Sunday, April 01, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - ஏப்ரல் 2007

ஏப்ரல் 2007ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

170 comments:

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/blog-post_31.html

ஆகா! தேவு...அப்படியே போட்டுட்டீரே! உண்மைதான் தேவ். கடந்த மாதம் காலில் றெக்கையைக் கட்டிக்கொண்டு பறந்த மாதம். அதனால்தான் பிசி பிசி. :-) அன்னைக்கு திடீர்னு சாட்டிங்குல வந்து கேள்விக்கணைகளைத் தொடுத்ததும் அப்ப என்ன தோணுச்சு அதச் சொல்லீட்டேன். செல கேள்விகள் விட்டுப் போச்சு. அத நீங்க மயிலார் கிட்ட அனுப்பியதால அதுக்கும் பதில் சொல்லியாச்சு. சொன்ன எந்த பதில்லயும் மறுதிருத்தம்னு எதுவும் செய்யலைன்னு உங்களுக்கே தெரியும்.

நண்பர்கள் அனைவரும் வைத்திருக்கும் மதிப்பிற்கு நன்றி பல. கள்ளியிலும் பால் கதையில் பல ஓட்டைகள் உண்டு. முதலில் அதைத் தொடர்ந்து உட்கார்ந்து எழுத முடியவில்லை. எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது எழுத நேர்ந்தது. ஆகையால் மறுபடித்தம் செய்து திருத்தம் செய்யக் கூட முடியவில்லை. அது கதையில் பல ஓட்டைகளையும் தொய்வையும் கொண்டு வந்து விட்டது. ஆனால் சொல்ல வந்ததைச் சொல்லிக் கொண்டே போனதால் கருத்து விட்டுப் போகவில்லை என்று கருதுகிறேன். அடுத்த முறை உங்கள் அனைவருக்கும் பிடித்த வகையில் சிறப்பாக எழுத முயல்கிறேன். நன்றி.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/04/sunday-with-2.html

ஆளுக்கேத்த கேள்வி. கேள்விக்கேத்த பதில். பதிலுக்கேத்த பதிவு. பதிவுக்கேத்த பின்னூட்டங்கள். :-) பாபாவும் சளைக்கலை.

அத்தோடு பாபாவின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். நட்சத்திர வாரத்தில் எல்லாரும் தங்கள் பதிவுகளில் மின்னுவார்கள். ஆனால் அடுத்தவர் பதிவுகளுக்கும் வெளிச்சம் வாங்கித் தந்திருக்கிறார் தேவ். நன்றி தேவ்.

கேள்வி கேட்பது உண்மையிலேயே எளிதன்று. யாரிடம் எதைக் கேட்க வேண்டும் என்று தெரிந்து கேட்டிருக்கின்றீர்கள். என்னுடைய பாராட்டுகள்.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/04/blog-post.html

ஆகா! திருநவேலி அலுவாவா! வாழ்க வளர்க. இருட்டுக்கடையா? சாந்தி ஸ்வீட்சா? சாந்தீன்னா...ஜங்சன்ல இருக்குற சாந்தீல மட்டுந்தான் வாங்கனும். மத்ததெல்லாம் போலி. இருட்டுக்கடைய அஞ்சு மணிக்குத்தான் தெறப்பாங்க. ஆறு மணிக்கெல்லாம் மூடீருவாங்க. ஆனாலும் ஐம்பதுக்கு (கிராமுக்கு) வாழ்த்துகள். :-)

// இம்சை அரசி said...
ஜி.ரா தலைமைல எவ்ளோ பெரிய வரவேற்பு குடுத்தோம். அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லாத ஜியை வன்மையாக கண்டிக்கிறேன்... ;) //

அதானய்யா பெங்களூருல இம்சை அரசியோட கூட்டணி வெச்சுப் பிரம்மாண்டமா எடுத்த விழாவைப் பத்தி ஒன்னுமே சொல்லலையே! அதுல ஒமக்கு டீ குடித்த செம்மல் அப்படீன்னு பட்டமெல்லாம் குடுத்தமே! மறந்து போச்சோ!

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/03/blog-post_30.html

ஆகா! செங்கரும்பின் சாற்றில் செம்மலரின் தேனூற்றி அதன் இனிமையை மொழியாக்கி இசையாக்கி முருகப் பெருமானுக்கு மாலையாக்கிக் கொடுத்தவர்களும் அந்த மாலையை இங்கே கொடுத்த தி.ரா.ச விற்கும் நன்றி பல. இப்படி அடிக்கடி எங்களைத் திக்குமுக்காட வைக்கும் படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/03/205_27.html

வாருமய்யா வாரும்...இப்பவாச்சும் பதிவு போட்டேரே...உம்முடைய வியர்டுகுணங்கள்ள ஒன்னான சோம்பேறித்தனந்தான் காரணமோ! சரி. இப்பவாச்சும் பதிவு வந்துச்சேன்னு பாராட்டுவோம்.

செண்டிமெண்ட்....நானும் கொஞ்சம் அப்படித்தான். யாரும் கஷ்டப்பட்டா செண்டிமெண்ட் வராது. கோவந்தான் வரும். ஆனா சந்தோஷமா இருந்தா ரொம்ப செண்டியாயிருவேன். அடுத்தவங்க சந்தோஷமா இருக்குறதப் பாத்தாலே ஆனந்தக்கண்ணீர் வரும். சோகக்காட்சீல அழாக சந்தோஷமா இருக்குறப்ப ஏண்டா அழுகுறோம்னு தோணும். அதெயல்லாம் பாத்தா வாழ முடியுங்களா!

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/03/blog-post_31.html

இந்தப் பாடலுக்குப் பின்னால் ஒரு சுவையான நிகழ்ச்சி உண்டு. திருச்சி ரயில்வே நிலையத்தில் முதல்வகுப்பில் டி.எம்.எஸ் உட்கார்ந்திருந்தாராம். அப்பொழுது சிறுவயது வாலி இந்தக் கவிதையைக் குடுத்தாராம். படித்த பொழுதிலேயே மெட்டெடுத்து விட்டதாம் டி.எம்.எஸ்க்கு. அந்தப் பாடலை இசையமைத்து அவரே பாடியிருக்கிறார். இப்படி வாலிக்கு வாழ்வளித்துக் காத்தானாம் முருகன். இதை அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வாலி.

மிகவும் அருமையான பாடல் இது. அது சொல்லும் கருத்துகள் எக்கச்சக்கம். கேட்கவும் படிக்கவும் நினைக்கவும் இனியதொரு பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி குமரன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/03/blog-post_27.html

அண்ணாமலையாரின் சொந்த ஊர் கழுகுமலை. அங்குதான் அவர் காவடிச் சிந்துகளை இயற்றி இலக்கியமாக்கினார். மிகவும் அழகான கோயில்.

இந்தப் பாடல் உன்னிகிருஷ்ணன் குரலில் சுகமாக இருந்தாலும் சுறுசுறுப்பாக இல்லை என்பது என் கருத்து. முருகப் பெருமானை வேண்டி வணங்கி காவடி தூக்கிக்கொண்டு ஆடியும் பாடியும் வருகின்ற அடியார் பாடும் பாடலில் சுறுசுறுப்பு தேவை. இதை வேறு யாரேனும் பாடியிருக்கின்றார்களா? சூலமங்கலமோ? சீர்காழியோ? டீ.எம்.எஸ்சோ? பித்துக்குளியோ? சௌம்யா பாடி கேட்டிருக்கிறேன்.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2007/04/weired.html

ஒங்களையும் ஜோதியில இழுத்தாச்சா! சூப்பர்.

டிராபிக் சிக்னல் சமீபத்தில் நான் பார்த்த படம். என்னை மிகவும் பாதித்த படம். மிகவும் அருமையான படம். அதைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். நேரந்தான் கிடைக்க மாட்டேங்குது!

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/04/blog-post.html

அழகு ஆயிரம் உலகம் முழுவதும். இதுல ஆறு மட்டும் சொல்லனும்னா எப்பிடி? ஆறு அழகுதான். அதுனாலதான் ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்னு ஔவையாரு சொல்லீருக்காங்க. இந்த ஆறில்லா பதிவுக்கு அழகு பாழ்னு நீங்க சொல்றீங்க. இப்பத்தான் "நான் பைத்தியம் பைத்தியம்"னு கும்மரிச்சம் போட்டக் கூட்டம் அமைதியாயிருக்கு. அதுக்குள்ள அழகு. நடக்கட்டும். நடக்கட்டும்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/ii-43.html

சமயத்துல ஒதவீன்னு சொல்வாங்க. அது இதுதான்னு நெனைக்கிறேன். காலத்தினால் செய்த உதவி. அவரு உண்மையப் போட்டு ஒடச்சிருப்பாரு. அதுனால என்னென்ன பிரச்சனைகள் வந்ததோ! பார்க்கலாம் அடுத்த பகுதியில்.

G.Ragavan said...

http://manaosai.blogspot.com/2007/04/weird.html

லிப்ட் இருக்கையில் நானும் நடந்து போயிருக்கிறேன். 11ம் மாடிக்கு. ஒரேயொரு முறை. எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக. அதற்காக லிப்ட் பயமெல்லாம் கிடையாது.

லிப்ட் பற்றி பேசுகையில் ஒன்று நினைவிற்கு வருகிறது. இந்தியாவில் பொதுவாக லிப்டுகளில் வெற்றிலை, பான்பராக் போற்றவைகளைத் துப்பக்கூடாது என்று எங்காவது அறிவுப்புப் பலகைகள் பார்க்கலாம். சிங்கப்பூரில் லிப்டில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று அறிவிப்புப் பலகை இருந்தது. அப்படியும் செய்வார்களோ என்று யோசனைதான் வந்தது.

எண்ணகளை நினைவில் வைப்பது. என்னுடைய அப்பாவிற்குத் தொலைபேசி எண்கள் நினைவில் இருக்கும். எண்களையே பயன்படுத்திப் பழகியவர். ஆனால் இப்பொழுது மொபைல் போன்களில் பெயரைத் தேர்ந்தெடுத்து அழைப்பதால் என்னால் எண்களை அவ்வளவு எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. நான் அடிக்கடி மறக்கும் இன்னொன்று பிறந்த நாட்கள், கல்யாண நாட்கள். ஆனால் உங்களுக்கு நல்ல நினைவாற்றல் இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/ii-44.html

எப்படியோ! தொல்லை விட்டது. அந்த மட்டுக்கும் நல்லது.

தரக்குறைவாகப் பேசுவது. சார்...இதை நானும் அனுபவித்திருக்கிறேன். உங்கள் அளவுக்கு அனுபவம் இல்லாத வயதிலேயே. சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு. நீங்கள் சொன்ன நபரைப் போல ஒருவர்....அலுவலகத்தில் என்னுடைய குழுவில் இருந்தார். என்னைப் பற்றித் தாறுமாறாகப் பேசினார். அவர் பேசிய பேச்செல்லாம் சொன்னால்....சீச்சீ என்று இருக்கும். அது பிரச்சனையாகி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதைப் பற்றி வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை. ஆனால் தரக்குறைவாகப் பேசக் கேட்பது என்பது எவ்வளவு கொடுமையானது என்று நீங்கள் சொல்வதை உணர்ந்து கொண்டேன் என்பதற்காகச் சொல்கிறேன்.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/04/blog-post.html

இன்னொன்னு இருக்கே காபி. கதாநாயகி பட்டணத்துல இருந்து பயங்கர மார்டனா பட்டிக்காட்டுக்கு வரனும். ஊருல இருக்குற எல்லாரும் ஜொள்ளு விடனும். அப்ப கதாநாயகியோட அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாரு. கதாநாயகிக்கும் திமிரு எக்கச்சக்கமா இருக்கும். கதாநாயகன் கிட்ட வம்பு செய்வாரு. அப்புறம் கதாநாயகன் திருத்துனப்புறம் காதல் வந்திரும். அப்ப இந்த அப்பா பாத்திரம் மகளைக் கண்டிக்கும். செந்தாமரைதான் இந்த மாதிரி அப்பா வேடத்துல நெறைய நடிச்சாரு. உண்மையிலேயே அவரு பிரமாதமான நடிகர். மனக்கணக்கு படம் பாருங்க. ரொம்ப நல்லா நடிச்சிருப்பாரு.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/04/blog-post_03.html

சென்ற வாரம் சிறப்பு வாரமாகச் சென்றமைக்கு வாழ்த்துகள். நல்ல கலக்கலாக இருந்தது.

அதென்ன ரஜினி பதிவு? நான் படிக்கவே இல்லையே. இப்பவே போய்ப் பாக்குறேன்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/02/blog-post_22.html

தேவ், நீங்கள் ரஜினி ரசிகர் என்று தெரியும். அந்த வகையில் நட்சத்திர வாரத்தில் இந்தப் பதிவு போட்டிருக்கின்றீர்கள். ஆனால் சொல்ல வந்த கருத்துகளோடு முழுமையாகவே ஒத்துப் போக முடியவில்லை. இதை என்னுடைய கருத்தாக மட்டும் எடுத்துக்கொள்ளவும். அட...உங்களுக்கு எதுக்குய்யா டிஸ்கிளைமரு! :-)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_573.html

டீச்சர், ஆயிரம் சொன்னாலும் இந்தக் கைவினைப்பொருள்கள் விஷயத்துல மேற்கு வங்கத்த அடிச்சுக்கவே முடியாது. இடைத்தரகெல்லாம் கிடையாது. ரொம்பக் கொறைஞ்ச விலைல நல்ல தரமான பொருட்கள். டெர்ரோகோட்டா ஹரிக்கேன் விளக்கு முப்பது ரூவா. அந்த வெளக்குல இருந்த வேலைப்பாட்டுக்கு மத்த ஊர்கள்ள 300-400 ரூவா போடுவாங்க. பத்து ரூவாய்க்கு துர்க்கா முகங்கள். டெர்ரகோட்டாதான். ஆனா திருத்தம்னா திருத்தம்..அப்படியொரு திருத்தம். அதே மாதிரி பல பொருட்கள். உண்மையிலேயே நான் அசந்துட்டேன்.

G.Ragavan said...

http://kaattaaru.blogspot.com/2007/04/blog-post_03.html

இதுதான் முதலிரவு அனுபவமா? நாங்கூட என்னவோ ஏதோன்னு ஓடியாந்தேன். :-) நல்ல அனுபவந்தான். பனியனோட செருப்பில்லாம பொதருக்குள்ள உக்காந்திருக்குறதும். :-))

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/04/blog-post.html

ஒத்துக்கிறோம் ஒத்துக்கிறோம். எந்தச் சந்தேகமும் இல்லை. :-)

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/ii-45.html

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆள்பவன் ஆண்டவன் என்று சொல்வார் கண்ணதாசன். அது போல ஒரு வங்கிக் கிளைக்குள்ளே எத்தனை ராஜ்ஜியங்கள். அடடா! அரசாளும் ஆசை ஆண்டிக்கும் உண்டு என்பது உண்மை போலும்.

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2007/04/blog-post_3569.html

வருத்தமான செய்தி. அவர் ஆன்மா அமைதி பெற ஆண்டவன் அருளட்டும்.

G.Ragavan said...

http://nirmalaa.blogspot.com/2007/04/namesake-mira-nair.html

வாங்க நிர்மலா வாங்க. கொல்கொத்தா பத்தி எழுதுறதுக்கு நீங்கதான் இருந்தீங்க. திரும்பவும் கொல்கொத்தா காதை தொடருதுன்னு நெனைக்கும் போது சந்தோஷமா இருக்கு. கொல்கொத்தா பத்தி நெறையச் சொல்லுங்க.

நீங்க விமர்சித்துள்ள படத்த இன்னமும் பாக்கலை. பார்க்கலாம்னு ஒங்க விமர்சனம் சொல்லுது.

நீங்க சொன்ன ஒரு விஷயம் உண்மை. ரசிப்புத்தன்மை...அதிலயும் அடுத்தவரைத் தொந்தரவு செய்யாம ரசிக்கும் தன்மை நம்மவங்களுக்கு இன்னும் வரனும். அளவுக்கு மீறிய ஒலி நம்மவர்களுக்குப் பிடிக்கிறது. ஏனென்று தெரியவில்லை.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_31.html

நீங்களுமா! சரி. சரி. நம்ம கூட்டணியே இப்படித்தான் இருக்கும் போல.

புத்தகத்த இப்பிடியெல்லாமா படிப்பீங்க? அதெப்படி முடியுதுங்க? நமக்கெல்லாம் புத்தகம் படிக்கிறதுங்குறது அமைதியா செய்யனும். இப்பல்லாம் வேற வழியில்லாம பஸ்லயும் படிக்கிறதுண்டு. ஆனா வீட்டுல சாஞ்சு உக்காந்துக்கிட்டு பிளாக் டீ போட்டுக்கிட்டு புத்தகத்துக்குள்ள முங்குனா...அடடடடா!

ஒங்களோட நீங்களே சண்டை போட்டீங்களா? இயக்குனர் ஷங்கர் பாத்திருந்தா அந்நியள்னு படம் எடுத்திருப்பாரு. தப்பிச்சுட்டாரு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_573.html

// துளசி கோபால் said...
வாங்க ராகவன்.

அடடா..நீங்க சொன்ன பக்கமெல்லாம் கட்டாயம் போய்த்தான் தீரணும்போல
இருக்கே!
கோபால், 'பதீக்' படுக்கை விரிப்பும், தக்ஷிணேஸ்வரர் கோயில் வாசலில் விற்கும்
பித்தளை அகல்களும்தான் வாங்கிவந்தார்(-: //

டீச்சர், தொக்கினேஷ்வர் கோயிலே மிக அழகு. ரொம்ப ரொம்ப. அதுல மகாகாளியைச் செம்பருத்தி மாலைகளோட பார்க்கின்ற காட்சி இருக்குதே! மகமாயி!

அங்கயும் நல்ல கைவினைப் பொருட்கள் கெடைக்கும். அங்க போனா லுச்சியும் கூகுனியும் சாப்பிடக் கிடைக்கும். லுச்சிங்குறது பூரி மாதிரி. கூகுனிங்குறது பருப்பு வகை. ரொம்ப நல்லாயிருக்கும்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/04/zen-garden.html

டீச்சர்...இப்பல்லாம் எதுவுமே சிம்பிள் பேக்கிங்கா இருக்கனும். யோகா ஃபார் டம்மீஸ். இப்ப ஜென் ஃபார் டம்மீஸ் (ஒங்கள டம்மீன்னு சொல்ல வரலை) பொதுவா இப்பிடிக் கெடைக்குதுன்னு சொல்றேன். சரி. வாங்கீட்டீங்க. அதுனால எதுவும் பலன் தெரிஞ்சா சொல்லுங்க.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/blog-post.html

பாமகவின் அணுகுமுறை எப்பொழுதும் இது போன்ற வகையில்தான் இருந்திருக்கிறது என்பது என் கருத்து. குஷ்பூவாகட்டும் தமிழாகட்டும் இப்பொழுது கிரிக்கெட்டாகட்டும்...இதனாலேயே அது சொல்ல வருவது திசை மாறிப் போய்விடுகிறது. அந்தக் கட்சியின் கொள்கைகள் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகையால் அதில் எவ்வளவு நல்லது கெட்டது என்று விவாதிக்க என்னால் முடியாது. ஆனால் இது போன்ற செயல்களை விடுப்பது நன்று என்பதே என் கருத்து.

அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வெறி அளவுக்கு மீறிப் போயிருந்ததையும் சொல்லியே ஆக வேண்டும். விளையாட்டு வீரர்களைக் கதாநாயகர்களாக்கிக் கடவுளாக்கிக் கொண்டாடிய முட்டாள்தனத்தின் விளைவு...கிரிக்கெட் வீரர்களின் இன்றைய பேச்சு. தன்னுடைய நடத்தையைப் பற்றி இதுவரை ஒருவரும் குறை கூறியதில்லை என்று நாடகம் போடுகிறார்கள். ஆனால்..அந்த வீரர்களை அப்படிக் கொண்டாடியதன் பலன் இதுவரை யாரும் குறையைச் சுட்டிக்காட்டவில்லை. இன்று ஒருவர் சுட்டிக்காட்டியதும் சுருக்கென்று கோவம் வருகிறது. கண்ணீர் வருகிறது. அந்த மாநிலத்து நாளிதழும் பேட்டி எடுத்து அவர்கள் மேல் ஒரு பரிதாபத்தை வரவழைக்க முயற்சி எடுக்கிறது. இன்றைய நிலையில் இந்திய விளையாட்டுத் துறையின் சாபக்கேடு கிரிக்கெட் என்பது மறுக்க முடியாத உண்மை.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/blog-post.html

// டி.பி.ஆர்.ஜோசஃப் said...
வாங்க ராகவன்,

அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்து இருக்கத்தான் செய்யும். அதை வெளிக்காட்டுவதிலும் தவறில்லை. ஆனால் அதற்கு கழுதை சவாரி தேவைதானா? //

நிச்சயமாகத் தேவையில்லை. பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஆதரவு என்பது வேறு. இப்பொழுது இவர்கள் செய்திருப்பது என்பது வேறு. இது ஏற்கத்தக்கது அல்ல என்பதே என் கருத்தும்.

// சாபக்கேடுங்கறதெல்லாம் பெரிய வார்த்தை. ரசிகர்களென்றால் உலகம் முழுவதும் அப்படித்தான். அது கிரிக்கெட் மட்டுமல்ல. கால்பந்து ரசிகர்கள் செய்யாத அட்டகாசமா? விளையாட்டு ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. இது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. உலகெங்குமுள்ள ரசிகர்களும் அப்படித்தான். //

ரசிகர்கள் அப்படித்தான் என்று சொல்வது முழுமையாக சரியாகாது. உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்கள் பொறுப்பை உணர்ந்து நடக்கின்றார்கள். அந்தப் பொறுப்புணர்வு இப்பொழுது யாருக்கும் இருப்பது போலவே தெரியவில்லை. அதுவுமில்லாமல் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் பேராசை. விட்டால் ஐம்பது வயது வரைக்கும் மட்டையைத் தட்ட ஆசைப்படுகிறார்கள். ஏதோ கிரிக்கெட் மட்டையோடே பிறந்த நவீன கர்ணர்கள் போலப் பேச்சு வேறு.

// ஆனால் அதை பெரிதுபடுத்தி அரசியல் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் இறங்குவதெல்லாம் அழகல்ல.. //

இது தவறென்று நானும் ஒத்துக்கொள்கிறேன்.

// இதுதான் சந்தர்ப்பம் என்று தாய்நாட்டிற்காக பல போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய மூத்த விளையாட்டு வீரர்களை பழித்துரைப்பதும் விவரமறிந்தவர்கள் செய்யக்கூடிய காரியமல்ல. //

பழித்துரைப்பது யார் என்பதையும் பார்க்க வேண்டும். ஒருவேளை அவர் அவையில் சொன்னது இத்தனை நாள் ஏறாமல் இன்று அம்பலத்தில் சொல்கின்றாரோ என்னவோ! எது எப்படியோ! இன்றைக்கு இருக்கும் சீனியர் விளையாட்டர்கள் வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதில் ஐயமில்லை.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/04/blogger-hacking-project-ver-10.html

:-) என்ன மருத்துவரே(இந்தப் பட்டம் ஒங்களுக்கும் பொருந்துந்தானே!

உப்புமா கிண்டி வையடி
அதுக்கு பக்குவம் என்ன சொல்லடா
காப்படி தண்ணி ஊத்தி
அரப்படி ரவா போட்டு
வேப்பெண்ண ஊத்திக் கிண்டி
உப்புமா கிண்டி வையடி
அதுக்கு பக்குவம் என்ன சொல்லடா

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/blog-post.html

உண்மைதான் ஜோசப் சார். நாம் பதிவை விட்டு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிப்பது நல்லதே. கண்டிப்பாகச் செய்ய வேண்டும். தமிழிசை நிகழ்ச்சிகள் நடத்தியது போல அதற்கும் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது செய்திருப்பது அல்ல. இதனால் பரபரப்பு உண்டாகுமே தவிர பாரம்பரிய விளையாட்டுகள் பிழைக்காது.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/04/2.html

நல்ல பதிவு. மிகவும் ரசித்தேன். அழகான கணவன் மனைவி ஊடலை ஆன்மீகத்தோடு கலந்து சொல்லும் பொழுது..அருமை. பாண்டி நாட்டாளைச் சொல்லி சோணாட்டாளை மாற்றியமையும் சிறப்பு. பாண்டி நாடு பண்புடைத்து. படிப்புடைத்து. பல்சுவையுடைத்து. இன்னும் நல்லன பலவுடைத்து.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/04/blog-post.html

ஆகா! நமது வரவேற்பு பற்றி இவ்வளவு சிறப்பாக பதிவு போட்டமை சிறப்போ சிறப்பு.

நானும் சாக்குலேட்டுகளை நண்பர்களுக்குக் கொடுத்திட்டேன். ஆகையால எங்கிட்டயும் படமில்லை. ஜி கொடுத்த சாக்லேட் நல்லாத்தான் இருந்திருக்கனும்.

ஜி இந்நேரம் திரும்ப வந்திருக்கனுமே! என்னாச்சுன்னு தெரியலையே!

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/03/17.html

அருமை அருமை. அள்ளிப் பருகியும் திகட்டாத தெள்ளிய தமிழமுதைச் சொல்லிச் சொல்லி முருகனை நினைத்திடும் தங்களது திருப்புகழ் விளக்கங்கள் அருமையோ அருமை. எப்படி இந்தப் பதிவு என் கண்களில் இருந்து தப்பியது! தப்பித்தாலும் திரும்ப வந்து முருகன் அருளை என்னிடம் எப்படி ஒப்பித்தது. தப்பித்ததும் ஒப்பித்ததும் முருகன் எண்ணம் என்று எடுத்துக் கொண்டு பதிவுக்கு வருகிறேன்.

எனக்குப் பிடித்த திருப்புகழ்களில் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அதிலும் ஏராரு மாடகூட மதுரையில் மீதேறி மாறியாடும் இறையவர் என்ற வரிகள் மிகவும் பிடிக்கும். பாலதேசிகன் என்பவர் பாடிய பாடலும் கேட்டுள்ளேன். பித்துக்குளி பாடிய பாடலும் கேட்டுள்ளேன். என்னை மயக்கி முருகனோடு இயக்கிச் சிறப்பிக்கும் அருமையான திருப்புகழ்.

வழக்கமாக கவிதை வடிவில் சுருங்கச் சொல்லும் நீங்கள்...இந்த முறை அழகாக விரிவாக ஆடற்கதைகளைச் சொல்லிய பாங்கு சிறப்பு. மிகச் சிறப்பு. முருகனருள் முன்னிற்கட்டும்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/03/17_24.html

// "சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும்" //

இந்த வரிகளுக்குச் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். வீரமாது என்றதும் அது வள்ளியோ என்பர் சிலர். ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது திருமகள். அதை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக அருமையான விளக்கம்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/03/17_24.html

// குமரன் (Kumaran) said...
இராகவனின் இந்த இடுகையைப் பாருங்கள். அவர் இந்த இடுகையைத் தொடங்கும் போதே 'கற்பு மணம் தெய்வயானை; களவு மணம் வள்ளி.' என்று தான் தொடங்குகிறார்.

http://iniyathu.blogspot.com/2006/04/13.html //

உண்மைதான் குமரன். நான் எழுதிய பதிவுதான் அது. அநுபூதிக்குப் பொருள் சொல்கையில் அதைக் குறிப்பிட்டேதானே ஆகவும் வேண்டும்.

வள்ளியோடும் தெய்வயானையோடும் முருகப் பெருமானை வணங்கவோ தொழவோ துயர் நீக்க அழவோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதையும் அறிக. :-)

வல்லிமாரிருபுறமாக வள்ளியூறை பெருமானே! (விஎஸ்கே, இந்தத் திருப்புகழுக்கும் விளக்கம் சொல்லுங்களேன்.)

G.Ragavan said...

http://2cinaustralia.blogspot.com/2007/04/blog-post.html

படங்கள் மிக அருமையாக வந்துள்ளன. அதென்ன தெப்பக்குளமா? செயற்கையாக உருவாக்கியிருக்கின்றார்களா? அதற்கு எப்படி தண்ணீர் நிரப்புகிறார்கள்?

மயில் மேல் அமர்ந்து துயர்களுக்குத் துயில் கொடுக்கும் முருகனைக் காண அழகோ அழகு!

G.Ragavan said...

http://higopi.blogspot.com/2007/04/blog-post_05.html

பெத்தவங்க அப்பிடி இப்பிடி யோசிச்சி ஒரு பேரு வெச்சா....அத அப்படியே பயன்படுத்த முடியலை பாத்தீங்களா! நானும் வந்த புதுசுல எல்லாரும் ராகவனையும் டோண்டு ராகவனையும் கொழப்பிக்கிட்டிருந்தாங்க. அப்ப படம் கூடப் போடலை. நட்சத்திர வாரத்துக்குப் படம் போட்டேன். அப்பத்தான் ராகவன் டோண்டு ராகவன் அல்ல..ஜி.ராகவன்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. இப்பவும் பாருங்க நாந்தான் இம்சை அரசின்னு சொல்றாங்க. என்னங்க இது? நாந்தான் என்னோட பேரப் போட்டு போட்டவப் போட்டு எழுதுறேனே...அப்புறம் எதுக்கு இன்னொரு ஐடி. ஜிராவுக்கு அதெல்லாம் தேவையில்லை. சரியோ தப்போ...தனக்குத் தெரிஞ்சத தானே சொல்லீட்டுப் போறதுதான் எனக்குப் பிடிக்கும். சரி விடுங்க.

இந்த ஹாய் பாய் எல்லாம் வேண்டாம். தகடூர் இணைப்பு நல்லாத்தான் இருக்கு. அதியமான் நலமா? பேசாம ஒங்களத் தகடூரார்னு கூப்பிட்டுறலாமா?

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2007/04/blog-post.html

அடடே! அவ்வளவு அவசரக்காரரா நீர்! புரிகிறது புரிகிறது. புஷ்ஷூருக்குப் போகையிலேயே நெனச்சேன். இப்பிடித்தான் ஏதாவது இருக்குமுன்னு. :-))))))

தேடுதல் வாழ்க்கைக் கின்பம் அதற்கின்பம்
நாடி முயங்கப் பெறின்

இது திருவள்ளுவர் சொன்னதில்லை. நான் சொல்றது.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/04/lyrics.html

என்ன கொடுமை சரவணன் இது! இன்னொரு கதாநாயகனப் புகழ்ச்சிப் பாட்டா! இதற்குத் திறந்தது கவிதையின் பூட்டா! :-( அய்யனாரிடம் கத்தி வாங்கிப் பென்சில் சீவனுமாக்கும்! வைரமுத்துத் தனமான வரிகள். பாட்டைப் படிக்கையில் ஒன்றும் சிறப்பாக இல்லை. ரகுமானின் இசையும் பாடகரின் குரலும் ஏதேனும் மாயம் செய்திருந்தால் பாட்டைக் கேட்கலாம்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/04/blog-post.html

எங்கிருந்தோ வந்தான் என்று ஒரு தமிழ்ப்படம் வந்தது. அது ஒரு மலையாளப்படத்தின் தமிழாக்கம். அந்த மலையாளத்திரைப்படம் அதிபயங்கர வெற்றி பெற்ற திரைப்படம். காரணம்? அதீத மகிழ்ச்சியும் அதீத சோகமும் மாறி மாறித் தாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை. தமிழில் அது முழுக்கவே காணாமல் போய் விட்டது. கிட்டத்தட்ட அந்த மலையாளப்படத்தின் வகையில் உங்கள் கட்டுரை. அதீத மகிழ்ச்சியுடன் படிக்கையில் அதீத சோகம். முருகா!

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/04/195.html

பாட்டு ரொம்பச் சரியா வந்திருக்கு. இதத்தான் ஒரு பாட்டுல

தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும்
தள்ளாடி நடந்தா ஜின்னின்னு இருக்கும்
என்னென்ன கவலை என்னென்ன வருத்தம்
எப்போதும் வாழ்க்கை நல்லாருக்கும்
ஓ பார்வதி
பார்வதி அல்ல தேவதாஸ்
சந்திரமுகி நான் சந்திரமுகி
லக்கலக்க லக்கலக்க லக்கலக்க லக்கலக்க

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/03/blog-post_31.html

நல்ல பதிவு கோவி.

ப்ரத்யேகம் என்பதற்கு தனிப்பட்ட என்று சொல்வது பொருந்தும். அத்தோடு ப்ரதானம் என்பது முதன்மை. நீங்கள் சொன்னது சரியே. நிதானம்....சொல்லவே தேவையில்லை. பொறுமையேதான். நிதர்சனம் என்றால் என்னவென்று அப்பட்டமாகச் சொல்லிவிட்டீர்களே. இதற்கு மேல் என்ன சொல்வது. இவைகளையே பயன்படுத்தலாம்.

G.Ragavan said...

http://sirumuyarchi.blogspot.com/2007/04/blog-post_4176.html

முருகு என்றாலே அழகு. அப்படியிருக்கையில் அழகு என்றதும் "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்ற பாடல் நினைவிற்கு வந்தது வியப்பில்லை. மாறாக சிறப்பு.

குழந்தைகள் அழகுதான். அமிழ்தினும் ஆற்ற இனிதென்று குழந்தை உழப்பி ஊட்டும் உணவு என்கிறாரே வள்ளுவர்.

மத்த எல்லாத்துலயும் ஒத்துக்கிறேன். ஆனால் பெண்கள் மட்டுந்தான் அழகுங்குறத ஒத்துக்க முடியாது. மயிலில் ஆணுக்குத் தோகை. ஆனையில் ஆணுக்குக் கொம்பு. குயில் ஆணுக்குக் குரல். இப்படி எதையெடுத்தாலும் ஆணுக்கு ஒரு சிறப்பிருக்கும். ஆக ஆணுக்குப் பெண்ணழகு. பெண்ணுக்கு ஆணழகு என்பதே உண்மை.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/blog-post_05.html

கேட்டுக் கேட்டு உளமுருகி கண்ணீர் பெருகி அன்போடு முருகா முருகா என்று சிந்திக்கவும் செய்த அற்புதப் பாடல் இது. அதை அருமையான முறையில் அறிமுகம் செய்திருக்கின்றீர்கள். நன்றி. நன்றி.

அத்தோடு அந்தச் சொற்பொழிவு விளக்கம் மிக அருமை. ரசித்தேன்.

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2007/04/blog-post_06.html

அது குதிரை அல்ல. குதிர். மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பதே சரி. ஆற்றில் ஆங்காங்கே மண் குதிர் குதிராக இருக்கும். அந்தக் குதிரில் கால் வைத்து ஆற்றைக் கடக்கலாம் என்று நினைத்து காலை வைத்தால் மண் உள்ளே போகும். ஆற்றில் விழ வேண்டியதுதான். அதைத்தான் மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பார்கள். யையைச் சேர்த்தது யாரென்று தெரியவில்லையே!

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/04/195.html

// துளசி கோபால் said...
'தெரியல'யில் வந்திருக்கறது 'புரியல'

எல்லாருக்கும் ஒரே பதில்தான் கேட்டோ:-) //

என்ன டீச்சர் இது! நாங்க மட்டும் எல்லாம் புரிஞ்சிக்கிட்டா பின்னூட்டம் போடுறோம். ஏதோ குத்துமதிப்பா எதையோ தட்டி விட்டுக்கிட்டிருக்கோம். அம்புட்டுதேய்ங்.

// ramachandranusha said...
ஏண்டாப்பா ராமனாதா, இப்படி ஆளு ஆளுக்கு "பின்" நவீனத்துவ எழுத ஆரம்பிச்சா எப்படி? ஜீராஆஆஆ நீயும் செட்டுல சேர்ந்தாச்சா நற நற நற :-) //

நீங்க வேற உஷா. பின்நவீனத்துவத்துல ஒன்னும் புரியாத நிலையில புரியாத மாதிரி ஒரு பின்னூட்டம் போட்டா அது பின்(னூட்ட)நவீனத்துவம் ஆயிருது பாருங்க. அதுதான் நான் செஞ்சிருக்குறது.

G.Ragavan said...

http://pirakeshpathi.blogspot.com/2007/04/5.html

மிகவும் அருமையான பாடல். என்னென்னவோ எழுதிவிட்டோம் என்ற ஆணவம் ஔவைக்கு. அப்பொழுது பாடம் சொல்கிறான் முருகன். தோற்ற பிறகு ஔவைக்குத் தோல்விக்குப் பிறகு வரும் ஒரு வேகவுணர்ச்சி வரும். "அடடே! மானம் போச்சே! இனிமே எப்பிடித் தூங்குறது." அந்தப் புலம்பல்தான் இந்தப் பாட்டு. நல்ல பாட்டு. நல்ல விளக்கம்.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/04/zero.html

மிகவும் அருமையான பதிவு ஓகை. சுழி என்ற தலைப்பைப் பார்த்ததும் நினைவில் ஓடியவை. ஆசிரியர் சுழிப்பது, சுழியில் அகப்படல், தலைச்சுழிகள். நீங்களும் மற்றவர்களும் ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்.

சுழி என்பது வடிவாகுபெயர். சுழிக்கப்பட்டிருப்பதால் சுழி. ஆகையால் பூச்சியத்திற்குச் சுழி என அழைத்தல் சிறப்பே.

ஆனால் சுழிப்பிறை என்பது நிலவிலி நிலையைக் குறிக்கும் என்று நான் எண்ணவில்லை. வட்டமான பிறை என்பதே சுழிப்பிறை என்றாகும். இதற்கு வேறு பெயர் தேடுதல் நன்று என்று தோன்றுகிறது.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/04/blog-post_08.html

சிற்றன்னை என்ற புதுமைப்பித்தனின் கதையின் தாக்கத்தில் விளைந்ததுதானே உதிரிப்பூக்கள். இனிய பாடல்கள் நிறைந்த அருமையான படம்.

// SurveySan said...
உதிரிப்பூக்கள் சின்ன வயசுல பாத்தது. இப்ப பாக்கலாம்னா, எங்கயும் கிடைக்க மாட்டேங்குது. தேடிக்கிட்டே இருக்கேன்.

DVD/VCD எங்கயாவது விக்கராங்களா? //

என்ன சர்வேசன்? எந்த ஊர்ல இருக்கீங்க? மோசர்பேயர் பத்திப் பதிவு போட்டது நீங்கதானே? மோசர்பேயர் டிவிடி உதிரிப்பூக்கள் 34 ரூவாய்க்குக் கிடைக்குது. நானும் வாங்கீருக்கேன். சென்னைல இருந்தீங்கன்னா சங்கராஹால்ல இருக்குற சவுண்டு சோன்ல முயற்சி செஞ்சு பாருங்க. மதுரைல இருந்தீங்கன்னா..பழையபஸ்டாண்டுல வரிசையா பல கடைகள் இருக்கு. மத்த ஊர்கள்ளயும் கிடைக்கனும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/04/blog-post.html

வாப்பா வா வெட்டி. அழகு பத்தி ஒனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லீட்ட. ஆனா நீ சொல்லாம விட்ட அழகுகள் இன்னும் இருக்கேப்பா! ;-)

குழந்தை அழகுதான். ஏனென்றால் குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா. ஆகையால்தான் தெய்வத்தைக் கூட நாம் குழந்தை வடிவில் பார்க்கிறோம்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/ii-46.html

என்ன அவரு ஆப்பீசுக்குத் தண்ணியப் போட்டுட்டு வந்துட்டாரா! அது ராசாபாசமாயிருக்குமே! என்னாச்சோ! சரி. அடுத்த பதிவுல படிச்சிக்கிறேன்.

G.Ragavan said...

http://vettiyaan.blogspot.com/2007/04/blog-post.html

மிகச்சிறப்பு. சுடர் மீண்டும் ஒளிரத்தொடங்கியுள்ளது. அருமையான தகவல்கள். இன்றைய நிலையை அப்பட்டமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள்.

அடுத்து சுடர் அனுசுயாவிடம். காத்திருக்கிறேன் அவரது பதிவிற்கு.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2007/04/blog-post.html

லிவிங் ஸ்மைல் வித்யா, நான் ஒரு பதிவு போட வேண்டுமென்று இருந்தேன். ஆனால் எழுத நேரம் கிடைக்கவில்லை என்பதற்கான எழுதாமல் இருக்கிறேன். ஆனாலும் இந்தப் பதிவு அதை ஒட்டியே இருப்பதால் பின்னூட்டமாகச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

ரஜினி திருநங்கையாக நடிப்பாரா? நிச்சயமாக நடிக்க மாட்டார். அதை அவர் ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள். ரஜினி மட்டுமல்ல எல்லா தமிழ்க் கதாநாயகர்களும் அதை விரும்ப மாட்டார்கள். ஆனால் தெலுங்கில் ஒரு முன்னணி கதாநாயகர் செய்திருக்கிறார். அதும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில்.

சமீபத்தில் ஐதராபாத் செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு கடையில் தெலுங்கு விசீடிக்களைப் பார்க்கையில் அந்தப் படம் மட்டும் பளிச்சென்று தென்பட்டது. கருப்பு வெள்ளைப்படம். என்.டி.ராமராவ் நடித்தது. படத்தின் பெயர் நர்த்தனஷாலா. சாவித்திரி அதில் நடித்த மற்றோரு பிரபலம்.

கதை எல்லாருக்கும் தெரிந்த மாபாரத அஞ்ஞாதவாசக் கதை. அதில் பிருஹன்னளை என்ற திருநங்கையாக அர்ச்சுனன் மறைந்திருப்பான். அந்தப் பாத்திரந்தான் என்.டி.ராமாராவ் நடித்தது. அப்பொழுது அவர் கிருஷ்ணராகவே மக்களால் கொண்டாடப்பட்டவர் என்பதை உணர்ந்துகொண்டு அந்தப் பாத்திரத்தை அவர் தேர்ந்தெடுத்தற்கான துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.

சரி. அர்ச்சுனன்..அது இது என்று வியாக்கியானம் பேசலாம். ஆனால் படத்தில் முக்கால் பொழுது நளினமாக பெண்ணியலுடைகளோடு அவர் நடித்திருப்பது நிச்சயம் துணிச்சல்தான். பாராட்டுக்குரியதுதான்.

தமிழியக்குனர்கள் எல்லாரும் சாராய வியாபாரிகள். சில வெற்றி வியாபாரிகள் பிரியாணிக்கடையும் வைத்திருக்கிறார்கள். மற்றபடி தமிழ்சினிமா மிகவும் கீழ்த்தரமாகப் போய்க்கொண்டேயிருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்தும். கதாநாயக புகழ்ச்சிப் பாடல்களும்.....நீங்க ஊதுறீங்களா..நான் ஊதட்டுமா பாடல்களும்தான் மலிந்து கிடக்கின்றன. உங்களுடைய விமர்சனத்தின் கருத்துகளுக்கு நான் உடன்படுகிறேன்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2007/04/blog-post.html

வருந்தத்தக்கது. மறைந்திருந்து அம்பு விடுவதில் என்ன இன்பமோ! உங்கள் முடிவிலிருந்து உங்கள் மனம் புரிகிறது. சிறிது பொறுத்திருப்போம். பிறகு பதிவுலகில் பின்னூட்டங்கள் இட்டுக்கொள்ளலாம். துணைக்கு நாங்கள் உண்டு.

// உண்மை தெரிந்தவன் said...
உண்மைத்தமிழன்!

அந்த சைக்கோ உடனே அவனது சல்மா அயூப் என்ற வலைப்பூவையும், இந்த போலி வலைப்பூவையும் டெலிட் செய்யாவிட்டால் அவன் சைபர் போலிஸின் வருகையை எதிர்நோக்க வேண்டியிருக்கும். போலிஸ் அவன் வீட்டுக்கோ அல்லது கிண்டியில் இருக்கும் அலுவலகத்துக்கோ எப்போது வேண்டுமானாலும் வரலாம். //

கிண்டியா? எப்படிய்யா இதெல்லாம் கிண்டிக்கிண்டி எடுக்குறீங்க! கிண்டீல யாரு வலைப்பதிவாளர் இருக்கா? யோசிக்கிறேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/01/blog-post_116875960380036196.html

முருகன் என்ற பெயரைச் சொல்லும் பொழுதும் பற்றிக் கொண்டு வரும் ரவி. :-) ஆம். இன்பம், பெருமை, புகழ், செல்வம், வீடுபேறு ஆகியவை நம்மைப் பற்றிக் கொண்டு வரும்.

முத்தமிழ்க்கடவுளின் முந்துதமிழ்ப் பெயருக்குள்ளே அனைத்து நலன்களும் இருக்கையில் சொல்லச் சொல்ல இனிக்காமல் எப்படி இருக்கும்? அப்படி இருந்தால் நாவில் ஏதேனும் கோளாறு என்றுதான் பொருள்.

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் கவியரசரின் பாடல்வரிகளை இசையரசி பாடிக் கேட்கையில் சுகமோ சுகம். நல்லதொரு பாடல்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/04/blog-post.html

உண்மைதான் டீச்சர். தாஜ்மகாலை விடப் பழசு. இது அக்பர் காலம்னா...அவருக்குப் பின்னாடி வந்த ஷாஜகாந்தானே தாஜ்மகாலக் கட்டியது. கடந்த ஐநூறு அறுநூறு ஆண்டுகளுக்குள்ள வடக்குல எழுந்த பெரிய கட்டிடங்கள் இன்னைக்கு நெறைய நிக்குது. ஆனா நம்மூர்ல அந்த சமயத்துலதான் அடிபட்டு மிதிபட்டு ஒழுங்கா ஒன்னும் எழுந்திருக்கலை. மதுரைல இருக்குற திருமலை நாயக்கர் மகாலும் இந்தக் காலகட்டந்தான். ஆனா நெலமையப் பாருங்க? அஞ்சுல ஒரு பங்குகூட இப்ப இல்லையாம். அரண்மனையோட ஒரு வாசலும் மீனாட்சியம்மன் கோயிலும் பக்கபக்கமா இருந்துச்சாம்.

இன்னொரு தகவல். இஸ்லாமியர்களோட கல்லறைல அது ஆணா பெண்ணான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது சொல்லுங்க? அந்தக் கல்லறை மேல இருக்குற சின்னத்த வெச்சுத்தான். பேப்பர் அல்லது எழுதும் அட்டை மாதிரி இருந்தா அது பெண். எழுதுகோல் அல்லது எழுதுகோல் வைக்கிற பெட்டி மாதிரி இருந்தா அது ஆண். :-) இத நான் நூர்ஜஹானோட கல்லறைல தெரிஞ்சிக்கிட்டேன். :-)

G.Ragavan said...

http://emadal.blogspot.com/2007/04/blog-post_07.html

மணிசித்ரதாழு, சந்திரமுகி ஆகிய இரண்டு படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நேர்மையாக விமர்சிக்க வேண்டுமென்றால் மணிசித்ரதாழு ஒரு சிறந்த படம். அது இயல்பு நடையிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தாலும்..மிகச் சிறப்பான படம். சந்திரமுகி...ஜோதிகா காட்சிகளைத் தவிர மற்றவை எல்லாம் வெறும் கதாநாயகன் புகழும் அபத்த நகைச்சுவையும். சந்திரமுகியின் வெற்றி வீச்சு எல்லாம் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதற்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு வந்த மலையாளப்படம் தேவைப்படுகிறதே! இந்த வீச்சை என்ன சொல்வது? உண்மையைச் சொல்லப் போனால் இன்றைய நிலையில் தமிழ்த் திரைப்படங்களில் டெக்னாலஜி இருக்கிறது. ஆனால் தரம் இல்லை. அதுதான் உண்மை.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/04/blog-post_09.html

வெட்டி...ஏதோ புரியுற மாதிரி இருக்குது. எங்கப்பாவுக்கு சீட்டு கிடைச்சது பிசிலதான். ஆனா நான் சேர்ந்தது ஓசிலதான் (அட ஓப்பன் கேட்டகிரின்னு சொல்றேன்). எங்கப்பாவுக்கு படிப்புக்குச் சலுகைப் பணம் கெடச்சது. எனக்குக் கிடையாது. கிரீமி லேயர் ஏற்கனவே வேலை செய்யுது. இது சாதிப் பேரை எப்படியோ மாத்திப்போட்டா அது எம்.பி.சி ஆயிருமாம். ஆனா எங்கப்பா செய்யலை. "செய்ய நானிருக்கேன். நீ படி"ன்னு சொல்லீட்டாரு.

இட ஒதுக்கீடு என்பது தவிர்க்க முடியாதது என்பதில் மறுப்பில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்தும் அதனால் முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியவில்லை என்றால்..அது செயல்படுத்தப்படும் முறையில் எங்கேயோ பிரச்சனை இருக்கிறது. என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அறிவாளிகள் கண்டுபிடித்துச் சரி செய்தால் நல்லது. கிரீமி லேயர் என்பது கண்டிப்பாக அவசியம். அதைச் செயல்படுத்த வேண்டும். ஆனால் முறையாக. ஏனென்றால் என்னுடைய பள்ளிக்காலத்திலேயே நான் பார்த்திருக்கிறேன். எனக்குச் சலுகைக் கட்டணம் கிடையாது. ஏனென்றால் அப்பா அரசாங்க ஊழியர். ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் வணிகர் பலருடைய பிள்ளைகளுக்குச் சலுகைக் கட்டணம் கிடைக்கும். இத்தனைக்கும் அவர்கள் எங்களை விட பல மடங்கு செல்வந்தர்கள். அந்தப் பையன்கள் அந்தப் பணத்தைச் செலவு செய்யும் பொழுது கொஞ்சம் பொறாமை இருந்தது உண்மைதான். ஆக...கிரீமி லேயர் வேண்டும். எல்லா நிலையிலும் என்பதுதான் சரி என்று தோன்றுகிறது.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/ii-47.html

முருகா! இப்படி ஒரு முடிவா! எதிர்பாராதது. குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். எனக்கும் குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் அது அளவிற்கு மீறிப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த ஒரு பொழுதில்....அந்த குடி மயக்கத்திலேயே அந்தப் பழக்கத்தைத் தூக்கி எறிந்தேன். அந்த மனவலிமையைக் குடுத்த முருகனுக்கு எனது நன்றி. ஆண்டுகள் இரண்டுக்கு மேல் இருக்கும். இன்னமும் அந்த பாட்டில்கள் என்னுடைய வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலேயே உள்ளன. ஆனால் தொட்டதில்லை. தொடும் எண்ணமும் வருவதில்லை.

G.Ragavan said...

http://emadal.blogspot.com/2007/04/blog-post_07.html

// ஜோ / Joe said...
//ஆனால் தரம் இல்லை. அதுதான் உண்மை. //
ராகவன்,
இப்போ மொழி ,பருத்தி வீரன் ,வெயில் படங்களின் தரத்திற்கு என்ன குறைச்சல் .தமிழில் தரமான படங்கள் வரத்தான் செய்கிறது .ஆனால் சிவாஜி-க்கும் சந்திரமுகிக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை நான் அதற்கு கொடுக்கிறோமா ? கொடுத்தால் தமிழ் சினிமா உருப்படும் . //

விதிவிலக்குகள் பெரும்பான்மை இல்லை ஜோ. மொழி நல்ல படமென்று கேள்விப்பட்டேன். பருத்தி வீரனைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. என்னுடைய கருத்து வேறுவிதமாக இருக்கிறது. ஆனால் நல்ல கான்செப்ட். பாரதிராஜாவின் பட்டிக்காடுகளோடு ஒன்ற முடிந்த அளவிற்கு அமீரின் பட்டிக்காட்டோடு ஒட்ட முடியவில்லை. ஆனால் படத்தில் அனைவரின் நடிப்பும் கனகச்சிதம். அதிலும் ப்ரியாமணி. அடேங்கப்பா!

சந்திரமுகி முடிஞ்சி இப்போ ஜிவாஜி வருதுங்கோ. மக்கள் அதுக்குள்ளயே பல்லேலக்காடிக்கிட்டிருக்காங்க. வெகுஜனப்படங்களுக்கு நான் விரோதி இல்லை. ஆனா ஊறுகாயில கொழம்பு ஊத்தித் தின்னுன்னா எத்தன வாட்டி சாப்புடுறது. வயிறு வலிக்குல்ல.

G.Ragavan said...

http://pradeepkt.blogspot.com/2007/04/blog-post.html

62 குடுத்திருக்கீங்க. கொஞ்சம் கூடன்னுதான் தோணுது. ஆனா படமாப் பாத்தப்புறந்தான் பாட்டுகள் ஒன்னொன்னும் எங்கெங்க போகுதுன்னு சொல்ல முடியும். ஆனா அந்த சஹாரா பூக்கள் பூத்ததோ அருமையோ அருமை. அதிலும் விஜய் யேசுதாஸ்...அடடா! மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் என்று கோமதிஸ்ரீ பாடுவதும் அருமை. இப்படியாவது தமிழ் இலக்கியங்கள் இசை வடிவம் பெறுவது மகிழ்ச்சியே.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_8725.html

அவரா இவர்! உண்மையிலேயே வியப்புதான். அந்த அலுவலகத்தில் பணி செய்யும் வலைப்பதிவர்களில் ஒருவரை மட்டுந்தான் எனக்குத் தெரியும். வலைப்பதிவர் சந்திப்பிலும் சந்தித்திருக்கிறேன். ம்ம்ம்ம்ம்....என்ன செய்வது! உண்மை சுடுகிறது. போற போக்கப் பாத்தா எல்லாப் போலிகளும் யாருன்னு சொல்லீருவீங்க போல!

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/04/king-cobra-ophiophagus-hannah.html

அடேங்கப்பா! பாக்கவே பயம்மா இருக்கே. மனுசன விடப் பெருசா இருக்கு! அத இந்தாளு என்னவோ பொம்மையப் பிடிச்சு வெளையாடுறாப்புல வெளையாடுறாரு. யப்போய்! இந்த ஆட்டைக்கு நான் வரலை.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/07/blog-post_115213888516163583.html

வெட்டி, சாதீய ஒழிப்பு என்பது களையப்பட வேண்டும் என்பதில் எள்ளளவும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கின்றார் போல் தெரியவில்லை. ஆனாலும் இன்னமும் இருக்கிறதே! ஏன்?

புராணங்களின் படி வருணாசிரமப் பிரிவினையோ...அல்லது வேறு ஏதாவது பிரிவினையோ....இருக்கும் வரை வேறுபாடுகள் இருந்து கொண்டேயிருக்கும். அந்த வேறுபாடு உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் இருந்து கொண்டேயிருக்கும். நம்மூரில் அதற்குப் பெயர் சாதி. வேறொரு ஊரில் அதற்குப் பெயர் மொழி. வேறொரு ஊரில் அதற்குப் பெயர் மதம். வேறொரு ஊரில் அதற்குப் பெயர் நிறம். வேறொரு ஊரில் அதற்குப் பெயர் பாலியல் ஈடுபாடு. இது ஏன் வருகிறது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பொதுவில் தன்னைப் போல இல்லாதவைகளை நாம் விரும்புவதில்லை. அவ்வளவுதான் விஷயம். இப்படி ஒவ்வொருத்தரும் அடுத்தவரை மதிக்கத் தொடங்கினால்...மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று நினைக்கத் தொடங்கினால்...எல்லா வேறுபாடுகளும் களையப்படும். அப்படி நடக்காதவரை....வெறும் பேச்சுகள் மட்டுமே இருக்கும்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/04/210.html

தருமி, அச்சத்தால் ஆண்டவனை நாடுதல் நன்றன்று. வணங்கினால்தான் வாழ்வு என்று இருந்தால் இறைவனுக்கும் ஜமீந்தாருக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும். இன்றைய நிலையில் என்னைப் பொறுத்த வரைக்கும் மதங்கள் மனிதனை வேறுபடுத்திக்கொண்டிருக்கின்றன என்றே நம்புகிறேன். மதங்களை மீறிய இறையுணர்வு இருந்தால் மட்டுமே இறைநம்பிக்கையாளர்களிடையே ஒற்றுமை ஏற்படும். அதுவரையில் கம்பெனி விளம்பரங்கள் போல...இங்கு வந்தால் அது கிடைக்கும். அங்கு வந்தால் இது கிடைக்கும். இங்கேயே இருந்தால் இதெல்லாம் கிடைக்கும் என்றுதான் தொடரும்.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு காலம். அது சுழற்றி. மாறி மாறிப் போய்க் கொண்டேயிருக்கும். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பெண்ணை அல்லது பெண் தெய்வத்தை முன்னிலைப் படுத்தி புதிய மதம் தோன்றும் என்று. எப்பொழுது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் தோன்றும் என்று தோன்றுகிறது. classified மதமாகத்தான் அதுவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. சாதீய வேறுபாடு போல மதவேறுபாடும் சமூகத்தில் புரையோடிக்கொண்டிருப்பது வருத்தத்தையளிக்கிறது.

எனது பின்னூட்டம் இந்தப் பதிவிற்குத் தொடர்பானதா என்று தெரியவில்லை. ஆனால் அது என் கருத்து. அதை இங்கே சொல்ல வேண்டும் என்று தோன்றியது. சொல்லி விட்டேன்.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2007/04/blog-post.html

// லிவிங் ஸ்மைல் said...
கண்டிப்பாக, எனக்கு அந்தப் படத்தை அனுப்பி வைத்து உதவலாமே. எனது ஆவண காப்பகத்துக்கு உதவும். மேலும், முழுக்க, முழுக்க பிரகந்நளை கதையாக இருக்கும் பட்சத்தில் அதை திரையிடவும் வாய்ப்புள்ளது.

யோசிக்கவும்!! தகவலுக்கு நன்றி!! //

கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன் லிவிங் ஸ்மைல் வித்யா. gragavan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் முகவரியும் தொலைபேசி எண்ணையும் அனுப்புங்கள். அனுப்பி வைக்கிறேன்.

முழுக்க முழுக்க ப்ருஹன்னளையைப் பற்றிப் பேசாது படம். ஆனால் ப்ருஹன்னளையாக முன்னணி நடிகர் விரசமில்லாமல் நடித்து வெளிவந்த படம். அந்தப் படத்தில் ப்ருஹன்னளைக்கு அரண்மனையில் இருந்த செல்வாக்கு சொல்லப்பட்டுள்ளது. அப்படி ஒரு முன்னணி நடிகர் நடித்த துணிச்சலுக்காகவாவது அந்தப் படத்தைப் பாராட்டலாம். அத்தோடு இந்தப் படம் 1960களில் வந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/04/210.html

// தருமி said...
ஜிரா,
//அதுவரையில் கம்பெனி விளம்பரங்கள் போல...இங்கு வந்தால் அது கிடைக்கும். அங்கு வந்தால் ...//
அதிலும் இப்படி கூவி கூவி விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு கடையிலும் வித விதமான வியாபாரம்; விள்ம்பரம் !! //

அதே அதே. ஆனால் இதை எந்த மதமும் ஒத்துக்கொள்ளாது.

// அதுசரி, அந்தப் புதிய வரப்போகும் மதம் பற்றி சீரியஸாகவா சொல்கிறீர்கள்? இல்லை.. அப்படி ஐடியா ஏதும் கைவசம் உண்டா? அப்படியாயின், முதல் பார்ட்னராக என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.. ப்ளீஸ் :) //

என்னங்க இது! விட்டா என்னப் புனிதராக்கி...இறைவனோட மகன்னோ...உள்ளபடிக்கு எல்லாரும் இறைவனுக்கு மகந்தான்....அப்படீன்னு சொல்லீருவீங்க போலிருக்கு. நமக்கெல்லாம் இது ஆகாதுங்க. அதுக்கெல்லாம் மதத்தலைவருங்க இருக்காங்க. அவங்க பாத்துப்பாங்க. நமக்கெல்லாம் முருகான்னு சொன்னாப் போதும்.

// தருமி said...
ஜிரா,
நீங்கள் சீரியஸாக எழுதியதை தடம் மாற்றி விட்டேனோ? //

:-) இருக்கட்டுமே. அதுனால் என்ன? சிரிச்சிக்கிட்டே பேசுவமே. ஏற்கனவே ஒரு மாதிரின்னுதன் ஊருக்குள்ள பேச்சு. அது உண்மைன்னு அவங்களும் நம்பட்டுமே. :-))))

// //classified மதமாகத்தான் அதுவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. //
இதில் classified மதம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? //

classified மதம் என்று சொல்வது எல்லாரும் வாருங்கள் என்று அழைப்பதைக் குறிப்பதற்காகச் சொன்னேன். ஒரு விதத்தில் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பது என்று கேட்பது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது நடக்கவே முடியாதது. எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு. இன்றை சூழலில் கிட்டத்தட்ட எல்லா மதங்களும் classified மதங்கள்தான்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/ii-48.html

சார், நல்லவங்கன்னு சிலர் இருப்பாங்க. இவங்க இருந்தா நல்லது நடக்குதோ இல்லையோ...கெட்டது நடக்கவே நடக்காது. அதே மாதிரி அவங்க போகும் போதும் பகைச்சுக்கும் போதும் கூட எந்தக் கெட்டதும் நடக்காது.

ஆனா சில பேரு இருக்காங்க. அவங்க இருந்தாலும் ஆயிரம் பிரச்சனை. போனாலும் ஆயிரம் பிரச்சனை. அந்த அளவுக்கு ராசி. இவரு ரெண்டாம் வகை போல இருக்கு.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/04/blog-post_11.html

சுடருக்கு எனது வாழ்த்துகள்.

உண்மைதான் ரவி. இப்பொழுது சற்று அனுபவம் உள்ளவர்களுக்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன என்றே நினைக்கிறேன். அத்தோடு அமெரிக்காவில் ரிசசஷன் தொடங்கியிருப்பதாகவும் பேசுக்கொள்கிறார்கள். அதுவும் கூட காரணமாக இருக்கலாம்.

வேலைக்கு அதிகமாக சில இடங்களில் குடுப்பது உண்மைதான். ஆனால் பல இடங்களில் குடுத்த காசுக்குக் கற்பழிப்பதும் உண்மைதான். அது அவரவர் நல்லூழைப் பொருத்து. ஒங்களுக்கு நெறைய நல்லூழ் இருக்கு போல. :-)

ஆடம்பரம்....ம்ம்ம்...பல சமயங்களில் தவிர்க்க முடியாத சுமையாகி விடுகிறது. இருந்தாலும் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் forum, garuda mall, mg road எல்லாம் போகாம இருக்க முடியலையேன்னு இங்கு ஒரு பெருங்கூட்டமே பொலம்புது!

அடுத்து லக்கியாரா! ஆகா. காத்திருக்கிறோம் பதிவிற்கு.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/04/blog-post_11.html

என்ன சொல்ல வர்ர நீ? மனதைப் புண்படுத்தீருச்சா? போக்கிரி படம் பார்த்து என்னோட மனம் புண்பட்டதுக்கு அப்ப விஜய் மன்னிப்பு கேப்பாரா? அடப்போங்கப்பா! உருப்படியா படம் எடுக்கச் சொல்லு. அப்புறம் மன்னிக்கலாம். முதல் மரியாதையையே கிண்டல் பண்றாங்க. போக்கிரிக்கு எந்த மூலைக்கு. பதநிக்குப் பேயா அலஞ்சவன் கள்ளுல குளிச்சாப்புல இருக்கு.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/04/blog-post_10.html

கிரீமி லேயர நீக்கியே ஆகனும். ஆனா குழந்தைக்களுக்குக் கிரீமி லேயர் இருக்கனும். வயசு கூடுனவங்களுக்கு மொகத்துல மட்டுந்தாம் கிரீமி லேயர் இருக்கலாம். சினிமா நடிகைன்னா கை கால் வயிறு என்று எல்லா இடங்களிலும் கிரீமி லேயர் இருக்கலாம். நடிகருக்கு மூஞ்சீல மட்டும் இருந்தாப் போதும். ஏன்னா அவரு முழுக்க மூடிக்கிட்டு வருவாரு. அப்படி வரலைன்னா...யாரும் பாக்க முடியாது.

கிரீமி லேயரை வயது வந்தவர்களுக்கு நீக்க வேண்டும் என்ற உங்களது இந்த சொந்தப் பதிவின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். நானும் கிரீமி லேயரில் இருந்து நீங்கி விட்டேன். :-)

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/04/65_10.html

கலவரமாம் கலவரம்
அதுதாம் இப்ப நெலவரம்
ரொம்பவே பேசிப்புட்டா
அருவாளோடயே தல வரும்
என்னடா காரணம்னா
சொல்றான் "கலா வரும்"

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/04/blog-post_11.html

பதிவு போடு பதிவு போடுன்னு சொன்னதும் கேட்டதும் உண்மைதான். அதுக்காக இப்பிடிப் போட்டுட்டியே மக்கா! :-((((((((((((((((((( விதி வலியது. நுணலும் தன் வாயால் கெடும்!

G.Ragavan said...

http://karaiyoram.blogspot.com/2007/04/blog-post.html

உங்கள் கதை என்றாலே எதிர்பார்ப்போடு வருவது என்றாகி விட்டது. நீண்ட நாட்கள் கழித்துப் படிக்கிறேன் உங்கள் கதையை.

ஒழுக்கு என்பார்கள். தொடக்கத்திலிருந்து முடிவு வரை விடாமல் தொடர்ந்து செல்வது. அது சிறப்பாக வந்திருக்கிறது. வழக்கம் போல.

கதையின் முடிவு மிகவும் ரசிக்கவும் சிந்திக்கவும் தக்கது. உடல் நிலை என்றாவது சரியில்லாமல் போனால் முதலின் நினைவிற்கு வருவது அம்மாதான். அதுதான் கதையின் போக்கை முழுவதுமாக மாற்றி விடுகிறது. மகரந்தம் உதிர்ந்த இடத்தில் மீண்டும் சேர்க்கை நடக்க வாய்ப்பில்லை. உண்மைதான்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/04/blog-post_12.html

லால் கீலா அல்லது செங்கோட்டை...இந்திய இஸ்லாமியர்களின் கட்டிடக் கலைக்குச் சான்று. மிக அழகான கட்டிடம். பளிங்கினால் ஒரு மாளிகை பவழத்தால் மணிமண்டபம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகப் பொருத்தம்.

அந்த தகரப் பெட்டிகளைத் தனியா போட்டோ பிடிச்சிருக்கக் கூடாது! (டப்பான்னு இனிமே சொல்லக்கூடாது. சொன்னீங்கன்னா...சொல் ஒரு சொல்லுல ஒங்களையும் கவுண்டமணி செந்திலையும் வெச்சி ஒரு போஸ்ட் போட்டிருவோம் :-) )

ஔரங்கசீப்போட சமாதிக்குப் போயிருக்கேன். ஊருக்கே ஔரங்காபாத்-னு பேரு. சமாதியின் மேற்புறம் திறந்து மண்ணிருக்கு. அதுல ஒரு சின்ன செடி இருக்கு. துளசீன்னு நெனைக்கிறேன். நினைவில்லை.

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2007/02/blog-post_14.html

இப்பிடி ஒரு பதிவு போட ஏன் சவுண்டு பார்ட்டியோட இதயம் துடிக்குதுன்னு மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம்! எனக்குத் தெரியாம இருக்குமா? ;-) உண்மைய எல்லார் கிட்டயும் சொல்லீர வேண்டியதுதான. அந்த வெள்ளக்காரப் பொண்ணு பேருதான் வாயில சரியா நுழைய மாட்டேங்குது. அதுனால நீங்களே சொல்லீருங்க. :-)

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/04/blog-post.html

வீடுமில்லாம விடுதியுமில்லாம வெளிய வீடெடுத்து நண்பர்களா ஒரு பெரிய கூட்டமே தங்கீருக்கு இராமநாதன். அவங்களை நீங்க கணக்குல சேக்காததுக்கு உங்களை அவர்கள் சார்பா நான் கடுமையா கண்டிக்கிறேன்.

ஒரே ஒரு வருடத்தைத் தவிர நான் முழுக்க முழுக்க வீட்டுல இருந்து படிச்சவந்தான். ஆனால் விடுதி நல்லதுன்னு தோணுது. விடுதி அனுபவங்கள் கண்டிப்பா வேணும். நாலு பேரோட பழகுற வாய்ப்பு கிடைக்கும்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/04/blog-post.html

அப்புறம் இன்னொரு விஷயம். ரொம்ப நாள் கழிச்சி என்னைப் போல சாமானியர்களுக்கும் புரியுற மாதிரி பதிவு போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/03/blog-post_22.html

மும்பையில் முத்தமிழ் வளர்ப்பது யாராலே! அந்த முத்தமிழும் முத்தத்தமிழாய்த் தித்திப்பதும் யாரேலே! உண்மையைச் சொல்லி விடு அருட்பெருங்கோ! ஏனென்றால் உண்மை சுடும். அதுவும் உன்னைச் சுடும். ;-)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/04/blog-post_11.html

வெட்டி, நீ பேரைச் சொல்லலைன்னாலும் அது யாரைச் சொல்றதுன்னு தெரியும். அப்போ நிர்வாகம் வேற. இப்போ வேற. அதுவுமில்லாம....அந்த ஒரு நபர் மேலையும் தவறு இருந்தாலும் சேறு எல்லார் மேலையும் தெரித்தது. அதற்கு ஒரு பாதுகாப்புதான் அந்த மாடரேஷன். இன்னும் சொல்லப்போனா அந்த மாடரேஷன் வந்தப்புறந்தான் கொஞ்சமாவது பின்னூட்டங்கள் மேல கட்டுப்பாடு வந்தது. அதுக்கப்புறமும் நான் சொதப்புனது வேற விஷயம். :-)

ஒன்னைய மதிக்க மாட்டேங்குறேங்கன்னு சொல்றதுக்கு ஒரே ஒரு காரணந்தான். அந்த நாப்பது. அது தவிர வேற காரணங்கள் இருந்தா அவைகளையும் சொல்லு.

நாப்பதுக்கு மேல வாங்குறதுதான் 24 மணி நேரத்துல வருதே. அதுல பாக்க வேண்டியதுதானே. இப்ப இந்த நாப்பத எடுக்குறத நான் ஆட்சேபிக்கிறேன்னு வெச்சுக்குவோம். அப்ப நான் தமிழ்மணம் என்னோட சொன்ன பேச்சு கேக்க மாட்டேங்குதுன்னு சொல்லலாமா?

சின்னப்பசங்கன்னா? ஒன்னையச் சேத்துக்கச் சொல்லலாமா? ;-)

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2007/02/blog-post_14.html

// Udhayakumar said...
நாரதர் கலகம் நன்மையில் முடியும், ஜிராவின் கலகம்??? இப்போவே கண்ணை கட்டுதே.... //

ஜிராவின் கலகம்....கல்யாணத்தில் முடியும் (இந்திய-அமெரிக்க) :-)

(அப்பாடி இன்னைக்கு வெடியக் கொளுத்தியாச்சு. இனிமே நிம்மதியா இருக்கலாம்) :-)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/04/blog-post_10.html

பிரபா, நான் பல கதவுகளைத் தட்டி விட்டேன். ஆனால் உறுதியான பதில் கிடைக்கவில்லை. ஆகையால் இங்கும் கதவைத் தட்டுகிறேன்.

காற்றினிலே வரும் கீதம் திரப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் என்ற பாடல். அது படத்தில் வாணி ஜெயராம் குரலில் அமானுஷ்யமாகவும் ஜானகியின் குரலில் காதற்றுள்ளலோடும் வரும். அதே பாடலை பி.சுசீலாவின் குரலில் இளையராஜா பதிவு செய்ததாகவும்...அது திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்றும் சொன்னார்கள். அது உண்மையா? உண்மையென்றால் அந்தப் பாடலும் கேட்கக் கிடைக்குமா? அது உண்மையென்றால் ஒரே பாடலை மூன்று பிரபலபாடகிகள் மூன்று விதமாகப் பாடியிருப்பது என்பது ஒரு அபூர்வ நிகழ்ச்சியே.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/04/blog-post_11.html

// செந்தழல் ரவி said...
ஜீரா / பொன்ஸ்

நீங்க ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லிட்டு அப்படியே அப்பீட்டாகுறீங்களே.. //

ரவி, ஒரு விஷயத்த மட்டும்னு சொல்லாதீங்க. இந்தப் பதிவு எதைப் பத்திப் பேசுதோ..அதப் பத்தி மட்டும் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.

நட்சத்திரத் தேர்வு முறையும் மற்ற பிரச்சனைகளையும் பேசுனா..அது பற்றிய கருத்துகளும் கண்டிப்பாக சொல்வோம். ஆனா இந்தப் பதிவுல நாப்பதத் தாண்டலையே! அதுனால்தான் அதப்பத்திப் பேசலை.

// வெட்டிப்பயல் said...

ஜி.ரா,
என்னைய மட்டும் மதிக்க மாட்றாங்கனு நான் சொல்லல...

சரி வேணும்னா இன்னும் சொல்லலாம்... ஸ்டார் வீக்ல லக்கி லுக், கப்பி எல்லாம் இவ்வளவு நாளாக வராதது ஏன்? //

இதப் பத்தி உன்னோட பதிவு சொல்லவே இல்லை. அது நாப்பதுலேயே ஓடிக்கிட்டிருக்கு. நட்சத்திரத் தேர்வு என்பது வெளிப்படையாக இல்லை என்பது உண்மை. உன்னுடைய பதிவு அதைப்பத்திப் பேசியிருந்தால் அதற்கு ஆதரவு சொல்லியிருப்பேன். சொன்ன பேச்சு கேக்கலைன்னா எப்படி? எத்தன தடவ சொன்ன? என்ன சொன்னன்னும் நாங்க ஒன்னையக் கேக்கலாம்ல. அப்படி நீ சொல்றது சரீன்னு தோணுச்சுன்னா கண்டிப்பா உனக்கு ஆதரவாத்தான் சொல்வோம்.

// இங்க எழுதறவங்க எத்தனை பேர் இவர்களவுக்கு எழுதுவார்களானு எனக்கு தெரியல.

என் ஸ்டார் வீக்ல ஒரு பதிவு கூட பூங்கால வரல. ஒரே காரணம் நான் அதுல ஒரு இடத்துல பூங்காவ பத்தி மீட்டிங்ல வந்த கமெண்டை சொல்லிட்டேன். அங்கே ஒரு முக்கியமான அந்நாள் தமிழ்மண நிர்வாகி கூட இருந்தார். அது எல்லாம் காரணம் இல்லைனா என்னுடைய ஸ்டார் வீக் பதிவுல ஒண்ணு கூடவா தகுதி இல்ல. //

வெட்டி...அப்படிப் பாத்தா என்னோட பதிவுகள்ள ஒன்னே ஒன்னுதான் பூங்காவுல வந்திருக்கு. அது ஒரு திரைப்பட விமர்சனம். நான் திரைவிமர்சனமா நல்லா எழுதுறேன்? பூங்காவை வைத்து நான் என்னுடைய எழுத்தை அளவு போடுவதில்லை. அதுதான் பெரிதென்றால் சொல்வதற்கொன்றுமில்லை.

// இல்லை பெரியாரை பத்தி நான் வித்யாசமா சொன்ன பதிவு கூடவா நல்லா இல்லை. வயசானவர்களுக்கு இருக்கும் வீம்பு குணம் அவர்களிடம் இருப்பதை போல் உணர்கிறேன்...

அப்பறம் 24 மணி நேரம் நிறைய பேர் படிப்பதில்லை. நானும் நிறைய பேரை கேட்டுட்டேன். பாப் அப் விண்டோல வரதால நானும் அதை பார்க்கறதில்லை. //

அப்படியென்றால் அதற்குண்டான விழிப்புணர்ச்சியைக் கொண்டுவா. அதற்கு ஏதாவது செய். அதுதான் சரியாக இருக்கும். இப்பொழுது இருக்கும் முறையால் நிறைய பின்னூட்டம் வாங்குகிற பதிவுகளுக்கும் குறைவாகப் பின்னூட்டம் வாங்குகிற பதிவுகளுக்கும் வாழ்வுண்டு. ரிசர்வேஷன் மாதிரி. நீ கிரீமி லேயர். புரிஞ்சதா? ஓசில வர்ர நீ பிசி கோட்டா கேட்டா பிசி கோட்டா தேவைப்படுறவங்கள என்ன சொல்றது? உனக்கு வாய்ப்பிருக்கு. அதைப் பாருங்கன்னு அடுத்தவங்களப் பாக்க வெக்கிறது கண்டிப்பா உதவும்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_12.html

அடேங்கப்பா! இவ்வளவு நடந்திருக்கா! இதெல்லாம் தெரியாமப் போச்சே! நீங்க சொல்றவரு யாருன்னு தெரியுது! மேல குடுத்திருந்த போலி லிங்கையும் பாத்தேன். ம்ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை.

சரி. எல்லாரும் இருக்குறப்பவே ஒங்க கிட்ட கேட்டுர்ரேன். இதே போல ஒரு பிரச்சனை இருக்கு. அதுக்கும் உங்க உதவி தேவைப்படும். சென்னை வந்ததும் தொடர்பு கொள்றேன். கிட்டத்தட்ட இதே மாதிரி மேட்டர்தான்.

இப்ப இவர விட்டுரலாம். ஆனால் இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பாடம். அனைத்து ஆதாரங்களும் இருப்பதால் இப்பொழுதைக்கு விட்டுப்பிடிக்கலாம் என்பதே சரியென்று தோன்றுகிறது.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/04/43.html

நல்ல பாடல். நல்ல விளக்கம்.

நீங்கள் இட்டிருக்கும் படம்..தஞ்சைப் பெரிய கோயிலின் சுற்று மண்டபத்து ஓவியம். அழகான ஓவியம். இன்று பெருமளவில் அழிந்து போனவைகளில் தப்பிப் பிழைத்தது. காண்கையில் மகிழ்ச்சி பொங்குகிறது.

செம்பாகத்திற்கு விளக்கத்தை எல்லாரும் மேலோட்டமாக அணுகியிருக்கிறீர்களோ என ஐயுறுகிறேன். நன்றாக அந்த வரியைப் படியுங்கள். எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

எரிகின்ற நெருப்பில் செம்மை எது? ஒளி. நெருப்பிற்கு உரிய பண்புகள் வெப்பமும் ஒளிச்சுடரும். வெப்பத்திற்கு நிறமில்லை. ஆனால் ஒளிச்சுடருக்கு? அது செம்மைதானே? அப்படி வெளிச்சமும் வெப்பமும் சேர்ந்திருப்பதுதான் அம்மையப்பன். பிரிக்க முடியாதது. இப்பொழுது செம்பாகம் என்பது எது என்று புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். "தரணியில் அரணிய" என்ற பாடலில் "எரிபுரை வடிவினள்" என்று அம்மையை விளிக்கிறார்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/04/blog-post.html

அழகு. அழகு பற்றிச் சொல்லும் எளிமையான உங்கள் பதிவும் அழகு. பச்சை வண்ணம் உங்களைக் கவர்ந்ததில்லை. அந்த வண்ண மாமலைபோல் மேனி கொண்ட பவழ வாய்க் கமலச் செங்கன் அச்சுதனை அமரர் ஏறை ஆயர்தம் கொழுத்தை சிந்தித்துக்கொண்டிருக்கையில் எப்படிப் பிடிக்காமற் போகும்!

என்னையும் அழைத்தமைக்கு நன்றி. விரைவில் பதிவிடுகிறேன்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/04/blog-post.html

// இராமநாதன் said...
ஜிரா,
//வீடுமில்லாம விடுதியுமில்லாம வெளிய வீடெடுத்து நண்பர்களா ஒரு பெரிய கூட்டமே தங்கீருக்கு//
எல்லாத்துக்கும் புது கேட்டகரில இருக்கீங்க போலிருக்கு.. வேற ஒண்ணும் குத்து இல்லை. //

உள்ள குத்துனாலும் வெளிய குத்துனாலும்...இந்தக் கேட்டகிரியிலோ கேக்காத கிரியிலோ நான் இல்லை. :-)

// //விடுதி அனுபவங்கள் கண்டிப்பா வேணும். நாலு பேரோட பழகுற வாய்ப்பு கிடைக்கும்.//
ஹூம்.. வீடு ஒண்ணு; விடுதி: ஒண்ணு.. ரைட்! //

ஹீ ஹீ ரைட்டு ரைட்டு

G.Ragavan said...

http://paarima.blogspot.com/2007/04/blog-post_12.html

ஹா ஹா ஹா :-))))))))))))

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/04/blog-post_12.html

முருகா முருகா முருகா! என்ன செய்து விட்டாயப்பா! குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உற்றாருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/037.html

// SP.VR. சுப்பையா said...
பாடலை மிகவும் சிறப்பாகப் பதிந்துள்ளீர்கள் நண்பரே! //

நன்றி ஐயா.

// இவ்வள்வு பாடகர்கள் பாடிய தமிழ்
பக்திப் பாட்டு இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சரிதானா? //

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நவக்கிரகநாயகி என்ற படத்தில் நவகிரகங்களையும் போற்றி ஒரு பாடல் வரும். அதில் எத்தனை பேர்கள் பாடியிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

இன்னொரு ஐவர் பாட்டு இருக்கிறது. அது தாய்மூகாம்பிகை படத்தில். பாலமுரளிகிருஷ்ணா கலைமகளுக்குப் பாடுவார். அடுத்து மெல்லிசை மன்னர் அலைமகளுக்குப் பாடுவார். அதைத் தொடர்ந்து சீர்காழி மலைமகளைப் பாடுவார். அது முடிந்ததும் மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் மூகாம்பிகையைப் பாடுவார்கள். இதற்கு இசை இளையராஜா. ஆனால் இதில் ஐவர்தான். பத்துமலைப் பாடலில் அறுவர். அதிலும் புகழ்பெற்ற அறுவர்.

மேலே நான் குறிப்பிட்ட பாடல்கள் கொண்ட படங்கள் அனைத்தையும் இயக்கியவர் கே.சங்கர்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/01/blog-post_116875960380036196.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா, இனியது கேட்கின் எங்கே?
சில நாளாய் இனியது கேட்க முடியவில்லையே! :-) //

பணிப்பளுதான் ரவி. பனிப்பளுத்தலையர் மகன் மனம் வைத்தால் விரைவிலேயே கேட்கலாம்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/04/blog-post.html

ரவி, நாம் மதம் பார்க்கலாம். ஜாதி பார்க்கலாம். ஆண்டவன் பார்ப்பானா? அன்பைக் கொண்டு அளப்பவனுக்கு சுல்தான் பீவியும் சுனிதாவும் ஒன்றுதான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. கொண்டாடியது சுல்தான் பீவி. ஆகையால்தான் அவரை நாம் கொண்டாடுகிறோம்.

நாச்சிக்கு விளக்கும் சொல்லி சொல்லொரு சொல்லையும் இங்கே கொண்டு வந்து விட்டீர்கள். நல்லது.

அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/037.html

// .:: மை ஃபிரண்ட் ::. said...
பக்தி பாடலும், பத்துமலை முருகனின் படங்களும் அருமை. :-) //

நன்றி மை ஃபிரண்ட். மிக அருமையான அனுபவம் அது.

// VSK said...
என்ன சொல்லிப் போற்றுவது!
எப்படி உம்மைப் புகழ்வது?
முருகா முருகா முருகா! //

அனைவரும் சொல்லிச் சொல்லிப் புகழ்வது போல நாமும் முருகா முருகா என்று சொல்வோம். அது போதும் அவனுக்கு.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/037.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
"அறுபடை வீடு கொண்ட திருமுருகா" - பாடலை இப்படி அறுவரை வைத்து ஒலிப்பதிவு செய்திருக்கலாமே. ஆனால் அந்தப் புகழ் பத்துமலைக்குத் தான் செல்ல வேண்டும் என்று மருகன் மனம் வைத்தான் போலும்!
புதியனவற்றுக்குத் தானே புகழொளியைத் தூண்டி விட வேண்டும்! இயற்கையாய் அமைந்து விட்டது! //

அதென்னவோ உண்மைதான் ரவி. முருகனைப் பற்றி திரைப்படங்களில் ஒரு பாட்டா இரண்டு பாட்டா? கவிஞர்கள் சொல்லால் தமிழால் எழுதிய பாக்களுக்கு இசையமைப்பாளர்கல் அழகு மெட்டிட்டு மகிழ்ந்திருந்தாலும் முதன் முதலாக பத்துமலைக்குத்தான் இந்தப் பெருமை போக வேண்டும் என்றிருந்திருக்கிறது பாருங்க. தெய்வம் திரைப்படத்தில் ஆறுபடை வீட்டிற்கும் ஆறு பாடகர்கள். ஆனால் அவை தனித்தனிப் பாட்டுகள். அத்தோடு அதில் பழமுதிர்ச்சோலை வராது.

// இனியது கேட்கின்-இல் இனி எது கேட்க விழைந்த போது, இனி அது இங்கும் கேட்க வழி செய்தீர்கள்! நன்றி! //

கந்தன் தருவதைத் தந்தேன். அவன் ஓவர்ஹெட் டேங்க். நான் குழாய். திறந்தான் தண்ணீர் வருகிறது. டேங்க் இல்லையென்றால் தண்ணீர் இல்லை. ஆனாலும் குழாயில் தண்ணீர் வருகிறது என்றுதான் வழக்கில் சொல்வது. :-)))))

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/037.html

// குமரன் (Kumaran) said...
இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன் இராகவன். இந்தப் பாடலில் கடைசியில் அவன் திருப்பெயர்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார்களே. அது மிக அருமையாக இருக்கிறது. //

வாய்ப்பிருக்கிறது குமரன். இந்தத் திரைப்படத்தில் உள்ள மற்ற சில பிரபல பாடல் "வருவான் வடிவேலன்", "நீயின்றி யாருமில்லை வழிகாட்டு முருகா"

// உங்கள் தயவால் குகையில் அமர்ந்திருக்கும் குகனைத் தரிசித்தேன். மிக்க நன்றி. //

அங்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் குமரன். குன்றின் மேல் குமரன் அமர்ந்ததை எங்கும் காணலாம். குன்றுக்குள்ளே அமர்ந்ததை திருப்பரங்குன்றத்திலும் பத்துமலையிலும் காணலாம். துப்புரவாகவும் இருக்கிறது. மலைநடுவே இருப்பதால் பறவை எச்சங்கள் அங்கங்கு கண்டாலும் பொதுவில் சிறப்பாகவே பராமரிக்கப்படுகிறது. சிறப்பு வழி என்றெல்லாம் ஒன்றுமில்லை. இறைவன் முன்னின்று வணங்கலாம்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/04/blog-post.html

// லக்கிலுக் said...
ஆபரேஷனில் ஈடுபட்ட அமுகவினருக்கு அச்சுறுத்தலாம் :-(

இதுதான் இப்போ ப்ளாஷ் நியூஸ்! //

அச்சுறுத்தியது யாராம்? இதென்ன புதுக்கூத்து!

G.Ragavan said...

http://mahadevanmayon.blogspot.com/2007/04/blog-post_5075.html

என்னய்யா இது! எல்லாரும் சேந்து கொழப்புறீங்களே! அப்ப அவங்க போலீன்னு யாரச் சொன்னாங்களோ அவர்தான் போலியா! எனக்கு என்னோட முதுகு தெரியுதய்யா!

G.Ragavan said...

http://mahadevanmayon.blogspot.com/2007/04/blog-post_5075.html

// கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
//எனக்கு என்னோட முதுகு தெரியுதய்யா! //

:-)))

இராகவன்,
மயில் வைத்து இருப்பவர் ஆயிற்றே நீங்கள், அதனால் உங்களுக்கு சுலபமாக உங்களின் முதுகைப் பார்க்க முடிகிறது. :-))) //

ஹா ஹா ஹா. உண்மைதான். :-)

// மயில் அப்படியே 180 டிகிரியில் கழுத்தைத் திருப்பி சிக்கெடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? //

பாத்திருக்கேன் பாத்திருக்கேன். அப்ப அந்தக் கழுத்து திரும்பும் போது அந்த ஊதா நிறம் லேசா மாறுமே. அடடடடா!

G.Ragavan said...

http://pesalaam.blogspot.com/2007/04/blog-post.html

பாரடைஸ்....இரண்டு முறை போயிருக்கேன். ஐதராபாத்தின் மையப்பகுதியில் உள்ளது. நல்ல பிரியாணி. அங்க போன ரெண்டு வாட்டியும் மட்டன் பிரியாணிதான் சாப்பிட்டேன். பிரியாணின்னாலே மட்டந்தான் நல்லாயிருக்குது. ஆனால் அது ஹெவி. அளவோட சாப்பிடனும். பவார்ச்சி போகனும்னு நெனச்சேன். நேரமிருக்கலை.

// செந்தழல் ரவி said...
நல்ல பதிவு...நினைவுகளை தூண்டியது..

பெங்களூரில் ஏர்ப்போட் ரோட்டில் ஹைதராபாத் பிரியானி செண்டர் (halaal cut ) உள்ளது... //

இதெங்கய்யா இருக்கு? வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும் போல. கோரமங்களாவுல ஒரு ஐதை ஹவுஸ் இருக்கு. அங்க சிக்கன் 65 வித்தியாசமா நல்லாயிருக்கும். ஆயிரம் இருந்தாலும் சுஃபி மாதிரி வருமா!

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/04/blog-post_13.html

சுடருக்கு வாழ்த்துகள் லக்கி.

// செந்தழலார் கைக்கு சுடர் வரும்போதே நண்பர்கள் சொன்னார்கள். அடுத்தது உனக்குதான்யா என்று. நாங்கள் இருவரும் இரட்டை வேட்டையர்களாம். //

ரவியின் கைக்குச் சுடர் வருகையில் அது அடுத்து உங்களுக்குப் போகும் என்று நானும் ஊகித்தேன். அப்படி அவர் உங்களுக்குக் குடுத்தது தவறொன்றும் இல்லை. இரட்டை வேட்டையர்கள் என்று சொல்வதெல்லாம் டூ மச். யார் சொன்னார்கள்? ஒத்த கருத்துடைய..அல்லது கருத்து வேறுபாடு இருந்தாலும் நல்ல நட்புள்ள நண்பர்களிடம் இந்த மாதிரி சுடரொப்படைப்பது போன்றவைகளை எதிர்பார்க்கலாம். அதில் என்ன தவறு? பேசி வைத்துக் கொண்டு செய்தால் என்ன! பேசாமல் வைத்துக் கொள்ளாமல் செய்தால் என்ன!

அடுத்தது கிழுமாத்தூர் எக்ஸ்பிரசா? வருக வருக.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/04/blog-post.html

// லக்கிலுக் said...
//அச்சுறுத்தியது யாராம்? இதென்ன புதுக்கூத்து!//

தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். ஆபரேஷனில் ஈடுபட்டவர்களில் மூவருக்கு கரு.மூர்த்தி என்ற பெயரிலும், அனானிகளாகவும் எடக்குமடக்கான பின்னூட்டங்களும், மெயில்களும் வந்துகொண்டிருக்கிறதாம். ஆபரேஷனில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும் பல அப்பாவி அமுகவினருக்கு மிரட்டல் பின்னூட்டங்கள் வந்துகொண்டிருக்கிறது.

"ஐ.பி. எண்களை வெளியிடுவது சைபர் லாவுக்கு புறம்பானது" என்று ஆபரேஷன் நடந்துகொண்டிருந்தபோதே பாலபாரதி அவர்களுக்கு அச்சுறுத்தலும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. //

லக்கி...இந்தப் பிரச்சனை கிணறு வெட்ட பூதமான மாதிரி பெருசாகிக்கிடே போகுது. எல்லாத்தும் ஒரு நல்ல முடிவு சீக்கிரமே வரும்னு நம்புவோம்.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/04/blog-post_13.html

அழகு. அழகு. அது சரி. அந்தப் பாளை மாணவன் செய்த சாதனை என்னவோ? சொன்னாத் தெரிஞ்சிக்கிருவம்ல.

விஜய் மாதிரி சட்டை....ம்ம்...பொங்கல் திருவிழால சேலை சுடிதார். நடக்கட்டும் நடக்கட்டும். ;-)

G.Ragavan said...

http://birund.blogspot.com/2007/04/blog-post_13.html

சிவாஜி படத்துக்கெல்லாம் வரிவிலக்கு குடுக்ககூடாது. அப்படீன்னா நாளைக்கு யாரும் ஜானின்னு படமெடுத்தாலும் வரிவிலக்கு குடுக்கக் கூடாது. ஒருவேளை அப்துல் கலாம்னு படமெடுத்துட்டா!

அதெல்லாம் சரி. பேசாம சிவாஜி கணேசன்னு பேர் வைக்கச் சொல்லலாம். ஆனா மாட்டாங்க. நடிகர் திலகம்னு வைக்கலாம். ஆனா அவர் பேர இப்பிடி ஒரு படத்துக்கு வெச்சு அவர அவமானப்படுத்த வேண்டாம்.

படத்துல ரஜினி சிவாஜின்னு உச்சரிக்க மாட்டாரு. ஷிவாஜி ஷிவாஜின்னுதான் உச்சரிப்பாரு. ஷிவாஜி ஒரு தடவ சாப்டா நூறுதடவ சாப்ட மாதிரின்னு டயலாக் பேசுவாரு.

G.Ragavan said...

http://gopinath-walker.blogspot.com/2007/04/blog-post_11.html

அழகழகா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ. அந்த ஆயிரத்தில் இன்னைக்கு ஒங்க வலைப்பூ.

எடுத்த எடுப்புலயே பெண்கள்தான் அழகுன்னு சொல்லீட்டீங்க. நோ அப்பீட்டுன்னு ஒங்களுக்கு ஒரு கூட்டமே தொடர்ந்து வரும். அது சரி. ஆண்களுக்குப் பெண்கள்தான அழகுன்னு மயிலாரும் சொல்றாரு. ஹி ஹி.

அந்த அம்மா நிகழ்ச்சி ரொம்பவே நெகிழ்ச்சிங்க. அம்மா என்றால் அன்பு. நான் பெத்த அம்மாவச் சொல்றேங்க.

கோழி பிடிச்சீங்களா? பிடிச்ச கோழிய கொழம்பு வெக்கச் சொல்லலையே. அந்த அளவுக்குச் சந்தோசப்படுங்க. :-)))))))

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/04/blog-post_1518.html

// நண்பர் சல்மா ஒரு வலைப்பூவை ஆரம்பித்தது தவறு என்றும் நான் வாதிட வரவில்லை! பெரும்பான்மை மதத்தில் இருந்துகொண்டு சிறுபான்மையினர் பெயரில் வந்தது மட்டுமே ஒப்புமை இல்லாதது. //

லக்கி, ஒரு சிறிய திருத்தம். பெரும்பான்மையாக இருந்து சிறுபான்மையினர் பெயரில் வந்ததுதான் தப்பு என்றால் சிறுபான்மையினராக இருந்து பெரும்பான்மையினர் பெயரில் வருவது சரியென்றாகிவிடும். மேலும் பெரும்பான்மை சிறுபான்மை என்பதே relative term. ஊருக்குள், மாநிலத்திற்குள், நாட்டிற்குள், உலகத்திற்குள் என்று பார்த்தால் பெரும்பான்மை சிறுபான்மையாகும். சிறுபான்மை பெரும்பான்மையாகும்.

அவரது தவறு வேறொரு மதத்தின் பெயரில் தவறாக எழுதியது. அவர் என்ன எழுதினார் என்று தெரியவில்லை. இன்னும் அந்த வலைப்பூ இருக்கிறதா? அவர் தவறாக எழுதியிருந்தாலும் அவரது கருத்து தவறு என்று முனைப்பாக யாரும் சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது. மதத்தின் பெயரால் அடித்துக்கொள்வதுதான் எல்லா பக்கங்களிலும் நடக்கிறதே. அப்படி அடித்துக்கொள்கிறவர்கள் எவராவது (எல்லா பக்கங்களிலும்) உண்மைப் பெயரில் அடித்துக்கொள்கின்றார்களா என்ன!

என்னைப் பொருத்தவரை அவர் செய்த பெரிய தவறு பொன்ஸ் பெயரில் போலி வலைப்பூ செய்தது. இது தனிநபர் தாக்குதல். மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுதான் என்னுடைய கருத்து.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/037.html

இந்தப் பாடலை இந்தச் சுட்டியில் இருந்து இறக்கிக் கொள்ளலாம்.

http://www.cooltoad.com/go/song?id=301009&get=bin

G.Ragavan said...

http://valai.blogspirit.com/archive/2007/04/15/tamil.html

என்னங்க இது! என்னைய ஏதோ விவரம் தெரிஞ்சவனாட்டம் கேள்வி கேட்டுட்டீங்களே! சித்திரைப் பிறப்புதான் எப்பொழுதும் தமிழ் வருடப் பிறப்பாக இருந்ததா என்று எனக்குத் தெரியாது. தையாக இருந்திருக்கும் என்று ஒரு சாரார் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு என்ன ஆதாரம் என்று சொன்னால் தெரிந்து கொள்ளலாம். தமிழ் வருடப்பிறப்பிற்காக இப்பொழுது சொல்லப்படும் புராணக்கதையில் எனக்கு ஏற்பில்லை. அப்படியென்றால் கன்னட, தெலுங்கு, ஹிந்தி, வங்காள வருடங்கள் எப்படிப் பிறந்தனவோ!

ஆனால் சித்திரைப் பிறப்பே தமிழ் வருடப் பிறப்பாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றே கருதுகிறேன். அதற்கு என்னிடம் ஆதாரம் இல்லாவிடினும்...சில உன்னிப்புகள் உண்டு. அதாவது பொதுவில் வானியலார்கள் கோள்களைக் கணிக்கையில் சூரியனை மையப்படுத்தியோ அல்லது சந்திரனை மையப்படுத்தியோ நாட்காட்டியைக் கணிப்பார்கள். சித்திரைப்பிறப்பு என்பது சூரிய நாட்காட்டி வகையில் வருகிறது. இதில் நமது தமிழ்ப்பிறப்புடனே....மலையாள விஷு, பஞ்சாப பைசாகி, வங்கப் புத்தாண்டு, ஒரியப் புத்தாண்டு, அசாமியப் புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இன்னொரு வியப்பான தகவல் ஒன்று. கர்நாடக தெலுங்கு வருடப்ப்பிறப்பு நம்மோடு ஒட்டி வராது. ஆனால் கர்நாடகத்தில் ஒரு சாரார் நம்மோரு வருடப் பிறப்பு கொண்டாடுகின்றனர். பஞ்சாபியரின் வருடப் பிறப்பான பைசாகி அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து தகவல் தெரிந்து கொள்ள நானும் ஆவலாக உள்ளேன்.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/04/44.html

தவளே என்ற பெயருக்குப் பொருள் சொல்லல் மிக எளிது. சால உறு தவ நனி கூறு களி. தவளே என்பது பெரியவளே என்று பொருள்படும் இங்கு. ஆகையால்தான் அடுத்தடுத்த வரிகளில் அவள் எவ்வளவு பெரியவள் என்றும் கூறுகிறார் அபிராமி பட்டர்.
1. சங்கரனார் மனைவி
2. சங்கரனார்க்கும் தாய்
3. யாவர்க்கும் மேலை இறைவி
ஆகையால்தான் தொடங்குகையிலேயே தவளே என்றழைக்கிறார்.

G.Ragavan said...

http://thoughtsintamil.blogspot.com/2007/04/blog-post_117664014980351574.html

அது சரி....தேவர்மகன் படத்தை முதலில் சன் தொலைக்காட்சியில்தானே கிண்டல் செய்தார்கள். அப்பொழுது இவர்கள் எங்கே போனார்கள்? இது குங்குமத்தில் வந்திருப்பது பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. மடையர்கள்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/04/blog-post_14.html

குழந்தைக்கும் பெற்றோருக்கும் எனது வாழ்த்துகள்.

மேகலை....புதுமையா வேணும்னா மேகலா

அங்கவை...புதுமையா வேணும்னா அங்கவி

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2007/04/267.html

நடிப்புக் கடவுளா? செல்வன் இது ரொம்ப ரொம்ப ரொம்பவே ரொம்ப!!!!!!!!!!!!

வெகுஜனப் படங்கள் தவறு என்பதல்ல வாதம். ஆனால் ரஜினி படங்கள் வரவர எப்படியிருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நடிப்பிற்கான கடவுள் கொஞ்சம் புதுமையான பாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும். நிறைய பேர் பார்க்கின்றார்கள் என்பதால் ஒன்று நன்று என்று ஆகிவிடாது. anyway i am not here to argue...எல்லாரும் வியாபாரிகள்தான். ஒரு சிலர் சிறந்த வியாபாரிகள். அவ்வளவுதான்.

G.Ragavan said...

http://pesalaam.blogspot.com/2007/04/blog-post_16.html

பிரியாணியிலேயே பலவிதமான செய்முறைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு விதம். நீங்கள் சொல்லும் வரலாறு ஐதராபாத்காரர்கள் முன்னிறுத்துவது. இதில் ஓரளவு உண்மை இருப்பதென்னவோ மெய்தான். ஆனால் பழைய நூல்களில் ஊண்சோறு இருக்கிறது. செய்முறை என்னவோ இன்றைய பிரியாணி போலத்தான். கறியையும் சோறையும் ஒன்றாக வேக வைப்பது. ஆனால் ஐதராபாத் பிரியாணி அப்படியல்ல. கறியும் சோறும் தனித்தனியாக வேகும்.

இன்றைய நிலையில் பிரியாணிக்கு ஐதராபாத் நிஜாம்கள் சொந்தம் கொண்டாடினாலும்....தென்னிந்தியாவே பிரியாணியின் மூதாதையர் நாடாக இருந்திருக்க வேண்டும் என்பது கணிப்பு. பேராமவுண்ட் ஏர்லைன்சில் ஊண்சோறு செய்வது எப்படி என்றும் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் ஒன்று...ஐதராபாத்தில் நன்றாகச் சாப்பிடுகிறார்கள்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/04/blog-post_18.html

மிகவும் அருமையான படம். அருமையான பாடல்கள். மூன்று பாடல்களுமே முத்துகள். அதிலும் வசந்தகால நதிகளிலே என்ற பாடல். முதலில் ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் அந்தாதியாகப் பாடிக்கொண்டு வர...மென்மையாகச் செல்லும் பாடல். கமல் தண்ணீரில் வீழ்ந்ததும் மெல்லிசை மன்னரின் குரலில் மனவினைகள் யாருடனோ என்று பாடுகையில் புதுப்பரிமாணம் பெறும். அதே போல ஆடிவெள்ளி பாடலும் மிக இனிமையானது. அவளொரு கதாநாயகியும் என்னுடைய விருப்பப் பாடல்களில் ஒன்று.

இதுதான் கதாநாயகியாக ஸ்ரீதேவிக்கு முதற் படம். இதற்குப் பிறகு வந்ததுதான் 16 வயதினிலே.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/04/18.html

கேட்டேன் கேட்டதைக் கொடுத்து விட்டான். முருகன் திருப்புகழோடு வந்து விட்டான். மிக்க நன்றி வி.எஸ்.கே.

இந்தத் திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்தமானது. படிக்கவும், கேட்கவும், நினைக்கவும், நினைத்துப் பாடவும், பாடி மகிழவும், மகிழ்ந்து முகிழவும் சிறப்பான திருப்புகழ்.

திருநெல்வேலியில் இருந்து அருகாமையிலுள்ள அருமையான பேரூர் வள்ளியூர். அங்குறையும் வள்ளிமணாளன் திருக்கோயில் பற்றி எழுந்த திருப்புகழ் இது.

அல்லில் நேரும் மின், சூரர் தொய்ய ஊர் கெட, வல்லிமார் இருபுறமாக என்று அருமையான சொற்றொடர் நிரம்பிய பாடல்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/04/18.html

அது சரி.....கேட்பது இத்தோடு நிற்குமா என்ன? "பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய பவனி வரும்படி அதனாலே
பகர வளங்களும் நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே" என்று தொடங்கும் திருப்புகழையும் உங்கள் விளக்கத்தோடு கேட்க மகிழ்ச்சி.

G.Ragavan said...

http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_14.html

ஆங்கில மாதங்கள் என்று தலைப்பு வைத்திருக்கலாம். நான் தமிழ் மாதப் பெயர்களுக்குத்தான் காரணம் சொல்லியிருக்கின்றீர்களோ என்று நினைத்தேன். தகவலுக்கு நன்றி.

// இருந்தாலும் பரிகாரம் செய்வது என்ற பெயரில் பலி கொடுத்தார்கள்.
கோழி ஆடு ஒட்டகம் என்று பலி கொடுத்து வந்தனர் பழங்காலத்தில்! காட்டுமிராண்டிகள் இன்றும்கூட பலி இடுகிறார்கள். இந்தியாவில் இந்து மதத்தினர் இன்றளவும் பலி இடுகிறார்கள். அதனால் தான் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார் தந்தை பெரியார். //

இது ஏற்றுக்கொள்ளும்படி தோணவில்லை. இந்துக்களில் திராவிடர்களே இந்தப் பலியிடுதலைச் செய்வது. இப்பொழுது பிராமணர்கள் பலியிடுவதில்லை. அதுவுமில்லாமல் ஜெயலலிதா பலியிடுதலைத் தடை செய்ய சட்டம் போட்டார். அப்படியானால் அவர் நவநாகரீகவாதியா! மைக்கேல் காபிரியேல் கதை தெரியுந்தானே. அங்கே கொழுத்த ஆட்டுக்குட்டியைப் பலியிட்டவன் காட்டுமிராண்டியா! என்னவோ போங்கள்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/04/blog-post_01.html

மிகவும் அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட. பாடலில் இரண்டு திருத்தங்கள்.

அங்குத் தூங்கிய என்று வராது. அங்கு தூங்கிய என்று வரும். அத்தோடு பெண்மையில் அல்ல. தூங்கிய பெண்மையில் எப்படி எழ முடியும்? அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள். அவன் சுகம் வாங்க வரும் பொழுது (அதுவரையில்) தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள் என்பது அதன் பொருள்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/blog-post_594.html

திராச ஐயா...கந்தனை நினைத்தால் கண் முன்னே வருவான் என்பது உலகறிந்த வழக்காயிற்றே! நீங்கள் விரும்பி நினைத்த பின்னும் வாராதிருப்பானோ. இன்று கோயிலுக்குச் செல்லும்படி உள்ளம் விரும்பியது. அருகில் இருந்தது அடையாறு அனந்தபத்மநாபசுவாமி திருக்கோயில். அங்கு முருகன் இல்லையே என்று மனம் சிறிது நினைத்தாலும் கண்ணன் வேறு கந்தன் வேறா என்று எண்ணிச் சென்றேன். அங்கே மூன்று கதவுகளும் சாத்தியிருந்தன. சென்றதும் சடபடதடவென மேளமும் நாதமும் கிளம்ப கதவங்கள் ஒவ்வொன்றாக திறக்க முருகா முருகா முருகா என்று வணங்கினேன். அரங்கனைத்தான். பிறகு திருக்கோயிலை வலம் வருகையில் ஒரு பெரிய படம். இறைவனும் இறைவியும் இருக்கும் படம். அதில் ஒருபுறம் முருகப்பெருமான் மயிலேறிக் கொண்டு வேல் பிடித்துக்கொண்டு நின்றான். சந்தததும் நினையாமல் எப்பொழுதோ நினைக்கும் நமக்கு இப்படிக் கோயிலில்...அனந்தபத்மநாபசுவாமி கோயிலில் காட்சி தந்தானை எப்படிப் புகழ்வது! கேட்பவர்க்கு இது கேணத்தனமாக இருக்கும். ஆனால் அனுபவித்தவருக்கு! முருகா! முருகா! முருகா!

G.Ragavan said...

http://vanusuya.blogspot.com/2007/04/blog-post_18.html

அனுசுயா அழகு பத்தி பதிவு போட்டிருக்கீங்க. அழகுதான். மலர்கள் அழகில்லைன்னு யார் சொல்ல முடியும். பறக்கின்ற வண்டுகள் அனைத்தையும் ஈர்த்து தன்னோடு சேர்த்து மகரந்தத்தை அப்பி விளையாண்டு அனுப்பி வைக்கிறதே!

குழந்தைகள்....முன்னே சொன்ன மலர்களை விட மென்மையானர்கள். ஆனால் நாம் அப்படிக் கையாள்வதில்லை!

// கொங்கு ராசா said...
//எல்லா குழந்தைகளும் அழகுதான//

ஆமா, ஆமா,, அதுனால தான எங்க மூணு பேரையும் கூப்பிட்டு இருக்கீங்க
//கொங்கு ராசா, இளா, இராகவன்//

ஒரு அழகே
அழகை பற்றி எழுதுகிறதே'ன்னு யாராவது கிறுக்கிடுவாங்கலேன்னு பார்க்கிறோம்.. இல்லாட்டி அழகை பத்தி எழுத எங்களுக்கு ஆட்சேபம் இல்ல.. என்ன சொல்றீங்க இளா, ஜீரா?? ;) //

ஆமு ஆமு. மறுப்பில்ல. மறுப்பில்ல. :-)

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/04/blog-post_20.html

வெவசாயின்னு நிரூபிச்சிட்டீரு. இந்தன வகையான பயிர்களைப் பத்தி விலாவாரியாச் சொல்லி.....தளைச்சத்து...சாம்பல்சத்து...சுண்ணாம்புச்சத்துன்னு பிரிச்சி மேயிறீங்களேய்யா! அழகுதாம் போங்க.

நம்மளும் அழகு பத்தி பதிவு போட்டிருக்கோம்ல. இங்ஙன பாருங்க.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/04/blog-post_01.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா

நீங்கள் சொன்ன மாற்றங்களைச் செய்து விட்டேன்.
பெண்மயில் பற்றி நீங்க என்ன சொன்னாலும் சரி தான்:-) //

பெண்மயில் பற்றிச் சொன்னேனா? பற்றியதை நீங்கள் பார்த்து விட்டீர்களா என்ன? ஹா ஹா

// ஊருக்கு இன்னும் கிளம்பலையா? இல்லை விமானத்தில் தமிழ்மணமா? :-) //

கிளம்பிக்கொண்டேயிருக்கிறேன். இன்னும் ஒரு நாள் இருக்கிறது.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/04/46.html

நல்லதொரு பாடல். நல்லதொரு விளக்கம். இந்தப் பாடலைப் படிக்கையில் ஏன் புது நஞ்சை உண்டு என்று எழுதியிருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன். இப்படித் தோன்றியது. நஞ்சு என்பது கொல்வது. அதாவது நமக்குத் தீயது. நமக்குத் தீயவைகள் ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக வருகிறதல்லவா. அந்தப் புதிய நஞ்சுகளைத் தானுண்டு எப்பொழுதும் நமைக் காக்கத் தானுண்டு என்கிறாரே அந்தப் பெருந்தகை. ஆகையால் புது நஞ்சை உண்டு என்று சொல்வது பொருத்தமே என்று முடிவுக்கு வந்தேன்.

G.Ragavan said...

http://manggai.blogspot.com/2007/04/blog-post_19.html

சரியாச் சொன்னீங்க. தேசிய அளவிலயும் சரி..மாநில அளவுலயும் சரி..இப்பிடித்தான் ஓடிக்கிட்டிருக்கு. அபிஷேக்-ஐஸ்வரியா கல்யாணத்தக் கிண்டலடிக்கிற நாம...சூரியா-ஜோதிகா கல்யாணத்துக்கு எப்படிப் பாஞ்சு பாஞ்சு படிச்சோம். ஆனாலும் ஊடகங்களுக்குப் பொறுப்பு கொஞ்சம் நஞ்சமல்ல....ரொம்பவே குறைவு. அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி செய்திகளை மாற்றித் தருவதில் எல்லா ஊடகங்களும் சிறப்பாகப் பணியாற்றுகின்றன.

G.Ragavan said...

http://pradeepkt.blogspot.com/2007/04/blog-post_20.html

வாங்க ப்ரதீப் வாங்க. நீங்களும் அழகு பதிவு போட்டாச்சா! ஒங்க ஊர்க்காரர் ஒங்களக் கூப்டுட்டாரு. நல்லது. அழகான ஆறுகளைப் பத்திச் சொல்லீட்டீங்க. வைகையப் பத்திச் சொன்னீங்களே...அது வாஸ்த்தவம். ஒரு காலத்துல வையையும் பொய்யாக் குலக்கொடிதான். இன்னைக்குத்தான் அத மதுரைக்காரங்க(சண்டைக்கு வராதீகவே) பப்ளிக் கக்கூசாக்கீட்டாங்க.

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2007/04/blog-post_21.html

குமரன்...எனக்கு உண்மையிலேயே ஒரு ஐயம். மாதங்களில் மார்கழி என்றா கண்ணன் கீதையில் சொல்லியிருக்கின்றான்? அதற்கு இணையான மாதம் தனுர் என்று நினைக்கிறேன். அந்தத் தனுர் என்னும் பெயர் கீதையில் பயன்படுத்தப்பட்டிருகிறதா? அந்தத் தனுர் மாதம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் நமக்கு பதினைந்து இருவது நாட்களுக்கு முன்னமே வந்து விடுகிறது. அப்படியிருக்கையில் அது மார்கழிதான் என்று எப்படி சொல்லப்படுகிறது?

மார்கழி காலை....ஆடி மாலை என்று சொல்லியிருப்பது அழகாக இருக்கிறது.

G.Ragavan said...

http://asifmeeran.blogspot.com/2007/04/blog-post_18.html

ஜேசுதாஸ் ஒதுங்கியிருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. அல்லது சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் நிலை. எதுவாக இருந்தாலும் அவரை கோயிலுக்குள் விட மறுப்பது மிகத்தவறு என்பதில் மறுகருத்தில்லை. மிகத்தவறான முடிவை குருவாயூர் கோயில் (அறங்காவலர்கள்) எடுத்திருப்பது வருத்தத்திற்குரிய மூடநம்பிக்கை என்பது என் கருத்து.

G.Ragavan said...

http://pradeepkt.blogspot.com/2007/04/blog-post_20.html

// பிரதீப் said...
ராகவா,
நீங்க சொன்னது உண்மைதாங்க... வைகை பொய்யாக் குலக்கொடியா இருந்ததைப் பார்க்கிற வாய்ப்பு இப்ப இருக்குறவுகளுக்கு இல்லாமப் போயிருச்சு. பைதிவே, உண்மைய உள்ளபடிச் சொன்னா மதுரக்காரவுக சண்டைக்கு வர மாட்டோம் :) //

மதுரைக்காரகளே கேட்டுக்குங்க. ஒங்க ஊர்க்காரரு சொல்றது நெசமாய்யா?

G.Ragavan said...

http://asifmeeran.blogspot.com/2007/04/blog-post_18.html

// dondu(#11168674346665545885) said...
அதே ஜேசுதாஸ் ஐயப்பன் மேல் பாட்டு பாடியதற்காக அவரது குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்விக்க முடியாது என்று பல ஆண்டுகளுக்கு முன்னால் கிறித்துவ தரப்பிலும் கூறப்பட்டதே. பாவம் மத்தளத்துக்கு இருபக்கமும் அடி. அப்படித்தானே.

அந்தக் காலக்கட்டத்தில் ஆர்ச் பிஷப் அருளப்பா, "எல்லா மதமும் சமம் என்பதை நான் ஒத்துக் கொள்ள முடியாது. என்னைப் பொருத்தவரைக்கும் என் மதமே உசத்தி" என்று கூறி ஜேசுதாசுக்கு நடந்ததை நியாயப்படுத்தியதையும் படித்தேன் என்பதை இங்கு இப்போது கூறிவிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன் //

அப்படி நடந்திருக்குமானால் அதுவும் தவறே.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/04/blog-post_7457.html

பாவம்யா கைப்பு. இப்பிடி அடி வாங்க வெச்சிட்டீங்களே. ஹி ஹி ஹி...ஆனாலும் மயிலாருக்கு அந்த நோட்டீசு ரொம்பப் பிடிச்சிருந்ததாம். :-)

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2007/04/22.html

சந்திப்பு நல்லபடி நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருடனும் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. ஆனாலும் நல்ல கலந்துரையாடல் நடந்தது குறித்து மகிழ்ச்சி.

G.Ragavan said...

http://vettrikandaswamy.blogspot.com/2007/04/royal-family-of-jaffna.html

இது கதையாகவும் இருக்கலாம். இப்படிச் சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பதில் தவறிருக்க முடியாது. சங்கிலியன் போர்ச்சுக்கீசியர்களால் கொடுங்கொலை செய்யப்பட்டதே வரலாறு. குடும்பத்தாரின் நிலை தெரியவில்லை. மதம் மாற்றப்பட்டு அப்படியே அதைப் பின்பற்றியிருக்கலாம். ஆனால் கண்டிப்பாக யாழ் அரசத்தின் ஆண் வாரிசுகளைப் போர்ச்சுக்கீசியர்கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். பெண்கள் கன்னியாஸ்திரிகளாப் போனார்கள் என்றால் வாரிசுகள் பெருகியது எப்படி? பல கேள்விகள் எழுகின்றன. விடைகளைக் கொடுக்காத வரை..இவர்களது பேச்சுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே உண்மை.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/04/blog-post.html

பார்த்துக்கொண்டே எப்படி இருக்க முடியும்? நிலவோ இரவில் மட்டுந்தான். அதிலும் மாதத்தில் ஓர் நாள் விடுமுறை. ஒருநாள் மட்டுமே முழு நிலவு. மற்ற நாட்களிலெல்லாம் தேய்தலும் வளர்தலும். அப்புறமெப்படி? ;-)

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/blog-post_4899.html

ஆகா! அருமையான சந்தப் பாடல். இதைச் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டிருக்கிறேன். மிகவும் அருமை. தமிழ்ப் புத்தாண்டிற்குப் பொருத்தமாக பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றி. சௌந்தரா கைலாசம் அவர்கள் மிகச்சிறந்த கவிஞர். மரபில் புலமையுடையவர். அந்தத் திறமும் தமிழும் பாடலில் வெளிப்படுகிறது.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/blog-post_13.html

மதுரை மணியின் இசைப்பணி முருகனுக்குத் தனி மாலை சூட்டியிருக்கிறதே. மிகச் சிறப்பு. மிகச் சிறப்பு.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/04/blog-post.html

// தேவ் | Dev said...
வாய்யா காதல் முரசு... ஜி.ரா. கவிதை என்பது லாஜிக் இல்லாத மேஜிக்... இதுல்ல போய் டெஸ்ட் கேஸ் ரன் பண்ணப் பார்த்தா தகுமா? //

அடடே தேவ்! கவிதைல லாஜிக் பாக்கக் கூடாதா! தெரியாமப் போச்சேய்யா! நமக்கும் கவிதைக்கும் ரொம்பத் தூரம்.

// அருட்பெருங்கோ said...
வாங்க தல,

/வாய்யா காதல் முரசு.../

நான் வர்றேன்னு தான் கதறுறேன்... யாரும் கன்டுக்க மாட்டேங்கறாங்க...

//// ஜி.ரா. கவிதை என்பது லாஜிக் இல்லாத மேஜிக்... இதுல்ல போய் டெஸ்ட் கேஸ் ரன் பண்ணப் பார்த்தா தகுமா? /

இன்னொரு தடவ சொல்லுங்க... அவரு டெஸ்டிங் ஃபீல்டுல இருக்காருனு நிரூபிக்கிறாரு!!! //

ஹலோ...வாப்பா அருட்பெருங்கோ....நாங்கள்ளாம் பெருபாமென்சு டெசுடிங்..தெரிஞ்சிக்கப்பா!

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2007/04/blog-post_23.html

திரைப்படவிழா சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துகள். இன்னும் பல நிகழ்ச்சிகள் இதை விடவும் சிறப்பாக நடந்து விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர வாழ்த்துகள்.

// பெண்ணியம், பெண் விடுதலை, தலித்தியம் குறித்து விவாதிக்கக் கூடிய சமூக ஆர்வலர்கள், இலக்கிய சிந்தனாவாதிகளிடமும் அவர்களைக் குறித்த கரிசனம் உள்ள அளவிற்கு போதிய புரிதல் இன்றி, முயற்சியும் இன்றி மௌனம் சாதிக்கின்றனர்.//

இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். எல்லாரும் ஏதோ குறையுடையவர்களே. ஆனால் அடுத்தவர்களின் குறையை மட்டும் குறையாகக் காணும் மனநிலை மாறாத வரை இப்படித்தான் தொடரும். நிலமை மாறும் என்று நம்புவோம்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2007/04/blog-post_25.html

ஒத்துக்கிறேன். ஒத்துகிறேன். அப்படியே ஒத்துக்கிறேன். நடிகர் திலகம்னா அது ஒருத்தர்தான். அவரோட எடம் அவருக்கு மட்டுமே.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/04/blog-post_24.html

நாட்டுப்புறப்ப்பாடல்களின் உயிர்ப்பு மற்ற பாடல்களில் இயல்பாக வராது. ஆகையால்தான் இலக்கியங்களே நாட்டுப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டு வெளிப்பட்டன. சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் படித்தாலே அது விளங்கும். ஆய்ச்சியர், குறத்தியர், உழவர், என்று பலருடைய பாடல்கள் அவரவர் மண்வாசனை மாறாமல் அருமையாக கொடுத்திருக்கிறார் இளங்கோ.

இந்தப் பாடல் செமி-ஃபோக் வைகையைச் சார்ந்தது. நாட்டுப்பாடலின் அடிப்படையில் எழுந்த கருநாடகப் பாணிப் பாடல். முன்பே கேட்ட பழக்கமான பாடல்தான். மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/blog-post_23.html

வாங்க ஜோசப் சார் வாங்க. இப்பதான் ஒங்க பதிவைப் பார்த்தேன். அழகு அழகு.

ஆம்...உங்கள் இரண்டாவது மகளைப் பற்றி திரும்பிப் பார்க்கிறேன் ஒன்றாம் பாகத்தில் படித்தேன். அப்பப்பா! மனம் கனக்கச் செய்ததே! மறுபடியும் நினைவு படுத்தி விட்டீர்கள். இறைவா!

ஒவ்வொரு அழகும் அருமை. வயதான காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதும் அழகுதான். அதற்கு நீங்கள் உதவியதும் அழகுதான். அருமை. அருமை. மக்களுக்குச் செய்யும் சேவை மகேசனுக்குச் செய்யும் சேவை என்று சொல்வார்கள். அது உண்மை. உண்மை. உண்மை.

அழகு பதிவிட அழைத்தமைக்கு நன்றி. ஏற்கனவே அழகு பற்றி பதிவிட்டிருக்கிறேன் இங்கே.
http://gragavan.blogspot.com/2007/04/blog-post.html

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/04/47.html

அருமை. பொழிப்புரை மாதிரி குடுத்துட்டீங்க. இலக்கிய நயம் பாராட்டல் பாநயம் பாராட்டல் மாதிரி விளக்கம். நல்லாயிருக்கு.

பஞ்சி பஞ்சிச் சாவார்னு
அவர் பஞ்சாத பொழுதில்லை அவனியிலே

இது எப்படியிருக்கு? :-)

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/04/ii-52.html

சார்...உங்க நிலைலதான் நானும் இருந்தேன். பொதுவாகவே தமிழ்நாட்டுப்பசங்களோ பொண்ணுங்களோ அடுத்தவங்ககிட்ட அவ்வளவு லேசாப் பழகீர்ரதில்ல. ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். நானும் அப்படித்தான் இருந்தேன். உங்களுக்கு நாப்பதுல கெடைச்ச பாடம் எனக்கு இருவதுல கெடைச்சது. அதுக்கப்புறம் மாறினேன். ஆனாலும் அப்பப்ப பழைய புத்தி எட்டிப்பாக்கும். அப்பப்ப திருந்திக்கிர்ரதுதான்.

G.Ragavan said...

http://asifmeeran.blogspot.com/2007/04/blog-post_22.html

உண்மைத் தமிழனின் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். பெண்கள் ஏன் மூடிக்கொள்ள வேண்டுமென்றால் ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டு தப்பு செய்து விடுவார்களாம்...அடக்கொடுமையே....ஒரு குறிப்பிட்ட மதமென்று இல்லை...பொதுவாகவே பண்பாட்டைப் பெண்கள் மீது தூக்கி வைப்பதுதான் உலகம் முழுவதும் நடக்கிறது.

// மற்ற மதங்களை விமர்சிப்பதில் முஸ்லிம்கள் பொதுவாக அக்கறை காட்டுவதில்லை. //

இதென்ன கூத்து...வலைப்பூக்களிலேயே இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் சேறுகள் வீசப்படுகின்றனவே. அடுத்தவர் தவறு என்று சொல்லித்தானே எந்த மதமும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது!

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/04/212.html

// நம்ம ராம் என்னைய மாட்டி உட்டுருக்காரு ... அவர பத்தி நான் சொல்லணுமா ..இளஞ்சிங்கம்.. மதுரைக்கார பாசக்கார பயர் ..(பயர் அப்டின்னா என்னன்னு கேக்குறீங்களா? "பய" அப்டின்றத கொஞ்சம் மரியாதையா சொல்லணும்னா "பயர்" அப்டின்னுதான சொல்லணும்?! இல்லீங்களா?) //

ஒரு சின்ன திருத்தம். பையர்-னு சொல்லுங்க. அப்புறம் ஐ-ய விட்டுட்டீங்கன்னு மதுரக்காரப்பய சண்டைக்கு வந்துரப் போறான். :-))))

// இதுபோல் இன்னும் சில பல நிமிடங்கள் உண்டுதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அதில நிறைய வெளியே சொல்ல முடியாத, சொல்லக் கூடாத நிமிடங்கள் அப்டின்னு வச்சுக்குங்களேன். //

சரிங்க சார். வெச்சுக்கிறோம். நீங்களும் அந்த அழகான நினைவுகளை மனசுக்குள்ள சந்தோஷமா எப்பவும் வெச்சிக்கோங்க. ஏன்னா...பல சமயங்கள்ள நினைவுகள் சிறந்த மருந்துகளாச் செயல்படுது.

அழகாச் சொல்றவங்களாத்தான் பாத்துக் கூப்பிட்டிருக்கீங்க. அவங்க சொல்றதக் கேக்கவும் காத்திருக்கோம்.

G.Ragavan said...

http://mkarthik.blogspot.com/2007/04/blog-post_26.html

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே விஜய் நடத்தும் இந்தக் கூத்து.

ஒரு சினிமா சொந்தமா எடுக்கச் சொல்லுங்க மொதல்ல. எல்லாம் ரீமேக்கு. எம்.ஜி.ஆர் மேல எனக்கு விமர்சனங்கள் நெறைய இருந்தாலும் அவரு படங்கள் இயக்கிய திறமைசாலி. ஒவ்வொரு நுட்பமும் தெரிஞ்சவரு. அவரு எங்க? டப்பிங் டண்டணக்கா எங்க?

G.Ragavan said...

http://mkarthik.blogspot.com/2007/04/blog-post_26.html

// Syam said...
மலைமேல இருக்கறவன் எல்லாம் முருகனும் இல்ல....
மாலை போட்டவன் எல்லாம் ரஜினியும் இல்ல...:-) //

ஹா ஹா ஹா ஷ்யாமு...கலக்கீட்டீங்க

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/04/48.html

நல்ல விளக்கம் குமரன். அருமையான பாடல். இங்கு "சடைமுடிக் குன்றில் ஒன்றி படரும்" என்று இருக்கிறதே. ப் விடுபட்டதா?

இந்தப் பாடலில் ஒன்று கவனிக்க வேண்டும். பிறப்பு இறப்பு தவிர்ப்பது என்று வருகையில் ஐயனையும் ஐயையையும் இணைத்துச் சொல்லியிருக்கிறார்கள். பொதுவில் அப்படிச் சொல்லும் வழக்கம் உண்டு. அப்படியில்லாமல் அம்மையை மட்டும் வைத்து பிறவியறுக்கும் பாடல் உண்டா? முருகனை மட்டும் வைத்து உண்டு. ஏனென்றால் அம்மையப்பனுக்கும் அவருக்கும் வேறுபாடில்லை என்கிறது தமிழ்.

G.Ragavan said...

http://imsai.blogspot.com/2006/06/blog-post_20.html

ஈஜிப்டுக்குப் போயிரனுமய்யா....அட..ஸ்பிங்ஸ்கு முத்தம் குடுக்கத்தாய்யா!

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/04/blog-post_26.html

உண்மையான ஆத்திகனும் சாது. உண்மையான நாத்திகனும் சாது. ஆனா ரெண்டுமே இல்லை. இருக்குறதுல உண்மையோட அளவு கூடக்கூட சாதுத்தனமும் கூடுது. அவ்வளவுதாங்க விஷயம்.

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2007/04/blog-post_18.html

கருப்பும் அழகுதாங்க. பனம்பழம். குயில். ஆனை. நாவல். எத்தனை வேணும்? பொதுவா எந்த நிறமும் அழகே. அது பொருத்தமான எடத்துல இருக்கும் பொழுது ரொம்பவும் அழகு.

பெங்களூர்ல இருந்து மதியம் ஊருக்குக் கெளம்புவீங்களா? வெள்ளிக்கெழமை ராத்திரியே போறதுக்காக்கும்? எலக்ட்ரானிக் சிட்டியில பஸ் ஏறனும்னா...தாராளமாப் போகலாம். அது சரி...நீங்க ராஜா. ராணி யாரு?

இளவஞ்சி, ஓமப்பொடி, குப்புசாமி ஆகியோர் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2007/04/blog-post_25.html

முருகா! சத்தியாமாக என்னால் பார்க்க முடியவில்லை. தெய்வமே...அறுவை சிகிச்சை என்றால் எவ்வளவு வலி..எவ்வளவு ரத்தம். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு ஒரு உறுப்பை அறுத்துப் போடச் சம்மதிக்கின்ற மனநிலையின் உறுதியை என்னவென்று சொல்வது. இனி எந்தத் திருநங்கையைப் பார்த்தாலும் அவர்கள் பட்ட வலி கண்ணில் வந்து போகுமே!

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/blog-post_26.html

பூவை செங்குட்டுவன் பல முருகன் பாடல்களை இயற்றியிருக்கின்றார். ஆனால் இந்தப் பாடல் இதுவரை கேட்கக் கிடைத்திராதது. படிக்கவாவது இன்று கிடைத்ததற்கு தங்களுக்கு நன்றி பல.

வாய் திறந்தான் முத்தமிழ் பிறந்தது என்ற வரிகளைப் படிக்கையில் எனக்கு அருணகிரி பயன்படுத்திய ஒரு பெயர் நினைவிற்கு வருகிறது. நகையேவிய நாதர் என்ற பெயர் அது. ஈசனுக்கு அந்தப் பெயராம். முப்புரம் எரிசெய்த பொழுது செருக்குற்ற அனைவரும் நாணும் வகையில் சிரித்தே எரித்தாராம். அப்படி முப்புரங்களின் மேல் நகை (சிரிப்பை) ஏவி அழித்ததால் அவரை நகையேவிய நாதர் என்கிறார் அருணகிரி. அது போல இதுவும். மிகவும் அருமை.

G.Ragavan said...

http://pitchaipathiram.blogspot.com/2007/04/traffic-signal.html

இந்தப் படத்தை நானும் பார்த்தேன். ரசித்தேன். கனத்தேன். பின்னூட்டத்தை முழுமையாக இரவு இடுகிறேன்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2007/04/blog-post_25.html

// தருமி said...
ஜோ,
சமீபத்தில் black படம் பார்த்து வயத்தெரிச்சலாப் போச்சு - நம்ம ஆளுக்கு இந்த மாதிரி ஒரு படம்கூட இல்லாம போச்சே... அப்படி ஒரு டைரக்டர் இல்லாம போச்சேன்னு ஒரு கவலை. சிகப்பு விக்,ஜரிகை வச்ச கோட்டுன்னு அவர எவ்வளவு மட்டமா காட்ட முடியுமோ அப்படி காட்டின படங்களுமா எடுத்து, அவர் தரத்துக்குப் படம் இல்லாமலேயே போயிரிச்சேன்னு கவலை.

எனக்கு சுத்தமா அமிதாப் பிடிக்காது; ஆனா அந்தப் படம் black ... அழகு..ஜோ! நம்ம ஆளுக்கு அப்படி ஒரு படம் கூட அமையாம போச்சே... :( //

எனக்கும் அந்த வருத்தந்தாங்க...அதெப்படி அப்படி ஒரு அருமையான நடிகரை வீணடிக்க மனசு வந்ததோ! முதல்மரியாதை மாதிரி பரிச்சைக்கு நேரமாச்சு படத்தையும் சொல்லலாம். பார்த்தீங்களான்னு தெரியலை. வரது..வரதுன்னு அவரு...அடடா! முடிஞ்சா அந்தப் படம் பாருங்க. ஐயங்காரா வருவாரு....மிலிட்டிரி ஓட்டல் வாசல்ல நின்னு சிக்கன் 65 வாங்குவாரு...அந்த ஒரு காட்சி போதும். அடடா! என்னதான் பெரிய ஊதாக் கூளிங்கிளாஸ்னாலும் கீழ்வானம் சிவக்கும் படத்த மறக்க முடியுமா? அவரும் சரிதாவும் போடும் போட்டி...திருவிளையாடல்...சொல்லவே வேண்டியதில்லை. அதே மாதிரி நவராத்ரியில் வரும் அந்த கூத்துக்காரர். ரூப சித்திர மாமரக்குயிலே...தங்கச் சரிகைச் சேல எங்கும் பளபளக்க...ஆகா! ஆனா ஒன்னுங்க....அவரு போயும் போயும் தமிழனாப் பொறாந்தாரே...ஒரு மலையாளியாவோ மராட்டியாவோ தெலுங்காவோ பொறந்திருந்தா...நாம தலைல தூக்கி வெச்சுக் கொண்டாடியிருக்க மாட்டோமா!

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/04/blog-post_26.html

// விரும்பி ஆத்திகர் ஆகுபவரை விட விரும்பி நாத்திகர் ஆகுபவரே மிகுதி. நினைவு தெரிந்தவுடனே எல்லோரும் ஆத்திகர்களாகத் தான் இருக்கிறார்கள், பின்பு தான் மாறுகிறார்கள். ஆத்திக செயல்பாடுகளில் குறை இல்லாவிட்டால் நாத்திகன் எங்கிருந்து வரப் போகிறான். //

கோவி, இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு நினைவு தெரிந்து பள்ளி கல்லூரிகளில் கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்த நினைவே இல்லை. அனால் போகப் போக.....எல்லாம் மாறியது. இறைநம்பிக்கை ஊறியது. இங்கிருந்து அங்கு தாவியவர்களும் உண்டு. அங்கிருந்து இங்கு தாவியவார்களும் உண்டு. ஆண்டவனையே வீட்டுக்கு அழைத்து வந்த செம்மல் என்ற உளறல்களுக்கும் ஆண்டவன் கீழ உக்காந்திருக்க இந்தம்மா சேர்ல உக்காந்திருந்தாங்க..போன்ற உளறல்கள் நமது ஊரில் எக்கச்சக்கம். ரெண்டு பக்கத்துலயும் பெரும்பாலும் அரைகுறைகள்தான். அதுதான் உண்மை.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/04/blog-post_26.html

டீச்சர்...அந்தத் தேங்காய் தாய்லாந்து தேங்காய். என்ன சுவையான நீரு...அந்த வழுக்கை அடடா! பதநி குடிச்சாப்புல தேங்காத்தண்ணி...நான் சிங்கப்பூரு போயிட்டு வந்ததிலிருந்து தாய்லாந்து எளநிக்கு அடிமையாயிட்டேன். என்ன குளுமை..என்ன வளமை...

நீங்க சொல்ற கிருஷ்ணன் கோயில் முஸ்தபா பக்கத்துல கொஞ்சம் முன்னாடி போனா இருக்கா? செராங்கூன் தெருன்னு நெனைக்கிறேன். அங்க ஒரு பெருமாள் கோயிலுக்கு நான் போனேன். அங்க உள்ள கருவறைக்குள்ளேயே போட்டோ எடுக்க விட்டாங்களே. நான் நம்ம பாண்டிநாட்டு ஆண்டாளை (தனிச் சந்நிதி) மட்டும் படம் பிடிச்சிட்டு வந்தேன். :-)

தொடர் முடிஞ்சு போச்சா! அதுவும் நல்லதுக்குத்தான். அடுத்த தொடர் தொடங்கீரலாமே.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/04/blog-post_23.html

ஆகா...டீச்சர் இப்பிடி மதவேறுபாடுக இல்லாம கோயிலுக்குப் போயிட்டு வந்தது ரொம்பச் சந்தோசம். எங்கப்பன் முருகன் கோயிலுக்குப் போகலையே டீச்சர் நீங்க. லிட்டில் இண்டியா செராங்கூன்னே சுத்தியிருக்கீங்களே!

காளியம்மன் கோயிலுக்கு நான் போனப்ப கூட்டம் தாங்கலை. நிக்ககூட எடமில்லை. வெள்ளக்காரங்க வந்து வீடியோ எடுத்துத் தள்ளிக்கிட்டிருந்தாங்க.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/04/blog-post_20.html

இந்தக் கோயில்தான் அந்தக் கோயில். இங்கதான் ஆண்டாளம்மாவைப் படம் பிடிச்சேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/04/blog-post_26.html

எனக்கு இந்தப் படம் பாக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனா பாக்க முடியலை. நல்ல விமர்சனமா செஞ்சிருக்க. சரி...ஆம்ஸ்டர்டாமுல இந்தப் படம் பாக்க முடியுமா? அதுக்கு எதுவும் வழி இருக்கா?

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/04/5.html

விளங்காதவை பற்றி விளங்கிய பொழுதிலேயே எல்லாரும் பதிவிட்டு அழகில் மயங்கிக் கொண்டிருக்கும் வேளையிலே விளங்காப் பதிவிட்ட அருட்பெருங்கோ விளங்கியவர் என்பது விளக்கமாக விளங்குகிறது.

எல்லாமே கருப்பு கருப்பா பிடிக்குதா! ம்ம்ம்....சரி.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/04/blog-post_18.html

// வணக்கம் ராகவன்

என்ன காரணமோ தெரியவில்லை, உங்கள் பின்னூட்டம் பிந்தித்தான் வந்தது :-( //

இருக்கட்டும் ப்ரபா. பிந்தி வந்தாலும் பின்னூட்ட வரிசையில் முந்தி இருப்பதைப் பாருங்கள். :-)

// சொல்லப்போனால் ரஜினி வாயசைத்த முதல் பாட்டுக்கு குரல் கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.வி.
அதாவது "மணவினைகள் யாருடனோ" என்ற வரியைக் குறிப்பிட்டேன். //

ஆமாம். ரஜினிக்கு முதலில் பாடியவர் மெல்லிசை மன்னர்தான். இந்தப் படத்திற்குப் பிறகுதான் பதினாறு வயதினிலே எல்லாம் வந்தது.

G.Ragavan said...

http://pitchaipathiram.blogspot.com/2007/04/traffic-signal.html

டிராபிக் சிக்னல்..ஐதராபாத்தில் மூன்று வாரங்கள் வெந்து கருவாடிக்கொண்டிருந்த பொழுது பார்த்தது. நல்ல படம். ஒரிஜினல் விசீடி வாங்கித்தான் படத்தைப் பார்த்தேன். ஒரு நல்ல படம் பார்த்த முழுத் திருப்தியைக் கொடுத்த படம்.

அந்தக் கதாநாயகனுக்கு மிஞ்சிப் போனால் 23 வயது இருக்குமா? அவனுடைய தலையில் பனங்காய்...இல்லையில்லை..பூசணிக்காய். ஆனாலும் சிறப்பாகச் செய்திருக்கிறான். தெலுங்கிலிருந்து இறக்குமதி செய்து படமெடுத்து தன்னைத் தளபதி தள்ளாதபதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் நடிக்கத்தெரியாதவர்கள் எல்லாம் அந்த நடிகனின் காலை ஒரு முறை தொட்டுக் கும்பிட்டால்...தங்களை நடிகன் என்று நினைத்த பாவம் தொலையும்.

எத்தனை பாத்திரங்கள்...எத்தனை கதைகள்...அத்தனையையும் கட்டியிருப்பது ஒரு கயிறு. ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து கோர்த்து வைத்திருந்தேன் என்று எழுதினார் கண்ணதாசன். இந்த முத்தாரத்தில் முப்பது கண்ணீர் முத்துகள் கோர்க்கும்படி படமெடுத்திருக்கிறார் மதுர்.

விபச்சாரம் முடிந்து திரும்பி வருகின்றவன்....மற்ற பாலியல் தொழில் பெண்களோடு சேர்ந்து பேசும் பொழுது "தனக்கும் வலிக்கும்" என்று சொல்லும் பொழுது...அவனுக்கு முதலில் டீ குடிக்கச் சொல்லும் கொங்கனசென்னின் நக்கலில் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுதே...ஒங்களையெல்லாம் பேச விட்டா தலைக்கு மேல ஏறீருவீங்க...சரி சரி..துணியெல்லாம் கழட்டு என்று சொல்லும் போலீஸ்காரன் முன்னிலையில் நமக்கு நெஞ்சம் கனக்கச் செய்து விடுகிறார்.

அந்த முத்துசாமி. தமிழ்நாட்டுச் சிறுவன். தாய்தந்தையரைச் சுனாமியில் பறிகொடுத்து விட்டுத் திண்டாடுகின்றவனிடமும் சில்லறை சில்லறையாக பிடுங்கித் தின்பது ஒரு கூட்டமென்றால்...சுனாமி நிவாரண நிதியை மொத்தமாகப் பிடுங்கித் தின்றது அரசியல் கூட்டம்.

மொத்தத்தில் டிராபிக் சிக்னல் ஒரு திரைப்படம். இன்றைய நாசமாய்ப் போன இந்தி(யத்) திரைப்படங்களில் ஒரு உண்மையான திரைப்படம். சில குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் நல்ல படம். போக்கிரியை பிளாக்கில் பார்த்தவர்கள் இந்தப் படத்தைத் திருட்டு வீசிடியிலாவது பாருங்கள். திரைப்படம் என்றால் என்னவென்று கொஞ்சமேனும் உங்களுக்குப் புரிந்தாலும் புரியலாம்.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2007/04/blog-post_28.html

உள்ளேன் அம்மா. என்னுடைய கண்டனத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.

அந்த நிகழ்ச்சியே ஒரு திருட்டு நிகழ்ச்சி. அடுத்தவனப் பாத்துக் காப்பி. அதுவுமில்லாம அதுல ஆண்கள் பெண்கள் வேடம் போட்டுக்கிட்டு அடிக்கிற கூத்து இருக்கே. கொடுமையோ கொடுமை. அதை நகைச்சுவைங்குற பேர்ல....சகிக்க முடியலை.

G.Ragavan said...

http://chinnakathai.blogspot.com/2007/04/blog-post.html

// கோவி.கண்ணன் said...

ம் வந்ததுக்கு ஒரு கேள்வியை கேட்டு வைக்கிறேன்.

கண்ணனை விட உயர்ந்த தெய்வம் இல்லைன்னு வைணவரான நீங்க சொல்லுவிங்க... அதே போல் வேறு சிலர் சிவன் முதன்மையானவர்... வேறு ஒருவர் பிள்ளையார் தான் மூலாதாரம் என்பார்... இது போன்று ஒன்றை விட மற்றொன்றை உயர்த்திச் சொல்வது மிகைப்படுத்தல் போன்று தெரிகிறது...உருவழிபாட்டுச் சிக்கல் தானே ? //

வந்தத்துக்குக் கேட்டது சொந்தத்துக்குக் கேட்டதாகவே நெனைப்போம்.

கோவி, நீங்கள் சொல்லும் பிரச்சனைக்கும் காரணத்துக்கும் தொடர்பே இல்லை. முருகன் பெரியவன்...கண்ணன் பெரியவன் என்று ஒவ்வொருவர் நினைக்கிறார்கள். சரி. இந்தக் கடவுள்களெல்லாம் கடவுளே அல்ல. ஏசுவே கடவுள். அவரே மிகப்பெரியவர் என்று இன்னொரு நம்பிக்கை. இவர்களை எல்லாம் வணங்கக்கூடாது. இவர்கள் கடவுள்களே இல்லை. இறைவன் ஒருவனே (இது எல்லா மதத்தின் உட்கருத்தும் கூட). அவனை இப்படி மட்டுந்தான் வழிபட வேண்டும் என்பது இன்னொரு நம்பிக்கை. இதுதான் நீங்க சொல்லும் பிரச்சனையின் முழுப்பரிமாணம். நீங்க பாதியில நிப்பாட்டீங்க. நான் பிரச்சனையை முழுசாச் சொல்லீருக்கேன். இதுல உருவ வழிபாடு எங்க வந்தது? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று எண்ணாத எண்ணமே இந்தப் பிரச்சனைக்குக் காரணம்.

G.Ragavan said...

http://chinnakathai.blogspot.com/2007/04/blog-post.html

// கோவி.கண்ணன் said...
ஜிரா,

நான் சொன்னதன் பொருள் இந்துமதக் கடவுள் உருவங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து அதன் படி இயற்றப்பட்ட அதன் வழி நடப்பவர்கள் குறித்தான கேள்வி, இதில் மாற்று மதத்தினரை கொண்டுவந்து சேர்க்கவில்லை. அது வேறுஒரு பிரச்சனை.
:) //

இல்லையில்லை. இதுவும் முழுக்க உண்மையில்லை. எல்லாம் ஒரே பிரச்சனைதான். இந்தப் பிரச்சனைதான் 300 என்ற ஆங்கிலப்படத்தில் கிரேக்கக் கடவுள் வழிபாட்டைச் சாத்தான் வழிபாடு என்று சொல்ல வைத்தது. இன்னும் நிறைய சொல்லலாம் கோவி. ஆனால் பிரச்சனைதான் உண்டாகுமே ஒழிய நல்லது நடக்காது. ஆக அமைதியே நல்ல வழி.

// நீங்கள் சொல்லும் மாற்றான் தோட்டத்து மணம் நல்ல உதாரணம்.

எந்த (இந்து) கடவுள் உயர்ந்தது என்ற சர்சையினாலேயே மனிதருக்குள்ளும் ஏற்றத்தாழ்வு வந்திருக்க வேண்டும். நான் வணங்கும் கடவுள் உயர்ந்தவர், நான் வணங்குவதற்கு பயன்படும் மொழி உயர்ந்தது...இது இரண்டை முன் வைக்கும் போது என் இனம்(சாதி)யே உயர்ந்தது என்று சொல்லப்பட்டு, மூன்றாவதாக சொன்ன கருத்தை மட்டும் மேற்கண்ட இரண்டும் தூக்கிப் பிடிக்கிறது என்பது என் எண்ணம். //

இந்து மதம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது மிகவும் இளைய மதம். இன்னும் சொல்லப்போனால் முன்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு மதமாக இருந்தது. அந்த வகையில் நீங்கள் சொல்லும் உயர்வு தாழ்வு என்பது இரண்டு மதங்களுக்கிடையில் ஏற்பட்டது. அதுதான் உண்மை. கவுந்தியடிகள் சரவணப்பொய்கையில் குளிக்காதே என்று தடுத்ததும் அதனால்தான். அப்படித்தடுத்ததால்தானோ கண்ணகிக்கு இந்த நிலையென்று வடக்கிருந்ததும் அதனால்தான். இன்றைய மதத்தை நேற்றைய அளவுகோல் ஒழுங்காக அளக்க முடியாது. பழைய பக்காப்படியைக் கொண்டு வாருங்கள்.

// நாட்டார் தெய்வங்கள் தீண்டத் தகாதது என்றதற்கும், தமிழ் நீசபாசை என்றதற்கும், இவற்றை கொண்டிருப்பவர்கள் பழிக்கத் தக்கவர்கள் என்ற ரீதியில் தானே சென்றது. //

ஆமாம். அது மதரீதியில். கடவுள் ரீதியில் அல்ல. பலமதங்கள் பண்டு இருந்ததை மறவாதீர். இதே பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பது மறுக்கவே முடியாது. மதங்களுக்குள் இன்று ஏற்றத்தாழ்வு சொல்லாமல் இருக்கின்றார்களா என்ன? கும்புடுலைன்னா உம்மாச்சி கண்ணக் குத்தீரும் போன்ற வறட்டு பயங்கள் ஒழிய வேண்டும்.

// மற்றபடி ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமந்திர சொல்லை போற்றி வணங்குகிறேன். //

இது திருமந்திரம் மட்டுமல்ல....எல்லா ஆன்மீக நூல்களும் இதைத்தான் சொல்கின்றன. முன்பே பலமுறை சொல்லியிருக்கிறேன். முருகா முருகா என்று சொல்லி விட்டு மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர் என்பதுதான் கருத்து. நினைத்தவர்க்கு நினைத்த விதத்தில் நினைத்த பொழுது வந்து காப்பான் இறைவன். அவ்வளவுதாங்க. இதுதான் தமிழ் சொல்றது. மத்த மொழியிலும் சொல்லியிருக்கலாம். ஆனா எனக்கு தமிழ்தான் தெரியும்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/04/blog-post_29.html

மிகவும் அருமையான பாடல். ரவியின் கேள்விதான் என்னுடையதும். இந்தப் பாடலை இயற்றியவர் யார்? சந்த நயம் ததும்பும் அழகிய பாடலை இயற்றியவர் யார்? இந்த அற்புதமான பாடலை அறியத் தந்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://viriyumsirakukal.blogspot.com/2007/04/blog-post_2829.html

முதற்கண் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள். இந்த வாரம் இனிய வாரமாக அமையட்டும்.

இந்தப் பதிவும் சிறந்த பதிவு. உணவு என்பது அத்தனை எளிதானதல்ல. மூன்று உ-க்கள் முதன்மையானவை. உணவு, உடை, உறைவிடம். இந்த மூனும் மனிதனுக்கு. இதுல முன்னாடி நிக்கிற உ உணவு. இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். அந்த உணவை அவ்வளவு லேசா எடுத்துக்காம அதுக்குள்ள என்ன இருக்குன்னு இத்தன எடுத்துச் சொல்லீருக்கீங்க. பாராட்டுகள். நம்மாளுங்க சோத்துக்குள்ளயும் கொழம்புக்குள்ளயும் முழுகிக்கிட்டேயிருக்காங்க. ஆண்டவந்தான் காப்பாத்தனும்.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/04/blog-post_12.html

சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார் பாரதி. அவர் தாசன் அதைச் சரியாகச் செய்திருக்கிறார். அதைப் பாராட்டுக் கண் கொண்டு பார்க்க இத்தனை பேர்கள் இங்கே இருப்பது மகிழ்ச்சி.

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றும் பொழுது சிறிது சேதாரம் இருக்கத்தான் செய்யும். துப்பார்க்குத் துப்பாய என்ற குறளை தெலுங்கில் மொழி பெயர்த்தால் அப்படியே தமிழ் போல இருக்காதுதான். ஆனால் சொல்லப்பட வேண்டியது கொண்டு செல்லப்படும். அதுதான் இங்கும் நடந்திருக்கிறது. இந்தப் பாடலுக்குப் பொருள் புரிந்து விட்டதே. அது சரி...கிருஷ்ணா நீ வேகமாய் வாராய் என்று கூட மொழி பெயர்ப்பு உண்டே. சுப்ரபாதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எம்.எஸ் பாடியிருக்கின்றார்களே...அவைகளும் இசை மற்றும் கலையின் முழுப்பரிமாணத்தைப் புரிந்து கொள்ளாமல் எடுத்த வீம்பு முயற்சியோ! வேதம் தமிழ் செய்தவர் என்று கொண்டாடுகிறார்களே...அவர் எதில் சேர்த்தி?

பாவேந்தர் முருகப் பெருமான் மேல் தூது நூல் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. அதுவும் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஊர்க்கோயில் முருகன் பற்றி. யாருக்கும் கிடைத்தான் தாருங்கள்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/04/218.html

வாழ்த்துகள் சிபி. சென்னை ஒரு புதிய நல்ல மாற்றத்தை உங்களுக்குக் கொண்டு வரட்டும்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/04/one-minute-manager.html

நல்லதொரு பதிவு. அல்லது தொடர். மேலாளராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. தினந்தினம் ஒரு பாடம். இந்தப் பதிவு கண்டிப்பாக உதவும் என்று நம்புவோம்.

// Udhayakumar said...
நேத்துதான் வாங்கினேன் :-) உங்கள் மொழியில் கேட்க ஆவலாய் உள்ளேன். //

என்ன சவுண்டு பார்ட்டி....மேலாளர் ஆயிட்டீங்களா? ஆகப் போறீங்களா?

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2007/04/blog-post_29.html

இந்தப் பாட்டின் குரல் பழக்கமானதாக இருக்கிறதே. எஸ்.ஜானகி? என்ன படம்?

நன்றாக ஆடுகிறார். வடக்கத்திக்காரராக இருப்பதால் தமிழ்க்கதாநாயகியாக வாய்ப்புண்டு. முதல்வர் ஆனாலும் ஆவார். சௌம்யா வாழ்க.

G.Ragavan said...

http://mayuonline.com/blog/?p=101

பச்சைக்கிளி முத்துச்சரம்...பார்க்க வேண்டும் மயூர். எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவாவது பார்க்க வேண்டும். ஐதராபாத்தில் அண்ணாவைத் தேடினாயா? ஹா ஹா ஹா...கிடைத்தாரா?

G.Ragavan said...

http://chitchatmalaysia.blogspot.com/2007/04/1.html

2007 ஆங்கிலப் புத்தாண்டாடு சேர்த்து ஆறு நாட்கள் மலேசியாவில் இருந்தேன். ஓரளவுக்கு...(ஏதோ ஒன்றிரண்டு) தெரிந்து கொண்டோம். குராங்கான் லாஜு (மெதுவாப் போ). டண்டாஸ் (இது ரொம்ப முக்கியமப்பா). டிலாரங் மெரோகாக் (புகைப் பிடிக்கக் கூடாது). மாசூக். டிலாரங் மாசூக். இப்படியாக கொஞ்சம் படித்துக் கொண்டோம்.

அதுல குராங்கான் லாஜுதான் காமெடி. நாங்க தங்கியிருந்த ஓட்டல் இருந்த தெரு குராங்கான் லாஜுன்னு நெனச்சோம். அங்க போர்டு இருந்தது. அத வெச்சி அந்த எடத்தக் கண்டுபிடிச்சிரலாம். அப்புறம் இன்னொரு எடத்துக்குப் போனா...அங்கயும் அந்த போர்டு. அட...என்னடா...இந்தத் தெரு எல்லா ஊர்லயும் இருக்கேன்னா வெசாரிச்சா...அது மெதுவாப் போங்குற பலகையாம்.