Saturday, September 30, 2006

என்னுடைய பின்னூட்டங்கள் - அக்டோபர் - 2006

2006ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நான் இட்ட பின்னூட்டங்கள் இங்கு பதியப்பட்டுள்ளன.

268 comments:

1 – 200 of 268   Newer›   Newest»
G.Ragavan said...

http://iniyavaikal.blogspot.com/2006/10/19.html

ஞானவெட்டியான் ஐயா, இந்தப் பாடலை நான் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பி.சுசீலா அவர்கள் பாடிக் கேட்டிருக்கிறேன். ராமநாதன் அவர்கள் இசையில் டீ.எம்.சௌந்தரராஜன் பாடி இப்பொழுதுதான் கேட்கப் போகிறேன். ஆமாம். பாடலை இறக்கிக் கொண்டிருக்கிறேன்.

கலைமகளுக்கான இந்த நாளில் அருமையானதொரு தமிழ்ப் பாவைத் தந்தமைக்கு நன்றி பல.

G.Ragavan said...

http://oosi.blogspot.com/2006/09/tamil-actress-srividya-in-hospital.html

ஸ்ரீவித்யாவின் உடல்நலம் முன்னேறி குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://paraasaran.blogspot.com/2006/09/3.html

நல்லதொரு விளக்கம். கந்தரநுபூதி தீந்தமிழ் இறைநூல். இகபர சுகம் தாண்டி அநுபூதி நிலை தரும் செய்யுட்றொடர்.

இதற்கு எனக்குத் தெரிந்த வகையில் நானும் பொருள் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கீழுள்ள சுட்டியில் காணவும்.

http://iniyathu.blogspot.com

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/09/6.html

// செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே //

ரவி இந்தப் பாடலில் சிறப்பு "கிடந்து இயங்கும்" என்ற சொற்றொடரில் இருக்கிறது.

படி கிடப்படுதான். ஆனால் இயக்கம் இல்லாதது. அப்படியிருக்க கிடந்து இயங்க எப்படி முடியும்?

அதற்கு அடுத்த வரியில் விடை இருக்கிறது. "கிடந்து உன் பவழ வாய் காண்பேனே"

அடியாரும் வானவரும் அரம்பையரும் திருக்கோயில் வாயிலில் விழுந்து உன் பவழவாய் காண்பதற்குத் தோதாக நானும் படியாய்க் கிடந்து உன் பவழவாய் கண்டியங்குவேன்.

G.Ragavan said...

http://iniyavaikal.blogspot.com/2006/10/19.html

ஐயா பாடலைக் கேட்டேன். இரண்டு பாடல்களுக்கும் உள்ள வேறுபாடுகள் ராகம், தாளம், சங்கதி, குரல், கருவிகள், மெட்டு என்று பலவிதங்களில் வேறுபட்டன. ஆனால் மையமாய் நின்று இயங்கும் இயக்கும் பாவின் இனிமை குன்றாது சுவைத்தது. இந்தப் பாடலை அறியத் தந்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://njaanavelvi.blogspot.com/2006/09/33_28.html

ஐயா, இறைவன் எங்கோ உட்கார்ந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் வைத்து இயக்குகிறவன் என்பதல்ல நமது நம்பிக்கை. எங்கும் நிறைந்து எதிலும் உறைந்து இயக்குகின்றவந்தான் இறைவன். அனைத்தையும் கடந்து அனைத்திற்கும் உள்ளிருப்பதுதான் கடவுள் என்பதே தமிழ். நீங்களும் அதைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். மிகச் சரியான விளக்கம். ஆதாரம் இல்லாதவனுக்கு எந்த ஆதாரம் போதும்!!!!!!!! இதை விளக்கிக் கொண்டாலே போதும். விளங்குவார் யாரும் இல்லை என்பதே இன்றைய நிலை.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2006/10/blog-post_01.html

கைப்பு...புரியுதப்பா புரியுது..உமக்கு 25 வயசு ஆச்சு..அடுக்கடி படுக்கைய நனைக்கிறீங்க...அழுதுதான். ஆண்டவா ஆண்டவான்னு கதறிக் கதறிக் கும்புடுறீங்க...என்ன செய்ய....காலம் இப்பிடியே போய்க்கிட்டேயிருக்கே...புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சிரும். வருத்தப்படாதீங்க.

G.Ragavan said...

http://iniyavaikal.blogspot.com/2006/10/19.html

// ஞானவெட்டியான் said...
அன்பு இராகவன்,
மெல்லிசைக்கு உரித்தான இனிமை பற்றி ஒன்றும் கூறவில்லையே? //

ஐயா இரண்டு பாடல்களிலும் மெல்லிசையே பயின்று வந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ராமநாதன் இசையில் பாரம்பரிய இசைச்சங்கதிகள் நிறைய இருக்கின்றன. ரகுமான் இசையில் பாரம்பரிய இசை வடிவு இல்லாது மெல்லிசை வடிவு இருக்கிறது. மிகவும் மெல்லிய பாடல் அது. என்னிடம் இப்பொழுது இல்லை. தேடித் தருகிறேன். என்னை விட நீங்கள் சிறப்பாக வேறுபடுத்திட இயலும் என நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2006/09/2.html

உதய்...இந்தப் பதிவைப் படிச்சேன். ஒரு கேள்வி...இதெல்லாம் தங்கத் தமிழ்ப் பெண்களுக்கு மட்டுந்தான. உலக மாதர்கள் அனைவருக்கும் இல்லையே. நீங்க தெளிவாச் சொல்லீட்டா மத்த ஊர்ப் பொம்பளைங்க அவங்கவங்க வேலையப் பாப்பாங்க. அத்தோட இந்த மாதிரி தமிழ்ப் பெண்களைப் பெருமை படுத்துறவங்களுக்குத் தமிழ் நாட்டுல என்னாகும்னு தெரியுந்தானே....

இல்ல இது ஒலகளாவிய பெண்களுக்குப் பொருந்தும்னு சொன்னீங்கன்னா...ஒலக மக்களுக்குக் கொஞ்ச நாளைக்குத் திருவிளா....துணிகிணி எடுத்துக் கொண்டாடிக்கிருவாங்க. நீங்க தெளிவாச் சொல்லீர்ரது நல்லதுன்னு எனக்குத் தோணுது. ஹி ஹி

G.Ragavan said...

http://manggai.blogspot.com/2006/10/growing-old.html

எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு என்று எழுதியிருக்கிறார் கவியரசர். எல்லாருக்கும் அது பொருந்தும் போல. கொஞ்சம் சகிப்புத்தன்மை இருந்தாலே நல்லபடியாக ஒன்றாக இருக்கலாம். பிரிவு என்பது கூட வேறு வழியே இல்லை என்ற நிலையில் மட்டுமே வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/005.html

// கைப்புள்ள said...
இந்தப் பாடலை நான் இப்போது தான் முதன் முறையாகக் கேள்வி படுகிறேன். பாடல் வரிகள் அருமை. //

இந்தப் பாட்டு கேக்கவும் ரொம்ப நல்லயிருக்கும். இத உங்க எல்லார் கிட்டயும் பகுந்துக்கு ஆசையா இருக்கு. ஆனா எப்படீன்னு தெரியலை. ஏதாவது வழி இருக்கா?

// பல நாட்களாக எனக்கும் திரையில் ஒலித்த ஒரு முருகன் பாடலைப் பற்றிய சந்தேகம் உள்ளது. எனக்குப் பாடல் வரிகளும் நினைவில்லை. நடிகை சரிதா திருநீறு அணிந்து "முருகா முருகா" என்று பாடுவார். இனிமையான பாடல். சிறுவயது நினைவுகளில் இப்பாடலும் ஒன்று. படம் பெயரும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்களேன். //

சரிதாவா? முருகன் பாட்டா? கீழ் வானம் சிவக்கும்ல சிவாஜியும் சரிதாவும் பாடுற பாட்டு ஒன்னு உண்டு.
"கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே முருகா முருகா" இப்படிப் போகும் அந்த பாட்டு.

வேறென்ன முருகன் படத்துல சரிதா நடிச்சிருக்காங்க....தெரியலையே...

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/005.html

// ENNAR said...
நான் கண்டேன் கண்ணாரக்கண்டேன் முருகனை அந்த காலத்திலே கலப்புத்திருமணம் செய்தவன் வாத்தியாரையே கண்டித்தவன் அப்பனுக்கே பாடம் சொன்ன புத்திரன். அப்பனை பாடும்வாயால் அவன் மகன் சுப்பனைப் பாடுவேனோ என்றவரைப் பாட வைத்தவனை //

கண்டோம் கண்டோம்
கண்ணுக்கும் கருத்தும்
இன்னிய கண்டோம்
உண்டோ உண்டோம்
தண்டமிழ் அமுதினை
அன்போடு உண்டோம்

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/005.html

// நாமக்கல் சிபி @15516963 said...
படம் அருமை இராகவன்.

நல்லதொரு நாளில் நல்லதொரு பாடல். நல்லதொரு படம்.

முருகனருள் முன்னிற்கும். //

நன்றி சிபி. பாடல்களின் ஒலி வடிவத்தைப் பகிர்ந்து கொள்ள ஏதேனும் வழியுண்டோ?

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/006.html

குமரன், உங்களையும் இந்த சீறிய பணியில் இணைத்துக் காண்பதில் பெருமகிழ்ச்சி.

புனிதாஸ்ரீ இயற்றிய இந்த சிறிய பாடலை சிறப்பாகப் பாடியிருக்கிறார் ஏசுதாஸ். இன்னமும் ஸ்ரீ எழுத உங்களுக்கு வரவில்லையா?

G.Ragavan said...

http://chozanaadan.blogspot.com/2006/10/17.html

வாருங்கள் சோழநாடன். இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள். நட்சத்திர வாரத்திற்கு எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://iniyavaikal.blogspot.com/2006/10/22.html

அநுபூதி நிலை என்பது இறைவனோடு ஒன்று படுவது. சொர்க்கம் நரகம் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அருணகிரியார் அநுபூதியார். அவர் அருளிய கந்தரநுபூதியை சூலமங்கலம் சகோதரிகள் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார்கள். கண்டிப்பாகக் கேட்க வேண்டியது. இதை அனைவருக்கும் தந்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/09/10-2.html

ஓம் என்பதற்கு விளக்கம் நமக்கு விளங்கியிருக்குமானால் நான் இப்படியா இருப்போம்! அகர உகர மகாரச் சேர்க்கை என்பது சைவ சித்தாந்தம். குடிலை என்று இதற்குத் தமிழில் பெயர்.

ஓங்காரத்துக்குப் பல விளக்கங்கள் பல பொழுதுகளில் பல சமயங்களில் வழங்கப்பட்டன. இருந்தாலும் தமிழின் சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது! அகரம் என்பது துவக்கம். அகரத்தில்தானே தமிழ் துவங்குகிறது. ஆகையால் படைத்தல். உகரம் என்பது மூன்று அடிப்படைத் தேவைகள். உணவு, உடை, உறைவிடம். இவை காத்தலின் பயன்கள். மகரம் தமிழ் எழுத்துகளில் இறுதியானது. ஆக முடிவு. முத்தொழிலும் தந்தொழிலாய்ச் செய்யும் ஆதிசிவனே ஓங்காரம். ஓங்காரம் என்பது ஒலியும் ஒலியின்மையும் கூடியது. அதாவது உளது இலது. அதை ஒலி வடிவில் காட்டுவது சேவல். ஒளி வடிவில் காட்டுவது மயில். அதன் விளைவாகிய ஞானம் வேலின் வடிவம்.

எஸ்.கே. நான்முகனை ஆறுமுகன் குட்டிய கந்தபுராணப் பாடல் நினைவுள்ளதா?

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/006.html

ஆகா ஸ்ரீ வந்துவிட்டதா குமரன். அருமை. அருமை. :-)

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2006/10/21.html

குமர வருக
தமிழ்ச் சமர வருக
வெற்றித் திருநாளில் வருக
அன்னை புகழ் சிறக்க வருக
வருக வருக வருக

நல்லதொரு நாளில் நல்லதொரு பாடலும் விளக்கமும்.

ருசித்து ருசித்துப் பாடிய பாவலன் நோவிலன் ஆயினன். அந்தப் பாவலன் நாலவன் பொருள் காட்ட காவலன் பெயருடைக் குமரன் வந்தீர்.

குமரன் இங்கு ஒரு ஐயம். பாடலைப் படிக்கையில் எழுந்த எண்ணம் உங்கள் விளக்கத்தோடு சற்று வேறுபடவே சொல்ல விழைகிறேன்.

புரிசடையோன் புடையாள் உடையாள் என்பதற்கான விளக்கமே அது.

புரிசடையோன் - நீள்முடிகளைப் பிரித்து அரித்துக் கூட்டிய சடைமுடியோனுக்கு

புடையாள் - துணை கொண்டவளாக (புடை சூழ என்ற சொற்றொடரை நினைவிற் கொள்க)

உடையாள் - உடையவளே

புரிசடையோன் புடையாள் உடையாள் - இப்படித் தோன்றுகிறது. அதை நீங்கள் அறியக் கூறிவிட்டேன்.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2006/10/21.html

குமர வருக
தமிழ்ச் சமர வருக
வெற்றித் திருநாளில் வருக
அன்னை புகழ் சிறக்க வருக
வருக வருக வருக

நல்லதொரு நாளில் நல்லதொரு பாடலும் விளக்கமும்.

ருசித்து ருசித்துப் பாடிய பாவலன் நோவிலன் ஆயினன். அந்தப் பாவலன் நாலவன் பொருள் காட்ட காவலன் பெயருடைக் குமரன் வந்தீர்.

குமரன் இங்கு ஒரு ஐயம். பாடலைப் படிக்கையில் எழுந்த எண்ணம் உங்கள் விளக்கத்தோடு சற்று வேறுபடவே சொல்ல விழைகிறேன்.

புரிசடையோன் புடையாள் உடையாள் என்பதற்கான விளக்கமே அது.

புரிசடையோன் - நீள்முடிகளைப் பிரித்து அரித்துக் கூட்டிய சடைமுடியோனுக்கு

புடையாள் - துணை கொண்டவளாக (புடை சூழ என்ற சொற்றொடரை நினைவிற் கொள்க)

உடையாள் - உடையவளே

புரிசடையோன் புடையாள் உடையாள் - இப்படித் தோன்றுகிறது. அதை நீங்கள் அறியக் கூறிவிட்டேன்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/09/10-3.html

எத்தனையெத்தனை செய்திகள். உயிரின் தொடக்கத்தினை விளக்க எத்தனையெத்தனை செய்திகள். படிப்பதோடு நிறுத்திக் கொள்ளத்தான் இந்தப் பதிவினைப் பொறுத்த வரையில் நான் செய்யக் கூடியது.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/09/10-4.html

எஸ்.கே. சின்னஞ்சிறு குழந்தை பிறந்து அதாவது ஈன்று புறம் வந்து சான்றோகாமல் நன்னெறி நல்காமல் கொல்லன் வடித்துக் கொடுத்த வேலைக் காணாமல் அழகுறு மாதர் விழிகள் என்னும் வேலைக் கண்டு அதனையே சிந்தையில் கொண்டு எந்நாளும் அதையே சிந்தையில் உண்டு உழலும் ஒவ்வொரு இளைஞனும் ஒரு பொழுதேனும் கந்தனை நமது சொந்தனைக் கொண்டாடினால் வாழ்நாளில் திண்டாடினான் என்ற நிலை வராது போகும். உண்மை. உண்மை. உண்மை.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/005.html

// Johan-Paris said...
ராகவா!
பாடலும் படமும் அருமை!
செந்தூர் மூலவர் சந்தணக்காப்பில் இப்படியா??, இருப்பார். அவர் அழகர் தான் ஐயமில்லை.
செந்தூர் சென்றும்;இவ்வளவு துல்லியமாகப் பார்க்கக் கிடைக்கவில்லை.
நன்றி!
யோகன் பாரிஸ் //

யோகன் ஐயா...நான் பிறந்தது தூத்துக்குடி. அதன் வழியாகத்தான் திருச்செந்தூர். சிறுவயதிலிருந்தே பலமுறை சென்ற ஊர். கண்ட செந்தில். உண்ட உப்பு. திருச்செந்தூர் முருகனின் சிறப்புகள் ஒன்றிரண்டு எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன்.

1. முருகன் கையில் மலருண்டு. வாழ்வை மலர வைப்பேன் என்று உறுதி சொல்லும் வகையில் மலரோடு நிற்கின்றானாம்.

2. கோயில் இருப்பது சந்தன மலைக்குள்ளே. ஆனால் இன்று மலை குறைந்து கோயில் பெருகி விட்டது. ஆனாலும் கோயிலுக்குள்ளே ஆங்காங்கு சந்தன மலையைக் காணலாம். வள்ளிகுகையும் சந்தனமலை என்னும் நுரைக்கல் குகைதான்.

3. திருச்செந்தூர் வியாழன் தலம்.

4. செந்தில் - செந்து இல். பிறவிக் கடலில் உழலும் உயிர்கள் அனைத்தும் சேர வேண்டிய இல்(லம்). அதனால்தான் கடற்கரையில் கோயில்.

5. பன்னீர் இலையில் திருநீறு தருவது பழைய வழக்கம். இன்றைக்கெல்லாம் அது துட்டுக்குத்தான் கிடைக்கும். ஆனால் கந்தனருள் அன்பிற்கே கிடைக்கும்.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/005.html

// வெற்றி said...
இராகவன்,
பாடலும் படமும் அருமை. இப் பாடலை இதுவரை அறிந்திலேன்.மிக்க நன்றி. //

வெற்றி இது மிகவும் இனிய பாடல். பாடலைப் பகிர்ந்து கொள்ள நல்ல வழி கிட்டட்டும். பிறகு கேட்டுப்பாருங்கள். அடடா!


// கைப்புள்ள said...
//"கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே முருகா முருகா"//

அடடா! இதே பாட்டு தாங்க. ரொம்ப நன்றிங்க. //

எனக்கெதுக்குங்க நன்றி. இன்னைக்கு இந்தப் படத்த அம்மாவோட பாத்தேன். சிவாஜியும் சரிதாவும் போட்டி போட்டுட்டு நடிச்சிருப்பாங்க.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/09/blog-post_30.html

:-)விடுதலை விடுதலை விடுதலை....அப்பா ஒருவழியா கிடைச்சிருச்சு.

அப்ப இன்னைக்கு இரவே நான் எழுதுன விடுதலையைப் போட்டுற வேண்டியதுதான்.

சிறில், இந்தக் கதையில் நான் மிகவும் ரசித்தது கடைசிப் பகுதிதான். நச்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/10/blog-post.html

இவ்வளவு வெவரமாக் கடைக்கு எங்கள எல்லாம் விட்டுட்டுப் போறதே தப்பு....போனதோட இல்லாம பாத்தது என்ன...வாங்குனது என்ன...கேட்டது என்னன்னு...சாப்டது என்னன்னு முழு வெவரம் வேற. ம்ம்ம்...வாழக வளர்க.

நீங்க சொல்ற மாதிரி பிடிச்ச கடைகள் சிலது எனக்கும் இருக்கு. தூத்துக்குடியில இருக்குற மார்க்கெட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னே தெரியாது. சும்மா உள்ள போயிட்டு வரனும். ஒரு சந்தோசம். அப்படியே உள்ள இருக்குற மீன் மார்க்கெட்டையும் எட்டிப் பாத்துறனும். :-)

புத்தருங்கள்ள சைவ அசைவர்கள் இருக்காங்க. சிக்கிம்ல இருக்குற கேங்டாக்குல ஒரு மடாலயம். ரும்டெக் மடாலயம். அங்க போனா செவசெவன்னு உருண்டையா இருக்கு. நம்மூர்ல நெல்லிக்கா எலந்தப் பழம் தெருவுல விப்பாங்களே...அந்த மாதிரி. அந்த செவசெவ உருண்டைகளை ஒரு தொன்னையில் போட்டு இன்னமும் செவசெவன்னு இருக்குற கொழகொழக் குளுமத்த ஊத்தி வித்தாங்க. மாட்டுக்கறி உருண்டையாம். விடுங்கடா சாமீன்னு...மடத்துல இருக்குற சாப்பாட்டுக்கடைக்குப் போனோம். நானும் என்னோட நண்பனும். நான் வெஜிடேரியன் சௌமியன் கேட்டேன். அவன் பீஃப் மோமோ கேட்டான். என்னால சௌமியனைச் சாப்பிட முடியலை...நாலு வாய் தின்னுட்டு நாறுதுன்னு வெச்சுட்டேன். "இது நாறுதுன்னா இதென்ன சொல்வ"ன்னு கேட்டுக்கிட்டே பீஃப் மோமோவை மூக்குக் கிட்ட நீட்டீட்டான் படுபாவி....உவ்வே....எந்திரிச்சி ஓடி வெளிய வந்துட்டேன். மதியம் வரைக்கும் எதையும் திங்க முடியலை. பீஃப் அப்படீங்கறதுக்காக இல்லை. ஆனா அந்தப் பக்கத்து வாடை....இப்ப நெனச்சாலும் நடுங்குது ஒடம்பு.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/10/blog-post.html

இலவசமே கொத்சே....மீண்டு வந்தாயா...மீண்டும் வந்தாயா...இலவசமாய் அனைவரும் பரிசு தரும் வேளையில் இலவசமாய்ப் பதிவு தருகின்ற கலியுகக் கர்ணனே! அண்ணா எழுதிய கட்டுரையை தன் கட்டுரையில் இணைத்த வலையுலக கங்கை அமரனே!

கச்சேரி என்றால் பெங்களூரில் நீதிமன்றந்தான். தமிழில் அது பாட்டுக்கு மட்டும் வழங்கப்படும் காரணம் நான் அறியேன்.

ஆனால் ஒன்று...காலத்திற்குத் தக்க மாற வேண்டிய ஒன்று பாரம்பரிய இசை. இல்லையென்றால் அவ்வளவுதான்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/10/145.html

படமெல்லாம் நல்லா வந்திருக்கு....அதுல பாருங்க...ஒங்களப் படம் பிடிக்கிறத ஒங்களுக்குப் பின்னாடி நின்னுக்கிட்டே அந்தக் கோவேறு கழுத பாக்குதே! பயங்கர சிரிப்புங்க :-)))))))))))))) கோகவுக்கு பயங்கர டைமிங் சென்ஸ்.

// கைப்புள்ள said...

தள, //

கைப்பு...தளன்னா இலைதளைங்க..தலன்னா தலை. நீங்க என்ன சொல்ல வர்ரீங்க?

G.Ragavan said...

http://kuralvalai.blogspot.com/2006/10/blog-post_02.html

இந்தப் பதிவுக்குச் சொல் ஒரு சொல்தான் ஊக்கமா :-) மிக்க நன்றி.

சில சொற்களை நேரடியாக மொழிமாற்றம் செய்ய முடியாது. இணையாகத்தான் சொற்களைத் தேட வேண்டும். இரவுக் கலைஞன் என்று கூடச் சொல்லலாம். ஆனால் படத்தின் கதைக்குப் பொருத்தமாக இல்லையே. ரேடியோ மாமான்னு பேர் வைக்கலாம். தப்பில்லை.

ராபின் வில்லியம்ஸ் எனக்கும் பிடிக்கும். முன்பெல்லாம் நகைச்சுவையாக நன்றாக நடிப்பார். இப்பொழுது இப்படி. ஏனிப்படி!

கதை கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. கடைசியில் என்னதான் சொல்ல வருகிறார்கள்?

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2006/10/blog-post.html

ஜோசப் சார். எனக்கு ஒரு கந்தரநுபூதி வரி நினைவிற்கு வருகிறது. நீங்கள் சொல்லும் வரிகள் வேதாகமத்தில் வருகின்றவா? பொதுவாகவே எல்லாவூர் வேதங்களிலும் ஒரே மாதிரியான நல்ல கருத்துகள் சொல்லப்பட்டிருக்கும்.

"அறிவொன்று அறவந்து அறிவார் அறிவில்" என்பது அநுபூதிச் செய்யுள். நீங்கள் சொல்லியிருப்பதும் அதுதான்.

அறிவொன்று அறவந்து அறிவார் அறிவில்
பிரிவொன்று அறநின்ற பிரான் அலையோ
செறிஒன்று அறநின்று இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே

இதுக்கு விளக்கம் எழுதினால் அதுவே ஒரு பதிவாகும். குமரன், எஸ்.கே போன்றவர்கள் எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/10/5.html

அப்பப்பா! படிக்கவே மனம் துன்பப்படுகிறது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதையும் பேராசை பெருநட்டம் என்பதையும் உணர வேண்டும். அடுத்தவரை வீணில் குற்றம் சொல்லிக் கொண்டேயிருந்தால் நாம் ஒரு நால் ஒதுக்கப்பட்டு விடுவோம். அதுதான் இவர் வாழ்விலும் நடந்திருக்கிறது. ஆண்டவா! வயதான காலத்தில் அவருக்குக் கொஞ்சம் மன அமைதியைக் கொடு.

G.Ragavan said...

http://hollywoodpaarvai.blogspot.com/2006/10/1.html

சம்மதம்...சம்மதம்...சம்மதம்...எழுதுங்கய்யா எழுதுங்க....ஆங்கிலப் படங்களுக்கும் நல்ல அறிமுகம் கிடைக்குமே!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2006/10/blog-post_03.html

எப்படியோ திரும்பவும் வலைப்பூவுக்கு வந்துட்டீங்க...நல்லது. வாரத்துக்கு ரெண்டு மூனு போட்டா போதும். இது தொடரட்டும். என்னுடைய வாழ்த்துகள்.

அது சரி...வலைப்பூ பெறந்த நாளுக்கு இனிப்பு விநியோகம் இல்லையா?

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/10/145.html

// Dev said...

ஜி.ரா,

அது தள தாங்க...
தல = தலை
தள = தளபதி //

ஐயோடா! வலைப்பூ மக்களே....இதுக்கெல்லாம் நாம் பொறுப்பு இல்லீங்கோவ்............

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/10/blog-post.html

// இலவசக்கொத்தனார் said...

அடடா, தமிழ் சும்மா துள்ளி விளையாடுதே...:) //

என்ன செய்ய கொத்சு..துள்ளித் துள்ளி விளையாட அள்ளி அள்ளித் தருகிறான் கந்தன்.

// தமிழில் அது பாட்டுக்கு மட்டும் இல்லைங்க. நீதிமன்றம் என்ற பொருளில் வழங்கி வந்திருக்கு. இப்போதான் அப்படி இல்லை. //

அப்படியா...தெரிஞ்சிக்கிட்டேன்.

// //ஆனால் ஒன்று...காலத்திற்குத் தக்க மாற வேண்டிய ஒன்று பாரம்பரிய இசை. இல்லையென்றால் அவ்வளவுதான். //

சரி. என்ன மாறணும்? அதைச் சொல்லுங்க. அப்படி மாறிக்கிட்டே இருந்தா அது தற்கால இசையாத்தானே இருக்கும்? பாரம்பரிய இசையா இருக்குமா? //

பாரம்பரியம் என்றால் மாறாதிருப்பது அன்று. இன்றைக்கு இருக்கின்ற பாரம்பரிய இசை என்பது நேற்று இருந்திருக்கலாம். ஆனால் முந்தாநேற்று இல்லை என்பதே உண்மை என்பதை நாம் உணராமல் போகலாகாது. பாரம்பரியமாக வந்த மகர, சகோட, யாழ்களும் கொட்டு, செண்டை, சிறு, பெரும் பறைகளும் கொம்பு, முழவு போன்ற ஊதிகளும் எங்கே இன்று. அது மாறித்தான் இது வந்திருக்கிறது என்பது உணரப்பட்டால் இது மாறி எது வரும் என்ற எதிர்பார்ப்பு வரும். குரல், விளி, துத்தம் போன்றவை தொலைந்தனவல்லவா...அது போல் இதுவும் மாற வேண்டும். மாற்றம் உலக தத்துவம். மாறாதது தவிர மற்றவையே நாறாதது.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/10/blog-post.html

// இராமநாதன் said...
இப்பதிவு குமுகத்தில் நிலைபெற்றுள்ள பல பொய்யான கட்டுமானங்களை தவிடு பொடியாக்கும்விதமாக காரத்துடன் எழுதப்பட்டிருப்பதால் பலநூற்றாண்டுகளாய் மாறாக் கறைகளாய் படர்ந்துகிடக்கும் பல விழுமியங்கள் இனி கேள்விக்குட்படுத்தப்படும் என்பது திண்ணம்.
ஆகவே இத்தகைய உயர்ந்த பதிவு தமிழ்ப்பதிவுலகை அடுத்த நிலைக்கு, புதியதொரு விவாதத்தளத்திற்கு, நுட்பமான ஒரு கருத்துக்களத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று கூறியிருந்தேன். இதில் உமக்கு என்ன புரியாமல் போனதென்று இங்கு குலவை கட்டுகிறீர் கொத்தனாரே? //

யய்யா இராமநாதா...ரெண்டு நாளா வயித்துவலியா? சாப்பாடு கொள்ளலையா? சித்தரத்தையும் அதிமதுரமும் சேத்துரசி பால்ல கலந்து குடிச்சா சரியாப் போயிரும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post.html

எனக்கு ராத்திரி முழுக்க உக்காந்து படிக்கிறது பிடிக்கவே பிடிக்காது. ரொம்ப முக்கியமான பரிச்சைக்குக் கூட பதினோரு மணிக்கு மேல உக்காந்து படிச்சதில்லை. அஞ்சு மணிக்கு முன்ன எந்திரிச்சதில்ல. அதுனால டைகரு லயன் பிஸ்கோத்தெல்லாம் தெரியாதப்பா!

G.Ragavan said...

http://mathy.kandasamy.net/musings/2006/10/01/539

மதி, சாணியிட்டு மெழுகுதல் தமிழகத்திலும் உண்டு. மண்தரை வீடுகளில் அந்தக் காலத்தில் சாணி மெழுகல்தான். எனக்கும் சாணி மெழுக்குத் தரை மிகவும் பிடிக்கும்.

அத்தோடு சாணியை நீரில் கரைத்து வீட்டு வாயிலில் தெளிப்பதும் உண்டு. அது மண்ணிற்குப் புதுநிறம் தருவதோடு ஒருவித பொலிவிருக்கும்.

திருச்சியில் இருந்த பொழுது (சுந்தர் நகர். ரங்கா நகர் பக்கத்தில் இருக்கிறது.) பக்கத்து வீட்டில் மாடு இருக்கும். அவர்கள் சாணியில் வாசல் தெளிப்பார்கள். நாங்களும் அம்மாவை நச்சரித்தோம். சரியென்று ஒத்துக் கொண்டார்கள். ஆனால் நாங்கள்தான் சாணி எடுக்க வேண்டும். வீட்டுப் பக்கத்தில் மாடுகள் எதுவும் போனால் சாணி போடுகிறதா என்று ஆவலோடு காத்திருப்போம் :-)))))))))))) சாணி பிறக்கிக் கொண்டு வந்து வாசலோரத்தில் குமிப்போம். அம்மா அதைத் தண்ணீரில் கரைத்துத் தெளிப்பார்கள். இன்னமும் அந்த வீட்டு வாயிலும் சாணித்தரையும் நினைவில் இருக்கிறது.

G.Ragavan said...

http://malainaadaan.blogspot.com/2006/09/blog-post_27.html

// மலைநாடான் said...
ராகவன்!

உங்களுடைய இந்தக்கருத்தே எனக்கும் உள்ளது. கருத்துக்கு நன்றி!

உங்கள் புதிய படத்தில் ரொம்ப அழகாக உள்ளீர்கள்.:)) //

நன்றி மலைநாடன். எல்லாப் புகழும் முருகனுக்கு. :-)

இந்தப் பதிவில் பலருடைய கருத்துக்கு பதில் சொல்ல விருப்பந்தான். ஆனால் நீங்களே சொல்லி விட்டீர்கள். :-)

G.Ragavan said...

http://hollywoodpaarvai.blogspot.com/2006/10/7-harry-potter.html

இதை எப்படி மறுபக்கம் என்று சொல்ல முடியும். அவர் ஒரு நடிகர். அவ்வளவுதான். ஹாரிபாட்டரில் நடிப்பார். வாய்ப்பு கிடைத்தால் லாரி ஒட்டுனாராகவும் நடிப்பார். அதுதான் சரி.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2006/10/22222.html

:-) நல்லாயிருக்குங்க நம்பரு. ஆக முப்பத்தெட்டு பேரு பாத்திருக்காங்க. சூப்பருங்க.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2006/10/blog-post.html

ஆகா! ரொம்ப நல்லாயிருக்கு. கலைங்குறது எது கிடைச்சாலும் அத வெச்சி முன்னேறும். பாருங்க...தாள்ள எவ்வளவும் அழகா செஞ்சிருக்காங்க. வண்ணத்துப்பூச்சிங்க பறக்குறதும், அருவி விழுகுறதும்...விழுகுற மனிதனைப் பிடிக்கிறதும்...அப்பப்பா!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/10/blog-post_04.html

டீச்சர், பெங்களூர்ல ஊருக்கு வெளிய ஓசுருக்குப் பக்கமா கொஞ்சம் பொறம்போக்கு இருக்குது. நீங்க இந்த போட்டோவ எடுத்துக்கிட்டு ஒடனே பொறப்பட்டு வாங்க....துளசியாஸ்ரமம் தொடங்கீரலாம். துளசிமாதா, கோபாலானந்தா, ராகவானந்தா, தொணைக்கு இளவஞ்சியானந்தாவையும் கூப்பிட்டுக்கலாம். :-)

உண்மையிலேயே அந்த ஒளிப் பொட்டுகள் மிக அழகு. மிகவும் அழகு. அப்படியே வெளிச்சத்தை நீராகக் கரைத்து மேலாகத் தெளித்தாற்போல. ஆகா...ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் இருளில் ஒளிரும் நட்சத்திரங்களையும் நிலாவையும் படுக்கையறையில மாட்டி வெச்சேன். சகோதரியரின் கொழந்தைங்க..."மாமா வானத்தையே வீட்டுக்குள்ள கொண்டாந்துட்டாங்க"ன்னு ஒரே கூச்சல். கும்மரிச்சம். :-)

G.Ragavan said...

http://vasanthanin.blogspot.com/2006/10/blog-post.html

எழுத்தாளர்களுக்கு மலையாளமும் வங்கமும் தரும் மதிப்பே தனி. வீண்கூச்சல்களும் எழுத்தாளர்கள் போடுவதில்லை. கருத்தியல் வாதங்கள் ஆனால் இருக்கும்.

தகழியின் செம்மீனைத் தமிழில் சுந்தர ராமசாமியின் உதவியோடு வாசித்திருக்கிறேன். ஒன்பதாவது...இல்லை பத்தாவது படிக்கையில். அந்த வயதில் நான் படித்து என்னைக் கவர்ந்த இரண்டு நாவல்கள் செம்மீனும் பொன்னியின் செல்வனும்.

ராமு கரியத்தின் இயக்கத்தில் திரைப்படமாகவும் பார்த்திருக்கிறேன். இன்று கூட தொலைக்காட்சியில் "மானச மைனே வரு" பாடலைப் பார்த்து ரசிக்க நேர்ந்தது.

சிலதுகள் காலம் மாறினாலும் ருசியாகத்தான் இருக்கிறன. கருவாடு போல ஊறுகாய் போல தேன் போல.

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2006/10/blog-post_04.html

உண்மைதான் ஜோசப் சார். அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டால் பெருகும். துன்பம் பகிர்ந்து கொண்டால் குறுகும். ஆகையால்தான் ஒருவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவது பெருமைக்குரியதாக கருதப் படுகிறது.

அப்படிக் கொடுப்பதையும் "கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்" என்கிறார் அருணகிரி. அதாவது நம்ம குடுக்குறோம்னு நெனச்சுக் குடுக்கக் கூடாதாம். இறைவன் கொடுக்கிறான்னு நெனச்சுதான் எதையும் குடுக்கனுமாம்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/006.html

// குமரன் (Kumaran) said...
இராகவன். தற்போதெல்லாம் தங்களின் பின்னூட்டங்களில் எழுத்துப் பிழை மிகுதியாக (ஒன்றிரண்டு தான். ஆனால் அது உங்கள் பின்னூட்டம் என்பதால் எனக்கு மிகுதியாகத் தெரிகிறதோ என்னவோ?!) இருக்கிறது. இங்கும் பாருங்கள். 'சீரிய' என்று சொல்ல நினைத்துச் 'சீறிய' என்று இட்டிருக்கிறீர்கள். :-) நான் எப்போதோ ஒரு முறை உங்களைச் சீறிய நிகழ்ச்சியை நீங்கள் இன்னும் மறக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. ;-) //

:-))))))))))))))))))))

என்ன செய்வது குமரன்...கற்றது கைமண்ணளவு. எப்படியோ எழுத்துப் பிழைகள் வந்து விடுகின்றன. தெரிந்து செய்கிறேனா...தெரியாமல் செய்கிறேனா என்றே தெரியவில்லை. குமரன் திருத்தட்டும்.

G.Ragavan said...

http://nganesan.blogspot.com/2006/10/blog-post.html

அந்தத் திருமலை நிந்தி திருமலையின் காதுகளுக்குப் போய் மூன்று நாள் கூண்டுத்தண்டனையும் பெற்றாராம் சுப்ரதீபக் கவிராயர். அதாவது கூண்டில் ஏற்றித் தொங்க விடுவது.

இந்தச் சுப்ரதீபக் கவிராயரிடம்தான் வீரமாமுனிவர் தமிழ் கற்றதாகக் கருதப் படுகிறது. தேம்பாவனி கூட இவரால் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதே காலகட்டத்தில் பாண்டி நாட்டில் எழுந்த இரண்டு சீரிய நூல்கள் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் மற்றும் கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் அருளியது.

G.Ragavan said...

http://sinthipoma.blogspot.com/2006/10/blog-post.html

கோயிலிலே மட்டுந்தானா தாண்டவக்கோனே
நீ எங்கேயும் இருப்பதுண்டு தாண்டவக்கோனே
மதியாதார் தலைவாசல் தாண்டவக்கோனே
நாங்கள் மறுத்திடுவோம் வெறுத்திடுவோம் தாண்டவக்கோவே
எங்கள் கையால் உருட்டி வைத்தல் தாண்டவக்கோனே
நீ எங்களுக்கும் சொந்தமடா தாண்டவக்கோனே

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/10/blog-post.html

நன்றாக வந்திருக்கிறது. அருமை.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/10/blog-post_03.html

அவர் பேசியது தமிழ் என்று புரிந்து கொண்டு அமெரிக்கப் போலீஸ் எதிர்வினை காட்டியதாக நினைக்கவில்லை.

வேண்டுமென்றால் இப்படியிருக்கலாம். தமிழ் பேசுகையில் நடுநடுவில் ஆங்கிலம் கலந்து பேசியதால் சொல் ஒரு சொல் அமெரிக்கக் குழுவினர் கடுப்பாகி இந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம். இன்று பெங்களூரில் கடையடைப்பு என்பதால் அமெரிக்க ரிப்போர்ட் இன்னும் கையில் கிடைக்கவில்லை. :-))))

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2006/10/blog-post_04.html

என்னது காட்டன் பட் காதுக்குள்ள போடக்கூடாதா? அப்புறம் எப்படி அழுக்கெடுக்குறது? ஹேர்ப்பின் தான் பெஸ்ட் :-)

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2006/10/blog-post.html

பிரபா, ஓபெரா ஹவுசுக்குள் இப்படியொரு அழகான அரங்கமா...பார்க்கவே சுகமாக இருக்கிறது. அங்கும் என்றாவது பாட்டு கேட்க வேண்டும்.

நிழச்சியை நேரில் பார்ப்பது போன்ற வருணனை. மிகச் சிறப்பு.

அதிசய ராகம் மெல்லிசை மன்னர் இசையல்லவா. சரி. வயதில் மறந்திருக்கலாம். விழியே கதையெழுது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

விஸ்வநாதனும் இளையராஜாவும் மிகவும் நட்பும் உரிமையும் பாராட்டுகிறவர்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏசுதாஸ் வாயிலும் இப்பொழுது வந்து விட்டது.

மஹதியும் நல்ல குரல்வளம் உடையவரே. சுஜாதாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா! காயத்ரி படத்தில் வரும் "காலைப் பணியில் ஆடும் மலர்கள்" பாட்டொன்று போதுமே.

பெண்ணாளே பெண்ணாளே பாடலில் முதன்மைக் குரல் பி.லீலாவுடையது. அவருக்கு மாற்றாக அன்று யார் பாடினார்கள். பெண்ணாளே பெண்ணாளே கறிமீன் கண்ணாளே....சலீல் சௌத்ரியின் முதல் மலையாளப்படம். செம்மீன்.

G.Ragavan said...

http://chennapattinam.blogspot.com/2006/10/blog-post.html

ராக்கோழியா ஊரு சுத்தீருக்கீங்க.

சின்ன வயசுல சென்னைக்கு லீவுக்கு வருவோம். அப்பல்லாம் இருட்டுன பெறகு டிங்கு டிங்கு டிங்கு டிங்குன்னு அடிச்சிக்கிட்டு குல்பி விப்பாங்க. அப்பத்தைய பேரு சேட்டைசு. சேட்டுங்க விரும்பிச் சாப்பிடுற ஐசுன்னு அப்படியொரு பேரு. வெட்டி எலைல வெச்சிக் குடுப்பாங்க.

அதே மாதிரி ராத்திரி வேளைகள்ள டி.நகர் பிரில்லியண்ட் டுட்டோரியல் பக்கத்துல இருக்குற கையேந்திபவன் மெளகா பஜ்ஜி. ஷ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!

மத்தபடி ராத்திரியெல்லாம் ஊரு சுத்தினதில்லைங்க.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2006/09/blog-post_25.html

அலைபேசீங்குறது எதுனால? பொருத்தமா இருக்கும்னு தோணலை. தொழில்நுட்பத்த வெச்சிப் பாத்தா எல்லாத் தொலைபேசிகளும் அலைபேசிகள்தான். செல்லிடைபேசி என்று கூட சிலர் சொல்கிறார்கள். கைத்தொலைபேசி எனலாம். அல்லது செல்லுமிடமெல்லாம் பேச உதவும் செல்லிடப்பேசி அல்லது செல்பேசி என்றும் சொல்லலாம்.

G.Ragavan said...

http://chennapattinam.blogspot.com/2006/10/blog-post.html

// அருள் குமார் said...
//ராத்திரி வேளைகள்ள டி.நகர் பிரில்லியண்ட் டுட்டோரியல் பக்கத்துல இருக்குற கையேந்திபவன் //

ராகவன், இது பத்தி ஒரு தனிப்பதிவே போடலாம் :) //

போடுங்கய்யா...ஏன் காத்துக்கிட்டு இருக்கீங்க ஹி ஹி

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_04.html

ஓகோ! இதுதான் வெவரமா!

1. ஆனை ( குணங்களாகக் கருதியது 1. வலிமை, 2.அந்த வலிமை இருந்தாலும் அதன் அமைதி 3. சின்ன ஊசியைக் கூடத் தூக்க முடியும் சாதுர்யம்)
(இது என்னோட பண்பா! கிழிஞ்சது போ)

2. இதுவும் ஆனையத்தான் நெனச்சேன்.
(வெளங்குனாப்புல தான்)

3. இளஞ்சிவப்பு (baby pink) - அது குறிப்பதாகக் கருதியது துன்பமற்ற இன்பம்...
(இது சரியாயிருக்கும் போல தோணுது)

4. மழையில் நனைவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் மழையில் நனைந்து கொண்டே பைக் ஓட்டுவது இன்னமும் பிடிக்கும்.
(நோ கமெண்ட்ஸ் :) )

5. ஒருவித வியப்பு கலந்த அடக்கம் (என்னோட வாழ்க்கைய இப்பிடியா நான் பாக்குறேன். இருந்தாலும் இருக்கலாம்.)

6. பிஸ்கோத்து ரேஞ்சுல ஒரு சாவி. லேசா அழுத்துனாலே ஒடஞ்சு போறாப்புல. ( ஈகோ அவ்வளவு சீக்கிரமா ஒடஞ்சிருமா என்ன...தெரியலையே...பொதுவா ஈகோ பாக்குறதில்லை. நல்லதோ கெட்டதோ தெரியலையே)

7. அமைதியா இருந்து நடக்குறத ஏத்துக்குவேன் (மரணத் தருவாயில் உணர்வேனா....இங்கதாங்க தப்பு செஞ்சிட்டேன். எல்லாப் பக்கமும் மூடியிருக்கிறப்போ முருகா காப்பாத்துன்னு கூப்பிடாம அமைதியா இருப்பேனா...தெரியலையே...முருகா எதுன்னாலும் நீதான் பொறுப்பு)

வெட்டி, இந்தாங்க என்னோட விடைகள்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/10/9.html

நல்லதொரு தொடர். திருவேங்கடமுடையான் மீது பற்றுள்ளோருக்குப் பற்றறுக்கும் தொடர். ஒவ்வொரு பதிவிலும் தமிழ்ச் செய்யுட்களைக் குடுத்து அவைகளை விளக்கியமையும் அருமை. வாழ்க. வளர்க.

இந்தப் பதிவில் நான் ரசித்தவை

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினைகள் ஓயுமே!

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/10/3.html

யோகன் ஐயா, கட்டுரையின் கடைசியில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது தொலைநோக்குப் பார்வையுடைய அரசாங்கம் செய்ய வேண்டிய சேவை. ஹும். உள்ளூர் அரசியலிலும் ஈகோவினாலும் வீங்கி உழுத்துப் போயிருக்கும் இவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆண்டவனை வேண்டுவதைத் தவிர வேறு வழி இப்பொழுது இல்லை.

இந்தத் தொடர் மிகவும் சிறப்பானதொரு தொடர். ஒரு இனத்தின் அடையாளத்தை வெளிக்கொண்டு வந்த தொடர் என்றாலும் மிகையில்லை.

பனைக்கொடி ஏற்றி பழுவேட்டரையன் தோணியோட்டிய காலம் மீண்டும் வரும். பனைக்கொடி பறக்கும். காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2006/10/182.html

எல்லாம் சரிப்பா....அந்தப் புத்தகத்துக்கு இந்தியாவுல இருந்து சப்ஸ்கிரிப்ஷன் வாங்க முடியுமா...ஹி ஹி....

G.Ragavan said...

http://sinthipoma.blogspot.com/2006/10/x-men-last-stand.html

hugh jackmanன்னு சொன்ன என்னவாம் :-) எனக்கும் மிகவும் பிடித்த நடிகர் அவர். X-Men முதல் படித்திலிருந்தே அவரைப் பிடித்து விட்டது. நடுநடுவில் Van Helsing போன்ற படங்களில் வேறு கலக்கி என்னுடைய அபிமானத்தை நிறைய வாங்கிக் கொண்டார். அடுத்த படம் என்னவாம்?

G.Ragavan said...

http://aanmiga-payanam.blogspot.com/2006/09/32-3.html

அனுபவங்களச் சொல்லும் போது படமும் போட்டா நல்லாயிருக்குமே...நாங்களும் அந்த எடங்கள பாத்துக்கிருவோம்ல.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/007.html

மிகவும் அருமையான பாடல். மதுரை சோமுவின் குரலில் கவியரசரின் பாடல் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில்.

// "முருகா என்றதும் உருகாதா மனம் உருகாதா.... மோகன குஞ்சரி மணவாளா
...........
தவசீலா ஏ சிவ பாலா " பாடலை தேடுகிறேன். இது சினிமாவில் இடம் பெற்றது எந்த படமென்று ஞாபகமில்லை. //

சிவா, இந்தப் பாடல் நீலமலைத் திருடன் என்ற படத்தில் இடம்பெற்றது. மிகவும் அருமையான பாடல். என்னிடம் இந்தப் பாடல் ரியல் ஆடியோ பார்மெட்டில் இருக்கிறது. அடுத்து இந்தப் பாடலை முருகனருளில் இடுகிறேன்.

G.Ragavan said...

http://pesalaam.blogspot.com/2006/10/ii.html

அப்பப்பா! பெரிய பட்டியலே போட்டிருக்கீங்க. எங்கூரு பக்கத்துல என்ன சொல்வாங்கன்னு தர்ரேன்.

1.மோனக்காரர் - தெரியலையே.

2. பண்ணையத்தாளு - தெரியலையே.

3. முறைமைக்காரன் - உரிமைக்காரன்னு சொல்லிக் கேட்டிருக்கிறேன். பாத்தியக்காரன்னும் கேட்டிருக்கேன்.

4. தண்ணிவாக்கி - தெரியலையே.

5. பொதி - தெரியலையே.

6. கருக்காய் - இதுக்கு என்னமோ சொல்லுவாங்க....மறந்து போச்சே.....

7. கொறத்திக் குஞ்சு - தலப்பெரட்டதான்

8. ஒறட்டாங்கை - இடது கை அல்லது எடது கையி

9. ரோட்டா - தம்ளரு

10. அங்கராக்கு - சட்டை

11. பாப்பராண்டி - பாம்புராணின்னு இதச் சொல்வோம்

12. செம்பூத்து - இதென்னன்னு தெரியலையே...

13. கழுமுண்டராயன் -யாருங்க இந்தக் கழுமுண்டராயரு?

14. புறடை - புளுகுனி. அதாவது புளுகுறவன்.

15. தெல்லவாரி, தேசாபோகம் - ஊதாரிதான்னுதான் நெனைக்கேன்.

16. சாவுகாசம் - தொடர்பு, பழக்கம், ஒட்டுறவு

17. ரவைக்கு - பொழுது சாய.

18. போத்தாலை - போயில அல்லது புகையில.

19. கொழுந்தனார் - மச்சினரு

20. கொழுந்தியா - மச்சினி

21. நங்கையா - தெரியலையே...மதினிங்குறது அண்ணன் மனைவி

22. பொன்னாம்பூச்சி - பொன்வண்டு

23. தொருசு - ஊர்சுத்தி.

24. தொண்டு - தொடுப்புன்னு சொல்வாங்க. ஆனா தொண்டுக்கு இணைச்சொல் அல்ல.

25. மொளைக்க போடுதல் - வெதைச்சிட்டு வந்துட்டான்னு சொல்லிக் கேட்டிருக்கேன்.

26. கொட்டை போட்டுட்டாரு - மண்டையப் போட்டுட்டாரு.

27. நலங்கு - மேலுக்குச் சேட்டமில்லாமப் போச்சு

28. கதக்கு - கக்கு (கொழந்த கக்கீருச்சி).

29. மோடம், கருக்கல் - மொகிலு, மேகம்

30. கும்மாயம் - மத்துதான்

31. சடஞ்சு - ஆஞ்சு போய் வந்திருக்கான்னு சொல்வாங்க

32. நேக்கு - இது தமிழ்ச் சொல் அல்ல. டம்ளர் போல கடன் வாங்கிய சொல்லே.

33. எச்சா - இதுவும் extra என்பதன் மருவூ என நினைக்கிறேன். கரூரில் இருந்த பொழுது எச்சா எச்சான்னு யாராவது சொன்னாலே எனக்கு ஒரு மாதிரி இருக்கும். கூடக் குடுங்க. கூடக் கொஞ்சம் குடுங்க. நெறைய குடுங்கன்னு நாங்க சொல்வோம்.

34. நேசர் பாரு - இதுக்கு ரெண்டு மூனு விதமாச் சொல்வாங்க. நேரான இணைச்சொல் தெரியவில்லை.

35. பூலவாக்கு - தெரியலை

36. பண்டம் பாடி - மாடு கன்னு நெலம் நீச்சு தோட்டந் துரவு

37. பீத்து - பீத்தல் இங்கும் உண்டு

38. பீத்தை - இத்துப் போனது.

38. சீக்கு- சேட்டமில்லாமக் கெடக்கான், மேலுக்கு வந்துருக்கு என்றெல்லாம் சொல்வார்கள். சீக்கு என்றும் சொல்லிக் கேட்டிருக்கேன்.

39. பிலுக்கு - கும்மாளம்.

40. கொக்காணி - வக்கனம். அவனப் பாத்து ஏம்ல வக்கனம் காட்டுத!

41. பொறந்தவன்/ பொறந்தவள் - ஒடம்பொறப்பு

42. தொண்டுபட்டி - தொழுவம்

எனக்குத் தெரிஞ்சதச் சொல்லீட்டேன்!!!!!!!

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2006/10/014.html

ஏன் இப்பிடி? சேட்டமில்லையா? குப்பமேனி தூதுவள எலைகள ஆஞ்சி அலசி...கொஞ்சோல பனங்கற்கண்டும் பாலும் சேத்துக் காச்சிக் குடிச்சா சரியாப் போகும். சரி

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/10/blog-post.html

ஆபீசுல ஒழுங்கா வரலை..வீட்டுல போய்ப் பாக்குறேன்.

G.Ragavan said...

http://sivamgss.blogspot.com/2006/10/133.html

கருணாநிதி பாணியில்

வ.வா.சங்கத்தில் இல்லாவிடினும் தலைவிக்கு ஆபத்து என்று தெரிந்ததுமே முதன்முதலாகக் குரல் கொடுத்தவன் நாந்தான். முந்தாநேற்று பழுத்த தக்காளியில் நேற்று வைக்கப்பட்டு இன்று ஊசிய ரசங்கள் எல்லாம் கொதிக்கும் இந்தக் காலத்தில் காலகாலத்திற்குமான ஊறுகாய்கள் உறைப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்!

நாயாய் பேயாய் பூனையாய்ப் புலியாய் காட்டு விலங்குகளாய்த் திரிவது விலங்களுக்கே உரியது. நமக்கு? குண்டர் என்ற பெயரில் தொண்டர் இருந்தால் சுண்டல் கிடைக்காது என்பது தெரியாதா!

பாயும் புலி, பதுங்கும் சிங்கம், வீர வேங்கை என்றெல்லாம் பெயரெடுத்த மண்ணின் மைந்தனாம் சொல்லின் செல்வனாம் என்றெல்லாம் புகழ விரும்பிய பொழுது அந்தப் புகழை விரும்பாது பகட்டுக்காரர்களில் காலில் விழுந்த கருமத்தை என்ன சொல்வது!

ஆகவே! அப்பாவின் மகளே வருக! நிலையான தலைமை தருக!

A to Z பாதுகாப்பு ஆங்கிலப் பாதுகாப்பு. ஆகையால் அ முதல் ஃ பாதுகாப்பு வழங்குவோருக்கும் வரிவிலக்கு கொடுக்கப்படும் என்பதை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

G.Ragavan said...

http://sivamgss.blogspot.com/2006/10/133.html

ஜெயலலிதா பாணியில்,

பெரியோர்களே தாய்மார்களே கழக உடன்பிறப்புகளே! ஒரு பெண் என்பதால் தலைவிக்கு மிரட்டல் விடுத்தவர்களை என்ன செய்யலாம்! தூக்கில் போட வேண்டும் அல்லவா! (கூட்டத்தில் ஒருவர் சோறு கொண்டு வந்த தூக்கைத் தூக்கி காட்டுகிறார். விசில் பறக்கிறது. கைதட்டல் விண்ணைப் பிளக்கிறது)

எங்களை என்னவென்று நினைத்தாய்? கழகத்தில் தூக்குத் தூக்கிகள் நிறைய உண்டு. எந்த பஸ்களையும் கொளுத்தாமல் எந்த கட்டிடத்தையும் உடைக்காமல் யாரையும் துன்புறுத்தாமல் ஒரு இடைஞ்சலும் இல்லாமல் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். அது பொறுக்கவில்லையா!

வலைப்பதிவுகளிலே எக்கச்சக்கமாக வலைப்பூவை பினாமி பெயரில் வைத்திருக்கும் இவர்களா சங்கத்தைக் காப்பாற்றப் போகிறார்? மக்களே ஏமாந்து விடாதீர்கள். பெனாத்தலும் டுபுக்கும் சேர்ந்தது திடீர்க் கூட்டணி. சந்தர்ப்பவாதக் கூட்டணி. ஒவ்வொரு தேர்தலுக்கும் நாம் தேடித்தேடி அமைக்கும் கூட்டணிதான் உண்மையான அரசியல் கூட்டணி. அந்தக் கூட்டணி நிலைக்கவே நான் விரும்புகிறேன்.

அப்படியில்லாமல் யாராவது எதிர்க்க நேர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுகிறேன்.

G.Ragavan said...

http://cinemapadalkal.blogspot.com/2006/05/blog-post_114767039075959785.html

நல்ல பாடல் சந்திரவதனா. மிகவும் நல்ல பாடல். எனக்கும் பிடித்த பாடல்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/10/blog-post.html

அலுவலகத்தில் நெட்ஸ்கேப். அதில் ஒன்றும் வரவில்லை. வீட்டில் ஐ.ஈ. அதுல ஒழுங்கா வருது.

பொன்ஸ் கலக்குறீங்க....நல்லாயிருக்கு. இன்னும் நிறைய வெளியிட எனது பாராட்டுகள். வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://oosi.blogspot.com/2006/10/bangalore-airport.html

ப்ருத்விராஜ் குடும்பத்தாருக்கு எனது வருத்தங்கள்.

அரசு அதிகாரிகளின் இந்த மனோபாவத்திற்கு நானும் மாட்டியிருக்கிறேன் ஒருமுறை. என்னுடைய சித்தி ஒருவர் பிறப்பிலேயே மனநலம் குன்றியவர். அவருக்கு ரயிலில் பயணம் செய்கையில் நல்ல கட்டணக்குறைப்பு உண்டு. அதற்கு ஒரு சான்றிதழும் காட்ட வேண்டும். ஒருமுறை அவரை கோயில்பட்டியிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்ல பயணச் சீட்டு வாங்க ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அப்பொழுது அந்த பயணச்சீட்டு கொடுனர் பேசிய பேச்சிருக்கிறதே. ஏதோ ஓசியில் கொடுப்பதால் நாங்கள் வந்திருக்கிறோம் என்ற அளவிற்குப் பேசினார். அவருக்குக் கொடுக்கப் பட வேண்டிய பதில் அன்றே கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இவர்களால் எப்படி இந்த மாதிரி நடந்து கொள்ள முடிகிறது என்றுதான் தெரியவில்லை.

தன்னிடத்தில் எல்லாம் நன்றாக இருப்பதால் அடுத்தவன் குறையும் நிலையும் புரிய மாட்டேன் என்கிறது. நம்மை வைத்து அடுத்தவரை அளக்கக் கூடாது. அது மிக தவறு. மனிதர்களே இறைவன் உங்களுக்குக் கொடுத்த வேதம் உங்கள் மூளை. அதைப் பயன்படுத்துகள்.

G.Ragavan said...

http://metermurugesan.blogspot.com/2006/10/blog-post_05.html

மீட்டர் தம்பியே
நீ பொங்கி எழுந்தாய்
உலகம் பயந்தது
முருகேசன் தம்பியே
நீ சீறினாய்
உலகம் திருந்தியது
நீ கிண்டல் செய்தாய்
உலகில் கெட்டது நின்று
நல்லது மட்டுமே நடக்கத் தொடங்கியது
வாழி நீ :-)

அண்ணா அண்ணா பத்திக்கு மூனு வாட்டி சொன்னா தம்பியாக்கீட்டோம். தம்பியானா தம்பியா மட்டுமே இருக்கனுங்குறது அரசியல் பாலபாடம். :-))))

G.Ragavan said...

http://raasukutti.blogspot.com/2006/10/049.html

அறிவியல்படி இப்படி நடக்க முடியுமான்னு யோசிக்கிறத விட்டுட்டு இப்படி நடந்தா என்ன செஞ்சிருப்போம்னு மட்டும் யோசிப்போம்.

1. சின்ன ராகவனப் பாத்தா, "டேய், ஒழுங்காப் படி, ரொம்ப வம்பு பண்ணாத, அப்பா, அம்மா குடும்பத்தார் கிட்ட ரொம்பப் பேசு, ஒனக்கு என்ன வேணும்னு தெளிவா இருந்து அதுக்கான வழியப் பாரு"ன்னு சொல்லீருப்பேன்.

2. பெரிய ராகவனப் பாத்தா..."இதுவரைக்கும் வாழ்க்கை நிம்மதியா இருந்ததா? நீ உருவாக்கனும்னு நெனச்ச மருத்துவ மையம் என்னாச்சு?"ன்னு கேட்டிருப்பேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/blog-post.html

மலேசியத்தில் தண்ணீர்மலை முருகனும் பத்துமலை முருகனும் மிகப் பிரபலம். சென்று கண்டு தொழ நாலாயிரம் கண்களை நான்முகன் கொடுக்காவிட்டாலும் நான் முகன் என்று சொல்லும்படி ரெண்டு கண்கள் குடுத்திருக்கிறான். தொழுவேன் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறான்.

எஸ்.கே, பாடல் மிகவும் அருமை. ஒழுங்கா அந்தப் பாட்டப் பாடிப் பதிவு செஞ்சு இங்க வலையேத்தலைன்னா...மயிலார அனுப்ப வேண்டி வரும்னு மட்டும் எச்சரிக்கிறேன். :-)

இந்தப் பாடல் எனக்கு ஒரு திரைப்பாடலை நினைவு படுத்தி விட்டது.

பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் என்ற பாடல்தான்.

அதில் இப்படி வரும்
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
அந்த வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா

மேற்கூறிய வரிகளை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். ஆனால் மிகவும் நீளமான இந்தப் பாடலை சீர்காழி, டீ.எம்.எஸ், பெங்களூர் ரமணி அம்மாள், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர்களோடு இசையமைத்துத் தானும் பாடியிருக்கிறார் மெல்லிசை மன்னர். பாடலைக் கவியரசர் இயற்றியிருக்கிறார்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2006/10/blog-post.html

என்னங்க இப்படியெல்லாம் கேள்வி கேக்குறீங்க :-)))))))) இனிமே தனியா வெளிய போகாதீங்க....எம்மதவாதிகளும் சம்மதவாதிகளா ஒங்கள எதிர்த்தாலும் எதிர்க்கலாம். :-)

கேள்விகள் அபிரஹாமிய மதங்களைப் பத்தீங்குறதால இந்து மதத்துக் கருத்துகளைக் கொஞ்சம் சொல்லீர்ரேன்.

இந்து மதங்குறதே பலரசம் (பழரசம்) போல இருக்கிறதால....ஒருத்தர் நம்புறத இன்னொருத்தர் நம்பத் தேவையில்லை. ஆகையால எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்ச சைவ சித்தாந்தத்த எடுத்துக்கிறேன்.

இது லேசா அறிவியல்பூர்வமாத் தெரியலாம். ஆனா இதுதான் உண்மைன்னு நான் சொல்ல வரலை. பகிர்ந்துக்கிறதுக்காகச் சொல்றேன். எனக்கே முழுசாத் தெரியாது.

ரெண்டு இருந்துச்சாம். இதுல இந்த ரெண்டும் ஒன்னுக்கொன்னு நேரெதிராம். இங்க என்ன இருக்கோ அதுக்கு நேரெதிரா அங்க இருக்குதாம். எளிமையாச் சொல்லனும்னா ஓசையும் அமைதியும். இந்த ரெண்டும் சேந்தப்போ ஓங்காரம் வந்துச்சாம். அதுதான் ஆதாரம். like an energy source. அதுல இருந்து கூறுகூறா பிரிஞ்சி பிரிஞ்சி உலகம் உருவாச்சாம். இதுவும் ஒரு நம்பிக்கை. ஒரு கம்பிய எடுத்து ஒரு முனைய நெருப்புலயும் மறுமுனைய பனிக்கட்டியிலயும் வெச்சா...அங்க ஏற்கனவே இல்லாத கரண்டு உருவாகுதுல்ல...அந்த மாதிரி விவரம்தான் இது.

அறிவியல் வழியா என்ன கண்டு பிடிச்சாலும் அதுக்கு முன்னாடி என்னன்னு ஒரு கேள்வி கண்டிப்பா இருக்கும்.

ஆனா கடவுள் படைத்தான்னு நெனச்சாச்சுன்னா....அது போதும். எதையும் நம்ப வேண்டியதில்லை. அடுத்தவன் நம்புறதையும் சேத்து. ஆனா எல்லாரும் நல்லா வியாக்கியானம் கொடுப்பாங்க. :-) என்னையும் சேத்துத்தான்.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2006/10/blog-post_116004808325383914.html

கைப்புள்ளைக்குக் கயமைத்தனம் தேவையா! இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

கர்பா நடனத்தைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். கொஞ்சம் கொஞ்சம் டீவில பாத்திருக்கேன். சுழண்டு சுழண்டு ஆடுவாங்க. நல்லாயிருக்கும் பாக்க.

கைப்பு பாத்த கர்பா நடனம்னு தலைப்பு வெச்சிருந்தா இந்நேரம் பின்னூட்டம் பிச்சிக்கிட்டு போயிருக்காதோ!

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2006/10/blog-post_06.html

தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்னு பாரதியார் சொல்லீருக்காரே. அது குலத்துக்கு இனத்துக்கு மட்டுமல்ல வீட்டுக்குந்தான்.

குடுக்க வேண்டிய மரியாதையக் குடுக்கலைன்னா அது திரும்பிக் கிடைக்கும் போது நல்லா வசமாக் கிடைக்கும். அப்ப ஐயோன்னாலும் வராது. அப்பான்னாலும் வராது.

எங்க பள்ளிக்கூடத்துல ஒரு வாத்தியார் இருந்தாரு. அவரு பசங்கள வேலைக்கு அனுப்பிக்கிட்டேயிருப்பாரு. போயி மிச்சரு வாங்கீட்டு வா. காராச்சேகு வாங்கீட்டு வா. ஞானம் பேக்கரி பன்னு....அது இதுன்னு. அவரு பையன் டியூஷன் படிக்கிற எடத்துல அந்த டீச்சரு அவரு பையனத்தான் இப்பிடியே அனுப்புறது. அது அவருக்குத் தெரிஞ்சப்புறமா பசங்கள வேலைக்கு ஏவுறத நிறுத்தீட்டாரு.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2006/10/1.html

ஐயா, ஒரு விண்ணப்பம். இந்தப் பதிவை நீங்க pdf formatல சேமித்து வைத்தால் நல்லது. இந்தத் தொடர் முடிகையில் எங்களுக்கும் கிடைக்குமாறு வலையேற்றுங்கள்.

நல்ல விளக்கங்கள் நீங்கள் தந்திருப்பது. தொல்காப்பியம் நான் இதுவரையில் படித்ததில்லை. அரசியல்வாதிகளின் உரையைப் படிக்கும் எண்ணமும் இல்லை. உங்கள் உரை தொடரட்டும். நானும் தெரிந்து கொள்கிறேன். பிறகு நானும் தொல்காப்பியர் சொன்னாருன்னு சொல்லிக்கிறலாம் அல்லவா :-)

உங்களது இந்தப் பணி சிறக்க முருகனை வணங்கி வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2006/10/blog-post.html

// Dharumi said...

ஜிரா,
//ரெண்டு இருந்துச்சாம். இதுல இந்த ரெண்டும் ஒன்னுக்கொன்னு நேரெதிராம். //
அதாவது matter- antimatter அப்டின்னெல்லாம் சொல்லுவாங்களே..அது மாதிரி; இல்ல? //

அதே அதே...இன்னமும் விளக்கமா என்னென்னவோ சொல்வாங்க...எனக்குத் தெரியாது. இதுக்கு நாத விந்து தத்துவம்னு பேரு.

// அதென்னவோ ஜிரா, உங்க பின்னூட்டம் தானா வரமாட்டேன்னு மொரண்டு பிடிச்சிது; அதனால நானா 'இறக்கிட்டேன்' :) //

இதுல பன்னாட்டுச் சதி இருக்குன்னு நெனைக்கிறேன். :-))))) சசி தரூருக்கு வீட்டோ ஓட்டுப் போட்டவங்கதான் இதுக்கும் காரணமாயிருக்கனும். இல்லைன்னா இடியாப்பத்த ஐஸ்கிரீமோட தின்னவங்க, கார்ல தண்ணி ஊத்தி ஓட்டுனவங்க, ஏரோப்பிளேனுக்கு அல்வா வாங்கிக் குடுத்தவங்க, யானைக்குப் பஞ்சாரம் வாங்குனவங்க, இமயமலைய தூசி தட்டுனவங்க, அமோசான் காட்டுக்குள்ள மரம் நட்டுனவங்க, ஆல்ப்ஸ் மலையில ஏசி ஃபிட் பண்ணுனவங்க சதியாத்தான் இருக்கனும். கண்டுபிடிப்போம்.

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2006/10/blog-post.html

தமிழகத்தில் இருக்கும் எனக்குத் தெரிந்தவர்களுக்கும் உறவினர்களும் சிக்குன்குனியா வந்து துன்பப்படுகிறார்கள். நோய் கொல்லாதுதான். ஆனால் நோயின் தாக்கத்தில் உடல் வலிவு குறைந்து இருவர் தடாலெனக் கீழே விழுந்து அடி பட்டிருக்கின்றனர். என் அத்தை ஒருவர் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார். வெறும் நீராகாரம்தான்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_116006932489654773.html

இந்தப் படக் கதை எம் மகன் கதை மாதிரியே இருக்குதே!

எல்லாத் தெலுங்கும் தெலுங்கல்ல பொம்ம
ரில்லு தெலுங்கே தெலுங்கு -ன்னு சொல்றீங்க...

தெலுங்குப் படங்கள்ள ஒரு பொழுது போக்கு இருக்கும். சை-ன்னு ஒரு படம் வந்தது. மசாலாதான். வெட்டுதான். குத்துதான். ஆனா பாக்க நல்லாயிருந்தது. ரக்பி விளையாட்ட வெச்சி. என்னென்னவோ முயற்சி செய்றாங்க அவங்களும். நம்மாளுங்க திரும்பத் திரும்பி போக்கிரித்தனமா படம் எடுக்குறாங்க.

அதென்னவோ விஜய் நடிச்ச படமாம். பிரகாஷ்ராஜ் அண்ணன். இவரு தம்பீன்னு சொல்லாம ஊருக்குப் போய் அம்மாவுக்கும் தங்கைக்கும் உதவி செய்வாரு. பாதியிலேயே விட்டுருங்கன்னு கதறிக்கிட்டு ஓடி வந்தேன். இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க.

ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம், ராமேஞ்சனேய யுத்தம், த்ரௌபதி வஸ்த்ராபஹரனமு, பூகைலாஸ், தான வீர சூர கர்ணா, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, அப்பு சேசி பப்பு கூடு, எல்லாம் பாத்தாச்சா?

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/10/blog-post_06.html

:-)))))) சிறில் நல்லா யோசிச்சிருக்கீங்க. ஆனா என்ன சொல்ல வர்ரீங்க? மதத்துக்குள்ளயே கெடக்காத. ஒழுங்கா நீயாவும் சிந்திச்சுப் பாரு. இறைவன் நமக்குக் கொடுத்த கொடை மூளையும் அன்பும். அத ஒழுங்காப் பயன்படுத்து. அவ்வளவுதாங்க. இதவிட வேற வழியில ஆண்டவன அடைய முடியுமான்னா முடியாதுன்னு அடிச்சுச் சொல்வேன். ஆனா பலர் ஒத்துக்க மாட்டாங்க. ஒத்துக்காட்டி என்ன வந்தது. ஒன்னும் வராது.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_06.html

மரண தண்டனை என்பது தேவைதான். ஆனால் எத்தகைய குற்றங்களுக்கு அந்தத் தண்டனை என்பதையும் முடிவு செய்ய வேண்டும். இதோ ஒரு வருடம் ஆகியிருக்கிறது. கொல்கொத்தாவில் ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு. அவனுக்கு என்ன தண்டனை தருவது? ஆயுள் தண்டனையா? இன்றைக்கு ஒரு குற்றவாளியின் கருணைமனு பரிசீலனைக்குப் போயிருக்கிறது. ஆனால் அது பரிசீலிக்கப்படக் கூடாது. மனிதனை மனிதனாக மதிக்காமல் கொடூரம் செய்கின்ற எவருக்கும் மரண தண்டனை பொருந்தும்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2006/09/blog-post_115953699506138535.html

கடைசி பெஞ்சா..........ஐயோ..பயங்கர டேஞ்சர் பெஞ்சு...எல்லா வாத்தியாரும் அது மேல ஒரு கண்ணா இருப்பாங்க. மொத பெஞ்சுதான் சேப்டி. யாரும் கண்டுக்க மாட்டாங்க.

ஆனாலும் இப்பிடி ரெண்டு வாட்டி ஆறாப்பு படிக்க வெச்சிருக்கக் கூடாது. ஒங்க வீட்டுக்குப் போன் போட்டு ஞாயம் கேட்டுருவோம்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/09/blog-post_26.html

பிசுக்கோத்து பாட்டில் இருப்பது பாபாவின் வீட்டில் என்று ரகசியப் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2006/10/blog-post_06.html

நாங்கூட நீங்க கதை எழுதீருக்கீங்களோன்னு வந்தேன். ஒன்னும் புரியல. நமக்குத் தெரியாத சமாச்சாரம் போல.

G.Ragavan said...

http://priyan4u.blogspot.com/2006/09/1.html

மிச்சமிருக்கிறதா எச்சமிருக்கிறதா ;-)

முத்தம் மழையாகப் பொழியத்தான்
இன்னும் இருக்குது ஆகாயமோ!

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2006/10/blog-post_07.html

எல்லா வீட்டிற்கும் சாலையுண்டு
சிறிதோ பெரிதோ சாலை சாலைதான்
ஆனாலும் பெரிய சாலைகள் அழகுதான்
வேகம் போகும் வண்டிகள் இடிக்காதவரை
பிள்ளைகள் பாதுகாப்பாய் ஆடலாம்
தூசியும் தும்பும் வீட்டுக்குள் நுழையாத வரை
ஆரோக்கியமும் உடன் இருக்கலாம்
ஒன்னுக்கு ரெண்டாய் அள்ளிக் கொடுக்க
கோடிப் பணம் இருந்தால் போதும்
சாலையோர வீடுகள் நமது ஓரம் வரும்!

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_07.html

// நாடாளுமன்றத்திற்குள் குண்டுவீசியதற்காக 1930ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் நாள் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையின் போது பலரும் இப்படி எழுதியிருக்கலாம், பேசியிருக்கலாம், நினைத்திருக்கலாம் இப்போது அப்சல் தூக்கு தண்டனைக்கு எழுதிக்கொண்டிருக்கின்றார்களே அது போல. //

அதுசரிதான். அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான். ஆளவிடுங்கசாமி. இந்த ஆட்டைக்கே நான் வரலை.

G.Ragavan said...

http://manathinoosai.blogspot.com/2006/10/blog-post_07.html

ஓசை, உலகில் எந்த மதமும் நூற்றுக்கு நூறு தூய மதமல்ல என்பது என் கருத்து. ஆகையால் மதத்தை விட இறைவன் பெரியவர். இறைவனை விட சகமனிதன் பெரியவன். இதுதான் என் கருத்து.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/10/6.html

மனதைக் கனமாக்கி விட்டது இந்தப் பதிவு. "இளமை நில்லாது யாக்கையோ நிலையாது" என்பது எவ்வளவு உண்மை. முருகா! நீயே துணை.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/10/blog-post_06.html

பொன்ஸ், இந்தக் கதையை நேற்றே படித்து விட்டேன். அலுவலகம் விட்டுக் கிளம்ப நேரமானதால், பின்னூட்டமிடவில்லை.

இந்தக் கதையைப் படிக்கத் தொடங்கியதுமே "இப்படி ஒரு எடத்துல யாரோடயாச்சும் நாலு சுவத்துக்கு நடுவுல அடைச்சுவச்சிடுவாங்களோன்னு பயம் இல்லை. திரும்பத் திரும்ப இன்னும் வெவ்வேற ஊருக்கு அலைய வேண்டியதில்லை" படிச்சதுமே கதை சொல்லி ஒரு ஆடு என்று தோன்றியது.

சற்று முன்னேற முன்னேற ஆடில்லை மாடு என்று தோன்றியது. ஆனால் எருமை என்று தோன்றவில்லை. ஆனால் மாடு என்று முடிவே கட்டிவிட்டேன். கடைசியில் படத்தைப் பார்த்ததும் எருமை என்று தெரிந்தது.

நல்ல முயற்சி. எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_07.html

கோவி. ஓரளவுக்குத் தெளிவாகவே சொல்ல முற்பட்டிருக்கின்றீர்கள் என்றே நம்புகிறேன். இங்கு பல நம்பிக்கைகள் உண்டு. ஆகவே இதுதான் என்று சொல்லிட முடியாது. அப்படிச் சொன்னாலும் அடுத்தவர் அதை ஏற்க வேண்டிய கட்டாயமில்லை.

பொதுவில் குலதெய்வ வழிபாடும் அடுத்து இஷ்ட தெய்வ வழிபாடும் அதைத் தொடர்ந்து பொது தெய்வ வழிபாடும் நடக்கிறது. அது தவறு என்று சொல்ல முடியாது. ஒரு விதத்தில் நல்லதுதான். மதச்சகிப்புத்தன்மை கொஞ்சமாவது மிச்சமிருக்கிறது. குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அது இந்தப் பதிவுக்கானவை அல்ல.

பதிவுக்கான கருத்துக்கு வருவோம். பிரம்மனிலிருந்து தோன்றினார்கள் என்று சொல்லப்படும் கருத்து பலருக்கே தெரியாது. அப்படியிருக்க ஆங்காங்கு இருக்கும் நல்ல மறைகளையும் தத்துவங்களையும் கொஞ்சமாவது எட்டிப் பார்த்தால் (நான் பார்த்தது சைவசித்தாந்தம்..அதுவும் கடற்கரை ஓரத்தில் நின்று கொண்டு கடலைப் பார்ப்பது போல)

தருமியின் பதிவிலும் சொல்லியிருந்தேன். இரண்டு இருந்தது. நாத விந்து தத்துவம். இரண்டுமே எதிரெதிர்கள். நாதத்தில் ஓசையுண்டு. விந்துவிற்கு அமைதிதான். விந்துவிற்கு உருவம் உண்டு. நாதத்திற்கு உருவம் கிடையாது. இப்படி எதையெடுத்தாலும் எதிரெதிர் பண்புகள். இந்த இரண்டும் சேர்ந்த பொழுது ஓங்காரம் பிறக்கும். ஒரு சின்ன பரிசோதனை. காதருகில் கையைக் குவித்து வைத்து மூடுங்கள். லேசான ஓங்காரம் கேட்கும். கைக்கு வெளியே ஓசை. உள்ளே அமைதி. ஆனால் முழுமையான ஓசையும் அமைதியும் இல்லாமையால் முறையான ஓங்காரம் கிடைக்கவில்லை.

இந்த ஓங்காரம்தான் அனைத்திற்கும் தொடக்கம். குடிலை என்று தமிழில் பெயர். இந்தக் குடிலைதான் இறைவனுக்கே அடித்தளம். அதனால்தான் சைவர்கள் சிவனும் முருகனும் கொற்றவையும் ஓங்காரத்தைப் பீடமாக (ஆதாரமாக) கொண்டவர்கள் என்று சொல்வார்கள்.

அப்படியே சிவனோ முருகனோ அம்பிகையோ ஒரே நாளில் உலகையோ உயிரையோ படைத்ததாகவும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. வாரியார் வழியே தெரிந்து கொண்டதிலும் அப்படித் தெரியவில்லை.

ஓங்காரம் பிறந்தது எனப் பார்த்தோம். இந்த ஓங்காரத்திலிருந்து சிறிது சிறிதாக பிரிந்து கொண்டேயிருந்ததாம். என்னவென்று எனக்கு விளக்கத் தெரியவில்லை. இப்படிப் பிரிந்து பிரிந்து பிரிந்து பிரிந்துதான் எல்லாம் வந்தது என்பது கருத்து. எனக்கு முழுமையாக விவரம் தெரியாது. எங்கேயோ படித்தேன். ஆனால் முழுமையாக விளக்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த நாதவிந்து கலைதான் இறைவனின் கலை என்பதால் நாத விந்து கலாதீ நமோ நம.

அணுவினுக்கணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்று தமிழ் எப்பொழுதோ சொல்லி விட்டது.

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்களெல்லாம்
அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்
அண்டங்கள் உள்ளும் புறமும் கரியாயினானும்
அண்டங்கள் ஈன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்

இவ்வளவுதான் எனக்குத் தெரிந்தவர். ஏற்பவர் ஏற்கலாம். ஏற்காதவர் ஏற்காமலும் போகலாம்.

G.Ragavan said...

http://kasadara.blogspot.com/2006/10/11.html

நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தையும் ஒத்துக் கொள்ளதான் வேண்டியிருக்கிறது. அந்த வயதைத் தாண்டித்தானே வந்திருக்கிறோம். "சொல்லித் தோன்றுமோ மன்மதக் கலை" என்றாரே கவியரசர். ரொம்பச் சரிதான் அது.

G.Ragavan said...

http://payananggal.blogspot.com/2006/10/14.html

கற்றார் பலகற்று பகர்வார்
எனச் சொல்லி
கல்லான் ஒருவன் உளறேல்
அவர் பொருட்டு
எல்லார்கும் பெய்யும் பிழை - எனும்படியால் அமைதி காத்தேன் கொத்சே.
ஜிரா வராமல் இருத்தலுண்டோ
பாரா முகம் காட்டக் கொத்தனார்
தீராப் பகைவரோ என்ன!

G.Ragavan said...

http://kadalodi.baranee.net/?p=11

மிகவும் அழகாக வந்திருக்கிறது. அந்த மாலை அந்தி மாலையோ!

G.Ragavan said...

http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_07.html

// கோவி.கண்ணன் [GK] said...
ஜிரா...!
அருமையான பின்னூட்டம். தருமி ஐயா பதிவிலும், சிறில் அவர்கள் பதிவிலும் இந்த கருத்தை சொல்லியிருந்தீர்கள் பார்த்தேன். //

ஆமாம் கோவி. அங்கு சொன்னதுதான். இன்னும் கொஞ்சம் விரித்து இங்கு சொல்லியிருக்கிறேன்.
இன்னும் கொஞ்சம் தெரியும். அவ்வளவு விளக்கம் தேவையில்லை என்று இங்கு நிறுத்தி விட்டேன்.

// சைவ சிந்தாந்த கருத்துக்களை வைணவர்கள் ஏற்க மாட்டார்கள். //

தேவையில்லை. அவரவர் கருத்து அவருக்கு. தன்னை வணங்காதவரை ஆண்டவன் தண்டிப்பான் என்று நான் கருதவில்லை.

// மதமே தோன்றியவைகள் என்ற கருத்து இருக்கும் போது, பிராஞ்ச தோற்றத்தை அதிலிருந்து அறிந்து கொள்ளுதல் எந்த விதத்தில் ஏற்புடையது என்று தெரியவில்லை. //

நானும் ஒத்துக் கொள்கிறேன். மதத்தை விட இறைவன் பெரிது. இறைவனை விட சகமனிதன் பெரிது. இறைவனோ தொண்டருள்ளத்து அடக்கம். தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே. thatz all.

// மதமே தோன்றாத காலத்தில்
சூரிய வழிபாடும், பாம்பு வணக்கமும் எகிப்திலிருந்தே, அதாவது ஆப்ரிக்காவும், இந்தியாவும் ஒன்றாக இணைந்திருந்த காலத்தில் (லெமுரியா) பழந் தமிழர்களுக்கு கிடைத்தது என்று ஒரு கருத்து கூட இருக்க்கிறது. //

சூரிய வழிபாடு ஆதியில் எல்லா ஊர்களிலும் உண்டு. பாம்பு வழிபாடு தெரியவில்லை.

G.Ragavan said...

http://vaisasview.blogspot.com/2006/10/blog-post_06.html

வைசா, முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய வேண்டுமா என்பதை முஸ்லீம் பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

// கவலைதரும் விடயம் என்னவென்றால், பிபிசி நடத்திய கருத்துக் கணிப்பில் 95% பேர் பர்தா அணியக் கூடாது என்று கருதுவதாகத் தெரிகிறது.//

இந்தக் கருத்து பிரிட்டனில் மட்டும் இருப்பதாக நான் கருதவில்லை. உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு. நமது நாட்டிலும் உண்டு. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் மற்ற நாட்டுப் பெண்கள் அந்தந்த நாட்டு வழக்கத்தைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்பதற்கு மத, பண்பாட்டுக் காரணங்களைச் சொல்வதற்கு எல்லா நாட்டு ஆண்களும் தயாராக இருப்பார்கள். இதுதான் உண்மை. பர்தா அணியும் நாடுகளில் மற்ற மதத்து நாட்டுப் பெண்களும் பர்தா அணியத்தானே வேண்டியிருக்கிறது. நமது நாட்டிலும் வெளிநாட்டு உடைகளை பெண்கள் அணிந்து கொண்டார்கள் என்று சொல்லிக் கிண்டல் பதிவுகள் வலைப்பூ வரை வரவில்லையா? அடப் போங்கங்க....அடுத்தவன் கைதான் வீசுது. நம்ம கை சந்தனமுல்ல. மொத்தத்தில் வயித்தெரிச்சல்.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2006/10/blog-post_07.html

நல்லதொரு கட்டுரை. சற்றுப் பெரிதானாலும் படங்களோடு அழகாய் இருக்கிறது.

சத்யஜித்ரேயின் ஷோனோர் கெல்லா பார்த்திருக்கிறீர்களா? அதில் ராஜஸ்தானை சுற்றி வளைத்துக் காட்டியிருப்பார். எனக்கும் போகும் ஆசை உண்டாக்கியது அந்தப் படம். ஆனால் இன்னும் நிறைவேறவில்லை.

மால்புவா எனக்கும் தெரியும். கோதுமை மாவைத் தண்ணியாகக் கரைத்து நெய்யிலோ எண்ணெய்யிலோ ஊற்றி அப்படியே பொரிப்பார்கள். மாவு தண்ணியாக இருப்பதால் அது எண்ணெய்யில் பரவி வட்டமாக வரும். அந்த வட்டத்தை ஜிராவில் (நானல்ல) ஊற வைப்பார்கள். பெங்காலிகள் செய்யும் பொழுது அத்தனை இனிப்பாக இருக்காது. ஆனா மற்றவர்கள் செய்கையில் தித்தித்தித்திக்கும்.

அடுத்தது குஜராத்தா...நல்லது நல்லது. காத்திருக்கிறோம். குஜராத்துலயும் கறிகிறி கெடைக்காதம்யா! எறாவச் சொறாவத் தேடிப் போய் மாட்டிக்கிறாதீரும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_116006932489654773.html

// இப்ப புதுசு புதுசா எடுக்கறாங்க... நம்ம ஆளுங்கதான் அங்க போய் கலக்கறாங்க ;) //

அட மக்கா! நம்மாளுக அங்க போயி கலக்குறது சரிதாம்ல. ஆனா இங்கருக்குற நம்மாளுக வயித்தல்லா கலக்குதாங்க. வரவர தமிழ்ல வர்ர படங்க பிடிக்க மாட்டேங்கி.

// //
அதென்னவோ விஜய் நடிச்ச படமாம். பிரகாஷ்ராஜ் அண்ணன். இவரு தம்பீன்னு சொல்லாம ஊருக்குப் போய் அம்மாவுக்கும் தங்கைக்கும் உதவி செய்வாரு. பாதியிலேயே விட்டுருங்கன்னு கதறிக்கிட்டு ஓடி வந்தேன். இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க.
//
சிவகாசி... நம்ம பேரரசு டைரக்ஷன் ;)//

நம்ம பேரரசா! யய்யா! ஆள விடு சாமி...உண்மையிலே நான் நொந்து நூலாப் போனேன் அந்தப் படத்துல மொதப் பாதியப் பாத்துட்டு...பாதியிலே பாக்காம விட்ட படம் அதுதான்.

// //
ஸ்ரீகிருஷ்ணார்ஜுன யுத்தம், ராமேஞ்சனேய யுத்தம், த்ரௌபதி வஸ்த்ராபஹரனமு, பூகைலாஸ், தான வீர சூர கர்ணா, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, அப்பு சேசி பப்பு கூடு, எல்லாம் பாத்தாச்சா?
//
இதுல ஜம்பலக்கடி பம்ப்பா மட்டும் பாத்திருக்கேன் ;) //

ஹா ஹா ஹா itz nonsense comedy...but good time pass...கண்ட்டா பகிலி போயிந்தின்னு வில்லி வரும் போது நமக்கே கொஞ்சம் திக்குன்னு இருக்கும்.

G.Ragavan said...

http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_07.html

// ஜிரா... !

மறுபடியும் வந்து சென்று வாகை சூடியதற்கு நன்றி ! (சகமனிதனே பெரியவன் என்று சொன்னதற்கு) //

நன்றி கோவி. ஆனால் அது என்னுள் தோன்றிய கருத்து அல்ல. தமிழில் படித்து அனுபவத்தில் ஏற்றுக் கொண்ட கருத்து.

// விசயம் வைத்திருக்கிறீர்கள். பிறப்பு/ இறப்பு சித்தர் தத்துவங்களை வைத்து தனி பதிவு இட வேண்டும் என்று சிறிய வேண்டுகோள் வைக்கிறேன்.
:)) //

ஏங்க இப்பிடி? இதெல்லாம் விவரம் தெரிஞ்சவங்க கிட்ட கேக்கனும் நான் ஜூஊஊஊஊஊஊட்!

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2006/10/blog-post.html

// நான் முற்றிலும் ஒத்துக்கொள்ளும் விஷயம்: இந்து மதம் இரண்டு பிரிவானது - ஒரு பிரிவினருக்குரிய இந்து மதத்தில் - higher gods like brahma, Siva, vishnu et al, ...வேதங்கள், இதிகாசங்கள், உபநிஷத்துகள், மனு தர்மம்...இத்தியாதி...இத்தியாதி. இன்னொன்றில், small gods, முனியாண்டி, மாரியாத்தா, சுடலைமாடன், ஐய்யனார்...etc., etc.,.... இப்படி ஒரு வகை. இந்த இரண்டையும் பிரித்தே காஞ்சையா பார்ப்பது போலவே நானும் பார்க்கிறேன். இதில் முதல் வகைக்கு ஏதாவது ஒரு பெயர் சொல்ல வேண்டுமே...நான் அதை ப்ராமணீய இந்து மதம் என்று கூறுகிறேன்; மற்றதற்கு என்ன பெயர் வைக்கலாமென்று இன்னும் தெரியவில்லை."அந்த மதத்துக்காரர்கள்"தான் உதவவேண்டும்! //

இல்லை தருமி. இதுவும் ஓரளவுக்குதான் உண்மை. நான் (நான் மட்டும் அல்ல) மாரியம்மன் கோயிலில் கெடா வெட்டிச் சாப்பிட்டு விட்டு அப்படியே கேரளா போய் குருவாயூர் வெண்ணெய் தின்று விட்டு அப்படியே பழநியில் பஞ்சாமிர்தம் நக்கி விட்டு மதுரையில் அழகர் கோயிலில் தோசையை லபக்கி விட்டு நேராக சுடலைமாடன் சாமி கோயிலில் திருநீறு பூசிக் கொண்டு முருகான்னு சொல்வேன். நிறையப் பேரு அப்படித்தான்.

நீங்க சொல்ற பிரிவினையும் உண்டு. ஆனா அது மட்டுமே உண்மையல்ல என்பது என் கருத்து. அவ்வளவு எளிதாகப் பிரித்து விட முடியாது தருமி. வேளாங்கன்னியில் மெழுகுவர்த்தியும் ஏற்றி விட்டு நாகூர் கோயிலில் பாத்தியா கொடுக்கும் கூட்டமும் உண்டு.

இந்து என்பது வெறும் பெயர்தான். அதை வைத்து எதையும் பொதுமைப் படுத்த முடியாது. பொதுமைப் படுத்துவதும் தவறு. இந்த நாட்டில் தனக்குப் பிடித்த வழியில் இருப்பதுதான் அது.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/blog-post.html

// பின்னுட்டங்களை அன்போடு வலையேற்றியதற்கும் [ நான் ஒரு டம்மி என்பதைப் புரிந்து கொண்டு!!] என் மனமார்ந்த நன்றி! //

SK. இங்கு யாரும் டம்மியில்லை. முருகனருள் முன்னிற்கையில் டம்மி என்று யாரைச் சொல்ல முடியும்?

எந்தப் பாடலுக்கான பின்னூட்டம் என்று ஒரு சிறு குழப்பம். அதனால்தான் அப்படி ஆகிவிட்டது. அடுத்த முறை எச்சரிக்கையாக இருக்கிறேன்.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2006/10/2.html

அப்பாடி........எவ்வளவு தகவல்கள். இந்த ஆயுத எழுத்துப் பிழையை நானும் செஞ்சிருக்கேன். செஞ்சுக்கிட்டிருக்கேன். ஆய்த எழுத்து...புரிந்து கொண்டேன்.

இதோ pdf formatல் சேமித்து விட்டேன் இந்தப் பதிவை. :-)

G.Ragavan said...

http://thamizhblog.blogspot.com/2006/10/30.html

மிகவும் அருமை. படிக்கையில் அந்தக் குசினியும் அந்தப் பக்கம் படுத்துகிடக்கும் கிழவியும் கண்முன்னே வந்தார்கள். நல்ல படைப்பு. எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_07.html

ஒருத்தர் நம்மளப் புகழும் போது ஒரு மாதிரி இருக்கே....இப்படியெல்லாம் பொய்ப் புகழ்ச்சி செய்யும் போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்படித்தன் கேட்டுகிட்டு இருந்தாங்களோ..அவங்களுக்கும் பொழப்பில்ல. நடிச்சவங்களுக்கும் பொழப்பில்ல....விடுங்க உஷா....

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/10/16.html

ரோட்டுக்கு மேல இருக்குற வீட்டுக்கு மதிப்பில்லையா! அடக் கொடுமையே....இங்கெ பெங்களூர்ல அப்பார்ட்மெண்ட் வாங்குனப்பக் கூட ரோட்டுக்கு மேல வேண்டாம்னு கொஞ்சம் உள்ள தள்ளியிருக்குற மாதிரி பாத்தோம். அந்தளவுக்கு டிராபிக்.

அங்கயும் தையல் வகுப்பா! அவங்க ஒங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது போக நீங்க அவங்களுக்கு நம்மூரு பாவடை ஜாக்கெட் தைக்கச் சொல்லிக் கொடுத்திருக்கலாம்ல. ஃபீஸ் கட்டியிருக்க வேண்டாம்ல.

ஜோஷ்வா? வரட்டும் வரட்டும்.

G.Ragavan said...

http://dravidatamils.blogspot.com/2006/05/blog-post_114857122653904836.html

எல்லாம் சரி...இந்தப் பெயர்களை வைத்தது யார்? எதை வைத்து இந்தப் பெயர் வைக்கப் பட்டது? நூற்குறிப்பு ஏதேனும் உண்டா? காரணங்கள் தெரிந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

தமிழ் எண்களைப் பயன்படுத்துவது நன்றே. நல்ல வழக்கமும் கூட. தமிழுக்காக உயிரைக் குடுப்பேன் என்ற அரசியல்வாதிகள் அவைகளை வழக்கில் புகுத்துவதில்லையே! அரசியல்வாதிகளை நம்புவதில் பயனில்லை. அவர்கள் ஓட்டுக்காகப் பேசும் வாய்ச்சொல் வீரர்கள்.

மதங்களையெல்லாம் கடந்து தமது குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதிலேயே இன்னும் ஒரு கருத்தும் எட்ட முடியவில்லை. இதுதான் மாதங்கள் என்று முடிவு செய்து விட்டால், எந்தெந்த மதத்துக்காரர்கள் அந்த மாதங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் வரையறுப்பது நன்று.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_07.html

// யாரோ சொன்னது போல் sycophancy is rooted in our culture..esp pure(?) Dravidian Culture.

பாலா //

ஒரு சின்ன திருத்தம் பாலா. sycophancy is rooted in our culture..esp pure political Dravidian Culture.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2006/10/185_07.html

ஒரு + போட்டாச்சு

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/10/5.html

பெங்களூரில் அனைவரும் சுகம். (இதை மிகவும் ரசித்தேன்)

தானே முளைத்த மரம்
கண்ணீர் ஊற்றி வளர்ந்த மரம்
யாருக்கும் தெரியும் மரம்
தனக்கு மட்டும் தெரியா மரம்
நேரமில்லாச் சோம்பலே உரம்
ஷேவிங் செட்டை எப்பொழுது எடுக்கும் கரம்?

பாபா, கவிதை நன்றாக இருந்தது.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/10/outsourcing.html

இன்னும் நெறைய இருக்குங்க. தவறுகள் இல்லாத மனிதன் இல்லை. ஆனால் முடிந்த வரை நல்லவைகளை எடுத்துச் சொல்லிய மனிதராக இருந்தார் என்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். அவரை எதிர்ப்பவர்கள் கூட அவரை எதிர்க்கின்ற இன்னொரு கூட்டத்தைச் சொல்ல அவரின் நல்ல பழக்கத்தைச் சொல்வதுதான் நடக்கின்றது. இது அவரை எதிர்க்கின்ற எந்தக் கூட்டத்திற்கும் பொருந்தும்.

இன்றைக்கு காந்தீயம் என்பது ஒரு அடையாளம். அகிம்சையை போதிக்கும் ஒரு வழி. ரிஷிமூலமும் நதிமூலமும் பார்த்து ஒரு நல்ல வழியை அடைத்து விடக்கூடாது. அப்படி அடைக்க நினைப்பவர்களின் கருத்தில் கயமைத்தனம் உள்ளது என்பதே என் கருத்து.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2006/10/blog-post_07.html

லிவிங் ஸ்மைல் வித்யா, உங்கள் கவிதையின் உள்ளடக்கம் புரிந்தது.

ஒரு திருநங்கை பாஸ்போர்ட் வைத்திருப்பதாகச் சொன்னார்களே. அவர் எப்படிப் பெற்றார்? எந்தப் பாலினம் என்று குறிப்பிட்டுப் பெற்றார்?? ஏதேனும் தகவல் அதுபற்றி உண்டா?

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/10/5.html

// யெஸ்.பாலபாரதி said...
ராகவா..
அசத்துறீயேப்பா... //

எல்லாம் ஒங்களப் போல சகவாச தோஷந்தான். ஹி ஹி...இல்லைன்னா நம்மள்லாம் எந்தக் காலத்துல கவித எழுதி.......

// நினைவுக்கு:-
பாபா வேண்டாமே.. ஏற்கனவே சீனியர் இருப்பதால்.. :-((( //

ஐய்யய்யோ! நான் பேரு வெச்சிட்டேனே....அவரை நான் பேர் சொல்லித்தான் கூப்புடுறது வழக்கம். ஒங்கள ஜூனியர் ஆக்க விருப்பமில்லை. பேசாம யெஸ்பான்னு கூப்பிட வேண்டியதுதான். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. :-)

G.Ragavan said...

http://payananggal.blogspot.com/2006/10/14.html

// இலவசக்கொத்தனார் said...
//எனும்படியால் அமைதி காத்தேன் கொத்சே.
ஜிரா வராமல் இருத்தலுண்டோ
பாரா முகம் காட்டக் கொத்தனார்
தீராப் பகைவரோ என்ன!//

அமைதி எல்லாம் காக்காதீங்க. வந்து ரெண்டு வரி எழுதிப் போட்ட எங்களுக்கு ஒரு ஊக்குவிப்பா இருக்குமில்ல. //

கொத்ஸ்
ஒரு சொல்
இரு சொல் என
வரு(ஞ்) சொல்
இருந்தால் தானே
அது நீர்
பெறு(ஞ்) சொல்லாகும்!
ஆனாலும்
தரு(ஞ்) சொல் என்பது
கரு(ச்) சொல் இல்லாயினும்
உறு(ஞ்) சொல்லாகும்

// பகைவரா?! ஐயா சாமி, அதெல்லாம் வேண்டாம். எல்லாரும் எப்பவுமே நண்பர்களாவே இருப்போம். //

தங்கள் விருப்பமே என் விருப்பமும் :-)

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/10/blog-post.html

யெஸ்பா, என்னது இது போட்டியா....

சரி...என்னோட மண்டைக்குத் தோணுனதச் சொல்றேன். நெருப்புப் பிடித்து எரிகின்ற ஒரு உருவம் அது. தன்னுடன் இருக்கும் நெருப்பை எல்லாருக்கும் பரப்ப முயல்கிறது. கெட்டது படபடவெனப் பரவுவது போல.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/10/blog-post.html

அப்புறம் இதெம்புட்டுன்னு சொல்லுங்க? நமக்குக் கட்டுப்பட்டா வாங்குவோம்ல...

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/10/2.html

அழகு அழகு என்பதெல்லாம் ஒரு நொடியில் இல்லாமல் போய் விட்டது பார்த்தீர்களா! கொடுமை. இவருக்காக வருத்தப்படுவதையும் இறைவனை வேண்டுவதையும் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

பொதுவாகவே புறத்தோற்றத்தினைப் பாதிக்கின்ற தோல்நோய் கொண்டவர்கள் நிலையே துன்பமானதுதான். இறைவன் அவர்கள் அனைவருக்கும் துன்பமில்லாத இன்பத்தைக் கொடுக்கட்டும்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/10/blog-post.html

// யெஸ்.பாலபாரதி said...

ராகவா.. அசத்துறியேப்பா.. //

விடை தப்புன்னு யெஸ்பா வழியில சொல்றது இப்படித்தானோ :-)

பெரியாரா....நான் கிட்டத்தட்ட சரியாத்தான் சொல்லியிருக்கேன். அந்த ஓவியர் சொல்ல விரும்பிய நான் சொன்ன கருத்தைத்தான் என நினைக்கிறேன்.

கெட்டது படபடவெனப் பரவுவதை விட்டு விடலாம். அது ஒரு உவமானம்தான். ஏனென்றால் பெரியாரின் கருத்துகளில் ஏறுபுடையனவும் உண்டு. விலக்குடையனவும் உண்டு.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/10/blog-post_09.html

இதை விளையாட்டாக நாங்களும் சொல்வோம். ஆனால் ஷேஷப்பய்யர் என்று சொல்வோம். இதைக் கன்னட, தெலுங்கு கோஷ்டிகளிடம் சொல்லி ஓட்டுவோம். பாருங்க...அப்பவே தஞ்சாவூர் ஷேஷப்பய்யர் லண்டன் போயிருந்தாரு. Just for fun.

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/10/blog-post_09.html

முத்துக்குமரன், இன்றைய சூழ்நிலையில் தேசபக்தி மட்டுமல்ல மதம், மொழி, இனம் என்று பலவற்றை வளர்க்க தீவிரவாதம் எளிதாக உதவுகிறது.

நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தை விடுங்கள். சொல்லியிருக்கும் தொனி தேசபக்தியே கூடாது என்பது போல இருக்கிறது. அல்லது தேசபக்தி இருப்பவர்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்பது போல இருக்கிறது. அதைத்தான் சொல்கின்றீர்களா? இல்லை என்று நான் நம்புகிறேன்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/10/6.html

கா.மு என்பது
திட்டமிடாமல் நடந்தது
திட்டிக் கொண்டிருக்கும்
கா.பி என்பது
திட்டமிட்டே நடக்கிறது!!!!!!

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/10/blog-post_09.html

not to publish

hi luckylook, please dont publish my previous comment as well as this comment.

I feel my comment is very much opt for this post but certainly not among the other comments for this post.

I am very sorry for that. I hope to comment in your blog sooner.

thanks for the help and support.

regards,
Ragavan

G.Ragavan said...

http://nambharathi.blogspot.com/2006/10/blog-post.html

வங்கத்திலும் மிக அருமையான பாடல். ஐதராபாத்காரர்களை அந்த ஊர் பிரியாணி தவிர எந்த பிரியாணி போட்டும் சமாதானப்படுத்த முடியாது என்பார்கள். தமிழர்களை நம்மூர்ச் சாம்பார் தவிர எந்தூர்ச் சாம்பாரும் திருப்திப் படுத்தாது. அதுபோல வங்காளிகளுக்கு இந்தப் பாடலை யார் பாடினாலும் திருப்தி இருக்காது. அவர்களே பாட வேண்டும். எனக்கு இசைஞானம் என்பது வெறும் கேள்வியறிவு.

வங்கத்தில் ஒரு நண்பன் வீட்டிலிருந்த பொழுது அவன் இந்தப் பாட்டைப் பாடினான். கூட நான் பாடும் பொழுது உச்சரிப்பிலும் ராகத்திலும் நூறு திருத்தம். சரி...அவனே பாடட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு அவனும் அவனுடைய அம்மாவும் அப்பாவும் வந்தே மாதரம் பாடலை ஏ.ஆர்.ரகுமான் போட்டதிற்கும் பாரம்பரிய இசை அமைப்பிற்கும் என்ன வேறுபாடுகள் என்று பேசத் தொடங்கி விட்டார்கள். நான் பப்பரப்பாங்பாங். :-)

ஒரு பாடலை முழுமையாக ருசிக்க ரசிக்க மொழியறிவு மிகத்தேவை. வங்காளிகள் இந்தப் பாடலின் ஒவ்வொரு எழுத்தையும் ருசித்து ருசித்து அந்தச் சுவையிலே ஊறி வெளிவரயியலாமல் இன்புற்றிருக்கிறார்கள்.

ஆனால் நாம்...எந்தத் தமிழ்ப் பாடலையாவது சொல்லி...........எங்கள் தமிழர் இந்தப் பாடலை நாடி நரம்போடு ஊனும் உயிரோடும் களிக்கிறார்கள் என்று சொல்ல ஆசை மட்டுந்தான் படமுடிகிறது.

ஒரு தமிழ்ப்பாவை ரசிப்பதைத் தடுக்க எத்தனையெத்தனை காரணிகள். கருத்தை ஏற்பதும் விடுப்பதும் வேறு. ரசிப்பது என்ற அளவிற்குக் கூட தமிழ்பற்று தலைவிரித்து ஆடுகிறது. என் வயிற்றெரிச்சல். உச்சரிப்பு பிழையாகப் பேசினால் வீட்டில் திருத்துகிறார்கள். நம்மூரில்...வளம் என்பதை வலம் என்று உச்சரித்த நண்பனைத் திருத்தினால் மொழியின் பங்கு அதைக் கொண்டு செல்வதோடு முடிந்து விடுகிறது என்று பேசுகிறான்.

பாரதியின் தீந்தமிழ் மொழிபெயர்ப்பும் மிகச் சிறப்பு. வரிமாற்றம் செய்யாமல் மொழிமாற்றம் செய்திருப்பது அவரது தமிழறிவின் பெருமை.

பாரதி.........நீ எங்கள் ஆசான். உன் தமிழ் எங்கள் உணவு. ஏன் உணவு தெரியுமா? உள்ளே போன மூச்சு வெளியே வந்திடும். உள்ளே போகும் உணவு நன்றாயின் உடலோடு தங்கும். அல்லன மட்டுமே வெளியேறும்.

G.Ragavan said...

http://payananggal.blogspot.com/2006/10/14.html

// இலவசக்கொத்தனார் said...
//கொத்ஸ்
ஒரு சொல்
இரு சொல் என
வரு(ஞ்) சொல்
இருந்தால் தானே
அது நீர்
பெறு(ஞ்) சொல்லாகும்!
ஆனாலும்
தரு(ஞ்) சொல் என்பது
கரு(ச்) சொல் இல்லாயினும்
உறு(ஞ்) சொல்லாகும்//

ஐயா, விளக்கம் ப்ளீஸ்.
:) //

அதெல்லாம் முடியாது :-(((((((((((((( ஏதோ எப்பவோ இப்படித் தோணுது...அதுக்கும் வெளக்கம் கேட்டா.......வேணும்னா குமரனையோ வைத்தியரையோ கேளுங்க....

G.Ragavan said...

http://payananggal.blogspot.com/2006/10/14.html

// காடாளும் பித்தனின் கைக்குழந்தை கந்தன்

நாடாள வந்தானோ? வேதனைதான் - மூடனாய்

கோவித்த கோவணாண்டி குன்றேறி நின்றவனை

சேவித்து என்ன பயன்



( அட சும்மா கோச்சுக்காதீங்க... வஞ்ச புகழ்ச்சி அணி :D திட்டற மாதிரி திட்டி புகழறது ) //



யாரது ஜீவ்சா! இதோ இங்கே பாருங்கள்...என்பாவோ வெண்பாவோ.....

மேலெங்கும் தீய்ந்தானே கடவுளோ
வேல் தங்கும் சேயோனே தெய்வமாங்கொல்
பால் குடித்து மாய்த்தானே கடவுளோ
நூல் கொடுக்கும் புலவனே தமிழ்க் கடவுளாங்கொல்
பத்துமுறை பிறந்தானே கடவுளோ
தத்தும் வயதில் தகப்பன் சாமியானே இறைவனாங்கொல்

G.Ragavan said...

http://pavanitha.blogspot.com/2006/07/blog-post_115417913399459733.html

நினைக்க நினைக்க இனிக்க வைக்கும் அனுபவம் கவிதையாகி இனிக்கிறது. அருமை. புகைவண்டியின் பயணமே பயணம்.

G.Ragavan said...

http://nambharathi.blogspot.com/2006/10/blog-post.html

// குமரன் (Kumaran) said...
இராகவன். நீங்களும் சொல்லின் செல்வன் ஆகிவிட்டீர்கள். :-) 'கண்டேன் கற்பினுக்கணியை' என்றானே கம்பனின் சொல்லின் செல்வன் அது போல் நீங்களும் 'வங்கத்திலும் மிக அருமையான பாடல்' என்று ஒற்றை வரியில் பாரதியாரின் மொழிபெயர்ப்புகளைப் பாராட்டிக் கொண்டே வங்கத்தின் முதற்பாடலையும் பாராட்டிவிட்டீர்கள். :-) //

ஹா ஹா ஹா சொல்லைக் கொடுப்பவன் வேலன். வேலனின் செல்வன் என்று வைத்துக் கொள்ளலாம். தவறில்லை. :-) அவர்கள் அந்தப் பாடல் மட்டுமல்ல ஒவ்வொரு வங்கப் பாடலையும் ரொபீந்தர ஷொங்கீத் என்னும் ரவீந்திரரின் பாடல்களையும் மற்ற வங்கப் பாடல்களையும் எப்படிச் சுவைக்கிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் ஒரு சிறிய புத்தக அலமாரியாவது இருக்கிறது. ம்ம்ம்.

// நானும் ஹைதராபாத்திற்குச் சென்ற போது அந்த ஊர் பிரியாணி சாப்பிடணும்ன்னு ஆசைப்பட்டு சார்மினார் பக்கத்துல ஒரு உணவு விடுதியில் உண்டேன். கொண்டு வந்து வைத்ததில் எடுத்து வைத்துச் சாப்பிட சாப்பிட வந்து கொண்டே இருந்தது. அவ்வளவு வைத்திருந்தார்கள். சுவை எப்படி இருந்தது என்று இப்போது மறந்துவிட்டது. +2 படிக்கும் போது சென்றது. //

நான் பத்து மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். ஆகையால் சுவை நினைவிலுண்டு. :-) அதுவுமில்லாமல் பெங்களூரில் ஆந்திர நண்பர்கள் பிரியாணி சரியில்லை என்று புலம்புவதும் தமிழர்கள் சாம்பார் சரியில்லை என்று புலம்புவதும் தினப்படி வாடிக்கை.

// சாம்பாரைப் பற்றி நீங்கள் சொன்னதும் உண்மை. நம்மூர் சாம்பார் தான் தகுந்த காரமும் புளிப்பும் கொண்டு இருக்கிறது. மற்றவர்கள் செய்யும் சாம்பாரில் இனிப்புச் சுவையும் வருகிறது. பிடிப்பதில்லை. //

எனக்குப் பழகி விட்டது. ஒருமுறை நண்பர்களை வீட்டிற்குச் சாப்பிட அழைத்திருந்தேன். தமிழ் முறை உணவுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவர்களின் கட்டாயம் வேறு. சோறு, சாம்பார், ரசம், அவியல், தயிர் என்று வைத்திருந்தேன். சாப்பிட்டு முடிந்து விட்டு lord of the rings பார்த்துக் கொண்டிருந்தோம். மும்பைத் தோழி ஒருத்தி திடீரென "R, can i ask u something?" என்றால் R என்றுதான் என்னை அழைப்பார்கள். எல்லா நண்பர்களுக்கும் முதலெழுத்து மட்டும்தான் பெயர். நானும் என்ன என்று கேட்டேன். "Can I hv a cup of sambar to drink?" என்று கேட்டாள். நான் வியந்து போனேன். ஏனென்று கேட்டால் பெங்களூரில் சாம்பார் என்று இத்தனை நாள் அவளை ஏமாற்றி விட்டார்களாம். சாம்பார் இதுதான் என்று இத்தனை நாள் தெரியாமல் போனதே என்று வருத்தப்பட்டாள். நான் கொடுத்த சாம்பார் குறிப்பு நொய்டா கொல்கத்தா என்று மணந்து கொண்டிருக்கிறது என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். :-)))))

// வங்காளிக்கு மட்டும் இல்லைங்க. சௌராஷ்ட்ரர்களுக்கும் தான். எங்கே சௌராஷ்ட்ர மொழிப் பாடலை டி.எம்.எஸ். பாடியதை வைத்து நீங்கள் பாடுங்கள். நான் ஒத்துக் கொள்கிறேனா என்று பார்க்கிறேன். :-) //

அட நீங்க வேற. அவரு தமிழ்ல பாடுன பாட்டுகளையே என்னால ஒழுங்கா பாட முடியாது. இதுல சௌராஷ்ட்டிரம் வேறையா...நீங்க வேற....நான் இன்னும் தாள் தூப் சே-யத் தாண்டலை. :-)

// ஒரு பாடலை முழுமையாக ரசிக்க மொழியறிவு தேவை என்பது முழுக்க முழுக்க உண்மை. நம்மவர்களும் ஊனும் உயிரும் களிக்கச் சில பாடல்களைப் பாடுகிறார்கள் என்று தான் நினைக்கிறேன். திருக்குறளில் சில பாக்கள் (முதல் பா மட்டுமாவது) இதில் வரும் என்று நினைக்கிறேன்.

தமிழ் எங்கள் உணவு தான். :-) //

அறிவேன். நான் அறிவேன்.

G.Ragavan said...

http://payananggal.blogspot.com/2006/10/14.html

// இலவசக்கொத்தனார் said...
வாங்க ஜிரா வழிக்கு. இவ்வளவு நாள் நானும் கூப்பிட்டு கூப்பிட்டு ஓய்ஞ்சே போயிட்டேன். இப்போ உங்க ஆளைப் பத்திச் சொன்னதும் பொத்துக்கிட்டு வருதோ கோபம்? ஓடியே வந்து போடறீங்களே.... :D

வாங்க வாங்க! :D //

வந்துட்டோம்ல. பின்னே கேக்க ஆளில்லைன்னு நெனச்சீங்களா? விட்டுருவோமா? :-)

வெண்பா இலக்கணம் தெரியாது. ஆசிரியப்பா மறந்து போச்சு. கொஞ்சம் டச்சப் பண்ணினா வரும். நேரமில்லாமத்தான் இப்படி....

G.Ragavan said...

http://lingastakam.blogspot.com/2006/04/blog-post.html

தொடரட்டும் இந்தப் பணி. வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://lingastakam.blogspot.com/2006/10/1.html

// தமிழ்கடவுள் என்றால் முருகப்பெருமான் என்று ஆனது போல் லிங்கம் என்றாலே அது சிவலிங்கம் என்றே பொருள் என்று ஆகிவிட்டது. //

:-) தமிழ்க் கடவுள் என்றால் முருகந்தான். ஆகவில்லை. லிங்கம் என்றாலும் சிவலிங்கம்தான். ஏனென்றால் சிவனுக்கு மட்டுந்தான் இந்த அடையாளம் உண்டு. அதனால்தான் தமிழில் ஆவுடையார் என்கிறார்கள். லிங்கம் என்பது பிற்பாடு வழக்கில் வந்தது என்று நினைக்கிறேன். குறிப்பாக சைவ மறுமலர்ச்சி காலத்தில். தொடரட்டும் இந்தப் பணி.

G.Ragavan said...

http://kasadara.blogspot.com/2006/10/12.html

மொத்தத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவு தொடர்ந்தும் ஒளிவு மறைவு இன்றியும் இருக்க வேண்டும்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/008.html

நாமக்கல் கவிஞர் எழுதிய அருந்தமிழ்ப் பா ஒன்று. அதுவும் தமிழ்க் கடவுள் முருகனைப் புகழ்ந்து பாடியது. மிகவும் அரிதான பாடலை அரித்தெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் நாமக்கல் சிபி. ஊர்ப்பாசமா?

எதுவாயின் என்ன? நினைத்து நினைத்து சுவைக்க ஒரு பா.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/008.html

இன்னொன்று...இந்தப் பாடலுக்கு இசை வடிவம் இருக்குமென்று நினைக்கவில்லை. வலைப்பூவில் இசையறிவு வாய்த்தோர் யாராயினும் இசையமைத்துப் பாடிக் கொடுத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/10/blog-post_09.html

// முத்துகுமரன் said...
//சொல்லியிருக்கும் தொனி தேசபக்தியே கூடாது என்பது போல இருக்கிறது//

ராகவன் இது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. //

வியப்புற என்ன இருக்கிறது முத்துக்குமரன். நான் எழுதியதை முழுவதும் படியுங்கள்.

====================================
நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தை விடுங்கள். சொல்லியிருக்கும் தொனி தேசபக்தியே கூடாது என்பது போல இருக்கிறது. அல்லது தேசபக்தி இருப்பவர்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்பது போல இருக்கிறது. அதைத்தான் சொல்கின்றீர்களா? இல்லை என்று நான் நம்புகிறேன்.
====================================

இதுதானே நான் சொன்னது. என்னுடைய கேள்விக்கு உங்களது விடை இல்லையே.

எல்லாரும் பொதுமைப்படுத்துகிறார்கள் எனச் சொல்லி நாமும் அதையே செய்தல் சரியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/10/1.html

இந்தக் கதையைத் திருமலை தெய்வம் படத்தில் பார்த்து விட்டேன். ஆனால் சற்று வேறு விதமாக. உங்கள் கதை முடியட்டும். ஒற்றுமை வேற்றுமைகளைச் சொல்கிறேன்.

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/10/blog-post.html

கலக்கீட்டீங்க அருள். நம்ம அடுப்படிக்கு வந்து பாருங்க (adupadi.blogspot) அஜால்குஜால் மேட்டருங்க நெறைய இருக்குதேய்.

கத்தரிக்கா புளிக்கொழம்புக்குத் தக்காளி போட்டும் செய்யலாம் போடாமலும் செய்யலாம். நல்லாவேயிருக்கும். கொஞ்சம் தேங்காய மைய அரச்ச்சி ஊத்தீரனும். அதுவும் புளி கொதிச்சி வரையில...அடடா! தெக்குப்பக்கம் இந்த அரச்சி ஊத்துறது நெறைய உண்டு.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2006/10/blog-post_11.html

சரயு நதிக்கரையும் அதோட பக்கத்துல இருக்குற மாந்தோப்பும் சுவாமியின் வீடும் பள்ளிக்கூடமும் ரயில்வே ஸ்டேஷனும் இன்னும் எத்தனையெத்தனையோ இருக்குதே.

ஆர்.கே.நாராயணின் கதைகளில் எளிமை இருக்கும். மெல்லிய நகைச்சுவையும் இருக்கும். அவருக்கு நோபல் பரிசு கிடைக்காதது வருத்தத்திற்குரியதே.

G.Ragavan said...

http://cinemapadalkal.blogspot.com/2006/10/blog-post.html

சந்திரவதனா இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதே போல "சந்திப்போமா சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா" என்ற பாடலும் மிகவும் பிடிக்கும்.

யோகன் ஐயா குறிப்பிட்ட காலமிது காலமிது பாடலும் மிகச்சிறப்பு.

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/10/blog-post.html

// துளசி கோபால் said...

அப்பாடா........ இந்த முறை ஊருக்கு வரும்போது உக்காந்து சாப்புட இடம் கிடைச்சிருச்சு.

ரொம்ப தெங்க்ஸ்.

தின்னுட்டு ஜமுக்கா இல்லையான்னு சொல்றேனே:-)))) //

டீச்சரு......நேரா புளிக்குழம்புக்குள்ள தப்பிக்கலாம்னு பாக்குறீங்களா? மொதல்ல முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா...அப்புறந்தான் மத்ததெல்லாம்.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2006/10/blog-post_116054335634831098.html

இவரு ஏன் இப்பிடி இவ்வளவு அசிங்கமா உக்காந்துக்கிட்டிருக்காரு. மொதல்ல ஒழுங்கா உக்காரச் சொல்லுங்க. அப்புறந்தான் பசந்தி நாச் நாச்.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/10/blog-post_05.html

யோகன் ஐயா...நல்லதொரு கட்டுரை. ஆய்வுக் கட்டுரை என்பதே கற்பனைகளின் மீது எழுதி தமது கருத்தை நியாயம் எனக் கற்பிக்கவே என்றான நிலையில் உண்மையான ஆய்வுக் கட்டுரை தந்தமை உங்கள் சிறப்பு.

படக்கென்று என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் நீங்கள் எழுப்பிய வினாக்கள் மிகச்சரியானவை.

ன் என்ற ஒற்று வந்தாலும் வராவிட்டாலும் இலக்கணம் சரியாயிருப்பதால் இந்தக் குழப்பம் வந்திருக்கிறது என நினைக்கிறேன். அதிலும் ஓலைகளில் எழுதப்பட்டு படியெடுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் பிழை நேர்ந்திருக்கலாம். ஆனால் பரிமேலழகர் சரியாக இருக்கிறாரே!

அடியார்க்கு நல்லாரோ நச்சினார்க்கினியாரோ குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்களா? இல்லை என்றே நினைக்கிறேன். இருந்தால் அவைகளையும் பார்க்கலாம்.

கவரிமா என்றால் அதற்கு நீங்கள் தரும் விளக்கமே மிகப் பொருத்தம். மிகச் சிறப்பு.

மான் என்று எடுத்துக் கொள்வோம். சமீபத்தில் சென்னையில் நான்கு மாதம் தங்க வேண்டியிருந்தது. கோட்டூரில் வீடு. அங்கு மான்கள் அடிக்கடி வரும். இரவில் கோட்டூர் பாலத்திலிருந்து இடது புறம் திரும்பி உள்ளே போனால் சமயங்களில் மான்கள் காணக்கிடைக்கலாம். அதை விட நிறைய மான்களை ஐஐடியிலும் காந்தி மண்டபத்தை ஒட்டிய காடுகளிலும் காணலாம். புள்ளிமான்கள்தான். மிகவும் மெல்லிய குணம் உடையவையாம்.

ஒரு நாள் காலையில் செய்தித்தாளில் இப்படி வந்திருந்தது. ஒரு வார காலகட்டத்தில் இரண்டு மான்கள் இறந்து போயினவாம். ஏனென்றால் நாய் குலைத்தாம். மிகமிக மென்மையான மான்கள் நாய்கள் கூடி நின்று குரைத்தாலே இறந்து விடும் என்பது எனக்கு அப்பொழுது புதிய செய்தி. அது போல ஏதேனும் மானினத்தின் மயிரைப் பறிக்க யாரேனும் முயன்றிருந்தால் அந்த அதிர்ச்சியில் கூட செத்திட வாய்ப்புண்டு. அப்படியும் நிகழ்ந்திருக்கலாம்.

இன்னொரு விதமாயும் தோன்றுகிறது. மயிர் நீங்கின் உயிர் வாழா அல்ல. மயிர் நீப்பின் உயிர் வாழா. ஆக மானே மயிரை இழக்கிறது. மான்கள் முதிர்ந்த காலத்தில் மயிர் உதிரத்தானே செய்யும். மனிதர்களுக்கும் மண்டை மயிர் உதிர்ந்து சொட்டை வருகிறதே. அது போல முழு நலத்தோடு இருந்த மான் மயிர் நீக்கத் தொடங்கி விட்டால் அதை முதிர்ச்சி அதன் தொடர்ச்சி சாக்காடு என்றும் கொண்டிருக்கலாம்.

இதை கவரிமாந்தான் சரியானது என்பதற்காகச் சொல்லவில்லை. இப்படியும் இருக்கலாம் என்று தோன்றியதற்காகச் சொன்னது. வெறும் நகைச்சுவைத் துணுக்காய்ப் பின்னூட்டம் இட ஒப்பாததால் எழுதியது.

கவரிமா என்றிருப்பின் உங்கள் விளக்கம் மிகப் பொருத்தம். மான் என்றிருப்பினும் தவறில்லை என்பதற்கு மேலே சொன்ன கருத்து. மாவா மானா என்று அறுதியிட்டுச் சொல்ல எனக்கு அறிவு போதாது.

உங்களது இது போன்ற ஆய்வுகள் தொடர வேண்டும். அதுவே எனது விருப்பம்.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/10/blog-post_05.html

// என்பதனையும் சிந்திக்காமல், மனம் போன போக்குக்கு பொருள்கூறி; அன்று நாம் படித்தது மாத்திரமன்றி!!!;இன்றுவரை தொடர்கிறதென்பதனை விளக்க முற்படுகிறேன். //

சத்தியமாகச் சொல்கிறேன். இந்த வரிகளைப் படிக்கையில் திக்கென்று இருந்தது. அநுபூதி, தமிழ்ச் செய்யுட்கள் என்று பொருள் சொல்கையில் ஏதேனும் தவறாக சொல்லி விடக்கூடாதே என்று. முருகனே துணை.

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/10/blog-post_08.html

// குமரன் அவர்களே...!

எனது கேள்விகளுக்கும் / உங்கள் மறுமொழிக்கும் நம் அருமை நண்பர்
ஜிரா என்ன சொல்லுவார் என்று கேட்க ஆவலாக உள்ளது. //

நன்றி கோவி. :-) நான் நண்பன் என்பதை வெளிப்படையாகவே உறுதி செய்தமைக்கு. மகிழ்கிறேன். :-) நம்மளையும் மதிச்சி நண்பரா ஏத்துக்கிட்டீங்கன்னுதான்.

// இந்த பின்னூட்டம் அவருரைய கண்களுக்கும் / காதுகளுக்கும் எட்டுகிறதா பார்ப்போம் !

:)) //

ஜிராவின் நாசிகள் தூசிகள் அடைந்து போயிருந்தாலும் கண்களில் மண்துகள் விழுந்திருந்தாலும் மதுரையின் பொதிகைத் தென்றல் மகரந்தங்களை அள்ளிக் கொண்டு வந்து நாசிக்கும் தந்து கண்களுக்கும் காட்டுகையில் எப்படி எட்டாமல் இருக்கும்! :-)

கோவி, இந்து மதம் என்பது பல(ழ)ரசம் என்று அறிவீர்கள். பல வழக்கங்கள் ஒன்றாகச் சேர்ந்தது. என்னை இந்து என்று அழைத்துக் கொள்கிறேன். சரி. ஆனால் சாதி என்னைக் கட்டுப்படுத்தியாகக் கொள்ளவில்லை. என்னுடைய சாதிச் சான்றிதழில் ஒரு சாதி இருந்தாலும் அதற்கு நான் பொறுப்பன்று. அதே நேரத்தில் சாதீயத்தால் என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அப்படி நினைப்பவர்களுக்கு என்னிடம் தோல்விதான் கிட்டும் என்றே நம்புகிறேன். சாதீயம் மட்டுமல்ல மொழியியம் மற்றும் மதம் கூட அப்படித்தான்.

சாதியால் நான் தாழ்ந்தவன் என்று எவனாவது சொன்னால் அவனைத் தாழ்வாகத்தான் பார்ப்பேன். அது போல என்னுடைய வழிபாட்டு முறைகளால் என்னைத் தாழ்ந்தவன் என்று சொன்னால் அவனை சாதீயகக்காரனைப் போலத் தாழ்வாகத்தான் பார்ப்பேன். அவனுக்கும் என்னிடம் வெற்றி கிடைக்காது. இது மொழி, இனம் என்று எதற்கும் பொருந்தும்.

ஏன் இமயத்தைத் தாண்டவில்லை என்பதே மையக் கேள்வி. அதற்குக் காரணம் உண்டு. ஒன்றே ஒன்று. நான் அறிந்தது மட்டும் சொல்கிறேன். அருணகிரிப் பெருமானை அறிவீர். அநுபூதி. அலங்காரம். விருத்தம். திருப்புகழ். எத்தனையெத்தனை. அத்தனையும் எழுதி விட்டு "கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் உளதோ"......ஏன்? தண்ணிய தம்ளர்ல குடிச்சா என்ன? கிண்ணத்துல குடிச்சா என்ன? சொம்புல குடிச்சா என்ன? ஓடையில அள்ளிக் குடிச்சா என்ன? அருவியில வாயத் தொறந்து குடிச்சா என்ன? இதுதான் கருத்து. இன்றைக்கு இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களில் சிலர் மதம் பிடித்திருந்தாலும் நம் நாட்டில் பல அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லிய கருத்துகள் நம்மோடு ஆங்காங்கு ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அது நம்மோடு சேர்ந்தது.

சாதீயம் நீங்க வேண்டியதுதான். கொடியதுதான். ஆனால் வெளியில் இருந்து அதை அழிக்க விரும்புகிறவர்கள் ஆடு நனைய அழுத ஓநாய்கள். இது புகுத்தியது அது புகுத்தியது என்கிறவர்கள்...சரி...ராமரை தூக்கி விடலாம். கிருஷ்ணனைத் தூக்கி விடலாம். வடமொழி செழிக்கும் எந்தக் கோயிலும் வேண்டாம். வாருங்கள் தமிழ்க்கடவுளை மட்டும் பைந்தமிழில் வணங்குவோம் என்றார் வர மாட்டார்கள். காரணம் அதுவல்ல அவர்கள் விருப்பம். அவர்கள் செய்யாயதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன். மனிதனுடைய நம்பிக்கையே இறைவன். அந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டு நல்லதையும் அமைதியையும் கொண்டு வரமுடியாவிட்டால் என்ன பயன்? மொத்தத்தில் மத நம்பிக்கையை விட இறை நம்பிக்கை பெரியது. ஆகையால்தான் நாம் நாடு நாடாகப் போய் யாரையும் பயமுறுத்துவதில்லை. இதுதான் என்னுடைய கருத்து.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2006/10/3.html

ஐயா, இந்தக் கட்டுரையின் பெரும்பகுதி எனக்குப் புதிது. ஆகையால் கருத்து சொல்ல தகுதியில்லை.

ஒன்று சொல்லலாம். எழுத்துகளுக்கு உயிர் மெய் என்று பெயரிட்டமை. உயிர் தனியே இயங்குகிறது. உயிர்மெய் இயங்குகிறது. மெய் இயங்க முடியவில்லையே. vowels and consonants என்று பொதுமையாகப் பிரிப்பதை விட இப்படி அறிவோடு பிரித்திருப்பது எத்தனை கூரியது. இதையறியாமல் பழையதெல்லாம் நைந்தது என்போரை என் சொல!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/10/19.html

பொது நலமறிந்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை கொண்ட நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

வேறென்னத்தச் சொல்றது டீச்சர்?

இந்திரா காந்தியா? எனக்கு காந்தியே தெரியுமே!

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/10/11.html

எஸ்.கே. எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ்களில் இதுவும் ஒன்று. திருப்பரங்குன்றின் திருப்புகழ்!

இந்தப் பாடலைக் கே.பி.சுந்தராம்பாள் பாடியும் ஏசுதாஸ் பாடியும் கேட்டிருக்கிறார். ஏசுதாசும் நல்ல பாடகர்தான். ஆனால் பாடலின் ஆழம் தெரியாதவர். ஆகையால் இசைச்சிறப்பு மட்டுமே ரசிக்க முடியும். சுந்தராம்பாளைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. உள்ளம் உருகி உணர்ந்து பாடியிருக்கிறார்கள். என்னிடம் அந்த ஒலிப்பேழை இப்பொழுது இல்லை. தேடிப்பார்க்க வேண்டும்.

நல்ல விளக்கம் ஐயா. இந்தப் பாடலில் ஒரு சொற்பொருட் சிறப்பு உள்ளது. நீங்கள் அதைக் கவனியாது விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

தந்தியின் கொம்பைத்தான் சொல்கிறேன். கொம்பு என்பது ஒரு மரத்தின் கிளை. ஆக ஒரு மரம் படர்வது அதன் கொம்புகளால். அதாவது கொப்புகளால் கிளைகளா. அப்படி வெள்ளானைக்குக் கொப்பாய் இருந்து வளர்க்கக் கண்ட தெய்வானையைப் புணர்ந்தவந்தான் தந்தியின் கொம்பைப் புணர்வோனே! இல்லையா?

முருகா! முருகா! முருகா!

G.Ragavan said...

http://varappu.blogspot.com/2006/10/blog-post.html

ஊக்கம் கொடுக்குறீங்களா! நல்லாருக்கு கருத்து. சரிதான்.

G.Ragavan said...

http://varappu.blogspot.com/2006/08/15.html

நாடு விட்டு நாடு போய்
வீடு விட்டு வீடு தங்கினாலும்
நான் நானாய் இருந்து விட்டால்
நான் இருக்கும் இடமே நான் பிறந்த ஊர்
விடுதலை என நினைத்தால்
ஒட்டுதலை விட முடியுமா?
என்னோடு எப்பொழுதும் கூட வருகிறதே!

G.Ragavan said...

http://etamil.blogspot.com/2006/10/blog-post.html

ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குலொத்துங்க ராஜ ராஜ வீர கேசரி வருகிறார். பராக். பராக். பராக்.

டேய்....ராஜ குலோத்துங்கத்த விட்டுட்டடா! தொலஞ்ச நீ!
========================================
மாமன்னர் நடனம் பார்ப்பதையா கிண்டல் செய்கின்றீர்கள். போன ஆண்டு மகாராணி பார்த்தாரே. மன்னருக்கும் பொழுது போக்கு வேண்டாமா? நாட்டைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்க முடியுமா?
========================================
ஏங்க...மதுரைய கண்ணகி எதுக்குக் கொளுத்துனாங்க? அவங்க கற்பு உள்ளவங்கன்னு காட்டவா?

இல்லடி எம் பொண்டாட்டி. மன்னரு ஆட்டம் பாத்துட்டுக் கடமைல தவறுனாரு. அந்த வெனதான் மதுரை எரிஞ்சது.
========================================
ஐயா, நீங்க சாப்பிட்டதும் எலைய எடுக்காதீங்க?

ஏன்?

அடுத்தாளுக்கும் இதே எலையத்தான் போடனும். அதுனால நாங்களே பதமா எடுத்துக் கழுவிக்கிறோம்.

ஏங்க? நானே எடுத்துப் போட்டுர்றேன்.

வேண்டாங்க..இப்ப நீங்க சாப்புடுறதுக்கு முன்னாடி இன்னொருத்தரு இதுல சாப்பிட்டு ஒழுங்கா எலைய வெச்சிட்டுப் போகலையா....அடம் பிடிக்காதீங்க.
========================================

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2006/10/blog-post_10.html

கர்ணன் - சூர்யா, அசின்
திருவிளையாடல் - விக்ரம், நயந்தாரா
காதலிக்க நேரமில்லை - சூர்யா, ஆர்யா அசின், பாவனா
முதல்மரியாதை - கமல், கமலினி (முத்து தமிழினின்னு சொல்ற மாதிரி இருக்கு). வடிவுக்கரசிக்குப் பதிலா செல்வீன்னு ஒரு நாடகத்துல உருண்ட முகத்தோட ஒருத்தர் நடிக்கிறாரே. அவரப் போடலாம். இசை..கண்டிப்பா ஏ.ஆர்.ரகுமான். இயக்கம்...பாரதிராஜாவேதான்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_12.html

எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்குற சிங்கத்த தட்டித் தொடச்சி எழுப்பீட்ட வெட்டி. எழுப்பீட்ட. விட மாட்டேன்.

இப்படி சாப்பிட்டவேர் கம்பெனிய வெச்சிக் காதல் கதையா எழுதித் தள்ளுனா...என்ன நெனப்பாங்க...மக்கள். ஏற்கனவே பேரு ரிப்பேரு ஆகியிருக்குன்னு ஊருக்குள்ள பேச்சு......இப்படியெல்லாம் எழுதுனா......

நானும் எழுதுறேன். இத்தனை நாள் உள்ளுக்குற்ற ஊறப்போட்டிருந்த சாப்பிட்டவேர் திகில் கதைகளை எழுதுறேன். மக்களைப் பயமுறுத்துறேன். தீபாவளிக்கு அப்புறமா.

(கதை நல்லாயிருக்கு)

G.Ragavan said...

http://ennam.blogspot.com/2006/10/blog-post.html

கூண்டுக்கிளி படம் வெளிவந்த பொழுதிலேயே தியேட்டரை விட்டுத் தூக்கப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது என்று கேள்விப்பட்டுள்ளேன். சிவாஜி எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சண்டை தாங்காமல்தான் என்று கேள்வி.

எம்.ஜி.ஆர் நல்லவனாக நடிக்க சிவாஜி வில்லனாக நடிக்க என்ன மனத்துணிவு இருந்திருக்க வேண்டும் சிவாஜிக்கு. ம்...படம் கிடைத்தால் பார்க்க வேண்டும். வீசிடியில் கிடைக்கிறதா என்ன?

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/10/blog-post_09.html

// முத்துகுமரன் said...

ராகவன்,

உங்கள் முதல் கேள்விக்கு, கவிதையில் எங்கு தேசபக்தி கூடாது என்று சொல்லியிருக்கிறது.(தொனி). கவிதையை மறூபடியும் வாசியுங்கள். தேசபக்தி வளர்க்க/ தேவைப்படுகிறது/ தீவிரவாதம். கவிதையைஒருவன் வாசிக்கையில் அது அவனுக்கான பிரதியாகிறது. அதன் பொருள் அவன் புரிதல்களுக்கேற்ப அமைகிறது. இந்தக் கவிதை தேசபக்தியில் தீவிரவாதத்தின் பங்கு என்னவென்பதை பேசுகிறது. எப்படி எவ்வாறு என்பதற்கான விடைகளை வாசகனை தேடச் சொல்லியிருக்கிறது. உங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி எடுத்து கொள்ளலாம். //

நன்றி முத்து. :-) வாசகன் விடை காணுறது இருக்கட்டும். நீங்க சரியான விடையைத்தான் கண்டுட்டீங்கன்னு நம்புறேன்.

// பொதுமைபடுத்துதல் என்ற தளத்திற்குள்ளே நான் போகவில்லை. //

சரி விடுங்கள். அதுக்குள்ள ஏன் போய்க்கிட்டு.

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2006/10/blog-post_12.html

நியாயமான பேச்சு. ஒரு பத்து ரூவாய எடுத்துக்கோங்க...அதுக்கு எத்தனை முகம். அரக்கிலோ அரிசி. அரக்கிலோ பருப்பு. கால் லிட்டர் எண்ணெய். ஒரு தேங்காய். ஒரு கைக்குட்டை. இன்னும் எக்கச் சக்கம்.

சந்தேகம் உடனிருந்து கொல்லும் வியாதி. சந்தேகமே வந்தாலும் அதை நேர்மையா அறிவுப்பூர்வமா சமாளிக்கனும். அத வெச்சுக்கிட்டு தானும் கஷ்டப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு கடைசியில அசிங்கப்பட்டு நிக்கக்கூடாது.

எனக்குத் தெரிஞ்சவரோட மனைவி ஆபீஸ்ல இருந்து வந்த ஒரு போன் கால நம்பி பெரிய சண்டையே போட்டு...அப்பப்பா....அந்த சமயத்துல அந்த நண்பரப் பாக்கனுமே!

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_11.html

சரி. இப்ப கிளி எங்கயிருக்கு? என்னாச்சு? இந்தக் கவிதைய இப்பப் போட என்ன காரணம்? விளக்கமாச் சொன்னா நல்லாயிருக்கும். கவிதையெல்லாம் லேசுல நமக்குப் புரிய மாட்டேங்குதுங்க. அதான் கேக்குறேன்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/10/blog-post_12.html

நாங்கூட சென்னையில திடீர்னு மென்பொருள் பெருகி....வித்தியாசமா பெங்களூர் மாதிரி வருதோன்னு நெனச்சு பதிவுக்கு வந்தேன். சென்னையாகும் பெங்களூர்னு ஒரு பதிவு போடுற எண்ணம் கூட இருந்துச்சு. படிச்சு முடிச்ச பிறகு ஒன்னும் தோணலை. உள்ளபடிக்குச் சொன்னா சென்னை-பெங்களூர் ஒப்பீடு செய்ய நான் சரியான ஆள்னு தோணுது. ஒப்பிடுறேன். கண்டிப்பா ஒப்பிடுறேன்.

G.Ragavan said...

http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_12.html

நல்ல பதிவு.

// 1. தேவையில்லாத பொருள்களை கணக்கிட்டு அகற்றவேண்டும் அல்லது அவற்றை ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவோருக்கு அளிக்கலாம். என்றுமே பயன் ஆகாத பொருட்களை தூக்கிப் போடலாம். //

முன்பெல்லாம் எல்லாத்தையும் சேர்த்து வைப்பேன். இப்பொழுது அப்படியில்லை.

// 2. பொருள்களுக்குரிய இடம் என்று அமைத்து அதே இடத்தில் அதே வகையான பொருள்களை வைக்கலாம். சமையல் அறைக்கு பயன்படும் கருவிகள் சமையல் அறையிலேயே வைப்பது, இரும்பு தளவாடங்களுக்கு ஒரு இடம், மின்சாரம் சம்பந்தப்பட்ட எக்ஸ்டன்சன் பாக்ஸ் , டெஸ்டர் போன்றவற்றிக்கு ஒரு இடம், ஸ்டேசனரி பெருள்களுக்கு, படித்த கடிதங்கள் மற்றும் படிக்காத கடிதங்கள் போன்ற வற்றை தனித் தனியாக வைக்கலாம். //

ரொம்பச் சரி

// 3. அந்தந்த அறையில் தனித் தனியாக சிறிய குப்பைத் தொட்டி வைப்பது நலம், ஒரு வேளை எப்போதாவது குப்பையை கிளர வேண்டுமென்றால் சில குறிப்பிட்ட குப்பையை கிளரினாலே தேடிய பொருள்கள் எளிதில் தன்மை மாறாமல் கிடைக்கும். //

ஏற்கனவே இருக்குறதெல்லாமே குப்பை மாதிரித்தான் கெடக்கு ஹி ஹி

// 4. அன்றாட குப்பைகளுக்கு தனி இடமும், படித்த செய்தித்தாள் போன்றவைகளுக்கு தனி இடமும் இருந்தால் பயன். //

ஆமாமா

// 5. அடைக்கப்பட்ட உணவு பொருள்களை பயன்படுத்தும் முன் பயன்படுத்தும் தேதி முடிந்துவிட்டதா என்று பார்க்கவேண்டும். முடிந்து இருந்தால் உடனே அகற்றப் படவேண்டும். அடிக்கடி கெட்டுப் போகப் கூடிய சமையல் பொருள்களை தனியாக வைத்திருந்தால் உடனடியாக அடையாளம் காண முடியும். //

அதெல்லாம் வாங்குறதில்லைங்க. ஹார்லிங்க்ஸ் மற்றும் சிக்கன் சாசேஜ் தவிர. அப்புறம் ஊறுகாய். :-)

// 6. தினமும் பயன்படுத்தும் பொருள் சற்று தேவைக்கு அதிகமாக வைத்திருக்க வேண்டும். சோப்பு, உப்பு, பற்பசை போன்ற பொருள்களை ஒன்றாவது அதிகம் வாங்கி வைத்திருந்தால் நல்லது. இதனால் பற்பசையை கடைசி வரை பிதுக்கி எடுத்துவிட்டு ஒரு நாள் அவசரத்திற்கு வேறு வழியின்றி வெறும் ப்ரெஸ்சையோ, கைவிரலையோ பயன்படுத்துமாறு அமைந்துவிடாது. //

ஆமாங்க

// 7.பொருள்களை அவை வைத்திருக்கும் இடத்துடன் குறித்து பட்டியலாக வைத்து இருந்தால் தேடி எடுப்பதற்கு சுலபமாக இருக்கும். //

ம்ம்ம்...செஞ்சு பாக்கலாம். அப்புறம் பட்டியல எங்க வெச்சோம்னு தேடுற நெலம வந்துறக் கூடாது.

// 8. பிளாஸ்திரி, தலைவலி, சுரம், அஜீரனம், இருமல் போன்றவைகளுக்கு பயன்படுத்தும் மருந்துப் பொருள்கள் தேவைக்காக வாங்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும், குறிப்பிட்ட இடத்தில் வைத்திருந்து முடிவு தேதி பார்த்து பயன்படுத்துதல் நலம். //

ஒத்துக்கிறேன். இருந்தாலும் பக்கத்துல எங்க 24மணி நேர மருந்துக்கடை இருக்குன்னு பாத்து வெச்சுக்கிறது நல்லது.

// 9. விருந்தினர்களின் பயன்பாட்டிற்கு தனியாக புதிய சோப், டவல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.//

வெச்சிருக்கேன். வெச்சிருக்கேன்.

// 10. எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது. //

ஒத்துக்கிறேங்க. அம்மா அடிக்கடி மாத்தி வெச்சுட்டா கொழம்பீரும்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/010.html

ஆகா! அனைவரும் பாடலை ரசித்திருக்கின்றீர்கள். கே.பி.எஸ் அம்மையாரின் கணீர் குரலுக்கு மயங்காதார் உண்டோ. முருகனைப் பாடிப் பாடி வாழ்ந்து புகழ் பெற்ற அவரின் பாடல்கள் என்றாலே தமிழர்க்குப் பேரானந்தம். எழுபது வயதிலும் தகதகதகதகவென ஆடவா என்று பிசிறில்லாமல் குறையில்லாமல் பாடிய அவருட பாங்கு முருகன் அருளே என்றால் மிகையாகாது.

G.Ragavan said...

http://kasadara.blogspot.com/2006/10/13.html

நம்ம பொறுமையா இருந்தாலே பாதிப் பிரச்சனை தீந்து போகும். அது இங்கயும் சரிதான் போல.

இப்பொழுது இருக்கும் முறையிலேயே தொடர் தொடரட்டும்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2006/10/blog-post.html

அப்பாடியோவ்...வெதப்பு முடிஞ்சி நாத்து நட்டுக் கதிரறுத்து இப்ப மந்தைக்கு வந்துருக்குய்யா உங்க வெள்ளாம....இன்னுமென்ன அடிச்சித் தூத்த வேண்டியதுதான!

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/10/2_12.html

ரவி, ஒரு சிறு திருத்தம்.

// உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!! //

இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே. நாடகத்தின் விளைவை அறிந்து அதை நடத்திச் செல்லும் அவனுக்கா நாடகத்தின் முடிவு தெரியாமற் போகும்!

நான் பார்த்த திருமலைத் தெய்வத்தில், கணவனும் மனைவியும் திருப்பணி செய்வார்கள். மனைவிக்கு உதவ வேங்கடன் வருவான். அவன் வந்து உதவுவதைப் பார்த்து அனந்தருக்கு ஆத்திரம் வந்து அவரே மண்வெட்டியைக் கொண்டு அடிப்பதாகக் காட்டியிருந்தார்கள்.

திருவரங்கத்தில் ராமானுசரின் கட்டளை கேட்டுக் கொண்டு திருப்பதி சென்ற விவரங்கள் சொல்லப்படவில்லை. அனந்தராக டி.ஆர்.மகாலிங்கமும் அவர்தம் துணைவியாக விஜயகுமாரியும் நடித்திருந்தனர். ஏ.பி.நாகராஜன் இயக்கம். கற்பூரத்தை வைத்துக் குருதியை அடைத்ததும் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் டி.ஆர்.மகாலிங்கம் குரலில் ஒரு நல்ல பாடலும் உண்டு.

G.Ragavan said...

http://manikoondu.blogspot.com/2006/10/roman-holiday-1953.html

ரோமன் ஹாலிடே..........எனக்குப் பிடித்த படங்களில் முதல் வரிசைப் படங்கள். ஆகா......ஆகா......திரும்பத் திரும்ப எத்தனை முறையும் பார்ப்பேன்.

audrey heburnக்கு இது முதல் படமாம். நம்பவே முடியாது. முதலில் இளவரசியாக ஒரு விருந்தில் கலந்து கொள்ளும் பொழுது அவருடைய ஒரு காலணி கழண்டு விழும். அப்பொழுது அடுத்தவருக்குத் தெரியாமல் அதைக் காலில் மாட்டிக் கொள்ளப் படும்பாடு. :-)))))))))

ஐயோஓஓஒ.........நான் ஒவ்வொரு காட்சியாக சொல்லிக் கொண்டே வர வேண்டும் போல.... :-)

கடைசியில் வழக்கமான விடைகளைச் சொல்லாமல் தனக்குத் தோன்றிய நியாயமான விடைகளைச் சொல்லும் பொழுதும் அந்த முகத்தில் ஒரு கம்பீரம் வருமே. எடுத்த போட்டோக்களைக் கொடுத்ததும் ஒரு நொடி பழைய விளையாட்டு முகம் வருமே.....audrey hepburn....audrey hepburn.........ஐயோ ஐயோ

G.Ragavan said...

http://gpost.blogspot.com/2006/10/blog-post_116055615582165265.html

நட்சத்திரங்களையெல்லாம் பக்கத்துல இருந்து பாக்க வேண்டாம்....இந்தப் பழம் புளிக்கும் :-))))))))))

என்ன கௌதம் இது? ஏன் இப்பிடி? தலமுடி உதிருதா? மொயல் ரத்தத்த வெள்ளத்துணியில நனச்சு தேங்காண்ண பாட்டில்ல போட்டு வைங்க. நறுமணம் மிகுந்த அந்த எண்ணெய தெனமும் தலையில தேச்சுட்டு வந்தா கருகருன்னு முடி பம்பையா வளரும்.

G.Ragavan said...

http://therthal2006.blogspot.com/2006/10/keeripatti-history-repeats-itself.html

முருகா! இதென்ன கொடுமை......எந்த அரசாங்கமும் இந்தப் பிரச்சனையை நேர்மையாக அணுகாது என்றே தெரிகிறது. சீச்சீ...........நீங்கள்ளாம் உயிரினங்களா?

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2006/08/blogger.html

this tamil blog contains materials and matters not in tamil. as a protest I wish to mention my interest of not commenting for this post. :-)

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/10/blog-post_13.html

மங்களம் உண்டாகட்டும்னு ஜோக் சொன்னதும் வாரியார் சொன்ன ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது.

ஒரு திருட்டு சாமியார் இருந்தாராம். அவரு வர்ர பெண்களுக்கெல்லாம் மாதேவா சம்போ கந்தா-ன்னு ஆசி குடுத்தாராம்.

அது என்னடான்னு விசாரிச்சா மாதே வா சமோகந் தா-ன்னு சொன்னாரம். :-))))))))))))))

G.Ragavan said...

http://sivamurugan.blogspot.com/2006/06/162-33.html

சிவமுருகன், ஆயிரங்கால் மண்டபம் என்பது வெறும் பேச்சு வழக்கென்று அறிகிறேன். உள்ளபடி நூற்றுக்கணக்கான தூண்களே உள்ளன. சரியா?

அதெல்லாம் சரி. கோயிலுக்குள் எப்படிப் படம் எடுத்தீர்கள்? நான் கேமரா கொண்டு சென்றால் இதையெல்லாம் படம் பிடிக்க முடியுமா?

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/10/blog-post_13.html

டீச்சர் மூப்பூ போட்டாலும் அது ஒரு பூதான். இதுக்கு வெக்கப் பூன்னு பேரு. மொட்டா இருக்கைல இளஞ்சிவப்பா இருக்கும். விரிஞ்சி விரிஞ்சி வெளுத்துரும். இது கொடைக்கானல் மலைச்சாரல்களில் எக்கச்சக்கமாக உண்டு. சங்கப்பாடல்களில் இந்தப் பூவிற்கு நாணத்தி என்று பெயர். "நாணத்தியன்ன முகிழ்வுடை" என்ற வரிகள் இதனை விளக்கும். இந்தப் பூவிற்கு மருத்துவப் பண்பும் உண்டு. இதனைத் தேனில் ஊற வைத்து உண்டால்....தோல் வளமாக இருக்கும்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/10/blog-post_13.html

டீச்சர்........நான் மேல போட்ட பின்னூட்டம் சும்மா.........சும்மா ஒரு இதுக்கு ஹி ஹி

G.Ragavan said...

http://cinemapadalkal.blogspot.com/2006/05/blog-post_30.html

சந்திரவதனா..........மிகவும் அருமையான பாடல் இது. பி.சுசீலாவின் இனிய குரல் சிறப்போ சிறப்பு..........கவியரசரும் மெல்லிசை மன்னரும் கூடிக் களித்த பாட்டு இது. சுருங்கச் சொன்னால் இது கேட்கத் திகட்டாத கானம்.

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/10/blog-post_14.html

உண்மைதான் முத்துக்குமரன். முதலில் சுரப்பது பால். தொடர்ந்து தாய்மை சுரப்பது அன்பால். நம்பால் கொண்ட பாசம் அது. நல்ல கருத்து. மிகவும் ரசித்தேன்.

G.Ragavan said...

http://chinnakathai.blogspot.com/2006/10/blog-post.html

அழித்துப் பிறக்கவொட்டா அயில்வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கிலீர் எரிமூண்டதென்ன
விழித்துப் பொங்குவெங் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டிழுக்குமன்றோ கவி கற்கின்றதே!

இதாங்க எங்க வாத்தியார் சொல்லிக் குடுத்தாரு :-)

G.Ragavan said...

http://dravidatamils.blogspot.com/2006/10/blog-post_14.html

இது போன்ற மதநல்லிணக்கக் கதைகள் நன்று என்றாலும் இந்தக் கதை கதையே என்று நான் அறிகிறேன்.

ஆதியில் அங்கு பெருமாள் கோயில் இல்லையென்பதும் பின்னாளில் வந்து போய் மீண்டும் வந்தது என்பது வரைக்கும் மட்டும் வரலாற்று உண்மைகளே.

G.Ragavan said...

// குழலி / Kuzhali said...
//நல்ல 'கதை'. //
கதையாகவே இருந்துட்டு போகட்டுமே அதனாலென்ன இந்து மதத்தில் புராணங்களில் இல்லாத கதைகளா?

இப்படியும் ஒரு கதை இருப்பது தான் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று தான் பதிவிட்டோம். //

பதிவிடுங்க. தப்பில்லை.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2006/10/169.html

தஞ்சைப் பெரிய கோயில் புகைப்படங்கள் மிக அருமை. இரவின் இருளில் ஒளியின் நடுவில் மிக அழகு! மிக அழகு!

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2006/10/blog-post_14.html

சுதர்சன், ஒரு + போட்டுட்டுதான் பின்னூட்டம் போடுறேன்.

அந்தப் பிள்ளைகளுக்கு உண்மையிலே விடுதலைதானய்யா கிடைச்சது.

விடுதலைங்குறது எப்பவும் நம்ம கிட்ட இருக்கிறது மட்டுமல்ல. விடுதலையோட விளக்கம் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரி மாறிக்கிட்டேயிருக்கும். சூழ்நிலையைப் பொறுத்து அதனோட தேவை கூடுங்குறதுதான் உண்மை. உண்மை. உண்மை. வாழ்த்துகள் சுதர்சன்.

G.Ragavan said...

http://sivacalgary.blogspot.com/2006/10/blog-post_14.html

மாட்டுக்கறிதான. சாப்பிடலாம். தப்பில்லை.

நேத்து இப்படிதான் சாப்பிட அலுவலகத்துக்கு வெளியில போனோம். பல்லவின்னு ஆந்திரா கடை. கூட வந்தவன் சைவம். அதுனால நானும் மினி மீல்ஸ் சொன்னேன். ரெண்டு பேருக்கும் பொதுவா கோபி 65 சொன்னோம். நல்லவேளைக்கு 65 பேரு நாந்தான் கோபின்னு வந்து நிக்கலை.

சாப்பாடு சுமார்தான். ஆனாலும் சாப்பிட்டோம். திடீர்னு பாத்தா சோத்துக்குள்ள புழு. அப்படியே கடைக்காரரைக் கூப்பிட்டுக் காட்டுனேன். மெல்ல ரொம்பவும் மெல்லிசான குரல்ல சாரி சாரின்னு சொன்னாரு. I am not going to eat this. I am not going to pay anythingன்னு சொல்லீட்டு வெளியில வந்துட்டேன்.

அப்புறம் பக்கத்துக்கடையில பிட்சா சாப்பிட்டு ஆபீசுக்கு வந்து நொய்டாவுல இருக்கிற நண்பனுக்குத் தகவல மெயில்ல அனுப்பினேன்.

"அடப்பாவி...சைவச் சாப்பாட்டு விலையில அசைவச் சாப்பாடு கிடைக்க இருந்தது. கெடுத்துட்டயே"ன்னு சொன்னான். :-)

என்னது...எனக்குப் புழுவப் பாத்ததும் கொமட்டுச்சான்னு கேக்குறீங்களா? இல்லீங்க. எடுத்து வெச்சிட்டு சாப்பிட்டிருப்பேன். ஆனா அங்க சாப்பிடப் பிடிக்கலை. அதுனால புழுவைக் காமிச்சி வெளிய வந்தாச்சு. :-)))))

G.Ragavan said...

http://lingastakam.blogspot.com/2006/10/1.html

// குமரன் (Kumaran) said...
இராகவன். சரியா வந்து மாட்டுறீங்க. :-)

முதலில் இந்தப் பதிவை எழுதிப் பதித்த போது 'தமிழ்க்கடவுள் என்றால் முருகப்பெருமான்' என்ற சொற்றொடர் எழுதவில்லை. பின்னர் படித்த போது உங்கள் நினைவு வந்தது. உங்களை வம்புக்கிழுக்க அதனைச் சேர்த்துக் கொண்டேன். நீங்களும் அதனைப் பிடித்துக் கொண்டீர்கள். :-)

ஏற்கனவே நாம் இந்த தலைப்பில் பேசியிருக்கிறோம். அப்போது தமிழ்க்கடவுள் என்று மாயவனையும் சொல்லலாம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் நான் கொடுத்தேன். ஆனால் வழக்கில் தமிழ்க்கடவுள் என்றால் முருகப்பெருமானையே குறிப்பிடுவதால் நான் சொன்னது சரி தான். தமிழ்க்கடவுள் என்றால் முருகனையும் குறிக்கலாம்; மற்றவரையும் குறிக்கலாம். ஆனால் முருகப்பெருமான் மட்டுமே என்று இப்போது 'ஆகிவிட்டது'. மீண்டும் இந்த விவாதத்தை நாம் செய்யலாம் என்று நீங்கள் விரும்பினால் நான் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். :-) //

ஹா ஹா ஹா குமரன்...நீங்கள் என்னை நினைத்திருப்பீர்கள் என்று நினைத்தேன். அது அப்படியே போலும்.

வாதம் செய்யப் போயும் போயும் என்னையா அழைக்கிறீர்கள். நல்ல ஆளைப் பிடித்தீர்கள். எதிராளியின் சொல்லை வைத்தே சொன்னவரின் பல்லை உடைப்பதற்குப் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் போனால் உங்கள் சொல்லும் பல்லும் எவ்வளவு கொள்ளும் என்று தெரிந்திடும். :-) என்னை விடுங்கள். நானுண்டு. என்னப்பன் கந்தப்பன் உண்டு.

G.Ragavan said...

http://lingastakam.blogspot.com/2006/10/2.html

குமரன், இந்தப் பாடலைப் படிக்கையில் காம தஹன கருணாகர லிங்கத்திற்குப் புது விளக்கம் தோன்றியது. லிங்கத்திற்கு நீங்கள் கொடுத்த பொருளைக் கொண்டு.

லிங்கம் என்றால் குறி(யீடு). நான் குறி என்றே கருதுகிறேன். சிவன் முழுமையான ஆண். சக்தி முழுமையான பெண். இவர்கள்தான் உலகத் தோற்றம்.

ஆக லிங்கம் என்ற சொல் குறியைக் குறிக்கிறது என்றே கருத முடிகிறது. ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்கவென்று தேவராய சுவாமிகள் எழுதியிருக்கிறாரே.

காமம் தத்திக் கரைபுரண்டு அறிவையும் எத்தித் தள்ளி மூண்டு வருமையில் அதனைத் தணிப்பது குறிகள்தானே. அப்படி கரைபுரண்டு வரும் காமவெள்ளத்தைத் தகித்து கருணை செய்த குறியைப் போற்றுவதாக ஏன் கொள்ளக் கூடாது?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/10/2_12.html

// கேபி சுந்தராம்பாள் கூட அந்தப் படத்தில் நடிச்சாங்கன்னு நினைக்கிறேன். பெருமாள் மேல் கணீர் என்று ஒரு பாட்டு பாடுவாங்க!
"ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை" ன்னு நினைக்கிறேன்! முருகனின் பாடல்களே பாடி வந்த அம்மையார், பெருமாள் பாடல் அவ்வளவாகப் பாடிக் கேட்டதில்லை. ஆனா இந்தப் படத்தில் அவருக்கே உரிய கம்பீரக் குரலில் ரொம்ப அருமையா பாடுவாங்க! //

உண்மைதான். அம்மையார் சைவக் கொழுந்து. பழுத்த சைவப் பழம். ஆனால் சைவ வரதன் அவரை வைணவ வரதனைப் பாடுவதைத் தடுக்கவில்லை.

ஏழுமலையிருக்க எனக்கென்ன மனக்கவலையும் அருமையான பாடல். இதே படத்தில் நாளெல்லாம் உந்தன் திருநாளே! மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே! என்ற அருமையான பாடலும் உண்டு. ஆனால் அது "நாளெல்லாம் பூசம் திருநாளே" என்ற பாடலை மாற்றி எழுதிக் கொண்டது. அதாவது நான் அவ்வப்பொழுது "ஆறுமுகமிருக்க எனக்கென்ன மனக்கவலை" என்று பாடிக்கொள்வது போல.

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/10/blog-post.html

சின்னக்குழந்தையொன்று தொண்டையிலிருந்து மதுரையெழுந்து வந்து தொண்டையிலிருந்து குரலெழுந்து வந்து அத்தோடு சிந்தையிலிருந்து இறைவன் மீது அன்பெழுந்து செப்பிய செய்யுள் இது. எனக்கும் எந்தச் சைவனுக்கும் மிகவும் பிடித்த செய்யுள் இது. இதைக் கொடுத்தமைக்கு மிக்க நன்று. மதுரைக் கோயிலில் ஒருமுறை தரிசனம் முடிந்து வருகையில் ஓதுவார்கள் சிலர் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கக் கேட்டேன். மிகச் சிறப்பு. மிகமிகச் சிறப்பு.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/10/2_14.html

நல்லவனாக இருப்பதற்கும் இளிச்சவாயனாக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. உங்கள் நண்பரை...மன்னித்துக்கொள்ளுங்கள் ஜோசப் சார்.......முதல் வகையில் சேர்க்க மனமில்லை. அவருடைய ஆன்மா அமைதியுற்றிருக்கும் என்று நம்புகிறேன். அதற்காக இறைவனை வணங்குகிறேன்.

G.Ragavan said...

http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_14.html

ஜெயலலிதா மேல் நம்பிக்கை இருந்ததேயில்லை. கருணாநிதி மேல் நம்பிக்கை போயே போச்சு. இப்ப இல்ல. சட்டமன்றத் தேர்தல்லையே. தேர்தல் முடிவுகளை விமர்சிக்கும் பொழுதே நான் சொன்னது அதுதான். அடப்போங்கய்யா.......

G.Ragavan said...

http://njaanavelvi.blogspot.com/2006/04/19.html

நல்லதொரு பதிவு. ஒருமுறை படித்தேன். அவ்வப்பொழுது படித்து முடிந்த அளவிற்குப் பயன்படுத்துகிறேன்.

மயிலாடுதுறையைப் பார்த்ததும் குரங்காடுதுறை நினைவிற்கு வந்தது (கபிஸ்தலம்) :-)

மிக நல்ல பணி ஐயா.

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_14.html

// At 3:59 PM, குழலி / Kuzhali said…

//இந்த நடுநிலையில் மிக்க மகிழ்ச்சி....
//
ஹி ஹி நானெப்பவும் நடுநிலை தான் ஆனால் திமுகவை திட்டுவதற்கு பெயர் தான் நடுநிலை என்றால் அது எனக்கு வேண்டாம். //

குழலி, திமுகவை மட்டும் திட்டுவதும் அல்லது திட்டாமல் இருப்பதும் நடுநிலையாகாது. என்னைப் பொறுத்த வரையில் இன்றைய திமுக என்பது அதிமுக. அங்கு ஜெயலலிதா என்றால் இங்கு கருணாநிதி. இவர்களில் யாருமே ஆதரிக்கத்தக்கவர் இல்லை. கருணாநிதி சமூகநீதி கொண்டு வருவார் என்றோ...ஜெயலலிதா நாட்டைப் அமைதிப்பூங்காவாக வைத்திருப்பார் என்றோ நாம் நம்பவில்லை. இவர்களை ஆதரிப்பதால் பலன் உண்டு என்கிறவர்களே ஆதரிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

கூட்டணியில் தொடங்கிய தவறைத் தனியாக ஆட்சி நடத்துவதில் தொடர்ந்து இப்பொழுது இங்கு வந்து நிற்கிறது. ம்ம்ம்ம்ம்....

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_14.html

இன்னொரு விஷயம். ஒரு செயல் தவறு என்று சொன்னோமானால் உடனே எல்லாரும் சொல்வது என்ன தெரியுமா........அவன் செய்யவில்லையா.......இவன் செய்யவில்லையா என்று...அதிலும் புள்ளி விவரங்களோடு வரும். இதுக்கு முன்னாடி இவ்வளவு நடந்திருக்கு. சரி. அதெல்லாம் தப்புன்னா...நீ செய்யுறதும் தப்புதான்னு சொன்னாலும் பலருக்குப் புரிவதில்லை.

G.Ragavan said...

http://sivacalgary.blogspot.com/2006/10/blog-post_14.html

// இராகவன். இப்படிப் பண்ணீட்டீங்களே. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. இது தான் சாக்குன்னு இப்படி சாப்பிட்டத்துக்கு காசு குடுக்காம வந்துட்டீங்களே? :-) //

என்ன சொல்றீங்க குமரன். பொய் சொன்னேனா? நானா? எப்ப? எங்க?

சரி. நாந்தான் காசு குடுக்கலை. அந்த ஓட்டல்காரன் பக்கத்தலயேதான நின்னான். கேக்க வேண்டியதுதானே? ;-)

// பொழச்சிபிங்க ராகவன்..... தூர கிழக்கு நாடுகளுக்கு போனால் உங்களுக்கு சாப்பாட்டிற்கு ப்ரச்னையில்லை நண்பர்கள் கிடைக்கவும் ப்ரச்னை இல்லை.

சீனர்கள் அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டை மிகவும் மதிக்கிறார்கள். அவர்களின் சாப்பட்டை பார்த்து முகம் சுளிக்கும் சில இந்தியர்களால் துணுக்கிறார்கள் //

சிவா, ஓ இதுவும் இப்படியா!

// ஜிரா, இதான் ஐடியான்னு இனிமே போற இடத்துக்கெல்லாம் கையில ரெண்டு புழுவோட போயிடாதீங்க. :) //

கொத்ஸ்....இதெல்லாம் நல்லால்ல சொல்லீட்டேன். அடுத்த வாட்டி சாம்பாருக்குள்ள கோழி கெடக்குதுன்னு வம்பு செஞ்சிருவோம்.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/10/blog-post_09.html

இதுக்கு அந்திமந்தாரைன்னு இலக்கியப் பேரு. அந்தியில மலரும்ங்குறதுக்காக அந்திமலர்ந்தாரைன்னு உள்ளது மருவி அந்திமந்தாரையாகி இருக்கலாம்.

ஆனா இதுக்கு ஊருக்குள்ள லேசான பேரு ஒன்னு உண்டே...அஞ்சுமணிப்பூ. அஞ்சு மணிக்குப் பூக்கிறதால அந்தப் பேரு. கருப்பா மெளக விடப் பெரிய அளவுல இருக்கும் விதை.

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2006/10/blog-post_09.html

உண்மைதான் ஜோசப் சார். கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்துகள்.

கோவி, உண்மையிலே பழுத்த பழங்கள் சிரிக்கையில் பாருங்கள்....அந்தச் சிரிப்பின் தன்மை புரியும். வாரியார் சிரித்துப் பார்த்திருக்கிறீர்களா! :-)

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_15.html

ம்ம்ம்.........

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/10/blog-post_15.html

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....நாலு பெண்களுக்கும் ஒரே போலக் குடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய பிரச்சனையாயிருக்கும். இப்பொழுது ஒரு ஜோடிக்கு மட்டுந்தானே வருத்தம். நாலு வீட்டுல ஒரு வீடு மட்டும் மாடி வீடா இருந்திருக்கட்டுமே........நாலு பெண்களும் போடுகிற சண்டை தெரியும்.

எல்லாம் சரிதாங்க. அப்பா அம்மா பாத்துக் குடுக்குறத வாங்கிக்கிருவோம். அப்பா அம்மாவை விடப் பெரிய செல்வம் உண்டாங்க!

G.Ragavan said...

http://oosi.blogspot.com/2006/10/rajini-kanth.html

// இப் படத்துக்கு ஆணிவேர் போன்றவர் நடிகர் வடிவேலு. சிவாஜிகணேசனின் நடிப்பைப் பார்த்துத்தான் அவரை "வீரபாண்டிய கட்டபொம்மன்', "திருவிளையாடல்', "சரஸ்வதி சபதம்' போன்ற படங்களில் நடிக்க அழைத்தார்கள். //

:-)))))))))))))))))))

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/10/blog-post_15.html

// திருநீறு எப்படி சைவச் சின்னம் ஆனது என்று சைவச்செம்மல் வந்து விளக்கம் சொல்லட்டும். அவருக்குத் தனிமடல் அனுப்புகிறேன். //

என்னையா சைவச் செம்மல் என்கிறீர்கள். முருகா! அந்தப் பெருமை எனக்குத் தகாது. நான் கற்றது விரல் நுனிப்புள்ளியினும் நுணுங்கியது.

நீறு என்றால் சாம்பல். அவ்வளவுதான். அதற்கும் நீரிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

திரு என்ற சொல் சிறப்புச் சொல் என்று தெரிந்திருக்கும். சிறப்புடைய சாம்பல் என்பதால் திருநீறு. எப்படி அது சைவச் சின்னமானதா!

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி காடுடைய சுடலைப் பொடி பூசி என்னுள்ளம் கவர் கள்வன்.

அந்தக் கள்வன் மெய் என்பது மெய்யன்று என்று விளக்கப் பூசிய பொடியைப் பெருமைப் படுத்த வேண்டிதானே திருவைச் சேர்த்தது.

இதற்கு மேலும் எதுவும் விளக்கம் வேண்டுமோ!

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/10/blog-post_15.html

// ஒரு தந்தை தன் மகளுக்கு என்ன செய்யணும், மகனுக்கு என்ன செய்யணும் என்று முடிவெடுப்பது அவர் உரிமை.

இதில் ஒரு எதிர்பார்ப்புடன் வரும் மருமகளைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. //

கண்டிப்பாக ஒரு தந்தைக்கும் தாய்க்கும் அந்த முடிவெடுக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில் மருமகளுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது இயல்பே.

// அவர் செய்திருக்க வேண்டியது இதுதான்.

தன் தந்தையிடம் சென்று, அப்பா, இதுபோல அவர்கள் விட்டில் அவர் மகள்களுக்கு எல்லாம் வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதுபோல நீங்களும் முடிந்தால் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கணும்.

அதுதான் முறை. //

அடக் கொடுமையே! நான் இப்படியும் இருக்குமோ என்று நினைத்தேன். ஒருவேளை வீட்டிற்கு வந்த மருமகள் சரியாகக் கொண்டு வரவில்லையே என்று குத்திக்காட்டுவதற்காக பெண்களுக்கு வீடுகளைக் கொடுத்து மகனுக்கு கார் கொடுத்திருக்கிறார்களோ என்று நினைத்தேன். இதைப் பார்த்து நீ போய் ஒங்கப்பா வீட்டுல வாங்கீட்டு வான்னு சொல்லாமச் சொல்ற மாதிரி. அப்படி இருந்திருந்தா அதை விடக் கேவலம் எதுவும் இல்லை. நல்லவேளை அந்தப் பெண்ணும் அப்படித் தூண்டப்பட்டு கணவனின் மானத்தைத் தன் பெற்றோரிடம் அடகு வைக்காமல் இருந்தாளே!

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2006/10/blog-post_17.html

"ஐயோஓஓஓ...........சாமியோய் இந்த பழிபாவத்துக்கெல்லாம் நானாளாக மாட்டேன். ஓசியில கெடச்சா போட்டியக் கூட சுட்டுத் திங்குறவங்கதான...யப்பா சாமியோவ்...விட்டா கிட்னி கிச்சடி போடுற பயகளப்போய்"ன்னு கதறிக்கிட்டே இந்தப் பக்கந்தான் கவுண்டரு ஓடுனாருங்க. ஏங்க?

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/10/12.html

எஸ்.கே உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொன்னால் போதுமா...ஆங்காங்கு ரசித்ததைச் சொல்ல வேண்டாமா!

அக்கு என்ற சொல்லிற்குப் பலர் பொருள் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். அக்கு வேறு ஆணி வேறு கழற்றி விடுவேன் என்றும் சொல் வழக்கம் உண்டே. அக்கு என்பது கூடு. ஆணி என்பது இணைப்பது. மரப்பொருட்களில் மரக்கட்டைகள் அக்கு. அவைகளை இணைக்கும் ஆணிதான் ஆணி. உடம்பை எடுத்துக் கொண்டால் எலும்புதானே மேனிக்கான சட்டமாக இருக்கிறது. அதனால்தான் அக்கு என்று அழைக்கப்படுகிறது.

சே - எருது...இது எனக்கு வேறொரு திருப்புகழை நினைவுபடுத்தி விட்டது. "பாவேறு நாமணத்த பாதரமே நினைத்து" அதில் "சேவேறும் ஈசர் சுற்றும் முருகோனே" என்று வரும்.

ஓராது ஒன்றைப் பாராது என்பதற்கு குடிலை அறியாமை என்று பொருள் கொள்ள முடியுமா? எப்படி? புரியவில்லையே!

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2006/10/blog-post_17.html

இப்பல்லாம் அரசியல்வாதிங்க யாரையும் நம்புறதில்லை. எல்லாம் கூட்டுக்களவாணிங்கதான். அபீஸ்ல ஒரு நண்பன் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமே ஒப்பந்தங்கள் இருந்தாலும் இருக்கலாம்னு சொன்னான். நம்பக் கஷ்டமாயிருந்தாலும் உண்மையிலேயே இருந்தாலும் இருக்கலாம். ஆனா ஒன்னு..விஜயகாந்துக்கும் அரசியல் லேசுமாசாத் தெரிஞ்சிருக்கு. அடுத்த தேர்தல்ல நல்ல வரவேற்பு அவருக்கு இருக்கும்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2006/10/blog-post_17.html

இன்னொன்னு. கருணாநிதி பிடிக்கலைன்னு ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்பொடுறது. ஜெயலலிதா பிடிக்கலைன்னு கருணாநிதிக்கு ஓட்டுப் போடுறது...இப்பிடியே எதிர்ப்பு ஓட்டுப் போட்டுத்தானே வீணாப் போனோம். ஜெயலலிதாவ எதுத்தா கருணாநிதிய ஆதரிக்கனும்னும் கருணாநிதிய எதுத்தா ஜெயலலிதா ஆதரவுன்னும் கண்மூடித்தனமா முடிவுக்கு வர்ர அளவுக்கு நம்மாளுங்க இருக்காங்க. இதுவுல விஜயகாந்த் அவர் பங்குக்குங்கு அள்ளிக் குடிக்கிறாரு.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/10/blog-post_15.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said:

//குமரன் (Kumaran) said:
சைவச் செம்மலுக்காகவா காத்திருக்கிறீர்கள்? //

குமரன், அட, எப்பிடி கரெக்டா கண்டுபுடிச்சீங்க!...
ஜிரா நீவிர் மயிலார் இருந்தும் வர இவ்வளவு தாமதம் ஏனோ?
சரி, ஞானப்பழம் அப்பன் கணேசனுக்கே! :-)) //

இந்தப் பதிவை நேற்றே கண்டேன். தெரிந்த விடைகள் சிலவே. அவைகளை ஏற்கனவே பலர் சொல்லியிருந்தனர். ஆகையால் அமைதி காத்தேன்.

முருகனைப் பற்றி முந்நூறு கேட்டால் சொல்வேன். என்னப்பனை அன்றி வேறெந்தப் பனையும் ஏறியறியேன். ஆகையால் தெரிந்து கொள்ளும் மாணவனாக மட்டும் வந்தேன். சென்றேன்.

சங்கரங்கோயிலில் இருவரும் ஓருருவாக இருப்பர். திருவனந்தபுரம் என்பது சரியாக இருக்கலாம். திருவனந்தபுரத்தின் பழைய தமிழ்ப் பெயர் சேடகமாடகம். சிலப்பதிகாரம் சொல்லும் பெயர் அது. சேரன் செங்குட்டுவன் சைவன். ஆகையால் போருக்குப் போகையில் விரிசடையன் மாலையைச் சிரசில் சூடிக் கொள்கிறான். சேடகமாடகத்து மாலை வருகிறது. அதை நம்பும் வழக்கம் அவனுக்கு இல்லை. ஆயினும் வந்தவர் மாலையைத் தந்தவர் மனம் புண்படக் கூடாதென்று வாங்கி ஒற்றைத் தோளில் போட்டுக் கொள்கிறான். இது தகவலுக்கு.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_116075564365938409.html

// பாலா said இங்கே நடப்பதையும் குறித்து வைத்து, இந்தியா திரும்பியவுடன் பகிர்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன் (ஜி.ரா. உங்க ஆஃபீஸ்தானே ; ) //

// வெட்டி said //(ஜி.ரா. உங்க ஆஃபீஸ்தானே ; ) //
அப்ப அவர் எங்க ஆபிஸ்ல இல்ல ;) //

இதோ இப்பொழுதே பேச வேண்டியவர்களிடம் பேசி வைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் பொறி (பொரி அல்ல) வைக்கப்பட்டு விட்டது. இனிமேல் வெட்டியானவர் மிகவும் கவனமானவராக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார். ஹி ஹி

«Oldest ‹Older   1 – 200 of 268   Newer› Newest»