Thursday, November 01, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - நவம்பர் 2007

நவம்பர் 2007ல் மற்ற வலைப்பூக்களில் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

185 comments:

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/11/4.html

சரவணபவன்ல அளவு கொறச்சல். விலை கூட. இப்பல்லாம் முருகன் இட்லி கடைதான் பெஸ்ட். வெங்காய ஊத்தப்பம் போடுறாங்க பாரு..அடடா! பொடிவெங்காயத்தையே பொடிப்படியா நறுக்கித் தூவி...ம்ம்ம்ம்....முருகா முருகா. விலையும் தக்க விலைதான். பொங்கலும் சாம்பாரும் அங்க அநியாயத்துக்குக் கூட்டணி சேருது. மெஜாரிட்டியோட திருப்தியா ஆட்சி அமைக்கலாம்.

நீ சந்திச்ச பலரை நானும் சந்திச்சிருக்கேன். நல்ல கலக்கல் சந்திப்புன்னு சொல்லு.

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2007/11/blog-post.html

// ஜோ / Joe said...
அதிலும் கூட சத்திரபதி சிவாஜியின் படமாக காட்டப்படுவது ,நடிகர் திலகம் 'ராமன் எத்தனை ராமனடி' படத்த்தில் சிவாஜியாக தோன்றிய காட்சி. //

சரியாப் பிடிச்சீங்க ஜோ. அது நடிகர் திலகமேதான். ராமன் எத்தனை ராமனடியேதான்.

கட்டபொம்மன் வேடத்துல என்.டீ.ஆரு நடிகர் திலகம் மாதிரிதான் நடிக்கப் பாத்திருக்காரு.

இந்தப் பாட்டுல என்.டி.ராமாராவைப் பார்க்கக் கஷ்டமா இருக்கு.

கர்ணன் படத்துல வருவாரே கிருஷ்ணரா...அது...என்.டி.ராமாராவ்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/10/27.html

கண்டதையும் சொல்லாம கண்டதைச் சொல்றான்னு பூசாரி புரிஞ்சிக்கிட்டாரு போல. அதான் இப்பிடி. கண்டதுக்குப் பலன் கை மேலன்னு சொல்வாங்க. கந்தன் கண்டதுக்குப் பலன் எது மேலையோ!

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/10/70.html

பதிவுல பல தப்புக இருக்குதுங்களே.

மொதல்ல என்ன அண்ணான்னு கூப்புட்டது தப்பு. வயசுலயும் சரி அனுபவத்துலயும் சரி அறிவுலயும் சரி...நீங்கதான் மூத்தவரு.

அடுத்தது
// இசை: மெல்லிசை மன்னர், எம்.எஸ்.விஸ்வநாதன் //

அதென்ன மெல்லிசை மன்னர்னு ஒருத்தரும் எம்.எஸ்.விஸ்வநாதன்னு ஒருத்தரும் இசையமைச்சிருக்காங்களா? அதென்ன கமா நடுவுல?

அடுத்தது
லேபிள்ள வாணி ஜெயராம், சுப்ரபாதம், ஏசுதாஸ்னு போட்டுட்டு மெல்லிசை மன்னரை விட்டுட்டீங்க. கவியரசரையும் விட்டுட்டீங்களே. அவங்க ரெண்டு பேரையும் பிடிக்காதா? ஹாரீஸ் யுவன் அளவுக்கு அவங்களுக்கு விவரம் தெரியாதுன்னு நெனைக்கிறீங்களா?

ஆனா ஒன்னு.. அதெப்படி லதா மாதிரியே இருக்காங்க நீங்க போட்டிருக்குற படத்துல உள்ள ராதை. நீங்களே வரைஞ்சீங்களா என்ன ;)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/10/blog-post_28.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சீதையத் தூக்கீட்டுப் போனதுதான் தப்புங்குறீங்க. சீதை வராமலே இருந்திருந்தா இவன் ஏய்யா தூக்கப் போறான்? ஆகக் கூடி அவதாரம் எடுக்காம இருந்திருந்தா இவன் தூக்கீருக்கவே முடியாதே//

அண்ணே வணக்கமுண்ணே!
ட்ரெயின் வுடாம இருந்திருந்தா குண்டே வெச்சிருக்கமாட்டாங்களே!
ட்வின் டவர் கட்டாம இருந்திருந்தா இடிச்சி இருக்கவே மாட்டாங்களே!
நாட்டுக்கு விடுதலை வாங்காம இருந்திருந்தா லஞ்ச லாவண்யமே பெருகி இருக்காதே!
அவ்தாரம் பண்ணாம இருந்திருந்தா இராவணனும் தூக்கி இருக்க மாட்டானே! //

அடடே! நீங்க அப்படி வாரீங்களா? அவதாரங்குறதே....ஐயா..இந்த ராவணனை மாய்க்குறதுக்குத்தானே. தொல்லை தாங்கலைன்னு ஒரு கூட்டம் போய் ஓலம் போட்டதாலதான அவரு குடும்பத்தோட கீழ இறங்கி வந்தாரு. வரும் போதே அடிக்கனும்னு முடிவோட வந்தாச்சுல்ல.

கவுக்கனும்னு நெனச்சா ட்ரெயின் விட்டாங்க? இடிக்கிறதுக்காகவா ட்வின் டவர் கட்டுனாங்க? இல்லையே. வேறொரு திட்டத்துக்காக் கெட்டுனது. ஆனா வேற மாதிரி வேற ஒருத்தரு பயன்படுத்திக்கிட்டாரு. ஆனா இங்க வந்ததுக்குக் காரணமே என்கவுண்டருக்குத்தானே.

//////ராவண கருவ பங்கம்னு போட்டிருக்கீங்களே. அது பங்கம் ஆகலையாம். சிவனால பங்கம் பண்ண முடியலையாம். அதுனால கருவ பங்க முயற்சின்னு வேணும்னா சொல்லிக்கலாமாம்.//

பங்கம்-னா என்ன ஜிரா?
சேதப்படுத்தறது-ன்னு பொருள்!
சேதமாச்சுன்னா, டோட்டல் டேமேஜ் ன்னா சொல்லுறோம்!
அதைத் தான் வெட்டி சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன்! //

அப்ப மானபங்கம்னா மானத்த டோட்டல் டேமேஜ் பண்றது இல்ல. லேசா செய்கூலி சேதாரம் செஞ்சுக்கிறதுதான் போல. நல்லா சொல்லிக்குடுத்தீங்க. நன்றி. :)

// ஈசனார் அவன் செருக்கை அடக்கினார். ஆனாலும் அது மீண்டும் துளிர்த்தது! ஈசன் அவனைக் கண்டித்தாரே அன்றி தண்டிக்க வில்லை! ஆனால் அதிலிருந்து பாடம் படிக்க இராவணன் முயலவே வில்லை!//

ஏங்க ஈசரு தண்டிக்கலை?

// //அப்புறம் வேறென்ன தப்புகள் இராவணன் செஞ்சான்னு சொன்னீங்கன்னா அப்படியே தெரிஞ்சிக்கிறோம்.//

ஜிரா, இங்கு பின்னூட்டங்களில் சூரன் பற்றியும் பேச்சு வந்தது!
அதனால் நீங்க சூரனும் என்னென்ன தப்பு செஞ்சான்னு சொன்னீங்கன்னா, ரெண்டுத்துல இருந்தும் பாடம் படிக்க பயனுள்ளதா இருக்கும்!

சூரபாத்மன் செய்த தவறுகள் என்ன ஜிரா? //

அடடா! நல்லதா ஒரு கேள்வி கேட்டீங்க பாருங்க. சூப்பருங்க. கச்சியப்பரோட கந்தபுராணத்துல பிற்சேர்க்கைகள் நெறைய இருக்குன்னு ஜிரா சொல்லீட்டா வால்மீகியோட ராமாயணத்துல பிற்சேர்க்கைகள் நெறைய இருக்குன்னு கே.ஆர்.எஸ் ஒத்துக்கிறதா எடுத்துக்கலாமா?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/10/blog-post_28.html
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இராமன் போருக்குப் பின் சிவபூஜை செய்தார் என்பதற்கு வால்மீகியிலோ, கம்பனிலோ நேரடித் தகவல் இல்லை.
ஆனா மற்ற இலக்கியங்களில் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை! தேடிப் பார்க்கணும்!

ஆனால் தல புராணங்களிலும், மற்ற பாடல் நூல்களிலும் ராம லிங்க வழிபாடு பற்றித் தகவல்கள் வருகின்றன! முன்பே சொன்னது போல் மூல நூல்களில் ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை!
இதை ஒட்டுமொத்தமாக Collective ஆகத் தான் படிக்க வேண்டும்! இல்லை மூல நூலில் சொல்லி இருந்தால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள முடியும் என்றால், ஒன்றும் சொல்வதற்கில்லை! //

அடடா. இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்குது. நீங்க சொன்னாப்புல ஜோதிர்லிங்கத்துல ஒன்னா வெச்சிப் போற்றுறாங்க. அப்படியிருக்குறப்ப இந்த வால்மீகி மறந்து போயி விட்டுட்டாரே! இன்னும் எதையெதையெல்லாம் விட்டாரோ தெரியலையே.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2007/10/blog-post.html

அடடே இந்தத் திட்டம் நல்ல திட்டமா இருக்கே.

எனக்குத் தண்ணீர் தண்ணீர் படத்துல இருந்து மானத்திலே மீனிருக்க பாட்டு வேணுங்க.

அப்புறம் உந்தி முந்தி விநாயகர். உந்தின்னா தொந்தி. தொந்தி முந்தி உக்காந்திருக்குற விநாயகர். சிபியாரே...சரிதானே?

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/10/3.html

போன பதிவுலதான் நம்ம மானத்தைச் சீவிச் சிங்காரிச்சிக் கப்பல்ல ஏத்துனீங்க. ஆனாலும் துணிஞ்சு வந்திருக்கேன்.

மொத்த வடைல ரெண்டு வடை சுட்டிருக்கேன்.

வணிகம்
1. நாய்ங்க அது. ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்னு பாட்டு கேக்குதே...அந்த நாய்தான் இது.

2. நோக்கியா - இது எனக்குத் தெரியாது. கூகிளாண்டவர் உதவினார்

3. புகைப் பிடித்தல் - கூகிளாண்டவராய நம

4. நைக்கீ ஸ்விஷ் அந்த லோகோ - சர்வம் கூகிளார்ப்பணம்

விளையாட்டு
1. கால்ல ஷூ இல்லாம விளையாண்டாருன்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/10/2.html

அடியே அம்முலு.... எப்படிங்க மறக்க முடியும்? கல்யாண அகதிகள். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். இசையரசியின் குரலில் மிகவும் அருமை.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் பாட்டும் அருமையோ அருமை.

நீங்க சொன்ன மாதிரி...அச்சமில்லை அச்சமில்லைல இருந்து இசையரசியைத்தான் இவர் நெறைய பயன்படுத்தியிருக்காரு.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/10/3.html

ஐயா, விளையாட்டுல நான் 1ன்னு சொன்னது 5வது கேள்விக்கான வடை. இப்ப சரியா வெந்திருக்கான்னு பாத்துச் சொல்லுங்க. :)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/11/blog-post.html

நீடூடி வாழ்க என்று உளமாற வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

http://vettippechu.blogspot.com/2007/10/blog-post_30.html

அடேங்கப்பா... பெரிய தில்லாலங்கடியா இருக்கே. முயற்சித்திர வேண்டியதுதான்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/11/250.html

கையக் குடுங்க சார். எதுக்குன்னா....இந்தக் கனவுகளுக்கும் எனக்கும் ரொம்பவும் நெருக்கம். இந்தச் சொற்கள் இப்பிடியெல்லாம் வந்து படுத்தியிருக்கு. சொற்கள் மட்டுமில்ல. சமயத்துல சொற்றொடர்களும். பாட்டும். ஒரு குறிப்பிட்ட இசைக்கோர்வையும். இன்னும் சொல்லப் போனா.... ஒரு குறிப்பிட்ட நினைவும். அதாவது கனவுலயும் வரும் நினைவு. முந்தியெல்லாம் கண்ட கனவை தெனமும் நண்பர்களோட மெயில்ல பகுந்துக்கிறுவேன். இப்ப நேரமின்மையால கொறஞ்சு போச்சு. இதுல பாருங்க... கனவுலயே..இது கனவு..நாளைக்கு இத நெனவு வெச்சி மெயில் அனுப்பனும்னு வேற தோணும். இதுக்கெல்லாம் குண்டக்க மண்டக்கன்னா எதுவும் பேரு வெச்சிறாதீங்க சாமிகளா.... :))))))))
பெண்ணைப் பெற்றவன் அப்படீங்குற கதையே...கனவுல நடிகர் திலகம் வந்து சொன்னதுதானே. பாதி ராத்திரியில எந்திரிச்சி உக்காந்து எழுதுனேன்.

ரெயின்கோட் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனா பார்த்ததில்லை. Singing in the rain படம் பார்த்திருக்கீங்களா? இல்லைன்னா பாருங்க. ஒங்களுக்குப் பிடிக்கும். வங்காளப் படங்கள் ஒங்களுக்குக் கிடைக்கும்னா...நான் பரிந்துரைக்கிறது பஞ்சரமேர் பகான் (bancharam-er bagan). கன்னடத்துல பூதய்யனு மக ஐயூ.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2007/10/blog-post.html

// இராம்/Raam said...
//எனக்குத் தண்ணீர் தண்ணீர் படத்துல இருந்து மானத்திலே மீனிருக்க பாட்டு வேணுங்க.//

ஜிரா,

என்கிட்டே இருந்தா போடுறேன்..... அந்த பாட்டுலே அப்பிடி என்ன விஷேசம்?? 2 - 3 தடவைதான் கேட்டுருக்கேன்... //

ராமு, இல்லைன்னாலும் தேடிப் பிடிச்சி.. மதுரைல முப்பது ரூவாய்க்கி டீவிடி வாங்கியாவது போடுப்பா.

அந்தப் பாட்டுல ரொம்பவும் இசைக்கருவிக இல்லாம பட்டிக்காட்டு மெட்டு ரொம்பப் பிரமாதமா இருக்கும். அதுவுமில்லாம அந்தப் பாட்டப் பாடுனவங்க யாரோ ஒரு புதுப்பாடகி. அவங்க பாடி வேற எந்தப் பாட்டும் கேட்டதில்லை. அதான் கேட்டேன்.

மானத்திலே மீனிருக்க
மதுரையிலே நானிருக்க
சேலத்திலே நீருக்க
சேருவது எக்காலம்.......

நீயாச்சும் மூனு நாலு வாட்டி கேட்டிருக்க. நான் ஒரு வாட்டிதான்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/10/blog-post_30.html

மிகவும் அருமையான பாட்டு இது. இந்தப் பாட்டில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று பெண் குரலில் இசையரசி பாடியது. இன்னொன்று ஆண்குரலில் பாலு நிலா பாடியது.

சுமித்ரா முதலில் ஒரு நிகழ்ச்சியில் இதைப் பாடுவார். பிறகு அவருக்கு மறதி வந்துவிடும். நினைவு தெளிவிக்க ஜெய்கணேஷ் இந்தப் பாட்டைப் பாடுவார். அதைக் கேட்டுதான் அவருக்கும் நினைவு வரும்.

மிக அருமையான பாட்டு.

// "அவர் நடிப்பில் சிவாஜி, இவர் குரலில் சிவாஜி.. " ஹி.. ஹி.. எப்படிங்க அதிருதுல்ல...? //

சுந்தர், எனக்குப் பிடித்த பாடகர் ஜெயச்சந்திரன். ஆனால் தமிழ்த் திரையுலகில் ஆண் பாடகர்களில் இரண்டே இரண்டு பேர்கள்தான் எதையும் பாடியிருக்கிறார்கள். ஒருவர் டி.எம்.எஸ். மற்றொருவர் பாலு. இவர்கள் இருவர் இடமும் இன்னும் நிரப்பப்படவில்லை. படாது என்றுதான் தோன்றுகிறது.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2007/11/blog-post_02.html

இந்தப் பாடலைப் பாடியது பி.எஸ்.சசிரேகா என்று நினைக்கிறேன். இல்லை.. இல்லை லதா ரஜினிகாந்த் தான். சசிரேகா பாடியது ராஜபார்வை படப்பாட்டு.

இதுவும் ஒரு நல்ல பாட்டு.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/10/blog-post_28.html

// வெட்டிப்பயல் said...
ஆன்மீக பதிவர்களும் அரசியல் பதிவர்கள் மாதிரி தான் நடந்துக்கறீங்க...

ஜி.ரா,
இங்க ஒருத்தர் நீங்க கேட்டதை கோட் பண்ணி இராவணன் செய்த குற்றங்களை சொன்னார். அதை புத்திசாலி தனமா விட்டுட்டு KRS கூட விவாதம் செய்யத்தான் பார்க்கறீங்க.

அவரும் அந்த அனானிமஸ் நண்பர் கொடுத்த பதில் சரியா தப்பானு சொல்லாம நைசா ஏமாத்திட்டு அடுத்த பின்னூட்டத்துக்கு போயிட்டார். எல்லாரும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிங்கப்பா... பெரிய பெரிய அரசியல்வாதிங்க எல்லாரும் தோத்துடுவாங்க... (ஸ்மைலி இல்லை)//

வெட்டி....ஓவர் உணர்ச்சி போலத் தெரியுது. ஆனா தேவையில்லை.

பேச்சு எனக்கும் ரவிக்கும். அதுக்குக் காரணம்.. இருவருக்கும் இருக்கும் புரிதல். வேறு எங்காவது இப்படிச் செய்கிறோமா? இல்லையே. இந்த விதண்டாவாதம் எங்களுக்குள் மட்டுந்தான். இது எனக்கும் தெரியும்....ரவிக்கும் தெரியும்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/10/blog-post_31.html

சந்திரபோஸ் எம்பதுகளில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர். நல்ல பாடலை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/11/4.html

// துளசி கோபால் said...
எனெக்கென்னவோ 'அந்த' முருகன் இட்லிக்கடை பிடிக்கலை.

சட்னி,சாம்பாருன்னு எல்லாம் இலையிலெ ஓடவிட்டு.......யக்(-:

சரவணபவன் பரவாயில்லை. //

என்ன டீச்சர் இப்பிடிச் சொல்லீட்டீங்க.... அந்த சட்டினியையும் சாம்பாரையும் பொங்கலோட கொழப்பி...அடா அடா அடா..நீங்க அப்படியெல்லாம் சாப்புடுறதில்லையோ! :)

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/11/2.html

ஒரு டீவிப் பொட்டி.. இன்னொரு பெட்டி.... டைப்ரைட்டர் மாதிரி ஒன்னு...ரெண்டு மூனு வயருங்க...இது என்ன வேலை பாக்குது பாத்தீங்களாம்மா. :)

அப்புறம்....இந்த சாப்ட்வேர்ல எப்பவுமே restart ஒரு நல்ல மருந்து. :) யோசிச்சிப் பாருங்க... ஏரோப்பிளேன் கூட சாப்ட்வேர்தான். அதுல restart செய்யுற மாதிரி நெலமை வந்துருச்சுன்னா!

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/11/250.html

// தருமி said...
ஜிரா,
நல்ல வேளை .. நம்மள மாதிரி 'கேசு'கள் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டதில ஒரு சந்தோஷம். //

என்ன சார்.. கேசு லூசுன்னு சொல்லிக்கிட்டு...அழகா...தமிழ்ல கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு சொல்லிப் பாருங்க.....எங்கயோ போயிருவோம்ல :))))))

////பெண்ணைப் பெற்றவன் அப்படீங்குற கதையே...கனவுல நடிகர் திலகம் வந்து சொன்னதுதானே.//
அடப் பாவி மனுஷா! அந்த அளவுக்குப் போயிரிச்சா? அதுவும் அவரே வந்திருக்கார் .. ம்.. கொடுத்த வச்ச மனுஷந்தானய்யா ..! இன்னும் யார் யார் வந்து கதை சொல்றாங்கன்னு எனக்கு மட்டுமாவது சொல்லுங்களேன். :) //

ஆகா... ஏதோ சொல்ல முடிஞ்சதச் சொல்லீட்டேன். நீங்க வில்லங்கத்துல மாட்டி விடப் பாக்குறீங்களே. ஏற்கனவே கள்ளியிலும் பால்..காதல் குளிர்னு பேரு ரிப்பேரு.

// செல்வன் said...
எல்லா ரசனைக்கும் தமிழில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.'நல்ல ரசனை' படங்கள் வரும் அதே சமயத்தில் 'கெட்ட ரசனை:)' படங்களும் வரட்டும்.ஒரே மாதிரி படங்களா எடுத்துகிட்டிருந்தா அந்த திரையுலகத்தில் வெரைட்டியே இல்லாம போயிடும். //

செல்வன், வெரைட்டி வேணுந்தான். கண்டிப்பா வேணுந்தான். ஆனா சோத்துக்கு ஊறுகாய்னு வெரைட்டி வெச்சா தாவலை. ஊறுகாய்க்குச் சோறுன்னு வெச்சா! அங்கதான இடிக்குது.

G.Ragavan said...

http://vasanthamravi.blogspot.com/2007/11/blog-post.html

ரவி, இதுவும் ஐடிகாரங்க குத்தம்தானா? :))))

ஐடிகாரங்க மேல...என்னையும் சேத்துத்தான்...சில குற்றங்களைச் சொல்வேன். ஆனா இதுக்கு எங்களச் சொல்ல மாட்டேன். மத்த பேராசை பிடிச்சங்களத்தான் சொல்வேன்.

ஐடிகாரங்க உள்ளபடிக்கு மைனாரிட்டிங்க. இன்போசிஸ்ல அறுவதாயிரம். டிசிஎஸ்ல இரு எழுவதாயிரம்...இப்பிடி அப்படி எல்லாத்தையும் கூட்டுனாலே அதிகபட்சமா அஞ்சாறு லட்சத்துக்கு மேலப் போகாது. நூறு கோடீல...இது எந்த மூலைக்கு? இவங்களுக்கெல்லாம் பொண்ணே கெடைக்கிறதில்லையா? ஆச்சரியமாத்தான் இருக்கு.

அப்படியே ஐடி மாப்பிள்ளைதான் தேடுறாங்கன்னு வெச்சுக்கிட்டாலும்... அதுக்குன்னு ஆசைப்படுறவங்களத்தான் தப்பு சொல்வேன். ஐடியை இல்ல. கிரிக்கெட் விளையாட்டுல குத்தமா? அதுமேல வெறிபிடிச்சு அலையுறவங்க மேல குத்தமா?

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/11/pit.html

வெற்றி உனதே...சென்று வா...வென்று வா :)

G.Ragavan said...

http://inisai.wordpress.com/2007/10/31/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/

ஆகா....அருமையான பாடல். தமிழிசை பாடும் வானம்பாடி என்ற தலைப்பைப் பார்த்ததுமே என்ன பாடலென்று தெரிந்து விட்டது. :) எனக்கும் மிகவும் பிடித்த பாடலாயிற்றே. சீர்காழியின் கணீர் குரலில் கேட்கக் கேட்கச் சுகம்.

பூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை - மயிலையில் மாண்ட பூம்பாவையைத் தேவாரப் பண்பாடி எழுப்பினார் திருஞானசம்பந்தர்

புனல் வாதிலே தமிழில் பண்ணெழுதிப் போட்டார் சம்பந்தர். அது முன்னேறியது. அதுதான் பொங்கும் புனலினையே எதிர்த்து நின்ற இசை.

பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - பாம்பு தன்னுடைய நஞ்சு என்று பொருள் கொள்ளக் கூடாது. பாம்புதன்...பாம்பினுடைய என்று பொருள். அரவம் தீண்டி அரவமற்றுப் போன அப்பூதியடிகளின் மகனை திருநாவுக்கரவர் பாடிப் பிழைக்க வைத்தார். சிவாஜி நடித்திருக்கிறாரே. திருவருட்செல்வரில். அது.

விளக்கம் போதுமா? :)

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/11/21-1.html

// Collapse comments

.:: மை ஃபிரண்ட் ::. said...
பொங்கல பொங்கல மற்றும் பூபூக்கும் மாசம் சூப்பர் சாங்..

இந்த தொடர் தொடர வாழ்த்துக்கள் மேட்டி. :-) //

வாங்க மை ஃபிரண்டு. ஆமா நல்ல பாட்டுதான் இது. அது சரி..அதென்னது மேட்டி வேட்டின்னு? :))))

// கானா பிரபா said...
பாடலுக்கு நன்றி ராகவன், நேற்று நடந்த துயர சம்பவத்தினைத் தொடர்ந்து இசைப்பதிவை என்னால் இடமுடியவில்லை. //

புரிகிறது பிரபா. எனக்கு இங்கு செய்தி தெரியத் தாமதமானது. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இதையும் கடந்து போவோம்.

// இனிமையான பாடல், பாடலைக் கேட்கும் போது மனசுக்குள் ஆயிரம் பூக்கள் பூக்கும். //

உண்மைதான். காதல் பூக்கும் பொழுது வரும் பாட்டல்லவா. அதான் ஆயிரம் பூக்கள் பூக்கின்றன.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/blog-post.html

இது பொய்யாமொழியின் கதையை வைத்து எடுத்த படம். பொய்யாமொழிப் புலவராக நடித்தவர் தியாகராஜபாகவதர். சிவனைப் பாடுவேன். அம்பிகையைப் பாடுவேன். பொடியனையா பாடுவேன் என்று முதலில் மறுத்தவர். கோழியைப் பாடும் வாயால் முட்டையைப் பாடுவேனோ என்று செய்யுள்.

பின்னால் முருகன் வேடனாக வந்து மிரட்டிப் பாடச் சொன்னாராம். அவருடைய பெயர் முட்டை என்றும்...அதை வைத்துப் பாடச் சொன்னாராம். கொடிய கோடையில்....முட்டைக்கும் காடு.. அதாவது முள் தைக்கும் காடு என்று பொருள்.

உடனே வேடன்...சிரித்து விட்டு... என்னய்யா பாட்டு....வெயில் கொடுமையில் மரங்களே எரிந்தன என்கின்றீர்..முள் மட்டும் எரியாமல் இருக்குமோ என்று கேட்கிறார். அப்படி ஆட்கொண்டாராம் பொய்யாமொழியை.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/11/216_4343.html

முருகனே...எப்ப ராமநாதன் எழுதுற பதிவு எனக்குப் புரியுமோ!!!!!

இந்த ரோஜர் பெடரரு யாருன்னு கேட்டா...என்னையும் பதிவுல சொல்லீருக்குற மாதிரி திட்டுவீங்களா :(

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/11/276.html

1. அஸ்ய அஸ்வாய சிஸ்ய சுசுவாய பஸ்யவாக - இதுதான் கர்மா - பறவைகளின் மொழில சொல்லீருக்கேன். நல்ல கிளியோ காக்காயோ வாங்கிப் பொருள் கேட்டுக்கோங்க.

2. for (int i=0, i++, i <= infinity)
{
return void;
}
இதுதாங்க அந்த லெட்ஜரோட முக்கியமான பகுதி.

3. ஏன்னா சோசியம் சொல்றவங்களுக்கே தெரியாது. அதான் உண்மை.

இந்த மூனும் புரிஞ்சிட்டா நாலுக்கும் அஞ்சுக்கும் விடை தேவையில்லை. :)

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/10/blog-post_25.html

அட கவிதை மாதிரியே இருக்கே...ஒருவேளை காதல் வந்துருச்சோ சீவியாருக்கு!!!!!!

யாரெல்லாம் அந்தப் பொண்ணுங்க. வரிசையா பட்டியல் போடு பாக்கலாம். :)))))))

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/11/29.html

மதுரைல நெறைய பொன் கெடைச்சது. ஆனா அத விட்டுட்டு லேசா வர முடிஞ்சது. கொல்லிமலைல ஒரேயொரு பொண் கெடைச்சது. அத விட்டுட்டுப் போக முடியலையாக்கும்...அதான் சித்தர் வந்து வெரட்டுறாரு...

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=320

ஆகா.............அருமையான தொடக்கம். மிகவும் நல்ல முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துகள். அடுத்து லக்கியின் பக்கத்துக்கு ஓடுறேன்.......

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/11/2.html

ஒரு முடிச்சே பெரு முடிச்சா இருக்கும்னு பாத்தா....மறு முடிச்சப் படுமுடிச்சாப் போடுறீங்களே...ம்ம்ம்ம்...அடுத்து யாரு? வினையூக்கியா...சூப்பர்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/11/blog-post.html

போட்டிய அருமையா நடத்தி முடிச்சிட்டீங்க. என்ன....நடிகை ராதா அறிமுகமான படம் என்ன....இளையராஜா இசையில் சீர்காழி பாடிய பாடல் ஒன்று...ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ரெண்டாவது தமிழ்ப் படம் எதுங்குறமாதிரியெல்லாம் கேள்விகள் இல்லையே தவிர..போட்டி அறிவுப்பூர்வமாக இருந்தது.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=354

ஹா ஹா ஹா பிரமாதம் போங்க. ரசிச்சேன். ரசிச்சேன். அதுலயும் அந்த நாளை உலகம் அழிந்து போகும்...ஆண்டவா...சற்று கழித்து :))))))))))))))))

G.Ragavan said...

http://photography-in-tamil.blogspot.com/2007/11/blog-post.html

ஐயா, தங்களது இந்த புகைப்பட அழகூட்டுச் செயலியின் செய்முறை விளக்குமுறை மிகவும் அருமையாக தகவல்கள் நிறைந்ததாக இருக்கிறது. தங்கள் கருத்துகளை இனிமேல் புகைப்படங்களில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியிருக்கிறது என்றால் மிகையில்லை என்பதை மட்டும் தற்போதைக்குச் சொல்லிக் கொண்டு விடைபெற விரும்புகிறேன் என்பதைத் தாழ்மையுடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2007/10/5.html

:(((((((((((((((((((((((((((((((((((((((

ஹி ஹி...வில்லன்.....சூப்பர்

ஊட்டி திட்டம்லாம் பயங்கர திட்டமாயிருக்குது. ஒன்னும் நடக்கப் போறதில்லை போல..

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/11/blog-post.html

இந்தப் பகுதியை நான் ரொம்பவுமே ரசிச்சேன். நல்லாச் சொல்லீருக்கீங்க. அருமை.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/11/blog-post_05.html

என்னடா மாலை நம்மூரு நெறத்துல இல்லாம தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக் கொடி நெறத்துல இருக்கேன்னு நெனச்சேன். அப்புறந்தான் புரிஞ்சது. அல்லுடு மஜாக்கா! வாழ்த்துகள் வெட்டிகாரு.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2007/11/blog-post_06.html

என்ன இருந்தாலும் பழசு அசல். அதுல புதுமைகள் உண்டு. மிருதங்கத்தை ட்ரம்ஸ் மாதிரி மெல்லிசை மன்னர் பயன்படுத்தியிருப்பாரு. அதுவுமில்லாம டி.எம்.எஸ்சோட உச்சத்துக்கும் போற குரல்.

புதுப்பாடலை ரீமிக்சியர் ஏ.ஆர்.ரகுமான் இல்லை. ரீமிக்ஸ் செய்வதில்லை என்பதில் உறுதியாக இரூக்கிறார். தொட்டால் பூ மலரும் பாட்டில் புது மெட்டே போட்டிருந்தார். ஆனா ரீமிக்சில் அதே மெட்டு இருக்க வேண்டும். இந்தப் பாட்டைப் பாடியவர்தான் இதை ரீமிக்சியவரும்.

அவருக்கும் பழைய பாட்டின் வலிமை தெரிந்திருக்கிறது. ஆகையால் ஹை பிச்சில் டி.எம்.எஸ்சின் குரலையே பயன்படுத்தியிருக்கிறார்.

பழைய பாட்டு மிகவும் அருமையானது. அந்த விறுவிறுப்பைக் கொண்டு வர முயன்றதில் புதிய பாட்டிற்கும் ஒரளவு வெற்றியே.

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/10/95-100.html

ஓஓஓஓஓஓஓஓஓஓஓ காத்திருக்கோம்யா...

G.Ragavan said...

http://kavithaikealungal.blogspot.com/2007/11/deepavali-special-kavithaigal.html

இனிய தீபவொளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

நல்ல கவிதைகள். தீபவொளியிலும் காதலொளி கண்டீர் கண்டீர் கண்டீர்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/11/blog-post_9926.html

கோவி, உண்மையிலே சொன்னா மதச்சார்பின்மைங்குறது நல்லா விக்குற சரக்காயிருச்சு. அதுனாலதான் ஒவ்வொரு கட்சியும் நல்லாவே காச்சுது. பத்வீல இருக்குறப்போ அதக் காப்பாத்திக்க எல்லாப் பயகளும் எதையாவது வெச்சி யாவரம் பண்றான். மக்களும் வாங்குறாங்க. மதம், மொழி, இனமெல்லாம் நல்லா விக்குற சரக்குக. விக்காம இருக்க முடியுமா? பாஜகாவுக்கு எந்த விதத்துலயும் கொறைஞ்சதில்லை காங்குரசு, ஜனதாதளம். பேருதான் வெவ்வேறயே தவிர உள்ளயிருக்குற சரக்கு ஒன்னாத்தான் இருக்கும் போல இருக்கு.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/blog-post.html

// வஞ்சப்புகழ்ச்சி என்று தமிழிலும் நிந்தாஸ்துதி என்று வடமொழியிலும் சொல்லுவார்கள். வஞ்சப்புகழ்ச்சி என்பதோ புகழ்வது போல் இகழ்வது; நிந்தாஸ்துதி இகழ்வது போல் புகழ்வது. இந்தப் பாடல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. //

குமரன் தமிழ் இலக்கணப்படி வஞ்சப்புகழ்ச்சி என்பது புகழ்வது போல இகழ்வது மட்டுமல்ல. இகழ்வது போலப் புகழ்வதும் கூட. இந்தப் பாடல் வஞ்சப்புகழ்ச்சி வகையைச் சார்ந்ததே. ஆனால் உண்மையான பொய்யாமொழியின் செய்யுள் இகழ்ச்சி மட்டுமே. கோழியைப் பாடுகிறவன் முட்டையைப் பாடுவானோ என்று போகும். அது என்னிடமுள்ள தனிப்பாடல் திரட்டு என்ற நூலில் இருக்கிறது. ஆனால் அந்த நூல் பெங்களூரில் இருக்கிறது.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/11/blog-post_03.html

விடுன்னு சித்தர் சொன்னாரு
இந்தப் பயலோ பொன்னி கிட்ட
தொடுன்னு போயி நிக்கிறானே
சரி...அதான் விடுவிடுன்னு திரும்பி நடந்துட்டானே.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/11/blog-post_05.html

// சமையல் யாரு?
பந்தி பாத்துக்கப் போவது நான் தான்! :-) ஜிரா...நீங்க குறுக்கால வராதீங்க! //

கவலையே படாதீங்க ரவி. நான் குறுக்க நெடுக்க வரலை. நம்மள்ளாம் பந்தீல உக்காரனும்னா பரிமாறுற பண்டங்களே வேறையா இருக்கனும். வெட்டிகாரு பந்தி சைவப்பந்தியா இருக்கும். ஆகையால யூ பிளீஸ் டேக் கேர்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/11/blog-post.html

அத்தனையும் வாங்கி ஜிகே முன்னாடி வெச்சுட்டீங்க. நீங்களும் ஒரு வாய்ச் சாப்புட்டுக்கிருங்க.

இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/11/blog-post.html

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் பிரபா. அருமையானதொரு இசையரசியின் பாடலையும் நினைவு கூர்ந்துள்ளீர்கள். மிகப் பொருத்தம்.

G.Ragavan said...

http://sinnakuddy1.blogspot.com/2007/11/blog-post_08.html

இது எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு. எம்.ஆர்.ராதா கலக்கியிருக்காரு. இத வெச்சி ஒரு பதிவு முந்தி போட்டிருந்தேன்.
http://gragavan.blogspot.com/2007/06/blog-post_19.html

G.Ragavan said...

http://bhanumathi.blogspot.com/2007/11/blog-post.html

வாங்க வாங்க. வலையுலகத்திற்கு எங்களது வரவேற்புகள். உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் சுவையாக எடுத்து வைக்க இது ஒரு நல்ல தளம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/11/blog-post_08.html

இனிய தீபாவளி வாழ்த்துகள் பிரபா.

தீபாவளி என்றால் கறியெடுப்பது எங்கள் பக்கத்தில் மட்டும் பழக்கம் என்று நினைத்தேன். உங்கள் பக்கத்திலுமா.

ஒரு நண்பர் கேட்டார். தீபாவளிக்கு ஒங்க வீட்டுல நோன்பு உண்டா என்று. எங்க வீட்டுல கறியெடுத்துக் கொழம்பு வெக்கிறதுதான் நோன்புன்னு சொன்னேன். :)

அரியதரம்னா அதிரசம். நாங்க சின்னப்பிள்ளைல..எங்க பட்டிக்காட்டுல தீபாவளின்னா அதிரசம் மலை மாதிரி கெடக்கும். எங்க வீடு பெரிய வீடு. பெரிய அடுப்படி. ஆகையால நாலஞ்சு அடுப்பு வெச்சி சொந்தக்காரப் பெண்மணிகள் எல்லாம் வந்து உக்காந்து அதிரசத்தைப் பக்குவமாப் பொரிப்பாங்க. அந்த அதிரச ஸ்பெஷலிஸ்டுகள் இப்ப அதிரசத்தையே மறந்து போயிட்டாங்க. ஆனா சுவை மட்டும் மறக்கலை.

G.Ragavan said...

http://engineer2207.blogspot.com/2007/11/blog-post_10.html

ஹி ஹி விஜய் படமெல்லாம் நான் சாய்ஸ்ல விட்டுருவேன். அதே மசாலாவத் திரும்பத் திரும்ப அரைக்கிறாரு. கொஞ்சம் கதைய மாத்துனாக்கூட ஒட்ட மாட்டேங்குது. நோ ரிஸ்க்.

G.Ragavan said...

http://rasigan111.blogspot.com/2007/11/blog-post_10.html

டண்டணக்க டணக்க
டண்டணக்க டணக்க
டண் டண் டண் டடண்
டண் டண் டண் டடண்

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/11/blog-post_10.html

பிரபா...அருமையானதொரு பாட்டு. கர்நாடக தாளம்..மேற்கத்திய ராகம்...அதற்குப் பொருந்தும் குரல். அருமையான கூட்டணிப் பாட்டுங்க.

கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளைக் காண்பதுண்டு
...அடடா! வாலி...வாலி...

// உண்மை தான், 80 களில் வந்த பிரபலப்பாடல்களில் இதுவும் ஒன்று. சுசீலா, மலேசியா வாசுதேவன் கூட்டணி அதிக பாடல்களில் இருக்காது. அரிதான பாடல்களில் இதுவுமொன்று. //

மலேசியா சுசீலா கூட்டணி என்றால் எனக்குப் படக்கென்று மூன்று பாட்டுகள் நினைவிற்கு வரும். இது ஒன்று. மற்ற இரண்டுகள்..
1. சீனத்துப் பட்டு மேனி - தாய் மூகாம்பிகை - இளையராஜா
2. பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் - தனிக்காட்டு ராஜா(?) - இளையராஜா

G.Ragavan said...

http://binarywaves.blogspot.com/2007/11/story-by-pics.html

Ha Ha Ha

what a nice story with two pics and two lines :) i like it.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/11/blog-post.html

அடேங்கப்பா.....அடடா! எல்லாமே நல்லாருக்கு. ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த மேம்பாலத்துல நின்னு படம் பிடிச்சிருக்கியே. சூப்பரப்பு. விமான நிலையமும் நல்லாருக்கு.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/11/blog-post.html

இதப் பாத்தப்ப்புறம் ஒரு பட்டம் குடுக்கனும்னு தோணுச்சு. சுருக்கமா இனிமே புபு சிவிஆர்னு கூப்புடலாம்னு இருக்கேன்.

அதென்ன புபு? புகைப்படப் புலவர். :)

எங்க..மக்கள் எல்லாரும் சேந்து சொல்லுங்க புபு சிவிஆர் வாழ்க.

G.Ragavan said...

http://thanjavuraan.blogspot.com/2007/11/blog-post_08.html

ஓ ஒங்க ஊர்ல அப்படியா? இப்ப நான் இருக்குற நெதர்லாந்துல கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் பிரதம மந்திரி ஸ்கூட்டர்ல ஆபீஸ் போனாராம். இப்பத்தான் பாதுகாப்பு அது இதுன்னு கார்ல போறாராம். என்ன கொடுமையோ...நான் வந்ததுல இருந்து இந்தூர்ல ஒரு கொடும்பாவி எரிக்கலை. போராட்டம் நடக்கலை. ஒண்டிக்கு ஒண்டி வர்ரியான்னு சண்டையில்லை. அட...கட்சி ஒடையலை. அரசியல்வாதிங்க உண்மையிலேயே இந்த நாட்டுல இருக்காங்களான்னு சந்தேகமாவே இருக்கு. ஏதாவது செஞ்சாகனும்யா...நாம மட்டும் கேணையனையா இருக்கக் கஷ்டமாயிருக்குல்ல.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/2.html

அகரமுமாகி அதிபனுமாகி திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்தது. கொடுத்தமைக்கு நன்றி.

இதைப் பித்துக்குளியார் பாடியும் கேட்டிருக்கிறேன். இதை விடவும் அருமையாக இருக்கும்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/2.html

// பாரதிய நவீன இளவரசன் said...
பழமுதிர்சோலை பற்றி ஒரு கேள்வி... மதுரை அருகேயுள்ள அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை)தானே பழமுதிர்சோலை? மற்ற ஐந்து படைவிடுகளிலும்போல, பழமுதிர்ச்சோலையிலும் முடிகாணிக்கை செலுத்தும் வசதி இருக்கிறதா?... அவசரமில்லை... மெல்ல விசாரித்து சொல்லுங்கள்.. நன்றி.//

பழமுதிர்ச்சோலையிலும் முடிக்காணிக்கை செலுத்தும் வசதி இருக்கிறது. எனக்கும் இந்த ஐயம் இருந்தது. சென்ற முறை சென்ற பொழுது ஐயத்தைத் தீர்த்துக் கொண்டேன். ஆயினும்..மதுரைக்காரர்கள் இதை இன்னும் சரியாகச் சொல்வார்கள். உங்கள் கேள்வியை இன்னமும் சண்மதச் செல்வர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் வந்தாலும் தகவல் கிடைக்கும்.

G.Ragavan said...

http://photography-in-tamil.blogspot.com/2007/11/blog-post_08.html

இது நல்ல டெக்கினிக்கியா இருக்குதே. இந்த டெக்கினிக்கியெல்லாம் தானா வர்ரதுல்ல...அப்படியே வருது. வரட்டும் வரட்டும்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/11/blog-post_10.html

திரவுபதைக்கு உதவ துணி பார்சல் அனுப்பிய விளக்கம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது வல்லியம்மா. நல்ல விளக்கம். அதுவுமில்லாம ஒரு பொண்ணு துணியில்லாம இருக்கும் போது அண்ணன் ஆனாலும் யோசிச்சுதான வரனும். அதுனாலயும் இருக்கலாம்.

என்னது மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்ல இந்தக் கதையெல்லாம் சொல்றாங்களா!!!!!

G.Ragavan said...

http://kavithaikealungal.blogspot.com/2007/11/kanaa-kaanum-kaalangal-1.html

தீபவொளித் திருநாள்ள தொடங்கீருக்கீங்க. கதை இப்பத்தானே தொடங்கீருக்கு. போகப் போகத் தெரியும்..கதையின் போக்கு புரியும்.

G.Ragavan said...

http://kadagam.blogspot.com/2007/11/blog-post_6315.html

போக வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டி விட்டிருக்கிறது உங்கள் பதிவு. பணக்காரக் கோயில்களுக்குப் போகும் மக்கள் இது போன்ற கோயில்களுக்கும் செல்ல வேண்டும். அதுதான் முறை.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/11/blog-post_09.html

இந்தப் படங்கள் பிட்டுக்கா? யாரு எடுத்தது?

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/11/blog-post.html

// கானா பிரபா said...
நீங்கள் இம்மாதிரிப் படங்கள் தொடர்ந்தும் எடுத்து எங்களுக்கு தொடர்ந்தும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி வருகின்றீகள், உங்கள் பணி தொடரட்டும் ;) //

ஹா ஹா ஹா சரியாச் சொன்னீங்க பிரபா. இப்பல்லாம் காமெராவத் தொடவே யோசனையா இருக்கு. எல்லாம் இந்த புபு காகவால வந்த வினை.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/11/blog-post_11.html

எனக்கு ஒரு டவுட்டு. இந்தக் கோகர்ணம் கருநாடகாவுல இருக்கு. அப்ப அரபிக் கடல். ஆனா இலங்கை வங்காள விரிகுடால இருக்கே!!!!! அப்ப இந்த இலங்கை வேற...அந்த இலங்கை வேறயா? அப்ப ராமர் பாலத்த அரபிக்கடலுக்கடீல தேடனுமா! ஆகா....

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/11/blog-post.html

பாத்தேன்...ஒன்னும் மனசுல நிக்கலையே! நல்லவேளை படம் இங்க வரலை.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/11/278-10.html

என்னங்க இப்பிடி ஆயிருச்சே சக்திக்கு....கதையச் சந்தோசமாக் கொண்டு போங்கங்கங்க...பாவம் சக்தி. கடவுளே சக்தியைக் காப்பாத்து.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/11/279-11.html

அடடா! நந்தினிக்குத் தெரிஞ்சு போச்சா! இனிமே குடும்பத்துல என்ன குழப்பம் வரப் போகுதோ! ம்ம்ம்...அந்த அண்ணனும் ரவுடியா இருக்கான். இந்தப் பொண்ணு என்ன செய்யப் போகுதோ!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/11/45.html

இந்தச் சினிமா பாக்குறதுன்னு சொன்னீங்க பாருங்க....அங்கதான் நீங்க நிக்கிறீங்க. இல்ல ஊஞ்சல்ல உக்காந்திருக்கீங்க.

எனக்கும் ஓம் தேட்டர்ல சினிமா பாக்கனும்னு ஆசையோ ஆசை. சிங்கப்பூர் போயிருந்தப்போ சோனி ஓம் தேட்டர் கெடைச்சது. வாங்கீட்டு வந்துட்டேன்.

ஆனா பாருங்க...அதுக்கேத்தாப்புல பிளாட் ஸ்கீரின் டீவி இல்லை. எங்கிட்ட லார்டு ஆஃப் தி ரிங்ஸ் ஒரிஜினல் டிவிடிகள் இருக்கு. அத ஓம் தேட்டர்ல போட்டா எபக்ட் சூப்பராயிருக்கும். அதே பெரிய டீவியும் இருந்தா...அடடா... ஆச எப்படி வருது பாத்தீங்களா...நீங்க சொன்னாப்புல.

தாமரைத் தடாகமும் அருமை. பாத்து டப்புன்னாலும் பாத்து எடுத்துட்டு வந்து குளம் கட்டீட்டீங்களே. ஜிகே குடுக்குற போஸ் பாத்தீங்கதான...

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/11/blog-post_10.html

// கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளைக் காண்பதுண்டு
...அடடா! வாலி...வாலி... //

ஒரு தப்பு பண்ணீட்டேன். பாட்டை எழுதியது வாலி அல்ல. கவியரசர். என்னிடம் கவியரசரின் திரைக்கவிதைத் தொகுப்புகள் உள்ளன. அதுவும் கண்ணதாசன் பதிப்பகத்திலிருந்து. அந்தப் புத்தகத்தில் இந்தப் பாடல் உள்ளது. தவறாகச் சொன்னமைக்கு மன்னிக்கவும்.

G.Ragavan said...

http://tamilgnu.blogspot.com/2007/11/3d-image.html

அடடா...என்ன அழகா இருக்குது படம். எனக்குத் 3டி படங்கன்னா ரொம்பப் பிடிக்கும். முந்தி விகடன்ல பின்னட்டைல 3டி படங்கள் இருக்கும். ஒரு மாதிரி பாத்தா படம் ஜம்முன்னு தெரியும்.

ஆனா இது வேற மாதிரி. ஆனா நல்லாருக்கு. இத முயற்சி செஞ்சு பாக்கனும். இந்தப் பக்கத்த புக் மார்க் பண்ணி வெச்சுக்கிறேன். கண்டிப்பா உதவும்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/11/blog-post_10.html

// Sud Gopal said...
நல்லதொரு தெரிவு...அப்படியே "எனக்குள் ஒருவன்" படத்தில் சுசீலாம்மா பாடிய அந்தப் பாடலையும் பதிக்கலாமே??? //

அந்தப் பாட்டு எனக்கும் பிடிக்கும் ஓமப்பொடியாரே....அதே மெட்டை மலையாளத்திலும் இளையாராஜா இசையில் "வானிட்டெழுதிய நீலக்கடக்கண்ணில் மீனோ" என்று பாடியிருக்கிறார். அந்தப் பாட்டைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். இரண்டையும் போடலாம் என்று..ஆனால் கிடைக்கத்தானில்லை.

////G.Ragavan said...

மலேசியா சுசீலா கூட்டணி என்றால் எனக்குப் படக்கென்று மூன்று பாட்டுகள் நினைவிற்கு வரும். இது ஒன்று. மற்ற இரண்டுகள்..
1. சீனத்துப் பட்டு மேனி - தாய் மூகாம்பிகை - இளையராஜா//

அப்ஜெக்ஷன் மை லார்ட்ட்ட்ட்ட்...

அந்தப் பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள். //

இந்த அப்ஜெக்ஷன் எல்லாம் இங்குட்டு ஆகாது. இதோ இருக்கு யூடுயூப் லிங்குசாமி. இந்தச் சாமிகிட்ட கேட்டுட்டுச் சொல்லுங்க. பாடுனது இசையரசிதான்.
http://www.youtube.com/watch?v=kAYPa7nRhBk
இந்தப்பாடலில் குரலினை மெலிதாக்கிப் பாடியிருப்பது உங்களுக்கு அப்படி ஒரு தோற்றத்தைக் கொடுக்கலாம்.

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/11/wishes_13.html

அதாகப்பட்டது...அபியின் அப்பாவாகிய அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/11/2007.html

யுவனுக்கு நெறைய ஓட்டு விழும்னு தெரியும். ஆனா என்னோட ஓட்டு யுவனுக்கு இல்ல. இசைக்கோர்வைல இன்னும் பலபடி அவர் முன்னேற வேண்டியிருக்குங்குறது என்னோட கருத்து. அதே போல பாடகர் தெரிவும் சரியில்லைன்னோன்னு தோணல்.

வித்யாசாகருக்குக் குடுக்கலாம். மொழி ஒன்னு போதும் அவருக்கு. யுவன் மாதிரி பத்து படம் குடுக்குறதுக்கு இவரு இப்பிடி ஒரு படம் குடுத்தாப் போதும்.

ரகுமான் இந்தி ஆங்கிலம்னு எங்குட்டெங்குட்டோ போயிட்டாலும்....அவர் எடம் அவருக்குதான். ஆனா அவருக்கு ஏற்கனவே புகழ் கெடைச்சாச்சு.

ஆகையால கொஞ்சம் ஒரிஜினாலிட்டி காட்டுற ஜி.வி.பிரகாஷுக்கு என்னுடைய வாக்கு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/11/46.html

வீடுன்னா சும்மாவா இருக்கு. அடடா. நல்லபடி கெட்டி முடிச்சாச்சு. நல்லாருக்கு வீடு. என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://engineer2207.blogspot.com/2007/11/blog-post_14.html

பின்னே.. இப்பிடி ஒரு படத்த வில்லன்னு கொடுத்தா எப்படிப் போடுறது? நான் என்ன காமெடிக் கதையா எழுதிக்கிட்டிருக்கேன். ;))))))))))))))))))

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/11/34.html

கண்ணுதான் வாசல். அந்த வாசல் தொறக்காம ஒடம்புல எந்த வாசல் தொறந்தும் பயனில்லை. அதத்தான் சித்தரு சொல்லீருக்காரு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/11/blog-post_14.html

:) அந்தக் கதாநாயகிதாங்க பின்னாடி டிசிபி ராகவன் கூட "பார்த்த முதல் நாளே"ன்னு பாடீருக்காங்க. ஆமா கமலினி முகர்ஜி. அந்தப் படத்துல கதாநாயகனா நடிச்சவரு பேரு ராஜான்னு நெனைக்கிறேன். ஐதராபாத்துல வேலை விஷயமா மூனு வாரம் இருந்தப்ப வாங்கிப் பாத்த வீடியோ அது. நல்ல படம்.

அதென்னது இன்னொரு படம். சிவியா? சிபியா? ஓ சிவியா. அப்படீன்னா?

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/11/blog-post_14.html

டீச்சர். மார்னிங் ராகா அப்படீன்னு ஒரு படம் இருக்கு. இங்கிலீஷ்தான். பாருங்க. ரொம்ப நல்லாயிருக்கும். The Morning Raga. ஷபனா ஆஸ்மீ, தலைவாசல் விஜய் எல்லாம் நடிச்சிரூக்காங்க.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/4.html

அருணகிரியினைப் புரியாதார் புரியாதாரே. வடமொழி கூடவே போய்....தமிழை உள்ளே நுழைத்தவர். ஆரம்பத்தில் வடமொழியை நிறையத் தூவி விட்டு...போகப் போகக் குறைத்துக் கொண்டே போனார். தமிழை அந்த அளவுக்குக் கஷ்டப்பட்டு நுழைக்க வேண்டிய நிலமை இருந்தது என்றுதான் கருதுகிறேன். இன்றைக்கு இப்பிடி என்றால்..அன்றைய நிலையை நினைத்துப் பாருங்கள். அருணகிரி விளையாடுவார்....

சிகராத்ரி கூரிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ.... அவ்வளவுதான். சிகராத்ரின்னு வடமொழியில் தொடங்கி விட்டு...பட்டுன்னு கூரிட்ட வேலும்..செஞ்சேவலும்...செந்தமிழிலால் பகர் ஆர்வம் ஈ.

அருணகிரியின் நூல்கள் தமிழ் இலக்கியம் ஆகுமா என்றால் கண்டிப்பாக ஆகும். மு.வ அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுகையில் அருணகிரியையும் சேர்த்துத்தான் எழுதினார். ஏனென்றால் அருணகிரி என்ன செய்தார் என்று மு.வவிற்குத் தெரிந்திருந்தது.

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2007/11/3.html

ஆகா...இத்தனைத் திருப்பங்களைக் கொடுத்துட்டு என்னையக் கூப்புட்டுட்டீங்களா! சரி. வந்துருவோம். கொஞ்சம் நேரம் குடுங்க. போட்டுருவோம்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/4.html

// அனுபூதி வேண்டும் போது, அவர் முற்றிலும் தமிழுடன் நின்று விட்டார்-னு சிலர் சொல்லுவதுண்டு.
ஆனால் அதிலும்
உல்லாச நிராகுல யோகவித
சல்லாப விநோதனும் நீஅலையோ
என்றும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே
என்றும் பாடுகிறார் //

முற்றிலும் தமிழில் என்று கூற முடியாது. ஆனால் பெரும்பாலும் தமிழில். தொடக்கத்தில் வடமொழி நிறைய இருக்கும். அதன் அடர்த்தியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் குறைந்த்து அநுபூதியில் முன்னின்றது தமிழ்.

// இறுதிப் பாடலின் போது கூட,
நதி புத்திர ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே
என்று சொல்லி விட்டுத் தான்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்கிறார்!//

நதிபுத்திர இறுதிப் பாக்கு முந்தைய பா. இறுதிப்பா உருவாய் அருவாய்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/4.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//G.Ragavan said...
அருணகிரியினைப் புரியாதார் புரியாதாரே//

அருணகிரிக்கு மட்டுமில்லை ஜிரா!
ஏனைய நல்லன்பர்க்கும் இது பொருந்துமே!
கம்பனைப் புரியாதாரும் புரியாதாரே! :-) //

அது சரி. அருணகிரிக்குத் தமிழை உள்ளே நுழைக்க வேண்டிய தேவை இருந்தது. கம்பருக்கு எதை நுழைக்க வேண்டிய தேவை?

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/11/x.html

ஹா ஹா ஹா... இந்த ஃபார்முலாவ விட்டு வெளிய வாங்கன்னா வர மாட்டேங்குறாங்களே. பேசாம சினிமா எடுக்காம...சும்மா ஒரு அஞ்சு பாட்டுக. நாலஞ்சு காமெடிக் காட்சி. ரெண்டு மூனு சண்டைக்காட்சி. நாலு கிளுகிளுப்புக் காட்டி. மூனு அழுகைக் காட்சிய மட்டும் எடுத்துப் போட்டாப் போதாதா? அப்புறம் எதுக்கு சினிமா எடுக்குறேன்னு சொல்லிக்கிறாங்க? என்னவோ.....தமிழ் சினிமா இப்பிடியே வீணாப் போயிரும் போல. அப்படிப் பாத்தா மொழி மட்டுந்தான் இந்த வருசம் தேறும் போல.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/11/blog-post_09.html

குமரன், நல்ல விளக்கம். நீங்கள் சொல்வது சரிதான். நக்கீரர் உயர்வு நவிற்சிக்கெல்லாம் போகவில்லை. தன்மையிலேயே நன்மையைச் சொல்லிவுடும் வன்மை அவருக்குத் திண்மை என்பது நமக்குப் புரிகிறது.

கணக்காயர் மகனா நக்கீரர். அவர் வலைஞர் என்று படித்த நினைவு.

சங்கறுப்ப தெங்கள் குலம் சங்கரனார்க் கேது குலம்

அப்படிப் பார்த்தால் வலைஞராக இருந்திருப்பார் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2007/11/6.html

ம்ம்ம்...என்ன சொல்றதுன்னு தெரியலை. விளையாட்டுதான். ஆனாலும் செஞ்சதச் சொல்லீருக்கீங்க.

சங்க இலக்கியத்துல ஒரு கட்டம். கார்காலம் வந்திருச்சு. வெளியூர் போன தலைவன் தேர்ல திரும்பி வர்ரான். தலைவி காத்திருக்காள்ள. வழியில சோலை. சோலைல பூக்கள். பூக்கள்ள வண்டு. வண்டுகளுக்குள் காதல். காதலுக்குள் கூட. வண்டி வேகமா வருது. சத்தத்துல வண்டுகளோட கூடுதல் தடைப்பட்டுறக் கூடாதுல்ல. படக்குன்னு தேர்ல கட்டியிருக்குற மணியப் பிடிச்சிர்ரான். சந்தம் நின்னு போகுது.

அந்த அளவிற்கு காதல்+காம உணர்வுக்கு இடம் கொடுத்திருந்தது தமிழ்ப்பண்பாடு. இன்னைக்கு நெலமை அப்படியா இருக்கு? இருவர் கூடிக் களிக்கும் பொழுது அதைக் கலைக்கிறது பெரிய பாவம்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/11/blog-post_15.html

வெட்டிக்கும் அவர்தம் துணைவியாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

பந்தியில் நடந்தது. அஞ்சாயிரம் பேருக்குச் சமைச்சேன். சங்கத்தாளுங்கன்னு ஏழெட்டு பேரு நொழைஞ்சாங்க....அஞ்சாயிரம் சாப்பாடு மூவாயிரமாயிருச்சு. அப்புறம் யாரோ கேயாரெஸ்சாம். அவரு நுழைஞ்சாரு. மூவாயிரமும் காலி. இவங்களையெல்லாம் ஏய்யா உள்ள விடுறீங்க? :))))))))))))))

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/11/blog-post.html

விஜய் படத்துக்குப் போவியா?
விஜய் படத்துக்குப் போவியா? சொல்லு...நூறு தோப்புக்கரணம் போடு..

அவர் தமிழ்ல நடிச்சாதான் படம் வெளங்காதுன்னு தெரியும்ல..தெரிஞ்சும் இனிமே போவியா? தெலுங்குல இருந்து காப்பி அடிச்சாதான் அவருக்கு நடிப்பையும் காப்பி அடிக்க வரும்னு தெரிஞ்சும் இனிமே போவியா? சொல்லு? போவியா?

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/10/blog-post_26.html

இந்த ஜிகிடி தண்டா..சாரி ஜிகிர் தண்டாவ ஒரு வாட்டிதான் சாப்புட்டிருக்கேன். ஆனா பிரமாதம். என்ன...ஜீனி நெறைய இருக்கும். அதுனால காலரிக்குப் பயந்துக்கிட்டு இதுகளையெல்லாம் சாப்புடுறதில்லை. மதுரைல கே.பி.என் பஸ்சுக்கு முன்னாடி இரு ஜூஸ் கடை இருக்கு. அதுல நெல்லிக்கா சூஸ் போடுறாங்க. சூப்பரப்பு.

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/09/blog-post_27.html

இப்பதாம்ல இதப் படிச்சேன். இவ்வளோ நாச்செண்டு படிச்சேம்னு கோவிச்சிக்கிறாத. வேலையத்தான் சொல்றேன். என்ன செய்ய.

இதப் படிச்சப்ப அப்படியே ஊருக்குப் போனாப்புல இருக்குதய்யா. மெத்தைன்னு எங்கூர்லதாஞ் சொல்வோம். அத நெனவு படுத்தீட்டியேய்யா. அதே போல பலப்பல எடங்க. நல்லா ரசிச்சேன். நல்லா ரசிச்சேன்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/11/blog-post_12.html

பெண்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. ஏன்னா நம்ம பண்பாட்டுல அவங்கள தெய்வமா வெச்சிப் பாராட்டுறோம்ல. அப்படி இருக்குறப்போ தெய்வத்துக்குப் பக்கவாத்தியம் வாசிக்கலாமா? அதுவும் தெய்வத்துக்குச் சரிசமமா உக்காந்து. அதத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டு நீங்கபாட்டுக்க...சாரி..கிருஷ்ணா பாட்டுக்க இப்பிடிச் சொல்லீட்டாரே.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/6.html

செந்தில் என்ற பெயருக்கு வெற்றியூர் என்று பெயர் இல்லை. செந்து+இல். செந்து என்பது ஆன்மா. ஆன்மாக்கள் ஒடுங்குவது இறைவனிடத்தில் என்பதால் உலக ஆன்மாக்களுக்கான இல்லம் என்ற பொருளில் உருவானது செந்தில் என்ற பெயர். சீர்கெழு செந்தில் என்கிறார் இளங்கோ.

திருச்சீரலைவாய் பின்னால் வந்த பெயர் என்று நினைக்கிறேன்.

// ஜெயந்திபுரம் என்று வடமொழி இலக்கியங்களும் சொல்கின்றன //
ஜெயந்திபுரம் என்று போற்றும் வடமொழி இலக்கியங்கள் எவை?

// சூரனைக் கொன்ற பின்னர் நடந்த சிவ பூஜையா இது? நான் சூர சங்காரம் செய்வதற்கு முன்னர் நடந்த சிவ பூஜை என்று தான் எண்ணியிருந்தேன். //

குமரன், கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தின்படி நீங்கள் எழுதியது சரிதான். செந்திலில் இறங்கியிருக்கும் போது ஓலம் ஓலம் என்று ஏலம் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் ஒரு கூட்டம். அப்பொழுது பூஜை செய்வதாக கச்சியப்பர் சொல்கிறார்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/11/blog-post.html

ஆகா...அருமையான பதிவு... பினாத்தலாரின் கோனார் நோட்ஸ் பயனுள்ளதுன்னாலும் தங்கமணிகளின் கைகளுக்குச் சென்று விட்டால் என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே திகிலாக இருப்பதாக ரங்கமணிகள் புலம்புவதன் எதிரொலியே இந்தப் பதிவு என்பதை ஒத்துக்கொள்வதில் யாருக்கும் எப்பொழுதும் எந்த வகையிலும் எந்த வித"மான" ஐயப்பாடும் இருக்கப் போவதில்லை என்று ஆணித்தரமாக நீங்கள் சொல்வதை நானும் பாராட்டுகிறேன். வாழ்க.

G.Ragavan said...

http://gopinath-walker.blogspot.com/2007/11/blog-post_17.html

நல்லா பதிவு போட்டிருக்கீங்க. மேடைல உக்காந்திருக்கோமா...பதிவு படிக்கிறோமான்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு. :)

பாலுவுக்குத் தேசிய விருது வாங்கிக் குடுத்த அந்த பாட்டு எது? அதச் சொல்லலையே?

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/11/250.html

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனை விளங்குவள்ளிக் காந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை வல்லியம்மாவின் பதிவில் பார்ப்பதும் பெருமகிழ்ச்சி.

தேவையான பொழுது கண்டிப்பாக வருவான். இது அனுபவத்தில் உணர்ந்தது.

நல்லதொரு அருமையான பாடல். பக்தியில்லாமால் இந்தப் பாடல் பாடப்பட்டிருந்தால் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/7.html

வள்ளி திருமணத்தைத் தொடாத புலவன் இல்லை. எல்லாரும் அதத் தொட்டு எழுதீருக்காங்க எப்படியாவது. ஏன்னா... அது முழுக்க முழுக்க காதல் ததும்பியது. ஆனால் மறைபொருளாக இறைபொருள் நிரம்பியது. ஆகையினாலதான் நரைபொருள் வரிசைல வள்ளி திருமணம் சேராம இன்னைக்கும் இருக்கு.

நல்லதொரு பதிவிட்ட ஜீவாவிற்கு நன்றி. அதுவுமில்லாம மெல்லிசை மன்னர் இசையில பாட்டு கேக்குறதுன்னா எனக்கு விருப்பம். அதுலயும் முருகன் பாட்டுன்னா... கேக்கனுமா? நன்றி. நன்றி.

G.Ragavan said...

http://ammanchi.blogspot.com/2007/11/blog-post_16.html

ஐயோ! என்னங்க இப்பிடி விமர்சனம் எழுதீட்டீங்க!!!! நானும் இந்தப் படத்தப் பாத்தேன். தொடக்கக் காட்சிகள் நல்லாருந்தாலும்.... போகப் போக ஒரே கழுத்தறுப்பு.

Singing in the rain படத்துல இருந்து எக்கச்சக்கமா சுட்டிருக்காங்க டைரடக்டரு அம்மணி. ஆனா ரொம்பவே கொழம்பீருக்காங்க. காமெடியாக் கொண்டு போறதா சீரியசா கொண்டு போறதான்னு நெறைய டவுட்டு இருந்திருக்குன்னு நெனைக்கிறேன். Spoofன்னு சிரிச்சிக்கிட்டேயிருக்கவும் முடியலை...சீரியஸ்னும் இருக்க முடியலை.

வில்லனா நடிச்சவரும் கதாநாயகியா நடிச்சவங்களும் கதாநாயகனுக்கு அம்மாவா நடிச்சவங்களும் நல்லா நடிச்சிருக்காங்க. என்னது ஷாருக்கானா...அவரு இருக்காரா படத்துல...ஆமா...ஒருத்தர் அடிக்கடி எரிச்சல் படுத்தீட்டே இருந்தாரு. அவர்தான.

G.Ragavan said...

http://kasiblogs.blogspot.com/2007/11/blog-post_14.html

உண்மையச் சொல்றேங்க காசி. எனக்கு ஒன்னுமே புரியலை. :(

ஆனாலும் நீங்க பதிவெழுத வந்ததுல சந்தோஷந்தான். தொடர்ந்து எழுதுங்க.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/6.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//திருச்சீரலைவாய் பின்னால் வந்த பெயர் என்று நினைக்கிறேன்//

பின்னாலா?
திருமுருகாற்றுப்படையில் திருச்சீரலைவாய் வரவில்லையா?//

இருக்கிறது. நாந்தான் தவறாகச் சொல்லிவிட்டேன். சரியாக எடுத்துக்கொடுத்தமைக்கு நன்றி. ஆனாலும் ஆற்றுப்படையை மீண்டும் தேடுகிறேன்.

////ஜெயந்திபுரம் என்று போற்றும் வடமொழி இலக்கியங்கள் எவை?//

ஸ்கந்த புராணம்.//

இத எழுதுனது யாருங்க? எப்ப எழுதுனாரு? திருமுருகாற்றுப்படைக்கு முன்னாடியா பின்னாடியா? அட தெரிஞ்சிக்கத்தான் கேக்குறேன்.

// தமிழில் திருச்செந்தூர் புராணத்தில் பாருங்கள் //

இதை எழுதுனது யாரு? எப்போ?

// அருணகிரி இந்தப் பேரைச் சொல்லி உள்ளாரா என்றும் தேடிச் சொல்ல முடியுமா? //

அருணகிரி சொல்லியிருக்காரான்னு தெரியலை. சொல்லியிருக்க வாய்ப்பிருக்கு. ஏன்னா அருணகிரி மிகவும் பிற்காலம். அதுவுமில்லாம என்னோட திருப்புகழ் திரட்டு பெங்களூர்ல இருக்குது.

////குமரன், கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தின்படி நீங்கள் எழுதியது சரிதான். செந்திலில் இறங்கியிருக்கும் போது ஓலம் ஓலம் என்று ஏலம் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் ஒரு கூட்டம். அப்பொழுது பூஜை செய்வதாக கச்சியப்பர் சொல்கிறார்//

ஹூம்!
அந்தக் கூட்டத்தின் பெயரை நீங்க சொல்ல மாட்டீங்களோ? :-)//

:) ஹா ஹா ஹா

// கச்சியப்பரின் கந்தபுராணத்துப் படியும், (திருச்செந்திப் படலம்-உற்பத்திக் காண்டம்)
மயன் கோவிலையும் ஆசனத்தையும் போருக்கு முன்னரே எழுப்புகிறான். அதில் அமர்ந்து சூரனின் கதையைக் கேட்கிறான் முருகன்.

ஈசனைத் தவக்கோலத்தில் வழிபட்டது எங்கு வருகிறது ஜிரா? //

திருச்சேய்ஞலூரா? அப்படித்தான் நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://paris-johan.blogspot.com/2007/11/blog-post_15.html

சூர்மா தடித்த சுடரனைய வெள்வேலே என்று போற்றுகிறாரே இளங்கோ. சூர்னா துன்பம். மான்னா பெரிய. பெரிய துன்பம்...அந்தத் துன்பத்தைத் தடித்தவன். அதாவது போக்கியவன். அதான் முருகன்.

அருமையான பாடலை நினைவுபடுத்தியமைக்கு நன்றி ஐயா.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/11/36.html

நம்ம காத்துன்னு நெனச்சா காத்து
கடல்னு நெனச்சா கடல்...
ஆண்ணு நெனச்சாத்தானே ஆண்
பெண்ணுன்னு நெனச்சாத்தானே பெண்
ஆகா நினைப்பு ஆட்டி வைக்குது எல்லாத்தையும்... அப்படித் தன்னைக் காத்துன்னு கந்தன் நம்புனா...நம்புன நொடியே அவன் காத்துதான்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/11/blog-post_17.html

அருமையான பாட்டுங்க. படமும் நல்ல படம். இதுல ரெண்டு பேர் கொரலையும் கேளுங்களேன். சருகு மாதிரி பாடுவாங்க. பாட்டோட மூடுக்குத் தேவையான மாதிரி. நல்ல பாட்ட நினைவு படுத்தியதுக்கு நன்றி.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/11/556.html

சூப்பர் கூட்டணிப் பாட்டு. இந்தப் படத்துல எல்லாப் பாட்டுமே நல்லாருக்கும்.

இந்தப் பாட்டு முழுக்க துள்ளலும் ஏக்கமும் நெறம்பீருக்கும். நல்ல பாடு. ரொம்ப நல்ல பாட்டு.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/11/555.html

நாலு பேருக்கு நன்றி... மறக்காத படங்களில் ஒன்று. மோகன்..பூர்ணிமா ஜெயராமன் நடித்தது. மெல்லிசை மன்னர் இசை. இதில் மோகன் ஒரு விளையாட்டுப் பிள்ளை. சும்மா அவராக கற்பனையாக கல்யாணப் பத்திரிக்கை அடித்து ஊருக்கெல்லாம் குடுத்து விடுகிறார். ஆனால் அதில் போட்டிருந்த படியே ஒரு பெண் இருப்பது அவருக்குத் தெரியாது. விளைவு..அந்தப் பெண்ணின் திருமணம் தடைபடுகிறது. ஏற்கனவே திருமணம் ஆனவள் என்று. அந்தப் பெண் அவனையே திருமணம் செய்து எப்படிப் பழி வாங்குகிறாள் என்பதே கதை. விசு படம்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/11/blog-post_09.html

ரீமிக்சைக் கேட்டுவிட்டு மெல்லிசை மன்னர் கோவப்பட்டாராம். :(

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/11/553.html

கொஞ்சம் கஷ்டமான சங்கதிகள். படபடன்னு பாடனும். ஆனா வரிகளும் சிதையாம இருக்கனும். மெட்டும் கெடக்கூடாது. சரி... இவங்க ரெண்டு பேரையும் கூப்புடாம எப்படி இதெல்லாம் செய்றது! :) நல்ல பாட்டுங்க.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2007/11/65.html

நல்ல பாடல். நல்ல விளக்கம்.

வாரியார் சொல்வார். "புழுவைத் தேய்த்த வீரனே...எறும்மை ஏய்த்த எத்தகனே" இப்பிடிப் பாராட்டுனா வெக்கம் வந்து வந்தவன் ஓடிப் போயிருவான். அப்படித்தான் நாம சாமிய "மன்மதனை எரித்தவனே" முப்புரம் தீய்த்தவனேன்னு சொல்றதெல்லாம். அவரு எல்லாத்துக்கும் மேல...அப்படீன்னு சொல்லீருக்காரு. இருந்தாலும் நாம சொல்லாம விடுறதில்லை. இது உங்க பதிவைக் கிண்டல் செய்தில்லை. தோணிச்சுன்னு சொன்னேன். அவ்ளோதான். நானும் இதெல்லாம் எழுதுறவந்தானே. :)

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/11/6.html

// // சூரனைக் கொன்ற பின்னர் நடந்த சிவ பூஜையா இது? நான் சூர சங்காரம் செய்வதற்கு முன்னர் நடந்த சிவ பூஜை என்று தான் எண்ணியிருந்தேன். //

குமரன், கச்சியப்பர் எழுதிய கந்தபுராணத்தின்படி நீங்கள் எழுதியது சரிதான். செந்திலில் இறங்கியிருக்கும் போது ஓலம் ஓலம் என்று ஏலம் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் ஒரு கூட்டம். அப்பொழுது பூஜை செய்வதாக கச்சியப்பர் சொல்கிறார்.//

இப்படித்தான் படித்த நினைவு. அந்த நினைவை உறுதியாக எழுதியது தவறே. அதற்காக மன்னிக்கவும். சரியாகத் தெரியாத ஒன்றைத் தெளிவாகத் தெரிந்ததாக எழுதியது தவறே.

எமக்குப்
போமோ வருமோ
அதுதான் வேலன் தருமோ எனின் உவப்பே
எந்தை தருவது
கந்தையானாலும்
சந்தையானாலும்
சிந்தையாலும் கொள்வோம்

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/11/36.html

// VSK said...
"நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்"

இதுதானே வேதம் சொல்லுவதும்!

இல்லையா ஜி.ரா.!
yadh bhaavam thadh bhavathi! //

ஆகா... அதெனக்குத் தெரியாதுங்களே. ஏதோ தோணிச்சு சொல்லீட்டேன். :) தப்புருந்தா மன்னிச்சிருங்க :)

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/11/blog-post_4989.html

இவங்களயெல்லாம் பாத்தாலே ஓடிப் போயிரனும். இல்லைன்னா நம்மளை ஓட வெச்சிருவாங்க. இதெல்லாம் நம்பாதீங்க. நம்பாதீங்க. நம்பாதீங்க.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2007/11/blog-post_18.html

வாலிட்டெழுதிய நீலக்கடக்கண்ணில் மீனோ...கவித்துவமான துவக்கம். அட..கவிதையே பாடல் போல அழகு. ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்த பாட்டு. எடுத்துக்குடுத்துட்டீங்க :)

அதுவுமில்லாம... பதிவும் போட்டுட்டீங்க. பிரமாதம் போங்க.

தேர் கொண்டு சென்றவன் பாட்டு லிங்கையும் கொடுக்கலாமே. கேட்டு ரசிக்க நல்லாயிருக்குமே.

G.Ragavan said...

http://varappu.blogspot.com/2007/11/grand-canyon.html

இதான் கிராண்டு கேன்யனா....நல்லாருக்கு படங்க. மொதப் படத்தப் பாத்தா பரிசு ஒங்களுக்குத்தான்னு தெரியுது.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/11/blog-post_17.html

இப்ப என்ன சொல்ல வர்ரீங்க? இந்தத் திருத்தங்களைத் தவிர...பரிமேலழகரோட மத்ததப் படிக்கலாமா?

பரிமேலழகர் எந்த ஊரு? எந்தக் காலம்? அந்த விவரங்களையும் குடுங்களேன்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/11/80-1.html

ஆகா...எம்பதுகளின் அபூர்வ பாடல்களா...காத்திருக்கோம் அடுத்த பகுதிக்கு.

அம்மா பிள்ளை பாட்டக் கேட்டதும் தோணுதே..அது சங்கர் கணேஷ்தான்னு. நல்ல பாட்டுங்க.

நீங்க சொன்ன மாதிரி...உன்னிடம் மயங்குகிறேன் பாட்டை அப்படியே போட்டிருக்காரு குமார். ஏசுதாஸ் அதைச் சுட்டிக் காட்டலையா! ஆச்சரியந்தான்.

தில்தீவானா...ஆகா..எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு. ரொம்ப ரொம்ப.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2007/10/blog-post_22.html

அனானி சொன்னதப் படிச்சி விழுந்து விழுந்து சிரிச்சேன். உண்மைதான் ஏசுதாஸ் உச்சரிப்பு மொதல்ல மோசமாத்தான் இருந்துச்சு. தெருக்கோயிலே ஓடிவா ரொம்பப் பிரபலமாச்சே. தண்ணீரில் மூல்காது காற்றுல்ல பந்து. ஆனா அப்புறம் நல்லா உச்சரிச்சாரு.

G.Ragavan said...

http://araiblade.blogspot.com/2007/11/blog-post_18.html

ரசிச்சேன். ரசிச்சேன். :)

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/11/1.html

வலையில் சிக்கிய இதயம்....இதயமா? இதயங்களா? ரெண்டு இதயம் தேவைப்படும்போல இருக்கே. ஒரு இதயந்தான்னா...அது யாரோடது? நாயகனா? நாயகியா?

ஒங்க படம் போட்டிருக்கீங்க. புரியுது. நீங்கதான் நாயகருன்னு. நாயகியோட படம்? நமீதா படந்தானே போடப் போறீங்க?

// ஜி
//ithanaalathaan enakku JiRa vaiye pidikaathu... sorry JiRa kathaigala :)))////

ஜி, இருக்கக் கொள்ளப்பட்டவங்க சடசடன்னு எழுதுறாங்க. நமக்கு அப்பப்பப்பத்தானப்பா முடியுது!

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/11/blog-post.html

ஆகா....அந்தக் கதாநாயகி பேர் தெரிஞ்சிக்கிறதுக்கு இவ்வளவு பெரிய பதிவா? கூச்சப்படாம யார்னு கேட்டுருக்கலாம்ல. இப்பிடி ஒரு பில்டப்பு!

சரி. நல்ல பாட்டு குடுத்திருக்கீங்க. நன்றி.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/11/blog-post_18.html

:)))))))))))))))))))

என்ன ஜி இது....டிராக் மாறுது!!!

எதுவும் ;) விசேசமா?

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/11/blog-post_19.html

குழந்தைகளுக்கானது உலகம். நம்ம அத நல்லாவே கெடுத்து வெச்சிருக்கோம்.

என்னது? எப்ப பேதம் வருதா? வயசு வரும் போதுதான். அப்பத்தான பேதம் அப்படீங்குற வேதம் வருது.

நாங்க மதுரைல இருந்தப்ப வீட்டு வேலை ஒன்னு செய்ய மாட்டேன். இப்ப மட்டும் என்னவாம். அப்ப பக்க்கத்து வீட்டுக்கு வெளையாடப் போயிருந்தப்போ அந்த ஆண்ட்டி...ராகவன்...பொண்ணு பேரு மறந்து போச்சு. டி.ஆர்.ஓ காலனீல இருந்தோம். கூடப் போயி மாவரைச்சுட்டு வர்ரியான்னு கேட்டாங்க. சரீன்னு போய்ட்டு வந்தேன். வீட்டுக்குத் தெரியாம ஒழிஞ்சி ஒழிஞ்சி. ஆனா தெரிஞ்சிருச்சு. :))))))

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2007/11/blog-post_17.html

என்னோட மனக்குமுறல்களை அப்படியே நீங்கள் பதிவாக இட்டிருக்கின்றீர்கள். தூத்துக்குடியில் பிறந்தவன் என்ற வகையில் செந்தூர் எனக்கும் பிடித்த ஊர். ஆனால் திருச்செந்தூர் கோயில் வியாபார நிலையமாகி விட்டது. எனக்கும் அதே வருத்தத்தில்தான் இங்கே இப்படியொரு பதிவு போட்டேன். திருக்கோயில்கள் திருந்த வேண்டுமென்று

திருச்செந்தூரை வைத்து எழுதிய சிறுகதை இங்கே

// படித்தேன் ரசித்தேன் ரத்னேஷ்!
செந்தூர் முருகனைச் செந்தூரிலும் காணலாம்!
உள்ளத்து உந்தூரிலும் காணலாம்!
பின்னது இன்னும் சிறப்பு! //
ஆமாங்க ரவி, அதுனாலதான் கோயிலுக்குப் போகாதீங்கடா....உள்ளத்துலயே கும்புடுங்க. கோயில்களைப் புறக்கணிங்கன்னு சொல்றேன். எவன் கேக்குறான். 2007லாவது மாறவேண்டும் கோயில்கள் பதிவுல சொன்னதுதானே.

// புராதனப் பெருமை வாய்ந்த இடங்களில் தான் சிறுமைகள்! இது அன்றும் இருந்திருக்கு! ஆனால் திருவரங்கத்தில் இராமானுசர் இதை எப்படிக் கையாண்டார், அரசனிடம் சொல்லி எப்படிச் சாதித்தார் என்பதை பின்னர் ஒரு பதிவா போடுறேன்.//
போடுங்க போடுங்க. அரங்கத்துல என்னாச்சுன்னு இங்க பதிவு போட்டிருக்கேன்.

மொத்தத்துல பெரும்பாலும் கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாத்தான் இருக்கு. கோயில்களைக் காப்பாத்துறதுக்காவே கோயில்களைப் புறக்கணிக்க வேண்டும்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/11/38.html

காற்று வந்தால் தலை சாயும் நாணல்
கந்தன் தலை சாய்ந்தான் காற்று வந்தது
கடவுள் விளையாட்டா ம்ம்ம்ம்ம்ம்ம்

G.Ragavan said...

http://balamuruganvazha.blogspot.com/2007/11/blog-post_20.html

எடியூரப்பா ஆட்சி கவுந்தது சரி. ஆனா கவுடா நல்லெண்ணத்துல அதச் செய்யலை. புரிந்துணர்வு ஒப்பந்தமெல்லாம் கண் துடைப்பு. மகன் முதல்வராகும் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் எங்க போச்சு? அந்தாளு குடும்பப் பிரச்சனை. அதுவுமில்லாம எடியூரப்பாவ பதிவீல விட்டு வெச்சா எங்க எதாவது நல்லது செஞ்சிருவாரோன்னு பயம் வேற. என்ன நல்லது செய்வாரோ தெரியாது. ஆனா கவுடாக்கு அந்த பயமும் இருந்தது தெரிகிறது. அரசியலில் பாஜக கழிசடை என்றால் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேவகவுடாவும் கழிசடைகள்தான்.

G.Ragavan said...

http://sithiram-pesuthadi.blogspot.com/2007/11/pencil-sketch.html

அருமை. படம் மிக அருமை. மிகமிக அருமை.

G.Ragavan said...

http://manasukulmaththaapu.blogspot.com/2007/11/2.html

ஓ கதை முடிச்சிட்டீங்களா? பெருசா வளரும்னு நெனச்சேன். நல்லாருக்கு. கடைசீல கதாநாயகன் நாயகியச் சேத்து வெச்சுட்டீங்க. :)

G.Ragavan said...

http://coralpraba.blogspot.com/2007/02/543210.html

என்னங்க இது...சொந்தமா ஏதாச்சும் எழுதக் கூடாதா? அடுத்தவன் கொழந்தைக்குச் சொந்தம் கொண்டாடுறீங்களே...என்னாச்சு?

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2006/09/9.html

நல்லாருக்கு. உண்மையிலேயே நல்லாருக்கு. செருப்பால அவன் அடி வாங்கீருக்கலம். இந்தக் கதைய முந்தி படிச்சிருக்கேன். பின்னூட்டம் போடாம விட்டிருக்கேன். அந்தக் குறைய இன்னைக்குத் தீத்தாச்சு. :)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/11/2.html

நல்ல விளக்கங்கள். மிகவும் ரசித்தேன்.

G.Ragavan said...

http://asifmeeran.blogspot.com/2007/11/blog-post_21.html

இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்ற வகையில் மட்டுமே பார்க்கிறேன். நன்றாக இசையமைக்கக்கூடியவர். அவ்வளவுதான். அதற்கு மேல் சாதாரண மனிதர்தான்.

இளையராஜா இல்லையென்றால் இத்தனை பாட்டு பாடியிருக்க மாட்டேன் என்று பாலு சொல்வது ஜோக். இளையராஜாவுக்கு முன்னாடியே பெரியவர்கள் அவரை வளர்த்து விட்டார்கள். இப்படி பாலு பேசுவது அவர்களை அவமதிப்பது போலாகும். நன்றியை விட நட்பு பெரிதாகப் போய்விட்டது.

G.Ragavan said...

http://bloggingintamil.blogspot.com/2007/11/blog-post_16.html

ஆகா...நல்ல திட்டமா இரூக்கே. இதுனால கதைக்களஞ்சியம் கவிதைக்களஞ்சியம்னு உருவாகும். இதுக்கு என்னுடைய ஆதரவு உண்டு.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/11/blog-post_21.html

இத்தனைலயும் எனக்குப் பிடிச்சது எது தெரியுமா?

சிறகுகளற்ற இலைகளாய் உதிர்கிறாய்
கைகளற்ற கிளைகளாய் பதறுகிறேன் நான்
பெருங்காற்றென வீசுகிறது காலம்...

இனி நான் தொடர்கிறேன்

மீண்டும் துளிர்ப்பேன் நான்
குளிருக்குப் பிறகு வசந்தம் :)

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/11/40.html

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாதடி ஞானத்தங்கமே

இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வருது.

G.Ragavan said...

http://abiappa.blogspot.com/2007/11/blog-post_22.html

சரி... இதொரு தப்புதான. அவனவன் தப்புகளை மட்டுமே வெச்சுப் படமெடுக்கிறான். இந்த மாதிரி ஒன்னு ரெண்டு விடுறது அதுகள விட மேலு.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2007/11/blog-post_2718.html

ஆகா... இந்தக் கிறுக்கு எனக்கும் இருக்கு :) எங்கம்மா குடுத்த கிறுக்குத்தனம். :) பைண்டிங் செஞ்சு நெறைய இருந்துச்சு. மதுரைல சில கடைகள்ள கிடைச்சதுன்னு பழைய பைண்டிங் புத்தகங்களையே வாங்குனேன்.

சென்னைல டி.நகர் உஸ்மான் ரோட்டுல காந்தியடிகள் வறுகடலை நிலையம் பகக்த்துல ஒரு லைப்ரரி...அதுல மாடி முழுக்கவே இந்த மாதிரி புத்தகங்கள்தான். நாலஞ்சு வாட்டி போய் ஒரு அள்ளு அள்ளுனேன். அப்புறம் ஒரு நண்பரக் கூட்டீட்டுப் போனேன். அவரு ஒரு அள்ளு அள்ளுனாரு. மிச்சம்மீதீன்னு நெறைய இருக்கும். மக்கள் போய் அள்ளிக்கோங்க.

G.Ragavan said...

http://kavithaikealungal.blogspot.com/2007/11/kanaa-kaanum-kaalangal-2.html

என்னது... காலத்தேர்ல ஏறி முன்னாடி போய் எட்டிப் பாக்குறீங்களா? :)

சரி படிச்சவன் என்ன செஞ்சான்னு அடுத்த பதிவுல தெரிஞ்சிக்குவோம். :)

G.Ragavan said...

http://thasanonline.blogspot.com/2007/11/blog-post_20.html

முருகன் எனும் திருநாமம்
முழங்குமிடம் கதிர்காமம்
குருபரணே சரணம் உந்தன் சேவடி
தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி...

என்ன அருமையான பாடல்காட்சி. கதிர்காமத்தையும் நடிகர்திலகத்தையும் வைத்து எடுக்கப்பட்ட காட்சி. கதிர்காமம் செல்ல வேண்டும் என்று நீண்ட நாள் ஆவல். ம்ம்ம்... எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் வரை அங்கே முருகன் முருகனாகவே இருக்கிறானா என்று பார்க்கலாம். :(

G.Ragavan said...

http://blogintamil.blogspot.com/2007/11/blog-post_23.html

கூட்டாஞ்சோறு நல்லாவே வெந்திருக்கு. இருங்க தட்ட எடுத்துட்டு வாரேன். ஒன்னொன்னா பாத்துருவோம். :)

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/11/41.html

ஓ பொருட்புதையலா! நான் வேறொன்னு எதிர் நோக்கினேன். ம்ம்ம்ம்ம்.. எப்படியோ புதையலை எடுத்துட்டான் கந்தன். பொன்னியும் வருகிறாள். வாழ்வு பெருகட்டும். பொன்னி வந்தாலே செழிப்புதானே.

G.Ragavan said...

http://thaalaattumpoongaatru.blogspot.com/2007/11/blog-post_22.html

ஸ்ரீசரண், ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்தப் பாட்டை யுடியூப்புல பாத்துக் கேட்டு ரசிச்சேன். இந்தாங்க லிங்கு.
நல்ல பாட்டை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

http://www.youtube.com/watch?v=Is_D8uxygjo

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/11/blog-post_23.html

மலர்களே மலர்களே இது என்ன கனவா

அருமையா இருக்குங்க. எத்தன பூக்கள்.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2007/11/7.html


போன வாட்டி சோகம்னு சொன்னீங்க. சரீன்னு இந்த வாட்டி சந்தோசமா முடிச்சிட்டீங்க. அதுனால பொழைச்சீங்க :)

G.Ragavan said...

http://keethukottai.blogspot.com/2007/11/blog-post_23.html

ஹி ஹி விஜய் காப்பியடிச்சாத்தான் மக்கள் படத்த பாக்கவே முடியுங்குற நிலமை.

இன்ஸ்பிரேஷன் எல்லாம் சரிதான். ஆனா இங்க வெறும் இன்ஸ்பிரேஷன் மட்டுந்தான இருக்கு. சொந்தச் சரங்கு இல்லையே. அவரும் என்னதான் செய்வாரு.

அது சரி. டாக்டர்னு சொன்னவங்களுக்கும் வெக்கமில்லை. அத வாங்கிக்கிட்டவங்களுக்கும் வெக்கமில்லை. ஹா ஹா....ஆனா காப்பிய விட ஒரிஜினல் எல்லாமே நல்லாருக்கு. வடிவேலு படம் மொதக்கொண்டு.

G.Ragavan said...

http://kummionly.blogspot.com/2007/11/blog-post_20.html

ஹி ஹி பாத்துட்டீங்களா.. ஹி ஹி... ஐயோ பாவம். ஆண்டவர் உங்களைக் காப்பாத்தட்டும்.

G.Ragavan said...

http://freethan.blogspot.com/2007/11/susheela-raman-not-star-yet.html

itz a nice intro to susheela raman. y dont u register ur blog in blogkut.com?

recently introduced to her songs and liked them. y dont u give links to her songs in youtube?

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/11/1.html

கந்தனையும் கேசவனையும் நட்பாக்கி அண்ணாமலைக்கு அழைத்துச் செல்லும் வகையில் குமரன் ஒரு தொடர்கதையைத் தொடங்கியிருக்கிறார் என்றால்.....அதில் ஏதோ இருக்கிறது. அடுத்தடுத்த பகுதிகளைப் படிப்போம்.

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/11/blog-post_25.html

மொழி படத்துல எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாங்க. ஆனா ஜோதிகாவும் பாஸ்கரும் சூப்பர். இவங்க ரெண்டு பேரும் இல்லாம படத்த நெனச்சே பாக்க முடியாது.

நேத்துதான் நீ சொன்னியேன்னு அழகிய தீயேங்குற படத்தப் பாத்தேன். இந்தப் படத்த இத்தன நாள் எப்படி பாக்காம விட்டேன். அப்படியொரு படம். அதுல அவரு அண்ணாச்சீன்னு நடிச்சிருக்காரு. அப்படியே எங்கூர்க்காரரு மாதிரி. நல்லா நடிக்கிறாருப்பா இவரு. நல்ல நடிகர்கள்ள ஒருவர்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/11/25-2.html

// சின்ன அம்மிணி said...
சுசீலா பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். வார்த்தைகளில் உருக்கத்தைக்கொட்டி பாடியிருப்பார். //

ஆமாங்க. கேக்குறப்பவே நமக்கு ஒரு மாதிரி இருக்கும். ரொம்பவே நல்ல பாட்டு.


// துளசி கோபால் said...
அருமையான பாட்டு.கேட்டே ரொம்ப நாளாச்சு.

நம்ம நண்பர் ஒருத்தர் பழைய ஈரோயின்களைப் பத்தி (இந்திப்படம்)

'கோல்ட்டீஸ்...ஓல்டீஸ்' எழுதப்போறதாச் சொல்லிக்கிட்டு இருந்தார்.

அங்கெல்லாம் சட்னு போறதில்லை,இங்கில்லிபீஸ் பதிவுப்பா(-: //

ஓ இங்கிலிபீசா...அதுலயும் இந்தி ஆண்டீஸ் பத்தியா. விடுங்க ஜூட் :)

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2007/11/blog-post_7073.html

தம்பி, படத்தோட பேரு மாலையிட்ட மங்கை. கவியரசர்தான் தயாரிப்பாளர். இந்தப் படத்துல ஏதோ இரு இந்தி டியூனைப் பயன்படுத்தச் சொல்லி விஸ்வநாதனை வற்புறுத்துனாங்களாம். அவரும் வந்த புதுசு. வெறுப்போட வேற வழியில்லாம போட்டாரம். ஆனா அந்தப் பாட்டை விட அவரு சொந்தமாப் போட்ட பாட்டெல்லாம் ஹிட்டாயிருச்சாம். அதுக்கப்புறம் யாரும் அவரை reuse பண்ணச் சொல்லிக் கேக்கலை. அவரும் செய்யலை. யாதோங்கீ பாராத்னு ஒரு இந்திப்படத்த தமிழ்ல எடுத்தாங்க. எம்.ஜி.ஆரை வெச்சு. அந்தப் படத்துல இந்திப் பாட்டுகள்ளாம் ஹிட்டு. தெலுங்குல எடுத்தவங்க இந்தி டியூன்களையே பயன்படுத்திக்கிட்டாங்க. தமிழ்ல இவர் கிட்ட எம்.ஜி.ஆர் இசையமைக்கச் சொன்னப்போ முடியாதுன்னு சொல்லீட்டாராம். இந்தி டியூனை பயன்படுத்தச் சொல்வாங்கன்னு. ஆனா எம்.ஜி.ஆர் சொந்த டியூனையே போட ஒப்புக்கிட்ட பெறகுதான் இசையமைக்கச் சம்மதிச்சாராம். இன்ஸ்பிரேஷனை ஏத்துக்கிடும் விஸ்வநாதன் காப்பியடிக்கிறதை ஏத்துக்கிறதில்லை.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/11/blog-post_4824.html

என்ன பரிசு வேண்டும் என்று கேட்டுக் குடுப்பதில் தவறில்லை. குறிப்பாக நெருங்கிய நண்பர்களுக்குள் இது நடைமுறைப்படும். எல்லாரிடமும் என்ன வேண்டும் என்று கேட்க முடியாது. அந்தச் சூழலில் gift vouchers எனப்படும் பரிசோலைகள் சிறந்தவை. முன்பெல்லாம் எனக்கு வரும் vouchers புத்தகக் கடையுடையதாகவே இருக்கும். இங்கு ஆம்ஸ்டர்டாம் வந்த பிறகு இங்குள்ளவர்கள் என்னுடைய பிறந்தநாளுக்குக் கொடுத்த பரிசும் ஒரு புத்தகம். உள்ளூரில் இருக்கும் இடங்களைப் பற்றி வண்ண வண்ணப் படங்கள் கொண்ட...புத்தகம். :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/11/blog-post_23.html

அருமை. சௌராஷ்ட்டிர மொழி தமிழகத்தில் பேசப்பட்டாலும் தமிழ் மொழியின் பாதுகாப்பில் உள்ளது என்பது மிகப் பொருத்தம். என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

G.Ragavan said...

http://maricair.blogspot.com/2007/11/blog-post_24.html


பிஜேபி சங்பரிவார் என்ன சொல்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லை.

ஆனால் தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுக்கலாமா என்றால் கொடுக்கலாம் என்றே சொல்வேன்.

சட்டர்ஜிக்கு பாரத் ரத்னா பொருந்துமென்றால் அது தஸ்லீமாவுக்கும் பொருந்தும். பிஜேபிக்காரர்கள் கொடுக்கச் சொல்கின்ற காரணத்தினாலேயே தஸ்லீமாவுக்கு அடைக்கலம் கொடுப்பது தவறாகிவிடாது.

பிஜேபியின் தவறைச் சுட்டிக்காட்டுவது வேறு..தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுப்பது வேறு. இரண்டிற்கும் என்னுடைய ஆதரவு உண்டு.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2007/11/353.html

படத்தோட போஸ்டரப் பாத்தாலே கொல நடுங்குது..படத்தையெல்லாம் பாக்க முடியாது சாமி. இதுல என்னவோ சா-ன்னு ஒரு படமாம். அதுவும் இதே மாதிரிதானாம். வேண்டாம்யா இந்தப் படம்.

இங்க ஆம்ஸ்டர்டாம்ல இந்தப் படம் தேட்டர்ல ஓடுது. நாம் போகலை. நமக்குன்னு நல்ல படங்க வருது. ஹார்ட் புரோக்கன் கிட்டு, ஸ்டார் டஸ்ட்டு, ஹேர் ஸ்பிரேன்னு...அது போதும்.

G.Ragavan said...

http://inbame.blogspot.com/2007/11/1.html

குமரன் ஒவ்வொரு குறளையும் ரசித்து ருசித்துப் படித்தேன். அனுபவித்து எழுதியிருக்கிறார் வள்ளுவர்.

அதெப்படி உரையாசிரியர்கள் வேறுபடுவார்கள்? இது என்ன கடவுளா? காதலய்யா காதல்...அதான் அனைவரும் ஒன்றையே சொல்லியிருக்கிறார்கள். :)))))))

முறிமேனி என்பதற்கு மாந்தளிர் போல என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. முறுவலான மேனி என்று சொல்லலாமா? பாத்தா அப்படியே சரவணபவன் தோசை மாதிரி மினுமினுன்னு இருப்பாய்யான்னு சொல்ற மாதிரி. ஆப்பிள் பழம் மாதிரி...அல்வாத்துண்டு மாதிரீன்னு பொலம்புற மாதிரி போல.

முத்தம் முறுவல் நான் மிகவும் ரசித்த உவமை. முத்தைத் தரு பத்தித் திருநகையை வள்ளுவரும் ரசிச்சிருக்காரூய்யா.

பித்தத்தைக் கொடுக்கும்
முத்தத்தைக் கொடுத்தாள்
மொத்தத்தையும் கொடுத்தேன் அப்படீன்னு எழுத வைக்கிறது இந்தக் குறள்கவிதைகள்.

G.Ragavan said...

http://inbame.blogspot.com/2007/11/1.html

// கோவி.கண்ணன் said...
//இந்தக் காம்புகளின் சுமையால் இவள் இடை இனி ஒடிந்து விடும். //

குமரன்,
:))
சிரிக்க முடியவில்லை. அப்படி கொடி இடையுடன் இருந்தால் அதன் பிறகு குழந்தையை வயிற்றிலும், பின் இடுப்பில் (இடையில்) சுமப்பது எப்படி ?

மிஸ்டர் திருவள்ளுவர் இட் ஈஸ் டூ மச் !
:)) //

கோவி...நீங்க சரியாப் புரிஞ்சிக்கலை. ஹி ஹி..இடை சாதாரணமாத்தான் இருக்கு. அதாகப்பட்டது அதாகப்பட்டதுகள் பெருசா இருக்கு. அத எப்படித் தாங்குது இதுன்னு இவருக்கு டவுட்டு. நீங்க அப்படியே அப்பாவியா பொருள் எடுத்துக்கிட்டீங்க போல.

G.Ragavan said...

http://manasukulmaththaapu.blogspot.com/2006/11/blog-post_13.html

பதிவுல மேல படம் போட்டிருக்கீங்களே....அத மட்டும் பார்சல் ப்ளீஸ் :)

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/11/to.html


இந்தச் சீவியாரு என்னவோ போட்டோ போட்டோன்னு போட்டாலும் போட்டான்..... இளவஞ்சியும் நல்லொளியோவியராயிட்டாரு. முந்தியா கண்டமானிக்கப் படம் பிடிப்பீங்க. இப்ப அதுல அப்படியிப்பிடி நகாசெல்லாம் செஞ்சு மினுக்க வெச்சுட்டீங்களேய்யா...


அந்த வரிசைக்குதிரைல முந்துன ஒரு குதிரை சூப்பரோ சூப்பர். அதே மாதிரி குழந்தைய வெச்சிக்கிட்டு.... அதுவும் சூப்பர்.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/11/2.html

ம்ம்ம்ம்ம்

இப்பிடித்தான் காதல் வருமா? சைவக் காதல் போல. நல்லாருங்கட்டும் நல்லாருக்கட்டும்.

அதென்ன...படிப்படியா டெவலப் ஆகுது காதல். முந்தியெல்லாம் போட்டோ டெவலப் பண்ணுற மாதிரி. அந்தப் போட்டோ ஆல்பத்துக்குப் போறாப்புல இந்தப் பயக ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிக்கிட்டு அந்தப் போட்டோவும் ஆல்பத்துக்குப் போகனும். அப்படித்தான் கதையை முடிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கிறேன்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/11/blog-post_26.html

அட அது பக்கத்து வீட்டு மரமா... சூப்பர்.

எனக்கும் ஓலப்பந்தல் ரோம்பப் பிடிக்கும். சின்ன வயசுல தூத்துக்குடி வீட்டுல எப்பவும் இருக்கும். கயித்துக் கட்டிலா...அதுல படுத்தா மேலு அழுத்துமே!!!!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/11/2.html

அந்தத் தாத்தாவுக்கு எதுக்கு ஐநூறு? இப்பிடி பெருமைக்குப் பிண்டியிடிச்சுத்தான் நாடே இப்பிடியிருக்கு.

சரி. கந்தன் திருந்துறானான்னு பாப்போம்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/11/2.html

அது பள்ளிக்கூடத்துல ஒரு வாத்தியாரு சொன்னாரு. பேரு பெத்த பேருன்னு நம்ம சொல்றோம்ல....அந்த மாதிரி இதுவும். தெலுங்குல பிண்டின்னா மாவு. மாவ எதுக்கு இடிக்கனும்? ஒரு வேளை தானியங்களை இடிச்சி மாவாக்குறதச் சொல்லீருப்பாங்களோ? இல்ல கோயில்களுக்கு மாவெளக்கு இடிப்பாங்களே...அதாயிருக்குமோ. கன்னடத்துலயும் ஹெம்மெகே ஹிண்டின்னு சொல்வாங்களான்னு தெரியலையே.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/11/217-wiimiiwe-me.html

விக்கிரமாதித்தன் கதைல வரும்...செய்யத்தெரியாம செஞ்சி மாட்டிக்கிட்டான்னு....வந்தவன்...வந்தத விட்டுட்டு வெளையாண்டிருக்கானே...இவனை என்ன்னன்னு சொல்ல!!!! தீர்ப்பு மனைவிக்குத்தான் சாதகம். ரெண்டு பேரு ரெண்டு விளையாட்டு விளையாடிருக்காங்க. அவ்வளவுதான நிரூபிக்க முடியும். மித்ததெல்லாம்? ;)

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/11/5.html

ஆகா...ராகவனா....நடக்கட்டுமய்யா...நடக்கட்டும்...சுரேஷ் ராகவனா...ஓ...அப்பச் சரி.

நல்லா விறுவிறுன்னு நம்மூர் நடையில எழுதிருக்க. நல்லாருக்கு படிக்க...

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/11/blog-post_27.html

தந்துவிட்டேன் என்னை? ஆனா மசாலா இயக்குனர்னு சொல்லீருக்கீங்க. ஸ்ரீதர் கண்டிப்பா மசாலா இயக்குனர் கிடையாது. சூர்யா, விஜய், சிம்பு, தும்புன்னு எல்லாரையும் கலந்தாலும்...விக்ரம்தான் நினைவுக்கு வர்ராரு. ம்ம்ம் பாட்டு தெரியலை. இந்தப் படத்துல முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மான்னு ஒரு பாட்டு. அது ரொம்ப நல்லாருக்கும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/11/80-2.html

கே.வி.மகாதேவன் பாட்டு மட்டும் கேள்விப்பட்டதில்லை. மத்ததெல்லாம் கேட்டிருக்கேன். எல்லாமே நல்ல பாட்டுங்க.

சந்திரபோஸ் இசையமைச்ச பொய்யின்றி மெய்யோடு...சொன்னால் இனிக்கு போன்ற பாடல்கள் கிடைத்தாலும் போடவும். தேடிக்கொண்டிருக்கிறேன்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/11/blog-post_28.html

ஹா ஹா ஹா கலக்கல் போங்க...

ஆமா...நீங்க எப்படி வெளிய இருக்கீங்க? ஒருவேளை சிறைக்குள்ளயும் இண்டர்நெட் யுனிகோடு எல்லாமிருக்கா?

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/11/blog-post_28.html

நேரத்துக்கு வரனுமா கூடாதா? அதச் சொல்லு :) மொதல் கவிதை நல்லாருந்தது.

G.Ragavan said...

http://aanipidunganum.blogspot.com/2007/11/blog-post_28.html


சரி... பனைமரத்து மேல இருந்து நெலக்கடலை தின்னாரு..சரிதான். வெளிக்கு எப்பிடிப் போனாராம்? அதச் சொல்லலையே. பனை மர உச்சீல கக்கூஸ் இருக்குதா என்ன?

இந்த மாதிரி மனநோயாளிகளை மருத்துவமனையில சேர்த்து ஷாக் ட்ரீட்மெண்ட்டு குடுக்கனும். அத விட முக்கியம்...அவங்க கிட்ட போறவங்களுக்குக் குடுக்கனும்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/11/blog-post_28.html

// ILA(a)இளா said...
//ஆமா...நீங்க எப்படி வெளிய இருக்கீங்க? ஒருவேளை சிறைக்குள்ளயும் இண்டர்நெட் யுனிகோடு எல்லாமிருக்கா?//
நமக்கு வசதி யெல்லாம் கம்மிதாங்க ஜி.ரா. தமிழ் மணம் அங்கேயும் வருது போல இருக்கே. உங்க ஊர் போலீஸ் =ஒன்னும் தமிழ்மணம் பார்த்தா ஒன்னும் சொல்றது இல்லிங்களா? //

தமிழ்மணம் உலகம் பூரா வருதே. எங்கெங்க இண்டர்நெட்டு இருக்கோ..அங்கங்க வருது. எங்க வீட்டுலயும் நெட் கனெக்ஷன் இருக்கு. அதுனால வருது. போலீஸ் மட்டுமில்ல..பக்கத்து வீட்டுக்காரங்க கூட தமிழ்மணம் பாத்தா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/11/2.html

// குமரன் (Kumaran) said...
ஓ. தெலுங்கா? இப்ப எல்லாம் நீங்க ஓவரா தெலுங்கு பேசறாப்பல இருக்கே இராகவன்?! எப்பப் பாத்தாலும் தெலுங்கு பாட்டு கேக்கறீங்க. எதாவது விஷேசமா? :-) //

என்னங்க இது...தெலுங்கு பாட்டு கேக்கக் கூடாதா? இதேமி பாதலு!!!!! ஹா ஹா ஹா நீங்க வேற குமரன்... எதையாவது கெளப்பி விடாதீங்க.

// குமரன் (Kumaran) said...
இராகவன் சார் உங்க வயசுல மூன்றில் ரெண்டு பங்கு வயசு உடையவர். அதனால் அவரை 'பார் அதி சின்னப் பயல்'ன்னு பாடுனா கூட சரியாத் தான் இருக்கும். அதனால இந்த சாரைக் கட் பண்ணிடுங்க (இராகவன். உங்க சார்பா நானே சொல்லிட்டேன். உங்களுக்கு ஓகே தானே?!) //

ஓ அப்ப ரத்னேஷ் சொன்ன சார் நாந்தானா? வேற யாரையோன்னு நெனச்சேன் நெஜமாலுமே.

// RATHNESH said...
குமரன்,

மேலே உள்ளது சும்மா டபாய்ச்சலுக்கு. (இந்த வார்த்தைக்கு விளக்கம் கேட்டு விடாதீர்கள்; நான் ராகவன் சார் அளவுக்குத் தெளிவானவன் இல்லை). //

என்னங்க ரத்னேஷ்....என்னங்க இது....நான் தெளிவானவன்னு எப்படிச் சொல்றீங்க. போச்சு..போச்சு...விசாரணைக் கமிஷன் வைக்கனும். :)

G.Ragavan said...

http://keethukottai.blogspot.com/2007/11/2007.html

yuvan disappoints a lot nowadays. he again proved hez just a mediocre.

சேவல் கொடி நல்லாருக்கு. வெத்தலையப் போட்டேன் தாவலை. செய் ஏதாவதும் சுமாராயிருக்கு....ஆனா கேட்டாப்புல இருக்கு. மை நேம் இஸ் பில்லாவை இப்பிடிக் கொலை செஞ்சிருக்க வேண்டாம்.

G.Ragavan said...

http://balajiulagam.blogspot.com/2007/11/blog-post_18.html

ஷோனோர் கெல்லா... புத்தகமாகவும் படித்திருக்கிறேன். படமாகவும் பார்த்திருக்கிறேன். ஆங்கில மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். சத்யஜித்ரேயின் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அப்படிப் படித்ததுதான். பெலூதாவின் கதைகள்...மொத்தம் மூன்று தொகுதிகள் என்னிடம். இதே போல ஜெய் பாபா பெலூ நாத் என்ற படமும் இதே கதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டதே. அதில் ஜடாயுவாக நடித்தவர் சந்தோஷ் தத்தா. அவர் இறந்து போய் விட்டார். அத்தோடு பெலூதா கதைகளைப் படமாக எடுப்பதும் நிறுத்தப்பட்டது. தமிழில் இது போன்ற படங்கள்.....அதீத எதிர்பார்ப்புதான் என்று தோன்றுகிறது.

G.Ragavan said...

http://pettagam.blogspot.com/2007/11/blog-post_28.html

கண்ணியம் காப்பதற்கும் உரிமையைக் கேட்பதற்கும் வேறுபாடு உண்டென்று நினைக்கிறேன்.

அச்சம் எதற்குத் தேவை? அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்.

மடமை ஏன்? மடத்தனமா இருக்கனுமா என்ன?

நாணம்.....இது ஒன்னு போதுங்க...முன்னேற விடாம தடுக்க.

பயிர்ப்பு....இது வேறொரு பதிவுல விவாதிக்க வேண்டியது.

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு போவதற்கும் கண்ணியம் போவதற்கும் தொடர்பில்லை என்பது என் கருத்து.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2007/11/29.html

:) நல்லாருக்கு

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/11/cvr.html

சூப்பர்...சூப்பர்...சூப்பர். கடைசிப் படத்தத் தவிர மத்ததெல்லாம் சூப்பர். என்ன சிவியார்? சரியாத்தான சொல்லீருக்கேன். ஏன்னா கடைசிப்படம் சூப்பரோ சூப்பர். :-P

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/11/wishes-vsk.html

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/11/3.html

ம்ம்ம்ம்.... அன்னதானத்துக்கு ஐநூறு ரூவாயா. சரிதான்.

அடிமுடியறியவொண்ணா அண்ணாமலையோனே.....அருணாச்சலர்க்கு அருளியவா...

அது சரி...இது திருவண்ணாமலைல வருதே கதை....எங்க அருணகிரி வருவாரா?

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/11/blog-post_29.html

அருமை...அற்புதம்...அபாரம்....அருமையான கதை. ராம்....அருமை. அருமை. எனக்குப் பாராட்ட சொற்களே வரலை. :) வாழ்க. வளர்க.

G.Ragavan said...

http://vasanthamravi.blogspot.com/2007/11/blog-post_28.html

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/11/gmail-launched-group-chat.html

ஆகா....கோபால்சாமிய block பண்றதுக்குத்தான் இத்தன வேலையா!

அது சரி.. இப்ப புது ஜிடாக்கு இறக்குமதி செய்யனுமாக்கும்?

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/11/blog-post_3874.html

இது சிறுகதை மாதிரித் தெரியலையே... ;)

இங்க ரெண்டு இருக்கு. சாமியாரு ஒன்னு. சாமி ஒன்னு. சாமியார்களை நான் நம்புறதில்லை. கடவுளை நம்புறேன். நம்மைக் காப்பாற்றுவார்னு ஒரு நம்பிக்கை. உழைப்பும் பிழைப்பும் துன்பமும் அனைத்தும் அவன் பொறுப்பு என்று நம்புகிறேன். அடி விழுந்தாலும் அவன் அடிதான். அணைத்தாலும் அவன் அணைப்புதான். இதுதான் என் கருத்து.

G.Ragavan said...

http://pstlpost.blogspot.com/2007/11/blog-post_29.html

கடவுள் இல்லாத இடத்துலதான் செருப்பு போடனும்னா....எவனும் செருப்பே போட முடியாது. முட்டாப்பயக.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/11/blog-post_29.html

அடா அடா அடா

ஆரம்பமே களை கட்டுதே.... போகப் போக எப்படி இருக்குமோ...

வலைப்பூவுல நாலஞ்சு பேரக் கட்டம் கெட்டி வெச்சிருக்கு. அவங்களையும் இப்பிடி ஏதாச்சும் செய்யனும்யா...

G.Ragavan said...

http://mangalore-siva.blogspot.com/2007/11/blog-post_30.html

:)))))))))))))))))))))

சிவா, கலக்கீட்டீங்க. கரெக்ட்டா வீடியோ பிடிச்சிப் போட்டீங்க. சூப்பர்.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/11/blog-post_2909.html

ரத்னேஷ் சொன்னதுதான் என் கருத்தும். ஒருத்தரை வளர்த்து விடுறது நண்பர்கள் அல்ல. எதிரிகள்.