Monday, March 05, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - மார்ச் 2007

மார்ச் 2007ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இந்தப் பதிவில் சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

163 comments:

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2007/03/53.html

மிகவும் அருமையான பாடல். பாடலின் கருத்திற்கேற்ப பாடலும் பலூனில் படமாக்கப்பட்டது.

G.Ragavan said...

http://karuppupaiyan.blogspot.com/2007/03/blog-post_06.html

ராஜ்வனஜை நான் மதுரைச் சந்திப்பில் சந்தித்திருக்கின்றேன். அவ்வளவு அமைதியாக இருந்தார். என்ன ராஜ், சிங்கையில் திடீரென்று?

G.Ragavan said...

http://piditthathu.blogspot.com/2006/09/blog-post_07.html

ஜெயமோகனின் கதைகளை இதுவரையில் படித்ததில்லை. விஷ்ணுபுரம் பற்றி எல்லாரும் அப்படிப் பேசுகிறார்களே என்று நினைத்து படிக்க நினைத்தேன். ஆனால் அதன் கருப்பொருள் அறிந்து படிக்காமல் விட்டு விட்டேன். அவரது கதைகளைப் படிக்காதவன் என்ற வகையில் அவரை நான் விமர்சனம் செய்வது சரியாக இருக்காது.

G.Ragavan said...

http://tamilkudumbam.blogspot.com/2007/03/blog-post_05.html

நீங்கதான் இப்பச் சுடரா? வாழ்த்துகள்.

அரசியல்ல பெண்கள் வர்ரது ஆண்கள் பலருக்கே பிடிக்காது. ஏன்னா இருக்குற நெலமை அப்படி. ஜானகியும் ராபரியும் பாராட்டுக்கு உரியவர்கள்தான்...தங்கள் அளவுல அவங்க நின்னதுக்கு. அதுக்குப் பாராட்டியே ஆகனும். மொடக்குறிச்சி அக்கா...இப்ப சத்தமே இல்லையே!

பருத்தி வீரன் இன்னமும் பாக்கலைங்க. நானும் பாக்கனும். நல்லாருக்குன்னு கேள்வி.

எனக்கும் சிவாஜி பிடிக்கும். :-)

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2006/11/blog-post_28.html

கிளாசை டம்ளராகக் காண்பர் டம்பளைக்
கிளாசெனச் சொல்லு பவர்-னு தெருவள்ளுவர் சொல்லீருக்காரு ரவி. தெரியாதா?

இப்பக் காட்டுறது கண்ணாடி டம்ளர். இதே மாதிரி எவர்சில்வர் டம்ளர், பித்தளை டம்ளர், வெள்ளி டம்ளர், தங்க டம்ளர் எல்லாம் இருக்கே. tumbler அப்படீங்கற ஆங்கிலச் சொல்லில் இருந்துதான் தமிழ் டம்ளர் வந்தது. அதுக்கு முன்னாடி கொவளை. ஊர்ப்பக்கத்துல தம்ளர்னும் சொல்வாங்க.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/03/blog-post_05.html

ஹா ஹா ஹா நல்ல காமெடிதான் போ. சூப்பரப்பு!

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/03/blog-post.html

// தெலுங்கு படத்தில் அந்த ஹீரோ போட்டிருக்குற அண்டர்வேர கூட அப்படியே காப்பியடிச்சு நடித்து விஜய் நடிக்கும் டப்பிங் கொடுமைகளுக்கு இது எவ்வளவோ மேல்.//

இத இத இதச் சொல்லு காபி. திரும்பத் திரும்ப அம்மியில ஏற்கனவே அரைச்ச மசாலாவை மிக்சியிலயும் கிரைண்டர்லயும் மாறி மாறி அரைச்சு கொடுமைப் படுத்துறத விட இது தாவலாம். ஜோதிகா...ம்ம்ம்ம்...ஒரு நல்ல நடிகையை இழந்திருக்கிறோம். சரி. அதுதான் அவரது விருப்பம் என்றால் மதிக்கிறோம்.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2007/02/blog-post.html

ம்ம்ம்ம்ம். இதற்குக் காரணம் என்னவென்று யோசித்துப் பார்க்கிறேன் லிவிங் ஸ்மைல். எனக்கு ஒரு காரணம்தான் தோன்றுகிறது. மனிதன் தான் செய்வது போல இன்னொருவர் செய்யாவிடில் அது தவறென்பான். அதைக் கிண்டல் செய்வான். அப்படியிருக்கையில் பெரும்பான்மையானோர் ஒரு மாதிரி இருக்கையில் வேறு விதமாக இருக்கும் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் கிண்டல் செய்வதுதான் நீங்கள் குறிப்பிடுவதும் என்று நினைக்கிறேன்.

நேற்று பேருந்தில்...தூத்துக்குடியிலிருந்து சென்னை வருகையில்....ஒரு வயதானவர்...திருநங்கை என்றுதான் நினைக்கிறேன். உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வேட்டி சட்டை உடுத்தியிருந்தார். கூந்தலை முடித்துக் கொண்டை போட்டிருந்தார். நெற்றியில் நாமம். ஆனால் நடையிலும் பேச்சிலும் ஒரு அதிகப்படியான குழைவு. அவருக்குத் தெரிந்தவர் ஒருவரும் பஸ்சில் ஏறியிருந்தார். குடும்பத்தோடு. நாமக்காரரிடம் ஏதோ பேசினார். கேட்டார். பின்னால் இருந்த எனக்குச் சரியாகக் கேட்கவில்லை. ஆனால் அடுத்து வாயை ஒருமாதிரிக் கொணித்து அந்த நாமக்காரர் செய்வது போலக் கிண்டலாகச் செய்து காட்டினார். அப்படிச் செய்தது தவறு என்று எனக்குத் தோன்றியது. அப்படிச் செய்தவர் உயரத்தில் மிகவும் குறைந்தவர். அதை வைத்து அவரைக் கிண்டல் செய்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவருக்கு வருத்தமாக இருந்திருக்குமே....அது போலத்தானே நாமக்காரருக்கும் இருந்திருக்கும் என்று நினைத்தேன். ம்ம்ம்..அவர் நினைக்கவில்லையே! பொதுவில் அடுத்தவரைக் கிண்டல் செய்வது எனக்குப் பிடிக்காது. நண்பர்களுக்குள் இருக்கும் கிண்டல் பேச்சுகளை நான் குறிப்பிடவில்லை.

G.Ragavan said...

http://valai.blogspirit.com/archive/2007/03/06/literature.html

தமிழ்நதி. நல்லதொரு கேள்விதான். ஆனால் விடை? பெண் அப்படியெல்லாம் எழுதக் கூடாது. ஆண் கவிஞர்கள் மட்டுந்தான் எப்படியும் எழுதலாம். பெண்களுக்குப் பண்பாடு இல்லையா? பெண் பாட்டுக்கு முலை கிலைன்னு எழுதத் தொடங்கீட்டா அப்புறம் இவங்க பொழப்பு?

// சமைஞ்சது எப்படி என்ற பாட்டு கேவலமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பல நாட்டுப்புற பாடல்களில் கூட மச்சினியை வம்புக்கிழுக்கும் வரிகளும், முறைப்பெண்ணை மாந்தோப்பின் ஓரம் ஒதுங்கச் சொல்லி அழைக்கும் வரிகளும் இருக்கின்றனவே. கட்டிக்கலாமா? பெத்துக்கலாமா? பாடல் அந்த ரகத்தை சேராதா? //

நந்தா இங்கே ஒரு வேறுபாடு உண்டு. மச்சான் முதலில் பாடுவார். பிறகு மச்சினி பாட்டு கட்டுவார். யாரும் மச்சினியை அப்படிப் பாடியதற்கு வசவு செய்வதில்லை. ஆனால் இங்கே கதையே வேறு!

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/02/blog-post_21.html

அருட்பெருங்கோவை நான் நன்றாக அறிவேன். அன்பே சிவம் மாதிரி அவருக்குக் காதலே சிவம். அன்பும் காதலும் ஒன்றுதானே. ஆகையால் அவருடைய கருத்தும் சரிதான். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் அவர். நல்ல கவிதைத் திறம் கொண்டவர். நல்ல நிலைக்கு வருவார் என்று வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/03/ii-33.html

ஆகா! வாழைப் பழத் திருடன்னு கேள்விப் பட்டிருக்கேன். தோலிருக்கப் பழம் விழுங்கியாம். இங்க அத விடப் பெரிய ஆளுங்கெல்லாம் இருப்பாங்க போல! விட்டா ஆளிருக்கப் பணம் விழுங்கிகளாயிருவாங்க போல!

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2007/03/blog-post.html

// செந்தழல் ரவி said...
யோவ் ஜீரா...என்ன உஷா மேடத்தை சந்திரவதனா என்று அழைக்கிறீர் ? மயிலார் லேண்டிங் ப்ராப்ளம் செய்து தலை கிறுகிறுக்க வைத்துவிட்டாரா ? //

ஐயா..மன்னிச்சுக்கிருங்கைய்யா. தெரியாமச் செஞ்சிட்டேன். இது நுனிப்புல்லுல இருக்குற கதைன்னு இப்பத்தான் தெரியுது. உஷாக்கா உஷாக்கா நீங்களும் மன்னிச்சிருங்க. சந்திரவதனா நீங்களும் என்னைய மன்னிச்சுருங்க. இன்னும் யார் கிட்டயும் மன்னிப்பு கேக்கனுங்களா! வரிசையா நின்னீங்கன்னா..அப்படியே கேட்டுருவேங்க.

// ramachandranusha said...
ராகவா, அது என்ன பெயரை மாற்றிவிட்டாய்? என் பெயர் சந்திரவதனா இல்லை :-) //

மாத்தலைங்க.....தூக்கக் கலகக்கத்துல எழுதீட்டேன். மன்னிச்சிருங்க. கதை நல்லாயிருந்துச்சா..அதுல மெய்மறந்து உங்க பெயரையும் மறந்துட்டேங்க. :-)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_07.html

பாம்பன் சுவாமிகள் சமாதி திருவான்மியூரில் இருக்கிறதா? ஆகா...பக்கத்தில் இருந்தும் பார்க்காமல் போனேனே. நான் இன்று ஐதராபாத் வந்திருக்கிறேன். அலுவலக வேலை தொடர்பாக. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு. ம்ம்...அடுத்து சென்னைக்குப் போகையில் பார்க்க வேண்டும்.

சண்முகக் கவசத்தை டி.எம்.எஸ் பாடிக் கேட்க வேண்டும். அண்டமாய் அவனியாகி என்று கம்பீரமாக அழகாகப் பாடியிருப்பார். கேட்கக் கேட்டப் பேரின்பம். ஒலிப்பேழை கிடைத்தால் கண்டிப்பாக வாங்கிக் கேளுங்க. கண்டிப்பாக. மிக அருமையாக இருக்கும்.

நீங்கள் சொன்ன கால் குணமான செய்தியை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இறைவன் அருள் இருந்தால் எதுதான் நடக்காது? அருணகிரிப் பெருமானின் திருப்புகழ் ஒவ்வொன்றும் தித்திக்கத் தித்திக்கச் சொல்லி மகிழ்ந்தாலே போதும்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_07.html

அனந்தபத்மநாப சுவாமி கோயில் சென்னையில் வீட்டிற்குப் பக்கம். ஆகையால் சென்னைக்குச் சென்றால் அங்கும் செல்வதுண்டு. அந்தக் கோயிலைப் பற்றி முன்பு நான் எழுதிய பதிவு இங்கே.

http://gragavan.blogspot.com/2005/08/blog-post_10.html

G.Ragavan said...

http://piditthathu.blogspot.com/2006/09/blog-post_07.html

லஷ்மி கொடுத்த லிங்கிலிருந்து மாடன் மோட்சம் படித்தேன். ஒரு கதம்ப உணர்வு. இது போன்ற கற்பனைமெய்யியல் கதைகளைப் படிப்பது சுகம். அதிலும் நமக்குப் பழக்கமான தளமாக இருந்தால் இன்னும் சுகம். குமரி மாவட்டத்துத் தமிழ் புதிதாக இருந்தாலும் கதையோட்டத்தை அது தடுக்கவில்லை. கண்டிப்பாக எழுதத் தெரிந்தவரின் கதைதான் இது. அதை மறுக்க முடியாது.

கதையின் கருத்துக்கு வருவோம். இந்தக் கதை வழியாகச் சொல்லும் மையக் கருத்து என்ன? மாடன் மோ(ட்)சம் போனான். அதற்கு எந்தந்த காரணிகள் எல்லாம் பயன்பட்டிருக்கிறது என்பது. அதுவும் சரியாகவே சொல்லப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

கிளைக்கருத்துகள். இவைதான் மையக் கருத்தை வழி நடத்தும் கருத்துகள். சில இடங்களைக் குறிப்பிட்டே சொல்ல வேண்டும்.

1. மாடன் - அப்பி சந்திப்பு
2. அப்பி எடுத்த முடிவு
3. இரண்டு பக்கத்து மக்களுக்கும் நடக்கும் சண்டை
4. ஏமாற்றப்படும் மாடனும் துரத்தப்படும் அப்பியும்

எனக்குத் தெரிந்த வரையில் சில இடங்களில் தாழ்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட சாதிப் பெயர்களைப் பயன்படுத்திய விதம் சரியில்லை என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அப்படிப் பேச்சு எழலாம். ஏனென்றால் சமீபத்தில் தூத்துக்குடியில் இந்தச் சாதிப் பெயர்களின் பயன்பாடு என்னை அதிர்ச்சியோடு தாக்கின. எனக்குத் தெரிந்த ஒருவர் சக்கிலியன் என்ற சொல்லைச் சொல்லிய விதம் மிகவும் கடுமையாக இருந்தது. அவரிடம் அப்பொழுதே அது தவறு என்று சொல்லி விட்டேன். மற்றொருவர். இவர் கிருத்துவர். அவரும் கிட்டத்தட்ட அதே போன்று சொல்லிய பொழுது விக்கித்துப் போனேன். அவரிடமும் அப்படிச் சொல்லாதீர்கள் என்று மட்டுமே சொல்ல முடிந்தது. ஆக உண்மையிலேயே அந்தந்த ஊரில் இருப்பவர்கள் இது போல சாதி குறிப்பிட்டுப் பேசுவது இன்னும் போகவில்லை என்றுதான் தெரிகிறது. மிகவும் வருந்தத்தக்கது.

வேதக்காரர்கள் பற்றி அப்பி சொல்வது கொஞ்சம் நக்கல் சேர்ந்தது. அதுவும் கதைச்சுவைக்கு ஏற்புடையதுதான். தவறில்லை.

அதே நேரத்தில் நாயர்களும் பிள்ளைகளும் செய்யும் கூத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியைப் படிக்கையில் அந்தப் பாத்திரங்கள் மேல் எரிச்சல் வருகிறது. அதன் பிறகு விளக்கு பூஜை...அது இதென்று வருகையில் கொஞ்சம் நகைச்சுவையும் எட்டிப் பார்க்கிறது. கோபாலன் யோகினி என்ற பெயர்கள் நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கதையைப் படித்து அனுதாபம் எழுந்ததென்றால் அது மாடன் மேல்தான். எரிச்சல் வந்தது மேல்சாதி என்று குறிப்பிடப்பட்டவர்கள் மீதுதான். ஆத்திரம் வந்தது என்று சொன்னால் அது அப்பி மீதுதான். குண்டக்க மண்டக்க எதையாவது செய்து விட்டு...இப்படி ஆனதே என்று.

இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து. இந்த ஒரு கதையை மட்டும் வைத்துக் கொண்டு என்னால் ஜெயமோகனைப் பற்றி உறுதியான முடிவுக்கு வரமுடியில்லை. முன்பு பாலகுமாரன் கதைகளை நண்பர் ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். நல்ல எழுத்து. ஆனால் நாள்பட நாள்பட அந்த எழுத்து சொல்ல வந்தது (மறைபொருளாக) பிடிக்கவில்லை. இப்பொழுதெல்லாம் பாலகுமாரன் கதைகளே படிப்பதில்லை. அது போல ஜெயமோகனின் இன்னும் சில கதைகளைப் படித்தால்தான் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்.

G.Ragavan said...

http://poar-parai.blogspot.com/2007/03/blog-post_05.html

சோ ஒரு விதமென்றால் வீரமணி இன்னொரு விதம். இருவரையும் கண்டு கொள்ளக் கூடாது. ஜெக்கும் கருணாநிதிக்கும் வீரமணி தூக்கிய காவடிகளை அடுக்க இடமில்லாமல் இருக்கிறது. சோ இன்னமும் எழுதுகிறாரா என்ன? அதையும் படிக்கின்றீர்களா என்ன?

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/blog-post_5510.html

புலிக்குட்டிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உலகத்தின் மீது நட்போடு உள்ளம் திறந்த நாள் வாழ்த்துகள். நலமும் வளமும் பெற்று நீடு வாழ்க. ழ்க. க.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2007/02/blog-post_28.html

ஓ! இப்ப இப்பிடி ஒரு தொடரா? நல்லாயிருக்கு.

சிறுவர் மலர் சின்ன வயசுல நெறைய படிச்சிருக்கேன். இப்பல்லாம் எடுத்தா மூனு நிமிசத்துல வெச்சிர்ரேன். அதுல பலமுக மன்னன் ஜோன்னு ஒரு பாத்திரம் வரும். அது ரொம்பப் பிடிக்கும். இப்பல்லாம் அது வர்ரதில்ல. ஏன்னு கேட்டுச் சொல்லுங்களேன்.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2007/03/blog-post_06.html

மூளைக்குள்ள அறிவு நெறைய இருந்தா எதுவும் நம்மள ஒன்னும் செஞ்சிர முடியாதுன்னு சொல்ல வர்ரீங்களா? இதுதான் எனக்குத் தோணுனது. இது தப்புன்னா...நானும் அவுட்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/03/330.html

330 மில்லியன் டாலட்தானா? ரொம்பக் கொஞ்சமாத் தெரியுதே!

ஊட்டியையோ கொடைக்கானலையோ வெலைக்கு வாங்கி ஒரு பங்களா கட்டிக்கிரனும். ஓரு நட்சத்திர ஓட்டல வெலைக்கு வாங்கீரனும். இல்லைன்னா சங்கிலித் தொடர் மளிகைக் கடைகளைத் தொறக்கலாம். அதுவுமில்லையா..இருக்குற பணத்த வங்கியில போட்டுட்டு....அதுல வர்ர வட்டியில அஞ்சு சதவீதத்தை ஊனமுற்ற மனவளர்ச்சியற்ற குழந்தைகளுக்குச் செலவழிக்கனும். இன்னொரு அஞ்சு சதவீதத்த வெச்சு முருகன் கோயில் கட்டனும். அங்க எல்லாரும் எங்கிட்டதான் துந்நூறு வாங்கனும். இன்னொரு அஞ்சு சதவீதத்த வெச்சி தூத்துக்குடி மாவட்டத்துக்கு நல்ல ரோடுக போடனும். விளாத்திகொளம், புதூரு, தூத்துக்குடி இங்கயிருக்குற அரசு அலுவலகங்கள கம்ப்யூட்டர்ல இணச்சு தகவல் பரிமாற்றத்தை லெட்டருக்குப் பதிலா மின்னஞ்சல்னு கொண்டு வரனும். அப்புறம்....அப்புறம்....ஊரு ஒலகமெல்லாம் சுத்திப் பாக்கனும். அப்புறம் ஒரு பெரிய தோல் மருத்துவ ஆராய்ச்சி மையம் வைக்கனும். அப்புறம்....அப்புறம்...தமிழ்நாட்டுக்கு முதல்வர் ஆகனும். அப்பத்தான 330 மில்லியன 1330 மில்லியன் ஆக்க முடியும். திருக்குறள் மாதிரி.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/03/ii-34.html

பொய்ப் புகார் வேறயா? எவ்வளவு பெரிய தப்பு! நியாயமான காரணங்களுக்காக செய்ய வேண்டிய புகார்களுக்கு என்ன மதிப்பு இருக்கும். இது மிகப் பெரிய தப்பு. ஆனா ஒன்னுங்க....தப்பு செய்யனும்னு துணிஞ்சிட்டா எதுவும் தப்பாத் தெரியாது. ஆனா அப்படித் துணியக் கூடாது. எண்ணித் துணிக கருமம். இல்லைன்னா கருமந்தான்.

G.Ragavan said...

http://senshe-kathalan.blogspot.com/2007/03/blog-post.html

வருத்தப்படாதீங்க. நீங்க பாட்டுக்கு வெளுத்துக் கட்டுங்க. ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லீட்டிருந்தா பொழுது போயிரும்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/03/blog-post.html

அருமையான பாடல். இந்தப் பாடலைப் படித்ததும் எனக்கு ஒரு கந்தபுராணப் பாடல் நினைவிற்கு வருகிறது.

முழுமதியன்ன ஆறு முகங்களும்
முந்நான்காகும் விழிகளின் அருளும் என்று தொடங்கும்....வேறுள படையின் சீரும்...அணிமணி தண்டை ஆர்க்கும் செழுமலரடியும் கண்டான்....அவன் தவம் செப்பப்பாற்றே!

இருக்குறது போர்க்களம். வந்திருக்குறது சண்டை போட. சூரனோ அருவாளத் தூக்கீட்டு வெட்ட வர்ரான். எதுத்து வர்ர ஆளு எவ்வளவு ஆத்தரத்தோட வரனும்? ஆனா இங்க முழுமதியன்ன ஆறுமுகங்களும் காட்டுறாரு. போர்க்களத்தில் எதிர்த்து வருகின்றவனுக்குக் கூட கருணை காட்டுறாரு. அவரா நம்மைக் கைவிடுவார்.

எனக்கு இந்த ராகமெல்லாம் தெரியாது. ஆனா சகானாவுல "ஆதி நாதன் கேட்கின்றான். அரளிப்பூவைத் தொடுக்கின்றேன்" என்ற மெல்லிசை மன்னரோட பாட்டு தெரியும். அந்தப் பாட்டோட மெட்டுல இந்தப் பாட்டைப் பாடிப் பார்த்தேன். சரியாவே பொருந்தி வருது.

G.Ragavan said...

http://eenpaarvaiyil.blogspot.com/2007/03/blog-post.html

ஒன்னும் புரியலையேப்பா...இது எந்த நூலு? (மயிலார்: நூல் பேரச் சொன்னா மட்டும் புரிஞ்சிரப் போற மாதிரி. சும்மா இர்ரான்னா!)

எதோ காரணத்தோடுதான் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆகையால் நானும் ஆவலோடு விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

// குழலி / Kuzhali said...
எஸ்.கே. அய்யா, அப்பாலிக்கா மூலத்தை ஓலைச்சுவடியில் கேட்டுப்புடாதிங்கோ...
இப்போ எழுத்துப்பிழையோட தமிழில் ஒரு கட்டுரை கொடுத்தா படிச்சிடுவிங்களோ இல்லையோ.... படிச்சி சரியா பொருள் சொல்வீங்களோ இல்லையோ அது போல செய்யலாமே இதற்கும், எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைச்சிக்கலாம் அப்பாலிக்கா... //

:-))) நல்ல நகைச்சுவை. ஆனால் கருத்து சரியாகத் தெரியவில்லை. தமிழில் பிழையிருந்தாலும் பொருள் கொண்டு விடுவோம். ஏனென்றால் அது தமிழில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இங்கு வடமொழியில் எழுதப்பட்டிருந்தால் அவருக்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் அவர் கேட்பதும் சரியென்றுதான் தோன்றுகிறது.

G.Ragavan said...

http://ilaikkaran.blogspot.com/2007/03/blog-post_06.html

அடடே! எதுங்க அது காந்திஜி வழியில் பீடு நடை போடும் பத்திரிகை? அதுக்குப் பேரு கெடையாதா? இவ்வளவு மிகைப்படுத்தி எழுதியிருக்காங்களே. அதுக்கு நீங்க வெச்ச தலைப்பு இன்னமும் சிரிப்புத்தான் போங்க.

கம்பெனிகள் இப்படிப்பட்ட பார்ட்டிகள நடத்துனா அப்புறம் ஏன் ஐநூறு ரூவா நுழைவுக்கட்டணம் வாங்குறாங்க? கம்பெனி பார்ட்டிகள்ல தண்ணிப் பழக்கம் இருக்கும். உண்மைதான். ஆனால் எல்லா நிறுவனங்களிலும் அப்படி அல்ல என்பதே உண்மை. அது சரி? இந்தக் கம்பெனியில வேலை செய்றவங்க மட்டுந்தான் குடிக்கிறாங்களோ? தெரிஞ்சுக்கக் கேக்குறேனய்யா.

வெளிநாட்டுக்குப் போனா கெட்டுப் போயிருவாங்களா? ஆகா. என்ன ஒரு கருத்து. என்ன ஒரு கருத்து. அப்ப இந்தியாவுல இருக்குறவங்கள்ள இதுவரைக்கும் வெளிநாட்டுக்கே போகாதவங்கள்ளாம் உத்தம சிகாமணிகள். வாழ்க உங்கள் புகழ். அப்ப பட்டிக்காட்டுல இருந்து சென்னைக்கு வர்ரவனும்...சென்னைல இருந்து பம்பாய்க்குப் போறவனும் கூட கெட்டுத்தான போகனும். என்னவோ போங்கய்யா.

நாராயணமூர்த்தி என்ன செய்ய வேண்டும் என்றா கேட்கின்றீர்கள்? நான் இரண்டு முறை மென்பொருள் நிறுவனம் மாறியவன். ஏழு ஆண்டுகள் பணியனுபவம். இப்பொழுது இன்போசிஸ்சில் பணி. ஆகையால் பொதுவாக எந்த நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்று ஓரளவு தெரியும். என்னுடைய பழைய நிறுவனத்தில் புதுக்கட்டிடம் கட்டித் திறந்ததற்கு பார்ட்டி நடந்தது. அதில் தண்ணீரும் ஒரு பகுதி. ஆனால் இன்போசிஸ் நிறுவனத்துக்குள் தண்ணி மட்டுமல்ல எந்த போதைப் பொருளுக்கும் அனுமதி இல்லை. அதுவுமில்லாமல் அவர்களது அலுவலகப் பார்ட்டிகளிலும் அவைகளுக்குத் தடை. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொருத்தராகச் சென்று குடிக்காதே குடிக்காதே என்று சொல்ல வேண்டுமா? அதுவும் நடக்கிறது. அதற்கென்றே ஹெல்ப்லைன்களும் இருக்கின்றன. அவைகளைப் பற்றிய விளம்பரமும் செய்தியும் நிறுவனத்தில் சேரும் அனைவருக்கும் கொடுக்கப்படும்.

அதுவுமில்லாமல் நீர்நிலைப் பகுதிகளிலும் அபாயகரமான பகுதிகளிலும் பார்ட்டி நடத்தக் கூடாது. அது பணியாளர்களின் பாதுகாப்பு கருதி.

ஒரே அலுவலகத்தார் திருமணம் செய்தால் ஒரு லட்சம். அப்படி ஒரு திட்டம் இன்போசிஸ்சில் கிடையாது. எனக்குத் தெரிந்த பல கம்பெனிகளில் கிடையாது. பொத்தாம் பொதுவாகக் குறை சொல்வதை விடுத்து முறையான தகவல்களைச் சொன்னால் அவைகளுக்கு பதில் சொல்ல முடியும். தவறுதான் என்றால்...அதை ஒப்புக் கொள்ளவாவது முடியும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/03/blog-post.html

நல்ல பதிவு வெட்டி. இத்தனை செய்திகளோடு இன்னொரு செய்தி. "Done love your company. Because your company doesnt love you." என்று சொன்ன ஒரே ஆள் அவர்தான். அதன் உள்ளர்த்தம் புரிந்தால் அவர் சொன்னதன் உண்மை புரியும்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/03/blog-post_07.html

பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துகள். அந்த சமயத்தில் சென்னை வர முயல்கிறேன்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/03/16.html

மீண்டும் திருப்புகழ். மெத்த மகிழ்ச்சி. இது எந்தத் தலத்திற்கான திருப்புகழ்? படித்த நினைவே இல்லையே. அது சரி...எனக்குத் தெரிஞ்சதே கொஞ்சந்தான்.

இந்தப் பாடலில் முழுக்க முழுக்க மணிபவழ நடை பயின்று வந்துள்ளது.

சததளம் என்ற சொல்லை இன்னொரு இடத்தில் அருணகிரி சொல்லியே கேள்விப்பட்டிருக்கிறேன். சததள முகுளித தாமாங்குசமென்றிடும் தாளாந்தர அம்பிகை.

G.Ragavan said...

http://ilaikkaran.blogspot.com/2007/03/blog-post_06.html

// இலைக்காரன் said...
g.ragavan அவர்களே,

வருகைக்கு நன்றி.

"கம்பெனிகள் இப்படிப்பட்ட பார்ட்டிகள நடத்துனா அப்புறம் ஏன் ஐநூறு ரூவா நுழைவுக்கட்டணம் வாங்குறாங்க? ..."

எனக்குள் எழுந்த கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது. தினகரன், நமது எம்.ஜி.ஆர், முரசொலி போன்ற மூன்றாம் தர பத்திரிக்கை என்றால் விட்டுவிடலாம். ஆனால் .... //

இலைக்காரரே....அவ்வளவு பெரிய பின்னூட்டத்த அவ்வளவு செய்திகளோட போட்டிருக்கேன். ஒங்களுக்குப் அந்த ஒரு வரி மட்டுந்தான் கண்ணுல பட்டதா? அதென்ன பத்திரிகைன்னு சஸ்பென்ஸ் வச்சிக்கிட்டேயிருங்க....எங்களுக்கு வேலையிருக்கு.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/blog-post_08.html

காலை ஜப்பானில் காபி
மாலை நியூயார்க்கில் காபரே
இரவில் தாய்லாந்தில் ஜாலி...இதெல்லாம் சினிமாப் பாட்டுலதான் நடக்கும்.

ஆணி அடிக்கனும். அடிச்சதப் புடுங்கனும். புடுங்கும் போது நெளிச்சதை மறுபடியும் தட்டி நீட்டனும்...அட போங்கய்யா....எங் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/03/blog-post_08.html

நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடியில்லாமல் வளர்க.

வெற்றிக்கு வாழ்த்துகள். இன்னும் பலகவிதை எழுதி முதற்பரிசுகள் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

சுடுகின்ற ஊரில் சுடாத கவிதைகளைச் சுடச்சுட கொடுக்கும் அருட்பெருங்கோவிற்கு வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/03/blog-post.html

முள்ளும் மலரும் எனக்கும் மிகவும் பிடித்த படம். படமென்று சொல்வதை விட அதைக் காவியம் என்று சொல்வேன். காயத்ரியும் ஓரளவு நல்ல படமே. சரியாக வெற்றி பெறவில்லை என நினைக்கிறேன். பாடல்கள் எல்லாம் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக பி.எஸ்.சசிரேகா பாடிய "வாழ்வே மாயமா வெறுங்கனவா கடும்புயலா" என்ற பாடலும் சுஜாதா பாடிய "காலைப் பனியில் ஆடும் மலர்கள்" என்ற பாடலும் மிக அருமை.

வைரமுத்துவோட ரசிகர் போல நீங்க?

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/03/blog-post.html

சத்தியமாச் சொல்றேன்....படிக்கத் தொடங்குனதுமே..."என் காதலி"ன்னு சொல்லாம என்னென்னவோ ஒளறிக்கிட்டிருக்கானேன்னு நெனச்சேன். அது சரியாயிருச்சு. ராகவா, ஒனக்கும் கிட்னி இருக்குதுப்பா! :-)

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/03/3.html

சன் டீவியும் ஜெயா டீவியும் வேஸ்ட். பாக்குறத நிப்பாட்டி ரொம்ப நாளாச்சு. விஜயும் மக்கள் தொலைக்காட்சியும் நல்லாருக்கு. ஆனா பாக்க நேரம் கெடைக்க மாட்டேங்குது.

G.Ragavan said...

http://eenpaarvaiyil.blogspot.com/2007/03/blog-post.html

இன்னமுமா...யாரும் சொல்லலை. ம்ம்ம்..முத்துக்குமரன் நீங்களே சொல்லீருங்க. அதுல ஏதோ காரணமில்லாம எடுத்துப் போட்டிருக்க மாட்டீங்க. என்னன்னு சொல்லுங்க. ரொம்பவும் காக்க வைக்காதீங்க.

G.Ragavan said...

http://eenpaarvaiyil.blogspot.com/2007/03/blog-post.html

// முத்துகுமரன் said...
//தமிழ் கடவுள் முருகன் ஒரு காமாந்தகன் என்றொரு பதிவு போட்டிருக்கிறேன்//

ரெம்ப சந்தோசம். அதுக்கும் சேர்த்து விளக்கம் அளிக்குமாறு எஸ்.கே அய்யா, குமரன், மற்றும் ஜி.ராகவனை கேட்டுக் கொள்கிறேன். ஹரி நான் அந்த கட்டுரை படிக்கவில்லை. அந்த லிங்க் இல்லை அந்த கட்டுரையை அனுப்புங்களேன் தனிமடலாகவாவது. ஆனா எந்த ஊர்லயா பொண்டாட்டியை வண்புணர்வானுங்க. முருகனுக்கு பொண்டாட்டி வள்ளிதான். எங்களைப் பொறுத்தவரை தெய்வானைதான் வராலாற்றில் திணிக்கப்பட்டவள், நுழைக்கப்பட்டவள் . //

ஓ என் கிட்டயும் அந்தப் பதிவு பத்திக் கேட்டிருக்கீங்களா? அதை ஒரு பொருட்டாவே மதிக்கலையே நான். ஆகையால அதுக்கு விளக்கம் சொல்லனும்னே தோணலை. விரும்பலை. ஆனாலும் நீங்க கேட்டதற்காகச் சில தகவல்கள். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

முருகன் வள்ளியை வண்புணர்ந்ததாக எனக்குத் தெரிந்து எந்த நூலிலும் இல்லை. காதற் சீண்டல்கள் என்று வரும். அதற்கு வேறொரு பரிமாணம் உண்டு. பழைய தமிழ் நூல்களில் காதலிக்கின்ற ஆண்கள் அனைவரும் முருகன் என்றும் பெண்கள் அனைவரும் வள்ளி என்றும் சொல்வார்கள். இளங்கோவடிகளும் இருவர் காதலிக்கையில் காதலனை முருகன் என்றும் காதலியை வள்ளி என்றும் சொல்கிறார். எனக்குத் தெரிந்து தெய்வயானையைப் பழைய தமிழ் நூல்களில் காண முடியாது. திருமுருகாற்றுப்படை உட்பட.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_09.html

வாழ்த்துகள் டீச்சர். ஐ நூறு என்று பாராட்டிச் சில காலமே ஆகியிருந்தும் ஐநூறு வந்தமைக்கு வாழ்த்துகள். ஐ ஆயிரம் என்று வாழ்த்திச் சில பொழுதிலேயே அது ஐயாயிரமாகக் கூட விருப்பங்கள்.

காஞ்சின்னு சொன்னா நினைவுக்கு வர்ர சில பாட்டுகள்
1. காஞ்சிப் பட்டுடுத்திக் கஸ்தூரிப் பொட்டு வைத்து
2. காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
3. நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று

காஞ்சிபுரத்துல கச்சியப்பர் கந்தபுராணம் எழுதுன கோயிலுக்குப் போனீங்களா?

பெருமாளை விடப் பல்லிக்குப் பெருமை....ம்ம்ம்..இதாங்க நடக்குது. கடவுள விட மத்ததுகளுக்குப் பெருமை.

சிவகாமி, ஆயனர் எல்லாரும் கற்பனைப் பாத்திரங்கள்தான். ஆனால் நம்ம மனசுல எப்படிப் பதிஞ்சு போயிருக்காங்க பாத்தீங்களா. ஒரு ராமராஜன் படத்துல நம்பியாரு சிற்பியா வருவாரு. படம் பேரு நினைவில்லை. அதுல ஒரு பழைய கோயிலைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும். அந்தக் கோயில் சிற்பங்களைப் பாத்ததும் அவரு சொல்வாரு...ஆகா...எல்லாம் ஆயனச் சிற்பி வடிச்சது. சிவகாமியை வைச்சு வடிச்சதுன்னு. :-)

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/03/blog-post_07.html

உளறுவதுன்னா அவ்வளவு லேசா! அதுலயும் ஜி மாதிரி காதல்மன்னர்கள் உளறினால்...கேக்கனுமா? நல்லா ஒளறீருக்கீரு. காதல் போதையில் மூளை கிறுகிறுத்து உடம்பு முறுமுறுக்கி உளறுனதுன்னு தெளிவாத் தெரியுது. :-)

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/03/blog-post_08.html

துளசி டீச்சருக்கு எனது வாழ்த்துகள். நலமும் வளமும் பெற்று வாழ்க.

பிரச்சனைகள் பற்றி....எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு....ஆகையால் பொறுமை. பொறுமை. பொறுமை.

G.Ragavan said...

http://ilaikkaran.blogspot.com/2007/03/blog-post_06.html

// Pot"tea" kadai said...
வவுறு ஏன் எறியனும்

15 ரூபாய்க்கு இருந்த மசாலா தோச 50 ரூபாய ஆனது ஏன்?

3,500 ரூ இருந்த மாத வாடகை 7,000 ரூ ஆனதேன்?

ஏன் ஏன் ஏன்? //

பொட்டீக்கடை. இது கண்டிப்பாக விவாதத்திற்கு உரியது. ஆனால் இதில் மற்றொரு உண்மையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விலையேற்றம் ஏன் வருகிறது? வழக்கமாக வாடகை ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தவர்....சாப்ட்வேர்காரன் நிறைய சம்பளம் வாங்குவதால் ஐந்தாயிரமாகக் கேட்கலாம் என்ற பேராசைதானே. அது சரியா தவறா என்பது வேறொரு விவாதம். ஆனால் இங்கே நாம் போதைப் பழக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக சாஃப்ட்வேர் துறை உயருவது இந்தியா உயர்வதாக ஆகாது. அது மறுக்க முடியாத உண்மை.

// வெறும் சாப்ட்வேர் பயலுங்களுங்களுக்கு 50,000ஆயிரம் சம்பளம் கொடுத்துட்டா இண்டியன் எகானமி ஏறுதோ இல்லியோ ஒக்காமக்கா வெலவாசி மட்டும் பட்ஜெட் போடாம ஏறும்.

நா ஏன் வவுறு எரியனும்?

ஜிரா...அந்த ஒரு லட்ச ரூ மேட்டர் பதிவு கூட யாரோ போட்டிருந்தாங்க.(ஒரு வேள் புரளியோ)
அது பொய் கிடையாது. கம்பெனி பேர் வேனா மாரியிருக்கலாம். //

பாத்தீங்களா? கம்பெனி பேரு மாறியிருக்கலாம்னு சொல்றீங்க. அப்படி அடிப்படை தெரியாத விஷயத்தை வெச்சு ஒருவரை மாமா வேலை பாக்குறவர் என்று சொல்வதற்குதான் எதிர்ப்பு. இது போல நிறைய மித்ஸ் மென்பொருள் துறை பற்றி இருக்கிறது. என்னவோ புனே பற்றிச் சொல்கின்றீர்கள். எனக்குத் தெரிந்து பெங்களூரில் சென்னையில் பல பார்ட்டிகள் நடக்கின்றன. ஒரு பார்ட்டிக்குத் தெரியாத்தனமா போய் ஃப்ரூட் பஞ்ச் கிளாசை கையில் வைத்துக் கொண்டு ஓரமாக உட்கார்ந்த அனுபவமும் எனக்குண்டு. அப்படி உட்கார்ந்திருந்ததற்காகக் கிண்டல் செய்யப்பட்டது வேறொரு சோகம். :-( ஆனால் கம்பெனிகளே போதைப் பொருள் நடத்துகிறதா என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அதற்கான வாய்ப்பு மிகமிக அரிது என்றே நான் நினைக்கிறேன். தண்ணி பார்ட்டிகளே எல்லா நிறுவனத்திலும் கிடையாது.

எங்க வேலை நீங்க நெனைக்கிற மாதிரி சொகுசு வேலை இல்லீங்க. இன்னைக்கும் நான் நெனைப்பேன். மாசம் பதினஞ்சாயிரம் குடுத்தா பேசாம வாத்தியார் வேலைக்குப் போயிரலாம்னு. ஆனா முடியுதா! இக்கரைக்கு அக்கரைப் பச்சை.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/03/blog-post_4767.html

புதுமையாக இருக்கின்றன அந்த அழைப்பு மொழிகள். புதிய செய்தி எனக்கு.

கல்லடி வேலரைப் பற்றி இன்னும் தகவல்கள் தாருங்களேன். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2007/03/blog-post_08.html

குமரன்...கோதையின் கதையின் பாதையில் கண்ணன் வேய்ங்குழல் ஓதையைக் கீதையாய்க் கொண்டாடும் கோபியர் அன்பின் காதையைச் சொல்லப் புகுந்தீரோ! ம்ம்ம்....ஆண்டவன் மீது அன்பு இருந்தால் கண்ணைக் கூடப் பிடுங்கிக் கொடுப்பான். காலால் உதைப்பான். கல்லால்..வில்லால்...சொல்லால்...அடிப்பார். இங்கே கோபியர் செயலை நான் அறிவேன். ஆயினும் அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2007/03/blog-post.html

கொச்சின்....நீங்கள் சொன்னாற் போல கேரளத்தின் வணிகமையம். அந்த சீன வலைகளை படகில் சென்று கொண்டே பார்க்கும் அழகே அழகு. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அதனால்தான் நீங்கள் இன்றும் அதைப் பற்றிப் பதிவிடுகின்றீர்கள்.

நிற்க. நலமா? பதிவுப் பக்கம் பார்த்து நீண்ட நாட்களாகிறதே!

G.Ragavan said...

http://njaanamuththukkal.blogspot.com/2007/02/58.html

என்ன ஐயா! ஒலிப்பதிவுகளா? அருமை. தொடரட்டும்.

G.Ragavan said...

http://nilaraj.blogspot.com/2007/03/tcs.html

மிகவும் உன்னதமான ஒரு சேவை. சத்தமில்லாமல் இப்படிச் சேவை செய்கிறவர்கள் நிறைய உண்டு. வளர்க சேவாலயாவின் தொண்டுகள். இளையராஜாவிற்கு எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/03/blog-post.html

// கோபி(Gopi) said...
நல்ல பதிவு.

ஒரு சந்தேகம்... நாராயணமூர்த்தி இப்போ இன்போசிஸ்லயா இருக்கார்? ரிட்டையராயிட்டார்ன்னு கேள்விப்பட்டேனே... அவரை ஏன் எல்லாரும் "இப்ப" காய்ச்சறாங்க? //

உண்மைதான் கோபி. தன்னுடைய அறுவதாவது வயதில் அவர் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அதற்கு முன்பு வரை ஒரு மாதத்தில் இத்தனை இன்போசிஸ் ஊழியர்களைச் சந்திக்க வேண்டும் என்று திட்டம் வைத்து...அதுவும் பல ஊர்களில்...சந்தித்து...அவர்கள் ப்ரோஜக்ட் எப்படிப் போகிறது என்று விசாரித்து...ம்ம்..என்னத்தச் சொல்றது!

// ப்ரேம்ஜி பத்தி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் இந்தச் செய்தியில என்ன சொல்றாருன்னா , தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் தொழில்வரியை (Professional Tax) அதிகரிக்கனுமாம். ஆனா அவர்கள் மூலம் இவர் சம்பாதிக்கும் கோடிகளின் மீதான (Sales/Service Tax) வரிகளைக் குறைக்கனுமாம். இது எப்படி இருக்கு?

தயவுசெய்து அவரோடயெல்லாம் நாராயணமூர்த்தியை ஒப்பிடாதீங்க. //

இன்போசிஸ்சையும் விப்ரோவையும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் இன்போசிஸ்சில் wealth distribution is transparent. But in wipro more than 90 percentage in single hand. அதைப் பற்றிப் பேசியதால்தான் விப்ரோவின் நம்பர்-1 விப்ரோவை விட்டே விலக நேர்ந்தது.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/03/blog-post_08.html

சிறில், கதையைப் படிக்கும் போது ஹோம்ல போய் பாட்டியப் பாத்துட்டு வர்ராங்கன்னு சொன்னத வெச்சு....அதையும்...இப்ப பெத்தவங்களுக்கும் பிள்ளைங்களுக்கும் நீங்க சொல்லியிருக்குற உரையாடலையும் வெச்சு எதாவது சொல்லப் போறீங்கன்னு நெனச்சேன். ஆனா....வேற மாதிரி போயிருச்சு. என்ன சொல்ல வர்ரீங்கங்குறது எப்படியோ விட்டுப் போச்சுன்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://njaanametti.blogspot.com/2007/03/98.html

இருக்குற வீட்டையே எப்படிப் பாத்துக்குறதுன்னு தெரியலையே ஐயா! இது மச்சு வீட்டுக்கு எங்க போறது? ஏதோ...செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என்று உணர்வித்ததுதான்...அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே!

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/03/16_08.html

எஸ்.கே, ஒரு ஐயம்.

மரகத ஆகார ஆயனும்-பச்சை நிறம் கொண்ட ஆயர் குலத்துதித்த
'மச்சாவதார மால்எனும் திருமாலும்

இரணிய ஆகார வேதனும்-பொன்னிறம் கொண்ட மறைகளின் தலைவனாம்
பிரமனெனும் படைப்புக் கடவுளும்

வசு எனும் ஆகார ஈசனும்-நெருப்பு நிறம் கொண்ட சிவந்த வண்னமுடை
உருத்திரன் என்னும் உக்கிர மூர்த்தியும்

இது நீங்கள் சொல்லியிருக்கும் பொருள். முதல் ஆகாரம் மீன் என்று தெரிகிறது. மற்ற இரண்டு ஆகாரங்களும் புரியவில்லையே. கொஞ்சம் விளக்குங்களேன்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/03/16_08.html

// "விநாயக மலை உறை வேலா"

திருப்பத்தூருக்குக் கிழக்கே
ஐந்து மைல் தள்ளி அழகுடனே
பிள்ளையார்பட்டியெனும் விநாயகர்மலையினில்
விருப்புடன் அமர்ந்திருக்கும் வேலாயுதரே! //

இங்கும் ஒரு ஐயம். சென்ற பதிவிலேயே கேட்க நினைத்தது. விட்டுப் போய்விட்டது. பிள்ளையார்பட்டி கோயில் என்பது நானறிந்த வரை புதிய கோயில் என்று நினைக்கிறேன். அருணகிரியின் காலத்தில் இருந்ததா என்ன? தெரிந்து கொள்ளக் கேட்கிறேன்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/03/blog-post_2874.html

அந்தச் செப்பேட்டைப் பற்றியும் அது சொல்லும் செய்தியைப் பற்றியும் அறியத் தந்தமைக்கு நன்றி. நான்காம் நூற்றாண்டு மன்னனின் செப்பேடு என்பது மிகவும் அபூர்வம். இது தொடர்பான மற்ற செய்திகளையும் சொல்லுங்களேன்.

G.Ragavan said...

http://kalaignarkarunanidhi.blogspot.com/2007/03/blog-post.html

ம்ம்ம்ம்..காதலில் சிக்காதார் யார்? சாந்தா என்று வைத்துக் கொள்வோம் என்று விட்டிருக்கலாம். ஓரெழுத்து மாற்றம் என்பது சற்று அதிகப்படியானது என்பது என் கருத்து. அவ்வளவே. மற்றபடி கருணாநிதியின் தமிழ்நடையைப் பற்றி இனிமேல் நான் புகழ வேண்டியதில்லை. நல்ல மொழிவளம்.

பதிவிற்குத் தொடர்பில்லாத ஒரு கேள்வி. இந்த ஆட்டோகிராப் வந்த பொழுதே எல்லாரும் பேசியதுதான். இதே போல திருமணமாகிக் குழந்தைகள் உள்ள ஒரு பெண் இதே போலக் காதற் கதை எழுதினால்? அல்லது ஆட்டோகிராப் போல மூன்று வாலிபர்களை விரும்பி நிறைவேறாமல் போய்..வேறு யாரையோ திருமணம் செய்து கொள்ளப் போனால்....அப்பொழுது சமூகத்தின் பார்வை எப்படி இருக்கும்?

G.Ragavan said...

http://espradeep.blogspot.com/2007/03/blog-post.html

படம் நல்லாயிருக்குன்னு கேள்வி. போய்ப் பாக்கனும். உங்க விமர்சனமும் ஆவலைத் தூண்டுது.

G.Ragavan said...

http://ilaikkaran.blogspot.com/2007/03/blog-post_06.html

// Pot"tea" kadai said...
//பொட்டீக்கடை. இது கண்டிப்பாக விவாதத்திற்கு உரியது. ஆனால் இதில் மற்றொரு உண்மையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விலையேற்றம் ஏன் வருகிறது? வழக்கமாக வாடகை ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தவர்....சாப்ட்வேர்காரன் நிறைய சம்பளம் வாங்குவதால் ஐந்தாயிரமாகக் கேட்கலாம் என்ற பேராசைதானே. அது சரியா தவறா என்பது வேறொரு விவாதம்.//

ஜிரா அய்யா...நல்லா பேசறீங்க
சாப்ட்வேர் காரன் அதிகமா சம்பாதிக்கறான் அதனால் வீட்டுக்கு சொந்தக்காரன் வாடகை அதிகமா கேக்கறதில்ல...வீட்டுக்கு சொந்தக்காரு 4,000 ரூ தான் கேக்கறாரு...நானும் தகுதிக்கு மீறனாலும் ஓகே தான்னு சொல்லறேன்...அங்கர்ந்து குதிச்சி ஓடியாராரு ஒரு சாப்ட்வேர் ஆளூ நா 5,000 கொடுக்கறேன் சார் 10 மாச வாடகையில்ல 12 மாச வாடகை அட்வான்ஸ் தர்ரனு சொல்லறாரு. சோ, ஆசைய மூட்டனுது யாருங்கய்யா? //

நல்லாப் பேசுறேன்னு சொன்னதுக்கு நன்றி பொட்டீக்கடை.

எனக்குத் தெரிஞ்ச சாப்ட்வேர்காரங்க யாரும் அப்படிச் சொல்லலை. ஆனா எனக்குத் தெரிஞ்சு வருசம் தவறாம வீட்டு வாடகைய ஏத்துறவங்க நெறைய உண்டு. கோழி எது முட்டை எதுன்னு கண்டுபிடிக்கிறது இதுல ரொம்பக் கஷ்டம். அதுனாலதான் இது வேறொரு விவாதம். இந்தப் பதிவுக்குத் தொடர்பில்லாததுன்னு சொன்னேன்.

G.Ragavan said...

http://lldasu.blogspot.com/2007/03/blog-post_01.html

சன் டீவியின் ஆரம்ப காலத்தில் மாலா, ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியை நடத்திய ரெகோ, இன்னொரு மொழி விளையாட்டு நிகழ்ச்சியை நடத்தியவர், இப்பொழுது விஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சி நடத்துகிறவர் என்று எல்லாரையும் தூக்கி எறிந்தது மறக்க முடியாதது. இன்றைக்கு அவர்கள் காணாமல் போனாலும் சன் தொலைக்காட்சியின் இந்தத் தொடர் தொல்லையும் மிரட்டலும்..அளவுக்கு மீறிப் போனதாகவே உணர்கிறேன். குறிப்பாக சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி. ஏ.வி.ரமணனுக்குப் பிறகு நிகழ்ச்சி விளங்கவில்லை. அதை விட ஜெய டீவியின் ராகமாலிகா நன்றாக இருக்கிறது. சுபஸ்ரீ தணிகாசலம் இயக்குறார். அரட்டை அரங்கம் நன்றாக நடந்தது. அது இப்பொழுது குறட்டை அரங்கமாக மாறி விட்டது. மக்கள் மன்றம் என்று மக்கள் ஜெயா டீவி கூட பார்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனைக்கு அடி சறுக்குகிறது. ஆனால் பிரச்சனையே...அடி சறுக்கிய ஆனையால் பிறகு எழவே முடியாது என்பதுதான். சன் டீவி தகிடுதத்தங்களை விடுத்து கொஞ்சம் அறிவுப்பூர்வமாக யோசித்தால் அவர்களுக்கு நல்லது. இல்லையேல் மக்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விடுவார்கள். ஆணவம் குறைய வேண்டும்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/03/blog-post_05.html

சூப்பரப்பு. நல்லாயிருக்குது. ஒங்க கொரலும் நல்லா பொருந்தி வருது. நல்ல விமர்சனம். வெட்ட வேண்டிய இடத்துல வெட்டி..ஒட்ட வேண்டிய இடத்துல ஒட்டி...எங்கயோ போயிட்டீங்க.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/03/blog-post_10.html

பெரியசாமிதூரன் எழுதிய அருமையான பாடல். இந்தப் பாடலைக் கல்யாணிமேனன் பாடக் கேட்டிருக்கிறேன்.

பழநி என்றதும் நினைவிற்கு வருவது "வருவாண்டி தருவாண்டி மலையாண்டி" என்ற சூலமங்கலம் பாடல்.

G.Ragavan said...

http://muthuvintamil.blogspot.com/2007/03/blog-post_11.html

// முத்துகுமரன் said...
துபாய் நேரம் ஞாயிறு மாலை 5.00 மணி வரை எதுவும் வரவில்லை செயல். வந்தா சேதி சொல்லி அனுப்புறேன். //

இப்படிச் சொன்னா எப்படி முத்துக்குமரன்? அவங்கதான் சொல்லலை. நீங்களாவது சொல்லனும். நீங்க சொல்லும் போது யாரும் வந்து கேட்டா...அதுக்குத்தான் முன்னாலயே பதிவு போட்டேன். அப்ப ஏன் சொல்லலைன்னு கேக்கலாமே. சீக்கிரம் சொல்லுங்கய்யா....காய வெக்காதீங்க.

G.Ragavan said...

http://nambharathi.blogspot.com/2007/03/blog-post.html

நல்ல விளக்கம். தொடரட்டும். ஒரு சிறிய கருத்து குமரன்.

நாட்டைத் தாயாகப் பார்த்தது உண்மைதான். அது உருவகம். அது தொடர்பான பாடலுக்கு விளக்கம் சொல்லும் பொழுது இப்படிச் சொல்ல வேண்டும் என்பது என் கருத்து. ஒரு எடுத்துக்காட்டு கீழே.

// நாவினில் வேதமுடையாள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் - தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

(இவள் நாவினில் வேதத்தைக் கொண்டிருக்கிறாள். கையில் நன்மை விளங்கும் வாளினைக் கொண்டிருக்கிறாள். அவளை அடைந்தவர்களுக்கு இன்னருள் செய்பவள். தீயவர்களை வீழ்த்திடும் வலிமையுடைய தோளினை உடையவள்) //

நாவில் வேதமுடையாள் - வேதம் என்பது மறைமொழி. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். அப்படிப் பெருமை தக்க மொழியினரைப் பேசும் மக்களைக் கொண்ட நாடு.

கையில் நலந்திகழ் வாளுடையாள் - கையில் ஆயுதம் உண்டு. ஆனால் அது நல்வழியில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உறுதி கொண்ட உள்ளத்திறமுடையோர் இங்குண்டு.

மேவினர்க்கு இன்னருள் செய்பவள் - ம்ம்ம்ம்....இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். எக்கச்சக்கமாக கனவு கண்டிருக்கிறான் பாரதி. ஆனால் அவன் கனவில் சிறிதும் நாம் நிறைவேற்றவில்லை என்பதுதான் சோகம். இதைப்போல கலைவாணரும் ஒரு படத்தில் 1960களில் இந்தியா மிகவும் மாறிவிடும் என்று பாடுவார். ஆனால் அந்தக் கனவும் இப்படித்தான். ம்ம்ம்..என்ன செய்வது!

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/03/blog-post_9270.html

நல்ல தகவலுங்க. இதே போல தமிழுக்கான முதல் டைப்ரைட்டரை வடிவமைத்தவர் யார் தெரியுமா? அவர் எந்த ஊர் தெரியுமா?

// இலவசக்கொத்தனார் said...
என்னப்பா இது? பதிவு தமிழ்மணத்தில் தெரிய மாட்டேங்குது? இதுக்கு விக்கிபசங்களைத்தான் கேட்கணும் போல! :) //

உங்க பதிவும் அப்படித்தானா? இன்னைக்கு போட்ட பதிவு வந்துச்சு...போச்சு. வந்துட்டுப் போச்சு. அப்புறம் வந்துருச்சு. நாங்கூட நம்மள தமிழ்மணத்துல இருந்து தூக்கீட்டாங்களோன்னு நெனைச்சேன்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/03/6.html

மிகவும் புதிய முயற்சி. நன்றாக வந்திருக்கிறது. கவிதைக்கும் கதைக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் முயற்சி. முதலில் அப்படித்தானே இருந்தது. காப்பியங்கள் கவிதைகளாகத்தானே வந்தன. பிறகுதானே உரை வடிவம். முயற்சி அனைத்தும் ரசித்தேன்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_12.html

எந்த மதமானால் என்ன? வந்தவர்களுக்கு அவர்கள் வழிபட இடம் கொடுத்தீர்களே. அதுவே நல்ல பண்பு. இப்படி ஒவ்வொருத்தரும் அடுத்தவர் நம்பிக்கையை மதித்து நடந்தால் அன்றுதான் "மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்" என்று பாட முடியும். படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/03/blog-post.html

எஸ்.கே, எனக்கும் முருகனைத் தெரியும். அவ்வளவுதான். அதற்கு மேல் நூலோ, கௌமாரமோ....எனக்குத் தெரிந்தது மிகக் குறைவுதான். ஆகையால் எனக்குத் தெரிந்த வகைக்குப் பதிவு போட்டேன். திருமுருகாற்றுப்படையை முழுக்கப் படிக்கச் சொல்கிறது உங்கள் பதிவு. விரைவில் தொடங்க வேண்டும். அடுத்த இனியது கேட்கின்....திருமுருகாற்றுப்படைதான் என்று ஆற்றுப்படையப்பன் சொல்லி விட்டான். அவன் அருளால் அனைத்தும் கைகூடும்.

G.Ragavan said...

http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_12.html

அருட்பெருங்கோவிற்கு எனது வாழ்த்துகள். அருட்பெருங்கோவின் படைப்பை நானும் மிகவும் ரசித்தேன். நன்றாகச் செய்திருக்கிறார். வாழ்த்துகள் கோ.

G.Ragavan said...

http://umakathir.blogspot.com/2007/03/blog-post_14.html

தம்பி...சூப்பரு. இனிமேலாவது விஜய டி.ஆர் படம் எடுக்காம இருந்தாச் சரிதான்.

நட்சத்திர வாரத்தில் கலக்க என் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/03/36.html

குமரன், பாடலை மிகவும் ரசித்தேன். அது சொல்லும் பொருளையுந்தான். அதை நீங்கள் சொல்லும் விதத்தையுந்தான்.

கடவுள் என்பது அனைத்தையும் கடந்து உள்ளிருக்கிறதல்லவா. அப்படியானால் ஒவ்வொரு பொருளாகவும்..அதன் பண்பாகவும்..அந்தப் பண்பின் பயனாகவும்..அந்தப் பயணின் விளைவாகத் துய்க்கும் இன்பமாகவும்....அந்த இன்பத்தின் விளைவாக எழும் எண்ணமாகவும்...அந்தன் எண்ணத்தின் வழி கிடைக்கும் நல்வழியாகவும் இருப்பது கடவுளே. அதைப் பொருளை மட்டும் வைத்து அழகாக விளக்கியிருக்கிறார். இப்படி ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாமே என்றுதான் "யாதுமாகி நின்றாய் காளி" என்றான் பாரதி.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/03/37.html

குமரன் இந்தப் பாடலைப் படிக்கையில் இன்னொரு பாடல் நினைவிற்கு வந்தது. அருணகிரிதான். எனக்கு வேறென்ன தெரியும்? ஆலுக்கணிகலம் வெண்டலை மாலை. அது போல இங்கு அம்மைக்கு. அம்மைக்கு மட்டும்.

கன்னல் என்பது கரும்புதான். கன்னல் சுவை என்பது இனிப்பு. கன்னல் என்றாலே இனிப்பல்ல. கன்னல் சுவை என்றால் கரும்பின் சுவை. அதாவது இனிமை.

அம்மையின் கையில் ஏன் கன்னலும் பூவும்? மலரைக் கையில் வைத்து வாழ்க்கையை மலர வைப்பேன் என்கிறார் அம்மை. அந்த மலர்ச்சி இனிமையானது என்பதற்காக அப்படிக் கன்னலையும் பூவையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/03/blog-post_2661.html

இது தொடர்பாக சமீபத்தில் கேள்விப்பட்டேன். பரபரப்பான தகவல்தான். ஆனால் முழுமையாக நிரூபிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.

அதுவுமில்லாமல் இறைநம்பிக்கை என்பதற்கு மாற்றாக எதையும் கொண்டு வர முடியாது என்ற நிலையில் இது போன்ற கண்டுபிடிப்புகள் உண்மையான ஆதாரங்களோடு வந்தால் ஒழிய மற்றவர்கள் நம்ப மாட்டார்கள்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/03/ii-37.html

ஆகா! இது வேறையா? அந்தச் செக்கை அவர் கொண்டு போயிருந்தார்னா அவர் தப்பிச்சிருந்திருக்கலாம். ஆனா நீங்க செக்கை வாங்கி வெச்சுக்கிட்டதால...ஆதாரம் பலமாத்தான் சிக்கியிருக்கு. ம்ம்ம்ம்...என்ன நடக்கப் போகுதோ! அந்த நடிகை சாமியாடப் போறாங்களோ!

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2007/02/blog-post_16.html

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார்
ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாதடி ஞானத்தங்கமே!

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/03/blog-post.html

// SK said...
இப்படி ஏதாகிலும் செய்து உங்களுக்கு உள்ளக்குறிப்பால் உணர்த்திய முருகனுக்கு வணக்கம்!

எங்களுக்கு அடுத்த விருந்து என்னவெனச் சொல்லிவிட்டீர்கள்!

காலம் தாழ்த்தாது, அவனருளலே அவன் தாள் வணங்கித் தொடங்குங்கள்!
:)) //

உண்மைதான் எஸ்.கே. விரைவில் தொடங்க வேண்டும். ஆனால் அதற்கு முன் ஆழமாகப் படிக்க வேண்டும்.

// ஜி.ரா. பதிவைப் படித்ததும், ஆர்வமிகுதியால் திருமுருகாற்றுப்படையைப் புரட்டியபோது, மனதில் பட்டவைகளை எழுத்தில் வடித்திருக்கிறேன்..... என் கருத்தாக மட்டும்.

எவருக்கும் பதில் சொல்லும் விதமாக அல்ல.

அடுத்தவரை மறுத்தும் அல்ல.

அவரவர் கருத்து அவரவர்கட்கு.

குமரன் சொன்னது போல இது ஒரு கருத்து பரிமாற்றம் கூட இல்லை.

தன் கருத்தைச் சொல்லுதல்.. அவ்வளவே.

யாருடனும் எனக்கு சர்ச்சை இல்லை!//

சரியாகச் சொன்னீர்கள் எஸ்.கே. சர்ச்சை அல்ல விரும்புவது. தத்தம் கருத்து. படித்ததில் புரிந்ததைச் சொல்வது. ஆண்டவனை விட அறிந்தவரா நாம்? ஏதோ அவன் அருளாலே அவன் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மற்றபடி வல்லிமார் இருபுறமாக வள்ளியூருறை பெருமானை வழிபட எனக்கு இடைஞ்சல் இல்லை.

G.Ragavan said...

http://sirippu.wordpress.com/2007/03/15/sivaji3/

ரஜினி பூசுனாப்புல இருக்காரே. ம்ம்ம்..ஷங்கர் ஒடம்பக் கூட்டச் சொல்லீட்டாரு போல. பாட்டெல்லாம் எப்ப வருதாம்? படம் எப்ப வருதாம்?

G.Ragavan said...

http://asifmeeran.blogspot.com/2007/03/blog-post_3937.html

பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்களில் நடத்த வந்தார்
நடத்துவேன் நடத்துவேன்
என்றழுகும் ஆணே
தம்பட்டம் விட்டு
நீ பட்டமாகு
கயறு பெண்ணாகட்டுமே!

G.Ragavan said...

http://cinemapadalkal.blogspot.com/2007/02/blog-post.html

மிகவும் அருமையான பாடல். எனக்கும் மிகவும் பிடித்த பாடல். மெல்லிசை மன்னரின் சிறப்பான பாடல்.

யோகன் ஐயா சுட்டிக்காட்டியது போல "மீனாளின் குங்குமம்" "பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்" என்று வரவேண்டும்.

நல்லதொரு பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி சந்திரவதனா.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/03/blog-post_15.html

அடேங்கப்பா...இங்க சொல்லீருக்குறத வெச்சே ரெண்டாயிரம் சினிமா எடுக்கலாம் போல! :-) நல்லாத்தான் கலக்கீருக்கீங்க. சோப்பு பவுடர் எல்லாம் வித்திருக்கீங்க. நல்ல தொவையல்தான்.

G.Ragavan said...

http://vaisasview.blogspot.com/2007/03/blog-post_15.html

உப்புல இவ்வளவு இருக்குதா? உப்பு உப்புன்னு உப்புனா நெஞ்சு கப்புன்னு பிடிச்சிக்கிரும்னு சொல்றீங்க. சரி. கேட்டுக்கிறோம். இந்துப்புன்னு சொல்றாங்களே...கடல்ல இருந்து எடுக்காம நெலத்துல வெட்டி எடுக்குற உப்பு. அதெப்படி? அதுவும் இப்பிடித்தானா?

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/03/300.html

நான் இன்னமும் படம் பார்க்கலை. கண்டிப்பா பாக்கனும். ஆனா அதுல ஈரானியர்களைக் கெட்டவங்களா காட்டியிருக்காங்களாமே. அது சரி...கட்டபொம்மன், மருதுபாண்டியர் பத்திப் படமெடுத்தா வெள்ளைக்காரனை வில்லனாத்தான காட்டனும்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_16.html

அடேங்கப்பா. என்ன அழகு. பார்க்க நூறு கண்ணு பத்தாது. என்ன அழகாச் செதுக்கீருக்காங்க. காசு பணம் நெறையா வெச்சிருக்குறவங்க குஜராத்திக்காரங்க. அள்ளிக் கொட்டுவாங்க. நம்ம போய்ப் பாத்துட்டு வந்தாப் போதும்.

நிஜாமுதீன் பாலத்துல இருந்து யமுனை எப்படி இருந்தது? ஒரே புழுதியா இருக்குமே அந்த எடம். அதுலயும் எதோ ரோடு போடுறதாச் சொல்லி...என்னவோ செஞ்சுக்கிட்டிருக்காங்க.

வடக்கத்திக் கிராமங்களும் நம்ம ஊர் பட்டிக்காடுகளும் ரொம்பவே வேறுபட்டவை. ரொம்ப வித்யாசமா இருக்கும். என்னன்னு சொல்லத் தெரியலை. ஆனாலும் வித்யாசந்தான்.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/03/blog-post_16.html

நல்லதொரு ஆய்வு குமரன். அதிர்ஷ்டம் என்பதற்கு வேறொரு சொல்லைக் கேள்விப்பட்ட நினைவு. வயதாகிவிட்டது பாருங்கள். சட்டென்று நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது.

ஆகூழ் என்ற சொல்லும் நல்லூழ் என்ற சொல்லும் பொருத்தமே. பாருங்கள். எத்தனை பாட்டுகள். எத்தனை எடுத்துக்காட்டுகள்.

இன்னொன்று துரதிருஷ்டம் என்பதற்கு இன்னொரு சொல் இருக்கிறது. கேடு. செவ்வியான் கேடும் நினைக்கப்படும். ஆனால் அதே குறளில் கேடிற்கு எதிர்ப்பதமாக வரும் ஆக்கம் அதிர்ஷ்டத்திற்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/03/187-may-your-soul-rest-in-peace-oh-dear.html

ம்ம்ம்....ஆனாலும் ஒங்களுக்குப் பேராசை ரொம்ப. பொறுப்பு முழுசையும் நீங்களே ஏத்துக்கனும்னு நெனைக்கிறீங்களே. அது நல்லாயில்லை சொல்லீட்டேன். நீங்க எடுத்த வேலையில பக்கத்துணையா இருந்து பின்னூட்டமிட்டு வளர்த்த எங்களையெல்லாம் மறக்கலாமா? நியாயமா? செப்புக நண்பா செப்புக!

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/03/187-may-your-soul-rest-in-peace-oh-dear.html

ஒரு சின்ன திருத்தம்

நீங்க எடுத்த வேலையில பக்கத்துணையா இருந்து பின்னூட்டமிட்டு வளர்த்த இன்னமும் வளர்க்கப்போகும் எங்களையெல்லாம் மறக்கலாமா? நியாயமா? செப்புக நண்பா செப்புக!

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/03/186_01.html

எப்படி ராமநாதா! எப்படி இப்படியெல்லாம்? அடுத்த பதிவு போடனும்னு பாத்துப் பொருத்தமா போட்ட பதிவு மாதிரி இருக்கே! எப்படி இப்படி?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/03/blog-post_18.html

அடடே! இன்னைக்கு ஒங்க ;-) உகாதி திருநாளாச்சே. உகாதி ஷுபாகாஞ்சனலு.

எங்க ஊர்லயும் இன்னைக்குப் புத்தாண்டுதான். ஹார்திக்க உகாதி ஷுபாஷைகளு

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/03/39.html

// குமரன் (Kumaran) said...
ஆமாம் வெற்றி. அந்தகன் என்றால் இறுதியில் வருபவன் என்று பொருள். அது எமனைக் குறிங்கும். //

குமரன்..இந்த விளக்கத்தில் பாதிதான் சரி. இறுதியில் எல்லாருக்கும் எமன் வரமுடியாது. இறைவனே வருவதும் உண்டு. அந்தம் என்றால் முடிவு. அந்தத்தைச் செய்கிறவன் அந்தகன். ஆண்டவன் அருளினால் வீடுபேறு கொள்கிறவர்களுக்கு முடிவு இல்லை. அதற்குப் பிறகு இறையருள் எனும் தொடர்ச்சியே. ஆகையால் அந்தகன் என்ற சொல் எமனுக்கு மட்டுமே பொருந்தும்.

இன்னொரு ஐயம். வாணுதல் என்பது எப்படி ஓளி பொருந்திய நெற்றியாகிறது? வாணுதல் எப்படிப் பிரியும்? நுதல் என்றால் நெற்றி என்று தெரியும். வானுதல் என்ற சொல்லாடலும் தெரியும். மதிவாள்நுதல் என்ற சொல்லாடலும் தெரியும். ஆனால் வாணுதல் என்பது?

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2007/03/blog-post_19.html

பதிவைப் படிக்கையிலேயே பயமாய் இருக்கிறது. ஏனென்றால் உடலின் ஒரு பாகமாகக் கருதப்படும் ஒரு உறுப்பை இழப்பது என்பது....அப்பப்பா! முடியை வெட்டுவதற்கே இவ்வளவு யோசிக்கிறோம். அப்படியிருக்கையில் பிறப்புறுப்பை வெட்டிக்கொள்ள வேண்டுமென்றால்...எந்த அளவிற்கு அது வேண்டாம் என்று தோன்றியிருக்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு ஆங்கிலப்படம் வந்தது. அதன் விமர்சனத்தைக் கூட வலைப்பூவில் யாரோ எழுதியிருந்தார்கள். அந்தப்படம் இந்தியாவில் வந்ததா என்று தெரியவில்லை. அதில் ஒருவர் இந்த அறுவை சிகிச்சை செய்ய விரும்புவார். ஆனால் அமெரிக்காவில் அதற்கு ஏதோ கட்டுப்பாடுகள் இருக்கிறதாம். அதை வைத்து ஏதோ கதை. அங்கே வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கட்டுப்பாடும் இருக்கிறது. இங்கு கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் முறையான வாய்ப்பு இல்லை. ஒரு அரசாங்கம் மக்களை எப்படி அணுகுகிறது என்பதற்கு எவ்வளவு வித்தியாசம்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/03/blog-post_3180.html

உளறல். பேத்தல். என்று எத்தனை சொற்கள் போட்டாலும் பொருத்தமாக இருக்கும் ராகுலின் இந்தப் பேச்சுக்கு. ஆனா நாளைக்கு ஏதாவது தவறு நடந்தால் மன்மோகன்சிங்தான் பொறுப்பு என்பார்கள் போல. சீச்சீ. வெட்கம் கெட்டவர்கள்.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/03/mirror-mirror-on-wall.html

ஆகா....இவ்வளவு லேசாப் புரிஞ்சிருச்சே. பிரமாதமய்யா. பிரமாதம். மக்களே புரிஞ்சிக்கோங்க. இனிமே பொது இடங்கள்ள இந்தச் சோதனையைச் செஞ்சிருங்க.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/03/blog-post_18.html

மனசு விட்டுச் சொல்றேன். எனக்குக் கண்ணுல தண்ணி வருது. அவசரமா ஆப்பீஸ் வேலையா ஐதராபாத்துல இருக்கேன். வெயிலோ வெயில். அத்தோட..எதையும் வாயில வெக்க முடியல....அவ்வளவு ஒறைப்பு. மிளகாய்ச் சாந்துக்குச் சட்டினீன்னு பேரு. எவ்வளவு நாளைக்குத்தான் பிரியாணியச் சாப்பிட முடியும். பிரியாணி வெறுப்பே வந்துரும் போல இருக்கு. :-( இப்பிடி இருக்குறப்ப...இப்பிடிப் பதிவெல்லாம் நாயமா? சொல்லுங்க கொத்ஸ். நாயமா?

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_19.html

நல்ல பாடல் பிரபா. ஓலங்கள் திரைப்படத்தில்தான் இந்த மெட்டி பாட்டாக முதலில் வந்தது. ஆனால் அந்தப் பாட்டிலும் தெலுங்குப் பாட்டிலும் ஜானகியின் குரல் சற்றுக் கடினமாக இருந்தது. ஆனால் தமிழில் இளையராஜாவின் குரல் மிகப் பொருத்தம். அத்தோடு வரும் ஜானகியின் சந்தங்களும் மிகப் பொருத்தம்.

புலமைப்பித்தம் மிகச் சிறந்த கவிஞர். ஆனால் அவர்.....ம்ம்ம்...சரி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதி.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_19.html

இன்னொரு தகவல். இதே போலத் தேர் கொண்டு சென்றவன் என்ற தமிழ்ப்பாடல் (பி.சுசீலா பாடியது. எனக்குள் ஒருவன் படத்திற்காக) மலையாளத்திலும் உண்டு. நீலக்கருங்குழல் என்று தொடங்கும் என்று நினைக்கிறேன். ஏசுதாசின் குரலில்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/03/weird.html

ஓ! இப்ப இதுதான் டிரெண்டா? நல்ல வியர்டுதான் நீங்க. அமெரிக்கால இருக்குறதால நெர்டுன்னும் சொல்லிக்கிறீங்க.

எதையெடுத்தாலும் வித்யாசமாச் செய்யனும்னு நெனைக்கிறீங்க. சரி. எதை வைக்கனும்னாலும் அப்படித்தானோ? ;-)

அட! தோணுன ஜோக்க ஒடனே சொல்லீரனும். இல்லைன்னா மறந்திரும்ல.

பெருமையாப் பேசுனா ஆனந்தக் கண்ணீர் வருமா? இது கிட்டத்தட்ட எல்லாருக்கும் பொருந்துற மாதிரி இருக்குதே?

அறிமுகம் இல்லாதவங்க கிட்டயும் நல்லாப் பழகுறது நல்ல பழக்கந்தான். ஆனா அறிமுகம் இருக்குறவங்ககிட்ட எப்படிப் பழகுவீங்க?

கடைசி பாயிண்டு எனக்கும் லேசாப் பொருந்தும் போல இருக்குது. ஆனா ரொம்பவும் நெருங்கிய நண்பர்கள் கிட்ட எப்பவும் தொடர்பு இருக்கும்.

ஓ! என்னையும் கூப்பிட்டிருக்கீங்களா? சரி. வாரேன்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/03/ii-38.html

என்னடா நாராயணா! இந்த ஆளு இத்தன கும்மரிச்சம் போட்டிருக்காரு! பெரிய இவன்னு நெனப்போ!

எனக்கு ஒரு சந்தேகம். பத்து லட்சத்துக்குச் செக்கு குடுத்துட்டு...பத்து லட்சம் பேங்குல இல்லைன்னா....அஞ்சு லட்சம் மட்டுமாவது குடுங்கன்னு கேக்க முடியுமா? அதுக்கு இன்னொரு செக் குடுக்கனுமா? இல்ல..இதே செக்கே போதுமா?

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/03/59.html

என்னைக்கு இந்தப் பயகள்ளாம் விளம்பரத்துல நடிக்கிறத விட்டுட்டு....ஒழுங்கா வெளையாடுறாங்களோ....என்னைக்கு இந்திய மக்கள் கிரிக்கெட் மாயையில இருந்து வெளிய வந்து மத்த வெளையாட்டுகளையும் ரசிச்சு ஆதரிக்கிறாங்களோ....அன்னைக்குத்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு மண்டைல அறிவு வந்து ஒழுங்கா வெளையாடுவாங்க.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2007/03/blog-post_17.html

உஷா, மூன்று நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஷபனா ஆஷ்மி சொன்ன அதே செய்தி. ஆனால் புற்றுநோயைப் பற்றி அவர் சொல்லவில்லை. ஆனால் பட்டிக்காடுகளில் சிறிது சூரிய வெளிச்சம் எப்படி பெண்களுக்கு மறுக்கப்படுகிறது என்று கொதித்தார். அவர்கள் அந்தத் துணிகளைத் துவைத்து அவைகளை அடுத்தவர் பார்க்கக் கூடாது என்பதற்காகவே வேறு துணிகளுக்கு அடியில் காயப்போடுவதைச் சொல்லி வருத்தப்பட்டார். இது புற்றுநோய் வரைக்கும் போகும் என்பது வயிற்றெரிச்சலாக இருக்கிறது. இதைத் தீட்டு என்று சொல்வதுதான் தீட்டு. அப்படிச் சொல்கிறவன் தலையில் இடி விழ.

G.Ragavan said...

http://vivaatham.thamizmanam.com/archives/29

ஒரு பெண் எதை அணிய விரும்புகிறாளோ...அதை அணியும் உரிமை அவளுக்கு வேண்டும். அது பர்தாவோ கிழிஞ்ச ஜீன்சோ. ஒரு பெண்ணிற்கு ஆடை பாதுகாப்பு என்று சொல்கிறார்களே...யாரிடமிருந்து பாதுகாப்பு? மற்ற பெண்களிடமிருந்தா? திருநங்கைகளிடமிருந்தா? இல்லையே. ஆண்களிடமிருந்துதானே. தங்கநகையை போட்டுக்கொண்டு போனால் திருடிவிடுவான் என்று பூட்டி வைப்பது வழக்கம். திருடன் இல்லையென்றால் தங்கத்தைப் பூட்டி வைத்தால் என்ன? திறந்து வைத்தால் என்ன? ஆண்கள் உத்தமர்களாய் இருக்கையில் பெண்கள் திறந்து வைத்தாலும் பிரச்சனை இல்லை.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/blog-post_19.html

:-)))))))) என்னங்க இது! உண்மைய இவ்வளவு வெளிப்படையாவா சொல்றது? இதப் படிச்சிட்டு கிரிக்கெட்டுக்காரங்களுக்குத் திடீர்னு மானம் வந்து...நாளைக்கே விளம்பரத்துல நடிக்காம...கோடிக்காசு வாங்காம...வெளையாடிச் செயிச்சிரப் போறாங்க!

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_19.html

// sreesharan said...
//ஓலங்கள் திரைப்படத்தில்தான் இந்த மெட்டி பாட்டாக முதலில் வந்தது. ஆனால் அந்தப் பாட்டிலும் தெலுங்குப் பாட்டிலும் ஜானகியின் குரல் சற்றுக் கடினமாக இருந்தது.//

வாங்க ராகவன் வாங்க...ஜானகியின் குரலை குறை சொல்ல வாய்ப்புக்காக காத்திருந்தது போல் இருக்கிறது. மலையாளிகளின் தேசிய கீதம் ஜானகி பாடிய 'தும்பி வா' பாடல். தேன் ஆற்றில் குளித்தது போன்ற ஒரு உணர்வு இந்த பாடலை கேட்ட பின்பு தோன்றும். இந்த தேன் குரலில் எது கடினமாக இருந்ததோ? அதை கொஞ்சம் விளக்குங்கள்.ஜோடி பாடலை விட 'தும்பி வா' பாடலே இனிமையானது.
நன்றி //

வாங்க ஸ்ரீசரண். அப்படியில்லை நண்பரே. குறிப்பாக தமிழ் வெர்சனில் ஜானகியின் குரல் சாகசம் மிக அபாரம். அத்தனை சங்கதிகளும் தேன். அதே போல மெட்டி ஒலி பாட்டு கேட்டிருக்கின்றீர்களா? அதில் இளையராஜா பாடுவார். ஆனால் ஜானகி அரசாள்வார். வெறும் சந்தங்களை வைத்தே அவர் மாயாஜாலம் செய்திருப்பார். அந்த வகையில் இந்தப் பாட்டைத் தமிழில் கேட்டு விட்டு இந்தப் பாட்டை இன்று மலையாளத்தில் கேட்ட பொழுது ஏதோ ஒரு குறை. ஒருவேளை தரமான ஒலிப்பதில் பிரபாவிற்குப் பாடல்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். அதனால் கூட ஜானகியின் குரல் வேறுமாதிரி தோன்றியிருக்கலாம். மற்றபடி ஜானகி ஒரு திறமையான பாடகி என்பதில் மறுகருத்து கிடையாது. மலையாளத்திலும் தெலுங்கிலும் இந்தப்பதிவின் வழியாகத்தான் நான் பாடலைக் கேட்டேன். ஆனால் தமிழ்ப்பாட்டு...நன்றாக உள்வாங்கியிருப்பது. அதனால் கூட அந்த வேறுபாடு தோன்றியிருக்கலாம்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/03/blog-post_20.html

என்னய்யா இது? என்ன இதுன்னு கேக்குறேன்ல?

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/03/blog-post_18.html

காபி, ஒன்னோட ஆதங்கம் புரியுது. ஆனாலும் அது உண்மைதான்னு நெனைக்கும் போது...என்ன செய்றது.

நான் அவசர வேலையா ஐதராபாத்துல வந்து உக்காந்திருக்கேன். இங்க தமிழ்ல சன்னும் ஜெயாவுந்தான் வருது. ஆனா என்னவோ டீவி பாக்கனும்னே தோண மாட்டேங்குது. இங்கிலீசு தெலுங்குன்னு மாத்தி மாத்திப் பாக்குறேன். ஒவ்வொரு நாள் தூங்குறதுக்கு முன்னாடி ஜெயா டீவியில பழைய பாட்டு போடுறாங்க. அதப் பாத்துட்டுத் தூங்கப் போறது. மத்தபடி சன் டீவியிலோ ஜெயா டீவியிலோ எதுவும் பாக்குறதில்லை. இத்தனைக்கும் ஒரு காலத்துல சன் டீவி இருந்தாப் போதும்னு நெனச்சவங்கதான்.

விஜய சொந்த அண்டர்வேர் போட்டு நடிக்கச் சொல்லனுமா? அவரு மேல ஒனக்கு என்ன கோவம்? அவரு படங்கள ஓட விடாமச் செய்யப் பாக்குறயே!

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/blog-post_19.html

// இலவசக்கொத்தனார் said...
பாப் வூல்மர் மரணம் ஒரு பரிதாபமான சம்பவம். அதனைக் குறிக்கும் இந்த பதிவில் அதற்குண்டான மரியாதை தரவில்லை என்றே நினைக்கிறேன். இது வரை கருத்து சொன்னவர்களுடன் இணைந்து பாராட்டத் தோணவில்லை. மன்னிக்கவும். //

ஐய்யோ! இந்தப் பதிவுக்கு இப்பிடி ஒரு பொருள் இருக்கா? எனக்கு அது உண்மையிலேயே புரியலைங்க. சும்மா திட்டுறதா நெனச்சு நானும் திட்டீட்டேன்.

பால் ஊல்மர் ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2006/08/blog-post.html&cmt=23

காய்கறிக்களுக்கான தமிழ்ப் பெயர். இதில் பல ஊர்களிலும் பலவிதங்களில் வழங்கப்படுகிறது. தெற்கில் நாங்கள் பூசணிக்காய் என்போம். ஆனால் வடதமிழ்நாட்டில் அதை மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் என்கிறார்கள். தடியங்காயைப் பூசணிக்காய் என்கிறார்கள். அதே போல சீனியவரைக்காய் என்று எங்களூர்ப்பக்கம் சொல்வோம். வேறு ஊர்களில் கொத்தவரங்காய் என்கிறார்கள். உருளை, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், மாங்காய், தேங்காய், பட்டாணி, அவரைக்காய் எல்லாம் ஒரே பேர்லதான் எல்லா ஊர்லயும் கெடைக்குது. காலிபிளவர் என்ற பெயர்தான் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் சொல்றாங்க. காலிப்பூன்னு நாங்க வெளையாட்டாச் சொல்வோம். என்னோட நண்பன் விளையாட்டா குஷ்பூன்னு சொல்வான். அதே போல போடோல்னு ஒரு காய் கிடைக்குது பெங்களூர்ல கோவைக்காய் மாதிரி...ஆனா பத்து மட்டங்குக்கும் மேல பெருசா இருக்கும். இது தமிழ்நாட்டுல இருக்கான்னு தெரியலை. அதுக்கு என்ன பேரோ?

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/01/blog-post.html

எவரையும் மதிப்பாகச் சொல்வது சரியே. நீங்க வாங்க போங்க என்று..ஆனால் உயர்வாகச் சொல்வது? ஏதேனும் நல்லது செய்திருந்தால் சொல்லல் சரி. இல்லாமல் வெறும் பிறப்பு, தொழிலின் அடிப்படையில் மட்டும் உயர்வு தாழ்வு சொல்வது மிகத்தவறு. இதைக் கண்டிக்கும் எவரையும் பாராட்டத்தான் வேண்டும்.

எங்கள் தலைமுறையில் இது குறைந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் நிறைய செல்ல வேண்டும்.

G.Ragavan said...

http://gopinath-walker.blogspot.com/2007/03/blog-post_19.html

ஒரே ஒரு கேள்வி. என்னையப் பத்தி பதிவு போட்டிருக்கீங்களா? ஒங்களப் பத்திப் பதிவு போட்டிருக்கீங்களா? அந்த அளவுக்கு ஒற்றுமையோ ஒற்றுமை. :-)
இனிமே நான் வந்து என்னத்த எழுதன்னு தெரியலை. :-))

// உதராணத்திற்கு இந்த மாசம் ஏதவாது பொருள் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டா அடுத்த 2 மாசம் கழிச்சு தான் வாங்குவேன். டக்குன்னு எதுவும் எனக்கு அமையரது இல்லை. //

இதுவும் நல்லதுதான்னு வெச்சிக்கோங்களே. திட்டம் போட்டு..நல்லதா வாங்கலாம்ல.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2006/08/blog-post.html

// `மழை` ஷ்ரேயா(Shreya) said...
ராகவன், 'போடோல்' என்பது புடலங்காய். //

இல்லை ஷ்ரேயா. புடலை தனியாக இருக்கிறது. இது நடுவில் பருத்தும் முனைகளில் சிறுத்தும் இருக்கிறது.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/03/iii.html

சூப்பர் இம்சை அரசி. இன்னைக்குத்தான் பாத்தேன். படக்குன்னு மொதல் ரெண்டு பகுதியையும் படிச்சிட்டேன். நல்லாயிருக்கு. நல்லாயிருக்கு. ரொம்பவே நல்லாயிருக்கு. நாங்கூட நீங்க துர்கா அவனுக்கு அறிவுரை சொல்ற மாதிரி..அவன் மாறுற மாதிரி முடிப்பீங்களோன்னு நெனைச்சேன். இல்லை. நல்லவேளை. இப்பிடி முடிச்சீங்க. நன்றி.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_21.html

பொரிச்ச பாப்கார்ன் மாதிரி இருக்குன்னு சொன்னீங்களே..அது சீனியுருண்டைகள். வாங்கித் தின்னுறாதீங்க. கர்நாடகா, ஆந்திரா தொடங்கி..மேல எல்லா மாநிலங்கள்ளயும் அதத்தான் தர்ராங்க. நெனைக்கைலேயே ஒடம்பு புல்லரிக்குது.

அந்த லூதியானா டிரைவரு...பயங்கர ஆளாயிருப்பாரு போல. நல்லவேளை..அவனை அனுப்பீட்டீங்க.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/03/blog-post.html

அடடே! அப்படியா? அப்ப...நம்பர் டூவான இராமநாதன் யாரோட கால்ல விழனும்னும் சொல்லீருங்க. அதாய்யா...நம்பரு ஒன்னு யாரு?

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/03/blog-post_17.html

வருக வருக. ஜியே வருக. பெங்களூர் மாநகரமே கதிகலங்க வருக. மயில், குயில், ஒயில், கரகம், பரதம், குச்சுப்பிடி (போலீஸ்காரங்க கைல இரூக்கும். கூட்டத்துல பாதுகாப்பு வேணும்ல), கதக்களி ஆகிய ஆட்டங்களும் பாட்டங்களும் மிகப்பெரிய பேனர்களும் தட்டிகளும், பெங்களூர் ஏர்போர்ட் ரோடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது நண்பர் குழாம் தலைமையில் கூடி உங்களை வரவேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருக. வருக. வரும் போது ஷகீராவையும் கூட்டிக்கிட்டு வர்ரீரே. பெரிய ஆளுதான்.

அது சரி. இந்த வியர்டுல நாந்தான் கூப்பிட்டிருக்கேனே. அதுக்குள்ள என்ன அவசரம்? சரி. வேற யாரையாவது கூப்புடுறேன்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/03/blog-post_21.html

கோவி, விளக்குமாறு என்பதால் அது இழிவு அல்ல. அதை இழிவாகச் சொல்வதும் தவறே. இத்தனைக்கும் அது தூய்மைப் படுத்தும் கருவி. அனாலும் ஏன் அது அப்படிப் பார்க்கப் படுகிறது என்றால் அதன் விலை. காசு எக்கச்சக்கமாகக் கொட்டி வாங்கிய வாக்குவம் கிளீனர் மதிப்பாக இருக்கக் காரணம் அதன் விலை. அவ்வளவே.

அத்தோடு...இறைவன் உருவச் சிலைகளை விளக்குமாறு கொண்டு துலக்குவது தவறல்ல. ஆனால் அந்த விளக்குமாற்றைக் கொண்டு வேறெதையும் துலக்காமல் இருந்தால் சரி. ஏனென்றால் அங்கிருக்கும் தூசியை இங்கு கொண்டு வந்து விடக்கூடாது அல்லவா!

G.Ragavan said...

http://unkalnanban.blogspot.com/2007/03/blog-post_21.html

அடடே! பார்த்தேன் ரசித்தேனுக்கு இந்தப் பாடா? அப்ப நினைத்தாலே இனிக்கும், குடும்பம் ஒரு கதம்பம், ஒரு வீடு இரு வாசல், ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஒரு ஓடை நதியாகிறது, கிழக்குச் சீமையிலே, தவமாய்த் தவமிருந்து இன்னும் எத்தனையெத்தனையோ படங்கள் இருக்கே...அதுக்கெல்லாம் என்ன செய்வீங்க? ஆனா தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு அவங்களுக்கு எதுக்கு பயந்தீங்க? எனக்கு இன்னமும் புரியலை. எதுக்கு கொல்ட்டின்னு சொல்லனும்? அப்ப ஒங்களுக்கு அவங்க கூட ஜாலியாப் பேசத் தெரியலையா? ஐயோ! இவ்வளவு கேள்வி கேக்குறேனே!

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/03/1.html

பிரபா, இந்தப் புத்தகத்தை நானும் வாங்கியிருந்தேன். நிறைய சுவையான சம்பவங்கள் நிறைந்தது. இதே போல ஆனந்த விகடனின் "நானும் ஒரு ரசிகன்" என்ற தலைப்பில் மெல்லிசை மன்னர் எழுதிய தொடரும் சிறப்பு. முன்பு சென்னைத் தொலைக்காட்சியில் மெல்லிசை மன்னர் ஒரு இசைத் தொடர் நிகழ்ச்சி நடத்தினார். அந்தத் தொடரின் வீசிடி, அல்லது டிவிடி கிடைக்குமா என்று தெரியவில்லை. :-(

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/03/blog-post_21.html

லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவில் இரண்டு பகுதிகள்.

1. அவர் சொல்லும் கருத்து
2. அவர் சொல்லிய விதம்

அவர் சொல்லிய கருத்தில் நான் ஒத்துப் போகிறேன். ஆனால் அவர் சொல்லிய விதம் தவறு என்பதில் மறுகருத்து இல்லை.

இங்கு இன்னொன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் சொல்லிய விதத்தை இத்தனை முறை போஸ்ட்மார்டம் செய்யும் பதிவுகள் வருவதுண்டு. ஆனால் அவர் சொல்லும் கருத்துகளை வைத்து?

லிவிங் ஸ்மைல் வித்யா போன்றவர்கள் சொல்லும் முறை நிச்சயம் மாற வேண்டும். ஆனால் இப்பொழுது தொடங்கியிருக்கிறது. விரைவில் மாறும் என்று நம்புவோம். ஆனால் அவர்கள் தொடங்கும் போதே வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்று நீட்டிக்கொண்டு வருவதுதான் நடக்கிறது. பொதுவில் திருநங்கை என்றால் எல்லாரும் என்ன செய்வார்களோ...அதுதான்...விலக்கி வைக்கப்படுகின்றவனின் சொற்கள் இப்படித்தான் இருக்கும். சேர்த்துக்கொள்ளும் வரை.

லிவிங் ஸ்மைல் வித்யா, இது உங்களுக்கு. பார்த்தீர்களா...நீங்கள் சொன்ன கருத்தை விட்டு விட்டு சொல்லிய விதத்தை எவ்வளவு எளிதாக தாக்க முடிகிறது. ஆகையால் சொல்லும் கருத்தை நாகரீகமாக சொல்ல முயலுங்கள். இது என் கோரிக்கை. குறிப்பிட்ட நடிகை பலருடன் படுத்தாரா இல்லையா என்பதல்ல பிரச்சனை. அது அவரது தனி மனித சுதந்திரம். அதை நாம் விமர்சிக்கலாகாது. ஆனால் தொடர் சொல்லும் கருத்தை விமர்சிக்கலாம். சொல்ல வருவதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/03/blog-post_21.html

வாங்க வாங்க. ஒங்களையும் ஜோதியில இழுத்தாச்சு. :-)

நல்ல வியர்டுதாங்க நீங்க. போனஸ் எல்லாம் வெளிய சொல்வாங்களோ! பாவம் அவர். :-))))

இப்படித்தான் ஒரு பெரியவர்...எங்க ஊர்ல என்னோட பக்கத்துல வந்து உக்காந்தாரு. என்ன தம்பி...என்ன பண்றீங்கன்னாரு. சொன்னேன். எடுத்த எடுப்புலயே இவ்வளவு இருக்குமா சம்பளம்னு கேட்டாரு. அத விடக் கூடன்னு சொன்னேன். அவர் ஏற்கனவே சொன்னதுல கொஞ்சத்தக் கூட்டி...இவ்வளவு இருக்குமான்னு திரும்பக் கேட்டாரு. இல்ல..இதவிடக் கூடன்னு சொன்னேன். இப்பிடியே அவரு கேக்கக் கேக்க...கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே. என்னத்துக்குக் கேட்டாரோ!

என்னது? கருப்பு முக்காடு போட்ட உருவமா? அடேங்கப்பா! நல்லாவே பயந்திருக்கீங்க.

சரியா அஞ்சு பேரைக் கூப்பிட்டிருக்கீங்க. அவங்களும் வந்து கலக்குவாங்கன்னு நம்புவோமாக.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/03/40.html

// SP.VR. சுப்பையா said...
செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
- குறள் எண் 569

போர் வருவதற்கு முன்பே தனக்குப் பாதுகாப்பாக
ஒரு அரண் செய்து கொள்ளாத அரசன்,
போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பு
இல்லாமையால் அஞ்சி விரந்து கெடுவான் //

மிகச்சரியாக ஒரு பாடலைச் சொன்னீர்கள் ஐயா. மிக அழகான குறள். அதற்குப் பொருத்தமாக ஒரு அழகான விளக்கமும் கூட. மிக அருமை.

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
நகைச்சுவையுடன் புரியவைத்துள்ளீர்கள்; இனிமேல் வரும் பின்னூட்டங்களில் மேலும் உதாரணங்களை எதிர்பார்க்கிறேன். //

நானும் எதிர்பார்க்கிறேன் ஐயா. மக்கள் பழைய பாடல்களில் இருந்து எடுத்துக்காட்டுகளைச் சொல்வது நமக்கும் புதிய தகவல்களைக் கொடுக்கிறது.

// Anonymous said...
Anna ..........Arumai....

Arumaiyilum Arumai.. //

என்னை அண்ணா என்றழைத்த உடன்பிறப்பே! பாராட்டுக்கு நன்றி. தம்பி என்றழைப்பேனா? தங்கை என்றழைப்பேனா?

// Kovai Mani - கோவை மணி said...
அழகான, அருமையான பதிவு.
மெல்லிய நகைச்சுவை கலந்து சிறப்பாக உள்ளது. //

நன்றி கோவை மணி. இப்பொழுது செரு என்பது எல்லாருக்கும் புரிந்திருக்கும் அல்லவா. அதற்காகத்தான் இப்படி எழுதுவது.

// Anonymous said...
Thalayanangalathu "seru" vendra pandian nedunchezhian - Title of a Pandian King

Sorry for not in Tamil.

Thanks
Sathya //

ரொம்பச் சரி சத்யா. தலையாணங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். ஆகா! எப்படி மறந்தேன் இந்தப் பெயரை. அன்னைக்குச் செரு என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தேன். இன்று தெரிந்து விட்டது.

// கோவி.கண்ணன் said...
ஜிரா

செருப்பில் தொடங்கி விளக்கமாறு என்று சுவைபட எழுதிய காளமேகப் புலவர் நாகையைச் சேர்ந்தவர். அவர்பற்றி பல சுவையான கதைகளை கேள்விப் பட்டு இருக்கிறேன். //

இல்லை கோவி. காவி நாகையைச் சேர்ந்தவர் இல்லை. திருவரங்கத்தில் பிறந்த வைணவர். அவர் சைவராக மதம் மாறியவர். அதை வைத்து நகைச்சுவையாக நான் எழுதிய கதை இங்கே. http://gragavan.blogspot.com/2005/07/blog-post.html

// செந்தில் - கவுண்டர் வழி செருவை நகைச்சுவையுடன் விளக்கியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள் //

நன்றி கோவி. நீங்களும் குமரனும் மாற்றுச் சொல் அறிமுகம் கொடுக்கின்றீர்கள். அந்தத் தொண்டுக்கு நடுவில் சில பழைய சொற்களை மீண்டும் அறிமுகப்படுத்துகிறேன்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/03/blog-post_7698.html

சுறுசுறுப்புன்னு சொன்னீங்க. ஆனா இவ்வளவு சுறுசுறுப்புன்னு இப்பத்தான புரியுது. பிரமாதம்.

சிங்கப்பூரில் இருந்து கொண்டு மீனில்லாமல் சாப்பிட முடியுமா! எப்படிங்க முடியுது! அடேங்கப்பா! உண்மையிலேயே கஷ்டந்தான். சிங்கப்பூரில் எங்கு போனாலும் அடிக்கும் அந்த சீனவாடை உங்களைத் துன்புறுத்தவில்லையா? இருந்தாலும் சிங்கையில் கிடைக்கும் தாய்லாந்து இளநீர் இருந்தால் மீன் கூட வேண்டாம் என்று சொல்லி விடுவேன். என்னை உண்மையிலேயே அடிமையாக்கி விட்டது அந்த இளநீர். ஆகா! கிடைக்குமா! கிடைக்குமா!

சரியான அஞ்சு பேரத்தான் கூப்பிட்டிருக்கீங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு பாக்குறேன்.

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2007/03/blog-post_21.html

:-) முற்றிலும் குழலி வகை இல்லாத குழலி பதிவு. நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவைப் படிப்பது போன்ற உணர்வு. வேலைப்பளுவா?

என்னுடைய கருத்தையும் கொத்தனாரின் பதிவில் சொல்லியிருக்கிறேன். அது இங்கும் பொருந்தும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/03/blog-post_20.html

வாப்பா விசித்ரகுப்தா..இன்னைக்குக் காலைல நான் பதிவு போட்டேன். இப்பப் பாத்தா நீ போட்டுருக்க. கலக்குற போ. ஆனாலும் ஜியோட கருத்துதான் என்னோட கருத்தும். :-) விசித்திரம்னாலே அபூர்வமா இருக்குறது. இப்படிச் சகட்டுமேனிக்கு விசித்திரங்களா அள்ளி விட்டா எப்படி?

நாங்கள்ளாம் சிவாஜி, எம்.ஜி.ஆர்னு சொல்வோம். நீ மாத்திச் சொல்ற...பழகுன தோசத்துக்கு மன்னிக்கிறேன்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/03/blog-post_18.html

// இலவசக்கொத்தனார் said...
கண்ணுல தண்ணி காரத்துனால வருதா அல்லது அழுகாச்சியா? மயிலார் தப்பா நினைச்சு நம்மளை கொத்திடப் போறார். உங்களுக்கு இந்தியாவிலேயே இம்புட்டு கஷ்டமா? ஒரு இட்லி தோசை கூடவா கிடைக்கலை? அடப்பாவமே. //

இட்லி தோசையா! இப்பிடி வயித்தெரிச்சல கெளப்பாதீரும். அரைச்சு இட்லி தோசை சுடுறது நம்ம வழக்கம். கரைச்சுச் சுடுறது இங்கப் பழக்கம். :-( ஒரு நல்ல சைவ ஓட்டல்ல போய் இட்லி சாப்டேன். நெய்யில ஊறுன இட்லி தலையில அண்டா வெண்ணையக் கொட்டித் தந்தாங்க. நான் என்ன செய்வேன்?

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/03/blog-post.html

விசித்ரவீர்யமாலன்னு பட்டம் கொடுக்கலாம் போல இருக்கே. கடைசிக் கருத்தத் தவிர மத்ததெல்லாம் எனக்கும் பொருந்துது.

எல்லாரும் இளையராஜா பிடிக்கும்னு சொன்னப்போ...எனக்கு மெல்லிசை மன்னர் பிடிச்சிருந்தது. இத்தனைக்கும் அப்போ அவர் ஃபீல்டுலயே இல்லை. அப்பல்லாம் இளையராஜாவை மாத்த வேற ஆள் வருவார்னு படிக்கும் போதே....சின்னப்பவே...சண்டை போடுவேன். ஏன்னு தெரியாது. இளையரஜா இசை எனக்கும் பிடிக்கும். ஆனாலும் சண்டை போடுவேன். அதே மாதிரி ஏ.ஆர்.ரகுமான் வந்தப்போ...அவருக்கு என்னோட முழுமையான நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து இளையராஜா ரசிகர்களான நண்பர்களோடு சண்டை போட்டிருக்கேன். நாளாக ஆக..அவங்களும் என்னோட பக்கம் வந்தது வேற கதை. அதே மாதிரி..எல்லாரும் ஒன்னு பிடிச்சிருக்குன்னு சொன்னா...அது எனக்கும் பிடிச்சிருக்குன்னு அவ்வளவு லேசா ஒத்துக்கிற மாட்டேன். ஆனா இப்ப அதக் கொறச்சிருக்கேன். ஆகையால நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது.

நல்ல ஆளுங்களாத்தான் கூப்பிட்டிருக்கீங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/03/blog-post_1149.html

வாங்கய்யா கொத்தனார் ஐயா...
வரவேற்க வந்தோமய்யா
நீங்களும் கூட்டணியில் கலந்ததுக்கு!!!

இத்தன பொருட்களை வாங்கி வெச்சி...சும்மாப் போட்டு வெச்சிருக்கீங்களா! அடக்கடவுளே! அதுனால எல்லாரும் ஒங்ககிட்ட கேட்டுட்டுதான் வாங்குறாங்களா? சரி. அவங்க பொழைச்சாங்க. நீங்களுந்தான்.

அஞ்சுன்னு சொல்லீட்டு அஞ்சுற மாதிரி இத்தனை அடுக்கீருக்கீங்க. ஒரு தகவல் புரிஞ்சது. டிரெட் மில்லுல தினமும் நடக்குறீங்க..ஓடுறீங்க...ஓடிக்கிட்டே நடக்குறீங்க..நடந்துகிட்டே ஓடுறீங்க..சரியா?

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/03/blog-post_21.html

சமீபத்தில் டிவிடிகள் விலை குறைந்ததால் வாங்கிய டிவிடியில் மீராவும் ஒன்று. நாற்பது ரூபாய்க்கு ஒரிஜினல் டிவிடி கிடைத்தது. படத்தை ஓடவிட்டேன். அப்பப்பா! எத்தனை பாடல்கள். அத்தனையும் கண்ணன் பாட்டுகள். கண்ணன் அடியவர் எவராயினும் அந்த ஒரு படப் பாட்டுகள் போதும். அத்தனை பாட்டுகள். அதிலும் மதுராவிலேயே சென்று படம் பிடித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். சமீபத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரா சென்றிருந்த பொழுது அங்கு வசதிகள் மிகக் குறைவாக இருப்பதைக் கண்டு....ஒழுங்கான விளக்குகள் கூட இல்லை. மிகப்பெரிய கிராமமாக இருக்கிறது மதுரா. அந்தக்காலத்தில் எப்படி அத்தனை தொலைவு சென்று தங்கிப் படமெடுத்தார்களோ என்று நினைத்துப் பார்த்தால்...அப்பப்பா! நீங்களும் அந்தப் படத்திலிருந்து பாடலைக் கொடுத்திருகின்றீர்கள்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/5.html

தேவ தேவ தேவாதி தேவ தேவப்பிரிய தேவாதி தேவே! பதிவைப் போட்டு நம்ம ஊர் மானத்தைக் கப்பல் ஏற்றிய (அல்லது இறக்கிய) உம்மைக் கண்டபடி உணர்ச்சி வசப்பட்டு பாராட்டத் தோன்றுகிறது. ஆனால்....நாதழுதழுப்பதால் பேச்சு வரவில்லை. ஆனாலும் கருத்தைச் சொல்லியே ஆக வேண்டுமல்லவா. இதோ வருகிறேன்.

1. ஒம்ம நக்கலையும் நையாண்டியையுந்தான் பதிவுலகமே அறியுமே. நம்ம மக்காக்கள் இதத் தூத்துக்குடித் திமிருலே-ம்பாங்க. அதெல்லாம் நமக்கு சர்வ சாதாரணம். இல்லையா?

2. கூட்டத்தக் கண்டாத்தானய்யா ஊட்டம் வரனம். இனிமே கூட்டத்துல குமிஞ்சிருங்க. அப்புறம் பாருங்க...என்ன நடக்குதுன்னு.

3. சினிமாக்கள். இதுல ஒரு விஷயம் சொல்லனும். சின்ன வயசுல நடந்தது. மூனாவது நாலாவது படிக்கிறப்போ இருக்கும். அப்ப தூத்துக்குடியில ஜோசப்புன்னு ஒரு தேட்டர் இருந்தது. ஊருல இருந்து நம்ம மச்சினரு வந்திருந்தாரு. வயசுல என்னைய விட மூத்தவரு. ராகவா...வால. சைக்கிள்ள உக்காருன்னு சொன்னாரு. உக்காந்தேன். நேரே ஜோசப்பு. ஏதோ தெலுங்கு டப்பிங் மாயாஜாலப்படம். அதுல தலைவிதிப்படிதான் நடக்கும்னு ஒரு வசனம். அப்படி மனப்பாடமா பதிஞ்சிருச்சு. வீட்டுக்கு வந்தா...சொல்லாமக் கொள்ளாமப் போனதுக்கு வசவு. இதெல்லாம் ஜகஜந்தானே! இப்பல்லாம் டிவிடி வெல கொறஞ்சிட்டதால டீவீடிகளா வாங்கிக் குவிக்கிறது. ஐதராபாத் வந்திருக்கிறதால நாலு தெலுங்குப் படம் வாங்கீருக்கேன். தான வீர சூர கர்ணா, மங்கமாவாரி மனவ்வாரு, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, நர்த்தனஷாலா அப்படீன்னு.

4.5. ஊர் சுத்துறது ரொம்பவும் பிடிக்கும். பல நாடுகளுக்கும் போகனும். பல மொழிகளைக் கேக்கனும்னு ஆசை. நிறைவேறிக்கிட்டுதான் இருக்கு.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_19.html

// கானா பிரபா said...
வணக்கம் வைசா

இதே படத்தில் வரும் மலரே என்னென்ன கோபம் பாடல் கூட சங்கர் கணேஷ் கன்னடத்தில் இருந்து சுட்டதாம்;-)

இளையராஜா பாடும் "சங்கத்தில்" பாடலை மட்டும் ராஜா இசையமைத்துக் கொடுத்ததாகவும் ஒரு தகவல். //

தவறான தகவல் பிரபா. ஆட்டோராஜாவிலேயே இன்னொரு படம் உண்டு. அதற்குத்தான் சங்கர்-கணேஷ் இசை. இந்த விஜயகாந்த் ஆட்டோராஜாவிற்கு இளையராஜாதான் இசை. மலரே என்னென்ன கோபம்..கன்னடத்தில் அவர் பயன்படுத்தியதுதான்.

சங்கர்-கணேஷின் ஆட்டோராஜாவில் ஒரு இனிமையான பாலு-ஜானகி இணைப்பாடல் உண்டு. "சந்தனப் புன்னகை சிந்திடும் மல்லிகை மந்திர முல்லைகள் தானோ..தேன் மழை பொழியும்...இதழ்களில் வழியும்...விடிந்ததும் காய்ந்துவிடும்" என்ற பாடல் அது.

G.Ragavan said...

http://tamizhachchikal.blogspot.com/2007/03/blog-post_22.html

அடடா! ஒங்க வலைப்பூவத் தேடித் தேடிப் பாத்தேன். ஏன்னு கேக்குறீங்களா? இதுக்கு அழைக்கத்தான். ஆனா உண்மையாவே கண்டுபிடிக்க முடியலை. மன்னிச்சிக்கிருங்க.

நல்ல ஆளுதான் நீங்க. செருப்பு காணாமப் போயிருச்சுன்னா....கால்ல கல்லு குத்தாதோ! ஆனா நம்ப முடியுது. ஏன்னா..இப்படித்தான் தூத்துக்குடியில பள்ளிக்கூடத்துல இருந்து நடந்து வந்துக்கிட்டிருந்தேன். ரொம்ப யோசிப்பேன். யோசிச்சுக்கிட்டே நடந்து வந்தா....எதுக்கோ நின்னுக்கிட்டே யோசிச்சிருக்கேன். என்ன யோசிச்சேன்னு எனக்கு நினைவில்லை. திடீர்னு ஒருத்தன்..என்னப்பா எவ்வளவு நேரம் அவங்க ரெண்டு பேரையும் பாப்பேன்னு கேட்டாரு. என்னடான்னு பாத்தா...ஒரு பழைய படப் போஸ்டர். எம்.ஜியாரும் ஜெயலலிதாவும் கன்னத்தோட கன்னம் வெச்சு கொஞ்சிக்கிட்டிருக்காங்க. அதக்கூடப் பாக்காம நின்னுக்கிட்டு என்னவோ யோசிசிருக்கேன். அவரு "பாத்தா ரொம்ப அழகாயிருக்குல்ல" அப்படீன்னு கேட்டாரு. எனக்கு ரொம்ப வெக்கமாப் போச்சு. வீட்டுக்கு விடுவிடுன்னு வந்துட்டேன்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/03/weird.html

அடேங்கப்பா! இப்பிடி அநியாயத்துக்கு weirdஆ இருக்கீரே! மனைவிகளைப் பத்திரமாகப் பாத்துக்கோங்க.

நீங்க பேச்சாளியா பெருச்சாளியான்னு எங்களுக்குத் தெரியாதா? அட்ட்ட்ட்ட்ட்டேங்கப்பா!!!!!!

கார் மேல நீங்க பைத்தியமா இருக்குறத உங்க படத்தப் பாத்தே பலர் தெரிஞ்சிக்கிட்டாங்க. நானுந்தான். நல்ல படமாத்தான் போட்டிருக்கீங்க. கொஞ்சம் திருநீறு பொட்டு வெச்சாப் போதும்....அப்படியே தஞ்சாவூருதாங்க.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/03/vsk.html

உங்கள் புதுப்பெயர் பொலிவாக அமைய முருகப்பெருமானை வணங்குகிறேன்.

இதுல இன்னொரு குழப்பம் வந்தது. எஸ்.கே அப்படீன்னு ஒருத்தர் வந்து பதிவு போடுறாரு. நான் கொழம்பிப் போய்த்தான் இருந்தேன். நல்லவேளை. VSKஆகீட்டீங்க. V for Victory.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/03/blog-post_22.html

மாட்டிக்கிட்டீங்களா...நல்லா மாட்டிக்கிட்டீங்களா...வேணும்..வேணும். நல்லா வேணும். :-)

கவிதை...ஆனா பாருங்க...அது திருப்புகழ் விளக்கமெல்லாம் சொல்லும் போது உதவுதே. காரணமில்லாமல் காரியமில்லைங்குறது சரியாத்தான இருக்கு. சரி. அடுத்த திருப்புகழ் எப்போ? காத்திருக்கிறோம்.

பழைய பாட்டைக் கண்டுபிடிச்சிருவீங்களா? அட...அத வெச்சே ஒரு பதிவு போடக்கூடாதாய்யா...நாங்களும் தெரிஞ்சிக்குவோம்ல.

காதலியின் பிறந்தநாள் வாழ்த்து....தப்பில்லை. மனதில் உள்ளதைச் சொல்லீட்டீங்க. சரிதான். முதல் காதல் யாராலும் மறக்க முடியாதுன்னு சொல்வாங்க. நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?

G.Ragavan said...

http://blogintamil.blogspot.com/2007/03/blog-post_6323.html

வா வாத்யாரே பதிவாண்ட
நீ வராங்காட்டி வுடமாட்டேன்னு இழுத்திட்டு வந்துட்டாங்களா? நல்லதுதான்.

குழுப்பூக்களைப் பத்திச் சொல்லியிருக்கீங்க. புழுப்பூக்களுக்கு நடுவுல குழுப்பூக்கள் மலர்ந்து நல்லதைச் செய்கிறதுன்னா நல்லதுதானே.

நான் பங்குபெறும் குழுப்பூக்களும் இங்கு குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.

சொல்லொரு சொல், முருகனருள், தமிழ்ச்சங்கம் என்று மூன்று பூக்கள். தமிழுக்கும் தமிழ்க்கடவுளுக்கும் உயர்வு செய்யும் இந்தக் குழுக்களில் இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். மற்ற வலைக்குழுப்பூக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். செய்வன சிறந்தோங்க வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/

ஆமா...என்னையப் பாத்திருக்கியே...அப்ப என்ன நெனச்சே? அதைச் சொல்லு. அப்புறம் நீ எவ்வளவு வியர்டூன்னு சொல்றேன்.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/03/blog-post.html

// Anonymous said...
// அப்படியே என்னை மாதிரியே இருக்கீங்க ராகவன் :))))//


அப்ப ரெண்டு பேரும் ஒரே ஆளா .. ரெண்டு பேரும் பெங்களூருன்ன உடனே சம்சயம் வந்தது

சும்மா லுல்லுவாங்காட்டிக்கி //

வாங்க அனானி வாங்க. இம்சை அரசி எவ்வளவு பெரியவங்க தெரியுமா? வயசுல இல்லை.....அறிவில...எழுத்துல...அவங்க கதைகள் பத்திரிகைகள்ள எல்லாம் வந்திருக்கு. அவங்க வேற நான் வேற. அவங்க அளவுக்கு என்னால எழுத முடியாது. எங்க ரெண்டு பேரையும் பெங்களூர் வலைப்பதிவர்கள் சிலர் நேருல பாத்திருக்காங்க..ஒரே நேரத்துல..நீங்களும் அப்படியே பொறப்பட்டு பெங்களூர் வந்தீங்கன்னா...ஒங்க ஐயப்பாட்டைத் தீத்து வெச்சு...நீங்க குடுக்குற ஆயிரம் பொற்காசுகளை வாங்கிக்கிறோம். ஆளுக்கு ஐநூறா நானும் இம்சையரசியும் பிரிச்சிக்கிறோம். சரியா?

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/03/blog-post_21.html

// Anonymous said...
ராகவன், நான் முகம் காண்பித்து எழுதாதையும் தாக்குவீர்கள் என நினைத்தேன்...ஹாஹஹா...நன்றி //

:-)நண்பரே...நீங்கள் முகம் காட்டி எழுதியிருந்தாலும்....இதேதான். :-))) ஆனால் முகத்தை காட்டவில்லை என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் ;-)

// பல பஸ்டாண்டுகளிலும், இருளான பகுதிகளிலும் இன்னும் பல ஆண்கள் இவர்களால் சங்கடங்களுக்கு உள்ளாகிறார்கள். மேலும் கடைகளில் தின வசூல், மற்றும் வம்படியாக நெளிய வைத்து காசு பிடுங்குதல் மும்பை போன்ற இடங்களில் நடக்காததா என்ன?. சினிமாவிலோ அல்லது டிவியிலோ இல்லாததை ஒன்றும் காண்பிக்கவில்லையே.. //

உண்மைதாங்க. மறுக்க முடியாத உண்மை. ஆனால் ஏன்? ஒரு வேலைக்கு அவர்களால் போக முடியுமா? அந்த நிலைக்கு வருவதற்கு லிவிங் ஸ்மைல் வித்யா பட்ட கஷ்டங்களைத்தான் சொன்னாரே. அட...அவர்களால் பள்ளிக்கூடங்களில் மற்றவர்களோடு சேர்ந்து படிக்கத்தான் முடியுமா? படிக்க விட மாட்டீர்கள்! வேலைக்குப் போக விட மாட்டீர்கள்! ரேஷன்கார்டு தர மாட்டீர்கள்! பாஸ்போர்ட் கிடையாது! பெண் என்றும் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள்! அட என்னதானய்யா செய்வது? பசி அவர்களுக்கும் வரும். ஒரு அரவாணி அரவாணியாகவே மற்றவர்களோடு பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று படித்து பட்டம் வாங்கி வேலைக்கும் செல்வதை இயல்பாக ஏற்றுக்கொண்டு விட்டு...அதை நாட்டில் நிகழ்த்திக்காட்டி விட்டு...இத்தனை இருந்தும் இப்படிச் செய்கிறாயே என்று கேளுங்கள். நானும் உங்களோடு வருகிறேன். அதை விட்டு விட்டு...

// மற்றபடி சாதி வழக்கங்களையும், ஆண்-பெண் வில்லன் - வில்லித்தனங்களையும் நாம் (என்ன சாதியானலும், நாம் வில்லன்/வில்லியாக இல்லாவிடினும்) டிவி, சினிமாவில் ஏற்றுக்கொள்ளும் போது திருநங்கைகள் ஏன் அவர்களது சக திருநங்கைகளது செய்கைகளை ஏற்காது தனிமனித தாக்குதல்?.....இதனைப் பார்க்கும் போது கருத்தை விட விளம்பரம் அதிகமாக தெரிகிறது, மற்றும் வக்ரம் வெளிவருகிறது...அஷ்டே. //

திருநங்கைகளைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளாமல் விலக்கி வைத்திருக்கும் பண்பாட்டில் சிறந்த ஒரு சமுதாயம்......விமர்சனம் செய்யும் அருகதையை இழந்து விட்டது. அஷ்டே! அர்த்தாயித்தா!

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/03/031.html

தேவரின் தெய்வம் திரைப்படத்தில் அத்தனை பாடல்களும் மிகச்சிறப்பு. திருப்பரங்குன்றத்திற்கு பெங்களூர் ரமணியம்மாளின் குரலில் பாடல். மிக அருமை. பாடலைக் கேட்கையிலும் பார்க்கையிலும் நினைக்கையிலும் ஒரு திருமண வீட்டிற்குச் சென்ற நிறைவைக் கொடுக்கும்.

தங்கம் வெள்ளி பவழம் முத்து தவழும் தெய்வானை
வாங்கிக் கொண்டாள் தாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை

குடும்ப வாழ்க்கையை எத்தனை அழகாக எளிமையாகக் கவிதையில் வைத்தார் கவியரசர்.

இந்தப் படத்திற்குப் பாடல்களை இயற்றும் பொழுது கவியரசரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி. இது அவரே எழுதி நான் படித்தது. எந்த நூலில் என்று மறந்து விட்டேன்.

கவியரசரின் மகளுக்குத் திருமணம் வைத்து விட்டார். திடீர் பணமுடை. திகைத்துப் போனார். அப்பொழுது வந்தது உதவி சாண்டோ சின்னப்பாத்தேவரின் உருவில்....தெய்வம் படத்திற்காக பாடல் எழுதக் கேட்டு...வேண்டிய பணமும் கிடைத்தது. அப்பொழுது சொன்னாராம்..."கண்ணதாசனுக்குத் தேவை என்ற பொழுது கண்ணன் வருவான் என நினைத்தேன்...ஆனால் முருகன் வந்து திருமணத்தை நடத்தி வைத்து விட்டான். அதுவும் தமிழை வாங்கிக் கொண்டு..."

இந்தப் பக்குவந்தான் அவரைப் பின்னாளில்
"கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்" என்றும் எழுத வைத்தது என்றால் மிகையில்லை.

அருமையானதொரு பாடலை...முருகன் அன்பர்கள் உளமுருகி கொண்டாடி மகிழும் பாடலை அறிமுகப்படுத்தியிருக்கின்றீர்கள் குமரன். மிக நன்றி.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/03/blog-post.html

சுவாரசியமான கொண்டாட்டம். படிக்கும் பொழுதே ஒரு மகிழ்ச்சி பொங்குகிறது. நல்ல குடும்பச்சண்டை போங்கள். :-) நல்ல ரசமாகச் சொல்லியிருக்கின்றீர்கள் ரவி.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/blog-post_26.html

தேவைதான்னு முக்குல ஒருத்தன் சொல்றான்...என்னய்யா கேள்வி இது? இப்பிடி ஒரு கேள்வியக் கேட்டே நட்சத்திர வாரத்தத் தொடங்கீட்டீரு. ஒமக்கென்னவே...கலக்கல் மன்னன். என்னுடைய வாழ்த்துகள். இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள். அடுத்த பின்னூட்டம் நாளைக்கு நைட்டுதான். கொஞ்சம் வேலை. வந்து பேசிக்கிறேன்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/1.html

நல்லாத் தொடங்கீருக்கீருய்யா! இண்டக்குசன் முடிஞ்சதும் என்னாச்சு? அடுத்த பதிவைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிறேன்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/2.html

கொஞ்சம் டல்லா இருந்த என்னைய இன்னைக்குச் சிரிக்க வெச்சது இந்தப் பதிவு. :-) நீங்க சொல்றதென்னவோ உண்மைங்க. ஆணி பிடுங்குறதுன்னா சும்மாவா? அடேங்கப்பா!

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/03/191.html

நாயனா ஏமி அர்ந்தக்காவட்லேது நாயனா!

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/blog-post_4041.html

அயிருச்சே ஆயிருச்சே...பதினாறு வயசுக்கு மேலயும் ஆயிருச்சே!

பெனாத்தலாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_9421.html

ஆண்களின் சமையல்....இதுக்கு என்ன சொல்றது? எனக்கு நல்லாவே சமைக்க வரும். அது பெண்களுக்கு மட்டுமான வேலைன்னு ஒத்துக்கிற முடியாது. பொதுவில் ஒரு மனிதப்பிறவி..தன் உயிர் வாழ்க்கைக்குத் தேவையான எதையும் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். உணவு ஈட்டல் மட்டுமல்ல..உணவு ஆக்கலும் இதில் அடங்கும். இதுதான் என்னுடைய கருத்து.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/03/blog-post_27.html

என்னங்க இது! முட்டைய உருளைக்கிழங்கு பட்டாணியோடல்லாம் கூட்டணி சேக்குறீங்க? இப்பல்லாம் முட்டையோட மஞ்சக்கருவ மட்டும் கலங்கால அலுங்காமக் குலுங்காமப் பிரிக்க பாத்திரங்க இருக்கு. அதப்பயன்படுத்திப் பாருங்க.

இந்த முட்டையோட வெள்ளைக்கருவ வெச்சி ஒரு லேசு ரெசிப்பி இருக்குய்யா....வடகம் அல்லது அப்பளத்தை எண்ணெய் இல்லாம பொரிச்சிக்கனும். மைக்ரோவேவ்ல அல்லது அதுக்குன்னே இப்ப வருதே. வேற வழியில்லாம எண்ணெய்ல பொரிச்சிக்கிட்டாலும் சரி.

அப்பளம்னா துண்டு துண்டா ஒடச்சிப் பொரிச்சிக்கோங்க. அடுப்புல வாணலிய வெச்சி......வெங்காயம் பச்சை மெளகாய் மட்டும் நறுக்கிப் போட்டு...எண்ணெய்லதாங்க..கொஞ்சமா விட்டுக்கோங்க....அதுல முட்டை வெள்ளைய ஒடச்சு ஊத்துங்க. மஞ்சக்கரு பிடிச்சவங்க அதையும் போட்டுக்கலாம். வெள்ளைக்கரு வேகும் முன்னாடியே பொரிச்சி வெச்ச அப்பளம் வடகமெல்லாம் அதுல கலந்து கிண்டுங்க. நல்லா வெந்ததும்...லேசா உப்புத்தூவி எறக்குங்க. அம்புட்டுதாங்க. அள்ளிக்கிட்டுப் போகும். பச்சை மெளகாய் பிடிக்காதவங்க....மெளகுப்பொடியும் போட்டுக்கலாம்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/03/blog-post.html

குமரன், உங்களையும் இதுல இழுத்தாச்சு. ம்ம்ம்...நல்லாத்தான் இருக்குது உங்க தனித்துவங்கள். வீட்டுல சரியாத்தான் சொல்லியிருப்பாங்க.

உங்ககிட்ட ரொம்ப நாளா சொல்லனும்னு நெனச்சது. இன்னைக்குச் சொல்லீர்ரேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ல இருக்குற திருப்புகழ் மண்டபத்தைப் பாக்கும் போதெல்லாம் ஒங்க நெனைவுதான் வரும். அங்கதான வாரியார் கிட்ட நீங்க பரிசு வாங்குனீங்க. :-) பல முறை அந்தக் கோயிலுக்குப் போயிருக்கேன். அந்த நினைவு தவிர்க்க முடியாதது.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/03/blog-post.html

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குமரன். நீடு வாழ்க. பீடு வாழ்க.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/3.html

அடங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்....என்னங்க இது...இந்த மொபைல்ல இந்த மாதிரி பட்டப் பேரு...செல்லப் பேரெல்ல்லாம் வெக்கக் கூடாதுய்யா! பிசினசு கார்டு அனுப்பும் போது அதுவும் கூடப் போகும். ஆனா....ஒரு நல்ல மேனேஜரா இருந்திருந்தா நீங்க ஏன் அப்படிக் கூப்பிடுறீங்கன்னு பொறுமையா கேட்டிருப்பாரு. ஆனா ஒங்க டேமேஜரு ரொம்ப நல்லவராத் தெரியுறாரு. அதுனால...அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லித் தெரிஞ்சிக்கிறோம்.

இந்தக் கக்கூஸ் பத்திச் சொன்னீங்க பாருங்க. நமக்கும் ஒரு அனுபவம் இருக்கு. என்னவோ திடீர்னு வயித்தைக் கலக்குச்சு. நான் உக்காந்திருந்த மூனாவது மாடியில இருக்குற கழிப்பிடத்துக்குப் போனேன். முடிச்சிட்டு வெளிய வந்து பாத்தா யாரையும் காணோம். எல்லாரும் குய்யோ முய்யோன்னு ஓடுறாங்க. மைக்குல வேற "please leave the building immediately"ன்னு அறிவுப்பு. படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கன்னு அறிவுரையும் கூட. உடனடியா உடனடியா அவங்க சொன்னாங்க. நான் பொறுமையா என்னோட பேப்பருக..அதுக இதுக..எல்லாத்தையும் பையில அள்ளிப் போட்டுக்கிட்டு மெதுவா கீழ எறங்கி வந்தா மொத்த ஆபீசும் வாசல்ல நின்னு ஆபீசப் பாத்துக்கிட்டு நிக்குது. எதுத்து இன்னொரு பெரிய ஆபீசு கண்ணாடி கண்ணாடியா வெச்சுக் கட்டிக்கிட்டிருந்தாங்க. அங்க வேலை பாத்தவங்களும் அப்படி வந்து நின்னாங்க. என்னடான்னு கேட்டா....லேசா நெலநடுக்கமாம். கண்ணாடியெல்லாம் தடதடன்னுச்சாம். அதான் அப்படீன்னு சொன்னாங்க. நான் எங்க இருந்தேன்னு கேட்டாங்க. சொல்லவா முடியும்! கம்முன்னு இருந்திட்டேன். நம்ம நண்பர்கள் ரெண்டு பேருக்குத்தான் எங்க இருந்தேன்னு தெரியும். அத வெச்சே என்னைய ரொம்ப நாளைக்கு ஓட்டுனாங்க.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/03/blog-post_29.html

அப்படியா? ம்ம்ம்..கண்டிப்பாக வெளிப்படையாகச் சொல்லப்பட வேண்டியதுதான். ஓரளவுக்காவது சொல்லத் தொடங்கியிருக்கிறாரே. அதைப் பாராட்ட வேண்டியது.

சினிமாவுல சுயபிரச்சாரம் என்பது இன்னைக்கு நேத்தா இருக்குது லக்கி! நம்ம கதாநாயக வழிபாடு விடுற வரைக்கும் தொடர்ந்து கிட்டேதான் இருக்கும்.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2007/03/blog-post_28.html

வித்யா, உங்கள் முடிவு வருத்தமளிக்கிறது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அதே நேரத்தில் நீங்கள் எடுத்த உங்கள் முடிவை மதிக்கிறேன்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_28.html

குன்றிருக்கும் இடமெங்கும் ஓடி விளையாடும் குழந்தைதான் நம்மைக் குழந்தையாகக் கொண்டு காப்பாற்றுகிறான்.

மலை மந்திர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தில்லியில் இருக்கும் எனது நண்பர் ராஜேஷ் அடிக்கடி செல்லும் கோயில் அது. மலையை மலெய் என்று சொல்கிறார்களே என்று முதலில் சங்கடப்பட்டதுண்டு. நல்லவேளைக்கு மலாய் என்று சொல்லாமல் விட்டார்களே என்று மகிழ்ந்தேன்.

அழகாகவும் துப்புரவாகவும் இருக்கிறது திருக்கோயில். செல்ல வேண்டும் என்ற ஆவலைக் கொடுக்கிறது.

ஒருமுறை தில்லியில் ஒருநாள் வேலையாகச் சென்றிருந்த பொழுது வேலையை முடித்து விட்டு திரும்ப ஏர்போர்ட்டுக்கு வரும் வழியில் ஏதோ கோயில் மாதிரி இருக்கேன்னே எட்டிப் பாத்தேன். மனசுக்குள்ள முருகன் கோயில்னு தோணுச்சு. மலை மந்திர்னு சொல்றாங்களே...அதா இருக்குமோன்னு...நெனச்ச மாதிரியே அதான். ஆனா போக முடியலை. பிளைட்டு போயிருமே. முருகன் கூப்பிடுற அன்னைக்குப் போய்க்கிற வேண்டியதுதான்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/03/ii-42.html

அடேங்கப்பா! சினிமா நாடகத்துல வர்ர மாதிரி இருக்குதே! விட்டா இவருதான் குடியரசுத்தலைவர்னே சொல்வாரு போல. அடேங்கப்பா! அடேங்கப்பா! பாலையா எக்ஸ்ப்ரஷந்தான் வருது.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/3.html

// மனதின் ஓசை said...

// நம்ம நண்பர்கள் ரெண்டு பேருக்குத்தான் எங்க இருந்தேன்னு தெரியும்.//
ராகவன்,
இப்ப எல்லாருக்கும் தெரியும் :-))) //

அட அதுனால என்னங்க. இப்ப அந்த நிறுவனத்துல நான் இல்லை. இது நடந்தது 2002. :-) அதுனால பிரச்சனையில்லை.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/03/weird-mega-serial.html

நான் பைத்தியம்னு எந்தப் பைத்தியமாவது சொல்லுமான்னு கேள்வி. ஆனா தமிழ் வலைப்பூக்கள்ள பலர் நான் பைத்தியந்தான்னு உறுதியோட வந்து நிக்குறாங்க. போட்டி பலமாத்தான் இருக்கு. நீங்களும் நல்ல வகையாத்தான் சொல்லீருக்கீங்க.

அடுத்து வீடு மாத்தாதீங்க. கட்டீருங்க. அதான் சரி. அப்புறம் மாத்த முடியாது.

என்னைய ஏற்கனவே உள்ள இழுத்து விட்டுட்டாங்க சார். நானும் பொலம்பித் தள்ளியிருக்கேன்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_28.html

// துளசி கோபால் said...
வாங்க ராகவன்.

குமரனைப் பத்தி எழுதுனப்பவே உங்களை நினைச்சேன். மலையில் முருகனைப் பார்த்தப்பவும்
உங்க நினைவு வந்துச்சு. ( ஏன்னு தெரியலை) //

ஆகா! உண்மையிலேயே அடியவர் பலர் முருகனுக்கு இருக்கும் பொழுது...ஒப்புக்குச் சப்பாணியான என்னையும் முருகனைப் பத்தி நெனைக்கும் போது நெனைக்க வெச்சானே அந்த முருகன். ஆகா! முருகனின் கருணைக்கு நன்றி பல.

// கோயில் அட்டகாசமா இருக்கு. படு சுத்தம்.

எந்தக்கோயிலுக்கும் வாசலில் நின்னாக்கூட உள்ளே போய்ப்பார்க்கவும் அவனருள் வேணும்.
இதுவும் என் அனுபவத்தில் நிறையப் பார்த்துருக்கேன். //

இப்பச் சொன்னீங்களே...இது வாஸ்த்தவம். திருமலை தென்குமரின்னு ஒரு படம் வந்தது. பாத்திருக்கீங்களா? எல்லாரும் கூட்டமா டூர் போவாங்க. அப்ப...மைசூர் வந்ததும் இளைஞர்களெல்லாம் பிருந்தாவனம் போயிருப்பாங்க. பெருசுகள்ளாம் கோயில்ல இருப்பாங்க. அடடா! அவங்கள்ளாம் பிருந்தாவன் போயிட்டாங்களே...நம்மளும் போயிருக்கலாமேன்னு நெனச்சுக்கிட்டே இவங்க கோயிலுக்குப் போவாங்க. கோயில் பூட்டியிருக்கும். அங்க போனவங்க...எல்லாருமா வந்த இடத்துல நம்ம மட்டும் அசடு மாதிரி பிருந்தாவனத்துக்கு வந்துட்டமேன்னு நெனைப்பாங்க. ஒடனே கெளம்பி கோயிலுக்குப் போவாங்க. இவங்க வரவும் கோயில் தெறக்கவும் சரியா இருக்கும்.

G.Ragavan said...

http://ammanpaattu.blogspot.com/2007/03/blog-post.html

அருமையான தொடக்கம். இப்பொழுது நேரமில்லை என்பதால்...கூட்டணியில் சிறிது காலத்தில் வந்து சேர்ந்து கொள்கிறேன்.

தரணியிலரணிய முரணிரனியனுடல் தனைநக நுதிகொடு சாடோங்கு நெடுங்கிரியோடேந்து பயங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதம்புய மந்திர வேதாந்த பரம்பரை
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குசமென்றிடும் தாளாந்தர அம்பிகை

G.Ragavan said...

http://mkarthik.blogspot.com/2007/03/1.html

2. பொம்மைன்னு சொல்றாங்க. ஆனா காதலிக்க நேரமில்லைன்னும் சொல்வாங்க. ரெண்டுல எது மொதல்ல வந்ததோ அது. அனேகமா பொம்மை.

3. கார்த்திக் - பொன்னுமணியா?

4. மெல்லிசை மன்னரும் இசைஞானியும் நாலஞ்சு படத்துக்கு இசையமைச்சிருக்காங்க. நீங்க எந்தக் கதாநாயகனச் சொல்றீங்க? முதல் கதாநாயகன்னா அதைக் கேள்வியில புகுத்துங்க.

5. கமல்-ஸ்ரீதேவி. மூன்றாம்பிறை.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/03/4.html

மீட்டுங்குல தூங்குன தேவே(கவுடாவே) :-) இதெல்லாம் சரியில்லைங்க. :-))))) who let the dogs out..wow..wow...wow...

இந்த வெளையாட்டு புதுமையா இருக்கே. இத எனக்கு யாரும் சொல்லித்தரலையேய்யா! எங்க பழைய ஆப்பீசுல floor decoration competitionனு வெப்பாங்க. தீபாவளிக்கு phool jaadiனு கொண்டாடுவாங்க. ஆனா கிருத்துமஸ்சுன்னா லீவு குடுத்து சும்மா விட்டுருவாங்க. ஆக....இட்லருக்கு பரிசு குடுத்தீங்க..என்ன குடுத்தீங்கன்னு அடுத்த பதிவுல படிச்சிக்கிறேன்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_2516.html

ஓ! பஞ்சாமிர்தம் முடிச்ச கையோடு லட்டு தேடிப் போயிட்டீங்க. அதுவும் கெடைச்சிருச்சு. படங்கள நல்லா சுத்திச் சுத்தி எடுத்திருக்கீங்க. நல்லா வந்திருக்கு.

சமீபத்துல ஐதராபாத் போயிருந்தப்போ அங்க பிர்லா மந்திருன்னு ஒரு கோயில். பகல் வேளைல போனதால கூட்டமே இல்லை. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நீண்ட நேரம் வணங்க முடிந்தது. அங்கயிருந்து சுத்திப் பாத்தா ஐதராபாத்தே தெரியும். மலை மேல கோயிலு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_2516.html

// SP.VR. சுப்பையா said...
அக்கய்யா! அன்னி பிக்சர்ஸ் பகுந்தம்மா!
மீக்கு சால் தாங்ஸ் தெலிய சேஸ்துன்னானு! //

நாக்கு ஒக டவுட்டுலு. அக்கா எப்படி ஐயாவாக முடியும்? அக்கய்யான்னு கூப்புடுறது தப்பு லேதா? அக்கம்மான்னுதானே கூப்பிடனும். எலக்கணப்படி அதுதானே சரி. தெலுங்குக்காரங்க அடிக்க வராதீக.

G.Ragavan said...

http://nandhakumaran.blogspot.com/2007/03/blog-post_30.html

காமத்தில் வெட்கமில்லை. யாருக்கும் எதற்கும் உரிமையுண்டு. ஆகையால்....காமத்தில் சைவம் என்பது வேலைக்குதவாது என்பது என் கருத்து. அதைத்தான் கவிதையும் சொல்கிறது.

G.Ragavan said...

http://nandhakumaran.blogspot.com/2007/03/blog-post_30.html

காமத்தில் வெட்கமில்லை. யாருக்கும் எதற்கும் உரிமையுண்டு. ஆகையால்....காமத்தில் சைவம் என்பது வேலைக்குதவாது என்பது என் கருத்து. அதைத்தான் கவிதையும் சொல்கிறது.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/03/blog-post_26.html

கலக்கல்பா! சூப்பர்பா! பிரமாதம்பா! நல்லா சிரிக்க வெச்சேப்பா! டகால் டக்கிரி டங்கிரி! திங்கிணுமே ஜாங்கிரி!

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/03/blog-post_30.html

நடுவில் சுடர் அணைந்து விட்டதோ என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மீண்டும் சுடரெழுந்திருக்கிறது.

மருதுபாண்டியரின் காளையர் கோயில் விவரங்கள் படிக்கச் சுவையாகவும் நினைக்க வருத்தமாகவும் இருக்கின்றன.

sound of music, come september, போன்ற படங்கள் எனக்கும் பிடிக்கும். குறிப்பாக come september படத்தில் நடித்த லோலோபிரிகிட்டாவின் நடிப்பும் நடனமும்...ஆகா! ஆகா! ஆகாகா!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_2516.html

// துளசி கோபால் said...
வாங்க ராகவன்.

நீங்க 'ஹை'தராபாத் பத்தி எழுதுங்களேன். ( நான் இன்னும் அங்கே போனதில்லை) //

நானும் அங்க ரொம்பப் பாத்ததில்லை டீச்சர். போனதும் ஒடம்புக்கு முடியாமப் போச்சு. வெயில் ஏறி ஒடம்பு சூடாகி..பயங்கர வயித்துவலி. எப்படியோ ஒருவழியா சரியாச்சு. அத்தோட விட்டதா? சாப்பாடு! ஐயோ ஐயோன்னு கூப்பாடு போட வெச்சிருச்சே! எதத் தொட்டாலும் காரம். வெளிய போனா வெயிலு. நான் என்ன செய்வேன்? நேக்கு யாரத் தெரியும். :-(((((((((((( ஐதராபாத் போனதுல ஒரே சந்தோசம் என்னோட நண்பரப் பாத்தது. அம்புட்டுதாங்க.

// எலக்கணப்படி 'ஒக டவுட்டுலு' வும் தப்புதான்.

டவுட்டு - ஒருமை

டவுட்டுலு - பன்மை //

ஒருமை பன்மை தெரியாத எருமைன்னு திட்டாதீங்க டீச்சர் :-((((((

// அக்கைய்யா, அம்மைய்யா எல்லாம் மரியாதைக்குரிய விகுதிதான்.

இது தெலுங்கு அய்ய. தமிழ் ஐயா இல்லையாக்கும்:-)))) //

ஓ! அப்ப தெலுங்கு அய்யா தமிழுக்கு வந்தா அக்காவாயிருவாரா! இது எனக்குத் தெரியாமப் போச்சே! ஆனாலும் அங்க ஆட்டோ டிரைவருங்க கிட்ட நான் தெலுங்குல பேசிச் சமாளிச்சத நீங்கள்ளாம் பாத்திருக்கனுமே......நல்லவேளை பாக்கலை.

G.Ragavan said...

http://2cinaustralia.blogspot.com/2007/03/blog-post_30.html

துயர்களைச் சட்னி செய்யும் சிட்னி முருகனுக்கு அரோகரா!
வேலனுக்கு அரோகரா!
சீலனுக்கு அரோகரா!

என்ன அழகு...பச்சை மயிலேறி கண்குளிர காட்சி தரும் அழகே அழகு. கொடுத்து வைத்தவர். உங்கள் வழியாக நாங்களும் தான்.

தவில் கச்சேரி எதுவும் நடந்திருந்தால் அதைப் பதிவு செய்திருக்கலாமே பிரபா. நாங்களும் கேட்டு ரசித்திருப்போமே!

G.Ragavan said...

http://mkarthik.blogspot.com/2007/03/1.html

// Priya said...
தலை, நாலாவது கேள்வில பிழை இருக்கு.
இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து ஒரு படத்துக்கு மேல இசையமைச்சிருக்காங்க. நீங்க குறிப்பிடறது கடைசி படமா?
உங்கள் கேள்வி - " இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து கடைசியாகஇசையமைத்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர், கடைசியாக நாயகனாக நடித்த படத்தின் பெயர் என்ன?" என்பதா? //

இதத்தான் நானும் கேட்டேன். மொதப் படமா? கடைசிப் படமா?
மெல்லத் திறந்தது கதவு
என் இனிய பொன் நிலாவே
செந்தமிழ்ப் பாட்டு
வண்ணத்தமிழ்ப் பாட்டு
விஷ்வ துளசி
இதுல எதுப்பா?

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/03/blog-post_30.html

மிகவும் அழகான பாடல். இருவரின் குரல்களும் அழகாக இணைந்து இயைந்து சுகமாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன்.