தருமி சார், அந்தக் கல்லைக் கண்டால் பாட்டு மலையாளப் பாட்டோட காப்பியாம். :-)
இளையராஜா ரகுமான் தேவையில்லை... தேவாவைக் கூப்பிட்டிருந்தாலே எல்லாப் பாட்டும் ஹிட் ஆயிருக்கும்.
நீங்க சொன்ன மாதிரி மெல்லிசை மன்னரோ, இசைஞானியோ இசைப்புயலோ எல்லாப் படத்துலயும் எல்லாப் பாட்டும் நல்ல பாட்டு கொடுத்ததில்லை. மொக்கைகளும் உண்டு. ஆனா இவங்க மூனு பேருமே கொஞ்சம் சிரத்தை எடுத்து செய்யக் கூடியவங்க. அந்தச் சிரத்தையும் முனைப்பும் ஹிம்மேஷ் ரேஷமய்யாவிடம் தெரியவில்லை. கல்லைக் கண்டால் பாட்டைத் தவிர எந்தப் பாட்டும் காட்சியோடு பொருந்தவில்லை என்பது என் கருத்து. முகுந்தா முகுந்தா நல்லாயிருக்கு. ஆனா கோயிலோட கற்சுவருக்குப் பூசுன ஆயில் பெயிண்ட் மாதிரி பளபளன்னு இருக்கு. நல்லாருக்குன்னு சொன்ன கல்லைக் கண்டால் பாட்டும் காப்பியாம்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகர். இசையமைப்பாளராக அவர் சில பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பாடகராகவே சிறப்பாக ஜொலித்தார் என்பது என் கருத்து. எல்லாப் பாடகர்களிலும் ஒரு குட்டி இசையமைப்பாளர் ஒளிந்திருக்கிறார். மயூரி படத்திற்கு இசை எஸ்.ஜானகி. எஸ்.பி.பி கிடையாது. டி.எம்.எஸ் இசையமைத்த முருகன் பாடல்கள் மிகப் பிரபலம். இசையமைப்பாளராக பி.சுசீலாவும் சில பல பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
துடிக்கும் கரங்கள் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. இளையராஜாவின் சாயல் தெரிந்தாலும் எல்லாப் பாடல்களுமே அருமை. மேகம் முந்தானை, சந்தனம் பூசும் மஞ்சள் நிலாவும் பாடல்களும் மிக அருமை. சிகரம்தான் உண்மையிலேயே சிகரம்.
இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்பதற்காக ரொம்பக் காலம் காத்திருந்தது இன்றுதான் கைகூடியிருக்கிறது. நன்றி பிரபா. :) இதற்காக தம்பி ராமும் மதுரையில் கடைகடையாக ஏறியிறங்கியிருக்கிறார்.
ரெண்டு பேரும் தூங்கிக் கிட்டே இசையமைச்சிருப்பாங்க போல. :) சித்ரா பாடுற பாட்டும் வாணி ஜெயராம் பாடுற பாட்டும் அப்படியே மெல்லிசை மன்னரின் இசைச்சாயல். ஆனால் அந்தக் கரிசக்காட்டுக் கடலை பாட்டு இரண்டு பேரின் சாயலும் இல்லாமல் இருக்கிறது. ஒருவேளை மொத்தப் பாடல்களுக்கு மெட்டும் இசையும் போட்டுக் கொடுத்திருந்திருப்பார்கள். பிற்காலத்தில் யாராவது அவைகளைப் பயன்படுத்தி இசைக்கோர்த்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஆனா ஒன்னு டீச்சர். தன்னவீனத்துவமான தலைப்பு வெச்சிருக்கீங்க. தன்னவனீத்துவத்தின் தனிச்சிறப்பு பதிவு முழுக்க இருக்கு. புதுமைகளைப் புகுத்துறதுல நீங்க பெரிய ஆள். வலைப்பதிவுல முதன்முதலா தன்னவீனத்துவப் பதிவு போட்ட பெருமை ஒங்களுக்குத்தான். :)
ஜோ, உங்கள் கருத்தையும் கடுப்பையும் நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
மத்திய மாநில அரசுகள் முதுகெலும்பைக் கழற்றி வைத்து காலம் பலவாயிற்று. ச்சே! என்னய்யா அரசியல்வாதிங்க நீங்க. ஒரு சாதாரண மனுசனுக்கு இருக்குற அக்கறை கூட ஒங்களுக்கு இல்லாமப் போயிருச்சே!
வாங்க வாங்க. தேன் கிண்ணத்திற்கு உங்கள வாங்க வாங்கன்னு வரவேற்கிறேன். :)
இந்தத் தொகுப்பு ரொம்பப் பிரமாதம். குறிப்பாக காலதேவன் ராஜகுமார் உரையாடல். நல்ல அமைஞ்சிருக்கு.
ஆனா அத்தோட சேத்து அபூர்வப் பாடல்களைக் குடுத்திருக்கீங்களே..அது...அது இன்னும் சிறப்பு.
கவியரசர் கண்ணதாசனையும் இசையரசி பி.சுசீலாவையும் தெரியாத இசையன்பர்கள் இருக்க முடியாது. ஆனா அவங்க மொதப் பாட்டு? அதையும் கேட்கும் வாய்ப்பைக் கொடுத்தமைக்கு நன்றி.
வைஜயந்திமாலாவின் அம்மாவாகிய வசுந்தராதேவி அவர்களின் பாட்டும் சுந்தரிபாயின் பாட்டும் கூட இப்பொழுதுதான் கேட்கிறேன். கேள்வியும் படுகிறேன்.
இது போன்ற இன்னிசையமுதங்கள் தேன் கிண்ணத்தில் தொடர வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
அதுல அந்தப் போர்க்களக் காட்சியப் பாக்குறப்பவே குப்புன்னு வேர்க்குதே. சிற்பிகளின் கைவண்ணம் ஒரு சிறப்புன்னா..அதக் கப்புன்னு படம் பிடிச்ச உன்னோட கைவண்ணமும் ஒரு சிறப்பு.
உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் நண்பரே. கி.ரா எழுதினார் கதைகள். அத்தனையும் பட்டிக்காட்டு இலக்கியம். அவை தமிழ் இலக்கியத்திற்குத் தவறான முகத்தையா தந்து விட்டன?
எப்படி ஒரு விஷயத்தைச் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது நாகரீகம். உயிரியல் பாடம் படிக்கையில் ஒவ்வொரு உடலுறுப்புகளையும் பேரைச் சொல்லித்தான் படிக்க வேண்டும். காமம் என்ற சொல்லில் பிரச்சனையென்றால் காமத்துப் பால் பற்றி வள்ளுவரும் வலைப்பூ தொடங்க முடியாது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள சினிமா பதிவுகளில் இருந்த ஆபாசம் உங்கள் பதிவுகளில் இருக்கவில்லை என்பது என் கருத்து.
தமிழ்மணத்தின் இந்த முடிவு வருத்தமளிக்கிறது. நல்ல வேளை... என் கொங்கை நின் அன்பர் என்று நான் கதை எழுதிய பொழுது இந்த மட்டுறுத்தல் இல்லை.
உங்களது இந்த முடிவு மிக வியப்பாக இருக்கிறது. காமக் கதைகள் என்று மட்டுமே வரக்கூடாதா? இல்லை வேறு சொற்களும் உள்ளனவா? கட்டில், படுக்கை, இரவு, ஆழம், தீண்டல் இதெல்லாம் வரலாமா? அப்படியென்றால் அவரை காமக் கதைகள் என்று எழுதுவதற்குப் பதிலாக கட்டில் கதைகள் என்று எழுதச் சொல்லலாம். இல்லையென்றால் படுக்கையறைக் கதைகள்.
அப்படி உண்மையிலேயே தவறான பதிவுகளை நிறுத்த வேண்டும் என்றால்... பண்பட்டவர்கள் என்றொரு பிரிவு தொடங்குங்கள். இல்லையென்றால் ஜட்டிக்குப் பதில் சட்டி என்றுதான் எழுதுவார்கள். அப்பொழுது என்ன செய்வீர்கள்?
என் கொங்கை நின் அன்பர் என்று முன்பு ஒரு கதை எழுதினேன். ஆகா கொங்கை என்று வந்து விட்டதே என்று அந்தக் கதையை தடுத்து விடலாமா?
உங்களுடைய அளவுகோல் புரியவில்லை.
ஒன்று செய்யுங்கள். பேசாமல் எந்தெந்தச் சொற்கள் எல்லாம் தலைப்பில் வரக்கூடாது என்று சொல்லுங்கள். பதிவு எழுதுகின்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
முருகனருள் வலைப்பூவில் கூடிப் பணிபுரியும் வாய்ப்பளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. நம்முடைய நட்பும் மருகனன்பும் கூடிப் பெருகி இந்த வலைப்பூவில் இன்னும் பல நட்புகள் சேர பலப்பல பாடல்களைப் பதிய வேண்டும் என்று முருகன் பெயரால் கேட்டுக் கொள்கிறேன்.
அனைவரின் குரலிலும் முருகன் புகழைக் கேட்டு மகிழ்ந்தேன். இது போலப் பல பாக்களை உங்கள் குரலில் கேட்டு மகிழ காத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படத்துல நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.வரலட்சுமி அவர்கள் நடித்துப் பாடியிருந்தார்கள். இளையராஜா இசையில் அவர் பாடிய இரண்டாம் பாடலான "உன்னை நானறிவேன்" மிகவும் அருமை. இந்தப் படம் வந்த பொழுது படம் பார்த்த எனக்குக் கதையே புரியவில்லை. அந்த வயதில் பல விஷயங்கள் புரியவேயில்லை. பிறகு விவரங்கள் தெரியும் பொழுது.. படத்தில் ஒவ்வொரு அணுவும் சிந்தித்து இழைக்கப்பட்டது என்பது புரிந்தது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால்... பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க. அனைவருக்கும் வரிசையில் லட்டு விநியோகம் நடக்கும். கதாநாயகி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக நாயகன் வரிசையில் வருவான். பார்த்துப் பார்த்து ரசிப்பான். அவன் முறை வருகையில் லட்டுதட்டு தீர்ந்து போயிருக்கும். அடுத்த தட்டு வருவதற்காக நிறுத்தி வைப்பார்கள். இதே நாமென்றால் எரிச்சல் பட்டிருப்போம். ஆனால் அவன் மகிழ்கிறான். ஏனென்றால் கூடக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாமே.
அதே பாட்டில் கொங்கை என்று வரும். அந்தச் சொல் வருகையில் அனிச்சையாக தன்னுடைய முந்தானையைச் சரி செய்வார் நாயகி. பாட்டில் கொங்கை என்ற சொல்லையும் பிடித்து...அனிச்சைச் செயலையும் பிடித்து படத்தை ரசிக்க வேண்டும். இப்படி மூளைக்கு நிறைய வேலை இருக்கும். அதனால்தானோ என்னவோ... படம் ஓடவில்லை.
ஆன்மீக ஆர்வம் இருப்பதால் இறைவன் பெயரைச் சொல்லும் எதற்கும் ஆதரவு தர வேண்டியதில்லை. திராவிடனாக இருப்பதால் மாண்புமிகு கலைஞப் புரட்சித் தலைவ/விகளுக்கு கண்மூடித்தன ஆதரவும் தரத் தேவையில்லை.
கலக்கலா இருக்குதுங்க. ஒவ்வொரு பொண்ணும் அவ்ளோ அழகு. அப்பப்பா.... அவங்களையெல்லாம் பாக்குறதுக்காகவே அந்தூருக்கு ஒரு வாட்டிப் போகனுங்க.
இந்தக் கதை புதுசா இருக்கு. ஆனா இன்னொரு கதையும் படிச்சிருக்கேன். மயில்ராவணன்னு ஒருத்தரு இருந்தாராம். அவரு ராமரு லச்சுமணரு எல்லாரையும் தூக்கிக் கொண்டு போய் அவரோட பாதாள உலகத்துல ஒளிச்சி வெச்சிட்டாராம்.
அனுமாரு அவரக் கண்டுபிடிக்கப் போறப்ப அங்க ஒரு அனுமாரு இருந்தாராம். அவரு இவர உள்ள விடாமச் சண்டை போட்டாராம். அப்புறம் என்னடான்னு பாத்தா.. இவரு அவரோட மகராம். என்னடா கலியாணம் கெட்டாம... டேட்டிங் பண்ணாம எப்படி மகர்னு யோசிச்சா... சீதையப் பாக்குறதுக்காக இவரு பறக்குறப்போ.....அது தண்ணீல சிந்தீருச்சாம்...அத ஒரு மீன் லபக்கோஸ்திரி பண்ணவும்... அதுக்கு பொறந்த பையந்தான் இந்த அனுமாராம். இந்தக் கதையக் கேள்விப் பட்டிருக்கேன்.
குணா திரைப்படம் மிகவும் அளவுக்கதிகமாகச் சிந்தித்ததன் விளைவாகப் பிறந்த படம். அத்தனை சிந்தனைகளுக்கும் தேவையான இசையைக் கொண்டு வருவதற்கு படம் வந்த பொழுது இருந்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா.
நல்ல இசைத்தொகுப்புகளைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கமல், சந்தானபாரதி, இளையராஜா ஆகியோரின் கலந்துரையாடலையும் கொடுத்தமைக்கு நன்றி. ரூமுக்குள் ஒளித்து வைத்தேன் என்று கங்கை அமரன் சொல்வது பொய்தான் என்றாலும்..உரையாடலை ரசிக்க முடிந்தது.
இளையராஜா ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர். அவர் மட்டுமே மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
கானா பிரபா சொன்னது போல மாற்றம் என்பது மாறாத தத்துவம். இளையராஜா வந்த பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சோபிக்கவில்லையே. நடுநடுவில் கன்னே கனியமுதே, ஜனனி, ராஜநடை என்று நல்ல பாட்டுகள் உள்ள படங்களும் வந்தன. சிறை மாதிரி உண்மையிலேயே மெல்லிசைப் பாடல்கள் கொண்ட படமும் வந்தன. ஆனால் முடிந்தது முடிந்ததுதான். அது போலத்தான் இங்கும்.
இளையராஜா நம்மைக் கூட்டிச் சென்ற உயரங்களைக் காண்கையில் அழகியெல்லாம் ஒன்றுமேயில்லை. உளியின் ஓசை பாட்டெல்லாம் உண்மையிலே மிகச் சுமார்தான். கல்லாய் நின்றேன் பாடல் மட்டும் தேவலை. ஆனால் அது கூட காதல் வானிலே பாட்டை நினைவு படுத்துகிறது. ஒரு சரித்திரப் படத்துக்குத் தேவையான அழுத்தம் சிறிதும் இல்லை என்பதே உண்மை.
இளையராஜாவின் வரவினால் மற்றவர்களுக்கு விளைந்தவைகளே இளையராஜாவிற்கு இப்பொழுது விளைந்திருக்கிறது. மாற்றம் என்பது மாறாத தத்துவம்.
அதுலயும் போக்கிரி இருக்கு. விஜயோட படம். அதுவும் எஸ்.பி.முத்துராமன் படம். அதுவும் தெலுங்குல சுட்டாளுன்னாரு ஜாக்கிரதா-ன்னு வந்த படத்தோட ரீமேக்தான். அதுவும் மொதல்ல ரஜினிக்குப் பிடிக்காத படம். பிறகு ஒத்துக்கிட்டாரு.
வரணுமாவா? வந்து வருசம் பதினஞ்சு க்கும் மேல ஆகப் போகுது. :-)
// எம்.எஸ்.வி டு ராஜா, ஒரு புதிய ட்ரெண்டு மாற்றம் இருந்தது, இசையில்.//
ராஜா டூ ரகுமான் மாற்றத்துலயும் டிரெண்டு மாற்றம் இருந்தது. அதுக்கு சாட்சி... யுவன் சங்கர்ராஜாவே ரகுமான் டிரெண்டைப் பின்பற்றுவது. அவருடைய அப்பாவைப் போல சிறந்த இசைமேதையாக இல்லாத காரணத்தினால்தான் யுவனால் புது டிரெண்டை உருவாக்காமல்..டிரெண்டைப் பின்பற்றுகிறவராகப் போய்விட்டார். ஒவ்வொரு டிரெண்டு மாற்றத்துலயும் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் மாறுனது மாறுனதுதான்னு தோணுது.
// ஆனா, ராஜா இந்த ட்ரெண்டுக்கும், அடிச்சு ஆடின படங்கள் உண்டே? //
எம்.எஸ்.வி கொண்டு வந்த டிரெண்டுக்கும் அடிச்சு ஆடுன படங்கள் உண்டே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டம். ஆனா நல்லாப் பாத்தீங்கன்னா.. இந்த டிரெண்டு மாற்றம் வரும் ஆண்டு இடைவெளி குறைஞ்சிருக்கு. 50ல வந்த எம்.எஸ்.வியை 76ல் வந்த இளையராஜா டிரெண்டு மாத்தினாலும் 82 வரைக்கும் எம்.எஸ்.வியும் பிரபலமாவும்...80களின் கடைசியில் நானும் இருக்கிறேன் வகையாகவும் (நீதிக்குத் தண்டனை மாதிரி படங்கள்) இருந்தார். ஆக 25 வருடம் முதல்நிலை. ஐந்து வருடம் சறுக்கல் எம்.எஸ்.விக்கு. 76ல் இருந்து 93 வரைக்கும்...அதாவது 17 வருடங்கள் முதலிடமாகவும் பிறகு ஐந்து வருடங்கள் சறுக்கல். இதே நிலைதான் ரகுமானுக்கும். அடுத்த டிரெண்டு மாற்றுனருக்காகத் தமிழ்த்திரையுலகம் தயாராக இருக்கிறது என்பதே உண்மை.
// ஹ்ம். பொறுத்திருந்து பாக்கணும்.//
உண்மைதான். ஆனாலும் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்த முடிவுதான்.
// என்னுடைய தனிப்பட்டக் கருத்து, ஈகோக்கு மருந்து கொடுத்தா, எல்லாம் சரியா போகும். //
ஈகோவுக்கு மருந்து தேவைதான். ஆனால் அது எவ்வளவு பலன் கொடுக்கும் என்பதே கேள்விக்குறிதான். அத்தோடு திரைப்படத்தையும் தாண்டி இளையராஜா நிறைய செய்ய முடியும். செய்தால் நல்லது.
நீங்களும் படம் பாத்துட்டீங்களா. நான் இன்னும் பாக்கலை. ஊர்ப்பக்கம் போனாத்தான் பாக்க முடியும். இல்லைன்னா ஆன்லைன்ல நல்ல பிரிண்ட் வர்ர வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.
கோவி இந்தப் பதிவு இரண்டு விஷயங்களை அலசுகிறது. ஒன்று வாரிசு அரசியல். மற்றொன்று கருணாநிதியின் சமீபத்திய ஆட்சிமுறை. இரண்டுமே விமர்சனத்திற்கு உரியதுதான்.
முதலில் வாரிசு அரசியல். இதில் தீடீர் குதிப்பு...முதலிலிருந்தே குதிப்பு என்று இரண்டு வகை உண்டு. ஸ்டாலினைப் பொருத்தவரை முதலில் இருந்தே தட்டுத்தடுமாறி அடியெல்லாம் வாங்கித்தான் வந்திருக்கிறார். வந்தபிறகு அவருக்கென்று ஒரு அடையாளமும் உருவாக்கிக் கொண்டார். ஆகையால் அரசியலில் அவரது இருப்பை அவ்வளவாக விமர்சிக்க முடியவில்லை. அதுவுமில்லாமல் தகுதியிருந்து..ஆனால் வாரிசு என்ற காரணத்தினால் வரமுடியாமல் போகுமானால் அதுவும் துரதிர்ஷ்டமே.
ஸ்டாலின் வாரிசு அரசியலை ஏற்றுக்கொண்ட நிலையில் வேறெந்த வாரிசு அரசியலையும் தவறு என்றும் தார்மீக உரிமை போய்விடுவதும் ஒரு விதத்தில் உண்மைதான். பொதுவில் நாம் செய்தால் சரி. அடுத்தவன் செய்தால் தவறுதானே.
விமர்சனம் என்று வந்தால் அழகிரியின் இருப்பு அதிகமாக விமர்சிக்கப்பட வேண்டியது.
அடுத்தது கருணாநிதி அவர்களின தற்போதைய ஆட்சி. அது குறித்து வருத்தமே மிஞ்சுகிறது. ஏதோ ராஜதந்திரம் என்று ஒகேனக்கல் பிரச்சனையை தேர்தலுக்குப் பின்னால் தள்ளிப்போட்டது சிலாகிக்கப்பட்டது. அந்த ராஜதந்திரம் ஓன்றுமே செய்யாமல் இருப்பது என்பது இப்பொழுதுதான் புரிகிறது. எந்தத் தேர்தலுக்குப் பிறகு என்று சரியாகச் சொல்லாமல் விட்டு விட்டாரோ!!! அடுத்தது மீனவர் பிரச்சனை. கரைமேல் பிறக்க வைத்தான். அவர்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்.
அப்புறம்.. அந்தக் கத்திப்பாரா ஜங்ஷன்.... அந்தப் பாலத்தை எப்ப முடிப்பாங்கன்னே தெரியலை.
இந்த விஷயங்கள்ள ஜெயலலிதா என்ன கிழிச்சிருப்பாருன்னு பாத்தா மண்ணாங்கட்டிதான். ஆனா அதே கட்டிதான் இங்கயும் இருக்குன்னு சொல்றதுக்கு வருத்தமாத்தான் இருக்கு.
அப்புறம் ஓன்னு கேக்கனும்னு நெனச்சேன். ஒரு அமைச்சர் நல்லா வேலை பாக்குறப்போ பாராட்டுவது நல்லதே. தவறேதும் இல்லை. ஸ்டாலின் நல்லா வேலை பாத்தா பாராட்டுறது சரியே. ஆனா மத்த அமைச்சருங்க? அவங்கள்ளாம் நல்லா வேலை பாக்குறாங்களா? அவங்களையும் இதே மாதிரி பாராட்டுறாரா?
அடம் பிடித்தது அன்று. அடுத்த முறை உறுதியாகத் திடம் பிடித்ததும் நன்று. காத்திருக்கிறேன் நந்நாள் என்னும் அந்நாளுக்காக. :D
// அவரு தான் இதுக்கெல்லாம் நல்லா அர்த்தம் எழுதுவாரு! ஆனா இப்போ அவர் அவ்வளவா சாமிப் பாட்டெல்லாம் எழுதறதில்ல!"
"ஏன்-பா?"
"அடுத்த வாட்டி அவரு நம்ம வீட்டுக்கு வரும் போது, அவரையே கேட்டுக்குங்க!//
இங்கயே சொல்றேன். அடுத்த வாட்டி போன் பண்றப்போ சொல்லீருங்க. கலீல் கிப்ரான் சொன்னாராம்..ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணர்கையில் மந்தையை விட்டு விலகுகின்றன. :-) சிறியேன் நான் யாதும் அறியேன் என்று உணர்கையில் மந்தையை விட்டு விலகுகிறேன். மந்தை போனாலும் எந்தையாம் கந்தை விட்டு விலகவில்லை. :-)
// சரி...நானே உங்களுக்கு விளக்கஞ் சொல்லி கந்தர் அலங்காரம் எழுதறேன்! சந்தோசமா?" //
கண்டிப்பா எழுதுங்க. மிக்க மகிழ்ச்சி. தாய் கேட்டேனும் முருகனுக்கு நீங்கள் எழுதனும்னு இருக்கு. அதான் இது. :-)
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் பூக்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில் கந்தனுக்கு அலங்காரம் செய்துள்ளார் அருணகிரியார்.
இதை இந்தப் பதிவில் சொல்லியுள்ளேன். http://iniyathu.blogspot.com/2005/10/blog-post.html
அலங்காரம் ஏன் என்று கேள்வி வருகையில் வர வேண்டிய இன்னொரு கேள்வி...கோயில் ஏன்? ஏனென்றால் கோயிலில்தானே அலங்காரம் நடக்கிறது. நெஞ்சகமே கோயில். நினைவே சுகந்தம். அன்பே மஞ்சன நீர். பூசை கொள்ள வாராய் பராபரமே என்று சொல்கிறதே தமிழ்.
அப்படி நெஞ்சமாகிய கோயிலில் அருணகிரி முருகனுக்குச் செய்த அலங்காரமே கந்தரலங்காரம். அதை மலர் தொடுத்து கந்தம் தெளித்து சூடம் ஏற்றிச் செய்வதே அலங்காராம் எனக்கருதுவதும் சரியன்று என்பது என் கருதுவது. அவ்வளவே நான் அறிந்தது.
இதற்கும் மேலதிகத் தகவல்கள் இருக்கும். அவைகளை நான் அறியேன். ரவி வந்து விளக்குவார் என்று கேட்டுக்கொள்கிறேன்.
// திருலோகச்சந்தர் சிபாரிசில் தான் இதை மொழி மாற்ற இருந்தார்களாம். இதே கதை ஹிட்லர் உமாநாத் படமாக முன்னர் தெலுங்குக்கு முன்னரே தமிழில் வந்ததாகவும் சொல்லியிருக்கிறார் சரவணன். ஹிட்லர் உமாநாத் நான் பார்க்கலை.//
ஹிட்லர் உமாநாத் படம் திருலோகச்சந்தர் இயக்குனதுதான். இதே கதைதான். கொஞ்சம் வித்யாசமா இருக்கும். அதாவது கதாநாயகன் அப்பாவியாய் இருப்பாரு.சிவாஜி கே.ஆர்.விஜயா நடிச்ச படம். படமும் ஓரளவுக்கு ஓடுன படந்தான். ஆனா கடி. அதுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.
அந்தப் படத்துல இருந்து ஒரு கலக்கலான சுருளிராஜான் காமெடிப் பாட்டு இங்க.
இவ்வளவு நாளா... ரஜினிக்கு நடிக்கவே தெரியாது. இவரையெல்லாம் ஒரு நடிகர்னு எப்படிச் சொல்றதுன்னு கேட்டுக்கிட்டிருந்தேன். அவருடைய திறமை இப்பப் பளிச்சிடுது. ரஜினிகாந்தைப் போலச் சிறந்த நடிகரையும் பார்க்க முடியாது. தமிழர்களைப் போல ஏமாளிகளையும் பார்க்க முடியாது. இனிமே ரஜினி படமெல்லாம் பாக்குறதில்லைன்னு முடிவு பண்ணியாச்சு. அது பத்தி ஒரு பதிவும் போட்டாச்சு.
ஐயா.... நான் என்னைக்குமே ரஜினி ரசிகர் கெடையாது. அவரு நல்ல படம் நடிச்சா கண்டிப்பா பாத்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனா எனக்கு வெவரம் தெரிஞ்சி அவரு நல்லபடம் நடிக்கலை. அவரு நடிச்ச நல்ல படமெல்லாம் பழைய படங்களா இருக்குது. அதையும் பாத்திருக்கேன்.
அவரு வெறும் நடிகர்தான். அப்படித்தான் நான் முந்தியும் நெனச்சிக்கிட்டிருந்தேன்..இப்பவும் நெனைச்சிக்கிட்டிருக்கேன்.
ஆனா அவரைத் தலைவர்னு நம்ம பயக ரொம்பப் பேரு சொல்றாங்க. அதுவும் அப்பிடியோன்னு நெறையப் பேரு நம்பீட்டாக வேற.
இப்பத்தானத் தெரியுது. அவரைத் தலைவர்னு சொன்னவங்களுக்கே அவரு புள்ளப்பூச்சியாத் தெரிஞ்சிருக்காருன்னு. இது மொதல்லயே தெரிஞ்சிருந்தா இவ்ளோ பிரச்சனைகள் வந்திருக்காதுல்ல.
ஆனா ஒன்னுங்க.. இனிமே ரஜினி சினிமால சண்டை போட்டா... கண்டிப்பா சிரிப்புதாங்க வரும். :D
57 comments:
http://dharumi.blogspot.com/2008/07/261.html
தருமி சார், அந்தக் கல்லைக் கண்டால் பாட்டு மலையாளப் பாட்டோட காப்பியாம். :-)
இளையராஜா ரகுமான் தேவையில்லை... தேவாவைக் கூப்பிட்டிருந்தாலே எல்லாப் பாட்டும் ஹிட் ஆயிருக்கும்.
நீங்க சொன்ன மாதிரி மெல்லிசை மன்னரோ, இசைஞானியோ இசைப்புயலோ எல்லாப் படத்துலயும் எல்லாப் பாட்டும் நல்ல பாட்டு கொடுத்ததில்லை. மொக்கைகளும் உண்டு. ஆனா இவங்க மூனு பேருமே கொஞ்சம் சிரத்தை எடுத்து செய்யக் கூடியவங்க. அந்தச் சிரத்தையும் முனைப்பும் ஹிம்மேஷ் ரேஷமய்யாவிடம் தெரியவில்லை. கல்லைக் கண்டால் பாட்டைத் தவிர எந்தப் பாட்டும் காட்சியோடு பொருந்தவில்லை என்பது என் கருத்து. முகுந்தா முகுந்தா நல்லாயிருக்கு. ஆனா கோயிலோட கற்சுவருக்குப் பூசுன ஆயில் பெயிண்ட் மாதிரி பளபளன்னு இருக்கு. நல்லாருக்குன்னு சொன்ன கல்லைக் கண்டால் பாட்டும் காப்பியாம்.
http://videospathy.blogspot.com/2008/07/blog-post.html
எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகர். இசையமைப்பாளராக அவர் சில பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பாடகராகவே சிறப்பாக ஜொலித்தார் என்பது என் கருத்து. எல்லாப் பாடகர்களிலும் ஒரு குட்டி இசையமைப்பாளர் ஒளிந்திருக்கிறார். மயூரி படத்திற்கு இசை எஸ்.ஜானகி. எஸ்.பி.பி கிடையாது. டி.எம்.எஸ் இசையமைத்த முருகன் பாடல்கள் மிகப் பிரபலம். இசையமைப்பாளராக பி.சுசீலாவும் சில பல பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
துடிக்கும் கரங்கள் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. இளையராஜாவின் சாயல் தெரிந்தாலும் எல்லாப் பாடல்களுமே அருமை. மேகம் முந்தானை, சந்தனம் பூசும் மஞ்சள் நிலாவும் பாடல்களும் மிக அருமை. சிகரம்தான் உண்மையிலேயே சிகரம்.
http://radiospathy.blogspot.com/2008/07/blog-post_07.html
இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்பதற்காக ரொம்பக் காலம் காத்திருந்தது இன்றுதான் கைகூடியிருக்கிறது. நன்றி பிரபா. :) இதற்காக தம்பி ராமும் மதுரையில் கடைகடையாக ஏறியிறங்கியிருக்கிறார்.
ரெண்டு பேரும் தூங்கிக் கிட்டே இசையமைச்சிருப்பாங்க போல. :) சித்ரா பாடுற பாட்டும் வாணி ஜெயராம் பாடுற பாட்டும் அப்படியே மெல்லிசை மன்னரின் இசைச்சாயல். ஆனால் அந்தக் கரிசக்காட்டுக் கடலை பாட்டு இரண்டு பேரின் சாயலும் இல்லாமல் இருக்கிறது. ஒருவேளை மொத்தப் பாடல்களுக்கு மெட்டும் இசையும் போட்டுக் கொடுத்திருந்திருப்பார்கள். பிற்காலத்தில் யாராவது அவைகளைப் பயன்படுத்தி இசைக்கோர்த்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
http://thulasidhalam.blogspot.com/2008/07/1.html
ஆகா டீச்சரின் அடுத்த தொடர் தொடங்கியாச்சேய்...
ஆனா ஒன்னு டீச்சர். தன்னவீனத்துவமான தலைப்பு வெச்சிருக்கீங்க. தன்னவனீத்துவத்தின் தனிச்சிறப்பு பதிவு முழுக்க இருக்கு. புதுமைகளைப் புகுத்துறதுல நீங்க பெரிய ஆள். வலைப்பதிவுல முதன்முதலா தன்னவீனத்துவப் பதிவு போட்ட பெருமை ஒங்களுக்குத்தான். :)
பிஜித் தீவுகளை இன்னும் பாக்கலை. சீக்கிரம் பாக்கனும்னு ஆசைய உண்டாக்குதுங்க ஒங்க பதிவு. :)
நானும் மேகத்தச் சுத்திச் சுத்திப் படமெடுத்திருக்கேன். ஆனா தேவலோகாஸ் இருக்காங்களான்னு பாக்கவேயில்லையே!!! சேச்சே! விட்டுட்டேனே.. அடுத்த வாட்டி தெளிவாப் பாத்துர்ரேன் டீச்சர். :)
http://cdjm.blogspot.com/2008/07/blog-post.html
ஜோ, உங்கள் கருத்தையும் கடுப்பையும் நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
மத்திய மாநில அரசுகள் முதுகெலும்பைக் கழற்றி வைத்து காலம் பலவாயிற்று. ச்சே! என்னய்யா அரசியல்வாதிங்க நீங்க. ஒரு சாதாரண மனுசனுக்கு இருக்குற அக்கறை கூட ஒங்களுக்கு இல்லாமப் போயிருச்சே!
http://thenkinnam.blogspot.com/2008/07/553.html
வாங்க வாங்க. தேன் கிண்ணத்திற்கு உங்கள வாங்க வாங்கன்னு வரவேற்கிறேன். :)
இந்தத் தொகுப்பு ரொம்பப் பிரமாதம். குறிப்பாக காலதேவன் ராஜகுமார் உரையாடல். நல்ல அமைஞ்சிருக்கு.
ஆனா அத்தோட சேத்து அபூர்வப் பாடல்களைக் குடுத்திருக்கீங்களே..அது...அது இன்னும் சிறப்பு.
கவியரசர் கண்ணதாசனையும் இசையரசி பி.சுசீலாவையும் தெரியாத இசையன்பர்கள் இருக்க முடியாது. ஆனா அவங்க மொதப் பாட்டு? அதையும் கேட்கும் வாய்ப்பைக் கொடுத்தமைக்கு நன்றி.
வைஜயந்திமாலாவின் அம்மாவாகிய வசுந்தராதேவி அவர்களின் பாட்டும் சுந்தரிபாயின் பாட்டும் கூட இப்பொழுதுதான் கேட்கிறேன். கேள்வியும் படுகிறேன்.
இது போன்ற இன்னிசையமுதங்கள் தேன் கிண்ணத்தில் தொடர வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
http://cvrintamil.blogspot.com/2008/07/blog-post_11.html
படங்கள்ளாம் நல்லா வந்திருக்கு தம்பி. பிளிக்கர் தளத்துலயும் அருமையான படங்களாவே இருக்கு.
அதுல அந்தப் போர்க்களக் காட்சியப் பாக்குறப்பவே குப்புன்னு வேர்க்குதே. சிற்பிகளின் கைவண்ணம் ஒரு சிறப்புன்னா..அதக் கப்புன்னு படம் பிடிச்ச உன்னோட கைவண்ணமும் ஒரு சிறப்பு.
http://radiospathy.blogspot.com/2008/07/12.html
இன்னிசை மழை - ஷோபா
இவங்க பாடகியும் கூட. இவங்க தம்பிதான் எஸ்.என்.சுரேந்தர்.
இன்னிசை மழையில் கதாநாயகி யாரு? யாரோ புதுமுகம்னு நெனைக்கிறேன்.
http://jyovramsundar.blogspot.com/2008/07/blog-post_1830.html
உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் நண்பரே. கி.ரா எழுதினார் கதைகள். அத்தனையும் பட்டிக்காட்டு இலக்கியம். அவை தமிழ் இலக்கியத்திற்குத் தவறான முகத்தையா தந்து விட்டன?
எப்படி ஒரு விஷயத்தைச் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது நாகரீகம். உயிரியல் பாடம் படிக்கையில் ஒவ்வொரு உடலுறுப்புகளையும் பேரைச் சொல்லித்தான் படிக்க வேண்டும். காமம் என்ற சொல்லில் பிரச்சனையென்றால் காமத்துப் பால் பற்றி வள்ளுவரும் வலைப்பூ தொடங்க முடியாது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள சினிமா பதிவுகளில் இருந்த ஆபாசம் உங்கள் பதிவுகளில் இருக்கவில்லை என்பது என் கருத்து.
தமிழ்மணத்தின் இந்த முடிவு வருத்தமளிக்கிறது. நல்ல வேளை... என் கொங்கை நின் அன்பர் என்று நான் கதை எழுதிய பொழுது இந்த மட்டுறுத்தல் இல்லை.
http://blog.thamizmanam.com/archives/132
வணக்கம் தமிழ்மண நிர்வாகத்தினரே,
உங்களது இந்த முடிவு மிக வியப்பாக இருக்கிறது. காமக் கதைகள் என்று மட்டுமே வரக்கூடாதா? இல்லை வேறு சொற்களும் உள்ளனவா? கட்டில், படுக்கை, இரவு, ஆழம், தீண்டல் இதெல்லாம் வரலாமா? அப்படியென்றால் அவரை காமக் கதைகள் என்று எழுதுவதற்குப் பதிலாக கட்டில் கதைகள் என்று எழுதச் சொல்லலாம். இல்லையென்றால் படுக்கையறைக் கதைகள்.
அப்படி உண்மையிலேயே தவறான பதிவுகளை நிறுத்த வேண்டும் என்றால்... பண்பட்டவர்கள் என்றொரு பிரிவு தொடங்குங்கள். இல்லையென்றால் ஜட்டிக்குப் பதில் சட்டி என்றுதான் எழுதுவார்கள். அப்பொழுது என்ன செய்வீர்கள்?
என் கொங்கை நின் அன்பர் என்று முன்பு ஒரு கதை எழுதினேன். ஆகா கொங்கை என்று வந்து விட்டதே என்று அந்தக் கதையை தடுத்து விடலாமா?
உங்களுடைய அளவுகோல் புரியவில்லை.
ஒன்று செய்யுங்கள். பேசாமல் எந்தெந்தச் சொற்கள் எல்லாம் தலைப்பில் வரக்கூடாது என்று சொல்லுங்கள். பதிவு எழுதுகின்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
http://cyrilalex.com/?p=440
வணக்கம் சிறில்
இதோ கதை இங்கே :-)
http://gragavan.blogspot.com/2008/07/tamil-science-fiction.html
http://muruganarul.blogspot.com/2008/07/100-kavadi-chindhu.html
முருகனருள் வலைப்பூவில் கூடிப் பணிபுரியும் வாய்ப்பளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. நம்முடைய நட்பும் மருகனன்பும் கூடிப் பெருகி இந்த வலைப்பூவில் இன்னும் பல நட்புகள் சேர பலப்பல பாடல்களைப் பதிய வேண்டும் என்று முருகன் பெயரால் கேட்டுக் கொள்கிறேன்.
அனைவரின் குரலிலும் முருகன் புகழைக் கேட்டு மகிழ்ந்தேன். இது போலப் பல பாக்களை உங்கள் குரலில் கேட்டு மகிழ காத்துக் கொண்டிருக்கிறேன்.
http://kaalapayani.blogspot.com/2008/06/blog-post_6557.html
நல்லாருக்குங்க கதை...பிடிச்சிருக்கு முடிவு. நடுவுல விளக்கங்கள் நெறைய இருக்குற மாதிரி இருந்தாலும்.. நல்ல கரு. நல்ல கதை. என்னுடைய வாழ்த்துகள்.
http://nilaraseegansirukathaigal.blogspot.com/2008/07/odocoileus-virginianus.html
முடிவு அருமைங்க...நல்லாயிருந்தது. மான் தப்பிச்சதுல மிக மகிழ்ச்சி.
போட்டிக்கு வாழ்த்துகள்.
http://venpu.blogspot.com/2008/07/blog-post.html
மிக அருமை. மிகவும் அருமை. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
http://vettipaiyal.blogspot.com/2008/07/blog-post.html
பாலாஜி கதையைப் படித்தேன். நல்ல கருத்துள்ள கதை. இதில் வருகின்ற நல்வினைத் திட்பம் மிக அருமை. நமக்கெல்லாம் தேவையானது.
இது அறிவியல் கதையா இல்லையா என்பது விவாதமானால்..இது அறிவியல் கதையேதான்.
இது அறிவியல் புனைவுக் கதையா என்றால்...புனையப்பட்ட அறிவியல் கதை என்பேன். அறிவியலில் புதிதாகப் புனையாத கதையென்பேன்.
மிகவும் நல்ல முயற்சி. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
http://kanapraba.blogspot.com/2008/07/blog-post.html
இலங்கை வானொலித் தமிழன்பர்கள் குறித்துத் தகவல்கள் மிக அருமை. அந்தப் பழைய புகைப்படமும் மிக நன்றாய் இருக்கிறது.
நீங்க சொன்ன மாதிரி.. நல்ல மலையாளப் படங்களையெல்லாம் தமிழ்ப் படுத்துறேன்னு கொடுமைப் படுத்துறாங்க. சந்திரமுகி..இப்ப குசேலன். அப்புறம் கோமதிநாயகம்... என்னவோ போங்க. திருந்த மாட்டாங்க போல....
http://videospathy.blogspot.com/2008/07/bobby.html
இந்த லெச்சுமிக்காந்தனும் பியாரிலாலனும் (ரெண்டு பேரும் மன்னிக்க) எக்கச்சக்க இந்திப் படங்களுக்கு இசையமைச்சிப் புகழோட இருந்தவங்க. நெறைய ஹிட் பாட்டுகள் குடுத்திருக்காங்க.
பாபி படம் ரிஷிகபூருக்கும் டிம்பிள் கபாடியாவுக்கும் வாழ்வளித்த படம். அந்தப் படத்திலிருந்து அருமையான பாடலைக் குடுத்தமைக்கு நன்றி.
http://radiospathy.blogspot.com/2008/07/13.html
வரும்..வரும்...ரும்..ரும்..ரும்..ரும்ரும்ரும்ரும்ரும்ரும்
அதானே? ;)
இந்தப் படத்துல நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.வரலட்சுமி அவர்கள் நடித்துப் பாடியிருந்தார்கள். இளையராஜா இசையில் அவர் பாடிய இரண்டாம் பாடலான "உன்னை நானறிவேன்" மிகவும் அருமை.
இந்தப் படம் வந்த பொழுது படம் பார்த்த எனக்குக் கதையே புரியவில்லை. அந்த வயதில் பல விஷயங்கள் புரியவேயில்லை. பிறகு விவரங்கள் தெரியும் பொழுது.. படத்தில் ஒவ்வொரு அணுவும் சிந்தித்து இழைக்கப்பட்டது என்பது புரிந்தது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால்... பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க. அனைவருக்கும் வரிசையில் லட்டு விநியோகம் நடக்கும். கதாநாயகி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக நாயகன் வரிசையில் வருவான். பார்த்துப் பார்த்து ரசிப்பான். அவன் முறை வருகையில் லட்டுதட்டு தீர்ந்து போயிருக்கும். அடுத்த தட்டு வருவதற்காக நிறுத்தி வைப்பார்கள். இதே நாமென்றால் எரிச்சல் பட்டிருப்போம். ஆனால் அவன் மகிழ்கிறான். ஏனென்றால் கூடக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாமே.
அதே பாட்டில் கொங்கை என்று வரும். அந்தச் சொல் வருகையில் அனிச்சையாக தன்னுடைய முந்தானையைச் சரி செய்வார் நாயகி. பாட்டில் கொங்கை என்ற சொல்லையும் பிடித்து...அனிச்சைச் செயலையும் பிடித்து படத்தை ரசிக்க வேண்டும். இப்படி மூளைக்கு நிறைய வேலை இருக்கும். அதனால்தானோ என்னவோ... படம் ஓடவில்லை.
http://thulasidhalam.blogspot.com/2008/07/2.html
முருகா...
இந்தச் சுற்றுலாவுல என்னைய நெனைக்கும் படியான சந்தர்ப்பம் வந்துச்சுன்னு நீங்க சொன்னப்ப எதுனாலன்னு யோசிச்சேன். இப்பப் புரிஞ்சது. முருகா முருகா...
அதென்னவோ தமிழ்நாட்டுக்காரங்களுக்குன்னு வந்து சேந்தான் இந்த முருகன். எங்க போனாலும் விடாம.
நீங்க தொடர்ந்து சொல்லுங்க டீச்சர். கேக்குறோம்.
http://thulasidhalam.blogspot.com/2008/07/3.html
முருகன்னதும் என்னோட நினைவு வர்ரதாச் சொன்னீங்களே. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு டீச்சர். வேலும் மயிலும் துணை. வடிவேலனே துணை. முருகா.
முருகனுடைய திருவுருவம் மிக அழகாக இருக்கிறது. வேலைப் பிடித்தன் காலைப் பிடித்தவர்க்கு ஏது குறை! முருகா.. உனை என்றென்னும் மறவாமை வேண்டும்.
// புரியாம முழிச்சவருக்குக் கொஞ்சமா ஹனுமன் கதை. ( சான்ஸ் கிடைக்கும்போது விடலாமா?) //
இது டீச்சர் ஸ்டைல் :D
http://govikannan.blogspot.com/2008/07/blog-post_21.html
மிகச்சரியான கருத்து. ஒப்புக்கொள்ள வேண்டியதே.
ஆன்மீக ஆர்வம் இருப்பதால் இறைவன் பெயரைச் சொல்லும் எதற்கும் ஆதரவு தர வேண்டியதில்லை. திராவிடனாக இருப்பதால் மாண்புமிகு கலைஞப் புரட்சித் தலைவ/விகளுக்கு கண்மூடித்தன ஆதரவும் தரத் தேவையில்லை.
மிகச் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
http://vivasaayi.blogspot.com/2008/07/1.html
தேங்கா சுடுறது ரொம்ப நல்லாருக்கும். சோளம் கம்பெல்லாம் போட மாட்டோம். வெல்லம், பொரிகடலை முக்கியமாப் போடுவோம். சுட்ட தேங்காய்ச் சுவையே சுவை. அடுத்த வாட்டி ஒங்களப் பாக்குறப்போ தேங்கா சுட்டுக் குடுங்க. :)
http://veyililmazai.blogspot.com/2008/07/blog-post_20.html
கதை ரொம்ப நல்லாருக்குதுப்பா. படிச்சு ரசிச்சேன்.
எல்லாரும் காலம் ஓடுதுன்னு சொன்னா...நீ காலம் அப்படியேதான் இருக்கு. நம்மதான் ஓடுறோம்னு சொல்ற :D நல்லாருக்கு கற்பனை.
வெற்றி பெற வாழ்த்துகள்.
http://www.sridharblogs.com/2008/07/blog-post_23.html
ஒரேயொரு கேள்வி மட்டும் கேட்டுட்டு எஸ்சாகிக்கிறேன். ஏன்னா.. கதையில ரொம்பப் பெரிய சமாச்சாரமெல்லாம் இருக்கு.
கதை முடியிறப்போ சுரேஷ்னு ஒருத்தர் வர்ராரே... அவரு பெனாத்தலார்தானே?
http://www.sridharblogs.com/2008/07/blog-post_23.html
// ஸ்ரீதர் நாராயணன் said...
//கதை முடியிறப்போ சுரேஷ்னு ஒருத்தர் வர்ராரே... அவரு பெனாத்தலார்தானே//
:-)) கதையில 2 சுரேஷ் வர்றாங்கப் பாருங்க. ஆனா 2 பேருமே பினாத்தவே இல்லை. அவங்க 2 பேரும் ஒண்ணா அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கேன். //
அப்ப பெனாத்தலார் உண்மையிலேயே பெனாத்துறார்னு சொல்றீங்களா? இத அவர் கிட்ட நேரடியாச் சொல்ற துணிச்சல் இருக்குதா?
இன்னொரு கேள்வி. அந்த ரெண்டு சுரேஷும் ஒரே சுரேஷா? இல்ல ஒருத்தர் சுர். இன்னொருத்தர் ஏஷாவா??
http://ulaathal.blogspot.com/2008/07/blog-post_25.html
கலக்கலா இருக்குதுங்க. ஒவ்வொரு பொண்ணும் அவ்ளோ அழகு. அப்பப்பா.... அவங்களையெல்லாம் பாக்குறதுக்காகவே அந்தூருக்கு ஒரு வாட்டிப் போகனுங்க.
இந்தக் கதை புதுசா இருக்கு. ஆனா இன்னொரு கதையும் படிச்சிருக்கேன். மயில்ராவணன்னு ஒருத்தரு இருந்தாராம். அவரு ராமரு லச்சுமணரு எல்லாரையும் தூக்கிக் கொண்டு போய் அவரோட பாதாள உலகத்துல ஒளிச்சி வெச்சிட்டாராம்.
அனுமாரு அவரக் கண்டுபிடிக்கப் போறப்ப அங்க ஒரு அனுமாரு இருந்தாராம். அவரு இவர உள்ள விடாமச் சண்டை போட்டாராம். அப்புறம் என்னடான்னு பாத்தா.. இவரு அவரோட மகராம். என்னடா கலியாணம் கெட்டாம... டேட்டிங் பண்ணாம எப்படி மகர்னு யோசிச்சா... சீதையப் பாக்குறதுக்காக இவரு பறக்குறப்போ.....அது தண்ணீல சிந்தீருச்சாம்...அத ஒரு மீன் லபக்கோஸ்திரி பண்ணவும்... அதுக்கு பொறந்த பையந்தான் இந்த அனுமாராம். இந்தக் கதையக் கேள்விப் பட்டிருக்கேன்.
http://radiospathy.blogspot.com/2008/07/blog-post_8868.html
குணா திரைப்படம் மிகவும் அளவுக்கதிகமாகச் சிந்தித்ததன் விளைவாகப் பிறந்த படம். அத்தனை சிந்தனைகளுக்கும் தேவையான இசையைக் கொண்டு வருவதற்கு படம் வந்த பொழுது இருந்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா.
நல்ல இசைத்தொகுப்புகளைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கமல், சந்தானபாரதி, இளையராஜா ஆகியோரின் கலந்துரையாடலையும் கொடுத்தமைக்கு நன்றி. ரூமுக்குள் ஒளித்து வைத்தேன் என்று கங்கை அமரன் சொல்வது பொய்தான் என்றாலும்..உரையாடலை ரசிக்க முடிந்தது.
http://ganakandharvan.blogspot.com/2008/07/blog-post_22.html
இந்தப் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். உடன் பாடியவர் பி.எஸ்.சசிரேகா.
http://surveysan.blogspot.com/2008/07/blog-post_27.html
இளையராஜா ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர். அவர் மட்டுமே மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
கானா பிரபா சொன்னது போல மாற்றம் என்பது மாறாத தத்துவம். இளையராஜா வந்த பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சோபிக்கவில்லையே. நடுநடுவில் கன்னே கனியமுதே, ஜனனி, ராஜநடை என்று நல்ல பாட்டுகள் உள்ள படங்களும் வந்தன. சிறை மாதிரி உண்மையிலேயே மெல்லிசைப் பாடல்கள் கொண்ட படமும் வந்தன. ஆனால் முடிந்தது முடிந்ததுதான். அது போலத்தான் இங்கும்.
இளையராஜா நம்மைக் கூட்டிச் சென்ற உயரங்களைக் காண்கையில் அழகியெல்லாம் ஒன்றுமேயில்லை. உளியின் ஓசை பாட்டெல்லாம் உண்மையிலே மிகச் சுமார்தான். கல்லாய் நின்றேன் பாடல் மட்டும் தேவலை. ஆனால் அது கூட காதல் வானிலே பாட்டை நினைவு படுத்துகிறது. ஒரு சரித்திரப் படத்துக்குத் தேவையான அழுத்தம் சிறிதும் இல்லை என்பதே உண்மை.
இளையராஜாவின் வரவினால் மற்றவர்களுக்கு விளைந்தவைகளே இளையராஜாவிற்கு இப்பொழுது விளைந்திருக்கிறது. மாற்றம் என்பது மாறாத தத்துவம்.
http://radiospathy.blogspot.com/2008/07/blog-post_28.html
பிரபா புதிரை நீங்க போட்டதும் ரெண்டு படங்க மனசுல வந்தது. ஒன்னு போக்கிரி ராஜா, இன்னோன்னு நல்லவனுக்கு நல்லவன்.
அதுலயும் போக்கிரி இருக்கு. விஜயோட படம். அதுவும் எஸ்.பி.முத்துராமன் படம். அதுவும் தெலுங்குல சுட்டாளுன்னாரு ஜாக்கிரதா-ன்னு வந்த படத்தோட ரீமேக்தான். அதுவும் மொதல்ல ரஜினிக்குப் பிடிக்காத படம். பிறகு ஒத்துக்கிட்டாரு.
ஆனா அதுல பாடுன பாடகிகள் ரெண்டு பேரு. ஒருத்தர் இசையரசி பி.சுசீலா. இன்னொருத்தர் ஜானகியம்மா. இவங்க ரெண்டு பேருமே ரொம்பப் பிரபலம். அங்க அவுட்டு. அதுவும் இல்லாம அதுல வாரிசு நடிகரோட அப்பா நடிச்சிருந்தாரு. அதாவது முத்துராமன். திரும்பவும் அவுட்டு. அப்புறம் அதுக்கு இசை மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். கானா பிரபா பதிவுன்னா இளையராஜாவாத்தான் இருக்கும்னும் இருக்கும்ல. ;-) ஆகையால ரெண்டாவது விடையத் தேர்ந்தெடுத்தாச்சு. :)
http://thulasidhalam.blogspot.com/2008/07/blog-post_28.html
ஆலிவ் பழங்கள். ஒடம்புக்கு நல்லது. குறிப்பா தோலுக்கு ரொம்ப நல்லது.
விடை சரியா டீச்சர்?
http://madippakkam.blogspot.com/2008/07/blog-post_28.html
ஆக... படத்தப் பாக்கனும்னு சொல்றீங்க. பாத்திருவோம். :-)
http://surveysan.blogspot.com/2008/07/blog-post_27.html
// Blogger SurveySan said...
ஜி.ரா,
மாற்றம் வரும்தான். இப்பவே வரணுமா? //
வரணுமாவா? வந்து வருசம் பதினஞ்சு க்கும் மேல ஆகப் போகுது. :-)
// எம்.எஸ்.வி டு ராஜா, ஒரு புதிய ட்ரெண்டு மாற்றம் இருந்தது, இசையில்.//
ராஜா டூ ரகுமான் மாற்றத்துலயும் டிரெண்டு மாற்றம் இருந்தது. அதுக்கு சாட்சி... யுவன் சங்கர்ராஜாவே ரகுமான் டிரெண்டைப் பின்பற்றுவது. அவருடைய அப்பாவைப் போல சிறந்த இசைமேதையாக இல்லாத காரணத்தினால்தான் யுவனால் புது டிரெண்டை உருவாக்காமல்..டிரெண்டைப் பின்பற்றுகிறவராகப் போய்விட்டார். ஒவ்வொரு டிரெண்டு மாற்றத்துலயும் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் மாறுனது மாறுனதுதான்னு தோணுது.
// ஆனா, ராஜா இந்த ட்ரெண்டுக்கும், அடிச்சு ஆடின படங்கள் உண்டே? //
எம்.எஸ்.வி கொண்டு வந்த டிரெண்டுக்கும் அடிச்சு ஆடுன படங்கள் உண்டே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டம். ஆனா நல்லாப் பாத்தீங்கன்னா.. இந்த டிரெண்டு மாற்றம் வரும் ஆண்டு இடைவெளி குறைஞ்சிருக்கு. 50ல வந்த எம்.எஸ்.வியை 76ல் வந்த இளையராஜா டிரெண்டு மாத்தினாலும் 82 வரைக்கும் எம்.எஸ்.வியும் பிரபலமாவும்...80களின் கடைசியில் நானும் இருக்கிறேன் வகையாகவும் (நீதிக்குத் தண்டனை மாதிரி படங்கள்) இருந்தார். ஆக 25 வருடம் முதல்நிலை. ஐந்து வருடம் சறுக்கல் எம்.எஸ்.விக்கு. 76ல் இருந்து 93 வரைக்கும்...அதாவது 17 வருடங்கள் முதலிடமாகவும் பிறகு ஐந்து வருடங்கள் சறுக்கல். இதே நிலைதான் ரகுமானுக்கும். அடுத்த டிரெண்டு மாற்றுனருக்காகத் தமிழ்த்திரையுலகம் தயாராக இருக்கிறது என்பதே உண்மை.
// ஹ்ம். பொறுத்திருந்து பாக்கணும்.//
உண்மைதான். ஆனாலும் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்த முடிவுதான்.
// என்னுடைய தனிப்பட்டக் கருத்து, ஈகோக்கு மருந்து கொடுத்தா, எல்லாம் சரியா போகும். //
ஈகோவுக்கு மருந்து தேவைதான். ஆனால் அது எவ்வளவு பலன் கொடுக்கும் என்பதே கேள்விக்குறிதான். அத்தோடு திரைப்படத்தையும் தாண்டி இளையராஜா நிறைய செய்ய முடியும். செய்தால் நல்லது.
http://www.sridharblogs.com/2008/07/blog-post_28.html
நீங்களும் படம் பாத்துட்டீங்களா. நான் இன்னும் பாக்கலை. ஊர்ப்பக்கம் போனாத்தான் பாக்க முடியும். இல்லைன்னா ஆன்லைன்ல நல்ல பிரிண்ட் வர்ர வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.
http://govikannan.blogspot.com/2008/07/blog-post_29.html
கோவி இந்தப் பதிவு இரண்டு விஷயங்களை அலசுகிறது. ஒன்று வாரிசு அரசியல். மற்றொன்று கருணாநிதியின் சமீபத்திய ஆட்சிமுறை. இரண்டுமே விமர்சனத்திற்கு உரியதுதான்.
முதலில் வாரிசு அரசியல். இதில் தீடீர் குதிப்பு...முதலிலிருந்தே குதிப்பு என்று இரண்டு வகை உண்டு. ஸ்டாலினைப் பொருத்தவரை முதலில் இருந்தே தட்டுத்தடுமாறி அடியெல்லாம் வாங்கித்தான் வந்திருக்கிறார். வந்தபிறகு அவருக்கென்று ஒரு அடையாளமும் உருவாக்கிக் கொண்டார். ஆகையால் அரசியலில் அவரது இருப்பை அவ்வளவாக விமர்சிக்க முடியவில்லை. அதுவுமில்லாமல் தகுதியிருந்து..ஆனால் வாரிசு என்ற காரணத்தினால் வரமுடியாமல் போகுமானால் அதுவும் துரதிர்ஷ்டமே.
ஸ்டாலின் வாரிசு அரசியலை ஏற்றுக்கொண்ட நிலையில் வேறெந்த வாரிசு அரசியலையும் தவறு என்றும் தார்மீக உரிமை போய்விடுவதும் ஒரு விதத்தில் உண்மைதான். பொதுவில் நாம் செய்தால் சரி. அடுத்தவன் செய்தால் தவறுதானே.
விமர்சனம் என்று வந்தால் அழகிரியின் இருப்பு அதிகமாக விமர்சிக்கப்பட வேண்டியது.
அடுத்தது கருணாநிதி அவர்களின தற்போதைய ஆட்சி. அது குறித்து வருத்தமே மிஞ்சுகிறது. ஏதோ ராஜதந்திரம் என்று ஒகேனக்கல் பிரச்சனையை தேர்தலுக்குப் பின்னால் தள்ளிப்போட்டது சிலாகிக்கப்பட்டது. அந்த ராஜதந்திரம் ஓன்றுமே செய்யாமல் இருப்பது என்பது இப்பொழுதுதான் புரிகிறது. எந்தத் தேர்தலுக்குப் பிறகு என்று சரியாகச் சொல்லாமல் விட்டு விட்டாரோ!!! அடுத்தது மீனவர் பிரச்சனை. கரைமேல் பிறக்க வைத்தான். அவர்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்.
அப்புறம்.. அந்தக் கத்திப்பாரா ஜங்ஷன்.... அந்தப் பாலத்தை எப்ப முடிப்பாங்கன்னே தெரியலை.
இந்த விஷயங்கள்ள ஜெயலலிதா என்ன கிழிச்சிருப்பாருன்னு பாத்தா மண்ணாங்கட்டிதான். ஆனா அதே கட்டிதான் இங்கயும் இருக்குன்னு சொல்றதுக்கு வருத்தமாத்தான் இருக்கு.
அப்புறம் ஓன்னு கேக்கனும்னு நெனச்சேன். ஒரு அமைச்சர் நல்லா வேலை பாக்குறப்போ பாராட்டுவது நல்லதே. தவறேதும் இல்லை. ஸ்டாலின் நல்லா வேலை பாத்தா பாராட்டுறது சரியே. ஆனா மத்த அமைச்சருங்க? அவங்கள்ளாம் நல்லா வேலை பாக்குறாங்களா? அவங்களையும் இதே மாதிரி பாராட்டுறாரா?
http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post.html
முருகப் பெருமான் வலைப்பூவிற்கு எனது வாழ்த்துகள். தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்.
http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post_28.html
அம்மா கேட்டதற்காகக் கந்தரலங்காரம் விளக்கம் சொல்ல வந்த ரவிக்கு நன்றி.
அமுதாம் தமிழே இனிது. அதுவும் முருகன் மேலென்றால்? இனியென்றும் இனியதே. அந்த இனியது கேட்க இனி அதுவாகக் கூட்டம் இங்கே வரப் போகிறது. வாழ்த்துகிறேன்.
http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post_28.html
// "உம்...நம்ம வீட்டுக்கு ராகவன்-ன்னு ஒருத்தரு வந்தாரே! ஞாபகம் இருக்கா?
நீங்க செஞ்ச மீனை நானும் அவர் கூடவே சாப்பிட்டாகணும்-னு அடம் புடிச்சாரே! //
அடம் பிடித்தது அன்று. அடுத்த முறை உறுதியாகத் திடம் பிடித்ததும் நன்று. காத்திருக்கிறேன் நந்நாள் என்னும் அந்நாளுக்காக. :D
// அவரு தான் இதுக்கெல்லாம் நல்லா அர்த்தம் எழுதுவாரு! ஆனா இப்போ அவர் அவ்வளவா சாமிப் பாட்டெல்லாம் எழுதறதில்ல!"
"ஏன்-பா?"
"அடுத்த வாட்டி அவரு நம்ம வீட்டுக்கு வரும் போது, அவரையே கேட்டுக்குங்க!//
இங்கயே சொல்றேன். அடுத்த வாட்டி போன் பண்றப்போ சொல்லீருங்க. கலீல் கிப்ரான் சொன்னாராம்..ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணர்கையில் மந்தையை விட்டு விலகுகின்றன. :-) சிறியேன் நான் யாதும் அறியேன் என்று உணர்கையில் மந்தையை விட்டு விலகுகிறேன். மந்தை போனாலும் எந்தையாம் கந்தை விட்டு விலகவில்லை. :-)
// சரி...நானே உங்களுக்கு விளக்கஞ் சொல்லி கந்தர் அலங்காரம் எழுதறேன்! சந்தோசமா?" //
கண்டிப்பா எழுதுங்க. மிக்க மகிழ்ச்சி. தாய் கேட்டேனும் முருகனுக்கு நீங்கள் எழுதனும்னு இருக்கு. அதான் இது. :-)
http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post_28.html
// Raghav said...
//அப்படியாச்சும் உலகம் பச்சைப் பசுமையா ஆவட்டுமே!//
அதாவது உலகம் பூரா வைணவம் மட்டும் தழைக்கனும்னு சொல்றீங்க...
ஜி.ரா, கொஞ்சம் வந்து இவர ரெண்டு தட்டு தட்டுங்க. //
நான் எங்கங்க அவரைத் தட்டுறது? அவருடைய விருப்பம் அவரோடது. அவரது எண்ணம் நிறைவேற எனது வாழ்த்துகள். :-)
என்ன இருந்தாலும் அவரு உ.உ.வ கே.ஆர்.எஸ் ஆச்சே. வைணவ வாரியார்னு பட்டம் குடுக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா தட்டச் சொல்றீங்களே!
http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post_28.html
ஏன் அலங்காரம்? நல்ல கேள்வி.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் பூக்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில் கந்தனுக்கு அலங்காரம் செய்துள்ளார் அருணகிரியார்.
இதை இந்தப் பதிவில் சொல்லியுள்ளேன்.
http://iniyathu.blogspot.com/2005/10/blog-post.html
அலங்காரம் ஏன் என்று கேள்வி வருகையில் வர வேண்டிய இன்னொரு கேள்வி...கோயில் ஏன்? ஏனென்றால் கோயிலில்தானே அலங்காரம் நடக்கிறது. நெஞ்சகமே கோயில். நினைவே சுகந்தம். அன்பே மஞ்சன நீர். பூசை கொள்ள வாராய் பராபரமே என்று சொல்கிறதே தமிழ்.
அப்படி நெஞ்சமாகிய கோயிலில் அருணகிரி முருகனுக்குச் செய்த அலங்காரமே கந்தரலங்காரம். அதை மலர் தொடுத்து கந்தம் தெளித்து சூடம் ஏற்றிச் செய்வதே அலங்காராம் எனக்கருதுவதும் சரியன்று என்பது என் கருதுவது. அவ்வளவே நான் அறிந்தது.
இதற்கும் மேலதிகத் தகவல்கள் இருக்கும். அவைகளை நான் அறியேன். ரவி வந்து விளக்குவார் என்று கேட்டுக்கொள்கிறேன்.
http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post_2795.html
நல்ல விளக்கம். இந்தச் செய்யுளுக்கு நான் எழுதிய விளக்கம் இங்கே இருக்கிறது.
http://iniyathu.blogspot.com/2005/10/blog-post_18.html
http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post_2795.html
// Raghav said...
//கவிநயா said...
நீ...ங்..க.. அறிமுகம் இல்லாத பதிவரா!!!//
அவர் அறிமுகம் ஆன பதிவர் மட்டும் இல்ல, "ஹரி"முகம் ஆன பதிவரும் கூட.. //
ரொம்பச் சரியாச் சொன்னீங்க. என்னையப் போன்றவங்கள்ளாம் அறியாமைல மூழ்கியிருக்குறப்போ...ஹரி-ஆமை (கூர்மம்) பிடிச்சு கரையேறும் ரவி என்று சொல்லனும். :-)
http://thulasidhalam.blogspot.com/2008/07/5.html
பதிவைப் படிக்கிறப்போ மனசு ரொம்பக் கஷ்டமாருந்துச்சு டீச்சர். பணம்னு ஒன்னு இருந்துட்டா எங்குட்டும் போயிப் பெழைச்சிக்கிறலாம்ல. ம்ம்ம்ம்ம்...
அந்த வெள்ளக்காரப் பயக பண்ணுன அட்டூழியம் கொஞ்ச நஞ்சமா! படுபாவிங்க.
அந்தப் பாட்டியைப் பத்திப் படிக்கிறப்பவும் ஒரு மாதிரி ஆயிருச்சுங்க.
ஊரு விட்டு ஊரு வந்தா நம்மவங்க எல்லாருமே ஒறவுதான். இங்க முந்தி எங்கூட இன்னொருத்தரும் இருந்தாரு. கல்யாணம் ஆனவரு. ஆனா குடும்பம் ஊர்ல இருந்துச்சு. இப்பக் கூட்டீட்டு வந்து தனிவீட்டுக்குப் போயிட்டாரு.
ஒரு வெள்ளிக்கிழமை ஒன்னுக்கு ரெண்டு சினிமா பாத்துட்டு... டர்க்கிஷ் ரெஸ்ட்டாரண்டுல நல்லா டோனேர் கபாப் தின்னுட்டு நடுராத்திரிக்கும் மேல வீட்டுக்கு வந்தேன். வந்தா...எங்க போனா ஏது போனேன்னு கேட்டுட்டு... இந்த மாதிரியெல்லாம் ராத்திரிக்கெல்லாம் சுத்தக்கூடாது சரியான்னு உறுமலாச் சொன்னாரு. நானும் சரிங்கன்னு சொல்லீட்டுப் போய் படுத்துட்டேன். வழக்கம்மா யாரும் சொன்னா...வேலையப் பாருவேன்னு சொல்ற நான் அன்னைக்குச் சரின்னு அமைதியாச் சொல்லீட்டுப் போய்ப் படுத்ததும் அதிசயந்தான்.
http://radiospathy.blogspot.com/2008/07/blog-post_28.html
// திருலோகச்சந்தர் சிபாரிசில் தான் இதை மொழி மாற்ற இருந்தார்களாம். இதே கதை ஹிட்லர் உமாநாத் படமாக முன்னர் தெலுங்குக்கு முன்னரே தமிழில் வந்ததாகவும் சொல்லியிருக்கிறார் சரவணன். ஹிட்லர் உமாநாத் நான் பார்க்கலை.//
ஹிட்லர் உமாநாத் படம் திருலோகச்சந்தர் இயக்குனதுதான். இதே கதைதான். கொஞ்சம் வித்யாசமா இருக்கும். அதாவது கதாநாயகன் அப்பாவியாய் இருப்பாரு.சிவாஜி கே.ஆர்.விஜயா நடிச்ச படம். படமும் ஓரளவுக்கு ஓடுன படந்தான். ஆனா கடி. அதுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.
அந்தப் படத்துல இருந்து ஒரு கலக்கலான சுருளிராஜான் காமெடிப் பாட்டு இங்க.
http://www.youtube.com/watch?v=AG0oQSU5M9E
http://cyrilalex.com/?p=444
கதையைப் படிச்சேன். நல்லா எழுதீருக்கீங்க.
ஆனா முடிவு பாதியிலேயே ஊகிக்க முடிஞ்சது.
அப்புறம் ... தென்னிந்தியா தண்ணிக்குள்ள இருக்குன்னு எழுதுறப் படிக்கிறப்போ கொஞ்சம் கஷ்டமாயிருந்துச்சு. :(
http://govikannan.blogspot.com/2008/07/blog-post_31.html
இவ்வளவு நாளா... ரஜினிக்கு நடிக்கவே தெரியாது. இவரையெல்லாம் ஒரு நடிகர்னு எப்படிச் சொல்றதுன்னு கேட்டுக்கிட்டிருந்தேன். அவருடைய திறமை இப்பப் பளிச்சிடுது. ரஜினிகாந்தைப் போலச் சிறந்த நடிகரையும் பார்க்க முடியாது. தமிழர்களைப் போல ஏமாளிகளையும் பார்க்க முடியாது. இனிமே ரஜினி படமெல்லாம் பாக்குறதில்லைன்னு முடிவு பண்ணியாச்சு. அது பத்தி ஒரு பதிவும் போட்டாச்சு.
http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html
http://vavaasangam.blogspot.com/2008/07/blog-post_31.html
கப்பிக்குப் பிறந்த விழா
பல பெண்களுக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இனிய பலா
பார்வையில் இன்ப புலா
கப்பிக்குப் பிறந்த விழா
கப்பி நாமம் வாழ்க
மன்மதாயாணம் வாழ்க
http://vivasaayi.blogspot.com/2008/07/kuselan-story.html
// இந்தக் கதைய தமிழ்ல எப்படி எடுத்து இருப்பாங்க? //
எந்த லச்சணத்துல எடுத்திருந்தா என்ன...பாக்க மாட்டோம். ரஜினிகாந்த் படங்களுக்குத் தடை. தடை.
http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html
http://madippakkam.blogspot.com/2008/07/blog-post_31.html
I Love Chennai :)
என்னதான் இருந்தாலும் சென்னைய விட்டுக் குடுக்க மனசு வராதுங்களே... :)
http://madhavipanthal.blogspot.com/2008/07/blog-post.html
கப்பிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
கப்பிக்குச் சிறந்த பரிசு என்னன்னா...நல்லா சந்தன நெறத்துல இருக்குற அழகான எஸ்பானியப் பெண்கள் இருபது பேரு. :) நீங்க சொல்றதெல்லாம் பரிசே இல்லை.
http://www.nathiyosai.com/2008/07/blog-post_31.html
குசேலனைப் பார்க்காதீர்கள். :-)
http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html
http://jegadeesangurusamy.blogspot.com/2008/07/blog-post_592.html
அதெல்லாம் பாக்க வேண்டும். அப்படி அவரு நடிச்ச படத்தப் பாத்து ஒன்னும் ஆகப் போறதில்லை.
http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html
http://kumarankudil.blogspot.com/2008/07/blog-post_31.html
ஹா ஹா ஹா
ரஜினிக்கு நடிக்கத் தெரியும்னு இப்பத்தாங்க நான் ஒத்துக்கிறேன். :-)
http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html
http://parvaiyil.blogspot.com/2008/08/blog-post.html
ஐயா.... நான் என்னைக்குமே ரஜினி ரசிகர் கெடையாது. அவரு நல்ல படம் நடிச்சா கண்டிப்பா பாத்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனா எனக்கு வெவரம் தெரிஞ்சி அவரு நல்லபடம் நடிக்கலை. அவரு நடிச்ச நல்ல படமெல்லாம் பழைய படங்களா இருக்குது. அதையும் பாத்திருக்கேன்.
அவரு வெறும் நடிகர்தான். அப்படித்தான் நான் முந்தியும் நெனச்சிக்கிட்டிருந்தேன்..இப்பவும் நெனைச்சிக்கிட்டிருக்கேன்.
ஆனா அவரைத் தலைவர்னு நம்ம பயக ரொம்பப் பேரு சொல்றாங்க. அதுவும் அப்பிடியோன்னு நெறையப் பேரு நம்பீட்டாக வேற.
இப்பத்தானத் தெரியுது. அவரைத் தலைவர்னு சொன்னவங்களுக்கே அவரு புள்ளப்பூச்சியாத் தெரிஞ்சிருக்காருன்னு. இது மொதல்லயே தெரிஞ்சிருந்தா இவ்ளோ பிரச்சனைகள் வந்திருக்காதுல்ல.
ஆனா ஒன்னுங்க.. இனிமே ரஜினி சினிமால சண்டை போட்டா... கண்டிப்பா சிரிப்புதாங்க வரும். :D
http://govikannan.blogspot.com/2008/08/blog-post_03.html
சிங்கைச் சந்திப்பை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
நீங்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டு இளநீர் குடித்ததைப் பற்றி ஏன் சொல்லவில்லை? :D
Post a Comment