Sunday, August 03, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் - ஆகஸ்ட் 20088

ஆகஸ்ட் 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

26 comments:

G.Ragavan said...

http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post.html

தங்க முகுந்தன் அவர்களே,

51 பாடல்களைக் கொண்டது கந்தர் அநுபூதி. காப்போடு சேர்த்து 108 பாடல்களைக் கொண்டது கந்தரலங்காரம்.

நீங்கள் குறிப்பிடுவது அநுபூதி. அதில் பாடல்கள் 51தான். ஆன்மீகச் செம்மல் கண்ணபிரான் ரவிசங்கர் பொருள் சொல்வது கந்தரலங்காரம்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2008/08/2.html

படங்கள்ளாம் ரொம்ப நல்லாயிருக்கு.

அப்படியே ஒங்க பாட்டி கதையும். :)

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/08/blog-post.html

பாடலைக் கொடுத்தமைக்கு நன்றி பல.

இந்தப் பாடலை ஆடியோவில் கேட்டிருக்கிறேன். ஆனால் வீடியோவில் இன்றுதான் பார்க்கிறேன்.

மிகவும் அழகாகப் பாடியிருக்கிறார் இசையரசி.

ஆனால் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் இன்னும் முதிர்ச்சி தேவைப்படுகிறது.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/08/divya-suri-charitham-2.html

// Blogger Raghav said...

//போனால் போகட்டும் என்று என் மருமகன் முருகன், படைவீடு கீழே ஒரு வெளிவீடு (out house) கொடுத்திருக்கான்! //

@ஜி.ரா, இந்த வரிகள் இடம் பெறுவதற்காக கே.ஆர்.எஸ்ஸுக்கு நீங்க என்ன கொடுத்தீங்க :) //

என்னங்க இப்பிடிக் கேட்டுட்டீங்க...கொடுத்ததெல்லாம் கொடுத்தார்...அவர் யாருக்காகக் கொடுத்தார்? ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை ஊருக்காகக் கொடுத்தார். அவருக்கு நான் கொடுப்பதா!!!!! இப்படியெல்லாம் பேசி எனக்கு அபச்சாரத்தை உண்டாக்காதீங்கன்னு கேட்டுக்க்கிறேன். வைணவ வாரியார் அனைத்தும் அறிவார். :)

G.Ragavan said...

http://rishanshareef.blogspot.com/2008/08/blog-post.html

வாழ்த்துகள் ரிஷான்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/08/urvashi-sharada-psuseela-psusheela.html

// சின்ன அம்மிணி said...

அந்தப்படம் ஒரே அழுகாச்சிப்படம், டீ வீல போடும் போது பாத்திருக்கேன். அப்பல்லாம் சரியா புரியாது. கொஞ்சம் பெரிசானப்பறம் தான் கதையோட வலிமையும் சாரதாவோட நடிப்பும் புரிஞ்சது //

வாங்க சின்ன அம்மிணி. நீங்க துலாபாரம் பத்தித்தானே சொல்றீங்க. அந்தப் படத்த நானும் சின்னப்பையனா இருந்தப்ப டீவீல பாத்திருக்கேன். அப்பயே மூஞ்சீல அரைஞ்ச படம். அதுலயும் வடை திருடுன சின்னப் பொண்ணு கைய எண்ணெய்ல முக்குவான் ஒரு கேணையன். அப்புறம் படத்தோட முடிவு. முருகா...

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/08/16.html

இதையெல்லாம் புதிராவே எடுத்துக்க முடியாது. என்ன கொடுமை பிரபா இது!!!! காது இரண்டால் காது இரண்டால் இதைக் கேட்டு சொல்வதெப்படி? :D

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/08/blog-post_08.html

வாங்க கோவை ரவி. மிக அருமையான பாடலைத் தந்து நினைவுபடுத்தியமைக்கு நன்றி. இன்னும் பலப்பல பொக்கிஷங்களை உங்களிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். :)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/08/sankaran-kovil-gomathi-amman-adi.html

// அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொல்லிப் பார்த்தாள்! அதிலும் அரியைத் தானே முதலில் சொல்றீங்க-ன்னு வம்பு பண்ணுகிறார்கள்! சொல்லுக்குச் சொல் பிடிச்சிக்கிட்டா, சோதரி என்ன செய்வாள் பாவம்? //

பேசாம சூலத்த எடுத்துக் குத்த வைக்கலாம்ல? எந்த அயோக்கியப்பயக இப்பிடி வம்பு செய்றது? இப்பிடி பதிவு பதிவா ஒங்களப் பொலம்ப வெச்ச அந்த மூடர்களுக்கு முழுமுதற்கடவுளான நாராயணனே "ஆராய்ந்து" அருளேலோர். சிவன் குண்டக்கமண்டக்க யோசிக்காமக் கேக்காமக் குடுத்துருவாரு.

// ஈசனுக்கு பக்கத்துல மாலன்னு சொல்ல அடியேனுக்கு மனசு வருதோ இல்லையோ,
அப்படிச் சொல்லி இருக்குறதைப் பார்க்க பலருக்கு கண்ணு வர மாட்டங்குதே! :)) //

அதெல்லாம் கண்ணா... முகத்திரண்டு புண்ணுடையர்னு கண்டுக்காமப் போங்க. அதான் ஒங்க கண்ணுக்கும் அவங்க புண்ணுக்கும் நல்லது.

ஒரு கேள்விங்க. நீங்க ஒரு புராணக்கதையைச் சொல்லீருக்கீங்க. சரி. தரவுகள்ளாம் சொல்லி எடுத்துச் சொல்ற நீங்க.... இது எந்த மன்னன்...எந்த நூற்றாண்டுல கெட்டுனது.... எப்பயிருந்து இந்தப் பழக்கம் இருக்குன்னும் சொல்லனும். நீங்க சொல்லலைன்னா யார் சொல்லப் போறா! நீங்க வாழ்க வாழ்க.

எனக்கொரு சந்தேகம். பழந்தமிழர்கள் கிட்ட ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்திருந்து...அதை எதாச்சும் ஒரு மன்னன் ஆதரிக்க விரும்பி..ஒருவேளை அவரே கூட அப்படியிருந்திருக்கலாம். இப்பிடியொரு கோயிலைக் கட்டியிருக்கலாமா? கட்டீட்டு சிவனும் அரியும் ஒன்னு...சிந்திக்காதார் சிந்தையில் மண்ணுன்னு கதை கெட்டி விட்டிருப்பாரோ?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/08/sankaran-kovil-gomathi-amman-adi.html

// உடலில் சரி பாதி என்பதற்காக, என் நண்பனை நான் தழுவிக் கொண்டால் நீயும் தழுவிக் கொள்-னு சொல்றா மாதிரி இருக்கு! :(
நிஜமாலுமே புரிஞ்சிக்கிட்டு தான் பேசறீங்களா? இல்லை சும்மா.....

அதான் சொன்னேனே! இந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு மட்டும் அன்னை தான் தவம் இருக்கணும்! சிவன் தவம் இருந்து, அம்பாளே உன் உடலில் பாதி நாரணனைக் காட்டு-ன்னு கேக்க முடியாது! என்ன தான் தங்கையானாலும் அவள் உடலில் அண்ணன் ரூபத்தைக் காட்டலாகாது!
இதுக்கு மேல எப்படிண்ணா பச்சையா சொல்லுறது? :( //

ஆமா ஆமா எப்படிப் பச்சையாச் சொல்றது!!!!

என்ன இருந்தாலும் மலைமகள் குணம் அலைமகளுக்கு வராது. அவளும் அவ புருசனை நோக்கித் தவமிருந்து.. என்னங்க நீங்களும் அவரும் ஒன்னுன்னு ஒலகுக்கு எடுத்துக்காட்டா ஒங்க நெஞ்சுல (அல்லது ஒடம்புல பாதீல) அவருக்கு எடங்குடுங்கன்னு கேட்டிருக்கலாம்ல. சமத்துவம்னா எப்பவுமே ஒரு பக்கமிருந்தே வருது. இருந்தாலும் அந்த ஒரு பக்கத்துக்காரங்களுக்குப் பாக்குறதெல்லாம் காமாலை. திருந்தேலோர் எம்பாவாய்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/08/sankaran-kovil-gomathi-amman-adi.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
Again @ Geethamma
//சிவன் கோயில் எல்லாவற்றிலுமே, சிவனின் கர்ப்பக் கிரஹத்தில், மூலஸ்தானத்துக்கு நேர் பின்னே கட்டாயமாய் விஷ்ணு இடம் பெறுவார்.//

எப்பமே அப்படி இல்லை கீதாம்மா!
லிங்கோத்பவரும் பல இடங்களில் இடம் பெறுவார்!

//லாஜிகலாய் யோசித்தால் புரியாது. அனுபவமும், உணர்வுகளுமே புரியவைக்கும், கட்டாயமாய்ப் புரியும்!//

100% உங்களை வழிமொழிகிறேன் கீதாம்மா!

//வேண்டும்போது விஷ்ணுவாகவும், வேண்டும்போது சக்தியாகவும் இடம் பெறுவது ஒருவரே என்றும், அனைத்திலும் உறைந்திருக்கும் சக்தியே என்றும் புரிந்தால்//

புரிந்தால்....
புரிந்தால்....
புரிந்தால்....
தில்லையில் பெருமாளைக் கடலில் தூக்கிப் போடும் போது, ஐயோ அம்பாளைக் கடலில் தூக்கிப் போடுகிறோமே என்று நெஞ்சு பதபதைத்து இருக்கும் அல்லவா! பதபதைத்ததா??? :((

அதை இன்றும் தில்லைப் பதிவுகளில் வரிந்து கட்டிக் கொண்டு நியாயம் தானே கற்பிக்கிறோம்? - நாமக்காரப் பசங்க கொடுத்த தொல்லையில் தான் ராஜா கடல்ல போட்டான் என்று!

ஐயோ அம்பாளைக் கடலில் வீசிட்டாங்களே-ன்னு பதிவில் வருத்தப்பட்டோமா? அத்தனை பேர் எடுத்துச் சொல்லி தரவு வைத்த பின்பும்???
வேண்டும் போது விஷ்ணுவாகவும், வேண்டும் போது சக்தியாகவும் இடம் பெறுவது ஒருவரே என்ற கான்செப்ட் அப்போ எங்கே போனது? :(

இப்படிப் பேசுவதற்கு என்னை மன்னிக்கவும்!
அது ஈசனோ, பெருமாளோ, இல்லை வேறு யாரோ, எவரும் அடியேனுக்குப் பொருட்டு அல்ல!

நியாயம் எப்பமே எல்லாருக்கும் ஒன்னு தான்!
அடியேனைப் பொறுத்த வரை சொல்லில் இருக்கும் அந்த நியாயம் செயலில் வர வேண்டும்!

பி.கு: இப்படி எல்லாம் நிலைப்பாடு எடுத்தால் சிலருக்கு என் மீது கோபம் வருகிறது. இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன! :)
ஆனால் சமயத்துக்கு ஏற்றாற் போல் நியாயம் என் சுபாவத்தில் இல்லையே! என்ன செய்ய! அடியேனை மன்னியுங்கள்!

தர்மோ ரகஷாதி ரக்ஷிதாஹ! //

ரொம்பச் சரி. இன்னமும் விஷ்ணு கோயில்கள்ள... பெருமாள்னும் சொல்லலாம். ஆனா அவர் ஒருத்தர் மட்டும் பெருமாள் இல்லையே. அவரும் பெருமாள். அவ்ளோதான். அதுனால புரியறதுக்காக விஷ்ணுன்னு விளக்கமாச் சொன்னேன்.

இன்னும் விஷ்ணு கோயில்கள்ள மருமகனை உள்ள விடாம இருக்கோமேன்னு யாருக்காச்சும் நெஞ்சு பதைபதைக்குதா? பொண்ணைக் குடுத்த இடமாச்சேன்னு யாருக்காச்சும் ஈரல் குலுகுலுங்குச்சா? :((

அதை இன்றும் தில்லைப் பதிவுகளில் வரிந்து கட்டிக் கொண்டு நியாயம் தானே கற்பிக்கிறோம்? - துந்நூறுக்காரப் பசங்க கொடுத்த தொல்லையில் தான் இன்னும் பயந்து நடுங்கி ஒடுங்கி விலகி இருக்காங்கன்னு!

ஐயோ மருமகனை உள்ள விடலையேன்னு-ன்னு பதிவில் வருத்தப்பட்டோமா? அத்தனை பேர் எடுத்துச் சொல்லி வரவு கேட்ட பின்பும்???

வேண்டும் போது முருகனாகவும், வேண்டும் போது விஷ்ணுவாகவும் இடம் பெறுவது ஒருவரே என்ற கான்செப்ட் அப்போ எங்கே போனது? :(

இப்படிப் பேசுவதற்கு என்னை மன்னிக்கவும்!
அது பெருமாளோ (முருகனோ), பெருமாளோ (விஷ்ணுவோ), இல்லை வேறு யாரோ, எவரும் அடியேனுக்குப் பொருட்டு அல்ல!

நியாயம் எப்பமே எல்லாருக்கும் ஒன்னு தான்!
அடியேனைப் பொறுத்த வரை சொல்லில் இருக்கும் அந்த நியாயம் செயலில் வர வேண்டும்!

பி.கு: இப்படி எல்லாம் நிலைப்பாடு எடுத்தால் சிலருக்கு என் மீது வருத்தம் வருகிறது. இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன! :)
ஆனால் சமயத்துக்கு ஏற்றாற் போல் நியாயம் என் சுபாவத்தில் இல்லையே! என்ன செய்ய! அடியேனை மன்னியுங்கள்!

அறம் செய விரும்பு!

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/08/sankaran-kovil-gomathi-amman-adi.html

// புனிதம் என்றவுடன் புனிதவதி நினைவுக்கு வருகிறார்கள்! காரைக்கால் அம்மையாரை அவர் புனிதமாக உள்ளார் என்று தானே அவர் கணவன் ஒதுக்கி வைத்தான்?
* ஏன் இல்லறத்தில் புனிதம் கூடாதா?
* சமயம் பேசும் பெண், கணவனோடு இல்லறம் பேண முடியாதா?
* சமயம் பேசிய ஆண்களோடு மட்டும், பெண்கள் இல்லறம் பேணி உள்ளார்களே?

- இவை எல்லாம் நியாயமான கேள்விகளே! :) //

புனிதவதியாரின் கணவன் விலகிச் சென்றது உண்மைதான். ஆனால் அது சரியென்று எந்த நூலும் சொன்னது போலத் தெரியவில்லை. பயங்கொள்ளித்தனமென்றே நான் கருதுகிறேன். தமிழர்கள் குருதியோடு கூடிய ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாட்டு எச்சத்தின் அச்சம் என்றே அதைக் கருதுகிறேன்.

http://gragavan.blogspot.com/2006/08/blog-post.html

G.Ragavan said...

http://sivanpaattu.blogspot.com/2008/08/tiruvasagam-tamil-archanai.html

மிக அருமையான பதிவு. மிகவும் தேவையான பதிவு. நீங்கள் சொல்வது மிகவும் சரிதான். சண்டையைப் போட்டு மண்டையை உடைப்பதை விட இப்படிப்பட்ட செயல்கள் நன்மையையே பயக்கும்.

அர்ச்சனையை ஆண்டவனுக்குச் செய்யவில்லை..அடியவர்களுக்குச் செய்கிறோம் என்பதை உணர்தலே நன்று. நீங்கள் கூறிய நீராவி மேக உவமை மிக அருமை. மேகத்து நீருக்கு ஆற்றில் இருந்து வந்தது..கடலில் இருந்து வந்தது என்றா தெரியும்? கடலில் இருந்தே வந்திருந்தாலும் உப்பின்றித்தானே இருக்கிறது.

தமிழில் செய்தால்..மற்ற மொழிக்காரர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு கேள்வி வேறு. இப்பொழுது அர்ச்சனை என்ற பெயரில் நடப்பது ஏதோ எல்லாருக்கும் புரிவது போலவும்.. தமிழில் சொன்னால் தமிழனுக்கு மட்டுமே புரியும் என்று சொல்வதெல்லாம் காமெடி. அப்படியானால் முருகனும் முகுந்தனும் இந்தியர்களுக்கு மட்டுந்தானா? வெள்ளைக்காரன் வணங்க விரும்பினால்? அவர்களுக்கும் வடமொழி புரியுமா? ஆகையால் அவரவர் தாய்மொழியில் வணங்குவதே சிறந்தது. அருணகிரி கதறுகிறாரே...செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ.

// அருண் நிஷோர் பாஸ்கரன் said...

கண்ணன் உங்களிடம் ஒரு சந்தேகம்....அமெரிக்கா வில் உள்ள ஒரு கோவிலில் நமது ஆண்டாள் அருளிய திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அர்ச்சனை செய்தால் ஒத்து கொள்விர்களா? //

கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டியதே. உள்ளமும் உணர்வும் புரிந்து வழிபடலே இறைவழிபாடு. திருவாசகம் மொழிபெயர்க்கப்பட்டதே. ஜி.யு.போப் செய்தாரே. எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்க்கும் கலையே கே.ஆர்.எஸ் இந்தப் பதிவில் சொல்லியிருப்பது. அதே போல கலைச் செல்வங்களின் சிறப்பை எட்டுந் திக்கு மட்டுமல்லாது எட்டுத்திக்கும் சென்று செல்ல அந்தந்த மொழிகளில் மாற்றுவது சரியானதே.

// நீங்களே சொன்னது போல கர்நாடக மாநிலத்தில் திருப்பாவையை தமிழில் தானே ஓதுகிறார்கள் கண்டத்தில் மொழி பெயர்த்து இல்லையே...அதே போல் சமஸ்கிருத ஸ்லோகங்களை அந்த மொழில் சொன்னால் தானே அழகு. அதை மொழி வடிவமாக பார்க்காமல் ஒலி வடிவமாக பாருங்களேன். //

ஒலிவடிவமாக என்ன பார்க்க? கோயிலில்...^&&*&*& நமக...*&*&((நமக என்றுதான் எனக்குக் கேட்கிறது. அதில் எந்த வடிவத்தைப் பார்ப்பது?

G.Ragavan said...

http://photography-in-tamil.blogspot.com/2008/08/architecture.html

நல்ல அருமையான பதிவு. ஒரு கட்டிடத்தைப் படம் பிடிப்பதற்குரிய எளிய வழிமுறைகளைச் சொல்லித்தந்திருக்கின்றீர்கள். இவைகளை அடுத்த முறை கண்டிப்பாகப் பயன்படுத்திப் பார்க்கிறேன். இது போன்ற பல தகவல்களைத் தாருங்கள்.

G.Ragavan said...

http://sivanpaattu.blogspot.com/2008/08/tiruvasagam-tamil-archanai.html

// அவங்களும் வெளி கதவ மாத்திர தான் திறந்து மூடினாங்க.

ஆலய அக விஷயங்கள்ல ஒன்னும் கை வைக்கல்லைங்க! //

:) என்னது ஆலய அக விஷயங்கள்ள கை வைக்கலையா? ரொம்ப எளிமையான எடுத்துக்காட்டு சொல்லட்டுமா?

சிவாச்சாரியார் ஆகம விதிகளின்படி வழிபாடு செய்த சிவனுக்குப் பன்றிக்கறி படைத்தாரே கண்ணப்பர். அப்பொழுது ஆகம முறைகளும் அக விஷயங்களும் கெட்டுப் போகிறதே என்று அழுதாரே அந்தச் சிவாச்சாரியார். ஆனால் என்னாயிற்று? கல்லால் அடித்தான் ஒருவன்..சொல்லால் அடித்தான் ஒருவன்... வில்லால் அடித்தான் ஒருவன்..மிதித்தான் ஒருவன் என்றுதானே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஒரு நாயன்மாரின் மனைவி திருக்கோயிலில் ஆவுடையார் மீதே எச்சில் துப்பினாரே :) அப்பொழுது எங்கு போயிற்று அகவிதிகள்?

அதெல்லாம் சரி. ரவி கேட்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்லுங்களேன். தமிழில் அர்ச்சனை செய்தால் என்னாகும்?

G.Ragavan said...

http://sivanpaattu.blogspot.com/2008/08/tiruvasagam-tamil-archanai.html

புறத்தார்க்குச் சேயோன்றன் என்பதற்கு எனக்குத் தோன்றும் பொருள் என்னவென்றால்....

அகத்தார்க்கு அருகில் இருப்பவன் இறைவன். அதை விடுத்து புறத்தே மட்டும் வழிபடுகின்றவர்களுக்குச் சேயோன்றன் அவன். அதாவது தொலைவானவன்.

இறைவனை உள்ளத்தில் வணங்கல் வேண்டும். "மனத்தினால் சிந்தித்து" என்கிறாளே ஒருத்தி. நெஞ்சகமே கோயில் என்றாரே ஒருத்தர். உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை...அங்கு உருவாகும் அன்பிற்கோற் பஞ்சமில்லை என்று எழுதினானே ஒரு கவிஞன். ஆகா!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/08/7.html

சினமா? எனக்கா? என்ன கொடுமை குமரன் இது! இப்பொழுதெல்லாம் பதிவுகள் பக்கமே வருவதில்லையே. ஆகையால்தான் உங்கள் பதிவுகளையும்.....ஹி ஹி மன்னித்துவிடுங்கள். :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/08/7.html

// குமரனிடம் கேள்விகளா? என்ன கேக்குறது? (என்ன கேக்குறதுன்னு என்னையே கேட்டா எப்படிங்க? அதான் டக்கு டக்குன்னு கேள்விகளா கொட்டியிருக்கே). :-) //

ஹா ஹா ஹா ஆமாமா கேள்விகள் கொட்டியிருக்குல்ல.... கேள்விகள் கொட்டியிருந்தா நல்லதுதான். குளவிகள்தான் கொட்டியிருக்கக் கூடாது. :D

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/08/7.html

// 1. உங்கள் கருத்துப்படி கோழிக்கறியில் எந்தப் பகுதி மிகவும் சுவையானது?

தொடைப்பகுதி. என் மக்களுக்கு கோழிக்கால் பிடிக்கும். :-) //

ஆகா ஆகா அப்படிப் போடுங்க... எங்கூர்ப்பக்கம் சப்பைன்னு சொல்வாங்க. எங்க தாத்தா பாட்டி இருந்தப்ப கோழிக் கொழம்பு வெச்சிக் குடுப்பாங்க எங்க பாட்டி. அதுல சப்பையை எனக்குன்னு எடுத்துக் குடுப்பாங்க :)

சிவக்கொழுந்துக்கும் கோழிக்கால்னா பிரியமா...நல்லது. நல்லது.

ஆனா என்னையக் கேட்டா.. கோழிக்கழுத்துதான் ரொம்ப ருசி. :D

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/08/7.html

// குமரன் (Kumaran) said...

அதெப்படி இராகவன் உங்களைக் கூப்புட்டவுடனே வந்துட்டீங்க? கூவி அழைத்தால் குரல் கொடுப்பவன் குமரன் மட்டுமில்லை இராகவனும்ன்னு காட்டுறீங்களா? :-) //

ஏன் இராகவன்னு சொல்றீங்க? இராகவனோட அடையாளமே முருகனடியவங்குறதுதான். ஆகக் குரல் கொடுத்தவன்..கொடுப்பவன்..கொடுக்கப் போவனும் முருகனடியவனே. :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/08/19.html

காலாபானியானு....இதைத் தயாரித்தது மோகன்லால். இயக்கம் ப்ரியதர்ஷன். இப்ப இந்தில மலையாளப்படம் எடுத்துக்கிட்டிருக்காரு.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/08/7.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆட்டாத கறியை ஏன் ஆட்டுக்கறி என்கிறார்கள்?//

எலே! ராகவனா இப்பிடி கேள்விய கேக்குறது?
சுட்ட கறியா? சுடாத கறியா-ன்னுல்ல கேக்கோணம்? :) //

ஹா ஹா ஹா நமக்கெல்லாம் சுட்டாத்தான் கறி. இங்க டச்சுக்காரங்க சுடாத கறியையும் பதம் பாக்குறாங்க. ஆனாலும் நமக்குச் சுட்ட கறியே போதும். :)

// அது ஆட்டு கறியோ, ஆட்டாத கறியோ,
அந்த எலும்புத் துண்டைத் தரையில் தட்டி, மஜ்ஜையை உறிஞ்சும் சுகம் இருக்கே...சரியா வரலீன்னா வீட்டுல ஆயா, அம்மா தட்டிக் கொடுப்பாங்க!
உஷ்ஷ்ஷ்ஷ்...
அந்த நாள் ஞாபகம்! ச்சே நான் ஏன் சைவன் ஆனேன்? :((( //

போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் ராகவனுக்கே
ஸ்பூன் ஃபோர்க் எழுக :)

// //நுண்மையா அடிச்ச கறி பிடிக்கும். கைம்மான்னும் கொத்துக்கறின்னும் சொல்லுவாங்க//

இங்கிட்டு அஞ்சப்பர்-ல வெஜிட்டபள் கொத்துக்கறி இப்போ இஷ்டார்ட் பண்ணியிருக்காங்க குமரன்! :) //

வெஜிடபிள்-ல ஏது கொத்துக்கறி? கொத்துக்காய்னு வேணும்னா சொல்லுங்க. :) கொத்துக்கறியும் சுவைக்கும் நாளும் வரலாம்...யார் கண்டார்! அவனே கண்டான்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/08/7.html

// துளசி கோபால் said...

ஹூஸ் அப்பா இஸ் நாட் இன் த பேரல்?ன்னு யாரும் கேக்கமாட்டோம்:-) //

ஹா ஹா ஹா ஆயிரம் பதிவர்கள் வந்தாலும் டீச்சர் டீச்சர்தான்.

// எங்க பதிவுக்கெல்லாம் கூட அவர் வந்து நாளாச்சு. நாங்கெல்லாம்.... அவருக்கு ஆணி நிறையன்னு நம்பும் அப்பாவிக்கூட்டம்!//

அதையே நம்புங்க டீச்சர். அதுதான் உண்மை. :)

// என்னப்பா கே ஆர் எஸ்,

பாயா எடுக்க ஆயா எதுக்கு?

மஜ்ஜைக்குன்னு ஒரு கருவி வந்துருக்கே.
அது தெரியாதா?

அதுவும் எவர்சில்வர்லே:-)))) //

அடா அடா அடா... அதப் போட்டோ பிடிச்சிப் போடக்கூடாதா! கண்டுக்கிறுவோம்ல! கே.ஆர்.எஸ்சும் வாங்கிப் பயன்பெறுவார்ல. :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/08/7.html

// கவிநயா said...

ச்சீச்சீ. இந்த கறி கசக்குது. ஜிராவுக்கு மட்டும் வணக்கம், வருகன்னு சொல்லிக்கிறேன் :) //

வணக்கம் கவிநயா :)

// Blogger கீதா சாம்பசிவம் said...

வருகைப் பதிவு!!!! //

நன்றி கீதாம்மா.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/08/7.html

//
3. அமெரிக்கா இந்தியா தவிர்த்த ஏதாவது ஒரு நாட்டில்தான் இனிமேல் வாழவேண்டும் என்ற நிலை வந்தால் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவீர்கள்?

சிங்கப்பூர். அப்படித் தான் சொல்லணும்ன்னு மேலிடத்துக் கட்டளை. :-)

மேலிடம் யாருன்னா கேக்குறீங்க? அதெல்லாம் சொல்லிக்கிட்டேவா இருப்பாங்க? ;-) //

ஹா ஹா வீட்டுக்குப் பக்கத்துலயே இருக்கலாம்னு பாக்குறாங்க போல. நல்ல நாடுங்க. சுத்திப்பாக்கப் போயிருக்கேன். நல்லாருந்துச்சு ஊரு. நமக்குதான் ஊர் சுத்தப் பிடிக்குமே. நல்லா சுத்திப் பாத்தாச்சு அந்த ஊரை. சின்ன ஊருதான்..ஆனா பிரமாதமா வெச்சிருக்காங்க. அங்க தாய்லாந்து எளநி கெடைக்க்குது பாருங்க... அடடா! அடடா!

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2008/09/blog-post.html

உங்களைப் போல பழம் பெறும் பதிவர் திரும்பவும் பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கவுண்டர் காமெடியே தனிங்க. அதுலயும் அவரு குண்டக்கமண்டக்க அலப்பர விடுறப்ப...அப்பாவியாட்டம் ஒருத்தர் கூடயே இருந்து கேணமானையா மாட்டி விடுவாரே. ஹா ஹா ஹா. உண்மையிலேயே நல்ல கூட்டணிங்க அது. அதுலயும் ஜெய்ஹிந்த் படத்துல அவர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது இருக்கே..அடேங்கப்பா...தூக்கத்துலயே கதவைத் தெறந்து விடுறதென்ன...மாடீல இருந்து குதிக்கிறதென்ன...

சரி. அடுத்து ரஜினிக்கு வருவோம். ரஜினி கவுந்தடிச்சி குப்புற விழுந்ததுக்கும் கருணாநிதி விழுந்ததுக்கும் வித்யாசம் இல்ல. எல்லாம் ஒன்னுதான். ஆனா இவரு தமிழினத் தலைவராயிட்டதால அவர ஒன்னும் சொல்லக் கூடாது. அப்படி எதுவும் சொன்னா தமிழ் விரோதியாயிருவாங்க.

கீழ நெறைய கேள்விக கேட்டிருக்கீங்க. அதுல எதுக்குமே பதில் தெரியலையேய்யா!