Wednesday, April 01, 2009

என்னுடைய பின்னூட்டங்கள் - ஏப்ரல் 2009

ஏப்ரல் 2009ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

44 comments:

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/03/5.html

சாமிமலைக்குப் போனீங்களே... அங்க கோயில்ல பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டீங்களா? நாம் உண்ட பிரசாதங்களிலே சாமிமலை முருகன் கோயில் பிரசாதம் போல இனிதாவதெங்கும் காணேம். :-) சக்கரப் பொங்கலும் உழுந்து வடையும்... அடடா... அடடடடா!

G.Ragavan said...

http://mathimaran.wordpress.com/2009/04/02/article-183

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகாதார். கடவுள் நம்பிக்கை இருக்குறவங்களுக்கு ஒரு காரணம் என்றால்... தமிழுணர்வு மட்டும் இருக்குறவங்களும் அதில் எளிதில் ஆழ்ந்து விடுவார்கள். அந்த அளவிற்கு அருமையானது. அதற்கு இளையராஜாவின் இசைமுயற்சி மிகச்சிறப்பு. சோவும் ஞாநியும் பொருத்தமில்லை என்று சொன்னதுதான் பொருத்தமில்லை. இதோ.. இன்னொரு இசைமேதை.... தென்னகத்தையே தனது இசையால் கட்டிப் போட்ட... இன்னும் கட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் மெல்லிசை மன்னரின் வாக்குமூலம்... இசையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவின் வாக்குமூலம். இது போதும்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2009/04/blog-post.html

ரொம்பச் சரியாச் சொன்னீங்க வல்லீம்மா. நீரின்றி அமையாது உலகுன்னு வள்ளுவரு சொல்லீருக்காரே.

நாகரீகங்கள் மூனு இடங்கள்ள வளந்தது. மலை....ஆற்றங்கரை...கடற்கரை... இந்த மூனு இடங்கள்ளயும் தண்ணி இருக்குற இடங்கள்ளதான்.

அதுனால தண்ணியை நல்லபடி பாத்துக்கனும். நீங்க சொன்ன மாதிரி ஐரோப்பாவுல தண்ணி ஓடுற அழகைப் பாக்குறப்போ... நம்மூர்ல இப்பிடியிருக்கனுமேங்குற எண்ணம் வர்ரதத் தடுக்க முடியலை.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2009/04/blog-post.html

// துளசி கோபால் said...

மத நம்பிக்கைகள் மீது அதீத பற்று வச்சு, அதனால் நடக்கும் சீரழிவுதான் 'புனித கங்கை' அருவருப்பான நிலையை அடைஞ்சதின் காரணம்.

சுத்தம் இருக்கும் இடத்தில்தான் கடவுள் இருப்பார்ன்னு எதாவது சாமியார் சொன்னாலாவது கேப்பாங்களா இவுங்க. //

டீச்சர்... அதுக்கும் ஒரு புராணம் இருக்கு. ஆனா அதை எல்லாரும் வசதியா மறந்துட்டாங்க போல. இங்க சொல்றேன். தெரிஞ்சிக்கோங்க.

அழுகின்ற ஒரு குழந்தைக்காக பாற்கடலை உருவாக்கிய பரமேசுவரன்... குழந்தையின் பசி தீர்ந்தவுடன்... அதைப் பரந்தாமனுக்குப் பள்ளி கொள்ளக் கொடுத்தான். நீருக்கு உயர்வு தர வேண்டி.. கங்கையைத் தலையில் வைத்துக் கொண்டாடும் கடவுளே கங்காதரன்.

காசியின் ஒரு முறை புரோச்சன சர்மா என்ற கோயில் பூசாரி சிவலிங்கத்திற்குப் பூசனை செய்து... காசு வாங்கிக் கொண்டு.... திரவியங்கள் அனைத்தையையும் அனைத்து வேளைகளிலும் அபிடேகம் செய்தார். அதனால் சிவலிங்கத்தின் மீது பிசுக்கேறி அழுக்கடைந்தது. இதன் விளைவாக கயிலாயம் முழுவதும் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. அங்கிருக்க முடியாமல் பார்வதி மிகவும் துன்புற்று... சிவனை நீங்கிப் பனிமலைகளில் தவம் செய்யப் புகுந்தார்.

இதற்கெல்லாம் காரணமான புரோச்சன சர்மாவைத் தண்டிக்க விரும்பி... புரோச்சனன் தொடும் பணம் அனைத்தும் அழுக்காக மாறச் சபித்தார். அப்படியே பாற்கடலுக்குச் சென்று மூழ்கி தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டார் பரமேசுவரன். தான் படைத்த கடலிலேயே தன்னைக் கழுவிக் கொண்ட காரணத்தினால்... பாற்கடல் நாறியது. ஆதிசேடனின் ஆலகாலத்தை விட அழுக்கின் நாற்றம் மிகவே ஆதிசேடன் பாற்கடலை நீங்கினான். இதற்குக் காரனமானவர் புரோச்சனன் என்பதால் நாராயணனும் லட்சுமியும் புரோச்சனனைச் சபித்தார்கள். அத்தோடு.. பணத்திற்காக திருக்கோயில்களையும் நீர்நிலைகளையும் இயற்கைச் சூழ்நிலைகளையும் கேடு செய்கின்றவர்கள்....ஆண்டவன் பெயரிலே செய்தாலும் கூட... அவர்கள் மண்ணைத் தின்னும் மண்புழுவின் நிலையிலும் கீழான பிறப்பெடுத்து அந்த மண்ணும் உண்ணக்கிடைக்காது உழல்வார்கள் என்று சபித்தார்கள்.

பிறகு கங்கை பெருகி பாற்கடலைத் தூய்மையாக்கியது. அதன்பிறகே ஆதிசேடன் வைகுண்டம் மீண்டது. மலைமகளும் கைலாயம் மீண்டாள்.

இந்தப் புராணம் நம் அனைவருக்கும் பாடம்.

G.Ragavan said...

http://blog.balabharathi.net/தமிழக-முதல்வருக்கு-புலிக

யெஸ்பா, சமீபத்திய காமெடிகள்ள பெரிய காமெடி இதுதான். இன்னைக்கு இருக்குற சூழ்நிலைல விடுதலைப்புலிகள் இப்பிடிச் செய்வாங்கன்னு கனவுல கூட நினைக்க முடியாது. ஆனாலும் நம்ம போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் வரவர காமெடி உணர்ச்சி கூடிக்கிட்டே போகுது. மானங்கெட்ட பொழப்பு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-6.html

// தண்ணீர் எல்லாம் கொண்டுவந்து வச்சுட்டாங்களேன்னுட்டு ஒரு அம்பதைத் தட்டுலே வச்சுட்டு வந்துட்டார். //

கோபாலை நம்பி ஓட்டல் தொடங்கலாம் போல இருக்கே. :-) அப்படித் தொடங்குனா... அடிக்கடி வந்துட்டுப் போகனும். பெரியவங்க ஆசீர்வாதம் எப்பவும் வேணும். :D

அந்ததாலி போட்டோ அருமை. அதாங்க சாப்பாட்டுத் தட்டு.

சுடுமண் சிற்பங்கள் அழகோ அழகு

உண்மையிலே அமிர்த குடமா இருந்தா இப்ப ஏங்க வத்திப்போச்சு? கதை உண்மையாயிருந்தா கொடத்துல இருந்தது அமிர்தமில்லை. கொடத்துல இருந்தது அமிர்தமாயிருந்தா கதை உண்மையில்லை. ஒரு கூட்டம் உக்காந்து கதைய உருவாக்கி நாலஞ்சு கோயில்களைக் கட்டியிருக்கலாம். ஒரு குடும்பத்துல இருந்து ஒவ்வொரு கடையா தொடங்குறாப்புல.

G.Ragavan said...

http://kotticodu.blogspot.com/2009/04/blog-post_04.html

இதெல்லாம் கண்டுக்காம விடுங்க. காமெடியாத்தான் இருக்கும். அனுதாப அலையை உண்டாக்குறாங்களாம். தேர்தல்ல இலங்கைப் பிரச்சனையை ஒரு காரணியாக வளர விடாமப் பாத்துக்கிறாங்களாம். திமுக தலைவரின் சீரிய சிந்தனையில் உதித்த வீரிய எண்ணமாக இருக்கும். கருணாநிதி ஜெயலலிதாவாகி ரொம்ப காலம் ஆச்சுங்கோவ்.

G.Ragavan said...

http://kalavany.blogspot.com/2009/04/blog-post_04.htm

இதெல்லாம் ரொம்பச் சகஜமுங்க. கண்டுக்காம விடுங்க. அரசியல்ல இவரு நல்லவரு இல்லை. ஆனா வல்லவர்னு அவரு கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க. அப்புறம் என்னத்த எதிர்பாக்குறது.

G.Ragavan said...

http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_2551.html

பாஜக என்பது மதச்சார்புள்ள கட்சி. ஆனால் காங்கிரஸ் என்பது போலி மதச்சார்பின்மைக் கட்சி. ரெண்டு கட்சிகளையும் சரியான அளவில் எதிர்க்க வேண்டியுள்ளது. அதற்காக மூன்றாவது அணியை ஆதரிக்க வேண்டும் என்பது தேவையில்லை. அந்தந்தத் தொகுதியில இருக்குறவங்கள்ள தூக்கிக் பாத்து வாக்களிக்கலாம். முடிஞ்ச வரைக்கும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

G.Ragavan said...

http://thurkai.blogspot.com/2009/04/blog-post.html

ரொம்ப நியாயமாக் கேள்வி கேக்குறீங்களே? தன்னிகரில்லாத் தமிழ்கத்தின் தலைமகன்.... செந்தமிழும் முத்தமிழும் நாவில் முத்துக்குளிக்கும் முதல்மகன் கலைஞர் அவரைப் பற்றி இப்படியெல்லாம் பேசலாமா? இதனால் உண்டாகும் பாவங்கள் என்ன தெரியுமா? நீங்கள் திராவிடத் துரோகியாவீர்கள். மதவெறியவர் ஆகவும் வாய்ப்புள்ளது. இனமான எதிரியாவீர்கள்.

ஜெயலலிதாவை நீங்க எதுக்குறீங்கன்னா.... கருணாநிதியை ஆதரிச்சே தீரனுமாமே... இது தெரியாதா?

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-7.html

// உள்ளே இருந்து வரும்போது நாலே பேரால் தூக்கமுடியும் இவருக்குப் படி தாண்டுனதும் கனம் கூடிருதாம். நாலு எட்டாகி, பதினாறாகி, அப்புறம் முப்பத்திரெண்டு பேர் வேணுமாம். திரும்பக் கோயிலுக்குள் வரவர எடை குறைஞ்சுக்கிட்டே வந்து நாலே பேர் போதுமாம், உள்ளே கொண்டு வைக்க.
ஆச்சரியமா இருக்கு !!!!//

ஹிஹி டீச்சர்... அந்த நாலு பேர்ல ஒருத்தரா என்னையும் சேத்துக்கச் சொல்லுங்க. எடை எப்பிடிக் கூடுதுன்னு பாப்போம். கோயிலுக்கு வெளிய வர்ரப்போ... அதுல ஒருத்தர் ஏறி நின்னுக்கிட்டு.... சூடம் காமிப்பாரே. அவரு எடைய கணக்குல சேத்தாங்களாமா? :-)

மா ஏகம் பஜ பாத்தீங்களா? என்னவோ கைல எழுதீருக்குமாமே... மா ஏகம் சரணம் பஜன்னு நெனைக்கிறேன்.

ஒப்பிலி உப்பிலியும் கூடன்னு சொல்றாங்களே.... சாப்ட்டுப் பாத்தீங்களா?

// "அவசரமாவும், ரொம்ப எளிமையாவும் நடந்துபோச்சு. அதாண்ணே....... "//

நாட்டுல எல்லாக் கல்யாணமுமா மண்டபங்கள்ளயும் மைதானங்கள்ளயும் நடக்குது? களவு மணம் கற்பு மணம்னு அந்தக்காலத்துலயே சொல்லீருக்காங்க. பொருளாதார மணம்னும் ஒன்னு இருக்குல்ல. அந்தப் பொண்ணுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://vidhyascribbles.blogspot.com/2009/04/blog-post_06.html

கர்ணன் படத்துல தேவிகாவோட பேரு சுபாங்கி.

அப்பச் சுபாங்கி மூனாவது மனைவி போல!!!

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/04/vijay-sun-tv-comedy.html

ஹாஹாஹாஹா மனசு விட்டுச் சிரிச்சேன் நான். பிரமாதமா பண்ணீருக்காங்க. விஜய்...விஜய்...

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-9.html

டீச்சர், அந்த வட்டங்கள் எல்லாம் இளவட்டங்களா? மாவட்டங்களா? :D

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் பாட்ட கே.ஆர்.எஸ் பாடச் சொல்லிக் கேளுங்க. :-)

உருசுய மருத்துவர் தஞ்சைக்குப் போயாச்சா.... சூப்பர். அவருடைய எண்ணை எனக்கு மயிலார் வழியா அனுப்பி விடுங்க.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-8.html

வலைக்குள்ள உக்காந்து கொசுத்தொல்லையில்லாம வலை மேயனும்னு விரும்பீருக்கீங்க. அது அங்க நடக்கலை.

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ சுவாமிஜிகளுக்கு எதுக்கு இந்த மாதிரி ஓட்டலு? எங்கையாச்சும் மடத்துல தங்க வேண்டியதுதான? மடச்சாம்பிராணியா இருக்காம இப்பிடித் தேர்ந்தெடுத்த இடச் சாமியார்களா இருக்காங்களே! போலிச் சாமியார்கள் ஆட்டம் சாஸ்தியாயிருச்சு.

G.Ragavan said...

http://globen.wordpress.com/2009/04/10/karunanidhi/

அவரு ஒரு முடிவோடதான் இருக்காரு. இலங்கைப் பிரச்சனை அரசியலுக்குள்ள வர்ரது அவருக்கு நல்லதில்லை. ஆகையால அதப் பத்தி மொதல்ல பயமுறுத்துனாரு. இப்ப எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு பேசுறாரு. தமிழினமாம்.. தலைவராம்... சீச்சீ

G.Ragavan said...

http://koluvithaluvi.blogspot.com/2009/04/blog-post.html

ஹஹஹஹ அவர மானமுள்ள தமிழன் யாருமே ஒரு பொருட்டா மதிக்கலையே. அப்புறம் மத்திய அரசு மதிக்கலை..மிதிக்கலைன்னா எப்படி?

G.Ragavan said...

http://parvaiyil.blogspot.com/2009/04/blog-post_15.html

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் பார்த்தேன். மிகவும் அருமையான படம். ஊகிக்க முடியாத முடிவு. எனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம் ஓடாமல் போனதிற்குக் காரணம் அது பாரதிராஜாவின் படம் என்பதால் இருக்கலாம். பாரதிராஜாவின் படம் என்றால் கண்டிப்பாக முயற்சி செய்வது என் வழக்கம். ஆனால் மக்கள் வேறு மாதிரி நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. என்னைப் பொருத்த வரையில் பொம்மலாட்டம் மிக அருமையான படம். படமெடுக்கின்றவர்களுக்குப் பாடம்.

G.Ragavan said...

http://www.luckylookonline.com/2009/04/blog-post_11.html

நீ திருடன்டா என்பதைப் பதமாகவும் சொல்லலாம். இதமாகவும் சொல்லலாம். ஆத்திரமாகவும் சொல்லலாம். நீங்க இதமும் பதமும் கலந்து சொல்லீருக்கீங்க. ஆனாலும் உண்மை எட்டிப் பாக்குது.

திமுகவின் எதிர்முகாமைச் சாடுவதற்காக மற்றவர்களுடைய ஈழ ஆதரவைச் சாடுவது உண்மையாக இருந்தால்... அது கருணாநிதிக்கும் பொருந்தும். அதுக்கெல்லாம் சிகரம் வெச்சாப்புல சொன்னாரு பாருங்க.... போரஸ் புருசோத்தமன் உதாரணம். அடேங்கப்பா. புல்லரிச்சிருச்சு. எல்லாத்தையும் எதிர்பாத்துத்தான் சும்மா இருந்தாரா? அமைச்சரவை வாங்குறப்போ.... கண்கள் பணிக்கிறப்போ இதயம் இனிக்குறப்பல்லாம் சும்மாயில்லாம இருந்தாரா? அங்கெல்லாம் லாபி வெச்சி வேலை ஒழுங்கா நடக்குதுல்ல. அஞ்சா நெஞ்சர்களால கூட ஒன்னும் செய்ய முடியலையா? வருங்கால விடிவெள்ளிகளும் கவிதாயினிகளும் என்னதான் பண்றாங்க. ஒருத்தருக்கும் என்ன பண்றதுன்னே தோணலையா? இல்லை..இவர் ஒருத்தர்தான் யோசிக்கிறாரா?

அது என்னங்க... அதிமுகவை எதிர்க்கனும்னா திமுகவை ஆதரிக்கனுமா?

வைகோவோ பாமகாவோ.... அவங்க அதிமுக கிட்ட இருக்குறதோ திமுக கிட்ட இருக்குறதோ... ரெண்டுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அங்க ஊரறியத் துப்பல் வாங்கனும். இங்க கதவ மூடிக்கிட்டு வாங்கனும். அவ்ளோதான் வித்யாசம். மத்தபடி அதிமுகவும் ஜெயலலிதாவும் எவ்வளவு எதிர்க்கப்பட வேண்டியவர்களோ... அந்த அளவிற்குத் திமுகவும் கருணாநிதியும் அவர்தம் குடும்பத்தாரும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே.

திமுக எதிர்ப்பாளர்கள் எல்லாம் அதிமுக ஆதரவாளர்கள் என்று சொல்வதும் ..... அமெரிக்கா போர் தொடுக்கும் பொழுது... எங்களோடு இல்லாதவர்கள் எதிரிகள் என்று சொல்வதற்கு ஒப்பானதே.

G.Ragavan said...

http://www.luckylookonline.com/2009/04/blog-post_11.html

//உண்மைதான் அம்மா வந்தால் ஆதரவாக பேசகூட முடியாதுதான். செயற்பாடுகளேதுமற்ற பேச்சு எதற்கு வேண்டியிருக்கிறது.

கலைஞர் இருந்தால் வெறும் சொற்களில் சுய இன்பம் காணலாம்.

அம்மா வந்தால் அது கிடையாது.

அவ்வளவுமே..//

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் சயந்தன். இதுதான் என்னுடைய கருத்தும். ஜெயலலிதா மேல ஒரு எதிர்பார்ப்பும் கெடையாது. பாறைல மயிரா மொளைக்கும். கருணாநிதி எதிர்பாத்து ஏமாத்துனவரு. அது சரி... நம்ம ஏமாந்துட்டோம்னு சொல்றதுதான் சரியா இருக்கும். அவரு மேல எங்க பழி வந்துருமோன்னு ஆழ்ந்து யோசிச்சு தீர்க்கமா அமைதியா இருக்கிறாராம். நமக்குத்தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது.

G.Ragavan said...

http://www.luckylookonline.com/2009/04/blog-post_14.html

மூன்று விரல் புத்தகம் என்னிடம் இருக்கிறது. ஆனால் இன்னும் படிக்கவில்லை.

மென்பொருள் துறையை வைத்து ஒரு நல்ல கதையை எழுத வேண்டும் என்ற ஆவலும் கருவும் மனதில் இருக்கிறது.

பலர் நினைப்பது போல மென்பொருள் துறை ஒரு சொர்க்கலோகம் அல்ல. மற்ற துறைகளில் என்ன இருக்கிறதோ... அதெல்லாம் இருக்கிறது. எல்லாம் அதிகம். அவ்வளவுதான்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/blog-post.html

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள். நலமோடு வாழ்க.

மைசூர்ப் பாயாசம் இதானா... இத மைசூர்ல கூடச் சாப்டதில்லையே.......

ஆனா டீச்சர் வலைப்பூல கெடைக்குது. அதான் சிறப்பு. பாயசப் பெண்மணி டீச்சர் வாழ்க.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-11.html

இந்த வடையைப் பத்திச் சொன்னீங்களே... அதுல பலப்பல விசயங்கள் இருக்கு. வடைய அப்படியேவும் சாப்புடலாம். பலப்பல விதமாகவும் சாப்புடலாம். வெறும் வடைய அப்படியே கடிச்சிக்கிட்டும் திங்கலாம். இல்லைன்னா.. கெட்டியான தேங்காச் சட்டினி தொட்டும்.. பொரிகடலை போடாமத் தேங்காயும் வதக்குன மெளகா..பச்சமொளகா.. லேசாப் புளி போட்டு அரைக்கனும். அந்தத் துவையல் ஒரு ருசி.

நாகரீகமா சாம்பார்ல தொட்டும் திங்கலாம். ஊற வெச்சும் திங்கலாம். ஆனா சாம்பார்ல பருப்பு நல்லா கொழஞ்சி கரைஞ்சிருக்கனும்.

ரசத்துல கொத்துமல்லி அரைச்சி விட்டு ஊற வெச்சும் சாப்புடலாம். வயிறு ஜிலுகிலுன்னு இருக்கும்.

இல்லைன்னா தயிர்ல ஊற வைக்கனும். இதுல ஒரு விஷயம். தேங்காயை மெளகாயோட லேசா அரைச்சிப் பாலெடுத்து அதைத் தயிர்ல கலந்துறனும். அதுலதான் வடை ஊறனும்.

வடக்கத்தி பாணில தக்காளி சாஸ் தொட்டுக்கிட்டும் சாப்பிடலாம். இல்ல.. வெளிநாட்டான் மாதிரி கடுகு சாசும் மயோனிசும் தொட்டுக்கிடலாம். இப்பிடி எப்படி வேணும்னாலும் சாப்பிடப்படக்கூடிய வடையை எவ்ளோ பாராட்டினாலும் தகும்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-11.html

மதுரைன்னதும் காலேஜ் ஹவுஸ் போனீங்களான்னுதான் கேக்க நெனைச்சேன். நீங்களும் சரியாப் போயிருக்கீங்க. அது பழைய ஓட்டல்தான். ஆனால் ரொம்ப நல்லாருக்கும். அந்தப் பொங்கல் இருக்கே.. அடடா... அதோட தலைல சாம்பாரை ஊத்திக் குழப்பி......அடடா! எனக்கில்லை. எனக்கில்லை. ரெண்டு நாளைக்கு முன்னாடி சாப்ட இத்தாலியன் கால்சொனேட்டோ... சால்மன் அடைச்சது... அது மாதிரி வாயில பட்டதும் கரையும்.

அப்பிடியே.. காலேஜ் ஹவுஸ் பக்கத்துல... ரோட்டு முக்குல பிரேம விலாஸ் அல்வாக் கடைல அல்வா வாங்கிச் சாப்பிட்டிருக்கனும். அடேங்கப்பா.....எலைல விழுறதும் தெரியாது.. விரல் தொடுறதும் தெரியாது.. நாக்குல படுறதும் தெரியாது... கிளுக்குதான்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-11.html

டீச்சர்... அவருக்குப் பேரு வாஸ்த்தாண்டவர். ஒரு வாட்டி... பாற்கடல்ல பரந்தாமரு பள்ளி கொண்டிருந்தப்போ... பரமசிவன் ஆலகால விடம் உண்டதையும் தான் வெண்ணை உண்டதையும் நெனைச்சிப் பாத்தாரு. அப்ப அவரு வயிற்றில் அமிலம் சுரந்து வாயுத் தொல்லை வந்து வீங்குச்சு. அந்தக் காட்சியைக் காண விரும்பின சிவனுக்காக திரும்பவும் வயிறு வீங்கிக் காட்டுனப்போ சிவனுக்கும் பரந்தாமனுக்கும் பொறந்தவர்தான் இந்த வாஸ்த்தாண்டவர். இவருக்குச் சைனால கோயில் இருக்கு. தமிழகத்துல இருந்து சைனாவுக்குப் போன இவரைத் திரும்பவும் தமிழகத்துக் கொண்டு வரனும். இவருக்குக் கோயில் கட்டிக் கும்பாபிசேகம் பண்ணனும். இவருக்கு வேண்டிக்கிட்டு ஆலகால விசத்தையும் வெண்ணெய்யையும் கலந்து ஒரு மண்டலம் சாப்புடனும். ஆலகால விசம் கிடைக்காதவங்க ரேசன் அரிசியை வாங்கிக்கலாம். அப்படித்தான் இருக்குறதா சொல்லிக்கிறாங்க.

G.Ragavan said...

http://www.athishaonline.com/2009/04/blog-post_21.html

I dont agree to your post.

There is a change... whcih is visible. He is trying to bring in. It is our time to support.

If we keep on suggesting and questioning without taking any actions.... DMK and ADMK will only be coming to power.

I wish he wins. Even otherwise... he has shown.... how the action speaks. than what we are doing.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-15.html

டீச்சர் குறுக்குத்துறை முருகன் கோயில் திருநெல்வேலில இருக்கு. ஜங்சனுக்குப் பக்கத்துல பாலத்துக்குப் பக்கத்துல இருக்கு. அதுதான் நீங்க சொல்ற திருச்செந்தூர்....கோயில்.

சின்னக் கோயில்தான். ஆனா எங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிக்கும். நெறைய வாட்டிப் போயிருக்கோம்.

நவதிருப்பதிக்கெல்லாம் போனதில்லை. ஆனா அறுபடை வீடுகளுக்கும் போயிருக்கேன். பாட்டிலுயர் ஆறுபடை வீட்டிலுயர் சரவணபவாநந்த ஞானகுருவே!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-15.html

// வல்லிசிம்ஹன் said...

ராகவன், முருகர்க்காக வந்துட்டாரு பாத்தீங்களா.:) //

வல்லீம்மா... நல்லாச்சொன்னீங்களே... முருகனுக்காக நம்ம வர்ரதா? நமக்காகல்ல முருகன் வரனும்! :-)

// துளசி ,
க்காந்திமதிஅம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் இதெல்லாம் நெல்வேலிக்கே சொந்தம். முருகன் அப்பப்போ தாமிரபரணியில் முங்கி எழற மாதிரி வெள்ளமெல்லாம் வரும்னு கேள்வி. யாரு பார்த்திருக்கா:( //

உண்மைதான். நானும் இதைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் நான் பொறக்குறதுக்கு முன்னாடி இருந்திருக்கும் போல.

G.Ragavan said...

http://vimalavan.wordpress.com/2009/04/21/அடுத்த-ஸ்டண்ட்தமிழகத்த/

அம்மாவாசைக்கு அடுத்த நாள் கிட்ட என்னத்த எதிர்பாக்குறது. ஓய்வெடுக்கலாம். இல்லைன்னா புராண மன்னர்கள் மாதிரி வனவாசம் போகலாம்.

G.Ragavan said...

http://suresh--jeevanandam.blogspot.com/2009/04/blog-post_25.html

தாமரையின் பேச்சைக் கேட்டேன். மிகச் சரியான கருத்து. ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஏதாவது நீரில்லாத கிணற்றில் குதித்து விடலாம். அம்மாவாசையும் அம்மாவாசைக்கு அடுத்த நாளும் சேர்ந்து நடத்தும் கூத்து மிகக் கேவலம்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/04/blog-post_24.html

புதிய வடிவமைப்பு கலக்கல். பாலச்சந்தருக்கு எனது சார்பாகவும் நன்றிகள். அதிலும் அந்த மும்மூர்த்திகளை மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். முகபாவங்களும் மிக அருமை. பொருத்தமான படங்களைப் பொருந்துமாறு இணைத்திருப்பது மிகச்சிறப்பு.

பாடல் தேர்வுகளும் அருமை. சிறுபொன்மணி பாடல் யாருக்குப் பிடிக்காது. ஆத்தி பாடலும் அருமை. ஏசுதாசை விட ஜெயச்சந்திரன் குரலுக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். கம்பன் ஏமாந்தான் கேட்கக் கேட்க திரும்பக் கேட்க வைக்கும் பாடல்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2009/04/blog-post_26.html

கருணாநிதியைக் கலைஞர்னெல்லாம் கூப்புட முடியாது. அப்படிச் சொல்றதுக்கும் ஜெயலலிதாவை புரட்சித் தலைவின்னு சொல்றதுக்கும் வித்யாசம் ஒன்னுமில்லை.

தாமரை சொன்னாப்புல.... ஜெ.. அம்மாவாசை. கருணாநிதி அதுக்கு அடுத்தநாளு.

கருணாநிதியின் கையாலாகாதத் தனத்துக்கு வைகோவும் காரணம்னு சொல்ல முடியாதுன்னு நெனைக்கிறேன்.

ஆகக்கூடி சட்டசபைல முழுப்பலம் இருந்தாத்தான் அழுத்தம் கொடுக்க முடியுமாக்கும். ஏங்க.... ஸ்பெக்ட்ரம் ஊழல் பத்தி சோனியாவுக்குத் தெரிஞ்சிருக்குறதால..அவரு சும்மாயிருக்கார்னா.... அவரு ஊழல் பெருச்சாளிங்க. அப்புறம் யார் எந்தப்பக்கம் போயிருந்தா என்ன?

சரிய்யா.... மக்கள் பெருசா பதவி பெருசா.... என்னவோ ரயில்ல படுத்தேன் தண்டவாளத்துல தலைய வெச்சேன்னு பெருமையாப் பேசுறவங்க... பதவிய விட மக்கள்தான் பெருசுன்னு தூக்கி எறிஞ்சிருந்தார்னா.. இந்நேரம் உலகத் தமிழர்களெல்லாம் அவருக்குப் பின்னாடி நின்னிருப்பாங்க. தமிழ்நாடே கொந்தளிச்சிருக்கும். பண்ற தப்பெல்லாம் பண்ணீருவாராம். அது வெளிய வரக்கூடாதுன்னு சும்மாயிருப்பாராம். ஆனா அந்தக் கையாலாகாதத்தனத்துக்கு இன்னொருத்தரு காரணமாம். நல்லாயிருக்கு கதை.

அவரு கூட்டணி மாறுனாரு. ஜெயில்ல வெச்சவரோட கூட்டணி வெச்சாரு. மானம் போச்சு. உணர்ச்சி போச்சு...எல்லாம் சரிதான்.

இங்க என்ன வாழுது. இதே காங்கிரசு தானே கருணாநிதி முழுப்பலத்தோட ஆட்சீல இருந்தப்போ கலைச்சது. ராஜீவ்காந்தியக் கொன்னதே திமுகதான்னு இதே காங்கிரஸ்தானே சொல்லுச்சு. எப்போ அப்பேர்ப்பட்ட காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சாங்களோ அப்பவே கருணாநிதிக்கு உணர்ச்சி போச்சு. மானம் போச்சு.

ஊரெல்லாம் ஊத்தப்பல்லு... சொல்றது மட்டும் ஒருத்தரையா... தேவைப்பட்டா திரும்பவும் பிஜேபியோட திமுக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லைன்னா சொல்றீங்க? அப்படி வெச்சா.. கருணாநிதியோட எது போகும்? ஏன்னா மானமும் உணர்ச்சியும் காங்கிரசோட கூட்டணி வெச்சப்பவே போச்சே.

வைகோ செஞ்சது சரின்னு சொல்றதுக்காக இதெல்லாம் சொல்லலை. அவரை என்னெல்லாம் சொல்லலாமோ...அத்தன கருமாந்திரங்களையும் இங்கயும் சொல்லலாம். ஜெ கிட்டயும் சொல்லலாம்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2009/04/blog-post_26.html

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... மிசா கிசான்னு சொல்றாங்களே... அதுல யாரோ ஜெயிலுக்கெல்லாம் போனாங்க. அந்த மிசாவைக் கொண்டாந்த கட்சியோட இப்பக் கூட்டணி வெச்சி... ஆட்சியில பங்கு வெச்சி.. ஆனா அடுத்தாள் பண்ணா அசிங்கமாக்கும்.

G.Ragavan said...

http://rozavasanth.blogspot.com/2009/04/blog-post.html


சரியான கருத்தாகத்தான் தோன்றுகிறது. மக்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் போகின்றவர்களுக்குத் தோல்விதான் பாடம். அந்தப் பாடம் இப்பொழுதைக்கு திமுகவிற்கும் காங்கிரசுக்கும் தேவைப்படுகிறது.

குறிப்பாக தங்கபாலு, தயாநிதி மாறன், ப.சிதம்பரம், அழகிரி ஆகியோர் தோல்வியடைய வேண்டும்.

ஜெயலலிதா தேர்தலுக்காகத்தான் ஈழம் பற்றிப் பேசுகிறார். தாமரை சொன்னது போல ஜெயலலிதா அம்மாவாசை. கருணாநிதி அம்மாவாசைக்கு அடுத்த நாள்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2009/04/blog-post_26.html

இலங்கையில் நடந்தவை... நடப்பவை... எல்லாவற்றையும் அறிந்திருந்தால் கருத்து சொல்ல முடியும். தமிழன் அடி வாங்குகிறான் என்பது புரிகிறது. சிங்களன் அடிக்கிறான் என்பதும் புரிகிறது. ஒன்று சேர்ந்து வாழும் வழியே கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியவில்லை. ஒத்துவரைலைன்னா அத்துட்டு வர வேண்டியதுதான்.

எல்லாம் நல்லதே நடக்கனும். நடக்கும்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-16.html

டீச்சர், இந்தப் பதிவைப் பாருங்க... இந்த ஆஸ்ஹோக் பவந்தானே நீங்க பாத்த அசோக்பவன்.

http://gragavan.blogspot.com/2006/06/12.html

முந்தி திருச்செந்தூர் போனப்போ எழுதுன பதிவு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-16.html

செந்தில் முருகா
பருகப் பாலுண்டு
அருந்தச் சோறுண்டு
வந்தார் சென்றார்
என்று கூட்டம் நூறுண்டு
இவர்களின் துயர் நீக்க வருவார்
உன்னைப் போல் யாருண்டு
உனக்கும் எங்கள் உள்ளத்தில்
ஊருண்டு
அதில் கோயிலுண்டு
அதற்குள் தேருண்டு
தினந்தோறும் திருநாளுண்டு!
உன் அருளுண்டு
வாழும் நெஞ்சில்
என்றென்றும் இடமுண்டு!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-16.html

// சாமிக்கும் எங்களுக்கும் எட்டே அடி தான் இருக்கு. கீழே மண்தரை, நறநறன்னு..... ஹூ கேர்ஸ்? //

டீச்சர்... அதுக்குக் காரணம் இருக்கு. அது மண்தரையில்லை. நல்ல கல்தரைதான். ஆனா கடக்கரை மணல் எல்லாரோட கால்ல பட்டு கொஞ்சம் கொஞ்சமா கோயிலுக்குள்ள வந்துரும். அதான் அப்படி.

// வழியில் ஒரு இடத்தில் (வரதராஜபுரம் கிராம ஊராட்சி?) கிராமதேவதைகள் கோயில் போல ஒன்னு இருந்துச்சு. சிலைகள் ஏதுமில்லை.
அப்பன் கோவில் செல்லும் வழின்னு ஒரு போர்டு. //

இந்த மாதிரிக் கோயில்களெல்லாம் தெக்குல ரொம்பப் பாக்கலாம். உள்ளூர்ச்சாமியா இருக்கும். எங்கூர்ல இதே மாதிரி கோயில். வெல்லக்கட்டி மாதிரி சாமி இருக்கும். அந்தக் கோயிலுக்குக் காச்சக்கார அம்மன் கோயில்னு பேரு.

G.Ragavan said...

http://abiappa.blogspot.com/2009/04/blog-post_27.html

இது நகைச்சுவைப் பதிவா?

என்ன... அவரு உண்ணாவிரதம் இருந்தத ஒரு மாசத்துக்கு முன்னாடியே இருந்திருந்தா இப்ப இருக்குறதாகச் சொல்லப்படுற போர் நிறுத்தம் அப்பவே வந்திருக்குமே. ரெண்டாயிரம் பேராச்சும் பொழைச்சிருப்பாங்க.

என்னவோ போங்க. எனக்குத்தான் ஒன்னும் புரியலை. ஒங்களுக்கெல்லாம் புரியிறத நெனைச்சி சந்தோசம்.

கருணாநிதி செய்றது தப்புன்னு சொன்னா... ஜெயலலிதா ஆதரவாளர்னு எங்களையும் ஏன் அசிங்கப்படுத்துறீங்க.

G.Ragavan said...

http://www.luckylookonline.com/2009/04/blog-post_27.html

லக்கி, ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க...

தாமரை சொன்னாப்புல ஜெயலலிதா அம்மாவாசை.... கருணாநிதி அதுக்கு அடுத்த நாள். இவங்க ரெண்டு பேரும் அத மாறி மாறி நிரூபிக்கிறாங்க. வசனம் மட்டுமில்ல நடிப்பும் வரும்னு கருணாநிதி காட்டுறாரு. நடிப்பு மட்டும் இல்ல... வசனமும் வரும்னு ஜெயலலிதா காட்டுறாங்க.

போர் நிறுத்தம் உண்மையிலேயே வந்துருச்சுங்களா? அதை நீங்க நம்புறீங்களா?

சரிங்க.. வந்துருச்சு. ரொம்ப சந்தோசம். இப்ப இருந்த உண்ணாவிரதத்தை ஒரு மாசத்துக்காச்சும் முன்னாடி இருந்திருக்கப்படாது! இன்னும் கொஞ்சப்பேரு பொழச்சிருப்பாங்களே!

ஜெயலலிதா ஆதரவாளர்களுக்கு மட்டுந்தான் கருணாநிதியை எதிர்க்கத் தோணும்னு எவ்ளோ நாள் எங்களை அசிங்கப்படுத்துவீங்க. கொஞ்சம் கட்சிக்கு வெளிய இருந்து யோசிச்சிப்பாருங்க.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2009/04/307.html

அதென்னெங்க நான் நெனைச்சத அப்படியே பதிவா எழுதுறீங்க.

http://www.luckylookonline.com/2009/04/blog-post_27.html

லக்கி, ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க...

தாமரை சொன்னாப்புல ஜெயலலிதா அம்மாவாசை.... கருணாநிதி அதுக்கு அடுத்த நாள். இவங்க ரெண்டு பேரும் அத மாறி மாறி நிரூபிக்கிறாங்க.

வசனம் மட்டுமில்ல நடிப்பும் வரும்னு கருணாநிதி காட்டுறாரு. நடிப்பு மட்டும் இல்ல... வசனமும் வரும்னு ஜெயலலிதா காட்டுறாங்க.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2009/04/blog-post_27.html

ஜெயை நம்ம முடியாது. ரவிசங்கர் சொல்லித்தான் அவருக்கு ஈழம் பத்தித் தெரிஞ்சிருக்குன்னு சொல்றதே பெரிய காமெடி. அவ்ளோ அரசியல் அறிவு.

ஆனா தனி ஈழம்... அதை இலங்கையிலேயே வாங்கித் தருவேன்னு சொல்றப்போ.. கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா ஜெயலலிதா பேசி எவ்ளோ கேட்டுருக்கோம்.

இந்தம்மா நடிக்க.. அத விட தனக்கு நடிக்க வரும்னு ஐயா நடிக்க.... உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்னு எம்.ஜி.ஆர் பாடுனதுதான் நினைவுக்கு வருது.

G.Ragavan said...

http://www.luckylookonline.com/2009/04/blog-post_27.html

// ஜிரா!

நீங்கள் நல்லவர், நடுநிலையாளர் என்பதை எந்த காலத்திலோ ஒப்புக் கொண்டோம். தொடர்ந்து இதை நீங்கள் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு எந்த அவசியமும் இல்லை. //

ஹாஹாஹா

நல்லவன்னு சொல்லீட்டீங்க. அப்பக் கும்முதல்தானா... :)

G.Ragavan said...

http://kalaignarkarunanidhi.blogspot.com/2009/05/blog-post_08.html

நீங்க பதிவுல சொல்றது நடக்குறதுக்கு வாய்ப்புகள் நெறைய இருக்கு. ஜெயை நம்பவே முடியாது. ஆனா இந்தக் கூட்டணி உண்டாகனும்னா அகில இந்திய அளவுல காங்கிரஸ் நெறைய ஜெயிக்கனும். ஜெ ஆதரவு இருந்தா திரும்ப ஆட்சீங்குற நெலமை வந்தா அணிகள் கண்டிப்பா மாறும். யார் கண்டா... அது திமுக-பாஜக கூட்டணியா மாறவும் வாய்ப்பிருக்கு.

ஆனா ஒன்னு... ஜெயை நம்பாதீங்க. அவருக்கு ஈழம் தேர்தல் சாப்பாடு.