Monday, January 08, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - ஜனவரி 2007

ஜனவரி 2007ல் வலைப்பூக்களில் நான் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

238 comments:

1 – 200 of 238   Newer›   Newest»
G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/01/blog-post_08.html

இன்னைக்கும் முழுக்கப்பு டீயும் குடிக்க விடாம கப்பப் பிடிச்சிக்கிட்டிருக்கானே!

G.Ragavan said...

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/01/blog-post.html

கவிதா....இங்க நெறைய பேரு நெறைய சொல்லீட்டாங்க. இதுக்கு சினிமா, அரசியல்...அது இதுன்னு காரணம் சொன்னாலும்...உண்மை அதில்லையோன்னு தோணுது. உண்மைன்னா...முக்கியமான காரணம். சினிமா போன்ற விஷயங்கள் ஒரு காரணம்னாலும்...அதே சினிமாவைப் பார்க்கிற எல்லாரும் அப்படிச் செய்றதில்லையே. அவங்கள ஏதோ ஒன்னு தடுக்குதுல்ல. நீங்க சொல்ற மாதிரி பண்றவங்கள அந்த ஏதோ ஒன்னு தடுக்கலை. வீட்டுல ஒழுங்கா சாப்பிடுறவன்....வெளிய சாப்பிடுறதில்லை. வகைவகையாச் சாப்பிடனும்னு விரும்புறம் கடைகடையாப் போய்ச் சாப்பிட்டுப் போயிருவான். சாப்பாடே வேண்டாங்குறவன் சாப்பாட்டை மதிக்கவே மாட்டான். இவங்க மூனு பேராலயும் இந்தப் பிரச்சனை இருக்காது. வீட்டுலயும் ஒழுங்கா சோறு கெடைக்காம...வெளியில சாப்பிட்டாலும் வாய்க்குப் பிடிக்காம...அல்லது பயந்துக்கிட்டு இருக்குற அரைப்பட்டினியாளர்களாலதான் இந்தப் பிரச்சனையே வருதுன்னு நெனைக்கிறேன். அரைப்பட்டினி இருக்கும் பொழுது சினிமாவுல ஹீரோ ஹீரோயின் என்னும் சிக்கன் 65ஐ வெட்டும் போது இன்னும் அதிகமாத் தூண்டப்படுறான். அதான் விஷயம்னு எனக்குத் தோணுது.

அதே நேரத்துல இது ஆண்கள் மட்டும் செய்றதில்லைன்னு நெனைக்கிறேன். இருபாலாரும்...சரி..எல்லாப் பாலாரும் செய்றதாத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன். இப்படி இவங்க நடந்துக்கும் போது பயந்தோ தெரியாமையோ கண்டுக்காமையோ இருந்தா அதை இவங்க சம்மதமா எடுத்துக்க வாய்ப்பிருக்கு. ஆகையால பிடிக்கலையா..ஒடனே தள்ளி நில்லுங்கன்னாவது சொல்லனும். ஒரு வாய்ப்பு குடுக்கலாம். தேவைன்னா இன்னொருவாட்டி சொல்லலாம் அதுக்கு மேலையும்னா விடக்கூடாது.

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2007/01/blog-post.html

ம்ம்ம்...அருள்...நல்ல கருத்துதான். ஆனால் மூன்றாவது சரியாக வராது என்றே தோன்றுகிறது. கவிதாவின் பதிவில் நான் சொன்ன கருத்தைப் பதிவாகப் போட்டிருக்கின்றீர்கள்.

ஆணினத்தின் மீது மட்டும் இந்த அவலப் புகார் எழக்காரணம் பெரும்பான்மை. இப்படிச் செய்கின்ற ஆண், பெண் விகிதாச்சாரங்களைப் பார்த்தால் ஆண் நிறைய இருக்கும் அதனால்தான் நிறைய புகார்கள். மூன்றாம் பாலினத்தவர்களும் இதைச் செய்கின்றவர்கள்தான். அவர்களுக்குப் பசிக்குச் சோறு கிடைத்தாலும் கிசிக்குக் ஆளு கிடைப்பது கடினம். ஒரு பெண்ணுக்கு ஆண் கிடைப்பதை விடவும்...ஒரு ஆணுக்குப் பெண் கிடைப்பதை விடவும் அவர்களுக்குக் கிடைப்பது கடினமாக இருக்குமென்றுதான் தோன்றுகிறது. ஆகையால்தான் பெரும்பான்மை என்ற பெயரில் அனைத்தையும் ஆண் ஏற்க வேண்டியுள்ளது.

ஆனாலும் ஒரு பெண் விரலால் குதிகாலை நிமிட்டிச் சைகை கொடுப்பதற்கும் பின்னால் போய் உரசுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நாம் பேசுவது இந்தியாவை மையமாக வைத்துத்தான். இது வெளிநாட்டுக்குப் பொருந்தாது.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/12.html

நெல்லிக்காய் காய் காய்
இனிப்புக்காய் தண்ணீரில்
துவர்ப்புக்காய் ஆனாலும்
சத்துக்காய் ஆனதே

நல்ல தொடர் வெட்டி. மக்கள் எத்தனை பேர் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள் பார். அடுத்த தொடர் எப்பொழுதென்று எல்லாரும் கேட்கிறார்கள். நானும்தான். எப்பொழுது கிடாரங்காய் தொடங்குகிறது?

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2007/01/blog-post.html

// //ஆனாலும் ஒரு பெண் விரலால் குதிகாலை நிமிட்டிச் சைகை கொடுப்பதற்கும் பின்னால் போய் உரசுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. //

இல்லை ராகவன்! பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை!! மேலும், அதைத்தொடர்ந்து அவர் செய்தவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை! இதுதான் நம் தவறென்று நினைக்கிறேன் :( //

ஆகா...அது அப்படியா? செய்தி முழுமையாகத் தெரியாத நிலையில் நான் சொல்லியிருக்கும் கருத்து தவறாக இருக்கலாம். முன்பே சொன்னது போல....இது எல்லா பாலினத்தினருக்கும் உள்ள ஒன்றுதான். ஆண்கள் மேல் நிறையத் தெரிவதற்குக் காரணம் (இந்தியாவில்) நம்முடைய சமுதாய அமைப்பும் செய்கின்றவர்களின் எண்ணிக்கையும்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/01/29.html

என்ன கொடுமை ரவி இது. மெல்லிசை மன்னர் இசையை இளையராஜா இசைன்னு நீங்க சொல்லீட்டீங்களே....கண்ணே கனியமுதே படத்துக்கு இசை மெல்லிசை மன்னர். இந்தப் பாடலைப் பாடியவர்கள் பி.எஸ்.சசிரேகாவும் ஏசுதாசும். மிகவும் அருமையாக பாடியிருப்பார்கள்.

G.Ragavan said...

http://arutperungo.blogspot.com/2007/01/blog-post.html

ஆகா...தொடர்கதையா...கலக்குங்க அருட்பெருங்கோ. காதற்கவிஞரின் காதற்கதை நல்லபடி வளரட்டும். காதல் ஒங்களுக்கு நல்லாவே வருது. ;-)

கரூர்....எம்மஜஸ்...எல்லாம் தெரிஞ்ச எடங்கள்தான். அப்படியே ஜவஹர் பஜாரு ஈஸ்வரங்கோயில்னும் சொல்லீருக்கலாம். நானும் அந்த எடங்களை நெனைச்சுப் பாத்துக்கிருவேன்.

G.Ragavan said...

http://arutperungo.blogspot.com/2007/01/2.html

என்னாது...நேரடி மோதலா? பார்க்கலாம்..என்னதான் நடக்குதுன்னு. சிங்கத்தோட குகையிலேயே போய் சந்திச்சது சிங்கத்தையா அசிங்கத்தையான்னு அடுத்த பகுதியில தெரிஞ்சிரும். :-)

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/01/blog-post_09.html

வாழ்த்துகள் சுதர்சன். இன்று பிறந்த (சுட்ட) ஓமப்பொடி போல மணமோடும் குணமோடும் சுவையோடும் நீடு வாழ்க. பீடு வாழ்க. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

(ஓமப்பொடி சுடுவது எப்படின்னு ஒரு வகுப்பு இருக்குதாம். வர்ரீங்களா? ;-) )

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/01/ii-17.html

தில்லாலங்கடி தில்லாலங்கடின்னு சொல்வாங்க. இவரு தில்லாலங்கடிகளுக்கெல்லாம் தில்லாலங்கடி போல. வேலைல பிரச்சனைன்னு கேள்விப்பட்டிருக்கேன். பிரச்சனையே வேலைன்னு இப்பத்தான் கேள்விப்படுறேன்.

G.Ragavan said...

http://vasanthanin.blogspot.com/2007/01/blog-post_08.html

தமிழகத்தில் பல பெரிய ஆட்களே உச்சரிப்பு மயக்கத்தில்தான் இருக்கிறார்கள். காற்று என்பதை காட்ரு என்று உச்சரிப்பதும் பழம் பளமாகிப் பலமானதும் அனைவரும் அறிந்ததே. அத்தோடு மலைப்பழம் மலப்பழமாகி நீண்ட ஆண்டுகளாகி விட்டது. ஆகையால் இந்த உச்சரிப்பு வித்தியாசங்களைப் பெரிது படுத்த வேண்டியதில்லை.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/01/29.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆகா என்ன கொடுமை சரவணன்-(ச்சே சரவணன் இல்லை),ராகவன்!
எங்கு சென்றீர்கள் இத்தனை நாள்! ஆளைக் காணோம்!
கண்ணனைக் காண்பதெப்போ என்ற பாட்டுக்குப் பதிலா ராகவனைக் காண்பதெப்போ என்று பாடிவிடலாம் என்று இருந்தோம்! :-)) //

என்ன செய்றது ரவி. ஒரு பத்து நாள் விடுப்பெடுத்துக் கொண்டு சுற்றுலா போயிருந்தேன். ஆகையால் வலைப்பூ பக்கமே வரவில்லை. :-)

// //மெல்லிசை மன்னர் இசையை இளையராஜா இசைன்னு நீங்க சொல்லீட்டீங்களே....கண்ணே கனியமுதே படத்துக்கு இசை மெல்லிசை மன்னர்.//

ஆகா, தவறு தான்! நீங்க சொல்லிய பிறகு தான் சரி பார்த்தேன்! மன்னிக்கவும்! மாற்றி விடுகிறேன்!

என்ன இன்று கண்ணன் பாட்டில் ஒரே வாபஸ்-ஆக இருக்கு?:-)) //

:-) நான் கூட பல பாட்டுகளுக்கு இசை இளையராஜான்னு நெனைச்சு கடைசியா அது விஸ்வநாதனாயிருக்கு. அதுனால ஒரு பாட்டு பிடிக்குதுன்னா...அது தொடர்பான தகவல்களையும் சேர்த்துத் தெரிஞ்சிக்கிறேன்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா, மாற்றியாகி விட்டது! அப்படியே அந்த நட்டுவாங்கம் குரல் யாருடையது என்றும் யாருக்காச்சும் தெரியுமா? //

இன்னைக்கு ராத்திரி கேட்டுட்டுச் சொல்றேன்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/01/30.html

வைரமுத்து எழுதிய வரிகள்தான். மிகவும் இனிமையான பாடல். பெரும்பாலும் தாலாட்டுத்தனமாக வரும் பாடல்களை இளையராஜா சுசீலாவிற்கே குடுத்திருக்கிறார். கண்ணன் ஒரு கைக்குழந்தை, கற்பூர பொம்மை ஒன்று, மனதில் ஒரே ஒரு பூ பூத்தது, மனதிலே ஒரு பாட்டு...இந்த மாதிரி...அப்படி இந்தப் பாட்டையும் கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை மேடையில் பி.சுசீலா பாடக் கேட்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. மிகவும் அருமையான இனிய பாடல்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/12/blog-post_30.html

இவ்வளவு விளக்கமாச் சொல்லியிருக்கீங்க. எல்லாம் சரிதான். ஆனா புது பிளாகர்ல என்னையச் சேக்கவே மாட்டேங்குறாங்களே. எத்தன வாட்டி சேரப் போனாலும்...ஒன்னோட பிளாகு பெருசாயிருக்கு..பின்னூட்டம் நெறையா இருக்கு. இப்ப மாத்த முடியாதுன்னு திட்டி அனுப்பீட்டாங்க. :-( இதுக்கு என்ன செய்றதுன்னு சொல்லுங்க?

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/01/ii-18.html

ஆகா...கரண்சிக் கட்டுகள்....எனக்கு இது வரை யாரும் லஞ்சம் கொடுத்ததில்லையே கொடுத்ததில்லையே! கொடுத்திருந்தா...பேசாம வாங்கி உள்ள வெச்சிருப்பேன். ஆனா நேரடியா நானே வாங்க மாட்டேன். யாராவது சம்பந்தமில்லாத ஆள் வழியா வாங்குவேன். இதெப்படித் தெரியும்னு பாக்குறீங்களா? அப்பார்ட்டுமெண்ட்டு ரிஜிஸ்டர் பண்ணப் போன எடத்துல பெங்களூர்ல அப்படித்தான் செஞ்சாங்க.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/01/blog-post_10.html

ஹி ஹி நல்லாருக்கு காமெடி...படத்த எடுத்து பொருத்தமா நீங்க செஞ்சிருக்குற வேலையும் நல்லாயிருக்கு.

அடுத்த பதிவா? ஓமப்பொடியைப் பிழிவது எப்படின்னு போடலாம். தமிழுக்கு ழ தேவையான்னு போடலாம். விளக்கமாறு எப்போது மாறும் என்று போடலாம். கபி கபி மேரே தில் மே பாட்டு கபிலருக்குத் தெரியுமான்னு போடலாம். எத்தனையோ இருக்குதுங்க.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_10.html

நல்லாயிருங்கய்யா நல்லாயிருங்க....புத்தாண்டு வாழ்த்துகள்....பசி வேளையில இப்படி ஒரு பதிவு...2007 இனிய ஆண்டாக அமையட்டும்...மதுரையா..லிவிங் ஸ்மைல் வித்யா, ராமு, தருமியா....உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள். ரெண்டு முள்ளு முருங்கை வடைய பெங்களூருக்கு அனுப்புறது?

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2007/01/20.html

கண்ணனுக்குத் தாசன் என்பதால்தான் தன்னைக் கண்ணதாசன் எனக் கொண்டான் அந்தக் கவிஞன். அவனுடைய கவித்திறனைச் சுவைத்தவர் அவனை அறிவார். இன்றுதான் இந்தப் பதிவுக்கு வந்தேன். சடசடவெனப் பின்னாலுள்ள பல பதிவுகளை படித்து விட்டேன். ஒவ்வொன்றும் அருமை. இனிமேல் தொடர்ந்து படிக்கிறேன்.

G.Ragavan said...

http://dravidatamils.blogspot.com/2007/01/blog-post_10.html

கலைகள் அந்தந்த நாட்டைப் பொறுத்து உருவானவைதான். மறுப்பதற்கில்லை. ஆனாலும் இன்று நாம் பலதரப்பட்ட பாடல்களையும் கேட்டு மகிழ்கிறோம். திரையிசையென்றாலும் கூட விஸ்வநாதனிலிருந்து இளையராஜாவிற்குத் தாவி ரகுமானிற்கு மாறியிருக்கிறோம். மேலிசை கீழிசை எல்லாம் கூடக் கலந்து கேட்கிறோம். இசை போகமன்று. அது உலக இயக்கம். இந்த உலகமே ஒலியும் ஒளியும்தான். ஒவ்வொரு இயக்கத்திலும் இசை இருப்பதை உணர்வது இனிமை.

அதே நேரத்தில் தமிழிசையும் தமிழ்க் கலைகளும் செழித்து வளர வேண்டும். இசையில் ஒன்றுமில்லை என்றால்...ஏற்கனவே அடிமேல் அடிவாங்கியிருக்கும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளைக் குழியில் போட்டு மூட வேண்டியதுதான்.

நிச்சயமாக இசை என்பது பாகுபாடு வளர்ப்பதாக இருக்கக் கூடாது என்ற கருத்தில் மாற்றமில்லை. ஏற்கப்பட வேண்டியதே.

G.Ragavan said...

http://penathal.blogspot.com/2007/01/10-jan-2007.html

சூப்பருங்கோ...ரசிச்சேன்..நல்லவேளை தப்பிச்சேன்னு நெனைச்சேன்...ஆனா மாட்டிக்கிட்டேன் :-) நல்லாயிருந்தது.

G.Ragavan said...

http://pangaali.blogspot.com/2007/01/blog-post_5042.html

தாயே..இம்சை அரசி...பேருக்கேத்தாப்புலதான் பதிவு போடனும்னு சட்டமிருக்குதா என்ன?!!!!!!!!!!!!

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_6801.html

இதெல்லாம் என்னதுக்குங்க? இதே மாதிரி ஒரு பொண்ணு படம் போட்டிருந்தா என்னென்ன கமெண்டுகள் வந்திருக்கும்! ஆனா ஒங்களை யாகாவா பாரதியாக்கீட்டாங்களே. அஸத அசுவாய அசவே அசுங்காய. இது கிவி பறவை மொழி.

G.Ragavan said...

http://arutperungo.blogspot.com/2007/01/3.html

அப்ப இளவரசி...வேறொரு இளவரசனைப் பாத்தாச்சு.....சரி. அதுனால என்ன...

G.Ragavan said...

http://islamiccollections.blogspot.com/2007/01/1.html

மதம் மாறுவது ஒருவரின் அடிப்படை உரிமை. அதை எந்த மதத்துக்காரரும் மறுக்க முடியாது. கூடாது. ஆகையால் இவர்களின் மதமாற்றம் அவர்களுக்கு நியாயமானதே.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/01/180-2.html

4. விஜய் யேசுதாஸ்...இது ஒன்னுதான் தெரியுது.

2. இவங்களப் பாத்தா புல்லாங்குழல் வாசிப்பாங்களே சிக்கில்...அவங்க மாதிரி இருக்குது.

மத்ததெல்லாம் தெரியலைங்க.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/01/blog-post_6337.html

இலவசக் கொத்தனாரின் ஓராண்டுச் சாதனைகளைச் சொல்வதற்கு வலைப்பூவில் இடமே இல்லை. இதெல்லாம் சாதனையா என்று அவரது பதிவுகளைச் சொல்ல வைக்கும் அளவிற்கு அவரே அடுத்தடுத்து பெருஞ்சாதனைப் பதிவிடுவதில் அவரே வல்லவர். அப்பேர்ப்பட்ட பின்னூட்ட நாயகனை....வலைப்பதிவின் வயாக்கராவை...முதன்முதலில் வாழ்த்திய..வரவேற்ற..பின்னூட்டமிட்ட பெருமை எனக்குச் சேரும் என்று மிகமிகத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
http://www.blogger.com/comment.g?blogID=20766087&postID=113688358896723305
கொத்தனார் வாழ்க வாழ்க என்று அகில உலகமும் பொங்கல் கொண்டாடுகிறது. தீபாவளி கொண்டாடுகிறது. கிருஸ்துமஸ் கொண்டாடுகிறது. ஈத் கொண்டாடுகிறது. என்னென்னவெல்லாம் பண்டிகைகள் உண்டோ அத்தனையும் கொண்டாடுகிறது. இந்த நாளை நாமும் பின்னூட்ட நாளாகப் பெருமைப் படுத்திக் கொண்டாட வேண்டும்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2006/12/194-lets-hit-nail.html

// //மதுரையில் கேள்வி கேட்ட ஒர் ஏழைப் பிராமணன் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் தருமி அவர்களே,//

என்னை யாரும் இவ்வளவு கீழ்த்தரமாக address செய்ய முடியாதென நினைக்கிறேன்.

ஏன் சார், உங்களுக்கே இது கேவலமாகத் தெரியவில்லை? என்ன நினைப்பு இது - எங்கும் எதிலும் ஜாதியைத் தவிர உங்களால் ஏதும் நினைக்க முடியாதா? விட்டால் 'தருமி அய்யரே' என்று விளித்து விடுவீர்கள் போலும்.i sincerely feel and sorry to say that the way you have addressed me lacks basic decency.
நகைச்சுவை உணர்வுமா உங்களூக்கு சுத்தமாக இல்லாமல் போகவேண்டும்? மிகவும் வருந்துகிறேன்.//

முதற்கண் தருமி ஒரு பார்ப்பணன் அல்லன். முன்பு யாரோ நக்கீரனை பார்ப்பனர் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் அவரோ வலைஞர்...இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் சங்கு கடைந்து விற்கின்றவர். அதே போல திருவள்ளுவர். அவர் மயிலையில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் கிடையாது. அவர் ஒரு நெசவாளி என்பதாக இரண்டு பாட்டுகள் கிடைக்கின்றன.

சரி. கட்டுரையின் கருத்துக்கு வருவோம். முன்பு யார் என்ன செய்தார்கள் என்பது மட்டும் முக்கியமல்ல. இப்பொழுது யார் என்ன செய்கிறார்கள் என்பதும் முக்கியம். சாதிக் கொடுமை எல்லாத் தளங்களிலும் பரவிக்கிடக்கிறது. சாதீயம் மதயீயம் போன்றவை எங்கிருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டியதே. மறுப்பில்லை.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/026.html

தானம் என்ற சொல் இன்று நிறைய பயன்பாட்டில் வந்து விட்டது. ஆனால் கண்டிப்பாக தானத்திற்கு மாற்றாக கொடையைத் தயங்காமல் பயன்படுத்தலாம் என்றே நம்புகிறேன். ஆனால் ஈகையும் கொடையும் வெவ்வேறு. எஸ்.கே சுட்டிக் காட்டிய குறளே நல்ல எடுத்துக்காட்டு.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/025.html

நன்றாக இருக்கின்றன இந்தக் கலைச் சொற்கள். புதிய சொற்களை அறிமுகப் படுத்துகையில் அவை எளிமையாக இருக்கும் வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தச் சொற்கள் அருமையாக இருக்கின்றன.

G.Ragavan said...

http://bookimpact.blogspot.com/2006/12/gone-with-wind-margaret-mitchell.html

எனக்கும் மிகவும் பிடித்த புத்தகம் இது. படமும்தான். ஸ்கார்லட்..ஸ்கார்லட்...எப்படி மறக்க முடியும் அவளை.

2005ல் இதை வைத்து நான் எழுதிய பதிவு இங்கே
http://gragavan.blogspot.com/2005/06/gone-with-wind.html

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/01/022.html

ஆகா...மிகவும் அருமையான பாடல். அனைவருக்கும் பிடித்த பாடல். ஏழிசை வேந்தரின் இனிய இசையிலும் குரலிலும் கேட்கக் கேட்கப் பரவசம். இதை இயற்றியவர் என்.எஸ்.சிதம்பரம் என்பது எனக்குப் புதிய செய்தி. இவர் டி.எம்.எஸ் இசையில் இன்னமும் முருகன் பாடல்கள் எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://islamiccollections.blogspot.com/2007/01/1.html

// // tamilreber said...
மதம் மாறுவது ஒருவரின் அடிப்படை உரிமை. அதை எந்த மதத்துக்காரரும் மறுக்க முடியாது. கூடாது. ஆகையால் இவர்களின் மதமாற்றம் அவர்களுக்கு நியாயமானதே //
1,How about inducing conversion by gifts, incentives and other baits. //

பணத்துக்காக மாறிடும் அளவிற்கு ஒரு நம்பிக்கை இருக்குமானால் அதை நம்பிக்கை என்று எப்படிச் சொல்வது? உங்களுக்குப் பணம் கொடுத்து மாறச் சொன்னால் மாறுவீர்களா?

// 2,Muslim countries permit conversion to Islam but not
from Islam.Why is that so.
Why they have rules that punish
those converting from Islam
with death. //

இஸ்லாமில் மதம் மாறுவதற்கு அனுமதி இல்லையென்றால் அதுவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே. மதமாற்றத்தைத் தடுப்பவர் எவராயினும் அவர் குற்றவாளிதான். என்ன காரணம் சொன்னாலும் அவர் ஒருவரின் அடிப்படை உரிமையைப் பறிக்கின்றவர்தான்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post.html

நாங்க நண்பர்கள் பேசிக்குவோம். விஜய் சங்கவிக்கும், யுவராணிக்கும் கோயில் கெட்டிக் கும்பிடனும்னு. பின்னே...இவங்கதான விஜய்க்கு வாழ்வே குடுத்தது. இல்லைன்னா....சரி...அத விடுப்பா. டப்பிங் படத்துல நடிக்கிறத மொதல்ல நிறுத்தச் சொல்லுங்க. மசாலுக்குள்ளயே இப்பிடி முங்கியிருந்தா சீக்கிரமே சிக்கம்65 போட்டுருவாங்கன்னும் சொல்லுங்க.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/2.html

எனக்குத் தெரிஞ்சி நான் தியேட்டர்ல போய் பாத்த ஒரே விஜய் படம் ...படம் பேரு மறந்து போச்சே.....ஒரு நாள் ஒரு கனவுன்னு பாட்டு கூட இருக்கும். சிவகாசின்னு ஒரு படம்...தாங்க முடியாம நான் ஓடி வந்த படம். நான் இப்பல்லாம் ரிஸ்க்கே எடுக்கிறதில்லை. விஜயப் பாத்து கேக்கனும்னு நெனச்ச கேள்விகள் அத்தனையும் கவுண்டபெல் கேட்டுட்டாரு. தேங்க்ஸ் கவுண்ட்ஸ்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/

அப்புறம்...இந்தப் பாட்டெழுதுறவங்க கிட்டயும் கவுண்டரைப் பேசச் சொல்லுங்களேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_31.html

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
நின் சேவடி செவ்வித் திருக்காப்புச் செய்யும் வெட்டியெனும் பாலாஜியைக் கா!

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாலாஜி. உன்னுடைய பெயரில் இருக்கும் வெட்டி என்பது வெட்டிவேரில் இருக்கும் வெட்டியைத்தானே குறிக்கிறது! அப்படித்தான் எல்லாரும் நினைக்கிறோம்.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2007/01/21.html

அருமையான பாடல்கள். உளக்குமுறலை இதை விடச் சிறப்பாகச் சொல்ல முடியாது. கவியரசர் என்றால் இவர் ஒருவர்தான்.

G.Ragavan said...

http://arutperungo.blogspot.com/2007/01/4.html

அடடே! அடடடடே! அடடடடடடே! இதுதானா அது! ம்ம்ம்ம்.....இப்பிடி ரெண்டு பேரும் அழுதுகிட்டே வாழ்க்கையத் தொடங்கீருக்காங்க. இதே அழுகையை வாழ்க்கை முழுசும் அவங்க அழுதுகிட்டே இருக்க எனது வாழ்த்துகள். இதே மாதிரி அருட்பெருங்கோவும் அழுதுகிட்டே வாழ்க்கையைத் தொடங்கப் போறதா கேள்விப்பட்டது உண்மைதான் போல இருக்கு!

G.Ragavan said...

http://mkarthik.blogspot.com/2007/01/blog-post_09.html

இது மத்திய கைலாசிலிருந்து டைடல் பார்க் வரைக்கும்தான். அதாவது ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. அதற்குப் பிறகு சாலை மிகவும் மோசம். ஜூன் மாதம் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் எனக்கு பைக் விபத்து நடந்தது. இன்னமும் அந்தச் சாலை அப்படியேதான் இருக்கிறது. முகத்திற்கு மட்டும் பவுடர் போட்டுக் கொள்வது போலத்தான் இருக்கிறது இந்தச்சாலை. குறைந்த பட்சம் சோளிங்கநல்லூர் வரையிலும் நல்ல சாலையாவது போட்டால் மட்டுமே பாராட்டலாம்.

G.Ragavan said...

http://mkarthik.blogspot.com/2007/01/blog-post_09.html

// மு.கார்த்திகேயன் said...
ஓ... மலேசியா ரோடுகள் இது போலத்தான் இருக்குமா மை பிரண்ட். மக்களும் சில பொறுப்புணர்ச்சிகள் உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும் மைபிரண்ட் //

கார்த்திகேயன், மலேசியச் சாலைகள் உலகத் தரத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன. மிகச் சிறப்பான பராமரிப்பு.

G.Ragavan said...

http://suvanappiriyan.blogspot.com/2007/01/blog-post.html

நானும் இந்தச் செய்தியை நாளிதழில் படித்தேன். கொடுமையான செயல் இது. மிகக் கொடுமையான செயல். தண்டனை மிகச் சரியானதுதான்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_116850065910832501.html

இது நட்பில்லை. நட்பில்லை. நட்பேயில்லை. இதுதான் காதலென்பதா! ஆமாம். ஆமாம். ஆமாவே ஆமாம்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_116850065910832501.html

// இம்சை அரசி said...
ஆஹா........

தனுஷ் உருகி உருகி பாடுன பாட்டுக்கு இவ்வளவு சூப்பரா இன்னொரு பரிமானத்த கொடுத்துட்டிங்க வெட்டி. //

அவரு எங்க உருகி உருகிப் பாடுறது. ஒருவேளை உருகி உருகிப் பாடித்தான் இப்பிடி ஆயிட்டாரோ!

G.Ragavan said...

http://vavaasangam2.blogspot.com/2007/01/asl-pls-part-2.html

அதெல்லாம் சரி...அதென்ன ASL PLS? அதையும் சொல்லுங்க.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/5-25.html

// "பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" //

எஸ்.கே, இந்த வரிகளைப் படிக்கையில் செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.

திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் எழுத்தில் அடிக்கடி காணலாம். சீரார் பெருந்துறை வாழ் நம் தேவரடி போற்றி!

ஏதம்...மிகவும் அழகான சொல். இன்று அது எந்த வகையிலும் பயன்படுத்தப்படுகிறதா என்று தெரியவில்லை.

நல்ல எளிய விளக்கம்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/3-23.html

மிகவும் கவித்துவம் நிறைந்த பாவை இது. மிகவும் ரசிக்கத்தக்கதும் கூட.

ஒரு சிறிய முரணைக் கொண்டு பெரிய பொருளைச் சொல்லியிருக்கிறார் மாணிக்கவாசகர். யாவரும் அறிவரியாய்....எமக்கெளியாய். எல்லாருக்கும் புரியலையே...எனக்குப் புரியுதப்பான்னு சொல்ற மாதிரி.

நான் சொல்ல வந்ததைக் கோவி சொல்லி விட்டார். அரிதாவனைப் பற்றி அல்ல. இந்தப் பாடல் திரைப்படத்தில் ஒலித்ததைப் பற்றி.

எஸ்.கே...ஏன் இப்படி சுருக்கமா விளக்கம் சொல்லத் தொடங்கீட்டீங்க. நிறைய எழுதுங்க.

G.Ragavan said...

http://karmegarajas.blogspot.com/2007/01/blog-post.html

:-))))))))))))))))) நல்லா நடந்து பழநிக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. சூப்பர். எனக்கும் அந்த மாதிரி நடைப்பயணமா எங்கையாவது நாலஞ்சு நாளைக்குப் போயிட்டு வரனும்னு ஆசைதான். பாக்கலாம்.

கடைசியில ஒங்க அப்பா நெனச்ச மாதிரி நீங்களும் கோயிலுக்கு நடந்தே போயி சாமி கும்பிட்டுட்டு வந்துட்டீங்கள்ள. பழநில பஞ்சாமிர்தமும் புளியோதரையும் நல்லாயிருக்கும். சாப்பிட்டீங்களா?

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/3-23.html

// SK said...
//எஸ்.கே...ஏன் இப்படி சுருக்கமா விளக்கம் சொல்லத் தொடங்கீட்டீங்க. நிறைய எழுதுங்க.//



முதல் பதிவிலேயே,
பாடலுக்கான பொருளை நானும், விரிவான விளக்கங்களை, நீங்கள் எல்லாரும் வந்து சொல்ல வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம், ஜிரா!

மறந்துவிட்டதா? :) //

ஆகா...ஆகாகா! அதுவும் சரிதான்.

// தினம் ஒரு பதிவு எழுதுவதால், விரிவான விளக்கம் கொடுக்க முடியவில்லை.

அப்படியும் மனது கேட்காமல், 13,20 பாடல்களுக்கு இரு பதிவு போட்டேன்.

ஒன்று செய்யலாமே!

இந்த 30-ம் முடிந்த பின்னர், வாரம் ஒரு பாடலாக எடுத்துக் கொண்டு அவரவர் அறிந்த விளக்கங்களை விரிவாகப் பதியலாமே!

அடுத்த மார்கழி வரும் வரை!

என்ன சொல்லுகிறீர்கள்! //

செய்யலாம்தான். கந்தரநுபூதி விரைவில் நிறைவு பெறுகிறது. அடுத்துக் கொஞ்சம் முருகனருளிலும் தமிழ்ச்சங்கத்திலும் (நீங்களும்தான்) செலவிடலாம் என நினைத்தேன். அதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது. யோசிக்கிறேன்.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2007/01/22.html

முதல் பாடலும் மூன்றாம் பாடலும் நன்றாகத் தெரிந்த இனிய பாடல்கள். நடுப்பாடல் கேள்விப்பட்டதில்லை என்றாலும் நன்றாக இருக்கிறது.

உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2007/01/blog-post_09.html

ஒன்னா ரெண்டா...நாலஞ்சு பாட்டுக நினைவுக்கு வருதே. அத்தனையையும் சொல்லீட்டாங்க எல்லாரும். அதே நேரத்துல சர்வேசன் சொல்றாப்புல ராஜா செரமப் பட்டு வேலை செஞ்சாப்புல தெரியலை.

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2007/01/blog-post_12.html

தகவலே சொல்லலை. வெறும் படம் மட்டும் போட்டிருக்கீங்க?

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/01/blog-post_12.html

ஜூனியர் கிசானுக்கு எனது வாழ்த்துகள். நீடு வாழ வாழ்த்துகிறேன். (வட, பஜ்ஜி, போண்டா, லட்டு, கேக்கு எல்லாம் கெடையாதா?)

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/01/3.html

4. தரும பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது

6. ஜனனீ ஜகனீ ஜகம் நீ அகம் நீ - தாய் மூகாம்பிகை - இந்தப் பாட்டுல கோரஸ் பாடியதே தீபன் சக்கரவர்த்தியும் இன்னொரு பாடகரும். இந்தப் படத்துல இளையராஜா இசையில் விஸ்வநாதன் பாடிய பாடலும் உண்டு.

இவ்வளவுதாங்க நமக்குத் தெரிஞ்சது.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/01/1_12.html

ஐயா, வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா என்று பாவேந்தர் ஒரு நூல் எழுதினார். ஆனால் நீங்கள் இன்னமும் ஆழமாக இது தமிழ்தான் என்று ஒரு நூல் எழுதத்தான் வேண்டும். இது எம்போன்றோரின் வேண்டுகோள். தமிழில் நாங்கள் அறிந்தது குறைவு. நீங்கள்தான் இந்த முயற்சியை எடுத்துச் செய்ய வேண்டும்.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2007/01/blog-post_12.html

கொஞ்சம் தாமதமா வந்துட்டேன். பெரியவங்க அதுக்கு என்ன மன்னிக்கனும்.

1. குர்காவ் - குருகாவா எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். குருவின் காவ் (ஊர்) என்று பெயருக்குப் பொருள்.

2. ஷாருக்கான்

5. அக்கம்மா தேவி

6. தங்கப் பதக்கம் (அல்லது தங்கப்ப தக்கம்)

7. எம்டன்

8. ஓரிகாமி

9. கோஹினூர்

10. ஒரு கிடையாது. தூரத்து இடி முழக்கம்-தான் படத்தின் பெயர். பி.விஜயன் இயக்கிய இந்தப் படத்துக்கு இசை சலீல்தா என்றழைக்கப்படும் சலீல் சௌத்ரி. இந்தப் படத்தில் இவரது மனைவியான சபீதா சௌத்ரி ஜெயச்சந்திரனோடு சேர்ந்து ஒரு பாடலைப் பாடியுள்ளார். அழியாத கோலங்கள் படத்திற்கும் இசை சலீல் சௌத்ரிதான். அதில் ஜெயச்சந்திரனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய "பூவண்ணம் போல மின்னும்" என்ற பாடல் மிகப் பிரபலம். இவர் கரும்பு என்ற வெளிவராத திரைப்படத்திற்காக சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பாடல்களுக்கு பி.சுசீலாவையும் ஏசுதாசையும் பாட வைத்து இசையமைத்தார். பி.சுசீலா பாடியது மகிழ்ச்சியான மெட்டில். ஏசுதாஸ் பாடியது சோக மெட்டில்.

14. இதற்கான விடையைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. fiddle அல்லது violin என்றழைக்கப்படும் இசைக்கருவி அது. http://en.wikipedia.org/wiki/Stradivarius

இவ்வளவுதாங்க தெரிஞ்சது.

G.Ragavan said...

http://trc108umablogspotcom.blogspot.com/2007/01/blog-post_12.html

இந்தக் கோலங்கள் இப்பொழுது ஸ்டிக்கர் வடிவத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. அழிந்து வரும் கலைகளில் ஒன்றாகிப் போயிற்று கோலம். வண்ணக்கோலம், சாந்துக் கோலம், மாக்கோலம், நீர்கோலம், மலர்க்கோலம், பழக்கோலம் என்று பலவகை உண்டு. இன்று ஏதாவது பிழைக்க வேண்டுமே என்று விரும்புகிறேன்.

G.Ragavan said...

http://trc108umablogspotcom.blogspot.com/2006/12/blog-post_31.html

இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும். விடுப்பு எடுத்துக் கொண்டு இரண்டு வாரங்களுக்கு ஊர் சுற்றப் போய் விட்டதால் நேரத்தில் வாழ்த்த முடியவில்லை.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/01/blog-post_11.html

ஆகா...எஸ்.ஜே சூரியா படம் மாதிரி இருக்குது காபி உங்க வாழ்க்கை. சின்ன வயசுல இருந்தே இனிமை இனிமை இனிமைன்னு சொல்லுங்க. காதல் தேவதைகள் கோடி நின்று கூடி நின்று வாழ்த்துப் பா பாடி நின்று வாழ்க்கையை நடத்துகிறீர்கள். வாழ்த்துகள்.

இனிய தலைப்பொங்கல் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/01/33.html

அப்ப அடுத்த பாட்டு "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்" பாட்டுதானே? :-)

கனிந்து கனிந்து என்று வருகையில் குரலும் கனிந்து...அடடா!

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/01/blog-post.html

இப்படியொரு தமிழ்ப் பதிவை இத்தனை நாள் படியாது படியாதிருந்தேனே. இன்றேனும் படித்தேனே. இப்பதிவும் படித் தேனே!

மிகவும் எளிய பாடல். படிக்கையிலேயே புரிந்து போகும் எளிமை. ஆனால் அந்த எளிமைக்குள்ளே ஒளிந்திருக்கிறது தமிழ்த் திறமை. ஆகா ஆகாவென எத்தனை முறைதான் ரசித்து ரசித்து ருசிப்பது! திகட்டவில்லை ஐயா...பாடலும்...படமும்...அவைகளோடு நீர் தந்த தகவலும்.

G.Ragavan said...

http://vettiyaan.blogspot.com/2007/01/blog-post_14.html

உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள். தைத்திருநாளில் எல்லா நலன்களும் பெருகி உலகு இன்புறுக.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_12.html

தும்பைச் செடி...பூஜைக்கு இதுல பூக்களைச் சேகரிப்போம். சின்னவயசுலயே உள்ளங்கை அளவுக்குத்தான் பூ கிடைக்கும். ஆற்றைப் பணியை இதழியைச் சூடியவர் தும்பையையும் சூடியிருக்கிறார்னா...முந்தியெல்லாம் எவ்வளவு செடி இருந்திருக்கனும்!

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/8-28.html

நான் சொல்ல வந்ததைக் கோவியும் சொல்லி விட்டார். சிவனை உருத்திரன் என்று சைவ சித்தாந்தன் ஒத்துக் கொள்வதில்லை. கிருபானந்தவாரியாரும் இது பற்றி பல சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் "மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்!" வரியும் நல்ல சான்று.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/01/blog-post_14.html

பதிவைப் போட்டாச்சா? வாழ்த்துகள். இனிய பொங்கல் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://athusari.blogspot.com/2007/01/blog-post_14.html

புன்னகைக்க மட்டுமே தோன்றுகிறது நல்லடியார். உங்களுக்கு நான் எதுவும் பதில் சொல்ல வேண்டியதில்லை. :-)

// அழகு said...
மட்டும்தான் எனில் எல்லாத் தமிழராலும் கொண்டாடப் படும் நாளாகவே பொங்கல் அமைந்திருக்கும்.

ஆனால், யதார்த்தம் அவ்வாறில்லை என்பதே உண்மை.

பொங்கல் பானையின் நெற்றி(!)யில் ஏன் திருநீறு? //

அழகு, திருநீற்றை நம்புகிறவர்கள் அதைப் பூசுகிறார்கள். நம்பாதவர்கள் பூச வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

யார் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் பொங்கல் தமிழர் திருநாள்தான். பொங்கல் வைத்து இறைவனை வணங்கும் நாள். சூரியனை இறைவனாக நினைப்பவர்கள் சூரியனை வணங்குகிறார்கள். வேறு இறைவனை வணங்குகிறவர்கள் அந்தந்த இறைவனை வணங்கிக் கொள்ளலாம். பொங்கல் கொண்டாடக் கூடாது என்று முடிவு செய்து விட்டால்....எந்தச் சமாதானமும் நமக்குச் சொல்லிக் கொள்ளலாம்.

// தமிழுணர்வுக்கும் பொங்கலுக்கும் முடிச்சு போடுவது நியாயமல்ல நண்பரே! உழவுத்தொழிலால் பயனடைபவர்கள் தமிழர்கள் மட்டுமா? இல்லையே! மனிதகுலம் முழுவதும்தான் உழவுத்தொழிலால் பயனடைகிறது! அதை தமிழருக்கு மட்டுமான கொண்டாட்டமாக பார்ப்பது ஒரு குறுகிய கண்ணோட்டமாக தெரியவில்லையா? இந்த நாளை அகில உலக அளவில் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் இந்தியா முழுவதுமாகவாவது கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை ஏன் இதுவரை எழவில்லை?//

மரைக்காயரே....தமிழர்களுக்குள்ளேயே கொண்டாட ஒற்றுமையில்லை...அப்புறம் எந்த மாநிலத்தின் கதவைத் தட்டுவது?

மொத்தத்தில் அனைவருக்கும் ஒன்று. கொண்டாட விரும்புகிறவர்கள் கொண்டாடுங்கள். விரும்பாதவர்கள் கொண்டாடாதீர்கள். அவ்வளவுதான். அதை விட்டு விட்டு....அட...நான் ஒன்னும் சொல்லலைங்க.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2007/01/blog-post.html

ஜோ, இந்தப் பதிவை முன்னமே படித்துப் பின்னூட்டமிட்டிருக்கிறேன். இன்றைய சூழலில் இந்தப் பதிவைப் படிப்பது மனநிறைவையும் அமைதியையும் தருகிறது. நன்றி பல.

G.Ragavan said...

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/01/blog-post_3103.html

மறுத்தவரை அந்தக் கோயில் தொடர்புடைய அனைத்துக் காரியங்களில் இருந்தும் முதலில் விலக்கி வைக்க வேண்டும். இது ஒரு தவறான முன்னுதாரணம். நம்பிக்கை இல்லாத ஒரு கோயிலுக்கு எதற்கு இவர் வேலைக்கு வந்தாராம்?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/desamuduru-from-director-of-pokiri.html

வெட்டிகாரு, நிமகூ பொங்கலூ ஷுபாகாஞ்சனலு. பொங்கலு பொங்கிந்தா? (தெலுங்குக்காரங்க மன்னிக்கவும்)

இந்தப் படத்தோட போஸ்டர்களை நேத்து பி.வி.ஆர்ல பாத்தேன். இவரு நடிச்ச படங்கள முன்னால பாத்ததில்ல. இந்த நடிகரப் பாத்தா கதாநாயகனைப் பாக்குறோங்குறத விட அழகான கதாநாயகியப் பாக்குறோம்னுதான் தோணும். அதுனாலயோ என்னவோ இந்தப் படத்துல சட்டையே இல்லாம எல்லாப் போஸ்டர்லயும் நிக்குறாரு.

G.Ragavan said...

http://dystocia.weblogs.us/archives/239

ஊரூருக்கு இதான் பிரச்சனையா? கிழிஞ்சது போங்க.

உங்களுக்கும் உங்கள் உற்றார் சுற்றாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_116850065910832501.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//இது நட்பில்லை. நட்பில்லை. நட்பேயில்லை. இதுதான் காதலென்பதா! ஆமாம். ஆமாம். ஆமாவே ஆமாம்.//

இது காதலில்லை, காதலில்லை, காதல் இல்லவே இல்லை!
நட்பு, நட்பு, நட்பே!!!! :-))) //

என்னவோ போங்க. என்னமும் செய்யுங்க. விக்கிரமன் படம் பாக்குறவங்க நெறையப் பேரு இருக்காங்க போல. :-)

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_15.html

:-)))))))))))))) இதையே ஒவ்வொரு பொங்கலுக்கும் திருப்பாம திருப்பித் திருப்பிப் போடலாம் போல.

உங்களுக்கு என் உளமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://valai.blogspirit.com/archive/2007/01/15/pongal.html

பொங்கலோ பொங்கல். இனிய உழவர் திருநாளாம் தமிழர் திருநாளில் பொங்கால் திருநாளின் பெருமையை உரக்கச் சொல்லிக் குரல் கொடுத்த சிந்தாநதிக்கு என்னுடைய மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/9-29.html

எனது உளங்கனிந்த தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

நன்றி. நன்றி. நன்றீ. இலக்கணம் மீறாமல் மூன்று முறை சொல்லி விட்டேன். நான்காம் முறை சொன்னால் இலக்கணம் மீறுமே என்று திரும்பச் சொல்லும் ஆவலில் ஒரு மாத்திரை கூட்டிவிட்டேன். :-)

நல்ல விளக்கம்.

இந்தப் பாடலின் சிறப்பு கண்ணகத்தே நின்று களிதரு தேனே என்ற வரிதான். அதென்ன கண்ணகத்தே நின்று? கண்ணுக்குள் ஏதாவது விழுந்தால் உறுத்தலாகத்தானே இருக்கிறது. கண்ணீர் வருகிறது. உடம்பும் மனதும் வேறெதையும் மறந்து கண்ணையும் துரும்பையும் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறது அல்லவா. அப்படி நோக்குமிடமெங்கும் நீக்கமற நின்ற இறைவனை எங்கும் கண்டால்...அந்தக் காட்சி கண்ணில் விழுந்து நெஞ்சில் உறுத்தி கண்ணீர் பெருகி...அந்த உறுத்தலுக்குக் காரணமான இறைவனையே உடம்பும் மனமும் ஒன்றாய் நினைக்கிறது என்று சொல்ல வருகிறார் மாணிக்கவாசகர். சரிதானா எஸ்.கே, கோவி?

G.Ragavan said...

http://athusari.blogspot.com/2007/01/blog-post_14.html

// நல்லடியார் said...
//புன்னகைக்க மட்டுமே தோன்றுகிறது நல்லடியார். உங்களுக்கு நான் எதுவும் பதில் சொல்ல வேண்டியதில்லை. :-) சூரியனை இறைவனாக நினைப்பவர்கள் சூரியனை வணங்குகிறார்கள். வேறு இறைவனை வணங்குகிறவர்கள் அந்தந்த இறைவனை வணங்கிக் கொள்ளலாம்.//- G.Ragavan

அன்பின் ராகவன்,

உங்களிடமிருந்து பொங்கல் வாழ்த்து இல்லாத புன்னகையை ஏற்க மாட்டேன் :-( //

மன்னிக்க வேண்டும் நல்லடியார். வாழ்த்து என்பது கொடுப்பவரும் பெருகின்றவரும் விரும்பி ஒப்பியிருப்பதாக இருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளாத ஒரு பண்டிகைக்கு நான் வாழ்த்துச் சொல்லத் தயாராக இல்லை.

// பொங்கல், தமிழர்களுக்குப் பொதுவான பண்டிகை என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அவரவர் விரும்பிய கடவுளை வணங்கி பொங்கலிட்டு பகிர்ந்தளித்து சாப்பிடுவதுபோல், அவரவர் விரும்பிய வகையில் சமைத்ததை பரிமாறிக்கொள்ள முடியுமா? மகிழ்ச்சியான நன்னாளில் சைவப் உணவை நீங்கள் விரும்பலாம்; ஆனால் நான் மகிழ்ச்சியாக இருந்தால் அசைவம்தான் :-) நீங்கள் தரும் சைவப்பொங்கலை என்னால் சாப்பிடமுடியும். ஆனால் நான் தரும் அசைவத்தை உங்களால் மனம் ஒப்பி சாப்பிடமுடியாதுதானே. இந்த நடைமுறைச் சிக்கலையும் கருத்தில் கொண்டால் பொங்கல், மதம் சார்ந்த பண்டிகையாக முன்னிருத்தப் படுகிறது. //

ம்ம்ம்ம்....கண்டிப்பாக ஈத் திருநாளின் போது பிரியாணி கொண்டு வந்து தாருங்கள். வாங்கிக் கொள்கிறேன். உங்களோடே உட்கார்ந்து சாப்பிடவும் செய்கிறேன். எனக்குத் தயக்கமில்லை. பொங்கலன்று நான் கறிசோறுதான் தருவேன் என்பது விதண்டாவாதம்.

சொல்ல வேண்டியதையெல்லாம் மேலே நண்பர்கள் அனைவரும் சொல்லி விட்டார்கள். இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. சொல்லியும் பயனில்லை. வாய்ப்பிற்கு நன்றி.

G.Ragavan said...

http://asifmeeran.blogspot.com/2007/01/blog-post_116868786612230877.html

விழுந்து விழுந்து சிரித்தேன் மீரான். :-)) குசும்புக்காரர்தான் நீங்கள். பெண்கள் தெய்வமாகவும் வேண்டாம். ஆண்கள் விலங்குகள் ஆகவும் வேண்டாம். எல்லாரும் எல்லாந்தான். அப்பப்ப அதது அங்கங்க அப்படியப்படி வருது. அதுக்கெதுக்கு ஒவ்வொருத்தருக்கும் இப்படிப்பட்ட விருது!

G.Ragavan said...

http://iniyavaikal.blogspot.com/2007/01/92.html

முதற்கண் பொங்கல் நல்வாழ்த்துகள்.

ரொம்பப் பிரமாதமான பாட்டுங்க இது. டி.எம்.எஸ்சின் குரலில் கம்பீரம் பாருங்க...அடடா! அதுலயும்
வளர் திங்கள்
நதி கங்கை
முடி கொன்றை
அணிகின்ற
சிவசம்பு மகிழ் சுந்தரி
நிரந்தரி - என்று பாடும் போது...அடடா! கே.வி.மகாதேவனின் இசை...ஒரு ஆன்மீக விருந்து.

G.Ragavan said...

http://iniyavaikal.blogspot.com/2007/01/96.html

மலை நின்ற திருக்குமரா மால் மருகா
உயர் தமிழ் தந்த திருக்குமரா வேல் முருகா...

நல்ல பாடல். குன்னக்குடி இசையில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பாடல்.

G.Ragavan said...

http://iniyavaikal.blogspot.com/2007/01/93.html

ஆகா..ஆகா...அருமையான பாடல்.

காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியும் தருகின்றாள்
வானகம் வையகம் எங்ஙனுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_116850065910832501.html

// என்னவோ போங்க. என்னமும் செய்யுங்க. விக்கிரமன் படம் பாக்குறவங்க நெறையப் பேரு இருக்காங்க போல. :-)//

இது விக்ரமன் டச் இல்லை ஜி.ரா...
5 Star பாக்கலயா...

இல்லைனா நீங்க போற ஃபுட் கோர்ட்லயே பாருங்க.

பையனும் பொண்ணும் நல்ல பிரண்டா இருக்க முடியாதா??? //

வெட்டி 5* முடிவு என்ன? அதையும் சொல்லு. நல்ல பிரண்டுன்னு எதச் சொல்ற நீ? நல்லா பழகுறது. ஆனா படுக்கையை மட்டும் பகுந்துக்காததா? அப்படிப் பகுந்துக்கிட்டா அது கெட்ட நட்பா? புரியலை சாமி. ஒருவேளை அப்படிப் பகுந்துக்கிட்டாலும் நல்ல நட்புதான்னு நான் சொல்வேன். அதுக்குப் பேர்தான் காதல். காதல்ல நட்பும் அடக்கம்.

// நான் பார்த்து இருக்காங்க... ஒரு வேளை உங்க அனுபவம் வித்யாசமா இருக்கலாம் :-) //

வித்தியாசமான அனுபவம். என்னோட அனுபவம். அடடா! நீ சொல்லும் போதே...ம்ம்ம்..அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கனும். :-(

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_3098.html

ஹா ஹா ஹா கைப்பு...கைப்பு...ஐயோ கைப்பு...நெலமை இப்பிடியா ஆகனும்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/01/35.html

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ரவி. யமுனைத் துறையில் நீரெடுத்து கோகுலத்துப் பாலூற்றி பிருந்தாவனத்தில் பொங்கலிட்டு அதனை ஆவும் மாவும் கூடச் சேர்ந்து அருந்தும் வண்ணம் ஒரு பாட்டு போட்டிருக்கின்றீர்கள். நன்று.

G.Ragavan said...

http://varappu.blogspot.com/2007/01/blog-post.html

இது கடவுளுக்கும் பொருந்துமா? பொருந்த வேண்டும் என்பதே எனது கருத்து. இனிமேல் இப்படி அபிசேகம் செய்றவங்க அந்தப் பாலைக் குடிக்கனும்னு சட்டம் போடனும்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2007/01/blog-post.html

நேற்று தமிழக சர்ச்சுகளில் பொங்கல் சிறப்புத் திருப்பலிகள் நடந்ததாக டிவியில் காட்டினார்கள். அதுவும் பொங்கல் கொண்டாட்டத்தில் அடங்கும் என்பது என் கருத்து. அவரவர்களுக்கு விருப்பப்பட்டபடி கொண்டாடுங்கள். ஆனால் இது தமிழர்களுக்கான பொதுக் கொண்டாட்டமாக இருத்தல் சுகம்.

ஓணத்தை எல்லா மலையாளிகளும் துர்கா பூஜாவை எல்லா வங்காளிகளும் கொண்டாடும் பொழுது...தமிழர்கள் நாமெல்லாம்......திருந்துங்க மக்களேன்னு கத்தத் தோணுது.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2007/01/blog-post_16.html

நம்முடைய பாரம்பரியத்தை மறக்காம நினைவு கூர்ந்திருக்கீங்களே...உங்களுக்கு மாட்டுச் சங்கமே நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கு. உங்களுக்கும் இனிய உளங்கனிந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கல் சாப்பிட்டீங்களா?

G.Ragavan said...

http://snakebed.blogspot.com/2007/01/blog-post.html

எல்லாருமே திருடங்கதான்...ஆனா அடுத்தவன் திருடுறது மட்டுந்தான் நமக்குத் தெரியும். ஆகையால அவங்கவங்க வேலைய அவங்கவங்க ஒழுங்காப் பாத்தாலே நல்லது. சுப்பிரமணியம்சாமி ஏதோ நடவடிக்கை எடுத்திருக்காருன்னு சொல்றீங்களே. அப்படியாவது இவங்களுக்கு விடிவு வந்தாச் சரி.

G.Ragavan said...

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/01/blog-post_15.html

நல்லதொரு பதிவு. சைவர்கள் யாரும் சாதீய வேறுபாடு பார்க்கக் கூடாது. அது சைவக் கருத்துக்கு எதிர்மறை.

// -/பெயரிலி. said...
குலமிருந்தால், அதுவே வேறுபாடுதானே? பிறகேன் "அவர்களுள்ளே ஏற்றத்தாழ்வில்லை" என்ற சப்பைக்கட்டு? //

பெயரிலி...நாயன்மார்களில் சாதி கொண்டாடப்படுவதில்லை. சைவராகி நாயன்மார் பெருமை பெற்றவர்கள் சாதி பாராட்டப்படுவதில்லை என்று எடுத்துக்காட்ட மட்டுமே பட்டியல் இட்டிருக்கிறார் என்று நம்புகிறேன். சைவசித்தாந்தத்தின் படி ஏற்றத்தாழ்வு சொல்வதும் பாராட்டுவதும் மிகத் தவறு. இன்றைய சூழலில் உண்மையிலேயே அந்த நிலை வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/01/blog-post_16.html

// பழையனக் கழித்துப்
புதியனத் தொடங்குதல் போகியாம்.
வா நட்பை விட்டு
காதலைத் தொடங்குவோம். //

நல்லாயிருக்கு. இத வெட்டிப்பயலுக்கும் கண்ணபிரான் ரவிசங்கருக்கும் காட்டுங்களேன். :-)

// உன் விரல் பட்டு
வெண்பொங்கலெல்லாம்
பொன்பொங்கலானது.//
அது என் பொங்கலானது

// வாசலில் இருப்பது
நீ போட்டக் கோலமா?
வாசனையோடு இருக்கிறது! //

இதென்ன கொங்குதேர் வாழ்க்கைக் கதை மாதிரியா

// மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்ட வேண்டும்.
கொஞ்சம் கன்னத்தைக் காட்டு! //

கொஞ்சம் மாநிறம்னா...ஏண்டா என்னய கருப்புன்னு சொல்லிக் காட்டுறயான்னு கோவிச்சிக்கப்போறாங்க. ஆனா உன்னோட விஷயத்துல அப்படி நடக்காது. :-)

G.Ragavan said...

http://vavaasangam2.blogspot.com/2007/01/blog-post_16.html

அடடா! இதுல்ல பண்டிகை. இத எல்லா மதத்தாரும் கொண்டாடுவாங்கன்னு நெனைக்கிறேன். ஆகையால உண்மையிலேயே இதயே தமிழர் திருநாளாக் கொண்டாடுவது நல்லதுன்னு தோணுது. அப்படியே...பக்கத்துல கேரளா கருநாடகான்னு அறிமுகப்படுத்தி அகில இந்தியத் திருநாளாவேக் கொண்டாடிடலாம். யாரு கண்டா...அகில உலகத் திருநாளானா ஆனாலும் ஆகலாம்.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/01/blog-post_16.html

லக்கி, சாதீய மத இன வேறுபாடுகளை யார் பார்த்தாலும் அதை எதிர்த்தே ஆகவேண்டும்.

// மற்ற சாதியினரின் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டி தாங்கள் தப்பித்துக் கொள்ள நினைக்கும் பார்ப்பனரின் தந்திரம் இந்த விவகாரத்திலும் நன்றாகவே வெளிப்படுகிறது.//

தவறு செய்கிறவர்கள் தப்பிக் கூடாதுதான். ஆனால் இவர்கள் தப்பிக்கூடாது என்பதற்காக வேறு சிலரைத் தப்பிக்க விடுவது சரியாகாது. வேறுபாடு பார்க்கும் அனைவரும் கண்டிக்கப்பட வேண்டும். பைக்கில் போகும் பொழுது முன்பிரேக்கை மட்டும் பிடித்தால் வண்டி தூக்கி எறியும். இரண்டு பிரேக்குகளையும் பிடிக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.

// தேவரோ, வன்னியரோ அல்லது வேறு எந்த ஆதிக்க ஜாதிக்காரராக இருந்தாலும் “இடஒதுக்கீடு” என்றதுமே பார்ப்பனரைப் போல கச்சைக் கட்டிக் கொண்டு தெருவுக்கு வந்து எதிர்த்து போராடுவதில்லை. இதிலிருந்தே தெரிந்துக் கொள்ளலாம் பார்ப்பனருக்கும் மற்ற ஆதிக்கசாதியினருக்கும் சாதிவெறியில் இருக்கும் வேறுபாடு.//

இடவொதுக்கீட்டை எதிர்க்காமல் இருப்பது மட்டுமே சரியாகி விடாது. பலவிதங்களில் சாதீயப் பாகுபாடுகள் பரவியுள்ளன. தவறை எதிர்ப்பது என்று முடிவு கட்டியபின் அனைத்தையும் எதிர்ப்பதே சரியாகும். நியாயமாகும். இதுவே என்னுடைய கருத்து.

G.Ragavan said...

http://saathveegan.blogspot.com/2007/01/3007.html

நல்லாயிருந்தது கதை. ஒரு தவறை எதிர்ப்பதற்காக இன்னொரு தவறை ஆதரிக்க முடியாது. கூடாது. தவறு என்று நாம் நினைப்பதை யார் செய்தாலும் கண்டிக்க வேண்டும். அதுதான் நேர்மை.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/01/blog-post_11.html

:-) படிக்கப் படிக்கப் புன்முறுவல் பூக்கை வைக்கின்ற கவிப்பூக்கள். அதாவது பூக்க வைக்கும் பூக்கள். காதற் பூக்கள்.

அது சரி. காதல் வளர்ந்தேன் என்றுதானே தலைப்பு இருக்க வேண்டும்? நீங்கள் காதலை வளர்த்தீர்களா? காதல் உங்களை வளர்த்ததா? ;-)

G.Ragavan said...

http://naveenprakash.blogspot.com/2007/01/blog-post.html

காதற் குறும்புகளா! :-) கவிதைகளோடு கொடுத்திருக்கின்றீர்களே படங்கள்...மிகப் பொருத்தம்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/01/blog-post_16.html

இதத்தான் வெளிய விட்டுட்டாங்களே. எங்காபீசுல இதுக்கு டெமோங்குற பேர்ல பெரிய பெரிய டீவிகளை (ஓ மானிட்டரா! மானீட்டர்னா புலியா? அதுதான மான் ஈட்டர்?) நிப்பாட்டி நீங்களே வந்து பாருங்கன்னு பயாஸ்கோப்பு படங் காட்டுனாங்களே.

G.Ragavan said...

http://jataayu.blogspot.com/2007/01/blog-post.html

இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் கருத்தோடும் நல்லடியார் அவரது பதிவில் சொல்லியிருக்கும் கருத்தோடும் செந்தழல் ரவி சொல்லியிருக்கும் கருத்தோடும் எனக்கு உடன்பாடு இல்லை என்று மட்டுமே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அப்படிச் சொல்வதால் என்னை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் கவலையில்லை.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/10-30.html

நல்லதொரு பதிவு. பிறப்பு என்று ஒன்று வருகையிலேயே அத்தோடு இலவச இணைப்பாக வருவது இறப்பு. அதிலிருந்து நம்மைக் காக்க இறைவனே பொறுப்பு. தனக்கே கடன் இல்லாதவந்தான் அடுத்தவனுக்குக் கடன் கொடுக்க முடியும். அப்படி பிறப்பும் இறப்புமற்ற பெருமானே நமது பிறப்பையும் இறப்பையும் அறுக்க முடியும் என்பதில் மாணிக்கவாசகருக்கு மட்டுமல சைவ நெறி தழைத்தோங்கச் செய்த அனைத்து அறிஞர்களும் ஏற்றுக் கொண்ட கருத்து. அருணகிரியும் கூட பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்றுதானே சொல்கிறார்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/blog-post.html

// SK said...
ஆமாங்க! இது மாட்டுப் பொங்கல்! //

ஆமாம் எஸ்.கே. மாட்டுப் பொங்கல்தான். இறைவனின் அருளோடும் திருவடியோடும் நம்மை மாட்டுப் பொங்கல்தான். :-)

தமிழை முத்தாக்கி அதற்கு சைவநெறி என்னும் ஒளிச்சத்தாக்கி தன் விளக்கம் என்னும் தங்கக் கம்பியில் கொத்தாக்கித் தந்த எஸ்.கே அவர்களுக்குத் தமிழர்கள் அனைவர் சார்பிலும் நன்றி.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2007/01/23.html

மிகச் சிறந்த பாடல். அரியது பெரியது கொடியது இனியது என்று ஔவை எழுதிவிட்டார் முருகனருளில். அந்த அளவிற்கு பெரியது என்று எழுத வேண்டும். அதற்கும் முருகனருள்தான் வேண்டும். கண்ணனுக்குத்தாசனென்றாலும் முருகனருள் முன்னின்றது. ததும்பித் ததும்ப்பி வழிந்த தமிழமுதம் கவிதை என்ற பெயரில் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் இசைமேதை கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் குரலில். நான் மிகவும் ரசிக்கும் பாடல் இது.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/01/ii-19.html

ஆகா....சினிமாவுலன்னா சரியா கட்ட எடுத்துப் பாக்குறப்போ போலீஸ் வரும். நெஜத்துல அப்படி நடக்காததே நல்லது. நம்மால ஒருத்தருக்கு வேலை போகுதுன்னா வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனா...இதச் சரீன்னு சொல்றதா...தப்புன்னு சொல்றதா? தெரியலையே.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/01/giveindiaorg.html

ஊர்ப்பக்கத்துல பொங்கல் மண்பானைல வெக்கிறவங்கள் உண்டு. இருந்தாலும் பாதுகாப்பா வெங்கலப் பானை ஏத்துறவங்களும் உண்டு. புதுசா பொங்கல் வைக்கிறங்க கிண்டுறேன் பேர்வழீன்னு மண்பானையை டொக்குன்னு ஒடச்சிறக்கூடாது. அதுதான் தெறமை. தண்ணி நொறைநொறையா பொங்கி வரும் போது அரிசியப் போட்டு பருப்பப் போட்டு.....நல்ல வெந்து வர்ரப்போ வெல்லத்த நுணுக்கிப் போட்டு கிண்டி பெரிய சட்டி வெச்சி மூடி வெச்சிருவாங்க.

பொங்கலுக்குக் கண்டிப்பா இருக்க வேண்டிய இன்னொரு பக்குவம் மொச்சைக் குழம்பு. மொச்சை இல்லாப் பொங்கல் மேல் இச்சை இல்லை என்று சொல்லும் அளவிற்குப் பொங்கலுக்கு மொச்சை வேகும். அடடா! நாங்க படிக்கிறப்பல்லாம் அம்மா வீட்டு வாசல்ல பொங்கல் வெப்பாங்க. இப்ப அப்பார்ட்மெண்டு வாசல்ல பொங்க வெச்சா...அவ்வளவுதான். குக்கர் பொங்கல்தான்.

அப்புறம் கரும்பு பனங்கெழங்கு..ம்ம்ம்ம்...ஐயா....ஊர்ப்பக்கம் யாராவது இருந்தீங்கன்னா ஒரு கட்டுப் பனங்கெழங்கு வாங்கி சென்னைக்காவது குடுத்து விடுங்க. அங்கிருந்து நான் வாங்கிக்கிறேன். :-)

கரிநாளும் கறிநாளும் எங்களுக்கு. நேத்து என்னவோ அம்மா மாட்டுப் பொங்கலையே கறிநாளாக்கீட்டாங்க. :-)

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/01/blog-post_16.html

ராமு....இதென்னது....ஜல்லிப் பதிவா? ஜல்லிக்கட்டு பதிவா? ஓரத்துல ஒதுங்கி பதுங்கி பம்மி நின்னு எடுத்த போட்டோ இல்லைல்ல இது. யாரோ எடுத்ததுதானே? ;-)

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/blog-post.html

// SK said...
இப்பதான், வேறொரு பதிவில், "பதிவுலக வாரியார்" எனத் தங்களுக்குச் சூட்டப்பட்ட பட்டத்தைக் கண்டு மகிழ்ந்து வந்தேன்!

வந்தவுடனேயே, வாரியார் கையால் ஒரு வாழ்த்து!

மிக்க நன்றி, பதிவுலக வாரியார் அவர்களே! //

ஆகா! இதென்ன கூத்து! அதெந்தப் பதிவில்?

மழை பொழியும் காரியார் போலத் தமிழ்மழை பொழியும் வாரியார் எங்கே! நான் எங்கே! வாழ்த்துவதைக் கூட வெண்பாவில் வாழ்த்தும் அந்த ஆசிரியப்பா எங்கே. நான் வெறும் களிப்பா!

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/01/blog-post_17.html

கண்டிக்கப்பட வேண்டியது. மிகவும் தவறான செயல்.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2007/01/blog-post.html

பல தகவல்கள் தெரிந்து கொண்டேன். பொங்கலுக்கு மட்டும் எப்படியாவது மொச்சைக் குழம்பு வைத்து விடுவார்கள் அம்மா. அதுவும் ஏனென்று புரிந்தது. நல்லதொரு விளக்கம். அனைவரும் கண்டிப்பாகப் படித்திட வேண்டியது.

மாணிக்கவாசகரை முதல் மெய்யியலார் என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் தமிழில் எழுந்த முதல் முழுமையான சமய நூல் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை என்கிறார்களே?

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/01/blog-post_17.html

ஐயிரண்டு திங்களாய் அன்னையிடம் வளர்ந்து தையிரண்டு வந்த போது மண்ணிலே பிறந்த விவசாயிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

மாட்டுப் பொங்கல்தால் அவர் மண்ணிலே நம்மோடு மாட்டும் பொங்கல். ஏன்? விவசாயியின் தோழன் மாடுதானே? அந்த மாட்டுக்குரிய பொங்கல் அன்று பிறந்ததன் மூலம் தன்னுடைய பெருமையை நிலை நிறுத்திக் கொண்டார்.

"அண்ணே ஒரு சந்தேகம்னே"

என்ன சந்தேகம்?

"விவசாயிங்குறது தமிழ்ச் சொல்லா? உழவர்ங்குறது தமிழ்ச்சொல்லா?"

அடிங்ங்ங்ங்ங்ங்ங்ங்

G.Ragavan said...

http://vittudhusigappu.blogspot.com/2007/01/blog-post.html

கடவுள் என்று நம்பி விட்டால் அனைத்தும் செய்து விட முடியும் என்ற நம்பிக்கை வந்து விடும். கோடு விழுமாறு அணிலைத் தொட்டார். கோடு விழாதவாறு மனைவியைத் தொட்டார் என்று சொல்லலாம்.

இது ராமர் அணிலைத் தொட்டதற்கு மட்டுமல்ல...எந்த ஒரு கடவுள் நிகழ்ச்சிக்கும் சொல்லலாம். முருகனுக்கு ஆறுதலை இருக்கே...ஆறு மூக்கிலும் சளி பிடித்தால் என்னாகும் என்றும் கேட்கலாம். கடவுள் என்று நம்பவில்லையென்றால் எதைச் சொன்னாலும் அதை இல்லையெனச் சொல்லலாம்.

கடவுள் உண்டு என்று நம்புகிறவர்களுக்கும் இல்லையென்று நம்புகின்றவர்களுக்கும் மட்டுமல்ல...வெவ்வேறு விதமாக கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குள்ளும் இந்த விதண்டாவாதம் நடக்கும். கேள்விக்குக் கேள்வி என்று போனால் இதற்கு முடிவே கிடையாது.

இறைநம்பிக்கையாளர்களோ பகுத்தறிவாளர்களோ.....அடுத்தவர்கள் தவறு செய்கிறார்கள் என்று சொல்வதற்கு ஓடோடி வருகிறார்கள். ஆனால் தங்கள் தவறு அறிகிலார்கள். எல்லாரும் வாழ்க.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/blog-post_17.html

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைப் பற்றிய கதை என்று வந்தேன். ஆனால் பிறகுதான் தெரிந்தது சேந்தன் கந்தனைச் செங்கோங்கோட்டு வெற்பனைப் பற்றிய கதை என்று.

திருவாதிரைக்களி என்று சொல்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும் சில முறைகள்தான் சாப்பிட்டிருக்கிறேன். சுவை இன்னமும் நாவிலும் நினைவிலும் விருப்பத்திலும் இருக்கிறது. :-) அப்படியே மலையாளம் போய் திருவாதிரைக்களி என்றால் அது தின்னும் பொருளல்ல. திருவாதிரை நாளில் நடுவில் விளக்கேற்றி வைத்து...பெண்கள் எல்லாம் வெண்ணாடை உடுத்தி சுற்றிச் சுற்றிக் கைகளைத் தட்டித் தட்டி ஆடும் ஒருவகையாட்டம்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_17.html

இந்தக் கனமான எழுத்துகள் தமிழுக்குத் தேவையே இல்லை. ஏற்கனவே சிலபல இடங்களில் இந்த ஒலிகளை நாம் பயன்படுத்தித்தான் வருகிறோம். எடுத்துக்காட்டாக தங்கை என்ற சொல்லை எடுத்தால் அதை உச்சரிக்கும் பொழுது thankai என்று உச்சரிப்பதில்லை. thangai என்றுதான் உச்சரிக்கிறோம். ங்கோடு க சேருகையில் அப்படிப் பலுக்கிறோம். அதே போல ஞ்சோடு ச் சேருகையில் ஜகரம் வரும்.

வாரியார் சொல்வார். முந்துதமிழ் என்று சொல்கிறார்கள் தெரியுமா? தமிழ் முந்துமாம். எங்கே? போட்டியில். கனமான எழுத்துகள் உள்ள வடமொழி இன்று பேச்சுப் பயன்பாட்டிலிருந்தே போன நிலை. ஆனால் பழைய மொழியான தமிழ்..இன்னமும் முடிந்தவரையில் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு பேச்சு வழக்கிலும் உள்ளது. எப்படியென்றால் ஒல்லியானவனும் கனமானவனும் ஓடினால் கனமில்லாத ஒல்லியானவன் முந்துவான் அல்லவா. அதுபோல முந்தும் தமிழ்மாலை முழங்கும் வடிவேலை என்று தொடர்வார் வாரியார்.

G.Ragavan said...

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/01/blog-post_9794.html

ம்ம்ம்...அந்த ராஜராஜனே வந்து சொல்லனும் போல இருக்கே! அப்பதான் உண்மை எதுன்னு நமக்குத் தெரியும்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_18.html

இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க? இந்தப் பின்னூட்டம் போட்டது தப்பூங்குறீங்களா? பழைய போலி செஞ்சது சரீங்கிறீங்களா? இல்ல ரெண்டுபேரு செய்றதும் தப்பில்லைங்கிறீங்களா? இல்ல ரெண்டு பேர் மட்டும் போதாதுங்குறீங்களா? தெளிவா வெளக்கமாச் சொன்னாத்தாங்க எங்களுக்கெல்லாம் புரியும்.

G.Ragavan said...

http://umakathir.blogspot.com/2007/01/blog-post_17.html

அப்பாஆஆஆஆஆஆஆஆஆங்க்....இந்தப் படத்த பெங்களூர் பக்கமா விடாதீங்க...ஒங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கேக்குறேன். சமீப காலமா பாக்குற படங்கள்ளாம் பெருங்கொடுமையா இருக்குது. இந்தப் படத்தப் பாத்தாலே பயமாருக்கு.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/blog-post.html

G.Ragavan said...
// அன்பு said...
உடுக்கையிடைப் பற்றும் கையுடை ஜீரா
உடுக்கையினை ஆய்ந்திடும் நேரம் - உடுக்கை
நன்றுடுத்தும் பெண்கண்டால் சீக்கிறம் கல்யாணப்
பெண்ணுன்னை சேர்வாள் காண் //

நல்லாயிருக்குங்க. வெண்பாலுல இது சேருமா? அதையுஞ் சொல்லீருங்க. அதுசரி...இந்தப் பாட்ட ஒங்களுக்குத்தான எழுதுனீங்க?

// அதென்னமோங்க.. புகை-- புற்றுன்னு எழுதுனத பாத்ததில இருந்து யாரையாவது பிடுங்கிடனும்னு இருந்தென்.. மாட்டிட்டீங்க //

அதுக்காக இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிடியா.... :-)

// மாப்பு மாப்பு //

இதெதுக்குங்க. :-)

G.Ragavan said...

http://payananggal.blogspot.com/2007/01/15.html

இருக்கேஞ் சாமி

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_18.html

// யெஸ்.பாலபாரதி said...
ஜிரா... என்னப்பா.. இத்தன கேள்வி கேக்குற... நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரான்னே தெரியலையே..? //

டென்ஷன் ஆகாதீங்க யெஸ்பா. போட்ட பின்னூட்டத்துக்கான ரியாக்ஷனைப் பாத்துட்டு அடுத்த பின்னூட்டம் போடலாம்னுதான் அப்படிப் போட்டேன்.

அடையாளம் தெரியாதுன்னு இருந்தா உள்ள வசதியைப் பாத்தீங்களா? என்ன வேணும்னாலும் எழுதலாம்.

நான் அப்படிக் கேட்டதுக்குக் காரணம்....இந்தப் போலியை நீங்கள் இவ்வளவு பிரபலப்படுத்தி வளர்த்து விடாதீர்கள் என்று சொல்லத்தான். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். அளவுக்கு அதிகமாக எது எதிர்க்கப்படுகிறதோ...அது அளவுக்கு அதிகமாக எதிர்ப்புச் சக்தி பெறும்.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2007/01/25.html

இரண்டுமே மிக அருமையான பாடல்கள். முருகனடியவர்கள் மட்டுமன்றி தமிழார்வலர்கள் அனைவரும் விரும்பிக் கேட்கும் பாடல்கள்.

வருவாண்டி தருவாண்டி பாடலைப் பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். பெங்களூர் ரமணி அம்மாளும் தெய்வம் படத்தில் பாடியுள்ளார். அந்தப் பாடல் குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்.

சரவணப் பொய்கையில் நீராடி பாடல் இது சத்தியம் திரைப்படத்திற்காக. மெல்லிசை மன்னர் இசையில். சின்னக் குயில் சித்ரா இந்தப் பாடலைப் பாடித்தான் இளையராஜாவிடம் வாய்ப்புக் கேட்டாராம்.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2007/01/cdvcddvdmp3.html

மிகவும் தொடக்ககாலத்தில் திருட்டு வீசிடிகளை வாங்கினேன். ஆனால் ஒரிஜினல் வாங்கத் தொடங்கி ஆண்டுகளாகின்றன. விலை குறைவாகக் கிடைக்கிறது. நூறு ரூவாய்க்கு ஒரிஜினல் டிவிடி கிடைத்தால் கூட வாங்கத் தயார். ஆனால் இன்னமும் சிலர் 425, 600 என்று விலை போடும் போது எரிச்சலாக வருகிறது. பேராசை பிடித்தவர்கள். இவர்களாலும் திருட்டு விசிடி பெருகுகிறது. நல்லவேளையாக bayshore, movieland போன்றவர்கள் குறைந்த விலையில் ஒரிஜினர் டிவிடிகள் கொடுக்கிறார்கள். தனிப்படமென்றால் 50. இரண்டு படங்கள் என்றால் 70 அல்லது 90. இது போதுமே. ஆகையால் என்னிடம் இருக்கும் விசிடி டீவிடீகளில் 90 சதவீதம் ஒரிஜினல்தான். அந்த 10 சதவீதம் ஆரம்பகாலத்தில் வாங்கப்பட்டதாக இருக்கும்.

அது சரி...சென்னையில் இந்தக் கடை எங்கே இருக்கிறது? அடுத்த வாரக்கடைசியில் சென்னை வரலாம் இருக்கிறேன். அப்பொழுது moser baer கடைக்கும் ஒரு விசிட் போடலாம் என்று நினைக்கிறேன்.

இந்த விலைக்கும் கிடைக்கும் பொழுது திருட்டு விசிடி, டிவிடிக்குப் போவது மிகத் தவறு.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/01/4-reloaded_19.html

1. நினைத்தேன் வந்தாய் நூறு வயது. ஏழிசை வேந்தரும் இசையரசியும் பாடியது. மெல்லிசை மன்னர் இசையில். மிகவும் துள்ளலான காதல் பாட்டு.

3. மலரே குறிஞ்சி மலரே.
ஏசுதாசும் ஜானகியும் பாடியது. மெல்லிசை மன்னர் இசையில். டாக்டர் சிவா படத்திற்காக. கவியரசர் கவிதை.

6. சொல்லத்தான் நினைக்கிறேன்...பாட்டும் அதுதான். படமும் அதுதான். மெல்லிசை மன்னரும் ஜானகியும் பாடியது.

8. பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி
நெஞ்சிருக்கும் வரை படத்திற்காக மெல்லிசை மன்னரின் இசையில் கவியரசரின் பாடல் ஏழிசை வேந்தரின் குரலில். இந்தப் படத்தில் நடித்த யாருக்கும் ஒப்பனை கிடையாது.

10. மிஸ்ஸியம்மா...பாட்டோட தொடக்கம் வர மாட்டேங்குதே...சதி பதி விரோதம் மிகவே.....

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/01/4-reloaded_19.html

10. வாராயோ வெண்ணிலாவே. ஏ.எம்.ராஜா, பி.லீலா பாடியது.

2. மான்குட்டி இப்போது என் கையிலே பாட்டு மாதிரி இருக்கு. ஆனா உறுதியாச் சொல்ல முடியலை.

மத்ததெல்லாம் கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு. இதுகளுக்கெல்லாம் பொதுப்பிணைப்பு எதுவும் இருக்கா?

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_19.html

அடுக்கு மொழியா? இந்த மாதிரி படத்தத் துணிச்சலாப் பாத்துட்டு...அதுக்கு விமர்சனமும் போட்டு எங்களைக் கொடுமைப் படுத்துன கொடுமையான தியாக மனப்பான்மைக்கு இடுக்கு மொழி, உடுக்கு மொழி, கடுக்கு மொழி இருந்தாலும் பத்தாது.

என்னால இன்னமும் கேக்காம இருக்க முடியல...என்னனு இந்தப் படத்துக்குப் போனீங்க? சொல்லியிருந்தீங்கன்னா...ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்த வீட்டு ஓம் தேட்டர்ல போட்டிருப்பேன்ல. நிம்மதியா இருந்திருப்பீங்க.

G.Ragavan said...

http://classroom2007.blogspot.com/2007/01/blog-post_19.html

வலமிருந்து இடமாக

ராஜசுலோச்சனா, சரோஜாதேவி, சௌகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, கடைசியில் இருப்பவர் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ராஜஸ்ரீயா?

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/01/ii-21_19.html

ரொம்பச் சத்தம் போடுவீங்க போல இருக்கே? வீட்டுல சொல்ல உப்பு ஒறப்பு கொறைக்கச் சொல்லனும். அவரு வந்து ரெண்டு மாசத்துக்குள்ள என்ன செஞ்சிருக்க முடியும்!!!!

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_19.html

ஓ கதை அப்படியா? நான் என்ன நெனச்சேன்னா....விளம்பரத்தப் பாத்துட்டுப் படத்துக்குப் போயிட்டீங்களோன்னுதான். அப்பாடி நீங்க தப்பிச்சீங்க. இனிமே ஒங்கள தெகிரியமா சந்திக்கலாம். :-)

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2007/01/19-1-07.html

உஷா...இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு சொல்லனுமா என்ன? மூடநம்பிக்கைன்னு சொல்றத விட விளம்பர வியாபாரத் தந்திரம். பச்சைச் சேலை....தாலிச்சரடு...சரி. விளக்கேத்தி வெச்சா யாருக்கு என்ன வியாபாரம்? எண்ண வியாபாரமா? சரியா வரலையே. ஏன்னா...எல்லார் வீட்டுலயும் விளக்கு ஏற்கனவே இருக்கும்.

ஆனா...எல்லாமே பெண்களைக் குறி வைத்துத்தான் இருக்கும். இந்தக் கொடுமைகள் கர்நாடகாவுல நடக்குறாப்புல தெரியலை. நடந்தாலும் எனக்குத் தெரியலை. தெக்கத்திப் பெண்கள் ரொம்பவே செண்டிமெண்டு. அதான் அவங்கள பயமுறுத்துறாப்புல அண்ணனுக்கு அல்வா, கணவனுக்குக் கல்கண்டு, தம்பிக்கு தயிரு, அப்பாவுக்கு அவுலுன்னு கதை விடுவாங்க. கண்டுக்காம இருக்குறது ரொம்பவும் நல்லது. இதே மாதிரி இன்னொரு ஏமாத்தல் அஷய திதி. திருந்துங்கடான்னா யாரு கேக்குறா?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_19.html

என்ன வெட்டி....முடிவுல மட்டும் முடிச்சு போடுற வித்தை கைவந்துருச்சு போல. கதை நல்லாயிருந்தது.

கருக்கலைப்பு...சரியா தவறா என்று தெரியவில்லையே. அது குழந்தைக்கு வலிக்குமா? கருக்கலைப்பு என்பதை முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் செய்வார்கள். அப்படிச் செய்வது குழந்தைக்கு வலியை உண்டாக்குமா? தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.

ஒருவேளை குழந்தை பிறவிக்கோளாறோடு பிறக்கும் பொழுது...அப்பொழுதும் கருக்கலைப்பு தவறாகுமா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.

G.Ragavan said...

http://payananggal.blogspot.com/2007/01/15.html

வெண்புகையும்
வன்பகையும்
கொள்முறையால்
தீவகையே
தீப்பகையும்
தீஞ்சுவையாய்
மாறுதலும் ஆகலாம்
தீப்புகையோ
கொல்லும் தகையே

(இது பாவெல்லாம் இல்லைங்க. புதுக்கவிதை.)

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/blog-post.html

// SK said...
இருப்பது "இருக்கை"
படுப்பது "படுக்கை"
ஏற்றிச் சுமப்பது "சிவிகை"
உடுப்பது "உடுக்கை"

புகை போட்டுப் பழுக்கப் பார்க்கும் காயே இப்படி என்றால்......!!!
:)) //

ஆகா...எஸ்.கே அடுத்தடுத்து எடுத்துச் சொல்கின்றீர்களே. பிரமாதம்.

// இந்தக் குறளின் பொருளைப் புரிய நம்மூரில் இருக்கும் குடிகாரர்களைப் பார்த்தாலே விளங்கிவிடும்!
என்னதான் போதையில் தள்ளாடி, வசை மொழிகள் பாடி நடந்து{??!!] வந்தாலும், ஒரு சமயத்தில், அவனது வேட்டி அவிழும் நிலையில், அவன் கை தானே சென்று, யாரும் சொல்லாமலே. பற்றும்.
அப்படி உதவ வருபவனே நண்பன்! //

:-)))))))))))))) சிறப்பான எடுத்துக்காட்டு. இதைப் பெண்களுக்கும் சொல்லலாம். விளக்கமாகச் சொன்னால் மக்கள் அடிக்க வருவார்கள்.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/blog-post.html

// வெட்டிப்பயல் said...
அருமை! அருமை!!!

கவுண்டர் செந்தில் மூலமா விளக்கியது புதுமை!!! பதிவ படிக்க ஆரம்பிச்சதும் இது சொல் ஒரு சொல்லானு ஒரு சின்ன சந்தேகம் வந்துடுச்சு :-)

இந்த மாதிரி நிறைய முயற்சி செய்யுங்க... //

என் பெயர் விசுவாமித்திரனா என்று ஒரு ஐயம் வருகிறது. :-) எல்லாப் புராணங்களிலும் விசிட்டரான வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டமல்லா கிடைக்கிறது. ;-)

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/blog-post.html

// யாழ்த்தமிழன் said...
இராகவன்,
நன்றாக உள்ளது. இரசித்தேன்.

உடுக்கை, படுக்கை போல அடுக்கை, எடுக்கை, ஒடுக்கை, தடுக்கை, முடுக்கை, சொடுக்கை என்றும் வரும்போலுள்ளது. //

அதே அதே. சரியாகப் பிடித்தீர்கள் யாழரே. இனிமேல் நீங்களே இதை வைத்து பல பதிவுகள் போடலாம்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_19.html

நல்ல பதிவு. நியாயமான கருத்து. அவரவர் தாய்மொழியில் வணங்குதலே மிகச் சிறப்பு. இதை அனைவரும் உணர வேண்டும்.

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_2332.html

இது முதலிலேயே செஞ்சிருக்க வேண்டியது. இப்பக் காலங் கடந்து செஞ்சிருந்தாலும் சரியான முடிவு. இப்ப என்ன காரணதுக்காக இந்த முடிவுக்கு வந்தாரு?

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/01/197.html

தருமி, நான் எதை நினைத்துப் பயப்படுகிறேனோ...அதை மிகத்தெளிவாக பெரிய பதிவாகப் போட்டிருக்கின்றீர்கள். உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. இது தமிழர் பண்டிகைதான். கல்லென்று நம்புகிறார்கள் என்றால் அதன் முன் வைத்த லட்டுக்கு என்ன நடந்து விடும்? நல்ல கேள்வி. ஆனால் இதற்கு வக்கனை பதில்கள் நிறைய கிடைக்கும். :-( இருக்கும் இடைவெளியைப் பெரிதாக்க இத்தனை மெனக்கெடுகிறார்கள். ஆனால் அந்த இடைவெளியை அடைக்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நடக்க மாட்டேன் என்கிறதே தருமி. :-(

G.Ragavan said...

http://vavaasangam2.blogspot.com/2007/01/blog-post_19.html

ரவி, உங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். தினத்தந்தி விளம்பரத்த மட்டும் பாத்துட்டு விமர்சனம் போட்டதுக்கு....ம்ம்ம்....ஆனாலும் ஒம்ம நெனச்சா பாவமாத்தானய்யா இருக்கு.

G.Ragavan said...

http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_9067.html

நம்மூர்ல ஒரு கெழவி இருந்தாங்க. அவங்க சொன்னாங்க "கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை. இந்தப் படங்களைப் பாக்கும் போது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. ஆனா என்ன செய்றதுன்னே தெரியலையே.

இன்னைக்கு பொன்ஸ் போட்ட பதிவைப் பாத்தீங்களா? இதுலயெல்லாம் தப்பிப் பிழைச்சு நல்லாயிருக்குற குழந்தைகளுக்கு வேறுவிதமான பாலியல் பிரச்சனைகளாம். குழந்தைகளைக் குழந்தைகளாக வைத்திருப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது.

G.Ragavan said...

http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_03.html

கீதையை நான் படித்ததில்லை. அது உண்மையிலேயே வருணாசிரமக் கொள்கையை தூக்கி நிறுத்துகிறதா என்று தெரியாது. அப்படிச் செய்யுமானால் அது தவறே. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்.

இந்தப் பதிவிற்கும் சமீபத்தில் நான் இட்ட 2007லாவது மாற வேண்டும் திருக்கோயில்கள் என்ற பதிவிற்கும் ஒரு தொடுப்பு இருப்பது போலத் தெரிகிறது.

ரவி ஸ்ரீநிவாஸ் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிச் சொன்னார். இருக்கலாம். ஆனால் செயற்பாட்டு முறை? இன்றைக்கும் கோயிலில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று பதிவிட்டாலே எதிர்ப்பு வருகிறது. பக்தியோடு செய்ய மாட்டார்கள் என்று விளக்கங்களும் வருகின்றன.

சங்கராச்சாரியாரால் சில கோயில்களில் உள்ளே போக முடியாது. சரி. பழைய கட்டுப்பாடுகள். சரி. அப்படியென்றால் முருகனுக்கு ஆடு வெட்டிக் கொண்டாடியதாக...முருகனுக்கு மட்டுமென்ன...கொற்றவைக்கும்தான்...சிலப்பதிகாரமும் திருமுருகாற்றுப்படையும் சொல்கின்றனவே. அது இன்னும் பழைய நூல்கள். அப்படியே செய்வோமா? மாயனுக்கு மீனை வைத்தார்களே...மாயனை வடமதுரை மைந்தனை வெண்ணை உண்ணனை மீனுண்ணியாக்கலாமா? தனியார் கோயில்கள் பொதுக் கோயில்கள் என்று பார்க்க வேண்டும் ரவி. தனியார் கோயில்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் செல்வர். அதே போல பொதுக் கோயில்களையும் மாற்றி விடலாமா? மற்ற சாதியினர் எல்லாம் அங்கே செல்ல வேண்டாம் என்று கூறி விடலாம்.

சிறில் சொல்வது போல, எல்லா மத நூல்களிலும் இந்த மிகைப்படுத்தும் விளக்கங்கள் உண்டு. ஹாரிபாட்டர் லார்டு ஆப் தி ரிங்கஸ், ஒடிசி, ட்ராய் எல்லாம் கொடுக்கும் அந்தப் பிரம்மாண்டம் இங்கும் கிடைக்கும். கதைக்குள் இருக்கும் நல்லதை மட்டும் கொண்டால் நன்று.

பிறப்பால், உழைப்பால், சாதியால், வேலையால், மதத்தால் வேறுபாடுகள்...இதற்கு எந்த மதநூல் ஒத்தூதினாலும் அது தவறுதான். தவறுதான். தவறுதான்.

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2007/01/30.html

கண்காட்சியை 21ம் தேதியோடு ஏன் முடிக்கிறார்களோ? 26, 27, 28 என்று மூன்று நாட்கள் தொடர்ந்து விடுப்பு அடுத்த வாரம் வருகிறது. அது வரையிலாவது கண்காட்சியை நடத்துவது சிறப்பாக இருக்கும்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/01/blog-post_7508.html

மிகவும் நல்ல பாடல். இளமை ததும்பும் குரல்.

அதுசரி...நிழல்கள் ரவி குரல்...சரத்பாபு குரல்னு அடுக்குனவங்க...இந்தப் பாட்டப் பாடுன வாணி ஜெயராம் குரல சொல்லாம விட்டுட்டீங்களே? :-(

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/01/blog-post_19.html

கிளியோபாட்ராவா? ஜுமாஞ்சி பாத்தது...தமிழில். தேட்டர் இன்னமும் நல்லாயிருக்கா?

குருவைத் தமிழ்ப்படுத்தும் போது குஜராத்துன்னே போட்டிருக்கலாம். தப்பில்லைன்னுதான் தோணுது. எலஞ்சின்னு போட்டுட்டு பண்பாட்டுக் கொலை செய்றத விட....அது தாவலை.

படம் பார்க்கனுங்குற விருப்பம் எனக்கு மொதல்லயிருந்தே இருக்கலை. இத்தன விமர்சனங்களைப் படிச்ச பிறகும் அப்படியொரு விருப்பம் எனக்கு வரும்னா.....மன்னிக்க. வராது.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/blog-post_19.html

அருமை.....மிகவும் அருமை....மிகவும் ரசித்தேன். ஆனால் வலியோடு.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/blog-post.html

// வெற்றி said...
இராகவன்,
நீங்கள் செய்தது உங்களுக்கே நல்லாய் இருக்குதா? :))

உங்களின் பதிவைப் படித்து பணிமனையில் பலமாக வாய்விட்டுச் சிரித்து விட்டேன். //

ஹா ஹா ஹா...சிரித்து விட்டீர்களா? அப்பாடி...இப்பத்தான் எனக்கு நிம்மதி. :-)

// என்னே கற்பனை வளம் உங்களுக்கு! சொல்ல வந்த ஒரு அருமையான சங்கதியை மிகவும் நகைச்சுவையாக இரசிக்கும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள். //

உண்மையச் சொன்னா....இந்தப் பதிவ எழுத மெனக்கெடலை. ரொம்ப லேசா எழுதுனது.

// உங்களின் இப் பதிவைப் பிரதி எடுத்து என் தமிழ்நண்பர்கள் சிலருக்கு உடனடியாக பணிமனையில் இருந்து தொலைநகலில்[Fax] அனுப்பினேன். இங்கே உங்களுக்கு ஒரு இரசிகர் கூட்டமே உருவாகுது என்றால் மிகை இல்லை.:)) //

ஆகா........நன்றி நன்றி. வெற்றி நமது பக்கம். :-)

// நிற்க. இனிப் பதிவு பற்றி.
இராகவன், இச் சொல் எனக்குப் புதிதல்ல. எங்கள் ஊரில் இச் சொல் அன்றாட புழக்கத்தில் உண்டு. //

அப்படியா? மிக நன்று. மகிழ்ச்சி தரும் செய்தி இது.

// தைப்பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன், "உடுக்கைகள் படுக்கைகள் எல்லாத்தையும் எடுத்தா தோய்க்கிறதுக்கு" என்று என் பேரனார் சொல்வது இன்றும் ஞாபகத்தில் நிற்கிறது. உடுக்கை,உடுப்பு போன்ற சொற்கள் எனது ஊரில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் அன்றாட புழக்கத்தில் உள்ள சொல் என்றே நம்புகிறேன். //

பேரனார் என்றால் பாட்டனாரா? ஏனென்றால் முன்பு சந்திரவதனாவின் பதிவில் பேத்தியார் என்பது பாட்டியைக் குறிக்கும் என்று படித்த நினைவு.

G.Ragavan said...

http://podhuppaattu.blogspot.com/2007/01/14.html

நல்ல விளக்கம். மெய்யே பொய்யாம். அப்படியிருக்க மெய் நுகரும் இன்பம் மட்டும் மெய்யாகுமா? மெய்யாக நுகர வேண்டும் என்றால் முருகந்தான் உதவ வேண்டும். முருகன் கைவேல் பேச வேண்டும். அதுதான் கைவாய்க் கதிர்வேல். நம்முடைய மூளை விரும்புவதை வாய் சொல்வது போல முருகன் கை விரும்பதை வேல் சொல்கிறது. ஆகையால்தான் கைக்கு வாய் வேல்.

வாழைப்பழத்தை நுணுக்கி நுணுக்கித் தர வேண்டியுள்ளதும் உண்மைதான். பல்லும் சொல்லுமொன்றுதானே. ஆகையால்தான் சொல்லும் பொருளும் போனபின்...பல் போன வாய்க்கு வாழைப்பழத்தை நுணுக்கி நுணுக்கிக் கொடுக்க வேண்டியுள்ளது.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/01/blog-post.html

மாட்டுக்கார வேலா
ஓம் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா!

மாட்டு வண்டி....நினைவிருக்கிறது. இருக்கங்குடிக்கு மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சென்றது. சிறிய வயதில். வண்டிப் பைதா மிகப் பெரியதாக இருக்கும். கிட்டத்தட்ட உட்கார்ந்திருப்பர் தலை வரைக்கும் கூட வரும். அது சுற்றும் அழகே அழகு. வண்டியில் ஏறுவதற்கும் அந்தச் சக்கரத்தை மிதித்து ஏறுவதும் உண்டு.

எங்கள் குடும்பத்தில் ஒரு தாத்தா இருந்தார். அதாவது என்னுடைய பாட்டிக்குச் சகோதரர். என்னுடைய பாட்டியின் மகள்...சிறுமி....அவளுக்கு மாமாவின் மீது மிகுந்த பாசம். அவளைப் பலமுறை வண்டியில் ஏற்றிக் கொண்டு போவாராம். ஒருமுறை வண்டியில் இவர் உட்கார்ந்திருக்கையில்...அவருக்குத் தெரியாமல் வண்டியில் ஏற சக்கரத்தில் காலை வைத்து ஏறியிருக்கிறார். இது தெரியாமல் அவர் வண்டியைப் பத்தவும் அந்தத் துயரம் நடந்திருக்கிறது. உடைந்து போய் விட்டாராம் மனிதர். போன மகளைக் கூட மறந்து விட்டு அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேற்றினார்களாம் என்னுடைய பாட்டனும் பாட்டியும்.

G.Ragavan said...

http://engineer2207.blogspot.com/2007/01/157.html

உளமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_4358.html

கருணாநிதியின் வயசு அப்படிப் பேச வைத்திருக்கிறதோ! ஆனாலும் அளவுக்கு மிஞ்சிய நகைச்சுவை உணர்வு. வயிறு வலிப்பது நமக்குதான்.

G.Ragavan said...

http://harimakesh.blogspot.com/2007/01/107.html

நீங்கள் குறிப்பிட்ட அத்தனை கருத்துகளையுமே நான் சாய்சில் விடுகிறேன். இந்த மாதிரி வாதங்களுக்கு நான் வரவில்லை. இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கும் முன் வெள்ளைக்காரன் பேசியது போல இருக்கிறது. பின்னூட்டமிட வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/blog-post.html

// இலவசக்கொத்தனார் said...
//நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.//

செந்தில் கவுண்டமணி அப்படின்னு வந்த உடனே அவங்க வசனம் எல்லாம் இயல்பா வருதே. இதைப் படிச்ச உடனெ செந்தில் சொல்லும் பூவை பூவுன்னு சொல்லலாம், புய்ப்பமுன்னு சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது. :)) //

உண்மைதான் கொத்ஸ். அது என்ன படம்னு கூட மக்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ இல்லையோ...இந்த வசனம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். :-))) எனக்கும் ரொம்பப் பிடிச்ச வசனம் அது.

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2007/01/blog-post_22.html

வந்தது சாமியா ஆசாமியான்னே கேள்வி நெறைய இருக்கு. ஆனா கருணாநிதி இவரை நல்லவர்னு ஏத்துக்கிட்டதுதான் உச்சகட்ட நகைச்சுவை. பாவம். அவருக்கும் வயசாயிருச்சுல்ல. முந்தியெல்லாம் நகைச்சுவையாப் பேசுறதுல ஜெயலலிதாவை மிஞ்ச ஆளில்லாம இருந்தது. நடுவுல காங்கிரசு, வைகோ, ராமதாசுன்னு நெறையப் பேரு முயற்சி செஞ்சி பாத்தாங்க. ஆனா ஜெயலலிதாவுக்குச் சரியான போட்டி கருணாநிதிதான்னு நிரூபிச்சிட்டாருங்க. இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன கூட்டோ!!!! கால்ல விழுகிற அந்த அம்மாகிட்ட அவர் சுயமரியாதைன்னா என்னன்னும் சொல்லியிருக்கலாம். பெரியவர்கள் என்று நம்புகிறவர்கள் காலில் விழுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால்...ஊருக்கு உபதேசம் செய்து விட்டு....விடுங்கள். ஒரு அரசியல்வாதியிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்றெல்லாம் கணக்கு இருக்கிறதே.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/01/32.html

அடடே! சிகரட்டுப் பிடிக்கிறதையும் தண்ணியடிக்கிறதையும் இப்படியெல்லாம் நாயப்படுத்தலாமோ! எகிப்து பெத்தராயுடு...இதெல்லாம் வேண்டாம். சரியில்ல....ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப சினிமா பாக்குறீங்க.

காதல் போயின் இன்னொரு காதல்னு சந்தோஷமா பழகிக்கோங்க. இப்படிக் கயிட்டப்பட வேண்டாம். :-)

நீங்க சொன்னவங்க பெங்களூர்லதான இருக்காங்க. நான் ஒரு வாட்டி போய் பேசிப் பாக்குறேன். ;-)

G.Ragavan said...

http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_116943798975537232.html

பாட்டீலும் துரைமுருகனும் பேசுனது பயங்கர காமெடி போங்க. பாபா பத்தி கருணாநிதி பேசுனதையும் நீங்க போடனும். அது இன்னமும் காமெடி. ஏன் இப்பிடி எல்லாருக்கும் புத்தி போகுதோ தெரியலை. ம்ம்ம்....

G.Ragavan said...

http://penathal.blogspot.com/2007/01/blog-post_21.html

நானும் போக்கிரியப் பத்தி அப்படித்தான் கேள்விப்பட்டேன். நோ ரிஸ்க். ஏற்கனவே சிவப்பதிகாரம் பொய்னு பட்ட சூடு இன்னமும் வலிக்குது. அதுக்குள்ள இதெல்லாம் எதுக்கு. ஏதாவது நல்ல படம் வந்து...நல்ல்ல்லா ஓடி மக்கள் நல்லாயிருக்குன்னு சொல்லட்டும். காத்திருக்கேன் அதுவரைக்கும்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/01/blog-post.html

வாங்க டீச்சர் வாங்க
வலைப்பதிவுகளுக்கு வாங்க
ஏங்கி ஏங்கித் தாங்க
இங்க பலபேர் வீங்கினாங்க...

என்ன இருமல்? நியூசிலாந்து குளிரு ஒத்துக்கலையோ? டீ போட்டுக் குடிச்சா சரியாப் போகும். டீயில ரெண்டு பட்டையும் சுக்கும் தட்டிப் போட்டா ஜம்முன்னு இருக்கும்.

புத்தகங்கள் வாங்குனீங்களா? என்னென்ன? நா அடுத்த வாரந்தான் சென்னை போறேன். ஆனா இந்த வாரத்தோட புத்தகக் கண்காட்சியை மூடீட்டாங்க. ரொம்ப மோசம்.

பெங்களூருக்கு நீங்க வரலையா?

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/01/32.html

// வெட்டிப்பயல் said...
//நீங்க சொன்னவங்க பெங்களூர்லதான இருக்காங்க. நான் ஒரு வாட்டி போய் பேசிப் பாக்குறேன். ;-)//

யார் அது??? //

நான் சொல்ல மாட்டேன்
அத மட்டும் நான் சொல்ல மாட்டேன்
வெட்டி...நான் சொல்ல மாட்டேன்
அத மட்டும் நான் சொல்ல மாட்டேன்

G.Ragavan said...

http://harimakesh.blogspot.com/2007/01/107.html

// ஜடாயு said...

ராகவன் கோயில் வழிபாட்டை ஒரு அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. //

அரசியல் கண்ணோட்டமெல்லாம் இல்லை. ஏன் அப்படி உங்களுக்குத் தோன்றுகிறது?

கோயில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ...அல்லது இந்து மதத்திற்காக ஏதேனும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் கட்டுப்பாட்டில் இயங்குகிறதோ...எப்படியிருந்தாலும் என்னுடைய கருத்துகளைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.

ஆன்மீகத்தலைவர்கள் கூடிச் செய்தாலும் நான் வரவேற்கத் தயாராக இருக்கிறேன். யார் செய்யப் போகிறார்கள். அதைச் சொல்லுங்கள்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_22.html

நல்ல பதிவு. உளமாரச் சொல்லும் எந்தச் சொல்லும் மந்திரச் சொல்லே.

அந்த மாதிரி போஸ்ட் கார்டுல வந்துக்கிட்டிருந்தது...அப்புறம் இ-மெயில்ல வந்தது. இப்ப மொபைல் குறுஞ்செய்தியா வருது. அப்படி வந்துச்சுன்னா மொதல் வேலையா...அத அழிச்சிட்டுத்தான் மறுவேலை.

ஆறு வருசத்துக்கு முன்னாடி இப்படி ஒன்னு வந்தது. அதை ஆறு பேருக்கு அனுப்புனேன். அப்ப ஒரு நண்பன் கேட்டான்..ஒரே ஒரு கேள்வி..என்ன ராகவா பயந்துட்டியான்னு. அப்பத் தெளிஞ்சவந்தான்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_22.html

நல்ல பதிவு. உளமாரச் சொல்லும் எந்தச் சொல்லும் மந்திரச் சொல்லே.

அந்த மாதிரி போஸ்ட் கார்டுல வந்துக்கிட்டிருந்தது...அப்புறம் இ-மெயில்ல வந்தது. இப்ப மொபைல் குறுஞ்செய்தியா வருது. அப்படி வந்துச்சுன்னா மொதல் வேலையா...அத அழிச்சிட்டுத்தான் மறுவேலை.

ஆறு வருசத்துக்கு முன்னாடி இப்படி ஒன்னு வந்தது. அதை ஆறு பேருக்கு அனுப்புனேன். அப்ப ஒரு நண்பன் கேட்டான்..ஒரே ஒரு கேள்வி..என்ன ராகவா பயந்துட்டியான்னு. அப்பத் தெளிஞ்சவந்தான்.

G.Ragavan said...

http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_116944339161596319.html

வியாழக்கிழமையிலிருந்தே சிவாஜி நகர் சுத்து வட்டாரத்துல ஒரு டென்ஷந்தான். சதாம் உசேனைத் தூக்கில போட்டதுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சு ஒரு கூட்டம் ஊர்வலம் நடத்துனாங்க. ஞாயித்துக் கிழமைக்கு இன்னொரு கூட்டத்தார் கூட்டம் நடந்த மேடைகள் கொடிகள் போட்டிருந்திருக்காங்க. அதுல இருந்த கொடிகளை இவங்க கிழிச்சிருக்காங்க. அப்பத்தான் பிரச்சனை தொடங்கீருக்கு.

அந்தப் பகுதியில தமிழ் ஆளுங்க ரொம்ப. அது பழைய பெங்களூர். அங்க இருக்குறவங்களும் பெங்களூர்த் தமிழர்கள். அங்கயிருந்த முத்தாலம்மன் கோயிலும் தாக்கப்பட்டிருக்கு. அப்புறம்....யாரோ ஒருத்தர் வீட்டுல பிள்ளையார் வெச்சிருந்தாராம். அதையும் தாக்கீருக்காங்க. சில இடங்களை சிலைகளை ஒடைச்சிருக்காங்க.

இதெல்லாம் வியாழன் நடந்தது. அதுக்குப் பழி தீத்துக்குற மாதிரி ஞாயித்துக் கெழம இன்னொரு கூட்டத்தார் அடாவடி செஞ்சிருக்காங்க.

இதுல என்னன்னா...அப்பாவ ட்ரெயின் ஏத்தி விட நான் அந்தப் பக்கந்தான் போகனும். கலவரம் நடக்குறது தெரியாது. ஆனா அந்த வழியெல்லாம் அடைச்சிட்டாங்க போலீசார். ஊரச் சுத்தி ஒலகத்தச் சுத்தி...நல்ல வேளையா நேரத்துக்கு எறக்கி விட்டுட்டேன்.

G.Ragavan said...

http://valai.blogspirit.com/archive/2007/01/22/welcome.html

வணக்கம். வாழ்த்துகள். நட்சத்திரமாய் மின்னும் நதி....சிந்தா நதி....இந்த வாரம் ஒங்களுக்கு விழா வாரம். ஆகையால் பதிவுகளும் விழாப் பதிவுகளாகவே இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_20.html

வெட்டி...என்னடா பதிவு என்று பார்க்கும் பொழுதே 43 பின்னூட்டங்கள். பின்னூட்ட இளவரசன் என்று உனக்குப் பட்டம் கொடுக்கிறேன். வாழ்க. வளர்க.

அம்மா....அவளைப் பற்றி என்ன சொல்வது. எல்லாப் பாசங்களையும் பந்தங்களையும் துறந்தார் ஒருவர். அவரால் துறக்க முடியாதது அம்மா. இருக்கின்ற சொத்து சுகங்களையெல்லாம் விட்டுப் பரதேசியாகப் போகப் போனார். அப்பொழுது அம்மா கேட்டார். "மகனே துறவியாகப் போகிறாயே. உனக்குரிய கடமைகளைச் செய்து விட்டாயா?"

அவரும் சொத்து சேர்த்ததையும் மனைவிக்குக் கணவனாகிக் குழந்தை கொண்டதையும்...அந்தப் பெண் இன்னும் வாழச் செல்வம் வைத்திருப்பதையும் சொன்னார்.

அப்பொழுது துறவியாக புது வேட்டி தந்த அந்த அம்மா கேட்டார்..."மகனே....எனக்கு இன்னும் கொள்ளி போடவில்லையே அப்பா!"

அந்தக் கடமைக்காக தன்னுடைய ஊரெல்லையைக் கூடத் தாண்டாமல் இருந்தார். செய்தி வந்தது. கலங்கிப் போனார். காய்ந்த விறகுகளின் மீதும் வறட்டிகளின் மீதும் கிடத்தியிருந்தார்கள். அவைகளையெல்லாம் அப்புறப் படுத்தி விட்டு வாழை மட்டைகளில் மெத்தெனப் படுக்க வைத்தார். பாடினார்....கண்ணீர் உகுத்துப் பாடினார்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெத்துப்
பையல் என்ற போதே பரிந்தெடுத்து
என்றெல்லாம் பாடி...எப்பிறப்பில் காண்பேன் இனி என்று கதறுகிறார். இங்கு ஒரு சூட்சுமம் உள்ளது. அடுத்த பிறவியிலாவது பிறக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் பட்டினத்தடிகள் தமக்கு அடுத்த பிறவி கிடையாது என்று அறிந்தவர். ஆகையால்தான்...இத்தோடு முடியப் போகும் அந்த உறவை நினைத்து நினைத்து கதறுகிறார். வாழைமட்டை பற்றி எரிகிறது. அவராலேயே பெற்ற அன்னையை உதற முடியவில்லையே....நாமெல்லாம்!

G.Ragavan said...

http://jataayu.blogspot.com/2007/01/blog-post_22.html

எனக்குத் தெரிந்து பிரச்சனை இந்த மாநாடு தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. பழைய பெங்களூர்...தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி வழியாக சதாம் ஆதரவு ஊர்வலம் போயிருக்கிறது. அப்பொழுது ஊர்வலத்தார் ஏதோ கொடியைக் கிழித்திருக்கிறார்கள். இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் மாநாட்டுக் கொடியென்று நினைக்கிறேன். அப்பொழுது வெடித்திருக்கிறது முதல் பிரச்சனை. அதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே. முத்தாலம்மன் கோயில் தாக்கப்பட்டிருக்கிறது. துவாரபாலகர் சிலையும் தாக்கப்பட்டிருக்கிறது. யாரோ வீட்டு வாசலில் பிள்ளையார் இருந்ததாம்...அந்த வீடும் தாக்கப்பட்டிருக்கிறது. எது எப்படியோ....தமிழன் அடி வாங்கியிருக்கிறான்.

நேற்று மீண்டும் கலவரம் வெடித்திருக்கிறது. மாநாடு நடந்த ஏரியாவுக்குள் போகவே முடியவில்லை. அப்பாவை கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷனிற்குக் கூட்டிக் கொண்டு பழைய சென்னை ரோடு வழியாகப் போனால்...அங்கும் ரோட்டை அடைத்திருக்கிறார்கள். அல்சூருக்குல் (கூட்டம் நடந்த இடம்) நுழையும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பிறகு சி.எம்.ஹெச் ரோடு வழியாக...கேம்பிரிட்ஜ் லேவுட் வழியாக மனிபால் செண்டர் வாயிலைப் பிடித்து மின்ஸ்க் ஸ்கொயர், கன்னிங்கம் ரோடு...உதயா டீவி என்று ஊரெல்லாம் சுற்றி கண்டோன்மெண்ட்டுக்குப் போக முடிந்தது. அல்சூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகள். பிரச்சனை எங்கு வெடித்தது என்று பேப்பரைப் பார்க்க வேண்டும்.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/01/blog-post_19.html

என்ன சொல்வது காபி....நாம் கூட அடுத்த தலைமுறைக்குப் போய் விட்டோம் என்றுதான் நினைக்கிறேன். என்னுடைய சகோதரியின் குழந்தைகளுக்குப் புதுப்பாடல்கள் பிடித்திருக்கின்றன. மிகவும் ரசிக்கின்றார்கள். ஆனால் என்னால் எல்லாப் பாடல்களையும் ரசிக்க முடியவில்லை.

என்னைக் கேட்டால் 60, 70ம் சிறப்பான காலகட்டம். ஆரம்ப 80களும் ஆரம்ப 90களும் கூட நல்ல கட்டமே. 98, 99ல் கூட நல்ல பாடல்கள் நிறைய கிடைக்கும். ஆனால் அதற்குப் பிறகு...ம்ஹூம்.

இலக்கணம் மாறுதோ....என்ற பாட்டாகட்டும்....நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா பாட்டாகட்டும்..ஒரே மேடையில் ஓரே டி.சட்டை ஜீன்சில் கமல் ஆடும் உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் ஆகட்டும். முதல்மரியாதையில் வரும் எல்லாப் பாடல்களுமாகட்டும்...இன்னும் நிறைய நிறைய இருக்கின்றன திரும்பத் திரும்ப ரசிக்க.

G.Ragavan said...

http://suttapons.blogspot.com/2007/01/blog-post.html

இதத்தான் நானும் சொன்னேன்.

G.Ragavan said...

http://valai.blogspirit.com/archive/2007/01/22/star.html

நல்ல தேர்வுகள். இதில் வெட்டிப்பயலையும் சேர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/01/blog-post_19.html

இலக்கணம் மாறுதோ பாடல் நிழல் நிஜமாகிறது படத்திற்காக. கே.பாலச்சந்தர் படம். கமல், சரத்பாவு, ஷோபா, சுமித்ரா நடித்தது.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_22.html

// குமரன் (Kumaran) said...
//அப்ப ஒரு நண்பன் கேட்டான்..ஒரே ஒரு கேள்வி..என்ன ராகவா பயந்துட்டியான்னு. அப்பத் தெளிஞ்சவந்தான்.
//

இராகவன். பயம் 'தெளிந்தது' என்று தானே சொல்லியிருக்கிறீர்கள்?! //

அச்சத்தை மட்டுமல்ல..அச்சத்தால் இறைவனை வணங்கக் கூடாது என்ற உண்மையும் தெளிந்தது. மிச்சத்தை அருணகிரி தெளிய வைத்தார். ஆகையால்தான் ஆண்டவன் பேரைச் சொல்லி யாரும் அச்சுறுத்தினால் சிரிப்பு வருகிறது.

// பயத்தால் அதனைச் செய்யச் சொல்லி வற்புறுத்தும் அந்த மின்னஞ்சல்களுக்கு பயப்படத் தேவையில்லை. நானும் அவற்றை இதுவரை மற்றவர்களுக்கு அனுப்பியதில்லை. ஆனால் அந்த மந்திரச் சொற்களுக்கு பலன் உண்டா என்ற கேள்வி வரும் போது மேலே சொன்னது போல் மின்னஞ்சலை அனுப்புவதால் பலன் இருக்காது என்று நினைக்கிறேன்; ஆனால் கையால் எழுதும் போது பலமுறை எழுதுவது மந்திரத்தை உருவேற்றுவது போல் ஆவதால் பலன் இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டுமே நினைப்பது தான். செய்ததில்லை. சோம்பல் தான் காரணம். நம்பிக்கையின்மை இல்லை. ஆனால் செய்து பலனைப் பார்த்தவர்கள் சொன்னாலும் அதற்கு எத்தனையோ விதண்டா வாத விளக்கங்கள் கொடுக்க முடியும். நானே என் மனத்திற்கு அவ்வப்போது அப்படி கொடுப்பதுண்டு. //

கையால் எழுதுவதோ...மனதால் நினைப்பதோ....முழு ஈடுபாட்டோடு சொல்லும் சொல்லும் மந்திரமே. செய்யும் செயலும் தந்திரமே. மாங்கனி என்று சொல்லும் பொழுதே நா இனிப்பதும்...புளியங்காய் என்றத் சொல்கையில் பல் கூசுவதும் கூட....இப்படிச் சொல்லிச் சொல்லி...எழுதி எழுதி மனதிலும் உடலிலும் உருவேற்றியதால்தான். ஆகையால் மந்திரந்திற்கு எந்த மொழியும் ஆகும். அதனால்தான் திருக்கோயில்களிலும் வேறு சில வழிபாட்டு முறைகளிலும் குறிப்பிட்ட மொழிகளைத் தூக்கிப் பிடித்து மற்றவைகளை ஏற்காத பொழுதும் சிரிப்பு வருகிறது.

G.Ragavan said...

http://maruthanayagam.blogspot.com/2007/01/blog-post_11.html

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மருதநாயகம்.

G.Ragavan said...

http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_116944339161596319.html

// ராஜசன் said...
இதையெல்லாம் செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரா? நல்ல கதை. விடாது கருப்பு. ஏனுங்க இப்படி பிளேட்டை திருப்பி போடறீங்க. ஜீராவும் எல்லாத்தையும் சொல்லிட்டு இது வேற மதத்துக்காரங்க செஞ்சது இந்து இயக்கத்தினர் இல்லைன்னு சொல்லாம அத்தோட நிறுத்திட்டாரு. என்ன இருந்தாலும் உங்க மேல இருக்கிற பாசம் விடுமா? //

ராஜசன், ஏன் இப்படிப் பேசுகின்றீர்கள்? நான் கேள்விப்பட்ட தகவல்களையும் பார்த்த தகவல்களையும் எழுதியுள்ளேன். அதிலிருந்தே யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று தெரிந்திருக்குமே. முஸ்லீம் இந்து என்றெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை. இதே மாதிரி பின்னூட்டத்தை ஜடாயு...இல்லை...ஹரிஹரன் என்று நினைக்கிறேன். அங்கும் இட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்துப் பாணியே அதுதான். என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தாதீர்கள். நன்றி.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_23.html

ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்துகள். வாழ்த்துகள் ரவி. இதனால் பல வீடுகளில் இன்பம் பெருகும்.

G.Ragavan said...

http://kasadara.blogspot.com/2007/01/8.html

என்னடா எஸ்.கே இப்படிச் சொல்லீட்டாரே! அவர் முருகனடியவராச்சே...இப்படிச் சொல்லலாமான்னு ஓடி வந்தா..மறுக்க முடியாத மாதிரி சொல்லீருக்கீங்க. :-)))

ஒரு ஐயம். ஏ வகையை பி வகைக்கு ஏற்றினால்....ஆண்டிபாடிகள் சண்டை போடும். சரி. ஆனால் ஏ வகையை ஓ வகைக்கு ஏற்றினால்? அங்கே சண்டை போட ஆண்டிபாடி இல்லையே. இருந்தும் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?

என்னுடைய இரத்தம் O-ve வகையைச் சார்ந்தது.

G.Ragavan said...

http://oosi.blogspot.com/2007/01/indian-food-facts.html

பூண்டுக் கொழம்பா! ஆகாகா! சொகமாச் சாப்பிடலாமேய்யா அத. கடைசியில கட்டித் தயிர் விட்டுப் பெசஞ்ச சோத்துக்குள்ள குழி நோண்டி அதுக்குள்ள கொழம்ப ஊத்தி ஷ்ஷ்ஷ்ஷ்னுன்னு சாப்புட்டா! ஐயோ!

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2007/01/blog-post_23.html

திருக்கோயிலில்
பெண்ணைக் காண
அவள் கண்ணைக் காண
வருகின்றவன்
பூசாரிப் பெண்ணை மட்டுமா
கண் கொண்டு பார்ப்பான்?
எப்பெண்ணாயினும்
எட்டித்தான் காண்பான்

கோ-மாறி நோய்களும் நோயே
பெண்ணை கோயில் பூசையில் மறுக்கும்
நா-மாறி நோய்களும் நோயே

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/01/176-2.html

ஒன்பது கோள்களுக்குமான ஊர்களுக்குத் திருச்சுற்றுலா சென்று வந்திருக்கும் சிபியாருக்கு முதலில் வாழ்த்துகள். கதிரவனில் தொடங்கி....கேது வரையான ஒன்பது கோளர்களையும் வணங்கி அருள் கொண்டமை சிறப்பு.

திகழொளி பரப்பும் பகலவன் கும்பகோணத்தில் குடி கொண்டிருக்கிறாரா? அதான் அங்கு வெயில் அப்படிக் கொளுத்தியதோ. ஒன்றரை வருடங்களுக்கு முன் சென்ற பொழுது அப்படி வெயில் கொளுத்தியது.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/01/176-2.html

வெஜிடபிள் பிரியாணியும் தக்காளி சாசுமா? என்னங்க இது? கெட்டித் தயிர்ல வெங்காயத்த மெல்லிசா நீளநீளமாவோ பொடிப் பொடியாவோ நறுக்கிப் போட்டு ஊற வெச்சா...அடடா! அது..காம்பினேஷன். அதுல மதியம் ஊற வெச்சிட்டு...அத ராத்திரிக்கு எடுத்தா...சாறும் தயிரும் கலந்து ஜலஜலன்னு இருக்குமேய்யா!

திருவெண்காடு வேறொன்றிற்காகவும் புகழ் பெற்றது. என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/01/blog-post.html

நீங்களும் மாறீட்டீங்களா?
என் சோகக் கதையக் கேளு வலைக்குலமே
ஆமா வலைக்குலமே
பீட்டாக்கு மாறனும்னு ரொம்ப தினமே
ஆமா ரொம்ப தினமே
பலபேரு கூட்டுச் சேந்த வலைப்பூ எல்லாம் விட்டு
தனியாக நின்னுக்கிட்டு மாத்தத்தான் பாத்தேனுங்க வலைக்குலமே
ஆமா வலைக்குலமே
ஆனாத்தான் நடக்கலையே வலைக்குலமே
ஆமா வலைக்குலமே! ஹோஓஓஓஓஓஓஓஓ!

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_24.html

பிறந்தநாள் வாழ்த்துகள் யெஸ்பா. இன்று போல் என்றும் வாழ்க...(இது சரியாத் தப்பான்னு தெரியலையே)...சரி என்றும் இன்புற்று வாழ்க. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். (இது புகையோட பகை கொண்டாடுறதுக்கு)

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/01/ii-22.html

ஐயோ பாம். தமிழ் வசசு முடிஞ்சி இப்ப தெலுங்கு திட்டா? ம்ம்ம்....ஆந்திராக் காரம்.....பேச்சுல இல்லாமலா போயிரும்! சினிமாவுல வர்ர மாதிரி சம்பேஸ்தான்ரான்னு அருவாளத் தூக்கீட்டு வராம இருந்தாங்களேன்னு சந்தோசம்.

G.Ragavan said...

http://vettrikandaswamy.blogspot.com/2006/09/1_24.html

கந்தக் கடம்பனை நமது சொந்தக் கடவுளை ஈழத்துக் கோயிலில் காணும் மகிழ்ச்சியே மகிழ்ச்சி. ஊர் கூடி இழுத்த தேர் இன்று மிளிர்வுற்று இருக்கிறது.

கடம்ப மரம் முருகனோடு மிகவும் தொடர்புடையது. தார் கடம்பத்தான் எம் கடவுள் என்கிறது இலகியம். இன்னும் பல இலக்கியங்களில் கடம்பக் குறிப்புகள் உண்டு. இப்பொழுது தமிழக முருகன் கோயில்களில் கடம்ப மரம் இல்லையென்றே தோன்றுகிறது. அந்தக் கடம்பு கடலைக் கடந்து இலங்கையில் யாழில் செழித்திருப்பது மிகச் சிறப்பு. தமிழர் பெருமை கொள்ள வேண்டியது பொறுப்பு.

இந்தக் கோயிலில் காவடிக் கந்தன் என்று வழங்குவதாகச் சொன்னீர்கள். என்னென்ன காவடிகள் இங்கு எடுக்கப்படும்?

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/01/blog-post_23.html

ம்ம்ம்...சென்னையை எல்லாரும் வெண்ணை என்று விளையாண்டிருக்கிறார்கள். இனிமேல் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

இன்னமும் சென்னையில் இருக்கின்றீர்களா? எத்தனை நாளைக்கு? வெள்ளியன்று சென்னை வருகிறேன் நான். சந்திக்க முடியுமா?

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/01/blog-post_19.html

// //படம் பார்க்கனுங்குற விருப்பம் எனக்கு மொதல்லயிருந்தே இருக்கலை. இத்தன விமர்சனங்களைப் படிச்ச பிறகும் அப்படியொரு விருப்பம் எனக்கு வரும்னா.....மன்னிக்க. வராது.//

ஜி.ரா. இப்படி எல்லாம் ஒதுங்கிப் போகக் கூடாது நீங்களும் பாத்துட்டு ஒரு இரண்டு வரி விமர்சனமாவதுப் போடுங்க... //

ஐயோ! தேவு...ஏற்கனவே சிவப்பதிகாரம், பொய்யின்னு வாங்குன சூடு இன்னும் ஆறலை. அதுக்குள்ள மக்கள் ஆழ்வார் போக்கிரின்னு ரெண்டு சூட்டோடு வந்து கதறிக்கிட்டு இருக்காங்க. இப்படி ஒரு நெலமைல இந்திச் சூடு வேற தேவையா? நான் தாங்க மாட்டேன் சாமி. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தோட ஒரிஜினல் டிவிடி வாங்கிக் குடுங்க. பத்து வாட்டி பாத்துட்டு பத்து விதமா விமர்சனம் எழுதுறேன். இதெதுக்குங்க ரஸ்க்கு...இல்ல இல்ல ரிஸ்க்கு.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/01/blog-post_19.html

// என்ன ஜி.ரா. போக்கிரி ஆழ்வாருக்கே பயந்தா எப்படி? அடுத்து நம்ம டயாலாக் டயனோசர் பேரரசும் நம்ம வல்லவன் சிம்புவும் இணைந்து ஒரு படம் பண்ணப் போறதா ஒரு செய்தி உலாவிகிட்டு இருக்கு அந்தப் படத்துப் போஸ்ட்டரைப் பார்க்கக் கூட பயப்படுவீங்கப் போலிருக்கு. //

பாத்தீங்களா...இதுக்குத்தாங்க நானும் சொல்றேன். துட்டத்தைக் கண்டா தூர வெலகுன்னு. லார்டு ஆப் லபக்தாஸ், ஹாரி பாட்டரும் பிச்சுப் போட்ட பரோட்டாவும், கிரானிகில்ஸ் ஆப்பு நாறுனியா மாதிரி நல்ல இங்கிலீசுப் படமாப் பாக்கலாம்னு உக்காந்தா இப்ப பிளட் டயமண்டு, டெயூஸ் பிகாலோன்னு படங்கள் வருது. சரீன்னு கன்னடம் பக்கம் வந்தா...தாங்க முடியலை. வெட்டி மாதிரி தெலுங்குக்கும் தாவ முடியலை. மலையாளம் நம்மளப் பாத்து முறைக்குது. இதெல்லாம் நமக்கெதுக்கு. கிட்டப்பா பாகவதர் நடிச்ச ஏதாவது படம் இருந்தாக் குடுங்க. இல்ல ரோஸ் பேண்ட்டு போட்டுக்கிட்டு எம்.ஜி.ஆர் ஆடிப் பாடுன படம்னாலும் சரிதான்.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/01/1.html

அசையும் தளையும் கூடிட வருமே
இசையாய் வெண்பா பிறப்பு

கொத்சு...இது சரியா இருக்கா?

அசையும் - அசை யும் - நிரை நேர் - புளிமா
தளையும் - தளை யும் - நிரை நேர் - புளிமா
கூடிட - கூ டிட - நேர் நிரை - கூவிளம்
வருமே - வரு மே - நிரை நேர் - புளிமா
இசையாய் - இசை யாய் - நிரை நேர் - புளிமா
வெண்பா - வெண் பா - நேர் நேர் - தேமா
பிறப்பு - பிறப் பு - நிரை நேர் - புளிமா

சரியாக அலகிட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். ஆனால் வெண்பா இலக்கணம் பொருந்தி வருகிறதா என்று நீர்தான் சொல்ல வேண்டும். இதில் மாமுன் நிரை, விளமுன் நிரை, மாமுன் நேர் ஆகிய மூன்றும் வந்திருக்கிறது.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/01/1.html

மாமுன் நேர் வரக்கூடாது என நினைக்கிறேன். சரியா?

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/01/1.html

// இலவசக்கொத்தனார் said...
ராகவண்ணா, நீங்கள் வந்துட்டீங்களா! வெரி குட்!

அலகிட்டது சரி, கொஞ்சம் தளை தட்டல் இருக்கிறது. அதுக்கு இன்னும் ஒரு நாள் பொறுங்கள். நாளை வெண்பா விதிகள் பத்தி இரண்டாம் பாகம் வருது. :) //

அது சரி....நீங்க அடுத்த பதிவு போடுற வரைக்கும் காத்திருக்க முடியுமா?

அசையை மெதுவாய் அசைந்தே தருவது
கசையால் அடித்திடும் வகையே

இது உங்களுக்குத் தெரியாதா?

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/01/1.html

// Jeeves said...
அசையும் தளையும் கூடிட வருமே
இசையாய் வெண்பா பிறப்பு///

இராகவனே இரமணா இரகுநாதா!!!!

அசையும் தலையில் அழகாய்த் தெரியும்
இசையின் இனிமையே காண்! //

அசையும் தளையும் அமைந்திடு முறையில்
இசைவாய் எழும்வெண் பா

இதையும் பகுத்தே இசைவெனச் சொல்வீர்
எதையும் விளக்கும் ஜீவ்ஸ்

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/01/101.html

// ILA(a)இளா said...
ஜி.ரா--> என்ன ஒரு ஞாபக சக்திங்க உங்களுக்கு. பட்டியல அப்படியே சொல்லிட்டீங்க. ஊறுகாய், சாலட் விட்டுபுட்டீங்களே. //

ஆமாய்யா மன்னிச்சுக்கிருங்க. தெரியாம விட்டுப் போச்சு.

//// வேட்டி சட்டையோட கலக்கலா வந்து மரியாத செஞ்சீகளே//
விவசாயின்னு தெரிய வேணாமோ? //

அது சரி. நடுவுல யாரோ கேதரின்னு போன் பண்ணுனப்போ விவசாயி formerஆ மாறி இங்கிலீஸ் பேசுனீங்களே? இந்திய இங்கிலாந்திய அமெரிக்க விவசாயக் கூட்டணி அமைக்கவா? இல்ல வெண்டைக்காயும் லெட்டூசும் கலந்து வெண்டூசுன்னு கலப்புக் காய்கறி கண்டுபிடிக்குற ஆராச்சியா?

//// இதெல்லாம் குடுத்தா உங்களை நண்பனா அடையனும்?
"பொய்" படம் கூட்டிட்டு போனவங்களை என்ன பண்ணலாம்? எதிரியாக்கிறலாமா? //

அதென்னவோ நாயந்தானுங்க. நான் அந்தக் கொடுமைய மறக்கனும்னு நெனச்சாலும் மறக்க விட மாட்டீங்க போல. :-( அவங்கள மன்னிச்சி போக்கிரி, ஆழ்வாரு, தாமிரபரணீ, அடைக்கலம்னு வரிசையா கூட்டீட்டுப் போயிறலாங்க.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/01/blog-post_25.html

டில்லிக்கு ராஜான்னாலும் டீச்சர் சொல்லைத் தட்டாதே அப்படீன்னு ஏன் எழுதாமப் போனாங்களோன்னு தெரியலைன்னே நெனைக்கிறதத் தவிர இப்ப வேறொன்னும் செய்ய முடியாது.

அந்த பிர்லா மந்திருக்கு நானும் போயிருக்கேன். எல்லாம் பளிங்குக் கல்லு. செருப்புகளையெல்லாம் சாக்குக்குள்ள போட்டு வெச்சாங்களா? பிர்லா மந்திரத்துல மட்டுமில்லை ஆக்ராவுல தாஜ்மகால், கோட்டை எல்லா எடத்துலயும் இப்படித் தடவித்தான் பாக்குறாங்க. என்ன செய்றது...செக்குருட்டி முக்கியம்ல.

ராஜபாத்தை படம் பிடிச்சுட்டீங்க போலிருக்கே. அப்படியே அப்துல்கலாம் கிட்ட போயி தமிழ் வலைப்பூக்களைப் பத்தியும் பேசியிருக்கலாமே. அவரும் ஒரு தமிழ் வலைப்பூ தொடங்கீருப்பாரு. ஹி ஹி. அப்படியே ரெண்டு மாசத்துல மூடீருவாரு.

ஓ! அந்தப் பையனுக்குக் கிங்பிஷர்ல வேலை கிடைச்சிருக்கா? அங்க செவசெவன்னு இருக்குறவங்களத்தான் வேலைக்கு எடுப்பாங்க. பிளைட்ல போகும் போது பாத்திருக்கேனே!

அந்த அமெரிக்க நார்த்திய அங்க என்ன பண்றாருன்னு கேளுங்க. டாக்கி ஓட்டிக்கிட்டிருப்பாரு. இல்லைன்னா கடை கண்ணி வெச்சிருப்பாரு. அது தப்புன்னு சொல்லலை. அதுக்கே இந்தப் போடுன்னா...பெரிய வேலை செஞ்சி இந்திரா நூயி மாதிரி வந்துட்டா!!!!!!!!!!!!

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/01/blog-post_21.html

இம்சை. புரியலைங்க. :-( கோவிச்சுக்கிராதீக. என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலை. சொற்களெல்லாம் எளிமையா சந்தமா பாந்தமா இருக்கு. ஆனா உள்ள நீங்க வெச்சிருக்குற பொடி புரியலை. கொஞ்சம் விளக்ஸ் பிளீஸ்.

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2007/01/blog-post_24.html

நியாயமான கேள்வி.

போக்கிரி ஒரு மகாமட்டமான படம். லாஜிக்கே இல்லாம வந்திருக்குற ஒரு படம். ஒரு காட்சி சொல்றேன் கேளுங்க. டீவியில அடிக்கடி போடுறாங்களே. அசின் கையில கிழிச்சிரும். ஆஸ்பித்திரிக்குக் கூட்டீட்டுப் போவாரு. அதுவும் எப்படி...நேரா டாக்டர் கிட்ட கூட்டீட்டுப் போவாரு. வழக்கமா எல்லாரும் ரிசப்ஷன்ல கேப்பாங்க. இவரு வழியில வர்ர டாக்டர மடக்குவாரு. ஹீரோல்ல. அப்படித்தான் செய்யனும். ஒடனே அந்த டாக்டரும் போலீஸ் கேஸ் பதியனும்னு சொல்வாரு. ஒடனே இவரு பிளேடால அந்த டாக்டரக் கீறீட்டு போலீஸ் கிட்ட போகலாம் வான்னு சொல்வாரு. ஒடனே டாக்டர் திருந்தீருவாராம்.

இதுல என்ன கொடுமைன்னா...எல்லா பெரிய ஆஸ்பித்திரியிலயும் அங்கயே போலீசுக்குக் கொடுக்குற பார்ம் வெச்சிருக்காங்க. நம்ம அத பூர்த்தி செஞ்சி குடுத்தாப் போதும். இதுதான் எதார்த்தம். அத விட்டுட்டு....யோவ் டைரடக்கரு....ஆடும் போது வெடுக்குவெடுக்குன்னு ஒடம்பு ஒரு பக்கமாப் போகும். படம் எடுக்கும் போதும் இப்படித்தான் எடுக்கனுமா? சொந்தமா ஒரு கத வெச்சி எடுத்தான்ன. தெலுங்குல இருந்து காப்பி வேற. இதுல விஜயக்குத் தமிழ்னு கூட சொல்ல வராது. தமிள்ள்ள்ள் தான். படம் எடுக்குறாங்களாம். படம். அடப் போங்கய்யா நீங்களும் ஒங்க படமும். தாங்க முடியலைங்க. இதுக்கு விட்டலாச்சாரியா படங்கள் எவ்வளவோ தாவலை.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_25.html

நல்ல காமெடிதான் போங்க. எல்லா அரசியல்வாதிங்களும் இவ்வளவுதாங்க. இதத்தான் நான் தேர்தல் சமயத்துல இருந்து சொல்றேன். யாரும் கேக்கலை. என்ன செய்ய...எல்லாரும் நல்லா சாப்புடுறாங்கப்பா. சாய்பாபா கருணாநிதி ஏதோ பொதுத் திட்டம் வெச்சிருக்காங்க. அதான் கூடிப் பேசியிருக்காங்க. மத்திய அமைச்சரும் மாநில அமைச்சரும் இலவச விளம்பரம் குடுக்குறாங்க. சீச்சீ.

ஹரிஹரன் எடுத்துக் குடுத்தாரே தினகரன். அவரும் ஒன்னும் கொறைஞ்சவர் இல்லைங்க. இங்க இந்து மதம்னா...அங்க கிருத்துவ மதம். அவ்வளவுதான். என்னைக் கேட்டா ஹரிஹரனை விட நீங்கதான் அவரைப் பத்திச் சொல்லவும் சரியான ஆள். ஹரிஹரனோட நான் பல கருத்துகள்ள ஒத்துப் போகாட்டியும் ஹரிஹரன் தினகரனைப் பத்தி எழுதுனா..அது சரியா எடுபடாது. திசை மாறும். நீங்களோ லக்கியோ எழுதுனா சரியா இருக்குங்குறது என் கருத்து. தினகரன் காஞ்சி சங்கராச்சாரியாரைப் பாத்துப் பேசுறாராம். வெள்ளிப் பூஜைப் பாத்திரங்கள் எல்லாம் பரிசாக் குடுத்திருக்காராம். எப்பயோ படிச்சது.

G.Ragavan said...

http://www.desikan.com/blogcms/?item=180

தேசிகன், நல்ல அறிமுகம். இந்தப் பரமபதம் முன்பு இருந்தது. தாயம் உருட்டி விளையாண்டிருக்கிறோம். சில சமயங்களில் வெறும் கட்டங்கள் போட்டு...5x5, 7x7 என்று ஒற்றைப் படையில் போட்டு நான்கு பேர்கள் விளையாடியிருக்கிறோம்.

நீங்கள் குறிப்பிட்ட பரமபதத்தையும் வாங்கி வைக்க வேண்டும். இதற்காக திருவரங்கம் போக வேண்டுமா! சென்னையிலோ பெங்களூரிலோ கிடைக்காதா!

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_25.html

// ஜோ / Joe said...
ராகவன்,
தினகரன் பத்தி நான் எழுதுனா ஒத்துக்க மாட்டீங்களோ? ஹி..ஹி..சும்மா தமாசு.. தினகரன் காமெடியை நானும் நேருல ஒரு தடவை பாத்திருக்கேன். //

தாராளமா எழுதலாம். நான் தமாசுக்குச் சொல்லலை. உண்மையாவே சொல்றேன். நீங்க இதப் பத்தி ஏற்கனவே எங்கயோ எழுதீருந்தீங்களே. படிச்ச நெனவு இருக்கு.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/01/blog-post_25.html

நெறைய புத்தகம் வாங்கீருக்கீங்க போல. படிங்க. நல்லாப் படிங்க. அதுதான் மூளைய வேலை செய்ய வைக்கும்.

நா.முத்துக்குமார். இந்தப் பேரைப் பொய் படத்துல பாலச்சந்தர் சொல்வாரே. காதல் பத்தி எதையோ சொல்லீட்டு இப்படீன்னு நா.முத்துக்குமாரசாமி சொல்லீருக்கார்ல-ன்னு சொல்வாரு. சரியா?

நல்ல கவிதைகளா எடுத்துச் சுவைக்கக் கொடுத்திருக்கீங்கன்னு நெனைக்கிறேன். அடுத்தடுத்த விமர்சங்களுக்குக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://gopinath-walker.blogspot.com/2007/01/blog-post_24.html

ஈரோயினா சரளாக்காவையும் ஈரோவா வடிவேலையும் போட்டு...கதையில மனோகரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி, காகா ராதாகிஷ்ணன், கருணாஸ், இவங்களையெல்லாம் போட்டு...காமெடி வில்லனா அவரு பேரு என்னங்க...தெரியலையே...ராசாதி ராச ராச மார்த்தாண்டன்னு படமெல்லாம் எடுத்தாரே. அவரப் போட்டு...சோடியா பிந்துகோஷையும் போட்டா நல்லாயிருக்கும். நாலு பாட்டு. ரெண்டு சண்டை. இருக்கனும். ஏர்ப்போர்ட்டுல கிளைமாக்ஸ் காட்சியில ஈரோயின வெளிய கொண்டு போறதுக்கு ஈரோ செய்ற காமெடி முயற்சிகள் பார்க்கிறவர்கள் வயிற்றில் வலியைக் கொண்டு வரும். ஈரோயின்னு நெனைச்சு ஒரு வெள்ளைக்காரப் பாட்டியைக் கையப் பிடிச்சி இழுக்குற காட்சி வைக்கனும். அது வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வெச்சு....அவரு அடி வாங்குனதும் ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்னு குதிரை மாதிரி சத்தம் விடனும். அப்ப மனோகரமா வந்து அவர அங்க இருக்குற எதையாவது எடுத்து அடிக்கனும். படா டமாசு. படா டமாசு.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/01/blog-post_23.html

வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
இவரைப் போன்ற பெரியவர்கள்தான்.

எங்களுக்கு இவரைப் பற்றி என்ன தெரியும்? இருந்தாலும் பிரெஞ்சுக்காரரான இவரைப் பற்றி ஒரு தமிழர் எழுதிட வேண்டும் என்று இருந்திருக்கிறதே. அதை நாங்கள் படிக்க வேண்டும் என்று இருந்திருக்கிறதே. அதுதான் அவருடைய சிறப்பு.

இறைவன் திருவடிகளில் அவர் அமைதியுற வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_25.html

// அனுசுயா said...
// பணக்காரன் பதவிக்காரன்-க்கு மட்டும் தங்க செயின். மத்தவன் கேட்டா பிரயோஜனத்துக்கு இல்லாத விபூதியைத் தர்றாரு//

கேட்டீங்களே சூப்பர் கேள்வி. செம காமெடி ஷோங்க உங்களோடது. அப்புடியே அடுத்த தடவை பசிக்கற பக்தருக்கு மசால் ரோஸ்ட் வர வழைக்க சொல்லுங்க. மாஜிக் ஷோ சூப்பரா இருக்கும். :))))))) //

எனக்கு மட்டன் பிரியாணி + சிக்கன் 65. தயிர்ப்பச்சடி கண்டிப்பா இருக்கனும்.

G.Ragavan said...

http://harimakesh.blogspot.com/2007/01/111.html

:-)) கலக்கல் பதிவு ஹரிஹரன். இந்தப் பதிவுக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவிக்கிறேன்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_25.html

// லக்கிலுக் said...
ஊருக்கெல்லாம் குல்லா போடுற சாய்பாபாவுக்கே குல்லா போட்ட டாக்டர் கலைஞர் வாழ்க!!!! //

ஆனாலும் ஒங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி கூடாதுங்க. ஹா ஹா ஹா...பாம்பைப் பாம்பெனப் பாம்பறிந்துத் தாம்பெனத் தாம் பொய்த்த நிகழ்ச்சிதான் இது.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/01/blog-post_24.html

நல்ல பாட்டு. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.

போன பாட்டுல வாணி ஜெயராம் பெயரை விட்டுட்டீங்க. இந்தப் பாட்டை அவங்களுக்குச் சமர்ப்பிச்சு சரி பண்ணீட்டீங்க. :-) நன்றி.

வாணி ஜெயராம் ஒரு சிறந்த பாடகி. தன்னுடைய முதல் பாடலுக்காகவே தான்சேன் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பாடகி. குட்டீ படத்தில் வரும் போலேரே பப்பீ ஹரா என்ற பாட்டுக்காக. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திப் பாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல வாரங்களாக முதலிடத்தில் தொடர்ந்து இருந்ததாம். அந்த அளவிற்கு இந்தி ரசிகர்கள் இந்தப் பாட்டை விரும்புவார்கள்.

இவர் ஒரு பாடலை ஏற்கனவே பாடி விட்டார் என்பதற்காக மீரா படத்திற்காக பண்டிட் ரவிஷங்கரின் இசையில் அந்தப் படத்தில் ஒரு பிரபல பாடகி பாட மறுத்து விட்டாராம். பிறகு வாணியை வைத்தே எல்லாப் பாட்டையும் முடித்துவிட்டார் பண்டிட்ஜி.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/01/blog-post_25.html

எந்தப் படத்தையும் முடிஞ்ச வரைக்கும் ஊன்றிப் பாக்குறது என் வழக்கம். பொய்யும் அப்படித்தான் ஆச்சு.

நா.முவை எனக்கு முன்னாலயே தெரியும். அவருடைய பெயரை அப்படி வித்தாயசமாச் சொன்னதுக்காக பொய் படத்தோட வசனத்தச் சொன்னேன்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_25.html

நல்ல கருத்துள்ள பதிவு. ஏற்க வேண்டிய கருத்து.

திருக்குறளை ஆழ்ந்து படித்தவர் குறைவு. வெறும் சொல்லை வைத்துப் பொருள் சொல்லக் கூடாது. பரிமேலழகர் உரையைக் காட்டிலும் நாமே கொஞ்சம் முயன்றால் நமக்கே புரியும். திருக்குறள் படிக்கக் கடிதானதல்ல.

பழைய இலக்கியங்களைப் பொருத்த வரையில் நிறைய தவறான தகவல்களும் நம்பிக்கைகளும் போய்ச் சேர்ந்துள்ளன. குறிப்பாக ஐம்பெருங்காப்பியங்கள். இவைகளில் நான்கு காப்பியங்கள் மதம் பரப்பும் காப்பியங்கள். சிலப்பதிகாரம் ஒன்றைத் தவிர. ஆனால் சிலர் அதையும் பௌத்தக் காப்பியம் என்பார்கள். ஆனால் நமக்குக் கிடைத்த அரும்பதவுரையோ நச்சினார்க்கு இனியார் உரையோ அப்படிச் சொல்வதில்லை. மேலும் சிலப்பதிகாரத்தில் கண்ணகியைப் பற்றியும் பலர் பல கருத்துகள் சொல்வார்கள். பாவம். பூம்புகார், கண்ணகி போன்ற திரைப்படங்களை மட்டும் பார்த்தவர்கள். உண்மையிலேயே சிலப்பதிகாரம் படித்தவர்களுக்குத்தான் அது சொல்வது தெரியும். பொழுது வருகையில் நானும் தெரிய வைப்பேன்.

இன்னும் நிறைய சொல்லலாம். மாற்றம் என்பது மனித தத்துவம். நாம் மட்டும் நல்லவர்கள். சரியானவர்கள் என்று நினைத்தால் அது மடத்தனம். அடுத்த வீட்டு ஆப்பத்திலும் சுவையிருக்கும் என்பதே உண்மை.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_25.html

// சுல்தான் said...
அழகு சொன்னதைப் போன்ற பெண்களால் இஸ்லாத்துக்கு இழுக்கு என்று முஸ்லீம்களும்,
தினகரன் போன்றவர்களால் கிறிஸ்துவத்துக்கு இழுக்கு என்று கிறிஸ்தவர்களும்,
புட்டபர்த்தி சாய்பாபாவால் இந்து மதத்துக்கு இழுக்கு என்று இந்துக்களும்,
மக்கள் மத்தியில் சொல்லி, இந்த இழிவுகளை கண்டிக்க முன் வர வேண்டும்.

முஸ்லீம்களில் நாங்கள் ரெடி, கிறிஸ்தவர்களில் ஜோ முதலானோர் ரெடி எனத் தோன்றுகிறது.
ஹரிஹரன் பகுதியில் எப்படி? //

என்னது இது...என்னையெல்லாம் கணக்குல சேக்கலையா? இந்தப் பதிவுலயே பாருங்க. கோவி இருக்காக...அனுசுயா இருக்காக...சிபி இருக்காக...மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் இருக்காக....நீங்க ஹரிஹரந்தான் வேணும்னா எப்படி? சரியாயில்லையே! :-(

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/01/33.html

கல்லெறிய இங்கே அணுகவும் என ஒரு சுட்டி. இந்தப் பதிவைப் படித்து விட்டு கல்லெறிந்தேன். என் மனதை. ஆம். இளக வைத்து விட்டது. அதென்ன வெட்டியும் இதே கருத்தில் ஒரு பதிவு. ஜியிடமிருந்தும் அதே கருத்தில். கடவுள் கருப்பை என்னும் உறுப்பை சிலருக்கு உடலில் வைத்தும் பொறுப்பை உள்ளத்தில் வைக்காததன் வினையே இது.

யெய்யா ஒரு பேச்சு. பேசுற பேச்செல்லாம் பாத்தா எங்கூருப் பக்கமாட்டந் தெரியுது. எந்தூரு? தூத்துக்குடி மாவட்டமா மக்கா?

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2007/01/027.html

இந்தப் பதிவைப் படிக்கையில் இதைச் சொல் ஒரு சொல்லில் போட்டிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் பதிவு சொல் ஒரு சொல்லில்தான் இருக்கிறது. :-)

வருக. வருக. வருக. உங்கள் வரவு நல்வரவாகுக. புதிய வலைப்பூவிற்கு மாறிய பிறகுதான் குழுமப்பூக்களில் சேர்வது என்று முடிவெடுத்திருப்பதால் உங்கள் வரவும் குமரனின் பங்களிப்பும் சொல் ஒரு சொல்லைக் கலகலப்பாகவும் பயனுள்ளதாகம் கொண்டு சென்று சிறப்பெய்தும் என்று நம்புகிறேன். வாழ்க. வளர்க.

«Oldest ‹Older   1 – 200 of 238   Newer› Newest»