அருமையான பாடல். இதே முன்பே கேட்டிருக்கிறேன். மீண்டும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.
எந்த மொழியா இருந்தா என்ன...கடவுளுக்கு எல்லாம் புரியும். இந்த மொழியில செஞ்சாத்தான் அது சரியாகும்னு சொல்றது தப்பு. அவங்கவங்களு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில கும்பிட்டுக்கலாம். என்ன சொல்றீங்க ரவி?
1. கோயில் புறா. ஒரு இசைச்சித்திரம். ஆனால் படம் ஓடவில்லை. ஆனால் பாடல்கள் ஒவ்வொன்றும் தேன். தேன். இசையரசியும் உமாரமணனும் "ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்" என்று பாடுகையில் உண்மையிலேயே நமது ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும். இதே படத்தில் வேதம் நீ என்ற பாடலும் மிக இனிமையானது. போன வாரந்தான் இந்தப் படத்தை என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரிஜினில் விசிடியில் பார்த்தார்கள்.
2. பயணங்கள் முடிவதில்லை. மிகமிகப் பெரிய வெற்றி பெற்ற படம். புதிதாக நான் எதுவும் சொல்லித்தான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று இல்லை. அவ்வளவு பிரபலம். சாலையோரம் பாடல் மிக அருமையானது. இளமையானது. இதே படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் "தோகை இளமயில் ஆடி வருகுது"
3. கிழக்குக்கரை...எங்கள் மாவட்டத்தில் தூத்துக்குடிக்குப் பக்கத்தில் உள்ள ஊரில் எடுத்தது. சட்டென்று பெயர் நினைவிற்கு வர மாட்டேன் என்கிறது. திருச்செந்தூருக்கு ரெண்டு ஸ்டாப் முன்னாடி...ஆஆஆ...எப்படி மறந்தேன்.
4. மணிசித்ரதாழு. மிக அருமையான படம். படத்தைப் பார்த்தவர்களுக்கு...அது சந்திரமுகியை விடக் காட்டிய உளப்பூர்வ பிரம்மாண்டம் புரியும். ஷோபனா நடிப்பு மிகச் சிறப்பு. தேசிய விருது கிடைத்ததே. இந்தப் பாடலை எந்த ராகத்தில் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் இசையமைத்தாரோ..அந்த ராகத்தில் பாடினால் நம்மிடமுள்ள ஒன்று காணாமல் போகுமாம். இதை எம்.ஜி.ராதாகிருஷ்ணன் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னதாக மலையாள நண்பன் கூறினான். நமக்குத்தான் ராகமும் தாளமும் தெரியாதே. என்ன ராகமாம் அது?
சத்தியமாச் சொல்றேன்.....இது படத்த விடவும் நல்லாவே இருக்கு. போன வாரந்தான் டிவிடி பிரிண்ட்டை இறக்குமதி செஞ்சு பாத்தேன். படத்த வேக வேகமா ஓட்டி ஓட்டிப் பாக்க வேண்டியதா இருந்துச்சு. ஆனா இந்தப் பதிவு எவ்ளோ நல்லாருக்கு. விவாஜி சூப்பரப்பு.
புதையல்....புதைப்பது புதையல். அன்பு கூடப் புதையல்தான். உள்ளத்தில் புதைந்து கிடப்பதால்.
கந்தனுக்கான புதையல் என்ன மாதிரி என்பது விரைவில் தெரிந்து விடும். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இந்த பத்து ஆட்ட வெச்சி ராசா என்ன செய்யப் போறாருன்னு பொருத்திருந்து பாப்போம்.
தங்க ஒளி...அதுவும் என்னன்னு பின்னாடிதான் தெரியும் போல. காத்திருப்போம்.
அவங்கவங்களுக்கு எந்த மொழி வேணுமோ..அதப் படிச்சிக்கலாம். வடக்க போயி வேலை பாக்கனும்னா இந்தி தெரிஞ்சிருக்குறது நல்லது. வடக்க போல...ஆனா வெளிநாட்டுக்குப் போறேன்னு சொல்றவன்...அந்த நாட்டு மொழியைக் கத்துக்குறது நல்லது.
அது சரி. நீங்க திமுக. உங்களுக்கு இந்தித் திணிப்பைப் பத்தித் தெரியும்னு சொல்லீருக்கீங்களே. திமுக காரனா இருந்தா மட்டுந்தான் இந்தித் திணிப்பு பத்தித் தெரிய வருமோ?
இந்தப் பதிவோட கருத்துகளோட முழுக்க முழுக்க ஒத்துப்போறேன்.
பி.ஜே.பி நல்ல கட்சி இல்லைன்னே வெச்சுக்குவோம். ஆனா மத்தபயகளும் அப்படித்தான்னு வெச்சுக்கோங்களேன். எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைகதான். எதக் காட்டி வியாபரம் செய்றாங்கங்குறதுதான் மாறுபடும்.
தேர்தல் முடிஞ்சதும் பி.ஜே.பி+ஜ.த கூட்டணி அமையலை. மொதல் கூட்டணி காங்கிரசு+ஜ.த. அதுல மகன விட்டே கட்சிய ஒடைக்கச் சொல்லி...தனக்கும் அதுக்கும் தொடர்பில்லைன்னு சொல்லி காங்கிரசுக்குப் பால்பாயாசம் குடுத்துட்டுதான் பி.ஜே.பியோட கைகோர்த்தாங்க. ஒப்பந்தப்படி பதவியைக் குடுக்கனுமே.....மனசில்லை. ஆச யார விட்டது. ஒடனே குண்டக்கமண்டக்க பேசுறாரு. இந்தத் திடீர் போதிமரம் எங்கயிருக்குன்னு சொன்னா அதுக்கடியில எல்லாரும் உக்காந்திருந்திட்டு வரலாம். கர்நாடகால நிலையான ஆட்சீங்குறது ரொம்ப ரொம்பக் கஷ்டம். எஸ்.எம்.கிருஷ்ணா ஒருத்தர்தான் அஞ்சு வருசம் உக்காந்து ஆட்சி செஞ்சாரு.
தமிழ்நாட்டுலயும் கேட்டீங்கன்னா..எனக்கு எல்லாம் ஒரே குட்டை..ஒரே மட்டையாத்தான் தெரியுது. ஒன்னை எதுக்குறதால இன்னோன்ன ஆதரிக்க வேண்டிய நெலமை நெறையப் பேருக்கு. அட...எதுக்க வேண்டியதுன்னா ரெண்டையும் எதுப்பமேன்னு இருக்குறது என்னோட நெலமை. ஆனா ஒன்னு எல்லா அரசியல்வாதிகளும் புஷ் மாதிரிதான் பேசுறாங்க. "எங்க கூட இல்லைன்னா நீ துரோகி"ன்னு.
கருணாநிதிக்கும் சரி வாஜ்பாயிற்கும் சரி இப்பொழுது உண்மையிலேயே தேவை ஓய்வு. ஞாநி எந்த உள்ளர்த்தத்துல சொன்னாரோ தெரியாது. ஆனா டீவில பாக்குறப்போ கஷ்டமாத்தான் இருக்கு. என்னையைக் கேட்டா ஸ்டாலினை முன்னிறுத்த இது சரியான நேரமாத்தான் தோணுது. ஷங்கர் தயாள் சர்மா முந்தி பாக்குறப்போ கஷ்டமாயிருக்கும். வாஜ்பாயும் இப்பிடித்தான். அதுலயும் முட்டீல ஏதோ அப்பரேஷன் செஞ்சாராமே. வண்டீல தள்ளீட்டு வந்தாங்க. ஐயோ பாவம்.
ஞாநி நெனச்ச உள்ளர்த்தம் எனக்கு இல்லைன்னாலும் கருணாநிதி ஓய்வெடுக்குறது நல்லதுன்னு வயச மட்டும் வெச்சு எனக்குத் தோணுது. இப்பத்தான் மகேந்திரன் பதிவுல இப்பிடித்தான் சங்கர் தயாள் சர்மா நடக்க முடியாம நடந்தப்பயும் கஷ்டமா இருந்துச்சு. வாஜ்பாய வண்டீல உக்கார வெச்சித் தள்ளிக்கிட்டு வந்தாங்க. அப்பயும் கஷ்டமா இருந்தது. இப்ப இவரப் பாக்கைலயும் கஷ்டமாத்தான் இருக்குன்னு பின்னூட்டம் போட்டுட்டு வந்து பாத்தா நீங்களும் சங்கர் தயாள் சர்மாவையும் வாஜ்பாயையும் எடுத்துச் சொல்லிக் கேள்வி கேட்டிருக்கீங்க. நல்ல கேள்வி. வயதானவர்களுக்கு ஓய்வு வேணும்னா வயதான எல்லாருக்கும் ஓய்வு வேணுந்தான்.
இது ரெண்டும் முடியாம...கருத்துக்கு என்ன கருத்துச் சொல்லி தன்னை நிலைநிறுத்திக்க முடியலையோ...அப்பத்தான் ஆபாசக்கும்மிகளும் பின்னூட்டங்களும் வர்ரது. இது கண்டிப்பா மறையனும்.
நிகழ்ச்சியை அமைப்பவர்கள்..பாடகர்களை அழைக்கையில் தமிழில் பாடுமாறு சொல்லியே அழைக்க வேண்டும். அந்த அடிப்படை அறிவு அவசியம். நடுவில் ஒன்றிரண்டு தெலுங்குப் பாட்டு பாடினால் பாடட்டும். ஆனால் நிகழ்ச்சி தமிழ் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். தமிழில் பாடினால்தான் காசு என்று சொன்னால் பாடி விட்டுப் போகிறார்கள்.
சாய்பாபா என்ன... எங்க பக்கத்து வீட்டு பாட்டி கூடத்தான் நெலாவுல தெரியுறாங்க. அவங்க நெலாவுல வடையே சுட்டிருக்காங்க. வெறும் தரிசனம் தர்ரது எந்த மூலைக்கு. ஆனானப்பட்ட கடவுள் சூரியன்ல காட்சி குடுத்தா நல்லாயிருக்கும்.
// ILA(a)இளா said... இந்தக் கடைசி வரிய வெச்சுதானே பதிவ ஓட்டனும்னு நினைக்கிறீங்க. அதாங்க சிவாஜி சக்ஸஸ் ரகசியம். ஏன்.. படங்களின் விமர்சனம்னு வெச்சுட்டு போயிருக்கலாமே? அதை வெச்சு பொழப்பு ஓட்டனும்னு தெரிஞ்சு வெச்சி இருக்கீங்க //
என்ன இளா இப்பிடிச் சொல்லீட்டிங்க!பின்னே சிவாஜியோட சக்சஸ்னா சும்மாவா இருக்கு. பராசக்தீல தொடங்கி...எத்தனை சிவாஜி படம்..எத்தனை சிவாஜி படம். ஒன்னா ரெண்டா...சாமி வேசம்..ஆசாமி வேசம்...எத்தனை வேசங்களைப் போட்டு என்னமா நடிச்சிருக்காரு சிவாஜி. பரமசிவனே நேருல வந்து நின்னாப்புல இருக்குமே. கப்பலோட்டிய தமிழன் பாத்துட்டு..வ.உ.சியோட மகன்...தியேட்டர்ல அப்பா அப்பான்னு கதறி அழுதாராமே...என்ன நடிப்புய்யா அது.
அடடா...அப்படி இருக்குறப்போ...பெனாத்தலாரே சிவாஜி படம் சரியில்லைன்னு நீங்க சொல்லலாமா? என்னது...இது சிவாஜி நடிச்ச படமில்லையா. யாரு ரஜினிகாந்த் நடிச்ச(!) படமா? ஓ அப்படியா...அப்பச் சரி.
இந்த மாய மந்திரஜால மோகினிய எறக்குமதி செய்ய முடியுமான்னு சொல்லுங்க. எப்படியிருக்குன்னு பாக்குறேன்.
வெற்றி, பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. வேலிக்கருவுதான் தமிழ்நாட்டின் தேசிய மரம் என்ற நிலை. வேலிக்கருவின் பலன்....மழையைத் துரத்தும். :( தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருசில பகுதிகளைத் தவிர...மற்ற இடங்கள் வறட்சி. திருநெல்வேலி நாகர்கோவில் மாவட்டங்கள் தாவலை. கோவை, தஞ்சை, தேனி போன்ற இடங்கள் செழிப்பைக் காட்டலாம். மற்றபடி..மொட்டையோ மொட்டை.
எத்தனை அழகான இடங்கள். கட்டிடங்கள். அப்பப்பா. அத்தனையையும் வைத்து வாழ்ந்தாலும்...மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்ம்ம்ம்ம். புரட்சீன்னு வந்தா....ஆண்டைக்கு எப்பவும் பேண்டைதான்.
ஒரு நல்லபடம் பாத்தோங்குற திருப்தியைப் பெரும்பாலும் மலையாள வங்காளப் படங்களப் பாத்துத்தான் தீத்துக்குறது. நீங்களும் அப்படித்தானா? அது சரி. நம்ம ஒற்றுமைதான் தெரிஞ்சதாச்சே.
மலையாளத்துலயும் பாண்டிப்படா, ராஜமாணிக்கம் எல்லாம் வரும். ஆனா நல்ல படங்களும் கண்டிப்பா வரும்.
ஒரு படம். பேரு நெனவில்லை. மோகன்லால், ரேகா, முரளி (டும்டும்டும் ஜோதிகா அப்பா), சுகுமாரி நடிச்சிருப்பாங்க. பழைய படம். ரேகா முரளி ஜோடி. மோகன்லால் கல்யாணமாகாத பணக்காரரு. சுகுமாரிதான் வேலைக்காரி மாதிரி சின்ன வயசுல இருந்து பாத்துக்கிறது. லாலுக்குக் கொழந்த ஆசை வரும். அப்ப முரளியோட ஆப்பரேஷனுக்கா ரேகாவுக்குப் பணம் தேவைப்படும். செயற்கை முறைல கருவுண்டாக்கி ரேகா சுமப்பாங்க. ஆனா கொழந்தை பொறந்ததும் தரமாட்டேன்னு அடம் பிடிப்பாங்க. சிலபல பிரச்சனைகளுக்குப் பிறகு மோகன்லால் போகட்டும்னு விட்டுருவாரு. கார்ல முரளி, ரேகா, கொழந்தை எல்லாம் ஏறிப் போனதும் பக்கத்துல இருக்குற சுகுமாரியப் பாத்துக் கேப்பாரு "அந்தக் கொழந்தைய அவ பாத்துக்கிற மாதிரி....நீ என்னையப் பாத்துக்குவியா"...அப்பா சுகுமாரியோட முகபாவங்கள்..அடடா. அவ்வளவுதான். படம் முடிஞ்சு போச்சு. இதே முடிவு தமிழ் சினிமால இருந்திருந்தா? "சுகுமாரி, அதோ போறாளே....என்னோட குழந்தையத் தன்னோட கொழந்தையாத் தூக்கிக்கிட்டு...அவ எவ்வளவு அன்போட ஆசையோட அந்தக் கொழந்தையப் பாசமா பாத்துக்கிறாளோ...அதே அளவு ஆசையோடயும் பாசத்தோடயும் என்னையப் பாத்துக்கிறதுக்கு ஒரு அம்மா வேணும். அந்த அம்மாவா நீங்க இருப்பீங்களா? சொல்லுங்கம்மா சொல்லுங்க" அப்படீன்னு கதாநாயகன் கதறீருப்பாரு. ஏன்னா..அப்பத்தான் நம்மாளுகளுக்கு மோகன்லான் சுகுமாரி கிட்ட என்ன கேக்குறாருன்னே புரியும். இல்லைன்னா என்ன கேக்குறாருன்னே புரியாது.
இயக்குனர்களை மட்டும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை. நம்ம மக்களையும் சொல்லனும். ஏன்னா..இயக்குனர்கள் மக்களுக்குள்ள இருந்துதான வர்ராங்க. ஆகையாலதான் இப்பிடியிருக்கு.
ஒரு பாட்டாவது உருப்படியா எடுக்குறாங்களா....விட்டாப் பொலம்பிக்கிட்டேயிருப்பேன்.
// ILA(a)இளா said... நல்ல புதையல் தான். சர்வர் சுந்தரம் கூட கிடைக்க மாட்டேங்குது. வாங்கியோ, இறக்கியோ வைங்க. வந்து வாங்கிக்கிறேன். எதுக்கும் நம்ம மயிலார் கிட்டே கேட்டுருங்க. அவர் கிட்ட இல்லாதததா? //
மயிலார் கிட்ட நெறைய இருக்கு. சமீபத்துல கூட வாங்கீருக்காரு. ஆனா இந்த மூனு படமும் இல்ல. மதுரைல சில சினிமா டிவிடிக் கம்பெனிகள் இருக்கு. அங்க எல்லாம் போய்த் தேடிப் பாத்தா கிடைக்கலாம். நானும் முடிஞ்ச வரைக்கும் படங்களைச் சேகரிச்சிக்கிட்டுதான் இருக்கேன்.
சர்வர் சுந்தரம் கிடைக்கும். எங்கிட்ட இல்ல. ஆனா கெடைக்க வாய்ப்பிருக்கு. எங்கயோ டிவிடி பாத்தேன். ஆனா வாங்கலை. சென்னைல ஏவிஎம் சவுண்டு..அதாங்க சங்கராஹால் பக்கத்துல இருக்கே. அங்க போய்ப் பாருங்க. நெறைய இருக்கு.
அப்புறம் ஒரு வேண்டுகோள். இவ்ளோ பொதையல்கள எடுக்குறீங்க. எனக்கு ரெண்டு பொதையல் வேணும். தேடிக்குடுங்கய்யா.
1. என் இனிய பொன் நிலாவே - பாட்டில்ல. படம். பாலுமகேந்திரா இயக்கத்துல வந்த படம். பாண்டியராஜன் நடிச்சிருக்காரு. இதுக்கு மெல்லிசை மன்னரு இசைஞானியும் சேந்து இசையமைச்சிருக்காங்க. இந்தப் படத்துல இருக்குற எல்லாப் பாட்டும் எனக்கு வேணும். இந்தப் படத்துல எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருக்காங்க.
2. ஞாயிறும் திங்களும் - இந்தப் படம் வெளிவரலை. ஸ்ரீதர் இயக்கத்துல தொடங்கி நின்னு போன படம். சிவாஜி, தேவிகா, கே.பி.சுந்தராம்பாள் நடிக்க இருந்தது. ஆனா பாட்டெல்லாம் பதிவு செஞ்சு ரிலீசும் செஞ்சிட்டாங்களாம். 60களின் சம்பிரதாயம் மாறாம மெல்லிசை மன்னர்தான் இசை. இந்தப் படத்துல என்ன விசேசம்னா....மெல்லிசை மன்னர் இசைல கே.பி.எஸ் பாடி ரெண்டு பாட்டு இருக்கு. பாட்டத்தனையும் எழுதுனது கவியரசரு. இந்தப் படத்துல இருக்குற அத்தனை பாட்டுகளையும் தேடிக் குடுங்கய்யா.
இந்த ரெண்டு புதையல்களையும் கேக்க உதவி செஞ்சா...ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும். புள்ள குட்டியோட நல்லாருப்பீங்க.
மதுமிதா, விகடன் பிரசுரமா இதை வெளியிட்டு இருக்காங்க? தில்லானா மோகனாம்பாள் பழநியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்துல இருக்கே. சென்னைல அவங்க பதிப்பகத்துக்கே போய் புத்தகம் வாங்கினேன். திமோ படிச்சிருக்கீங்களா? படிங்க..அப்பப்பா! ஒரு காலகட்டத்தையே கண் முன்னாடி கொண்டாந்துருவாரு. அவருடைய எழுத்து அருமையான எழுத்து. அறிமுகத்துக்கு நன்றி. இதையும் தேடுறேன்.
// இராமநாதன் said... ஜிரா, //.மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்ம்ம்ம்ம். புரட்சீன்னு வந்தா....ஆண்டைக்கு எப்பவும் பேண்டைதான்.//
சிம்பிளா சொல்லிட்டீங்க.. என்ன புரட்சி/மலர்ச்சினு சொல்லி உள்ள வந்தவங்களும் குடும்பத்துக்கும் சேர்ந்து சுரண்டித் தின்னுட்டுதான் போறாங்க.. அதுக்கு என்ன செய்யிறது?
இந்த மேட்டர்ல தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசேமேல்னு வச்சுக்கலாமா கூடாதா? //
கூடாது. கூடவே கூடாது. ஒரு பேயே உக்காந்து திங்குறதுக்குப் பதிலா ஒரு வாட்டி பேயி..ஒரு வாட்டி பிசாசு...ஒரு வாட்டி குட்டிச்சாத்தான்னு எல்லாரும் சாப்புடட்டும். அதென்ன ஒருத்தரே உக்காந்து சாப்புடுறது.
மருதமல பாத்துட்டேன். படம் எல்லாம் கதம்பமா இருந்தாலும் தொடக்கத்துல இருந்து முடிவு வரைக்கும் ரசிக்க முடிஞ்சது. முழு மசாலாதான்...ஆனாலும் உக்காந்து பாத்தேன். இந்த வருடத்துல வந்த சிறந்த மசாலாபடம்னு விருது குடுக்கலாம்.
என்னது நாச்சியார்புரம் கற்பனையா? பாப்பாப்பட்டி கீரிப்பட்டீல என்ன நடக்குது? அதத்தான் கொஞ்சம் கூட்டிச் சொல்லீருக்காங்க. சரிதானே?
காசு எல்லாம் குடுத்துத் தொலைச்சிட்டானா....சரி...மாமல்லபுரம் போய்ச் சேந்தப்புலதான். அந்த ரெண்டு கல்லு இருக்குதே...அதப் பயன்படுத்தப் போறானாக்கும். படுத்தட்டும் படுத்தட்டும்.
:) நல்ல பதிவு தீவு. ரசித்தேன். தலைப்பிலிருந்து முடிப்பு வரைக்கும்.
எல்லாரும் முகலாய மன்னர் நாட்குறிப்பு எழுதினார். கக்கூஸ் போனதை எழுதினார். நம்மவர் எதை எழுதினார் எனக் கேட்பர். அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முகலாய அரசன் அனைத்தையும் எழுதினான். அதற்கு முன்பு? அவர்கள் எழுதியது பாதுகாக்கப்பட்டது. நம்மவைகள்? தமிழர் வரலாறு எழுத விரும்பினால் எக்கச்சக்கமான சான்றுகள் உள்ளன. ஏதோ காசுக்கு எழுதினர் என்று சொல்வது...சொல்கிறவர்களுக்கே பொருந்தும்.
அருமையானதொரு கலைஞரைக் கௌரவிக்கும் அருமையான முறை. ஒரு தலைமுறைக் கலைஞனை அடுத்த தலைமுறைக் கலைஞர்தான் கௌரவிக்க வேண்டும். எஸ்.எம்.சுப்பையாநாயுடுவுக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே கௌரவம் செய்த பெருமை மெல்லிசை மன்னருக்கு உண்டு. அவருடைய மறைவுக்குப் பின் நாயுடு அவர்களின் துணைவியாரைத் தன் வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றினார் மெல்லிசை மன்னர்.
ஆனால் அவருக்கு அடுத்த தலைமுறைக் கலைஞர்கள் மெல்லிசை மன்னருக்குக் கௌரவம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் மிகமிக வருத்தத்திற்குரிய விடயம். நிச்சயமாக இசைஞானியோ இசைப்புயலோ இதை முன்னெடுத்துச் செய்யலாம். தாங்கள் மதிப்பதாகச் சொல்லப்படும் ஒரு கலைஞனுக்கு இதைச் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா. எஸ்.பி.பாலசுப்ரமணியம் கோதண்டபாணி ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்தார். கண்டசாலாவுக்குச் சிலை வைத்தார். மெல்லிசை மன்னருக்கு ஒரு மேடையில் மட்டும் ஏதாவது செய்யுங்க மக்களே என்று கோரிக்கை வைத்தார். கலைஞர்களே உங்கள் கலைத்திறமையை மதிக்கிறேன். ஆனால் அதற்கு மேலும் நீங்கள் செய்ய வேண்டியதுண்டு. உங்கள் கடமையை நினைவுபடுத்திப் பாருங்கள்.
கவியரசருக்கும் ஒருத்தரும் ஒன்றும் செய்யவில்லை. மெல்லிசை மன்னர் முன்னெடுத்துத்தான் சிலை வைத்தார். வாழும் போதே உங்களுக்கு முந்தைய தலைமுறையைக் கௌரவிக்க என்னய்யா தயக்கம் உங்களுக்கு!!!!
ராஜேஷ், நீங்கள் சொல்வது சரிதான். இசையரசி, எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடிய பாடல்கள் கலக்கல் என்றால் பின்னாளில் வாணிஜெயராமுடன் இணைந்த பாடல்களும் கலக்கலே. இசையரசி அவர்கள் ஜமுனாராணி, லீலா, ஜிக்கி ஆகியோருடனும் இணைந்து பாடியிருக்கின்றார் என்று நினைக்கிறேன். பாடல்கள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. சூலமங்கலம், உமாரமணன், எஸ்.பி.ஷைலஜா ஆகியோருடனும் இணைந்து பாடியுள்ளார்.
நீங்கள் கொடுத்துள்ள பாடலும் மிக அருமையாக இருக்கிறது. தேர்ந்தெடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.
பிரபா மிகவும் அருமையான பாட்டு. உங்கள் கருத்தோடு பாதிதான் ஒத்துப் போகிறேன். என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு முன் ஒரு டிஸ்கி. இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பாடியவர்கள், இசை எல்லாமே மிகமிக அருமை. சரி. இப்பொழுது கருத்துக்குப் போவோம்.
1. என்னைக் கேட்டால் பாடற்காட்சி மிகமிக இயல்பாகவும்..இசை பலபடிகள் இயல்பிற்கும் மேலாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. தமிழர்களில் நூற்றுக்கு 99 பேர் இப்பிடித்தான் ஆடுவார்கள். இப்படித்தான் சிரிப்பார்கள். இப்படித்தான் முழிப்பார்கள். ஆகையால்தான் பாடற்காட்சியும் இசையும் பொருந்தி வரவில்லை. இதை மிகத் திறமையாகக் கையாண்டவர் மகேந்திரன். யாரும் பாட மாட்டார்கள். பாடற்காட்சி போய்க்கொண்டேயிருக்க பின்னணியில் பாடல் ஒலிக்கும். நித்தம் நித்தம் நெல்லிச்சோறு விதிவிலக்கு. அதுவும் மெல்லிசை இசைக்கோர்வையோடு. இந்தப் பாடல் அளவிற்கு அதீத இனிமையான இசைக்கோர்வை இருக்காது. இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது.
2. மிகமிக இனிமையான இந்தப் பாடலை மிக அழகாகவும் படமாக்கியிருக்கலாம். பலர் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் செய்திருக்கலாம். அதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்தப் பயதான் ராசுப்பாட்டீலா? நல்லாத்தான் படம் போட்டிருக்காங்க. இது பாராட்டுக்குரியதே. இந்த மாதிரிப் பண்பாட்டுக் கலப்புகளின் அறிமுகங்கள் நல்லதே. ஒற்றுமையை வளர்க்கும் என்று நம்புவோம்.
கந்தன் இப்பொழுதுதான் பக்குவப் படத் தொடங்கியிருகிறான். தன் முடிவைத் தானே எடுக்கும் திறம் வந்திருக்கிறது. ஊருக்குப் போனாலும் புதையலூருக்குப் போனாலும் வெறும் கை முழம் போடாது என்பதும் புரிந்திருக்கிறது. நல்ல தொடக்கம்.
ஆகா...பிரபா, நான் எப்போ ராஜாவைக் குறை சொன்னேன்? அந்தப் பின்னூட்டத்துல தவறு எங்க நேர்ந்திருக்குன்னு எனக்குத் தோணியதைத் தெளிவாச் சொல்லீருக்கேனே.
=============================== இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ===============================
நானும் இயக்குனர் மேலதான தவறைச் சொல்லியிருக்கிறேன். :)
வணக்கம் இ.க.வள்ளி. இது நகைச்சுவைப் பதிவுன்னு நீங்க சொன்னப்புறம் புரிஞ்சது. ஆனா சில விஷயங்களைச் சீரியசாவும் சொல்லியிருக்கனும். சில விஷயங்களைச் சொல்லாமலும் இருந்திருக்கலாம்.
ஊரெங்கும் தமிழில் ஆங்காங்கு சுவரில் எழுதி வைத்திருப்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. அதை நீங்கள் கண்டித்திருக்கலாம். நகைச்சுவை செய்து விட்டீர்கள்.
தமிழ்ப்பாட்டு நீங்கள் எங்கே கேட்டீர்கள் வள்ளி? தெருக்களில் தமிழ்ப்பாட்டு கேட்டு ஆண்டுகளாகின்றன. சமீபத்தில் நான் கேட்டதில்லை. கன்னடப் பாட்டுகளுக்கும் மக்கள் விசிலடிக்கின்றார்களே. எங்கள் வீட்டுப் பக்கமெல்லாம் அடிக்கிறார்கள்.
என்னது? கன்னட நடிகர்களை நம்மவர்களுக்குத் தெரியாதா? கிழிஞ்சது போங்க. பெங்களூருக்குப் புதுசாப் போனவங்களுக்கு வேணாத் தெரியாம இருக்கலாம். ஆனா அங்கயே இருக்குற தமிழர்களுக்கும் போய் ஆண்டுகள் ஆன தமிழர்களுக்கும் நல்லாவேத் தெரியும். ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க. நாகமண்டலா, நீலான்னு படங்கள் கன்னடத்துல உண்டு. அதுமாதிரியெல்லாம் தமிழ்ல இப்போதைக்கு யோசிக்க முடியுமான்னு தெரியலை. சேரன் கூட மசாலாக்கண்ணாடிக்கு வந்துட்டாரு. அட...அத விடுங்க...சயனைடு? ராஜீவ்காந்தி கொலைய வெச்சி எடுத்த படம்? கன்னடப் படந்தானே? அவங்க நடுநிலையோடு எடுத்திருந்தாங்க. நம்மளும் எடுத்தோமே....என்ன படமெது? குற்றப்பத்திரிக்கை. கன்னடத்துல நல்ல படங்கள் பாட்டுகள் நெறையவே இருக்கு. டி.ஜி.லிங்கப்பா, ஜி.கே.வெங்கடேஷ், விஜயபாஸ்கர்னு தமிழர்கள் கொடிகட்டப் பறந்த திரையுலகம் அது.
சென்னை மாதிரி சாப்பாடு வராதுன்னு நம்ம சொல்றோம். பம்பாய் மாதிரி ரொட்டி வராதுன்னு இன்னொருத்தன் சொல்றான். ஐதராபாத் மாதிரி பிரியாணி வராதுன்னு இன்னொருத்தன் சொல்றான். எல்லாம் ஒரு இதுதான். பொதுவாவே சாப்பாட்டைக் குறுகிய மனப்பாங்கோடுதான் நாம அனுகுறோம். அது தப்புதான். இது எல்லாருக்கும் பொதுவானது.
ஆனா ஒன்னு சொல்லிக்கனும். போற ஊரு வேற ஊரா இருந்தா...அந்த ஊரையும் அதனோட பழக்க வழக்கங்களையும் தெரிஞ்சி அங்க இருக்குறவங்களோட நல்லாப் பழகுறது நல்லதே. வெட்டி வெறுப்பை வளர்க்காமல் இருப்பது அவசியம்.
நீடுதவம் கல்லாமை கற்ற கயமையில் உங்கள் பொருளோடு ஒத்துப் போகவில்லை குமரன்.
// ஒரு காலமும் தப்பித் தவறிக் கூட இறைவனை வணங்கமாட்டேன் என்று இருப்பவரை 'கல்லாமை கற்றவர்' என்று நயம்பட சொல்கிறார்.//
இது ஏற்புடையதன்று இங்கு. தவம் என்பது பெருமைக்குரியது. ஏன்? அது அல்லது தவிர்த்து நல்லது மட்டுமே செய்யும். அதுதான் தவம். ஓரிடத்தில் அமர்ந்து இறைவனை நினைப்பதா தவம்? இல்லை. செய்கின்ற செயல்களில் வாழும் வாழ்க்கையில் அல்லது தவிர்த்து நல்லது மட்டுமே செய்மைதான் தவம். அந்தத் தவத்தைக் கல்லாமை கற்ற கயவரிடம் செல்லாமை என்பது நன்று என்று பொருள் கொள்ள வேண்டும்.
தமிழ் படிச்சா தமிழ் வாத்தியாராகலாம். எழுத்தாளர் ஆகலாம். மேடைப்பேச்சாளர் ஆகலாம். ஆன்மீகப் பேச்சாளர் ஆகலாம். ஆனா யாரும் கூப்புட்டு வேலை குடுக்க மாட்டாங்க.
ஒரு மொழியை மட்டும் படிச்சா என்ன வேலை செய்ய முடியும்? மொழி பெயர்ப்பாளர் ஆகலாம். ஆனா அதுக்கும் ரெண்டு மொழி தெரிஞ்சிருக்கனும்.
மொதல்ல தமிழைப் படிக்கிறதுங்குறது என்னது? தமிழ்ல பட்டம் வாங்குறதா? அதெல்லாம் வாங்காமலேயே வலைப்பூக்கள்ள செய்யுள்களப் பல பேரு பிரிச்சி மேயுறாங்களே...அவங்களை என்ன செய்றது?
தமிழ்ங்குறது நம்ம மொழிய்யா...அத எல்லாரும் படிக்கனும். கண்டிப்பா படிக்கனும். அதோட வாழ்றதுக்கும் வேற ஒன்னையும் கூடப் படிக்கனும். இது ரெண்டுல ஒன்னு மட்டுந்தான் படிப்பேன்னு சொல்றதுதான் முட்டாள்தனம். தமிழை ஆழமாப் படிச்சித் தெரிஞ்சவரு சொன்னது என்ன தெரியுமா? "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள். கவலை உனக்கிலை ஒத்துக்கொள்"
அத விட்டுட்டு..தமிழ் படிச்சேன் வேலை இல்லைன்னு சொல்லக் கூடாது. வேலைக்கு இல்லைன்னாலும் தமிழ் படிக்கனும். வேலைக்குத் தேவைன்னா வேற ஒன்னையும் படிக்கனும்.
உங்களுடைய உழைப்பிற்கும் உயர்விற்கும் என்னுடைய வாழ்த்துகள்.
:) தங்கர் இதைக் கொஞ்சம் சாதாரணமா எடுத்திருக்கனும். எல்லாருக்கும் எல்லாம் தெரியுமா? இனிமே டிகிரி படிச்சவங்கள்ளாம் படத்தோட டைரக்டர் யார்னு தெரிஞ்சுட்டுதான் படம் பார்க்கனும். ரெண்டு டிகிரின்னா கதாசிரியர் யார்னும் தெரிஞ்சிருக்கனும். டிப்ளமோன்னா இசையமைப்பாளர் வரைக்கும் தெரிஞ்சாப் போதும். எஸ்.எஸ்.எல்.சீன்னா நடிகை மட்டும் தெரிஞ்சாப் போதும்.
// ILA(a)இளா said... //தமிழ் படிச்சா தமிழ் வாத்தியாராகலாம். எழுத்தாளர் ஆகலாம். மேடைப்பேச்சாளர் ஆகலாம். ஆன்மீகப் பேச்சாளர் ஆகலாம். ஆனா யாரும் கூப்புட்டு வேலை குடுக்க மாட்டாங்க.// ஜி.ரா, அந்த வகையில பார்த்தா தமிழ் (பட்டப்படிப்பு) படிக்கவே வேணாங்கிறீங்க. அப்போ அந்த படிப்பை யெல்லாம் பல்கலைக் கழக்த்துல இருந்து எடுத்துடனுமா? //
அப்படியில்லை இளா. அவைகளும் இருக்கட்டும். ஆனால் தமிழை மட்டும் படிப்பேன்னு சொல்றது சரியில்லைன்னு தோணுது. இப்பக் கம்ப்யூட்டர் படிக்கிறாங்கள்ள.....எல்லாரும் கம்ப்யூட்டர் படிச்சா வேலை கெடைக்குமா? கெடைக்காதுல்ல. ஏன்னா...வேலைகளும் பலவிதம். தேவைகளும் பலவிதம்.
ஆகையால பல தொழில்கள் இருக்கு. அதுல ஒன்னோ ரெண்டோ படிச்சிக்கலாம். அதுனாலதான் சொல்றேன்....அதுவுமில்லாம தமிழ் என்ன பிழைக்க உதவும் கருவியா? அதெல்லாம் அரசியல்வாதிகளுக்குதான்.
ரவி, சில பாட்டுகளக் கேட்டா கண்ணுல தானாத் தண்ணி வரும். அதுல இது ஒன்னு. என்ன பாட்டு..என்ன நடிப்பு...ஆகா. நடிகர் திலகத்தைச் சரியா தமிழ்த்திரையுலகம் பயன்படுத்திக்கிறலையேங்குறதுதான் என்னோட வருத்தம்.
அணைக்கட்டும். எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் சேர்க்கத்தானே வேண்டும்.
அடுத்து தங்கை துர்காவிற்கு வாழ்த்துகள்.
அடுத்தது உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் உள்ள பிரச்சனையை இப்படி ஊரறியச் சொல்லியிருப்பது சரியன்று. அத்தோடு உங்கள் நண்பரைப் பற்றிப் பல குறிப்புகள் வேறு. சின்னப்புள்ளத்தனமா இருக்கு. ரொம்பவே உணர்ச்சிவசப்படுறீங்கன்னு நெனைக்கிறேன். அது நல்லதில்லை.
அரசியலில் ஜெயலலிதாவைப் பிடிக்காது என்பதைத் தவிர்த்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சொல்ல என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை. அவர் எத்தனை பேருடன் வாழ்ந்தார் என்று ஏளனம் செய்கின்றவர்கள் எத்தனை பேர்களை மனதால் நினைத்து மகிழ்ந்திருத்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கட்டும் முதலில். அவருடைய அரசியல் செயல்பாடுகளைக் குறை சொல்ல வேண்டுமா..நானும் தயார். அதையும் இதையும் குழப்பக் கூடாது.
முதற்கண் திருமதி என்ற சொல்லை திருமணமான பெண்களுக்கு மட்டுந்தான் பயன்படுத்த வேண்டும் என்று எதுவும் சட்டம் இருக்கிறதா? இலக்கணம் இருக்கிறதா? மிஸ்டர் மிஸல்ல இருந்து கடன் வாங்குனதுதான. அப்புறமென்ன...எத்தனை தமிழ் இலக்கியங்கள்ள திருமதியைக் கல்யணாமான பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்காங்க?
அருமையான பாடல். ஸ்ரீவித்யாவிற்குத் தமிழில் மிகமிக அருமையான பாடல்கள் கிடைத்துள்ளன. தேசியவிருது பாடலில் கூட நடித்துள்ளாரே. ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம். கங்கை யமுனை என்று நடிகர் திலகத்தோடு ஆடியதாகட்டும்....தகதகவென ஆடவா என்று கே.பி.எஸ் பாட்டுக்கு சிவகுமாரோடு தாண்டவமாடியதாகட்டும்...பூங்காவியம் பாட்டில் "யார் மகள் இப்பூமகள்" என்று உருகியதாகட்டும். நிறைய நல்ல பாட்டுகள் ஸ்ரீவித்யாவிற்குக் கிடைத்தேயிருக்கின்றன.
அவருடைய நினைவுநாளில் பாடலை நினைவு கூர்ந்தமை சிறப்பு.
அதென்னவோ உண்மைதான். ஒவ்வொரு நல்லதுலயும் கெட்டதுலயும் அனுபவந்தான். அதுவும் நல்லதுக்குதான். நல்லதே நடக்கும். சேலத்துல நல்ல மாம்பழம் கெடைக்கும். சீசன் நல்லாருந்தா ஒரு டசன் வாங்கச் சொல்லுங்க.
குமரன், திருமுருகாற்றுப்படையைத் தொட்டு நீண்டகாலமாகிறது. திருவாவினன்குடிக்குள்ள செய்யுள்தானே இது.
நீங்கள் குடுத்துள்ள வரிகளையும் அதற்கு அடுத்த வரிகளையும் படித்துப் பார்த்துப் பொருள் கொள்ள முயன்றேன்.
புள்ளணி நீள்கொடிச் செல்வனும், முக்கண்ணனும், முருகனும் ...... இது நீங்கள் கொடுத்த வரிகளின் குறுகிய பொருள். இந்த மூவருக்கும் என்ன என்பது அடுத்த வரியில் இருக்கிறது.
பலர் புகழ் மூவரும் தலைவராக ஏமுறு (போற்றப்படும்) ஞாலத்தில் (உலகத்தில்) தோன்றி.... என்று பா தொடர்கிறது.
அதாவது மாலையும் சிவனையும் முருகனையும் தலைவராக ஏற்றுப் போற்றும் இந்த உலகத்தில் தோன்றி..... சரி. தோன்றியது யார்?
தாமரை பயந்த தாவில் ஊழி....
தாவு என்பதற்குக் கொள்கை என்றும் பொருள் சொல்லலாம்.... தாமரையில் பிறந்த கொள்கைக்கு ஊழி போல....
நிற்க...நீங்கள் கொடுத்துள்ள வரிகளை மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
நீங்கள் சொன்ன பொருள் தவறோ என்று தோன்றுகிறது.
மொத்தம் மூனு பேரச் சொல்லீருக்கு.
1. புள்ளணி நீள் கொடிச் செல்வன் - இது மால்னே வெச்சுக்கலாம். ஏன்னா நஞ்சைக் கொடுக்கும் பாம்பைப் புடைக்கும் புள் (பறவை) பருந்து. அந்தப் பருந்தை வெச்சு அதை மால்னு சொல்லலாம்.
// நான் அடுத்து எங்கே செல்வேனோ என்ற எண்ணத்தில் புள்ளணி நீள் கொடிச் செல்வனைத் திருமால் என்றே வைத்துக்கொள்ளலாம் என்று முழு மனமின்றிச் சொன்னது போல் சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் படித்துப் பார்த்து உங்களுக்கு புட்கொடியுடையவன் திருமால் என்ற பொருள் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். //
இல்லை... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மனமின்றி என்றெல்லாம் ஒன்றுமில்லை. அது மால்தான் என்பதற்கு வரிவரியாக விடை சொல்லி முடிவிற்கு வந்திருக்கிறேன்.
புட்கொடி என்று நான்முகனையும் சொல்லலாம். அங்கு அன்னக்கொடி. ஆனால் அன்னத்தால் பாம்பினைப் புடைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆகையால்தான் பருந்து என்று சொல்லி... அதை வைத்து அது மால் என்று முடிவுக்கு வர முடிகிறது என்று சொன்னேன். அதை நீங்கள் வேறு மாதிரி புரிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். :) புட்கொடிக்கு வேறு எவரையும் இந்த இடத்தில் நினைக்க முடியவில்லை.
இதப் படிச்சிட்டு சொல்லுங்க....உண்மையிலேயே திருமாலையும் சிவனையும் இது புகழுதான்னு...
எனக்கு இந்தச் செய்யுளைப் படிக்கிறப்போ.... ஏதோ வரலாற்றுச் செய்தி படிக்கிறாப்புல இருக்கு. இந்தத் தமிழ் இலக்கியங்கள் சொல்ற இந்திரனும்.. புராண இந்திரனும் வெவ்வேறையோன்னு தோணுது.
முதலில் இளங்கோ சமணர் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. துறவு பூண்டது உண்மைதான். ஆனால் சமணத்துறவென்று சொல்லவில்லை. அதுவுமில்லாமல் அவர் துறவறத்திற்குப் பிறகு அரண்மனைகளில் அண்ணனோடும் வாழ்ந்திருக்கிறார். சமணத் துறவு அரண்மனை வாழ்வு ஏற்காது. இன்னும் நிறைய சொல்லலாம்.
1. மாசாத்துவான்
2. திங்கள் மாலை வெண்குடையான் சென்னிச் சொங்கோல் அதுஒச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி
3. பேரியாற்றங்கரை மக்கள் இல்லை அவர்கள். குன்றக் குறவர்கள். அதுவுமில்லாம அவங்க கண்ணகி உயிர் துறந்த கதையைச் சொல்லலை. கண்ணகி விண்ணேகியதச் சொல்றாங்க.
ஏன்? வடிவேலு கூட ஆடுனா என்ன? ஒரே கதைய திருப்பித் திருப்பி எடுக்குற விஜய் கூட ஆடுறத விட வடிவேலு கூட ஆடலாம். கூச்சமில்லாம இளைய தளபதின்னு சொல்லிக்கிறவங்களே வெக்கமில்லை. ஷ்ரேயா ஏன் வெக்கப்படனும்? ஆடட்டும். ஆடட்டும். சிவாஜின்னு ஒரு படம் வந்துச்சே...அதுல மேக்கப் போட்டு ஒருத்தர் நடிச்சார்ல...அந்த மேக்கப்பைக் கலைச்சிட்டு ஆட விடுங்க...அப்புறம் தெரியும் சேதி.
ஒன்னு சொல்லட்டுமா? அந்தச் செய்யுளோட நயத்துனாலதான் ஒங்க மனைவியால லேசா மனப்பாடம் செய்ய முடிஞ்சது. அதையே உரையா விரிச்சி ரெண்டு பக்கத்துக்குப் பொருள் எழுதிக் குடுத்தா அப்படியே திருப்பிச் சொல்லீருக்க முடியாது. :)
1. ஞாநி பாலியல் பத்தி எழுதக்கூடாதுன்னு சொல்றது ஒளறல்ங்குறது என்னுடைய கருத்தும் கூட. ஒத்துப் போகிறேன்.
2. கருணாநிதிக்கு ஓய்வு பற்றிய கட்டுரையில் உங்கள் கருத்தோடு முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை. முழுமை என்ற சொல் இங்கே முக்கியம். ஏனென்றால்.... கருணாநிதிக்கு இப்பொழுது ஓய்வு தேவை என்பது என்னுடைய கருத்தும் கூட. அதுவுமில்லாமல் சங்கர் தயாள் சர்மாவும் வாஜ்பாயும் தொலைக்காட்சியில் வரும்பொழுது எனக்குத் தோன்றியதுதான் கருணாநிதியைப் பார்க்கும் பொழுதும் தோன்றுகிறது. அந்த வகையில் ஓய்வு தேவை என்பதில் ஐயமில்லை.
அதே நேரத்தில் அதை எழுதிய விதத்தில் உடன்பாடு இல்லை. வேட்டி நனைவதைப் பற்றியெல்லாம் பேசுவது அதிகமாகவே தெரிகிறது. அந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது அசௌகரியமாகவே இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அவர் சொல்ல வந்ததை வேறுவிதமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் எந்த விதமாகச் சொல்லியிருந்தாலும் இதே விளைவுதான் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
// அப்படிப் பெருங்குடியில் பிறந்ததால் தான் அவளால் அரசனைக் கேள்வி கேட்டு வழக்குரைக்க முடிந்தது என்று நினைக்கிறேன். எளிய குடியில் பிறந்தவர்கள் அப்படித் துணிவுடன் அரசனைக் கேள்வி கேட்க முடிந்திருக்குமா என்பது ஐயமே. ஆனால் அப்படி பெருங்குடி பிறந்த பெருமகள் ஆனாலும் அவள் உரைத்த வழக்கைக் கேட்டு அவள் பக்க நியாயத்தை உணர்ந்து உடனே உயிர் விட்ட பாண்டியன் பெருமை மிகப்பெரிது. //
குமரன், நீங்கள் சொன்னது தவறு. பெரிய குடும்பத்தில் பிறந்ததால் பேசினாள்னா...அன்னைக்கே கோவலன் கிட்டயும் மாதவிகிட்டயும் பேசியிருப்பா. அதுவுமில்லாம... வெறுங்கைய வீசிக்கிட்டு...காடு மேடு நடந்து... தெரியாத ஊர்ல... பால்காரங்க வீட்டுல தங்கிக்கிட்டு... இருந்தப்பத்தான் அவளுக்குப் பெரிய வீட்டுக்காரின்னு நெனைவுக்கு வந்துச்சா? இல்லை. இளங்கோவடிகள் இதக் கேட்டிருந்தார்னா...அவ்ளோதான். :)))))))))))))
பாண்டியன் நெடுஞ்செழியன் நல்லவன். நல்ல அரசன். இல்லைன்னா...அவரு எங்க அப்பா மாதிரின்னு கண்ணகி சொல்வாளா? தென்னவன் தீதிலன்யா.
சேடகமாடத்து மாலை பற்றி வருகிறது! ஆனா சேடகமாடம் வர்ணிக்கப்படவில்லை! சேடகமாடம் தான் திருவனந்தபுரம் என்பது ஆய்வுக்குரியது! //
உண்மைதான். சேடகமாடம் என்றால் அனந்தபுரம் என்று ஒரு உரையில்தான் படித்தேன். மற்ற உரைகளில் அப்படிச் சொல்லப்படவில்லை. முதலில் படித்த உரையாதலால் அது மனதில் நின்றுவிட்டது.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said... ஜிரா ஏமி செப்பறாருன்னா:
//முதலில் இளங்கோ சமணர் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. துறவு பூண்டது உண்மைதான். ஆனால் சமணத்துறவென்று சொல்லவில்லை. அதுவுமில்லாமல் அவர் துறவறத்திற்குப் பிறகு அரண்மனைகளில் அண்ணனோடும் வாழ்ந்திருக்கிறார். சமணத் துறவு அரண்மனை வாழ்வு ஏற்காது. இன்னும் நிறைய சொல்லலாம்//
அரண்மனையில் அண்ணன் கூட அடிக்கடிப் பேசறாரு ஜிரா! ஆனா வாழ்ந்ததா சொல்லலையே! //
இல்லை. அடிக்கடி பேசுறார்னு சொல்லலை. அண்ணனோடயும் அண்ணியோடயும் அரசு மண்டவத்துல கொலுவிருந்ததா அவரே சொல்றாரே.
ஐயோ ரவி..தெரியாமச் சொல்லீட்டேனே...நாங்கூட சிலம்பில் வைணவம்னு நீங்க ஏதோ ஆராய்ச்சி செய்றதா நெனச்சுச் சொல்லீட்டேனே. தமிழ் ஆர்வத்தால மட்டுந்தான் நீங்க சிலம்பு படிச்சீங்கன்னு தெரியாமப் போச்சே! என்னைய மன்னிச்சிருங்க. மன்னிச்சிருங்க. மன்னிச்சிருங்க.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said... 3. இளங்கோ அடிகளுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் கண்ணகி உயிர் துறந்த கதையை முதலில் சொல்லியவர் யார்?
செங்குட்டுவன், அவன் மனைவி, இளங்கோ, சாத்தனார் எல்லாரும் இயற்கை அழகு காண பெரியாறு மலைக்கு வருகிறார்கள்!
அப்போ, அங்குள்ள பழங்குடி மக்கள், குன்றக் குரவை ஆடி, கதையைச் சொல்லுறாங்க. ஒரே ஒரு முலை உடைய பெண், வேங்கை மரத்துக்குக் கீழே, 15 நாள் அன்ன ஆகாரம் இன்றி உயிர் துறக்கிறாள். விண்ணுலகு ஏகுகிறாள் விமானத்தில்! என்று சொல்லுறாங்க! //
எனக்கு இந்தப் பதினஞ்சு நாளு வெரதம் புதுச்செய்தி. நான் படிச்ச வரைக்கும்.... வேங்கை மரத்துக்கடியில ஒத்த மொலையோட நிக்குறா கண்ணகி. அப்ப வானத்துல இருந்து ஹெலிகாப்டர்ல வந்து கோவலன் கூட்டீட்டுப் போறதாத்தான் படிச்சேன். உயிர் துறக்குறதையெல்லாம் படிக்கலையே.
ராபர்ட்டுக்கு ஏன் இப்பிடித் தங்க ஆசை? இப்பிடித்தான் ஒருத்தர் தங்கம் தங்கம்னு அலஞ்சான். கூப்புட்டு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது... அது எதிர்வீட்டுத் தங்கம்னு. அது மாதிரி...ராபர்ட்டு?
ஐயா தங்களுடைய இந்தப் பதிவு மிக நன்றாக இருந்தது. சமீபத்தில் எனக்கு வேண்டிய ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அவர் இவ்வளவு விவரமாகவும் அழகாகவும் எடுத்துச் சொல்லவில்லை. நீங்கள் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி.
இதுல இப்பிடியொரு விசயமிருக்கா... இவ்வளவு நாளாத் தெரியாமப் போச்சே. எல்லாம் ஒங்களப் போல அறிஞ்ச தெரிஞ்சவங்க சொன்னாத் தெரிஞ்சிக்கிறோம். அப்ப பெண்களையெல்லாம் நெறைய ஆண்களளக் கல்யாணம் செஞ்சுக்க வெச்சுட்டா....ஆயுசு சமமாயிருமுல்ல. இது நல்ல திட்டமாயிருக்கே!
ஆக புரபசர் சாமின் உதவியாலதான் சக்திக்கு சக்தி கெடைச்சி நல்லாப் படிச்சி மதிப்பெண் வாங்கி....அந்த மதிப்பெண் மூலமா பாராட்டும்...பெண் மூலமா அடிஒதையும் கெடைக்கூதா?
இந்த நொடியை எப்படி அனுபவிக்கிறது? நாம எப்பவும் அடுத்த வேளைக்குதான செய்வோம்...
மதியம் சாப்பிடச் சோறு செய்றோம் நாளைக்கு நாடகம் பாக்க டிவி வாங்குறோம் நாளைக்குச் சந்தோஷமா இருக்க பயணம் போறோம் நாளைக்கு தெரியப் போற முடிவுக்குத்தான இந்தக் கதையப் படிக்கிறோம் அதாவது மாசம் மொதநாள் வர்ர சம்பளத்துக்குத்தான ஒழைக்கிறோம்
நல்ல அருமையான பாடல். சலீல் சௌத்ரி என்ற சலீல்தா மிக அருமையான இசையமைப்பாளர். அவருடைய தமிழ்ப் பாடலை எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.
அதுக்கு மேல நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீங்களே சொல்லீட்டீங்களே.
சலீல்தாவிற்கு இதுவரையில் மற்ற தமிழ்த்திரை இசையமைப்பாளர்களுக்குக் கிடைக்காத ஒரு பெருமை உண்டு. ஆம். சிலப்பதிகாரத்தின் கானல்வரிக்கு இசையமைத்த பெருமைதான் அது. இசையரசியையும் ஏசுதாசையும் பாட வைத்திருக்கிறார். அருமையான பாடல். அந்தப் பெருமை மெல்லிசை மன்னருக்கும் கிடைத்திருக்கும். ஆனால் தட்டிப் போய் விட்டது. இறையருட் கலைச்செல்வர் கே.சங்கர் சிலப்பதிகாரத்தை, ராமாயணம் மகாபாரதம் போல தொடராகத் தமிழில் எடுக்க சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தை அணுகினாராம். அதற்கு இசையமைக்க மெல்லிசை மன்னரையும் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டது.
more controversial better the movieன்னு சொல்றீங்களா? ம்ம்ம்ம்... தெரியலைங்க. என்ன படம் அது...குற்றப்பத்திரிக்கை...என்னா controversy...15 வருசங் கழிச்சித்தானே படமே வந்துச்சு. ஆனா படம்? கிழிஞ்ச பப்படம். அந்த மாதிரி ஆயிரக்கூடாதேன்னுதான். ஆனாலும் நீங்க சொல்றீங்க. நல்ல பிரிண்ட் நெட்டுல டவுண்லோடு கிடைக்கிறப்போ பாக்கிறேன். இல்லைன்னா எனக்கு வேற வழி இல்ல.
பாலாஜி, இந்தப் பதிவோட முழுமையா ஒத்துப் போக முடியலை. வாடகையக் கூட்டுறாங்க...ஓட்டல்ல கூட்டுறாங்கங்குறதெல்லாம் சின்னக் குழந்தைத்தனமா இருக்கு. இவ்ளோ சொல்றியே...இந்த சாப்ட்வேர் இப்ப வந்ததா? இல்லையே. இன்போசிஸ் வந்தே 25 வருசம் ஆச்சே. நீ சொல்ற இத்தன விலையேத்தமும் கடந்த நாலஞ்சு வருசத்துலதானப்பா. அதுக்கு ஒருவிதத்துல நாமும் பொறுப்பேத்துதான் ஆகனும்.
விலையக் கூட்டும் போது வேண்டாம்னு போறது. கொஞ்சம் கொறஞ்ச விலையுள்ளத கொஞ்ச நாள் தேர்ந்தெடுத்தா என்னவாம்? இந்த பெங்களூர் வந்து ஏழு வருசம் முடிஞ்சி போச்சு. நான் வந்தப்ப இந்த நூறு ரூவா எறநூறு ரூவா டிக்கெட் விக்கிற தேட்டர்கள் இல்ல. அட... இப்பவும் 30-40க்கு டிக்கட் குடுக்குற தேட்டருங்க இருக்கு. அங்க போறமா? இல்லையே...பிவிஆர்ல பாத்தாதானே படம். இன்னோவேட்டிவ் மல்ட்டிபிளக்ஸ்ல பாத்தாதானே படம். அங்கதான தொடங்குது ஆட்டிடிடூட் பிரச்சனை. அந்த ஆட்டிட்டூட ஆட்டீட்டோம்னா...பிரச்சனை தீருதோ இல்லையோ...மாற வழியிருக்கு.
அடுத்தவங்களைக் குற்றம் சொல்றதுக்கு முன்னாடி நம்மளச் சரி செஞ்சிக்கிருவோம். சுனாமிக்கு அள்ளிக் கொடுத்ததையே எவ்ளோ நாளளக்குப் பெருமை பேசுறது. கொடுத்ததத் திரும்பச் சொல்றதும் நல்லதில்லை.
செல்வன் சொல்ற survival of the fittest சரிதான். ஆனா நமக்குன்னு பொறுப்பு இருக்குல்ல.
கொத்ஸ், வட்டம், மாவட்டம், அடிமட்டம்னு எல்லாக் கட்சீலயும் கொள்ளையடிச்சித்தான் வெச்சிருக்கான். உண்மைதான். அவன் எக்கேடும் கெட்டுப் போகட்டும்யா. தானைத் தலைவாம்பான்..புகழுறுதலைவிம்பான்...நம்ம கத அப்படியா? அப்படியா வந்தோம்? இல்லைல்ல. பொறுப்போடதான படிச்சி வந்தோம். அந்தப் பொறுப்பையும் தொடருவோம்.
// ஒரே மூச்சில் அவ்வளவும் சொல்ல வேண்டுமா? தொடர்ந்து தான் பேசுவோமே.
(Lighter sense - ல் ஒரு கூடுதல் குறிப்பு: ராமாயணத்தில் தெளிவான பாத்திரங்களில் ஒன்று சுமத்திரை என்பேன். மூன்று பட்டத்தரசிகளில் ஒருத்தி மூத்த பட்டத்தரசி இன்னொருத்தி அரசனின் காதல் கிழத்தி என்னும் போது மூன்றாமவள், ஒரு பெண்ணாக என்ன செய்வாளோ அதைச் செய்தவள் (கோசலையுடனேயே ஒட்டித் திரிந்தாள்). இரட்டைக் குழந்தைகளில் ஒருவனை மூத்தவன் ராமனுடன் இழைய விட்டாள்; அடுத்தவனை பட்டத்துக்கு உரியவனாகிய பரதனுடன் இழைய விட்டாள். தெளிவு என்பது இது தான். //
சூப்பர் சூப்பர்....ஊய் ஊய் இது சூப்பர். ரத்னேஷ்...சூப்பர்.
என்னோட கருத்துகளும் இந்த வகையிலதான் போகுது.
ரவி, குணம் நாடிக் குற்றமும் நாடியெல்லாம் சரிதான்...நான் கேக்குறேன். சீதையத் தூக்கீட்டுப் போனதுதான் தப்புங்குறீங்க. சீதை வராமலே இருந்திருந்தா இவன் ஏய்யா தூக்கப் போறான்? ஆகக் கூடி அவதாரம் எடுக்காம இருந்திருந்தா இவன் தூக்கீருக்கவே முடியாதே...இப்படியும் கேக்கலாமே.
அப்புறம் வேறென்ன தப்புகள் இராவணன் செஞ்சான்னு சொன்னீங்கன்னா அப்படியே தெரிஞ்சிக்கிறோம்.
வெட்டிப்பயல் என்ன சொல்றாருன்னா...ஜிடாக்குல சொன்னாரு....ராவண கருவ பங்கம்னு போட்டிருக்கீங்களே. அது பங்கம் ஆகலையாம். சிவனால பங்கம் பண்ண முடியலையாம். அதுனால கருவ பங்க முயற்சின்னு வேணும்னா சொல்லிக்கலாமாம். பங்கம் சொல்லக் கூடாதாம். சிவனே பங்கம் பண்ண முடியாத கருவம் இருந்ததாலதான் அவன் மாண்டான்னு அப்படின்னு வெட்டியார் கூறுகிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஒற்றுமை உயர்வு தரும் என்பதை ஏற்பதற்கு எந்த மறுப்பும் இல்லை. அரங்கம் சென்று கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே என்று உருகவும் என்னால் முடிகிறது. நம்புவீர்கள் என்றே நினைக்கிறேன்.
ஆனால் அரியை அணைக்க முடிந்த என்னால் ராமனை ஏற்க முடியாது. குறை என்று இல்லை. கொள்கை அளவில் சிலபல மறுப்புகள் உள்ளன.
அதுவுமில்லாமல் நாளைக்கு யாரேனும் சிவனும் ஏசுவும் ஒன்றுதான்...அதாவது எல்லாம் ஒன்று என்று பொதுவாகவும் கூறலாம். அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பமே.
மொதல்ல அந்தப் பூசாரிய உக்கார வெச்சி நல்ல கொழும்புத் தேங்காயா ரெண்டு வாங்கி ஒடைங்க. மண்டை... தேங்காய் எது ஒடஞ்சாலும் சரிதான்.
இதே போல முருகன் அடியவர்கள் அனைவரும் அலகு குத்துறத நிப்பாட்டும்படி வேண்டிக் கேட்டுக்கிறேன். அந்தப் பழக்கம் எந்த நூல்லயும் இல்லை. அதுவுமில்லாம நம்மள வருத்திக்கிறதால அவன் மகிழ்ச்சியுற மாட்டான்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு ஓவற இமைக்கும் சேன் விளங்கு அவிரொளி
இங்கே நீங்கள் சொல்லியிருக்கும் படிப் பொருள் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.
உலகம் உவப்ப...வலன் ஏர்பு திரிதரு...பலர் புகழ் ஞாயிறு = உலகம் மகிழும்படியாகச் செய்யும் பெருமை கொண்டு...அப்பெருமை எங்கும் பரவும் படி பலரும் புகழும் ஞாயிறானது...
கடல் கண்டாங்கு ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி - ஞாயிறானது கடலோடு கண்ட பொழுதில் உண்டாகும் இமைக்கச் செய்யும் அழகான செவ்வொளியின் தன்மையுடைய திருவடி
இதுதான் நான் படித்துக் கண்ட பொருள்.
முருகனுடைய செவ்விய திருவடிகளைக் குறிப்பதாகவே நான் கருதுகிறேன்.
நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கமும் அருமையாக இருக்கிறது.
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said... குமரா! நல்ல ஒப்பு நோக்குக் கட்டுரை. காலை உதயசூரியனை விட ஒருகாலத்தில் மாலை மறையும் சூரியன்,அதுவும் அமைதியான கடல் மட்டத்தில் செந்துளியாகக் கடைசிச் சொட்டு மறையும் காட்சி 45 வருசமாகியும் மனதைவிட்டு மறையவில்லை. ரம்மியமான மாலைப் பொழுதுகள்..//
யோகன் ஐயா, கச்சியப்பரின் ஒரு பா நினைவிற்கு வருகிறது
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவுல மகன் உக்காந்திருக்கிறது எப்படி இருக்குன்னா....இரவுக்கும் பகலுக்கும் நடுவுல இருக்குற மாலை மாதிரி இனிமையா இளமையா குளுமையா செழுமையா இருக்காம். :)
// சிலப்பதிகாரத்திலும், "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலந்திரிதலான்" என்று வந்திருப்பது ஒப்பு நோக்கத் தக்கது. //
ரத்னேஷ். அது அப்படியிருக்கும் என்று நினைக்கவில்லை.
ஞாயிறு பொற்றுதும்..ஞாயிறு போற்றுதும்.
ஏன்?
ஏன்னா...இந்தக் காவிரி பாயுதே சோழநாடு...அந்த நாட்டு அரசன் இருக்கானே சோழன்....அவனோட ஆணைச்சக்கரம் மேரு வரைக்கும் போகுமப்பா...அந்த மாதிரி சூரியனுடைய ஆட்சியும் மேரு வரைக்கும் போகும்னு பொருள் கொள்றதே சரியா இருக்கும்னு தோணுது.
// //இங்கே உகரத்தில் இலக்கியத்தைத் தொடங்குவது மரபு என்று சொன்னது காட்டிய எடுத்துக்காட்டுகளின் மூலம் 'என்னுடைய பார்வைக்கும் மட்டும் தோன்றிய' ஒன்று இல்லை. நச்சினார்க்கினியர் முதல் பலரும் சொன்னதொரு மரபு இது. நீங்கள் நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் சொல்லுங்கள். அந்த உரையிலிருந்து இந்த மரபைப் பற்றிய செய்தியை எடுத்துத் தருகிறேன். வாரியார் சுவாமிகளும் இந்த மரபைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.//
இதைத்தான் கேட்டேன். இப்படி ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தாலே அதுமரபு என்றாகி விடுகிறது. எனில் நீங்கள் சொன்னது சரியே. //
ரத்னேஷ். பலமுறை சொல்லும் கருத்து. ஒவ்வொரு முறையும் இதைக்குறிப்பிட வேண்டும் என்று தேவையில்லை.
இந்த முறையை நானும் அறிவேன். இனியது கேட்கின் வலைப்பூவிலும் பயன்படுத்தியிருக்கிறேன். தேடினால் தொடுப்பு கிடைக்கும். http://iniyathu.blogspot.com/2006/12/47.html இதோ கிடைத்தும் விட்டது.
132 comments:
http://aaththigam.blogspot.com/2007/09/4.html
அதாவதுங்க....ரொம்பவும் வேண்டியவங்கன்னா...திட்டுனாக்கூட நம்ம பெருசா எடுத்துக்க மாட்டோம். அது உரிமை. அப்படித்தான் கந்தனுக்குச் செல்லி.
ஊர்ச் சந்தைன்னா சும்மாவா இருக்கும். காய்கறிகளும் பழங்களும் உப்பு மெளகா புளி ரோஸ், மஞ்சள்னு நெறநெறமா திண்பண்டங்க...கருவாடு, உப்புக்கண்டம் வகையறாக்க...இப்படிச் சகலமும் கெடைக்கிற எடந்தான சந்தை.
சக்கம்மா என்ன சொல்றாங்கன்னு அடுத்த பகுதில தெரிஞ்சிக்குவோம்.
http://varappu.blogspot.com/2007/10/blog-post.html
பெங்களூரா? மழை பேயுறப்போ எடுத்திருக்கீங்க. கோடள்ளி மெயின் ரோடு மாதிரி இருக்கு!!!!
http://muruganarul.blogspot.com/2007/10/blog-post.html
அருமையான பாடல். இதே முன்பே கேட்டிருக்கிறேன். மீண்டும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.
எந்த மொழியா இருந்தா என்ன...கடவுளுக்கு எல்லாம் புரியும். இந்த மொழியில செஞ்சாத்தான் அது சரியாகும்னு சொல்றது தப்பு. அவங்கவங்களு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில கும்பிட்டுக்கலாம். என்ன சொல்றீங்க ரவி?
// ILA(a)இளா said...
ஒரு கோட்டுக்கு இத்தனை ரோடா? ஷ்ஷ்ஷ், இப்பவே கண்ண கட்டுதே! //
வருத்தப்படாதீங்க இளா. இதுக்கெல்லாம் சேத்து வெச்சு கே.ஆர்.எஸ்க்கு இருக்கேய்....
http://muruganarul.blogspot.com/2007/10/blog-post.html
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//மதுரையம்பதி said...
ரியல் பிளேயர் வரை சென்றபின் ஏதோ "அந்னொன் எரர்"ன்னு வருது சாமீயோவ்.//
ஆகா...இனொரு முறை ட்ரை பண்ணுங்க....எனக்குச் சரியா வருதே! இல்லீன்னா இதோ கூல் கூஸ் சுட்டி!
http://music.cooltoad.com/music/song.php?id=311717 //
மதுரையம்பதிக்கு மட்டுமில்லை. எனக்கும் எரருதான். வீடியோ பாட்டெல்லாம் ஒழுங்கா வருது.
http://aaththigam.blogspot.com/2007/09/5.html
சென்னைக்குப் பக்குத்துல...சரி...ஆனை..சரி..கடலு...சரி...புதையலு..புரிஞ்சிருச்சேய். புரிஞ்சிருச்சின்னுதான் நெனைக்கிறேன். கதை போற போக்க வெச்சுச்சொல்றேன். :)
http://aaththigam.blogspot.com/2007/09/6.html
செதம்பர ராசாவா....அவரே வந்துட்டாரா...அப்ப வெற்றிதான். அப்ப....வெற்றியேதான்.
http://koodal1.blogspot.com/2007/10/blog-post.html
இரண்டிற்கு வாழ்த்துகள் குமரன். ஆண்டுகளுக்குச் சொன்னேன். இன்னும் பலப்பல ஆண்டுகள் பதிவுகள் பல பதித்து சிறப்புற வாழ்த்துகள்.
http://naalainamathae.blogspot.com/2007/10/12.html
மிகவும் வருந்தத்தக்க நிலை. மிகமிக. என்னய்யா கொடுமை இது...சாதீ..சாதீன்னு ஏன் இப்பிடி அலையுறாங்களோ. மனுசன மனுசனா மதிக்காம என்னய்யா வாழ்ந்து குப்புற விழுந்தீங்க. சீச்சீ! நாம அடுத்தவங்கள நம்மள விடக் குறைச்சலா நெனக்கிறப்போ..நம்மளை ஒருத்தன் குறைச்சலா நெனைக்க வாய்ப்பிருக்குங்குறது ஏன் புரிய மாட்டேங்குதோ.
அம்மா தனம், எப்பாடு பட்டாவது படி. அந்த ஊர விட்டு வெளியூரு வந்துரு. நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். நல்லாயிருப்ப.
http://sethukal.blogspot.com/2007/09/3.html
நக்கல் வசனங்கள். :)))))))))) ஜெட் ஏர்வேசு, எலுமிச்சம்பழச் சாதம்னு...
ஒங்களுக்காவது ரோந்து வண்டி...பெங்களூர்ல ரெண்டு பயக. தெரிஞ்ச பயகதான். பைக்க எடுத்துக்கிட்டுப் போய் நிதானமேயில்லாம போனானுக. அவ்ளோ தண்ணி. அவங்களுக்கு நிதானம் வந்தப்ப ஆஸ்பித்திரீல கட்டில்ல படுத்திருந்தாங்க. பயங்கர ஆக்சிடெண்ட்டு...அப்பப்பா...குடிச்சிப்புட்டு ஓட்டாதீங்கடே...வண்டிய.
http://radiospathy.blogspot.com/2007/10/22.html
ரொம்பவும் அருமையான பாட்டுகள்.
1. கோயில் புறா. ஒரு இசைச்சித்திரம். ஆனால் படம் ஓடவில்லை. ஆனால் பாடல்கள் ஒவ்வொன்றும் தேன். தேன். இசையரசியும் உமாரமணனும் "ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்" என்று பாடுகையில் உண்மையிலேயே நமது ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும். இதே படத்தில் வேதம் நீ என்ற பாடலும் மிக இனிமையானது. போன வாரந்தான் இந்தப் படத்தை என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரிஜினில் விசிடியில் பார்த்தார்கள்.
2. பயணங்கள் முடிவதில்லை. மிகமிகப் பெரிய வெற்றி பெற்ற படம். புதிதாக நான் எதுவும் சொல்லித்தான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று இல்லை. அவ்வளவு பிரபலம். சாலையோரம் பாடல் மிக அருமையானது. இளமையானது. இதே படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் "தோகை இளமயில் ஆடி வருகுது"
3. கிழக்குக்கரை...எங்கள் மாவட்டத்தில் தூத்துக்குடிக்குப் பக்கத்தில் உள்ள ஊரில் எடுத்தது. சட்டென்று பெயர் நினைவிற்கு வர மாட்டேன் என்கிறது. திருச்செந்தூருக்கு ரெண்டு ஸ்டாப் முன்னாடி...ஆஆஆ...எப்படி மறந்தேன்.
4. மணிசித்ரதாழு. மிக அருமையான படம். படத்தைப் பார்த்தவர்களுக்கு...அது சந்திரமுகியை விடக் காட்டிய உளப்பூர்வ பிரம்மாண்டம் புரியும். ஷோபனா நடிப்பு மிகச் சிறப்பு. தேசிய விருது கிடைத்ததே. இந்தப் பாடலை எந்த ராகத்தில் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் இசையமைத்தாரோ..அந்த ராகத்தில் பாடினால் நம்மிடமுள்ள ஒன்று காணாமல் போகுமாம். இதை எம்.ஜி.ராதாகிருஷ்ணன் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னதாக மலையாள நண்பன் கூறினான். நமக்குத்தான் ராகமும் தாளமும் தெரியாதே. என்ன ராகமாம் அது?
http://chennaicutchery.blogspot.com/2007/10/4.html
சத்தியமாச் சொல்றேன்.....இது படத்த விடவும் நல்லாவே இருக்கு. போன வாரந்தான் டிவிடி பிரிண்ட்டை இறக்குமதி செஞ்சு பாத்தேன். படத்த வேக வேகமா ஓட்டி ஓட்டிப் பாக்க வேண்டியதா இருந்துச்சு. ஆனா இந்தப் பதிவு எவ்ளோ நல்லாருக்கு. விவாஜி சூப்பரப்பு.
http://chennaicutchery.blogspot.com/2007/10/5.html
ஹா ஹா ஹா சூப்பர் காமெடிங்க. உண்மையிலேயே கலக்கல்தான். படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஒடம்பெல்லாம் ஒரே அடி.
http://thamilachi.blogspot.com/2007/10/blog-post_5735.html
உங்கள் துணிவு பாராட்டிற்குரியது. கருத்தைக் கருத்தால் எதிர்க்காமை எல்லாவிதமான குழுவிலும் இப்பொழுது நிறைய இருக்கிறது. இது வருந்தத்தக்க நிலை.
http://aaththigam.blogspot.com/2007/09/7.html
புதையல்....புதைப்பது புதையல். அன்பு கூடப் புதையல்தான். உள்ளத்தில் புதைந்து கிடப்பதால்.
கந்தனுக்கான புதையல் என்ன மாதிரி என்பது விரைவில் தெரிந்து விடும். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இந்த பத்து ஆட்ட வெச்சி ராசா என்ன செய்யப் போறாருன்னு பொருத்திருந்து பாப்போம்.
தங்க ஒளி...அதுவும் என்னன்னு பின்னாடிதான் தெரியும் போல. காத்திருப்போம்.
http://thulasidhalam.blogspot.com/2007/10/30.html
குளிருன்னா இதெல்லாம் தேவைதான். இங்கயும் குளிரத் தொடங்கீருச்சு. ரூமுரூமுக்கு ஹீட்டர்தான். இப்பயே கிடுகிடுங்குது. போகப் போக எப்படியிருக்குமோ.
http://vivasaayi.blogspot.com/2007/10/learn-another-language.html
அவங்கவங்களுக்கு எந்த மொழி வேணுமோ..அதப் படிச்சிக்கலாம். வடக்க போயி வேலை பாக்கனும்னா இந்தி தெரிஞ்சிருக்குறது நல்லது. வடக்க போல...ஆனா வெளிநாட்டுக்குப் போறேன்னு சொல்றவன்...அந்த நாட்டு மொழியைக் கத்துக்குறது நல்லது.
அது சரி. நீங்க திமுக. உங்களுக்கு இந்தித் திணிப்பைப் பத்தித் தெரியும்னு சொல்லீருக்கீங்களே. திமுக காரனா இருந்தா மட்டுந்தான் இந்தித் திணிப்பு பத்தித் தெரிய வருமோ?
http://govikannan.blogspot.com/2007/10/blog-post_05.html
இந்தப் பதிவோட கருத்துகளோட முழுக்க முழுக்க ஒத்துப்போறேன்.
பி.ஜே.பி நல்ல கட்சி இல்லைன்னே வெச்சுக்குவோம். ஆனா மத்தபயகளும் அப்படித்தான்னு வெச்சுக்கோங்களேன். எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைகதான். எதக் காட்டி வியாபரம் செய்றாங்கங்குறதுதான் மாறுபடும்.
தேர்தல் முடிஞ்சதும் பி.ஜே.பி+ஜ.த கூட்டணி அமையலை. மொதல் கூட்டணி காங்கிரசு+ஜ.த. அதுல மகன விட்டே கட்சிய ஒடைக்கச் சொல்லி...தனக்கும் அதுக்கும் தொடர்பில்லைன்னு சொல்லி காங்கிரசுக்குப் பால்பாயாசம் குடுத்துட்டுதான் பி.ஜே.பியோட கைகோர்த்தாங்க. ஒப்பந்தப்படி பதவியைக் குடுக்கனுமே.....மனசில்லை. ஆச யார விட்டது. ஒடனே குண்டக்கமண்டக்க பேசுறாரு. இந்தத் திடீர் போதிமரம் எங்கயிருக்குன்னு சொன்னா அதுக்கடியில எல்லாரும் உக்காந்திருந்திட்டு வரலாம். கர்நாடகால நிலையான ஆட்சீங்குறது ரொம்ப ரொம்பக் கஷ்டம். எஸ்.எம்.கிருஷ்ணா ஒருத்தர்தான் அஞ்சு வருசம் உக்காந்து ஆட்சி செஞ்சாரு.
தமிழ்நாட்டுலயும் கேட்டீங்கன்னா..எனக்கு எல்லாம் ஒரே குட்டை..ஒரே மட்டையாத்தான் தெரியுது. ஒன்னை எதுக்குறதால இன்னோன்ன ஆதரிக்க வேண்டிய நெலமை நெறையப் பேருக்கு. அட...எதுக்க வேண்டியதுன்னா ரெண்டையும் எதுப்பமேன்னு இருக்குறது என்னோட நெலமை. ஆனா ஒன்னு எல்லா அரசியல்வாதிகளும் புஷ் மாதிரிதான் பேசுறாங்க. "எங்க கூட இல்லைன்னா நீ துரோகி"ன்னு.
http://naachiyaar.blogspot.com/2007/10/blog-post_05.html
சொல்ல வேண்டியதச் சொல்ற மாதிரிச் சொல்லனும். எதிர்க்கருந்து இருந்தாலே எதிரின்னு நெனைக்கிற எண்ணம் மாறுனாப் போதும். எல்லாம் ஒழுங்கா நடக்கும்.
http://chennaicutchery.blogspot.com/2007/10/6.html
அடேங்கப்பா....மலையாள மனோரமாவோட கடந்த பத்து வருச இயர்புக்க ஒரே மூச்சுல படிச்ச எப்பக்டு வருதுய்யா...வருது.
ஆனா...வெட்டிப்பயலுக்கு இப்பிடி ஆப்பு வெச்சிட்டாரே விவாஜி. வெட்டி சுட்டியாவாரா? பொட்டியாவாரான்னு போகப்போகத்தான் தெரியும் போல.
http://aaththigam.blogspot.com/2007/10/8.html
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிரைத் தும்பி நல்லதைக் கொணர்ந்ததோ! நன்று. நன்று. மாமல்லபுரம் என்று முதலிலேயே புரிந்தது.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இப்பக் கந்தனுக்கு ஆடு போயாச்சு. அதால அவனுக்குத் தும்பமில்லை. இப்பிடி எல்லாம் போகவும்...எல்லாம் வந்துரும்.
http://govikannan.blogspot.com/2007/10/blog-post_05.html
// முத்து தமிழினி said...
ராகவன் சொல்றமாதிரி எல்லாரையுமே எதிர்த்துக்கிட்ட போனா நம்மளை தவிர யாரும் ஆளக்கூடாதுன்ற முடிவுக்கு தான் வரணும்..
ராகவா சும்மா தமாசுக்கு :))//
அட முத்து தமிழினி...வாங்க. எவ்ளோ நாளாச்சு. எப்படி இருக்கீங்க?
ஐயா, நீங்க தமாசுங்குறீங்க. நான் வயித்தெரிச்சலுங்குறேன். செய்றது நல்லதா இருந்தா ஏன் எதுக்குறோம்? தப்புன்னு மனசுக்குப் பட்ட எதுக்குறோம். சரின்னு பட்டா ஆதரிக்கிறோம். ஆனா ஒரு குறிப்பிட்ட கட்சியோ தலைவரோ நல்லது செஞ்சிருக்காங்கங்குறதுக்காக அவங்களை எதுத்து எதுவுமே சொல்லக் கூடாதுன்னா எப்படி? அதத்தான் சொல்ல வாரேன். தப்புன்னு சொல்றதும் சரீன்னு சொல்றதும் கட்சிய வெச்சும் தலைவர வெச்சும் சொல்ல முடியாது. அதப் புரிஞ்சிக்காம புஷ்ஷிசம் பேசுனாத்தான் எரிச்சல் வருது. அதத்தான் நான் சுட்டிக் காட்டுனேன்.
http://paarima.blogspot.com/2007/10/blog-post.html
கருணாநிதிக்கும் சரி வாஜ்பாயிற்கும் சரி இப்பொழுது உண்மையிலேயே தேவை ஓய்வு. ஞாநி எந்த உள்ளர்த்தத்துல சொன்னாரோ தெரியாது. ஆனா டீவில பாக்குறப்போ கஷ்டமாத்தான் இருக்கு. என்னையைக் கேட்டா ஸ்டாலினை முன்னிறுத்த இது சரியான நேரமாத்தான் தோணுது. ஷங்கர் தயாள் சர்மா முந்தி பாக்குறப்போ கஷ்டமாயிருக்கும். வாஜ்பாயும் இப்பிடித்தான். அதுலயும் முட்டீல ஏதோ அப்பரேஷன் செஞ்சாராமே. வண்டீல தள்ளீட்டு வந்தாங்க. ஐயோ பாவம்.
http://blog.balabharathi.net/?p=56
ரொம்ப நாள் கழிச்சி யெஸ்பா பதிவு.
ஞாநி நெனச்ச உள்ளர்த்தம் எனக்கு இல்லைன்னாலும் கருணாநிதி ஓய்வெடுக்குறது நல்லதுன்னு வயச மட்டும் வெச்சு எனக்குத் தோணுது. இப்பத்தான் மகேந்திரன் பதிவுல இப்பிடித்தான் சங்கர் தயாள் சர்மா நடக்க முடியாம நடந்தப்பயும் கஷ்டமா இருந்துச்சு. வாஜ்பாய வண்டீல உக்கார வெச்சித் தள்ளிக்கிட்டு வந்தாங்க. அப்பயும் கஷ்டமா இருந்தது. இப்ப இவரப் பாக்கைலயும் கஷ்டமாத்தான் இருக்குன்னு பின்னூட்டம் போட்டுட்டு வந்து பாத்தா நீங்களும் சங்கர் தயாள் சர்மாவையும் வாஜ்பாயையும் எடுத்துச் சொல்லிக் கேள்வி கேட்டிருக்கீங்க. நல்ல கேள்வி. வயதானவர்களுக்கு ஓய்வு வேணும்னா வயதான எல்லாருக்கும் ஓய்வு வேணுந்தான்.
http://jegadeesangurusamy.blogspot.com/2007/10/blog-post.html
என்ன கொடுமைங்க இது.... ஒருத்தனை அழிக்கனும்னா அதுக்கு தெய்வம் உதவும்னு நம்பி தெய்வத்தை அவமதிக்கிறதுக்கு இவங்கள என்னதான் செய்றது? என்னவோ போங்க. தான் வாழ யாகம் செஞ்சா அத சரிங்கலான். ஆனா அடுத்தவன் அழியிறதுக்கு யாகமா!!!!!!
http://tvpravi.blogspot.com/2007/10/blog-post_7620.html
ரவி, இதுக்கு ரெண்டே ரெண்டு விஷயத்தக் கடைப்பிடிச்சா போதும்.
1. எதிர்க்கருத்து சொல்றவன் எதிரி இல்லைன்னு நெனைக்கனும்
2. கருத்தைக் கருத்தால எதிர்க்கனும்
இது ரெண்டும் முடியாம...கருத்துக்கு என்ன கருத்துச் சொல்லி தன்னை நிலைநிறுத்திக்க முடியலையோ...அப்பத்தான் ஆபாசக்கும்மிகளும் பின்னூட்டங்களும் வர்ரது. இது கண்டிப்பா மறையனும்.
http://pithatralgal.blogspot.com/2007/10/261.html
அண்ணன் (நீங்கள்) ஒரு கோயில் என்றால்
கும்மி ஒரு தீபமன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ
என் அண்ணன், எங்கள் அண்ணா, அண்ணா என் தெய்வம், அண்ணன் ஒரு கோயில் போன்ற படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் அண்ணா.
http://enularalkal.blogspot.com/2007/10/blog-post_07.html
நிகழ்ச்சியை அமைப்பவர்கள்..பாடகர்களை அழைக்கையில் தமிழில் பாடுமாறு சொல்லியே அழைக்க வேண்டும். அந்த அடிப்படை அறிவு அவசியம். நடுவில் ஒன்றிரண்டு தெலுங்குப் பாட்டு பாடினால் பாடட்டும். ஆனால் நிகழ்ச்சி தமிழ் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். தமிழில் பாடினால்தான் காசு என்று சொன்னால் பாடி விட்டுப் போகிறார்கள்.
http://wikipasanga.blogspot.com/2007/10/blog-post.html
பந்துல எப்படிங்க ரன் எடுக்குறது? ரப்பர் எடுக்கலாம்...லெதர் எடுக்கலாம்..கார்க் எடுக்கலாம்...ரன் எப்படி எடுக்குறது? :))) சரி. சரி. ஸ்டாப்பிங்.
ஒரு கேள்விக்குன்னே வெச்சுக்கிருவோம். பந்து மட்டைல பட்டு ரெண்டாத் தெரிச்சி..ஒங்கு இங்குட்டும் ஒன்னு அங்குட்டும் போயிருச்சுன்னா என்ன செய்வாங்க?
http://songs.arutperungo.com/2007/08/blog-post_27.html
எனதுயிர்ங்குறது இலக்கணப் பிழைன்னு நெனைக்கிறேன். என்னுயிரே என்னுயிரேன்னு இருக்கனும்னு நெனைக்கிறேன்.
பாட்டு நல்லாருக்கு.
http://birund.blogspot.com/2007/10/blog-post_9766.html
சாய்பாபா என்ன... எங்க பக்கத்து வீட்டு பாட்டி கூடத்தான் நெலாவுல தெரியுறாங்க. அவங்க நெலாவுல வடையே சுட்டிருக்காங்க. வெறும் தரிசனம் தர்ரது எந்த மூலைக்கு. ஆனானப்பட்ட கடவுள் சூரியன்ல காட்சி குடுத்தா நல்லாயிருக்கும்.
http://penathal.blogspot.com/2007/09/blog-post_30.html
// ILA(a)இளா said...
இந்தக் கடைசி வரிய வெச்சுதானே பதிவ ஓட்டனும்னு நினைக்கிறீங்க. அதாங்க சிவாஜி சக்ஸஸ் ரகசியம். ஏன்.. படங்களின் விமர்சனம்னு வெச்சுட்டு போயிருக்கலாமே? அதை வெச்சு பொழப்பு ஓட்டனும்னு தெரிஞ்சு வெச்சி இருக்கீங்க //
என்ன இளா இப்பிடிச் சொல்லீட்டிங்க!பின்னே சிவாஜியோட சக்சஸ்னா சும்மாவா இருக்கு. பராசக்தீல தொடங்கி...எத்தனை சிவாஜி படம்..எத்தனை சிவாஜி படம். ஒன்னா ரெண்டா...சாமி வேசம்..ஆசாமி வேசம்...எத்தனை வேசங்களைப் போட்டு என்னமா நடிச்சிருக்காரு சிவாஜி. பரமசிவனே நேருல வந்து நின்னாப்புல இருக்குமே. கப்பலோட்டிய தமிழன் பாத்துட்டு..வ.உ.சியோட மகன்...தியேட்டர்ல அப்பா அப்பான்னு கதறி அழுதாராமே...என்ன நடிப்புய்யா அது.
அடடா...அப்படி இருக்குறப்போ...பெனாத்தலாரே சிவாஜி படம் சரியில்லைன்னு நீங்க சொல்லலாமா? என்னது...இது சிவாஜி நடிச்ச படமில்லையா. யாரு ரஜினிகாந்த் நடிச்ச(!) படமா? ஓ அப்படியா...அப்பச் சரி.
இந்த மாய மந்திரஜால மோகினிய எறக்குமதி செய்ய முடியுமான்னு சொல்லுங்க. எப்படியிருக்குன்னு பாக்குறேன்.
http://thulasidhalam.blogspot.com/2007/10/31.html
பாத்தீங்களா டீச்சர். அந்த ஊர்லயும் இப்பிடி ஒருத்தருக்குத் தெரியாத ஆள வேலைக்கு வெச்சா பிரச்சனை சொல்றாங்க. அத்தனையும் நானும் பட்டேன். ஒங்களப் போல பெரிய அளவுல இல்லைன்னாலும்...நானும் பட்டேன். அப்பப்பா! கிரில் கேட்டுப் போட மட்டுந்தான் காசுன்னு கேட்டு போட்டப்புறம் சொன்னாங்க. பெயிண்டிங் தனியாம். ம்ம்ம்...என்னவோ போங்க. அப்பார்ட்மெண்ட்டை முடிச்சி உள்ள போய் உக்காந்தப்புறம் வரிசையா செலவுகள். அத வைக்கிறது..இத வைக்கிறதுன்னு. கொசுவர்த்தி சுத்த வெச்சுட்டீங்களே டீச்சர்.
http://vettrikandaswamy.blogspot.com/2007/10/blog-post_06.html
வெற்றி, பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. வேலிக்கருவுதான் தமிழ்நாட்டின் தேசிய மரம் என்ற நிலை. வேலிக்கருவின் பலன்....மழையைத் துரத்தும். :( தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருசில பகுதிகளைத் தவிர...மற்ற இடங்கள் வறட்சி. திருநெல்வேலி நாகர்கோவில் மாவட்டங்கள் தாவலை. கோவை, தஞ்சை, தேனி போன்ற இடங்கள் செழிப்பைக் காட்டலாம். மற்றபடி..மொட்டையோ மொட்டை.
http://penathal.blogspot.com/2007/10/blog-post.html
ஹாரி பாட்டர். எப்படிப் படிச்ச கதை அது. அப்பப்பா...ஹாரி பாட்டர் புத்தக வெளியீடு வருதுன்னாலே அது திருவிழா வர்ராப்புலதான்.
இங்ஙன இருக்கு நான் எழுதுன மதிப்பீடு.
http://gragavan.blogspot.com/2007/07/blog-post_22.html
http://sangamwishes.blogspot.com/2007/10/wishes_09.html
வாழ்த்துகள் ராசா....இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீடூடி வாழ வாழ்த்துகிறேன்.
http://chennaicutchery.blogspot.com/2007/10/7.html
அடா அடா அடா என்ன திட்டம் என்ன திட்டம். இப்பிடித்தான் இருக்கனும் திட்டம்னா.
வெட்டி...நீ மாட்டிக்கிட்ட...இனிமே ஒன்னால ஒன்னும் பண்ண முடியாது.
http://valaippadhivu.blogspot.com/2007/10/blog-post.html
எத்தனை அழகான இடங்கள். கட்டிடங்கள். அப்பப்பா. அத்தனையையும் வைத்து வாழ்ந்தாலும்...மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்ம்ம்ம்ம். புரட்சீன்னு வந்தா....ஆண்டைக்கு எப்பவும் பேண்டைதான்.
படத்துலயே இப்பிடி இருக்கே. நேருல பாத்தா எப்படியிருக்கும்.
http://videospathy.blogspot.com/2007/10/blog-post_08.html
காற்றுவெளியிடைக் கண்ணம்மா....நின்றன் காதலை எண்ணிக் களிக்கிறேன்....காதலிக்கிறது களிப்பில்லையாம். அந்தக் காதலை எண்ணி எண்ணிப் பாக்குறது களிப்பாம். பாரதியாரு சொல்றாரு. கேட்டுக்கோங்க. :)
நல்ல பாட்டு பிரபா. பாரதியின் மெட்டிலிருந்து விலகி போடப்பட்டிருக்கும் மெட்டும் காட்சியழகும் பரவசமூட்டுகின்றன.
http://dharumi.blogspot.com/2007/10/237.html
ஒரு நல்லபடம் பாத்தோங்குற திருப்தியைப் பெரும்பாலும் மலையாள வங்காளப் படங்களப் பாத்துத்தான் தீத்துக்குறது. நீங்களும் அப்படித்தானா? அது சரி. நம்ம ஒற்றுமைதான் தெரிஞ்சதாச்சே.
மலையாளத்துலயும் பாண்டிப்படா, ராஜமாணிக்கம் எல்லாம் வரும். ஆனா நல்ல படங்களும் கண்டிப்பா வரும்.
ஒரு படம். பேரு நெனவில்லை. மோகன்லால், ரேகா, முரளி (டும்டும்டும் ஜோதிகா அப்பா), சுகுமாரி நடிச்சிருப்பாங்க. பழைய படம். ரேகா முரளி ஜோடி. மோகன்லால் கல்யாணமாகாத பணக்காரரு. சுகுமாரிதான் வேலைக்காரி மாதிரி சின்ன வயசுல இருந்து பாத்துக்கிறது. லாலுக்குக் கொழந்த ஆசை வரும். அப்ப முரளியோட ஆப்பரேஷனுக்கா ரேகாவுக்குப் பணம் தேவைப்படும். செயற்கை முறைல கருவுண்டாக்கி ரேகா சுமப்பாங்க. ஆனா கொழந்தை பொறந்ததும் தரமாட்டேன்னு அடம் பிடிப்பாங்க. சிலபல பிரச்சனைகளுக்குப் பிறகு மோகன்லால் போகட்டும்னு விட்டுருவாரு. கார்ல முரளி, ரேகா, கொழந்தை எல்லாம் ஏறிப் போனதும் பக்கத்துல இருக்குற சுகுமாரியப் பாத்துக் கேப்பாரு "அந்தக் கொழந்தைய அவ பாத்துக்கிற மாதிரி....நீ என்னையப் பாத்துக்குவியா"...அப்பா சுகுமாரியோட முகபாவங்கள்..அடடா. அவ்வளவுதான். படம் முடிஞ்சு போச்சு. இதே முடிவு தமிழ் சினிமால இருந்திருந்தா? "சுகுமாரி, அதோ போறாளே....என்னோட குழந்தையத் தன்னோட கொழந்தையாத் தூக்கிக்கிட்டு...அவ எவ்வளவு அன்போட ஆசையோட அந்தக் கொழந்தையப் பாசமா பாத்துக்கிறாளோ...அதே அளவு ஆசையோடயும் பாசத்தோடயும் என்னையப் பாத்துக்கிறதுக்கு ஒரு அம்மா வேணும். அந்த அம்மாவா நீங்க இருப்பீங்களா? சொல்லுங்கம்மா சொல்லுங்க" அப்படீன்னு கதாநாயகன் கதறீருப்பாரு. ஏன்னா..அப்பத்தான் நம்மாளுகளுக்கு மோகன்லான் சுகுமாரி கிட்ட என்ன கேக்குறாருன்னே புரியும். இல்லைன்னா என்ன கேக்குறாருன்னே புரியாது.
இயக்குனர்களை மட்டும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை. நம்ம மக்களையும் சொல்லனும். ஏன்னா..இயக்குனர்கள் மக்களுக்குள்ள இருந்துதான வர்ராங்க. ஆகையாலதான் இப்பிடியிருக்கு.
ஒரு பாட்டாவது உருப்படியா எடுக்குறாங்களா....விட்டாப் பொலம்பிக்கிட்டேயிருப்பேன்.
http://aaththigam.blogspot.com/2007/10/9.html
இந்த எண்ணெய் பத்தி நெறையப் பேரு சொல்லீட்டாங்க. அதுக்குப் பயிற்சியெல்லாம் ஒன்னும் வேண்டாம். எண்ணெய ஏன் சிந்தாமக் கொண்டு வரனும்னு தெரிஞ்சாப் போதும். வீட்டையும் பாத்து எண்ணெயையும் கொண்டாந்துரலாம்.
சரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா?
http://aaththigam.blogspot.com/2007/10/10.html
மதுரைல எறங்குனானே...அங்க ஜங்சன் பக்கத்துல பிரேம விலாஸ் கடைல அல்வா வாங்கித் தின்னிருக்கலாமே. ஓ அது சாந்தரந்தான கெடைக்கும். மதுரை சாப்பாட்டுக்குக் கவலையே இல்ல. நல்ல சாப்பாடு நெறைய எடத்துல கெடைக்கும்.
http://konjamkonjam.blogspot.com/2007/10/2.html
// ILA(a)இளா said...
நல்ல புதையல் தான். சர்வர் சுந்தரம் கூட கிடைக்க மாட்டேங்குது. வாங்கியோ, இறக்கியோ வைங்க. வந்து வாங்கிக்கிறேன். எதுக்கும் நம்ம மயிலார் கிட்டே கேட்டுருங்க. அவர் கிட்ட இல்லாதததா? //
மயிலார் கிட்ட நெறைய இருக்கு. சமீபத்துல கூட வாங்கீருக்காரு. ஆனா இந்த மூனு படமும் இல்ல. மதுரைல சில சினிமா டிவிடிக் கம்பெனிகள் இருக்கு. அங்க எல்லாம் போய்த் தேடிப் பாத்தா கிடைக்கலாம். நானும் முடிஞ்ச வரைக்கும் படங்களைச் சேகரிச்சிக்கிட்டுதான் இருக்கேன்.
சர்வர் சுந்தரம் கிடைக்கும். எங்கிட்ட இல்ல. ஆனா கெடைக்க வாய்ப்பிருக்கு. எங்கயோ டிவிடி பாத்தேன். ஆனா வாங்கலை. சென்னைல ஏவிஎம் சவுண்டு..அதாங்க சங்கராஹால் பக்கத்துல இருக்கே. அங்க போய்ப் பாருங்க. நெறைய இருக்கு.
http://konjamkonjam.blogspot.com/2007/10/2.html
ஓமப்பொடியாரே,
மொதப் பாட்டு நல்லாருக்கு. முன்னாடியே கேட்டதுதான். ரெண்டாவது பாட்டு நல்லால்ல. ஏசுதாஸ் குரலுக்குப் பொருந்தி வரலை. பாலுவோ மலேசியாவோ பிச்சி உதறீருப்பாங்க. ஏசுதாஸ் குரலுக்குப் பொருத்தமான டி.எம்.எஸ் பாட்டுன்னா "பொன்னை விரும்பும் பூமியிலே" சொல்லலாம். மூனாவது பாட்டும் ரொம்ப அருமையான பாட்டு. அடடா அடடா அடடா டா!
அப்புறம் ஒரு வேண்டுகோள். இவ்ளோ பொதையல்கள எடுக்குறீங்க. எனக்கு ரெண்டு பொதையல் வேணும். தேடிக்குடுங்கய்யா.
1. என் இனிய பொன் நிலாவே - பாட்டில்ல. படம். பாலுமகேந்திரா இயக்கத்துல வந்த படம். பாண்டியராஜன் நடிச்சிருக்காரு. இதுக்கு மெல்லிசை மன்னரு இசைஞானியும் சேந்து இசையமைச்சிருக்காங்க. இந்தப் படத்துல இருக்குற எல்லாப் பாட்டும் எனக்கு வேணும். இந்தப் படத்துல எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருக்காங்க.
2. ஞாயிறும் திங்களும் - இந்தப் படம் வெளிவரலை. ஸ்ரீதர் இயக்கத்துல தொடங்கி நின்னு போன படம். சிவாஜி, தேவிகா, கே.பி.சுந்தராம்பாள் நடிக்க இருந்தது. ஆனா பாட்டெல்லாம் பதிவு செஞ்சு ரிலீசும் செஞ்சிட்டாங்களாம். 60களின் சம்பிரதாயம் மாறாம மெல்லிசை மன்னர்தான் இசை. இந்தப் படத்துல என்ன விசேசம்னா....மெல்லிசை மன்னர் இசைல கே.பி.எஸ் பாடி ரெண்டு பாட்டு இருக்கு. பாட்டத்தனையும் எழுதுனது கவியரசரு. இந்தப் படத்துல இருக்குற அத்தனை பாட்டுகளையும் தேடிக் குடுங்கய்யா.
இந்த ரெண்டு புதையல்களையும் கேக்க உதவி செஞ்சா...ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும். புள்ள குட்டியோட நல்லாருப்பீங்க.
http://madhumithaa.blogspot.com/2007/10/blog-post_09.html
மதுமிதா, விகடன் பிரசுரமா இதை வெளியிட்டு இருக்காங்க? தில்லானா மோகனாம்பாள் பழநியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்துல இருக்கே. சென்னைல அவங்க பதிப்பகத்துக்கே போய் புத்தகம் வாங்கினேன். திமோ படிச்சிருக்கீங்களா? படிங்க..அப்பப்பா! ஒரு காலகட்டத்தையே கண் முன்னாடி கொண்டாந்துருவாரு. அவருடைய எழுத்து அருமையான எழுத்து. அறிமுகத்துக்கு நன்றி. இதையும் தேடுறேன்.
http://varappu.blogspot.com/2007/10/blog-post_09.html
கவிதைகளுக்கெல்லாம் சிறந்த கவிதையாக
உங்கள் கவிதை உருவாக விதையாக
இருந்த ஒரு நண்பனை
நீங்கள் இப்படித் திட்டியிருக்கின்றீர்கள்.
பாராட்டுகள்.
http://valaippadhivu.blogspot.com/2007/10/blog-post.html
// இராமநாதன் said...
ஜிரா,
//.மற்றவர்களை வாழ வைக்காததால் வந்த வினை....ம்ம்ம்ம்ம். புரட்சீன்னு வந்தா....ஆண்டைக்கு எப்பவும் பேண்டைதான்.//
சிம்பிளா சொல்லிட்டீங்க.. என்ன புரட்சி/மலர்ச்சினு சொல்லி உள்ள வந்தவங்களும் குடும்பத்துக்கும் சேர்ந்து சுரண்டித் தின்னுட்டுதான் போறாங்க.. அதுக்கு என்ன செய்யிறது?
இந்த மேட்டர்ல தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசேமேல்னு வச்சுக்கலாமா கூடாதா? //
கூடாது. கூடவே கூடாது. ஒரு பேயே உக்காந்து திங்குறதுக்குப் பதிலா ஒரு வாட்டி பேயி..ஒரு வாட்டி பிசாசு...ஒரு வாட்டி குட்டிச்சாத்தான்னு எல்லாரும் சாப்புடட்டும். அதென்ன ஒருத்தரே உக்காந்து சாப்புடுறது.
http://raamcm.blogspot.com/2007/10/blog-post.html
ஒன்னோட கவுஜைக்கும் விவாஜியோட கவுஜைக்கும் எதிர்க்கவுஜ இங்க
http://gragavan.blogspot.com/2007/10/blog-post.html
http://varappu.blogspot.com/2007/10/blog-post_09.html
ஒங்க கவுஜைக்கும் ராயலார் கவுஜைக்கும் எதிர்க்கவுஜ இங்க
http://gragavan.blogspot.com/2007/10/blog-post.html
http://pstlpost.blogspot.com/2007/10/blog-post_10.html
பில்லா படத்துல பாட்டெல்லாம் சூப்பர் ஹிட். வெத்தலயப் போட்டேண்டிய ரீமிக்ஸ்சா? அப்ப மை நேம் இஸ் பில்லா?
http://keethukottai.blogspot.com/2007/09/blog-post_23.html
மருதமல பாத்துட்டேன். படம் எல்லாம் கதம்பமா இருந்தாலும் தொடக்கத்துல இருந்து முடிவு வரைக்கும் ரசிக்க முடிஞ்சது. முழு மசாலாதான்...ஆனாலும் உக்காந்து பாத்தேன். இந்த வருடத்துல வந்த சிறந்த மசாலாபடம்னு விருது குடுக்கலாம்.
என்னது நாச்சியார்புரம் கற்பனையா? பாப்பாப்பட்டி கீரிப்பட்டீல என்ன நடக்குது? அதத்தான் கொஞ்சம் கூட்டிச் சொல்லீருக்காங்க. சரிதானே?
http://aaththigam.blogspot.com/2007/10/11.html
காசு எல்லாம் குடுத்துத் தொலைச்சிட்டானா....சரி...மாமல்லபுரம் போய்ச் சேந்தப்புலதான். அந்த ரெண்டு கல்லு இருக்குதே...அதப் பயன்படுத்தப் போறானாக்கும். படுத்தட்டும் படுத்தட்டும்.
http://theevu.blogspot.com/2007/10/blog-post_159.html
:) நல்ல பதிவு தீவு. ரசித்தேன். தலைப்பிலிருந்து முடிப்பு வரைக்கும்.
எல்லாரும் முகலாய மன்னர் நாட்குறிப்பு எழுதினார். கக்கூஸ் போனதை எழுதினார். நம்மவர் எதை எழுதினார் எனக் கேட்பர். அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முகலாய அரசன் அனைத்தையும் எழுதினான். அதற்கு முன்பு? அவர்கள் எழுதியது பாதுகாக்கப்பட்டது. நம்மவைகள்? தமிழர் வரலாறு எழுத விரும்பினால் எக்கச்சக்கமான சான்றுகள் உள்ளன. ஏதோ காசுக்கு எழுதினர் என்று சொல்வது...சொல்கிறவர்களுக்கே பொருந்தும்.
http://radiospathy.blogspot.com/2007/11/23.html
அருமையானதொரு கலைஞரைக் கௌரவிக்கும் அருமையான முறை. ஒரு தலைமுறைக் கலைஞனை அடுத்த தலைமுறைக் கலைஞர்தான் கௌரவிக்க வேண்டும். எஸ்.எம்.சுப்பையாநாயுடுவுக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே கௌரவம் செய்த பெருமை மெல்லிசை மன்னருக்கு உண்டு. அவருடைய மறைவுக்குப் பின் நாயுடு அவர்களின் துணைவியாரைத் தன் வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றினார் மெல்லிசை மன்னர்.
ஆனால் அவருக்கு அடுத்த தலைமுறைக் கலைஞர்கள் மெல்லிசை மன்னருக்குக் கௌரவம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் மிகமிக வருத்தத்திற்குரிய விடயம். நிச்சயமாக இசைஞானியோ இசைப்புயலோ இதை முன்னெடுத்துச் செய்யலாம். தாங்கள் மதிப்பதாகச் சொல்லப்படும் ஒரு கலைஞனுக்கு இதைச் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா. எஸ்.பி.பாலசுப்ரமணியம் கோதண்டபாணி ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்தார். கண்டசாலாவுக்குச் சிலை வைத்தார். மெல்லிசை மன்னருக்கு ஒரு மேடையில் மட்டும் ஏதாவது செய்யுங்க மக்களே என்று கோரிக்கை வைத்தார். கலைஞர்களே உங்கள் கலைத்திறமையை மதிக்கிறேன். ஆனால் அதற்கு மேலும் நீங்கள் செய்ய வேண்டியதுண்டு. உங்கள் கடமையை நினைவுபடுத்திப் பாருங்கள்.
கவியரசருக்கும் ஒருத்தரும் ஒன்றும் செய்யவில்லை. மெல்லிசை மன்னர் முன்னெடுத்துத்தான் சிலை வைத்தார். வாழும் போதே உங்களுக்கு முந்தைய தலைமுறையைக் கௌரவிக்க என்னய்யா தயக்கம் உங்களுக்கு!!!!
http://johan-paris.blogspot.com/2007/10/blog-post_12.html
நல்லாவே தண்ணியடிக்குதுக..இல்ல.இல்ல தண்ணி குடிக்குதுங்க இந்தப் பாம்புக!
படத்தத் தேடிக்குடுத்ததுக்கு நன்றி யோகன் ஐயா.
http://isaiarasi.blogspot.com/2007/10/blog-post.html
ராஜேஷ், நீங்கள் சொல்வது சரிதான். இசையரசி, எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடிய பாடல்கள் கலக்கல் என்றால் பின்னாளில் வாணிஜெயராமுடன் இணைந்த பாடல்களும் கலக்கலே. இசையரசி அவர்கள் ஜமுனாராணி, லீலா, ஜிக்கி ஆகியோருடனும் இணைந்து பாடியிருக்கின்றார் என்று நினைக்கிறேன். பாடல்கள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. சூலமங்கலம், உமாரமணன், எஸ்.பி.ஷைலஜா ஆகியோருடனும் இணைந்து பாடியுள்ளார்.
நீங்கள் கொடுத்துள்ள பாடலும் மிக அருமையாக இருக்கிறது. தேர்ந்தெடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.
http://videospathy.blogspot.com/2007/10/blog-post_12.html
பிரபா மிகவும் அருமையான பாட்டு. உங்கள் கருத்தோடு பாதிதான் ஒத்துப் போகிறேன். என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு முன் ஒரு டிஸ்கி. இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பாடியவர்கள், இசை எல்லாமே மிகமிக அருமை. சரி. இப்பொழுது கருத்துக்குப் போவோம்.
1. என்னைக் கேட்டால் பாடற்காட்சி மிகமிக இயல்பாகவும்..இசை பலபடிகள் இயல்பிற்கும் மேலாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. தமிழர்களில் நூற்றுக்கு 99 பேர் இப்பிடித்தான் ஆடுவார்கள். இப்படித்தான் சிரிப்பார்கள். இப்படித்தான் முழிப்பார்கள். ஆகையால்தான் பாடற்காட்சியும் இசையும் பொருந்தி வரவில்லை. இதை மிகத் திறமையாகக் கையாண்டவர் மகேந்திரன். யாரும் பாட மாட்டார்கள். பாடற்காட்சி போய்க்கொண்டேயிருக்க பின்னணியில் பாடல் ஒலிக்கும். நித்தம் நித்தம் நெல்லிச்சோறு விதிவிலக்கு. அதுவும் மெல்லிசை இசைக்கோர்வையோடு. இந்தப் பாடல் அளவிற்கு அதீத இனிமையான இசைக்கோர்வை இருக்காது. இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது.
2. மிகமிக இனிமையான இந்தப் பாடலை மிக அழகாகவும் படமாக்கியிருக்கலாம். பலர் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் செய்திருக்கலாம். அதில் மாற்றுக்கருத்தில்லை.
http://elavasam.blogspot.com/2007/10/blog-post.html
இந்தப் பயதான் ராசுப்பாட்டீலா? நல்லாத்தான் படம் போட்டிருக்காங்க. இது பாராட்டுக்குரியதே. இந்த மாதிரிப் பண்பாட்டுக் கலப்புகளின் அறிமுகங்கள் நல்லதே. ஒற்றுமையை வளர்க்கும் என்று நம்புவோம்.
http://aaththigam.blogspot.com/2007/10/12.html
ஊருக்குள்ளப் போயாச்சா? ஜங்சன்ல இருந்து அப்படியே காலேஜ் ஹவுஸ் வழியா நேராப் போனா மீனாட்சியம்மன் கோயில் வரும். அங்க போக வேண்டியதுதானே.
வண்டி கெடைக்கலையான்னு கேட்டா...அது தெரிஞ்ச ஆளாத்தான் இருக்கனும். மதுரை தெரிஞ்சவங்க மனுசங்கள்ள ரெண்டு பேருதான். ஒருத்தன் திருடன். அவன் வர மாட்டான். இன்னொருத்தரு ஓட்டலாரு. அவராத்தான் இருக்கனும்.
http://aaththigam.blogspot.com/2007/10/13.html
கந்தன் இப்பொழுதுதான் பக்குவப் படத் தொடங்கியிருகிறான். தன் முடிவைத் தானே எடுக்கும் திறம் வந்திருக்கிறது. ஊருக்குப் போனாலும் புதையலூருக்குப் போனாலும் வெறும் கை முழம் போடாது என்பதும் புரிந்திருக்கிறது. நல்ல தொடக்கம்.
http://videospathy.blogspot.com/2007/10/blog-post_12.html
// வாங்க ராகவன்
ராஜாவைக் குறை சொன்னதை மன்னிக்கிறேன் ;-) //
ஆகா...பிரபா, நான் எப்போ ராஜாவைக் குறை சொன்னேன்? அந்தப் பின்னூட்டத்துல தவறு எங்க நேர்ந்திருக்குன்னு எனக்குத் தோணியதைத் தெளிவாச் சொல்லீருக்கேனே.
===============================
இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது.
===============================
நானும் இயக்குனர் மேலதான தவறைச் சொல்லியிருக்கிறேன். :)
http://ammanpaattu.blogspot.com/2007/10/3.html
நல்ல பாடல்.
அது சரி..சிவகவின்னு போட்டுட்டு ஹரிதாஸ் படத்தப் போட்டா எப்படி?
சிவகவி படத்துலதான் தியாகராஜபாகவதர் பொய்யாமொழிப் புலவரா நடிச்சாரு. முருகன் மேல பாடவே மாட்டேன்னு அடம் பிடிச்சிக் கடைசீல சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே சுப்ரமண்ய சுவாமீன்னு பாடுவாரு.
இன்னொரு கேள்வி. கடம்ப வனம் எப்படிக் கதம்ப வனமாச்சு?
http://malargall.blogspot.com/2007/10/blog-post_12.html
வணக்கம் இ.க.வள்ளி. இது நகைச்சுவைப் பதிவுன்னு நீங்க சொன்னப்புறம் புரிஞ்சது. ஆனா சில விஷயங்களைச் சீரியசாவும் சொல்லியிருக்கனும். சில விஷயங்களைச் சொல்லாமலும் இருந்திருக்கலாம்.
ஊரெங்கும் தமிழில் ஆங்காங்கு சுவரில் எழுதி வைத்திருப்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. அதை நீங்கள் கண்டித்திருக்கலாம். நகைச்சுவை செய்து விட்டீர்கள்.
தமிழ்ப்பாட்டு நீங்கள் எங்கே கேட்டீர்கள் வள்ளி? தெருக்களில் தமிழ்ப்பாட்டு கேட்டு ஆண்டுகளாகின்றன. சமீபத்தில் நான் கேட்டதில்லை. கன்னடப் பாட்டுகளுக்கும் மக்கள் விசிலடிக்கின்றார்களே. எங்கள் வீட்டுப் பக்கமெல்லாம் அடிக்கிறார்கள்.
என்னது? கன்னட நடிகர்களை நம்மவர்களுக்குத் தெரியாதா? கிழிஞ்சது போங்க. பெங்களூருக்குப் புதுசாப் போனவங்களுக்கு வேணாத் தெரியாம இருக்கலாம். ஆனா அங்கயே இருக்குற தமிழர்களுக்கும் போய் ஆண்டுகள் ஆன தமிழர்களுக்கும் நல்லாவேத் தெரியும். ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க. நாகமண்டலா, நீலான்னு படங்கள் கன்னடத்துல உண்டு. அதுமாதிரியெல்லாம் தமிழ்ல இப்போதைக்கு யோசிக்க முடியுமான்னு தெரியலை. சேரன் கூட மசாலாக்கண்ணாடிக்கு வந்துட்டாரு. அட...அத விடுங்க...சயனைடு? ராஜீவ்காந்தி கொலைய வெச்சி எடுத்த படம்? கன்னடப் படந்தானே? அவங்க நடுநிலையோடு எடுத்திருந்தாங்க. நம்மளும் எடுத்தோமே....என்ன படமெது? குற்றப்பத்திரிக்கை. கன்னடத்துல நல்ல படங்கள் பாட்டுகள் நெறையவே இருக்கு. டி.ஜி.லிங்கப்பா, ஜி.கே.வெங்கடேஷ், விஜயபாஸ்கர்னு தமிழர்கள் கொடிகட்டப் பறந்த திரையுலகம் அது.
சென்னை மாதிரி சாப்பாடு வராதுன்னு நம்ம சொல்றோம். பம்பாய் மாதிரி ரொட்டி வராதுன்னு இன்னொருத்தன் சொல்றான். ஐதராபாத் மாதிரி பிரியாணி வராதுன்னு இன்னொருத்தன் சொல்றான். எல்லாம் ஒரு இதுதான். பொதுவாவே சாப்பாட்டைக் குறுகிய மனப்பாங்கோடுதான் நாம அனுகுறோம். அது தப்புதான். இது எல்லாருக்கும் பொதுவானது.
ஆனா ஒன்னு சொல்லிக்கனும். போற ஊரு வேற ஊரா இருந்தா...அந்த ஊரையும் அதனோட பழக்க வழக்கங்களையும் தெரிஞ்சி அங்க இருக்குறவங்களோட நல்லாப் பழகுறது நல்லதே. வெட்டி வெறுப்பை வளர்க்காமல் இருப்பது அவசியம்.
http://ppattian.blogspot.com/2007/10/blog-post.html
முருகா....முடியலைங்க. படிக்க ரொம்பக் கஷ்டமாயிருக்கு. இந்த உலகம் குழந்தைகளுக்கானது. அதைக் காப்பாற்றி குழந்தைகளின் கையில் கொடுங்கள்.
http://aaththigam.blogspot.com/2007/10/14.html
கந்தா
காசு வந்தா
கனவு மறந்ததா!
யோசிச்சிப் பாரப்பா!
சென்னைல மாபலிபுரத்துலதான் வி.எஸ்.கே ஒனக்குக் கிளைமாக்ஸ் வெச்சிருக்காரு.
அங்கே செல்.
http://papaasangam.blogspot.com/2007/10/blog-post_16.html
ரொம்ப நாள் கழிச்சி பதிவுக்கு வர்ரேன். நலமா?
காலைல ஆறு மணின்னா எப்படியிருக்கும்? மறந்து போச்சே!
ஆக மொத்தத்துல படிக்கிறப்போ இம்சை அரசி அமைதியின் சிகரம்.....
http://elavasam.blogspot.com/2006/11/blog-post_29.html
என்னடா நாய்க்கரு நாடாருன்னு கொத்ஸ் சாதி பேசுறாரேன்னு ஓடியாந்தேன். பாத்தா கேள்வி கேக்கச் சொல்றீங்க. அதையும் இங்க கேக்கக் கூடாதுங்குறீங்க. அப்ப இங்க என்னதான் செய்றது?
http://abiramibhattar.blogspot.com/2007/08/54.html
நல்ல பாடல். நல்ல விளக்கம்.
நான் ரசிச்சது கல்லாமை கற்ற கயவர். அடடா! முரண் இருந்தாலே ரசனைக்கு அரண் இருக்காதே...
நீடுதவம் கல்லாமை கற்ற கயமையில் உங்கள் பொருளோடு ஒத்துப் போகவில்லை குமரன்.
// ஒரு காலமும் தப்பித் தவறிக் கூட இறைவனை வணங்கமாட்டேன் என்று இருப்பவரை 'கல்லாமை கற்றவர்' என்று நயம்பட சொல்கிறார்.//
இது ஏற்புடையதன்று இங்கு. தவம் என்பது பெருமைக்குரியது. ஏன்? அது அல்லது தவிர்த்து நல்லது மட்டுமே செய்யும். அதுதான் தவம். ஓரிடத்தில் அமர்ந்து இறைவனை நினைப்பதா தவம்? இல்லை. செய்கின்ற செயல்களில் வாழும் வாழ்க்கையில் அல்லது தவிர்த்து நல்லது மட்டுமே செய்மைதான் தவம். அந்தத் தவத்தைக் கல்லாமை கற்ற கயவரிடம் செல்லாமை என்பது நன்று என்று பொருள் கொள்ள வேண்டும்.
http://vivasaayi.blogspot.com/2007/10/bscmaths.html
:)
புரியுது இளா.
தமிழ் படிச்சா தமிழ் வாத்தியாராகலாம். எழுத்தாளர் ஆகலாம். மேடைப்பேச்சாளர் ஆகலாம். ஆன்மீகப் பேச்சாளர் ஆகலாம். ஆனா யாரும் கூப்புட்டு வேலை குடுக்க மாட்டாங்க.
ஒரு மொழியை மட்டும் படிச்சா என்ன வேலை செய்ய முடியும்? மொழி பெயர்ப்பாளர் ஆகலாம். ஆனா அதுக்கும் ரெண்டு மொழி தெரிஞ்சிருக்கனும்.
மொதல்ல தமிழைப் படிக்கிறதுங்குறது என்னது? தமிழ்ல பட்டம் வாங்குறதா? அதெல்லாம் வாங்காமலேயே வலைப்பூக்கள்ள செய்யுள்களப் பல பேரு பிரிச்சி மேயுறாங்களே...அவங்களை என்ன செய்றது?
தமிழ்ங்குறது நம்ம மொழிய்யா...அத எல்லாரும் படிக்கனும். கண்டிப்பா படிக்கனும். அதோட வாழ்றதுக்கும் வேற ஒன்னையும் கூடப் படிக்கனும். இது ரெண்டுல ஒன்னு மட்டுந்தான் படிப்பேன்னு சொல்றதுதான் முட்டாள்தனம். தமிழை ஆழமாப் படிச்சித் தெரிஞ்சவரு சொன்னது என்ன தெரியுமா? "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள். கவலை உனக்கிலை ஒத்துக்கொள்"
அத விட்டுட்டு..தமிழ் படிச்சேன் வேலை இல்லைன்னு சொல்லக் கூடாது. வேலைக்கு இல்லைன்னாலும் தமிழ் படிக்கனும். வேலைக்குத் தேவைன்னா வேற ஒன்னையும் படிக்கனும்.
உங்களுடைய உழைப்பிற்கும் உயர்விற்கும் என்னுடைய வாழ்த்துகள்.
http://thulasidhalam.blogspot.com/2007/10/35.html
ஆகா...அடிபட்டிருச்சா...அடடா! வேகம் நல்லதுக்கில்லைன்னு சொல்றாங்களே. பின்னாடி வரும் போதாவது மெதுவா வந்திருக்கலாம். சரி. நடந்தது நடந்து போச்சு. லைசன்ச திரும்பக் குடுத்துட்டாங்களா? ஒங்க ஒடம்பு நல்லாருக்குல்ல.
http://valaippadhivu.blogspot.com/2007/10/215.html
:) தங்கர் இதைக் கொஞ்சம் சாதாரணமா எடுத்திருக்கனும். எல்லாருக்கும் எல்லாம் தெரியுமா? இனிமே டிகிரி படிச்சவங்கள்ளாம் படத்தோட டைரக்டர் யார்னு தெரிஞ்சுட்டுதான் படம் பார்க்கனும். ரெண்டு டிகிரின்னா கதாசிரியர் யார்னும் தெரிஞ்சிருக்கனும். டிப்ளமோன்னா இசையமைப்பாளர் வரைக்கும் தெரிஞ்சாப் போதும். எஸ்.எஸ்.எல்.சீன்னா நடிகை மட்டும் தெரிஞ்சாப் போதும்.
http://vovalpaarvai.blogspot.com/2007/10/blog-post_16.html
ஆகக்கூடி கண்ணாடின்னு சொன்னாலும் அது முழுக்கக் கண்ணாடி இல்ல. ஆனா வெலை மட்டும் எக்கச்சக்கம். உயிரைக் காப்பாத்துதே. அதான் இந்த வெலை. உயிருக்கு வெலை ஏது?
http://vivasaayi.blogspot.com/2007/10/bscmaths.html
// ILA(a)இளா said...
//தமிழ் படிச்சா தமிழ் வாத்தியாராகலாம். எழுத்தாளர் ஆகலாம். மேடைப்பேச்சாளர் ஆகலாம். ஆன்மீகப் பேச்சாளர் ஆகலாம். ஆனா யாரும் கூப்புட்டு வேலை குடுக்க மாட்டாங்க.//
ஜி.ரா, அந்த வகையில பார்த்தா தமிழ் (பட்டப்படிப்பு) படிக்கவே வேணாங்கிறீங்க. அப்போ அந்த படிப்பை யெல்லாம் பல்கலைக் கழக்த்துல இருந்து எடுத்துடனுமா? //
அப்படியில்லை இளா. அவைகளும் இருக்கட்டும். ஆனால் தமிழை மட்டும் படிப்பேன்னு சொல்றது சரியில்லைன்னு தோணுது. இப்பக் கம்ப்யூட்டர் படிக்கிறாங்கள்ள.....எல்லாரும் கம்ப்யூட்டர் படிச்சா வேலை கெடைக்குமா? கெடைக்காதுல்ல. ஏன்னா...வேலைகளும் பலவிதம். தேவைகளும் பலவிதம்.
ஆகையால பல தொழில்கள் இருக்கு. அதுல ஒன்னோ ரெண்டோ படிச்சிக்கலாம். அதுனாலதான் சொல்றேன்....அதுவுமில்லாம தமிழ் என்ன பிழைக்க உதவும் கருவியா? அதெல்லாம் அரசியல்வாதிகளுக்குதான்.
http://imsai.blogspot.com/2007/10/blog-post_16.html
ரவி, சில பாட்டுகளக் கேட்டா கண்ணுல தானாத் தண்ணி வரும். அதுல இது ஒன்னு. என்ன பாட்டு..என்ன நடிப்பு...ஆகா. நடிகர் திலகத்தைச் சரியா தமிழ்த்திரையுலகம் பயன்படுத்திக்கிறலையேங்குறதுதான் என்னோட வருத்தம்.
http://bharathi-kannamma.blogspot.com/2007/10/blog-post_15.html
ஹா ஹா ஹா நல்லாருக்கு மசாலா.
எஸ்.வி.சேகர் மகனை வெச்சுப் படமெடுக்காராக்கும். அந்தக் கொடுமை வேறயா! ஆண்டவா...
தமிழர்கள ஆண்டவனும் காப்பாத்த முடியாதுங்குறது சரிதான் போல.
ரஜினி பத்தி சத்யராஜ் சொன்னதுக்கு நானும் ஒத்துக்கிறேன். வழக்கமா சத்யராஜே கொளறுவாரு. இந்த விஷயத்துல சரியாத்தான் சொல்லீருக்காருன்னு தோணுது.
http://isaiinbam.blogspot.com/2007/10/blog-post_18.html
தமிழ் தியாகராஜரை அணைக்கிறதா ;)
அணைக்கட்டும். எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் சேர்க்கத்தானே வேண்டும்.
அடுத்து தங்கை துர்காவிற்கு வாழ்த்துகள்.
அடுத்தது உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் உள்ள பிரச்சனையை இப்படி ஊரறியச் சொல்லியிருப்பது சரியன்று. அத்தோடு உங்கள் நண்பரைப் பற்றிப் பல குறிப்புகள் வேறு. சின்னப்புள்ளத்தனமா இருக்கு. ரொம்பவே உணர்ச்சிவசப்படுறீங்கன்னு நெனைக்கிறேன். அது நல்லதில்லை.
http://isaiinbam.blogspot.com/2007/10/blog-post_18.html
அப்படியே சுகாசினி பாடுன வரிகளை வெச்சுக்கிட்டே தொடங்கீட்டீங்களா :)
இதோ என்னுடைய மொழிபெயர்ப்பு. இசையரசி பாடுனத வெச்சி பெயர்த்துட்டேன். மொழியை. வேறென்ன பெயர்த்தேன்னு நீங்கதான் சொல்லனும்.
நின் அருள் இல்லையா
ராமா
நின் அருள் இல்லையா
தடுப்பவர்தான் எவரோ
கல்யாணராமா
தடுப்பவர்தான் எவரோ
கல்யாணராமா
நின் அருள் இல்லையா
நின் அருள் இல்லையா
நின் அருள் இல்லையா
ராமா................
என்னைக் காப்பவரும் இலையே
நீ காக்க
கதிர் வழிச் சுடரே உனக்கின்னும் தாமதமா
ராம ராம ராம தியாகராஜ உயிர்த் துடிப்பே
என் மதி மயங்கிடுதே முறையோ வா வேகமாய்
நின் அருள் இல்லையா
ராமா
நின் அருள் இல்லையா
http://govikannan.blogspot.com/2007/10/blog-post_6307.html
அரசியலில் ஜெயலலிதாவைப் பிடிக்காது என்பதைத் தவிர்த்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சொல்ல என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை. அவர் எத்தனை பேருடன் வாழ்ந்தார் என்று ஏளனம் செய்கின்றவர்கள் எத்தனை பேர்களை மனதால் நினைத்து மகிழ்ந்திருத்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கட்டும் முதலில். அவருடைய அரசியல் செயல்பாடுகளைக் குறை சொல்ல வேண்டுமா..நானும் தயார். அதையும் இதையும் குழப்பக் கூடாது.
முதற்கண் திருமதி என்ற சொல்லை திருமணமான பெண்களுக்கு மட்டுந்தான் பயன்படுத்த வேண்டும் என்று எதுவும் சட்டம் இருக்கிறதா? இலக்கணம் இருக்கிறதா? மிஸ்டர் மிஸல்ல இருந்து கடன் வாங்குனதுதான. அப்புறமென்ன...எத்தனை தமிழ் இலக்கியங்கள்ள திருமதியைக் கல்யணாமான பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்காங்க?
பேரைப் பாத்ததும் அவங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னு கண்டிப்பாத் தெரியனுமா? தெரியலைன்னா ஒலகம் இடிஞ்சிருமா?
பேசாம ஆண்ணா திரு...பெண்ணா திருமதி.... இளைஞர்களாக இருந்தா செல்வன் செல்வி. அத்தோட முடிச்சிட்டுப் போய்க்கிட்டேயிருக்கனும். அதுதான் சரீன்னு தோணுது.
http://thooya.blogspot.com/2007/10/hot.html
காதல்னா மிக்சர் சாப்புடுறது. புரியலையா?
நமக்கு இருக்குற எல்லா உறவுகள்ளயும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கலந்து இன்னொரு உறவாக்கி...அந்த உறவோட உறவாடுறது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
நீங்க மிக்சர் சாப்டிருக்கீங்களா?
http://thooya.blogspot.com/2007/10/hot.html
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.
இந்த மிக்சர்ல புனித மிக்சரு புனிதமில்லாத மிக்சருன்னு எதுவுமில்லை. பசிக்குச் சாப்பாடு. கிசிக்கி மிக்சர். அவ்ளோதாங்க. ஒரு கடைல மிக்சர் கெடைக்கலைன்னா இன்னொரு கடை மிக்சருங்குறதுதான் ஒலக நியதி. ஆனா இன்னொரு கடைல மிக்சர் கெடைக்கும் தெரியாதவங்கதான் பாவம். ஆனாலும் எல்லாரும் வாழ்க்கைல சாப்புட்ட மொதல் மிக்சரோட சொவை மறக்கவே மறக்காது.
http://thooya.blogspot.com/2007/10/hot.html
கடைசியா ஒன்னு...... அப்ப நாங்கள்ளாம் பிரபலம் இல்லையா? :(
http://videospathy.blogspot.com/2007/10/blog-post_19.html
அருமையான பாடல். ஸ்ரீவித்யாவிற்குத் தமிழில் மிகமிக அருமையான பாடல்கள் கிடைத்துள்ளன. தேசியவிருது பாடலில் கூட நடித்துள்ளாரே. ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம். கங்கை யமுனை என்று நடிகர் திலகத்தோடு ஆடியதாகட்டும்....தகதகவென ஆடவா என்று கே.பி.எஸ் பாட்டுக்கு சிவகுமாரோடு தாண்டவமாடியதாகட்டும்...பூங்காவியம் பாட்டில் "யார் மகள் இப்பூமகள்" என்று உருகியதாகட்டும். நிறைய நல்ல பாட்டுகள் ஸ்ரீவித்யாவிற்குக் கிடைத்தேயிருக்கின்றன.
அவருடைய நினைவுநாளில் பாடலை நினைவு கூர்ந்தமை சிறப்பு.
http://aaththigam.blogspot.com/2007/10/15.html
அடடா! என்ன வளர்ச்சி. அருமையான வளர்ச்சி. உழைப்பு உயர்வு தருங்குறது சரிதான்.
http://aaththigam.blogspot.com/2007/10/16.html
அதென்னவோ உண்மைதான். ஒவ்வொரு நல்லதுலயும் கெட்டதுலயும் அனுபவந்தான். அதுவும் நல்லதுக்குதான். நல்லதே நடக்கும். சேலத்துல நல்ல மாம்பழம் கெடைக்கும். சீசன் நல்லாருந்தா ஒரு டசன் வாங்கச் சொல்லுங்க.
http://aaththigam.blogspot.com/2007/10/17.html
இப்ப எனக்கு ஒன்னு தோணுது. வெள்ளக்கல்லு வெள்ளைக்காரன். கருங்கல்லு கந்தன். நல்ல கூட்டணிதான்.
http://aaththigam.blogspot.com/2007/10/18.html
சேலத்துக்குப் போறதுக்குள்ள ஒரு தடையா....தடை உடைபடாமலாப் போயிரப் போகுது.
http://koodal1.blogspot.com/2007/10/blog-post_20.html
குமரன், திருமுருகாற்றுப்படையைத் தொட்டு நீண்டகாலமாகிறது. திருவாவினன்குடிக்குள்ள செய்யுள்தானே இது.
நீங்கள் குடுத்துள்ள வரிகளையும் அதற்கு அடுத்த வரிகளையும் படித்துப் பார்த்துப் பொருள் கொள்ள முயன்றேன்.
புள்ளணி நீள்கொடிச் செல்வனும், முக்கண்ணனும், முருகனும் ...... இது நீங்கள் கொடுத்த வரிகளின் குறுகிய பொருள். இந்த மூவருக்கும் என்ன என்பது அடுத்த வரியில் இருக்கிறது.
பலர் புகழ் மூவரும் தலைவராக ஏமுறு (போற்றப்படும்) ஞாலத்தில் (உலகத்தில்) தோன்றி.... என்று பா தொடர்கிறது.
அதாவது மாலையும் சிவனையும் முருகனையும் தலைவராக ஏற்றுப் போற்றும் இந்த உலகத்தில் தோன்றி..... சரி. தோன்றியது யார்?
தாமரை பயந்த தாவில் ஊழி....
தாவு என்பதற்குக் கொள்கை என்றும் பொருள் சொல்லலாம்.... தாமரையில் பிறந்த கொள்கைக்கு ஊழி போல....
நிற்க...நீங்கள் கொடுத்துள்ள வரிகளை மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
நீங்கள் சொன்ன பொருள் தவறோ என்று தோன்றுகிறது.
மொத்தம் மூனு பேரச் சொல்லீருக்கு.
1. புள்ளணி நீள் கொடிச் செல்வன் - இது மால்னே வெச்சுக்கலாம். ஏன்னா நஞ்சைக் கொடுக்கும் பாம்பைப் புடைக்கும் புள் (பறவை) பருந்து. அந்தப் பருந்தை வெச்சு அதை மால்னு சொல்லலாம்.
2. முக்கண்ணுன்னு தெளிவாவே சொல்லியாச்சு. அதுக்கு மேல பேச்சே இல்ல.
3. இங்கதான் இடிக்குது. ஏன்னா....
=================================
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
=================================
இது முருகன் இல்ல...இந்திரன்னு நெனைக்கிறேன். ஏன்னா.... நல்லாப் படிங்க... வேள்வி முற்றிய வென்றடு கொற்றம்னு சொல்லுது. வேள்வி செஞ்சு கிடைக்கிற பதவி இந்திரப் பதவின்னு சொல்றாங்களே. நகுசங்கூட செஞ்சான்னு நெனைக்கிறேன். அதுவுமில்லாம ஆனை எருத்தம் ஏறியவன் இந்திரனாகவும் இருக்கலாமே.
இப்ப திரும்ப அடுத்த வரிக்கு வருவோம்...
மால், சிவன், இந்திரன் ஆகியோரைத் தெய்வமாகக் கொண்டாடும் நாட்டில் தோன்றி....
தாமரையில் தோன்றிய கொள்கைகளுக்கு (மறைகளாக் கூட இருக்கலாம்) ஊழியாகத் தோன்றிய முருகன்..... இப்படியும் பொருள் கொண்டு போகலாம்னு தோணுது. சரியாத் தெரியலை.
ஆனா படிக்கனும். மற்றவங்க என்ன சொல்லீருக்காங்கன்னும் படிக்கனும்.
http://koodal1.blogspot.com/2007/10/blog-post_20.html
// நான் அடுத்து எங்கே செல்வேனோ என்ற எண்ணத்தில் புள்ளணி நீள் கொடிச் செல்வனைத் திருமால் என்றே வைத்துக்கொள்ளலாம் என்று முழு மனமின்றிச் சொன்னது போல் சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் படித்துப் பார்த்து உங்களுக்கு புட்கொடியுடையவன் திருமால் என்ற பொருள் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். //
இல்லை... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மனமின்றி என்றெல்லாம் ஒன்றுமில்லை. அது மால்தான் என்பதற்கு வரிவரியாக விடை சொல்லி முடிவிற்கு வந்திருக்கிறேன்.
புட்கொடி என்று நான்முகனையும் சொல்லலாம். அங்கு அன்னக்கொடி. ஆனால் அன்னத்தால் பாம்பினைப் புடைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆகையால்தான் பருந்து என்று சொல்லி... அதை வைத்து அது மால் என்று முடிவுக்கு வர முடிகிறது என்று சொன்னேன். அதை நீங்கள் வேறு மாதிரி புரிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். :) புட்கொடிக்கு வேறு எவரையும் இந்த இடத்தில் நினைக்க முடியவில்லை.
உசாத்துணைன்னா என்ன? யாரந்த உசா?
http://koodal1.blogspot.com/2007/10/blog-post_20.html
குமரன், கண்டுபிடிச்சிட்டேன். :) நான் சொன்னது சரி... அது இந்திரந்தான்...
http://murugan.org/texts/tirumurukarruppadai_layne_little.htm
இங்க போய் பாருங்க...
ஆனா நான் தாமரையில் பயந்தல தப்புப் பண்ணீட்டேன். :)
இதப் படிச்சிட்டு சொல்லுங்க....உண்மையிலேயே திருமாலையும் சிவனையும் இது புகழுதான்னு...
எனக்கு இந்தச் செய்யுளைப் படிக்கிறப்போ.... ஏதோ வரலாற்றுச் செய்தி படிக்கிறாப்புல இருக்கு. இந்தத் தமிழ் இலக்கியங்கள் சொல்ற இந்திரனும்.. புராண இந்திரனும் வெவ்வேறையோன்னு தோணுது.
http://sethukal.blogspot.com/2007/10/blog-post.html
:) எதைக் கிண்டல் செஞ்சாலும் சரி.. காதலைக் கிண்டலடிக்கலாம :) அதான் இப்பிடி...
அப்புறம்..ஏன் கருவாட்டுக் கொழம்பை நெனைவு படுத்துனீங்க? சென்னைக்கு வரும் போது.. ஒங்க வீட்டுக்கு வருவேன். கண்டிப்பா கருவாட்டுக் கொழம்பு இருக்கனும். கண்டிசனாச் சொல்லீட்டேன்.
http://madhavipanthal.blogspot.com/2007/10/blog-post_21.html
முதலில் இளங்கோ சமணர் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. துறவு பூண்டது உண்மைதான். ஆனால் சமணத்துறவென்று சொல்லவில்லை. அதுவுமில்லாமல் அவர் துறவறத்திற்குப் பிறகு அரண்மனைகளில் அண்ணனோடும் வாழ்ந்திருக்கிறார். சமணத் துறவு அரண்மனை வாழ்வு ஏற்காது. இன்னும் நிறைய சொல்லலாம்.
1. மாசாத்துவான்
2. திங்கள் மாலை வெண்குடையான் சென்னிச் சொங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி
3. பேரியாற்றங்கரை மக்கள் இல்லை அவர்கள். குன்றக் குறவர்கள். அதுவுமில்லாம அவங்க கண்ணகி உயிர் துறந்த கதையைச் சொல்லலை. கண்ணகி விண்ணேகியதச் சொல்றாங்க.
4. பேரெல்லாம் சொல்லலை. நல்லவேளை. இல்லைன்னா... அந்தப் பேரையே வைக்காம நம்மாளுக அழிச்சிருப்பாங்க. அவ்ளோ மூடநம்பிக்கை.
5. வயந்தமாலை, சித்ராபதி. இந்த வயந்தமாலையின் உருவத்துல வனதெய்வம் வேற வரும்.
6. தெரியலை. 1008 பொன்னாக இருக்க வாய்ப்பிருக்கு. கழஞ்சு என்ற சொல்லை சிலம்பில் படித்த நினைவில்லை.
7. என்னது குரல், விளி, துத்தம்னு...சுரங்களை அடுக்கிக்கிட்டு. மாதரியும் ஐயையும்தான் அவங்க. ஆய்ச்சியர்கள்.
8. அட...அதென்ன திருவேரகம்னு சொல்லீட்டீங்க. சீர்கெழு செந்திலும் செங்கோடும் ஏரகமும் நீங்கா இறைவனை...வெறும் திருவேரகத்தோட நிப்பாட்டீங்க. அதுவுமில்லாம புண்ணிய சரவணப் பொய்கை வேற வருது. அதுவுமில்லாம குன்றக் குறவர்கள் வேற....அட...அத விடுங்க... கோவலனை அரக்கன்னு சொல்லீருக்காரு இளங்கோ. சிலம்பு தொடங்கும் போதே..கல்யாண ஊர்வலத்துல போற கோவலனை..ஆகா..எவ்ளோ அழகா முருகனாட்டம் (செவ்வேள்) இருக்கானேன்னு சொல்றாங்க. ஆனா வைணவத் தலம்னதும் அடுக்கச் சொல்றீங்க. நல்லாருங்க.
திருவரங்கம் வருது. சேடகமாடகம் வருது. அது திருவனந்தபுரம்னு ஒரு உரையில படிச்சேன். மத்த உரைகளைன்ன என்னனு படிக்கனும். திருவேங்கடம் வருதுன்னு நீங்க சொன்னீங்க.
9. மணிமேகலா தெய்வந்தான். இதுல என்ன கேள்வி வேற. அந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலைல வர்ராங்களே.
10. கனகவிசயர்கள். நூற்றுவர் கன்னரோடு சேந்து வென்றான். ஆனால் அது இமயத்துல கல்லெடுக்க இல்ல. கனகனும் விசயனும் அவமானமா பேசிட்டாங்கன்னு போற வழியில தலைல தட்டி கல்லைத் தலைல ஏத்திக் கொண்டாந்தான். கொண்டாந்து கோயிலைக் கட்டியதும் விடுதலை செஞ்சிட்டான்.
http://pithatralgal.blogspot.com/2007/10/264-8_21.html
பைக்குல கூட்டீட்டுப் போறானா பிள்ளையா.... அப்ப உப்பும் தண்ணியும் ஒன்னாகுது....படி உப்பும் படித் தண்ணியும் கலந்தாலும் கடைசீல கெடைக்கிறது ஒரு படிதான். அதான் நடக்கப்போகுதுன்னு தோணுது.
http://thulasidhalam.blogspot.com/2007/10/37.html
படிச்சிக்கிட்டே வர்ரப்ப...படம் வரலையேன்னு தோணுச்சு. ஒடனே படம் வந்துருச்சு. :) பெருமாள் முன்னாடி.. பிள்ளையாரு பின்னாடி.... பிரசாதம்... அதான அந்த சட்டிக்குள்ள மூடி வெச்சிருக்கீங்க. :)
http://vettipaiyal.blogspot.com/2007/10/blog-post_19.html
பாரீஸ் ஏர்ப்போர்ட்டை மறக்கவே முடியாதுப்பா. பெருசுன்னா பெருசு..அவ்ளோ பெருசு. என்னோட லக்கேஜ் வராம...நான் அங்குட்டும் இங்குட்டும் ஓடி..அப்பப்பா....ரொம்பப் பெரிய ஏர்ப்போர்ட். மேல இருந்து பாத்தா கொழாய் மாதிரி இருக்கும்.
அங்கயும் போய் வலைப்பதிவுதான் எழுதுனியா....ஒன்னயப் பாத்து ஒருத்தர் கவிஞர்னும் கேட்டுட்டாரா...ஒன்னும் சொல்றதுக்கில்லை. வெட்டி புகழ் பாரீஸ் வரை பறக்குது.
http://vettipaiyal.blogspot.com/2007/10/2_22.html
ஆட்டோகிராபெல்லாம் கேட்டாங்களா.. எங்கயோ போயிட்டப்பா....
மத்தபகுதியெல்லாம் படிச்சு முடிச்சு புன்னகைதான் பூக்குது.
தொடரு தொடரு...
http://mkarthik.blogspot.com/2007/10/blog-post_19.html
ஏன்? வடிவேலு கூட ஆடுனா என்ன? ஒரே கதைய திருப்பித் திருப்பி எடுக்குற விஜய் கூட ஆடுறத விட வடிவேலு கூட ஆடலாம். கூச்சமில்லாம இளைய தளபதின்னு சொல்லிக்கிறவங்களே வெக்கமில்லை. ஷ்ரேயா ஏன் வெக்கப்படனும்? ஆடட்டும். ஆடட்டும். சிவாஜின்னு ஒரு படம் வந்துச்சே...அதுல மேக்கப் போட்டு ஒருத்தர் நடிச்சார்ல...அந்த மேக்கப்பைக் கலைச்சிட்டு ஆட விடுங்க...அப்புறம் தெரியும் சேதி.
http://rathnesh.blogspot.com/2007/10/blog-post_3413.html
ஒன்னு சொல்லட்டுமா? அந்தச் செய்யுளோட நயத்துனாலதான் ஒங்க மனைவியால லேசா மனப்பாடம் செய்ய முடிஞ்சது. அதையே உரையா விரிச்சி ரெண்டு பக்கத்துக்குப் பொருள் எழுதிக் குடுத்தா அப்படியே திருப்பிச் சொல்லீருக்க முடியாது. :)
http://holyox.blogspot.com/2007/09/339-2.html
கதையின் நடையை விட நல்லாருக்கு கருத்து.
ஒரு ஆம்பிளை படக்குன்னு வீட்டுக்குள்ளயோ வெளியவோ சிகரெட் பிடிக்கிறது பண்பாட்டு வெளக்கமாறாத் தெரியாது மக்களுக்கு. ஆனா ஒரு பொண்ணு சிகரெட்டத் தொட்டுட்டாலே அவளை கரிச்சிக் கொட்டி திட்டி....சீச்சீ.... இவன் தண்ணியடிப்பானாம்...ஆனா அவ அடிக்கக் கூடாதம். தப்ப யாரு செஞ்சாலும் கெட்டதுதான். அத ஒத்துக்கமாட்டாங்க ஒருத்தனும்.
http://madhavipanthal.blogspot.com/2007/10/blog-post_21.html
1. கேள்விய முழுசாப் படிக்கலை.. ஹி ஹி...விடைய வேறச் சொல்லனுமா?
5. கோசிகனா அது? தெரியாமப் போச்சே.
6. அப்ப அது கழஞ்சுதான். 1008 கழஞ்சு.
http://holyox.blogspot.com/2007/10/347.html
ஐயோ பாவம்...இப்படி ஆயிருச்சே....எப்படித்தான் தாங்குனானோ பையன்.
ஆனா அவனுக்கு வேணுந்தான்.
http://varappu.blogspot.com/2007/10/1.html
காதல் ஜுரமாக்கும். மொதல்ல காதல் குளிர் வந்ததால...ஜுரம் வந்துருச்சோ!!!!!!
// Please add my gmail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com"//
ஆமா... gmail idன்னு சொல்லியாச்சு. அப்புறமென்ன digitalwaves@*****?
http://dharumi.blogspot.com/2007/10/238.html
தருமி சார். ரெண்டு கருத்துகள்.
1. ஞாநி பாலியல் பத்தி எழுதக்கூடாதுன்னு சொல்றது ஒளறல்ங்குறது என்னுடைய கருத்தும் கூட. ஒத்துப் போகிறேன்.
2. கருணாநிதிக்கு ஓய்வு பற்றிய கட்டுரையில் உங்கள் கருத்தோடு முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை. முழுமை என்ற சொல் இங்கே முக்கியம். ஏனென்றால்.... கருணாநிதிக்கு இப்பொழுது ஓய்வு தேவை என்பது என்னுடைய கருத்தும் கூட. அதுவுமில்லாமல் சங்கர் தயாள் சர்மாவும் வாஜ்பாயும் தொலைக்காட்சியில் வரும்பொழுது எனக்குத் தோன்றியதுதான் கருணாநிதியைப் பார்க்கும் பொழுதும் தோன்றுகிறது. அந்த வகையில் ஓய்வு தேவை என்பதில் ஐயமில்லை.
அதே நேரத்தில் அதை எழுதிய விதத்தில் உடன்பாடு இல்லை. வேட்டி நனைவதைப் பற்றியெல்லாம் பேசுவது அதிகமாகவே தெரிகிறது. அந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது அசௌகரியமாகவே இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அவர் சொல்ல வந்ததை வேறுவிதமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் எந்த விதமாகச் சொல்லியிருந்தாலும் இதே விளைவுதான் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
http://dharumi.blogspot.com/2007/10/239.html
அப்பப் படம் பாக்க வேண்டாங்குறீங்க. சரி.
http://madhavipanthal.blogspot.com/2007/10/blog-post_21.html
// அப்படிப் பெருங்குடியில் பிறந்ததால் தான் அவளால் அரசனைக் கேள்வி கேட்டு வழக்குரைக்க முடிந்தது என்று நினைக்கிறேன். எளிய குடியில் பிறந்தவர்கள் அப்படித் துணிவுடன் அரசனைக் கேள்வி கேட்க முடிந்திருக்குமா என்பது ஐயமே. ஆனால் அப்படி பெருங்குடி பிறந்த பெருமகள் ஆனாலும் அவள் உரைத்த வழக்கைக் கேட்டு அவள் பக்க நியாயத்தை உணர்ந்து உடனே உயிர் விட்ட பாண்டியன் பெருமை மிகப்பெரிது. //
குமரன், நீங்கள் சொன்னது தவறு. பெரிய குடும்பத்தில் பிறந்ததால் பேசினாள்னா...அன்னைக்கே கோவலன் கிட்டயும் மாதவிகிட்டயும் பேசியிருப்பா. அதுவுமில்லாம... வெறுங்கைய வீசிக்கிட்டு...காடு மேடு நடந்து... தெரியாத ஊர்ல... பால்காரங்க வீட்டுல தங்கிக்கிட்டு... இருந்தப்பத்தான் அவளுக்குப் பெரிய வீட்டுக்காரின்னு நெனைவுக்கு வந்துச்சா? இல்லை. இளங்கோவடிகள் இதக் கேட்டிருந்தார்னா...அவ்ளோதான். :)))))))))))))
பாண்டியன் நெடுஞ்செழியன் நல்லவன். நல்ல அரசன். இல்லைன்னா...அவரு எங்க அப்பா மாதிரின்னு கண்ணகி சொல்வாளா? தென்னவன் தீதிலன்யா.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
8 இளங்கோவால் ""வர்ணிக்கப்படும்"" வைணவத் தலங்கள் எவை?
சேடகமாடத்து மாலை பற்றி வருகிறது! ஆனா சேடகமாடம் வர்ணிக்கப்படவில்லை! சேடகமாடம் தான் திருவனந்தபுரம் என்பது ஆய்வுக்குரியது! //
உண்மைதான். சேடகமாடம் என்றால் அனந்தபுரம் என்று ஒரு உரையில்தான் படித்தேன். மற்ற உரைகளில் அப்படிச் சொல்லப்படவில்லை. முதலில் படித்த உரையாதலால் அது மனதில் நின்றுவிட்டது.
http://madhavipanthal.blogspot.com/2007/10/blog-post_21.html
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா ஏமி செப்பறாருன்னா:
//முதலில் இளங்கோ சமணர் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. துறவு பூண்டது உண்மைதான். ஆனால் சமணத்துறவென்று சொல்லவில்லை. அதுவுமில்லாமல் அவர் துறவறத்திற்குப் பிறகு அரண்மனைகளில் அண்ணனோடும் வாழ்ந்திருக்கிறார். சமணத் துறவு அரண்மனை வாழ்வு ஏற்காது. இன்னும் நிறைய சொல்லலாம்//
அரண்மனையில் அண்ணன் கூட அடிக்கடிப் பேசறாரு ஜிரா!
ஆனா வாழ்ந்ததா சொல்லலையே! //
இல்லை. அடிக்கடி பேசுறார்னு சொல்லலை. அண்ணனோடயும் அண்ணியோடயும் அரசு மண்டவத்துல கொலுவிருந்ததா அவரே சொல்றாரே.
// நாங்க ஒன்னியும் நுழைக்கவும் பாக்கல! ஒழைக்கவும் பாக்கல!
அதான் தெளீவாச் சொல்லி இருக்கோம்-ல! அதையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிட்டு, சிலம்பு தெரியாம இருக்கறோமே-ன்னு ஆதங்கம் தானே பட்டுக்கினு கீறோம்! //
ஐயோ ரவி..தெரியாமச் சொல்லீட்டேனே...நாங்கூட சிலம்பில் வைணவம்னு நீங்க ஏதோ ஆராய்ச்சி செய்றதா நெனச்சுச் சொல்லீட்டேனே. தமிழ் ஆர்வத்தால மட்டுந்தான் நீங்க சிலம்பு படிச்சீங்கன்னு தெரியாமப் போச்சே! என்னைய மன்னிச்சிருங்க. மன்னிச்சிருங்க. மன்னிச்சிருங்க.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
3. இளங்கோ அடிகளுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் கண்ணகி உயிர் துறந்த கதையை முதலில் சொல்லியவர் யார்?
செங்குட்டுவன், அவன் மனைவி, இளங்கோ, சாத்தனார் எல்லாரும் இயற்கை அழகு காண பெரியாறு மலைக்கு வருகிறார்கள்!
அப்போ, அங்குள்ள பழங்குடி மக்கள், குன்றக் குரவை ஆடி, கதையைச் சொல்லுறாங்க.
ஒரே ஒரு முலை உடைய பெண், வேங்கை மரத்துக்குக் கீழே, 15 நாள் அன்ன ஆகாரம் இன்றி உயிர் துறக்கிறாள். விண்ணுலகு ஏகுகிறாள் விமானத்தில்! என்று சொல்லுறாங்க! //
எனக்கு இந்தப் பதினஞ்சு நாளு வெரதம் புதுச்செய்தி. நான் படிச்ச வரைக்கும்.... வேங்கை மரத்துக்கடியில ஒத்த மொலையோட நிக்குறா கண்ணகி. அப்ப வானத்துல இருந்து ஹெலிகாப்டர்ல வந்து கோவலன் கூட்டீட்டுப் போறதாத்தான் படிச்சேன். உயிர் துறக்குறதையெல்லாம் படிக்கலையே.
http://aaththigam.blogspot.com/2007/10/20.html
ராபர்ட்டுக்கு ஏன் இப்பிடித் தங்க ஆசை? இப்பிடித்தான் ஒருத்தர் தங்கம் தங்கம்னு அலஞ்சான். கூப்புட்டு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது... அது எதிர்வீட்டுத் தங்கம்னு. அது மாதிரி...ராபர்ட்டு?
http://photography-in-tamil.blogspot.com/2007/10/blog-post_23.html
ஐயா தங்களுடைய இந்தப் பதிவு மிக நன்றாக இருந்தது. சமீபத்தில் எனக்கு வேண்டிய ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அவர் இவ்வளவு விவரமாகவும் அழகாகவும் எடுத்துச் சொல்லவில்லை. நீங்கள் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி.
http://elavasam.blogspot.com/2007/10/blog-post_24.html
இதுல இப்பிடியொரு விசயமிருக்கா... இவ்வளவு நாளாத் தெரியாமப் போச்சே. எல்லாம் ஒங்களப் போல அறிஞ்ச தெரிஞ்சவங்க சொன்னாத் தெரிஞ்சிக்கிறோம். அப்ப பெண்களையெல்லாம் நெறைய ஆண்களளக் கல்யாணம் செஞ்சுக்க வெச்சுட்டா....ஆயுசு சமமாயிருமுல்ல. இது நல்ல திட்டமாயிருக்கே!
http://pithatralgal.blogspot.com/2007/10/265-9.html
ஆக புரபசர் சாமின் உதவியாலதான் சக்திக்கு சக்தி கெடைச்சி நல்லாப் படிச்சி மதிப்பெண் வாங்கி....அந்த மதிப்பெண் மூலமா பாராட்டும்...பெண் மூலமா அடிஒதையும் கெடைக்கூதா?
http://aaththigam.blogspot.com/2007/10/21.html
இந்த நொடியை எப்படி அனுபவிக்கிறது? நாம எப்பவும் அடுத்த வேளைக்குதான செய்வோம்...
மதியம் சாப்பிடச் சோறு செய்றோம்
நாளைக்கு நாடகம் பாக்க டிவி வாங்குறோம்
நாளைக்குச் சந்தோஷமா இருக்க பயணம் போறோம்
நாளைக்கு தெரியப் போற முடிவுக்குத்தான இந்தக் கதையப் படிக்கிறோம்
அதாவது மாசம் மொதநாள் வர்ர சம்பளத்துக்குத்தான ஒழைக்கிறோம்
ஆனாலும் முடியும்னுதான் தோணுது...பாக்கலாம்.
http://chennaicutchery.blogspot.com/2007/10/9.html
ம்ம்ம்ம்... அந்த சிவிஆர், கே.ஆர்.எஸ் வர்ர பாட்டுகள் சூப்பரப்பு.
அடுத்தது கிளைமாக்சா? அப்ப வேர்மாக்ஸ், தண்டுமாக்ஸ், இலைமாக்ஸ், பூமாக்ஸ், காய்மாக்ஸ், கனிமாக்ஸ் எல்லாம் எப்ப வரும்?
http://radiospathy.blogspot.com/2007/10/blog-post_24.html
நல்ல அருமையான பாடல். சலீல் சௌத்ரி என்ற சலீல்தா மிக அருமையான இசையமைப்பாளர். அவருடைய தமிழ்ப் பாடலை எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.
அதுக்கு மேல நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீங்களே சொல்லீட்டீங்களே.
சலீல்தாவிற்கு இதுவரையில் மற்ற தமிழ்த்திரை இசையமைப்பாளர்களுக்குக் கிடைக்காத ஒரு பெருமை உண்டு. ஆம். சிலப்பதிகாரத்தின் கானல்வரிக்கு இசையமைத்த பெருமைதான் அது. இசையரசியையும் ஏசுதாசையும் பாட வைத்திருக்கிறார். அருமையான பாடல்.
அந்தப் பெருமை மெல்லிசை மன்னருக்கும் கிடைத்திருக்கும். ஆனால் தட்டிப் போய் விட்டது. இறையருட் கலைச்செல்வர் கே.சங்கர் சிலப்பதிகாரத்தை, ராமாயணம் மகாபாரதம் போல தொடராகத் தமிழில் எடுக்க சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தை அணுகினாராம். அதற்கு இசையமைக்க மெல்லிசை மன்னரையும் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டது.
http://dharumi.blogspot.com/2007/10/239.html
// தருமி said...
ஜிரா,
எங்கே அய்யா நானப்படிச் சொன்னேன்?
ஒழுங்கா படத்தைப் பாருங்க.. பார்க்க வேண்டியது நிறைய இருக்கு..
more controversial better the movie, இல்லியா? //
நல்லா யோசிச்சிப் பாருங்க... நல்ல படம்னா.. ஒடனே போய்ப் பாருங்கன்னு சொல்லீருப்பீங்க. இப்பிடி சுத்தி வளைச்சிக் கஷ்டப்பட்டிருக்க மாட்டீங்கள்ள. அதுனால சொன்னேன்.
more controversial better the movieன்னு சொல்றீங்களா? ம்ம்ம்ம்... தெரியலைங்க. என்ன படம் அது...குற்றப்பத்திரிக்கை...என்னா controversy...15 வருசங் கழிச்சித்தானே படமே வந்துச்சு. ஆனா படம்? கிழிஞ்ச பப்படம். அந்த மாதிரி ஆயிரக்கூடாதேன்னுதான். ஆனாலும் நீங்க சொல்றீங்க. நல்ல பிரிண்ட் நெட்டுல டவுண்லோடு கிடைக்கிறப்போ பாக்கிறேன். இல்லைன்னா எனக்கு வேற வழி இல்ல.
http://vaithegi.blogspot.com/2007/10/blog-post_18.html
ஷர்பத் குலாமா? ரோஜா ஜூசுன்னு பேரா....ம்ம்ம்ம் இப்ப ரெண்டு கொழந்தைங்க குடும்பம்னு அமைதியாயிருப்பாங்க. அதான் கண்ணுல அந்தப் பவர் இல்ல.
http://ilavanji.blogspot.com/2007/10/blog-post.html
அடடா! ஏனிப்படி? ஏணிப்படி போல தமிழ்மணத்துல முன்னேறிய தாங்களா இப்படி? ஏன் ஏன் ஏன் நண்பனே.... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...நண்பனே நண்பனே நண்பனே.
http://radiospathy.blogspot.com/2007/10/blog-post_25.html
ஆறிலிருந்து அறுவது வரைக்குமா? தெரியலைங்க. நீங்களே சொல்லீருங்க.
http://vettipaiyal.blogspot.com/2007/10/3_30.html
நாப்பது ரூவாயா அந்தப் படத்துக்கு... இங்க இருவது யூரோன்னாங்க...எப்படியோ நல்லவேளை தட்டிப் போயிருச்சு...இல்லைன்னா அதுக்குத் தண்டம் அழுதிருக்கனும். அந்த இருவது யூரோவக் காப்பாத்தி மாசத்துல நாலு இங்கிலீஷ் படம் பாத்துட்டேன்.
யவன ராணியா... யவனம்னா எந்த ஊருன்னு சொல்லு பாக்கலாம்? ;)
http://blog.arutperungo.com/2007/10/blog-post.html
என்னய்யா கூத்து... இது கூடவாத் தெரியாது...
வந்த காதலைப் பரிசாக் குடுத்துட்டு...அடுத்த காதலுக்குப் போம்யா....
http://elavasam.blogspot.com/2007/10/1.html
ஆண்டவா... இதென்ன சோதனை. ஒன்னுமே புரியலையே... ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரிஞ்சது. ம்ம்ம்..அந்த கிரேக்கக் கேள்விக்கு.. மத்ததுக்கெல்லாம் முழிக்கிறேன். ஏனிந்த சத்திய சோதனை. திரும்பவும் படிக்கிறேன்.
http://konjamkonjam.blogspot.com/2007/10/blog-post_30.html
ஆக... அம்பானியாரு முதப் பணக்காரருன்னு புரியிற விசயத்தச் சொல்ல என்னவோ புரியாததெல்லாம் சொல்லீருக்கீங்க. ஆரு இந்த டக்ளசு. டக்ளசு ஆடம்ஸ்னு ஒருத்தர் கதையெல்லாம் எழுதுவாரே அவரா?
http://blog.arutperungo.com/2007/10/blog-post_30.html
கணக்கம்பட்டியாரு வந்துட்டாரா.. அடுத்த பாகத்தையும் படிச்சிட்டுக் கருத்தச் சொல்றேன் :) நல்லா எழுதீருக்கப்பா கதைய.
http://vettipaiyal.blogspot.com/2007/10/blog-post_29.html
பாலாஜி, இந்தப் பதிவோட முழுமையா ஒத்துப் போக முடியலை. வாடகையக் கூட்டுறாங்க...ஓட்டல்ல கூட்டுறாங்கங்குறதெல்லாம் சின்னக் குழந்தைத்தனமா இருக்கு. இவ்ளோ சொல்றியே...இந்த சாப்ட்வேர் இப்ப வந்ததா? இல்லையே. இன்போசிஸ் வந்தே 25 வருசம் ஆச்சே. நீ சொல்ற இத்தன விலையேத்தமும் கடந்த நாலஞ்சு வருசத்துலதானப்பா. அதுக்கு ஒருவிதத்துல நாமும் பொறுப்பேத்துதான் ஆகனும்.
விலையக் கூட்டும் போது வேண்டாம்னு போறது. கொஞ்சம் கொறஞ்ச விலையுள்ளத கொஞ்ச நாள் தேர்ந்தெடுத்தா என்னவாம்? இந்த பெங்களூர் வந்து ஏழு வருசம் முடிஞ்சி போச்சு. நான் வந்தப்ப இந்த நூறு ரூவா எறநூறு ரூவா டிக்கெட் விக்கிற தேட்டர்கள் இல்ல. அட... இப்பவும் 30-40க்கு டிக்கட் குடுக்குற தேட்டருங்க இருக்கு. அங்க போறமா? இல்லையே...பிவிஆர்ல பாத்தாதானே படம். இன்னோவேட்டிவ் மல்ட்டிபிளக்ஸ்ல பாத்தாதானே படம். அங்கதான தொடங்குது ஆட்டிடிடூட் பிரச்சனை. அந்த ஆட்டிட்டூட ஆட்டீட்டோம்னா...பிரச்சனை தீருதோ இல்லையோ...மாற வழியிருக்கு.
அடுத்தவங்களைக் குற்றம் சொல்றதுக்கு முன்னாடி நம்மளச் சரி செஞ்சிக்கிருவோம். சுனாமிக்கு அள்ளிக் கொடுத்ததையே எவ்ளோ நாளளக்குப் பெருமை பேசுறது. கொடுத்ததத் திரும்பச் சொல்றதும் நல்லதில்லை.
செல்வன் சொல்ற survival of the fittest சரிதான். ஆனா நமக்குன்னு பொறுப்பு இருக்குல்ல.
கொத்ஸ், வட்டம், மாவட்டம், அடிமட்டம்னு எல்லாக் கட்சீலயும் கொள்ளையடிச்சித்தான் வெச்சிருக்கான். உண்மைதான். அவன் எக்கேடும் கெட்டுப் போகட்டும்யா. தானைத் தலைவாம்பான்..புகழுறுதலைவிம்பான்...நம்ம கத அப்படியா? அப்படியா வந்தோம்? இல்லைல்ல. பொறுப்போடதான படிச்சி வந்தோம். அந்தப் பொறுப்பையும் தொடருவோம்.
http://thulasidhalam.blogspot.com/2007/10/blog-post_31.html
அவரை இழந்து வருந்தும் உறவினருக்கும் நட்பிற்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
http://madhavipanthal.blogspot.com/2007/10/blog-post_28.html
// ஒரே மூச்சில் அவ்வளவும் சொல்ல வேண்டுமா? தொடர்ந்து தான் பேசுவோமே.
(Lighter sense - ல் ஒரு கூடுதல் குறிப்பு: ராமாயணத்தில் தெளிவான பாத்திரங்களில் ஒன்று சுமத்திரை என்பேன். மூன்று பட்டத்தரசிகளில் ஒருத்தி மூத்த பட்டத்தரசி இன்னொருத்தி அரசனின் காதல் கிழத்தி என்னும் போது மூன்றாமவள், ஒரு பெண்ணாக என்ன செய்வாளோ அதைச் செய்தவள் (கோசலையுடனேயே ஒட்டித் திரிந்தாள்). இரட்டைக் குழந்தைகளில் ஒருவனை மூத்தவன் ராமனுடன் இழைய விட்டாள்; அடுத்தவனை பட்டத்துக்கு உரியவனாகிய பரதனுடன் இழைய விட்டாள். தெளிவு என்பது இது தான். //
சூப்பர் சூப்பர்....ஊய் ஊய் இது சூப்பர். ரத்னேஷ்...சூப்பர்.
என்னோட கருத்துகளும் இந்த வகையிலதான் போகுது.
ரவி, குணம் நாடிக் குற்றமும் நாடியெல்லாம் சரிதான்...நான் கேக்குறேன். சீதையத் தூக்கீட்டுப் போனதுதான் தப்புங்குறீங்க. சீதை வராமலே இருந்திருந்தா இவன் ஏய்யா தூக்கப் போறான்? ஆகக் கூடி அவதாரம் எடுக்காம இருந்திருந்தா இவன் தூக்கீருக்கவே முடியாதே...இப்படியும் கேக்கலாமே.
அப்புறம் வேறென்ன தப்புகள் இராவணன் செஞ்சான்னு சொன்னீங்கன்னா அப்படியே தெரிஞ்சிக்கிறோம்.
வெட்டிப்பயல் என்ன சொல்றாருன்னா...ஜிடாக்குல சொன்னாரு....ராவண கருவ பங்கம்னு போட்டிருக்கீங்களே. அது பங்கம் ஆகலையாம். சிவனால பங்கம் பண்ண முடியலையாம். அதுனால கருவ பங்க முயற்சின்னு வேணும்னா சொல்லிக்கலாமாம். பங்கம் சொல்லக் கூடாதாம். சிவனே பங்கம் பண்ண முடியாத கருவம் இருந்ததாலதான் அவன் மாண்டான்னு அப்படின்னு வெட்டியார் கூறுகிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
http://chennaicutchery.blogspot.com/2007/10/blog-post_24.html
அடாடா...சிவிஆர் டெக்குனாலஜி..விவாஜி ரவாஜி...டிராக்டர் ரோலர்ஸ்... என்ன அருமையான எடுத்துக்காட்டுகள். ரொம்பவே நல்லாருக்கு. ஆனா விவாஜி இத்தோட முடியுதுன்னு நெனைக்கும் போதுதான் கயிட்டமா இருக்கு. விடாதீங்க. அடுத்து இப்பிடி இளிச்சவாயர் கிடைக்காமலா போயிரப் போறாரு...இழுத்துட்டு வாங்க கும்மீருவோம். :)
http://koodal1.blogspot.com/2007/10/blog-post_31.html
குமரன், இந்தப் பதிவு யாருக்கு?
ஒற்றுமை உயர்வு தரும் என்பதை ஏற்பதற்கு எந்த மறுப்பும் இல்லை. அரங்கம் சென்று கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே என்று உருகவும் என்னால் முடிகிறது. நம்புவீர்கள் என்றே நினைக்கிறேன்.
ஆனால் அரியை அணைக்க முடிந்த என்னால் ராமனை ஏற்க முடியாது. குறை என்று இல்லை. கொள்கை அளவில் சிலபல மறுப்புகள் உள்ளன.
அதுவுமில்லாமல் நாளைக்கு யாரேனும் சிவனும் ஏசுவும் ஒன்றுதான்...அதாவது எல்லாம் ஒன்று என்று பொதுவாகவும் கூறலாம். அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பமே.
http://thiravidam.blogspot.com/2007/10/blog-post.html
தூ.....மனிதப் பிறவிகள்ளயே கேடுகெட்ட பிறவிகள் இவர்கள். மதத்தின் பெயரால கொலை செய்றானே படுபாவிகள்.
http://aaththigam.blogspot.com/2007/10/26.html
நாலஞ்சு பகுதிக படிக்காம விட்டுப் போச்சு..இன்னைக்குத்தான் உக்காந்து படிச்சேன்.
ஆகக்கூடி கழுகுக வருது...சண்டையும் வருது....அப்ப ஒரு திருப்பமும் வருது. வரட்டும் திரும்பிப் பாத்துருவோம்.
http://rathnesh.blogspot.com/2007/10/blog-post_31.html
மொதல்ல அந்தப் பூசாரிய உக்கார வெச்சி நல்ல கொழும்புத் தேங்காயா ரெண்டு வாங்கி ஒடைங்க. மண்டை... தேங்காய் எது ஒடஞ்சாலும் சரிதான்.
இதே போல முருகன் அடியவர்கள் அனைவரும் அலகு குத்துறத நிப்பாட்டும்படி வேண்டிக் கேட்டுக்கிறேன். அந்தப் பழக்கம் எந்த நூல்லயும் இல்லை. அதுவுமில்லாம நம்மள வருத்திக்கிறதால அவன் மகிழ்ச்சியுற மாட்டான்.
http://koodal1.blogspot.com/2007/10/blog-post_25.html
குமரன், இந்தப் பதிவை இப்பொழுதுதான் படித்தேன்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு ஓவற இமைக்கும் சேன் விளங்கு அவிரொளி
இங்கே நீங்கள் சொல்லியிருக்கும் படிப் பொருள் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.
உலகம் உவப்ப...வலன் ஏர்பு திரிதரு...பலர் புகழ் ஞாயிறு = உலகம் மகிழும்படியாகச் செய்யும் பெருமை கொண்டு...அப்பெருமை எங்கும் பரவும் படி பலரும் புகழும் ஞாயிறானது...
கடல் கண்டாங்கு ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி - ஞாயிறானது கடலோடு கண்ட பொழுதில் உண்டாகும் இமைக்கச் செய்யும் அழகான செவ்வொளியின் தன்மையுடைய திருவடி
இதுதான் நான் படித்துக் கண்ட பொருள்.
முருகனுடைய செவ்விய திருவடிகளைக் குறிப்பதாகவே நான் கருதுகிறேன்.
நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கமும் அருமையாக இருக்கிறது.
http://koodal1.blogspot.com/2007/10/blog-post_25.html
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
குமரா!
நல்ல ஒப்பு நோக்குக் கட்டுரை.
காலை உதயசூரியனை விட ஒருகாலத்தில் மாலை மறையும் சூரியன்,அதுவும் அமைதியான கடல் மட்டத்தில் செந்துளியாகக் கடைசிச் சொட்டு மறையும் காட்சி 45 வருசமாகியும் மனதைவிட்டு மறையவில்லை.
ரம்மியமான மாலைப் பொழுதுகள்..//
யோகன் ஐயா, கச்சியப்பரின் ஒரு பா நினைவிற்கு வருகிறது
ஏலவார்குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலனாகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞாலமேவுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவுல மகன் உக்காந்திருக்கிறது எப்படி இருக்குன்னா....இரவுக்கும் பகலுக்கும் நடுவுல இருக்குற மாலை மாதிரி இனிமையா இளமையா குளுமையா செழுமையா இருக்காம். :)
http://koodal1.blogspot.com/2007/10/blog-post_25.html
// சிலப்பதிகாரத்திலும், "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலந்திரிதலான்" என்று வந்திருப்பது ஒப்பு நோக்கத் தக்கது. //
ரத்னேஷ். அது அப்படியிருக்கும் என்று நினைக்கவில்லை.
ஞாயிறு பொற்றுதும்..ஞாயிறு போற்றுதும்.
ஏன்?
ஏன்னா...இந்தக் காவிரி பாயுதே சோழநாடு...அந்த நாட்டு அரசன் இருக்கானே சோழன்....அவனோட ஆணைச்சக்கரம் மேரு வரைக்கும் போகுமப்பா...அந்த மாதிரி சூரியனுடைய ஆட்சியும் மேரு வரைக்கும் போகும்னு பொருள் கொள்றதே சரியா இருக்கும்னு தோணுது.
http://koodal1.blogspot.com/2007/10/blog-post_25.html
// //இங்கே உகரத்தில் இலக்கியத்தைத் தொடங்குவது மரபு என்று சொன்னது காட்டிய எடுத்துக்காட்டுகளின் மூலம் 'என்னுடைய பார்வைக்கும் மட்டும் தோன்றிய' ஒன்று இல்லை. நச்சினார்க்கினியர் முதல் பலரும் சொன்னதொரு மரபு இது. நீங்கள் நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் சொல்லுங்கள். அந்த உரையிலிருந்து இந்த மரபைப் பற்றிய செய்தியை எடுத்துத் தருகிறேன். வாரியார் சுவாமிகளும் இந்த மரபைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.//
இதைத்தான் கேட்டேன். இப்படி ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தாலே அதுமரபு என்றாகி விடுகிறது. எனில் நீங்கள் சொன்னது சரியே. //
ரத்னேஷ். பலமுறை சொல்லும் கருத்து. ஒவ்வொரு முறையும் இதைக்குறிப்பிட வேண்டும் என்று தேவையில்லை.
இந்த முறையை நானும் அறிவேன். இனியது கேட்கின் வலைப்பூவிலும் பயன்படுத்தியிருக்கிறேன். தேடினால் தொடுப்பு கிடைக்கும்.
http://iniyathu.blogspot.com/2006/12/47.html
இதோ கிடைத்தும் விட்டது.
Post a Comment