Friday, June 01, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - ஜூன் 2007

ஜூன் 2007ல் மற்ற வலைப்பூக்களில் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

255 comments:

1 – 200 of 255   Newer›   Newest»
G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/05/sj-surya.html

கவுண்டருக்கு கோடி நன்றி. இந்தாள என்ன செய்றதுன்னு நெனச்சு நெனச்சு நொந்து போயிருந்தேன். வாங்கு வாங்குன்னு வாங்குனாரய்யா கவுண்டரு. வாழ்க வளமுடன்.

நடிக்கிறது தப்பில்லை. ஓமக்குச்சி நரசிம்மன், ஒருவிரல் கிருஷ்ணாராவ் எல்லாம் திட்டவா செய்றோம். அந்த மாதிரி இவரும் நடிச்சா நாம ஏன் எதுவும் சொல்லப் போறோம். கதாநாயகனாத்தான் நடிக்கனும் அடம் பிடிச்சு...பொம்பளப் பிள்ளைங்கப் பிடிச்சிப் பிசிக்கி வெக்கைலதான் எரிச்சல் வருது. பெரிய மம்முதக்குஞ்சுன்னு நெனப்பு.

G.Ragavan said...

http://sathurvedhi.blogspot.com/2007/05/blog-post_31.html

என்னங்க இது...விந்து வெளியேறுவதுதான் பிரச்சனைன்னா அதுக்கு வேற வழிமுறைகள் இருக்கே. இப்பிடி வீடுவீடா போயி நல்ல காரியம் செய்யனுமா என்ன?

// நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப் பட்ட முறையே தேவதாசி என்பது. தேவதாசி என்பது ஒரு குலம். //

இதென்ன கொடுமை. அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் பெண்ணையும் அதுக்குள் புகுத்தி..இப்பிடியே பல பெண்களைச் சீரழிப்பது பெரும்பாவம்.

// இறைவனை வேதம் ஓதி போற்றுபவர்களின் கால்களை அமுக்குதல், மற்றும் வேதம் ஓதுபவர்களின் மனைவிமார்கள் பிறந்தகத்துக்கு பிரசவத்துக்காக சென்ற நாட்களில் ஒரு மனைவி ஸ்தானத்தில் இருந்து 'திருப்தி' படுத்துதல் போன்ற புனிதமான செயல்களைச் செய்திருக்கிறார்கள். //

சரி சரி. அப்ப வேதம் ஓதாதவங்களுக்கு விந்து வெளியேற வேண்டாமா? அதுக்கு என்ன செய்றது?

அது சரி...புரொபைல்ல இருக்குறது ஒங்க படந்தானா? எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. எங்கையோ இருந்து படத்த எடுத்துப் போட்டு...யாரோ ஆரம்பிச்ச வலைப்பூவா!

G.Ragavan said...

http://espradeep.blogspot.com/2007/06/blog-post.html

வாங்கய்யா...வந்துட்டீங்களா? எல்லாரும் நலமா? இப்ப எங்க இருக்கீங்க?

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/06/226.html

இவ்வளவு சின்ன வயசுல தாத்தாவானது நீங்களாத்தான் இருக்கும். வாழ்த்துகள். (கின்னசுக்கு எதுக்கும் ஒரு போன் போட்டுப் பாருங்களேன்)

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/06/blog-post.html

ஜீவனாம்சமே கூடாதுன்னு முழுசா ஒதுக்கவும் முடியாது. கண்டிப்பாக் குடுத்தே ஆகனும்னு அடம் பிடிக்க முடியாது. தியாகபூமி தெரியுந்தானே. இந்தாளுகிட்ட இருந்து பிரிச்சு விட்டுருங்க...அவருக்கு வேணும்னா நான் ஜீவனாம்சம் தாரேன்னு ஒரு பெண் சொன்ன கதை.

நல்ல வேலையில் இருக்கும் படித்த பெண்களுக்கு அந்த மனிதனின் பணம் வேண்டா வெறுப்பாக இருந்தால் வியப்பில்லை.

அதே நேரத்தில் எல்லாப் பெண்களும் அந்த நிலையில் இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

ஆகையால் தீர்ப்பில் இரு தரப்பையும் ஆராந்து நோக்கிச் சொல்ல வேண்டும்

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/06/16840.html

அவர்கள் வந்து மின்னிணைப்பைத் துண்டிக்கும் பொழுது உடனிருந்தவர்கள் யார்? 20 வயது மகன் என்றால் அவன் மீதுதான் தவறு. உடனே மருத்துவமனையை அணுகியிருக்கலாம். அக்கம் பக்கத்தவரை அழைத்திருக்கலாம். சொந்தக்காரர்கள் நண்பர்கள்...யாரையாவது கூப்பிட்டிருக்கலாம். 20 வயது என்பது சின்ன வயதல்ல. கிட்டார் வாசிச்சானாமே...கொமட்டுல குத்துங்க. அட...அவங்க அப்பாவுக்காவது போன் போட்டிருக்கலாம்ல. என்னவோ போங்க.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/05/blog-post_31.html

// தருமி said...
முயற்சிர வேண்டியதுதான் !

'முயற்சிர' - எப்படி இருக்கு இந்த புதுச் சொல். குமரன், ஜிரா- கிட்ட சொல்லிராதீங்க. அடிக்க வந்திரப் போறாங்க. //

வந்துட்டோம்ல....தப்பிக்க முடியுமா...எப்படியாவது மயிலாருக்கு அலகு வேர்த்துரும்.

என்னங்க இளவஞ்சி இப்பிடி இலக்கணப் பிழையோட எழுதுறீங்க. தமிழ்ச்சங்கம் தீர்த்து வைக்காத பிரச்சனையைத் தனியொரு புலவராக இருந்து தீர்த்து வைத்த தருமி சொல்லீட்டாரு. அதுக்கு மேல என்ன சொல்றது. இப்ப என்ன செய்யப் போறீங்க?

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/05/219-1.html

யாரையும் நொந்துக்க வேண்டாம். சந்துல சிந்து பாடுற இந்த சிங்காரங்களைச் சீவீட்டாலே போதும். வேற என்ன பண்றது. ஆனா ஒன்னு அங்க ஆக்கிரமிச்சுக் கோயில் கட்டுனானே...அவனுக்கு ஆண்டவன் வைக்கிற ஆப்பு இருக்கு.

G.Ragavan said...

http://amkworld.blogspot.com/2007/06/blog-post.html

சதுர்வேதியோட கட்டுரை ஒன்னைப் படிச்சேன்...அதாங்க..அந்த தேவதாசி...அதுல கேணத்தனமான கருத்துகள் இருந்ததோடு மட்டுமில்லாம...அதை எழுதுனதும் அடிமுட்டாள் தனமா இருந்தது. இங்க இங்க அடின்னுன்னு எடுத்துக் குடுக்குற மாதிரி. தேவதாசி முறையை ஆதரிக்கிறவங்க இவ்வளவு மடத்தனமா ஆதரிப்பாங்கன்னு நம்ப முடியலை. அதை அந்தப் பதிவுலேயே சொல்லீட்டும் வந்தேன். நீங்க என்னடான்னா மதிமாறன் அப்படீங்குறவருதான் சதுர்வேதின்னு சொல்றீங்க. அதுவுமில்லாம இந்தத் த்வேதி, த்ரிவேதி, சதுர்வேதி எல்லாம் வடக்கத்திச் சாதிப் பெயர்கள். லோக்கல்ல வெப்பாங்களான்னு தெரியலை.

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2007/05/blog-post_415.html

// முத்துகுமரன் said...
//இதில் இருந்தே தி.மு.க-அ.தி.மு.க. கட்சிகளுக்கு பொது எதிரியாக தே.மு.தி.க.வை கருதுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.//
இப்படியே போனார்னா கோட்டைக்கு போகமாட்டார். கீழ்ப்பாக்கத்திற்குதான் போவார். ஆழ்ந்த அனுதாபங்கள். //

முத்துக்குமரன், விஜயகாந்திற்கு என்னுடைய ஆதரவு இல்லை என்பது தெளிவானாலும்....மற்ற அரசியல்கட்சிகளின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கையில் இன்னமும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் விஜயகாந்த் ஒரு நெருடலாக இருப்பது போலவே தோன்றுகிறது. விஜயகாந்த் வருகின்ற தேர்தலில் முதல்வராவார் என்று நினைக்கவில்லை. ஆனால் ஒரு போட்டியாக அவரை இரண்டு கட்சிகளும் நினைக்கின்றனவோ என்று எனக்குத் தோன்றுகிறது. விஜயகாந்த் வந்து கிழிக்கப் போவது ஒன்றுமில்லை. இப்போதைய கிழிசல்களில் அவருக்கும் கொஞ்சம் பங்கு. அம்புட்டுத்தான்.

பிரதீப் தெரியும்தானே உங்களுக்கு. அவரிடம் அடிக்கடி சொல்வேன். "ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஐயம். ஒருவேளை கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில எதுவும் ரகசிய ஒப்பந்தம் இருக்குமோன்னு..."...ஏன்னா வரவர எந்த அரசியல்வாதியையும் நம்ப முடியலைங்க.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/05/blog-post_31.html

// ஜீரா,

எங்கய்யா புடிச்சீரு.. இந்த புதுப்போட்டோ?! துண்டு கலரெல்லாம் பார்த்தா சீக்கிரமே கட்சி ஆரம்பிச்சிருவீரு போல?! :))) //

வஞ்சிக்கோட்டை வாலிபரே, இதெல்லாம் டூ மச்சு. :-)))))))) அது துண்டில்லை. துண்டில்லை. சாக்கெட். ஆல்ந்தூர்ல அடிக்கடி குளிருதுல்ல..அதுக்கெதமா...அந்த சாக்கெட். அந்தப் படத்தப் படகுல வெச்சி எடுத்தது. ஆலந்தூரு கால்வாயெல்லாம் சுத்திக்காடுற படகுல வெச்சி எடுத்தது.

கட்சியா..நீங்க வேற...எனக்கு அரசியலோஃபோபியா வந்துருச்சோன்னு தோணுது!!!!!!!!!

G.Ragavan said...

http://perunthottam.blogspot.com/2007/05/29.html

சூப்பர். நல்லா இருந்தது. குறிப்பா திங்கள் காலை. :-)))))))))))

G.Ragavan said...

http://dravidatamils.blogspot.com/2007/05/blog-post_30.html

தெரியாத புதுத் தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

இந்துக்கள் என்றில்லை, தமிழ் கற்றோருக்கெல்லாம் பொதுமை ஔவையார். இன்று வரை கே.பி.எஸ் அவர்களைத் தவிர வேறு யாரையாவது ஔவையாராக நினைத்துப் பார்க்க முடியுமா? முடிகிறதா? நடிகர் திலகத்திற்குச் சிவாஜி பெயர் சூட்டிய பெரியார் செய்த இன்னொரு சரியான செயல் இது. அவருக்கு நன்றி.

அந்தப் படத்தில் அத்தனை தமிழ்ச்செய்யுட்கள். அதை வேறொரு பாடகி பாடி...வேறொரு நடிகை வாயசைத்திருந்தால் எப்படி இருந்திருக்குமோ. படமே தோற்றிருக்கலாம்.

// ஸ்ரீதர் சிவராமன் said...
இது மாதிரி சம்பவங்கள படிக்க படிக்க பெரியார் கடவுள்(உவமைக்குதாங்க) ரேஞ்சுக்கு போறார் //

வேண்டாம் ஸ்ரீதர். அதைத்தான் அவர் வெறுக்கிறார். அவரைக் கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டு போனா...அவர் ஏன் சொன்னார்னு யோசிக்காம அப்படியே பின்பற்றுவோம். அது அவருக்கு ஒவ்வாதது. தான் ஒரு மனிதந்தான்..தவறு செய்திருக்கக் கூடியவந்தான் என்று தெளிவாகவே சொல்லி விட்டுப் போயிருக்கிறார். அவர் மனிதன். நாமெல்லாம் மனிதனாகப் பார்க்க வேண்டும்.

// லிவிங் ஸ்மைல் said...
படிக்கும் போது, அந்த வி.ஜ.பி. கலைஞரோன்னு நெனச்சுட்டே படிச்சேன்.. பெரியார் தான் அந்த வி.ஜ.பின்னாலும், கலைஞர் இல்லைன்றது சப்புன்னு ஆயிடுச்சு. //

லிவிங் ஸ்மைல் வித்யா, அந்தப் படம் வரும் பொழுது கருணாநிதி அவர்கள் வி.ஐ.பி இல்லைன்னு நெனைக்கிறேன். அது பாவேந்தர் திரைப்படத்துக்கு வசனம் எழுதிய காலம்னு நெனைக்கிறேன் (எ.டு ஆயிரம் தலை வாங்கிய சிந்தாமணி). அண்ணாத்துரையும் கூட. இவர்களுக்குப் பிறகு வந்து புகழ் பெற்றவர் கருணாநிதி. ஆனாலும் சரியான ஆண்டுக்கணக்கு எனக்குத் தெரியாது.

அதுவுமில்லாம பெரியார் நெறைய செஞ்சிருக்காருங்க. சப்புன்னு போகக் கூடாது. மத்தவங்கள்ளாம் செஞ்சது அவர் செஞ்சதுக்கு முன்னாடி ஒன்னுமேயில்லை. பெயருக்கேத்த பெரியார் பெரியார்.

G.Ragavan said...

http://osaichella.blogspot.com/2007/06/blog-post_02.html

சூப்பரப்பு. செம நச். செம காரம். ரசித்தேன்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/06/blog-post.html

பாடலைக் கேட்டேன் ரவி. படத்தின் பெயரும் பாடலும் முன்பு கேள்விப்பட்டது போலவே இல்லை என்பதால் யாரிசையாக இருக்கும் என்று சிந்தித்துக்கொண்டே பாடலைக் கேட்டேன். மெல்லிசை மன்னராக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பாடலில் ஒருவித இரைச்சல் இருக்கிறது. பெரும்பாலும் வி.குமாராக இருக்க வாய்ப்புள்ளது. அல்லது சங்கர்-கணேஷாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்தப் பாடலை பாடும் நிலாவும் இசையரசியும் மட்டுமே காப்பாற்றுகிறார்கள். இது என் கருத்து.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/06/blog-post_02.html

அருமையான பாடல் ரவி. பாலு-வாணி ஜெயராம் இணைந்து பாடி எந்தப் பாடலும் சோடை போனதாக நினைவில்லை. மிகவும் அருமையான பாடல். ஜனனி படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. கொஞ்சும் மலர் மஞ்சம் ஒரு அருமையான காதல் பாடல்.

மெல்லிசை மன்னரின் இசையில் சில விஷயங்கள் சொல்லியே ஆக வேண்டும்.

நடுவில் உன் மேனி நாதஸ்வரம் என்று பாலு பாடுகிறார். உடனே பாடலில் நாதசுரம் வருகிறது. ஆனால் வேறு எங்கும் வருவதாகக் காணோம். இத்தனைக்கும் பாடல் முழுவதும் மேளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. (இந்த ஸ்டைலை காதல் கசக்குதய்யா, ஒட்டகத்தக் கட்டிக்கோ ஆகிய பாடல்களிலும் கேட்கலாம்.) ஆனாலும் அந்த நாதசுரம் பாடலுக்குப் பொருத்தமாகவே வருகிறது. இதுமாதிரி நிறைய இருக்கிறது. இந்தப் பாடலை மட்டும் இப்பொழுது பார்ப்போம்.

இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமையானவை. ஆடுவது எந்த அம்மனோ என்று இன்னொரு பாலு பாடல் உண்டு என்று நினைக்கிறேன். இருந்தால் கொடுக்கவும். அப்படியே உங்களுடைய ஜிமெயில் ஐடியையும் கொடுக்கவும். மன்னிக்க மாட்டாயா பாடல் இந்தப் படத்தின் சிறப்பம்சம். இசையரசியும் காந்தர்வக் குரலோனும் சிறப்பித்த பாடல்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/05/blog-post_31.html

ரவி, இந்தப் பாடல் கொஞ்சம் சுமார்தான். பாலுவால் என்று சொல்ல வரவில்லை. மொத்தப் பாடலும்.

அத்தோடு ஒரு சின்ன திருத்தம். தீந்தேனா என்று வரவேண்டும். தீன்தேனா என்று எழுதியிருக்கின்றீர்கள். திருத்தத்திற்கு கோவித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/06/blog-post.html

முருகா! தர்மலிங்கத்தின் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாருடைய ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

நண்பர்களே...ஒரு வேண்டுகோள். உடல்நலனை மிக எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அடிக்கடி வருகின்ற பிரச்சனையென்றால் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கொருமுறை மருத்துப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/06/blog-post_01.html

// திருமால் மருகன் தினந்தோள் முருகன்
குருவாய் அமர்ந்த குமரன் அருளால்
கருவறை தாண்டிக் கடவுளாய் வந்த
சிறுவர் சிரிப்பே சிறப்பு! //

கொத்ஸ், கவியரசரின் வரிகள் எனக்கு நினைவிற்கு வருகின்றன. உலகிலாடும் தொட்டிலெல்லாம் உன் புகழ் பாடும். இது சொல்லச் சொல்ல இனிக்குதடா என்ற பாடலில் வரும் வரி. குழந்தை வரம் என்பது இறைவன் கொடுப்பது. எல்லா வரமும் இறைவன் கொடுப்பதுதான் என்றாலும் கோடியில் இருப்பவரும் கோடியில் கிடப்பவரும் விரும்பும் செல்வம் மழலைச் செல்வமாக உள்ளது. ஆகையால்தான் அதை மழலைச் செல்வம் என்று சொல்கின்றார்கள். அப்படி முருகனருளை இந்தக் குழந்தைகள் நாளில் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. வாழ்க. வளமுடன்.

வெண்பா இலக்கணம் எனக்குத் தெரியாது. ஆகையால நீங்க விதிமீறல் செஞ்சிருக்கீங்களான்னு தெரியலை. ஆனா செய்யுள் இலக்கணம் புரியும். அதை வெச்சுச் சொல்றேன். மொத வரி தனியாத் தொங்கிக்கிட்டிருக்குது. அதக் கொஞ்சம் சரி செய்யப் பாருங்களேன்.

G.Ragavan said...

http://mkarthik.blogspot.com/2007/06/blog-post_01.html

ஓ ஹரி படத்துல சூர்யாவா. மசாலாவாத்தான் இருக்கும். பட்டிக்காட்டுப் படம்னு தெரியுது. சூர்யா வழக்கம் போலக் கலக்கல். அசின்....அடடா! வடிவேலு கூட கலக்கலா இருக்காரு. இப்பவே படம் பாக்கனும் போல இருக்கே. ஆனா என்ன..கழுத..வெட்டு குத்து நெறைய இருக்கும். ஆமா...இந்தப் படத்துல எந்தப் பாட்ட ரீமிக்சு செய்யப் போறாங்களாம்?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/05/blog-post_30.html

அடக்கொடுமையே. ஏம்ப்பா இப்பிடிச் செஞ்சிட்ட...சரி. இதெல்லாம் கல்லூரியில சரிதான். நான் பிட்டடிக்கப் பேப்பர் குடுத்திருக்கேன். ஆனா வாங்குனதில்லை. இதுனால என்னோட நண்பர்கள் கிட்ட வாங்குன திட்டுக எக்கச்சக்கம். ஒருவாட்டி ஒரு முக்கியமான கேள்வி எனக்குத் தெரியலை. இன்னொரு முக்கியமான கேள்வி என்னோட நண்பனுக்குத் தெரியலை. ஆனா எனக்குத் தெரியாத கேள்வி அவனுக்குத் தெரிஞ்சிருந்தது. அவனுக்குத் தெரியாதது எனக்குத் தெரிஞ்சிருந்தது. நான் எழுதீட்டு அவன் கிட்ட குடுத்தேன். அவன் அதப் பாத்து எழுதீட்டு..அவன் எழுதுனத எனக்குக் குடுத்தான். நான் வாங்கலை. வெளியில வந்து வசவு நாறீருச்சு. ஏன்னா...நான் முழுசா 20 மார்க்கு விட்டுட்டு வந்திருக்கேன். விட்டுட்டுன்னா...விடை தெரியாது. ஆனாலும் எதையாவது எழுதீட்டு வந்தேன். ஆனாலும் எப்படியோ ஓரளவு நல்ல மதிப்பெண் வாங்கீட்டேன்.

அதுவுமில்லாம அப்பல்லாம் நான் செண்டிமெண்ட் செந்தில்குமாரா இருந்தேன். ஆமாம். எக்சாம் அப்பல்லாம் மஞ்சப்பைதான் கொண்டு போவேன். அதுவுமில்லாம அந்தக் குறிப்பிட்ட சட்டையும் பேண்ட்டுந்தான். எல்லா எக்சாமுக்கும். அத்தோட முடிஞ்சதா...கல்லூரியில ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. எக்சாமுக்குப் போகும் போது..காலேஜுக்குள்ள நொழைஞ்சதும்...அங்க போய் உக்காந்திருவேன். அங்க உக்காந்துட்டுப் போய் எழுதுனாத்தான் ஒரு திருப்தி. :) நெனச்சுப் பாத்தா சிரிப்பாத்தான் இருக்கு. :)

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/06/220-hindu.html

இந்தச் செய்தியை போன வாரமும் வலைப்பூவுல எடுத்துப் போட்டிருந்தாங்களே. படிச்சேனே. ஆக...சென்னைல செய்தி போட்டு ஒருவாரம் கழிச்சுதான் மதுரைல செய்தியாப் போடுறாங்களா! மதுரக்காரவுகளே....என்னங்க இது! இப்பவே மதுரை இந்துப் பத்திரிகை அலுவலகத்துக்குப் போயி.....ஐயோ..இல்ல இல்ல வேண்டாம்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/06/220-hindu.html

// தருமி said...
et tu ஜிரா ! //

என்ன செய்றது தருமி சார். லேட்டஸ்ட்டா பேசுனாத்தானே எடுபடுது..ஹி ஹி ஹி..கோவிச்சிக்கிராதீக. இதெல்லாம் ஒரு இதுதான்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/06/blog-post_01.html

ஓ இங்க பாட்டாதான் சொல்லனுமா! வெண்பால்லாம் பெரியவங்க விளையாட்டு. என் பாவோட நிறுத்திக்கிறேன். :)

தமிழ்ப்பாவும்
குமிழ்ப்பூவும்
தலைகொள் வேலன்
அருள் பாயும்
புவி பிறக்கும்
சிறுவர் சிரிப்பே சிரிப்பு!

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_02.html

ஹி ஹி ஹி.... :-)

G.Ragavan said...

http://naalainamathae.blogspot.com/2007/06/50_02.html

// மாசிலா said...
அய்யய்யோ! இது என்னங்க முதலுக்கே மோசம் போன மாதிரி. மத்தவங்க படங்கள கூட போட்டு பதிவு எழுத முடியுமா? போதாத காலமடா சாமி. //

கிழிஞ்சது போங்க! நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க! :) குட்டிப் பிசாசு சொன்ன மாதிரி..அந்தப் பதிவுக்கும்..படத்துக்கும்...தொடர்பில்லைன்னுதான் நானும் நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://ilackia.blogspot.com/2007/06/blog-post.html

அட..இப்பத்தான் இந்தப் படத்தப் பாத்து முடிச்சேன். ஒடனே அது பத்திய பதிவா! ரொம்ப நல்லது. அந்தச் சிறுமி ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. விருது பொருத்தமானது. வாழ்த்துகள். சரளான்னு பேரா? தமிழ்ப் பொண்ணா?

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2007/05/blog-post_31.html

நல்லவேளை சிவாஜி ஸ்ரீதேவி ரெண்டு படந்தான். தப்பிச்சோம். என்.டி.ஆர் விடலை. எல்லாச் சின்னப்பொண்ணுங்க கூடயும் நடச்சிட்டாரு..ஹி ஹி..அக்கினேனியும் அப்படித்தான். இப்ப ரஜினிகாந்து அதத்தான செய்றாரு. மகளுக்குக் கொழந்தை பெறந்து தாத்தாவாயாச்சு. மருமகன் ஜோடி போட்ட பொண்ணோட இவருக்குச் சோடி கேக்குது. இதெல்லாம் ஜகஜமுங்க. படத்தப் பாக்காம விடுறதுதான் நல்லது.

ஆனா பாருங்க...இதுல ரெண்டு கதாநாயகிகளைப் பத்திச் சொல்லனும். ஒருத்தரு ஸ்ரீதேவி. அக்கினேனி கூட டூயட்டுப் பாடீட்டு...ரொம்ப வருசம் கழிச்சு..அவரு மகன் கூடயும் டூயட்டு பாடுனாங்க. அப்படிப் போடுங்க ஸ்ரீதேவி. அடுத்தது கே.ஆர்.விஜயா. அறுபதுகள்ள சினிமாக்கு வந்தாங்க. மெல்லிசா அழகா இருந்தாங்க. அப்புறம் குண்டாயிட்டாங்க எழுபதுகள்ள. ஆனா பாருங்க...குண்டானப்புறமும் சிவாஜி கதாநாயகனா நடிக்கிற வரைக்கும் அவங்க கதாநாயகியா நடிச்சு நெறையப் படம் வந்தது.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/06/4.html

இந்தக் கருப்போட்டைகள் என்ன வம்பு பண்ணுது. பக்கத்துல எது போனாலும் விடாதா! சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லின்னு சொல்வாரு வள்ளுவரு. அது மாதிரி கருப்போட்டை என்னும் சேர்ந்தாரை விழுங்கியா! சரி...இதெல்லாம் பாக்க நம்ம இருக்க மாட்டோம். முருகன் காப்பாத்தீட்டான். :)

G.Ragavan said...

http://yazhsuthahar.blogspot.com/2007/06/3.html

அருமையான பாடல்கள். மிகவும் ரசித்தேன்.

யாழ் சுதாகர், ஒரு வேண்டுகோள். பாடல்கள் தொடர்புள்ள தகவல்களும் தரலாமே. என்ன படம், யார் இசை, உடன் பாடியவர்கள், கவிஞர்...இந்த மாதிரி.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/06/blog-post_02.html

ஆகா..இதுகதானா விடைக. அருமையா இருக்கு. குறிப்பா ரொம்ப ரசிச்சது உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். பிரமாதம். திருவிளையாடல் ஆரம்பமும் ஓரளவு நல்லாயிருந்தது. ஆனா பிரகாஷ்ராஜ் படம் என்ற குறிப்பு சரியில்லை. நெறையக் கொழப்புச்சு.

சகத்திரம்....இது உண்மையிலேயே கடினமானது. சகத்திரம் என்பது வடக்கில் இருந்து வந்தது என்றே நினைக்கிறேன். ஒருவேளை சகஸ்ரம் என்று கொடுத்திருந்தால் எளிதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஓவியலூசு..கோட்டியை எப்படி மறந்தேன். ஆனாலும் கடினமானதுதான்.

பச்சைங்குற முடிவு செஞ்சிட்டேன். ஆனா அடுத்த பகுதியில கோட்டை விட்டுட்டேன். ஆனா முனைப்பா யோசிக்கலை.

வேலுண்டு வினையில்லை படத்துக்கு எத்தனை பேர் சரியான விடை சொன்னாங்க?

கண்ணும் கண்ணும், ராகதாளங்கள் - இப்பிடிப் படங்கள் இருக்குறதெல்லாம் உண்மையிலேயே தெரியாது.

நண்பனின் காதலி தெரிஞ்சது. ஆனா ஏன் எழுதாம விட்டேன்னு தெரியலை.

இந்தியா - இதுக்குத் தாய்நாடு, நம்நாடு ரெண்டுமே சொல்லாம்.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/05/2.html

ஆகா...நீ எங்கிட்ட என்னென்ன கேட்டன்னு சொல்லீட்ட...சரி. நல்லவேளைக்கு உனக்கு நான் என்ன விடை சொன்னேன்னு சொல்லலை. :-))))))

இந்தா பாரப்பா..இந்தத் திருநவேலி..சானகிராம்..சங்சன்...இப்பிடி நெனவலைகளக் கெளப்பி விடாத. நாங்களும் பக்கத்தூருதான். எங்களுக்கும் மலரும் நெனைவுகள் இருக்கு. ஆமா..சொல்லீட்டேன்.

சங்கரு..வரவர எரிச்சல் படுத்துறாரு. ஒரு படத்த எடுக்க இவ்வளவு நாள்னா..என்ன நல்ல இயக்குனர்னே தெரியலை. படம் வந்தாத் தெரிஞ்சுட்டுப் போகுது!

G.Ragavan said...

http://chitchatmalaysia.blogspot.com/2007/06/blog-post.html

புதுசா புட்டு வித்த டீச்சர் வர்ராங்கன்னு சொன்னாங்க. அது நீங்கதான்னு இப்பதான் தெரிஞ்சது. அதான் பாடத்தப் புட்டுல தொடங்குனதோ! ஒங்கூர்ல புட்டுல தேங்காப்பூவும் ஜீனியும் கலந்துதான சாப்பிடுவீங்க? சமயத்துல அள்ளி வாயுல திணிச்சிக்கிட்டா தொண்டை "டிலாரங் மாசூக்"னு சொல்லும். :)

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/06/221.html

தருமி சார்....நான் நெனைக்கிறத நீங்க எப்படி திருடலாம். ஒங்க மேல திருட்டு வழக்கு பதியப் போறேன். என்ன திருட்டுன்னு கேக்குறீங்களா? எண்ணத் திருட்டுதான். நல்லவேளை எல்லா எண்ணத்தையும் திருடலை. இல்லைன்னா...நான் பதிவு போடாம சும்மா உக்காந்திருக்க வேண்டியிருக்கும் :)

G.Ragavan said...

http://baavaa.blogspot.com/2007/06/blog-post_04.html

இந்த வெவரம் நடக்குறதுக்கு முன்னாடி தெரியாது. பேப்பர்ல டச்சுலதான வருது. வந்தப்புறம் பாத்தா பேப்பர்ல படம் போடுறாங்க. அட..ஒரு இங்கிலீசு பேப்பர் மொதல்லயே கெடைச்சிருக்கப் படாது. ம்ம்ம்..

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/06/48.html

// வல்லிசிம்ஹன் said...
அதிர்வு இல்லாமல் காலைப்பொழுதில் முருகனை நினைக்க வைத்ததற்கு நன்றி ராகவன்.

இளையராஜா வர்களின் குரல் மென்மையும் இசையும் அமைதியாக ஆனந்தமாக இருந்தது. //

ஆமாங்க...அடுத்து பாருங்க..ஆர்ப்பாட்டமா ஒரு கண்ணன் பாட்டு வரப்போகுது :)

// இணையத்தில் அவ்வளவாகத் தேடும் பயிற்சி இல்லை. கிடைத்தால் உங்களுக்கும் மயிலுகிறேன். //

கண்டிப்பாங்க. நானும் தேடிப் பாக்குறேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/06/48.html

// கானா பிரபா said...
ராகவன்,

அருமை
இதே போல ராஜாவின் கீதாஞ்சலி பாமலைத் தொகுப்பில் "மறந்தேன் மறந்தேன் " என்று ஒரு அருமையான முருகன் பாட்டு உண்டு கேட்டீர்களா? //

கேட்டேன் பிரபா. அந்தப் பாட்டும் எங்கிட்ட இருக்குது. ஆனா இந்தப் பாட்டு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதான் போட்டாச்!!!!

// நீங்கள் கேட்ட கவரிமான் பாடல் தவிந்த அப்படத்தின் மற்றைய பாடல்கள் என்னிடம் இலகுவாக எடுக்கமுடியும், நீங்கள் கேட்ட பாடலைக் கட்டாயம் என் கையிருப்பில் தேடித்தருகின்றேன். //

தேடிப்பாருங்கள் பிரபா. அந்தப் பாடல் ஒரு அபூர்வப் பாடல். கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/06/48.html

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கண்டேன்.. கண்டேன்.. என் முருகனைக் கண்டேன்.. ஜி.ரா. ஸார்.. இப்போதெல்லாம் தினமும் காலையில் என் முருகனை காண்கிறேன் பல்வேறு வடிவங்களில்.. இன்று உங்களது பாடலின் மூலமாக.. முருகா.. //

வாங்க உண்மைத்தமிழன். நோக்குமிடமெங்கும் நீக்கமற நின்ற நித்யானந்தனை எங்கும் எதிலும் எப்பொழுதும் காண்பதில் என்ன குறை இருக்க முடியும். முருகனருள் முன்னிற்கும்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/06/54.html

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
மிக இனிய பாடல், பெண்களில் கம்பீரமும் கலந்த குரலின் சொந்தக்காரி எங்கள் கே.பி.எஸ் அம்மா! ஆம் அவர் நல்லதை மட்டும்
பாடியவர்.
நன்றி //

உண்மைதான் ஐயா. லட்ச ரூவாய் சம்பளம் வாங்கி நாட்டு விடுதலைப் போராட்டத்துக் கொடுத்தாராம். ம்ம்ம்..இன்றைக்குக் கோடிக் கோடியா சம்பளம் வாங்கி...ஏரியா உரிமைய வாங்கிக் கொள்ளையடிக்கிறவந்தான் உண்டு. கே.பி.எஸ் உண்மையிலேயே பெருமைக்குரியவர்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/06/54.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா

கண்ணன் பாட்டில் உங்கள் வரவு நல்வரவு ஆகுக! //

நன்றி ரவி.

// சுந்தரமான சுந்தராம்பாளின் சுறுசுறு பாட்டுடன், சுவையாகத் துவங்கி உள்ளீர்கள்! //

அவர் பாடிய பாடல்கள் எக்கச்சக்கம். அத்தனையும் முருகனுக்கு இச்ச கச்சம். இருந்தாலும் இரு எச்ச கச்சம் வேங்கடன் மேலும். அதை எடுத்துச் சொல்லத்தான் இந்தப் பதிவு.

// அதுவும் பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், தன் ஒப்பார் இல் அப்பன்...
என்னப்பன், திருவேங்கடமுடையான் பாடல்!

கண்ணக்கு இனியானைக் காதுக்கும் இனியதாகக் கேட்கும் போது...
இனியது கேட்கின் அல்லவா?
இனிஎது கேட்கின் மன்னவா!
மலர்மகள் மாதவா! நீ ஏழு மலை இருக்க..ஏது மனக்கவலை! //

ம்ம்ம்...சொற்கோர்வை... :)

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/06/28.html

படம் பாத்தாச்சா...நான் இன்னும் பாக்கலை. பாக்கனும்னும் தோணலை. அது ஏன்னும் தெரியலை.

G.Ragavan said...

http://papaasangam.blogspot.com/2007/06/1.html

அடேங்கப்பா! என்ன கூத்து! என்ன கூத்து! கலக்கல்தான் போங்க!

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/06/54.html

// வல்லிசிம்ஹன் said...
இந்தக் குரலுக்குச் சொந்தக்காரரை
அவ்வையார் என்றே சின்ன வயதில் நினத்ததுண்டு.
அப்படி ஒரு உருக்கமும் பக்தியும்.

மயிலேறும் வடிவேலனே பாடல் இல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியும் தொடங்காது அப்போதெல்லாம்.

கேபிஎஸ் அம்மா கம்பீரமும்,மணிக்குரலும் அதற்குப்பின் யாருக்கும் கிடைக்கவில்லை.
ஜி.ரா,நீங்கள் சொன்னது போல நல்லதையே பாடினதால் தான் இருக்கும்.
மிக மிக நன்றி.
ரவி,ஜி.ரா //

உண்மைதான் வல்லியம்மா. கே.பி.எஸ் அவர்களின் குரலும் பாடும் திறமும்...அவர்களுக்கு மட்டுந்தான். அவருக்குப் பின் யாருக்கும் இல்லை. முன்னும் அப்படித்தான்.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2005/01/blog-post_26.html

எல்லாரும் அனுபவிச்சதுதான்...எல்லாருஞ் செஞ்சதுதான்...எல்லாரும் தொலைச்சதுதான்...ஆனா நீங்க மட்டும் பதிவு போட்டுட்டீங்க :)

எனக்கு நினைவிருக்குற ரொம்பச் சின்ன வயசு நினைவு ஒன்னு உண்டு. அது இன்னமும் மறக்கலை. என்னையக் கையில தூக்கி வெச்சிக்கிட்டு எங்கத்த...எங்கம்மாவக் காட்டி...அது யாரு சொல்லு...யாரு சொல்லுன்னு கேட்டது. அவங்க காட்டுன எடத்துல எங்கம்மா...இதுதான் எனக்கு நினைவிருக்கும் என் வாழ்க்கையின் முதற்றுளி. அப்ப வெளாத்திகொளத்துல இருந்தாங்களாம். நான் கைக்குழந்தை.

நீங்க ஞாயித்துக்கெழமை அப்பம் வாங்கப் போய் தெரிஞ்சிக்கிட்டீங்க. ஆனா எனக்கு வேற மாதிரி. தூத்துடி சேவியர்ஸ் ஸ்கூல்ல கிருஸ்துவப் பசங்கள ஒவ்வொரு நாளு மதியம் மூனாவது பீரியட் முடிஞ்சதுமே சர்ச்சுல எதுக்கோ கூப்புடுவாங்க. அன்னைக்கும் அப்பிடிக் கூப்டுவிட்டாங்க. இந்தப் பயகளப் பூசைக்குப் போங்கன்னு வாத்தியார் சொல்லீட்டாரு. எனக்கோ ஆர்வம் தாங்கலை. நானும் கெளம்பீட்டேன். வாத்தியார் பாக்கலை. ஆனா ஒரு பய பாத்துட்டான். வாத்தியார் கிட்ட போயி..ஒரு இந்துப் பையனும் போறான்னு சொல்லப் போக...பிரம்பாம்பழம் கைல பழுத்ததும்...அடுத்த வகுப்பு முழுக்க முட்டி போட்டதுந்தான் நடந்தது.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/current-results.html

இங்க பாருங்கய்யா...சொன்னா கோவிச்சப்படாது. empty vessel makes more noise. தமிழ்ல சொன்னா...நெறகுடம் தழும்பாது. ;)

(ம்ம்ம்...நம்மள இன்னைக்கு யாரெல்லாம் வந்து கும்மப் போறாங்களோ!) :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/06/66.html

ஒங்கூரு அம்மாவும் நல்லா செவசெவன்னு ஜம்முன்னுதான் இருக்காங்க. ஆனா என்ன..நல்லா சிரிச்சாப்புல இருக்காங்க. ஒங்கூர் ஐயா படமெங்க? யாராவது ஜினிமாக்காரங்க அரசியல்ல இருக்காங்களா? இல்லைன்னா பாட்டுப்பாடுறவங்க....ஆடுறவங்க..அந்த மாதிரி?

இங்க நெதர்லாந்துலயும் குடும்ப மருத்துவர் கட்டாயம். வந்ததும்...அதச் செய்யச் சொன்னாங்க. அதுவுமில்லாம...எல்லாரும் புதுசா வர்ரவங்கள ஏத்துக்க மாட்டாங்க. ஆபீஸ்ல ஒருத்தங்க ஒரு நம்பரு குடுத்தாங்க. டாக்டர். கோஃபர்தோன். அவருதான் நம்ம குடும்ப மருத்துவரு. ரொம்ப நல்ல மனுசரு. ஒரு வாட்டி பாக்க 25யூரோதான் வாங்குவாரு. நல்லவேளைக்கு காப்பீடு இருக்கு.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/06/3.html

சிற்பி மொதல்ல அறிமுகம் ஆனபடம்.....பேரு மறந்து போச்சு..பொன்வண்ணன் இயக்கிய படம். படமும் ஒரு மாதிரி நல்லாயிருக்குன்னு வெச்சுக்கயேன். ஆனா ஸ்டார் வேல்யூ இல்லாம படம் ஓடலை. அதுல உண்மையிலேயே நல்ல பாட்டுக குடுத்திருந்தாரு. யாரும் கண்டுக்கலை. செதுக்கீட்டாரு இந்தப் படத்துல.

ஏன்....வித்யாசாகர் கூட மொதல்ல நல்ல பாட்டு போட்டாரு. கண்டுக்கலை....அர்ஜுன் படத்துல காப்பியடிச்சாரு..பெரியாளாயிட்டாரு. இப்ப திரும்ப நல்ல பாட்டு குடுக்குறாரு.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/06/blog-post.html

தலைவாரிப் பூச்சூடி உன்னைப்
பாடசாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை
தலைவாரிப் பூச்சூடி உன்னை
சிலை போல ஏனங்கு நின்றாய்
நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலை போட்டு வாங்கவா முடிவும்
கல்வி தெளிவாகப் படித்தாலே புரியும்

இந்தப் பாட்டுதான் எனக்கு ஒடனே நெனைவுக்கு வந்தது.

குழந்தைக்கு எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://santhoshpakkangal.blogspot.com/2007/06/191-infosys.html

// ILA(a)இளா said...
இந்தப் முடிவு அனைத்து கம்பெனிகளும் ஒன்று கூடி எடுத்தது. என்ன இன்ஃபி முதலில் அமல்படுத்துகிறது அவ்வளவே. இது நாஸ்காமின் ஏற்பாடு. எல்லாம் கால் செண்டர் பசங்க பண்ணின வேலை //

என்னது..இது கூடி அடிச்ச கும்மியா....

ஆனா ஒன்னு...இதுல சில விஷயங்கள்ள இன்னும் கருத்து வேறுபாடுகள் இருக்கு.

not just competetors...itz the same client in competetors company..for eg....guy working in microsoft project in infosys cant join accenture microsoft project...he can join accenture...but differnt project..for eg..cisco..

i dont know whether my understanding is right or not...

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/current-results.html

// ஜோ / Joe said...
ஆனால் கமல் படத்துக்கு பெரும்பாலும் குடும்ப தலைவர் மட்டும் போயிட்டு வந்துடுவாரு .சில விஷயங்கள கிரகிச்சுகிறதுக்கு அதற்கான அறிவும் முதிர்ச்சியும் வேணுமில்ல. //

அப்படிச் சொல்லுங்க. :) நம்ம எப்பவும் ஒரே கச்சிதானே :)

// ஜோ / Joe said...
ராகவன்,
இப்ப தான் பார்த்தேன் .விஜயகாந்த் கட்சி கரை போட்ட துண்டு போட்டிருக்க மாதிரி இருக்கு ..சொல்லவேயில்ல! //

யெய்யா இதெல்லாம் ஞாயமில்லை. சொல்லீட்டேன். அது துண்டில்லை. ஜாக்கெட்டு. விஜயகாந்து புகழ் ஆம்ஸ்டர்டாம் வரைக்கும் இருக்குன்னா சொல்றீங்க! ஆனா திமுக அதிமுகவும் அந்த அளவுக்கு விஜயகாந்தைக் கொண்டு வந்தாலும் வந்துரும். நம்ப முடியாது.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/06/blog-post.html

நன்றி சிவியார். கள்ளியிலும் பால் கதையை தொடர்ந்து எடுத்துச் சென்றமைக்கு நன்றி.

கதையின் முடிவை நான் சூசகமாகச் சொல்லியிருந்தேன். நீ அதை விளக்கமாகச் சொன்னால்தான் மகிழ்ச்சியளிக்கிறது என்று சொல்லியிருக்கிறாய். நல்லது. நன்றாக எழுதியிருக்கிறாய்.

சரி..நான் பாகம்-2க்கு ஒரு கதை சொன்னேனே...அதை எழுதலாமே?

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/06/1.html

அடேங்கப்பா! அட்டகாசம்ப்பா! அட்டகாசம். மதுரைக்குப் போயும் கோனாரு கறித்தோசை சாப்பிடாம வந்திருக்கான் ராமு. அவனச் சும்மா விடாத. :-)))))))))))))))))

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/06/blog-post_07.html

ஹா ஹா ஹா....முதலிரவு பிரமாதங்க. :-))) வாழ்க்கைல மறக்கவே முடியாதுன்னு சொல்லுங்க.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/06/blog-post_07.html

ஆகா! சினிமா எடுக்குறது சம்பாதிக்கத்தான். அதே நேரத்துல கொஞ்சம் கலையார்வத்தோடயும் எடுக்கலாம். இல்லைன்னா பேசாம நீலப்படம் எடுத்துப் பொழைக்கலாம்.

அதுல நீங்க சொல்ற மாதிரி அல்டாப்பு கேசுங்க வேற...என்ன நடந்ததோ..அடுத்த பதிவுல படிச்சிக்கிறேன்.

G.Ragavan said...

http://vettippechu.blogspot.com/2007/06/g.html

// தமிழ்மணத்தில் ஆன்மீக மணத்துடன் அவ்வப்போது எழுதும் ஒரு மூத்த வலைப்பதிவருக்கு 251 வயது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த தள்ளாத வயதிலும் கொடநாட்டு மகாராணி & தங்கத்தாரகையைப் பற்றி ஆதங்கத்துடன் எழுதியுள்ளார் இந்த முன்னாள் தமிழ்மணம் தாரகை!

வாழ்த்துக்கள் 251 வயது முதியவரே!//

ஹா ஹா ஹா இதுவரைக்கும் நான் வயச நெனச்சுப் பாத்த்தில்லை...ஆனா இப்பிடி எல்லார் முன்னாடியும் போட்டுடைப்பீங்கன்னு எதிர்பார்க்கலை. இப்படித்தான் சமீபத்துல ராபர்ட் கிளைவ் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில கொடியேத்தும் போது என்னோட டீ குடிச்சாரு.

அட அத விடுங்க...இந்தப் பூலித்தேவன், மருதுபாண்டியர், கட்டபொம்மன் இவங்கள்ளாம் என்னோட பேச்சைக் கேட்டிருந்தா இந்த நெலமையே வந்திருக்காது. ம்ம்ம்....என்ன பண்றது.

G.Ragavan said...

http://vettippechu.blogspot.com/2007/06/g.html

// ஆவி அம்மணி said...
ஜீ.ராகவன் அவர்களை எனக்கு 60 வருடங்களாகத்(தான்) தெரியும்.

அப்பொழுதே 20 வருடங்களாக வலைப்பதிவில் எழுதிவருவதாகத் தெரிவித்தார்.

தமிழ்மணத்தில் எப்போது தமது வலைப்பூவை இணைத்தார் என்று எனக்குத் தெரியாது! //

அம்மணி...நீங்க ஆவியானப்புறந்தான் நமக்குப் பழக்கும். நீங்க பொறக்குறதுக்கெல்லாம் முன்னாடியே வலைப்பூ வெச்சிருந்தேன். ஆனா அப்பத் தமிழ்மணம் இல்லை. அதுனான பொறுமையா இருந்தேன்.

அப்ப என்னோட வலைப்பூவைப் பாத்துக் காப்பியடிச்சுத்தான் பாரதியார், பாரதிதாசன்னு ரெண்டு பேரு புகழ் பெற்றுட்டாங்க. சரி. இருக்கட்டும். இந்த வாரியார்....அவரும் என்னோட பதிவுகளைப் படிச்சு...சரி..விடுங்க....நீராறும் கடலுடுத்த பாட்டை நான் எழுதுனேன்னு சொன்னா நம்பவா போறாங்க. ஒலகம் அப்பயிருந்தே இப்படித்தாங்க இருக்கு.

G.Ragavan said...

http://vettippechu.blogspot.com/2007/06/g.html

// ஆவி அம்மணி said...
//சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைப் பற்றியும் உப்பு சத்தியாக்கிரகத்தை ஆதரித்தும் எழுதிய வலைப்பூக்களை பிரிட்டிஷ் அரசு தடை செய்ததை அறிவீங்களா ஆவி.அம்மணி?
//

ஏன் அறியாமல்? என் வலைப்பூ கூட தடை செய்யப் பட்டது! //

ஆமாம்..நெனைவிருக்கு. ஆனா நான் பிகேபிளாக்ஸ் வழியா என்னோட வலைப்பூவை இந்திய மக்கள் கிட்ட எடுத்துச் சென்றேன். வந்தேமாத்துறம்..வந்து ஏமாத்துறோம்..வந்தே மாத்துறம்னு மக்கள் உணர்ச்சிவசப்பட்டாங்களே.

G.Ragavan said...

http://sivapuraanam.blogspot.com/2005/11/blog-post_04.html

சிவாஜி ரிலீசு சிவாஜி ரிலீசுன்னு எல்லாரும் சொன்னாங்க...பாத்தா உண்மையிலேயே சிவா'ஜி' ரிலீசு. ஒங்கள மரியாத இல்லாம கூப்புடுவோமா? :)

வாங்க வாங்க. உங்க வரவு நல்வரவாகட்டும்.

G.Ragavan said...

http://kalaignarkarunanidhi.blogspot.com/2007/06/blog-post_07.html

அடடே! லக்கி கைதெல்லாம் வேண்டாம். சிபிஐ விசாரணை வெச்சிரலாம். சட்டம் தன் கடமையைச் செய்யும். நாமளும் நிம்மதியா இருக்கலாம். அப்புறம் இந்த வாந்தி பேதியெல்லாம் தேவையிருக்காதுல்ல. அழகிரி செஞ்சாலும் தப்புதான். ஜெயலலிதா செஞ்சாலும் தப்புதான். கருணாநிதி, வைகோ,ராமதாஸ், நானு நீங்க..யார் செஞ்சாலும் தப்பு தப்புதான்.

G.Ragavan said...

http://vettippechu.blogspot.com/2007/06/g.html

// அதிரைக்காரன் said...
ஜீரா சார்,

உங்கள் சமீபத்திய பதிவப் படிச்சுட்டு ஆட்டோ கீட்டோ வந்துச்சா? எதுக்கும் ஜன்னல் பக்கம் அடிக்கடி எட்டிப் பார்த்துக்குங்க! :-)))) //

என்ன அதிரை இது! இந்தியாவுல இருந்தா இப்பிடிப் பதிவெல்லாம் போடுவோமா? அதான் ஊரு விட்டு ஊரு வந்து போடுறோம். :-)

G.Ragavan said...

http://vettippechu.blogspot.com/2007/06/g.html

// சிம்பு said...
அந்தக் காலத்துல ஸுதேஸமித்திரன்ல வந்த தியாகி கோ.ரா கட்டுரையப் படிச்ச பின்னாடிதான் நானே சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கிட்டேன்.

வீரமங்கை நயன்தாராவுடன் ஆங்கிலேயரை எதிர்த்து நாங்க போடாத குத்தாட்டமா? //

ஆமாமா..அது மறக்குமா சிம்பு? அப்பயே வெள்ளக்காரன் ஊர விட்டுப் போனதுக்குக் காரணமே நீதானே(நாந்தான் மூத்தவனாச்சே..அதுனால கூப்பிடலாம்) காரணம். அந்தப் பெருமையை ரோஜாவின் மாமா (செல்வமணி இல்லங்க) தட்டிக்கிட்டு போய்ட்டாரு. இதச் சொன்னா யாரு நம்புறா?

// "வற்றாயிருப்பு" சுந்தர் said...
எல்லாத்துக்கும் யாகவா முனிவரோட அருள் யாகத்துக்கும்.. சே.. ஏகத்துக்கும் இருக்கு போலருக்கே.

நடக்கட்டும் நடக்கட்டும்! //

வத்திராயிருப்பு, வள்ளுவரு சொல்லொரு சொல் படிச்சதெல்லாம் இங்கதான். யாகவாராயினும் அவர் எழுதுனது எத வெச்சு? இத வெச்சுத்தான். :)

// அப்புறம் ஜி.ரா. உங்க என்னடா மஞ்சள் துண்டுக்குப் போட்டியா கெளம்பிட்டாரு போலருக்கேன்னு - அப்றம்தான் தெரிஞ்சது அது ஸ்வெட்டர்/ஜாக்கெட்னு. :-) //

போட்டிக்கு நம்மள்ளாம் வர முடியுமாங்க? நமக்குக் கெடச்சது இதோ இந்த சொட்டரும் சாக்கெட்டுந்தான். இது கூட அந்நியத்துணி பகிஷ்கரிப்புப் போராட்டத்துல தப்பிச்சதுதான். :)

G.Ragavan said...

http://vettippechu.blogspot.com/2007/06/g.html

// துளசி கோபால் said...
ஆன்மீகத்துக்கு வயதில்லைன்னு இப்பத் தெரியுதுங்களா?:-)))

ஆனாலும் கோ.ரா. வை 'மூத்தவர்'
என்ற வகையில் வாழ்த்துகின்றேன். //

வாழ்த்துங்க..வாழ்த்துங்க...நீங்க சொன்னது வாழ்த்துங்க! :)

// நாமக்கல் சிபி said...
பொன்மனச் செம்மல் கோ.ரா வாழ்க!
தானைத் தலைவன் கோ.ரா வாழ்க!
காந்தீய ஆட்சிதரக் காத்திருக்கும் எங்கள் அண்ணன் கோ.ரா வாழ்க!

எதுக்கும் இப்பவே ஒரு கோஷம் போட்டு வெப்போம். பின்னாடி யூஸ் ஆனாலும் ஆகும்.

ஹிஹி. பொருளாளர் பதவிதான் எனக்கு வேணும். //

ஒரு முடிவோடதான் இருக்கீங்க எல்லாரும். பொருளாளர் பதவி ஒங்களுக்கு எதுக்கு. கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியே குடுத்துர்ரேன். :)

// செந்தழல் ரவி said...
நாட்ல உழவன், கிழவன் ரெண்டு பேரும் தான் இன்னும் 300 வருஷத்துக்கப்புறம் உயிரோட இருக்கப்போறாங்கன்னு அருள்வாக்கு சொல்லிடப்போறாரு ஜி.ரா.. //

ரவி..இத நான் ஏற்கனவே சொல்லியாச்சு. ராமநாதனோட பதிவுல. நூறு வருசத்துக்கு அப்புறம் எப்படியிருப்போங்குற பதிவுல சொல்லியாச்சு. :)

// வாசகன் said...
யார் இந்த ஜீ.ரா

தமிழில் கோ.ரா
"வயது" காரணமாக 'மதிப்பிற்குரிய கோ.ரா'
அதாவது ம.கோ.ரா
இங்கிலிபீஸ்ல M G R னு சொல்வாய்ங்க...
இப்பபுரிஞ்சிடுச்சா, சிம்புங்கல்லாம் ஏன் சிரத்தையா வந்து கமெண்ட்டுறாங்கன்னு! //

அடேங்கப்போய்! விட மாட்டீங்க போல! லதா, மஞ்சுளா, பத்மப்பிரியா எல்லாரும் ஓடியாங்க. :-)))

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/06/220-2.html

கண்டிப்பாக இப்படி அவர்கள் செய்தது தவறுதான். மக்களுக்கு இடைஞ்சலாக ஒரு கோயிலைக் கட்ட வேண்டிய தேவையில்லை.

எனக்கென்ன தோன்றுகிறதென்றால்..இந்த இடத்தை ஏதாவது பெரிய மனிதன் ஆக்கிரமித்துக் கொண்டு..எதுவும் கேட்டால் மிரட்டுவதற்குக் கோயிலை வைத்திருக்கிறானோ என்று தோன்றுகிறது. எப்படியிருப்பினும் அப்படிக் கோயிலைக் கட்டியது தவறே. தவறே.

அரசாங்கம் ஒன்றும் செய்யாது தருமி சார். பதவீன்னு ஒன்னு இருக்குல்ல. அது ரொம்பத் தேவை. என்னைக் கேட்டால் இந்துக்களே ஒன்னு சேந்து போய் அந்தக் கோயிலின் ஆக்கிரமிப்பை இடிக்கலாம்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/blog-post_1101.html

இளா, நீங்க நடுநிலைவாதியே இல்லை. நீங்க அதிமுக அடிவருடின்னு தெரிஞ்சு போச்சு. போச்சு. போச்சு. :))))))))))

பெண் ஆணை அடிப்பதும் ஆண் பெண்ணை அடிப்பதுமல்ல இந்தப் படத்தின் பிரச்சனை. அப்படிப் பார்ப்பதும் பேசுவதும் தவறு.

காவல்துறை என்பது பெரும்பாலும் ஆளுங்கட்சி அடிவருடியாகத்தானே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்க மட்டும் என்னவாம். இவன் அவனத் திட்டுறதும்...அவன் இவனத் திட்டுறதும்...கொடுமைடா சாமி. நல்லவேளை நாம எந்த அரசியல்கட்சியிலயும் இல்லை. இல்லைனா கட்சித்தலைவர்கல் செய்ற ஒவ்வொரு தப்புக்கும் நல்ல வியாக்கியானம் சொல்ல வேண்டியிருந்திருக்கும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/06/blog-post_07.html

முருகா! அந்த நிஷாவா இந்த நிஷா! என்ன கொடுமை இது.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/06/blog-post_08.html

வரவர சங்கரோட அழிச்சாட்டியம் தாங்க முடியலை சார். இத்தனைக்கும் அவரோட ஆரம்பகாலப் படங்களை அவ்வளவு ரசிச்சுப் பார்த்தவன். ஆனா இப்பல்லாம் உண்மையிலேயே எரிச்சல் வருது. வெறும் பிரம்மாண்டத்துக்காக படம் பாக்க முடியாது. ஒரு படம் ரெண்டு படம் சரி. அதுக்கு மேலன்னா டூ மச்சு. கேட்டா கதைக்கேத்த பிரம்மாண்டம்னு வெட்டிக்கதை வேற.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/06/55.html

தமிழால் பிழைக்க வந்தவர்கள் பலரிருக்க பாரதியும் கண்ணதாசனும் தமிழ் பிழைக்க வந்தவர்கள்.

இந்தப் பாடலை இயற்றும் பொழுதே பாரதியின் அந்தப் பாடலை வைத்துத்தான் இயற்றியிருக்கிறார்கள். அது அப்பொழுதே முடிவு செய்தது.

இன்னொன்று...பாரதியின் பாடலை அப்படியே சினிமாவில் போட்டால் மினிமா ஆகாதுங்க. நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி, சிந்துநதியின் மிசை நிலவினிலே, நிற்பதுவே நடப்பதுவே, வெற்றி எட்டுத் திக்கும் எட்ட, சொல்ல வல்லாயோ கிளியோ, சின்னஞ்சிறு கிளியே, வெள்ளைக் கமலத்திலே...இப்படி எக்கச்சக்கமாக இருக்கிறது. அது இசையமைப்பாளரின் திறமை.

நல்லதொரு பாடலை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://yazhsuthahar.blogspot.com/2007/06/3_08.html

அருமையான பாடல்கள் யாழ் சுதாகர். தொடர்பாடல்களைக் கேட்டு ரசித்தேன். பூமழை தூவி வரவேற்கத்தான் வேண்டும்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/06/228.html

நல்லதொரு முடிவய்யா..நீங்க நல்லாயிருக்கனும். புகைப்பிடிப்பது இனிமே உங்களுக்கு வரவே கூடாது. வந்தா மயிலார விட்டுக் கொத்தச் சொல்ல வேண்டியதுதான்.

G.Ragavan said...

http://thamilar.blogspot.com/2007/06/blog-post_3780.html

தன் வாலைத் தானே தின்னும் பாம்பின் நிலை போல இருக்கிறது மகிந்தாவின் முடிவு. ஆனால் ஒன்று...இதனால் முதலில் துன்பமும் பிறகு நலனும் பெறப் போவது தமிழர்களே. ஈழத்திற்கான கதவை மகிந்தாவின் திறவுகோல் திறக்கிறது.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2007/06/297-296-296.html

சாதி வேறுபாடு போக வேண்டும். போக விடாமப் பிடிச்சிக்கிட்டேயிருந்தா அடிச்சுத்தான் பிடுங்கனும். வேறென்ன பண்றது. அடி வாங்கீட்டே எவ்வளவு நாள்தான் ஒருத்தன் இருப்பான். திருப்பி அடிச்சா கன்னம் பேந்துருமே! இது சாதிக்கு மட்டுமில்லை...எந்த ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பொருந்துமே. என்ன பெரியார் சொன்ன இடியையும் அடியையும் பார்ப்பனர்களை மட்டுமில்லாம மத்த பெரிய சாதிகளுக்கும் கொண்டு போக வேண்டியிருக்கு.

G.Ragavan said...

http://truetamilans.blogspot.com/2007/06/100.html

இறைவன் எங்கே இருக்கிறான்? எங்கும் இருப்பவனை எங்கேயென்று தேடுவது? நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்தவனை நோக்கல் நன்றே.

G.Ragavan said...

http://varappu.blogspot.com/2007/06/blog-post.html

வாழ்த்துகள். மிக அருமையாக வந்திருக்கிறது. ஊக்கப்பரிசு பொருத்தந்தான்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/06/67.html

அடடடடே! கமலஹாசன் மட்டுந்தான் ஒங்களப் பாத்து மரியாதை செஞ்சுட்டுப் போனாருன்னு நெனச்சேன். பாத்தா...ஆந்திர சிரஞ்சீவி, வெங்கடேஷ்...கன்னட சௌந்தர்யா....நம்மூரு விஜயகாந்த்து....எல்லாரும் மரியாதை செஞ்சிட்டுப் போயிருக்காங்க. பிரமாதங்க.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/05/blog-post_16.html

முதல் கவிதை நல்லாயிருக்கு. அடுத்த வாட்டி மறக்காம அனுப்பனும். சரியா?

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/06/100.html

பழைய படங்கள். எல்லாம் வடக்கே எடுத்தவை. ஒன்று புரிகிறது. நிறைய இயற்கை வளங்களை இந்த நூறாண்டுகளில் இழந்திருக்கிறோம். படங்கள் அருமையாக இருக்கின்றன.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/06/8_08.html

எல்லா பாடல்களுமே நல்ல பாடல்கள். செம்மீனே பாடலும் மிக அருமை.

சரி. imeem...esnipes ரெண்டுமே பயன்படுத்தியிருக்கீங்களே. ஏன்?

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/06/223-3.html

தருமி சார், யோசித்துத்தான் பதிவு போட்டிருக்கின்றீர்கள். அது படிக்கும் பொழுதே தெரிகிறது. silent majorityன்னு சொன்னீங்களே....உங்களோட நானும் வர்ரேன். :)

G.Ragavan said...

http://mayuonline.com/blog/?p=123

வாப்பா வா..மயூரேசா. இந்த வார நட்சத்திரமே! ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமைய எனது வாழ்த்துகள். அடுத்தடுத்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம். கொடுத்து அசத்து.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/06/blog-post.html

ரொம்ப மகிழ்ச்சிங்க. எனக்கும் இந்தக் கனவு இருக்கு. நிறைவேறும்னு நம்புறேன். :) நியூசிலாந்துக்கு வந்தா நீங்க கூட்டீட்டுப் போக மாட்டீங்களா? :)

அந்தப் படங்கள் மிக அருமை. இதே மாதிரி பலூன்ல ஏத்திச் சென்னை, பெங்களூர் எல்லாம் பாக்கனும்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/06/preview.html

// ILA(a)இளா said...
அதாவது உலகத்துல கருத்தை காப்பி அடிச்சு பார்த்து இருக்கேன், பதிவை காப்பி அடிச்சு இப்பதான்யா பார்த்து இருக்கேன். Original is Here //

இளாஜீ, காப்பியைக் காப்பியாகக் காண்பர் காப்பியைக் காப்பியாக ஆத்தா தவர்-னு தெருவள்ளுவர் சொல்லீருக்காருப்பு! அது தெரியாதா? NDMKல இருந்துக்கிட்டு இப்பிடிப் பேசலாமா?...பேசலாம். :)

G.Ragavan said...

http://maayanpaarvai.blogspot.com/2007/06/blog-post_7043.html

is it not supercalifragilisticespialidotious? i think this is the longest english word. there is a song in Mary Poppins with this word...rather starting with this word.

G.Ragavan said...

http://athusari.blogspot.com/2007/06/nri.html

nalladiyar sir, in office comp, i dont hv unicode enabled. still i cud read ur blog. and some other blogs too. but not many. Can u pls tell me whatz the change needed for that?

now coming to the post. there is a reason behind this tarrif.

when a telecom company wants connections with other country...or telecom company with other country, the tarrif is fixed with them. if bsnl wants to connect to saudi telcom, saudi charges bsnl with a tarrif. based on this tarrif, bsnl decides the charges to customers. if the foreign company charges more, bsnl or any other telecom company will also charge more. by considering the amount of traffic, america, UK, singapore, malaysia kind of countries reduced the tarrif to india. but thatz not the case with gulf country telecom companies, I heard. Not only this...calling India from Saudi is cheaper than calling Nepal.

some private companies in india use illegal ways for connectivity and charges less....some years back reliance was fine heavily for that. this illegal connection happens from other countries also.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/blog-post_11.html

ஹி ஹி ஹி...இது புடிச்சவங்க புடிக்காதவங்க..படிச்சவங்க..படிக்காதவங்க..எல்லாருக்குந்தான்.

அது சரி...அந்தப் பின்னூட்டங்களையெல்லாம் எனக்கு மயில்ல அனுப்பி வைங்க. :)

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/06/blog-post_4855.html

விளம்பரங்கள் எல்லாமே அருமையா இருக்கு. முந்தியே பாத்ததுதான். ஆனாலும் திரும்பவும் பாக்க நல்லாத்தான் இருக்கு.

நீங்க ஒரு விளம்பரப்பிரியர்னு இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே! என்ன செய்யப் போறீங்க?

G.Ragavan said...

http://vivaatham.thamizmanam.com/archives/44

ஜீவாவின் கருத்துகளோடு நான் முழுவதும் ஒத்துப் போகிறேன். அந்தப் பதில்களையே என்னுடைய பதில்களாகவும் எடுத்துக் கொள்ளவும்.

மதம் மனிதனால் உருவாக்கப்படுவது. இறை அதற்கும் அப்பாற்பட்டது. மனிதன் உருவாக்குவதால்..ஒரு மதத்தில் உள்ள தவறை நிரூபித்து மற்ற மதங்கள் தங்களைப் புனிதப்படுத்திக் கொள்கின்றன. இதை எல்லா மதங்களிலும் காணலாம்.

அடுத்து அச்சமூட்டுவது. தேவையேயில்லை. அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே என்கிறார் வள்ளலார். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? இப்பிடிப் பலர் சொல்லியதுதான். இருந்தாலும் மக்களுக்கு மிரட்டலும் அச்சுறுத்தலும் மிகவும் பிடித்திருக்கிறது. என்ன செய்வது!

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/06/blog-post.html

ஒரு கனவு போயின்
மறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு
கலையும் கனவுக்கு
காவு கொடுப்பதா
ஏற்கோம் ஏற்கோம்

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/06/blog-post_12.html

அப்பிடியே நம்மூருக்குப் போய்ட்டாப்ல இருந்துச்சு. பிரமாதம் ஜி. பிரமாதம். பாளையங்கோட்டை சங்சன்னு படிக்கைல...அடடா! அடடடடா!

அது சரி...அப்புறம் ஒரு நாளு தெரியாம அந்தப் பிள்ளளயப் பாத்து...கண்ணடிச்ச கதையச் சொல்லவேயில்லையே!

G.Ragavan said...

http://mayuonline.com/blog/?p=126

ஹாரி பாட்டர் புத்தகம் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ஒரு நண்பன் படிச்சுப்பாருன்னு மொதப் புத்தகம் குடுத்த்தான். பத்துப் பதினைஞ்சு பக்கம் படிச்சிருப்பேன். புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துட்டேன். ஏன்? நானே வாங்கிப் படிக்கத்தான் :)

டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ், டிசப்ஷன் பாயிண்ட்..ரெண்டுமே இன்னும் படிக்கலை. ஏஞ்சல்ஸ் அண்டு டெமன்ஸ் புக்கே கொஞ்சம் டூ மச்.

கல்கியின் பொன்னியின் செல்வன் மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்று. மறுப்பே இல்லை.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/05/blog-post.html

கவிதை அருமை. அதிலும்

// உணர்வுகளை விதையாக்கி
காதலை பயிர் செய்து
அவளுக்குப் படைத்தேன் கவிதையாய்... //

அருமையோ அருமை.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/06/230-ocean-13.html

ஹா ஹா ஹா படம் அங்க வந்துருச்சா? இங்க நெதர்லாந்துல இனிமேதான் வரப் போகுது. எப்படா வரும்னு காத்திருக்கேன். ;)

இந்தப் படத்துல வர்ர 13க்கு என்ன பொருள் தெரியுமா? இதுக்கு முன்னாடி வந்த படம் ocean 12. அதுக்கு முன்னாடி Ocean 11. அதுதான் மொதப்படம். 11 பேரு சேந்து ஏமாத்துறது. அடுத்த படத்துல 12 பேரு. இப்பப் 13 பேரு. :) அனேகமா அடுத்து 14 பேரு வெச்சி வந்தாலும் வரலாம்.

படத்துல எல்லாம் பெரிய ஆளுங்கதான். ஜார்ஜ் குளூனி, பிராட் பிட் உண்டு.

G.Ragavan said...

http://santhoshpakkangal.blogspot.com/2007/06/ocean-13.html

நானும் பாக்கனும். நானும் பாக்கனும். இன்னும் இங்க வரலையே. இப்ப ஷ்ரெக் 3க்குதான் எல்லாரும் காத்திருக்காங்க. வந்ததும் கண்டிப்பா பாக்கனும்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/06/184.html

என்னடா வல்லியம்மா பெரிய பதிவாப் போட்டுட்டாங்களேன்னு படிச்சா முடிவு மகிழ்ச்சியா இருந்தது :) நல்லது. எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

G.Ragavan said...

http://webeelam.blogspot.com/2007/06/blog-post.html

நீங்கள் சொல்லும் பல விஷயங்களை மறுப்பதற்கில்லை என்பதுதான் வேதனையான விஷயம். உங்களது கருத்துகளோடு பெரும்பான்மையாகவே ஒத்துப் போகிறேன்.

வேறெந்தத் தமிழ்த் திரைப்படமும் உடனடியாக கர்நாடகாவை எட்ட முடியாது. ரஜினி படம் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே அந்த படம் திரையிடப்படப் போகிறது.

இங்கு நெதர்லாந்திலும் வருகின்ற ஞாயிறு படம் ஒரு திரையரங்கில் வெளியிடப்படப் போகிறது. இந்தப் படத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் அறிவிற்குக் கொஞ்சமும் இல்லை. ஆனால் சென்றால் தமிழர்கள் பலரைப் பார்க்கக் கிடைக்கும் என்ற ஒரே காரணம் மட்டுமே என்னை படத்திற்குப் போகச் சொல்கிறது. ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை.

என்னைப் பொருத்த வரையில் ரஜினிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் மிகவும் அதிகப்படியானது. இவரோடு ஒப்பிடுகையில் விஜயகாந்த் பலப்பல மடங்கு ஒத்துக்கொள்ளப்படத்தக்கவர் என்பது என்னுடைய கருத்து.

G.Ragavan said...

http://athusari.blogspot.com/2007/06/nri.html

// நல்லடியார் said...
G.ராகவன்,

தொலைபேசித் துறையில் பணியாற்றுகிறீர்கள் என்று நினைக்கிறேன். தகவலுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி. //

நல்லடியார் சார், நான் கணிணித்துறையில் இருக்கிறேன். ஆனால் கணிணியில் முதலில் தொலைத்தொடர்பு தொடர்பான மென்பொருளில் பணியாற்றினேன். ஆனால் அதனால்தான் எனக்கு இது தெரிந்ததா என்று உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.

////nalladiyar sir, in office comp, i dont hv unicode enabled. still i cud read ur blog. and some other blogs too. but not many. Can u pls tell me whatz the change needed for that?//

ஒரு சில பதிவுகளைப் படிக்க முடிகிறது என்று சொல்லியுள்ளீர்கள். ஆரம்பத்தில் எனது பதிவின் வார்ப்புருவில் (Template) இத்தகைய குறைபாடு இருந்தது. என் நண்பனின் மகன் சில மாற்றங்களைச் செய்து தந்து உதவினார். முடிந்தால் அவனிடம் கேட்டுச் சொல்கிறேன். //

கண்டிப்பாக. கேட்டுச் சொல்லுங்கள் சார். காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

G.Ragavan said...

http://selventhiran.blogspot.com/2007/06/blog-post_13.html

:) நல்லதொரு கோணம். க(தை)ட்டுரையின் முத்தாய்ப்பே முடிவுதான். உண்மைதான். இந்தக் கோணமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/06/blog-post_13.html

இந்தா பாருப்பா. ஜாஸ்னு ஒரு படம் வந்தது..அந்தப் படத்து இசையைப் பத்தித்தான் நீ ஏதோ எழுதீருக்கன்னு வந்தா...ஏதோ பெரிய பெரிய தகவலையெல்லாம் சொல்லீருக்க. நல்லாரு.

நீ சொன்ன பாட்டுகள நானும் கேட்டிருக்கேன். தமிழ்த்திரையுலகில் எல்.ஆர்.ஈசுவரி மிகச் சிறந்த பாடகி. ஜாஸ் இசைக்கு மிகவும் பொருந்தும் குரல் அவருடையதுதான். அதில் மறுப்பே இல்லை. ஹல்லோ மிஸ்ட்டர் எதிர்க்கட்சியில் ஹரிணி நன்றாகப் பாடியிருந்தாலும் ஏதோ குறைவது தெரியும். அதே மாதிரிதான் குரங்கு கையில் பூமாலையும். வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே பாட்டில் ஆஷா கொலை செய்திருப்பார். தேடினேன் வந்தது ஜாஸ் இசையோ?

G.Ragavan said...

http://theevu.blogspot.com/2007/06/blog-post_14.html

நெதர்லாந்துலயும் 20 யூரோதானாம். ஆனா எங்க ஊர்ல இல்ல. அவ்வளவு தூரம் பஸ் பிடிச்சிப் போகனும் வேற. நானும் போக மாட்டேன்னுதான் நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2007/06/killing-us-softly-aua.html

என்ன கொடுமை சரவணன் இது! ஓ இராமநாதன் இது!

கடையில நல்ல பொருள் இருந்தா திருடீருவீங்களா? அறிவில்லை? ஓட்டல்ல பலகாரத்தக் கண்ணாடிக்குப் பின்னாடி அடுக்கி வெச்சிருக்கான். அப்ப அத உருட்டி மெரட்டி எடுத்துத் தின்னுருவீங்களா? அப்புறம் இத மட்டும் என்ன? தப்பு பண்றதுக்குக் காரணம் வேனும். அதுல இது ஒன்னு. போங்கய்யா போங்க! திருந்த வழியப் பாருங்க.

டிஸ்கி : நான் ஒங்களச் சொல்லலைங்க :)

G.Ragavan said...

http://yazhsuthahar.blogspot.com/2007/06/4_13.html

பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன். அருமையான பாடல்கள்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/06/blog-post_14.html

அடக்கடவுளே! அந்தக் காரணத்துனால திருமணம் செஞ்சுக்கலையா! ம்ம்ம்... நல்ல கருத்தா தெரியலை. இது என்னுடைய கருத்து.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/blog-post_7272.html

ரஜினியை எனக்குப் பிடிக்காது என்பதற்குச் சாதீயக் குறியீடு ஒரு காரணமே அல்ல. அவருடைய நடிப்பு என்று பார்த்தால் ஆரம்பத்தில் நல்ல படங்களில் நடித்தவர்தான். இப்பத்தான் நடிப்புங்குறதையே மறந்துட்டாரு.

அவருடைய படங்கள் மட்டுமல்ல....ஒவ்வொரு விஷயத்தில் தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பி முடிவெடுக்கும் திறமை. அதே போல கர்நாடகாவில் தமிழ்ப்படங்களுக்கெல்லாம் இடமில்லை என்றதும் சும்மா இருந்தவர்...சிவாஜிக்கு இடமில்லை என்றதும்...அவருடைய சொந்தங்களை வைத்துக் காரியம் சாதித்தமை. இன்னும் நிறைய சொல்லலாம்.

எல்லாரும் நினைப்பது போலல்லாமல் ரஜினி ஒரு பிராமணர். கெய்க்குவார்ட் என்பவர்கள் மராட்டிய பிராமணர்கள்.

இதே போல கமலைப் பிடிப்பதற்கும் அவரது சாதீயக் குறியீடுகள் காரணமல்ல. பெண்கள் விஷயமும் காரணமல்ல. ஆனால் நடிப்பை மட்டும் தெரிந்து கொண்டு..அதையாவது ஒழுங்காகச் செய்து கொண்டு வருவதால் கமலைப் பிடிக்கும்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/06/56.html

இதை ஒத்துக்கொள்ளவே முடியாது. இந்தப் பாடலில் வாணி ஜெயராம், வலம்புரி சோமநாதன் ஆகியோரும் பாடியிருக்கிறார்கள். நீங்கள் முழுப் பெருமையையும் சிவாஜிக்குக் கொடுப்பது சரியாகாது. என்னைக் கேட்டால் ரஜினிக்குப் பதிலாக சிவாஜி (உண்மையான சிவாஜிங்க) ராகவேந்திரராக நடித்திருந்தால் படம் ஓடியிருக்கும்.

மற்றபடி எனக்குப் பாடல் மிகவும் பிடிக்கும். இனிமையான இசை, சந்தம், குரல் ஆகிய காரணங்களுக்காக.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/06/56.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஜிரா...இது என்ன சிவாஜி ரிலிஸ் போது இப்படி எல்லாம் நீங்க எக்ஸ்ட்ராவா ரிலிஸ் பண்ணறீங்க?:-)

வாணி ஜெயராம் - குழந்தை சிவாஜியின் குரல்
வலம்புரி சோமநாதன் - சிவாஜியின் குரவின் குரல்
இப்படி எல்லாமே சிவாஜி மயம் தான் தலீவா! :-) //

இருந்துட்டுப் போகட்டும். ஆனாலும் பாட்டோட தொடர்புள்ளவங்க பேர்கள் எல்லாத்தையும் குடுக்கனும்ல ;) அதுதான் நான் சொல்றது! :)

// ஆம்ஸ்டர்டாம் போயி படம் பாத்தாச்சா? //

ஆம்ஸ்டர்டாம்ல படம் இல்லை. வேற ஏசன், ஆரெம், அல்மீரா, டென்ஹாரென்னு நாலு ஊருல ஓடுது. இங்க இருந்து இன்னைக்குப் பெரிய கூட்டமே பொறப்பட்டுப் போயிருக்கு. நாளைக்கொரு கூட்டம். மிச்சம் மீதி மிஞ்சுனவங்கள்ளாம் ஞாயிறு போறாங்க. அதுல நான் போனாலும் போவேன். I am not so keen on Sivaji. But friends want to watch the movie. Just accompanying them.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/06/7.html

நானா...நானா...நானா...அடுத்து நானா எழுதனும். சரி. எழுதுறேன்.

இதுவரைக்கும் எழுதனதெல்லாம் படிச்சுப் பாத்தேன். எத்தனை பேரு. சிந்தாநதி, வெட்டிப்பயல், சி.வி.ஆர், ஜி, இம்சை அரசி, ராம்...அடுத்து நீங்க..இப்பிடிப் பெரியவங்களா எழுதீருக்கீங்க. இவங்களையெல்லாம் கோர்த்து எப்படி எழுதப் போறேன்னு தெரியலை. குரங்கு கைப் பூமாலையா கரடி கைத் தேனடையான்னு பதிவு போட்டப்புறந்தான் தெரியும்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/06/7.html

// CVR said...
அடுத்தது ஜிராவா???
சூப்பர்!!! :-D //

என்னது இது! No expectations please.

G.Ragavan said...

http://balabharathi.wordpress.com/2007/06/16/shivaji/

இன்னும் படம் பார்க்கவில்லை. நாளை போகலாம் என்று இருக்கிறேன். படம் பார்த்தால் கருத்து சொல்கிறேன். ஆனாலும் கடைசியாகக் குறிப்பிட்ட செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது. மிகமிக. ஷங்கர் மட்டும் தெய்வமா என்ன? எல்லாரும் எவர்சில்வர் தட்டில் சோற்றைப் போட்டால்...இவர் தங்கத் தட்டு..வெள்ளித் தம்ளர், வைர ஸ்பூன்....ஆனா சோறு என்னவோ அதே நஞ்ச சோறுதான்.

G.Ragavan said...

http://annakannan-photos.blogspot.com/2007/06/blog-post.html

புத்தர் ஆலமரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் பொழுது அவரது தவத்தைக் கலைக்க மோகம், மதம், மாச்சர்யம், இப்பிடி எல்லாம் வந்துச்சாம்....தவங்குறது சிந்தனையை ஒடுக்குறது. அந்தத் சிந்தனையைக் கலைக்க இந்தச் சிந்தனைகள் வந்தா...தவம் போயிரும்ல. ஆனா...அத்தனை சிந்தனை வந்தாலும் அவர் தவமிருந்தாராம். அதத்தான் காலப் போக்குல சொல்லும் போது..தவமிருந்தாரு...அப்சரஸ் வந்தா....அங்க தொட்டு இங்க தொட்டுத் தடவுனா...ஆனாலும் புத்தரு தவத்துல இருந்தாருன்னு சொல்லீட்டாங்க. அதைச் சொல்லும் சிற்பந்தான் இது. புத்தருடைய பதும ஆசனம் மாறாம இருக்கு பாருங்க.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/06/blog-post.html

// அருட்பெருங்கோ said...
/ஒரு கனவு போயின்
மறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு
கலையும் கனவுக்கு
காவு கொடுப்பதா
ஏற்கோம் ஏற்கோம் /


ராகவன்,

ஒரு கனவு போயின்
மறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு தான்...

ஆனால் கண்கள்???


கலைகிற கனவின் பின்னே
அலைகிற கண்கள்...

கனவு கலைவதை காண்ச் சகியாமல்
இயக்கம் நிறுத்தும் மூளை...

கனவைப் போலவே
கலைந்து போகிற மனசு...

சவமாகிறது...உடல்! //


எந்தக் கண்களும்
கண்டதில்லை கனவை
கண்டவைகள் கனவல்ல
எந்தக் கண்களும்
கண்டதில்லை மனதை
காணாத கூட்டணிக்குக்
காணும் கண்களையும்
வாழும் வாழ்க்கையையும்
படையல் போட
மடையலாக வேண்டுமோ!
கசப்பென்றாலும்
களிம்பைத் தின்பவன்
நலம் பெறுவான்
நஞ்சென்று புரிந்தும்
கசப்பைத் தின்பவன்?

G.Ragavan said...

http://kathaiezuthukiren.blogspot.com/2007/02/3_13.html

நல்லாயிருக்கு. நல்லாயிருக்கு. ரசித்தேன். ரசித்தேன். மிக அருமை.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/06/blog-post_2401.html

நீங்க படம் பாத்துட்டீங்க...விமர்சனம் எழுதீட்டீங்க. நான் பாக்கலையே கோவி! இங்க வந்திருக்கு. வெளியூர் போய்ப் பாக்கனும். அதான் போலாமா வேண்டாமான்னு யோசனையா இருக்கு.

போய்ப் பாத்தா கண்டிப்பா விமர்சனம் எழுதுறேன். அழைப்பிற்கு மிக்க நன்றி.

G.Ragavan said...

http://princenrsama.blogspot.com/2007/06/blog-post_16.html

இதெல்லாம் ஜகஜமாய்ப் போச்சுங்க இப்ப. என்ன பண்ணலாம். கோயமுத்தூர்க்காரங்கள்ளாம் இப்ப இருக்குற குழுமத்துல இருந்து விலகி புதுக்குழுமத்துல சேரலாம். குறைந்த பட்சம் வலைப்பூக்கள்ள இருக்குற கோவைக்காரர்களாவது செய்யலாம்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/06/blog-post_14.html

ஹா ஹா ஹா...ஜோசப் சார்....திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடுனது அந்தக்காலம். ஆனா இப்பல்லாம் சட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதைக் கட்டம் போட்டுப் படிக்கிற கூட்டம் படித்துக் கொண்டே இருக்குது.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/06/boss-coooooooooooool.html

கறி வறுவல்ல கறியை விட கருவேப்பிலை எக்கச்சக்கமா இருக்குறது மாதிரி போய்க்கிட்டிருக்கு ஷங்கர் படங்கள். ஜெண்டில்மேன், காதலன், இந்தியன்..அப்படியே முதல்வன் வரைக்கும் ரசிச்சதை இப்ப ரசிக்க முடியலை. கொஞ்சம் மூளையைப் பயன்படுத்துனா நல்லது.

நாங்க...எங்க வீட்டுல எப்பவுமே ரஜினி படத்துக்குப் போக மாட்டோம். சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். மொதமொத நாங்க வீட்டோட பாத்த ரஜினி படம் மாப்பிள்ளை. பொட்டும் பொடிசா நண்டும் சிறுசா இருந்தப்பப் பாத்தது. படத்தப் பாத்து நான் அமலா ரசிகனானதுதான் மிச்சம். அதுக்கப்புறம் எதுவும் பாத்த நினைவில்லை.

ரொம்ப நாள் கழிச்சி முத்துங்குற படம் பார்த்தேன். ஏன்னா...அந்த அரசியல் சூழ்நிலை. அருணாச்சலம் போகலை. கொஞ்ச நாள் கழிச்சு பாக்கப் போனா..தேட்டர்ல பத்து பேரு. அடுத்து படையப்பா. அது வந்தப்போ பெங்களூருக்கு வந்த புதுசு. ஒடனே போய்ப் பாத்துட்டேன். ரெண்டு காரணம். படம் தமிழ்ப் படம். அடுத்தது அதுல சிவாஜி நடிச்சிருந்தது.

பாபாவைப் பார்க்கவே இல்லை. ஆனா சந்திரமுகி பார்த்தோம். மறுபடியும் அம்மா அப்பாவோடு. பெங்களூரில். காரணம்? மணிசித்ரதாழு. நான் ஏற்கனவே பார்த்த படம். மிகவும் பிடித்த படம். ஆகையால் சந்திரமுகி. இப்பொழுது சிவாஜி. ஆனால் போக வேண்டும் என்று தோன்றவில்லை. காரணம் படத்தில் ஈர்க்கும் விஷயம் எதுவுமே இல்லை. சாகாரா பாட்டு நன்றாக இருக்கிறது. ஆனால் அது படத்தில் இல்லையாம். தமிழை உதுத்த நாராயணன் பாடிய பாடல்தான் படத்தில் இருக்கிறதாம். அப்புறமென்னத்துக்குப் பாக்குறது? என்னது பொழுது போக்கவா? Oceans's 13, shrek the third, harry potter எல்லாம் வரிசையா இருக்கே. சூர்யா நடிச்சு வேல் வேற வரப் போகுது. இப்போதைக்கு அது போதும். ஆனா இங்க பயக படம் பாத்தே ஆகனும்னு துடிக்கிறாங்க. அவங்களால போய்ப் பாத்தாலும் பாப்பேன்.

G.Ragavan said...

http://kuppaikal.blogspot.com/2007/06/blog-post_1659.html

// இந்தியாவின் உயர்ந்த பதவிக்கு என்னை தேர்வு செய்துள்ளார்கள். இதன் மூலம் இந்தியாவில் பெண்கள் எவ்வளவு தூரம் மதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிகிறது என்றார் பிரதிபா பாட்டீல். //

ஆகா! பிரதிபா பாட்டீலுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சியா? அப்பாடியோவ்!

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/06/boss-coooooooooooool.html

// இளவஞ்சி said...
யோவ் ஜீரா,

// கறி வறுவல்ல கறியை விட கருவேப்பிலை எக்கச்சக்கமா இருக்குறது மாதிரி //
// தமிழை உதுத்த நாராயணன் //

உமக்கு குசும்பு ஓவர்தான்! :) //

என்னய்யா! குசும்புன்னா கோயமுத்தூருக்குக் குத்தகைக்கா விட்டிருக்கு. எங்கூருக்கு வந்து பாருங்க. குசும்பு கூத்தாடும். :)

// ஆர்னால்டு சிவநேசன் படத்தை பார்த்துட்டு அவருக்கு டாம் ஹேங்ஸ் மாதிரி நடிக்க வரலைன்னு சொல்லலாமா? டெர்மினேட்டர் காஸ்டவேல பாதிகூட வராதுன்னு கம்பேர் பண்ணாலாமா? இல்லை அவங்க எல்லாம் நடிக்க வராமத்தான் ஃபார்முலா படங்க செய்யறாங்களா?! //

அர்னால்டு சிவாஜிநகர் பார்முலா போட்டு நடிச்சாரு நடுவுல...நல்ல படங்களும் நடிச்சாரு. ஜூனியர்ல அம்மாவாகுறது...ஜிங்கில் ஆல் த வே-ல காமெடி..கொஞ்சம் மாறி மாறி முயற்சி செய்றாங்கள்ள...ரஜினிக்கு நடிக்கவே தெரியாதுன்னு சொல்லலை. முள்ளும் மலரும், ஜானி, பில்லா, தில்லு முல்லு...எத்தனை வேணும். இப்ப வரிசையா இப்பிடித்தான்னா எப்படி? எங்களுக்கு ஓவர் டோசா இருக்கு.

// அவங்கவங்க படத்துக்கு அந்தத்த மனநிலையோட போனா நிறைய படங்கள் ரசிக்கலாம்! வரப்போற தசாவதாரத்துக்கு சிவாஜி பார்த்த மனநிலையிலா போவேன்? :) //

உண்மைதான். ஒத்துக்கிறேன். அந்த மனநிலையும் பக்குவமும் நோக்கு இருக்கு. நேக்கு இல்லையே! நேக்கு யாரத் தெரியும்! எங்க போவேன்! :))))

// வாய்ப்புக்கிடைச்சா பாரும் ஓய்! இல்லைன்னாலும் ஒன்னும் கெட்டுப்போகாது! அதுக்காக Ocean13 போவேங்கறீரே?! நியாயமா? எதுக்கும் மந்திரிச்ச தாயத்து ஏதாவது கட்டிக்கிட்டு போங்க! புரிஞ்சாலும் புரியும்! :) //

என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க. Ocean's 12 பாத்ததுமே அடுத்த படம் வரும்னு முடிவு கட்டிக் காத்திருக்கோம்ல. இன்னைக்குப் போறேய்யா போறேன். :)

//// படத்தப் பாத்து நான் அமலா ரசிகனானதுதான் மிச்சம்// சீக்கிரமே ஸ்ரேயா ரசிகனாகக் கடவது! //

ஸ்ரேயாவா? அது ஸ்ரேயாவோட ப்ராப்தியைப் பொருத்து :))))))))))

//// இப்போதைக்கு அது போதும். ஆனா இங்க பயக படம் பாத்தே ஆகனும்னு துடிக்கிறாங்க. அவங்களால போய்ப் பாத்தாலும் பாப்பேன். //

ரஜினி படம் பாக்கப் போறதை பத்தி ரஜினி மாதிரியேவா ஸ்டேட்மெண்ட் விடறது!? :))) //

என்ன பண்றது? ஆண்டவன் சொல்றான். ஜிரா செய்றான்! கதம் கதம். :)

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/blog-post_17.html

ஐயா, நீங்க இந்தப் பதிவு போட்டதும் எனக்குன்னே நெனச்சிக்கிறேங்க. ஏன்னா நீங்க சொல்லீருக்குறதெல்லாம் நானும் சொல்றவந்தான். ஒவ்வொன்னுக்கும் விளக்கம் சொல்லலாம். ஒங்க விரலை வெச்சே ஒங்க கண்ணக் குத்தலாம். ஆனா வேண்டாம். ஏன்னா நீங்களே எதிர்மறை அம்சங்களை அழகாப் பட்டியல் போட்டுக் குடுத்துட்டீங்க. ஆகையால அத வெச்சே நான் நூல் பிடிக்கிறேன்.

// பொத்துக்கிட்டு வருதுங்க கோவம். இவுங்க பகுத்தறிவும், பொருளாதார விளக்கமும், சமுதாய பார்வையும் அருமைங்க. 60 வயசு தாத்தாவுக்கு 20 வயசு சோடியான்னு உள்குத்து பதிவுகள் போடுறீங்களே, கிளிண்ட் ஈஸ்ட் வுட் ஜே.லோவோட நடிக்க ஆசைன்னு சொன்னா ரசிப்பீங்களோ? //

அட...நீங்க வேற முதல்மரியாதைல சிவாஜி (நடிகர் திலகம்) ராதாவோட சோடி போட்டப்பவே ரசிச்சவங்க நாங்க. அதுல சிவாஜி வயசானவராகவும் ராதா கொஞ்ச வயசுக்காரராகவும் நடிச்சிருப்பாங்க. அது ஒரு விதக் காதல். இப்ப அதே படத்தைச் சீனி கம்-னு இந்தீல எடுத்திருக்காங்களே. அந்த மாதிரியா சிவாஜி சந்திரமுகியெல்லாம் இருக்குது? பாபா படத்துல இந்த சோடி விசயத்த கேட்டோமா? இந்த வயசுலயும் இவரு இளவட்டம்....அவருக்குச் சின்ன சோடி. அட..ரசினிக்கு மட்டுமில்லீங்க..சத்தியராசு, விசயகாந்து...எந்த எடுபட்ட பயலா இருந்தாலும் இதத்தான் சொல்லுவோம். புரிஞ்சதா.

// நீங்க சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் படத்துக்கு குடும்ப சகிதமா போறது இல்லியா? அங்கே அவுங்க அடிக்காத அடியா, பறக்காததையா ரஜினி பண்ணிட்டாரு? //

வாங்க. வாங்க. நல்லா மாட்டிக்கிட்டீங்க. இதுல கதைப்படி சூப்பர்மேன் மனுசனே இல்லை. வெளிக்கிரகத்துல இருந்து வந்தவன். ஸ்பைடர்மேனை என்னவோ ஒரு எட்டுக்காப்பூச்சி கடிச்சு வெச்சிருது. இப்பிடி அவங்க அந்த மாதிரி சண்டை போடுறதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு காரணம் சொல்லுவாங்க. இங்க? ஒருவேளை இவரும் மனுசனே இல்லையோ! அட...தெரியாமக் கேக்குறேன். அப்படி எதுவும் இருந்தாச் சொல்லீருங்களேன். அதையுஞ் தெரிஞ்சிக்கிறோம்.

// ஸ்பைடர் மேன் உதட்டோட முத்தம் குடுத்தா சரியா? //

சரிதாங்க. மிஸ்டர் அண்டு மிசஸ் ஐயர்ல அந்த கதாநாயகன் கதாநாயகிக்குக் கொடுத்ததும் சரிதாங்க. கதைக்கு முத்தங் கொடுக்குறதையும் முத்தத்துக்குக் கதையக் கெடுக்குறதையும் ஏங்க ஒப்பிடுறீங்க? முத்தங்கொடுக்குறத ஒரு பெரிய விசயமா யாரும் சொன்ன மாதிரி தெரியலை. அப்படிப் பாத்தாலும் கமலுக்குத்தான் சொல்லனும்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/blog-post_17.html

// லாஜிக் இல்லாதது ரஜினி படத்துல மட்டும் இல்லீங்க எல்லாம் மொழியிலும் இருக்கு. அப்படி பார்த்தா தமிழ் சினிமாவுல பாட்டே இருக்கக்கூடாது. பாட்டு பாடியா உங்க காதலை தெரிவிக்கிறீங்க. எத்தனை பேருங்க பாட்டுப்பாடி காதலை தெரிவிச்சு இருக்கீங்க. //

எல்லாப் படத்துலயும் லாஜிக் பாக்கக் கூடாதுதான். ஒத்துக்கிறோம். ஆனா லாஜிக்கையே மறக்க வைக்கிற படங்கள்ள இந்த வகைகளும் ஒன்னு. இங்கிலீசுல இல்லியையான்னு கேப்பீங்க. ஆனா அவங்க லாஜிக்கை மறக்க காரணம் சொல்வாங்க. வெளிகிரகத்துல இருந்து வந்தது. ஏதோ அறிவியல் ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சாங்க..அப்படி இப்பிடின்னு. ஆனா இங்க? சாதராண மனுசங்களுக்குப் பொறந்து வளர்ந்து நூறு பேரை ஒதைக்கிறதெல்லாம் டூ மச். ரஜினி மட்டுமில்லை. எல்லாருக்கும் இது பொருந்தும். இங்க ஏன் நெறைய சொல்றோம்னா...மத்தவங்கள அவ்வளவா கண்டுக்கலை. ஆனா இங்க அப்படியா? நின்னா நிலம். அசைஞ்சா அலை. சிரிச்சா சிகரம்னு இருக்குறப்போ. பாலையும் தேனையும் போஸ்ட்டர்ல கொட்டுறப்போ. சாமிக்குக் கொட்டுறதையே நிறுத்தலாம்னு ஆன்மீகவாதிகளே பேசுறப்போ....மனுசனுக்கு..கொடுமைங்க. கொடுமை. அதுல இவரு மாதிரியே ரெண்டு ஜெராக்ஸ் மெஷினுங்க வந்திருக்கு. அதுங்களை எப்படி switch off பண்றதுன்னு தெரியலை.

// சொல்லுங்க,தமிழ்சினிமா பகுத்தறிவு பாதையில் போகுதுன்னு ஒத்துக்கிறேன்.//

பகுத்தறிவுப் பாதைலதான் போகனும்னு அவசியமில்லை. பொழுது போக்கு இருக்கட்டும். ஆனா பொழுது மட்டுந்தான் போக்குவேன்னு ஒருத்தன் சொன்னா அவன் சோம்பேறி. அதிலும் பலர் பின்பற்றும் ஒருத்தர் சொன்னா அது தப்பு. இதே சத்யராஜ் சொல்லீருந்தா எவன் கேக்கப் போறான். அவரு செஞ்சா அதே மாதிரி யாரும் செய்யப் போறதில்ல. இங்க அப்படியா?

பாட்டுப் பாடுறது ரொம்பப் பொருத்தம். ஏன்னா இயல்பாவே தமிழில் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் பாட்டு இருக்கு. தாலாட்டு பாடுவாங்க. ஒப்பாரியோடதான் வழியனுப்புவாங்க. இன்னும் நெறையச் சொல்லலாம். அதோட தொடர்ச்சிதான் சினிமால பாட்டு. ஆனா அதையும் இயல்பு நிலையிலிருந்து எங்கையோ கூட்டீட்டுப் போயிட்டோம். எங்க கரும்புக்காட்டுக்குள்ளதான். :)))))))))))))

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/blog-post_17.html

இன்னும் கொஞ்சம் சொல்லனும். இப்ப Ocean's 13 போறேன். பாத்துட்டு வந்து ராத்திரி சொல்றேன். :)

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/blog-post_17.html

// ILA(a)இளா said...
ஜி.ரா, இதுக்கு மேல உங்க பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட மாட்டாது. உங்ககூட சண்டை போட விரும்பல. தனியா பேசிக்குவோம். உமக்கும் எனக்கும் என்னையா பிரச்சினை. Take this topic offline, இது ஜி.ராவுக்கு மட்டும்தான் //

சண்டையா...அத யாரு போட்டா....நீங்க வேற. இதெல்லாம் கலந்துரையாடல்தானே. நம்ம தனியா பேசிக்கிருவோம். நோ பிராபளம். :)

// இளவஞ்சி said...
இளா,

விடுங்க... நம்ப ஜீரா என்ன தமிழ்ப்படம் பார்க்காத ஆளா?! :)

நமக்கு பிடிச்சிருக்கு பார்க்கறோம்! ஜீராவுக்கு பிடிக்கலை... பார்க்கலை! அவ்வளவுதான்!

இதுல நாம் ஏன் பார்க்ககூடாதுன்னும் ஜீரா ஏன் பார்த்தே ஆகவேண்டும்னும் பேசிக்கிட்டு இருந்தால் இது நடக்கற காரியமா?!//

ரொம்பச் சரியா சொன்னீங்க இளவஞ்சி. :) நாம் பாக்கலைன்னா கொறஞ்சு போகுமா? நீங்க பாக்குறது தப்புன்னு நான் சொல்லலை. சொல்லவும் மாட்டேன். பிடிச்சிருக்கு பாக்குறீங்க. அதுல எந்தத் தப்பையும் நான் பாக்கலைங்க. சிவாஜி நான் பாக்காததுக்குக் காரணம் தேட்டர் வேற ஊர்ல இருக்கு. போக ரெண்டர மணி நேரம். வர ரெண்டர மணி நேரம். அப்படியில்லைன்னா கண்டிப்பா போயிருப்பேன். போகவே மாட்டேன்னு சொல்ல...நானென்ன உத்தம புத்திரனா? :-))))

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/06/blog-post.html

வாங்கய்யா...ஓமப்பொடி ஐயா
வரவேற்க வந்தோமய்யா!

மீண்டும் மீண்டும் வா...
பதிவு வேண்டும் வேண்டும் தா

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/06/blog-post_17.html

அனுபவம் புதுமை... :) இப்பிடித்தாங்க நானும் wheat bread சாப்பிடுறேன். விக்குனா தண்ணிய ஊத்திக்கிறேன். கழுத என்ன..இங்க வந்தப்புறம் காபி கொஞ்சம் கூடிப் போச்சு. அதக் கொறைக்கனும்.

ஆனா பருப்புவடைக்கதை நல்லாவே இருக்கு. :) இதுக்குன்னே நம்மகிட்ட ஓட்ஸ்வடை சமையல் குறிப்பு கைவசம் இருக்கு. :)

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/06/blog-post.html

// ILA(a)இளா said...
காதை குடும்யா, நமக்கு ஒரு பொது எதிரி வந்து இருக்காரு. யாருன்னு தெரியுதா? ஜி.ராஆஆஆ //

எதுருல வந்து நின்னுக்கு எதிரின்னா பேசுறீங்க....எச்சரிக்கை...உதிரி உதிரியா உதுத்துருவம்ல... :)

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2005/10/86-2.html

சைக்கிள்+கார்+பஸ்...ரயில்....விமானம்...இப்பிடி அடுக்குனா எப்படி? கப்பல்னு சொல்ல வாய் வருது...சொல்லக்கூடாதுன்னு மனசு தடுக்குது. ஆனாலும் தட்டீட்டேன். பயப்படாம கப்பல்ல போங்க. ஒரு கெட்டதும் நடக்காது.

G.Ragavan said...

http://9-west.blogspot.com/2007/06/blog-post_16.html

:) திருநவேலியா? பக்கத்து ஊர்தான். நீங்க இப்பிடிக் கொண்டு போனா...நாங்க கொஞ்சம் வேற மாதிரி...தூத்துடீல இருந்து கெளம்புவோம். தேங்கா, பொரிகடலை, உப்பு, பச்ச மெளகா போட்டு அரைச்சி....அடுப்புல சட்டிய வெச்சி...அதுல தொவையல வதக்கீருவோம். கெடாம கம்முன்னு ஒரு நாளைக்கு இருக்கும். இந்தச் சட்டியோட இட்டிலி சண்ட போட்டா எப்படி இருக்கும் தெரியுமா...அடடடா!

பல நாள் பள்ளிக்கூடத்துல அம்மா குடுத்தனுப்புன தயிர்ச்சோத்துக்கு இந்தச் சட்டினி சரி சோடி போட்டிருக்குங்க.

குழந்த கேட்ட கேள்வியும் சூப்பரு.

G.Ragavan said...

http://gayatri8782.blogspot.com/2007/05/blog-post_949.html

அருமை. அருமை.

பாலைத்திணையை சோலைத்திணையாக்க கண்ணீர் வெள்ளாமை செய்ய வைக்கின்ற கவிதை. மிகவும் ரசித்தேன்.

G.Ragavan said...

http://kirukalkal.blogspot.com/2007/06/blog-post_18.html

சூப்பரப்பு...பிரமாதமான ரீமிக்ஸ். அதுலயும் அந்த ஓக்கே!

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/06/blog-post_18.html

நல்ல பாட்டு. சிவகுமார் சந்திரகலா நடிச்சது. ரொம்பவே இளமையான குரல். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டும் கூட.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/06/2.html

விமர்சனம் பிரமாதகக் கொடுத்திருக்கின்றீர்கள். ஷங்கர் இயக்கியிருந்தாலும் அவருடைய வழக்கமான படமாக இது இருக்காது என்று எதிர்பார்த்ததுதான். ஸ்ரீதர் என்று இயக்குனர். அந்தக் காலத்தில் மிகப் பெரிய இயக்குனர். அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சிவாஜியை வைத்து நிறையப் படங்கள் எடுத்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் ஸ்ரீதர் படத்தில் சிவாஜி என்றிருக்கும். புனர்ஜென்மம், நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு..இப்பிடி நிறைய. அப்படியிருக்கையில் எம்.ஜி.ஆரை இயக்க ஒரு வாய்ப்பு. படம் எப்படி இருந்திருக்கும்? ஸ்ரீதர் இயக்கியிருந்தாலும்...அது எம்.ஜி.ஆர் படமாக இருந்தது. அதே நேரத்தில் அதற்குப் பிறகு வந்த எம்.ஜி.ஆர் படங்களுக்கு அதுவே அடித்தளமாக இருந்தது. குறிப்பாக அந்தப் படத்து வேட்டிக்கட்டு..அதற்குப் பிறகு வந்த எம்.ஜி.ஆர் படங்களில் எல்லாம் வந்தது. பாடல்கள் சூப்பர் ஹிட். படமும் சூப்பர் ஹிட். அந்தப் படந்தான் உரிமைக்குரல். இங்க சிவாஜி. ஆனா ஒன்னு...இந்த வரலாறு திரும்புறது சினிமாவோட மட்டும் நிக்கனும்னு விரும்புறேன். அதுதான் ரஜினுக்கும் நல்லது. நமக்கும் நல்லது.

முத்து, படையப்பா படங்கள் எனக்குப் பிடிக்கும். பொழுதுபோக்குப் படங்குற வகையில சிவாஜியும் பிடிக்கும்னுதான் தோணுது.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2007/06/7.html

// Boston Bala said...
ஜிரா பதிவு வந்துடுச்சா?

(இது வரைக்கும் வந்த கதையை முன்கதை சுருக் செஞ்சு போடுங்களேன் :D) //

வந்திருச்சு பாபா...
http://gragavan.blogspot.com/2007/06/8.html

நீங்க கேட்ட மாதிரி...முன்கதைச் சுருக்கத்தை உண்மையாவே சுருக்கமா குடுத்திருக்கேன்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2007/06/blog-post_19.html

யோசிக்க வைக்கும் கட்டுரை. எனக்கும் சிவாஜி என்ற பெயரை இந்தப் படத்திற்கு வைத்தது பிடிக்கவில்லை. முன்பெல்லாம் சிவாஜி என்று கூகிளில் தேடினால் நடிதர் திலகம் பற்றிய செய்தித் தொடுப்புகள் வரும். இப்பொழுது? இதில் சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி வேறு கேட்டார்களாம். நாடகமோ நாடகம்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/06/ii-68.html

ஆகா! என்ன சார் இது....துப்பறியும் தொடர்கள் மாதிரி திடீர்த் திருப்பங்கள் எக்கச்சக்கமா இருக்கே.

ஆனா நீங்க மும்பை போனீங்கன்னு தெரியும். ஆகையால நீங்க மும்பை போகுற முடிவுதான் எடுத்திருப்பீங்க. ஏன் அந்த முடிவை எடுத்தீங்கன்னு..அடுத்த பதிவுல தெரிஞ்சுரும். :)

G.Ragavan said...

http://binarywaves.blogspot.com/2007/06/jerry-yang-new-yahoo-ceo.html

all the best for jerry yang. in fact i was using yahoo extensively at one stage...but nowadays i am rarely opening the yahoo id. all done with google....i can understand the mass effect on this. the task is tough..let us wait and watch.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/06/224.html

சத்தியமாச் சொல்றேன். நம்பவே முடியலை. இவங்க உண்மையான கடமையுணர்வோடு சொல்லீருந்தாங்கன்னா....இவங்களுக்கு கோடி நன்றிகள். ஏன்னா காவல்துறை கிட்ட இதெல்லாம் நான் உண்மையிலேயே எதிர்பார்க்கலை. இது உண்மையான மாற்றமாக எல்லாக் காவல்துறையிலும் தொடர்ந்தா நல்லா இருக்கும். ஆனா...அதெல்லாம் நடக்குமான்னு தெரியல.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/06/4.html

அத்தியுந்திந்தோம்...மலையாள நாட்டு நாடான் பாட்டு என்று அழைக்கப்படும். மலைநாட்டு மக்களின் நாட்டுப்புறப்பாட்டு. சலீல்தா என்றழைக்கப்படும் சலீல் சௌத்ரியின் இசையில்....ஸ்வப்னம் என்று நினைக்கிறேன்....அதில் வாணி ஜெயராம் "நாடான் பாட்டிலே மைனா...நாராயணக்கிளி மைனா" என்று பாடுவார். அந்த நாடான் பாட்டுதான் இந்தப் பாட்டு.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/06/4.html

// நான் கூறுவதைவிட விலாவாரியாக இங்கே பட்டியலிட்டிருக்கிறார்கள். நமது 'இசை ஞாநிகள்', 'இசைப்புயல்கள்', 'மெல்லிசை மன்னர்கள்' ஆகியவர்களின் தனித் திறமைகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் இசையமைப்பு என்ற பெயரில் தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்காகக் கிண்டியதெல்லாம் வெறும் உப்புமாதான். //

நண்பரே..இந்தக் கருத்தோடு முழுமையாக என்னால் ஒத்துப் போக முடியவில்லை. நீங்கள் குடுத்த சுட்டியில் சென்று பார்த்தேன். அதில் மெல்லிசை மன்னருக்கு inspired என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜாவிற்கு heavily inspired...ஆனா மத்தவங்களுக்கெல்லாம் அட்டக்காப்பீன்னு போட்டிருக்கு.

மெல்லிசை மன்னராகட்டும் இளையராஜாவாகட்டும்...உப்புமாவாகவே கிண்டினார்கள் என்று நான் நினைக்கவில்லை. உப்புமா கிண்டுகிறவர்கள் எல்லாம் இன்றைக்குக் கிண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால் வெறும் உப்புமா நாள்பட இருக்காது. ஊசிப் போகும்.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/06/4.html

ஆனா ஒன்னு..உப்புமான்னே வெச்சுக்கிட்டாலும்...இந்த உப்புமாவே இன்னும் ருசியா இருக்குதே. விசு 50ல வந்தாருன்னு நெனைக்கிறேன். பல பாட்டுகள இன்னமும் கேக்குறோம். இளையராஜாவின் ஆரம்பகாலப் பாட்டுகளையும் ரசிக்கிறோம். உப்புமான்னு சொல்றத விட...நேத்து வெச்ச மீன் கொழம்புன்னு சொல்லலாமா?

G.Ragavan said...

http://sureshinuk.blogspot.com/2006/11/blog-post.html

என்னோக்க வாக்கு ஜோதிகாவுக்கு. நடனம் தெரிஞ்சவங்கங்குற வகையில நல்லா ஆடீயிருப்பாங்க சௌந்தர்யா. ஆனா நடிப்புல ஏதோ ஒரு குறை. ஜோதிகா நடிப்பு பிரமாதம். நடனம் தெரியாத பெண் நடனமாடுற மாதிரி நம்பி ஆடனும்....அந்த வகையில ஜோதிகா சரியா தப்பாப் பண்ணீருந்தாங்கன்னு தோணுது. ஆனா ஷோபனா அந்த வேலைய ரொம்ப லேசா செஞ்சிருப்பாங்க.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/06/blog-post_19.html

இந்தப் பாட்டை இப்பொழுதுதான் கேட்கிறேன். நல்ல பாடல்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/06/blog-post_16.html

உள்ளத்தில் நல்ல உள்ளம்...அம்பிகா கிடையாது. கவுண்டமணியும் கெடையாது. விஜயகாந்துக்கு ஜோடி ராதா. ஜனகராஜ் காமெடின்னு நெனைக்கிறேன். இந்தப் படத்த ஏதோ ஒரு டீவியில போட்டாங்க. இந்தப் படத்துல ஒழுங்கா நடிச்சது ராதா மட்டுந்தான். :))) கங்கை அமரன் இசை. அவ்வளவுதான் எனக்கும் தெரியும்.

G.Ragavan said...

http://vicky.in/dhandora/?p=384

உண்மைதான். ஜெயலலிதா இப்படி ஒரு ஆயுதத்தைக் கையில் எடுப்பார் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

இதில் விவகாரம் என்னவென்றால் கலாம் ஒத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் முதற்சுற்றில் ஜெக்கு வெற்றி என்றுதான் தோன்றுகிறது. அழகாகச் சொல்லிக் காட்டுவார். ஒரு தமிழரை குடியரசுத் தலைவராக தாந்தான் ஆதரவு தெரிவித்ததாகவும்..கருணாநிதி அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தன் பதவியே குறியென்று இருந்தார் என்று அடுக்கடுக்கிப் பேசுவார். அது அவருக்கு நன்றாகவே வரும்.

ம்ம்ம்...என்னைக் கேட்டால் கலாம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றே சொல்வேன். ஜெக்கா இல்லை. நாட்டுக்காக.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/06/5.html

ம்ம்ம்ம்....எங்கெங்க என்னென்ன இருக்கோ...அட நம்ம கண்ணு முன்னாடியே நூறு உயிர்கள் காத்துல மெதக்குதாம். அதுவே தெரிய மாட்டேங்குது. இதுல எங்கயோ இருக்குற உயிர்கள நம்ம கண்டுபிடிச்சா..அது பெரிய வெற்றிதான். ஆனா மடியில பூனையக் கட்டிக்கிட்டு வரப் போறமா....பொதையலைக் கட்டிக்கிட்டு வரப்போறமான்னுதான் தெரியலை.

நல்ல சுவாரசியமான தொடர். நீங்கள் நிறையப் படிக்கின்றீர்கள் என்று தெரிகிறது. அப்படி நீங்கள் படித்த தகவலை எங்களோடு பகிர்ந்து கொள்ளும் உங்களது மனப்பாங்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்களுக்கு எனது நன்றி. :)

G.Ragavan said...

http://mayuonline.com/blog/?p=130

மயூரேசா, படத்தை நான் பார்த்து விட்டேன். என்னுடைய கருத்துப்படி படம் வீண். மட்டம்.

// யுத்தத்திற்குச் செல்ல முதல் அரசன் கெட்ட சக்திகளை பிரார்த்தித்து அவர்களின் அனுமதியுடனேயே யுத்தத்திற்குச் செல்ல வேண்டும் ஸ்பாட்டாக்களின் பாரம்பரியம். //

படத்துல கெட்ட சக்தின்னு சொல்றாங்க. அது கிரேக்கக் கடவுள்கள். இப்படிச் சொல்ல வெச்சது படம் எடுத்தவங்க கொழுப்பு.

அதுவுமில்லாம ஆசியர்களை அருவெறுப்பாகச் சித்தரித்தமை. அவர்களுடைய வாழ்க்கை முறையை மிகவும் கேவலமாகக் காட்டியமை என்று படத்தின் குறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அளவுக்கு மீறிய வன்முறை படத்தின் பலவீனம். என்னைக் கேட்டால் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருப்பது மூளைக்கு நல்லது.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/06/blog-post_19.html


எட்டா! இதெல்லாம் நாயமா? மொதல்ல பதிவு போட்டவங்களுக்குக் கூப்பிட எட்டு பதிவர்கள் கிடைப்பாங்க. அடுத்தடுத்து வர்ரவங்க எங்க போய் ஆள் பிடிக்குறது. இதெல்லாம் சரியில்லை. கொஞ்சம் கொறைச்சிக்கோங்க.

என்னது தண்ணீல இருக்குறதுன்னா ரொம்பப் பிடிக்குமா? வலையுலகமே தெரியும்னு சொல்லுதேய்யா....

கருநாடக சங்கீதம் நுண்கலை. அதாவது பல இடங்களில் இருந்து எடுத்துக்கொண்டு இலக்கணம் வகுத்துக்கொண்டு வளருவது. நானும் பல பாடல்களை ரசித்திருக்கிறேன். சில பாடல்கள் ஓரளவுக்கு. ஆனால் ஒன்றைத் தெரிந்து கொண்டால்தான் ரசிக்க முடியும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சாட்டிலைட் டிவி பாக்க சாட்டிலைட் டெக்னாலஜி தெரியனுமா என்ன!

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/06/blog-post_19.html


எட்டா! இதெல்லாம் நாயமா? மொதல்ல பதிவு போட்டவங்களுக்குக் கூப்பிட எட்டு பதிவர்கள் கிடைப்பாங்க. அடுத்தடுத்து வர்ரவங்க எங்க போய் ஆள் பிடிக்குறது. இதெல்லாம் சரியில்லை. கொஞ்சம் கொறைச்சிக்கோங்க.

என்னது தண்ணீல இருக்குறதுன்னா ரொம்பப் பிடிக்குமா? வலையுலகமே தெரியும்னு சொல்லுதேய்யா....

கருநாடக சங்கீதம் நுண்கலை. அதாவது பல இடங்களில் இருந்து எடுத்துக்கொண்டு இலக்கணம் வகுத்துக்கொண்டு வளருவது. நானும் பல பாடல்களை ரசித்திருக்கிறேன். சில பாடல்கள் ஓரளவுக்கு. ஆனால் ஒன்றைத் தெரிந்து கொண்டால்தான் ரசிக்க முடியும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சாட்டிலைட் டிவி பாக்க சாட்டிலைட் டெக்னாலஜி தெரியனுமா என்ன!

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2007/06/blog-post_19.html

// Anonymous said...
நான் வீர சிவாஜியின் பரம ரசிகன். நாட்டிற்காக போராடி உயிரைவிட்ட அந்த மராட்டிய வீரனின் பெயரை, பிழைப்பிற்காக வேடம் கட்டி நடித்த ஒருவனுக்கு யாரோ ஒரு கிழவன் சூட்ட அதற்கு உங்களைப் போன்றவர்கள் இன்று வக்காலத்து வாங்குகிறீர்கள். மராட்டிய வீரனின் பெயரை கண்ட கண்டவர்களை கட்டிப்பிடித்து நடிக்கும் ஒரு மனிதனுக்கு சூட்டியதன் மூலம் அவருக்கு தமிழர்கள் செய்தது மாபெரும் துரோகம், அவர் பெயருக்கு களங்கம்.

சிவாஜி, கணேசனின் பெயர் அல்ல. ஆனால் ரஜினியின் பெயர் சிவாஜி. தன் பெயரை தானே வைத்துக் கொள்ள, யாரோ கொடுத்த பட்டப் பெயரைக் கொண்டு புகழ் சேர்த்த, இன்றில்லாத ரசிகக் குஞ்சுகளின் அனுமதி தேவையில்லை. அப்படி ஒரு பெயர் மாற்றத்தினால் உங்களின் கணேசனின் புகழ் மங்குமேயானால், அது தானாக ஏற்பட்டதில்லை; பிறரால் ஏற்படுத்தப்பட்டது. நீங்கள் கணேசனின் ரசிகனென்று கூறிக்கொண்டு இந்தப் பதிவின் மூலம் அவரையும் கேவலப் படுத்துயுள்ளீர்கள். //

அதெல்லாம் சரிதாங்க. ரஜினிகாந்துன்னு பேருல நடிக்காம சிவாஜிராவ் கெய்க்குவாடுங்குற தன்பெயரைச் சொந்தப் பெயரை உண்மையான பெயரை போட்டு நடிக்க வேண்டியதுதானய்யா. ரஜினிக்காந்துங்குற பேரும் யாரோ வெச்சதுதான்.

அட...அது போகட்டும்..படம் எடுக்கனும்னு முடிவு செஞ்சப்போ..சிவாஜி என்னோட பேரு. அத வெச்சி நடிக்கப் போறேன்னு சொல்லீருக்கலாம்ல. அப்ப ஏன் சவுத் போக் ரோடு போய் அனுமதி வாங்கனும். போட்டோவுக்கு முன்னாடி நின்னு போஸ் குடுக்கனும்!!!!

கண்டிப்பா இதுனால நடிகர்திலகத்தோட புகழ் மங்காது. நீங்க சொன்னீங்களே...அது உண்மை.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_3676.html

தம்பதியினருக்கு எனது வாழ்த்துகள். மகிழ்ச்சியோடு எந்தத் துயரும் இன்றி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களைப் பெண்ணென்றே கருத வேண்டும் என்று வலைப்பூவிலும் அனைவரும் குரல் கொடுக்கும் வேளையில்...இவரையும் ஆண் என்று கருதுவது தவறாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

இங்க நெதர்லாந்துல இதெல்லாம் சட்டப்படியே சரியாம். தனிமனித சுதந்திரம்னு வருது. ஒழுக்கம் அது இதுன்னு பேசுனாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையா நடந்துக்காத வரைக்கும் அது ஏற்கப்பட வேண்டும் என்று கருத்து இங்க இருக்கு. ஒருவிதத்துல இதுவும் சரீன்னுதான் தோணுது. அட இட்லி பிடிச்சவன் இட்லி திங்குறான். நூடுல்ஸ் நுங்குறவன் நூடுல்ஸ் நுங்குறான். சைனீஸ் ஓட்டல் பக்கம் போனா கொஞ்சம் கொமட்டுது. அதுக்காக நம்மூரு சமையல் மட்டுமே ஒசத்தீன்னு சொல்லீர முடியாதுல்ல. அவங்கவங்களுக்கு அவங்கவங்களோடதுன்னு விட்டுற வேண்டியதுதான்.

இதையெல்லாம் பாக்கும் போது, இந்தியாவுலயும் இதைப் பரிசீலிக்க வேண்டிய காலம் வந்துருச்சோன்னு தோணுது.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_7583.html

ஜெயலலிதா ஆப்பை அசைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவர் மாட்டிக் கொள்வாரா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்.

ஒருவேளை கலாம் போட்டியிட்டு வெற்றி பெற்றால்...தாந்தான் முதலில் கலாம் வரவேண்டும் என்று சொன்னது என்று முழங்குவார். கருணாநிதிக்கு அறத்துன்பம்.

தப்பித்தவறி கலாம் தோற்றுவிட்டாலோ....ஒரு தமிழன் போட்டியிட்டும் ஓட்டுப் போடாத கருணாநிதி தமிழனா என்று கேட்பார். அப்பொழுதும் கருணாநிதிக்கு அறத்துன்பம்.

உள்ளபடிக்கு ஜெக்கு கலாம் வரவேண்டும் என்ற அக்கறை இருப்பதாக நினைக்கவில்லை. அரசியலுக்கு இந்த நிலை எடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/06/101_09.html

என்னங்க இது..திடீர்னு....தனியா கொத்துமல்லின்னு கவிதை. வேண்டாங்க. சந்தோசமா இருங்க. முருகனருள் முன்னிற்கும்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/06/230-ocean-13.html

பாத்துட்டேன். பாத்துட்டேன். படத்தப் பாத்துட்டேன். சூப்பர் படங்க. தொடக்கத்துல இருந்து முடிவு வரைக்கும் சூப்பர். விழுந்து விழுந்து சிரிச்சி..பிரமாதம் போங்க.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/06/blog-post_7440.html

அடடடடாஆஆஆ! அட்டடடடாஆஆஆஆஆஆஆ! பிரமாதமப்பா! :)

இன்னொன்னு..சைடுல இருந்துச்சே வீடியோ...நெத்திக்கண்ணு மாதிரி மேல வந்துச்சே..ஞானப்பழப் பிரச்சனை...சூப்பர். சூப்பர். சூப்பர்.

G.Ragavan said...

http://mayuonline.com/blog/?p=130

// on 20 Jun 2007 at 9:46 am5நந்தா
உண்மைதான் படத்தில் வன்முறை அதிகம்தான். ஆனால் Lord of the Rings, Troy போன்ற படம் பார்க்க விரும்புபவர்களிற்கு, வெகு நிச்சயமாக இந்த படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். //

இல்லை நந்தா இல்லை. Lord of the rings and Troy are my fav movies....but certainly not 300.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/06/05.html

சிவிஆர். உன்னுடைய கருத்து தவறு என்பதற்கு 50களிலிருந்தே எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். இருந்தாலும் இளையராஜா பாட்டு என்பதால் இளையராஜாவிடமிருந்தே தொடங்கலாம்.

அன்னக்கிளி படத்துல சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவைன்னு ஒரு பாட்டு. கிராமத்துச் சோகம்.

பதினாறு வயதினிலே....ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ...செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா...சேதி என்னக்கா....

இப்போதைக்கு இது போதும்...

இந்தப் பாட்டும் ரொம்ப நல்ல பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

G.Ragavan said...

http://thaalaattumpoongaatru.blogspot.com/2007/06/blog-post.html

நல்ல முயற்சி ஸ்ரீசரண். தமிழ்ப் பாடகிகளில் எஸ்.ஜானகி அவர்களுக்குச் சிறப்பான ஒரு இடம் யாராலும் மறுக்கவே முடியாதது. இந்த வலைப்பூ வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

இந்தப் பாடல் எனக்கும் பிடித்த அருமையான பாடல்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/06/10.html

அருமையான பாடல்கள். கேட்டவர்கள் தேர்ந்தெடுத்துக் கேட்டிருக்கின்றார்கள்.

சரி. என் பங்குக்குக் கேட்கிறேன். :)

1. இது மாலை நேரத்து மயக்கம் - தரிசனம் என்ற படத்திலிருந்து (முடிந்தால் மெயிலில் அனுப்பி வைக்கவும்.)

2. கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் - சிரித்து வாழ வேண்டும் படத்திலிருந்து

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/06/blog-post_21.html

பத்து வரைக்கும் வந்துட்டேன். அப்புறம் பாத்தா சீட்டுக் கட்டு...அதெல்லாம் கெட்ட பழக்கம்னு மேல போகல :)

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_3676.html

// Anonymous said...
பொண்ணும் பொண்ணும் திரும‌ண‌ம் செய்ய‌ட்டும். அது அவங்க விருப்பம்.ஆனா,
அப்புற‌ம் ஏன் ஆண் வேச‌த்தில‌ உடையணிந்து ........ ?
யாரைத் திருப்திப்ப‌டுத்த‌? புரியல‌ப்பா!! தெரிஞ்ச‌ சொல்லுங்க!!


புள்ளிராஜா //

யோசிக்க வைக்கின்ற கேள்விதான். ஆனால் அது அவரைத் திருப்திப் படுத்திக் கொள்ளவே என்று நினைக்கிறேன். ஆண்கள் பெண்ணாக அறுவை சிகிச்சை செய்கிறார்களே...அது யாரைத் திருப்திப்படுத்த. நான் நினைக்கிறேன்...அந்தப் பெண் தன்னை ஆணாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று. ஆகையால்தான் அப்படியிருக்கும் என்று தோன்றுகிறது.

// செந்தழல் ரவி said...
க்கே / லெஸ்பியன் என்னும் ஓரினச்சேர்க்கைக்கான விருப்பம் / இந்த விடயம் ஹார்மோன்களில் ஏற்ப்படும் மாற்றம்... //

அப்படியானால் அது செய்ற்கையானதல்ல. அப்படித்தானே. ரவி, எனக்கு ஒரு ஐயம். ஒருவேளை இயற்கையே மக்கள்தொகையைக் குறைக்க இப்படியொரு உத்தியைச் செயல்படுத்துகிறதோ என்று!


// அரைக்கிறுக்கன் கிறுக்கிய சட்டத்தை குப்பையில் போட்டுவிட்டு புதிய சட்டங்களை உருவாக்க ஓட்டுப்பொறுக்கி அரசியல்கட்சிகள் விடுமா தெரியவில்லை....!!! //

ரவியின் கருத்தோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.

// செல்வன்,

carnal intercourse against the order of nature என்றுதான் இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது. இதற்குள்தான் ஒரினச் சேர்க்கையை கொண்டு வர வேண்டும்.

"penetration is sufficient to constitute the carnal intercourse" என்றும் விளக்கம் கூறுகிறது.

It requires atleast a minimum degree of penetration...

Can that happen in a lesbian relationship? //

உண்மைதான். இரண்டு பெண்கள் விஷயத்தில் நடவாது. ஆனால் இரண்டு ஆண்கள் விஷயத்தில் நடக்கலாம் அல்லவா. அப்படியிருக்கையில் ஒருவேளை இரண்டு ஆண்கள் இப்பிடி வாழ ஆசைப்பட்டால்? பெண்களுக்கு வாய்ப்பிருக்கிறது. ஆண்களுக்கு இல்லை. :)))))

மற்றொன்று. முன்பு கேரளா..இப்பொழுது பஞ்சாப். இரண்டிலும் பெண்கள்தான் முன்வந்து இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு ஆண்கள் இப்படி வந்து சொல்லவில்லை. ஆண்களை விட பெண்கள் துணிச்சல்காரர்களோ!

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/06/blog-post_7142.html

ஹா ஹா ஹா என்னங்க இது! இப்படியொரு கலக்கல். அனுபவம் பேசுது!

// ஈ- கல்யாணமான புதிதில் இப்படி நிற்பவன், கடைசி வரை இப்படியே நிற்க வேண்டியது தான். //

ஜூப்பரு. அப்படியே ஒங்களுக்குப் பொருந்துது. :)

// ஒள- ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி. //

ஹி ஹி ஹி...உங்களுக்கு வாழ்நாள்ல அந்தத் துணிச்சல் மட்டும் வரவே வராது. :))

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/06/blog-post_20.html

அறியா சனமா இருக்குறப்பதான் அறியா சினம் வந்து பாடாப் படுத்தும். ஆனா அதையும் நல்ல நகைச்சுவையா சொல்லீருக்கீங்க. :)

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/06/blog-post_7142.html

// பெருசு said...
ஜி.ரா,

நீங்க மாட்டாம போயிருவீங்களோ, திரும்பி ஊருக்கு போங்க, வீட்டுலே பாத்து வெச்சிருப்பாங்க.

அப்புறமா கவிதையா வரும். //

இது வாழ்த்து மாதிரி தெரியலையே...சாபம் மாதிரீல்ல இருக்கு :))))))))))))))

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_6379.html

என்ன காமெடி இது....ஒருவேளை அது sex toyயா இருந்தாதான் என்ன?

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/06/189-2.html

ஆத்தா ஆடு வளத்தா கோழி வளத்தா நாய் மட்டும் வளக்கலன்னு பழைய வசனம். இப்ப அத மாத்தனும் போல இருக்கே. :)))))))) சென்யோ"ரீட்டா"

G.Ragavan said...

http://kuttipisasu.blogspot.com/2007/06/blog-post_7186.html

கொல்கொத்தா நினைவுகளைக் கிளப்பி விடுறீங்களே குட்டிப்பிசாசு....

2003ல் துர்காபூஜாவை அங்கே நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்து விருந்து திகட்டத் திகட்ட அனுபவித்தேன். மறக்க முடியாத அனுபவம். மீனிலேயே குளித்தேன். :) மச்சேர் ஜோல்..மச்சேர் பாஜா...எலீஷ்..ஆகாகா!

பண்டல் என்பது ஆங்கிலச் சொல். அது நம்ம பந்தல்ல இருந்து கொண்டு போனதுதான்.

G.Ragavan said...

http://xavi.wordpress.com/2007/06/22/10

என்னங்க இது..இவ்வளவு வேகமா இருக்கீங்க. நேத்து இரவுதான் சிறில் பதிவு போட்டாரு. இன்னைக்கு நீங்க. இதுல பாருங்க...ஒங்களுக்குப் பின்னூட்டம் போட்டுட்டுத்தான் சிறிலுக்குப் பின்னூட்டம் போடப் போறேன் :)

ரொம்பக் கஷ்டப்பட்டு வண்டியத் திருப்புனேன். நீங்க பழைய குருடி கதவத் திறடீன்னு மாத்தீட்டீங்க. :)))))))))))))) சரி நடக்கட்டும். இன்னம் இருக்குறது ரெண்டு அத்தியாயங்கள்தான். அதையும் மாசிலா மணிகிட்ட சொல்லீருங்க. அவரு கூப்புடுற ஆளுதான் கடைசி. மொத்தம் 12 அத்தியாயங்கள்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/06/9.html

என்ன சிறில் காவேரிய லாரிக்குள்ள தள்ளி விட்டுட்டீங்க :)))) இருங்க நீங்கதான் தள்ளி விட்டீங்கன்னு எந்தக் கோர்ட்டுல ஏறியும் சாட்சி சொல்வேன். :)

கதை பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்கு.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/06/57.html

பாடல் அருமையாக இருந்தது. மிகவும் ரசித்தேன்.

கல்யாணி மேனனுக்கு இப்படியா அறிமுகம் கொடுக்குறது? மார்னிங் ராகால பாடுனது சுதா ரகுநாதன்.

கல்யாணி மேனன் பாடிய பெரிய ஹிட் பாட்டு எது தெரியுமா?

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

அது சுஜாதாங்குற படத்துல. அப்புறம் சவால் படத்துல "தண்ணியப் போட்டா சந்தோசம் பிறக்கும்..தள்ளாடி நடந்தா....ஓ பார்வதி...பார்வதியல்ல தேவதாஸ்..சந்திரமுகி நான் சந்திரமுகி"ங்குற பாட்ட கமலஹாசனோடச் சேந்தும் பாடியிருக்காங்க. நான் மேல சொன்ன ரெண்டு பாட்டும் மெல்லிசை மன்னர் இசையில். இளையராஜா இசையிலையும் ஒரு பாட்டு பாடியிருக்காங்க. எதுன்னு நெனைவில்லையே....நல்லதொரு குடும்பத்துல வரும் "செவ்வானமே பொன்மேகமே..." பாட்டுன்னு நெனைக்கிறேன். ஆமா. அதுதான். ஜெயச்சந்திரன், டி.எல்.மகராஜன் கூட சேந்து பாடியிருப்பாங்க.

சைந்தவி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை செட்டிநாடு வித்யாஷ்ரம்ல படிச்ச பொண்ணு. அந்தப் பள்ளிக்கூடத்த இந்தப் பொண்ணு நல்லாப் பாடுறான்னு ஊக்குவிச்சிருக்காங்க. அதனுடைய பலன்..இந்த மாதிரி வாய்ப்புகள். சைந்தவி +2 எழுதி முடிச்சிப் பாசாகியாச்சுங்க.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/06/blog-post.html

நல்லதொரு முன்மாதிரி. அப்துல் கலாம் அவர்கள் மிகச்சிறந்த மனிதர். அவருக்கு இரண்டாவது வாய்ப்புக் கொடுக்கக் கசக்குது பலருக்கு. என்ன செய்ய. அரசியல் விளையாடுது.

சரி. அவரும் ஓய்வெடுக்கட்டும். அதுதான் நல்லது.

என்னது? கோயில் ஒழுக்குகள் மாறனுமா? ஹா ஹா...அதெல்லாம் அவ்வளவு லேசுல நடக்காதுன்னுதான் தோணுது.

G.Ragavan said...

http://gragavan.blogspot.com/2007/06/blog-post_19.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
'ஜிரா...
ரொம்ப நேரம் சிரிச்சாலும்...ஒன்னு மட்டும் சிந்திச்சேன்!
நடிகவேளுக்கு இருக்கும் கட்டைக் குரலில் (கணீர் குரலும் கூட), தமிழிசை, தேவாரங்கள் எல்லாம் பாடி இருந்தால் - குழைவு குறைந்து கம்பீரம் எஞ்சியிருக்கும்!
சான்ஸை நாம மிஸ் பண்ணிட்டமா இல்லை ராதா மிஸ் பண்ணிட்டாரா?
:-) //

நம்மதான் மிஸ் பண்ணீட்டோம். அவரு பாடகராயிருந்தா நல்லாவே இருந்திருக்கும் என்பதில் எந்த மறுப்பும் கெடையாது.

G.Ragavan said...

http://nirmalaa.blogspot.com/2007/06/blog-post.html

அழைப்பிற்கு நன்றி நிர்மலா. கண்டிப்பாக எழுதுகிறேன்.

எட்டு எட்டா எடுத்து வெச்சிருக்கீங்க. சூப்பரு.

G.Ragavan said...

http://vrkathir.blogspot.com/2007/06/blog-post_23.html

இந்த வாரத்துல இது ரெண்டாவது ஹோமோபதிவுன்னு நெனைக்கிறேன். பஞ்சாப்ல ரெண்டு பேரு கல்யாணம் செஞ்சதா பதிவு. அடுத்து இது.

இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்னு தெரியலை.

ஆனா தூக்கில் போடுவதெல்லாம் டூ மச். ஒருவேளை அவங்கள அவங்களா இருக்க விட்டுட்டு..நாம கண்டுக்காம விட்டுட்டோம்னா பிரச்சனையில்லாம இருக்கும்னு நெனைக்கிறேன்.

பொதுவாகவே பண்பாடு பண்பாடுன்னு பொலம்புற இந்தியர்களுக்கு பண்பாடேயில்லாத ஒரு பழக்கம் உண்டு. பொரளி பேசுறதுதான் அது. ஒருத்தரப் பத்தி ஏதாவது தெரிஞ்சாப் போதுமே...ஈறப் பேனாக்கி. பேனப் பெருமாளாக்கி..பிச்சையெடுத்தாராம் பெருமாளு..பிடுங்கித் தின்னாராம் அனுமாருன்னு பேசுவாங்க. இவங்க வாயில இதெல்லாம் தெரிஞ்சா சும்மாவா விட்டு வப்பாங்க!

என்னுடைய பழைய அலுவலகத்தில் ஒரு நண்பர் ஹோமோ. அவர் என்னிடம் இயல்பாகப் பழகக் கூடியவர். யார் கிட்டயாவது சொல்லனும்...இல்லைன்னா தலையே வெடிச்சிரும் போல இருக்குன்னு..எங்கிட்ட வந்து சொன்னாரு. அவரோட ரகசியம் இன்னமும் எங்கிட்ட ரகசியந்தான்.

என்னைக் கேட்டா நாம திறந்த மனதோட ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்னு நெனைக்கிறேன்.

ஒருவேளை இப்பிடி யோசிச்சிப் பாருங்களேன். நீங்க குடுத்த ஆசிரியர் சுட்டியில....ஹோமோ ஏற்றுக்கொள்ளப் பட்ட சமூகமா இருந்திருந்தா அந்த ஆசிரியருக்கு ஏத்தப் பையனா பாத்து அவங்கம்மாப்பாவே கல்யாணம் செஞ்சு வெச்சிருப்பாங்க. இந்த மாதிரி எங்கயோ கூட்டீட்டுப் போறது...கொல பண்றதெல்லாம் நடந்திருக்காதுல்ல.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/06/blog-post_22.html

ஆதரிக்காம விட்டுருவோமா சார். நாமளும் ஒரு ஆடியோ வலைப்பூ வெச்சிரூகோம்ல. இசையன்பர்களுக்கு இசையன்பர்கள்தானே ஆதரவு. நீ பாலுவுக்கு. நான் இசையரசி பி.சுசீலாவுக்கு.

இந்தப் பாட்டு இப்பதான் கேக்குறேன். ஆரம்பகாலத்துல வந்த பாட்டுன்னு தெளிவாத் தெரியுதுல்ல.

நேயர் விருப்பம்னா எனக்கு ஒரு பாட்டு வேணும். கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும். இத gragavan@gmail.comக்கு அனுப்புங்க.

வலைப்பூவுல போடுறதுக்கு வேற பாட்டு கேக்குறேன். காலம் மாறலாம் நம் காதல் மாறுமா பாட்டு போடுங்க. :)

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/06/blog-post_22.html

ஐயா இந்தப் படங்களைப் பார்த்து நெகிழ்ந்து போய் விட்டேன். கொலை செய்தே உண்ணும் விலங்குகள் கூட அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று வாழ்கின்றனவே. அடடா! மனிதர்களே...விலங்குகளிடமிருந்து கற்க வேண்டியது நிறைய உள்ளது. ஒன்று பட்டு வாழுங்கள்.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/06/blog-post_23.html

இன்று கவியரசர் பிறந்த நாளா...ஆகா..கவியரசர் புகழ் வளர்க.

நீங்கள் கொடுத்திருக்கும் அனைத்து பாடல்களும் அருமையைய்யா!

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/06/blog-post_21.html

வாழ்த்துகள் காபி. தாமதமான வாழ்த்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் வேலையாக இருந்து விட்டேன்.

பெண் கவிஞர்கள் பற்றிய கவிதையை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மற்ற கவிதைகள் அருமை.

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/06/3.html

மசாலா நல்லாயிருக்கு. அளவா இருக்கு. சிவாஜி இன்னும் பாக்கலை. பெங்களூர் வந்துட்டு வீட்டுக்கு வராமப் போயிட்ட பாத்தியா :)

G.Ragavan said...

http://bharathi-kannamma.blogspot.com/2007/06/3.html

// Anonymous said...
சிவாஜி படத்துக்கான இணைப்பு
CD1
http://download.yousendit.com/855EB33608FA68B9
CD2
http://download.yousendit.com/B5AB057C0098EE71 //

அனானி, இந்த லிங்கு பிளாக்குடுன்னு வருதே. gragavan@gmail.comக்கு லிங்கு அனுப்புங்க. இங்கல்லாம் படம் தேட்டர்ல கெடையாது. ஒங்களப் போலவங்க புண்ணியத்துல பாத்தாத்தான் உண்டு.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/06/2.html

நல்ல அழகிய எளிய பாடம். புரிகிறது. இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/06/7-9.html


நீங்களும் எட்டு போட்டாச்சா! அதான நீங்கள்ளாம் மொத ரவுண்டுலயே போட்டிருக்கனுமே :)

அடடே! உங்களுக்கு சர்க்கரை இருக்கா. மீன் சாப்பிடக் கூடாதுன்னு இல்லை. சாப்பிடலாம். நண்டு எறால் எல்லாம் சாப்பிடலாம். ஆனா அளவோட. கொஞ்சம் உடற்பயிற்சியும் அவசியம்.

// இப்பவும் சினமா எதுலையாச்சும் முட்டம் காண்பிச்சாங்கண்ணா நினைவுகள் 'அடி ஆத்தாடீ'ன்னு பறந்துடும். //

அதுக்குக் காரணம் நீங்க அங்கயே இல்லாலதுதான். அங்கயே இருந்தா அடியோட சரி. ஆத்தாடியெல்லாம் வராது :)

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/06/blog-post_23.html

எல்லாம் சரி...யாரு இந்த ராமைய்யா? அவருக்கு மட்டுந்தான் இந்தப் பதிவா? :))))))))

நல்லா வந்திருக்கு பதிவு. நீ போடுற படங்களோட கலர்புல்லா வந்திருக்கு.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/06/190.html

ஆகா...ஜோதியில நீங்களும் ஐக்யமாயிட்டீங்களா! :) எட்டு எல்லாரையும் தப்பிக்க விடாம வளைச்சு போடுது போல.

மீனம்பாக்கம் பழகீருச்சுன்னு சொன்னீங்க. இது எங்க அம்மாவுக்கும் பொருந்தும். பஸ், டிரெய்ந்தான் முந்தியெல்லாம். இப்ப என்னடான்னா அப்பாவை ஊர்ல விட்டுட்டுத் தனியாவே சிங்கப்பூருக்குப் போய்ட்டு வர்ராங்க :) இந்தத் துணிச்சல் நல்லதுதான்.

உங்கள் அழைப்பிற்கு நன்றி. நானும் எட்டு பதிவு போட்டிருக்கிறேன்.

G.Ragavan said...

http://tamilarangam.blogspot.com/2007/06/blog-post_24.html

பசும்பொன் அவர்களைப் பற்றி நான் அறிந்தது மிகமிகக் குறைவு. ஆகையால் அவரைப் பற்றி நான் கருத்திட ஒன்றுமில்லை.

ஆனால் பருத்திவீரன் படத்தைப் பற்றிச் சொல்லலாம். ஏனென்றால் பார்த்டு விட்டேன். படத்தைப் பற்றிய உங்கள் கருத்தோடு நான் முழுவதும் ஒத்துப் போகிறேன்.

முதலில் அவனைக் கதாநாயகன் என்று காட்டியது அபத்தம். அவன் அடாவடி...எல்லாந்தான் செய்கிறான். அவனை ரவுடி என்ற எதார்த்த வகையில் காட்டியிருந்தால் ஒத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் கதாநாயகன்..வீரம் நிறைந்தவன்..அடப் போங்கய்யா என்று கதறத் தோன்றுகிறது.

கற்பழிப்புக் காட்சி மட்டுமல்ல..மொத்தப் படமும் அபத்தக் குழம்பு. இதை ஊற்றி ஊற்றிக் குடித்து போதையில் தள்ளமாடி ரசிக்கிறது தமிழ்க் கூட்டம். ஒளிப்பதிவு நன்றாக இருந்ததாலேயே படம் இயல்பான படமாகாது.

படத்தை என்னுடைய நண்பர்களோடு பார்த்தேன். எல்லாரும் படித்து வெளிமாநிலம்,நாடு என்று பார்த்தவர்கள். இறுதிக்காட்சியில் அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு "மானம் காத்த மகராசா" என்று பட்டம் வேறு கொடுத்தார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லையே...நான் மூடனோ ஒருவேளை தமிழனே இல்லையோ என்று எனக்கே ஐயம் வந்து விட்டது. "நீ பெரிய ஊர்ல வளந்தவன்.அதான் தெரியலை." அடக் கொடுமையே....சொன்னது மதுரையாள். தூத்துடியை விட மதுரை சின்ன ஊரா?

அதீத உணர்ச்சிவசப்படும் ஹிஸ்டீரியாதான் நமது பண்பாடு காட்டிக்கொண்டிருக்கும் இது போன்ற படங்களை விட...எதார்த்தமேயில்லாமல்...கமர்ஷியலாக வரும் சிவாஜி டைப் படங்கள் ஒருவிதத்தில் தாவலை. ஏனென்றால் இங்கு இயல்பு என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். அங்கு ஏமாற்றுதலை இயல்பாகக் காட்டுகிறார்கள்.

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2007/06/blog-post.html

நல்ல அருமையான தகவல்கள் பிரபா. கேரளத்தில் யூதர் வரலாறு என்பது வியப்பான ஒன்று. மிகப் பெரிய சமூகம் அங்கு இருக்கிறது. மலையாளிகளோடு கலந்து வாழ்கிறது. நல்ல தகவல்கள்.

// மேற்குலகத்தாரால் அன்றைய காலகட்டத்தில் அறியப்பட்ட ஒரே இந்தியக் கடற்துறையும் கூட. //

இது தவறு என்று நினைக்கிறேன். வின்செண்ட் ஸ்மித், ஸ்ரீநிவாச சாஸ்த்திரி போன்ற வரலாற்றாளர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள். இன்றைய தமிழ்கத்துத் துறைமுகங்களும் அன்று பிரபலமாகவே இருந்திருக்கின்றன. குறிப்பாக கொற்கை. காவிரிப்பூம்பட்டிணம். இன்று இவையிரண்டுமே இல்லை.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/06/blog-post_22.html

// கோவை ரவீ said...
//அதை வேறொரு பாடகர் பாடியிருப்பார்.//

கானா பிரபா சார். யாரு ஜெயச்சந்திரன் சாரா? //

ரவி, அப்படியானால் அந்தப் பாடலையும் போடலாமே! பாலுவின் பாடல் வலைப்பூதான். அவர் பாடலோடு தொடர்புடைய இந்த மாதிரி பாடல்களையும் அதே பதிவில் கொடுக்கும் பொழுது சுவாரசியம் கூடும். அதற்காகச் சொல்கிறேன். நான் கூட அடுத்து ஒரு தமிழ்ப் பாட்டையும் அதற்கு ஈடான ஒரு வங்காளப் பாட்டையும் இசையரசி பதிவில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

G.Ragavan said...

http://arivagam.blogspot.com/2007/06/blog-post.html

சூப்பர் கேள்விகள். இந்தக் கேள்விக்கு எந்தப் பயலும் ஒன்னும் சொல்ல முடியாது.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_24.html

கோட்டிக்காரப் பயக எல்லா ஊர்லயும் உண்டு போல. சோனியாவின் அரசியலில் ஜெயலலிதா வழியில் போகிற மாதிரி இருக்குன்னு நெனச்சிக்கிட்டிருக்க வேளையில...துர்காவா படம் போட்டிருக்காங்க. ம்ம்ம்...எல்லாம் காலம்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_24.html

அப்புறம் ஜெயலலிதாவை மேரியா, காளியா சித்தரிச்சதுக்கு...ஸ்டாலினை அர்ஜுனராகவும் கருணாநிதியை கிருஷ்ணராகவும் சித்தரிச்சதுக்கெல்லாம் வழக்கு கெடையாதா!

G.Ragavan said...

http://yazhsuthahar.blogspot.com/2007/06/7.html

அருமையான பாடல்கள். காதலின் பொன்வீதியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜானகி, வாணி ஜெயராம், சுசீலா என்று இணைக்குரல்களோடு மாறி மாறி பயணம் செய்தது அற்புத அனுபவம்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/06/blog-post_24.html

இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும். ஆனா படம் என்னன்னு தெரியாம இருந்தது. டாக்சி டிரைவரா. இதுல ஒரு அருமையான பாலு-ஜானகி டூயட் "மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும்..மாலைகள் அழைக்கின்றன.." என்று நடுவில் வரும். தொடக்கம் மறந்து போச். மெல்லிசை மன்னர் இசை.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/06/blog-post_24.html


பேப்பர இப்பிடி மாஞ்சி மாஞ்சி படிப்பீங்களா...இன்னொன்னு சொல்றேன்..இந்த ஊர்ல எதத்தொட்டாலும் டச்சுதான். ஆகையால பேப்பர் படிக்கிறதே இல்லை. இங்க டிசிஎஸ் கம்பெனிக்காரங்களும் பட்னி, விப்ரோ எல்லாரும் இருக்காங்க. அன்னைக்கு மழை...என்னைக்கி? முந்தாநேத்து..வெள்ளிக்கிழமை. நாங்க எல்லாரும் ஓடியாந்து பஸ்ல ஏறி உக்காந்தோம். கீழ பாத்தா...இங்கிலீஸ் பேப்பர். அட்ரா சக்கைன்னானாம்னு....படக்குன்னு எடுத்துட்டேன். அப்படியே பொரட்டு பொரட்டுன்னு லேசா பொரட்டீட்டு...வரிசையா எல்லாரும் படிச்சிட்டாங்க. ஒவ்வொருத்தரு மொகத்துலயும் ஒரு ஒளி தெரிஞ்சதே! அடடடா!

அப்புறம்..அந்த இலவசப் பழக்கம் அங்கயும் போகலையா?

G.Ragavan said...

http://engineer2207.blogspot.com/2007/06/181.html

ஆகா! இதனா அது! எட்டு போட்டுருக்கேன் எட்டு போட்டிருக்கேன் சொன்னியே..எட்டு எட்டா எடுத்து வெச்சு வந்து எட்டிப் பாத்தா எட்டு போட்டிருக்கியே தாயே! வாழ்க வளமுடன். பாசு. பாசு. பாசு. யாருய்யா அது லைசென்ஸ் குடுத்திருங்கப்பா!

G.Ragavan said...

http://viriyumsirakukal.blogspot.com/2007/06/blog-post_277.html

தேங்கயாச் சில்லுசில்லா அறுத்துப் போட்டிருக்கீங்க. திராச்சைப் பழம் ஜலஜலன்னு மெதக்குது. வெல்லம் போட்டு பழுப்பா இருக்குது. அப்ப பருப்புப் பாயாசந்தான். சரியா?

G.Ragavan said...

http://arisuvadi.blogspot.com/2007/06/8.html

// ராகவன் அண்ணா:தன்னடக்கம் என்றால் என்னவென்று இவரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் .//

நீ நல்லா பொய் சொல்லக் கத்துக்கிட்டிருக்க :))))) இந்த அளவுக்குப் பொய் சொன்னா நல்லதில்லை

நல்ல எட்டாத்தான் போட்டிருக்க. உன்னை வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.

டாம் குருஸ் அண்ணன் இல்லை. ஏன்னா அவருக்கு வயசு அம்பதாகப் போகுது. வேணும்னா சித்தப்பான்னு சொல்லிக்கலாம். :)

G.Ragavan said...

http://sivagnanamji.wordpress.com/2007/06/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/

பட்டறைக்குப் போன பட்டியல் பெரிய பட்டியலாத்தான் இருக்கு. பதிவர் சந்திப்பு நல்லபடி நடந்தது குறித்து மகிழ்ச்சி.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/06/8-11.html

// STD க்கு எதிர்மறை என்ன? //

// பல்வலிக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? //
பல்லுதான்

// ஒரு காட்டுல 10 பேர் போய்ட்டு இருக்காங்க திடீர்னு சிங்கம் ஒன்னு வந்து 6 பேரை கொன்னுருச்சு. 4 பேரை விட்டுருசு, ஏன்? //

தெரியலையே

// கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன பண்ணலாம்? //

சொறியலாம்

// புல்லு சாப்பிட்டா கண்ணு நல்லாத் தெரியும், உதாரணத்துடன் விளக்கனும்? //

மாடெல்லாம் என்ன கண்ணாடியா போட்டிருக்கு

// பஸ்ல போயிட்டு இருந்தப்ப ஒருத்தர் தோல் தட்டி இது ராயப்பேட்டையான்னு கேட்டா, சங்கத்து சிங்கங்கள் என்ன பதில் சொல்லுவாங்க? //

தோள்(ல்)னு சொல்வாங்க :)

// பெரிய பட்ஜெட் படத்துல -கதாநாயகன் வில்லனை ராக்கெட் லாஞ்சர் வெச்சு கொல்லுவாரு, அதே சின்ன பட்ஜெட் படம்னா? //


// கமல் மீசை இல்லாம நடிச்ச முதல் படம் எது.? //

களத்தூர் கண்ணம்மா

// வெங்காய கடைக்காரங்க எல்லாம சேர்ந்து சங்கம் வெச்சா என்ன பேர் வெப்பாங்க? //

ஆனியன் யூனியன்

// இந்த e-commerce, e-business, e-mail இதுக்கெல்லாம் போட்டியா ஏதாவது வந்தா என்ன பேர் வெக்கலாம்? //

// முதலாம்ப்பு படிக்கிற பையன் பரீட்சைக்கு போறான், வினாத்தாள் வாங்கின உடனே சட்டை டவுசர் கழட்டிட்டு பனியன் ஜட்டியோட பதில் எழுத ஆரம்பிக்கிறான் ஏன்? (கொஞ்சம் கருப்பு ஸ்டைல் கேள்வி இது) //

answer in brief

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2007/06/blog-post_21.html

ஆகா ஆகா ஆகா....இவ்வளவு பிரபலமா இருப்பீங்கன்னு நெனச்சுப் பாக்கலை. எனக்குக் கண்ணுல தண்ணி வந்துருச்சு. சிரிச்சி சிரிச்சுதான். :))))))))))))))))

G.Ragavan said...

http://manimalar.blogspot.com/2007/06/blog-post_23.html

வாழ்த்துகள் மணியன் சார். நிறைய சாதிச்சிருக்கீங்க. எட்ட நின்னு வாழ்த்துச் சொல்லி ஒதுங்கிக்கிறேன். :)

G.Ragavan said...

http://manggai.blogspot.com/2007/06/blog-post_790.html

முதலில் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள். தலைவாழை விருந்தோடு தடபுடலாகத் துவங்கியுள்ளது விருந்து. வாரம் முழுவதும் இப்படியே இருக்கட்டும். :)

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/06/235-7-12-12-1.html

என்னது! இன்னொரு பதிவா! நல்லவேளைய்யா எட்டு பதிவுன்னு எட்டு பதிவு போடாம விட்டீங்களே! ஹா ஹா ஹா

புத்தக் களவானி யாருன்னு இப்பத் தெரியுது :)

அந்த வாத்தியார் கிட்ட என்ன சொல்லீருப்பீங்கன்னு யோசிச்சிப் பாக்குறேன். யோசிக்கிறேன். யோசிச்சிக்கிட்டேயிருக்கேன். யோசிக்கப் போறேன்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/06/3.html

:) ஒரு குரங்குக் குட்டி ஒங்கள என்ன பாடு படுத்தீருச்சு பாருங்களேன்..குரங்குன்னா சும்மாவா சொன்னாங்க. :)))))))))))))

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2007/06/blog-post_24.html

அப்பாடி...இங்க எல்லாரும் கூட்டம் கூட்டமாப் போயிப் படம் பாத்தப்போ நாம மட்டும் போய்ப் பாக்காம விட்டுட்டோமோன்னு மனசுக்குள்ள ஒரு முக்குல லேசான சலனம் இருந்துச்சு. உங்க பதிவப் படிச்சடுந்தான் 50யூரோவக் காப்பாத்தீருக்கோம்னு புரிஞ்சது. டிக்கெட்டு 20 யூரோ. போக வர 30 யூரோ. அத்தோட ஒரு நாள். மெதுவா டிவிடி வரட்டும் அப்புறம் பாத்துக்கலாம்.

சன் டீவி விமர்சனம் பாத்தேன். விமர்சனம் ரஜினி படத்துக்கா விஜய் படத்துக்கான்னு சந்தேகம் வர்ர அளவுக்குக் காட்சிகள். அட..லாஜிக்கை விடுங்க. எல்லா மசலாப் படங்களும் இப்பிடித்தான் எடுக்குறாங்க. சாலமன் பாப்பையா வந்தாரு. அத்தோட என்னோட ஆத்திரம் அண்டாவுக்குள்ள குதிச்சி டங்குடங்குன்னு ஆடுச்சு. என்னங்க வசனம் அது.

பாப்பையா: இதுதான் என்னோட பொண்ணு அங்கவை

விவேக் : என்னது அங்க வைக்கனுமா

அத்தோட கருப்புப் பெண்களாக் காட்டிக் கிண்டல் வேற. இந்தாளு தொலி கருப்பா இருந்தா வைரமுத்து, காமராஜரு, ராமரு, கிஷ்னருன்னு தொணைக்குக் கூப்புடுவாங்களாம். திராவிடத்தின் உண்மையான நிறமே கருப்புதான்னு வசனம் பேசுவாங்களாம். அங்கவைக்கும் சங்கவைக்கும் தொலி கருப்பா இருந்தா கதாநாயகருக்குப் பிடிக்காதாம். சீச்சீ. அப்படி ஒரு காட்சீல நடிக்கவே வெக்கமாயில்லை. இதுல லாஜிக் பாக்காம ரசிக்கனுமாம். அடப் போங்கய்யா! விஜய் படம் மாதிரிதான் ரஜினி படம் இருக்கும்னு இப்பத்தான் தெரியுது.

«Oldest ‹Older   1 – 200 of 255   Newer› Newest»