Monday, January 08, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - ஜனவரி 2007

ஜனவரி 2007ல் வலைப்பூக்களில் நான் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

238 comments:

«Oldest   ‹Older   201 – 238 of 238
G.Ragavan said...

http://thamizsangam.blogspot.com/2007/01/blog-post_25.html

தமிழ்ச் சங்கத்தில் அன்று திருக்குறளை அரங்கேற்றும் பொறுப்பு வள்ளுவனுக்குக் கிடைத்தது. இன்று சிறிலுக்குக் கிடைத்திருக்கிறது. மிகச் சிறப்பு.

கடவுள் வாழ்த்தில் துவங்குகிறார் வள்ளுவர். இந்தக் குறளில் உள்ள பகவன் என்ற சொல் இரண்டு விதங்களாக ஆராயப்படுகிறது.

பகவன் என்பது இறைவன் என்ற பொருளில் கொள்வது ஒரு வகை.

பகலன் என்பது படியெடுக்கையில் பகவன் என்றாகியிருக்கலாம் என்பது இன்னொரு வகை. பகலன் என்றால் கதிரவன். அப்படியும் இருக்க வாய்ப்புண்டு என்பதே என் கருத்து. ஆனாலும் வள்ளுவனார் இன்றில்லாததால் எப்பொருளிலும் எடுக்கலாம். இறைவனே மிகப் பெரியவன். தன்னைத் தான் தோன்றி தன்னில் உலகு தோன்றியான் என்பார்கள். அப்படிப் பார்த்தால் சூரியனிலிருந்து நாம் வெடித்து வந்தோம் என்றும் சொல்கின்றார்கள். எது உண்மையோ. ஆண்டவனன்றி யாரறிவார்.

நீங்கள் சொல்லியிருக்கும் கதையும் அற்புதம். மிகவும் ரசித்தேன்.

G.Ragavan said...

http://espradeep.blogspot.com/2007/01/blog-post.html

நான் தப்பிச்சுட்டேன். நான் தப்பிச்சுட்டேன். நன்றி பிரதீப் நன்றி. என்னைக் காப்பாற்றியமைக்கு நன்றி. இல்லைன்னாலும் இந்தப் படத்துக்குப் போற எண்ணம் இல்ல. இனிமே வராதுங்குறதுக்கு ஒங்க பதிவு உதவுச்சு.

G.Ragavan said...

http://imohandoss.blogspot.com/2007/01/blog-post_29.html

என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க. இந்தப் படத்துல தமிழ் சினிமாவுக்கு வேண்டிய அத்தனையும் இருக்குன்னு வேற சொல்லீட்டீங்க வேற. தமிழ் சினிமாவை ஆண்டவந்தான் காப்பாத்தனும். எதிர்பார்ப்பே இல்லாமப் போகனுங்குற நெலமைக்கு வந்துட்டோம் பாத்தீங்களா!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/01/blog-post_29.html

கூகிள் தேடத்தான பயன்படுதுங்குறதால தேடித்தான் கெடைக்கனும்னு இருந்திருக்கு. அதுக்கென்ன செய்றது!

26, 27, 28 மூனு நாளும் லீவு. அதுவரைக்குமாவது கண்காட்சியை நடத்தீருக்கலாம். அத விட்டுட்டு எங்க நான் வந்துரப்போறேனோன்னு 21ந்தேதியோட முடிச்சிட்டாங்க. ஹம்ம்ம்ம். யார் செஞ்ச சதிவேலைன்னு தெரியலை.

கோவி.மணிசேகரன் புத்தகங்கள எந்தக் கடையிலயும் போடலையா!

மகரிஷி எழுதிய இரண்டு நெடுங்கதைகள் திரைப்படங்களா வந்திருக்கு. பத்ரகாளி மற்றும் வணக்கத்திற்குரிய காதலியே. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்துல.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_2572.html

இதனால எதுவும் நன்மை நடந்துரும்னு நம்ப முடியலை. அப்படி நடந்தா அது பாமகவுக்கு இருக்கலாம்.

கருப்பும் மாசிலாவும் சொல்லும் கருத்துகள் ஏற்புடையவை.

சாதீய எல்லைக்குள் அவரை அடக்குவதில் உடன்பாடல்ல என்று லக்கிலுக் சொல்வது நடக்க வேண்டுமென்றால் அதற்கு வழிவகை தேட வேண்டியது ராம்தாஸ். நாமல்ல.
பொன்ஸ் சொல்லியிருக்கும் செய்தியும் மறுக்க முடியாயததே.

பாமக ஒரு மாநிலக்கட்சியாக வளரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. லக்கிலுக் குறிப்பிட்டது போல பெயருக்கும் செயலுக்கும் தகுந்த வளர்ச்சியை அது ஏற்கனவே அடைந்து விட்டது. இதற்கு மேலும் வளர வேண்டும் என்றால் ஆண்டவந்தான் கண் பார்க்க வேண்டும்.

G.Ragavan said...

http://imohandoss.blogspot.com/2007/01/blog-post_29.html

இல்லை மோகன்தாஸ். கலைப்படங்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வரவில்லை நான். ஆனால் இப்படி மசாலாவுக்குள்ளேயே முங்கிக் கொண்டிருந்தால் எப்படி? எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல்..வில்லன்..வில்லனை அழிக்கும் கதைநாயகன். அவனுக்கு ஒரு நாயகி. அவன் அடுத்தவனை வெட்டுவதாலும் குத்துவதாலும் அவளுக்கு அவன் மேல் காதல் வரும். வெகுஜனப் படங்கள் தேவைதான். ஆனால் ஒரே மாதிரி எடுத்தால் எப்படி? அதைத்தான் நானும் கேட்கிறேன். மக்களுக்குப் புரியாமல் கலைப்படம் எடுப்பது எப்படி பயனில்லையோ....அதே போல இப்படிப் படங்களாக எடுத்துத் தள்ளுவதும் பயனில்லை. அதுதான் என் கருத்து. Vijay is monotonous. இதுதான் என்னுடைய கருத்து.

G.Ragavan said...

http://chudarvizhi.blogspot.com/2006/11/blog-post_12.html

நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள். நட்சத்திரப் பிறப்பில் உயிர்ப்பிறப்பின் சிலிர்ப்பைச் சொல்லியிருக்கின்றீர்கள். மிகப் பொருத்தம். அருமை.

இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://tamizhachchikal.blogspot.com/2007/01/blog-post_28.html

கொஞ்சம் சிக்கலான மாதிரி பிரச்சனைதான். ஆனா இந்தப் பிரச்சனை யாருக்கும் வரும் தெரியுமா? பத்தாம்பசலிகளுக்குத்தான். தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் உத்தமர்களாய் கட்டுப்பெட்டிகளாய் அடுத்தவர் முன் காட்டிக்கொள்ள ஆசைப்படும் அரைகுறைகளுக்கு.

ஜமுக்காளம் வாங்கீட்டு வரச்சொன்னவன அதுலயே படுக்கச் சொல்லீருக்கனும். தறுதலை. என்ன செய்ய? வளர்ப்பு சரியில்லை.

G.Ragavan said...

http://tamizhachchikal.blogspot.com/2007/01/blog-post_28.html

ஒரு சிறு தவறு. முந்தைய பின்னூட்டத்தில் யாருக்கும் வரும் தெரியுமா என்பதை யாருக்கு வரும் தெரியுமா என்று படிக்கவும். நன்றி.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/01/top-most.html

பட்டியலில் என்னையும் சேர்த்தமைக்கு நன்றி சிவபாலன். நீங்கள் விரும்பிப் படிக்கின்றீர்கள் என்பதே எழுதச் செய்யும் ஊக்கம்.

தாமதப் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். இப்பொழுதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். புதிய பிளாகருக்கு மாறியதிலிருந்து இன்னமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். சண்டை இன்றிரவு முடியும் என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/01/35.html

ஹா ஹா ஹா...அருட்பெருங்கோ...வேணும் ஒனக்கு வேணும். :-)

அந்தக் கன்னத்தைக் காட்டச் சொல்றது இருக்கு பாருங்க....அங்கதான் அருட்பெருங்கோ நிக்கிறதே. உக்கார முடியாம இல்ல. ஆனா அதுதான் டச்சு. அதுக்கு நீங்க வெச்சீங்களே ஒரு கவிதையப் பிச்சு. அடடா!

// செந்தழல் ரவி said...

இருக்காதா பின்ன, அவர் நம்ம செட்டு...:))))))))))) //

கவுண்டர் : என்ன செட்டு? பெரிய சேவிங் செட்டு

ரவி, நீங்க இதை ஜாலியாக எடுத்துக் கொள்வீர் என்று நம்புகிறேன். :-)

G.Ragavan said...

http://chennapattinam.blogspot.com/2007/01/50.html

மொத்தத்துல யாதும் டாய்லெட் யாவரும் போவீர்-னு சொல்றீங்க. ஹம்ம்ம்..

இன்னொன்னையும் சேத்துக்கோங்க. சரவணபவன், முருகன் இட்லிக்கடை, சங்கீதா மாதிரி ஓட்டல்களுக்குப் போனீங்கன்னா.....ஒடனே உக்கார எடம் கெடைக்கனும்னு ஆசைப்படக் கூடாது.

பழைய மகாபலிபுரம் ரோடு இன்னமும் பழைய ரோடாவே இருக்குன்னும் கேக்கக் கூடாது.

பஸ்சுல கடைசி சீட்டு பொம்பளைங்க சீட்டு. நீங்க உக்காந்து யாரும் எழுப்புனா "நாங்களும் அவங்கதான்"னு சொல்லுங்க.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/01/ii-24.html

ஜோசப் சார். நீங்க விலக வேண்டாம். உங்க என்னுலகமே தொடர்ந்து இருக்கலாம். அதுக்கு என்ன செய்யனும்னு வெட்டிப்பயலும் நாமக்கல் சிபியும் ஒரு பதிவு போட்டிருக்காங்க. அத ஒரு வாட்டி பாருங்க. இதையே நீங்க திரும்பவும் பயன்படுத்தலாம்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/01/023-1.html

கந்தகுரு கவசத்திற்கும் சேலத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. யாரேனும் சொல்லுங்களேன் அதை. கண்டிப்பாக நான் சொல்ல மாட்டேன். :-)

மிகவும் எளிய தமிழில் அமைந்த பாத்தொடர். இதனைச் சூலமங்கலம் சகோதரியரின் குரலில் கேட்பது மிகவும் அருமையாக இருக்கும். உண்மை பக்தியோடு அவர்கள் பாடியதால்தான் அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/01/023-1.html

பிள்ளையார் படம் மிக அருமை சிபி. எங்கு படம் பிடித்தீர்கள்?

// அடடா. அடுக்கடுக்கா கேள்விகள் வருதே. இப்படி அடுக்கடுக்கா கேள்வி கேட்டு ஒரு தடவை பட்டாலும் அறிவு வரமாட்டேங்குதே. :-( //

:-) பட்டால் வருமா அறிவு? அந்த வெறுந் துணியால் வருமா அறிவு? முருகன் திருவடி பட்டால்தானே வரும் அறிவு!

G.Ragavan said...

http://harimakesh.blogspot.com/2007/01/114.html

ஆயிரம் இருந்தாலும் இட்டிலியோடு பொடியைக் குழைந்த்து நன்றாகப் பிசைந்திழைத்து விழுங்கும் போது..அடடா! சுகமோ ஆயிரம்.

என்னதான் தேங்காய்ச் சட்டினியோடும் சாம்பாரோடும் இட்டிலிக்குத் திருமணம் நடந்து விட்டாலும் வெங்காயச் சட்டியோடு ஒரு கள்ளத் தொடர்பு வைக்கையில்...ஆகா! என்ன சுகம்! என்ன சுகம்!

வார்ப்பது என்ற சொல் இட்டிலிக்கு முழுதாகப் பொருந்தாது. தோசைக்குப் பொருந்ததே பொருந்தாது.இட்டிலிக்கு வேகுதல்..வேக வைத்தல் ஆகிய சொற்களே சரி. இட்டிலி வேக வெக்கிறேன் என்று சொல்ல வேண்டும். தோசை சுடுகிறேன் என்று சொல்லலாம்.

சொல் ஒரு சொல் மாதிரி ஆயிருச்சு. :-)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_1921.html

மாறீட்டோம் வெட்டி. ஒரு வழியா மாறியாச்சு. சனிக்கிழமை ஒருவழியா புது பிளாகருக்கு மாறீருச்சு. நேத்துதான் டெம்பிளேட் மாத்தி...பட்டை தீட்டி...எல்லாம் செஞ்சாச்சு. பின்னூட்ட ஜாங்கிரி நீக்கலும் செஞ்சாச்சு. ஆனா புது பிளாகர்ல இருந்து முன்னாடி போட்ட கமெண்ட் எல்லாம் அனானியா தெரியுட்து. புதுசா போடுற கமெண்ட் எல்லாம் ஒழுங்காத் தெரியுது. என்னன்னு பாக்கனும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_3720.html

வெட்டி, இந்தப் பதிவை நான் பார்த்து வருவதற்குள் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் ஆகிவிட்டன. ஆகையால் நான் சொல்ல வந்ததை ஏற்கனவே ஆங்காங்கு சொல்லியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இருந்தாலும் என்னுடைய கருத்து இங்கே.

பகுத்தறிவு என்பது கடவுள் நம்பிக்கையின்மை இல்ல. atheist is different from rationalist. பகுத்தறிவு என்பது பகுத்து அறிவது. ஆகையால்தான் எல்லாக் கடவுள் நம்பிக்கையாளரும் பகுத்தறிவாளராக அறியப்படுவதில்லை. கடவுள் இல்லை என்று சொல்கின்றோரையும் பகுத்தறிவாளன் என்று சொல்வ ஒப்புவதில்லை.

செய்கிற ஒரு செயல்...நல்லதா கெட்டதா என ஆய்ந்து செய்வது அதில் நல்லதை மட்டுமே செய்வதே பகுத்தறிவு. அதையும் கடவுள் நம்பிக்கையையும் குழப்புவது கூட பகுத்தறிவின்மைதான்.

கடவுளை நம்பத்தான் வேண்டுமா என்று கேட்பதைப் பகுத்தறிவு எனலாம். அதற்குச் சரியான விடை சொல்ல வேண்டிய பொறுப்பு நம்பிக்கையாளர்களுக்கு உள்ளது. ஆனால் கடவுளை நம்பாமல் இருப்பது பகுத்தறிவு என்ற வாதம் ஏற்கப்படக் கூடாதது.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_3720.html

// //பகுத்தறிவின் அடுத்த கட்டம் ஆன்மிகம் தான்:)) //

தலைகீழாக சொல்கிறீர்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆன்மீக அறிவு தான் ஆதிக்கம் செலுத்தியது.

சில நூறாண்டுகளாக தான் உலகம் பகுத்தறிவு பாதையில் செல்கிறது.இது தொடரும். //

ஜாலி ஜம்பர், இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆன்மீகம் ஆதிக்கம் செலுத்தியது என்பது சரியல்ல. உண்மையான ஆன்மீகம் ஆதிக்கம் செலுத்தாது. உண்மையான பகுத்தறிவும் ஆதிக்கம் செலுத்தாது. ஆகையால்தான் அவையிரண்டும் ஒன்றாகின்றன.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_30.html

என்னது அக்கு மார்க்கு தமிழ்ப் படங்களாச் சொல்லனுமா? சொல்லலாமே....விஜய் நடிச்ச பல படங்கள். அதுல அவரும் அவருடைய அம்மாவும் சேந்து பம்பாய் குட்டி சுக்கா ரொட்டீன்னு பாட்டெல்லாம் பாடியிருப்பாங்க.

வாலியச் சேக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அதத் தவிர எஸ்.ஜே.சூரியா எடுத்த எல்லாப் படமும் அப்படித்தான்.

சமீபத்துல சில படங்கள் வந்தது. பள்ளிக்கூடப் பிள்ளைகளை வெச்சு. பேரெல்லாம் தெரியாது. பார்க்கவும் இல்லை.

ஆனா இந்த மாதிரி பாலியல் பிரச்சனைகளை வெச்சுப் பாக்குற மாதிரி ஒழுங்கா படமெடுக்கத் தெரியாது. மகேந்திரனே தோத்துப் போன சப்ஜக்ட். பூட்டாத பூட்டுகளைச் சொல்றேன். சரியாச் சொல்லலை. ஆபாசமெல்லாம் அதில் கிடையவே கிடையாது.

சினிமாவுல கொல பண்றவன் எப்படிக் கதாநாயகனோ அப்படித்தான் இந்த மாதிரிப் படங்களும். இவங்களுக்கும் நீலப்படங்களுக்கும் பெரிய வித்யாசம் இருக்குற மாதிரி தெரியலை. இந்த மாதிரி தமிழ் சினிமா பாக்குறதுக்கு டெயூஸ் பிகாலோ பாத்துறலாம். (பாத்துட்டேன்.)

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/01/blog-post_29.html

படங்கள் நன்றாக வந்துள்ளன.பெரிய வேறுபாடு தெரியாத அளவிற்கு உள்ளன. மிக நன்று. தசாவதாரத்தை எதிர்பார்க்கிறேன்.

G.Ragavan said...

http://manggai.blogspot.com/2007/01/blog-post_30.html

என்னது ஒரு மணிக்கொரு பீடியா! சூப்பரு. நல்ல வேளை...கையில ஒரு கண்ணாடி டம்ளரைக் குடுக்காம இருந்தாங்களேன்னு சந்தோசப்படுங்க.

அதென்ன ஆங்கன்வாடி?

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/01/023-1.html

// சிவமுருகன் said...
சேலத்தில் தானே ஸ்காந்தாஸ்ரமம் உள்ளது. 1997-ல் அங்கு ஒரு முறை சென்று வந்துள்ளேன். அந்த ஓடை நீரை பருகினால் சித்த சுத்தியாகும் என்று இந்த பா முடியும் சமயம் வருமே அதை தானே சொல்கிறீர்கள் இராகவன்? //

ஆமாம் சிவமுருகன். அதேதான். அந்த ஓடை நீர் சித்த சுத்தியாக இருக்கிறதா இப்பொழுது?

உங்கள் பின்னூட்டத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கின்ற உணர்வு.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/01/blog-post_29.html

சொன்ன பேச்சு கேக்கனும். காலைல பட்டினி. மதியம் பேருக்குத் திங்குறது. முக்காவாசி மிச்சம் வேற. அப்புறம் வயித்துக்குள்ள ஏரோப்பிளேனே ஓடும். முன்னாடி உக்காந்து திங்குறவனப் பாத்தாவது திருந்தக் கூடாது? என்னவோ போப்பா! ஒடம்பப் பாத்துக்க. நல்லா வயிறு முட்டச் சாப்புடு. சந்தோசமா இரு. அது போதும். வெறும் வயித்துல டீ காப்பி சாப்பிடாம சாப்பிட்டப்புறம் சாப்பிடு.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/01/blog-post_5692.html

இந்த முறை அப்பா பெங்களூருக்கு வந்ததும் கேட்டது...இங்க மக்கள் தொலைக்காட்சி வராதான்னுதான். ரொம்பவும் நாகரீகமா இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்.

சமயபுரம் கோயில் பராமரிப்பு குறைவுதான். பராமரிக்க முடியாத அளவுக்குக் கூட்டம். விடியற்காலையில போனா இருக்கும் சுத்தம் கோயில் தெறந்து அரைமணி நேரத்தில் காணாமப் போயிரும்.

அந்த விஷயத்தில் எனக்குத் தஞ்சை மாரியம்மன் கோயிலை மிகவும் பிடிக்கும். காலை நேரத்தில் கூட்டமில்லாமல் தாமரை மலர்களை சூட்டிக் கொண்டு செவ்வாடையில் அன்பொழுகக் காட்சி தந்த அந்தக் காட்சி இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. திருவானைக்காவல்காரியும் அப்படித்தான்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/01/blog-post_8751.html

அப்பச்சன் தயாரிப்பா? பரதன் இயக்கமா? ம்ம்ம்...ரெண்டாவது படம் சரியாப் பொருந்தி வர்ர மாதிரி இருக்கு. பாப்பம். என்ன நடக்குதுன்னு.

G.Ragavan said...

கொஞ்ச நாள் கழிச்சிப் போட்டிருக்கீங்க. இப்ப இது டிரெண்டு இல்லையே சிறில். :-)

அந்தக் கதைக்கு அளவுக்கு அதிகமாகவே விளம்பரம் கிடைச்சிருச்சு. அதுக்கு வலைப்பூவுல நிறைய பேர் காரணமாயாச்சு.

அது சரி? பின்னூட்ட ஜாங்கிரி நீக்கலுக்கு இன்னும் ஸ்கிரிப்ட் சேக்கலையா? ஜாங்கிரி எக்கச்சக்கமா இருக்குதே சிறில்.

கொஞ்ச நாள் கழிச்சிப் போட்டிருக்கீங்க. இப்ப இது டிரெண்டு இல்லையே சிறில். :-)

அந்தக் கதைக்கு அளவுக்கு அதிகமாகவே விளம்பரம் கிடைச்சிருச்சு. அதுக்கு வலைப்பூவுல நிறைய பேர் காரணமாயாச்சு.

அது சரி? பின்னூட்ட ஜாங்கிரி நீக்கலுக்கு இன்னும் ஸ்கிரிப்ட் சேக்கலையா? ஜாங்கிரி எக்கச்சக்கமா இருக்குதே சிறில்.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/01/34.html

யய்யா ஜி? என்ன நடக்குது? உண்மையச் சொல்லீரும். உள்ளதைச் சொல்றீரா? உண்மைய இல்லைங்குறீரா?

அந்தப் பய கார ஓட்டத் தெரியாம ஓட்டீட்டானாக்கும். அடப்பாவமே! சரி...மோதல்லதான காதல் பெறக்கும்.

// வெட்டிப்பயல் said...
கலக்கல்...

சீக்கிரம் அடுத்த பகுதி போடவும். முடிந்தால் எனக்கு மடலிலாவது அனுப்பி வைக்கவும்... //

this is too bad Mr.vetti. Do we get your stories in mail? ;-)

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/01/198.html

பாத்தீங்களா...எவ்வளவு லேசா ஆயிருச்சு வேலை.

நான் word பயன்படுத்துறதில்லை. wordpad தான். அதுல யாரோட உதவியும் இல்லாம உழலாம். அதுவுமில்லாம சேமிக்கைல அளவு கொஞ்சமா இருக்கும்.

G.Ragavan said...

http://kalvetu.blogspot.com/2007/01/blog-post_30.html

வெளிநாடுகளில் இப்படிக் குளியலறைகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பூணூல் இன் நட்ஷெல்...தலைப்பு நன்றாகத்தான் இருக்கிறது.

ஒருவேளை நான் வந்திருந்தால்...இந்த ஆள் நெற்றியில் என்ன வைத்திருக்கிறார் என்று உங்களைக் கேட்டிருப்பார். பிறகு நீங்கள் ஏன் வைக்கவில்லை என்று கேள்வி வரும். பிறகு நீங்கள் சந்தனப் பொட்டு இன் நட்ஷெல் என்று பாடம் எடுத்திருக்க வேண்டும். :-)

G.Ragavan said...

http://sirippu.wordpress.com/2007/01/30/snake/

காரணம் இருக்கிறது. மனிதன் இயற்கையை நம்பாமல் செயற்கையாக தனக்கு வேண்டியதை வேண்டிய வகையில் செய்து கொண்டான். முன்பெல்லாம் பிள்ளைகள் வேகமாக கணக்குப் போடுவார்கள். கால்குலேட்டர் பயன்படுத்தத் தொடங்கியதும் அந்த வேகம் மட்டுப்படும். பிறகு கால்குலேட்டர் இல்லாமல் முடியாது. அந்த நிலைதான் நமக்கும் நடந்து கொண்டிருக்கிறது. விலங்குகளுக்கு எந்தக் கருவியும் தேவையில்லை. ஆகையால் இயற்கையை ஒவ்வொரு நொடியும் நுகர்ந்து வாழ்கின்றன. அதனால் எல்லாம் தெரிய வருகிறது. நாமும் அந்த நிலைக்குப் போனால் எப்பொழுது மழை வரும், வெயிலடிக்கும், நிலம் நடுங்கும் என்று சொல்லலாம்.

G.Ragavan said...

http://kalvetu.blogspot.com/2007/01/blog-post_30.html

// ராகவன்,

ஆம் வெளிநாடுகளில் பல நல்ல unisex விசயங்கள் உண்டு.பீச் அருகில் சில திறந்தவெளி குளிக்கும் இடங்கள் இருக்கும்.பீச்சில் சுற்றியபின் உடலில் உள்ள மண்ணைக்கழுவ ஆண்,பெண் அனைவரும் ஒரே இடத்தில் நின்று water hose மூலம் குளியல் நடத்துவார்கள். //

ஆனா ஒன்னு...அவங்க கூடக் குளிக்கிற பொண்ண உத்து உத்துப் பாக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். நம்மூர்ல துணிய மூடி அனுப்புனாலும் பாக்குறாங்க. மூடாம பிரியா விட்டாலும் பாக்குறாங்க. அப்புறம் எதையாவது செஞ்சிட்டு மூடாம இருந்ததுன்னு பழியை வேற போடுவாங்க. படுபாவிப் பயலுக. நம்மூருக்கு இது சரி வராதுன்னு நெனைக்கிறேன். ஆனா நம்மாளுக வெளிநாட்டுக்குப் போனா செய்வாங்க.

// இந்தியா ஒரு ஆன்மீக நாடு. இந்துக்கள் புனிதர்கள்.பொட்டு,சந்தனம்,பூணூல்,சைவம் etc..உயர்ந்த பண்புகள் என்று பல ஜல்லிகள் உண்டு.//

பூசுவதும் உயர்ந்த பண்பும் பூசாமை தாழ்ந்த பண்பும்னு சொல்றது தவறுதான். நான் கோயிலுக்குப் போனா துன்னூரு, குங்குமம், சந்தனம்...எதெல்லாம் குடுக்குறாங்களோ..அதெல்லாம் பூசிக்கிறதுல எந்தக் கஷ்டமும் இல்லை. ஆனா தெனமும் கோயிலுக்குப் போறதில்லையே. ஆகையால கொஞ்சோல சங்கரங்கோயில் புத்துமண்ணக் கொழச்சி லேசா வெச்சிக்கிருவேன். இது இருந்தாத்தான் பக்தின்னு இல்லை. சின்ன வயசுப் பழக்கம். அது இல்லாம என்னோட மொகத்தப் பாக்க எனக்கே பிடிக்காது. அத்தோட கொஞ்சோல பக்தியும் கூட. அவ்வளவுதாங்க.

// சந்தனமும் , குங்கும பொட்டும் ஒருவித வழிபாட்டு அடையாளங்கள்.பக்தர்கள் சைக்கிள்,கார்,பானை,அடுப்பு என்று சகட்டுமேனிக்கு எல்லா பொருட்களிலும் இந்த அடையாளம் இடுவார்கள். ஆனால் பூணூல் அப்படியல்ல. //

உண்மை. பூணூல் அணிவது அவரவர் விருப்பம். ஆனால் அணியாதது சிறுமை என்று சொல்ல முடியாது. அவ்வளவுதான்.

// அரைஞான்(அரணாக்கயிறு,அரணாக்குண்டிக் கயிறு) கயிற்றில்கூட சாதி உண்டு தெரியுமா? //

என்னது? காத்துட்டு கருப்புக் கயித்துல சாதியா? அதென்னங்க அது? கருப்புக் கயிற வாங்கி இடுப்புல சுத்துறதுலயுமா சாதி?

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/01/023-1.html

// குமரன் (Kumaran) said...
எளிய தமிழ் தான். ஆனாலும் விளக்கமும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். முருகதாசர் என்ன சொல்கிறாரோ? அனுபூதி நிறைவடந்துவிட்டதே. கவசத்தைத் தொடங்கலாமே அவர். //

முருகதாசரா? நான் முருகனடியவன் ஐயா. அடியவன் என்று சொல்லக் கூட வரவரத் தயக்கமாக இருக்கிறது. ஏனென்றால் அப்படிச் சொல்லிக் கொண்டால் நல்லவனாக இருக்க வேண்டுமே. அதெல்லாம் ரொம்பக் கஷ்டம். சண்முகச் செல்வர், வலையுலக வாரியார், ஆன்மீகச் செம்மல், இப்ப முருகதாசர்னு சொன்னாலும் ஏத்துக்க முடியாம பக்கு பக்குன்னுல இருக்கு.

அநுபூதி நிறைவுதான். ஆனால் கவசம்...இப்பொழுது இல்லை. கொஞ்சம் ஓய்வு. சந்தியாவைக் கவனிக்க வேண்டும். பிறகு முருகனருளில் கொஞ்சம் பங்களிப்பு. சொல்லொரு சொல், தமிழ்ச்சங்கம்...ஒரு மாதம் கழித்துத்தான் இனியதில் என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும்.

G.Ragavan said...

http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_23.html

நன்றி ஜகத். உங்களது கோடை நானும் பயன்படுத்திப் பயன்பெற்றேன். ஜாங்கிரிகள் நீங்கி விட்டன. புதிய பின்னூட்டங்கள் தெளிவாக வருகின்றன.

அதே நேரத்தில் நான் மாறும் முன்பே மாறியவர்கள் முன்பு இட்ட பின்னூட்டங்கள் அனானிமசாக வருகின்றனவே! அதற்கு என்ன செய்ய வேண்டும்?

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/01/blog-post_30.html

மிகவும் சிக்கலான பிரச்சனை இது. என்னதான் நூறு காரணங்கள் சொன்னாலும் அது ஏன் அப்படி நடக்கனும்? அதுதான் கடவுளின் திருவுளம் அப்படீங்குற ஒரு வாதத்தில் அடிபட்டுப் போகும் பொழுதுதான் அறிவியல் அமைதியாக வேண்டியிருக்கிறது. இது என்னுடைய கருத்து.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/01/200.html

ஒரு நூறு என்று சொல்லும் முன்னே
இருநூறு எழுந்து
முன் நூறு போட்டதை
நான் நூறு கூட்டி
ஐ நூறு கூடியதே
இது அரு நூறுதான் என்று
பாராட்டு எழு நூறு
என் நூறோ? உன் நூறன்றோ!
வாழ்க வளமுடன்!

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/01/blog-post_31.html

படங்கள் நல்லா வந்திருக்கு கோ. கட்டிடக் கலை அமைப்பைப் பார்த்தியா! என்ன நேர்த்தி. இந்தக் கோயிலும் தஞ்சைக் கோயிலும் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்படுகின்றவை. ஆகையால்தான் துப்புரவாகவும் ஒழுங்காகவும் இருக்கின்றன. மற்ற பெரிய கோயில்கள் எல்லாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/01/blog-post_31.html

// மணியன் said...
தந்தை இராஜராஜன் எழுப்பியதைவிட சிறப்பான கோவிலைக் கட்ட விரும்பிய இராசேந்திர சோழனின் முயற்சியிது. கங்கையில் தூய்மை செய்யப் பட்டு கனக விசயன் தலையில் கொணர்ந்த கற்களைக் கொண்டு கட்டப் பட்டதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. வரலாறு அறிந்தவர்கள் கூறுவார்கள் என எதிர்நோக்குகிறேன். //

இல்லை மணியன். கனக விசயர்கள் ராஜேந்திர சோழனுக்கும் கிட்டத்தட்ட என்னூறு ஆண்டுகளுக்கு முந்தையவர்கள். அதாவது சேரன் செங்குட்டுவன் காலம். கண்ணகிக்குக் கோயில் கட்ட வேண்டுமென்று விரும்பவும் ஒரு அமைச்சன் பொதிகையில் கல்லெடுத்துக் காவிரியில் நீரெடுதுக் கழுவிக் கட்ட வேண்டும் என்கிறான். இன்னொருவனோ இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் மூழ்கியெடுத்துச் செய்ய வேண்டுமென்கிறான். கொன்றை சூடிய விரிசடையன் நமக்கு ஒரு கல் தாரானோ என்று இமயம் செல்ல நினைக்கிறான் செங்குட்டுவன். அப்பொழுது வடவர்களான கனகனும் விசயனும் பாண்டிய, சேர, சோழர்களை இகழ்ந்து சொல்லிய செய்தி எட்டுகிறது. ஆகையால் கல்லெடுக்க என்று மட்டும் புறப்பட நினைத்தவன் போருக்கும் புறப்பட்டுப் போய் வென்று கல்லெடுத்து கனகவிசயர் தலையில் வைத்துக் கொணர்ந்தான்.

«Oldest ‹Older   201 – 238 of 238   Newer› Newest»