Tuesday, October 07, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் - அக்டோபர் 2008

அக்டோபர் 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

26 comments:

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/10/blog-post_06.html

எனக்குக் கொஞ்சம் ஞாபகமறதிங்க. அதுலயும் இந்த அரசியல்னா அந்த மறதி கூடிரும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கருணாநிதி ஏதோ ஒரு உண்ணாவிரதத்துல கலந்துக்கிட்டாப்புல நினைவு. என்ன உண்ணாவிரதம் அது?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/10/blog-post_07.html

ஏலேய்... என்னல இது! கதையா இதுன்னேன். கதையாம்ல கத. பெரிய கதை. சந்தோசமா முடிக்கத் தெரியாதோ... எப்படில ரெண்டு பேரையும் பிரிச்ச.. ஐயோ எனக்கு மனசே கேக்கலையே... இனிமே ஒங்கதையப் படிச்சா..என்னன்னு கேளு. கதையாம் கத.

G.Ragavan said...

http://eerththathil.blogspot.com/2008/09/blog-post_26.html

நல்ல தொகுப்பு. இந்த மாதிரி சுருக்கமா குடுக்குறப்போ தேடிப் பிடிச்சு படிக்க லேசா இருக்கும்.

அதெல்லாம் சரி.. தமிழ் வலைப்பூக்கள்னு என்னோட வலைப்பூ வந்தா சரி. "சிறந்த"ங்குறது பொருத்தமாயில்லையே. :)

G.Ragavan said...

http://www.sridharblogs.com/2008/10/blog-post.html

டென் காமேண்ட்மெண்ட்ஸ் படத்தைப் பார்த்திருக்கீங்களா? அருமையா பிரம்மாண்டமா இருக்கும்.

பொதுவாவே பாத்தீங்கன்னா... எல்லாப் புராணங்களும் ஒரு குறிப்பிட்ட formulaக்குள்ள அமைஞ்சிரும்.

ஒரு நாயகன். ஒரு எதிர்நாயகன். ஒரு கடவுள். இதுதான் கதை. இதுல அந்தந்த நாட்டுப் பிரச்சனையைத் தூவிக்கனும்.

தமிழ்நாடுன்னா...சாதிப் பிரச்சனை. ஆப்பிரிக்காவுல அரசியல் பிரச்சனை.

அப்புறம் சூழ்நிலைக் காரணி மாயாஜாலம். மலையா இருக்குற ஊருன்னா.. மலை உடையனும். கடலு..தண்ணின்னா..அது வழி விடனும். இதுவே பாலைவனம்னு வெச்சுக்கோங்க.... தண்ணி வரும். பந்தல் வரும். இந்தப் பச்சடியையும் சேத்துக்கனும்.

அப்பப்ப வளமான வாழ்வு ஊறுகாயும் சொர்க்கப் பாயாசமும் சேத்துக்கிட்டா புராண விருந்து கலக்கலா இருக்கும். :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/10/blog-post_07.html

அடடே! பூனைக்குக் குடுக்குற வசதியா. எங்கிட்டக் கூட கொஞ்சம் துணிகள் இருக்கு. போட்டுக்கலாம். ஆனா போட்டு அலுத்துருச்சேன்னு வெச்சிருக்கேன். யாருக்குக் குடுக்குறதுன்னு தெரியலை இங்க. ஆனா வெலைக்கெல்லாம் விக்க விருப்பமில்லை. இந்தியாலன்னா யாருக்கும் குடுத்திருக்கலாம்.

அந்தம்மாவை ஏன் கொலை செஞ்சாராம்? பூனையைக் காப்பாத்துறதால கொலையா! என்ன கொடுமை டீச்சர் இது.

அவருடைய ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வணங்குகிறேன்.

G.Ragavan said...

http://www.sridharblogs.com/2008/10/blog-post.html

// Sridhar Narayanan said...

வாங்க ஜிரா

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

உலகின் பழம்பெரும் இதிகாசங்கள்ல இருக்கிற ஒற்றுமை ஆராய்ச்சிக்குரியதுதானே. :-) //

நிச்சயமா இல்லைன்னுதான் சொல்வேன். :) எல்லா மனுசங்களோட மனசும் ஒடம்பும் ஒரே அச்சுதான். திங்குறதுக்கு ஏத்தாப்புல உடம்பும்...தங்குறதுக்கு ஏத்தாப்புல மனசும் கூட்டிக் கொறச்சிக்குது. அவ்ளோதான். வரலாறுன்னு பாத்தாலே... பிறந்தான் வளர்ந்தான் இறந்தான்தானே. இதுக்குள்ள முன்னப்பின்ன இருக்குறதுதானே. அதேதான் புராணத்துலயும். இதுல ஆச்சரியப் படுறதுக்கோ...பெருமிதப் படுறதுக்கோ ஒன்னுமில்லைங்குறது என்னோட கருத்து. :)

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2008/10/blog-post.html

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். சிங்கப்பூர் உனக்கு எல்லா நலன்களையும் மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும். :)

பெங்களூர்ல அது இது கூடக் கொறைய இருந்தாலும்... பெங்களூரு பெங்களூருதான்யா. என்னதான் சொந்த ஊரு தமிழ்நாடுன்னாலும் பொழப்பு கத்துக்குடுத்து வளத்து விட்ட ஊரு மேல எனக்கும் பாசம் உண்டுதான். நீ என்ன சொல்ல வர்ரன்னு புரியுது.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/10/blog-post_12.html

சந்திரபோஸ் ஒரு நல்ல இசையமைப்பளர் என்பதில் ஐயமில்லை. இளையராஜவோடு ஒப்பீடு என்பது கடினம் தான். ஆனால் சந்திரபோஸ் தனக்கென்று ஒரு இடத்தை வைத்திருந்தார் என்பதும் உண்மை.

G.Ragavan said...

http://selvaspeaking.blogspot.com/2008/10/blog-post_12.html

நல்ல அலசல். பள்ளியில் படிக்கும் போது மெல்லிசை மன்னர் ஃபீல்டில் இல்லை என்றாலும்.... இளையராஜவை விட அவரையே பிடிக்கும். ஈற் பாட்டுகள் பிடிக்கும். ஆனால் IR இல்லை. அப்பவே சொல்வேன்.. அடுத்து ஆள் வருவார்னு. ஆகையால ஆற்ற் வந்தப்போ ஆதரவு தானா குடுதாச்சு. வழக்கமன MSV-IR சண்டை மாறி...ARR-IR சண்டை :) ஆனா இந்த வாட்டி வெற்றி என் பக்கம். ஆனல்.... இவர்கள் மூவர் இசையும் பிடிக்கும். வஞ்சனை இன்றி ரசிப்பேன். யுவன் சுமார் தான்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2008/10/blog-post_13.html

அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டிய பதிவு. மெல்லிசை மன்னருக்கு ஆனதேதான் இளையராஜாவுக்கு ஆச்சு. இசைப்புயலுக்கு அது இன்னும் ஆகவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஆகத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் ரகுமான் சுதாரித்துக் கொண்டால் இன்னும் கொஞ்ச நாள் வண்டி ஓட்டலாம். ஏனென்றால் மெல்லிசை மன்னரின் பாணியிலிருந்து மாறுபட்டு வந்த இசை இளையராஜாவினுடையது. அதிலிருந்து மாறுபட்டு வந்தது ரகுமான். அடுத்து புதிய இசைப்பாணி வரும் வரையில் ரகுமான் விரும்பினால் அடித்து ஆடலாம். யுவன், இமான் போன்ற மற்ற இசையமைப்பாளர்களால் ரகுமானின் இடத்தைப் பிடிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் எல்லாம் சங்கர்-கணேஷ் போல. மெல்லிசை மன்னர் இருக்கும் பொழுதே சங்கர்-கணேஷ் வந்தனர். ஆனாலும் மெல்லிசை மன்னரே மன்னர். இளையராஜா வந்துதான் ராஜா ஆனால். அது போலத்தான் யுவன் வகையறாக்களும். படங்கள் நிறைய இருக்கும். ஆனால் அவர்களுக்கென்று புதுப்பாணி இருக்காது. அந்தப் பாணி வந்தவுடன் இசைப்புயல் கரையைக் கடக்கும். ராஜா ராஜாதான் என்று சொல்வது எவ்வளவு உண்மையோ...அவ்வளவு உண்மை மன்னன் மன்னந்தான். புயல் புயல்தான்.

G.Ragavan said...

//ஆரம்ப கால ஏஆர் ரகுமான் இசையைப் பற்றி அப்போது இளைய ராஜாவிடம் கேட்ட போது, 'கிரிக்கெட் ஆட்டம் நன்றாக நடைபெறும் போது, மைதானத்திற்கு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால், அவளது பக்கம் தான் ரசிகர்களின் கவனம் உடனே திரும்பும்' என்ற ரீதியில் பேட்டி அளித்து புதிய இசை அமைப்பாளரைப் பற்றி இவ்வளவு புகழ்ச்சியுடன்(!) வரவேற்புக் கொடுத்தார். அதே போன்று அவரது மகனுக்கும் சொல்லுவாரா என்பதை இளையராஜாவின் தீவிரவிசிறிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இளைய ராஜாவின் இசையில் //

ஒரு பேட்டியில் கங்கையமரன் சொன்னது நினைவுக்கு வருகிறது.

எங்களுக்கு மெல்லிசை மன்னரும் ஒரு அண்ணன் தான். அவரு போட்ட பாதைல தான் நாங்க எல்லாருமே போய்க்கிட்டிருக்கோம்.

அன்னக்கிளி படம் வந்தப்ப பக்கத்து மெல்லிசை மன்னர் ஏதோ பட ரெக்கார்டிங்ல இருந்தாராம். அப்ப ரெக்கார்டிங் தேட்டர்ல இளையராஜா ரெக்கார்டிங் நடக்குதுன்னு கேள்விப்பட்டு ஒடனே அங்க போய் இளையராஜா கையைப் பிடிச்சிக்கிட்டு பாட்டெல்லாம் ரொம்ப நல்லாருக்குன்னு பாராட்டுனாராம்.

இந்த நிகழ்ச்சிதான் மேல நீங்க சொன்னதப் படிச்சப்புறம் நினைவுக்கு வருது.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/10/blog-post_12.html

சந்திரபோஸ் திரைப்படத்திற்கு வந்ததே ஒரு பாடகராகத்தான். ஒரு கல்லூரி மேடையில் பாடிய மாணவரை..உடனே அழைத்துத் தனது இசையில் பாட வைத்தார் மெல்லிசை மன்னர். ஆறுபுஷ்பங்கள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஏண்டி முத்தம்மா என்ற பாடலைத்தான் முதலில் பாடினார் சந்திரபோஸ். பிறகுதான் இசையமைப்பாளராக ஆனார். 80களில் நிச்சயமாக இவரும் ஒரு பிரபலமான இசையமைப்பாளராக இருந்தார் என்பதும் உண்மை. பாடகராக இருந்து இசையமைப்பாளரான இவரது இசையில் பல நல்ல பாடல்களும் வந்துள்ளன.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2008/10/blog-post.html

படத்துல இருக்குறதப் பாத்தா.. வை.வா மாதிரி இருக்காரு.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/10/blog-post_12.html

ஆரம்பத்தில் சந்திரபோஸ் இசையமைத்த சுவாமி ஐயப்பன் படத்திலிருந்து "சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது..பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது" என்ற பாடலும் "பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்" என்ற பாடலும் மிகவும் இனிமையானவை.

கலியுகம் என்ற திரைப்படத்தில் வரும் "இளங்குயில் பாடுதோ..யார் வரக்கூடுமோ...அழகிய மாலையில்" என்ற பாடலும் மிக இனியது.

"ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே" - வாய்க்கொழுப்பு
டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே - பாட்டி சொல்லைத் தட்டாதே
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை - மாநகரக் காவல்

இன்னும் நிறைய பாடல்களை எடுத்துச் சொல்லலாம். கண்டிப்பாக 80களில் பிரபல இசையமைப்பாளராக சந்திரபோஸ் இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இளையராஜா மிகச்சிறந்த நிலையில் இருந்த அந்த வேளையிலும் தன்னுடைய தனிப்பட்ட பாணியில் நல்ல பாடல்களைக் கொடுத்த சிறந்த இசையமைப்பாளர் என்பதும் உண்மை. அவருடைய பல இனிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2008/10/blog-post.html

பதிவு போட்டாச்சு.

http://gragavan.blogspot.com/2008/10/mad-at-cinema.html

உங்க பதிவு பற்றிய கருத்து பின்னால் வரும்.

G.Ragavan said...

http://moganan.blogspot.com/2008/08/blog-post_29.html

இந்த விஷயம் கொஞ்சம் அணுகுவதற்குச் சிக்கலானது. இங்கு உணர்ச்சி வசப்பட்டு பண்பாடு கலாச்சாரம் என்று பேசியிருக்கிறார்கள். அப்படிப் பேசுவதால் பயனிருப்பதாகத் தெரியவில்லை.

இங்கே நெதர்லாந்தில் அலுவலகத்திலேயே இருக்கிறார்கள். ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் உடன் பணிபுரிகிறார். அவருடைய துணைவருடன் திருமண உறவில் வாழ்ந்து வருகிறார். ஒரு மகளையும் தத்தெடுத்துள்ளார். அவருடைய வாழ்க்கை முதலில் பார்க்கையில் சற்று வியப்பாக இருந்தாலும்.... அவரும் குடும்ப வாழ்க்கைதான் வாழ்கிறார் என்பது புரியவே சிலகாலம் ஆனது. உண்மையிலேயே பழகவும் மிகவும் இனியவர். கண்ணியமானவரும் கூட. ஆக வாய்ப்பு என்று கிடைக்கும் பொழுது அவர்களும் அப்படிப்பட்ட வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் நான் புரிந்து கொண்டது.

ஏன் ஒருவர் ஓரினச் சேர்க்கை செய்கிறார் என்பதற்குக் காரணம் பலயிருக்கலாம். எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. மருத்துவக் காரணங்கள் கூடச் சொல்கிறார்கள்.

சமயங்களில் அருவெறுப்பு வருகையில் எனக்கு நானே சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."ராகவா... நீ யார் அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதற்கு? அந்த உரிமையை உனக்குக் கொடுத்தது யார்? அவர்கள் வாழ்க்கை...அவர்கள் விருப்பம். சுதந்திரமும் உரிமையும் கொடுக்கப்படுவதற்கல்ல. கொடுக்கப்படக் கூடியதும். அல்ல. நம்மைப் பெரிய நாட்டாமையாகக் கருதிக் கொண்டாலோ...உலகைக் காக்கும் பண்பாட்டுக் கோமானாக எண்ணிக் கொண்டாலோதான்... அடுத்தவன் இப்பிடிச் செய்ய வேண்டும்..அப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்போம்.

உணர வேண்டியது என்ன.... அவரவர் விருப்பப் படி வாழ அவரவர்க்கு உரிமையுண்டு. நம்மை வற்புறுத்தாத வரையில் அது நன்றே."

இதைத்தான் நாமும் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து... உணர்ச்சி புணர்ச்சி என்று சொல்வதெல்லாம் பண்பாட்டுக் காவல்தனம் என்னும் போலித்தனம்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/10/blog-post_19.html

நல்ல இசைத்தொகுப்பு. நன்றி பிரபா.

நெற்றிக்கண் படமும்...பாடல்களும் மிகமிக இனிமை. இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே சுகம் சுகம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ரகம்.

கர்நாடக இசை மெட்டில்.....மேற்கத்திய இசைக் கோர்வையில்....ஆஆஆஆஆஆ.. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு என்று தொடங்கும் போதே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ராமனின் மோகனம்...ஜானகி மந்திரம்...என்று தொடங்கி..ராமாயணம் பாராயணம்.. காதல் மந்திரம் என்று போகையில்..இதயத்தில் என்னவோ உருகுமே...என்னங்க பேரு அதுக்கு?

ராஜாராணி ஜாக்கி....வாவ் வாவ்... வாழ்வில் என்ன பாக்கி.. வாவ் வாவ்... இளையராஜா..எங்கய்யா போனீரு?

தீராத விளையாட்டுப் பிள்ளைக்கு இப்படியும் மெட்டு பொருத்தமாகத்தான் இருக்குது.

நெற்றிக்கண்.. இளையராஜா இசையில் அருமையான படம்.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=450

மிகப் பொருத்தமான கதைகளுக்கே பரிசு கிடைத்திருக்கிறது. ரசித்து ருசித்த கதைகள் வெற்றி பெற்றமை மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இத்தனை கதைகளையும் படித்து நல்லதொரு திறனாய்வு செய்து முடிவு சொன்ன ஜெயமோகனுக்கு நன்றி பல.

எழுதுவதற்குப் பலரையும் தூண்டிச் சிறப்பான பல கதைகளைப் படிக்கத் தந்தமைக்கு சிறில் அலெக்ஸ்க்கும் நன்றி பல. சிறப்பு வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/10/blog-post_19.html

டீச்சர்... இதெல்லாம் இங்கயும் கெடைக்குது. ப்ரோக்கோபூவுல புளிக்கொழம்பு வெச்சுப்பாருங்க. சூப்பரா இருக்கும். இல்லைன்னா.... லேசா மெளகா வெங்கயாத்தோட வதக்கி....புளி சேத்துத் துவையல் அரைச்சிருங்க. சூப்பரோ சூப்பரு.

இதே மாதிரி அஸ்பாரகஸ் கிடைக்கும். அதுலயும் கொழம்பு வைக்கலாம். இல்லைன்னா....அஸ்பாரகஸ்+குடமிளகாய் போட்டு கூட்டு வெச்சாலும் நல்லாருக்கும்.

கீழ இருக்குறது பீங்கான் தட்டா? மொமொன்னு எழுதீருக்கு. அப்படியொரு தின்பண்டமும் இருக்கு.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/10/blog-post_19.html

நாரதரும் நீரே
நா ரதரும் நீரே
சினிமா பதிவு நன்றாக இருக்கிறது.

// எனக்கு மியூசிக்கல் ரொம்ப பிடிக்கும். Singing in the Rain எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்! //

இல்லையே... நீங்க American in Parisல பாக்கனும்!!!!! எங்கயோ தப்பா சொல்லீருக்கீங்க போல இருக்கே!

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2008/10/blog-post_21.html

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாலாஜி. நல்லபடியா ஊர் சென்று சிறப்போடு வாழ்க.

வலைப்பூ பக்கம் வராம இருந்துறாத... அப்பப்பக் கண்டுக்க... நானும் கொஞ்சம் நல்லவந்தான். :D

எல்லாம் இறைவனருளால் நல்லபடி நடக்கும். வாழ்க. வளர்க.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html

கலக்கீட்டீங்க. அப்படியொரு நகைச்சுவை...நக்கல்.. பதிவு முழுக்கவே...

// வெள்ளிக்கிழமை விரதம்' வந்த புதிது. சிவகுமாரும், ஜெயசித்ராவும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லையென்று எங்களுக்கு ஏக வருத்தம். //

அப்படியே.. கமலுக்கு ஸ்ரீதேவிக்கும் கல்யாணம் ஆகலையேன்னு வருத்தம்...ரஜினிக்கும் ஸ்ரீபிரியாவுக்கும் ஆகலையேன்னு வருத்தம்....லியானார்டோ டிக்காப்பிரியோவுக்கும் கேட் வின்ஸ்லெட்டுக்கும் ஆகலயேன்னு வருத்தம்...சூர்யாவுக்கும் அசினுக்கும் ஆகலையேன்னு வருத்தம்.... அப்படியே சொல்லலாமோ! :)

நீங்க சொல்ற நடிகை பாரதி இல்லை. காஞ்சனா..... அதுல அவங்க கூட நிறைய விலங்குகளும் பறவைகளும் ஆடும். சரியா? சரின்னா...அந்தப் பாட்டு "முத்தமோ மோகமோ...கட்டி வந்த செல்வமோ"

G.Ragavan said...

http://thenkinnam.blogspot.com/2008/10/blog-post_21.html

மறைந்த இயக்குனர் ஸ்ரீதருக்கு அஞ்சலி. அவருடைய ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். அவரை இழந்து தவிக்கும் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் அனுதாபங்கள்.

இந்த பொழுதில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தப் பாடல் தொகுப்பை வெளியிட்டமை பொருத்தமானது.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2008/10/blog-post_9672.html

நல்ல பதிவு. தற்பெருமை பேசுவதில் ஆன்மீகவாதிகளும் முன்னிலைதான். இறைவனைப் புகழும் உரிமை ஒருவருக்கு இருக்குமாயின் இகழும் உரிமையும் உண்டு. அப்படி இகழ்கின்றவரையோ..கேள்வி கேட்கின்றவரையோ கிண்டல் செய்வது என்பது ஆண்டவன் ஒருவருக்குக் கொடுத்த உரிமையைக் கிண்டல் செய்வது போலாகும்.

உங்கள் கட்டுரை சொல்ல விழையும் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2008/10/1_29.html

// Blogger குமரன் (Kumaran) said...

திருப்பரங்குன்றத்தில் ஊன் சோறு படைக்கப்பட்டதாகத் தான் இராகவன் சொல்லிக் கொண்டிருப்பார். நீங்கள் பழமுதிர்சோலை என்கிறீர்கள். இரண்டு இடங்களிலும் அப்படித் தான் என்று நக்கீரர் சொல்கிறாரோ? இன்னும் திருமுருகாற்றுப்படையின் முதல் பத்து அடிகளைத் தாண்டி நான் செல்லவில்லை. அதனால் தெரியவில்லை. :-) //

குமரன், நான் தவறாகச் சொல்லிவிட்டேன். கண்ணபிரான் ரவிசங்கர் சொல்வதுதான் சரி. ஆகையால் நான் தவறாகச் சொன்னதாகவே சொல்லுங்கள். :-)

G.Ragavan said...

http://vinojasan.blogspot.com/2008/11/blog-post_02.html

உண்மையைச் சொல்றேன்... இந்தப் பதிவு நான் நெனைக்கிறத அப்படியே சொல்லுது.

என்னோட வலைப்பூவுல ரஜினி படத்துக்குக் குறுக்கக் கோடு போட்டிருக்கேன். ஆனா.. இந்த முறை அவரது பேச்சு.... மிகவும் சிறப்பானது என்பதிலும் மிகவும் பொருத்தமானது என்பதிலும் மிகவும் தேவையானது என்பதிலும்... மிகவும் ஆற்றல்தருவது என்பதிலும் மறுகருத்தில்லை.