Tuesday, January 01, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் - ஜனவரி 2008

ஜனவரி 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

157 comments:

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/12/2008.html

புத்தாண்டில் மிகச் சிறப்பான பதிவு ரவி. நல்ல கருத்துகள். இவை நடைபெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

// செல்வன் said...
கண்ணபிரான்

2007 முடியும் சமயத்தில் கண்திருஷ்டி மாதிரி ஒரு பதிவு:-( //

திருஷ்டிதான். ஆனா யாருக்குங்குறதுதான் கேள்வியே :)

// திருக்கோயில்கள் திருந்த அரசு நிர்வாகத்தை அதிலிருந்து தூக்கினால் போதும்.அரசு நிர்வாகத்தில் வரும் எதுவுமே உருப்படாது எனும்போது கோயில்கள் மட்டும் விதிவிலக்கா? //

அட அரசாங்கங்குறது என்னங்க? நம்ம பிரதிநிதிகள்தான். உள்ளபடிக்குச் சொன்னா...இன்னைக்கு இருக்குற அரசாங்கம் இப்பிடி தாந்தோனியாவும் தன்னலத்தோடயும் இருக்குறது நம்மளாளதான். ஏன்னா..நம்மளே அப்படித்தான இருக்கும். அப்ப நம்ம திருந்துனா...அரசாங்கம் திருந்தும். அடுத்தவன் சரியில்லைன்னு சொல்றதுக்கு முன்னாடி நம்ம மாறீருவோமே.

// ஆந்திராவில் கோயில் நிலத்தை விற்பதையும், அவை கொடையாளிகள் தானம் கொடுத்த பலனுக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்பதற்கும் சட்டம் போட்டிருக்கிறார்கள். கோயில்களை புரபஷனல் நிர்வாகத்திடம் ஒப்படைத்து பராமரித்தால் இந்தியாவில் ஏழ்மையான கோயில்கள் என்று எதுவுமே இருக்காது.பணக்கார கோயில்களில் வரும் வருமானம் இந்தியா முழுக்க உள்ள எல்லா கோயில்களையும் கைதூக்கிவிட போதுமானது. //

அதாகப்பட்டது கோயில்கள் எல்லாம் இஸ்கான் மாதிரி பிசினஸ் செண்டராயிரனும். ஏற்கனவே பாதிக்குப்பாதி அப்படித்தான் இருக்குன்னு வெச்சுக்குங்களேன்.

// புதுகோயில் கட்டவேண்டாம் என்பதும் சரியில்லை.புதிதாக பல குடியிருப்புகள் உருவாகின்றன.பல மைலுக்கு எங்கேயும் கோயில்கள் கிடையாது எனும்போது புதுகோயில் கட்டுவதுதான் வசதியானது. //

புதுசு கட்டவே கூடாதுன்னு ரவி சொன்னதா நான் நினைக்கலை. புதுசு தேவைதான். ஆனா அதுக்காக ஊரு முழுக்கக் கோயிலா நெரப்பி வைக்கிறதும் நல்லதில்லை. பழசையும் பாத்துக்கிட்டு தேவையான புதுசையும் கெட்டிக்கிருவோம்.

// திருக்கோயில் உண்டியலுக்கு காசு போடவேண்டாம் என்பதும் கைதட்டலை பெற்றுத்தருமேயன்றி வேறு எந்த பயனையும் பெற்றுதராது.ஏழை எளியவருக்கு தான தருமம் செய்யுங்கள்,ஏழ்மையான கோயிலுக்கு நிதி கொடுங்கள் என்று சொல்லுங்கள், பெரிய கோயில்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொல்லாதீர்கள். அது வேறு, இது வேறு. ஏழைகளுக்கு உதவுவதில் ஆன்மிக உணர்வு நிரம்பியவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.ஏழைகளுக்கு மேலும் கொடுங்கள் என்று சொல்லலாமே தவிர, கோயில் காசை அவர்களுக்கு கொடுங்கள் என்று கேட்பதில் எந்த பொருளும் இருப்பதாக தெரியவில்லை. //

அப்படியா? மொதல்ல உண்டியல்ல ஏன் காசு போடனும்? அதைச் சொல்லுங்க? பக்தியில அது எந்த வகை?

// ஆழ்வார்களும் நாயன்மார்களும் உண்டியலில் காசு போட்டார்களா என கேட்கிறீர்கள். திருமங்கை ஆழ்வார் திருடி கோயில் கட்டினார்.பத்ராசல ராமதாசர் அரசு கஜானா காசை எடுத்து பத்ராசலம் கோயிலுக்கு கொடுத்து ஜெயிலுக்கு போனார்.//

அத்தன நாயன்மார்லயும் ஆழ்வார்லயும் அடியார் கூட்டத்துலயும் ரெண்டுதானா கெடைச்சது செல்வன். பூசலார் தெரியுந்தானே? அரசன் கோடிக்கோடியா கொட்டி கோயில் கட்டினான். சாமி பூசலாரோட உள்ளக்கோயில்ல குடி போயிருச்சு.

// காசு கொடுத்து ஸ்பெஷல் தரிசனம் வேண்டாம் என்பதும் தவறு. அந்த காசு மற்ற பக்தர்களுக்கு வசதிகளை அதிகரிக்கத்தான் பயன்படுகிறது.அம்பானியாலும், ஐஸ்வர்யாராயாலும் எந்த காலத்திலும் கூட்டத்தோடு நின்று சாமி கும்பிட முடியாது.சாமியை பார்ப்பதை விட ஐஸ்வர்யாராயை பார்ப்பதில்தான் கூட்டம் ஆர்வத்துடன் இருக்கும்.அது யாருக்கும் நல்லதில்லை.அதுக்காக அம்பானியையும் ராயையும் கோயிலுக்கு போகாதே என்று சொல்லவும் முடியாது.அவர்கள் மன அழுத்ததுக்கும் ஆன்மிகதேடலுக்கும் அது ஒரு வடிகால். டிஸ்னிலாண்டில் ஃபாஸ்ட் பாஸுக்கு ஐம்பது டாலர், தனிவரிசை. (கோயிலும் டிஸ்னிலாண்டும் ஒன்றா என சர்வீஸ் மேனேஜ்மெண்ட் பற்றி தெரியாமல் சிலம்பமாடுபவர்கள் தனிடிராக்கில் ஆடிக்கொள்ளலாம்) //

well...service management is very much appreciable in service industry but not in temples. காசு குடுக்கலைன்னா டிஸ்னிலேண்டுக்குள்ளயே விட மாட்டான். அதுதான் கோயில்லயும் நடக்கனுமா என்ன? டிஸ்னிலாண்ட் பொழுது போக்கு இடம். அதோட ஏங்க கோயில ஒப்பிடுறீங்க? Usage of the term serive management wont justify your idea.

ஐஸ்வர்யாராய் வந்தா பல்லக் காட்டிக்கிட்டு எட்டிப்பாக்குறத நம்மதான் நிப்பாட்டனும். அதுனாலதான் மாத்தம் மொதல்ல நம்மகிட்ட இருந்து வரனும்னு சொல்றது. நினைவிருக்கா? பெண்களின் உடை பற்றிய ஏதோ ஒரு பதிவில்....பாக்குறவன் பார்வைல தப்பு இல்லைன்னா...தொறந்திருந்தா என்ன மூடிருந்தா என்ன? அதேதான் இங்கயும்.

// உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். //

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://kuttipisasu.blogspot.com/2007/12/blog-post_27.html

பாலையாவை மறக்க முடியுமா....அப்பப்பா...நடிகர். நடிகர். அவர் நடிகர்.

ஓர் இரவு படத்துல லலிதா அக்கினேனி நாகேஸ்வரராவ் நடித்த பாடல் அது. துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா....பாரதிதாசன் பாடல். அந்தப் படத்துல பாலையா வில்லன்.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2007/12/happy-new-year.html

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய வளமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். உலகம் அமைதியுற்று அனைவரும் நீடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://shylajan.blogspot.com/2007/12/blog-post.html

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின்னு வள்ளுவர் சொல்லீருக்காரு, நீங்க திண்ணியருதான்...எடுத்த சபதம் முடிச்சே தீருவீங்க. புத்தாண்டு மற்றும் சபத வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/12/581-2008.html

அருமையான பாட்டைப் புத்தாண்டுக்குப் போட்டிருக்கீங்க. ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு தொடங்கும் போதே பிச்சிக்கிட்டு போகுமே...அப்புறம் ஹ்ஹேய் ஹ்ஹேய் ஹ்ஹேய்.....டிபிகல் எஸ்.பி.பி பாட்டுங்க இது. அவருதான் இதுக்குச் சரி.

உங்களுக்கும் பாடும் நிலா பாலு வலைப்பூக் குழுமத்திற்கும் இசை ரசிகர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2007/12/579.html

நல்ல பாட்டுங்க. முந்தியே கேட்டிருக்கேன். பாட்டு மெல்லிசை மன்னர் இசைன்னு தெளிவாத் தெரியுது.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2007/12/ii.html

Freeflow writting...அதாவது ஓடும் எழுத்து நடை...படபடன்னு படிக்க முடியுது. நல்லா எழுதீருக்க. அடுத்த பாகத்துக்கு ஓடுறேன்.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2008/01/iii.html

ஓ இது வினிதாவா... ம்ம்ம்ம்...பாவம் இந்தப் பொண்ணு. அந்தப் பய தெய்வாவ நெனச்சிக்கிட்டிருக்கான். பேசாம பேர வள்ளின்னு மாத்தி வெச்சுக்கச் சொல்லு. வாய்ப்பிருந்தாலும் இருக்கும். ஆனா அந்தப் பயலும் அதுக்குப் பேர மாத்தனுமே!!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2007/12/blog-post_6537.html

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பாலாஜி. இந்த வருடம் இனிய வருடமாக அமைய வாழ்த்துகள். நீடு வாழ்க. பீடு வாழ்க.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/01/blog-post.html

வாங்க ரவி. இசையரசி வலைக்குழுமம் வரவேற்கிறது. கானா பிரபாவின் சார்பாகவும் ராஜேஷின் சார்பாகவும் உங்களை வரவேற்கிறேன்.

வந்ததும் பாடும் நிலா பாலு அவர்கள் குரலில் இசையரசி பற்றிக் கேட்க வைத்து விட்டீர்கள். நன்றி. :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/01/13.html

ஆக இதெல்லாம் முற்பிறவிகளா...ம்ம்ம்ம்......இப்ப கந்தனா வந்திருக்கானாக்கும். ம்ம்ம்.... ஏன் எல்லாக் கல்லுக்கும் பிறவிகள் வரலை? ஒரேயொரு கல்லை மட்டும் (அல்லது சில கற்களுக்கு மட்டும்) பிறவி கொடுத்திருக்காரு கிருஷ்ணரு?

அப்புறம்.... எல்லாம் இருக்கு. எடுத்துக்கிறது நம்மளோடதுன்னா...அது கடவுளின் விருப்பமா இல்லையா? எதை நம்ம எடுக்குறோம்னு முடிவு பண்றது கடவுளின் எண்ணப்படி நடக்கலையா?

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/01/582.html

சூப்பர் பாட்டுங்க. இந்தப் படம் வந்தப்ப ரொம்பவே ஹிட்டாம். இந்தப் படத்துல இந்தப் பாட்டும் மேகமே மேகமே பாட்டும் ரொம்ப ஹிட்டு. பிடிச்ச பாட்டுகளும் கூட.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2007/12/blog-post_6355.html

அன்பும் அறனும் இல்வாழ்க்கைக்குத் தேவைன்னா... அன்பும் அரவணைப்பும் நட்புக்குத் தேவை. ஆண் ஆணோ பெண் பெண்ணோ ஆண் பெண்ணோ....எல்லாத்துலயும் இருக்குறது தப்பில்லை. ரொம்பவும் சரி. தமிழ் பொண்ணுங்க இந்த அளவுக்குப் பழக மாட்டாங்க. ஆனா என்னுடைய மற்ற மாநிலத் தோழிகள் அன்போடயும் அரவணைப்போடயும் பழகுவாங்க.

நம்மூர்லதான் பொம்பளைய ஆம்பளை தொட்டாலே அதுக்குத்தான்னுன்னு முடிவு கட்டீர்ராங்களே. ரொம்பவே பிரிச்சி வெச்சி....அதையே நெனைக்க வெச்சிட்டோம்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2008/01/blog-post.html

கதையப் படிச்சேன். ஆனா என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலை. கதையின் மையக்கருத்து ஜெனிக்கு இப்பப் புரியாமப் போகலாம்...பின்னாடி புரியலாம்னு சொல்ல வர்ரீங்களா?

G.Ragavan said...

http://babumanohar.blogspot.com/2008/01/80.html

ஐயையோ...ஆண்களைக் குற்றம் சொல்லலாமா? இரவில் வெளியே வந்ததுதானே பெண்களின் குற்றம். வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருந்தால் 80 பேரும் எதுவும் செய்திருக்க மாட்டார்களே............இப்படியெல்லாம் உங்களுக்குப் பின்னூட்டங்க வரலாங்க. :)

ஆண்கள் குடிக்காம இருக்கனும்...ஆண்கள் ஒழுங்கா இருக்கனும்னு சொல்லப்படாது. பெண்களுக்கு ஆண்களிடமிருந்து பாதுகாப்பு வேணும்னா ஒளிஞ்சிக்கிறனும். இப்பிடி பப்ளிக்கா நடமாடக் கூடாதுன்னு உலக பண்பாட்டுக் காப்பாளர்கள் எல்லாரும் சொல்றாங்கய்யா.

G.Ragavan said...

http://kuttipisasu.blogspot.com/2008/01/blog-post_8040.html

பில்லா படம் பாத்தேன். எனக்குப் பிடிச்சிருந்தது. நல்லா செஞ்சிருந்தாங்க. I liked the movie. ரீமேக் செய்யலாம். தப்பில்லை. நீங்க சொன்னாப்புல எம்.ஜி.ஆர் சிவாஜியெல்லாம் ரீமேக்குல நடிச்சிருக்காங்க. அவங்களுக்குத் தெறமையிருந்துச்சு....ரீமேக்குனாலும் நல்லா நடிச்சி படத்தக் காப்பாத்துனாங்க.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/01/blog-post.html

அடா அடா அடா... பாட்டா இது. பிரமாதம் பிரமாதம். இந்தப் பாட்டெல்லாம் இப்ப இருக்குற இசையமைப்பாளர்களுக்குப் பாடமா வைக்கனும். குறிப்பா பாட்டுப் படிக்கிறவங்களுக்கு. தமிழ் தமிழாவும் இருக்குல்ல.

G.Ragavan said...

http://sivamgss.blogspot.com/2008/01/blog-post.html

என்னது பில்லா பாட்டுக நல்லால்லியா...எனக்கு எல்லாப் பாட்டுமே ரொம்பப் பிடிக்குமே...

ஹெலன் வந்து நினைத்தாலே இனிக்கும் சுகமே..ஷிக்கு ஷிக்கு ஷிக்குன்னு அடடடடா! நானும் சமீபத்துலதான் நெட்டுல பாத்தேன்.

காதல் பாட்டு கெடையாதே...வெத்தலையப் போட்டேண்டிதானே உண்டு. அது நல்ல பாட்டாச்சே.

சந்தேகப்படும் நடிகை பிரவீணா. இவர் பாக்கியராஜின் மனைவி. இப்பொழுது காலமாகிவிட்டார். இவர் பாமா ருக்மணி படத்திலும் நடிச்சிருக்காங்க.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2007/12/blog-post_6112.html


வணக்கம் மதுமிதா. உங்கள் நட்சத்திர வாரத்தில் நிறைய படிக்கவில்லை. பின்னூட்டமும் இடவில்லை. ஊர் சுற்றிக்கொண்டிருந்ததால்.

நாமாக எழுதும் பொழுது எழுத்து எளிமையாகிறது. இந்த மாதிரி கட்டுப்பாடுகளில் கொஞ்சம் சுதந்திரம் போகிறது. ஆனாலும் எழுதுவது நன்றே. தொடர்ந்து எழுதுங்கள். நாங்கள் காத்திருக்கிறோமோ இல்லையோ......தமிழ் காத்திருக்கிறது.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/01/14.html


என்ன மோகன் கதைய அதுக்குள்ள முடிச்சிட்டீங்க :)

ஆகக்கூடி அந்தக் கேசவனும் தாத்தனும் கூடி நாடகமாடி...செத்துப் போன மாதிரி நடிச்சி...அவரப் பாக்க விடாம செஞ்சி கல்யாணத்துல வர்ர மாதிரி வந்துட்டுப் போயி....கந்தன் இப்பிடி ஆன்மீகக் கிறுக்கனா ஆக்கீட்டாங்க. சரிதானே? :)

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2008/01/blog-post.html

ஓப்பேரா ஹவுசும் விடாம விருந்து படைச்சிக்கிட்டுதான் இருக்கு உங்களுக்கு. :) கொடுத்து வெச்சவருய்யா நீரு.

இந்த ஊருக்கு யாரோ இமேஷ் ரேஷமைய்யான்னு ஒருத்தரு வந்தாராம். எங்ககிட்ட இந்தூருக்காரங்க இந்தியாவுல இருந்து யாரோ பெரிய பாடகர் வந்திருக்காராமேன்னு கேட்டாங்க. அவரு பெரிய ஆளெல்லாம் ஒன்னுமே கெடையாதுன்னு சொல்லீட்டேன். அப்புறம் பாத்தாத்தான் தெரிஞ்சது எல்லாருமே அப்படித்தான் சொல்லீருக்காங்கன்னு.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2006/03/tr-bala_114373702853621260.html

சூப்பர் பாட்டுங்க சுந்தர். எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நல்ல அருமையான காதல் பாட்டு.

டி.ஆரின் பாடல்கள் மிகவும் நன்றாகவே இருக்கும். எல்லாப் பாடகர்களையும் பாட வைத்துச் சிறப்பான பாடல்களைக் கொடுத்தவர் அவர். டி.எம்.எஸ், பி.சுசீலா, பாலூ, ஜானகி, சித்ரா, ஜெயச்சந்திரன், ஏசுதாஸ், சசிரேகா என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் இசையில் வந்த நல்லதொரு பாடல் இது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=368

மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. சகபதிவர் ஒருவரின் உழைப்பின் விளைவு என்று அறிந்து மகிழ்ச்சி. இன்னும் பல புத்தகங்கள் எழுத என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/01/4.html

ஓ கதை இப்பிடிப் போகுதா? சரி...நல்லாருந்தாச் சரிதான். வாழ்க வளமுடன்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2007/12/blog-post_31.html

எல்லாமே அருமையான பாட்டுகள். நடுநடுவில் தாகூரின் கவிதைகளும் அருமை.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2008/01/361.html


இனிமே காசு இருக்குறவங்க..வீட்ட வெள்ளையடிச்சி வெக்காதீங்க...ஏன்னா உங்க கிட்ட காசு இருக்குன்னு தெரிஞ்சி...எவனாவது திருடீட்டான்னா....அந்த அப்பாவியைத் திருடத் தூண்டிய குற்றம் உங்கள் மேல் வரலாம்.

அதே மாதிரி அடுத்தவங்க ஒங்களைக் கொலை செய்யத் தூண்டுற மாதிரி நடந்துக்காதீங்க. இப்பிடி அடுக்கீட்டேப் போகலாம்.

அதே மாதிரி...பஸ்ல போறதாலதான் ஆக்சிடெண்ட் ஆகுது. பஸ்சுல போகாமலே இருக்குறது நல்லது. ரயிலு விமானம் அதுலயுந்தான்.

அட மானங்கெட்ட மடப்பசங்களா....நீ மூடி வெச்சாலும் திங்குறவன்....தொறந்து வெச்சாலும் நுங்குறவன். அதப் புரிஞ்சிக்கோங்கடா.

பண்பாட்டுக் காவலர்கள் கூற்றுப்படி பெண்களை வீட்டுக்குள்ளயே வெச்சிப் பூட்டீட்டா எவ்வளவு பாதுகாப்பா இருக்கும். அது ஏன் எல்லாருக்கும் புரிய மாட்டேங்குது.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2008/01/blog-post_05.html

ஹா ஹா ஹா இப்பிடி ஜாலியா படிச்சி எவ்ளோ நாளாச்சு. ஆனா ஒன்னுங்க...இதெல்லாம் நடந்தாலும் நடக்கலாம். அரசியல்ல எதுவும் நடக்கும்.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/01/blog-post_04.html

ஆகா... இப்பிடியொரு சங்கிலித் தொடரா... தொடரட்டும். வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://iramurugappan.blogspot.com/2008/01/blog-post_05.html

அடப்பாவி மனிதர்களா....சகமனிதன் சமைச்சிச் சாப்பிடக் கூட முடியாதாக்கும். வெளியில கடையில திங்குறவன் சமைக்கிறவன் கொலங் கோத்திரந் தெரிஞ்சிதான் திங்குறானுகளோ...இவனுகளையெல்லாம் வன்கொடுமைச் சட்டத்துல அடைக்கனும்.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=370

ஆகா...லிவிங் ஸ்மைல் வித்யாவின் புத்தகமும் வெளிவருகிறதா. மிகச் சிறப்பு. வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://sivamgss.blogspot.com/2008/01/blog-post.html

// கீதா சாம்பசிவம் said...
வாங்க ராகவன், முதல்லே ரொம்ப நாளா ஒரு சந்தேகம் கேட்கணும்னு உங்க கிட்டே!

இந்தச் "சரவணன் என்ற ராகவன்" அப்படின்னு ஒருத்தர் பங்களூரில் இருந்தாரே/இருக்கிறாரே? அவரும் நீங்களும் ஒரே ஆளா வேறே வேறேயா? போன வருஷம் "நம்பிக்கைக் குழுமம்" "காதல் கவிதை"ப் போட்டியில் நீங்கதான்னு நினைச்சுட்டு இருந்தேன், மஞ்சூர் இல்லைன்னு சொல்றார். //

:) மஞ்சூர் சொல்றதுதாங்க சரி. நம்ம கவிதையெல்லாம் எழுதுறதில்லைங்க. இதுல காதல் கவிதையெல்லாம் எங்க எழுதுறது? காதல் குளிர் தொடர்கதைக்காக ஏதோ கொஞ்சம் முயற்சி செஞ்சேன்.

சரவணன் என்ற ராகவன் வேற. நான் வேற. நான் அவரில்லை :) அட...நான் அவனில்லை படத்துக்கு எப்ப விமர்சனம்?

G.Ragavan said...

http://thanjavuraan.blogspot.com/2008/01/blog-post.html

தஞ்சாவூரன், அலசல்னு சொன்னா சரிதாங்க. ஆனா அதுக்குச் சொன்ன தீர்வு, நீங்க முடிவை எடுத்துட்டு அலசத் தொடங்குன மாதிரி நினைக்க வைக்குது.

என்னவோ புத்தாண்டுக் கொண்டாட்டத்துல மட்டுந்தான் பொண்ணுங்க கையப்பிடிச்சி இழுக்குற மாதிரி சொல்றீங்க பாருங்க. அடடா. மத்த நாள்கள்ள... பகல்களில்...மத்த எந்த வேளையிலும் எதுவுமே நடக்காம இருக்குது நம்ம நாட்டுல. கணவன் மனைவியை அடிக்கலாம்னு உரிமை கொடுத்து ஆணைக் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கும் பெருமைக்குறிய பண்பாடு நம்மோடது. இப்பத்தான் லேசா மாறியிருக்கு. என்னைக்கு ஆண் தண்ணியடிக்கப் பழகுனப்பவே தட்டி வைக்காம விட்டமோ..அப்பவே நம்ம பண்பாடு நடுநிலைமை தவறீருச்சு. பண்பாட்டுப் பெருமை பேசுறதெல்லாம் பெண்களை நகைகளாக்கி லாக்கர்ல வைக்கத்தான் உதவும். என்னவோ...சொல்லனும்னு தோணிச்சி சொல்லீட்டேன். கோவிச்சிக்கிறாதீங்க.

G.Ragavan said...

http://thanjavuraan.blogspot.com/2008/01/blog-post.html

அட..சொல்ல மறந்துட்டேன்.

உண்மையான தீர்வு என்ன தெரியுமா? ஒவ்வொரு அம்மாவும் தன்னோட மகனை வளக்குறப்போ மகளை விட எந்த விதத்திலும் கூட வளக்காம இருக்கனும். பெண்ணை எப்படி மதிக்கனும்னு கத்துக் கொடுக்கனும். அப்புறம் அடுத்தவங்க சுதந்திரத்தை மதிக்கக் கத்துக்கனும். போன வாரம் அலுவலக நண்பர்கள் டூர் போயிருந்தோம். அதுல ஒருத்தன் நம்மூருக்காரந்தான்...வெள்ளைக்கார சோடிகள் முத்தம் குடுக்குறதையே தேடிப்பிடிச்சி படமா எடுத்துத் தள்ளியிருந்தான். தெருவுல முத்தம் கொடுத்தப்ப எடுத்தா என்னன்னு வாதாடலாம்.....ஆனா அது கெடையாது நம்ம பண்பாடு...சங்கப்பாட்டுலயே சொல்றாங்க. தேர்ல வர்ர தலைவன்...தலைவியைப் பிரிஞ்சி சம்பாதிக்கப் போனவன்...காஞ்சி போயி வேகமா திரும்பி வர்ரான்...அப்ப தேரின் மணியை அடிக்காம அழுத்திப் பிடிச்சிக்கிறான். ஏன்னா...வழியில சோலை..சோலைல மலர்கள்...மலர்கள்ள வண்டுகள் கூடிக்கிடக்கு. மணியோசை அந்தக் கூடலுக்குத் தொந்தரவாயிருமேன்னு கப்புன்னு பிடிச்சி மணிய நிப்பாட்டுறான். அந்த அளவுக்கு அடுத்தவர் உணர்ச்சிகளை மதிச்சது நம்ம பண்பாடு. அது இன்னைக்கு எந்த மாதிரி வெச்சிருக்கோம்னு நமக்கே தெரியும்.

G.Ragavan said...

http://blogintamil.blogspot.com/2008/01/blog-post.html

ஆகா....இந்த வாரம் நீங்களா...

அதெல்லாம் சரி. இப்பிடிப் போட்டுத் தாக்குனா எப்படிங்க? ஒங்க நம்பிக்கையக் காப்பாத்திக்கக் கஷ்டப்படனுமே!!!

G.Ragavan said...

http://vasanthamravi.blogspot.com/2008/01/mumbai-girls-molested-during-new-year.html

சரிங்க. இனிமே யாரும் போட்டோ எடுக்காதீங்க. நாட்டுல குற்றமே நடக்காது. நடந்தாலும் நாம உணர்ச்சிவசப்பட மாட்டோம்.

// புத்தாண்டு அன்று இரவு போதை மயக்கத்தில் கயவர்கள் மிக மோசமாக நடந்து கொள்வார்கள் என்று சாதாரண மக்களுக்கு கூட தெரியும். இதை எல்லாம் தெரிந்து கொண்டும் கூட பல பெண்கள் அன்றைய தினம் தண்ணியட்டிக்க வெளியே வருகின்றனர் என்றால் அவர்கள் எதற்கும் துணிந்து தான் வருகின்றனர் என்று தானே அர்த்தம். இதில் எப்படி சமுதாயத்தை குற்றம் சொல்ல முடியும்? சட்டங்கள் மாறும் வரை இந்த கயவர்களை ஒன்றும் செய்ய முடியாது. //

அப்ப அந்தக் கயவர்களை மன்னிச்சி விட்டுறலாமா?

ஒரே ஒரு கேள்வி. வீட்ட நல்ல செல்வச் செழிப்பா வெச்சிருந்தா...எதுக்கும் துணிஞ்சவங்கன்னுதான்ன அர்த்தம். அப்ப திருடுறவன இனிமே ஒன்னும் சொல்ல முடியாது. கொலை செய்றவனையும் ஒன்னும் செய்ய முடியாது. இதில் எப்படி சமுதாயத்தை குற்றம் சொல்ல முடியும்? சட்டங்கள் மாறும் வரை இந்த கயவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

// அப்பெண்கள் எந்த உடை அணிந்து இருந்தனர் என்று பலரும் கேட்கின்றனர்?, போதை வெறியில் வருபவன் சேலை கட்டி இருந்தால் மட்டும் பிடித்து இழுக்காமல் சென்று விடுவானா? ஒரு வேளை அவர்கள் கிளிவேஜ் காட்டிக்கொண்டு , காமத்தை தூண்டும் படி மேலாடை அணிந்திருந்தால் , அந்த கயவர்களை இந்த குற்றத்தை செய்ய தூண்டியதில் ஆபாச உடையின் பங்கும் கொஞ்சம் இருக்கும் என்றே நம்புகிறேன். //

ஆமா ஆமா ஆபாச உடைலதான் இருக்கு. வீட்டை இனிமே யாராவது வீட்டுக்குப் பெயிண்ட் அடிச்சா அவ்வளவுதான்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/01/25.html


எல்லாமே நல்ல பாட்டுங்க.

தேவனின் கோவில்....அருமையான பாட்டு...அதுல ப்ரேம ப்ரேம ப்ரேமாதி ப்ரேமம்னு வர்ரது எனக்குப் பிடிக்காது. ஆனா அடுத்து சித்ரா தேவனின் கோயில்னு தொடங்குனதுமே அள்ளிக்கிட்டுப் போகும். என்ன அருமையான மெலடி.

தும்பி வா பாட்டும் அருமைதான். ஆனா அந்தப் பாட்டு வரலை. திரும்ப ப்ரேம ப்ரேம ப்ரேமாதி பாட்டுதான் வருது.

ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டச் சொல்லி ஆசப்பட்டேன்......எவ்வளவு நாளாச்சு. அருமையான பாட்டுங்க. சொர்ணலதாவின் குரல்ல ரொம்ப அருமையா இருக்கு. நினைவு படுத்திய சிவியாருக்கும் பாட்டைக் குடுத்த உங்களுக்கும் நன்றி.

அமரா மதுரா ப்ரேமா நீ பா பேக சந்த மாமா...என்ன பாக்குறீங்க? அமுதைப் பொழியும் நிலவேதான். கன்னடத்தில். ரத்னகிரி ரஹஸ்யா :) அதே கதைதான். டி.ஜி.லிங்கப்பாதான். இசையரசியேதான்.

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்....இளையராஜான்னு எழுதீட்டீங்க. மெல்லிசை மன்னரும் நல்ல பாட்டுங்க குடுத்திருக்காருங்க :)

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு....என்னோட ஆல் டைம் ஃபேவரிட்ல ஒன்னு. ஹாட்ஸ் ஆஃப் சந்திரபோஸ்.

G.Ragavan said...

http://webeelam.blogspot.com/2008/01/blog-post_08.html

அடக் கொடுமையே... கேடு கெட்ட கூட்டமா இருக்கும் போல இருக்கே. இதுக்குப் பேரு பண்பாடுன்னு எவன்யா சொன்னான்? அந்த ஜெர்மனியப் போலீஸ் எல்லாரையும் முட்டிக்கி முட்டிக்கி தட்டுனாத்தான் சரி வரும்.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2008/01/iv.html

:) இதுதான் திருப்பமா. மொதல்ல புரியலை. ரெண்டாவது வாட்டி படிக்கிறப்போ புரிஞ்சது.

நல்ல முயற்சி. கொஞ்சம் சிரமப்பட்டிருந்தா பிரமாதமா இருந்திருக்கும். மற்ற படி நல்ல யோசனை.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/01/5.html

பொண்ணுங்களை கரையேத்தியாச்சு. பாட்டியையும் மேல ஏத்தியாச்சு. அடுத்து ஹரியோட அப்பாதானா... அவருக்கு என்னவோ...

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/01/blog-post.html

33 சதவீதம் குடுத்தீங்க சரி... ஆனா டீச்சரை மூனாவது பேராப் போட என்ன காரணம்? அதுவுமில்லாம அவங்களுக்கு முன்னாடி இருக்குற எண் 3 மட்டும் கருப்பா இருக்கே. ஆம்பளைங்களுக்குப் போட்டிருக்குற எண் 1ம் 2ம் ஊதா நிறத்துல இருக்கே? அப்ப நீங்களும்.......... (யாருப்பா எங்க... கொடியத் தூக்குங்கப்பா...)

அப்புறம்.. படம் நல்லாருந்துச்சு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/01/6.html


ஓ இன்னும் இவன் வேற இருக்கான்ல... அவனுக்கும் முடியனுமாக்கும். இந்த பிஜ்யா பாவம்... இப்பிடி ஆயிருச்சே.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2008/01/blog-post.html

நல்ல அறிமுகம். கண்டிப்பா படத்தப் பாக்கனும்னு தோண வெச்சிட்டீங்க. பாத்துருவோம். :)

G.Ragavan said...

http://chitchatmalaysia.blogspot.com/2008/01/1.html

மிகவும் அருமையான தொடர் இது. தன்னுடைய நாட்டைப் பற்றி எடுத்துச் சொல்லும் தொடர் என்பதாலும் பாராட்டப்பட வேண்டியதே.

லங்காவி மிக அழகு. ஐயமேயில்லை. 2007ஐ மலேசியாவில்தான் தொடங்கினேன். அப்பொழுது லங்காவியும் சென்று வந்தேன். பினாங்கிலிருந்து ஃபெர்ரியில் லங்காவி சென்றோம். மிக அருமையான பயணம். மிகவும் ரசித்தேன்.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2008/01/blog-post_12.html

மொக்கைச் சங்கிலித் தொடரா இப்போ...... தமிழ் வலைப்ப்பூக்களை மொக்கையாலும் காப்பாத்த முடியாதுங்குறது.....உஷா மொக்கைப் பதிவு போடும் போதே தெரிஞ்சு போச்சே. ஆகா!!!!!

அழைச்சிட்டீங்க. நான் அடுத்து போடப்போற பதிவு 2008ல நான் போடப் போற மொதப் பதிவு. அது மொக்கையாத்தான் இருக்கனும்னு இருக்குறப்போ...யார் என்ன செய்ய முடியும்!!!

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/01/596.html

நல்ல பாடல். சங்கர் கணேஷ் இசையில் வெளிவந்த அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.

// வா மச்சான் வா, வண்ணாரப் பேட்டை என்ற சென்னைச் செந்தமிழ்ப் பாடல் இடம் பெற்ற படம்.//

ஒரு சின்ன திருத்தம். சென்னைச் செந்தமிழ் அல்ல. பெங்களூர்த் தமிழ் அது. கதை முழுக்க பெங்களூரில் நடப்பது. பெங்களூரிலும் வண்ணாரப்பேட்டை உண்டு. விவேக் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/01/blog-post_10.html

இந்தப் பாட்டை நான் முன்னாடியே கேட்டிருக்கேன். இது ரொம்பவே மென்மையான பாட்டு. இந்தப் படத்துல கதாநாயகிக்கான எல்லாப் பாட்டையும் ஜெயலலிதாவே பாடியிருக்காரு. இன்னொரு பெண்குரல் படத்துல மனோரமா.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2008/01/blog-post.html

அழகான படங்கள். குழந்தையின் முகத்தைப் பாருங்கள். அடடா... என்ன ஒரு கும்மாளம்.

புடிச்ச படம் போடச் சொன்னதுக்கு...

காமரால புடிச்ச படம்...
உங்களுக்குப் புடிச்ச படம்...
பாத்த எங்களுக்கும் புடிச்ச படமால்ல போட்டுட்டீங்க! :)

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/01/594.html

எனக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும். பாலு ஜானகி கூட்டணில பிடிச்ச பாட்டுகள்ள ஒன்னு. ஓடிக்கிட்டேயிருக்குற மாதிரி இருக்கும் பாட்டு.இந்தப் படத்துலதான் மொதமொதலா பாரதிராஜாக்கு வாலி எழுதுனாருன்னு நெனைக்கிறேன். சரியாத் தெரியலை.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2006/11/blog-post_116248262507634591.html

வாவ்....அருமையான பாட்டுங்க. இப்பிடித் தோண்டத் தோண்ட எத்தனை நல்ல நல்ல பாட்டுங்க கெடைக்குது. நன்றி. நன்றி. நன்றி.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/01/592.html

இந்தப் படத்துல ரெண்டு பாட்டுங்க சூப்பர் ஹிட். மத்த மூனும் கேட்டதேயில்லை. படமும் பாத்ததேயில்லை.

இதுல ஒரு இது என்னன்னா... எஸ்.பி.பி ரெண்டு பாட்டு பாடியிருக்காரு. ஆனா நாலு பெரிய பாடகிகளோட. ஒரே படத்துல நாலு பெரிய பாடகிகளோட பாடுற வாய்ப்பு வேற யாருக்கும் கெடச்சிருக்கான்னு தெரியலை. பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், ஜிக்கி ஆகிய நாலு பேரோடயும் பாடியிருக்காரு.

G.Ragavan said...

http://kappiguys.blogspot.com/2008/01/blog-post.html

மொக்கை என்பது மொச்சையைப் போல இச்சை என்பதை உணர்ந்த திருவாளர் கப்பி அவர்கள் தலைப்பில் தொடங்கி வணக்கம் வரும் மொச்சைகளை.. மன்னிக்க மொக்கையை அள்ளித் தெளித்திருக்கிறார். அவருடைய மொச்சைக் குழம்பை..மன்னிக்க மொக்கை குழப்பத்தை மிகமிகப் பாராட்டுகிறேன்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/01/blog-post.html

குமரன் உங்க கதைய எல்லாரும் விரும்பிப் படிச்சிருக்காங்கன்னு தெரியுது. நீங்க எழுதுன மொதக் கதை. அதைப் பத்தி இவ்ளோ சொல்றாங்கன்னா... கதைல ஏதோ இருக்குன்னுதானே பொருள். அதுவுமில்லாம பதிவுலகப் பெரிவங்க எல்லாருமே விமர்சனம் செய்திருக்காங்க. என்னுடைய பாராட்டுகள். அடுத்த கதை எப்போ?

G.Ragavan said...

http://abiappa.blogspot.com/2008/01/blog-post_13.html

படிக்கிறப்போ கதைல ரொம்ப லேசா ஒன்றிட முடியுது. நல்ல லேசான எழுத்து நடை.

வைரத்தை படிக்கிறவங்க உள்ளத்துல தங்கத்துல பதிக்கிற மாதிரி பதிச்சிட்டீங்க. அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்ல்.

இப்பல்லாம் நல்ல கதைகளைப் படிக்கிறப்போ பொறாமையா இருக்கு. :) நல்லா எழுதீருக்கீங்க.

G.Ragavan said...

http://varappu.blogspot.com/2008/01/blog-post.html

நல்லாயிருக்குங்க படங்க. கடைசி மூனுமே அருமை.

ஆனா ஒன்னு....எக்கச்சக்கமா தமிழ்ல சிந்திச்சிருக்கீங்கன்னு....

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=371

வாழ்த்துகள் சிறில். அம்மா கையால வெளியிட வெச்சிட்டீங்க. அருமையோ அருமை. ஈன்ற பொழுதிலும் பெருதுவத்திருப்பாங்க. இன்னும் பல புத்தகங்கள் வெளியிடனும் நீங்க.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/01/7.html

இவங்களும் பொண்ணு குடுக்க மாட்டாங்க. குடுக்குற வீட்டுல எடுத்தாலும் விட மாட்டாங்க. என்ன மனுசங்கய்யா!!!!!

சரி.. ஹரிக்கும் கனகாவுக்கும் என்னாகுதுன்னு பாப்போம்.

G.Ragavan said...

http://mangalore-siva.blogspot.com/2008/01/blog-post_13.html

வெண்பொங்கலுக்குச் சட்னி சாம்பார் கூட்டணின்னு தமிழ்நாடு முடிவு செஞ்சுட்டாலும் தயிரும் நல்லாருக்கும். அதே நேரத்துல புளிக் கொத்சு இருந்தாலும் நல்லாருக்கும். கடுகு உளுந்து பச்ச மொளகா தாளிச்சு..அதுல நீராக் கரைச்ச புளிக்கரைசலை ஊத்திக் கொதிக்க வைக்கனும். லேசா வெல்லம் போட்டு உப்புப் போட்டு கொதிக்க விடனும். புளிவாடையும் போகனும். கொத்சு ரொம்பக் கெட்டியாவும் இருக்கக் கூடாது. இத ஊத்திச் சாப்பிட்டா வெண்பொங்கல் பொன் பொங்கலா ருசிக்கும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/01/blog-post_14.html

சொன்னாலும் சொல்லாட்டியும் நீ பழம் பெறும் பதிவர்தான். பெரிய பதிவர்தான்.

ஏற்கனவே படிச்ச பதிவுகள். நினைவு படுத்தியமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/01/blog-post_14.html


பிரமாதமான பொங்கல்களா இருக்கே. :)

இன்னும் சிலது விட்டுப் போச்சுங்களே.

களகளன்னு நெய் ஊத்தி அழகாப் பொங்கல் வெச்சி...அத வாழையில எடுத்து வெச்சி....ஆனா திங்காம ஃபோட்டோ பிடிச்சீங்கன்னா...அது சிவியார் பொங்கல்

நீங்க வெச்ச பொங்கல்லயே நல்ல பொங்கல்னு நீங்க நெனச்சு...ஆனா ஏன் யாரும் சாப்பிடலைன்னு தோணுதா....அப்ப அது சர்வேசன் பொங்கல்

இனிமே பொங்கல் வைக்காதீங்கன்னு உங்களுக்குத் தோணுச்சுன்னா அது கண்ணபிரான் ரவிசங்கர் பொங்கல்

இது தமிழ்ப் பொங்கல்..இது அதே பொங்கல். ஆனா மலையாளத்துப் பொங்கல். அதெ பொங்கல் ஆந்திராவுல பொங்குனப்போ இப்பிடி இருந்துச்சு. இப்பிடி ஸ்டேட் விட்டு ஸ்டேட் பொங்கலா வருதா...அப்ப அது ரேடியோஸ்பதி கானாபிரபா பொங்கல்

G.Ragavan said...

http://photography-in-tamil.blogspot.com/2008/01/flickr-10.html

மொத ரெண்டு படம் அழகுன்னா மூனாவது படம் அறிவு. நல்லாருந்துச்சு படங்க.

G.Ragavan said...

http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_5731.html

திருப்பரங்குன்றம்னாலே முருகந்தான் நினைவுக்கு வரும். தூத்துக்குடியில இருந்து மதுர வழியா ரயில்ல போனா ஜன்னல் வழியா தெரியிற கோபுரமும் அதுல தெரியிற வேலும்...அதப் பாத்து கண்ணத்துல போட்டுக்கிறதும் சின்ன வயசுப் பழக்கம். இப்ப கன்னத்துல போட்டுக்கிறதில்லைன்னாலும் மனசுக்குள்ள போட்டுக்கிறதுண்டு. அந்த வழியாப் பயணம் போய் ரொம்ப நாளாச்சு.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2008/01/220.html

படங்கள் சூப்பர். ரஷ்யாவும் சரி. இந்தியாவும் சரி.

அது சரி... நல்ல தமிழைப் பாட்டாக் கேட்டா...ஏன் இப்பிடிப் பரவசமாகுது!!!

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/01/blog-post_10.html

மொக்கையிலும் மொக்கையிதுன்னு சொல்ல முடியாத அளவுக்கு உப்புமால நெய் ஊத்திக் கிண்டியிருக்கீங்க...ம்ம்ம்ம்... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://gopinath-walker.blogspot.com/2007/12/blog-post_19.html

அருமையான வீடியோ. நமக்கெல்லாம் பாடம்.

மெட்டுக்கு வர்ர மாதிரியே யோசிச்சேன். ரொம்ப யோசிக்க முடியலை. ஆகையால சுருக்கமா நாலு வரி.

தடுக்கி விழுந்தது யார்
தடத்தை மறந்தது யார்
நீ எழு
இந்திய நாடு எழும்
ஏ பகலே நிலவே நீயே பார்
நாங்கள் எழுகின்றோம்
நீ எழு
நம் இந்திய நாடு எழும்

G.Ragavan said...

http://vasanthamravi.blogspot.com/2008/01/blog-post_16.html

இதுமாதிரி ஒன்னு எனக்கும் தெரியும். அதுவும் அமெரிக்காதான். பெரும்பாலும் நீங்க சொல்றது உண்மைதான். மறுப்பதிற்கில்லை. இது பலப்பல கோணங்கள்ள வெளிப்படுது.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/01/blog-post_16.html

மிகவும் நடுநிலையான விமர்சனம். ஒத்துக்கொள்ளும்படிச் சொல்லியிருக்கின்றீர்கள். உங்களுக்கும் குமரனுக்கும் பாராட்டுகள்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2008/01/blog-post_16.html

இசைக்கோர்வையைக் கேட்டேன். இதே போன்ற இசையை சிக்கிம்மில் கேட்டிருக்கிறேன். ரும்டெக் மானெஸ்ட்ரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கேட்டிருக்கிறேன்.

எல்.வைத்தியநாதன் அவர்களின் இசையறிவு பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நல்ல பொருத்தமான பதிவிட்ட உங்களுக்கும் பாராட்டுகள்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2008/01/blog-post.html

உண்மைதாங்க. உங்கள் மழலையின் குரலில் இசையின் இனிமையைக் காண்கின்றீர்கள்.

இதே மாதிரி அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்னும் வள்ளுவர் சொல்லியிருக்காரு. அதுவும் நீங்க அனுபவிச்சிருப்பீங்களே.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/01/blog-post_16.html

குடுக்கலாம்யா...ஒரு பத்துப் பதினைஞ்சு குடுக்கனும். அவரு சிறந்த அறுவை நிபுணர்னும் நெறைய நிரூபிச்சிருக்காரு. டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கூடப் பட்டம் கிழிக்கலாம் அவருக்காக.

G.Ragavan said...

http://pitchaipathiram.blogspot.com/2008/01/blog-post_17.html

திருநங்கைகளைப் பொறுத்தவரையில் நினைத்துப் பார்க்கவே அச்சப்படும் ஒரு விஷயம்... தன்னுடைய உடலில் ஒரு பாகத்தையே வலிக்க வலிக்க அறுத்தெரியும் அளவிற்கு அது தேவைப்படாமை. அந்த அளவிற்கு அது தன்னுடையதில்லை என்ற எண்ணம் எப்படி வருகின்றது என்பது நமக்குத் தெரியவில்லையானாலும்....அப்படி எண்ணம் வரும் என்பது புரிகிறது. லிவிங் ஸ்மைல் வித்யாவின் உள்ளப்போராட்டங்களையும் வாழ்க்கைப் போராங்களையும் எழுத்து வடிவில் கொண்டுவந்திருப்பது மிகவும் சிறப்பு. உங்கள் வலியும் வேதனையும் புரிகின்றது. உங்களை மதிக்கிறோம்.

எழுத்தாளராகியிருக்கும் லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/01/8.html

பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இந்த மாதிரி...குத்தம் சொல்றதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்குதே.

// இலவசக்கொத்தனார் said...
கல்யாணமும் ஆச்சு. அடுத்து என்ன? //

என்ன கொத்ஸ் இது... எதை கேக்கனும்னு ஒரு இது இருக்குல்ல :)

G.Ragavan said...

http://padiththathilpidiththathu.blogspot.com/2007/11/blog-post.html

:) உண்மைதாங்க. ஒத்துக்கிறேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2008/01/blog-post.html

நன்றாக இருக்கிறது திராச. இந்தப் பாடலைக் கேட்டாலும் சுகமாகத்தான் இருந்திருக்கும். கொடுத்து வைத்தவர் நீங்கள். அதே போல வரிகளைக் கேட்டு எழுதிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் உள்ளம் குழைவதால்தானே இந்த வலைப்பூவில் நாமெல்லாம் கூடியிருக்கிறோம். :)

G.Ragavan said...

http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_4041.html

ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்து. ஆமோதிக்கிறேன்.

G.Ragavan said...

http://pstlpost.blogspot.com/2008/01/blog-post_4814.html

பி.வாசுவா? ஆண்டவா...அப்ப குசேலனைப் பாக்க யோசிக்கத்தான் வேணும். அவர் அள்ளித் தெளிக்கிற மசாலா வாடைய நெனைக்கும் போதே பயமா இருக்கே.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/01/blog-post_17.html

நல்ல பதிவு. நல்ல பாட்டு.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2008/01/blog-post_13.html

கலர்கலரா எழுதலைன்னா என்ன...கண்ணியமா எழுதுறீங்கள்ள...அதுதான் நீங்க பட்டியல் போட்டுருக்கீங்க.

அழைப்புக்கு நன்றி. ஆனா என்னோட பதிவுகள்ள தேர்ந்தெடுக்க முடியுமான்னு தெரியலை. :(

G.Ragavan said...

http://kiranmova.blogspot.com/2008/01/virtual-meeting-places-and-need-for.html

Nice thought. I agree social factor plays important role in influencing our buying nature. obviuously i would like to good..atleast decent in front of others.

virtual places are different. i can sit with pajama and chat or even post in some forums.

but... there is a clinche there also... u want to put ur best photo for profile...so u buy good dress for that...again influenced....and then comes video chatting...again ur going see ppl...and story continues..........

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2008/01/blog-post_17.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//G.Ragavan said...
நல்ல பதிவு. நல்ல பாட்டு//

எங்க ஜிரா-வா இது? இப்படி ஒன்-லைனர்-ல பேசறாரு? நான் இன்னும் நெறய விசயம்...தமிழ்க் கடவுள், காவடி பத்தியெல்லாம் சொல்லப் போறாரு-ன்னுல்ல நெனச்சேன்! //

:) அவருக்கு அதெல்லாம் தெரியாதுங்க. நீங்க சொன்னா கேட்டுக்கிறப் போறாரு. :)

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2008/01/367.html

ஆம்ஸ்டர்டாமைப் பத்தி பதிவுல சொன்னதால ஒரு வணக்கம் போட்டுக்கிறேன். இருக்குற ஊருல்ல.

இங்க ஆம்ஸ்டர்டாம் ஏர்ப்போர்ட் ஐரோப்பாவுலயே சிறந்த ஏர்ப்போர்ட். கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே ரொம்ப லேசா சாமாளிச்சிறலாம். அதுவுமில்லாம வயசானவங்க உதவி கேட்டா அவங்களுக்குன்னு வண்டி வெச்சிருக்காங்க.

ஆனா பாருங்க...இதெல்லாம் புதுசா வர்ர நம்மூர்ப் பெரியவங்க கண்களுக்குத் தெரியாது. மத்தபடி ஐரோப்பாவுல நான் பாத்த ஏர்ப்போர்ட்கள்ளயே ஸ்கிப்போல் (ஆம்ஸ்டர்டாம்)) ஏர்ப்போர்ட்தான் பெஸ்ட். வீட்டுல இருந்து பஸ் பிடிச்சாலே இருவது நிமிசந்தான். அமெரிக்க ஏர்ப்போர்ட்டுகளையும் பாத்திருக்கேன். ஆனா ஸ்கிப்போல் ஸ்கிப்போல்தான்.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/01/201.html

அருமையான பாட்டுங்க. வளை வளைன்னு வருது.

இளா...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/01/blog-post.html

ரெண்டுமே அருமையான பாட்டுகள். இளையராஜா இசையில வந்த அருமையான பாட்டுகள். பாடலைப் பதிவு செய்து தந்த கோவை ரவிக்கும் பதிவு செய்து இட்ட பிரபாவிற்கும் நன்றி.

G.Ragavan said...

http://chitchatmalaysia.blogspot.com/2008/01/2.html

நாங்க எறங்குனதும் ஃபெர்ரியில போய்தான். 2007ம் ஆண்டைச் சுற்றுலா ஆண்டாக அறிவிச்சிருந்தாங்க. நாங்க பெனாங்குல இருந்து கெளம்பி எறங்குனதும் 1ம் தேதிதான். ஆகையால வர்ரவங்களுக்கெல்லாம் லங்காவின்னு பெயர் போட்ட அழகான கர்ச்சீப் (தலைல கட்டுற ஸ்கார்பா இருக்குமோ) குடுத்தாங்க. அத வாங்க பத்திரமா இந்தியாவுல வெச்சிருக்கேன்.

அந்த பருந்தும் அழகானது. அருகில் இருக்கும் நீங்கள் சொல்லும் அழகான இடத்திற்கு மாலையில் சென்றோம்.

அல்லாபிச்சை என்ற தமிழரின் காரில்தான் வாடகை பிடித்துச் சென்றோம். இரண்டு நாட்களுக்கு அவர்தான் பல இடங்களுக்கும் பயணம் அழைத்துச் சென்றார்.

இடங்களைப் பார்த்திருந்தாலும் இந்தக் கதைகளை யாரும் சொல்லவில்லை. நீங்கள் சொன்னமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/01/on-his-blindness.html


இது மொக்கையா...இது மொக்கையான்னு கேக்குறேன். அறிவாளிங்களையெல்லாம் மொக்கை பதிவுக்குக் கூப்புட்ட கப்பியைச் சொல்லனும்.

பாரடைஸ் லாஸ்ட் ரீகெய்ண்டுன்னு பழைய கதையப் பத்தியெல்லாம் பேசுறீங்களே...சமீபத்துல 1956ல் பொறந்தவங்களோ நீங்க ;)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/01/blog-post_16.html


// இராம்/Raam said...
ஹி ஹி.... இளைய தளபதியின் குருவி வரட்டும்... எல்லாரும் வாயடைச்சு போகப்போறாங்க... :) //

என்னது குருவியா? அதுக்கும் சிட்டுக்குருவி லேகியத்துக்கும் எதுவும் தொடர்பு இருக்குதா என்ன வாயடைச்சுப் போறதுக்கு? :))))))

என்னய்யா குருவி காக்காய்னு...வில்லன் இருக்கான். இவரு எத்தனை பேரு வந்தாலும் அடிச்சுப் போடுற ஆளு. இவர் மேல ஒரு பொண்ணுக்குக் காதல். வில்லனை வென்று காதலியைக் கட்டிப்பிடிக்கிறதுதான கதை.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/01/blog-post_14.html

// வெட்டிப்பயல் said...
//G.Ragavan said...

சொன்னாலும் சொல்லாட்டியும் நீ பழம் பெறும் பதிவர்தான். பெரிய பதிவர்தான்.

ஏற்கனவே படிச்ச பதிவுகள். நினைவு படுத்தியமைக்கு நன்றி.//

ஆஹா... நீங்களே இப்படி சொல்லலாமா??? //

சொல்லலாமாவா!!!! தாராளமாச் சொல்லலாம்.

சுழன்று கொண்டிருந்த பல ஆன்மீகப் புயல்களைக் கரைகடக்க வைத்த சூறாவளி நீர்

கிச்சுமுச்சுப் பதிவுகளுக்கு நடுவில் வாய்விட்டுச் சிரிக்கவும் மனம்விட்டுச் சிந்திக்கவும் வைத்த வலையுலகக் கலைவாணர் நீர்

ஆஊ என்று அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் மசாலா நடிகர்களைக் கவுண்டரை வைத்துக் கலாய்த்த அதிரடியார் நீர்

கண்ணன் பாட்டு என்று சொல்லிக்கொண்டு இழுத்து இழுத்து பாடிக்கொண்டிருந்தவர்களுக்கு இழுத்து ஒன்று விட்டு....சிங்கம் போல நடந்து வர்ரான் என்று பாட வைத்த இசைச்சுடர் நீர்

பெரியர் என்று பெயரில் பலர் கதறிய வேளையில் பெரியார் என்று எழுதி வைத்த செறியார் நீர்.

ஆகையால நான் தாராளமா உங்க அருமைகளையும் பெருமைகளையும் எடுத்துச் சொல்லலாம். :)

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2008/01/221.html


மாயாவதியைப் பாராட்டலாம் இந்த விஷயத்துக்கு. அட வர்ரதுக்குக் கணக்குக் காட்டி வரியும் கட்டுறாரே. இதெல்லாம் நம்மூர்ல நடக்காதேய். உத்தமர்களையும் உத்தமிகளையும் இப்படியெல்லாம் நடக்கச் சொல்லக் கூடாது. எதிர்க்கட்சிக்காரங்க மட்டுந்தான் பெட்டி வாங்குவாங்க. மத்தபடி எல்லாரும் உத்தமங்க.

என்னையும் அழைச்சிருக்கீங்க. வல்லீம்மாவும் கூப்டிருக்காங்க. ரொம்பக் கஷ்டமான வேலைதான். முயற்சி செய்யப் பாக்குறேன்.

(இனிமே அஞ்சாறு மாசத்துக்கு யாராச்சும் தொடர் விளையாட்டுன்னு தொடங்குனீங்க.....அம்புட்டுத்தான்...தேடி வந்து அடி விழுகும்)

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/01/on-his-blindness.html

// @ஜிரா
பாரடைஸ் லாஸ்ட் ரீகெய்ண்டுன்னு பழைய கதையப் பத்தியெல்லாம் பேசுறீங்களே...சமீபத்துல 1956ல் பொறந்தவங்களோ நீங்க ;)////
அதெல்லாம் பரவாயில்லை அண்ணாச்சி!!

நீங்க என்னடான்னா அருண்கிரிநாதர்,சங்கத்தமிழ்னு பிச்சு உதர்ரீங்க!!!
கிட்டத்த்ட்ட சமீபத்துல கி.மு 3ஆம் நூற்றாண்டுல நீங்க பிறந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!! ;) //

அதெப்படி? அருணகிரி 15ம் நூற்றாண்டு. சங்கத்தமிழ் ஒத்துக்கிறேன். ஆனா ஆதாம் ஏவாளு உலகம் தோன்றுனப்பல்ல....அப்பயிருந்தே நீங்க இருக்கீங்க போல. ஒருவேளை ஏவாளுக்கு ஆப்பிள் பழத்தைச் சாப்பிடச் சொன்னதே....அல்லது சாப்பிடக் கூடாதுன்னு சொன்னது....நீங்கதானா :P

G.Ragavan said...

http://ukumar.blogspot.com/2008/01/blog-post.html

நல்ல பாட்டு. நல்ல பாடம். எல்லாருக்கும் தெரிய வேண்டிய பாடம்.

G.Ragavan said...

http://shaliniyin.blogspot.com/2008/01/blog-post.html

வாங்க ஷாலினி வாங்க
உங்க வரவு நல்வரவாகுக

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/01/blog-post_20.html

எல்லாமே அருமையான பாடல்கள். ஜீவ்சின் தேர்வும் அருமை. எந்தப் பாட்டும் பிடிக்காதுன்னு யாரும் சொல்ல முடியாத அளவுக்கு எடுத்துக் குடுத்திருக்காரு. நல்ல பாடல்கள். நல்ல முயற்சி.

G.Ragavan said...

http://araiblade.blogspot.com/2008/01/blog-post_524.html

டிபிசிடியின் கேள்விதான் என்னுடையதும். இன்னொரு கடிதம் வந்தால்....அப்ப என்ன செய்வாராம். ஆனாலும் காதலிக்க அல்லது விரும்பபடுறதும் சுகம்தான். அதுக்குத்தானே காதலிக்கவும் விரும்பவும் செய்றாங்க.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/01/blog-post_08.html

சூப்பர் பாட்டுங்க. கேக்கக் குடுத்தமைக்கும் நினைவுபடுத்தியமைக்கும் நன்றி. பாட்டு வரியும் குரலும் நல்ல கலப்பு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/01/9.html

ஓ ஊருக்குப் பொறப்பட்டாச்சா.....அங்க போய் என்னென்ன ஆகப் போகுதோ.. பொறுத்திருந்து பாப்போம். ஒருவேளை பஞ்சாபி இந்திப் படங்களா கனகா பாப்பாளோ என்னவோ...

இந்தச் சப்பாத்தி சோறு விவகாரம் பெரிய விவகாரம். நான் பெங்களூர் போன புதுசுல எங்க அத்த வீட்டுல இருந்தேன். அத்தை மிலிட்டிரில லெப்டிணட்டு கர்ணலா இருந்தவங்க. தினமும் சப்பாத்தி ஆபீசுக்குக் கட்டிக் குடுப்பாங்க.

எனக்குத்தான் சாப்பிட முடியாது. ஆபீஸ்ல ஜோத்சனான்னு ஒரு கன்னடப் பொண்ணு. அந்தப் பொண்ணு நல்லா புளியோகரே, சித்ரான்னா, மொசுரன்னா, உப்பிட்டு, அவரேக்காய் ஹுளி இப்பிடி விதவிதமா வரும். அந்தப் பொண்ணுக்கு சப்பாத்தி ஓக்கே. நாங்க டிபன்பாக்ஸ் மாத்து பண்ணிக்கிருவோம். :) ஆனா.. இப்ப சோறைக் குறைச்சாச்சு. சோறுன்னாலே கொஞ்சோலதான்.

G.Ragavan said...

http://manasukulmaththaapu.blogspot.com/2008/01/blog-post_20.html

ஆகா...நீங்கதான் நச்சத்திரமா. வாழ்த்துகள். ஏற்கனவே எல்லாரும் வாழ்த்தீட்டாங்க. நாந்தான் லேட்டு. இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://manasukulmaththaapu.blogspot.com/2008/01/1_21.html

நல்ல தொடக்கம். அப்படியே சினிமா பாக்குறாப்புல எழுதீருக்கீங்க :) நல்ல நடை.

கம்ப்யூட்டர்னா அந்த அளவுக்கு ஆயிருச்சுல்ல :))))))))))))))))))))

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=378

நல்ல வாழ்த்து. வாழ்க வளமுடன்.

முப்பிணியும் உண்டாகட்டும்னு காளிதாசர் வாழ்த்துனது நினைவுக்கு வருது :)

G.Ragavan said...

http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_21.html

சொந்த ஊரச் சொல்றதுல எதுக்கு வெக்கம். தாராளமாச் சொல்லனும்.

ஆனா எங்க சொல்றோம்னும் இருக்கு. வெளிமாநிலம்னா தமிழ்நாடும்போம். வெளிநாடுன்னா இந்தியாம்போம். தமிழ்நாடுக்குள்ளைன்ன பக்கத்துல உள்ள பெரிய ஊரச் சொல்வோம். அந்தப் பெரிய ஊருன்னா உள்ள ஊரச் சொல்வோம்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/01/blog-post_21.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//(சில சமயம் புளியோதரை சாப்பிடுவதற்காகவே கோவிலுக்கு போவேன்.) அதுவும் கூடாதா :))//

ஆகா! நானும் உங்க கட்சி தான்!பயப்படாதீங்க! அப்படி எல்லாம் பதிவு போடவே மாட்டேன்!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
புளியோதரை லட்டு இன்றிக் கோயில் என்பதில்லையே!
:-)))) //

புரியுது புரியுது நீங்க எந்தக் கோயில்களை முன் வைக்கிறீங்கன்னு. அப்ப பஞ்சாமிர்தம் இன்றிக் கோயில்கள் உண்டு. அதாவது பஞ்சாமிர்தம் தராத கோயில்களுக்குப் போகலாம்னு சொல்றீங்க. சரிங்க. நீங்க சொன்னாச் சரிதான் :)))))

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/01/10.html

கனகா வீட்டு வேலைகளைக் கத்துக்கலையா.... பேசாம எல்லாருக்கும் சோத்த வடிச்சிப் போட்டு...சாம்பாரும் ரசமுமா ஊத்துனா... நீ மகராசி உக்காரும்மான்னு சொல்லீரப் போறாங்க. அவ்வளவுதானே :)

பிஜ்யாவுக்கு மட்டும் ஏனிப்படியோ.. ம்ம்ம்ம். முருகா காப்பாத்துப்பா.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/01/blog-post_22.html


உங்களுக்கு நானும் விமர்சனம் எழுதவில்லை. ஆனால் கதையை முழுதும் படித்தேன். கதைத்தொடர்பு என்று சொல்வார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இருக்கும். ஆனால் ஓரிடத்தில் ஒன்றாகச் சேரும். உங்கள் கதையில் அந்த ஓரிடம் என்பது கதை முடியுமிடமானதால் சில இடங்களில் குழம்பிப் போனது உண்மைதான்.

என்னதான் பக்தி..ஆன்மீகம் என்றாலும் அந்தத் தாத்தாவும் கேசவனும் நாடகமாடிக் கந்தனைக் குழப்பி ஆன்மீகக் கிறுக்காக்கி விட்டார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. :) இதைக் கடைசி அத்தியாயத்திலும் சொல்லியிருந்தேனே. :) கோவித்துக்கொள்ளாதீர்கள். அப்படித் தோன்றியதால் சொன்னேன்.

அடுத்த கதையில் சாமியை மூட்டி கட்டி வைத்து விட்டு....ஆசாமிகளிடம் வாருங்கள்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/01/blog-post_21.html


// மதுரையம்பதி said...
என்னப்பா, இராத்திரி கனவுல இதெல்லாம் வந்துதா?....ஆனா அதுல கூட பாருங்க வெண் பொங்கல், சாம்பா சாதம், தயிர் சாதம்ன்னு சிவன் கோயில் பிரசாதங்கள் வரல்லையே? //

மதுரையம்பதின்னு பேரு வெச்சிக்கிட்டு.. பேருக்கேத்த கேள்விய நச்சுன்னு கேட்டீங்க :)

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
யப்பா, எதைச் சொன்னாலும் அடிக்கறதுக்குன்னே கெளம்பி வராங்களே! :-)
வேணும்னா ஒரு முழுப் பாட்டும் பாடிடுறேன் ஜிரா!

பஞ்சாமிர்தம், பாயசமின்றிக் கோயில் என்ப தில்லையே! போதுங்களா? :-)
இன்னும் வேற என்ன என்னல்லாம் இருக்குப்பா?

சக்கரைப் பொங்கல்
அதிரசம்
அழகர் கோயில் தோசை
காஞ்சிபுரம் இட்லி
பால் பாயசம்
மிளகு வடை //

இதை ஒத்துக்க முடியாதுங்க. நானும் மதுரையம்பதியும் கேட்டப்புறமா லிஸ்ட் விடுறீங்க. ஆகையால பிற்சேர்க்கைகளை விலக்கீருவோம்.

முருகன் கோயில்ல புளியோதரை கெடைக்கிறதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. சரவணவ பவன், சங்கீதால கூடதான் கெடைக்குது.

புளியோதரைன்னா திருவரங்கம்
லட்டுன்னா திருப்பதி
தோசைன்னா திருமாலிருஞ்சோலை
உப்பில்லாதது ஒப்பிலியப்பர்

இதெல்லாம் ஒங்க ஐட்டங்கள்.

எங்கப்பன் முருகனுக்குப் பஞ்சாமிர்தம்தான் பிரதானம். எந்தப் பெருமாள் கோயில்ல பஞ்சாமிர்தம் குடுக்குறாங்க? பெருமாள் கோயில்ல பஞ்சாமிர்தம் வாங்கிச் சாப்பிட்டவங்கள்ளாம் கையத் தூக்குங்கப்பா. :)

அப்புறம்...எங்க குலதெய்வக் கோயில்ல கெடா வெட்டுவாங்க. அந்தக் கறியைச் சமைச்சுத்தான் எங்களுக்குப் பிரசாதம். அதை நீங்க விட்டது நாட்டார் தெய்வ வழிபாட்டுக்கு எதிரான செய்கைதானே :))))))))

(அப்பாடி கொளுத்திப் போட்டாச்சு. வரட்டுமா... முருகா முருகா)

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/01/blog-post_21.html

இத எப்படி மொக்கைன்னு சொல்றது? இவ்ளோ அழகாக் கதை சொல்லீட்டு..மொக்கைன்னா ஒத்துக்கிருவோமா?

அருட்பெருங்கோ.. இன்னோரு கதை சொல்லுங்க அருட்பெருங்கோ....இன்னோரு கதை... :)

G.Ragavan said...

http://manasukulmaththaapu.blogspot.com/2008/01/2_22.html

உள்ளத்துல இருந்து சொல்றேன். ரொம்பப் பிரமாதமா எழுதுறீங்க. அருமையான நடை.

பெரிய பிரச்சனையக் கொண்டு வந்தோ.. புதுமையப் பண்ணியோன்னு எழுதலைன்னாலும்....ஒரு காதல் கதையை இவ்வளவு அழகா எழுதுறீங்க. உங்க எழுத்துல கத்துக்க நெறைய இருக்கு. என்னுடைய பாராட்டுகள்.

G.Ragavan said...

http://kouthami.blogspot.com/2007/12/blog-post_25.html

வாழ்த்துகள் கண்மணி. :) நல்ல கவிதை.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/01/blog-post_09.html

வாழ்த்துகள் அருட்பெருங்கோ. போட்டியில் இரண்டாவதாக வந்ததற்கு.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=379

அருமையான தலைப்பொன்றைக் கொடுத்துப் பலரை எழுத வைத்து ஒரு அழகான கவிப்போட்டியை உருவாக்கியமைக்கு நன்றி.

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://andaiayal.blogspot.com/2008/01/project-madurai.html

தகவல்கள் பாதுகாக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் மதுரைத்திட்டம் தொடர்ந்து செயல்படும் என்று நம்புவோம்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/01/11.html

ஒரு தகவல் சொல்லுங்க. இத்தன பாத்தரத்த வெச்சுக்கிட்டு இத்தன சுருக்கமா எப்படி கதை சொல்றீங்க? நான் நாலு பாத்திரம் வெச்சுக்கிட்டே நாப்பது அத்தியாயம் எழுதியும்..சொல்ல வந்தத முழுசாச் சொல்ல முடியலை.நீங்க வெளுத்து வாங்குறீங்க. அதான் டீச்சரோ!!!!

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/01/blog-post_24.html


மிகவும் அருமையான பாடல் பிரபா. தாரா என்றால் விண்மீன். தமிழில் மின்னாமல் போனாலும் கன்னடத்தில் பல சிறப்பான படங்களில் நன்றாக நடித்தவர். கன்னூரு ஹெகடத்தி, உண்டு ஹோதா கொண்டு ஹோதா போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டுக்குறியது. சமீபத்தில் வந்த குப்பியிலும் கலக்கியிருக்கிறாரே.

இந்தப் பாடலின் பின்னணியில் ஒரு செய்தி உண்டு. வேறொரு கதையை வைத்துக் கொண்டு எல்லாப் பாடல்களையும் பதிவு செய்து விட்டார்கள். பிறகுதான் கதையை மாற்றினார்கள். ஆனால் அதே பாடல்களை வைத்துக் கொண்டு படத்தை முடித்தார்கள்.

கங்கை அமரன் இளையராஜாவின் இசையில் பிரபலமான பாடகிகளுடன் ஒரு பாட்டாவது பாடியுள்ளார். இசையரசியுடன் இந்தப் பாடல். வாணி ஜெயராமுடன் ஒரு கைதியின் டைரி படத்திற்காக ஒரு பாடல். பாட்டு மறந்து விட்டது. எஸ்.ஜானகி அவர்களுடனும் பாடியிருக்கிறார். சித்ராவோடும் பாட்டு உண்டே.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2008/01/blog-post_24.html

ஆகா... பழைய பாட்டுன்னா எனக்கும் பிடிக்கும். மெல்லிசை மன்னர் இசையில வெளிவந்த பாடல்கள்னா ரொம்பவும் பிடிக்கும்.

நீங்க சொன்ன மாதிரி "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"னு காதலை வேற யாரும் எளிமையாச் சொல்லலை.

சொல்லியிருக்குற எல்லாப் பாட்டுகளுமே எனக்குப் பிடிக்கும்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/01/1.html

XX XX என்று பலவேந்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப்புலவர்
XXயொருவனும் அல்லன்
மாரியும் உண்டீங்கு உலகு புரப்பதுவே! :) சரியா குமரன்?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/01/1.html


ரவி ஷங்கர்னு பேர் இருந்தாலே குசும்பு கூத்தாடுங்குறது சரியாத்தான் இருக்கு. இப்பிடி வம்பு பண்றானே.

கதைய நல்லா தொடங்கீருக்கீங்க. என்ன சொல்லப் போறீங்கன்னு ஆவலாக் காத்திருக்கேன்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/01/603.html

அருமையான பாட்டுங்க....துள்ளிக்கிட்டே பாடியிருக்காங்களோ.... அடடா!

படத்தோட பேரு என்ன தவம் செய்தேன். என்ன தவம் செய்தேன்னே ஒரு பாட்டு இந்தப் படத்துல உண்டுன்னு நெனைக்கிறேன்.

அப்புறம்... இப்பிடிப் போயிட்டு..அப்பிடி வர்ரதுக்குள்ள நாலஞ்சு பாட்டுக கூடீருச்சு. :) எல்லாத்தையும் கேக்கனும்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/01/602.html

பட்டாம்பூச்சி.....தேவராஜன் இசையில் வெளிவந்ததுன்னு நெனைக்கிறேன். கமல் நடிச்சதுன்னு தெரியும்.

G.Ragavan said...

http://photography-in-tamil.blogspot.com/2008/01/blog-post_25.html

இந்த லென்சு இப்பிடித் தயாரிக்கிறாங்க. சரி. நல்லாப் படங்காட்டீருக்கீங்க. காண்டாக்ட் லென்சு எப்படித் தயாரிக்கிறாங்க? அதையும் காட்டுங்களேன்.

G.Ragavan said...

http://sathyapriyan.blogspot.com/2008/01/blog-post_25.html

திருச்சீல எங்கப்பா கொஞ்ச வருசம் வேலை பாத்தாங்க. சுந்தர் நகர்னு சொல்ற எடத்துல இருந்தோம். மெயின்கார்டு கேட்டு பக்கத்துல இருக்குற இம்பால ஓட்டலுக்குக் கூட்டீட்டுப் போவாங்க. அதே மாதிரி தெப்பக்குளத்தச் சுத்தியிருக்குற எடத்துல மாங்கா இஞ்சி விப்பாங்க. அதுவும் வாங்குவாங்க. எல்லாம் ரொம்பச் சின்னப் புள்ளைல நடந்ததா...அதுனால சரியாத் தெரியலை.

G.Ragavan said...

http://manasukulmaththaapu.blogspot.com/2008/01/3_24.html

அப்பாடி...ரெண்டு பேரும் சேந்துட்டாங்க. :) நன்றி நன்றி. நல்லபடி திருப்தியா கதைய முடிச்சிருக்கீங்க. அதுக்கு ரொம்ப நன்றி. :)

G.Ragavan said...

http://mathimaran.wordpress.com/2008/01/26/%e0%ae%ae%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5/

தமிழ்த் திரையுலகில் இவரது இசையின் பாதிப்பு இல்லாத இசையமைப்பாளரே இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பேட்டியின் அடுத்த பகுதிகளுக்கும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/01/blog-post_24.html

ஆகா... புதுகைத் தென்றலா...வாழ்த்துகள்.

ஐந்து பாடல்களுமே அருமையானவை.

களத்தூர் கண்ணம்மாவில் எம்.எஸ்.ராஜேஷ்வரி பாடிய பாடல். சுதர்சனம் அவர்களின் இசையில். மிகவும் அருமையான பாட்டு.

கவியரசர்+மெல்லிசை மன்னர் கூட்டணின்னாலே கலக்கல்தான். கடவுள் அமைத்து வைத்த மேடையும் அப்படியொரு கலக்கல்தான். பாட்டும் இருக்கனும்... மிமிக்கிரியும் இருக்கனும். அதுவும் இதுவும் மெட்டுக்குள்ள ஒத்துப் போகனும். இதெல்லாம் இன்னைக்குச் செய்யச் சொன்னா ரொம்பவே கஷ்டப்படுவாங்க.

இசையரசியின் இன்னிசைக் குரலில் கண்ணுக்கு மையழகு மயக்குகிறது. இசைப்புயலும் வைரமுத்துவும் அவர்கள் பங்குக்குச் சிறப்பு செய்த அருமையான பாடல்.

கங்கை அமரன் எழுதிய பாடல் இது. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு. மிக அழகான பாடல். கேட்கவும் பார்க்கவும் கூட.

வரலட்சுமி அவர்களின் குரலை மறக்க முடியுமா? ஆகா...வெள்ளிமலை மன்னவா என்று அரற்றும் பொழுதும்....பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் என்று உருகும் பொழுதும்....சொல்லவல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ என்று மருகும் பொழுதும்...ஏடு தந்தானடி தில்லையிலே என்று எகிறும் பொழுதும்....உன்னை நானறிவேன் என்று கதறும் பொழுதும்...ஆகா...எத்தனை பாவங்கள் அந்தக் குரலில்.

இந்தப் பாடல்களைக் கேட்கக் குடுத்த பிரபாவிற்கும் நன்றி பல.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/01/blog-post_26.html

அருமையான பாட்டு. நல்ல பாட்ட நினைவுபடுத்தியிருக்கீங்க. நன்றி. ஏசுதாஸ் அருமையாகப் பாடியிருக்கிறார்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2007/11/blog-post_12.html

இசையரசிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நீடு வாழவும் பீடு வாழவும் முருகனை வணங்குகிறேன்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/01/blog-post_26.html

மிகவும் பொருத்தமான விருது. காலம் கடந்து கிடைத்தாலும் பொருத்தாம விருதே. இசையரசிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்னும் ஒருவருக்கு இந்த விருது கிடைக்க வேண்டியிருக்கிறது. அவர்தான் மெல்லிசை மன்னர். அவருக்கும் கிடைத்து விட்டால் பத்மபூஷன் விருது சிலுவையிலுருந்து இறங்கிவிடும்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2008/01/1948-54.html

நினைத்துப் பார்க்கிறீங்களா? :) திருவில்லிபுத்தூர் என்றால் ஆண்டாள்தான். அடுத்தது பால்கோவா.

திருவில்லிபுத்தூரைப் பத்திச் சொல்லும் போது பக்கத்துல இருக்கும் திருவண்ணாமலை பத்தியும் சொல்லுங்க.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2008/01/blog-post_27.html

பதிவைப் படித்தேன். ஆனால் ஒன்று உண்மை. பொதுவில் பார்ப்பனர்கள் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்று பிரிப்பது எளிதாகிறது. இது பொதுவில். தமிழ் தாக்கப்படுகிறது..படாமை என்ற கருத்துக்குப் பிறகு வருவோம்.

ஏன் இந்தப் பிரிவினை எளிதாகிறது? அதுதான் சிந்திக்கப்பட வேண்டிய கருத்து. நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காவிட்டாலும்... பார்ப்பனர் அல்லாதவர்களுக்குப் பார்ப்பனர்கள் மீது ஒருவித வெறுப்புணர்ச்சி இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

ஒரு செட்டியார் நண்பன் இருந்தான். இப்பொழுது அவனோடு தொடர்பு இல்லை. படிக்கும் பொழுது அவன் வீட்டிற்குச் செல்கையில் முதலில் என்னைப் பார்ப்பனர் என்று நினைத்துக் கொண்டு தயக்கத்தோடு பழகினார்கள். ஆனால் இல்லை என்று நண்பன் சொன்னதும்...அவர்களின் பழக்கத்திலேயே ஒரு பெரிய மாற்றம் தெரிந்தது. அவர்கள் வீட்டிலேயே பலமுறை உண்டும் உறங்கியும் இருக்கிறேன். என்னிடம் அவர்கள் அதைச் சொன்ன பொழுது...ஏனப்படி? நான் பார்ப்பனராக இருந்திடக்கூடாது என்று விரும்பினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்..."அவர்களை நம்ப முடியாது" என்று கூறினார்கள். சாதீயக் கூற்றின் முதல் பார்ப்பனீயத் தாக்கத்தை நான் புரிந்து கொண்டது அன்றுதான்.

தனிப்பட்ட முறையில் என்னைவிட என்னுடைய சாதி முக்கியமானதல்ல. இதுதான் என் கருத்து.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/01/12.html

மிக அழகான கதையைக் கொண்டு சென்று முடித்திருக்கின்றீர்கள். தேர்ந்த எழுத்தாளர் நீங்கள். ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கிய சிற்பம் போலப் பதிந்து விட்டன. மிகமிக ரசித்துக் கதையைப் படித்தேன்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/01/blog-post_26.html

வாங்க காதற்கவிஞரே அருட்பெருங்கோ... இந்த வார நட்சத்திரமே...என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

வர்ரப்பவே தமிழ்மணத்தை கொஞ்ச நேரம் நிப்பாட்டீட்டுதான் வந்திருக்கீங்க. ஆகையால இந்த வாரம் நெறைய பதிவுகளை எதிர்பார்க்குறோம்.

இந்த வாரம் இனிய வாரமாக அமையட்டும்.

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2008/01/blog-post_27.html

ஏம்ப்பா.... உண்மையிலேயே அவரு ஈரோவா நடிக்கப் போறாரா? ஏன் இந்தக் கொலைவெறியாம் அவருக்கு? ஏமாந்த அந்த புரொடியூசரு யாரு? ஏற்கனவே ஊரும் உலகமும் கதிகலங்கிப் போயிருக்குறப்போ.. இப்பிடியெல்லாம் கெளப்பி விடலாமா? திருத்தணி முருகனுக்கே அடுக்குமா?

G.Ragavan said...

http://ullal.blogspot.com/2008/01/blog-post_28.html

இன்னும் விசுவநாதனுக்கும் குடுக்கலை. இந்திப் படத்துல பத்து இருபது படத்துக்கு இசையமைச்சவங்களுக்கெல்லாம் குடுத்தாச்சு. ஏதோ அரசாங்கம் காசுக்கு விக்குற விருது மாதிரி ஆயிருச்சு. ஏதோ இந்த வாட்டி தப்பித் தவறி பி.சுசீலாவுக்குக் குடுத்துட்டாங்க. மறந்து போய்க் குடுத்துருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2008/01/blog-post_28.html

பயங்கர மொக்கையும் நீயே
ஒயின் பாட்டில் அடைக்கும் தக்கையும் நீயே
அழைத்த அழைப்புக்குப் பிசகாமல் மொக்கித்த உம்மை மொக்கத்தான் வேண்டும். :( (இது பின்னூட்ட மொக்கை)

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2008/01/blog-post_22.html

ஆபீசர் ஆபீசர்னு சொல்றீங்க. ஆனா ஆப்பீசரா இருப்பாரு போல இருக்கே! ஆப்புக்கே ஈசனான ஆப்பீசரைப் பாராட்டுறதா... இல்ல பாத்துப் பயப்படுறதான்னு தெரியலையே!

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/01/blog-post_29.html

ஏம்ப்பா கண்ணக் கசிய வெக்கனும்னே முடிவு செஞ்சுட்டு எழுதுனியா....கடைசி வரவர முடிவை ஊகிச்சாலும்...படிக்கிறப்போ ஒரு இதுதான்.... எப்படியோ ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தாச் சரிதான். :) முருகா!

G.Ragavan said...

http://vilambi.blogspot.com/2008/01/blog-post.html

மத்த நாடுகளைப் பத்தி எனக்குத் தெரியலை. ஆனால் நெதர்லாந்து பத்தி நீங்க சொல்லியிருக்கீங்க. நானும் இங்க இருக்குறதால அதப் பத்தித் தெரிஞ்சதச் சொல்றேன்.

// இவைகள் வெளியில் தெரியவந்ததும் அம்மையாருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தினை திரும்பப் பெற்றுகொள்வது பற்றி நெதர்லாந்து விவாதிக்க ஆரம்பித்தது. //

விவரம் தெரிஞ்சதும் அவங்க எடுக்குற நடவடிக்கை இதுதான்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்லாம் பத்தி ஏதோ தப்பாச் சொல்லீட்டாரு. உடனடியா அரசாங்கம் அது தனிப்பட்ட அவருடைய எண்ணம். அது அரசாங்கத்தின் எண்ணமல்ல. நெதர்லாந்து எல்லா மதங்களையும் (குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் சப்பைக்கட்டோடு ஆதரிக்கலை) மதிக்கிறதுன்னு அறிக்கை விட்டாங்க.

// ஆனால் நெதர்லாந்தில் ஓய்ந்தபாடில்லை. மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் குர்ஆனைத்தாக்கி ஒரு திரைப்படம் தயாரித்துள்ளதோடு அதனை ஒளிபரப்பு செய்ய அனுமதியும் பெற்றுவிட்டார். இந்த முழு பதிவுமே இந்த செய்தியினை அறிமுகப்படுத்தான். //

அதிகப்படியா எழுதீருக்கீங்க. நெதர்லாந்தோட சட்டதிட்டம் தெரியாம. இங்க கருத்துச் சுதந்திரம் உண்டு. ஒருவர் இதுதான் தன்னுடைய கருத்து என்று சொல்லும் உரிமை இருக்கிறது. அது இஸ்லாம் மேல மட்டுமில்ல...கிருஸ்துவம் மேல இருந்தாலும் அதுக்கு அனுமதி உண்டு. அது தனிப்பட்ட நபரோட கருத்து என்கிற வகையில்தான் அந்தப் படத்துக்கும் அனுமதி. அது அரசாங்கத்தின் கருத்து கிடையாது. அதே நேரத்துல அந்தப் படத்த வெச்சி இங்க அரசியல் செய்ய முடியாது. நெதர்லாந்து மக்கள் இந்தியர்களைப் போலக் கிடையாது.

இன்னைக்கு ஆபீஸ் மீட்டிங்குல ஒருத்தர் தும்முனாரு. இன்னொருத்தரு டச்சுல என்னவோ சொன்னாரு. என்ன "god bless you?" சொன்னீங்களான்னு கேட்டேன். "இல்ல இது நெதர்லாந்து. இங்க god எல்லாம் சொல்றதில்லை. good health அப்படீங்குறத டச்சுல சொன்னாரு" அப்படீன்னு சொன்னாங்க. கடவுளுக்கு அவ்வளவுதான் மதிப்பு. இஸ்லாமுக்கு எதிரா நெதர்லாந்து செயல்படுதுன்னு சொல்றது சூப்பர் ஜோக்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/01/blog-post_654.html

ஹா ஹா ஹா இந்த மாதிரி வம்பெல்லாம் செஞ்சிருக்கேன். நல்ல வேளைக்கு அப்பாலஜி அம்மாலஜி லெட்டரெல்லாம் எழுதலை.

ஒரு புரொபசர் பாடம் எடுத்துக்கிட்டிருந்தாரு. எனக்கு அவரப் பாத்துச் சிரிப்பா வந்துச்சு. தலையக் குனிஞ்சி சிரிச்சேன். அவரு கணக்குப்படி முத வரிசைல உக்காந்திருக்குற நாங்கள்ளாம் நல்ல பசங்க. "என்னப்பா"ன்னு கேட்டாரு. தலைவலிக்கின்னு சொன்னேன். பின்னாடி டெஸ்க்குல போய் படுத்துக்கொன்னு சொன்னாரு. சரீன்னு பின்னாடி டெஸ்க்குல போய் நல்லா வசதியாப் படுத்துக்கிட்டேன்.

அப்ப (கடைசி பெஞ்சுல) பக்கதுல உக்காந்திருந்த நண்பன் எந்திரிச்சு "எனக்கும் தலைவலிக்குது"ன்னு சொன்னான். அவருக்கு வந்ததே கோவம்.

"I know genune people and their genune reasons. you sit and listen to the class" அப்படீன்னு கத்தீட்டாரு. எனக்குச் சிரிப்போ சிரிப்பு. பேசாம வகுப்பு முடியுற வரைக்கும் டெஸ்க்குல படுத்துக்கிட்டேன்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2008/01/225.html

புரட்சியா...அப்படீன்னா தலைவருங்க சினிமாக்காரங்க பேருக்கு முன்னாடி போட்டுக்கிறதுதான. அப்படீன்னா பிடிங்க. நீங்கதான் பொரட்சிப் பதிவரு.

G.Ragavan said...

http://mathimaran.wordpress.com/2008/01/29/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%af/

பாத்தீங்களா.. .அவரு இசையமைப்பாளர் ஆகி நமக்கெல்லாம் அருமையான இசையைத் தரனும்னு இருந்திருக்கு. அதான்...நடிக்க விடாம பாலையா மூலமா அடிக்க வெச்சித் தொரத்தியிருக்கிறது. எது எப்படியோ....மெல்லிசை மன்னரையும் தமிழ்த்திரையிசையையும் பிரிக்கவே முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்த பெருமையும் அவருக்கு உண்டு.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/01/6.html

கவிதைக் கதையா... நல்லாருக்கு.

கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்...
காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை தரையில் தூக்கிப் போட்டான்

// அழகிய தமிழ்க் கடவுள் said... //

பேரு ரொம்ப அழகா இருக்குங்க :)

G.Ragavan said...

http://poar-parai.blogspot.com/2008/01/blog-post_28.html

தட்டியில எழுதீருப்பது பேத்தல். மகா அயோக்கியத்தனம். சைவத்துக்கும் இவங்கதான் இனிமே விளக்கம் கொடுக்கப் போறாங்களாக்கும். அப்பர் மாணிக்கவாசகர் பேரை வெச்சுக்கிட்டு இப்பிடி எழுதுறது உறுத்தலையா? அட...சமஸ்கிருதத்துல எழுதவாவது தெரியுமா இந்தத் தட்டிப் பயகளுக்கு? அடுத்தவனும் பூசை செய்ய வந்துறக் கூடாதுங்குற பயத்துலதான் சமஸ்கிருதத்த உள்ள வைக்கிறது.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2008/01/1.html

தேவ் கச்சேரியத் தொடங்கீட்டாரப்பா......களை கட்டீரும் இனிமே. :)

கூட்டுறவுகள் என்றாலே இதம்தான். சுகம்தான். நாங்கள் அரசாங்கவேலைக்காரர் பிள்ளைகள். அடிக்கடி மாற்றல். பல ஊர்கள். ஆகையால் இந்த ஓரிடத்திலேயே வளர்வது என்பது கிடைக்காமல் போயிற்று. உங்கள் கதையைப் படிக்கையில் அதன் சுகம் புரிகிறது.

G.Ragavan said...

http://thamizmani.blogspot.com/2008/01/blog-post_29.html

// Hari said...
Coming to the issue, Archanai done in Tamil is never/ever inferior in Hinduism. But u can't demand that it should be done only in Tamil. //

fine Hari. agree to that point. what we can do is...v can have board in all temples saying "இங்கு வடமொழியிலும் (வேணும்னா சமஸ்கிருதம்னும் போட்டுக்கலாம்) அர்ச்சனை செய்யப்படும்". anybody willing to do archana in sankskrit can opt for that.

லத்தீனில் அரபியில் கதையெல்லாம் வேலைக்கு ஆகாதுங்க. அது வேறொரு நம்பிக்கை. இந்து என்று மதத்தின் பெயரைப் போட்டுக்கொண்டிருக்கும் நான் விரும்புகிறேன் இது இப்பிடி இருக்க வேண்டும் என்று. அதற்கு என்ன பதில்?

ஏதோ பழைய முறை என்று கதை சொல்ல வேண்டாம். "கொழுவிடை குருதியொடு விரவிய செந்நெல்"...என்னன்னு பாக்குறீங்களா? திருப்பரங்குன்றம் முருகன் கோயில்ல குடுத்த பிரசாதமாம். நக்கீரர் சொல்றாரு. அது இப்ப இருக்குறத விட பழைய வழிபாட்டு முறை போலத் தெரியுதே. அப்ப அதுக்கு மாறீருவோமா?

// தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. //

அப்படியா? அப்படீன்னா குறிச்சிக்கோங்க ஜிரான்னு சொல்லப்படுறா கோ.இராகவனுக்கும் சம்ஸ்கிருத மொழித் துவேசம்னு. அடப்போங்கய்யா... ஒங்க கருத்துக்கு ஒத்து வரலைன்னா.... வெறியனா..."சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ"ன்னு படிச்சவங்க நாங்க. நீங்களும் வேண்டாம் ஒங்க கோயிலும் வேண்டாம். நெஞ்சகமே கோயில். நினைவே சுகந்தம். அன்பே மஞ்சன நீர். பூசை கொள்ளப் பராபரம் வரும். அதுக்குத் தெரியும் எங்களுக்கு இருக்குறது துவேசமா அன்பான்னு.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/01/2.html

திரை விலகலா...காதா... எந்தன்
திருப்பதி வெங்கடரமணா இட..ரென்னும்
திரை விலகலா...காதா

பரம புருஷா...அறமெனும் வீட்டிற்குப்
போக ஒட்டாது செய்யும் எந்தன்
திரை விலகலா...காதா

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/01/2.html

// வெட்டிப்பயல் said...
//ஓஹோ...நீங்க பக்தியில் அப்படியே உருகுறவரோ?
போதும் போதும்யா உருகினது! நாளைக்கு உருகறத்துக்குக் கொஞ்சம் மிச்சம் மீதி வச்சிக்குங்க! இப்போ ஜருகண்டி! ஜருகண்டி பாபு!"//

//மனசுக்குள்ள அப்படியே பெரிய ஆழ்வார்-ன்னு நெனைப்பா? என்னமோ அப்படியே ஏங்கறாங்களாமில்ல ஏங்கறாங்க!" -//

//ஆகா, சாது மாதிரி என்னமா நடிக்கறாருப்பா! புனித பிம்பம்-னு இதைத் தான் சொல்லுறாங்க போல!//

இப்படி கேவலமா பேசறவங்களுக்கா திருமலைல தினமும் வெங்கடேசனை தரிசிக்கும் பெரும் பேறு கிடைத்திருக்கிறது???

எனக்கு என்னுமோ நீங்க அவுங்களை ரொம்ப தாழ்த்தற மாதிரி இருக்கு...

பதிவு போடனும்னு அவசரத்துல எழுதனீங்களா? மனசு லயிச்சி எழுதன மாதிரி தெரியல :-( //

அது சரி வெட்டிங்க...அப்ப கோயில்ல சாமி பக்கத்துல இருக்குறவங்கள்ளாம் உத்தமர்களா.. இது எனக்குத் தெரியாமப் போச்சுங்களே. இது எல்லாக் கோயிலுக்கும் பொருந்துமா? இல்ல திருமலை திருப்பதி வெங்கடரமணன் திருக்கோயிலுக்கு மட்டும் பொருந்துமாங்க? எதாச்சும் தப்பாக் கேட்டிருந்தா கோவிச்சுக்கிறாதீங்கங்க. நீங்க சொன்னா கேட்டுக்கிறேன். :)

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/01/check-out-my-slide-show.html

ஹா ஹா ஹா

குழந்தைகளே குறும்புதான் அழகுதான். ரசித்தேன். ரசித்தேன்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/01/2.html


பாரிங்குற பேர போன வாட்டி சொல்லலை. இந்த வாட்டி நீங்களே சொல்லீட்டீங்க. :)

அத்தனை வள்ளல்கள் இருந்திருக்காங்க. ஆனா ஏழு பேரத்தான் சொல்றோம். அந்த ஏழுலயும் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரின்னு அவரைத்தான் நினைவு வெச்சிருக்கோம். அடுத்தது அதியமானச் சொல்வோம். பாரிக்கு அந்த அளவுக்குப் புகழ்.

அப்புறம் ஏழு வள்ளல்களைப் பத்தியும் சொல்லியிருக்கீங்க. கொஞ்சம் எளிமையான தமிழ்ல சொல்லீருந்தீங்கன்னா எனக்கும் புரிஞ்சிருக்கும்.

G.Ragavan said...

http://vilambi.blogspot.com/2008/01/blog-post.html

// மு மாலிக் said...
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி ராகவன்.

ஐரொப்பிய கருத்து சுதந்திரத்தில் சில மேன்படுத்தல்கள் தேவை. //

:) மேம்படுத்துதல் எல்லா எடத்துலயும் தேவைப்படுதுங்க. ஐரோப்பாவில் மட்டுமில்லை.

// ஒருவர் கூறும் கருத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், அவ்வாறு கூறியவர், " நான் கூறியது சரியோ தவறோ. ஆனால் நான் கூறியது என் சுதந்த்திரத்திற்கு உட்பட்டது " என்ற அள‌வில் வாதிட்டு வெளியில் வந்துவிடும் நிலை உள்ளது. அது மாறவேண்டும். அந்த கருத்துப் பற்றிய விவாதத்தினை நீதிமன்றம் அனுமதித்து, அவர் கூறிய கருத்து நியாமானதா என்பதை ஆய்ந்து, அவ்வாறு நியாமானதில்லை எனும் நிலையில் அவருக்கு தண்டனைகள் வழங்கும் அளவிற்கு மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். சுருக்கமாக "பொறுப்பற்ற கருத்து சுதந்திரம்" என்ற நிலைமாறி "கருத்து சுதந்திரம்" எனும் நிலை ஏற்படவேண்டும். //

பொறுப்பற்ற கருத்துச் சுதந்திரம்னு நீங்க சொல்றீங்க. ஏன்னா அது உங்களையும் தப்புன்னு சொல்ல வாய்ப்பிருக்குறதால. நியாயம் என்பது எல்லைகளுக்குள்ளேயே மாறுபடுகின்ற விஷயம். நீங்கள் நியாயம் என்று சொல்வதை நான் கட்டாயம் ஏற்க வேண்டும் என்று நினைத்தால் அதுகூட நியாயமில்லைதான்.

// ஐரோப்பிய கருத்து சுதந்த்திரத்தில், ஒரு நிறத்திற்கு எதிராக கருத்து கூற அனுமதியில்லை என்பதை கவனிக்க. அது ஏன் ? நான் காட்டிய செய்தியினைப் படித்தீர்களானால் ஒரு மதத்திற்கு எதிராகவும், வழிபாட்டு உரிமையை மறுத்தும் கருத்துக் கூற சுதந்திரம் உண்டு என்பதினைக் கவனிக்க. //

நிறம்...இது மதம், சாதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு தனிமனிதனைத் தாழ்த்தும். கருப்பன் என்று இழந்தால் அது எல்லா மதத்திலும் மொழியிலும் இனத்திலும் இருக்கின்றவர்களைத் தாழ்த்தும்.

மதத்தை விட தனிமனிதன் உயர்ந்தவன். எனக்கு இந்த விதிமுறை சிறப்பானதாகவே படுகிறது.

அட... ஏதோ இஸ்லாமை மட்டும் அப்படியெல்லாம் எதிர்த்துச் சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தவறு எனப்பட்டு கிருத்துவ மதத்தையும் குற்றம் சொல்லியிருக்கிறார்கள். உங்களைச் சொல்வது மட்டும் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவ்வளவே நீங்கள் அறிந்தது.

// உங்கள் அலுவலக சம்பவம் அருமை. ஆனால் அது அவர் நாத்தீகர் என்றுதான் காட்டுகிறது. சுதந்திரத்தினை மதிப்பவர் என்று காட்டவில்லை என்பதை கவனிக்க. //

அது சுதந்திரத்தைக் குறிப்பதற்காகச் சொல்லவில்லை. மதத்தை விட மனிதனை நினைப்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகச் சொன்னது.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/01/blog-post_30.html

நடிகர் கோபியின் ஆன்மா அமைதி பெறட்டும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், மலையாளத்திரையுலகத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவர் சமீபத்தில் கிளாஸ்மேட்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நீங்கள் வீடியோவில் குடுத்திருக்கும் எண்டே மாமாட்டுக்குட்டியோடே அம்மாவுக்கு என்ற படம் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்று வந்திருக்கிறது. கோபியின் பாத்திரத்தைத் தமிழில் செய்தவர் சத்யராஜ்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/01/cvr.html


காதல் கவிஞர் என்பவர் காதல் இளவரசர் என்பதையும் நினைவுபடுத்தும் வகையில் பாடலைக் கொடுத்துள்ளார். ஐந்து பாடல்கள்களுமே அருமை. நல்ல தேர்வுகள்.

G.Ragavan said...

http://mathimaran.wordpress.com/2008/01/31/%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/

மெல்லிசை மன்னரின் இசைக்கோப்புகளும் கோர்வைகளும் இன்றும் கேட்கச் சுகமானவை. வலிக்கும் பொழுதும் களிக்கும் போதும் சுகிக்கும் போதும் சுவைக்கும் போதும் நினைத்துப் பாடச் சிறந்தவை.

மெல்லிசை மன்னரின் ஹம்மிங் "பாலிருக்கும் பழமிருக்கும்" பாட்டில் மிக இனிமையாக இருக்கிறது. அவருடைய குரலும் மிக இனிமையானதே. சொல்லத்தான் நினைக்கிறேன் என்று அவர் இசையிலும்....வி.குமார் இசையிலும், இளையராஜாவின் இசையிலும், கங்கையமரன் இசையிலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் பாடியிருக்கிறார் என்றால் அவருடைய இசைத் தாக்கத்தை என்னவென்று சொல்வது.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/02/blog-post.html

அருமையான சிந்தனைத் துளிகள்.

ஆசையால் நட்டவர் பெயரை உயிரில் சுமக்கும் மரம்.

ஆனியால் தொட்டவர் பெயரைக் கட்டையில்தானே சுமக்கிறது. பொருத்தமே.

எல்லாமே நல்லாயிருந்தது. முந்தி...எழுதுற ஆசைக்கு நீர் ஊத்துன ஆரம்ப காலத்துல இந்த மாதிரி பூக்கவிதையெல்லாம் எழுதுனேன். அது நினைவுக்கு வருது.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/01/1.html

அப்போ இளாங்குறது பொண்ணா? இவ்ளோ நாள் வேற மாதிரி நெனச்சிட்டேனே! :-P

நல்ல கதை. ரசிச்சேன்.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/01/blog-post_31.html

தொலைபேசி மேல ஆத்திரம் கன்னங்களுக்கா? இதழ்களுக்கா? ;) உண்மைய உரக்கச் சொல்லுங்க அருட்பெருங்கோ. ;) அச்சப்படாதீங்க. நம்மூர்ல வெளிப்படையா பேச மாட்டாங்களே தவிர மனசுக்குள்ள அந்த நெனப்புத்தான் எல்லாருக்கும்.

நல்ல கவிதைகள். முரட்டு முத்தங்கள் அருமையான கவிதை.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/02/blog-post.html

அந்தப் பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.எஸ்சும் பாடுனது. அதை மனோரமாவும் கமலும் நல்லாவே பாடியிருக்காங்க. காலத்தை வென்ற பாடல். தூத்துக்குடிப் பாடல். தேடிக் கொடுத்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2008/01/2.html

பாத்திரங்களக் கொண்டு வந்து சேக்குறீங்க பாருங்க...அங்க நிக்குறீங்க நீங்க. இல்ல... நல்லா நாற்காலி போட்டு உக்காந்திருக்கீங்க. அருமையான நடை. நல்ல எழுத்து.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/02/2.html

:) அந்தப் பாட்டை எழுதுனவருக்கும் செம்புலம் பேருலயே சேந்துருச்சு. அந்த அளவுக்கு அருமையான கவிதை அது. இன்னைக்கும் அது உண்மை. உலக உண்மைகள் வரிசைல இதுவும் உண்மை. :)

கதை....நல்லாவே இருந்துச்சு... இப்பிடித்தான் நீங்க பொண்ணு பாக்கப் போனப்போ செஞ்சீங்களா? ;)

G.Ragavan said...

http://kappiguys.blogspot.com/2008/02/blog-post.html


நல்ல கதம்பம். ஜோதா அக்பர் படத்துக்கு ரகுமான் இசையா. இங்கயும் படம் வருதுன்னு தட்டி வெச்சிருக்காங்க. வந்தாப் பாக்கனும்.

சைட்டு குடுத்திருக்கீங்க பாருங்க. அது சூப்பர். நானும் ரகுமான் ரசிகருதான். :)

நளர் நளர்னு சொல்றாங்களே...அது நீங்கதான்னு கேள்விப்பட்டேன். கத்திரிக்காக் கொழம்பு வெச்சா கோழிக் குருமாவாட்டம் இருக்குமா? உருளைய உருட்டுனா மீன் வறுவலாம்.

ஆயிரம் சினிமா கண்ட அபூர்வ கப்பி என்ற பட்டத்தை விரைவில் உங்களுக்குத் தரப் பரிந்துரை செய்கிறேன்.

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2008/02/blog-post.html

மோகன் பட்டதை நானும் பட்டிருக்கிறேன். சொல்லாமக் கொள்ளாம இந்தியாவுக்கு டிக்கெட் வாங்கீட்டு ஓடிப்போயிட்டாரு என்னோட டீம்ல மெம்பர் ஒருத்தரு. கிளையண்ட் கிட்ட நான் என்னனு சொல்றது? அப்பப்பா...எப்படியோ ஒப்பேத்தி அந்த புரோஜெக்ட்டை முடிச்சேன். ஒரு மேனேஜரா பட்ட பாடு இருக்கே. மறக்க முடியாதுய்யா..நீங்க கதைல சொன்னாப்புல எத்தன சொல்லடி பட்டு புரோஜெக்ட முடிச்சேன்னு எனக்கும் கூட இருந்த டீம் மெம்பர்களுக்கும் தான் தெரியும்.

ஓடிப்போனவன் மேல ஆத்திரம் கொஞ்சம் இருந்தாலும் பழி வாங்குற எண்ணம் இல்லை. எங்கயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்.

G.Ragavan said...

http://photography-in-tamil.blogspot.com/2008/02/blog-post.html

மிக அருமையான எளிய முறை. எந்தப் பெரிய பிரச்சனைக்கும் எளிய தீர்வு இருக்கும்னு சொல்வாங்க. அது உண்மைதான் போல. இது போலப் பயனுள்ள தகவல்களை நீங்க தொடர்ந்து சொல்லனும்.