Sunday, July 01, 2007

என்னுடைய பின்னூட்டங்கள் - ஜூலை 2007

ஜூலை 2007ல் மற்ற வலைப்பூக்களில் இடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

294 comments:

1 – 200 of 294   Newer›   Newest»
G.Ragavan said...

http://papaasangam.blogspot.com/2007/07/blog-post.html

காபி காபி காபீ....

வட பஜ்ஜி பொண்டா வட பஜ்ஜி பொண்டா சூடான சுவையான வெங்காய பஜ்ஜி....தொட்டுக்க சுறுசுறு கொத்துமல்லிச் சட்டினீய்ய்ய்ய்ய்ய்....

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/07/1.html

இரண்டு பாடல்களும் மிகச்சிறப்பான பாடல்கள்.

சௌந்தர்யன் நல்ல இசைக்கவிஞர்தான். ஆனால் இவர் முன்னுக்கு வந்திருக்கலாம். இசையமைப்பாளருக்கு இசை மட்டும் தெரிந்திருந்தால் போதாது. அதெல்லாம் அந்தக் காலம்.

பாலபாரதி திரைப்படத்திற்குள் வந்த பொழுதுதான் ரகுமானும் வந்தார். ரகுமானின் பெருவெற்றியோசையில் பாலபாரதியின் மெல்லிசை கேட்கவேயில்லை.

இவையிரண்டு மட்டுமில்லாது....இந்த இருவரிடமும் இருந்த ஒரு பலவீனம்....புதுமையைப் புகுத்தாமை. இருவருமே....அன்றைய காலகட்டத்தில் இசை எப்படியிருந்ததோ...அதே பாணியில் பாடல்களைக் கொடுத்தமை. ஆனால் இவர்களோடு வந்த ரகுமான் தமிழிசையை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார். கருநாடக சங்கீதம் பாடிக்கொண்டிருந்த திரையிசையை மெல்லிசைக்கு விஸ்வநாதன் கொண்டு சென்றார். விஸ்வநாதனிடமிருந்து இளையராஜா அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார்...இளையராஜாவிடமிருந்து ரகுமான். ஆகையால்தான் இவர்கள் மூவரும் தமிழ்த்திரையில் வேறெந்த இசையமைப்பாளர்களையும் விடப் போற்றப்படுகிறார்கள்.

G.Ragavan said...

http://umakathir.blogspot.com/2007/06/blog-post_30.html

தம்பி, வாங்க...சங்கப்பாட்ட எடுத்துட்டு வந்திருக்கீங்க. நல்லது. இந்தப் பாட்டுல என்ன சொல்லீருக்காங்கன்னு நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னு எனக்குப் புரியலையே! நீங்க இந்தப் பாட்ட எப்படிப் பொருள் கொண்டீங்கன்னு சொல்லுங்க. அதுல நான் எவ்வளவு ஒத்துப் போகுறேன்னு சொல்றேன்.

G.Ragavan said...

http://delphine-victoria.blogspot.com/2007/06/blog-post_30.html

ஒரு பாட்டு உண்டு. அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையேன்னு. 25000 ஈன்ற அன்னைன்னு பட்டம் கொடுக்கலாம். இதுல என்ன சாதனைன்னா....25000 முறை இரண்டு உயிர்களைக் காப்பாற்றீருகீங்க. அதாவது குறைந்த பட்சம் 50000 பேர் உயிர்வாழ நீங்களுமொரு காரணமாயிருக்கீங்க. பாராட்டுகள்.

கடைசிப் பாயிண்ட்டு...அப்படியே ஒரு காதற்கதை படிச்சாப்புல இருந்தது.

G.Ragavan said...

http://thamilachi.blogspot.com/2007/07/blog-post_5985.html

உலகநீதி அருமையான நூல். தொடங்கும் போதே ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம். அதாவது படிடான்னு சொல்றாரு உலகநாதரு. இவருக்குக் கண்ணில்லைன்னு நெனைக்கிறேன். படின்னா எப்படி? ஒழுங்காப் படிக்கனும். கற்க கசடறன்னு சொல்றாங்களே அப்படி. ஏன்னா...அறிவுதான் நம்மளை மனுசனா இருக்க வைக்கும். உலகநீதியே எளிமை. அந்த எளிமைக்கும் பெரியார் சொன்ன பொருளும் அருமை.

G.Ragavan said...

நல்ல பாயிண்டு...இத வெச்சித்தான் நானும் சிவாஜி படத்தின் பெயரை மாற்ற வேண்டும்னு பதிவு போடலாம்னு நெனச்சேன். ஆனா அதுக்குள்ள மேக்கப் மகிமை வந்துருச்சு.

படம் முழுக்க எல்லாரும் சிவாஜிம்பாங்க. இவரு மட்டும் ஷிவாஜிம்பாரு. கையெழுத்தும் ஷிவாஜி. ஆகையால படத்தோட பேர ஷிவாஜி என்று மாற்றும் படி ஷங்கரைக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி மாற்றவில்லை என்றால் அவரை இனிமேல் சங்கர் என்று அனைவரும் அழைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்படும் என்று படுபயங்கரமாக எச்சரிக்கை விடுக்கிறேன்.

G.Ragavan said...

http://lodukku.blogspot.com/2007/07/blog-post.html

நல்ல பாயிண்டு...இத வெச்சித்தான் நானும் சிவாஜி படத்தின் பெயரை மாற்ற வேண்டும்னு பதிவு போடலாம்னு நெனச்சேன். ஆனா அதுக்குள்ள மேக்கப் மகிமை வந்துருச்சு.

படம் முழுக்க எல்லாரும் சிவாஜிம்பாங்க. இவரு மட்டும் ஷிவாஜிம்பாரு. கையெழுத்தும் ஷிவாஜி. ஆகையால படத்தோட பேர ஷிவாஜி என்று மாற்றும் படி ஷங்கரைக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி மாற்றவில்லை என்றால் அவரை இனிமேல் சங்கர் என்று அனைவரும் அழைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்படும் என்று படுபயங்கரமாக எச்சரிக்கை விடுக்கிறேன்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/2.html

பொத்திப் பொத்தி வெக்காதீகடா...வெந்துரும்னு சொன்னாக் கேட்டாதான. பாடப் பாட ராகம்..மூட மூட ரோகம்னு சும்மாவா சொல்லீருக்காங்க.

G.Ragavan said...

http://asifmeeran.blogspot.com/2007/08/blog-post.html

:))))))))))))) சூப்பர்

நீங்க நாசரேத்தா...தூத்துடி மாவட்டம். கையக் குடுங்க. :)

G.Ragavan said...

http://tamilpoo.blogspot.com/2006/12/blog-post_09.html

நல்ல காமெடிதான் போங்க. நம்மள யாரும் போட்டோ பிடிக்கைல போட்டோ பிடிக்கக்கூடாது. :)

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/06/1000.html

இளா..ஒரு உண்மையச் சொல்றேன் கேட்டுக்கோங்க. ஒங்கப்பா பொறந்த ஊர்லேயாவா வேலை செஞ்சாரு? இல்ல எங்கப்பா? இல்லையே..அப்பயே அவங்க ஊரு விட்டு ஊரு போக ஆரம்பிச்சாச்சு. அப்பயே இந்த இழப்பு கிழப்பெல்லாம் தொடங்கியாச்சு. ஊரு விட்டு ஊருங்குறது மாநிலம் விட்டு மாநிலமாகி நாடு விட்டு நாடாகியிருக்கு. யாரு கண்டா..நம்ம கெரகம்...கெரகம் விட்டு கெரகம் போக வேண்டி வந்தாலும் வரலாம். "எம் பையன் செவ்வாய்ல இருக்கான் சார். நல்ல வேலை. நல்ல சம்பளம். விண்டர்ல போக முடியாது. சம்மர்ல டூரிஸ்ட் விசா எடுத்து நானும் வொஃய்பும் போலாம்னு இருக்கோம் சார்" பேச்சுகள் கேட்கப் படலாம். அப்ப சாயிவிவங்குற ஒருத்தர் கெரகம் விட்டு கெரகம் போவதால் எதையெல்லாம் இழக்கிறோம்னு பதிவு போடுவாரு.

மனிதர்களோடு பழகுவது குறைந்து விடுகிறது.

வேற்றுக்கிரகவாசிகளின் உணவுப்பழக்கம் ஒத்துக்கொள்வதில்லை. இங்கே பூமீ ஸ்டோர்கள் இருந்தாலும் பூமியில் கிடைக்கும் உணவே உணவு...

இப்படியெல்லாம் பதிவுகள் வரும். அப்ப சிம்மக்கல் நாபி வந்து "அட..இப்பிடி ஒரு பார்வை இருக்கான்னு கமெண்ட்டு போடுவாரு" :)

வாழ்த்து நம்பர் இரண்டு.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/06/800-802-805820.html

ஐயா, இந்த இடம் எங்க இருக்கு? எந்த நாட்டில்? பார்க்கும் ஆவலைத் தூண்டி விடுகின்றீர்கள்.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2007/06/800-802-805820.html

சொல்ல மறந்து விட்டேன். இந்தியாவிலும் இப்படி ஒரு இடம் உள்ளது. மும்பையில். அந்த இடத்தின் பெயர் மறந்து விட்டது. கடலில் ஒரு மசூதி. இணைப்பது ஒரு பாலம். பகலில் போகலாம். இரவில் தண்ணீர் வந்து பாலத்தை மூடிவிடும்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2007/06/blog-post.html

நல்ல பாடல். கேட்டு மகிழ்ந்தேன்.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/07/blog-post.html

கோழி ஒரு தட்டிலே
சப்பாத்தி ஒரு தட்டிலே
இருப்பதேனோ இளவஞ்சி வீட்டிலே

நல்லா ஜொஜ்ஜொலிப்பா இருக்கு இளவஞ்சி. இப்பிடி பிரமாதப்படுத்துவீங்கன்னு தெரியாமப் போச்சே..யாருப்பா அது லண்டனுக்கு ஒரு டிக்கெட்டு போடு. :)

// நாமக்கல் சிபி said...
//இது என் முதல் சமையல் குறிப்பு பதிவு !
//

புரியுது தலைவா!

பொண்ணு பார்த்துட்டாங்களா! //

பொண்ணு பாத்துட்டாங்களாவா? ம்ம்ம்...அந்தக் கதைய ஏன் கேக்குறீங்க. இளவஞ்சிய அழவெச்சிப் பாக்கனும்னு உறுதியா இருக்கீங்க போல.

// ஜெஸிலா said...
ஒரு ஆண் சமையல் குறிப்பு பதிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ;-) //

என்னங்க இது...adupadi.blogspot.com போய்ப் பாருங்க. என்ன கொஞ்ச நாளா தூங்குது..ஹி ஹி

// நிஜமாவே நல்லெண்ணை உடம்புக்கு நல்லதா? நல்ல தேடிப் பாருங்க. எனக்கு இருப்பதிலேயே அதிக கெடுதியான எண்ணெய் நல்லெண்ணைன்னு ஒரு மடல் பார்த்த நினைவு. //

இல்லைங்க. எல்லா எண்ணெய்யும் கெட்ட எண்ணெய்தான். ஆனா கெட்டதுல எது கொஞ்சமாக் கெட்டதுன்னு பாத்தா அது ஆலிவ் எண்ணெய்யும் நல்லெண்ணெயுந்தான். உறையாக் கொழுப்பு இரண்டிலுமே கிடையாது. அதுவுமில்லாம நல்லெண்ணெய்ல லெசித்தின் இருக்கு. ஆகையால மத்த எண்ணெய்கள விட இது ரெண்டுமே நல்லது.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/07/blog-post.html

அதெல்லாம் இருக்கட்டும்...இந்த எடின்பரோ கோமான்(ளி இல்ல)னு சொல்றாங்களே..அது நீங்கதானா?

G.Ragavan said...

http://muthuvintamil.blogspot.com/2007/06/blog-post_30.html

பதிவை நானும் ஒப்புக்கொள்கிறேன் முத்து.

இடைத்தேர்தல் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்குத்தான் வெற்றியைத் தரும். எதிர்பார்த்த வெற்றிதான். ஆனால் எதிர்பாராதது விஜயகாந்த் கட்சியின்...என்னங்க பேரு. தேமுகக...இல்ல...தேமுதிக? அதுக்குக் கெடைச்ச ஓட்டுதான். ம்ம்ம்...அதுசரி...எல்லா அரசியல்வாதிகளும் நல்லவங்களா இல்லாதப்ப விஜயகாந்த்த மட்டும் என்னத்த சொல்றது.

அடுத்த தேர்தல்னு வந்தா கண்டிப்பா பாமக திமுகவோடு இருக்காதுன்னு தோணுது. ஒருவேளை, பாமக, மதிமுக, தேமுதிக கூட்டணி வரலாம். காங்கிரஸ் திமுக கூடத்தான் இருக்கும். அவங்களுக்குச் சட்டுன்னு ரிஸ்க் எடுக்கத் தோணாது.

கருணாநிதிக்கு ஓய்வு தேவை என்பது மறுக்க முடியாதது. ஸ்டாலின்னு முடிவு செஞ்சப்புறம் என்ன தயக்கம்? காங்கிரஸ் பயக கேக்கப் போறதில்லை. பேசாம அதச் செய்யச் சொல்லுங்க.

//ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் அறிவித்து பல நாட்களாகிறது. ஒரு ஆட்டோ கூட மீட்டர் போட்டு இயக்குவதில்லை. சென்னையில் திமுக செல்வாக்கை இழந்துவிட்டது என்று பேச்சு இருக்கிறது. இழந்த செல்வாக்கை சுலபமாக மீட்கலாம் கலைஞர் அவர்களே.ஆட்டோகாரர்களை மீட்டர் போட்டு ஓட்ட வையுங்க அது போதும்//

ஆமா. ஆமா. உண்மைதான்.

G.Ragavan said...

http://umakathir.blogspot.com/2007/06/blog-post_30.html

ஓ ஆனையைத் தின்னதுதான் ஒங்களுக்கு வியப்பா? இதுல வியக்க ஒன்றுமேயில்லை தம்பி. ஆனைய மட்டுமா கடவுளாப் பாக்குறோம்? கோழிக்கொடியனடின்னு சொல்லிக்கிட்டே சிக்கம்65 உள்ள தள்றோமே. மச்சாவதரம்னு கும்பிட்டாலும் மீன் விக்காமலா இருக்கு.

உணவு என்பது இல்லாத பொழுது கிடைப்பதைத் தின்பது. நீங்கள் கொடுத்திருக்கும் பாடல் பாலைத்திணைப் பாடலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்தப் பாடலை முன்பு படித்ததில்லை. அதிலும் புலி அடித்த ஆனை. தப்பில்லை.

ஆமையைப் புழுங்கி உண்டாங்களாம். தெரியுமா? அதாவது மண்டைய வெட்டீட்டு...உள்ள குச்சியச் சொருகி...நெருப்புல வாட்டி..வெந்த பிறகு ஓட்டத் தொறந்தா ரெடிமேட் சட்டிக்குள்ள வெந்த கறி...மெளகு உப்புப் போச்சு...அப்படியே திங்கலாம்ல. இதுக்கும் பாட்டிருக்கு. இப்ப ஆமையத் திங்குறமா என்ன?

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/tcs.html

அப்பாடியோவ் 1006 பேரா...அடேங்கப்பா...வாழ்த்துகள் டிசிஎஸ். பணி கிடைத்தவர்களுக்கும் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://lodukku.blogspot.com/2007/07/blog-post.html

// குசும்பன் said...
லொடுக்கு said...
வாங்க ஜிரா,
நம்ம பக்கம் முதன்முதலா வந்துருக்கீங்க. நன்றி!

அப்ப நாங்க என்ன பல தடவை வந்து இருக்கோமா! எங்களுக்கு எங்க வரவேற்ப்பு!!! மின்னல் என்னப்ப இது...எங்களு ஒரு நன்றி எல்லாம் வேண்டாம் பர்ஜிலராப்ல ஒரு வரவேற்ப்பு டிரீட் கொடுத்துவிடுங்க...

டீல்... //

அடடே. அப்ப எனக்கு மட்டும் நன்றியா? அஸ்க்கு புஸ்க்கு. எனக்கும் ட்ரீட்தான் வேணும்.

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2007/06/78.html

நல்ல முயற்சிய்யா...நல்ல முயற்சி. தொடருங்க. அப்பப்ப மக்களையும் நெனைச்சுக்கோங்க. :)

அங்கங்க எழுத்துப்பிழைக இருக்கு. அதுகளையும் சரி செஞ்சுருங்க.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post.html

:) என்ன குமரன் இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க?

பழைய நகைல ஓரளவு நல்ல தங்கம் இருக்கும். புதுசுல செம்புதான நல்லா இருக்கும். இதெல்லாம் யாவார டெக்குனிக்கு. :)

தூத்துடியில அழகர் ஜுவல்லரீல வாங்குன நகைகளைல சென்னைக் கடைகளுக்குக் கொண்டு போங்க. ரொம்பப் பேசாம வாங்கிக்கிருவாங்க.

G.Ragavan said...

http://papaasangam.blogspot.com/2007/07/blog-post.html

// வெங்கட்ராமன் said...
///////
வட பஜ்ஜி பொண்டா
///////

இது என்ன பொண்டா புது அயிட்டமா . . .

எனக்கும் ரெண்டு மெயில்ல அடாச்மெண்டா அனுப்பி வக்கிறீங்களா. . . . . . ? //

ஆகா...ஒரு கொம்பு விட்டுப் போச்சுன்னா இப்பிடியா முட்டுறது :)))) மெயில்ல அட்டாச் பண்றதுக்கு முன்னாடி 50யூரோ அனுப்பி வைங்க. இங்க இந்தியச் சமாச்சாரங்கள் வெல கூட. :)))))

G.Ragavan said...

http://papaasangam.blogspot.com/2007/07/blog-post.html

// G3 said...
@ஜி.ராகவன்

//காபி காபி காபீ....

வட பஜ்ஜி பொண்டா வட பஜ்ஜி பொண்டா சூடான சுவையான வெங்காய பஜ்ஜி....தொட்டுக்க சுறுசுறு கொத்துமல்லிச் சட்டினீய்ய்ய்ய்ய்ய்.... //

உங்க கிட்ட டீ கிடைக்காதா சார்??? //

உண்"டீ"ர் உண்"டீ"ர் என்று எல்லாரும் சொல்லிப் பாராட்டும் டீயும் உண்டு. ஆனா பாருங்க. இன்னைக்குன்னு பாத்து டீத்தூளு தீந்து போச்சு. ஹி ஹி. சாந்தரம் வந்துரும். இப்பக் காபீ...குடிக்கிறீங்களா :)

G.Ragavan said...

http://milakaai.blogspot.com/2007/07/blog-post_8960.html

நல்லதொரு தொடக்கம். சமூகத்தில் அவர்களும் ஒரு பங்குதான். அதை ஏற்றுக்கொண்டு அனைவரும் அரவணைத்து வாழும் நிலை வரவேண்டும் என்று நம்புவோம். விரும்புவோம்.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/07/blog-post.html

// ILA(a)இளா said...
எனக்குள்ள இருக்கிற சிங்கத்தை தூண்டி விட்டுட்டீங்க.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வரேன்... //

இந்தியாவுல சிங்கங்கள் கிர் சரணாலயத்துலதான் இருக்குதாம். அதுனால நீங்க கிர்ர்ர்ர்ர்ர்ர் போறது சரிதான். ஹி ஹி ஹி ஹி

G.Ragavan said...

http://chinmayisripada.blogspot.com/2007/07/and-what-concert.html

Kangalal Kaidhu Sei is a fantastic album. lv the songs....not just one, but all.

thesulavudhe...itz an old song by PS, rite? itz quite tough one too. i wish to hear u singing the same. is it possible to post that in ur blog too?

G.Ragavan said...

http://chinmayisripada.blogspot.com/2007/06/i-watched-sivaji-on-first-day.html

enjoyed the movie!! good. u hv done well in sahara song. but i feel Jayachandran would have been a opt choice to pair..like Kannathil Muthamittal. nice combo.

G.Ragavan said...

http://chinaudioblog.blogspot.com/2006/06/kunguma-poove.html

well...i thought itz a remix again in current trend. eagered to listen how to replaced LRE. but itz not a remix :) nice song.

G.Ragavan said...

http://kalaignarkarunanidhi.blogspot.com/2007/07/blog-post.html

அருமை. அருமை. கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திகழ்ச்சிகள் தொடர வேண்டும்.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/07/blog-post.html

// அதீத ஞாபக சக்தி//

அப்படித் தெரியலையே...ஒம்மள மொதல்ல எட்டு போடக் கூப்புட்டதே நானு. அப்புறந்தான கோவும் தேவும் வந்தாங்க ;)

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/07/blog-post.html

// வழக்கம்போல
தூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை.//

தனிமை என்ற பெயரில்
இறைவன்

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_02.html

அடடே! இதுக்கெதுக்கு மன்னிப்பு. சொந்த வேலையாப் போயிட்டு வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோசம்.

G.Ragavan said...

http://payananggal.blogspot.com/2007/07/blog-post.html

வணக்கம்ணா...ஒரு கும்புடு போட்டுட்டு ஓரமா உக்காந்துக்கிறேன். நீங்க கலக்குங்கண்ணா. :)

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/07/blog-post.html

:) மொதப் பாதி புரிஞ்சது. பயங்கர காமெடி. ஆனா கடைசிப் பகுதி புரியலை.

பேசாம இகலப்பைலயே அடிக்க வேண்டியதுதானே.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/07/blog-post.html

கப்பல் ஏறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு
துளசியம்மா அம்மம்மா
பட்டப் பகல் ரோடாச்சு
ஊரெல்லாம் செந்தாச்சு
என்னம்மா

இப்படியெல்லாம் நீங்க பாடவேயில்லையா!!!!!!!

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/07/blog-post.html

// சுதர்சன்.கோபால் said...
ஜீரா..நீங்க கூப்பிட்டதா நினைவில்லையே?? //


அடடா! அப்ப எனக்குத்தான் நல்ல நினைவாற்றலா! :)

அதெல்லாம் இருக்கட்டும்..நான் கூப்புட்டுதான் நீங்க பதிவு போடனுமா!!! என்ன ஓம்பபொடியாரே இது! நீங்க பிழிஞ்ச எத்தன ஓமப்பொடிகளுக்கு நான் கடலமாவு கரைச்சுக் குடுத்திருப்பேன் :)))

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2007/07/blog-post_7115.html

நல்ல முயற்சி. இது புதுமையானதும் கூட. முயற்சி வெற்ற பெற எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://thekkikattan.blogspot.com/2007/07/blog-post_02.html

தருமி சார்(ம்) தம்பதியினருக்கு எனது வாழ்த்துகள். இறையருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.

G.Ragavan said...

http://vrkathir.blogspot.com/2007/07/blog-post.html

இது ஒருமுறை எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. தனியார் பேருந்து. தூத்துக்குடியிலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்தில். ஓட்டுனரிடம் போய்க் கேட்டேன். உடனே நிறுத்தி விட்டார். அத்தோடு அவரும் அதற்கு இறங்கினார். வண்டி நின்றதும்..நாலைந்து பேர் இறங்கினார்கள். :) ஒருத்தருக்கு வந்தால்......

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/07/50.html

// துளசி கோபால் said...
அரைச் சதத்துக்கு வாழ்த்து(க்)கள். //

நன்றி டீச்சர். உங்களது வாழ்த்தும் ஆதரவும் எங்களை இன்னமும் ஊக்கப்படுத்துகிறது.

// முந்தாநாள் 'தெய்வம்' படம் பார்த்தப்ப உங்க நினைவு வந்தது.அந்தப் படத்தில் முருகன் கொள்ளை அழகு. //

ஆகா. தெய்வம் படம் நானும் பாத்திருக்கேன். அருமையான படம். அருமையான பாடல்கள். ஆனா...என்னோட நினைவு வந்ததுன்னு சொல்றீங்களே. மகிழ்ச்சிதான். முருகனை நினைக்கும் போதுதான் என் நினைவு வந்தது. அது கண்டிப்பா மகிழ்ச்சிதான்.

G.Ragavan said...

http://pakkatamilan.blogspot.com/2007/07/blog-post.html

அப்பாடியோவ்....பதிவுக்கு வந்து பாத்தா ஏற்கனவே பெருங்கும்மி ஓடிக்கிட்டிருக்கு. ;)

// அப்புறம் Tamil Blog'னு Search பண்ணேன், அப்போதான் ஒரு பதிவும், ஜிரா பதிவும் வந்துச்சு, அதிலே ஆரம்பிச்சது தான் இந்த வரலாற்று பயணம்... //

ராமேய்....ஒனக்கு என்ன கொடுமை செஞ்சேன் நானு? என்னோட பதிவப் படிச்சிட்டு வலைப்பூவுக்கு வந்தேன்னு சொல்லீட்டியே. மெரட்டல் கால்...மெயிலா வருதப்பா....இப்பிடிப் பண்ணீட்டியே ராம். :(((((((((((((((((((

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2007/06/8.html

ரொம்ப நாள் கழிச்சு ஒங்க பதிவைப் படிக்கிறாப்புல உணர்வு. நேரங்கிடைக்குறப்போ ஏதாவது எழுதுங்க.

எட்டு போட்டு நீங்களும் பாஸாயிட்டீங்க. வாழ்த்துகள்.

கடவுள் நம்பிக்கை இல்லாமை என்பது தவறல்ல. நாம நல்லவங்களா இருந்தாப் போதும். எத்தன பூஜை செஞ்சோம் அப்படீங்குற கணக்குக்கு மதிப்பு பூஜ்யந்தான்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/07/50.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சாதனையாய் நினைத்தபடி சோதிக்கிறார் உன்னை
இவர் சதிராட்டம் காண்பதற்கோ அனுப்பி வைத்தாய் என்னை//

அருமையான வரிகள்!
பாடலாசிரியர் யார் ஜிரா? //

உண்மைதான் அருமையான வரிகள். பாடலாசிரியர் யாரென்று கண்டுபிடிப்பதில் சிறிய பிரச்சனை. படத்தின் எழுத்தோட்டம் பார்த்தேன்.

அமரர் கவியரசு கண்ணதாசன்
அமரர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (காயாத கானகத்தே)
கவிஞர் வாலி
கவிஞர் கே.பி.அறிவானந்தம்
கவிஞர் தமிழ்நம்பி
வேம்பத்தூர் கிருஷ்ணன்

இப்படி ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் காயாத கானகத்தே. ஆகையால் அவரை விட்டுவிடலாம். வரிகளையும் மற்ற பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் கவியரசராக இருக்கவே வாய்ப்புள்ளது. இந்தப் படத்தில் இன்னும் மூன்று பாடல்கள் மிகச் சிறப்பாக இருக்கும்.

1. காற்றின் அணுவை மூச்சாக்கி என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்
2. வேலுண்டு வேலுண்டு வேலய்யா இனி வினையில்லை வினையில்லை முருகய்யா

இந்த இரண்டு பாடல்களும் வாணி ஜெயராம் பாடியுள்ளார்.

மற்றொரு பாடல் இசையரசி பி.சுசீலா பாடியது. "முத்துக்குமரனை நித்தம் பணிந்தவர் சித்தந்தனில் பக்திக் கடலது" என்ற பாடல். மிகவும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் போகும். அந்தப் பாடலும் முருகனருளுக்கு வரும். :)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/06/blog-post_28.html

பெரியாழ்வாரின் பெயருக்குக்குப் பின் இப்படியொரு பெரிய செய்தி இருக்குமென்று தெரிந்து கொண்டேன். சிறப்பு. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/3.html

போச்சு போச்சு...இப்படியெல்லாம் உண்மையப் பேசலாமா? பேசுனா சும்மா விடுவாங்களா!

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/07/195.html

முந்தி பெல்ஜியம்ல இருந்தப்ப இப்பிடித்தான். அங்க நாலஞ்சு மெஷின் இருக்கும். எதுலயாவது காசப் போட்டு தொவைக்கனும். அதுவே தொவச்சு...காய வெச்சிக் குடுத்துரும். நாங் கொஞ்சம் வீம்பாச்சா...அப்பல்லாம் கைலி கெட்டுறது. அதுலயே போயி துணியப் போடுறதும்..எடுக்குறதும்...மக்கள் நெனச்சிருப்பாங்க..எந்தூர்ரா இவன்னு :)))) ஆனா இப்ப கைலியே மறந்து போச்சு. பஜ்ஜாமாதான்.

நம்ம நல்ல வேளைக்கு இங்க நெதர்லாந்துல வீட்டுக்குள்ள வாஷிங்மெஷின் இருக்கு. :) தப்பிச்சேன்.

இந்த பதிவுல ஸ்பெஷல் என்ன தெரியுமா? பொதிஞ்சிருக்குற நகைச்சுவைதான். படிக்க நல்லாயிருந்தது.

G.Ragavan said...

http://bhaarathi.net/sundara/?p=318

யக்காவா! இதுதான் யக்காவா! நல்ல அழகா இருக்கு. தொட்டால் முள் குத்தும். தொடாமல் படம் பிடித்தீர். :)

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/07/50.html

// தி. ரா. ச.(T.R.C.) said...
மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா............
மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா
அந்த மனங்களையும் நீ மாற்றக் கூடாதா தலைவா
இன்றைக்கும் பொருந்துவரிகள்.50 100 ஆக வேண்டும் வாழ்த்துக்கள் //

நன்றி தி.ரா.ச ஐயா. இந்த ஐம்பதில் உங்கள் பங்கும் உண்டே. :) நாம் கூடி இழுக்கும் தேர்தானே..

// வல்லிசிம்ஹன் said...
நூறில் பாதியும் முருகன் முழுவதும்.

வேலுண்டு வினையில்லை படம் மிக நம்பிக்கையைக் கொடுக்கும். வார்த்தைகளின் வலிமை அப்படி. வாழ்த்துகள் ராகவன். //

நன்றி வல்லியம்மா. உண்மைதான். வேலுண்டு வினையில்லை என்று நினைத்த பொழுதிலேயே முன்வினை இவ்வினை வருவினையாவும் தொலையுமே!

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/3.html

செல்வன், எப்பொழுதும் கீரைக்குழம்பை விட உருளைக்கிழங்கு வறுவல் மொறுமொறுவென்றும் இருக்கும்..நன்றாகவும் விற்கும். நாசர் கீரைக்குழம்பு வைக்காம இருந்தாலும் பிரச்சனையில்லை...அவரையும் வறுவலு வறுக்கச் சொல்றீங்களே...கொழுப்புப்பு! நெஞ்சுக்கு நல்லதில்லையே.

நாசரு நல்லபடம் எடுக்கலைங்குறதுக்காக அவர் சொல்ல வர்ரது தப்பாயிராது. அவர் சரியான ஆளாங்குற விட...அவர் சொன்னது சரியான்னு மட்டுந்தான் நான் இங்க பாக்குறேன். அந்த வகைல அவரு சொன்னது எனக்குச் சரீன்னுதான் படுது.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/07/blog-post_03.html

ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். கருத்தை எதிர்ப்பதற்கும் கருத்து சொல்கிறவரை எதிர்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

// திரைபடம் எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர் ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம் //

இதுல பாத்தீங்கன்னா....இசையரசி பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி நன்றாகப் பாடுறாங்கன்னு எழுதுனா ஆந்திரா ஜால்ரா பட்டம் கிடைக்காது. சின்னக்குயில் சித்ரா/ஜெயச்சந்திரன் நல்லா பாடுறாருன்னா மலையாள ஜால்ரா பட்டம் கிடைக்காது. அது ஏங்க? நாராயணா நாராயணா....

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/07/blog-post_03.html

//// திரைபடம் எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர் ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம் //

இதுல பாத்தீங்கன்னா....இசையரசி பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி நன்றாகப் பாடுறாங்கன்னு எழுதுனா ஆந்திரா ஜால்ரா பட்டம் கிடைக்காது. சின்னக்குயில் சித்ரா/ஜெயச்சந்திரன் நல்லா பாடுறாருன்னா மலையாள ஜால்ரா பட்டம் கிடைக்காது. அது ஏங்க? நாராயணா நாராயணா.... //

டிஸ்கி போடம விட்டுட்டேங்க. எனக்கு பாலு யேசுதாஸ் பாட்டுகள் பிடிக்கும். நேத்து போட்ட முருகனருள் பாட்டு கூட யேசுதாஸ் பாடுனதுதான். மேல சொன்னது விவாதத்துக்கு.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/07/blog-post.html

எட்டு எட்டுன்னதும் தட்டுத் தடுமாறி ஓடியாந்தேன். இப்பிடி எட்டு போட்டுட்டியேம்மா.....

கோ, இது 0.8 இல்ல....அம்மணிக்கு இருக்குற தெறமைக்கு இது வெறும் 0.000008தான்.

அது சரி...ஒரே ஜெயமயமா இருக்குதே! வெற்றி உன்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது போல.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/07/226.html

இதெல்லாம் ஜகஜம் தருமி சார். எரியிற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி!

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/07/blog-post.html

திராச ஐயா, ஆசையைக் கிளப்புகின்றீர்களே.....முருகா. சிறுவாபுரி முருகன் கோயில் தரிசனம் கிட்டும் நாள் எந்நாளோ!

பாடலைக் கேட்டு மகிழ்கிறேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2007/06/8.html

// ramachandranusha said...
ராகவா, சின்ன மாற்று கருத்து. //

உஷா, இங்கதான் ஒரு திருத்தம். ராகவான்னு எல்லாரும் கூப்டப்ப ஜிரான்னு கூப்டு பேர மாத்தீட்டு..இப்ப எல்லாரும் அப்படிக் கூப்புடுறப்போ ராகவான்னு கூப்புடுறீங்களே :)

// நல்லவங்கன்னு யாரை சொல்வது? //

அட..அது தெரிஞ்சா நம்ம நல்லவங்களாயிர மாட்டமா?

// எல்லாரும் சதவீத மாறுபாடு இருந்தாலும், சுயநலமிகளே!
பிறகு எல்லாருக்கும் நல்லவங்களா திகழுவது முடியாத செயல். நம்ம மனசுக்கு சரின்னு பட்டது, அதனால பிறருக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா... ரைட்டு அவ்வளவே. நீயும் சொல்லிட்ட இல்லே, நான் ஏன் ஏத்திஸ்ட் ஆனேன் என்று ஒரு பதிவு
போட்டு விட வேண்டியதுதான் :-) //

ஆச்சு. காத்திருக்கோம்.

G.Ragavan said...

http://osho-tamil.blogspot.com/2007/07/1-1.html

பதிவைப் படிச்சுட்டேன். பயனுள்ள தகவல்.

தொடங்குதல் மிக எளிது
முடிப்பதுதான் பெரிய தொல்லை

என்று வைரமுத்து எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/07/blog-post.html

கூச்சம்...ம்ம்....இதெல்லாம் எதுக்கு...அந்த மாதிரி கப்பு கைல இருக்கும் போது எதுக்குக் கூச்சம்?!

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2007/07/blog-post_04.html

:) நல்ல அண்ணன். தானாட மறந்தாலும் சதையாடும் என்பார்கள்
தாளாத பாசத்தில் அண்ணா என்றழைப்பார்கள்....

G.Ragavan said...

http://radhasriram.blogspot.com/2007/06/super-8_28.html

எளிமையான எட்டு போட்டுட்டீங்க. நல்லாருக்கு.

அப்பா பத்திப் படிக்கும் போது மனசு கஷ்டமாயிருக்கு. சமீபத்துல எங்க அப்பாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அப்ப ஆஸ்பித்திரி ஐசியூல அவரை அரைமயக்கத்துல பாக்கும் போது..அப்பப்பா....மனசுக்குள்ள என்னென்ன உணர்ச்சிகள். அத்தனையையும் முகத்துலயோ ஒடம்புலயோ காட்டாம....முருகா...நான் விடுங்க..எங்கம்மா...அவங்களும் அதே மாதிரிதான். இப்ப அப்பா நல்லாயிருக்காங்க. ஆனா எங்கம்மா துணிச்சலா எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க. மனசுக்குள்ள மருக்குன்னு இருந்திருந்தாலும் காட்டிக்கலை.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/07/239-007.html

நல்லபாட்டு. ரிக்ஷாக்காரனை மனதில் வைத்து எடுக்கபப்ட்ட பாடல்.

G.Ragavan said...

http://agiilankanavu.blogspot.com/2007/07/blog-post_9844.html


:) இந்த வீடியோப் பைத்தியம் இருக்குதே..அப்பப்பா...ஒங்களுக்கு வீடியோன்னா எனக்கு சிடி. அப்பத்தான் சீடியெல்லாம் வந்த புதுசு. ஒரு கடையில சிடி ரெக்கார்டிங் (சிடில இருந்து காசெட்ல பதிவு பண்றது) குடுக்கப் போயிருந்தேன். அங்க இருந்தவர...அண்ணே சிடியக் காட்டுங்களே பாக்கனும்னு சொன்னேன். அவரும் காட்டுனாரு. எத...ஒரு சிடியை கயித்துல கெட்டித் தொங்க விட்டிருந்தாங்க....எனக்கு வந்த கடுப்பு இருக்கே......

ஆனா நீங்க சொல்ற மாதிரி வீடியோ கேசட் திருவிழாக்கள் எங்களுக்கும் நெறைய நடந்திருக்கு. பேயாப் படம் பாப்போம்ல. என்ன படமா இருந்தா என்ன...எல்லா படமும் நம்படம்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_03.html

உருத்திராட்சப் பூனை. இதை நேரிலேயே பார்த்திருக்கிறேன். சிற்பங்கள் மிக அழகானவை. மாமல்லபுரம்....சிற்பக்கூடம். சமீபத்தில் முருகன் கோயில் ஒன்றை அகழ்ந்திருக்கின்றார்களாமே...அதைப் பார்த்தீர்களா?

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/07/blog-post.html

அருமையான தகவல். உண்மையிலேயே யோசிக்க வெக்கிற கேள்வி. அதுக்கேத்த விடை. எளிமையா படமெல்லாம் போட்டுச் சொல்லீருக்கீங்க. நன்றி.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2007/07/blog-post_04.html

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் வேலைக்கு வந்த புதிதிலும் இரத்தம் கொடுத்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி அல்ல. ஆனால் ஏதாவது மையம் வைக்கும் பொழுது. அதிலும் என்னுடையது O-ve. ஆனால் இப்பொழுது கொடுப்பதில்லை. சொரியாசிஸ் உள்ளவர்கள் இரத்தம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆகையால் விரும்பினால் தானம் கொடுக்க முடியாது.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2007/07/blog-post_05.html

கும்மியடிக்கனுமே
பிள்ளைகளா
கும்மியடிக்கனுமே
குனிஞ்சி நெளிஞ்சி
வளைஞ்சு கொழஞ்சி
கும்பியடிக்கனுமே
பிள்ளைகளா
கும்மியடிக்கனுமே

இந்தப் பதிவுல என்னென்ன உள்வெளிநடுமேல்கீழ்முன்பின் குத்துகள் இருக்கோ சாமியோவ்....எனக்கு மட்டும் உள்ளர்த்தம் புரியவே மாட்டேங்கு!

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/07/blog-post.html

// இதைப் படமாக எடுப்பது பற்றியெல்லாம் பலர் பேசினார்கள்! வந்தியத் தேவனா யாரு நடிக்கலாம்?
என்னைக் கேட்டா, எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பதிவரின் பெயரைத் தான் ரெக்கமண்டேஷன் செய்வேன்! //

ம்ம்ம்...என்னால ஊகிக்க முடியுது! அவந்தானா...அவந்தானா...நமீதன்தானே? ;)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/07/blog-post.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கிழிஞ்சுது போங்க!
நமீதனைப் போட்டாக்கா படம் முழுக்க வாய் விட்டுச் சிரிக்கக் கூடாதுன்னு கண்டிசன் வேற போடணுமே! வந்தியத் தேவன் அடிக்கடி நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிற பாத்திரமாச்சே! :-) //

ஹா ஹா ஹா அது உண்மைதான். பேசாம நமீதனை மதுராந்தகனாக்கீரலாம். அழகுக்கு அழகு அப்படியொரு பொருத்தம். :)

// நீங்க இவ்வளவு பெரிய தியாகியாக இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சே ஜிரா! வர லட்சுமியை யாராச்சும் வேண்டான்னு சொல்லுவாங்களா? இப்பிடி தாரை வார்த்துக் கொடுக்கீங்களே! :-) //

ஓ எனக்கா..எனக்கா...எனக்கே எனக்கா...நம்ப முடியவில்லை. இல்லை...இல்லை........

பாவம் வந்தி

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/3.html

// கேள்வி. நாசர் உளறுவதுபோல் அவதாரத்துக்கு பதில் அருணாச்சலத்துக்கு விருது தரவில்லை. அவதாரம் வந்தது 1995ல்.அருணாசலம் வந்தது 1998 அல்லது 1999.மனிதர் எந்த உலகில் வாழ்கிறார் என்பதே தெரியவில்லை. //

யாரது? செல்வனா? செல்வனா சொல்லைப் பிடித்து பொருளை விடுத்து விவாதம் செய்வது!

தில்லானா மோகனாம்பாளை அனுப்பல....ரிக்ஷாக்காரனை அனுப்பீருக்காங்கன்னு சொன்னா..அட கதாநாயகன் போட்டிக்கு....தேசீய விருது குடுத்தாங்களே....அப்படிச் சொன்னா தில்லான மோகனாம்பாள் வந்த வருசம் என்ன..ரிக்ஷாக்காரன் வந்த வருசம் என்னன்னு கேப்பீங்களோ! itz an agony about the attitue which is not changing even after decades. நல்லதைச் செய்யலைங்குறது வேற...ஆனா நல்லது செய்யனும்னு நெனைக்குறதே இல்லைங்குறதுதான் இங்க வருத்தம். அதுக்கு ஒரு வழி செய்யக்காணோம். தமிழ் சினிமாவ ஒரு எட்டு முன்னாடி நகத்த ஏதாவது செஞ்சாங்களா..இவங்க மட்டும் நூறு கோடீன்னு முன்னால நகந்துட்டாங்க...அவனவன் தெருவுல கெடா வெட்டுறான்..பாலூத்துறான்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/07/8-8.html

நல்லா இருக்கு...எட்டு பதிவுல போட வேண்டிய தகவல்களை ஒரு பதிவுல போட்டு அசத்தீட்டீங்க. :)

அந்த டீக்கு நாலரை ரூவா கொடுத்த கதை சூப்பரு.

திமிங்கீலம் குட்டி போடுறதா...இருந்து பாத்திருக்கலாமே...

G.Ragavan said...

http://halwacity.com/blogs/?p=265

// “காசு போட்டு படம் எடுக்குற எங்களுக்கு தாண்டா தெரியும்” என்று புலம்புவது கேட்கிறது.

“நீ படம் எடுக்கலேன்னு யார் அழுதா? காசு போட்டு படம் பார்க்கும் எங்களுக்கும் தெரியும்னு” எதிர் குரல் விடுகிறேன். //

இத..இத..இதத்தான் சொல்றோம். ஆனாலும் கமர்ஷியல் கமலக்கண்ணன்களுக்குக் கோவம் வருதே. இதச்சொன்னா நம்மல்லாம் ஏதோ ஆர்ட் பில்ம் அனந்தராமன் ஆயிர்ரோம். என்னவோ போங்க.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/07/12.html

பிரபா பாடல்கள் முழுமையாக கேட்கவில்லையே. ஏற்றுமதியில் பிரச்ச்னை போல.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/07/blog-post_04.html

சாரங்கி என்ற இசைக்கருவியைப் பற்றிய நல்லதொரு அறிமுகம். இந்த இசைக்கருவியை தமிழ்த்திரையிசையில் முதலில் பயன்படுத்தியது மெல்லிசை மன்னர் என நினைக்கிறேன். கர்ணன் என்ற படத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். இரவுல் நிலவும் வளரட்டுமே என்ற பாடலில் மிகத் தெளிவாகத் தெரியும். அந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களிலும் சாரங்கி உண்டென்று நினைக்கிறேன். உள்ளத்தில் நல்ல உள்ளத்திலும் கூட. நீ கொடுத்திருக்கும் பாடல்களும் நல்ல எடுத்துக்காட்டுகளே.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/07/blog-post.html

அட்டடடடாஆஆஆஆஆஆ! ஒரு அப்பாவிப் பையன்னு நெனச்சிக்கிட்டிருந்தேனே...இதெல்லாம் எனக்குத் தெரியாமப் போச்சேய்யா! வெட்டிங்குறதனாலயோ என்னவோ....தவகல்வகள வெட்டி வெட்டி வெச்சிருக்க.

எனக்கு ஒரு டவுட்டு?
// ஐஸ்வர்யா ராய் அண்ணனை துரத்தி துரத்தி டாவடித்தது நாடே அறியும். "அவர் சட்டைய கழுட்டினா சல்மான் கான், சட்டைய போட்டா ஷாருக்கானு" அண்ணி கொடுத்த ஸ்டேட்மெண்ட் //

யாரோட சட்டைய? ஐஸ்வர்யா ராயோடதையா!!!!!!!!!!! இதெல்லாம் சொல்லவேயில்லையே!!!! சிவிஆர்!?!?!?!?!!?

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/07/blog-post_08.html

அடடா! ஆகா..படத்தப் பாக்கைலயே பகபகன்னு பசிக்கே...இளவஞ்சி வீட்டுக்குப் போனா....அடடா! பிரமாதங்க..இப்பிடி கலக்குறீங்க. சூப்பரு.

G.Ragavan said...

http://imohandoss.blogspot.com/2007/07/blog-post_10.html

கேட்டது அப்பாதான? அதனாலதான். ஈன்ற பொழுதினும் தன்னுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய். அந்த உவப்ப அம்மாவுக்குக் குடுக்கதான்..அப்பாவை மண்டி போட்டு உக்கார வெச்சு மந்திரம் சொன்னான். :) இப்பவும் முருகன் ஆணாதிக்கவாதியா? :)))))))))))

G.Ragavan said...

http://godshavespoken.blogspot.com/2007/07/blog-post_09.html

நான் ஒன்னும் பேச மாட்டேன். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். எனக்கு ஒன்னும் தெரியாது. ஆன் ஆர்பரும் தெரியாது பெண் ஆர்பரும் தெரியாது. எனக்கு ஒன்னும் தெரியாது. நான் பேச மாட்டேன். நான் அமைதியா இருப்பேன். ஆமா. ஆமா. ஆமா.

G.Ragavan said...

http://imohandoss.blogspot.com/2007/07/blog-post_10.html

// மோகன்தாஸ் said...
இதெல்லாம் சால்ஜாப்பு, நான் ஒத்துக்க மாட்டேன். //

ரொம்ப நல்லது. அத ஒங்க விருப்பத்துக்கே விட்டுர்ரேன்.

// பெண்கள் கிட்ட பிரணவ மந்திரத்தைச் சொல்லக்கூடாதுன்னு நினைச்ச முருகன் ஆணாதிக்கவாதியில்லாம எப்படி ;) //

அப்படியா? பெண்கள் கிட்ட முருகன் சொல்லக்கூடாதுன்னு சொல்லீருக்காரா? அடடே! இத எனக்குச் சொல்லலையே அந்த முருகன்.

// வேணும்னா அந்தக்காலத்தில் ஆணாதிக்கம் பெண்ணியம் எல்லாம் இல்லேன்னு வேணும்னா சொல்லுங்க //

பதிவு அதப்பத்திப் பேசுதா என்ன? எனக்கு நீங்க வெச்சுருக்குற உள்குத்து புரியலை. எனக்குத் தெரிஞ்சதச் சொல்லியாச்சு. வர்ரேஏஏஏஏஏன். :)

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2007/07/blog-post_09.html

அடடா! ஜி...போட்டுத் தாக்குறியேப்பா..இதல்லாம் உண்மையான்னு மட்டும் சொல்லீரு ;)

G.Ragavan said...

http://jannal.blogspot.com/2007/07/blog-post_2256.html

உங்கள் வலைப்பூவை இப்பொழுதுதான் முதன்முறை படிக்கிறேன். நீங்கள் மூத்தவலைப்பதிவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வலைப்பூவைத் தொடருங்கள். ஏனென்றால் இதுவும் ஒருவகை ஊடகம். உங்களைப் போன்ற பிரபல ஊடகர்கள் இங்கும் வருவது இருவகை ஊடகங்களுக்கும் பாலம் உருவாக்கும். நீங்கள் சொன்ன கட்டுப்பாடுகளுக்குட்பட்டே இயங்குங்கள். அது போதும்.

வலைப்பூ என்பது இந்த உலகத்தைப் பிரதிபலிக்கிறது என்றே நினைக்கிறேன். உலகத்தில் என்னென்ன தவறுகள் சரிகள் நடக்கிறதோ அதெல்லாம் இங்கும் இருக்கிறது. sampling theory. என்ன இங்கு கூட்டம் குறைவாக இருப்பதால் வினைகளும் எதிர்வினைகளும் நமக்கு எளிதாகத் தெரிந்து விடுகின்றன. உலகத்தில் நமக்கு எல்லாம் தெரிவதில்லை. அதே நேரத்தில் எதிர்க்கருத்தை எதிரியின் கருத்தாக நோக்காமை என்ற ஆரோக்கிய சூழல் கண்டிப்பாக வளர வேண்டும். வரும் என்று நம்புவோம்.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/07/7.html

சிவிஆர். உலகத்துல இத்தன பேரு பாத்திருக்காங்களா? அப்ப நானும் உண்மையச் சொல்லீர்ரேன்.

தூத்துக்குடியில சின்ன வயசுல...ஊரோட சின்ன வயசுல இல்ல..என்னோட சின்ன வயசுல...வீட்டுக்குப் பின்னாடியிருந்த முருங்கை மரத்து அரிப்புழுக்களுக்குத் தீ வெச்சுக்கிட்டிருந்தேன். அப்ப திடீர்னு ஏதோ சத்தம்...என்னடான்னு மேல பாத்தேன். ஏதோ பறக்குறாப்புல இருந்துச்சு. ஊதா...மஞ்சள்...பச்சைன்னு மாறிமாறி ஒளிருச்சு. என்னடான்னு பாத்துக்கிட்டிருந்தேன். நாங்கூட ஏதோ முருகன் மயில் மேற போறாருன்னு நெனச்சுக் கும்புட்ட்டேன். ஆனா இப்பல்ல தெரியுது...அது ஒரு பறக்கும் தட்டுன்னு...மேட்டர் இவ்வளவு பெருசாயிருக்கும்னு தெரிஞ்சிருந்தா அப்பவே ஒலகத்துக்குச் சொல்லீருப்பேன். ம்ம்ம்...இப்ப சொன்னா நம்பவாப் போறாங்க! :(

கதைய இப்பிடிப் பாதீல விடலாமா? ரொம்பத் தப்பு. ரொம்பவே தப்பு.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/07/07.html

மிகவும் அருமையான பாடல். தமிழ்த்திரையிசையில் மெல்லிசை மன்னருக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு. பல புதுமைகளைச் செய்தவர். தம்பட்டங்கள் இல்லை. எல்லாம் போகிற போக்கில் செய்திருக்கிறார். ஆகையால்தான் இசைஞானியும் இசைப்புயலும் ஏனைய இசையமைப்பாளர்களும் அவரை மதிப்பாக வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பாட்டும் மிக இனிமையானது. தேனில் குரலெடுத்து இனிமைத் தமிழெடுத்து இசையரசி பாடுகையில் தான் மறந்து நாம் மறந்து உலகம்தாம் மறந்து மகிழ்கிறோம்.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/07/blog-post_04.html

ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? பதிவைப் படிச்சிக்கிட்டே வரும் போதே...வழக்காமான இளவஞ்சி பாணி சோகம் வரும்னு எதிர்பார்த்துக்கிட்டேயிருந்தேன். வந்திருச்சு. வந்திசுச்சுன்னு மகிழ்ச்சியா இருக்க முடியுதா!!! இல்லையே. ம்ம்ம்...ஏன்? ஏன்? ஏனிப்படி ஏணிப்படியில ஏத்தி கீழ தள்ளூறீங்க? பாவம்...எல்லாரும் அழுறாங்க பாருங்க. இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம். :(

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2007/07/3-1.html

மகதி ராகத்தினை முதலில் திரையிசையில் பயன்படுத்தியது மெல்லிசை மன்னர். எந்தப் பாட்டு தெரியுமா? அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம்.....அபூர்வ ராகம். பாலமுரளி கிருஷ்ணாவோடு பேசி இந்த ராகத்தைப் பயன்படுத்தியாக மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/07/xx.html

இந்தப் பிரவீன்காந்த் படத்தையும் இன்னன்ன காரணங்களுக்குப் பாப்பேன்னு நீங்க சொல்லும் போதே ஒங்க தற்கொலை எண்ணத்துக்கான காரணம் மனப்பிரழ்வின் மறுபக்கச் சிறுமையின் நிழல் என்பது புரிந்து விடுகிறது. சேச்சே! ஒளர்ரேன்ல. ஒங்க விமர்சனம் படிச்சதுக்கே இப்பிடீன்னா..படத்தப் பாத்தா! ஐயாடியோவ்....விடுங்க சாமி விடுங்க...

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/07/ii-71.html

என்னது....இவரு சாவி இருக்குங்குறாரா...ம்ம்ம்..குழப்பத்தின் உச்சகட்டம் போல இருக்கு.

ஒங்க வீட்டுக்காரம்மா யோசிச்சுத்தான் பேசியிருக்காங்க. இந்தப் பதிவுல அவங்களுக்கு என்னோட பாராட்டைத் தெரிவிச்சிக்கிறேன்.

G.Ragavan said...

http://payananggal.blogspot.com/2007/07/blog-post_10.html

இந்தப் பஞ்சு டயலாக்கு நெருப்பு டயலாக்கே நமக்குப் பிடிக்காத விஷயங்க...ஹி ஹி...வெண்பா எழுதத் தெரியாதுன்னு எப்படிச் சொல்றதாம். :)

// இப்னு ஹம்துன். said...
காசாசை மிக்கோர் கணினி விளையாட்டு
பேசாமல் போனால் பொறுப்பில்லை - ஆசையில்
கண்மூடி வாக்கினை கொட்டிய மாந்தரே
எண்ணிக்கை ஏழா இயம்பு! //

இப்னு ஹம்துன், நல்ல வெண்பா. முதலிரண்டடி எப்படிப் பொருந்துகின்றதென்று புரியவில்லை. ஆனால் கடைசி இரண்டடிகள் மட்டுமே அழகான வெண்பாதானே.

கண்மூடி வாக்கினைக் கொட்டிய மாந்தரே
எண்ணிக்கை ஏழா இயம்பு

G.Ragavan said...

http://enakkul-oruvan.blogspot.com/2007/07/blog-post.html

:) எட்டும் எட்டும் ஒன்று...உன்னோட பதிவென்று ஒன்று :)

நல்லா எழுதீருக்கப்பா. கலக்கல். என்னுடைய பாராட்டுகள்.

தீப்பொறின்னாலே கிழிக்கனும்னு தெரியாதா! :))))))))))))))

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/07/07.html

// இங்கே நேயர் விருப்பம் எல்லாம் அனுமதிக்கப் படுமா??

கற்பூரமுல்லை ஒன்று - கேளடி கண்மணி //

என்ன கேள்வி ஓமப்பொடியாரே. இதெல்லாம் கேக்கலாமா? கண்டிப்பா உண்டு. உங்க விருப்பத்த ஏற்கனவே சிவிஆர் எடுத்துக்கிட்டாரே. :)

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2007/07/blog-post_09.html

1. தெரியாது
2. தெரியாது
3. தெரியாது
4. தெரியாது
5. தெரியாது
6. தெரியாது
7. தெரியாது
8. தெரியாது
9. தெரியாது
10. தெரியாது

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/07/blog-post_1086.html

நன்றி ரவி. மிகவும் அருமையான பாடல். எனக்குப் பிடித்த பாடலென்று உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ. :)

வாழ்க்கை என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் இது. இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்.

அப்படியே அடுத்த நேயர் விருப்பம் கேட்டுற வேண்டியதுதானே. :) பாலு, ஜிக்கி, வாணி ஜெயராம் பாடுன பாட்டு போடுங்களேன். :)

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/07/6.html

நல்ல தொகுப்பு. மிகவும் ரசித்தேன். எனக்கும் பிடித்த பாடல்கள்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/07/blog-post_10.html

பாட்டில் பிழையில்லை. அது கொண்ட பொருளிலும் பிழையில்லை. நீங்கள் கொண்ட பொருளில்தான் பிழையுள்ளது.

சாதிகள் இல்லையடி பாப்பா...சரி புரிஞ்சது

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம். அப்படீன்னா..இந்தக் குலம் தாழ்ந்தது...அந்தக் குலம் உயர்ந்ததுன்னு சொல்றது பாவம். அப்படிச் சொல்லாதே.

அதாவது பல் சொத்தை கெடுதி. மிட்டாய் தின்னா பல் சொத்தை வரும்னு பாரதியார் சொல்றாரு. நீங்க மிட்டாய் தின்னா மட்டுந்தான் பல் சொத்தை வருமான்னு கேக்குறீங்க.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/07/blog-post_10.html

கோவி, தமிழ்ப்பாக்களுக்குப் பொருள் கொள்கையில் அப்படியே பொருள் கொள்ளாதீர்கள். அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளும் படி எந்தக் கவிஞனும் எழுத மாட்டான். பூட்டுவிற்பொருள்கோள் வகைன்னு ஒன்னு உண்டு. அந்த வகை இந்தப் பாட்டுல நீங்க சொல்ற வரிகள். அவசரப்பட்டு படிக்காதீங்க. கொஞ்சம் ஆழப்படிங்க. இது என்னுடைய வேண்டுகோள்.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/07/gk.html

சிவபாலன், கோவியின் கேள்வியிலேயே தவறு உள்ளது என்பது என் கருத்து. அங்கேயே பதிலும் சொல்லியிருக்கிறேன்.

G.Ragavan said...

http://milakaai.blogspot.com/2007/07/blog-post_6012.html

அடடா! என்னமா நடிச்சிருக்காங்க. சூப்பரு. இது ராமுவா ராபியா? இவங்க தமிழ்ல கூட நடிச்சாங்கன்னு நெனைக்கிறேன். ஆனா கடவுள் புண்ணியத்துல பிரபலமாகலை.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2007/07/blog-post_10.html

இது ஐசு. அப்படியே வட்டமா ஒறஞ்சிருக்கு. அதான் அப்படி. சின்ன வயசுல பிரிஜ்ஜுல சிவலிங்கம் வரும். அதுக்குப் பூவெல்லாம் போட்டு அலங்காரம் செஞ்சிருக்கேன். :)))))))))))

G.Ragavan said...

http://pithanantha.blogspot.com/2007/07/001.html

உபத்தின் உபவாய உபத்தேய உபகார சிப்ஸ்காரம் என்ற உபதேசத்தை இவ்வளவு அழகா விரிச்சி யாரும் சொன்னதில்லை.

க்காகோக்காகாகககாகீக்கோகா....இது பறவை பாஷை. ஒங்கள வாழ்த்துறேன். வாங்கிக்கோங்க.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2007/07/3.html

நல்ல பாடல். மிகவும் இனிமையான பாடல்.

G.Ragavan said...

http://srinoolakam.blogspot.com/2007/07/1995.html

வேதனையான நிகழ்வு. இவைகள் எல்லாம் என்று முடியுமோ! தமிழர் வாழ்வு என்று அமைதி பெறுமோ!

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2007/07/blog-post.html

:) படிக்கும் பொழுதே ஒரு மகிழ்ச்சி. :) விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவராக இருந்திருக்கின்றீர்கள். நான் விளையாட்டென்றாலே அந்தப் பக்கமே போக மாட்டேன். அப்படியொருவன்.

குடிகாரன் வேடம்...ம்ம்ம்...சரி சரி

// "அப்பர் ஓடு",
"சம்பந்தர் விடாதை"
என்று சிவனே என்று இருந்த நாயன்மார்களை மைதானத்துக்கு இழுத்து வேடிக்கை நடக்கும் காலம் //

ஹா ஹா ஹா

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_11.html

// குமரன் (Kumaran) said...
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள். //

இது ஒன்று போதும் என்று நினைக்கிறேன். இதுதான் என்னுடைய கருத்தும். பாரதி சொல்லிய அனைத்தும் சரியென்று சொல்ல இயலாது. ஏனென்றால் பாரதி சொன்ன அனைத்தும் தெரியாது. இந்தப் பாடலை எப்படிப் பொருள் கொள்ள வேண்டுமோ அப்படிப் பொருள் கொண்டால் சரியானது என்பதே என் கருத்து. பாரதி தெய்வமல்ல. மனிதன். கவிஞன் என்பதை மறக்கக்கூடாது.

G.Ragavan said...

http://gragavan.blogspot.com/2007/07/3-1.html

இதோ இன்னொரு 3 இன் 1 பதிவு போட்டாச்சு. :) இந்தப் பதிவுக்கும் லிங்க் குடுத்திருக்கேன்.

G.Ragavan said...

http://vettrikandaswamy.blogspot.com/2007/05/blog-post_10.html

மனதில் வேதனையூட்டும் படங்கள். அப்பப்பா! மனிதன் உலகத்தைச் சுடுகாடாக்கிக் கொண்டிருக்கிறான்.

G.Ragavan said...

http://kuttipisasu.blogspot.com/2007/05/blog-post.html

திரையில் ஒப்பாரிப் பாடல்கள்....நல்ல தலைப்பு குட்டிப்பிசாசு. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நீங்களே சொல்லியாச்சு. அப்புறம் நானெப்படிச் சொல்றது :)

ஆங்...ஒரு பாட்டு நெனைவுக்கு வருது...

ஆளுக்கொரு தேதி வெச்சு ஆண்டவன் அழைப்பான்....இது மெல்லிசை மன்னரே இசையமைத்துப் பாடியது. படத்தோட பேரு தீர்ப்பு அல்லது தீர்ப்புகள்னு நெனைக்கிறேன்.

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ...இந்தப் பாட்டை எப்படி மறக்க முடியும்? இளையராஜா இசையில ஏசுதாஸ் பாடிய பாட்டு.

// vathilai murali said...
ஹலோ குட்டிபிசாசு
நல்ல முயற்ச்சி , கருத்தம்மா வில் கூட (அடுத்து ஒரு ஜன்மம் வந்து ஆம்பிளையாய் பிற்ந்தா) என்ற பாடல். //

முரளி இந்தப் பாட்டு எம்.பி.3 கிடைக்குமா?

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/07/blog-post_11.html

ஆகா..ஆகா...எப்பேர்ப்பட்ட பாடல். மிகவும் இனிமை. மிகமிக.

இது அன்பே சங்கீதா...கீதா சங்கீதான்னு கூட இந்தப் படத்துல இன்னொரு பாட்டு உண்டு.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/07/blog-post_11.html

ஆகா..ஆகா...எப்பேர்ப்பட்ட பாடல். மிகவும் இனிமை. மிகமிக.

இது அன்பே சங்கீதா...கீதா சங்கீதான்னு கூட இந்தப் படத்துல இன்னொரு பாட்டு உண்டு.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_09.html

நாயைக் கண்டா கல்லைக் காணோம்னு சொல்வாங்க. நீங்க காலைக் காணோம்னு ஓடியிருக்கீங்க. நல்லதுதான். கால் முக்கியம். :))))

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/blog-post_3732.html

:((((((((((((((((((((((

கண்ணுல தண்ணி வருதுங்க. முருகா... இந்த உலகம் குழந்தைகளுக்கானது. குழந்தைகளுக்கானது. குழந்தைகளுக்கே ஆனது.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2007/07/blog-post.html

ரொம்ப நாள் கழிச்சி இந்தப் பாட்டப் பாக்குறேன். "தாய் மடியிலே மழலைகள் ஊமையோ" ஆகா..ஆகாகா...கொடுத்தமைக்கு நன்றி ஜோ. நடிகர் திலகம் நடிகர் திலகம்தான்.

என்னது இதுக்கும் -வ் குத்துறாங்களா :))))) யாரோட வயித்தெரிச்சல்னு தெரியலையே!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/1.html

"தார் கடம்பத்தார் எம் கடவுள்" ஆகா...ஆகா...சொல்லச் சொல்ல இனிக்குதடா. நல்லதொரு தொடர். தொடருங்கள்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
முருகப் பெருமான் விரும்பி அணியும் மலர், தற்காலங்களில் கோவிலில் முருகனுக்குச் சார்த்தப்படுவது போல் தெரியவில்லையே! ஏனோ? //

:) தெரியலையே ரவி. முருகனுக்குக் கெடா வெட்டுனதாக் கூடத்தான் இலக்கியம் சொல்லுது. வெட்டுறோமா என்ன!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/2.html

கடம்பும் கண் முன் காட்டிய குமரனுக்கு நன்றி. கண்டேன் கண்டேன் கடம்பைக் கண்டேன். கந்தனைக் கண்டதைப் போலக் கொண்டேன். நன்றி. நன்றி.

:) இதென்ன எனக்குப் பிடித்த பாடல்களாக அடுக்கியிருக்கின்றீர்கள். எல்லாப் பாட்டுகளுமே இனியது கேட்கினில் வந்ததுதான். ஆனால் கடம்புக்கு என்று தொகுத்ததில்லை. நல்லதொரு தொகுப்பு.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/07/h-4.html

:) என்னப்பா அடுத்த கதையா? பய பயங்கர ஏமாளியா இருப்பான் போல. ம்ம்ம்...முழுக்கதையும் படிச்சிட்டுதான் கருத்து சொல்வேன்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/blog-post_12.html

கலாமுக்கு எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/07/8.html

வணக்கம்

வணக்கம்

நீங்க எந்த ஊர்ல இருந்து வர்ரீங்க?

டிம்பிக்கோ டிம்மாலோல இருந்து வர்ரோம்

எதுக்கு வந்திருக்கீங்க?

மனிதர்கள் "வெட்டி"ப்பொழுது போக்குறாங்களாம். அது எப்படீன்னு பாக்க வந்திருக்கோம்

அப்படியா. சரி. என்ன சாப்புடுவீங்க

எது கெடைச்சாலும் சாப்புடுவோம்

எது கெடைச்சாலும்னா?

இப்ப நீங்க கூட இருக்கீங்க...சப்பப்...களக்..சப்பப்...கிளுக்..

G.Ragavan said...

http://kuttipisasu.blogspot.com/2007/05/blog-post_12.html

உண்மைதான் குட்டிப்பிசாசு. கூன் குருடு செவிடு மாதிரி ஒன்னுதான் பேடு. ஆனா அதை நம்மாளுங்க பிடிச்சுக்கிட்டு தொங்குறதிருக்கே. ஐயோ! தாங்க முடியலை. திருநங்கைகளுக்கும் சமத்துவமாக வாழ வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி குறையும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/07/h-4.html

ம்ம்ம்....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...சரி

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2007/07/227-4.html

ஹெ ஹெ இதெல்லாம் ஜகஜம். மரத்துப் போச்சு....இது மாதிரி எத்தனை நடக்குது நம்மூர்ல.

அதென்னங்க எங்க வைகைன்னு சொல்லீட்டீங்க. அவளும் ஒரு காலத்துல பொய்யாக் குலக்கொடிதான். இப்பத்தான் இப்பிடி "ஆயி"ருச்சு :(

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2007/07/blog-post_12.html

முடியாது..முடியாது..என்னால அழ முடியாது. நான் அழ மாட்டேன். நான் அழ மாட்டேன்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/07/blog-post_12.html

நன்றி நன்றி நன்றி :)

G.Ragavan said...

http://thamilachi.blogspot.com/2007/07/blog-post_9880.html

தென்னவன் தீதிலன் தேவர்கோன் பெருவிருந்து ஆயினன்
நானவன் தன் மகள்

- வஞ்சிக்காண்டம், சிலப்பதிகாரம்

G.Ragavan said...

http://manaosai.blogspot.com/2007/07/blog-post_12.html

சந்திரவதனா, நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவைப் படிக்கிறேன். நல்ல பதிவுதான். அருமை.நல்லதைத்தான் செய்திருக்கின்றீர்கள். கண்டிப்பாக நிம்மதியாக இருக்கலாம். :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/07/blog-post.html

அருமையான பாடல் பிரபா. மிகவும் பிடித்த பாடலும் கூட. மரகதமணி நல்ல இசையமைப்பாளர். ஆனாலும் சில படங்களே செய்துள்ளார்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_3193.html

மனோண்மணீயம் சுந்தரம்பிள்ளையின் தமிழாற்றலை நாம் போற்றாமல் இருக்க முடியாது. இந்த நூலின் ஒரு பகுதியை என்னுடைய தமிழாசிரியர் ஒருவர் பாடம் நடத்தினார். மயங்கிக் கிறங்கி ரசித்தேன்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/07/blog-post.html

வாழ்த்துகள் ஜோசப் சார். மிக்க மகிழ்ச்சி. இப்படி நெறையப் புத்தகமா எழுதித் தள்ளிக்கிட்டேயிருங்க. :)

G.Ragavan said...

http://thooya.blogspot.com/2007/07/blog-post_04.html

அமைதியைப் போதிக்க வேண்டிய புத்த பிக்குகளே தமிழர்களைக் கண்டால் "அமை தீயை" என்று கூக்குரலிடுகிறார்கள் என்றால் புத்தர் கண்ணீர் வடிக்காமல் என்ன செய்வார்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_4262.html

முழுவெண்மேனியன் என்பதற்கு திருபூசிய மேனி என்றுதான் பொருள் கொண்டேன். அப்படித்தான் கொள்ள வேண்டும். வாரியாரின் விளக்கமும் அருமை. நல்லதொரு பதிவு.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_12.html

நல்ல பாடல்கள். கடம்பங்காட்டுக்காரியையும் அழைத்து வந்து விட்டீர்கள். அருமை. ஒன்று பார்த்தீர்களா...ஆத்தாளுக்கோ கடம்பவனக்காரி என்றுதான் பெயர். அப்பனுக்கோ கடம்பனைப் பெற்றவன் என்றுதான் பெயர். மகனுக்கு மட்டும் கடம்பன் என்றே பெயர். கடம்பும் முருகும் அந்த அளவிற்கு இயைந்தன போல.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/07/blog-post_14.html

சிறுவயதில் விரும்பிப் படித்தது லயன் காமிக்ஸ். எப்படி மறக்க முடியும். அதில் ஒரு துப்பறிகிறவர் வருவார். பெயர் மறந்து விட்டது. அதில் வில்லன் ஒரு விஞ்ஞானி. காமெடித்தனாமான கண்டுபிடிப்புகள் நிறைய வைத்திருப்பார். எல்லாக் கதைகளிலும் இறுதியில் தப்பித்து விடுவார். அடுத்த கதையில் வரவேண்டும் அல்லவா. லயன் காமிக்ஸ்...அனைவரும் விரும்பிப் படிக்க வேண்டியது.

G.Ragavan said...

http://mayuonline.com/blog/?p=136

படத்த நேத்துப் பாத்துட்டேன். ரொம்ப நாள் கழிச்சி திரும்பவும் ஹாரி பாட்டர் பாத்திரங்களோட உலாவுவது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. ஏன்னா போன படமும் புத்தகமும் வந்தே ஒன்னர வருடங்கள் ஆகுது. IMAXல கடைசி 20 நிமிடம் 3Dல காட்டுறாங்க. ஆனா அது ரொம்பப் பிரமாதமா இல்லை. ஏன்னா அது 3Dக்காகவே எடுக்கலை. 2D to 3D Conversion முறையில செஞ்சிருக்காங்க. அதுனால சுமார்தான்.

புத்தகத்தோட ஒப்பிடும் போது படம் ஒன்னுமேயில்லை. ஆனாலும் ரசிச்சுப் பார்த்தேன். படம் படு வேகமா ஓடுது. நான் ரொம்பவும் ரசிச்சது கார்னீலியஸ் பட்ஜ், டோலோரஸ் அம்பிரிட்ஜ் இவங்ககிட்ட இருந்து டம்பிள்டோர் தப்பிக்கிற கட்டம். சூப்பர். "Mr.Fudge, you may not like that man. But Dumbledore has style"

அதே மாதிரி Weasly Brothers வெடி போட்டுக் கலக்குற இடம். அதுவும் சூப்பர். புத்தகத்த அந்தக் கட்டத்தைப் படிக்கும் போது ரொம்பச் சந்தோஷமா இருக்கும். படத்துலயுந்தான். படத்துல கதை படுபயங்கரமா ஓடுது.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/07/blog-post_14.html

// ஆன்லைனில் வாங்கறதுக்கு ஏதானா வழியிருந்தால் கொஞ்சம் சொல்லுங்க... //

முடியும்னா நானும் தயாரு :) gragavan@gmail.com

G.Ragavan said...

http://jeeveeji.blogspot.com/2007/07/blog-post_12.html

பாவேந்தரின் தமிழைச் சுவைத்துச் சுவைச்சு அலுக்காமை என்பது நானும் சிறிதறிவேன்.

அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்ச்சியை எடுத்துச் சொன்னமைக்கு நன்றி. கவியரசருக்கும் நன்றி. பாவேந்தருக்குக் கொடுத்த கார்வேந்தரல்லவா அவர்.

பாண்டியன் பரிசு....இப்பொழுது யாரேனும் அதை எடுக்கத் துணிவரோ!

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/blog-post_1239.html

ம்ம்ம்...திரும்பத் திரும்ப இந்திய அரசாங்கம் இதைத்தானே பல வகைகளில் செய்து வருகிறது. எல்லாம் வடக்கத்திக்காரர்கள் செய்வது. அதெப்படி ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் வளர்க்க அரசு இப்படிச் செய்யலாம். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

G.Ragavan said...

http://thamilachi.blogspot.com/2007/07/1926.html

இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் என்றால் கோயில்களும் அனைவருக்கும் பொது. அதில் இன்னார் நுழையக்கூடாது என்று சொல்வது தவறு. அத்தோடு கோயில்களில் பூசனை செய்ய பிறப்பின் அடிப்படையிலில்லாது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இன்னும் பல சட்டங்களுக்குப் பிறகு இதைக் காணல் கானலாகவே இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/07/13.html

கூவின பூங்குயில்
கூவின கோழி
குருகுகள் இயம்பின
விளம்பின காண் சங்கம்
யாவரும் அறிவறியா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

இது திருவெம்பாவை. மாணிக்கவாசகர் எழுதியது. இதை விடியலில் பாடுவார்கள். அந்த விடியல் சுகமாக உமாரமணன் குரலில் கேட்டுக் கொண்டே செவ்வந்திப் பூக்களில் செய்த வீட்டிற்குள் நுழைவது மிக இனிமை.


ஓ ஒதட்டோடரச் சிரிப்பு பாட்டு மட்டுமல்ல...பாஞ்சாலங்குறிச்சியில் அனைத்துப் பாட்டுகளுமே நன்றாக இருக்கும். தேவாவும் தனித்துவம் கொண்ட இசையமைப்பாளர்தான். மெல்லிசை மன்னரின் சாயல் நிறைய இருக்கும். இரூந்தாலும் இயக்குனர்கள் அவரைப் பார்க்கப் போகையில் பல சிடிகளோடு போவார்களாம். இதை அவரே வருத்தத்தோடு ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

கண்ணாலே காதல் கவிதை பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

தளபதி படத்தில் சிறந்த பாடல் எது என்று கேட்டால் நான் தயங்காமல் சொல்வேன் "சின்னத்தாயவள் தந்த" பாடல் என்று. இது நாயகன் படத்தில் வரும் "தென்பாண்டிச் சீமையிலே" பாடலின் தங்கச்சி என்றாலும் அருமையான பாடல்.

இவ்வளவு சொல்லி விட்டுச் சும்மாப் போக முடியுமா? ஒரு பாட்டு கேக்கணுமே. சந்திப்பு படத்தில் இடம் பெற்ற "ராத்திரி நிலாவில் ரகசியக் கனாவில்" என்ற பாடல் என்னுடைய விருப்பமாகத் தரவும்.

G.Ragavan said...

http://emugu.blogspot.com/2007/07/blog-post_15.html

// அதற்கு தே.மு.தி.க கேப்டன், ''நான் எந்த படமும் பார்ப்பதில்லை.
நல்ல‌ ஆங்கில படங்களை மட்டும் பார்ப்பேன்.''//

அட...அதுக்குள்ள ஒரு காரணம் இருக்குங்க. ஆங்கிலப் படத்துல இருந்துதான திருட முடியும். சிவாஜியில இருந்து திருடுனா மக்களுக்குத் தெரிஞ்சு போயிரும்ல. நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க போல இருக்கு..ஹிஹிஹி...அவரு எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்க்கிறார் போல இருக்கு. :))))))))))) ஆமா...எனக்கொரு கேள்வி...அவருக்கு இங்கிலீஷ் படமெல்லாம் புரியுதாமா?

G.Ragavan said...

http://yazhsuthahar.blogspot.com/2007/07/1_08.html

வனிதாமணி வனமோகினி....அருமையான சுறுசுறுப்பான அதிரசம். இது சக்ரவாகமா.

வான் போலே வண்ணம் கொண்டு வந்தது மோகனமா...சரி. இதில் வரும் பெண்குரல் யார்? ஷைலஜாதானே? ஆமாம். பாட்டுக்கு நடுவுல அவர் "மோகனங்கள் பாடி வந்து மோகவலை விரித்தாயே" என்று ஒரு வரி பாடுகிறார். இது எதேச்சையாக அமைந்தது என்று தோன்றுகிறது.

ABC நீ வாசி...ஆகா ஆகா...அருமை..அருமை...ஆழ்ந்தேன். மிகமிக ரசித்தேன். நன்றி நன்றி. இன்னொரு மோகனமா...மிக அருமை.

நடபைரவி...இப்பொழுத்தான் இந்தப் பெயரைக் கேள்விப்படுகிறேன். இன்னொரு மிக அருமையான பாடல். டி.எல்.மகராஜன். இவரது தந்தையுடனும் இசையரசி பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் எந்தப் பாட்டென்று நினைவில்லை.

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2007/07/blog-post.html

ஏர்டெக்கன்...அதில் பயணம் செய்ததும் இல்லை. இப்போதைக்குச் செய்யும் எண்ணமும் இல்லை. இதுவரை யாரும் உருப்படியாக அதைப் பற்றிச் சொன்னதில்லை. கேட்டதெல்லாம் பிரச்சனைகள்தான். என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல...வலைப்பூவில் முதலில் துளசி டீச்சர். இப்பொழுது நீங்கள்.

அடுத்து கர்நாடகவா? காத்திருக்கிறோம்.

G.Ragavan said...

http://jannal.blogspot.com/2007/07/blog-post_05.html

முதலில் எட்டுக்கான வாழ்த்துகள்.

எனக்கு ஒரு ஐயம். காமராஜர் அவர்கள் கொண்டு வந்த மதியவுணவுத் திட்டத்திற்கும் எம்.ஜி.ஆர் கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் சத்துணவுத்திட்டத்திற்கும் என்ன வேறுபாடு? ஏனென்றால் முதன்முதலில் பள்ளிகளுக்குச் சம்பளம் கெட்ட வேண்டும் என்ற திட்டத்தை திருச்செந்தூரில் வைத்து (ஒரு மூதாட்டியின் வேண்டுகோளால்) மாற்றினாராம். அதாவது இலவசக் கல்வி என்ற திட்டம் வந்ததாம். அப்பொழுது கொண்டு வந்ததா இந்த மதியவுணவுத்திட்டம்? அதில் எம்ஜிஆர் செய்த மாற்றம் என்ன?

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_15.html

கலக்கல் சந்திப்பு ரவி. ஆனாலும் நம்ம வழக்கமான வாலிப வயோதிக அன்பர்கள் சந்திப்பா இது அமையாதது ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இடம் பொருள் ஏவல் ஆகியவைகளைக் காட்டும் பரிணாமவெளியின் ஒளிக்கூட்டத்தில் இதெல்லாம் ஜகஜம் என்று புரிந்து கொள்ள முயற்சிப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். :)))))))))

சாத்தான் குளம் <=> சாண்டா குரூஸ்...சூப்பரப்பு

நீங்க ஹத்ரூப்பாய்னு சொல்லும் போது அப்படியே பெங்களூருக்குப் போய்ட்டாப்புல இருக்கு. தமிழ் எங்க போனாலும் கூட வருது. இணையம் வழியா. வீட்டுக்குப் போன் போடுறது வழியா...இப்பிடி..ஆனா கன்னடம். இல்லையே. இப்பிடி வலைப்பூவுல கேட்டாதான் உண்டு.

அதெல்லாம் சரிப்பூ....ஏதோ போட்டோ போட்டோன்னு சொல்றீங்களே...அதப் போடுறது? மோகந்தாஸ் பக்கத்துப் போனா அது படத்தக் காட்டுவேனான்னு அடம் புடிக்குது.

G.Ragavan said...

http://vovalpaarvai.blogspot.com/2007/06/blog-post_21.html

வவ்வால், இந்தப் பதிவில் நீங்கள் சொல்வது அத்தனையும் எனது ஆதங்கங்களே. உழைக்கத் தெரிஞ்சா மட்டும் போதுமா? பொழைக்கத் தெரிய வேண்டாமா?

ஒரு விஷயம் சொல்றேன். மூனு சுரத்துல ஒரு ராகம் மகதி. அதுல ராஜா ஒரு தெலுங்குப் பாட்டு போட்டாராம். அதை மேடையில சொல்லி....விளக்கி...டீவியில வருது. ஆனா பாருங்க. அந்த ராகத்த மொதமொதலாப் போட்டது எம்.எஸ்.வி. அதை எடுத்து இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.
http://gragavan.blogspot.com/2007/07/3-1.html
இந்தப் பதிவுலயே இளையராஜா பதிவுக்கும் தொடுப்பு இருக்கு.

தமிழ்த்தாய் வாழ்த்து பத்தி இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.
http://isaiarasi.blogspot.com/2007/06/03.html

// அனேகமாக அவரது அந்திமகாலத்தில் விருதுக்கு ஏற்பாடு செய்வார்கள் போல் உள்ளது. அதானே நம்மாளுங்க வழக்கம்! //

:( இது நடந்தாலும் நடக்கலாம். ஒவ்வொரு பேட்டியிலையும் பாலசுப்ரமணியம் சொல்வாரு. எம்.எஸ்.விக்கு பாரத ரத்னா விருதுகள் குடுங்கன்னு. ஆனா அதுக்கு அவர் என்ன செஞ்சாருன்னு சொல்ல மாட்டாரு. நாலஞ்சு பேட்டீல இத பாலு சொல்லக் கேட்டுட்டேன். :(

// அப்படியா..? அடக் கொடுமையே!

ம்ம்... கலைசேவை புரிந்த த்ரிஷா, சிம்பு லாம் கலைமாமணி குடுக்கிறவங்க இவரைலாம் பரிந்துரைப்பாங்களா? //

அடடே! சிம்பு த்ரிஷா போன்ற உயர்ந்தவர்களுக்கு விருது இவருக்குத் தேவையா? வேண்டவே வேண்டாம். உண்மையான இசையன்பர்களின் அன்பு என்றும் மெல்லிசை மன்னருக்கு உண்டு.

அவருக்காக ஒரு வலைப்பூ தொடங்கும் எண்ணமும் உண்டு. விரைவில் நடக்கும். அதில் கலந்து கொள்ள வருகின்றீர்களா வவ்வால்?

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/07/9.html

ம்ம்ம்ம்....நம்புவது நம்பாமை பேதமை நம்புவது அஞ்சலறிவார் தொழில்னு நம்ம தெருவள்ளுவர் சொல்லீருக்காரு. ஆகையால நானும் அப்படியே இருந்துக்கிறேன். :)

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2006/12/p.html

பென்சில்வேனியா தெரியுமா? பென்சில் வேணும்யான்னு கேக்கலை. அமெரிக்கால ஒரு ஊரு பென்சில்வேனியா.

அந்தூர்ல பனிச்சறுக்கு. இப்படி உள்ளரங்க்கு இல்ல. மலை மேல. அடேங்கப்பா....எல்லாரும் கீழ இருந்து மேல போய் சர்ரு புர்ருன்னு வர்ராங்கப்பா.

நான் கீழ ரெண்டு பெரிய படைக் குச்சிகளைக் கால்ல மாட்டிகிட்டு புதையல் புதையலா எடுத்தேன். கூட வந்தவங்கள்ளாம் சொல்லிக்கொடுத்ததப் புரிஞ்சிக்கிட்டு சறுக்கப் போயிட்டாங்க. சொல்லிக் குடுக்க வந்தவரு எனக்குச் சொல்லித் தரவே முடியாதுன்னு கோவிச்சுக்கிட்டு போய்ட்டாரு. அவமானம். எவமானமா? எனக்கு அவமானம்யா...

அப்புறம் நானே எனக்குத் தெரிஞ்ச மாதிரி செஞ்சு பாத்தேன். அடடா...இப்ப ஓரளவு வருதே. அப்புறம் ஓரளவு பழகீருச்சு. அத்தோட நிறுத்தீருக்கலாம். விஞ்ச்சு ஏறி மேல போயி சறுக்குத் தொடங்கி..அடடா....நல்லா வருதேன்னு நெனைக்கும் போதே....வேகம் கூடி..பயந்து போயிட்டேன். பயந்ததும் தடுமாறீட்டேன். சரசரன்னு உருண்டு விழுந்துட்டேன். அப்புறம் எழுந்து எறங்கினேன். :)

G.Ragavan said...

http://imsai.blogspot.com/2007/07/blog-post_09.html

எனக்கு இந்தி தெரியாதுன்னு ஒங்களுக்குத் தெரியுமே..அப்புறமும் இந்தியில பதிவு போட்டா எப்படி?

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/blog-post_7621.html

இதுல பாருங்க..இத்தன நாளா அந்துமணி முகம் தெரியாது. அதுல கார்டூன் போட்டிருப்பாங்க. ஆனா இன்னைக்கு அது நடக்கலை. முகத்தைப் போட்டிருக்காங்க. ம்ம்ம்..

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/07/blog-post_15.html

ஹா ஹா ஹா...நல்லாருக்கு. இதுவாச்சும் ஒரு பாட்டுத்தேன். போன வாரம் வரைக்கும்....FM ரேடியோ மாதிரி வரிசையா கேக்குற பாட்டெல்லாம் போட்டுக்கிட்டிருந்தேன். அப்ப என்ன செய்வீங்க? அப்ப என்ன செய்வீங்க?

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/06/blog-post_1995.html

மிகவும் நல்ல செய்தி. சமீபத்தில் மலையாளத்தில் கூட அம்மகிளிக்கூடு என்ற படத்தில் "ஹ்ருதய கீதமாய்" என்று பாடிய பாடல் பெருவெற்றி பெற்றது. இந்தப் பாடல் இன்னும் பெருவெற்றி பெற விரும்புவோம்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2007/07/blog-post_17.html

எந்தத் தொழிலும் குலத்தொழில் அல்ல. யாருக்கு எது வருகிறதோ..அதைச் செய்து பிழைக்க வேண்டும். செய்வன திருந்தச் செய்தால் போதும். எல்லாமும் எல்லார்க்கும் பொது. உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

// எந்த ஒரு இசைப் பின்னனியும் (முறையாக) இல்லாத இளையராஜாவால் //

இது தவறான தகவல் கோவி. இளையராஜா இசையை முறையாகப் பயின்றவர். பாரம்பரிய சங்கீதம் மட்டுமின்றி மேற்கத்திய சங்கீதமும் கூட. அத்தோடு இவர் மெல்லிசை மன்னரிடம் இசைக்கருவி வாசிப்பவராகவும் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகவும் இருந்திருக்கிறார். அவரது கடின உழைப்பு இந்த நிலைக்கு உயர்த்தியது. ஆனால் அவரது குடும்பப் பின்னணி இசைப்பின்னணி அல்ல. உழைப்பாலும் படிப்பாலும் உயர்ந்தவர் அவர்.

// இளையராஜாவுக்கு முன்பு இசை அமைப்பாளர்களெல்லாம் முற்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்களாகவும், முறையாக பயின்றவர்களாகவும் இருந்தார்கள். //

இது இளையராஜாவுக்கு முன்னமே மாறத்தொடங்கியிருந்தது. மெல்லிசை மன்னரும் முற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் அல்லர். அவரிடம் உதவியாளராக இருந்த கணேஷ் (சங்கர்-கணேஷ்) அவரும் அப்படியே. ஆனால் அதற்கு முன்னால் அப்படியிருக்கவில்லை. ஆனாலும் அத்தி பூத்தாற்போல் கே.பி.சுந்தராம்பாளும், சீர்காழி கோவிந்தராஜனும் வந்தனர்.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/07/singing-in-rain.html

singing in the rain is one of the best movies ever made. இப்படிச் சொல்வது உயர்வு நவிற்சியல்ல. ஆனால் உண்மை. ஆங்கிலத்திரைப்படங்களில் Gone with the wind, Roman holiday வரிசையில் singing in the rain படத்துக்கும் ஒரு சிறப்பான இடமுண்டு.

ஜீனி கெல்லி, டெபி ரெனோல்ட்ஸ், டொனால்ட்ஸ் ஓ கொனர் கூட்டணி படத்தைக் கலக்கியது என்றால் யேன் ஹேகன் பெருங்கலக்கு கலக்கியிருப்பார்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//எது எப்படியோ இது வரை எடுக்கப்பட்ட ம்யூசிகல்களிலேயே தலைசிறந்த படம் இதுதான்//

சற்றே மிகைப்படுத்தப்பட்ட வாசகம்! //

மிஸ்டர். ரவி. நீங்க சொன்னத ஒடனடியா திரும்ப வாங்கலைன்னா மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்னு மிகமிகக் கடுமையா எச்சரிக்கிறேன்.

// இதோ அடியேன் Musical பட்டியல்! உங்கள் நூலகத்தை வாட்டி எடுக்க :-)
An American in Paris
Saturday Night Fever
Pink Floyd the Wall
Chicago (இது broadway show ஆகவும் இப்போதும் நடக்குது! நீங்கள் நியுயார்க் வரும் போது அழைத்துச் செல்கிறேன் CVR) //

I totally reject all the movies you have listed under the musical category. I know "An american in Paris" ( I know Indian too ;) ) Itz not worth to compare with Singing in the Rain. And just imagine about fantastic musicals like Sound of Music. Then King and I....How dare you ignore these movies and list such movies.!!!!!! atrocious and outrageous.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2007/07/dr.html

ஜெயலலிதாவின் கணக்கு அவ்வளவு எளிதானதல்ல. கருணாநிதியைத் தவிர யாரிருந்திருந்தாலும் நீங்கள் சொன்னது இந்நேரம் நடந்திருக்கும்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/07/241-vs.html

ஏற்கனவே இந்தப் பொருளாதாரம்னா நமக்குப் புரியாது. இதுல இத்தன கேள்வி கேட்டா எப்பிடி?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/07/blog-post_16.html

முதற்கண் உங்கள் பதிவில் பிழையுள்ளது. சொல்லில் குற்றமிருந்தாலும் மன்னிக்கப்படலாம். ஆனால் பொருளில் குற்றமுள்ளது.

முதற்கண் தலைப்பிலேயே தவறு கண்டோம். உண்டோம் என்று நீங்கள் சொல்ல விரும்பும் பதிவில் குற்றம் கண்டோம் என்று சொல்லவைத்தமை கொடுமை. கொடுமை.

நாரதரிடம்தானே அம்மையப்பன் என்றால் என்ன உலகம் என்றால் என்ன என்றுதானே கேள்வி கேட்கப்பட்டது. உங்களது பதிவும் சொல்கிறது. அப்படியிருக்க தலைப்பில் கிழவியை வைத்த காரணம்? இது மாபெருங்குற்றமென்பதால் முத்தமிழ்ச் சங்கத்துத் தலைமைப் புலவரான நக்கீரரும்....வயதேகி ஊரேகி நாடேகித் தமிழ் வளர்த்த ஔவையும் உங்கள் மீது மிகவும் ஆத்திரமாக இருப்பதாக மயிலார் வழியாகச் சொல்லியனுப்பியிருக்கின்றார்கள். ஆகையால் தலைப்பை மாற்றவிட்டால் உங்களது அடுத்த பதிவிற்குத் தமிழ்க் குழாய் மூடப்படுமாம்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/07/blog-post_16.html

// என்ன?"
35 Comments - Show Original Post
Collapse comments


வெட்டிப்பயல் said...
சபாஷ் சரியான கேள்வி...

அப்படியே என் கேள்விக்கும் பதில் சொல்லுங்க...

வேல் வெச்சிருக்கவர் வேலன்னா வில் வித்தையில் சிறந்தவர் வில்லன் தானே...

அப்படினா ராமரும் அர்ச்சுனனும் வில்லன் தானே???

இந்த கேள்விக்கு முதலில் விடை சொல்லுங்க...

ஜி.ரா வந்து இந்த நடுவர் நாற்காலில உட்காருங்க ;) //

வேலனும் அகத்தியரும் கபிலரும் நக்கீரரும் மருதரும் கட்டிக்காத்த இந்த நடுவர் பதிவை எனக்குக் கொடுத்தது பாண்டி நாட்டான் (சோற்று நாட்டான் அல்ல ;) ) என்ற வகையில் மிகப் பொருத்தம்.

சரியானதொரு கேள்வி. மிகச் சரியானதொரு பொழுதில்...மிகமிகச் சரியானதொரு நபரிடமிருந்து மிகமிகமிகச் சரியான முறையில் வந்திருக்கிறது.

வேலைப் பிடித்தவன் வேலனென்றால் வில்லைப் பிடித்தவன் வில்லன் என்பதே தமிழ் இலக்கணம். அதை ஏற்காதவர்க்கு தலைக்கனம். இனியும் ஏன் பாட வேண்டும் பிலாக்கனம். (இங்க நிறுத்திக்கிறேன். அடுத்த கனம் எதுவும் தெரியல)

புணர்ச்சி விதிகளின் படி ஆண்பால் விகுதி...முருகா...சரி...இலக்கண விதிகளின் படி ஆண்பால் விகுதியோடு வில்லன் என்ற பெயர்ச்சொல் வில்லலப் பிடித்தவன் என்றே பொருள் சொல்கிறது.

வேலவன் வில்லவன் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். ஒப்புக்கொள்கிறோம். ராகத்தில் வன்மையானவன் ராகவன் என்று அழைக்கப்படுவது போல வேலெறிவதில் வல்லவன் வேலன். வில்லிடுவதில் சிறந்தவன் வில்லவன் என்று சொல்வதே பொருந்தும்.

ஆனால் முருகனும் வேலும் பிரிக்க முடியாதவை. ஆகையால்தான் வேலவன் என்றதொரு பெயர் இருந்தும் வேலன் என்ற பெயரையும் தமிழ் வழங்கிற்று.

வில்லவன் என்று மட்டும் சொல்ல வேண்டுமாயின் வில்லில் வல்லவன் மட்டுமே ராமனும் அருச்சுனனும் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக்கொள்கின்றீர்களா? அத்தோடு வில்லும் அவர்களும் ஒன்றல்ல. பிரித்துப் பார்க்கப்படக் கூடியதே என்று எதிர்கட்ச்சிக்காரர்கள் கூறுவார்களேயானால் வில்லன் என்ற பெயர் தவறு என்று தீர்ப்பளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2007/07/316-1.html

செல்வன், இப்படியொரு பதிவைத் துவக்கியிருக்கின்றீர்கள். இது சரியா தவறா என்பது வேறொரு விவாதம். ஆனால் இதை வைத்தே உங்களைக் கிண்டல் செய்யும் பின்னூட்டங்களும் வர வாய்ப்பிருக்கிறது.

சரி. பதிவிற்கு வருவோம். இந்தப் பதிவின் நோக்கம் என்ன? ஓரினச்சேர்க்கை என்பதைப் பற்றி அனைவருக்கும் புரிய வைப்பதற்கா? அப்படியெனில் பதிவிடுவது சரிதான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவுகளைப் படித்த பிறகுதான் திருநங்கைகளின் மீதான எனது பார்வையே மாறியது. வலைப்பதிவில் பல பதிவர்களுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன். சரியோ முறையோ பிழையோ...எதையும் வெளிப்படையாகப் பேசினால்தான் அதைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் மூடமூடத்தான் ரோகம்.

இங்கே ஆம்ஸ்டர்டாமில் ஆனா ஃபிராங்க் வீடு என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கே தனிநபர் சுதந்திரம் என்று எதையெல்லாம் பட்டியலிட முடியும் என்று கூறியிருந்தார்கள். அதில் மதம், உணவு, என்று அடுக்கிக் கொண்டே போகையில் sexual orientation (இதுக்குத் தமிழ்ல என்ன சொல்றதுன்னு தெரியல) அதுவும் வந்தது. வயது வந்த மனிதர்களுக்குள்ளான எந்தவொரு இனக்கவர்ச்சியும்....யாரையும் வற்புறுத்தாத உடலுறவும் தனிநபர் சுதந்திரத்தில் வருகிறது. அந்த வகையில் மட்டும் பார்த்தாலே கூட ஓரினச் சேர்க்கையாளர்களை நாம் மறுக்க முடியாது. அதற்குப் பிறகு என்னென்ன காரணங்கள் இருந்தாலும் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்வதை ஏற்றுக்கொண்டே...அதையே பெண்களுக்கு என்று வருகையில் பண்பாடு கலாச்சாரம் என்று கூப்பாடு போடுகின்றவர்கள்...இதைப் புரிந்து கொள்ளவாவது முயற்சி எடுப்பார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் தொடருங்கள். தெரிந்துகொள்ளக் காத்திருக்கிறோம்.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2007/07/singing-in-rain.html

// CVR said...
மன்னிக்க வேண்டும் கே.ஆர்.எஸ்,விக்கியில் உள்ள வரிகளை எடுத்துக்கொண்டால் நான் எழுதியது சரியான மொழி பெயர்ப்பு அல்ல!!தவறுக்கு வருந்துகிறேன்//

என்னதிது? நீ என்னத்துக்கு மன்னிப்பு கேக்கனும்? நீ என்ன தப்பாச் சொல்லீட்ட? அவரு சொன்னதுதான் தப்புன்னு அப்பவே தட்டி வெச்சுட்டோமே ;) அப்புறம் என்னத்துக்கு மன்னிப்பு தண்டிப்புன்னு.

சி.வி.ஆர்: ஜிரா
நான்: கம்முண்ணு கெட :)

// Singing in the rain - Nominated for 2 Oscars.
An American in Paris - Reputed to be Gene Kelly's favorite of all his films - Won 6 Oscars //

இங்க பார்ரா கூத்த....தல ஒன்னுதான இருக்கு. வெரலு பத்திருக்கு. எது பெருச்சுன்னு கேக்குறார்ப்பா ரவி. தலைக்குன்னு ஒரு வேல...விரலுக்குன்னு ஒரு வேல. ஒத்துக்கிறேன். ஆனா தலையில்லாம விரல் இல்லை. விரல் இல்லாம தலையுண்டு. ;)

தேசிய விருது எம்.ஜி.ஆருக்குக் குடுத்திருக்காங்க. நடிகர் திலகத்துக்குக் குடுக்கலை. இதுவும் தெரியுந்தானே. ;)

// அதன் அண்மைக் கால அற்புதம் Chicago. அங்கு ஒரு Debbie Reynolds என்றால் இங்கு ஒரு Catherine Zeta-Jones!
How dare you ignore The Chicago on your list? atrocious! outrageous! anachronous! autocratic!!!!!!!!!!!!!!!!!!!! //

ஆரமுதுண்ணுதற்கோர் ஆசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவரோ! பால் போலக் கள்ளும் உண்டு. நிறத்தாலே ரெண்டும் ஒன்று.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2007/07/blog-post_17.html

ம்ம்ம்ம்...எது உண்மை எது பொய்னு தெரியலை. நீங்க இப்பிடி சொல்றீங்க. என்னவோ நடக்குது. வரவர ஒலகமும் வலைப்பூ மாதிரி ஆயிக்கிட்டிருக்கா...இல்ல இப்பதான் நம்ம ஒலகத்தத் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கோமான்னு தெரியலை. தலைமுடியப் பிச்சிக்க வேண்டியதுதான் போல. விசாரணைன்னு வந்தாலே நம்ம நாட்டுல என்ன நடக்கும்னு தெரியுந்தானே. அத்தோட முடிஞ்சதுன்னு பொருள்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/07/200.html


ஒடம்பு சரியாப் போச்சுல்ல. அதுவே எங்களுக்குப் பெரிய சந்தோசம். இறைவன் அருள் முன்னிற்கும்.

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/blog-post_8552.html

// Anonymous said...
வர்ணாச்ரம வேதத்தை அனைத்து சாதியினரும் படிப்பதுதான்
பெரியார் கண்ட கனவா? //

உண்மைதான். வேதம் படித்தால்தான் அர்ச்சகன் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் இன்றைய சூழலில் முதலில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டியது அவசியம். ஆகையால் படிப்பதில் தவறில்லை. First make the thing common to everybody. Then caliber as per need. Thatz the needed approach. ஆகையால அது சரிதான்.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2007/07/blog-post_17.html

வணக்கம்ணா....வெற்றி உங்களுக்கே. நானும் ஒப்புக்குச் சப்பாணியா போட்டீல இருக்கேன். அப்பத்தான ஒங்க படங்களோட பெருமை மத்தவங்களுக்குத் தெரியும்.

G.Ragavan said...

http://anony-anony.blogspot.com/2007/07/2_17.html

சூப்பர்.........சூப்பர்...........சூப்பர்

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2007/07/blog-post_17.html

இங்க பார்ரா! சில்லுன்னு படம் போட்டு அதுக்குச் சினிமாப் பாட்டு போட்டுருக்காரு சிறில். உண்மையச் சொல்லுங்க நீங்க எம்ஜார் ரசிகர்தானே? ;)

படம் அழகாயிருக்கு சிறில். லில்லில ஒரு எழுத்து மாத்துனா தமிழ். அல்லி.

G.Ragavan said...

http://vellithirai.blogspot.com/2007/07/18-07-2007.html

1. ஆண்பாவம்
2. குரு
3. அன்புள்ள ரஜினிகாந்த்
4. விஜயகாந்த்-மீனா நடிச்ச படம்...பேரு நினைவில்லையே. சேதுபதி?
5. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா....அந்தப் படம்...ஆனா பேரு....ராஜா சின்ன ரோஜா
6. எங்க மாமா
7. இந்திரா
8. அஞ்சலி
9. சத்ரியன்
10. உலகம் சுற்றும் வாலிபன்

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/07/blog-post.html

வடக்கத்திச் சமையல்ல சீரகம் கொஞ்சம் தூக்கலா இருக்கும். அதுதான் அவங்களோட ஸ்பெஷாலிட்டி. இது லேசாத்தான் இருக்கு. ஸூக்கினின்னா என்ன? அதையும் சொல்லுங்க.

G.Ragavan said...

http://chitchatmalaysia.blogspot.com/2007/07/blog-post.html

மங்கூஸ்தான் பழமெல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும். தூத்துக்குடீல கெடைக்காது. ஆனா குற்றாலம் போனா கிடைக்கும். குற்றாலம் போறப்பல்லாம் மங்கூஸ்தான் பழம் சாப்டாம வந்ததில்லை. அவ்வளவு பிடிக்கும். பழத்தைப் பத்தி இவ்வளவு விரிவா எடுத்துச் சொன்னதுக்கு நன்றி லா. :)

G.Ragavan said...

http://thekkikattan.blogspot.com/2007/07/circumcision-re-considered.html

முடியும் நகமும் வளர்ந்துக்கிட்டேயிருக்கும். வெட்டுறோம். அதென்ன அப்படியா? பரிணாம வளர்ச்சியில வேண்டாதது அப்படியே போயிரும். இது என் கருத்து. ஆகையால இது தேவையில்லைங்குறாது என் கருத்து. கோவி சொன்ன மாதிரி பிரச்ச்னை இருக்குறவங்களுக்குக் கண்டிப்பா பண்ணலாம். ஆனா எல்லாருக்கும் தேவையில்லைங்குறது என்னோட கருத்து.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/07/09.html

ஆகா ஆகா ஆகாகா! அடையிலிருந்து தேனைப் பிழிந்து அடையில் ஊற்றித் தடையின்றி உண்பது போன்ற இனிய பாடல்.

கேட்டால் நெகழ்ச்சி. அட பாட்டால் மகிழ்ச்சி..நன்றி. நன்றி.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2007/07/242.html

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவார்

ம்ம்ம்ம்...பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் சொல்லாண்ட காதல் உங்களையும் கதை எழுத வெச்சிருச்சா :) நல்லது...காத்திருக்கிறோம்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/07/blog-post_18.html

சூப்பர். சூப்பர். சூப்பர். இப்ப ஆபீசுக்கு ஓடுறேன். வந்து பின்னூட்டம் போடுறேன்.

நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமைக்கு எனது வணக்கங்கள்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/07/blog-post_18.html

மண்ணிலே தோண்டிய களிமண்ணைப் பிசைந்து உருட்டி...சக்கரத்திலிட்டுச் சுற்றி....கை கொண்டு திருத்தி...பாண்டமாக்கி அதையும் நெருப்பில் இட்டுச் சுட்டு வைத்தால் பாத்திரமாகும். அதற்குள்ளே தண்ணீரையும் ஊற்றலாம். அரிசையைப் போடலாம், பழங்களையடுக்கலாம்.

அப்படியிருக்கையிலே தமிழகத்திலே பிறந்து நடிப்பு என்பதை தன்னோடு கலந்து சிறப்புற்று இருக்கும் நடிகர் திலகம் பாத்திரமானால் அதிலே பரமசிவனை வைக்கலாம். கட்டபொம்மனை வைக்கலாம். கப்பலோட்டிய தமிழனை வைக்கலாம். பாரதியை வைக்கலாம். "Now let me talk like a policeman" தங்கப்பதக்கம் சௌத்திரியை வைக்கலாம். "ஆனைக்கு அடி சறுக்குனா என்னாகும் தெரியுமோல்யா" பாரிஸ்டர் ரஜினிகாந்த்தை வைக்கலாம். "நாளைக்கி ஒம் மகந் திம்பான். ஆனா விதை...அது இன்னைக்கி நாம் போட்டது" தேவரய்யாவை வைக்கலாம். அட...குங்குமம் படம் பார்த்திருந்தால் பெண்ணையும் வைக்க்கலாம் என்று புரிந்திருக்கும்.

அவரது நடிப்புத்திறமைக்குச் சிறப்பு செய்த வெட்டிக்கு நன்றி பல.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/07/blog-post_18.html

நான் எங்கயும் போகலை. இங்கதான் இருக்கேன். நடக்கட்டும் நடக்கட்டும். எல்லாரும் பேசட்டும். நான் கேட்கிறேன்.

//காத்தாடியைப் போட்டதால அணைக்கச் சொல்லிச் சத்தம் போடறியா...சரியா போச்சு போ! நல்லா போத்திக்கிட்டுப் படுப்பியா? எந்திரிச்சு உக்காந்து என்ன விவரம்ன்னு கேக்குற?//

:))))))))) இப்பிடித் தூங்குறவங்களுக்கும் விசிறி வேணும். ஆனா திருப்பிப் பிடிக்கனும். கண்ணன் எழுந்திருக்கிறவன்னுதான் நப்பின்னை ஒழுங்கா பிடிக்கிறாங்க.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/07/blog-post_17.html

அப்பப்பா! என்னங்க இது! ஒரு பாட்டா? மூனு பாட்டுகளா?

ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம். இது உண்மையிலேயே ஒரு பாடம்.

ஒவ்வொரு பாட்டும் தனித்துவம். மூனு பேருமே கலக்கீருக்காங்க.

அதுலயும் அந்தரி சுந்தரின்னு கர்நாடக ஸ்டைல்ல பாடிக்கிட்டிருக்கும் போதே உத்தரவின்றி உள்ளே வான்னு வெஸ்டர்னுக்கு மாத்துறது அருமையா இருக்கு. படக்குன்னு நம்மளால கண்டுபிடிக்கவே முடியாம பின்னணி இசையும் மாறுது பாருங்க. சூப்பர்.

நல்ல பாட்டை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/07/blog-post_17.html

அப்பப்பா! என்னங்க இது! ஒரு பாட்டா? மூனு பாட்டுகளா?

ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம். இது உண்மையிலேயே ஒரு பாடம்.

ஒவ்வொரு பாட்டும் தனித்துவம். மூனு பேருமே கலக்கீருக்காங்க.

அதுலயும் அந்தரி சுந்தரின்னு கர்நாடக ஸ்டைல்ல பாடிக்கிட்டிருக்கும் போதே உத்தரவின்றி உள்ளே வான்னு வெஸ்டர்னுக்கு மாத்துறது அருமையா இருக்கு. படக்குன்னு நம்மளால கண்டுபிடிக்கவே முடியாம பின்னணி இசையும் மாறுது பாருங்க. சூப்பர்.

நல்ல பாட்டை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2006/08/blog-post_115133137571707563.html

அருமை அருமை அருமையானதொரு பாடல். எனக்கு "அம்மவென்றழைக்காத" பாட்டை விட இது ரொம்பப் பிடிக்கும்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/07/blog-post_16.html

சூப்பர் சூப்பர் ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2006/08/blog-post_115470993721662249.html


ஆகா உண்மையிலேயே இந்தப் பாட்டு ஒரு கிளாசிக்.

அவளுக்கு ஆறு குழந்தைங்க. கணவன் இல்ல.

அவனுக்கு ஆறு குழந்தைங்க. மனைவி இல்ல.

இப்ப இவங்க ரெண்டு பேருக்கும் காதல் வந்துருது.

அப்பத்தான் இந்தப் பாட்டப் பாடுறாங்க. இந்தச் சூழ்நிலைய மனசுல வெச்சுக்கிட்டு பாட்டக் கேளுங்க. பாட்டோட உண்மையான பரிமாணம் புரியும்.

அப்புறம் இன்னொரு விஷயம். இசையரசி அப்படீன்னு பி.சுசீலா பாடல்களை வெச்சு வலைப்பூ தொடங்கீருக்கோம். உங்களைப் போல இசையன்பர்கள் அடிக்கடி அந்தப் பக்கம் வரனும். நன்றி.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2007/07/blog-post.html

கலக்கல். அடுத்தடுத்து படக்குன்னு படிக்கனுமே...

அதுசரி..திருனவேலி மாவட்டத்துலயும் கருப்பட்டிதான. பனவெல்லம்னு வடக்கத்திக்காரக பேச்சப் போட்டிருக்கீரே. சரியில்லயே. ;)

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2007/07/2.html

அடடா! அடுத்து என்னாச்சோ தெரியலையே! முத்தம் கொடுத்தானா? காரியத்த மொத்தமும் கெடுத்தானா?

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2007/07/3.html

போர்வை போர்வை போர்வை ஹோஓஓஓஓஓஓஓ! :))))))))))

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2007/07/7.html

வரிசையா ஒவ்வொரு பதிவாப் படிச்சிக்கிட்டு பின்னூட்டம் போட்டுக்கிட்டு வந்தேன். ஒரு கட்டத்துல முடியாம..கடகடன்னு பதிவுகளைப் படிச்சிட்டு முடிவுக்கு வந்துட்டேன். :) நல்ல கதை. நல்லாயிருந்தது. மிகவும் ரசித்தேன். சூப்பர். நம்மூருக்குப் போயிட்டு வந்த உணர்வு. நல்ல கதை.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/07/blog-post_18.html

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

G.Ragavan said...

http://imsai.blogspot.com/2007/07/blog-post_146.html

நீங்க இவ்வளவு நல்லவருன்னு தெரியாமப் போச்சே! கொரியாவ எந்தக் கொரில்லாவும் இனிமே காப்பாத்த முடியாது.

G.Ragavan said...

http://kavishan.blogspot.com/2007/07/blog-post_4117.html

ஆகா! பாருயா மகிந்தாவ? திடீர்னு நல்லவராயிட்டாரு....கருப்பட்டி உருட்டித் தந்தாலும் உள்ள அரளியரைச்சுக் கொடுக்குறவரு...இன்னைக்கு இனிக்க இனிக்கப் பேசுறாரய்யா! பேச்சுக்குள்ள இருக்குற ஆணவத்துக்குப் பதிலடி கண்டிப்பா கிடைக்கும். ஈழக்கனவா? ம்ம்ம்...சிங்கள நாட்டுக் கனவு உமக்கு வரும்...அன்னைக்கு உங்கள நாங்க மன்னிக்கிறோம். மகிந்தரே, இந்த உலகம் ரொம்பப் பேரப் பாத்திருக்கு. அவங்க மூஞ்சியப் பேத்திருக்கு. ஆக மொத்தத்துல திருந்துறதுக்கு வழியப் பாரும்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2007/07/blog-post_16.html

வருடந்தோறும்
ஆடி வரும்
ஆடி வரும்
வந்தாலே அம்மன் கூழ்
தேடி வரும்
அம்மன் அருள்
கூடி வரும்

சமயபுரத்தாளின் படம் பார்த்தாலே பரவசந்தான்.

ஆயீ மகமாயி
ஆயிரம் கண்ணுடையா
நீலி திரிசூலி
நீங்காத பொட்டுடையா
சமயபுரத்தாளே
சாம்பிராணி வாசகியே
சமயபுரத்து எல்லைய விட்டு
சடுதியிலே வாருமம்மா

தஞ்சை மாரியம்மன் கோயிலுக்குப் போயிருக்கிறேன். ஆகா....புன்னைநல்லூர்க்காரியை பார்த்தால் பார்க்க முடியவில்லை. பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அந்த நினைப்பைத் திரும்பவும் உங்கள் பதிவு கொண்டுவந்துவிட்டது.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2007/07/blog-post_19.html

இதுல இன்னோன்னு சொல்றேன் பாருங்க. ஆண் சிங்கம் உக்காந்த எடத்துலயே திங்கும். பெண்சிங்கங்கதான் கூடிப் போயி வேட்டையாடிக்கிட்டு வரும். அதத்தின்னுதான் அலும்பு ராஜ்ஜியம் செய்யும் சிங்கிள் சிங்கம். :))))))))))))

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/07/blog-post_19.html

படம் எப்ப வந்ததுன்னு தெரியலை. ஆனா சின்னப்பிள்ளைல வந்தது. முந்தானை முடிச்சு மதுரை சிந்தாமணில பாத்தது நினைவிருக்கு. இதெல்லாம் நினைவில்லை. பின்னாடி எப்பவோ பாத்தது. படம் நல்ல படம். பாட்டுக ரொம்பப் பிரமாதம்.

படத்தோட கதைப்படி மொதல்ல இந்துப் பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலிக்கிற மாதிரி இருந்துச்சாம். அதுனாலதான் "கோயிலில் காதல் தொழுகை" அப்படீன்னுல்லாம் பாட்டு எழுதுனாங்க. அப்புறம் பிரச்சனை வந்துரக்கூடாதென்னு...முஸ்லீம் பொண்ணை கிருத்துவப் பொண்ணாக்கீட்டாங்க.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2006/08/blog-post_115470993721662249.html

// சுட்டியை கொடுத்தால் குறைஞ்சா போய்விடுவீங்க சார். இங்கே கொடுங்க மற்ற ரசிகர் வரும் இந்த தடத்தில் அவர்கள் பார்க்க ஏதுவாக இருக்கும். அப்படியே என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்க சார். //

ஹி ஹி மறந்துட்டேன் :)
http://isaiarasi.blogspot.com
என்னோட புரபைலுக்குப் போனாலும் லிங்க் இருக்கும்.

G.Ragavan said...

http://enkathaiulagam.blogspot.com/2007/07/blog-post.html

ஜோசப் சார், இதெப்போ தொடங்குனீங்க? இதெல்லாம் கண்லயே படலை. எல்லாம் இந்த நேர வித்தியாசம் செய்ற வேலை.

இனிமே வந்துருவோம்ல. தொடருங்க தொடருங்க உங்க தொடருங்க. :)

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2007/07/50.html

// Niraimathi said...
இந்த பாடலை எழுதியது எனது தந்தை 'தமிழ்நம்பி' :)
அவர் இப்போது எங்கள் நினைவுகளில் வாழும்போது .....இந்த பதிவு சொல்லமுடியாத ஒரு ஆனந்தத்தை எனக்கு அளிக்கிறது. மிக்க நன்றி :) :) :) //

ஆகா...நிறைமதி, பெயரிலேயே தமிழைக் கொண்டிருக்கும் தும்பியாகிய தமிழ்நம்பிதான் இந்தப் பாடலை எழுதியது என்று எடுத்துச் சொல்லி...அவர் உங்கள் தந்தையார் என்று நீங்கள் பெருமிதம் கொள்வது, எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. உங்கள் நினைவுகளில் மட்டுமல்ல பல முருகன் பாடல்களை எங்களுக்குக் கொடுத்து எங்கள் நினைவிலும் வாழ்கின்றவர் உங்கள் தந்தை. நாங்களும் அவரது தமிழ்ப் புல் மேயும் மந்தை.

G.Ragavan said...

http://parvaiyil.blogspot.com/2007/07/blog-post_08.html

வாங்க வாங்க. நல்ல நெறைய எழுதுங்க. என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_18.html

குமரன், இந்தப் பதிவு இரண்டு பக்கத்தாருக்கும் பொருந்தும் என்பதே என்னுடைய கருத்து. தமிழும் வடமொழியும் இரண்டு கண்கள் என்று சொல்கின்ற தெற்கர்கள் உண்டு. ஆனால் அப்படி நினைக்கின்ற வடவர்கள் இல்லை. ஆகையால் நமது மொழியைப் பார்த்துக் கொள்வதே நமக்குப் போதுமானது என்பதும் என் கருத்து.

இப்படிச் சொல்வதால் வடமொழி மீது எனக்குத் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பிரெஞ்சு, டச்சு ஆகியவைகளை வைக்கும் நிலையில் அதையும் வைத்திருக்கிறேன். ஆனால் தமிழெந்தன் உயிருக்கு நேர். தமிழில் எழுதக் கூடாது பேசக்கூடாது என்று சட்டம் போட்டுத் தடுத்தாலும் தமிழில் நினைப்பதை யாரும் தடுக்க முடியாது. அதையும் எப்படியும் தடுக்க முடியும் என்ற நிலை வந்தால்....அந்தச் சிரமத்தை நான் யாருக்கும் வைப்பேன் என்று நினைக்கவில்லை.

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு

இந்த வரிசையே போதும் என்பது பாரதியின் கருத்து மட்டுமல்ல என் கருத்தும்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_19.html

அருமை...அருமை. நன்றி.

காப்பவிழ்ந்த தாமரை...ஆகா என்ன அழகான சொல்லாடல். காப்பு அவிழ்வதே மலர்தல் என்று கற்பனை செய்யவே அழகாக இருக்கிறதே. அருமை. அருமை.

பின்னூட்டம் போட யோசிக்க விடாமல் மனது பாட்டாய்கிறதே!

விபுலானந்தரை ஒருகை பார்க்க வேண்டும். :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_18.html

// ஆனால் வடமொழி தெரிந்ததாலேயே ஒருவர் தமிழுக்கு துரோகி ஆகிவிடுகிறார் என்ற எண்ணம் தவறு என்று ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். //

வடமொழி தெரிந்ததால் ஒருவர் தமிழ்த்துரோகி ஆக மாட்டார். ஆனால் தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் வடமொழியை உட்கார்த்தி வைக்க விரும்புகிறவர் கண்டிப்பாக துரோகியாவார் என்பது என் கருத்து. இதற்கு எடுத்துக்காட்டுகள் பல சொல்லலாம். திருக்கோயில்களிலிருந்தே தொடங்கலாம்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_18.html

// /தமிழும் வடமொழியும் இரண்டு கண்கள் என்று சொல்கின்ற தெற்கர்கள் உண்டு. ஆனால் அப்படி நினைக்கின்ற வடவர்கள் இல்லை./

வடவர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் கிடையாது. இந்தி, மராத்தி, குஜராத்தி, காஷ்மிரி, போஜ்புரி என்றுதான் இருக்கும். அவனை கேட்டால் இந்தியும் சமஸ்கிருதமும் என் இரு கண்கள் என்பான்.தமிழை அவனும் இந்தியை நீங்களும் 'கண்' என்று சொல்ல மாட்டீர்கள்.பிறகு இது என்ன வகையான ஸ்டேட்மெண்ட் ஜீரா? //

அனானி நண்பரே....சொல்ல வந்தது சரியா வரலை போல இருக்கு. நீங்க சொன்ன மாதிரி இந்திய நானும் கண்ணுன்னு சொல்ல மாட்டேன். அவன் தமிழ் கண்ணுன்னு சொல்ல மாட்டான். அப்புறம் என்னத்துக்கு வடமொழியைப் பிடிச்சிட்டுத் தொங்கனும். அப்படீன்னு சொல்ல வந்தேன். தூக்கக் கலக்கத்துல ஒழுங்கா வரலை போல.

/// /இப்படிச் சொல்வதால் வடமொழி மீது எனக்குத் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பிரெஞ்சு, டச்சு ஆகியவைகளை வைக்கும் நிலையில் அதையும் வைத்திருக்கிறேன்./

தனிப்பட்ட வெறுப்பு கிடையாது.ஆனால் பொதுப்பட்ட வெறுப்பு இருக்கிறதா? //

பொதுப்பட்ட வெறுப்பா? ம்ம்ம்...ஒன்னு இருக்கு. திருக்கோயில்களில் தமிழ் புழங்கனும். அது இதுவரைக்கும் நடக்க மாட்டேங்குது. அந்த வயித்தெரிச்சல் உண்டு.

// தெலுங்கு குஜராத்தி டச்சு சமஸ்கிருதம்..என்ன வகையான பட்டியல் இது? டச்சிலும் குஜராத்தியிலும் தான் கோயில்களில் சுலோகம் சொல்லுகிறார்களா? //

சும்மா ஒரு லிஸ்ட்டு...இங்கிலீசு வரல பாத்தீங்களா. ஏன்னா அது வேலக்கு உதவுது. அப்படி எந்த வகையிலயும் உதவாத மொழிகளைப் பட்டியல் இட்டிருக்கிறேன். அதுலதான் சுலோகங்களையும் சேர்த்திருக்கிறேன்.

// அடடடடட.....யார் உங்களை சட்டம் போட்டு தமிழில் எழுதக்கூடாது பேசக்கூடாது என்றது? விட்டால் 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்று ஸ்டண்ட் அடிப்பீர்கள் போலிருக்கிறதே? //

:))))))))))))) செம கிண்டல்ங்க. ஸ்டண்ட்டான்னு தெரியாது. ஆனா தமிழ்ல யோசிக்காம என்னால இருக்க முடியுமான்னு தெரியலை. நான் சொன்னது கொஞ்சம் அதிகப்படியான ஸ்டேட்மெண்ட்தான். :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_18.html

// குமரன் (Kumaran) said...
இராகவன். இங்கே வடமொழி என்றது செங்கிருதமான சமஸ்கிருதத்தைத் தான். ஆனால் நீங்கள் வடமொழி என்றது இந்தியை என்று எடுத்துக் கொண்டீர்களோ என்று உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் தோன்றுகிறது. இல்லை நானும் நீங்கள் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளாமல் குழம்புகிறேனா? //

கிழிஞ்சது போங்க. வடமொழின்னா சமசுகிருதம்தான். இந்தின்னு அங்க சொன்னது...அனானி இந்தீன்னு சொன்னதால.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/07/14.html

அருமையான தேர்வுகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2007/07/blog-post_18.html

// பெங்களூரில் இருக்கும்போது சொல்லியிருந்தால் ஜீரா நிஜமான தைரியசாலி எனலாம்)...தமிழில் 'நினைப்பதை' தடுத்தால் உயிரையும் விடுவேன் என்பது...

ஜீரா.........தாங்கலை.. //

:))))))))))) இப்ப நெதர்லாந்து வந்துட்டாலும் வேலை பெங்களூருதாங்க. நான் திரும்ப அங்கதான் போயாகனும். இப்ப அவசரப் பட்டு வாய விட்டுட்டோமோன்னு நெனைக்கும் போது பயமாத்தான் இருக்கு.

// அரசியலில் எதுவும் குதிக்க போகிறீர்களா? போட்டோவில் கலர்துண்டு எல்லாம் போட்டுக்கொண்டு ஜம்மென்று இருக்கிறீர்கள்? //

குதிச்சிரலாங்குறீங்களா. நீங்களும் கூட வாங்க. :)

சரிங்க...தூங்கப் போறேன். ரொம்ப நேரமாச்சு. ஏற்கனவே இங்க ஆணி பயங்கரமா இருக்கு. ஆணியா ஆப்பான்னே கண்டுபிடிக்க முடியலை. சனி ஞாயிறுதான் கொஞ்சம் ஒழுங்காத் தூங்க முடியுது.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2007/07/blog-post_21.html

ஆகா! ஜோசப் சார். இதென்ன அஞ்சு ரூவாயப் பிடுங்கீட்டு அம்பது ரூவா குடுக்குறீங்க :)))))) தி.பா படிக்கும் போது தோணுச்சு. ஆனா பெருசாத் தெரியலை. இப்ப நீங்க சொல்ல வர்ரது புரியுது.

// tbr.joseph said...
வாங்க மதி,

ராகவனுக்கு ஜீரான்னு செல்லப்பெயரா? //

அவரேதான்... அந்த செல்லப் பெயரையும் பயன்படுத்தப்போகிறேன்..
காப்பி ரைட் எடுத்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்:-). //

:)))) இல்லங்க. காப்பி ரைட் எடுக்கலை. நீங்க தாராளமா பயன்படுத்தலாம். எங்கிட்ட கேக்கனுமா என்ன!

நானும் ராகவன் கற்பகத்தைச் சந்திக்க..அடடா...கமலன் கமலியைச் சந்திக்க ஆவலாகக் காத்திருக்கிறேன். :)))

G.Ragavan said...

http://satrumun.blogspot.com/2007/07/blog-post_4181.html

அடக்கொடுமையே நெதர்லாந்துக்கா வந்திருக்காரு. அப்ப வெளிய கிளிய தலையக் காட்டக்கூடாது. இங்க ஆம்ஸ்டர்டாம்ல RLDன்னு ஒரு எடமிருக்கு. Red Light District. ஒரு பெரிய ஏரியாவே அதான். அங்க போனா அவரைப் பாக்கலாமான்னு தெரியலை. அப்புறம் ஹார்லெம் பக்கத்துல அம்மணக்கடற்கரை இருக்காம். அங்க போவாரான்னு தெரியலை. ம்ம்ம்ம்...இதுல என்னைய ஆட்டோகிராப்பு ஸ்டெப்கிராப்பு வாங்கச் சொல்றாரு. சிவாஜிங்குற படத்துக்கு நான் போட்ட பின்னூட்டங்கள்ளையெல்லாம் அவருக்குக் காட்டுனாப் போதும்...அட.....மேக்கப் மகிமைன்னு ஒரு பதிவிருக்கே. அதையும் காட்டனும். அத்தோட போதும் அத்தானி மண்டபவம்னு ஓடீருவாரே.

G.Ragavan said...

http://neytalkarai.blogspot.com/2007/03/blog-post_24.html

ஈழநாட்டுக் கலைஞர்களைப் பற்றிய தெரிதல் மற்ற தமிழர்களிடையே மிகக் குறைவு. அவர்களைப் பற்றிய தகவல்களையும் படைப்புகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் பல படைப்புகளை இது போல ஒலி-ஒளிப் பதிவுகளாகத் தரமுடிந்தால் நாங்கள் தெரிந்து கொள்வோம்.

G.Ragavan said...

http://nayanam.blogspot.com/2007/07/blog-post_21.html

அருமை. அழகான தமிழில் அருமையான நடிகர் திலகத்திற்குக் கவிதாஞ்சலி செலுத்தி விட்டீர்கள். மிகவும் அருமை.

«Oldest ‹Older   1 – 200 of 294   Newer› Newest»