Sunday, January 11, 2009

என்னுடைய பின்னூட்டங்கள் - ஜனவரி 2009

ஜனவரி 2009ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

25 comments:

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/01/blog-post_11.html

மைடியர் குட்டிச்சாத்தாம் படம் திரைப்பட வரலாற்றில் ஒரு சகாப்தம். மலையாளத்தில் அப்பச்சன் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் பெருவெற்றியைக் கண்டது. உடனே தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் சென்றது. வென்றது.

முதல்முறை மட்டுமல்லாது இரண்டாம் முறையும் வெளியிடப்பட்டு பெருவெற்றி பெற்ற படம் இது. இப்பொழுது வெளியிட்டாலும் குழந்தைகளைக் கூட்டிச் செல்லலாம். படமும் கண்டிப்பாக வெற்றி பெறும்.

தமிழில் வெளிவந்த மற்றபல 3டி படங்களுக்கு இது முன்னோடி. ஆனால் இந்தப் படத்தின் வெற்றியை வேறெந்த படமும் பெறவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் 3டியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தமிழியக்குனர்கள் சரியாக யோசிக்காததுதான். திரும்பத் திரும்ப சாக்லேட்டை நீட்டினால் அலுப்புத்தானே வரும். சுட்டிப் பையன் என்று நினைக்கிறேன். அந்தப் படத்தில் அனுராதா திரையில் வந்து குலுக்கினார். குடும்பத்தோடு பார்க்கப் போனவர்கள் ஓடிவந்தார்களாம். ஆனால் விட்டலாச்சார்யாவின் ஜெய் வேதாளம் ஓரளவு நன்றாக இருக்கும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/01/blog-post_11.html

மைடியர் குட்டிச்சாத்தான் படத்தின் இசையைப் பாராட்டிச் சொல்ல வேண்டும். படம் தொடங்கும் போதே இசையரசாங்கம் தொடங்கிவிடும். எழுத்து பார்க்கும் பொழுதே ஒரு மாயலோகத்திற்குக் கூட்டிச் செல்லும். பிறகென்ன ஒரே கலக்கல்..படம் முழுதும் ராஜாவின் ஆட்சிதான். இரண்டே பாடல்கள்தான். இரண்டும் முத்துகள். வாணி ஜெயராமின் குரலோடு சுஜாதாவின் குரல் பொருந்தவில்லையென்றாலும் நல்ல பாடல்தான். யேசுதாசின் குரலில் பூவாடைக் காற்றே பாட்டும் கலக்கல்.

G.Ragavan said...

http://arivili.blogspot.com/2009/01/14-15.html

என்ன கொடுமை. குழந்தை என்றும் பாராமல் குதறிய கயவர்களுக்கு உரிய தண்டனையைத் தந்தே ஆக வேண்டும். குழந்தையைக் குழந்தயாகப் பார்க்கும் மனநிலை வரவேண்டும்.

G.Ragavan said...

http://naadody.blogspot.com/2009/01/blog-post_08.html

நீங்கள் குறிப்பிட்ட கவிஞர்கள் அனைவர்களும் நல்ல இனிய பாடல்களைத் தந்துள்ளார்கள்.

ஆனால் மற்றவர்களை விட புலமைப்பித்தன் ஒரு படி முன்னேயிருப்பது போல ஒரு எண்ணம். அரசியல் அவரை பெருமைக்கு உள்ளாக்காவிடினும்..அவரது ஒவ்வொரு திரைப்பாடலும் அவரது தமிழறிவுக்குச் சாட்சி. தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யாரடித்தாரோ...யாரடித்தாரோ...

ரோசாப்பு ரவிக்கைக்காரி..என்று பட்டியல் நீளும். இதழில் கதையெழுதும் நேரமிது பாடலும் இவர் எழுதியது என்று நினைக்கிறேன். முத்துலிங்கம் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்.

இவர் தேவாவின் இசையில் வா கலா கலா கண்ணடிச்சா கலக்கலா என்றும் எழுதியிருக்கிறார்.

மெல்லிசை மன்னர் இசையில் எம்.ஜி.ஆருக்காக நிறைய பாடல் எழுதியிருக்கிறார். சட்டென்று பாடல்கள் நினைவிற்கு வரவில்லை.

G.Ragavan said...

http://kalagam.wordpress.com/2009/01/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/#comment-145

மிக அருமையான கருத்து. பெண்ணைப் போகப் பொருளாக மட்டுமே பார்ப்பதும் தவறு என்று எல்லாருக்கும் உறைக்க வேண்டும். பாலின ஈர்ப்பு என்பது தவிர்க்க முடியாததே. ஆனால் அந்த ஈர்ப்பை மட்டுமே மூலதனமாக வைத்து இம்மாதிரியான விளம்பரங்களை வெளியிடுவது சமூகத்தில் ஆண்-பெண் சமநிலையைக் குலைக்கும். விளைவு நீங்கள் குறிப்பிட்டது போலத்தான் இருக்கும்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2009/01/blog-post_10.html

சேந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சிவக்கொழுந்து என்பதாலோ என்னவோ கேள்விகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் சேந்தன் என்பதாலோ என்னவோ கேட்டதெல்லாம் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கு அன்பு முத்தங்கள்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2009/01/blog-post_10.html

சேந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சிவக்கொழுந்து என்பதாலோ என்னவோ கேள்விகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் சேந்தன் என்பதாலோ என்னவோ கேட்டதெல்லாம் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கு அன்பு முத்தங்கள்.

G.Ragavan said...

http://wethepeopleindia.blogspot.com/2009/01/blog-post.html

நீங்க சொன்ன மாதிரி நடக்கத்தான் வாய்ப்பு நிறைய. ஜனநாயகம் பிணநாயகமாகி இப்பப் பணநாயகந்தானே இருக்குது. இதுல எல்லாருமே திருடங்கதான். ஒரு சிலர்தான் அவங்கவங்க அபிமானத் தலைவர்/தலைவி நல்லவங்கன்னு நெனைக்கிறாங்க. ஆனா எல்லாரும் பணத்துக்குப் பறக்குறவங்கதான்.

G.Ragavan said...

http://girirajnet.blogspot.com/2009/01/gani.html

இந்தியிலும் கஜினியைப் பார்த்தேன். முடிவை மாற்றியிருக்கின்றார்கள். ஆனாலும் அந்த இயந்திரங்களுக்கு நடுவில் நயன்தாரா மொபைலில் பேசுகையில் இயந்திரங்கள் நிற்கும் அதிர்ச்சிக் காட்சியை இந்தியிலும் சேர்த்திருக்கலாம். உண்மையிலேயே அதிர்ச்சியை உண்டாக்கும் காட்சி அது. ஆனால் அங்கிருந்து நயன் தப்பிப்பது நம்ப முடியாமல் இருக்கும்.

இந்தியில் பாடல்களில் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் சப்பை. ரகுமானுக்கு என்னாச்சு?

அமீர்கான் நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய இருப்பினாலேயே படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் சூரியாவிடமிருந்த ஏதோ ஒன்று குறைகின்றது. சுட்டும் விழிச்சுடரே பாடலில் சூரியா-அசின் ஒட்டுறவும் வேதியலும் நன்றாக இருக்கும். இந்தப் படம் முழுக்கத் தேடினாலும் கிடைக்கவில்லை. ஆனால் காரை விற்று அமீர் கையில் பணம் கொடுக்கும் பொழுது ஒரு பாட்டு வரும். எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்கிறது என்று. அந்தப் பாடல்காட்சிதான் படத்திலே மிகவும் பிடித்த கட்டம். மிக அருமை. ஐயோ....இவங்க ரெண்டு பேரும் சேரக்கூடாதா என்று ஏங்க வைத்த காட்சி.

படம் முடியும் பொழுது கேக் வெட்டும் காட்சியில் அந்தப் பெண்ணின் பெயரைச் சரியாகச் சொல்லும் புத்திசாலித்தனமும் பாராட்ட வைத்தது.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2009/01/blog-post_10.html

உஷா.. ஒன்னு நல்லாப் புரியுது. நீங்க பெரியாளாயிட்டீங்க. சூப்பரு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/01/all-because-of-uthappa.html

ஆகா.... அந்த பொங்களத்தைப் புகைப்படலம் ஆக்குனதப் புகைப்படமா எடுத்துப் போட்டிருக்கக் கூடாதா! நாங்களும் பாத்து ரசிச்சிருப்போம்ல.

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2009/01/east-mebon.html

அடேங்கப்பா... இருந்த கல்லெல்லாம் கொடஞ்சி கட்டீருக்காங்க போல. அதுலயும் அந்தப் பாம்பைக் கட்டி கடலைக் கடையிற சிற்பம்....அடடா....ஆனா மண்டைய ஒடைச்சிருக்காங்க. கலையக் கலையா பாக்க மாட்டாங்க போல.

இந்தப் படமெல்லாம் கொண்டாந்து காட்டுனதுக்கு ரொம்ப நன்றி பிரபா.

G.Ragavan said...

http://manimalar.blogspot.com/2009/01/blog-post.html

இலசந்த விரமதுங்கே என்னும் அந்த மனித தெய்வத்தின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். நம்மினத்தவரை இழப்பதே பெரும் சோகம். அதை விடப் பெரிய சோகம் இலசந்த விரமதுங்கே பொன்ற நியாயவான்களை இழப்பது.

G.Ragavan said...

http://mathimaran.wordpress.com/2009/01/17/article156/

மதிமாறன், ஒரு நல்ல இசை ரசிகன் என்ற வகையில் இந்தப் பதிவிற்கு என்னுடைய பின்னூட்டத்தை இடுகிறேன்.

மெல்லிசை மன்னர், இளையராஜா, ரகுமான் என்று வரிசை வந்தாலும் இவர்கள் மூவருக்குள்ளும் இருக்கும் மரியாதையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இசைத்தலைமுறை இடைவெளி இருந்தும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மெல்லிசை மன்னர் பாட முடிகிறது என்பது இவர்களுக்குள் இருக்கும் மதிப்புதான் காரணம். இளையராஜாவும் மெல்லிசை மன்னர் இசையில் பாடியிருக்கின்றார். மெல்லிசை மன்னரும் இளையராஜா இசையில் பாடியிருக்கிறார். சிம்பொனி இசையமைத்ததும் இளையராஜா அதை முதலில் மெல்லிசை மன்னருக்குத்தானே போட்டுக் காட்டினார்.

ரகுமானுக்கு விருது கிடைத்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. ஒரு தமிழன் பெற்ற விருது என்ற வகையில் நான் இதைப் பார்க்கிறேன்.

ரீமிக்ஸ்சிற்கு வருவோம். தொட்டால் பூ மலரும் பாடலுக்குச் செய்தது ரீமிக்ஸ் அல்ல என்று மெல்லிசை மன்னரே ஒப்புக் கொண்டு விட்டாரே. அந்தப் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு வேறொரு மெட்டு போட்டிருக்கிறார். அழகிய தமிழ் மகனில் பொன்மகள் வந்தாள் என்று போட்டது ரீமிக்ஸ். ஆனால் அது ரகுமான் இசையில்லை. அந்த ரீமிக்சை வேறொருவர் செய்தார் என்று கேள்விப்பட்டேன்.

இரண்டாம் வகையில் சொல்லப்பட்ட இது போன்ற ரீமிக்சுகளை மெல்லிசை மன்னரும் கடுமையாகச் சாடியிருக்கிறார். தான் உயிரோடு இருக்கும் போது தானிட்ட மெட்டுகளுக்கு நடக்கும் வன்கொடுமையைக் கேட்கச் சகிக்காமல் அவர் ஆத்திரப்பட்டது ஒப்புக்கொள்ள வேண்டிய அறச்சீற்றம்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/01/blog-post_18.html

டீச்சர். நியூட்டனின் விதி என்ன? ஒன்னாவதா ரெண்டாவதா மூனாவதான்னு தெரியலை. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை இன்னொரு ஆற்றலகத்தான் மாத்த முடியும். ஆனா அழிக்க முடியாது :D

வாழைப்பழங்களை நீங்க அழிக்க முயற்சி பண்ணீங்க. ஆனா என்னாச்சு... அது கேக்காச்சு... அதையும் இன்னும் அழிக்க முடியலை பாத்தீங்களா? :D

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/01/blog-post_18.html

இன்னொன்னு சொல்றேன். பெண்கள் சமைக்கிறப்போ சமையலைத் தேவையில்லாமக் கடினப்படுத்தீர்ராங்கன்னு நெனைக்கிறேன். ஆறு வாழப்பழத்துக்கு இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். :)

வாழப்பழத்த நல்லாப் பெசஞ்சு வெச்சுக்கனும். அதே முட்டைய நல்லா அடிச்சுக்கனும். புசுபுசுன்னு வரனும். ஆம்லெட் போட்டாக்கூட மெத்துன்னு இருக்குற அளவுக்கு அடிச்சிக்கனும். மாவைத் தண்ணி விட்டுக் கரச்சிக்கனும். அதே செல்ப் ரைசிங் எடுத்துக்கோங்க. அதுல லேசா...அதென்ன மார்ஜரினா...அது... பெசஞ்ச பழம்...அடிச்ச முட்ட....அந்த பிரவுன் சுகர்.. எல்லாம் கலந்துக்கனும்.

நான் ஸ்டிக் அடுப்புல வெச்சு....குக்கி போட்டுறனும். கும்முன்னு இருக்கும். அல்லது... மாவைத் தண்ணியாக் கரைக்காம கேக்குக்குக் கரைச்சிட்டு ஓவன்ல வெச்சிரனும். இல்லைன்னா பான் கேக் ஊத்திரலாம். இல்லைன்னா இட்டிலி சுடலாம். அதுவும் இல்லையா....சப்பாத்தி மாவு பெசஞ்சு வாழைப்பழத்தப் போட்டுப் பெசஞ்சி பூரி சுடலாம். அதுன்னா ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு ஆச்சு. கேக்குன்னா எவ்ளோ திங்க முடியும் சொல்லுங்க? ;)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/01/34.html

விடை தெரிஞ்சிருச்சு. சொன்னாலும் என் பேருக்குப் போடாதீங்க. ஏன்னா கேட்டுத் தெரிஞ்ச விடை. சொந்த விடையில்லை.

குழலூதும் கண்ணனுக்குப் பாட்டு.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2009/01/blog-post_20.html

ஹாஹாஹா உங்க பதிவு சரியானதுன்னாலும் பதிவோட கருத்து தப்பானது. :-)

ஏன்னு கேக்குறீங்களா? இதுக்கு நாலு வருசம் நான் பின்னாடி போகனும். நான், ஒரு வடக்கத்திப் பையன், மலையாளி.. மூனு பேரும் நண்பர்களா இருந்தோம். அப்போ நெட்டுல மேட்டர் எப்படித் தேடுறதுன்னு பேசுனோம். மலையாளி நண்பன் மல்லுன்னு போட்டுத் தேடுனான். வடக்கத்தி நண்பன் தேசின்னு போட்டுத் தேடுனான். நமக்குத் தமிழ்தானே. :-)

ஆகா நீங்க மலையாளம்....கேரளான்னு தேடாம malluன்னு தேடிப் பாருங்க. அதே மாதிரி desi. தமிழர்களையும் மலையாளிகளையும் தவிர மத்தவங்கள்ளாம் desiய நீரோட்டத்துல சேந்தாச்சுங்கோவ் :-)

நீங்க என்னடான்னா தமிழன் மட்டுந்தான் இப்பிடின்னு பேசுறீங்க. ஒலகமே இப்பிடித்தான் இருக்குதுங்கோய்.

G.Ragavan said...

http://naiyaandinaina.blogspot.com/2009/01/blog-post_19.html

கோவி பதிவில் நானிட்ட பின்னூட்டம்

http://govikannan.blogspot.com/2009/01/blog-post_20.html

ஹாஹாஹா உங்க பதிவு சரியானதுன்னாலும் பதிவோட கருத்து தப்பானது. :-)

ஏன்னு கேக்குறீங்களா? இதுக்கு நாலு வருசம் நான் பின்னாடி போகனும். நான், ஒரு வடக்கத்திப் பையன், மலையாளி.. மூனு பேரும் நண்பர்களா இருந்தோம். அப்போ நெட்டுல மேட்டர் எப்படித் தேடுறதுன்னு பேசுனோம். மலையாளி நண்பன் மல்லுன்னு போட்டுத் தேடுனான். வடக்கத்தி நண்பன் தேசின்னு போட்டுத் தேடுனான். நமக்குத் தமிழ்தானே. :-)

ஆகா நீங்க மலையாளம்....கேரளான்னு தேடாம malluன்னு தேடிப் பாருங்க. அதே மாதிரி desi. தமிழர்களையும் மலையாளிகளையும் தவிர மத்தவங்கள்ளாம் desiய நீரோட்டத்துல சேந்தாச்சுங்கோவ் :-)

நீங்க என்னடான்னா தமிழன் மட்டுந்தான் இப்பிடின்னு பேசுறீங்க. ஒலகமே இப்பிடித்தான் இருக்குதுங்கோய்.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2009/01/blog-post_22.html

பூக்காடு சென்றால் செடிகள் நூறு. அந்த நூறு செடிகளில் பூக்கள் ஆயிரம். அந்த ஆயிரம் பூக்களில் நல்லது அல்லது என்று பிரிக்கவியலா நிலை. அப்படியிருக்கையில் உச்சிக் கொப்பிலும் உட்கொப்பிலும் மறைந்திருந்த மணம் மிகுந்த பூக்கள் பலதைப் பறித்து....வாழைநாரோ அழுத்தும்...பஞ்சுநூலோ அறுக்கும்...என்று வருந்தி மேகத்தைத் திரித்து விளக்கம் என்னும் கலங்கரை விளக்கத்தோடு கொடுத்திருக்கின்றீர்களே! கேட்க இரண்டு காதுகள் போதவில்லையே!

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2009/01/blog-post_22.html

மகாசக்தி மாரியம்மன் படத்திற்கு இசை யார்? இனிமேல் இசையமைப்பாளர் பெயரும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அனங்கன் அங்கஜன் பாட்டு எனக்கும் மிகவும் பிடிக்கும். பாலுவின் நெய்க்குரலில் பொறித்த அரிசி முறுக்காக எஸ்.ஆர்.ஈசுவரியின் குரலில் விறுவிறுப்பான பாடல். இந்தப் பாடலைத் தனியாகத் தரவிறக்கத் தரயியலுமா?

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2009/01/blog-post_22.html

மஞ்சள் இட்ட நிலவாக...ஆகா ஆகா.... என்ன ஒரு அருமையான பாடல். நிலவே குளிர்... அந்தக் குளிர் நிலவிற்கும் குளிரெடுக்க வைக்கும் குழைந்த குரலில் பி.சுசீலா பாடுவது சுகம். சுகம். இசை மெல்லிசை மன்னர்தானே?

கர்ணனைப் பற்றிப் பேசினால் பேசிக்கொண்டேயிருக்கலாம். அத்துணை சிறப்பு. சூலமங்கலம் பாடுகையில் ஒரு தாய் பாடிக் கேட்பது போலவே உள்ளது. பொருத்தமான பாடகர்களைத் தேர்வு செய்வதில் மெல்லிசை மன்னருக்கு நிகர் அவரேதான்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2009/01/blog-post.html

முத்துக்குமரனோடு ஒத்துப் போகிறேன். நானும் தமிழ்ச்சாதி.

அப்படிச் சொல்லிக் கொள்வதைக் கேள்வி கேட்கின்றவர் திருமணப் பத்திரிக்கையைக் காட்டி விட்டுப் பேசட்டும்.

தற்கொலை என்று சொல்வது எளிது. ஆனால் அதன் பின்னால் இருக்கும் துணிச்சலும் தியாகமும் கையறுநிலையும் மிகவும் கவனிக்கத்தப் பாடம்.

அரசியல்வாதிகளிடம் எதையும் எதிர்பார்க்கவியலாது. ஜெயலலிதாவின் ஆணவத்திற்கும் அடாவடித்தனத்திற்கும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. எங்கே புலிகள் தன்னைக் கொன்றுவிடுவார்களோ என்று அஞ்சி அஞ்சியே அடங்காமல் போனவர் அவர். அவரிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வீணாய்ப் போனவர். அதிமுக என்று சொல்லிக் கொள்வது அசிங்கம்.

அரசியலாக்க வேண்டாம் என்று கருணாநிதி கெஞ்சிக் கேட்கிறார். கொலை பண்றாங்க என்று சன் டீவியில் கதறி அழுதது மறந்தது போல. அன்றைக்குச் சட்டமன்றத்திலே சொல்கிறார். "அரசாங்கம் என்று ஒன்று இருப்பதாலேயே தீர்மானமாவது போட முடிகிறது" என்று. இனிமேல் அவரது வழியைப் பற்றி எல்லா அரசாங்கங்களும் வெறும் தீர்மானத்தை மட்டும் போட்டால் போதும். அடப்போங்கய்யா... தமிழினத் தலைவராம். திமுக என்று சொல்லிக் கொள்வது வியாபாரம்.

விளாத்திகுளங்களும் தைலாபுரங்களையும் விட்டுத் தள்ளுங்கள். காங்கிரஸ்காரனை பிடியுங்கள். மானமுள்ளவன் காங்கிரசுக்கு ஓட்டுப் போடக்கூடாது என்பது என் கருத்து. நாம் தமிழர் என்ற உணர்வு கொஞ்சமேனும் இருந்தால்.... காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் படுதோல்வி அடைய வேண்டும். முத்துக்குமரனுக்குத் தமிழகத் தமிழான குறைந்தது இதையாவது செய்ய வேண்டும்.

முத்துக்குமரா.. உனது தியாகம் பலனளிக்கும். வெற்றி நமதே.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/01/blog-post_31.html

மறைந்த நகைச்சுவைத் திலகம் நாகேஷ் அவர்களின் ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

நல்லதொரு பேட்டியைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

G.Ragavan said...

http://vinavu.wordpress.com/2009/01/31/eelam15/

முத்துக்குமரனுக்கு இறுதி அஞ்சலி.

புரட்சி பொங்கி வெடிக்க வேண்டிய பொழுது, குறைந்த பட்சம்.... தமிழகத்திலாவது திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து புரட்சி வெடிக்க வேண்டும். மானமுள்ளவர்கள் இந்த மூன்று கட்சிகளையும் கட்டாயம் புறக்கணிக்க வேண்டும்.