Tuesday, May 01, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - மே 2007

மே 2007ல் மற்ற வலைப்பூக்களில் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

218 comments:

«Oldest   ‹Older   201 – 218 of 218
G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/03/blog-post_23.html

யோகன் ஐயா. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பக்திக்குரலார். முருகனை நினைத்து அவர் சுரம் பாடினாலே நமக்கு பக்திச் சுரம் வரும். சரம் பிரித்துப் பாடினால் சரவணனின் முல்லைச் சரமணம் வரும். அவருடைய பாடல்கள் எத்தனையெத்தனை. ஆகா! அவரை நினைவு கூர்வதில் மிக்க மகிழ்ச்சி. அவர் இன்றும் குரலால் நம்மோடு வாழ்கிறார்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/05/blog-post_27.html

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்.

போட்டது ஒரு பதிவு. அதுல எழுதுனது நாலஞ்சு வரி. மிச்சமிருக்குற மூனு வரிகள் பழைய பதிவுகளுக்கு லிங்க்கு. அதுக்குள்ள 155 பின்னூட்டங்கள். நீங்க பெரிய ஆளுன்னு தெரியும். ஆனா..இவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியாது. அப்படியே இனியது கேட்கின்ல சேந்துட்டீங்கன்ன்னா....நல்லாயிருக்கும். :)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/05/blog-post.html

மாறன் சடகோபன் புளியமரக்கதை கேள்விப்பட்டுள்ளேன். இந்த விவரங்கள் தெரியாது. புதிய தகவல்கள். நன்றாக படிக்க எளிமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/05/52.html

வானம்பாடி. இனிய பாடல்கள் நிறைந்த படம்.

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் நாட்டம் கொண்டேன்...

ஆகாகா...இசையரசியின் இனிய குரல் கண்ணனை உருக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

கவியரசரை வியந்து வியந்து வியந்து போகிறேன். வாழ்க அவரது புகழ்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/05/62.html

அடடே! இப்ப அந்த வினுசெண்டு பீட்டருதான் பிரதமரா...அடேங்கப்பா! என்ன வளர்ச்சி என்ன வளர்ச்சி...

கட்சி தாவுறது பத்திச் சொன்னீங்களே...நம்மூர்ல கட்சி தாவாத கட்சியே கெடையாது. ஆனா அடுத்த கட்சியை மட்டும் அப்படிச் சொல்வாங்க. எல்லாம் பொழப்பத்த பயக. எரிச்சலா வருது.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/05/blog-post_28.html

பாராசெய்லிங்.....மலேசிய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள் கொத்ஸ். திரும்பவும் வாய்ப்பு கிடைத்தால் பாராசெய்லிங் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அற்புதமான அனுபவம். அதுனாலதான் அத வெச்சே நாங்களும் ஒரு பதிவு போட்டோம்ல. ஒங்க அளவுக்குக் கல்லா கெட்டலைன்னாலும் நல்ல வருமானம். :)

G.Ragavan said...

http://pakutharivu.blogspot.com/2007/05/blog-post_29.html

// "ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?" என்று மகாபெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.
"உனக்கு சம்சுகிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்னானம் பண்ணுவார்?.. புரிந்து நடந்துகொள்..." என்றேன். //

மிகக் கொடூரமான வரிகள். படிக்கக் கசப்பைத் தருகின்றன. சீச்சீ. இப்படி எழுதச் சொல்வது உறுதியாக ஆன்மீகமில்லை.

G.Ragavan said...

http://pakutharivu.blogspot.com/2007/05/blog-post_29.html

அந்தப் பக்கங்களை ஸ்கேன் செய்து போடுங்கள். பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்கு ஆதாரமாக இருக்கும்.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/05/100.html

இசை இன்பந்தான். என்ன ஐயம். இசையில் ஏது உயர்வு தாழ்வு. இசையால் வசமாகா இதயம் எது? நாதமயமான இறைவன் என்று புகழும் பொழுது....இசைதான் உலக இயக்கம்.

G.Ragavan said...

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/05/with_22.html

வாழ்த்துகள் வித்யா. அடிக்கடி ஒங்கள வாழ்த்திக்கிட்டே இருக்கேன். நல்லதுதானே.

இங்கே நெதர்லாந்து நாட்டில் இவர்களுக்குச் சங்கம் உள்ளது. அதே நேரத்தில் இவர்களை யாரும் விநோதமாகப் பார்ப்பதில்லை. சமமாக நடத்தப்படுகிறார்கள். நான் பார்த்தவரையில் அவர்கள் அவர்களாகவே இருக்க...மற்றவர்கள் சாதாரணமாகவே இருக்கிறார்கள். இந்த நிலை இந்தியாவில் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/05/blog-post_29.html

மிகவும் அருமையான பாடல். இந்தப் பாடல் கவியரசர் எழுதி மெல்லிசைமன்னர்கள் இசையில் வெளிவந்தது. இசையரசியின் தேங்குரலும் குழைவும் முருகனருளை அனைவருக்கும் சூரை விடுகிறது. அதனால் நம்மைச் சூரை விடுகிறது.

பனி பெய்யும் மாலையிலே
பழமுதிர்ச்சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே
கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகைப்
பார்த்து நின்ற பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான்
பெண்மையை வாழ வைத்தான்

// (பிறவான், இறவான் என்று பாட்டை எடுத்துக் கொண்டு, யாரோ வரப் போறாங்கப்பா...
அவுங்க என்ன தான் சொன்னாலும், நாம அன்பா Happy Birthdayன்னு சொல்றத விடமாட்டோம்-ல!
ஏன்னா...நான்...அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! :-)//

சொல்லிய சொல்லும் சொல்லின் உள்ளும் உள்ளத்தின் துள்ளும் துள்ளதன் எள்ளும் அறிந்தவன் இறைவன். அப்படியிருக்க யார் வந்து அந்தப் பாட்டையெல்லாம் சொல்லப் போறாங்க ரவி?

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/05/blog-post_29.html

உப்பிட்டவரை உள்ளளவும் நெனைக்கனும். இப்பிடி உப்புமாப் பதிவிட்டவரை...மயிலாரே..ஓடியாங்க...கொஞ்சம் என்னன்னு கேளுங்க!

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/05/blog-post_30.html

மூடர்கள். வினையை விதைக்கிறார்கள். வினையை அறுப்பார்கள்.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/05/blog-post_30.html

மூடர்கள். வினையை விதைக்கிறார்கள். வினையை அறுப்பார்கள்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/05/blog-post_29.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// G.Ragavan said...
இந்தப் பாடல் கவியரசர் எழுதி//

ஜிரா
வாலி எழுதியதாச் சொல்றாங்களே!
கொஞ்சம் பாத்துச் சொல்லுங்களேன். //

வாலியா, கே.சங்கர் படமென்றால் எனக்குத் தெரிந்து கவியரசர்தான் எப்பொழுதும் எழுதிருக்கிறார். வருவான் வடிவேலனில் கூட அவர்தான். இந்தத் தகவலைச் சரி பார்க்க வேண்டும்.

// இறைவன் சொல்லும் உள்ளும் துள்ளும் எள்ளும்,
அதனில் விள்ளும், பள்ளும் நள்ளும் கள்ளும் அறிந்தவன் தான் ஜிரா!

ஆனா இந்த "லொள்ளும்" என்ற ஒன்று உள்ளதே!
அதான் பாட்டை எடுத்து வரும் அன்பர் மனத்துக்கு, ஆசை மனத்தையும் காட்டி மகிழ்விக்க எண்ணினேன்! :-) //

ஆசை மனதைக் காட்டி மகிழ்விக்க எண்ணினீரா? எத்தனை முறை. ஏனென்றால் ஆசாநிகளம் துகளாயின பின்...என்றும் ஜிராவுக்குத் தெரியுமாம் :)

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/05/blog-post_29.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
ஆங் புது கெட்டப் நல்லாத் தான் இருக்கு! செவ்வேள் ஏறிய மஞ்ஞை தெரியும்! நீங்க செவப்பா போட்டுக்கினு எதில் ஏறிப் போறீங்க? //

ஆம்ஸ்டர்டாம்ல உள்ள கால்வாய்கள்ள படகுச் சாவாரி. அதுதான் அந்தப் படம்.

// உங்க பழைய படங்கள் எல்லாம் சும்மா காணாமப் போச்சுனா, இங்க கேளுங்க! ஒரு பெட்டகமே இருக்கு! :-)) //

என்னங்க சொல்றீங்க...எங்கயிருந்து இதெல்லாம் கெடைச்சது. இருக்குறத அனுப்பி விடுங்க. எங்கிட்ட இல்லாதது கூட உங்ககிட்ட இருக்கும் போல இருக்கே.

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/05/70.html

அடடா! நல்ல ஒழிப்புத்தான். இந்த ஒழிப்பையும் ஒழிக்கனுமய்யா....அதுதான் உண்மையான ஒழிப்பு.

கவிதையெல்லாம் கலக்கல்தான். ஒங்களுக்கென்ன சொல்லித் தரனுமா?

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/02/blog-post_12.html

அடிக்குது குளிரு...அது சரி..அது சரி..

ஒரு கேமரா கெடைச்சா குளிருல போய் இப்பிடிப் படமா எடுத்துத் தள்ளீருக்கியே...சளி பிடிச்சுக்குச்சுன்னா என்ன பண்றது?

அமெரிக்காவுல இப்பிடித்தான் ஒரு நாளு...பனி பொழிஞ்சது...இறங்கி வெளையாடியாச்சு. :)))))))))))

«Oldest ‹Older   201 – 218 of 218   Newer› Newest»