Saturday, December 06, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் - டிசம்பர் 2008

டிசம்பர் 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

20 comments:

G.Ragavan said...

http://kalaiy.blogspot.com/2008/12/blog-post_05.html

நானும் நெதர்லாந்தில் தற்போது வசிக்கிறேன். ஆனால் நான் கேள்விப்பட்டவிதம் சற்று வேறுமாதிரியாக இருந்தது.

சிண்டர்கிளாசுடன் வரும் உதவியாளர்கள் கருப்பினர்கள் என்று சொல்லவில்லை. அவர்களும் சிண்டர் கிளாசுடன் வரும் வெள்ளையர்கள்தான். ஆனால் பரிசுப் பொருட்களை புகைப்போக்கி வழியாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து குழந்தைகளின் காலணியுறைக்குள் (புகைக்கூண்டிற்கு அருகில் வைத்திருப்பார்களாம்) வைப்பதால் புகை படிந்து கருப்பாக ஆகியிருப்பார்களாம்.

இப்படித்தான் கேள்விப்பட்டேன்.

மதங்கள் வளரும் பொழுது இரண்டு விதமாக வளரும். அடிப்படையாக அந்த மண்ணில் இருப்பதையும் தனக்குள்ளே எடுத்துக் கொண்டு வளர்வது ஒன்று. அடிப்படையாக எது இருந்தாலும் அதை முற்றிலும் ஒழித்துக் கட்டிவிட்டு வளர்வது மற்றொன்று. கிருத்துவமதம் முதல்வகையில் வருவதாகவே நான் கருதுகிறேன்.

தொப்பியில் சிலுவை இருப்பது பெரிய விடயமே அல்ல. யேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்குப் பாடம். ஆகையால் சிலுவை மதிப்பிற்குரியதாகக் கருதுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/12/blog-post.html

எல்லாப் பாட்டுகளுமே அருமையான பாட்டுகள்.

எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்கள் மிக இனிமையானவை. பலப்பல பாடகர்களை வைத்து சிறப்பான பாடல்களைத் தந்தார்.

பின்னாளில் ஒரே மெட்டு பல பாடல் என்று மாறிப் போனாலும்... அவருடைய ஆரம்பகாலப் பாடல்களில் இருக்கும் இனிமையும் எளிமையும் மறுக்கமுடியாதவை.

குறிப்பாக நீங்கள் கொடுத்திருக்கும் "ஓர் இரவில் காற்று வந்தது" பாடலும் "மனசும் மனசும் சேந்தாச்சு பூமாலைதான்" பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். "சங்கீத வானில் சந்தோஷம் பாடும்" பாடலும் அப்படியே.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2008/12/blog-post_07.html

மனமார்ந்த வாழ்த்துகள் பிரபா. மூன்று முப்பதாகி முந்நூறாகட்டும். :-)

உங்களுடைய பல பதிவுகளைப் படித்துக் களித்தவன் என்ற வகையிலும் உங்களோடு இசையரசி வலைப்பூவில் கைகோர்த்தவன் என்ற வகையிலும் உங்களை வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

http://supershanki.blogspot.com/2008/12/blog-post_08.html

ஒரேயொரு கேள்விக்குத்தான் பதில் தெரியும். அதான்... லட்சுமியம்மாவோட ஊருதி. ஆந்ததான? கொல்கத்தாவுல துர்காபூஜாக்குப் போனப்போ அங்க லட்சுமிக்கு ஆந்தை இருந்துச்சு. அப்பத்தான் தெரியும். மத்த கேள்விக்கெல்லாம் விடை தெரியாதே.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/12/30.html

இவ்ளோ லேசாவா குயிஜு வைக்கிறது? இதெல்லாம் நல்லால்ல சொல்லீட்டேன்.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/12/834.html

அருமையான காதற் பாடல்களின் தொகுப்பு. மனதுக்கு இனியது காதல். அந்த அளவிற்கு இனியவை இந்தப் பாடல்கள். பாடல்களும் லஷ்மி நாராயணாவின் தொகுப்பும் மிக அருமை. இந்தத் தொகுப்பைக் கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி ரவி.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/12/blog-post.html

உண்மையிலேயே சுவாரஸ்யமான தொடர் விளையாட்டு இது.

நிலாவாக இருக்குமோ...வானமாக இருக்குமோ என்று நினைத்து நினைத்து.. கடைசியில் சூரியன் என்று நமக்குத் தெரியும் பொழுது.. போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சி. நல்லதொரு நிகழ்ச்சி என்றே சொல்வேன். இதே போல நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வளங்குங்கள்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2008/12/madagascar.html

என்னோட மனசுல இருக்குறத அப்படியே எடுத்து எழுதீட்டீங்களே....

எனக்கும் நீங்க சொன்னதெல்லாம் பிடிக்கும். அதுலயும் சின்ன வயசுல அந்த ஹிமேன்... அவரோட புலி. அப்புறம் ஒரு குட்டிச்சாத்தான் பறந்துக்கிட்டு வருமே. அது எல்லாமே பிடிக்கும்.

இப்ப வர்ர கார்டூன்கள்ள உண்மையிலேயே வன்முறை நெறைய இருக்கு.

உட்டி உட் பெக்கரும் ரொம்பப் பிடிக்கும்.

மடகாஸ்கர்-2 இங்க வந்தப்ப மொத நாள் மொதக் காட்சின்னு பாத்தாச்சு. ரசிச்சாச்சு.

G.Ragavan said...

http://tipofmypen.blogspot.com/2008/12/blog-post_13.html

நீங்க சொல்றத ஒத்துக்கிறேன். பிரஷ் முழுக்க ஏன் பேஸ்ட்டு வைக்குறாங்கன்னே தெரியலை. அதுனால வாய் மொழுக்க நொறை வெற. கொஞ்சமா வெச்சித் தேச்சாலே போதும்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/12/00-in-new-york.html

கோதை ஆண்டாள்
தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்

கவியரசர் வரிகள். தமிழ்காதலிக்குத் தமிழாலே காட்டிய பரிசு.

மாலவன் மார்களிக்க மார்கழியில் தாரளித்து வென்றவள் கோதை. காதலர்களுக்கு அவள் அன்று காட்டியதே வெற்றிப் பாதை. அதை விடவா இனிக்கும் கண்ணனின் கீதை! அச்சுவைப் பாவைப் படிக்காதவர் பெயரே பேதை.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/12/839.html

மிக அருமை. மெல்லிசை மன்னரின் இசையில் பாடும் நிலா பாலு பாடும் பாடல் தேன் தொட்ட மாம்பழத் துண்டு.

அடுத்து வந்த ராஜ்குமார் பாரதியின் குரல்...எல்.வைத்தியநாதன் இசையில் சுறுசுறுப்பான அதிரசம்.

இசைஞானி இளையராஜாவின் குரலிலும் இசையிலும் மனோவோடு சேர்ந்து தந்தது...தேங்காய்த் துருவிக் கலந்த பச்சரிசிப் பிட்டு.

நன்றி. நன்றி. நன்றி.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/12/31.html

நான் விடைய இங்க சொல்லலாமா கூடாதா? :-)

G.Ragavan said...

http://raviaditya.blogspot.com/2008/12/blog-post_5412.html

எங்க நிறுவனத்துல நாரி நாரின்னு ஒருத்தரக் கூப்புடுவாங்க. கொஞ்சப் பெரிய ஆளும் கூட. அவரோட உண்மையான பேரு நரசிம்மா. இந்தப் பேரெல்லாம் வழக்கமா வடமொழிப் பெயர்களைச் சிதைச்சுச் சொல்றதுதான்.

யாரும் வளர்மதியை வளர் வளர்னு கூப்ட மாட்டாங்க. ஆனா மதின்னு கூப்டுவாங்க. ஏன்னா அது தமிழ்ப் பெயர். அதுக்குப் பொருள் நம்க்குத் தெரியும். முருகன்னு பேரு வெச்சி முரு முருன்னு யாராச்சும் கூப்டுறாங்களா? மங்கையர்க்கரசி மங்கை ஆகும். ஆனா பொருள் சிதையாது. வடமொழிப் பெயர்களைச் சுருக்குறப்போ நம்ம இஷ்டத்துக்குச் சுருக்கிக்கிறோம். அதுக்குதான் தாய்மொழியில பேர் வைக்கிறது நல்லது.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2008/12/blog-post_27.html

எங்கள மாதிரி ஆளுங்க கிட்ட கேட்டா என்ன தெரியும்?

காமிரா கவிஞர், புகைப்படப் புலவர் சிவிஆர் கிட்ட கேட்டா.... என்னன்னு சொல்லிட்டுப் போறான். :-)

ஆமா பசியாம இருக்குறதப் போக்க ஏதாச்சும் மருந்து சொல்லுங்க.... :-)

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2008/12/banteay-srei.html

அழகு... அபாரம்... அற்புதம்...

விடையேறும் பெம்மானைச் சிற்பத்தில் களிக்கும் வேளையில் அன்னையில் சிரம் கொய்தான் திகைக்க வைக்கிறானே. அவனை வேரோடு பகைக்க வைக்கிறானே!

கலையைக் கலையாகக் கருதாது கலைக்கும் பேர்களைக் குலைக்கும் வகையோடு சேர்ப்பதே சரி.

பிரபா, வரலாறு ஒரு புதிர். அது தொடத் தொட அழியும் பனிப்படலம் போல் உள்ளே நிறைய மறைத்து வைத்துள்ளது. இது போன்ற பயண அனுபவங்கள் நிறைய கற்றுக் கொடுக்கின்றன. நன்றி.

G.Ragavan said...

http://pulithikkaadu.blogspot.com/2008/12/blog-post_27.html

பணம் சம்பாதிக்கப் பல வழி. அதுல இது ஒரு வழி.

மன்னன் கட்டிய கோயிலுக்குப் போகம... பூசலாரோட மனக்கோயிலுக்கு ஆண்டவன் போன கதையச் சொன்ன நம்ம ஊர்ல... இப்பிடியும் ஒரு கூட்டம். அதுக்குப் போறதுக்கும் ஒரு கூட்டம்.

சென்னைல என்னோட ஆந்திரா நண்பனோட பேசிட்டு இருந்தேன். சனிக்கெழமை என்னடா பண்றன்னு கேட்டதுக்கு... வேலூர் கோயிலுக்குப் போறேன்னு சொன்னான். என்ன கோயில்னு கேட்டா golden templeனு சொன்னான். ஒரே கொழப்பம். அவன் நெட்டுல இருந்து படங்களை எடுத்துக் காட்டிய பிறகுதான்... இந்தப் புது யாவாரம் தொடங்கீருக்குறது தெரிஞ்சது.

G.Ragavan said...

http://raviaditya.blogspot.com/2008/12/2.html

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே... மிகவும் பிரபலமான பாடல். மணிப்பூர் மாமியார் படத்தில் சமையல் பாடமே என்றொரு பாடல் வந்து...பின்னாளில் உன்னால் முடியும் தம்பி படத்தில் என்ன சமையலோ என்று வந்தது.

மஞ்சள் நிலா படத்தில் பி.சுசீலாவும் ஜெயச்சந்திரன் பாடும் பூந்தென்றல் காற்றே வா - நல்ல பாடல். மிக இனிமையானது.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் "" பாடல் சுமார் ரகம். அதில் சசிரேகா தடுமாறுவது போலத் தெரியவில்லை. பாட்டே அவ்வளவுதான். ஜேசுதாஸ் கூட அலுப்பூட்டுகிறார். கேள்வியின் நாயகனே பாட்டைப் பாடிய சசிரேகாவிற்கு இந்தப் பாட்டு கடினமாக இருந்திருக்கும் என்று நம்ப முடியவில்லை.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2009/01/blog-post.html

ஆக.... உற்வசர்... தெப்போற்சவம் போகாம... குப்பத்தொட்டோற்சவத்துக்குப் போயிட்டாரா............

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/01/blog-post.html

ஜெயச்சந்திரன் பாடிய ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு பாடலும் பி.சுசீலா பாடிய ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு பாடலும் மிகமிக இனிய பாடல்கள். இளையராஜாவின் மாஸ்டர் பீஸ் என்றுதான் சொல்ல வேண்டும். பெண் பாடும் பாடலை ஏன் இயக்க மறுத்தார் என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. தொடர் வெற்றி கொடுத்த மிதப்புநிலையாகக் கூட இருக்கலாம். அல்லது அடுத்த படத்தைத் தொடங்கி விட்டதால் இதில் நேரம் செலவழிக்க முடியாமலும் போயிருக்கலாம். வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியுமென்று தோன்றவில்லை.

அந்தப் பாடலால் பாலு ஆனந்த் அவர்களுக்கு வாய்ப்பு வரவேண்டும் என்றிருந்திருக்கிறது.

அவருடைய இயக்கத்தில் வந்த படங்களில் எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள்தான்.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடல் மிகமிக அருமை.

அதே போல ரசிகன் ஒரு ரசிகையில் வரும் பாடியழைத்தேன் (நீங்கள் ஏழிசை கீதமே பாடலை ஏற்றியிருக்கின்றீர்கள்), காற்றினிலே வரும் கீதம் கண்ணனவன் குழல் நாதம் பாடலும் மிக இனிமை. முன்னது ஏசுதாசின் குரலில். பின்னது வாணி ஜெயராம் குரலில்.

அண்ணா நகர் முதல் தெருவில்.. ஏ பச்சக்கிளி பாட்டு கலக்கல். மெதுவா மெதுவா பாடலும் இனிமையானது.

தற்பொழுது இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வருகிறார். படத்தைப் பார்த்துத்தான் இவர்தானா அவர் என்று தெரிந்து கொண்டேன். நன்றி.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2009/01/blog-post.html

// ramachandranusha(உஷா) said...
ஜி.ரா! ஆஹா உனக்காவது புரிந்ததே! ஆமாம் எங்க போனே? நோ சீ :-) //

ஹி ஹி இதெல்லாம் தெளிவாப் புரியும். புரியுற மாதிரிதானே எழுதீருக்கீங்க. அதுவுமில்லாம இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி எனக்கும் நடந்தது. ஒரு நண்பருக்கு சாமிப் பாட்டுன்னா பிடிக்கும்னு முருகன், பெருமாள்னு கதம்பமா சிடிகள் வாங்கிக் குடுத்தேன். ஏரோப்பிளேன்ல கொண்டு போகனுமேன்னு... கவரெல்லாம் எடுத்துட்டு சிடி பேக்ல எடுத்துக்கிட்டாரு. இருங்க பேப்பரெல்லாம் குப்பத்தொட்டீல போட்டுர்ரேன்னு சொன்னேன். அவருக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு. எங்க எடுத்துப் போட்டிருவேனோன்னு.. அதெல்லாம் எடுத்துச் சுருட்டி.. ஒரு பேப்பர்ல போட்டு இன்னும் சிறுசாச் சுத்தி ரப்பர் பேண்ட் போட்டு எடுத்துட்டுப் போனாரு. உங்க கதையப் படிச்சதும் அதான் நினைவுக்கு வந்தது.

என்னது.. எங்க போனேனா... இருக்கேன். இருக்கேன். என்ன... ரொம்ப வேலை. அவ்ளோதான் மேட்டரு. :)