Saturday, September 06, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் - செப்டம்பர் 2008

செப்டம்பர் 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

94 comments:

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/09/20.html

நீங்க குடுத்திருக்கும் பத்துப் பாட்டுகளுமே கலக்கல். பிரமாதமான பாட்டுகள்.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/09/blog-post.html

ரெண்டு பாட்டுமே நல்ல பாட்டுகள். என் வாழ்விலேய விட.. ஏ ஜிந்தகி நல்லாருக்கு. ரெண்டு படத்துலயுமே எல்லாப் பாட்டுமே சூப்பர்.

G.Ragavan said...

http://muranthodai.blogspot.com/2008/09/blog-post_05.html

இந்தக் கதையத் தொடர்ந்து படிச்சிட்டு வர்ரேன். பின்னூட்டம் போட்டதில்லை. ஆனா இன்னைக்குப் போட்டாச்சு.

கதையும் நடையும் ரொம்ப நல்லாருக்கு. தொடர்ந்து சொல்லுங்க. :)

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2008/09/blog-post_07.html

வடமொழியில இத விசர்ஜனம்னு சொல்றாங்க. ஆனா பாருங்க.... அப்படிச் செய்ய வேண்டிய பிள்ளையாருங்க களிமண்ணால ஆகியிருக்கனும். இது பிளாஸ்டர் ஆப் பாரீஸ். இதை விசிறவும் முடியாது. ஜனமும் பண்ண முடியாது. அதான் இப்பிடிக் கெடக்குது.

கொல்கொத்தாவுலயும் துர்கா பூஜா பண்றாங்க. ஆனா எல்லா துர்காவும் களிமண்ல பண்றாங்க. தலைமுடி கூட நார்களால் செய்றாங்க. இயற்கை வண்ணங்கள். அதுக்கும் மேல ஒருவிதச் செடியின் தண்டிலிருந்து எடுத்ததில் வண்ணம் பூசி அலங்காரம். அதுனால துர்காவுக்கு இந்தக் கேவலம் நடக்கலை. தண்ணீல போட்டா....சல்லுன்னு கரைஞ்சு போயிரும். அது ஏத்துக்கக் கூடியது. ஆனா இது ஏத்துக்கவே முடியாதது. பி.ஆ.பா-ல பிள்ளையார் செய்ய ஆகம சாத்திரத்துல எடமிருக்கான்னு தெரியலை.

G.Ragavan said...

http://www.blogger.com/comment.g?blogID=25530484&postID=3150753054093554005&isPopup=true

நயாகரான்னாலே எனக்கு நினைவுக்கு வர்ர பாட்டு "மலைராணி முந்தானை சரியச் சரிய"ன்னு வாணி ஜெயராம் பாடுறதுதான். கவியரசர் அருவியை பெண்ணோடு ஒப்பிட்டு எழுதீருப்பாரு.

காதல் விட்ட மூச்சு இன்று கருகிக் கருகிக் காற்றாகி
காதலியின் கண்ணீர்தான் பெருகிப் பெருகி நீராகி
மேகம் என்னும் தோழி வந்து கனியக் கனிய மொழி பேசி
தாயை விட்டு ஓடிச் செல்லும் பெண்ணைப் போலே நழுவி.....
மேடை விட்டு ஆடிச் செல்லும் மென்மைதானோ அருவி...

அது உண்மைதான்னு படங்களும் சொல்லுது.

G.Ragavan said...

http://ilavanji.blogspot.com/2008/09/blog-post_09.html

ஹா ஹா ஹா

கடலுக்குள்ள போயி கக்குறதுக்கு ஒரு படகுப் பயணம்... ஹா ஹா.... ஐய்யோ ஐய்யோ! ஒரே தம்மாசு...

கடல்ல நீஞ்ச வருமா? அலையெல்லாம் இருக்கும்னு சொல்றாங்களே! நமக்கு இந்த மத்தியதரைக்கடல்...பசிபிக் பெருங்கடல்...இதுலதான் நீந்திப் பழக்கம். நேரா விவேகானந்தர் குறுக்குக் கடற்கரைல எறங்குனா...40 நிமிசந்தான்...மத்தியதரைக்கடலே மல்லாக்கப் பொறண்டுறும்ல..... :D

ஆனா ஒன்னுய்யா படமெல்லாம் கலக்கலா எடுக்குறீரு. அதெல்லாம் கைராசி.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/09/692.html

மிக அழகான பாடல். ஒரு கடிதத்தைப் படிப்பது போலவே காதலர் இருவர் பேசிக்கொள்கிறார்கள். அதில் இசையரசியின் இனிய குரல் சிறப்பாக குழைந்து இனிமையாக இருக்கிறது. பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/09/691.html

பி.சுசீலா-ஏசுதாஸ் கூட்டணியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. லலலா என்று இசையரசி தொடங்கும் பொழுது கம்பிப் பாகு போல இழுபடும் குரல் அப்படியே தேன் துளிகளாய் பொழிந்து தித்திக்கும் பொழுது பாடல் நம்மைக் இளமைக் காதலின் உச்சத்திற்கே கொண்டு போய்விடும். இளையராஜாவின் அற்புத இசைமகிமை.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=445

தாமதம் ஆகிவிட்டது. சரி. ஆகட்டும். காத்திருப்போம். மற்றவங்க சொன்ன மாதிரி கவர்ச்சி போயிரும்னாலும்...நீங்களும் வருத்தம் தெரிவிச்சிருக்கீங்க. ஆகையால அப்படியே எடுத்துக்குவோம்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/09/blog-post_09.html

குன்னக்குடி வைத்தியாதனுக்கு தமிழிசையில் தனியிடமுண்டு. அவரது மறைவு ஒரு இழப்புதான். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இசையன்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த நேரத்தில் பொருத்தமான பாடல்களைத் தேர்வு செய்து அவரது மறைவுக்கு அஞ்சலி செய்தமை மிகச் சிறப்பு.

இறைப்பாடல்களாகட்டும் காதற்பாடல்களாகட்டும் குத்துப்பாட்டுகளாகட்டும் அவருக்குள்ள பாணியில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

வயலின் இசைமேதையான அவருடைய ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/09/yvijaya-psuseela-pshuseela-psusheela.html

// Sridhar Narayanan said...

அவர் குறிப்பிடும்படியாக நடித்த படங்கள் வரிசையில் - மன்மத லீலை, மூன்று முடிச்சு, கல்யாண அகதிகள் என்று சில இருக்கும். //

ஆமாங்க... அதுலயும் மூன்று முடிச்சுல ஒரு துணைநடிகையாவே வருவாங்க. அதுலயும் தீக்காயம் பட்ட பிறகு....நல்லா நடிச்சிருப்பாங்க. கல்யாண அகதிகள்ள ரொம்ப மரியாதை வர்ர மாதிரி நடிச்சிருப்பாங்க. ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிச்ச படங்கள்.

// இந்த வில்லிகள் வரிசையில் சிஐடி சகுந்தலா-வையும் சேர்த்துக் கொள்ளலாம். //

சி.ஐ.டி.சகுந்தலாவோ சில படங்கள்ள கதாநாயகியா நடிச்சிட்டுதான் வில்லியானங்கன்னு நெனைக்கிறேன். சரியா?

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2008/09/blog-post_10.html

நீங்க சொல்ற மாதிரி கலைஞர் டிவி நல்லா இல்லை. சன் மற்றும் கலைஞர் டிவிகள் அறுவையோ அறுவை. விஜய் நல்ல இருக்கு.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/09/yvijaya-psuseela-pshuseela-psusheela.html

// வல்லிசிம்ஹன் said...
இரண்டு பாட்டும் வெகு அருமை ராகவன்.
எப்போதோ கேட்டதை அழகாக இங்கே கொண்டு வந்து வைத்துவிட்டீர்கள். நன்றி.
விஜயா நன்றாகவே இமோட் செய்கிறார். ஸ்ரீதர் குறிப்பிட்டது போல இவருக்குப் பாங்கான பாத்திரங்கள் கிடைக்காமல் போயிற்றோ //

ஆம. நல்லா நடிக்கிறாங்க. ஆன பெரும்பாலும் வில்லி வேடம். ரொம்பவும் பழய படங்களில் கூட ஆணவம் கொன்ட பாத்திரங்களே கொடுக்கப்பட்டனன்னு நெனைக்கிறேன்.

// விகே ராமசாமி போல நடிகரையெல்லாம் பார்க்க முடியுமா இனிமேல். //

வி.கே.ராமசாமியின் நடிப்பும் பிடிக்கும். கத்திக் கத்திப் பேசுவாரு. ஆன அது அவரோட பாணி.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/09/yvijaya-psuseela-pshuseela-psusheela.html

// Blogger துளசி கோபால் said...

சூப்பர் கச்சேரி. ரொம்பவும் ரசித்தேன்.

வலை ஏத்துனதுக்கு நன்றிப்பா.

இந்தப் படம் பார்க்கலை(-: //

என்னது... இந்தப் படம் பாக்கலையா.. மொதல்ல பாருங்க. நீங்களே விமர்சனம் எழுதீருவீங்க. ஒரு வாட்டி பாக்கலாம். பாட்டுகள்ளாம் கலக்கல். தேவன் திருச்சபை மலர்களேன்னு கூட ஒரு பாட்டு இருக்கு.

G.Ragavan said...

http://www.sridharblogs.com/2008/08/steven-spielberg.html

அருமையான அறிமுகங்கள். Duel படத்தைப் பார்த்ததில்லை. ஆனால் பார்க்கும் ஆவலை உண்டாக்கி விட்டீர்கள். அடுத்த படத்தைப் பத்திச் சொல்லனுமா.....லியோ வேற டாம் வேற....படம் வந்தப்பயே பெங்களூர்ல பாத்தாச்சு. நீங்களும் பெங்களூர்ல பாத்திருந்தா...எந்தத் தேட்டர்னு சொல்லுங்க பாப்போம். ;)

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/09/blog-post_10.html

மிக அருமையான பதிவு. நம்மூர்ல இல்லாத பிரச்சனையில்லை. குப்பையில்லை. அதெல்லாம் ஒதுக்கித்தள்ளீட்டு....இன்னும் இந்துன்னு சொல்லிக்கிறதுக்குக் காரணம் இதுதானய்யா. கடவுள் மேல பயத்த விட அன்புதானய்யா வருது. வேலைக்காரன்னு முருகனைச் சொல்லும் உரிமைய விட்டுக்குடுக்க முடியலையய்யா.. சாதி...வித்தியாசமெல்லாம் நான் பாக்குறதில்லை. ஆகையால் சாதி பாருன்னு எந்த நூலும் சொன்னா அதைக் கண்டுக்காம இருக்க முடியுது. ஆனா சாமி மேல பயத்தை விட பாசத்தை வைக்கிறத கண்டுக்காம இருக்க முடியலையேய்யா..

பிள்ளையார் சிலைல கூட என்ன பிரச்சனைன்னா....சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு வராம இருக்கனுமேன்னு கவலை. சிலையப் போட்டு ஒடைக்கிறாங்க...ஒடைக்காமப் போறாங்க. ஆளுக மண்டையப் போட்டு ஒடைக்காம இருந்தாச் சரிதான்.

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/09/694.html

அடா அடா அடா என்ன அருமையான பாட்டுய்யா...இளையராஜா இளையராஜா...எங்கய்யா போன?!?!

இசையரசி பி.சுசீலா பாடுன இந்தப் பாட்டைக் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றிங்க. :)

G.Ragavan said...

http://murugaperuman.blogspot.com/2008/09/0506_08.html

// தட முலை என்று வர்ணித்த சங்கக் கவிகள் கூட கூர் முலை என்று வருணிக்கவில்லை! //

எத்தனை சங்கக் கவிகள் படிச்சிருக்கீங்க ரவி? எல்லாச் சங்கக் கவிதையும் தெரிஞ்சாப்புல சொல்றீங்க. ஆணவம் பிடிச்சு வைணவ இலக்கியமெல்லாம் படிச்சுக் குடிச்சிட்டு ஜிரா பேசுன மாதிரியில்ல பேசுறீங்க. உங்களுக்கு அது தகுமா!

ஒரு பாட்டு...வரிகள் மறந்து போச்சு. காதலனும் காதலியும் தழுவிக்கிறாங்க. அப்ப காதலி காதலனோட முதுகையே தடவுறாங்க. ஏன்னு கேக்குறான் அவன். அவ சொல்றா.."இல்ல இப்பிடிக் கூருமையாயிருக்கே..உன்னத் தொளைச்சு அங்குட்டு வந்துருச்சோன்னு அச்சத்தோட தடவிப் பாக்குறேன்"

நீங்க கேக்குற தரவு எங்கிட்ட இல்லை. பாட்டு வரிகள் நினைவுக்கு இல்லை. ஆனா இது சங்கத்தமிழ்ல இருக்கு.

ஆனா ஒன்னு..என்னையப் போல மக்குகளுக்கு இவ்ளவுதான் தெரியுது. உங்களைப் போலப் படிச்சவங்களுக்குத்தான் அது சரியாத் தெரியும். நான் சொன்ன பொருள் கூடத் தப்பாயிருக்கலாம். நீங்க இல்லைன்னா சொன்னா நா மறுபேச்சுப் பேசாம ஏத்துக்கிறேன்.

G.Ragavan said...

http://murugaperuman.blogspot.com/2008/09/0506_08.html

கூர்முலைன்னு சட்டுன்னு சங்கத்தமிழ்ல வரிகள் சொல்ல முடியலை. ஆனா அருணகிரி சொல்லீருக்காரு. முருகனடியவர்களுக்கு முருகனருளாளர்களே உதவி போல.

// பாடல் 728 ( திருவாமாத்தூர் )
ராகம் - ....; தாளம் -

தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன ...... தனதான


அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத்

தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந் //

இதுல வர்ர கூர் கூர்தானா? முலை முலைதானா?

அருணகிரி ஏதாச்சும் தப்பாச் சொல்லீருந்தாருன்னா சொல்லுங்க. அவருக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். :P

G.Ragavan said...

http://ganakandharvan.blogspot.com/2008/09/blog-post_10.html

வணக்கம் நண்பரே. மிக அழகான பாடலைக் கேட்கத் தந்தமைக்கு நன்றி.

இந்தப் பாடல் இடம் பெற்ற படம் நீதிக்குத் தண்டனை. மெல்லிசை மன்னர் இசையில் வெளிவந்த இந்தப்பாடல்தான் திரைப்படத்தில் சுவர்ணலாதாவிற்கு முதற்பாடலும் கூட.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/09/blog-post_12.html

பாலாஜி, இது ஒரு பொதுப்பிரச்சனையாத் தெரியலை. எங்க பாட்டி இருந்த வரைக்கும் ஒரு வயசுக்கு மேல பெரிய வேலையெல்லாம் செய்யலை. அம்மாவே செஞ்சிருவாங்க. ஆனாலும் கீரை ஆயுறது. மோர் சிலுப்புறது (ஹார்லிக்ஸ் பாட்டில்ல பழைய மோரை ஊத்தி குலுகுலுன்னு குலுக்குனா வெண்ணெய் தெரண்டு வரும்)...மாதிரியான ஒவ்வொரு வேலைகள் பாட்டிக்கும் போகும். அவங்களேயும் பாப்பாங்க. அவங்க அனுபவங்களைக் கேட்டுக்கிறதும் நல்லதுதான். அவங்களைச் சும்மாவும் வெச்சிருக்கக் கூடாது. அப்பப்ப முடிஞ்ச வேலையைக் குடுக்கனும்.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2008/09/wall-e.html

வால்-ஈ பாத்துட்டீங்களா. நானுந்தான். இப்பப் பாத்த படங்கள்ள எனக்கு ரொம்பப் பிடிச்ச படம் இதுவும் டார்க்-நைட்டும்தான். அதுல வால்-ஈ சூப்பரு.

அதுலயும் அந்தச் செடியை உள்ள வெச்சிக்கிட்டு ஈவா அமைதியானப்புறம் அதை அங்கயிங்கன்னு கூட்டீட்டுப் போறதும்....மழை பெய்றப்போ கொடை அதுயிதுன்னு ஒரே சிரிப்புதான் போங்க. அதே போல கடைசீல ஈவா அந்தக் காட்சியெல்லாம் பாக்குறப்போ உணர்ச்சிகளைக் காட்டவே முடியாத அந்த ரோபோ முகத்துல கூட காதலைக் காட்டியிருக்கிறது அற்புதம்.

உண்மையிலேயே படம் சொல்லியிருக்கும் பாடம் நாம் அனைவரும் சிந்திக்கத் தொடங்க வேண்டியது.

G.Ragavan said...

வருத்தத்திற்குரிய செய்திதான். கம்பெனிகளின் பங்கும் இதில் இருக்கிறது. அளவுக்கு அதிகமாக சம்பளத்திற்கு விரும்பி அடிக்கடி நிறுவனம் மாறும் பணியாளர்களின் பங்கும் இதில் இருக்கிறது. அவர்களை நம்பி வீட்டு வாடகையில் இருந்து எதையெடுத்தாலும் இரண்டு மடங்கு விலை சொன்னவர்களின் பங்கும் இதில் இருக்கிறது. ம்ம்ம்.

G.Ragavan said...

http://santhoshpakkangal.blogspot.com/2008/09/9-layoff.html

வருத்தத்திற்குரிய செய்திதான். கம்பெனிகளின் பங்கும் இதில் இருக்கிறது. அளவுக்கு அதிகமாக சம்பளத்திற்கு விரும்பி அடிக்கடி நிறுவனம் மாறும் பணியாளர்களின் பங்கும் இதில் இருக்கிறது. அவர்களை நம்பி வீட்டு வாடகையில் இருந்து எதையெடுத்தாலும் இரண்டு மடங்கு விலை சொன்னவர்களின் பங்கும் இதில் இருக்கிறது. ம்ம்ம்.

G.Ragavan said...

ஜென்சி மிக நல்ல பாடகி. இவர் பாடிய பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். உச்சரிப்பு முன்னப்பின்ன இருந்தாலும் மிகநல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருடைய பாடல்களைத் தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

ஒரு சிறிய திருத்தம். உங்கள் ஒலிச்சேர்க்கையில் முதலாகக் கொடுக்கப் பட்டிருக்கும் விழியில் விழுந்து பாடலைப் பாடியவர் பி.எஸ்.சசிரேகா. அந்தப் பாடலை இந்தச் சேர்க்கையிலிருந்து எடுத்து விடுங்கள்.

G.Ragavan said...

http://chummafun.blogspot.com/2008/08/jency.html

ஜென்சி மிக நல்ல பாடகி. இவர் பாடிய பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். உச்சரிப்பு முன்னப்பின்ன இருந்தாலும் மிகநல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருடைய பாடல்களைத் தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

ஒரு சிறிய திருத்தம். உங்கள் ஒலிச்சேர்க்கையில் முதலாகக் கொடுக்கப் பட்டிருக்கும் விழியில் விழுந்து பாடலைப் பாடியவர் பி.எஸ்.சசிரேகா. அந்தப் பாடலை இந்தச் சேர்க்கையிலிருந்து எடுத்து விடுங்கள்.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/09/blog-post_13.html

எப்பவுமே ஒருத்தரை வளர வைக்கிறதும் வாழ வைக்கிறதும் யாருன்னு நெனைக்கிறீங்க? எதிரிகள்தான். குஷ்பூ நல்லவரா கெட்டவரான்னு செய்ற விவாதம் ஒரு பக்கம் இருக்க.... அவரைத் தேவைக்கு அதிகமாக எதிர்ப்பது அவரை வளர்த்து விடத்தான் செய்யும் என்பது என் கருத்து.

ஆனால் உங்களது ஒப்பீடு சரியான வழியில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

// திரைப்படங்களில் ஆபாச உடைகள் அணிந்தவர்,//

இது ஆண்களைக் கவர திரைப்பட இயக்குனர்கள் வைக்கும் காட்சிகள். ஆக..பார்க்கிறவர்கள் பார்க்காமல் போனால்...அவர் நடிப்பதற்குத் தேவையே இருந்திருக்காதல்லவா. அப்ப அவர் ஆடியது தவறா சரியா?

// சில படங்களில் மஞ்சள் சேலை ஈரத்துடன் அம்மன் பாடல்களும் பாடி ஆடியவர்,//

இது பெண்களைக் கவர

// ஆங்கிலம் பேசுபவர், அதிகம் படிக்காதவர், //

ஓக்கே. இதை விட்டு விடலாம்.

// கணவர்களின் எண்ணிக்கையில் ஆய்வுகள் நடத்த வைத்திருப்பவர், திருமணம் செய்யாமலேயே ஒருவருடன் “வாழ்ந்திருந்ததை” வெளிப்படையாக பத்திரிகைகளில் சொன்னவர், //

இதை யாரோ ஒரு ஆண் அரசியல்வாதியும் சட்டசபையிலேயே சொன்ன நினைவு. அவரு என்னோட மனைவி. அவரு அவரோட மகள். இவராச்சும் வெளிப்படையா வாழ்றேன்னு சொன்னாரு. அந்த ஒரு விஷயத்துக்காச்சும் பாராட்டனும். மழுப்பி முழுங்கலை. ஒரு வேளை ரெண்டு "வெச்சிருக்குற" ஆம்பளைங்க இப்ப அரசியல்ல இல்லைங்குறதாலதானோ என்னவோ...அடுத்த முதல்வராகும் தகுதி இன்னாருக்கு இருக்குன்னு சொல்ல முடியலை போல.

// பரபரப்புக்கு எந்தக் கணமும் தயாராக இருப்பவர், இளம் வயதிலேயே அதிகமாக exploit செய்யப்பட்டிருப்பதால் ஆண்களைத் துச்சமாக மதிப்பவர் என்று தமிழக அரசியலில் வெற்றிக் கொடி கட்டத் தேவையான எல்லா இலக்கணங்களும் பொருந்தி வருகின்ற ஒப்பீடு வேறு பயப்படுத்தியது. //

exploit செஞ்சவங்க ஆண்களா பெண்களா ரத்னேஷ். நீங்க ஒப்பீடுன்னு போட்டிருக்கிறது ஒருவிதத்துல பொருத்தமாகவும் படிச்சா ரசிக்கச் செய்யத்தக்கதா இருக்குங்குறதால....சரியா இருக்கும்னு தோணலை.

மத்தபடி திருமா-குஷ்பூ விவகாரம் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2008/09/blog-post_14.html

:) கோவி...ஆன்மீகத்துலயும் அறிவியல்லயும் இருக்குற யாராலும் எதுக்கும் முழுமையா விடை சொல்ல முடியாது. அதுதான் உண்மை. அறிவியல்லயும் எல்லாத்துக்கும் விடையில்லை. இன்னும் இல்லைன்னு வேணா சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமா கண்டுபிடிக்கிறாங்க. ஆன்மீகத்துலயும் இப்பிடித்தான்னு நெனைக்கிறேன்.

ஆராய்ச்சிகள்னு கேக்க சந்தோசமாத்தான் இருக்கு. ஆனாலும் அந்தக் கேள்விக்கான விடையை நீங்க சொல்லலைன்னுதான் தோணுது.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/09/blog-post_09.html

உண்மையிலேயே இப்பல்லாம் பட்டிமன்றம் காமெடி பஜார் ஆகிப்போச்சுன்னுதான் தோணுது. நீங்க சொன்னப்புறம் எனக்கும் அந்தப் பட்டிமன்றத்தைப் பாக்கனும்னும் கேக்கனும்னு விருப்பமா இருக்கு. :( வாய்ப்புக் கெடைக்குமான்னு தெரியலை.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/09/blog-post_11.html

நல்லாப் பாடியிருக்காரு. ரொம்பக் கடினமான பாட்டுதான். அவரால முடிஞ்ச வரைக்கும் பாடியிருக்காரு. அதுவும் முன்னாடி இசையரசி பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், பாலமுரளி கிருஷ்ணா...எல்லாரும் உக்காந்திருக்காங்க. ஆகையால பாடுனது நல்லதுதான்.

இவரு ஒங்களுக்குத் தெரிஞ்சவரா?

G.Ragavan said...

http://cvrintamil.blogspot.com/2008/09/blog-post_13.html

படங்கள் நல்லாருக்கு. குறிப்பா கண்ணகி படமும் கடைசிப் படமும்.

பாத்தியா.... நல்லா ஓடுறவங்க முன்னாடி ஓடுற கொஞ்சப் பேருதான். பின்னாடியெல்லாம் கூட்டத்தோட அரோகரா போடுற மாதிரி நடந்துதான் போறாங்க.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2008/09/blog-post_999.html

உங்களுடைய கருத்துதான் என்னுடையதும். ஒவ்வொரு மதமும் தீவிரவாதத்தை எதிர்க்கிறதுதான். அதை எல்லாரும் ஏதாவது ஒரு நூலைக் கொண்டு ஆதாரம் சொல்ல முடியும். ஆனால் எந்த மதத்தின் பெயரால் நடந்தாலும் தீவிரவாதம் கண்டிக்கத்தக்கதே. கண்டிக்கப்ப்படவே வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் கருத்தோடு அப்படியே ஒத்துப் போகிறேன்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2008/09/268.html

என்னய்யா இப்பிடிப் பயமுறுத்துறீக!!!!

கவுண்டமணி ஒரு படத்துல வசனம் சொல்வாரு..."செர்மன் பொண்டாட்டியோ..சிங்கப்பூர் பொண்டாட்டியோ...சப்பான் பொண்டாட்டியோ..இந்தியப் பொண்டாட்டியோ...பொண்டாட்டீன்னு வந்துட்டாலே அவுக வாயக் கட்டவே முடியாது"

அது மாதிரி... படிச்சவரோ படிக்காதவோ...(கோயிலை) இடிச்சவரோ...இடிக்காதவரோ...அரசியல்வியாதின்னு வந்துட்டாலே....அவுக கையைக் கட்டவே முடியாது போல....

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/09/698.html

நன்றி நன்றி... கேட்ட பாடலைத் தந்தமைக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்ச இளையராஜா பாட்டுல இதுவும் ஒன்னு... படம் பாத்தா யாரு பாடுறாங்கன்னே தெரியாது.. ஆனா துள்ளலோ துள்ளல். இசையரசி பிரமாதாப்படுத்தீருப்பாங்க. கூடப் பாடிய டி.எல்.மகராஜனுடைய தந்தைதான் பிரபல பாடகர் திருச்சி லோகநாதன்.

G.Ragavan said...

http://enularalkal.blogspot.com/2008/09/blog-post_14.html

அசின், சிநேகா நல்ல வாய்ப்புக் குடுத்தா நல்லா நடிப்பாங்க. ஆனா மத்தவங்கள்ளாம் கவர்ச்சிப் பாவைகள்தான். அழகா இருக்காங்க. ஆடுறாங்க. ஆனா மாறுபட்ட பாத்திரங்களக் குடுத்தா துண்டக் காணோம்...துணியக் காணோம்தான். தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகி இடத்தைப் பூர்த்தி செய்ய நெறையப் பேரு இருக்காங்க. ஆனா நல்ல நடிகை எடத்தப் பூர்த்தி செய்யத்தான் ஆளில்லை. இதக் குஷ்பூ வேற சொல்லீட்டாரா...கிழிஞ்சது போங்க. வேற வெனையே வேண்டாம்டோய்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/09/2008.html

என்ன கொத்ஸ்...இப்பிடிப் பண்ணீட்டீங்களே!

ஒன்னும் தேறலை. நல்லா இருங்கய்யா... நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க. :)

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/09/2008.html

இப்படிப் பட்ட புதிர்களை நமக்குக் கொடுக்கும் கொத்ஸ்க்கு தமிழ்ச் செம்மல் என்ற பட்டத்தைக் கொடுக்கிறேன்.

G.Ragavan said...

http://kavinaya.blogspot.com/2008/09/blog-post_11.html

மிக நல்ல பாடல். இந்தப் பாடலை முதன்முதலாகக் கேட்டது கல்கி இதழோடு வந்த ஒலிப்பேழையில்தான். எம்.எஸ்.எஸ் அவர்கள் குரலில். முறுமுறுவெனக் கேட்கச் செரிவாகவும் விறுவிறுவென்றும் இருக்கும். அந்தப் பாடலை மீண்டும் கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/09/blog-post_17.html

எல்லாம் ஏற்புடையதுதான். ஒருவனைப் பார்த்துக் காதல் வருவது பெண்களுக்கு அழகின்மையா? காதலித்தவனே கணவனாக வரவேண்டும் என்று விரும்புவது அழகின்மையா? அதெல்லாம் சரிதான்.

ஆனா இலக்குவனிடம் ஆத்திரங்கொண்டு சொன்னது ஒவ்வாது. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே (சீதையாயினும்) நாவினாற் சுட்ட வடு. கிட்டத்தட்ட இதே தப்பைத்தான் திரவுபதையும் செய்றா. "மாமாவுக்குத்தான் கண்ணில்லைன்னா மாமா மகனுக்குமா"ன்னு சொன்னா எரிச்சல் வரத்தான் செய்யும்.

இதுனால பெண்ணாலதான் எல்லாங் கெட்டுப் போகுதுன்னு சொல்ல முடியாது. நாவடக்கம் என்பது அனைவருக்கும் தேவைதான். அதுனாலதான் பயனில சொல் பாராட்டுவாளை மகளெனள்னு சொல்லாம...பயனில சொல் பாராட்டுவானை மகனெனெல் மக்கட்பதடியெனல்னு சொல்லீருக்காரு வள்ளுவர். அவையடக்கும் அனைவருக்கும் பொது.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/09/blog-post_16.html

// Blogger தமிழன்... said...

\
பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம்
\

அது என்ன நிறம் அண்ணே...:) //

ரிப்பீட்டேய் :) அதென்ன நிறமப்போய் :D

// பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம். அதனாலயே ரஜினி ரசிகனானான். //

அவரு மராட்டம்னு சொல்றாங்களேப்பு!

சரி கதைக்கு வர்ரேன். எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த உரையாடலை நீ கொண்டு போயிருந்த விதம். நல்லாருந்துச்சு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_17.html

என்னது சென்னை ஏர்ப்போர்ட்டுல இட்லி தோசை கெடைக்கலையா? கெடைக்குதுங்களே. நானே பாத்திருக்கேனே. ஆனா கோபால் ஏதாச்சும் ஹைபை லௌஞ்சுக்குப் போயிருப்பாரு. :)

அந்த ஓமன் மசாலா அருமையோ அருமை. பாக்கவே அழகா இருக்குது. எவ்ளோ ஏலக்கா...எவ்ளோ கிராம்பு... எவ்ளோ சுக்கு.... எவ்ளோ சோம்பு.... ஆனா இதுல எதுவுமே மேலுக்கு நல்லதில்லைங்குறாங்களே!!!

ஆனா..அந்தக் கேரளத்தைப் பத்தி நீங்க கேக்குறது சரியாத்தான் இருக்கு. ஏதோ குண்டக்க மண்டக்க கதை சொல்லி வெச்சுட்டாங்க. மன்னிச்சு விட்டிருங்க.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post.html

இதுக்குத்தான் லேசா உருண்டைக்கொழுக்கட்டை செய்யனுங்குறது. பச்சரிசி மாவை மெதுமெதுவா கொஞ்சம் பெரிய சுண்டைக்கா அளவுல பதமா உருட்டிக்கிறனும்.... தண்ணி விட்டு வெல்லம் விட்டு ஏலம் போட்டு லேசா கொதிச்சு வர்ரப்பா உருண்டைகளைக் கொஞ்சங் கொஞ்சமாச் சேத்து நல்லா வேக விடனும். கடைசியில தேங்காத் துருவித் தூவி எறக்கனும். அவ்ளோதான்.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/09/blog-post_4850.html

மிகமிக நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். இரண்டையும் ஒட்ட விதம் மிக அருமை. ரசித்தேன்.

G.Ragavan said...

http://www.sridharblogs.com/2008/09/blog-post_17.html

நன்றாக இருக்கிறது ஸ்ரீதர். கிட்டத்தட்ட தாத்தாவின் வரலாறையே சொல்லி விட்டீர்கள். அத்தோடு தாத்தாவைச் சுற்றியுள்ள அனைவரையும் தொட்டு விட்டு...வேலுவிடம் முடித்தது அருமை.

G.Ragavan said...

http://kaluguppaarvai.blogspot.com/2008/09/blog-post_20.html

ஏதாச்சும் கதை படிச்சீங்கன்னா...அதுல மொதல்ல வில்லன் ஜெயிக்கிற மாதிரி வரும். வெட்டுவான் கொல்லுவான். ஆகையால அந்தக் கதை அதை ஆதரிக்குதுன்னு சொல்ல முடியாது. ஏன்னா கடைசீல எல்லாத்துக்கும் சேத்து கதாநாயகன் கிட்ட வாங்குவான்.

அந்த மாதிரி இந்த விளம்பரத்துல பாத்தீங்கன்னா... மொதல்ல நீங்க சொல்றாப்புலதான் இருக்குது. ஆனா அப்படி தப்பா நெனைச்சவங்களுக்கு ஆப்பு வெச்சாங்களே விளம்பரம் முடியுறப்போ...அத விட்டுட்டீங்களே.

G.Ragavan said...

http://classroom2007.blogspot.com/2008/09/blog-post_21.html

நல்ல கதை. நாட்டு நடப்பை அப்படியே சித்தரிக்கிறது இந்தக் கதை.

இல்லைன்னாலும் உண்மையச் சொல்லனும்னு இருக்குறப்போ சொல்லீரனுங்குறது நீதி.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2008/09/269.html

தருமி சார்... ஒரு வாட்டி பேசிருக்கோம். நம்மள்ளாம் பெரும்பான்மையானவங்க. ஒரே மாதிரித்தான் சிந்திப்போம். இதுவும் அப்பிடித்தான். எந்த மதத்துக்காரங்களா இருந்தா என்ன... நல்லாருந்துன்னா சாப்புட வேண்டியதுதானே. மதுரைல டி.ஆர்.வோ காலனீல பக்கத்து வீட்டு பாய் கோழி மீன் வாத்துன்னு விதவிதமாச் செய்வாங்க... நல்லா சாப்டிருக்கேன். தூத்துடீல கிருத்துவ நண்பர்கள் வீட்டுல கிருத்துமஸ் விருந்தும் உண்டிருக்கேன். மதமாய்யா பெருசு. மனுசந்தான் பெருசு.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சரி. எனக்கிருக்கே. இங்க ஐரோப்பாவுல டூர் போறப்போ அங்குள்ள தேவாலயங்கள்ள போய் இறைவனைத் தரிசனம் பண்ணீட்டுதான் இருக்கேன். எங்கயிருந்தா என்னய்யா... எல்லாம் ஒன்னுதான்.

இத ரொம்பப் பேரு சொல்லீட்டுத்தான் இருக்காங்க. கேக்குறாப்புல தெரியலையேய்யா! :(

G.Ragavan said...

http://muranthodai.blogspot.com/2008/09/blog-post_13.html

அப்பாடி இப்பத்தான் நிம்மதியாச்சு. நல்லவேளை. பிடிச்சவன் கூட சேந்துக்கிட்டாளே.

குருட்டுக் கணவனை நல்லபடி வெச்சுப் பாத்துக்கலாம். ஆனா... அவன் கணவனா நடந்துக்கிறனுமே. பய காவாலியால்ல இருந்திருக்கிறான். அவனைப் போட்டுத்தள்ளாம விட்டாளேன்னு சந்தோசப்படனும்.

G.Ragavan said...

http://muranthodai.blogspot.com/2008/09/blog-post_21.html

சூப்பருங்க கதை. போதைல எழுதுனாலும் கீதை எழுதீருக்கீங்க. ஆகையால பாராட்டித்தான் ஆகனும். சூப்பரு. :)

அந்த ரெண்டு ரூவா ஊசிக் குத்தல்...உண்மையிலேயே குத்தலுதான். :)

G.Ragavan said...

http://www.payanangal.in/2008/09/vidhathu-karuppu-marmadesam-multiple.html

காப்பியோ டீயோ... அந்நியன் படம் ஒரு குப்பை. அத உறுதியாச் சொல்லலாம்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2008/09/blog-post_21.html

நானும் கொஞ்சோல பாத்தேன்... அப்புறம் தாங்க முடியலை....விட்டுட்டேன். அட.. படம் பாக்குறதங்க. :D

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/09/blog-post_21.html

முதல் மரியாதைக்கு என்னைக்கும் உண்டு முதல் மரியாதை. தமிழ்த் திரையில் வெளிவந்த சிறந்த படங்கள்ள முதலிடம்னு கூடச் சொல்லலாம். அந்தத் தகுதி அந்தப் படத்துக்கு இருக்குது. கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை, பாடல் என்று எல்லாத்துலயும் பிரமாதமா அமைஞ்ச படமய்யா அது. படமா...சேச்சே.. காவியம்யா. காவியம்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/09/blog-post_21.html

// இப்படத்தின் பின்னணி இசைப் பிரித்தெடுப்புக்காக நேற்று படத்தை ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். 2 மணி 32 நிமிடம் ஓடும் படத்தின் பின்னணை இசைக் கோர்ப்புக்காக கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கு மேல் செலவாகியது. //

ஹா ஹா ஹா என்ன பிரபா இது? படத்துல இசை கலந்து மயங்கியிருக்கு. அதுல இருந்து எப்படிப் பிரிக்க முடியும்? இசையரசாட்சி நடத்தீருக்காருய்யா இளையராஜா. நீங்க என்னடான்னா...பால்பாயசத்துல இருந்து பாலப் பிரிக்கப் பாத்திருக்கீங்க. கடைசீல பாத்தீங்களா...பால்பாயசத்தையே குடுக்க வேண்டியாதாப் போச்சு. :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/09/blog-post_21.html

// சிவாஜி கணேசனுக்கு மிகைப்படுத்தப்பட்ட நடிப்புத் தான் வரும் என்ற வீணர்களின் பேச்சுக்கு சாவு மணி போல் வந்த படங்களில் முதல் மரியாதை தலை சிறந்தது. மனுஷர் என்னமாய் வாழ்ந்திருக்கின்றார். அடக்கி வைக்கப்பட்ட தன் உணர்வுகளை மெளனமாகக் காட்டும் விதம், பரிசல்காரியின் அன்பில் பொங்கிப் பாயும் மகிழ்ச்சிப் பிரவாகம் என்று காட்சிக்குக் காட்சி நடிகர் திலகத்தின் நடிப்பின் பரிமாணம் சிறப்பாகப் பதியப்பட்டிருக்கின்றது. //

ஒரு உண்மையான நடிகனை உண்மையாகப் பயன்படுத்திக் கொண்ட படம் இது. இயக்குனர் என்ன சொல்வாரோ அதை செஞ்சிட்டுப் போயிருவாரம் நடிகர் திலகம். ஏன்னா...அவரு இயக்குனரு. அவரோட வேலைல தலையிட்டா நல்லாவாயிருக்கும்னு எண்ணம். பாரதிராஜா என்ன எதிர்பாத்தாரோ..அதை அப்படியே செஞ்சிருக்காரு அவரு. தமிழில் இன்னும் நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நடிகர் நடிகர் திலகம். அந்த மீன் சாப்புடுற காட்சி ஒன்னே போதுமேய்யா.... கூரைல ஒழுகுற மழத்தண்ணீல குயிலு கையக் கழுவீட்டுச் சோறு போடுறப்போ...அந்த அழகை நெனச்சி ரசிக்கிறதாகட்டும்...மனைவி மூக்கச் சிந்தீட்டுச் சோறு போட்ட கொடுமையை நினைச்சி மருகுறதாகட்டும். அப்பப்பா.

இந்தப் படத்துல எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. ராதா குயிலாவே வாழ்ந்திருப்பாங்க. அவங்களுக்குப் பொருத்தமா ராதிகாவின் குரல். ஒளக்கு..ஒலக்குன்னு உச்சரிப்புப் பிசகினாலும் பொருத்தமோ பொருத்தம். அப்புறம் வடிவுக்கரசி...இப்பிடியொரு பெண்டாட்டி அமையக் கூடாதப்போய்னு எல்லாரும் பயப்படுற அளவுக்கு ஒரு பாத்திரம். அதையும் பிரமாதப் படுத்தீருப்பாங்க. அப்புறம் அருணா.... அப்பாவைத் தப்பா நெனச்சிட்டு திட்டுறதாகட்டும்... அப்புறம் ....கழுத்துச் சங்கிலிக்கு ஆசப்பட்டு சங்க நெறிச்சிட்டா எங்க போவேன்னு அவரு கலங்குறப்போ காலைப் பிடிச்சிட்டுக் கதறுவதும்...பின்னாளில் அவர் அப்பாவேயில்லை என்று தெரிஞ்ச பெறகு...காலைக் கட்டிக்கொண்டு..."அப்பா ஒரு வரம் கொடுப்பீங்களான்னு" கேக்குறப்பவும்...அதுக்கு அவரு.."நீ என்ன கேக்கப் போறேன்னு எனக்குத் தெரியும். இந்தச் செம்மம் மட்டுமில்லை...ஏழேழு செம்மத்துக்கும் நாந்தான் தகப்பன்..நீதான் மகன்னு" ரெண்டு பேரும் கலங்குறதாகட்டும். அடடா...பாத்தா அழுகை வந்துருமய்யா....

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/09/blog-post_21.html

தொட்டால் பூமலரும்னு பாடுனது போயி... தொட்டால் நோய் பரவும்னு பாட வேண்டியதுதான். :)

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2008/09/blog-post_22.html

ராஜ் மற்றும் பார்வதி அவர்கள் அமைதியான வாழ்க்கையைத் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.

உதவின்னு செய்யலைன்னாலும் போகட்டும். ஒவத்தரவம் செய்றதுல நம்மாளுகள மிஞ்ச முடியாது போல.

நட்பைப் புரிஞ்சிக்கிறதுல ஏன் இத்தனை கஷ்டமோ தெரியலை ஜோசப் சார்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2008/09/269.html

// Blogger தருமி said...

ஜிரா,

//அங்குள்ள தேவாலயங்கள்ள போய் இறைவனைத் தரிசனம் பண்ணீட்டுதான் இருக்கேன். //

எங்க தெய்வம், ஒரே தெய்வம், அதுவே உண்மையான தெய்வம் - அப்டின்னு சொல்றவங்க இதை ஒத்துக்கமாட்டாங்கல்ல. எப்படி அடுத்த மதக் கடவுளை நீங்களும் கடவுள் எனலாம்; அதிலிருந்தே தெரியலையா உங்க தெய்வங்கள் பொய், தப்பு அப்டின்னு -- இப்படில்லா அவுக சொல்லுவாக!! //

சொல்லீட்டுப் போகட்டுமேய்யா. அதுனால நமக்கு ஆனது இல்லைன்னு ஆயிருமா. இப்ப...அக்கா இருக்கு. தங்கச்சி இருக்கு. அக்கா வீட்டுக்குப் போனாலும் நல்ல சோறு கெடைக்கும். தங்கச்சி வீட்டுக்குப் போனாலும் நல்ல சோறு கெடைக்கும். அக்கா வீட்டுலயே கெடைக்குதேன்னு அங்க மட்டுமே தின்னுக்கிட்டிருக்கமா? இல்லைல்ல..பாசமுள்ள தங்கச்சி வீட்டுலயும் போய்க் கைய நனைக்கிறோம்ல. அது உரிமைய்யா...இவுக யாரு குடுக்குறது. எங்கும் நிறைந்தவன் கடவுள்னு எல்லா மதமும் சொல்லுது. அப்ப கோயில்ல இருக்குற ஆண்டவன்...சர்ச்சுலயும் புல்லுலையும் பூண்டுலையும் கூடத்தானய்யா இருக்கான். டீவில படந்தெரியுது. ஆகையினால டீவில மட்டுந்தான் கரண்டு இருக்குன்னு சொல்றவகள ஒன்னும் பண்ண முடியாது. கண்டுக்காம விட்டுற வேண்டியதுதான்.

// //மதமாய்யா பெருசு. மனுசந்தான் பெருசு.//

அம்புட்டுதான். இதத்தான் நானும் சொல்லுதேன். இதோடு எல்லாம் முடிஞ்சிருச்சி.

ஆனா தெய்வம் நம்மள படச்சது எதுக்குன்னா தன்னை மட்டும் கும்பிடறதுக்காக அப்டின்னு சொல்றாகளே ..// //

ஆமா... நம்ம கும்புடுலைன்னுதான் சாமி சந்நியாசம் போகுதோ. சாமி என்ன ஆண்டையா.... போற வார வேலைக்காரனெல்லாம் கும்புடுறேஞ் சாமின்னு சொல்றதுக்கு. அன்புய்யா அன்பு. அது எல்லாத்தையும் ஏத்துக்குறும். மனுசப்பயகளுக்குத்தான் அந்த மனப்பாங்கு கெடையாது.

ஆமா... ஒங்க வீட்டுல கிருஸ்மஸ்க்கு விருந்து இருக்கும்ல. கறி கோழி இருக்கும்ல... எப்பன்னு சொல்லுங்க...ஒரு கைக்கு நானும் வாரேன். :) மதுரப்பக்கம் சாப்ட்டு நாளாச்சு. ஆனாலும் எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. உண்மையிலேயே நிறைவேறலை இதுவரைக்கும். முஸ்லீம்க கல்யாணத்துல கறிப்பிரியாணி பிரமாதமா இருக்குமாம். அதச் சாப்டதில்லைய்யா... :(

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2008/09/blog-post_21.html

நீங்க திருப்பதிக்குப் போடுவீங்களா...எங்க வீடுகள்ள இருக்கங்குடி மாரியம்மனுக்கும் சங்கரங்கோயில் கோமதிக்கும் மாவிளக்குப் போடுவாங்க. கண்ணுவலி வந்தா கண்ணுல வெச்சு எடுப்பாங்க. வயித்துவலின்னா வயித்துல..இப்பிடி.

எங்க வீடுகள்ள...அரைக்க மாட்டாங்க. பச்சரிசியை ஊற வெச்சிக் காய வெச்சி...அத ஒரல்ல போட்டு ஒலக்கையால டங்குடங்குன்னு இடிக்கிறப்பவே வெல்லம் போடுவாங்க. அரிசியும் வெல்லமும் நல்லா கும்முன்னு கலந்துரும்.

அதுல வெளக்கு வெச்சி...குழிச்சி...நெய்யூத்தி திரியேத்துவாங்க. பூஜையெல்லாம் முடிஞ்சி வெளக்கு அணைஞ்சப்பெறகு...அந்த மாவுல நெய் எறங்கீருக்கும். அடடா...மணமணக்குமே...

இப்பல்லாம் ஏது உரலு ஒலக்கை. பச்சரிசியை ஊற வச்சு.. காய வச்சு... அப்புறம் மிக்சீல போட்டு அடிச்சி....நல்லா அடிச்சி வர்ரப்ப வெல்லத்தையும் போட்டு அடிச்சி எடுத்தா மாவு பதமா வரும். அதுல வெளக்குதான்....அப்புறமா தொண்டைக்குள்ள களுக்கு களுக்குத்தான். :)

G.Ragavan said...

http://tvrk.blogspot.com/2008/09/blog-post_9400.html

என்னைக் கேட்டால் கருணாநிதி இதை முதலிலேயே செய்திருக்க வேண்டும். காலம் கடந்தாவது எடுத்த முடிவாயினும் சரியான முடிவு. இனிமே தமிழ்நாட்டுலயும் கூடித் தின்னாத்தான் காலந்தள்ள முடியும்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_22.html

அடடா ஒரு பாட்டு நினைவுக்கு வருது...

பூக்களே வண்ணவண்ணக் கவிதைகள் படிக்கும்..பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்....

கண்ணே கனியமுதே-ங்குற படத்துப் பாட்டு.

ஒங்களுக்கு வசந்தம் தொடங்குது. எங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்ள இலையுதிர்க்காலம் வந்துரும். குச்சிகுச்சியா மரமெல்லாம் நிக்கும். குளுரும்.

ஜோசப் சார் சொன்னாப்புல ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது. ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/09/blog-post_21.html

ஆனாலும் சாருவுக்கு நகைச்சுவை உணர்சு ரொம்ப சாஸ்திங்கோவ். இவரு எழுதுனா இலக்கியமா. அதென்னது சீரோ டிகிரியா... அதப் படிச்சுக் கழுத்தும் தலையும் 360 டிகிரிக்குச் சுத்துச்சேய்யா...சரி விடுங்க. முந்நவீன இலக்கியம்னா அப்படித்தான் இருக்கும்னு வெச்சுக்கோங்களேன். இப்ப என்ன பிரச்சனைன்னா....ரெண்டு மூனு வலைப்பதிவார்கள் சேந்து அவரோட பூச்சியக் கோணம்... அதாங்க சீரோ டிகிரிக் கதைய தமிழில் மொழி பெயர்த்தால்...ஓ தப்பாச் சொல்லீட்டேனோ...ஆங்கிலத்துல மொழி பெயர்த்தால் ... அவரு வலைப்பூக்களைக் கொண்டாடுவாரு.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/09/blog-post_21.html

இன்னொரு விசயம்...யாராச்சும் சாருவைப் பாக்க முடியும்னா...இந்தக் கேள்வியெல்லாம் கேளுங்கய்யா...

1. தொல்காப்பியரைத் தெரியுமா? ஏன்னா நானு தொல்காப்பியரை ஒவ்வொரு நாளும் படிச்சுப் படிச்சு வியக்கிறேன்.

2. Anne Rice எழுத்துகளைப் படிச்சிருக்காரா? என்னது அப்படின்னா யார்னே தெரியலையா?

3. Witch Hunter, Vet might fly போன்ற புதினங்களைப் படிச்சிருக்காரா?

4. டச்சு மொழி இலக்கியங்களின் நவீனச் செழுமையின் அலங்காரங்களை அனுபவித்திருக்கிறாரா!

இப்பல்லாம் நான் யாரும் வந்தா...எவ்ளோ படிச்சிருக்கீங்கன்னுதான் கேக்குறது. சாரு....விடையிருக்கா? இதையெல்லாம் படிச்சிருக்கீங்களா? என்னது கற்றது கைமண்ணளவா? ஹி ஹி ஔவையாரை நினைச்சு நீங்களும் வியந்தா நல்லாயிருக்கும்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/09/blog-post_21.html

// டிஸ்கி 2: இந்த சந்திப்பில் பங்கெடுத்து ஆனால் இதைப் போன்ற Irresponsible Statements கூறப்பட்ட பொழுது கண்டனங்களைத் தெரிவிக்காத சகபதிவர்களுக்கு என் கண்டனங்கள். //

சகபதிவர்களா? ஹி ஹி அவங்கள்ளாம் சாரு நிவேதிதா பேசுறதக் கேக்க முடியாம தூங்கீட்டாங்களாம். (கரகாட்டக்காரன்ல கவுண்டமணி கிட்ட செந்தில் சொல்வார்ல...எனக்குப் பிடிக்கலைன்னா தூங்கீருவேன்னு) இல்லைன்னா...வீட்டுக்கு வந்தப்புறமாச்சும் சுடச்சுட பதிவு போட்டிருப்பாங்கள்ள. கை கூடத் தட்டலையாம்யா...நம்புங்க.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_19.html

என்ன டீச்சர் க்ராய்சானை இவ்ளோ லேசாச் சொல்லீட்டீங்க. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதிலும் ஆஸ்திரிய நாட்டு க்ராய்சான் அப்படியே பிறை வடிவத்துல இருக்கும். டச்சுக்காரங்க பிறைவடிவத்த விட்டுட்டு ஒரு மாதிரி முக்கோணமா போடுவாங்க. ஆனா பிரெஞ்சுக் க்ராய்சான் ரொம்ப நல்லாயிருக்கும்.

இந்தக் க்ராய்சானை மொதமொதலா செஞ்சவங்க ஆஸ்திரியாக்காரங்க. துருக்கியர்கள் ஒரு வாட்டி ஆஸ்திரியா மேலப் படையெடுத்து வந்தாங்களாம். அப்ப ஆஸ்திரியாக்காரங்க சண்டை போட்டு ஜெயிச்சாங்களாம். தங்கள் மேல படையெடுத்து வந்த ஒரு இஸ்லாமிய நாட்டை வெற்றி பெற்றதன் அடையாளமா பிறை வடிவத்துல ரொட்டி சுட்டுச் சாப்டாங்களாம். அதான் க்ராய்சான்.

இந்தக் கதைய ஆம்ஸ்டர்டாம்ல இருந்து ஆஸ்திரியாவுக்கு விமானத்துல போறப்போ அம்மாவுக்குச் சொன்னேன். ஏன்னா...விமானத்துல சாப்புடுறதுக்கு அம்மா தேர்ந்தெடுத்தது க்ராய்சான். :)

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2008/09/blog-post_21.html

// Sridhar Narayanan said...

ஜி ரா கவனத்திற்கு,

மேலே போட்ட எனது மறுமொழியில் சிரிப்பான் எதுவும் போடவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உண்மையாகவே நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கிறேன். ஆமாம் :-(( //

ஹி ஹி போங்க ஸ்ரீதர். ஆனாலும் ஒங்களுக்குக் குசும்புதான். கடுமைன்னு தமிழ்ல சொன்னா நெறைய. கன்னடத்துல சொன்னா கொறச்சல். மளே கடுமே அப்படீன்னா மழை கொறவுன்னு பொருள். நீங்க சொல்ற கடுமையான மனவுளைச்சல் கன்னடந்தானே. :) பாத்தீங்களா ஒங்க எழுத்தை நான் கன்னடத்துல மொளி பெயர்த்து (எடுத்து) இருக்கேன். என்னையப் பாராட்டாம கிண்டுறீங்களே!

G.Ragavan said...

http://isaiinbam.blogspot.com/2008/09/blog-post.html

குன்னக்குடியின் இசையை ஏற்காதார் ஏற்காதாரே. விட்டுத்தள்ளுங்கள் அவர்களை. அவர்களுக்கு அவர்களே சீரார். மற்றோர் வேறூரார்.

வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதனுக்கு அஞ்சலி. அவரை இழந்து வாடும் சுற்றம் சூழல் ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_19.html

// துளசி கோபால் said...

எனக்கும் க்ராய்சண்ட் ரொம்பப் பிடிக்கும். ஆனா தினம்தினமுன்னுன்னதும் ரொம்ப பேஜாராப் போயிருச்சு.

அது சரி. அம்மாவுக்குப் பிடிச்சுச்சா? //

நீங்க தொடர்ந்து 19 நாள் சுத்தீருக்கீங்க. அதான் பிரச்சனை. நான் மூனு நாளு..நாலு நாளுன்னு ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக் கூட்டீட்டுப் போனேன். ஆகையால கிராய்சான் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. அப்பாக்கு சுகர் இருக்கு. இருந்தாலும் பாருங்க....காம்ப்ளிமெண்டரி பிரேக்பாஸ்ட்டுல க்ராய்சானுக்கு ஜாம் வெச்சிச் சாப்புடுவாரு. சரி. நெதர்லாந்துக்கு திரும்புனதும் வீட்டுச் சாப்பாடுதானேன்னு விட்டுருவோம். அதுல பாருங்க.. பிசா நகரத்துல ஓட்டல் பொலோன்யாவுல சக்கரச்சத்து இருக்குறவங்களுக்குன்னே தனியா ஜாம் வெச்சிருந்தான். கேக்கனுமா? :)

ஆனா மத்தபடி சாப்பாடுக்குப் போற எடத்துல கஷ்டப்பட்டாங்க. எனக்குப் பழகீருச்சு. சோறு இல்லைன்னா கவலையேயில்லை. பிரட்..மீட்னு சாப்டுருவேன். ஆகையால இந்திய விடுதிகள் கண்ணுல பட்டா அதுக்குள்ள நொழைஞ்சிருவோம். பிசாவுல இந்திய விடுதியில்லை. ஒரு பாகிஸ்தானி கடைதான். ஒரு வாட்டி உள்ள போனோம். அடுத்த வாட்டி வேற எங்கயும் சாப்புட வர மாட்டேன்னு உறுதியாச் சொல்லீட்டாங்க அப்பா. எங்க..பாஸ்தா வாங்கிக் குடுத்திருவேனோன்னு பயம். :)

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=443

:) முடிக்கிறப்போ வெச்சீங்களே ஒரு குத்து. அப்பப்பா.

உங்க நடையப் பத்திச் சொல்லனுமா. ஆனா மேல சொன்ன விமர்சனங்கள்தான். அறிவியல் விஷயங்கள் நெறைய சொல்லீட்ட மாதிரி ஒரு எண்ணம். ஏன்னா.. படிச்சதுக்கு அப்புறம் எதையும் தேடனும்னா எதைத் தேடுறதுன்னே நெனைவுக்கு வரலை.

ஆனா நல்லா எழுதீருக்கீங்க. எப்பிடிய்யா யோசிக்கிறீங்க.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=447

கதைய விடச் செணத்தப் பத்தித்தான் பேச்சுப் போலருக்கு. எங்கூர்ப்பக்கம் வெரசான்னு சொல்வாங்க.

கதை நல்லாருக்கு. முடிவுதான் கொஞ்சம் வருத்தமாயிருக்கு. பூனைய வளத்தான்னு முடிச்சிருந்தா சந்தோசமாயிருந்திருக்கும். ஆனா அது பழைய முடிவாச்சுதே. ஆகையால புதுமுடிவு கதைக்குப் பொருத்தந்தான்.

G.Ragavan said...

http://www.luckylookonline.com/2008/09/blog-post_24.html

வாழ்க வாழ்க.

இந்த உதவியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி பல. மனிதநேயமிக்க காரியம் செய்திருக்கின்றீர்கள்.

செய்தியை அறியத்தந்தைமைக்கு நன்றி ல.லு. லக்கிலுக்கை ல.லுன்னும் சொல்லறது என்னோட வழக்கம். :) பின்னூட்டங்களையும் படிச்சதாலா வந்த குசும்பு இது! :D

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/09/blog-post.html

எனக்கும் இந்தப் பாட்டெல்லாம் பிடிக்கும். உழவன் மகன், தாய்நாடு படத்துல எல்லாப் பாட்டுமே நல்லாருக்கும். மனோஜ்-கியான் இசையில வெளிவந்த எல்லாப் படத்துலயும் பாட்டுகள் நல்லாயிருக்கும். இணைந்த கைகள்ள கூட. ஒரு மாதிரி வித்யாசமான கலக்கலா இருக்கும்.

செம்மறி ஆடே பாட்டு சூப்பரோ சூப்பர். உன்னை தினம் தேடும் தலைவன் பாட்டும் கலக்கல். வரகுச் சம்பா மொளைக்கலை ஹான்னு ஒரு பாட்டு சசிரேகா பாடியிருப்பாங்க. கலக்கல் பாட்டு அது. அதே மாதிரி ராதா நீச்சல் கொளத்துல இருக்குறப்ப ஒரு பாட்டு உண்டு. அதுவும் ஜில்லுன்னு இருக்கும்.

தாய்நாடு...ஒரு முல்லைப் பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா...சிறு பிள்ளைப் பூமுகம் கொஞ்சம் வாடினால் நெஞ்சம் தாங்குமோ கண்ணா....பாட்டு ஒரு மாதிரி வடக்கத்திச் சாயல்ல இருக்கும். ஆனா பாக்குறதுக்கும் நல்லாயிருக்கும். சத்யராஜ், ஸ்ரீவித்யா, நம்பியார், ரெண்டு கொழந்தைங்கன்னு. கலக்கல்.

இதே படத்துல இன்னொரு டி.எம்.எஸ்-பி.சுசீலா பாட்டு இருக்கு. எங்கயோ வில்லனோட கோட்டைக்குள்ள போய் சத்யராஜும் ராதிகாவும் ஆடுவாங்க. பாட்டு சட்டுன்னு நினைவுக்கு வரலை. ஆனா கலக்கலோ கலக்கல். கெடைச்சா அந்தப் பாட்டையும் குடுங்கா.

தாய்மாமன் கைகள் பட்டு பாட்டும் நல்ல பாட்டுதான்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/09/subway-coke.html

இனிய தலை தீபாவளி நல்வாழ்த்துகள். முருகனருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.

புரட்டாசியாவது கார்த்திகையாவது... கோழி மீன் இல்லைன்னா என்ன சாப்புடுறது! எனக்குச் சோறு சப்பாத்திகளை விட கோழி மீன் இருந்தாப் போதும். நீ சொல்றாப்புல ஒரு மாசம் சாப்டாம இருந்தா நல்ல பயிற்சி வருந்தான்.

வெற்றித் திருநகர் படிக்கலை. வீட்டுல புத்தகம் இருக்கு. அம்மா படிச்சிருப்பாங்க.

கோக்கெல்லாம் பொதுவா குடிக்கிறதில்லை. எப்பவாச்சும் குடிக்கிறதுதான். பர்கர் கிங் போனாக் கூட குடிக்கத் தண்ணிதான் வாங்குறது வழக்கம்.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/09/blog-post_26.html

வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா

அணைந்த விளக்குகள்...தாங்கள் ஏற்றி வைத்த விளக்குகளில் ஜொலிக்கின்றன.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2008/09/blog-post.html

செந்தூரப்பூவே படத்துல வர்ர...சசிரேகா பாடும்..செந்தூரப் பூவே பாட்ட மறந்துட்டீங்களே.

அதே படத்துல "சோதனை தீரவில்ல சொல்லியழ யாருமில்ல" பாட்டு.. ஜெயச்சந்திரன் பாடுனது.

அதோட முடிஞ்சதா... கிளியே இளங்கிளியே இந்தச் சபையில் வந்தாலென்ன...மலேசியா கலக்கீருப்பாரே...

இதுவும் மனோஜ் கியான் இசைதான். அடுத்து ஊமை விழிகள்.

சசிரேகா பாடுன ராத்திரி நேரத்துப் பூஜையில்...

பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடுன...தோல்வி நிலையென நினைத்தால்...

மாமரத்துப் பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா...

இதெல்லாம் மனோஜ் கியான்.

அப்புறம் வெளிச்சம் படத்துல வருமே....துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே.. சொல்லிக் கொண்டு போனால் என்ன...ஆகா..ஆகா

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/09/mgr.html

என்ன ரத்னேஷ்... பதிவுகளில் பரபரப்புக் கூடுதே.

எந்த நடிகை குடிச்சா என்ன... குடிக்கலைன்னா என்ன... எம்.ஜி.ஆர் எவ்ளோ நல்ல "நடிகர்"னு உலகத்துக்கே தெரியும். அவரோட நூலையும் அப்படியே நம்பிக்கிட்டு.

அப்படியே இருந்தாலும் அந்த நடிகை குடிக்கிறதுல என்ன செய்தி? எம்.ஜி.ஆரோட அப்பாவித் தன்மையக் காட்ட பதிவு போட்டேன்னு சொன்னா.. உண்மையிலேயே நீங்கதான் அப்பாவி. :)

பி.கு..கையில் பிரம்போட வந்திருக்கேனான்னு தெரியாது. ஆனா ரத்னேஷ் பதிவுன்னா கருத்தை அப்படியே சொல்லீட்டுப் போறது வழக்கம். :)

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/09/21.html

ஹா ஹா அவரு வயித்தெரிச்சல்ல சொன்னாலும்... அதே மாதிரி ஆயிருச்சு. ஆனா அவரு இன்னொன்னையும் புரிஞ்சிக்கனும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மாதிரி ஆளுங்களை வாழ வைக்கும் தெய்வமே திமுக தலைமைதான்னு.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/09/blog-post_26.html

நல்ல கருத்தாய்வு. சட்டுன்னு சொன்னா... சோ திமுக ஆதரவாளரா இருந்தா இப்பிடித்தான் கட்டுரை இருந்திருக்கும். :)

jokes apart...

ஜெயலலிதாப் பாத்தாலே பத்திக்கிட்டு வர்ரது மட்டுமில்ல... இப்பல்லாம் கருணாநிதியைப் பாத்தாலும் பத்திக்கிட்டுதான் வருது. அரசியலைக் குடும்பச் சண்டைக்கடையாக்குனது... தமிழ்நாட்டுல முக்கியத் தொழில்களைத் தன்னோட குடும்பத்துக்குள்ளயே அடக்கிக்கிட்டது. இன்னும் நெறையச் சொல்லலாம். கருணாநிதி மேலயும் திமுக மேலையும் இருந்த நம்பிக்கை போயே போச்சு. ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போட்டா ஒரு வித்யாசமும் இருக்கப் போறதில்லை. என்ன கொடுமையோ... யாருக்குப் போடுறதோ...

ஸ்டாலின் மேலையும் விஜயகாந்த் மேலையும் நம்பிக்கை வைக்க முடியலை. பாக்கலாம்...வருங்காலம் என்ன சொல்லுதுன்னு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/09/vs.html

உப்புமா கிண்டுறப்போ அடிச்சுரண்டிக்கு... அதாவது சட்டீல ஒட்டிக்கிட்டிருக்குற முறுகலுக்குப் போட்டி நடக்கும்னு சொல்வாங்க. எனக்கு உப்புமாவே பிடிக்காதுங்குறதால..நான் கண்டுக்கலை. அந்த மாதிரி இந்தப் பதிவுலயும் அடிப்பிடிச்சிருச்சு. :( ஆனா அதுக்கு யாரும் போட்டி போடலைன்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2008/09/blog-post_26.html


உணவுக்கட்டுப்பாடு தேவைதான். உங்கப் பதிவைப் படிச்ச பிறகு...நானும் எதுக்கும் இதையெல்லாம் இப்பவே குறைச்சிக்கலாம்னு தோணுது.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/09/blog-post_24.html

ரொம்ப நல்ல பாட்டுங்க. இதுல எனக்குப் பிடிச்சது தமிழ் வடிவம். இளையராஜாவின் குரலும் எஸ்.ஜானகியின் குரலும் இணைந்து இயைந்து ஒலிக்கும். பாடல்களைக் கொடுத்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://blog.balabharathi.net/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81/

அது சரி.... எல்லாம் ஒரு குட்டைல ஊறுன மட்டைங்கதான். நாமதான் இவங்க நல்லவங்களோ அவங்க நல்லவங்களோன்னு நெனச்சிக்கிட்டு ஏமாத்திக்கிறோம். ஆனா அவங்க தெளிவாயிருக்கன்னு மட்டும் புரியுது.

G.Ragavan said...

http://pathivubothai.blogspot.com/2008/09/blog-post_1952.html

நல்லாருக்கு கதை. உண்மையிலே நடந்திருந்தாலும் பாராட்ட வேண்டியதுதான். குறிப்பாக செந்தில். எல்லாரும் வாழ்க. நலமுடன் வாழ்க.

G.Ragavan said...

http://muralikkannan.blogspot.com/2008/09/blog-post_3460.html

எல்லாரும் இப்பிடித்தானே படமெடுக்குறாங்க. நல்ல படத்தை மக்கள் எப்பவும் ஆதரிக்கிறாங்க. சமயத்துல நல்ல படம் எடுக்குறேன்னு பிராண்டி வெச்சிர்ராங்க. அதான் ஓட மாட்டேங்குது.

ஒங்க கணக்குப்படி பாத்தா எல்லாருமே இந்த வகைதான். காசு பாக்கத்தான் தொழில். நல்ல படம் இல்லைன்னு தோணுச்சுன்னா நிராகரிக்க வேண்டியது நம்முடைய கடமையும் கூட.http://muralikkannan.blogspot.com/2008/09/blog-post_3460.html

எல்லாரும் இப்பிடித்தானே படமெடுக்குறாங்க. நல்ல படத்தை மக்கள் எப்பவும் ஆதரிக்கிறாங்க. சமயத்துல நல்ல படம் எடுக்குறேன்னு பிராண்டி வெச்சிர்ராங்க. அதான் ஓட மாட்டேங்குது.

ஒங்க கணக்குப்படி பாத்தா எல்லாருமே இந்த வகைதான். காசு பாக்கத்தான் தொழில். நல்ல படம் இல்லைன்னு தோணுச்சுன்னா நிராகரிக்க வேண்டியது நம்முடைய கடமையும் கூட.

G.Ragavan said...

http://nizhalpadam.blogspot.com/2008/09/blog-post_26.html

ஹா ஹா ஹா பாவங்க நீங்க...

எனக்கு எப்படியிருந்தாலும் தூக்கம் வந்துரும். ஒரு வாட்டி நண்பர்கள்ளாம் டூர் போனோம். ராத்திரி பஸ்சு. நாம் பாட்டுக்க பஸ் பொறப்பட்டதும் தூங்கீட்டேன். அவன் பாவம் பக்குபக்குன்னு முழிச்சிக்கிட்டே வந்தான். பஸ்சா இருந்தான்ன..ரயிலா இருந்தான்ன....தூக்கம்னா தூக்கந்தான். :)

G.Ragavan said...

http://sinnakuddy1.blogspot.com/2008/09/blog-post_28.html

நன்றி நன்றி நன்றி :)

இந்தப் பேட்டியைப் போன்ற மற்ற பலபேட்டிகளையும் இருந்தால் தரவும்.

G.Ragavan said...

http://thekkikattan.blogspot.com/2008/09/donation-of-organs.html

கட்டுரையைப் படிச்சதும் ஸ்பெயின்காரங்க மேல மரியாதை வந்துருச்சுய்யா. நல்லாயிருக்கனும் மகராசங்க.

தருமிசார் ரத்ததானம் பத்திச் சொன்னாரு. ஒரு அனுபவம். கல்லூரியில் படிக்கையில் நானும் ரத்ததானம் செய்திருக்கிறேன். வேலைக்கு வந்த புதிதிலும் செய்திருக்கிறேன்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என்னுடைய தந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. நான்கு யூனிட்டுகள் ரத்தம் தேவை என்றார்கள். அதை அவர்களே ஏற்பாடு செய்து கொள்வார்கள். ஆனால் நாம் வேறு நான்கு யூனிட்டுகள் தானம் செய்ய வேண்டும். என்னுடைய சகோதரி, மைத்துனன், சகோதரியின் தோழியின் நண்பன் மற்றும் நான் என்று முடிவு செய்து சென்றோம். எனக்கு ஒரு ஐயம் இருந்தது. அங்கு ரத்தம் எடுக்கும் முன் பரிசோதனை செய்து கொண்டிருந்த மருத்துவரிடம் (அல்லது உதவியாளரிடம்) கேட்டேன். "சொரியாசிஸ் இருப்பவர்கள் ரத்தம் குடுக்கலாமா?" என்று. ஏனென்றால் பணிக்கு வந்து சில வருடங்களுக்குப் பிறகு சொரியாசிஸ் வந்திருந்தது. உடனே அந்த மருத்துவர்..."அடடா.. கூடாதுங்க. சொரியாசிஸ் இருந்தா ரத்தம் கெட்டுப் போன மாதிரி" என்றார்.

உண்மையில் அது கெட்டுப் போவதல்ல. குடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கலாம். ஏனென்றால் சொரியாசிஸ் நோய் ஒருவரிடம் இருந்து ஒருவர் பரவாது. பரவினாலும் அது மரபணுக்கள் வழியாக...அதாவது குழந்தைகள் வழியாகத்தான் பரவும். ஆகையால் தானத்திற்கு ஏற்க மாட்டார்கள்.

இந்த நிலையில் மற்ற உடலுறுப்புகளை என்ன சொல்வது! ம்ம்ம்.. நம்முடைய பொருள்..நமக்குப் பிறகு பலருக்குப் பயன்படுமானால் அது நன்றே.

இந்து மதத்தின் எந்தப் பிரிவிலும் உடல் பிரதானம் என்று சொல்லவில்லை. உடல் பிறப்போடு மட்டும் ஒட்டியது. ஆனால் ஆன்மா மட்டுமே மீண்டும் வரக்கூடியது. ஆகையால் உடலுறுப்புகளைத் தானம் செய்வதில் தடையில்லை.

G.Ragavan said...

http://pudugaithendral.blogspot.com/2008/09/blog-post_29.html

அடா அடா அடா

இந்தக் கோதாவரிக்குப் போகனும்... படகுப் பயணம் போகனும்னு எனக்குந்தான் ரொம்ப நாள் ஆசை. பாப்பம். எப்ப நிறைவேறுதுன்னு.

படமெல்லாம் நல்லா வந்துருக்கு. தொடர்ந்து எழுதுங்க.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/09/eagle-eye.html

முருங்கைக்காய்ச் சாம்பாரைப் பெசஞ்சுதானே திங்கனும். பாவம் வடக்கத்திப் பயக. திங்கத்தெரியாம தின்னுட்டு முருங்கைக்காயை மதிக்காமப் போய்ட்டாங்க.

முருங்கைன்னு சொன்னதும்... ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருது. எங்கூடப் படிச்ச நண்பன் ஒருவனோட பாட்டி எப்பவும் முருங்கைச் சமாச்சாரங்களை மரத்துக்காய், மரத்து எலை, மரத்துப்பூன்னுதான் சொல்வாங்க. என்னன்னு விசாரிச்சா..அந்தத் தாத்தாவோட பேரு முருகப்பச் செட்டியாராம்.

தெனமும் முருங்கைக்காய்ச் சாம்பார் சாப்டதன் பலன்..கிளுகிளுகதைப் போட்டீல வந்து நிக்குது.நடக்கட்டும். நடக்கட்டும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/09/eagle-eye.html

// இலவசக்கொத்தனார் said...
நீரோ ஊருக்குப் போகப் போறீரு. //

நீரோவோட ஊரு ரோமாபுரி. ஆக...வெட்டி பாலாஜி இத்தாலிக்குப் போறாரா....ஐரோப்பாவுக்கு வர்ராரா! சூப்பரப்பு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_5623.html

கொலு ரொம்பப் பிரமாதமா வந்துருக்குங்க. வாழ்த்துகள்.

பலர் Goluன்னு உச்சரிப்பாங்க. அது தவறு. Koluன்னுதான் உச்சரிக்கனும். கொலுவீற்றிருந்தான்னு சொல்வாங்கள்ள. அதே மாதிரி Koலுசை Goலுசுன்னும் தப்பாச் சொல்றாங்க.

எல்லாம் நல்லா அமைஞ்சிருக்கு டீச்சர்.

போன வருசந்தான் முருகனையும் மயிலையும் விட்டுட்டீங்கன்னு பாத்தேன். இந்த வருசமும் விட்டுட்டீங்களே!

G.Ragavan said...

http://maraboorjc.blogspot.com/2008/09/blog-post.html

படிக்கிறப்பவே கஷ்டமாயிருக்கு. பொதுமக்களுக்கு விழிப்புணர்வே இல்லையே. என்ன கொடுமைங்க இது. ஒரு மாசத்துக்கு முன்னாடி போயிருந்தப்போ இந்த நெலமையைப் பார்த்தூ வருத்தப்பட்டேன். நீங்க பதிவாவே போட்டுட்டீங்க.

G.Ragavan said...

http://ennam.blogspot.com/2008/09/blog-post_29.html

அவருடைய ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து தவிக்கும் உறவு, நட்பு மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவருடைய பாடல்களுக்கான சுட்டி கிடைக்குமா?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/09/blog-post_28.html

என்ன இருந்தாலும் கவுண்டர் கவுண்டர்தான். தனியாவும் சரி...செந்திலோடையும் சரி...கலக்கல்தான். அந்த நக்கல் ஒன்னே போதுமப்போய். சமயத்துல அவரு எத்துறதும் ஒதைக்கிறதும் சங்கடப்படுத்துனாலும்.. கூட்டிக்கழிச்சிப் பாத்தா நல்லாத்தான் இருக்குது.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/10/blog-post.html

பாக்யராஜ் இசையில் வந்த பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் அவர் தனித்துவமான இசையமைப்பாளாரா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.

காவடிச் சிந்து பாடல்கள் வெளி வந்தன. ஆனால் படம் வரவில்லை.