கண்டிப்பாகத் தேவையில்லை. வடமொழியும் ஒரு கண் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. என்னதான் ஆங்கிலத்திலேயே படித்து வேலையைப் பார்த்தாலும் சம்பாதித்தாலும் ஆங்கிலம் இன்றியமையாத மொழியாக இருந்தாலும் இரண்டாவது கண் என்று ஒப்புக்கொள்ள முடியாத பொழுது, வடமொழியை அப்படி ஒப்புக்கொள்ள முடியாது.
பதிவைப் படிக்கைல ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்தது. பின்னூட்டங்களப் படிச்சப்புறம் எல்லாம் கொழம்பிப் போச்சு.
சரி..ஒன்னொன்னா யோசிக்கிறேன். 1. ஓரினச் சேர்க்கை...சரியா தப்பா? அதான மொதக் கேள்வி. தனிப்பட்ட வயது வந்த இருவருக்குள் நடக்கும் ஒப்புதல் உடலுறவுக்குத் தடையில்லை அப்படீன்னா அது தனிமனித சுதந்திரம்னா ஓரினச் சேர்க்கை சரிதான். அது அதில் ஈடுபடும் இருவரின் தனிப்பட்ட விருப்பம்.
2. அவங்க குடும்பமா கல்யாணம் செஞ்சுக்கிட்டு வாழலாமா? ம்ம்..இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான். அதுக்கு வேற மாதிரி யோசிச்சுப் பாக்குறேன். பொதுவா ஓரினச் சேர்க்கையாளர்கள் மேல இங்க வைக்கிற குற்றச்சாட்டு...பலரோட உறவு வெச்சுக்கிறது..பொது இடங்கள்ள உத்துப்பாக்குறது..அப்படித்தான...ஒருவேளை இந்தக் கல்யாண உரிமை அவங்களையும் குடும்ப அமைப்பா வாழ வைச்சா...அது அவங்களை இன்னும் நெறிப்படுத்தும்னா அதையும் செய்யட்டுமே.
உண்மைதான். நம்ம பிள்ளைக இப்படீன்னு தெரிஞ்சா வருத்தப்படத்தான் செய்வோம். மறுக்க முடியாது. ஆனா இப்பிடித்தான்னு நின்னா என்ன செய்றது? நம்ம குண்டக்க மண்டக்க முடிவெடுக்க...அவங்க வேற மாதிரி முடிவெடுத்துட்டா? எதுக்கோ பயந்துக்கிட்டு பிள்ளையப் பறிகொடுக்க முடியுமா!?
இது என்னோட கருத்து. ஏதோ தொடுப்புகள்ளாம் குடுத்திருக்கீங்க. அதையும் படிச்சி மருத்துவம் என்ன சொல்ல வருதுன்னு புரிஞ்சிக்கப் பாக்குறேன்.
ஹாரிபாட்டர் புத்தகத்தைப் பணக்காரத்தனத்துக்கும்னு மட்டும் வாங்குறவங்களச் சொல்றது சரி. பெருமைக்கு மாவிடிக்கிறதுன்னு சொல்வாங்க. அந்த மாதிரி செய்றவங்களுக்குச் சரி.
ஆனா எல்லாரும் அப்படியில்லை. ஹாரி பாட்டர் புத்தகம் வந்த பிறகுதான் காமிஸ்ல இருந்த ஆர்வத்தைப் புத்தகம் படிக்கிறதுல குழந்தைங்க திருப்புனாங்க. பெரும்பாலானவங்க விரும்பித்தான் படிக்கிறாங்கன்னு நம்புறேன்.
ஹாரிபாட்டரப் படிக்கிறாங்களோ இல்லையோ....ஏழைகளுக்கு உதவ வேண்டியது எல்லோருடைய கடமையும்.
ஏழாவது புத்தகத்தைப் படிச்சு முடிச்சிட்டேன். விரைவில் வருது பதிவு. புத்தகத்துல என்ன இருக்குன்னு அந்தப் பதிவுல தெளிவாச் சொல்ல முயற்சி செய்றேன்.
நான் காலைலயே இந்தப் பதிவைப் பாத்தேன். ஆனா ஆப்பீசுல கட்டங்கட்டமா வரும். அதுனால காத்திருந்து வீட்டுக்கு வந்து படிச்சிட்டேன். :)
கொத்து புரோட்டாவைப் போல சுவையான உணவு இல்லை. இல்லை. இல்லவேயில்லை. இங்கு உண்ணும் பருகரும் ஸ்டெக்கும் என்னதான் இருந்தாலும் கொத்துக்கு முன்னால் வருமா!
அந்தப் பழைய புலவரு கருஎள்ளுவரு அல்ல. தெருவள்ளுவரு. அவரு மதுரை, தூத்துக்குடி, கோவை, திருச்சீன்னு பல ஊர்கள்ள தெருவுல தள்ளுவண்டி வெச்சு கொத்து பொரோட்டா பொரட்டுனவரு. அதுனாலதான் அவருக்கு மதுரை பரோட்டா வணிக தள்ளுவண்டி கொத்தனார்னும் இன்னொரு பேரு உண்டு. ஹி ஹி
// முருகனுக்கு எழுபடை வீடுதான்( ஏழாவது வீடு இப்போதைக்கு Amsterdam! ).//
இதே பிரச்சனை லியாண்டர் பயசுக்கும் ஏற்பட்டதை மறக்க முடியாது. அவருக்கும் பிரச்சனை காய்கறியால்தானாம். அரைகுறை வேகல் மாடு/பன்றிக் கறியில் இருக்கும் நாடாப்புழு அவரைத் தாக்கியிருக்கிறார். ஆனால் பயசுக்கு அதைச் சாப்பிடும் வழக்கமில்லையாம். பிறகு அவரது சாப்பாட்டு முறையிலிருந்து அது காய்கறிகளைச் சாப்பிடுவதால் வந்தது என்று கண்டுபிடித்தார்கள்.
இந்தியச் சூழலில்...பச்சைக்காய்கறிகளைத் தவிர்ப்பது நல்லது என்றே தோன்றுகிறது. நன்றாகக் கழுவித் தோல் நீக்கிச் சாப்பிடுதல் நலம். கீரை வகைகளை நன்றாகக் கழுவிட வேண்டும். அசைவத்தையும் நன்றாக வேக வைப்பதே நல்லது.
அதெல்லாம் சரி....தருமம் எங்க இருக்கு? பத்திரிக்கைல மட்டும் இருக்க?
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய.....இந்த வரியிலேயே மொத்தப் பாட்டும் முடிஞ்சு போச்சு. அந்தக் கோடு அசைய அசைய அதுல நம்ம மனசு இசைய இசைய....அடடா! சந்தமே சொந்தமா வெச்சிருக்கிற அருணகிரிக்கா சொல்லித்தரனும்!!!! முருகா! நன்றி வி.எஸ்.கே
// VSK said... முருகன் ஒரு கடவுள். அவன் சாதி பார்த்ததில்லை. படைப்புகள் அனைத்துமே அவன் சாதிதானே. பேதமென்ன அதில்?
அவனால் உபதேசம் பெற்று, அவனையெ வாழ்த்திப் பாடல்கள் புனைந்து அவனையே எண்ணி வாழ்ந்த அருணையார் சாதி பேசுவாரா? //
கண்டிப்பாக மாட்டார். அவருடைய படைப்புகளைப் படித்தவர்களும் அப்படிப் பேச மாட்டார்கள்.
அவர் வாழ்ந்த காலகட்டத்தை வைத்து அவர் சொல்வதை ஆராய வேண்டும். அந்த வகையில் இட்டார் இடாதார் விளக்கம் பொருத்தமானதாகவே உள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிச் சொல்லியிருப்பார் என்று நினைக்கவில்லை.
அப்பப்பா என்ன அழகு. இது பாரீசிலிருந்து எவ்வளவு தொலைவு? பிரான்சின் எந்தப் பக்கத்தில் இருக்கிறது? பெல்ஜியம் எல்லையை ஒட்டியா? பார்க்க வேண்டும் போல இருக்கிறதே. சென்ற பாரீஸ் விஜயம் அப்படிப் போனது. அடுத்து திரும்பவும் வரனும்.
முந்தி ஒரு நடிகரு இருந்தாரு. பேரு திடீர்னு நெனவு வரலை. அவருடைய மனைவி ஸ்டவ் வெடிச்சிருச்சு. காப்பாத்தப் போய் இவரும் போயிட்டாரு. அவரு பேரு மறந்து போச்சு. அவரு மகன் கூட சன் டீவில ஊரு ஊராப் போயி நீங்கள் கேட்ட பாடல் நடத்துறாரே.
Wonderful district with fantastic scenic places. Kanyakumari district...unlike other district (named with district headquarters) has nagarcoil as HQ.
I had been to many of the tourist places in the distric and enjoyed. Thirparappu, Thottipalam, Kanyakumari, Sucheendram, Chitharu dam, Padmanabpuram and some more unknown places.....
ஒரு கருத்து. பாகப் பிரிவினைக்குத் தெலுங்கில் இசை விஸ்வநாதன் இல்லையென்று தெரிகிறது. ஆனால் தெலுங்கு இசையமைப்பாளர் அதே மெட்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இசைக்கோர்வையில் தமிழில் இருந்த முழுமை தெலுங்கில் இல்லை. இது என்னுடைய கருத்து.
// குமரன் (Kumaran) said... ஆமாம் இராகவன். தமிழ் வளர் மதுரைன்னு சொல்லலாம். ஆமா. அது வினைத்தொகைன்னு தானே சொல்லுவாங்க. நீங்க உரிச்சொல்னு சொல்றீங்க? எனக்கு இலக்கணம் அவ்வளவா தெரியாது. அதனால நான் சொல்றது தப்பா இருக்கலாம். //
இல்ல இல்ல. நீங்க சொல்றதுதான் சரி. அது வினைத்தொகை. சால உறு தவ நனி கூறு களி - இவைகள்தான் உரிச்சொற்கள்
ஒரு காக்கிலோ தேறும்னு நெனைக்கிறேன் :)))))))))))))))
// //காட்டில் ம்ருகங்கள் உண்டு போன்ற உச்சரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம்//
ஜிரா இது கர்நாடக இசை வாணர்கள் பலர் செய்யும் ஒலி பேதம்! தமிழ் என்றில்லை... தெலுங்கு, கன்னடம் எல்லாத்திலும் இதைச் செய்கிறார்கள்...ஜேசுதாஸ் கூடத் தன்னை அறியாமல் சில சமயம் இப்படிச் செய்து விடுவார் இசைக் கச்சேரிகளில்! //
இது தம்மையும் அறியாமல் செய்யும் தவறல்ல ரவி. மொழியை அறியாமல் செய்யும் தவறு. ஒருமுறை கச்சேரியில் பாம்பே ஜெயஸ்ரீ ராகி தந்திரா என்ற புரந்தரதாசரின் கீர்த்தனையைப் பாடுகையில்.....கன்னடத்தைப் படுகொலை செய்து கொண்டிருந்தார். எனக்கே மனசுக்குச் சங்கடமாக இருந்தது என்றால்..கன்னடர்கள் கேட்டிருந்தால்? அப்படித் தப்புத் தப்பாய் ஏன் பாட வேண்டுமென்று தெரியவில்லை.
// எந்த "ரோ" மகானுபாவுலு என்று "ரோ"வை இழுப்பது - உடனே அடியேன் இங்கே C-Rowவில் உட்கார்ந்து இருக்கிரேன் என்று ஒருவர் எழுவது மாதிரி ஆகி விடும்! :-) //
எந்த்த "ரோம" கான பாவுலுகளும் நிறைய உண்டு. இப்பிடிப் பாடிச் சாதிப்பது என்னவென்றுதான் எனக்குப் புரியவில்லை. :)))))))))))))))))) ஜேசுதாசின் திருப்புகழைக் கேட்கனுமே. ஒலிப்பேழை இருக்கிறது. அதில் அவர் செய்த திருப்புகழ் கொலைகளைக் கேட்டு விட்டு...அதைத் திரும்பக் கேட்கவேயில்லை.
என்னது இது? எல்லாப் படத்துலயும் இந்தக் கததான...இதத்தவிர வேற நடிக்கத் தெரிஞ்சா நடிக்க மாட்டாங்களா? எடுக்கத் தெரிஞ்சா எடுக்க மாட்டாங்களா? நீ வேறப்பா! யாரு கிட்ட எவ்வளவு எதிர்பார்க்கலாம்னு இருக்கு. இவ்வளவுதான் எதிர்பார்க்கனும்.
இல்ல டீச்சர் சசிகுமார்ங்குறது அப்பா. அவரும் நடிகர். காசேதான் கடவுளடா படத்துல கூட வருவாரே. அவருதான் வில்லன். அவரோட பையன் சன் டீவியில நீங்கள் கேட்டல் பாடல் நடத்துறாரே...சாரதியோ பாரதியோ.
தூக்கம் வராமை...இது எனக்கு வரும்...எப்பவாச்சுந்தான். அப்படித் தூக்கம் வரலைன்னா...அன்னைக்கு நடுநிசில ஏதோ எழுதப் போறேன்னு பொருள். ஆமா...தூக்கம் வராத இரவுகள்ள ஓரளவுக்கு எனக்கே திருப்தியாகுற எழுத்துகள எழுதீருக்கேன். மத்தபடி...நல்ல சினிமா, நல்ல புத்தகம், நல்ல கூட்டணி கெடைச்சா....காப்பியக் குடிச்சு தூக்கத்தத் தூங்க வெச்சிருவேன். ஆனா அது அடுத்த நாள் என்னைய நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்க வெச்சிரும். ஆனா இது அடிக்கடி நடக்க்குறதில்லைங்குறதால No Problem.
வழக்கமா எழு அல்லது ஏழேகாலுக்கு அலாரம் வெப்பேன். இன்னைக்கு அதே நேரத்துக்கு எந்திருச்சேன். ஆனா அலாரம் அடிக்கல. நாந்தான் சீக்கிரமா எந்திரிச்சிட்டேனோன்னு திரும்பவும் படுத்துத் தூங்கீட்டேன். அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சி (நடுவுல அடிக்கடி முழிப்பு வந்துச்சு) மொபைல எடுத்து மணி பாத்தா எட்டு. அலாரம் செட் ஆகவே இல்லை. :)
ஆனா இந்தக் குடைமிளகாயை மூழ்க வெச்சு பொரிக்க முடியாது. அதுக்கு எண்ணெய் எக்கச்சக்கமா தேவைப்படும். அப்படி இருக்குறப்போ மைதாலுல முக்கி எண்ணெய்ல உக்கார வெச்சா, மாவு வழிஞ்சிராதா?
இப்பிடி வாழ்க்கை வரலாறு சொல்லும் போதே சமையல் குறிப்பு சொல்றது நல்லாருக்கு. தேவன் எழுதிய அப்பளக்கச்சேரி புத்தகம் நினைவுக்கு வருது.
மீண்டுமொரு அருமையான நேயர் விருப்பம். எஸ்.ஜானகி அம்மா, காற்றில் உங்கள் கீதம் காணத ஒன்றைத் தேடுதே! எப்படி மறக்க முடியும் இந்தப் பாட்டை. உங்கள் குரலை. இதை இசையரசியோடு நீங்கள் நடத்திய இசைக்கச்சேரியில் நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததே...ஆகா!
கட்டி வெச்சுக்கோ இந்த அன்பு மனச...ஆமா ஆமா. இந்தப் பாட்டையுந்தான். அருமையான பாட்டு.
அடுத்து சர்வேசனின் தேர்வு. எப்படிய்யா இந்தப் பாட்டப் பிடிச்சீங்க. எனக்குத் தெரிஞ்சு தமிழில் உண்மையிலேயே வீணடிக்கப்பட்ட திறமையான பாடகி பி.எஸ்.சசிரேகா. மெல்லிசை மன்னரின் அறிமுகம். இளையராஜாவின் இசையிலும் நல்ல பாட்டுகள். இதோ இதோ நெஞ்சிலே பாடல், மேளம் கொட்ட நேரம் வரும் பூங்குயிலே, விழியில் விழுந்து இதயம் நுழைந்து, தென்றல் என்னை முத்தமிட்டது, செவ்வானமே பொன்மேகமே...இப்பிடி எல்லாமே நல்ல பாட்டுகள். ஆனாலும் ஏனோ வாய்ப்புகள் குறைவு. ராத்திரி நேரத்துப் பூஜையில் பாட்டை மறக்க முடியுமா? வரகுச் சம்பா மொளைக்கலே ஹோ, சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக இன்னும் நிறையவே இருக்கின்றன. வாணி ஜெயராமோடு போட்டி போட்டுப் பாடிய கேள்வியின் நாயகனே பாட்டையும் மறக்க முடியுமா?
இதோ இதோ என் நெஞ்சிலே பாட்டில் உடன் பாடியவர் எஸ்.ஜானகி. ஷைலஜா அல்ல. ஷைலஜாவின் முதற்பாட்டு சோலைக்குயிலே என்ற பாட்டு. பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்திலிருந்து.
ஒரு சிறிய கருத்து. பாடலைப் போடுகையில்..அத்தோடு தொடர்புள்ள மற்றவர்கள் பெயரையும் போடுவது நல்லது. சந்திரபோஸ் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். பாடலாசிரியர் பெயர் பல சமயங்களில் மறந்து போகிறது. ஆனால் பெரும்பாலும் இசையமைப்பாளர் பெயரையும் உடன் பாடியவர்கள் பெயரையும் குறிப்பிடுதல் நலம்.
இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும். பாட்டு போட்டதுக்கு நன்றி.
// வல்லிசிம்ஹன் said... ராகவன், ரொம்பப் பேருக்கு இந்தப் பாட்டுத்தெரியாதுனு நினைத்தேன்.
ஹீரோவும் ஹீரோயின்ம் வேறு எங்கோ போய்ப் பாடிவிட்டு மீண்டும் புகுந்து கொள்வது போலத் திரை அமைப்பு., பாடுகிற மாதிரி இருக்கும். தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் இறங்குனு குரல் அப்படியே கண்டக்டர் குரல்தான் அதுதான் இரண்டு பாடல்களாக அமைந்த்து வெகு அழகாகத் தெரிகிறது. மீண்டும் நல்ல செலக்ஷன். //
வாங்க வல்லீம்மா...இந்தப் பாட்டு எல்லாருக்கும் தெரியும். ரொம்ப நல்ல பாட்டாச்சே! எப்படி மறக்க முடியும்? ஆமா...தேனம்பேட்டை காமதேனு சூப்பர் மார்க்கெட். இப்பவும் இருக்கு. ஆனா அவ்வளவு கூட்டம் போறதில்லை.
ஒரு பாடல் வரி முடிவதற்குள் அடுத்த வரி ஆரம்பமாகும்.
பாடலை முழுமையாக வரி வரி யாக இரசித்துக்கேட்ட காலமது..
இதற்கு மேலும் எழுதினால் புலம்பலாகிவிடும்... ஒன்றை கவனித்தீர்களா? இந்தப்பாட்டு இன்றும் கேட்டு இரசிக்கும்படியாகவிருக்கிறது. //
ஆமாங்க. இன்னமும் ரசிச்சு ரசிச்சு கேக்குற மாதிரி இருக்குது. அருமையான பாட்டு. நீங்க பொலம்ப்றதா நெனைக்கலை. சொல்லுங்க. கேக்குறோம்.
// வெற்றி said... இராகவன், இந்தப் பாடலைப் பல முறை கேட்டு இரசிச்சிருக்குறேன். ஆனால் இந்தப் பாடலுக்குள்ளை இப்படி ஒரு சங்கதி இருக்கிறதை இப்பதான் தெரிந்து கொண்டேன். ம்ம்ம்...வியப்பாக இருக்கிறது.
மிக்க நன்றி. //
வெற்றி...இது மாதிரி நெறைய இருக்கு. நம்ம சும்மா கேட்டுட்டுப் போயிர்ரோம். ஆனா நம்ம இசையமைப்பாளர்கள் எவ்வளவு யோசிச்சிருக்காங்க. அத இந்த மாதிரி பதிவுகள்ள சொல்றதும் சந்தோசந்தான்.
வாங்க சர்வேசன். நன்றி. நல்ல பாட்டை நீங்கள் ரசிச்சிக் கேட்டதில் மகிழ்ச்சி.
// CVR said... சூப்பரு!!! எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது அண்ணாத்த!!! பாடலின் வரிகளின் சிறப்பை முன்பஏ அறிந்திருந்தாலும் அதன் பின்னால் உள்ள சூட்சமத்தை இன்றுதான் அறிந்தேன்!! :-)
வீட்டிக்கு போய் பாட்டை பொறுமையா கேக்கறேன்!! நல்ல பதிவு!! பதிவிட்டதற்கு நன்றி!! :-) //
சரி தம்பி. வீட்டுக்குப் போய் பாட்டப் பாரு. பாத்துட்டு கருத்து சொல்லு.
// ஆம் வாலியின் அழகான வரிகளை என்றும் கேட்டு ரசிக்க முடியும் அதுவும் பாடலின் துவக்கத்தில் இசையரசியின் சிரிப்பும் பின்னர் பாலுவிம், அவரும் செய்யும் குரல் ஜாலங்களும் அடேயப்பா சொல்ல வார்த்தைகள் போதாது.
அந்த கண்டக்டர் குரல் இளையராஜாவின் அண்னன் பாஸ்கரினுடையது //
ஆகா தகவல்களை அள்ளி விடுறீங்களே...சூப்பர் சூப்பர்
// இந்த பாடலின் சிறப்பு நீங்கள் சொன்னது போல பாடலுக்குள் பாடல் அதே போல் நாலு பேர்கள் பாடுவதாக நமக்கு தோன்றும் அப்படி ஒரு வித்தையை பயன்படுத்தியிருப்பார் ராஜா
சிட்டுக்குருவி கதை,வசனம் மற்றும் பாடல்கள் வாலி இந்த பாடல் தேர்வுக்கு மிகவும் நன்றி இந்த பாடலை பற்றிய எனது கட்டுரையை இங்கே படிக்கவும் //
// CVR said... பாத்தாச்சு பாட்டை!!! நம்ம மெட்றாசா இதுன்னு இருக்கு!!! தேனாபேட்டை எல்லாம் எதோ லோக்கல் டவுன் மாதிரி இருக்கு!! ஹ்ம்ம்! நல்ல பாட்டு அண்ணா!! நன்றி!! :-) //
ஆமா. ஆமா...இது சென்னையில்லை. மெட்ராஸ். பழைய மெட்ராஸ். நான் தவழ்ந்துக்கிட்டிருந்தப்ப இருந்த மெட்ராஸ். நீ பொறந்திருக்கவே மாட்ட. எனக்கு 80ல் இருந்த சென்னை ரொம்பவும் பிடிக்கும். இவ்வளவு நெரிசல் இருக்காது. பேல்பூரீங்குற ஒன்ன...சென்னைக்கு வந்தாத்தான் நாங்கள்ளாம் சாப்பிட முடியும். அப்புறம் தியாகராயாய நகர்ல பாண்டிபஜார்ல இருக்குற கையேந்தி பவன் மொளகா பஜ்ஜி. அடடா! அடடடடா! பழைய ராஜகுமாரி தேட்டர் இருந்துச்சு அங்குட்டு.
// துளசி கோபால் said... இந்தப் பாட்டு நிஜமாவே எனக்குத் தெரியாது. இப்பத்தான் முதல்முதலாக் கேக்கறேன். நாங்கள் 'வனவாசம்' செஞ்சப்ப வந்த படமோ? //
வாங்க டீச்சர். இந்தப் பாட்டைக் கேட்டதில்லையா. நல்ல பாட்டு. இப்பக் கேட்டுட்டீங்கள்ள. எப்படி இருக்கு?
// போன இடுகையில் (தொழில்நுட்பப் பிரச்சனையால் காணாமல் போன இடுகை) ஒரு வாழ்த்துக்கவிதை எழுதிப் போட்டேன். சேமித்து வைக்காமல் விட்டுவிட்டேன். இப்போது எழுதலாம் என்று உட்கார்த்தால் கவிதை வரமாட்டேன் என்கிறது. :-( //
இதுக்குதான் நான் பின்னூட்டங்களைச் சேமிச்சிக்கிர்ரது.
// வெட்டிப்பயல் said... ஜி.ரா, நானும் உங்கள் பிறந்த நாளுக்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.. கீழே பார்க்கவும்
"கவிதை" //
அடடா! பிரமாதமா கவித எழுதீருக்கியே வெட்டி....சூப்பரு. ஒரு பரிசு அனுப்புறேன்.
உத்தரவின்றி உள்ளே வா படத்துல இப்பிடியொரு பாட்டு இருக்குறது இன்னைக்குத்தான் தெரிஞ்சது. நல்லாயிருக்குங்க பாட்டு. பாடும் நிலா இளைய நிலாவாக் காய்கிறது பாட்டில்.
சாய்பாபா...மெல்லிசை மன்னர் இசைக்குழுவில் இருந்தவர். என்ன வாத்தியம் வாசிச்சாருன்னு தெரியாது. ஆனா பலவிதமான ஓசைகளை உருவாக்குவாராம். இந்த மாதிரி லுலுலுலு லல்லல்லாலாம் நெறையப் பாடுவாராம். இவரு இந்திய நாடு என் வீடு அப்படிங்குற பாட்டுல கூட பாடீருக்காருன்னு நெனைக்கிறேன்.
நீங்க சொல்ற பொடிய நானும் சாப்பிட்டிருக்கேன். எய்யா சாமி...நாக்கு வெந்து போகும் மொத வாட்டீ. ஆனா சின்னப் பையனா இருந்தப்ப சண்டாளச் சட்டினியையே அல்வா மாதிரி தின்னவன். ஆகையால இந்தப் பொடியும் சுகந்தான்.
இது நல்லாயிருக்கும்னாலும் வேண்டாம். பின்னால...அதாவது வயசு கூடும் போது பிரச்சனையாகும். அதுல எண்ணெய் இல்லாம வறுத்த எள்ளையும் கூடப் போட்டு அரைச்சுக்கோங்க. அது நல்லாயிருக்கும். மணமாவும் இருக்கும்.
ஜோசப் சார். தலைமுறைக்குத் தலைமுறை சிந்தனை மாறும். அந்த மாத்தத்துக்கு ஏத்த மாதிரி எழுத்து மாறும். அந்த மாத்தத்துக்கு எதுவுமே உட்படும். தமிழ்ல என்னன்னா..எழுத்துப் பழக்கம் உள்ளவங்க அதுக்குள்ள ரொம்ப போறாங்க. இல்லாதவங்க தள்ளித் தள்ளிப் போறாங்க. மொழி எப்பவுமே பண்டிதர்கள் கையிலேயே இருக்கும் போல...இல்ல மொழியாளுமை உள்ளவங்கள நம்ம பண்டிதர்னு சொல்லீர்ரோமா? தெரியலையே.
இந்தப் பாட்டுல இன்னொரு செய்தியும் இருக்கு. அதைப் பலர் மறந்துட்டோம். தார் என்ற சொல் அது. தார்னா மாலைன்னு இன்னைக்குச் சொல்லீர்ரோம். ஆனா ரெண்டும் ஒன்னில்லை. தார் வேற. மாலை வேற. பெண் கையில போட்டது வளையல். ஆண் கையில போட்டது கங்கணம். அதையே மாத்திச் சொல்ல முடியுமா? முடியாது. அது மாதிரி பெண்கள் அணிவது மாலை. ஆண்கள் அணிவது தார்.
என்ன வேறுபாடா? மாலை பூட்டப்பட்டிருக்கும். வட்டமா..இன்னைக்குப் பாக்குற மாலைகள் அப்படித்தான இருக்குது. ஆனா தார் பூட்டப்பட்டிருக்காது. புரியலையா? ஆண்டாள் கழுத்து மாலையை யோசிச்சுப் பாருங்க. தொள்ள இருக்கும். இந்தப் பக்கம் தொங்கும். அந்தப் பக்கம் தொங்கும். ஆனா ரெண்டு முனையும் முடிஞ்சிருக்காது. அது தார். "கொங்கலர் தார்"னு சோழனுடைய மாலையை இளங்கோவடிகள் சொல்றாரே. தார் கடம்பத்தார் எம் கடவுள்..இப்பிடிப் பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.

வேங்கடம் தமிழ்ப் பெயர்சொல்லே. அதில் மாற்றுககருத்தே இருக்கக் கூடாது.
திருப்பதிய மீட்க முடியலையா? பதிலுக்குச் சென்னையக் கேட்டாங்களே...அது தெரியாதா! சென்னையையும் தர முடியாதுன்னு...வந்தப்புறம் திருத்தணியா திருப்பதியான்னு ஒரு சண்டையப் போட்டு திருத்தணி ஒருவழியா கெடைச்சது. நல்லவேள. இல்லைன்னா முருகனக் கும்பிடக் கூட ஸ்டேட் விட்டு ஸ்டேட் போக வேண்டியிருக்கும்.
ஸ்ரீநிவாஸ்...இந்த வடமொழிப் பெயருக்குப் பொருள் என்ன? ஸ்ரீ என்றால் திரு. நிவாஸ் என்றால் வசிப்பது. திருமகள் குடிகொண்ட இடம் என்று பொருள். ஸ்ரீநிவாஸன் என்றால் அதற்கு ஆண்பால் விகுதி சேர்கிறது. திருமகளோடு என்றும் வாழ்கிறவன் என்ற பொருளாகிறது. சரி. ஸ்ரீநிவாஸ் என்பதற்கு இணையான தமிழ்ப் பெயர் என்ன? திருக்குடி என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
வாங்க நண்பன். உங்க பதிவுகளைத் திரும்பவும் பார்ப்பதில் மகிழ்ச்சி.
இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னமும் பார்க்கக் கிடைக்கவில்லை.
நான் அடிக்கடி நினைப்பது "இந்த உலகம் குழந்தைகளுக்கானது" என்று. ஆனால் பெரியவர்களின் கைகளில் அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பூட்டிய உலகத்துக்குள்ளே உள்ள குழந்தைகளின் நிலை? கொடுமை. கொடுமை.எல்லாரும் தப்பிக்க முடியவில்லை. ஒருசில குழந்தைகளாவது தப்பித்தது குறித்து மகிழ்ச்சி.
ஏன் தெரியுமா அரசாங்கங்கள் வரியை மறுக்கின்றன...ஒருவேளை வரி வாங்கி விட்டால்..அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே....அதுவுமில்லாமல் அங்கீகாரம் கொடுத்தது போலவும் ஆகிவிடும் அல்லவா.
// நானானி said... இன்னும் நான் 'புளிமிளகாய்' ரெசிப்பி கொடுத்தால் கடித்து குதறி விடுவார்கள். //
புளிமெளகாயா...சூப்பர். எங்க வீடுகள்ள புளிமெளகா இல்லாம எந்த நல்லது கெட்டதும் நடந்ததில்லை. புளிமிளகாய்க்கு எனக்குத் தெரிஞ்ச ரொம்பப் பேரு அடிமை. நான் கொஞ்சம் கொஞ்சம் அடிமை. :)
அன்மையில் வீட்டிலிருக்கும் போது " ஏம்மா கருவாட்டுக் கூடை முன்னாடி போ.." என்ற வசனத்தை விளையாட்டாகச் சொல்ல, பிள்ளைகள் என்னது என்று விசாரிக்க, இந்தப்பாடல் பற்றி விரிவாகச் சொல்லி மகிழ்ந்தேன் அப்போ இந்தப்பாடலை பதிவாக எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன். நினைத்ததைச் செய்திருக்கின்றீர்கள். மறக்க முடியாத ஒரு பாடல். மற்றும் அனைத்தும் மற்றவர்கள் சொல்லி விட்டார்கள். பதிவுக்கு நன்றி. //
வாங்க மலைநாடான். இதுதான் எண்ணிய முடிதல்னு சொல்வாங்களோ :)))) இந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்கும்னு தெரிஞ்சு மகிழ்ச்சி.
// வேலு நாயக்கன் said... ஆஹா! எவ்வளவு யோசித்து பாட்டு எழுதி இருக்காங்க... ஆஹா! எவ்வளவு ரசித்து கேட்டிருக்காங்க.....
நானும் தான் இருக்கேனே வெட்டியா... //
ஆகா...கைப்புள்ள இருந்தாரு...இப்ப வேலு நாயக்கனும் வந்துட்டீங்களா! "நானும் இருக்கேனே வெட்டியானா?" என்ன அர்த்தம்? நீங்கதான் வெட்டியா? இல்ல வெட்டியா இருக்குறதும் நீங்களா? கொஞ்சம் புரியுறாப்புல சொல்லுங்களேன். :)
// நானானி said... ராகவன்! இதுக்குள்ளே இவ்ளோ சமாசாரம் இருக்குதா? அருமையான ஒரு பாடலை மேலும் அருமையாக ரசிக்கவைத்திருக்கிறீர்கள். கருவாட்டுக்கூடையிலிருந்து நல்லமணம் வீசியது. //
கருவாட்டுக்கூடைல இருந்து நல்ல மணம்தான வரும்..ஆகா ஆகா...ஆகா...ம்ம்ம்..சீலாக்கருவாடு நெத்திலிக் கருவாரூ..சுறாக்கருவாடு...ம்ம்ம்..ம்ம்ம்..
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said... ராகவா!! நல்ல பாட்டு, அழகான அலசல், அது அந்தக் காலப்பாட்டுக்கே உரிய தனித்துவம். ''கங்கை யமுனை...மிகப்பிடித்த பாடல்.... //
வாங்க யோகன் ஐயா, ஆமா...அந்தக் காலப் பாட்டு. இளையராஜா வந்த புதுசுல இசையமைச்ச பாட்டு. அதுனால இளமையும் துள்ளலும் இனிமையும் எக்கச்சக்கம்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணு முட்டுதே...இம்புட்டு கேள்வி மாறி மாறி மாரி மாதிரி கேட்டிருக்கீங்க. சொல்றேன்.
// வெட்டிப்பயல் said... ஆனா எல்லா வார்த்தைக்கும் தமிழ்ல வார்த்தை தேடனுமா என்ன? (இந்த திருக்குடி, திருவகன் மாதிரி). //
அது தப்புங்குறியா? தப்புன்னா ஏன் தப்புன்னு சொல்லு.
// சரி அப்படினா நாராயணான்ற வார்த்தை எந்த மொழி??? //
கண்டிப்பாக தமிழ் இல்லை. நாராயண் என்பது வடமொழிப் பெயர். இன்னொரு அன் ஆண்பால்விகுதியாகச் சேர்ந்து நாராயணன்.
//// வெட்டிப்பயல் said... // ஓ கண்டுபுடிச்சிட்டா போச்சு! ஆனா ஒரு சிறு மாற்றம். "பாலாஜி"-என்பதில் இருந்து துவங்கலாமா? :-)))//
தேவையில்லை.. எனக்கு மொழியில் பெரிதாக பற்றில்லை... //
மொழிப்பற்றைக் கடந்த நல்ல பண்பு எங்களுக்கெல்லாம் இல்லப்பா. என்ன பண்றது. இதோ இங்க நெதர்லாந்து வந்திருக்கேன். இங்க கூட இந்திக்காரங்க வந்து நான் இந்தீலதான் பேசனும்னு எதிர்பார்க்குறான். பூடகமா கேலி பேசுறான். அவனுக்கு இருக்குற அளவுக்கு எனக்கு மொழிப்பற்று இல்லையேன்னு நான் வருத்தப்படலை.
// ஜி.ராக்கு வேணா ஆரம்பியுங்களேன். ராகம் தமிழ் வார்த்தையா?
ராகவன் தமிழ் வார்த்தையா? //
ராகங்குறதோ ராகவங்குறதோ தமிழ்ப் பேர் இல்லைய்யா. அதுனால என்ன சொல்ல வர்ர?
//// kannabiran, RAVI SHANKAR (KRS) said... //ஸ்ரீநிவாஸ் என்பதற்கு இணையான தமிழ்ப் பெயர் என்ன? திருக்குடி என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்//
ஜிரா என்னங்க இது திருக்குடி, தூத்துக்குடின்னு காமெடி பண்ணிக்கிட்டு? :-) //
ஆகா! திருக்குடிங்குறது காமெடியாப் போச்சா! இன்னும் சரியாச் சொன்னா திரு தங்குமிடம். அதாவது திருத்தங்கல். அது இன்னமும் பொருத்தம். அட...அந்த பேர்ல ஒரு ஊரும்..அந்த ஊர்ல ஒரு கோயிலும் இருக்குறது தெரியாதா!
// போதாக்குறைக்கு "ஸ" கரம் வேற போடறீங்க! அதான் தமிழில் "ச" கரம் இருக்கே! இல்லீன்னா பரவாயில்லை!ஸ்ரீநிவாசன் என்றே சொல்லுங்க! //
அப்ப ஸ்ரீ மட்டும் ஏன் போடனும். பேசாம சீனிவாசன்னு சொல்வோமே!
// இது துதியோடு நின்றால் சரி! ஆனா அதுக்காக இறைவனின் பெயரை எல்லாம் தமிழ்ப் படுத்தறேன்னு இறங்கினா, அதுக்கு முடிவே இல்லாமப் போயிடும்! //
// திருவேங்கடமுடையான் என்னும் அழகிய தமிழ்ச் சொல் உள்ளதே! அதை எப்படி மாற்றி ஆக்க முடியாதோ, அதே போல் தான் ஸ்ரீநிவாசன் என்பதையும் மாற்றி ஆக்க முடியாது! //
ஆக்க விருப்பமில்லை என்று சொல்லுங்கள். மொழி மாற்றித்தான் நீங்கள் கூப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதே போல மாற்றிக் கூப்பிடக்கூடாது என்று நீங்கள் கட்டாயப்படுத்தவும் முடியாது.
//// அதே போல் முருகன் முருகன் தான், கந்தன் கந்தன் தான், சுப்ரமணியன் சுப்ரமணியன் தான்! அரங்கன் எல்லா மொழியிலும் அரங்கன் தான்! //
// தெலுங்கில் ஆஸ்தானம் சொல்லும் போது கோவிலில் "மலையப்ப சுவாமி வாரி ஒச்சினாரு! பராக் பராக்! மலையப்ப தேவுடு ஒச்சினாரு! பராக் பராக்!" - இப்படி மலையப்பன் என்று தான் கூறி மகிழ்கிறார்கள்! //
ஆனா பாருங்க ரவி, மலையப்பா அப்படீங்குறது தெலுங்குப் பேரு கன்னடப் பேருன்னு அவங்கவங்க சொல்லிக்குவாங்க. அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும். அதுனால எனக்கு ஒன்னுமில்லை. ஆனா தமிழ்ப் பேரைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாங்கன்னு நீங்க சொன்னதாலச் சொன்னேன்.
அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு நான் சொல்லலை. மேல ரவிக்கு நான் சொல்லீருக்குறத படி. அந்தப் பேரை மாத்தாமக் கூப்புடுறது தப்புன்னு நான் சொல்ல வரலை. மாத்திக் கூப்புடக்கூடாதுன்னு நீங்க சொல்லக்கூடாதுன்னுதான் நான் சொல்றேன். சரி..கலைமகள் அலைமகள் மலைமகள்னு கூப்டா சாமி வராதா?
// வெட்டிப்பயல் said... //அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும்.//
தாய்மொழி பற்று தமிழர்களுக்கே உரியதுனு நினைச்சா சிரிப்பு தான் வருது. அவனவனுக்கு அவன் தாய் மொழி மேல பற்று இருக்கும். இங்க நீங்க கன்னடர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் தாய் மொழி பற்று இல்லைனு சொல்ல வரீங்களா? //
மொதல்ல நான் என்ன சொன்னேன்னு முழுசாக் கீழ தர்ரேன். அதுக்குக் கீழ விளக்கம் சொல்றேன்.
// மலையப்பா அப்படீங்குறது தெலுங்குப் பேரு கன்னடப் பேருன்னு அவங்கவங்க சொல்லிக்குவாங்க. அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும். அதுனால எனக்கு ஒன்னுமில்லை. ஆனா தமிழ்ப் பேரைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாங்கன்னு நீங்க சொன்னதாலச் சொன்னேன். //
திரும்பவும் சொல்றேன். அவங்க அது கன்னடம் தெலுங்குன்னு சொல்லி மகிழ்றது தப்புன்னு சொல்லலை. அவங்க அதத் தமிழ்ப் பேரா நெனைச்சுச் சொல்றாங்கன்னு சொன்னது தப்புன்னு சொல்றேன்.
திரும்பத் திரும்பச் சொல்றேன். என்ன பேர்ல வேணுமோ அப்படியே கூப்புட்டுக்கோங்க. ஆனா அப்படித்தான் எல்லாரும் கூப்புடனும்னு சொன்னா ஏத்துக்க முடியாது. இதுதான் என்னுடைய கருத்து. ஸ்ரீநிவாஸ், சீனிவாசன் இப்படிக் கூப்புடுறவங்க கூப்புடுங்க. ஆனா நான் திருத்தங்கல்னு கூப்புடக்கூடாதுன்னு நீ சொல்லக் கூடாது. அந்தத் திருத்தங்கல் சொல்லட்டும்.
// நீங்க திருத்தங்கல்னோ இல்லை வெறும் தங்கல்னோ கூட சொல்லிக்கோங்க...
ஆனா இந்த பேருக்கு தமிழ்ல இல்லை இந்த பேருக்கு தமிழ்ல இல்லைனு புலம்பறதை நிறுத்துங்க. இறைவனை மொழியை வைத்து அளவிடவதை நிறுத்துங்க...
இல்லைனா இந்த மாதிரி எப்பவும் மத்தவங்களோட சண்டை போட்டுட்டே இருங்க. இறை தொண்டு செய்யனும்னு ஆசைபடாதீங்க. அதுக்கு உங்களுக்கு நேரம் கிடைக்காது. சண்டை போடத்தான் சரியா இருக்கும்... //
ம்ம்ம். தம்பி...நான் என்ன சொல்ல வர்ரேன்னே புரிஞ்சிக்காம பேசுனா என்ன செய்றது? இறைத்தொண்டு செய்ற பக்குவம் எனக்குக் கிடையாது. நான் சாதாரணமானவன். நான் புனிதனல்ல. அதை மட்டும் சொல்லிக்க விரும்புறேன். சரி. நாந்தான் சண்டை போடுறேன். அப்படியே இருக்கட்டும். ரெண்டே ரெண்டு கருத்து சொல்லீட்டு முடிச்சிக்கிறேன்.
1. தமிழில் கும்பிட்டால்தான் சாமி காப்பாத்தும்னு நான் சொல்ல வரலை. அதை நான் எங்கையும் சொல்லவும் இல்லை. கடவுள் மொழியைப் பார்த்து அளவிடுவார்னு நானும் சொல்லலை. ஆனா எனக்குப் பிடிச்ச மாதிரிதான் கடவுளைக் கூப்புடுவேன். அது தப்புன்னு யாரும் சொல்ல முடியாது. அது தப்புன்னா....நீ என் கிட்ட என்ன தப்பு சொல்றியோ அந்தத் தப்பு உங்கிட்ட இருக்கு.
2. தமிழ்ல அது இல்ல இது இல்லன்னு நாங்க யாரும் அழலை. ஆனா தமிழுக்கு எதுவும் தேவைன்னா அதைச் செய்ய வேண்டியதும் இருக்கு. நாம இந்தக் கருத்தைப் பத்தி இந்தப் பதிவுல பேசலை. இந்தப் பதிவுல சாமிப் பெயரைத் தமிழ்ப் படுத்தலாமான்னுதான் பேசினோம். அதைத் தாண்டி நான் வெளிய போகலை.
// எனக்கு தூய தமிழ் வார்த்தை தெரியாதுனு ஏமாத்த பார்த்தீங்க ஜி.ரா...
அப்படினா முதல்ல நீங்க போயி படிச்சிட்டு வாங்க. சொல் ஒரு சொல்னு ஊருக்கே சொல்லி தரீங்க... //
பாலாஜி, உன்னைய ஏமாத்தி எனக்கு என்ன ஆகப் போகுது. கொண்டல் கேள்விக்கு உனக்குதான் விளக்கம் சொல்றேன். ரவிக்கு இல்லை. ஏன் தெரியுமா? கொண்டல்னா மேகம்னு அவரு முடிவெடுத்துட்டாரு. அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனா அவர் சொன்னத வெச்சு நீ பேசுறதால ஒனக்குச் சொல்றேன்.
வளை என்றால் வளைப்பதுமாகும். எலியிருக்குமிடமும் ஆகும். குலை என்றால் குலைப்பதும் ஆகும். குலை தள்ளுவதும் ஆகும்.
கொண்டல் காற்று கேள்விப்பட்டிருக்கியா? மலையிலிருந்து வீசும் காற்றுக்குக் கொண்டல் என்று பெயர். சித்திரையில் அது மாறும். அது வெயில் காலம். கார் கொண்டற் கால் தள்ள வாய்ப்பில்லை.
எனக்குத் தமிழ் முழுக்கத் தெரியும்னு நான் சொல்லிக்கலை. சொல்லவும் மாட்டேன். ஏன்னா தமிழ்ல எவ்வளவு எனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். நன்றி.
294 comments:
«Oldest ‹Older 201 – 294 of 294http://ilackia.blogspot.com/2007/07/93.html
இப்பத்தான் புத்தகத்த முடிச்சிட்டு கம்ப்யூட்டர்ல உக்கார்ரேன். :) விமர்சனம் போடனும்.
http://govikannan.blogspot.com/2007/07/blog-post_475.html
கண்டிப்பாகத் தேவையில்லை. வடமொழியும் ஒரு கண் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. என்னதான் ஆங்கிலத்திலேயே படித்து வேலையைப் பார்த்தாலும் சம்பாதித்தாலும் ஆங்கிலம் இன்றியமையாத மொழியாக இருந்தாலும் இரண்டாவது கண் என்று ஒப்புக்கொள்ள முடியாத பொழுது, வடமொழியை அப்படி ஒப்புக்கொள்ள முடியாது.
http://blog.arutperungo.com/2007/07/blog-post_22.html
ஏனிப்படி? ஏனிப்படி? ஏனிப்படி?
http://holyox.blogspot.com/2007/07/317-2.html
பதிவைப் படிக்கைல ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்தது. பின்னூட்டங்களப் படிச்சப்புறம் எல்லாம் கொழம்பிப் போச்சு.
சரி..ஒன்னொன்னா யோசிக்கிறேன்.
1. ஓரினச் சேர்க்கை...சரியா தப்பா? அதான மொதக் கேள்வி. தனிப்பட்ட வயது வந்த இருவருக்குள் நடக்கும் ஒப்புதல் உடலுறவுக்குத் தடையில்லை அப்படீன்னா அது தனிமனித சுதந்திரம்னா ஓரினச் சேர்க்கை சரிதான். அது அதில் ஈடுபடும் இருவரின் தனிப்பட்ட விருப்பம்.
2. அவங்க குடும்பமா கல்யாணம் செஞ்சுக்கிட்டு வாழலாமா? ம்ம்..இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான். அதுக்கு வேற மாதிரி யோசிச்சுப் பாக்குறேன். பொதுவா ஓரினச் சேர்க்கையாளர்கள் மேல இங்க வைக்கிற குற்றச்சாட்டு...பலரோட உறவு வெச்சுக்கிறது..பொது இடங்கள்ள உத்துப்பாக்குறது..அப்படித்தான...ஒருவேளை இந்தக் கல்யாண உரிமை அவங்களையும் குடும்ப அமைப்பா வாழ வைச்சா...அது அவங்களை இன்னும் நெறிப்படுத்தும்னா அதையும் செய்யட்டுமே.
உண்மைதான். நம்ம பிள்ளைக இப்படீன்னு தெரிஞ்சா வருத்தப்படத்தான் செய்வோம். மறுக்க முடியாது. ஆனா இப்பிடித்தான்னு நின்னா என்ன செய்றது? நம்ம குண்டக்க மண்டக்க முடிவெடுக்க...அவங்க வேற மாதிரி முடிவெடுத்துட்டா? எதுக்கோ பயந்துக்கிட்டு பிள்ளையப் பறிகொடுக்க முடியுமா!?
இது என்னோட கருத்து. ஏதோ தொடுப்புகள்ளாம் குடுத்திருக்கீங்க. அதையும் படிச்சி மருத்துவம் என்ன சொல்ல வருதுன்னு புரிஞ்சிக்கப் பாக்குறேன்.
http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_21.html
அருமையான தேர்வுகள். ஜெயகாந்தன், தீபா, இளவஞ்சி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
http://ilavanji.blogspot.com/2005/11/blog-post_19.html
ஏழாவது புத்தகம் வந்துருச்சுங்கோவ்....அதையும் ஒரு நாள் + ஒரு பகல்ல படிச்சி முடிச்சாச்சூங்கோவ். சீக்கிரமே விமர்சனம் வருதுங்கோவ். :)
http://muruganarul.blogspot.com/2007/07/1.html
கந்தகுருகவசம் மீண்டும் முருகனருளில் முன்னிற்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடரட்டும். அருள் பரவட்டும்.
http://ilavanji.blogspot.com/2007/07/blog-post_17.html
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. பொருத்தமான படம் போட்டியில் வென்றது.
கலக்கல் திலகம் இளவஞ்சி வாழ்க!
ஒளிப்படச் செம்மல் இளவஞ்சி வாழ்க!
நிழற்பட ஓவியர் இளவஞ்சி வாழ்க!
புகைப்படப் புலவர் இளவஞ்சி வாழ்க!
http://pithatralgal.blogspot.com/2007/07/244-2.html
எடுத்த எடுப்புலயே பிரிவா? ம்ம்ம்....பார்க்கலாம். பல்லாண்டு பாடிக் புகழும் இடத்தில் சொல்லாண்டு காதல் பழகிய சிறுவர்களை நல்லாண்டு சேர்த்து வைக்கட்டும்.
http://nilavunanban.blogspot.com/2007/07/blog-post_9994.html
ஹாரிபாட்டர் புத்தகத்தைப் பணக்காரத்தனத்துக்கும்னு மட்டும் வாங்குறவங்களச் சொல்றது சரி. பெருமைக்கு மாவிடிக்கிறதுன்னு சொல்வாங்க. அந்த மாதிரி செய்றவங்களுக்குச் சரி.
ஆனா எல்லாரும் அப்படியில்லை. ஹாரி பாட்டர் புத்தகம் வந்த பிறகுதான் காமிஸ்ல இருந்த ஆர்வத்தைப் புத்தகம் படிக்கிறதுல குழந்தைங்க திருப்புனாங்க. பெரும்பாலானவங்க விரும்பித்தான் படிக்கிறாங்கன்னு நம்புறேன்.
ஹாரிபாட்டரப் படிக்கிறாங்களோ இல்லையோ....ஏழைகளுக்கு உதவ வேண்டியது எல்லோருடைய கடமையும்.
ஏழாவது புத்தகத்தைப் படிச்சு முடிச்சிட்டேன். விரைவில் வருது பதிவு. புத்தகத்துல என்ன இருக்குன்னு அந்தப் பதிவுல தெளிவாச் சொல்ல முயற்சி செய்றேன்.
http://ilavanji.blogspot.com/2007/07/blog-post_22.html
நான் காலைலயே இந்தப் பதிவைப் பாத்தேன். ஆனா ஆப்பீசுல கட்டங்கட்டமா வரும். அதுனால காத்திருந்து வீட்டுக்கு வந்து படிச்சிட்டேன். :)
கொத்து புரோட்டாவைப் போல சுவையான உணவு இல்லை. இல்லை. இல்லவேயில்லை. இங்கு உண்ணும் பருகரும் ஸ்டெக்கும் என்னதான் இருந்தாலும் கொத்துக்கு முன்னால் வருமா!
அந்தப் பழைய புலவரு கருஎள்ளுவரு அல்ல. தெருவள்ளுவரு. அவரு மதுரை, தூத்துக்குடி, கோவை, திருச்சீன்னு பல ஊர்கள்ள தெருவுல தள்ளுவண்டி வெச்சு கொத்து பொரோட்டா பொரட்டுனவரு. அதுனாலதான் அவருக்கு மதுரை பரோட்டா வணிக தள்ளுவண்டி கொத்தனார்னும் இன்னொரு பேரு உண்டு. ஹி ஹி
// முருகனுக்கு எழுபடை வீடுதான்( ஏழாவது வீடு இப்போதைக்கு Amsterdam! ).//
ஆகா! அப்படிப் போடுங்க.
// ஆனா அழகிரிநாட்டுக்கு (அதாங்க... தெந்தமிழகம்) வந்துட்டீங்கன்னா கொத்துபரோட்டாவுக்கு தலவரலாறு ஊருக்கு ஊர் உண்டு! //
பின்னே....கொத்துப் புரோட்டாவை என்னோட வங்காள நண்பர்களுக்குத் தெரியாம அறிமுகப் படுத்தீட்டேன். அவங்க கடைல உக்காந்து சிக்கன் கொத்து, எக் கொத்து, மட்டன் கொத்துன்னு கொத்திக் கொத்தி எடுத்தத மறக்க முடியுமா?
சாத்தூர்ல வண்டி இருக்கங்குடிக்குத் திரும்புற திருப்பத்துக்கு முன்னாடி ஒரு ஓட்டல் இருக்கு. அப்படியே கொடகொடகொடன்னு கொத்தி அதுல சால்னாவை ஊத்தி கொளகொளன்னு தட்டுல எல மேல போட்டுத் தருவாங்களே...ஆகா...ம்ம்ம்..இங்க அதெல்லாம் எங்க. ஒங்க ரெசிப்பிதான் திங்க. நன்றிங்க.
http://vettipaiyal.blogspot.com/2007/07/blog-post_6204.html
தேரு இழுக்கலாம். தேர்த் திருவிழான்னா அது ஊர்த்திருவிழா. எல்லாரும் முயற்சி செய்வோம்.
இசைப்பதிவுகள்ள இசையரசி பதிவுகளையும் சேத்துக்கோங்கய்யா. மறந்துராதீக.
http://ennulagam.blogspot.com/2007/07/1.html
வாழ்க்கைச் சக்கரம் சுழலத் தொடங்கீருச்சா. நல்லாயிருக்கு அறிமுகம். ஒங்க எழுத்தப் பத்தி என்ன சொல்றது! அதெல்லாம் தானா வர்ரது.
அறிமுகம் இப்பதான் தொடங்கீருக்கு. இனிமேதான் இந்தப் பாத்திரங்கள் செய்யப்போற சேட்டைகளை ரசிக்கப் போறோம். காத்திருக்கிறோம்.
http://kannansongs.blogspot.com/2007/07/blog-post_23.html
கண்ணன் பாடல்கள் வலைப்பூவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்ல பாடல். இதை முழுக்கவும் கருநாடகாமப் பாடுவார்கள். அப்படிப் பாடாமல் சிறிது நாட்டுப்பாடல் முறைமையைக் கலந்தமை நன்றாக ரசிக்கும் படி இருந்தது.
காட்டில் ம்ருகங்கள் உண்டு போன்ற உச்சரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.
அது சரி...கழுத்தில் சங்கிலி ரொம்பவும் வித்தியாசமா இருக்கே?
http://kavidhaiunarvu.blogspot.com/2007/07/blog-post_7621.html
தில்லானா மோகனாம்பாள் ஒரு காவியம். புத்தகமாகவும் படிச்சிருக்கேன். ரெண்டு பெரிய புத்தகங்கள். அப்பப்பா...அதைச் சுருக்கிச் சினிமாவா அழகா எடுத்திருப்பாங்க்க. எனக்கும் படத்தோட வசனம் நல்லா நெனைவிருக்கு. அத்தன வாட்டி நானும் பாத்திருக்கேன். இத்தனைக்கும் அது எங்கப்பா சின்னப்பையனா இருந்தப்ப வந்தது.
// சுல்தான் said...
நல்ல படம்தான். இருந்தாலும்
பார்த்து அம்மணீ!
சந்திரமுகி கதை மாதிரி ஆயிடப்போகுது?!!!! //
:))))))))))))) ஆனா சுல்தான் சார். மோகனாம்பாள் முடிவு சுபமான முடிவு. அதுனால இவங்க தப்பிச்சாங்க. :)
http://thulasidhalam.blogspot.com/2007/07/blog-post_17.html
படங்க நல்லாருக்கு டீச்சர். அவருக்கு என்னுடைய பாராட்டுகள். ஆமா இப்பல்லாம் பதிவெழுதுறதில்லையா. உங்க பதிவுகள் தமிழ்மணத்துல தெரியிறதில்லையே?
http://koodal1.blogspot.com/2007/07/blog-post_23.html
உண்மைதான். தமிழ் வளர்த்த மதுரையை தமிழ் வளர் மதுரை என்று சொல்லலாம். வளர்னு சொல்லும் போது உரிச்சொல் ஆகீருதுல்ல.
http://inbame.blogspot.com/2007/07/1.html
அருமையான குறள்கள். புணர்ச்சி மகிழ்தல் என்பதைக் காதலன் வழியிலிருந்து சொல்லியிருக்கிறார். குறிப்பாக நோய்க்கு நோயே மருந்து என்பது அழகிய கவிதை.
http://johan-paris.blogspot.com/2007/07/blog-post_23.html
மிகவும் வருத்தத்திற்குரிய செய்திகள். குழந்தைகள் குழந்தைகளாக வளர இந்த உலகம் அனுமதிக்கவே அனுமதிக்காதா!
http://saampar.blogspot.com/2007/07/blog-post_23.html
சரவணா ஸ்டோர்ஸ் மீது ஏற்கனவே பல புகார்கள் வந்து விட்டன. அங்கு போவதைத் தவிர்ப்பது நல்லது என்றுதான் தோன்றுகிறது.
ஈழத்தவர்கள் மட்டுமல்ல தமிழகத்துத் தமிழர்களும் முந்திய செய்திகளில் மாட்டியுள்ளார்கள். இனிமேலாவது சரவணா ஸ்டோர்ஸ் மாறுகிறதா என்று பார்க்கலாம்.
http://malarvanam.blogspot.com/2007/07/blog-post_798.html
இதே பிரச்சனை லியாண்டர் பயசுக்கும் ஏற்பட்டதை மறக்க முடியாது. அவருக்கும் பிரச்சனை காய்கறியால்தானாம். அரைகுறை வேகல் மாடு/பன்றிக் கறியில் இருக்கும் நாடாப்புழு அவரைத் தாக்கியிருக்கிறார். ஆனால் பயசுக்கு அதைச் சாப்பிடும் வழக்கமில்லையாம். பிறகு அவரது சாப்பாட்டு முறையிலிருந்து அது காய்கறிகளைச் சாப்பிடுவதால் வந்தது என்று கண்டுபிடித்தார்கள்.
இந்தியச் சூழலில்...பச்சைக்காய்கறிகளைத் தவிர்ப்பது நல்லது என்றே தோன்றுகிறது. நன்றாகக் கழுவித் தோல் நீக்கிச் சாப்பிடுதல் நலம். கீரை வகைகளை நன்றாகக் கழுவிட வேண்டும். அசைவத்தையும் நன்றாக வேக வைப்பதே நல்லது.
அதெல்லாம் சரி....தருமம் எங்க இருக்கு? பத்திரிக்கைல மட்டும் இருக்க?
http://aaththigam.blogspot.com/2007/07/22.html
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய.....இந்த வரியிலேயே மொத்தப் பாட்டும் முடிஞ்சு போச்சு. அந்தக் கோடு அசைய அசைய அதுல நம்ம மனசு இசைய இசைய....அடடா! சந்தமே சொந்தமா வெச்சிருக்கிற அருணகிரிக்கா சொல்லித்தரனும்!!!! முருகா! நன்றி வி.எஸ்.கே
// VSK said...
முருகன் ஒரு கடவுள்.
அவன் சாதி பார்த்ததில்லை.
படைப்புகள் அனைத்துமே அவன் சாதிதானே.
பேதமென்ன அதில்?
அவனால் உபதேசம் பெற்று, அவனையெ வாழ்த்திப் பாடல்கள் புனைந்து அவனையே எண்ணி வாழ்ந்த அருணையார் சாதி பேசுவாரா? //
கண்டிப்பாக மாட்டார். அவருடைய படைப்புகளைப் படித்தவர்களும் அப்படிப் பேச மாட்டார்கள்.
அவர் வாழ்ந்த காலகட்டத்தை வைத்து அவர் சொல்வதை ஆராய வேண்டும். அந்த வகையில் இட்டார் இடாதார் விளக்கம் பொருத்தமானதாகவே உள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிச் சொல்லியிருப்பார் என்று நினைக்கவில்லை.
http://johan-paris.blogspot.com/2007/06/normandy.html
அப்பப்பா என்ன அழகு. இது பாரீசிலிருந்து எவ்வளவு தொலைவு? பிரான்சின் எந்தப் பக்கத்தில் இருக்கிறது? பெல்ஜியம் எல்லையை ஒட்டியா? பார்க்க வேண்டும் போல இருக்கிறதே. சென்ற பாரீஸ் விஜயம் அப்படிப் போனது. அடுத்து திரும்பவும் வரனும்.
http://enkathaiulagam.blogspot.com/2007/07/blog-post.html
// tbr.joseph said...
வாங்க ராகவன்,
எல்லாம் இந்த நேர வித்தியாசம் செய்ற வேலை.//
இப்ப நீங்க இந்தியாவுல இல்லையா? எங்கருக்கீங்க? //
இப்ப நெதர்லாந்துல இருக்கேங்க. புரோஜக்ட் வேலையா வந்திருக்கேன்.
http://konguvaasal.blogspot.com/2007/07/blog-post.html
பிரமாதம் போங்கோ. தேங்காண்ணை கொறைக்கனும். கொழுப்பு நெறைய. நல்லெண்ணெய் தேவலை. ஓரளவுக்கு நல்லது.
http://thulasidhalam.blogspot.com/2007/07/blog-post_25.html
கிருஷ்னனுக்கு மாதவன் பொருத்தம். அர்ஜுனனுக்கு அஜித். கர்ணனுக்கு சூர்யா. துரியோதனனுக்கு விக்ரம். குந்திக்கு சரண்யா. பீமனுக்குப் புது ஆளத்தான் போடனும்.
முந்தி ஒரு நடிகரு இருந்தாரு. பேரு திடீர்னு நெனவு வரலை. அவருடைய மனைவி ஸ்டவ் வெடிச்சிருச்சு. காப்பாத்தப் போய் இவரும் போயிட்டாரு. அவரு பேரு மறந்து போச்சு. அவரு மகன் கூட சன் டீவில ஊரு ஊராப் போயி நீங்கள் கேட்ட பாடல் நடத்துறாரே.
http://imsaiarasi.blogspot.com/2007/07/blog-post_19.html
காதல் மயக்கம்
அழகிய கண்கள் சிரிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம்
தன்னை மறந்த அனுபவம்
இன்று அனுமதி இலவசம்
இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வருது. சூப்பர். தொடரட்டும்.
http://imsaiarasi.blogspot.com/2007/07/ii.html
அவனா சொன்னான்
இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நம்ப முடியவில்லை இல்லை இல்லை இல்லை...
ஆனாலும் அடுத்து என்னாகுதுன்னு பாப்போம்.
http://cdjm.blogspot.com/2007/07/blog-post_21.html
Wonderful district with fantastic scenic places. Kanyakumari district...unlike other district (named with district headquarters) has nagarcoil as HQ.
I had been to many of the tourist places in the distric and enjoyed. Thirparappu, Thottipalam, Kanyakumari, Sucheendram, Chitharu dam, Padmanabpuram and some more unknown places.....
Thanks for bringing back the memory. Thanks Joe.
http://isaiarasi.blogspot.com/2007/07/blog-post_24.html
ஆகா....மூனு பாட்டுகள். ஆனா ரெண்டு மொழிகள்ள. இசையரசியின் குரலில் தெலுங்கும் இனிக்கிறது.
ஒரு கருத்து. பாகப் பிரிவினைக்குத் தெலுங்கில் இசை விஸ்வநாதன் இல்லையென்று தெரிகிறது. ஆனால் தெலுங்கு இசையமைப்பாளர் அதே மெட்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இசைக்கோர்வையில் தமிழில் இருந்த முழுமை தெலுங்கில் இல்லை. இது என்னுடைய கருத்து.
http://koodal1.blogspot.com/2007/07/blog-post_23.html
// குமரன் (Kumaran) said...
ஆமாம் இராகவன். தமிழ் வளர் மதுரைன்னு சொல்லலாம். ஆமா. அது வினைத்தொகைன்னு தானே சொல்லுவாங்க. நீங்க உரிச்சொல்னு சொல்றீங்க? எனக்கு இலக்கணம் அவ்வளவா தெரியாது. அதனால நான் சொல்றது தப்பா இருக்கலாம். //
இல்ல இல்ல. நீங்க சொல்றதுதான் சரி. அது வினைத்தொகை. சால உறு தவ நனி கூறு களி - இவைகள்தான் உரிச்சொற்கள்
http://kannansongs.blogspot.com/2007/07/blog-post_23.html
//// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அது சரி...கழுத்தில் சங்கிலி ரொம்பவும் வித்தியாசமா இருக்கே?//
ஜிரா எதப் பாக்கணுமோ அத கரெக்டாப் பாத்திடுவாரே! :-))
எவ்வளவு தேறும் ஜிரா, சங்கிலி? :-) //
ஒரு காக்கிலோ தேறும்னு நெனைக்கிறேன் :)))))))))))))))
// //காட்டில் ம்ருகங்கள் உண்டு போன்ற உச்சரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம்//
ஜிரா
இது கர்நாடக இசை வாணர்கள் பலர் செய்யும் ஒலி பேதம்! தமிழ் என்றில்லை...
தெலுங்கு, கன்னடம் எல்லாத்திலும் இதைச் செய்கிறார்கள்...ஜேசுதாஸ் கூடத் தன்னை அறியாமல் சில சமயம் இப்படிச் செய்து விடுவார் இசைக் கச்சேரிகளில்! //
இது தம்மையும் அறியாமல் செய்யும் தவறல்ல ரவி. மொழியை அறியாமல் செய்யும் தவறு. ஒருமுறை கச்சேரியில் பாம்பே ஜெயஸ்ரீ ராகி தந்திரா என்ற புரந்தரதாசரின் கீர்த்தனையைப் பாடுகையில்.....கன்னடத்தைப் படுகொலை செய்து கொண்டிருந்தார். எனக்கே மனசுக்குச் சங்கடமாக இருந்தது என்றால்..கன்னடர்கள் கேட்டிருந்தால்? அப்படித் தப்புத் தப்பாய் ஏன் பாட வேண்டுமென்று தெரியவில்லை.
// எந்த "ரோ" மகானுபாவுலு என்று "ரோ"வை இழுப்பது - உடனே அடியேன் இங்கே C-Rowவில் உட்கார்ந்து இருக்கிரேன் என்று ஒருவர் எழுவது மாதிரி ஆகி விடும்! :-) //
எந்த்த "ரோம" கான பாவுலுகளும் நிறைய உண்டு. இப்பிடிப் பாடிச் சாதிப்பது என்னவென்றுதான் எனக்குப் புரியவில்லை. :)))))))))))))))))) ஜேசுதாசின் திருப்புகழைக் கேட்கனுமே. ஒலிப்பேழை இருக்கிறது. அதில் அவர் செய்த திருப்புகழ் கொலைகளைக் கேட்டு விட்டு...அதைத் திரும்பக் கேட்கவேயில்லை.
http://vettipaiyal.blogspot.com/2007/07/blog-post_25.html
என்னது இது? எல்லாப் படத்துலயும் இந்தக் கததான...இதத்தவிர வேற நடிக்கத் தெரிஞ்சா நடிக்க மாட்டாங்களா? எடுக்கத் தெரிஞ்சா எடுக்க மாட்டாங்களா? நீ வேறப்பா! யாரு கிட்ட எவ்வளவு எதிர்பார்க்கலாம்னு இருக்கு. இவ்வளவுதான் எதிர்பார்க்கனும்.
http://thulasidhalam.blogspot.com/2007/07/blog-post_25.html
இல்ல டீச்சர் சசிகுமார்ங்குறது அப்பா. அவரும் நடிகர். காசேதான் கடவுளடா படத்துல கூட வருவாரே. அவருதான் வில்லன். அவரோட பையன் சன் டீவியில நீங்கள் கேட்டல் பாடல் நடத்துறாரே...சாரதியோ பாரதியோ.
http://isaiarasi.blogspot.com/2007/07/blog-post_24.html
// rajesh said...
நான் கொடுத்த 3 பாடல்களுமே தமிழில் மிகவும் அருமையான பாடல்கள்
தெலுங்கில் ரசம் கொஞ்சம் குறைவு தான் இருந்தாலும் இனிமையே //
இருந்தாலும் ராஜேஷ், அங்கும் இங்கும் மாறாது இனிமை தருவது இசையரசியின் குரல். அந்தக் குரலோடு சேர்ந்த உணர்ச்சி. அந்த உணர்ச்சியில் விளையும் நயம். :)
http://kuzhali.blogspot.com/2007/07/blog-post_25.html
:))))))))))))))))))))))))))))))))))))))))))))) ஐயோ குழலி....தாங்க முடியலை வயித்து வலி..செம காமெடிங்க.
http://imsaiarasi.blogspot.com/2007/07/iii.html
கஸ்தூரி மானே
கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
புதுக் கைத்தாளம் போடு
ஜாதிப் பூவை நெஞ்சோடு நீ சேர்த்துச்
சூடிப் பார்க்கும் நேரம் இது!!!!!
முடிஞ்சிருச்சுன்னு போட்டிருக்கியேம்மா...உண்மையிலேயே முடிஞ்சிருச்சா! நல்லபடி சந்தோசமா முடிஞ்சிருக்கு. ரொம்ப ரொம்ப சந்தோசம்.
http://ennulagam.blogspot.com/2007/07/2_24.html
தூக்கம் வராமை...இது எனக்கு வரும்...எப்பவாச்சுந்தான். அப்படித் தூக்கம் வரலைன்னா...அன்னைக்கு நடுநிசில ஏதோ எழுதப் போறேன்னு பொருள். ஆமா...தூக்கம் வராத இரவுகள்ள ஓரளவுக்கு எனக்கே திருப்தியாகுற எழுத்துகள எழுதீருக்கேன். மத்தபடி...நல்ல சினிமா, நல்ல புத்தகம், நல்ல கூட்டணி கெடைச்சா....காப்பியக் குடிச்சு தூக்கத்தத் தூங்க வெச்சிருவேன். ஆனா அது அடுத்த நாள் என்னைய நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்க வெச்சிரும். ஆனா இது அடிக்கடி நடக்க்குறதில்லைங்குறதால No Problem.
http://ennulagam.blogspot.com/2007/07/3_26.html
வழக்கமா எழு அல்லது ஏழேகாலுக்கு அலாரம் வெப்பேன். இன்னைக்கு அதே நேரத்துக்கு எந்திருச்சேன். ஆனா அலாரம் அடிக்கல. நாந்தான் சீக்கிரமா எந்திரிச்சிட்டேனோன்னு திரும்பவும் படுத்துத் தூங்கீட்டேன். அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சி (நடுவுல அடிக்கடி முழிப்பு வந்துச்சு) மொபைல எடுத்து மணி பாத்தா எட்டு. அலாரம் செட் ஆகவே இல்லை. :)
http://naachiyaar.blogspot.com/2007/07/205.html
ஆனா இந்தக் குடைமிளகாயை மூழ்க வெச்சு பொரிக்க முடியாது. அதுக்கு எண்ணெய் எக்கச்சக்கமா தேவைப்படும். அப்படி இருக்குறப்போ மைதாலுல முக்கி எண்ணெய்ல உக்கார வெச்சா, மாவு வழிஞ்சிராதா?
இப்பிடி வாழ்க்கை வரலாறு சொல்லும் போதே சமையல் குறிப்பு சொல்றது நல்லாருக்கு. தேவன் எழுதிய அப்பளக்கச்சேரி புத்தகம் நினைவுக்கு வருது.
http://muthukumaran1980.blogspot.com/2007/07/blog-post_25.html
பெரியவர்களை மனதார வணங்கி அவர்கள் ஆசிகளைப் பெற்றுக்கொள்கிறேன்.
உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.
http://radiospathy.blogspot.com/2007/07/15.html
மீண்டுமொரு அருமையான நேயர் விருப்பம். எஸ்.ஜானகி அம்மா, காற்றில் உங்கள் கீதம் காணத ஒன்றைத் தேடுதே! எப்படி மறக்க முடியும் இந்தப் பாட்டை. உங்கள் குரலை. இதை இசையரசியோடு நீங்கள் நடத்திய இசைக்கச்சேரியில் நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததே...ஆகா!
கட்டி வெச்சுக்கோ இந்த அன்பு மனச...ஆமா ஆமா. இந்தப் பாட்டையுந்தான். அருமையான பாட்டு.
அடுத்து சர்வேசனின் தேர்வு. எப்படிய்யா இந்தப் பாட்டப் பிடிச்சீங்க. எனக்குத் தெரிஞ்சு தமிழில் உண்மையிலேயே வீணடிக்கப்பட்ட திறமையான பாடகி பி.எஸ்.சசிரேகா. மெல்லிசை மன்னரின் அறிமுகம். இளையராஜாவின் இசையிலும் நல்ல பாட்டுகள். இதோ இதோ நெஞ்சிலே பாடல், மேளம் கொட்ட நேரம் வரும் பூங்குயிலே, விழியில் விழுந்து இதயம் நுழைந்து, தென்றல் என்னை முத்தமிட்டது, செவ்வானமே பொன்மேகமே...இப்பிடி எல்லாமே நல்ல பாட்டுகள். ஆனாலும் ஏனோ வாய்ப்புகள் குறைவு. ராத்திரி நேரத்துப் பூஜையில் பாட்டை மறக்க முடியுமா? வரகுச் சம்பா மொளைக்கலே ஹோ, சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக இன்னும் நிறையவே இருக்கின்றன. வாணி ஜெயராமோடு போட்டி போட்டுப் பாடிய கேள்வியின் நாயகனே பாட்டையும் மறக்க முடியுமா?
இதோ இதோ என் நெஞ்சிலே பாட்டில் உடன் பாடியவர் எஸ்.ஜானகி. ஷைலஜா அல்ல. ஷைலஜாவின் முதற்பாட்டு சோலைக்குயிலே என்ற பாட்டு. பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்திலிருந்து.
http://myspb.blogspot.com/2006/12/blog-post_27.html
நல்ல பாட்டு. உச்சத்தில் பாடியிருக்கிறார். மிகவும் அழகாக.
http://myspb.blogspot.com/2007/07/blog-post_26.html
துள்ளல் துள்ளல் துள்ளல் பாட்டு முழுக்க துள்ளல்தான். அருமையான பாட்டு.
http://myspb.blogspot.com/2007/07/blog-post_20.html
ஒரு சிறிய கருத்து. பாடலைப் போடுகையில்..அத்தோடு தொடர்புள்ள மற்றவர்கள் பெயரையும் போடுவது நல்லது. சந்திரபோஸ் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். பாடலாசிரியர் பெயர் பல சமயங்களில் மறந்து போகிறது. ஆனால் பெரும்பாலும் இசையமைப்பாளர் பெயரையும் உடன் பாடியவர்கள் பெயரையும் குறிப்பிடுதல் நலம்.
இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும். பாட்டு போட்டதுக்கு நன்றி.
http://pithatralgal.blogspot.com/2007/07/245-3.html
பிரின்சி நல்லதத்தான் சொல்லீருக்காரு. ஆனா இப்பிடிச் சொல்ற பிரின்சிகள் இருக்காங்களான்னுதான் தெரியலை. எங்க பிரின்சி பேசியே நான் கேட்டதில்லை. ம்ம்ம்..இப்பிடியெல்லாம் படிச்சிப் படிச்சிச் சொல்றாரு. இந்தப் பயக படிப்பாங்களா..பொறுத்திருந்து பாப்போம்.
http://vovalpaarvai.blogspot.com/2007/06/blog-post_15.html
செஞ்சிக் கோட்டைக்கும் காதல் கோட்டைக்கும் இப்பிடியொரு தொடர்பா! இதெல்லாம் நெறையச் சொல்லுங்கய்யா. தெரிஞ்சுக்கிறோம். தேசிங்கு ராஜாவும் பஞ்சகலியாணியும் கேள்விப்பட்டிருக்கோம். விரிவாச் சொல்லுங்க.
http://isaiarasi.blogspot.com/2007/07/12.html
// நாமக்கல் சிபி said...
இதே மாதிரி அமைப்புல நம்ம ஞான்ஸ்(எஜெண்டு) ஒரு கவிதை போட்டிருந்தாரு! //
ஆகா...அதுவும் அப்படியா? அது எங்கன்னு தொடுப்பு குடுங்க. பாக்குறோம்.
// சிவபாலன் said...
Wow! Good! //
வாங்க சிவபாலன். ஆமா. இது ரொம்ப நல்ல பாட்டு. கண்டிப்பா எல்லாரும் ரசிப்பாங்க.
http://isaiarasi.blogspot.com/2007/07/12.html
// வல்லிசிம்ஹன் said...
ராகவன், ரொம்பப் பேருக்கு இந்தப் பாட்டுத்தெரியாதுனு நினைத்தேன்.
ஹீரோவும் ஹீரோயின்ம் வேறு எங்கோ போய்ப் பாடிவிட்டு மீண்டும் புகுந்து கொள்வது போலத் திரை அமைப்பு.,
பாடுகிற மாதிரி இருக்கும்.
தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் இறங்குனு குரல் அப்படியே கண்டக்டர் குரல்தான்
அதுதான் இரண்டு பாடல்களாக அமைந்த்து வெகு அழகாகத் தெரிகிறது. மீண்டும் நல்ல செலக்ஷன். //
வாங்க வல்லீம்மா...இந்தப் பாட்டு எல்லாருக்கும் தெரியும். ரொம்ப நல்ல பாட்டாச்சே! எப்படி மறக்க முடியும்? ஆமா...தேனம்பேட்டை காமதேனு சூப்பர் மார்க்கெட். இப்பவும் இருக்கு. ஆனா அவ்வளவு கூட்டம் போறதில்லை.
http://isaiarasi.blogspot.com/2007/07/12.html
// theevu said...
ம் அதெல்லாம் ஓரு காலம்...
இலங்கை வானொலியில் ஒரு காலத்தில் கலக்கிய பாடல்.
ஒரு பாடல் வரி முடிவதற்குள் அடுத்த வரி ஆரம்பமாகும்.
பாடலை முழுமையாக வரி வரி யாக இரசித்துக்கேட்ட காலமது..
இதற்கு மேலும் எழுதினால் புலம்பலாகிவிடும்... ஒன்றை கவனித்தீர்களா? இந்தப்பாட்டு இன்றும்
கேட்டு இரசிக்கும்படியாகவிருக்கிறது. //
ஆமாங்க. இன்னமும் ரசிச்சு ரசிச்சு கேக்குற மாதிரி இருக்குது. அருமையான பாட்டு. நீங்க பொலம்ப்றதா நெனைக்கலை. சொல்லுங்க. கேக்குறோம்.
// வெற்றி said...
இராகவன்,
இந்தப் பாடலைப் பல முறை கேட்டு இரசிச்சிருக்குறேன். ஆனால் இந்தப் பாடலுக்குள்ளை இப்படி ஒரு சங்கதி இருக்கிறதை இப்பதான் தெரிந்து கொண்டேன். ம்ம்ம்...வியப்பாக இருக்கிறது.
மிக்க நன்றி. //
வெற்றி...இது மாதிரி நெறைய இருக்கு. நம்ம சும்மா கேட்டுட்டுப் போயிர்ரோம். ஆனா நம்ம இசையமைப்பாளர்கள் எவ்வளவு யோசிச்சிருக்காங்க. அத இந்த மாதிரி பதிவுகள்ள சொல்றதும் சந்தோசந்தான்.
http://radiospathy.blogspot.com/2007/07/15.html
// SurveySan said...
G Ragavan,
excellent comment :) //
நன்றி சர்வேசன் :)
// who is the MD for
idho idho en nenjile? //
வட்டத்துக்குள் சதுரம் திரைப்படத்திற்கு இசை இளையராஜா. மிகவும் அருமையான பாடல்.
இங்கே ஒரு நேயர் விருப்பம். பிரபா, லட்சுமி திரைப்படத்தில் இடம் பெற்ற மேளம் கொட்ட நேரம் வரும் பாடல்...எனக்காக. :)
http://isaiarasi.blogspot.com/2007/07/12.html
// SurveySan said...
தூள் பாட்டுப்பா இது.
இந்த சங்கதி இப்பதான் தெரியும்.
அருமை அருமை! :) //
வாங்க சர்வேசன். நன்றி. நல்ல பாட்டை நீங்கள் ரசிச்சிக் கேட்டதில் மகிழ்ச்சி.
// CVR said...
சூப்பரு!!!
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது அண்ணாத்த!!!
பாடலின் வரிகளின் சிறப்பை முன்பஏ அறிந்திருந்தாலும் அதன் பின்னால் உள்ள சூட்சமத்தை இன்றுதான் அறிந்தேன்!! :-)
வீட்டிக்கு போய் பாட்டை பொறுமையா கேக்கறேன்!!
நல்ல பதிவு!! பதிவிட்டதற்கு நன்றி!! :-) //
சரி தம்பி. வீட்டுக்குப் போய் பாட்டப் பாரு. பாத்துட்டு கருத்து சொல்லு.
http://isaiarasi.blogspot.com/2007/07/12.html
// rajesh said...
இவ்வளவு அழகான பாட்டை எழுதிய தாடிக்காரரையும் பாராட்டினால் என்ன குறைந்தா போய்விடுவீர். ராகவன் உமது தலையில் ஒரு குட்டு.... //
மன்னிப்பு மன்னிப்பு...எனக்குத் தெரியாதுய்யா...தெரிஞ்சுக்கிட்டா முடியாதுங்குறேன். இப்ப பதிவப் பாருங்க. வாலீன்னு எழுதீட்டேன். :)
// ஆம் வாலியின் அழகான வரிகளை என்றும் கேட்டு ரசிக்க முடியும் அதுவும் பாடலின் துவக்கத்தில் இசையரசியின் சிரிப்பும் பின்னர் பாலுவிம், அவரும் செய்யும் குரல் ஜாலங்களும் அடேயப்பா சொல்ல வார்த்தைகள் போதாது.
அந்த கண்டக்டர் குரல் இளையராஜாவின் அண்னன் பாஸ்கரினுடையது //
ஆகா தகவல்களை அள்ளி விடுறீங்களே...சூப்பர் சூப்பர்
// இந்த பாடலின் சிறப்பு நீங்கள் சொன்னது போல பாடலுக்குள் பாடல்
அதே போல் நாலு பேர்கள் பாடுவதாக நமக்கு தோன்றும் அப்படி ஒரு வித்தையை பயன்படுத்தியிருப்பார் ராஜா
சிட்டுக்குருவி கதை,வசனம் மற்றும் பாடல்கள் வாலி
இந்த பாடல் தேர்வுக்கு மிகவும் நன்றி
இந்த பாடலை பற்றிய எனது கட்டுரையை இங்கே படிக்கவும் //
படிச்சிருவோம். விட முடியுமா?
http://vavaasangam.blogspot.com/2007/07/blog-post_27.html
பிசி ள்கதுழ்வா தந்ர்மானம யடைனுனெ. கங்ருஇ லால்ந.
http://isaiarasi.blogspot.com/2007/07/12.html
// CVR said...
பாத்தாச்சு பாட்டை!!!
நம்ம மெட்றாசா இதுன்னு இருக்கு!!!
தேனாபேட்டை எல்லாம் எதோ லோக்கல் டவுன் மாதிரி இருக்கு!!
ஹ்ம்ம்!
நல்ல பாட்டு அண்ணா!!
நன்றி!! :-) //
ஆமா. ஆமா...இது சென்னையில்லை. மெட்ராஸ். பழைய மெட்ராஸ். நான் தவழ்ந்துக்கிட்டிருந்தப்ப இருந்த மெட்ராஸ். நீ பொறந்திருக்கவே மாட்ட. எனக்கு 80ல் இருந்த சென்னை ரொம்பவும் பிடிக்கும். இவ்வளவு நெரிசல் இருக்காது. பேல்பூரீங்குற ஒன்ன...சென்னைக்கு வந்தாத்தான் நாங்கள்ளாம் சாப்பிட முடியும். அப்புறம் தியாகராயாய நகர்ல பாண்டிபஜார்ல இருக்குற கையேந்தி பவன் மொளகா பஜ்ஜி. அடடா! அடடடடா! பழைய ராஜகுமாரி தேட்டர் இருந்துச்சு அங்குட்டு.
// துளசி கோபால் said...
இந்தப் பாட்டு நிஜமாவே எனக்குத் தெரியாது. இப்பத்தான் முதல்முதலாக் கேக்கறேன்.
நாங்கள் 'வனவாசம்' செஞ்சப்ப வந்த படமோ? //
வாங்க டீச்சர். இந்தப் பாட்டைக் கேட்டதில்லையா. நல்ல பாட்டு. இப்பக் கேட்டுட்டீங்கள்ள. எப்படி இருக்கு?
// நான்கூடத் தலைப்பைப் பார்த்துட்டு, 'கூடையிலே கருவாடு' பாட்டுன்னு நினைச்சேன்.
உள்ளெ வந்தா ஒரு 'கவி அரங்கம்' இருக்கு:-) //
ஆமாங்க. இந்தக் கவிஞருங்க இப்பிடித்தான் பாட்டுக்குள்ள விளையாடீருக்காங்க.
http://sangamwishes.blogspot.com/2007/07/wishes_103.html
// ILA(a)இளா said...
சிறு திருத்தம் நண்பர்களே! வாழ்த்துக்கள் ஜி.ரா //
நன்றிங்க. ரொம்ப நன்றி. :)
// கோவி.கண்ணன் said...
//பதிவுலகின் கிருபானந்த வாரியாரும்,//
ஆன்மீக செம்மல் ஜி இராகவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். //
வாழ்த்துகளுக்கு நன்றி கோவி.
ஆன்மீகச் செம்மலா? கோவி, ஒங்களுக்கே இது டூ மச்சாத் தெரியலையா? ஆன்மீகச் செம்மல்தான் "என் கண்மணி உன் காதலி"ன்னு பாட்டுப் போடுவாரா :))))) அப்புறம் ச் விட்டுட்டீங்களே!
http://sangamwishes.blogspot.com/2007/07/wishes_103.html
// குமரன் (Kumaran) said...
வாழ்த்துகள் இராகவன். //
நன்றி குமரன்.
// போன இடுகையில் (தொழில்நுட்பப் பிரச்சனையால் காணாமல் போன இடுகை) ஒரு வாழ்த்துக்கவிதை எழுதிப் போட்டேன். சேமித்து வைக்காமல் விட்டுவிட்டேன். இப்போது எழுதலாம் என்று உட்கார்த்தால் கவிதை வரமாட்டேன் என்கிறது. :-( //
இதுக்குதான் நான் பின்னூட்டங்களைச் சேமிச்சிக்கிர்ரது.
// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
நானும் உங்கள் பிறந்த நாளுக்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.. கீழே பார்க்கவும்
"கவிதை" //
அடடா! பிரமாதமா கவித எழுதீருக்கியே வெட்டி....சூப்பரு. ஒரு பரிசு அனுப்புறேன்.
// CVR said...
அண்ணாஆஆஆஆ!!
வாழ்த்த வயதில்லை !!
வணங்குகிறேன்!!! :-) //
ஆகா...வாழ்த்துறதுக்கு எத்தன வயசு வேணும்? அதச் சொல்லவே இல்லையே! சரி..வணங்குறதுதான் வணங்குற...கால்ல விழுந்து வணங்கக் கூடாதா!!!!!
http://sangamwishes.blogspot.com/2007/07/wishes_103.html
// துளசி கோபால் said...
நம்ம ராகவனுக்குப் பொறந்த நாளா?
இப்படி யாராவது வந்து சொன்னாதான் தெரியுது.
பேசாம வலைப்பதிவர் பிறந்த நாட்கள்னு ஒரு ரெஜிஸ்ட்டர் வச்சுக்கலாம். //
இது நல்ல திட்டமா இருக்கே. கண்டிப்பா செய்யலாம். வாழ்த்துப் பதிவு போடுற பொறுப்பை..ஒரு குழு கிட்ட ஒப்படைச்சிரலாம். அதுக்கு இளாவைத் தலைவராப் போட்டுரலாம்.
// அன்பான வாழ்த்து(க்)கள் ராகவன். நல்லா இருங்க. //
நன்றி டீச்சர்
// நேத்துதான் கோபால் சொல்லிக்கிட்டு இருந்தார், ராகவன், நெதர்லாந்து
'வாழ்க்கை'யை எழுதலாமேன்னு. //
இத நான் இன்னைக்கு நெனச்சிக்கிட்டிருந்தேன். நீங்க சொல்லீட்டீங்க. விரைவில் வரும். வரும். வரும்..வரும்..ரும்..ம்..
http://ammanpaattu.blogspot.com/2007/07/blog-post_20.html
அருமையான பாடல்...எளிய கவிதை. அரிய பொருள். பாரதியின் கலைமகள் வணக்கத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி குமரன்.
http://myspb.blogspot.com/2007/07/blog-post_27.html
உத்தரவின்றி உள்ளே வா படத்துல இப்பிடியொரு பாட்டு இருக்குறது இன்னைக்குத்தான் தெரிஞ்சது. நல்லாயிருக்குங்க பாட்டு. பாடும் நிலா இளைய நிலாவாக் காய்கிறது பாட்டில்.
சாய்பாபா...மெல்லிசை மன்னர் இசைக்குழுவில் இருந்தவர். என்ன வாத்தியம் வாசிச்சாருன்னு தெரியாது. ஆனா பலவிதமான ஓசைகளை உருவாக்குவாராம். இந்த மாதிரி லுலுலுலு லல்லல்லாலாம் நெறையப் பாடுவாராம். இவரு இந்திய நாடு என் வீடு அப்படிங்குற பாட்டுல கூட பாடீருக்காருன்னு நெனைக்கிறேன்.
http://sivabalanblog.blogspot.com/2007/07/varnasiramam.html
நல்ல கேள்விகள். இந்த நிலை கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும். அதில் எந்த ஐயமும் இல்லை.
http://asifmeeran.blogspot.com/2007/07/blog-post_28.html
அட ஆண்டவா! இதுல என்ன உள்குத்து இருக்குன்னு தெரியலையே. இருந்தாலும் எனக்குத் தெரிஞ்ச பூங்காக்களைப் பத்தித் தெரிஞ்சிக்கிறேன்.
1. தமிழ்மணப் பூங்காவ நான் படிக்கிறதில்ல. ஆகையால அதுல எதூவும் முன்னேறுச்சா பின்னேறுச்சான்னு தெரியலை
2. சென்னைல இருக்குற பூங்காக்களோட பராமரிப்பு நாளொரு மேனி பொழுதொரு மட்டம்னு போய்க்கிட்டிருக்கு.
http://9-west.blogspot.com/2007/07/blog-post_2824.html
திருனவேலிக்காரங்க பத்திச் சொன்ன்னீங்களே..அது உண்மை..பிள்ளைகளுக்கு ரொம்பச் செல்லம். தூத்துக்குடிக்காரனுக்குத் தெரியாதா திருனவேலிய.
நீங்க சொல்ற பொடிய நானும் சாப்பிட்டிருக்கேன். எய்யா சாமி...நாக்கு வெந்து போகும் மொத வாட்டீ. ஆனா சின்னப் பையனா இருந்தப்ப சண்டாளச் சட்டினியையே அல்வா மாதிரி தின்னவன். ஆகையால இந்தப் பொடியும் சுகந்தான்.
இது நல்லாயிருக்கும்னாலும் வேண்டாம். பின்னால...அதாவது வயசு கூடும் போது பிரச்சனையாகும். அதுல எண்ணெய் இல்லாம வறுத்த எள்ளையும் கூடப் போட்டு அரைச்சுக்கோங்க. அது நல்லாயிருக்கும். மணமாவும் இருக்கும்.
http://ayyanaarv.blogspot.com/2007/07/blog-post_26.html
இங்கிலீசு படங்கள்ள பல படங்கள் மட்டும் தெரிஞ்சது. மத்ததெல்லாம் தெரியல. இண்டியானா ஜோன்ஸ் வெற்றிப் படம். ஆனா என்னைப் பொறுத்த வரையில் மட்டமான மசாலா படம்.
ரேயோட படங்கள்ள கண்டிப்பா பாக்க வேண்டியது ஷோனோர் கெல்லா, காபுருஷ், குபி காயன் பகா பாயன். ரே இல்லாத பெங்காலிப் படங்கள்ள எனக்குத் தெரிஞ்சதுல பஞ்சரமேர் பாகான், நாகொர்தொலா.
http://ennulagam.blogspot.com/2007/07/blog-post_27.html
ஜோசப் சார். தலைமுறைக்குத் தலைமுறை சிந்தனை மாறும். அந்த மாத்தத்துக்கு ஏத்த மாதிரி எழுத்து மாறும். அந்த மாத்தத்துக்கு எதுவுமே உட்படும். தமிழ்ல என்னன்னா..எழுத்துப் பழக்கம் உள்ளவங்க அதுக்குள்ள ரொம்ப போறாங்க. இல்லாதவங்க தள்ளித் தள்ளிப் போறாங்க. மொழி எப்பவுமே பண்டிதர்கள் கையிலேயே இருக்கும் போல...இல்ல மொழியாளுமை உள்ளவங்கள நம்ம பண்டிதர்னு சொல்லீர்ரோமா? தெரியலையே.
http://aaththigam.blogspot.com/2007/07/22.html
இந்தப் பாட்டுல இன்னொரு செய்தியும் இருக்கு. அதைப் பலர் மறந்துட்டோம். தார் என்ற சொல் அது. தார்னா மாலைன்னு இன்னைக்குச் சொல்லீர்ரோம். ஆனா ரெண்டும் ஒன்னில்லை. தார் வேற. மாலை வேற. பெண் கையில போட்டது வளையல். ஆண் கையில போட்டது கங்கணம். அதையே மாத்திச் சொல்ல முடியுமா? முடியாது. அது மாதிரி பெண்கள் அணிவது மாலை. ஆண்கள் அணிவது தார்.
என்ன வேறுபாடா? மாலை பூட்டப்பட்டிருக்கும். வட்டமா..இன்னைக்குப் பாக்குற மாலைகள் அப்படித்தான இருக்குது. ஆனா தார் பூட்டப்பட்டிருக்காது. புரியலையா? ஆண்டாள் கழுத்து மாலையை யோசிச்சுப் பாருங்க. தொள்ள இருக்கும். இந்தப் பக்கம் தொங்கும். அந்தப் பக்கம் தொங்கும். ஆனா ரெண்டு முனையும் முடிஞ்சிருக்காது. அது தார். "கொங்கலர் தார்"னு சோழனுடைய மாலையை இளங்கோவடிகள் சொல்றாரே. தார் கடம்பத்தார் எம் கடவுள்..இப்பிடிப் பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.
http://aaththigam.blogspot.com/2007/07/22.html
இந்தப் பாட்டுல இன்னொரு செய்தியும் இருக்கு. அதைப் பலர் மறந்துட்டோம். தார் என்ற சொல் அது. தார்னா மாலைன்னு இன்னைக்குச் சொல்லீர்ரோம். ஆனா ரெண்டும் ஒன்னில்லை. தார் வேற. மாலை வேற. பெண் கையில போட்டது வளையல். ஆண் கையில போட்டது கங்கணம். அதையே மாத்திச் சொல்ல முடியுமா? முடியாது. அது மாதிரி பெண்கள் அணிவது மாலை. ஆண்கள் அணிவது தார்.
என்ன வேறுபாடா? மாலை பூட்டப்பட்டிருக்கும். வட்டமா..இன்னைக்குப் பாக்குற மாலைகள் அப்படித்தான இருக்குது. ஆனா தார் பூட்டப்பட்டிருக்காது. புரியலையா? ஆண்டாள் கழுத்து மாலையை யோசிச்சுப் பாருங்க. தொள்ள இருக்கும். இந்தப் பக்கம் தொங்கும். அந்தப் பக்கம் தொங்கும். ஆனா ரெண்டு முனையும் முடிஞ்சிருக்காது. அது தார். "கொங்கலர் தார்"னு சோழனுடைய மாலையை இளங்கோவடிகள் சொல்றாரே. தார் கடம்பத்தார் எம் கடவுள்..இப்பிடிப் பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
வேங்கடம் தமிழ்ப் பெயர்சொல்லே. அதில் மாற்றுககருத்தே இருக்கக் கூடாது.
திருப்பதிய மீட்க முடியலையா? பதிலுக்குச் சென்னையக் கேட்டாங்களே...அது தெரியாதா! சென்னையையும் தர முடியாதுன்னு...வந்தப்புறம் திருத்தணியா திருப்பதியான்னு ஒரு சண்டையப் போட்டு திருத்தணி ஒருவழியா கெடைச்சது. நல்லவேள. இல்லைன்னா முருகனக் கும்பிடக் கூட ஸ்டேட் விட்டு ஸ்டேட் போக வேண்டியிருக்கும்.
ஸ்ரீநிவாஸ்...இந்த வடமொழிப் பெயருக்குப் பொருள் என்ன? ஸ்ரீ என்றால் திரு. நிவாஸ் என்றால் வசிப்பது. திருமகள் குடிகொண்ட இடம் என்று பொருள். ஸ்ரீநிவாஸன் என்றால் அதற்கு ஆண்பால் விகுதி சேர்கிறது. திருமகளோடு என்றும் வாழ்கிறவன் என்ற பொருளாகிறது. சரி. ஸ்ரீநிவாஸ் என்பதற்கு இணையான தமிழ்ப் பெயர் என்ன? திருக்குடி என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
http://cvrintamil.blogspot.com/2007/07/blog-post_24.html
சிவிஆர் முழுப்பாட்டையும் பாடுகிறார்
ஏ குருவி சிட்டுக்குருவி
ஒஞ் சோடியெங்க அதக் கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
இப்ப பொண்டாட்டி இல்ல
வந்து ஏங்கூடப் போடு....ஏ குருவி சிட்டுக்குருவி...
:)))))))))))))))))))))))))))
சரி தம்பி. படம் நல்லாயிருக்கு. ரொம்பவே நல்லாயிருக்கு.
http://sethukal.blogspot.com/2007/02/blog-post.html
அவனும் இவனும் ஒன்னு. ரெண்டும் ஒன்னுக்குள்ள ஒன்னு. அதாவரு ஒருவனின் இருமனங்கள் பேசிக்குது. பாசத்துக்கும் சந்தேசகத்துக்கும் நடுவுல ஊஞ்சலாடுது. எப்ப எது கூடுதோ..அப்ப அடுத்தது தோக்குது. அப்ப வெற்றி எப்பல்லாம் உண்டோ..தோல்வி அப்பல்லாம் உண்டு. இதான நீங்க சொல்ல வர்ரது. சரியா தப்பாப் புரிஞ்சிக்கிட்டேனா?
http://pithanantha.blogspot.com/2007/07/002.html
அட்டடா! அட்டடட்டா! எப்படி இப்பிடி!
ஆகா துன்பத்துக்குள்ள இன்பமும் இன்பத்துக்குள்ள துன்பமும் உக்காந்துக்கிட்டிருக்குன்னு சொல்றீங்க. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லைன்னுதான சொல்ல வர்ரீங்க.
http://9-west.blogspot.com/2007/07/blog-post_2824.html
// நானானி said...
வாங்க, ராகவன் எப்ப வந்தீய!
நானும் சின்னதில் ரெண்டையும் அல்வா மாதிரி சாப்பிட்டுருக்கேன்.
இப்போ வயசாச்சில்ல...எப்பவாச்சும்தான்.
எள்ளு சேர்த்தால் அது எள்ளுப்பொடியாகிவிடுமே! //
ஆமா எள்ளுப்பொடிதான். ஆனா நீங்க சொல்ற பொடியை விட இது கொஞ்சம் சாது. அதுனால ஓரளவுக்கு நல்லதுன்னு சொன்னேன்.
// நானானி said...
யாராச்சும் எங்கூர்காரங்க இந்த பொடியின் அருமை பெருமை பற்றி
சொல்லமாட்டீர்களா.....?பொடியின்
காரத்தைவிட கமெண்ட்டுகளின் காரம் தாங்கலேயே....! //
என்ன இப்பிடி வருத்தப்படுதீய..இருந்தாலும் நாங்க பழைய திருனவேலி மாவட்டந்தான....இந்தப் பொடிய எப்படித் திங்கனுந் தெரியுமா? நெல்லெண்ணையா நெறைய ஊத்தனும். அந்த எண்ணெய்யே செவசெவன்னு வழிஞ்சு வரும். அந்த எண்ணெய்ல இட்டிலிய மெத்து மெத்துன்னு ஒத்தி ஒத்திச் சாப்புடனும்...அடடா!
http://alternatemovies.blogspot.com/2007/07/born-into-brothels-english-hindi.html
வாங்க நண்பன். உங்க பதிவுகளைத் திரும்பவும் பார்ப்பதில் மகிழ்ச்சி.
இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னமும் பார்க்கக் கிடைக்கவில்லை.
நான் அடிக்கடி நினைப்பது "இந்த உலகம் குழந்தைகளுக்கானது" என்று. ஆனால் பெரியவர்களின் கைகளில் அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பூட்டிய உலகத்துக்குள்ளே உள்ள குழந்தைகளின் நிலை? கொடுமை. கொடுமை.எல்லாரும் தப்பிக்க முடியவில்லை. ஒருசில குழந்தைகளாவது தப்பித்தது குறித்து மகிழ்ச்சி.
ஏன் தெரியுமா அரசாங்கங்கள் வரியை மறுக்கின்றன...ஒருவேளை வரி வாங்கி விட்டால்..அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே....அதுவுமில்லாமல் அங்கீகாரம் கொடுத்தது போலவும் ஆகிவிடும் அல்லவா.
http://sethukal.blogspot.com/2007/07/blog-post_28.html
ரொம்பச் சரியாச் சொல்லீருகாரு தம்பி. சரிதான்.
http://konguvaasal.blogspot.com/2007/07/blog-post_29.html
// "ஆல் இன் ஆல்" அயகுராசா said...
போங்கடா கோமுட்டித்தலையனுங்களா..
என்ற பேரு எப்புடி விட்டுப்போச்சு?? //
// ILA(a)இளா said...
கைப்புள்ளையும் விட்டுப்போயிருச்சே. //
அதுக்குக் காரணம்...அவங்க ரெண்டு பேரும் பாண்டி நாடு. கொங்கு நாடு கெடையாது.
சரிதானா இளவஞ்சி?
http://9-west.blogspot.com/2007/07/blog-post_2824.html
// நானானி said...
இன்னும் நான் 'புளிமிளகாய்' ரெசிப்பி
கொடுத்தால் கடித்து குதறி விடுவார்கள். //
புளிமெளகாயா...சூப்பர். எங்க வீடுகள்ள புளிமெளகா இல்லாம எந்த நல்லது கெட்டதும் நடந்ததில்லை. புளிமிளகாய்க்கு எனக்குத் தெரிஞ்ச ரொம்பப் பேரு அடிமை. நான் கொஞ்சம் கொஞ்சம் அடிமை. :)
http://vettipaiyal.blogspot.com/2007/07/blog-post_29.html
வெட்டி...இது மாதிரி எத்தன டவுட்டுக இருக்கோ..அத்தனையும் ஒன்னொன்னாக் கேட்டுத் தெரிஞ்சிக்க. ரொம்ப நல்லது.
http://neytalkarai.blogspot.com/2007/07/22.html
நல்ல முயற்சி. பொன்சுடனான உரையாடல் மிக நன்றாகச் சென்றது. பதிவர் பட்டறை குறித்த தகவலும் அருமை.
ராதா காதல் வராதா....பாடலுந்தான் அருமை.
http://isaiarasi.blogspot.com/2007/07/12.html
// tbr.joseph said...
அவருடைய கவிதை வாளி எப்பொழுதும் ஆகாது காலி.//
இதென்ன டிராஜேந்தர் வசனம் மாதிரி இருக்கு ;-) //
ஆகா..கொஞ்சம் எதுகை மோனையோட சொன்னாலே டி.ஆர் மாதிரியா? :)))))))))))
// மற்றபடி வழக்கம்போலவே பதிவு சூப்பர். //
ரொம்ப நன்றி சார்.
// மலைநாடான் said...
ராகவன்!
அன்மையில் வீட்டிலிருக்கும் போது " ஏம்மா கருவாட்டுக் கூடை முன்னாடி போ.." என்ற வசனத்தை விளையாட்டாகச் சொல்ல, பிள்ளைகள் என்னது என்று விசாரிக்க, இந்தப்பாடல் பற்றி விரிவாகச் சொல்லி மகிழ்ந்தேன் அப்போ இந்தப்பாடலை பதிவாக எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன். நினைத்ததைச் செய்திருக்கின்றீர்கள். மறக்க முடியாத ஒரு பாடல். மற்றும் அனைத்தும் மற்றவர்கள் சொல்லி விட்டார்கள். பதிவுக்கு நன்றி. //
வாங்க மலைநாடான். இதுதான் எண்ணிய முடிதல்னு சொல்வாங்களோ :)))) இந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்கும்னு தெரிஞ்சு மகிழ்ச்சி.
http://isaiarasi.blogspot.com/2007/07/12.html
// வற்றாயிருப்பு சுந்தர் said...
சூப்பர் பாட்டு ராகவன் இது. ஏற்கனவே நம்ம 'தல' பதிவுல போட்டதுதான். //
ஓ! அப்படியா? ஏற்கனவே இந்தப் பாட்டை நீங்க போட்டுட்டீங்களா! பாக்காம விட்டுட்டேனே
// ஒத்தை ஆளு இந்தப் பாட்டைப் பாடணும்னா திண்டாட்டம்! இடைவெளியில்லாம வரிக்கு வரி ஓவர்லேப் செஞ்சு கலக்கிருப்பாங்க. //
ஆமா ஆமா
// பாட்டக் கேக்கும்போதே படம் பாக்காட்டியும் பஸ் பயணம் நினைவுக்கு வந்துடும்! //
அதே அதே. இந்தப் பாட்டை நான் முந்தியே கேட்டிருக்கேன். ஆனா பாத்தது சமீபத்துலதான். ஆனாலும் இந்தப் பாட்டைக் கேட்டா பஸ்சுதான்.....
// எத்தன தடவ வேணா சவாரிக்குப் போகக்கூடிய பாட்டு இது! :-) //
அப்படியே மறுமொழிகிறேன்.
// வேலு நாயக்கன் said...
ஆஹா! எவ்வளவு யோசித்து பாட்டு எழுதி இருக்காங்க...
ஆஹா! எவ்வளவு ரசித்து கேட்டிருக்காங்க.....
நானும் தான் இருக்கேனே வெட்டியா... //
ஆகா...கைப்புள்ள இருந்தாரு...இப்ப வேலு நாயக்கனும் வந்துட்டீங்களா! "நானும் இருக்கேனே வெட்டியானா?" என்ன அர்த்தம்? நீங்கதான் வெட்டியா? இல்ல வெட்டியா இருக்குறதும் நீங்களா? கொஞ்சம் புரியுறாப்புல சொல்லுங்களேன். :)
// நானானி said...
ராகவன்!
இதுக்குள்ளே இவ்ளோ சமாசாரம் இருக்குதா? அருமையான ஒரு பாடலை மேலும் அருமையாக ரசிக்கவைத்திருக்கிறீர்கள்.
கருவாட்டுக்கூடையிலிருந்து நல்லமணம் வீசியது. //
கருவாட்டுக்கூடைல இருந்து நல்ல மணம்தான வரும்..ஆகா ஆகா...ஆகா...ம்ம்ம்..சீலாக்கருவாடு நெத்திலிக் கருவாரூ..சுறாக்கருவாடு...ம்ம்ம்..ம்ம்ம்..
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!!
நல்ல பாட்டு, அழகான அலசல்,
அது அந்தக் காலப்பாட்டுக்கே உரிய தனித்துவம்.
''கங்கை யமுனை...மிகப்பிடித்த பாடல்.... //
வாங்க யோகன் ஐயா, ஆமா...அந்தக் காலப் பாட்டு. இளையராஜா வந்த புதுசுல இசையமைச்ச பாட்டு. அதுனால இளமையும் துள்ளலும் இனிமையும் எக்கச்சக்கம்.
http://blog.arutperungo.com/2007/07/blog-post_30.html
ம்ம்ம்...இது எப்ப எழுதத் தொடங்குன? இப்பதான் பாக்குறேன். நல்லா எழுதீருக்க. உணர்ச்சிகளை ஜிலேபி பிழியிறாப்புல பிழிஞ்சி பிழிஞ்சி எழுதீருக்க. வாழ்க வளமுடன்.
http://vivasaayi.blogspot.com/2007/07/blog-post_2878.html
கடவுளென்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி விவசாயி
அந்த விவசாயி ஆனாரே நட்சத்திரம்
அதற்காகத் தொடுப்போமே வாழ்த்துச்சரம்
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்
கதை கதை மாதிரியில்லாம கதையில்லாத மாதிரியே இருக்குற கதை எப்படி அமைஞ்சது? கொஞ்சம் விளக்குங்களேன்.
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணு முட்டுதே...இம்புட்டு கேள்வி மாறி மாறி மாரி மாதிரி கேட்டிருக்கீங்க. சொல்றேன்.
// வெட்டிப்பயல் said...
ஆனா எல்லா வார்த்தைக்கும் தமிழ்ல வார்த்தை தேடனுமா என்ன? (இந்த திருக்குடி, திருவகன் மாதிரி). //
அது தப்புங்குறியா? தப்புன்னா ஏன் தப்புன்னு சொல்லு.
// சரி அப்படினா நாராயணான்ற வார்த்தை எந்த மொழி??? //
கண்டிப்பாக தமிழ் இல்லை. நாராயண் என்பது வடமொழிப் பெயர். இன்னொரு அன் ஆண்பால்விகுதியாகச் சேர்ந்து நாராயணன்.
//// வெட்டிப்பயல் said...
//
ஓ கண்டுபுடிச்சிட்டா போச்சு! ஆனா ஒரு சிறு மாற்றம்.
"பாலாஜி"-என்பதில் இருந்து துவங்கலாமா? :-)))//
தேவையில்லை.. எனக்கு மொழியில் பெரிதாக பற்றில்லை... //
மொழிப்பற்றைக் கடந்த நல்ல பண்பு எங்களுக்கெல்லாம் இல்லப்பா. என்ன பண்றது. இதோ இங்க நெதர்லாந்து வந்திருக்கேன். இங்க கூட இந்திக்காரங்க வந்து நான் இந்தீலதான் பேசனும்னு எதிர்பார்க்குறான். பூடகமா கேலி பேசுறான். அவனுக்கு இருக்குற அளவுக்கு எனக்கு மொழிப்பற்று இல்லையேன்னு நான் வருத்தப்படலை.
// ஜி.ராக்கு வேணா ஆரம்பியுங்களேன். ராகம் தமிழ் வார்த்தையா?
ராகவன் தமிழ் வார்த்தையா? //
ராகங்குறதோ ராகவங்குறதோ தமிழ்ப் பேர் இல்லைய்யா. அதுனால என்ன சொல்ல வர்ர?
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
//// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஸ்ரீநிவாஸ் என்பதற்கு இணையான தமிழ்ப் பெயர் என்ன? திருக்குடி என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்//
ஜிரா
என்னங்க இது திருக்குடி, தூத்துக்குடின்னு காமெடி பண்ணிக்கிட்டு? :-) //
ஆகா! திருக்குடிங்குறது காமெடியாப் போச்சா! இன்னும் சரியாச் சொன்னா திரு தங்குமிடம். அதாவது திருத்தங்கல். அது இன்னமும் பொருத்தம். அட...அந்த பேர்ல ஒரு ஊரும்..அந்த ஊர்ல ஒரு கோயிலும் இருக்குறது தெரியாதா!
// போதாக்குறைக்கு "ஸ" கரம் வேற போடறீங்க! அதான் தமிழில் "ச" கரம் இருக்கே! இல்லீன்னா பரவாயில்லை!ஸ்ரீநிவாசன் என்றே சொல்லுங்க! //
அப்ப ஸ்ரீ மட்டும் ஏன் போடனும். பேசாம சீனிவாசன்னு சொல்வோமே!
// இது துதியோடு நின்றால் சரி!
ஆனா அதுக்காக இறைவனின் பெயரை எல்லாம் தமிழ்ப் படுத்தறேன்னு இறங்கினா, அதுக்கு முடிவே இல்லாமப் போயிடும்! //
எங்க போகும்? எங்கையும் போகாது. அந்தப் பேர் எதுனால வந்துச்சுன்னு எல்லாருக்கும் புரியும். அவ்வளவுதான். கலைமகள் அலைமகள் மலைமகள்ளாம் அப்ப இனிமே கூப்பிட வேண்டாம். சரஸ்வதி, லஷ்மி, பார்வதீன்னே கூப்புடுவோம்.
// திருவேங்கடமுடையான் என்னும் அழகிய தமிழ்ச் சொல் உள்ளதே! அதை எப்படி மாற்றி ஆக்க முடியாதோ, அதே போல் தான் ஸ்ரீநிவாசன் என்பதையும் மாற்றி ஆக்க முடியாது! //
ஆக்க விருப்பமில்லை என்று சொல்லுங்கள். மொழி மாற்றித்தான் நீங்கள் கூப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதே போல மாற்றிக் கூப்பிடக்கூடாது என்று நீங்கள் கட்டாயப்படுத்தவும் முடியாது.
//// அதே போல் முருகன் முருகன் தான், கந்தன் கந்தன் தான், சுப்ரமணியன் சுப்ரமணியன் தான்! அரங்கன் எல்லா மொழியிலும் அரங்கன் தான்! //
ஆமா ஆமா ஆமா...வடக்கத்திக்காரன் முருக் தோ பியாசா, முருகு மக்கன்வாலான்னு பக்திப் பரவசமாக் கேக்கைல நமக்கும் புல்லரிக்குதே. ரங்கா ரங்கா!
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
// தெலுங்கில் ஆஸ்தானம் சொல்லும் போது கோவிலில் "மலையப்ப சுவாமி வாரி ஒச்சினாரு! பராக் பராக்! மலையப்ப தேவுடு ஒச்சினாரு! பராக் பராக்!" - இப்படி மலையப்பன் என்று தான் கூறி மகிழ்கிறார்கள்! //
ஆனா பாருங்க ரவி, மலையப்பா அப்படீங்குறது தெலுங்குப் பேரு கன்னடப் பேருன்னு அவங்கவங்க சொல்லிக்குவாங்க. அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும். அதுனால எனக்கு ஒன்னுமில்லை. ஆனா தமிழ்ப் பேரைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாங்கன்னு நீங்க சொன்னதாலச் சொன்னேன்.
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
//// வெட்டிப்பயல் said...
//ராகங்குறதோ ராகவங்குறதோ தமிழ்ப் பேர் இல்லைய்யா. அதுனால என்ன சொல்ல வர்ர?//
முதல்ல உங்க பேரை தமிழ் படுத்துங்க... ஊருக்கெல்லாம் உபதேசம் பண்றதுக்கு முன்னாடி கெசட்ல உங்க பேரை மாத்துங்க... //
அடடே! ஓ அப்படி வாரியா நீ! இந்த பாருப்பா...நான் ஒன் பேர மாத்தல. ஒன்னோட பங்காளி பகையாளி பேர மாத்தலை. எல்லாருக்கும் பொதுன்னு சொல்ற சாமியோட பேருக்குத் தமிழ்ல என்ன பொருள்னு கண்டுபிடிச்சிச் சொல்லிக்கிட்டிருக்கோம். சாமி கும்புடுறவனுக்கு அதுகூடத் தெரியக் கூடாதுன்னா ரொம்ப சந்தோசம்.
// வெட்டிப்பயல் said...
//சரஸ்வதி, லஷ்மி, பார்வதீன்னே கூப்புடுவோம்.//
ஊரே இப்படி தான் கூப்பிடுது...
அப்ப அப்படி கூப்பிட்டா சாமி வராதா? //
அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு நான் சொல்லலை. மேல ரவிக்கு நான் சொல்லீருக்குறத படி. அந்தப் பேரை மாத்தாமக் கூப்புடுறது தப்புன்னு நான் சொல்ல வரலை. மாத்திக் கூப்புடக்கூடாதுன்னு நீங்க சொல்லக்கூடாதுன்னுதான் நான் சொல்றேன். சரி..கலைமகள் அலைமகள் மலைமகள்னு கூப்டா சாமி வராதா?
// வெட்டிப்பயல் said...
//ஆகா! திருக்குடிங்குறது காமெடியாப் போச்சா!//
ஊருக்கு வேணா இப்படி வைக்கலாம் ஆளுக்கு இப்படி வெச்சா அது காமெடி தான்.. பேரரசு படம் மாதிரி //
ஓ! அது ஆளா! நாங்கூட சாமீன்னு நெனச்சுட்டேன்பா. இப்ப என்ன பண்றது. பீ.பி.ஸ்ரீநிவாஸ்னு ஒரு பாடகரு இருக்காரு. அவர உட்லண்ட்ஸ் ஓட்டல்ல பாத்தேன். அவருகிட்டப் போயி "ஐயா திருக்குடியாரே திருக்குடியாரே"ன்னு பேசலை. ஏன்னா அவரு ஒரு பாடகரு. ஒரு மனிதன். வித்தியாசம் புரியுதா?
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
// ஜி.ரா,
விதண்டா வாதம் வேண்டாம்...
தெலுகில் மலைக்கும் கொண்டலம்\பர்வதம்னு தான் சொல்லுவாங்க...
சும்மா காசா, பணமானு அடிச்சி விடாதீங்க. ஆன்மீக பதிவெழுதுவதற்கு பதில் நீங்கள் அரசியல் பதிவெழுதலாம்... //
:)))))))))))) ஏம்ப்பா இப்பிடி....திருமலா அப்படீன்னா என்ன? அப்படித்தான தெலுங்குதேசம் அந்த ஊரக் கூப்பிட்டுக்கிட்டிருக்கு!
என்னது கொண்டலா? ஹெ ஹெ கொண்டல் என்பதும் தமிழ்ச்சொல்தான்னு தெரியாது போல.
நான் அரசியல் பதிவெழுதப் போறது இருக்கட்டும். நீ கொஞ்சம் தமிழைப் படிச்சிட்டு வந்து தப்புல்லாம எழுதுனாத் தாவிலை.
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
// வெட்டிப்பயல் said...
//அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும்.//
தாய்மொழி பற்று தமிழர்களுக்கே உரியதுனு நினைச்சா சிரிப்பு தான் வருது. அவனவனுக்கு அவன் தாய் மொழி மேல பற்று இருக்கும். இங்க நீங்க கன்னடர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் தாய் மொழி பற்று இல்லைனு சொல்ல வரீங்களா? //
மொதல்ல நான் என்ன சொன்னேன்னு முழுசாக் கீழ தர்ரேன். அதுக்குக் கீழ விளக்கம் சொல்றேன்.
// மலையப்பா அப்படீங்குறது தெலுங்குப் பேரு கன்னடப் பேருன்னு அவங்கவங்க சொல்லிக்குவாங்க. அதே நேரத்துல ஸ்ரீநிவாஸ் வடமொழிப் பேருன்னு அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சிருவாங்க. இதுதான் எல்லாப் பேர்களுக்கும். அதுனால எனக்கு ஒன்னுமில்லை. ஆனா தமிழ்ப் பேரைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாங்கன்னு நீங்க சொன்னதாலச் சொன்னேன். //
திரும்பவும் சொல்றேன். அவங்க அது கன்னடம் தெலுங்குன்னு சொல்லி மகிழ்றது தப்புன்னு சொல்லலை. அவங்க அதத் தமிழ்ப் பேரா நெனைச்சுச் சொல்றாங்கன்னு சொன்னது தப்புன்னு சொல்றேன்.
திரும்பத் திரும்பச் சொல்றேன். என்ன பேர்ல வேணுமோ அப்படியே கூப்புட்டுக்கோங்க. ஆனா அப்படித்தான் எல்லாரும் கூப்புடனும்னு சொன்னா ஏத்துக்க முடியாது. இதுதான் என்னுடைய கருத்து. ஸ்ரீநிவாஸ், சீனிவாசன் இப்படிக் கூப்புடுறவங்க கூப்புடுங்க. ஆனா நான் திருத்தங்கல்னு கூப்புடக்கூடாதுன்னு நீ சொல்லக் கூடாது. அந்தத் திருத்தங்கல் சொல்லட்டும்.
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
// வெட்டிப்பயல் said...
ஏடு கொண்டல வாடா என்பது தெலுங்கு தான் ஜி,ரா.
இங்கே தெலுகு பேசும் நண்பர்களிடையே கேட்டு தான் சொன்னேன்... //
ஏடு கொண்டல வாடானி பிலிசேதி தெலுகு அனி நாக்கு தெலுசு. ஆனா தமிழ்லயும் கொண்டல்னா மலைதான்.
http://vivasaayi.blogspot.com/2007/07/blog-post_7121.html
என்ன நடக்குது இங்க? என்னைய வெச்சிக் காமெடி கீமெடி எதுவும் செய்யலையே!!!!
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
// நீங்க திருத்தங்கல்னோ இல்லை வெறும் தங்கல்னோ கூட சொல்லிக்கோங்க...
ஆனா இந்த பேருக்கு தமிழ்ல இல்லை இந்த பேருக்கு தமிழ்ல இல்லைனு புலம்பறதை நிறுத்துங்க. இறைவனை மொழியை வைத்து அளவிடவதை நிறுத்துங்க...
இல்லைனா இந்த மாதிரி எப்பவும் மத்தவங்களோட சண்டை போட்டுட்டே இருங்க. இறை தொண்டு செய்யனும்னு ஆசைபடாதீங்க. அதுக்கு உங்களுக்கு நேரம் கிடைக்காது. சண்டை போடத்தான் சரியா இருக்கும்... //
ம்ம்ம். தம்பி...நான் என்ன சொல்ல வர்ரேன்னே புரிஞ்சிக்காம பேசுனா என்ன செய்றது? இறைத்தொண்டு செய்ற பக்குவம் எனக்குக் கிடையாது. நான் சாதாரணமானவன். நான் புனிதனல்ல. அதை மட்டும் சொல்லிக்க விரும்புறேன். சரி. நாந்தான் சண்டை போடுறேன். அப்படியே இருக்கட்டும். ரெண்டே ரெண்டு கருத்து சொல்லீட்டு முடிச்சிக்கிறேன்.
1. தமிழில் கும்பிட்டால்தான் சாமி காப்பாத்தும்னு நான் சொல்ல வரலை. அதை நான் எங்கையும் சொல்லவும் இல்லை. கடவுள் மொழியைப் பார்த்து அளவிடுவார்னு நானும் சொல்லலை. ஆனா எனக்குப் பிடிச்ச மாதிரிதான் கடவுளைக் கூப்புடுவேன். அது தப்புன்னு யாரும் சொல்ல முடியாது. அது தப்புன்னா....நீ என் கிட்ட என்ன தப்பு சொல்றியோ அந்தத் தப்பு உங்கிட்ட இருக்கு.
2. தமிழ்ல அது இல்ல இது இல்லன்னு நாங்க யாரும் அழலை. ஆனா தமிழுக்கு எதுவும் தேவைன்னா அதைச் செய்ய வேண்டியதும் இருக்கு. நாம இந்தக் கருத்தைப் பத்தி இந்தப் பதிவுல பேசலை. இந்தப் பதிவுல சாமிப் பெயரைத் தமிழ்ப் படுத்தலாமான்னுதான் பேசினோம். அதைத் தாண்டி நான் வெளிய போகலை.
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
// எனக்கு தூய தமிழ் வார்த்தை தெரியாதுனு ஏமாத்த பார்த்தீங்க ஜி.ரா...
அப்படினா முதல்ல நீங்க போயி படிச்சிட்டு வாங்க. சொல் ஒரு சொல்னு ஊருக்கே சொல்லி தரீங்க... //
பாலாஜி, உன்னைய ஏமாத்தி எனக்கு என்ன ஆகப் போகுது. கொண்டல் கேள்விக்கு உனக்குதான் விளக்கம் சொல்றேன். ரவிக்கு இல்லை. ஏன் தெரியுமா? கொண்டல்னா மேகம்னு அவரு முடிவெடுத்துட்டாரு. அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனா அவர் சொன்னத வெச்சு நீ பேசுறதால ஒனக்குச் சொல்றேன்.
வளை என்றால் வளைப்பதுமாகும். எலியிருக்குமிடமும் ஆகும். குலை என்றால் குலைப்பதும் ஆகும். குலை தள்ளுவதும் ஆகும்.
கொண்டல் காற்று கேள்விப்பட்டிருக்கியா? மலையிலிருந்து வீசும் காற்றுக்குக் கொண்டல் என்று பெயர். சித்திரையில் அது மாறும். அது வெயில் காலம். கார் கொண்டற் கால் தள்ள வாய்ப்பில்லை.
எனக்குத் தமிழ் முழுக்கத் தெரியும்னு நான் சொல்லிக்கலை. சொல்லவும் மாட்டேன். ஏன்னா தமிழ்ல எவ்வளவு எனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். நன்றி.
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
பாலாஜி, இன்னோன்னு, என்னுடைய விளக்கங்களையெல்லாம் சொல்லீட்டேன். இனியும் ஏதாவது ஐயப்பாடு இருந்தால் நல்ல தமிழாசிரியராக பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்.
http://konguvaasal.blogspot.com/2007/01/blog-post_22.html
மொதக் கேள்விக்கு மட்டும் விடை சொல்றேன். சென்னை சில்க்ஸ். அடையாறு ஆனந்தபவன் கோயமுத்தூர்க்காரங்கன்னு நெனைக்கிறேன்.
மத்ததுக்கெல்லாம்...நான் இந்த ஆட்டைக்கே வரலை.
Post a Comment