Tuesday, March 03, 2009

என்னுடைய பின்னூட்டங்கள் - மார்ச் 2009

மார்ச் 2009ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

63 comments:

G.Ragavan said...

http://balajiulagam.blogspot.com/2009/03/blog-post.html

அதெல்லாம் சரிங்க.... ஒரு கேள்வி. என்னவோ இங்க இருக்குற சூழலும்..அங்க இருக்குற சூழலும் ஒன்னாயிருக்குற மாதிரி ஒப்பிட்டிருக்கீங்களே. சரி... ஆங்கிலேயர் ஆட்சியில அனுபவிச்சாங்கன்னே வெச்சிக்கலாம். அதுக்காக... இப்ப சாகனுமா? இடவொதுக்கீடுங்குறது வேற. அதையா இலங்கை அரசாங்கம் பண்ணிக்கிட்டிருக்கு? எல்லாருக்கும் வாய்ப்புங்குறதுக்கும்...தமிழனை வெட்டிச் சாய்ப்புங்குறங்குறதுக்கும் வேறுபாடுகள் இருக்குங்கோய்.

மொத்தத்தில் அரை வேக்காட்டுத்தனமான பதிவு. எப்ப என்ன பேசுறதுன்னு தெரியாத பதிவு. அல்லது...தெரிஞ்சே பேசுற பதிவு.

G.Ragavan said...

http://balajiulagam.blogspot.com/2009/03/blog-post.html

// தமிழகத்தவர் பலருக்கு இலங்கைப் பிரச்சனையின் அடிப்படை விசயங்கள் தெரிவதில்லை. ஈழத்தவர் தம் மொழி பேசுகிறார்கள் என்னும் இன ஒற்றுமை அடிப்படையில் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்துக்கொண்டிருகிறார்கள்.

"இந்தியா சுதந்திரமடைந்த போது தமிழக அரசு மற்றும் இன்னபிற துறைகளில் எப்படி பிராமணர் அளவுக்கு அதிகமான இடங்களில் அமர்ந்திருந்தார்களோ, அதேபோல இலங்கையில் தமிழர்கள் அளவுக்கதிகமான பதவிகளை தங்களிடம் வைத்திருந்தார்கள். //

அப்ப இலங்கைல தமிழர்களுக்கு நடக்குறத.. இங்குள்ள பிராமணர்களுக்குச் செய்யலாமா? சொல்லுங்க. அப்ப யாராச்சும் ஆதரிச்சு வந்தா... ஒங்க பதிவைக் காட்டுவோம்ல.

எதுக்குய்யா இலங்கைத் தமிழனை ஆதரிக்கிறாங்க? அவன் தங்கம் அள்ளித் தருவான்ன... சோறு போடுவான்னா.... இன ஒற்றுமை ஒரு காரணம்.... அவன் அங்க அடி வாங்குறது தெரியலை? காஷ்மீர்ல பண்டிட்டு அடி வாங்குனா ஆதரிக்கலாம். இலங்கைல தமிழன் அடிவாங்குனா...கண்ணைத் தொறந்து வெச்சிக்கிட்டு எதுக்கனுமாக்கும். வலைப்பூவோட பேருக்கும் பதிவுக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2009/03/felicitating-oscar-video.html

கற்றாரைக் கற்றாரே காமுறுவர். அவங்கள்ளாம் இசை மேதைகள். அதான் ஒத்துமையா இருக்காங்க. இது புரியாம.. .நம்மதான்.

எம்.எஸ்.வி -> இளையராஜா -> ஏ.ஆர்.ரகுமான் என்பது மாற்றம் மட்டுமல்ல. முன்னேற்றமும் கூட. இதுல ஒருத்தர் வேலை செஞ்சிருக்கலைன்னா கூட...அடுத்தவங்க முன்னாடி செஞ்சவங்க வேலையச் செஞ்சிருக்கனும். அடித்தளம் போட்டப்புறம்தானே வீடு கட்ட முடியும். மொத ஆளு குழியே நோண்டலைன்னா.. அடுத்து வர்ரவரு அந்த வேலையத்தான செஞ்சிருக்கனும். இதத்தான் இளையராஜா தெள்ளத்தெளிவா எடுத்துச் சொல்லீருக்காரு. அதை நம்மதான் புரிஞ்சிக்கனும்.

G.Ragavan said...

http://englishkaran.blogspot.com/2009/03/blog-post_04.html

எனக்கும் வி.கே.ராமசாமியின் நடிப்பு பிடிக்கும்.

இதோ இங்க சில வீடியோக்கள்.
http://www.youtube.com/watch?v=SzxVaAj7Y_Y
http://www.youtube.com/watch?v=wlhwy-WPsqM

பின்னாளில் இவர் தயாரிப்பாளரானார்னு சொல்றது தவறு. இவரு ஆரம்ப காலத்துலயே தயாரிச்சிருக்காரு. ஏ.பி.நாகராஜனோட சேந்து படங்கள் தயாரிச்சிருக்காருன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

G.Ragavan said...

http://manimalar.wordpress.com/2009/03/06/நாடாளுமன்ற-தேர்தலில்-கட்

I liked the prediction of Krishna Lakshmana

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_07.html

ஆண்டவன் கட்டளை படம் வந்தப்பல்லாம் நாம பொறக்கவேயில்லை. அப்பாவே பள்ளிக்கூட வயசுன்னு நெனைக்கிறேன்.

ஆனா நான் பாத்தது நான் பள்ளிக்கூடம் படிக்கிறப்ப. சென்னைக்கு விடுமுறைக்கு வருவோம். அப்பல்லாம் நாகேஷ் தியேட்டர் இருந்துச்சு. அதுல ஆண்டவன் கட்டளை ஓடுச்சு. சொன்னா நம்ப மாட்ட.... ஏதோ பழைய படத்துக்குப் போன மாதிரியே இல்லை. தியேட்டர்ல கூட்டம் நெறைய இருந்துச்சு. இப்பல்லாம் புதுப்படங்களே காத்து வாங்குது. படத்த மொதல்ல இருந்து கடைசி வரைக்கும் ரசிச்சுப் பாத்தேன். முடிவைச் சொதப்பல்னு சொல்ல மாட்டேன். சரியாத்தான் இருக்குங்குறது என் கருத்து.

இந்தப் படத்துல பாட்டுகள் எல்லாமே கலக்கல். அமைதியான நதியினிலே ஓடம் பாட்டு இருக்கே. அப்பப்பா... மெல்லிசை மன்னர் காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கனும். இளையராஜா ரொம்பச் சரியாச் சொல்லீருக்காரு. ஆதார சுருதின்னு.

அதே மாதிரி ஆறுமனமே ஆறுன்னு நடிகர் திலகம் பாடுறப்போ நமக்கே மனம் அமைதியாயிரும். அப்புறம்... அந்த மனசு மாறும் காட்சிகள். காதலிக்கலாமா வேண்டாமான்னு கொழம்புற காட்சிகள் அவர் நடிப்பு பிரமாதமா இருக்கும். அப்பப் பின்னணி இசை ரொம்பக் கலக்கல்.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_07.html

புதிய பறவை... இந்தப் படத்தை முதன் முதலில் பாத்தப்போ பிரமிப்போடதான் பாத்தேன். யாருங்க அந்த தாதாமிராசி? புதிய பறவைக்கு முன்னாடி என்ன படம் எடுத்திருக்காரு? மூன்று தெய்வங்கள் இவர் எடுத்ததுதான். ஆனா அது பின்னால வந்தது.

பார்த்த ஞாபகம் இல்லையோ... பாட்டா அது.... தேன ஊத்துனாப்புல இசையரசி சுசீலா பாடுவாங்களே. அப்ப நாற்காலில கோட்டு சூட்டுப் போட்டுக்கிட்டு ஜிகரெட்டுப் பிடிச்சிக்கிட்டே ஒரு பார்வை பாப்பாரு பாருங்க. அடடா....

அதே மாதிரி...பலப்பல காட்சிகளைச் சொல்லலாம். ஆனா சரோஜாதேவிக்கு மட்டும் ஏன் அவ்ளோ ரோஸ்பவுடரும் கண்மையும்? சரோஜாதேவி கொஞ்சிக் கொஞ்சிப் பேசுறப்போ லேசா எரிச்சல் வந்தாலும்... சிட்டுக்குருவி முத்தம் கொடுத்துன்னு பி.சுசீலா பாடுறப்போ நம்மளையே மறந்துர்ரோம்.

இந்தப் படத்த மொதமொதலா வீடியோ கேசட்டுல பாத்தேன். எப்பன்னு நெனைவில்லை. கடைசிக் காட்சில.. உண்மையிலேயே காதலிச்சேன்னு சொல்வாங்க சரோஜாதேவி. அதுக்குப் பதிலா....நடிச்சாங்கன்னே இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்னு படம் பாக்குறப்போ தோணுச்சு. இப்பவும் அதேதான் கருத்து. பில்லா படத்த எடுத்த மாதிரி.. இந்தப் படத்தையும் திரும்ப எடுக்கலாம். சூர்யாவைத் தவிர வேற யாரையும் நெனைச்சிக்கூடப் பாக்க முடியலை. ஏ.ஆர்.ரகுமான் இசையா இருக்கனும். இல்லைன்னா மெல்லிசை மன்னரையும் இசைஞானியையும் சேத்து இசையமைக்க வெச்சிறனும். ரொம்பக் கலக்கலாயிருக்கும்.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_07.html

பாவ மன்னிப்பு.... பா வரிசைப் படம். பீம்சிங்-மெல்லிசை மன்னர்-நடிகர் திலகம் கூட்டணியில் வந்த கலக்கல் படம். இந்தப் படம் வந்தப்ப இந்தப் படப் பாட்டுகளை வரிசைப் படுத்தச் சொல்லிப் போட்டியெல்லாம் வெச்சாங்களாம்.

இந்தப் படத்துல வர்ர அத்தான் என்னத்தான் பாட்டைக் கேட்டுட்டு இந்த மாதிரி எளிமையான தமிழ் பாட்டுகள் இருந்தா பாடக் குடுங்களேன்னு லதா மங்கேஷ்கர் கேட்டாங்களாம். ஆனாலும் இதுவரைக்கும் மெல்லிசை மன்னர் லதா மங்கேஷ்கரைத் தமிழில் பயன்படுத்தலை. ஏன்னா..மொழி தெரியாமப் பாடி பாட்டைக் கெடுத்துருவாங்கன்னுதான். இந்த நிகழ்ச்சியை இப்ப உள்ள இசையமைப்பாளர்களுக்கு எடுத்துச் சொல்லனும்.

இந்தப் படத்துல தொப்பி வெச்சிக்கிட்டு வித்யாசமான தோற்றத்துல வருவாரு. ஆனா ரொம்ப எளிமையான தோற்றம். முகத்துல அமிலத்த வேற ஊத்திருவாங்க. கதைப்படி பெத்த அப்பனே ஊத்துவாருன்னு நெனைக்கிறேன். அந்த முகத்தை வெச்சிக்கிட்டு.. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்.. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்னு.. உண்மையிலேயே சிரிச்சிக்கிட்டே அழுவாரு நடிகர் திலகம். ஆகா.... ஆகா. ம்ம்ம்...நடிப்பால நம்ம பசியைப் போக்க இன்னொருத்தர் வர்ர வரைக்கும் நடிகர் திலகத்தின் படங்கள்தான் நமக்கு உணவு.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_07.html

பட்டிக்காடா பட்டணமா.... பி.மாதவன் இயக்கிய படம். இந்தப் படத்தை எத்தனை படமா தமிழ்ல எடுத்திருப்பாங்கன்னு கணக்குப் பாக்கவே முடியாது. அத்தன வாட்டி எடுத்துட்டாங்க. ஆனாலும் பட்டிக்காடா பட்டணமாவை மசாலாவுல அடிச்சிக்க முடியாது.

மூக்கையாங்குற கணவன் பேரை முக்கேஷ்னு ஜெயலலிதா மாத்திச் சொல்றதும். அவர் சொன்ன மாதிரியே முக்கேஷா ஸ்டைலா வந்து... நல்வாழ்த்து நான் சொல்லுவேன்னு பாடுறதும்...பட்டிக்காட்டு மாமனா...கொண்ட வெச்சிக்கிட்டு... அம்பிகையே ஈசுவரியே..எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரின்னு அம்மங்கொண்டாடியா ஆடுறதும்.... அடி ராக்கு..அடி மூக்கு....ன்னு தொடங்கி...தெய்வான சக்களத்தி வள்ளிக் கொறத்தி..நம்ம கதையிலும் இருக்குதடின்னு கிண்டலாப் பாடுறதும்... ஒரு மசாலாப் படத்துக்கு என்ன வேணுமோ...எல்லாம் அளவாப் போட்டுத் தாளிச்ச படம்.

இந்தப் படம் முடியுறப்போ கோழைக் கணவனா இருக்குற வி.கே.ராமசாமிக்கு வீரம் வந்து சுகுமாரியைச் சவுக்கால அடிப்பாரு. அதப் பாத்துட்டு.. எங்கம்மா... "படம் முடியுறப்போ வீரம் வந்துருமே"ன்னு சொன்னப்போ என்னால சிரிப்பை அடக்க முடியலை. படம் முடியுறப்போ போலீஸ் வர்ர காமெடி மாதிரி... படம் முடியுறப்போ வீரம் வர்ரதத் தொடங்கி வெச்ச படம் இது.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_07.html

அடிச்சிச் சொல்றேன். ஆலயமணி மாதிரி இன்னொரு படம் வரலை. அந்த வகையில வந்த இன்னொரு படமாச் சிறையைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மிகவும் சிக்கலான காதலின் மனப்பரிமாணங்களைச் சொன்ன படம் ஆலயமணி.

ரொம்பவும் எளிய கேள்வி. ஒருவனைக் காதலித்த பெண்... இன்னொருவனைக் காதலித்து மகிழ்ச்சியோடு திருமண வாழ்க்கை வாழ முடியுமா? முடியும் என்று அறுபதுகளில் சொன்ன படம். கண்ணான கண்ணனுக்கு அவசரமா என்று எஸ்.எஸ்.ஆருடன் டூயட் பாடி விட்டு.... பின்னாடி கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா என்று சிவாஜியோடு காதலிப்பதாகட்டும்.... உண்மையிலேயே சரோஜாதேவி நடிச்ச படம் இது.

அதே போல நடிகர் திலகத்தின் பாத்திரமும் மிகச் சிக்கலான பாத்திரம். சிறுவயதில் ஒரு பொம்மைக்காக நண்பனைக் கொலை(!) செய்த பாத்திரம். அதாவது ஒருவிதமான "தன் பொருள்" மனநிலை கொண்ட பாத்திரம். ஒரு பொம்மைக்கே அவ்வளவு "தன் பொருள்" உணர்ச்சி இருக்கும் பொழுது..... தான் காதலிக்கும் பெண் இன்னொருவனைக் காதலித்தவள் என்று தெரிந்தால்?....கொலை வெறிதானே வரும். அப்படிக் கொலை செய்யப் போகையில்...அவள் தவறில்லாதவள் என்று தெரிந்தால்...படத்தை நீங்களே பாருங்கள். எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா என்று கவியரசர் கண்ணதாசனை எழுத வைத்த பாத்திரம்.

திரும்பவும் சொல்கிறேன். இன்றைக்கும் இப்பிடியொரு படம் வருவது மிக அரிது.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_07.html

கடைசியாக் கத்தாழைக் கண்ணாலே பாட்டுக்கு போட்டிருக்கிறது பாபு படப்பாட்டு. வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா என்று வரும் பாட்டு. செம லோக்கல் பாட்டு.

குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது
அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
மேரியம்மா கேரியரில் எறா இருக்குது
அதில் பத்மநாப ஐயரு வீட்டுக் கொழம்பி கெடக்குது

இப்பிடிப் போகும் பாட்டு.

இந்தப் படத்துல வருமே.. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். I miss M.S.Viswanathan, Kannadasan and T.M.Soundararajan. அவங்களுக்கு வயசாச்சு. கவியரர் இப்ப நம்மகூட இல்லை. ஆனா ஒரு பாட்டை உருவாக்க அவங்க காட்டுன சிரத்தையைக் காட்டும் கூட்டணியை எதிர்பாக்குறேன்.

G.Ragavan said...

http://ennam.blogspot.com/2009/03/blog-post.html

முதல் கேள்விக்கு விடையில்லை.

ஆனால் இரண்டாம் கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டது சரிதான். கண்களைத் தண்ணீரில் கழுவுகையில் இடக்கண் சிவந்திருக்கும். அடுத்த காட்சியிலேயே வலக்கண் சிவந்து வீங்கியிருக்கும். நானும் கவனித்ததே. நெதர்லாந்திலும் இப்படித்தான் திரையில் பார்த்தேன்.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_07.html

// முரளிகண்ணன் said...

ஆண்டவன் கட்டளை படத்தைப் பற்றிய ஒரு சுவராசியமான தகவல்.

(பதிவர் நர்சிம் அவர்கள் சொன்னது)

இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லோரும் ஜாம்பவான்கள். சிவாஜி,கண்ணதாசன், எம் எஸ் வி, சந்திரபாபு, டி எம் எச், பி பி எஸ் என.

இயக்குநர் இவர்களோடு ஒப்பிட்டால் ஜுனியர். அதனால் டைட்டில் கார்டில் கடைசியில் தன் பெயரை எப்படி போடுவது என தயங்கி ஒரு உபாயம் செய்தார்.

சிவாஜி நடந்து வரும் ஆரம்ப காட்சியில் ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் stop என்னும் கை பலகையை காட்டுவார். அப்பொழுது இயக்கம் என அவர் பெயர் வரும்.

அதாவது இவர்களிடம் நான் வேலை வாங்கவில்லை. அவர்கள் செய்வதை சரியான அளவோடு நிறுத்துவதுதான் என் பணி என.//

ஆண்டவன் கட்டளை படத்திற்கு இயக்கம் கே.சங்கர். அவருக்கு அதுதான் முதல் படமா என்று நினைவில்லை. அப்படியிருந்தால்..முதல் படத்திலேயே சிக்கலான கதையமைப்பை எடுத்துக் கொண்டமை மிகச் சிறப்பு. இவர் பின்னாளில் வருவான் வடிவேலன், வேலுண்டு வினையில்லை, சுப்ரபாதம், யாமிருக்க பயமேன், நவக்கிரக நாயகி, முப்பெருந்தேவியர் என்று பக்திப்படங்களாக எடுத்து இறையருட்கலைச்செல்வர் கே.சங்கர் என்று அழைக்கப்பட்டார். இவருடைய திரைப்பட வாழ்க்கை எடிட்டிங்கில் தொடங்கியது என்று நினைக்கிறேன். ஆகையால்தான் அவருடைய படங்களில் எல்லாம் எடிட்டிங் என்று வருகையில் கே.சங்கர் என்றும் இருக்கும். ஒரு சிலரைப் போல கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம் என்று அவியலாக தன்னுடைய பெயரைப் போட்டுக்கொள்ள மாட்டார்.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_07.html

// ஜோ / Joe said...

ஜிரா,
எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' -ணை இயக்கியதும் இதே கே.சங்கர் தானே? //

வாங்க ஜோ. ஒங்களத்தான் காணோம்னு நெனச்சேன்.

ஆமா. அதே சங்கர்தான். இவர்தான் ஆண்டவன் கட்டளை, கௌரி கல்யாணம் (திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்னு பாட்டு வருமே), மிருதங்கச் சக்கரவர்த்தின்னு நெறைய படங்கள் எடுத்தவரு. பெரும்பாலும் மெல்லிசை மன்னர்தான் இசை. மிருதங்கச் சக்கரவர்த்தி படத்தைப் பத்திச் சொல்லனுமா! ஆகா. அந்தப் படத்தைப் பாக்கனும் போல இருக்கு. எங்க கெடைக்குமோ!

G.Ragavan said...

http://pitchaipathiram.blogspot.com/2009/03/blog-post_09.html

நானும் அந்த நிகழ்ச்சியை ஒருவித உணர்ச்சிப் பெருக்கோடதான் பார்த்தேன். நம்ப மாட்டீங்க... இவங்க மூனு பேரும் ஒன்னு சேந்து ஏதாச்சும் நிகழ்ச்சி நடக்காதான்னு ஏங்குனவங்கள்ள நானும் ஒருவன்.

இளையராஜாவை அம்மாவின் தாலாட்டுன்னு சொல்லீட்டீங்க. அப்ப மெல்லிசை மன்னரோட இசை? ;) பாட்டி சொல்ற கதையா? :)

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்துல வந்தவங்க. வென்றவங்க. அதுனாலதான் இவங்க மூனு பேரும் ஒருத்தரையொருத்தர் மதிக்கிறாங்க. இளையராஜாவின் பேச்சு மிகப் பொருத்தம்.

மெல்லிசை மன்னரின் உடல்நிலை அவ்வளவு சிறப்பாகத் தென்படவில்லை. வயதும் இருக்கிறது. அவர் ரகுமானைத் தொட்டுக் கொஞ்சியது ஒரு தாத்தா தன்னுடைய பேரனைக் கொஞ்சுவது போலவே இருந்தது. என்னுடைய தாத்தாவும் பாட்டியும் நினைவிற்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2009/03/982.html

அருமையான பாடல்கள். அரிய பாடல்களும் கூட. எட்டு பாட்டுகளும் இதயத்தை எட்டும் பாட்டுகளாயினும்...இதயத்துள் தூங்கும் இன்பத்தைத் தட்டும் பாடல்களாக மூன்று பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்வேன்.

பழகும் தமிழே பார்த்திபன் மகனே...வேதாவின் இசையில் மிக இனிய பாடல். ஏ.எம்.ராஜாவும் இசையரசி பி.சுசீலாவும் குழைந்து பாடிய இனிய பாடல்.

பாலோடு தேன் கலந்த அபிஷேகம்....ஞானக்குழந்தை படத்திற்கு இசை திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன். இந்தப் படத்தில் இன்னொரு இனிய பாடல் "ஓசை கொடுத்த நாயகியே".

இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்.... இந்தப் பாடலைத் தெரியாத தமிழிசை விரும்பியும் உண்டா? மெல்லிசை மன்னரின் இன்னிசையில் தாலாட்டிசையாக வரும் இந்தப் பாடலைப் பிடிக்காதார் பிடிக்காதாரே!

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2009/02/960.html

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ...அடடா... கவித்துவமான காதற்பாடல். நீண்ட நாட்களாக வாலி என்று எண்ணிக் கொண்டிருந்தவனைத் திருத்தியமைக்கு நன்றி. 80களில் நல்ல பாடல் என்றால் கூசாமல் வாலி வைரமுத்து என்று சொல்லிடும் வழக்கம் மறைய வேண்டும். அதற்கு இந்தப் பதிவுகளும் நிகழ்ச்சிகளும் மிகவும் உதவும்.

புலமைப் பித்தன் மிக அருமையான கவிஞர். அவர் எழுதி .. கேட்டு... ரசிக்காத பாடல் இதுவரையில் இல்லை என்பதே என் அனுபவம்.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2009/02/960.html

கண்ணன் மனம் என்னவோ.. கண்டுவா தென்றலே....காதல் கொண்ட பெண்களுக்குக் காதலனே கண்ணன். கண்ணனே காதலன். அந்தக் காதலனை எண்ணி எண்ணிக் கன்னி பாடும் இனிய பாடல். மெல்லிசை மன்னர் இசையில் வெளிவந்த இந்தப் பாடல் என்னுடைய பிடித்த பாடல் வரிசையில் சிறப்பான இடத்திலுண்டு.

காக்கிச்சட்டை படத்தில் அத்தனை பாடல்களும் இனிமையிலும் இனிமை. அதில் இனியது கண்மணியே பேசு பாடல். அதே போல பட்டுக் கண்ணம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும். அதுவும் புலமைப் பித்தன் எழுதியதா?

G.Ragavan said...

http://raviaditya.blogspot.com/2009/03/blog-post_09.html

காற்றுக்கென்ன வேலி பாடல் மிக அருமையான பாடல். எல்லா வகையிலும் சிறப்பாக அமைந்த பாடல் என்பதே உண்மை.

// சுசிலா பாடியிருந்தால் இந்த உணர்வு இருக்குமா? சந்தேகம்தான்.//

இந்த ஒப்பீடு சரியானதல்ல என்பதே என் கருத்து. ஒரு பாடலுக்குப் பொருத்தமான பாடகியைத் தேர்வு செய்யும் உரிமை இசையமைப்பாளர்களுக்கு உண்டு. பி.சுசீலா பாடலைப் பாராட்டிச் சொல்லும் பொழுது... இந்தப் பாடலை ஜானகி பாடினால் இந்த உணர்வு இருக்குமா என்பது சந்தேகம் என்பது போல இருக்கிறது உங்கள் கருத்து.

// இந்த ஹை பிட்ச் சுசிலாவுக்கு வராது என்றுதான் ஜானகி பாடினார். //

இதைச் சொன்னது யார்? எப்பொழுது? சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்று இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பாடித் தேசிய விருதும் வாங்கி விட்டார்.

இதெல்லாம் இருக்க. இந்தப் பாடலை எஸ்.ஜானகி சிறப்பாகப் பாடியிருக்கிறார் என்று சொல்லிப் பாராட்ட எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html

மொதல்ல... நீங்க பட்டாம்பூச்சி விருது வாங்குனதுக்கு வாழ்த்துகள். அப்புறம்...எனக்கு விருது குடுத்ததுக்கு நன்றி.

என்னது பட்டாம்பூச்சி நினைவுகளை எழுதனுமா? சரி. எழுதீட்டாப் போச்சு. நானும் பதிவு எழுதி நாளாச்சு.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html

மதுமிதாம்மா... பதிவு போட்டாச்சு....

http://gragavan.blogspot.com/2009/03/blog-post.html

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post.html

கைப்ஸ்... ஒங்கள பதிவுக்குக் கூப்டிருக்கோம். பட்டாம்பூச்சி விருதும் குடுத்திருக்கோம். வந்து வாங்கிக்கோங்க.

http://gragavan.blogspot.com/2009/03/blog-post.html

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/03/37.html

பிரபா.. ஒங்களுக்குப் பட்டாம்பூச்சி விருது குடுத்திருக்கோம். வந்து வாங்கிக்கோங்க.

http://gragavan.blogspot.com/2009/03/blog-post.html

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/02/blog-post_28.html

ஒங்களுக்குப் பட்டாம்பூச்சி விருது குடுத்திருக்கேன். வந்து வாங்கி பெருமை பண்ணுங்க.

http://gragavan.blogspot.com/2009/03/blog-post.html

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post.html

நல்ல கொசுவத்தியாச் சுத்தீருக்கீங்க. அப்ப தேவின்னு ஒருத்தங்களும் செய்தி வாசிச்சாங்க. அவங்கள ஒரு வாட்டியோ ரெண்டு வாட்டியோதான் பாத்திருக்கேன். ஆனா அவங்களதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க படம் கெடைச்சாலும் போடுங்க.

ஆங்கிலச் செய்தி வாசிக்கிறவங்கள்ள... அந்த தாடிக்காரர் பிடிக்கும். ஒல்லியா இருக்காரே. அவரு.

G.Ragavan said...

http://udanpirappu.blogspot.com/2009/03/blog-post_10.html

அரசியல்கட்சீன்னு வந்துட்டாலே... இப்படிப்பட்டக் காமெடிக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. இவங்கள நம்பி கொஞ்சம் ஏழ பாழைங்க கட போட்டுக் காசு பாத்தத நெனச்சிச் சந்தோஷம். இது எல்லாக் கட்சிகளுக்கும் பொதுன்னு நெனைக்கிறேன்.

ஆனா அதிமுகவுக்குன்னு விசேசக் காட்சிகள் இருக்கு. குறிப்பா அந்த மொதப் படம். கால்ல விழுந்து கும்புடுறது. தன்னுடைய காலில் விழுகின்றவனைப் புன்னகையோடு ரசிக்கும் பாங்கு....அவரது மனநிலையைச் சந்தேகிக்க வைக்கிறது.

அது கிடக்க. மானமுள்ளவன் அதிமுகவில் இருக்க முடியாது என்பது தெரிந்ததுதானே. ஈழத்துக்கான உண்ணாவிரதம் ஒரு நாடகம். ஜெயலலிதா தான் ஒரு நடிகை என்பதை திரும்பவும் நிரூபிக்கிறார். ஆனால் இந்த முறை மிக அசிங்கமாக.

G.Ragavan said...

http://muralikkannan.blogspot.com/2009/03/1987_10.html

சின்னப்பூவே மெல்லப்பேசு படம் ரொம்பப் பிடிக்கும். பாட்டெல்லாம் சூப்பராயிருக்கும். படம் வந்தப்ப தியேட்டர்ல பாத்த நினைவில்லை. பின்னாடி எங்கயோ கேசட்டுல பாத்தேன்னு நெனைக்கிறேன். அதுல நாயகி பேரு பல்லவியா? வேற படத்துல அவங்களப் பாத்ததில்லையே!

ஆண்களை நம்பாதே.... இந்தப் படத்துல வாராய் என் தோழா வாராயோன்னு ஒரு பாட்டு இருக்குன்னு நெனைக்கிறேன்.

இலங்கேஸ்வரன்.... இந்தப் படத்த விஜய் டீவியில் பாத்தேன். பொருத்தமில்லாத பாத்திரத் தேர்வுகள். அதைச் சரி செஞ்சிருந்தாலே கொஞ்சம் ஓட்டிருக்கலாம்.

அன்புள்ள அப்பா...அப்பப்பா....அதுல வர்ர மரகதவல்லிக்கு மணக்கோலம் எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு

கடமை கண்ணியம் கட்டுப்பாடு நல்ல படம்

G.Ragavan said...

http://muralikkannan.blogspot.com/2009/03/1987_10.html

கூட்டுப்புழுக்கள் ரொம்ப நல்ல படம். ஆர்.சி.சக்தியின் படைப்பு. சிறை, கூட்டுப் புழுக்கள் போன்ற நல்ல நாவல்களைத் திரைப்படமாக்கிய அவரைத் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதது வருத்தமே. மனக்கணக்கு திரைப்படமும் மிக அருமையாக இருக்கும்.

கூட்டுப்புழுக்கள் படத்தில் வரும் நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக்கனா பாடல் மிக இனிமையானதும்... பாடுவதற்குக் கடினமானதும் கூட.

G.Ragavan said...

http://abiappa.blogspot.com/2009/03/blog-post_2451.html

ஒன்னு சொல்றேன். இந்தத் தெனாவெட்டுத்தான் திமுக தலைமையை இந்த ஆட்டம் ஆட வைக்குது. ஜெயலலிதா வெளங்காத அரசியல்வாதிதான். அத விட்டா இங்கதான வந்தாகனும்னு நெனைக்கிறதாலத்தான் ஆட்டம் ஜாஸ்த்தியாருக்கு திமுக கூடாரத்துல.

இந்த நிலைமை நிச்சயம் மாறியே ஆகனும்.

நிறை குறையெல்லாம் அலச வேண்டியதுதான். ஆனா கட்சியப் பாத்து ஏன் அலசுறீங்க? அவ்வளவு பிராக்டிக்கலான ஆளுன்னா ஒங்க தொகுதியைப் பாத்து அதுல நிக்குறவங்கள்ள நிறைகுறைகளைப் பாருங்க.

ஜெயலலிதா வெளிப்படையாச் செஞ்சதை கருணாநிதி மறைமுகமாச் செய்றாரோன்னு தோணுது.

ரெண்டு பேரையும் ஒன்னாத்தான் நான் எடை போடுறேன். சீர்தூக்கிப் பாத்தா ரெண்டுமே தூக்கிப் போட வேண்டிய நிலைலதான் இருக்குது.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_11.html

// ஒரு வேளை ரெண்டு ம‌ணி நேர‌ம், மூணு ப‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌மாக‌ இருந்திருந்தால் பிடித்திருக்கும் போல‌. சின்ன‌ வ‌யசுல‌ ஏங்கி இன்று பிடிக்காம‌ல் போன‌ லிஸ்ட்ல முக்கியமான‌ இட‌த்துல‌ இது தான். //

அதே அதே.... முதல்லயே நீளமான பயணம். வெளிய எதும் பாக்க முடியாது. பகல்னா வெறும் மேகம். ராத்திரின்னா இருட்டு.

நான் மொதல்ல போனது பெங்களூருல இருந்து டெல்லிக்கு. ஆப்பீஸ் வேலையாத்தான். ஜெட் ஏர்வேஸ். கிட்டத்தட்ட மூனு மணி நேரம். நல்லா சொகமா அனுபவிச்சேன். இப்பல்லாம் ஏரோப்பிளேன் கெளம்புனதும் தூக்கம் வந்துருது.

ஒரு வாட்டி நண்பர்கள்ளாம் சேந்து பெங்களூர்ல இருந்து கேரளத்துக்கு டூர் போனோம். ராத்திரி பஸ். வண்டி பெங்களூர விட்டு வெளியேறுனதும்...நான் தூங்கீட்டேன். நடுவுல எங்கயோ டீக்கு நிப்பாட்டினாங்க. பக்கத்துல இருந்த வங்காள நண்பன்.. கொட்டக்கொட்ட முழிச்சிக்கிட்டிருந்தான். ஏன்டா தூங்க வேண்டியதுதானேன்னு கேட்டா... ஓடுற பஸ்ல எப்பிடித் தூங்குறதுன்னு கேக்குறான். நம்ம தூத்துடி-சென்னை, தூத்துடி-பெங்களூர், கோயில்பட்டி-சென்னை, கோயில்பட்டி-பெங்களூர்னு எவ்ளோ பயணிச்சிருப்போம். அந்த அனுபவம் கொல்கொத்தாவுலயே பொறந்து வளர்ந்து படிச்சி பெங்களூருக்கு வேலைக்கு வந்த அவனுக்கு இல்லாமப் போச்சே!

G.Ragavan said...

http://udanpirappu.blogspot.com/2009/03/blog-post_10.html

// உடன்பிறப்பு said...

//// நந்தா said...
பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கெல்லாம் அதிமுக அப்படி பண்ணலையா, அம்மா பண்ணா மட்டும் சும்மா இருக்கீங்க கலைஞர்னா மட்டும் கேள்வி கேக்குறீங்க//

நன்றி நந்தா, இப்போ நீங்களே பாருங்க, நம்ம பத்ரி வந்து அ.தி.மு.க. உண்ணாவிரதத்துல மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குமா, மற்ற கட்சிகள் உண்ணாவிரதத்துல நடக்காதா என்று கேட்கிறார். இது மாதிரி கேட்கிறவர்கள் எல்லா கட்சி சார்பாகவும் இருக்கிறார்கள் //

நண்பரே... இத்தகைய வாதங்கள்தான்... அதிமுக எதிர்ப்பு என்ற எங்களைப் போன்றவர்கள் நிலையைத் திமுக ஆதரவு என்று மாற்றாமல் இருக்கிறது.

அதிமுகவோடு ஒப்பிட்டு...அவங்க பண்றாங்க...நாங்களும் பண்றோம்னு நெனைக்கிறதுதான்...ரெண்டு கட்சிகளிடமிருந்தும் எங்களைச் சம தூரத்தில் தள்ளி வைக்கிறது.

இப்படிச் சொல்வதனால் அதிமுகவை நான் ஆதரிக்கிறேன் என்பது பொருளாகாது. முன்பு திமுகவிற்கு ஆதரவளித்தவன் என்ற வகையில் இன்றைய திமுகவின் மேல் மிஞ்சி இருப்பது ஏமாற்றம் மட்டுமே. இதை இந்தப் பதிவில் சொன்னது உங்கள் மனதைப் புண்படுத்துமானால் மன்னிக்க. ஏனென்றால் இது கட்சி சார்பற்ற ஒரு சராசரித் தமிழனின் வயிற்றெரிச்சல்.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_11.html

// நான் அஞ்சாவது படிச்சிட்டு இருந்தேன். அப்பவே நக்கலு, திமிரு எல்லாம் இருந்தது ;) //

இப்பயும் அதெல்லாம் இருக்குறதா அமெரிக்காவுல மாநாடு போட்டுச் சொன்னாங்களாமே! :D

எங்க வீட்டுலயும் டீவி இல்லாமத்தான் இருந்துச்சு. பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி இதுக்காகவே போறோம்னு வீட்டுல வேற வழியில்லாம டீவி வாங்குனாங்க. நான் ஒழுங்காப் படிக்காம டீவி பாக்குறேன்னு எங்கப்பா பூஸ்டரக் கழட்டி வெச்சிருவாரு. எனக்கு ஒரு வீராப்பு உண்டு. இந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சா ... அதுக்கு எதிராவே செய்வேன். பூஸ்டரைக் கழட்டீட்டா டீவிதான பாக்க முடியாது. படிக்கனும்னு அவசியமில்லையே. :-) ஒழுங்கா அரமணி நேரம் டீவி பாக்க விட்டிருந்தா கூடக் கொஞ்ச நேரம் படிச்சிருப்பேன். :-)

G.Ragavan said...

http://coolzkarthi.blogspot.com/2009/03/blog-post_15.html

ஆண்டானியோ...ரோசாரியோ...சேச்சே அது ரொம்பக் கஷ்டமான பேரு. இவங்கதான் அன்னை சோனியா.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post_15.html

கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதிவிட்டமைக்கு நன்றி. நன்றி. நன்றி.

வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

ஆக...ஆண்டளைத் தவிர வேறு எந்தக் கவிஞரும் வண்ணத்துப்பூச்சியைப் பத்தி எழுதலையே. எனக்கென்னவோ அவங்கள்ளாம் உண்மையிலேயே தமிழ்க்கவிஞர்களான்னு சந்தேகமா இருக்கு.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post_15.html

// தமிழ்ப் புலவர்கள் மனசு வைக்கணும்! அவிங்க யாரும் வைக்கலை போல இருக்கே! தமிழ்க் கடவுளான திருமாலையே தமிழ்க் கடவுள்-ன்னு பாடாத சில பின்னாள் புலவர்களா, பட்டாம் பூச்சிக்கு எல்லாம் மனசு இரங்கப் போறாங்க?" //

அப்படித் தமிழ்ப்புலவர்கள் மனசு வெக்காமத்தான் அப்படிச் சொல்லாம இருந்தாங்கங்குறதுக்கு எதாச்சும் தரவு வெச்சிருப்பீங்க. எடுத்துச் சொன்னா தெரிஞ்சிக்கிறோம். அத்தோட.... முன்னாட் புலவர்களெல்லாம் திருமாலைத் தமிழ்க்கடவுள்னு பாடுன பாட்டுகளைக் கொடுத்தா படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்.

// "அது என்னமோ சரி தான்! சில பேரு ராஜாவுக்கு கூஜா தூக்க, வலிந்து போய் காதல் பாடல்களை எழுதுவாங்க! உலா, கலம்பகம்-ன்னு பின்னாளைய சிற்றிலக்கியம்! அதில் எல்லாம் செயற்கைக் காதல் தான்! //

என் செய்வது? கோயில் மதிலொட்டி.... சுற்று வீடுகளில் சோற்றுப் பாத்தி வெட்டி....பாலும் நெய்யும் பெய்து கையொழுகத் தின்றுவிட்டு...உண்ணோம் உண்ணோம் என்று சொல்லும் நிலையில் பின்னாட் புலவர்கள் இருந்தனரோ என அறியோம். உண்டேன் உண்டேன் உண்டேன் என்று சொல்லி நெருக்குண்டேன்... தள்ளுண்டேன்... வயிறு சுறுக்குண்டேன்...சோறு மட்டும் உண்டிலேன் என்று வழுதி திருமணத்திலேயே பாடுகின்றவர்கள்...உலாவும் தென்றலைக் கூட்டி உலா பாடுவதில் வியப்பென்ன! கலங்கும் குடும்பத்திற்கு கலங்கரை விளக்காக கலம்பகம் பாடுவதில் வியப்பென்ன! அவளை நினைத்து வறியவர் குரலை இடிக்க வேண்டாம் என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post_15.html

//இந்திர உலகில் காணலாகும் வண்ண வண்ண ஜாலங்கள்! வண்ண வண்ண வானவில்லை இந்திர தனுசு என்று சொல்வது போல், வண்ண வண்ண வண்ணாத்திப் பூச்சியை இந்திர கோபம்-ன்னு சொல்லுறது வழக்கம்!
அவன் கோபாலன்! அவள் கோபிகை! அது "கோ"பம்!//

உண்மையிலேயே இந்தக் காரணத்துனால அதுக்குக் கோவம்னு பேரா? இல்ல.. இப்பிடியிருக்கலாம்னு நெனைக்கிறீங்களா?

இந்தக் கோவத்தப் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா? தெரிஞ்சிக்குறதுக்காகத்தான் கேக்குறேன். :-)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post_15.html

// //G.Ragavan said...
கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதிவிட்டமைக்கு நன்றி. நன்றி. நன்றி//

ஓ அது கோரிக்கையா? நான் ஆணை-ன்னுல்ல நினைச்சேன் ராகவா? :) //

ஆணையா... ஆனையிட்டுப் படை நடத்தும் மன்னனல்லவே நான். கோரிக் கையேற்றுக் கொண்டு பதிவிட்டதாகவே நானறிகிறேன். மறுப்பீரோ!

////வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்//

:)
அந்தப் படத்தில் வந்த ஒரே நல்ல பாட்டு-ன்னு சொல்லலாமா? //

இல்ல... அந்தப் படத்துல எல்லாப் பாட்டுமே நல்ல பாட்டுகதான். டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டு கலக்கல். அதே மாதிரி வெத்தல மடிச்சிக் கொடுத்த பொம்பளையும் நல்ல பாட்டுத்தான். இன்னோரு பாட்டு கூட இருக்கே. என்ன பாட்டு அது?

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post_18.html

விருது வாங்கி..... பிறகுப் போலீசிடம் ஆப்பும் வாங்கி... பதிவும் வாங்கி.... அதில் பின்னூட்டங்களும் வாங்கிய தங்களது வீரமும் தீரமும் கொற்றமும் கொடையும் பாராட்டவும் புகழவும் பட வேண்டியவை.

இதை நமது ஔவையார் அன்றே பாடியிருக்கிறார்.

காராகொன்றோ பைக்கானொன்றோ
ரோடாகொன்றோ தெருவாகொன்றோ
எவ்வழி நல்வழி போலீசார்
அவ்வழி நல்லை வாழிய கைப்பு

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2009/03/3.html

வணக்கம் ஜோசப் சார். நலம்தானே. ஒங்களையும் பதிவுல பாத்து ரொம்ப நாளாச்சு.

பதிவைப் படிச்சாச் சிரிப்பா வருது. ஆனா சிரிச்சோம்னு நெனச்சா வேதனையா இருக்கு.

போன தேர்தலுக்கு நான் எழுதுன பதிவுல.... நான் திமுகவை நெறைய தாக்குறேனோன்னு நெனைச்சீங்களே. இப்பவும் அப்படித்தான் நெனைக்கிறீங்களா? இல்ல ஏதாச்சும் மாறுதல் இருக்கா? உண்மையிலேயே ஒங்க கருத்தைத் தெரிஞ்சிக்கத்தான் கேக்குறேன். :-)

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2009/03/299.html

மொதல்ல சொந்த அனுபவம். அப்புறமா.. பதிவுக்குப் பின்னூட்டம்.

சென்னையில அமெரிக்கத் தூதரகத்துக்கு ஒரு வாட்டிப் போயிருக்கேன். விசாவுக்குத்தான். அப்பப் பழைய கம்பெனில இருந்தேன். அங்க டிரஸ் கோடெல்லாம் கெடையாது. ஆகையால டீ சட்டையும் ஜீன்சும் போட்டுக்கிட்டுப் போனேன். போறப்போதான் நினைவுக்கு வந்தது... ஆபீஸ் ஐடி கார்டைக் கொண்டு போகலைன்னு. சரி கழுத.. நடக்குறது நடக்கட்டும்னு போனேன்.

உள்ள பாத்தா பெருங்கூட்டம். மத்த நிறுவனங்கள்ள இருந்து வந்தவங்கள்ளாம் முழுக்கைச் சட்ட.... பேண்ட்டு... டை எல்லாம் கட்டீருந்தாங்க. கழுத்துல ஆபீஸ் ஐடி. அடேங்கப்பாவா இருந்தாங்க. ரொம்ப மரியாதையா பணிஞ்சு பேசுனாங்க.

என்னோட முறை வந்துச்சு. போய் நின்னேன். ரெண்டொரு கேள்விக கேட்டாங்க. பதிலைச் சொன்னேன். கை விரல வெச்சி ரேக பிடிக்கனும்னு சொன்னாங்க. அவரு வலக்கைய வெக்கச் சொன்னா எடக்கைய வெச்சேன். சார்... கவனமா வைங்கன்னு சொன்னாரு. ஷ்யூர்னு சொல்லீட்டு ரொம்பக் கேஷுவலா வெச்சிட்டு பேசாம இருந்தேன். அடுத்த கைய வைங்கன்னு லேசா கடுப்பானாரு. சரின்னு வெச்சேன். சரி.. அந்தக் கவுண்டர் கிட்ட.. சீச்சீ கவுண்டர்ல எல்லாத்தையும் குடுத்துட்டுக் கெளம்புங்கன்னு சொன்னாரு. வந்து பாத்தா.. பாவிப்பயக .. பத்து வருசத்துக்கு அப்பப்ப வந்துட்டுப் போகலாம்னு விசா குடுத்துருக்காங்க. ஹிஹி..ஒரே கொடுமைதான் போங்க.

அங்க ஒரு பய. சின்னப்பய...பள்ளிக்கூடம் முடிச்சிட்டு கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பிச்சிருந்தான். சின்னப்பய. அவனை ஒரு அக்கா... இந்திய அக்காதான்... கொடகொடன்னு கொடஞ்சது. அந்தப் பயலப் பாக்கப் பாவமாயிருந்துச்சு. என்னாச்சோ தெரியலை.

வெளிய வந்தா போலீசு... சார்.. காசு குடுங்கன்னு....கொடுமைடான்னு நெனைச்சிக்கிட்டேன்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2009/03/299.html

// கையில் ஐ-போன்; ஆகவே அமெரிக்காவிலிருந்து வந்தவராக இருக்க வேண்டும். //

ஐ போனு ஒலகமெல்லாம் கெடைக்குதாமே... அவரு இந்தியாவுலயே வாங்கீருக்க மாட்டாரோ? ;)

ஆனாலும் நீங்க சொல்ற மாதிரி நடக்க வாய்ப்பிருக்கு. :)

// இங்கிருந்து செல்லும் பெற்றோர்கள் அங்கே இருப்பது ஒரு golden cage-ல் இருப்பது போன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன். //

கிட்டத்தட்ட உண்மைதான்னு நெனைக்கிறேன். எங்கப்பாம்மா இங்க வந்தப்ப.... பகலெல்லாம் வீடுதான். சாந்தரம் நான் வந்தாத்தானே பேச்சுத் தொணைக்கு. ஆனா அவங்களா பக்கத்துல கடைக்கிப் போயி ஒரு கிலோ வெங்காயம் ஒரு நாளைக்கி... பாலு இன்னோரு நாளைக்கி..... இப்பிடி ஒவ்வொன்னும் ஒவ்வொரு நாளைக்கு வாங்கீட்டு வருவாங்க. ஐரோப்பாவுல போக்குவரத்து வசதி நல்லாருக்குறதால...கார் எதிர்பாக்காம அவங்களா அங்கிட்டும் இங்குட்டும் போய்ட்டு வர முடிஞ்சது. ஒரு வாரயிறுதி விட்டு இன்னொரு வாரயிறுதீல ஏதாச்சும் பக்கத்து நாட்டுக்குப் போயிட்டு வந்தோம். அதுவும் பொழுதுபோக்குதானே. என்ன... போன எடத்துல சாப்பாடு பிடிக்கலை அவங்களுக்கு. அவங்க ஒழுங்காச் சாப்பிடாததப் பாத்து எனக்குக் கோவந்தான் வந்துச்சு. ஏதாச்சும் இந்திய உணவு விடுதி கண்ணுல பட்டா கூட்டீட்டுப் போயிருவேன். இத்தாலீல...பிசா-வுல... அருமையான இத்தாலிய பாட்சாக்கள்ளாம் வேண்டாம்... பாகிஸ்தானி உணவகத்துலதான் சாப்பிடனும்னு அடம். அங்கதான் சோறு கெடைக்குதாம். நம்மூரு சுவையாவும் இருக்குதாம். கோழிய அறுத்து அறுத்து டோனேர் கபாப் போட்டு சோத்தோட வெச்சிக் குடுத்தது ரொம்பப் பிடிச்சிருச்சு அப்பாக்கு. ஆனா.. இந்தியாவுலன்னா...நார்த் இண்டியன் சாப்பாடெல்லாம் ஆகாதுன்னு சொல்வாங்க. :)

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post_18.html

// கைப்புள்ள said...

//விருது வாங்கி..... பிறகுப் போலீசிடம் ஆப்பும் வாங்கி... பதிவும் வாங்கி.... அதில் பின்னூட்டங்களும் வாங்கிய தங்களது வீரமும் தீரமும் கொற்றமும் கொடையும் பாராட்டவும் புகழவும் பட வேண்டியவை.//

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே? //

இந்தச் சந்தேகம் ஏன்? காமெடியேதான். ஆனா கீமெடி இல்லை.

நம்ம சூடானார் கேக்கச் சொல்லீருக்காரு. ஏன் விருது குடுத்தோம்னு யோசிச்சதுண்டா?


// //இதை நமது ஔவையார் அன்றே பாடியிருக்கிறார்.

காராகொன்றோ பைக்கானொன்றோ
ரோடாகொன்றோ தெருவாகொன்றோ
எவ்வழி நல்வழி போலீசார்
அவ்வழி நல்லை வாழிய கைப்பு

//

நன்னி ஜி.ரா. இது மூதுரை பாடல் தானே? //

ஹிஹி அது மூதுரை... இது மொத்துரை... மொத்தோ மொத்துரை :D இது மாதிரி இன்னும் பத்துரை இருக்கு. எடுத்து விடனுமா?

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2009/03/54.html

அடேங்கப்பா... இதெல்லாம் ஊடூபுல ஏத்துறாங்களா இப்போ. அருமை.

ஓம்புரி ஒரு நல்ல நடிகர். பாரத் ஏக் கோஜ்-னு ஒரு தொடர் வந்தது. ஷியாம் பெனகல் எடுத்தது. ரொம்பச் சின்ன வயசு. அதுல என்ன கத ஓடுதுன்னே ஒழுங்காப் புரியாது. ஆனா அதுல ஓம்பூரியோட நடிப்பு அவ்ளோ பிடிச்சிருந்தது.

ஷ்ரெயா கோஷல் நல்ல பாடகி. அவங்களுக்கு விருது குடுக்கலைல...கூட்டத்துல எருது பத்தி விடுவோம்னு இப்பவே இங்கயே மெரட்டிக்கிறேன்.

G.Ragavan said...

http://page78.devcutchery.com/2009/03/blog-post.html

பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்குச் சேதியும் வந்தாச்சு....
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ... ஆடாதோ

தேவே வருக
காதற்கதைகளின் கோவே வருக
இளமை உள்ளங்களின் தீவே வருக
இன்ப எண்ணங்களைக் கதைகளில் அள்ளியிரைக்கும் பூவே வருக
எழுத்து மழை பொழிக

தேனும் வானும் கூடிச் சிரித்தாற் போல் கதை பல சொல்லி மக்கள் மனதில் இன்பச்சுவைகளை எழுப்புக

G.Ragavan said...

http://truetamilans.blogspot.com/2009/03/blog-post_22.html

படம் கலக்கல். நான் தமிழ்ல்ல பாக்கல. தெலுங்குல பாத்தேன். இங்க நெதர்லாந்துல தமிழ் இந்திப் படங்கதான் வரும். அதுவும் எதிர்பார்ப்புள்ள படங்கதான். தெலுங்குப் படங்கள்ளாம் ஆன்லைன்லதான்.

ஆனா நல்ல பிரிண்டு இல்லை. தமிழ்லயும் படத்தப் பாக்கனும். ஆன்லைனைத் தவிர வேற வழியே இல்லைங்குறதால...ஆன்லைனாண்டவருக்கேச் சரணம்.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_9910.html

திரும்பவும் ஒரு சிவாஜி ஸ்பெஷல். நன்றி பாலாஜி. ஒவ்வொரு பாட்டும் தேன். ஆகையால மொத்தமா எல்லாப் பின்னூட்டங்களையும் இன்னைக்கே போடாம...ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொன்னுன்னு பாப்போமா? ஒனக்குச் சரிதானே?

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_9910.html

தவப்புதல்வன்... முக்தா சீனிவாசன் இயக்கிய படம். எனக்கும் ரொம்பப் பிடிச்ச படம். பரம்பரை பரம்பரையா குடும்பத்துல வர்ர மாலைக்கண் நோய் மகனுக்கு வந்துரக்கூடாதேன்னு கவலைப்படுற தாய். மாலைக்கண் நோய் வந்தப்புறம் அதைத் தாயிடமும் மத்தவங்களிடம் மறைக்க முயலும் மகன். அதனால் அவனுக்கு உண்டாகும் பிரச்சனைகள். காதலனோட நோய்களையும் பிரச்சனைகளையும் தெரிஞ்சிக்கிட்டு...அவனுக்கேத் தெரியாம குணப்படுத்தி பிரச்சனைகளைத் தீர்க்கும் டாக்டர் காதலி. இதுதான் கதை. அம்மா பண்டரிபாய். மகன் நடிகர் திலகம். காதலி கே.ஆர்.விஜயா.

இதுல ஒரு பாட்டு...கிருஸ்துமஸ் பாட்டு.... தாத்தா துள்ளி விளையாடுவாரு. சிவாஜிதான். கிண்கிணி கிண்கிணி என வரும் மாதா கோயில் மணியோசைன்னு ஒரு அருமையான பாட்டு. பாடிக்கிட்டிருக்குறப்பவே மாலையும் வந்துரும்.. நோயும் வந்துரும். தடுக்கிக் கீழ விழுந்துருவார். சின்னப்பிள்ளைகளெல்லாம் சிரிக்கும்... அப்ப... தாத்தாதானே பார்வை கொஞ்சம் குறைவாய் இருந்தால் என்ன... தட்டுத்தடவி தடுக்கி விழுந்தால் சிரிப்பாயோ என் கண்ணேன்னு டி.எம்.எஸ் பாடுறப்பவும்...நடிகர் திலகம் அழுறப்பவும்... இன்னைக்கும் எனக்குக் கண்ணுல தண்ணி வந்துரும். பாட்டைக் கேட்டாலே போதும். மெல்லிசை மன்னரை நாம ஒழுங்கா மதிக்கலைன்னு... இசை தெரிஞ்ச எல்லாருக்கும் தெரியும். இந்த மாதிரி இறவாப் பாடல்களைக் கொடுத்த அவருக்கு ஒரு தேசிய விருது கூடக் கொடுக்கலைன்னா... அந்த விருதுக்கு மதிப்பு பூச்சியந்தான்.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_9910.html

சரி.. பாலாஜி போட்டிருக்குற பாட்டுக்கு வருவோம்.

இசையால் வசமாகா இதயமெது? அந்த இசைக்கு எவ்வளவு பெரிய ஆற்றல்கள் உண்டு. அம்மா பாடுனா தாலாட்டுது. காதலி பாடுனா சீராட்டுது. கொழந்தை பாடுனா கண்களில் ஆனந்த நீராட்டுது. வயல்ல பாடுனா பயிர் வளருது. போரில் பாடுனா வீரம் வருது. இப்பிடி உலகத்துல இருக்குற அத்தனையையும் தட்டி எழுப்புற இசையால ஒரு விளக்கையா பொருத்த முடியாது? மன்னன் மகளுக்கு நோய். என்னன்னே தெரியாத நோய். உடம்புக்கு வந்தாத்தானே தெரியும். மனசுக்கு வந்தா? நோயும் பேயும் இருட்டுலதான் ஆடும். அப்ப வெளிச்சம் வரனுமே! அதுக்கு விளக்கேத்தனும். திரி போட்டு விளக்கேத்துறத விட... சுரம் போட்டு விளக்கேத்துனா உள்ளம் இளகி நோய் போயிருமே.

தான்சேன் என்கின்ற இசை மேதையைத் தவிர யார் அப்படிப் பாட முடியும்? கூப்புடுங்க. இது படத்துல வர்ர ஒரு கற்பனை நாடகக் காட்சி.

இந்தக் காட்சிக்குத்தான் மெல்லிசை மன்னர் இசையமைச்சிருக்காரு. இசை கேட்டால் புவி அசைந்தாடும். அது இறைவன் அருளாகும். ஏழாம் கடலும்...வானும் நிலவும்...என்னுடன் விளையாடும். இசை என்னிடம் உருவாகும். கேட்டுப்பாருங்க.... டி.எம்.எஸ்க்கு ஏழிசை வேந்தர்னு ஒரு பேர் உண்டு. இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னாரு. ஒரு இசையமைப்பாளருக்கு பாட்டுல என்ன வேணுமோ.. அதையெல்லாம் டி.எம்.எஸ்க்கு விளக்கவேண்டியதில்லை. எல்லாம் தானே வந்துரும். மெட்டை மட்டும் சொன்னாப் போதும். இது...சண்டையெல்லாம் போட்டுப் பிரிஞ்சப்புறம் சொன்னது. எம்.எஸ்.வி என்ன சொன்னாருன்னா... கோடி ரூவா கொடுத்தாலும் அவரால அபசொரமாப் பாட முடியாதுங்க.

அப்படிப் பட்ட டி.எம்.எஸ் இந்தப் பாட்டைக் கம்பீரமா பாடிருக்காரு. வேற யாரையுமே நெனைக்க முடியாத பாட்டு. கேளுங்க. கேட்டு ரசிங்க.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/03/blog-post_9910.html

நல்லா யோசிச்சிப்பாருங்க. இங்க நம்மள்ளாம் பேசிக்கிட்டிருக்கோமே... இதுல எல்லாரையும் பொறந்ததுல இருந்தேவா தெரியும்? இல்லையே. எங்கிருந்தோ வந்தோம்...சரிதானே. அந்த எங்கிருந்தோ வந்தது நல்லதா இருந்தா அருள்னும் சொல்லலாம்...கெட்டதா இருந்தா இருள்னு சொல்லலாம்.

இங்க இந்தத் தந்தைக்கு...அதாங்க...படிக்காத மேதை ரெங்காராவுக்கு....பிள்ளைகள் உண்டு. ஆனாலும்...எங்கிருந்தோ வந்தான் ஒருவன். அன்பை நாம எவ்ளோவோ கொட்டுனாலும் வாங்காமப் போறவங்களும் உண்டு. ஆனா இன்னும் வேணும்.. குடு குடுன்னு கேட்டு வாங்குறவங்களும் உண்டு. அப்படியொருத்தன் வந்தான். கூடவே இருந்தான். அவனை நம்ம பாத்துவோம்னு நெனச்சா..அவன் நம்மளப் பாத்துக்கிறான். அப்படிப்பட்டவனை வசச்சி வீட்ட விட்டுத் தொரத்தியாச்சு. தன்னோட பிள்ளைகள் மேல தகப்பனுக்கு இதுனால வெறுப்பு. பெத்தாதான் பிள்ளையா?

அப்பப் பாட்டு வருது... வந்தது யாரு? கண்ணன் என் காதலன்னு சொன்னாரு. கண்ணம்மா என் காதலின்னு சொன்னாரு. கண்ணம்மா என் குழந்தைன்னு சொன்னாரு. வேலைக்காரன்னு சொன்னாரு. தாய்னு சொன்னாரு. அந்தக் கண்ணனே இங்கயும் வந்தான்னு .. பாசத்துக்கு ஏங்குற தகப்பன் நம்புறாரு. ஆத்தாமையெல்லாம் மனசுக்குள்ள விம்மி வெடிச்சிப் பாடுறாரு. எங்கிருந்தோ வந்தான்... இடைச்சாதி நானென்றான்... இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்தேனோ!

சீர்காழி கோவிந்தராஜன் பற்றிச் சொல்லாம இந்தப் பாட்டைப் பத்திப் பேச முடியாது. வெண்கலத் தொண்டை. கணீர்னு பாடுறாரு.

பாட்டைப் பாருங்க. நல்ல படங்க. கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதியது.

G.Ragavan said...

http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post_24.html

நட்சத்திர வாழ்த்துகள்.

நீங்க சொன்னதுல தப்பே இல்லை. வெறும் லாப நோக்கோட மட்டும் ஒரு நிறுவனம் இயங்குனா...அதை எவ்ளோ பேசுறோம். அதே மாதிரி வெறும் லாப நோக்கோடயும் அரசியல் நோக்கோடயும் மட்டும் ஒரு நடிகன் இயங்குறப்போ ... அதைப் பத்திக் கருத்துச் சொல்றதுல என்ன தவறு?

அறிவற்றவர்னு சொன்னதுல தப்பு இருக்குறதா தெரியலை. நீங்க சொன்ன மாதிரி.. கலையுணர்வோட விஜய் தன்னைத் திரையுலகுல ஈடுபடுத்திக்கிட்ட காட்சியமைப்புகளைக் காட்டச் சொல்லுங்க. இவ்ளோதான் வரும். அத வெச்சிப் பண்றேன்னு அவர் சொன்னா...அது அவருடைய அறிவின் குறைவைத்தானே சுட்டிக் காட்டுது. புதுமையாக எதையாவது செய்யனுங்குற எண்ணத்தையாவது பாக்க முடியுதா? இப்படி தன் தொழிலில் பணம் பாக்குறதைத் தவிர வேற எதையுமே நினைக்க முடியாதவங்களை அறிவற்றவர்கள்னு சொல்றது பொருத்தம்தானே.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/03/2.html

என்னது? ஜோடுதலையா? எங்கூர்ல போகானீன்னு சொல்வோம்.

படிக்கிறப்பவே காப்பி குடிக்கனும்னு ஆசையாயிருக்கு. காப்புச்சீனோ காப்பூச்சீனோவாக் குடிச்சி நாக்கு நமத்துப் போச்சு. நல்ல காப்பி குடிக்கனும்.

டி.ஆர்.ராஜகுமாரிதானே அவங்க. சின்ன வயசுல பாண்டி பஜார்ல தியேட்டர் இருந்துச்சு.. Rajakumariல இருக்குற Raj இருக்காது. அக்குமாரி அக்குமாரின்னு சொன்ன நெனைவு இருக்கு.

ஆனை அடக்கிய அருந்தமிழ் டீச்சர் என்று ஒங்களுக்குப் பட்டம் குடுக்குறோம்.

அத்தோட... ஆனைத் தந்த கலைச்செல்விங்குற பட்டத்தையும் குடுக்குறோம். அந்தத் தந்தத்த எவ்வளவுக்கு வித்தீங்க?

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/03/3.html

தனியொரு டீச்சருக்கு இட்லியில்லையெனில் கொப்பரையை அழித்திடுவோம் என்று வலைப்பூக்களில் தொடர் பதிவிடுவோம். இட்டிலி என்ற தலைப்பில் பதிவிட்டு மூன்று பேரைக் கூப்பிட வேண்டும். இது எப்படி இருக்கு?

என்னது... பால் நீலமாகுமா? இப்பிடித்தான் கருநாடகாவுல ஒரு கோயில் இருக்கு. பேரு மறந்து போச்சு. அதுல சிவலிங்கத்தோட தலைல நெய்ய ஊத்தித் தடவுனா வெண்ணெய்யாயிரும்னு ஒரு நம்பிக்கையாம். அந்தூரு ஐயரும் லிங்கத்தோட தலைல தண்ணிய ஊத்தீட்டு... நெய்யையும் ஊத்தீட்டு அதத் தடவோ தடவுன்னு அழுத்தித் தடவுனாரு. கடைசியா... சிவலிங்க அழுக்கு..நெய்யு..ஐயர் கைல இருந்தது எல்லாம் தெரண்டு கெட்டியா ஒன்னு வந்துச்சு. அதை எல்லாருக்கும் துளித்துளி பிரசாதம்னு குடுத்தாங்க. யக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்... நான் தொடவேயில்லை.

கோயில்ல போட்டோ எடுக்க விடனும்னு 2007ன் தொடக்கத்துலயே.... 2006ஆ? பதிவு போட்டாச்சு.

G.Ragavan said...

http://mathimaran.wordpress.com/2009/03/26/article-180

மிக அருமையான தேர்ந்தெடுத்த கேள்விகள். அவைகளுக்குப் பொருத்தமான மெல்லிசை மன்னரின் விடைகள்.

காதல் கட்டிப்புரளவது மட்டுமல்ல என்பதை இசையாலும் சொல்லியிருக்கிறார். சைவக் காதலுக்கான பாடலிது. அசைவக் காதலுக்கும் மெட்டிட்டிருக்கிறார் மெல்லிசை மன்னர். இன்பமே உந்தன் பேர் பெண்மையோ.... பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற வகைப் பாடல்களைச் சொல்லலாம்.

ஷெனாய் என்பது வடக்கில் மங்கல வாத்தியம். நம்மூர் நாயனம் மேளம் போல. ஆனால் அதைச் சோகத்திற்குத் தமிழகம் தத்தெடுத்துக்கொண்டாலும்.... சரவணப் பொய்கையில் பாட்டிலும் ஷெனாய் இருக்கிறது என்ற செய்தியே வியப்பூட்டுகிறது.

G.Ragavan said...

http://muralikkannan.blogspot.com/2009/03/blog-post_28.html

நல்ல அலசல். இதே மாதிரி இன்னொரு படம் வந்தது. என்ன படம்.. என்ன பேரு.... ஆங்.. சாவித்ரி

இந்தப் படத்துல என்ன கதை தெரியுமா? வயசான ஒரு கோயில் குருக்கள்.. ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்னப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்குவாரு. அந்தப் பொண்ணுக்கு அந்த ஊர்க்காரன் மேல ஒரு ஆவல். அவனே கதாநாயகன். அவனோட அம்மாவின் நடத்தை கேள்விக்கு உட்படுத்தப்பது. அதுனால அவனுடை எண்ணவோட்ட மாறுதல்கள். படமும் பாட்டுகளும் நல்ல பாட்டுகள். ஆனா படம் ஓடலை. வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்னு பாட்டு நல்லாருக்கும்.

G.Ragavan said...

http://kanavukale.blogspot.com/2009/03/blog-post_27.html

இந்தப் படத்தோட பேரு தான வீர சூர கர்ணா. இந்தப் படத்தப் பொருத்த வரைக்கும் பலப்பல சாதனைகள் உண்டு. மூனே மாசத்துல மொத்தப்படத்தையும் முடிச்சி ரிலீசுக்கு வந்துருச்சாம். அதுவுமில்லாம படமும் ரொம்ப நீளம்ம்ம்ம்ம்ம். அதே மாதிரி... படத்தோட வெற்றியும் பெருவெற்றி. இந்தப் படத்த இப்ப வெளியிட்டாலும் வசூல்தானாம். இந்தப் படம் தமிழ்ல வந்துச்சா என்ன?

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2009/03/blog-post_29.html

பாஜக பேவாரின்னா... காங்கிரசு காவாலி...
அதிமுக அசிங்கம்மா திமுக தீட்டு
இதுல எந்தப் பயலையுமே நம்ப முடியாது. நம்பக்கூடாது. ஆனா மூனு கட்சிகளுக்கு இந்த வாட்டி ஓட்டுப் போடக்கூடாது. கூட்டணிகளுக்குப் போட்டாலும் சரிதான். ஆனா காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தமிழுணர்வு கொண்டவர்கள் ஓட்டுப் போடக்கூடாதுங்குறது என் கருத்து.

G.Ragavan said...

http://muralikkannan.blogspot.com/2009/03/blog-post_25.html

பொதுவாகவே தமிழ்த்திரைப்படங்களில் பட்டிக்காட்டுப் படங்கள் என்றால் மதுரையும் மதுரைக்குக் கீழேயும்தான். கோவை வட்டாரப் படங்களில் மக்களைப் பெற்ற மகராசி இருந்தாலும் 80களின் இறுதியில்தான் கோவைப்பகுதியை மையப்படுத்திப் படங்கள் வந்தன என்றே சொல்லலாம். ஆனால் ரோசாப்பூ ரவிக்கைக்காரியைத் தவிர வேறெந்தப் படத்தையும் யதார்த்தப்படம் என்று சொல்ல முடியவில்லை.

அதே போல வடக்கு மாவட்டங்களைப் பார்த்தால்... தங்கர்பச்சானைத் தவிர வேறு யாரும் திரும்பிப்பார்த்ததாகவும் தெரியவில்லை.

பாரதிராஜாவின் படங்கள் இருக்க.... ஏழாவது மனிதன், மனிதரில் இத்தனை நிறங்களா, காதல், சுப்பிரமணியபுரம் என்று யதார்த்தங்கள் நீண்டுகொண்டேயிருக்கின்றன.

G.Ragavan said...

http://tvrk.blogspot.com/

நல்ல தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

நீங்கள் இட்டிருக்கும் பட்டியலில் உத்தமபுத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம், அன்னையின் ஆணை, சாரங்கதாரா, காத்தவராயன் ஆகிய படங்களைப் பார்த்திருக்கிறேன்.

அன்னையின் ஆணையில் எதிர்மறை பாத்திரம். சாரங்கதாரா படம் மிகச்சுமார்.

பொம்மைக்கல்யாணம் படமே தெலுங்கில் பொம்மல பெள்ளியாகியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://balaji_ammu.blogspot.com/2009/03/534.html

இந்தக் கலாச்சாரக் காவலர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா.

அந்தப் பொண்ணுங்களும் பசங்களும் என்ன பண்ணா எனக்கென்ன... ஏதோ அக்கறைல செய்றதா இருந்தா... அவங்ககிட்ட நல்லபடி பேசலாம்ல. அத விட்டுட்டு.. இந்த மாதிரி ரவுடித்தனம் பண்றது ஆண்மையில்லாத்தனம். என்னது...அவரோட பொண்ணாட்டியும் கூடச் சேந்து ரவுடியிசம் பண்ணாங்களா? ஹி ஹி கற்புக்கரசி. கணவன் சொல் பேச்சு மீறா உத்தமி வாழ்க :P

பிரியாங்குற பேர்ல ஒரு ஆண் பின்னூட்டம் போட்டிருக்குறதாத்தான் நெனைக்கிறேன். பெண் பெயரில் ஆண் பின்னூட்டம் போட்டா... அத எப்படிச் சொல்றது?! ;) இனிமே அவருக்கு நெறைய டிமாண்டு இருக்கும்னு நெனைக்கிறேன். :P

இந்த மாதிரி ஆண்மையற்ற அசோசியேஷன் தலைவர் போன்ற மனநோயாளிகளுக்கு நல்ல மருத்தவம் செய்ய நிதி திரட்டனும். ஏதாச்சும் செய்யனுங்க. பாவம். இல்லைன்னா... என்ன செய்றோம்னே தெரியாம.... நாளைக்கு அவங்களை அவங்களே எதாச்சும் செஞ்சுக்கப் போறாங்க. ஐயோ...அந்த நடிகையை நெனச்சுச் செஞ்சிட்டேன்.. இந்த நடிகையை நெனச்சுச் செஞ்சிட்டேன்... பண்பாடு போச்சே.. கலாச்சாரம் போச்சேன்னு தற்கொலை செஞ்சுக்கிட்டாலும் செஞ்சுக்குவாங்க. ஏதாச்சும் செய்ங்க சார்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/03/blog-post_19.html

ஒவ்வொரு பாட்டும் முத்துகள்.

எல்லாப் பாட்டுகள்ளயும் எனக்குப் பிடிச்சது பருவமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.. என்ன பாட்டு அது.

இளையராஜா இளையராஜா... எங்கய்யா போனீங்க?

அப்படியே மெத்துமெத்துன்னு ஷூ போட்டுக்கிட்டு ஓடிக்கிட்டே பாடுனா.. இப்பிடித்தான் இருக்கும். எவ்ளோ கேட்டாலும் அலுக்காத பாட்டு.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2009/03/blog-post_30.html

நல்லா எழுதீருக்கீங்க. பாராட்டுகள்.

வருணைச் சொல்வதில் மிகச் சரியான கருத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள். அதுவும் அழகாக.

அதென்ன கடைசியில் ஸ்டாலினும் அழகிரியும் ஒன்றானது போல என்று? அதென்ன நாட்டுக்கு நல்ல விஷயமா? வேண்டுமானால் திமுகவிற்கும் திமுக தலைவரின் குடும்பத்திற்கும் நல்ல விஷயம். என்ன.... சிலபல கொலைகள் தவிர்க்கப்படும். கொள்ளைகள் கூட்டப்படும். அவ்வளவுதானே. இந்த மாதிரி ராகுலும் வருணும் சேர வேண்டும் என்றால்.... சேராமலேயே இருக்கட்டும். ஒன்னும் குறைந்து விடப் போவதில்லை.

G.Ragavan said...

http://panimalar.blogspot.com/2009/03/blog-post_30.html

எனக்குப் புரிந்து ஜெயலலிதாவிற்கோ அவரது கட்சிக்கோ கொள்ளையைத் தவிர வேறு கொள்கை இருந்தது போலத் தெரியவில்லை. திமுக என்னும் குடும்பக் கட்சியை எதிர்க்க வேண்டியது எவ்வளவு தேவையோ...அவ்வளவு தேவை அதிமுக என்னும் வட்டிக்கடையை எதிர்ப்பதும்.

அதிமுக அடுத்தவரால் ஆட்சிக்கு வரும். திமுக தன்னால் மட்டுமே வீழும்.

G.Ragavan said...

http://www.mathibala.com/2009/03/blog-post_29.html

காங்கிரஸ் எதிர்ப்பு எவ்வளவு அவசியமோ...அவ்வளவு அவசியம் அதிமுக எதிர்ப்பும். அதே அளவுக்குத் திமுக எதிர்ப்பும். இந்த மூனு கட்சி தவிர்த்த மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கிறது சரின்னு தோணுது. இந்த மூனு பேருக்குமே நல்ல பாடம் தேவைப்படுது. குடும்பத்துக்காக கட்சி நடத்துற கூட்டமும்... கட்சிக்காக குடும்பம் நடத்துற கூட்டமும்... குடும்ப உறுப்பினர்களைக் கொடுத்துக் கொடுத்து கட்சி நடத்துற கூட்டமும் எதிர்க்கப்பட வேண்டியவையே.

அதிமுகவோ திமுகவோ... ரெண்டு கட்சியும் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல... தமிழர்களுக்கு ஒரு பயனும் செய்யாது. குடும்பம் நடத்தவும் கொள்ளையடிக்கவும்தான் செய்யும்.