Saturday, September 01, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - செப்டம்பர் 2007

செப்டம்பர் 2007ல் மற்ற வலைப்பூக்களில் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

194 comments:

G.Ragavan said...

http://blogintamil.blogspot.com/2007/08/top-two.html

ரெண்டு பேருமே பெரிய ஆளுங்க. நீங்க மட்டுமில்ல நாங்களும் அவங்க எழுத்த விரும்பிப் படிக்கிறவங்கதான். நல்லாச் சொல்லீருக்கீங்க.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/09/blog-post.html

பாப்பிசையில் முருகன் பாடல். சிலோன் மனோகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இவரைப் பற்றி. சுராங்கனி பாட்டையும் இவர் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பாடலை ரசித்தேன். கந்தனை எப்படிப் பாடினாலும் சுகம். சுகம். சுகம்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/09/dreams.html

கனவுகளே ஆயிரம் கனவுகளே

கவன் வைத்து அடித்து அழைக்கின்றீர்கள். ஆமா. ஜிரா என்று எல்லாரும் அழைக்கும் போது ஜி.ரா"கவன்" என்று கவன் வைத்து அழைக்கின்றீர்கள். வராமல் இருக்க முடியுமா? கண்டிப்பாக.

அது சரி..உங்கள் கனவை முதலில் சொல்லுங்கள். :)

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/09/blog-post_02.html

ஞாயிறு காலையில் கந்தனின் அற்புதமான இசையறிமுகத்தைத் தந்தமைக்கு நன்றி பல.

எந்தநாளும் நல்லூரை என்ற பாடல் பாரம்பரியப் பாணி என்றால் "நல்லூரான் திருவடியை" பாடல் காவடிச் சிந்து. கழுகுமலை அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னால் கூட உள்ளம் குழையுதடி என்ற பாடலின் மெட்டில் பாடியிருக்கின்றார்கள். கேட்க இரண்டு பாடல்களும் இதம். இதம்.

G.Ragavan said...

http://dondu.blogspot.com/2007/09/staatssicherheit-staasi.html

டோண்டு, செரங்குன்னு எங்கூர்ப்பக்கம் சொல்வாங்க. அது ஆறும். ஆறுறப்போ பக்கு கட்டும். அப்ப அரிக்கும். அப்பச் சொரியாம விட்டா முழுசா ஆறீரும். ஆனா சொரிஞ்சிட்டா காஞ்ச பக்கு பிஞ்சி புண்ணு பச்சையாயிரும். அதுதான் இப்ப நடக்குதோன்னு தோணுது.

நீங்க விரும்புறீங்களோ இல்லையோ...போலியை நாங்க எல்லாரும் மறக்க விரும்புறோம். ஆகையால நீங்க அமைதியா இருக்குறது நல்லது. தன்மானம் பெருசுன்னா....வலைப்பூக்களை விட்டு வெளிய போய் ஒங்க தன்மானத்தையும் வீரத்தையும் காட்டுங்க. இங்கதான் காட்டுவேன்னா.......ஒதுக்கப்பட வேண்டியது போலியை மட்டுமில்ல உங்களையும்தான்.

இந்தப் பின்னூட்டத்துக்கு நீங்க பதில் போட வேண்டாம். உஷா என்ன சொன்னாங்களோ...அத வேற மாதிரி சொல்லீருக்கேன். அத மட்டும் கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க.

G.Ragavan said...

http://dondu.blogspot.com/2007/09/staatssicherheit-staasi.html

டோண்டு, அந்தப் பின்னூட்டம் என்னுடையதுதான். அதைப் பிரசுரிக்கும் அல்லது மறுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.

உங்களது அந்தப் பின்னூட்டத்தை இப்பொழுதுதான் பார்த்தேன். நானிட்ட பின்னூட்டம் தேவையற்றதெனில் அதை பிரசுரிக்க வேண்டாம். ஆனால் சொல்ல வந்ததை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நன்றி.

G.Ragavan said...

http://chitchatmalaysia.blogspot.com/2007/09/50.html

நாசி லமாக். இதப் பத்தி நான் ஒன்னும் சொல்லாம இருக்குறது நல்லது. சீனாய் ஏர்ப்போர்ட்டுலதான் நாசி லமாக்கோட அறிமுகம் கெடச்சது. வாங்குனத அப்படியே வெச்சிட்டு பர்கர் வாங்க வேண்டியதாப் போச்சு. அந்த எண்ணெய் வாடையும் இனிப்பு கலந்த கருவாட்டுக்குழம்பும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஒருவேளை சாப்பிட்டுப் பழகுனா பிடிக்குமோ என்னவோ. அது என்னம்மா எண்ணெய்?

தே தாரிக்....இத மொதல்ல ருசிச்சது பினாங்குல...ஒரு பொட்டானிக்கல் கார்டன்ல இருக்குற கடைல. தமிழர்கள் நடத்துற கடைதான். டீத்தண்ணியில கிரீம் கலந்த மாதிரி...கிரீம்தான் கலக்குறாங்கன்னு நெனைக்கிறேன். இனிப்பா இருக்கும். ஆனா என்னோட ஓட்டு தே அலியாவுக்குத்தான். இஞ்சி போட்ட டீ.

G.Ragavan said...

http://chitchatmalaysia.blogspot.com/2007/09/50.html

நாசி லமாக். இதப் பத்தி நான் ஒன்னும் சொல்லாம இருக்குறது நல்லது. சீனாய் ஏர்ப்போர்ட்டுலதான் நாசி லமாக்கோட அறிமுகம் கெடச்சது. வாங்குனத அப்படியே வெச்சிட்டு பர்கர் வாங்க வேண்டியதாப் போச்சு. அந்த எண்ணெய் வாடையும் இனிப்பு கலந்த கருவாட்டுக்குழம்பும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஒருவேளை சாப்பிட்டுப் பழகுனா பிடிக்குமோ என்னவோ. அது என்னம்மா எண்ணெய்?

தே தாரிக்....இத மொதல்ல ருசிச்சது பினாங்குல...ஒரு பொட்டானிக்கல் கார்டன்ல இருக்குற கடைல. தமிழர்கள் நடத்துற கடைதான். டீத்தண்ணியில கிரீம் கலந்த மாதிரி...கிரீம்தான் கலக்குறாங்கன்னு நெனைக்கிறேன். இனிப்பா இருக்கும். ஆனா என்னோட ஓட்டு தே அலியாவுக்குத்தான். இஞ்சி போட்ட டீ.

G.Ragavan said...

http://chitchatmalaysia.blogspot.com/2007/09/50.html

மகாதிர மகாதிருடன்னு கிண்டலாச் சொல்வாங்க. :) எங்கூர்ல இல்ல. ஒங்கூர்லதான்.

கெண்டிங் மலைக்கும் போயிருக்கேன். கேளிக்கை இடம். நல்ல இடம். அதே மாதிரி பினாங்கும் லங்காவியும். பினாங்குல நாங்க தங்கியிருந்த ஓட்டல்ல இருந்து பாத்தா நீங்க போட்டிருக்குற பாலம் தெரிஞ்சது. பெருசுதான்.

மலேசியா போயிட்டு..பத்துமலைக்குப் போகாமலா? ஹி ஹி. பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம்.

G.Ragavan said...

http://tamilgossips.blogspot.com/2007/09/blog-post_3266.html

மாறன் சகோதரர்கள் இதைச் செய்வார்கள் என்று நினைக்கவில்லை. அப்படிச் செய்தால் அதன் பலன் நிச்சயமாக நல்லவிதமாக இருக்காது என்று அவர்களுக்கும் தெரியும். அதுவுமில்லாமல் மத்திய மாநில அரசுகள் கையில் இருக்கையில் கருணாநிதி குடும்பத்தைப் பகைத்துக்கொள்ள மாறன்கள் விரும்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://ennam.blogspot.com/2007/09/blog-post.html

இப்பிடித்தான் பில்லாவத் தமிழ்ல திரும்ப எடுக்குறாங்களாம். என்னாகப் போகுதுன்னு தெரியலை. மொரட்டுக்காளையும் உலகம் சுற்றும் வாலிபனும் கூட வரப்போகுதாம். வரட்டும். ஆனா ஒன்னுங்க. இந்த ரீமேக்குகள் எல்லாம் ஏன் மசாலாப் படங்களாவே இருக்கு. தில்லானா மோகனாம்பாளு, மூன்று முடிச்சு, பாலும் பழமும்னு ஏன் முயற்சி செய்ய மாட்டேங்குறாங்க? இந்தீல ஏற்கனவே உம்ரோ ஜான திரும்ப எடுத்து கையச் சுட்டுக்கிட்டாங்களே. அது மாதிரி ஆயிருமோன்னு பயப்படுறாங்க போல.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/09/blog-post_04.html

ஹா ஹா ஹா நல்லாத்தான் இருக்கு.

ஆனா சென்சாரெல்லாம் வேண்டாம். போலீஸ் மாதிரி நமக்குள்ள சில டெக்கி மக்கள் வெச்சுக்கலாம். யாருக்குப் பிரச்சனைன்னாலும் அவங்க கிட்ட போய்ச் சொல்லலாம். யாரு பிரச்சனை பண்றாங்கன்னு அவங்களே கண்டுபிடிப்பாங்க. பிடிச்சவன் பிடிக்காதவன் பேதம் இல்லாத மாதிரி. அதுதான் சரியான வழி. இப்பதான் போலிய எந்த ஐபில இருந்தாலும் நாட்டுல இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும்னு ஆயிருச்சுல்ல. அப்புறமென்ன. தமிழ்மணப் போலீஸ் ஸ்டேஷனச் சட்டபூர்வமாத் தெறக்க வேண்டியதுதானே. வாலண்டியர்ஸ் யாராவது?

G.Ragavan said...

http://biththan.blogspot.com/2007/09/1.html

சகோதரரே, கடவுள் நம்பிக்கை என்பதையும் மூடநம்பிக்கை என்பதையும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் பலரே சரியாகப் புரிந்து கொள்ளாத பொழுது, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு.

இறைநம்பிக்கை என்பது எப்படியிருக்கும் என்று எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. அது அப்படித்தான். ஆனால் பகுத்தறிவு என்பதை இறைநம்பிக்கையின்மை என்று சொல்ல முடியாது. பகுத்தறிவுவாதிகள் என்று சொல்கின்றவர்கள் குஷ்பு, தங்கர்பச்சான் விவகாரங்களில் நடந்து கொண்டதையும் மறக்க முடியாது.

உங்கள் எடுத்துக்காட்டுகளை வைத்து நீங்கள் சொல்ல வந்தது தவறென்று சொல்வது மிக எளிதாகும். ஆனால் நீங்கள் என்ன சொன்ன வருகின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தமிழச்சியும் மாசிலாவும் துண்டுச்சீட்டு பிரசுரம் செய்தார்கள் என்று நினைக்கிறேன். அதாவது அவர்கள் கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் நாகரீகமாக. அதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை. அதே போலத்தான் அந்த வலைப்பூவில் சொல்லியிருப்பதும். அது அவர்கள் கருத்து. யாருக்கு என்ன தெரியுமோ அதைத்தானே சொல்ல முடியும். ஒருவர் இல்லை என்று சொன்னதால் மட்டுமே நம்பிக்கை மாறும் என்றால்...அப்படிப்பட்ட நம்பிக்கை மாறுவதே நல்லது.

நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்
ஏமாப்போம் பிணியறியோம்
நரகத்தில் இடற்படோம்....இதுவும் பகுத்தறிவுதான்.

G.Ragavan said...

http://konguvaasal.blogspot.com/2007/09/blog-post.html

ஒன்னு சொல்றேன் குறிச்சிக்கோங்க. திருச்சேங்கோடு ரொம்பப் பழைய ஊரு. சிலப்பதிகாரத்துல நம்ம எளங்கோ சொல்றாரு "சீர்கெழு செந்திலும் செங்கோடும் நீங்கா இறைவன் கை வேலன்றே" திருச்சேங்கோட்டு அருத்தநாரீர்ஸ்வரரப் பத்தி ஒன்னும் சொல்லலை. ஆனா அங்கயிருக்குற முருகன் கோயிலைப் பத்திச் சொல்றாரு.

பழநி மலைக்கு உள்ள பெருமை திருச்செங்கோட்டுக்கும் உண்டு. இங்க இருக்குற முருகனும் நவபாஷாணந்தான். ஆனா ஒரு வித்யாசம். பழநியில கருப்பு. இங்க வெளுப்பு. இதப் பத்தி நெறைய பேருக்குத் தெரியாது போல.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/09/blog-post.html

பழைய தகவலு. ஆனா நமக்குப் புதுசு. எடுத்துச் சொன்னதுக்கு நன்றி.

ஆமா புஸ்ஸு கழுதையா ஆனையா? அதச் சொல்லுங்க மொதல்ல. ஆனாலும் கழுதைய வெச்சுக்கிட்டும் தேர்தல்ல ஜெயிக்கவும் தெறமை வேணுந்தான்.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/09/best-of.html

1. மாருகோ மாருகோ மாருகயீ - வெற்றி விழா
ஆகா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் - கல்யாணராமன்
வாடி எங்கப்பக் கெழங்கே - அலைகள் ஓய்வதில்லை

2. முதலில் ஜெமினி கணேசனின் மனைவியார். அடுத்து அவரது மகள்கள். கமலா செல்வராஜ், ரேக்கா, ஜிஜி தெரிகிறது. மற்ற பெயர்கள் தெரியாது.

3. பள்ளிக்கூடம், சரயூ நதிக்கரை, தோப்பு

எ.பா.எ.ப
1. படிக்காதவன் - ஒரு கூட்டுக்கிளியாக
3. நினைத்தாலே இனிக்கும் - யாதும் ஊரே யாவரும் கேளிர்
5. மூன்று முடிச்சு - வசந்தகால நதிகளிலே

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/09/blog-post.html

நல்ல படங்கள். நேரில் வந்திருந்த உணர்வை அசைபடங்கள் தந்தன.

ஐயா, ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு தனி அடையாளம் வேண்டும். அது கலை வழிபாடு பண்பாடு என்று செழித்தோங்க வேண்டும். இந்தியத் தமிழர்களைச் சாராமல் நிலைநிற்க வேண்டும். அது மிகவும் அவசியமானதும் கூட. அதனால்தான் பாண்டிச்சேரியில் இருந்து சென்றவர்கள் செய்யாததைக் கூட இலங்கையிலிருந்து சென்றவர்கள் செய்கின்றார்கள். செய்யவும் வேண்டும்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/09/blog-post.html

ரூப்பு தேரா மஸ்தானா
பியாரு மேரா தீவானா

பாயல் மேரி ஜாது ஜாகாதீ ஹே
உஸ்கோ புலாத்தீ ஹே
மே கியா கரூ


இதெல்லாம் இந்தியில எப்படி அடிக்கனுங்க?

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/09/that-silent-knowledge-of-whole-tree.html

இங்கீலீசாட்டம் இருக்குதே! நமக்குத்தான் டச்சு தவிர வேறெதும் படிக்க வராதே!!!!!

G.Ragavan said...

http://muslimpage.blogspot.com/2007/09/blog-post_8068.html

நண்பரே, செய்தியை இப்படிச் சொல்லியிருந்திருக்க வேண்டாம். நீங்கள் அப்படி நினைக்கவில்லையானாலும் ஹெல்மெட் அணிந்ததால் ஒருவர் இறப்பு என்ற தொணியில் பதிவு இருக்கிறது. தரமற்ற ஹெல்மெட் என்று மட்டும் மாற்றினாலே பதிவின் உண்மையான கருத்து வெளிப்படும்.

இருசக்கரவண்டியோட்டிகளுக்கு தலைக்கவசம் கண்டிப்பாகத் தேவையானது. தலைக்கவசச் சட்டத்தைத் தமிழக அரசு விலக்கியது என்னைப் பொருத்த வரையில் அடிமுட்டாள்தனமான செயல்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_31.html

// எல்லாம் ஒரே பொருளில் வரும் பற்று தான், ஜிரா!
அதைப் பற்றாமல், பற்ற வைத்திக் கொண்டு இருக்கீங்க நீங்க! :-)) //

பற்று வரவெல்லாம் பொருளை வெச்சுத்தானே. அது தெரியாதா! சரிய்யா..நாங்க பத்த வெச்க்கிறவங்கதான். என்னயப் பாத்து பத்த வெச்சிட்டியே பரட்டைன்னு சொல்றீங்க. நீங்க நல்லவங்க. வல்லவங்க. சரிதானாய்யா..இனிமே ஒன்னும் சொல்லலைய்யா நானு.

G.Ragavan said...

http://biththan.blogspot.com/2007/09/1.html

// ஆனால் மாறுபட்ட நம்பிக்கை உடையவர்களை 'வெங்காயம்' என்றும் 'முட்டாள்கள்', 'ஆட்டு மந்தைகள்' என்றும் வசை பாடுவது எந்த விதத்தில் நியாயமோ? நான் ஒன்றை நம்பவில்லை, நீங்கள் நம்பாதீர்கள் என்ற நிலைப்பாடு வேறு; நான் நம்பவில்லை, நம்புகிறவனேல்லாம் முட்டாள், அறிவிலி (எனவே நான் புத்திசாலி) என்ற நிலைப்பாடு வேறு. தலைவர் வழியில் செல்லும் அவர்களிடம் நான் வேறு எதையும் எதிர்ப்பார்க்காவிட்டாலும் உங்களிடமிருந்து அதற்கான ஆதரவை எதிர்பார்க்கவில்லை. //

நண்பரே, தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். மாற்று நம்பிக்கை உள்ளவரை அநாகரீகமாகப் பேசுவது பகுத்தறிவின் எந்த விதிக்குள்ளும் அடங்கவில்லை. அவர்கள் அப்படிச் சொல்வதால் அப்படி யாரும் ஆகிவிட முடியாது என்பதைக் குறிப்பதற்காக அப்படிச் சொன்னேன். பகுத்தறிவு என்பது கடவுள் நம்பிக்கையின்மை அல்ல என்பதுதான் நான் சொல்ல வந்தது.

G.Ragavan said...

http://podhuppaattu.blogspot.com/2007/09/15.html

பெயர்கள்ளயே முருகன் அப்படீங்குற பெயர் ரொம்ப சிறப்பானது. அதுனாலதான கூப்புடும் போது முருகாங்குற பேரு முன்னால வருது. நல்லா யோசிச்சிப் பாருங்க...நம்மாளா நம்மள அறியாமச் சொல்லும் போது...முருகான்னுதானே வாயில வருது.

எட்டு பண்புகள்....நமக்கு எட்டும் பண்புகள். அதாவது இறைவனின் பண்புகள் எட்டாதவை. ஆனா புரிய வைக்கனுமே. கம்பீல கண்ணுக்குத் தெரியாம ஓடுற மின்சாரத்தத் தொலைக்காட்சியில வண்ணவண்ணமா உணர்ரோமே. வானொலில ஒலியா உணர்ரோமே. அந்த மாதிரி கடவுள உணர இது எட்டு வழி. ஆனா...இந்த எட்டுதான் கடவுள்னு நெனைச்சிறக்கூடாது.

ரொம்ப நாள் கழிச்சித் தொடங்கீருக்கீங்க. படிக்க ரொம்பச் சந்தோசமா இருக்கு.

G.Ragavan said...

http://kavishan.blogspot.com/2007/09/blog-post_1339.html

ஐயா, அந்தக் கொழந்தைய எங்கிட்ட குடுக்கச் சொல்லுங்க....நான் பாத்துக்கிறேன்.

G.Ragavan said...

http://keethukottai.blogspot.com/2007/08/blog-post.html

படம் பாத்துட்டீங்களா? நான் இன்னும் பாக்கலை. ஆனா உங்க விமர்சனத்தப் பாத்தா முயற்சி செய்யலாம் போல இருக்கே.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/09/blog-post_05.html

உண்மைதாம்ப்பா....பெண்களுக்கு நம்மூர் சூழ்நிலைல ரொம்பப் பொருந்துனாலும்..இது எல்லாருக்கும் பொருந்தும். நீ ஐதராபாத்துல இருக்க..ஆனா பாரு...வலைப்பூவுக்கு ஹுசைன் சாகர்னு பேரு வெக்காம அமராவதி ஆத்தங்கரைன்னுதானே பேரு வெச்சிருக்க ;)

அப்புறம்....அழகிய தமிழ்க் கடவுள் சொன்னாப்புல அது "வேரோடு பிடுங்கி" ஒற்று வராது.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post.html

உறங்காப்புளிக் கதையை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று விளக்கமாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு சிறிய ஐயம், அந்தப் படத்தில் புளியம் பொந்துக்குள் இருக்கும் மாறனார் நல்லாடையோடும் நற்சின்னங்களோடும் இருக்கிறாரே! சரி. உண்ணாமலே வளர்ந்தார் என்றது நடக்கையில் துணி வளர்வதும் சின்னம் துலங்குவதுமா பெரிய விடயம்.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/09/blog-post.html

பாட்டுலயும் யாயும் ஞாயும் யாராகியறோதான். யாயும் யாயும்..மொழ்ழின்னு பாம்பே ஜெயஸ்ரீ கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்காங்க. நளினகாந்திய நெளினகாந்தியாக்கீட்டாங்க. :)))))))))

பழைய தமிழ்ப்பாடல்களை இரகுமானின் இசையில நெறைய கேக்கலாம். இந்திரையோ இவள் சுந்தரியோன்னு குத்தாலக் குறவஞ்சீல இருந்து....அதே மாதிரி கற்க கசடறன்னு பாய்ஸ்ல.....மாலே மணிவண்ணா...சிவாஜியில...

என்ன....திருப்புகழத்தான் நேரடியாப் பயன்படுத்தாம பாட்டா மாத்தீருவாரு. நாதவிந்து கலாதீ நமோன்னா...என் வீட்டுத் தோட்டத்தில்னு வரும். முத்தைத் திருபத்தித் திருநகைன்னா வெற்றிக்கொடி கட்டுன்னு வரும்.

அப்புறம் ஒரு திருத்தம்....என்உடல் இல்ல....என்னுடல். இகலைப்பைல அடிக்கும் போது தானே என்னுடலாயிருதே...அப்புறம் எப்படி அடிச்சீங்க?

G.Ragavan said...

http://biththan.blogspot.com/2007/09/blog-post_1713.html

இந்தப் பதிவை ரசிக்க முடியவில்லை. வள்ளுவனையும் வாரியாரையும் பாரதிதாசனையும் ஔவையையும் விவேகானந்தரையும் செல்வநாயகத்தையும் சூப்பர்ஸ்டாரோடு இணைத்த கொடுமை ஒருபுறமென்றால்....

தொழிலை வைத்து இழிவு சொல்லியிருக்கும் மடமை மறுபுறம். ஏன் இப்படி?

G.Ragavan said...

http://paraasaran.blogspot.com/2007/09/8.html

அநுபூதியானது ஒவ்வொருவருவது நோக்கிலும் விதம்விதமான வாக்காக வருவதும் கதம்பமாக இருக்கிறது. :)

திணியான மனோசிலை மீது தாமரைப் பாதம் எப்படிப் பதியும்? அதான் கல்லாச்சே? அதுக்குத்தான் மொதல்லயே "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து" உருகீர்ராரு. அப்புறம் அதுல தானாப் பாதம் பதிஞ்சிருது.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/09/blog-post_08.html

பிரபா, சும்மா இரு என்ற பாடம் முருகன் அருணகிரிக்குச் சொன்னது. முருகன் சொன்ன சும்மா இன்றைக்கு எந்த பொருளில் வழங்கப்படுகிறது என்றால் அது நகைப்புதான். :) எனக்குத் தெரிந்து சும்மா என்ற சொல் வரும் முதல் தமிழிலக்கியம் அநுபூதிதான் என்று நினைக்கிறேன். நீங்களும் குறிப்பிட்டுள்ள "செம்மான் மகளைத்" பாடலைப் பற்றி இனியது கேட்கின் வலைப்பூவில் முன்பு எழுதியது இங்கே.
http://iniyathu.blogspot.com/2006/04/13.html

படங்கள் மிக அழகாக இருக்கின்றன. இந்த ஆண்டு எடுத்ததா? சென்ற ஆண்டுகளில் எடுக்கப்படவையா? நல்லூரான் தகவல்களைத் தினமும் தரும் உங்கள் பணி சிறப்புடையது. அத்தோடு இனிய முருகன் பாடல்களையும் தந்து ஈழத்துக் கலைஞர்களையும் கலைகளையும் அறிமுகம் செய்வதும் சிறப்பு.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/09/blog-post_05.html

இப்பிடியொரு அருமையான புத்தகம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா இத வெச்சே படிச்சிருப்பேனே...

அம்மா ஆடு இலை ஈ உரல் ஊசி எறும்பு ஏணி ஐவர் ஒட்டகம் ஓடம் ஔவை இப்பிடித்தான நான் படிச்சேன்

அது சரி....உரலும் ஊசியும் ஏணியும் பிள்ளைகளுக்குத் தெரியாதுன்னு மாத்தீட்டாங்க போல...

G.Ragavan said...

http://gragavancomments.blogspot.com/2007/09/2007.html

நல்ல பாட்டுதான். ஆனா அவ்வளவா பொருந்தி வரலைன்னு தோணுது.

யார்ரா அந்தப் பாட்டப் பாடுனதுன்னு யோசிச்சேன். ஜெயச்சந்திரனா ஜேசுதாசான்னு ஒரு நொடி யோசிச்சேன். படக்குன்னு குறுக்கால வந்த கர்நாடக டைப் பிருகா யாருன்னு சொல்லீருச்சு. :)

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/09/blog-post.html

ஹா ஹா ஹா

இப்பிடி ஆயிருச்சே ஒங்க நிலமை...மன்னிக்கனும்..நீங்க சொல்றவரு நெலமை. ஆனா அதெல்லாம் நல்லதுதாங்க. தங்கமணி சொல்லே தங்கம்னு எடுத்துக்கிட்டு செய்ங்க. மன்னிக்கனும். செய்யச் சொல்லுங்க.

G.Ragavan said...

http://kummionly.blogspot.com/2007/09/blog-post_09.html

பதிவைப் படிச்சிட்டேன். இப்ப என்ன சொல்லனும்? கொஞ்சம் பாதுகாப்பா கீழ இருக்குற பின்னூட்டங்களப் போடலாம். உங்களுக்கு எது பொருத்தமாத் தோணுதோ...அதையே எடுத்துக்கோங்க.

1. கதையப் படிச்சேன். அருமையா இருந்தது.

2. குசும்பனுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்

3. குசும்பனா இப்பிடி? நம்பவே முடியலையே....

4. படிக்கிறப்போ கதை மாதிரியே இல்ல...உண்மையான நிகழ்ச்சி மாதிரியே இருந்தது

5. பாவங்க குசும்பன். தெரியாமச் செஞ்சிட்டாரு. மன்னிச்சு விட்டுருங்க.

G.Ragavan said...

http://makkal-sattam.blogspot.com/2007/09/blog-post_2491.html

அன்புமணி கொண்டு வர நினைக்கும் திட்டம் நல்ல திட்டம். ஆனால் ஏற்கனவே ஐந்து வருடப் படிப்பு. அதில் ஓராண்டு பயிற்சி. அந்த ஓராண்டு பயிற்சியில் அவர்களைப் பல இடங்களுக்கும் அனுப்பலாம். அது நல்ல திட்டமாக இருக்கும்.

அதே நேரத்தில், இதை மருத்துவம் மட்டும் இல்லாது...எல்லா நிலைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். குறைந்த பட்சம்...ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும்...அவரது தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் கண்டிப்பாக மாதம் ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வர வேண்டும். அரசு ஊழியர்களில் சிலருக்கு அரசு வீடுகளும் வாகனங்களும் உண்டு. அதைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டத்தையும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேல் போட வேண்டும்.

G.Ragavan said...

http://kuttapusky.blogspot.com/2006/12/blog-post_11.html

வைதாரையும் வாழவைப்போன் என்றுதான் கடவுளைப் பற்றி அறிந்துள்ளோம். பெரியார் சிலை வைப்பதால் கடவுளுக்குத் தீட்டு வராது. நெருப்பைக் கரையான் உண்ணல் நகைச்சுவை என்பது போலத்தான் இதுவும். ஆனால் சிலைச்சேதம் என்பது வெறுப்பின் வெளிப்பாடாகப் பார்க்கிறேன்.

பெரியாரின் சிலையை உடைத்தவர்களுக்குப் பெரியார் மீதிருக்கும் வெறுப்புதான் காரணம். தீட்டாவது. பூட்டாவது.

பெரியார் சிலையைத் தாராளமாக வைக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் இஸ்லாம் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. பெரியாருக்குச் சிலை வைப்பதும்..மாலை வைப்பதும் தொடருமானால்...நாளை அவரும் கடவுளாக வாய்ப்பிருக்கிறதோ என்று. இது ஒரு சிந்தனைதான். பெரியாருக்குச் சிலை வைக்கக் கூடாது என்ற மறுப்பு இல்லை.

G.Ragavan said...

http://naalainamathae.blogspot.com/2007/09/blog-post_08.html

எந்தப் பெண் மட்டும் இல்லைங்க...எந்த ஆணும் அடிமைதான். மழலையாச்சே.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/09/blog-post_09.html

ஆகா...இப்படியொரு புதையல். இதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். கேட்டு விட்டு பின்னூட்டம் இடுகிறேன். தொடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://araiblade.blogspot.com/2007/09/blog-post_08.html

இதுல பிரச்சனை என்னன்னா....ஒருத்தர் ஒன்னு சொன்னா...அத எப்பச் சொன்னாரு...எதுக்குச் சொன்னாருன்னு தெரிஞ்சிக்காம புரிஞ்சிக்கிறதுதான். அது பெரியாரா இருந்தாலும் வள்ளுவரா இருந்தாலும் சரிதான்.

இப்ப அநுபூதி, திருப்புகழு, திருப்பாவைகள் நமக்குச் செய்யுளாச் சொன்னா புரியிறதில்லை. அதுக்கு விளக்கம் சொல்ற மாதிரி....பெரியார் என்ன சொன்னார்...எதுக்குச் சொன்னார்னும் விளக்கம் சொன்னா நல்லாயிருக்கும்.

இல்லைன்னா....பெரியார் சொன்னதை அப்படியே வரிக்கு வரி எடுத்துக்கிட்டோம்னா...அவ்வளவுதான். இத்தனைக்கும் பெண் ஏன் அடிமையானாள் படிச்சான்னா...குஷ்பூவுக்கு வெளக்கமாறு தூக்குனவங்க வெக்கப்பட வேண்டியிருக்கும். மொத்தத்துல பெரியார் சொன்னதப் புரிஞ்சிக்கிட்டு...அதுல நல்லது கெட்டத மட்டும் எடுத்துக்கிறது நல்லது. இல்லைன்னா..அவரோடு பேச்சு வேதமாகி அவரும் இறைத்தூதர் ஆயிருவாரு.

சிலப்பதிகாரம் பத்திய பெரியார் கருத்தில் நான் உடன்படவில்லை. சிலப்பதிகாரம்னு இன்னைக்கு நெறையப் பேரு நெனைச்சிக்கிட்டிருக்குற கதையத்தான் பெரியாரும் தெரிஞ்சி வெச்சிருந்தாருன்னு நெனைக்கிறேன். கற்புங்குறத எதிர்க்க வேண்டி அவர் கண்ணகியையும் சிலப்பதிகாரத்தையும் அவர் எதிர்த்திருக்காரு. ஆனா சிலப்பதிகாரம் சொல்ற கற்பே வேற. கணவனோட இருந்ததுக்காக சிலப்பதிகாரமோ...அந்த நூலின் பாத்திரங்களோ கண்ணகியைப் போற்றலை. கண்ணகியின் கற்பு என்று விளக்கப்படுவது அவளது அறச்சீற்றம். அதுதான் மையக்கருத்து. அரசியல் பிழைத்தார்க்கு அறமே கூற்றம். இதுதான் சிலப்பதிகாரத்தின் மையக்கருத்து. இங்க அறம் என்பது கண்ணகி. அரசியல் பிழைத்தது பாண்டியன் நெடுஞ்செழியன். அத விட்டுட்டு...எல்லாரும் கண்ணகி கோவலன் கூடவே போனா வந்தான்னு எழுதுறதும் சினிமா எடுக்குறதும் சிரிப்பா இருக்குங்க. :)))))))))))))))) கதைல இளங்கோவடிகள் அன்றைய காலகட்டத்தை அப்படியே பிரபலசிச்சிருக்காரு. அவ்வளவுதான். அத வெச்சுக்கிட்டு...அத இளங்கோவோட கருத்தா எடுத்தக் கூடாது. இன்னும் சொல்லப்போனா...சிலப்பதிகாரத்த முழுசா ஆழப்படிக்காம யாரும் பேசுறது.....என்னைப் பொருத்தவரையில் மூடத்தனம்.

G.Ragavan said...

http://araiblade.blogspot.com/2007/09/blog-post_08.html

// மாசிலா said...
நான்கூட கடைசியா தோழியர் தமிழச்சி பதிவுல குறல் பற்றி பெரியார் கருத்தை பார்த்து அதிர்ச்சியாயிருந்தேன். உண்மைதான். பிறகு நல்லா யோசித்து பார்த்தேன்.

ஏன் இவரு இப்படி சொல்லி இருப்பாருன்னு!

என்னை பொருத்தவரை அவர் மதம் மொழி என்கிற எல்லை, வலை, சுவர்களை உடைத்தெறியனும்னு நெனைச்சிருப்பாரோன்னு தோனுது. //

அதே அதே. நீ நீயாயிரு. அதே நேரத்துல அடுத்தவன அடுத்தவனா இருக்க விடு. இதுதாங்க மையக்கருத்து. இத எல்லாரும் பின்பற்றுனா போதும்.

// இன்றைக்கும் தமிழ வெச்சி நெறைய வியாபாரம் நடக்குது மேன். பாப்பான் மொத கொண்டு நம்ப மொழிய வெச்சி நம்மளையே அழிச்சினு வர்ரான். பல ஆயிரம் ஆண்டுகளா அத பேசற பறையன் பள்ளனுக்கு இத்யாதிக்கு எதுவும் கிடைக்கல.
பாப்பார பன்னாட தான் கொண்டு வந்த மொழியான சாக்கட கிருதத்தை அந்த உணர்வு, ஆட்டுக்குட்டி உணர்வுன்னு நெனச்சி இருந்தான்னா, இன்னிக்கு சோமாறி அடியோட ஒழிஞ்சி போய் இருப்பான். அதுக்கு பதிலா, சாமர்த்தியமா நம்ம மொழிய அவன் கத்துனு நம்மளையே ஏமாத்தினு பொழைச்சினு வர்ரான். நம்மளும் அவனுக மொழிய கத்து அவனுகள திருப்பி அடிச்சி இருந்திருக்க முடியும். //

கண்டிப்பா முடியும். அதையும் செஞ்சாரு அருணகிரி. கடவுள் வணக்கம் தொடர்புங்குறதால நீங்க கண்டுக்காம இருக்கலாம். ஆனா நடந்தது உண்மை. தமிழ் மொழியும் முருகன் வழிபாடும் கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போன காலத்துல... தமிழும் வடமொழியும் கலந்து...அப்ப பிரபலமா இருந்த கடவுள்களோட இணைச்சு திருப்புகழ எழுதத் தொடங்கி....அலங்காரத்துக்கு வர்ரப்போ "சிகராத்ரி கூரிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ"ன்னு மாறி...பின்னாடி அநுபூதில பெரும்பாலும் தமிழ்லயும் முருகனை மட்டும் முன்னிறுத்தியும் எழுதுனாரு. அவருக்குப் பின்னாடி நம்மளே அதச் சரியா எடுத்துக்கலை.

//மற்றுமொரு இந்திய தத்துவ ஞானி ஆன ஜெ.கே வும் மொழி, கொள்கை, நாடு, எல்லைகள், கொடி, தலைவன் போன்ற சமுதாய, மற்றும் தனி மனித சுதந்திரத்தை அழிக்கும் போலி வேசங்களுக்கு ஆளாக கூடாதுன்னு சொல்லி இருக்காரு. //

வள்ளலாரையும் சேத்துக்கோங்க. தாயுமானவரையும் சேத்துக்கோங்க. அருணகிரி கொஞ்சம் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவரு. அவரும் அந்தக் காலத்துக்குத் தக்கச் சொல்லீட்டுத்தான் போயிருக்காரு.

// மொழிய நேசிக்கிற அளவுக்கு சக மக்களை நேசிக்க தவறிய சமுதாயத்தை பார்த்தும் இப்படி சொல்லி இருப்பாரு.

என்னை பொருத்தவரை
பெரியார் ஒரு பெரும் ஞானி. அற்புத தீர்க்க தரிசி. மிகுந்த தொலை நோக்குடைய தத்துவ மேதை. //

ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்து. ஆனா இன்னைக்குப் பெரியார் அப்படீங்குறது திகவின் சொத்துங்குற மாதிரி ஆகிப் போனது வருத்தத்திற்குரியது. அதுவுமில்லாம பெரியார் கருத்தை நேர்மையா பலர் விமர்சனம் செய்யலைங்குறது உண்மைன்னாலும்....விமர்சனம் செஞ்சாலே அவனைத் துரோகி பச்சோந்தீங்குறதும் நடக்குது. பெரியார் என்ன சொன்னாருன்னு எல்லாரும் படிக்கனும். படிச்சிச் சிந்திச்சி அதுல இருக்குற நல்லதுகள எடுத்துக்கனும். தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்கெல்லாம் நான் பரிந்துரைக்கிறது..."பெண் ஏன் அடிமையானாள்" எல்லா மதத்து ஆண்களுக்கும்தான். அதுல குறிப்பிட்ட்ட மதத்தை வைச்சு எழுதீருந்தாலும் எல்லாருக்கும் பொருந்த வேண்டிய கருத்துகள் அவை.

G.Ragavan said...

http://viriyumsirakukal.blogspot.com/2007/09/blog-post.html

அருமையான இடம். பழந்தமிழ் இலக்கியத்தில் சொன்னது போன்ற இடம். கோயில். அறியத் தந்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/09/blog-post.html

அன்புமணி கொண்டுவந்துள்ள திட்டம் முழுமையாக சிறந்த திட்டமல்ல என்பது என் கருத்து. பயிற்சிக்கான ஒரு வருடத்தில் இது போன்ற இடங்களில் இடலாம். அதுவுமில்லாமல் இதை முதலில் அரசியல்வாதிகளிடமிருந்தே தொடங்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும்....தொகுதியில் உள்ள எல்லா ஊர்களுக்கும் மாதம் ஒரு முறையாவது செல்ல வேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் சும்மா எட்டிப்பார்த்து காபி டீ சாப்பிடக் கூடாது. ஆறுமாதங்களுக்கு ஒருநாள் கண்டிப்பாக அந்த ஊரில் தங்க வேண்டும். இதை முதலில் கொண்டு வரட்டும். இதுதான் இப்பொழுதைக்கு உண்மையிலேயே தேவையானது.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/09/blog-post_06.html

பாரதப் போரில் தேரோட்டியவன்....அதனால் பாண்டவர்தம் வாழ்க்கைத் தேரோட்டியவன்...அவனுக்கு ரதாங்கபாணி என்ற பெயர். அதற்கு நல்ல விளக்கம். ஆனால் ஒரு ஐயம். கோதண்டபாணி என்றால் கோதண்டத்தைக் கொண்டன். ரதாங்கபாணி என்றால் ரதத்தை அங்கமாகக் கொண்டவன் என்ற பொருளா?

G.Ragavan said...

http://tbcd-tbcd.blogspot.com/2007/09/blog-post_09.html

அதே லங்காவீல நானும் வாட்டர் ஸ்கூட்டர் ஓட்டினேன். ஆனா...மெதுவா ஓட்டுனா அது ஒழுங்காப் போகலை. வேகமா ஓட்டுனா ஒழுங்காப் போகுது. ஆனா என்னால வேகமா ஓட்ட முடியலை. அப்புறமா பாரா செய்லிங் போனேன். அது ரொம்ப நல்லா இருந்தது.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/09/55.html

காதல் துணையே மின்னாயிரம் கொண்ட வடிவுன்னு பாடுறப்போ....இறைவி மின்னாயிரம் நின்றாற்போலத் தெரியிறது வியப்பே இல்ல.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post_08.html

இருக்குற பிரச்சனை போதாதா? இது வேறயா? ஏற்கனவே எம்.ஜி.ஆரு நகரு. கருணாநிதி நகரு, ஜெயலலிதா நகருன்னு அரசியல் அநாகரீகம் நகருது. இதுல இந்தப் பிரச்சனையும் சேந்துச்சுன்னா...அவ்ளோதான்.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2007/09/blog-post.html

நல்ல பழக்கந்தான். தொடருங்க. உணவுக்கட்டுப்பாடு நம்மாளுகளுக்குக் கண்டிப்பா அவசியம். சோற்று மலையில சாம்பார் ஆறு ஓடுது. ரத்தத்துலயும் பலருக்குச் சர்க்கரை ஓடுது.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/09/blog-post.html


// //என்ன....திருப்புகழத்தான் நேரடியாப் பயன்படுத்தாம பாட்டா மாத்தீருவாரு. நாதவிந்து கலாதீ நமோன்னா...என் வீட்டுத் தோட்டத்தில்னு வரும்//

அது பாட்டா கொடுக்காம ராகத்த மட்டும் கொடுத்தாரு ஜிரா, ஜெண்டில் மேன் படத்தில்.
நாதநாமக்ரியை என்னும் ராகம்; அதான் என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்! //

அது செஞ்சுருட்டி ராகங்க. நீங்க இப்பிடிச் சுருட்டி வீசீட்டீங்களே!!!!

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2007/09/blog-post.html

ஆறுமாசத்துக்கு அப்புறமா வந்தாலும்..அழைப்ப மறக்காம பதிவு போட்டுட்டீங்க.

மழை ஒரு அற்புத அனுபவம். இந்தியால இருக்குறப்போ மழையில நனையிறது சுகம். வெதுவெது மண்ணில் குளுகுளுவென மழை இறங்குவது ஒரு சுகம். ஆகா! ஆனா இங்க அடிக்கடி மழை பேயுது. ஐஸ் ஊசிமாதிரி...மழை வந்தா குடையப் பிடிச்சிக்கிட்டு ஓட வேண்டியிருக்கு.

அஞ்சாவது படிச்சிட்டு எனக்கு அவ்ளோ சந்தோஷமாயிருச்சு. நீங்களும் நல்லாயிருக்கனும். ஒங்க மகனும் நல்லாயிருக்கனும். முருகன் காப்பாத்துவான். வாழ்க வளமுடன்.

G.Ragavan said...

http://suvaithacinema.blogspot.com/2007/08/blog-post.html

அஜீவன் அண்ணா பழகுவதற்கு மிக இனிய நண்பர். குறும்படங்களின் குறுங்கதைகளை அவர் சொல்லியே கேட்டிருக்கிறேன். :) அவைகளைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://samoogam.blogspot.com/2007/09/blog-post_09.html

என்ன கொடுமைங்க இது....திருந்துங்கடா...திருந்துங்கடா...


அது சரி..கொறடா கொறடான்னு சொல்றாங்களே. எதைக் கொறைக்கச் சொல்றாங்க?

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/09/blog-post_08.html

இதுக்குதான் நான் கிரிக்கெட்டே பாக்குறதில்ல. கிரிக்கெட்னாலே ஒரு பிடித்தமின்மை. இத்தனைக்கும் குடும்பமே உக்காந்து கிரிக்கெட் பாக்கும். நானும் அம்மாவும் மட்டும் பாக்க மாட்டோம். ஆகையால கிழவர்கள் விளையாண்டாலும் கவலையில்லை. அரைக்கிழவர்கள் விளையாண்டாலும் கவலையில்லை. பொதுவா...இந்தியர்கள் கிரிக்கெட் மோகத்தைக் குறைச்சிக்கிறது நல்லது.

G.Ragavan said...

http://oratariothiruvasagam.blogspot.com/2007/08/5.html

முன்னைக்கு முன்னையும் பின்னைக்குப் பின்னையுமான ஒரு அரிவாள். அது அறுப்பது பாசத்தின் வேர். அந்த வேருக்கு நீரூற்றுவது ஆசை. அதனால் விளைவது துன்பம். துன்பத்தையும் அறுக்கலாம். ஆனால் வேர் இருக்க இருக்க...மண்ணோடு இறுக்க இறுக்க துயர் பூத்துக்கொண்டேயிருக்கும். ஆகையால்தான் பாசத்தின் வேரை அறுக்கிறது இந்த அரிவாள்...அதுவும் அறிவால். மெய்யறிவால். அதனால் மெய்யறிவு மூளைக்குப் புகாமல் சிந்தைக்குள் புகுகிறது. நல்ல பாடல். நல்ல விளக்கம்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post_10.html

என்னைக் கேட்டால் இப்படிச் சொல்வேன். திராவிடம் என்பது இனம். தமிழ் என்பது மொழி. திராவிடர் அனைவரும் தமிழ் பேச வேண்டும் என்ற தேவையில்லை. இன்னொன்று தெரியுமா? வங்காளிகள் மங்கோலோ திராவிடர்கள் என்ற வகையில் வருகிறார்கள். அந்த வகையில் ஒரியர்களும் பாதித் திராவிடர்கள்தான். ஆனால் மொழி மாறலாம். எடுத்துக்காட்டாக...இங்கே ஐரோப்பாவில் ஆப்ரிக்கர்கள் பலர் உள்ளார்கள். எல்லாரும் ஆப்ரிக்கர்கள்தான். ஆனால் நெதர்லாந்து நாட்டில் இருப்பவர்கள் டச்சும், பிரான்சில் பிரெஞ்சும், ஜெர்மெனியில் ஜெர்மனும் பேசுகிறார்களே. அவர்கள் எல்லாரும் அந்தந்த நாட்டிலேயே வெகுகாலமாக தங்கிவிட்டவர்களே. அவர்கள் பிரெஞ்சு பேசினாலும் ஆப்ரிக்கர்களே. அந்த வகையில் திராவிடம் என்பதை இனவகையில் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பேசப்படும் வகையில் மொழி பகுக்கப்படுகிறது.

ஆனால் உங்கள் கேள்விக்கு என்னிடம் விடையில்லை. ஒருவேளை இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் மொழி தொடர்பாக ஏதேனும் பெரியதாக நடந்திருக்கலாம்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/06/blog-post_17.html

மூன்று பாடல்களையும் கேட்டேன். தெலுங்கில் மிகவும் நன்றாக இருப்பது போலவும்...அடுத்து இந்தி...அடுத்து தமிழ்...இந்த வரிசையில் நன்றாக இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது.

G.Ragavan said...

http://tamilgossips.blogspot.com/2007/09/100.html

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/09/blog-post_09.html

பீமா காமா சோமான்னு இருக்குன்னு சொல்றீங்க. சரி. படம் வரட்டும் அப்புறமாக் கேட்டுக்கலாம்.

இந்த விமர்சனம் குடுக்குறது நல்லாருக்கு. தொடருங்க.

ஹாரிஸ் ஜெயராஜ்...ம்ம்ம்ம்..ஒன்னும் சொல்லத் தோணலை. ஒரு பத்துப் பதினைஞ்சு மெட்டுகள வெச்சுக்கிட்டே...அங்கயிங்க இருந்து உருவிப் பாட்டுப் போடுறாங்க. இவருக்கு முன்னாடி இருந்த பல பெரியவங்க அறுநூறு எழுநூறுன்னு இசையமைச்சிருக்காங்க. அதுல பெரும்பாலும் நல்ல பாட்டுகள். அதெப்படி!!!! இல்ல...நெறையப் படத்துக்கு இசையமைக்கிறது கஷ்டம்னு சொன்னீங்களே...அதுனால கேக்குறேன்.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2007/09/blog-post_09.html

இவ்வளவு எழுத யோசனை வந்துச்சே!!!!! அதப் படம் பிடிக்கனும்னு யோசனை வரலை?

எனக்கு என்ன தோணுதுன்னா...நீங்க சாப்டது தடியங்கா அல்வா. காசி அல்வான்னு கூடச் சொல்வாங்க. ஆனா அதுல தடியங்காயத் துருவிப் போட்டிருக்கும். தடியங்க அல்வாங்குறது..தடியங்காய பெரிய பெரிய துண்டா நறுக்கி ஜிராவுல (செந்தழல் ரவி சொன்ன மாதிரி) ஊற வெச்சி வெளிய எடுத்து அடுக்கி வெச்சிருப்பாங்க. வெள்ளையா இருக்கும். வெளிய உலர்ந்திருக்கும். பிச்சிச் சாப்புடும் போது உள்ள ஈரம் தெரியும். இத வங்காளத்துல கும்ரோ மிட்டாய்னு சொல்வாங்க. அதுவா இது?

நீங்க அத்ரி பச்சான்னு சொல்வீங்க. எங்க பாட்டி எங்களுக்கு அத்ரி பான்ஸ்கோல்னு சொல்லிக் குடுத்திருக்காங்க.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/01/blog-post_14.html

ரெட்டைக் குரல் துப்பாக்கி மாதிரி ஒரு பாட்டு. என்ன பாட்டு இது! ஆகா! ஆகா! ஆகா!

நெய்தல் நிலத் தலைவனை நெய்தல் நிலத்துல வெச்சு நெனைச்சிக்கிட்டே இசையில் நெய்த பாட்டைப் போட்டுட்டீங்களா!

G.Ragavan said...

http://sinnakuddy1.blogspot.com/2007/09/blog-post_5888.html

சத்தமே கேக்கலை. என்ன வெவரம்னு சொல்றீங்களா?

G.Ragavan said...

http://muslimpage.blogspot.com/2007/09/blog-post_10.html

மதத்தைப் பாராமல் லேடன் தவறானவர் என்று சொன்னமை நன்று. அமெரிக்கா உத்தமன் இல்லைதான். அதையும் திட்ட வேண்டியிருக்கு. இதையும் திட்ட வேண்டியிருக்கு.

G.Ragavan said...

http://sinnakuddy1.blogspot.com/2007/09/blog-post_10.html

நிகழ்ச்சியைப் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/09/blog-post_10.html

முதல்ல உள்ளது மாமரமா? எல வேற மாதிரி இருக்கும். ஆனாலும் தளிர்ல இப்பிடி இருக்குமோ!

பூவா? இது தெரியாதா? இதுதான் செம்பூ? செம்புல தண்ணி ஊத்தி ஊத்திப் பூத்த செம்பூ! :)

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/09/blog-post_10.html

கண்டோம் கண்டோம்
கண்ணுக்கும் கருத்துக்கும்
இனியது கண்டோம்
கேட்டோம் கேட்டோம்
செவிக்கும் சிந்தைக்கும்
இனியது கேட்டோம்

நன்றி பிரபா.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/01/blog-post.html

எப்பேற்பட்ட பாடல் இது. கேட்கக் கேட்க உள்ளம் உருகுதய்யா! முருகா!

முருகன் பாடல்கள் என்றாலே டி.எம்.எஸ் என்று முத்திரையைப் பதித்துவிட்டார்.

ஒரு பாடலா? இரு பாடலா? எத்தனையெத்தனை முத்துகள். கேட்டுக் கேட்டுச் சுகிக்க.

பாடலை நினைவூட்டிய நண்பர் ரவிக்கு நன்றி.

G.Ragavan said...

http://babumanohar.blogspot.com/2007/09/blog-post_11.html

இதெல்லாம் டூ மச்சாத் தெரியுது. இப்படியெல்லாம் சென்னை மாறுச்சுன்னா...நம்ம நாடு வளர்ச்சியடைந்த நாடுகள் வரிசைல வந்துருச்சுன்னு பொருள்.

அதுவுமில்லாம நம்மாளுங்க இதெல்லாம் செஞ்சு குடுத்தாலும் துப்புரவா வெச்சுக்கிற மாட்டாங்க.

G.Ragavan said...

http://sambarvadai.blogspot.com/2007/09/blog-post_11.html

கொசு பறந்துருச்சு..இனிமே எருமை சரிஞ்சிரும். என்னமா காமெடி பண்றாரு விஜய டி ராஜேந்தரு. என்ன பதிவு குடுக்கலை. அதத்தான மரியாதைன்னு மரியாதையாச் சொல்றாரு.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/09/256-7.html

பொம்பளப் பிள்ளைய இப்பிடியெல்லாம் பொலம்ப விடலாமா? இதெல்லாம் நல்லால்ல சொல்லீட்டேன்.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2007/09/335.html

என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்தக் கட்டுரையில் சொல்லப் படுவது உண்மையென்றால்...அது வருந்தத்தக்கது.

கம்யூனிஸ்ட் அரசாங்கமா இருந்தா என்ன காங்கிரஸ் அரசா இருந்தா என்ன...இல்ல வேற எந்த அரசாங்கமா இருந்தா என்ன....அரசாங்கம்னு வந்துட்டாலே...மக்களுக்கு இடைஞ்சலாத்தான் இருக்கனும்னு விதி போல.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/09/blog-post_11.html

நல்ல பாடல். வீரமணி ஐயா அவர்களின் பாடலை மலைநாடான் அவர்கள் வலைப்பூவிலும் கேட்டிருக்கிறேன்.

சப்பரப் படங்கள் மிக அழகு. கூட்டம் சிறப்பாக இருக்கிறது என்பதும் புரிகிறது.

G.Ragavan said...

http://pktpariarasu.blogspot.com/2007/09/blog-post_11.html

டாக்டர் சார்லசுக்கு பாராட்டுகள். மூடநம்பிக்கைகள் கண்டிப்பாக ஒழிய வேண்டும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/09/blog-post.html

இன்னொரு விவரமும் இருக்கு. வீட்டுல அவங்க தொல்ல தாங்காமத்தான் ரொம்பப் பேரு வெளையாடப் போறேன்...அங்க போறேன்னு போயி புகழ் வாங்கீர்ராங்க. அப்ப அதுக்குக் காரணம் யாரு? பின்னாடி இருந்து தூண்டி விட்டவங்கதான?

G.Ragavan said...

http://podhuppaattu.blogspot.com/2007/09/16.html

நல்லாச் சொல்லீருக்கீங்க.

இந்த முதுசூர் என்பதற்காக இன்னொரு விளக்கம் சொல்லலாம். உள்ளபடிக்குப் பெரும்பாலான விளக்க உரையாளர்கள் அதத்தான் சொல்றாங்க.

சூர்னா துன்பம். முதுசூர்னா....முன்பு செய்த தவறுகளால வந்திருக்கும் துன்பம். தீதும் நன்றும் பிறர் தர வாரா. அப்படி நாம முன்னாடி செஞ்ச தப்புகளால விளையிற துன்பத்தைத் துடைக்கிற முருகன்னு பொருள்.

பேராசைக்கான விளக்கம் புதுமையா நல்லாருந்தது.

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/09/gtalk-custom.html

இப்பிடித்தான் கவித எழுதனுமா! சொல்லவேயில்லையே!

G.Ragavan said...

http://tamilgossips.blogspot.com/2007/09/blog-post_12.html

இது உண்மையாவும் இருக்கலாம். சாத்தூராரப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/09/blog-post_5476.html

நல்லூர்
வேண்டியன பெற்றுத் தரும் நல்லூர்
தமிழ்க் கூட்டம் நாடிச் செல்லூர்

அந்த நல்லூரில் குடிகொண்ட கந்தப் பெருமானின் அருளை ஒவ்வொரு நாளும் வாறி வாறி வழங்கிப் பதிவுலகில் தானொரு பாரி என்று நின்ற கானா பிரபாவிற்கு நன்றி. நெல்லிக்கனி ஒன்றுதான் கொடுத்தான் அதியமான். நாளொன்றுக்கும் பதிவுகள் கொடுத்தான் இந்த அதிகமான். முருகனருள் முன்னின்று வாழ்க. நல்லதொரு தொகுப்பாக இந்தப் பதிவுகள் நின்று நிலைக்க விரும்புகிறேன்.

G.Ragavan said...

http://palipedam.blogspot.com/2007/09/blog-post_4784.html

பட்டியல் வளர்ந்து கொண்டே போவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஈழத்து வலைப்பதிவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/09/blog-post.html

1. ஆ. சேரன் பெருஞ்சோற்று உதியன் (ஆனா இதுக்கு ஆதாரம் எதுவும் இருக்குறதா எனக்குத் தெரியலை. பாரதத்துலயும் எதுவும் சொல்லலை. வேற எந்த நூல்லயும் சொல்றாப்புல தெரியலை)

3. புரோசனன். நகுலன் அம்பு விடுறவனில்லை. வாட்சண்டைல பெரியாள்னு நெனைக்கிறேன். துச்சாதனன் கதைல பெரிய ஆளு. நெடுங்கதை, சிறுகதைன்னு கலக்குற ஆளு. சால்வன் இல்லைன்னு நெனக்கிறேன். புரோசனன் பேரு கேட்டாப்புல இருக்கு. அவராத்தான் இருக்கனும்.

4. அரவாந்தான். வேற யாரு. மத்தவங்கள்ளாம் உயிரழந்தாங்க. இவரு மட்டுந்தான உயிர் துறந்தாரு. அது சரி...அரவானோட பேரு பாரதத்துல உண்மையிலேயே இருக்கா? படிச்சு ரொம்ப நாளாச்சு. அதான் கேக்குறேன். படிச்ச நெனைவே இல்லை.

5. இந்தக் கேள்வீல தப்பு இருக்குன்னு நெனைக்கிறேன். நூறு கவுரவர்கள்ல ஒரே ஒருவன் மட்டும் மிஞ்சினான்னு சொல்லீட்டு துச்சலையோட பேரக் குடுத்திருக்கீங்க. அது பொருந்தாது. ஏன்னா அது பொண்ணு. அதுவுமில்லாம நூத்தியொன்னு. விகர்ணன் பிழைக்கலை. அவனைக் கொல்லும் போது பீமனே அழுகுறான். ஒன்னையும் கொல்ல வேண்டியதாப் போச்சேப்பான்னு. யுயுத்சு எப்படிக் கௌரவர்கள் வரிசைல வந்தான்? அசுவத்தாமன் கௌரவரே கெடையாதே. ஆனா பொழைச்சவன் அவந்தான். கேள்விப்படி பாத்தா நூறுவர்ல ஒருவர் கூடப் பிழைக்கலை.

6. கீசகந்தான். வேற யாரு.

7. அதான் திருட்டுராஷ்டிரன்...சாரி..திருதிராட்டிரன் பக்கத்துலயே ஒரு அம்மா கண்ணக் கட்டிக்கிட்டு உக்காந்திருக்காங்களே. அவங்கதான். பாரதத்த எழுதுனவருன்னும் சொல்லலாம். ஆனா அவருக்குத்தான் எல்லாம் தெரியுமே. ஆகையால விடை காந்தாரி

8. அபிமன்யுதான். சிகண்டி வீரந்தான். ஆனா நூறு வில்லையும் ஒடைக்கிற அளவுக்கு வீரர் இல்லை. திட்டத்துய்மன் தவத்துல இருந்தவரு கழுத்தை அறுத்தான். அவனை எப்படிச் சொல்ல முடியும். அபிமன்யுதான் விடை.

9. வளர்ப்புத்தாயார்னு சொல்லலாமா? வளர்ப்புத் தெய்வம்னு சொல்ல வேண்டாமா? கவுந்தேயன் பட்டம் கர்ணனுக்குக் கடைசி வரைக்கும் கெடையாது. அவன் ராதேயன். என்னென்னைக்கும் ராதேயன். பெத்து ஆத்துல போட்டவளும் உண்டு. ஒரல எடுத்து வயித்துல இடிச்சவளும் உண்டு. பிள்ளைங்க போனாலும் ரத்தம் தேச்சுத்தான் சடை போடுவேன்னு சொன்னவளும் உண்டு. ஆனா...ஆத்துல வந்தத நெஞ்சுலயும் கண்ணுலயும் தூக்கி வெச்சி வளர்த்தாளே ராதை. அம்மா...நீ தெய்வம். பானுமதி துரியோதனன் மனைவி. கர்ணனுக்குச் சகோதரின்னு சொல்லலாம். இந்த அதிரதையும் ஷோனும் ஒங்க கற்பனையா?

10. பரீச்சித்து. தன்னுடைய அத்திரத்தை ஏவினான் அசுவத்தாமன். எல்லாத்தையும் அது அழிச்சது. பாண்டவர் வம்சத்தையே மூழுக்க முழுக்க. உத்தரை வயிற்றுல இருந்த பரீச்சித்தையும் பரீட்சித்தது. ஆனால் கண்ணன் அதை இங்குபேட்டரில் வைத்துப் பிழைக்க வைத்து விட்டார்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post_12.html

குமரன் இந்தச் செய்தி எனக்கு வியப்பானதுதான். மத்திய அரசின் அறிக்கையும்தான். மிகுந்த துணிச்சல் மிகுந்த அறிக்கைதான் அது.

இந்தப் புறனாநூறு எழுதப் பட்டது யாரால்? எப்பொழுது? எந்த மன்னனைப் பற்றி என்ற தகவல்களையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

பிறன்மனை கவர்வது பேராண்மை இல்லைதான். தவறுதான். எல்லாம் சரியாக இருக்கும் ஒருவன் மற்றொருவனின் மனைவியைக் கவர்ந்ததால் போர் புரியப்பட்டு மாண்டான் என்ற வகையில் சரியாகத்தான் இருக்கிறது.

ஆனால் அவன் நல்லவனாக இருக்கையில் அவதாரம் நிகழாமல் இருந்திருந்தால் அவன் நல்லவனாகவே இருந்திருப்பான் அல்லவா. இது இயல்பாக எழும் கேள்வி. இதற்காக விடை சொல்ல சில பல கதைகள். அப்படி அப்படி என்று சேர்த்து எழுதப்பட்டதுதான் வால்மீகியின் கதையோ என்ற ஐயம் எனக்கு எப்பொழுதும் உண்டு. இப்பொழுதும் உண்டு.

செய்யுளின் கவிதை நயம் மிகவும் அருமை. ரசிக்காமல் இருக்க என்னுடைய தமிழாசை விடவில்லை. எப்படிப்பட்ட செய்யுள்.

G.Ragavan said...

http://podhuppaattu.blogspot.com/2007/09/16.html

அதெல்லாம் சரி. என்னோட பின்னூட்டத்த ஏன் வெளியிடலை. என்ன கோவம்?

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post_12.html

குமரன், இந்தச் செய்யுளைத் திரும்பவும் படித்தேன். உங்கள் பதிவையும் படித்தேன். திரும்பத் திரும்பச் சிந்திக்கை வைத்த செய்யுள். எனக்குத் தோன்றிய கருத்துகளைச் சொல்லி விடுகிறேன்.

1. முதற்கண் செய்யுளில் இராவணன் என்ற பெயர் இல்லை. இராமனின் மனைவி சீதையை ஒருவன் கவர்ந்தான். அவன் அரக்கன் என்று தூற்றப் படுகிறான். மாற்றான் மனைவியைக் கவர்ந்தவனைத் தூற்றுதல் சரியே.

2. இராமனைக் கடவுள் என்றும் இந்தச் செய்யுள் சொல்லவில்லை. கடுந்தெறல் இராமன் என்பதற்கு இனிய இராமன் என்ற வகையில் பொருள் கொள்ளலாம். ஆனால் கடவுள் என்று பொருள் சொல்ல முடியாது. ஏனென்றால் "பாரி பாரி என்று பலவேந்தி ஒருவர் புகழ்வர் செந்நாப்புலவர்...பாரியொருவனும் அல்லன் மாரியும் உண்டீங்கு உலகுபுரப்பதுவே" என்று எக்கச்சக்கமாக உணர்ச்சிவசப்படும் புலவர்கள் நம்மவர்கள். கவர்ந்தனை அரக்கன் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றார் அல்லவா இந்தப் பாட்டிலும். முருகன் மாதிரி இருக்கான் மாப்பிளைன்னு சொல்லனும். அதச் சொல்றதுக்கு நாம கண்ணால கண்டு வணங்கத்தக்க செவ்வேளை ஒத்த மாப்பிள்ளைன்னு இளங்கோ சொல்றாருல்ல. அட...வெறெந்த நூலையும் எடுத்துக்கோங்க. கடவுள்னு வந்துட்டா அதீத உணர்ச்சிவசப்படல் உண்டு. ஆனா இங்க சும்மா கடுந்தெறல் இராமன்.

அதாவது இது ஒரு இயல்பான குறிப்பு என்ற அளவிலேயே உள்ளது. இராமனின் மனைவி சீதை கவரப்பட்டாள். அத்தோட நிறுத்திக்கிறாரு புலவர். "அரும் பெறல் மரபின் பெரும்பெயர்"ங்குற மாதிரி உணர்ச்சி பொங்கிச் சொல்லலை. இதுவும் சிந்திக்கத்தக்கது. இந்தச் செய்திக்குக் கண்காது மூக்குகள் பின்னாடி முளைச்சிருக்கலாம்.

3. மேல சொன்ன ரெண்டு கருத்துப்படியும்...பதிவோட தலைப்பு தவறுங்குறது என்னோட கருத்து. சீதையைக் கவர்ந்தவனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு என்பதே சரியான தலைப்பு.

G.Ragavan said...

http://pktpariarasu.blogspot.com/2007/09/blog-post_11.html

// மூட நம்பிக்கைகள் எந்த்தகைய குழுவினர் கொண்டிருதாலும் "கண்டிப்பாக ஒழிய வேண்டும்" என்னும் கூற்றில் நீங்கள் முழு உடன்பாடுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.//

எஸ்.கேயின் கருத்துதான் என்னுடையதும். மூடநம்பிக்கை எங்கிருந்தால் என்ன...ஒழிய வேண்டியதுதான்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/09/66.html

// குமரன் (Kumaran) said...
பாரதியார் கவிதைகள் படிக்கும் போது பல முறை இந்தப் பாடலைப் படித்திருக்கிறேன் இராகவன். இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். மீண்டும் இங்கெ கேட்க கொடுத்ததற்கு நன்றி.

முழுப்பாடலின் வரிகள் எங்கே? //

எழுதச் சோம்பேறித்தனமா இருந்துச்சு. அதான்........ ஹி ஹி

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/09/5.html

:)

G.Ragavan said...

http://nadaivandi.blogspot.com/2007/09/blog-post_12.html

ரசித்தேன். மிகமிக ரசித்தேன். ஊருப்பக்கம் போயிட்டு வந்த திருப்தி கதையப் படிச்சதுல இருந்துச்சு. நன்றி. இதுமாதிரி நெறைய எதிர்பார்க்குறேன்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post_12.html

// அரக்கன்,வானரர்,விண்ணில் இருந்து மண்ணில் வீசப்பட்ட அணிகலன் அதை கண்ட வானரம்- என முழுக்க முழுக்க ராமாயணத்தை அப்படியே உரைக்கும் இந்த செய்யுளை இதுபோல் செக்யூலரைஸ் செய்வது சரியல்ல என்பது என் கருத்து. //

குமரன், இதில் செக்யூலரைஸ் செய்வதற்கு எதுவுமில்லை. இராமனுடைய மனைவி சீதை. அவனைக் கவர்ந்தவன் அரக்கன். அவளது அணிகலன்களைக் குரங்குகள் அணிந்தன. அவ்வளவுதான் செய்தி. இதில் கடுந்தெறல் என்பதற்குச் சச்சிதானந்தம் என்ற பொருள்.....மன்னிக்கவும்...பொருந்தி வரவேயில்லை.

அத்தோடு இலைமறை காய்மறையாகச் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் அது சொல்வது இராவணன் என்பதற்கு எவ்வளவு பொருத்தம் சொல்லலாமோ..அவ்வளவு பொருத்தம் இல்லை என்பதற்கும் சொல்லலாம்.

முன்பே நான் சொன்னது போல, இராமன் மனைவி சீதையை ஒருவன் கடத்திச் சென்றான் என்ற செய்திக்கு ஒட்டுதல் வேலை நிறைய நடந்திருக்கலாம் என்பதே நான் சொல்ல வரும் கருத்து. பழைய நூலும் கிடைக்குமாயின் நமக்கு விவரங்கள் இன்னமும் தெரியலாம். இந்தச் செய்யுள் சொல்வதை மறுக்கவில்லை. ஆனால் இதை வைத்து வால்மீகி சொன்னதைத்தான் முன்பும் சொல்லியிருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது.

இராமாயணத்தில் மட்டுமல்ல கந்தபுராணத்திலும் இதுதான் நிலை. சூர் தடித்ததும் மா அறுத்ததும் மட்டுமே பழைய நூல்களில் காணலாம். ஆனால் கந்தபுராணத்தில் எக்கச்சக்கமாக இருக்கும். இதுதான் நான் சொல்ல வருவது. திருமுருகாற்றுப்படையில் சூர் கொன்றது வருவதால் கந்தபுராணம் சொல்வதைத்தான் திருமுருகாற்றுப்படையும் சொல்கிறது என்பதாகாது.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/09/66.html

// இலவசக்கொத்தனார் said...
ஜிரா,

நல்ல அருமையான பாடல். நான் இதுவரை கேட்டதில்லை. ராகமாலிகையாய் அமைந்துள்ளது. எனக்குத் தெரிந்த வரை மூன்று ராகங்கள் - சுருட்டி, அடாணா, ஷண்முகப்ரியா (இது இருக்க வேண்டாமா இந்த பாட்டுக்கு). கேஆர்எஸ் அண்ணா, திரசா ஐயா போன்றவர்கள் வந்து சரிதானா எனச் சொல்லலாம். //

ஓ இது ராகமாலிகையா? அது கூடத் தெரியலை. சங்கீதக்காரங்க நீங்க எடுத்துச் சொன்னா எங்களுக்கும் தெரியுது. :)

// பாடலுக்கு நன்றி ஜிரா. //

இதெதுக்கு? :)

// வவ்வால் said...
ராகவன்,

வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் ...அப்படினு ஒரு பாட்டு தெய்வவாக்குனு(இளைய ராஜாவே பாடி இருப்பார்) ஒரு படத்துல வரும் அதுவும் முருகன் பாட்டு தானே :-)) //

ஆமா ஆமா :))))) ஒத்துக்கிறேன். அதுவும் முருகன் பாட்டுதான். எனக்குப் பிடிச்ச பாட்டுதான்.

// ILA(a)இளா said...
அடடா, நன்றிங்க ஜி.ரா. கொத்ஸ் உங்க விளக்கமும் அருமை. வாழ்த்துக்கள் உங்க சேவை. //

சேவைன்னு சொல்றீங்களே...அது எலுமிச்சைச் சேவையா? தேங்காய்ச் சேவையா? தெளிவாச் சொல்லீட்டா நல்லது. முருகன் பாட்டு கேக்க வந்தவங்களுக்குப் பிரசாதமாக் குடுத்துறலாம்.

// கானா பிரபா said...
arumaiyaana paaddu, thanks to Ragavan //

நன்றி டாலியாவுக்குத்தான் சொல்லனும். அவங்கதான் பாட்டு அனுப்பிச்சாங்க. :)

//பராசரன் said...
பாரதியின் அருமையான பாடல்களில் ஒன்றை தந்ததற்கு நன்றி

குமரன் உங்களுக்காக முழுப்பாடலும் இதோ //

ஆகா பராசரன், நன்றி. நன்றி. சோம்பேறித்தனத்துல நான் கொடுக்காம விட்டத எடுத்துக் குடுத்துருக்கீங்க. நன்றி நன்றி. உங்களுக்கு வரி கட்டச் சொல்றாரு ரவி. எவ்வளவு கெட்டனும்?

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/09/66.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
பாட்டுக்கு நன்றி! சொல்ல வல்லாயோ கிளியேன்ன்னுட்டு வரிகளைச் சொல்லாமப் போனா எப்படி? :-))
வரி கொடுத்த பராசரானுக்கு நீங்க வரி கட்டணும் ஆமா! :-) //

ஜனவரியா? பிப்ரவரியா? அதையும் சொல்லீருங்க. ஜன வரி போடுற ஒங்கள என்ன செய்ய?


////கேஆர்எஸ் அண்ணா//
-கொத்ஸ்...இது என்ன அநியாயம். அண்ணா பொறந்த நாள் அதுவுமா என்னைய அண்ணான்னு கூப்பிடுக்கிட்டு...
தம்பி...
தம்பிக்குத் தம்பி=ததம்பி ன்னு வேணும்னாச் சொல்லுங்க! :-))//

இதென்ன கொடுமை. கொத்சுக்குச் சின்ன வயசு. ஒங்கள அண்ணன்னு கூப்புடுறாரு. ரொம்பப் பேசுனீங்கன்னா பெரியப்பான்னு கூப்புடச் சொல்லீருவேன்.

// அதானே ஷண்முகன் பாட்டுன்னா ஷண்முகப்ரியா இல்லாமலா? //

அப்ப எல்லா சண்முகன் பாட்டுலயும்ம் சண்முகப்பிரியா இருக்குமா? இல்ல எல்லாப் பாட்டும் சண்முகனுக்குப் பிரியந்தானா?

// வெற்றி said...
இராகவன்,
முருகப் பெருமான் மீதான பாரதியார் பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

அருமையான பாடல். //

ஆமாம் வெற்றி. ரொம்ப அருமையான பாடல். ரொம்பவுமே வித்தியாசமான கூட்டணி. இந்த மாதிரி மாணிக்கங்கள் நெறைய இருக்கு. நமக்குத்தான் தெரியலை.

கே.வி.மகாதேவன் இசையில கே.பி.சுந்தராம்பாள் நெறைய முருகன் பாட்டுகள் பாடியிருக்காங்க. ஆனா மெல்லிசை மன்னர் இசையிலையும் பாடியிருக்காங்க. ஞாயிறும் திங்களும் படத்துக்காக. ஆனா படம் வரவேயில்லை. :( பாட்டுகள் வெளிவந்திருக்கு. யாருக்காவது ஞாயிறும் திங்களும் பாட்டுகள் கெடைச்சா குடுங்க.

// தி. ரா. ச.(T.R.C.) said...
@கொத்ஸ் நீங்கள் சொல்வது மிகவும் சரி. இது ஒரு ராகமாலிகாதான்.சுருட்டி, அடாணா, ஷண்முகப்பிரியா.திருமதி. எம்.எல்.வஸந்தகுமாரி மிகவும் அருமையாகப் பாடுவார்.மீண்டும் கேட்கும் வாய்ப்புக்கு நன்றி ஜிரா //

தி.ரா.ச எனக்கு ஒரு ஐயம். சுருட்டின்னு சொல்றீங்களே..அதுவும் செஞ்சுருட்டியும் ஒன்னா? வெவ்வேறயா? ஒருவேளைச் சுருட்டியையே நல்லாச் சுருட்டுனா அது செஞ்சுருட்டியோ?

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/09/19.html

எல்லாமே நல்ல பாட்டுக.

முத்துக்குளிக்க வாரீகளா! ஆகா ஆகா ஆகா! அப்படியே தூத்துக்குடிக்குப் போனா மாதிரி இருக்கே! ஏலே மக்கா என்னல செய்தீக. பிரபா அண்ணாச்சிக்கி ஒரு எளநி வெட்டுங்கடேய் :)

எல்லாஞ் சரிதான். ரொம்ப நாளா ஒரு பாட்டு கேக்குறேனே...அதப் போடக் கூடாதா? சந்திப்பு படத்துல இருந்து "ராத்திரி நிலாவில் ரகசியக் கனாவில்" பாட்டுதான் அது.

G.Ragavan said...

http://naayakan.blogspot.com/2007/09/blog-post_14.html

பைத்தியக்காரன், மகாராஷ்டிராவில் இருக்கும் அஜந்தா எல்லோரா குகைகளுக்குச் சென்றிருக்கிறேன். என்ன ஒரு பிரமாண்டம். என்னவொரு அழகுணர்ச்சி. என்னவொரு சிற்ப ஓவியக் கலை. எப்பேற்பட்ட இயற்கைச் சூழல். கலைகளும் செழித்த பௌத்தம் தாழ்ந்ததற்கு மூன்று காரணங்களாக உலகளாவிய வரலாற்றாளர்கள் சொல்கின்றார்கள்.

1. மக்களைச் சார்ந்து தொடங்கிய பௌத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மன்னனைச் சார்ந்து போனது. ஆக மன்னன் மாறினால் மதமும் போய்விடும். தேவையில்லாத அரசியல் தலையீடுகள்.

2. ஆசையை ஒழிக்கச் சொன்ன பௌத்தமே செல்வத்துக்குள் விழுந்து விட்டதும்...பௌத்தக்கருத்துகள் நீர்த்துப் போனதும். இதற்குக் காரணம்...கதைகளையும் கடவுளையுமே எதிர்த்து வந்த பௌத்தம் புத்தரையே கடவுளாக்கியதும் கதைகள் பல புனைந்ததும்.

3. இந்த மேற்கூறிய இரண்டு காரணங்களையும் சைவமும் வைணமும் முறையாகப் பயன்படுத்திக் கொண்டமை

// சீனாவிலும் , ஜப்பானிலும் எப்படி நிலைப்பெற்றது, அங்குள்ள மன்னர்கள் பௌத்த மதத்திற்கு மாறிய பிறகும் போரில் எல்லாம் வழக்கம் போல ஈடுபட்டார்கள் , மக்களும் புலால் உண்ணுதல் போன்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை(உயிர்க்கொலை ததவிர்க்க சொன்னது பௌத்தம்)

அப்படி இருந்தும் இன்று வரை அங்கு எல்லாம் பௌத்தம் நிலைத்துள்ளது. //

வவ்வால், எப்பொழுதும் வெளிநாட்டுச் சரக்கிற்கிருக்கும் மதிப்பே தனி. இதோ ஒரு நல்ல எடுத்துக்காட்டு சொல்கிறேன். இங்கே மேற்கத்திய நாடுகளில் கிருத்துவத்திற்கு மதிப்பு மிகவும் குறைந்து கொண்டிருக்கிறது. ஏசுநாதர் என்று ஒருவர் இருந்தார் என்பதையே பலர் நம்பத் தயாராக இல்லை. ஆனால் ஆசிய நாடுகளில் கிருத்துவம் செழித்து வளர்கிறது அல்லவா. அந்த மாதிரிதான் நீங்கள் மேலே குறிப்பிட்டிருப்பதும்.

இன்னொன்று சொல்கிறேன். மலேசியாவில் பினாங்குத் தீவில் ஒரு புத்த மடாலயத்திற்குப் போயிருந்தேன். படுத்தநிலையில் புத்தர். பெரிய புத்தர். பலப்பல ஓவியங்கள். அதில் புத்தமதக் கதைகளைச் சொல்கையிலும் பிராமணர் ஒருவர் வருகிறார். ஒரு வயதான பிராமணருக்கு தனது இளைய வயது மகளைக் கொடுத்த ஒரு விவசாயி அருள் பெறுவதாகக் கதை வேறு. முழுக்கதையும் நினைவில்லை. ஆனால் அதிர்ச்சியடைய வைத்த கதை அது.

// ஒரே காரணம் ஆளுவோரின், அதாவது மன்னர்களின் ஆதரவு தடையின்றி கிடைத்தது தான்.

குறிப்பாக தென்னிந்தியாவில் களப்பிறர்கள் எனப்படும் காளமுக சைவர்கள் மாற்று மதத்தினரை வேட்டை ஆடிக்கொன்றனர். அது கி.பி. 2 முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. //

களப்பிரர்கள் ஆட்சிகுறித்த தகவல்கள் நான் படித்ததில்லை. ஆகையால் சரியாகத் தெரியவில்லை.

// மேலும் அதன் பின்னரும் பல இந்து மத துறவிகள் தோன்றி மதம் மாறிய மன்னர்களை மீண்டும் இந்து மதம் திரும்ப வைத்தனர்.

உதாரணம் கூன்பாண்டியனை மனம் மாற வைத்த திரு ஞானசம்பந்தர், அனல் ,புனல் வாதங்கள் மூலம் சமணர்களை கழுவிலேற்றினார்.

திருநாவுக்கரசர் ,மகேந்திரவர்ம பல்லவனை மீண்டும் இந்து மதம் திரும்ப வைத்தார். //

பாதித்தகவல்கள்தான் சொல்லியிருக்கின்றீர்கள் வவ்வால். இதே மகேந்திரவர்மந்தான் அப்பரையில் கற்றூணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சியது. சுண்ணாம்புக் காளவாயில் இட்டதும். அதற்குக் காரணம்? மதம் மாறியது. அங்கு சமணமும் தன்னுடைய கோரமுகத்தைக் காட்டியது. மதங்கள் அரசியலுக்கு வந்தால் இதுதான் நடக்கும்.

அதுவுமில்லாமல் நாவுக்கரசருக்கும் தீ வைத்தது. அத்தோடு மதுரைச் சமணர்கள் தமிழ்ப் புலவர்களை மதப்பாட்டுகள் எழுதிவிடுவார்களோ என்று ஆனைமலையில் கொன்றது..நிறைய இருக்கிறது. பௌத்தமும் சமணமும் செய்யச் சொல்லும் வேலைகளா இவை? இல்லை. காரணம்..அவை குறிஞ்சியாக முல்லையாக தொடங்கிப் பாலையாகத் திரிந்தமைதான். எல்லா மதத்திலும் இதைப் பார்க்கலாம்.

ஏசுநாதரைச் சிலுவையில் அரைந்த ரோமர்கள் ரோமன் கத்தோலிக்கன் என்று தொடங்கவில்லையா? ஜோர்டானும் சிறியாவும் கிருத்துவத்தில் தங்களது உண்மையான பங்கு இழந்து ரோமிடமே கொடுத்துவிட்டன அல்லவா. அந்த மாதிரிதான். மதம் என்பது அபின். அதை வைத்து ஆளலாம். அரசியல் செய்யலாம். அதைப் பயன்படுத்துகிறர்கள் குறைவு. ஆனால் அவர்கள் பெறும் பலன்கள் நிறைய. அதனால்தான் "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வள்ளலார் சொல்லியிருக்கிறார்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/09/blog-post_14.html

நல்ல தகவல். அறியக் கொடுத்தமைக்கு நன்றி ரவி.

// இலவசக்கொத்தனார் said...
ஏன் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் பெயர் இன்னும் அப்படியே இருக்கிறது? //

ஒருவேளை அது கட்டப்படும் பொழுதே அந்தப் பெயரில் கட்டப்பட்டதனால் இருக்கலாம்.

// சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டதா? //

ஆம் என்றே நினைக்கிறேன். தியாகி சங்கரலிங்கனார் என்று எங்கேயே படித்திருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் சொல்லலாம். நினைவுச் சின்னம் விருதுநகரிலேயே கூட இருக்கலாம்.

பொட்டி ஸ்ரீ ராமுலு என்றால் ஆந்திராவில் எல்லாருக்கும் தெரியும். சங்கரலிங்கனார் என்றால் தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்!!!! தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post_12.html

// எல்லோரும் அறிந்த இராவணன் என்ற பெயர் இந்த செய்யுளில் சொல்லப்படவில்லை என்பதை இடுகையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். இராமன், சீதை, குரங்குகள் என்று எல்லாவற்றையும் சொன்ன புலவர் இராவணன் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்று மட்டுமே சொல்லியிருக்கும் காரணத்தைச் சிந்திக்க வேண்டினேன். என் எண்ணத்திற்கு அது அந்த கொடுஞ்செயலைச் செய்தவன் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்று சொன்னார் என்று தோன்றியது. உங்களுக்கு 'இராவணன் என்று பாடலில் சொல்லவில்லை. அரக்கன் என்று தான் சொல்லியிருக்கிறார். அதனால் இராவணனை அரக்கன் என்று சொன்னது புறநானூறு என்ற தலைப்பு தவறு. சீதையைக் கவர்ந்தவன் அரக்கன் என்று தான் சொன்னது புறநானூறு என்று சொல்வதே சரி' என்று தோன்றுகிறது. இராவணனை குறிப்பால் உணர்த்தியது இந்தச் செய்யுள் என்று நான் எண்ணுகிறேன். குறிப்பால் கூட இராவணன் பெயர் சொல்லப்படவில்லை என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். :-) //

குமரன், நான் இந்த ஒரு பாடலை மட்டும் வைத்துக் கொண்டு பேசுகிறேன். இந்தச் செய்யுளில் இராவணன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பது நீங்களும் சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால் தலைப்பில் செருகியிருக்கின்றீர்கள். அதற்குக் காரணம்...இராமன், அவன் மனைவி சீதை. அவளைக் கடத்தியவன் அரக்கன், சிந்திய நகைகளைக் குரங்குகள் அள்ளின. இந்தத் தகவல்கள் வால்மீகியின் நூலிலும் பின்னரெழுந்த நூல்களிலும் வருவதால் அதுதான் இது. இதுதான் அது என்ற முடிவுக்கு நீங்கள் வந்து விட்டீர்கள்.

அப்படி வரமுடிவதற்கு ஐம்பது சதவீதம் வாய்ப்புதான் இருக்கிறது என்பதைச் சொல்வதற்காகவே கந்தபுராணத்தையும் வம்பிற்கிழுத்தேன். சூர்தடித்ததும் மா அறுத்ததும் வள்ளியைப் புணர்ந்ததும் பழந்தமிழ் நூல்களிலும் வரும். கந்தபுராணத்திலும் வரும். ஆகையால் அதுதான் இது. இதுதான் அது என்று முடிவிற்கு வரமுடியாது. அது இங்கும் பொருந்தும். ஆகையால்தான் சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிக்குச் சாதமாகப் பயன்படுத்துகிறேன்.

இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். ஒரு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு ரகுமனும் ராஜியும் தமில்மனத்தில் பேசிக்கொள்வார்கள். பழைய தமிழ் நூலான கந்தரலங்காரத்தில் "வெய்ய வாரணம் போல் கைதான் இருபதும் தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன்" என்று வந்திருப்பதிலிருந்து வள்ளியோ தெய்வயானையோ இராமனுக்கும் சீதைக்கும் பிறந்த மகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒருவர் சொல்லலாம். அதற்கு ராஜி "ரகுமன், வாரணம் போல் என்று இங்கு வந்திருப்பதைக் கவனிக்கவும். வாரணம் என்றால் ஆனை. ஆனையைப் போலப் பலம் பொருந்திய கைகள் இருபது என்று சொல்லியிருக்கிறது. ஆகையால் அது கஜமுகனாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அவன் சூரனின் தம்பிதானே. எய்தான் முருகன் என்பது படியெடுக்கப்படும் பொழுது மருகன் என்று மாறியிருக்கலாம்" என்று வாதிடலாம். :))))))))))))))))) அதைத்தான் இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழில் என்பதால் செய்வது இனிமையாக இருக்கிறது.

// இராமனைக் கடவுள் என்று இந்தச் செய்யுள் சொல்லவில்லை. சொன்னதாகவும் நான் சொல்லவில்லை. கடுந்தெறல் இராமன் என்பதற்கு இனிய இராமன் என்றும் பொருள் கொள்ளலாம்; இனிய தேனை உடைய இராமன் என்று பொருள் கொள்ளலாம்; இனிய தேனை வழங்கும் இராமன் என்றும் பொருள் கொள்ளலாம். கடுந்தெறல் என்பதற்கு தெளிந்த கள் என்றும் பொருள் உண்டு. அதனையும் சொல்லலாம் தான். ஆனால் கடவுள் என்று நேரடியாகவோ குறிப்பாகவோ சொல்லப்படவில்லை இந்தச் செய்யுளில். //

உண்மைதான். இராமன் கடவுள் என்று செய்யுள் சொல்லவில்லை. இராவணன் அரக்கன் என்றும் செய்யுள் சொல்லவில்லை. இதுதான் நான் சொல்ல வருவது.

// உயர்வு நவிற்சியைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். இந்தச் செய்யுளில் இராமகதையைச் சொல்ல வரவில்லை புலவர். 'எல்லோருக்கும் தெரிந்த அந்தக் கதையில்' வரும் ஒரு நிகழ்ச்சியை உவமையாகக் கூறுகிறார். அவ்வளவு தான். அதனால் இராமனையோ சீதையையோ உயர்வு நவிற்சியுடன் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு. சொல்லவும் இல்லை. //

:) பொதுவாவே நம்மாளுங்க அளவுக்கு அதிகமா உணர்ச்சிவசப்படுவாங்க. பெரும்பாலான நூல்கள்ள பாருங்க. அதுனாலதான் சொன்னேன்.

G.Ragavan said...

http://naayakan.blogspot.com/2007/09/blog-post_14.html

// வவ்வால் said...
ராகவன் ,

உங்கள் கருத்துகள் எதை சொல்லவருகிறது, சமண, புத்த மதத்தவர்கள் வன்முறையில் இறங்கியதால் அழிந்தது என சொல்ல வருகிறதா. //

என்ன வவ்வால் இது! நான் மூன்று காரணங்களைச் சொல்லியிருக்கின்றேன். நீங்கள் வன்முறையில் இறங்கியதாலை மட்டும் பிடித்துக் கொண்டீர்களே. அதுவும் ஒரு காரணம். அதுதான் காரணம் என்று சொல்லவரவில்லை.

// நான் பாதி சொல்லக்காரணம் , அது எல்லாம் , தற்போது பேசும் பொருளுக்கு தேவைப்படவில்லை. இந்தியாவில் மன்னர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே மதம் வளர முடியும் என்பதை சுட்டிக்காட்டுவது தான் நோக்கம். //

இதில் பாதிதான் உண்மை. மன்னனின் ஆதரவு தேவைதான். ஆனால் மக்களிடத்திலேயே போகாமல் மன்னனின் ஆதரவு மட்டும் இருந்து ஒன்றும் செய்ய முடியாது. புத்தரும் சீடர்களும் அரண்மனையை விட்டு மக்களிடம் போனார்கள். ஆனால் பின்னால் வந்தவர்கள் மக்களை விட்டுவிட்டு அரண்மனைகளுக்குள் போனார்கள். மன்னன் ஆதரவு மட்டும் போதாது என்பதே என்றும் உள்ள உண்மை. `இந்த 90% silent massஐ நம்பவே முடியாதுங்க. இதுவும் ஒரு காரணம்தான். இதுதான் காரணம்னு சொல்லலை.

// அக்கால மன்னர்கள் பெரும் கோயில்களைக்கட்டியும், பெரும் மானியங்களை அளித்தும் வளர்க்கவில்லை எனில் இந்து மதம் கூட அழிந்து இருக்கும். //

நிச்சயமாக. மன்னன் ஆதரவு என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அது மட்டும் போதாது என்பதே கருத்து.

////வவ்வால், எப்பொழுதும் வெளிநாட்டுச் சரக்கிற்கிருக்கும் மதிப்பே தனி.//

இந்தியா என்ற நாடே அக்காலத்தில் இல்லை, மகத நாடு என்பது தனி நாடு ,அதன் மன்னன் அசோகர் தரை வழியாயவும் , கடல் வழியாகவும் பல நாடுகளுக்கும் தூது அனுப்பி புத்த மதம் வளர்த்தார்.இலங்கைக்கு அவரது மகள் சங்கமித்திரை, மகேந்திரன் ஆகியோரையே அனுப்பினார்.அப்படி எனில் நமக்கும் அது வெளிநாட்டு சரக்கு தானே , மதிப்பு ஏன் ஏறவில்லை. //

நமக்கு மதிப்பில்லை என்பது உண்மையன்று. தமிழ் இலக்கியங்களில் ஒன்று புத்த மத இலக்கியம். மூன்று சமண இலக்கியம். ஒன்றே ஒன்றுதான் மதச்சார்பற்ற தமிழிலக்கியம். அது சிலப்பதிகாரம். ஆகையால்தான் அது மட்டும் நின்னு நிலைக்குது. நாமளும் புத்த சமணங்களைக் கொண்டாடினோம். ஆனா அதுக்கப்புறம் நடந்த சைவ வைணவ மறுமலர்ச்சிகள் மத்த நாடுகள்ள நடக்கலை. ஆனா பின்னாளில் இஸ்லாமிய கிருத்துவ மறுமலர்ச்சிகள் பல தெற்காசிய நாடுகளில் நடந்தன. பிலிபைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியான்னு நெறையச் சொல்லலாம். சீனா இரும்புத்திரை நாடு. உள்ள என்ன நடக்குதுன்னு நமக்குச் சரியாத் தெரியாது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில. அதுதான் முன்னாடியும் நடந்தது. இப்பவும் நடக்குது. நாளைக்கும் நடக்கும்.

// திருநாவுக்கரசர் ஆரம்பத்தில் சமணத்தில் இருந்து மீண்டும் சைவம் திரும்பியவர் , அவர் மீது பல்லவன் கோபம் கொண்டது எல்லாம் நீங்கள் சொன்னது தான், ஆனால் அவர் மகேந்திரவர்மனை மனம் மாற்றியதும் , கடலூர் அருகே உள்ள திருப்பாதிரி புலியூரில(திருநாவுக்கரசரின் சொந்த ஊர்) இருந்த சமண மடத்தை இடித்து அக்கற்களைக்கொண்டே அவருக்கு குணப்பரச்வரர் கோயில் கட்டித்தந்தான் மகேந்திரவர்மன்.

அதே போல காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் புத்த விகாரம் ஆக இருந்தது ,அதை இடித்து மீண்டும் பெருமாள் கோயிலாக்கினான்.

இதற்கெல்லாம் ஆதாரங்களும் உள்ளது. மன்னன் மாறினால் அவ்வளவு தான் அடியோடு எல்லாவற்றையும் மாற்றி விடுவார்கள், அப்புறம் எப்படி புத்தம் இருக்கும். //

அதுவும் ஒரு காரணம். அது மட்டுமல்ல காரணம் என்பதே நான் சொல்ல வருவது. மகேந்திரவர்மன் சமணராக இருக்கையில் அப்பர் சைவராகத்தானே இருந்தார்? அப்பொழுது எப்படிச் சைவம் பிழைத்தது? சமணப்பள்ளியைப் பின்னால் இடித்தான். அதற்கு முன்னால் சைவப்பள்ளியைத்தானே இடித்தான். இடிக்கப்பட்டது எழுந்தது அல்லவா. எப்படி? இறைக்கதைகளை விடுங்கள். சிந்தித்துப் பார்த்தால் அது மக்களிடம் சென்றிருந்ததும் புரியும்.

சைவம் சரியானது சமணம் தவறானது என்று சொல்லவில்லை. மன்னர்களின் ஆதரவு இல்லாமை மட்டுமே ஒரு மதத்தை அழித்து விடும் என்று நான் நம்பவில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதே என் கருத்து.

G.Ragavan said...

http://naayakan.blogspot.com/2007/09/blog-post_16.html

நல்ல கவிதை. பெரியாரின் சமூகநீதிப் பங்கை நாம் மறக்கவோ மறுக்கவோ முடியாது என்பதே உண்மை. இன்றைய நிலையில் அவரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் அவரை இறையெதிர்ப்புக்குள்ளேயே அடக்கி விடுகிறார்களோ என்ற அச்சம் எனக்கு உண்டு.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/09/1.html

// இரவு
பெத்த சேஷ வாகனம். (சுந்தரத் தெலுங்கு-ங்க. தீந்தமிழில் பெரிய நாக வாகனம்) //

என்னங்க சொல்றீங்க? தீந்தமிழில் பேரரவூர்தி அல்லது பெரும்பாம்பூர்தின்னுதானே இருக்கனும். :) ஓ நீங்க தமிழைச் சொல்றீங்களா? ;)

// உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய், //

இந்த வரிகள்ள ஒரு பொருள் இருக்கு. உளம் தனில் உளன் என்று சொல்கிறோமே. உள்ளுவார் உளத்தில் மட்டும் உளனாயின் அவன் எப்படி எங்கும் உளனாவான். வேண்டுவார் வேண்டாதார் இலந்தானே அவன். ஆகையால் உள்ளுவார் உள்ளார் அனைவர் உளத்திலும் உளன். ஆனால்....உள்ளுவாரே உளத்தில் உளன் எனக் காணபர். ஆகையால்தான் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய். எல்லா எடத்துலயும் இருந்தாலும் மின்விசிறில இருந்துதான் காத்து வருதுன்னு நெனைக்கிறோம்ல. அந்த மாதிரி.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/09/blog-post_11.html

உண்மைதாங்க. எல்லாரும் எங்கயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும். நீடு வாழட்டும். பீடு வாழட்டும்.

G.Ragavan said...

http://manaosai.blogspot.com/2007/03/blog-post_28.html

கணவாயைத் துண்டுகளாக நறுக்கி மாவில் முக்கிப் பொரித்துக் கிடைக்கிறது என உண்டேன். ரப்பரைப் போல இழுவையாக இருந்தது. நீங்கள் உண்ட கணவாயும் அப்படித்தான் இருந்ததா? இல்லை மெத்தென்று இருந்ததா?

உங்கள் தந்தையாரையும் அவர் தொடர்பான அழகான நிகழ்வையும் அருமையாக நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள்.

G.Ragavan said...

http://holyape.blogspot.com/2006/07/12-2.html

பாகிஸ்தானியர்களும் பங்களாதேசிகளும் ஒரே மதம். ஆனால் வெவ்வேறு இனம். பங்களாதேசிகள் பேசும் மொழி வங்காளம். பாகிஸ்தானில் உருது என்று நினைக்கிறேன். இருவருடைய பண்பாடுகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் இலக்கியச் செறிவும் வெவ்வேறு. இது அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் பாகிஸ்தான் ராணுவம் செய்த தவறுகளைப் பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். ஒன்றிணைந்த பாகிஸ்தானில் பங்களாதேசிகள் இராணுவத்தில் இல்லாமல் இருந்தார்களா? இருந்தும் அமுக்கி வைக்கப்பட்டார்களா?

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/09/chicago.html

ஷிகாகோ படம் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க சொல்றதப் பாத்தா படத்தப் பாக்கலாம் போல இருக்குது...சரி பாத்துட்டாப் போச்சு.

அப்புறம் ஒரு வேண்டுகோள். Come Septemberனு ஒரு படம். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். அந்தப் படத்தப் பத்தியும் அதுல நடிச்ச கதாநாயகி பத்தியும் எழுதுங்களேன். :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/09/2.html

எல்லாமே அருமையான பாடல்கள்.

காதல் மன்னன் படத்தில் வரும் "மெட்டுக் கட்டித் தவிக்குது ஒரு பாட்டு" பாட்டிற்கு இசையும் மெல்லிசை மன்னர்தான். ஆனால் படத்தில் பரத்வாஜ் என்று பெயரைப் போட்டு அசிங்கப்படுத்திவிட்டார்கள். இதை அந்தப் பாடலை எழுதிய வைரமுத்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அவர் பாடிய விடை கொடு எங்கள் நாடே பாடலைப் போட்டிருக்கலாம். ஆனால் இசையமைத்துப் பாடியதால் இது மிகப் பொருத்தும்.

ஜிக்கி "செந்தாமரையே" பாட்டிற்குப் பிறகும் ஒரு பாடலைப் பாடினார். அதுவும் சங்கர் கணேஷ் இசையில். உடன் வாணி ஜெயராமும் பாலுவும் பாடியிருக்கிறார்கள். அதுவும் பிரபலமான பாடல்தான். கண்ணில் தெரியும் கதைகளில் வரும் "நான் ஒன்ன நெனச்சேன்" பாட்டுதான்.

ஜமுனாராணி அவர்களைப் பெங்களூர் இந்திராநகரில் வீட்டிற்கு அருவில் இருக்கும் வங்கியொன்றில் சந்தித்தேன். அவரை அடையாளம் கண்டு பேசியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/09/1.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//// இரவு
என்னங்க சொல்றீங்க? தீந்தமிழில் பேரரவூர்தி அல்லது பெரும்பாம்பூர்தின்னுதானே இருக்கனும். :) ஓ நீங்க தமிழைச் சொல்றீங்களா? ;)//

தமிழ், தீந்தமிழ்-னு தனியாச் சொல்லணுமா ஜிரா?
இனிப்பு வெல்லம், சுவையான வெல்லம்-னு யாராச்சும் சொல்லுவாங்களா? வெல்லம்-னாலே இனிப்பு தானே! //

ஐயா தீந்தமிழ்னு சொன்னதே நீங்கதான். ஏன் இப்ப மாத்திச் சொல்றீங்க.

// என்னாது
பெரும்பாம்பு ஊர்தியா?
பேர் அரவு ஊர்தியா?
அழகான சொற்கள் தான்! ஆனா மக்களுக்கு இன்னும் எளிதில் சொல்லலாமே! புரிய சற்றுக் கடினமான தத்துவங்களை புரியும் நடையில் சொன்னாலாவது, ஒவ்வாமை நீங்கி, ஓதுவார்கள் அல்லவா? :-))) //

பேருந்துன்னு சொல்லப் பழகுனப்போ இதத்தான் சொன்னாங்க. இப்ப ஊரூருக்குப் பேருந்து நிலையங்க இருக்கு. இங்க பிரச்சனை சொல்லின் கடினத்துல இல்லன்னு நெனைக்கிறேன். சொல்ல விரும்புற எண்ணத்தின் கடினமோ என்னவோ.

// பெரிய, நாகம் ரெண்டுமே தமிழ் தான்!
வாகனம் - வடமொழி மாதிரி இருப்பினும், இராம.கி ஐயாவைக் கேட்க வேண்டும்! //

தெரிஞ்சிக்கலாம். இராம.கி ஐயா எடுத்துச் சொல்லட்டும். நமக்கும் கூட நாலு தகவல் கெடைக்குமே.

// இன்னொன்று:
ஊர்தி என்றால் நகர வேண்டும்; சில வாகனங்கள் நகராத வாகனங்கள்.
முத்துப் பந்தல் வாகனம், கற்பகத் தரு வாகனம், இன்னும் சில!
அவற்றுக்கு ஊர்தி என்னும் சொல் சரியாக வருமா? //

வாகனங்குறது வடமொழிச் சொல்லுன்னே வெச்சுக்குவோம். அதுக்கு என்ன பொருள்? சும்மா உக்காந்துக்கிறதுக்கா? கருட வாகனத்துக்கும் முத்துப்பந்தல் வாகனத்துக்கும் வேறுபாடு இருக்கு. கருட வாகனம்னா கருடன் மேல உக்காந்துக்கிறது. முத்துப்பந்தல் வாகனம்னா முத்துப்பந்தல் மேல உக்காந்த்துக்கிறதா? :))))))))))) வாகனம்னு சொல்றதும் ஊர்வதைக் குறிக்கிறதுதான்.

// தோளுக்கு இனியான் என்று சொல்லுவார்கள்! அது போல ஒற்றைச் சொற்றொடரை உருவாக்க வேண்டியது தான்!
அது வரை வாகனமே எளிது! //

வாகனத்துக்கு இணை ஊர்திதான். ஒற்றைச் சொல்தான். மயிலேறின்னு எங்க ஊர்ப்பக்கம் பேரு வெப்பாங்க. நல்ல வேளை அவங்க கிட்ட இந்த ஒற்றைச் சொற்றொடரை உருவாக்கி ஓத வேண்டியிருப்பது எளிமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நீங்க சொல்லலை. :)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/09/blog-post_18.html

நாங்கூட எல்லாரும் ஒன்னாச் சிரிச்சி சந்தோசமா இருக்காங்களே. நம்மூர்ல அப்படியான்னு நெனச்சேன். அப்புறம் பாத்தா சிரிச்சி மகிழ்ந்த எடம் அப்படியிருக்கு. நம்மூர்ல கல்யாண வீட்டுலயும் அரசியல்வாதிங்க அடுத்தவனத் திட்டுவாங்க. அங்க இழவு வீட்டுலயும் சிரிக்கிறாங்க. அரசியல்வாதிங்களே ஒரு தனி வகைதான்.

G.Ragavan said...

http://blogintamil.blogspot.com/2007/09/1_19.html

காலைல நெட்ல உக்கார முடியாம இருக்கு. அதோட பலன்...ஒங்க பதிவு உட்பட பல பதிவுகள் கண்ணுல படாமப் போயிருது. இன்னைக்குப் பிடிச்சாச்சு.

பக்திங்குற சொல்லுக்கும் அன்புங்குற சொல்லுக்கும் வேறுபாடு கிடையாது. ஆனா பக்தீங்குறதப் பயம்னு புரிஞ்சிக்கிறப்பதான் பிரச்சனையே வர்ரது. அத மக்கள் மனசிலிருந்து எடுத்துட்டாலே போதும்.

ரவியைப் பத்தி என்ன சொல்றது. அவரோட பதிவுல சண்டை போடுறதே நானாத்தான் இருக்கும். :))) அவ்வளவு அழகாச் சொல்வாரு.

வி.எஸ்.கே அவர்களைப் பத்திச் சொல்லனுமா? திருப்புகழ்த் தேனைத் தெளிய எடுத்துத் தரும் தேனீ.

குமரன் எதைத் தொடலைன்னு எனக்குத் தெரியலை. எத்தனை நூல்கள்.. எத்தனை பதிவுகள்.

ஞானவெட்டியான் ஐயாவின் பதிவுகளும் விரும்பிப் படிக்கின்றவையே. புதுப்புதுத் தகவல்கள் கிடைக்குமே.

வெட்டிப்பயலை மற்ற ஆன்மீகப் பதிவர்கள் லிஸ்டில் சேர்த்ததைக் கண்டிக்கிறேன். :) அவர் ஒரு ஆன்மீகச் செம்மல். என்னைப் பலமுறை கேள்வி கேட்டு யோசிக்க வைத்திருக்கிறார். அவர் ஒரு பக்திமானும் கூட.

சிபி தொடங்கி வைத்த முருகன் பாட்டுகளையும், சுப்பையா ஐயா, கீதாம்மா, வல்லீம்மா ஆகியோரின் பதிவுகளையும் கண்டிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

G.Ragavan said...

http://penathal.blogspot.com/2007/09/exclusive-preview.html

பொன்னியின் செல்வன்....சற்றுச் சிரமமான தயாரிப்புதான். ஆனால் நாகா வெல்வார் என்றே நம்புகிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/09/blog-post.html

எந்தக் கவி பாடுனாலும்
சந்தக் கவி பாடுனாலும்
அதைக்
கந்தக் கவியாப் பாடுனாலே சுகந்தான்
அதுவும் மதுரை சோமு பாடுனா கேக்கனுமா! ஆமா...கேக்கனும். திரும்பத் திரும்பக் கேக்கனும்.

ஆனா அந்தச் சுட்டி முழுப்பாடும் பாடலை. அது என்னன்னு கொஞ்சம் பாருங்களேன் திராச.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2007/09/337.html

ரசித்தேன். அந்தத் தந்தையின் தரும சங்கடம் புரிகிறது. ஆக அவர் செய்த தவறுதான் அவருக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது. முடிவு மகிழ்ச்சியைக் கொடுத்ததும் உண்மைதான்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/09/20.html

ஆகா! பாடல் தந்த வள்ளல் பிரபா வாழ்க. :) எவ்ளோ நாளாச்சு இந்தப் பாட்டக் கேட்டு. அப்படியே இந்தப் பாட்டை மெயில்ல அனுப்பினா நல்லாயிருக்கும். இது எம்பதுகள்ள வந்த வழக்கமான டிஸ்கோ பாட்டு. ஸ்ரீதேவி பாடுவாங்க படத்துல.

இந்தப் படத்துல ஆனந்தம் விளையாடும் வீடுன்னு ஒரு பாட்டு உண்டு. நல்லாருக்கும். படம் பாத்துட்டு ஸ்கூட்டர்ல குடும்பத்துல எல்லாரும் திரும்பி வர்ரோம். நாங்கள்ளாம் பொடிசுங்க. மதுரை விஜயலட்சுமி தேட்டர்ல இருந்து டி.ஆர்.ஓ காலனிக்குப் போகனும். வழியில மாரியம்மன் கோயில் பக்கத்துல போலீஸ் கிரவுண்ட் இருக்கு. அதப் பாத்ததும் ஒடனே பாடுனேன். ஆனந்தம் விளையாடும் வீடு மெட்டுலயே...

போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
இது போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
நான்கு சுவர் கொண்டு உருவான கிரவுண்ட்

ஆனந்தம் விளையாடும் வீடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு

அந்த அளவுக்கு...அந்த வயசுலயே மனசுல நின்ன பாட்டு.

இதே படத்துல வர்ர "நான் வாங்கி வந்தேன்டி நாலு மொழம் பூவு" பாட்டையும் மாடி வீட்டு ஏழை படத்துல வரும் "அன்பு எனும் நல்ல தேன் கலந்து" பாட்டையும் அடுத்தடுத்த நேயர் விருப்பங்களுக்காகக் கேட்டுக்கிறேன்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post_12.html

// வெட்டிப்பயல் said...
//குமரன் (Kumaran) said...

பாலாஜி. வரலாற்றுப் புகழ் மிக்கப் பதிவா? அப்படிப் போடுங்க. :-) உங்க கொல்ட்டி இடுகையைப் போல இது என்று சொல்லலாமா? :-)
//
கொல்ட்டி கதையெல்லாம் சும்மா... இது பல வருட விவாதமாச்சே ;)

// இராகவனார் எங்கே நிக்கிறார்ன்னு தெள்ளத் தெளிவா சொன்னீங்க. :-)//
நான் எங்க சொன்னேன்? அவரே தான் வாக்குமூலம் கொடுத்திருக்காரு ;) //

பெரியவங்க மன்னிக்கனும். குற்றம் சாட்டப்பட்டவர்னு நான் சொல்லீருக்கனும். குற்றவாளின்னு தப்பாச் சொல்லீட்டேன். இப்ப அத நீங்க நம்பனும்னு தேவையில்லை. உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://gayatri8782.blogspot.com/2007/09/2.html

அருமையான அறிமுகம். பழைய பாட்டுக புரியலைன்னு லேசாச் சொல்லீர்ர்ராங்க. கொஞ்சம் சிரமப்பட்டு புரிஞ்சிக்கிட்டோம்னா அதுல எத்தன நோபல் பரிசு புக்கர் பரிசுக இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.

குறுந்தொகை...பேரே சொல்லுதே. தொகையானதுன்னு.

இதுல எனக்கு ஒரு சந்தேகம். குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துச் சொன்னவரு பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரு பாடிய பாரதம் இருக்கா இல்லையா? அந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் ரொம்ப அழகானது. தாமரை புரையும் காமர் சேவடின்னு தொடங்கும்.

G.Ragavan said...

http://gayatri8782.blogspot.com/2007/09/1.html

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் முயற்சி வெற்றி பெற என்னுடையவாழ்த்துகள்.

இனியது கேட்கின் வலைப்பூவுல எனக்குத் தெரிஞ்சதச் சொல்லீருக்கேன். வந்து பாருங்க. ஆனா நீங்க தமிழ் படிச்சவங்க. ஆகையால நீங்க சுவையாச் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன். http://iniyathu.blogspot.com

G.Ragavan said...

http://princenrsama.blogspot.com/2007/09/blog-post_21.html

பைத்தியக்காரத்தனமான செயல். வி.எச்.பி வெறி பிடித்துப் போயிருக்கிறது. பத்வா அடுத்த மதத்தவர் குடுக்கையில் குதிப்பதும்...பிறகு தானே குதிப்பதும். சீச்சீ.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/09/blog-post_21.html

கருணாநிதியின் பேச்சு எரிச்சலைத் தந்தது உண்மைதான். வாயை வெச்சுக்கிட்டு சும்மாயிருக்க மாட்டாரான்னு தோணுச்சு. அந்த எரிச்சல் மறந்து போற அளவுக்கு எரிச்சலைக் கெளப்பி விட்டிருக்காரு வேதாந்தி. புடிச்சி அவரை கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்புங்கப்பா. எல்லாம் பக்தி கெடையாது. மதப் பற்றும் கெடையாது. முழுக்க முழுக்க அரசியல். என்ன...இதுனால கருணாநிதிக்குத் தமிழ்நாட்டுல வாழ்வு. வி.எச்.பி, பி.ஜே.பிக்கு வடநாட்டில் வாழ்வு.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2007/09/blog-post_21.html

தேனும் வயம்பும் வாயில் தூவும் வானம்பாடி....இது மலையாள வரிகள். ஒரே ஒரு எழுத்து மட்டும் மாத்துனா தமிழ். தேனும் வசம்பும் வாயில் தூவும் வானம்பாடி....அழகான கவித்துவமான வரிகள். இதுல இருக்குற கவிதை பாடி அழைத்தேன் வரிகள்ள இல்ல.

வசம்பு குழந்தைகளுக்கு உரசி ஊட்டுவாங்க. தூத்துக்குடி ஓதுவார் கடைல கிடைக்கும்.

ரவீந்திரன் ஒரு இனிய கலைஞர். சமீபத்தில் இவருடைய இசையில் வந்த அம்மகிளிக்கூடு படத்துல வர்ர ஹ்ருதய கீதமாய் பாட்டு எனக்கு மிகமிகப் பிடித்த பாட்டு.
http://www.youtube.com/watch?v=JlFNX9D0blI
இதைக் கேட்கும்படி பரிந்துரைக்கிறேன்.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2007/09/blog-post_21.html

ஒரு சிறிய தவறு செய்து விட்டேன். தேனும் வயம்பும் வாயில் என்று தவறாக எழுதி விட்டேன்.

தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி....

வசம்பை உரசி நாவில்தான் தேய்ப்பார்கள்.

இந்தப் பாட்டை முழுமையாக மலையாளத்தில் கேட்ட பொழுது இன்றைய தமிழ் சினிமா கவிஞர்கள் மேல் ஏமாற்றம் வந்தது. :(

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/09/blog-post_21.html

// வவ்வால் said...
ராகவன் கலைஞர் பேசியது உண்மை அதான் உங்களுக்கு எரிச்சல் தந்துச்சா :-)) //

அப்படியில்ல வவ்வால். நான் சொல்ல வந்தத நீங்க புரிஞ்சிக்கலைன்னு நெனைக்கிறேன். எங்கடா பிரச்சனை இருக்கும்னு அலையிற ஊர்ல நம்மளா எதுக்குப் பிரச்சனையைக் கெளப்பனும்னுதான். அதான் இப்பக் கெளம்பீருச்சே. இப்பத் தேவையில்லாம இந்த வி.எச்.பிக்கு ஒரு பப்ளிசிட்டி.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/09/1.html

ஆகா! கேட்காமலே கிடைக்கிறதே தகவல்கள். நிறைய தகவல்கள். இப்ப அவசரமாகப் படித்தேன். மறுபடியும் பொறுமையாகப் படிக்கிறேன். அடுத்த பகுதிக்கும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/09/blog-post_22.html

கர்மவீரர்னா அவர் காமராஜர் மட்டுந்தான். அவரப் பத்திச் சொன்னா...சொல்லிக்கிட்டே போகலாம். மதிய உணவுத் திட்டத்தத் தொடங்குனது அவர்தான். பேரத் தட்டிக்கிட்டுப் போனது ஒருத்தரு. பள்ளிக்கூடத்துல சம்பளம் கெட்ட வேண்டாம்னு முடிவெடுத்தது இலவசக் கல்வியைக் கொண்டு வந்ததும் அவர்தான். தமிழர்கள் இன்னைக்கு இவ்வளவு படிச்சிருக்காங்கன்னா...அதுக்குத் தொடக்கப்புள்ளி வெச்சவரு கர்மவீரர் காமராசர்தான்.

சரி. விசயத்துக்கு வருவோம். அந்த மணல்மேட்டை இடிக்கலாமா கூடாதான்னு கேட்டா...அது சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்தில்லைன்னா கண்டிப்பா இடிக்கலாம். அவ்வளவுதான்.

கருணாநிதி இந்தப் பிரச்சனையை வேற மாதிரி கையாண்டிருக்கலாம் அப்படீங்குறது என்னோட கருத்து. சும்மா வீட்டுல உக்காந்து ஆலு டிக்கி சாப்பிட்டுக்கிட்டிருந்த வி.எச்.பி ஆளுங்களுக்கெல்லாம் இப்ப காலம் வந்து காச்சு மூச்சுன்னு கத்துறாங்க. பக்தீன்னா நெனைக்கிற? இல்லவே இல்லை. அரசியல். பழமுதிர்ச்சோலைல மின்கம்பி இடிக்குதுன்னு ஏதாவது நாவல் மரத்த வெட்டுனாப் போதும்....அதுதான் முருகரு ஔவையாருக்கு நெல்லிக்கனி குடுத்த மரம்னு சண்டைக்கு வருவாங்க. இல்ல இல்ல...வரமாட்டாங்க..ஏன்னா முருகனை வெச்சித் தமிழ்நாட்டுக்குள்ள மட்டுந்தான் அரசியல் செய்ய முடியும். அகில இந்திய அளவுளன்னா ராமர்தான். ஹம்ம்ம்ம்...எல்லாரும் மறந்து போன பா.ஜ.கவுக்கு வாழ்வு.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/09/blog-post.html

புது வீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ஏர் டெக்கன்ல டீ குடிச்சியா...அதுவும் 20 ரூவாய்க்கு. தேவலையே. இன்னைக்கு ஓரு காப்புச்சினோ காப்பி குடிச்சேன். ரயில்வே டேசன்ல. ரெண்டு யூரோ. அதாவது 114 ரூவா.

நம்ம எத்தன டீ குடிச்சிருக்கோம். ம்ம்ம்....என்ன செய்றது...

நீங்க இருக்குற எடமெல்லாம் ஐதராபாத்தே இல்லையாம். நீ ஐதராபாத்துன்னு சொன்னதுக்கு ராஜசேகர ரெட்டி வந்து சத்தம் போட்டுட்டுப் போறாரு.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/09/18.html

// துர்கா|thurgah said...
yupp a great dancer.it is a pity that she killed herself.may her soul rest in peace. //

துர்கா, ஒரு நல்ல நடிகையும் கூட. அலைகள் ஓய்வதில்லை பாத்தாலே தெரியும். ஆனா பாவம்...அவங்களை இப்பிடியே பாத்துப் பழகீட்டோம். எந்த ஒரு ஆணையும் தன்னை ரசிக்க வைக்கக் கூடிய அழகு அவருடையது. அவருடைய முடிவு மிகவும் வருந்தத்தக்கது.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/09/18.html

// ஸ்ரீசரண் said...
நன்றி ராகவன்

ONE OF MY FAVOURITE
என் செல் பேசியில் ring tone ஆக வைத்திருந்தேன் இந்த ட்யுனை //

வாங்க ஸ்ரீசரண், இது ரொம்பவுமே வித்தியாசமான சில்க் பாட்டு. ட்ரன் ட்ரன் ட்ரன் என்ற தொடக்கமே அசத்தல். ரொம்ப ஏத்த இறக்கம் இல்லாத பாட்டும் கூட. ஆனா பொருத்தமா இருக்கு. எனக்கும் இது பிடிச்ச பாட்டு.

G.Ragavan said...

http://pangaali.blogspot.com/2007/09/blog-post_23.html

பொதுவாழ்க்கைக்கு ஒரு பெண் வந்தால் என்னவெல்லாம் பட வேண்டியிருக்கிறது. தன்னைப் புனிதமாக்கிக் கொண்டு அவள் எதுவும் செய்வாள் என்று அசிங்கம் பேசி மகிழும்.

ஒரு நல்ல நடிகை அவர். நல்ல உடல்வாகு. நல்ல உடைத்தேர்மை உடையவர் அவர். அவரைக் கடைசி வரைக்கும் கவர்ச்சியாகவே பார்த்து விட்டது திரையுலகம். எந்தப் பாத்திரமும் ஒழுங்காகச் செய்யக் கூடியவர். நகைச்சுவைப் பாத்திரம் கூட. ஒரு பாக்கியராஜ் படத்தில் பாவா பாவா என்று வருவாரே. ஆனால் அதிலும் கவர்ச்சியைக் கூட்டியிருப்பார்கள்.

சில்க் சுமிதா ஒரு நல்ல நடிகை என்று சொல்லிக் கொள்ளவே விரும்புகிறேன்.

G.Ragavan said...

http://pangaali.blogspot.com/2007/09/blog-post_23.html

சில்க் ஸ்மிதாவின் ஒரு பாட்டை இந்தப் பதிவில் நினைவு கூர்ந்திருக்கிறோம்.

http://isaiarasi.blogspot.com/2007/09/18.html

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/09/blog-post_22.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//நாவல் மரத்த வெட்டுனாப் போதும்....அதுதான் முருகரு ஔவையாருக்கு நெல்லிக்கனி குடுத்த மரம்னு சண்டைக்கு வருவாங்க//

ஜிரா...என்ன ஆச்சு?
முருகன் எப்போ ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தாரு? அதியமான்-ல்ல கொடுத்தான்? //

ஐயா, நாவல் மரம்னு தெளிவாச் சொல்லீருக்கேனே. அப்புறம் ஏன் நெல்லிக்கனிக்கு எழுதுனேன். எதையும் எப்படியும் திருப்பலாம்னு சொல்றதுக்காகச் சொன்னது.

// இல்ல நாவல் மரத்துல இருந்து நெல்லி எப்படி வரும்?...ஒரு வேளை இப்படி எல்லாம் அவிங்க சொன்னாக் கூட அதையும் மக்கள் நம்புவாங்கா-ன்னு சொல்ல வந்தீங்களா? :-))) //

ஆமாம்யா. இது குற்றவாளி-குற்றம் சாட்டப்பட்டவர்ல செஞ்ச மாதிரி தப்பு இல்லை. ;)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/09/blog-post_22.html

// ஓகை said...

ராகவன் மற்றும் வெட்டிப்பயல்,

அதாவது நம்ம வச்சிருக்கறது மட்டும்தான் பக்தி. மத்தவன் ராமன் மேல வச்சுருக்கிறதெல்லாம் வெளி வேசம், காரியார்த்தமான பக்தி, அரசியல் லாபத்துக்காக மட்டும். அப்படித்தானே! மத்தவங்க பக்திய அளக்க முயற்சி பன்றதுக்கு உங்களோட பக்தி மட்டுமா அளவுகோல்?

முதல்வர் பேசுனதுல ஏதோ தப்பு நடந்திருக்குன்னுதானே காமராஜர எல்லாம் உவமை சொல்லி, காமராஜரோட நாத்திக மனத்தையும் எடுத்துக்காட்டி ஒரு பதிவு போட்டிருக்கீங்க.

நாத்திகர்களுக்காவது பக்தி என்பது இல்லாததால் அவர்களுக்கு பக்தி மனம் புரியாமலோ அல்லது வேண்டுமென்றே புன்படுத்துவதற்காவோ பேசலாம். ஆனால் தன்னுடைய பக்திதான் உசத்தி மத்தவனுங்க பக்தியெல்லாம் வெரும் புன்னாக்குன்னு பேசறது மகா அகந்தை. //

வெறும் புண்ணாக்குன்னு சும்மாச் சொல்லலைங்க. உண்மைன்னுதான் நான் நம்புறேன். உண்மையான பக்தி நாக்க வெட்டிக் கொண்டா...தலைய வெட்டிக் கொண்டான்னா கேக்கும்? அதுக்குப் பேரு பக்தியா. உண்மையான பக்தி என்ன தெரியுமா செய்யும். அது உண்மையிலேயே ராமர் பாலம்னு நம்புனா...அதுல விழுகுற வெட்டைத் தன்னோட கழுத்த மொதல்ல வாங்கும். அந்த அளவுக்கு எனக்கும் பக்தி கிடையாதுங்குறதுதான் உண்மை. அதுனால்தான் பாம்பின் கால் பாம்பறியுங்குற வகையில வேதாந்தியோடது பக்தி இல்லைன்னு உறுதியாச் சொல்ல முடியுது. இதுல அகந்தையெல்லம் ஒன்னுமில்லை.

அட...நமக்கு வேண்டியவங்க மேல ஒரு அடி விழுந்தாங்க்கூட குறுக்கப் போய்த் தடுப்போம். முடிஞ்சா நாமளே அருவாள எடுத்து வெட்டுவோம். அந்நேரம் காப்பாற்றியவர்களுக்குப் பரிசுன்னு காமெடி பண்ண மாட்டோம்.

கருணாநிதி சற்று நிதானமாகப் பேசியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதைச் சொல்லத் தயக்கமும் இல்லை. ஆனால் விவாதத்திற்குக் கூப்பிடுகிறாரே...அதற்குப் போக வேண்டியதுதானே. கருணாநிதி பொய் சொன்னால் விவாதத்தில் வெளிவந்து விடுமே. அப்பொழுது எல்லாரும் உங்கள் பக்கம் வருவார்கள் அல்லவா. அதை விட்டு விட்டு நாக்கைக் கொண்டா...தலையைக் கொண்டான்னு பத்துவா விடுறதெல்லாம் காட்டுமிராண்டித்தனம். இதை எந்த மதத்துக்காரங்க சொல்லீருந்தாலும் காட்டுமிராண்டித்தனந்தான்.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/08/blog-post.html

ஜெயந்தி, ரொம்ப நாள் கழிச்சி வலைப்பூவுக்கு வர்ரேன். கதை நல்லாருக்கு. நல்லா எழுதீருக்க.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/09/18.html

// வெட்டிப்பயல் said...
நல்ல நடிகை...
இவர் பின்னால் சுற்றாத நடிகர்களே இல்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா இவர் இறந்தப்ப ஒருத்தர் கூட வரலை :-( //

எல்லாம் பயந்தான். அவங்க செஞ்ச தப்புக்கு அவரோட ஆவி வந்து அடிச்சிருமோன்னு.

// அலைகள் ஓய்வதில்லை, அவசர போலிஸ் 100 எல்லாம் நல்லா நடிச்சிருப்பாங்க. //

எப்படி மறக்க முடியும்? பாவா புட்டு சாப்புடுங்க பாவான்னு கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் சின்னப்பாப்புவை எப்படி மறக்க முடியும்?

//அவர் ஆத்மா சாந்தியடையட்டும் //

நிச்சயமா அடைஞ்சிருக்கும். யோக்கியத்தனத்தைப் பொம்பள கிட்ட மட்டும் எதிர்பார்க்கக் கடவுள் மனிதன் இல்லை. ஆகையால அவருக்கு எப்பவோ அமைதி கிடைச்சிருக்கும்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/09/18.html

// கானா பிரபா said...
வணக்கம் ராகவன்

நல்ல பாடல், சில்க்கிற்கு கிடைத்த இன்னொரு நல்ல பாடல், பி சுசீலா அம்மாவும் எஸ்.பி.பியும் பாடிய "பேசக்கூடாது" என்ற பாட்டு. //

வாங்க பிரபா. நீங்க சொல்றது "பேசக்கூடாது வெறும் பேச்சில்ல் சுகம்" என்ற பாட்டா?

// துளசி கோபால் said...
சில்க் போயி 11 வருசமாச்சாமே.....
காலம் எப்படி ஓடுது பாருங்க.

நல்ல பாட்டு. மறந்தே போயிருந்தது.
நன்றி //

ஆமா டீச்சர் 11 வருசம் ஆச்சு. இப்போதைக்கு இன்னொரு சில்க் வர்ரதுக்கு வாய்ப்பில்லைன்னுதான் தோணுது.

// வல்லிசிம்ஹன் said...
ஸ்மிதாவின் கண்கள் உறுதியான நோக்குக் கொண்டவை. ஆயிரம் பொருள் அந்தப் பார்வையில் தெரியும்.
அழகும் திறமையும் கொண்டவர்கள் இப்படி ஒருன் சோகத்தில் தள்ளப் படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை:(((

மிக நல்ல பாடல் ராகவன்.ரசித்துக் கேட்டேன். //

ஆமா வல்லீம்மா. அவங்க நல்ல நடிகையும் கூட. வெறும் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டது தமிழ் சினிமாவின் இழப்புதான்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மிகவும் மெல்லிதாக ஓடும் பாட்டு இது! குலுக்கல் நடனங்களில் பாடப்படும் இரைச்சல் எல்லாம் இல்லாமல் ட்ரன் ட்ரன் ட்ரன் என்று துவக்க இசையே மென்மை தான்! பாடலை யூட்யூபிலும் ஏற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி! //

நான் ஏற்றலை ரவி. ஒரு நண்பர் ஏற்றியிருக்காரு. அதைக் கண்டுபிடிச்சிப் போட்டேன். அதுனால அவருக்கு நன்றியும் சொல்லீருக்கேனே.

// பாவா பாவான்ன்னாலே இவங்க தான் ஜிரா! சின்னப்பாப்பு கேரக்டர், அதுவும் முழி முழி பாக்யராஜுக்கு ஏற்ற ஜோடி! அவருக்கு நாமம் போட்டு, திருப்பதி வேண்டுதல் அது இதுன்னு அடிக்கிற லூட்டி....கலக்கலா இருக்கும்! :-)//

செம கலக்கல் காமெடி அது.

// பொதுவா ஒரு கலைஞருக்கு இருக்கு ரசிகர் பட்டாளம் அவர் மறைவுக்குப் பின் அவ்வளவா இல்லாவிட்டாலும், ஏதாச்சும் ஒரு வகையில் memorial இருக்கும்! சில்க்-குக்கு வலைத்தளம் ஏதாச்சும் இருக்கா ஜிரா? //

கண்ணபிரான் ரவிசங்கர்னு ஒருத்தர் ஆரம்பிக்கப் போறதாக் கேள்வி. இன்னும் தொடங்கலைன்னுதான் நெனைக்கிறேன் ;)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/09/blog-post_24.html

பாலாஜி, டாவின்சி கோடு தடை செய்ததும் என்னைப் பொருத்த வரையில் தவறே.

G.Ragavan said...

http://pathivu.madurainagar.com/2007/07/blog-post_30.html

அழகான புகைப்படம். நல்ல படையல்தான்.

// தருமி said...
குமரன்,
இது பாண்டிய மன்னனா..? எனக்குச் சொன்னவர்கள் திருமலை நாயக்கர் என்று சொன்னார்களே .. //

தருமி ஐயா, திருமலை நாயக்கர் செலையெல்லாம் பாத்தா வயிறு பெருசா இருக்கும். இந்தச் சிலைல அப்படித் தெரியலையே

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/09/92_24.html

குளிருக்குப் படம் அனுப்பச் சொன்னேன். எல்லாம் பொருத்தமாயிருக்கு. ஒரு படத்தத் தவிர. ஹி ஹி. எந்தப் படம்னு சொல்லித் தெரியனுமா?

கிங்காங் படத்தைத் தமிழில் எழுதுறதா இப்போதைக்குத் திட்டம் எதுவும் இல்லீங்க. :)

எவராம் என்னைக் கலாய்க்கச் சொன்னவராம்னு நீங்க சொல்லாமலே தெரிஞ்சு போச்சு. ஹி ஹி.

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/09/92_24.html

// நான் காட்டிக் கொடுக்க விரும்பாததால் அவரது பெயரை ராயல்டிக்காக இந்தப் பதிவில் வெளியிடவில்லை //

மதுரைப் பக்கமெல்லாம் இந்த ராயல் டீ ரொம்பப் பிரபலம்னு பேசிக்கிறாங்களே. உண்மையா?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/09/5.html

மடப்பள்ளிய எங்கிட்ட ஒப்படைச்ச ஒங்க நல்ல மனசைப் பாராட்டினாலே தகும்.

புளியோதரையும் சோறு
வெகு பொருத்தமாய்ச் சாம்பாரு
பூரிக்கிழங்கு பாரு ஹஹா ஹஹா ஹஹா

படத்தப் பாத்ததும் பெங்களூர்ல எங்க தெலுங்கு அக்கா ஒருத்தங்க செய்ற புளிஹாரா நெனைவுக்கு வருது. அடடா! அடடடடா!

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/09/blog-post_24.html

வாழ்த்துகள். வெற்றிக்கு வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/03/blog-post.html

தெரியலையே ஜோசப் சார். தெரியலையே. பல சமயங்கள்ள ஏன்னு தெரியாம முழிக்கிறதுண்டு. ஆனா நல்லதுக்குத்தான்னு மனசத் தேத்திக்கிட்டு வாழ்க்கையத் தொடர்ந்து செய்ய வேண்டியதுதான்.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2007/09/1.html

ஒரு குட்டிச் சுவரின் தல புராணமா :)))))

கொசுவத்திச்சுருள் ஒரிஜினல் டார்டாய்ஸ்தானே? ;)

புகாரின்னு ஓட்டல் பேர் இருக்கு. அண்ணாசாலைலா. முந்தி ரொம்பப் பிரபலமா இருந்த ஓட்டல். இப்ப ஏதோ ஓடிக்கிட்டிருக்கு.

தொடரட்டும் கதை. அதுல யாருக்கு விழப் போகுதோ உதை.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2007/09/2.html

போப்பாண்டவர் ரேஞ்சுக்கு உயத்துன கமெண்ட்டுதான் ஹைலைட்டு... :))))))))))))))))))

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/09/blog-post_24.html

நல்லதொரு தகவல். இதைத்தான் ஒரு பதிவில் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். உண்மையான அன்பு...தன் தலையைக் கொடுக்கும். இல்லையென்றால் அடுத்தவர் தலையைத் தானே எடுக்கும். போய் வெட்டு குத்துன்னு தண்டோரா போடாது.

நீங்கள் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வு ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு பாடம். அட்டூழியம் செய்றவங்க ஆன்மீகவாதிகள் அல்லர். அரசியல்வாதிகள்.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/09/2.html

அரக்கருக்குப் பின்னால் இருக்கும் தகவல் இதுதானா....அரக்கு அரக்கு என்று அத்தனை முறை சொல்லியிருந்தும் அது அரங்கரோடு பொருந்துவது தெரியாமல் இருந்தோமே! அடடா!

தொடரட்டும் தொடர். அடுத்த பதிவிற்கும் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2007/09/1.html

:) என்ன சொல்றது மதுமிதா. அரசியல்வாதிங்க ரெண்டும் பேசுவாங்க. அவங்களப் புரிஞ்சிக்காமத்தான் நம்மளும் தூக்கிக் கொண்டாடிக்கிட்டிருக்கோம்.

ராமர் சேது விஷயத்தில் கருணாநிதி சற்று நிதானமாகப் பேசியிருக்கலாம் என்பதும் உண்மை. வேதாந்தி கொஞ்சமாவது நிதானமாகவது யோசித்திருக்கலாம் என்பதும் உண்மை.

G.Ragavan said...

http://binarywaves.blogspot.com/2007/09/nobody-has-proved-that-ram-did-not.html

We cant expect more than this from politicians who will exploit anything for the sake of power. It is true that Karunanidhi should have used better words, but it is absolute rubbish to claim the natural formation as a bridge made by Ram and Co.

As per the story, Hanuman writes the name of Ram in every stone that was used. We can scan the entire bridge to find the autograph of Hanuman. If Hanuman is god, the autograph sould have stayed. If the autograph didnt stay, we can understand the unwillingness of God to keep the brige.

It is not politicians who have to decide. It is engineers who have to decide.

G.Ragavan said...

http://araiblade.blogspot.com/2007/09/blog-post_24.html

மிக அருமையான திட்டம். இந்தத் திட்டத்திற்கு என்னுடைய நன்கொடை நூறு கோடி.

தூத்துக்குடீல இருந்து கால்வாய் வெட்டுறது சரி. கால்வாய விளாத்திகொளம் புதூர் வழியா விடச் சொல்லுங்க. எங்கூரு மக்களும் தண்ணிய கண்ணுல பாத்தாப்புல இருக்கும். அதுவுமில்லாம அந்தப் பக்கம் இருக்குறவங்களு வேலை வாய்ப்பாவும் இருக்கும்ல.

கால்வாயோட ரெண்டு பக்கமும் மரங்களை வெக்கனும். தென்ன மரமா வெச்சா மகசூலும் இருக்கும். கேரளாவுல படகு வீடு விடுறாங்களாமே. அத விடச் சீப்பா நம்மளும் விட்டுக் காசு பாக்கலாம்.

G.Ragavan said...

http://janakiamma.blogspot.com/2007/09/blog-post_17.html

ரவி, இந்தச் சுட்டியை இவ்வளவு தாமதமாகவாத் தருவது. நாமெல்லாம் இசையன்பர்கள். இசை நமக்கு இசைவானது.

எஸ்.ஜானகி அவர்களின் குரலின் குழைவு நிறைந்து வரும் பாடல்களில் இதுவும் ஒன்று. செந்தூரப்பூவே பாட்டு இதே ரகந்தான். அழகிய கண்ணே இதே ரகந்தான். இந்தப் பாட்டை மிகவும் ரசித்தேன்.

ஒரு உதவி செய்ய முடியுமா? இந்தப் பாட்ட எனக்கு மெயிலில் அனுப்ப முடியுமா?

G.Ragavan said...

http://janakiamma.blogspot.com/2007/09/yaar-bina-chain-kaha-re-saaheb-hindi.html

பாட்டு தொடங்கும் பொழுதே பப்பி லஹரி என்று தெரிந்து போகிறது. :)

தமிழில் மெல்லிசை மன்னர் இசையிலும் இசைஞானியின் இசையிலும் ஒவ்வொரு இந்திப் பாட்டு பாடியிருக்கிறார் எஸ்.ஜானகி.

G.Ragavan said...

http://pillaitamil.blogspot.com/2007/06/blog-post.html

இந்தக் கொடுமைய நான் எங்கன்னு சொல்லுவேன். பெரபுதேவா நகுமான்னு நகும்மாதிரி சொல்லீட்டு..பாட்டப் பாடுனது ஆருன்னு சொல்லலையேய்யா! பாடுனவரு ஜெயச்சந்திரன். இப்பிடியெல்லாம் சொல்லாம இருக்குறது தப்பு.

என்னது ஓலைப்பெட்டிய பாத்திருக்கீங்களாவா! அதுலதானய்யா வாழ்ந்தோம். சீரணி, காரச்சேவு, சீவலு, கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி...இன்னும் என்னமுஞ் சொல்லுங்க. சின்ன வயசுல அதெல்லாம் எங்களுக்குப் ஓலப்பெட்டீலதானய்யா கெடச்சது. அந்த ஓல வாசமும் சீரணி வாசமும் கலந்து திங்கைல...அடடா! அடப் போங்கய்யா! பர்கர் கிங்காம் ட்விஸ்ட் பிரையாம். ஊர்ல இருந்து வரைல கருப்பட்டிச் சீரணிய எங்க தாத்தா ஓலப்பெட்டீல வாங்கி, தூக்குவாளில பாட்டி செஞ்ச கோழிக் கொழம்பும் கொண்டு வருவாரே....தாத்தா..தாத்தா... :((((((((((((((

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/09/56.html

இறைவனைப் புகழும் ஒவ்வொரு செய்யுளும் சிறப்பு என்றால், ஒவ்வொரு செய்யுளிலும் ஒவ்வொரு சிறப்பு. அப்படி இந்தச் செய்யுளில் சிறப்பாக இருப்பது ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நிற்பாள் என்ற வரி.

மலர் நாம் அனைவரும் காண்பது. அது அரும்பாக இருக்கையில் ஒரு கூம்புதான். ஆனால் அந்த ஒற்றைக் கூம்பு மலர்ந்து விரிகையிலே எத்தனை இதழ்கள். மகரந்தங்கள். தேன் துளிகள்...அடடா! ஒரு அரும்பில்தான் அத்தனையும் இருக்கிறது.

அப்படி நாதமும் விந்தும் கலந்த பொழுது ஒரு ஓங்காரமாக அரும்பி இந்த உலகமாக விரிந்தவளைப் புகழாமல் எப்படி இருப்பது!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post_22.html

பரிசு பெற்ற அறிஞர் இருவருக்கும் சௌராஷ்டிர மொழிக்கும் என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பெருமை எனக்குப் புரிகிறது.

குமரன், எனக்கு ஒரு ஐயம், பரிசு பெற்றவர் இருவரும் பயன்படுத்திய எழுத்துரு என்ன?

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/09/blog-post_24.html

ஆராய்ச்சியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா ஒரு கேள்வி மட்டும் எங்கிட்ட இருக்கு இப்ப.

இராமாயணக் கதைப்படி அது குரங்குகள் கட்டிய பாலம்னு சொல்றாங்க. அதுக்கு பொறியியல் படிச்சாரான்னு கேட்டது சரியில்லைன்னுதான் தோணுது. அந்தக்காலத்துல ஏது பொறியியல் கல்லூரி? நம்ம ஊர் பழைய கோயில்களைக் கட்டுனவங்க எந்தப் பொறியியல் கல்லூரியில படிச்சாங்க? அப்படிக் கருணாநிதியை எதிர்கேள்வி கேக்க நேரமாகாது. அதைத்தான் விஜயகாந்தும் கேட்டாருன்னு நெனைக்கிறேன்.

கருணாநிதி இப்பிடிக் கேட்டிருக்கலாம். கதைப்படி பாலத்தைக் கட்டுனப்போ கல்லெல்லாம் தண்ணிக்குள்ள போயிருச்சாம். ஒடனே அனுமார் அந்தக் கல்லில் ராமரோட பேர எழுதிக் கடல்ல போட்டாராம். இப்ப இருக்குற பாலத்த முழுக்கத் தேடிப் பாத்து அந்தக் கையெழுத்து இருக்கா இல்லையான்னு உறுதி பார்த்திருக்கலாம்ல. அப்படி இல்லைன்னா...கடவுள் போட்ட கையெழுத்து அழியுமா. அது வேற பாலம். இது வேற பாலம்னு சொல்லீருக்கலாம்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post_23.html

இறைவன் நமக்குப் பிடித்ததைச் செய்கிறோமா என்பதை விட இறைவனுக்குப் பிடித்ததை நாம் செய்கிறோமா என்பதுதான் கேள்வி. அதைத்தான் நீங்கள் குறிப்பிடும் வடமொழிச் செய்யுளும் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

// கோவி.கண்ணன் said...
குமரன் ஒரு கேள்வி,

கடவுள் (உருவங்கள்) கையில் உள்ள ஆயுதங்களையெல்லாம் போட்டுவிட்டு, சாதாரண மனிதராக வந்தால் எத்தனை பேருக்கு அதுகடவுள் என்று தெரியும் ? - 'உள்ளுணர்வு' சொல்லும் என்று பல்டி அடிக்கக் கூடாது :-)

சில கோவில்களின் ஒரே சிலைக்கு பல்வேறு உருவ அலங்காரம் பண்ணுவார்கள். பார்த்திருக்கிறேன். அலங்காரங்களை கலைத்துவிட்டால் வெறும் சிலை மட்டுமே இருக்கும், அது எந்த சாமி என்று தெரியாது.

புறத்தோற்றமான நாமம், ஆயுதங்கள், வாகனங்கள் தவிர்த்து இந்த உருவ கடவுளுக்கு இதுதான் உருவம் என்று எதாவது இருக்கிறதா ? //

இது குமரனுக்கு மட்டுந்தானா கோவி :)

கோவி, பெரும்பாலன இறையடியவர்கள் கூற்றுப்படியும் நம்பிக்கையின் படியும் இறைவன் அனைத்துமாய் நின்று அனைத்தையும் கடந்தவன். அப்படீன்னா? எல்லாம் அவந்தான். அந்த எல்லாத்தையும் விட அவன் பெரியவன். அப்ப எல்லா உருவமும் அவனுடைய உருவந்தான். அதே நேரத்துல இந்த உருவங்களையெல்லாம் விடவும் அப்பாற்பட்டவன். அதுனாலதான் "நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்தவன்" அப்படீன்னு சொல்றாங்க. அப்படி நம்புறவங்க வம்புறவங்க இல்ல.

அழகூட்டல், நீராட்டல், சீராட்டல் எல்லாம் குழந்தை விளையாட்டுங்க. குழந்தை பொம்மை வெச்சி விளையாடுற மாதிரி. தப்பில்லை. ஆனா பொம்மையை வெச்சி வியாபாரம் செய்றதுதான் தப்பு.

// புத்தரைக் கூட சீனர்கள் சீனரைப் போல் இடுங்கிய கண்ணாகத்தான் புத்தர் கோவிலில் வைத்திருக்கிறார்கள். நம் இந்திய புத்தர் வேறு போல் இருப்பார். ஆனால் ஜீசஸ் ஒன்று போல் தான் எல்லா ஊர்களிலும் தெரிகிறார்.
(ஒரு எடுத்துக்காட்டுதான் . இவர்கள் வாழ்ந்தவர்கள் என்பதால் இதை ஒப்பிட்டுக்காக எடுத்துக் கொள்ள முடியாது) //

இல்ல கோவி. ஏசுவிலும் சப்பான் ஏசு, இந்திய ஏசுன்னு பார்க்கலாம். தோல் வெளுப்பாயிருக்குமே தவிர, முகத்துல அந்த ஊர்த்தன்மை வந்திரும். இங்க ஐரோப்பாவுல இருக்குற சர்ச்சுகள்ள இருக்குற ஏசுநாதர் முகமும் நம்மூர்கள்ள பாத்த முகமும் வேற மாதிரிதான் இருக்கு. றோர்மண்டுல சிலுவைல பாத்த ஏசுநாதர் ரொம்பவே வேற மாதிரி இருந்தாங்க. அதுவும் Y வடிவச் சிலுவை வேற.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/09/blog-post_20.html

ஜோசப் சார் சொல்றதையும் ஒத்துக்கிறத்தான் வேண்டியிருக்கு.

இங்க நெதர்லாந்துல ஆவூன்னா மழை பெய்யுது. ஆனா ஒரு வாடையும் கெளம்பலை. தெனமும் மழை பேஞ்சா என்னத்தக் கெளப்புறது? அவனவன் இங்க புட்டியத்தான் கெளப்புறான்.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2007/09/sum-sumne-nagthale-upendra-and-chandini.html

ஏ திரைப்படம் பயங்கர வெற்றி பெற்ற படம். உபேந்திராவுக்குப் பெருவாழ்வு குடுத்த படம். அப்ப இருந்த முதல்வர் வீரேந்திர பாட்டீலைக் கிண்டலிச்சிருந்தாருன்னும் சொல்லுவாங்க. படத்தத் தமிழிலும் டப் செஞ்சாங்களே. ஆனா யாரும் கண்டுக்கலை.

பிரியங்கா திரிவேதின்னு ஒரு நடிகை தமிழ்ல ஒன்னு ரெண்டு படத்துல நடிச்சாங்கள்ள...அவங்கதான் உபேந்திராவோட மனைவி.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/09/blog-post_24.html

மாலிக்கின் பேச்சு நிச்சயமாகப் பொறுப்பற்றது. தினமலர் எழுதியது எவ்வளவு பொறுப்பற்றதோ அதே அளவிற்கு இதுவும் பொறுப்பற்றது. மதவெற்றி உலகம் முழுவதும் அந்த அளவுக்கு மக்க்களை மூடர்களாக்கிக் கொண்டிருக்கிறது.

கொஞ்ச நாள் முன்னாடி கிரிக்கெட் பிள்ளையாரைக் கிண்டலடிச்சுப் பதிவு படிச்ச நினைவிருக்கு. பிள்ளையாரு ஜெயிக்க வெச்சாருன்னு பதிவுல கேட்டிருந்தாங்க. யார் எழுதுன பதிவுன்னு நினைவில்லை. அந்தப் பதிவு சொன்ன கருத்து மாலிக்குக்கும் பொருந்தும்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/09/blog-post_1972.html

திருக்குறளைப் புகழ்வதில் புலவர்களுக்கிடையில் போட்டிதான்.

அந்தக்காலத்து ஔவையார் ஒருத்தர்

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக்
குறுகத் தறித்த குறள்-னு சொன்னா...

இடைக்காடர் சும்மாயிருக்காம

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக்
குறுகத் தறித்த குறள்-னு சொல்லீட்டாரு :))))))))))))))

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/09/blog-post.html

வேழமுகமின் விரதமிது...இந்தப் பாடலை இப்பொழுதுதான் முதன்முதலாகக் கேட்கின்றேன். கொடுத்தமைக்கு நன்றி ராஜேஷ்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/09/26.html

கண்ணாடி டிசைன் ரொம்ப அழகா இருக்கு டீச்சர். இது கிளாஸ் பெயிண்டிங் வகையா? நான் முந்தி கிளாஸ் பெயிண்டிங் செய்வேன். அதுல லெட்டுல லைன் வரைஞ்சு...கோடுகளுக்குள்ள வண்ணத்தைத் தீட்டுறது. சிலர் அந்த ஓவியத்து மேல இன்னொரு கண்ணாடி வெச்சு பாதுகாப்பாச் செஞ்சிருவாங்க. அந்த மாதிரிச் செஞ்சதா இது? இல்ல வேற முறையா?

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/09/92_24.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அது சரி,
ஜி ராகவனில் உள்ள ராகவனும் ராம் தானே! கூட்டிக் கழிச்சிப் பாருங்க! :-)//

ஏன்? பெருக்கி வகுத்துப் பாக்குறது?

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2007/09/sum-sumne-nagthale-upendra-and-chandini.html

// கானா பிரபா said...
வாங்க ராகவன்

கன்னடம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த இப்படத்தைத் தமிழில் ரசிகர்கள் புறங்கையால் ஒதுக்கி விட்டார்கள்.

பிரியங்காவை இவர் மண ஒப்பந்தம் செய்த நேரம் நடிகர் ரவிச்சந்திரன் பிரியங்காவைத் தாறுமாறாகப் படமெடுத்துப் பேஜார் பண்ணினாராம் ;) //

பண்ணினாரே. :) அப்ப பெங்களூர்லதான இருந்தேன். ரவிச்சந்திரன் ரசிகர்கள் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? பிரியங்காவொட கொழந்தை ரவிச்சந்திரனைப் போல இருக்குன்னு!!!!!!!!!!!! அந்த அளவுக்கு ரவிச்சந்திரன் ரசிகர்களுக்கும் உபேந்திரா ரசிகர்களுக்கும் ஆகாது.

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/09/94.html

நல்லா ஆடுறாங்களே. சூப்பர். பெரபுதேவாவை அனுப்பி வெச்சாங்களான்னு கேளுங்களேன்.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/09/blog-post.html

கிரெடிட் கார்டுகள அனுப்பிக்கிட்டேயிருக்காங்களா! அடடா! வர்ர கிரெடிட் கார்ட ரெண்டா வெட்டீரு. இல்ல..வர்ர்ரத வாங்காத. அதுதான் நல்லது.

இப்ப வர்ர விகடன், குமதங்களை விட வலைப்பூக்கள் எத்தனையோ மடங்கு நல்லாயிருக்கு. என்ன..அதப் படிக்க வலையிணைப்பு வேணும். அதுனால நெறையப் பேர் படிக்கலை. அவ்வளவுதான்.

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2007/09/blog-post_26.html

அருமையான பாட்டுங்க. ரொம்பவே. இளையராஜாவின் சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.

நீங்க சொன்னது சரிதான். அவங்க ராசியும் சுமதியுந்தான்.

பாடுனவங்க யாரா? நல்ல கேள்வி. பி.எஸ்.சசிரேகாவும் எஸ்.ஜானகியும்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/09/blog-post.html

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். காத்திருக்கிறோம் விருந்திற்கு. மருத்துவரிடம் மருந்து மட்டுமல்ல விருந்தும் கிடைக்கும் என்று தெரிகிறதே! முன்பு திருப்புகழ் விருந்து. இப்பொழுது சித்த வி(ம)ருந்து :)

G.Ragavan said...

http://kuruvikal.blogspot.com/2007/09/blog-post_26.html

இந்தப் பதிவைப் படித்து முடித்ததும் பின்னூட்டங்களைப் படித்து முடித்ததும் ஒன்று தோன்றுகிறது.

மூளையில அது கூட..இது குறைய இருக்குறதால இந்தப் பிரச்சனை வருதுன்னு சொல்றீங்க. பொதுவாவே எந்தக் காரியத்தையும் நல்லாவும் தப்பாவும் செய்றதுக்கு மூளைல கூடக் கொறைய இருக்குறதுதான காரணம்.

அப்படிப் பாத்தா இந்த மூளைல கூடிக்கொறையிறது இயற்கையா வருதா? செயற்கையா வருதா?

இயற்கையா வருதுன்னா...அப்ப அந்தச் செயல் இயற்கைக்கு மாறானதுன்னு எப்படிச் சொல்ல முடியும்? செயற்கையா வருதுன்னா? அது எப்படி வருது?

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/09/blog-post_26.html

ஹா ஹா ஹா

என்னடா ஒங்க பதிவுகளையெல்லாம் இப்பப் படிச்சிப் பின்னூட்டம் போட முடியுதேன்னு யோசிச்சேன். ஒருவேளை விஸ்வாவோட வேலையா இருக்குமோ.

காலைல பால் ஆகுறதில்லைன்னு படிச்சி விழுந்து விழுந்து சிரிச்சேன்.:))))))))))

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/09/blog-post_21.html

வல்லீம்மா என்ன சொல்றதுன்னு தெரியலை..... படிக்கக் கஷ்டமா இருந்தது. முருகா!

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/09/blog-post_27.html

நல்லா கதை சொல்ற. ரொம்ப நல்லாவே கதை சொல்ற. உங்கிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு. நெறையவே இருக்கு.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/

விடுகதை ஒரு தொடர்கதை....அருமையான படம். அருமையான பாடல்கள். இந்தப் பாடல் நல்ல பாடல்தான். ஆனாலும் இந்தப் படத்தின் சிறப்பான பாட்டு "நாயகன் அவன் ஒருபுறம் அவன் விழியில் மனைவி அழகு" என்ற பாடல். கே.ஜே.யேசுதாசும் எஸ்.ஜானகியும் பாடியது. மிகமிக அருமையான பாட்டு. கங்கை அமரன் இசை. கங்கையமரன் இசையைக் கேட்கும் பொழுது...கிராமத்துப் பாடல்களில் அண்ணனைப் போல இசையமைத்தாலும்...அவர் மெல்லிசை மன்னரின் பாணியைப் பின்பற்றுவது போலத் தோன்றுகிறது.

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/09/wishes_29.html

குஷ்பூவுக்குப் பெறந்த நாள் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/09/21.html

// VSK said...
படம் பெயர் நினைவுக்கு வரவில்லை.

பாடலோ மறக்கவொண்ணா பாடல்1

"அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே!"

பாடியவர் ஜானகி
இடையில் இளையராஜாவும் ஒரு வசனம் பேசுவார். //

வியெஸ்கே, நீங்கள் குறிப்பிடும் பட்டம் கோயில் புறா. நீங்கள் குறிப்பிடும் பாடலைப் பாடியவர் பி.சுசீலா. எஸ்.ஜானகி அல்ல. உடன் பாடியவர் உமா ரமணன்.

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2007/03/blog-post.html

சூடிக்கொடுத்தாள் சுடர்கொடி
அதை
நாடிப் பிடித்தான் பரந்தாமன்
தேடிக் கொடுக்க எத்தனையோ
இருப்பினும்
பாடிக் கொடுத்து அவனையே பெற்றாள்
வாழி வாழி வாழியவே

நெருநல் என்பதுதான் நென்னல் என்றாகி நென்னே என்றும் ஆகி...தமிழில் மறைந்து கன்னடத்தில் நின்னா என்றும் தெலுங்கில் நின்னே என்றும் வழங்கப்படுகிறது என்று நினைக்கிறேன். வதுவை கன்னடத்தில் மதுவே ஆனது போல.

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2007/09/blog-post_28.html

ஜோசப் சார்....அந்த நெலமை வந்தாச்சு...மதங்கள்ள இதெல்லாம் சாதாரணமப்பா! உண்மைதாங்க. இந்தியால மட்டுமில்ல...பெரும்பாலும் ஊரூருக்கு அப்படித்தான் இருக்கு.

பதவீல இருக்குறவங்க இல்லாதவங்கன்னு எல்லாருக்கும் ஒளறிக் கொட்டும் சுதந்திரம் இந்தியாவில் மட்டுமே இருக்கிறது.

எனக்கு என்ன தோணுதுன்னா அமைதி என்பது மாயை. அது முன்பும் இருந்ததில்லை. இப்பொழுதும் இல்லை. நாளையும் இருக்கப் போவதில்லை. சண்டையும் சச்சரவும் போர்களும் சிந்தும் குருதியும் எப்பொழுதும் நடந்து கொண்டேயிருக்கும். மனிதன் இறுதிவரை மனிதாகவே வாழப் போவதில்லை. ஒரு சிலர் மனிதனாக வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். வாழுவார்கள். ஆனால் அவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/09/blog-post_28.html

கோவி, உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். நீங்கள் சொல்வதும் ஜோசப் சார் சொல்வதும் நான் நினைப்பதும் ஒன்றுதான். ஆனால் சொல்லும் முறை வேறு விதமாக இருக்கிறது.

அரசியல் பேசுகிறவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. மதவாதிகள். உலகம் முழுவதும் அதுதான் நடக்கிறது. குன்றக்குடி அடிகளாரோ வாரியாரோ அரசியல் பேசியிருக்கின்றார்களா என்ன? அவர்கள் ஆன்மீகவாதிகள். உண்மையான ஆன்மீகவாதிகள் சமூக அக்கறை கொண்டவர்களாகவும் நல்வழி சொல்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய நிலையில் இந்த எதிர்பார்ப்பெல்லாம் நிறைவேறாது என்பதுதான் உண்மை. அரசியல் செய்கிறவர்களுக்கு மதம், மொழி, இனம், நிறம் ஆகியவை நன்றாகவே உதவும். இன்றைக்கும் உதவிக்கொண்டுதான் இருக்கிறது.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/09/68.html

குமரன் ஒரு ஐயம். தென்னிலங்கை கோனா? தென்னிலங்கைக் கோனா? இரண்டாவதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

குலசேகர ஆழ்வாருக்கு முன்னும் பின்னும் சேரமான் குடும்பம் சைவமாக இருந்தது. அதே குடும்பத்தில் இருந்து ஒரு சைவ இலக்கியமும் இருக்கிறது என்று நினைக்கிறேன். சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

G.Ragavan said...

http://vanusuya.blogspot.com/2007/09/blog-post.html

இதான் ஆப்பிள் பூவா....அழகா இருக்கே. அதான் பழமும் அழகா இருக்கு. கிரீன் அப்பிள்னு சொல்றாங்களே...அதோட பூ எப்பிடி இருக்கும்?

G.Ragavan said...

http://muslimpage.blogspot.com/2007/09/04_29.html

மிக நல்ல போராட்டம். எல்லாரும் ஓர் நிறை. மனிதர்களுக்குள் பாகுபாடு பார்ப்பது மிகத் தவறு.

G.Ragavan said...

http://kalaignarkarunanidhi.blogspot.com/2007/09/blog-post_29.html

மது என்றால் தேன் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று சோ சொல்லியிருப்பது நகைச்சுவையின் உச்சகட்டம்.

வனப்பிரஸ்தத்திற்கு மது பொருந்தாதா? அதாவது சோ சொல்லும் தேன் பொருந்தாதா?

G.Ragavan said...

http://pstlpost.blogspot.com/2007/09/blog-post_8084.html

// Anonymous said...
//ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று முயற்சிப்பார்//

ithu semma joke.... all vijay movies are same... rendu kuthu paattu, moonu duet, naalu fight... //

நானும் ஒத்துக்கிறேன். அப்படி வித்தியாசமா விஜய் என்ன செய்றாருன்னு தெரியலை. ஒரே கதைதான். அதத்தான் இப்பிடி அப்படித் திருப்பித் திருப்பி எடுக்கிறாரு. இந்தப் படங்கூட ஏதோ பழைய படத்தோட ரீமேக்குன்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://birund.blogspot.com/2007/09/blog-post_29.html

ஓ காப்பிக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா. இருங்க ஒரு காப்பி குடிச்சிட்டு வாரேன். :)

G.Ragavan said...

http://thabaal.blogspot.com/2007/09/blog-post_17.html

நாங்கள்ளாம் சீலான்னுதான் சொல்லுவோம். சென்னைப்பக்கந்தான் வஞ்சிரம்னு சொல்வாங்க.

கணவாய் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். சாப்பிட்டிருக்கேன். ஆனா எனக்குக் கணவாய் பிடிக்காது. நீங்க சொன்னாப்புல ரப்பர் மாதிரி இருக்கும். வட்டவட்டமா வெட்டி பஜ்ஜி போல பொறிச்சி வெச்சிருக்காங்க. ஆனா அவ்வளவா பிடிக்கலை. தமிழகத்துல கணவாய் அவ்வளவா கிடைக்காது.

G.Ragavan said...

http://tamil-old-songs.blogspot.com/2007/08/sweet-seventies-tamil-songs.html

யாழ் சுதாகர், உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. எழுபதுகளில் எழுந்த இன்னிசைச் சுரங்களைச் சரங்களாக்கி எங்களை நோக்கித் தொடுத்தீரே...ஆகா! வாழ்க வாழ்க. இவைகளில் பல பாடல்கள் தேடினாலும் கிடையாதவை. அவைகளைக் கேட்கவும் இறக்கவும் வசதி செய்த உங்களைப் பாராட்டினாலே தகும். நீடு வாழ்க நீவிர். நீண்டு வாழ்க உங்கள் இசைத் தொண்டு.

G.Ragavan said...

http://tamil-old-songs.blogspot.com/2007/08/sweet-seventies-tamil-songs.html

பிறகு இன்னொரு குறிப்பு. எழுபதுகளில் பெரிய இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர். அவருடைய படத்தையும் நீங்கள் இணைத்திருந்திருக்கலாம். பாலு, ஏசுதாஸ், வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன் ஆகிய பாடகர்களை வளர்த்து விட்டதே அவர்தான். சொர்ணலதாவை அறிமுகப் படுத்தியதும் அவர்தான். அவருடைய பங்களிப்பை மறுக்கவே முடியாது என்பதால் இந்தக் கோரிக்கை. நன்றி.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/09/blog-post_26.html

அருமை. கதை அடுத்த பகுதியிலா... காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/09/3.html

நல்ல தொடக்கம். இனிய எளிய வாழ்க்கை. கந்தனின் வாழ்வு செல்லும் பாதை எதுவென்று கந்தன் புகழ் பாடும் விஎஸ்கே சொல்லித் தெரிந்து கொள்வோம்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/09/blog-post_29.html

ஒழுக்கவிதிகள் இடம் பொருள் ஏவலைப் பொருத்து மாறுகிறது.

இங்க நெதர்லாந்துல பெரும்பாலும் எல்லாரும் மது அருந்துறாங்க. ஆனா யாரும் தப்பா நடந்து பாத்ததில்லை. நம்மூர்ல மது அருந்தாமைன்னு சொல்றோம். ஆனா குடிச்சிப் போட்டு வம்பு செய்றவங்க எத்தனை பேரு. வரைமுறையற்ற உடலுறவுன்னு சொல்றோம். ஆனா யாரும் யாரையும் கையைப் பிடிச்சு இழுக்குறதில்லை. ராத்திரி 12மணிக்கு ஒரு பொண்ணு தனியாப் போக முடியுது. நம்மூர்ல பண்பாடும் கலாச்சாரமும் கட்டிக்காத்துக் குட்டிச்சுவராக்கி வெச்சிருக்கோம். இது பண்பாட்டுக் காவலவர்களும் மதவாதிகளும் ஆணாதிக்கவாதிகளாக இருப்பதால்...நம்ம நாடு இப்பிடியே இருக்கு. ஒன்னும் பண்ண முடியாது.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/09/300.html

இதென்ன கூத்து...தாத்தா சொத்து பேரனுக்குத்தான். ஒழுங்கா கோயில் கிட்ட இருந்து பிடுங்கி அன்னமய்யா சந்ததியினருக்குக் குடுங்க. கோயில்கள்ள ஏற்கனவே பெருச்சாளிகள் நெறைய இருக்கு. இதுல இதையும் குடுத்தா முடிஞ்சது கதை.

G.Ragavan said...

http://muslimpage.blogspot.com/2007/09/blog-post_29.html

முருகா...படிக்கவே பயமா இருக்கே.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/09/68.html

// குமரன் (Kumaran) said...
இரண்டிற்கும் என்ன வேறுபாடு இராகவன்? நான் இணையத்தில் தேடியவரை தென்னிலங்கை கோன் என்ற பாடமே இந்தப் பாசுரத்திற்கு இருக்கிறது. அப்படி தேடியதில் கிடைத்தது இன்னொன்று. மன்னு புகழ் கோசலை என்று இங்கே எழுதியிருக்கிறேன். ஆனால் பல இடங்களில் மன்னு புகழ் கௌசலை என்ற பாடம் இருக்கிறது. //

புட்டி பாலுக்கும் புட்டிப் பாலுக்கும் உள்ள வேறுபாடுதான். வேறென்ன.

// குலசேகர ஆழ்வாருக்கு முன்னும் பின்னும் சேரமான் குடும்பம் சைவர்களாக இருந்ததற்குத் தரவுகள் என்ன இராகவன்? சொன்னால் தெரிந்து கொள்வேன்.//

வரலாறுதான். வேறென்ன. எங்கு படித்தேன் என்ற நினைவில்லை. கவியரசர் கூட சேரமான் காதலி என்ற புதினத்தில் கூறியிருக்கிறாரே.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/09/68.html

// குமரன் (Kumaran) said...
சரி. புட்டி பாலுக்கும் புட்டிப்பாலுக்கும் என்ன வேறுபாடுன்னாவது சொல்லுங்க இராகவன். //

கிழிஞ்சது போங்க. என்ன குமரன்..கிண்டலடிக்கிறீங்களா? ரெண்டுல ஒன்னு இலக்கணப் பிழைன்னு தோணுது. திருவரங்கக் கோன்னுதானே சொல்வோம். திருவரங்கம் கோ என்றா சொல்வோம்?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/09/300.html

// இவரது பக்திப் பாடல்களைக் கேட்டு பரவசம் அடைந்த மன்னர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி-திருமலையில் 28.58 ஏக்கர் நிலத்தை அன்னமாச்சார்யாவுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. //

ஆக...இது பரிசாக வழங்கப்பட்டது. இத எப்படியும் பயன்படுத்தும் உரிமை அன்னமய்யாவுக்கு உண்டு. அவரு உயில் எதுவும் எழுதீருக்காரா? அதுல ரெண்டு சாச்சிக் கையெழுத்து இருக்கா? அப்படி எதுவும் இல்லைன்னா சொத்து பேரக்கொழந்தைகளுக்குத்தான்.

என்ன சொன்னீங்க? திருமலைநாயக்கரு மகாலா? சந்ததியினர் இருந்திருந்தாங்கன்னா அது அவங்களுக்குத்தான் சொந்தம். தஞ்சாவூர் அரண்மனையில இன்னும் மராட்டிய சர்ஃபோஜியின் வம்சாவளியினர் இன்னும் இருக்காங்க. அது தெரியும்தானே. மைசூர் அரண்மனையிலும் அப்படித்தான். இன்னும் அது உடையாரோட சொத்துதான். கழுகுமலைக் கோயில் எட்டையபுரம் ஜமீந்தார் குடும்பத்தோட பராமரிப்புலதான் இருக்கு. கோயில் அவங்களுக்குத்தான் சொந்தம். ஜமீந்தார் பதிவியும் பவிசும் அவங்களுக்கு இல்லைன்னாலும் கோயில் அந்தக் குடும்பத்தினரோட பராமரிப்புதான்.

ஆகையால சொத்த மொதல்ல திருப்பதி கோயில்ல இருந்து பிடுங்கி....உண்மையான வாரிசுகள் கைல குடுக்கலைன்னா....கருவரை நுழைவுப் போராட்டம் நடத்தப்படும்.

// வெட்டிப்பயல் said...
சில சந்தேகங்கள்...

பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் அரசாங்கம் நிலம் அளித்ததாக ஏதாவது சான்று இருக்கிறதா இல்லை கொடுத்தால் அது கணக்கில் வருமா என்று கேட்கிறீர்களா? //

கிண்டலாயிருக்கா? பாரதியாருதான் சோத்துக்கில்லாமச் செத்தாரே. அப்புறம் என்னத்த நெலம் குடுக்குறது. பாரதிதாசனுக்குத் தெரியலை. ஒருவேளை வீடு கீடு இருந்திருந்தா...அரசாங்கம் அவங்க சந்ததியினருக்கு நல்ல விலை கொடுத்து...பொதுவுடைமையாக்கலாம். அதையும் கூட நீதிமன்றத்துல தடுக்க முடியும்னுதான் தோணுது.

G.Ragavan said...

http://valai.blogspirit.com/archive/2007/09/27/beggars.html

யாராவது யாசகம் கேட்டா....கொடுக்காம போய்ட்டா கொஞ்ச நேரத்துக்கு ஒரு மாதிரி இருக்கும். ஆனா இப்படிப் பாக்குறப்போ அதுக்குத் தேவையேயில்லைன்னு தோணுது. இருக்குற புண்ணியம் போதும்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/09/68.html

http://www.tamil.net/projectmadurai/pub/pm0007/pm0007.pdf

குமரன், இங்கும் தென்னிலங்கைக் கோமான் கிடைப்பார்.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/09/3.html

ஐயா, பதிவைப் படிக்கையில் எனக்கு ஒன்று தோன்றியது. அது சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்லவே விரும்புகிறேன்.

பழைய தமிழ் நூல்களில் இருந்து இன்று வரை..முருகனைச் செக்கச் சிவந்தவன். பவழம் போல மேனி. இப்படியே போகிறதே. அதற்கும் அரக்கனுக்கும் எதுவும் தொடர்பு இருக்கிறதா?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/09/300.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கழுகுமலைக் கோயில் எட்டையபுரம் ஜமீந்தார் குடும்பத்தோட பராமரிப்புலதான் இருக்கு. கோயில் அவங்களுக்குத்தான் சொந்தம். ////

கழுகுமலைய விடுங்க. திருமலைக்கு வருவோம். நான் எவ்வளவோ சொன்னேன். அதையெல்லாம் விட்டுட்டு கழுகுமலைல குற்றம் சொல்ல வந்துட்டீங்க. வசதியா தஞ்சாவூரையும் மைசூரையும் ஒதுக்கீட்டீங்க.

நிலபுலன் யாருக்குக் குடுத்தது? அன்னமய்யாவுக்கு. யாரு குடுத்தது? அரசரு. குடுத்தப்புறம் அது அரசருக்குச் சொந்தமில்லை. அன்னமய்யாவுக்குச் சொந்தம். ஏன் குடுத்தாரு. பாட்டுல மயங்கிக் குடுத்தாரு. ஆக அந்தச் சொத்து அன்னமய்யாவின் சுயசம்பாத்யம். அதை எப்படியும் செலவிட அன்னமய்யாவுக்கு உரிமையுண்டு.

அன்னமய்யா...அத கோயிலுக்கு எழுதி வெச்சாரா? அதுக்கு ஆதாரம் எதுவும் இருக்கா? உயிலு குயிலு? அப்படி அன்னமய்யா கோயிலுக்கு எழுதி வெச்சிருந்தா நீங்க சொல்றது சரி. ஆனா கோயிலுக்கு அவர் எழுதி வெச்ச மாதிரி தெரியலையே. அதுக்கு ஆதாரம் இருக்குற மாதிரியும் தெரியலையே. அன்னமய்யா பாட்டுல அனைத்தும் இறைவனுக்கேன்னு சொல்லீருக்காருன்னு புரட்டு விடாதீங்க.

அப்படி அன்னமய்யா இப்படித்தான் இந்தச் சொத்தைப் பயன்படுத்தனும்னு உரிமை சொல்லாததால அது அவருடைய வழிவந்தவர்களுக்கு உரிமையாகுது.

இதுக்கு விளக்கம் சொல்லுங்க. கழுகுமலைக்கு அப்புறம் போவோம்.

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/09/wishes_30.html

ஜி ஜி வாழ்த்துஜி

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

இன்னும் பல்லாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

http://kalaignarkarunanidhi.blogspot.com/2007/09/blog-post_29.html

// கோவி.கண்ணன் said...
//ஆமாம் மது என்றால் தேன்
அப்ப மாமிசம் என்ன கத்தரிக்காயா?//

தமிழன் ஐயா,
மீனுக்கு 'நீர் வாழைக்காய்' என்ற பொருளில் கல்கத்தாவில் சோஅண்ட்சோவினர் விரும்பி சாப்பிடுவார்களாம். //

இது உண்மையில்ல கோவி. அதாவது மாமிசம் சாப்பிடுறதில்லை. நீர் வாழைக்காய் அல்லது நீர் புஷ்பம்னு சொல்றது. எனக்குத் தெரிஞ்சு வங்காளிகள் எல்லாருமே அசைவம் உண்பவர்கள். மீன் மட்டுமல்ல கோழி ஆடு எல்லாமே. என்னுடைய வங்காள நண்பனிடம் கேட்ட பொழுது அசைவம் சாப்பிடுவதற்காக "நீர் வாழைக்காய்" என்றெல்லாம் சாக்கு சொல்லிக் கொள்வதில்லையாம். என்னுடைய நண்பன் சட்டர்ஜி வீட்டிலேயே ஆடு கோழி மீன் எல்லாமே சாப்பிட்டிருக்கிறேன்.