Sunday, May 10, 2009

என்னுடைய பின்னூட்டங்கள் - மே 2009

மே 2009ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

16 comments:

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2009/05/blog-post_10.html

// திருமுருகன் என்றாலே நினைவில் முன்னிற்கும் நம் அருமை நண்பர் திருமுருகன் அன்பர் முருகனருள் அன்பர்களில் முதல்வர் இராகவப் பெருமாள் இப்பாடலை நின்குழலில் வலையேற்றியிருக்கிறார். இன்று காலையில் தான் அதனைக் கண்டேன். //

இன்னைக்குத்தான் இதை வலையேத்துனேன். அன்னைக்கே கண்டுபிடிச்சி பதிவும் போட்டுட்டீங்களே. ரொம்பவே வேகம். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2009/05/blog-post_10.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
நேற்று முன் தினம் தொலைபேசிய போது கூட, நடு இரவில், அவர் அறையில் "நாராயணா ஹரி நாராயணா"-ன்னு பாட்டு ஒலிச்சுது! ஆகா! அடியேன் கேட்டு மயங்கியே விழுந்தேன்! :) //

அடடே மயங்கி விழுந்துட்டீங்களா... அப்ப இனிமே கேக்காது. :) மறுபடியும் மயங்கி விழுந்துட்டீங்கன்னா!

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2009/05/blog-post_10.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வலையேற்றியவர்: முருகனருள் கோ. இராகவன்//

கண்ணன் பாட்டில் அவர் பேரை இப்படித் தான் போடணும்-ன்னு உத்தரவு-ல்ல?

இந்தப் பதிவை அவர் இட்ட பதிவாகவே எடுத்துக் கொள்கிறேன்! அணுகில் அணுகும்!
அகலிலும் அணுகும்! :)) //

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல் வேந்தர் சேர்ந்தொழுகுவார் :)

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2009/05/blog-post_10.html

// Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கேபி சுந்தராம்பாள் அம்மா எம்பெருமான் கண்ணன் மேல் இன்னும் பல பாடல்கள் பாடி இருக்காக! அதே திருமலை தென்குமரி படத்தில் நாராயணியம்மாவா நடிப்பாங்க! அதுல இன்னொரு பாட்டு!
"நாளெல்லாம் உந்தன் திருநாளே - மலை
நாடாளும் ஏழுமலைப் பெருமாளே"-ன்னு பாட்டு! //

திருமலைத் தென்குமரி இல்ல... திருமலைத் தெய்வம்.

நாளெல்லாம் உந்தன் திருநாளேயோட மூலப் பாட்டு நாளெல்லாம் பூசம் திருநாளே. அதை சினிமாவுக்காக குன்னக்குடி உந்தன் திருநாளேன்னு போட்டாரு.

// எலே ராகவப் பெருமாளே! இதையும் வலையேத்து லே! :)//

என் பேர் ராகவன்.

G.Ragavan said...

http://kalaignarkarunanidhi.blogspot.com/2009/05/blog-post_16.html

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

மக்களுக்கு ஜெயலலிதாவின் மீதுள்ள அச்சம் போகவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆகையால்தான் என்னைப் போன்றவர்கள் திமுகவை எதிர்த்தாலும் அது அதிமுக ஆதரவாக மாறவில்லை. தனி ஈழம் என்று ஜெயலலிதா சொல்லும் பொழுது கேட்க நன்றாக இருந்தாலும்... ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறை கேட்பவர்களுக்கு ஒரு சந்தேகத்தையே கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால்... ஸ்டாலின் முதல்வராவதற்கு இது மிகச்சரியான தருணம்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2009/05/blog-post_80.html

தேர்தலில் பணம் விளையாண்டதுன்னு சொல்லித் தப்பிக்கிறது சரியான வழியாத் தெரியலை. அதை வாங்குனவங்க ஏன் வாங்குனாங்க? அப்படி வாங்கீட்டுப் போடுறவங்களுக்கு இந்த முடிவுகள் போதும்.

இன்னொன்னையும் நினைச்சுப் பாக்கனும். திமுகவை எதிர்க்க வேண்டியது அவசியமான ஒன்னுதான். ஆனா அதுக்காக ஜெயலலிதாவுக்கு எப்படி ஆதரவு கொடுக்க முடியும்? திடீர் ஞானோதயம் வந்து பேசுறதால அவரை நம்ப முடியுமா?

திமுகவோ அதிமுகவோ... ரெண்டு பேரும் கொள்ளையடிக்கத்தான் போறாங்க. தனி ஈழம் பேசுன ஜெயலலிதா இப்போ எங்கே? உண்மையிலேயே ஈழ அக்கறை இருந்தா இன்னமும் ஈழத்தப் பத்திப் பேசனுமே! ஏதாச்சும் செய்யனுமே! எங்க போனாங்க?

எப்படி ஜெயலலிதா எதிர்ப்புங்குறது கருணாநிதி ஆதரவா மாற முடியாதோ... அதே மாதிரி....கருணாநிதி எதிர்ப்ப்புங்குறது ஜெயலலிதா ஆதரவாகவும் மாற முடியாது.

ரொம்பக் கஷ்டங்க. ஜெயலலிதா ஜெயிக்கலைன்னு சந்தோசப்படுறதா கருணாநிதியும் சோனியாவும் தோக்கலையேன்னு வருத்தப்படுறதான்னு தெரியலை.

G.Ragavan said...

http://truetamilans.blogspot.com/2009/05/blog-post_17.html

சரத்பாவுவிற்கு வாழ்த்துகள்.

// புருனோ Bruno said...

////தம்பி இதில் பணத்தை இழந்திருக்கலாம்.//

ஆனால் விளம்பரம் பெற்றிருக்கிறார் சார் //

புருனோ.... தேர்தலுக்கு மட்டும் ஈழம் பேசுன ஜெயலலிதாவை விடவும்... திடீர் உண்ணாவிரதம் கண்டுபிடித்த கருணாநிதியை விடவுமா இவருக்கு விளம்பரம் கிடைத்திருக்கிறது!!!!

// ஒரு வேளை அவரது செலவை விட அவர் பெற்ற நன்கொடை அதிகமாக கூட இருக்கலாம் //

புருனோ.. இப்பிடியும் யோசிச்சுப் பாருங்க... இவருக்கே நன்கொடை குவிஞ்சிருக்குன்னா.... தலைக்கு ஆயிரம் ரூவா குடுத்து பிரியாணி போட்டு ஓட்டு வாங்குன மகன்களுக்கும் பேரன்களுக்கும் எவ்ளோ நன்கொடை கிடைச்சிருக்கும்!!!!!! பேச்சுக்குன்னே அவர் நன்கொடைக்காகச் செஞ்சாருன்னு வெச்சுக்கிட்டாலும்.... .. தான் விரும்பும் அரசியல் கட்சியும் தலைவரும் மட்டுமே தப்பு செய்யலாம்! அது ராஜதந்திரம். ஆனா அடுத்தவன் எதுவும் செய்யக்கூடாது. :-) நல்லாருக்கு. ராமனின் மனைவி மட்டும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளா இருக்கனும்.

G.Ragavan said...

http://rishanshareef.blogspot.com/2009/05/blog-post.html

ஹாய் ரிஷான். உங்கள் உடல்நலம் தேறி மீண்டும் முழுநலத்தோடு வலைப்பதிய வந்தமைக்கு மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவன் அருளால் நலமே பெருகட்டும். மகிழ்ச்சி பொங்கும் நாட்கள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://oliyudayon.blogspot.com/2009/05/blog-post.html

மெல்ல மெல்ல பாட்டு பி.சுசீலா பாடுனது. கலக்கல் பாட்டு. கோடு போட்ட மாதிரி பாட்டு... ஆனா கேக்கும் போது ஒடம்பு லேசா துள்ளுறாப்புல இருக்கும். இளையராஜா... இசைராஜாதான்.

G.Ragavan said...

http://timeforsomelove.blogspot.com/2009/05/blog-post_24.html

வருண்... ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்... திருவிளையாடல் படத்து வசனம் தான்...

பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்... குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த வகை என்று உமக்கே தெரியும்... உம்மைப் போல் நாலு பேர்... இல்லை நீர் ஒருவரே போதும். உலகம் உருப்படும்.

G.Ragavan said...

http://oliyudayon.blogspot.com/2009/05/blog-post.html

// பாட்டு: என்ன சுகமான உலகம்” படம்:கர்ஜனை

http://www.thiraipaadal.com/albums/ALBIRR00165.html

Raja went full blast in one place.
Listen friend!


G.Ragavan:

சார்! நான் சொல்றது கரெட்டுதானே?
சொல்லுங்க. //

கர்ஜனை படத்துல என்ன சுகமான உலகம் பாட்டு நல்லாருக்கும். ஆனா எனக்கு "குத்தும் ஊசி வலிக்கும்" பாட்டு பிடிக்கும். ஒரு மாதிரி வித்யாசமா இருக்கும்.

இளையராஜாவின் பாடல்கள் பல மனதிருக்கும் அமைதியும் இன்பமும் தரும் மருந்தாக இருக்கின்றன என்பதே உண்மை. மெல்லிசை மன்னர், இசைஞானி பாட்டுகளைக் கேட்காதே என்று சொல்லி விட்டால் எனக்குக் கேட்பதற்கு வேறு பாட்டு கிடைக்குமா என்று தெரியாது.

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2009/05/wishes_27.html

வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. :-)

G.Ragavan said...

http://tvrk.blogspot.com/2009/05/12_30.html

பழநியும் அன்புக்கரங்கள் சுமார் ரகம் என்றாலும் மற்ற மூன்று படங்களுமே மிக அருமை. ஒவ்வொன்றும் ஒரு விதம். பாட்டுகளும் கலக்கல்.

சாந்தி படத்தில் வரும் செந்தூர் முருகன் கோயிலிலே...யார் அந்த நிலவு... அடடா!

திருவிளையாடலில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.மகாலிங்கம், பாலமுரளிகிருஷ்ணா போன்றோரும்... டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பீ.ஸ்ரீநிவாஸ், எஸ்.ஜானகி என்று ஒரு பட்டாளமே பாடியிருப்பார்கள்.

நீலவானம்... ஓ லிட்டில் பிளவர்...சீ யுவர் லவர்... ம்ம்ம்ம்ம்

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/05/gira-silk-smitha.html

// துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் ராகவன். //

வாழ்த்துகளுக்கு நன்றி டீச்சர். :-)

// கானா பிரபா said...

இனிய பிறந்த நாள வாழ்த்துக்கள் ராகவன் //

வாழ்த்துகளுக்கு நன்றி பிரபா :-)

// திகழ்மிளிர் said...

இனிய பிறந்த நாள வாழ்த்துகள் //

மிக்க நன்றி திகழ்மிளிர் :-)

// கோவி.கண்ணன் said...

:)

என்னது ஜிரா ஹேர் ஸ்டைல் மாற்றி மாற்றி அசத்துறார். //

மாற்றி மாற்றின்னு சொல்றதென்னவோ உண்மை கோவி. ஆனா அசத்துறார்னு சொல்றது அதிகம்.

// ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஜிரா :)) //

நன்றி நன்றி :-)

// Seemachu said..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீரா !! //

நன்றி சீமாச்சு :-)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/05/gira-silk-smitha.html

// G3 said...

ஜி.ரா.வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) //

நன்றி ஜி3. எப்படியிருக்கீங்க?

// Blogger சென்ஷி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி.ரா. :)) //

மிக்க நன்றி சென்ஷி

// Blogger தமிழ் பிரியன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி.ரா. //

நன்றி தமிழ்ப்பிரியன்

// Sridhar Narayanan said...

ராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். //

நன்றி ஸ்ரீதர்.

// எம்.ரிஷான் ஷெரீப் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பர் ஜி.இராகவன் ! //

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரிஷான்

// தமிழ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஜிரா. //

மிக்க நன்றி தமிழ்.

// Blogger வல்லிசிம்ஹன் said...

பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ராகவன்.

இனிமையான பல வருடங்கள் இந்த நாளைக்கும் அதுக்கு அப்புறமும் உங்கள் வாழ்வில் வருவதற்கும் வாழ்த்துகிறோம். //

நன்றி வல்லிம்மா. :-)

// கஷ்டப்பட்டு மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் தமிழில் சொல்லி இருக்கிறேன். //

கஷ்டப்பட்டாச்சும் தமிழ்ல வாழ்த்துச் சொல்லனும்னு நெனைச்சீங்களே.... அதுக்கு இன்னொரு நன்றி :-)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/05/gira-silk-smitha.html

// முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் ஜிரா //

நன்றி முரளிகண்ணன் :-)

//Blogger υnĸnown вlogger™ said...

என் அன்பு அண்ணாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) //

நன்றி சகோதரி

// ILA said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் //

நன்றி இளா :-)

// கோபிநாத் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா ;)) //

வாழ்த்துகளுக்கு நன்றி கோபிநாத்

// கவிநயா said...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஜிரா! //

மிக்க நன்றி கவிநயா :-)