Tuesday, July 31, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - ஆகஸ்ட் 2007

ஆகஸ்ட் 2007ல் மற்ற வலைப்பூக்களில் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

168 comments:

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/07/blog-post_31.html

இசையமைப்பாளர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டுமமென்று தெரிந்த இயக்குனர்களில் மகேந்திரனும் ஒருவர். நெஞ்சத்தைக் கிள்ளாதே....அருமையான படம். மெல்லிய உணர்வுகளைக் காட்டும் படும். அந்தப் படம் உருவான கதையை அறியத் தந்தமைக்கு நன்றி பிரபா.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/08/blog-post.html

ம்ம்ம்...என்ன சொல்றது இளா. இதுல பாருங்க பொசசிவ்வா இருக்காங்களே..அவங்க அன்பு உண்மையானது. அதே நேரத்துல வன்மையானது. அந்த வன்மை இருக்குறதுனாலதான் உண்மையை ஏத்துக்கிறக் கஷ்டமா இருக்கு.

நம்ம நாட்டுல நல்ல காலத்துலயே பையனும் பொண்ணும் பேசுனா அது இது.....அப்படிப் பேசுவாங்க. இதுல இந்த மாதிரி பிரச்சனைகள் வேற.

கண்ணுக்குத் தெரியாத ஜானகிகளுக்காக நான் இறைவனை வேண்டுகிறேன். உங்கள் வனவாசம் முடியட்டும்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/07/2.html

என்னது இது....மரம் தன் வரலாறு கூறுதல்...ஆறு தன் வரலாறு கூறுதல்னு தமிழ்ல கட்டுரை எழுதீருக்கோம். இதென்ன நட்சத்திரம் தன் வரலாறு கூறுதலா!

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/08/blog-post.html

இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா பாத்ததில்லை. பாத்துற வேண்டியதுதான். நல்ல விமரிசனம். ஆனா இதெல்லாம் தேட்டர்ல வராது. இறக்குமதி முடியும்னா லிங்குசாமிய அனுப்பி வையுங்க.

ரேட்டடோயீங்குற படத்தப் பாத்தேன். புளகாங்கிதம் அடைஞ்சேன். சூப்பர். அதுக்கு விமரிசனம் போட கை பரபரங்குது.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/07/blog-post_31.html

பில்லைக் கொல்லுங்குறதப் படிச்சதும் என்னடா இது புதுமையா இருக்கே. தெலுங்கோ மலையாளமோ கன்னடமோ மாராட்டியோ குஜாராத்தியோன்னு நெனச்சேன். பாத்தா ஆங்கிலம். கொல்லு பில்லை-ன்னு தலைப்பு வெச்சிருந்தா நான் புல்லரிச்சிருப்பேன். அதுனாலதான் நீங்க வைக்கலைன்னு நெனைக்கிறேன். நன்றி நன்றி.

G.Ragavan said...

http://9-west.blogspot.com/2007/07/blog-post_30.html

புளிமிளகாய்க்கு இணை எதுவுமில்லை. புளியும் வெங்காயமும் சேக்குற அளவைப் பொறுத்து உறைப்பு சிறப்பாக இருக்கும். நல்லா மெளகா புளியில வேகனும். அப்பத்தான் ஒறப்பு சீராப் பரவும். ஆனாக் கொஞ்சமாத் தொட்டுக்கனும். இட்டிலிக்கு நல்லாயிருக்கும். ஆனா சோத்துக்குத்தான் சூப்பர். அதுலயும் கெட்டித் தயிரை வெட்டி எடுத்து...
வெந்து குழைந்த சோறில் பிசைந்து
தட்டில் வைத்து புளிமிளகாயும் சேர்த்து விட்டால்
அது களகளவென்றே தொண்டையில் இறங்கும் சொர்க்கமடா!

G.Ragavan said...

http://ppattian.blogspot.com/2007/08/blog-post.html

அதே அதே சிவாஜிக்கு ஷங்கர் தேவையில்லை. :)

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/08/blog-post_02.html

மொதக் கேள்விக்கு விடை காகம்
ரெண்டாங் கேள்விக்கு விடை சார்லி

அப்ப எனக்கே பரிசு எனக்கே பரிசு

G.Ragavan said...

http://nanbanshaji.blogspot.com/2007/08/blog-post.html

ஆண்டவா... அவரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுவோம்.

நண்பர் ஆசிப் மீரானுக்கும் அவரது குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

இழப்பு இழப்புதான். அந்த இழப்பைத் தாங்க மனவலியை இறைவன் அருளட்டும்.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2007/08/ltte.html

சர்வேசன், குப்பி திரைப்படத்தை நானும் பார்த்தேன். அந்தப் படம் பிரச்சனையை நடுநிலையோடு அணுகியிருக்கிறது என்றே நினைக்கிறேன். கொஞ்சம் கூட மிகைப்படுத்துதல் இல்லை. உள்ளது உள்ளபடி. இன்னொன்று சொல்கிறேன். படம் மூலத்தில் கன்னடம். தமிழ்ப்படமல்ல. பிறகுதான் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. நம்மாளுகளும் எடுத்தாங்களே குற்றப்பத்திரிக்கைன்னு..படமா அது!

ராஜீவ் காந்தி மரணம் விடுதலைப்புலிகளுக்கு ஒரு அடிதான். மறுப்பில்லை. ஆனால் அது ராஜீவ் காந்தியின் அரசியல் கத்துக்குட்டித்தனத்தின் விளைவு என்பதையும் நாம் மறுக்க முடியாது. மிகமிகத்தவறான வெளியுறவுக்கொள்கையின் பலன் அது. அதற்காக கொலை சரி என்று வாதம் செய்யவரவில்லை. அதே நேரத்தில் அது ஏன் நடந்தது என்று நினைத்துப் பார்த்துக்கொள்வதிலும் தவறில்லை.

G.Ragavan said...

http://thamilachi.blogspot.com/2007/08/blog-post_6419.html

இந்தச் செய்தியோடு சிறுது மாறுபட வேண்டியிருக்கிறது. ஸ்கந்தன் என்பது வடமொழிப் பெயர்தான் மறுப்பில்லை. ஆனால் கந்தன் என்பது வடமொழி அல்ல. "கந்து சுழிக்கும் கடாக் கழிற்றின்" இதிலிருக்கும் கந்து எப்படி களிற்றுக்குப் பற்றுக்கோடோ அதுபோல நமக்குப் பற்றுக்கோடு இறைவன் என்ற பொருளில் வந்தது கந்தன். இதற்கு ஸ் போட்டு வடமொழிப் பெயர் ஆக்கி விட்டார்கள். ஆனையோடு கூடவே இருப்பது கந்து. ஆனால் அது தேவையான பொழுது குழியில் நட்டினால் அது ஆனையையே கட்டிப் போடுகிறது அல்லவா. அதுதான் உட்பொருள்.

அதே நேரத்தில் நீங்கள் சொல்லும் புராணக்கதையையும் கேள்விப் பட்டிருக்கிறேன். வடக்கில் அப்படித்தான் சுப்பிரமணியருக்கு வழங்குகிறார்கள்.

முருகு என்ற பெயர்ச்சொல் காரணமாகச் சொல்லப் படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/08/blog-post.html

இரண்டு நிமிட சிடி...ம்ம்...கொஞ்ச நாள் பொறு தலைவா...ஒரு குழந்தை உன்னோடு நாள் முழுக்கவும் விளையாட வரும். :)

கோவைப் பாத்துட்டியா? ஆளு பாத்தா அப்பாவி மாதிரி இருப்பான். ஆனா கவிதைல மட்டும் காதலைக் கலக்கிக் கலக்கி ஊத்துவான்.

மனைவி கிட்ட சொல்லலையா! அப்ப இந்த வலைப்பதிவை படிக்க விடாத :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/08/7.html

ஓ! ஒங்க ஊர்லயும் இதெல்லாம் நடக்குதா! இந்தியால மட்டுந்தான் இப்பிடியோன்னு நெனச்சேன். ஒலகம் பூரா இதே நெலமைதான் போல. இங்க ஒரு நா இடி இடிச்சி ஒரு மெட்ரோ ரயில்வே பாலம் சேதமாயிருச்சு. அந்தப் பாலத்தைச் சரி செய்ய ரெண்டு மாசம். ஆகஸ்டு 25ம் தேதிதான் அந்தப் பாலம் வழியாப் போற மெட்ரோக்களை விடுவாங்களாம். ஆனா சொன்ன தேதிக்குச் செஞ்சுர்ராங்க இங்க.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/08/15-125.html

செப்டம்பர் 15...சனிக்கிழமை. பாரீஸ் போக முடியும் என்றுதான் தோன்றுகிறது. திட்டம் போடலாந்தான்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பகிர்ந்தமைக்கு நன்றி குமரன்.
என் அன்புக்குரிய பதிவுலக நண்பர் ஒருவர் பாரீசுக்கு மிக அருகாமையில் தான் இப்ப இருக்கார்.
அவரை இதற்குப் போகச் சொல்லப் போறேன்! :-) //

யாருங்க ரவி அது? நீங்க சொன்ன மட்டும் அவரு கேப்பாரா? டிக்கெட்டும் எடுத்துக் குடுத்து திக்கெட்டும் பேசுறாப்ப்புல போயிட்டு வரச்சொன்னா சந்தோசமா போக மாட்டாரா? ;)

G.Ragavan said...

http://thaalaattumpoongaatru.blogspot.com/2007/07/blog-post_25.html

அருமையான பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கிறேன். தாலாட்டு...மென்மையான தாலாட்டு. இதே படத்தில் ஜானகி அவர்கள் குரலில் வரும் பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க...அதுவும் மிகவும் அருமையான பாட்டு.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/08/blog-post.html

படங்கள் அருமை. படம் பிடிக்க ஒனக்குச் சொல்லித் தரனுமா. பிரமாதமாப் பிடிச்சிருக்க.

எங்க ஆபீஸ் பக்கமும் மரங்க இருக்கு. வயருக போகுது..கொஞ்சம் பாத்து ஏதாவது செஞ்சா நல்லது! :)

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/08/blog-post.html

கலக்கல் நகைச்சுவை. ஆனா என்ன படம்னு தெரியலை.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/1.html

சூப்பர். மிகவும் ரசித்தேன்.

இந்திரனக் கிண்டலடிக்கிறதாகட்டும்...செந்திலை நோண்டுறதாகட்டும்...கவுண்டர் கவுண்டர்தான்.

அந்த கடவுளுக்கே அசிஸ்டெண்ட்டு டயலாக்கு சூப்பரோ சூப்பரு.

// CVR said...
WOWOWOW!!!
Super post!!!!

உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!!! :-D //

என்னது? ஆன்மீகப் பதிவாளர்கள் எல்லாம் டுபாக்கூர்கள்னா? ;)

அது சரி...இந்த உண்மை வெறும் புகழ்ச்சியில்லையை எங்க பிடிச்ச? கடைசியா எந்த வலைப்பூ படிச்ச?

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/1.html

// இலவசக்கொத்தனார் said...
//அத்தனை ஆன்மீகப் பதிவரையும் வாட்டி எடுத்துக் கொண்டு இருந்தார்கள்!//

இதுக்குத்தான் வெறும் உப்புமா போதுமடான்னு அப்பீட் ஆகிக்கிறது. //

நடுவுல ஒரு வாட்டி பிரியாணி போட்டீங்களே.....நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பது ஆன்மீக டிப்பார்ட்டுமெண்டு. நாலு டிப்பார்ட்மெண்ட்டு தள்ளி இருக்குறது உப்புமா டிப்பார்ட்மெண்டு....அடிக்கடி உப்புமா கிண்டவுங்களுக்குன்னே வெச்சிருக்குற டிப்பார்ட்மெண்ட்டாம். ரொம்பவும் டேஞ்சரான டிப்பார்ட்மெண்ட். எச்சரிக்கை.

// மதுரையம்பதி said...
//ராயல் ராமா? இன்னாப்பா லஞ்ச் மெனு? சங்கத்துச் சிங்கங்களுக்குப் பசி வந்துருச்சு //

அவருதான் பிரியாணி மாஸ்ட்டரா?....எலக்ட்ரானிக் சிட்டிக்கு ஒரு பார்சசசசசல். //

அப்படியே ஆம்ஸ்டர்டாமுக்கும் ஒரு சீரகச்சம்பா கறி பிரியாணி...பொடிப்பொடியா நறுக்குன வெங்காயம் போட்ட கெட்டித் தயிர்பச்சடியோட பார்சல்.

G.Ragavan said...

http://vettrikandaswamy.blogspot.com/2007/08/blog-post.html

வெற்றி, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இறை நம்பிக்கையை விஷயத்திலும் விடையில்லாத கேள்விகள் உண்டு. அதிலொன்று இது.

செவ்வியான் கேடும் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் நினைக்கப்படும்....முருகனை வேண்டிக் கொள்வதைத் தவிர எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. :(

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/01/blog-post_116875924955286124.html

சகோதரி யாஸ்மீன் பாத்திமா அவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

பாடல் மிகவும் அருமையானது. எண்ணெய்யிலாதொரு தீபமெரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா....இந்த வரிகளைக் கேட்கையிலும் படிக்கையிலும் நினைக்கையிலும் கண்களில் அலையடிக்கிறது.

ஏழிசை வேந்தரின் இனிய குரலும், மெல்லிசை மன்னரின் சிறந்த இசையும், கவியரசரின் அருந்தமிழும்....நம்மைக் கட்டிப் போடுகிறது என்றால் மிகையிலை. இந்தப் பாடல் எமக்குப் பகையிலை.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/08/blog-post.html

மலையாளத்தில் பெருவெற்றி பெற்ற படம். திலகனும் மோகன்லாலும் கலக்கிய படம். அதை எடுத்துச் செய்வதற்கே துணிச்சல் வேண்டும். அதற்காக அஜீத்தைப் பாராட்டுவோம். தெலுங்கிலிருந்து மசாலப் படத்தை இறக்குமதி செய்து வெற்றி முரசு கொட்டுவதை விட இந்த முயற்சிகள் தாவலாம். ஆனால் நம்மவர்கள் ரசனை என்று ஒன்று இருக்கிறதே. கேரள சதயத்தை விட ஆந்திர கோங்குரா சுவையாகப் படுகிறது என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/08/21.html

இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க? தண்ணியடிக்காம வீட்டுக்குப் போன சோகத்தைச் சொல்ல வர்ரீங்க. சரிதான? சரியாப் புரிஞ்சிக்கிட்டேன்னு நெனைக்கிறேன். :)

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/08/blog-post_7990.html

// ILA(a)இளா said...
அட ஓம்பபொடியாரே, இந்தப் பாட்டுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டீரு? ஜி.ரா கிட்டே இந்த மாதிரி ஒரு குறுந்தட்டு குடுத்து இருக்கேன், வாங்க முடிஞ்சா பாருங்க. அந்த குறுந்தட்டின் பேரு "என் கண்மணி" //

என் கண்மணி தான....பாட்டு இசையரசி வலைப்பூவுல போட்டிருக்கோமே. கேக்கலையா? ஹி ஹி...

குறுந்தட்டெல்லாம் வேணும்னா ஆம்ஸ்டர்டாம் வரனும்...அப்பத்தான்...

G.Ragavan said...

http://vovalpaarvai.blogspot.com/2007/06/blog-post_21.html

// சுதர்சன்.கோபால் said...
இந்த விஷயத்தில் வடக்கு எப்போதும் வாழ்கிறது.தெற்கு தேய்ந்துகொண்டுதான் இருக்கிறது.தமிழ்,தெலுங்கு உச்ச நட்சத்திரங்களுக்குக் கூட பத்மவிபூஷண் கொடுத்தாச்சு..

மஞ்சள் துண்டு மகான் மனசு வச்சா நடக்கலாம்..ஒண்ணா ரெண்டா..நாப்பாதாச்சே;-) //

ஐயா மனசு வெச்சா கண்டிப்பா நடக்கும். அவரு சொல்லித்தான தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைச்சாரு மெல்லிசை மன்னர். அதுக்காகவாவது செய்யலாம். ஆனா செய்வாருன்னு தோணலை.

// இந்த லிஸ்டிலே வாணிஜெயராமையும் சேர்த்துக்கிட வேண்டியது தான்.. //

அவங்கள ஏற்கனவே சேத்தாச்சே. மொதப் பாட்டுலயே தான்சேன் விருது. பொறுக்குமா? வெரட்டி விட்டுட்டாங்க. வாணி ஜெயராம் ஒரு பாட்டு பாடீட்டாங்களாம் மீராங்குற படத்துல.அடுத்த பாட்டுக்கு இசையமைத்த பண்டிட் ரவிசங்கர் கூப்டப்போ லதா மங்கேஷ்கர் முடியாதுன்னுட்டாராம். வாணி பாடுன பாட்டையும் இவரையே பாட வெச்சாத்தான் வருவேன்னு சொன்னாராம். ரவிசங்கர் அப்படியான்னு கேட்டுக்கிட்டு எல்லாப் பாட்டையும் வாணி ஜெயராமையே பாட வெச்சாராம். அவரு இசைமேதை. ஆனா மத்த இசையமைப்பாளர்கள் அப்படியில்லையே. தங்கச்சியக் கட்டுனவரு....அப்படி இப்பிடின்னு உறவுக்காரங்களாப் போய்ட்டாங்க. அதுனால வாணியக் கண்டுக்கலை.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/08/blog-post.html

// //யெவகுனே ஸ்ரீ வேங்கடேஸ்வரு தெலிக
ககனமு மிட்டிதி கைவல்யமு// //

ரவி, அது யெவகுனே அல்ல. யெக்குவனே என்று நினைக்கிறேன். அப்படித்தான் என் காதில் விழுந்தது. ஏற முடியாதது...அதாவது மிகவும் உயர்ந்தது...திருவேங்கடமுடையான் என்ற பொருளில் வரும் என்றே தோன்றுகிறது

// ககனம்=வானம், சொர்க்கம், மோட்சம்
சொர்க்கத்தையும் தாண்டி நிற்பவன் திருவேங்கடமுடையான். "அவனே துணை" என்றால் அவன் துணைக்குக் கூட வருகிறான் என்று பொருளாகி விடுகிறது.
இது அவரின் இறுதிக் கட்டம். அதனால் அவனையே பெற்று விட்டால் பேரின்பமோ என்று குழைந்து விடுகிறார்! //

:) கவிதையை எனக்குத் தெரிந்த வரையிலும் மொழி பெயர்த்து மேலே இட்டிருக்கிறேன். நீங்கள் எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பையும் பார்த்தேன். நிறைவில்லாமல் மொழி பெயர்த்து விட்டு..இங்கு பின்னூட்டத்தைப் பார்த்தால் நான் சொன்னதையே சொல்லியிருக்கின்றீர்கள். :)

G.Ragavan said...

http://uduvai.blogspot.com/2007/08/blog-post_03.html

அருமை அருமை அருமை. மிகமிக ரசித்தேன்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/08/blog-post.html

ராஜேஷ், சொன்னால் நீங்கல் நம்பாமலும் போகலாம். நீண்ட நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த பாட்டு இது. மிக அருமையான பாட்டு. ஆகா....அருமை. அருமை. நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா!!!!!

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/06/03.html

// நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ said...
'தலைவாரிப் பூச்சூடி உன்னை...' என்ற அழகான பாடலை எழதிய கவிஞர் எங்கள் புதுச்சேரியில் பிறந்த பாவேந்தர் பாரதிதாசனார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதியதாகத் திரு இராகவன் குறிப்பிட்டது தவறாகும்.

அன்புடன்
பெஞ்சமின் லெபோ
(பிரான்சு) //

வாங்க பெஞ்சமின் லெபோ. தகவலுக்கு நன்றி. தப்பாச் சொல்லீட்டேன் போல. மன்னிச்சுக்கோங்க. பாவேந்தரும் மன்னிச்சுங்கங்க. "தலைவாரிப் பூச்சூடி உன்னை" கவிதையை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசனார். :)

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/08/blog-post_06.html

கோவி, மிகவும் எளிதாகச் சொல்வதானால்...நான் வணங்கும் கடவுளுக்கு நான் பேசுவது புரியும். அப்புறம் மொழி எங்க இருந்து வந்துச்சு. இத ஒத்துக்க முடியாத எதையும் ஒத்துக்க முடியாது. சரிதானே?

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/08/blog-post.html

ஆகா...கலைக்கு எல்லையே இல்லைங்குறது உண்மைதான. இங்கயும் மக்கள் கலைக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுக்குறாங்க. பாரீஸ் இருக்கு பாருங்க பாரீஸ். அங்கதாங்க...அடேங்கப்பா....அழுக்குத்தண்ணி ஓடுற குழாய்ல கலை. காக்காய் உக்காராம விட ஜன்னல்ல கம்பீல கலை. தட்டுல கலை. ரோட்டுல கலை. டேபிள்ள கலை. i felt the entire city including every nonliving objects thinking as if my mind thinks...அவ்ளோ கலை. ஒங்கூர்லயும் கலை நல்லா விலை போகுதுன்னு தெரிஞ்சு மகிழ்ச்சி.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/08/4.html

டீச்சர் ஒங்க பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டத் தொடுப்பே வர மாட்டேங்கி. ரெண்டு கமெண்ட்டுக்கு மேல தெரிய மாட்டேங்கி. :( ஒருவழியா வலைப்பூவுக்குப் போய்...அதுல ஒவ்வொரு பதிவுல இருக்குற பின்னூட்டத் தொடுப்பையும் கிளிக்கிப் பின்னூட்டம் போடுறேன்.

G.Ragavan said...

http://neytalkarai.blogspot.com/2007/08/blog-post_07.html

ஆகா! பாரம்பரிய இசையிலும் தமிழ்ப் பாட்டு புரிகிறதே. பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் குரலும் பாவமும் அருமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே ஒலி போய்விடுகிறதே. முழுமையான ஒலியோடு ஒளி இல்லையா?

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/08/blog-post.html

அருமையான பாடல். மிகவும் ரசித்தேன் திராச. சிவனாரின் பாடல்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ. முருகன் புகழைச் சிவன் பாடுவது பொருத்தமே.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/08/2.html

ஆகா..இந்தக் கொடுமைய நீங்களும் அனுபவிச்சீங்களா...என்னோட பழைய கம்பெனியில வேலை செய்யும் போது...நான் ஏன் வீப்புரோல வேலை செய்யலைன்னு கேக்காத ஊர்ப்பெருசுக இல்ல. இப்பத்தான் நான் ஏதோ பெரிய கம்பெனியில வேலை செய்றதா நெனைக்கிறாங்க.

சுப்பு ருக்கு நல்லாருக்கு. ரெண்டாவது பாகம் சரி. மொதப் பாகம் எங்க?

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/07/1_21.html

:))))))))))))))))))

சூப்பராருக்கு சூப்பராருக்கு சுப்புருக்கு

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/2_08.html

கலக்கல். நல்ல சிரிப்பூ பூந்தி தூவுன தயிர்வட களக்குகளக்குன்னு தீந்து போற மாதிரி..பதிவும் படக்குன்னு தீந்து போச்சு. :)

பள்ளிகொண்ட மண்டையால தொடங்கி, பிசுபிசு பிச்சி ஓட்ஸ் வழியா, கணக்குப் பாடம் படிச்சிச் சம்பளம் பாத்து, லப்டப்புல பயந்து போயி, நரகலோகம் பாவபுண்ணியம் கணக்கையும் பாத்து, காபி ராகத்தோடு காபியையும் குடித்து, அம்பி பெட்டிஷன் படிச்சிட்டு, ஒன்னுமே புரியாம ஆறுமாசம் தவிக்கிறதும்...வெட்டியைப் பார்க்கப் போறதும்...அடடா!!!!!!

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/08/blog-post_08.html

புலம்பல் புதன் முடிந்து அலம்பல் அடுத்தநாள் வரட்டும்.

நன்றாக இருந்து இந்தக் கவிதை வடிவம்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/08/248-4.html

போன வாரம் முதல்வர் பேசுனாரு. இந்த வாரம் பசங்க பரிச்ச எழுதீட்டு அழுறாங்க. அடுத்த வாரம் இஞ்சினீரிங் காலேஜுக்குப் அட்மிஷன் வரப்போகுது. சரிதானே?

ஆனா காலேஜ் முடிச்சிக் கெளம்புறது ஒரு சோகந்தான். அது தாக்காத யாரும் இருக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/08/wishes_09.html

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கே.ஆர்.எஸ். :)

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/farmer.html

சூப்பரு...படம்னா இப்பிடித்தாம்யா இருக்கனும்....கலக்கலு

படத்துக்குப் பாட்டு வேண்டாமா....அதையும் போடுங்கப்பா...கலக்கலா இருக்கும்.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2007/08/blog-post_08.html

வாங்க வாங்க கைப்புள்ள...ஹுடுகி உடுக்கி பந்திதீரா...ஈத்தர ஹாடு நோடிதரே....பாடு பெரும்பாடப் போயிருமய்யா! நோடுக்கொள்ளி. :)

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/08/wishes_09.html

// வெட்டிப்பயல் said...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆஞ்ச கீர போட்டு
காஞ்ச பய புள்ள
மாஞ்சி மாஞ்சி தின்னுட்டுப்
மவராசனாப் போயி வாரேன்! :-) //

தெய்வமே,
எங்கயோ போயிட்டீங்க!!! //

என்ன வெட்டி, சாமி எங்க போயிரிச்சி..மலையேறீருச்சா :)))))))))))

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/08/wishes_09.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
தெற்கத்தி தமிழ்த் தென்றலால் என்னைத் தாலாட்டி வாழ்த்திய ஜிரா அண்ணாவுக்கு என் அன்பும் நன்றியும்!//

என்னது ஜிரா அண்ணாவா!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

// அப்படியே சீனியம்மா கொடுத்து வுட்ட பத்துரூவாத் தாள நீங்களே பத்திரமா வெச்சுக்குங்க ஜிரா. நாம பாக்கும் போது சீனி மிட்டாய், தேன் மிட்டாய் வாங்கக் கொடுத்தறணும் ஆமா! :-) //

பத்துரூவாத்தாள ஒங்க கைலதான குடுத்தாங்க. எங்கிட்ட எப்பிடி இருக்கும்? இன்னொரு பத்து ரூவா வேணும்னா சொல்லுங்க. வெட்டி கிட்ட இருந்து கொடுக்கச் சொல்றேன். அதுக்காக இப்பிடி அபாண்டம் சொல்ல வேண்டாம்.

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/08/wishes_09.html

// வெட்டிப்பயல் said...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தெற்கத்தி தமிழ்த் தென்றலால் என்னைத் தாலாட்டி வாழ்த்திய ஜிரா அண்ணாவுக்கு என் அன்பும் நன்றியும்!//

ஆஹா,
இப்படி ஒரு அண்ணன் தம்பி இருக்கறதே எனக்கு தெரியாம போச்சே :-( //

இல்ல..இல்ல..இல்லவே இல்ல...இத ஒத்துக்கவே முடியாது. எனக்கு ரவி யாருன்னே தெரியாது.

// வெட்டிப்பயல் said...
CVR/KRS/விவா/சி.தல,
ஜி.ரா இந்த போட்டோல மாதவன் மாதிரியே இருக்காரு இல்ல? //

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

G.Ragavan said...

http://chinnaammini.blogspot.com/2007/08/blog-post_9444.html

நாவேறு செல்வியா? அவங்க பூவேறு கோனின் மனைவியாச்சே! :)

ரெண்டாவது கேள்விதான் கொழப்புது.....

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/farmer_09.html

ஹெஹ்ஹெஹ்ஹெஹ்ஹெஹ்...ஹா ஹா ஹா ஹா சூப்பர்மா! :)

அந்த ஆர்க்குட் ஐடி, ஜிடாக் ஐடி, யாஹூ ஐடி.....சூப்பர்..முன்னூறு நானூறு பின்னூட்டாங்கள்..சூப்பரு.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/08/1.html

நல்ல தொடர். பலப்பல தகவல்கள் கிடைக்கின்றன.

இரண்டு வழி என்று நீங்கள் சொல்வதைப் படிக்கையில் சிலம்பு நினைவிற்கு வருகிறது. சேரன் சென்ற வழி மேற்கு வழி. உதகை ஏறி இறங்கி கன்னடம் வழியாக கன்னரைச் சென்றடைந்தான். அவரோடு சேர்ந்து கனக விஜயரைத் தோற்கடித்தான். மறுவழியில் நடந்த ஏதேனும் இதே போன்ற சிறப்பு மிக்க பயணங்கள் உளவா?

அரவாடு ஏன் வந்தது என்று இன்று தெரிந்தது. எங்களூர்ப்பக்கம்ம் அரவட்டு என்று சொல்வார்கள். அப்படிக் கேலி செய்கிறார்களோ என்ற்று நினைத்தேன். ஆனால் அரவட்டு காவட்டு என்ற சொற்களிலிருந்து அப்படி வந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தேன். இன்றைக்குத் தெளிவானது.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/08/249-5.html

இந்தப் பாகத்த நேத்தே படிச்சிட்டாலும் இன்னைக்குப் பின்னூட்டம் போடுறதுக்கு மன்னிக்கனும். நல்லாருக்கு...ஆனா ஏனிப்படி....எப்பவுமே எனக்கு ஆப்பி எண்டிங்குதான் பிடிக்கும். :) ஆனாலும் நீங்க சொல்லீருக்குற விதம் நல்லாருக்கு.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/08/232.html

இப்ப பாராட்டனுமா? கிண்டல் பண்ணனுமா? :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/08/6.html

அப்பாடீ..இன்னைக்கு ஒங்க வலைப்பூ என்னையப் பின்னூட்டம் போட விடுது. :)

அந்தக் கையெழுத்து ஒங்களோடதா நல்லாருக்கே...பூஜைத்தட்டுல என்னெல்லாம் இருக்கு?

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/08/blog-post_09.html

நல்ல வெமர்சனம். பாக்குறோம். ஆனா அதுக்கு லிங்குசாமி...வேணுமே...

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/08/blog-post_10.html

படிச்சிட்டியா? முடிச்சிட்டியா? பதிவும் போட்டாச்சா? பின்னூட்டங்களும் அள்ளியாச்சா? சூப்பர்.

ஆனா பாரு. பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தனை விட...எனக்குக் கயல்விழி ரொம்பப் பிடிக்கும். அட தெரியலையா? கயல்விழிதாம்ப்பா மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ;)

பாண்டியர்களை வில்லனாகக் காட்டும் கதைகள் ரிஜெக்டேடு குவாலிட்டி ;) (அப்பாடி..கொழுத்திப் போட்டாச்சு)

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/08/blog-post_10.html

திருவேரகம்....இரண்டு முறை சென்றிருக்கிறேன். வீட்டில் ஒரு முறை. நண்பர்களோடு ஒரு முறை. முருகன் அருள் இனியதா அங்கு கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலும் உளுந்த வடையும் பொங்கலும் இனியதா என்று போட்டி வைத்தால் முருகன் தோற்கக் கூட வாய்ப்பிருக்கிறது :) தஞ்சைக் கழநி அல்லவா....சுவையில் சிறப்பு. அருளில் பொறுப்பு.

அருமையான பாடல். பித்துக்குளி முருகதாஸ் திருப்புகழ் பாடிக் கேட்க வேண்டும்..கோனாடு சூழ் விராலிமலையுறை பெருமாளே முருகா...அப்படிப் பாடுகையிலேயே விராலி மலையில் பத்து முறை ஏறி இறங்கிய பலன் கிடைக்கும்.

சூதமிகவளர் சோலை மருவு சுவாமிமலைதனில் உறைவோனே..உனைப் பாடும் தமிழினை நாளும் பருகிட மகிழ்ந்திட அருள்வாயே!

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/08/blog-post_10.html

// வெட்டிப்பயல் said...
பாண்டியர்களை வில்லனா பார்த்தே பழகிடுச்சி.. இந்த கதை படிச்சா பிடிக்குமானு தெரியல. //

ஆகா...என்ன கொடுமை. பாராட்ட பாண்டியரை அவதூறாப் பேசிட்டியா? 64 திருவிளையாடல்களை நடத்திய நாட்டைப் பத்தித் தப்பாப் பேசீட்டியா?
விடுவோமா...அடுத்து ஒரு வரலாற்றுப் புதினம் எழுதப் போறேன். சோழந்தான் வில்லன். சோறுடைத்து சோறுடைத்துன்னு சொல்லிக்கிட்டே வயிறு நிறைய சோறடைத்த சோழ மன்னனை வில்லனா வெச்சுக் கதை எழுதுறேன்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_29.html

நெடுஞ்சேரலாதன்...இமயவரம்பர் என்று பெயர் கொண்டவர். இவர் வென்றது கூபகத்துக் கடம்ப மரம். அதாவது இன்றைய கோவா. அந்த மரத்தைக் கூட செங்குட்டுவனைக் கொண்டு வெட்டச்செய்தார் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. சேரசூரியன் என்று ஒரு புதினத்தைக் கோவி.மணிசேகரன் எழுதியிருந்தார். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்.

குமரன், செய்யுளைப் படிக்கத் தொடங்கினேன். சற்றுக் கடினமாகத்தான் இருக்கிறது. பொறுமையாக உட்கார்ந்து பார்க்க வேண்டும்.

// குமரன் (Kumaran) said...
உங்கள் கேள்விக்கு/ஐயத்திற்கு, செஞ்சொல் பொற்கொல்லன் இராகவன் வந்து பதில் சொன்னால் இன்னும் சுவையாக இருக்கும். அவர் வருவதற்கு நாளானால் நான் சொல்கிறேன். :-) //

ஆகா.....இராகவனுக்கு என்ன தெரியும் குமரன். ஆனை மட்டுமா ஐயனுக்கு...ஆடும் ஆடாதா அடியார் உள்ளமும் கூடத்தான் வாகனங்கள். நீங்களே விளக்கம் சொல்லுங்கள். நானும் ரசிக்கிறேன்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சுவாமிமலையில் யானை வாகனத்தைக் காணலாம்! அப்போ சூர சம்காரம் நடைபெறவில்லையே! அதானால் லாஜிக்கா யானை வைச்சிருக்காங்க போல! :-) //

nope. please. dont make such logics which people can easily accept. அதுதான் உண்மைன்னு நம்பத் தொடங்கீருவாங்க. நாளைக்கு எழுதுறவன்..மொதல்ல முருகன் ஆனைல போனாரு...சண்டைக்கப்புறம் மயில் வந்துருச்சு..மயில்ல போனாருன்னு எழுதுவாங்க. :)))))))))

// சில ஆலயங்களில், ஆடு (கிடா) அவனுக்கு ஒரு வாகனம்.

மயில், யானை, ஆடு - ஆணவம், கண்மம், மாயை என மும்மலங்களை குறிக்கும்.

மற்றவை கொற்றவை அண்ணனார் ராகவனார் வந்து கற்றவை பகர்வார்!:-) //

பகரார். அதையும் நீங்களே பகருங்க. மும்மலம் வரைக்கும் வந்தவங்க...அதுக்கு மேலையும் சொல்லலாமே.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/08/blog-post.html

இன்னைக்குத்தாய்யா இதப் பாத்தேன். நல்ல முயற்சி. இத நானும் மெதுவா முயற்சிக்கிறேன். பெனாத்தலார் பேசுறப்போ அப்படியே யாரோ ஒரு பெரிய பழைய வாத்தியாரு பாடம் எடுக்குறாப்புலயே இருக்கு. வாத்தியார் பெனாத்தலார் வாழ்க வாழ்க

G.Ragavan said...

http://9-west.blogspot.com/2007/08/blog-post_09.html

பிறந்தநாள் வாழ்த்துகள் ரங்கமணிக்கு.

கப்பு பாக்கவே அழகா இருக்கே. இங்க ஒன்னு பார்சல். ஆனா இனிப்பு நெறைய. ஆகையால வேண்டாம்னு ஒதுக்கீர்ரேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/08/blog-post_10.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பாண்டி நாட்டு பத்திப் பெருமையாத் தானே எழுதுவாரு கல்கி...
உடையாரில் கூட தஞ்சைப் பெரிய கோவில் கட்ட, பாண்டி நாட்டு அடிமை வீரர்கள் தான் பல ஐடியா கொடுப்பாய்ங்க...மெய்க்காவலை மீறி இராஜராஜர் அவிங்கள அப்படியே அணைச்சிக்குவாரு! //

அடிமைப் பாண்டிய வீரர்கள்...அடடா...அதச் சொல்லிக் காட்டுறதுல என்ன மகிழ்ச்சி. ஏய் அடிமையே..உன்னை அணைச்சிக்கிறேன். நான் பெரிய ஆளு. அதான நீங்க சொல்ல வர்ரது.

// பிற்காலப் பாண்டிய மன்னர்களின் பேராசையும் நேர்மையின்மையும் பொதுமக்களை மதிக்காததும் தான் அவிங்க வீழ்ச்சிக்குக் காரணம்...
கதையில் இதைப் பாண்டி நாட்டு வீரர்களே சொல்லி குமுறுவார்கள்! //

இதெல்லாம் எந்த வரலாற்று நூல்ல இருந்து எடுத்தீங்க ரவி? வின்செண்ட் ஸ்மித்தா? நீலகண்ட சாஸ்திரியா?

// சோழநாடு ஒரு புதிய நாகரிகத்தின் தொட்டிலா உருவெடுக்க இதுவும் ஒரு காரணம்...

பாண்டி நாடு முத்துடைத்து
சோழ நாடு சோறுடைத்து
முத்து வேணுமா? சோறு வேணுமா??
ஹைய்யா...ஜிரா கொழுத்திப் போட்டது அணையாம இன்னொன்னும் கொழுத்திப் போட்டாச்சு! :-)) //

முத்த எங்கையும் பண்டமாத்தலாம்? சோத்த? வடக்க போனா சப்பாத்தி கேப்பான். மேற்க போனா ரொட்டி கேப்பான். கெழக்க போன மீனக் கேப்பான். எனக்கு ஒன்னு மட்டும் புரிஞ்சிருச்சி...சோறு தின்னு சோறு தின்னுன்னு தமிழர்களை சோற்றால் அடித்தப் பிண்டங்களாக்கி..இன்னைக்கு சர்க்கரை நோய் வரவழைக்கக் காரணமே சோழர்கள்தான். அடப்பாவமே! எவ்வளவு பெரிய திட்டம். கொடுமையான திட்டம்.

G.Ragavan said...

http://verygoodmorning.blogspot.com/2007/08/14.html

எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்தப் பதிவை வெட்டிப்பயல் இன்னமும் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. அல்லது பின்னூட்டம் போடாமல் இருக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.

முருகன் நான்முகனைத் தலையில் குட்டியதையே பெரிய கேள்வியாகக் கேட்டு...ஆதிசிவனின் தவறை எடுத்துக்காட்டிய வெட்டியார்....இறைவன் அனைவரும் ஒருவரே என்று சொல்லும் பொழுது ஒரு கடவுள் இன்னொரு கடவுளைத் தாழ்திச் சொல்லலாமா என்று கேள்விகள் கேட்டவர்...இங்கு அமைதியாக இருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

வீட்டு வாசலில் அரனும் அயனும் வந்து நின்றார்கள் என்று சொல்லிக் காட்டுவதை அவர் ஏற்றுக்கொள்கிறார் போலத் தெரிகிறது. அதனால்தான் இங்கு கேள்வி கேட்கவில்லையோ? அதற்குக் காரணம் என்ன? வெங்கடேசனும் சிவனும் நான்முகனும் இல்லை என்று நம்பும் அவரது கருத்து இந்தப் பாடலைப் பொறுத்தவரை என்ன?

பி.கு..இது ரவிக்கு. சனகாதி முனிவன் பெயரை முருகன் என்று திரித்துச் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2007/08/blog-post.html

ஆகா! இது எப்பத்தைய உலாத்தல் பிரபா? லீலா பேலசிலிருந்து ஐந்தாறு நிமிடங்கள் நடந்தால் என்னுடைய வீடு. லீலா பேலஸ் தேவே கவுடா அவர்களுக்குப் பினாமிச் சொந்தம் என்று சொல்வார்கள். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. தொடரப் போகும் பயணத்தின் நிகழ்வுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://vettrikandaswamy.blogspot.com/2007/08/blog-post_10.html

வெற்றி நியாயமான ஆதங்கம். தன் தலையைத் தானே திருகிக் கொண்டு கூக்குரலிடும் கோழியைப் போல இருக்கிறது இலங்கை அரசின் நிலை. பேரினவாதம் என்பது கூட பயங்கரவாதமாகியிருக்கிறதே. இலங்கை யாரிடமிருந்தும் பாடம் கற்கிறதோ இல்லையோ...இலங்கையிடமிருந்து உலக நாடுகள் பாடம் படித்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

G.Ragavan said...

http://balajiulagam.blogspot.com/2007/08/blog-post_12.html

நீங்கள் குறிப்பிடும் படத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. பார்க்கத் தூண்டுகிறீர்கள்.

ஜீவா சொன்னது போல இன்ஸ்பிரேஷன் சரி. அதாவது இயக்குனராக ஜீவா செய்தது. காட்சியைக் காப்பியடித்திருப்பது இன்ஸ்பிரேஷன் அல்ல. அதாவது நீங்கள் சொல்லியிருப்பது போல சுஹாசினி செய்திருப்பது.

G.Ragavan said...

http://thamilachi.blogspot.com/2007/08/blog-post_5423.html

இந்தப் பதிவின் கருத்தோடு முழுமையாக ஒத்துப் போகிறேன். இந்த விஷயத்தில் மட்டும் பெரும்பாலான ஆண்கள் மத, சாதி, கடவுள் நம்பிக்கை, பகுத்தறிவு ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டு ஒன்று சேர்கிறார்கள்.

G.Ragavan said...

http://seemachu.blogspot.com/2007/08/51.html

பதிவின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். இப்பொழுது இந்தியாவில் இருக்கும் ஐடி துறையினரைப் போன்ற பேராசைக்காரர்களைப் பார்க்க முடியாது. இரண்டு மூன்று வருடங்களிலேயே தங்களைப் பெரிய மென்பொருள் வித்தகராக நினைத்துக் கொள்கின்றார்கள். விதிவிலக்குகள் கண்டிப்பாக உண்டு. ஆனால் பொதுவில் ஆழ உழாமல் அகல உழுது கொண்டிருக்கிறோம்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/08/rush-hour-3-no-rush.html

வயசான கதாநாயகர்கள் அவங்க வயசுக்கேத்த பாத்திரத்த எடுத்து நடிக்கவே மாட்டாங்களா? இனிமே கதாநாயகன் வயசப் பாத்து அதுல நாலு வயசு குறைஞ்சு இருக்குறவங்களத்தான் கதாநாயகியாப் போடனும்னு சட்டம் கொண்டு வரனும். அப்பத்தான் கோழிவூட்டுல இருந்து காளிவூட்டு வரைக்கும் திருந்தும்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/07/blog-post_30.html

ம்ம்ம்ம்ம்...எனக்குப் பிடிச்ச பாட்டு. இந்தப் படத்துல இருக்குற ஓடம் கடலோடும் பாட்டும் இதே கூட்டணியில வந்த அருமையான பாடல். நன்றி.

G.Ragavan said...

http://gopinath-walker.blogspot.com/2007/08/blog-post.html

:(((((((((((((((((((((((((((((((((((((((

பெங்களூருக்கு வந்த புதுசுல..வந்த புதுசுல...வந்த புதுசுல..இப்பிடித்தான் நாங்க எல்லாரும்...நாங்க எல்லாரும் :((((((((((((((((((( தமிழு வங்காளம்னு கலந்து ஊடு கட்டியிருக்கோம். அப்ப சாப்புடாத பிரியாணியா....மீனா..கோழியா..ஆடா..அடடா! நான் வெச்ச சாம்பாரக் கப்புல வாங்கிக் குடிச்சாங்களே சாமி :((((((( ஆனந்தக் கண்ணீர் வந்துச்சே! அதையெல்லாம் ஞாபகப் படுத்துறீங்களே

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/08/1.html

// bala said...
//அரவாடு என்று தெலுங்கர்கள் தமிழர்களை ஏன் அழைக்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு நெடுநாட்களாக இருந்தது. //

குமரன் அய்யா,
எனக்கும் ரொம்ப நாளாகவே இந்த சந்தேகம் இருந்து வந்தது.இந்த கொல்டிப் பசங்க எதுக்கு தமிழை அரவம் என்றும்,தமிழர்களை அரவாடு என்றும் சொல்றாங்கன்னு.என்னோட கொல்டி நண்பனைக் கேட்டேன்.அவன் சொன்னது எனக்கு அதிர்ச்சி அளித்தது.தெலுங்கில் அரவம் என்றால் சத்தம்,அதாவது கடமுடா சத்தம்.தமிழர்கள் பேசும் மொழி கேவலமான கடமுடா சத்தமாக இவங்க காதுக்கு கேட்பதால் அதை அரவம் என்று சொல்கிறார்களாம்.ஆனாக்க இங்க இருக்கற தமிழ் அறிஞர்கள் என்ன சொல்லிக்கொண்டு பீத்திக்கறாங்க?
தெலுங்கு,கன்னடம் எல்லாம் தமிழ்த்தாய் ஈன்ற குட்டிகளாம்.கொல்டிப்பசங்க என்ன நினைக்கிறாங்க?just opposite.

பாலா //

அது சரி பாலா....தமிழறிஞர்கள் பீத்திக்கிறது இருக்கட்டும். அதை ஆந்திராக்காரர்கள் ஒப்புக்கொள்ளாதது இருக்கட்டும். நீங்க என்ன நெனைக்கிறீங்க? தமிழ்ல இருந்து மத்த திராவிட மொழிகள் வந்ததுன்னு நெனைக்கிறீங்களா? இல்ல வேற ஏதாவது நெனைக்கிறீங்களா? அதையும் சொல்லீருங்க.

G.Ragavan said...

http://thamilachi.blogspot.com/2007/08/blog-post_6135.html

மிகுந்த வருத்தம் தருகிறது. எத்தனை மனவுளைச்சலில் இதைச் சொல்லியிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சங்கரராமன் கொலை வழக்கில் இவரும் தொடர்பு கொண்டிருக்கும் வாய்ப்பு மிகப் பிரகாசமாகவே இருக்கிறது.

G.Ragavan said...

http://babumanohar.blogspot.com/2007/08/blog-post_13.html

// தாக்குதல் பற்றி MIM தலைவர் அக்பரூதின் ஓவைஸி சொன்னது....

"MLA அந்தஸ்து பற்றி நாங்கள் கவலை படவில்லை.முதலில் நாங்கள் முஸ்லிம்கள்.இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்களை எந்த முறை சாத்தியப்படுகிறதோ அந்த முறையில் எதிர்ப்போம்.அது எங்களின் கடமையும்கூட.."

"மேற்கு வங்கத்தில் வேண்டுமானால் அந்தம்மாவை அனுமதித்திருக்கலாம்...இது ஐதராபாத்..இங்கு இந்த பெண்ணை அனுமதிக்க முடியாது. இந்த தாக்குதல் அந்த பெண்மணிக்கு தேவையான ஒன்றுதான்.." //

மகா மட்டமான பேச்சு. கேவலம். எதிர்கருத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாத கோழையினைப் போல உளறியிருக்கிறார் அக்பரூதின்.

G.Ragavan said...

http://osaichella.blogspot.com/2007/08/blog-post_12.html

வாரியார் தமிழ்ச்செம்மல். தமிழ்ப் பெருங்கடல். நினைத்த மாத்திரத்தில் வந்தவரின் பெயரையும் செயலையும் (கலியாணப் பத்திரிக்கை வைக்க வந்திருப்பால், வீடு பால்காய்ச்சல் இருக்கும்) இணைத்து வெண்பா சொல்லும் திறமை கொண்டவர்.

முருகப் பெருமான் மேல் மட்டற்ற அன்பு கொண்டவர். தமிழ் தமிழ் என்று அமிழ்து பிழிந்து தந்தவர்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/08/blog-post_4244.html

சீச்சீ! யாருய்யா அங்க...அந்தப் பல்கலைககழகத்த இழுத்து மூடுங்கப்பா. இந்த வெக்கங் கெட்டவங்களும் வாங்கி வெச்சுக்கிருவாங்க.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/08/blog-post_13.html

ஓமப்பொடி..நல்ல முடிவு. வெட்டி சொன்ன மாதிரி முடிக்காதீங்க. இதுதான் நல்லாருக்கு. வெத ஒன்னு போட்டா சொர ஒன்னா மொளைக்கும். நல்லாருக்கு. கண்ணுல தண்ணி கொளங்கட்டுதுவோய். அந்தப் பயலும் அம்மாவும் நல்லாருக்கனும்வே! நல்லாருக்கனும்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/08/blog-post.html

ரமணீய என்பதிலிருந்து ரமணன் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நல்ல பாடல். நல்ல பதிவு.

G.Ragavan said...

http://marudhai.blogspot.com/2007/08/blog-post.html

அழகான காட்சி. மதுரையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விதி கடைபிடிக்கப்படவே வேண்டும். அது தொடரட்டும்.

எங்க ஊர்ல (கொளக்கட்டாங்குறிச்சீல) எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் உண்டு. சின்னக் கோயில்தான். அதுக்கு ஐயரோ பூசாரியோ கெடையாது. நாங்கள்ளாம் உள்ள போவோம். சாமி கும்புடுவோம். வீட்டுப் பெண்களும் உள்ள போவாங்க. வெளக்கேத்துவாங்க. பூப்போடுவாங்க. தாத்தா காலத்துல வீட்டக் கட்டும் போது அந்தக் கோயிலுக்கு மேலப் போகலை. பக்க்கத்துல இருந்த வீடுகள்ளாம் மாடி கெட்டிக்கிருச்சி. ஆனா இன்னைக்கும் எங்க வீடு அப்படியேத்தான் இருக்கு. இத்தனைக்கும் அந்தத் தெருவுல பெரிய வீடு வேற...

G.Ragavan said...

http://marudhai.blogspot.com/2007/08/blog-post_05.html

மதுரைல ஒரு வருசம் இருந்திருக்கேன். டி.ஆர்.ஓ காலனீல. ஆனா சின்ன வயசு. அப்பல்லாம் இதெல்லாம் தெரியாது.

திருமலை நாயக்கர் மகாலில் இப்பொழுது இருப்பது ஐந்தில் ஒரு பங்கு கூட இருக்காதாம். வெள்ளைக்காரன் எடுத்த சர்வே அப்படித்தான் சொல்கிறது. ஒரு வாசல் கோயில் வாசல் அருகில் இருக்குமாம். அப்படியே அரண்மனையில் இருந்து வெளியே வந்து சாலையைத் தாண்டி கோயிலுக்குள் போய் விடலாம்.

நாயக்கர் வரலாறும் கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் இருக்கும். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் அது முதலியார்-நாயக்கர் ஆட்சித் தொடக்கம். கிருஷ்ணதேவராயரைப் பற்றிப் படிக்கும் பொழுது தெரிந்த விஷயம் இது. விசுவநாத நாயக்கர் + அரியநாத முதலியார் கூட்டணி (அரசர்+அமைச்சர்) சிறப்பாக இருந்ததாகக் கேள்வி. திருமலையரசருக்குப் பிறகு புகழ்பெற்ற அரசர்கள் வரவில்லை. இல்லையில்லை..மங்கம்மாளுக்குப் பிறகு. மங்கம்மாளைச் சிறையில் அடைத்துப் பேரன் அரசனாகிறான் என்று நினைக்கிறேன். ஆனால் அவனோடு தொடங்கியதாம் அழிவுப்பாதை..இன்றைக்கும் மதுரையில் பாட்டிக்குச் சோறு போடாத பேரன்கள் இருந்தால் மங்கம்மா ஆவி பழி வாங்கீரும்னு மெரட்டுவாங்களாம்.

G.Ragavan said...

http://marchoflaw.blogspot.com/2007/08/blog-post.html

நானும் ஆரி பாட்டர் ஃபேன். புத்தகத்த மொதநாளே வாங்கிப் படிச்சிட்டேன். ஆனா ஆப்புக்கு ஆப்பூ அண்டத்துலயும் உண்டுன்னு தெரியுந்தானே. எத்தனை நாள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு சொல்றது. புத்தகம் வந்து ஒரு மணி நேரத்துல மின்வடிவம் வந்துருச்சு. அத நானே நாலு பேருக்கு அனுப்புனேன். பின்னே காசு கொட்டி புக்கு வாங்கீருக்குல்ல. :)

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/doctor-doctor.html

என்னது ஆன்மீக அப்ரசெண்டா? என்ன கொடுமை? கள்ளியிலும் பால் எழுதுனதுக்கே நாலஞ்சு டாக்டர் பட்டம் கொடுக்கனும்.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/08/3.html

அப்பாடி.....எவ்வளவு தகவல்கள். பொறுமையாக உட்கார்ந்து படித்தேன். தொடருக்குக் காத்திருக்கிறேன்.

திருக்குடி என்ற பெயரை ஸ்ரீநிவாஸ் என்ற சொல்லுக்கு உருவாக்கினேன். ஆனால் அந்த ஸ்ரீநிவாசத்துக்குள் இவ்வளவு தகவல்கள் இருக்குமென்று இப்பொழுதுதான் தெரிகிறது.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/08/1000.html

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் போட்டியை நடத்தியவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://ennam.blogspot.com/2007/08/blog-post_14.html

என்னத்தக் காட்டுறதுங்க? இதப் படிச்சிட்டு ஜெயலலிதாவே சந்தோசப்பட்டிருப்பாரு. அதிமுகத் தொண்டர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் இனிமே எப்படிப் பாப்பாங்கன்னு சொல்லவே வேண்டாம். இது போன்றதுகளைக் கண்டுக்காம விடுறதுதான் நல்லது. இல்லைன்னா இதான் சாக்குன்னு இன்னமும் எழுதுவாங்க.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/08/251-6.html

தருமி பெயர்க்காரணம் இதுதானா :)))))))))))))))))))) சூப்பரு போங்க.

நந்தினிய ரொம்ப நகங்கடிக்க வேண்டான்னு சொல்லுங்க. காலேஜ் போனப்புறம் ஒரு பயலும் ஒழுங்காப் படிக்கிறதில்லை. :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/08/blog-post_14.html

ஜாங்கிரி ஜாங்கிரி ஜாங்கிரி...அடடா! எனக்கு ரொம்பப் பிடிக்குமே...வேண்டாம். வேண்டாம். இனிமே இதெல்லாம் குறைச்சிக்கனும். அதான் நல்லது.

ஆனாலும்..

எல்லாருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/08/blog-post_12.html

அருமையான பாட்டு ராஜேஷ். சுறுசுறு பாட்டு. விறுவிறுப் பாட்டு.

இந்தப் படம் ஒரு இந்திப் படத்தோட தழுவல். ஆனா அந்தப் படத்துல இருந்து ஒரு இந்திப் பாட்டக் கூட விஸ்வநாதன் எடுத்துக்கலை.

நல்ல பாட்டை நினைவு படுத்தியதுக்கு நன்றி.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/3.html

சூப்பர். சூப்பர். பிரமாதம்.

அம்சதூளிகா மஞ்சம்னா என்னன்னு தெரியாம இருந்துச்சு. அம்சமா தூளா பொண்ணுங்க சுத்தியிருக்குற மஞ்சந்தான் அம்சதூளிகா மஞ்சம்னு வெட்டிப்பயல் கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிட்டேன்.

// Guards வெட்டியை அலேக்காகத் தூக்க, கன்னிப் பெண்கள் எல்லாம் "பாவா, பாவா" என்று கூக்குரல் கொடுக்க, கொதிக்கும் அண்டாவில் தூக்கி வெட்டியை வீசுகிறார்கள் //

இப்பிடி இந்தப் பொண்ணுங்கள்ளாம் பாவா பாவான்னு சொல்லும் போது...எனக்கு ரகசியபோலீஸ் சின்னப்பாப்பு சில்க் ஸ்மிதா நினைவுக்கு வராங்க. ம்ம்ம்...அவங்க கண்டிப்பா சொர்க்கத்துலதான் இருப்பாங்க.

G.Ragavan said...

http://osaichella.blogspot.com/2007/08/flash-news.html

வாழ்த்துகள் லிவிங் ஸ்மைல் வித்யா. திரைப்படத்தை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம். எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2007/08/blog-post_16.html

என்ன கொடுமை இது!!!!! கவியரசர் வரிகள் நினைவுக்கு வருது...இல்லையென்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் (மகளே)!!!!!!! பாவி மனிதர்களா!

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2007/08/blog-post_16.html

// Anonymous said...
where is kapaleswara temple in chennai? //

தெரிஞ்சு கேக்குறீங்களோ தெரியாமக் கேக்குறீங்களோ!

மயிலைநாதன் என்று பெயரும் கொள்ளும்படி மயிலையிலே கயிலைநாதன் குடிகொண்டுள்ள கோயில்தான் அந்தக் கோயில். 21Gல் பாரிமுனையில் ஏறினால் சரியாகக் கோயில் தெப்பக்குளத்தில் இறக்கி விடுவார்கள். (தண்ணியில் அல்ல...ஓரத்தில்)

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/08/blog-post_5662.html

மிக எளிய சொல்லில் சொல்வதென்றால் இமாமின் பேச்சு கொடூரம். தன்னுடைய பொறுப்பை மறந்து உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார். இதன் விளைவுகள் உறுதியாக நல்லவையாக இருக்கப் போவதில்லை. அது மட்டும் புரிகிறது.

G.Ragavan said...

http://abumuhai.blogspot.com/2007/08/blog-post.html

அழகின் கருத்தில் பெருமளவில் ஒத்துப் போகிறேன். மன்மோகன் சிங் உளறிக் கொட்டியது மிகக் கொடுமை. அவரென்ன விடுமுறைக்கு இந்தியாவிற்கு வந்துவிட்டுப் போகிறவரா....இந்த நாட்டை நடத்திச் செல்கிறவர். அவரது பேச்சும் கண்டிக்கத்தக்கது. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பேச்சும் வன்முறைதான். இமாமின் பேச்சு மடத்தனம். அவர் மீது சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சரியாக இருக்கும். ஆனால் அது நடக்கும் என்று நினைக்கவில்லை. அரசும் யோசிக்கும். அப்படிக் கைது செய்தாலும் கலவரம் கண்டிப்பாக உண்டாகும்.

அபுமுஹை, இமாமின் பேச்சுக்குக் கண்டிப்பு சொல்லும் உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜார்ஜ் பெர்ணாண்டசைச் சொல்லித்தான் இமாமைச் சொல்ல வேண்டுமென்றில்லை. இமாமை மட்டுமே கூடச் சொல்லியிருந்திருக்கலாம். இமாமின் கருத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளாதது சிறப்பு. நன்றி.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/08/blog-post_14.html

உங்கம்மாவிற்குப் புத்தம் பிடுத்தமா...என்னுடைய அம்மாவிற்கும்தான். நிறைய படிப்பார்கள். அவர்களிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

கிரா, எப்படி அவரை மறக்க முடியும். எங்க ஊர்க்காரர்தான். தூத்துக்குடி மாவட்டம். இடசெவல் ஊர்க்காரர். அந்தப் பக்கத்துப் பேச்சுலதான் எழுதுவாரு. ரொம்ப நல்லாயிருக்கும். அப்பப்பா! அவர் எழுத்தப் படிக்கும் போதே அப்படியே ஊருக்குள்ள நாலு சுத்து சுத்தி மந்தை வழியா தோட்டத்துக்குப் போய் கம்மங்கருது சுட்டுத் தின்ன சுகம் கிடைக்கும். ரொம்ப எளிமையானவராம். அடுத்து என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்.

G.Ragavan said...

http://yehathuvaislam.blogspot.com/2007/08/blog-post_9342.html

பேசுறவரு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசுறாரு.

தஸ்லீமா தாக்குதலை எதுக்குறவங்கள்ளாம் தஸ்லீமா கருத்தை ஆதரிக்கிறவங்கங்குற தொனியில இவரு பேசியிருக்காரு. புஷ் சொன்ன மாதிரி "எங்க கூட இருக்கீங்களா அவங்க கூட இருக்கீங்களா" அதுதான் இதுவும்.

தஸ்லீமாவின் கருத்து தவறென்றால் அதை எதிர்க்க வேண்டியது சரிதான். ஆனால் தாக்குதல்? அதுதான் கண்டிக்கப்படுகிறது. இப்படியே போனால் கருத்து பிடிக்கவில்லை என்றால் தாக்குவது சரி என்றாகும். அத்தோடு எதிர்த்துக் கேட்டால் நீயும் அந்தக் கருத்தா என்று கேட்பதும் சரியாகாது.

மொத்தத்தில் தாக்குதல் தவறு. தஸ்லீமா சொன்னது கண்டிப்பாக விவாதத்திற்கு உரியது.

நேற்றுதான் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் படிக்க நேர்ந்தது. அவரது காலகட்டத்தில் எழுதப்பட்ட நூலானாலும்....மையக்கருத்தில் கடைசியாக அவர் முன் வைப்பது இரண்டு விஷயங்கள். கர்ப்பத்தடை ஒன்று. ஆண்மை அழிவது இரண்டு. அப்பொழுதே பெரியார் இதற்காக எதிர்க்கவும் தாக்கவும் பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ம்ம்ம்ம்... மீண்டுமொருமுறை அவர் சொன்னதைப் படித்துப் பார்க்க வேண்டும்.

G.Ragavan said...

http://abumuhai.blogspot.com/2007/08/blog-post.html

// 'ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்' என்று இந்துத்துவ துறவி செல்வி உமாபாரதி திருச்சியில பேசுனப்போ இவங்களெல்லாம் எங்கேத்தான் போயிருந்தாங்களோ..!

http://maricair.blogspot.com/2007/07/blog-post.html //

மரைக்காயர், அப்படிச் சொல்லியிருந்தால் அதுவும் கொடூரம்தான். அதில் எந்த ஐயமும் இல்லை. உமாபாரதியும் இந்த விஷயத்தில் இமாம் எவ்வளவு கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியவரோ அதற்கும் உரியவர். சில பல சமயங்களில் சில செய்திகள் நமது கவனத்திற்கு வருவதில்லை. அலுவலகப் பணி அது இது என்று ஏதாவது வந்து விடும். அந்த நேரத்தில் கருத்து சொல்ல முடியாமலும் போயிருக்கலாம்.

உமாபாரதி உடைத்ததும் பொன்குடமே. இமாம் உடைத்ததும் பொன்குடமே.

ஒருவேளை அபுமுஹை சொல்வது போல இமாம் சொல்வதை இஸ்லாம் சொல்வதாக எடுத்துக்கொள்வதாகக் கூடாது என்றே வைத்துக் கொள்வோம். அதே போல உமாபாரதி சொல்வதும் இந்து மதம் சொல்வதாக ஆகாது. ஆனால் இவர்கள் இருவர்களின் கருத்தும் வன்முறை என்ற வகையில் எதிர்க்கப்பட வேண்டியதுதான்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/08/blog-post_3797.html

துன்பம் தீர
இன்பம் சேர
நல்வினை சிறக்க
தீவினை மறக்க
கந்தன் குடிகொள்ளும்
நல்லூரே
நாமெல்லாம் செல்லூர்
அருள் மணக்கும்
தமிழைச் சொல்லூர்

என்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும்.

கந்தா! முருகா! உன்னை வேண்டி வேண்டிக் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். உலகம் முழுவதும் உன்பிள்ளைகள்தான். இந்தப் பிள்ளைகளுக்கு மட்டும் அடியுதை ஏன்! வாழ வையப்பா!

பிரபா, ஆன்மீக ஈழம் பற்றித் தொடருங்கள். தெரியவும் அறியவும் ஆவலாக உள்ளோம். தேவாரத் திருப்புகழ் வழியாகக் கொஞ்சம் தெரிவோம். இருந்தாலும் ஈழ மணத்தில் கேட்கவும் படிக்கவும் ஆவலாக உள்ளோம்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/08/2.html

ஆகா! கிரா இந்த ஜிராவுக்கும் பிடித்த எழுத்தர். மனிதர். அவரைச் சந்திக்க நானும் ஆவலாக உள்ளேன். அடுத்த முறை சென்னை வருகையில் உங்களிடமிருந்து தொலைபேசி எண் வாங்கி...நேராகப் பாண்டிச்சேரி சென்று அவரைப் பார்த்து விடவேண்டும். அவருடைய எழுத்தின் பாதிப்பு என்னுடைய எழுத்திலும் இருக்கும். அந்த வகையில் அவர் எனக்கு ஆசானுமாவார்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/08/blog-post_5662.html

// பிறைநதிபுரத்தான் said...
கொலை மிரட்டல் விடுபவனுக்கு - இமாம் என்ற அடைமொழி ஒரு கேடு.

தாடி மட்டும் வளர்த்து - அறிவை வளர்க்காதவனையெல்லாம் - இமாம் ஆக்கினால் இதுவும் பேசுவானுங்கள் - இன்னமும் பேசுவானுங்கள்..

ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத அவனின் தாடியை பிடித்து இழுத்து - தடியால் அடித்து - சிறையில் அடைக்கவேண்டும். //

இது தவறு. தாடியைப் பிடித்து என்பது தவறு என் கருத்து. தஸ்லீமாவின் சேலையைப் பிடித்து இழு என்பதற்கும் இமாமின் தாடியைப் பிடித்து இழு என்பதற்கும் வேறுபாடு எனக்குத் தெரியவில்லை.

மற்றபடி சட்டப்படியான நடவடிக்கை தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/08/18.html

எல்லாமே அருமையான பாடல்கள்.

காதோடுதான் நான் பேசுவேன்...ஆகா...ஈசுவரியின் குரலும் பாடும் திறனும்..ஆகாகா

நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு...இரண்டுக்கும் இடையில் இறைவனின் சிரிப்பு...இது தேனும் பாலும் படமா! இதில்தானே மஞ்சளும் தந்தாள் மயக்கம் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி பாடல். இதே படத்தைக் கொஞ்சமே கொஞ்சம் மாற்றி கற்பூரதீபம் என்று பின்னால் எடுத்தார்கள்.

ஆனந்த ராகம் கேட்கும் காலம்...கானாவின் பதிவில்தான். அதைச் சொல்ல வேண்டுமா?

பாட வந்ததோர் கானம்..ஆகா...இளமைத் துள்ளல் நிறைந்த பாடல். கேட்கக் கேட்கச் சுகம். அதிலும் மூடிவைத்த பூந்தோப்பு என்று பாடல் போகும் பொழுது சொர்க்கத்தின் உச்சி நமக்குத் தெரியும். நன்றி. நன்றி.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/08/18.html

// சுதர்சன்.கோபால் said...
எண்பதுகளில் தான் இசையமைத்து வந்த சில ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார்.அப்படி வந்த பாட்டுகளில் ஆனந்த ராகம் கேட்கும் காலமும் ஒண்ணு.

இந்தப் பாடல் இப்போது இந்தியிலும் ஹிட்டாக்கும். //

ஓமப்பொடியாரே....தொடுப்புக்கு நன்றி. எல்லாப் பாட்டையும் கேட்டேன். ஆனந்தராகம் பாடல் மட்டுமே சுகசுகமாய் ரசிக்க முடிகிறது. மற்ற பாடல்கள் எல்லாம்...சரி சொல்லக் கூடாது. அதிலும் ஷபத் என்ற பாடலை இளையராஜா பாடும் பொழுதும் ஜோஷ் மே என்று ஏசுதாஸ் பாடும் பொழுதும் கதவில்லாத கூண்டுக்குள் மாட்டிக்கொண்டது போன்ற உணர்வு. இளையராஜாவைக் குறை சொல்வதாக நினைக்க வேண்டும். நானும் இளையராஜாவின் பாடல்களுக்கு விசிறிதான். மனதில் பட்டதைச் சொன்னேன்.

இன்னொன்று. ஆனந்த ராகத்ட்தில் ஷ்ரேயா கோஷல் சிறப்பாகச் செய்திருக்கிறார். கூடப் பாடியவர் ரூப் குமார் ரத்தோடு...ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/07/52.html

நல்லதொரு பாடல் குமரன்.

ஒரு சிறிய திருத்தம். துரகம் என்றால் குதிரை. "பட்சியெனும் உக்ர துரகம்" என்று மயிலைக் குதிரையாகக் காட்டுகிறார் அருணகிரிநாதர். துரகம் என்பது வடமொழிச் சொல். ரத கஜ துரக பதாதிகள் என்று வடமொழியில் சொல்வார்கள் அல்லவா.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/08/53.html

நல்ல பாடல். இறைனை எண்ணி இருப்பதே தவம். அந்தத் தவமும் அவமுடையார்க்கே ஆகும்.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post_3666.html

நல்ல கலக்கல் பதிவு சிவபாலன்.

// ஜாகிர் said...
கமலை ரஜனியுடன் ஒப்பிடுவது. தவறு. வேண்டுமானால் ரஜனியை ஆட்டுக்கார அலமேலுவை ஒரு திருவிழாவாக்கிய (சிவபாலன் இலக்கணப்படி) ஆட்டுன் வேண்டுமானால் ஒப்பிடலாம். ரஜனி சந்தைப்படத்தப்பட்டிருருக்கும் ஒரு நுகர்வுப்பொருள் சோப்பு சீப்பு போல. காலம் மாற மாற ஒரு கோடி கலர் பேப்பர்களுடன் வந்து ஆடிவிட்டுப் போகும்... அவ்வளவுத்தான். //

ஜாகிர்..... :))))))))))))))))))) சரியாகத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். ரஜினியின் இன்றைய நிலை அப்படித்தான் இருக்கிறது. அதற்கு ரஜினியும் முக்கியக் காரணம். இவருக்கு நடிக்கவே தெரியாதா என்ன? முள்ளும் மலரும் இன்றைக்கும் எனக்குப் பிடித்த படம். மூன்று முடிச்சு..ஆகா...ஜானி, தில்லு முல்லு இப்பிடிப் படங்களையும் சொல்லலாம்தான். ஆனால் அதையெல்லாம் அங்கேயே விட்டு விட்டு இப்பொழுது இப்பிடி வந்து விட்டார். வயதுக்கேற்ற வேடங்களில் நடித்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால்....படம் வரும் போது மட்டும் திருவிழா...மத்த நேரத்துல தெருவிழாதான்.

ஸ்ரீ, உங்கள் கருத்தோடும் நான் ஒத்துப் போகிறேன். எம்.ஜி.ஆர் படங்கள் ஓடிய ஓட்டம் உலகுக்குத் தெரியாததா...எம்.ஜி.ஆர் படங்கள்ள நல்லபடம் எதுன்னு கேளுங்க? பதில் சொல்றதுக்குள்ள கண்ணாமுழி வெளிய வந்துரும். அதே நடிகர் திலகம் படத்துல நல்ல படங்கள 50, 60, 70, 80, 90ன்னு பட்டியல் போடலாம். அந்தந்தக் காலத்துக்கான நடிப்பு அங்க இருக்கும். பூப்பறிக்க வருகிறோம் பார்த்திருக்கீங்களா? அதுல யாரோ அஜய்னு கதாநாயகனாம். ஆனா படத்துல இவருதான் அரசாங்கம். எல்லாருக்கும் ஒன்னு கேட்டுக்கிறேன். அந்தப் படத்தத் திருட்டு வீசிடிலயாவது பாருங்க. அப்பத் தெரியும்.

இப்ப இருக்குற நடிகர்களை எடுத்தாலும் இந்த விஜய் சூர்யா வேறுபாடு தெளிவாத் தெரியுதே. ரெண்டு பேருமே மசாலாப் படம் செய்வாங்க. ஆனா விஜய் நடிச்ச நல்ல படம்னா...காதலுக்கு மரியாதை, அப்புறம் ஒரு விக்ரமன் படம் வந்ததே..அவ்வளவுதான். மத்தபடி எல்லாம் ஒரே மாவுதானே. சூர்யா படம்னா...மசாலப் படங்கள்ளயும் ஒரு மாறுதலை எதிர்பார்க்கலாம். காக்க காக்க ஒரு மாதிரி...பிதாமகன் ஒரு மாதிரி...கஜினி ஒரு மாதிரி...பேரழகன் ஒரு மாதிரி...இதுதான் நாளைக்குப் பேசப்படும். போக்கிரிகளும் போக்கிரிராஜாக்களும் அல்ல.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_13.html

ஹா ஹா ஹா..கலக்கல். கலக்கல்.

அது சரி..நான் எழுதுன "ஜொள்ளே கடலைவண்ணா" என்ற சங்கப் பாடலை...ஆடியோ சிடியில் மட்டும் போட்டுட்டு படத்துல வெட்டீட்டீங்களே! :(

G.Ragavan said...

http://yehathuvaislam.blogspot.com/2007/08/blog-post_9342.html

சரி நண்பரே..என்னுடைய பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கின்றீர்கள். என்னுடைய பின்னூட்டத்தை ஏன் பிரசுரிக்கவில்லை?

G.Ragavan said...

http://osaichella.blogspot.com/2007/08/blog-post_18.html

சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மறைத்து மறைந்த்து வைத்து மக்களைக் கெடுத்து வைத்திருக்கின்றார்கள். வெளிப்படையான அணுகுமுறை இல்லை என்பதைச் சொன்னால் செக்ஸ் மேனியாக் பட்டம் கிடைக்கும். இதில் நகைச்சுவையே....அப்படிச் சொன்னவர் ஆணாக இருந்தால்....நண்பர்களோடு பள்ளிக்கூட வயதிலேயே சரோஜாதேவி புத்தகத்தை ஒளித்து வைத்துப் படித்து சினிமாத் தேட்டரில் ஒளித்து வைத்து பிட்டுப் படம் பார்த்தவராகத்தான் இருப்பார். கண்டிப்பாகப் பெண்களின் அங்கங்களை ரசித்துப் பார்த்திருப்பார். ஆனால் அதை வெளிப்படையாக யாரும் சொன்னால் பாய்வார்கள். அப்பப்பா! அப்படியில்லை...நான் சிறுவயதில் இருந்து உத்தமனாக இருந்தேன்...பெண்களை ஏறெடுத்தும் பார்த்ததில்லை..புத்தகங்கள் நீலப்பட பழக்கங்கள் இல்லை. நண்பர்களோடு அசிங்கமாகப் பேசிக்கொண்டதில்லை என்று சொன்னால்...ஒன்று அவருக்கு ஏதோ கோளாறு. இல்லையெனில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை


// சுல்தான் said...

நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து ஆரம்பித்து விடுங்கள்.
மீண்டும் கற்காலத்திற்குத் திரும்புங்கள் - யார் வேண்டாம்கிறது? //

சுல்தான் ஒரு சிறு திருத்தம். உங்கள் விருப்பப்படியான வாழ்க்கை வாழ உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. யாரும் உங்களை அப்படி இருக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி உங்களை யாரும் சொன்னால்...அன்றைக்கு உங்களுக்கு ஆதரவாக கண்டிப்பாக நாங்கள் வருவோம். அதே போல வேறு யாராவது வேறு விதமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால்...அது அவரது தனிப்பட்ட விருப்பம் அல்லவா. அவரவர்க்குப் பிடித்தது அவரவர்க்கு. இப்படிச் சொல்வதால் நான் பத்து பேரோடு படுத்து எழுந்திருக்கிறேன் என்று பொருள் அல்ல. அப்படிப் படுத்து எழுந்திருக்கின்றது அப்படிச் செய்கின்றவர்களின் விருப்பம் என்ற வகையில் விட்டு விடுகிறேன்.

குடும்பத்தைச் சொல்கின்றீர்கள்...இந்தக் கருத்தை நாம் யார் மீதும் புகுத்த முடியாது. கூடாது. இந்தக் கருத்து மட்டுமல்ல எந்தக்கருத்தையுந்தான். அப்படியிருக்கையில் குடும்பத்தினர் மீது எப்படிப் புகுத்துவது. ஒருவேளை அப்படித்தான் என்று அவர்கள் முடிவெடுத்தால் அது அவர்கள் முடிவு.

நான் சொல்ல வந்தது உங்களுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. நெறைய எழுதீட்டேன். குழப்பீருந்தா மன்னிச்சிருங்க.

G.Ragavan said...

http://ammanpaattu.blogspot.com/2007/08/blog-post.html

நல்லதொரு பாடல். எனக்கும் பிடித்த பாடல். ஈசுவரி எல்லாவகைப் பாடல்களையும் பாடும் திறமை கொண்டவர். அவர் இதைப் பல பாடல்களில் நிரூபித்திருக்கிறார். இந்தப் பாடல் மட்டும் அல்ல. "மாதென்னைப் படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக" என்ற பாடலிலும் அருமையாகப் பாடியிருப்பார். நிறைய சொல்லலாம்.

நல்லதொரு பாடலை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://muslimpage.blogspot.com/2007/08/blog-post_17.html

தீண்டாமை என்று ஒழியுமோ! சாதிமத வேறுபாடுகள் என்று ஒழியுமோ! சகோதரர்களுக்கு நல்ல வாழ்வும் சுயமரியாதையும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/08/502.html

என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள். இசைப்பதிவுகளுக்கு இந்தப் பதிவும் ஒரு முன்னோடி என்பது மிகையாகாது. இசையரசி வலைப்பூ துவங்க இந்த வலைப்பூவும் ஒரு தூண்டுதல் என்று சொல்லிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

யாழ் சுதாகரின் பதிவுகளும் மிக அருமையானவை. கானாபிரபாவின் நேயர் விருப்பத்தைச் சொல்லவும் வேண்டுமோ.

இப்படி இருக்கையில் இசைப்பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதுவும் செய்ய முடியுமென்றால் அது இன்னமும் சிறப்பாக இருக்கும். என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் ஏதேனும் செய்யலாம்.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post_3666.html

// ஜோ / Joe said...
ராகவன்,
30 -களிலேயே நடிக்க வந்த எம்.ஜி.ஆர் 135 படங்கள் நடித்து முடித்த போது ,1952-ல நடிக்க வந்த சிவாஜி 200 படங்களை தாண்டியிருந்தார் .ஒரே நாளில் இரு படங்கள் ரிலீசாகி இரண்டும் 100 ஓடிய சரித்திரமெல்லாம் நடிகர் திலகத்துக்கு உண்டு . அது போல பாகப்பிரிவினை ரிலீசாகி 60 நாட்களில் பாசமலர் ரிலீசானது .இரண்டும் வெள்ளி விழா கண்டது .சும்மா தியேட்டரில் கேட்கும் விசில் சத்தத்தை வைத்து ரசிகர்களையும் ,வசூலையும் கணக்கு போட வேண்டாம். தமிழ் திரையுலக சரித்திரத்திலே 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரிலீஸாகி 100 நாள் ஓடிய படம் வீரபாண்டிய கட்டபொம்மன். //

இதெல்லாம் தெரிஞ்சவங்க நீங்க எடுத்துச் சொல்லனும். சொல்லுங்கய்யா..தெரிஞ்சிக்கிறோம்.

G.Ragavan said...

http://mayuonline.com/blog/?p=140

நல்ல விமர்சனம். ஆனால் கடைசி விருந்து அல்ல. இன்னொரு புத்தகம் வருகிறது. ஹாரி பாட்டர் பாத்திரங்களைப் பற்றியும்...இதுவரையில் புத்தகத்தில் சரியாகச் சொல்லப்படாத செய்திகளையும்...இன்னும் பல நிகழ்வுகளையும் சேர்த்து வருகிறது. இரண்டு-மூன்று ஆண்டுகள் பொறுக்க.

G.Ragavan said...

http://paris-johan.blogspot.com/2007/08/2.html

ஆகா...பஞ்சாமிரதத்திலும் பிரச்சனை வந்து விட்டதா?

கற்கண்டோடு சர்க்கரை நெய் பழத்தோடு தேன் கலந்த அமிர்தம் கிடைக்குதய்யா பழநியிலே
பஞ்சாமிர்தம் கிடைக்குதய்யா பழநியிலே

இந்தப் பாட்டை நினைத்துக் கொள்ளுங்கள். ஐந்து இருக்கிறது அல்லது.

1. கற்கண்டு - கடுக்முடுக் என்று கடிக்க
2. சர்க்கரை - இது இடித்த வெல்லம்
3. நெய் - உருக்குறு நெய். கசடு இல்லாது
4. பழம் - பழைய பஞ்சாமிர்தம்னா ஒரு பழந்தான். அதுவும் கூட மலைப்பழம் மட்டுமே. இப்பொழுது கிடைப்பதெல்லாம் போடுகிறார்கள். பழநி சித்தனாதன் கடையில் வாழை மட்டுமே போடப்பட்டு பஞ்சாமிர்தம் இன்றும் கிடைக்கிறது
5. தேன் - அந்த கொளகொளப்பும் இனிமையும் தருவதற்கு தேனைத் தவிர யாரால் முடியும்.

செய்முறை எளிதுதான். பழத்தைப் பிசுக்கிக் கொண்டு...எல்லாவற்றையும் கலந்து பிணைந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். தண்ணீர் படக்கூடாது. கையைக் கழுவி விட்டு தண்ணீர் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பிணையும் பாத்திரத்திலும் நீர் இருக்கக் கூடாது.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/08/blog-post_19.html

நல்லூரோடு உங்கள் தொடர்புகள் அறியக் காத்திருக்கிறோம். நல்ல தொடக்கம்.

எங்கள் சிறுவயதில் தூத்துக்குடியில் இருந்தாலும் ஊருக்குப் போனால் அங்கு விறகடுப்புதான். செம்மண்னையும் களிமண்ணையும் குழப்பிச் செய்த பெரிய பெரிய அடுப்புகள். மூன்று குமிழ்களோடு சாணி மெழுகப்பட்டு அழகாக இருக்கும். பெரிய பெரிய அடுப்புகள். அதில் விளையாட ஆசை பிறந்தாலும் திட்டு விழுகும். ஒரு அடுப்பிற்கு விறகு கூட்டும் வழி இருக்காது. ஆனால் பக்கத்து அடுப்பிலிருந்து வரும் நெருப்பு உள்ளே நுழையும் வகையில் இருக்கும். அவையெல்லாம் நினைவு படுத்தி விட்டது உங்கள் பதிவு. ஒருமுறை பாட்டி ஒருவர் அடுப்பில் சமைத்துக் கொண்டிருக்கையில் அடுப்பிற்குள் பொட்டு வெடிகளைக் கொட்டி விட்டு பிறகு திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதும் நினைவிற்கு வருகிறது.

கந்தனின் பாடலையும் படித்தேன். கேட்டேன். அருமை. அருமை.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/08/blog-post_15.html

என்ன செய்வது?
மௌனம் சம்மதம் என்று
தவறாக மொழி பெயர்த்த
நீ தேசத்துரோகிதான்!

G.Ragavan said...

http://nattunadappu.blogspot.com/2007/08/blog-post_19.html

:) இதை PDA என்பார்கள். அதாவது Public Display of Affection. இதுல பாருங்க இந்தியாவுல செய்யக்கூடாதது PDV, PDU...அதாவது Public Display of Violence and Public Display of Urination...PDA கூடாதுங்குறவங்க அதையும் மறுத்தா`நல்லாயிருக்கும்.

G.Ragavan said...

http://paris-johan.blogspot.com/2007/08/2.html

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவன்!
பஞ்சாமிர்தத்துக்கு ஒரு பிரச்சனையும் வரவில்லை.
நீங்கள் கூறவேண்டியது, இந்த வாசகர் கேட்ட கேள்விக்கு, அந்த பத்திரிகையில் வந்த பதில் சரியா?
அடுத்து பஞ்சாமிர்தத்துக்கும், பழத்துக்கும் தொடர்பில்லை. என அகராதிப்படி நான் கருதுகிறேன்.
பதிவில் அதைக் குறிப்பிட்டுள்ளேன்.
உங்கள் அபிப்பிராயம் என்ன? //

இல்லை. அந்தக் கருத்து தவறு. பழமின்றிப் பஞ்சாமிர்தம் இல்லை. அகராதியில் பஞ்சகவ்யத்தையும் பஞ்சாமிர்தத்தையும் குழப்பிக்கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். பஞ்சாமிர்தத்தில் பாலோ தயிரோ சேர்ப்பது கிடையாது. நெய்யும் தேனும்தான்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/08/blog-post_17.html

அருமையான பாட்டு...எனக்கும் பிடிச்ச பாட்டு. கேட்டு ரொம்ப நாளாச்சு. குடுத்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://nambharathi.blogspot.com/2007/07/blog-post_20.html

நல்ல பாடல். நல்ல விளக்கம். பிழைகளைக் களை என்று இறைவனை வேண்டுதல் சரிதானே!

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/08/blog-post_19.html

கோவி, இந்தக் கூத்தைத்தான் தேர்தல் முடிவு வந்த பொழுதே நான் குறிப்பிட்டேன். என்னால் யாரையும் நம்ப முடியவில்லை என்று. நீங்க அந்த நிலைக்கு இன்று வந்திருக்கின்றீர்கள். என்று வந்தால் என்ன...உண்மை அதுதான். தேனை எடுத்தது எந்தக் கையானா என்ன நக்காமலா விடுவாங்க. நாமதான் இவங்களை விட அவங்க நல்லவங்க. அது இதுன்னு ஏமாத்திக்கிறோம்.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/08/blog-post_14.html

தம்பி எப்படியிருக்கப்பா? ஒடம்பு சரியாப்போச்சுன்னா சரிதான். அதுதான் தேவை. ஆப்பரேஷனைக் கூட அழகாச் சொல்ற. நல்லாச் சொல்ற. முருகன் ஒன்ன நல்லபடி வெச்சுக்கிறட்டும்.

G.Ragavan said...

http://viduthalaidaily.blogspot.com/2007/08/blog-post_19.html

மாட்டு மூத்திரத்தை வீட்டிற்குள் தெளிப்பது என்பதும் அதை அதோடும் இதோடும் கலந்து குடிப்பது என்பதும் அருவெறுப்பாகத்தான் உள்ளது.

சாணியும் மலம்தான். ஆனால் அது ஈரமாக இருக்கையில் புழு கூட வருகிறது. ஆனால் தண்ணீரில் குழைத்து தரையிலோ அடுப்பிலோ மெழுகி விட்டால் சிறப்பாகிறதே. பொதுவில் கழிவுகள் நல்ல உரம் என்ற அளவில் தெரியும். ஆனால் மருந்து என்றால் அதை ஆராய்ச்சி செய்து சொல்லட்டுமே. ஆராய்ச்சி இல்லாமல்...ஒரு நிரூபணம் இல்லாமல் கோமியம் சிறந்தது என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஆராய்ச்சி செய்து அது உண்மையாகிவிட்டால் அதைக் கிண்டல் செய்கிறவர்களும் வாயடைத்துப் போவார்களே.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/08/10.html

அப்பாடியோவ் உங்க பதிவுக்குப் பின்னூட்டம் போட முடியுது டீச்சர். :)

நீங்க எழுதுனப் படிக்கும் போது எனக்கு அப்படியே அப்பார்மெண்ட் எழும்புனது நெனைவுக்கு வருது. அப்பப்பா...அது ஒரு சுகம். இல்லையா டீச்சர்?

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/08/blog-post_1068.html

ஆகா! நீங்கதான் இந்த வார மிண்மிணியா...சூப்பர். என்னுடைய வாழ்த்துகள்.

சாதீயக் கொடுமை உண்மையிலேயே கொடுமையானது. உலகத்தில் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது ஒரு விதத்தில் அடுத்தவனைத் தாழ்ந்தவனாக நினைக்கும் வழக்கும் உள்ளது. அதைச் சொன்னால் "உங்களைப் போல நாங்கள் அல்ல" என்பார்கள். விட்டுத்தள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுதும் திருந்தினால் நல்லது. ஆனால் இயற்கை விதிப்படி அதற்கு வாய்ப்பு குறைவு என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் வாலு போயி கத்தி வந்தது டும்டும்டும். பார்க்கலாம். என்ன நடக்கிறது என்று.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/08/blog-post_20.html

நல்லதொரு ஆய்வு கோவி. முருக வழிபாட்டில் இன்னொரு சிறப்பும் சொல்கிறேன். எல்லாத் தெய்வங்களும் அப்படி இப்பிடி மருவி உருவி கலந்தாச்சு. ஆனாலும் முருகனை மட்டுந்தான் இன்னும் முருகன்ன்னு தமிழ்ல சொல்றோம். கொற்றவை விரிசடையன் எல்லாரும் கெஜட்டுல பேர மாத்திக்கிட்டாங்க. இந்தாளு மட்டும் நூறு பேரு புதுப்பேரு வெச்சிக்கிட்டாலும் இன்னும் பழைய பேர விட மாட்டேங்குறாரு. :))))))))))

பழைய இலக்கியங்கள்ள பாத்தா முருகனைக் கொற்றவையின் மகன்னு சொல்வாங்க. விரிசடையன் மகன்னு சொல்வாங்க. சூர் தடித்தது மா அறுத்தது வள்ளியின் காதல் வரும். இதையே திரும்பத் திரும்பச் சொல்வாங்க.

// மாசிலா said...
முருகனின் உருவப்படங்கள் வெள்ளைத்தோல் உடையவராக சித்தரிக்கப்படுவது ஏன்?

உண்மையில் அவர் வெள்ளையாக இருந்தாரா?

முருகன் என்பவர் ஒரு கடவுளா அல்லது மக்களின் நம்பிக்கை பாத்திரமா? //

மாசிலா, உங்களது இரண்டு கேள்விகளையும் இணைத்தே எனக்குத் தெரிந்த விடை சொல்கிறேன்.

முருகன் என்பது இன்றைய நம்பிக்கையில் பலருக்கு பல கடவுள்களில் ஒரு கடவுள். ஆனால் பழைய சமுதாயத்தில் ஒரு இனத்தினர் இதுதான் கடவுள் என்று வழிபட்ட கடவுள்.

பொதுவாகவே கடவுள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று பெரும்பாலான இலக்கியங்கள் ஒத்துக்கொண்டாலும்...ஆனையைப் புரிந்த குருடர் போல தாம் எப்படியெல்லாம் உணர்ந்தனரோ அப்படியெல்லாம் இறைவனை வழிபடத் தொடங்கினர்.

தமிழில் கூட முருகக் கடவுளை சொற்களுக்குள் முடிக்க முடியாது. சொல்லி விளக்க முடியாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனாலும் சாமீன்னா இப்பிடித்தான்னு ஒரு நம்பிக்கை. அப்படி உருவகப் படுத்தும் போது செம்மைப் பண்பை வைத்தும் அறிவை வைத்தும் உருவகப் படுத்துகிறார்கள் தமிழர்கள். செம்மை செஞ்சுட்டு வான்னு தூத்துக்குடி திருநவேலி மாவட்டங்கள்ள இன்னமும் சொல்வாங்க. அந்தச் செம்மையை உருவகப் படுத்தும் போது சிவப்பு நிறம் வந்திருக்கிறது. வெள்ளை அல்ல. இன்னும் சொல்லப் போனால் முருகனின் ஆடை செம்மையானது என்று இலக்கியங்கள் சொல்வதுண்டு. அது இன்றைக்குக் காலப்போக்கில் வெள்ளையாகியிருக்கிறது. பழநி தண்டாயுதபாணி கருப்பாகத்தானே இருக்கிறார். திருச்செங்கோட்டில் வெள்ளையாக வைக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாக் கோயில்களிலும் வெளுப்பாக வைக்கத் தெரியாமல் போயிருக்குமா. இன்றைய நிலையில் சினிமா நாயக நாயகிகள் வெளுப்பாக இருப்பது போல காலண்டர் படங்களில் முருகனும் வெளுப்பாகியிருக்கிறார். இயல்பாகவே நம்மவர் உள்ளிருக்கும் ஒரு தாழ்வு மனப்பாங்கின் வெளிப்பாடு அது. மாற வேண்டும். நிச்சயம் மாற வேண்டும்.

G.Ragavan said...

http://vovalpaarvai.blogspot.com/2007/08/blog-post_20.html

நல்ல நல்ல விசயமாத்தான் சொல்லீருக்கீங்க. ஆனா பாருங்க..மாநில மத்திய அரசுகள் இத யோசிக்கவே மாட்டேங்குறாங்களே. அரசியல் செய்யவே இவங்களுக்கு நேரம் சரியா இருக்கு. என்ன செய்றது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். இது உண்மை. நாளைக்கு ஏதோ ஒரு நாடு உழும். அவங்களை நோக்கிச் சாப்பாட்டுக்கு நமது கைகள் தொழும். :((((((

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/08/wishes-jk.html

இம்சையரசிக்குப் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஜெ.கேக்கு ஜேஜேன்னு பிறந்தநாள் வாழ்த்துகள்.

வேதாவுக்கு பணப்பண பிறந்தநாள் வாழ்த்துகள்.

தெக்கிக்காட்டானுக்கு தென்றல் வருடும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://poopoornima.blogspot.com/2007/05/ii.html

நல்லா பாடீருக்கீங்க பூர்ணி. முருகனருள் முன்னிற்கட்டும்.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2007/08/blog-post_20.html

சூப்பர் சர்வேசன். இறாலே ஒரு விருந்து. கூட மீன் கொழம்புமா! கலக்கல்.

// அவரு சொன்ன மாதிரியே, ரொம்ப ஸ்ரத்தையா ஸ்டெப்-பை-ஸ்டெப் ஃபாலோ பண்ணி, இறால் ரெடி பண்ணியாச்சு.
மற்ற மசாலாக்கள் சேர்க்காத வறுவல் என்பதால், இறாலின் சுவை கூடியிருப்பதாகவே தோன்றுகிறது. இல்லன்னா, ஜி.ராவின் எழுத்துத் திறமையால் எனக்கு அப்படி தோணுதான்னு தெரியல. //

சர்வேசன், சமையல்ல ஆரம்பப்பாடமே, நாம பயன்படுத்துற பொருட்களோட சுவையை அப்படியே காட்டுறதுதான். மசாலா நெறையப் போட்டுட்டா மசலா சுவைதான் தெரியும். அதுனாலதான் மசாலா எண்ணெய் ஆகியவைகளை முடிஞ்ச வரைக்கும் குறைக்கனும். அதத்தான் அந்தச் சமையல் குறிப்புல நான் செஞ்சிருந்தேன். மத்தபடி சுவையெல்லாம் எழுத்துத் திறமைல இருந்து வரலை. இறால்ல இருந்துதான் வந்துச்சு. :))))))))))

மேக்கரல் இங்கயும் கெடைக்குது. ஆனா வாங்குறதில்லை. இங்க வந்தப்புறம் சால்மன் தான் வாங்குறது. ஹி ஹி. அந்த மீன் கொழம்ப எப்படிச் செஞ்சீங்கன்னு சொல்லுங்களேன்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/08/blog-post_5765.html

கருத்தடை மாத்திரைகள் ஏற்கனவே இந்தியாவில் உண்டே. அரசு மருத்துவமனைகளில் கொடுப்பார்களே. மாலா-டி என்று ஒன்று ஏற்கனவே இருக்கிறதே. அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? விற்கக் கூடாதாக்கும். அரசாங்கமே விநியோகித்தால் போதுமாமா?

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blogger-vcr.html

ஆகா! இவ்வளவு நடந்திருக்கா. இது தெரியாமப் போச்சே! வீசீயார்....இப்பிடி ஆப்பை வீசினார்னு ஒரு பதிவு வந்து சொன்னாத்தான் நமக்கு வெவரம் தெரியுது.

ஆமா...இன்னோன்னு தெரியுமா ஒங்களுக்கு.......இந்தத் தகவல்களை நாந்தான் ஒங்கள்ளுக்குக் கொடுத்தேன்னு நெனச்சிக்கிட்டு நெதர்லாந்து பாவையர் கூட்டம் ஏன்னைய மெரட்டி விரட்டுறாங்க. கஷ்ட்டப்பட்டு தப்பிச்சி வீட்டுக்கு வந்துட்டேன். அண்ணன் வீசியார் எப்ப நெதர்லாந்துக்கு வந்தாருன்னுதான் எனக்குப் புரியலை!!!!!!!!!!!!

G.Ragavan said...

http://blog.balabharathi.net/?p=47

ஹா ஹா ஹா...ரசித்தேன். ரசித்தேன். போர்வெறி ஒழிய வேண்டும். அதுக்கு இந்த மாதிரியான போலி வாத்தியார்கள் ஒழிய வேண்டும்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/08/mid-week.html

ஆகா! இப்பிடி மானிட்டர தொடைக்க வெச்சிட்டீங்களே...இது சரியா? முறையா? தகுமா? இப்பிடி ஒங்கள வரவேற்க வேண்டியதாப் போச்சே!

G.Ragavan said...

http://sirippu.wordpress.com/2007/08/21/alarm

அடக்கடவுளே! கம்பியால அடிச்சாரா? அவரு என்ன அப்பாவா?!!!!!

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/08/19.html

கீதை என்ன சொல்கிறதென்பது எனக்குத் தெரியாது. படித்திருந்தால்தானே தெரிவதற்கு. ஆகையால் நீங்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று கூட சொல்ல முடியாது.

ஆனால் சில கேள்விகள் எழாமல் இல்லை. அந்த வர்ணம் பற்றிய செய்தியைப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது அந்த வரிகளை நேரடியாகப் படிக்கவே விருப்பத்தைத் தூண்டுகின்றீர்கள். அந்த வரிகளைக் கொடுக்க முடியுமா? வடமொழி தெரியாது என்றால் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாமே!

பகவத்கீதையை வைத்துச் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும் என்று சொன்னால் அதை நாம் மறுக்கமும் முடியும் என்று நினைக்கிறேன். சத்தியத்தைச் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தால் கீதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு முருகன் மேல் என்று சொல்வேன். அசத்தியம் என்று முடிவு எடுத்து விட்டால் எந்த நூலாக இருந்தால் என்ன.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/08/blog-post_20.html

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஏதோ புரியுது. சரியாத்தான் புரியுதுன்னு நெனைக்கிறேன். ஆனால் முடிவு ஊகிச்ச மாதிரியே இருந்தது.

// இலவசக்கொத்தனார் said...
அண்ணா, என்ன சொல்ல வறீங்க? இந்த மாதிரி எல்லாம் சொன்னா என்னை மாதிரி சின்ன பசங்களுக்குப் புரியாது. //

அப்படியே என்னைப் போல கெழங்கட்டைகளுக்கும் புரியுதே! என்ன செய்றது...

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/08/blog-post_639.html

அருமை. அருமையான கதை.

G.Ragavan said...

http://araiblade.blogspot.com/2007/08/blog-post_6439.html

சூப்பர் கதைங்க. மகாபாரதத்துல உள்ள ட்விஸ்ட்ஸ் அண்டு டர்ன்ஸ் ரொம்பவும் நல்லா விறுவிறுப்பா இருக்கும். மகாபாரதக் கதைல இருக்குற கருத்தை விட...அந்தப் பாத்திரங்களின் மனப்பாங்கும் குணச்சித்திரமும் திரும்பத் திரும்ப யோசிக்க வைக்கிறவை.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/08/blog-post_20.html

// // G.Ragavan said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஏதோ புரியுது. சரியாத்தான் புரியுதுன்னு நெனைக்கிறேன். ஆனால் முடிவு ஊகிச்ச மாதிரியே இருந்தது.//
இந்த டகால்டி யெல்லாம் வேணாம். அப்புறம் எதுக்கு இப்படி ஒரு ம்ம்ம்ம்ம்ம்ம்ம். //

அது ஏன்னா....ஏன் இப்பிடி முடிச்சீங்கன்னு யோசிக்கிறேன். கதையின் மையக்கருத்து தொடங்கும் ஆதிப்புள்ளின் பாதிப்புள்ளியை இளா இன்னும் இந்தப் பெரியபுள்ளி தொலைத்த புள்ளியைத்தான் தேட வேண்டும் என்று இப்பொழுதே புள்ளி வைத்து நீங்கள் கோலம் போட வேண்டும்.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2007/08/blog-post_22.html

ஆகா! எனதருமை எலுமிச்சைச் சாதத்தின் மேல் இப்பிடியொரு பழி சுமத்திய உங்களை என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் முந்திரியின் மீது பழியைப் போட்டு உங்களை நீங்களே காப்பாற்றிக்கொண்டீர்கள். தீது மட்டுமல்ல நன்றும் பிறர் தர வாரா! :)

எலுமிச்சம்பழச்சோறே நீ வாழ்க! ஆகா...ஆகா!

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_23.html

ஹெ ஹெ ஹெஹ்ஹெஹ்ஹே!

சிபியார் பாடுகிறார்

கனவே கலையாதே
கையேந்தியே நான் கேட்கிறேன்
நூறு பின்னூட்டம்.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/08/blog-post_25.html

2. பொன்பட்டாடை மூடிச் செல்லும் தேன் சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளை தோறும் போதை என்ன சொல்ல............

அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ
காணாததும் கேளாததும் காதலில் விளைந்திடுமோ? ;)

3. தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

4. இது இளையராஜா ஸ்டைல். அவருதான் இசையமைப்பாளர். ஆனா கேட்ட மாதிரியே இருக்குது. அதுல அந்த மெலடி வர்ர கட்டம்....தூங்காத கண்ணின்று ஒன்று பாட்டோட மெட்டு மாதிரியே இருக்குது.

G.Ragavan said...

http://vinmathi.blogspot.com/2007/08/blog-post_26.html

உண்மையச் சொல்லட்டுமா? எனக்கு சென்னைக்கே போயிட்டாப்புல இருக்கு. :) ஊரக் காமிச்சதுக்கு நன்றி.

இது நல்ல திட்டம். அப்படியே எங்கக் கோட்டூர்புரம் ரோட்டு டிராபிக்கையும் காட்டுனா நல்லாருக்கும். :)

G.Ragavan said...

http://vinmathi.blogspot.com/2007/08/blog-post_26.html

உண்மையச் சொல்லட்டுமா? எனக்கு சென்னைக்கே போயிட்டாப்புல இருக்கு. :) ஊரக் காமிச்சதுக்கு நன்றி.

இது நல்ல திட்டம். அப்படியே எங்கக் கோட்டூர்புரம் ரோட்டு டிராபிக்கையும் காட்டுனா நல்லாருக்கும். :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/08/blog-post_27.html

காய்கறியெல்லாம் என்ன அழகு. என்ன அழகு. இதப் பாத்தா காய்கறியச் சமைக்கவே தோண மாட்டேன்குதே. பேசாம மீனு கோழின்னு திங்க வேண்டியதுதான்.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2007/08/blog-post_958.html

சர்வேசன்..இப்ப இது என்னத்துக்கு? ஏற்கனவே எரியுதாம் எள்ளு...அதுல ஏன் போடனும் கொள்ளு?

டோண்டுவின் பதிவுகளில் பின்னூட்டமிட்டு ஆபாசப் பின்னூட்டங்கள் வாங்கிய அனுபவம் எனக்கும் உண்டு.

தவறு ரெண்டு பக்கமும் இருக்கு அப்படீங்குறது என்னுடைய கருத்து. இப்ப இதப் பத்திப் பேசி இப்ப ஒன்னும் ஆகப் போறதில்லை. கண்டுக்காம இருக்குறதுதான் நல்லது.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/08/blog-post_22.html

ஆகா! இந்தப் பாட்டப் பத்தி என்ன சொல்றது..... பாக்கவும் கேக்கவும் அருமையான பாட்டாச்சே.... மெல்லிய நாட்டுப்புறப்பாட்டு இது. வானொலிக்காக தேவிகா பாடுற மாதிரி படமாக்கப்பட்ட காட்சி இது.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_26.html

சற்றுமுன் கிடைத்த தகவலின் படி....திருவாளர் கண்ணபிரான் ரவிசங்கரர் தனது நண்பருக்குத் தொலைபேசி செய்து....பாத்தியா மதுரைக்காரங்களத் திட்டீட்டேன்...அது தெரியாம..ஏதோ பாராட்டுனதா நெனச்சுக்கிட்டிருக்காங்க. இதுல சங்கரதாஸ் சாமியையும் இழுத்துட்டதால....மதுரைக்காரனை எவ்வளவு வேணும்னாலும் மாபாவீன்னு சொல்லித் திட்டலாம். கேட்டா வெளக்கம் சொல்லிக்கலாம்...இப்பிடிச் சொல்லி வில்லன் வீரப்பா+நம்பியார்+அசோகன் எல்லாம் கலந்து சிரிச்சாராம். கேட்ட நண்பரை இன்னமும் காணலை.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/08/14.html

ஓ அப்பத்தான் துளசிதளம்னு பேர் வெச்சீங்களா...நல்ல பேரு. புது வீடு..புது வலைப்பூ...கலக்குறீங்க டீச்சர். கலக்குறீங்க.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/08/1.html

வீட்டுல உக்காந்து வேலை பாக்குறது எப்பவும் வேலைக்காகாது. வாரத்துக்கு ரெண்டு நாளாவது அலுவலகம் போகனும். ஆனா ஒன்னு..ஆபீஸ்லன்னா நேரத்துக்குக் கெளம்பீருவோம். வீட்டுலன்னா...அது நடக்காது. ரொம்ப வேலையாயிரும்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/08/blog-post_28.html

பாண்டித்துரைத்தேவர் செய்தது சரிதான். ஆனால் அதற்குக் காரணம்...குறள் வேறொருவர் எழுதியது. அதில் இன்னொருவர் என்ன கைவப்பது.

அதே நேரத்தில் கருத்து சொல்வதில் சுதந்திரம் இருக்கத்தான் வேண்டும். அதே நேரத்தில் அனைவரும் அனைத்தும் அறிந்தவர் இல்லர்.

ஒருவர் சொல்கிறது தவறு என்று தோன்றினால் அதற்கு எதிரான கருத்தை விளக்கிப் பதிவிடலாம். அதுதான் சரியான முறை.

ஆனால் எதிர்க்கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தமிழ்வலைஞர்கள் பலருக்கும் வரவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/08/blog-post_1327.html

மாண்புமிகு டாக்டர் விஜய் அவர்கள் ஒழுங்காக தமிழில் ஒரு படம் எடுக்கட்டும். அப்புறம் எதுவும் பேசட்டும். டாக்டர் பட்டம் குடுத்துட்டாங்கன்னு அவரோட படத்த ஆப்பரேஷன் தேட்டர்ல போடச்சொல்வாரு போல இருக்கே. தெலுங்கு ரீமேக் இல்லாம பழைய படம் ரீமேக்கு இல்லாம.....உருப்படியா ஒரு படமாவது நடிக்கட்டும்...அப்புறமா இவரை நடிகர்னாவது நம்ம மதிக்கலாமான்னு யோசிக்கலாம்.

G.Ragavan said...

http://maruthamuraan.blogspot.com/2007/08/blog-post_6615.html

சிரிப்புதான் வருது. ஆனா சிந்தனையும் கூட. ஏன் அந்தப் பெண் போய்க் கடிக்கனும்? அது என்ன டைனமைட்டா கடிச்சி வீச. ஒன்னு...இந்தாளு ஏதாச்சும் வம்பு செஞ்சிருக்கனும். இல்லன்னா...அந்தப் பொண்ணுக்கு சிறுவயதுல ஏதாவது தவறு நடந்திருக்கனும்.

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2007/08/blog-post.html

குழலி, எனக்கு இப்பொழுது பதிவுகளைப் (உங்களது, ரவியோடது, செல்லாவோடது) படிச்சிட்டு என்ன சொல்றதுன்னு தெரியாம வாயடைச்சுப் போயிருக்கேன்.

ஆமா. இவ்வளவு காட்டமாக் கூட்டமாச் சொல்றீங்க. நம்பவும் முடியாம..நம்பாம இருக்கவும் முடியாமக் குழப்பத்துல இருக்கேன்.

ஏன்னா...என்னை முத்தமிழ் மன்றத்துல இருந்து வலைப்பூவுக்குக் கூட்டீட்டு வந்ததே இவர்தான். டெம்பிளேட் எல்லாம் செட் செஞ்சு குடுத்தாங்க. நான் சொல்றது ரெண்டு வருசத்துக்கும் முன்னாடி....ரெண்டரை வருசம் இருக்கும்னு நெனைக்கிறேன்.

அப்புறம் நாள்பட நாள்பட அவரோட தொடர்பு குறைஞ்சுதான் போச்சு. ஆனா அவர்தான் இவர்னு முன்னாடி அரசல் புரசலாச் சொல்லிக் கேள்விப்பட்டாலும்...அத நம்பலை. ஆனா இப்ப நீங்கள்ளாம் இதச் சொல்றது அதிர்ச்சிதான். அவர்தான் தவறு செஞ்சவர்னா...அது தப்புதான். அந்தத் தப்புக்கு என்ன செய்யனுமோ..அத செய்யத்தான் வேணும்.

இவருடைய வலைப்பூ முகவரி என்னுடைய வலைப்பூவுல இருக்கு. அது தொடர்ந்து இருக்கும். நன்றி மறப்பது நன்றன்றுதானே. ஆனா இவர்தான் போலி, வி.க, சட்னி வடைன்னு எல்லாம் சொல்லிக் கேக்குறது...கஷ்டமாத்தான் இருக்கு. என்ன நெனைக்கிறதுன்னே தெரியாமக் குழம்பியிருக்கேன்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_26.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// G.Ragavan said...
கேட்ட நண்பரை இன்னமும் காணலை.//

அந்த நண்பர் யார் என்றால்:
மயிலுக்குத் தோழர்!
மாதவனை விட நல்லாத் தமிழ் பேசுவார்! :-))) //

மாதவன விட நல்லாத் தமிழ் பேசுவார்னா...சூர்யாவவிட மோசமாப் பேசுவாரா? இப்பிடியா ஒங்க நண்பரோட தமிழறிவைக் கிண்டலடிக்கிறது. அவர் ஒங்களுக்கு நண்பர். ஆனா நீங்க அவருக்கு எதிரி போலத் தெரியுது!

////இப்பிடிச் சொல்லி வில்லன் வீரப்பா+நம்பியார்+அசோகன் எல்லாம் கலந்து சிரிச்சாராம்//

எம்.ஆர்.ராதா அண்ணன் போலவும், மற்றும் பிரகாஷ் ராஜ் போலவும்
சிரிச்சதை நண்பர் ஏனோ குறிப்பிட மறந்து விட்டாரே! ராதாவைப் பிடிக்காதோ? :-)) //

ராதா அளவுக்குச் சிரிக்க ஒங்களுக்கு முடியாதுன்னு அவருக்கு நல்லாத் தெரியுமாம்.

////இதுல சங்கரதாஸ் சாமியையும் இழுத்துட்டதால....மதுரைக்காரனை எவ்வளவு வேணும்னாலும்//

சங்கரா சங்கரா!
மதுரை தான் எனக்குப் பிடிச்ச ஊரு!
மல்லி தான் எனக்கு பிடிச்ச ஃப்ளவரு!
இதை நாடும் நகரமும் நன்கறியும்!
அண்ணன் ஜிராவும் அறிவார்! //

மக்களே...நல்லாக் கேட்டுக்கோங்க...நன்கறியும்னா என்ன? நன்கு அறியும்னா நெனைக்கிறீங்க. அதுதான் இல்ல. ரவி என்ன சொல்றாருன்னா...நக-ரம்மும் நான் கறியும் அப்படீங்குறத அப்படி இலை மறை காய்மறையாச் சொல்றது..இந்த மறை வேலையெல்லாம் நல்லாத் தெரிஞ்சவர்தான் ரவி.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2007/08/327_29.html

ஆட்டத்துல டாக்டர் ஜிராவை மறந்துராதீங்கய்யா...டாக்டர் ஜிரான்னு சொல்லும் போதே எவ்வளவு நல்லாருக்கு. பேர்ப் பொருத்தமும் நல்லாருக்கு. அதுனால ஜேப்பியார் ஜேப்புல எதுனாச்சும் போட்டு எனக்கும் டாக்டர் பட்டம் வாங்கிக் குடுத்துருங்க. வேட்டையாடு விளையாடு படத்துல வர்ர டாக்டர் இளா மாதிரி இல்லாம...ஒழுங்கா அப்பூரேசன் பண்றேங்க.

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2007/08/blog-post.html

// நீ என்னடான்னா குழம்பிட்டத்தா உளறித்தள்ற...உனக்கென்ன போச்சு, உன்னையா திட்டினான்... //

ரவி, என்னையா திட்டினான்னு சொல்றீங்க....திட்டு எனக்கு மட்டுமில்ல..என்னோட குடும்பத்துக்கும் விழுந்தது. பின்னூட்டத்துல மட்டுமில்ல..மெயில்லயும்.

நீங்க என்னோட குழப்பத்தத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்கீங்கன்னு நெனைக்கிறேன். தெரிஞ்ச ஒருத்தரப் பத்தி இப்படி ஒரு செய்தி கேக்குற அதிர்ச்சி அது.

ஆனா நீங்க அந்தத் தொடுப்பு விசயம் சரியில்லைன்னுதான் தோணுது. எடுக்குறதுதான் நல்லது.

மத்தபடி பின்னூட்டம் அந்த மாதிரிப் போடுறதுக்கெல்லாம் தனித்திறமை வேணும். :))))))))))))))

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/08/blog-post_9507.html

ஆகா! எவ்வளவு தகவல்கள். எவ்வளவு செய்திகள். நன்றி பிரபா. இந்தத் தொடரைத் தொடங்கிய பொழுது படித்தது...நடுவில் விடுபட்டுப் போனது. அனைத்தையும் தொடர்ந்து படிக்கிறேன். :)

G.Ragavan said...

http://keethukottai.blogspot.com/2007/08/parasakthi.html

கீத்துக்கொட்டகைக்கு என்னுடைய வாழ்த்துகள். இப்பிடிப் பல படங்கள எங்க்களுக்கு அறிமுகப் படுத்தனும்னு கேட்டுக்கிறேன்.

பராசக்தி எப்படிப் படம்யா. இன்னைக்கும் நாட்டுக்கு அப்பிடியே பொருந்தும். எல்லாக் காலத்துக்கும் பொருந்துற மாதிரி கதை வசனம்.

நடிகர் திலகத்தைச் சொல்லனுமா என்ன? விக்ரமப் போடலாம்...ஆனா சூரியாதான் ரொம்பப் பொருத்தம்.

ஒரு விஷயம் உண்மைதான். அன்னைக்குப் படத்துல நடந்ததெல்ல்லாம் இன்னைக்கும் அப்படியே மாறாம இருக்கு. நாடும் அப்படியே மாறாம இருக்கு. என்ன கொடுமை சரவணன் இது!

நடிகர் திலகத்தில் புகழ் ஓங்குக.

G.Ragavan said...

http://blog.balabharathi.net/?p=49

போலிப்பிரச்சனை இப்படியெல்லாம் திரும்புதா? கண்டுக்காம விடுங்க யெஸ்பா. நீங்க யாரு? நல்லவரு...வல்லவரு...(சரியாச் சொல்லீருக்கேனா? )

G.Ragavan said...

http://photobala.blogspot.com/2007/08/blog-post_17.html

முருகா! எவ்வளவு கொடுமைகள். படிக்கையில் அதன் வலி புரிகிறது. நிலமை மாறத்தான் வேண்டும். அதற்காக முதலில் எங்களிடமிருந்து திருநங்கைகள் மீதான ஒதுக்குதலையும் காழ்ப்புணர்வையும் தவிர்க்கிறோம். அனைவரும் இப்படிச் செய்ய நிலமை மாறும்.

பருத்திவீரன் ஒரு மட்டமான படம் என்பது என் கருத்தும் கூட.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_31.html

பச்சைமாமலைபோல் மேனி
பவழவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே
ஊரிலேன் காணி இல்லை
உழவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேனே
ஆருளர் களைகண் அம்மா
செந்தில்மாநகருளானே ;)

மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_31.html

// //பரமமூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே....
செந்தில் மாநகருளானே ;)//

அச்ச்சோ...எங்க ஜிராவா இது? கையக் கொடுங்க! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
செந்தில் மாநகரில் பெருமையுடன் இருப்பது காரொளி வண்ணன், கண்ணன் தான் என்று சொல்ல ஒங்களுக்கு எம்மாம் பெரிய மனசு வேணும்! :-)))

அட அங்கேயும் கண்ணன் இருக்காருப்பா மாப்ஸ் முருகன் கூடவே!
போதாக்குறைக்கு குலசேகரப்பட்டினம் பள்ளி கொண்டவனும் பக்கம் தேன்! //

படிச்சவன் பாட்டக் கெடுத்தாங்குறது சரியாத்தான் இருக்கு. நான் என்ன பொருள்ள சொல்லீருக்கேன். நீங்க என்ன பொருள்ள திரிக்கிறீங்க? நடுவுல ஒரு வரிய வேற முழுங்கீட்டீங்க.

காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேனே
ஆருளர் களைகண் அம்மா
செந்தில்மாநகருளானே ;)

கண்ணனே...கதற்றேனே...யாரும் இல்லைன்னு நெனச்சியா? செந்தில்நகர் முருகன் இருக்கான் தெரிஞ்சுக்கோன்னு முடிச்சிருக்கேன். நீங்க சொன்ன மாதிரியெல்லாம் பொருள்ள நான் சொல்லல. ;)

நீங்கதான் பழைய இலக்கியங்கள திரிச்சிப் புதுப்புது பொருளாச் சொல்லிக் கொடுமை செய்றவரா?

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/08/520.html

சுந்தர், இது ஒரு அருமையான பாடல். நட்சத்திரம் என்ற படத்திலிருந்து. இது தெலுங்குப்படத்தின் தமிழ் வடிவம். தாசரி நாராயணராவ் தெலுங்கில் எடுத்தார். அவரே அதைத் தமிழிலும் எடுத்தார்.

தெலுங்கில் சக்ரவர்த்தி இசையமைப்பாளர். அதே மெட்டு தமிழில் சங்கர் கணேஷ் வழியாக வந்திருக்கிறது. ஆக..மெட்டுக்குச் சொந்தக்காரர் சக்கரவர்த்தி.

அதே போல பாடலை இயற்றியவர் கவியரசர். இந்தப் பாடல் வரிகளைப் போலவே வைரமுத்து வேறொரு பாடலில் எழுதியிருந்தாராம். அதாவது "தாமரைப் பூவின் சூரிய தாகம்" என்று. ஆனால் தற்செயலாக இந்தப் பாட்டை ரேடியோவில் கேட்டாராம். ஆகையால் உடனே ரெக்கார்டிங்கிற்கு முன்னால் அவர் எழுதிய பாட்டிலிருந்த "தாமரைப் பூவின் சூரிய தாகம்" என்ற வரிகளைத் திருத்தி விட்டார்ராம். கவியரசரைப் பார்த்து இவர் எழுதி விட்டார் என்று சொல்லி விடக் கூடாதல்லவா. இதை வைரமுத்து ஒரு பேட்டியில் சொன்னார்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_3882.html

சசா சங்கமா? என்னைய ஏய்யா சாமியார் ஆக்கப் பாக்கீரு? கள்ளியிலும் பால் எழுதுறவனுக்குஞ் சாமியார் மடத்துக்கும் என்னய்யா தொடர்பு?

எல்லாரும் ஒங்கள ரொம்பப் பாராட்டுறாங்க. நானும் பாராட்டலைன்னா...ஏதோ பொறாமைல பாராட்டாம இருக்கேன்னு உண்மையப் பேசுவாங்க. அதுக்காகவாவது பாராட்டுறேன். நல்லாருந்துச்சு ஒங்க அட்டுலாசு மாதம். மொத்தத்துல at loss வாலிபரா இல்லாம atlas மாத வாலிபரா(!) இருந்து கலக்கீருக்கீங்க. பாராட்டுகள்.

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/09/wishesg3.html

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் பதிவாண்ட திண்ணெழுத்து G3யே நீடு வாழ்கவே!

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_31.html

// சங்கம் சங்கமே சத்சங்க சங்கமே //

ஒரு வெண்பாவுக்குள்ள சொல்லு மூனு வாட்டி வந்தாலே புலவர்களுக்குப் பிடிக்காது..நீங்க ஒரு வரியில நாலு சங்கம் வைக்கிறீங்க. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு சங்கமா? வெண்பாவை எனது பாண்டி நாட்டு சங்கப்பலகை ஏற்கவில்லை.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_31.html

// சங்கம் சங்கமே சத்சங்க சங்கமே //

ஒரு வெண்பாவுக்குள்ள சொல்லு மூனு வாட்டி வந்தாலே புலவர்களுக்குப் பிடிக்காது..நீங்க ஒரு வரியில நாலு சங்கம் வைக்கிறீங்க. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு சங்கமா? வெண்பாவை எனது பாண்டி நாட்டு சங்கப்பலகை ஏற்கவில்லை.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/08/blog-post_26.html

கான்கார்ட் விமானங்களைக் காண் என்று பதிவு போட்டிருக்கீங்க. நல்ல பல தகவல்கள். அப்ப செலவு கூடன்னுதான் மக்கள் போகலையா...ம்ம்ம்...அப்ப ஒன்னும் செய்ய முடியாது..

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_31.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// G.Ragavan said...
// சங்கம் சங்கமே சத்சங்க சங்கமே //
ஒரு வெண்பாவுக்குள்ள சொல்லு மூனு வாட்டி வந்தாலே புலவர்களுக்குப் பிடிக்காது..//

ஓ...அப்படியா புலவர் ஜிரா?
வந்துட்டாருப்பா ஒட்டக் கூத்தராட்டும்! :-)

இதுக்குப் பதில் சொல்லுங்க புலவரே!
குறளும் ஒரு வெண்பா தான்! குறள் வெண்பான்னே பேரு!

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!

முதலடியில் நாலு "பற்று"!
ஈற்றடியில் இரண்டு "பற்று"!!
ஆக மொத்தம் ஆறு பற்று!!!

ஆக, ஐயன் வள்ளுவரின் குறள் வெண்பாவில் இத்தனை "பற்று" வருவதால் குறள் உங்களுக்கும் பிடிக்காது! புலவருக்கும் பிடிக்காதா?
என்ன கொடுமை ராகவன்! :-((( //

ஓஓ அதாவது நீர் திருவள்ளுவர் அளவுக்குப் பெரிய ஆளுன்னு சொல்லிக் காட்டுறீரு. ஆனா ஒன்னு....அம்பிகையின் அருள் பெற்ற கூத்தனைப் போலன்னு சொன்னது எனக்குப் பெருமைன்னாலும் தமிழ்ப்புலமைச் செம்மல் கூத்தனுக்கு இழுக்கு. ஆகையால அப்படிச் சொல்லாதீங்க.

////வெண்பாவை எனது பாண்டி நாட்டு சங்கப்பலகை ஏற்கவில்லை//

யார் சொன்னா பாண்டி நாட்டு சங்கப் பலகை உங்களதுன்னு? :-)

இப்படித் தான் மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைச் சங்கப் பலகை ஏற்கவில்லை-ன்னு ரொம்ப பிகு பண்ணாங்க ஜிரா போன்ற பழம்பெரும் புலவர்கள்!

ஆனா அது அத்தனை பேரையும் தள்ளிவிட்டு மாறன் மொழியை மட்டும் காதலுடன் ஏற்றுக் கொண்டது! //

ஓஓ! மொதல்ல திருவள்ளுவரப் போலன்னு எடுத்துக்காட்டு....மொழியரசர் அவர். இப்ப மாறனாரையும் எடுத்துக்கிட்டாச்சா! இறையரசர். அவங்களப் போல நீங்களும்னு நிரூபிக்கப் படாதபாடு படுறீங்க. ம்ம்ம்ம்..மக்களே..கேட்டுக்கோங்க. உஷாராயிக்கோங்க. "நான் கடவுள்"னு இவரப் போல நெறையப் பேரு சொல்லிக்கிட்டு கெளம்"பீரு"க்காங்க.

// அடங்குஎழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்
அடங்கு எழி்ல் அஃதென்று அடங்குக வுள்ளே
இங்கேயும் மொத்தம் நாலு அடங்கு ஜிரா! இதுக்கு என்ன சொல்றீங்க? :-))) //

இதவிட ஒரு யமகம் சொல்றேன் பாருங்க....

சேயவன் புந்தி வனவாசமாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசாசராந்தகச் சேந்த வெண்ணில்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிப்பொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாறா வேதருஞ் சேதமன்றே

இப்பிடியும் எழுதலாம். ஆனா ஒவ்வொன்னுக்கும் பொருள் வேறங்க. எங்க நீங்க சொன்ன பாவுக்கு விளக்கம் சொல்லுங்க பாப்போம்.