Thursday, September 07, 2006

என்னுடைய பின்னூட்டங்கள் - செப்டம்பர் 2006

மற்றவர்களின் வலைப்பூக்களில் நான் பதிக்கும் பின்னூட்டங்கள் இங்கும் பதிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

177 comments:

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2006/09/blog-post.html

வானொலி அண்ணாவாக நீங்கள் மாறி விட்டீர்களா! :-)

சின்ன வயதில் எங்கள் வீட்டில் வானொலி இருந்ததுதான். ஆனால் அதிகம் கேட்டதில்லை. காரணம் தொலைக்காட்சி. எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இருக்கவில்லை. தூத்துக்குடியில் புதுக்கிராமத்தில் புரொபசர் மார்க்கசகாயம் அவர்கள் வீட்டில் டீவி இருந்தது. அங்குதான் டீவி பார்ப்பது. சென்னை நிலையம் ஏது? இலங்கை ரூபவாஹினிதான்.

அதில் வரும் நிகழ்ச்சிகளும் விளம்பரங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆய்புவன் என்று தொடங்கும் செய்திகளைக் கூட புரியாமல் பார்ப்பேன்.

நிகழ்ச்சியில் பேசுகிற தமிழின் வசீகரம், லலிதா நகை மாளிகை விளம்பரம், நெஸ்டோமால்ட் பால் பவுடர் விளம்பரம், சிக்னல் டூத் பேஸ்ட், இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். நான் சொல்வதெல்லாம் மிகச் சிறிய வயதில். பிறகு இலங்கையின் பிரச்சனை தீவிரமடைய அடைய ரூபவாஹினி புள்ளிவாஹினியாய்ப் போனது.

ஜோ சொல்வது போல இலங்கை வானொலி மிகப்பிரபலமாக இருக்கும். தூத்துக்குடிப் பக்கமெல்லம் நிறைய சொல்வார்கள்.

G.Ragavan said...

http://tamilitary.blogspot.com/2006/09/blog-post_06.html

படித்து முடித்ததும் மனது கொஞ்சம் கனத்தது. ஆண்டவா!

சிக்கிம் வரைக்கும் போனேனே. காங்டாக்குல இருந்தேனே....இதப் பத்தி யாரும் சொல்லலையே...சொல்லீருந்தா கண்டிப்பாப் போய்ப் பாத்திருப்பேனே!

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_06.html

// கோபி(Gopi) said
காமெடி சூப்பருங்க...

:-)))

//கடையெழு வள்ளல்ல அதியமான் இல்லையா!//

இது குறித்த சில தகவல்கள்:

அதியமான் என்பது ஒரு அரசரின் பெயர் அல்ல. அது சோழர் சேரர் போல ஒரு வம்சத்தினரின் பெயர்.

சேரன் + மகன் = சேரமான்
அதியன் + மகன் = அதியமான்

"அதியமான் ஆய் எழினி" கடையேழு வள்ளல்களில் ஒருவர் அல்ல.. (அவரின் காலத்தோடு ஒப்பிட்டால்... முதலேழு அல்லது இடையேழு வள்ளல்களில் ஒருவராய் இருக்கலாம். எனக்கு உறுதிபட தெரியவில்லை)

"அதியமான் நெடுமான் அஞ்சி" கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவ்வைக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய நெல்லிக்கனியை தந்தவர். இவரது மகனின் பெயர் "அதியமான் பொகுட்டெழினி"

அதியமான்கள் தகடூரை மையமாய் கொண்டு மேற்கில் நாமக்கல், கிழக்கில் ஆற்காடு, வடக்கில் மைசூர், தெற்கில் கொங்கு நாட்டை எல்லையாகக் கொண்ட பகுதியை ஆண்டனர்.

ம்ம்.. ரொம்ப ப்ளேடு போட்டுட்டேனோ ? //

கோபி, மிக்க நன்றி. சேரமான் சேரமான்னு மூச்சுக்கு முன்னூறு வாட்டி படிச்ச எனக்கு அதியமான் சிக்காமப் போச்சே! கற்றது கைமண்ணளவு. சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2006/09/blog-post_06.html

சூர்யாவோட போஸ் ரொம்ப நல்லாயிருக்கு....நாளைக்குப் படம் வருதா! போய்ப் பாத்துரனுமே...டிக்கெட் கிடைக்காதே! பி.வி.ஆர்ல ஓடுதோ ஐநான்ஸ்ல ஓடுதோ இன்னொவேடிவ்ல ஓடுதோ!

அப்படியே சோதிகா படமும் போடுறது. ரெண்டு பேரும் சேந்தாப்ப இருந்தாலும் சரிதான்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2006/09/165.html

யய்யா என்ன இப்பிடி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க! நெறையப் பேரு வந்து கலக்கப் போறாங்க பாருங்க.

என் பங்குக்குக் கொஞ்சம் போல........

அப்ப உழவுதான் பெரிய தொழிலா இருக்கும். மாடு கெட்டிக் கமலை இழுத்துத் தண்ணி விட்டு விவசாயம் நடக்கும். மழை தவறாம பெய்யும். ஒரு இடத்துல இருந்து இன்னொரு எடத்துக்கு மாட்டு வண்டியோ குதிர வண்டியோ கட்டிக்கிட்டுப் போகனும். இல்லைன்னா நடந்து போகனும். அவ்வளவுதாங்க. ஏன்னா சண்டயக் கிண்டயப் போட்டு இருக்குற வசதிகள் வாய்ப்புகள் எல்லாம் அழிஞ்சு போகும். இயற்கைச் சீற்றங்கள் வேற. மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ இயற்கையால் கட்டாயப் படுத்தப் பட்டிருப்பான்.

G.Ragavan said...

http://vinmathi.blogspot.com/2006/09/blog-post_04.html

முடிவு ஊகிக்கக் கூடியதாக இருந்தாலும்...நல்லாயிருந்தது. பாராட்டுகள்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/193.html

// tbr.joseph said...
வாங்க ராகவன்,

(உங்களுக்குப் பின்னூட்டம் போடுறது இது மூனாவது வாட்டி. இதாவது வரனும்) //

என்ன ராகவன் புதுசா இருக்கு? நீங்க பின்னூட்டம் போட்டு நா வெளியிடாம இருப்பேனா என்ன? என்னுடைய நண்பரின் மரணத்திற்குப் பிறகு என்னுடைய வேலைப்பளு மிகவும் கூடிவிட்டது. அத்துடன் இந்த சிக்கன்குனியாவால் உடலும் பலஹீனமாகிவிட்டது. தொடர்ந்து கணினியை உபயோகிக்க முடியவில்லை. அதனால்தான் த.ம பக்காம் வர இயலவில்லை. ஆனால் தினமும் இயன்றவரை பின்னூட்டங்களை வெளியிட்டு விடுகிறேன்.. எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை. மன்னியுங்கள்:( //

இல்லை ஜோசப் சார். தவறு உங்களுடையது இல்லை. பிளாகரிலேயே பிரச்சனை வந்தது. ஆகையால் பின்னூட்டம் உங்களுக்கு வந்திருக்காது என்று எனக்குத் தெரியும்.

சரி. உடம்பு எப்படி இருக்கிறது? ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்மணத்தில் திரும்பிப் பார்க்கிறேனைக் காணவில்லை என்பதால்...நாந்தான் சரியாகப் பார்க்கவில்லையோ என நினைத்து வந்தேன். நீங்களும் பதியவில்லை. உடல் சரியாகட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/09/blog-post_07.html

// எல்லா தகவல்களையும் தந்துவிட்டால் படம் பார்க்கும்போது போர் அடிக்குமே...அதனால வுடு ஜூட்டு.

pinகுறிப்பு: ஆபீசில் ரெம்ப போர் அடிக்குதுங்கோ. //

அதுக்காக இப்படியா ஹா ஹா ஹா

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/09/blog-post_07.html

டீச்சர் இன்னொரு விஷயம்....யார் படத்துல ரொம்பச் சிறப்பான விஷயமே செந்தில் காமெடிதான். அதுல பிடி மாஸ்டரா வருவாரு. அவங்க குடும்பத்துல அப்பா, தாத்தான்னு கரண்டுல கண்டமாயிருக்கும். இவருக்கும் அப்படித்தான் ஆகும்னு பயப்படுற கேரக்டர். கடைசில அப்படித்தான் ஆகும். பேய் கரண்டுக் கம்பிய வெட்டி விட்டுரும். அதுல தாத்தாவ வர்ர செந்திலோட நடிப்பு பிரமாதமா இருக்கும். புதுசா ஊருக்குள்ள இழுத்திருக்குற கரண்டு வயருல மண்ணெண்ணெய் வருதுன்னு வெட்டப் போயி ஷாக்கடிச்சிரும்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/194.html

அட ஆண்டவா! அவர் பேச்சு அப்படி இப்படி இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட நிலை வருத்தத்தைத்தான் கொடுக்கிறது. இறைவன் அவருக்கு நல்ல வாழ்வைப் பிறகும் கொடுத்திருப்பான் என நம்புகிறேன்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/09/135.html

சிபி, கந்தன் நமக்கெல்லாம் சொந்தன். கந்தவேளை எந்தவேளையும் தொழத் துயரகலும். முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன் என்கிறார் அருணகிரி. அப்படியிருக்க நமக்கெல்லாம் கந்தனைக் கண்ட பொழுதெல்லாம் வந்தனை செய்து மகிழ முடிவது வியப்பா என்ன!

முருகன் பாடல்களை முறையாகப் பாடிப் பக்திப் பணியாற்றியர்கள் டீ.எம்.எஸ், சீர்காழி, சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள். இன்னும் பலரும் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே முருகனடியவர்களாக இருந்தமையால் மட்டுமே இவர்களுடைய பாடல்கள் உள்ளமுருக்கும் தன்மை கொண்டவை. சமீபத்தில் மகாநதி ஷோபனா கூட சிறப்பாகச் செய்திருக்கிறார்.

திரைப்படத்தில் வாலியை வளர்த்து விட்டவர் மெல்லிசை மன்னர். அதனால்தான் வாலி அவரை வாழ்க்கை தந்த வள்ளல் கந்தவேள் என்று புகழ்ந்திருக்கிறார். ஏன் கந்தவேள்? வைணவரான அவர் ஏன் கந்தவேள் என்று சொல்ல வேண்டும்? அதற்கும் இந்தப் பதிவுக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

திரைப்படத்திற்கு வருமுன் ஒருமுறை திருச்சி ரயில் நிலையத்தில் டீ.எம்.எஸ் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்தாராம். வாலியாகப்பட்டவர் ஒரு கவிதையை அவரிடம் கொடுத்து வணக்கம் செய்து கொண்டாராம். அந்தக் கவிதையைத் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைத்து மகிழ்ந்து அதற்கு அவரே மெட்டமைத்துப் பாட்டாக்கினார். அந்தப் பாடல்தான் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்பது. இன்னும் சில பாடல்களும் உண்டு. அவைகளும் டீ.எம்.எஸ்சின் இசையில் வெளிவந்து வெற்றி பெற்றன.

முத்தமிழும் முருகப் பெருமானின் சுயச்சொத்து. அந்தச் சொத்து நமக்கெல்லாம் வழிச்சொத்து. உரிமைச் சொத்து. ஆகையால் மறவாது, தமிழ் இறவாது காக்கும் கடமையைத் தந்து அதில் வெற்றியையும் கந்தன் நமக்குத் தரட்டும். வாழ்க வளமுடன்.

தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்

G.Ragavan said...

http://annakannan.blogspot.com/2006/09/blog-post.html

ஆகா......எனக்குப் பாக்கனுமே...பாக்கனுமே.....அடுத்த வாரம் பாக்குறேன். கண்டிப்பாப் பாக்குறேன். பெங்களூர் சூர்யா ரசிகர் மன்றத் தலைவர் (மானசீக) என்ற முறையில் (ஜோதிகாவுக்குந்தான்) படத்தைப் பாக்கனுமே..........!!!!!!!!!!!!!!!!!!

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2006/09/blog-post.html

அன்னையின் அன்பு மழையில் உலகம் தழைக்க என்னுடைய வாழ்த்துகள்.

இந்தியப் பிறப்பு மதங்களைத் தொடர்ந்து அடுத்ததாக என்னை ஈர்ப்பது கத்தோலிக்க மதம்தான். பிறந்த ஊரும் அருணகிரி கற்றுத் தந்த வழியும் காரணமாக இருக்கலாம்.

நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா நின்ற காவியமாம்
காலத் திரையில் எழில் கொஞ்சும் கனகக் கருணை ஓவியமாம் - டீ.எம்.எஸ் குரலில் இந்தப் பாடலைக் கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி.

ஜோ, இந்தப் பாட்டு கிடைக்குமா? குறைந்த பட்சம் கேட்கும் இணைப்பு!

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2006/07/blog-post_05.html

வாழ்த்துகள். ஆண்டு பலவாயிலும் பதிவில்லாமையும் பின்னூட்டமில்லாமையும் இன்றி வாழ்க. வளர்க.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/09/136.html

சிபி, எனக்கு ஒரு கவியரசரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொதுநலம் அறிந்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/09/137-1.html

±ýÉ º¢À¢ þôÀÊ ¦ºïº¢ðËí¸? ±ôÀʧ¡ ¿øġ¢Õó¾¡î ºÃ¢. Å¡ú¸ ÅÇÓ¼ý.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2006/09/154.html

ஒரு + போட்டுட்டேன். இத எவ்வளவு சொன்னாலும் புரியாது. ஏன்னா புரிஞ்சிக்க விரும்பாதங்கதான் நெறைய.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2006/09/blog-post_10.html

எங்க வீட்டுலயுந்தான் ரெண்டு பேரையும் எல்லாருக்கும் பிடிக்கும்.

சூர்யா-ஜோதிகா தம்பதியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இறையருளால் இல்வாழ்க்கை இனிதாக அமையட்டும்.

G.Ragavan said...

http://raasaa.blogspot.com/2006/09/blog-post_06.html

இங்க பார்ரா பாட்ட.....பட்டயக் கெளப்புதே! ராசா...மவராசா....இந்தப் பாட்டுக்காகவே படம் பாக்கனும் போல.

G.Ragavan said...

http://gragavan.blogspot.com/2006/09/2.html

G.Ragavan said...
// துளசி கோபால் said...
//கூஊஊஊஊஊச்! (நானில்லை. சோலை)//

:-)))))))))))) //

சிரிப்பு வருதுல்ல டீச்சர்...நீங்க நேருல பாத்திருக்கனுமே...அடேங்கப்பா...

// valli said...
ராகவன்,பிரமாதமாக ஆரம்பித்து
விட்டது. ல.க.லொ.
நேரிலே போகாததற்கு இந்தப் போட்டோ விருந்து அமர்க்களமாக இருக்கிறது.
அடுத்த பதிவைச் சீக்கிரம் போடுங்கள். //

கண்டிப்பா வள்ளி. இந்தப் புகைப்படங்கள் அவங்க சம்மதத்தோடதான் எடுத்தது. நம்ம கூட போட்டோல நிக்குற அருள்தான் அனுமதி வாங்கித் தந்தது.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/09/16.html

அடடே! மணி சொல்லீட்டாரா! நல்லதச் சொல்லி நடந்தது நல்லதுதான்.

சென்னையில இருந்து கெளம்புறதுக்கு முன்னாடி. அதான் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, இந்த கிராண்ட் ஸ்வீட்ஸ் வாசல்ல பைக்க நிறுத்தினேன். உள்ள போய் வேண்டியதுகள வாங்கீட்டு வந்து வண்டிய எடுக்கப் போறப்போ ஒருத்தர் வந்து ரேகை பாப்பேன்னு அடம் பிடிச்சாரு. வேண்டாம்னு சொன்னேன். அவரும் விடாம அம்மன் அருள் நெறைய இருக்கு. வெளிநாடு போவீங்கன்னு தொடங்குனாரு. நான் வேண்டாம்னு அழுத்தமாச் சொல்லீட்டு வண்டிய நகட்டீட்டு வந்துட்டேன். எங்கையாவது கூட்டத்துலயும் யாராவது ரேகா பாக்கத் தெரியும்னு (ரேகையத்தான் அப்படிச் சொன்னேன் ஹி ஹி) சொன்னா நான் கைய நீட்டவே மாட்டேன். அருணகிரி சொல்லிக் குடுத்துருக்காரே.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2006/09/blog-post_09.html

கைப்பு...படம் மட்டும் காட்டிக்கிட்டு இருந்தவரு...இப்ப பாட்டும் போடத் தொடங்கீட்டீரு. ஆனா ஒன்னு....இதெல்லாம் நல்லாயிருக்கு...சொல்லீட்டேன்.

சாமி என்ன நாலு கடல் நாலு மலை நாலு வானம் தாண்டியா இருக்கு? எப்பவும் கூட இருக்குதய்யா...உள்ள இருக்குதய்யா....அதனால்தான் கடவுள்னு சொன்னான் தமிழன். அனைத்தையும் கடந்து அனைத்துக்கும் உள்ள இருக்குறது கடவுளாம்யா. புரிஞ்சிருக்கும்னு நெனைக்கேன்.

அந்த பருப்புருண்டை என்ன இத்தாந்தண்டி இருக்கு. ராசஸ்தான் சாப்பாட்டுல அதப் பெணஞ்சு திங்குறதுதான....உப்பு ஒறப்பு இருகாதேய்யா!

ஊரெல்லாம் நல்ல மழை பெஞ்சிருக்கு போல. எல்லாரும் நல்லாயிருக்கட்டும். நாங்க மட்டும் பெங்குளூருல வேகுறோம். கடவுளு கருண காட்டுனாத் தேவலை.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/09/141.html

அன்று புறாவிற்காகத் தன்னுடைய தசையறுத்தான் சிபிச் சக்கரவர்த்தி. இன்று வலைப்பதிவர்களுக்காக கழுத்தறுத்தான் சிபி என்ற அவப் பெயர் வராமல் நன்றாகச் சிறப்பாச் செம்மையாச் செழுமையாச் செய்தமைக்கு எனது பாராட்டுகள்.

மார்க்கு போடனுமா? அதுக்குச் செவப்பு மைப் பேனா வேணும். குடுத்தாத்தான் போடுவோம். இல்லைன்னா போடா...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..போட மாட்டோம்.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2006/09/blog-post_11.html

மேல இருக்குறது பழநிக்குமாரசாமி. கீழ இருக்குறது பழநிபாபா. நேத்து ஊருக்குப் போயிட்டதால படிக்கலை சார்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2006/09/blog-post_10.html

அருந்தமிழ்க்கடல் வாரியார் அவர்களின் எளிமையும் அருளும் நிரம்பிய சொற்பொழிவுகள் நன்மை மட்டுமே பயந்தன. பயக்கின்றன. பயக்கும்.

மூச்சு விடுவது என்பது முருகன் பெயரைச் சொல்வது என்று வாழ்ந்த பெருமகனார் அவர். தனக்கென்று எதுவும் அவர் செய்து கொள்ளவில்லை. பல திருக்கோயில்களுக்குத் திருப்பணியும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும் செய்து, மக்களை நல்வழிப் படுத்துவதிலேயே குறியாக இருந்தத் திருமகனார்.

அவர் ஈழத்திற்கு வந்திருந்தது சாலப் பொருந்தும். அவரைக் கொண்டாடாத தமிழர் யார்!

அவருடைய சொற்பொழிவுகளை கேட்டு விட்டு மீண்டும் பின்னூட்டம் இடுகிறேன்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/09/1.html

சூரியாவிற்கும் ஜோதிகாவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இருவரும் இணைபிரியாது அன்போடும் அருளோடும் நீடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

படங்காட்டிய பொன்சுக்கு நன்றி.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/09/1-2.html

இது மொத நாள் போட்டோவா....நல்லாருக்கு. எடுத்துக் கொடுத்த ஸ்பை சென்னப்பட்டணம் சீனுவுக்கும்...அத வலைப்பூவுல ஏத்துன பாபாவுக்கும் நன்றி.

அனானி என்ன சொல்ல வர்ரீங்கன்னே புரியலையே....இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கிறது தப்புங்கிறீங்களா? இல்ல...சூரியா ஜோதிகாவைக் கல்யாணம் செஞ்சுக்கிறது தப்பா? இல்ல...ஜோதிகா சூரியாவைக் கல்யாணம் செஞ்சுக்கிறது தப்பா? இல்ல...கல்யாணமே செஞ்சுக்கிறது தப்பா? இல்ல...இந்தப் போட்டாக்கள வலைப்பூவுல போட்டது தப்பா? புரியுறாப்புல சொன்னா...நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல. என்னவோ சொல்ல வர்ரீங்க. என்னான்னுதான் புரியல.

G.Ragavan said...

http://harimakesh.blogspot.com/2006/09/28_11.html

இங்கயும் போய்ப் பாத்துறனுமய்யா.....கண்டிப்பாப் போய்ப் பாப்பேன். எந்தச் சந்தேகமும் இல்லை.

பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம்.

G.Ragavan said...

http://malainaadaan.blogspot.com/2006/09/blog-post_11.html

மலைநாடன், உங்கள் பெயரைப் பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது ஒரு கன்னடப் பாடல். "மலை நாட ஹெண்ணா மை பன்னா" அதாவது "மலை நாட்டுப் பெண்ணா மெய் சிறப்பா" இது நேரடி மொழி பெயர்ப்பு. பீ.பி.ஸ்ரீநிவாசும் எஸ்.ஜானகியும் பாடியது.

நீங்கள் நட்சத்திரமானதிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/09/4.html

தோல்விகள் பாரமாகுமா
வெல்கிறவர் வெல்லம் என்றால்?

G.Ragavan said...

http://palaniyandavar.blogspot.com/2006/09/blog-post_11.html

என்னங்க இப்படிச் சொல்லீட்டீங்க....

ஊழ மூக்கு
பட்டி வாயி :-)

பாகப் பிரிவினை படத்துப் பாட்டுதான் அது. சரியா?

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/09/blog-post_11.html

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_12.html

முருகா முருகா முருகா முருகா

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/09/001.html

ஆனைமுகத்தோன் அருளால் இந்த வலைப்பூ நாள் தோறும் மலர்ந்து தமிழ்மணம் கமழ்ந்திட வேண்டுகிறேன்.

இப்பணியில் அப்பனையும் இணைத்துக் கொண்ட சிபிக்கு நன்றி.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/09/002.html

முருகனைச் சொல்லாத நாளில்லை
எண்ணாத நாளில்லை
கல்லிலும் சொல்லிலும் ஆன்றோர் வடித்ததைக் கண்ணிலும் கருத்திலும் கொள்வதே கடமை என்று கொள்வதே பெருமை!

G.Ragavan said...

http://palaniyandavar.blogspot.com/2006/09/blog-post_115799889915276451.html

முருகனின் காட்சி மட்டுமா? ஆடல், பாடல், உபதேசம், ஜபமாலை, அநுபூதி....அனைத்துக் கிடைக்கப் பெற்ற அருணகிரிப் பெருமானை அறிவோம்.

திருவடிகளுக்கு அருமையான விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/09/blog-post_11.html

காலையில் பூக்கின்ற மலர்களெல்லாம் ஆண்டவன் திருவடியை அடைய விரும்பியே பூக்கின்றன. வீழ்கின்ற ஒவ்வொரு மழைத்துளியும் ஏழையின் கண்ணீரைத் துடைக்கவே வீழ்கின்றன. மாலையோ காலையோ வேறு எந்த வேளையோ! வீசுகின்ற தென்றல் இதமாகத்தான் வீசுகின்றன. இப்படியிருக்கப்பட்ட நேரத்திலே உலகின் ஓரத்திலே ஓர் நாடாம்! புதிய நிலம் என்னும் பெயராம்! ஆசிரியை என்று அழைக்கப்படும் துழாய் என்பது அவர் பெயர். பார்த்ததென்ன? இட்டதென்ன? ஏன் இந்த நிலை? எதனால் ஆனது இப்படி? யாரால்? இந்த வஞ்சத்தைக் கேட்பதற்கு யாரும் இல்லை என்றுதானே எல்லாரும் நினைக்கிறார்கள். இருக்கட்டும். அந்த நினைப்பு நினைப்பாகவே இருக்கட்டும். இருக்கட்டும்...இருக்கட்டும். :-(((((((((((((

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/09/sonic-boom.html

என்ன டீச்சர்...ஒங்க ஊருல மட்டுந்தான் விண்கல் விழுகுமா?

எங்க ஊர்லயும் விழுகுது கல்.

இலையில பொங்கல்
தலையில செங்கல் :-)))))))

விழுந்த கல்ல நீங்க மொதல்லயே ஓடிப் போய் எடுத்து வெச்சிருந்தா அத ரெண்டு கோடி ரூவாய்க்கு வித்திருக்கலாம்ல.

விண்கல்லுல கழுவுன தண்ணி மெடிசின். விண்கல்ல தெனமும் தொட்டுக் கும்புட்டா கண்ணு நல்லா தெரியும். விண்கல்ல படுக்கைக்குக் கீழ வெச்சுக்கிட்டா ஒடம்பு வலி வியாதி எல்லாம் போயிரும். விண்கல்ல பஸ்பம் பண்ணிச் சாப்பிட்டா இளமை மாறாம இருக்கும். இதையெல்லாம் யாரும் ஒங்க கிட்ட சொல்லலையா?

G.Ragavan said...

http://manggai.blogspot.com/2006/09/blog-post.html

மங்கை, நீளமான பதிவுன்னாலும் நிறைவான பதிவு. படிக்க அலுக்கவேயில்லை.

ஆங்கிலம் தெரியும். இந்தி தெரியும்னு எப்படிதான் காட்டிக்கிறதாம். இப்படித்தான் செய்வாங்க.

பெங்களூர்ல எங்களைப் போல வந்தேறிகள் தமிழ்தான் தமிழா இருக்கும். அதுலயும் முக்காப் பேருக்கு ழ ள ல தகராறு. நிலமை அப்படியிருக்க இங்கயே இருந்தேறிகள் பேசினா கேக்கவே வேண்டாம். அப்பப்பா! அது தவறு என்று சொல்ல முடியாது. இங்கேயே பிறந்து வளர்ந்ததால் இருக்குமோ என்னவோ! ஆனாலும்.....தமிழில் கற்றவர்களும் இருக்கிறார்கள். தமிழர்களிடம் அந்தத் தமிழில்தான் பேசுகிறார்கள். என்னுடைய அலுவலக நண்பன் ஒருவன் பெங்களூர்த் தமிழில் பேசிக் கொண்டிருந்தவன்...இப்பொழுதெல்லாம் என்னை மலைக்க வைக்கும் அளவுக்குப் பேசுகிறான். அவனுடைய அப்பா அதற்கு என்னைக் காரணமாகச் சொல்கிறார் வேறு! ஆக பழக்கமும் விருப்பமும்தான் முக்கியம். நீங்கள் செய்து கொண்டு இருப்பதும் அதுதானே!

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/09/9.html

கதம்பம் தெரியுமா எஸ்.கே? மதுரைக்கிக் கீழே மிகவும் பிரபலம். மருக்கொழுந்து மல்லி கனகாம்பரம் முல்லை வைத்துக் கட்டியது. அப்படிக் கட்டிய ஒரு மாலைதான் இந்தப் பாட்டுக்கான உங்களது விளக்கம்.

மைந்த என்ற அழைப்பில் மருக்கொழுந்து. கந்தன் பெருமை சொல்வதில் மல்லி. முதுமையின் கொடுமையினை விளக்குகையில் வாசமில்லாக் கனகாம்பரம். சிறியதானாலும் அருஞ்சொற்பொருளில் முல்லை. இப்படித் தொடுத்த மாலையை மல்லே புரி பன்னிரு வாகுவில் உம் சொல்லே புனையும் சுடர் வேலவனே என்பது பொருத்தம்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2006/09/blog-post_10.html

// கானா பிரபா said...
வணக்கம் ராகவன்

வாரியாருக்கெனப் பிரத்தியோகமாக வலைப்பூ அமைத்து நீங்கள் பெருமைப்படுத்தியதும் இந்த நேரத்தில் சிறப்பாக நினைவுகூரவேண்டியது, தங்களின் விரிவான பின்னூட்டத்தை எதிர்பார்க்கின்றேன். //

பிரபா. அது நானில்லை. கோபி தொடங்கிய வலைத்தளம். அவர்தான் அதைச் சிறப்பாக கொண்டு செல்கிறார். நானும் அதில் ஒரு பங்கு. ஆனால் இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டதில்லை. :-(

G.Ragavan said...

http://nadanagopalanayaki.blogspot.com/2006/08/blog-post_21.html

சௌராஷ்டிரம் தெரியாததால் விளக்கம் எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் விளக்கத்தில் சொல்லியிருப்பது சிறப்பு. இது நினைவூட்டும் பாடல் எது தெரியுமா?

கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார்
ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார்

G.Ragavan said...

http://kuralvalai.blogspot.com/2006/09/blog-post_11.html

கதம்பம் மணமணக்குது. படிக்க விறுவிறுப்பு. சொல்லியிருக்கும் கருத்துகளும் கூட. குறிப்பாக அந்த வெளிநாட்டில் ஒட்டகம் மேய்க்க்கிறதைப் பற்றிச் சொல்லியிருப்பது.

G.Ragavan said...

http://malainaadaan.blogspot.com/2006/09/blog-post_115798544670226683.html

படிக்கப் படிக்க நெஞ்சம் நெகிழ்ந்து கண்கள் முகிழ்ந்தன என்றால் மிகையாகாது. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே என்கிறது புறம். இதைப் பலர் பெற்றுப் போடுதல் என்று தவறாகப் புரிந்து கொண்டு புறநாநூறு தாய்மைக்கு பெருமை செய்யவில்லை என்கிறார்கள். பெற்றெடுத்தலே என்ற பொருள் என்றால் ஈன்றெடுத்தல் எந்தலைக் கடனே என்று எழுதியிருக்கலாமே! புறம் தருதல் என்றால் என்ன? புறம் என்றால் நாம் தவிர மற்றயவை. அந்த மற்றயவைகளோடு கூடி ஒழுகும் விதத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டியவள் தாய். அந்த ஒழுகல் எவ்வளவு ஒழுங்காகக் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறதோ...அந்த அளவே ஒருவன் வாழ்க்கையும் பண்பும்.

இந்தச் சிறப்பை உங்கள் தாயார் அறிந்திருந்திருக்கிறார் என்பது பெருமைக்கும் போற்றுதலுக்குமுரியது.

தன்னைத் தேய்த்துக் குழம்பாக்கி அந்தக் குழம்பைக் கொண்டு பிள்ளைகளின் வாழ்வில் மணம் சேர்க்கிறாளே தாய்! அவளே முதலில் காணும் தெய்வம். அதனால்தான் ஈன்று புறந்தருதலை முதலில் வைத்தார்கள். அப்புறந்தான் சான்றோனாக்குதல், நன்னெறி நல்குதல், வேல் வடித்துக் கொடுத்தல் எல்லாம்.

இன்னொரு கன்னடப் பாட்டு நினைவிற்கு வருகிறது.

தாயி தந்தே இப்புரு
நாவு கண்ணலி காணுவ தேவுரு

தமிழாக்கம்

தாய் தந்தை இருவரும்
நாம் கண்ணிலே காணும் தெய்வமே

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/09/003.html

நன்றி ஞானவெட்டியான் ஐயா. உங்கள் பாராட்டு எங்களுக்கு ஊக்கம்.

G.Ragavan said...

http://kasadara.blogspot.com/2006/09/7.html

:-) வீட்டுக்கு வீடு வாசப்படி....அது சரி...நம்மூர்ல வீட்டுல எல்லாரும் கண்ணுல படுற மாதிரி நெருக்கமா இருக்கிறோம். வெளிநாடுகளில் எப்படியோ?

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/09/blog-post.html

ஆகா பத்திரமா ஊரு போய்ச் சேந்தாச்சா....ரொம்ப நல்லது.

ஆமா..அன்னைக்குச் சந்திச்சுப் பேசினோம். ஆனா என்ன பேசுனோம்...பேசுனோம்ல அது சரிதான்.

சூறாவளிப் பயணம் முடிந்து ஓய்வும் முடிந்து வந்திருக்கும் உங்களை மீண்டும் தமிழ்மணத்திற்கு வருக என வரவேற்கிறேன்.

G.Ragavan said...

http://blog.thamizmanam.com/archives/39

நல்ல முயற்சி. நல்ல பலனை அளிக்க வேண்டும். கருத்தியல் எதிர்ப்புகளும் விவாதங்களும் இருப்பது முறையே. சரியே. ஆனால் அந்தத் தளத்தை விட்டு அது தனிமனிதத் தாக்குதலாகும் பொழுது கண்டிப்பாக தவறுதான். உங்களது இந்த முயற்சி வெற்றி தருமானால் நல்லதுதான்.

G.Ragavan said...

http://bliss192.blogspot.com/2006/06/blog-post_21.html

ம்யூஸ், இது பதிப்பதற்கு அல்ல. உங்களுக்குத் தகவலே.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்ற வாரந்தான் வந்திருக்கிறேன். ஆகையால் செய்ய வேண்டிய பல முக்கிய வேலைகளையும் உறவினர் சந்திப்புகளையும் இந்த வாரயிறுதியில் வைத்துள்ளேன். ஆகையால் சந்திப்பிற்கு நான் வருவது இயலாது. உங்கள் சந்திப்பு இனிதே நடக்க எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://piditthathu.blogspot.com/2006/09/blog-post_13.html

ஆகா! இதெல்லாம் நம்ம சென்னைய விட்டு வந்தப்புறம் நடக்குதே!

எது எப்படியோ! ஒரு எழுத்தாளராக நின்றிருக்கும் ரஜினி ராம்கிக்கு எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://rajniramki.blogspot.com/2006/09/blog-post.html

வாழ்த்துகள் ரஜினி ராம்கி. ஒரு பக்கம் எழுதுவதற்கே நிறைய தெரிந்திருக்க வேண்டும். ஒரு புத்தகம் என்பது....உறுதியாக ஒரு சாதனைதான். எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://chennapattinam.blogspot.com/2006/09/blog-post_14.html

முருக வழிபாடு தமிழ் வழக்கோடு ஒன்றிய வழிபாடு என்பதற்கு மற்றொரு சான்று. அடுத்த முறை சென்னை வருகையில் மாமல்லபுரம் சென்று பார்க்க வேண்டும்.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2006/09/blog-post.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா

செளக்கியமா? இல்லை...இல்லை...நலமா?:-)

"நலந்தானா" போலவே கவியரசரின் இன்னொரு பாட்டு, "கருடா செளக்கியமா". அதுவும் சரி ஹிட்.
ஆக அவரவர் சௌகர்யம் போல்,
"நலமும்", "செளக்கியமும்" மாறி மாறி பயன்படுத்தி உள்ளனர்.

இருப்பினும் "நலமே" நலமாக உள்ளது!

(முதலில் "உபயோகப்படுத்தி உள்ளனர்" என்று தான் டைப் செய்தேன். உங்கள் பதிவைப் படிக்கும் தாக்கம் நல்லாவே அடிக்க ஆரம்பித்து விட்டது. "பயன்படுத்தி உள்ளனர்" என்று மாற்றி விட்டேன்" :-) //

வாங்க கண்ணபிரான். நலம் நலமே அல்லவா. கருடா சௌக்யமா பாட்டு இப்பொழுதுதான் நினைவிற்கு வருகிறது. :-)

பயன்படுத்தின்னு மாத்தீட்டீங்களா? ரொம்ப நல்லது. குறஞ்சது நம்மளாவது முடிஞ்ச வரைக்கும் இப்படிச் செய்றது நல்லதுதானே...

// "'நலம்' தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்பது திருமங்கையாழ்வார் பாடல். இங்கும் "நலம்" தான் பயின்று வருகிறது.

அண்மைக் காலத்தில், பாரதி கூட
"ஓமெனப் பெரியோர் கள் என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்
தீமைகள் மாய்ப்பது வாய் துயர்
தேய்ப்பது வாய், 'நலம்' வாய்ப்பது வாய்"
என்று "நலம்" என்று தான் சொல்லுகிறார்.

வள்ளுவர் முதல் வள்ளலார் வரை அனைவரும் "நலம்" பயின்று உள்ளனர். இவற்றை இன்னும் பலர் வந்து இங்கே "நலம்" சொல்லட்டும் :-) //

இத இத இதத்தான் எதிர் பார்த்தேன். சரியாக எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

// சௌகர்யம் - வசதி என்று சொல்லலாம் என்று சொல்லி உள்ளீர்கள்.
"வசதி" - தமிழா? (இராம கி அய்யா அவர்களைக் கேட்க வேண்டும்)
இல்லை வேறு நல்ல சொல் உள்ளதா? //

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? குறும்பன் குமுறியிருக்கிறார் பாருங்கள். வசதி தமிழ்ச் சொல்லே!

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2006/09/blog-post.html

// உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே
- அருணகிரி

:-)) //

குறும்பன் ஆனாலும் ஒங்களுக்கு ரொம்பவும் குறும்புதான். :-) நல்ல கந்தரநுபூதிச் செய்யுள் இது. இதில் பாருங்களேன்...என்னை இழந்த நலம். ஒன்றை இழப்பது நலம் தருமா? தரும் என்கிறார். தம்மை இழப்பது ஒரு நலமாம். அதுவும் எல்லாம் அற. இங்கு சொல்ல வருவது அகந்தையும் நாம் என்ற எண்ணமும். மிகவும் மாறுபட்ட நலத்தை எடுத்துக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2006/09/blog-post.html

// ஜெயஸ்ரீ said...
நலம் என்ற சொல்லுக்கு பின்வரும் வெவ்வேறு பொருள்கள் உண்டு.

1. நற்பண்பு
2. அழகு
3. அன்பு
4. லாபம்
5. புகழ்
6. செல்வம், ஆரொக்கியம்
7. சிவப்பு நிரம்
8. விருச்சிக ராசி(சோதிடம்)
9. சுக்கு //

வாங்க ஜெயஸ்ரீ. வரிசையா நலன்களை அடுக்கீட்டீங்க. இந்தப் பொருள்கள்ள பயின்று வர்ர மாதிரி சில சின்னச் சின்ன வரிகளைச் சொல்லுங்களேன். நீங்களாவே எழுதியிருந்தாலும் சரிதான். இல்லை மேலே குறிப்பிட்டிருப்பது போல குறளாகவோ பாசுரமாகவோ வேறொரு செய்யுளாகவோ இருந்தாலும் சரிதான். (ஆசைக்கு அளவேது! :-) )

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2006/09/blog-post.html

// துளசி கோபால் said...
ராகவன்,

பெந்தகளுருக்குப்போய்ச் சேர்ந்தாச்சா?

நல்லா இருக்கீங்களா? //

பந்தாயித்து டீச்சர். சென்னாகிதினி. தாவு?

// 'நலம். நலமறிய ஆவல்'

பாட்டை விட்டுட்டீங்களே(-: //

தப்புத்தான் டீச்சர். என்னதான் குருவை மிஞ்சிய சிஷ்யனா...இல்லை இல்லை..ஆசானை மிஞ்சிய சீடனாக இருந்தாலும் ஆசான் ஆசாந்தான். டீச்சர் டீச்சர்தான்.

G.Ragavan said...

http://iniyathu.blogspot.com/2006/09/33.html

// Sivabalan said...
ஜிரா,

நல்லா எழுதியுள்ளீர்கள்.

நல்ல பதிவு!!

நன்றி!! //

நன்றி சிவபாலன். சிவபாலன்னா முருகந்தானே. :-) உங்களுக்கு அடுத்து சிவமுருகனுடைய பின்னூட்டம். :-)

G.Ragavan said...

http://iniyathu.blogspot.com/2006/09/33.html

// சிவமுருகன் said...
//இதெல்லாம் எதனால் வந்தது? மதச்சகிப்புத் தன்மை இல்லாததால் வந்தது.//

இது தாங்க இப்போதைக்கு தேவையான ஒன்று.

புரிஞ்சிக்கணும், அவங்க பெரியவங்களே சொல்லியிருக்காங்க, நாமும் சண்டை போடகூடாதுன்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க.

ஆக எல்லா பெரியவங்களும் சொல்லியிருக்காங்க.

அததாங்க இப்போதைக்கு தேவையான ஒன்றுன்னு சொன்னேன். //

ஆமாம் சிவமுருகன். ஊரூருக்குப் பெரியவங்க சொன்னது இதுதான். ஆனா இதை எல்லாரும் விட்டுர்ராங்க. ஏன்னே தெரியலை. ம்ம்ம்...

G.Ragavan said...

http://iniyathu.blogspot.com/2006/09/33.html

// SK said...
சமயம் அறிந்து, சமயம் துறந்த, சமயோசிதமான பதிவு!

முருகனருள் முன்னிற்கும்! //

மிக்க நன்றி SK.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//பெரியாழ்வாரும் அப்படி சண்டையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்
அப்பரைக் கூட இந்தச் சமயச் சண்டைகள் விட்டு வைக்க வில்லை//

"சண்டை" என்பது சற்றே கனமான வார்த்தை. "வாதம் புரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்" என்று கொள்ளுதல் நலம்! - ok வா ஜிரா? //

ஆமாம் ரவி. சண்டை சற்றுப் பெரிய சொல்தான். அதனால்தான் குமரனும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டியதாகப் போயிற்று. மேற்கூறிய பெரியவர்களும் வம்புச்சண்டையிலிருந்து விலகிப் போனவர்கள்தான். அதாவது நாம் சும்மாயிருந்தாலும் நம்மேல் வந்து விழும் என்பதை எடுத்துக்காட்ட அப்படிச் சொன்னது.

G.Ragavan said...

http://iniyathu.blogspot.com/2006/09/33.html

// கோவி.கண்ணன் [GK] said...
ஜிரா...!
அருமையான கருத்துக்கள்...!

பதிவுக்கு ஒரு + குத்து !

:) //

நன்றி கோவி. கருத்தாதரவுக்கும் +க்கும். :-)

// மனதின் ஓசை said...
நல்ல பதிவு..ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியப்போவது/புரிய விடப்போவது இல்லை..அதுதான் வேதனையானது. //

புரிய விரும்புவோம் மனதின் ஓசை. நல்லதை நல்ல வழியிலேயே சொல்ல வேண்டும். சொல்லிக் கொண்டேயிருக்கலாம். ஒருவருக்குப் புரிந்தாலும் சரிதான்.

// ILA(a)இளா said...
நல்ல பதிவு!! //

நன்றி இளா. மொதமொதலா நம்மளோட இந்த வலைப்பூவுக்கு வந்திருக்கீங்க. வாங்க வாங்க.

// குமரன் எண்ணம் said...
நல்ல பதிவு அருணகிரிநாதர் சொல்லி இருக்காருன்னாவது யாராவது கேக்கறாங்க பார்க்கலாம். //

உண்மைதான் குமரன் எண்ணம். அவருஞ் சொல்லி ஆண்டுகள் நூத்துக்கணக்குல ஆச்சு. எல்லாரும் கேட்டா நல்லது.

G.Ragavan said...

http://iniyathu.blogspot.com/2006/09/33.html

// குமரன் (Kumaran) said...
மிக நல்ல பதிவு இராகவன்.

பெரியாழ்வார் சமயப் பிணக்குகளில் ஈடுபட்டாரா? புதிய செய்தி இராகவன். அடியேன் அறிந்த வரை பெரியாழ்வார் சமயப் பிணக்குகளில் ஈடுபட்டதாக அறியவில்லை. ஒரு எடுத்துக்காட்டாவது சொல்லுங்கள்.

திருமங்கையாழ்வாரும் சம்பந்தப்பெருமானும் வாதப்போர் செய்ததை அறிவேன். ஆனால் பெரியாழ்வார் சமயப் பிணக்குகளில் ஈடுபட்டாரா? ஒருவேளை பாண்டியன் சபையில் பரத்துவ நிர்ணயம் செய்ததைக் குறிப்பிடுகிறீர்களா? அது சண்டையில் சேருமா என்று தெரியவில்லை. மற்ற படி அவருடைய பாசுரங்களில் மற்ற சமயத்தாரைப் பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை.

பதிவைப் பற்றிய விரிவான பின்னூட்டங்கள் இட மீண்டும் வருகிறேன். //

வாங்க குமரன் வாங்க. சண்டை என்று நான் பயன்படுத்திய சொல்லில் எடை உங்களை அப்படி நினைக்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

இவர்கள் பிணக்குகள் தேடித் திரிந்தார்கள் என்று சொல்லவில்லை. சும்மாப் போனாலும் கூட மேலே வந்து விழும் என்ற பொருளுக்குச் சொன்னது. அதைத்தான் மேலே ரவியும் சுட்டிக்காட்டினார். நானும் ஒத்துக் கொண்டேன்.

விளக்கமான பின்னூட்டத்திற்குக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://iniyathu.blogspot.com/2006/09/33.html

// தி. ரா. ச.(T.R.C.) said...
ஒருவரது குலமோ,வளர்ப்போ,செய்யும் தொழிலோ முருகன் அருளை பெறுவதற்கு ஒரு தடை அல்ல என்பதற்கு வள்ளியை மணம் புரிந்ததிலிருந்து நமக்கு தெரிகிறது.எப்படி கொலைத்தொழில் புரியும் வேடர்குலத்து வள்ளியை நீயெ தேடிச் சென்று வலிய மணம் புரிந்து கொண்டாயோ அது போல பல கொடிய செயல்கள் செய்த என்னையும் நீதான் வலிய வந்து ஆட்கொள்ளவேண்டும் என்று அருண்கிரியார் இரைஞ்சுவதாகவும் ஒரு பொருள் கொள்ளலாமா ராகவன்.
மத சம்பந்தமான உங்கள் விளக்கமும் நிலையும் அருமை.இன்றைய நிலைக்கு பொருத்தமானது. //

இல்லை தி.ரா.ச. இந்த இடத்தில்தான் அருணகிரி அழுத்தம் திருத்தமாக "கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு உளதோ" என்று கூறியுள்ளார். காக்க வேண்டுவது மற்ற எல்லாப் பாடல்களிலும் உள்ளதுதானே. இந்தப் பாடலில் குறிப்பாக சண்டை போட்டு மண்டை உடைவதைத் தடுக்குமாறு வேண்டுவதைச் சொல்லலாம். அருணகிரியும் ஒரு போட்டி செய்தார். வில்லிபுத்தூராருடன். ஆனால் வெற்றிக்காக இல்லை. மற்ற தமிழ்ப் புலவர்களைக் காப்பாற்றவும் வில்லிபுத்தூராரைத் திருத்தவுந்தான். அந்தப் போட்டியிலும் தமிழை மட்டுமே முன்னிறுத்தி வென்றார். தோற்ற வில்லிபுத்தூராருக்கு தண்டனை என்ன தெரியுமா? வில்லிபாரதம் எழுதுவது. ஆக தண்டனையும் கருணையும் ஒன்று. மேலே பாருங்கள். ஜெயஸ்ரீ இன்னும் அருமையாக விளக்கியிருக்கிறார்கள்.

G.Ragavan said...

http://iniyathu.blogspot.com/2006/09/33.html

// ஜெயஸ்ரீ said...
//அருணகிரி யாரோடும் சமயச் சண்டைக்குப் போனதில்லை. எந்தப் புறச்சமயத்தையும் குறை கூறவில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்று வாழ்ந்தவர். இறைவனை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். //

உண்மை. சாஸ்திர ஞானம் பெறுவதிலும் வாத பிரதிவாதங்களிலும் தன் காலத்தைக் கழிப்பவர்கள் பலர் அங்கேயே நின்றுவிடுகிறார்கள்.
"வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ " -தாயுமானவர்
புதர்களிடையே சென்று தன் கொம்புகளை அவற்றில் சிக்கவைத்து , தலையை ஆட்டி ஆட்டி அதிலிருந்து விடுபடத்துடித்து, மேலும் சிக்குண்டு வேடனுக்கு இரையாகும் மானைப்போல் சமயச் சழக்குகளில் சிக்குண்டு மாய்வேனோ ? மிருகங்களை வேட்டையாடி உண்ணும் வேட்டுவக்குல வள்ளியை விரும்பி மணந்தவனே !
இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. வள்ளி திருமணம் உணர்த்தும் பெரிய உண்மை என்னவென்றால் வள்ளி என்பது பக்குவப்பட்டு இறைவனை அடையத்துடிக்கும் ஜீவாத்மா.அப்படிப்பட்ட ஜீவாத்மாவை பரம்பொருள் தானே வலிய வந்து ஆட்கொள்கிறான்.
இறைவனை அடைய சாஸ்திர ஞானமோ, வாதவிவாதங்களில் வெற்றியோ தேவையில்லை, செய்யும் தொழில் பேதமில்லை.' கொலையே புரி வேடவர் குலப்பிடி தோய் மலையே' .அவனை அடைய வேண்டி ஆன்மாவின் துடிப்பும் 'கற்றாவின் மனம்போலக் கசிந்துருகும்' மனமும் தேவை. //

மிக்க நன்றி ஜெயஸ்ரீ. நான் சொன்னது. பின்னூட்டத்தில் விளக்கியது அனைத்தும் உங்கள் ஒரு பின்னூட்டத்தில் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மிக்க நன்றி. இப்படிச் சொல்லக் கேட்பது எப்படிப் பட்ட இன்பம்.

G.Ragavan said...

http://kathalregai.blogspot.com/2006/09/4.html

குமரன் நல்ல பதிவு.

இந்தப் பெருவெடிப்பிற்கும் சைவ சித்தாந்தம் உலகத் தோற்றமாகக் குறிப்பிடும் நாத விந்துத் தத்துவத்திற்கும் எதுவும் தொடர்பு இருக்குமா என்று தெரியவில்லை. ரொம்பவும் எளிமையாகச் சொல்லப் போனால் ஓசையில்லாமையும் ஓசையும் இணைந்தது எழுந்தது ஓங்காரம். அதிலிருந்து கூறுகள் பிரிந்து பிரிந்து பிரிந்து உலகம் உண்டானது.

G.Ragavan said...

http://piditthathu.blogspot.com/2006/09/blog-post_14.html

இந்தப் பூனை கோயிந்தின் பூனை என்ற தகவலை மறைத்தமைக்கும் அந்த ஷூ கோயிந்தின் ஷூ என்ற அதிபயங்கரச் செய்தியை மறைத்ததையும் நான் மிகமிக வன்மையாகப் பாராட்டாமல் கண்டிக்கிறேன்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/09/blog-post_14.html

ஒரு நல்ல கட்டுரை என்பேன். பெண்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

இதில் என்னுடைய தாயை நான் பாராட்டியே ஆக வேண்டும். மற்றவர்கள் நேரமாக்குகிறார்களோ இல்லையோ...தான் சரியான வேளைக்குச் சாப்பிட்டு விடுவார். அதுதான் சரியும் கூட.

அவருக்கு ஆரஞ்சு வேஃபர்ஸ் மிகவும் பிடிக்கும். பெங்களூருக்கு அவர் வருகையில் வீட்டில் எப்பொழுதும் வாங்கி வைத்திருப்பேன். ஆனால் நீங்கள் சொல்வது போல எனக்குச் சமையலில் என்ன பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும். அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று எனக்கு ஒழுங்காகத் தெரியாது. அடுத்து பெங்களூர் வருகையில் (இந்த மாதக் கடைசியில்) கண்டிப்பாகக் கேட்கிறேன்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/09/10.html

ஓ அந்தச் செருப்புகள் இவைகள்தானா! அடேங்கப்பா! கோயிந்த கோயிந்த கோபால கோயிந்த!

G.Ragavan said...

http://malainaadaan.blogspot.com/2006/09/5.html

பொன்னில்லை பொருளில்லை...அன்போடு கொண்டு வரும் எளிய பொருட்களையே சீராகக் கொள்கிறான் கந்தன். கூதாள கிராத குலிக்கிறைவா என்கிறது அநுபூதி. கூதாள மலர் மனமற்றது. அழகற்றது. அந்த மலரையும் சூட்டிக் கொண்டு அன்பு செய்கிறவனாம் கந்தன்.

நீங்கள் விவரணை செய்கையிலேயே அங்கு சென்று வந்த மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால் இன்றைய நிலையானது பொங்கிய மகிழ்ச்சியை அமிழ்த்தி விடுகிறது.

G.Ragavan said...

http://vettrikandaswamy.blogspot.com/2006/09/blog-post_16.html

மிக அருமையான விளக்கம். வாரியாரின் எளிய விளக்கம் தீபவொளித் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தூண்டுகிறது.

விளக்கத்திற்கு மிக்க நன்றி வெற்றி.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/09/blog-post_16.html

அப்ப கிரிக்கட்காரங்களுக்கும் வருணனுக்கும் ஏதோ உள்குத்து இருக்குது...அது எப்படி கொத்சுக்குத் தெரிஞ்சது? இது எதுவும் கத்திரிக்கா கொத்சு தொடர்புள்ளதா?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_15.html

// வெட்டிப்பயல் said...
என்னப்பா உலகம் இது...
கமெண்டுக்கு பதில் கூட சொல்ல முடியாத அளவுக்கு வேலை கொடுக்கறானுங்க!!! இந்த மேனஜருங்க தொல்ல தாங்க முடியலப்பா!!! //

ம்ம்ம்ம்....சரி..சரி...தொடர்புள்ள ஆளுங்ககிட்டப் பேசி இதுக்கு ஒரு வழி செஞ்சிட்டாப் போச்சு...

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_115846142188659615.html

ஓ படம் வந்திருச்சா! இதெல்லாம் யாரும் சொல்லல...அவங்கள்ளாம் ரொம்ப நல்லவங்க.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/195.html

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2006/09/blog-post.html

நாளும் கோளும் வேலையற்றுக் கருணை வள்ளல் கண்பார்வை அருள் பெருகி உடல் நலமும் வளமும் பெருக வேண்டுகிறேன்.

தமிழ் வழக்குகளையும் சொற்களையும் அறியத் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களேதான். மிக்க நன்றி.

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/09/blog-post.html

வாங்க முத்துக்குமரன் வாங்க....வழக்கம் போல உங்க பதிவுகளை இடுங்க.

புதுமனை புகுந்ததிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அண்ணனுக்கும் அண்ணிக்கும் எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://ennar.blogspot.com/2006/09/blog-post_18.html

என்னார் என்னும் இன்னார் இந்த வாரம் விண்மீனானார். மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.

சிந்திய தேந்துளி இனிப்பாயினும் கசப்பான விளைவினையும் தரயியலும் என்பதே உலக உண்மை. இதைத்தான் வண்ணத்துப்பூச்சி விளைவு என்பார்கள் ஆங்கிலத்தில்.

இந்த விண்மீன் வாரத்தில் நீங்கள் சிந்துந் தேந்துளிகள் நன்மையை மட்டுமே பயக்குமென வேண்டுகிறேன். என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://ennar.blogspot.com/2006/09/blog-post_18.html

என்னார் என்னும் இன்னார் இந்த வாரம் விண்மீனானார். மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.

சிந்திய தேந்துளி இனிப்பாயினும் கசப்பான விளைவினையும் தரயியலும் என்பதே உலக உண்மை. இதைத்தான் வண்ணத்துப்பூச்சி விளைவு என்பார்கள் ஆங்கிலத்தில்.

இந்த விண்மீன் வாரத்தில் நீங்கள் சிந்துந் தேந்துளிகள் நன்மையை மட்டுமே பயக்குமென வேண்டுகிறேன். என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://etamil.blogspot.com/2006/09/lord-krishna-makes-fashion-statement.html

கண்ணனுக்குக் குழாய் மாட்டியதால் ஆத்திரப் பட்டார்களா! ம்ம்ம்...மக்களை என்னதான் சொல்வது. இறைவனுக்கு எந்த அலங்காரமும் செய்து கொள்ளலாம். தவறில்லை. நமது குழந்தையை எத்தனை வகையான உடைகளில் பார்த்து ரசிக்கிறோம். ஆகையால் இதெல்லாம் தவறில்லை. ஆனால் அதை நமது வீட்டிலோ தனியிடங்களிலோ செய்து கொள்ளலாம். அனைவருக்கும் பொதுவான திருக்கோயிலில் செய்வது தகும் என்று தோன்றவில்லை.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/09/004.html

// SK said...
அருமையான கவியரசரின் பாடலுக்குப் பொருத்தமான படம் போட்டு, முருகன், வள்ளியுடன் மயில் மீது வருவதை அப்படியே காட்டியதற்கு, நன்றி, ஜி.ரா. //

நன்றி எஸ்.கே. அடுத்து நீங்கள்தான் பாடலும் படமும் கொடுக்க வேண்டும். காத்திருக்கிறோம்.

// தி. ரா. ச.(T.R.C.) said...
அருமையான படம்.அருமையான் பாடல்.பாட்டுக்கும் சுட்டி கொடுத்து இருக்கலாம். //

தி.ரா.ச, குமரனும் இதைத்தான் கேட்டிருக்கிறார். உடனே ரவி பாடலுக்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறார். கேட்டு மகிழுங்கள். மிகச் சிறந்த பாடல் இது.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/09/004.html

// ஜிரா...அந்தப் படம் எங்கு கிடைத்தது?
அந்தக்கால ஆயில் பெயிண்டிங்கோ?
அதைப் பார்த்தவுடன், புதுசாக் கல்யாணமான பொண்ணு, தன் கணவனைக் கட்டிக் கொண்டு ஸ்கூட்டரில் போவது போலவே இருந்தது.
என்ன பொதுவா பெண்கள் ஸ்கூட்டரில் பின்னே. இங்க நம்ம வள்ளியம்மை, மயிலின் முன்னே!:-) //

ரவி, படம் கிடைத்த தளத்தையும் போட்டிருக்கிறேனே. மிக அழகான படம். நானும் ரசித்துத்தான் இட்டேன். இது 1920-40க்குள் வரையப்பட்ட ஓவியம் என்ற அளவுக்குத்தான் எனக்கு விவரம் தெரியும்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2006/09/blog-post_19.html

ஜோ, நாளிதழில் போப்பின் கருத்தைப் படித்ததுமே நெஞ்சம் துணுக்குற்றது. இத்தனை பெரிய பொறுப்பில் இருப்பவர் தவிர்த்திருக்க வேண்டிய பேச்சு அது. சரி. ஆனது ஆகி விட்டது. அவர் செய்தது தவறு என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக எதிர்ப்பு அமைதி வழியில் காட்டப்பட்டிருக்க வேண்டும். காட்டினார்கள். எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பினார்கள். சரி. ஆனால் தேவாலயங்கள் கொளுத்தப்பட்டது சரியன்று என்பது எனது கருத்து.

என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய போர் வெடிக்கும். தவிர்க்க முடியாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதில் பங்கேற்கும். அதற்கு மதம்தான் காரணமாக இருக்கும். இதற்கு என்னிடம் ஆதாரமில்லை. ஆனால் நாட்டு நடப்பை வைத்துப் பார்க்கையில் இப்படி நடக்கலாம் என்றே தோன்றுகிறது.

G.Ragavan said...

http://merkondar.blogspot.com/2006/09/blog-post_19.html

ஆகா...எல்லாமே அரிய படங்கள். அறியத் தந்திருக்கிறீர்கள். மிக நன்று.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/09/blog-post_19.html

அடப்பாவிங்களா! இதெல்லாம் கொடுமை....இந்தத் தப்புக்குத் தண்டனையா யானைக்குப் பல் விளக்கிக் குளப்பாட்டி காலைக்கடன்களை முடிக்க வைக்கிற வேலை தரனும்.

G.Ragavan Tue Sep 19, 02:04:48 PM 2006மணிக்கு, எழுதியவர்:

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/09/blog-post_19.html

// //இந்தத் தப்புக்குத் தண்டனையா யானைக்குப் பல் விளக்கிக் குளப்பாட்டி காலைக்கடன்களை முடிக்க வைக்கிற வேலை தரனும். //
ஐடியா நல்லாருக்கு ஜிரா, ஆனா யானைக்கு பல்லா? வெளிய இல்ல இருக்கு! //

ஐயோ பொன்ஸ்....ஒங்களுக்கு ஆனையப் பத்தித் தெரியவே இல்லையே! ஆனைக்கு வெளிய நீட்டிக்கிட்டிருக்குறது மட்டும் பல் கிடையாது. உள்ள பற்கள் உண்டு. மேலையும் கீழையும்...வாயில எதையும் போட்டா கரகரன்னு அரைக்கிறது எப்படி? அப்படியே எதை உள்ள போட்டாலும் மாவுமில்லு மாதிரி அரைக்க பற்கள் இருக்கு.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2006/09/blog-post_19.html

இறைநேசன் மற்றும் புலிப்பாணி, உங்கள் இருவருக்குமே ஒரே பதிலைச் சொல்லி விடுகிறேன். ஆனால் இதுகுறித்து விவாதம் செய்ய நான் ஆயத்தமாக இல்லை. ஆகையால் இதற்கு நீங்கள் என்ன விளக்கம் சொன்னாலும் நான் அதற்குப் பதிலளிக்கப் போவதில்லை. இது என்னுடைய கருத்து அவ்வளவே.

உலகத்தில் பெரும்பாலானோர் தாம்தான் சரி என்று நினைப்பார்கள். நான் உள்பட. அடுத்தவர் தவறு மட்டுமே நமக்குத் தவறாகத் தெரியும். அடுத்தவர் தவறு செய்தால் நாம் அதை விடத் தவறு செய்து...அடுத்தவர் தவறைச் சுட்டிக் காட்டுவோம். இதுதான் வலைப்பூவில் தொடங்கி உலகமெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் போன்றவர்கள் என்ன செய்வது? ஒன்றும் செய்ய முடியாது. கூட்டிலிருந்து தேந்துளி சிந்துகிற வரையில் குடிக்கத்தான் முடியும். அவ்வளவுதான். ஆனால் ஒன்று. நிலமை மாறும். இன்றைக்கு இருக்கின்ற அத்தனை தத்துவங்களும் மறைந்து போகும். இதுதான் என்னுடைய கருத்து.

என்றைய நிலையிலும் நான் விரும்புவது..."கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே அதுவாய் படுமாறு உளதோ!"

நன்றி.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/195.html

//// மதுரைல ஒரு வருசந்தானா! எங்கப்பாவும் மதுரை சர்வீஸ்ல இருந்தப்போ ஒரு அரசியல்வாதியால படாத பாடு பட்டாரு. ஆனா யாரு அந்த அரசியல்வாதின்னு தெரியாது. //

ஒங்கப்பா எந்த வருசம் மதுரையில இருந்தாங்க? ஒருவேளை நம்மாளுதான் அவங்களுக்கும் பிரச்சினை குடுத்தாரோ என்னவோ? //

எந்த வருசம்.....இருங்க கணக்குப் போட்டு பின்னால போறேன். அது 82-84க்குள்ள இருக்கலாம் சார்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2006/09/176.html

இதுல மாங்கா மடையங்கன்னா அந்த விமான நிலையத்துக்காரங்கதான்...நீதிபத்திக்கு தள்ள வேண்டியத தள்ளியிருந்தா அவங்களுக்குச் சாதகமா தீர்ப்பு வந்திருக்குமுல்ல...அத விட்டுட்டு ஐகோர்ட்டு நோஸ்கோர்ட்டுன்னு போயி இப்பிடியா நோஸ்கட் வாங்குறது! இந்த நாட்டுலதான் இவங்களும் இருக்காங்கன்னு நெனைக்கும் போது ரொம்பவே வியப்பா இருக்கு!

G.Ragavan said...

http://kaalangkal.blogspot.com/2006/09/blog-post_19.html

கோவி, இந்தக் கண்ணைக் குத்தும் அச்சுறுத்தல் எல்லா மதத்திலும் உண்டு. ஆனால் கேட்டுப் பாருங்கள்...தங்கள் மதமே அன்பு மதம் என்று நிரூபிக்க எல்லாரும் வரிகளோடு வருவார்கள். சாமி கண்ணை இன்றைக்கே குத்தும், நாளைக்குக் குத்தும், செத்தப்புறம் குத்தும் என்று எல்லா மதங்களும் சொல்கின்றன. இது தவறுதான் என்பது என்னுடைய கருத்து.

இறைவன் அன்பு மயமானவன். தன்னை வணங்கினால் மட்டுமே வாழ வைப்பான். இல்லையென்றால் தண்டிப்பான் என்பதெல்லாம் வரட்டு வாதம். எந்த மதம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பல பெரியவர்களும் ஏற்றுக் கொண்டதில்லை.

G.Ragavan said...

http://ennar.blogspot.com/2006/09/blog-post_19.html

பிறப்பின் ரகசியத்தையும் இறப்பின் தடுப்பையும் மனிதனாலும் காண முடியும் என்று தெரியவில்லை.

கோவி, பயனுள்ள கருத்து என்றால்? பத்து ருவாய் கிடைக்கும் கருத்தா? பணவளம் மட்டுமல்ல...மனவளமும் பெற வேண்டும். அதற்குதான் தத்துவங்கள். காலப்போக்கில் தத்துவங்கள் திரிந்து போவதும் உண்டு. திரியாமல் இருப்பவைகளும் உண்டு. வேண்டியதை எடுத்துக் கொள்வது அவரவர் விருப்பம்.

மற்றபடி, சாமி கண்ணைக் குத்துமா என்ற பதிவில் என்னுடைய கருத்தையும் இட்டிருக்கிறேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_17.html

வெட்டி, மிகப் பிரமாதம். நன்றாக இருக்கிறது. இவ்வளவு இயல்பாக எழுத எங்க கத்துக்கிட்ட? லேசா பொறாமையாவும் இருக்கு. ஆனா கெட்ட எண்ணத்துல இல்ல. இயல்பா கதை சொல்ல இது நல்ல முறை.

கரிக்கைச் சோழி, அருண்-அருணா, தூக்கம் வர்ர ஐட்டங்கள், இன்னும் இன்னும் பல முந்திரிப் பருப்புகளை ருசித்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

மொத வேலையா....டேட்டாபேஸ்ல இருந்து உன்னோட வீட்டு நம்பர எடுத்து....நடக்குறச் சொல்லி....கலியாணத்துக்கு ஏற்பாடு செய்யனும். செஞ்சிர்ரேன்.

G.Ragavan said...

http://kasadara.blogspot.com/2006/09/9.html

எஸ்.கே. கிட்டத்தட்ட இதையே குறித்து மே 26, 2005ல் நான் இட்ட பதிவு.

http://gragavan.blogspot.com/2005/05/blog-post_26.html

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் நிச்சயமாக எச்சரிக்கை உணர்வு தேவையே!

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/196.html

அடேங்கப்பா....அப்புறம் என்ன..சினிமாவுல வர்ர பேங்க் மேனேஜர் கதாநாயகன் மாதிரி விர்ரு விர்ருன்னு சர்ரு சர்ருன்னு பறந்து போயி சண்ட போட்டீங்களாக்கும். :-)

செய்நன்றி அறிதல்லு சொல்வாங்க. மெல்லிசை மன்னர் தூங்கப் போறதுக்கு முன்னாடித் தன்னை வாழ வைத்தவங்களுக்கு எல்லாம் நன்றி சொல்வாராம். காலைல எழுந்ததும் ஏன் சொல்லக் கூடாது? ஏன்னா காலையில் எழுந்திருப்போம்னு நமக்கு எப்படித் தெரியும்? அதுனாலதான் தூங்கப் போறதுக்கு முன்னாடியே சொல்லீர்ரது. தேவையில்லாம இது நினைவுக்கு வந்தது.

G.Ragavan said...

http://pradeepkt.blogspot.com/2006/09/blog-post.html

வாங்கய்யா வாங்க

ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க...

வேட்டையாடி நடுநடுவுல விளையாடிக்கிட்டும் வந்திருக்கீங்க...

நீங்க சொல்ற எந்தக் கருத்துக்கும் எதிர் கருத்துச் சொல்ல முடியலையே....

அப்புறம் எப்படிச் சண்ட போடுறது? :-)

G.Ragavan said...

http://kabhika.blogspot.com/2006/09/blog-post.html

முன்னால் தலைவரா? அப்பப் பின்னால் தலைவியா?

சைக்கிளக் கட்டிப் பிடிச்சிட்டு தூங்குறாரு...வெவரமில்லாத ஆளாயிருப்பாரு போல.

G.Ragavan said...

http://ennar.blogspot.com/2006/09/blog-post_20.html

அருமையான வரலாறு அழகான கவிதையில்.

பூலித்தேவனைப் பலர் புலித்தேவன் என்பார்கள். நீங்களும் குறிப்பிட்டிருப்பதைப் போல பூலித்தேவன் என்பதுதான் சரி.

முதல் முறை வெள்ளையன் தோற்றுதான் போனான். இரண்டாம் முறை யூசுப்கானின் (மருதநாயகம்) சூழ்ச்சி வென்றது.

இந்திரா சௌந்திரராஜன் "ஒரு வழி ஐந்து வாசல்" என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். நெற்கட்டும்செவலையும் பூலித்தேவரையும் நடுவில் வைத்து. படித்துப் பாருங்கள். நன்றாக இருக்கும்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/09/vs.html

சிறில்....இதைப் பார்க்கின்ற எல்லாரும் சிரிப்பதோடு இல்லாமல் சிந்தித்தால் நன்றாக இருக்கும். முதல் படம் இன்றைய உலகின் நிலையை அப்பட்டமாக தோலுறித்துக் காட்டி விட்டது.

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2006/09/blog-post_18.html

இதெல்லாம் நல்லாயில்ல சொல்லீட்டேன்...எல்லாரும் கலக்கோ கலக்குன்னு கலக்குறதுன்னு முடிவு செஞ்சிட்டு வந்திருக்கீங்களா! நல்லாயிருங்கப்பா! நல்லாயிருங்க. :-)

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2006/09/blog-post_19.html

ஒருத்தன் எள்ளுருண்டைல எண்ண பிழிஞ்சானாம்....அதுல ஏன் பிழியிற....இந்தா எள்ளுப் புண்ணாக்கு....இதுல பிழின்னு சொன்னானாம் இன்னொருத்தன்.

G.Ragavan said...

http://oosi.blogspot.com/2006/09/actress-telugu-high-court.html

ரவிக்கு விளம்பரம் வேணுமாக்கும்....அதான் இப்பிடி....

G.Ragavan said...

http://eathokirukkalkal.blogspot.com/2006/09/blog-post_115872271797394435.html

நல்லாயிருக்குதுங்க....உண்மையாகவே!

G.Ragavan said...

http://arul76.blogspot.com/2006/09/blog-post_21.html

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைத்திருந்தால் துயரம் என்று
ஞானியரும் வேதியரும் சொன்னார் அன்று

G.Ragavan said...

http://ennar.blogspot.com/2006/09/blog-post_21.html

மாபாரதத்தை எடுத்துக் கொண்டால் எந்தப் பாத்திரமும் முழுமையான உத்தமப் பாத்திரம் அல்ல. கர்ணனிடம் தவறு கண்டவர்கள் சொல்வது...பாஞ்சாலியை அவமானப்படுத்தியது...இன்னொன்று அபிமன்யு மீது அம்பிட்டது. இரண்டாவதை முதலில் கொள்வோம். போர்க்களத்தில் இருதரப்பிலும் ஒழுங்கீனங்களும் போரற மீறல்களும் மலிந்திருந்தன. பெயரில் தருமத்தை வைத்திருந்தவன் கூட "ஹஸ்வத்தாமா ஹதகா குஞ்சரஹா"தான். ஆகையால் போர்க்களத்தில் கூட்டதோடு கும்மியடித்த கர்ணனை மட்டும் குற்றவாளியாக்குவது தகாது. போர்க்களத்தில் கர்ணன் செய்தது குற்றமென்றால் பாரதத்தில் எந்தப் பாத்திரமும் குற்றமற்றதல்ல. கண்ணன் உள்பட.

பாஞ்சாலியை அவமானப் படுத்தியது.....ஊரில் ஒரு பெண்ணை நான்கு பேர் பேசுவார்கள். அது தவறுதான். ஐயமில்லை. ஆனால் அவர்களை எல்லாம் விட கட்டிய கணவனே பணயம் வைத்து ஆடினானே...பாதகன்....அவன் தின்பதற்கும் சோறு போட்டாளே இந்த பாஞ்சாலி...இவர்கள் எல்லாரும் நல்லவர்கள்...கர்ணன் மட்டும் கெட்டவன். கர்ணன் செய்தது தவறுதான். ஆனால் எல்லாரும் -4 வாங்கியிருக்கையில் கர்ணன் -2 வாங்கியிருக்கிறான். அதான் உண்மை.

துரியோதனனுக்கு கர்ணன் அறிவுரைகள் சொல்லாமல் இல்லை. துரியன் விருப்பம் அறிந்தவன். ஆயினும் போர் வழி அதைப் பெற வைக்க எவ்வளவோ முயல்கிறான். ஆனால் முடியவில்லை. முயற்சி தோல்வியில் முடிந்தால்...முயற்சியே எடுக்கவில்லை என்பதா!

ஆனாலும் ஏன் துரியனுடன் இருந்து மாண்டான்? இந்தப் பக்கம் வந்திருந்தால் அத்தனை செல்வமும் பதவியும் இவன் காலடியில்தானே....ஏன் செய்யவில்லை. அதுதான் செய்நன்றியறிதல். தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் வரட்டும் என்று அவன் செய்த தருமம். குருவிடத்திலேயே நன்றி மறந்த உத்தமராம் பாண்டவர்க்கு முன் இவன் இந்தக் காரணதுக்காக கெட்டவன் என்றால்...அப்படியே இருக்கட்டும்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது பாண்டவரில் எவரைக் காட்டிலும் உயர்ந்தவன் கர்ணனே...கர்ணனே...கர்ணனே...

G.Ragavan said...

http://thamizhblog.blogspot.com/2006/09/21.html

பாடலைப் பார்த்து ரசித்தென். மிக நன்றாக இருக்கிறது. அருமையாக எடுத்திருக்கிறார்கள்.

மெல்லிசைதான் காலத்திற்கும் நிலைக்கும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தப் பாடல்.

படப்பிடிப்பு இடங்களும் மிக அருமை. பாடகர்தான் நடிகரும் கூடவா....நன்றாக இருக்கிறார். பாடுகிறார். அழுகிறார். சிரிக்கிறார். கதாநாயகி நெளிந்து நெளிந்து ஆடுவது நன்றாக இருக்கிறது. குறிப்பாக அந்தக் கைத்தாளம் ஒலிக்கும் காட்சி.

அதே போல சிறிது நேரமே வந்தாலும் மலித்தின் பெற்றோர்களும் ஆழமாகப் பதிந்து விடுகிறார்கள். குறிப்பாக மலித்தின் தாயாரின் கைகளின் நடுக்கத்தைத் தேனீர்க் குவளை வழியாகக் காட்டியிருப்பது.

மயூரன், உலகத்தரம் என்பதே மாயை. தரம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆங்கிலத்தில் வரும் பேரழிவுப் படங்கள்தான் தரத்தை நிர்ணயிக்கின்றன என்றால் தரம் குறைவே!

தமிழில் பெரும்பாலும் சினிமா வியாபாரம் செய்கிறார்கள். ஒரு சிலர் நன்றாகச் செய்கிறார்கள். நிலமை மாறும் என்று நம்புவோம்.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/09/blog-post_17.html

அடடே! இதானா....என்.சி.சி ரகசியம்...இட்லி வடை பூரி கிழங்கு...அடடா!

கதையாக எழுதியிருந்த விதம் அருமையாக இருந்தது.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/09/blog-post_21.html

இதுல இருக்குறது ஆனை கொண்டானா மலைப்பாம்பா?

இத்தாம் பெருசா இருக்கே....இப்பத்தான் HBOல ஆனை கொண்டான் படத்தப் பாத்துட்டு வந்திருக்கேன்...நீங்களும் மெரட்டுறீங்களே! :-)

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/197.html

உள்ள என்ன போதைப் பொருள் இருந்துச்சா?

இல்ல சாமி செலகள எதுவும் வெச்சிருந்தாங்களா? போதைப் பொருளா இருக்கத்தான் வாய்ப்பு நெறைய!

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2006/09/166.html

இராமநாதன்....நல்ல அறிவியல்பூர்வமான சிந்தனை. நீங்கள் சொன்னது நடந்தாலும் நடக்கலாம். ஆண்டவனே அறிவார்.

// இடத்தைவிட்டு நகரவேண்டிய தேவை குறைவதாலால் மோட்டார் வாகனங்கள் குறைந்து படிப்படியாக இயற்கை மீண்டும் வலுப்பெற ஆரம்பிக்கும். //

இப்படி நடந்தா ரொம்ப சந்தோசம். நடக்கனுமே. ஆனா அதுல ஒரு பிரச்சனை இருக்கு. நெனச்ச எடத்துக்குப் போக முடியும்னா அடுத்தவங்க படுக்கையறைக்குள்ளையும் போக முடியும்...அதுவும் இடத்தை விட்டு நகராமலே...முந்தியெல்லாம் போன் இருக்குற இடத்துல பேசனும். இப்ப நம்ம இருக்குற எடத்துக்கே போன் வருதே...அந்த மாதிரி ஒரு தொந்தரவு. ஆகையால firewall ஒன்னு நிருவிக்கிருவாங்க எல்லாரும். அதுக்குப் password இருக்குறவங்க மட்டுந்தான் போக முடியும்...இது எப்படி இருக்கு?

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/09/blog-post_21.html

எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ்களில் இதுவும் ஒன்று. சந்தம் நிறைந்த பாடல் நமது வாழ்க்கையை விளக்குகிறது. இதை வாரியார் பாடிக் கேட்க வேண்டும். ஆகா! அடுத்தடுத்த பாகங்களுக்குக் காத்திருக்கிறேன். அதிலும் நீங்கள் மருத்துவர் வேறு அல்லவா!

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/09/9.html

// குமரன் (Kumaran) said...
//கந்தன் பெருமை சொல்வதில் மல்லி. //

இராகவன். எந்த மல்லியைச் சொல்கிறீர்கள்? எனக்குத் தெரிந்து ஒருவர் தன் பெயரிலேயே மல்லியை வைத்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சொல்கிறீர்களா? :-) //

பெயரில் இருந்தால் என்ன....பொருளில் இருந்தால் என்ன...மல்லி மணக்கத்தான் செய்யும். :-)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/09/blog-post_22.html

பாட்டுதானே...ம்ம்ஹ்ம்ம்ம்

அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரீஈஈஈஈஈஈஈஈஈஈ
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
டும்டும்டும்டும்டும்
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி

பாடியாச்சு...கொழுக்கட்டை, சுண்டல், ஞானவெட்டியான் ஐயா சொன்ன காய்கறி கலந்த சோறு...எல்லாம் வந்து எனக்குக் குடுங்க...

G.Ragavan said...

http://ennar.blogspot.com/2006/09/2.html

தாழ்ந்த நிலையில் இருந்து ஒருவன் உயர்ந்து சாதனையாளனாக நிற்கும் பொழுது அவனது வரலாற்றைப் பார்த்தால் அதில் பட்ட துன்பங்களும் இன்னல்களும் தியாகங்களும் நிறைந்து தழும்பும். தனக்குகில்லாதது தம்பிக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய பாசத்தையும் என்ன சொல்வது!

G.Ragavan said...

http://umakathir.blogspot.com/2006/09/1.html

:-))))))))))))))

வாய் விட்டுச் சிரிக்க முடிந்தது...சூப்பரப்பு. நான் கூட அவன் அடி வாங்கப் போறான்...மிதி வாங்கப் போறான்னு நெனச்சேன்...கடைசியில... :-)))))))))

G.Ragavan said...

http://umakathir.blogspot.com/2006/09/blog-post_115834982117782611.html

தம்பி, ஒவ்வொரு ஊரிலும் நாட்டிலும் மொழியிலும் இனத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். மத, மொழி, இனவாதிகளால் நாம் வேறு விதமான முடிவுக்குத் தள்ளப்படுகிறோம். வலைப்பூக்களில் நடக்கின்ற சண்டை தெரியும்தானே! உலகம் முழுதும் இப்படித்தான். ஆகையால் நாம் யாரிடம் பழகினாலும் நல்லவர்களாக இருக்க முயல வேண்டும். அவ்வளவுதான்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/09/blog-post_06.html

பாபா....இது கதையில்லையா? கதையென்ற எண்ணத்தோடுதான் படிக்கத் தொடங்கினேன். ஆகையால் அதன் வலி அவ்வளவாகத் தெரியவில்லை. உண்மை என்று தெரிந்த பின் அதன் பரிமாணம் கூடிப் போய் விட்டது.

சாந்தியக்காவும் தோழிகளும் நீடு வாழட்டும். மகிழ்வோடு நீடு வாழட்டும்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/09/tgif.html

பெங்களூர்ல எங்க வீட்டுல இருந்து காமணி நேரம் நடந்து போனா TGI Fridayங்குற pub. அதப்பத்தித்தான் சொல்லப் போறீங்களோன்னு நெனச்சேன்....

நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாம் நல்லாயிருக்கு. தூக்கத்துல நடக்குற ஆனைங்க நல்லாயிருக்கு. :-)

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2006/09/blog-post_23.html

பாபாவை நான் நேரில் சந்தித்தது சென்னையில். அவர் பேசும் பொழுது எளிதாக ஒட்டிக்கொள்ள முடிந்தது. அதற்குக் காரணம் அவரது வட்டார வழக்கு. தெக்கத்தி வழக்கு. அவருடைய பதிவுகளை அதற்கு முன்னால் நிறைய படித்ததில்லை. அவரைச் சந்தித்த பிறகு அவரது பதிவுகள் கண்ணில் பட்டால் கண்டிப்பாக படிப்பதுண்டு. நேரத்தைப் பொறுத்துப் பின்னூட்டமும் உண்டு. அந்தப் பதிவுகளை "ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப் படுத்திய" உங்களுக்கு நன்றி.

G.Ragavan said...

http://sathyapriyan.blogspot.com/2006/09/blog-post.html

சத்தியப் பிரியன், நிறைய படிக்கிறீர்கள். நீங்கள் படித்ததில் இரண்டு கதைகளை மட்டும் நான் படித்திருக்கிறேன். உண்மையே உன் விலை என்ன மற்றும் கனவுத் தொழிற்சாலை. உண்மையே உன் விலை என்ன திரைப்படமும் மிக அருமையாக இருக்கும். கனவுத் தொழிற்சாலையும் நல்ல புத்தகமே. கோணல் பக்கங்களும் படித்திருக்கிறேன்.

count of monte cristo...புத்தகம் இருக்கிறது. இன்னும் படிக்கவில்லை. classic படிக்கும் ஆர்வம் இருக்கிறதென்றால் the secret garden படியுங்கள். மிக நன்றாக இருக்கும்.

G.Ragavan said...

http://balaji_ammu.blogspot.com/2006/09/blog-post_21.html

என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த மாதிரி இலவசங்களை நிறுத்த வேண்டும். ஹஜ் போவதற்கு என்று கொடுத்தால்...அடுத்து அமர்நாத் யாத்திரை என்று வரும். காசியாத்திரை இந்துக்களுக்குப் புனிதம் என்று சொல்லி காசி யாத்திரை போவதற்கும் கேட்பார்கள்.

இந்த முறை ஏற்பாடுகளைச் செய்து விட்ட படியால், விட்டு விடலாம். அடுத்த முறை கண்டிப்பாக இந்த இலவசம் கூடாது. தடுக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.

என்னைக் கேட்டால் இஸ்லாமியர்களே இதை மறுக்க வேண்டும். அதுதான் சரியானதென்று எனக்குத் தெரிகிறது.

அதற்கு மேலும் அரசாங்கம் குடுப்பேன் என்று சொன்னால் எல்லாருக்கும் கொடுக்கத்தான் வேண்டும். அதுதான் சரி.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/09/blog-post_115878550807097410.html

நல்ல துவக்கம். நல்ல நடை. அகவலுக்குக் காத்திருக்கிறோம் ரவி. தொடரட்டும் இந்தப் பணி. அதிலும் முடிக்கையில் நாத விந்து கலாதீ திருப்புகழை எடுத்தாண்டமை மிகச் சிறப்பு.

குமரன், சுட்டிக்காட்டியது போல தியாகராஜரின் பாடல்களைத் தரமுடிந்தால் தரவும். காத்திருக்கிறோம். அகவல் முடிந்ததும் அது தொடரட்டும்.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2006/09/169.html

நல்லதொரு பதிவு...இதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்ன எண்ணத்தோடே உள்ளே வந்தேன். ஆனால் நடையைப் படித்தால் உங்கள் நடை இல்லை. கண்டிப்பாக தமிழறிந்த (அதற்காக உங்களுக்குத் தமிழ் தெரியாது என்றல்ல..உங்களை விடவும் சிறப்பாக என்று கொள்ளவும்.) ஒருவர் எழுதியது என்று தெரிந்தது. நல்ல கருத்துகள். கண்டிப்பாக பாராட்டுக்குறியன.

ஆகையால்தான் தமிழ் தமிழ் என்று கத்தித் தொண்டைத்தண்ணீர் வற்றிக் கொண்டிருப்பதை விட உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இனியது கேட்கின் வலைப்பூ தொடங்கினேன். பிறகு சொல் ஒரு சொல் என்ற வலைப்பூவைக் குமரன் தொடங்கியதும் அவரது அழைப்பின் பேரில் அதில் கலந்து முடிந்தது செய்கிறேன். குறைக்கின்ற நாய் கடிக்காது என்பார்கள். நான் குறைப்பதை விடுத்துக் கொஞ்சமாவது செயலில் காட்டுதல் நன்று என்று நம்புகிறேன்.

G.Ragavan said...

http://karaiyoram.blogspot.com/2006/09/blog-post.html

தொடருமா? இங்கயே முடியும் போட்டிரலாமே....அந்த அளவுக்கு கதை இருக்கு. சிறுகதையோட இலக்கணத்தோடு. இது பாராட்டுதாங்க.

G.Ragavan said...

http://santhoshpakkangal.blogspot.com/2006/09/123.html

நிலமை மாற வேண்டும். கருத்து மோதல் என்பது தனிநபர்த் தாக்குதல் என்னும் அநாகரீகக் குழிக்குள் விழுந்து நாளாகி விட்டன. இனியாவது நிலமை மாறினால் நல்லது. ஊதுகின்ற சங்கை நீங்கள் ஊதி விட்டீர்கள். விழ வேண்டியவர் காதில் விழுந்தால் சரிதான்.

G.Ragavan said...

http://sivamgss.blogspot.com/2006/09/124.html

வாங்க வாங்க ஒங்க பயணமெல்லாம் நல்லபடி நடந்ததுல ரொம்ப மகிழ்ச்சி. பாத்தது கேட்டதெல்லாம் எழுதுங்க. படிக்கிறோம்.

G.Ragavan said...

http://manggai.blogspot.com/2006/09/blog-post_23.html

ம்ம்ம்....உண்மைதான்...இந்தியா நகரங்களிலே மட்டும் வளர்கிறது. ஆகையால் சிற்றூர்கள் சீந்தாவூர்களாகவே இருக்கின்றன. அதனால்தான் இந்த நிலை.

G.Ragavan said...

http://ennar.blogspot.com/2006/09/blog-post_24.html

மிகவும் அருமையான கருத்துகள். இதைப் புரிந்து கொண்டாலே உலகில் அமைதி விளையும். ஆனால் புரியத்தான் மாட்டேன் என்கிறது. இறைவா இவர்களைக் காப்பாற்று. உங்கள் கட்டுரைக்குத் தக்க ஆங்காங்கு இலக்கிய விதை விதைத்திருப்பதும் மிக அருமை. முழுக்க முழுக்க தமிழின் அடிப்படை இதுதான். இதைப் புரிந்து கொண்டால் நன்று. இல்லையேல்........நடப்பது நடந்தே தீரும்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/09/blog-post_25.html

வாங்க பாபா....கடைசியா வேட்டையாடி விளையாடீட்டீங்க...நல்லது. இப்பவாவது நாங்கள்ளாம் போட்ட பதிவுகளைப் படிச்சீங்களா? ஒவ்வொருத்தரோட பார்வையும் தெரியும்ல.

படத்துல பிடிச்சது பிடிக்காததுன்னு ரொம்ப இருக்குது. குறிப்பா சுத்திச் சுத்தி வந்த கேமராவும் சிந்திக் கெடக்குற ரத்தமும் சதையும். அப்புறம் புதுமையாக் காட்டுறேன்னு வர்ர அந்த ஓரின அல்லது ஈரினச் சேர்க்கை விஷயம். மத்தபடி படத்துல வர்ரதெல்லாம் எல்லா மசாலப் படத்துலயும் வர்ரதுதான. சகலகலா வல்லவன் என்ன செஞ்சிற முடியும்னு நெனைக்கிறீங்க?

கௌதம் ஒரு பேட்டியில சொல்லியிருந்தாரு. மொதல்ல கமலுக்குப் படத்துல ஈடுபாடே இல்லையாம். அப்புறம் எப்படியோ கௌதம் மேல நம்பிக்கை வந்து ஆகி நடிச்சாராம்.

G.Ragavan said...

http://varappu.blogspot.com/2006/09/blog-post_18.html

இளா! இது கதையா! இல்லை கதை போல் வந்து நடந்ததையெல்லாம் சொல்லும் நினைவுகளின் சுருளலைகளா! இல்லை அந்தச் சுருளலைகளில் மிதந்து வந்து உள்ளக் கரையினில் தினந்தினம் மோதி மோதி உடைந்து நொறுங்கும் நீங்குமிழிகளான பழைய ஆசைகளா! இல்லை அந்தப் பழைய ஆசைகளையெல்லாம் உண்டாக்கிய இளவேனிற்காலத்து வண்ண மலர்களில் பிறந்து வழிந்து ஒழுகிப் பரவும் நறுமணம் என்னும் பாலியல் ஈர்ப்பா! என்னப்பா! என்ன? (அப்படியே சிவாஜி போல வசனமாக படித்துப் பார்க்கவும் )

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/09/blog-post_25.html

// ஆனால் கமல்ஹாசன் அப்படிப்பட்டவராக தன்னை இதுவரை காட்டிக்கொண்டதில்லை என்பதால் தான், அவரிடம் சமூக அக்கரை கொண்ட படங்களை எதிர்பார்க்கிறோம்.//

அக்கறை, இடையின ரவா? வல்லின றவா? //

பொன்ஸ், அக்கரைக்கு ரவும் போடலாம் றவும் போடலாம். என்ன பொருள்தான் மாறும். அக்கரைன்ன அந்தக் கரை. அக்கறைன்னா அக்கறையோட பாத்துக்கிறதுன்னு சொல்றாங்களே.

ஆனா பாபா என்ன சொல்ல வர்ரார்னா படத்த அக்கரையில எடுத்திருக்காங்க..ஆனா அக்கறையில்லாம...அதுனால இனிமே அக்கரையில படமெடுத்தா ஒழுங்கா எடுக்கனும்னு சொல்ல வாராரு. சரிதானா அண்ணாச்சி? :-)

(உங்க பதிவையும் சொல் ஒரு சொல் ஆக்க வெச்சது பொன்ஸ்தான். நான் இதுக்குப் பொறுப்பில்லை. பலர் பொருப்பு பொருப்புன்னே எழுதுறாங்க...அதுக்கும் ஒரு பதிவு போடனும் போல.)

G.Ragavan said...

http://eelabarathi-1.blogspot.com/2006/09/blog-post_115916675503436293.html

பிரதமர் சந்திக்க மறுத்ததே ஒரு தவறான நடவடிக்கை. இந்தச் சந்திப்பு கொஞ்சமாவது நல்லது செய்யும் என்ற நம்பிக்கையைக் குலைத்து விட்டது பிரதமரின் நடவடிக்கை. அரசியல் காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு. அதிலும் ஏற்கனவே தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெளியேறிய நிலையில். ஒரு தமிழ் இந்தியன் என்ற வகையில் பிரதமரின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால் முரசொலி மாறன் ஸ்டாம்பு வெளியிட பிரதமரை வரவழைக்கின்றவர்களால்...இந்தச் சந்திப்பிற்கு நல்ல விதமாக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்பதை நினைக்கும் பொழுது வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது. எந்த நினைப்பில் தமிழினத் தலைவர் என்று பட்டம் வைத்துக் கொள்கிறார்களோ!

G.Ragavan said...

http://muttom.blogspot.com/2006/02/blog-post_08.html

தொடங்குதல் மிக எளிது
முடிப்பதுதான் பெரிய தொல்லை
என்று வைரமுத்து எழுதினார். அது காதலுக்கு மட்டுமல்ல எழுத்துக்குந்தான். சரியான பொழுதில் முடித்திருக்கிறீர்கள். ஏனென்றால் அடுத்த தொடருக்கு நேரம் ஆகிறதல்லவா! தொடரட்டும்.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2006/09/blog-post_24.html

நாட்டியப் பேரொளி பத்மினியின் மறைவு வருந்தத்தக்க செய்தி. அன்னாரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://ennar.blogspot.com/2006/09/blog-post_115910674549093940.html

என்னார் உங்களுடனான இந்த வாரம் இனிமையாகவே கழிந்தது. இனி ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பதிவுகளைத் தர வேண்டும்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2006/09/177.html

நானும் மொத ஆளக் கண்டு பிடிச்சிட்டேன். :-)

நெறையப் பேரச் சந்திச்சிருக்கீங்க. நானும் மதுரைக்கு வந்தா சந்திக்கிறேன். அப்ப என்ன போடுவீங்கன்னு யோசிச்சுப் பாக்குறேன். :-))))

பாபாவை நானும் நேரில் சந்தித்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2006/09/are-you-bastard-director-gautham.html

லிவிங் ஸ்மைல் வித்யா, இந்தப் பதிவுக்கு எப்படி பின்னூட்டமிடுவதென்றே தோன்றவில்லை.

நீங்கள் எழுதியிருக்கும் கருத்து நியாயமானதுதான். நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்ற வகையில் உங்களுக்கு ஆத்திரம் நிறைய வந்திருப்பது இயல்பே.

சொற்களில் ஏற்றிய காட்டத்தையும் ஆத்திரத்தையும் கருத்துகளில் இன்னமும் கூட்டியிருந்தால் இன்னும் நிறையவே ஆதரவுக் கருத்துகள் கிடைத்திருக்கும் என்பது என் கருத்து.

உடல் ஊனமுற்றவர்களை வைத்து நகைச்சுவை அமைக்கக் கூடாது என்று கூட ஒரு சட்டமுள்ளது. ஆனால் இங்கு வந்து உங்கள் கருத்து தவறு என்று சொல்கிறவர்கள் சிரிக்கத்தான் செய்வார்கள். கண்டுகொள்ள வேண்டாம். அடுத்த வேலையைப் பார்ப்போம்.

அதே நேரத்தில் உங்கள் பதிவில் இருக்கும் ஆத்திரத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் தெரியும் கருத்துக்கு எனது உளப்பூர்வமான ஆதரவு உண்டு.

G.Ragavan said...

http://jeyachchandran.blogspot.com/2006/09/blog-post_26.html

மீன் எனக்கும் மிகவும் பிடித்த உணவு. கொழுப்பில்லாத உணவு. அதை எண்ணெய்யில் பொரித்துத் திங்கலாமா? அதுதானே சுவைக்கிறது?

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/198.html

நல்ல வாயன் சம்பாதிச்சத நார வாயன் உக்காந்து திங்குறதுன்னு சொல்றாங்களே! அது இதுதான் போல. என்னவோ...அடுத்து என்ன நடந்ததோ!

போன பதிவப் படிச்சிட்டு கஞ்சா கிஞ்சா கடத்துறானோன்னு நெனச்சேன். அந்த அளவுக்கு அந்தாளு போகாததும் ஒரு விதத்துல நல்லதுதான்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/199.html

ஜோசப் சார்....என்ன செய்வது! நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை....இறையடி சேரும் பொழுது அமைதியாகச் சேர வேண்டும். அந்த அமைதியை ஆண்டவன் அவருக்கு வழங்கியிருப்பான் என நம்புகிறேன்.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/09/blog-post_27.html

இந்தப் படத்தை நான் இந்தியில் (உருது) பார்த்தேன். வசனங்கள் புரியவேயில்லை. பக்கத்திலிருந்த நண்பந்தான் அவ்வப் பொழுது உதவியது.

இந்தப் படத்தை கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எடுத்திருக்கிறார் இயக்குனர். பணப்பற்றாக்குறைதான். இறுதியில் இரண்டு பாடல்காட்சிகளும் சில காட்சிகளும் அப்பொழுதே வண்ணத்தில் எடுத்தார்கள். அதைப் பார்த்து முழுப்படத்தையும் வண்ணத்தில் எடுக்க வேண்டும் என்று விரும்பினாராம் இயக்குனர். ஆனால் யாரும் ஒத்துக்கொள்ளாததால் (ஏற்கனவே பத்தாண்டுகள்) முக்கால்வாசி கருப்பு வெள்ளையிலும் கொஞ்சம் வண்ணத்திலும் வெளிவந்தது படம். மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

பாடல்கள் அனைத்துமே அருமை. தமிழில் கனவு கண்ட காதல் பாடல் மட்டும் கேட்டிருக்கிறேன். தேனொழுகும். மற்ற பாடல்களையும் தமிழில் கேட்க விருப்பம். எங்கேனும் கிடைக்குமா?

G.Ragavan said...

http://eelabarathi-1.blogspot.com/2006/09/blog-post_115931911726000179.html

இது உண்மையிலேயே கருணாநிதியின் கருத்துதானா?

சந்திக்க முயலவில்லை...அதை விடுங்கள்.

மத்திய அரசிடமிருந்து பதிலில்லை என்று சொல்வதோடு அவர் கடமை முடிந்து விட்டதா! மிகவும் நன்று. ஒரு முறை சூடு பட்டதால் இந்த முறை அமைதி காக்கிறாராக்கும். பிறந்த நாள் அன்று தமிழுக்காக, தமிழரரின் வாழ்வுக்குத்தான் உயிர் போகும் என்றாரே! புரட்சியே செய்யாமல் புரட்டியை பெயரில் வைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவை மிஞ்சி விட்டார். யாரைத்தான் நம்புவதோ!

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_27.html

வெட்டி, பொதுவாகவே நான் சராசரி மாணவந்தான். எங்களுக்கு இண்டர்னெல் மதிப்பெண் லேபுக்கு மட்டும் இருந்தது. மத்ததுக்கெல்லாம் நாமதான் விழுந்து விழுந்து எழுதி வாங்கனும். இண்டர்னல் இருந்திருந்தா இன்னும் நெறைய வாங்கீருப்பேன்னு நெனைக்கிறேன். ஓரளவுக்கு ஆசிரியர்களோட நல்ல பழக்கம் இருந்தது்.

ஒரு முறை எலக்ட்ரிகல் லேப் எக்சாம். மதிய பாட்ச். சாப்பிட்டுப் போனா வரிசைல நாந்தான் மூனாவது ஆளு. எனக்கு முன்னாடி போனவன் யூனிபார்மை இன் பண்ணாமல் போனான். ஒரு மாதிரி ஏனோ தானோன்னு வெச்சுக்கோங்களேன். பின்னாடியே நான் இன் பண்ணிக்கிட்டு நீட்டா போனேன். அவனப் பாத்ததும் எக்ஸ்டெர்னல் அவன ஒழுங்கா இன் பண்ணிக்கிட்டு வரச் சொன்னாரு. அதுவே அவருக்குப் பிடிக்கலை.

அவனுக்கு ஏதோ கஷ்டமான எக்ஸ்பெரிமெண்ட். அதப் பண்ணவே ரொம்ப நேரமாகும். பொதுவா எக்சாம்ல வெக்க மாட்டாங்க. காலைல பேச்சுக்கும் வைக்கல. குடுத்துப் பாப்பமேன்னு ஒன்னு வெச்சிருக்காங்க. அவன் அத எடுத்துப் பாத்துட்டு மாத்தனும்னு அடம் பிடிச்சு மாத்தீட்டான். பின்னாடியே நான் போய் எடுத்ததும் அதே பேப்பரத்தான். என்னோட நேரம். எக்ஸ்டெர்னர் எங்கிட்ட எக்ஸ்பிரிமெண்ட் மாத்தனுமான்னு கேட்டாரு. நான் தேவையில்லன்னு சொல்லீட்டு அதுக்கான டேபிளுக்குப் போயிட்டேன். ஃபார்முலா நெனவுக்கு வரல. எதையெதையோ எழுதி...என்னென்னவோ தப்புத்தப்பா செஞ்சேன். படிச்சதெல்லாம் நல்ல எக்ஸ்பெரிமெண்டுகள். அதெல்லாம் நண்பர்களுக்குப் போயிருச்சு. நமக்கு இப்பிடி வந்து மாட்டுச்சு.

எப்படியோ எதையோ செஞ்சு என்னவோ ரீடிங் போட்டுக் கொண்டு போய்க் குடுத்தேன். வைவால மொதக் கேள்வி கேட்டாரு. சரியாச் சொன்னேன். ரெண்டாவது மூனாவது கேள்விக்கு தெரியாதுன்னு ஒடனே சொல்லீட்டேன். அவ்வளவுதான். வெளிய வந்தாச்சு.

அப்புறமா எல்லாம் முடிஞ்சப்புறம் ஒரு நல்ல லெக்சரர் எங்க கண்ணுல பட்டாரு...அவரு எங்கிட்ட கேட்டது "எக்ஸ்டெர்னல என்ன செஞ்ச?"

ஏன் சார்னு கேட்டேன். "நீ எழுதியிருந்த ஃபார்முல தப்பு. ரீடிங் தப்பு. அதச் சொல்லாப் போனேன். அவரு அதக் கேக்காமலே மார்க்கு போட்டுட்டாரு"ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாரு. அந்த எக்சாம்ல எனக்கு நூத்துக்கு தொன்னூத்தெட்டு.

அந்த எக்ஸ்பெரிமெண்ட்டை யாரும் அந்த நேரத்துக்குள்ள செஞ்சு முடிக்க முடியாது. ரீடிங்கும் ஒழுங்கா வராது. (என்னன்னு மறந்து போச்சு). அதுனால யாரும் வெக்க மாட்டாங்களாம். அத முயற்சி செஞ்சி பாக்கனும்னு நெனச்சு செஞ்சதுக்கு அவரு மதிச்சு மார்க்கு போட்டாராம். தெரியாத கேள்விக்கு எதையாவது ஒளராம பளிச்சுன்னு தெரியாதுன்னு சொன்னதும் அவருக்குப் பிடிச்சிருந்ததாம்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_27.html

இன்னொரு விஷயம். சில மாணவர்கள் சில ஆசிரியர்களை படாத பாடு படுத்தியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் காத்திருந்து பழி வாங்குவதும் உண்டு. சில ஆசிரியர்களும் மோசமானவர்களாக இருப்பதும் உண்டு. நல்லது கெட்டது எங்கும் உண்டு.

G.Ragavan said...

http://etamil.blogspot.com/2006/09/what-can-i-codemn-today.html

பாட்டா இது நிப்பாட்டுன்னு சொல்ல வேண்டிய அளவுக்கு இருக்கு!

// வெட்டிப்பயல் said...
What abt the movie review??? //


இந்தப் படத்துக்கு மூவி ரிவியூ வேற கேக்குறீங்களே வெட்டிப் பயலே...பால மேல என்ன ஆத்திரம்? :-)

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/09/2_115878943493864862.html

பனை பொருட்கள் தெந்தமிழ் நாட்டில் பிரபலம். அதை விடப் பலமடங்கு ஈழத்தில். உண்ணும் பொருட்களாய் பழம், கிழங்கு, நொங்கு, பதநி என்று களிக்கக் கிடைக்கும். அடுத்து பெட்டிகளும் பாய்களும். ஊர்ப்பக்கம் போனால் சில்லுக் கருப்பட்டி அடைத்துத் தரும் மூட்டுப் பெட்டிகள் ஒரு பக்கம். சீரணிகளை அடைத்துத் தர இரண்டு பெட்டிகள். ஒன்றுக்குள் மற்றொன்னை வைத்து மூடி கட்டித் தரப்படும் பெட்டிகள்....ம்ம்ம்ம்...ஊர்ப்பக்கத்து நினைவுகளை கிளறி விட்டீர்கள். இப்பொழுதெல்லாம் பிளாஸ்டிக் பைகளில் கிடைக்கிறது எல்லாம். :-(

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/200.html

ஜோசப் சார், நீங்க எடுத்த முடிவு நேர்மையான முடிவு. ஆனா அது கண்டிப்பா உங்களுக்கு நல்லதத்தான் கொண்டு வந்திருக்கும். அதில் ஐயமில்லை. முதல் வினை எதிர்வினையாக இருந்தாலும் அதன் விளைவாக வந்த வினைகள் நல்வினைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். சரியா?

200 பதிவிட்டமைக்கு எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/200.html

ஜோசப் சார், நீங்க எடுத்த முடிவு நேர்மையான முடிவு. ஆனா அது கண்டிப்பா உங்களுக்கு நல்லதத்தான் கொண்டு வந்திருக்கும். அதில் ஐயமில்லை. முதல் வினை எதிர்வினையாக இருந்தாலும் அதன் விளைவாக வந்த வினைகள் நல்வினைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். சரியா?

200 பதிவிட்டமைக்கு எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2006/09/blog-post_28.html

எறாவும் முருங்கைக்காயுமா! எங்க பக்கத்துல எறாவத் தனியா கொழம்பு வெப்பாங்க...அத விட புளியூத்தி ஊறுகா மாதிரி செஞ்சிருவாங்க. கெட்டியா பிரமாதமா இருக்கும். எறாவுல என்ன சிறப்புன்னா...கூட்டணி எதுகூடயும் வெக்கும். புளியூத்துறதோ, தக்காளி வெங்காயம் போடுறதோ, மிளகு போடுறதோ..இல்ல வெறும் மெளகாத்தூளப் போட்டு எண்ணெயில பெரட்டி வெக்கிறதோ....கமகமன்னு இருக்கும். ஆனா ஒன்னு...அதக் கழுவுறது ரொம்ப முக்கியம். நல்லாக் கழுவித்தான் செய்யனும். இந்த மாதிரி பாக்கெட்ல விக்குறத வாங்காம புதுசா வாங்குங்க. எறால் கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்.

நமக்கெல்லாம் கைப்பக்குந்தான். சைவம் அசைவம்...எல்லா ஊர் வகையும் ஒத்துக்கிரும். தமிழ் நாட்டுக் கொழம்புதான் பெருசுன்னு இல்லை....கீரை, கொத்துமல்லி, கருவேப்பிலை அரைச்சு விட்ட கோழியும் நல்லாயிருக்கும். பெங்காலி ஸ்டைலில் தொய்சிக்கன் (தயிர்க்கோழி) இருந்தாலும் சரி. இம்ரானா பஞ்சான்னு கபாபா இருந்தாலும் சரி. எல்லாம் ஓகேதான்.

ஆனாலும் படாதபாடு பட்டிருக்கீங்க. மிச்ச முருங்கைக்காய அடுத்த நாளு புளிக்கொழம்பா வெச்சிருக்கலாமுல்ல.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2006/09/blog-post_28.html

சீச்சீ மனிதர்களா இவர்கள்....தூ!!!!!!!!!!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/09/15.html

டீச்சர், பிள்ளைகன்னா அப்படியிப்படித்தான் விளையாடும். நாங்கூட சின்னப்பிள்ளைல தூத்துக்குடியில மூனாப்பு கூடப் படிச்ச ராஜேஷ்ங்குற பையன் காதுக்குள்ள பென்சில வெச்சிக் கொடஞ்சிட்டேன். இத்தனைக்கும் அவன் ரொம்ப நல்ல நண்பன். அவங்க அம்மாவும் நல்லாத் தெரியும். அமைதியா வீட்டுக்கு வந்து ராகவன் இப்படிச் செஞ்சானாம். ராஜேசுக்குக் காது வலிக்குதுன்னு அத்தை கிட்ட சொல்லீட்டுப் போயிட்டாங்க. அதுக்கப்புறமும் அவங்க வீட்டுக்குப் பல வாட்டி போயிருக்கேன். ஆனா அவங்க சிடுசிடுத்ததேயில்ல. நா வழக்கமா அப்படிச் செய்யறதில்ல. ஆனா அன்னைக்கு ஏன் அப்படிச் செஞ்சேன்னு எனக்கே தெரியாது. அது மாதிரிதான் ஒங்க பொண்ணு விசயத்துலயும் நடந்திருக்கும். சின்னப்பசங்க கிட்ட சொல்லித் திருத்தப் பாக்கலாம். தப்பில்லை.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/09/4_28.html

உருண்டையாய் லட்டெங்கே
தட்டித் துளையிட்ட வடையெங்கே
உதிர்த்து அவித்த பிட்டெங்கே
கடைந்து எடுத்த வெண்ணெய் எங்கே
சுறுசுறுப் புளியோதரை எங்கே
குளுகுளுத் தயிர்ச்சோறெங்கே
அரங்கன் திருவடி கண்டாருக்கு
இதெல்லாம் தோன்றுமோ
வடையாய் லட்டாய் பிட்டாய்
வெண்ணெய் ஒழுகி அன்னம் பெருக
நிற்பானே அவனே நமக்காக!

G.Ragavan said...

http://ukumar.blogspot.com/2006/09/blog-post_28.html

வணக்கம் வெளிகண்ட நாதர். மிக நல்ல பதிவு. தமிழ் மொழியில் இல்லாதது இல்லை. வாழ்க்கையை வாழக் கருத்துகள் அனைத்தும் தமிழில் கொட்டிக் கிடக்கின்றன. தமிழ்க் கடை விரித்திரிக்கிறது. ஆனாலும் கொள்வாரின்றி கடையாகக் கிடக்கிறது. முடிந்த வரையில் அதை எடுத்துச் சொல்ல வேண்டியது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வகையில் நமக்குக் கடமையாகிறது. அதே நேரத்தில் வன்முறையும் நேர்மையின்மையும் தவறான வழிமுறைகளும் நமக்குத் துணைவரலாகாது. ஆகையால் நாகரீகமாகவும் நேர்மையாகவும் முடிந்தவரையில் கருத்துச் சொல்லவும் வேண்டும்.

உங்கள் ஆதங்கமும் நியாயமானதே...நிலமை மாறுமா என்று தெரியவில்லை. கொஞ்சமேனும் மாற வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஏ.பி.நாகராஜன் படங்களில் ஆன்மீகப் படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் தமிழை முன்னிறுத்தியே இருக்கும். இதோ திருவிளையாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் படத்தால் அன்றோ "கொங்குதேர் வாழ்க்கை" என்ற சங்கப் பாடல் இன்னமும் புகழ் பெற்று ஓங்குகிறது. கந்தன் கருணையை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை தமிழ்ப் பாடல்கள். "அரியது கேட்கின்" "முருகனே செந்தில் முதல்வனே" போன்ற ஔவை மற்றும் நக்கீரரின் பாடல்கள் பிழைத்தன. திருவருட்செல்வரை எடுத்துக் கொள்ளுங்கள். "பண்ணின் நேர் மொழியாள்", "மாசில் வீணையும்", "காதலாகிக் கசிந்து", "சதுரம் மறை தான் துதி செய்து", "அப்பன் நீ" போன்ற தேவாரப் பண்களும் "உலகெலாம் உணர்ந்து" என்ற பெரிய புராணக் காப்புச் செய்யுளும் கிடைத்தன. திருமால் பெருமையை எடுத்துக் கொள்ளுங்கள். "வாரணமாயிரம் சூழ வலம் செய்து", "மார்கழித் திங்கள்", "பச்சைமாமலை போல் மேனி" போன்ற அருமையான பழந்தமிழ்ப் பாக்களும் சுவைக்கச் சுவைக்கச் சுவை குன்றாமல் கிடைத்தன. அத்தோடு கவியரசரும் தன்னுடைய திறமையால் இனிய பல தமிழ்க்கவிகளைக் கொடுத்தார். அந்தப் படங்கள் வந்த காலத்தில் என் தந்தையே படித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் இன்றைக்கும் ரசிக்க முடிகிறது.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/09/144-2.html

திருப்பாட்டுத் திண்டிவனத்து தெருவள்ளுவர் என்ன சொல்லீருக்காரு தெரியுமா! "அழுகைக் கழுகை அழுத அழுகை
அழுகை அழா தவர்"

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/09/blog-post_115943191249119961.html

இவ்வளவு லேசா ஆபாசப் பின்னூட்டம் போடுறவங்கள பிடிக்க முடியுமா என்னா? எனக்கு நம்பிக்கை இல்லை. முடியும்னா அத எப்பவோ கண்டுபிடிச்சிருப்பாங்களே! என்னவோ பண்ணுங்க. மொத்தத்துல எல்லாரும் நல்லாயிருங்க.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/09/blog-post_115943191249119961.html

இவ்வளவு லேசா ஆபாசப் பின்னூட்டம் போடுறவங்கள பிடிக்க முடியுமா என்னா? எனக்கு நம்பிக்கை இல்லை. முடியும்னா அத எப்பவோ கண்டுபிடிச்சிருப்பாங்களே! என்னவோ பண்ணுங்க. மொத்தத்துல எல்லாரும் நல்லாயிருங்க.

G.Ragavan said...

http://muthuvintamil.blogspot.com/2006/09/2_28.html

வாழ்த்துகள் முத்து. தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையிலே வெண்ணெய் என இழக எனது வாழ்த்துகள். :-)

சரி..எப்ப சென்னைப் பயணம்? அழகான மெங்களூரு விட்டுச் சென்னைக்கு என்னைக்குக் கெளம்புறீங்க?

முத்துவிற்கு உதவிய செந்தழல் ரவிக்கு என்னுடைய சார்பிலும் ஒரு நன்றி.

உலகம் மிகச் சிறியது. அதில் நாம் மிக மிகச் சிறியவர்கள். இதில் ஒருவருக்கொருவர் முடிந்த வரையில் உதவிக் கொள்வது மிகவும் சிறப்பு.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/09/blog-post_29.html

ஜோசப் சார்...முதல் பாகம்தான் நிறைவு பெறுகிறது என்று தெரியும் பொழுது ஒரு நிம்மதி. :-)

அரசியல்வாதி ஒருவர் கையூட்டு வாங்க மறுத்த என்னுடைய தந்தையை எப்படி அலைக்கழித்தார் என்று நான் அறிவேன். என்னுடைய தந்தையார் பணியில் சேரும் பொழுதே....அரசாங்கப் பணியல்லவா....ஆகையால் ஆர்டர் வேண்டுமென்றால் காருக்கு டயர் வாங்கிக் குடு என்று அமைச்சர் கேட்டாராம். முடியாத குடும்பம். எப்படியோ எங்கேயோ பெரட்டி உருட்டி ஒப்பேத்தியிருக்கிறார்கள். இதில் டயர் கேட்டவரும் அலைக்கழித்தவரும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள். இன்றைக்கும் எதிரிக் கட்சிகள் அவர்கள் சார்ந்த கட்சிகள்.

அன்றைக்கு நீங்கள் பட்ட மனவேதனை எனக்குப் புரிகிறது. மறப்போம். மன்னிப்போம்.

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2006/09/blog-post_115950685866256671.html

இந்தக் கூத்து நெறைய நடக்குதுங்க.....உலகம் பூராவும்....பேராசை மட்டும் வரக்கூடாது. அதத்தான் அருணகிரி "ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே" என்கிறார்.

ஆசை என்னும் சங்கிலி - நிகளம்னா சங்கிலி....நம்மைக் கட்டிப் போட்டிருப்பது ஆசை என்னும் சங்கிலி...அந்த நிகளம் துகளாயின பின்னால்தான் அநுபூதி பிறக்குமாம். அநுபூதீங்குறது உள்ளமும் உடலும் உணர்வும் இறைவனோட ஒன்று பட்ட அமைதி நிலை.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/09/18.html

கஸ்தூரி மான்குட்டியாம்
அது கண்ணீரை ஏன் சிந்துதாம்
வேறூரும் புறப்பட்டதோ
பட்டுத் துணிகளும் மூடப்பட்டதோ!

(ராஜநடைங்குற படத்துப் பாட்டைக் கொஞ்சம் மாத்தீருக்கேன்.)

டீச்சர்...நம்மவங்க நிகழ்ச்சிக்குப் பட்டுலயோ சேலையிலையோ போறது பெரிசில்ல...வெளியூர்க்காரங்க நிகழ்ச்சிக்கு நம்மூர் பாணியில போறதுதான் கலக்கல். எல்லாரும் என்னன்னு வந்து பாப்பாங்க. கண்டிப்பா.

G.Ragavan said...

http://kaalangkal.blogspot.com/2006/09/blog-post_28.html

நேத்து இப்படித்தான் லிவிங் ஸ்மைல் வித்யா ஒரு படம் போட்டு கலங்கடிச்சாங்க..இன்னைக்கு நீங்க ஒரு படம் போடுறீங்க.....ம்ம்ம்ம்...மனசு கலங்குறதத் தவிர ஒன்னும் செய்ய முடியலையே!

என்ன கோவி, நீங்களும் கண்ணன் நரகனைக் கொன்றதுதான் தீபாவளின்னு முடிவுக்கு வந்துட்டீங்களா? வாரியார் கட்டுரையப் படிக்கலையா?

G.Ragavan said...

http://pesalaam.blogspot.com/2006/09/blog-post_19.html

நல்ல அறிமுகம். இதில் வெகுசிலவே எங்களூர்ப் பக்கத்துப் பேச்சோடு ஒத்திருக்கிறது.

வெடுக்குன்னு...பிடிங்கீட்டான்..இதே பொருளில் சொல்வார்கள். ஆனால் வெக்குன்னு பிடிங்கீட்டான் என்பதே தெக்கத்திப் புழக்கம். வெக்குவெக்குன்னு கையப் பிடிச்சி இழுத்தாம்ல என்று சொல்வார்கள்.

ஸோலி என்று உங்கள் பக்கம் சொல்வது தெற்கில் சோலி (choli)ஆகி விடும்.

இவத்த அவத்த என்பது இங்குட்டு அங்குட்டு

கரூரில் சிறுவயதில் மூன்று வருடங்கள் இருந்தோம். இத்தகைய பேச்சுகளைத்தான் கேட்டிருக்கிறோம். கரூர் மார்க்கெட்டில் அம்மாவும் நானும் அந்த ஊருக்குப் போன முதல் வாரம் காய்கறி வாங்கப் போனோம். பட்டர்பீன்ஸ் கேட்டால் "நீங்க மதுரப் பக்கத்துக் காரங்களா"ன்னு கேட்டாங்க.

என்னுடைய உச்சரிப்பில் தெளிவாக வரும் சகரம் cha பலமுறை அங்கு கிண்டல் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒரு சினிமாவுல வாராங்க வாரங்க பண்ணாடி வாராங்கன்னு பாட்டு வரும். அது என்னன்னு இப்பத்தான் புரியுது.

அதே போல இன்னொரு படத்துல செம்மறி ஆடேங்குற பாட்டுல செவத்த பொண்ணு இவத்த நின்னுங்குற வரிக்கும் இப்பத்தான் புரியுது.

இன்னொரு பிரச்சனை அந்தப் பக்கம் ல, ள, ழ எல்லாம் கெடையாது. எல்லாம் ல-தான்.

(நடுவுல யாருங்க கொங்குநாடு செந்தமிழுடைத்துன்னு சொல்றது :-) )

உண்டு என்பது தமிழ்ச் சொல்லே. கன்னடமும் பாதிக்கு மேல் தமிழே! அதனால் பிரச்சனையில்லை.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/09/blog-post_115939824373465066.html

யோகன் ஐயா....சரியான பொழுதில் மிகச் சரியானதொரு பாடலைத் தந்து மகிழ்வு கூட்டியிருக்கிறீர்கள். கண்ணுக்குத் தமிழைக் காட்டியிருக்கிறீர்கள்.

முப்பெருந்தேவியரில் முதலில் புகழப் படுகிறவள் கலைமகள். நாமகள். வெண்பூமகள். சொல்மகள். தமிழ்மகள்.

எங்கோ இருப்பவன் இறைவன் என்று கொண்டவர் அல்லர் தமிழர். எங்கும் இருப்பது இறை. அதுதான் நமது ஆன்மீகப் பசிக்கு இரை. இதை என்றென்றும் தமிழில் உரை என்று வாழ்ந்தவர்கள் முன்னோர். அந்த வழக்குக்கு மாறுபாடு காணாதவன் பாரதி. அவன் எழுதில் மாறுபாடு காணாதவர் நீர். அதனால்தான் அவன் கவியை அவியறியத் தருகிறீர்.

எனக்கும் ஒரு பாடல் நினைவிற்கு வருகிறது. இது பாரதி எழுதியதல்ல. கம்பன் எழுதியது.

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை
தூய உருப்பளிங்கு போல் வாழ் என்
உள்ளத்தின் உள்ளே இருப்பள்
இங்கு வாராது இடர்
படிக நிறமும் பவழச் செவ்வாயும்
கடிகமழ் போல் தாமரைப் பூக்கையும்
துடியிடையும் அல்லும் பகலும்
அனவரதம் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி!

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2006/09/blog-post_28.html

நல்லதொரு கதை தேவ். படித்தவுடன் கதை மாந்தர் அத்தனை பேரின் மேலும் ஒரு பரிவுதான் பிறந்தது. அடுத்த கதைக்குக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://muthuvintamil.blogspot.com/2006/09/2_28.html

// பொன்ஸ் said...
ஜி.ரா
// வெண்ணெய் என இழக//
இளக என்பதைத் தான் இப்படிச் சொல்றீங்களா? //

ஆமாம் பொன்சு...அதத்தான் சொன்னேன். தெரியாம எழுத்துப் பிழை வந்துருச்சுங்க....அதுக்கு எவ்வளவு கொறைக்கனுமோ...அவ்வளவு கொறைச்சுக்கோங்க.

G.Ragavan said...

http://yosinga.blogspot.com/2006/09/blog-post_28.html

இந்த எண்ணிக்கை பிரச்சனைதானய்யா நாட்டுத் தேர்தல் வரைக்கும் நடக்குது. ஓட்டுப் போடுற அரசியல்வாதியப் பத்தி முழுக்கத் தெரிஞ்சிக்கிட்டா போடுறோம். ஏதோ நம்மளா பிடிச்சது பிடிககதது..ஒரே மதம்..ஒரே இனம்...ஒரு ஊரு..இப்படித்தானய்யா நடக்குது...அதுதான் சரீன்னு வலைப்பூல பலர் வந்து கருத்துச் சொன்னாங்களே....இங்க நடந்தா மட்டும் தப்பாயிருமா!

ஆனாலும் இந்த மாதிரி நடக்காம இருக்க என்ன செய்யனும்? சுழல் முறை நடுவர் குழு அமைச்சி தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நடுவர்கள் யாருன்னு கடைசி வரைக்கும் சொல்லவே கூடாது. அப்புறம் என்னாகும் தெரியுமா? பாரபட்சம் பார்க்கப்பட்டது. சாதி, மதம், மொழி, ஊர், எல்லாம் பார்க்கப்பட்டது. ஈனப்பிறவிகள்...மானமில்லாதவர்கள்...நடுவர்களைச் சரிக்கட்டும் வழி...இப்படியெல்லாம் நடக்கும்.

பொதுவுல போட்டியில கலந்துக்கிறத ஆரோக்கியமான முறையில அனுகுறதும்...நம்மைப் பொருத்த வரையில் நேர்மையா நடந்துக்கிறதும் மட்டுமே உதவும். அப்படியில்லைன்னா எந்த முறை வெச்சாலும் பிரச்சனை தீராது.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2006/09/blog-post_28.html

நானும் எனது வாக்கைச் செலுத்தி விட்டேன். எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/09/4_28.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஜிரா
வாங்க, வரும் போதே கலக்கலா தான் வந்து இருக்கீங்க!
"எங்கே எங்கே" ன்னு எல்லாரும் என்னையே கேட்டா நான் எங்க போவேன் சாமி? ஆமா அந்த ஃபோட்டோ-ல தட்டுல நீங்க என்ன வச்சிருக்கீங்க? பாயசம்?? :-) //

பாயாசமா! குடித்த கொஞ்ச நேரத்துக்கு ஆயாசம் போகும் காப்பி. அன்னைக்கு டீ குடிக்க நல்லாவே இல்லைன்னு காப்பி எடுத்தேன். காப்பியெடுத்த ஜிரான்னு சொல்லீரப் போறாங்க யாராவது! :-)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/09/4_28.html

// வாங்க டீச்சர்.
ராகவனிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டாயிற்றா? பிரசாதக் கியூ ரொம்ப நீளம். ஜருகண்டி, தய சேசண்டீ! //

//
அப்பாடா, என் நண்பன் ஜிரா விரும்பிய எல்லா பிரசாதங்களையும் எப்படியோ வாங்கிக் கொடுத்து விட்டேன் :-) அனைவரும் ராகவனிடம் அவசியம் பிரசாதம் பெற்றுக் கொள்ளவும் :-)) //

ஓ! பிரசாத ஸ்டால் என்னோட பொறுப்புல வந்திருச்சா இப்போ! :-)))))) அப்ப விக்க ஒன்னுமில்லாம நானே தின்னுருவேனே...நல்ல ஆளப் பாத்து பொறுப்ப ஒப்படைச்சீங்க போங்க...

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2006/09/blog-post_29.html

பிரபா, இந்தப் படங்கள் எப்பொழுது எடுக்கப்பட்டவை? குறிப்பாக சைக்கிள்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தைப் பார்த்ததும் அங்கு செல்ல வேண்டும்...குதிக்க வேண்டும்..மரங்களுக்கிடையில் வெதுவெதுக் காத்தோடு ஓடாட வேண்டும் என்று தோன்றுகிறது.

அன்ன வாகனத்தில் கலைமகள்தானே? எந்தக் கோயில்? எந்த ஊர்?

G.Ragavan said...

http://malainaadaan.blogspot.com/2006/09/blog-post_27.html

நல்லதொரு பதிவு..... ஒரு + முதலில் போட்டாகி விட்டது. :-)

// மலை நாடர்!
இந்த பத்தினித் தெய்வவழிபாடு, "சேரன் தீவு" செரன்டீப்- சேர மன்னர்காலத்தவர்களில் சக்தி வழிபாடே!! கேரள மண்ணின் பகவதி வழிபாடே!! இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில்; கண்ணகியை சேரநாட்டுப் பெண்ணாகத் தான் கூறுகிறார்கள். //

யோகன் ஐயா...எனக்குத் தெரிந்த சிலப்பதிகாரத்தை வைத்து விளக்குகிறேன். சரியா? அதில் தவறு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

சிலப்பதிகார காலத்தில் பிரபலமாக இருந்த பெண் தெய்வம் கொற்றவையும் வள்ளியும். வள்ளியை கதிர்வேல் வள்ளலிம் துணைவியாகப் பாடுகிறார்கள். காதலிக்கிறவர்கள் எல்லாம் காதலன் முருகன். தாம் வள்ளி என்று பாடுகிறார்கள். கொற்றவையின் குமரன் முருகன் என்றும் பாடுகிறார்கள். அதற்குப் பிறகு உள்ளே வருவது கண்ணகி வழிபாடு.

இளங்கோவடிகள் கண்ணகியைச் சேரத்தி என்று சொல்லவில்லை. சொல்வது செங்குட்டுவனும் அவனுடைய சுற்றத்தாரும். செங்குட்டுவன் கோயில் கட்டி இலங்கைக் கயவாகுவையும் வடக்கத்து அரசர்களையும் சிறை விடுத்த பிறகு கோயிலில் எல்லாரும் கண்ணகியைச் சேரர் செல்வி என்று புகழ்கிறார்கள். ஆனால் கண்ணகியே தெய்வமாக வந்து தான் பாண்டியன் மகள் என்கிறாள். பிறந்த நாடு சோணாடு. சோழத்தி என்றிருக்கலாம். சொர்க்கம் புகுந்தது சேரநாட்டு எல்லையில் செங்குன்றத்தில். முதற் கோயில் எழுந்ததும் சேர நாட்டில். எழுப்பியது சேரன். அப்படியிருக்க பாண்டியன் மகள் என்று சொல்லக் காரணம்?

கோவலன் தன்னை விட்டு மாதவியிடம் போனதைச் சரியென்று கண்ணகி ஒத்துக்கொண்டாள் இல்லை. ஆனாலும் அவனையே விரும்பியதால் திரும்பி வந்ததும் சேர்ந்து கொண்டாள். கோவலன் தவறு செய்த பொழுது தனது தந்தையார் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். கேட்கவில்லை. ஆனால் பாண்டியன் தண்டனை கொடுத்தான். ஆகையால் "நானவன் தன் மகள்" என்று தெளிவாகவே கூறி விடுகிறாள்.

அதற்குப் பிறகுதான் இலங்கைக் கயவாகும் வடக்கத்தியரும் கூட கண்ணகிக்குக் கோயில் கட்டுவோம் என்று உறுதி செய்து அவரவர் ஊர்களில் கோயில் எழுப்பினர். அடுத்த பாண்டியன் வெற்றிவேலனும் திருக்கோயில்களைப் பாண்டி நாட்டில் எழுப்பினான். சேரன் செங்குட்டுவனின் மாமன் மகனே சோழன் கிள்ளி. அவனும் சோழ நாட்டில் கண்ணகிக்குக் கோயில் எழுப்புகிறான்.

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2006/09/blog-post_28.html

ஜோசப் சார். கடவுள் சாத்தான் என்ற கருத்து அப்ரஹாமிய மதங்களில் உள்ளது. ஆனால் தமிழில் அந்த நம்பிக்கை இல்லை. அனைத்தும் இறைவந்தான். சாத்தான் என்று ஒன்று இருந்தால் அது இறைவனுக்குப் போட்டியாக இருந்தால் அது வெல்லவும் வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையே இறைவன் அனைத்தும் கடந்து உள்ளிருக்கும் கடவுள் என்ற நம்பிக்கை அடிபட்டுப் போகிறது. ஆக உலக இயக்கத்தில் நன்மை தீமை இரண்டும் இறைவனால் கட்டளைப்படுவதே. ஆனால் ஏன் என்றுதான் நமக்குத் தெரிய மாட்டேன் என்கிறது.

G.Ragavan said...

http://robinhoot.blogspot.com/2006/07/blog-post_29.html

ராபின்ஹூட், இவ்வளவு ஆதாரங்கள் இருக்கையில் ஏன் சும்மாயிருக்கிறீர்கள்? நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. எடுக்க விடாமல் எது தடுக்கிறது? ஒவ்வொரு பதிவில் இன்னார் இன்ன கம்பெனியில் வேலை செய்கிறார் என்றே போட்டு மானத்தை வாங்குகையில் இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கக் காரணம் என்ன? போலி செய்வது சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆதாரங்கள் இருக்கையில் நேர்மையாக நடவடிக்கை எடுப்பதே சரி என்பது என் கருத்து.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/09/blog-post_27.html

இதான் மான்குட்டியா? அப்ப மான்வாஹனீன்னு ஒங்களக் கூப்பிடலாமா பொன்ஸ்?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/09/vs.html

அப்படியே சாவித்திரி படத்துக்கும் ரோஜா படத்துக்கும் ஒத்துமை போட்டா நல்லாயிருக்கும்...ஹி ஹி...

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/09/2_26.html

// பெருகு மதவேழம் மாப் பிடிக்கி முன்னின்று,
இருகண் இளமூங்கில் வாங்கி, - அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான்கலந்த வண்ணன் வரை //

மிக அருமையான தீந்தமிழ்ப் பா. மிகவும் ரசித்தேன்.

// மத நீர் கண்ணில் பெருகும் ஆண் யானை ஒன்று //

பெருகு மதம்...கண்களில் இருக்காது.. :-)

இந்தச் செய்யுளில் இந்தக் காலத்தில் finger chipsஐ sauceல் முக்கிச் சாப்பிடுவது போல...இளமூங்கில் தண்டைத் தேனில் தோய்த்துத் தின்னக் கொடுக்கிறதாம் காதலும் காமமும் கூடிப் பிடியைப் பிடித்துக் களிக்க விரும்பிய களிறு. என்ன அருமையான் செய்யுள்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/09/blog-post_29.html

பட்டி விக்கிரமாதித்தன் கதைகள் படிச்சிருக்கீங்களா? கதைக்குள் கதைன்னு வரும். அதுமாதிரி இது தமிழ்மணத்துக்குள்ள தமிழ்மணமா :-)

உங்கள் எண்ணம் போல் வண்ணம் அமைய எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2006/09/blog-post_29.html

// கௌபி என்பது பற்றிய விளக்கம், படங்கள்...

இரண்டு/ மூன்று வகை

1. பிறவுண் நிறத்தில்,
2. பிறவுண்?? நிறத்தில் கறுப்பு புள்ளிகளுடன்
3. வெள்ளை நிறத்தில் கறுப்பு நிற கண் போன்ற மைப்புடன்

1. http://victoryseed.com/catalog/vegetable/peas/cowpea_whippor_small.jpg

2. http://en.wikipedia.org/wiki/Cowpea //

இதுதான் கெளபியா? இதத் தமிழில்...குறிப்பாகத் தெற்கில் தட்டாம்பயறு என்பார்கள். இதை வேக வைத்துச் சுண்டலாகச் சாப்பிடுவார்கல். புளியூத்தி குழம்பு வைப்பார்கள். மிகவும் புரதம் நிறைந்த உணவு.

// கானா பிரபா said...
வணக்கம் ராகவன்

கருப்பு வெள்ளைப் படம் 80 களின் ஆரம்பப்படம்.

மற்றைய கலர்ப் படங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்டது. அந்த சுவாமி வலம் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் தமிழ்வருடப்பிறப்பு உற்சவம். //

பிரபா...இலங்கைப் படங்களைப் பார்த்தாலே ஏதோ விட்ட குறை தொட்ட குறை நினைவுதான் எனக்கு. அங்கே போக வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்கனவே உண்டு. இந்தப் படங்கள் ஆசைத் தீயில் ஆவல் நெய்யைத்தான் ஊற்றுகின்றன. ம்ம்ம்ம்..சென்ற ஆண்டு முயற்சி செய்தேன். என்னுடைய மைத்துனன் ஒருவன் சிறுகாலம் கொழும்பில் இருந்தான். அப்பொழுது போயிருக்க வேண்டியதும்...ம்ம்ம் அவன் இப்பொழுது சென்னைக்கு வேறு வேலை தேடி வந்து விட்டான். வைகோ போனார்....பாரதிராஜா போனார்....மகேந்திரன் போனார் என்று படிக்கையில் பொறாமையாக இருக்கும். எனக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். கந்தனை நம்பிக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://ennam.blogspot.com/2006/09/blog-post_115960311492493966.html

வாழ்த்துகள் நண்பரே!

விடுதலையா! ம்ம்ம்ம்.... யோசிக்கிறேன்...இப்பொழுதே...

G.Ragavan said...

http://pesalaam.blogspot.com/2006/09/blog-post_19.html

//இன்னொரு பிரச்சனை அந்தப் பக்கம் ல, ள, ழ எல்லாம் கெடையாது. எல்லாம் ல-தான்.//

எந்தப் பக்கமுங்கோ? :) //

கொங்கு பக்கந்தான்..வேறெந்த பக்கம்!! மத்த பக்கமெல்லாம் ளகரந்தான். கன்னியாகுமரி, நாகர்கோயில் பக்கந்தான் ழ கேக்கலாம்.