Sunday, February 03, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் - பிப்ரவரி 2008

பிப்ரவரி 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

104 comments:

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/02/blog-post_03.html

இந்த வாரம் உங்களோடு இனிய வாரமாகக் கழிந்தது.

காதற் கவிஞர் என்ற பெயருக்கு ஏற்ற வகையில் காதல் பதிவுகளை நட்சத்திர வாரத்தில் கொடுத்தமை சிறப்பு.

இன்னும் நல்ல பதிவுகளைத் தொடர்ந்து உங்கள் வலைப்பூவில் எதிர்பார்க்கிறோம்.

வாழ்க. வளர்க.

G.Ragavan said...

http://blog.arutperungo.com/2008/02/blog-post_03.html

குழந்தை மித்ராவிற்கு எனது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல தமிழ்க் கடவுள் முருகன் அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க. மகிழ்வோடு வாழ்க.

G.Ragavan said...

http://shaliniyin.blogspot.com/2008/02/blog-post.html

வணக்கம் ஷாலினி. உங்க கவிதையைப் படிச்சேன். நல்லா எழுதீருக்கீங்க.

விரிக்காத வலை....ம்ம்ம்ம்ம்...ஆனாலும் பிடிச்சிருச்சு பாத்தீங்களா...அதான் காதல்னு சொல்றீங்க. சரிதானே?

சரணடைய என்னுடைய வாழ்த்துகள். நின்னைச் சரணடைந்தேன்னு பாரதியாரே பாடியிருக்காரு. இதுல நீங்க சரண்னு எதச் சொல்ல வர்ரீங்க? சரணாகதித் தத்துவத்தையும் அதன் உள்ளர்த்தங்களையும் விளங்கச் சொல்ல முடியுமா?

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2008/02/blog-post.html

இப்பிடி ஒரு பயணத்தையே ஒரே பதிவுல சொல்லீட்டியே :) நல்ல பயணமாத்தான் இருக்கனும்.

வயநாடு எனக்கும் மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தலம். செம்பரா பீக் போகலை போல. அது டிரெக்கிங் எடம். தேயிலைத் தோட்டம் வழியா மேல ஏறனும். ஏறி எறங்குறதுக்குள்ள தாவு தீந்துரும்.

சூச்சிப்பாறா அருவிக்கு நானும் போயிருக்கேன். நல்ல இயற்கையழகோட இருக்கும்.

எடக்கல் போனதில்லை. அந்தக் கொகை வாசலைப் போட்டோ பிடிச்சிருக்கலாம்ல :)

காமிராச் சித்தர் சிவியார் பாடம் எடுத்ததாலதானோ என்னவோ..ஒவ்வொரு படமும் நச்சுன்னு இருக்கு.

G.Ragavan said...

http://manasukulmaththaapu.blogspot.com/2008/01/blog-post_30.html


தாம்பத்யம் புனிதத்தை விட்டு அன்யோன்யத்துக்கு வரனும். அப்பத்தான் நல்லது. அன்யோன்யம்தான் புனிதம்னு சண்டைக்கு வந்தா நான் வரலை ஆட்டைக்கு. எந்த உறவுலயும் தொடர்பு இருந்துக்கிட்டேயிருக்கனும். அது உடலை விட மனதால இருக்க வேண்டியது மிகமிக அவசியம். அது குறையுறப்போதான் பிரச்சனைகள் வர்ரது.

// பண்பாடு பிறளாத பத்தினி பெண்கள் படிதாண்டும் அவலம் ஏனோ? என்று சிந்திக்க வைத்தது. //

அப்ப ஆண்களுக்குப் பண்பாடு இல்லையா? இருந்தாலும் பிறளாலாமா? :)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/02/blog-post.html

கேள்வியெல்லாம் ரொம்பப் பிரமாதமா இருக்கு. கேள்வின்னா இப்பிடித்தான் இருக்குனங்குற மாதிரிக் கேள்விகளை நீங்க கேட்டுருக்கீங்க. கேள்வி கேக்குறதுக்கு உங்களுடைய கேள்விகள் சிறந்த எடுத்துக்காட்டுகளா அமையும். :)

// இறைவன் மனிதனுக்குத் தந்தது கீதை!//

அப்படீங்குறீங்க? சரி. :)

// மனிதன் இறைவனுக்குத் தந்தது வாசகமும், பாசுரமும்! //

அப்ப திருப்புகழு, தேவாரமெல்லாம் என்னங்க? :)

// திருவடிகளின் சிறப்பா? - கடவுள் வாழ்த்தில் பாதியே அது தான்! - ஆலயங்களில் சடாரி (திருவடி) சார்த்தும் வழக்கத்தை முன்னொரு பதிவில் பொருத்திப் பார்த்தோம் - நினைவிருக்கா? //

இருக்கு இருக்கு. :)

// குழலூதி அந்த அழகன் என்னைக் கொல்லுறானே என்பது போல் ஒரு குறிப்பு வருகிறது! என்ன குறள்-னு சொல்லுங்க பார்ப்போம்? (உடனே, அவன் கண்ணன் தான்! வள்ளுவர் கண்ணனைப் பற்றித் தான் சொல்லி இருக்காரு-ன்னு கண்ணன் பாட்டு நண்பர்கள் எல்லாம் வம்புக்கு கெளம்பிறாதீங்கப்பா! :-))//

எனக்கென்னவோ அப்படித்தான் இருக்கும்னு தோணுது ;)

என்னது கேள்விகளுக்கு விடையா? விடையேறும் பெம்மான் குமரந்தான் இதெல்லாம் சொல்ல முடியும். நான் ஜூட்................ :)

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/02/1.html

மிகவும் தேவையான தகவல்களை நீங்கள் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். உடல் நலம் என்பது பெரும்பேறு. எல்லாருக்கும் அப்பேறு வாய்ப்பதில்லை. அது நம்முடைய அலட்சியத்தினால் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. சிறுவயதிலிருந்தே சீர்மையான உணவு..சீரான உடற்பயிற்சி என்று இருப்பதே நன்று.

புற்றுநோய் என்று இதற்குப் பெயர். புற்று வளரும் பொழுது கிடுகிடுவென்று வளரும். அதனால்தானோ என்னவோ அப்பெயரை வைத்தார்கள். நீங்கள் அடுத்து சொல்லப் போகும் தகவலுக்காகக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2008/02/3.html

மனசறிஞ்சு சொல்றேன். விழுந்து விழுந்து சிரிக்க வைச்சுட்டீங்க :)))))))))))))))

ஒவ்வொரு நிகழ்ச்சியிலயும் படுற அவமானங்களப் படிக்கிறப்போ...நல்லா யோசிச்சிருக்கீங்க. :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post.html

போட்டீல குதிச்சிட்டீங்களா...சூப்பர்.

படங்கள்ளாம் நல்லாயிருந்தாலும் இரண்டாவது படமும் வளையலும் சூப்பரோ சூப்பர். மயில்கழுத்துக் கலர் பட்டுச்சேலையும் சூப்பர் :)

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2008/02/kite-runner.html

இந்தப் புத்தகத்தை ஸ்கிப்போல் ஏர்ப்போர்ட் கடையில் பார்த்தேன். ஏனோ வாங்காமல் விட்டுவிட்டேன். உங்கள் பதிவு வாங்கத் தூண்டுகிறது. வாங்கீட்டாப் போச்சு :)

சமீபத்தில் தாலிபான் ஆப்கானிஸ்தான் ரஷ்யா வைத்து வந்திருக்கும் இரண்டாவது படம் இது. சார்லி வில்சன்'ஸ் வார் என்ற படமும் இந்தச் சூழ்நிலை வைத்து எடுக்கப்பட்டதுதான். சென்ற வாரம் திரையரங்கில் பார்த்தேன்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2008/02/225.html

ஓ இதெல்லாம் ஷட்டில் விளையாடுறதப் பத்தியா? அவரு ஷட்டில் பேட்தானே கைல வெச்சிருக்காரு? டேபிள் டென்னில் இல்லையே?

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2008/02/2007.html

நீ எழுதுறதப் பாத்து நானே பிரமிச்சுப் போயிருக்கேன். நீ என்னடான்னா இப்பிடிச் சொல்லீட்ட. உண்மையச் சொல்றேன். நீ ரொம்ப நல்லா எழுதுற. இன்னும் நல்லாவும் எழுதுவ. என்னுடைய வாழ்த்துகள். :)

G.Ragavan said...

http://pudugaithendral.blogspot.com/2008/01/blog-post_30.html

அடிச்சுச் சொல்லேன். தமிழ்ல படத்தப் பாத்துட்டு அழத்தான் போறோம். ஏன்னா பி.வாசு இந்தப் படத்தைத் தமிழுக்கு ஏத்தாப்புல மாத்தப் போறாராம். மணிசித்ரதாழுக்கு ஆன நெலமைதான் இந்தப் படத்துக்கும். அதான் பாத்தவங்கள்ளாம் அழுவாங்கன்னு சொன்னேன்.

இளாவும் இம்சையும் ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா... இவ்ளோ பழைய நியூஸ் சொல்லீருக்கீங்களேன்னு :)

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2008/02/blog-post_05.html

முந்தியெல்லாம் லெட்டர் எழுதுறப்போ வழக்கமா எல்லாரும் எழுதுறாப்புல எழுதப் பிடிக்காது. அதுனால விதவிதமான முறைகள்ள எழுதுவேன். ஒருவாட்டி சுத்திச் சுத்தி எழுதி படிக்கிறவங்க லெட்டரச் சுத்திச் சுத்திப் படிக்க வேண்டியதாப் போச்சு. இப்ப இமெயில், சாட்டிங், ஃபோன்னு இருக்கே. எல்லாம் சரிதான். போறது போறதும்..வர்ரது வர்ரதும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/02/2.html

அதாகப்பட்டது அதாகப்பட்டது...பஸ்சுல பக்கத்து சீட்டுல உக்காரப்பட்டதுல இருந்து கடலை வெள்ளாமை விளைச்சல்ல தொடங்குச்சுன்னுல்ல சொல்லனும். தழைச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்புச் சத்தெல்லாம் நல்லா போட்டு மகசூல் பிரமாதமா இருக்கனுமே. நீங்க எழுதுறீங்க. அப்ப நல்ல மகசூலாத்தான் இருக்கும். :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/02/1.html

இந்த இரண்டு பாடல்களும் கேட்டதில்லை. தொண்ணூறுகளில் இளையராஜா இசைக் கேட்புக் குறைந்திட்ட காலம். பல படங்களும் பாடல்களும் கேட்டதில்லை.

உமாரமணன் மிக அழகாகப் பாடியிருக்கிறார். அவருக்குத் திருஷ்டி வேண்டாமா... கூடவே மனோ அழுகின்றாரே...

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post_06.html

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீடு வாழ்க. பீடு வாழ்க. எல்லாம் வல்ல முருகப் பெருமானை வணங்கி வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2008/02/wishes.html

துளசி டீச்சருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். முருகப்பெருமான் அருளால் சிறப்புற்று வாழ வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/02/blog-post.html

ஹா ஹா ஹா செம காமெடி....

அதுலயும் சிம்பு மெண்டல் ஹாஸ்பிட்டல்ல இருக்குறதாச் சொல்றதும்...சரியான எடத்துலதான் இருக்கேன்னு சொல்றதும்...அடடடடா! கலக்கீட்டீங்க கப்பி.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/02/3.html

:) நல்ல திருப்பம். ரசிச்சேன். ரவி ஷங்கரா ரவி சங்கரா? இதுல ஷங்கர்னு சொன்னதுக்கு எதுவும் காரணமுண்டா?

திருக்கோயிலூர்...நல்ல பேரு... கள்ளக்குறிச்சி....இதுல வியப்பு என்னன்னா....குறிச்சிகள்ளாம் பாண்டிநாட்டுப் பேருக...எங்க சொந்த ஊரு குளக்கட்டாங்குறிச்சி. தூத்துடி மாவட்டம். பாஞ்சாலங்குறிச்சி..கல்லிடைக்குறிச்சி...இன்னும் நெறைய குறிச்சிக இருக்கு. கடலூர் மாவட்டத்துல குறிச்சி இருக்குறது வியப்புதான்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/02/3.html

ரொம்ப அழகாச் சொல்லீருக்கீங்க. ரசித்துப் படித்தேன்.

// எருக்கம் பூவினையும் ஏற்றுக் கொள்ளும் கணங்களின் தலைவனான கடவுளைப் பாரிக்கு உவமையாகச் சொன்னாரே. //

ஒவ்வொரு சமயம் சொல்றவங்களப் பொருத்து சொல்ல வந்தது என்னன்னு வெவ்வேறு விதமா நெனச்சுப் பாத்துப் பொருள் கொள்றதும் உண்டு. :) நீங்க சொல்ல வர்ரதும் புரிஞ்சது.

எருக்கு சிவனார்க்கும் ஆகுமென்றும் படித்ததுண்டு. வக்ரதுண்டுக்குமட்டுமன்று. பாலைப்பூ கொற்றவைக்கும் ஆக வேண்டுமே. செய்யுளில் கணமும் இல்லை தலைமையும் இல்லை. ஆனாலும் நீங்க அந்த நம்பிக்கைல அப்படிப் பொருள் கொண்டிருக்கீங்க. அது ஒங்க விருப்பம்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//எருக்கம் பூவினையும் ஏற்றுக் கொள்ளும் கணங்களின் தலைவனான கடவுளைப் பாரிக்கு உவமையாகச் சொன்னாரே//

அந்தக் கடவுள் பேர் என்ன குமரன்?
அந்தக் கடவுள் கபிலர் காலத்தில், தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்தார் போல இருக்கே? :-) //

ஆகா நீங்க இருக்கீங்களா?? உங்க புன்னகையே நீங்க நெனைக்கிறதச் சொல்லுதே. நீங்க சொன்னா மறுபேச்சே கெடையாதுங்களே. ஆமாம். ஆமாம். நீங்க சொல்றதுதான் சரி. :)

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//Labels: இலக்கியத்தில் இறை//

வாழ்த்துக்கள் ஜிரா! :-) //

என்ன நெனச்சு வாழ்த்துனீங்களோ.. :) வாழ்த்துக்கு நன்றி. பெரியவங்க வாழ்த்து..பெருமாள் வாழ்த்து :)

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/02/3.html

முருகா..படிக்கிறப்பவே பயமா இருக்கே. ஆண்டவா...எல்லாரும் உன் பிள்ளைங்கதானே....பாத்துக்கோப்பா.

இதத் தவிர எனக்கு வேற ஒன்னும் சொல்லத் தோணலை.

G.Ragavan said...

// கோபிநாத் said...
\\ஜிரா தொடந்து சொல்றாரு. "படத்துக்குக் கதாநாயகனையும் முடிவு செஞ்சிட்டேன். அடுத்த கதாநாயகன் விவசாயி இளா. ரொம்பவும் இயல்பா நடிக்கிற தெறமை அவரு கிட்ட மட்டுந்தான் இருக்கு. அவரை கதை டிஸ்கஷனுக்குக் கூப்புடுங்க.\\

விவாஜி அண்ணே தான் கதாநாயகனா!!!..சூப்பர் ஜோடி யாரு ஜிரா ;))) //

இளா ரேஞ்சுக்குச் சோடி பிடிக்கனும்னா இந்தியாவுல ஆகாது. வெளிநாட்டுலதான் தேடனும். இலங்கை சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் விற்பனையாகிறது..சாரி..சாரி..தேடப்படுகிறது. :)

// குமரன் (Kumaran) said...
இராகவன். நீர் தமிழ்த் துரோகி என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். தமிழ்ப்பட கதாநாயகர்களை எல்லாம் உள்ளேயே விடாமல் விரட்டி அடித்துவிட்டு இந்திப்பேயை மட்டும் உள்ளே விட்டு ஆயிரம் ஜி போட்டுப் பேசும் ஜிரா ஒழிக ஒழிக ஒழிக.

:-)))))) //

என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க. சூரியாவை மொதல்ல உள்ள கூப்ட்டு உக்கார வெச்சுப் பேசீருக்கேன். சாருக்கானை நானா கூப்புடச் சொன்னேன்? மலேசியா மாரியாத்தாவின் செயல் அது.

// ILA(a)இளா said...
ஷாருக்கான் வசனம் எல்லாம் சூப்பரு. எங்கேயாவது நடிகைங்க பேட்டிய பார்த்தா மாதிரியே இருக்கு. அதென்னைய்யா கடேசியா நம்மள இழுத்து விட்டுடீங்க.
இப்பவாவது சோடியா பிரியா மணிய போடு..... சீ சீ நடிக்க வைங்க.. //

அடடா.....பிரியா மணியா? ரெண்டு சோடி வேணுமா? பிரியான்னு ஒன்னு..மணிமேகலைன்னு ஒன்னு...ரொம்பத்தான் ஆசை உமக்கு. :-P

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/02/blog-post_07.html

// துளசி கோபால் said...
கலக்கல்.

நம்ம கதை இலாக்காவுக்கு சிவியாரை அனுப்பி 'வையுங்க'. //

அனுப்பி வையுங்கன்னு நீங்க சொன்னப் பெறகு வையாம...சேச்சே..அனுப்பாம இருப்பமா...யாருப்பா அங்க...நியூசிலாந்துக்கு ஒரு கூரியர் அனுப்பனும். :)

// பைய(ன்)ர் பார்க்கரதுக்கு அம்சமான முகம்தான்.

நாயகனாக்கியே தீரணுமுன்னு ஒரு கூட்டம் அலையுதாமே! //

நாயகன்னா அவரே...அவரன்றி நாயகனே இல்லைன்னும் அவங்கள்ளாம் சொல்றாங்க... அமெரிக்கா அலறுதாம்...இங்கிலாந்து இருமுதாம்...பாரீஸ் பதறுதாம்...ஜெர்மனிக்கோ ஜெர்க்கு...நெதர்லாந்துக்கு நெர்வஸ்னஸ்...இப்பிடி உலகைக் கலக்குறாரு... கேட்டா அதான் சீவியார்...அப்படீங்குறாரு. என்னய்யா தேங்காயையான்னு கேட்டா....இளம் பெண்களின் மனதைச் சீவியார்னு வசனமெல்லாம் சொல்றாரு.

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/02/4.html

ரொம்ப அருமையாச் சொல்லீருக்கீங்க.

புகைப்பழக்கம் எனக்கு இருந்ததில்லை. ஆனா குடிப்பழக்கம் இருந்தது. மிகமிக அதிகமாகவே. ஆனா அதையும் விட்டாச்சு.

நீங்க சொன்ன மாதிரி உடற்பயிற்சி மிக முக்கியம். இங்க உடற்பயிற்சி நிலையங்கள்ள...வயதானவங்க கூட வந்து முடிஞ்ச பயிற்சிகளைச் செய்றாங்க. மிகவும் பாராட்டுக்குறியது.

// ஷாலினி said...
//அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் நிலை இன்னும் மோசம்.வீட்டிலிருந்து கார்,காரிலிருந்து அலுவலகம்,அலுவலகத்தில் இருந்து கார் என்று எண்ணி ஒரு நாளுக்கு 100 - 200 அடிகளுக்கு மேல நடப்பதே இல்லை.//


சரியா சொன்னீங்க..
பாகத்து தெருல gym வச்சிகிட்டே போக சோம்பேரித்தனப்படுறது மன்னிக்க முடியாத குற்றம் ;)

புரியுறவங்களுக்கு புரிஞ்சா சரி :P //

ரொம்பச் சரியாச் சொன்னீங்க ஷாலினி. குறிப்பா தமிழ் இளைஞர்கள் சோற்றுப் பானைக்குள்ள தலைய விட்டுட்டு வயிறையும் பானை மாதிரி ஆக்குறதுல குறியா இருக்காங்களே தவிர...உடற்பயிற்சியில ஆர்வம் காட்டுறதில்லை. அழகு முகத்துல மட்டும் இல்லை.. ஒடம்புலயும் இருக்குங்குற ஒவ்வொருவரும் உணரனும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/02/blog-post.html

அருமையான பாடல்கள். முதலில் மை பிரண்டிற்கு வாழ்த்துகள்.

1. மனமே தொட்டால் சிணுங்கிதானே... மிக அருமையான பாடல்.... எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...

2. சினேகிதியே படத்தில் பாடல்கள் அருமையா இருக்கும்.

3. அருமையான பாட்டு.. இன்னைக்கும் செம பெப் சாங். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு மாற்றா இன்னொரு குரல் இன்னும் வரலைங்குறதுதான் உண்மை. சில குரல்கள் வந்து முயற்சி செஞ்சாலும் நிலைக்கலை.

4. இந்தப் படம் மகாமட்டம்னு தெரியும். ஆகையால பாட்டுகளையும் கேட்டதில்லை. உங்களாலதான் கேக்க முடிஞ்சது.

5. மெல்லிசை மன்னரின் மெட்டுகள் மிக அருமையானவை. இனிமையானவை. அவைகளுக்கும் மேலாக உணர்வுகள் மிகுந்தவை. அவருடைய மெட்டுக்கு வாத்தியக்கோர்வை செய்வது எந்த இசையமைப்பாளருக்கும் இனிய செயலே. அதைத்தான் இளையராஜாவும் செய்திருக்கிறார். மிக அருமையாக. எல்லாப்பாட்டுகளுமே அருமை. ஆனா நீங்க சொன்ன மாதிரி..இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

G.Ragavan said...

http://mathimaran.wordpress.com/2008/02/07/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%a3/

இதுல மெல்லிசை மன்னர் பயன்படுத்தியிருக்குற சொல்லைப் பாருங்க... காதல்... சந்திரபாபுவுக்கும் விஸ்வநாதனுக்கும் காதலான்னு கிராக்கி பேசலாம். அது அதுயில்ல. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு சொல்றாங்களே அதுல வர்ர காமம்.

பாத்தீங்களா.... அவரு என்னவோ சொல்ல..ஒன்னு ரெண்டாகி..ரெண்டு மூனாகி....பாரதியார் விஷயத்துல அப்படிப் பேசீட்டாருன்னு வந்துருச்சு பாத்தீங்களா. நல்ல வேளை முழு உண்மைய கொண்டு வந்தாச்சு.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/02/blog-post_07.html

உங்க விமர்சனத்தை இப்பத்தான் படிச்சேன். கதையின் நிறைவுப் பகுதியில் நான் இட்ட பின்னூட்டம் இது. நீங்க அத விரிச்சிச் சொல்லீருக்கீங்கன்னு நெனைக்கிறேன். அதான் குமரன் அதிர்ச்சியாயிட்டாரு.

// G.Ragavan said...
என்ன மோகன் கதைய அதுக்குள்ள முடிச்சிட்டீங்க :)

ஆகக்கூடி அந்தக் கேசவனும் தாத்தனும் கூடி நாடகமாடி...செத்துப் போன மாதிரி நடிச்சி...அவரப் பாக்க விடாம செஞ்சி கல்யாணத்துல வர்ர மாதிரி வந்துட்டுப் போயி....கந்தன் இப்பிடி ஆன்மீகக் கிறுக்கனா ஆக்கீட்டாங்க. சரிதானே? :)

January 03, 2008 3:33 PM //

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/02/blog-post_07.html

// தேவ் | Dev said...
பாவக்காய் என்ன பாவம் செய்தது? தமிழின உணவான பாகற்காயைப் பாவம் செய்வதாகக் காட்டும் ஜிரா அவர்களே வட இந்திய உணவான உருளைக் கிழங்கை வைத்து உருளை உருபடாதக் கதை என்றோ ஆலு அசிங்கப்பட்ட கதை எனவோ படம் எடுக்க நீங்கள் முயலாதது எனோ.... மதிப்பிற்குரிய ஆ.சூ.ஸ்டார் அண்ணன் குமரன் எழுப்பிய குற்றசாட்டுக்கு நீங்கள் குத்த வச்சு பதில் சொல்லும் வரை இந்த பிரச்சனை ஓயாது.... //

குமரன் எழுப்புவது பிரச்சனையே இல்லை. பாவக்காய் செய்த பாவம் என்று சொன்னால் ஆலு அலம்பல் செய்யவில்லை என்றும் உருளை உருப்பட்டிருக்கிறது என்றும் பொருளா? ஆலு டிக்கியை அஞ்சு பிளேட் வாங்கி ஆளும் பேரும் பார்க்காமல் உள்ளே தள்ளிய குமரனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? பனீர் பட்டர் மசாலோவோடு தமிழ் நாட்டுத் தோசையைக் கூட்டணி வைத்த உங்களது நயவஞ்சகம் புரிகிறது.

//// பதிவுலக ஆன்மீக லி.சூ.ஸ்டார் கே.ஆர்.எஸ் நடத்தப் போகும் பிசா போராட்டத்தில் ஹேம்பர்கர், ஹாட் டாக் போன்றவைகளையும் இணைத்து வலுவாகப் போராட்டம் நடக்கும் நீங்கள் உங்கள் தமிழ் எதிர்ப்புக்கு மன்னிப்பு கேட்காவிட்டால்... போராட்டத்தில் அகில தமிழ் உலக பாவக்காய் பாசறையைச் சேர்ந்த பலக் கோடி தமிழர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது... //

தமிழ் தமிழ் என்று பேசிக்கொள்ளும் நீங்கள் பர்கர், பீட்சா, ஹாட்டாக் என்று வெளிநாட்டுப் பண்டங்களை உண்ணும் விரதத்தில் சேர்க்கும் அட்டூழியம் ஏன்? கேப்பைக் களி,கம்பு அடை, குதிரைவேலிச் சோறு, கத்திரிக்காய் புளிக்குழம்பு என்று ஏன் உண்ணவில்லை? மொரமொரெனவே புளித்த மோரும் வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் சேர்க்காதது ஏன்? ஏன்? ஏன்? செப்புக தேவ்...செப்புக?

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/02/blog-post_08.html


பிரமாதமா இருக்காரே...பிரதிமாதமும் பாக்குறாப்புல இவங்கள வெச்சிக் காலண்டர் போட்டாங்களாமே...அது எங்குட்டும் கெடைக்குமா?

ஓம் சாந்தி ஓம் படத்த ஆம்ஸ்டர்டாம்ல கூட்டத்துல போய்ப் போத்தேன். மட்டமான படம். நாலஞ்சு இங்கிலீஷ் படத்துல இருந்தும் சில பழைய இந்தியப் படங்கள்ள இருந்தும் சுட்டிருக்காங்க.

ஆனா நீங்க குடுத்துருக்குற பாட்டு...கேக்க ரொம்ப நல்லாயிருக்கு. Singing in the rain படத்துல இருந்து சுட்ட காட்சியமைப்புன்னாலும் தீபிகா படுகோனே பிரமாதம்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/02/blog-post_09.html

நன்றி பிரபா. அவருடைய மகிழ்ச்சியை அவர் வழியாகவே தெரிந்து கொள்வது மிக நன்றாக இருக்கிறது.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2008/02/226_08.html

ஆகா...சைவத்துல இவ்வளவு விஷயங்கள் இருக்கா? ஒருவேளை இதெல்லாம் டீவீல பல்பொடி ஷேவிங் கிரீம் விளம்பரங்கள் மாதிரியோ :) அதாவது சொல்வாங்க..ஆனா அவங்க அதப் பயன்படுத்துவாங்களான்னு தெரியாது... :))) just kidding.. :)

இங்க நெதர்லாந்துல எனக்குத் தெரிஞ்சு ரெண்டு டச்சுக்காரங்க மரக்கறி சாப்புடுறவங்க.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/02/blog-post_07.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//தமிழ் தமிழ் என்று பேசிக்கொள்ளும் நீங்கள் பர்கர், பீட்சா, ஹாட்டாக் என்று வெளிநாட்டுப் பண்டங்களை உண்ணும் விரதத்தில் சேர்க்கும் அட்டூழியம் ஏன்?//

உக்கும்...இதுக்குத் தான் தமிழில் சிந்திக்கணும்ங்கிறது!:-)
ஒரு தமிழனின் போரட்டம் இன்னொரு தமிழனக்குத் தானே புரியும்? //

ஓ அப்ப உங்களுக்குப் புரியலையா...அதுக்கு யாரும் ஒன்னும் செய்ய முடியாது. :))))

// கேப்பங்களி, கம்பங்கூழ், தேன் பிசைந்த தினைமாவு, சற்றே கருப்பட்டி தட்டிய கார அடை, குதிரை வேலிச் சோறு,//

இதுல எதுனாச்சும் தேவோ..இல்ல உண்ணும் விரதத்துல பங்கு பெறப் போறவங்களோ....எப்பவாச்சும் சாப்பிட்டிருக்கீங்களா? நீங்க வேணா சாப்பிட்டிருக்கேன்னு பொய் சொல்லலாம். அதுக்கு ஏதாச்சும் செம்மொழி அல்லது வடைமொழிப் பாட்டும் எடுத்துப் போடலாம்...ஆனா மத்தவங்க? தூத்துக்குடி சீலா மீன முழுசாப் பொரிச்சி உள்ள தள்ளுனவன் இந்த ஜிரா...உங்க அலம்பல் எல்லாம் எங்கிட்ட வேண்டாம்...

// செங்கரும்புச் சாறு, பாகற்காய் புளிக்குழம்பு, வெங்காயம் துவைத்துப் புளித்த மோரு
- இவை எல்லாம் மனம் மகிழ்ந்து தமிழன் உண்ணும் உணவு! எதிர்ப்பைக் காட்ட வீதியில் உண்ணும் உணவல்ல! //

அப்படீன்னா பீட்சா ஹட்டு...கார்னரு..டோமினோஸ்..காபி டே, பாரீஸ்டால சாப்புடுறவங்கள்ளாம் தமிழர்களே இல்லையா... இல்ல எதிர்ப்பைக் காட்டத்தான் அங்க உக்காந்து திங்குறாங்களா? நேத்து கூட நீங்க சலாமி பீட்சா வாங்கி குஷன் சோபாவுல சாஞ்சி உக்காந்து ஃபேண்டாசியா பாத்துக்கிட்டே மொக்குனீங்களே...அது எந்தக் கணக்கு?

// எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
உண்ணுவது "இச்சோறே"!
எதிர்ப்பைக் காட்ட ஏய்த்தவர் வீழ்த்த
உண்ணுவது "அச்சோறே"!!//

சோற்றால் அடித்த பிண்டங்களாய்த் தமிழரை மாற்றப் பார்க்கும் கே.ஆர்.எஸ் அவர்களே...உங்களுக்குத் தமிழர்கள் நோ சொல்லும் காலம் நெருங்கி விட்டது. என்னுடைய அடுத்த படமான தெருமால் பெருமை என்ற படத்தில் உங்களையே கதாநாயகராக்குவது என்று முடிவு செய்து விட்டேன்.

// சங்கத்தின் போர்வாள் அண்ணன் தேவ் மேல் அவதூறு கற்பிக்கும் இயக்குனர் ஜிராவுக்கு பாகற்காய் சப்ளை இன்றோடு நிறுத்தப்படுகிறது! :-) //

நன்றாகக் கவனிக்க. நான் பாவக்காய் என்றேன். பாகற்காய் எனவில்லை. ஆகையால் பாவக்காய் சப்ளையை மட்டும் நிறுத்தும் படியும்... பாகற்காயைத் தொடர்ந்து அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல்..இன்று குழம்பில் வேகும் நண்டோடு உங்களுக்கு நட்புறவு உண்டாகும் அபாயம் இருப்பதை மிகமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/02/blog-post_07.html

// துளசி கோபால் said...
ஒரு சந்தேகத்தை இங்கே(யே) கேட்டுக்கவா?

அந்த சீலா மீனுக்கு ஆங்கிலத்தில் என்னப்பா பேர்? //

டீச்சர்... சீலா மீனுக்கு ஆங்கிலத்துல seer fishனு சொல்வாங்க.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
டீச்சர்...
இந்தூருக்கு அம்மா அப்பா வந்த போது, சங்கரா மீனை Red snapper-ன்னு கண்டு புடிச்சி வாங்கியாந்தேன்.
வஞ்சிரத்தை Salmon/king fishன்னு சொல்லுறானுங்க! சிலா மீனு=seer fishன்னு கேள்வி! ///

தப்பு கே.ஆர்.எஸ். வஞ்சிரங்குறது வடதமிழ்நாட்டு மக்கள் சீலா மீனுக்கு வெச்ச பேரு. Salmon/Zalm என்று சொல்லப்படுவது இளஞ்சிவப்பு சதையுடன் இருக்கும். சீலாவின் வெள்ளைக்காரச் சொந்தக்கார மீன் மாதிரி. சங்கரா மீன்னா செவப்பா இருக்குறதா? ம்ம்ம்ம்...முள்ளு நெறைய இருக்கும்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/02/3.html

// குமரன் (Kumaran) said...
நன்றி அரைபிளேடு. வள்ளியை முருகனுக்கு மணம் புரிவிக்க வந்த ஆனைமுகனைப் பற்றி கந்த புராணம் தான் சொல்கிறது; அது காலத்தால் பிந்தையது; அதற்கு முன்னர் அந்தக் கதை இல்லை என்று சாதிப்பார்கள். அவ்வளவு தானே? :-) //

:) அப்படிச் சாதிப்பதற்கு நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் குமரன்?

G.Ragavan said...

http://kappiguys.blogspot.com/2008/02/blog-post_10.html

இது உண்மையிலேயே சினிமாவா? நல்லா யோசிச்சுச் சொல்லுங்க. இப்பல்லாம் கலியாணத்தை வீடியோ எடுக்குறாங்கள்ள...அதுல புதுமையா வீடியோவா?

ஆனா ஒன்னு...இதுல நடிச்சவங்களே..இதப் பாத்திருப்பாங்களான்ன்னு தெரியலை.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/01/608.html

இந்தப் பாடலை இப்பொழுதுதான் கேட்கிறேன். இது நிச்சயமாக ஏ.ஆர்.ரகுமானாக இருக்கவே முடியாது.

G.Ragavan said...

http://thamizachi.blogspot.com/2008/02/blog-post_6742.html

இது சற்றுச் சிக்கலான பிரச்சனை. அந்தத் தாய் உதவி செய்திருக்கிறார். பரிதாப உணர்ச்சியும் தாய்மையும் பெருகிச் செய்த ஒரு செயலால் இன்று அவமானப்படுத்தப்பட்ட நிலை. மிகமிகப் பரிதாபநிலைக்குறியது.

ஊனமுற்றவர்தான். அவருக்கும் ஆசையுண்டுதான். ஆனால் அதை நிறைவேற்ற வழியே இல்லாத பொழுது இப்படியா செய்வது? உயிர் கொடுத்து உணவு கொடுத்து உடையும் உணர்வும் வாழ்வும் கொடுத்த ஒருவருக்கு நல்லது செய்யாவிட்டாலும் இப்படி நன்றி மறந்து அல்லது செய்வது தவறே. உப்பளித்த கை கொப்பளிக்க வைப்பது சரியன்று.

உடனடியாக சிறந்த கவுன்சிலரை இவர் அணுகுவதே சிறந்து என்று எனக்குத் தோன்றுகின்றது. அவருடைய உணர்வுகளுக்கு வடிகாலாக விலைமாதர்களை அணுகுவதும் சரியான வழியென்றுதான் தோன்றுகிறது. இதுதான் என்னுடைய கருத்து.

G.Ragavan said...

http://kappiguys.blogspot.com/2008/02/blog-post_10.html

// வெட்டிப்பயல் said...
இதை இன்னொரு சூப்பர் ஸ்டார் சொல்றது தான் தாங்கல.

CVRஐ பார்த்துட்டு ஒருத்தர் "ஒரு நடிகர் உங்களை மாதிரியே இருக்காருங்கனு சொன்னாராம்."

யார் அந்த நடிகர்னு கண்டுபிடிபார்க்கலாம்...

(மணி ரத்னத்தோட கடைசி மூணு தமிழ் படத்துலயும் அவர் இருக்காரு)//

தமிழ்ப் பெண்கள் எல்லாரும் சிவியாரைப் பார்த்து வலையுலக ப்ருத்விராஜ்னு சொல்றாங்களாமே...நீங்க என்னடான்னா மணிரத்னம் சினிமால நடிச்சிருக்காருன்னு சொல்றீங்க....மாதவனைச் சொல்றீங்களா? சித்தார்த்தைச் சொல்றீங்களா? இல்ல..அபிஷேக் பச்சனைச் சொல்றீங்களா?

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/02/blog-post_11.html

வாங்க வாங்க வாங்க... உங்களது இந்த வாரம் இனிய வாரமாக அமைய என்னுடைய வாழ்த்துகள். நட்சத்திரமே நட்சத்திரமே வாழ்க வாழ்க!

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/02/blog-post_11.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஓம் ஷாந்தி ஓம்! :-))))) //

யார் இந்த ஷாந்தி? கைப்புவின் நட்சத்திரப் பதிவில் இந்தப் பெயரை நீங்கள் சொல்லும் காரணம் என்ன? இடம் சுட்டிப் பொருள் விளக்குக. கோடிட்ட இடத்தை நிரப்புக. பொருத்துக.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/02/blog-post_1202.html

ஆகா....உண்மையிலேயே வருத்தமாப் போயிருச்சுங்க. அதுலயும் சிலேட்டு பிடிக்க வெச்சாங்கன்னு சொன்னீங்களே...அதப் படிக்கைல கண்ணுல தண்ணி வந்துருச்சு. :((((

இதெல்லாம் வீரர்களின் வாழ்க்கையில் ஜகஜம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/02/sam-anderson.html

தென்னகத்துச் சிங்கமாம்
தமிழ்த் திரையுலகம் பிழைக்க வந்த செல்வமாம்
வெள்ளித்திரைக்கு வெள்ளையடிக்க வந்த வள்ளலாம்
ஆடல் அழகனாம்
பாடல் புலவனாம்
அனைத்தும் சிறக்கும் நடிப்புச் சிற்பியாம் சாம் ஆண்டர்சன் அவர்களின் யாருக்கு யாரோ திரைப்படத்தைப் பார்த்து ரசித்து விமர்சனமும் இட்ட வெட்டியார்....நமது இதயங்களில் தேனைக் கொட்டியார். அப்படியே இந்தப் படத்துக்கு நீங்கள் கொடுக்க வேண்டுமே சுட்டியார். இங்கேயே எப்படி..எங்கே இறக்க (அதாவது சாக அல்ல) வேண்டும் என்று கூறுக.

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2008/02/dating.html

எல்லாமே அருமையான பாட்டுங்க. எனக்குப் பிடிச்ச பாட்டுங்க.

அது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு. அவருக்குத் தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு பாட்டாச்சும் போட்டிருக்க மாட்டாரா? போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா?

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2008/02/dating.html


அப்புறம் இன்னொரு விஷயம்...I hate Nagarjuna.. I hate Nagarjuna...I hate Nagarjuna....

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/02/blog-post_12.html

// பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது. //

இது சூப்பர்... இந்தப் பார்வைக்கும் சிரிப்புக்குந்தான் நாயாப் பேயா அலஞ்சு திரிஞ்சு அடிபட்டு மிதிபட்டு காதலிக்கிறாங்க. அந்தப் பக்கம் மிஸ்டு கால் குடுப்பாங்களாம்....இவன் பாட்டுக்க ஃபோனப் போட்டு வழியுறான்...சரி. நல்லாருக்கட்டும் முருகா...நல்லாருக்கட்டும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/02/blog-post.html

// வெட்டிப்பயல் said...
//குமரன் (Kumaran) said...

இந்த இடுகைக்கு ஆன்மிகம்ன்னு லேபிள் ஒட்டியிருக்கீங்களே பாலாஜி. இதில் ஆன்மிகம் எங்கே வந்தது? இலக்கியம்ன்னு சொல்லியிருந்தா சரியா இருக்கும்.//

எப்படியும் இது நீங்க, KRS எல்லாம் வந்து பேசி ஆன்மீகமாகிடும்னு ஒரு நம்பிக்கை தான் ;) //

ஆன்மீகச் செம்மல்..சண்மதச் செல்வர்..பல்நூல் பயில் பகலர், சொல்லின் செல்வர்....மாலடியர்...கீதைக்குப் பாதை போடும் மேதையர்...திரு கே.ஆர்.எஸ் வாழ்க வாழ்க..வாழ்க...வாழ்க :)

சுருங்கச் சொன்னா...ஆன்மீகம்னா கே.ஆர்.எஸ்...கே.ஆர்.எஸ்னா ஆன்மீகம். :)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/02/blog-post.html


இப்பிடியெல்லாம் கேள்வி கேட்காதீங்க. எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. என்னவா இருந்தாலும் கே.ஆர்.எஸ் வந்து விளக்குவாரு. அவரு சொன்னா...அதான் முடிவு. அவர் சொல்லட்டும். அப்புறமா நான் வந்து வழிமொழியிறேன். :)

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2008/02/dating.html

// நான் கொஞ்சம் நம்ம "மொட்டை" விசிறி...
அவருக்கு முன்னாடி எம்.எஸ்.வி...அவருக்கும் முன்னாடி ஜிரா (அட, ஜி இராமநாதன்-ங்க)...

இப்ப ரஹ்மான், ஹாரிஸ், தேவா, ஜெர்ரி, யுவன், - இப்படி லிஸ்ட்டு நீளுமே மோகனத்தில்!
அவங்க அவங்க பின்னூட்டமாச் சொல்லச் சொன்னேன்!
எல்லாத்தையும் சேகரிச்சி பதிவுல போட்டுடறேன்!

ஜிரா காலத்துக்கு எம்.எஸ்.வி
நமக்கெல்லாம் ஜெர்ரி, யுவன், ராஜா தான்பா :-) //

அது சரி... சிலப்பதிகாரத்துல முல்லைப்பண்ணு தேங்கா பன்னுன்னு சொன்னீங்களே.... சிலப்பதிகாரத்த வைரமுத்து எழுதுனாரா?

தேவாரத் திருமுறைகள் ஆழ்வார்கள் அருளியதெல்லாம் இன்றைக்கும் மோகனத்துல பாடுறாங்களே... அதுக்கெல்லாம் ரகுமானும் ஜெர்ரி ஜெடியுந்தான் மெட்டுப் போட்டாங்களா?

என்னங்கய்யா கலர் கலரா இடியாப்பம் பிழியுறீங்க? ;)

மெல்லிசை மன்னர் போட்ட பாட்டுகள மட்டும் நான் வந்து எடுத்துக் கொடுக்கனுமாக்கும். அப்ப ரகுமான் பாட்ட ரகுமான் விசிறிகள் சொல்லட்டும்னு விட்டுருக்கலாமே. விடலையே. ஏன்னா நீங்க ரகுமான் விசிறி. ராஜா பாட்டுகளை அவர் ரசிகர்கள் சொல்லியிருக்கலாம்னு விட்டிருக்கலாமே? இல்லையே. ஏன்னா நீங்க ராஜா விசிறி. ஒரு படத்துக்கு மட்டும் இசையமைச்ச ஜெர்ரி பேரெல்லாம் சொல்றீங்க...ஆனா மெல்லிசை மன்னர் இசை மட்டும் கசக்குதுல்ல ;) அப்ப நீங்க மெல்லிசை மன்னர் இசைக்கு எதிரிதானே? :) உண்மைய மறைக்காம சொல்லீருங்க.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/02/blog-post_07.html

// இம்சை அரசி said...
ஜி.ரா இவ்ளோ காமெடி பண்ணுவீங்கன்னு இத்தன நாளு எனக்கு தெரியாம போச்சே :)))//

ஹி ஹி இதெல்லாம் ஜகஜம் :)

// சரி... அடுத்து காதல் குளிருக்காவது சிவியார் அண்ணன ஹீரோவா போடனும்ன்றது எங்களோட கோரிக்கை... ஜி.ரா ஏமாத்த மாட்டார்ன்ற நம்பிக்கை இருக்கு ;))) //

ஆகா... ஒங்க ஆசைய நிறைவேத்தியே ஆகனுமே :)

// அப்புறம் நம்ம KTMஅ ஏன் சும்மா விட்டீங்க??? (ஏதோ நம்மளால முடிஞ்சது ;)))) //

ஒவ்வொருத்தராத்தானே... இப்பத்தான தொடங்கீருக்கோம். :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/02/4.html

மிக அழகா எழுதீருக்க ரசிச்சுப் படிச்சேன். நல்ல எழுத்து நடை உங்களுடையது. சொற்களைக் கூட்டுவதும் அவைகளைச் சேர்த்துப் பூட்டுவதும்..பூட்டியவைகளை எங்கள் கண்களுக்குக் காட்டுவதும் என்று விளையாண்டிருக்கின்றீர்கள். நன்று நன்று.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/02/4.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரரே!
அது என்ன இடுகல் மாதிரி ஒரு படம்? அதான் வேலவனா?
வேலன் வெறியாட்டம் என்றால் என்ன? அது ஏன் "வெறி" ஆட்டம்?
ஆன்மீகப் பதிவர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் வந்து விளக்க வேணுமாய் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! //

அப்ப நீங்கதான தெய்வமே வந்து விளக்கனும். விளக்குங்க விளக்குங்க. தெரிஞ்சுக்கக் காத்திருக்கோம். சரியான வெறிபிடிச்ச சாமியா இருக்கும் போல இருக்கே!!!!! :) ஆனா நீங்க வெளக்குனா எங்களுக்கும் புரிஞ்சிரும்.

G.Ragavan said...

http://tmpolitics.blogspot.com/2008/02/valentines-day.html


மத்த விஷயங்கள்ளாம் விடுங்க... காதலர் தினமோ வசந்த விழாவோ... ஒவ்வொரு மதத்துக்காரங்களும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. கொண்டாடுறதுலயோ..அல்லது கொண்டாடப்படும் விதத்துலனாலாயோ கருத்துகள் வேறுபடலாம். நான் அதுக்குள்ளயே போகலை.

ஆனா "It promotes Love"... ஊக்குவிக்க்கப்படக்கூடாத அளவுக்குக் காதலைக் கொடுமையாக்குறது காமெடியா இருக்கு. :) இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. விவாதத்துக்கோ உங்க நம்பிக்கையை புண்படுத்துறதுக்கோ உங்க பதிலை எதிர்பார்த்தோ சொல்லலை. என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய விரும்பினேன்.

G.Ragavan said...

http://sirippu.wordpress.com/2008/02/12/sexercise/

அடா அடா அடா படிக்கிறப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு. உடற்பயிற்சி இதுதான்னு இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே. :)

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2008/02/dating.html


// ஓகை said...
//அது சரி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மோகன ராகம் தெரியாது போல இருக்கு. அவருக்குத் தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு பாட்டாச்சும் போட்டிருக்க மாட்டாரா? போட்டிருந்தார்னா.... மோகன ராமல இருந்து நன்னு பலிம்ப தாண்டி..ஏன் பள்ளி கொண்டீர் ஐயா...மயில் வாகனான்னு கலக்குற கே.ஆர்.எஸ்சுக்குத் தெரியாம இருக்குமா? //

ஐயோ, இது வஞ்சப் புகழ்ச்சியா? ஒரு மெல்லிசை மன்னர் ரசிகரை புரிஞ்சிக்காம எழுதிட்டேன். ஜீரா வாழ்க, வளர்க! //

:) நீங்க கோவப்பட்டதுல எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிங்க. மெல்லிசை மன்னருக்காக நீங்க கோவப்பட்டது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. :) இந்தப் பதிவுல நீங்களும் எனக்குத் தொணையா இருக்கீங்கன்னு தெரிஞ்சு மகிழ்ச்சி.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/02/blog-post_12.html

கொசுவத்திய ரொம்பப் பெருசாத்தான் சுத்தீட்டீரு...

பள்ளிக்கூடத்துல தமிழை விரும்பிப் படிச்சது உண்மைதான். ஒவ்வொரு செய்யுளையும் ரசிச்சுத்தான் படிச்சேன். உரைநடை அலுப்பூட்டும். செய்யுட்கள் களிப்பூட்டும்.

பலப்பலச் செய்யுட்களை ரசித்து ருசித்துச் சுவைத்திருக்கிறேன்.

ஒருமுறை வீட்டில் தங்கை கம்பராமாயணச் செய்யுள் படித்துக் கொண்டிருந்தாள். "செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர் செல்வந்தேறி" என்று வரும் செய்யுள். அதுல இஞ்சின்னா இலங்கைத் திருநகர்னு அவங்க டீச்சர் சொல்லிக் குடுத்திருக்காங்க. ஆனா..இஞ்சின்னா மதில். அது தப்பு. டீச்சர் கிட்டயே போய்ச் சொல்லுன்னு சொல்லி அனுப்பிச்சேன். அதே மாதிரி அவளும் போய்ச் சொல்லி...தப்பாச் சொல்லிக் குடுத்துட்டீங்களே டீச்சர்னு சொல்லி மானத்தை வாங்கீட்டா. :))))))))))

பேச வந்த தூத செல்லரித்த ஓசை செல்லுமோ என்று தொடங்கி..
வாசலுக்கிடும் படல் கவித்து வந்த கவிகைமா என்று தொடரும் பாடலை நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறென். கிடைத்தால் தரவும்.

அப்புறம் கலிங்கத்துப்பரணி. படிக்கைலயே திக்குதிக்குன்னு இருக்குமேய்யா.. பொருதடக்கை வாளங்கே...மணிமார்பெங்கே....இப்பிடிப் போகுமே..

G.Ragavan said...

http://chinnaammini.blogspot.com/2008/02/blog-post_12.html

அருமையா இருக்கு. சூப்பரோ சூப்பர். நல்லா எழுதீருக்காங்க. மெட்டுக்கும் பொருந்தி வருது.

கந்தா கடம்பா குமாரா....

வடபழநி முருகன் கோயில்ல ஒருத்தர் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" பாட்டை மாத்தி "திருச்செந்தூர்னு" தொடங்குற மாதிரி முருகன் மேல அருமையாப் பாடினாரு. ரொம்பவும் ரசிச்சிக் கேட்டேன். நல்லாவும் பாடினாரு. கேட்டு ஏழெட்டு வருடங்களுக்கும் மேல ஆச்சு.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/02/1.html

// CVR said...
ஆஹா ஆஹா!!
தில்லானா மோகனாம்பால் ரீமிக்ஸா???? //

என்னது ரீமிக்சா? ரொம்பவும் சிந்திச்சு ஒரு அருமையான கதை எழுதீருக்கேன். நீ இப்பிடிச் சொல்லீட்டியேப்பா!!!!!

// நம்ம தங்கத்தலைவி எம்மா வாட்சன் வேற நடிக்கறாய்ங்களா???
சூப்பரு!!! //

ஆமா...நாந்தான் இயக்கனும்..அதாவது படத்தன்னு உறுதியா இருக்காங்க. வெட்டி வேணும்னா கதாநாயகனா நடிச்சிக்கிறட்டும்னும் சொல்லீருக்காங்களே.

// கதையில இன்னும் என்னென்ன ட்விஸ்ட்டு வருதுன்னு பாக்கலாம்!! :P

அண்ணாச்சி காமெடி கலக்குது!! :-))))) //

நன்றி நன்றி

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/02/valentines-day.html

காதலுக்குத் தமிழ்ப் பண்பாட்டில் மிகப்பெரிய இடமிருந்திருக்கிறது. அகப்பாடல்கள் அத்தனையையும் பாருங்கய்யா...அள்ளித் தெளிச்சுச் சொல்லீருக்காங்க. வண்டோடக் காதலைக் கூட மதிச்ச கதையெல்லாம் அதுல வரும். வண்டுகள் சோலைல மலர்ப்படுக்கைல இருக்கு. தலைவன் தேரில் வருகிறான். கார்காலம் வரும் பொழுது பொருள் சேர்த்து வருகிறான். தலைவியைக் காணும் ஆவல்.....தேர்மணி ஒலிக்கிறது. கபக்குன்னு அதப் பிடிச்சிக் கட்டீர்ரான். ஏன்னா..அந்த ஓசை வண்டுகளின் உறவைத் தொந்தரவு செஞ்சிருமாம். அப்படியிருந்த பண்பாடு. அட காதலுக்குக் கடவுளே தூது போன கதையெல்லாம் நம்ம கிட்ட இருக்கே.

G.Ragavan said...

http://arisuvadi.blogspot.com/2008/02/1.html

அழகான தொடக்கம். தாய் தந்தை சொல்லும் காதல் கதை... தொடர்ந்து படிக்கிறேன். நேர வித்தியாசத்தால விட்டுப் போச்சு. சிவியார் தான் என் மேல ரொம்பக் கோவிச்சிக்கிட்டு...துர்கா கதை எழுதுறான்னு கூடத் தெரியாம இருக்கீங்களேன்னு திட்டுனான். ஓடி வந்து படிச்சிட்டேன். :)

G.Ragavan said...

http://arisuvadi.blogspot.com/2008/02/2.html

படிச்சாச்சு...அடுத்த பாகத்துக்கு ஓடிங் :)

G.Ragavan said...

http://arisuvadi.blogspot.com/2008/02/3.html

:) என்ன ஆகுதுன்னு பாப்போம். இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்று கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்கிறாரே...எதுக்கும் எதுக்கும் முடிச்சுன்னு பாப்போம்.

G.Ragavan said...

http://arisuvadi.blogspot.com/2008/02/4.html

இப்பிடித்தான் ஒருவாட்டி...இவனுக்குத் தொணைக்க்குப் போன அவனும்..இவளுக்குத் தொணைக்குப் போன அவளும்..காதலிச்சு...இவனுக்கும் இவளுக்கும் முன்னாடியே கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்களாம்.

G.Ragavan said...

http://arisuvadi.blogspot.com/2008/02/5.html

ஹா ஹா ஹா அடுத்து என்னாகுதுன்னு பாப்போம்.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/02/gandhi-valentine.html


காதலுக்கு இப்பிடியொரு அழுத்தமான பதிவு. காதல் வாழ்க. காதல் வளர்க. காதலே உலகைக் காக்கும். அன்பே தெய்வம்.

ஆனாலும் பேரு கைப்புன்னு வெச்சுக்கிட்டு காதலப் பத்திக்கூட இவ்ளோ ஆழமாப் பதிவு போடுறீங்களே....அடா அடா அடா.. ஒங்க அறிவே அறிவு. :)

G.Ragavan said...

http://arisuvadi.blogspot.com/2008/02/6.html

அப்படியிப்பிடீன்னு காதல் வந்துரும் போல.வரட்டும் வரட்டும். நல்லதுதான். ஜூச மொதல்ல கொட்டி....மனசை அப்புறம் கொட்டி...காதலை அப்புறம் கெட்டிக் கொள்வாங்க.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/02/iit.html

ஹா ஹா ஹா அந்தப் படத்த மறக்க முடியுமா...விழுந்து விழுந்து சிரிக்க வெச்ச படமாச்சே....ஹா ஹா ஹா... உண்மையச் சொல்றேன்...அவரு பெரிய அறிவாளிதான். சந்தேகமேயில்லை.

ஷலபாஞ்சிகா சூப்பர். உள்ளபடிக்கு அதுல நாலு நெளிவுகள் இருக்கு. கழுத்து.. மார்பு...இடுப்பு.... தொடை...சரியாப் பாருங்க :)

உங்க பதிவுகள் காமெடியா இருந்தாலும் அதுல எச்சகச்சமா அறிவுப்பூர்வமா இருக்கேன்னு நெனச்சேன். அதுக்கெல்லாம் ஐஐடிதான் காரணமா!!!!

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/02/8.html

விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறீங்க. ஹா ஹா ஹா....முருகா முருகா...

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/02/blog-post_16.html

தூத்துக்குடியில இருந்து கோயில்பட்டி, மதுரை, ராமேசுரம், எங்குட்டுப் போனாலும் குறுக்குச்சால வழியாத்தான் போகனும். அங்கதான் பாஞ்சாலங்குறிச்சிக்குப் போற நுழைவுவாயில் இருக்கு. கருணாநிதி முதல்வரா இருந்தப்போ கெட்டுனது. அங்க கூட்டீட்டுப் போகச்சொல்லி வீட்டுல பலவாட்டிக் கேட்டிருக்கேன். ஆனா இதுவரைக்கும் கூட்டீட்டுப் போகலை.

அடுத்து என்ன சொல்லப்போறீங்கன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post_16.html

நானும் படத்தப் பாத்துட்டேன் டீச்சர். இங்க ஆம்ஸ்டர்டாம்ல ஒரு தேட்டர்ல படத்த வெளியிட்டிருக்காங்க. ஒரே இந்தியக் கூட்டந்தான். கொஞ்ச டச்சுக்காரங்களும் வந்தாங்க. ஆனா தேட்டர் நெறைஞ்சிருச்சு.

படம் நல்ல படம்னும் சொல்ல முடியாது. கெட்ட படம்னும் சொல்ல முடியாது. ஒரு வாட்டி கண்டிப்பாப் பாக்கலாம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படம். அந்த சுஃபி பாட்டு நல்லாருந்துச்சு. மத்ததெல்லாம் சுமார்தான். சுஃபி பாட்டு கூட ஏற்கனவே ரகுமான் பயன்படுத்திய இசைக்கோர்வைகள்தான்.

படத்துல சொல்ற மாதிரிதான் உண்மையிலேயே நடந்திருக்குமான்னு சொல்ல முடியாது. ஆனா பாக்க நல்லாருந்தது. செட்டிங்ஸ் எல்லாம் நல்லாப் போட்டிருந்தாங்க.

ஹ்ரித்திக் பொருத்தமாத்தான் இருந்தாரு. நம்ம புத்தகத்துல பாத்ததெல்லாம் வயசான அக்பர்தானே. சின்ன வயசுல ஒல்லியா இருப்பார்னே நெனச்சிக்கிருவோம். நல்லாவும் நடிச்சிருக்காரு.

ஐஸ்வர்யாராய் பச்சன் நல்லா நடிச்சிருந்தாலும்....என்னவோ நெருடல். ஏதோ...ஏதோ...ம்ம்ம்ம்

அந்த சூது...என்னவோ பேர் சொன்னீங்களே. அவரு சந்திரமுகில வில்லனா வந்து அடிவாங்குறவரு. அதாங்க ஷீலாவோட அடியாளா கூடவே வருவாரே...அவருதான்.

படத்துல பொதுவாகவே நடிகர் நடிகையர் தேர்வு நல்லாயிருந்தது. ஜலாலுதீன் அம்மாவா வர்ரவங்க...பார்க்க பெர்ஷீயன் மாதிரியே இருந்தாங்க. ஒருவேளை பெர்ஷியனாக்கூட இருக்கலாம். பாபரே பெர்ஷியால இருந்துதான வந்தாரு.

ஆனா ஒன்னு...வசனம் ஒன்னும் புரியலை. அங்கங்க புரிஞ்சது. பக்கத்துல உக்காந்திருந்தவன் கிட்ட கேட்டுக்கிட்டிருந்தேன்.

G.Ragavan said...

http://nilavunanban.blogspot.com/2008/01/blog-post_28.html

ரசிகவ், கட்டுப்பாடான சட்டம் எதற்கு? இதைத் தெருவில் செய்யாமல் இருப்பதற்கா? உடனே எல்லாரும் பாதுகாப்பான இடங்களுக்குப் போவார்கள். மொத்தத்துல கண்ணுக்கு தெரியுறதுதான் உறுத்துதல்னு தோணுது. தெரியாட்டி..நடக்குதா இல்லையான்னே தெரியாதே...

ஆனா ஒன்னு....இப்படி இருக்கக்கூடாதுன்னு சொல்ல ஒங்களுக்கு எவ்வளவு உரிமையிருக்கோ...அந்த அளவுக்குச் சமமான உரிமை அவங்களுக்கும் இருக்கு. அதையும் மறக்கக்கூடாது.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2008/02/4.html

ஆகா....சரவணன் செல்லப்பிள்ளைன்னு பாத்தா இப்பிடிக் கள்ளப்பிள்ளையா இருப்பாரு போல...

ரணம்..குட்டிக்கரணம்...நல்லாருந்துச்சு. :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/02/blog-post_15.html

ஆகா இந்தவாரம் கோபியா... இசைப்பிரியராச்சே அவரு. ராசாரசிகர் கோபிக்குப் பிடிச்ச பாட்டுகளைப் போட்ட பிரபாவுக்கும் நன்றி.

சின்னத்தாயவள் பாட்டு ரொம்பவே அருமையான பாட்டு. கேக்குறப்பவே உருக்குமேய்யா. இந்தப் பாட்ட தெலுங்குல இசையரசியைப் பாட வெச்சிருக்காரு ராஜா. பாட்டு தேடிப்பாக்கனும்.

காதல் கவிதைகள் எழுதிடும் நேரம் பாடலும் மிக அழகானது. அந்தக் கதாநாயகியின் பெயர் மறந்து விட்டது.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...இது வெறொரு மெட்டில் போடப்பட்டு..படமும் ஆக்கப்பட்டு...பிறகு இளையராஜா மெட்டுப் போட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....அருமையான பாடல். ஜானகி பாடியிருப்பது மிக நன்றாக இருக்கும். ஏசுதாஸ் பில்லை நிலா வெல்லை நிலா என்று பாடியிருப்பார்.

நல்ல முத்துமுத்தான பாடல்களைக் கேட்டிருக்கின்றீர்கள் கோபி. நன்றி.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2007/06/187.html

ரொம்ப அழகா இருக்கு படங்கள். ஸ்விஸ்ல அது ஒரு வசதி.. போற மலையில எல்லாம் மேப் வெச்சிருப்பாங்க. அத வெச்சி எங்கிருந்து என்னனு பாக்கலாம்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2008/02/229.html

இது கதையா? கதை போலத் தோன்றும் நிகழ்வா? நிகழ்வுகளின் வழியாக நீங்கள் சொல்ல வரும் கருத்தா? கருத்துகளுக்குள்ளே ஒழிந்து கொண்டிருக்கும் ஆதங்கமா? அவைகளையும் சொல்லுங்கள் ஐயா! :)

G.Ragavan said...

http://aayirathiloruvan.blogspot.com/2008/02/blog-post_17.html

ஸ்ரீ420 பராசக்திக்குப் பின்னால் வந்த படம். இதில் ராஜசுலோச்சனா "ராமய்யா ஒஸ்தாவய்யா" என்று ஆடியிருப்பார். ராஜசுலோச்சனா நடிகர் திலகம் நடிக்க வந்தபிறகு நடிக்க வந்தவராக இருந்தால் பராசக்தி முந்தியே வந்தது. இல்லையென்றால் ஸ்ரீ420 முந்தி வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இரண்டு படங்களும் சார்லி சாப்ளினைக் காப்பியடிக்கின்றனவோ என்றே தோன்றுகிறது.

G.Ragavan said...

http://nilavunanban.blogspot.com/2007/12/blog-post.html

ஹா ஹா ஹா

இது சாம்பார் வடை மாதிரி சாம்பார் இட்லி. :) சாம்பார் இட்லி பேடா-ன்னு சொன்னா தட்டுல வெச்சிக் குடுப்பாங்க. இந்தச் சாம்பார் இட்லியும் ருசிதான். அப்படியே கொஞ்சங் கொஞ்சமாக் கொத்திச் சாம்பார்ல கலந்து சாப்புடனும். சாப்ட பெறகு இட்லியும் இருக்கக் கூடாது..சாம்பாரும் இருக்கக் கூடாது. அதுதான் நேக்கு. :)

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2008/02/blog-post_17.html

அட.... எந்த அரசியல்வாதிங்க இப்ப கோளுகையோட இருக்காங்கன்னு நீங்க விஜயகாந்த் கிட்ட மட்டும் எதிர்பாக்குறீங்க? ஹா ஹா ஹா நீங்க வேற... இவ்வளவு அப்பாவியால்லாம் இருக்காதீங்க. :)

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/02/blog-post_8144.html

வரலாறு படிக்க மிகவும் சுவையானது. அந்தச் சுவை அதைச் சொல்லும் முறையிலிருந்து வருகின்றது. நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள். நம்ம பக்கத்து ஊர்ல இவ்வளவு நடந்திருக்கு தெரியாமப் போச்சேய்யா!!!!!

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/02/bone-marrow-donation-1.html

நல்ல விழிப்புணர்வு பதிவு. என்னுடைய தந்தையாருக்கு அறுவை சிகிச்சை செய்த பொழுது ஐந்து யூனிட்டுகள் குருதி வேண்டும் என்று கேட்டார்கள். என்னையும் சேர்த்து ஐவர் சென்றோம்.என்னுடையது ஓ நெகட்டிவ் வகை. சற்று அபூர்வமானதாமே. ஏற்கனவே கல்லூரியில் தானம் செய்திருக்கிறேன். ஆனால் இந்த முறை மறுத்து விட்டார்கள். ஏனென்றால் சொரியாசிஸ் உள்ளவர்களின் குருதி எடுத்துக்கொள்ளப்பட மாட்டாதாம். அந்த வகையில் மஜ்ஜைக்கும் அப்படித்தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். ஆகா தேவை இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் இதில் ஊக்கத்தோடு செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/02/83.html

இது ரொம்ப எளிய பிரச்சனை ரத்னேஷ்.

வேறு மாநிலத்துல இருந்து வந்தவங்க...ஏன்னா தமிழ்நாட்டுல பல மொழி பேசுறவங்க பல நூற்றாண்டுகளுக்கும் முன்னாடி வந்திருக்காங்க. அவங்களுக்குத் ஆதிநிலத்துல யாருமே இருக்க மாட்டாங்க.

அதே மாதிரி தொழிலுக்கு வந்திருப்பாங்க. ரஜினிகாந்து மாதிரி.

வெளிமாநிலம்...நாடுன்னு போயிருப்பாங்க...என்னைய மாதிரி...

எப்படி இருந்தாலும்....அத்தனை பேரையும் ஒன்னாப் போட்டு...

முதன்மையா உன்னைத் தமிழன்னு அடையாளப்படுத்திக்க விரும்புறியான்னு கேட்டு...ஆமான்னு சொன்னா அவங்க எல்லாருமே தமிழ்தான்.

மனிதன்னு அடையாளப்படுத்திக்க விரும்புறேன்னு உளப்பூர்வமா சொன்னா அவங்களும் தமிழர்கள்தான்.

ஆனா மனிதன்னு அடையாளப் படுத்துறத விட தமிழன்னு அடையாளப்படுத்துறது முக்கியாமான்னு கேட்டுட்டு... கொலம் கோத்திரம்..ஐயர், ஐயங்கார், நாடார், நாய்க்கரு, தேவரு, பிள்ளைன்னு அடையாளப்படுத்துறது...வெறும் மாய்மாலம்.

அடுத்தவனுக்கு நம்ம தமிழன்னு தெரியுதோ இல்லையோ...நம்ம எல்லாருக்கும் நம்ம தமிழனா இல்லையான்னு நல்லாவே தெரியும்.

G.Ragavan said...

http://songs.arutperungo.com/2008/02/blog-post_20.html

இசை ஜெயச்சந்திரன்னு போட்டிருக்கீங்க. இவரு பாடகர் ஜெயச்சந்திரனா? அவர் எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடகர்.

இருங்க...நான் என்னுடைய தமிழ்ப்படுத்துதலைச் செய்றேன். :)

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/02/2.html

// CVR said...
என்ன ஒரு சின்ன டவுட்டு அண்ணாச்சி!!

இது வரைக்கும் அட்லாஸ் வாலிபர்னு இருந்த பெயரை நீங்க வந்த அப்புறம் அட்லாஸ் சிங்கம்னு மாத்தீட்டாங்க??? :-P
இல்லை!! ஏதோ தோனிச்சு கேட்டேன்!! //

ஆகா.... வந்துட்டாய்யா...வந்துட்டான். இப்ப என்ன சொல்ல வர்ர? நான் மனுசன் இல்லைன்னு சிங்கம்னு எழுதீட்டாங்கன்னு சொல்ல வர்ரியா? இல்லை. வாலிபர் இல்லைன்னு சிங்கம்னு மாத்தீட்டாங்கன்னு சொல்ல வர்ரியா? எங்கயிருந்தய்யா கெளம்புறீங்க!!!!!!!!!!!!!!!!!!!!11

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/02/5.html

அருமையான எழுத்து நடை.

பாரி பாரி என்று பலவேத்தி.....ம்ம்ம்ம்... எனக்கு மிகவும் பிடித்த செய்யுட்களில் ஒன்று. அழகானது.

பாரி பாரின்னு சொல்றீங்களே... பாரி மட்டுந்தான் ஒலகத்தக் காப்பானா? இன்னொருத்தன் இருக்கான்...அதான் மாரி. அதுல என்ன தெரியுது? மாரி எப்படிப் பாகுபாடு பாக்காதோ.. அப்படித்தான் பாரியும். நல்லவன் கெட்டவன்..நண்பன்..பகைவன்...இப்பிடி எந்தப் பாகுபாடும் பாராப் பாரி. அதுனாலதான் புகழ் சோராப் பாரி. அவப்பெயர் சேராப் பாரி.

G.Ragavan said...

http://arisuvadi.blogspot.com/2008/02/7.html

I always like happy endings :) நல்லபடியா கதைய முடிச்சதுக்கு நன்றி. நன்றி. நன்றி. :)

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2008/02/dr-kj.html


அருமையான கச்சேரியாக அமைந்திருந்தது என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது பதிவு.

சுரம் பிரளாமல் பாடும் திறமை பெற்றவர் ஏசுதாஸ். அத்தோடு சொந்தச் சரக்கையும் சேர்க்கும் பொழுது...அது ஐஸ்கிரீமோடு சேர்ந்த சாக்கலேட் சாஸ்.

எந்தரோ மகானுபாவுலு பாடல் மிகமிக அழகானது. அதைக் கேட்டல் சுகமேயெனினும்..ஏசுதாஸ் பாடக் கேட்பது இன்னும் சுகமே.

பாட்டுகளின் வரிசையைப் பார்க்கும் பொழுது தமிழில் நிறையப் பாடியிருக்கிறார் என்று தெரிகிறது.

ஃபோட்டோவும் கலக்கல்.

G.Ragavan said...

http://thamizachi.blogspot.com/2008/02/blog-post_6408.html

கொடுமை கொடுமை... பெருங்கொடுமை. சீச்சீ. அந்தக் குழந்தையின் கதறலைப் பாருங்கள். ஒரு பிஞ்சுக் குழந்தையை முரடர்கள் பிடித்துக் கொள்ள.....இதற்கு எது காரணமாக இருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2008/02/1.html

சிலம்பைத் தட்டுத் தடுமாறிப் படிக்கையில் உண்டான ஐயங்களும் எழுந்த கேள்விகளும் உங்கள் பதிவினால் தெளிவுறும் என்றே கருதுகிறேன். முதற்கண் அதற்கு நன்றி பல.

இந்தப் பாதைகளையும் பகுதிகளையும் கைவரைபடம் அளவிலாவது காட்ட முடியுமானால் மிக நன்றாக இருக்கும். செய்வதாக நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள். காத்திருக்கிறோம்.

G.Ragavan said...

http://valavu.blogspot.com/2008/02/2.html

அதாவது இன்னைக்குள்ளவங்க கம்பராமாயணம்...வால்மீகி ராமாயணம்னு படிச்சிட்டு அதுக்கு அவங்க பேரப் போட்டு நூல் எழுதிக்கிற மாதிரி அந்தக் காலத்துல சிலம்புக்கு எழுதீருக்காங்க. சரியா?

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2008/02/251.html

தருமி சார், தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களையெல்லாம் பாக்குறதில்லை இப்ப. தொலைக்காட்சியே பாக்குறதில்லை. நீங்க சொல்றதப் பாத்தா நாடகம் நல்லாருக்கும் போல.

சன் டீவி தொடங்குனப்ப வந்த பல நாடகங்கள் அருமையானவை. அதே மாதிரி 88-91 வரையில் வந்த பல சென்னைத் தொலைக்காட்சி நாடகங்களும் அருமையானவை. அவைகளின் டிவிடிகளெல்லாம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன். ரொம்பச் சின்ன வயதில் பார்த்தவை. அப்பொழுதே ஈர்த்தவை இப்பொழுதும் ஈர்க்கும் என்றே நம்புகிறேன். இந்தியில் கூட அப்பொழுது பல தொடர்கள் ஈர்த்தன. நூபுர், இந்திரதனுஷ், பாரத் ஏக் கோஜ் போன்ற நாடகங்கள் உண்மையிலேயே மிக அருமையானவை. பின்னாளில் அவை ஸ்ரீமான் ஸ்ரீமதி என்று சீரழிந்து போனது வேறு விஷயம்.

G.Ragavan said...

http://jeevagv.blogspot.com/2008/02/blog-post_15.html

மிக எளிய திருப்புகழ். உததி என்னும் சொல் தெரிந்தாலே பாடல் விளங்கிவிடும்.

திமிரும் கடல் போல நரகப் பிறப்பில் விடுவாயேல்....

இந்தப் பிறப்புக்கு எல்லாரும் கடலைத்தான் சொல்வாங்க. ஏன்னா...அதுல விழுந்தா வெளிய வர எவ்வளவு தத்தளிச்சாலும் உள்ளதான் இழுக்கும். உள்ள போயிட்டா அவ்ளோதான். அதே மாதிரி உள்ளே வெளியேயும் ரொம்ப நேரம் விளையாட முடியாது. அப்படிப் பட்ட சூழலில் நம்மைக் காப்பாற்ற இறைவனே துணை. அதான் அருணகிரி முருகனிடம் வேண்டுகிறான்.

வடிவு, குறைவின்மை..இப்பிடியெல்லாம் கேட்டுட்டு...அருளதருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேண்டும். :) மொதல்ல எல்லாம் வரும். ஆனா மனதோடு அடிமை கொளல் வந்துருச்சுன்னா மொதல்ல வந்த அத்தனையும் போயிரும். அதான் அப்படிக் கேட்டிருக்காரு.

G.Ragavan said...

http://birund.blogspot.com/2008/02/blog-post_24.html

மாலை மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. வந்த இரண்டு மாலைகளில் ஒருவருக்கொருவர் அணிந்து கொண்டார்கள் என்று படித்தேன். அப்படியே மாற்றிக் கொண்டாலும் அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம். தலையிட நமக்கு உரிமையில்லை.

G.Ragavan said...

http://photography-in-tamil.blogspot.com/2008/02/2008_23.html

இப்பல்லாம் உங்கள இப்பிடிப் பதிவுல பாத்தாத்தான் உண்டு போல. :)

// ஆனால் நம்ப ஜீரா மூலம் ஏற்கனவே தம்பி ரொம்ப சாந்தமான ஆளு //

ம்ம்ம்... நான் சாந்தா சொரூபின்னு சொன்னத நீங்க சாந்த சொருபீன்னு நெனச்சிட்டீங்க போல. எப்படியோ முழுசாத் தப்பிச்சு முடிவு சொல்லீட்டீங்க. :)

படங்கள் எல்லாமே அருமை. அந்தப் பூக்கூடையும் அருமை. என்னைக் கேட்டா அதுவும் பொருந்து வருதுன்னுதான் தோணுது. வட்டம் இருக்கனும்னு விதி. ஆனா வேறெதும் இருக்கக்கூடாதுன்னு விதி இருக்குதுங்களா? இல்லைல்ல. அந்தப் படத்தோட சிறப்பு என்னன்னா...சுத்தி என்னென்ன இருந்தாலும் அந்த வண்ணவட்டங்கள் தங்களை எவ்வளவு அழகா வெளிப்படுத்திக்கிருதுக.

G.Ragavan said...

http://abiramibhattar.blogspot.com/2008/02/79.html

குமரன், இந்தப் பாடலையும் விளக்கத்தையும் படித்தேன். நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக எளிய பாடல்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2008/02/251.html

// தருமி said...
//தொலைக்காட்சியே பாக்குறதில்லை//

அப்ப அங்க எப்படித்தான் நேரம் போகுது? பாவம் தான் நீங்க :( //

நேரம் எங்கங்க இருக்கு? இன்னும் நாலஞ்சு மணி நேரம் இருந்தா நல்லதுதான்.

// நீங்க சொன்ன நாடகங்கள் ஏதும் பார்த்ததில்லையென நினைக்கிறேன். சென்னைத் தொலைக்காட்சி நாடகங்களும் அருமையானவை என்று சொல்வது சும்மா ஜோக்குதானே ! //

ஐயோ.. இல்ல இல்ல.. நான் உண்மையாத்தான் சொல்றேன். ஓமப்பொடியார் கிட்ட பேசி இதோ இந்தப் பட்டியல் கெடைச்சது.

சூரிய வம்சம்னு ஒரு நாடகம். ஸ்ரீகாந்த் அரசியல்வாதியா நடிச்சிருப்பாரு. சு.சமுத்திரம் எழுதிய நாவல். சென்னைத் தொலைக்காட்சியில தொடர் நாடகமா வந்துச்சு. ரொம்பச் சின்ன வயசுல பாத்தது. முழுக்கதையும் நினைவில்லை. ஆனா ரசிச்சுப் பாத்தேன்.

இவளா என் மனைவி - ஆர்.சி.சக்தி எடுத்த நாடகம். நிழல்கள் ரவி, சரத்பாபு, சித்ரா நடிச்சது. மறக்க முடியுமா?

நீலா மாலா - ஞாயிறு காலை வந்துருமே

சக்தி 90 - இதுல நடிச்ச நடிகை பேரு ராகவி. அந்தப் பேரச் சொல்லிப் பயக கிண்டல் அடிப்பாங்க.

அந்தப்புரம் - அந்தக் காலத்து சரித்திர நாடகம். முடிஞ்ச வரைக்கும் நல்லாவே இருந்தது.மனோரமா கூட நடிச்சிருந்தாங்கன்னு நெனைக்கிறேன்.

மரியாதைராமன் கதைகள் - இது அப்ப பிடிச்ச நாடகம்

பரமார்த்த குருவின் கதைகள் - சொல்லனுமா இந்தக் காமெடியை :)

பெண் - ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நடிகை எடுத்த கதை. ரொம்ப அருமையா இருக்கும்.

பகலில் ஒரு இரவு - ரேவதி குருடியா வருவாங்க. சுரேஷ் மேனன் நாடகம். இதுல ரஞ்சனி கூட சின்ன பாத்திரத்துல வருவாங்க.

நடந்தாய் வாழி காவேரி - சீர்காழி சிவசிதம்பரம் நடிச்சிருந்தாருன்னு நெனைக்கிறேன். சரியா நினைவில்லை.

கல்யாணத்துக்குக் கல்யாணம்

பஞ்சு பட்டு பீதாம்பரம் - காத்தாடி ராமமூர்த்தி நாடகம்

தினேஷ் கணேஷ் - டெல்லி கணேஷ் சுலக்ஷனா நடிச்சது. இதுல கட்டிக்கிட்ட உன்னையத்தான் நான் கட்டிக்குவேன் இல்லாங்காட்டி உசுரையே விட்டுக்குவேன்னு ஒரு பாட்டு வரும்.

கடல் புறத்தில் - செந்தாமரை, லிவிங்ஸ்டன், சபீதா ஆனந்த் நடிச்சது

ரயில் சிநேகம் - பாலச்சந்தரோட மாஸ்டர் பீஸ்....பாட்டெல்லாம் கலக்கல்

ஸ்வர பூஷணி - இது கர்நாடக சங்கீதத்தை அடிப்படையா வெச்சி வந்தது. அடிக்கடி பாடுவாங்க. ஆனாலும் உக்காந்து பாத்த நாடகம்.

நாணயம் - ஏவிஎம் எடுத்த தொடர். கே.ஆர்.விஜயா நடிச்சது. ரொம்ப நல்லாயிருக்கும்.

வண்ணக்கோலங்கள் - எஸ்.வி.சேகர் நாடகம்

சரஸ்வதியின் சபதம் - இதுல சோ ஒரு எழுத்தாளரா வந்து சினிமாவுக்குக் கதை சொல்லுவாரு. அது அப்படியே சினிமா மாதிரி வரும். அப்ப வந்த பலப்பல படங்களைக் கிண்டலடிச்சிச் சூப்பரா இருக்கும். கொத்தமல்லி ஆத்தா பாட்டு கூட சூப்பரா இருக்கும்.

ஜனதா நகர் காலனி - சுப்புணி இருக்கப் பயமேன்!

எத்தனையெத்தனை....இன்னும் சில நாடகங்கள் நினைவில் இருக்கு. சட்டுன்னு வரலை. :) இதுல எதையுமே நீங்க பாத்ததில்லையா?

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post_26.html

முருகா.... என்ன கொடுமை இது. தெய்வமே. ஒன்னும் சொல்ல முடியலை... அவர்கள் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/02/bone-marrow-donation-part-2.html

// வல்லிசிம்ஹன் said...
முதல் பதிவு விட்டுப் போய் விட்டது. சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் (டயபெடீஸ்)தானம்செய்ய இயலுமா?//

சர்க்கரை நோயாளிகள் இதைச் செய்யக்கூடாது என்றே தோன்றுகின்றது. மருத்தம் தெரிந்தவர்களும் பதிவை எழுதியவரும் வந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன்.

எது எப்படியோப்பா... நல்லா இருக்கப்பட்டவங்க இதைச் செய்ங்கன்னு வேண்டி வேண்டி காலைத் தொட்டுக் கேட்டுக்கிறேன். உங்களால ஒன்னு முடியும். அதைச் செய்றதால ஒரு உயிர் பிழைக்குதுன்னா...அது எவ்வளவு பெரிய விஷயம்! இன்னைக்கே தொடங்குங்க.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/02/blog-post_25.html

உங்க பதிவுல ஒரு பாதிக் கருத்துக்கு ஒத்துப் போறேன். ஆனா ஒரு பாதிக்கு இல்லை.

குழந்தைகளின் வளர்ப்புக்குப் பெற்றோர்கள் முதற்காரணம்...அங்கு அவர்கள் செய்யும் தவறுகள் பிள்ளையின் பின்னாளைய நடவடிக்கைகளை நிர்ணயிக்கின்றன. பிள்ளைகளுக்குப் பொறும்பும் வேண்டும் என்பதும் ஒரு வித உண்மை.

மாமனார் முன்னாடி கால் மேல் கால் போட்டு மருமக உக்கார்ரது மட்டுந்தான் தப்பா. சாதாரணமா உக்காந்தா சரியா? அதையும் சொல்லீருங்க. இல்லை நிக்கனுமா? கையக் கட்டனுமா.... என்னென்ன மரியாதையெல்லாம் செய்யனும்னு சொல்லுங்க. ஒருவேளை பாக்குறப்பல்லாம் கால்ல விழுந்து கும்பிட்டா மரியாதை வந்திரும்னு நெனைக்கிறேன். :)

பிரச்சனை மரியாதைல கெடையாது. அன்புல இருக்கு. பெற்றோருக்கும் பிள்ளைக்கும் நல்ல அன்பும் ஒட்டுறவும் இருந்தால் போதும். எல்லாம் சரியாப் போகும். பிள்ளைகளுக்குன்னு "தியாகம்" செய்றப்போ.. அது பிள்ளைகளுக்கும் புரியுற மாதிரி செய்யுங்க. அதுவுமில்லாம பிள்ளைங்களோட வாழ்றதே ஒரு கலை. அடிக்கிறதும்..திட்டுறதும்...ஈகோ பாக்குறதும்...சின்ன வயசுல இருந்தே குழந்தைகள் கிட்ட எதையும் மறைக்காம வெளிப்படையாகும் அன்பாகவும் பேசிப் பழகி விளையாண்டு வாழ்ந்து பாருங்க... அப்புறம் புரியும்.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2008/02/blog-post_21.html

மரகதங்குற படத்தோட பேரு. கருங்குயில் குன்றத்துக் கொலைங்குறது இன்னொரு பெரு. சரிதானே.

குங்குமப் பூவே பாட்டு மட்டுமே அந்தப் படத்துல தெரியும். படம் நல்லாருக்கும்னு சொல்லீருக்கீங்க. கெடைச்சாப் பாக்குறேன்.

// இனியவள் புனிதா said...
மறக்காம சிவாஜியோட 'நிறைக்குடம்' பாருங்க..... //

ஆமா. இதுவும் நல்ல படந்தான். கொஞ்சம் வித்யாசமான கதையம்சம். அதே போல வசந்தத்தில் ஓர்நாள்னு ஒரு படம். படம் கொஞ்சம் கடிதான்னாலும் கதைக் கரு ரொம்பவே வித்யாசமானது. மக மலேசியாவுல விபச்சார விடுதியில் இருக்கா. அவளுக்கு அப்பான்னு தெரியாது. ஆனா சொன்னா அவளுக்குப் பிடிக்காது. ஏன்னா அம்மாவைத் தவிக்க விட்டுட்டுப் போனவரு அவரு. அவளை காசு குடுத்து அப்பாவே வாங்கி நல்ல வாழ்க்கை அமைக்கப் பாக்குறாரு. ஆனா பொண்ணு அடிக்கடி அந்த எடத்துக்கேப் போறா.. காசு குடுத்து வாங்கி ஏன் சும்மா வெச்சிருக்கன்னு காரணம் வேற... அப்ப சிவாஜி படுற கஷ்டம் நம்மளக் கலங்க வெச்சிரும். கடைசில உண்மை தெரிஞ்சி நல்லபடி முடிஞ்சிரும். கெடைச்சா பாருங்க. அதுல "வேண்டும் வேண்டும் உந்தன் உறவு வெண்பனித் தென்றல் உள்ள வரையில்"னு ஒரு பாட்டு ரொம்ப அருமையா இருக்கும்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/02/bone-marrow-donation-part-2.html


// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@ஜிரா
மன்னிக்க வேண்டுகிறேன்!
உங்கள் கேள்விக்கான பதில்,
"இல்லை!" :-( //

இது எதிர் பார்த்ததுதான் ரவி. யுனிவர்ர்சல் டோனார் குரூப் என்னோடது... ஓ நெகட்டிவ். ஆனா யாருக்கும் குடுக்க முடியாது. :) வைக்கப் போர் நாய்னு எங்கூர்ல சொல்லுவாங்க. வைக்கப்போர்ல நாய் படுத்திருக்கும். ஆனா எந்த மாடும் திங்க முடியாது. :)

அதுனாலதான் மத்தவங்களக் கெஞ்சிக் கேட்டுக்கிறது. குடுங்கய்யான்னு.

G.Ragavan said...

http://pakkatamilan.blogspot.com/2008/02/smirnoff-experience.html

கலக்கல்... இவ்ளோ காமெடியா ப்ளாக் இது வரைக்கும் பாத்ததேயில்லை....

அது சரி... பெய்லீஸ் ஐரிஷ் கிரீம் கெடைக்குமா? ;)

எகிறிக் குதிச்சா வானம் இடிக்குமா? ;)

G.Ragavan said...

http://gragavancomments.blogspot.com/2008/02/2008.html

மூனு பாட்டுகளும் மூன்று முத்துகள்.

சந்தக் கவிதை பாடிடும் பாட்டு ரொம்ப அருமை. பாடியது யார்னு தெரியலை. இது ரொம்பவே அறிவாளித்தனமான மெட்டும் இசைக்கோர்வையும். நல்ல இசை வாங்குறதுல ஸ்ரீதருக்கு அடுத்து மகேந்திரன்னு சொல்ல நெனைக்கிறேன்.. கீழ ஸ்ரீதர் படப் பாட்டு.

தலையைக் குனியும் தாமரையே. எஸ்.ராஜேஸ்வரி நல்லாப் பாடியிருக்காங்க. காத்திருந்தேன் அன்பே... இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ... பூமகள் கன்னங்கள் இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ..ஆயிரம் நாணங்கள்.. இந்த ஊமையின் வீணையில் பலசுரமா...

ஆகா ஆகா... என்ன பாட்டு என்ன பாட்டு... ஸ்ரீதர்.. எங்கய்யா போனீங்க. :(

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/02/blog-post_27.html

பார்வதி மிக நன்றாகப் பாடுகிறார். தன்னம்பிக்கை மிளிர்கிறது. அவருக்கு நல்ல வளமான எதிர்காலம் அமைய முருகப் பெருமானை வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2008/02/blog-post_27.html

முருகா முருகா...

நல்லாரு தம்பி. நல்லாரு.