Sunday, February 01, 2009

என்னுடைய பின்னூட்டங்கள் - பிப்ரவரி 2009

பிப்ரவரி 2009ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

34 comments:

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2009/02/blog-post.html

முழுக்க முழுக்க ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. இந்தக் கருத்தை எதிர்ப்பவர்கள் கூட "நீ ஒழுங்கா" என்ற கேள்வியைத்தான் எழுப்ப முடிகின்றதே தவிர... பதிவின் கருத்திலிருக்கும் உண்மைக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அதற்கான விடை அவர்கள் மனதிற்கே நன்றாகத் தெரியும். கருணாநிதியை எதிர்ப்பவர்கள் ஜெயலலிதா ஆதரவாளராக இருக்க வேண்டியதில்லை. இருவரையும் தவறு என்று சொல்ல வேண்டியிருந்தால் சொல்லித்தான் ஆக வேண்டும். அதை நடுநிலமை, ஓர நிலைமை என்று எப்படிச் சொல்லிக் கொண்டாலும் கவலையில்லை.

G.Ragavan said...

http://www.ponmaalai.com/2009/02/blog-post.html

ஹாஹாஹா பித்தத்துக்கு சுக்கா மிளகான்னு அரசாங்கம் தேடுது போல!!!

G.Ragavan said...

http://muralikkannan.blogspot.com/2009/02/2.html

அசோகன் எனக்கும் மிகவும் பிடித்த நடிகர். உயர்ந்த மனிதன் டாக்டராக வந்து ரகசியத்தைச் சொல்ல வரும் காட்சியில் மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த நடிப்பை மறைக்காமல் இருக்க அந்தக் காட்சியில் நடிகர்திலகம் எந்த நடிப்பையும் வெளிக்காட்டாமல் இருப்பார்.

அன்பே வா படமும் அருமை. இன்னும் நிறைய படங்களும் உண்டு. காயத்ரி படத்திலும் நன்றாக நடித்திருப்பார்.

நல்லதொரு தொகுப்பு. மிக அருமை.

G.Ragavan said...

http://thamilar.blogspot.com/2009/02/blog-post_03.html

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகச் சரியானது. இது அரசியல் போராட்டமல்ல. உணர்வுகள் உளுத்துப் போன அரசியல்வாதிகளில் கையாலாகதத்தனத்தின் ஏமாற்றத்தில் உணர்வுகள் கொந்தளித்து உருவான அறப்போராட்டம். புரியாதது போல நடிக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் ஆளத்துடிக்கும் வர்க்கத்திற்கும் பாடம் நடத்தும் போராட்டம். வெல்க. வெல்க.

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2009/02/blog-post.html

சுற்றுலா என்றாலே எனக்குப் பிடிக்கும்...அதிலும் பழம்பெருமை வாய்ந்த இடங்களும் கட்டக்கலைச் செல்வங்களும் கொண்ட இடங்களுக்குச் செல்வது இன்னும் பிடிக்கும். உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சி.

கோபுரங்களைக் காண்கையில் மேலெழுந்து செல்லும் தீப்பிழம்பினை நினைவு படுத்துகிறது. நெருப்பானது எந்தச் சூழலிலும் மேல் நோக்கிச் செல்லவே முனையும். அது போல இறையருள் நாடும் உள்ளங்களும் மேன்மை என்ற பண்பைப் பற்றி மேல் நோக்கிச் செல்லவே முனையும் என்பதைச் சொல்வதற்காக அத்தகைய அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கலாமோ!

சிதைந்த கோயில்களின் நிலை... வருத்தம் தருகிறது.

G.Ragavan said...

http://isaiyinmadiyil.blogspot.com/2009/02/2.html

அருமையான பாடல்கள். இது கேட்கத் திகட்டாத கானம்.

முன்பே வைத்த வேண்டுகோள். இத்தகைய இனிய பாடல்களைத் தருகையில் பாடலோடு தொடர்புள்ள பிற தகவல்களும் கிடைக்குமானால் மிகச் சிறப்பாக இருக்கும். குறிப்பாக திரைப்படம், இசையமைப்பாளர் போன்ற தகவல்கள்.

G.Ragavan said...

http://awardakodukkaranga.wordpress.com/2009/02/08/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D

எதிர் நீச்சல் எனக்கும் மிகவும் பிடித்த படம். அதில் வரும் அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா பாட்டும் ரொம்பப் பிடிக்கும். எல்லா நடிகர்களுக்குமே நடிப்பதற்கு வாய்ப்புள்ள படம். முக்கால்வாசிப் படம் அந்த ஒண்டுக்குடித்தனத்துக்குள்ளேயே நடந்து விடும்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/02/chidambaram-what-next.html

மிக அருமையான பதிவு. பாராட்டுகள். திருக்கோயில் நிர்வாகங்கள் கைமாறுகையில்.. அதனால் நற்பலனும் நற்செயலும் விளைய விரும்புவதே அனைவரின் விருப்பமும். அந்த வகையில் அரசு என்ற முறையில் கருணாநிதி அவர்களிடம் இந்தக் கோரிக்கையை வைப்பது சரியானதே.

வாரியாரைத் தாக்கியது தவறு என்றே எடுத்துக் கொள்வோம். நந்தனாரைத் தாக்கியவர்கள்... பிறகு ஏற்றுக்கொண்டார்களா? அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா? இந்தக் கேள்விக்கு நேர்மையான விடை சொல்கின்றவர்களுக்கு கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைக்கலாமா என்பதற்கும் நேர்மையான விடையிருக்கும்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/02/chidambaram-what-next.html

சைவத்திருமறைகள் பல போற்றிய இடம் தில்லை. அந்தத் தில்லையை சைவத் தமிழுக்கு எல்லையாக்கும் முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும்.

திருமுறைகளையும் சைவப் பெருமறைகளையும் வளர்க்கும்... உலகறியச் செய்யும் மையமாகவும் தில்லைக் கோயிலை உருவாக்க வேண்டும். தமிழை மின்னணுவில் ஏற்றி...உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும். அத்தோடு ஒரு இணையதளம் அமைத்து கோயிலின் பெருமையையும், தமிழகத்துக் கலைத் திறமையையும் உலகறியச் செய்ய வேண்டும்.

கோயிலின் பராமரிப்பு கண்டிப்பாக சீர்தொடங்க வேண்டியுள்ளது. புணரமைப்பு செய்து குடமுழுக்கு செய்ய வேண்டியது மிக்க தேவை.

தில்லைக் கோயிலில் தமிழ் வழிபாட்டு முறைகளை முன்னிறுத்தி... தேவார திருமறைகளை ஒரு சாராருக்கோ ஊராருக்கோ சொந்தம் என்ற நிலையை மாற்றும் வகையில் அனைவரும் தில்லைக் கோயிலில் ஓதும் வகை செயல் வேண்டும்.

திருக்கோயிலில் அரசியல் நுழையாமல், ஆன்மீகமும் தமிழும் ஆளும் வகை செய்தால் முதல்வருக்கும் அரசுக்கும் நற்பெயர் கிட்டும் என்பது மறுப்பற்றது.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/02/chidambaram-what-next.html

// ஆச்சார்ய ஹ்ருதயம் வலைப்பூ இன்வைட் அனுப்பி வைக்கட்டுமா? அங்க மட்டும் தான் கேள்வி கேக்குறவங்களை ரொம்ப புடிக்குது-ன்னு சொல்றாங்க! :)) //

ஆச்சார்ய ஹ்ருதயமா? குழந்தைத்தனமாக ஆச்சர்ய இருதயத்தோடு உலகைப் பார்க்கும் உள்ளங்களை மாச்சர்யம் நீக்கி ஐஸ்வர்யம் பெற்றுத்தரும் இருதயங்களைப் பற்றிப் பேச விழையும் வலைத்தளமா?

ஆசிரியர் என்றார் கற்பிப்போர். அப்படி நாம் கற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விசிறி வீசு சிறியர்கள் நாம். ஆயினும் வலையில் விழாமல் இருக்கவே விரும்புகிறேன். :)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/02/chidambaram-what-next.html

// Blogger ஜடாயு said...

// அல்லது நந்தனாரைத் தாக்கிய காரணத்தினாலேயே அவர்கள் இன்னமும் தீயவர்களாகவே கருதப்படுகின்றார்களா? //

நந்தனாரைத் தாக்கினார்களா? யார் தாக்கியது? எப்போது? வாரியார் சுவாமிகள் முதல் கீதா சாம்பசிவம் அம்மா வரை திருநாளைப் போவார் உண்மைச் சரிதத்தை பெரியபுராண அடிப்படையில் எழுதி ஓய்ந்தாயிற்று. அதைப் படித்திருக்கிறீர்களா? முதல்ல போய்ப் படிங்க.

இது போக, பின்னாளில் கோபாலகிருஷ்ண பாரதியார் இதே கதையை பல கற்பனைகள் சேர்த்து நாடக வடிவமாக எழுதியதில் கூட "தாக்குதல்" எதுவும் கிடையாது. ஆண்டை நந்தனார் தில்லை போவதைத் தடுக்க முயற்சிக்கிறார்.. சிவனருளால் நந்தனார் அதைக் கடந்து தில்லை போனதும் தன் குலத்தை எண்ணி தானே நின்றுவிடுகிறார். //

வணக்கம் ஜடாயு சார். தாக்குதலைப் பத்தித்தான் இப்பப் பேச்சா! சீர்திருத்தங்களைப் பத்தி இல்லையா. சரி தாக்குதலுக்கே வருவோம். தாக்குதல் என்பது எப்படியெல்லாம் நடத்தப்படலாம்? ஆயுதங்களையோ கையையோ கொண்டு மட்டுந்தானா? அப்ப நுண்மருங்கல் தாக்கு அணங்கு சீதைன்னு கம்பர் சொல்றாரே. அங்க தாக்கப்பயன்படுத்தப்பட்டது ஆயுதமா? அந்த ஆயுதம் தாங்கினால் உடம்பு வீங்குமா? :)

என்ன சொன்னீங்க? தன் குலத்தை எண்ணித் தானே நின்று விட்டாரா? ஏன் நினைக்கனும்? ஏன் நிக்கனும்? அந்தக் குலத்தவர்கள் உள்ள போகலாம்னு இருந்தா... தன்னுடைய குலமே நினைவுக்கு வந்திருக்காதே! ஆக... குலத்தை நினைக்க வேண்டிய அளவிற்குச் சட்டம் இருந்திருக்கிறது. அது கொடுங்கோன்மை. அந்தக் கொடுங்கோன்மை தாக்கப்பட்ட மேன்மையரைப் போய்... தன் குலத்தை எண்ணி நின்றார்... என்று சொல்வது எப்படியிருக்கு தெரியுமா? ஊன் மெலிந்துரு ஞமலி ஊனறு எலும்பைக் கடிக்க.... வாலெயிறு ஊறு குருதியைச் சுவைத்தின்புறு நிலையொத்தது.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே...நாவினால் சுட்ட வடு. கோயிலுக்கு வரனும்னு விரும்புறவனை... வெளிய நின்னு கும்புடனும்னு சட்டம் செஞ்சி வைச்சிருந்தா...அதைச் சமூகத்தின் மீதான தாக்குதல்னு சொல்லாம.... தூக்குதல்னா சொல்வாங்க?

ஆகக்கூடி... ஆண்டவனே கனவுல வந்து சொன்னாத்தான் கேப்பாங்க. அப்படித்தானே. இங்கயும் ஆண்டவன் சொன்னது. நீதியை ஆண்டவன் சொன்னதுதான். ஆனா கனவுல இல்ல. நினைவுல.

// ஒன்றுமே படிக்காமல், இப்படி போகிற போக்கில் ஏதோ கொசு அடிப்பது மாதிரி ஒரு கமெண்ட் விட்டு விட்டுப் போகிறீர்களே.. என்ன நியாயம் சார் இது? //

கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள். நான் எங்கே! ஏதோ எனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொன்னேன்.

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2009/02/blog-post_09.html

இங்க ஐரோப்பாவுலயும் பெரும்பாலும் இந்திய உணவகம்னு போட்டிருந்தா பாகிஸ்தானியோ பங்களாதேஷியோதான் நடத்துவாங்க. ஆம்ஸ்டர்டாம்ல ஒரு நல்ல இந்திய உணவகம் இருக்கு. அதுக்குப் பேரு காமசூத்ரா. அது எங்க இருக்கு தெரியுமா? சிவப்பு விளக்குப் பகுதிக்குப் பக்கத்துல. டெல்லிக்காரங்க நடத்துறாங்க. ஆனா சாப்பாடு பிரமாதமா இருக்கும்.

என்னது! கரப்புத் துவையலா? விட்டா பாம்புப் பச்சடி...தவளைப் பாயாசம்னு அடுக்குவீங்க போல. கச்சே தாகேன்னு ஒரு விளங்காத இந்திப் படம் வந்துச்சு. அதுல அஜய் தேவ்கன் காட்டுக்குள்ள சூப்பு வெச்சிக் குடுப்பாரு. குடிச்சிட்டு அவரோட நண்பரு.. என்னடா சூப்புன்னு கேப்பாரு. மேண்டக்கா சூப்னு சொல்வரு. வெண்டக்கா சூப்பான்னு என்னோட நண்பன் கிட்ட கேட்டேன். இல்லையாம். மேண்டக்-னா தவளையாம். மேண்டக் கா சூப்புன்னா தவளையின் சூப்பு. யப்பா சாமி ஆள விடுங்கப்பு!

ஒரு ரகசியம் குறிச்சிக்கோங்க. இங்க ஒரு எத்தியோப்பியன் உணவகம் இருக்குது. அங்க முதலைக்கறியும் மான்கறியும் வரிக்குதிரைக் கறியும் கெடைக்குது. மொத ரெண்டு எப்பிடியிருக்கும்னு சுவைச்சிப் பாத்தாச்சு.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2009/02/293-challenge.html

மெய் - உடம்பு, உண்மை
புல(ம்) - நிலம்
புல(ன்) - உறுப்பு (அ) உணர்ச்சி
அறைகூவல் - இது எல்லாருக்கும் நல்லாத் தெரியும்

இதெல்லாம் வெச்சிப் பாத்தா,

உடம்பு உணர்ச்சி அறைகூவல் - Body sense requester
உடம்பு நில அறைகூவல் - body land requester
உடம்பு உறுப்பு அறைகூவல் - body part requester
உண்மை உணர்ச்சி அறைகூவல் - true sense requester
உண்மை நில அறைகூவல் - True ground requester
உண்மை உறுப்பு அறைகூவல் - true part requester

இதுல எதாச்சும் சரியா?

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2009/02/blog-post.html

வெண்பாவிலே எப்படி ஈரடி வெண்பான்னு பிரிஞ்சதோ... அதே போல இந்த வெண்பாவுக்கு நூறடி வெண்பான்னு பேரு. பின்னே... நூறு அடிகள் கைப்புள்ள வாங்கப் போறாருல்ல.

மத்தபடி பாட்டு பெரமாதம்.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2009/02/blog-post.html

// Namakkal Shibi said...

//வெறும்+பாடல் = வெண்பா ன்னு அர்த்தம்//

தல! இலக்கணப் பிழை!

வெறும்+பாடல் = வெற்றுப்பா அல்லவா! //

வெறும்+பா ம்மா வெறுப்பா இல்லையா?

G.Ragavan said...

http://rishansharif.blogspot.com/2009/02/blog-post.html

முதலில் படத்தைப் பார்த்தவுடன் .. ஏதோ குழந்தைகள் பொம்மையை இப்படிச் செய்திருக்கின்றன என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அதிர்ச்சிகரமான அந்தச் செய்தி. இந்தப் பென்சில் திருகுணியைக் கண்டுபிடித்தவன் மனநிலையைச் சோதிக்கத்தான் வேண்டும்.

G.Ragavan said...

http://ravitha82.blogspot.com/2009/02/blog-post.html

இந்தப் பதிவோட தொடுப்ப.. இந்தப் பதிவைப் படிக்காத நண்பர் ஒருவர் குடுத்தாரு. நானும் என்னனு பாக்க வந்தேன். படமும் பாடமும் நல்லாருக்கு. :)

G.Ragavan said...

http://www.sridharblogs.com/2009/02/blog-post.html

நான் கடவுள் படத்தை நானும் பார்த்தேன். வித்யாசமான படம் என்பது மறுப்பிற்கு இடமின்றி ஒப்புக்கொள்கிறேன்.

Aham Brahma asked meங்குறது கதையோட மையக்கருத்து மாதிரி தோணலை. ஏன்னா... ஆர்யா வர்ர காட்சிகள் மிரட்டுற மாதிரி இருந்தாலும்... ஏத்துக்குற மாதிரி இல்லை.

ஆனா அந்த விளிம்புநிலை மனிதர்கள்...அப்பப்பா....ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. அதுலயும்...அந்தச் சின்னப் பையன்....நாங்களும் முதலாளியாயிருவோம்ல..அப்படியே...தொழிலதிபராகி நடிகையக் கல்யாணம் பண்ணி வெச்சிருவோம்னு சொல்றப்போ சிரிப்பை அடக்க முடியலை.

அதே மாதிரி... இந்தக் கருமத்த ஊத்துடான்னு அந்தக் குள்ளமான பொண்ணு சொல்லி வாங்கிக் குடிச்சிட்டு அடிக்கிற லூட்டியும் அருமை. கிட்டத்தட்ட சுந்தர்.சி படத்துல வரும் பணக்காரப் பெரிய குடும்பத்தை நினைவு படுத்தும். ஆனா.... பிச்சைக்காரங்க.

அன்னக்கிளி படத்துல உண்மையிலேயே மிகச்சிறந்த பாட்டுன்னா சொந்தமில்லை பந்தமில்லை பாட்டுதான். அந்தப் பாட்டு வர்ர காட்சியில கண்ணுல தண்ணி வந்துருது. அதே மாதிரி இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாட்டுக்கும்.

படத்தை ரசித்தேன். படைக்கப்பட்ட விதத்துக்காக.

ஆனா அந்தக் கஞ்சா கசக்கியைச் சாமியார்னு கூட ஏத்துக்க முடியலை. சாமீன்னு எப்படி ஏத்துக்கிறது. குப்பைத்தொட்டி மாதிரி இருக்கன்னு அம்மாவைச் சொல்ற பாத்திரம்...குப்பைத் தொட்டிக்குக் கூடப் போகக் கூடாத பொருளை உண்பது எந்த விதம்?

அந்தச் சாமி பாத்திரத்தை விட அம்சவல்லியின் பாத்திரம் தீர்க்கமாக யோசிக்கிறது. கை விட்டுக் கை மாறும் பொழுதும்.... கவுரதியா பாடிச் சம்பாதிச்சிட்டு. இப்ப பிச்சை எடுக்க வந்துட்டோமேன்னு வருத்தப்படுறியான்னு கேட்கப் படும் பொழுதும்... அம்மாகிட்ட அப்படிப் பேசலாமான்னு புத்திமதி சொல்றப்பவும்... காப்பத்துங்க சாமின்னு கெஞ்சுற போதும்... சர்ச் வாசல்ல உபதேசம் கேட்ட்டுட்டு.. அத்தனையை சாமிகளையும் சந்திக்கு இழுத்து.... நாக்கை பிடுங்கிக் கொள்ள வைக்கும் பொழுதும்... ரொம்பவும் அறிவுத்திறமையோடு யோசிக்கின்ற பாத்திரம்.

இது எதுவுமில்லாம... ஆர்யாவோட பாத்திரம்...நுண்ணிய படைப்பு என்பதைத் தவிர வெற்றுக்கூச்சல்.

G.Ragavan said...

http://abiappa.blogspot.com/2009/02/15022009.html

ஹாஹாஹா பதிவாவே போட்டுட்டீங்களா....

அந்தக் கவிதை நல்லாத்தானே இருந்துச்சு. கார்த்திகைப் பாண்டியனுக்குப் பின்னாடியே ஜிராவும் அந்தப் பதிவைப் பாத்திருக்கார்ல...... அந்தப் பதிவுக்குச் சுட்டி குடுத்தது ஒரு மகாநல்லவரு.. அவரு அந்தப் பதிவைப் பாக்கவேயில்லையாம். அவ்ளோ நல்லவரு.

இப்பவும் சொல்றேன். கே.ஆர்.எஸ் நிறுத்திய சபைன்னுதான் சொல்லீருப்பாரு. கீ போர்டுல ள ழ பிரச்சனையோட ர ற பிரச்சனையும் இருக்கத்தானே செய்து.

நேத்து ஒரு தோழியோட வீட்டுக்குப் போயிருந்தேன். வீடு மாத்துறப்போ போகாம... வெள்ளையடிக்கிறப்போ போயிருந்தேன். ராச்சாப்பாட்டுக்கு ஓட்டலுக்குப் போனோம். ஒயின் ஆர்டர் பண்ணோம் மொதல்ல. அந்தப் புது வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல ஒருத்தர் இருக்காராம். அவரு ஒயினைக் கொண்டா கொண்டான்னு குண்டா குண்டாவாக் குடிப்பாராம்.

ரொம்ப சந்தோசம்... அடுத்த வாட்டி அவருக்கும் வணக்கம் போடுவோம்னு சொன்னேன். அப்பத்தான் தோழி சொன்னாங்க... அவரு ஒரு கே-ன்னு. அதாங்க நீங்க பதிவுல சொல்லீருக்கீங்களே. ஓரினச்சேர்க்கைன்னு. பெருந்தன்மையா காமிச்சிக்கிறதா நெனச்சிக்கிட்டு..."that is fine. it is his choice and we have to respect it"ன்னு சொன்னேன். ஒடனே நோன்னு சொல்லீட்டு. "is ur sexual preference by your choice?"ன்னு கேட்டாங்க. என்ன சொல்றதுன்னு தெரியலை. பெருந்தன்மையாச் சொல்லப் போய் இப்பிடி மாட்டிக்கிட்டோமேன்னு நெனச்சேன். "இங்க பாரு.. நீ அங்குட்டு இங்குட்டு பிள்ளைக நடக்குறப்போ வெடுக்கு வெடுக்கு பாக்குறது by choiceஆ? இல்லைல்ல... அது மாதிரி அவனுக்கும் not by choice"ன்னு சொன்னா. நானும் சரின்னு கேட்டுக்கிட்டேன். அடுத்த வாட்டி அவருக்கும் வணக்கம் போடுறேன்னு சொல்லி கவனத்தைத் தோசைலயும் சாம்பார்லயும் திருப்பினேன்.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/02/sw.html

இதுக்கு என்னோட பதிலே வேற. மேனேஜருக்கும் ஒரு மேனேஜர் உண்டு. அந்த மேனேஜர் கிட்ட கேக்குறதுக்கு ஒங்க மேனேஜர் என்ன கேள்விகள் கேக்க விரும்புறாருன்னு கேட்டுப் பாத்தா.... நம்ம நெலமை தாவலையேன்னு தோணும். :-) இதுதான் உண்மை.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2009/02/blog-post_18.html

நல்ல விமர்சனம்.

// படத்தில் நாயகன் ருத்ரனில்லை. பிச்சை எடுக்கும் விளிம்புகளின் பிரதிநிதியாக, படத்தின் மையப்பாத்திரமாக கதையை நகர்த்துவது அம்சவள்ளி பாத்திரமே.//

முழுக்க முழுக்க ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. அம்சவல்லி பாத்திரம்தான் உண்மையிலேயே கதை. அந்த அம்சவல்லிக்கு என்ன தேவையோ அதைக் குடுக்கத்தான் அகோரியாரே வர்ராரு.

ஆனா எனக்கு ஒன்னு புரியலை. கடைசீல அகோரியார் பண்றது கருணைக்கொலை. ஆனா அதப் போய் அந்தப் பொண்ணுக்குக் கொடுத்த வரம்னு உயர்த்திச் சொல்றது சரியில்லைன்னு தோணுது. அத விட நல்லது அந்தப் பொண்ணு பண்ணுச்சு. அம்மா கூட நல்லபடியாப் பழகுன்னு உபதேசம் பண்ணுச்சு. அம்மா கூட இருந்து... அந்தச் சோத்தைச் சாப்பிட்டா என்ன தப்பு? உண்மையிலேயே சாமியாரா இருந்தா... தேங்காச் சில்லையும் பாவக்காப் பத்தையையும் ஒன்னா நெனச்சித்தானே திங்கனும்? அத விட்டுட்டு மனுசக்கறிதான் திம்பேன்னா என்ன அர்த்தம்? இப்ப ரயில்ல போறோம். எல்லாரும் பேசிட்டுதான் வருவாங்க. ஆனாலும் நம்ம அமைதியா புத்தகம் படிச்சிட்டுத்தானே வர்ரோம். அல்லது.. அந்தச் சத்தத்துலயும் கூட வந்தவங்க கிட்ட பேசிட்டுத்தானே வர்ரோம். எல்லாரும் பேசுற இடத்துல இருந்தா குணம் மாறும்னா... அது நிலையில்லாத குணமாச்சே! அப்படி உறுதியில்லாத அகோரித்தனமான மனநிலையை.. அல்லது சாமியார்த்தனமான மனநிலையை.. மனநோய்னுதான் பாக்கத் தோணுது. இதுல கஞ்சா வேற...

ஏதோ.. அந்தப் பொண்ணக் காப்பாத்த ரெண்டு கொலை செஞ்சதத் தவிர மித்ததெல்லாம் வெத்துக் கூச்சல்.

மேல சொன்னது.. அந்தப் பாத்திரத்தின் மீதான விமர்சனம்.

ரெண்டாவது... அவலட்சணமா இருக்குறவரைத் திருமணம் செய்துக்கிறதுக்கோ மறுக்குறதுக்கோ அம்சவல்லிக்கு உரிமையிருக்கு. ஆனா அவளுக்கு அதுதான் உண்மையிலேயே பாதுகாப்பானது. நல்லது. வளமான பாதுகாப்பான எதிர்காலத்துக்குகந்தது. அதைத் தேர்ந்தெடுக்காம... வாழ வழியில்லைன்னு பொலம்புறது எவ்ளோ தூரம் சரியானது?

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/02/blog-post.html

மெல்லத்திறந்தது கதவு திரைப்படம் ஒரு இசைக்காவியம். தமிழகத்தின் இருபெரும் மேதைகள் இணைந்து இசையமைத்த படம். தனித்துவம் குறையாமலும் ஒத்துழைப்பு தவறாமலும் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கின்றார்கள் என்பது என்னுடைய கருத்து. நாம் வேலை செய்யுமிடத்தில் நம்மைப் போலவே வேலை தெரிந்த இன்னொருவனிடம் சேர்ந்து வேலை செய்வது எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த நிலையில்தான் இருவரும் இணைந்து மிகுந்த மகிழ்ச்சியோடு இசையமைத்திருக்கிறார்கள். மெல்லிசை மன்னருக்கும் இசைஞானிக்கும் என்னுடைய வணக்கங்கள்.

G.Ragavan said...

http://mathimaran.wordpress.com/2009/02/21/article170

இந்தக் கேள்விக்கு விடை ரொம்ப லேசு. திமுக தலைமைகிட்ட இருந்து இந்தக் கருத்து வர்ரதால..... யாரா இருக்கும்னு நீங்க கேட்ட கேள்விக்குக் காரணம் அதிமுகன்னு சொல்லனும்.

ஏன்னா கருணாநிதி எதிர்ப்புன்னா... அதைச் செய்ய அதிமுககாரங்களுக்கு மட்டுமே காரணம் இருக்குறதாத்தானே வருசக்கணக்குல சொல்லிக்கிட்டிருக்காங்க. திமுக எதிர்ப்பாளர்னா... அவங்க அதிமுக ஆதரவாளர்னு அசிங்கப்படுத்தி வாய மூட வெச்சாங்க. இனிமே அது முடியாதுன்னு நெனைக்கிறேன். அதிமுகவை எந்த அளவுக்கு எதிர்க்க வேண்டியிருக்கிறத்தோ... அந்த அளவுக்கு திமுகவும் எதிர்க்கப்பட வேண்டியதே என்பது என் கருத்து. காங்கிரசை மதிக்கவே கூடாதுங்குறதும் என்னோட கருத்து. மானமுள்ள தமிழன் இந்த மூனு கட்சிகளுக்கும் ஓட்டுப் போடவே கூடாது.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/02/blog-post.html

சண்டிராணிங்குற படத்துக்கு மெல்லிசை மன்னர் இசையமைச்ச பாட்டு...வான் மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதே. பானுமதி பாடியிருக்காங்க. அந்தப் பாட்டு மாதிரி ஒரு மெட்டு குடுங்கண்ணே என்று இளையராஜா கேட்க... அந்தப் பாட்டையே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே என்று குடுத்தாராம் எம்.எஸ்.விஸ்வநாதன்.

G.Ragavan said...

http://thamilar.blogspot.com/2009/02/blog-post_5789.html

விடுங்க. வயதான காலத்துல சாப்பாட்டைக் கொறைச்சிக்கிறது நல்லதுதான்.

G.Ragavan said...

http://muralikkannan.blogspot.com/2009/02/blog-post_26.html

ஹிட்லர் உமாநாத் பாட்டை யூடியூப்புல வலையேத்தி ஏற்கனவே பதிவும் போட்டிருக்கேன்.

http://gragavan.blogspot.com/2008/03/blog-post.html

சுருளிராஜன் எனக்கும் மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். காசி யாத்திரை படம் ரொம்பப் பிடிக்கும்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2009/02/297.html

:-) ஒங்களுக்கு நல்ல விஷயம் சொல்லனும்னு பிரியப்படுறாரு. கேட்டுக்கோங்க.

சமீப காலமாக என்னுடைய எண்ணங்கள்ள சிலபல மாறுதல்கள். கடவுள் நம்பிக்கை மாறலை. ஆனா மத நம்பிக்கை மாறியிருக்கு. அதே முருகன் பிடிக்கும். ஆனா இந்தக் குறிப்பிட்ட மதத்துக்குள்ளன்னு என்னை அடைச்சிக்க முடியலை. ஜனவரியில ஒரு வாரம் சவுதிக்குப் போயிட்டு வந்தேன். அங்க ஒரு அட்டைல.. என்ன மதம்னு எழுதச் சொல்லீருந்தாங்க. அதை ஒன்னும் எழுதாமக் குடுத்தேன்.

இதைப் பெருமையாச் சொல்லலை. ஆனா சொல்றேன். முருகான்னு சொல்றதால சர்ச்சுக்குப் போகாம இருக்க முடியாது. அங்கயும் எனக்குப் போகனும். இங்கயும் போகனும். என்னோட எண்ணங்களைக் கட்டுப்படுத்துற விஷயங்கள் வேண்டாம்னு தோணுது. அதோட விளைவுதான் இது.

G.Ragavan said...

http://truetamilans.blogspot.com/2009/02/blog-post_26.html

இளையராஜாவின் திறமையைக் குறைத்து நினைக்கக்கூட முடியாது. ஆத்திரம் அறிவுக்குக் கெடுதிதான். ஆனால் அதை எல்லா பொழுதுகளிலும் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகந்தான்.

ரகுமானின் வரவிற்கு வேண்டுமானால் இளையராஜாவின் ஆத்திரம் உதவியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதற்குப் பிறகு ரகுமானின் உழைப்புதான்.

ரகுமானைப் பயன்படுத்தும் முன் மரகதமணியைப் பயன்படுத்தினாரே பாலாச்சந்தர். பாடல்கள் சிறப்பாகவே இருந்தனவே. ஆக... நல்ல பாடல் என்பதையும் மீறி மாற்றம் கொண்டு வருதல் என்ற காரணமே ரகுமானின் வெற்றிக்குக் காரணம். உழைப்பு. பொறுமை. நல்ல தொடர்புகள்.

இளையராஜா ஆஸ்கார் விருது பெறவில்லை என்பதற்கு...அவருடைய இசை சரியான முறையில் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதே காரணம்.

G.Ragavan said...

http://screen4screen.blogspot.com/2009/02/blog-post_26.html

இளையராஜாவின் இசைத்திறமையை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. அவருக்கு விருது கிடைக்காததற்குக் காரணம்... சரியான முறையில்... சரியான வழியில் கொண்டு செல்லப்படாததுதான்.

அதே நேரத்தில் ரகுமானின் கடின உழைப்பையும் இசைத்திறமையையும் குறைத்துச் சொல்ல முடியாது.

இருவருமே இசை மேதைகள். பெருமைக்கு உரியவர்கள்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/02/blog-post_26.html

அடடே! போட்டி முடிஞ்சே போச்சா... ஒரு மயிலைத் தட்டி விட்டிருக்கப்படாது... படக்குன்னு வடை சுட்டிருப்பேனே.

உருவங்கள் மாறலாம் படமும் நல்லா விறுவிறுப்பா இருக்கும். கிட்டத்தட்ட எல்லாப் பெரிய நடிகர்களும் இருப்பாங்க. நடிகர்திலகம், கமல், ரஜினி, மனோரமா, ஜெய்சங்கர், .... அடுக்கிக்கிட்டே போகலாம்.

பாடல்களும் நல்லாருக்கும். நீங்க கொடுத்த வானில் வாழும் தேவதை, காமனுக்குக் காமன் பாட்டும் சூப்பர். ஆண்டவனே உன்னை இன்று பாட்டும் நல்லாருக்கும். அப்புறம் ஏதோ சாமியாருங்க பாட்டு வருமே... சில்க்கேஸ்வரான்னு பாட்டு... அந்தப் பாட்டையும் கொடுத்தீங்கன்னா... சந்தோசமாக் கேப்பேன். :D

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2009/02/297.html

// தருமி said...
ஜிரா,
வாங்க ஜிரா..ரொம்ப நாளாச்சு பாத்து. //

ஆமாமா கடைசியா மதுரைல பாத்தது. மூனு வருசம் இருக்குமா? குறஞ்சது ரெண்டர வருசமாச்சும் இருக்கனும்.

// ரொம்ப சந்தோஷம் .. இதுதான் ஆரம்பம். குழப்பமான பதிலாகத்தான் தந்திருக்கீங்க..இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. //

குழப்பமா விளக்கமா! அதாகப்பட்டது..... கடவுள் நம்பிக்கை இருக்கு. முருகனை இன்னும் பிடிக்கும். ஏசுநாதரையும் பிடிக்கும். மகமாயியையும் பிடிக்கும். புத்தரையும் பிடிக்கும். அல்லா கான்செப்டும் பிடிக்கும். எல்லாம் ஒன்னுதான்னு தோணுது. ஆனா முருகனைப் பிடிக்குங்குறதால இந்துன்னு சொல்லிக்கிற முடியலை. அப்படிச் சொன்னா... ஏசுவைப் பிடிக்கிறதால நான் கிருஸ்துவனாகவும் இருக்கனும். சரி... ரெண்டும்னே வெச்சுக்கிட்டா.... தான் இந்துன்னும் கிருஸ்துவன்னும்... முஸ்லீம்னும் சொல்லிக்கிறவங்க.... நீ எங்காள்னா... இப்பிடியிப்பிடி இருக்கனும்னு சட்டம் வைக்கிறாங்க. இல்ல.. அவங்கவங்களுக்குள்ள சட்டம் வெச்சிக்கிறாங்க. அதை ஏத்துக்க முடியலையே. இந்தியன் பேங்குல கணக்கு இருக்குறதால.... ஸ்டேட் பாங்குல கணக்கு வைக்காதன்னு சொன்னா எப்படி? இல்ல... ஒத்துக்க முடியாத சட்டமெல்லாம் வெச்சா எப்படி? அப்ப ஒதுங்கிக்கிறதுதானே நல்லது.

கடவுள் எல்லாருக்கும் பொதுன்னு சொன்னா... நம்மள எப்படி அடையாளப்படுத்திக்கிட்டாலும் நம்ம கூடத்தான இருக்கனும். அப்புறம் அடையாளம் என்னத்துக்கு? இப்பிடிப் போகுது எண்ணம்.

உண்மையச் சொல்லப் போனா இந்த எண்ணம் வர்ரதுக்குத் தூண்டுதலா இருந்தது வெட்டி பாலாஜியின் கேள்விகளும் கே.ஆர்.எஸ்சின் கேள்விகளும்தான்.

// நானும் திரும்பிப்பார்க்கும்போது இதே மாதிரி குழப்பத்திலிருந்தது நினைவுக்கு வருகிறது. இந்தக் குழப்பமே ஒரு நல்ல ஆரம்பம்தானே ..

குழப்பம் தொடர வாழ்த்துக்கள்........ //

குழப்பம் தொடரன்னு சொல்றீங்க.. ஆனா இப்பத்தான் தெளிவா இருக்கோமோன்னு தோணுது. :-) அதுதான் குழப்பம்னா... தொடரட்டுமே. :D

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2009/02/297.html

// ராகவா, நான் பில்லீவர் என்று (எங்களைப் போல) போட்டு, அவங்க பிரஷரை ஏத்தாதே :-) //

எனக்கு அந்தச் சந்தேகமும் வந்துச்சு... ஒன்னுமே எழுதாம விட்டா பிரச்சனையாயிருமோன்னு....ஆனாலும் முருகன் மேல பாரத்தப் போட்டு மதங்குற எடத்துல ஒன்னும் போடாமக் குடுத்தேன். அதான் இமிக்கிரேஷன் ஆளு சிடுசிடுன்னு விழுந்தானா?!?!

நம்பிக்கையின்மைன்னு சொல்ல மாட்டேன். கடவுள் நம்பிக்கையிருக்கு. ஆனா மதநம்பிக்கை இல்லை.


// தருமி ஐயா, எனக்கு ஒரு டவுட்டு, எல்லா சாமிகளும் ஏன் குறிப்பிட்ட வட்டம் / எல்லை தாண்டி
யோசிப்பதில்லை. உதாரணமாய் ஓட்டகம் மேட்டர் போல!//

சாமியெல்லாம் வட்டம் சதுரம்னு யோசிக்கலை. சாமியை வெச்சி பூமியை வளைக்கிற ஆசாமிங்கதான் வட்டத்துக்குள்ளயும் சதுரத்துக்குள்ளயும் யோசிக்கிறது.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2009/02/297.html

// உண்மையச் சொல்லப் போனா இந்த எண்ணம் வர்ரதுக்குத் தூண்டுதலா இருந்தது வெட்டி பாலாஜியின் கேள்விகளும் கே.ஆர்.எஸ்சின் கேள்விகளும்தான். //

இப்பிடி மொட்டையா சொன்னதைத் தப்பா எடுத்துக்கக் கூடாதுல்ல. அதுனால விளக்கமும் சொல்றேன். சமயம் குறித்த கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலயும்...வலைப்பூக்கள்ளயும் அவங்க கேக்குறப்போ அவங்களுக்கு விடை சொல்லனுங்குறத விட எனக்கு விடை சொல்லனுங்குறதுக்காக யோசிச்சி யோசிச்சுதான் இந்த எண்ணங்கள் வந்திருக்கு. ஆகையால வெட்டி பாலாஜியும் கே.ஆர்.எஸ்சும் எனக்கு உதவி செய்திருக்கிறதாகத்தான் நான் நெனைக்கிறேன். கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்னு வைரமுத்து சொன்ன மாதிரி.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2009/02/3.html

எல்லாமே அருமையான பாட்டுகள்.

தம்தனதம்தன பாட்டு தமிழில் இருந்ததை விட தெலுங்கில் நன்றாக இருக்கிறது. தமிழிலும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தெலுங்கில் கொஞ்சம் உசத்தியாக. ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டியில் இளையராஜா சொன்னார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி... ஏன் பி.சுசீலாவை நிறைய பயன்படுத்துவதில்லை?

அதற்கான பதில்... அவங்களுக்கு நான் நெறைய பாட்டுகள் குடுக்கலாம். அவங்களும் நல்லாத்தான் பாடுவாங்க. ஆனா... அந்தப் பாட்ட மத்த பாடகிகளாலும் கூட பாடக் கூடியதா இருக்கும். அத அவங்க லேசாப் பாடிருவாங்க. ஆக.... அவங்களால மட்டுமே பாட முடியுங்குற பாட்டுகளை அவங்களுக்குக் குடுக்குறேன். ஏன்னா.. அதையெல்லாம் வேற யார்ட்டயுமே குடுக்க முடியாது. இதுதான் காரணம்னு சொன்னாரு.

அதே போல எஸ்.ஜானகியின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியதே இளையராஜாதான் என்பது என்னுடைய கருத்து. மெல்லிசை மன்னரும் எஸ்.ஜானகிக்குப் பாட்டு குடுத்திருக்காரு. ஆனா அவருடைய இசையில் எஸ்.ஜானகியின் குரலைக் கேளுங்க. குறிப்பா இளையராஜா வர்ரதுக்கு முன்னாடி.... கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்.... உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம்...பொன்னென்பேன் சிறு பூவென்பேன்.. நல்லாத்தான் இருக்கும். ஆனா ஏதோ ஒன்னு குறையிறாப்புல இருக்கும். ஆனா இளையாராஜா வந்தப்புறம் எம்.எஸ்.வி குடுத்த பாட்டுகளைக் கேளுங்க... காற்றுக்கென்ன வேலி.... தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ.... போக்கிரிக்குப் போக்கிரி ராஜா... வித்யாசம் தெரியும்.

தம்தனதம்தன பாட்டைத் தமிழில் போட்டப்போ ஜென்சியும் வசந்தாவும் பாடியிருந்தாங்க. பொதுவாகவே ரெண்டு பெண்கள் பாடுற பாட்டுன்னாலே...பி.சுசீலா...எல்.ஆர்.ஈஸ்வரிதான். பிறகு பி.சுசீலா... வாணி ஜெயராம்னு ஆச்சு. இளையராஜா வந்தப்புறம் பி.சுசீலா எஸ்.ஜானகின்னு ஆச்சு. ஆனா இந்தப் பாட்டுல ஜென்சியும் வசந்தாவும். பொட்டு வைத்த முகமோ பாட்டுல...லல்லல்லா பாடுவாங்களே..அவங்கதான் வசந்தா.

ஆனா இளையராஜாவிற்கு இந்தப் பாட்டு திருப்தி அளிக்கவில்லையாம். ஆனா பாட்டைக் கேட்ட எல்லாரும் ரொம்ப நல்லாயிருக்குன்னு பாராட்டினாங்களாம். பின்னாடி தெலுங்குல எடுக்குறப்போ.... ஜென்சிக்குப் பதிலா பி.சுசீலாவையும் வசந்தாவுக்குப் பதிலா ஜானகியையும் பாட வெச்சிருக்காரு. அவர் மதிப்பு வெச்சிருக்குற இரண்டு பெரிய பாடகிகள் அவரை ஏமாத்தல. அவர் விரும்புனது கிடைச்சது. எல்லாரும் பாடுறாங்க. சில பாடகர்கள்தான் பாட்டாகவே வாழ்றாங்க. அதுல பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் முன்னிலை வகிக்கிறாங்கன்னு சொல்றது மிகப் பொருத்தம்.