Friday, November 07, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் - நவம்பர் 2008

நவம்பர் 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

23 comments:

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/11/blog-post_07.html

யானைக்கு என்னுடைய ஆறுதல்கள். யானையும் நானும் இந்த விஷயத்துல ஒன்னுதான்.

என்னன்னு கேக்குறீங்களா..... இந்தியாவுக்குக் கூப்புடுறதுக்குன்னே ஒரு மொபைல் வெச்சிருந்தேன். லைகா-ன்னு ஒரு மொபைல் கம்பெனி. வெளிநாட்டுக்குக் கூப்டா ரொம்ப மலிவு. அதுனால 33 யூரோவுக்கு ஒரு மொபைலை வாங்கி.. அதுல லைகா சிம் கார்டு போட்டு... அப்பப்ப தேவைக்கு ஆன்லைன் டாப்பப் பண்ணீட்டு கால் பண்ணீட்டு இருந்தேன்.

நெதர்லாந்துக்குன்னு இன்னொரு மொபைல் இருக்கு. அது ஒசத்தி மொபைல் கீ பேடே கிடையாது. எல்லாம் டச்சிங் டச்சிங்தான். அதுல இண்டர்நெட்டெல்லாம் வருது. என்ன வசதின்னா 150 நிமிடம் இலவசம். 100 குறுஞ்செய்தி இலவசம். ஆகையால அடிப்படைத் தொகையிலேயே நம்ம அடிப்படைத் தேவைகள் தீர்ந்திரும்.

இப்பிடிச் சிக்கனமா இருந்த நான்...ஒரு நாள்... அதென்ன ஒரு நாள்... நவம்பர் 5ம் தேதி 200ம் வருசம்....மொபைலைக் கைதவறி எங்கயோ வெச்சிட்டேன். என்னது..எந்த மொபைலா....அதாங்க 33 யூரோ மொபைல். அந்த மொபைல்தான். எங்க தேடியும் கிடைக்கலை. 43 யூரோ போச்சு. பத்து யூரோவுக்குக் காசு அதுல மிச்சம் இருந்தது.

வேற வழி... அப்பாம்மாவுக்குத் தினமும் பேசனுமே.... கடைக்கு ஓடு.... 33யூரோ மொபைலைக் காணோம். சரின்னு 59யூரோவுக்கு ஒரு தொறந்து மூடுற மொபலை வாங்கி... ஒரு லைகா சிம்மையும் வாங்கிப் போட்டாச்சு. :)

ஆகையால யானை புண் மயிலுக்குத் தெரியும். :-)

G.Ragavan said...

http://www.luckylookonline.com/2008/11/blog-post_08.html

இந்தப் படத்த நானும் பாத்துட்டேன். என்ன சந்தோசம்னா.. அமெரிக்காக்காரனுக பார்க்குறதுக்கு முன்னாடி பாத்துட்டோமென்னு. இதே மாதிரி ஹாரி பாட்டர் புத்தகமும் அமெரிக்காக்காரனுகளுக்கு முன்னாடியே இந்தியாவுலயே படிக்க முடிஞ்சது. முழுசா ஒரு நாளுக்கு முன்னாடி. ஏன்னா இதெல்லாம் பிரிட்டிஷ் பின்னணிச் சமாச்சாரங்கள்.

வெளிப்படையச் சொல்லனும்னா... நான் பாத்த மொத சேம்ஸ்பாண்டு படம் இதுதான்.என்னய்யா சேம்ஸ்பாண்டுன்னு கேட்டவன் நான். இனிமே இதுக்கு முன்னாடி வந்த படங்களையெல்லாம் பாக்கனும்யா...

நீங்க சொன்னாப்புல ஈரோ ஈரோயினி ரெண்டு பேருமே செம கட்டுடலா இருக்காங்க. டேனியல் கிரெய்க் அமைதியா அலட்டல் இல்லாதவராத் தெரிஞ்சாலும்.... நீங்க சொல்றப்புல உள்ள பொங்கல் வெச்சுக்கிட்டேயிருக்காருன்னு தெளிவாத் தெரியுது. நல்ல தேர்வு.

எனக்குப் படத்துல எது பிடிச்சது தெரியுமா? கடைசீல அந்த வில்லக் கேணைக்கு எண்ணக் கேனை கொடுத்துட்டுப் போறதும்...அதனால அவனுக்கு என்ன ஆகுதுங்குறதும்தான்.

படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும்.. கடற்புறக் காட்சிகள் இத்தாலியின் சிங்க்யூ தெர்ரா என்ற இடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. மிகமிகமிக அழகான பகுதி.

G.Ragavan said...

http://www.luckylookonline.com/2008/11/2008.html

சினிமாக்காரங்களோட இந்த நிலைக்குக் காரணம் அவங்களேதான். சினிமா கலையின் ஒரு வடிவம். அதை வெறும் தொழிலாப் பாத்தா இப்படித்தான் ஆகும். கலைக்கும் தொழிலுக்கும் ஒரு இணக்கம் இருக்கனும். அத விட்டுட்டுப் பேராசைப் பட்டா பெருநட்டந்தான். குறிப்பா நடிகர்கள். அடேங்கப்பா.... ஆடுற ஆட்டமென்ன... முதலமைச்சர் ஆயிட்ட மாதிரியும்.... ராஜ்பவன்ல பதவிய ஏத்துக்கிட்ட மாதிரியும்.... பெரிய *டிங்கி மாதிரியும் நடந்துக்கிட்டா அப்புறம் படம் என்னத்த ஓடும்.... சிவாஜி ஜெயிச்சாரு. அவரு படப்பிடிக்குத் தாமதமா வந்தாருன்னு யாரையாச்சும் சொல்லச் சொல்லுங்க பாப்போம். எம்.ஜி.ஆர் ஜெயிச்சாரு. ஆனா அவரு எவ்வளவு நுணுக்கமான ஈடுபாட்டோட இருந்தாரு. கமலும் ரஜினியும் கூட தொடக்ககாலத்துல காட்டிய ஆழ்ந்த ஈடுபாடு அளப்பரியது. இளைய தளபதிங்குறான்...நாளைக்குப் பழைய தளபதியாகப் போறது தெரியாம. திருந்துங்கடான்னா கேட்டாத்தான...நுனிக்கெளைல உக்காந்துக்கிட்டு வெட்டுறாங்க. வெட்டட்டும். நமக்கென்ன... இதில்லைன்னா இன்னோன்னு. ஆனா அவங்களுக்கு?

G.Ragavan said...

http://www.luckylookonline.com/2008/10/blog-post_21.html

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை முதன்முதலா வீடியோலதான் பாத்தேன். ஊர்ல ஏதோ விசேசத்துக்குப் போனப்போ டெக்கெடுத்து வீட்டுல போட்டாங்க. அதுல இதுவும் ஒன்னு. பொழுது போக்குக்குன்னே எடுத்த படம்.

நீங்க சொன்ன மாதிரி பாட்டெல்லாமே கலக்கல். தொடக்கத்துலயே எனது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்னு விறுவிறுப்புதான். எனக்கு ரொம்பப் பிடிச்சது பச்சைக் கிளி முத்துச்சரம் பாட்டும் பன்சாயீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ பாட்டும். அவளொரு நவரச நாடகம் பாட்டு படமாக்கப்பட்ட விதம் உண்மையிலேயே அழகுதான்.

பச்சைக்கிளி பாட்டு முடிஞ்சதுமே மேட்டா ரூங்ராத்தைத் தங்கச்சின்னு இவரு சொல்றதும்.. அந்தப் பொண்ணு அண்ணான்னு சொல்றதும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

மத்தபடி உலகம் சுற்றும் வாலிபன் எனக்கும் பிடித்த படமேதான். நீங்க நம்ப மாட்டீங்க.... ஒரு ஆறேழு வருசத்துக்கு முன்னாடி... உலகம் சுற்றும் வாலிபன் படம் வந்தது. அதுக்கு பெங்களூர்ல அவ்ளோ கூட்டம். எம்.ஜி.ஆருக்கு அவ்ளோ பெரிய கட் அவுட். எனக்கே ஆச்சரியமாப் போச்சு.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/11/blog-post.html

நிறம் மாறாத பூக்கள் ஒரு அருமையான படம். வித்யாசமான கதையமைப்பு. பாத்திரப்படைப்புகள் கூட. இசையைப் பத்திச் சொல்லனுமா.

நீங்க சொல்ற மாதிரி... இளையராஜாவின் பின்னணியிசையின் மெருகேறல் தொடங்கியதும் ஒருவிதமான மேற்கத்திய தாக்கம் இசையில் இறங்கியதும் இந்தப் படத்துல இருந்துதான்னு தோணுது.

இளையராஜா இசையமைச்ச படங்களின் பாடல்களை வந்த வரிசைக்கிரமமா கேட்டப்ப எனக்கு மேல சொன்னதுதான் தோணிச்சு. அதுக்கு முன்னாடி பல படங்களில் மெல்லிசை மன்னரின் நீட்சியாகத்தான் இருந்தது இசை. ஆனால் தனித்துவத்துமான மெட்டுகளோடு.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/11/blog-post.html

சசிரேகாவும் மிகவும் நல்ல பாடகி. இளையராஜாவின் இசையில் பாடல்கள் குறைவென்றாலும் அனைத்துமே நல்ல பாடல்கள்.

1. மேளம் கொட்ட நேரம் வரும் - லட்சுமி திரைப்படத்தில்
2. இதோ இதோ என் வானிலே ஒரே பாடல் - வட்டத்துக்குள் சதுரம்
3. வாழ்வே மாயமா - காயத்ரி
4. இருபறவைகள் (சோகம்) - நிறம் மாறாத பூக்கள்
5. விழியில் விழுந்து இதயம் நுழைந்து - அலைகள் ஓய்வதில்லை
6. தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் - அலைகள் ஓய்வதில்லை
7. விழியோரத்துக் கனவும் ஒரு கதை கூறிடுமே - ராஜபார்வை
8. ராஜபார்வை படத்தில் வரும் பள்ளிக்குழந்தைகள் பாடும் பாட்டு

இப்படி எல்லாமே நல்ல பாடல்கள்.

அவருடைய பெயரை எழுத்தில் போடாதது தவறே.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/11/27.html

வீட்டுக்கு வந்துதான் பாட்டைக் கேட்டேன். இந்தப் பாட்டை முந்தியே கேட்டிருக்கேன். கேட்டப்பவே பிடிச்ச பாட்டு. திரும்பவும் கேக்க வெச்சமைக்கு நன்றி. :)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/11/blog-post.html

// சின்ன அம்மிணி said...
3. வில்லத்தனம் பண்ணறதுன்னா ஜிரா //

சின்ன அம்மிணி.... இந்தப் பின்னூட்டத்த நீங்க போட்டீங்களா? இல்ல... உங்க ஐடியை யாராச்சும் திருடி.. ஒங்க பேர்ல பின்னூட்டம் போட்டாங்களா? ;)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/11/blog-post.html

இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் துர்காவைப் பாட்டி என்று அழைக்க.. பதிவினை இட்ட கே.ஆர்.எஸ் ஒப்புதல் கொடுத்துள்ளாரா? அப்படித் துர்கா அழைக்கப்பட அவருக்குச் சம்மதமா? சம்மதமில்லையெனில்... அதை ஏன் கண்டிக்கவில்லை. இந்தப் பதிவை இட்ட கே.ஆர்.எஸ் அதைத் தட்டிக் கேட்காததை நான் கண்டபடி கண்டிக்கிறேன். இதைக் காரணம் காட்டி... நானும் அன்புத் தங்கை துர்க்காவும் வெளிநடப்புச் செய்கிறோம்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2008/11/273.html

வருக வருக... இந்த வாரம் மீண்டும் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.

இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் சொல்லும்... நீங்கள் மறுபடியும் நட்சத்திரமானதன் சிறப்பை. :) தொடருங்க..தொடருங்க... தொடர்ந்துக்கிட்டேயிருங்க.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2008/10/272.html

:( சாதியாம் சாதி. என்ன கொடுமைங்க இது. நாலு தலைமுறைக்கு முன்னாடி நாவிதன் சித்தப்பன்னு ஒரு சொலவடையிருக்கு. இது புரியாம இப்பிடிச் சாதிப்பித்துப் பிடிச்சு அலையுறாங்களே.... இருட்டறையில் உள்ளதடா உலகம். சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே.

ஐயா... இருக்குது. இந்தச் சாதீலதான் பொறந்தன்னு தெரியும். அதுக்காக அதைப் பிடிச்சித் தொங்கிக்கிட்டே திரியனுமா... ஒனக்கு ஒன்னுன்னா ஒஞ்சாதிக்காரந்தான் வருவான்னு ஒரு பயத்தோடத்தாண்டா சாதியப் பிடிச்சித் தொங்குறீங்க.

பேபல் கோபுரக் கதை நெனைவுக்கு வருது. அதுல மொழிக்குப் பதிலா சாதீன்னோ மதம்னோ இருந்திருக்கலாமோ! :(

G.Ragavan said...

http://shylajan.blogspot.com/2008/11/blog-post_02.html

பிறந்தநாள் வாழ்த்துகள் ரிஷான்.

ஆனாலும் நீங்கள் கே.ஆர்.எஸ்சை அங்கிள் என்று அழைத்திருப்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது. உங்களோடு சண்டை போட்டிருப்பேன். ஆயினும் இது பிறந்தநாள் பதிவு என்பதால் மரியாதையோடு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் கே.ஆர்.எஸ்சை அங்கிள் என்று எங்காவது அழைக்கக் கண்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

G.Ragavan said...

http://shylajan.blogspot.com/2008/11/blog-post_02.html

// ஆஹா..ஒரு நாள் குழந்தை 28 வயசுப்பையனை அங்கிள்னு கூப்டுறது தப்பா ? அது அவரை அங்கிள்னும் சொல்லும்.. 18 வயசான உங்களை சித்தப்பான்னும் சொல்லும். ஏன் 12ம் வகுப்பு துர்காவை பாட்டின்னு கூடச் சொல்லும்..இதையெல்லாம் கண்டுக்கப்படாது ஜிரா சித்தப்பா :P //

ஆனாலும் ரிஷான் தாத்தாவுக்கு காமெடி ரொம்பத்தான். ஊர்ல இருக்குற பாட்டிகளையெல்லாம் வெரட்டி வெரட்டி பாட்டி டீசிங் பண்ணீட்டு ஒரு நாள் கொழந்தைன்னு கதையா விடுறீங்க? ஒங்க பிறப்புச் சான்றிதள்ல வயசு 76ன்னுல்ல போட்டிருக்கு. ஏன் ஒரு நாள் கொழந்தை அடுத்தநாள் மீன் கொழம்புன்னு கதை விடுறீங்க.

இனிமே மரியாதையா கே.ஆர்.எஸ் பேராண்டின்னுதான் கூப்புடனும். என்னையோ துர்கோவையோ எப்படியும் கூப்டு அவமானப் படுத்துங்க. ஆனா கே.ஆர்.எஸ்சை அவமானப் படுத்தினா... கொலைவெறிப்படை காத்திருக்கிறது. பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. உங்களோட பல் செட் ஒளித்து வைக்கப் படும். வாக்கிங் ஸ்டிக் மிக உயரத்தில் வைக்கப்படும். எச்சரிக்கை. எச்சரிக்கை.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2008/11/278-1.html

என்னைப் பொருத்தவரையில்... அந்த மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது. மசூதியாகத் தொழுகைக்கு ஆகவில்லையென்றாலும் அது ஒரு பழங்கட்டிடம். குறிப்பிட்ட ஒரு காலத்தைக் குறிப்பிடும் பழஞ்சின்னம். எல்லோரா கைலாசநாதர் கோயிலில் கூடத்தான் வழிபாடு இல்லை. அதற்காக இடித்து விட்டு பல்கலைக்கழகம் கட்ட முடியுமா?

இந்த விஷயத்தில் தவறு இந்துக்களின் பக்கம் என்பதே என் கருத்து. ஆப்கன் புத்தர் சிலையிடிப்பிற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை என்பதே என் கருத்து. அங்கு முஸ்லீம்களின் தவறு. இங்கு இந்துக்களின் தவறு.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2008/11/277-exodus.html

பொன்னியின் செல்வன் பலமுறை படித்த பிடித்த புத்தகம். வந்தியத்தேவனை ஏன் அவ்வளவு பிடிக்கிறது என்பது இதுவரைக்கும் புரியவில்லை. இத்தனைக்கும் கதையின் பெயர் வேறொருவருக்கு உரியது. ஆனால் கதையை வந்தியத்தேவர் எடுத்துக்கொண்டார். அதே போலக் குந்தவை. இவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று அப்படி அடித்துக் கொள்ளும். நந்தினியின் மீது வெறுப்பு தோன்றி...அது அநுதாபமாக மாறிப் பரிதாபமாகும். மணிமேகலை.... பாவிப் பெண். காதலுக்கு உயிரையும் கொடுத்தாளே. இரண்டு திருமணங்களை ஏற்றுக் கொள்கிறவன் இல்லையென்றாலும்.... வந்தியத்தேவா மணிமேகலையையும் திருமணம் செய்து கொள் என்று நம்மைக் கெஞ்ச வைத்திடுவார் கல்கி. என்ன புத்தகம் சார். அடாடா!

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/11/icon-poetry.html

புனிதவதியாருக்கு இழைக்கப்பட்டது கொடுமை என்பதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியாது. பக்தியோடு இருந்தார். ஆனால் குடும்பம் நடத்த வேண்டும் என்றுதானே விரும்பினார். அதற்கு வழியில்லை என்றுதான் வேறுவழி தேடிப் போனார். அப்படித் தேடிய வழி நல்வழியாகப் போனதால் நாமும் அவ்வம்மையாரைப் பாராட்டுகிறோம்.

என்னைப் பொருத்த வரையில் பரமதத்தன் செல்வம் மட்டுமே அறிந்த மூடன் என்பேன்.

தன்னை விட மனைவி பெரியவளாகி விட்டாலே உண்டாகும் ஒருவித தாழ்வு மனப்பான்மைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இந்தத் தாழ்வு மனப்பாங்கு இயல்பானது என்று யாரேனும் நினைப்பார்களேயானால் அவர்கள் அறிந்தோ அறியாமலோ ஆணாத்திக்கதிற்கு கிரீஸ் ஊற்றுகின்றவர்கள்.

நான் நினைக்கிறேன்.... பக்தியுடைய ஆண்களின் மனைவிகளுக்கு அவரோடு வாழ வேண்டுமா... கூடாதா என்று யோசிக்கும் வாய்ப்பே இருந்திருக்காது என்றுதான் தோன்றுகிறது. அப்படி அவள் விலகியிருக்க விரும்பியிருந்தால்... அவளையும் தவறாகத்தான் பேசியிருக்கும்.

அந்த வகையில் காரக்காலம்மையார் வருத்தத்திற்குரியவரே. இங்குள்ள பெண்களையெல்லாம் ஒன்று கேட்கிறேன். உங்களில் எத்தனை பேருக்கு பக்தி இருக்கிறது? உங்கள் கணவருடைய பக்தியை விட அது பெரியதா? சிறியதா? ஆண்கள் கோயிலுக்குப் போவதை விட பெண்கள் கோயிலுக்குப் போவதுதானே நிறைய. அப்படியானால் எல்லா ஆண்களும் தத்தமது மனைவியை விட்டு விலகிட வேண்டியதுதானே. ஒத்துக்கொள்வீர்களா?

ராகவேந்திரரைப் பற்றிப் பேச்சு வந்தது. என்னுடைய கருத்துப்படி ராகவேந்திரர் செய்ததும் பிழையே. பொதுநலம் என்ன வந்தது அங்கு? ராகவேந்திரர் சாமியார் ஆகவில்லையென்றால்... வேறொருவர் சாமியார் ஆகிவிட்டுப் போகிறார். ஆனால் சரஸ்வதி அம்மாளுக்கு? வேறொரு துணையைத் தேடுவது என்ற யோசனை கூடத் தோன்றத் தெரியாத அப்பாவித்தனத்தில்தானே கிணற்றில் குதித்தார். பெற்ற பிள்ளையை வளர்ப்பதை விட பெரிய கடமை என்ன? சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே. அதை வெறொருவர் செய்திருந்தாலும்.... தான் செய்யாமல் விட்டது தவறு என்பதே என் கருத்து.

பொதுவாகவே இந்தியச் சமுதாயத்தில் ஆண்களுக்கு ஒரு நீதி. பெண்களுக்கு ஒரு நீதிதான். ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே என்றுதான் 20ம் நூற்றாண்டிலும் எழுத வைத்திருக்கிறது தமிழ்ப் பண்பாடு. அத்தனை கதாநாயகர்களையும்.. கதாநாயகி எப்படியிருக்க வேண்டும் என்று பாட வைக்கிறது.

எலும்பை மெல்லும் பட்டினி நாய்...நன் குருதியைத் தானே சுவைப்பது போல.... இந்தப் பெண்ணடிமைத்தனத்திற்கு நாம் இன்னும் கிரீஸ் விட்டுக் கொண்டிருக்கிறோம்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/11/icon-poetry.html

இன்னொரு விதமாகவும் யோசிக்கத் தூண்டுகிறது இந்தப் பதிவு....

ஆண்டாளுக்கு அவளுக்கு விரும்பிய வாழ்வு கிடைத்தது.... சம்பந்தருக்கு ஞானப்பாலை உண்டு பல தமிழ்ப் பாக்களைக் கொண்டு தந்த பிறகும் பெண்டு கிடைத்தது. சுந்தரரைக் கேட்கவே வேண்டாம். மாலயன் காணாத அடியும் முடியும்... சங்கிலியார் வீட்டு நிலை கண்டது.

இவர்கள் எல்லாம் ஒரு பக்கம்....

மறுபக்கத்தில்..... தன்னந்தனியாளாய்....உழவாரஞ் செய்த அப்பர்...

பேயாய் அலைந்தும் தீயாய் வாழ்ந்து ஈசனைச் சேயாய்க் கொண்ட புனிதவதியார்.

அக்காவையும் மனைவியையும் கைவிடாவிட்டாலும்... கூடி வாழாமல் பிரிந்தே இருந்த அருணகிரி.

அளப்பறியாச் செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் மனையாளைப் பிரிந்த பட்டினத்தார்.

இவர்கள் எல்லாரும் ஒரு பக்கம்...

எங்கேயோ இடிக்கிறதே... ஏன் இடிக்கிறது?

திருநீலகண்டரை இதில் சேர்க்க முடியாது. ஏனென்றால் அங்கு அருள் இருவருக்குமே கிடைத்தது.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/11/blog-post.html

ஆகா ஆகா மறந்திருந்த நல்லதொரு இனிய பாடலை மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

கேட்க அலுக்காத இனிமையான பாடல்.

இதைக் கதாநாயகி வரிசையிலும் போடலாம். நளினிக்குத்தானே பாட்டு. :)

இதே படத்தில் "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை.. இருவிழியால் இந்தப் பூங்கோதை" என்று இனிய பாடலும் உண்டு.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/11/blog-post_19.html

வில்லனாகவே சினிமாவில் வாழ்ந்தவர் நம்பியார். நிஜ வாழ்க்கையில் கதாநாயகர்கள் வில்லனாக இருந்த பொழுதும்... இந்த வில்லன் குணச்சித்திரமாகவே இருந்தார். இதை வைத்தே வெ.சேகர்..அவரது முதற்படமான நீங்களும் ஹீரோதான் படத்தில் ஒரு காட்சி கூட அமைத்திருந்தார்.

பிற்காலத்தில் நிறைய பக்திப்படங்களிலும் நகைச்சுவைப் படங்களிலும் நடித்திருக்கும் நம்பியாரின் நடிப்பு பாராட்டுக்குரியது.

அவரது ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுவோம்.

இந்த வேளையில் அவரது பாடல்கள் சிலவற்றை நீங்கள் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2008/11/281-2.html

நல்ல கொசுவர்த்திப் பதிவு. :D

நீங்க சொல்ற நீராவி பஸ் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சி பாத்த மொத பஸ்சு கட்டபொம்மன் தான்.

ஆனா கரி எஞ்சின் தெரியும். தூத்துடி சேவியர்ஸ் பள்ளிக்கூடம் பக்கத்துலதான் புகைவண்டி நிலையம். ஆகையால அது தெனமும் பாக்குற சமாச்சாரம். டிபன் பாக்சோட அங்கதான் போய்ச் சாப்புடுவோம்னு வெச்சுக்கோங்களேன். நெனைச்சாலே ஒருவித சுகம் வருதுங்க. உலகத்துல இத்தன ஊரு போயிருக்கேன். பாத்திருக்கேன். ஆனா தூத்துடின்னா ஒரு ஜில்ல்ல்ல்ல்ல்ல்... இப்ப அங்க வேண்டியவங்க யாருமில்லைங்குறது கூடுதல் தகவல்.

தூத்துடில இருந்து சென்னைக்குப் போகனும்னா... இது நானே ரொம்ப ரொம்பச் சின்னப் பையனா இருந்தப்ப உள்ளது... திருநவேலீல இருந்து ஒரு ரயில் வரும். தூத்துடில இருந்து ஒரு ரயில் வரும். அது கரி எஞ்சின். மணியாச்சில வந்து ரெண்டையும் சேத்து டீசல் எஞ்சின் மாட்டுவாங்க. அதுக்கப்புறம் விழுப்புரத்துல வந்து டீசலக் கழட்டீட்டு எலக்ட்ரிக் எஞ்சின் மாட்டுவாங்க. மூனுலயும் பயணத்தோட வித்யாசம் புரியும்...வேகம்... அனுபவம்னு.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

புதுக்கிராமத்துல வக்கீல் அழகிரிசாமி வீட்டுல இருந்து.. எங்க மாமாதான். சமீபத்துல இறைவனடி சேந்துட்டாரு. வக்கீல் சங்கரப்ப ரெட்டியார் வீட்டுக்கு ஏதாச்சும் பண்டமாற்று நடக்கும். நாந்தான் கொண்டு போய்க் குடுப்பேன். வாங்கீட்டு வருவேன்.

வீட்டுல இருந்து நாலு எட்டு தள்ளியிருக்கும் பிள்ளையார் கோயில் வரைக்கும் மெதுவாப் போவேன். குப்குப்னு சத்தமெல்லாம் வரும். தூத்துக்குடி-மணியாச்சி கரி எஞ்சின். பக்கதுலதான.

அடுத்து பிள்ளையார் கோயில்ல இருந்து எண்ணக்கடை வரைக்கும். இது அதிகப்படி தூரம். மணியாச்சி-விழுப்புரம் டீசல் எஞ்சின். இங்க வேகம் கூடும். கிடுகிடுன்னு ஓடுவேன்.

எண்ணக்கடையில இருந்து வக்கீல் சங்கரப்ப ரெட்டியார் வீட்டு வரைக்கும் கண்ணு மண்ணு தெரியாத ஓட்டம். விழுப்புரம்-சென்னை எலக்ட்ரிக் எஞ்சின். இப்பிடியெல்லாம் அட்டகாசம் செஞ்சிருக்கேன்.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2008/11/blog-post_23.html

தோஸ்தானா பாத்தாச்சு. இங்க ஆம்ஸ்டர்டாம்லயும் ஓடுது. அல்லது ஓடுச்சு. இங்கல்லாம் இந்தியப் படங்கள் நாலஞ்சு நாள் ஓடுனாலே பெருசு. படம் முழுக்க சிரிப்பு. ஒவ்வொரு சமயம் கடி மாதிரி இருந்தாலும்... படக்குன்னு சுதாரிச்சிக்கிட்டு திரும்பவும் சிரிக்க வைச்சிருது. எனக்கும் படத்தைக் கொண்டு போன விதம் பிடித்திருந்தது.

யூமா வாசுகியைப் படிக்கனுமே. அதுலயும் வாஸுகின்னு உச்சரித்த விதத்தச் சொல்லியிருந்த விதமே பிடிச்சிருந்தது.

முழுக்க முழுக்கவே பொருளாதார இடவொதுக்கீடு செய்யனும்னு தேவையில்லை. சாதீய இடவொதுக்கீடு இன்னமும் தவிர்க்க முடியாத நிலையிலேயே இருக்கிறது என்பது என் கருத்து. அதுக்குத்தான் கிரீமி லேயர்னு இருக்கே. என்ன... மாசச் சம்பளம் வாங்குறவங்கள விட தொழில் பண்றவங்களுக்கு இந்தக் கிரீமி லேயர்ல ஏமாத்துறது எளிது. முழுக்க முழுக்கவே பொருளாதார அடிப்படைல குடுக்கனும்னு சொல்றதை ஏத்துக்க முடியாது.

G.Ragavan said...

http://muranthodai.blogspot.com/2008/11/blog-post_16.html

தொடங்கீட்டீங்களா.. சூப்பரு. தொடக்கம் நல்லாருக்கு. கத போற போக்கு புரியுறாப்புல இருக்கு. தொடர்ந்து படிச்சிருவோம். :-)

G.Ragavan said...

http://kaladi.blogspot.com/2008/12/blog-post.html

படிக்கிறப்போ சிரிப்பா இருந்தாலும்... உண்மை சுடுதே...

அரசியல்வாதிகள் நெலமைய நெனச்சி வருத்தப்படாம இருக்க முடியலை... என்ன செய்றது?