். ஆனால் அதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருப்பது இப்பொழுதுதான் தெரியும்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/01/blog-post_13.html

// இலவசக்கொத்தனார் said...
//ஆமாம்..காருக்குறிச்சி எங்குள்ளது? - யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க.//

நெல்லை மாவட்டம்தானுங்கோ! //

பழைய நெல்லை மாவட்டம் கொத்ஸ். தற்போதைய தூத்துக்குடி மாவட்டம். கோயில்பட்டியில் இவருக்குச் சிலையொன்று உள்ளது. அதை ஜெமினியும் சாவித்திரியும் வந்து திறந்து வைத்ததாக அந்தக் கல்வெட்டு சொல்கிறது.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/02/blog-post_12.html

ரஜினி ஒரு நடிகர். அவ்வளவுதான். அவரிடம் சினிமாவை மட்டும் எதிர்பார்க்க வேண்டும். அதுகூட நல்ல சினிமா என்று எதிர்பார்க்க முடியுமா என்று சொல்ல முடியாது. அந்த விமான நிலையத்தில் ரஜினி ஒரு பயணி. அவ்வளவுதான் செய்ய முடியும். செய்ய வேண்டும். அதற்கு மேலும் ஏதேனும் செய்திருந்தால்தான் தவறு.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2007/02/blog-post_09.html

என்ன மெல்லிசை மன்னருக்கு ஒடம்புக்கு முடியலையா! ஆண்டவா. அவரை அமைதியாப் பாத்துக்கோ. எங்களை அமைதிப்படுத்துற பல பாடல்கள் அவர் கிட்ட இருந்துதான் வந்தது.

திரையுலக ஜாம்பவான்கள் அவரைப் பார்க்காதது வருத்தத்தை அளிக்கிறது. இன்றைக்கிருக்கின்ற பெரிய இசையமைப்பாளர்கள், பாடகிகள், பாடகர்கள் எல்லாரும் அவரால் முன்னுக்கு வந்தவர்கள்தான். இளையராஜா, சங்கர்-கணேஷ், ஏ.ஆர்.ரகுமான் என்று எல்லாரும் அவருடைய உதவியாளராக இருந்தவர்கள்தான். பாலசுப்ரமணியன், ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், சுவர்ணலதா, இன்னும் பல பெரிய பாடகர்களைப் பட்டை தீட்டி வளர்த்தவர் அவர். இவ்வளவு ஏன்...சித்ரா இளையராஜாவிடம் வாய்ப்புக் கேட்டுப் போன பொழுது பாடியது மெல்லிசை மன்னரின் சரவணப் பொய்கையில் நீராடி பாடலைத்தான். நன்றியுள்ளவர்களே அவருக்காக கொஞ்சம் பிராத்தியுங்கள்.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/02/38.html

கவிதையில் அஞ்சலி
முடிவில்
கல்லெறியச் சொல்வது
சரியா ஜி?
ஓ! கல்லெனச் சொன்னது
நெஞ்சங்களையா!
எரிகின்றவைகளை எறிவதெப்படி?

G.Ragavan said...

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_12.html

நல்லதொரு பதிவு.

கர்நாடகத் தமிழர்களின் பாதுகாப்பு பற்றி இன்னொரு கர்நாடகத் தமிழன் என்ற வகையில் பேசியதற்கு எனக்குக் கிடைத்த பட்டம் மானரோசமற்றவன். ம்ம்ம்...தமிழன் என்றொரு தலையெழுத்து. ஈழத்தில் அடிவாங்குகிறானே...அவனுக்கு என்ன செய்தாய்...உன்னை நம்பி நான் இங்கு போராட என்று கேட்டால்....அவர்கள் தமிழகத்தில் கொலை கொள்ளை செய்தார்கள் என்று ஒரு கருத்து வேறு. இதே கருத்தை நாளைக்கு எங்கள் மீதும் வைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

தமிழன் என்றொரு இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு. என்ன செய்வது!

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/02/blog-post_13.html

// மணிகண்டன் said...
//மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது//

அதெப்படிங்க சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனிங்களும் இந்த மாதிரி மேனேஜரை தேர்ந்தெடுக்கறாங்க??

இதுக்கு ஒரே முடிவு, மேனேஜரா ஆகறதுதான். வேலையே பார்க்க வேணாம் :)) //

வெட்டி, இது ரொம்ப அதிகம். மணிகண்டன் யூ டு.

நான் சாப்ட்வேர் இஞ்சினியராவும் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியராவும் இருந்தப்ப என்னோட டீம் லீடரப் பாத்து, நம்மளும் டீம் லீடராயிட்டா நல்லாயிருக்கும்ல...வேலையப் பிரிச்சிக் குடுத்துட்டு சும்மாயிருக்கலாம்னு நெனச்சேன். டீம் லீடரானப்புறந்தான் தெரிஞ்சது..அது அப்படியில்லைன்னு. ஒவ்வொருத்தன் எழுதுற கோடுக்கும் நம்மதான் பொறுப்பு. ஒரு பய ஒத்துழைக்க மாட்டான். அப்பத்தான் நான் செஞ்ச தப்புகளும் தெரிஞ்சது. பேசாம மேனேஜரா இருந்தா நிம்மதியாயிருக்கலாமேன்னு நெனச்சேன். ஆனா பாருங்க. மேனேஜர் ஆனப்புறமும்...நிம்மதியில்லை. அப்பத்தான் புரிஞ்சது. எந்த அளவுக்குப் போனாலும் வேலையும் பிரச்சனையும் இருக்கும்னு.

கோடிங் எழுதுறதும் டெஸ்டிங் பண்றதும் மட்டுமில்லீங்க புராஜெக்ட்ங்குறது. அதையும் தாண்டி நெறைய இருக்கு. நீங்க ஒழுங்கா கோடிங் எழுதுறதுக்கான சூழ்நிலையை நாங்க உருவாக்கனும். புராஜெக்ட் தொடங்கி, ஆளுங்கள அதுல சேத்து, எல்லாருக்கும் தெரிய வெச்சு, மசாமாசம் இங்கிருந்து டெலிவரி, அங்கிருந்து ரெவின்யூ, குவாலிட்டி, ரிப்போர்ட்டிங். மக்களே. இது ஒங்களுக்கும் ஒரு நாள் புரியும். ஏதோ சாப்ட்வேர் இஞ்சினியர்கள்ளாம் ரொம்பத் தெரிஞ்சவங்க மாதிரியும் மேனேஜர்கள் மண்ணாங்கட்டின்னும் பேச வேண்டாம். exceptional cases are always there. and they are not examples. if we write what sw engineers do.....they cant show their face any where.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/02/blog-post_13.html

//
வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
நான் மேனஜருக்கு எல்லாம் வேலை செய்ய தெரியாதுனு சொல்லல. நான் சொன்னத படிச்சா உங்களுக்கு புரியும்.

புது மேனஜர் வந்தாரு. அவருக்கு அப்ப அந்த ப்ராஜக்ட பத்தி எதுவும் தெரியலைனு. ப்ராஜக்ட் மேனேஜர் வேலை எவ்வளவு கொடுமைனும் தெரியும்... //

வெட்டி, less tension more work. more tension less work. :-) டென்ஷனாக வேண்டாம். பதிவைப் படிச்சுட்டுத்தான் கமெண்ட்டுக்கே வந்தேன். பதிவைப் படிச்சப்ப நான் சொல்ல நெனச்சது வேற. மொதக் கமெண்ட்டைப் படிச்சப்புறம் நான் சொன்னது வேற.

// பதிவ படிக்காம பின்னூட்டம் போட்டா நான் என்ன செய்யறது???

என்னை டென்ஷனாக்கனும்னே எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்கனு நினைக்கிறேன்... //

:-) ராத்திரி முழுக்கத் தூங்காம இருந்தியா? கெட்டகெட்ட கனாவெல்லாம் வந்துச்சா? வந்திருக்கக் கூடாதே!

// பதிவ படிச்சி பின்னூட்டம் போட முடிஞ்சா போடுங்க. இல்லைனா உங்களுக்கும் டைம் வேஸ்ட் எனக்க்கும் வேஸ்ட்... //

அதெல்லாம் முடியாது. எங்க இஷ்டப்படித்தான் பின்னூட்டம் போடுவோம். டைம் வேஸ்ட்டானாலும் ஆகட்டும். :-))))

// இராத்திரி பகலா எதுக்கு கஷ்டப்படறோம், அதுவும் வேலையே இல்லாத சமயத்துலயும்கூட அங்கயே வெட்டியா உக்கார்ந்திருக்கற ஒரூ கல்ச்சர், அதனால உடம்பு வீணாகாதானு கேட்டா தேவையில்லாத சண்டை... //

உண்மைதான். அது மிகத்தவறான வழக்கம். ஆனா பொதுவில் எந்த மேனேஜரும் நைட் அவுட் வருகிற மாதிரியே பிளான் செய்வதில்லை. சமயங்களில் அப்படி வந்து விடுவதுண்டு. அதை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதில்தான் திறமையே இருக்கிறது. ஒரு சின்ன எடுத்துக்காட்டு. நான் பார்த்துக் கொண்ட ஒரு புராஜெக்ட்டில் திடீர்ப் பிரச்சனை. வேலை நிறைய. நிறைய என்பதை விட onsite dependency. அங்கிருந்து தொடர்ந்து தகவல் பரிமாற வேண்டும். என்ன செய்வது. குழுவை இரண்டாகப் பிரித்து ஒன்று பகலில் வரும். ஒன்று இரவில் வரும். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் overlapping இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு. இது சரியா தவறா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஏதாவது செய்யத்தான் வேண்டியிருக்கிறது. இன்னொரு புராஜக்ட். பழைய நிறுவனத்தில். திடீரென்று தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு அதிக வேலை. எல்லாரும் நேரம் கழித்துப் போக வேண்டிய நிலை. அஞ்சாவது நாள் எல்லாருக்கும் விடுமுறை கொடுத்தாகி விட்டது. அன்றைக்குக் கொஞ்சம் பேர் வந்து...அவர்களுக்கு வேறொரு நாளில் கொடுக்க நேர்ந்தது. அவ்வளவுதான். இதை ஒரு மேனேஜர் உணர்ந்து செய்ய வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான்.

எல்லாருக்கும் ஒரு அறிவுரை. அலுவலகத்தில் தேவைக்கு மேல் இருக்காதீர்கள். எட்டு மணி நேரம் வேலை. அதற்குள் முடிக்கப் பாருங்கள். மற்ற விஷயங்களை மூடி வைத்து விட்டு வேலையில் கவனம் செலுத்தினால் எட்டு மணி நேரத்தில் வேலையை முடிக்கலாம். சமயத்தில் கூடுதல் நேரம் தேவைப்படும். அப்படியில்லை...ராத்திரி ஒன்பது மணிவரை அலுவலகத்தில் இருப்பேன் என்றால்....அதனால் வருத்தப்படப் போவது நீங்களாகவே மட்டும் இருக்கும்.

இதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டவன் நான். ஒரு குறிப்பிட்ட புராஜக்ட்டில் (மூன்றரை வருடங்களுக்கு முன்பு) அளவுக்கு அதிகமான வேலை. மிகுந்த வேலைப்பளு. ஒரு நாள் ஏழரை மணிக்கு வீட்டிற்குக் கிளம்புகையில் மேனேஜரம்மா அழைத்து வேலை கொடுத்தார். அம்மா அப்பா ஊரிலிருந்து வந்திருந்ததால் நண்பர்களை இரவு உணவிற்கு அழைத்திருந்தேன். அரைமணி நேர வேலை என்று அவர் சொன்னார். நம்பி வாங்கியதன் பலன்? இரவு பதின்னொன்னரை மணிக்கு வீட்டிற்குப் போனது. i was totally stressed during that period and that reflected in my skin as psoriasis. பிறகு நான் அந்தப் புராஜெக்ட்டிலேயே இருக்க மாட்டேன் என்று சொல்லி மாறினேன். ஆகையால் அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். அப்படி தொடர்ந்து இருக்கும் வகையிலேயே வேலை உங்களுக்கு வருமானால்.....குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து மேனேஜரிடம் பேசவும். பலனில்லை எனில் அனைவரும் சேர்ந்து அடுத்த லெவல் மேனேஜரிடம் பேசவும்.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/02/39.html

ஜி, ஊறுகாய ஊறப் போடனும். துணிய ஆறப்போடனும். காதல்ல கியரப் போடனும்னு தெரியாதா! ஸ்பீடு எடுக்க வேண்டிய எடுத்துல தூங்கீட்டியே ஜி!

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/01/blog-post_22.html

காபி, கலையைக் கொலையாகச் செய்வர் கலையைக்
கலையாகக் காணா தவர்

அதான் இப்பிடி. ஒன்னும் பண்ண முடியாது. இருக்குறத ஏத்துக்க. இல்லைன்னா ஒன்னையக் கெழவன்னு சொல்லி ஊரு ஒதுக்கி வெச்சிரும்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/02/196.html

அருமையான பாடல் சிபி. அதிலும் "எடுத்துக் கொடுக்கையிலே இருவிரல் மோதும்..நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும்" என்று பாடுகையில் அடடா! அதே போல "இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே..இருளே இவளின் துணையே".

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2007/02/blog-post.html

கோதையின் வரலாறு உணர்த்துவது எது? அன்பு மட்டுமிருந்தால் போதும்...ஆண்டவனை அடைந்து விடலாம் என்பதுதான். ஆகையால்தான் ஆச்சாரங்களை அன்போடு செய்து வந்த பெரியாழ்வார்க்குக் கோதையினால் தரிசனம் கிடைத்தது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/02/30.html

பிறவி என்பது பெருங்கடல். அதில் ஓடங்கள் நாம். செலுத்துகிறவன் இறைவன். துடுப்பு நமது மனம். அந்த மனதின் வழியாக நல்வழியிலோ தீவழியிலோ செலுத்துகிறவன் அந்த நல்ல தீய வினைகளிலிருந்து நம்மைக் காப்பான். அதைத்தான் அபிராமி பட்டர் சொல்கிறார். இறைவன் காப்பான் என்ற நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் பிறவிக் கடலை நீந்திடலாம்.

G.Ragavan said...

http://chinnakathai.blogspot.com/2007/02/blog-post.html

உண்மை. உண்மை. மறுக்க முடியாத உண்மை. ஆகையால்தான் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று சொல்கிறோம். மிடாசின் கதை நாம் அனைவரும் அறிந்ததுதானே. நல்லதொரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி குமரன்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/02/197.html

4. ஜோதிகா
5. மும்தாஜ்
6. பூமிகா
7. மாதவி
8. அமலா
9. பானுப்ரியா
10. பூர்ணிமா ஜெயராமன்

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/blog-post.html

எங்கூர்ப்பக்கம் இன்னமும் பையதான்.
"ஏல பையப் போல" என்று இன்றும் சொல்லக் கேட்கலாம். எனக்கும் பைய என்பது மிகப் பிடிக்கும். என்னுடைய வாயிலும் அடிக்கடி வரும் சொல்தான்.

அருட்பெருங்கோவிடம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த பைய பற்றிப் பேச்சு வந்தது. பேச்சுவாக்கில் நான் பைய என்று சொல்லியிருந்தேன். உடனே அவர் ஒரு கதை சொன்னார்.

பேருந்தில் மிச்சச் சில்லரையை நடத்துனரிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். பையத் தருகிறேன் என்று அவரும் சொல்லியிருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்துச் சில்லரை கேட்டவர் நடத்துனரின் பையக் கேட்டாராம். :-)))))

பைய, மெதுவா எல்லாம் இருக்கட்டும். மெல்ல மெள்ள எது சரி? மெல்ல என்றால் மெல்லுதலையும் குறிக்கலாம். மெள்ள என்று சொல்வதுதான் சரியா? இதற்கு எதுவும் இலக்கிய ஆதாரம்?

மெள்ள மெள்ள அருகில் வந்து மென்மையான கைகள் பட்டு என்று பாட்டும் உண்டே.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/02/198-2.html

2. கமலஹாசன்
3. மோகன்
4. இதைப் பாடுவது திலிப். ஆனால் படத்தின் நாயகன் மோகன். ஆகையால் எந்தப் பெயரை எடுத்துக் கொண்டாலும் சரி.
5. அரவிந்தசாமி
6. பிரபுதேவா
8. விஜயகாந்த்
10 வடிவேலு
11. பிரசாந்த்
12. விஜய்
13. பிரபு
14. அர்ஜுன்

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/02/blog-post_17.html

சுடரேற்றி விட்டீரா எஸ்.கே. வாழ்த்துகள். சுடர் செல்லும் வழி வியப்புக்குரியதாய்...மிகப் புதுமையாய் இருக்கிறது. தொடரட்டும் இந்தச் சுடர்.

உங்கள் தந்தையார் பூசித்த முருகன் இப்பொழுது உங்களோடு இருக்கிறான் என்பதறிந்து மெத்த மகிழ்ச்சி. இது எனக்கு வாரியார் பற்றிய செய்தி நினைவிற்கு வருகிறது.

வயலூர் திருப்பணியின் போது மிச்சமிருந்த உலோகங்களை வைத்து வள்ளி தெய்வயானையோடு கூடிய வேலுடை முருகனைச் செய்து வழிபட்டு வந்தாராம். அந்த முருகன் அவரது தமையன் மக்களிடம் இருந்து இன்னும் பூசிக்கப்படுகிறதாம்.

முகமூடியாகவோ முகந்திறந்தியாகவோ இருப்பது தவறில்லை. ஆனால் தான் சொல்வது நன்மையையும் ஒற்றுமையையும் ஓங்குவித்து உதவுகிறதா என்பதே முக்கியம். குறைந்தபட்சம் அது பிரச்சனையை உண்டாக்குவதாகவும் இருக்கக் கூடாது. இது அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது.

குமரனிடம் நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கின்றீர்கள். அவைகளுக்கான குமரனின் விடைகளுக்காகக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/02/yaar.html

யார் யார் யார் அவர் யாரோ?
ஊர் பேர் தான் தெரியாதோ!

இதென்ன பெரிய வித்தை. சின்னத்தம்பி பெரியதம்பி படத்துல காந்திமதி கூட யான்னு சொல்லி அசத்துவாங்க. நீ என்னடான்னா!

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/02/184.html

சொல்லீட்டீங்கள்ள......பாத்துட்டாப் போச்சு! பாத்துட்டு ஒரு பதிவும் போட்டுட்டாப் போச்சு.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2007/02/239_16.html

பெண் சுதந்திரமா? அதை ஆண் கொடுக்க வேண்டும் என்று சொல்வதிலிருந்தே....பெண் சுதந்திரம் என்பதை ஆண் வரையறுப்பதிலிருந்தே பெண் சுதந்திரம் என்பது இன்று சாக்கடைக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது தெரியாதா! இன்னன்ன சுதந்திரம் கொடுக்கலாம்..இன்னது கொடுக்கக் கூடாது என்று ஆண் சொல்வதே அபத்தம். பெண்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நடக்கும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவர்களே பொறுப்பு. ஆரம்பத்தில் கொஞ்சம ஆர்ப்பாட்டமாகவும் எரிச்சல்படுத்துவதாகவும் இருந்தாலும் போகப் போகச் சரியாகி விடும். கசப்பு மருந்துதான். விழுங்கத் தயாராக ஆண்களின் தொண்டை திறக்கவில்லை இன்னும்.

ஒன்று மட்டும் புரியவில்லை. காதல் என்றாலே எல்லா மதத்திலும் எதிர்ப்பு வருகிறது. கொடுமை கொடுமை.

// குழலி / Kuzhali said...
இந்துத்துவா வாதிகளின் கலப்பு திருமணம் என்பது வெவ்வேறு சாதிகளில் இந்துக்களுக்குள் மட்டும் செய்துகொள்வதா? முசுலீமும் இந்துவும் செய்துகொள்வது இந்துத்துவாவாதிகளுக்கு கலப்புத்திருமணம் இல்லையா? அதுபற்றி என்ன சொல்றாங்க இந்துத்துவா வாதிங்க? //

குழலி இது குறித்து என்னுடைய கருத்தைச் சொல்லி விடுகிறேன். இந்துத்துவ இஸ்லாமிய வாதிகள் பதிலும் என்னென்னவோ என்பதுதான் என் ஆவலும்.

அவன் அவனாகவும் அவள் அவளாகவும் இருந்து செய்து கொள்ள முடியாத திருமணம் கண்டிப்பாகக் கலப்புத் திருமணம் இல்லை. இந்து இஸ்லாமியரைத் திருமணம் செய்ய மதம் மாற வேண்டும் என்பதோ அல்லது இஸ்லாமியர் இந்துவாக வேண்டும் என்பதோதான் அந்தந்த மதவாதிகளின் கருத்தாக இருக்கும். இந்தக் கருத்தைத் தூக்கிப் பிடிக்க பல சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். இந்த விஷயத்தில் அனைத்து மதவாதிகளும் ஒரே மாதிரிதான்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/02/199.html

தருமி, எனக்கு ஒரு சந்தேகம். இந்தப் பதிவ நீங்க எழுதுனீங்களா? நான் எழுதுனேனா? நான் நெனைக்கிறத அப்படியே சொல்றாப்புல இருக்கே! ஒரு இடத்துல கூட மாத்தம் தேவையில்லை. ஏன்? நீங்க ஏன் இப்படி...?

ஜெயபச்சனும் சஞ்சீவ்குமாரும் செவிட்டூமையா கலக்கிய படம் தமிழ்லயும் வந்தது. கமலும் சுஜாதாவும் நடிச்சிருந்தாங்க. "இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அந்த இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட" என்ற கவியரசரின் பாடல் மிகவும் பிரபலம். வாணி ஜெயராம் பாடியது. பேசாத பெற்றோருக்காக "உங்களுக்காக நானே கேட்பேன். உங்களுக்காக நானே சொல்வேன்." என்ற வரிகள் மிகச் சிறப்பு. குழந்தை பிறந்ததும் குழந்தை அழுகிறதா இல்லை தம்மைப் போல செவிட்டூமையா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாமல் ஜெயா பச்சனும் சஞ்சீவ்குமாரும் தடுமாறி வருந்தும் காட்சியும்..பிறகு நண்பரொருவர் சொல்லி உண்மை தெரிந்து மகிழும் காட்சியும்.....உண்மையைச் சொல்லப் போனால் நான் பார்த்த சிறந்த இந்திப் படங்களில் அதற்குத்தான் முதலிடம். இத்தனை தெரிகிறது. படத்தின் பெயர் தெரியவில்லை. கோரா காகஸ்?

G.Ragavan said...

http://nanbanshaji.blogspot.com/2007/02/blog-post_12.html

நல்ல கருத்து. தவறுகள் எங்கும் நிகழ்வதுதான். ஆனால் தன் தவறைத் தானே சுட்டிக்காட்டும் எண்ணம் இன்னொரு சக இந்தியனுக்கு இருப்பதைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். 1947 earth என்ற படமும் இதே போன்ற சர்ச்சைக்குரிய படம்தான். பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொண்டது என்று நினைக்கிறேன். பிறகு வாட்டர். இப்பொழுது farzania. ஒவ்வொருவரும் தம்மீதான விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயங்குவதுதான் இதற்கெல்லாம் காரணம். உலகளாவிய உளவியல் பிரச்சனை இது. டாவின்சி கோடுக்கான எதிர்ப்பும் இத்தகையதோ என்று தோன்றுகிறது. இரண்டிலும் களங்கள் வேறு என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் தான் சார்ந்த ஒன்றின் மீதான விமர்சனம் அல்லது மாற்றுக் கருத்து என்பதற்கு ஒவ்வொருவரிடமும் தடை இருக்கிறது என்பதற்கு farzania தடை ஒரு எடுத்துக்காட்டு. இந்தப் படம் திரையிடப்படாவிட்டால் வேறெந்த இந்திப் படமும் குஜராத்திற்குப் போகாது என்று யாரோ அறிக்கை விட்டிருந்தார்களே.

G.Ragavan said...

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_15.html

இந்த வேதம் போன்றவைகள் பற்றிய குறிப்பு இடைக்கால நூல்களில்தான் நிறையக் காணக்கிடைக்கிறோம். அதற்கு முந்தைய நூல்களில் எனக்குத் தெரிந்து இல்லை.

வேதம் என்றால் நால் வேதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

நாலான வேத நூலாக மாதி நானோதினேனும் இலை வீணே என்கிறார் அருணகிரியும். ஞானசம்பந்தரும் வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நமசிவாயமே என்கிறார். நன்கு கவனிக்க வேண்டும் இங்கு. வேதன் நான்கிலும் மெய்ப்பொருளாவது அல்ல. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது. இரண்டுக்குமுள்ள பொருள் வேறுபாடு தெரிந்ததே. சைவர்களுக்கு மூலமானது இந்தச் சொல்தான். அனைத்திலும் உயர்ந்தது நமசிவாயமே. இதுதான் என் கருத்து.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_17.html

நல்ல பதிவு யெஸ்பா.

// பொதுவாக பெண் என்பவள் இந்த வரையரைக்குள் தான் பேச வேண்டும், செயல்பட வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதில் மதங்களின் பங்கும் மிக முக்கியமானது. அவை ஏற்படுத்தி இருக்கும் ஆயிரமாயிரம் புனைக்கதைகளின் வழியே சொல்லப்பட்டிருக்கும் விசயங்களும் அது தான். அதை அப்படியே அவர்களும் ஏற்றுக்கொள்ளும் படி செய்தது தான் ஆணாதிக்கத்தின் தந்திரம். //

மிகச் சரி. பெண்ணடிமை விஷயத்தில் பெண்ணின் நலன், பெண்ணின் பெருமை, பெண்ணிற்குப் பாதுகாப்பு, பெண்ணிற்குச் சிறப்பு, பெண்ணை பெருமைக்குரியது...இன்னமும் பலவிதங்களில் மதங்கள் முகமூடி போட்டுக்கொள்கின்றன என்பதே உண்மை. என் கருத்தும் அதுதான்.

// பார்ப்பனீயம் என்பது எப்படி குறிப்பிட்ட ஒரு சாதிக்குள் அடங்காமல்.. எல்லா சாதிக்குள்ளும் நீக்கமற நிறைந்திருக்கிறதோ.. அது போல ஆணாதிக்கச் சிந்தனையும் ஆண்,பெண் பாகுபாடில்லாமல் அனேகரிடம் இருக்கிறது. //

மறுக்க முடியாத வருத்தந்தரக்கூடிய உண்மை.

சமீபத்தில் செல்வனின் கீழ்க்கண்ட பதிவில் இட்ட பின்னூட்டம். இங்கும் பொருந்தும் என்பதால் இடுகின்றேன்.

http://holyox.blogspot.com/2007/02/239_16.html

பெண் சுதந்திரமா? அதை ஆண் கொடுக்க வேண்டும் என்று சொல்வதிலிருந்தே....பெண் சுதந்திரம் என்பதை ஆண் வரையறுப்பதிலிருந்தே பெண் சுதந்திரம் என்பது இன்று சாக்கடைக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது தெரியாதா! இன்னன்ன சுதந்திரம் கொடுக்கலாம்..இன்னது கொடுக்கக் கூடாது என்று ஆண் சொல்வதே அபத்தம். பெண்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நடக்கும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவர்களே பொறுப்பு. ஆரம்பத்தில் கொஞ்சம ஆர்ப்பாட்டமாகவும் எரிச்சல்படுத்துவதாகவும் இருந்தாலும் போகப் போகச் சரியாகி விடும். கசப்பு மருந்துதான். விழுங்கத் தயாராக ஆண்களின் தொண்டை திறக்கவில்லை இன்னும்.

ஒன்று மட்டும் புரியவில்லை. காதல் என்றாலே எல்லா மதத்திலும் எதிர்ப்பு வருகிறது. கொடுமை கொடுமை.

// குழலி / Kuzhali said...
இந்துத்துவா வாதிகளின் கலப்பு திருமணம் என்பது வெவ்வேறு சாதிகளில் இந்துக்களுக்குள் மட்டும் செய்துகொள்வதா? முசுலீமும் இந்துவும் செய்துகொள்வது இந்துத்துவாவாதிகளுக்கு கலப்புத்திருமணம் இல்லையா? அதுபற்றி என்ன சொல்றாங்க இந்துத்துவா வாதிங்க? //

குழலி இது குறித்து என்னுடைய கருத்தைச் சொல்லி விடுகிறேன். இந்துத்துவ இஸ்லாமிய வாதிகள் பதிலும் என்னென்னவோ என்பதுதான் என் ஆவலும்.

அவன் அவனாகவும் அவள் அவளாகவும் இருந்து செய்து கொள்ள முடியாத திருமணம் கண்டிப்பாகக் கலப்புத் திருமணம் இல்லை. இந்து இஸ்லாமியரைத் திருமணம் செய்ய மதம் மாற வேண்டும் என்பதோ அல்லது இஸ்லாமியர் இந்துவாக வேண்டும் என்பதோதான் அந்தந்த மதவாதிகளின் கருத்தாக இருக்கும். இந்தக் கருத்தைத் தூக்கிப் பிடிக்க பல சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். இந்த விஷயத்தில் அனைத்து மதவாதிகளும் ஒரே மாதிரிதான்.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/blog-post_17.html

வாழ்த்துகள் குமரன். எஸ்.கே அவரிடமிருந்து சுடர் உங்களிடம் வந்திருக்கிறது. நன்றாக ஏற்றியிருக்கின்றீர்கள். அடுத்து சிபியாரா! ம்ம்ம்...காத்திருக்கிறேன்.

குன்றம் அமர்ந்த குமரன் பற்றிய குமரம் பாவும் அருமை. சிற்சில எழுத்துப்பிழைகள். திருத்துங்கள். நீங்களே ஒருமுறை படித்தால் தெரிந்து போகும்.

அலை ஓய்வதும் காலை நனைப்பதும் எப்பொழுது நடப்பது குமரன்? ஆகையால் வேலைப்பளு குறைந்து ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது விரைவில் வாருங்கள்.

சொல்லொரு சொல் ஏன்? அதற்குத் தனிப்பதிவு. ம்ம்ம்..காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/02/leave-letter.html

சென்று வா மகனே
சென்று வா
அறிவை வென்று வா மனனே
வென்று வா
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
தாயிருக்கும் வரைக்கும் கலக்கமில்லை
எந்தச் சபையிலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகனே
சென்று வா

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/02/200.html

// ஆக நெருப்பில்லாமல் புகையாது என்பது ஒரு வகையில் உண்மைதான் எனினும் பனிப் புகைக்கு எந்த நெருப்பு ஆதாரம்? என்று ஒரு கேள்வியும் இருக்கிறது. //

என்ன நாமக்கல்லாரே! இப்பிடிக் கேட்டுட்டீங்க? சாலையோரங்கள்ள தூங்குறவங்களப் பாத்திருக்கீங்களா? விடியற்காலைப் பனிப்புகைக்கு அவங்களுக்கு நெருப்புதானே ஆதாரம். அதுக்கும் முடியாதவங்க ஆ! தாரம்னு சொல்றாங்களாமே!

// திணை என்பது ஒழுக்கம், நெறி போன்றவற்றைக் குறிக்கும் சொல். //

அப்பத் தேனும் திணைமாவும்னு சொல்றது?

இந்த சேலம் பத்தி ஒரு நகைச்சுவைச் சம்பவம் உண்டு. என்னுடைய வடக்கதிய நண்பர்களோடு நிறைய பயணம் சென்றிருக்கிறேன். சேலத்தை (salem) சலேம் என்று உச்சரிப்பார்கள். அது சேலம் என்றாலும் கேட்க மாட்டார்கள். அதுதான் சரியான உச்சரிப்பு என்று சொல்வார்கள். விளக்கிச் சொன்னால் ஒத்துக் கொள்வார்கள். ஆனால் என்னுடைய நெருங்கிய வங்க நண்பன் ஒருவன் ஒத்துக் கொள்ளவில்லை. ஒருநாள் அவனை அழைத்து..."ஏய்...ஒனக்குத் தெரியுமா? துணிகளுக்கான சலே போட்டிருக்கிறார்கள்" என்றேன். "அதென்ன சலே" என்று கேட்டான். "sale என்றால் சலே தானே. ஒரு m கூடப் போட்டால் நீங்கள் சொல்வது போல சலேம்" என்றேன். :-) அதைக் கேட்டதும் அவன் முகம் போனபோக்கு இன்னமும் மறக்கவில்லை. :-)

அடுத்தது தருமி ஐயாவா?
வா வாத்யாரே சுடரேத்த
நீ வராங்காட்டி நா உடமாட்டேன்
மதுர பஜார் ஜக்கு
நீ பழமுதிச்சோல கொக்கு

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2007/02/blog-post_19.html

நல்ல பதிவு பொன்ஸ்.

// இப்படிச் சொன்னாலும், அலுவலகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவர் என்ன வேலை செய்கிறார், எப்படி நேரத்தைச் செலவிடுகிறார் என்ற விஷயம் நல்ல மேலாளருக்குத் தெரிந்து தான் இருக்கிறது. டெக்னிகலாக எதுவும் தெரியாதவர், என்று பொதுவாக மேலாளர்களைக் கிண்டலுக்குச் சொன்னாலும், [ஜி.ரா மன்னிக்க :-D ] இது போன்ற விசயங்களை அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. //

நிச்சயமாக. மறுக்க முடியாத உண்மை. என்னதான் ஒருவர் நீண்ட நேரம் அலுவலகத்தில் இருந்தாலும் அவர் வேலை செய்கின்றாரா இல்லையா என்பதை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஸ்கேலை வைத்து அளந்து மதிப்பெண் கொடுக்கும் ஆசிரியர்களைப் போல சில மேனேஜர்கள் நேரத்தைப் பார்த்து கணக்கிடுவதும் உண்டு. சமயங்களில் இஞ்சினியர்களும் ஏமாற்றுவது உண்டு. நானே செய்திருக்கிறேன். நான் இஞ்சினியராக இருந்த சமயம். ஒரு புராஜெக்ட். டெலிகாம் நெட்வொர்க்கிங்கில். மூன்று பேர் டீம். டீம் லீட் கிடையாது. design, coding and testing தான் வேலை. நேரடியாக மேனேஜரிடம் சொல்வோம். அப்பொழுது இதைச் செய்ய எவ்வளவு நேரமாகும் என்று கேட்பார்.
முதலாள் : என்னோட மாட்யூல் ரொம்பப் பெரிய மாட்யூல். ஆனா logic complexity ரொம்பக் குறைவு. அதுனால இதுக்கு இவ்வளவு நாளாகும்.

மேனேஜர் : அப்படியா. சரி. அடுத்து உனக்கு.

ரெண்டாவதாள் : என்னோடது சின்ன மாட்யூல். ஆனா very complex. அதுனால இதுக்கு இவ்வளவு நாளாகும்.

மேனேஜர் : அப்படியா. சரி. அடுத்து உனக்கு.

மூனாவது ஆள் : என்னோட medium size and medium complexity. அதுனால இவ்வளவு நாளாகும்.

மேனேஜர் : அப்படியா. சரி.

கடைசியில் மூன்று பேரும் ரொம்ப நாள் வாங்கியிருப்போம். இது இஞ்சினியர்கள் பக்கமும் நடக்கிறது. மறுக்க முடியாதது.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/02/blog-post_16.html

:-))))) கலக்கல் கிண்டல் ரவி.

G.Ragavan said...

http://karuppupaiyan.blogspot.com/2007/02/blog-post_16.html

சுடர் உண்மையிலேயே சுறுசுறுன்னு பரவுதுங்க. இந்தப் பதிவை நான் ஏற்கனவே படிச்சிட்டேன். ஆனா ஊரூராச் சுத்தீட்டிருக்கிறதால உடனே பின்னூட்டம் போடலை. அடுத்தடுத்து வந்த சுடர்களுக்குக் கூடப் போட்டுட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/02/blog-post_6763.html

ஆத்தீ! இதென்ன குருவா? இல்லை...முருகா முருகா! நான் ஒன்னும் சொல்லலை. நான் ஒன்னும் சொல்லலை. (இது எந்தூரு ஆசிரமம். அங்கச் சேர்ரது ஆ! சிரமம்னு இருக்குமோ?)

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/02/ii-26_21.html

சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
சோதனைதான் வாழ்க்கையென்றால்
தாங்காது பூமீன்னு பாடலையா சார்?

G.Ragavan said...

http://penathal.blogspot.com/2007/02/2-20-feb-07.html

அவையில ஒங்க பதிவக் குற்றம்னு சொல்லீட்டாங்க. :-)

G.Ragavan said...

http://penathal.blogspot.com/2007/02/2-20-feb-07.html

அவையில ஒங்க பதிவக் குற்றம்னு சொல்லீட்டாங்க. :-)

G.Ragavan said...

http://manaosai.blogspot.com/2003/09/blog-post_16.html

அப்பாடியோவ்....இது வேற ராகவனா! :-) நாங்கூட நீங்க ஏதோ கேக்கப் போறீங்கன்னு நெனச்சுக்கிட்டு பயந்துக்கிட்டே வந்தேன்.

சரி..ராகவன் ஏன் அப்படிச் செய்தான். நீங்க முந்திக்கிருவீங்களோன்னு பயந்து அவன் முந்திக்கிட்டான்.அவ்வளவுதான்.

G.Ragavan said...

http://etamil.blogspot.com/2007/02/what-religion-do-you-fit-in-with.html

எனக்கு இப்பிடி வந்திருக்கு. இதுல ஸ்பிரிச்சுவல்னும் சொல்லுது. இண்டலெக்சுவலி பேலண்சுடு லைபுன்னும் சொல்லுது. சில கேள்விகளுக்கு நான் பதில் சொல்லலை. ஏன்னா அந்த பதில்கள் என்னோடதுக்கு ஒத்துப் போகலை.

You fit in with:
Taoism

Your ideals mostly resemble those of the Taoist faith. Spirituality is the most important thing in your life. You strive to live by all of your ideals, and live a very intellectually focused life.

70% spiritual.
10% faith-oriented.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/blog-post_21.html

பதிவைப் பற்றிய விமர்சனத்திற்குப் போகும் முன் இந்த இருமொழிக் கொள்கை பற்றி ஒரு விளக்கம். அல்லது என் கருத்து என்று சொல்லலாம்.

நீங்கள் தமிழைத் தாய்மொழி என்று சொல்லிக் கொள்வதில் தவறில்லை. தமிழ் பிழைக்க வேண்டும், உயர வேண்டும் என்று விரும்பினாலே தமிழன் என்ற அடைமொழி போட்டுக் கொள்ளலாம். தமிழனாகப் பிறந்து வாளைப்பளமாம் மலப்பளம் சாப்பிடுவதுதான் தவறு. வேறொரு மொழி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறன்று.

ஒரு இலக்கியவாதியைச் சொல்கிறேன். அவருடைய பெயரைச் சொன்னாலே கரிசல்காடுகள் எல்லாம் பூப்பூக்கும். சருவங்களிலேயே மழை நீர் பெய்யும். கி.ராஜநாராயணன். அவர் தெக்கத்திக்காரர். அவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் நீங்கள் சொல்வது போல பெரும்பாலும் தமிழ் கலந்த தெலுங்கு. இல்லை இல்லை. தெலுங்கு கலந்த தமிழ். கிண்டலாக இப்படிச் சொல்வார்களாம். காப்பி கீழ சிந்தீருச்சு. இது தமிழ். காப்பி கீழ சிந்தேச. இதுதான் அவர்கள் பேசும் தெலுங்கு. ஆனால் அவர் தமிழிலக்கியத்திற்குச் செய்தது? அவரைத் தமிழர் இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகையால் நீங்கள் தமிழர் என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2006/12/8.html

எப்படி ஜி? எப்படி இப்படி? நடத்து நடத்து....அடுத்து ஒரு படம் எடுத்துற வேண்டியதுதான?

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/02/ii-28.html

அடேங்கப்பா...ஒரு பெருக்கல் குறிய வெச்சி அது கையெழுத்தேயில்லைன்னு சொல்வாங்களா? அது சரி. எனக்கு ஒரு ஐயம். நாம ஒவ்வொரு வாட்டி கையெழுத்துப் போடும் போதும் ஏதாவது ஒரு மாத்தமிருக்குமே. அப்புறம் எப்படி நம்ம கையெழுத்துதான்னு நிரூபிக்க முடியும்?

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/02/blog-post.html

இளவஞ்சி....நீங்க இவ்வளவு நாள் கழிச்சு வந்து சுடரேத்துனாலும் இப்பிடி ஜொஜ்ஜொலி ஜொலிஜொலின்னு ஏத்தீருக்கீங்களேய்யா! வாழ்க வளமுடன்.

இன்னொரு விசயம். உ-ங்குறது பிள்ளையார் சுழின்னு சொல்லக் கூடாது.உ-க்கு ஒலி உண்டு. பிள்ளையார் சுழிக்கு ஒலி கிடையாது. உல இருக்குற சுழி பிள்ளையார்சுழியில வராது.

ஒங்க கருத்துகள்ள பலதுதான் என்னதும். தெளிவாத்தான் சொல்லியிருக்கீங்கன்னு நம்புறேன்.

அடுத்தாரு? எம்.எஸ்.வி.முத்துவா? வாங்க வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீக அண்ணாத்தே
அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே!

G.Ragavan said...

http://yazhsuthahar.blogspot.com/2006/11/blog-post.html

யாழ் சுதாகர், உங்கள் பெயரை நான் வானொலியில் கேட்டிருக்கிறேன். கே.எல்.ரேடியோவிலா? நீங்கள் வலைப்பூ எழுதுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

டி.எம்.சும் சரி தேவரும் சரி...இருவருமே முருகனடியவர்கள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

உங்களுடைய மற்ற பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/02/blog-post_18.html

பாக்கலையே மக்கா! பாக்கனும்னு நெனச்சேன். ஆனா பாக்க விடாம வேல சுத்திச் சுத்தி அடிச்சி திரும்ப பெங்களூருக்கே திருப்பி அனுப்பிச்சிருச்சே! ஆனாலும் எப்படியாவது பாத்துருவேன்னு நெனைக்கிறேன். பாத்துட்டுப் பதிவு போடுறேன்.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/blog-post_21.html

// இலவசக்கொத்தனார் said...
ஸ்,ஷ்,ஜ் போன்ற எழுத்துக்கள் வழக்கத்தில் வந்து விட்டதால் அவற்றை சேர்க்க மாட்டேன் என அடம்பிடிப்பது தேவை இல்லை என்பதே என் எண்ணம். //

கொத்தனார்...இங்கு ஸ், ஷ், ஜ் பயன்படுத்துவதில் மட்டுமில்லை பிரச்சனை. அவை பெயர்ச்சொல்லில் வருகையில் ஒன்றும் செய்ய முடியாது. ஜானி என்பதைச் சானி என்றா எழுத முடியும்? ஆனால் இங்கு பொதிந்திருப்பதற்கு வேறொரு பரிமாணமும் உண்டு.

நீங்களே சொல்லியிருக்கும் கஷ்ட எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம். கஷ்டமோ இஷ்டமோ இங்கு துன்பமென்றோ விருப்பமென்றோ பயன்படுத்தினால் ஸ், ஷ் எல்லாம் தேவையில்லையே. இவையொன்றும் தெரியாத புதுச் சொற்கள் இல்லையே. இதைச் சொல்வதும்தான் சொல் ஒரு சொல்லின் வேலை.

கஷ்டம் பழகிவிட்டதே என்று சொல்கின்றவர்களுக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் முன்பே சொன்ன எடுத்துக்காட்டைச் சொல்லிக் கொள்ள மட்டும் விரும்புகிறேன். மலைப்பழம் என்று வாழையில் ஒரு வகை. அதை அப்படியா உச்சரிக்கிறோம். மலைப்பழம் விரும்புகிறவர்கள் மலைப்பழம் சாப்பிடுங்கள் என்று சொல்வதோடு எங்கள் வேலை முடிகிறது. அதற்கு மேல் உங்கள் விருப்பம். அதாவது நினைவு படுத்திக் கொண்டேயிருப்பது. அதற்கு மேல் உங்கள் விருப்பம்.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/blog-post_21.html

// Anonymous said...
ரொம்ப நீண்ண்ண்ட்ட்ட பதிவு. //

என்ன செய்வது அனானி. தமிழின் வளமும் பெருமையும் காலமும் நீண்ண்ண்ண்ண்டதுதானே!

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/blog-post_21.html

// ஞானவெட்டியான் said...
அன்பு குமரன்,
தங்களின் இவ்விடுகையை என் பார்வைக்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி. சின்னாட்களாக(சில நாட்களாக)த் தமிழ்மணம் படிப்பதையே விட்டுவிட்டேன். காரணம்; மலிந்திருக்கும் சாதி சமயச் சண்டைகளும், மொழிச் சண்டைகளும் மறைமுக நேரடி முகம் சுளிக்கவைக்கும் தாக்குதல்களுமே. எழுத்தில் நளினம், கண்ணியம் ஆகியவைகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலை.

1. தங்களின் "சொல் ஒர் சொல்" தொடரப்படவேண்டிய ஒன்றே. உங்கள் மூவருடன் நாலாவதாக நானும் சேர்ந்துகொள்கிறேன். //

ஐயா வருக. தங்கள் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியே. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் மிகவும் ஏற்கக்கூடியவையே. கடை விரிக்கிறோம். கொள்வதும் கொள்ளாததும் கள்வதும் கல்வதும் கல்லாததும் உங்கள் விருப்பம். சரிதானே ஐயா?

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/blog-post_21.html

// SK said...
ஜெயஸ்ரீ சொன்ன அந்த ஒரு வரியே போதுமானது!

'முயற்ச்சி" என எழுத்துப் பிழையாக சமுத்ரா எழுதியதையும், இசுடாலின், இசுலாம் என்றெல்லம் எழுதுவதுதான் சரி என நீங்கள் வாதிடுவதையும் ஒப்பிடுவது ஆச்சரியமளிக்கிறது.

இசுலாம் என்னும் போது சொல்லின் உச்சரிப்பே முழுதுமாக ,மாறுகிறதே. //

அது ஒப்பீடு அல்ல எஸ்.கே. முயற்ச்சி என்று தவறாக எழுதுவதைப் பற்றி அவ்வளவு வருத்தமில்லாத நிலையில் இசுலாம் இசுடாலின் மீது வருத்தம் வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் அவர். தனக்கே தந்தனா...ஊருக்கெப்படி துந்தனான்னு கேக்குறாரு.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/02/2_21.html

மிகவும் நல்ல பதிவு. இப்படி எடுத்துச் சொன்னால்தானே தெரிகிறது. தொடரட்டுமிந்தப் பணி

G.Ragavan said...

http://copymannan.blogspot.com/2007/02/blog-post_7088.html

பாரதியின் கவிதைகளை நீங்கள் முழுதும் படித்ததில்லை போலத் தெரிகிறது. "பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே" என்று பாடியவனும் "சாதி மதங்களைப் பாரோம் உயர் சென்மம் இத்தேசத்தில் எய்தினராயின்" என்று சொன்னவனும் அவந்தான். anyway...உங்கள் கருத்து உங்களுக்கு. சொல்லனும்னு தோணுனதால சொன்னேன். உங்கள் விளக்கத்தை எதிர்பார்த்து இல்லை. பின்னூட்டமிட வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/02/29.html

இதுதான் அந்த இடவலப் பிரச்சனையா! நல்லவேளை இப்பிடி வெளக்கமாச் சொன்னீங்க.

அந்தக் குதிரைல இருந்து கத்தி உருவுற கற்பனை உண்மையிலேயே சிறப்பு. நம்மூர்லயும் அப்படித்தான் இருந்திருக்கனும்னு நெனைக்கிறேன். ஆனா நம்மூர்ல நடுவுல போறதுதான எப்பவுமே ஃபேஷன். அதுனால எதுத்தாப்புல யாரும் வந்தா மட்டும் ஒதுங்கிக்குவாங்கன்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://eerththathil.blogspot.com/2007/02/blog-post_21.html

:-)) கேக்க வேண்டியத நேராக் கேக்கலைன்னா இப்படித்தான்.

கால்ல விழுந்து கும்புடனுமா? ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். திரும்ப புருஷன் பொண்டாட்டி கால்ல விழுந்து கும்புடுவான்னா, அவளும் அவன் காலில் விழுந்து கும்பிடலாம்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2007/02/blog-post_4734.html

இங்கே நாளொரு போராட்டம்னு பேப்பர்ல படிக்கிறோமே. பொதுவாவே கர்நாடக அரசியல்வாதிகள் சரியில்லைன்னு (வீட்டுக்கு வீடு வாசப்படி) இவங்களுக்கு நெனைப்பு. எனக்குத் தெரிஞ்சி கிருஷ்ணாவுக்கு அப்புறம் கொஞ்சம் பிரச்சனை பெரிசாகாம பாத்துக்கிட்டதுல குமாரசாமியையும் பாராட்டித்தான் ஆகனும். இந்நேரம் வேறொரு ஆளா இருந்தா அவ்வளவுதான். பங்காரப்பா மாதிரி ஆளுங்க இருந்திருந்தா...கேக்கவே வேண்டாம்.

பிரச்சனை மதப் பிரச்சனை. இது கிருத்துவ மதத்துகுள்ள பிரச்சனை. தவறுன்னுதான் எனக்குப் படுது.

G.Ragavan said...

http://gopinath-walker.blogspot.com/2007/02/blog-post_16.html

எதுத்தாப்புல வர்ரவன் புன்னகையைக் குடுன்னு கேக்காம பொன் நகையைக் குடுன்னு கேட்டான்னா?

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/02/blog-post_22.html

பெனாத்தல் என்றால் என்ன? பென் + ஆத்தல் பெனாத்தல். பென் என்றால் பேனா. கணினி பயன்படுத்துகிறவர்களுக்குக் கணினிதான் பேனா. அந்தக் கணினியை வைத்துக் கொண்டு ஆத்தோ ஆத்தென்று ஆத்திய (சேவையத்தாங்க) பெனாத்தலார் வெற்றி பெறாமல் இருந்தால்தான் நான் ஆச்சிரியப்பட்டிருப்பேன் என்பதை உடன்பிறப்புகள் அறிவர். எழுந்து வா விழுந்து வா என்ற தாரக மந்திரம் உனக்காகவே உருவானது என்பதை நீ அறிவாய். நான் அறிவேன். வாழ்க. வளமுடன்.

இதல்லாம் யாரால நடந்ததுங்க? ஓட்டுப் போடுற சைட்டுக்குப் போக முடியலை. ஒரே கலாட்டா. எல்லா லிங்க்கையும் பிளாக் பண்ணி வெச்சிருக்காங்க. அதையும் மீறி ஹேக் பண்ணிப் போனா வைரஸ்களையும் வார்ம்களையும் அள்ளி வெளாசுறாங்க. இந்தத் தேர்தலை நாங்க புறக்கணிக்கிறோம்.

நாங்க என்ன பிச்சையா கேட்டோம். எங்களுக்கு உரியதைத்தானக் கேட்டோம். வாக்குச் சேகரிக்கும் போது இவங்க பதிவு எழுதுவாங்க. நாங்க லோலோன்னு அலஞ்சு ஓட்டு வாங்குறது. கடைசில இவங்க மெடல் குத்திக்கிட்டு போறதா?

அன்று மெசபடோமியாவிலே டஸ்கஸ் சிந்தூசஸ் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். பார்வையைப் பார்க்கா விட்டால் கோர்வையாகப் பேச்சு வராது என்று. அதை இன்னும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் ஒரு தமிழன் சொன்னான். அதை மறப்போமா? வஞ்சகரின் வலைப்பூவில் விழுவோமா!

(இதெல்லாம் என்னன்னு பாக்குறீங்களா? வெவ்வேறு தலைவர்களின் கருத்துகள்.)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/02/6.html

அல்வான்னே எஸ்.வி.சேகர் ஒரு நாடகம் போட்டிருக்காரு. அது தெரியாதா டீச்சர். எஸ்.வி.சேகர் நாடகம் பாக்குறத நிறுத்தி ரொம்ப காலமாச்சு. நீங்க மாட்டிக்கிட்டீங்க. சரி. நாடகம் எப்படீன்னு சொல்லலையே?

அருமைக்கு வேற சொற்களா? சிறப்புன்னு சொல்லலாம். மிகச் சிறப்புன்னும் சொல்லலாம். செழுமையான நடிப்புன்னும் சொல்லலாம். ப்ரமாதம் இருக்குறப்போ இதெல்லாம் தேவையான்னு மட்டும் கேக்காதீங்க :-)

20007லும் தமிழ் நாட்டுக்காரங்க கோலம் போடுவாங்கன்னு நெனைக்கிறீங்க? தமிழ்நாடே இருக்கோ இல்லையோ!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/02/6.html

வெயில் படம் கொஞ்சம் சுமார்தான் டீச்சர். நடிச்சவங்கள்ள்ளாம் நல்லா நடிச்சிருப்பாங்க. ஆனா படத்துல ஏதோ குறையுது. படத்தோட ஒரிஜினல் டிவிடி மலேசியாவுல கெடைச்சது. வீட்டுலயே உக்காந்து முழுசாப் பாக்க முடியலை. தேட்டர்ல எப்படிப் பாத்தீங்களோ!

G.Ragavan said...

http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post_22.html

ஓ! தமிழ்ப் படமெல்லாம் நெறையப் பாப்பீங்க போல. நான் இந்த ரிஸ்க்கே எடுக்குறதில்லை. படம் வந்து நல்லா ஓடி...ஏதாவது அதுல ஸ்பெஷலா இருந்தா மட்டுந்தான் பாக்குறது. பஞ்ச் வசனப் படங்கள் யாரு நடிச்சாலும் பாக்குறதில்லை.

பேசாம ஏற்கனவே வந்த பழைய படங்கள்ள நல்ல படங்களாத் தேடி வாங்கிப் பாக்குறதுண்டு. அதுதான் நல்லது.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/02/blog-post_1973.html

டீச்சர், ஸ்க்விட்டுக்குத் தமிழ்ல காணவாய்னு பேரு. ஏன் அந்தப் பேருன்னு எனக்குத் தெரியாது. எனக்கு இது சாப்பிடப் பிடிக்காது. ரப்பர் மாதிரி இருக்கும். ஒரு துண்டு சீலாக் கருவாடு இருந்தாக் கூடப் போதும்.

இவ்வளவு பெருசா பிடிச்சிருக்காங்களே. ஊருக்கே கொழம்பு காச்சி ஊத்தலாம் போல. ம்ம்ம்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/02/blog-post_1973.html

சொல்ல மறந்துட்டேனே...தலைப்பூ சூப்பரு.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/02/blog-post_19.html

பிரியாணின்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுலயும் மட்டன் பிரியாணி, மீன் பிரியாணின்னா கேக்க வேண்டாம். அடடா! அதுலயும் பெங்களூரு திப்பசந்திரா பேகம்ஸ் பிரியாணில ஒரு மீன் பிரியாணி கிடைக்குமே! அடடடடா!

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/02/3_22.html

சார், உண்மையச் சொல்லுங்க. நீங்க கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் பின்னாடியே போய்த்தானே ஒட்டுக் கேட்டுட்டு வந்துதானே எழுதுனீங்க?

அந்த டிக்கெட்டு காமெடி சூப்பர்.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/02/blog-post_21.html

// ஞானவெட்டியான் said...
அன்பு ஜெயஸ்ரீ,
//சொற்தொகை(vocabulary)//

சொற்தொகை எனில்(என்றால்) சொற்களின் எண்ணிக்கை என்று ஆகுமல்லவா? அதற்குப் பகரியாக(பதிலாக) சொற்குவை எனக் கூறுதல் நலம். குவியலில் இருந்து வருவது குவை.

"சொற்குவை" - அழகாக உள்ளதல்லவா?

"சொல் ஒரு சொல்"லின் பணியை இங்கிருந்தே தொடங்குகிறேன்.//

சொற்குவை மிகவும் அழகான சொல். இந்தச் சொல்லை மிகவும் ரசித்து ருசித்துப் பயன்படுத்தப் பசித்து என்னுடைய கதையொன்றின் தலைப்பில் எழுதினேன். "பொற்சிலையும் சொற்குவையும்" என்று.
http://gragavan.blogspot.com/2005/11/blog-post.html

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/02/180.html

காதலுக்குள்ளேயே மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் நீர்மூழ்கிக் கப்பலாம். இல்லை. காதல் மூழ்கிக் கப்பலாம். அதற்குப் பெயர் அருட்பெருங்கோ என்று சொல்கிறார்கள். உண்மைதான்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/02/blog-post_21.html

காதல் அமுதென்று
யார் சொன்னது?
மூழ்கிக் குடிக்கும் வண்டு
இன்னும் வெளியில் வரவில்லை
உயிரோடுதான் இருக்கிறதா?
அடடே! அமுதம் தீர்ந்து விட்டது
குவளையில் நிரம்பியிருப்பது கண்ணீர்

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/02/blog-post_23.html

கி.வா.ஜவின் தமிழ்ச் சிலேடை மிகவும் அருமையாக இருக்கும். இவர் உ.வே.சாவிடம் தமிழ் படித்தவர். உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்தவர். இவர்களிடம் தமிழுக்குக் குறைவிருக்காது.

மோசம் போவது என்பதை இறப்போடு தொடர்பு படுத்தித் தமிழகத்தில் சொல்வதில்லை. ஈழத்தில் அப்படிப் புழங்கப்படுவது புதுச்செய்தி.

இதுபோலத் தமிழிலும் கன்னடத்திலும் உண்டு. மழை கடுமையாக இருக்கிறது என்றால் தமிழில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகின்றது என்போம். மழே கடுமே என்றால் கன்னடத்தில் மழை குறைவு என்று பொருளாகும். சுமார் என்றால் நாம் ஏதோ இருக்கிறது என்ற பொருளில் சொல்வோம். சுமார் என்பது கன்னடத்தில் நிறைய என்பதாக வரும். கார்களு சுமாரிதே என்றால் கார்கள் நிறைய இருக்கின்றன என்று பொருள்.

G.Ragavan said...

http://nanbanshaji.blogspot.com/2007/02/blog-post_25.html

தனக்கு நல்லது என்று நம்பும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் உரிமை எவருக்கும் உள்ளது. அந்த வகையில் மைக்கேல் ஜாக்சன் எடுத்த முடிவு அவரது உரிமை. அதைக் கேள்வி கேட்பதோ கிண்டல் செய்வதோ தவறு. அவர் விரும்பும் அமைதி அவரை ஆட்கொள்ளட்டும். நிறைய ஆடி விட்டார். இனிமேலாவது அமைதி பெறட்டும்.

G.Ragavan said...

http://nanbanshaji.blogspot.com/2007/02/blog-post_12.html

farzania என்று குறிப்பிட்டிருக்கிறேன். அது தவறு. parzania என்பதுதான் சரியென்று நினைக்கிறேன். சரிதானா நண்பன். இந்தப் படமும் black friday என்ற படமும் இப்பொழுது பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/02/7.html

டீச்சர், அந்தப் பை சணல்ல செஞ்சிருந்தாங்களா? இல்ல வெட்டி வேர்ல செஞ்சிருந்தாங்களா? இப்பல்லாம் ரெண்டுமே பிரபலமாகிக்கிட்டு வருது. ரொம்ப நல்லாவும் இருக்கு. நாங்கூட ரெண்டு வெட்டிவேர் விசிறி வாங்குனேன். ரொம்ப நல்லாயிருக்கு. வெயில் காலத்துல அதுல லேசா தண்ணி தெளிச்சிட்டு விசுறனாப் போதும். அடடா!

அடுத்து டெல்லியா....ம்ம்ம்ம்...ஏற்கனவே டெல்லி போனீங்களே...நான் வரிசை மாறிப் படிக்கிறேனோ!

G.Ragavan said...

http://suvanappiriyan.blogspot.com/2007/02/blog-post_24.html

சோதிடம் என்பதும் சூனியம் என்பதும் இரண்டு வெவ்வேறு விதங்கள். இரண்டையும் நாம் நம்பக் கூடாது. ஏ.ஆர்.ரகுமான் கூட தனது தந்தைக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக நம்புகிறார். என்னதான் செய்வது?

தமிழில் சைவ நூல்களை எடுத்துக் கொண்டால் ஆண்டவனை நம்பும்படித்தான் சொல்கின்றன. துன்பம் வருகையில் நாளும் கோளும் என்ன செய்யும்? முருகன் திருவடி துணையிருக்கையில் என்று அருணகிரி சொல்லியிருக்கிறார். நாளாவது கோளாவது. எல்லாம் இறைவனடியவர்களூக்கு நல்லதுதான் என்று சொல்லியிருக்கிறார் திருஞானசம்பந்தப் பெருமான். ஆகையால் மக்கள் இறைவனைச் சரண்புகுதலே மிகச் சிறப்பு.

சமயத்தில் ஏதேனும் கெடுதல் உண்டானால் இப்படி எதையாவது நாடுவது வழக்கமாக இருக்கிறது. அதையெலாம் விடுத்து இறைவன் திருவடியில் ஒப்படைப்பதே சரியென்பது ஆன்றோர் பலர் கருத்து. நான் ஆன்றோன் இல்லையென்றாலும் என் கருத்தும் அதுதான்.

G.Ragavan said...

http://nanbanshaji.blogspot.com/2007/02/blog-post_25.html

// நீங்கள் சொல்வது போல, அது ஒருவன் தன் மனதை ஈடுபடுத்திக் கொள்ளாமலே, ஒரு பொட்டலமாகக் கட்டி விற்கப்படும், அது எங்களிடம் கிடைக்கிறது என்று சொன்னால், அதை இந்த உலகம் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.

நன்றி, சிந்திக்கத் தூண்டியமைக்கு. //

ஆன்மீக உணர்வு என்பது பொட்டலத்தில் கிடைக்கும் பொருள் அல்ல அள்ள. முயற்சி வேண்டும். முனைப்பு வேண்டும். அப்படியில்லாமல் இந்து மதத்திற்கோ இஸ்லாமிற்கோ மாறுவது பயனற்றது. இன்னும் சொல்லப் போனால் எந்த மதமும் இல்லாமலும் இறையுணர்வு கொள்ள முடியும் என்று நம்புகிறேன். ஆனால் அதற்குப் பக்குவம் எக்கச்சக்கமாக வேண்டியிருக்கும்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/02/ii-29.html

அப்பாவிக்கும் அடப்பாவிக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். அதுதான் ட. நீங்க சொல்ற நபர் எந்த டவுக்குள்ள விழுந்தாரோ தெரியலையே!

வங்கியில் டாக்குமெண்டுகள் போல மென்பொருள் துறையில் மின்னஞ்சல் அனுப்புவது மிகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் அனுப்பிய மெயில் நமக்கே எதிராகத் திரும்பவும் வாய்ப்புள்ளது.

G.Ragavan said...

http://salmaayup.blogspot.com/2007/02/blog-post.html

பர்தா மட்டுமல்ல எந்த ஒரு உடையையும் அணிவது அந்தப் பெண்ணின் விருப்பம். உரிமையும் கூட. அதனால் உண்டாகும் நல்லது கெட்டவைகளுக்கு அந்தப் பெண்ணே பொறுப்பு. அரைகுறை துணி போட்டதால்தான் கையைப் பிடித்து இழுத்தான் என்ற வாதம் அல்ல நான் சொல்வது. அந்த வாதம் தவறு என்பதே என் கருத்து. பாடப் பாடத்தான் ராகம். மூடமூடத்தான் ரோகம் என்பார்கள்.

பர்தா அணிவதற்குச் சுதந்திரம் இருப்பது சரியென்றால் அணியாமல் இருப்பதற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். இது நம்ம ஊர் சேலைகளுக்கும் சல்வார் கமீஸ்களுக்கும் பொருந்தும்.

பொதுவில் தான் என்ன அணிய வேண்டும் என்பதை அந்தப் பெண்ணே முடிவு செய்வதே நல்லது.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/02/blog-post_25.html

யய்யா! இதென்ன....எந்தப் படமும் விடுறதில்லையோ! இவருதான் சூரியாவோட தம்பியா? அண்ணன் அளவுக்கு இல்லைதான். (என்ன இருந்தாலும் நம்ம சூரியா ரசிகரு ஆச்சுங்களே)

படம் வந்துருச்சா! பாக்கனும். எங்க பெங்களூருல ஒன்னும் வர்ரதில்லையே! வந்தா பாக்கனும்.

G.Ragavan said...

http://sugunadiwakar.blogspot.com/2007/02/blog-post_26.html

இதுதான் பெரியாரின் கருத்துகளா? கிட்டத்தட்ட என்னுடைய சிந்தனை ஓட்டமும் இந்தத் திசையிலேயே இருக்கிறது. சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு முன் பெரியாரின் எழுத்துகளைப் படித்திராத எனக்கு அவரின் எழுத்துகளைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை இந்தக் கட்டுரை தூண்டுகிறது என்றால் மிகையில்லை.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/02/ii-30.html

பெங்களூர்ல இது போல personalized banks இருக்கு. சென்னையிலும் இருக்கனும். அங்க அக்கவுண்ட் தொடங்குனப்புறம் ரொம்ப நல்லாயிருக்கு. போனா வந்தா மரியாதையா நடத்துறாங்க. மத்த பேங்குகள்ல பொதுவா வள்ளுன்னு விழுவாங்க. இங்க அப்படியில்ல. நீங்க சொல்லும் போதுதான் சூச்சுமம் புரியுது.

இதென்னங்க...வகைவகையா பிரிச்சுச் சொல்றீங்க. பேசாம நீங்க இது தொடர்பா ஒரு புத்தகம் போடலாம்.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2006/09/01.html

லிவிங் ஸ்மைல் வித்யா, இங்கு ஒரு ஐயம். மருத்துவர் என்றால் அவரும் படித்தவர்தானே. அப்புறமும் அவர் எப்படி பிரச்சனை தெரியாமல் அணுகுகிறவராக இருக்கக் கூடும்? உடம்புக்கு வைத்தியம் பாக்குற டாக்டர்களே அந்த மருந்து இந்த மருந்துன்னு மாத்தி மாத்திக் குடுத்துப் பாத்துதான வைத்தியம் பாக்குறாங்க. அதுமாதிரிதான் மனசுக்கு வைத்தியம் பாக்குறவங்களும் போல.

இன்னொரு ஐயம். நீங்கள் குறிப்பிடும் திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறாவிடில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? (இவை தெரிந்து கொள்வதற்காகவே கேட்கப்படும் கேள்விகள்)

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/02/1_27.html

ஐயா, சொல்கின்றவர் சொல்லட்டும். விடை சொல்லிக்கொண்டேயிருந்தால் மாளாது. நமக்கென்று வேலை இருக்கிறது. அவைகளைப் பார்க்கலாம். நீங்கள் கொடுக்கும் தமிழமுது பருகக் காத்திருக்கிறோம்.

G.Ragavan said...

http://higopi.blogspot.com/2007/02/blog-post_27.html

கோபி, இது உண்மையான நிகழ்வா? கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக பெங்களூரின் மாற்றங்களைக் கவனித்துக் கொண்டு வருகிறேன். என்னுடைய கவனிப்புகள் எவ்வளவு சரியென்று தெரியவில்லை. ஆனால் அவை என்னுடைய கவனிப்புகள் ஆகையால் சொல்லி விடுகிறேன்.

நான் வந்த புதிதில் பெங்களூரில் மீட்டர் போட்டுத்தான் ஆட்டோ ஓடும். அப்பொழுது பெரும்பாலும் கன்னடர்கள்தான் ஆட்டோ டிரைவர்கள். உள்ளூர்க்காரர்கள். கொஞ்சம் தமிழர்களும் கொஞ்சம் முஸ்லீம்களும் இருப்பார்கள். நானே ஒரு முறை ஆட்டோவில் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட பொழுதும் ஆட்டோக்காரர் ஒழுங்காகக் கொண்டு சேர்த்தார்.

ஆனால் இன்று? பலரும் பல மாநிலங்களில் இருந்தும் ஆட்டோ ஓட்டுகிறார்கள். மீட்டர் என்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. டபுள் ட்ரிபிள் எல்லாம் சாதாரணமாகிக் கொண்டு வருகிறது. காலையில் மடிவாளாவில் இறங்கும் பொழுது மீட்டரில் ஐம்பது ரூபாய் வரும் இடத்திற்குக் கூசாமல் 150 கேட்பார்கள். பேரம் பேசி 100-120க்கு வருவார்கள். சரி. அதாவது விடியற்காலை நேரம். டபுள் என்றாலும் 100 ஆகி விடுகிறதே.

பொதுவில் வெளியில் சென்றால் ஆட்டோ, கடை எதுவானாலும் கன்னடத்திலேயே பேசுவதுண்டு. தெரிந்த தமிழ்க்கடைகளில் மட்டுமே தமிழில் கேட்பது. மற்ற இடங்களில் கன்னடம் புழங்குவதுதான் சரி. குறிப்பாக நீங்கள் சொல்லும் ஆட்டோக்காரர்களிடம் கன்னடத்தில் புழங்குவது நல்ல பயனைத் தரும்.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/02/33.html

என்ன குமரன்? பித்தா பிறை சூடி பாடல் மறந்து விட்டதா? அத்தா தெரிந்திருக்குமே!

ஞானவெட்டியான் ஐயாவின் கருத்துதான் என் கருத்தும். நீங்களும் திருத்தியிருக்கின்றீர்கள். ஆகையால் ஞானவெட்டியான் ஐயாவின் பின்னூட்டம் முதலில் புரியவில்லை. பிறகு புரிந்தது.

ஒரு ஐயம். யாமளை என்றால் இளையவள்..அதாவது இளமையானவள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இதற்கும் சியாமளாவிற்கும் எதுவும் தொடர்புண்டா? சியாமளம் என்பது நிறத்தைக் குறிக்கும் என்று தெரியும். ஆனாலும் அதற்கும் இதற்கும் தொடர்புண்டா என்று கேட்கிறேன்.

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2007/02/blog-post_24.html

multicasting, broadcasting எல்லாம் இறைவன் திருச்செயலில் அன்றே கண்டது உலகம். அதான் அனைவரும் அறிய அன்பைச் சொல்லியிருக்கிறான். கோதையின் பாதையை நாமும் கொண்டால் வாதையை வெல்லலாம்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/02/70.html

அப்படியில்ல வெட்டி. 70க்கு மேல எடுக்கக் கூடாதுன்னு இல்லை. அதுக்கு மேல எடுக்குறவங்க கிரீமி லேயர். அவங்களுக்கு ரிசர்வேசன் கெடையாது. அவ்வளவுதான். ஒங்கள நீங்களே பாத்துக்க முடியும்னு அரசாங்கம் நம்புது. என்னையப் போல பின்னூட்டக்கோட்டுக்குக் கீழ வாழ்றவங்கள நெனச்சுப் பாரு. அவங்களுக்காக அரசாங்கம் கொண்டு வந்த திட்டந்தான் இந்த இட ஒதுக்கீடு திட்டம். புரிஞ்சதா?

G.Ragavan said...

http://nanbanshaji.blogspot.com/2007/02/blog-post_25.html

// Sirajudeen said...
G.Rahavan Said,
//ஆன்மீக உணர்வு என்பது பொட்டலத்தில் கிடைக்கும் பொருள் அல்ல அள்ள. முயற்சி வேண்டும். முனைப்பு வேண்டும். அப்படியில்லாமல் இந்து மதத்திற்கோ இஸ்லாமிற்கோ மாறுவது பயனற்றது.//
உங்கள் கருத்தை பாதி ஏற்றுக் கொள்கிறேன். அதாவது முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இடம் மாறுவது தவறு என்பது தவறான கருத்து. ஏனெனில் பசிக்கிறது என்று உணவு தேவைக்காக சேற்றிலே கையை விட்டால் அங்கே சோறு கிடைக்காது. முதலில் சோறு கிடைக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். பின்பு அங்கே சென்று முயன்று அதை பெற வேண்டும்.//

சிராஜுதீன், தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இஸ்லாமில் இறையுணர்வு கிடைக்காது என்று நான் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருப்பதால் மட்டும் இறையுணர்வு வந்து விடாது என்பது என் கருத்து. அது இந்து மதமானாலும் சரிதான். இஸ்லாம் மதமானால் சரிதான். எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் தேடல் இருந்தால்தான் இறையுணர்வு எய்ய முடியும் என்பது என் கருத்து. Label is not a product என்பதுதான் நான் சொல்வது. மைக்கேல் ஜாக்சனின் மதமாற்றம் அவர் விரும்பியதைத் தரட்டும் என்று நான் ஏற்கனவே வாழ்த்தி விட்டேன். ஒருவர் மதம் மாற (எதிலிருந்து எதற்குப் போனாலும்) விரும்பினால் அது அவர் உரிமை என்பது என் கருத்து. அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்பதும் என் கருத்து.

// அதுபோல மன அமைதிக்கும், நிம்மதிக்கும் சரியான ஆன்மீக பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை அவர் (மைக்கெல் ஜக்ஸன்) இஸ்லாத்தில் கிடைப்பதாக உணர்கிறார்கள். அது நிங்கள் பின்பற்றும் மதத்தில் இருந்தால் அந்த அமைதி பாதையை (ஆன்மீக) எடுத்து வைப்பது தான் சரியான வாதமுறை. அதைவிட்டு விட்டு எல்லாம் பயனற்றது என்பது பயனற்ற வாதம். ஆக பயனற்ற வாதத்தை விட்டுவிட்டு ஏன் பல மனிதர்கள் பிரச்சனைகளிலும், துன்பங்களிலும் சிக்கும் போது மன அமைதியை நாடி இஸ்லாத்தில் தஞ்சமடைகிறார்கள் என்று சிந்தியுங்கள். தெளிவு கிடைக்கும். //

இஸ்லாமில் கிடைக்காதது இந்து மதத்தில் கிடைக்கும் என்று நான் சொல்லிக் கொண்டும் இருக்கவில்லை. அதற்கு இஸ்லாமும் இந்து மதமும் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். இரண்டையும் முழுமையாக அறிந்தவன் இல்லை நான். ஆகையால் உங்களோடு வாதம் செய்ய எனக்கு விருப்பமும் இல்லை. ஒரு கருத்து எந்த மதத்துக் கருத்தாக இருந்தாலும் அதைக் கேள்விப் படுகையில் என் மனதிற்குச் சரியாகப் படுகிறதா இல்லையா என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். அதைத்தான் இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

// இன்னும் சொல்லப் போனால் எந்த மதமும் இல்லாமலும் இறையுணர்வு கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.//

இறைவனே இல்லாமல் இறையுணர்வா? புரியவில்லை. //

நான் சொன்னதைச் சரியாகப் படியுங்கள். மதம் இல்லாமல் இறையுணர்வு என்றேன். இறைவனும் மதமும் ஒன்று என்று நீங்கள் நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2007/02/246.html

செல்வன், சிலப்பதிகாரத்தின் மீது ஈடுபாடும் பற்றும் உடையவன் என்ற வகையில் இந்தப் பதிவை ஆர்வத்துடன் படித்தேன். படித்தேன் என்று சொல்லா விட்டாலும் நல்ல முயற்சி.

இன்றைக்கும் பூம்புகார் சினிமாதான் பலருக்குச் சிலப்பதிகாரம். மிக வருந்தத்தக்க நிலையது. சிலப்பதிகாரம் முறையாகப் படித்தவர் கேட்டவர் அறிவர் உண்மைப் பொருளை.

கண்ணகியும் மணிமேகலையும் சந்திக்கவேயில்லை. அதற்கான சூழலும் இருக்கவில்லை. கோவலன் மாதவியை நீங்குங்கால் மணிமேகலை கைக்குழந்தை. பிறகு நடந்ததுதான் உலகிற்கே தெரியுமே. அப்படியிருக்க....அவர்கள் இருவரும் சந்தித்தால் என்ற கற்பனை...மிக அழகு. மிக ரசித்தேன்.

ஆக வேண்டியிருப்பது ஒரு திருத்தந்தான். மதுரைக்குச் சேவை செய்ய மணிமேகலை சென்றிருக்க முடியாது. அதுவும் பிக்குணியாக. அதுதான் பொருந்தி வரவில்லை. மணிமேகலை வளர்ந்த காலத்தில் கண்ணனிக்குக் கோயிலை இலங்கையிலேயே கயவாகு கட்டியாகி விட்டது.

பெருந்தெய்வம் போலத் தோற்றம் என்று சிலம்பு சொல்லும். நீங்கள் பராசக்தி என்றிருக்கின்றீர்கள்.

பாண்டியன் நெடுஞ்செழியன் செய்தது தவறில்லை என்று கண்ணகி ஒத்துக்கொண்டு அவன் தனக்குத் தந்தை என்றும் ஏற்றுக்கொள்கிறாள் கண்ணனி. ஏன்? கோவலனைத் தட்டிக் கேட்டவன் அவன் ஒருவந்தான். கோவலன் செய்ததையெல்லாம் கண்ணகி பொருத்துக் கொண்டாள் என்று கதை கட்டுகிறவர்கள் சிலம்பு ஒலிகூட கேட்டறியாச் செவிடர்.

கோவலன் தவறு செய்தான். திருந்தியிருக்கிறான். ஏற்றுக் கொண்டாள். அவ்வளவுதான். நீங்கள் சொல்லியிருக்கும் பாங்கு மிகச் சிறப்பு. நன்கு ரசித்தேன்.

தொடரப் போகிறதா? தொடரட்டும். காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2007/03/blog-post.html

நீங்களும் பாத்துட்டீங்க போல. பருத்தி வீரன், மொழி, பச்சைக்கிளி முத்துச்சரம்னு மூணு படம் வரிசைல இருக்கு. எது பாக்கக் கெடைக்குதோ தெரியலையே! பாத்துட்டு கருத்து சொல்றேன்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_3859.html

நல்ல கேள்விகள். நல்ல பதில்கள். சுடர் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது.

// சிலரால் தான் நினைப்பதை எழுதிவிட முடிகிறது.
என்னால் பேச மட்டுமே முடிகிறது. :( //

அதுதான் எங்களுக்கெல்லாம் தெரியுமே! :)

இரண்டு நாள் கேள்வியை எனக்கு நானே கேட்டுப்பார்த்தேன். செய்ய வேண்டும் என்று நினைப்பவை மலை போல முன்னே வந்து நிற்பதைத்தான் காண்கிறேன். ஆகையால் அத்தனையும் செய்வதை விட ஒரு உயில் எழுதி வைத்து விட்டு இரண்டு சாட்சிக் கையெழுத்தையும் வாங்கி வைத்து விட்டு தனிமையை நாடுவேன்.

G.Ragavan said...

http://solvathellamunmai.blogspot.com/2007/02/blog-post.html

// எனது நண்பன் ஒருவன் சொன்னான் “நாங்கள் கல்யாணம் கட்டி பிள்ளை பெற்றாலும் வயசாச்சே என்ற நினைப்பு வராது, ஆனால் எங்களோட படிச்ச ஒருத்திக்கு கல்யாணம் என்றாலே வயசு போன மாதிரி இருக்கடா” என்றான். //

மிக அழகு. ரசித்தேன். :)

கொப்பி என்றால் நோட்டுப் புத்தகமா?

அமிலம் + காரம் -> உப்பு + அப்பு மிகவும் அருமை. எனக்கொரு சித்தர் பாட்டு நினைவிற்கு வருகிறது. வரிகள் மறந்து போயின. கருத்து மட்டும் நிற்கிறது. நாழி உப்பும் நாழி அப்பும் சேர்ந்து நாழி அப்புதான் மிஞ்சும். நாழி என்பது உழக்கு. ஒரு உழக்கு உப்பை ஓருழக்கு நீரோடு சேர்த்தால் நீர்தான் மிஞ்சும். அதுவும் ஓருழக்குதான். ஈருழக்கு அல்ல.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/02/30.html

ஏற்கனவே சில பதிவுகள் முப்பதுக்கு மேல பின்னூட்டம் வாங்கியும் முகப்புல வருது. அதக் கொஞ்சம் பாருப்பா கோ.

G.Ragavan said...

http://pradeepkt.blogspot.com/2007/02/blog-post.html

இந்த பட்ஜெட் விவகாரங்கள் எல்லாம் சரியாப் புரியிறதில்லை. ஆனா பொதுவுல பட்ஜட் சுமாருக்கும் கீழதான் போல இருக்கு. என்னவோ போங்க...மாசச் சம்பளம் வாங்குறவந்தான் ஏமாளி.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/02/70.html

// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
2007ல உங்க ஆசைய பத்தி எழுதனீங்களே அதுக்கு எத்தனை பின்னூட்டம் வந்துச்சி???

மக்களுக்கு பிடிக்கிற மாதிரி எழுதினா தானா வரும். இல்லைனா காசு கொடுத்தாலும் வராது. //

பிடிச்ச மாதிரி எழுதுனா பின்னூட்டம் தானா வருதுல்ல. அப்புறம் ஏம்ப்பா இப்பிடி ரியாக்ஷன்? எனக்குப் பின்னூட்டம் வரலைங்குறதுக்காக நான் சொல்லலை. எனக்கு எது வரனுமோ அது வருது. அது எனக்குப் போதும்.

நான் சொல்ல வந்ததையே நீயும் புரிஞ்சிக்கலை. இந்தச் சட்டத்தால நல்லா எழுதுறவங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பின்னூட்டங்கள் அப்படியேதான் வரும். அதுவுமில்லாம இப்பவே முப்பதுக்கு மேல பின்னூட்டங்கள் வாங்குன பதிவுகளும் முகப்புல தெரியுதே!

// இப்ப க்ரீமி லேயரா இருக்கவங்களை விட புதுசா வரவங்களுக்கு தான் பாதிப்பு அதிகம்...

// அபி அப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி 100 பின்னூட்டம் வாங்கினாரே அவர் என்ன கிரிமீ லேயரா?

படிச்சா அடுத்தவங்க சிரிச்சி சந்தோஷப்படற மாதிரி எழுதினா தானா வரும்... //

எழுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். சிலருக்குச் சிரிச்சாலே போதும். சிலருக்கு அதையும் தாண்டிப் போகனும். எழுத்தைப் பற்றிய கருத்தை எல்லாரும் அறிய விரும்புவது நியாயம்தான். எந்த ஒரு முடிவுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இதற்கும் அப்படியிருக்கும் போலத் தெரிகிறது. எனக்கென்னவோ இது ஓவர் ரியாக்ஷன் போலத்தான் தோணுது. மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க. ஆனால் இது பொறாமையால் சொல்லப்பட்டதல்ல என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் எண்ணம் நிறைவேற எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/02/blog-post_28.html

இந்த எடம்..மலேசியாவுல இருக்குற புத்ரஜயா.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/02/blog-post_28.html

// தேவ் | Dev said...
எல்லாரும் பின்னூட்டம் மட்டும் போட்டீங்க பாருங்கய்யா ஜி.ரா..கேள்விக்குப் பதிலைக் கரெக்ட்டாச் சொல்லியிருக்கார். தாங்க்ஸ் ஜி.ரா. //

அவசரப்படாதீக தேவ். விடை தப்பாம். மை ஃபிரண்டும் சிங்கை நாதனும் சொல்லீருக்காங்க. புத்ராஜாயாவுல ஒரு மசூதி இருக்குது. அது பக்கத்துல இந்த மாதிரி எடவெளி இருக்குது. இங்குட்டிருந்து அங்குட்டுப் பாத்தா இப்பிடித்தான் தெரிஞ்சது. அதுவுமில்லாம அங்க இருக்குற ஒரு பாலத்துலதான் நெறைய வெளம்பரங்க எடுக்குறாங்க. அதுனால அப்படி நெனச்சு சொன்னேன்.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2007/03/blog-post.html

நன்றாக ரசித்தேன். அருமையான கற்பனை. மிக நன்று.

// செந்தழல் ரவி said...
எல்லாம் அந்த ஹொய்சாள மன்னன் மகளால் வந்த வினை...!!!

( ஹொய்சாளருடன் தமிழர்கள் திருமண பந்தம் கொண்டதாக சரித்திரமே இல்லையே உஷா அவர்களே ) //

ரவி, கல்யாணியரோடு சோழர் திருமணத் தொடர்பு வைத்திருந்தனர். ஹொய்சாளர்களோடு பல்லவர்களுக்குத் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சரியாகத் தெரியவில்லை. ஆனால் திருமணம் என்ற அளவிற்கு....ஐயம்தான். சந்திரவதனா இது கற்பனைக் கதை என்று சொல்லி விட்டாரே.