Monday, March 03, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் - மார்ச் 2008

மார்ச் 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

82 comments:

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2008/03/blog-post_03.html

வணக்கம் நட்சத்திரமே.

ரொம்பக் கஷ்டமான கேள்விகளா கேட்டிருக்கீங்க.

4. பொட்டீ ஸ்ரீ ராமுலு-வா? இவர்தான் ஆந்திராவை மெட்ராஸ் மாகாணத்துல இருந்து பிரிக்கனும்னு உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டது.

5. பிரேம் நசீர். இவரு கூடவே கதாநாயகியா நடிச்சாங்களே ஷீலா. எத்தனை படம்.. எத்தனை படம். அடேங்கப்பா...

மத்த கேள்விகளுக்கெல்லாம் விடு ஜூட்.....

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2008/03/blog-post.html

நட்சத்திர வாழ்த்துகள் :) இனிமேல் முகத்தில் புன்னகையைக் காணலாமா? அட.. படத்துல கொஞ்சம் சிரிங்க :)

பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து மிகவும் மகிழ்ச்சியோடு இருக்க என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/blog-post_2633.html

:) சரி. இப்பவாச்சும் செஞ்சா சரி :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/02/blog-post_29.html

// ரசிகன் said...
பாடல்கள் கலக்கலா இருக்கு:) நல்ல தேர்ந்தெடுப்பு.. சூப்பர்.....:) //

நன்றி ரசிகன். பாட்டெல்லாம் கேட்டு ரசிச்சதுக்கு நன்றி.


////துர்கா said...
கமெண்ட் மாடரேசன் யாரு உங்களைப் போட சொன்னா?கும்மி அடிக்க கூப்பிட்டு இப்படி சதி பண்ணி அசிங்கம் பண்ணிட்டீங்க இல்ல பிரபு அண்ணா...க்க்ர்ர்ர்ர்ர்
//

kolaiveri yodathaan alaiyarangappa :))))))) //

பாத்தீங்களா.... ஏதோ பிரபா நமக்காகப் பாட்டுப் போடுறாரு. அவர் பதிவுல இப்பிடியெல்லாம் செஞ்சா அவரு கோவிச்சிக்கிருவார்ல. :)

//en pinnuten engeyi? //

உங்க பின்னூட்டமும் போட்டு... அதுக்குப் பதிலும் போட்டாச்சு.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2008/03/blog-post.html

நல்ல குரல்வளம். நல்லதொரு அனுபவப் பேட்டி. இவருடை இசைப்பயணம் இன்னும் பல்கிப் பெருகிப் புகழ் சுவைக்க என்னுடைய வாழ்த்துகள். வர்ணராமேஸ்வரனை அறிமுகப் படுத்திய கானா பிரபாவிற்கும் நன்றி.

G.Ragavan said...

http://blogintamil.blogspot.com/2008/03/blog-post_6259.html

ஆகா.. நீங்களா...சூப்பர். கும்பி சூப்பரா நடக்குது போல :D

G.Ragavan said...

http://veyililmazai.blogspot.com/2008/03/blog-post.html

:) மொதல்ல புரியலை. பின்னூட்டம் படிச்சப்புறம் புரிஞ்சிருச்சு. என்னடா மேடைங்குறாரு... என்னது.. துணி மறைக்குதுங்குறாரே.. ஏதாச்சும் ஆப்பரேஷனான்னு நெனச்சேன். தூக்குல போட்டுட்டீங்க... ம்ம்ம்ம்.. அந்தப் பிள்ளயக் கெடுத்துக் கொன்னுட்டானாக்கும்!

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2008/03/blog-post_04.html

பேய்க்கதையா.... இன்னொருவாட்டி பேய்க்கதை எழுதுனீங்க....... :) பேய் வரப் போகுதுன்னு புரிஞ்சிருச்சுங்க.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/blog-post_04.html

// கருவறைகளில் தமிழ்க்குரலைக் கேட்க அளவிலாத ஆசை கொண்ட நீங்கள் நான் மேல கேட்டிருக்கும் காரியங்கள் சிலவற்றையோ அல்லது எல்லாவற்றையுமோ அல்லது அதற்கு மேலுமோ செய்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அவற்றின் பலாபலன்களை அறியத் தாருங்கள். //

ஓகை ஐயா, என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க. அப்ப இனிமே நீங்க அரசியல்வாதிங்க மோசம்னு சொல்ல முடியாது. அப்புறம் அவங்கள திருத்த என்ன செஞ்சீங்க? எத்தனை முறை நீங்க மனு கொடுத்தீங்க? எத்தனை முறை முதல்வரிம் குறை சொன்னீங்க? அதோட பலாபலன்களை அறியத் தாருங்கள்னு கேப்பாங்க. :)

கோயில்களில் தமிழைப் பரப்ப வேண்டும் என்ற நிலையே கேடுகெட்ட நிலை என்பது என்னுடைய கருத்து. அந்த நிலமையில் இருக்கிறோம்.

அதெல்லாம் சரி. தில்லைல என்ன நடக்குது? அங்கல்லாம் நீதிமான்கள் செத்துப் போயிட்டாங்களா? இல்ல மடத்தலைவர்கள் தூங்கீட்டாங்களா? என்னவோ போங்க. எனக்கு ஒன்னும் புரியலை :(

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/blog-post_04.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஏன் சைவத்தில் இராமானுஜர் போன்று ஒருவர் வரவில்லை?//

இது பல பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் நான் அடிக்கடி சொல்லும் ஆதங்கம்!
வைணவத்துக்கு ஆழ்வார்கள் தமிழ்ப் பாசுரம் அருளிச் செய்தார்கள் என்றால், அதைக் காலமெல்லாம் ஆலயத்தில் ஓதி மகிழ ஆச்சாரியர்கள் மேலாண்மை செய்து கொடுத்தார்கள்!

ஆனால் சைவத்தின் நற்பேறின்மை போலும்! நாயன்மார்களின் பதிகங்களைக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து புழங்க ஒரு இயக்கமோ, ஆச்சார்ய பரம்பரையோ அமையவில்லை! :-( //

ஆமா. ஆமா. நற்பேறின்மையுள்ளதுதான் சைவம். புரியுது புரியுது. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின் சேவடி செவ்வித் திருக்காப்பு....வாசல்ல இருந்துக்கிட்டே :)

// இனியாவது அமைய இறைவன் திருவுள்ளம் கனிய வேண்டும்! //

வைணவத்துக்குக் கனிஞ்ச கடவுள் சைவத்துக் கனியலைன்னா... அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கனுமே ரவி. ;)

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/03/blog-post_05.html

எல்லாமே நல்ல பாட்டுக்கதான். ஆனா ஏன் இந்தக் கண்டசாலா இப்பிடிக் கொதறுறாரே!

மெல்லிசை மன்னர் சினிமாவுக்கு வந்த புதுசுல போட்ட பாட்டு "உலகே மாயம் வாழ்வே மாயம்".. தேவதாஸ் படத்துக்கு. அந்தப் பாட்டு ரெக்கார்டிங் முடிஞ்சதும் அந்தப் பாட்ட எழுதுன உடுமலை நாராயணக் கவி. அவரு பளார்னு விஸ்வநாதனா அறைஞ்சிட்டாராம். "ஏனடா... இவர ஏண்டா பாட வெச்சே? உலகே மாயம் வால்வே மாயம்னு பாடீருக்கானே"ன்னு சொன்னாராம். :)

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2008/03/blog-post.html

யோகன் ஐயா... இந்தப் பொண்ணப் பாத்தா பயமா இருக்கு. இன்னும் சொல்லப் போனா விட்டலாச்சாரியா படத்துல வர்ர வெள்ளைப் பேய் மாதிரி இருக்கு. பாவம். இவங்களுக்கு இதுவே வேலை போல. கூந்தலே வாழ்க்கை. வாழ்க்கையே கூந்தல்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post.html

ரவி, உங்க பதிவை முழுசும் படிச்சேன். பின்னூட்டங்களையும் படிச்சேன்.

மேன்மைகொள் சைவ நீதி ஓங்கு பெறல் வேண்டும். அருள்கொள் தீந்தமிழ் கோயிலில் தாங்கு பெறல் வேண்டும்.

அதற்கு இது ஒரு தொடக்கம் என்று சொல்லலாம்.

பிரச்சனை மொழியிலோ... வழிபாட்டு முறையிலோ இல்லை என்பது என் கருத்து. இது தன்னுடைய வேலையைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியாகவே எனக்குத் தெரிகிறது. தேவாரம் பாடினாலே போதும்னா நெறைய பேரு போட்டிக்கு வந்திருவாங்களே.

ஆனா...நீங்க சொன்னாப்புல இன்னும் செய்ய வேண்டியது நெறைய இருக்கு. செய்யப்படும்னு விரும்புறேன்.

G.Ragavan said...

http://sivanpaattu.blogspot.com/2008/03/blog-post_1145.html

ஆகா ஆகா

பாட்டுக்கோட்டையாம் பட்டுக்கோட்டையின் அருமையான கவிதை.

சௌபாக்யவதி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

ஏழிசை வேந்தரின் குரலும் அருமை. இது எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/7.html

அருமை. ரசித்தேன். ரசித்தேன். :)

G.Ragavan said...

http://sivanpaattu.blogspot.com/2008/03/blog-post_1145.html

ஆகா ஆகா

பாட்டுக்கோட்டையாம் பட்டுக்கோட்டையின் அருமையான கவிதை.

சௌபாக்யவதி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

ஏழிசை வேந்தரின் குரலும் அருமை. இது எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2008/03/wishes.html

சூடான சூடானில் சூடம் போல் சுடர் விடும் சூடானாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். நீடு வாழ பீடு வாழ முருகனை வணங்குகிறேன்.

G.Ragavan said...

http://jeeveesblog.blogspot.com/2007/12/blog-post_25.html

பாசமலர் தொடுத்த வலைச்சரத்துல இருந்து இங்க வந்தேன். நல்ல கதை. நீர் மோர்.... சாப்பிட வாப்பான்னு கெஞ்சுறப்போ....அந்தப் பாசமும் தழுதழுப்பும். அடடா!

G.Ragavan said...

http://arunmozhi985.blogspot.com/2008/03/blog-post_07.html

அருண்மொழி, முதலில் ஜெயலலிதா செய்ததே மிகவும் தனிப்பட்ட விடயம். அவரது அரசியல் செயல்பாடுகள் எவ்வளவு விமர்சனத்துக்கு உரியனவோ.. அந்த அளவிற்கு அவரது தனிப்பட்ட செயல்கள் மதிக்கவும் பட வேண்டியவை. ஞாநியும் அதே காரணத்திற்காக ஆதரித்திருந்தாலும் அது தனிப்பட்ட விடயம்.

நீங்கள் சரியென்றோ தவறு என்றோ சொல்லவில்லை. உண்மைதான். ஆனால் இதை ஒரு விடயமாக எழுதுவது கூட எந்த வினையின் படி என்று உங்களுக்குத் தெரியும் என்றே நம்புகிறேன். நன்றி.

G.Ragavan said...

http://arunmozhi985.blogspot.com/2008/03/blog-post_07.html

// ஒரு மூத்த வயதினர் முதுமை காரணமாக குளியலரையில் வழுக்கி விழுந்ததை கூட ஒரு வெகுஜன பத்திரிகையில் எழுதும் வினையை விட இது ஆயிரம் மடங்கு பரவாயில்லை. //

அருண்மொழி, ஞாநியின் அந்தக் கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையும் அநாகரீமேதான். அதிலும் ஐயமில்லை.

// முரளி said...
யோசிக்க வேண்டிய விஷயம் அருண்மொழி.

ஞாநி மற்றவர் பற்றி எதுவும் எழுதலாம் ஆனால் நாம் அதை குறித்து ஒரு கருத்து சொன்னால் உடனே திரு ராகவன் அது தனிப்பட்ட விஷயம் என சொல்வது ஏன்? //

முரளி, தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நான் ஞாநிக்கு பரிந்து பேசவில்லை. ஞாநி தவறாக எதுவும் எழுதியிருந்தாலும் அதுவும் தவறுதான். அவர் எல்லை மீறுவதும் கண்டிக்கப்பட வேண்டியதே. ஆனால் அந்த அளவிற்கு நாமும் இறங்க வேண்டாம் என்பது என் கருத்து. நான் ஏதோ ஞாநி என்பதற்காக இப்படிச் சொல்கின்றேன் என்று நீங்கள் நினைப்பீர்களானால்....விடுகிறேன் ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/blog-post_07.html

என்ன குமரன்... கதைய திரும்பப் படிச்சீங்களா? :) பதிவாகவே போட்டுட்டீங்க. இது இன்னும் நெறையப் பேருக்கு அந்தப் பதிவை அறிமுகப் படுத்தியிருக்கு.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/03/blog-post.html

அஞ்சு பாட்டுதான் கேக்கனும்னு சொல்லீருக்காரு பிரபா. ஆனா நீங்க அஞ்சு முத்துகளைக் கேட்டிருக்கீங்களே. எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டுங்க. ரெண்டு விஸ்வநாதன். ரெண்டு இளையராஜான்னு பிரிச்சிக் கேட்டிருக்கீங்க. :)

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2008/03/6.html

ஆகா... ரூட்டு மாறுதே.... ம்ம்ம்... அண்ணன் எப்ப வேலைக்குப் போவான்னு தம்பி காத்திருந்தாப்புல இருக்கு...

feverishனு சொன்னீங்களே....நான் காலேஜ்ல படிக்கிறப்போ கிளாஸ்ல புரபசரைக் கிண்டலடிச்சுச் சிரிச்சிக்கிட்டிருந்தேன். அவர் என்ன ஏதுன்னு தெரியாம.. என்னாச்சுப்பான்னு கேட்டாரு. அவரப் பொருத்த வரைக்கும் நானெல்லாம் நல்ல பையனாம். வாந்தி வருது சார்னு சொன்னேன். அவரு பெர்மிஷன் குடுத்து அனுப்பி வெச்சுட்டு. போர்டுல ராகவன் வந்தா இந்த மருந்தச் சாப்பிடச் சொல்லுங்கன்னு ஒரு பேரை எழுதி வெச்சிருந்தாரு. :)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post.html

// தமிழின் சைவத் திருமுறைகள் போன்றே பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் தொன்மையான வழிபாட்டு மரபுகள் உள்ளன. (பசவண்ணர் மற்றும் அவரது சீடர்களின் கன்னட வசன இலக்கியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு ஆயுள் வேண்டும் அதனைக் கற்றுத் தெளிவதற்கு) அதற்காக அதெல்லாம் ஒவ்வொரு சமயமாகி விடுமா? //

அப்படித்தான் இருக்கிறது கருநாடகத்தில். லிங்காயத் என்று அழைப்பார்கள். அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோயில்கள் எதிலும் வடமொழிப் பயன்பாடு அறவே கிடையாது. வச்சனங்கள்தான். பசவண்ணரின் வச்சனங்கள்தான். அதே போல கோயில் பராமரிப்பிலும் பிராமணர்களின் பங்கு கிடையவே கிடையாது. கோயில்கள் அனைத்தும் லிங்காயத் மடங்களால் பராமரிக்கப்படுகின்றன. அப்படி நான் சென்று பார்த்த ஒரு கோயில் எடியூரில் உள்ளது.

G.Ragavan said...

http://vinaiooki.blogspot.com/2008/03/blog-post_06.html

படம் மிக மிக அருமையான படம். மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்றால் மிகையில்லை.

G.Ragavan said...

http://pudugaithendral.blogspot.com/2008/03/blog-post_08.html

முருகன் எனும் திருநாமம்
முழங்குமிடம் கதிர்காமம்
குருபரணே சரணம் உந்தன் சேவடி
தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி

சிறுவயதிலேயே மிகவும் பிடித்த பாடல் இது..

அதே போல வருவான் வடிவேலன் என்ற படத்தில் வரும்,

நீயின்றி யாருமில்லை விழி காட்டு என்ற பாடலில்.. வாணி ஜெயராம் அவர்கள் "நாங்கள் கதிர்காமம் வந்ததற்குப் பலன் இல்லையோ" என்று கதறி அழும் கட்டம் மிகமிக உருக்கும். அப்பொழுதெல்லாம் நான் கதிர்காமத்திற்குச் செல்லும் பலனை கந்தன் என்று தருவானோ என்ற ஏக்கம் பிறக்கும்.

தில்லானா மோகனாம்பாள் என்ற கதையைப் படித்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் படிங்கள். கதையின் இரண்டாம் பாகம் முழுதும் இலங்கையில்தான். அப்பொழுது சண்முக சுந்தரம் செட்டும் மோகனாங்கி செட்டும் கதிர்காம யாத்திரை செல்வார்கள். அந்த யாத்திரையை மிக அழகாக விவரித்திருப்பார் கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு.

நூறாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://kasiblogs.blogspot.com/2008/03/blog-post.html

:) அதானே.. புத்திசாலி அப்படீங்குறது இருபாற்சொல்தானே. கேள்வியைக் கேட்டவன் யோசிக்காம தோற்பான்னு கேட்டா...அதைத் தேர்ந்தெடுத்து இப்பிடியொரு பதிலைச் சொல்லனுமா? வரவர மதன் பதில்கள் சவசவ.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/03/531.html

பயணம் தொடரட்டும்... நல்ல சிந்தனைகள். கே.ஆர் புரத்துல எப்பவுமே கூட்டம்தான். நல்ல அனுபவம்....

முதலில் சோற்றுக்குப் பாடு... பிறகு எழுத்துக்குப் பாடு... அதான் வாழ்க்கை. எழுத்தும் மொழியும் தேவைதான். வயிறைக் காயப் போட்டுட்டு... கூட இருக்குறவங்களைப் பட்டினி போட்டுட்டு என்ன எழுதுறது?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/03/cvr.html

இங்கயும் இப்பிடித்தான். மெடிக்கல்னா அப்பாயிண்மெண்டோ அம்மாயின்மெண்டோ வாங்கீட்டுத்தான் போகனும். இல்லைன்னா எமர்ஜென்சிதான்.

நல்ல பாட்டு. அதை ஏன் சிவியாருக்காகப் போட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/03/blog-post_09.html

ஹாய் ரிஷான்... அஞ்சுமே அருமையான பாட்டுகள். எல்லாப் பாட்டுமே எனக்கும் ரொம்பப் பிடிக்கும். :)

ஒரு காதல் தேவதை... பூமியில் வந்தாள்... ஆகா....கேக்கும் போதே வந்தாப்புல இருக்குல்ல. :) எல்லாரும் இசை இளையராஜான்னு நெனைப்பாங்க. ஆனா இசை சங்கர் கணேஷ்.

மாலையில் யாரோ மலரோடு பேச....ஆகா. சொர்ணலதா பாடுறப்போ சொர்ணமழைதான் போங்க. இந்தப் பாட்டு பாக்கவும் ரொம்ப நல்லாயிருக்கும்.

உடையாத வெண்ணிலா... அழகான பாடல்..

அழகிய தீயே... ரொம்பவே அற்புதமான படம். விழிகளின் அருகினில் வானம். உண்மைதானே.. பாத்தாத் தெரியுதுன்னா பக்கத்துலதான :) நல்ல பாட்டு.

கடைசியா ஒரு பாட்டு போட்டிருக்கீங்க பாருங்க... அது.. அது.. அது பாட்டு. கேட்டா திரும்பத் திரும்பக் கேக்க வைக்குதுங்க :)

அது சரி... பேசாம நீங்களே கதாநாயகனா நடிக்கலாமே. :) அஞ்சு பாட்டு என்ன.. படத்துக்கு அஞ்சு பாட்டு கெடைக்கும். :D

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2007/05/blog-post_30.html

// ('முருகனை குலதெய்வம்ன்னு சொல்லி என்னப்பா பயன்? பெருமாளைத் தானே உயர்த்திப் பேசிக்கிறீங்க' என்று அவர்கள் மனத்தில் தோன்றிய தோற்றத்தால் கேட்டுக் கொண்டிருப்பார்கள்). //

அப்படி மனசுல தோணுறதும் உண்மைதானே குமரன் ;)

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// ஜெயஸ்ரீ said...
ஒரு பாட்டில் சிவனையும் பிரம்மனையும் வைத்துப் பாடியதால் வைணவம் எல்லாவற்றையும் அணைத்துக் கொண்டு போகிறது என்றால் கௌமாரத்திலும் எக்கச்சக்கமான பாடல்களை எடுத்துக்காட்ட முடியும்//

கெளமாரம்-ன்னா என்ன ஜிரா? :-)
நான் முருகுச் சமயம், மனமுருகு சமயம்-ன்னு இல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன்! :-)) //

அதெல்லாம் சரிதாங்க. முருகும் முறுகலில் உருகும் உள்ளம் எங்களுக்கும் தெரியும். அப்ப ஜெயஸ்ரீ கௌமாரம்னு சொன்னது வேறையா? அது எனக்குத் தெரியாமப் போச்சுங்களே :( இப்பிடி எதுவுமே தெரியாம இருக்கேனே! அப்ப கௌமாரத்துக்கும் முருகனுக்கும் தொடர்பு இல்லைங்குறீங்க. நீங்க சொன்னா சரிதான் ;)

// அதாச்சும் ஜிரா
பாட்டுல எல்லார் பேரையும் போட்டதாலயே மட்டும் கொண்டாடிக்கலை!
சொல் மட்டும் அன்றி, காட்டும் பொருளும் ஒற்றுமையை வலியுறுத்துகிறது! - இங்க நான் சொன்னது திருவாய்மொழி என்னும் நூலை மட்டும் தானே!
சைவம்/வைணவம்/கெளமாரம் இதுல எங்க வந்துச்சி? //

என்ன காமெடி ரவி. ஜெயஸ்ரீ கிட்ட கேக்க வேண்டிய கேள்விய எங்கிட்ட கேக்குறீங்க?

அப்ப திருப்புகழ் எல்லாம் சொல்லுல மட்டும் கொண்டாடுது.... ம்ம்ம்ம்ம்.. புரியுது புரியுது. திருவாய்மொழி மட்டுமே சொல்லும் பொருளும் உள்ளும் புறமும் ஒன்றி எந்த மயக்கமும் இன்றி இருக்கு. அருணகிரிக்கு அப்படியெல்லாம் பாடத் தெரியாமப் போனது வருத்தந்தான்.

// அட, எனக்கு என்னங்க தெரியும்! அடியேன் பொடியேன்!
கெளமாரத்திலும் இது போன்ற எக்கச்சக்கமான பாடல்களும் செயல்களும் இருக்கலாம்! நீங்க தான் எங்களுக்கு எடுத்துச் சொல்லணும்! //

ஓ அப்ப கௌமாரத்துல என்ன இருக்குன்னு ஒங்களுக்குத் தெரியாது. அப்புறம் எப்படிங்க கீழ இப்பிடி டயலாக் ;)

///////////
//('முருகனை குலதெய்வம்ன்னு சொல்லி என்னப்பா பயன்? பெருமாளைத் தானே உயர்த்திப் பேசிக்கிறீங்க' என்று அவர்கள் மனத்தில் தோன்றிய தோற்றத்தால் கேட்டுக் கொண்டிருப்பார்கள்//

ஹிஹி!
சரி நாம அந்தப் பக்கம் போவோம்! அவிங்கள இந்தப் பக்கம் வரச் சொல்லுங்க பார்ப்போம்! :-))
////////////////////

G.Ragavan said...

http://shaliniyin.blogspot.com/2008/03/13.html

என்னது? கோப்சுக்குப் பொறந்த நாளா? நான் நம்ப மாட்டேன்.. நீங்க வெளையாட்டுக்குச் சொல்றீங்க...

பொறந்த நாளுக்கு ஐநூறு யூரோவுக்கு எனக்கு மட்டும் டிரீட் தர்ரேன்னு சொல்லீருக்கானே. பொறந்த நாள்னா குடுத்திருப்பான்ல ;)

மச்சி.... வாழ்த்துகள்டா.. :)

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/03/2.html

சலீல் சௌத்திரியின் இசை மிகப் பிரபலமானது. மாநிலங்களைக் கடந்தது என்றும் சொல்லலாம். இதே பாட்டை இசையரசியில் இப்படி இட்டேன் முன்பு.

http://isaiarasi.blogspot.com/2007/06/06.html

இந்தியையும் மலையாளத்தையும் விட வங்களத்தில் ஓஓ ஆமார் சஜோனி கோ என்று கேட்கும் பொழுது மிகவும் பிடிக்கும்.

சலீல் சௌத்திரி சிலப்பதிகார கானல்வரிப் பாடலை இசையரசியை வைத்தும் யேசுதாசை வைத்தும் பதிந்திருக்கிறார்.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=396

:) என்னடா சிறில் என்னவோ செமையான பதிவு போட்டிருக்காரேன்னு ஓஓஓஓஓஓஓடி வந்தேன். தெலுங்குப் பாட்டு போட்டுட்டீங்களே... நல்ல காமெடியான விளம்பரம்.

இனிமே எல்லாரும் காண்டம் பயன்படுத்தவும்னு கேட்டுக் கொள்கிறேன். PLAY SAFE.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/8.html

நன்று நன்று என்று தொன்று தமிழை இன்று புகழவும் வழி செய்த குமரனுக்கு நன்றி. சொற்களைக் கூட்டி அவற்றில் அழகினைக் காட்டி கருத்தினையும் உடன் பூட்டிக் கதை சொல்லும் திறமும் சிறப்பு.
இது அது என எடுத்துக் காட்ட எது சொல்வது? மொத்தமும் சத்தமின்றி உண்டவனுக்கு மெத்தனம்தானே வரும். :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/8.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரா நீ பதியும் தமிழும் குமுறா! :-)//

இல்லை இல்லை

குமரா நீ பதியும் தமிழும் அதில் பொதியும் பொருளும் நொந்து அமரா!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/8.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இல்லை இல்லை
குமரா அடுக்குச் சொற்கள் உம் தமரா?
அவை ஒன்றோடொன்று செய்வது சமரா?
அருந் தமிழால் நீ நம்-மவரா?
அதையான் உரக்கச் சொல்வதும் தவறா? //

ஒப்பேன் ஒப்பேன்
நீர் சொல்வதை
நான் மறுப்பதில் தப்பேன்
நல்மொழி சொல்லாமல் தப்பேன்

நெல்லும் சொல்லும் பொங்கூர் துள்ளும் குமரன்
தமிழ்க் கோல் பற்றி நிமிரன்
எண்ணும் எழுத்தும் நாவில் கொளுத்தும் திமிரன்
இதை மறுப்பவன் எனக்குச் சமரன்
அவரை முறியடிக்காமல் நானும் அமரன்

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/krs.html

அட நீங்கதான் விண்மீனா? அப்பப் பிடிச்சி அறுத்து மெளகாப் பொடி போட்டுப் பிசிறி எண்ணெய்ல பொறிச்சிற வேண்டியதுதான். :)

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

அது சரி.... எல்லாரும் அவங்கவங்க வீட்டுக் குழந்தைங்க படத்தப் போடுறாங்கன்னு... நீங்களும் ஒங்க பேரனோட பழைய படத்த எடுத்துப் போட்டுட்டீங்களே.... ;)

என்னது... அடுத்த போஸ்ட்டு எனக்கா? எனக்கு வர்ரது போஸ்ட்டோ வேஸ்ட்டோ எல்லாமே முருகனுக்குத்தான்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/krs.html

// வெட்டிப்பயல் said...
//வேடிக்கை பார்க்கப் போனவன், வேங்கையை அடக்கி ஹீரோ ஆவுறதெல்லாம் சினிமாவில் மட்டும் தானா? பதிவுலகிலும் நடந்துருச்சி பாருங்க! - தமிழ்மணத்துக்கு என் நன்றி!//

அப்ப ஹீரோயின் யாரு???

வில்லனா ராகவனை மட்டும் சொல்லிடாதீங்க.

(நான் வில்லு வெச்சிருக்குற ராகவனை சொன்னேன் ;)) //

அட என்ன வெட்டி.... அவருடைய எண்ணமே அதுதானே... ராகவனை வில்லனாக்குறதுன்னே முடிவோட இருக்காரு. நான் வில்லு வெச்சிருக்காத ராகவனைச் சொல்லலை. ;)

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/03/blog-post_13.html

ஆகா இது பைரவரு கதையா... நாங்கூட என்னடா ஏதோடான்னு நெனச்சேன். முடிவுல சொல்லீருக்கீங்க பாருங்க முடிவு...

நாயை நாற்காலீல கட்டிச் சுத்துனா சும்மாயிருக்குமா? எப்படிச் செஞ்சிருப்பாங்க? ம்ம்ம்ம்...

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/03/blog-post_16.html

இட்டிலி.... கேசரி.... சட்டினி... இப்பிடி எல்லாப் படமும் போட்டிருக்கீங்க. இதெல்லாம் உண்மையிலேயே சின்ன அம்மணிக்குக் குடுத்தீங்களா?

டெசிகேட்டேட் கோக்கோனட்னா என்ன?

எனக்குச் சேமியா கேசரிய விட ரவாகேசரி ரொம்பப் பிடிக்கும். அதுக்காக சேமியா மேல கோவமெல்லாம் ஒன்னுமில்லை. கூட்டணியில இடம் எப்பவும் உண்டு.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/1.html

ஆவென்று எழுந்தது ஆம்ஸ்டர்டாம் ஆர்ப்பாட்டப் போர்... அந்தப் போரிலே பிறகு என்றென்றும் பாரிலே (Bar) பின்பற்ற வேண்டிய கருத்துகளை நான் சொன்னேன். அதை உலகோர் உணர்ந்து சிறந்தோங்க பதிவாக இட்டமை சிறப்பு.

// கேஆரெஸ்: "ஜிரா...பதிவுலகப் பரந்தாமா...நான் இனிமே பதிவே எழுதப் போறதில்ல! எனக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு! நான் எப்படி என் நண்பர்களுக்கு எதிராப் பதிவு போடுவேன்?
கண்ணன் பாட்டு பாடி என்னைத் தூங்க வைத்த பிதாமகர் குமரன் இன்னிக்கி அவங்க பக்கம் இருக்காரு!
காலத்தின் கோலம் கோவி கர்ணனும், ஆச்சாரியர் VSK-வும் அவர்கள் அணிக்குச் சென்று விட்டார்கள்!
பாடம் எடுத்த சுப்பையா வாத்தியார் இன்று சூடம் கொளுத்த வந்திருக்காரு!
என்னால் முடியாது ஜிரா, என்னால் முடியாது! என்னை விட்டு விடுங்கள்!" //

இப்பிடியெல்லாம் சத்தமாச் சொல்லக் கூடாது... எல்லாரும் நல்ல வேளைன்னு நெனைப்பாங்க. அப்புறம் எப்படிக் குட்டையக் கொழப்புறது.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/1.html

// கப்பி: "ஜிரா, நீங்களே பாண்டவர்களின் செகு-வேரா!
உலகத் தரம் வாய்ந்த படம் 10000 BC! அதற்கு விமர்சனம் எழுதும் கடமையில் தத்தளித்துக்கிட்டு இருக்கும் என்னை வீணாகச் சோதிக்க வேண்டாம்! வேண்டுமானால் நீங்கள் மாடு மேய்க்கப் போகும் போது, இலவசமாகப் பார்த்து மகிழ சாம் ஆண்டர்சன் பிட்டு ஒன்றைத் தருகிறேன்! //

கப்பி.... அன்னைக்கு துரியோதனன் அவைல பாஞ்சாலிக்கு மட்டும் சேலை குடுத்தேன். வெட்டி துரியோதனன் உன்னோட ஜீன்ஸ் டீஷர்ட் பிடுங்குனப்போ நான் வரலைங்குறதுக்காக சாம் ஆண்டர்சன் பிட்டு தர்ரேன்னு சொல்றியே... இதெல்லாம் ஞாயமா? பிட்டுக்கு மண் சுமந்தாரு இறைவன். உனக்கென்ன பிட்டு குடுக்காம இருக்க என்ன வேணும்னு சொல்லு. கர்ணன் இருக்காரு. அவர் கிட்ட சொல்லிக் குடுக்கச் சொல்றேன்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_17.html

// வெட்டிப்பயல் said...
அருமை அருமை...

ஜி.ரா வந்து என்ன சொல்றார்னு பார்க்கலாம்...

ஆனா இப்பவெல்லாம் ஜி.ரா எங்கேயும் விவாதம் செய்யறதேயில்லை :-( //

அட நான் என்ன விவாதம் செய்றது? அதெல்லாம் விவரம் தெரிஞ்சவங்க செய்றது. என்னைக்கு எனக்கு விவரம் பத்தாதுன்னு புரிஞ்சதோ அன்னைக்கே வாயை மூடிக்கிட்டேன்.

இப்பிடியெல்லாம் பதிவு போட்டு ரவிக்கு இன்னார்தான் தமிழ்க்கடவுள்னு நிரூபிக்க வேண்டிய நெலமை. எனக்கு அப்படியில்லையே. இன்னும் சொல்லப் போனா.... இவரு நிரூபிச்சத அவரு கூட இருக்குற எல்லாரும் ஏத்துப்பாங்களான்னே சந்தேகம்தான்.

அட... தமிழன் கும்புடுற எல்லாக் கடவுளுமே தமிழ்க் கடவுள்தான். ஒவ்வொருத்தருக்கும் அதை நிரூபிக்குறதுல ஒரு ஆர்வம்...ஒரு லாபம். கே.ஆர்.எஸ் இப்பத்தான தொடங்கீருக்காரு. நாங்க ரொம்ப நாளாவே சொல்லீட்டிருக்கோம். ஆனா இவ்ளோ நாளா அவங்க ஏன் சொல்லிக்கலைன்னு கேள்வி கேட்டா அதுக்கு என்ன சொல்வாரோ தெரியலை. தமிழ்ப் புலவருங்க எல்லாம் முருகன் தமிழ்க்கடவுள்னு சொல்லீட்டாங்கன்னா...வைணவத்துல தமிழ்ப் புலவர்கள் இருக்கலையா அப்ப... ஏதோ கே.ஆர்.எஸ் ஆசைக்குச் சொல்லிக்கிறாரு. சொல்லீட்டுப் போகட்டுமே. நீங்க சொல்லுங்க கே.ஆர்.எஸ். Keep it up. Good show.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

1 ஆ) ஒக்கூர் மாசாத்தியார்

2. அ) இசைஞானியார்/ மங்கையர்க்கரசியார்

3 ஈ) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
4 ஈ) நிவேதிதா தேவி
5 லட்சுமி செகால்
6 அ) ருக்மணி தேவி அருண்டேல்
7 தெரியவில்லை. ஆனா குமுதவல்லிங்குற பேர்தான் வைணவங்க வைக்கிற பேர் மாதிரி இருக்கு. ஆகையால அதையே தேர்ந்தெடுக்குறேன்.
8 ஆ) மண்டோதரி - இதுவும் தெரியலை. காரைக்காலம்மையாருக்கோ பரவை, சங்கிலியாருக்கோ இப்பிடி நடந்துச்சான்னு தெரியலை. மண்டோதரி பத்தித் தெரியாது. ஆகையால அவங்களை தேர்ந்தெடுக்கிறேன்.
9 சாந்தி
10 அ) பத்திரிகையாளர் வாசந்தி

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

அது சரி... தமிழ்ப் பெண்கள் பத்துன கேள்விகள் சொன்னீங்க. அதான் முருகன் தொடர்பான எந்தக் கேள்வியும் வரலையோ.. சரி. சரி. புரியுது.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

// கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
அய்யா ஜி.ரா., முருகு என்றால் அழகு. அழகு என்பதில் பெண்களுக்கு இணையுண்டா? (தைரியம் இருந்தால் இல்லை என்று சொல்லவும்) எனவே, எல்லா கேள்விகளுமே முருகைப்(முருகனைப்) பற்றி தான். சரியா? //

அடடா! தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்களே.... வேண்டிய வேலை ஆகுறதுக்காக அழகே அமுதேன்னு நாங்க பொய் சொல்றதுதான். (நீங்க இப்ப உதவுற கே.ஆர்.எஸ்சையும் சேத்துத்தான்) அதையெல்லாம் உண்மைன்னு நம்பீட்டீங்களா!!!!! இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே..

உலக ஆண்களின் சார்பாக ஒரு சுயதம்பட்டம்... ஆண்யானைக்குத்தான் தந்தம் உண்டு. ஆண்குயில்தான் கூவும். ஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டு. ஆண்களுக்குத்தான் வலிமையுண்டு. ஆகையால என்னதான் பெண்களை நாங்க அழகேன்னு பாராட்டினாலும்... அதெல்லாம் கவிதைக்குப் பொய்யழகுதான்.

என்ன ரவி, இந்த வேட்டியும் கிழிஞ்சு போச்சே... என்ன செய்யப் போறீங்க? பேசாம சரணடைஞ்சிருங்க. மன்னிச்சிர்ரேன். ;) வீண் போட்டி வேலைக்காகது என்பதைப் புரிந்து கொள்ளவும்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

// கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ஜிரா, கல்வெட்டில் வடித்தீரே: //உலக ஆண்களின் சார்பாக ஒரு சுயதம்பட்டம்// இன்னொரு நாள் உதவாம போயிடும்....:-)//

என்னக்கா இது! இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க. அப்ப நாங்க சொல்றதுக்கு வேற கெடைக்காமலா இருக்கும்? தமிழ்க்கடவுள் முருகவேள் கொடுத்த முத்தமிழும் எக்கச்சக்கமா இருக்கு. அதுல எடுத்து விட்டாலே போதும். நீங்க கே.ஆர்.எஸ் கூடச் சேராம இருங்க. நமக்குள்ள எதுக்கு சண்டை. அக்கா தம்பி பாசத்துக்குள்ள கே.ஆர்.எஸ் வரனுமா. யோசிச்சுப் பாருங்க. ஒங்க மேல எவ்ளோ மரியாதை வெச்சிருக்கேன்னு ஒங்களுக்கே தெரியும்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஐயகோ...
கெபி யக்கோவ்! போயிறாதீங்க! ஜிராவின் கொட்டம் அடக்கிட்டுச் செல்லுங்கள்! இதற்குத் தக்க பதில் காட்டி விட்டுச் செல்லுங்கள்! ஜிராவின் ஆணியப் பேயை ஓட்டி விட்டுச் செல்லுங்கள்! //

கொட்டமாவது சட்டமாவது.... அக்கா தம்பிக்குள்ள பிரச்சனைய மூட்டி விடுறீங்க. இந்த மாதிரி தப்பெல்லாம் செய்யாதீங்க.

நீங்க ஏன் தமிழ்ப் பெண்களை வெச்சிப் போட்டி வெச்சீங்கன்னு சொன்னத இப்ப ஊருக்கே சொல்லீர்ரேன். அப்பத்தெரியும் ஆணீயம் யாரு பெண்ணீயம் யாரு பித்தளை யாருன்னு...

பெண்களே...இதோ இந்தக் கே.ஆர்.எஸ்....போட்டீன்னா பெண்கள்தான் அடிச்சிக்கிட்டு வருவாங்க. அவங்க வந்து சண்டை போட்டாத்தான் பதிவுல குழாயடி எபெக்ட் இருக்கும்னு சொன்னாரு. அதுனாலதான் பின்னூட்டத்துல கூட. ஆண் -2 பெண்-1தானான்னு ஏத்தி விடுறதெல்லாம்.

////என்ன ரவி, இந்த வேட்டியும் கிழிஞ்சு போச்சே... என்ன செய்யப் போறீங்க?//

அக்கா இருக்க கவலை ஏன்?
பட்டு வேட்டி சப்ளை, பரந்தாமன் கெபி அக்கா கைகளில் இருந்து கங்கை போல் காவிரி போல் சுரந்து கொண்டே இருக்கும்! //

அக்கா சொக்கா கொடுத்ததெல்லாம் அந்தக் காலம். இப்ப நாங்க்தான் அவங்களுக்குக் கூட்டணி. தெரிஞ்சிக்கோங்க. கங்கைதான் அழுக்கோ அழுக்காமே. காவிரியில தண்ணியே விட மாட்டேங்குறாங்க. நீங்க உள்குத்து வெச்சி கெபி அக்காவைத் திட்டுவதை நான் கண்டமானிக்கக் கண்டிக்கிறேன்.

////பேசாம சரணடைஞ்சிருங்க//
மாட்டேன்! அடியேன் சரணாகதி மட்டுமே செய்வேன்! :-))//

கதியாவது சொதியாவது. உங்க விதியிலேயே அப்படிக் கெடையாதே. மதியில்லாம நடந்துக்காதீங்க. என்னைச் சரணடைஞ்சிருங்க. பாவ மன்னிப்பும் கூடச் சேத்துக் குடுக்கிறேன்.

////வீண் போட்டி வேலைக்காகது என்பதைப் புரிந்து கொள்ளவும்//

வேலை வணங்குவதே என் வேலை!
வேலுக்கும் ஆகும்! வேலைக்கும் ஆகும்!
வெற்றி வேல்! வீர வேல்!
No saran adanjufying with gira!
Por Drums kottatum! :-)) //

என்னாது... வேலை வணங்குவது உங்க வேலையா....இப்பிடியெல்லாம் பொய் சொல்லக் கூடாது. அபத்தம் செப்பினேவாரிக்கி புவ்வா தொரகலேது. மீரு அரவம்லோ அபத்தம் செப்தாரு. அதி மஞ்சிதிகாது.
டரம்ஸ் கிழிஞ்சி தொங்குது. அத ஓரமா வெச்சிட்டு கொஞ்சம் தண்ணி குடிங்க.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

// இலவசக்கொத்தனார் said...
//ஆண்யானைக்குத்தான் தந்தம் உண்டு. ஆண்குயில்தான் கூவும். ஆண் மயிலுக்குத்தான் தோகை உண்டு. //

ஜிராண்ணா, ஒரு டவுட்டுங்கண்ணா, அப்போ அழகா இருக்கிற ஆம்பளைங்க யாருக்குமே ஆறறிவு இல்லீங்களாண்ணா?

என்னைப் பார்த்து எவனும் இப்படி எல்லாம் சொல்ல முடியாது என்கிற தைரியத்தில்

இலவசக்கொத்தனார் //

கொத்ஸ்... நல்லா யோஜிஜ்ஜு பாருங்க. அழகா இருக்குற ஆண்களுக்கு அறிவு மட்டுந்தான் இல்லைன்னு வெச்சிக்கிட்டாலும் கூட... அந்தப் பக்கம் ரெண்டுமே இல்லையே ;)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

// இலவசக்கொத்தனார் said...
//பேசாம சரணடைஞ்சிருங்க//

என்னது சரணை அடையறதுக்கா இம்புட்டுப் போட்டி? என்னடா எல்லாம் பொம்பளப் பிள்ளைங்க கேள்வியா இருக்கேன்னு நினைச்சேன். எல்லாம் அந்த படுபாவியை அடையத்தானா?

யோவ் அரைபிளேடு, நம்மளைக் கவுத்துட்டாங்கய்யா! வந்து என்னான்னு கேளு! //

இப்பவாச்சும் ரவி எங்க வர்ரார்னு புரிஞ்சிக்கிட்டீங்களா... இங்க வந்து ஆற அமர விடை சொல்லி வடையச் சுடுறீங்களே... எம் பேச்சை நீங்க கூட கண்டுக்கலையே கொத்ஸ்.....எப்படியோ இப்பவாச்சும் உண்மை புரிஞ்சதே...

G.Ragavan said...

http://rishanshareef.blogspot.com/2008/03/blog-post.html

வாழ்த்துகள் ரிஷான். பத்திரிகையில் பாராட்டு வாங்குவது எளிதல்ல. இந்தப் பாராட்டு உங்களை ஊக்குவித்து இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும் என்று நம்புகிறேன்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//நீங்க கே.ஆர்.எஸ் கூடச் சேராம இருங்க. நமக்குள்ள எதுக்கு சண்டை. அக்கா தம்பி பாசத்துக்குள்ள கே.ஆர்.எஸ் வரனுமா//

அக்கா...
உங்களை அக்கா-ன்னு மொதலில் கூப்பிட்டது நான் தான்!
அதனால் பழம் எனக்கே கொடுக்க வேண்டும்! //

ரவி.... யாரு மொதல்ல கூப்டாங்கங்குறது பெரிசில்லை. யாரு கடைசி வரைக்கும் கூப்புடுறாங்கங்குறதுதான் பெருசு. எனக்கு இருக்குறது ஆறுமுகம். அத இதுவரைக்கும் காட்டுனதில்லை. காட்ட வெச்சிராதீங்க. தாங்கமாட்டீங்க..

// ஜிராவின் ஏமாற்று வார்த்தைகளில் மயங்கிட வேண்டாம்!
கொஞ்சிக் கொஞ்சிக் பேசி மதி மயக்கும்
ஜிராவின் உலகம் வலை விரிக்கும்-ன்னு மயில்பாடினியார் பாட்டை நினைவு கூருங்கள்! :-)) //

அன்புக்கு நான் அடிமை
தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை

அன்பு மலர்களே
நம்பி இருங்களேன்
நாளை நமதே

நானே என்றும் ராஜா
ஆனால் முள்ளில் ரோஜா
ரவியா என்னை வெல்லக் கூடும்!!!!!

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

// இலவசக்கொத்தனார் said...
//ஜிரா!
பாத்துக்குங்க! கண்ணனே வென்றான்!
தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்!
தருமம் 100-இல் வெல்லும்!//

ஆமாம் கவ்வும் கவ்வும்.

என் பின்னூட்டங்களை அழித்த பின் 50 கூடத் தேறாது. அப்புறம் மண்ணைத்தான் கவ்வும். //

ஒங்கது அம்பதுன்னா என்னது இருவது இருக்காதா? அதையும் நான் அழிச்சிர்ரேன். அப்ப என்னாகுதுன்னு பாப்போம்..... கொத்சுக்கு நேர்ந்த அவமானம் தமிழ்ச் சமுதாயத்திற்கு நேர்ந்த அவமானம். எழுவீர்..ரவியின் முதுகில் உழுவீர்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//எனக்கு இருக்குறது ஆறுமுகம். அத இதுவரைக்கும் காட்டுனதில்லை. காட்ட வெச்சிராதீங்க. தாங்கமாட்டீங்க....//

உமக்கோ வெறும் ஆறுமுகம்!
எம் தலைவனின் எதிரிக்கும் கூடப் பத்து முகம்!
எம் தலைவனுக்கோ நூறு முகம்!

பெகாவத் கீதை சொன்ன ஜிரா பரந்தாமனிடம் கேட்டுத் தெளியுங்கள்! போர்க்களத்தில் விஸ்வரூப தரிசனத்தின் போது எத்தனை எத்தனை முகங்கள் தெரிந்தன என்று கவுண்டி விட்டுச் சொல்லுவார்! :-))) //

ஹா ஹா ஹா

ஆறுமோ ஆவல் ஆறுமுகனைக் காணாமல்.....
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறுமுகனைத் துதியுங்கள் பாவச் சேறு நீங்கி வாழுங்கள்

பத்தும் நூறும் பத்தாமல் திருடித் தின்னது தெரியாதோ எமக்கு! அது மறந்ததோ உமக்கு.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

// இலவசக்கொத்தனார் said...
//கொத்ஸ்!
நடு ராத்திரி-ல எனக்கு நானே சிரிச்சிக்கிட்டு இருக்கேன்!
இது வரைக்கும் இப்படி எல்லாம் வெளையாண்டதே இல்லை!
முருகா! முருகா!!
:-)))//


சந்தோஷமா இருக்கும் போது வாயில் முருகன் பேருதான் வருது. ஜிரா நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். //

என்னத்த நோட்டுறது..... அவரு உள்ளன்போடச் சொல்லலை. அது வெறும் உள்குத்து. கீழ அவரோட பின்னூட்டத்தையும் அதுக்குண்டான உண்மையான விளக்கத்தையும் கொடுத்திருக்கேன் பாருங்க.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இம்புட்டு நேரம் இருந்த ஜிரா பரந்தாமன் எங்க போனாருன்னு தெரியலையே!
கட்ச்சீ நேரத்துல பரந்தாமனை நம்புவதற்குப் பதிலா முருகனையே நம்பலாம் போலக் கீதே! ;-) //

அதாவது இதுவரைக்கும் அவரு முருகனை நம்பலையாம். இனிமே நம்பலாம் போல இருக்குதாம். அவ்ளோதான். இது புரியலையா உங்களுக்கு. முருகன் பேரைச் சொல்லி டிராமாயிங். ஆனா நாங்க நம்ப மாட்டோம். நீங்களும் நம்பாதீங்க.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_9600.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
நூறாம் பின்னூட்டம் பெருமாள் பேர்-லயா?
ஆகா கண்ணா! உன் மகிமையே மகிமை! :-)))

ஜிரா!
பாத்துக்குங்க! கண்ணனே வென்றான்!
தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்!
தருமம் 100-இல் வெல்லும்! //

சூதும் வாதும் உமக்கே தோது
முருகன் அன்பர்களாகிய நாங்களோ குணத்தான் சாது
நீர் செய்திருப்பது தீது
அதை விட்டால் உமக்குப் போக்கிடம் ஏது!

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/03/1.html

குறும்பின்றி அமையாது உலகு... ம்ம்ம்.... தலைப்பு கலக்கலா இருக்கு... எனக்கு ரெண்டு டவுட்டுங்க..

1. அவங்க முத்தம் குடுத்தாங்களா இல்லையா?

2. அந்தப் பையன் ஏன் வேர்க்க விறுவிறுக்க நடந்து போறான்? சைக்கிளோ பைக்கோ இல்லையா?

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/03/2_24.html

எனக்கு ரெண்டு டவுட்டு

1. இட்டிலிக்குச் சாம்பார் ஊத்திக்க மாட்டாங்களா? என்ன குடும்பம்யா ரெண்டும்? சட்னி, சாம்பார் பொடி ஆகிய முச்சுவைகளையும் கலந்தடிக்கனும்ல.

2. அந்தப் பையன் என்ன வேலை செய்றான்? கல்யாணம் பண்ணா பொண்ண வெச்சிக் காப்பாத்துவானா? அதுக்குச் சம்பாத்யம்?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/03/krs_24.html

ரவி, இந்தப் பதிவு சூடான பதிவுதான். சுடச்சுட இருக்கே. :)

சரி. என்னோட கருத்துகளைச் சொல்லீர்ரேன். எல்லாக் கருத்துகளும் ஒன்னோட ஒன்னு தொடர்பு இல்லாமக் கூட இருக்கலாம். அங்கங்க பாயிண்டு பிடிச்சிருக்கேன். அவ்ளோதான்.

// ஒரு படைப்பாளியின் கருப்பொருளைத் தீர்மானிக்கும் உரிமை யாருக்கு என்பதும் உங்களுக்கே தெரியும்! //

உண்மைதான். படைப்பாளிக்கே உரியது. அதன் மீதான கருத்துச் சொல்லும் உரிமை படிப்பாளிக்கே உரியது அல்லவா.

// வாரியாரைப் போய் பெருமாள் மீதும் காலட்சேபம் பண்ணுங்க! வேளுக்குடி சுவாமியிடம் போய் வள்ளித் திருமணம் விரிவுரை பண்ணுங்க-ன்னு எல்லாம் கேட்பது எவ்வளவு அபத்தம்? //

வேளுக்குடிச் சாமி வள்ளி திருமணம் பேச்சு செஞ்சாரான்னு தெரியாது. ஆனா வாரியார் கண்ணன் மேலையும் பெருமாள் மேலையும் செஞ்சிருக்காரு. ராமாயணம் விரிவுரையும் கதை சொல்லீருக்காரே. குமரன் கூட வாரியாரே ராவணனைத் திருடன்னு சொல்லீருக்காருன்னு எழுதீருக்காரே.

// எண்ணிக்கையில் அவை உங்களுக்குப் போதவில்லையா? ஒவ்வொரு வலைப்பூவிலும், முருகனருளில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு, அம்மன் பாட்டில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு என்று கணக்கு சமர்பிக்க வேண்டுமா? சொல்லுங்கள், சமர்பிக்கிறேன்! //

தேவையில்லைன்னு நெனைக்கிறேன். பட்டியலை வெச்சு முடிவுக்கு வர்ரது ஸ்கேலால அளந்து பாத்து மதிப்பெண் போடுற மாதிரி. ஆகையால இதை நீங்க செய்ய வேண்டாம் என்பது என் கருத்து.

// உண்மையாலுமே, KRS சைவ/வைணவம் பார்ப்பவன் இல்லைன்னு உங்களுக்கும் தெரியும்!
தில்லை=சைவம்! அதுனால நைசா சைக்கிள் கேப்புல வைணவத்தைக் கம்பேர் பண்ணி சைவத்தைத் தாழ்த்திறலாம் என்கிற மட்டமான எண்ணம் உடையவனா அடியேன்?
ராமர் பாலம் வைணவம் தானே? ராமானுசர் இருந்திருந்தால் பொது நலனுக்குப் அணையைக் (பாலம் மெய்யோ/பொய்யோ - அது வேற விஷயம்) கொடுத்து விடு-ன்னு சொல்லி இருப்பாரு-ன்னு பதிவு போட்டேனே! அப்போ அடியேனோட Hidden Vainava Agenda-வை யாரும் சுட்டிக் காட்டலையே? //

ராமர் பாலம் குறித்தான உங்கள் பதிவு எவ்வளவு சரியானதோ அவ்வளவு சரியானதே தில்லைப் பதிவும். வைணவக் கோயில்களின் நிலை தெரியாது. ஆனால் பெரும்பாலான சைவக் கோயில்களில் தமிழுக்கு இன்னும் முதல்மரியாதை இல்லை என்பதே உண்மை. மூவிரு முகங்கள் போற்றீன்னு யாரு அருச்சனை பண்றாங்க? ஓம் ஸ்கந்தாய நம..குகாய நம..கார்த்திகேயாய நமதானே நமநமக்குது. அது பத்தி நாந்தான் சொல்லனும்னு இல்லை. நீங்களும் சொல்லலாம். வேற யாரும் சொல்லலாம். உங்களுக்கும் அந்த உரிமை உண்டு.

// தமிழ்க் கடவுள்- இல்லன்னு யாரையும் பதவி இறக்கல! இவரும் தமிழ்க் கடவுள் தான் என்று தமிழ் இலக்கியத் தரவுகளை முன் வைக்கிறோம்!
தரவுக்கு எதிர் தரவு வைப்பது ஒரு வகை! தரவினை மறுப்பது ஒரு வகை!
ஆனால் ரெண்டும் செய்யாம "இவருக்கு ஏதோ ஆசைப்பா! சொல்லிக்கிராரு! சொல்லிட்டுப் போகட்டம்" என்று, இங்கும் ஆட்களுக்கு attributing motive தான் நடக்குதே தவிர, பயனுள்ள விவாதம் நடக்குதா? //

நாம் ஒத்துப்போகாத விடயம் இதுதான். மாலனும் தமிழர்க்கடவுளேன்னு நிரூபிக்க நீங்க விரும்புறீங்க. அதைச் சொல்லிக் கோங்கன்னு விட்டுர்ரதுதான் என் எண்ணம். அவ்ளோதான். தரவு கொடுத்ததும் அதை அலட்சியப்படுத்துறதா நெனைக்கக் கூடாது. அதை வெச்சு வாதம் செய்ய விருப்பம் இல்லை. அவ்ளோதான். ஆகையால உங்க விருப்பப்படி செய்ங்கன்னு சொன்னேன். அதை நீங்க எந்த வகையில எடுத்தாலும் வருத்தமில்லை. நீங்க சொன்ன ரெண்டு வகைக்குள்ளதான் நாங்க வரனும்னு நீங்க எதிர்பார்க்கவும் கூடாது. இன்னும் கூட உங்க கருத்தை மறுக்க நிறைய கருத்துகள் இருக்கு. வீண் சண்டை தேவையில்லைங்குறதாலதான் ஒதுங்கி இருக்கிறேன். அதை அலட்சியபடுத்துதல்னோ அசிங்கப்படுத்துதல்னோ நீங்களோ வேற யாரோ நெனச்சாங்கன்னா.... மன்னிச்சிருங்கய்யா.

// உண்மையாலுமே, KRS சைவ/வைணவம் பார்ப்பவன் இல்லைன்னு உங்களுக்கும் தெரியும்! //

இது மிகவும் idealistic நிலை. அதாவது உன்னதமான நிலை. உன்னதம்னு சொல்றதே கற்பிதம். நானும் கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணேன்னு உருகுகின்றவந்தான். ஆனாலும் முருகனருள் முன்னிற்கும்னு மூழ்குறவன். நீங்களும் பதிவுகள் நெறைய போட்டாலும் வைணவம் முன்னிற்பது இயல்பே. அது தவறென்று சொல்ல முடியாது.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பதிவுல நாங்க அந்தப் பக்கம் வர்ரோம். அவங்க இந்தப் பக்கம் வருவாங்களான்னு கேட்டீங்க. உள்ளபடிக்கு பாத்தா முருகன் இலக்கியங்கள்ள பெருமாளைப் போற்றி நெறைய எடுத்துக்காட்டலாம். ஆனா எந்தப் பெருமாள் இலக்கியத்துல முருகனை எடுத்தாண்டுருக்காங்கன்னு சொல்ல முடியும்னு எனக்குத் தெரியலை. பகழிக்கூத்தர்னு சொன்னாலும் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் எழுதி அதுல பெருமாளையும் புகழ்ந்தாரு. திருமாலிருஞ்சோலை பிள்ளைத்தமிழ் எழுதி முருகனைப் புகழ்ந்தாரான்னு தெரியாது. இப்பிடியெல்லாம் விவாதம் செஞ்சுக்கிட்டேயிருக்கலாம். ஆனா அதெல்லாம் எதுக்குன்னுதான் தோணுது. இதுதான் என்னுடைய நிலை.

சுருக்கமாச் சொன்னா... நீங்க எழுதுறதும் எழுதாததும் உங்க விருப்பம்.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2008/03/blog-post_21.html

நட்சத்திரக்கதை. நல்ல கதை. அருமையாக இருக்கிறது. காதற்ற ஊசியும் வாராதுகாண் என்று சொன்னதும் ஒரு செட்டிக்குத்தானே.

அழ அழுக பத்திச் சொல்லனும்னு வந்தேன். ஆனா பஞ்சாயத்து முடிஞ்சு தீர்ப்பும் சொல்லியாச்சு. ஆகையால தீர்ப்பை ஏத்துக்கிறேன்.

G.Ragavan said...

http://sangamwishes.blogspot.com/2008/03/wishes_8671.html

குமரனுக்கும் குமரன் செல்விக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2008/03/star-posting_25.html

அண்ணா அவர்கள் காலமெல்லாம் நான் பிறப்பதற்கு முன்பு. ஆகையால் அவரை ஒரு லெஜண்டாக மட்டுமே தெரியும். அவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அவருடைய பேச்சும் எழுத்தும் மிகவும் பிரபலம் என்று கேள்வி. இன்னும் சிறப்பான பேச்சுகளை மேற்கோள் காட்டியிருக்கலாமோ!

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/03/blog-post_26.html

கொதஸ், நான் பிறக்கும் பொழுது அண்ணா ஒரு லெஜண்டாக அறியப்பட்டவர். உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். வெறும் அடுக்குமொழி மட்டும் பேசினார் என்று நான் நம்பவில்லை. திரைப்படங்களிலேயே நாதா ஸ்வாமியை மாற்றி அத்தான் என்று எழுதினார். அதுவும் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தில். எனக்கென்னவோ வாத்தியார் ஐயா இன்னும் சரியான மேற்கோள்களை எடுத்துக்காட்டவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2008/03/star-posting_8939.html

பொன்னியின் செல்வனைப் படிக்காதார் படிக்காதாரே. தொட்டால் விட முடியாதவைகளில் அதுவும் ஒன்று. ஒவ்வொரு பாத்திரங்களும் உண்மையிலேயே நம்மோடு வாழத்தொடங்கிவிடும். அப்படிப்பட்ட எழுத்து. கல்கியின் எழுத்து நடை சிறப்பானது.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2008/02/blog-post.html

உனது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். நிச்சயம் சொல்லும்.

நாமே பெயர். பெயரே நாம். மாம்பழம்னு சொல்றப்பவே இனிப்பு நாக்குல தெரியுதுல்ல. அதான் பேரோட பலன். அந்தப் பலனை நீங்க பெற்றதுல பெருமகிழ்ச்சி.

லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/03/blog-post_6333.html

பீர்க்கங்காய் ரொம்ப நல்லது. இதுல பருப்பு நான் வேற மாதிரி செய்வேன். அதச் சாப்புட்டுட்டு என்னோட பெங்காலி நண்பன்...அதுக்கு ஜிங்கே தால்னு பேரு வெச்சிட்டான். ஜிங்கேன்னா வங்கத்துல பீர்க்கையாம்.

தோலுரிச்சித் துண்டாக்குன பீர்க்கை. வெங்காயம் தக்காளி நறுக்கிக்கனும். குக்கர்ல எண்ணெய் ஊத்தி கடுகு உளுந்து போட்டு அப்புறம் வெங்காயம் தக்காளி போட்டு.... அதுல கொஞ்சம் சாம்பார் பொடியும் போட்டு.. பீர்க்கங்காய்த் துண்டுகளையும் போட்டு.. பாசிப்பருப்பும் போட்டு.. தேவையான தண்ணி ஊத்தி குக்கர்ல குண்டு போட்டு வேக வைக்க வேண்டியதுதான். அருமையானா ஜிங்கே தால் தயார்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/9.html

அப்படியானால் சதி செய்துதான் மூவேந்தர்களும் பாரியைக் கொன்றார்களா? ம்ம்ம்..

எப்படியோ பெண்களைக் காப்பாற்ற நட்புறவு ஒன்று துப்புரவாக இருந்தது நன்றே. அங்கவையும் சங்கவையும் முருங்கைக்கீரை நன்றாகச் சமைப்பார்களாமே!

G.Ragavan said...

http://sivamgss.blogspot.com/2008/03/blog-post_5674.html

அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

அது சரி... நீங்க பாட்டுக்க முருகனைத் தமிழ்க்கடவுள்னு சொல்லீட்டீங்க. அதுல ஒரு பிரச்சனை ஓடிக்கிட்டிருக்குதுன்னு தெரியலையா :)

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/03/blog-post.html

நல்லா யோசிச்சிருக்க. சுருக்கமாச் சொன்னா சென்னை நாயை பாரீஸ்ல விட்டா பிரெஞ்சு நாயோட பேசுறதுக்கு அது எந்த மொழியையும் கத்துக்க வேண்டியதில்லை. லொள்லொள்ளே எல்லா நாய்களுக்கும் புரியும். அதே லொள்லொள்ள வெச்சுக்கிட்டு அந்தச் சென்னை நாய் நெதர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்த்திரேலியா, எகிப்து, கிரேக்கம்னு சுத்தீட்டு வந்துரும். நமக்குத்தான் பெரும்பாடு.

கவியரசர் ரொம்ப அழகாச் சொல்வாரு....

பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா?

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/10.html

குமரன், எனக்கு ஒரு ஐயம். இதுல நெடியோன் குன்றுன்னு வருதே... அப்ப இந்த நெடியோன் குன்றுதான் அந்த நெடியோன் குன்றா? இல்லை... பரம்பு மலையும் நெடியோன் குன்றுகள்ள ஒன்றா? போற போக்கப் பாத்தா நீங்க வைக்கிற தரவுகளில் இருந்து குன்று தோறாடும் கண்ணப் பெருமாள்னு சொல்லனும் போல இருக்கே. :)

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2008/03/blog-post_26.html

அடா அடா அடா.... யாரோட மனசும் புண்பட்டா நீங்க பொறுப்பாக முடியாது... சூப்பருங்க. இப்பிடித்தான் இருக்கனும். ஆனா கலக்கல் பதிவு. ;) ரசிச்சேன். சவுண்டு பார்ட்டியின் சவுண்டு கேக்கத் தொடங்கீருச்சு. இனிமே கலக்கல்தான்.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2008/03/star-posting_28.html


வாரியாரைப் போலத் தமிழை வாறி யார் தந்தார் என்று வாலி கேட்பது மிகப் பொருத்தம்.

அவரைக் கண்டதில்லை. ஆனால் கேட்டதுண்டு. கைத்தல நிறைகனி அப்பமோடவல் பொரி என்று தொடங்குகையிலேயே களை கட்டிவிடும். முழுவதும் கேட்டு விட்டுத்தான் அடுத்த வேலையே. நல்ல ரசிகர். அதனால்தான் அத்துணை சுவையாகச் சொல்ல முடிந்தது.

செந்தமிழ்க் கடவுளை சிந்தையில் நிறுத்தி சந்தங்களைக் கவியில் நிறுத்தி அவர் சொற்பொழிவைக் கேட்கின்றவர்களைக் கோயிலில் முருகன் திருவடியில் நிறுத்தி வைக்கும் சொல்வன்மையைப் புகழ்ந்து சொல் வன்மை எனக்கு இல்லை.

G.Ragavan said...

http://maruthanayagam.blogspot.com/2008/03/blog-post_27.html

படத்துல புஷ்ஷு மட்டும் இல்ல போல. இன்னொருத்தரும் இருக்காரு. அவரு யாருங்க? இவரு குடுத்து அவரு வாங்குறாரா?

இப்பிடிப் பின்னூட்டம் போட எனக்கே அசிங்கமாத்தான் இருக்கு. என்ன செய்றது. :( வேற கருத்து சொல்ல பதிவுல ஒன்னுமில்லையே.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2008/03/star-posting_7034.htmlhttp://devakottai.blogspot.com/2008/03/star-posting_7034.html

அருமையான சொற்பொழி்வு. சொற்களைக் கூட்டி இறையைக் காட்டி விளக்கியிருக்கிறார் வாரியார்.

// சுப்பையா வாத்தியார் கண்டது--முருகன்

பயம்,ஆசை இவை தான் கடவுளின் பிறப்பிடமா? //

இல்லை தமிழன். பலருக்கு அச்சமும் ஆசையும் கடவுள் நம்பிக்கையின் பிறப்பிடம். கடவுளின் பிறப்பிடமல்ல.

// அன்பு தான் விடுதலையா?

அப்போது கடவுளை மற!மனிதனை நினை! //

இதுவும் சரியான கருத்தே. கடவுளை நினைப்பதன் பலன் மனிதனை மறப்பது அல்ல. அதுவும் தவறே. நூறு கோயில் சென்று ஆயிரம் பாப்பாடி லட்சம் பூத்தூவி கோடி முறை வணங்கி விட்டு கொடுஞ்செயலைச் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. கடவுள் இல்லை என்று சொல்கின்றவர்கள் எவ்வளவு மனிதனை நினைக்க வேண்டுமோ...அதே அளவு நினைக்க வேண்டியவர்கள் கடவுள் உண்டு என்று சொல்கின்றவர்கள். அப்படி நினைக்கவில்லையெனில் அவர்கள் கடவுள் மீது அன்பு கொண்டவர்கள் அல்லர். அச்சம் கொண்டவர்கள் எனத் தெளிக. உண்மையைச் சொன்னால் பெரும்பாலான உலகத்தார் இப்பிடித்தான்.

G.Ragavan said...

http://devakottai.blogspot.com/2008/03/star-posting_7034.html

// கோவி.கண்ணன் said...

வாத்தியார் சுவாமிஜி,

இறைவன் என்று ஒருவர் இருக்கிறார்,

"ஆம்" என்று ஒப்புக்கொண்டு,
அவரை வணங்குவதால் பக்தர்கள் என்ன நன்மை அடைகிறார்கள் ?//

கோவி, சுவாமிஜி நிறைய சொல்வாங்க. எனக்குத் தெரிஞ்சத நான் சொல்றேன். இறைவனை வணங்கினால்தான் அருள் புரிவான் அப்படீன்னு நெனைக்கிறதே தவறான கருத்து. நான் உணர்ந்த வரைக்கும் சூரியன் எல்லாருக்கும் காயிற மாதிரிதான் கடவுளின் அன்பும். புரிஞ்சிக்கிறதுலதான் இருக்கு இன்பம். ஒரு நண்பன் கூட இருக்குற உணரும் பொழுது உண்டாகும் அன்பு போலத்தான் இறைவன் நம்ம கூட இருக்கான்னு உணரும் போது உண்டாகும் இன்பமும். நண்பனை அணைப்போம். கடவுளையும் அப்படித்தான். இந்த வகைலதான் இறைவனை நான் பாக்குறேன்.

G.Ragavan said...

http://shaliniyin.blogspot.com/2008/03/blog-post_28.html

ஆகா... ஆகா... சிவியாரின் அருமைகளையும் பெருமைகளையும் எடுத்துச் சொல்லி அவருக்கு வாழ்த்தும் சொல்லீருக்கீங்க. சூப்பரோ சூப்பர்.


// //
பிகரா எறும்பு போனாலும் விடமாட்டாரு..
உடனே அதை படமாக்குவாரு..////
எறும்புகளிலே கூட பிகருங்க இருக்கா அம்மணி????
அதுவே எனக்கு இப்போதான் தெரியும்!! :P//

எறும்புல பிகர் இருக்குன்னு நாங்க முடிவுக்கு வந்ததே நீங்க போட்டோ பிடிக்கிறதாலதாங்க. ;)

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/03/blog-post_6182.html

இந்தப் பிம்பப்படுத்துறத எல்லா "உயர்ந்தவர்களுக்கும்" செய்றதுதான். நமக்குப் பிடிச்சவங்களா இருந்தா நம்ம கண்டுக்கிற மாட்டோம். பிடிக்காதவங்களா இருந்தா பிச்சு ஒதறீருவோம். ரஜினிகாந்த் பத்தி ஒரு புத்தகம் வந்திருக்குன்னு கடைகள்ள வெச்சிருக்காங்க. அதுல இதான் போட்டிருக்கா. அந்தப் புத்தகத்தப் படிக்கிறது வீண்னு நெனச்சேன். நீங்க படிச்சு சொன்னப்புறம் அதை உறுதிபடுத்திக்கிட்டேன்.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2008/03/blog-post_31.html

இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!!!! ஒரே ஊருக்குள்ளேயே குட்டையாய் ஊறிக்கிடக்கும் குட்டைகளிடம் இந்தப் பழக்கம் எக்கச்சக்கமாக இருக்கிறது போல. தேங்கிய உள்ளத்தில் தேங்கிப் போன அழுக்குகள். நீங்கிப் போனால் நன்று.

G.Ragavan said...

http://sethukal.blogspot.com/2008/03/7.html

இந்தக் காதல் எங்குட்டுருந்து வருதுன்னு தெரிஞ்சா இந்தப் பிரச்சனையெல்லாம் வராது. ஆனா இதுக்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. வரனும்னா வந்தே தீரும். படனும்னா பட்டே தீரும்.

G.Ragavan said...

http://shaliniyin.blogspot.com/2008/03/blog-post_28.html

// Senthuran said...
வர வர தமிழ் வலையுலகு கெட்டு போச்சப்பா... பதிவு மூலமா எல்லாம் கடலை போடுறாகள். :-( அதுவும் பொண்ணுகளே. என்ன கொடுமை சரவணா? ச்சீ... CVR //

செந்தூரன், எனக்கு ஒரு சந்தேகம். பெண்கள் கடலை போடக் கூடாதா? ரொம்ப வருத்தப்படுறாப்புல தெரியுது. ஒருவேளை ஆண்கள் மட்டுந்தான் கடலைய வறுக்கனும்னு நெனைக்கிறீங்களோ!!!!! நல்லாருங்கய்யா நல்லாருங்க... "அதுவும் பொண்ணுங்களே"ன்னு சொன்னது male chauvanismனு சொல்லலாமா?

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2008/03/blog-post_31.html

// குழலி / Kuzhali said...
ஜோ வடமாவட்டங்களில் இந்து / கிறித்துவ மதம் என்ற வேறுபாடின்றி சாதி வெறியே முதன்மையாக இருக்கின்றது //

தென்மாவட்டங்களிலும் இது உண்டு. குறிப்பாகச் சொன்னால் தூத்துக்குடியில் கிருத்துவ நாடார்களுக்கும் கிருத்துவ பரதவர்களுக்கும் (ஃபெர்ணாண்டஸ்) நடக்கும் பிரச்சனைகள். பெரிய பெரிய கலவரங்களை உண்டாக்கியிருக்கிறது.