Tuesday, June 02, 2009

என்னுடைய பின்னூட்டங்கள் - ஜூன், ஜூலை, ஆகஸ்ட் 2009

ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2009ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

30 comments:

G.Ragavan said...

http://gopinath-walker.blogspot.com/2009/06/blog-post.html

இசைஞானி இளையராஜாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பல இசைத் தொகுப்புகளைத் தந்து மக்களை மகிழ்விக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களுக்கு என்னுடைய இசைக்கோப்புகளில் தனியானதொரு இடமுண்டு. இப்பொழுது கூட.... பார்வை ஜாடை சொல்ல என்று (எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ) மண்டைக்குள்ளே ஏசுதாசும் ஜானகியும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2009/06/blog-post_07.html

பதிவு போட்டாச்சா! ஆகா... கோவியின் சுறுசுறுப்பே சுறுசுறுப்பு... அப்ப பதிவர் சந்திப்புல நம்ம பேசிக்கிட்டது உண்மைதானே ;-)

// 2004ல் இருந்து எழுதுபவர், நான் பதிவு எழுதத் தொடங்கிய காலத்தில் ஊக்குவித்தவர், //

அதாகப்பட்டது பழம்பெரும் (அ) பெறும் பதிவர்னு சொல்ல வர்ரீங்க. சரியா? ;)

// "அட ட....நீங்க தான் ஜோ வா?" என்று ஜோவைப் பார்த்து இராகவன் கேட்க,

ஜோ மயக்கமானார். //

தப்பாப் புரிஞ்சிக்கிட்டாங்களே... எனக்கு அவர்தான் ஜோன்னு தெரியும். நாங்கதான் நடிகர்திலகம் பத்திய பதிவுகள்ள சரியா வந்து பின்னூட்டம் போட்டுருவோம்ல. அவருக்கு அவருதான் ஜோவான்னு தெரியுமான்னு சோதிச்சுப் பாத்தேன். :-)

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2009/06/blog-post_07.html

// இராம்/Raam said...

ஜிரா இல்லை... இராகவ் கான்... :)) //

அப்படிப் போடு.... அங்க நீதானே ஹீரோ. நாங்கள்ளாம் ஒரு ஓரத்துலதானே நின்னுக்கிட்டிருந்தோம்.

விவோசிட்டில ஒரு சைனீஸ் பொண்ணு ஒன்னப் பாத்து சிரிச்சாளே... அப்புறம் என்னாச்சு?

// பெருசு said...

ஜி.ரா வுக்கு இலந்த வடையும் ,
கிளி மூக்கு மாங்காயும் ரொம்ப
பிடிக்கும். //

ஆகா... ஆகா.... சரியாச் சொன்னீங்க. எலந்தவடை வாங்கித் தரல.... ஆனா மலாய் காப்பி.. இல்ல.. இல்ல கோப்பி வாங்கிக் குடுத்தாங்க. :-)

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2009/06/blog-post_07.html

// தருமி said...

ஜிரா ஒரு படத்தில இப்படி தாடியோடு இருக்காரே .. என்ன ஆச்சாம்? கேட்டு சொல்லுங்க ...//

என்ன ஆச்சா?!?!?! இன்னைக்கு ஒரு சைனீஸ் முடி திருத்தத்துல போய் நீண்ட முடியைக் கத்தரிச்சிட்டு...டிரிம்மர் வெச்சி தாடியை டிரிம் பண்ணியாச்சு... :-)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/06/blog-post.html

மிக நல்ல பாட்டு. திரைப்படப்பாடலை பின்னணி இசையாகப் பயன்படுத்துவது அறுவதுகளில் மெல்லிசை மன்னர் தொடங்கினாலும்... எழுபதுகளில் அதை அளவுக்கு மீறிப் பயன்படுத்தித் திகட்ட வைத்தார்கள் சங்கர்-கணேஷ். நல்ல வேளையாக இளையராஜாவின் இசை மாற்றத்தைக் கொண்டு வந்தது.

மெல்லமெல்ல பின்னணி இசை பல்லவி அனுபல்லவியில் நன்றாக இருந்தாலும்.... வாழ்க்கை படப்பாடலில் அது மேம்பட்டு முழுமைப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது.

காட்சியமைப்பைத் தவிர்த்து விட்டுச் சொன்னது மேலுள்ள கருத்து.

இளையராஜாவிற்குப் பிறகான இசையமைப்பாளர்களில் அவருடைய பாதிப்பில்லாத இசையமைப்பாளர்களே கிடையாது எனலாம். அவருக்கு முந்திய மெல்லிசை மன்னரே... இளையராஜாவின் வருகைக்குப் பிறகு அவரைத் தன்னுடைய இசையில் பாட வைத்ததில் இருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். இதில் யுவனெல்லாம் எம்மாத்திரம்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2009/06/blog-post.html

என்னையும் மதிச்சி அழைச்சிருக்கீங்க. எழுதீட்டாப் போச்சு. :-) நானும் பதிவெழுதி ரொம்ப நாளாச்சு.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2009/06/blog-post.html

பதிவு போட்டாச்சு. :)

http://gragavan.blogspot.com/2009/06/blog-post.html

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2009/06/blog-post.html

ஜெயச்சந்திரனின் குரல் வளமும் திறமையும் சிறப்பாகவே இருக்கின்றன. மலையாளியாக இருந்தாலும் தமிழை மதிக்கும் கலைஞர். அவருடைய கீழ்க்கண்ட வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதை இங்கே கொடுக்கிறேன்.
http://www.jayachandransite.com/html/profra.html

Jayachandran likes to sing Tamil songs. He comments' "The natural flow of the Tamil language gives a musical touch to Tamil which makes its songs much more musical".

இப்படித் தமிழை மதிக்கின்ற கலைஞர்களைத்தானே தமிழ் இசையமைப்பாளர்கள் மிகவும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். மிகவும் வருத்தமான விஷயம்.

இவருடைய உச்சரிப்பும் இசையும் கலந்து சிறக்கும் திறமையைத் தமிழ்த் திரையுலகம் கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2009/06/blog-post.html

கேட்டதும் கொடுப்பவரே குமரரே குமரரே
மினசோட்டா நாயகரே :)

பதிவிட்டமைக்கு நன்றி பல.

// கண்ணீர் விட்டது அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் 'சூப்பர் சிங்கர் 2008'ன் இறுதி நாளில் அஜீஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது. என்னைப் பொறுத்தவரை வெற்றி பெறத் தகுந்தவர் இரவி தான். அதனால் அஜீஷ் வெற்றி பெற்றதில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். //

உண்மையைச் சொல்லப் போனால் அஜீஷை விடவும் அனைவரும் நன்றாகப் பாடினார்கள். அதிலும் ஒரு பெண் மிக அருமையாகப் பாடினார். பெயர் மறந்து விட்டது. அவரும் கடைசிச் சுற்றுக்கு வந்தார். ஆனால் நடுவர்களாக உட்கார்ந்திருந்த மலையாளிகள் ஒரு மலையாளியைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது. (அஜீஷ் ஒரு மலையாளி என்று எண்ணிச் சொன்னது).

// எண்ணெய் பருப்புப் பொடி சாதம், மட்டன்/சிக்கன் குழம்பு, வத்தற்குழம்பு, தயிர்சாதத்துடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலைத் துவையல்.//

உப்புக்கண்டத்தை விட்டு விட்டீர்களே. அது இரவுக்கா?

தந்தையாரின் உடல்நிலை எப்படியிருக்கிறது? எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருளால் விரைவில் நலமடைய வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://www.vettipayal.com/2009/06/blog-post_1342.html

ஸ்ரீதேவியின் நடிப்புத்திறமையை இனிமேல்தான் சொல்ல வேண்டுமென்று இல்லை. எல்லாவிதமான பாத்திரங்களுக்கும் பொருத்தமானவர். முருகனாக முதலில் நடித்தார். பட்டிக்காட்டுப் பெண், அம்மன் வேடம், நவநாகரீகப் பெண், இன்னும் என்னென்னவோ வேடங்கள். அத்தனையிலும் பொருத்தமாக ஜொலித்தார். ஆந்திரத்தில் நாகேஷ்வரராவுடன் நடித்து விட்டு... அவர் மகன் நாகார்ஜுனாவிற்கும் ஜோடியாக நடித்தார்.

வணக்கத்திற்குரிய காதலியே என்ற படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல மூன்று முடிச்சு. இதில் ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் நடக்கும் போட்டி. இதுதான் கதாநாயகியாக ஸ்ரீதேவி முதலில் நடித்த படம். இந்தப் படத்தின் காட்சிகள் கிடைக்கவில்லையா?

மகேந்திரன் தமிழில் தப்பி வந்த இயக்குனர். ஜானியும் சரி.. பின்னாள் இயக்குனர்களுக்குப் பாடமான படங்கள்.

சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாட்டு ... அடடா... கடைசியில் இருவருடைய கைகளும் உரசிக் கொண்டே வந்து.... விரல்கள் பற்றிக் கொள்ளும். அப்பொழுது அப்படியே கமலில் தோளில் சாய்வாரே... ஸ்ரீதேவி... உங்கள் இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. மீனம்பட்டி தந்த அழகரசியே... மீண்டும் தமிழுக்கு நடிக்க வருக.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2009/06/12-b-32-b.html

பதிவை எழுத அழைத்த நான் பின்னூட்டம் இடுவதற்கு முன்னமே இத்தனை பின்னூட்டங்கள். அருமை அருமை.

பதிவு போட்டதுக்கு நன்றி.

// என்னைய பத்தி என்னென்னமோ பொய் சொல்லி, இந்த ஆட்டைக்கு அழைத்த மவராசன் மகரந்தனுக்கு இனிய நன்றி! :) //

மெய்யென்று மேனியை யார் சொன்னதுன்னு கவியரசர் கண்ணதாசன் கேப்பாரு. அந்த மாதிரி கேக்குறீங்க.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/06/blog-post_20.html

ஒரு சாதாரண இசை ரசிகனா இருக்கின்ற காரணம் மட்டுமே நான் இளையராஜாவின் இசை ரசிகன் என்று சொல்லிக்கொள்ளப் போதும்.

என்ன... இன்னும் சினிமாவுலயே இருக்குறது வருத்தமா இருக்கு. திரையிசையில் பிரபலமாக இருந்த மெல்லிசை மன்னரும் சரி... இசைஞானியும் சரி... இரண்டு ஆன்மீக இசைக்கோர்வைகளை நமக்குக் கொடுத்தார்கள். ஒன்று கிருஷ்ணகானம். மற்றொன்று திருவாசகம். இரண்டும் தமிழ்த்தேன். கவியரசர் கலக்கியது கிருஷ்ணகானம் என்றால்.... மாணிக்கவாசகர்... அதாவது ஐந்தாம் நூற்றாண்டுத் தமிழ் மேல்நாட்டு இசையோடு இணைந்தது மற்றொன்றில்.

ஆனால் ஏனோ தெரியவில்லை.. இருவருமே... திரையை விட்டு வெளியே வரவில்லை என்றே தோன்றுகிறது. மெல்லிசைமன்னரின் வயதும் உடல்நிலையும் புரிகிறது. இளையராஜா முனைப்பெடுக்க வேண்டும் என்று இந்த ரசிகன் கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று பாடல்களையும் கேட்டேன். நல்ல இசையமைப்பு. பாடல்களைக் கொடுத்தமைக்கு நன்றி பல.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2009/06/blog-post.html

// தந்தையாரின் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. இன்று இரவு தம்பியிடம் பேச வேண்டும். //

தந்தையார் இப்பொழுது எப்படியிருக்கிறார் குமரன்?


// குமரன் (Kumaran) said...

இராகவன்,

இறுதிச் சுற்றுக்கு வந்தவர்களில் எனக்குப் பிடித்த வரிசை: இரவி, இரேணு, அஜீஷ். ஆனால் பொதுமக்களின் வாக்கெடுப்பில் வரிசை மாறிவிட்டது.

அஜீஷ் மலையாளியா என்று தெரியவில்லை. நடுவர்கள் மூவரும் மலையாளிகளா என்று தெரியவில்லை. ஆனாலும் இந்தத் தேர்வு மக்களால் செய்யப்பட்டது என்பதால் அந்தக் குற்றச்சாட்டை வைக்க இயலாது. //

அஜீஷ் மலையாளியா என்று தெரியவில்லை என்பது உண்மைதான். ஆனால் பெயர்.. முகவெட்டு.. அம்மாவின் உடையலங்காரம்.. நகையலங்காரங்களைப் பார்க்கையில் அப்படித் தெரிகிறது. அவர் மலையாளியாக இருப்பது தவறல்ல. ஆனால் முதலிடத்திற்கு அவர் தகுதியானவர் இல்லை என்பது என் கருத்து. பொதுமக்கள் முடிவே முடிவு.

ஆனால் நடுவர்கள் என்ற பெயரில் இரண்டு பேர் அடித்த அசிங்கக் கூத்து இருக்கிறதே... நிகழ்ச்சி பார்க்கும் ஆசையையே கெடுத்துக் கொண்டிருந்தது. ஸ்ரீநிவாசின் வெத்து வேட்டு விமர்சனங்களும்... ஆமாம் சாமி சுஜாதாவும். ம்ம்ம்.. உன்னி கிருஷ்ணன் மட்டுமே கொஞ்சம் முனைப்போடு செயலாற்றினார் என்பது என் கருத்து.

// உங்களுக்கு வாணி ஜெயராம் தொடங்கி பெண்குரல்களே மிகவும் பிடிக்கும் என்று தெரிகிறது. எனக்கு என்னவோ சுசீலா அம்மா குரலுக்கு நிகராக வேறு எந்த பெண் குரலும் வருவதாகத் தோன்றுவதில்லை. வாணியம்மா குரலும் சித்ராம்மா குரலும் பிடிக்கும். //

ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் கூட சொன்னது அதுதான். இசையரசியின் குரல்தான் அவருக்குப் பிடித்த குரல்களிலேயே சிறந்தது என்று. ஆண்குரல்களில் ஜெயச்சந்திரன், டி.எம்.எஸ், மலேசியா, கார்த்திக் ஆகியோரின் குரல் மிகவும் பிடிக்கும். இவர்கள் பாடிக் கேட்கையில் தமிழ் தமிழாக இருப்பதும் சிறப்பு.

// ஏன் உப்புகண்டத்தில் பட்டியலில் விட்டேன் என்று தெரியவில்லை. உப்புகண்டம் எந்த நேரத்திலும் கடித்துக் கொள்ளலாம். அதுவும் எனக்கு மிகவும் பிடித்த புளியோதரையுடன் உப்புகண்டம் இருந்தால் மூன்று வேளைக்கு ஆனதை ஒரே வேளையில் தின்று தீர்ப்பேன். :-) //

இதெல்லாம் எங்களுக்குக் குடுக்காதீங்க. நீங்களே சாப்டுறீங்களே :( ஆம்ஸ்டர்டாமுக்கு பார்சல் அனுப்புங்களேன்.

// உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

யாராவது அரைகுறையாக ஒன்றைப் படித்துவிட்டு அதுவே அறுதியானது என்று பேசும் போது.//

ஒரு கேள்வி. அப்படி ஒருவர் அரைகுறையாகத்தான் பேசுகிறார் என்று சொல்ல உங்களுக்கு எல்லாம் தெரியுமா குமரன்?

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/07/1.html

ஒன்னு சொல்றேன். நல்லாப் பாடத் தெரிஞ்சவங்கதான் இசையமைப்பாளராக இருக்க முடியும். அப்படி நல்ல இசையமைப்பாளரா இருக்குறவங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்காது. ஆனா அவங்க பாடுற அளவுக்குப் பாடுறது லேசு கிடையாது. ஜெயச்சந்திரன் ஒரு வாட்டி தொலைக்காட்சில சொன்னாரு. இளையராஜா சொல்லிக் குடுத்துப் பாடுனாலே போதும்... பாட்டுக்கு என்ன தேவையோ அதெல்லாம் தானா வந்துரும்.

நல்ல பாட்டுகளா எடுத்துப் போட்டிருக்கீங்க. இளையராஜாவோட எஸ்.ஜானகி பாடுன பாட்டுலயே எனக்கு ரொம்பப் பிடிச்சது மெட்டியொலி காற்றோடு எந்நெஞ்சைத் தாலாட்ட... அடேங்கப்பா....

அதே மாதிரி... தென்னமரத்துல தென்றலடிக்கு நந்தவனக்குயிலேன்னு ஒரு பாட்டு. இசையரசியும் இளையராஜாவும் கலக்கீருப்பாங்க. பாட்டுல அப்படியொரு வேகம். படபடன்னு பாடிக்கிட்டேயிருக்கனும். ஆனா உச்சரிப்பு அப்படியிருக்கும். பாவம் குறையாம ரெண்டு பேருமே அருமையா பாடியிருப்பாங்க.
http://www.thiraipaadal.com/albums/ALBIRR00320.html
இந்தச் சுட்டியில் அந்தப் பாட்டு இருக்கு.

G.Ragavan said...

http://shaliniyin.blogspot.com/2009/07/blog-post.html

ஆகா. ரொம்ப அழாகான பாட்டு.

எஸ்.ஜானகியின் இனிய குரலுக்கு மிகவும் பொருத்தமான பாடல். இந்தப் பாடல் படத்துல வரலையே தவிர... படத்துல உள்ள மத்த பாட்டுகளும் ஒன்னுக்கொன்னு கொறஞ்சதில்லை. அதுலயும் குறிப்பா விழியில் விழுந்து இதயம் நுழைந்து பாட்டும்... காதல் ஓவியம் பாட்டும் ரொம்பவே கலக்கல்.

G.Ragavan said...

http://shaliniyin.blogspot.com/2009/07/blog-post.html

அப்புறம் இன்னொன்னு... அந்தப் படம். அருமையா தேடி எடுத்துப் போட்டிருக்க. செமயா இருக்கு. பாக்கவும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/07/225-3.html

பிரபா, உங்களுடைய ரேடியோஸ்பதி வலைப்பூவிற்கு நாங்களெல்லாம் ரசிகர்கள். தொடர்ந்து ரசித்துக்கொண்டிருக்கிறோம். பலப்பலப் புதுமைகளைப் புகுத்தி எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் உங்களது நற்பணிக்கு நன்றி பல. இது இன்னும் பலப்பவாகப் பெருகி புகழ் பெற எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/07/blog-post_16.html

ஆகா. மீண்டும் சிறப்பு நேயர் துவங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பலருடைய ரசனையும் ரசிக்கும் வாய்ப்புக் கிடைக்குமல்லவா. நன்றி பிரபா.

கலைக்கோவனுக்கு வாழ்த்துகள். நல்ல பாடல்களைத் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பாடல்களும் அருமை. அதிலும் பூவண்ணம் போல மின்னும்...தெய்வீக ராகம்... மேகமே மேகமே மூன்றும் அருமை.

மேகமே மேகமே நகல்தான். சங்கர் கணேஷிடம் அவ்வளவுதான் எதிர்பார்க்கலாம். ;-)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/08/blog-post.html

முள்ளும் மலரும் திரைப்படம் ஒரு காவியம். ஓவியத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் வண்ணத்துளி பொருத்தமாக அமைந்து ஓவியத்தைச் சிறப்பிப்பது போல... இந்தக் காவியத்தில் பங்காற்றிய ஒவ்வொருவரும் தத்தமது திறமையைச் சிறப்பாகப் பங்களித்திருக்கின்றார்கள் என்பது உண்மை.

எழுபதுகளின் இறுதியில் தமிழ்த்திரைப்பட மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இரண்டாவது படம் என்று சொல்லலாம். (பதினாறு வயதினிலே முதல் படம்).

இரண்டு படங்களிலும் இளையராஜா இசை. கவியரசரின் வரிகள். சிறந்த பாடகர்கள். விளைவு? கேட்கத்திகட்டாத கானங்கள்.

ஆனால் இரண்டு படங்களுக்கும் ஒரு வேறுபாடு..... அல்லது முன்னேற்றம் என்று சொல்லலாம். வந்த புதிதில் இளையராஜாவின் பாடல்கள் புதுமையான மெட்டுகளோடு வந்தாலும்....பின்னணி இசை பொருத்தமாக இருந்தாலும் அது மெல்லிசை மன்னரின் தொடர்ச்சியாக இருந்தது. அன்னக்கிளி, பத்ரகாளி, இன்னும் சிலபல படங்களைக் கண்டிப்பாகச் சொல்லலாம்.

16 வயதினிலே படத்தில் ஒரு தெளிவான வேறுபாடு தெரியத் தொடங்கியது. ஆனால் அந்த சிறப்பான வேறுபாடு தன்னை முழுமையாகப் பரிணமித்துக்கொண்ட படம் முள்ளும் மலரும். காட்சிகளும் நடிப்பும் கருத்தாழத்தோடு இருந்து விட்டபிறகு.... பின்னணி இசை தன்னுடைய சிறப்பை வெளிக்காட்டியே ஆகவேண்டும் அல்லவா. அதுவும் இளையராஜா போன்ற இசைக்கலைஞர்களிடம்.

நல்லதொரு இசைத்தொகுப்பைக் கொடுத்தமைக்கு இளையராஜாவிற்கும், அதைக் கொண்டு வந்து கொடுத்த பிரபாவிற்கும்.. அதற்காக எல்லா வகையிலும் தொடர்புள்ள அனைவருக்கும் நன்றி பல.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/08/g3.html

Congrats G3. Ellame favourite songs thaan.

Murugan song... Thiruchendoorin Kadalorathil is fantastic. Enakum romba pidikum. Ella paatume nalla paata kuduthirukeenga.

Vazhthugal Gayathri. Thanks Praba :-)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/08/blog-post_30.html

அஞ்சு பாட்டும் அஞ்சு விருந்துகள். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம்.

கண்ணன் ஒரு கைக்குழந்தை பாட்ட எத்தன தடவ கேட்டாலும் தெகட்டாது. இதுவும் சரி.. பெண் ஜென்மம் படத்துல வர்ர செல்லப்பிள்ளை சரவணன் பாட்டும் சரி... ஏசுதாஸ்-பி.சுசீலா காதற் பாடல்களில் சிறந்த பாடல்கள் வரிசையில் இடம் பெறும். இளையராஜாவின் இசையைக் குறிப்பிட்டுத்தான் சொல்லனுமா என்ன?!

சொல்லத்தான் நினைக்கிறேன். எம்.எஸ்.வி ஜோடியாப் பாடுன பாட்டுகளைத் தேடிப் பிடிச்சிரலாம். பொதுவாவே தனிப்பாடலாத்தான் பாடிருக்காரு. அதுல ரெண்டு இந்தப் பதிவுலயே வந்துருச்சு. ஒன்னு எஸ்.ஜானகி. ஒன்னு பி.சுசீலா. இன்னோன்னு எல்.ஆர்.ஈஸ்வரி கூட இருக்கு. ஆனா அது முழுப்பாட்டும் கெடையாது. பாட்டுக்குள்ள ஒரு பகுதியில் ரெண்டு பேரும் ஜோடியாப் பாடுவாங்க. இந்திய நாடு என் வீடு பாட்டுதான். அதுல படச்சோன் படச்சோன் எங்ஙளப் படச்சோன்ன்னு வரும். அந்த மலையாளப் பகுதியை ரெண்டு பேரும் சேந்து பாடீருப்பாங்க. அது தவிர வேற பாட்டு எனக்குத் தோணலை.

காதல் வைபோகமே.... அடடா. கலக்கல் பாட்டு. கங்கை அமரன் ஒரு நல்ல இசையமைப்பாளர். அவர் இசையில் மட்டும் கவனம் செலுத்தீருந்தா பெரிய இசையமைப்பாளரா ஆகியிருப்பாரு. வாலி சொல்வாரு... கங்கை அமரன் அண்ணன் வழியில் இசையமைக்காமல் மன்னன் வழியில் இசையமைப்பார்னு. எந்த வழியாக இருந்தால் என்ன... இந்த ரெண்டு வழிகளுமே நல்வழிகள்தான்.

கங்கையமரன் இசைல பிடிச்ச இன்னொரு பாட்டு... நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு

மெல்லிசை மன்னர் தனமான மெட்டு.. இசைஞானித்தனமான இசைக்கோர்வை. ரொம்ப நல்லாருக்கும். ரொம்ப ரொம்ப.

// சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். //

ரொம்ப சரியாச் சொன்னீங்க. இந்தப் படம் 16வயதினிலேக்கு முன்னாடியே வந்துருச்சு.

இந்தப் படத்துலதான் ஸ்ரீதேவி முதமுதலா கதாநாயகி ஆனாங்க. அந்த வகைல ஸ்ரீதேவிக்கும் இந்தப் படத்துலதான் முதன்முதலா பாடற்குரல் கெடைச்சது. ஸ்ரீதேவிக்கு மொத்தம் மூனு பாட்டு இந்தப் படத்துல.

1. அவள் ஒரு கதாநாயகி - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி (இன்னொரு பாத்திரத்திற்கு)
2. ஆடி வெள்ளி தேடியுன்னை - வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன்
3. வசந்தகால நதிகளிலே - வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன், மெல்லிசை மன்னர்

இந்த மூனுல எந்தப் பாட்டை முதலில் பதிவு பண்ணினாங்கன்னு தெரியலை. வசந்தகால நதிகளிலேயாக இருக்கவே வாய்ப்பு நிறைய உண்டு. இருந்தாலும் ஸ்ரீதேவிக்கு முதலில் குரல் கொடுத்தது வாணி ஜெயராம், பி.சுசீலான்னு சொல்லலாம்.

குழந்தை நட்சத்திரமா ஏதாச்சும் பாட்டு இருக்கான்னு யோசிச்சேன். இருக்கு. ஆனா அதுல ஸ்ரீதேவி பாடுற மாதிரி வராது. வேற இருந்துச்சுன்னா சொல்லுங்க.

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது... பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது. ஏன்? வயித்து வலியா இருக்கும். இது எங்கயோ படிச்ச நகைச்சுவைத் துணுக்கு.

ஆனா இந்தப் பாட்டுல மெல்லிசை மன்னர் குரல் குடுத்திருக்காருன்னு நெறைய பேருக்குத் தெரியாது. அவரு இன்னும் பாடியிருக்கலாம். ஏனோ இசையமைக்கிறதோட நிறுத்திக்கிட்டாரு. இதைக் கூட அவர் கிட்ட உதவியாளரா இருந்த ஜி.கே.வெங்கடேஷ் வற்புறுத்தித்தான் பாடுனாருன்னும் சொல்வாங்க. இந்தப் பாட்டுக்கு வற்புறுத்துன ஜி.கே.வெங்கடேஷ் இன்னும் நாலஞ்சு பாட்டுகளுக்கும் வற்புறுத்தீருக்கக் கூடாதா! எனக்குத் தெரிஞ்சி எல்லாப் பெரிய இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியது மெல்லிசை மன்னராத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.

வி.குமார் - எனக்கென்ன குறைச்சல்
இசைஞானி - தாய் மூகாம்பிகை படத்துல அலைமகள் நீயேங்குற பாட்டு
கங்கை அமரன் - ஓடம் எங்கே போகும் நதி வழியே (ராமராஜனோட முதல் படம். இந்தப் பாட்டுக்கு (சங்கர்)கணேஷ் நடிச்சிருப்பாரு)
எஸ்.வி.ரமணன் - ஆண்டவனே உன்னை இங்கு சந்திக்க வேண்டும் (உருவங்கள் மாறலாம்)
ஏ.ஆர்.ரகுமான் - ஆலாலகண்டா, விடைகொடு எங்கள் நாடே
பரத்வாஜ் - மெட்டுக்கட்டித் தவிக்குது ஒரு பாட்டு (இந்தப் பாட்டுக்கு இசையமைத்தது மெல்லிசை மன்னர் என்று பாடல் எழுதிய வைரமுத்துவே கூறியிருக்கிறார். ஆனால் இசைவட்டில் அப்படிப் போடவில்லை. என்ன காரணமோ!)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2009/09/blog-post.html

நண்பர் சித்தை பாசித்திற்கு வாழ்த்துகள்.

ஒவ்வொரு பாடலும் நல்ல பாடல்.

அள்ளித்தந்த பூமி - நண்டு படத்தில் வரும் மிகச்சிறந்த பாடல். கேட்கவும் பார்க்கவும் மிக இனியது. மலேசியா வாசுதேவனைத் தவிர வேறெந்தக் குரலும் பொருந்தியிருக்கும் என்று தோன்றவில்லை.

ஓடையில நல்லோட - இந்தப் பாடலை முன்பு கேட்டிருக்கிறேன். பழக்கமான பாடல்தான். மீண்டும் கேட்கையில் பாடலின் இனிமை மயக்குகிறது. இப்படிப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தந்தமைக்கு நன்றி. இந்தப் பாடலை மின்னஞ்சல் செய்ய முடியுமா?

இதே போல வா அருகில் வா என்ற படத்தில் வரும் "மான மதுரையில் பார்த்தேன் ஒன்னக் கண்ட நாளா மதிகெட்டுப் போனேன்" என்ற பாடலும் இனிமையானது. அதுவும் ஏசுதாஸ் எஸ்.ஜானகி பாடலே.

மழையே மழையே - கலக்கல் பாடல். சங்கர் கணேஷ் இசை என்பதை ஏற்றுக் கொள்ள மனசு ஒப்பவில்லை என்றாலும் மிக நல்ல பாடல்.

வா வெண்ணிலா - வழக்கமாக எல்லாரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலைத்தான் கேட்டிருப்பார்கள். எஸ்.ஜானகி பாடலும் நல்ல பாடலே. படத்தில் இந்தப் பாடலைப் பார்க்கையில் ... ஆகா... அமலா தன்னோட முகத்தக் காமிச்சிருந்தா என்னன்னு தோணும்.

தென்னமரத் தோப்புக்குள்ள - இந்தப் பாடல் அப்பொழுது பிரபலமான பாடல்தான். இது முல்லைமலர் மேலே பாடலில் "தேவ" வடிவம். :-)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/11/blog-post_16.html

// வல்லிசிம்ஹன் said...
மூணூ வரை ரெஸ்ட் எடுங்க. இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்குன்னேன்!!!
கில்லாடிப்பா.:)
காரம் ஜெரிக்கவே ஒரு மணி நேரம் படுக்கணும். //

ஒரு மணி நேரமா? வாய்ப்பேயில்ல... நான் ஐதராபாத் போயிருந்தப்போ ஒவ்வொரு ராத்திரியும் உருண்டு பெரண்டு கதறி அழவேண்டியதாப் போச்சு. ஊர்ப்பக்கத்துல ஒறப்புன்னு சொல்வாங்க. அதுல கொறப்பு செஞ்சா நமக்கெல்லாம் நல்லாருக்கும். ஆனாலும் ஆந்துரால பொறப்புன்னா மெளகாயால வயித்த நெரப்புன்னு வழக்கமாமே! கேக்கச் சிறப்புதான். இருந்ததலும் வயித்துல நெருப்புதான்.

// ஹ்ம்ம் சீதை அக்னிக்குள்ள போய் வந்தது கதையாப் போச்சு.
நம்ம நாட்ட்ல ரொம்பத் தாயார்கள் சீதைன்னு , மகளுக்குப் பெயர் வைக்கத் தயங்குவது உங்களுக்குத் தெரியுமா.!!
சீதாலட்சுமி இருக்கும்.
வெறும் சீதா குறைவுதான்.:(( //

உண்மைதான். ஜானகின்னு பேர் வெப்பாங்க. மைதிலின்னு பேர் வெப்பாங்க. ஏன்னா அதெல்லாம் பொறந்த வீட்டுப் பேரு. சீதான்னு வெக்க மாட்டாங்க. என்னக் கேட்டா.. தாய்மார்கள் ராமன்னு பேர் வைக்கவும் தயங்கனும். வேணும்னா ராகவன்னு வெச்சுக்கலாமே :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/11/blog-post_15.html

டீச்சர், கண்தராவூரிலே எங்க ஆப்பீஸ் கெஸ்ட் ஹவுஸ் (அது ஆப்பீஸ்க்குள்ள... ஊருக்கு வெளிய இருக்கு)ல ஒரு மாசம் தங்கீருந்தேன். ஆப்பிஸ்குள்ளயே என்னால சாப்ட முடில. வயிறு பிடிக்குது. ஒரு தமிழ் நண்பர்கிட்ட கண்ணீர் விட்டுக் கதறுனேன். அவருதான் காரு வெச்சி (அவரோடதுதான்) சட்டினிக்குக் கூட்டீட்டுப் போனாரு.


நாலு வகைச் சட்டினி போட்டிருக்கீங்களே. அதுல வெள்ளவெளேருன்னு ஒரு தொவையலு இருக்கே. அதுதான் அன்னைக்கு என்னையக் காப்பத்துச்சு. தேங்காச்சில்லும் ஜீனியும் வெச்சு அரைச்சது. அவ்ளோதான். அதத் தொட்டுச் சாப்டுதான் வயித்தைக் காப்பாத்துனேன்.

மேங்கோ தோசைன்னு போட்டிருக்கானே... அது மாங்கா ஊறுகா தோசை. தோசைக்குள்ள மாவிடிகாய பச்சடி (மாங்கா ஊறுகாய்) தடவி வெச்சிருப்பாங்க. நல்லாருந்துச்சு. இதெல்லாம் விட பாதுகாப்புன்னா பாரடைஸ் பிரியாணிதான்.

G.Ragavan said...

http://www.hollywoodbala.com/2009/11/2012-2009.html

படத்தைப் பாத்துட்டேன். படம் - கிராபிக்ஸ் = குப்பை. இது என்னோட கருத்து.

G.Ragavan said...

http://www.hollywoodbala.com/2009/11/twilight-2008.htm

Twilight என்னோட ஃபேவரிட் படம். படம் வந்தப்போ மூனு வாட்டி தேட்டர்லயே போய்ப் பாத்தாச்சு. அந்தப் புத்தகங்கள் எல்லாமும் படிச்சாச்சு. பாகம் ரெண்டுக்குக் காத்திருந்தேன். பாக்கனும். பாக்கனும். வேம்ப்பயரை வவ்வால்னு சொல்லலாமா கூடாதான்னு தெரியலை. சொல்லிக்கலாம். ஏன்னா அப்படியும் சில படங்கள் புத்தகங்கள் காமிச்சிருக்கு. இந்த வேம்ப்பயர் கதைகளை பிராம் ஸ்டோக் தொடங்கி வெச்சாலும் Vampire Chroniclesனு புத்தகத் தொடர்களையே எழுதிக் குமிச்சிருக்காங்க Anne Rice. இதுகள்ள அனேகப் புத்தகங்கள் எங்கிட்ட இருக்கு.

G.Ragavan said...

http://www.hollywoodbala.com/2009/11/new-moon-2009.html

புத்தகத்திலும் இரண்டாம்பாகம் சுமாரானது என்று பொதுவான கருத்து. ஆனாலும் படத்தைப் பார்த்தேயாக வேண்டும். படித்ததெல்லாம் எப்படி வந்திருக்கிறது.. எதையெதை மாற்றியிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டுமே. வேம்ப்பயர்களைக் குறைவாகக் காட்டியதால் இரண்டாம் புத்தகம் சுமார் என்று கூட ஒரு கருத்துண்டு.

G.Ragavan said...

http://muralikkannan.blogspot.com/2009/11/2.html

பெண்ணியம் என்று பார்த்தால் சிந்துபைரவி, கல்கி, பார்த்தாலே பரவசம்.. மூன்றுமே குப்பைகள்.

சிந்துபைரவியை எடுத்துக்கொண்டால்... இசையறிவு இல்லையென்று சிவகுமார் பாத்திரம் செய்ததை.. சமையலறிவு இல்லையென்று சுலக்ஷணா பாத்திரம் செய்தால் சரியாகுமா? என்ன... சுஹாசினி பாத்திரம் செய்த ஒரே சரியான வேலை... தன்னுடைய பிள்ளையை சுலக்ஷணாவிடம் விட்டுச் செல்வதுதான். இல்லையென்றால் அதுவும் சுஹாசினி அல்லது சுஹாசனன் ஆகியிருக்கும்.

கல்கி பேசத்தேவையில்லாத குப்பை. பார்த்தாலே பரவசம் கிடையாது. பார்த்தாலே பிறர் சவம்.

ஆனால் பாலச்சந்தரின் வேறு சில படங்களில் பெண்ணியம் குறித்து நல்லவவகளும் உண்டு. உங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2009/09/blog-post.html

இந்தப் பதிவுல நீங்க சொல்லீருக்குற அளவுக்குக் கூட இஸ்லாம் பத்தித் தெரியாது. அதுனால தனிப்பட்ட கருத்துகள் எதுவும் இல்லை. ஆனாலும் ஒன்னு சொல்லலாம். எந்தப் பொதுமையும் விமர்சனத்திற்கு உரியதே. அந்த வகையில் இஸ்லாமும் விமர்சனத்துக்கு உரியதே.

கடைசியா ஒன்னு... பால்குடிச்சா தாய் முறை வந்துரும்.. அதுனால ஆணும் பெண்ணும் பக்கத்துல உக்காரலாம்னு சொன்ன அறிவாளியை என்ன சொல்றது!!!! I think it is high time he gets laid.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2009/11/blog-post_23.html

அடா அடா அடா டீச்சர் கலக்கீட்டீங்க போங்க. சிலப்பதிகாரம்னா சொல்லனுமா?

இதுல பாருங்க... கண்ணகி கோவலனோட இருந்ததை சிலப்பதிகாரமோ அதன் பாத்திரங்களோ பாராட்டவே பாராட்டாது. இளங்கோவடிகளும் கூட. அப்புறம் எதக் கற்புன்னு எதைச் சொல்றாங்கன்னு படிச்சாத்தான் உண்மை தெரியும். புருசனுக்கு இணக்கமா இருந்துக்குறது ஒரு பெண்ணுடைய விருப்பம். அந்த மாதிரி பெண்களுக்குப் பரிசு குடுக்கனும்னா சொர்கத்துக்குப் போனாலும் கூடவே இருந்துக்கட்டும்னு சொல்லீரலாம் (கோப்பெருந்தேவி மாதிரி)... ஆனா வாயில்லாப் பூச்சியா இருந்தாலும் அரசனை என்னடான்னு கேட்ட்ட அறச்சீற்றம்தான் கற்புன்ன்னு ஒரு பெண் சொல்லி ஆண் கேட்டுக்கிர்ரதா சிலம்பு சொல்லுது.