மறைன்னா அதை மறைக்காம எல்லாருக்கும் எடுத்து உரை. மக்கள் மனதில் உறை. இப்பிடித்தான் இருக்கனும். வைணவத் தமிழ் வேதங்கள் இதைச் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லி எடுத்துச் சென்று இன்றைய அழுக்கையும் இழுக்கையும் நீக்கியே தீர வேண்டும்.
லலித ப்ரிய கமலம் விரிச்சினதி...ஆகா...அருமையா இருக்கு. இப்பத்தான் கேக்குறேன். ஏசுதாசும் சூப்பரா பாடியிருக்காரு. ரொம்பவே நல்லாப் பாடியிருக்காரு. தமிழில் பாலுவும் நல்லாப் பாடியிருக்காரு. தமிழை விட சித்ரா தெலுங்குல நல்லாப் பாடியிருக்குறாப்புல இருக்கு. தமிழ்ல ஏற்கனவே சிலச்சில இடங்கள்ள கஷ்டப்பட்ட மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சு. ஆனா தெலுங்குல அந்தக் கஷ்டம் தெரியலை. நல்ல ஒழுங்கு இருக்கு. கூட்டிக்கழிச்சிப் பாத்தா தெலுங்குல பாட்டு நல்லாருக்கு. பாடல்கள் வரிகளை வெச்சுப் பார்க்கும் போது தராசு நடுவுலதான் நிக்குது. நல்லா பாட்டு அறிமுகப் படுத்தியிருக்கீங்க.
அந்தப் பையனைத் தவறு சொல்ல முடியாது. பிரியக்கூடாது என்றால் எப்படி...ஏற்கனவே பிரிந்தவந்தானே. பாசம் உந்தத்தானே அடையாளம் தெரிஞ்சவுடம் வந்து பார்த்திருக்கிறான். பிள்ளை குட்டியை விட்டு விட்டு எப்படி வருவது? பெற்றவர்களையும் பார்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறானே. பாராட்டப்பட வேண்டியவன் அவனே. அந்த அம்மா அவனோடு போயிருக்கலாமே?
தேவே... கொத்ஸ் படையின் கோவே தேமே என்றிராமல் தாமே முன்னின்று எடுத்து வைத்த கருத்துகளைக் கண்டு நாம் மனம் மகிழ்ந்த கதையைச் சொல்லவா?
சரசர முறுமுறுவென தேவைக்குத் தக்கப் பிழிந்த சேவை நொறுக்கி நுங்கிய கதையைச் சொல்லவா?
நீர் நீர் கலவாத ஜோர் பாலில் டீ குடிப்புப் போராட்டம் நடத்த முனைந்த கதையைச் சொல்லவா?
சொல்ல நூறு கதையுண்டு. அவைகளைச் சொன்னால் மற்றவர்கள் எடுத்து வந்து மொத்துவதற்கும் நூறு கதையுண்டு. ஆகையால் இந்த ஒரு பின்னூட்டத்தோடு நிறுத்திக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
ராதிகாவுக்கு இசையரசி பாடி நெறையப் பாட்டு இருக்கு. நீங்க குறிப்பிட்ட எல்லே இளங்கிளியேயும் அருமையான பாட்டு. அதே மாதிரி...மணமகளே வா படத்தில் வரும் பாட்டும் அருமையாக இருக்கும்.
// தருமி said... ஜிரா, "கிசி" - இது நல்லா இருக்கே! //
தருமி சார். இது கி.ராவோடது. ஜிராவோடதில்லை. அவருடைய ஏதோ ஒரு கட்டுரைல கிசிங்குற சொல்லைப் பயன்படுத்தீருந்தாரு. எப்பவோ படிச்சது. இதெல்லாம் மண்டைல நல்லா நிக்குமே. அதான். :)
சூப்பர். :) கதையில சொல்லிக்கிட்டு வந்தப்ப சவசவன்னு இருந்துச்சு. முடிவைப் படிச்சப்புறம் கதையத் திரும்பிப் படிக்க வெச்சீங்க பாருங்க. அங்கதாங்க கதை வெற்றி பெற்றது. என்னுடைய வாழ்த்துகள்.
பாலாஜி, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. இந்த உலகத்துல இதுதான் சரி தப்புன்னு அப்படியே அச்சடிச்சுச் சொல்ல முடியுமான்னு தெரியலை.
நாங்கூட என்ன சொல்றதுன்னு தெரியாம இருந்தேன். சரி...வேலைல எல்லாம் பொய்தான் சொல்றோம். ஆனா பொய் சொல்லீட்டு வேலை வாங்குனப்புறம் வேலைய ஒழுங்காச் செய்யனும். அது இல்லைன்னா ரொம்பக் கஷ்டம்.
ஒரு நிகழ்ச்சி சொல்றேன். ஒரு நேர்முகத்தேர்வு எடுத்துக்கிட்டிருந்தேன். அவசரமா நாலஞ்சு பேர் தேவைப்பட்டாங்க. பாத்தா வரிசையா தெலுங்கு ஒரிசா ரெஸ்யூம்ஸ். பாத்தாலே கண்டுபிடிச்சிரலாம் அது fakeன்னு. ஒரு பையன் கிட்ட நாலு கேள்விதான் கேட்டேன். சரி தம்பி...நாங் கேக்க வேண்டியதெல்லாம் கேட்டாச்சு. நீ எதாச்சும் கேக்கனுமான்னு கேட்டேன். அதுக்கு அவன்...I think you are not satisfied with my answer. Shall i know the result now? அப்படீன்னு கேட்டான். அதைச் சொல்லக் கூடாதுல்ல. HR தானே சொல்லனும். அதைச் சொல்லி அனுப்பிச்சேன். அன்னைக்கு வந்தது பெரும்பாலும் அப்படித்தான்.
ஆனா...ஒன்னோட கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லை. சரிதான்னு சொல்லவும் வாய் வரலை. தப்புன்னு சொல்லவும் மனசு வரலை.
தங்கம் தேட்டர்......ஒரு படம் பாத்திருக்கேன். சரியா நெனைவில்லை. ஆசியாவுல பெரிய தேட்டர்னு சொன்னாங்க. திரையப் பாத்தா வெள்ளி மாதிரி இருந்துச்சு. ஏன் அப்படியிருக்குன்னு கேட்டேன். வெல்வெட்டுத் திரையாம் அது. அப்படியான்னு கேட்டுக்கிட்டது மட்டும் நல்லா நினைவிருக்கு. பெரிய தேட்டர்தான்.
அப்ப நாங்க டி.ஆர்.வோ காலனியில இருந்தோம்....விஜயலட்சுமி ஜெயராஜ் தேட்டர்ல போடுற பழைய சிவாஜி படங்களுக்குக் கூட்டீட்டுப் போவாங்க. ஜெயராஜ்ல ரொம்ப ரொம்பச் சின்னப் பிள்ளைல ஒரு படம் கூட்டீட்டுப் போனாங்க. சிவாஜி படந்தான். ஆனா அப்ப அது என்ன படம்னோ யாரு நடிச்சாங்கன்னோ நினைவிருக்கலை. ரொம்ப வருசம் கழிச்சி அந்தப் படத்தத் டீவில பாத்ததும் கண்டுபிடிச்சிட்டேன். மிருதங்கச் சக்கரவர்த்தி. அவரு மடியில மிருதங்கத்த வெச்சிக்கிட்டு உக்காந்திருக்குற மாதிரி கட்டவுட்டு வெச்சிருந்தாங்க. அப்ப அதான் சிவாஜின்னு கூடத் தெரியலை.
சினிப்பிரியா, மினிப்பிரியா, சுகப்பிரியா, செண்ட்ரல், சக்தி, சிவம், ஷா ஆகிய தேட்டர்களும் தெரியும்.
பாடலைக் கேட்டேன். நன்றாக இருக்கிறது. சமீபத்தில் நான் ரசித்துக் கேட்ட மலையாளப் பாடல்..அனந்த பத்ரம் படத்தில் வரும் பிணக்கமானோ என்னோடு இணக்கமானோ என்ற பாடல்.
இதோ இங்கே பார்க்கலாம் http://www.youtube.com/watch?v=zaMK6O8tbBw
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்...நல்லாருக்கு. ஆனா பரிசு பெறும் அளவுக்கு நல்லாயிருக்கான்னு எனக்குச் சொல்லத் தெரியலை. திருப்பம்...இருக்குது. எதிர்பாராத திருப்பம்தான். ஆனா அந்தத் திருப்பாதால பெரிய திக்பக் சந்தோசம் எதுவும் வரலை.
அதுவுமில்லாம சூர்யாவை அவன்னு சொன்னதுல சின்ன சறுக்கல்னே நெனைக்கிறேன். சம்பந்தி அவர்னு ஆகும் போது சூர்யாவும் அவர்னு இருக்கனும். ஆனா அவர்னா உண்மை தெரிஞ்சு போகும். அந்த அவன் வராமச் சொல்லீருந்தா நல்லாயிருந்திருக்கும்.
திருப்பக் கதைகள்ளயே நான் ரொம்பவும் ரசிச்சது பேய்க்கதைதான். ஜெனி புல்லாங்குழல் ஊதுன கதை. அப்புறம் பினாத்தலாரின் பொன்னியில் செல்வன்.
வாழ்த்துகள் காபி. உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் உங்கள் மகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். முருகனருளால் நீடு வாழவும்..பீடு வாழவும் வாழ்த்துகிறேன்.
அந்தத் திருப்பம் வந்தப்புறம் ஒரு திக் அல்லது மகிழ்ச்சி அல்லது சோகம் அல்லது ஏதாவது ஒரு உணர்ச்சி நெறைய வரனும். நான் படிச்ச வரையிலயும் மூனே மூனு கதையிலதான் அது வந்துச்சு. ஒன்னு பினாத்தலாரின் பொன்னியின் செல்வன். அடுத்தது ஜெனி புல்லாங்குழல் ஊதுனது. அடுத்தது ராகவன் பைத்தியமானது.
மத்தவங்க கருத்து என்னன்னு தெரியாது. ஆனா உங்க கதை நல்லாருக்கு.
உங்க கருத்தோடு முழுமையாக ஒத்துப்போகிறேன். இந்தக் கருத்துக்கு என்னுடைய வெளிப்படையான ஆதரவுகள் உண்டு.
ஆசைக்கு ஒன்றும் ஆஸ்திக்கு ஒன்றும் கட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும்....ஆசைக்கு மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்டு வைத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது புரியப்போவதில்லை.
தமிழில் கவிதை அருமை. பாடிய குரல்கள் அருமை. பீ.பி.சீனிவாசும் பி.சுசீலாவும். இசையமைப்பும் அருமைதான்.
தெலுங்கில் இசையும் பெண்குரலும் தமிழில் இருந்ததுதான். ஆனால் கவிதை மாறியிருக்கிறது. சூச்சி வலச்சி செந்தக்கு பிலச்சி...பார்த்தேன் சிரித்தேன் மாதிரித்தான் முயன்றிருக்கின்றார்கள். சொல் விளையாட்டு இருக்கிறது. மொழி புரிவதால் தமிழ் வரிகளில் உள்ள ஆழம் தெலுங்கு வரிகளில் இல்லை என்பதும் புரிகிறது. தெலுங்கிலேயே ஆழம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பாடல் வரிகளில் இல்லை.
அடுத்த குறை கண்டசாலா. இவர் நல்ல பாடகர்தான். ஆனால் ஏற்ற இறக்கங்கள் இறங்கியே இருக்கும். பீ.பி.ஸ்ரீநிவாஸ் தெலுங்கும் பேசத் தெரிந்தவர். அவரே பாடியிருக்கலாம். இசையரசியைச் சொல்ல வேண்டியதில்லை. தமிழில் அவர் செய்த சிறப்பைத் தெலுங்கிலும் செய்திருக்கிறார்.
அது சோபன் பாபுவா? யார் இந்த நெளிந்த இடுப்பர்னு நெனச்சேன். :)
// வெட்டிப்பயல் said... ஜி.ரா, எல்லா திருப்ப கதையும் படிச்சேன். சில கதைகள் திக்னு இருக்கு. சில கதைகள் மனசை பாரமாக்குது. சில கதைகள் "அட!!!"னு ஆச்சர்யப்பட வைக்குது (குறிப்பா பினாத்தலாரின் பொ.செ). அதான் கொஞ்சம் எல்லாத்தையும் தள்ளி எழுதலாம்னு இந்த கதை முயற்சி செஞ்சேன். படிச்சி முடிச்சவுடனே ஒரு சின்ன அசட்டு சிரிப்பு வரனும்னு. வேற எதுவும் பெருசா முயற்சி செய்யல. அது வந்துச்சா என்னனு நீங்க தான் சொல்லனும். //
வரலைன்னுதான் சொல்வேன்.
// சூர்யாவை அவனு சொன்னது எனக்கு தப்பா தெரியல. சம்பந்தியை மட்டும் அவர்னு சொன்னது தப்பு தான். அதை சரி செய்தாச்சு. அன்னைக்கே மாத்தனும்னு நினைச்சேன். விட்டுட்டேன். //
ம்ம்ம்ம்... இல்லை. இங்க நான் மாறுபடுறேன். why should i bother to think the writter can be young or old? யார் எழுதீருந்தாலும் அது பொருந்தாதுன்னுதான் தோணுது. இருந்தாலும் இதுபத்தி வாதம் பண்ண விரும்பலை. உனக்குத் தெரியாததை எதுவும் நான் சொல்லீரப் போறதில்லை.
//எனக்கு ரொம்ப பிடிச்சது கொத்ஸ் கதைதான் :-)) //
பிடிக்குமே. ராகவனுக்குப் பைத்தியம்னா பிடிக்காமலா இருக்கும். :)))))))))))))
கொத்ஸ் கதை எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. உன் கதையப் படிச்சிட்டுத்தான் அவர் கதையப் படிச்சேன். அதுனால அதைச் சொல்லலை.
இது எந்த வகையான எம்.என்.சி? அதையும் சொல்லுங்க. ஏன்னா ஒவ்வொரு துறை நிறுவனத்துலயும் ஒவ்வொருவிதமான வேலையடுக்குகள் இருக்கும்.
சரி. இந்த எம்.என்.சி போயிருச்சுன்னா எல்லாருக்கும் பயன் வந்துருமா? நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு தெளிவாச் சொல்லுங்க.
எனக்குத் தெரிஞ்சி 10 மணிக்கு வந்துட்டு 4 மணிக்கு வீட்டுக்குப் போறது அரசாங்க அலுவலகத்துலதான் நடக்குது. அரசாங்க அலுவலகத்துலயும் இதே மாதிரி பட்டியல் போடுங்க. அப்பத்தான் ஒப்பிட்டுப் பார்க்கவும் வசதியா இருக்கும்.
அப்புறம்....எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம். பெயர்ல புரட்சியும் இருக்கு. தமிழும் இருக்கு. கொஞ்சம் எழுத்துப்பிழைகளைச் சரி செய்ங்க.
// நீங்க தான் சுப்ரபாதம் ஏன்? எதுக்கு எழுப்பணும்னு மொத பின்னூட்டம் போட்டீங்க! நினைவிருக்கா? இந்த மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்பதை அருணகிரியும் அப்படியே ஆண்டிருக்காரு! அதைச் சொல்லுவீங்க-ன்னு காத்துகிட்டு இருந்தேன்! //
அருணகிரி ஆண்டிருக்காரா? ஓ சுப்ரபாதத்துல இருந்து அருணகிரி ஆண்டிருக்காரா. அடடா...தெரியாமப் போச்சே. தெரிஞ்சா சொல்லாமலா போகப் போறேன்.
// நீங்க மடத் தலைவர் ரேஞ்சுக்கு ஆசிர்வாதம் கொடுத்துட்டு போயிட்டீங்களே! :-) //
அட...இங்க தளை தட்டினா என்ன தட்டாட்டி என்ன....இது வெண்பா கலிப்பா இல்லை. களிப்பான என்பா. அதுல பிழை இருக்கான்னு பாக்கத்தான் ரவிக்குத் தெரியும். என்ன பாக்கனும்னு முருகனுக்குத் தெரியும். ;)
ம்ம்ம்.. கொஞ்சம் சிக்கலான பிரச்சனைதான். காதல்னா ரெண்டு பக்கமும் தெரியும். நட்புக்கும் காதலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அது எங்க எப்படிப் பிரியுதுங்குறதுதான் சிக்கல். அது தீர்ந்திருச்சுன்னா காதல் அழகா வந்துரும்.
கதையின் முடிவை ஊகிக்கலைங்குறதுதான் உண்மை. யாரோ ரெண்டு பேரோட காதல்னு சொன்னதும்...ஐயோ காதலைச் சொல்ல இவ்ளோ கஷ்டப்படுறாங்களேன்னு சங்கடமா இருந்துச்சு. கடைசில டிவிஸ்டு வேற வெச்சிட்டிங்க. பாவம் ஸ்வப்னா.
// குமரன் (Kumaran) said... இராகவனும் நீங்களும் அடிக்கடி இந்த சப்ஜெக்டைத் தொடுகிறீர்கள். ஏன் என்று தெரியவில்லை. நண்பர்கள் யாராவது இந்த வகையில் இருந்து துன்பப்படுகிறார்களா? //
நான் எப்பங்க எழுதுனேன். ஒருவேளை கள்ளியிலும் பால் பத்திச் சொல்றீங்களா? அதுல எல்லாமே இருந்துச்சே. ஒன்னு ரெண்டு எல்லாமே...வேற எப்ப எழுதுனேன்?
ராம், சமீபத்தில் நான் படித்த மிக அருமையான சிறுகதைகளில் இதுவும் ஓன்று. மிகவும் ரசித்தேன். மிகமிக. எழுத்து நன்றாக வருகிறது.
பாலாஜிக்கு நீ சொன்னெ பதிலும் சரி. அந்தப் பெண் இறந்தது கதையல்ல. இறந்ததனால் நடந்தது கதை. இந்தக் கதைக்கு இவ்வளவு போதும். கோனார் நோட்ஸ் எல்லாம் குடுக்கத் தேவையில்லைன்னுதான் தோணுது.
நல்லடியார், இஸ்லாம் குறித்தான கருத்துகளுக்கு நான் வரவில்லை. ஆனால் ஒரு கேள்வி எழாமல் இல்லை.
ஒருவேளை இதே போலத் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு...அட...நீங்கள் போட்டிருக்கின்றீர்களே...அதே படத்தையும் யுனிசெப் போட்டிக்கு அனுப்பியிருந்து....அது தேர்வாகியிருந்தால் என்ன செய்திருப்போம்? தமிழர்களைக் கேள்வி கேட்கின்றவர்களை நீங்கள் இங்கே கேட்டிருப்பது போலக் கேட்டிருப்போம். நம்மைச் சுட்டிக்காட்டும் பொழுது....அது தவறாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. இது என்னுடைய கருத்து. அவ்வளவே.
அப்புறம்....பின்னூட்டமிடனும்னா அது மேல நகட்டவும்னு போட்டிருக்கியே. அத எடுப்பா...தொல்லையா இருக்குது. வலைப்பூவுக்கு ஒரு ஸ்க்ராலு, பின்னூட்டத்துக்கு இன்னொரு ஸ்க்ராலு...
எக்ஸ்பிரஸ் மாதிரி கதை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு போகுது. வந்தவன் கூடப் பொறந்ததுகளையும் கூட்டீட்டுப் போயி ஒரு நல்லது பண்றானாக்கும். ரொம்ப நல்லது. வாழ்க வளமுடன்.
அதாவதுங்க... குடிக்கிறது புகைக்கிறதுன்னு வந்தா... அது ஆணுக்கும் பெண்ணுக்கும் கெடுதிதான். ஆணுக்கு மட்டும் நல்லதுன்னா சொல்றோம்.
ஆனா ஆண் குடிக்குறப்போ கெடாத பண்பாடு பெண் குடிச்சப்போ கெடுதுன்னு சொல்றாங்க பாருங்க..அப்பத்தான் எரிச்சல் வருது. அடேய் பண்பாட்டுக் காவலர்களா... குடிக்கிறது எல்லாருக்கும் கெடுதல்தானய்யா...போய் ஆண்கள் குடிக்கிறப்பவும் சொல்லுங்கய்யா...அட நீங்களே குடிக்கிறவங்கதானே...இப்படித்தான் கேக்கத் தோணுது.
அதுக்காக பெண் குடிக்கனும்னு தேவையில்லை. ஆனா அந்த முடிவை அந்தப் பெண்ணே எடுத்தால் அந்த உரிமை அவளுக்கு உள்ளது. அதே போலத்தான் உடை விஷயத்திலும். இதுதான் என்னுடைய கருத்து. மத்தபடி இதைத் தமாஷ்னு சொல்றதெல்லாம் செம தமாஷ்தான்.
பொங்கல் தமிழர் திருநாள்னு சொல்றோம். அப்ப தமிழர்னு சொல்ற எல்லாருக்குந்தான் திருநாள். அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது மிகச் சிறப்பு.
ஓகை எளிதாக இந்துப் பண்டிகை என்று சொல்லிவிடலாம். ஆனால் இந்து என்பதே ஒரு கலப்பிதம். அப்படியிருக்கையில் ஐநூறும் ஆயிரமும் மட்டும் ஏன் கலக்காமல் இருக்க வேண்டும்.
அவரவர் வழியில் பொங்கலைக் கொண்டாடுவதில் தவறில்லை. சூரியனை வணங்குவது என்பது ஒரு விதம். அதை இயற்கை என்ற கோணத்தில் பார்க்க விரும்புகிறவர்களும் பார்க்கலாம். மொத்தத்தில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நம்மை விட்டுக் கொடுக்காமலும் அதே நேரத்தில் அணைத்து வாழவும் தெரிந்திருக்க வேண்டும்.
சுருங்கச் சொன்னால் முருங்கை உடையும். மூங்கில் இசை கொடுக்கும்.
பனிமாமதியின் குழவி என்ற இடத்தில் குழந்தை என்று சொல்ல வேண்டியதில்லை.. குட்டி என்றும் சொல்லலாம். நிலாக்குட்டியைச் சூடிக் கொண்டன்னு சொன்னா பொருள் வருதுல்ல.
107 comments:
http://umakathir.blogspot.com/2007/12/blog-post.html
ஆகா....கதை போட்டாச்சா...சூப்பர். ஆறு வெரலையும் புகுத்தியாச்சு. சுரேஷ் ராகவன்னு ஜி தெளிவாச் சொல்லியும்...ராகவன்..ராகவன்னு அழுத்திச் சொல்லியாச்சு. வாழ்க வளமுடன்.
அடுத்தாரு கப்பியா...சூப்பர்.
அப்புறம் பழைய ஆம்பல்களுக்குத் தொடுப்பு குடுத்துருங்க.
http://mangalore-siva.blogspot.com/2007/11/blog-post_6656.html
சூப்பர் படங்க. அருமையா எடுத்திருக்கீங்க ;)
http://blog.nandhaonline.com/?p=39
சரியாச் சொன்னீங்க நந்தா. அதென்ன பொண்ணுக்கு மட்டும் தாலி? குங்குமம்? பெண்களுக்குத் தாலி வேண்டாம்னு சொல்லறவங்க...ஆண்கள் கழுத்திலும் தாலியை ஏற்றட்டும். மோதிரம் போட்டுக்கிறோமே...அட..அப்ப பொண்ணுக்கும் மோதிரம் போதுமே... கல்யாணத்துக்கு முன்னாடி குங்குமம் வெச்சுக்கிறதில்லையா.... அட..கல்யாணத்துக்கு அப்புறம் வைக்காம ஒரு அரமணி நேரம் இருக்கச் சொல்லுங்க...நூறு கேள்வி வரும். மூட நம்பிக்கைல ஊறுன பெண்களே...குங்குமம் இல்லாம ஒரு மாதிரி இருக்குன்னு பொலம்பல் வேற. பெண்கள் கேக்க வேண்டிய கேள்வி...நம்ம கேட்டுக்கிட்டிருக்கோம். இதெல்லாம் எனக்கென்னவோ வெளங்கீரும்னு தோணலை. வெளங்குச்சுன்னா ரொம்ப நல்லது. சிகரட் பிடிக்குறது ரெண்டு பேருக்குமே கெடுதி. ஆனா பெண் பிடிச்சா ஒடனே பண்பாடு வந்துரும். தண்ணியடிக்குறதும் அப்படித்தான். பொண்ணுங்களும் தண்ணியடிக்கிறாங்க..கலி முத்தீருச்சுன்னு பேசுவாங்க. அட மடப்பயகளா...ஆணோ பெண்ணோ...யாரு தண்ணியடிச்சாலும் சிகரெட்டுப் புடிச்சாலும் கெடுதிதான்னு நெனைக்க மாட்டானுக. ஏன்னா சுதந்திரம் பறிபோயிரும்ல. அதுனால. ரெண்டுக்கும் பொதுவுல வைப்போம்யா...எல்லாத்தையும். தான் மட்டும் கும்மியடிக்கனும்..மனைவி அம்மியரைக்கனும்னு நெனைக்கிற ஆணால பொதுவுல வைக்க முடியாது.
http://kelpidi.blogspot.com/2007/12/blog-post.html
ஏ.ஆர்.ரகுமான் உச்சத்துல இருந்தப்ப வந்த படமிது. எனக்கும் பிடிச்ச பாட்டு இது. அப்பல்லாம் ரகுமானின் பயங்கர ரசிகன் நான். :)
http://madhavipanthal.blogspot.com/2007/11/blog-post_30.html
மறைன்னா அதை மறைக்காம எல்லாருக்கும் எடுத்து உரை. மக்கள் மனதில் உறை. இப்பிடித்தான் இருக்கனும். வைணவத் தமிழ் வேதங்கள் இதைச் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லி எடுத்துச் சென்று இன்றைய அழுக்கையும் இழுக்கையும் நீக்கியே தீர வேண்டும்.
http://videospathy.blogspot.com/2007/12/to.html
லலித ப்ரிய கமலம் விரிச்சினதி...ஆகா...அருமையா இருக்கு. இப்பத்தான் கேக்குறேன். ஏசுதாசும் சூப்பரா பாடியிருக்காரு. ரொம்பவே நல்லாப் பாடியிருக்காரு. தமிழில் பாலுவும் நல்லாப் பாடியிருக்காரு. தமிழை விட சித்ரா தெலுங்குல நல்லாப் பாடியிருக்குறாப்புல இருக்கு. தமிழ்ல ஏற்கனவே சிலச்சில இடங்கள்ள கஷ்டப்பட்ட மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சு. ஆனா தெலுங்குல அந்தக் கஷ்டம் தெரியலை. நல்ல ஒழுங்கு இருக்கு. கூட்டிக்கழிச்சிப் பாத்தா தெலுங்குல பாட்டு நல்லாருக்கு. பாடல்கள் வரிகளை வெச்சுப் பார்க்கும் போது தராசு நடுவுலதான் நிக்குது. நல்லா பாட்டு அறிமுகப் படுத்தியிருக்கீங்க.
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post.html
அந்தப் பையனைத் தவறு சொல்ல முடியாது. பிரியக்கூடாது என்றால் எப்படி...ஏற்கனவே பிரிந்தவந்தானே. பாசம் உந்தத்தானே அடையாளம் தெரிஞ்சவுடம் வந்து பார்த்திருக்கிறான். பிள்ளை குட்டியை விட்டு விட்டு எப்படி வருவது? பெற்றவர்களையும் பார்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறானே. பாராட்டப்பட வேண்டியவன் அவனே. அந்த அம்மா அவனோடு போயிருக்கலாமே?
ஆகா....அருமையான தொடக்கம். எப்படிப் போகிறதென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
திங்கள் திங்களா...சூப்பர். என்னுடைய வாழ்த்துகள்.
அப்புறம் இளைய தளபதின்னு சொல்லிக்கிட்டிருக்குறவனை எல்லாம் பழைய தளபதின்னு சொல்லிக்கிட்டிரூக்காங்க. ஆச்சுல்ல ரெண்டு வருசம். நீயும் மூத்த பதிவர்தான்.
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜிக்கு என்னுடைய வாழ்த்துகள்.
http://cvrintamil.blogspot.com/2007/12/3.html
ம்ம்ம்ம்ம்....பிரச்சனை இப்பிடி திசை திரும்புதா.....தமிழரசி.....பிரகாசாவின் வாழ்க்கையில் பிரகாசம் தரும் ஒளியரசியாக வா. வா. வா.
http://elavasam.blogspot.com/2007/12/1.html
நூறு பதிவிட்டமைக்கு வாழ்த்துகள்.
பட்டிமன்றம் கலக்கல். சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்.
அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன்.
http://elavasam.blogspot.com/2007/12/2.html
போட்டி பெரும் போட்டியா இருக்குதய்யா. ஆனா யாரு வெற்றி பெறும் போட்டின்னுதான் தெரியலை.
பின்னூட்டம் வலக்கண்ணா இருந்தா உப்புமா இடக்கண்ணுன்னு இருக்கீங்க நீங்க. இருகண்ணுல ஒருகண்ணுன்னு எப்படிச் சொல்றது. போட்டி முடிவுக்காக காத்திங். ஆனா பதினாலு பின்னூட்டந்தான வந்திருக்கு. உப்புமா வேகலையோ? இல்ல..பின்னூட்டப் பெருமைய புரிய வைக்கிறாங்களோ?
http://elavasam.blogspot.com/2007/12/3.html
தேவே...
கொத்ஸ் படையின் கோவே
தேமே என்றிராமல்
தாமே முன்னின்று எடுத்து வைத்த கருத்துகளைக் கண்டு நாம் மனம் மகிழ்ந்த கதையைச் சொல்லவா?
சரசர
முறுமுறுவென
தேவைக்குத் தக்கப் பிழிந்த
சேவை நொறுக்கி நுங்கிய கதையைச் சொல்லவா?
நீர்
நீர் கலவாத
ஜோர் பாலில்
டீ குடிப்புப் போராட்டம் நடத்த முனைந்த கதையைச் சொல்லவா?
சொல்ல நூறு கதையுண்டு. அவைகளைச் சொன்னால் மற்றவர்கள் எடுத்து வந்து மொத்துவதற்கும் நூறு கதையுண்டு. ஆகையால் இந்த ஒரு பின்னூட்டத்தோடு நிறுத்திக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
http://kanapraba.blogspot.com/2007/12/blog-post.html
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் பிரபா. இன்னும் பல சிறப்பான தகவல்களைத் தொகுத்தெழுதி சிறப்பான இடத்தில் இருக்க என்னுடைய வாழ்த்துகள்.
http://holyox.blogspot.com/2007/12/354.html
ரசிச்சேன். நல்லாருந்துச்சு.
நமக்கெல்லாம் நரகந்தாம்ப்பா... :) ஒங்க கதைல வர்ர நரகத்தச் சொன்னேன். :))))))))))))
http://holyox.blogspot.com/2007/12/354.html
ஆமா...ஒரு ஐயம். அதென்ன வரிசைல நின்ன அத்தன பேரும் ஆம்பிளைங்கதானா? பொம்பளைங்களுக்கு மது ஆண் மாமிசம்னு தனிக்கதை வருமா?
http://thulasidhalam.blogspot.com/2007/12/blog-post.html
பூக்கள் நிறம்பிய பூக்கள் அழகோ அழகு.
http://kappiguys.blogspot.com/2007/12/7.html
:) இன்னும் திருப்பங்கள். சுவாரசியம் சுவாரசியந்தான்.
அடுத்தாரு தேவா? அப்ப கலக்கல்தான் தேவா :)
http://videospathy.blogspot.com/2007/12/to.html
வெண்ணிலா நேரத்திலே வேணுகாணம்
மேல்மாடி முத்தத்திலே நானும் நீயும்...
படம் : நேயர் விருப்பம்
இசை : விஜயபாஸ்கர்
இந்தப் படத்துலயே மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமான்னு கூட பாட்டு ஒன்னு இருக்கு. அதுவும் நல்லாருக்கும்.
http://isaiarasi.blogspot.com/2007/12/3.html
அருமையான பாட்டுங்க. அதென்ன கோடு போட்டாப்புல பாடிருக்காங்க....நானும் இவங்க பாட்டுல பிசிறு கண்டுபிடிச்சிரலாம்னு பாக்குறேன். முடியலையே.
ராதிகாவுக்கு இசையரசி பாடி நெறையப் பாட்டு இருக்கு. நீங்க குறிப்பிட்ட எல்லே இளங்கிளியேயும் அருமையான பாட்டு. அதே மாதிரி...மணமகளே வா படத்தில் வரும் பாட்டும் அருமையாக இருக்கும்.
http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_07.html
தெரியாம என்ன?
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்
அந்தப் பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு உருகி நின்றாள்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
http://vinaiooki.blogspot.com/2007/12/blog-post_08.html
இதுதான் சூப்பர். கொடுக்கல் வாங்கல்தான் எப்பவும் சரி. நம் தாய்மொழியைக் கற்கனும். மதிக்கனும். அதுனாக வேற மொழியைக் கற்காம இருக்கக் கூடாது. தேவைக்கு வேண்டியத தெரிஞ்சு வெச்சுக்கிறது நல்லதுதான்.
டிசோசா நல்லாருக்காங்களா :))))
http://bharathi-kannamma.blogspot.com/2007/12/blog-post.html
நல்ல விவரிப்பு.அந்த தலைக்கறி பத்தி ரெண்டு வாட்டி இருக்கே. அதப் பாரு. படங்கள் ரொம்ப அழகா இருக்கு.
http://elavasam.blogspot.com/2007/12/5.html
வாக்களித்தோம். வாக்களித்தோம். களித்தோம். தோம். ம்.
http://dharumi.blogspot.com/2007/12/242.html
ஆகா....வாழ்த்துகள். விகடனில் பெயர் வந்த தலைவர் தருமியார் வாழ்க வாழ்க :)
http://dharumi.blogspot.com/2007/12/244.html
தருமிசார்...இதுல என்ன பெரச்சனை தெரியுமா? வீட்டுவீட்டுக்கு பசிக்குச் சோறு பொங்கித் திங்குற மாதிரித்தான் கிசிக்குப் பிரியாணி. வீட்டுல என்ன சமையல்னு பேசிக்கிறாங்க கூச்சமில்லாம. அதுல எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்காங்க. இதுல..பேசனும்னு கூடத் தேவையில்லை. ஆனா எல்லாம் தெரிஞ்சிக்கிறப்படாதா. என்னவோ போங்க. அத தப்பு தப்புன்னு சொல்லி ஒதுக்கி வெக்கிறதே தப்புன்னு நெனைக்கிறேன். நம்மூர்ல புனிதபிம்பங்கள் சாஸ்தியாகிப் போயி....இந்த விசயம் நாஸ்தியாகிப் போச்சு. நம்மூர்ல அஞ்சரைக்குள்ள வண்டி ஓடுற தேட்டர்ல வர்ர கூட்டத்தப் பாத்தாலே தெரியும்...அவங்க வாழ்க்கைல கூடல் திருப்தியின்மையால கஷ்டப்படுறது.
http://myspb.blogspot.com/2007/07/blog-post_2774.html
நல்ல பாட்டு. இதத் தெலுங்குலயோ கன்னடத்துலயோ கேட்டாப்புல இருக்கேன்னு யோசிச்சேன். அப்புறம் பாத்தா பின்னூட்டத்துல தெரிஞ்சிருச்சு. நல்ல பாட்டு.
http://thenkinnam.blogspot.com/2007/12/85.html
மிகவும் அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல், இசையமைப்பாளர், பாடகர். நன்றி. நன்றி.
http://myspb.blogspot.com/2007/11/blog-post_23.html
இந்தப் பாடலின் தெலுங்கு வடிவம் யுடியூபில் இங்கே இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=yLXDnsHAPEI
http://dharumi.blogspot.com/2007/12/244.html
// தருமி said...
ஜிரா,
"கிசி" - இது நல்லா இருக்கே! //
தருமி சார். இது கி.ராவோடது. ஜிராவோடதில்லை. அவருடைய ஏதோ ஒரு கட்டுரைல கிசிங்குற சொல்லைப் பயன்படுத்தீருந்தாரு. எப்பவோ படிச்சது. இதெல்லாம் மண்டைல நல்லா நிக்குமே. அதான். :)
http://rathnesh.blogspot.com/2007/12/blog-post_1619.html
ரசித்தேன். மிகவும் ரசித்தேன். நல்ல மனசுத் தந்தை. அவர் நீடூடி வாழ்க. அவரது எண்ணம் எல்லாருக்கும் வருக. மிகவும் பாராட்டத்தக்க கரு.
http://koodal1.blogspot.com/2007/12/4.html
ம்ம்ம்ம்..... படித்தேன் குமரன். இந்தப் பகுதியில் சொல்லப்பட்டவையனைத்தும் கதைக்குத் தேவையானவைகளா? ரொம்ப படிப்பது போல இருந்ததால் கேட்கிறேன்.
http://penathal.blogspot.com/2007/12/blog-post_10.html
சூப்பர். :) கதையில சொல்லிக்கிட்டு வந்தப்ப சவசவன்னு இருந்துச்சு. முடிவைப் படிச்சப்புறம் கதையத் திரும்பிப் படிக்க வெச்சீங்க பாருங்க. அங்கதாங்க கதை வெற்றி பெற்றது. என்னுடைய வாழ்த்துகள்.
http://aayirathiloruvan.blogspot.com/2007/12/2008.html
அடா அடா அடா..... நல்லா படம் எடுக்குறாங்க. அந்தக் காலண்டர் கெடைச்சாச் சொல்லுங்க.
http://radiospathy.blogspot.com/2007/12/blog-post.html
அருமை அருமை. எம்.ஆர்.ராதா....நடிகவேள்...எனக்கும் மிகவும் பிடித்த நடிகர். அவருடைய நடிப்பும் பாட்டும் பேச்சும் அருமையோ அருமை. நல்லதொரு பதிவிட்டிருக்கின்றீர்கள். நன்றி. நன்றி.
http://vettipaiyal.blogspot.com/2007/12/fake.html
பாலாஜி, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. இந்த உலகத்துல இதுதான் சரி தப்புன்னு அப்படியே அச்சடிச்சுச் சொல்ல முடியுமான்னு தெரியலை.
நாங்கூட என்ன சொல்றதுன்னு தெரியாம இருந்தேன். சரி...வேலைல எல்லாம் பொய்தான் சொல்றோம். ஆனா பொய் சொல்லீட்டு வேலை வாங்குனப்புறம் வேலைய ஒழுங்காச் செய்யனும். அது இல்லைன்னா ரொம்பக் கஷ்டம்.
ஒரு நிகழ்ச்சி சொல்றேன். ஒரு நேர்முகத்தேர்வு எடுத்துக்கிட்டிருந்தேன். அவசரமா நாலஞ்சு பேர் தேவைப்பட்டாங்க. பாத்தா வரிசையா தெலுங்கு ஒரிசா ரெஸ்யூம்ஸ். பாத்தாலே கண்டுபிடிச்சிரலாம் அது fakeன்னு. ஒரு பையன் கிட்ட நாலு கேள்விதான் கேட்டேன். சரி தம்பி...நாங் கேக்க வேண்டியதெல்லாம் கேட்டாச்சு. நீ எதாச்சும் கேக்கனுமான்னு கேட்டேன். அதுக்கு அவன்...I think you are not satisfied with my answer. Shall i know the result now? அப்படீன்னு கேட்டான். அதைச் சொல்லக் கூடாதுல்ல. HR தானே சொல்லனும். அதைச் சொல்லி அனுப்பிச்சேன். அன்னைக்கு வந்தது பெரும்பாலும் அப்படித்தான்.
ஆனா...ஒன்னோட கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லை. சரிதான்னு சொல்லவும் வாய் வரலை. தப்புன்னு சொல்லவும் மனசு வரலை.
http://cvrintamil.blogspot.com/2007/12/4.html
ஆகா.....கதையச் சொல்லிக்கிட்டே ஒன்னோட புகைப்படக்கலைக்கு விளம்பரமும் செஞ்சு சுட்டியும் குடுத்துட்டியாக்கும். வாழ்க. வாழ்க.
அது சரி? யாரந்தக் கிஷோர்? ஆமா.....ப்ரகாஷ் அசைவம்னு எனக்கு இப்பத்தான் தெரியும். பாவம். பய சிக்கன் பிரியாணிய சீலிங்குல தேடுறான். கிஷோர் கிட்ட சொல்லி கூச்சப்படாம வாங்கிச் சாப்புட்டுக்கச் சொல்லு.
http://pathivu.madurainagar.com/2007/12/5.html
என்னது!!! ரீகல் தேட்டர் வாசகசாலையா? அதுல "அந்த மாதிரி" போஸ்டருங்கதானே கண்ணுல படும். பஸ்சுல அந்த வழியாப் போறப்போ தெளிவாத் தெரியுமே.
காலேஜ் ஹவுசுல இப்பவும் டிபனெல்லாம் நல்லாருக்கு. பக்கத்துலயே இருக்குற பிரேம விலாஸ் அல்வாக்கடையைப் பத்திச் சொல்லலையே. அடா அடா அடா. திருநவேலிக்குப் போட்டியா மதுரைலயும் அலுவா கெடைக்குமிடமாச்சே.
தங்கம் தேட்டர்......ஒரு படம் பாத்திருக்கேன். சரியா நெனைவில்லை. ஆசியாவுல பெரிய தேட்டர்னு சொன்னாங்க. திரையப் பாத்தா வெள்ளி மாதிரி இருந்துச்சு. ஏன் அப்படியிருக்குன்னு கேட்டேன். வெல்வெட்டுத் திரையாம் அது. அப்படியான்னு கேட்டுக்கிட்டது மட்டும் நல்லா நினைவிருக்கு. பெரிய தேட்டர்தான்.
அப்ப நாங்க டி.ஆர்.வோ காலனியில இருந்தோம்....விஜயலட்சுமி ஜெயராஜ் தேட்டர்ல போடுற பழைய சிவாஜி படங்களுக்குக் கூட்டீட்டுப் போவாங்க. ஜெயராஜ்ல ரொம்ப ரொம்பச் சின்னப் பிள்ளைல ஒரு படம் கூட்டீட்டுப் போனாங்க. சிவாஜி படந்தான். ஆனா அப்ப அது என்ன படம்னோ யாரு நடிச்சாங்கன்னோ நினைவிருக்கலை. ரொம்ப வருசம் கழிச்சி அந்தப் படத்தத் டீவில பாத்ததும் கண்டுபிடிச்சிட்டேன். மிருதங்கச் சக்கரவர்த்தி. அவரு மடியில மிருதங்கத்த வெச்சிக்கிட்டு உக்காந்திருக்குற மாதிரி கட்டவுட்டு வெச்சிருந்தாங்க. அப்ப அதான் சிவாஜின்னு கூடத் தெரியலை.
சினிப்பிரியா, மினிப்பிரியா, சுகப்பிரியா, செண்ட்ரல், சக்தி, சிவம், ஷா ஆகிய தேட்டர்களும் தெரியும்.
http://thenkinnam.blogspot.com/2007/12/101.html
அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடிக்கும்.
http://thulasidhalam.blogspot.com/2007/12/blog-post_11.html
போன வாரம் இங்க டச்சுக்காரர் ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அப்ப அவர் சொன்னாரு.
சிண்ட் கிளாஸ்...சாண்டா கிளாஸ் மாதிரிதான். முந்தி ஸ்பெயின்ல இருந்து ஒரு கிருஸ்துவச் சாமியார் வந்து ஊர்வலம் போவாராம். அவருக்கப்புறம் இங்க இருக்குறவங்களே ஊர்வலம் நடத்தீருக்காங்க. இப்ப என்னடான்னா...அது மத ஊர்வலம்னு இல்லாம பண்டிகை ஊர்வலம் மாதிரி ஆயிருச்சாம். மக்களும் பெருசா எடுத்துக்கலை. மாறாம வெச்சிருந்தா அழுகீரும். ஆனா எதைச் சேக்கனும்னும் இருக்கு.
மொத்தத்துல கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.
http://engineer2207.blogspot.com/2007/12/blog-post.html
ம்ம்ம்ம்.....நம்மாளுங்க நம்மாளுங்க ஏமாத்துறப்போ அடுத்தவன் ஏமாத்துறதுல என்ன வியப்பு.
தப்பு ரெண்டு பக்கமும் இருக்குறாப்புல தெரியுது. நாங்க வெளியில இருந்து பாக்கைல...சரியான வெவரம் தெரியாது. உள்ளூர்க்காரங்க சொல்றீங்க. தெரிஞ்சிக்கிறோம். 2007 புத்தாண்டில் மலேசியாவில்தான் இருந்தேன். நல்ல வளமாக முன்னேறிக்கொண்டிருக்கும் நாடு என்பது தெளிவாகவே தெரிந்தது. எல்லாரும் நல்லாயிருக்கட்டும்.
http://avanthikave.blogspot.com/2007/12/foot-ball-player.html
அரண்மனை பிரமாதம். என்னது வீடா? அது சரி.
http://vinaiooki.blogspot.com/2007/12/survey_10.html
கதை எனக்குப் பிடிச்சிருந்தது. நச்சென்று முடிவில்லாமல் முத்தென்று இருந்தது. ஆனால் அதுவும் சிறப்பு. முடிவை ஊகிக்க முடியவில்லை. மிகவும் ரசித்தேன்.
http://cyrilalex.com/?p=361
பாடலைக் கேட்டேன். நன்றாக இருக்கிறது. சமீபத்தில் நான் ரசித்துக் கேட்ட மலையாளப் பாடல்..அனந்த பத்ரம் படத்தில் வரும் பிணக்கமானோ என்னோடு இணக்கமானோ என்ற பாடல்.
இதோ இங்கே பார்க்கலாம்
http://www.youtube.com/watch?v=zaMK6O8tbBw
http://koodal1.blogspot.com/2007/12/5.html
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
சந்தான புஷ்ப பரிமள கிண்கிணியுகளமிர்தப் பிரபாலிங்கன
சந்திரசேகர மூஷிகாரூட வெகுமோக
சத்யப் பிரியாலிங்கன சிந்தாமணிகலச
கரகடகபோலத் த்ரியம்பக விநாயகன் முதல்....
சிவனை வலம் வருமளவில் உலகடைய நொடியில் வரும் சித்ரக் காலாப மயிலாம்
இதாங்க என்னோட பின்னூட்டம். ஆனா கதை ஒன்னும் நகரக்காணமே!!!!
http://pathivu.madurainagar.com/2007/09/3.html
உன்னா உடித்த உண்ணும் உடித்துன்னு நடத்தியிருக்கீங்க :)
அது பாசிப்பயறு இல்லையாம். உழுந்தாம். சரியான்னு கேட்டுச் சொல்லுங்க.
அதெல்லாம் சரி... திருமலை நாக்கர் மகாலை யாரு இடிச்சாங்க. வெள்ளைக்காரங்களா?
மகால்ல ஒளியொலி காட்சி நடத்துறாங்களாமே. அதுல என்ன காட்டுறாங்க?
http://vettipaiyal.blogspot.com/2007/12/blog-post_14.html
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்...நல்லாருக்கு. ஆனா பரிசு பெறும் அளவுக்கு நல்லாயிருக்கான்னு எனக்குச் சொல்லத் தெரியலை. திருப்பம்...இருக்குது. எதிர்பாராத திருப்பம்தான். ஆனா அந்தத் திருப்பாதால பெரிய திக்பக் சந்தோசம் எதுவும் வரலை.
அதுவுமில்லாம சூர்யாவை அவன்னு சொன்னதுல சின்ன சறுக்கல்னே நெனைக்கிறேன். சம்பந்தி அவர்னு ஆகும் போது சூர்யாவும் அவர்னு இருக்கனும். ஆனா அவர்னா உண்மை தெரிஞ்சு போகும். அந்த அவன் வராமச் சொல்லீருந்தா நல்லாயிருந்திருக்கும்.
திருப்பக் கதைகள்ளயே நான் ரொம்பவும் ரசிச்சது பேய்க்கதைதான். ஜெனி புல்லாங்குழல் ஊதுன கதை. அப்புறம் பினாத்தலாரின் பொன்னியில் செல்வன்.
http://sangamwishes.blogspot.com/2007/12/wishes_14.html
வாழ்த்துகள் காபி. உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் உங்கள் மகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். முருகனருளால் நீடு வாழவும்..பீடு வாழவும் வாழ்த்துகிறேன்.
http://elavasam.blogspot.com/2007/12/blog-post_11.html
கொதஸ்... அருமை.
அந்தத் திருப்பம் வந்தப்புறம் ஒரு திக் அல்லது மகிழ்ச்சி அல்லது சோகம் அல்லது ஏதாவது ஒரு உணர்ச்சி நெறைய வரனும். நான் படிச்ச வரையிலயும் மூனே மூனு கதையிலதான் அது வந்துச்சு. ஒன்னு பினாத்தலாரின் பொன்னியின் செல்வன். அடுத்தது ஜெனி புல்லாங்குழல் ஊதுனது. அடுத்தது ராகவன் பைத்தியமானது.
மத்தவங்க கருத்து என்னன்னு தெரியாது. ஆனா உங்க கதை நல்லாருக்கு.
http://myspb.blogspot.com/2007/12/blog-post_14.html
இல்லை. இந்தப் பாடலைப் பாடியது ஏ.வி.ரமணன். எஸ்.பி.பி அல்ல. பாலுவின் குரலைப் போலப் பலர் பாடியிருக்கிறார்களே.
http://cyrilalex.com/?p=362
சிறில், புரியுறாப்புலயும் இருக்கு. சரியாப் புரியாத மாதிரியும் இருக்கு. எல்லாம் கூட்டுக்களவாணிங்கன்னு சொல்ல வர்ரீங்க. அதான?
http://surveysan.blogspot.com/2007/12/blog-post_09.html
:) உங்க கதையையும் படிச்சிட்டேன். :)
http://osaichella.blogspot.com/2007/12/blog-post_14.html
உங்க கருத்தோடு முழுமையாக ஒத்துப்போகிறேன். இந்தக் கருத்துக்கு என்னுடைய வெளிப்படையான ஆதரவுகள் உண்டு.
ஆசைக்கு ஒன்றும் ஆஸ்திக்கு ஒன்றும் கட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும்....ஆசைக்கு மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்டு வைத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது புரியப்போவதில்லை.
http://kouthami.blogspot.com/2007/12/blog-post_8570.html
மூத்த பதிவர்னு சொல்லிக்கிறத்தான் முடியுதே தவிர... ஒரு பேரையும் கண்டுபிடிக்க முடியலையேய்யா!!!!!!
http://videospathy.blogspot.com/2007/12/blog-post.html
தமிழில் கவிதை அருமை. பாடிய குரல்கள் அருமை. பீ.பி.சீனிவாசும் பி.சுசீலாவும். இசையமைப்பும் அருமைதான்.
தெலுங்கில் இசையும் பெண்குரலும் தமிழில் இருந்ததுதான். ஆனால் கவிதை மாறியிருக்கிறது. சூச்சி வலச்சி செந்தக்கு பிலச்சி...பார்த்தேன் சிரித்தேன் மாதிரித்தான் முயன்றிருக்கின்றார்கள். சொல் விளையாட்டு இருக்கிறது. மொழி புரிவதால் தமிழ் வரிகளில் உள்ள ஆழம் தெலுங்கு வரிகளில் இல்லை என்பதும் புரிகிறது. தெலுங்கிலேயே ஆழம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பாடல் வரிகளில் இல்லை.
அடுத்த குறை கண்டசாலா. இவர் நல்ல பாடகர்தான். ஆனால் ஏற்ற இறக்கங்கள் இறங்கியே இருக்கும். பீ.பி.ஸ்ரீநிவாஸ் தெலுங்கும் பேசத் தெரிந்தவர். அவரே பாடியிருக்கலாம். இசையரசியைச் சொல்ல வேண்டியதில்லை. தமிழில் அவர் செய்த சிறப்பைத் தெலுங்கிலும் செய்திருக்கிறார்.
அது சோபன் பாபுவா? யார் இந்த நெளிந்த இடுப்பர்னு நெனச்சேன். :)
http://vettipaiyal.blogspot.com/2007/12/blog-post_14.html
// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
எல்லா திருப்ப கதையும் படிச்சேன். சில கதைகள் திக்னு இருக்கு. சில கதைகள் மனசை பாரமாக்குது. சில கதைகள் "அட!!!"னு ஆச்சர்யப்பட வைக்குது (குறிப்பா பினாத்தலாரின் பொ.செ). அதான் கொஞ்சம் எல்லாத்தையும் தள்ளி எழுதலாம்னு இந்த கதை முயற்சி செஞ்சேன். படிச்சி முடிச்சவுடனே ஒரு சின்ன அசட்டு சிரிப்பு வரனும்னு. வேற எதுவும் பெருசா முயற்சி செய்யல. அது வந்துச்சா என்னனு நீங்க தான் சொல்லனும். //
வரலைன்னுதான் சொல்வேன்.
// சூர்யாவை அவனு சொன்னது எனக்கு தப்பா தெரியல. சம்பந்தியை மட்டும் அவர்னு சொன்னது தப்பு தான். அதை சரி செய்தாச்சு. அன்னைக்கே மாத்தனும்னு நினைச்சேன். விட்டுட்டேன். //
ம்ம்ம்ம்... இல்லை. இங்க நான் மாறுபடுறேன். why should i bother to think the writter can be young or old? யார் எழுதீருந்தாலும் அது பொருந்தாதுன்னுதான் தோணுது. இருந்தாலும் இதுபத்தி வாதம் பண்ண விரும்பலை. உனக்குத் தெரியாததை எதுவும் நான் சொல்லீரப் போறதில்லை.
//எனக்கு ரொம்ப பிடிச்சது கொத்ஸ் கதைதான் :-)) //
பிடிக்குமே. ராகவனுக்குப் பைத்தியம்னா பிடிக்காமலா இருக்கும். :)))))))))))))
கொத்ஸ் கதை எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. உன் கதையப் படிச்சிட்டுத்தான் அவர் கதையப் படிச்சேன். அதுனால அதைச் சொல்லலை.
http://pettagam.blogspot.com/2007/12/blog-post_12.html
பா பா பா பா பா பா பாம்பு..... பயம்மா இருக்கே. மலேசியால பாம்புக்கோயில்னு ஒரு புத்தரு கோயில் இருக்கு. பயந்துக்கிட்டேதான் போனேன். முந்தி அளவுக்குப் பாம்புக இல்லையாம். அப்பாடி தப்பிச்சேன்.
சிங்கப்பூர்ல ஒரு அக்கா பாம்பை மேல மாலையாப் போட்டு சிவபெருமானியா நின்னாங்க. தொடக்கூடப் பயம்.
இப்பிடி இருக்குறப்போ பாம்போட நெருங்கி நட்போடப் பழகுறாங்கன்னா..பாராட்டித்தான் ஆகனும். என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
http://mazhalaitalk.blogspot.com/2007/12/blog-post.html
இஞ்சி ரொட்டி வீடு ரொம்ப அழகாயிருக்கு. :) நல்லா செஞ்சிருக்கீங்க.
http://blog.thamizmanam.com/archives/110
நல்ல முயற்சி. இது எழுதுகிறவர்களை ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
http://mangalore-siva.blogspot.com/2007/12/blog-post_16.html
முழு வீடியோவையும் குடுக்கக்கூடாதா!!!!!
http://puratchithamizan.blogspot.com/2007/12/blog-post_14.html
இது எந்த வகையான எம்.என்.சி? அதையும் சொல்லுங்க. ஏன்னா ஒவ்வொரு துறை நிறுவனத்துலயும் ஒவ்வொருவிதமான வேலையடுக்குகள் இருக்கும்.
சரி. இந்த எம்.என்.சி போயிருச்சுன்னா எல்லாருக்கும் பயன் வந்துருமா? நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு தெளிவாச் சொல்லுங்க.
எனக்குத் தெரிஞ்சி 10 மணிக்கு வந்துட்டு 4 மணிக்கு வீட்டுக்குப் போறது அரசாங்க அலுவலகத்துலதான் நடக்குது. அரசாங்க அலுவலகத்துலயும் இதே மாதிரி பட்டியல் போடுங்க. அப்பத்தான் ஒப்பிட்டுப் பார்க்கவும் வசதியா இருக்கும்.
அப்புறம்....எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம். பெயர்ல புரட்சியும் இருக்கு. தமிழும் இருக்கு. கொஞ்சம் எழுத்துப்பிழைகளைச் சரி செய்ங்க.
http://verygoodmorning.blogspot.com/2007/12/blog-post.html
நல்ல பதிவு. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். உலகெங்கும் அன்பும் அமைதியும் வளமும் கல்வியும் நட்பும் இன்னபிற நல்லன எல்லாம் பெருகட்டும்.
http://veyililmazai.blogspot.com/2007/12/2.html
கதைய இப்பத்தான் பாக்குறேன். என்னடா பய ஒன்னாம் பாகம் எழுதீட்டு ரெண்டாம் பாகம் போடவேயில்லையேன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். பாத்தா போட்டு...பின்னூட்டங்களும் கொட்டிக் கிடக்குது.
ம்ம்ம்ம்ம்.....அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங். கதையில உன்னோட பலமே வசனங்கதான். விவரிப்பை விட அவை சுவையா இருக்குது. :)
http://radiospathy.blogspot.com/2007/12/24.html
மீண்டும் நீங்கள் கேட்டவை. :) மகிழ்ச்சி மகிழ்ச்சி. அதுவும் நல்ல பாடல்களோடு.
திருவெம்பாவையோடு உமா ரமணன் தொடங்கும் செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு பாடல் தேன் தேன். ஆகா.
இசைக்கவோ நம் கல்யாண ராகம்...ஆகா...ஜெயச்சந்திரனும் ஜானகியும் மிக அழகாகக் குரலால் செதுக்கிய ஒலிச்சிற்பம்.
பார்த்த பார்வையில் பாடலை இப்பொழுதுதான் கேட்கிறேன். கௌரி மனோகரி படம் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா சரியா நினைவில்லை.
சுட்டும் விழிச்சுடர் பாட்டைப் பத்திச் சொல்ல வேண்டியதில்லை. பொன்மானே கோபம் ஏனோ...ஆகா...நல்ல பாட்டு. இன்னைக்கு ரெண்டாவது உமாரமணன் பாட்டு இது. :)
http://cvrintamil.blogspot.com/2007/12/blog-post_16.html
படமெல்லாம் நல்லாருக்கு. எவ்ளோ பனி எவ்ளோ பனி. இந்தக் குளிர்ல தனியாவா இருக்கீங்க?
http://verygoodmorning.blogspot.com/2007/12/blog-post.html
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//உலகெங்கும் அன்பும் அமைதியும் வளமும் கல்வியும் நட்பும் இன்னபிற நல்லன எல்லாம் பெருகட்டும்//
என்னங்கண்ணா இது? லோக சம்ஸ்தா சுகினோ பவந்து-ன்னு எல்லாம் வாழ்த்தறீங்க! ;-) //
என்னது சமோசாவா? ஆசையக் கெளப்புறீங்களே. இங்க கெடைக்காதே. :)
வடமொழியில தெரியலைங்க. தமிழ்ல தெரிஞ்சதச் சொல்லீட்டேன். கற்றது கீபோர்டு அளவு. கல்லாதது இண்டர்நெட் அளவுன்னு மட்டுந்தான் எனக்குத் தெரியும். :)
// நீங்க தான் சுப்ரபாதம் ஏன்? எதுக்கு எழுப்பணும்னு மொத பின்னூட்டம் போட்டீங்க! நினைவிருக்கா?
இந்த மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்பதை அருணகிரியும் அப்படியே ஆண்டிருக்காரு!
அதைச் சொல்லுவீங்க-ன்னு காத்துகிட்டு இருந்தேன்! //
அருணகிரி ஆண்டிருக்காரா? ஓ சுப்ரபாதத்துல இருந்து அருணகிரி ஆண்டிருக்காரா. அடடா...தெரியாமப் போச்சே. தெரிஞ்சா சொல்லாமலா போகப் போறேன்.
// நீங்க மடத் தலைவர் ரேஞ்சுக்கு ஆசிர்வாதம் கொடுத்துட்டு போயிட்டீங்களே! :-) //
என்னைய மடையன்னு ரொம்ப நாகரீகமாச் சொல்றீங்க. சரி. சரி. புரியுது.
// தமிழ் மழை பொழிங்க தல! //
தமிழ் மழையா?
கருமுகில் தருமழை எனபல
நறுமொழி பெருதொகை பொலிவது
வருவது அறுமுகன் ஒருவனின்
திருப்புகழ் மகிழ்வுடன் செப்பிடவே! ;)
http://verygoodmorning.blogspot.com/2007/12/blog-post.html
//// //தமிழ் மழையா?
கருமுகில் தருமழை எனபல
நறுமொழி
பெருதொகை பொலிவது
வருவது அறுமுகன்//
சூப்பரு!
//ஒருவனின்
திருப்புகழ் மகிழ்வுடன் செப்பிடவே! ;)//
இங்கன தளை தட்டுதே! யப்பா கொத்சு! ஒதவிக்கு வாப்பா!//
அட...இங்க தளை தட்டினா என்ன தட்டாட்டி என்ன....இது வெண்பா கலிப்பா இல்லை. களிப்பான என்பா. அதுல பிழை இருக்கான்னு பாக்கத்தான் ரவிக்குத் தெரியும். என்ன பாக்கனும்னு முருகனுக்குத் தெரியும். ;)
http://madhumithaa.blogspot.com/2007/12/blog-post_17.html
நட்சத்திர மதுமிதாவிற்கு வாழ்த்துகள். வணக்கங்கள். இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள். இதுல எதுவும் உள்குத்து இல்லீங்க :)
http://cvrintamil.blogspot.com/2007/12/5.html
ப்ரகாஷுன்னு கதாநாயகனுக்குப் பேரு வெச்சாலே காதல்ல பெரச்சனைதான் போல. முடிவு சுபமாயிருந்தாச் சரி.
அது சரி...ஒரு டவுட்டு....உண்மையிலேயே இவங்க ரெண்டு பேருக்கும் காதல்தானா?
http://cyrilalex.com/?p=364
இது.....இது நச்சு நச்சுன்னு இருக்கு. ஐரிஷ் கிரிமூக்க்கு ஆப்பிளைக் கடிச்சிக்கிறாபுல கதைய்யா.
முடிவை ஊகிக்க முடியலை. நாங்கூட அந்தப் பயலும் ரோபோட்டும் சேந்து ஏதாச்சும் செய்வாங்கன்னு நெனச்சேன். அட....ஆராய்ச்சிய்யா...ஆராய்ச்சி. :0
http://thenkinnam.blogspot.com/2007/12/blog-post_6605.html
பாலு பாடுனதுலயும் ஏசுதாஸ் பாடுனதுலயும் சுர வேறுபாடெல்லாம் ஒன்னும் இருக்குறாப்புல தெரியலை. இலக்கணப்படி ரெண்டு பேரும் நல்லாப் பாடியிருக்காங்க. ஆனா இந்தப் பாட்டுக்கு ஏசுதாசின் குரல் மிகப் பொருத்தம். ஆழமான கொரல் அவருக்கு. அது தெரிஞ்சுதான் இளையராஜா பாலுவையே பயன்படுத்தாம ஏசுதாசைப் பயன்படுத்தீருக்காரு. என்னோட ஓட்டு ஏசுதாசுக்குத்தான்.
http://vinaiooki.blogspot.com/2007/12/survey_17.html
என்னங்க இது....பேய்க்கதையா எழுதுறீங்க. நீங்க நீங்கதானே :)
http://raamcm.blogspot.com/2007/12/blog-post.html
ஹா ஹா ஹா
புரியுது தம்பி.. புரியுது. ஏதோ ஜினிமாலதான் மலேசியா சிங்கப்பூரு சுச்சருலாந்துன்னு ஆடுறாக பாடுறாக. ஒங்க நம்பரு ஏதோ ஆசையக் கழுத பட்டுத் தொலைச்சிட்டாரு. விட்டுருய்யா :)
அதென்ன பொரட்டா சாலுனான்னு வயித்தெரிச்சல கெளப்புத? இங்ஙன ரொம்பக் கயிட்டப்பட்டு நேத்துத் தோசையச் சுட்டுப் புட்டோம்யா... பயக கண்ணுல தண்ணி. நாங்கழுத உள்ளூருச் சாப்பாடுதான் சாப்புடுறது.
http://veyililmazai.blogspot.com/2007/12/3.html
பேரில்லாத வேரில்லாத ஒரு கேள்வியக் கேக்க....கூரில்லாதவன் என்ன சொல்லப் போறானோ தெரியலையே!!!!!
http://tamilarangam.blogspot.com/2007/12/blog-post_17.html
அரசியல்வாதிங்கள நம்பாதீங்கன்னா கேட்டாத்தானே....சாதி, மொழி, இனம், மதம் இப்பிடி அத்தனையும் சொல்லுவாங்க. ஆனா அவங்க அதுக்கு ஒன்னும் செய்ய மாட்டாங்க. நம்மதான் தலைவரு புலவரு தலைவி அன்னைன்னு ஏமாத்திக்கிறோம்.
http://surveysan.blogspot.com/2007/11/14.html
சர்வேசரே... இதோ ஒரு கதை. http://gragavan.blogspot.com/2007/12/blog-post_17.html
இத போட்டீல சேத்துக்க வேண்டாம். எல்லாருக்கும் ஒரு தூண்டுதலாத்தான் எழுதுனேன். நல்லாருந்துச்சுன்னா இன்ஸ்பிரேஷனுக்குச் சேத்துக்கோங்க. ஆனா போட்டிக்கல்ல. :)
http://madhavipanthal.blogspot.com/2007/12/blog-post_16.html
Across
1 திருவாரூர்
2 கரை
3 நம்பி
4 வந்தியத்தேவன்
5
6 மணியம்
7 அநிருதத
8 கருதிருமன்
9 பழையாறை
10
Down
1
2
4
11 பினாகபாணி
12
13 நிலவறை
14
15
16 தாழை
http://cvrintamil.blogspot.com/2007/12/blog-post_17.html
நல்ல கதை. நல்லா எழுதீருங்க சீவியார். எல்லாரும் விரும்பி உங்க கதையைப் படிக்கிறாங்கன்னு தெரியுது. ரொம்ப நல்லது. தொடரட்டும் இது.
http://koodal1.blogspot.com/2007/12/6.html
பிடாரியம்மன் ரொம்ப எளிமையா இருப்பாங்களா? எளிமையைப் போல அருமருந்தில்லைன்னு சொல்வாங்க. மனசுக்குப் புரியுது. ஆனா ஆசை நாடலையே. ஆனா கந்தனுக்கு எளிமை பிடிச்சிருக்கு போல. நல்லதுதான். எதுனால அப்படியாச்சுன்னு அடுத்தடுத்த பகுதிகள்ல தெரிஞ்சிட்டுப் போகுது.
http://manasukulmaththaapu.blogspot.com/2007/12/blog-post_17.html
ம்ம்ம்.. கொஞ்சம் சிக்கலான பிரச்சனைதான். காதல்னா ரெண்டு பக்கமும் தெரியும். நட்புக்கும் காதலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அது எங்க எப்படிப் பிரியுதுங்குறதுதான் சிக்கல். அது தீர்ந்திருச்சுன்னா காதல் அழகா வந்துரும்.
http://kuraikudam.blogspot.com/2007/12/blog-post.html
நல்லாருக்கு. :) ரசிச்சேன். நல்ல கற்பனை.
http://koodal1.blogspot.com/2007/12/blog-post.html
என்ன குமரன், இந்த வாட்டி பாட்டுகளாப் போட்டுட்டீங்க. ம்ம்ம்..இன்னமும் கதை புடிபடலை எனக்கு. நீங்க இனிமே சொல்லப் போறதுக்கும் இதுவரைக்கும் சொல்லிக்கிட்டிருக்குறதுக்கும் தொடர்ப்பு வெச்சிருக்கீங்கன்னு புரியுது. ஆனா என்னன்னு புரியலையே...ம்ம்ம்ம்ம்...இன்னும் ஒன்னு ரெண்டு பதிவுல புரிஞ்சிருமே. :)
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க....எப்பேற்பட்ட வரிகள்.. இந்த வரிகள் செஞ்ச வம்புகள் எத்தனையெத்தனை. அடடா!
http://cyrilalex.com/?p=365
கவிதையாஆஆஆஆஆஆஆஆஆ..... ம்ம்ம்ம்.... ரொம்பக் கஷ்டமாச்சே.... நீங்க எழுதுனதே புரியலை. இதுல என்னத்த எழுதுறது. அறிவாளிகளுக்கு வழி விட்டு ஒதுங்கிக்கிறேன். :)
http://thulasidhalam.blogspot.com/2007/12/blog-post_19.html
திருவேங்கடம் ஹரியானது எப்படின்னு கேள்விக்கு இப்பிடின்னு விடை சொல்றீங்க.
ஆனா...திருவேங்கடம் திருவேங்கடமானது எப்படின்னு யாராச்சும் கேட்டு வெச்சுட்டா என்னங்க பண்றது? :/
ரொட்டி சப்ஜின்னா இந்தியால சாப்புடுறதுதான. நல்லாருக்குமே. ஒரு செட்டு முடிஞ்சா பார்சல் அனுப்புங்களேன். :)
நீங்களும் காதாசிரியையாயிட்டீங்க. வாழ்த்துகள். :) இது கதை எழுதும் நேரம் போல.
http://heartnmindfights.blogspot.com/2007/11/place-beautiful-house-in-small-town.html
aaha....jyothikavuku phone podungappa :)
http://holyox.blogspot.com/2007/12/358.html
முழுக்க முழுக்க ஒப்புக் கொள்கிறேன்.
// சிரிப்பையும் சிறுநீரையும் அடக்கும் //
முருகா...
http://myspb.blogspot.com/2007/12/568.html
நல்ல பாட்டு. முந்தியே கேட்டிருக்கேன். ஆனா இப்ப மறுபடியும் கேக்கும் போதும் ரொம்பப் பிடிச்சிருக்கு.
http://imsaiarasi.blogspot.com/2007/12/i.html
ஆகா...வருக வருக. இது தொடர்கதைக்காலம். செவ்வாய் எப்ப வருமுன்னு காத்திருக்கோம்.
நல்ல தொடக்கம். அடுத்த பகுதியப் படிக்கத்தான் இப்போ வெயிட்டிங்கு :)
http://imsaiarasi.blogspot.com/2007/12/i.html
// J K said...
//பி.கு: ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.//
அப்போ இதுவும் சொந்த கதைனு சொல்றீங்களா? //
ஆகா...சொந்தமா எழுதுறதால சொந்தக் கதைன்னு சொல்லிக்கலாம்னா சொந்தக் கதைதாங்க :)))))))))))))
// நாகை சிவா said...
//ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.//
நீங்களும் அந்த வரிசை தான் என்பது நல்லாவே தெரியும்..
உங்களுக்கு எல்லாம் வேலை கொடுத்த அந்த புண்ணியவானை நினைச்சா தான் பாவமா இருக்கு.... //
ஹா ஹா ஹா சிவா... ஹா ஹா ஹா விழுந்து விழுந்து சிரிச்சேன்
http://koodal1.blogspot.com/2007/12/8.html
இப்பிடிக் கந்த புராணம், பாகவதம்னு சொல்லிக்கிட்டே போறீங்களே...கதைய எப்பச் சொல்லப் போறீங்க :)
அது சரி..அந்தக் கல்லுதான் அன்னைக்குக் கண்ணல் கால்ல விழுந்துச்சா. எங்கயிருந்து விழுந்துச்சு?
http://cyrilalex.com/?p=366
இதானா அது.. இப்பத்தான புரிஞ்சிருக்கு. புரிய வைத்த சிறிலாரே வாழ்க வாழ்க. (இது நுண்ணரசியலாகுமா?)
http://kannansongs.blogspot.com/2007/12/72.html
சூப்பர் பாட்டுங்க.
தியாகராஜ பாகவதர் பாடுறப்போ மெதந்துக்கிட்டே பாடுறாப்புல இருக்கும். அதுதான் அவரோட ஸ்பெஷாலிட்டி. மன்மதலீலையை வென்றார் உண்டோன்னு பாட்டு இருக்குல்ல...அதப் போடுறது.
http://holyox.blogspot.com/2007/12/357.html
கதையின் முடிவை ஊகிக்கலைங்குறதுதான் உண்மை. யாரோ ரெண்டு பேரோட காதல்னு சொன்னதும்...ஐயோ காதலைச் சொல்ல இவ்ளோ கஷ்டப்படுறாங்களேன்னு சங்கடமா இருந்துச்சு. கடைசில டிவிஸ்டு வேற வெச்சிட்டிங்க. பாவம் ஸ்வப்னா.
// குமரன் (Kumaran) said...
இராகவனும் நீங்களும் அடிக்கடி இந்த சப்ஜெக்டைத் தொடுகிறீர்கள். ஏன் என்று தெரியவில்லை. நண்பர்கள் யாராவது இந்த வகையில் இருந்து துன்பப்படுகிறார்களா? //
நான் எப்பங்க எழுதுனேன். ஒருவேளை கள்ளியிலும் பால் பத்திச் சொல்றீங்களா? அதுல எல்லாமே இருந்துச்சே. ஒன்னு ரெண்டு எல்லாமே...வேற எப்ப எழுதுனேன்?
http://raamcm.blogspot.com/2007/12/blog-post_22.html
ராம், சமீபத்தில் நான் படித்த மிக அருமையான சிறுகதைகளில் இதுவும் ஓன்று. மிகவும் ரசித்தேன். மிகமிக. எழுத்து நன்றாக வருகிறது.
பாலாஜிக்கு நீ சொன்னெ பதிலும் சரி. அந்தப் பெண் இறந்தது கதையல்ல. இறந்ததனால் நடந்தது கதை. இந்தக் கதைக்கு இவ்வளவு போதும். கோனார் நோட்ஸ் எல்லாம் குடுக்கத் தேவையில்லைன்னுதான் தோணுது.
http://blog.arutperungo.com/2007/11/blog-post_05.html
பொய்யின்றி கையோடு மொய் கொண்டு போனால் நல்லதுன்னு சொல்றீங்க. :)
நானும் எழுதீருக்கேன். ஒருவாட்டி. போதும்டா சாமீன்னு ஓடி வந்துட்டேன். யார் யாரோ மாப்ளேய், தம்பி, மருமகனே, மகனேன்னு கூப்ட்டு நமக்கு ஒன்னு எழுதுன்னு சொல்றாங்கப்பா. யார் யாரு எவருன்னே தெரியலை. தாங்க மாட்டாம கைமாத்தி விட்டுட்டு வந்துட்டேன்.
http://athusari.blogspot.com/2007/12/2007-unicef.html
நல்லடியார், இஸ்லாம் குறித்தான கருத்துகளுக்கு நான் வரவில்லை. ஆனால் ஒரு கேள்வி எழாமல் இல்லை.
ஒருவேளை இதே போலத் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு...அட...நீங்கள் போட்டிருக்கின்றீர்களே...அதே படத்தையும் யுனிசெப் போட்டிக்கு அனுப்பியிருந்து....அது தேர்வாகியிருந்தால் என்ன செய்திருப்போம்? தமிழர்களைக் கேள்வி கேட்கின்றவர்களை நீங்கள் இங்கே கேட்டிருப்பது போலக் கேட்டிருப்போம். நம்மைச் சுட்டிக்காட்டும் பொழுது....அது தவறாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. இது என்னுடைய கருத்து. அவ்வளவே.
http://koodal1.blogspot.com/2007/12/11.html
குமரன், இப்பத்தான் தொடரின் விட்டுப்போன அத்தியாயங்களைப் படிச்சிட்டு வந்தேன். கந்தனும் கேசவனும் திடீர்னு காணாமப் போயிட்டாங்க. வரிசையா சாமி கதை சொல்லீட்டு வர்ரீங்க. எப்படி இந்த ரெண்டு விதங்களையும் ஒட்டுப்போடப் போறீங்கன்னு தெரியலை. காத்திருக்கேன்.
http://vettipaiyal.blogspot.com/2007/12/blog-post_23.html
திருப்பு திருப்புன்னு திருப்பீட்ட போ :) சரி.. இதப் போட்டீல சேத்தாங்களா இல்லையா?
http://blog.arutperungo.com/2007/12/blog-post_1128.html
நல்லாருந்தது. புதுமையான சொல்முறை.
அப்புறம்....பின்னூட்டமிடனும்னா அது மேல நகட்டவும்னு போட்டிருக்கியே. அத எடுப்பா...தொல்லையா இருக்குது. வலைப்பூவுக்கு ஒரு ஸ்க்ராலு, பின்னூட்டத்துக்கு இன்னொரு ஸ்க்ராலு...
http://ennulagam.blogspot.com/2007/12/blog-post.html
ஆகா...ரொம்ப நாள் கழிச்சி உங்க பதிவுகளைப் பாக்கக் கெடைச்சிருக்கு. மலேசியப் புத்தாண்டா. சூப்பரு. போன வருசப் புத்தாண்டு எனக்கு மலேசியாலதான். நல்ல வளமையான ஊரு. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
http://thulasidhalam.blogspot.com/2007/12/3.html
எக்ஸ்பிரஸ் மாதிரி கதை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு போகுது. வந்தவன் கூடப் பொறந்ததுகளையும் கூட்டீட்டுப் போயி ஒரு நல்லது பண்றானாக்கும். ரொம்ப நல்லது. வாழ்க வளமுடன்.
http://imsaiarasi.blogspot.com/2008/01/blog-post_10.html
நல்லாருக்கு கதை. மிகவும் ரசித்தேன். நல்ல பாத்திரங்கள். அதைப் பயன்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது.
http://madhavipanthal.blogspot.com/2008/01/10.html
அடுத்து நீங்களா... ம்ம்ம்ம்ம்... ஏற்கனவே கதை கதி கலங்குது. நீங்களும் சூப்பரா கதி கலக்கீட்டீங்க்க. பெனாத்தலார் பாடு திண்டாட்டந்தான்.
http://malarvanam.blogspot.com/2008/01/blog-post.html
அதாவதுங்க... குடிக்கிறது புகைக்கிறதுன்னு வந்தா... அது ஆணுக்கும் பெண்ணுக்கும் கெடுதிதான். ஆணுக்கு மட்டும் நல்லதுன்னா சொல்றோம்.
ஆனா ஆண் குடிக்குறப்போ கெடாத பண்பாடு பெண் குடிச்சப்போ கெடுதுன்னு சொல்றாங்க பாருங்க..அப்பத்தான் எரிச்சல் வருது. அடேய் பண்பாட்டுக் காவலர்களா... குடிக்கிறது எல்லாருக்கும் கெடுதல்தானய்யா...போய் ஆண்கள் குடிக்கிறப்பவும் சொல்லுங்கய்யா...அட நீங்களே குடிக்கிறவங்கதானே...இப்படித்தான் கேக்கத் தோணுது.
அதுக்காக பெண் குடிக்கனும்னு தேவையில்லை. ஆனா அந்த முடிவை அந்தப் பெண்ணே எடுத்தால் அந்த உரிமை அவளுக்கு உள்ளது. அதே போலத்தான் உடை விஷயத்திலும். இதுதான் என்னுடைய கருத்து. மத்தபடி இதைத் தமாஷ்னு சொல்றதெல்லாம் செம தமாஷ்தான்.
http://dharumi.blogspot.com/2008/01/argument-continues.html
தருமி சார். இது போன வருசம் பேசுன அதே விஷயந்தான்.
பொங்கல் தமிழர் திருநாள்னு சொல்றோம். அப்ப தமிழர்னு சொல்ற எல்லாருக்குந்தான் திருநாள். அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது மிகச் சிறப்பு.
ஓகை எளிதாக இந்துப் பண்டிகை என்று சொல்லிவிடலாம். ஆனால் இந்து என்பதே ஒரு கலப்பிதம். அப்படியிருக்கையில் ஐநூறும் ஆயிரமும் மட்டும் ஏன் கலக்காமல் இருக்க வேண்டும்.
அவரவர் வழியில் பொங்கலைக் கொண்டாடுவதில் தவறில்லை. சூரியனை வணங்குவது என்பது ஒரு விதம். அதை இயற்கை என்ற கோணத்தில் பார்க்க விரும்புகிறவர்களும் பார்க்கலாம். மொத்தத்தில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நம்மை விட்டுக் கொடுக்காமலும் அதே நேரத்தில் அணைத்து வாழவும் தெரிந்திருக்க வேண்டும்.
சுருங்கச் சொன்னால் முருங்கை உடையும். மூங்கில் இசை கொடுக்கும்.
http://vadakkupatturamasamy.blogspot.com/2007/12/blog-post_22.html
நல்லாருக்கு ரீமிக்ஸ் :)
http://kappiguys.blogspot.com/2007/12/blog-post_29.html
ஏட்டிக்குப் போட்டீங்குறது இதுதானய்யா....நல்லாவே போட்டி போடுறாங்கோ........
http://abiramibhattar.blogspot.com/2007/12/71.html
நல்ல விளக்கம்.
பனிமாமதியின் குழவி என்ற இடத்தில் குழந்தை என்று சொல்ல வேண்டியதில்லை.. குட்டி என்றும் சொல்லலாம். நிலாக்குட்டியைச் சூடிக் கொண்டன்னு சொன்னா பொருள் வருதுல்ல.
Post a Comment