Thursday, January 14, 2010

என்னுடைய பின்னூட்டங்கள் - 2010

மற்ற வலைப்பூக்களில் 2010ம் ஆண்டில் நானிடும் பின்னூட்டங்கள்.

211 comments:

«Oldest   ‹Older   201 – 211 of 211
G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2012/02/boo.html

வாழ்த்துகள் உஷா :)

நீண்ட நாட்களாக கூகிள் ரீடரில் உங்கள் வலைப்பூவில் பதிவுகள் வராமல் இருந்தது. இன்றைக்கு உங்கள் பதிவைக் கண்டு மகிழ்ச்சி. :)

குடும்பம் பெரிதானால் பொறுப்புகள் நிறைய இருக்கும். ஆனால் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். பூ கொள்ளை அழகு.

வீடுகளில் வளர்ப்பதற்கு வெளிநாட்டு நாய்களை விட இந்திய நாய்கள்தான் நல்லதாம். ஆரோக்கியமாகவும் இருக்குமாம்.

சிறுவயதில் ஒரு நாய்க்குட்டி தட்டுத்தடுமாறி காம்பவுண்டுக்குள் வந்து விட்டது. இருந்த ரெண்டு பழைய பிஸ்கட்டுகளை பாட்டி அந்த நாய்க்குப் போட்டதும், அந்த ராஜா வீட்டில் ஒருவனாகி விட்டான். ராஜா எங்களோடு இருந்த காலம் இனிய காலம். :)

அன்புடன்,
ஜிரா
gragavanblog.wordpress.com

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/02/blog-post_13.html

அடா அடா அடா என்ன அழகான வேலைப்பாடுகள். ஒளிரும் சேவல். தீப்பிடித்த டிராகன், வெளிச்சப் பெங்குயின், அடாடா!

இதெல்லாம் போட்டோலயாச்சும் பாக்கக் குடுத்து வெச்சிருக்கு :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/02/blog-post_15.html

மலர்கள் பூத்துக்குலுங்கும் இடத்தில் முருகனும் வள்ளியும் (காதலித்துக் கொண்டு) இருப்பார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை.

மகிழ்ச்சி பூக்கிறது என்றுதானே தமிழில் சொல்வோம். மகிழ்ச்சியே பூத்தது போல அழகான பூக்கள்.

தாமரை மலர் சிறப்பான மலர்களில் ஒன்று. வீட்டில் மலர்வது மிகமிகச் சிறப்பு. சர்க்கரைப் பொங்கல் செய்து வையுங்கள். ஏதோ நல்ல செய்தி வரப்போகிறது. :)

செக்கச் சிவந்த செம்பருத்தியைப் பார்த்திருக்கிறேன். இளஞ்சிவப்பு நிறத்தில் இனிமையாக இருக்கிறது. ஆனாலும் நான் “செம்”பருத்தி ரசிகன்.

ஒரே செடியில் இரண்டு ரோஜா மலர்கள். ஆனால் இரண்டும் வெவ்வேறு நிறங்கள். ஒட்டுவகை ரோஜாவோ?

ராஜலட்சுமியின் அழகே அழகு.

வீட்டில் என்னதான் தண்ணீர் இருந்தாலும் இது போலக் குடிப்பதுதான் பூனைகளுக்கும் நாய்களுக்கும் பிடிக்குமாம். நியூசிலாந்தில் நல்ல தண்ணீர். அதுனால சரிதான். :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/02/blog-post_17.html

அழகான வாத்து. கொஞ்சம் கூட திடுக்கிடலே இல்லாம வீட்டுக்குள்ள சுத்தியிருக்கு.

தமிழ்நாட்டு வழக்கப்படி வரப்போற கணவன் வாத்துக்காக மண்சோறு வேற சாப்பிட்டிருக்கு. அங்காளபரமேஸ்வரி துணையிருப்பாள். :)

பெங்களூர் வீட்டில் புறாக்கள் வரும். அதுக்கு ஜன்னலுக்கு வெளிய கொஞ்சம் அரிசி போட்டு வெச்சேன். ஆனா கொஞ்சநாளா வரவேயில்லை. அதுனால அரிசி போடுறத நிறுத்தீட்டேன். நேத்து நேரங்கழிச்சு வேலைக்குக் கிளம்புனதால புறா காலைல வர்ரது தெரிஞ்சது. நாளையிலிருந்து திரும்பவும் அரிசி போடனும்.

அப்பாம்மா இங்கயே வந்துட்டதால சென்னைல தெனம் வீட்ல சாப்டுக்கிட்டிருந்த காக்காய்க் கூட்டம் என்ன பண்ணுதோ தெரியலை. சத்தம் போட்டுக் கூப்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடும். யாராச்சும் சாப்டா ஆசைக்குக் கொஞ்சமா கேட்டு வாங்கிச் சாப்புடும். என்ன பண்ணுதங்களோ இப்போ!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/02/blog-post_17.html

// இந்தியா வந்துருந்தப்ப நம்ம பறவைகளுக்கு யாரு ப்ரெட் போட்டுருப்பாங்களோன்னு கவலைதான். பார்வதிபரமேஸ்வரன் எல்லோருக்கும் படியளப்பாங்கன்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான். எந்த ஊரில் இருக்கோமோ அங்கே கொஞ்சம் தீனியை இதுகளுக்கும் போடணும். வீடுதேடி வர்றதைத் துரத்த முடியுமா? //

அதேதான். இங்க புறாக்களுக்கு அரிசி. அரிசியை அப்படியே முழுங்குதே. நமக்கெல்லாம் சோறா வேகவெச்சு மெத்து மெத்தா இருந்தாத்தான் தொண்டையில் இறங்குது.

// இப்படிச் சொல்றேனே தவிர வீட்டாண்டை வந்த ரெண்டு மனுசங்களை உள்ளே வரவிடாம துரத்த வேண்டியதாப் போச்சு. சாட்டர்டே அட்வெண்டிஸ்ட் சர்ச். பண்பாட்டுக்காக வீட்டுக்குள்ளே அழைச்சுட்டு பலதடவைக் கஷ்டப்பட்டுட்டேன். நீ கும்புடறது கல்லுன்னு ஆரம்பிக்கும்போது எரிச்சலா வருது.

இப்பெல்லாம் ஸாரி. நான் வேறு மதம். நீங்கபோயிட்டு வாங்கன்னு வாசலோட துரத்தறேன்:( //

தப்பில்லை. இதை நானும் பட்டிருக்கேன். பாவம் அறியாதவர்கள். என்னோட ஆபீஸ் டெஸ்க்குல பிளாக் மடோனா என்னும் கருப்பு மேரி கையில் ஏசுவோடு உட்காந்திருக்கிறாள். மூச்சுக்கு முச்சு முருகா என்றாலும் அந்த மேரி மீது ஒரு பற்று. ஐரோப்பாவில் ஊர் ஊராச் சுத்துனப்பவும் அந்த ஊர்ச் சர்ச்சுக்குப் போறத தவறவிட்டதில்லை.

ஆயிரம் பேர் சொன்னாலும் எல்லாம் ஒன்னுதான்.

தேவையில்லாம பிரச்சனைய வளக்குறத விட “நாங்க வேற”ன்னு சொல்லி அனுப்புறது தப்பேயில்லை. ரெண்டு பக்கமும் நேரம் மிச்சம்.

G.Ragavan said...

http://www.badriseshadri.in/2012/02/1.htm

உத்தரமேரூரில் ஒரு முருகன் கோயில் இருப்பதாகவும் சொல்வார்களே. அது வேறு கோயிலா?

கண்ணதாசன் ஒரு பாடலில்
பக்தர்கள் சேரூர்
பழவினை தீரூர்
உத்தரமேரூர் அமர்பவனே
என்று பாடியிருக்கிறார்.

அந்தக் கல்வெட்டுகளின் எழுத்து வடிவங்களை வைத்துக் காலத்தைக் கணக்கிடலாம் என்று சொல்வார்கள்.

சென்னையிலிருந்து எந்தப் பக்கம் செல்ல வேண்டும்?

உத்தரமேரூர் என்றால் இன்னொருவரும் நினைவுக்கு வருவார்.

அவர்தான் உத்தரமேரூர் நாரதர் நாயுடு :)

G.Ragavan said...

http://www.badriseshadri.in/2012/02/2.html

கஜலட்சுமியை க்ளோசப்பில்தான் கண்டுபிடிக்க முடிந்தது. அழகான சிற்பங்கள்.

நாகப்படத்தோடு பரந்தாமன் தேவியரோடு இருக்கும் சிற்பம் மிக அழகு.

சைவமோ வைணவமோ நாகம் இல்லாமல் இல்லை போலும்!

அந்த முனிவரின் தவக்கோலத்தைப் பார்த்ததும் எனக்கும் சமணச் சந்தேகம் வந்தது உண்மைதான்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/02/blog-post_21.html

பார்த்தேன்
ரசித்தேன்
வந்து பார்க்க நினைத்தேன்
தொலைவினை நினைத்து நான் மலைத்தேன் :)

அழகு அள்ளிக்கிட்டு போகுது.

சங்க இலக்கியங்களில் இயற்கை அழகை விளக்கியிருக்கிற மாதிரி நீங்க விளக்கியிருக்கீங்க. நம்மூரும் முந்தி இப்பிடி இருந்துச்சாம் :)

ஆகையினால உங்களுக்கு வாத்தைப்பாடினியார்னு பட்டம் கொடுக்கலாம்னு நெனைக்கிறேன். என்ன சொல்றீங்க? :)

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2012/02/blog-post_21.html

ஆகா. இது நல்லாருக்கே. நானும் ரெண்டு மூனு(ணு) :) நாள் எல்லாத்தையும் மறந்துட்டு அப்பாடீன்னு இந்த மாதிரி நிகழ்ச்சிக்குப் போகனும்னு விருப்பம்தான். விருப்பம் மட்டும் இருக்கு. :)

இந்தாயிருக்கு திருச்சி. பக்கத்துல வயலூர். பாக்கனும் மாசாமாசம் திட்டம் மட்டும் போடுறேன். முருகன் கூப்பிடலையே! :(

G.Ragavan said...

http://www.badriseshadri.in/2012/03/blog-post_19.html


கட்டற்ற பாலியல் சுதந்திரம் - இதைப் பேசினாலே பிரச்சனைதான். ஆனாலும் பேசித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

இல்லறம் என்ற அமைப்பு நல்லதுதான். அதிலிருக்கும் பயன்கள் மிகமிக அதிகம்.

இன்றைக்கு இல்லம்/இல்லறம்/குடும்பம் என்று சொல்வது முதலிலிருந்தே அப்படியிருக்கவில்லை. கட்டற்ற பாலியலில் இருந்து சிறிது சிறிதாக மாறி ஒரு கட்டமைப்பிற்குள் வந்தது. அந்தக் கட்டமைப்பு என்பது இல்லறம் என்று அழைக்கப்படுகிறது.

மேலே டிராபிக்கை எடுத்துக்காட்டியிருந்தார்கள். நாம் எப்பொழுதுமே 100% சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை. எங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கு மீறிக்கொள்கிறோம். இதுதான் இன்றைய நிலை.

மனதளவிலாவது அனைவரும் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை அனுபவிப்பவர்களாக இருப்பதுதான் இன்றைய உண்மையான நிலையும் கூட. மனைவியையோ கணவரையோ தவிர மனதால் வேறு யாரையும் இதுவரை நினைத்ததேயில்லை என்று யாரும் கூறிவிட முடியாது.

நிற்க. கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கு ஆதரவாகச் சொல்வதாக முடிவு கட்ட வேண்டாம். இரண்டு பக்கமும் உள்ள அம்சங்களை எனது பார்வையில் சொல்கிறேன்.

இல்லறத்தில் உள்ள ஒரு பிரச்சனை, அது ஆண்-பெண் என்ற குடும்ப அமைப்பை மட்டுமே ஏற்றுக்கொள்வது.

ஒருவேளை அது மற்ற பாலின ஈர்ப்புகளையும் இணைத்துக் கொள்ளுமானால் அவர்களுக்குள்ளும் குடும்ப அமைப்பு உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் குடும்ப அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அதில் எதையும் மாற்ற விரும்புவதில்லை. பெண்ணே வீட்டையும் சமையல்கூடத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் இருந்தும் கூட பெரும்பாலானோர் மாறுவதில்லை.

ஆகையால்தான் அந்த அமைப்பிற்குள் பொருந்தாதவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ எல்லை மீறுகிறார்கள்.

கட்டற்ற பாலியல் சுதந்திரத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆரோக்கியம் என்பது பேண வேண்டியது. முறையான பாலியல் அறிமுகம் இல்லையென்றால் ஆரோக்கியக் கேடு உண்டாகும் வாய்ப்பு நிறைய.

என்னைப் பொருத்த வரை யாருக்கு எது வேண்டுமோ அவர்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பு.

ஒருவர் தாம் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்யலாம். அடுத்தவர் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவெடுக்கக் கூடாது. நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லும் உரிமை உண்டு. ஆனால் கையைப் பிடித்துத் தடுக்கும் உரிமை இல்லை. புரிந்து கொள்ளாமல் தடுத்தால் விளைவுகள் எதிராகத்தான் இருக்கும்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/05/there-is-dragon-on-wall.html

பல்லியாகப்பரணியே பாடீட்டீங்க :)

பல்லிகள் டைனோசாரின் எச்ச மிச்சங்களோ? நெறைய ஒத்துப் போகுதே!

இதைச் சில பேரு Balliன்னு உச்சரிப்பாங்க. அது தப்பு. Palliன்னுதான் உச்சரிக்கனும்.

சினிமாக்கள்ள பல்லிப் பாயாசம் ரொம்பப் பிரபலம். குறிப்பா எல்லா இராம.நாராயணன் படத்துலயும் நல்லவங்களுக்கு யாராச்சும் பல்லிப் பாயாசம் குடுப்பாங்க. அதைக் கொரங்கோ யானையோ பாம்போ ஆடோ மாடோ தட்டி விட்டுரும்.

இன்னும் சில படங்கள்ள விசம் கலந்த பால்/பாயாசம் குடுப்பாங்க. குடிக்கப் போற நேரத்துல அதுல பல்லி விழுந்து நல்லவங்கள காப்பாத்தீரும்.

இப்பிடி எத்தையோ இருக்கு. எடுத்துச் சொல்லிக்கிட்டேயிருக்கலாம் :)

«Oldest ‹Older   201 – 211 of 211   Newer› Newest»