Thursday, January 14, 2010

என்னுடைய பின்னூட்டங்கள் - 2010

மற்ற வலைப்பூக்களில் 2010ம் ஆண்டில் நானிடும் பின்னூட்டங்கள்.

211 comments:

1 – 200 of 211   Newer›   Newest»
G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2010/01/366.html

மிகவும் நல்ல முயற்சி. இந்த முயற்சியோடு தொடர்புள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

உதவி செய்ய நினைப்பவர்களுக்கு எழும் முதல் ஐயம்... அந்த உதவி சரியான நபருக்குச் செல்கிறதா என்பதுதான். அது போன்ற ஐயங்களை நீக்க அகரம் போன்ற அமைப்புகள் வழியாகவும் உதவலாம்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/01/blog-post_14.html

அயர்வு இன்றி உயர்வு கொள் பயணம் சென்று
பகிர்வு கொள் பதிவு மூலம் பெருமை கொண்ட
நுகர்வு சிறக்கும் துளசிதளத்தின் டீச்சரே வாழ்க வாழ்க :)

பொங்கள் வாழ்த்துகள். அதுவும் எங்கள் வாழ்த்துகள் :)

அந்த நூடுல்ஸ்க்குக் கப்பு-ஓ-நூடுல்ஸ் என்று பெயர். ரொம்பத் தின்னா வயித்துக்குள்ள பிளாஸ்ட்டிக் போகுமாம். என்னோட நண்பனோட நண்பனுக்குக் கப்பு-ஓ-நூடுல்ஸ் ரொம்பப் பிரியமாம். அதையே தெனமும் சாப்ட்டு சாப்ட்டு... வயித்து வலியாம். வயித்தச் சோதிச்சுப் பாத்தா... உள்ள பிளாஸ்டிக். கொதிக்கக் கொதிக்க வெந்நீ ஊத்துறாங்கள்ள... அதுல கொஞ்சங் கொஞ்சமா உள்ள போயிருக்காம்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/01/1.html

கண்கள் மட்டுமன்றி அகமதும் பார்த்து ரசித்த அகமதாபாத்தின் பயணக்கட்டுரை தொடங்கிவிட்டதே! :)

ஒப்புரவு ஒழுகுன்னு சொன்ன ஔவையார் துப்புரவு ஒழுகுன்னும் சொல்லீருக்கலாம். குப்பையப் பொது எடத்துல போடக்கூடாதுன்னு எல்லாருக்கும் புரியனும். நேத்து ஒரு பிரபல எழுத்தாளரை பெசண்ட் நகரில் சந்தித்தேன். கிளம்பும் பொழுது அதே தெருவில் இன்னொரு பெரிய காரும் சென்றது. திடீரென காருக்குள் இருந்து ஒரு கோக் கேன் சாலையில் வந்து விழுந்தது. படித்து செல்வத்தில் கோடியில் கூடியிருக்கும் மாடி வீட்டு துண்டுபீடிகளும் இப்பிடி நடக்கையில் படிக்காதவரை என்ன சொல்ல! இந்த விஷயத்தில் குஜராத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான் போல.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2009/12/blog-post_24.html

எம்.ஜி.ஆர் என்ற நடிகர் மீதும் எம்.ஜி.ஆர் என்ற அரசியல்வாதி மீதும் பலப்பல விமர்சனங்கள் இருந்தாலும், இப்பொழுதிருக்கும் அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டால் ஏற்றுக்கொள்ளத்தக்கவராகவே இருக்கிறார். ஊழல் செய்தார் எம்.ஜி.ஆர் என்று சொல்லும் தகுதி இன்றைய அரசியல்வாதிகள் எவருக்கும் இல்லை. இலவசம் என்று சொல்லக் கூட எவருக்கும் அருகதை இல்லை. தொலைக்காட்சி வரை அதை வளர்த்திருப்பவரை ஆதரிப்பவர்கள் அமைதி காப்பது நல்லது.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? இந்தப் பெருமை இன்றைய திமுக தலைமைக்கும் கிடைக்காது. அதிமுக தலைமைக்கும் கிடைக்காது. ஆயிரம் விமர்சனங்களையும் தாண்டி எம்.ஜி.ஆர் பாராட்டுக்குரியவராக இருக்கிறார்.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2010/04/spb.html

details in this post are not completely correct.

the first female singer award was not there in 1962. Kandhan Karunai won national award, but for best Music. K.V.Mahadevan won it. K.B.Sundarambal's national award was for the movie Thunaivan. (not for Ariyathu Kaekin from Kandhan Karunai).

In the year the best female singer award was introduced, P.Suseela won it for Uyarandha Manithan. Janaki's first national award was for 16 Vayathinile (Chendoora Poove).

Among the female singers, Chithra won national awards maximum number of times so far. And only P.Suseela, K.S.Chithra, Shreya Goshal, and Lata won consequent national awards. In that list too only Chithra won it two consequent times.

And count wise, PS as well as SJ are the same. It is 5 times.

Two feathers on top for PS are,
1. first female singer who own that award
2. consequent awards

these are just facts. You can rewrite your post again. :)

G.Ragavan said...

@SurveySanபின்னவும் இல்ல. முடியவும் இல்ல. கொஞ்சும் சலங்கை வந்தப்போ சிறந்த பின்னணிப்பாடகிக்கான தேசிய விருதே கிடையாது. முதல் விருதே 1968லதான். உயர்ந்த மனிதனுக்காக தமிழ் வாங்குச்சு. அடுத்த வருசமே துணைவனுக்காக கே.பி.சுந்தராம்பாள். இன்னும் பாக்கப்போனா பிரபலமான பாடகர்கள் எல்லாரும் தமிழில் தேசிய விருது வாங்கீருக்காங்க. யேசுதாசும் ஜெயச்சந்திரனும் மலையாளத்துல வாங்குனாங்க.

கொஞ்சும் சலங்கை நல்ல பாடல். எனக்கும் பிடித்த முருகன் பாடல். ஆனா அதுக்குத் தேசிய விருதெல்லாம் கொடுக்கலை. அந்தப் பாடல் பி.லீலா பாட வேண்டியது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை. மத்த பாட்டெல்லாம் பி.லீலாதான். அவங்கதான் இந்தப் பாட்ட ஜானகி பாடினா நால்லாருக்கும்னு பரிந்துரைச்சது. நாதஸ்வரத்துக்கு ஜானகி குரல் நல்லாருக்கும்னு அவங்க பரிந்துரைச்சிருக்காங்க. ஆனாலும் இந்தப் பாடலின் வரிகள் ரொம்ப நாளைக்கு எனக்குப் புரியலை. நாதஸ்வரத்தோட குரல் எப்படிப் பொருந்தனும்னு கேட்டீங்கன்னா... ரெண்டு பாட்டு சொல்வேன். ரெண்டு பாட்டுமே ஒரே படம். ஒரே இசையமைப்பாளர். ஆனா ரெண்டு பாடகிகள்.

நலந்தானா நலந்தானா - பி.சுசீலா
பாண்டியன் நானிருக்க - எல்.ஆர்.ஈஸ்வரி

ரெண்டு பாட்டுலயும் ஒவ்வொரு சொல்லும் நாதசுரத்தோடு.. அடடா!ழ்

@SurveySanபின்னவும் இல்ல. முடியவும் இல்ல. கொஞ்சும் சலங்கை வந்தப்போ சிறந்த பின்னணிப்பாடகிக்கான தேசிய விருதே கிடையாது. முதல் விருதே 1968லதான். உயர்ந்த மனிதனுக்காக தமிழ் வாங்குச்சு. அடுத்த வருசமே துணைவனுக்காக கே.பி.சுந்தராம்பாள். இன்னும் பாக்கப்போனா பிரபலமான பாடகர்கள் எல்லாரும் தமிழில் தேசிய விருது வாங்கீருக்காங்க. யேசுதாசும் ஜெயச்சந்திரனும் மலையாளத்துல வாங்குனாங்க.

கொஞ்சும் சலங்கை நல்ல பாடல். எனக்கும் பிடித்த முருகன் பாடல். ஆனா அதுக்குத் தேசிய விருதெல்லாம் கொடுக்கலை. அந்தப் பாடல் பி.லீலா பாட வேண்டியது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை. மத்த பாட்டெல்லாம் பி.லீலாதான். அவங்கதான் இந்தப் பாட்ட ஜானகி பாடினா நால்லாருக்கும்னு பரிந்துரைச்சது. நாதஸ்வரத்துக்கு ஜானகி குரல் நல்லாருக்கும்னு அவங்க பரிந்துரைச்சிருக்காங்க. ஆனாலும் இந்தப் பாடலின் வரிகள் ரொம்ப நாளைக்கு எனக்குப் புரியலை. நாதஸ்வரத்தோட குரல் எப்படிப் பொருந்தனும்னு கேட்டீங்கன்னா... ரெண்டு பாட்டு சொல்வேன். ரெண்டு பாட்டுமே ஒரே படம். ஒரே இசையமைப்பாளர். ஆனா ரெண்டு பாடகிகள்.

நலந்தானா நலந்தானா - பி.சுசீலா
பாண்டியன் நானிருக்க - எல்.ஆர்.ஈஸ்வரி

ரெண்டு பாட்டுலயும் ஒவ்வொரு சொல்லும் நாதசுரத்தோடு.. அடடா!

G.Ragavan said...

http://rudhrantamil.blogspot.com/2010/04/blog-post_12.html

ருத்ரன் சார், நல்ல பதிவு.

நாமெல்லாம் வளர்ந்து விட்டோம். முன்னேறி விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் இந்தத் தொந்தரவுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகின்றவன் நான். அங்கும் இந்தக் கொட்டம் ஆட்டம் போடுகிறது. மேலாளர்கள் எல்லாம் உணவருந்தப் போகையில் நானும் ஒரு கிருத்துவ நண்பரும் அசைவ உணவு சொன்னதற்குப் பேசிய பேச்சும் ... எடுத்த வகுப்பும்...

இதே ஆள்தான் வெள்ளி வந்தால் மொடாக் குடியன்.

சீச்சீ என்று இருக்கிறது. இன்றைக்கே இப்படியென்றால்... அன்றைக்கு!

இன்னொருவர் வேறுவிதம். "ராகவன் நீங்க ஐயங்காரா? ஐயரா?"

இதுதான் அவர் என்னிடம் தமிழில் பேசியது. இரண்டும் இல்லை என்று தெரிந்ததில் இருந்து ஒரே ஆங்கிலம்தான்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_26.html

டீச்சர்... இவ்ளோ கோயில் போயிருக்கீங்க... கர்நாடகாவுல குக்கே சுப்ரமண்யா முருகன் கோயில் போகலையா? மங்களூர் பக்கத்துலதான இருக்கு.

அதென்ன வெளிநாட்டுக்காரங்களுக்கு அனுமதி இல்லை? ஆண்டவன் எல்லாருக்கும் பொது. வாடிகன் சிஸ்ட்டென் சாப்பெல் உள்ள நான் போக முடியுறப்போ... இது ஏன் கூடாது? மத்த மதங்கள விடுங்க. நம்மதானே அடுத்தவங்களுக்கு எடுத்துக்காட்ட்டா இருக்கனும்!

சட்டைய்யக் கழட்டச் சொல்றதுக்கு உருப்படியா ஒரு ஆன்மீகவாதியும் காரணம் சொல்லலை.

G.Ragavan said...

http://jackiesekar.blogspot.com/2009/10/km0-18-14.html

மிக்க நன்றி. உங்கள் விமர்சனம் படித்து விட்டு படத்தை இறக்குமதி செய்து பார்த்தேன். மிக அருமை. கொஞ்சம் கூடக் குழப்பாமல்... அதிலும் அந்த முடிவு.... வாவ்.

இதையே தட்டி நெளித்து தமிழிலும் எடுக்கலாம். ஆனால் அசிங்கப்படுத்தி விடுவார்கள். ஏனென்றால் இதில் முகம் சுழிக்க வைக்கும் ஒரு காட்சியும் கிடையாது. படத்தை மிகமிக ரசித்தேன். இது போன்ற சிறந்த படங்கள் குறித்து நிறைய சொல்லுங்கள்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/05/blog-post.html

கண்ணன் வந்தான்... அங்கே கண்ணன் வந்தான்... டீச்சர் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணா கண்ணா
இரவினிலும் நடை திருக்கும் உடுப்பியூர் வனம்
நினைவினிலே நிறைந்திருக்கும் மத்வவூர் வனம்
கேட்டதெல்லாம் நிறைத்திருக்கும் பிருந்தாவனம்... பிருந்தாவனம்

இந்தப் பதிவுக்கு இந்தப் பாட்டுதான் பொருத்தம். இன்னொரு பாட்டும் சொல்லலாம்.

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா!

இந்தப் பாட்டோட வீடியோ இங்க இருக்கு.
http://www.youtube.com/watch?v=tDnFpt7bTTY

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/05/blog-post.html

ட்யூப்லெஸ்ஸுக்குள் ட்யூப் வந்ததெல்லாம் மாயமா? கோழிக்குள் முட்டை வைத்தான். முட்டைக்குள் கோழி வைத்தான். பிரியாணிக்குள்ளும் முட்டையை வைத்தான். அந்த ஆண்டவனின் மாயத்தாலே டியூப்லெஸ்ஸுக்குள்ளும் ட்யூப் வந்தது. :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2010/04/blog-post_27.html

யார் ஏற்றுக்கொண்டாலும் சரி... ஏற்காவிட்டாலும் சரி... இளையராஜா ஒரு இசை ராஜா. அவருடைய இசைதான் என்னுடைய குழந்தைப் பருவத்தில் நிறைந்திருந்தது. அது இன்னமும் நெஞ்சில் இருக்கிறது. பின்னாளில் உடன் படித்த நண்பர்களோடு ஏ.ஆர்.ரகுமான் - இளையராஜா சண்டை போட்டாலும்... இளையராஜாவின் இசைக்கு நான் தனிமதிப்புக் கொடுக்கத் தவறியதேயில்லை.

மலையாளத்தில் அவரது இசையைக் குறைவாகவே கேட்டுள்ளேன். அதைத் தீர்க்க பாடல்களளத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் பாடல்கள் ஒலிக்கவில்லை. பிழை காட்டுகிறது.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/05/blog-post_04.html

பார்த்தால் பசி தீரும்னு சொல்வாங்க. ஒங்களுக்கு ஏறியிருக்கு போல. :) தப்பில்லை. சாப்பாடு நல்லாருந்தா கூட ரெண்டு வாய் சாப்டுறதில்லையா. நல்ல பாட்டுன்னா கூட ரெண்டு வாட்டி கேக்குறதில்லையா. அந்த மாதிரிதான்.

பக்குவமெல்லாம் நல்லதுதான். ஆனா ஆண்டவனிடத்திலும் வைக்கும் அன்பிற்கும் அம்மாவிடத்தில் குழந்தை வைக்கும் அன்பிலும் பக்குவமா பெரிது! :)

எல்லாஞ் சரிதான் டீச்சர்.

அந்தக் கமுகுப் பூக்கள் ரொம்ப அழகு.

கனகதாசர் ஜன்னல் வழியாப் பாத்தார்னு தெரிஞ்சி... அவர உள்ள வர வைக்காமா... அல்லது அவர் சார்ந்தவங்கள உள்ள வர வைக்காம... அங்கேயே இருந்து பூஜை செய்ற கூட்டத்தினரைத் தவிர எல்லாரையும் ஜன்னலுக்கு வெளிய நிக்க வைச்ச பெருமையை என்ன சொல்றது!

G.Ragavan said...

http://vimarsagan1.blogspot.com/2010/02/blog-post_08.html

மலையாளியை நம்புவது கஷ்ட்டம்னு சொல்வாங்க. நானும் பாத்திருக்கேன். நம்மவங்கள்ளயும் நெறையப் பேர நம்ப முடியலையே. மலையாளிகள் கிட்ட இருந்து நம்ம கத்துக்க வேண்டியது இனமான உணர்வு. அது மட்டும் தமிழனுக்குக் கொஞ்சமாச்சும் இருந்திருந்தா.... ஹூம்...

விஜய் டீவியில சூப்பர் சிங்கர்னு நிகழ்ச்சி வருது. அதுல மொதல்ல ஜெயிச்சவங்களும் மலையாளிகள். இப்ப குழந்தைகளுக்கான போட்டி நடக்குது. உண்மையிலேயே நல்லாப் பாடுற தமிழ்க் குழந்தைகளை வெளியேத்துறாங்க. பாக்குற ஆசையே போச்சு. விஜய் டீவி இயக்குனர் எந்த ஊர்னு பாக்கனும்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/05/blog-post_05.html

ரஜதசபைன்னா வெள்ளியம்பலம். கனகசபைன்னா பொன்னம்பலம். வெள்ளி பொன்னம்பலம்னு சொன்னா நமக்குப் புரிஞ்சிரும்னுதான் ரஜத கனக்கன்னு சொல்லிக்கிறது.

ரஜத பீடம்னா வெள்ளி மேடை. கன்னடத்துல பெள்ளி. அவ்ளோதான்.

பெரும்பாலும் கருநாடகத்துல உள்ள சிவங்கோயில்கள்ள சிவலிங்கத்துக்கு மீசையிருக்கும். கண்ணு மூக்கெல்லாம் வெச்சிருக்கும். தர்மஸ்தலா போனாலும் அப்படித்தான் இருக்கும்.

இப்ப என்ன டிரெண்டுன்னா கொளத்தப் பாத்தாப்புல கூர மேல சிவனோட செலைய வெக்கிறது. பெங்களூர்லயே ரெண்டெடத்துல அப்படிப் பாத்தேன்.

அப்புறம் சமணக்கோயில் மாதிரின்னு சொன்னீங்க பாருங்க. அது ரொம்ப நுணுக்கமான சங்கதி. பெங்களூர்ல இருந்து பொறப்பட்டு மங்களூர் போற வழியில ஹாசனுக்குக் கொஞ்சம் முன்னாடி ஷ்ரவணபெளகோளாவுக்கு வழி பிரியும். அங்க மல மேல பகுபலி இருக்காரு. துணியில்லாம பெருசா நிப்பாரு. அங்க நெறைய சமணர்கள் இருக்காங்க இன்னமும். அந்த மலைக்குப் பேரு சூரியகிரி. அதுக்கு எதுத்தாப்புல சந்திரகிரி. அந்த மலையிலயும் சமணக் கோயில்கள் இருக்கு.

புராணப் புளுகுகளை ஓரங்கட்டுங்க. நீங்க போன கோயில் அனேகமா சமணக் கோயிலா இருந்து மாத்தப்பட்டதா இருக்க வாய்ப்பு இருக்கு.

காளிதாசரோட மாளவிக்காக்னி மித்ரம் அப்படீங்குற நாடகத்தின் மொழி பெயர்ப்பைப் படிக்குறப்போ பல உண்மைகள் தெரிஞ்சது. அக்னிமித்ரன் ஒரு அரசன். பிராமணனும் கூட. பரம்பரையா அவன் அரசன் கெடையாது. அவனுடடய அப்பா... புத்தர்களையும் சமணர்களளயும் அழிக்க என்னெல்லாம் பண்ண முடியுமோ அத்தனையும் செஞ்சிருக்காரு. பிக்கோ பிக்குணியோ வந்தா வெட்டுறது. விகாரைகளைப் பள்ளிகளை இடிக்கிறது. இப்பிடி நெறைய. இதுதான் உண்மையிலேயே நடந்தது.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2010/05/blog-post_20.html


சரியான நேரத்தில் பொருத்தமான பதிவிட கானா பிரபாதான். :)

அனுராதா ரமணன் அவர்களின் சில எழுத்துகளை வாசித்துள்ளேன். சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம் ஆகிய படங்களையும் பார்த்துள்ளேன். முதலிரண்டும் வெற்றிப்படங்கள். மூன்றாவது வெற்றியடையவில்லை. முக்தா சீனிவாசன் இயக்கியது.

சிறை படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். படம் தொடங்கியதும் வரும் அனுராதா ஆட்டப் பாடல். பிறகு வாணி ஜெயராம் குரலில் வரும் "நான் பாடிக்கொண்டேயிருப்பேன்" மகிழ்ச்சியாக. பிறகு மெல்லிசை மன்னரின் குரலில் "விதியெனும் கரங்களில் வீணையின் நரம்புகள்". இந்த இரண்டு பாடல்களுமே மிகச்சிறப்பானவை.

அடுத்து ஏசுதாஸ் குரலில் "ராசாத்தி ரோசாப்பூவே" பாடல். படம் முடியும் முன்னால் "நான் பாடிக்கொண்டேயிருப்பேன்" சோகமாக வாணி ஜெயராம் குரலில்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2010/05/blog-post_20.html

சிறை படத்தில்தான் கவிஞர் பிறைசூடன் அறிமுகப்படுத்தப்பட்டார். மெல்லிசை மன்னர் முன்பொருமுறை பட்டுக்கோட்டை கலியாண சுந்தரத்தை கவிதையைக் கூடப் படிக்காமல் நிராகரிக்க இருந்தார். பிறகு முயற்சி செய்து பார்ப்போமே என்று சந்தம் குடுத்து கவிதை எழுதச் சொன்னார். அவர் எழுதிய கவிதையைப் படித்து விட்டு.... உங்களைப் போய் நிராகரிக்க இருந்தேனே. என்ன ஆணவம் எனக்கு என்று வருந்தினார். இப்படித்தான் தொடங்கியது பட்டுக்கோட்டையாரின் திரைப்பயணம். அதற்குப் பிறகு கவிதை என்று யார் எதைக் கொண்டு நீட்டினாலும் படித்து விட்டுதான் எதையும் முடிவு செய்வார். பிறைசூடன் கவிதைகளைப் படித்து விட்டு அவரை இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.

இயக்குனர் ஒரு புதுமையும் செய்தார். படம் தொடங்கி பெயர்கள் போடும் பொழுது பின்னணியில் இசை வராது. இயக்குனரும் இசையமைப்பாளரும் சேர்ந்து இசசயமமக்கும் ஒலி வரும். இதைப் பின்னாளில் வேறு இசையமமப்பாளர்களும் பின்பற்றினார்கள்.

G.Ragavan said...

http://rudhrantamil.blogspot.com/2010/06/blog-post_07.html

Well said Doctor. I was having doubt on SriSriSriSri... and he confirmed when this dog shooting incident happened. Horrible fellows. These guys are more dangerous than corrupt politicions.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_24.html

ஆகா! ஆகா! சண்டியின் வீட்டில் முருகனுக்கும் ஒரு படை வீடு! ஆகா! அதைப் பற்றி எழுதவும் தங்களுக்கே குடுத்து வைத்திருக்கிறது. பெருமை எல்லாம் உங்களுக்கே! எனது மனமார்ந்த பாராட்டுகள்.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2010/06/blog-post_18.html

என்னுடைய கருத்தை அப்படியே பிரதிபலித்திருக்கின்றீர்கள்.

தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடலில் கேரளாவிலிருந்து வந்த விண்ணப்பம் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அந்தச் சிறுமி நன்றாகப் பாடுவார் என்பது உண்மைதான். ஆனால் அந்த நிகழ்ச்சி எப்படி நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்த என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

குறிப்பாகச் சித்ராவின் மீதிருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சீச்சீ என்றாகி விட்டது. பிரியங்கா என்ற சிறுமி மிக அருமையாகப் பாடுவார். அவர் என்ன பாடினாலும் எதையாவது சொல்வார்கள். ஸ்ரீநிஷாவிற்கும் அப்படியே. இறுதிச் சுற்றிற்கு வந்திருந்தாலும் நித்யஸ்ரீயை அவர்கள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ரோஷன் என்ற மலையாளச் சிறுவன் தப்பும் தவறுமாகப் பாடுவது நமக்கே தெரியும். ஆனால் சித்ராவிற்குத் தெரியவே தெரியாது. பிரியங்கா, ஸ்ரீநிஷா, நித்யஸ்ரீ ஆகியோரின் தவறுகள் மட்டும் பூதகரமாக்கப்பட்டன. அதையும் ஏற்றுக் கொண்டு அந்தக் குழந்தைகள் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல.

ஒருமுறை நித்யஸ்ரீயை eliminate என்றார்கள். சிறப்புப் பார்வையாளராக வந்திருந்த எஸ்.ஜானகி உடனே எழுந்து ஆட்சேபித்து நித்யஸ்ரீயைக் காப்பாற்றினார். பி.சுசீலா பாடிய நாளை இந்த வேளை பாடலை அல்கா சொதப்பினார். ஆனால் அவர் spot selection. இன்னும் நிறையச் சொல்லலாம்.

சிங்கார வேலனே பாட்டைப் பற்றி எல்லாரும் சொன்னார்கள். அதை விடச் சிறப்பாக ஞானப்பழம் பாட்டைப் பாடினார் ஸ்ரீநிஷா.

என்னவோ குறுகிய மனப்பான்மை என்றெல்லாம் இங்கு பெரிய பேச்சு பேசியிருக்கீறார்கள் பலர். அவர்கள் அதை நீதிபதிகளிடமும் விஜய் டிவியிடமும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். இதே போல கேரளத்தில் ஒரு தமிழ்க் குரல் செல்லக்குரலாக இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை மலையாளிகளுக்குக் குறுகிய மனம் இருப்பது சரி போல.

அதே நேரம் ஜோடி நம்பர் 1ல் எனக்குப் பிடித்தது சுனிதா-வாங் (வடகிழக்கு) ஜோடி.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2010/07/blog-post.html

நல்ல ஒலிப்பதிவு. மிக அருமை. ஒரு பாடல் உருவாகும் ஒத்திகை கேட்பதற்கு மிகப் புதுமையான பழமையாக இருந்தது.

நீங்கள் சொன்ன ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா நல்ல பரிச்சயம்.

இந்தப் பாடலைக் கேட்கையில் இளையராஜா இசையில் டி.எம்.எஸ் பாடி வந்த "சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி" பாடல் நினைவிற்கு வருகிறது.

கவியரசரின் இறுதிக்காலத்தில் அமெரிக்காவிற்கு வைத்தியம் பார்க்கச் சென்றிருந்தார். அப்பொழுது இதே போல இசை ஒத்திகையைப் பதிவு செய்து எம்.எஸ்.வி அமெரிக்காவிற்கு அனுப்பினாராம். ஆனால் அது சென்று சேர்வதற்குள் கவியரசர் இறைவனடி சென்று சேர்ந்து விட்டாராம். அந்த ஒலிக்கோப்பு கிடைத்தாலும் பதிவிடுங்கள்.

G.Ragavan said...

http://cablesankar.blogspot.com/2010/07/5.html

இன்று நீ நாளை நான் மிகவும் நல்ல படம். ஆனால் படம் வந்த நாளுக்குப் பொருத்தமில்லாப் படம். சரி அல்லது தவறு என்று சொல்ல முடியாத உறவுச் சிக்கலைக் கொண்டு வெளிவந்த படத்தை நமது பண்பாட்டுப் பாதுகாப்பாளர்கள் எதிர்க்காமல் இருந்தது அதிசயம்.

பாடல்களும் பின்னணி இசையும் சிறப்போ சிறப்பு. மொட்டு விட்ட முல்லக்கொடி என்று எஸ்.ஜானகி கள்ளக்குரலில் ஆரம்பிக்கும் பொழுதே கேட்ப்பவர்களுக்குத் துள்ளல்தான்.

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்... ஆகா... ஆகா.. பாட்டா அது. இசைக்காவியம். தன்னன்னனனா தன்னன்னனனா....

G.Ragavan said...

http://cablesankar.blogspot.com/2010/07/5.html

இன்று நீ நாளை நான் மிகவும் நல்ல படம். ஆனால் படம் வந்த நாளுக்குப் பொருத்தமில்லாப் படம். சரி அல்லது தவறு என்று சொல்ல முடியாத உறவுச் சிக்கலைக் கொண்டு வெளிவந்த படத்தை நமது பண்பாட்டுப் பாதுகாப்பாளர்கள் எதிர்க்காமல் இருந்தது அதிசயம்.

பாடல்களும் பின்னணி இசையும் சிறப்போ சிறப்பு. மொட்டு விட்ட முல்லக்கொடி என்று எஸ்.ஜானகி கள்ளக்குரலில் ஆரம்பிக்கும் பொழுதே கேட்ப்பவர்களுக்குத் துள்ளல்தான்.

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்... ஆகா... ஆகா.. பாட்டா அது. இசைக்காவியம். தன்னன்னனனா தன்னன்னனனா....

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2010/07/blog-post_19.html

ஜென்சி மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவர். அவருடைய குரலில் புதுவித இளமைத்தன்மை தெறிக்கும். அவர் இளம்வயதில்தானே பாடினார். ஆயினும் அவரது குரலிலேயே கலந்தது என்று சொல்லலாம்.

திரிபுரசுந்தரி படத்தில் துவங்கிய அவரது பயணம் வெறும் முப்பது பாடல்களில் முடிந்தது பெரும் சோகம். ஆனாலும் ஜென்சிக்கு என்று தனியிடம் இருப்பதை மறுக்கவே முடியாது. எஸ்.பி.ஷைலஜா எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறார். ஆயினும் ஜென்சிக்கு இன்றும் இருக்கும் வரவேற்பு நிதர்சனம்.

இந்த ஒலிப்பதிவைக் கொடுத்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/07/5.html


வணக்கம் டீச்சர். பின்னூட்டம் போடலைன்னாலும் ஒங்க பதிவுகளைத் தொடர்ந்து படிச்சிக்கிட்டுதான் வாரேன்.

பயணக்கட்டுரைகளைப் பிரமாதமா எழுதுறீங்கன்னு நான் சொன்னா எல்லாரும் அடிக்க வருவாங்க. ஏன்னா... ரொம்பப் பிரமாதமா எழுதுறீங்கன்னு சொல்லனுமாம். ;)

அலுவலக வேலையா ஒரு மாசம் துருக்கி வந்திருக்கேன். இங்க எங்க பாத்தாலும் பூனைக. நீங்க பாத்தீங்கன்னா போட்டா பிடிச்சிக்கிட்டேயிருக்கனும். அவ்வளவு பூனைங்க. காலைல எந்திரிச்சி டாக்சி பிடிக்க வந்தா கால் கிட்ட வந்து நிக்கும். திரும்ப வர்ரப்போ இன்னும் சிலது வரும். படுக்கும். புரளும். மிரளும். ஓடும். ஓடி ஒளியும். இப்பிடி எதையாச்சும் செஞ்சிக்கிட்டேயிருக்கும். நீங்க கண்டிப்பா இந்தப் பக்கம் எட்டிப்பாக்கனும் (இது வரைக்கும் பாக்கலேன்னா).

அப்புறம் இன்னொரு விஷயம் சொன்னீங்களே. அந்த டிரைவர் சாப்பிடும் போது எழுந்திருக்கப் போனவரைத் தடுத்துச் சாப்புடச் சொன்னீங்களே. ரொம்பச் சரி. ஆடுற ஆட்டமும் ஓடுற ஓட்டமும் அதுக்குத்தானே. அதுனாலதான் சாப்பாட்டை வீணாக்குறது எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம். கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் முடியவே முடியாதுங்குற நிலை வந்தாலொழிய வீணாக்குறதில்லை.

புத்தர்களெல்லாம் அருமை.

இந்த உலகம் நிலையில்லாதது. நேற்று இருந்தது இன்று இல்லை. இன்று இருப்பது நாளை இல்லை. நாமும் அப்படித்தான். இப்பிடி நிலையில்லாத உலகத்துல கருணாநிதி, ஜெயலலிதா, ராஜபக்ஷேவா நம்ம மாறிடக்கூடாதுன்னு நிலையாமையைக் குறிக்க நினைக்க நெற்றியில நீறு பூசிக்கிறோம். அப்படியிருக்க நீடுதுயில் கொண்டவங்கள நீறுதுயில் கொள்ள வைக்கிறது எவ்வளவு பொருத்தம்னு தெரியலை. வள்ளுவரோட நீறு எடுத்து வெச்சிருக்கோமா... அவரோட துணிமணிகளை பாதுகாத்து வெச்சிருக்கோமா...ஆனாலும் எப்படி நினைவில் இருக்கிறார்! அவர் செய்த திருப்பணி. திருக்குறள் என்ற ஞானமேகம் ஆண்டாண்டு காலாமாக நின்று நிலைப்பதே அவர் பெருமை. அப்படி வாழனும். இது என் கருத்து.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/07/5.html

ஆமா டீச்சர். இஸ்த்தான்னா புல்லுதான். நல்லாவே இருக்குது ஊரு. கண்டிப்பா இங்க வந்து சுத்துங்க. பதிவு போடுங்க. நானும் வழக்கம் போலப் படிச்சிட்டுப் பின்னூட்டமும் போடுறேன். முடிஞ்சு கெளம்புறேன். அடுத்த செவ்வாய். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_15.html

குமரன், இந்தப் பதிவை இப்பொழுதுதான் படித்தேன். படக்கென்று படிக்கையில் நான் எழுதியது போல் இருந்தது. இப்படிச் சொல்லியதைக் குறையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

பாரதப் போரில் கண்ணன் செய்ததெல்லாம் மிகவும் சரி என்று விளக்கம் சொல்வது எளிது. கடவுள் என்று வந்து விட்ட பின்னர் வியாக்கியானங்களை உருவாக்கிக் கொள்வதும் கண்டுபிடிப்பதும் இடைச்செருகுவதும் இலகே.

அப்படியிருக்க... அசுவத்தாமனின் இந்த நிலைக்குக் காரணம் யாரென்று பார்த்தால்... பலரையும் கைகாட்ட வேண்டியிருக்கிறது. பாரதக்கதையில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும். ஆனால் அசுவத்தாமன் இருந்தான் என்று சொல்வதை விட அவனைப் பற்றிப் பெரிதாக எந்தத் தகவலும் சொல்லப்பட்டிருக்காது. முடிவில்தான் அவனை கொடுமைக்குள் முடித்து வைக்கும் முடிவு வெளிப்படும். ஆக நடுநிலையோடே இருந்திருக்கிறான்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_15.html

போர்க்குற்றம்... அதுவும் பிறக்காத பிஞ்சு மீது கொலை ஏவல் என்ற குற்றம் அவன் மீது. ஆகையால் அவனுக்குத் தண்டனை. சரி. இந்த விளக்கத்தையே வைத்துக் கொண்டு சிந்திப்போம்.

போர்க்குற்றம் என்பது போரில் ஈடுபட்டவர்கள் மீது வரும். ஆனால் ஒளிந்திருந்து உதவி செய்கின்றவர்கள் மீது வராது போலும். போரிட மாட்டேன். கொலைக்கருவி ஏந்தேன் என்று சொல்லி விட்டு பின்னாளில் அசுவத்தாமனுக்குச் சாபம் தந்த பெருவள்ளலின் தராதரம் சிந்திக்கத் தக்கது. தண்டனையைப் பற்றிப் பேசும் பொழுது கொடுத்த கோமானின் கோமாளித்தனத்தையும் பேசித்தானே ஆகவேண்டியிருக்கிறது.

அவன் ஆண்டவனாகவே கருதப்படட்டும். அப்படிப்பட்டவன் மனிதர்கள் இடும் போரில் மாயம் காட்டியமை முறையா! பகல் முடிந்தது என்று அனைவரையும் ஏமாற்ற அருச்சுனன் அம்பேவி ஆதவனை அகற்றியிருந்தால் முறை. தேரோட்டி தீ மறைத்து மாலை எனக்காட்டிய வேலை முறையா! காலத்தேரை ஓட்டுவதாகச் சொல்லப்படுகிறன் கைச்சக்கரம் வைத்து பரிதி மறைத்தது... ஆயுதம் தொடேன் என்று சொன்ன சொல்லின் நம்பகத்தன்மையை நாசம் செய்ததே! காரணம் அருச்சுனப்பாசம். அவன் மகனுக்கு முந்தி விரித்த உறவின்படி மாமனுக்கு உதவி செய்திருக்கிறான் என்றே தோன்றுகிறது. அதனால்தான் இறுதில் காலம்பு வாங்கி குவலயம் நீங்கி பாலாழி பாய்ந்தான் பாதகன் என்றும் விளக்கம் சொல்வார்கள். ஏனென்றால் வந்த வேலை முடிந்ததாம். அவன் எண்ணப்படி நடந்தது அனைத்தும் என்றால் அசுவத்தாமன் அம்பெய்ததும் அதை ஆடவள் வயிற்றில் திருப்பியதும் அவன் எண்ணப்படிதானே. அப்படி எய்தவனாக இருந்து அம்பைச் சபித்த வம்பை என்ன சொல்வது!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_15.html

போர்க்குற்றம்... அதுவும் பிறக்காத பிஞ்சு மீது கொலை ஏவல் என்ற குற்றம் அவன் மீது. ஆகையால் அவனுக்குத் தண்டனை. சரி. இந்த விளக்கத்தையே வைத்துக் கொண்டு சிந்திப்போம்.

போர்க்குற்றம் என்பது போரில் ஈடுபட்டவர்கள் மீது வரும். ஆனால் ஒளிந்திருந்து உதவி செய்கின்றவர்கள் மீது வராது போலும். போரிட மாட்டேன். கொலைக்கருவி ஏந்தேன் என்று சொல்லி விட்டு பின்னாளில் அசுவத்தாமனுக்குச் சாபம் தந்த பெருவள்ளலின் தராதரம் சிந்திக்கத் தக்கது. தண்டனையைப் பற்றிப் பேசும் பொழுது கொடுத்த கோமானின் கோமாளித்தனத்தையும் பேசித்தானே ஆகவேண்டியிருக்கிறது.

அவன் ஆண்டவனாகவே கருதப்படட்டும். அப்படிப்பட்டவன் மனிதர்கள் இடும் போரில் மாயம் காட்டியமை முறையா! பகல் முடிந்தது என்று அனைவரையும் ஏமாற்ற அருச்சுனன் அம்பேவி ஆதவனை அகற்றியிருந்தால் முறை. தேரோட்டி தீ மறைத்து மாலை எனக்காட்டிய வேலை முறையா! காலத்தேரை ஓட்டுவதாகச் சொல்லப்படுகிறன் கைச்சக்கரம் வைத்து பரிதி மறைத்தது... ஆயுதம் தொடேன் என்று சொன்ன சொல்லின் நம்பகத்தன்மையை நாசம் செய்ததே! காரணம் அருச்சுனப்பாசம். அவன் மகனுக்கு முந்தி விரித்த உறவின்படி மாமனுக்கு உதவி செய்திருக்கிறான் என்றே தோன்றுகிறது. அதனால்தான் இறுதில் காலம்பு வாங்கி குவலயம் நீங்கி பாலாழி பாய்ந்தான் பாதகன் என்றும் விளக்கம் சொல்வார்கள். ஏனென்றால் வந்த வேலை முடிந்ததாம். அவன் எண்ணப்படி நடந்தது அனைத்தும் என்றால் அசுவத்தாமன் அம்பெய்ததும் அதை ஆடவள் வயிற்றில் திருப்பியதும் அவன் எண்ணப்படிதானே. அப்படி எய்தவனாக இருந்து அம்பைச் சபித்த வம்பை என்ன சொல்வது!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_15.html

தொலையட்டும். கார்மேக வண்ணம் உடலை மற்றுமன்றி உள்ளத்திலும் கொண்டவன் செயல்தான் அப்படியென்றால்...பெற்றவன் செயல். அவனுக்கும் இருந்து அருச்சுனப் பாசம். நடுநிலை தவறுதல் மறையோர் எனச் சொல்வோருக்கு முறையோ! நலம் பொருந்தியவனை விட நலமற்றவன் மீதே மருத்துவன் கருத்து செலுத்த வேண்டும். ஊட்டமுள்ளவனுக்கே ஊட்டினான் அவன் நாட்டம் தவறென்னு உலகம் செப்பும். நல்லதொரு மாணவனைத் தூண்டி விட்டால் போதும். அதையும் தாண்டி பாசம் வைத்தால்! அதனால் மற்ற மாணவர்களைத் தள்ளி வைத்தால்! அவனுக்கா மறப்பேறு கிடைத்திருக்கும்! மகப்பேறு சாபம் பெற அவனும் பெருங்காரணம். இப்பிடிச் சாட்டைகள் சுழற்றி விட... பம்பரத்தைச் சபித்த போலிப் பண்பாளனின் பாங்கைப் போற்றுவதிலும் பேருவகை கொள்ளல் அனைவரும் செய்வதன்று.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_20.html

இந்திய நாட்டுக்கு உங்களையும் உங்கள் இல்லத்தாரையும் வருக என்று வரவேற்கிறேன்.

குழந்தைகளைக் கைக்குழந்தைகளாகப் பார்த்தது. இப்பொழுது பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

தந்தையாரின் ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள் சிறப்புற நடந்தேகியனவா! அப்படியே நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.

கொடுப்பது என்பது எளிதன்று. ஆகையால்தான் வறியார்க்கு ஒன்று ஈவதை ஈகை எனப்பாராட்டுகிறார்கள்.

அந்தப் புகைப்படங்களில் வாங்குகின்ற குழந்தைகளின் முகமகிழ்ச்சியைப் பாருங்கள். அடடா! பேறு பல செய்திருக்கின்றீர்! உளங்கனிந்த பாராட்டுகள்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_7072.html

மதுரையம்பலம் ஏகிய குமரன் குடும்பத்தாரின் களிப்பு இந்தப் பதிவினால் எங்களுக்கும் பரவிய உவப்பு!

மதுரைக் கோயிலில் மீனாட்சியைக் காணச் செல்லும் வழியில் ஒரு இஸ்லாமியர் சாம்பிராணிச் சேவை செய்து கொண்டிருப்பாரே! அவர் இன்னமும் இருக்கிறாரா!

பிறர் சாதம் பெற உணவிட்டவருக்குப் பிரசாதம் கிடைப்பதில் வியப்பேது!

உங்களுக்கு எழுதத் தெரியுமா... பேசத்தெரியுமா என்று என்னைக் கேட்டால்.... நன்றாகப் படிக்கத் தெரியும் என்று சொல்வேன் நான். சரிதானே!

பூரி பறந்தால் கவ்வலாம். பூரிக்கட்டை பறந்தால்... எதற்குப் பின்னாலாவது பவ்வலாம்...

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_24.html

தாம் உண்பதென்ன
உடலில் உடுப்பதென்ன
உளங்குளிர நினைப்பதென்ன
மேனியைத் தீண்டுவதென்ன
தம்மைத் தாண்டுவதென்ன
எண்ணத்தைத் தூண்டுவதென்ன
என்று எதையும் காணாதவருக்குக்
கணிணி கொடுத்த பாங்கு சிறப்பு. ஆயிரம் கோயிலுக்கு அறம் செய்வதிலும் ஆயிரமாயிரம் மடங்கு உயர்ந்தது ஆதரவற்றவ சிறப்புத் திறனாளர்களுக்கு ஆதரவு செய்வது. இதற்குத் தரவு ஆண்டவன் அருளேட்டில் இருக்கும்.

கண்ணூறக் காணமுடியாத நிலையிலும் வாயூற உண்டது அவர்களுக்கு மகிழ்ச்சியையே உண்டாக்கியிருக்கும். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றார்கள். பிரியாணி இட்டவரை.... உளம்பிரியாமல் நினைக்க வேண்டுமோ!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_15.html

என்னுடைய பின்னூட்டத்தில் நான் பேசியிருப்பது இருவரைப் பற்றி மட்டுமே. ஒருவன் கிருஷ்ணன். மற்றொருவன் துரோணாச்சாரியன். இவர்களைத் தவிர யாருடைய மகளையும் தங்கையையும் நான் பிரச்சனைக்கு இழுக்கவில்லை. கிருஷ்ணனைக் குற்றம் சொல்லிவிட்டேன் என்ற நினைப்பு கொடுத்த வெறி... பின்னூட்டத்தைச் சரியாகக் கூடப்படிக்க விடாமல் தடுத்திருக்கிறது போல.

கிருஷ்ணனையா சொன்னாய்... இரு பார்... உன்னை என்ன சொல்கின்றேன் என்று வீறு கொண்டு எழுந்திருப்பது கொமேனியை நினைவூட்டுகிறது. அந்த அளவிற்கு அதிகாரமும் பணபலமும் இருந்திருந்தால் கொய்து தா என்று கொய்தா போல் கட்டளையிடப்பட்டிருக்குமோ!

வலையுலக வாரியார் என்று என்னை ஒரு பொழுதும் நினைத்ததும் இல்லை. நினைக்கப்போவதும் இல்லை. அவர் தமிழ்க்கடல். என்னை நினைத்து வாரியாரை அவமானப் படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

செம்மணி வணங்குதல் மனநோயாயின், கிருஷ்ணனை.... கருப்பன் என்று சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டோ.. அல்லது வேறு ஏதாவது பட்டுக்கொண்டோ நீலவண்ணன், பச்சைமலை என்றெல்லாம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்வதும் மனநோயேயாகும்.

தவறுகள் நாயன்மார்கள் மட்டுமல்ல தற்கால ஆழ்வார்களும் செய்வார்கள் போலும்.

நாயன்மார்கள் விவாதப் பொருள் ஆகும் என்றால் கிருஷ்ணன் ஏன் ஆகக் கூடாது. சுப்புரமணிக்கும் அப்படியே. தெய்வயானை திருமணமும் அப்படியே.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2010/07/blog-post_15.html

ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

வாரியார் நேர்மையாகப் பேசுகின்றவர் என்று சிலர் நம்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு வாரியாரின் சிவனருட்செல்வர்கள் புத்தகத்தைப் பரிந்துரை செய்கின்றேன். நாயன்மார்களைப் பற்றி விளங்கிக் கொள்ள உதவும். அல்லது வாரியார் நேர்மையாகப் பேசுகிறாரா என்ற அவர்களுடைய கருத்தில் மாற்றம் ஏற்படுகிறதா என்றும் விளங்கும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2010/09/blog-post_12.html

போன வாரம் முரளியின் மறைவு மிகுந்த மனவருத்தத்தை அளித்ததென்றால் இந்த வாரம் சுவர்ணலதா. மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவர். நிச்சயமாக பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், சித்ரா வரிசையில் சேரப் பொருத்தமானவர். இறைவனின் எண்ணம் வேறுவிதமாக இருந்திருப்பது நமக்கு இழப்புதான்.

அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.

சின்னஞ்சிறு குயில்தான் பாடுமா? சின்னஞ்சிறு கிளியே என்று பாடத்தொடங்கிய இந்தக் கிளி பாடியதெல்லாம் இனிய பாடல்கள். மும்மூர்த்திகளின் ஆசி பெற்ற ஒரே பாடகி என்று சொல்லலாம்.

நல்ல பாடல்களை வரிசைப்படுத்தித் தந்துள்ளீர்கள். கடல்பூக்கள் படத்தில் தேவா இசையில் இவர் பாடிய பாடல் மிக அருமையாக இருக்கும். சட்டென்று பாடல் நினைவுக்கு வரவில்லை.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2010/11/blog-post_07.html

கமலஹாசன் ஒரு நல்ல நடிகன் என்பதில் மறுப்பில்லை. ஆங்கிலப் படங்களில் இருந்து திருடினார் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும் அவருடைய பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம்.

அபூர்வ சகோதரர்கள் படம் மிகச்சிறிய வயதில் வந்தது. அந்தப் படத்தை இரண்டாம் முறை பார்க்க வேண்டும் என்று வீட்டில் அடம் பிடித்ததும் அது நிறைவேறாமல் போனதும் நினைவிற்கு வருகிறது. அப்பொழுது திரையில் வந்த காட்சிகள் மிகப் புதுமையாக இருந்தன. தொடக்கத்தில் ஸ்ரீவித்யாவின் வாயில் நஞ்சை ஊற்றும் காட்சியின் ஒளியமைப்பு இன்னும் கண்ணுக்குள் உள்ளது. அந்த வயதில் பாடல்கள் அவ்வளவு நன்றாகப் பிடிபடவில்லையென்றாலும் அந்தப் படத்தை பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் பொழுது இளையராஜாவின் இசைஞாலங்களை வியப்போடு ரசிக்க முடிகிறது. அந்த இசைக்கோலங்களை பிரித்தெடுத்து கொடுத்த உங்களுக்கு நன்றி.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2010/11/blog-post_04.html

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் டீச்சர்.
இனிய தந்தேரஸ் வாழ்த்துகள்

இங்க பெங்களூர் பேப்பர்கள்ள ஹேப்பி தீபாவளி, தந்தேரஸ் நாள் வாழ்த்துகள்னு விளம்பரங்கள்ள போட்டிருந்தாங்க.

என்னதிது தந்தேரஸ்னு ஒன்னும் புரியாம இருந்தேன். இப்பப் புரிஞ்சது தந்தேரஸ்னா என்னன்னு. :)

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2010/11/blog-post.html

வாங்க பிரபா. ஆமா. ரொம்ப நாளாச்சு. எந்தப் பதிவு போடுறோமோ இல்லையோ இந்தப் பதிவு போடலாம்னுதான் வந்தாச்சு. :)

எனக்கும் இந்தப் பாடல் ரொம்பவும் பிடிக்கும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2010/11/2.html

வணக்கம் பிரபா.

இளையராஜாவின் மேற்கத்திய பாணிப் பாடல்கள் ஒன்றா இரண்டா?

பம்பம்பாப பம்பபமா துள்ளும் கால்கள் எங்குமுண்டா என்று தொடங்கி எத்தனை பாடல்கள்.

அதிலும் அதிகம் கேட்டிராத பாடல்களைத் தந்தமைக்கு நன்றி.

நீங்கள் சொல்வது போல ஒரு இசையமைப்பாளர் என்னதான் உயிரைக் கொடுத்தாலும் இயக்குனர் மனது வைத்தால் படத்தோடு பாட்டுகளும் காணாம போய்விடும். அந்த முத்துக்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் பெரியவர்.

புன்னகையில் மின்சாரம் எனக்கு விருப்பப் பாடல். என்ன இசை. என்ன குரல். அடடா! அதையும் போட்டிருக்கலாமே.

இதுதான் இதுக்குத்தான் நாட்டுக்கோழி பாஸ்தா. கங்கையமரன் மட்டுமே இப்பிடியும் எழுத முடியும். சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என்றும் எழுத முடியும்.

வஞ்சிக்கொடி பாட்டும் சூப்பர். மற்ற பாடல்களை இப்பொழுதுதான் முதன்முறையாகக் கேட்கிறேன்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2010/11/blog-post_16.html

இசையரசி பி.சுசீலாவின் குரலை ஏன் பிடிக்கும் என்று பெரிய இசையமைப்பாளர்களும் பாடகர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் வியந்த் சொன்ன பிறகு... நாம் என்ன சொல்வது? அவர் பாடல்களைக் கேட்டால் பிடித்திருக்கிறது என்று எளிமையாகச் சொல்லிவிடலாம். அதற்கு எடுத்துக்காட்டச் சொல்லும் போதுதான் பிரச்சனை வரும். எந்தப் பாட்டைச் சொல்வது? பொங்கி வரும் புதுப்புனலில் எந்தத் துளியை நீர் என்று சொல்வது!

நாலு பாட்டுகளும் அதியற்புதம். காத்திருந்த மல்லி மல்லியைத் திரும்பத் திரும்பக் கேட்க வைத்து விட்டீர்கள். நன்றி. :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2011/02/blog-post_22.html

மலேசியா வாசுதேவன் என்ற மிகச்சிறந்த கலைஞனின் இழப்பு தமிழிசை ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்புதான். டி.எம்.எஸ் அவர்களுக்குப் பிறகு மற்றொரு ஆண்மைமிக்க குரல் என்று அவரை மட்டும்தான் சொல்ல முடிகிறது. இதை யாரும் மறுக்கவே முடியாது.

சமீப காலமாகவே சிறந்த கலைஞர்கள் நம்மை விட்டுப் போவது வருத்தத்தைத் தந்து கொண்டிருந்தது. இந்த ஆண்டாவது அது தொடராமல் இருக்கும் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையும் பொய்யானதே. :-(

அவர் ஒரு மிகச்சிறந்த பன்முகக்கலைஞர். கீழே சுட்டியில் இருக்கும் பாடலைப் பாருங்கள். சுருளிராஜனுக்காப் பாடியிருக்கிறார். எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=AG0oQSU5M9E

இதே போல உப்புமா கிண்டி வையடி என்ற பாடலையும் பாடியிருக்கிறார். அதில் உடன் பாடியிருப்பவர் வசந்தா. அதுவும் சுருளிராஜனுக்குத்தான். அந்தப் பாடல் இருந்தால் தயவு செய்து கொடுக்கவும்.

அவரது ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2011/04/blog-post.html

ஸ்ரீகுமார் நல்ல திறமையுள்ள பாடகர். ஆனால் அவருடைய மூக்கால் பாடும் குரல் கேட்பவர்களுக்குச் சற்று சலிப்பை உண்டாக்கும் என்பது என் கருத்து.

மலையாளிகளுக்கு தமிழ் இசையமைப்பாளர்கள் என்றாலே ஒரு இளப்பம். இளையராஜா என்னதான் இசையமைத்துக் கொட்டினாலும் அவரை நினைவு கூற மாட்டார்கள். இதை விடுங்கள். பிறப்பால் மலையாளியாகப் பிறந்து வளர்ப்பால் தமிழராகிப் போன மெல்லிசை மன்னருக்கும் இதே கதிதான். எனக்குத் தெரிந்த வரை பாடகர் ஜெயச்சந்திரனைத் தவிர இளையராஜாவையும் விஸ்வநாதனையும் கேரளத்தில் சிலாகிக்கும் மலையாளப் பாடகர் யாரும் இல்லை என்பதே உண்மை. அது இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட குயில்பாடகியாக இருந்தாலும் கூட. எல்லையைத் தாண்டியதும் ஜான்சன், ரவீந்திரன், ராதாகிருஷ்ணன் என்றுதான் கதைப்பார்கள்.

G.Ragavan said...

http://anandrajah.blogspot.com/2011/05/blog-post_26.html

இது கானல்வரிப் பாடலா? இந்த வரிகளைப் படித்த நினைவில்லையே.

நீங்களே எழுதுனீங்களா?

எனக்கு ரெண்டாம் பாகம் பிடிச்சிருந்தது. டக்டக்குன்னு அடுக்கீருக்கீங்க.

தீன் அழகான்னா என்ன பொருள்?

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/08/22/048/

எங்கிருந்தய்யா இந்தப் பாக்களைப் பிடிக்கின்றீர்கள். படிக்கப் படிக்கச் சிந்திக்க வைக்கின்ற பாடல். முதலில் ஒரு நன்றியைப் பிடித்துக் கொள்ளுங்கள். :)

சொல்ல வந்த செய்தி சிறியதுதான். இங்கு வராதே. அங்கு வா. ஆனால் அதைச் சொல்வதற்குள் எவ்வளவு செய்திகள். ஒவ்வொன்றையும் அனுபவிப்பதே சுகமாக இருக்கிறது.

காடு வெட்டிக் கழனி செய்தனர் என்று படித்திருக்கிறோம். அதையும் அழகாகச் சொல்லியிருக்கிறாள் தோழி.

யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்

இதில் யாமரம் என்பது பற்றித் தேடும் பொழுதுதான் ஒரு உண்மை தெரிந்தது. இந்த யா மரம் யால் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. யால் என்பது பின்னாளில் ஆல் என்று மாறியிருக்கிறது. யாமம் வடக்கே போய்ச் சாமம் ஆனது போல யால் என்பது வடக்கில் சால் என்று ஆகியிருக்கிறதாம்.
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/64c0457d0ec6be62/e32f5eccb722033c?lnk=raot&pli=1

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/08/22/048/

கரும்பு மருள் முதல பைந்தாள் செந்தினை
மடப்பிடித் தடக்கை அன்ன

இந்த வரிகளைப் பிரித்துப் பிரித்துப் பார்ப்போம்

கரும்பு மருள் முதல - கரும்பைப் போன்ற அடியை உடைய
பைந்தாள் - பசும் இலைகளோடும்
மடப்பிடித் தடக்கை அன்ன - மடம் நிறைந்த பெண்யானை (பிடி) யானையின் துதிக்கை போன்ற
செந்தினை - செம்மையான தினை

இதில் பிடித் தடக்கை என்று சொல்வதில் பொருள் உள்ளது. பிடியின் துதிக்கை சற்று நளினமாக இருக்குமாம். அது போல நளினமான தினை என்று புலவர் கூறுகிறார். அது ஏன்?

பால்வார்பு கரிக் குறட்டு இறைஞ்சிய செறிங்கோட் பைங்குரல்

எந்தக் கூளமும் வளர்ந்து வரும் பருவத்தில் பால் பிடிக்கும். அப்பொழுது அந்தப் பக்கம் போனாலே நெஞ்செல்லாம் வாசம் நிரம்பும். பயிரில் எடை கூடுவதால் நேராக வளர்ந்து கொண்டிருந்த பயிர் மெல்லத் தலைசாயும்.
அதுதான் பால்வார்வு செறிங்கோட் பைங்குரல் - பால் பிடித்த செறிந்த கொண்டைகள் போன்ற பசுங்கதிர்கள்

அப்படித் தலை சாயும் பசுங்கதிர்கள் எதை ஒத்திருக்கின்றன?
கரிக்குறட்டினை ஒத்திருக்கின்றன. இது வழக்கமான குறடு போலத்தான் இருக்கும். ஆனால் கரித்துண்டுகளை இழுப்பதற்காக கிண்ணம் போல இருக்கும். வளைந்த குறட்டுக் கிண்ணம் என்று சொல்லலாம்.
இந்தப் படத்தைப் பாருங்கள். தினைப்பயிர்தான்.
http://www.google.co.in/imgres?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+pics&hl=en&sa=X&biw=1366&bih=613&tbm=isch&prmd=ivns&tbnid=0zBk0A-NASu4RM:&imgrefurl=http://azhkadalkalangiyam.blogspot.com/2010/02/blog-post_5691.html&docid=qM7Oeh76nI_lwM&w=200&h=136&ei=v4lSToqtCYyvrAeNw9ysAg&zoom=1

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2011/08/blog-post_22.html

இங்கு பின்னூட்டமிட்ட ஒவ்வொருவரும் அவர்கள் எண்ணங்களை எழுத்தில் கொட்டி விட்டார்கள். நானும் கொட்டாவிட்டால் எப்படி? :)

வாணியம்மாவின் பாடல்கள் என்று தெரியாமலயே வாணியம்மாவின் பாடல்களைத் தேடித் தேடி ரசித்திருக்கிறேன். ஒரு நாளேயாயினும் ஒரு முறையேயாயினும் அவரைச் சந்திக்க வேண்டும் என்று இன்னும் நீங்காத ஆவல் இருக்கிறது. என்று நிறைவேறுமோ.

அவருடைய பாடல்களை நீங்கள் கேட்டு மகிழ்ந்து அவரோடு உரையோடி ரசித்திருக்கின்றீர்கள். வாழ்க. அதை ஒரு பதிவாகவும் இட்டிருக்கின்றீர்கள். வாழ்க. வளர்க.

இத்தனை பேர் உள்ளமுருகி பின்னூட்டம் இட்டிருக்கும் இந்தப் பதிவில் வாணியம்மாவின் ரசிகன் என்ற வகையில் அவருக்கு வணக்கத்தையும் உங்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/08/22/048/

தாங்கள் யார்? கண்ணனுக்கும் கந்தனுக்குமாய் ஆனவர். அமெரிக்க ஆழ்வார், செந்தமிழுக்கும் சிக்கெடுக்கும் இந்த நூற்றாண்டுக் கம்பர். ஒரு நல்லாசானுக்குக் கொடுக்கும் மதிப்பு உங்களுக்கு என்னிடத்தில் எப்பொழுதும் உண்டு.

ஆயினும் சிறியேன் மறுத்துப் பேசுவதற்காக மன்னிக்கவும். நெல்லுக்கும் தினைக்குக் கதிர் வளையும். கம்புக்கும் சோளத்துக்கும் வளையாது என்று நான் அறிந்ததை மட்டும் சொல்லி இந்தப் பின்னூட்டத்தை நிறுத்திக் கொள்கிறேன். கண்டவன் சொன்னதாக எண்ண வேண்டும். எங்களூரில் கண்டவன் சொன்னதாகக் கொள்ளுங்கள்.

நன்றி.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/08/22/048/

திரு கே.ஆர்.எஸ் தினை+கதிர் என்று கொடுத்த படம் கம்பங்கதிரைக் காட்டுகிறது. அது தொடர்பான சுட்டிகளை நோக்குகையில் கம்பு, சாமை மற்றும் தினைக்கும் அதே படத்தைக் காட்டுகிறது. கம்பங்கதிரின் தண்டுப்பகுதி தட்டை எனப்படும். கம்பந்தட்டை. அது சாயும். ஆனால் வளையாது.

நெல், தினை, குதிரைவாலி ஆகியவை கதிர் சாய்ந்து வளைந்துதான் தான் நான் பார்த்திருக்கிறேன். சாயாத வளையாத தினையும் உண்டு போலும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/08/23/049/

ஔவை சொன்னதுல ஒரு தவறு இருக்கு. நல்லாருக்குச் செய்தது தொடர்ந்து வந்து உதவும். அல்லார்க்குச் செய்தது உதவியே ஆனாலும் தொடர்ந்து வந்து படுத்தும். இதுதான் இன்னைக்கு நிலைமை. :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/01/058/
நாளுக்குப் பொருத்தமான பாட்டு. அருணகிரிநாதர் திரைப்படத்திற்காக ஜி.ராமநாதன்+டி.ஆர்.பாப்பா இசையில் டி.எம்.எஸ் மிகவும் அருமையாகப் பாடியிருப்பார். அந்தப் படத்தில் நிறைய திருப்புகழ் பாடல்கள். ஆகையால்தான் இரு மேதைகள் இணைந்து இசையமைத்திருக்கிறார்களோ!

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/01/058/

பட்சியெனும் உக்ர துரகமும்

இதுல வரும் துரகம் என்ற சொல் குதிரையைக் குறிக்கும். ரத கஜ துரக பதாதிகள் என்று சொல்வார்களே. அதில் வரும் துரகமேதான்.

அப்பனோ நரியைப் பரியாக்கினான். அதாவது ஒரு விலங்கை இன்னொரு விலங்காக்கி மாணிக்கவாசகர் கைவிலங்கைக் கழட்டினான். இங்கே மகனின் அடியாரோ இன்னும் ஒரு படி மேலே போய் பறவையை விலங்காக்கி நம்மையெல்லாம் முருகப் பெருமானின் திருவடிகளோடு சேர்த்து அன்பு விலங்கிடுகிறார்.

இந்தப் பாடலில் மட்டுமல்ல. பல இடங்களில் மயிலைக் குதிரை என்கிறார். கந்தர் அநுபூதியில் மயிலை ஆடும்பரி என்கின்றார். ஆடுகின்ற குதிரையாம்.

கந்தர் அலங்காரத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று மயிலேறும் ராவுத்தனே என்கிறார். அந்தக் காலத்தில் ராவுத்தர்கள் குதிரை வணிகம் செய்தவர்கள். அரபு நாட்டில் இருந்துதான் குதிரைகள் வரவேண்டியிருந்தது.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/01/058/

பக்கரை விசித்திர மணி பொற்கலை இட்ட நடை என்று சொல்லி விட்டு பட்சியெனும் உக்ரதுரகம் என்று அடுத்த வரியை அருணகிரி அடுக்கும் பொழுது, முருகனைப் புகழ்கிறாரா மயிலைப் புகழ்கிறாரா என்று சட்டென்று எண்ணம் எழுவது தவிர்க்க முடியாது. முருகனைத்தான் சொன்னார் என்றாலும் மயிலுக்குச் சொல்லவும் பொருத்தமாக இருக்கிறது. மயில் விருத்தமென்று பின்னாளில் எழுத இந்தத் திருப்புகழெல்லாம் முன்னோடி போலும்.

நீபம் - கடம்பம். இந்த நீபம் என்ற சொல்லைத் திருப்புகழில் எக்கச்சக்கமாகக் காணலாம்.

எ.டு-1
சீரான கோல கால நவமணி
...........
சீராக மோது நீப பரிமள இருதாளும்

எ-டு-2
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
.................
குன்றென வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பா

இந்த வரியைப் பாருங்களேன்.
நீபப் பக்குவ மலர்த்தொடை

முருகனுக்கு மலர்த்தொடையா? ஆண்களுக்கு மலர்த்தொடை என்று சொல்லும் வழக்கம் கிடையாதே. :) தோளில் சூடிய மாலை முழங்கால் வரை வருகிறது. மயில் மீது அமர்ந்திருப்பதால் அந்த மலர்மாலையைத் தொடை தாங்குகிறது.

திருப்புகழில் ஒவ்வொரு வரியாக எடுத்தால் ஆழ்ந்து கொண்டேயிருக்கலாம்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/01/058/

ஒரு சிறிய தவறு செய்து விட்டேன். மலர்த்தொடை பற்றித்தான். இந்தப் பாடலை இணையத்தில் தேடுகையில்தான் தொடை சொன்ற சொல்லிற்கு மாலை என்ற பொருளும் உண்டு என்று தெரிந்தது.

ஆகக்கூடி மலர்த்தொடை என்றால் மலர்மாலை எனப் பொருள் கொள்க.

அதே போல, முதலடி முருகனையும் சேவலையும் புகழ்வது போல இருக்கிறது என்று எழுதியிருந்தேன். அது சேவலைப் புகழ்வது என்று சில சுட்டிகளும் முருகனைப் புகழ்வது எனச் சில சுட்டிகளும் கூறுகின்றன. பொற்கலனை இட்ட நடை என்று சேவலைப் புகழ்வதுதான் பொருத்தமாக இருக்கிறது என்பது என் கருத்து.

பி.கு - இனிமேல் மற்றவர்கள் என்ன உரை எழுதியிருக்கிறார்கள் என்று படித்து விட்டுத்தான் எதையும் எழுத வேண்டும். :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/01/058/

குடிலச் சடில என்ற சொற்றொடரைச் சற்று ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.

அதற்குப் பொருள் வளைந்த சடையன்.

அதிலும் குறிப்பாகக் குடிலம் என்ற சொல் என்னை மிகவும் சிந்திக்க வைக்கிறது.

குடிலை என்பது ஓங்காரத்தைக் குறிக்கும். ஓம் என்ற மந்திரல ஒலிக்குக் குடிலை என்று பெயர். அந்த ஓங்கார எழுத்து போல் வளைந்த சடையன் என்று பொருள் கொள்ளலாமா?

சடை ஓம் என்பது போல வளைந்திருக்கிறது என்று கூறுவதில் என்ன பெருமை இருக்க முடியும்?!

ஓம் என்பது அனைத்திற்கும் மூலம். ஓசையும் ஓசையின்மையும் (அமைதி) கூடியது. படைப்புக்கும் காப்புக்கும் மறைப்பிற்கும் ஆன ஆகுபொருள். அந்த ஆகுபொருள் வெற்பன் (மலையன்) சடைமுடிமேல் உயர்ந்த இடத்தில் ஆகுபொருள் என்று பொருள் சொல்கிறதோ திருப்புகழ்?!

தமிழ் சுவைக்கும் வண்டீர்களே விளக்குங்கள்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/01/058/

வில் பரமர் - பினாகபாணி - ராமயணத்தில் ராமன் வில்லன் ஆகுமுன்பே வில்லன் ஆனவர் ஈசன்.

இதே போல முதலில் குழலூதியது முருகன் என்று வாரியார் சொன்னது நினைவிற்கு வருகிறது. தரவு தேட வேண்டும். தெரிந்தவர் இருந்தால் சொல்லுங்கள்.

இந்த வில் பற்றி ஒரு சுவையான கதை உண்டு. ”முப்புரம் எரி செய்த அதிதீரா” கதைதான்.

மூவரையும் ஒரே நேரத்தில் ஒருவரே கொல்ல வேண்டும் என்பது அவர்கள் பெற்ற வரம். மூன்று கோட்டைகளை அமைத்து விண்ணில் பறந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒருவரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஈசனிடம் போகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக மாறுகிறார்கள். திருமால் வில்லுக்கு நாணானார் என்று நினைவு. அப்படித் தேரேரிப் போகையில் ஒவ்வொருவருக்கும் ஆணவம். நாம் இல்லையென்றால் ஈசனால் இப்பிடிப் போருக்குச் செல்ல முடியுமா என்று.

அவருக்கா தெரியாது. அனைத்தையும் விட்டு விட்டு மெல்லச் சிரித்தாராம். மூன்று கோட்டைகளும் தீப்பற்றி அழிந்தனவாம்.

அதனால் அருணகிரி ஈசனை நகை ஏவிய நாதர் என்று சொல்வார். அந்தப் பாடல் எந்தப் பாடல் என்று நினைவிற்கு வரவில்லை. தெரிந்தவர் சொல்லுங்களேன்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/01/058/

போன பின்னூட்டத்திலும் ஒரு தவறு. தேரேறி என்றிருக்க வேண்டும். தேரேரி என்று எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும். :(

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/01/058/

ஒரு சிறிய ஐயம்.

அடிசில் என்றால் உணவு என்றும் ஒரு பொருள் உண்டே. மிக்க அடிசில் என்றால் விதவிதமான உணவுவகைகள் என்று பொருள் வராதா? அப்படித்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதே போல் இடிப்பல்வகைத் தனி மூலம் என்பதில் கிழங்குகளை இடித்துச் செய்யப்பட்ட மாவுப்பண்டங்கள் என்று படித்த நினைவு.

இரண்டையுஞ் சற்று பார்த்துச் சொல்லுங்கள்.

அப்படியே... அந்த நகையேவிய நாதரையும் கண்டுபிடித்துக் கொடுக்க முடியுமா?

நன்றி.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/01/058/

பாட்டும் பொருளும் காட்டித் தமிழ் கூட்டுஞ் சுவைக்குக் குமரன் வருவதில் என்ன வியப்பு! :) வருக வருக. உங்கள் கருத்தமுதம் அள்ளித் தருக. :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/04/061/

ஒவ்வொரு பாவும் நம் மனதுக்குள் தாவும் வண்ணம் தேடித் தரும் சொக்கனுக்கு நன்றி. :)

இந்தப் பாடல் நெய்தல் திணைன்னு குறிப்பதற்கு நிறைய குறிப்புகள் உள்ளன.

வெண்மணல் - இது மலையிலோ காட்டிலோ வயலிலோ இருக்காது. நீர் அரிக்கும் கடற்பாக்கங்களில் இருக்கும்.

புன்னை மரமும் அவ்வண்ணமே. கடற்கரைப் பகுதியில் நிறைந்திருந்த புன்னை மரங்கள் இன்று அழகிற்காகவும் வளர்க்கப்படுகின்றன,

வலம்புரிச் சங்கு, இலங்கு நீர்த்துறை ஆகியனவும் நெய்தலைக் குறிக்கும்

உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் பொருந்தி வருகிறது. அதாவது வருந்துதலும் வருத்தம் நீக்குதலும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/04/061/

நெய் பெய் தீம்பால் பெய்து என்பதற்குப் தேனொடு கலந்த இனிய பால் என்று கூறியிருக்கின்றீர்கள். அதில் சிறுது நான் மாறுபடுகிறேன்.

நெய்தலில் தேன் வராது. அது குறிஞ்சிக்கான கருப்பொருள்.

நெய் பெய் தீம்பாலைச் சற்று சிந்தித்த பொழுது இப்படித் தோன்றியது.

அது நெய்யைப் பாலொடு கலப்பதல்ல. பதப்படுத்தப்பட்ட பாலைக் காய்ச்சும் பலருக்கு நான் சொல்லப் போவது தெரியாமலிருக்கலாம். ஆயினும் நான் கண்கூடாகக் கண்டதைச் சொல்கிறேன்.

செழும் மாட்டின் அப்பொழுது கறந்த பாலில் கொழுப்புச் சத்து நிறைய இருக்கும். அதிலும் எருமையென்றால் கேட்கவே வேண்டாம். அந்தப் பாலைக் காய்ச்சும் பொழுதே அக்கொழுப்பு இளகி உருகி நெய்யாகப் படரும். இயற்கையோடு இணைந்து இயைந்திருந்த அந்நாளைய வாழ்வில் இது போன்ற நெய் பெய் தீம்பால் (நெய்யைப் பெய்கின்ற தீம்பால்) நாட்படி நிகழ்வாகவே இருந்திருக்கும்.

அந்தப் பாலைத்தானே மக்கள் பருகுவர். அதையே மரத்திற்கும் ஊற்றினர் போலும்.

தானருந்து பாலை மரமும் அருந்தியதால் அது தங்கையாகிறது. ஒரு தாய் தந்த உணவு உண்டவர் உடன் பிறந்த உணர்வு கொண்டவர் என்பது சிறப்பல்லவா.

அதையும் அன்னையைக் கொண்டே சொல்ல வைத்திருக்கிறார் புலவர். யார் சொல்கிறார்கள் என்பதைப் பொருத்து சொல்லின் திறனும் வேறுபடுமல்லவா. ஆகையால் இங்கு புன்னை மரத்தை தன் மகள்களுக்குத் தங்கை என்று அன்னை கூறியது பொருத்தமே.

பாண்டியன் தீதற்றவன் என்று யார் கூறியிருந்தாலும் ஒப்புக்கொள்ளக் கூடியதுதான். அதையே கண்ணகி கூறும் பொழுதுதானே தென்னவன் தீதிலன் என்பது உறுதி பெறுகிறது. அது போலத்தான் இங்கும்.

கருத்தம்மாவில் அன்னையைப் புதைத்த இடத்தில் முளைத்த மரமும் அன்னை என்பது போலப் பாரதிராஜா காட்டியிருப்பதும் கிட்டத்தட்ட இதே போன்ற காட்சியமைப்புதான்.

G.Ragavan said...

http://www.writerpara.com/paper/?p=2618

”ஆடி அடங்கும் வாழ்க்கையடா”ன்னு கவிஞர் சுரதா சொல்லீருக்காரே. அதுக்கு இதுதான் பொருளோ! :) அப்பவும் பாருங்க “பொருள்” வந்துருது. :)

ஒரு வாட்டி வெள்ளித்தட்டு வாங்கப் போனேன். தில்லானா மோகனாம்பாள் படிச்ச நினைவுல ”கூஜால்லாம் இப்ப வர்ரதில்லையா”ன்னு தெரியாமக் கேட்டுட்டேன். இப்ப வர்ரதில்லைன்னு சொன்னவரு... ஒடனே, ”ஒங்களுக்கு வேணுமா சார். சொல்லுங்க. ஆர்டர் பண்ணி கொண்டு வந்துர்ரோம். இப்ப யாரும் கேக்குறதில்லைன்னுதான் கடைல வைக்கலை. நீங்க சொன்னீங்கன்னா ஒரு வாரத்துல ஒங்க வீட்டுலயே வந்து குடுத்துர்ரோம்”னு அடுக்கத் தொடங்கீட்டாரு. எங்க.. கூஜா தூக்க வெச்சிருவாரோன்னு இருக்கட்டுங்கன்னு சொல்லீட்டு வந்துட்டேன்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/04/061/

இந்தத் தீம்பால் பல இடங்கள்ள வருது. அதுவும் கறந்த பால் என்ற பொருளிலேயே.

கன்றும் உண்ணாது
கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால்
நிலத்து உக்காங்கு

அடுத்து திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில்
”புனிற்றுக் கவரி முலை நெறித்துப் பொழியும் அமுதந்தனை
பேட்டெகினம் புனலைப் பிரித்துத் தீம்பால் பருகும் திருச்செந்தூர்"

சுருக்கமாகச் சொல்கிறேன். மொட்டவிழும் தாமரைப் பூவோடையில் கன்று ஈன்ற எருமை இறங்கி உழப்புகையில், அதன் மடியை விரால் மீன் இடிக்க, பாலெல்லாம் தண்ணீரில் சொரிந்தது. அப்பொழுது மலர்களின் மேல் அமர்ந்துள்ள அன்னப் பறவைகள் தண்ணீரில் இறங்கி அந்தப் பாலை மட்டும் பிரித்துக் குடித்ததாம். என்ன அழகான கற்பனை.

இன்னும் நிறைய சொல்லலாம்.

G.Ragavan said...

http://www.writerpara.com/paper/?p=2636



தினமும் ஆயில்பாத் எடுக்கும் அப்பளத்துக்கும் கட்டுப்பாடா! ஒரு வேளை சனி நீராடு என்று ஔவையார் சொல்லியிருக்கிறார் என்பதால் வாரம் ஒருநாளானதோ.



ஆயிரம் சொல்லுங்கள். பெற்று வளர்த்த அன்னபூரணி, அகிலாண்டேஸ்வரி, ராஜமாதா, அவளுக்கு மட்டுந்தான் பிள்ளைகளின் வயிறு தெரிந்திருக்கிறது.



இப்படிச் சோற்றுக்குப் பதிலாக ஓட்ஸ், அப்பளத்துக்குப் பதிலாக கார்ன் பிளேக்ஸ், புல் மீல்ஸ்க்குப் பதிலாக கிண்ணத்தில் சோறு, சப்பாத்தி என்று பலவித கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இரத்தசோகை வந்த கணவர்களும் உண்டு.



இதற்கெல்லாம் ஒரே வழிதான் உள்ளது. அதாவது மோட்டார் சுந்தரம்பிள்ளை, அக்னி நட்சத்திரம் விஜயகுமார் ஆகியோர் காட்டிய வழிதான் அது. :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/06/063/

இந்த மக்கட் செல்வத்தைப் பற்றிப் பேசும் பெரிய புலவர்கள் எல்லோரும் மிகவும் உயர்ச்சியாகவோ மிகவும் தாழ்ச்சியாகவோ பேச மாட்டார்கள்.

திருவள்ளுவர் கூட நடுநிலையாக ஒரு செய்தியைச் சொல்வது போலத்தான் கூறுகிறார்.

குழல் இனிது யாழ் இனிது என்று கூறுகின்றவர்கள் தங்கள் மழலைச் சொல் கேட்டதில்லை
அமிழ்தை விட இனியது தம்மக்கள் சிறுகை விட்டு உழப்பித் தரும் கூழ்.

இங்கும் அதுதான். மக்கட்பேறு இன்பத்தை அனுபவிக்க முடியாத வாழ்க்கை நேர் கோடு போன்றது. இன்ப ஏற்றமும் இல்லை. துன்ப இறக்கமும் இல்லை.

இதில் இன்னொரு மறைபொருள் இருக்கிறது. பிள்ளைகளால் பெற்றோருக்கு நற்பெயரும் வரலாம். அவப்பெயரும் வரலாம். குழந்தை இல்லாதவர்க்கு இரண்டுக்கும் வாய்ப்பில்லை. இன்றைக்குப் பல பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் பார்க்கும் பொழுது “ஏன் பிறந்தாய் மகனே” என்ற கண்ணதாசன் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.

அதைத்தான் பாண்டியன் தெளிவாகவும் நடுநிலையோடும் மறைபொருள் கொண்டும் என்று மூன்று வகையில் கருத்து சொல்லியிருக்கின்றான்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/07/064/

எனக்குத் தெரிந்து திருக்குற்றாலக் குறவஞ்சியிலிருந்து மூன்றாவது பாடல். :) குறவஞ்சியை மிகவும் ரசிக்கின்றீர்கள் போல.

திரிகூடராசப்பக் கவிராயரின் சொல்லாட்சியும் பொருளாட்சியும் காட்சி ஆளுமையும் வியப்பில் ஆழ்த்துவது.

ரவிக்கையைப் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார். :) எனக்குத் தெரிந்து ரவிக்கை பற்றிச் சொன்ன முதல் புலவர் இவர்தான். இதற்கும் முன்பே யாரேனும் சொல்லியிருந்தால், தெரிந்தவர் சொல்லுங்கள்.

ஊர்வலம் வரும் சிவனைப் பார்த்துப் பெண்கள் சொல்லிப் புகழும் காட்சியில் இந்த ரவிக்கை வருகிறது.

கொஞ்சத் தொலைவுல ஊர்வலம் வருது. யாரோ வர்ராங்க. இங்கயிருந்து பாக்குறப்பவே ரொம்பப் பளிச்சுன்னு வேற இருக்காங்க. நான்முகனோன்னு அவங்களுக்கு ஒரு ஐயம். ஆனா பாம்பும் சங்கும் இருக்கே. ஒரு வேளை பெருகும் கருணைத் திருமாலோ. இருக்காது. மூனு கண்கள் இருக்கே. அப்பச் சிவந்தான் என்று முடிவு கட்டுகிறர்கள். அந்தப் பாட்டுலதான் ரவிக்க வருது. பாட்டைக் கீழே குடுக்குறேன். படிச்சாலே புரியும் எளிய பாடல்தான்.

ஒருமானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும்
ஒருகோடி மான்கள்போல் வருகோடி மடவார்
புரிநூலின் மார்பனிவன் அயனென்பார் அயனாகில்
பொங்கரவ மேதுதனிச் சங்கமேது என்பார்
விரிகருணை மாலென்பார் மாலாகில் விழியின்மேல்
விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார்
இருபாலு நான்முகனுந் திருமாலும் வருகையால்
ஈசனிவன் திரிகூட ராசனே என்பார்.
ஒருகைவளை பூண்டபெண்கள் ஒருகைவளை பூணமறந்
தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/07/064/

மனம் விழி கரம் முந்துவதைப் பத்திப் பலர் தங்கள் உள்ளத்தில் கண்டவாறு சொல்வார்கள். காதலோடு பொருந்தியும் வரும். அதுவும் உண்மைதான். வேறு இடங்களில் பயன்படுத்தவும் செய்யலாம். அழாகான பொருள் செறிந்த வரிகள்.

ஆனால் திரிகூட ராசப்பக் கவிராயர் இந்த இடத்தில் காதலைச் சொல்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.

ஆங்கிலத்தில் Reflex என்பார்கள். வண்டி ஓட்டுகிறவர்களுக்குத் தெரியும். ஒரு கியரிலிருந்து இன்னொரு கியருக்கு மாற்ற வேண்டும் என்று எண்ணி விட்டுப் பிறகு மாற்ற மாட்டார்கள். வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதே கை கிளட்சைப் பிடிக்கிறது. கால் கியரை மாற்றி விடுகிறது. இப்படி எண்ணமும் பார்வையும் உடலும் ஒன்றுபட்டு செயலாற்றும் பொழுதுதான் செயல் சிறப்பாக இருக்கும். விளையாட்டில் அது இன்னமும் அழகாகத் தெரியும். நீங்கள் கொடுத்த விளக்கமும் மிகப் பொருத்தம்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/07/064/

திரிகூட ராசப்பக் கவிராயருக்குப் பேதையுள்ளம். பெரிய வேறுபாடுகள் நினைக்கத் தெரியாத நல்ல மனது.

கடவுள் வாழ்த்தில் பிற்காலச் சாத்திரப் படி நாலு வரி பிள்ளையாருக்குப் பாடி விட்டு, பிறகு முருகனுக்கு ஆரவாரமாக ஆரத்தி எடுக்கிறார். அடுத்துதான் குற்றாலீசருக்கும் குழல்வாய்மொழியம்மைக்கும். இப்படிச் சிவக் குடும்பத்தை வாழ்த்தில் வைத்தவர், மற்ற தெய்வங்களை விட்டுவிடவில்லை.

மேலே சொன்ன ”ஒருமானைப் பிடித்துவந்த” பாடலையே எடுத்துக் கொள்ளுங்களேன்.

அதில் திருமாலைப் பற்றிக் குறிப்பிடுகையில் விரிகருணை மால் என்றுதான் கூறுகிறார். அளப்பரிய பெருங்கருணையுடைய மால்.

இவரைப் போலத்தான் அருணகிரியும். பேதையுள்ளம். முருகனைத் தவறிய ஒன்றும் அறியாது ”சும்மா இரு” என்ற உபதேசத்தான் உளமொடுங்கித் தவம் செய்த உள்ளம். தற்கொலை முயற்சி வேறு. அப்பொழுது பாடுபட்ட அந்த நெஞ்சம் பண்பட முருகன் அருள்தந்தான். அப்படியானால் முருகா முருகா என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதானே. பாட்டில் எல்லாம் மாலோன் மருகனை என்று எல்லாம் ஏன் பாட வேண்டும்?

அன்பு மட்டுமே அறிந்த பேதை உள்ளங்கள் வேறுபாடு பார்க்காது. அதுவும் சைவ வைணவச் சண்டை மிகுந்திருந்த பொழுது இப்படிப் பாடுகிறார். முருகனைப் பாடும் உள்ளங்கள் சிவனையும் அம்மையையும் மாலையும் சேர்த்தே பாடுகின்றன.

ஆனால் அதே காலத்திலோ அதற்கு முன்னம் இருந்த காலத்திலோ ஆழ்ந்து பக்தி இலக்கியம் படைத்த பெரியவர்களுக்கு அந்தப் பேதையுள்ளம் இல்லை போலும். திருமாலை மையப்படுத்திப் பாடும் எந்தப் பழைய நூலிலும் முருகன் மாமனே என்று யாரும் பாடக் காணோம். அடுத்தவர் எப்படி இருந்தால் என்ன! அருணகிரி மற்றும் ராசப்பக் கவிராயர் போன்ற பேதை உள்ளங்கள் நல்ல எண்ணங்களை விதைத்தன. அதைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/07/064/

இந்தப் பாட்டில் அழகான ஒரு தமிழ்ப் பெயர் ஒளிஞ்சிருக்கு. அதை யாரும் பாக்கலை.

சங்கணி வீதி - அதென்ன சங்கணி வீதி?

எப்பவுமே நீர்வளம் நிறைஞ்ச இடங்களில் சங்குப்பூச்சிகளும் நத்தைகளும் நிறைய இருக்கும். இவை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போகும் போது தங்கள் வீடுகளையும் தூக்கிக் கொண்டு போகும்.

அப்படி அணியணியா சங்குகள் போகும் வீதிதான் சங்கணி வீதி.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/07/064/

அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நானும் நினைத்தேன். திருமால் காப்பியங்களிலும் முருகனைப் புகழ்ந்து நிச்சயமாக ஆழ்வார்கள் பாடியிருக்க வேண்டும். மாலிடம் ஆழ்ந்தவர்களுக்கு உறுதியாக முருக பக்தியும் இருந்திருக்கும். பகழிக்கூத்தர் முருகனைப் பாடவில்லையா. ஆனால் அவர் முருகன் பாடலில் மாலைப் பாடினார். அப்படியில்லாது மாலைப் பாடிய ஏதாவது வைணவ இலக்கியத்தில் முருகா முருகா என்று சொல்லியிருப்பார்கள். என்ன செய்வது! என்னைப் போன்றவர்கள் கற்றது குறைவு. உங்களைப் போன்ற முழுதுணர்ந்த மூதோர்கள் எடுத்துச் சொன்னால் தெரிந்து கொள்கிறோம். அப்படியிருக்க பிழைக்கச் செய்த பிழை என்று தவறாகக் கொள்ளக் கூடாது என்று வேண்டுகிறேன்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/08/065/

வேண்பாவுக்கும் உவமைக்கும் புகழேந்தியை மிஞ்சி யாருமில்லை. கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் பலவற்றில் புகழேந்தியின் பாதிப்பு தெரியும். அவரைப் புகழ்ந்தே திரைப்பாடலில் அதுவும் காதற்பாடலில் கவியரசர் பயண்படுத்தியிருக்கிறார்.

பாமா ருக்மணி படம் தெரியுந்தானே. பாக்கியராஜ் இரண்டு மனைவியரொடு படும் பாடு. அந்தப் படத்திற்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். அவர் இசையில் ஒரு பாடலை எழுதுகிறார் கவியரசர். பாலசுப்ரமணியம் அவர்களும் ஜானகி அம்மாள் அவர்களும் இணைந்து பாடியிருக்கின்றார்கள்.

நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
தேடி உறவானவள்

அப்பாடலை நான் வலையேற்றியிருக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=8ShcM5D10NA

அந்த இனிய பாடலில் ஒரு வரி
உவமைகளாலே தமயந்தி அழகை உருவாக்கினான் ஒரு புலவன்

புலவன் பெயரைச் சொல்லவில்லை. ஏன்... அவன் படைக்கும் நான்முகனை விட மேல் இந்த இடத்தில். நான்முகன் எதையெதையெல்லாம் வைத்துப் படைக்கிறானோ நாம் அறியோம். ஆனால் வெறும் உவமைகளை மட்டும் வைத்துக் கொண்டு தமயந்தியின் அழகை உருவாக்கினானே (புகழேந்தி), அவன் புலவன் என்று பெருமைப் படுத்துகிறார்.

தமிழ் கற்போர்க்கும் கேட்டு மகிழ்வோருக்கும் புகழேந்தி ஒரு மகிழ்வேந்தி. நாமெல்லாம் புகழ் வேந்தி.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/08/065/

மொல்ல மொதப் பாட்ட எடுத்துக்குவோம். நாலுவரி எழுதியிருந்தாலும் அது சொல்ல வருவது என்னன்னா.. நளன் தேர்ப்பாகனாகவும் குதிரையப் பாத்துக்கிட்டும் இருந்தான். அப்படியே சமையல்காரனாகவும் இருந்தான். இதுதான் புகழேந்தி சொல்ல வருவது.

இந்த நளன் யார்? முன்னாள் அரசன். எந்த நாட்டுக்கு? நிடத நாட்டுக்கு.

நிடதநாடு வளம் நிரம்பியதுன்னு சொல்லனும். என்னென்ன வளங்கள்? நீர், நிலம் மற்றும் நிரை. இந்த மூனும் நல்லாயிருக்கும் நாட்டில் மற்ற வளங்கள் தானாகச் சேரும்.

இந்த மூனையும் ஒரு வரிக்குள்ள சொல்லனும். முடியுமா? முடிச்சுக் காட்டுனாரு புகழேந்தி.

மேதிக் கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும் நாடன்

எருமைக் கடைவாயில் நீலம் கண்விழிக்கும்.

இதுல எருமை - நிரை - பால் வளம் வந்தாச்சு
நீலம் - அப்ப செடிகொடியெல்லாம் நெறைய இருக்கு
ஆனா நீலமலர் எங்க பூக்கும்? குளத்துல. அப்ப நீர்வளமும் வந்தாச்சு.

எருமை எறங்கி உழப்பும் அளவிற்கு நீர்வளம் மிகுந்த குளம். அந்தக் குளத்துக்குள்ள எருமை நீலமலர்களைக் கடிக்குது. அப்பத்தான் விடிஞ்சிருக்கு. ஆகையால குளத்துல பூக்க வேண்டிய நீலமலர்கள் எருமை வாயில் பூக்குது.

எல்லாம் நெய்தல் நிலக் குறிப்புகள். நல்ல வளமையான நாட்டைச் சேர்ந்தவனான நளன், தேர் செலுத்தி, குதிரையப் பாத்துக்கிட்டு சமைக்கிறதுக்காக மடைவாயில் புக்கான் (புகுந்தான்). அதுவும் மதிப்பா. முன்னாடி மன்னனா இருந்தமேன்னு எண்ணமில்லாம எல்லாப் பணிகளையும் மதிப்புறச் செய்தான் நளன் என்று பெருமையாகச் சொல்றாரு புகழேந்தி.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/08/065/

என்னைக் கேட்டா நளதமயந்தி கதை ராமாயணத்தை விட மேலானதுன்னு சொல்வேன்.

நளன் ஒரு சிறந்த ஆண்மகன். என்னென்ன வகையுண்டோ அத்தனையிலும். பொண்டாட்டிக்குச் சமைச்சுப் போடுறதுலயும். பின்னாடி அத வெச்சுத்தான் வந்தவன் நளன்னு தெரிஞ்சு தமயந்தி அவனோட சேர்ரா.

குற்றமே சொல்ல முடியாத குணக்குன்று நளனும் தமயந்தியும். அதையும் தாண்டிய அன்புப் புரிதல் இருவருக்கும்.

மொதல்ல ஒரு சுயம்வரம். தேவர்கள்ளாம் கூட வந்திருக்காங்க. ஆனாலும் மனிதனுக்கு மாலையிட்டாள் தமயந்தி. இந்திரலோகம் போயிருந்தா அமுதமுண்டு சாகாவரத்தோட இருந்திருக்கலாம். ஆனா அவள் தேர்ந்தெடுத்தது ஒரு மனிதனை.

வாழ்ந்தாங்க. வாழ்ந்தும் கெட்டாங்க. பிள்ளைகளைப் பெத்தவங்க வீட்டுக்கும் அனுப்பிச்சாங்க. விதியாலப் பிரிஞ்சாங்க. நளனுக்கோ உருவம் வேற மாறீருச்சு.

எப்படிக் கண்டுபிடிக்குறது? இன்னொரு சுயம்வரம் வெச்சா தமயந்தி. அதுக்கு அயோத்தி மன்னன் ரிதுபர்ணன் வர்ரான். அவனுக்கு உருவம் மாறுன நளன் தேரோட்டி.

வந்தவங்களையெல்லாம் கவனிச்சு நளனைத் தெரிஞ்சுக்கிட்டு அவன் சமையல் சுவையாலப் புரிஞ்சிக்கிட்டு ஒன்னு சேர்ராங்க.

இன்னொரு சுயம்வரம் வெச்சியேன்னு தமயந்தி மேல அவன் சந்தேகப்படலையே. தீக்குளிக்கச் சொல்லலையே. ஊருக்கு நிரூபிக்கச் சொல்லலையே. அவந்தான் உண்மையான ஆம்பளை. பொண்டாட்டியப் புரிஞ்சவன். ஒன்ன எனக்குத் தெரியும்னு கூடச் சொல்லலை. அப்படியே சேத்துக்கிட்டான். உண்மையச் சொன்னா இவனைத்தான் கடவுளா வணங்கனும். ஏன்னா... அத்தன துன்பம் வந்தப்பவும் எந்தத் தப்பும் பண்ணலை. அவனைப் பிடிக்கிறதுக்கே கலி ரொம்பச் சிரமப்பட்டிருக்கான்னா பாத்துக்கோங்களேன். எப்படியோ ஒரு ஒப்புக்குச் சப்பாணிக் காரணத்த வெச்சி பிடிக்கிறான்.

இவ மட்டும் என்ன. தமயந்தி. முதத் திருமணத்துலதான் நளனத் தேர்ந்தெடுத்த. அவனக் காணோம்ல. இன்னோரு திருமணத்துலயாச்சும் தேவப்பய இந்திரனைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே. அப்பவும் நளனத்தான் தேர்ந்தெடுத்தா. அவளுக்கும் அவனைத் தெரியும்.

எது வந்தாலும் நீதியின் படியும் உண்மையான இல்லறத்தின்டியும் வாழ்ந்து வெற்றி பெற்ற நளசரிதமே நாம் உண்மையிலேயே போற்றத்தக்க இதிகாசம். இவர்களே போற்றத் தக்க பெருமக்கள்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/13/070/

நல்ல செய்யுள். இந்தச் செய்யுளைப் படிக்கையில் கடிமலர், கடிகமழ், கடிதேகி, கடிநிழல், கடிகால் போன்ற பயன்பாடுகளும் நினைவுக்கு வருகின்றன.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/11/068/

அருமையான பாடல்.

அணுகாதவர்க்குப் பிணியே என்று பட்டர் சொன்னதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. பிணி என்பது எப்பொழுதும் துன்பம் தருவதாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

முப்பிணியும் உண்டாகட்டும் என்ற காளிதாசன் வாழ்த்து நமக்கெல்லாம் தெரிந்ததுதானே.

பிணியே என்று சொல்லி விட்டு, அந்தப் பிணி போக்கும் மருந்தே என்று சொல்வதிலிருந்து அன்னையின் கருணை எங்கு கொண்டு செல்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

அணுகாத தருமசேனனுக்குச் சூலை என்னும் பிணிதானே வந்தது. வந்த பிணியும் அம்மையப்பன் அருளால் விலகியதே. அப்படித்தான் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/16/073/

பிற்காலத்து ஔவை பாடிய பாடல் இது. தொண்டை நாடு பற்றிய குறிப்பிலிருந்து அறியலாம்.

எளிய பாடல்தான். ஆனாலும் இதற்குள்ளும் மறைபொருளுண்டு. அதற்குப் பிறகு வருவோம்.

மலைநாட்டில் வேழங்கள் நிறைய. மலைவேழம் நிறைந்த நாடு என்பதால் மலையாளம் ஆனதோ!

அளம் என்றால் இடம். எ.கா உப்பளம். அது போல மலையளம் மலையாளம் ஆகியிருக்கலாம்.

சோழ வளநாடு என்று சொல்லும் பொழுதே வளத்தின் பயனான உழவு செழித்து சோறு நிறைக்கும் நாடு என்னும் பொருள் வந்துவிடுகிறது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதால் மேதக்க (மேன்மையான) சோழவளநாடு என்கிறார் ஔவையார்.

பூழியர்கோன். பாராண்ட பாண்டியர்கள் தமிழ்மன்னர்களில் முதல் மன்னர்கள். தென்னவன், வழுதி, பூழியர்கோன், செழியன் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள். அந்தப் பாண்டியர்களின் நாட்டில்தான் முத்து விளைகிறது. மற்ற நாடுகளெல்லாம் நிலத்தில் விளைவித்தால், பாண்டிநாடு கடலிலும் விளைவித்திருக்கிறது.

தொண்டைநாடு சான்றோருடைத்து. பல்லவர் ஆட்சியில் காஞ்சி செழித்தது. வடவர்கள் நகரேஷு காஞ்சி என்பார்கள். நாவுக்கரசர் இருந்த ஊர். பின்னாளில் அருணகிரி, வள்ளலார் என்று அருட்சான்றோரைப் பெருமித்த ஊர். சோழநாட்டுப் பட்டினத்தடிகளுக்கே வீடுபேறு சென்னைத் திருவொற்றியூர் தானே. பாண்டிநாட்டு பாம்பன் சுவாமிகளுக்கோ சென்னை திருவான்மியூர்.

இப்படி ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சிறப்புடையன.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/16/073/

ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன சிறப்புன்னு சொல்றதுக்கா கிழவி ஒரு பாட்டை எழுதீருக்கப் போறாங்க? அப்படியே பொருள் தெரிஞ்சாலும் வேற ஏதோ ஒரு மறைபொருள் வெச்சிருப்பாங்களே.

இந்தப் பாட்டுலயும் இருக்கு மறைபொருள். அந்த மறைபொருளைச் சுருக்கமாச் சொன்னா “சரஸ்வதி சபதம்”.

கல்வியா செல்வமா வீரமான்னு கேள்வி கேக்குறாரே நாரதர். அந்த மூன்றும் இன்றியமையாதவைன்னு படத்தின் முடிவுல சிவன் வந்து சொல்லீர்ராரு.

அதைத்தான் ஔவைக்கிழவி இந்தப் பாட்டில் சொல்றாங்க. வரப்புயரன்னு சொன்ன மாதிரி.

சான்றோர் வாழும் நாடு இறைவன் வாழும் நாடு. ஏன்னா நல்ல அறிவுரைகளும் கருத்துகளும் மக்கள் படிக்கப் புரிந்து நடக்க வழி செய்யும்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். அப்படி அறிவு சிறந்த சான்றோர்கள் நாட்டின் உணவு வளத்தில் தங்கள் அறிவைச் செலுத்துவார்கள். ஒரு நாடே கூடி உழைக்கும் வயல்களில் விளைச்சல் சிறப்பாகத்தான் இருக்கும். அவ்வாறு கழநி செழித்த மக்களிடத்தில் செல்வம் சேரும். அதுதான் முத்து. அப்படி கல்வி, உழவு, செல்வம் என்று சிறந்து விளங்கும் நாட்டில் பாதுகாப்பாக வேழங்களும் (படைகள்) இருக்கும். இப்படித்தான் எந்த நாடும் முன்னேற முடியும். இப்படி முன்னேறாத நாடுகளின் முன்னேற்றம் நிலையாக இருக்காது.

வல்லரசு ஆனால் உழவு செழிக்காது. ஆனால் உழவு செழித்தால், செல்வம் பெருகி வல்லரசு ஆகலாம். அதற்காக சரியான வழிமுறையை நம்நாடு மட்டுமல்ல. உலகமே பின்பற்ற வேண்டும். இல்லையேல் தொழுதுண்டு பின்செல்லும் நிலைதான்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/18/075/

இந்தப் பாடலின் பொருள் விளக்கத்தை விட நான் ரசித்தது மாசு-ஆசு பயன்பாட்டைத்தான்.

மாசு என்ற சொல் நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்தது.
மாசில் வீணையும் மாலை மதியமும்
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாசிலா உண்மைக் காதலே

ஆனா ஆசு அவ்வளவா கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆசுஇல் (ஆசில்) அந்தணன். ஆசு என்றாலும் குற்றம். அந்தணன் ஆசு இல்லாதவனா? அல்லது ஆசு இல்லாதவன் தான் அந்தணனான்னு விவாதிக்கலாம். ஆனா இங்க வேண்டாம்.

நம்ம கதைக்கு வருவோம். மாசுன்னா என்ன? ஆசுன்னா என்ன?

மாசு என்பது அழுக்கு. ஆசு என்பது குற்றம். அழுக்கு தொடைச்சா போயிரும். குற்றம்? செய்யாம இருந்தாத்தான் நல்லது.

மாசு ஏற்படக்கூடியது. நீக்கக் கூடியது. மாற்றக் கூடியது. ஆனால் குற்றம் எப்படிப் போகும்? செய்யாமல் இருந்தால் ஒழிய குற்றம் போகாது.

மாசில் வீணை – வீணையில் சுரங்கள் சிறப்பா வரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கு. ஏதேனும் சுரக்குற்றம் உண்டானால் தந்தியை மாற்றியோ தளர்த்தியோ இழுத்தோ சரி செய்யலாம்.

ஆனால் கொள்ளை எனப்படும் குற்றம்? செய்த பிறகு போகுமா? போகாது. செய்யாமல் இருப்பதே உய்யும் வழி.

மாசுக்கும் ஆசுக்கும் வேறுபாடு புரிஞ்சிருக்கும். பாட்டுக்கு வருவோம்.

மாசுஇலா மரபின் – மரபு போற்றத்தக்கதாக இருக்க வேண்டும். ஒருவேளை ஏதேனும் தவறு நேர்ந்து விட்டாலும் திருந்திக்கொள்ளலாம். ஆகையால்தான் மரபைப் பற்றிச் சொல்லும் பொழுது மாசு இல்லாத மரபு என்று கூறுகிறார்.

ஆசுஇல் அந்தணன் – குற்றமில்லாத அந்தணன்னு சொல்லக் கூடாது. குற்றம் செய்யாத அந்தணன் என்று சொல்ல வேண்டும். ஏன் அங்க குற்றம் செய்யாதன்னு சொல்லனும்? அந்தணன் ஆகப்பட்டவன் ஒரு வேளை உணவுக்கும் யாசித்துப் புசிக்க வேண்டியவன். அப்படிப் பொருட்பற்று இல்லாதவனாக இருக்க வேண்டிய ஒருவன் மற்றொருவனை அடிமை என்று நினைத்தால் அது குற்றமாகாதா?

அதனால்தான் இதுவரைக்கும் நீ குற்றம் செய்யாதவனாக இருந்தாலும் என்னை உன் அடிமை என்று சொல்வதன் வழியாக குற்றவாளி ஆகப் போகிறாய். உனக்குப் பைத்தியமா என்று கேட்கிறார் சுந்தரர்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2011/09/09162011.html

வாங்க வாங்க. ஒரு வாரமா நான் நெனச்சிட்டிருந்தது. நீங்க செஞ்சிட்டீங்க. எனக்கும் உந்துதல் ஆகி புதுசா ஒரு வலைப்பு தொடங்கீட்டேன். :)

http://gragavanblog.wordpress.com

பெருசா எழுதுறமோ இல்லையோ. எழுதனும். எழுத்து உள்ள இருக்கு. வெளிய வராதப்போ உள்ள பயங்கர ஆட்டம் போடுது. அத வெளிய எடுத்து விட்டுருவோம்னு இந்தப் புது வலைப்பூ.

சிவகார்த்திகேயன் சினிமாவில்... சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நல்ல பெயர் கிடைக்கலாம்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/19/076/

இது போன்ற பாடல்களில் இருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுந்தரருக்கு ஈசனே ஆருயிர்த் தோழன் ஆயினார் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம். நட்பு அப்படி இருக்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்படலாம். ஆனால் புரிய வேண்டியது வேறு. ஈசனுடைய நட்புக்குத் தன்னை அனைத்து வகையிலும் பொருத்தமானவராக வைத்திருந்தார் சுந்தரர். அந்தச் சிறப்பு இல்லாதவருக்கு நட்பு சாதாரண மனிதரோடாயினும் சிறக்காது.

எல்லாரும் கூப்பிடுகிறோம். ஆனாலும் சம்பந்தன் அழைத்த போது தானே அன்னை வந்தாள். இந்தத் தூணில் என்று பிரகலாதன் காட்டிய போதுதானே நரசிங்கம் வந்தது. அப்படித்தான் இதுவும்.

நட்பு இப்படியிருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கு, அதற்குத் தகுதியும் கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பது சுந்தரர்-ஈசன் நட்பின் வழியாக நாம் அறியலாம்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/20/077/

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம். கம்பன் கவி அமுதம்தான். ஆனால் சிலம்பு பல நூற்றாண்டுகள் முன்னோடி.

இருக்கும் காப்பியங்களில் மூத்த காப்பியம். பெருந்தேவனார் பாடிய பாரதம், அவரது பெயருக்கு முன்னால் மட்டுமே உள்ளது. அதற்கு முன்பு பல நூல்களை ஆராயும் ஆசை கடலரசனுக்கு வந்தது என்பர்.

போனவை போகட்டும். இருப்பவைகளை ருசிப்போம்.

சிலம்பு என்ற சொல்லுக்கு மலை என்றும் ஒரு பொருள் உண்டு. மலை உயர்ந்தது. அப்படி உயர்ந்த அதிகாரமாய் இன்றும் நிற்பது சிலப்பதிகாரம். இடைச்செருகல்கள் உண்டுதான். ஆனாலும் சிலம்பு மெருகு குறையாதது. சிலம்பிலுள்ள இடைச்செருகல்கள் குறித்தான ம.பொ.சியின் நூல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர் ஆய்ந்த தமிழ்ச் செம்மல் அல்லவா.

மற்ற காப்பியங்களின் பாத்திரப் பெயர்களைக் கேட்டால் பொதுவாக யாருக்கும் நினைவிருக்காது. இங்கு யாரேனும் பட்டியல் போடலாம். ஆனால் பொதுவாக யாரிடமாவது சென்று கேட்டால் தெரிந்திருக்காது. மணிமேகலையில் அவள் பெயர் மட்டும் நினைவிருக்கும்.

ஆனால் சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலன், மாதவி மட்டுமல்லாது நூலை எழுதிய இளங்கோவையும் பெரும்பானோர்க்குத் தெரிந்திருக்கும். தொன்னூலாயினும் நன்னூலாயின் மக்கள் கொன்னூலே (கொள்+நூலே).

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/20/077/

மனையறம் படுத்த காதை இது. திருமணம் முடிந்து கோவலனும் கண்ணகியும் இல்லறம் நடத்திய முறை காட்டும் பகுதி.

அதிலும் இந்தப் பாடல் முதலிரவுப் பாடல். “வா வா பக்கம் வா” என்று பாடாமல் வரிவரியாகப் பாடியிருக்கிறான் கோவலன்.

என்னறிவுக்கு எட்டிய மாற்றங்களோடு பொருள் விளக்கம் பார்க்கலாம்.

குழவித் திங்கள் இமையவர் ஏத்த,
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னொடு பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகு என

பொழுதோ இரவு. அறைக்குள் நிலவோ குறைவு. மெல்லிய விளக்கொளிதான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அல்லவா.

உள்ளே வந்தவளின் முகத்தைத்தான் பார்க்கிறான் முதலில். வானிலிருந்து கொண்டு மூடிய அறைக்குள் வராத நிலவு, இப்பொழுது வரக்கண்டான். பொலிவான முகம். அதிலும் சிறந்தது நெற்றி. அனைவரும் கண்களிலோ இதழ்களிலோ தொடங்கினால் கோவலன் நெற்றியில் தொடங்குகிறான். பின்னாளில் அந்த நெற்றிக்கு அவனால் ஒரு குறைவு வரப்போகிறது என்று அவனுக்குத் தோன்றியிருக்கலாம். யார் கண்டது!

குழவித் திங்கள் - குழந்தை நிலா

இமையவர் - கயிலை ஈசன்

அந்த இமயத்து அமர் ஈசன் சடைமுடியில் அழகாகப் பொலிந்து சிறப்புற்றிருக்கிறது நிலா. இருந்தாலும்......உரிதின் நின்னொடு பிறப்பு உண்மையின்.... இந்த அழகு நிலா உன்னோடுதான் பிறந்திருக்க வேண்டும் என்பது உண்மையென எண்ணி, அந்தப் பெரியோன் உனக்கு நெற்றியாகத் தந்தானே.

அழகானவை எல்லாம் உன்னோடு பிறந்தவையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் நீ அவ்வளவு அழகு.

கவசத்தொடு பிறந்தவன் கர்ணன். அது போல நிலவுடன் பிறந்தவள் கண்ணகி என்று சொன்னால் இந்த வரி இன்னும் எளிதாய் விளங்கும். கண்ணகிக்கு நெற்றியாகச் சிறப்பு செய்ய வேண்டிய பிறையானது தன்னுடைய முடியில் இருத்தல் தகாது என்று சிவனே கொடுத்தானாம் நெற்றியாக.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/20/077/

முதலில் நெற்றியைப் பார்த்தவன், அடுத்து கொஞ்சம் கீழ இறங்குறான். இரு கரு புருவங்கள். வில்லாய் வளைந்த புருவங்கள். இந்தப் புருவங்கள் தானே பார்வைக் கணைகளை ஏற்றி நம்மேல் தொடுக்கிறது என்று வியக்கிறான்.

இது வில்லா? வில்லைப் போன்றதா? இந்தக் குழப்பத்தில் அதை வில்லென்றே முடிவு கட்டுகிறான்.

அதுவும் யாருடைய வில்? உருவு இலன் ஒரு பெரும் கருப்பு வில்.

உருவு இலன் யார்? மன்மதன். அனைத்தையும் கடந்து அனைத்திற்குள் உள்ளிருக்கும் பேரானந்தப் பெரும் பொருள் தவமிருக்கும் பொழுது ஐவகை மலர்களைக் கூட்டி அம்பாக்கி எய்து, அதனால் ஐயன் சினத்திற்கு ஆளாகி நெற்றிக்கண் சினந்த நெருப்பில் சாம்பலாகிப் போனானே. அந்த மன்மதன். ரதியின் வேண்டிக் கேட்க, அவள் மட்டுமே காணவும் மற்றோர் காணாததாகவும் உருவு தந்தாரே ஈசன். அந்த மன்மதன்.

அப்படிப் பட்ட மன்மதனுடைய ஒரு பெரும் கருப்பு வில்தான் ஒரு கரும் புருவங்கள் ஆனது.

கருப்பு வில்லில் கூறப்படும் கருப்பு நிறத்தைக் குறிப்பதல்ல. இங்கு கருப்பு கரும்பைக் குறிக்கும்.

பெரிய கரும்பைத்
தோகையோடு வில்லாக்கிப்
பூக்கணை வைத்து,
தனது துணையவளாம்
தோகையொடு வந்து
தோகை மையல் உண்டாக
எய்கிற மன்மதன்.

முதல் இரண்டு அடிக்கு வருவோம். அடையார் முனையகத்து அமர்மேம்படுநர்க்குப் படை வழங்குவதோர் பண்பு.

அடையார் முனைன்னா சென்னையில் இருக்கும் அடையார் அல்ல. அடையார் முனைன்னா போர்முனை.

அமைதியை அடையா(தா)ர் செல்வது போர்முனை. அப்படிப் போர் முனைக்கு வரும் எதிர்களோடு போர் செய்யப் புகும் வீரர்களுக்கு படைக்கலன் வழங்குவது வழக்கம்.

அதை ஏன் இங்க சொல்றான் கோவலன். அமைதியில்லாது தவிக்கிறது அவன் மனது. வெற்றித் திருமகளைப் பற்றிப் பறித்திடத் துடிக்கிறது உடல். அப்படி வந்து நிற்பவனை அப்படியே விட்டால் என்னவாகும்? காய்ந்த மாடு வயலுக்குள் புகுந்தது போலத்தான்.

அப்படி போருக்கு வேகத்தோடு வந்தவனை எதிர்த்து அவன் வேகத்தைக் குறைத்து விவேகமாக்கி கட்டிலில் இல்லறம் சிறக்க வைக்க அவளுக்கும் படைக்கலன் வேண்டுமே. அந்தப் படைக்கலன்கள்தான் அவள் புருவங்கள்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/20/077/

முதலில் நுதலைப் (நெற்றி) பார்த்தான். அடுத்து புருவம் கண்டான். அடுத்து டக்கென்று இடைக்கு நழுவுகிறான் கோவலன். ஏன்? அந்த வில்லாகிய புருவம் தாக்கி விட்டதே. அதனால்தான் நழுவல்.

அந்த இடையை எப்படிப் பார்க்கிறான் தெரியுமா? பாடலைச் சற்று பார்ப்போம்.

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின் - மூவாமருந்து எது? ஏவா மக்கள் மூவா மருந்து என்று ஔவை சொன்னதை இங்கு நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. :) கண்ணகியும் ஒருவிதத்தில் ஏவாமக்கள் வகையில் வருகின்றவள்தான்.

மூவாமருந்து என்று சிலப்பதிகாரம் சொல்வது அமுதம். பாற்கடலைக் கடைந்தார்கள் அல்லவா. அப்பொழுது வந்தது அமுதம். அந்த அமுதம் என்று இங்கு சொல்லப்படுவது எது? அல்லது யார்? வேறு யார்? கண்ணகிதான்.

அப்படி அமுதம் தோன்றுவதற்கு முன்பு பல பொருட்கள் பாற்கடலில் தோன்றின. அப்படித் தேவர்கோமான் இந்திரன் பெற்றது ஒரு படைக்கலன். அந்தப் படைக்கலனின் பிடி சிறுத்திருக்கிறது. மூவிலைச் சூலம் விரிந்திருந்தாலும் அதன் பிடி சிறுத்திருப்பது போல இடையும் சிறுத்திருக்கிறதாம் கண்ணகிக்கு.

மானல்லவோ கண்கள் தந்தது
மயில்லல்லவோ சாயல் தந்தது
என்று கவியரசர் எழுதியது நினைவிற்கு வருகிறது.

அது போல சிறுத்த இடை தந்தது இந்திரன் படைக்கலனாம். இப்பொழுது வரிகளைப் படியுங்கள். புரியும்.

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படை நினக்கு அளிக்க அதனை நினக்கு இடையென

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/23/080/

சங்கப்பாடல்களை ருசிக்கும் போது பல சொல்லாடல்கள் மயக்குகின்றன. இது பொதுவாகவே தமிழில் இருப்பதுதான். பிற்காலத்தில் அருணகிரி மணிப்பவழத்தில் சொன்ன பனிப்பானு என்ற சொல்லாடலும் அப்படியே. பானு என்றால் சூரியன். பனி குளுமையானது. பனி போன்ற குளுமையான கதிரவனாம். எது? நிலவு. பனிப்பானு வெள்ளிப் பொன் செங்கதிரோன். இப்பிடி கண்டபடி அவர் விளையாண்டதாலதான் அவருக்கும் ஓசை முனின்னு பேரு.

இந்தப் பாடல்ல மீன் ஆர் குருகு. அடடா! வண்டார் குழலின்னா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். வண்டுகள் மொய்க்கும்/இருக்கும் குழல். ஏன் கூந்தல்ல வண்டு மொய்க்குது? ஏன்னா.. அதுல மலர்கள் இருக்கு. அதிலிருக்கும் தேனுக்காகத்தான் வண்டுகள் மொய்க்குது.

இந்த மீன் ஆர் குருகு. இன்னும் சற்று வித்தியாசமானது. குருகு என்பது பறவை. மீன்கள் மொய்க்கும்/இருக்கும் பறவையா? அதெப்படி? அந்த மீன்களெல்லாம் பறவைகள் வாயில் இருக்கு.இவ்வளவு தகவலை விளக்குறேன்னு நீட்டி முழக்காம மீன் ஆர் குருகுனு சட்டுன்னு முடிச்ச குன்றியனாரைப் பாராட்டாம இருக்க முடியலை.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/23/080/

இன்னொன்னு புரிஞ்சிக்கனும். நெய்தல் நிலப்பாடல்கள் அப்படீன்னாலே என்னவோ தலைவன் தலைவிய விட்டு விலகிப் போயிட்டதா மட்டும் நினைக்கக் கூடாது.

இந்தப் பாட்டை எடுத்துக்கிட்டீங்கன்னா தலைவன் இல்ல. தலைவி அவனைப் பத்திதான் பாடுறா. அதுவும் தோழிகிட்ட. ஆனா ஏன் இந்தப் பிரிவு? தலைவன் வணிகத்துக்குப் போயிருக்கான். அதனால்தான் பிரிவு. தலைவன் தலைவி மேல ஆத்திரப்பட்டோ வேறு ஏதேனும் நிகழ்ச்சிகளாலோ விலகிப் போகலை. அப்படியிருந்தா அதைக் குத்திக் காண்பிச்சிருப்பா தலைவி. ஆக இந்த இடத்துல இருவரும் கருத்து ஒருமித்த காதல்தான். அதையும் குறிப்பிட்டுச் சொல்லனும்.

அதுனாலதான் இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே. அதாவது... உறுதியான அவன் மார்பைக் கூட பஞ்சணையாய் கொண்டு துயின்று இன்புற்ற என் நெஞ்சே, அந்த இன்பம் தந்த மார்போடு நீயும் புறப்பட்டுப் போய் விட்டாய். அங்கேயே இரு என்கிறாள்.

இப்படியாகக் காதல் இருவழிப்பட்டதுன்னும் சொல்லனும். இது என் தாழ்மையான கருத்து. :)

G.Ragavan said...

http://nchokkan.wordpress.com/2011/09/13/pronunciation/

இசையரசி சுசீலாம்மா கிட்ட இருக்கும் தமிழ் உச்சரிப்பை இப்ப வர்ர தமிழ்ப்பாடகர்கள் கிட்டயே எதிர்பார்க்க முடியாதே! அதை ஒரு நிகழ்ச்சியில் அவங்களே சொன்னாங்க. தெலுங்கு தாய்மொழி. அது ஒரு கண்ணுன்னா தமிழ் எனக்கு இன்னொரு கண்ணு. தமிழ் தன்னோட கண்ணுன்னு இன்னைக்குத் தமிழர்களே சொல்றதில்லை. Language is a medium of communicationனு சொல்லீட்டு ஆங்கிலத்தில் பிழையில்லாம எழுதும் மக்கள் நம்மக்கள்.

பழைய பாடகர்களில் ஏசுதாஸ் நிறைய பிரச்சனைகளில் மாட்டியிருக்கிறார். மெல்லிசைமன்னரிலிருந்து வைரமுத்து வரை சண்டைகள் நிறைய.

அதுக்கு முன்னாடி கண்டசாலா. உலகே மாயம் வால்வே மாயம்னு தன்னோட பாட்டைக் குதறுனதுல இருந்து மெல்லிசை மன்னர் அடுத்து அவரைத் தமிழில் பாட வைக்கவே இல்லை. லதாமங்கேஷ்கர் பெரிய பாடகியா இருந்தாலும் தமிழுக்கு வேண்டியதில்லை. பாட்டைக் கெடுத்துருவாங்கன்னு open statement விட்டவரு அவர்.

அந்த வகையில் ஜெயச்சந்திரனின் தமிழ் உச்சரிப்பு மிக அற்புதம்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/24/081/

திருமுருகாற்றுப்படை பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றி சொக்கன். :)

தமிழர்கள் எல்லாரும் ஒன்னு குறிச்சி வெச்சிக்கோங்க. தமிழ் உள்ள இலக்கியங்களில் முதன்முதலில் இறைவனைப் புகழ்ந்து பேரின்ப நெறியில் எழுந்த முதல் நூல் திருமுருகாற்றுப்படை.

சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. அப்படீன்னா அதுக்கு முன்னாடியே அவைகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். முதற்தொகுப்பு பதினென்மேற்கணக்கு நூல்கள். இந்த நூல்களில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு எல்லாம் வரும்.

அந்தப் பத்துப்பாட்டில் முதற்பாட்டு திருமுருகாற்றுப்படை. தமிழர்கள் வாழ்வோடு ஒன்றாகிக் கலந்த ஒரு திருமுருகனைப் போற்றி எழுந்த நூல். தெய்வம் பலப்பல என்பதெல்லாம் இல்லை. எல்லாம் ஒன்றுதான் என்பதும் நற்கருத்துதான். பல்வேறு காலகட்டங்களில் தமிழன் பலப்பல தெய்வங்களை வணங்கியிருக்கிறான் என்பதும் உண்மை. வரலாறு நமக்கு நல்லவைகளையும் தீயவைகளையும் ஒன்றாகத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது. அப்படிப் பலப்பல கடவுள்கள் தமிழர்கள் வாழ்வில் வந்தாலும் இன்றைக்கும் தமிழ் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் கடவுள் முருகன். இன்னொன்று குறித்துக் கொள்ள வேண்டும். இந்தத் தமிழ் அடையாளங்கள் இருப்பது கோயில்களில் அல்ல. முருகனுக்கும் தமிழ் மக்களுக்கும் உண்டான அன்புத் தொடர்பில்.

ஆரியக்கலப்பில் எத்தனை புதுப்பெயர்கள் வந்தன. கார்த்திகேயன், காங்கேயன், என்று எத்தனை பெயர்கள் வந்தாலும் முருகன் என்ற எளிய இனிய தமிழ்ப் பெயர்தானே தமிழ் மக்களின் நெஞ்சில் இருக்கிறது.

இதைத்தான் திருமுருகாற்றுப்படையில் அன்றைக்கே “அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக” என்று நக்கீரர் கூறியிருக்கிறார். அதற்கு என்ன பொருள்?

இந்தத் தமிழ் மரபு இருக்கிறதே. அது அரியது. பெரியது. புகழ் மிக்கது. அப்படியான தமிழ் மரபில் எத்தனையெத்தனையோ பெயர்கள். அந்தப் பெயர்களில் எல்லாம் பெரும் பெயர் முருகன். என்ன பொருள்னு புரியுதா? அனைத்திலும் பெரிதாய் முன்னிற்கும் தொடக்கம் முருகன்.

அதுனாலதான் தமிழன் எதையெதையோ விட்டாலும் முருகன் என்கின்ற பெயரை மட்டும் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னும் விடவில்லை.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/24/081/

திரும்பத் திரும்ப பெரியவங்க சொன்னதுதான். தமிழ் ஆன்மீக நூல்கள் உகரத்துலதான் தொடங்கும். வடக்கில் இருந்து வந்து மொழி பெயர்த்தாலும் உகரத்துலதான் தொடங்கும். இதில் பிற்காலத்தில் ஆண்டாள் போன்றவர்கள் மாறுபாடு காட்டியிருக்கிறார்கள்.

உலகம் உவப்ப - திருமுருகாற்றுப்படை
உலகம் யாவையும் தாமுளவாக்கலும் - கம்பர்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் - சேக்கிழார்
மகரம் மேவிய உகரத்தில் “முத்தைத் தரு பத்தித் திருநகை - அருணகிரிப் பெருமாள்”

இந்த வரிசையிலும் திருமுருகாற்றுப்படைதான் முன்னோடி.

உலகம் உவப்ப. ஒரு ஊரா? ஒரு நாடா? ஒரு இனமா? இல்ல எல்லா மக்களுமா? பூமியில் இருக்கும் எல்லா உயிரனங்களுமா? இல்லை... உலகம் முழுவதும் உவக்கட்டும்னு தொடங்குறாரு. எல்லாரும் நல்லாயிருக்கனுங்குற எண்ணத்தை முதலடியாக வைத்து எழுந்த நூல். அதுதான் தமிழ்ப் பண்பாடு.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/24/081/

இந்தச் செய்யுளின் சிறப்பு முதல் மூன்று அடிகளிலேயே முடிஞ்சு போகுது. மத்த மூன்று அடிகளும் இலவசம். இலவசம்னு சொல்லலாம்ல? :) ஆகையால மொத்தப் பொருளையும் பாக்கம, அங்கங்க ஆழ்ந்து தமிழ் சுவைப்போம்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு

உலகம் உவப்பன்னு சொன்னது புரியுது.

வலன் ஏர்பு திரிதரு – திரிகின்ற, சுற்றி வந்து திரிகின்ற, கிழக்கில் தொடங்கி மேற்கில் முடியும் வகையில் வலம் செய்வது போலத் திரிகின்ற

பலர் புகழ் ஞாயிறு – உலகோர் அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொள்ளும் ஞாயிறு (பகலவன்)

சரி. துண்டு துண்டாப் புரியுது. மொத்தமா என்னதான் சொல்றாரு நக்கீரர்?

ஞாயிறு இருக்கிறதே, அதனுடைய கதிர்கள் உலகில் எல்லா உயிர்களுக்கும் ஆற்றல் தந்து அதன் பயனாகிய உழைப்பையும், உழைப்பின் விளைவாகிய உவப்பையும் கொடுக்கிறது.

இன்னொரு விதமாச் சொன்னா… வெளிச்சம் வரும் பொழுதே இருள் ஓடிவிடும். வெளிச்சம் வந்து பத்து நிமிடம் கழித்துப் போகலாம் என்று காத்திருக்க முடியாது. வெளிச்சம் வரவர இருள் போய்விடும். அறிவு வளரவளர அறியாமை போய் உள்ளத்தில் உவப்பு உண்டாகும் அல்லவா.

இப்படி ஒன்பது பொருள் சொல்லலாம். ஆனால் பெரியவர்கள் துணை கொண்டு படித்தும் என் மண்டைக்கு எட்டியது இந்த இரண்டுதான்.

சரி. பகலவன்னு சொல்லியாச்சு. அடுத்து என்ன? கடற் கண்டா அங்கு

கடற்பரப்பிலே தோன்றும் பகலவன். இந்த இடத்துல தோன்றும்னா, கடலுக்குள்ள இருந்து வருவதுன்னு பொருள் அல்ல. நம்ம பாக்கும் பொழுது கடல் பக்கமா வருது. ஏன் கடல்னு சொல்லனும்? கடல் இல்லாத ஊரில் கதிரவன் உதிக்காதா? உதிக்கும். மலையில் உதிக்காதா? உதிக்கும். அப்புறம் ஏன் கடற் கண்டாஅங்கு?

இந்தக் கடற் கண்டாங்கு பத்திப் புரிஞ்சிக்கிறதுக்கான குறிப்பு அடுத்த வரியில் இருக்கு. ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி.

அவிர் – பளபளப்பு
சேண் – தொலைவு
தொலைவில் இருந்தாலும் நம்முடைய கண்களைக் குவித்து இமைக்கச் செய்யும் பளபளக்கும் ஒளி பொருந்தி பகலவன்.

இது வெளிப் பொருள். உட்பொருள் என்ன? ஒளியானது நமக்குப் பார்வை கொடுக்கிறது. ஒரு பொருளின் மேல் பட்டு எதிரொளிக்கும் ஒளி நம் கண்களுக்குள் சென்று அந்தப் பொருளின் உருவத்தை நமக்குத் தெரிவிக்கிறது. ஆகையால்தான் இரவில் பொருள் இருதாலும் ஒளி இல்லாவிட்டால் பொருள் தெரிவதில்லை.

கண்ணு இருக்கு. அதுல பார்வையும் இருக்கு. பாக்க வேண்டிய பொருளும் இருக்கு. ஆனா ஒளி இல்லாவிட்டால் அந்தப் பொருள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. பார்வை இருந்தாலும் குருடன். உண்மையிலேயே இருக்கும் பொருளும் நமக்கு இருக்கிறதா என்று புரிவதில்லை.

இப்பப் புரிஞ்சிருக்குமே பொருள். ஒளி நமது இமையோடு தங்கி விடுவதில்லை. உள்ள போகுது. உள்ள போனாத்தான் பலன்.

இது புரிஞ்சிருச்சுன்னா கடற்கண்டாங்கு ரொம்ப லேசு.

கட்டாந்தரையிலோ கற்பாறையிலோ ஒளி விழுந்தால் என்னாகும்? ஒன்னும் ஆகாது. அந்த ஒளி மேற்பரப்பிலேயே நின்று விடும். உள்ள போகாது. ஆனால் தண்ணியில் விழுந்தால்? ஒளிக்கதிர்கள் தண்ணீரில் ஊடுறும். எவ்வளவு தொலைவு உள்ள வெளிச்சம் போகுதோ அதுக்குள்ள என்னென்ன இருக்குன்னு காட்டிவிடும்.

ஞாயிறு (பகலவன்) = அறிவு
கடல் = உள்ளம்
அறிவானது உள்ளத்துக்குள் செல்லச் செல்லதான் உண்மையிலேயே என்ன இருக்குன்னு நமக்குப் புரியும். அதுனாலதான் மலைக் கண்டாங்குன்னு சொல்லாம கடற்கண்டாங்குன்னு நக்கீரர் சொல்லீருக்காரு.

இப்ப மொதல்ல இருந்து படிப்போம்.
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு
கடற் கண்டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி

இவ்வளவுதாங்க. இத மட்டும் புரிஞ்சிக்கிட்டு நடந்தா திருமுருகாற்று்படைய இதுக்கு மேல படிக்க வேண்டாம். வேறெந்த நூலையும் படிக்க வேண்டாம். வாழ்க்கை சிறப்பா இருக்கும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/24/081/

நீங்க ரெண்டு கேள்வி கேட்டிருக்கீங்க. ரெண்டுமே பெருத்த விவாதத்திற்கு உரியது. அதிலும் முதற்கேள்வி இருக்கிறதே.. அப்பப்பா! இது பற்றி ஒரு பதிவு எழுதி பெரிய சண்டைக்காடு ஆகிவிட்டது முன்பு.

மறுஇல் கற்பின் வாள் நுதல் கணவன்

இதுதானே அந்த வரி. நீங்கள் தெய்வயானையின் கணவர் என்று பெயர் சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால் அது தெய்வயானையைக் குறிக்காது என்பது என் கருத்து. திருமுருகாற்றுப் படையில் வள்ளி என்று வெளிப்படையாக நக்கீரர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தெய்வயானையின் பெயர் வரவில்லை.

கற்பு என்று சொல்வதன் வழியாக அது தெய்வயானையைக் குறிக்கும் என்று கூறுவோரும் உண்டு. அதை ஏற்காதாரும் பலருண்டு. அவரவர்க்குப் பிடித்தது போல வைத்துக் கொள்ளலாம். :)

மறுஇல் என்றால் மறுக்க முடியாத அல்லது மாற்றுக் கருத்து இல்லாத என்று பொருள்.

கற்பை ஏற்றம் செய்ய வந்த சொற்றொடர். மறுஇல் கற்பின். புரிஞ்சது.

வாள்நுதல் – வாளைப் போன்று ஒளிரும் நெற்றி

ஏன் வாள் போன்றன்னு சொல்லனும்?

கற்பில் இரண்டு வகையுண்டு. அறக்கற்பு. மறக்கற்பு. நல்ல எடுத்துக்காட்டு இரண்டு இருக்கிறது. கண்ணகி அறக்கற்பு. கோப்பெருந்தேவி மறக்கற்பு.

புரியலையா? :) விளக்கமா சொல்றேன். ஆறு வரிக்கு ஆறு பக்கம் எழுத வெச்ச சொக்கன் வாழ்க. :)

கண்ணகிக்கு வந்தது அறச்சீற்றம். அதாவது நடந்தது தவறு என்று எழுந்த ஆத்திரம். கணவன் செய்ததுக்கெல்லாம் அவள் சரியென்று இருந்ததை இளங்கோவடிகள் கற்பு என்று சொல்லவே இல்லை. கோவலன் செய்தது தவறு என்று கண்ணகியின் வாயால் இளங்கோவடிகள் சொல்கிறார். அவன் தவறுக்குத் தண்டனை சோழ நாட்டில் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் பாண்டியன் கொடுத்துவிட்டான். அவன் எனக்குத் தகப்பனைப் போல என்று கண்ணகியே “தென்னவன் தீதிலன் தேவர்கோன் பெருவிருந்து ஆயினன். நானவன் தன்மகள்”னு சொல்றாரு. ஆகையால இனியும் கோவலன் செஞ்ச தப்பைக் கண்ணகி கண்டிக்கலைன்னு யாரும் சொல்லக் கூடாது.

சரி. கற்புக்கு வருவோம். செங்குட்டுவன் சேரமாதேவியிடம் கேட்கிறான்.

கோப்பெருந்தேவியோ கணவனாகிய செங்குட்டுவன் உயிரை விட்டதும் ஒரு சொல்லும் பேசாது ஆவி நீத்தாள். கண்ணகியோ பாண்டியர் செய்தது அரசியலின் படித் தவறு என்று நிரூபித்து அரண்மனை எரித்துதான் சினத்திலிருந்து மீண்டாள். இவர்கள் இருவரில் போற்றத்தக்கவர் யார்?

ஆணாக இருந்து சேரன் கேட்டதற்கு பெண்ணாக இருந்து கற்பு பற்றித் தீர்ப்பு சொல்கிறாள் சேரமாதேவி.

ஒருத்தி கணவனோடு நல்லபடியாக, ஒட்ட வாழ்ந்து எல்லா இன்பங்களையும் அனுபவித்து அவன் அன்பிலே திளைத்து ஒருவருக்கு ஒருவராக வாழ்ந்து, அந்த இல்லறம் செழிக்க அவன் போனதும் அவனைப் பிரியாதவளாக அவனுடனே சென்றாளே. அவள் மறத்தி. அவள் கணவன் எங்கு சென்றானோ அங்கேயே சென்று அவனுடனேயே இருந்து அவளுக்கு என்ன வேண்டுமோ அதைப் பெற்று விட்டாள். வேறு ஏதேனும் கொடுத்தாலும் வாங்கவும் மாட்டாள்.

இன்னொருத்தி கணவனோடு சரியாக வாழாமல், செல்லவங்கள் அனைத்தையும் இழந்து, பஞ்சம் பிழைப்பதற்காக நாடு விட்டு நாடு வந்து, அங்கு தனது கணவனையும் இழந்தாள். ஆக இல்லற இன்பத்தை முழுமையாகச் சுவைக்காத நிலையிலும் தவறான அரசியல் செய்தான் அரசன் என்று சினம் காட்டினாளே! அந்தச் சினம் அறம். அந்தக் கற்பை நாம் சிறப்பு செய்ய வேண்டும். கண்ணகிக்குக் கோயில் எடுக்க வேண்டும் என்கிறாள்.

கற்பின் இரண்டு விளக்கங்களையும் ஒரு பெண் வழியாக இளங்கோ அருமையாகக் கூறியிருக்கிறார். இதில் உடல் தொடர்பாகக் கற்பு என்று அழைக்கப்படுவது வரவே இல்லை.

வள்ளியாகப்பட்டவள் காட்டில் வாழ்ந்து, கந்தனையே நினைதது, பிறகு அவனையே மணந்து, தெய்வமாக அவனுடனே இருந்து அருள் செய்கிறாள். அந்தக் கற்பை மறம் என்று சொல்வதற்காக வாள் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது என் கருத்து. சுடர்நுதல் என்று சொல்லியிருக்கலாமே. இலக்கணமும் பொருந்தி வரும்.

இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டுமென்று கிடையாது. இப்படியும் பொருள் கொள்ளலாம்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/24/081/

அடுத்த கேள்வி நக்கீரர் பத்தி.

இதுவும் சற்று ஆராய்ச்சிக்கு உரியது. மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன்னு தெளிவாச் சொல்லியிருக்காங்க.

நீங்க முன்பு பதிவிட்ட கொங்குதேர் வாழ்க்கை பாட்டை ஓட்டி இறையனாருக்கும் நக்கீரருக்கும் வாதம் வருது.

அப்ப இறையனார் (பாட்டு வரி சரியா நினைவில்லை. தோராயமா கொடுக்கிறேன்)
அங்கம் புழுதிபட அரிவாளில் நெய் பூதி
பங்கப்பட இரண்டு கால் பரப்பி சங்கதனைக் கீர் கீரென அறுக்கும் நக்கீரனோ என் கவியை ஆராயக் கூடியவன்?

அதுக்கு நக்கீரரோ,
சங்கறுப்பது எங்கள் குலம். சங்கரனார்க்கு ஏது குலம் என்று கேட்கிறார்.

மதுரையில் எப்படிச் சங்கு விளையும். கடற்கரை வலைஞர் குலத்தில்தான் நக்கீரர் பிறந்திருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

கணக்காயனார் மகனாகச் சொல்லப்படும் நக்கீரர் வேறொருவராகவும் இருக்கலாம். அல்லது வலைஞர் குலத்தில் பிறந்தாலும் கணக்காயராக நக்கீரரின் தந்தை தொழில் மாறியிருக்கலாம். அதற்கும் வாய்ப்புள்ளது.

முடிவு அவரவர் கையில். :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/24/081/

மன்னிக்கவும். அது ஏ.பி.நாகராஜன் வசனம் மட்டுமல்ல. அதற்கு மூலப்பாடலும் உண்டு.

இதோ பாக்களைத் தருகிறேன். தனிப்பாடல் திரட்டு பாகம் ஒன்றை உருட்ட வேண்டியிருந்தது.

அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்

சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வோம் இனி

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/24/081/

மன்னிக்கவும். அது ஏ.பி.நாகராஜன் வசனம் மட்டுமல்ல. அதற்கு மூலப்பாடலும் உண்டு.

இதோ பாக்களைத் தருகிறேன். தனிப்பாடல் திரட்டு பாகம் ஒன்றை உருட்ட வேண்டியிருந்தது.

அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்

சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வோம் இனி

தருமிக்கு பொற்கிழி அளித்ததற்கு நூலாதாரம் உண்டு. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தில் ஐம்பத்தியிரண்டாவது படலமாகத் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் வருகிறது. இந்த நூல் சங்கநூல் அல்ல. பிற்காலத்து எழுந்தது.

ஆகையால்தான் பல ஔவைகள் இருந்தது போல பல நக்கீரர்கள் இருந்திருந்திருக்கலாம் என்பதும் ஒரு கருத்து. அப்படி இருக்கவே முடியாது என்பதற்கு ஏதேனும் தரவிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/24/081/

கோபப்பிரசாதத்திற்கும் திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எப்படி எல்லா ஔவையாரின் பாடல்களும் ஒரே ஔவையார் மேல் ஏற்றப்பட்டனவோ, அத்தகைய கொடுமைதான் நக்கீரருக்கும் நடந்தது.

அதற்கு ஆதாரமாகத்தான் பிற்கால நூல்களில் இருந்த பாக்களை எடுத்துக் கொடுத்தேன். நான் சரியாக விளக்கவில்லை போலும்.

அத்தோடு தமிழை எந்தச் சமயத்துக்குள்ளும் அடைக்க முடியாது. இரட்சிணிய யாத்திரிகம், சீறாப்புராணம், ஏசுகாவியம் என்றெல்லாம் தமிழில் வந்து விட்டது. சமயங்கள் தங்களைத் தமிழோடு ஐக்கியப்படுத்துகின்றனவா என்பதே சிந்திக்க வேண்டியது. காலம் பலவற்றை மாற்றுகிறது. அந்த மாற்றத்திற்குத் தக்க நிலைப்பாடுகள் தவிர்க்க முடியாதன.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/24/081/

// “அரும் பெறல் மரபின்”…பெரும் பெயர் முருக என்றோ…
மாயோன் மேய் “மன் பெருஞ் சிறப்பின்”…தாவா விழுப்புகழ் என்றோ
மன் பெரும் மரபை…வேந்தனுக்கும் வருணனுக்கும் காட்டாது! திணை அடையாளங்களாகவே நின்று விடுவர்! //

அவ்வளவு எளிதாக முடிக்க முடியாது. மக்கள் வணங்கினர் என்பதை நூல்கள் சொல்கின்றன. ஆக வழிபாடு வழக்கில் இருந்திருக்கிறது.

அது மட்டுமன்றி இந்திரவிழவு இன்றைக்குக் கொண்டாடப்படவில்லை என்றாலும் பழம் நூல்கள் கூறுகின்றன. சிலப்பதிகாரம் முதற்கொண்டு.

ஆகையால் அனைத்தையும் மதிப்பதே முறை என்பது என் கருத்து. இதுகுறித்துத் தோண்டினால் இன்னும் நிறையச் சொல்லலாம்.

G.Ragavan said...

http://emadal.blogspot.com/2011/09/blog-post_25.html

சத்தியபிரகாசும் பூஜாவும் பல சுற்றுகளில் சொதப்பினார்கள். ஆனாலும் ஏதோ ஒரு ”சக்தி” அவர்களைக் காப்பாற்றிக் கொண்டேயிருந்தது.

ஒரு சுற்றில் பூஜா எப்படிப் பாடினாலும் எனக்குப் பிடிக்கும் என்று நடுவராக இருந்த சுஜாதா உளறிக் கொட்டினார். அதை அப்பொழுதே சிறப்பு விருந்தினராக வந்திருந்த டி.எல்.மகராஜன் கண்டிக்க வேண்டியிருந்தது.

சத்தியபிரகாஷ் கர்நாடக சங்கீதப் பாடல்களை நன்றாகப் பாடுவார். அவர் ஒரு ஆல்ரவுண்டர் அல்லர். பூஜாவின் பாடல் தேர்வுகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே அமையும். அதை மீறி அவர் வர முயற்சி செய்த போதெல்லாம் தடுமாறியிருக்கிறார். இதையும் அனந்த் அவர்கள் கூறியிருக்கிறார்.

பெரும்பாலானவர்கள் கருத்துப்படி இவர்கள் இருவரும் அதிதீவிரமாக முன்னிறுத்தப்பட்டமை எரிச்சலையே தந்தது.

அதுவுமில்லாமல் தொடர்ந்து மலையாளிகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த விஜய் டீவி மீதான எரிச்சல்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு அழுத்தம். இவையெல்லாம் சாய்சரணுக்கு வசதியாக அமைந்தன என்பதே உண்மை. நீங்கள் சொல்லும் காரணங்கள் அல்ல என்பது என் கருத்து.

G.Ragavan said...

http://feelthesmile.blogspot.com/2011/09/airtel.html

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியே ஒரு கண் துடைப்பு. இதை சென்ற சூப்பர் சிங்கர் ஜூனியரிலேயே நாங்கள் உணர்ந்தோம். நன்றாகப் பாடக்கூடிய சிறுமிகளை ஓரங்கட்டிய விதமும்.. இதோ இன்றைக்கு நீங்கள் பாரட்டிக் கொண்டிருக்கும் அல்காவிற்கு அவர்கள் செய்த உதவியும் எக்கச்சக்கம். ஒரு முறை நித்யஸ்ரீயை விலக்கம் செய்து விட நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. இத்தனைக்கும் அவர் அன்று நன்றாகப் பாடியிருந்தார். சிறப்பு நடுவராக வந்த எஸ்.ஜானகி அவர்கள் உள்புகுந்து காப்பாற்றினார்.

சத்யபிரகாஷால் பாட்டும் நானே பாடலைச் சுவையாகப் பாடியிருக்க முடியாது என்பது என் கருத்து. அதுவுமில்லாமல் ஒவ்வொரு முறையும் மலையாளிகளுக்கு பட்டம் குடுக்கின்றார்கள் என்ற எரிச்சல் விஜய் டீவிக்கு இந்த முறை புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். அதுவும் சத்தியப்பிரகாசுக்கு உதவாத காரணமாக இருக்கலாம்.

G.Ragavan said...

http://emadal.blogspot.com/2011/09/blog-post_25.html

// அப்படிப்பார்த்தால் தொடர்ந்து consistency காட்டியது பூஜா! அவரொரு முதல் வகுப்பில் தேறும் மாணவி போல. சத்யா அப்படி அல்ல! நண்பர்களின் தூண்டுதலால் உள்ளே வந்தவர். //

சத்தியப்பிரகாசை விடவும் பூஜா முதலிடத்திற்குப் பொருத்தமானவர் என்பது என் கருத்து. முதலிலிருந்த உச்சரிப்புப் பிழைகளை திருத்திக் கொண்டு முன்னேறிய விதம் அருமை. மன்னவன் வந்தானடி கிளாஸ். பி.சுசீலாவே பாராட்டியிருப்பார்கள். அதை விட மற்ற மூவருமே சுமார்தான்.

//இயற்கையான குரல் வளம் கொண்டவர். நல்ல உழைப்பாளி. எல்லா தொகைகளிலும் பாட முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர். //

இந்தக் கருத்தில் நான் வேறுபடுகிறேன். :) உங்கள் கருத்தை மதிக்கிறேன்.

// அவர் கடைசியாகப் பாடியது நான் இதுவரை அவர் பாடிக்கேட்டதில்லை. எங்கோ கொண்டு போகிறார். இதை ரசிக்க முடியவில்லை என்றால் இசை ஞானம் குறைவு என்று சொல்ல வேண்டியிருக்கும். //

சமைக்கத் தெரிஞ்சாதான் ருசிக்க முடியும்னு சொல்றீங்க. :) பெரியவங்க சொன்னா சரிதான். :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/29/086/

நல்ல பாடல். நகைச்சுவையில் நம் புலவர்கள் திறமைசாலிகள்தான். நிறைய பாடல்களை எடுத்துச் சொல்லலாம்.

இந்தப் பாடலை எழுதிய ஔவை பிற்கால ஔவையாக இருக்கலாம். இவருடைய பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் தனியாக இருக்கிறது. பின்னொரு ஔவையின் பாடல்கள் இன்னொரு பகுதியாக இருக்கிறது.

இந்தப் பாடலை எழுதிய ஔவை கம்பருக்குச் சமகாலத்தவராக இருந்திருக்க வேண்டும் என்று திரட்டு சொல்கிறது.

எந்த ஊர் என்று கேட்ட சோழனுக்கு நொந்தேன் என்று பாட்டெழுதியிருக்கிறாள். காவிரி சூழ் நாடா என்று சிறிய கிண்டலும் உண்டு.

சோழன் கம்பன் பாட்டை வியந்ததற்குப் பாடியதாகக் குறிப்போடு இன்னொரு பாட்டும் உள்ளது.
விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் - அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று

கம்பனைப் போலக் காப்பியம் பாட முடியுமா என்று கேட்டதற்குத்தான் வான்குருவியின் கூடு பாடலைப் பாடினார் என்று நூல் கூறுகிறது.

கம்பரும் கூத்தரும் நன்னிலையில் செழிப்பாகத்தான் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். இவர்கள் இருந்த பொழுதும் பாண்டி நாட்டுப் புகழேந்தி சோழநாட்டில் தன்னை நிலைநாட்டினான். வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி. அவன் புகழ் ஏந்திதான் நாமும் தமிழ் கற்க வேண்டும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/30/087/

ஐயா, எனக்குப் பிடித்ததை நீங்கள் சொல்ல வேண்டும் என்று உலகில் எந்தச் சட்டதிட்டமும் இல்லை. அப்படி எதிர்பார்ப்பது சிறிதும் முறையாகாது. உங்களுக்குப் பிடித்ததைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும். சொல்கின்றீர்கள். இதற்கு ஏன் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?

நீங்கள் சொன்ன வரிகளையே எடுத்துக் கொள்வோம்.
// பெரும் நாத்திகராக அறியப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன்….
பகுத்தறிவுப் பாசறையில் இருந்து கொண்டே….
ரெண்டே ரெண்டு ஆன்மீக உள்ளங்களை மட்டுமே போற்றியவர்! //

பாரதிதாசனார் வள்ளலாரைப் போற்றினார் என்று நீங்கள் கூறியிருந்தால் நான் அப்படி எடுத்துக் கொண்டிருப்பேன். உங்களுக்குப் பிடித்த வைஷ்ணவ சம்பிரதாய ராமானுஜரைப் பற்றிச் சொல்லியிருக்கின்றீர்கள். அதுவும் சரிதான்.

ஆனால் இவர்கள் இருவரை மட்டும் பாரதிதாசன் பாராட்டினார் என்று நீங்கள் அழுத்திச் சொல்லி அதற்குக் கருணை என்னும் கொள்கையைக் காரணம் காட்டுகையில் வேறு எப்படி பொருள் எடுத்துக் கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

நூறு ஓட்டல் இருக்கும் ஊரில் இரண்டு ஓட்டல்கள் மட்டும் சுவை என்னும் கொள்கையில் சிறப்பு என்று நீங்கள் சொல்லும் பொழுது அவையன்றி இன்னொன்று சுவையிராது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்.

பாரதிதாசன் வள்ளலாரையும் இராமானுஜரையும் பாராட்டினார் என்றால் அது செய்திக் குறிப்பு. அவர்கள் இருவரை மட்டும் பாராட்டினார் என்பது சிறப்புக் குறிப்பு. சொன்னவர் தாங்கள். கேட்டுக் கொண்டவர்கள் நாங்கள். அவ்வளவே. :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/09/30/087/

ஐயா, நீங்கள் எல்லாரையும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கவே இல்லையே. :(

இளையராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்று கருத்து சொல்வதற்கும் இளையராஜா மட்டுமே சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை செந்தமிழ் செல்வராகிய தாங்கள் அறிவீர்கள்.

அப்படி இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர் என்று சொல்வது கூட ஒரு கருத்துதான். அதைச் சொல்கின்றவர் வேறொருவர் இசையைக் கேட்டும் ரசித்ததில்லை என்பதே அவர் சொல்வதற்கான காரணம். அவ்வளவுதான். அதுவும் அவர் கருத்து. தவறு என்று சொல்லவே முடியாது.

அது போலத்தான் நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் சொன்ன சரியான பொருளில் புரிந்து கொண்டேன் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவ்வளவுதான். உங்களுடைய கருத்தை வெளிப்படையாகச் சொன்னதற்கு ஏன் வருத்தப்படுகின்றீர்கள் என்றுதான் புரியவில்லை. ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/01/088/

கம்பன் என்றாலே கவியமுதம். பேசாமல் கம்பன் கழகத்தில் சேர்ந்து விடலாமா என்று கூடத் தோன்றும். அத்துணை சுவை. ஏற்பிலாக் கருத்தையும் ஏற்புடையதாகச் செய்யும் கவிவண்ணம் கம்பன் கைவண்ணம். இராமனின் கைவண்ணம் கால்வண்ணம் மெய்வண்ணம் கண்டவர்கள் எல்லாரும் அப்பொழுது இருந்தார்கள். அதற்குப் பின்னால் எப்பொழுதும் இராமனின் வண்ணங்களைக் கம்பன் கைவண்ணங்களால்தான் எல்லாரும் காண்கிறோம். தமிழால் கம்பனுக்கு உண்டான பெருமையிது.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/01/088/

பில வாய்களுக்குப் பொருள் சொல்லாம விட்டுட்டீங்களே. :) பிலம் என்றாலே பொதுவான பொருள் துளை/வழி. பொதுவாக பிலத்துவாரம் என்று பாதாளத்துக்குச் செல்லும் வழியைச் சொல்வார்கள் (கே.ஆர்.எஸ் அவர்கள் இந்தப் பொருளைச் சரிபார்க்கவும்.)

அப்படியான பாதாள வழி அச்சமூட்டி அரட்டி விரட்டும். அப்படிப் பட்ட அச்சமூட்டும் வாய்களாம் இராவணனின் பிலவாய்கள். அதிலும் புகை முந்தும் வாய்கள். அடங்கா ஆத்திரத்தில் அடி வயிற்று அக்கினி பற்றி எரிய, அதன் புகை வாய் வழியாக வெளியே வருகிறதாம். ஒரு வாய் வழியாகவா? இல்லை. பத்து வாய்களின் வழியாகம் புகை வருகின்றது. பத்து மீசைகள் துடிக்கின்றன.

பற்களைக் கடிக்கும் பொழுது ஒன்றோடொன்று மோதி உராய்ந்து தீப்பொறிகள் பறக்கின்றன. ஒரு மண்டைக்குள் உண்டாகும் ஆத்திரத்தையே நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. பத்துமண்டை ஆத்திரத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் சூர்ப்பனகையைக் கேட்டான் “யார் அவன்” என்று.

இராவணனின் இந்தக் கோவம் நியாயமானதுதான். ஆனால் “யார் அவன்” என்று கேட்ட கேள்வி “யார் அவள்” என்று மாறியதன் விளைவுதான் ஒரு “வன்வாளி” அவன் உடல் புகுந்து தடவியது.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/01/088/

கம்பனைப் பற்றி நினைத்தாலே எண்ணச் சிறகுகள் வண்ணம் பூசிப் பளபளத்துப் பறக்கின்றன. ஒரு மேடையிலேனும் அவன் கவிச்சுவையை வியந்து நயந்து பேச வேண்டும். என்று தணியுமோ இந்த ஆவல். :(

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2011/10/2011-6.html

முருகா முருகா முருகா

சிங்கை முருகா! உன் திருக்காட்சி நானும் கண்டேன். இனியும் காண்பேன். அருள் முருகா.

படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு டீச்சர். கோயில்னா இப்பிடி இருக்கனும்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னோட மருமகள் இந்தக் கோயில்ல பரதநாட்டியம் ஆடியிருக்காங்க.

அப்படியே டீச்சர் ஒரு சின்ன விளம்பரம். புது வீடு தொறந்திருக்கேன். நீங்களும் அடிக்கடி வாங்க :) ரீடர்ல போட்டு வெச்சிக்கோங்க.

http://gragavanblog.wordpress.com/

G.Ragavan said...

http://raviaditya.blogspot.com/2011/10/blog-post.html

படம் உண்மையிலேயே அருமை. தவறு கண்டுபிடிக்கனும்னா கண்டுபிடிக்கலாம். ஆனா அப்படிக் கண்டுபிடிக்கக் கூடாதுன்னு நெனைக்க வெச்ச திரைக்கதை அருமை. அதுவுமில்லாம அந்த விபத்தை முதல்லயே காட்டுனதுதான் விறுவிறுப்பைக் கூட்டுச்சுன்னு நெனைக்கிறேன்.

பாடல்கள் எல்லாமே கலக்கல். கோவிந்தா கோவிந்தாவாகட்டும், மாசமா ஆறு மாசமா, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய், உன் பேரே தெரியாதே.. எல்லாமே அருமை. இசையமைப்பாளர் சத்யாவிற்குப் பாராட்டுகள். தொடர்ந்து நல்ல பாட்டுகள் குடுங்க.

அனன்யா அடக்கமான அழகுன்னா அஞ்சலி அசத்தல் அழகு. ரெண்டு பேருக்கும் ரொம்பப் பொருத்தமா சர்வா மற்றும் ஜெய். ஒரு சின்ன இடைவெளியில ஜெய்-அஞ்சலி ஜோடி மனசுல இடம்பிடிச்சிர்ராங்க. அதுக்காக அனன்யா-சர்வா ஜோடி குறைவுன்னு சொல்லல. வெற்றிக்கான வித்யாசம் ரொம்பச் சிறுசு. :)

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2011/10/blog-post.html

கோயிலே இருக்கட்டும். அதுதான் ரொம்பவும் பழகி வந்திருக்கு. நெருக்கமாகவும் இருக்கு. :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2011/10/2011-6.html

// பொண் வளர்த்தி......பீர்க்கங்காய் வளர்த்தி என்பது சரிதான்! //

ஆமா டீச்சர். நேரம் நெகுநெகுன்னு வளருது. காலம் கடகடன்னு ஓடுது. :)

// ஆமாம்...கிரகப்பிரவேசத்துக்கு அழைப்பு அன்புப்பறதில்லையா? வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் விரைவில். எத்தனை பதிவு போட்டுருக்கீங்க? //

இன்னையோட சேத்து அஞ்சு பதிவுகள். வாரத்துக்கு ஒன்னாச்சும் போட்டுறலாம்னுதான் இருக்கேன். :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2011/10/2011-7.html

கோயில்களைப் பராமரிக்கிறதைப் பத்தி சிங்கப்பூர் மக்கள் கிட்டதான் கத்துக்கனும்.

சைனாடவுனுக்கு ஒரேவாட்டிதான் போயிருக்கேன். அஞ்சு டாலருக்கு மூனு பொருட்களை வாங்குறதுக்கு. ஆனா இந்த மாரியம்மன் கோயிலுக்குப் போனதில்லை. அடுத்து போறப்போ போயிறலாம். :)

ஆமா.. இத்தன சாமிக இருக்குன்னு சொல்றீங்க. சிங்கப்பூர் கோயில்கள்ள மறக்காம இருக்குற முருகன் இங்க இல்லியா? :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2011/09/blog-post_27.html

ஒரு காலத்துல ராஜேஷ்குமார் நாவல்கள் அவ்வளவு பிரபலம். இப்பல்லாம் வெளிவருதான்னு தெரியலை. வாங்கியெல்லாம் படிச்சதில்லை. யாராச்சும் ஏங்கயாச்சும் வாங்கீருப்பாங்க. அதுல சிலது படிச்சிருக்கேன்.

மறக்க முடியாத தலைப்பு “திரும(ர)ண அழைப்பிதழ்”

G.Ragavan said...

http://nchokkan.wordpress.com/2011/09/27/anandha/

உத்துப் பாக்குறது மாதிரி... இது உத்துக் கேக்குறது. :)

சொல்லிக் கொடுத்த சுருதிக்குள்ளயே பாடுறது உமாரமணன் பாணி. இவ்வளவு புதுப்பாட்டெல்லாம் நீங்க தேட வேண்டாம். ராஜா இசையில் அமுதே தமிழே அழகிய மொழியே கேளுங்க. அதுலயே பி.சுசீலா பாடுறதுக்கும் உமாரமணன் பாடுறதுக்கும் வேறுபாடு தெரியும்.

மின்னொளி சரிதான்னு எனக்குத் தோணுது.

சிந்திய வெண்மணி பாட்டுல அந்த வரியைப் பி.சுசீலா பாடனுமா ஏசுதாஸ் பாடனுமாங்குற சந்தேகம் எனக்கும் உண்டு. :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2011/09/blog-post_27.html

நீங்க சொல்ற ஸ்ரீநிவாசர் கோயிலுக்கு நானும் போயிருக்கேன். மருமகளுக்கு முடியிறக்குனது அங்கதான. இந்தியா வந்தப்பத்தான் திருச்செந்தூர்ல இறக்குனது.

கோயில்ல முடியெறக்குன அன்னைக்குக் கட்டளைக்கு புளியோதரை கேசரியெல்லாம் சொல்லீருந்தோம். வந்தவங்களுக்கெல்லாம் கொடுத்தோம். அப்புறமா அவங்கவங்களே எடுத்துக்கட்டும்னு வெச்சிட்டோம்.

பலாச்சுளைகள் அழகு. Civic Sense நம்ம மக்களுக்குக் குறைவு. ஆங்கிலத்துல தப்பில்லாம பேச முயற்சி பண்ணீட்டு (அ) பேசீட்டு, தமிழில் தப்பு பண்ற மாதிரி. வெளிநாட்டைத் துப்புரவா வெச்சிக்கிட்டு உள்நாட்டை குப்பையாக்குறது.

அரசாங்கத்தைச் சொல்லி ஒரு புண்ணியமும் இல்லை. தனிமனித மனநிலையே அப்படித்தானே இருக்கு. வெளிய நம்மளே எவ்வளோ குப்பை போடுறோம். ரெயில்வே ஸ்டேஷன், பஸ்டாண்டு, இன்னும் பல இடங்கள். நம்மளால தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் நம்மைப் போலத்தான் இருக்கும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2011/10/blog-post_14.html

நல்ல பாட்டு. ராஜா பாட்டுகளை எடுத்துச் சொன்னா ஒன்னா ரெண்டா...

எனக்குச் செம்பருத்தி படத்தில் செம்பருத்திப் பூவு சித்திரத்தைப் போலே பெண்ணொருத்தி ஆடட்டுமே பாட்டு பிடிக்கும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/16/102/

இந்தப் பா தமிழர்கள் பெருமைப்படத் தக்க பா.

இதை எழுதிய வெள்ளிவீதியார் ஒரு பெண்பாற்புலவர். காதல் நிறைவேறாமல் போனவர். அதற்குக் காரணம் என்னவென்று பலவித ஊகங்கள் உண்டே தவிர, நான் அறிந்தவரை இதுதான் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஒரு சிலர் கதைகள் சொன்னாலும் அதற்குத் தரவுகள் இருப்பது போலத் தெரியவில்லை.

ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் என்று சொல்வதில் இருந்து கணவனை இழந்து தவித்தவராக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆதிமந்தி சோழன் மகள். ஆட்டனத்தி சேரன். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஒரு சூழலில் ஆட்டனத்தி ஆற்றோடு போய்விடுகிறான். அப்பொழுது ஆதிமந்தி காவிரிக்கரையோரமாக தலைவனைத் தேடி அழுது புலம்புகிறாள்.

இந்தக் கதையை பாரதிதாசன் ஆட்டனத்தி ஆதிமந்தி என்று நாடகமாக எழுதினார். இதையே தழுவி எடுக்கப் பட்ட படம் மன்னாதி மன்னன். அதில் அஞ்சலிதேவி தண்ணீரோடு போன எம்.ஜி.ஆரைத் தேடி “காவிரித்தாயே காவிரித்தாயே” என்று பாடுவார்.

வெள்ளிவீதியாரின் இயற்பெயர் தெரியவில்லை என்று நினைக்கிறேன். பெயர்க்காரணத்தை உ.வே.சாவின் குறுந்தொகை உரைநூலில் காணலாம்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/16/102/

நம்மள்ளாம் ஒன்னு நல்லா நினைவு வெச்சிக்கனும்.

சங்கப்பாடல்ல இருந்து இப்பத்தைய சினிமா பாடல் வரைக்கும் பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் நிலையிலிருந்து நிறைய எழுதீருக்காங்க. அதெல்லாம் ஓரளவுதான் பொருத்தம்.

ஒரு பெண்ணே உணர்ச்சிகளை உளவெடிப்போடு எழுதும் போது ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் அது அவர்களின் தவறான பக்கத்தை அல்லது இயலாமையை சுட்டிக் காட்டுகிறது.

காதல் பாட்டையே ஆண் யோசிக்கும் பொழுது “மனம் துள்ளும் இன்பத்தால்” என்றுதான் எழுத முடிகிறது. “குங்கமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டில் சங்கமம்” என்று இயல்பாக எழுத ஒரு பெண் கவிஞர் தேவைப்படுகிறார்.

எத்தனையோ விதமாக ஆண்களைப் பெண்கள் பாடுவதாகப் பாடல்கள். ஆனால் வசீகராவின் வெற்றி ஊர் அறிந்தது.

இன்றும் பெண் எழுத்தாளர்கள் எல்லாம் ராஜம் கிருஷ்ணனாகவோ லட்சுமியாகவோதான் இருக்கப்பட ஆண்கள் விரும்புகிறார்கள். உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் வடித்தால் விமர்சனங்கள், வசவுகள், இன்னும் என்னென்னவோ. இதுதான் உலகம். :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/16/102/

வெள்ளிவீதியார் சங்கப்புலவர். ஆகையால்தான் உள்ளதை உள்ளபடி சொல்லிப் பாராட்டும் பெற முடிந்தது. சங்ககால ஔவையார் இவர் பெயரைக் குறிப்பிட்டு அகநானூற்றுப் பா எழுதியிருக்கிறார்.

பட்டினி. வயிற்றுப் பசி. பசிக்கு மருந்து சோறு. அந்தச் சோறில்லாமல் வயிறு தவிப்பது கொடுமை. அந்தக் கொடுமையை அனுபவிக்கின்றவர்களுக்குத்தான் ஆண்டவன் வயிற்றை ஏன் படைத்தான் என்று ஆத்திரம் வரும்.

பசி இப்படி. கிசி? அதுதான் உடற்பசி.

கணவனோ இறந்து விட்டான். வேறு யாரையும் காதலிக்க முடியவில்லை. அவன் தொட்டணைத்து கைபட்டுக் கால்பட்டு உடல்முட்டிச் சுகித்த எண்ணங்களை மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?

தவிக்கிறார் வெள்ளி வீதியார். இரவு நேரம். இருட்டு மருட்டுகிறது. நிலவு சுடுகிறது. படுத்திருக்கும் மெத்தை உறுத்துகிறது. தென்றல் கடலலையிலிருந்து வருகிறதா? உலையிலிருந்து வருகிறதா? கிசித்திருக்கும் வேளையில் கிசிச்சோறு கிட்டாத் துயரம். மாற்றான் பொருளுக்கு மனதிலும் விரும்பாதவர் வெள்ளிவீதியார். இறந்தவனையே நினைத்து வருந்துகிறார்.

நல் ஆன் தீம்பால் – நல்ல பசுவின் தீம்பால். ஒரு சிறிய செய்தி. பழந்தமிழில் ஆ என்றால் பசு. நாம் வடக்கத்திப் பசும்பாலுக்கு மாறி விட்டோம். தெலுங்கில் இன்றும் ”ஆப்பாலு”தான்.

ஆவின் மடியில் சுரக்கும் பாலை கன்று பருகும். அல்லது ஆயர் பீய்ச்சுவர். இரண்டும் ஆகவில்லையென்றால் பால் கட்டிக் கொள்ளும். அது பசுவிற்குத் துன்பம் கொடுக்கும். அந்தத் துன்பம் தாளாமல் பசுக்கள் பாலைத் தரையிற் சொரிந்துவிடும்.

அப்படி மண் வீழ்ந்த பாலால் என்ன பயன்? அப்படிப் பயனில்லாமல் கிடக்கிறதே என் அழகு. பசலை பிடித்துப் போனதே.

தனியொருத்தியாய் முழுமையான இன்பம் துய்க்க முடியவில்லை. என் தலைவனாலும் அனுபவிக்கப்பட முடியவில்லை. ஒரு ஆணால் அனுபவிக்க முடியாத என்னுடைய அழகான அல்குல்(பெண்குறி) நிலம் வீழ்ந்த பாலாயிற்றே. பொருளோ நல்ல பொருள். வீணாய்க் கிடக்கிறது.

இப்படியாகப் புலம்புகிறார்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/16/102/

எனக்கு ஒன்று புரியவே மாட்டேன் என்கிறது. ரவிசங்கர் அவர்களும் அந்த வருத்தத்தை அழகாகச் சொல்லியிருந்தார்.

அல்குல் என்பதற்குப் பொருள் சொல்வதில் என்ன குற்றம் வந்தது? தெருத்தெருவாகத் திரிந்து குறுந்தொகை இலக்கியம் தேடி அதில் ஒவ்வொரு பாடலுக்கும் மிக அருமையாக விளக்கம் சொல்லியிருக்கும் உவேசாவிற்கு அல்குல் எதைக் குறிக்கிறது என்பதைச் சொல்வதற்கு தயக்கமில்லை. தமிழில் அவர் செய்யாத ஆராய்ச்சியா? ஒரு கருத்தை வேண்டுமானால் அவர் சார்புடையவராக வைக்கிறார் என்று சொல்லலாம். ஒரு சொல்லிற்குப் பொருள் சொல்லும் பொழுதா அப்படிச் சார்பு நிலை வரும்.

அபீதகுசம் என்று சொல்லும் பொழுதும் breast cancer என்று சொல்லும் போதும் வராத தயக்கம் அல்குல்லில் ஏன்?

அதைப் புருவம் என்று சொல்கிறது இந்தப் பதிவு.
http://www.tamilauthors.com/01/90.html
நன்றாகப் படித்துப் பாருங்கள். இதை வைத்துக் கொண்டு அல்குல் என்பது அல்குல்தான் என்றும் சொல்லலாம்.

இது தமிழ்ச் சுத்திகரிப்பல்ல. தமிழழிப்பு. :(

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2011/10/2011-9.html

நல்லாயிருக்கேன்னு சொன்னாலும் நமக்கு மனசு கேக்காது டீச்சர். கேக்கக் கூடாது டீச்சர். அதான் பாசம்.

போன வாரம் தங்கையோட பேசுறப்போ மருமகன் ஏதோ வெளையாடும் போது தலைலன்னு ஆரம்பிச்சா... நான் குறுக்க புகுந்து... அவன் விளையாடுறப்போ நீ மண்டைய உள்ள விட்டியாக்கும்னு கேட்டேன். இல்ல... மகளோட தலைல பட்டுருச்சுன்னு சொன்னா. நான் ஒடனே.. என்னது என் மருமகளுக்கு அடி பட்டிருச்சான்னு பதறிப் போய்க் கேட்டேன். இதையெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த பிரதர் இன் லா “ஏண்டா, என் பொண்டாட்டின்னா மண்டைய கொண்டு போய் உள்ள விட்டியான்னு கேக்குற. மருமகன்னதும் ஐயோ மருமகளுக்கு அடிபட்டிருச்சான்னு பதறுற”ன்னு சொன்னாரு. எல்லாரும் சிரிச்சிட்டோம். :)

ஓ! மணி பத்மே ஹூமா? நாங்கூட மணி பத்தே ஹூமோன்னு நெனச்சேன். :)

செரங்கூன் மாலுக்கு என்னவோ பேர் சொல்வாங்களே. அங்க கோமளவிலாஸ்ல காப்பி கெடைக்குமே. அடடா. அதுக்குன்னே அங்க போவேன். மத்தபடி அந்த மாலு ரொம்ப நெரிசல். உள்ளயெல்லாம் போறதில்லை.

பக்கத்துலயே ஒரு மால் கட்டிப் பாத்தாங்க. ஆனா அது காத்தாடுது. மக்களுக்கு இதுதான் பிடிச்சிருக்கு. :)

G.Ragavan said...

http://nchokkan.wordpress.com/2011/10/17/calc-2/

இதெல்லாம் தப்பில்லைங்க.

வீட்ல தெனமும் சமைக்கிறாங்க. ஆனா தெனமும் உப்பு பாப்பாங்க. போட்ட கைக்குத் தெரியாதா? அப்பிடித்தான் இதுவும்.

பூட்டுனா பூட்ட இழுத்துப் பாக்குறதில்லையா? தப்பில்ல சார்.

நான் 43 + 36ன்னா மொதல்ல 40ம் 30ம் கூட்டி 70 ஆக்கி. அத்தோட ஆறையும் மூணையும் கூட்டி ஒம்போதாக்கி .. கடைசியா எழுவத்தொம்பது ஆக்குவேன்.

இந்தப் பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரியாது. ஆனா இது என்னவோ எளிமையா இருக்கு.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2011/10/2011-10.html

ஒரு நல்ல படம் என்ன பண்ணும் தெரியுமா? அதீத இன்பத்தையும் அதீத துன்பத்தையும் மாத்தி மாத்திக் குடுக்கும். மக்கள் உணர்ச்சி வசப்பட்டு ரசிப்பாங்க. உங்க பதிவில் இருக்கும் கலவை அப்படித்தான் இருக்கு.

முருகா, எல்லாரையும் காப்பாத்து.

சிங்கை சரவணபவன்ல எவர்சில்வர் கப்புலதான் காப்பி டீ வரும். சரியா? :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/22/108/

நன்றி சொல்லித் தொடங்குகிறேன். :)

நீங்கள் சொன்னதும் குறுந்தொகையிலிருந்து சிலப்பதிகாரம் பரிபாடல் கந்தபுராணம் இன்னும் பலப்பல நூல்கள் மனதில் வந்தன. ஆனாலும் ஏனோ திருப்புகழ் முந்திக் கொண்டது. ஒன்றா இரண்டா? சந்தங்களை எல்லாம் சொற்களில் சொந்தங்களாக்கிப் பாடிய திருப்புகழில் எதை எடுப்பது? பலவற்றையும் சிந்தித்து தமிழும் மதுரையும் சிறக்கும் இந்தத் திருப்புகழை எடுத்தேன்.

எளிய சொற்கள். ஓரளவு புரியும் மேலோட்டப் பொருள். இனிய சந்தம்.அருணகிரிக்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொன்னாலும் போதாது.

அப்பா அருணகிரி
எத்தனை ஊர்
எத்தனை கோயில்
எத்தனையடிகள் நடந்ததோ உன்னடிகள்
இத்தனைக்கும் ஈடான் முருகனருளே பொருத்தம்
உன்னையும் மதித்து வணங்குகிறோம்

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/22/108/

திருமுருகாற்றுப்படையின் முதல்வரியும் இந்தத் திருப்புகழின் வரியும் சொல்வது ஒன்றுதான்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு - திருமுருகாற்றுப்படை
பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய பவனி வரும்படி அதனாலே - திருப்புகழ்

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாகிய இடைவெளியில் தமிழ் எப்படி மாறியிருக்கிறது பார்த்தீர்களா? :)

இந்தத் திருப்புகழில் நான் மிகவும் ரசித்த சொல்
வரை - மலை - வரை என்றால் எளிதில் தெரியாது. வரையாடு என்று கேள்விப்பட்டிருப்போம். அது மலையில் திரியும் ஆட்டைக் குறிக்கும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/22/108/

கந்தரநுபூதியில் ஒரு வரி உண்டு. அருணகிரி சொன்னதுதான். யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்.

அதன் பொருள் என்ன?

முருகா... ஒன்றும் அறியாமல் இருந்தேன். எதையெதையோ நினைத்து அதில் திளைத்திருந்தேன்.

அப்படியிருந்த நான் இன்றைக்கு ஊரூராகச் சென்று உன்னுடைய திருப்புகழைப் பாடுகின்றேன்.

அப்படிப் பாடுவதற்குரிய கல்வியும் அறிவும் நீயே தந்தாய். ஏன் கொடுத்தாய்?

ஒரு குழந்தையின் மழலைச் சொல் கேட்டு பெற்றோர் பெறும் இன்பத்தை என் வழியாக நீ கேட்டு இன்புற நினைத்தாய்.

பூமியில் இருக்கும் நீர் மேகத்துக்குப் போகிறது. ஆனால் அது அங்கேயே தங்கிவிடுவதில்லை. மீண்டும் பூமிக்கே வருகிறது.

முன்பு பூமியில் இருந்த நீர் கடலில் உப்பு நீராக இருந்தது. அது மேகத்திற்குச் சென்று திரும்பி வருகையில் உலகம் பயன்பெறும் நன்னீராக வருகிறது.

அப்படித்தான் முருகா. யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற நீ தந்தாய்.

ஆகையால்தான் வளமொடு செந்தமிழ் உரை செய நீ அருள வேண்டும். அது போதாது. அந்த வளமையான உரையை அன்பர்கள் மகிழவும் வரங்கள் அருள்வாயே!

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/23/109/

எள் + நெய் = எண்ணெய் என்பது சரியே.

எல்லாமே நெய்தான். ஆனால் மற்ற நெய்கள் எள்ளின் பெயரைத் திருடிக் கொண்டு விட்டதால் எண்ணெய் நல்லெண்ணெய் ஆகி விட்டது.

http://koodal1.blogspot.com/2008/03/blog-post_13.html

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/10/23/109/

சின்ன வயசுல இந்தப் பாவில் வர்ரதெல்லாம் பாத்திருக்கேன்.

பெரிய தயிர்ப்பானைகள். பொதுவா கருப்புப்பானைகள்தான் தயிருக்குப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அந்தப் பானையைத் தொட்டுப் பார்த்தால் வெளியில் சில்லென்று இருக்கும்.

அடுப்பாங்கரையில் ஒரு ஓரத்தில் பெரிய கட்டையை நட்டு வைத்திருப்பார்கள். அதில் கயிறுகள் கிடக்கும். தயிர்ப்பானைகள் மட்டுமல்ல அந்தக் கயிறுகளிலும் தயிர் வீச்சம் அடிக்கும்.

பானையை தரையில் அப்படியே வைக்க மாட்டார்கள். தலைக்கு வைக்கும் சும்மாடு போலவே ஒரு பானைதாங்கியும் இருக்கும்.தயி

மத்தில் கயிறுபட்டுப் பட்டு ஒரு பக்கம் பளபளப்பாகவே தேய்ந்திருக்கும். கடையும் பொழுது மத்து பானைக்குள் எந்த உயரத்தில் இருக்க வேண்டும் என்றும் கணக்கு உண்டு. ரொம்பவும் மேலாக இருந்தால் தயிர் வெளியே சிதறும். ரொம்பவும் கீழாகப் போனால் பானையே உடையும். மத்து சரியாக நடுவில் இருக்க வேண்டும்.

மத்தின் இடுக்குகளிலும் வெண்ணெய் ஒட்டிக்கொண்டிருக்கும். அதையும் வழித்து எடுப்பார்கள். பொதுவாக வெண்ணெய்யை நீண்ட நாள் வைத்திருக்க மாட்டார்கள். காரணம்.... எப்படியும் அடுத்தடுத்து பால் வரும். தயிராகும். கடையப்படும். ஆகையால் ஓரிரு நாளைக்குள் உருக்கி விடுவார்கள். வெயில்காலமென்றால் விரைவிலேயே உருக்கிவிடுவார்கள்.

இந்த வெண்ணெய் கடையில் வாங்கும் வெண்ணெய் போல கட்டியாக இருக்காது. மிருதுவாக இருக்கும்.

நெய் காய்ச்சும் பொழுது தெற்கில் நன்றாகக் காய்ச்சி விடுவார்கள். அரைகுறைக் காய்ச்சல் வீச்சம் போய்விடும். அப்படி நன்றாகக் காய்ச்சிய பொழுது வெற்றிலை, முருங்கையிலை, கருவேப்பிலை ஆகியவற்றை மோரில் நனைத்து நெய்யில் போடுவார்கள். மலைப்பழம் கிடைக்கும் காலங்களில் சிறு மலைப்பழமும் போடும் வழக்கம் உண்டு.

வடித்த பிறகு சட்டியில் இருக்கும் மண்டியில் சோறிட்டு உப்பிட்டுப் பொரிந்த இலைகளோடு பிசைந்து சாப்பிடுவதற்கும் ஒரு அடிதடி நடக்கும். அந்நெய்ச்சுவை இப்பொழுது எங்கும் காணேண்.

G.Ragavan said...

http://ethamil.blogspot.com/2011/10/7.html

என்னுடைய கருத்தைப் பிரதிபலித்திருக்கின்றீர்கள். :)
http://gragavanblog.wordpress.com/2011/10/27/%e0%ae%8f%e0%ae%b4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%9c-%e0%ae%86%e0%ae%a4/

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2011/10/blog-post_31.html

எல்லாரும் சிங்கப்பூர் ஐல ஏறி ஊரப் பாப்பாங்க. இப்ப என்னடான்னா ஓட்டல் மேல ஏறி சிங்கப்பூர் ஐயைப் பாக்குற நெலமை வந்துருச்சே :)

சிங்கப்பூர்ல மல்லிகைப் பூக்கட்டி விக்கிறப்போ அதுல செகப்பா குட்டி ரோஜாக்களையும் சேத்துக் கட்டி விக்கிறாங்க. முழுக்க வெள்ளையா இருக்கக் கூடாதாம்.

பெண்புலியைப் பாத்தவங்களுக்கு வெண்புலியெல்லாம் எம்மாத்திரம்? இந்த உலகத்துல எவ்ளோ செஞ்சாலும் போதாதுன்னு சொல்றது ரெண்டு பேரு. ஒன்னு வயிறு. இன்னோன்னு மனைவி. :)

கடைசியா ஒன்னு... சிப்பி இருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி

G.Ragavan said...

http://nchokkan.wordpress.com/2011/10/31/mm/

படிக்கும் பொழுதே பக்பக்கென்று இருக்கிறது.

survival of the fittest என்று சொல்வார்கள். ஆனால் நிம்மதி இல்லாத survival என்ன பயன்?

நாமாவது நம் குழந்தைகளுக்கு நல்லதைச் சொல்லித் தர வேண்டும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/01/118/

என்னுடைய தெரிவைப் பதிந்ததற்கு நன்றி. :)

தெய்வயானை திருமணம் என்று சொன்னதும் பழம் பாக்களில் கிடைக்கவில்லை. ஆகையால் கச்சியப்பரின் கந்தபுராணத்தில் தெய்வயானை திருமணப் படலத்திலிருந்து இந்தப் பாவை தேர்ந்தெடுத்தேன்.

பின்னாளில் முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை என்று திருப்புகழில் அருணகிரியார் பாடினாலும் தெய்வயானை திருமணப் பாடலாக இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. தெய்வயானை திருமணத்தைப் படலமாகவே பாடிய கச்சியப்பர்தான் உதவிக்கு வந்தார்.

இந்தப் பாட்டில் ஒன்று கவனிக்க வேண்டும்.

கடவுள் என்று போற்றப்படுவதற்கு முருகன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆறுகுழந்தையா இருந்து, ஒன்றாகி, பிரம்மனைச் சிறையிட்டு, மலையைப் பிளந்து, சூர்மா தடித்து, இன்றும் உலகத்தைக் காப்பாற்றிக் கொண்டு... இத்தனை வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யாமல் தெய்வயானை அம்மையார் இறைவியாகி விட்டார் பார்த்தீர்களா?

அஞ்சு வருசம் படிச்சு டாக்டர் ஆவரு ஒருத்தரு. ஆனா அவரைத் திருமணம் செஞ்சுக்கிட்டு டாக்டர் சம்சாரம் ஆயிருவாங்க அந்தம்மா. :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2011/11/blog-post.html

இயற்கைப் பேரழிவு என்பது நம் கட்டுப்பாடுகளையெல்லாம் தாண்டியது. நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் இயற்கை செய்வதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. வலிதான். மருந்து இல்லாத வலி. இயற்கையே எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக!

இந்தப் பதினஞ்சு வயசுப் பிரச்சனை மேற்கத்தியப் பண்பாட்டில் உள்ளதுதானே. நெதர்லாந்தில் பணி புரிந்த பொழுது ஒரு டச்சம்மா குடும்பத்தைப் பற்றி ஊரைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்டார். ஊரைப் பற்றிச் சொன்னதும்... பெற்றோர் இருக்கும் ஊர் எவ்வளவு தூரம் இருக்கும் என்று கேட்டார். பெற்றோர் பெரும்பாலும் என்னோடுதான் இருப்பார்கள் என்று சொன்னேன்.

அவரால் வியப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் படித்து வேலைக்கு வேறு ஊருக்கு வரும் வரை பெற்றோரோடு இருந்தேன் என்பதே அவருக்கு வியப்பு.

what do you for privacy? என்று கேட்டார். It is difficult to be without parents than being without privacy for most of the Indians. இப்படி ஒரு பதிலைச் சொல்லிச் சமாளித்தேன். பிறகு அவர் ரொம்ப நேரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

இவர் இப்படியென்றால் இன்னொருவர் வேறு மாதிரி. கூடப்பிறந்தவர்கள் எத்தனை பேர், என்ன செய்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டார். சகோதரிகளுக்குத் திருமணம் ஆனதைப் பற்றிச் சொன்னேன். இந்தியாவில் திருமண வீட்டில் சாப்பாடு போடுவார்களாமே, உண்மையா? உங்கள் வீட்டிலும் போட்டீர்களா? என்று கேட்டார். ஆமாம். சாப்பாடு போட்டோம் என்றேன். எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்று அடுத்த கேள்வி. ஒரு ஆயிரத்தைனூறிலிருந்து இரண்டாயிரம் இருக்கும் என்றேன். அவரால் அதற்கு மேல் யோசிக்கவே முடியவில்லை. You fed 1500 people? Are you from any royal family of India? இப்படிக் கேட்டார். ஆயிரம் பேர் திருமணத்திற்கு வருவதே அவர்களுக்கு மிகப் பெரிய விஷயம். இதில் அவர்களுக்குச் சாப்பாடு வேறு. நெதர்லாந்தில் அவர் அழைத்தால் ஆயிரம் பேர் திருமணத்திற்கு வர மாட்டார்கள் என்பது ஒன்று... அப்படி வந்தாலும் அவர்களுக்கு உணவிட்டால் அவர் ஓட்டாண்டியாகி விடுவார் என்பதும் உண்மை.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2011/11/blog-post.html

முழுக்க முழுக்க ஒத்துக் கொள்ள வேண்டிய பதிவு.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/06/123/

கவிகள் உணரும் கனிச்சுவை. தமிழ்க்கவிகள் உணரும் கம்பனின் கவிச்சுவை.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய்ச் சுடுகிறது - அந்த
மலருக்கு என் மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது

பாட்டுக்குத் தமிழ்க் கோட்டை பட்டுக்கோட்டை என்றால் கவிகளின் அரசன் நமது கவியரசன் கண்ணதாசன்.

இலக்கியத்தை அப்படியே நமக்குப் புதிதாய் வார்த்துத் தந்தான். நம் நெஞ்சதோடு என்றும் நிற்க எளிமை சேர்த்துத் தந்தான். அவனுக்குப் பின் அதைச் செய்வாரில்லை. கண்ணதாசனுக்குப் பின்னால் வார்த்தை அடுக்குவாரெல்லாம் பெருங்கவி ஆனதே உண்மை. அரசியல் தாளம் தட்டி, அடிப்பொடியாய் மாரும் தட்டி, தமிழுக்குச் சீரும் தட்டி, சிங்காரித்துத் தரும் தமிழ் ஒப்பனையாளரும் ஆனாரே திரைப்படக் கவிஞர் என்று.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/06/123/

வெண்ணிலா எனும் முழுமதி அனல்வாரி மேனி கொதிக்க
தாமரை அதன் மேலவள் காமத் தீயில் வெந்து கொதிக்க
பூசுகின்ற கந்தம் என்பது காய்ந்துடனே சருகாய் உதிர
ஆசையுள்ள பேதை நெஞ்சம் பெரும் போதை மிஞ்ச
தென்றல் தீண்ட வெங்குமிழும் கொண்டதே
பூசைக்குப் பொருளுண்டு கொண்டு பூசை பல செய்தேன் - நெஞ்சத்து
ஆசைக்கு மருந்துண்டோ உண்டு நானும் சுகம் பெறவே?
உண்டென்றும் நெஞ்சறிவேன் வில் தாங்கும் நோயொன்று
எந்நோய்க்கு அந்நோயும் அந்நோய்க்கு எந்நோயும் மருந்தென்று சேர்ப்பீரோ!
இப்படிக்கு,
சனகன் வளர்த்த சீதை

G.Ragavan said...

http://kalaiy.blogspot.com/2011/11/blog-post.html

// Balaji R said...

போதி தர்மன் பற்றி சீனர்கள் தயாரித்த படம் பார்த்தேன்...
அதில் தமிழ் நாட்டில் புத்த மதம் பயின்றவர் போதி தர்மன் என்பது போல் உள்ளது...
இது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று...அப்போது சமணர்கள் இருந்தார்களே தவிர...புத்த மதம் இல்லை...
எந்த நாட்டு சினிமா இருந்தாலும் அதில் சிறிது தவறுகள் இருக்கவே செய்யும் என்பதை உணர்ந்தென்...
பகிர்வுக்கு நன்றி...//

புத்தமதம் தமிழகத்தில் நன்றாகவே இருந்தது. மதுரைக் கூளவாணிகச் சீத்தலைச் சாத்தனார் புத்தரே. மாதவியும் மணிமேகலையும் பூண்டது புத்தத் துறவமே. சமணத் துறவறம் அல்ல. மதுரையில் புத்த விகாரம் இருந்ததை சிலப்பதிகாரம் சொல்கிறது.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/17/134/

பரிபாடலெல்லாம் படிக்கிறீங்களா? :) கடக்குமுடக்குன்னு இருக்கும். கற்கண்டும் அப்படித்தானே. :)

பரிபாடலுக்கும் குதிரை(பரி)க்கும் எந்தத் தொடர்பும் கெடையாது.

பரிந்து வருவதால் பரிபாடல். அகம் புறமெல்லாம் தாண்டி இன்பம் மட்டுமே குறிக்கோளாகப் பரிந்து வரும் பாடல்கள் பரிபாடல்கள்.

நீங்க படிக்கிற பரிபாடற் தொகுப்பு முன்னாடியும் ஒரு பரிபாடற் தொகுப்பு இருந்திருக்கு. ஆனா இப்ப இல்ல. இந்த நூலுக்குப் பிறகும் பிற்காலத்துல சிலர் எழுதியிருக்காங்க.

இந்தப் பரிபாடற் தொகுப்பும் பிற்காலத்து நூலோ என்று ஒரு ஐயமும் உண்டு. ஆனால் கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து முடிவுக்கு வரமுடியாது.

யாருடைய உரையைப் படிக்கின்றீர்கள்? உ.வே.சா திரட்டிய பரிமேலழகர் உரையும் மாணிக்கனாரின் உரையும் என்னிடம் இருக்கிறது.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/17/134/

நீங்க குடுத்திருக்கும் இந்தச் சின்ன விளையாட்டுப் பாடல் ஒரு சிறுகதைக்குள்ள வருது. :)

இந்தப் பாடல் வரிகளை மட்டும் படிக்கிறவங்க, அந்தக் காதலன் அப்பாவின்னும் அந்தப் பொண்ணு ரொம்பப் படுத்துறான்னும் நெனச்சுக்குவாங்க.

ஆனா உண்மை அதுவல்ல. :)

பிரச்சனை முதல் வரியிலயே தொடங்குது. விளியா விருந்து. அதாவது அழையா விருந்தாளி.

தலைவன் இந்தக் காட்சியில் அழையா விருந்தாளி. ஏனென்றால் இந்த வரிகளில் வருகின்றவள் தலைவி அல்லள். அவள் காதற்பரத்தை.

பொய்யாக் குலக்கொடி வையையிலே புதுப்புனல். இளம் பெண்ணின் காதல் உள்ளம் போல வெள்ளம் பொங்கிப் பெருகி வருகின்றது. இப்பொழுதும் ஆற்றில் நீர் வந்தால் போய்ப் பார்ப்பது போலே, அப்பொழுது ஆற்றில் நீர் வந்தால் புதுப்புனலாடுவது வழக்கம். அப்பல்லாம் ஆத்துத் தண்ணி அவ்வளவு நல்லாயிருந்திருக்கு. :)

அப்படி தன்னுடைய தலைவியோடு நீராடிய தலைவன், பரத்தையர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தே அந்தப் பக்கமாக வருகின்றான். அவர்களைத் தேடித்தான். அழையா விருந்தாளியாக. அதுதான் விளியா விருந்து.

அவனுக்கு அவள் புதியவள் அல்ல. ஏற்கனவே போய் வந்த எடந்தான். அதான் அவ கேக்குறா “தாமிவை பணிபொசி பண்ப பண்டெல்லா”. பண்டு.. அதாவது முந்தியெல்லாம் நல்ல தளிராப் பாத்துக் கொண்டு வர்ரவனாச்சே. இப்ப மட்டும் ஏன் “நனியுருவத்தென்னோ துவள் கண்டீ”? அதாவது… தளிர்களெல்லாம் ரொம்பவும்(நனி) துவண்டு(துவள்) போச்சே!

அவளுக்குத் தெரியும் அவனுக்கென்று ஒரு தலைவி இருப்பது. அதான் இதையெல்லாம் கேக்குறா. அவனும் அதையும் இதையும் சொல்லிச் சமாளிக்கிறான். ஒன்னும் படியல. கடைசியா திருப்பரங்குன்றத்து முருகன் மேலையே சத்தியம் செய்றான். அப்பக் கூடயிருக்கும் சில மூத்த கிழவிகள் அவளைப் பேசிச் சரிக்கட்டி அனுப்பி வைக்கிறாங்க.

அதுக்கப்புறம் அவங்க என்ன பண்ணாங்கன்னு பரிபாடல்ல படிச்சிக்கோங்க. :)

பரிபாடலில் முருகன் பாடல்களில் மட்டுமல்ல திருமால் பாடல்களிலும் இடைச்செருகல்கள் உண்டு. பரிமேலழகர் உரையை வைத்துத்தான் பரிபாடல் பாட்டுகள் இப்பக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. திருமாலுக்கும் அதுல இடைச்செருகல்கள் மாயக்கதைகள் எக்கச்சக்கம் உண்டு. பன்றி முகம். தண்ணிக்குள்ள போய் கொம்புல நிலமகளைத் தூக்கீட்டு வர்ரதுன்னு.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/19/136/

இந்தப் பா ரொம்பவே அரிய பா. எப்படீன்னு கேக்குறீங்களா? அணிலாடு முன்றிலார் எழுதிக் கிடைத்த ஒரே பா இதுதான். எட்டுத்தொகை நூலில் இவர் எழுதிய வேறெந்த பாட்டும் இல்லை. ஒருவேளை இவரோட உண்மையான பேர் தெரிஞ்சிருந்தா கண்டுபிடிக்கலாம். ஆனா அவர் எழுதுன பாட்டிலுள்ள வரியே அவருக்குப் பேராகும் அளவுக்கு மக்களுக்கு பாட்டு பிடிச்சுப் போச்சு.

நற்செள்ளையார்தான் காக்கைப்பாடினியார்னு சொல்ல முடிஞ்ச அளவுக்கு இவரோட இயற்பெயர் நமக்குத் தெரியாமப் போனது வருத்தமே!

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/19/136/

மிகமிகச் சரியாகச் சொன்னீர்கள். பெற்றோர்கள் பக்கத்திலேயே இருக்கக் கூடாது என்று இருக்கும் கூட்டமும் உள்ளது. அடிக்கடி போன் செய்து பேசி விட்டால் போதும் என்று நினைக்கும் அக்கறை இல்லாத அக்கரைவாசிகளை நினைத்தால் சற்று எரிச்சலாகத்தான் இருக்கிறது. யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படி எடுத்துக்கொண்டால் மன்னிக்கவும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/19/136/

தன்னைப் பால் என்று சொல்லி அது வீணாகப் போவதை அழகாக “கன்றும் உண்ணாது” பாடலில் எடுத்துச் சொன்னார் வெள்ளிவீதியார்.

இங்கு தன்னை வீடாக உருவகித்து அது வீணாகிக் கிடப்பதை எடுத்துச் சொல்லித் தனிமையை விளக்குகிறார் அணிலாடு முன்றியலார்.

அருந்தினால்தான் பால். வாழ்ந்தால்தான் வீடு. கூடி இருந்தால்தான் உறவு.

இந்தப் பாடலில் இருந்து ஒரு செய்தியையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தக் காலத்திலேயே வளம் குன்றிய பொழுது மக்கள் தாமிருக்கும் இடம் நீங்கி வேறோர் இடம் செல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. அப்பொழுது வீடுகள் வாழும் மக்கள் இல்லாது பாழடைந்து போயிருக்கின்றன.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/25/142/

நல்ல பாடல். தொல்காப்பிய உரையே எழுதலாமே :)

இந்தக் குருளை என்ற சொல் கம்பராமாயணத்தில் ஒரு சுவையான கட்டத்தை நினைவூட்டுகிறது.

கைகேயி வரம் வாங்கி விட்டாள். இந்த விவரம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

அதிலொருவன் இலக்குவன். உடன் பிறந்த பிறப்பின் உண்மையைப் புரியாதொரு மூடநிலையில் சொல்கிறான்.
சிங்கக் குருளைக்கு இடு தீம்
சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை
ஊட்ட விரும்பினாளே!

கைகேயிசைத்தான் நேரடியாகத் தாக்குகிறான். ஆனால் உள்ளே அவன் தாக்குவது பரதனை. இதுதான் இலக்குவனின் சிந்திக்கும் தகுதி.

சிங்கக் குருளைக்கு (இராமன்) ஊட்ட வேண்டிய இனிய சுவையுள்ள உணவினை, கண்பொங்கி ஊழை வடியும் கண்களை உடைய ஒரு நாய்க்குட்டிக்கு (பரதன்) ஊட்ட விரும்பினாளே!

தன்னுடைய தமயனை இப்படிப் பேசும் ஒரு பாத்திரம்தான் இலக்குவன் பாத்திரம்.

இராமன் காட்டிற்குப் போய் பதினான்கு ஆண்டுகள் துன்பப்பட்டார் என்று சொல்வார்கள். அப்படிப் பட்ட அத்தனை துன்பங்களையும் சில நாட்களில் அனுபவித்தான். அவனைப் பெற்ற தாய் அவனைப் புரியாமல் வரம் கேட்டாள். கோசலையோ அவன் ஒன்றும் தெரியாதது போல நடிக்கிறான் என்று நினைத்தாள். இதோ இலக்குவனோ இப்படி. குகனும் பரதனைப் பார்த்ததும் தவறாகத்தானே நினைத்தான். இவர்களெல்லாம் கிடக்கட்டும் வசிட்டன் இருக்கிறானே, அவன் இன்னும் கொடிது செய்தான். பாட்டன் வீட்டிலிருந்து வந்து நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டு வருநதியிருக்கும் பொழுது அவனிடத்தில் போய் “எப்பொழுது பட்டாபிஷேகம் வைக்கட்டும்” என்று கேட்கிறான்.

இப்படி அனைவராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அதனால் பரதன் பட்ட துன்பம் பெரிது என்பதால்தான் தன்னை நிரூபிக்க கடிய பெரிய முடிவுகளை எடுக்கிறான்.

ஏன் இந்த நிலை? சற்று சிந்தித்துப் பார்த்தால் கம்பன் காட்டும் ஒரு உண்மை புரியும். எங்கு தனிமனித வழிபாடு அதிகரிக்கிறதோ, அங்கு அடுத்தவரைப் புரிந்து கொள்ளும் நல்ல பண்பு குறைந்து போகும். இராமன் நல்லவனாகவே இருக்கட்டும். ஆனால் அவன் மீது வைத்த அதீத அன்பும் அளவுக்கு மீறிய வழிபாடும், பின்னாளில் ஆயிரம் இராமனும் உனக்கு ஒக்கார் என்று புகழப்பெற்ற மாண்புடைய பரதன் என்ற ஒப்பற்றவனைப் புரிந்து கொள்ளாத நிலையை உண்டாக்கி விட்டது.

இதை இன்றும் நாம் செய்து கொண்டிருக்கிறோம். நமக்குப் பிடித்த எழுத்தாளர், அரசியல்வாதி, பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், நடிகர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/25/142/

பாராட்டுகளுக்கு நன்றி விஜய்.

இது ஒரு பட்டி மன்றம் போல. இங்கு எல்லாரும் கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு. சொக்கன் தொடக்கி வைப்பார். நான் அதைப் பிடித்துக் கொண்டு எதையாவது சொல்வேன். :) எழுதியதைத் திரும்பப் படிக்கையில் செய்திருக்கும் சிறு தவறுகள் புரிகின்றன. அவைகளை அடுத்த முறையிலிருந்தேனும் நீக்க வேண்டும்.

உயிர் 12. மெய் 18. அவ்வளவுதான். ஆனால் இந்தப் பன்னிரண்டும் பதினெட்டும் கலந்து நம்மை எவ்வளவு சிந்திக்க வைக்கின்றன. பேச வைக்கின்றன. விட்டால் பேச கருத்துகள் உண்டு. அதை எடுத்துச் சொல்ல சொக்கனின் இந்த வலைப்பூவும் உண்டு. :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/26/143/

அருமையான பாடல்.

இந்தப் பாடலுக்குப் போவதற்கு முன்னால் இந்தப் பாடலால் நினைவூட்டப்பட்ட திருவெம்பாவையிலிருந்து சிறு கருத்து. பிறகு பாடலுக்கு வருகிறேன்.

உலகில் அனைத்தையும் மூன்றில் அடக்கிவிடலாம். அவன் அவள் அது. திருநங்கைகளை என்ன செய்வதா? அதை அவர்களே “அவள்” என்று முடிவு செய்து விட்டார்களே. ஆகா மூன்றில் உலகம் அடங்கும். இது மாணிக்கவாசகர் கூற்று.

சற்று வேறு விதமாக சிந்தித்தால் சத்து சித்து ஆனந்தம் ஆகிய மூன்றில் உலகம் அடங்கும். இது சைவை சித்தாந்தம். சத்து சிவன். சித்து சக்தி. ஆனந்தம் முருகன்.

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம். இகம் பரம் என்று இரண்டுதான். ஆனால் இகபரம் என்றும் ஒன்றுண்டு. இகத்தில் இருக்கும் பொழுதே பரத்தை (பரத்தையை அல்ல) நினைக்கும் நிலை. விளக்கமாப் பாப்போம்.

இகம் - இந்த வாழ்க்கை. மண்ணுலகில் குழவியாய் மகவாய் நாம் பிறந்து வாழும் வாழ்க்கை. பரம் - பிறந்ததிலிருந்து எப்போதும் தொடர்பிலிருந்த மண்ணை நீங்கிப் பரவாழ்வுக்குச் செல்வது. இந்த இரண்டிலும் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் உண்டு. ஒரே ஆள்தான். வீட்டில் கணவனாக அனுபவிக்கும் இன்பங்கள் ஒருவகை. அலுவலகத்தில் மேலாளராக அனுபவிக்கும் இன்பங்கள் இன்னொரு வகை. இரண்டும் சரியாக இருக்க வேண்டும். ஒன்றில் குறைவிருந்தாலும் அடுத்த இடத்தில் இடிக்கும்.

இகத்து வாழ்க்கை சரியாக நடந்தால்தால் பரம் பரமசுகம். இகமே சுகமாக இல்லையென்றால் பரம் பம்பரம்தான்.

இகத்துக்கு அருள்வது அம்மை. பரத்துக்கு அருள்வது அப்பன். ஆனால் அது போதுமா? வெளியூருக்குப் போகும் பொழுது அதற்கு முன்னேற்பாடுகளை செய்து கொண்டுதானே புறப்படுகிறோம். அது போல இகத்தில் இருக்கும் பொழுதே பரத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதுதான் இகபரம். அதற்கு அருள வேண்டியது அம்மையப்பன் (அதாவது முருகன்).

இதையே இன்னமும் அழகாகச் சுருக்கிக் கச்சியப்பர் கந்தபுராணத்தில் எழுதியிருக்கிறார். எப்படி?

தோடுடைய செவியன் ஒருபுறம். மரகதமங்கை மறுபுரம். இருவருக்கும் இடையில் குழந்தை முருகன் தகப்பன் மடியில் அமர்ந்திருக்கிறான். இந்தக் காட்சி எப்படியிருக்கிறதாம்?

ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலனாகிய குமரவேள் நடுவுரும் பான்மை
ஞாலமேவுரும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்

இரவு பகல் என்று நாளை இரண்டாகப் பிரித்தான். பகலில் வெயில். இரவில் இருட்டு. பகலில் சூரியன். இரவில் சந்திரன். பகலில் செய்வதற்குக் கடமைகள். இரவில் செய்வதற்கும் கடமைகள். ஆனால் அத்தோடு முடிகிறதா? பகலானது இரவாக மாறத் தொடங்கும் மாலைப்பொழுது ஒன்று இருக்கிறது.

பகலுக்குரிய வெளிச்சம் உண்டு. ஆனால் வெம்மை இல்லை. இரவிற்குரிய குளுமை உண்டு. ஆனால் இருட்டு இல்லை. இப்படி இரண்டின் நல்ல பண்புகள் இணையும் மாலை இனிமையானது என்பது நாம் அனைவரும் ஒப்புக் கொள்வது.

அப்படி பகலுக்கும் இரவுக்கும் நடுவில் இனிமையான மாலையாக முருகப் பெருமான் அம்மைக்கும் அப்பனுக்கும் நடுவில் இருக்கிறார்.

இதுதான் மூன்றில் உலகம் அடங்கும் வகை. இன்னும் விரித்துச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதுவே போதுமானது.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/26/143/

சரி. பாடலுக்கு வருவோம்.

அபிராமி பட்டர் சொன்னதற்கும் நம்மாழ்வாரின் அருளிச் செயலில் சொன்னதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் நல்ல கருத்துகள்தான். ஆனால் இந்த வரிகளை வைத்துப் பார்த்தால் சொல்லும் கருத்துகள் வேறு.

ஆழ்வார் அனைத்தையும் பார்க்கிறார். உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. விழிக்கிறது. உழைக்கிறது. உறங்குகிறது. இப்படி உலகத்தோடேயே இயங்கி உகவுகமாய் (யுகயுகங்களாய்) உலக உயிர்களைக் காப்பவன் என்று நாராயணனைப் புகழ்கிறார் நம்மாழ்வார்.

பட்டர் சிந்திப்பது வேறு வகையில். இன்னும் சொல்லப்போனால் முதல் வரியிலேயே பாடல் முடிந்து விடுகிறது. இலக்கணத்திற்காக அடுத்து மூன்று வரிகள். அவைகளும் சுவையானவைதான். நாம் முதலடியை மட்டும் பார்ப்போம்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை

இதற்கு எப்பொழுதும் உன்னையே நினைக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே? அதென்ன நின்று இருந்து கிடந்து நடந்து எனச் சொல்வது?

நாமெல்லாம் குழந்தைகளாகத்தான் இந்த உலகில் பிறக்கிறோம். பிறந்த பொழுதிலிருந்தே உண்கின்றோம். மூச்சு விடுகிறோம். மலம் கழிக்கிறோம். அப்படியிருக்கும் பொழுது நாம் அன்னையின் முழுக்கட்டுப்பாட்டில்தான் இருக்கிறோம். எது நடந்தாலும் அவள் பொறுப்பு.

ஆனால் எப்பொழுது நிலை மாறுகிறது. படுத்துத் தவழ்ந்து உருண்டு விளையாடிக்கொண்டிருக்கும் நாம் எழுந்து நிற்கும் பொழுது நிலைமை மாறிவிடுகிறது. வாழ்க்கையில் முதன்முறையாக நம்முடைய கால்களால் நிற்கிறோம். அப்பொழுதுதான் வாழ்க்கை முறையே மாறத்தொடங்குகிறது. பிடிக்க வரும் அன்னையிடமிருந்து கூட ஓடும் வேகம் வருகிறது. அதற்கு எழுந்து நிற்பது வாழ்வின் முதல் நிலை.

அடுத்து என்ன? இருப்பது. வாழ்க்கையை வாழ்ந்து இருப்பது. அவரவர்க்கு வாய்க்கப்பட்ட வகையில் இந்த உலகத்தில் வாழ்ந்து இருப்பது வாழ்வின் அடுத்த நிலை.

வாழ்வின் இன்பதுன்பங்களையெல்லாம் பட்டுத் தெரிந்து நொந்து வயதேறி நலங்குன்றி கட்டிலில் கிடப்பது அடுத்த நிலை. நேரம் எப்பொழுது வருமோ என்று காத்துக் கிடப்பது.

ஆவி போனதும் நால்வர் துணையோடு இறுதி யாத்திரை நடப்பது இறுதி நிலை.

இப்படியான வாழ்க்கை நிலைகளை எல்லாம் சொல்லி, இந்த வாழ்க்கை முழுவதும் நினைப்பது அம்மையே உன்னைத்தான் என்கிறார் பட்டர்.

இது ஒருவகைப் பொருள்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/26/143/

இரண்டாவது பொருளுக்கு வருவோம்.

நாமெல்லாம் கோயிலுக்குச் செல்கிறோம். அங்கு என்னென்ன செய்து இறைவனை வணங்குகிறோம்? புளியோதரையில் புரந்தரியையும் சர்க்கரைப் பொங்கலில் சங்கரியையும் பார்த்து வணங்கி விழுங்கி மரியாதை செய்வது ஒருவகை. அதை இங்கே இப்பொழுது பேச வேண்டாம். :)

கோயிலுக்குச் செல்கிறோம். இறைவன் முன்னால் நிற்கிறோம். அவனுக்குச் செய்யும் பூசனைகளைக் கண்டு மெய்மறந்து இருக்கிறோம். இறைவன் திருவடிகளில் விழுந்து கிடந்து வணங்குகிறோம். அவனைச் சுற்றி நடந்து வலம் செய்து வழிபடுகிறோம்.

இப்படித் திருக்கோயிலில் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நாமெல்லம் இறைவியை நினைக்க வேண்டும் என்பதற்காக பட்டர் சொன்ன பாடல் இது.

இது இன்னொரு பொருள்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/27/144/

பரிபாடல். சற்று வில்லங்கமான பெயர். காரணம் இன்றைக்குக் கிடைத்திருக்கும் பாக்களும் அவைகளில் உள்ள இடைச்செறுகல்களும்.

பரிபாடல் தொகுப்பு ஒன்று முற்றிலும் காணாமல் போனதாகவும் ஒரு செய்தி சொல்கிறது. இப்பொழுது பரிபாடல் என்று சங்க இலக்கிய வரிசையில் எட்டுட்தொகை நூல்களில் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும் பரிபாடல் முழுமையாகக் கிடைக்கவில்லை.

எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்டவை என்பது நாம் அறிந்தது. முதலில் தொகுக்கப்பட்டது குறுந்தொகை என்று உ.வே.சா அவர்களும் மற்ற தமிழறிஞர்களும் நன்கு ஆய்ந்து தோய்ந்து ஒப்புக்கொள்கிறார்கள்.

அப்படித் தொகுக்கப்பட்ட நூல்தான் பரிபாடல். நாம் செய்த நற்பயனால் மற்ற நூல்கள் முழுதும் கிடைத்தன. பிரதிபேதங்களைக் கண்டு திருத்தி வெளியிடும் அளவிற்குச் சுவடிகள் கிடைத்தன.

ஆனால் பரிபாடலின் நிலைமை அப்படியல்ல. பரிமேலழகர் பின்னாளில் செய்த உரையில் கொஞ்சம் ஓலைகள் மிச்சமிருந்து எப்படியோக் கிடைத்தன.

ஒரு பழைய வெண்பாவின் படி,
திருமாலுக்கு - 8
செவ்வேளுக்கு (முருகன்) - 31
காடுகாண் கிழாருக்கு - 1 (காட்கோள் என்றும் பிரதிபேதம் உண்டு)
வையை (வைகை அல்ல) - 26
மதுரைக்கு - 4
இத்தனை பாடல்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இருப்பது வெறும் 22தான்.

இதில் வையை ஆற்றை வைகை அல்ல என்று சொன்னதற்கும் காரணம் உண்டு. வையை என்பதே உண்மையான பெயர். எப்பொழுது வைகை ஆனதென்று தெரியவில்லை.

மற்ற சங்கநூல்களை விட பரிபாடலில் புராணத்தனமான வரிகளும் கதைகளும் வருவதால் இடைச்செருகல் மிகுந்ததென அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பின்னாளிலும் பல பரிபாடல்கள் வந்ததால் சரியாகக் கணிக்க முடியாத அளவுக்குச் சுவடித் தரவுகள் கிடைக்கவில்லை. சரி. இருப்பவைகளைப் பார்ப்போம்.

நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் பாடலைப் பார்த்ததும் இது சங்கப்பாடல் அல்ல என்று எளிதாகக் கூறிவிடலாம். பரிபாடல் என்பது வெண்பாவைச் சார்ந்ததுதானே.

மேற்கூரிய காரணங்களால்தான் பொதுவாகவே பரிபாடலில் இருந்து எடுத்தாள்வது குறைவு.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/11/25/142/

@dagalti

பின்னவன் பெற்ற செல்வன் யான் பெற்ற செல்வம்னு ராமன் புரிஞ்சிக்கிறது சரி.

நாமும் ராமனை இப்படி உசத்தியாக வைத்து பரதனை அதன் மூலம் உயர்த்த வேண்டுமா? :)

சரி. ராமன் மட்டுமா பரதனைப் புரிந்து கொண்டான்? இல்லை.

பெற்றவள் கைகேயி. அவளிடம் கூட ராமன் பெயரைச் சொல்லித்தான் வரத்தையே கேட்க வைக்க முடிகிறது தசரதனால். அந்த அளவிற்கு ராமனைத் தன் மகனாய் நினைத்த தாய். ஆனால் தன் மகனை?

அகிலமெல்லாம் ஆளும் ஆண்டவனைக் கும்பியில் சூல் கொண்டு பெற்ற கோசலை? கைகேயி மாற்றாள் மகனைத் தன் மகன் என்று எண்ணிய எண்ணியது போல கோசலை பரதனை எண்ணவில்லை. அப்படி எண்ணியிருந்தால் பரதன் வந்ததும் அழுது புரண்டிருப்பாள். ஆனால் அவளோ பரதன் நடிப்பதாகத்தான் நினைக்க முடிந்தது.

கூடவே பிறந்த பிறப்பு. அறிவிற் சிறந்த சுமத்தரை பெற்ற மகனோ பரதனை நாய் என்றான்.

வசிட்டன், குகன் என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளாத நிலை.

அப்பொழுது ஒரு கூட்டம் பரதனைப் புரிந்து கொண்டது.

அண்ணனைத் தேடி வருகிறான் பரதன். ராமனை அழிக்கத்தான் வந்தானோ என்று படபட வீரவசனங்களை அள்ளி வீசுகிறான் குகன். ஆனால் அவன் கூட்டம்? எளிமையே வாழ்க்கையாக வாழும் அந்தக் கூட்டம்? அது புரிந்து கொண்டது பரதனை. இதற்கு முன்பு பார்த்ததும் கிடையாது. குகனுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் அவர்களுக்கும் தெரியும்.

ஆனால் அவர்கள் கண்ணுக்கு பரதனின் பண்பு பார்த்ததும் புரிந்து விட்டது. ஏன்? அவர்கள் தனி மனித வழிபாட்டில் இல்லை. ஆகையால்தான் தலைவன் கொக்கரித்த போதும் அமைதியே காத்தனர். அவர்கள் அமைதியையும் பரதன் அருகில் வந்த கோலத்தையும் சிந்துத்துத்தான் குகனே வேறு மாதிரி யோசித்து பரதனைப் புரிந்து கொள்கிறான்.

ராமன் புரிந்து கொண்டது ஒரு பொருட்டே அல்ல. அவந்தான் ஆண்டவனாமே. புரியாமல் போனால்தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால் அந்தக் கங்கைக் கரை வேடுவர்கள்? அவர்களை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/12/03/150/

நூற்றைம்பது பாக்கள். அதிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பா. ஒவ்வொரு நூல். ஒவ்வொரு நூற்றாண்டு. ஒவ்வொரு புலவர். இது எளிய செயல் அல்ல.

வெளிநாடு போனாலும், வெளியூர் போனாலும், அது ஆனாலும், இது ஆகாவிட்டாலும், தவறாமல் வந்து விடும் பாக்கள்.

எங்களையும் சொல்லிப் பெருமைப் படுத்தியிருக்கிறான் என்.சொக்கன். அதற்கு நன்றி. ஆனால் நாம் இன்றும் பார்த்து வியக்கும் அவரின் உழைப்புக்குதான் முதல் மதிப்பு இங்கு.

ஆற்றுக்குத் துறை கட்டுவதும் நூலுக்கு உரை கட்டுவதும் எளிய செயல்களே அல்ல. செய்யும் மனத்துணிவும் உடற்துணிவும் தேவை. எத்தனையோ நூல்களை என்.சொக்கன் அவர்களே எழுதி விட்டார். எத்தனை இதழ்களில் தொடர் கட்டுரைகள். அப்படியிருப்பவர் இப்படி ஒன்றைச் செய்யத்தான் வேண்டுமா? வேண்டும் என்று அவரே சொல்லிச் செய்கிறார். ஏன்? ஈடுபாடு. நமக்கெல்லாம் ஒரு பாடமாய்ச் செய்யும் தமிழ்த்தொண்டுக்கு எனது பாராட்டுகள்.

இந்த நூல்கள் இருப்பது பலருக்குத் தெரியும். அவைகளுக்கு உரைகளும் இருப்பது பலருக்குத் தெரியும். ஆனால் யார் எடுத்தார்? யார் வலைப்பூவில் தொடுத்தார்? இவர்தான் செய்தார். ஓடும் தேரோட அதில் ஆடும் மணியாக எங்களைப் போன்றோரின் பின்னூட்டங்கள். மணியில்லாமலும் தேரோடும். தேரில்லாமல் மணியாடாது. :) ஆகையால் இதற்கான முழுப் பெருமையும் இனிய நண்பர் என்.சொக்கன் அவர்களுக்கே என்பது என் கருத்து.

நான் ரசிகன். அந்த ரசிப்புக்குத் தீனி போடுகின்றது இந்த வலைப்பூ. அதற்கு என்னுடைய நன்றி பல. :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/12/04/151/

இந்தப் பாடலில் ஒரு உண்மை உள்ளது. நாம் கண்டிப்பாக உணர்ந்து கொள்ள வேண்டியது.

முதலில் மேலோட்டமாக பார்த்து விட்டு ஆழமாகப் போகலாம்.

இன்றைக்குப் பல நோய்களுக்குக் காரணம் stress எனப்படும் மன அழுத்தம். ஆகையால்தான் முன்பெல்லாம் அரிதாக இருந்த மாரடைப்பு இப்பொழுது இளம் வயதினரையும் தாக்கத் தொடங்கியிருப்பது.

அது மட்டுமல்ல மன அழுத்தம் தொடர்பாக பலப்பல நோய்கள் வருகின்றன. ஏற்கனவே அழுத்தம் கொடுக்கும் துன்பம். அத்தோடு இந்த நோய்கள் கொடுக்கும் துன்பம் என்று வாழ்க்கை துன்பமயமாகிறது.

ஒருவருக்கு மன அழுத்தம் எப்படி வருகிறது? குடும்பத்தினர், அலுவலகத்தினர், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், மற்றும் நாம் தொடர்பு கொள்ளும் அனைவரும் காரணமாக ஆக வாய்ப்பிருக்கிறது.

எல்லாருக்கும் எல்லாமும் அமைந்து விடுவதில்லை. குடும்பத்திலும் கூட. ஆகையால்தான் ஏறுக்கு மாறானால் கூசாமல் சன்யாசம் கொள் என்றாள் ஒரு தமிழ்க் கிழவி. சற்றே வேறு விதமாக “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

வீட்டில் நொச்சுப்பட்டும் அலுவலகத்தில் நச்சுப்பட்டும் நண்பன் என்ற பெயர் வைத்துக் கொண்டவர்களிடத்திலும் உற்றார் உறவினர்களிடத்தில் சீழ்ப்பட்டும் ஒருத்தன் இருந்தால் அவன் எப்படி நன்றாக இருப்பான்?

பிசிராந்தையார் என்ன தவமெல்லாம் செய்தாரோ! அவருக்கு எல்லாமும் நன்றாக அமைந்து விட்டது. அதன் பலன் என்ன? நல்வாழ்வு. நிம்மதி. நல்ல உடல்நிலை.

நிம்மதி மிகப் பெரிது. சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ஒன்று உண்டு. முருகன் பாடல்தான். பழநி மலை முருகா பழம் நீ திருக்குமாரா என்று தொடங்கும் அழகான பாடல்.

அதில் வரிகள் இப்படி வரும்.
இளமை நில்லாது
யாக்கையோ நிலையாது
வளமையோ செல்வமோ பயனொன்றும் தாராது
நிலமை இதுவாகத்
தலைமைப் பொருளாக
நிம்மதியை எந்தனுக்குத்தா முருகா
நிம்மதியை எந்தனுக்குத்தா

நானும் நாளும் முருகனிடம் வேண்டுவது நிம்மதியைத்தான்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/12/04/151/

// மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர் //

மாண் = மாண்பு

நுண்மாண் நுழைபுலன் இல்லான் என்ற குறளிலும் வருகின்றதே.

மாண்பு கொண்ட = மாண்ட

உண் - உண்ட
கொள் - கொண்ட
மாண் - மாண்ட

மனைவி மாண்புடையவள். அப்படியானால் அவர்களுக்குள் இன்பம் மட்டுமே இருக்கும். அவர்களுக்கு மக்களும் உண்டு.

அந்த மக்களும் மனைவியும் நிரம்பியவர்கள் ஆவர். என்ன நிரம்பியவர்கள்? அறிவுச் செல்வம் நிரம்பியவர்கள். அறிவுச் செல்வம் நிரம்பியவர்களுக்கு எதையும் சிந்தித்துச் செயலாற்றும் திறன் இருக்கும். இல்லையென்றால் குடும்பத்திற்குள் emotional blackmail தான் இருக்கும். அது நல்லதல்ல. அந்தச் சூழ்நிலையில் எரிச்சலும் சண்டையுந்தான் உண்டாகும்.

// யான் கண்டு அனையர் என் இளையரும் //

இங்கு இளையர் என்பவர் பிசிராந்தையாரிடத்துப் பணிபுரிகின்றவர்கள். அவர் புலவராயினும் உழவர். புலமை மாணாக்கர்களோடு உழவரும் உளர். இவர்கள் பிசிராந்தையாரின் எண்ணத்தைப் புரிந்து அதற்குத் தக்க செயலாற்றும் ஆற்றல் மிக்கவர்கள். அவர்களிடமும் எரிந்து விழுந்து அதட்டிப் பேசத் தேவையில்லை.

// வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் //

வேந்தன் நல்லவன். அவனுடைய ஆட்சி மாட்சி நிறைந்ததாக இருக்கிறது. ஆகையால் வருத்தமோ ஆத்திரமோ இல்லை. சாலைகள் குண்டும் குழியாக இருக்கிறதே என்று தினமும் தேரோட்டும் பொழுது எரிச்சல் வருவதில்லை. நாட்டில் குப்பைகள் பெருகுகின்றனவே என்று அடிக்கடி மூக்கைப் பொத்திக் கொண்டு வருத்தப்படத் தேவையில்லை. தேவையான அளவிற்கு நீர்ப்பாசன வசதி செய்யவில்லையே என்று தொழிலுக்காகவும் வாழ்வியலுக்காகவும் வீண்கவலை கொள்ளத் தேவையில்லை. இப்படி எல்லா விதத்திலும் சிறப்பானதொரு ஆட்சியை மன்னன் ஆண்டு கொண்டிருக்கிறான்.

அப்படியொரு இன்பம் நிறைந்த வாழ்வு என்னுடையது. அதுதான் இத்தனை வயதாகியும் நரையில்லாதவனாகவும் உடல் நலம் மிக்கவனாகவும் வாழ முடிகிறது என்கிறார் பிசிராந்தையார்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/12/04/151/

நன்றி. :)

சில சொற்கள் முதலில் புரியாது. ஆனால் கொஞ்சம் விளக்கினால் நமக்குத் தெரிந்த பொருளாகவே இருக்கும்.

எளிய எடுத்துக்காட்டு வளி. வளி என்றால் காற்று. பொதுவாக மக்களுக்குத் தெரியாது. ஆனால் சூறாவளி தெரியும். :) அதைச் சொல்லி இதைச் சொன்னால் மக்களுக்குப் புரியும்.

கலிழும் கண்கள் என்று ஒரு சொல்லாடல். என்னடாவென்று பார்த்தால் கலங்கியழும் கண்கள் என்று பொருள். :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2011/12/blog-post.html

பத்து பத்தாதுன்னாலும், எனக்குத் தோணுன பத்து :)

1. வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
2. மெட்டி ஒலி காற்றோடு என்னெஞ்சைத் தாலாட்ட
3. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
4. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
5. நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
6. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
7. சின்னத்தாயவள் தந்த ராசாவே
8. ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு
9. முத்துமணி மால ஒன்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட
10. நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2011/12/blog-post.html

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

அஸ்பாரகஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நெதர்லாந்துல இருந்தப்போ அஸ்பாரகஸ் சூப்பாக் குடிச்சேன். இந்தியாவுல கெடைக்கலையே. நான் என்ன பண்ணுவேன். :(

இப்பிடி ஞாவகப்படுத்தி விட்டுட்டீங்களே டீச்சர். :(

G.Ragavan said...

மிக அருமையானதொரு பாடலை இன்றைக்கு இட்டமைக்கு என்.சொக்கனுக்கு நன்றி. :)

முதலில் தேவாரம் பற்றிச் சில செய்திகள் பார்ப்போம். பிறகு பாட்டுக்கு வருவோம்.

பொதுவாக அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோர் அருளியது தேவாரம் என்று வழக்கு உள்ளது.

ஆனால் அப்பர் அருளியதுதான் தேவாரம். அப்பரின் தேவாரம் சிறப்புப் பெற்று மற்றவர் நூல்களும் தேவாரம் என்றே வழங்கப்படலாயின.

அப்பர் - தேவாரம்
ஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு
சுந்தரர் - திருப்பாட்டு

இவைதான் முறையே மூவரும் அருளியவை. இன்றைக்கும் அனைத்தும் தேவாரம் என்றழைக்கப்படுகிறது. இது திருநாவுக்கரசருக்குப் பெருமையே.

பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. ராஜராஜசோழன் ஆட்சியில் தொகுத்தார். இது குறித்து முன்பு எழுதிய சிறுகதை இங்கே. பொற்சிலையும் சொற்குவையும் என்று தேடினால் பல இடங்களில் இந்தக் கதையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
http://gragavan.blogspot.com/2005/11/blog-post.html

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/12/09/156/

சரி. பாட்டுக்கு வருவோம்.

இந்தப் பாட்டுல எத்தன விளக்கு இருக்கு? நாலு விளக்குகள் இருக்கு. விளக்குன்னா என்ன?

அதுக்கு முன்னாடி.. பாட்டு “இல்”னு தொடங்குது. இல் என்றால் வீடு. வீடுன்னா என்ன?

தொல்காப்பியர் சொன்ன மாதிரி எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு. பொருள் இல்லாத சொல் இல்லவே இல்லை.

வீடுன்னு சொல்றமே. அப்படீன்னா என்ன?
விடுவது வீடு
படுவது பாடு
கெடுவது கேடு

முடிஞ்ச வரைக்கும் எளிமையாச் சொல்றேன்.

மழை, வெயில், இடி, மின்னல் இப்படிப் பலவிதப்பட்ட துன்பங்களை நம்மிடமிருந்து விடுவிப்பது வீடு.

மழை, வெயில், இடி மின்னல் இப்படிப் பலவிதப்பட்ட துன்பங்களைப் படுவது நம்முடைய பாடு.

மழை, வெயில், இடி, மின்னல் இப்படிப் பலவிதப் பட்ட துன்பங்களால் நமக்குக் கெடுவது கேடு.

இது பொதுப்பொருள். தத்துவப் பொருளை பார்ப்போம். நாம் ”பாடு”பட்டுக் ”கேடு”கெட்டுப் போனாலும் அவைகளில் இருந்து காப்பது இறைவனின் வீடு. (வீடுபேறு).

அது போல விளக்குன்னா? விளக்கி வைப்பது விளக்கு. எதை விளக்கி வைப்பது?

வீடுதான் நல்லதுன்னு சொல்லியாச்சு. அதுதான் காப்பாத்தும்னும் சொல்லியாச்சு. அந்த வீடு எங்க இருக்குன்னு தெரிய வேண்டாமா? இதுதான் வீடுன்னு நமக்கு விளக்கி வைப்பது விளக்கு. அந்த வீட்டுக்குள் என்னென்ன ஏதென்ன இருக்குன்னு வெளிச்சமிட்டு விளக்கி வைப்பது விளக்கு.

இதுவரைக்கும் வீட்டுக்கும் விளக்குக்கும்தான் பொருள் பாத்திருக்கோம். அடுத்த பின்னூட்டத்துல பாடலுக்குப் போவோம்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/12/09/156/

இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது,
சொல் அக விளக்கு அது, சோதி உள்ளது,
பல் அக விளக்கு அது, பலரும் காண்பது,
நல் அக விளக்கு அது, நமச்சிவாயவே!

இதுதான் திருநாவுக்கரசின் பதிகம். இந்தப் பதிகத்துல நாலு வரிகள் இருக்குன்னு சொல்றத விட நாலு படிகள் இருக்குன்னு சொல்றது பொருத்தம். நாலாவது படிதான் பெரும்படி. இப்போ ஒவ்வொரு படியா ஏறுவோம்.

முதற்படி

இல் அக விளக்கு - வீட்டிற்கு உள்ளே இருக்கும் விளக்கு
வீட்டுக்குள்ளே இருக்கும் விளக்கு, உள்ளேயிருக்கும் இருளைப் போக்கும்.

இருள் எங்க இருக்கும்? இருள்னு ஒன்னு தனியாக் கெடையாது. வெளிச்சம் இல்லாம இருக்குறதுதான் இருள். வெளிச்சம் எல்லாத்தையும் காட்டும். இருள் எதையுமே காட்டாது. நம்ம உள்ளத்துல இருட்டு இருந்தா நல்லது எதுவுமே தெரியாது.

அந்த இருள் விலகுனாத்தான் நல்லது கெட்டது நல்லாத் தெரியும். எப்படி இருட்ட விலக்குறது. விளக்கு விலக்கும். ஆன்மாவாகிய வீட்டுக்குள்ளே அருட்பெருஞ்சோதி என்ற கருணை விளக்கு இருந்தால் நன்மை தீமைகள் விளங்கி அறியாமை இருள் நீங்கும்.

அப்பாடி... ஒரு படி ஏறியாச்சு. அடுத்த படி என்ன?

சொல் அக விளக்கு - சொல்லுக்குள் இருக்கும் விளக்கு

அறியாமை இருள் விலகியாச்சு. இப்போ நல்லது கெட்டது புரிஞ்சு தெளிஞ்சாச்சு. தெளிஞ்சவன் என்ன செய்வான்? அந்த நல்லத எடுத்து நாலு பேருக்குச் சொல்வான். அதையும் இறைவன் பெயரால் சொல்வான்.

“யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்” என்று அருணகிரியார் பாடுகிறார்.

அப்படிச் சொல்லும் சொல்லுக்கும் உள்ளுக்கு இருப்பது எது? சோதி. இல்லுக்குள் இருந்த அதே அருப்பெருஞ்சோதி.

ஒரு விளக்குல இருந்து இன்னொரு விளக்கு பொருத்துற மாதிரி, இல்லில் இருந்து வெளிச்சம் சொல்லில் வந்தது.

சொல்லுக்குச் சோதி வந்த கதை இதுதான்.

நம்முடைய உள்ளத்தில் அறியாமை போனால் பேசுகின்ற பேச்சும் சுடர் விடும்.

இரண்டாவது படியும் ஏறியாச்சு. அடுத்து?

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/12/09/156/

ரெண்டாவது படி போதுமா? போதாது. மூணாவது படிக்குப் போவோம்.

பல் அக விளக்கு அது பலரும் காண்பது

பல் - பன்மை

நமக்குள்ள எத்தனை பிரிவுகள். மதங்கள் எத்தனை. மொழிகள் எத்தனை. இனங்கள் எத்தனை. எண்ணங்கள் எத்தனை.

இப்படியெல்லாம் பலவிதமாகப் பிரிந்தாலும், பலரும் பார்க்கும் ஒரு விளக்கு ஒரே விளக்கு.

ஆண்டவனின் அருள் விளக்குன்னு சொல்லலாம். சூரியன்னும் சொல்லலாம். இந்து சூரியன், கிருத்துவ சூரியன்னு பல சூரியன்கள் கெடையாது. ஒன்னுதான். இந்தியால பாத்தாலும் அதே சூரியன். ஐரோப்பால பாத்தாலும் அதே சூரியன்.

ஆனா ஒவ்வொருத்தரும் சூரியனைப் பாக்குறாங்க.

இப்படிப் பலர் பார்க்கும் விளக்கு முன்பு சொன்ன அதே அருட்பெருஞ்சோதி விளக்கு.

இன்னும் எளிமையாச் சொல்றேன். அருட்பெருஞ்சோதியை இல்லத்தில் கண்டு சொல்லில் சொன்ன பெருமக்கள் பலர். அதுவும் பலப்பல மொழிகளில். ஒரு விளக்கு இல்லில் இருந்து சொல்லாகிப் பல்லாகியிருக்கிறது (பலவாகியிருக்கிறது).

இப்படி எந்த வகையில் உணர்ந்தாலும் உணரப்படுவது ஒரே சுடர்தான்.

அதுதான் பல் அக விளக்கு - பலவற்றின் உள்ளே இருக்கும் விளக்கு பலரும் காண்பது.

மூணுபடி தாண்டியாச்சு. நாலாவது படியான பெரும்படிக்கு வருவோம்.

நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!

மூன்று படிகளை முறையாய் ஏறிய ஒரு உள்ளமானது உள்ளத்தில் நல்ல உள்ளம் தானே. அதை நல்ல அகம் - நல் அகம் என்று சொல்லலாமா!

இப்படி மூன்று படிகளை ஏறி வந்த நல்ல உள்ளம் நான்காவது படியில் காணும் விளக்கு நமச்சிவாய விளக்கு.

சரி. வேற விதமாவுஞ் சொல்லலாம்.

மாதா, பிதா, குரு, தெய்வம்

மாதா - இல்
பிதா - சொல்
குரு - பல்
தெய்வம் - நல்

இவைகள்

ஈன்று புறந்தருதல் தாய். அதனாலதான் தாயிற் சிறந்த கோயில்(இல்) இல்லைன்னு சொல்றோம்.

அந்தத் தாய் முதல் விளக்கு. அந்தத் தாய் சொன்னாத்தான் தந்தை.

தந்தை இரண்டாவது விளக்கு. அதுனாலதான் தந்தை “சொல்” மிக்க மந்திரம் இல்லைன்னு சொல்றோம்.

குரு - ஆசிரியர். நாம இந்த உலகத்தில் ஒருத்தரிடம் மட்டுமா பாடம் படிக்கிறோம். பாக்குற பழகுற ஒவ்வொருத்தரிடமும் பாடம் படிக்கிறோம். “பல”ரிடம் பாடம் படிக்கிறோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விளக்குதான்.

இப்படி இந்த விளக்குகளெல்லாம் முறையாக வழிகாட்டி நாம் தெரிந்து கொள்வது நல் விளக்கு. அதுதான் நமச்சிவாய அருட்பெருஞ்சோதி.

ஏன் சோதி? ஒரு சுடரில் இருந்து பல சுடர்களை உண்டாக்கலாம். அதுவுமில்லாமல் சுடர் கீழ் நோக்கிப் போகாது. மேல் நோக்கித்தான் போகும். எண்ணங்களும் மேல் நோக்கித்தான் போகனும். அதுதான் நல்லது.

இந்த கார்த்திகைத் திருநாளில் இப்படியொரு அருமையான பதிகத்தைக் கொடுத்து அதற்குப் பொருளும் சொல்ல வைத்த என்.சொக்கனுக்கு நன்றி.

இன்னும் விரிச்சுச் சொல்லிக்கிட்டேயிருக்கலாம். அது தேவையில்லை. சொல்ல வந்தது புரிஞ்சிருச்சுன்னா அங்கயே நிருத்தீரனும். அதான் இங்க நிருத்தியாச்சு. :)

G.Ragavan said...

http://tamildoubt.blogspot.com/2011/10/blog-post_21.html

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்னும் ஒரு பாட்டு உண்டே.

புரத்துக்கும் புறத்துக்கும் நல்ல விளக்கம்.

புதுசாத் தொடங்கீருக்கீங்க. வாழ்த்துகள். ரீடர்ல சேத்தாச்சு :)

G.Ragavan said...

http://tamildoubt.blogspot.com/2011/12/blog-post_14.html

பயில்வித்தேன் சரியான சொற்றொடராகத் தெரியவில்லை. பயிற்றுவித்தேன் என்றுதான் நான் படித்திருக்கிறேன். செயல் - செய்வித்தேன். செயல்வித்தேன் அல்ல.

ஆனாலும் குழப்பமாத்தான் இருக்கு. :(

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/12/17/164/

மார்கழி பிறந்து விட்டது. பொருத்தமாக நாக சொக்கனின் பாவும் வந்து விட்டது. :)

திருப்பாவையின் முதற்பாடலை இன்றைய பாடலாக பதிந்திருப்பது மிகப் பொருத்தம்.

பாடலுக்குப் போவதற்கு முன் சில செய்திகள்.

பாவை என்றாலே திருப்பாவையும் திருவெம்பாவையும் மிகப்புகழ் பெற்றுள்ளன. ஆனால் பாவைப்பாடல் என்பது சங்ககாலத்திலிருந்தே இருந்திருக்கிறது. இருக்கின்ற நூல்களை வைத்துக் கொண்டு ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் திருவெம்பாவையை எழுதினார். அடுத்து பத்தாம் நூற்றாண்டில் திருப்பாவை என்று சொல்வது ஓரளவுக்கு மட்டுமே சரி.

பல பழைய பாவைப்பாடல்கள் காணாமலே போயின. சமண முனிவர் ஒரு பாவை நூல் இருந்து காணாமல் போய்விட்டது. ஆனால் அதிலொரு பாடல் மட்டும் தப்பிப் பிழைத்தது.

சரி. இப்பொழுது பெயரளவிலிருந்தாவது நமக்குத் தெரிந்த பாவைப் பாடல்கள் எவை?

சமணப்பாவை
திருவெம்பாவை
திருப்பாவை
தத்துவராய சுவாமிகள் - 2 பாவை நூல்கள்

சரி. அந்தத் தப்பிப் பிழைத்த சமணப் பாவைப் பாடலைப் பார்ப்போமா.

கோழியும் கூவின குக்கில் அழைத்தன
தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத்து அறிவன் அடியேத்தி
கூழை நனையக் குடைந்தும் குளிர்புனல்
ஊழியுள் மன்னுவோம் என்றேலோர் எம்பாவாய்

இது கூட பின்னாளில் எழுந்த யாப்பருங்கல விருத்தியுரை என்ற ஒரு உரை நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டதால் பிழைத்தது.

மார்கழி நீராடல் என்று இப்பொழுது சொன்னாலும், சங்ககாலத்தில் தைநீராடல் என்றே பாவைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. தை பிறந்தால் வழி பிறக்கும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2011/12/17/164/

முன்பு இனியது கேட்கின் வலைப்பூவில் மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாவிற்கு விளக்கம் சொன்னேன். அதில் முதல் பாவைக்கான விளக்கம் இங்கே.
http://iniyathu.blogspot.com/2005/12/blog-post_15.html

பாடலின் சிற்சில இடங்களை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

பாவைப்பாட்டு தொடங்கியது ஆண்டாள் எதற்கு அழைக்கிறாள்? சாமி கும்பிடவா? கோலம் போடவா? பால் காய்ச்சவா? வீடு வாசலைக் கூட்டவா?

இவைகள் எதுவுமே இல்லை. நீராடப் போதுவீர் என்றுதான் அழைக்கிறாள். எழுந்ததும் நீராட வேண்டுமாம். அதுவும் மார்கழி மாதக் குளிரில். ஏன் அப்படி?

ஓய்வெடுத்து உடல் உறங்கும் பொழுது மனக்குரங்கு எங்கெங்கோ சென்று விடுகிறது. சொல்லக்கூடியதும் சொல்லக்கூடாததும் ஆகிய பலப்பல எண்ணங்கள் கனவுகள் என்னும் பெயரில் கூத்தடிக்கும். அதனால்தான் நாம் எழுந்திருக்கும் பொழுது மனமும் உடலும் சற்று விலகியிருப்பது போல இருக்கும்.

இந்த இரண்டையும் எப்படி ஒன்றாக்குவது? நீராடித்தான். தலையில் ஊற்றும் நீர் மூளையை விழிப்பித்துப் பின்னர் உடல் வழியே வழிந்து ஒவ்வொரு உறுப்பாக சுறுசுறுப்பாக்கும். மனமும் உடலும் விழித்துச் செயல் சிறக்கும்.

அந்த ஒரு நிலையில் ஆண்டவனை வணங்கல் வேண்டும் என்பதால்தான் “நீராடப் போதுவீர்” என்று முதலில் சொன்னாள் ஆண்டாள்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2011/12/08-balaramanl.html

சேவித்தல் அருமையான சொல். சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தேன். அங்கேயும் தரிசனம்தான்.

அது மட்டுமில்லாமல் சாதாரண மக்கள் கும்புடுதான். சாமியைக் கும்புடுன்னுதான் சொல்றாங்க.

ஒருவேளை நீங்க குறிப்பிட்ட மக்களைக் கூறுகின்றீர்கள் என நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://nchokkan.wordpress.com/2011/12/26/cbf2012/

மூன்று புத்தகங்களும் மூன்று விதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தகவல்களைச் சொல்கிறது.

இப்படி எந்த வகையானாலும் கலந்து கட்டுவது சிறப்பு.

உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்களிடம் ஒரு உதவி வேண்டும். மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/01/179/

அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

மிகப்பொருத்தமான திருப்புகழை பதிவிட்டமைக்கு என்.சொக்கனுக்கு நன்றி. :)

பொதுவாக வருணிக்கும் போது பாதாதி கேசம்னு சொல்வாங்க. அதாவது பாதத்துல தொடங்கி கேசத்துல முடிக்கனும். ஆண்டவனைக் கும்புடும்போது கேசாதி பாதமா இருக்கனுமாம். தலையில் தொடங்கி அவன் அடிகளில் வீழுந்து வணங்குவதற்காக.

இத எதுக்குச் சொல்றேன்னு கேக்குறீங்களா? இந்தப் பாட்டை கேசாதி பாதமாப் படிச்சாலும் பாதாதிக் கேசமா புரிஞ்சிக்கனும். அதத்தான் சொக்கனும் விளக்கத்துல செஞ்சிருக்காரு.

நம்மளும் அப்படியே ஒரு de tour போடுவோம்.

மொதல்ல கடைசி வரி.
ஐந்து கரத்து ஆனை முகத்துப் பெருமாளே - இதுக்கு விளக்கமே தேவையில்ல. அதென்ன பெருமாள் வர்ரார்னு பாக்குறீங்களா? பெரும்+ஆள் = பெருமாள்

அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே - அடியவர்களுக்காக என்றும் நிலையான அருட்பொருளாக இருப்பவனே

தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே - திருவிளையாடல் படம் எல்லாரும் பாத்திருப்பீங்க. பாக்கலைன்னாலும் ஒரு வாட்டி பாத்துருங்க. :) ”மூத்தபிள்ளைதான் செல்லப்பிள்ளை. இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை”ன்னு முருகன் வசனம் பேசுவாரு. ஒரு பழத்துக்காகச் சண்டை. அதுல பிள்ளையாரு அம்மையப்பனைச் சுத்தி வந்து பழத்தை வாங்கிக்குவாரு. வலம் வர்ரதுன்னா சுத்தி வர்ரது. கோயில்ல வலப்புறமாத்தான் சுத்தி வருவோம். அதான் ”தந்தை வலத்தால்” அருள் கைக் கனியோனே

தம்பி தனக்காக வனைத்தணைவோனே - இந்த ஒரு வரிய வெச்சித்தானே ஒரு படமே வந்தது. ஸ்ரீவள்ளி. அதுக்கு முன்னாடி நாடகம். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளோட வள்ளி திருமணம் நாடகம் மிகப்பிரபலம். காலகலாமா நடந்துட்டு வர்ரதுதானே. முருகனும் வள்ளியும் சங்ககாலத்துல இருந்தே காதலர்கள். அந்தக் காதல் ஒன்னு சேர்ரதுக்காக காட்டுக்குள்ள யானை வடிவத்துல வந்து திருமணத்தை நடத்தி வெச்சாராம் பிள்ளையாரு.

உம்பர் தரு தேனு மணிக் கசிவாகி - உம்பர்னா வானவர்கள். தருன்னா வடமொழியில மரம். கற்பகதருன்னு சொல்றாங்கள்ள. அந்தக் கற்பக மரம். தேனு=காமதேனு. மணி=சிந்தாமணி. இந்த மூன்றையும் இங்க ஏன் சொல்றாரு? இந்த மூன்று கிட்டயும் என்ன கேட்டாலும் கிடைக்கும். பால்னா பால் கொடுக்கும். தேன்னா தேன் கொடுக்கும். தேள்னா தேளையும் கொடுக்கும். யார் கேக்குறாங்க? எதுக்குக் கேக்குறாங்கன்னு யோசிக்காமக் கொடுக்கும். அவ்வளவு சக்தி.

நம்மாள முடியுமா? நமெல்லாம் மனிதர்கள். நமக்குன்னு இருக்கும் கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் அதற்கு வழிவிடாது. திருமணமான ஒருவருக்கு காதலை வேண்டி யாரேனும் கேட்டால் கொடுக்க முடியுமா? கொடுக்கலாமா? இந்த மாதிரி கட்டுப்பாடுகளுக்குள் சிக்கி விடக்கூடாது என்றுதான் இந்த மூன்றும் மரமாகவும் மணியாகவும் மாடாகவும் இருக்கின்றன.

இந்த மூன்று பொருட்களும் கேட்டவர்களுக்கு கேட்டதெல்லாம் கொடுப்பது போலத் தானும் கொடுக்க வேண்டும்.

சரி. கொடுப்பதுதான் கொடுக்க வேண்டும். எப்படிக் கொடுக்க வேண்டும்?

ஒண்கடலில் தேன் அமுது உணர்வு ஊறி,
இன்ப ரசத்தே பருகிப் பலகாலும்,
எந்தன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே

வாரி வாரிக் கொடுக்கும் பொழுது உணர்வில் அமுது ஊற வேண்டும். அந்த அமுது ஊறிய இன்ப ரசத்தைப் பலகாலும் பருகும் இன்பப் போல வாரி வாரிக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு ஆதரவு தருவாய் என்று அருணகிரிநாதர் கேட்கிறார்.

ஒரு திருப்புகழுக்குள் இவ்வளவு தகவல்கள். இன்னும் ஒவ்வொரு திருப்புகழாக எடுத்துப் படித்தால் எவ்வளவு இன்பம்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2011/12/16-thirumarant.html

நென்னல் என்பது நின்னே என்று கன்னடத்திலும் இன்றும் வழங்குகிறது.

பிறகு ஒரு விஷயம். சில விஷயங்களை உங்கள் கருத்தாகக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு உடுக்களை எடுத்துக்காட்டுகின்றீர்கள்.

உடு - ஒருமை
உடுக்கள் - பன்மை

அப்படியானால் மாடு, வீடு, காடு, ஓடு ஆகிய சொற்களின் பன்மை என்ன? மாடுக்கள், வீடுக்கள், காடுக்கள், ஓடுக்கள் என்று எழுதலாமா?

ஆனால் மடு? மடுகல் அல்ல. மடுக்கள்.

நீங்கள் இலக்கணம் தெரியாமல் யாராவது தூத்துக்குடியிலிருந்து சொன்னாலும் தொல்காப்பியம் காட்டுகின்றவர். இதற்கும் தொல்காப்பியத்தில் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்.

நன்றி.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/06/184/

இந்தப் பாடலுக்கு நேற்றே பின்னூட்டமிட இயலவில்லை.

ஒரு கவிஞர்.. முத்துலிங்கம்னு நெனைக்கிறேன். கிட்டத்தட்ட கீழ இருக்குற மாதிரி ஒரு எம்.ஜி.ஆர் படத்துக்குப் பாட்டு எழுதியிருக்காரு.
உன் கண்கள் மன்மதன் படைக்கலம்
காதலில் வேண்டும் அடைக்கலம்
இதுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனும் அருமையா இசையமைச்சிருக்காரு. அந்தப் பாட்டைக் கேட்ட எம்.ஜி.ஆர், மெட்டெல்லாம் நல்லாருக்கு. ஆனா அடைக்கலம்னு எல்லாம் கிருஸ்துவப் பேர் மாதிரி காதல் பாட்டுல இருக்கே. மொழி விளையாண்ட அளவுக்குப் பாட்டுல காதல் விளையாடலையேன்னு சொன்னாங்களாம்.

சரின்னு மறுபடி ஒரு பாட்டெழுதி மெட்டுப் போட்டு... அதுதான் தங்கத்தில் முகமெடுத்து.. .சந்தனத்தில் உடலெடுத்து பாட்டு.

ஏன் சொன்னேன்னா... அதுல வர்ர “கண்கள் மன்மதன் படைக்கலம்” என்கின்ற வரிகள்.

இதே மாதிரிப் பொருள்ல பல பாடலாசிரியர்கள் எழுதியிருக்காங்க.

இளையராஜா இசையில் இளமைக்காலங்கள் படத்துல வர்ர ”பாட வந்ததோர் ராகம்” பாட்டுல (இசையரசி பி.சுசீலா, ஏசுதாஸ் பாடியது)
“கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்” என்ற வரிகள் இந்தக் குறுந்தொகைப் பாட்டின் முதலிரண்டு வரிகளைச் சுருக்கமாகச் சொல்கின்றன.

சினிமாப்பாட்டிலும் இலக்கியம் உண்டு.

காதல் கண்ணுலதான் தொடங்குது. கண்பார்வையற்றவர்களுக்குக் காதில் தொடங்கும்.

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். கம்பர் காட்டும் காட்சி. அப்பக் கூட அண்ணல் முதல்ல நோக்குனாருன்னுதான் கம்பர் சொல்றாரு. ஒரு விதத்துல ஆணாதிக்கம்தான்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/06/184/

இந்த மாதிரி பாடல்கள் படிக்கிறப்போ சில ஒப்புமைகள் நாமளாச் செஞ்சிக்கனும். அதுக்கான குறிப்பு அந்தப் பாட்டுலயே இருக்கும்.

தினைப்புனத்துல தலைவி இருக்கா. தினைப்புனம் குருவிகளை ஈர்க்குது. ஆனா தலைவி குருவிகளை விரட்டுறா. இது பாட்டுல தலைவி என்ன செய்றான்னு நேரடியாச் சொல்ற பொருள்.

எப்படி இதைத் தலைவன் கருத்தோட தொடுக்கனும்னு சொல்றேன்.

தினைப்புனத்துல தலைவி இருக்கா. இனிய மொழி, மென் தோள், அழகிய கண்கள்னு தலைவி தலைவனை ஈர்க்குறா. தினைப்புனத்துக்குக் குருவி வந்த மாதிரி தலைவன் வர்ரான். குருவியைக் கல்வீசி விரட்டும் தலைவி, தலைவனைக் கண் வீசி விரட்டுறாள்.

அதுதான் ”எல்லாரும் அறிய நோய் செய்தனவே”.

நாலு பேர் இருக்குற எடத்துல என்னக் கண்டுக்காம அவமானப்படுத்தீட்டாளேன்னு புலம்புறாங்கள்ள. அந்த மாதிரி.

தினைப்புனம் - தலைவி
குருவி - தலைவன்
கல் - தலைவியின் கண்கள்

இப்பப் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

பருத்திக்கு ஊடுபயிர் போடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை. எனக்குத் தெரிஞ்சு ஒரு பயிர் விளஞ்சப்புறமா இன்னொரு பயிர் வளர்ப்பது உண்டு. அதுவும் ஒருவிதத்துல நிலத்தின் வளத்தைக் காப்பாற்றத்தான்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/07/185/

விளம்பி நாகனார் தெளிவாச் சொல்லீட்டாரு. மறுக்கவே முடியாது. இது புரிய வேண்டிய பலருக்குப் புரியாமலேயே இருக்குது. என்ன செய்றது.

நான்மணிக்கடிகை பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளது. மன்றம்(சங்கம்) மருவிய காலத்து நூல்களில் ஒன்று.

இதுல நாகனார் அவரோட பேரு. விளம்பி அவரோட ஊராம். இவரு பதினென்கீழ்க்கணக்குல இருக்கும் மற்ற நூலாசிரியர்களை விட காலத்தில் கொஞ்சம் பிந்தியவர்னும் சொல்றாங்க.

முந்திரிக் கொத்துன்னு ஒரு பலகாரம் ஊர்ப்பக்கம் ஒரு பலகாரம் செய்வாங்க. மூனு இனிப்புருண்டைகளை ( சீடை அளவுக்கு ) ஒன்னா வெச்சு பச்சரிசி கரைச்ச மாவுல முக்கிப் பொரிச்சி எடுப்பாங்க. பலகாரம் ஒன்னு. ஆனா ஒரு பலகாரத்துக்குள்ள மூனு உருண்டைகள்.

அது மாதிரிதான் நான்மணிக்கடிகை. வித்தியாசம் என்னன்னா இங்க நாலு உருண்டைகள். கடிகைன்னா துண்டம். இப்ப உள்ள தமிழில் துண்டு. நான்கு மணிகளை உடைய ஒரு துண்டம்.

ஏன் அப்படியொரு பேரு? ஒவ்வொரு பாட்டுலயும் நாலு தகவல்கள் சொல்லி கருத்தைப் புரிய வைப்பாரு.

இந்தப் பாட்டுலயே பாருங்க புரியும்.

1. பாகன் படுத்துனாலும் யானை அவனைச் சுமக்கும்
2. என்னதான் அடிச்சாலும் அஞ்சு நிமிசம் கழிச்சி கொழந்த அம்மான்னுதான் ஓடி வரும்
3. கருத்துல வேறுபாடு வந்து விவாதம் பண்ணாலும் நண்பர்கள் ஒருத்தரையொருத்தர் வெறுக்க மாட்டாங்க.
4. ஆனா.... மனசு ஒத்துப் போகாத ரெண்டு பேர் சேந்து ஒன்னும் பண்ண முடியாது

மொதல் மூனும் நீரடிச்சு நீர் விலகாத எடுத்துக்காட்டுகள். ஆனாக் கடைசி வரி?

அது எலிக்கும் தவளைக்கும் உண்டான நட்பு மாதிரி.

ஒரு பஞ்சதந்திரக் கதை உண்டு.

ஒரு எலியும் தவளையும் நண்பர்களா ஆனாங்களாம். நாள் ஆக ஆக தவளைக்கு எலியப் பிரிஞ்சு இருக்க முடியல. அதுனால தன்னோட கால்ல ஒரு கயிறக் கட்டி எலியோட கால்லயும் கட்டுச்சாம். முட்டாள் எலிக்குத் தவளையோட மூடத்தனம் புரியலை. ரெண்டு பேரும் நடந்து போறப்போ ஒரு கொளம் வருது. கொளத்தப் பாத்ததும் தவளைக்கு ஒரே கொண்டாட்டம். டபக்குன்னு ஒரே தவ்வு. தண்ணி நல்லாக் குளுகுளுன்னு இருக்கும்னு குதிச்சிருச்சு. எலியால ஒன்னும் பண்ண முடியலை. அதுவும் தண்ணீல விழுந்துருச்சு. ஆனா அதால தண்ணீல நீந்த முடியாமத் தவிக்குது. மூச்சு முட்டி செத்தும் போச்சு. செத்துப் போன எலி தண்ணீல மெதக்குது. இப்ப தவளையால எங்கயும் போக முடியல. தண்ணீல நனஞ்சு கயிறு இறுகீருச்சு. எலியோ தண்ணீல வீங்கிப் போனதால தவளையால இழுக்க முடியலை. அப்ப ஒரு பருந்து வந்து எலியத் தூக்கீட்டுப் போச்சு. தவளையும் கூடயே போய் உயிரை விட்டுருச்சு.

இப்பிடி தான் அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கமா இல்லையான்னு கூட புரிஞ்சிக்க முடியாத மூடர்கள் உண்டு. அவர்களால் அவர்களுக்கும் துன்பம். அடுத்தவர்களுக்கும் துன்பம்.

அதுனாலதான் எதிலும் பொருத்தம் வேண்டும். நட்பு, திருமணம். தொழில், இப்பிடி எல்லாத்துலயும் இது பொருந்தும்.

இந்தப் பாடலில் எனக்குப் பிடிச்ச சொல்லாடல் “சிலைப்பினும் நட்டார் நடுங்கும் வினை செய்யார்”

அதென்ன சிலைப்பினும்? சிலைன்னா கற்சிலையா? பொற்சிலையா?

ரெண்டுமில்லை. இங்க வந்தது சொற்சிலை. சிலை என்றால் ஒலி என்றும் பொருள். சிலம்புவதால்தான் சிலம்பிற்கு அந்த பெயரே வந்தது. “ஆர்க்கும் சிலம்பே அணி முரசா”ன்னு சொன்னாரு புகழேந்திப் புலவர் நளவெண்பாவில்.

ரெண்டு நண்பர்கள் பேசுறப்போ குரல் சாதாரணமா இருக்கும். ஒரு விவாதம்னு வர்ரப்போ குரல் ஏறும். அதுதான் “சிலைப்பினும்”. அப்படிக் குரல் ஏறி ஒலித்துப் பேசும் விவாதங்கள் நடந்தாலும் பொருந்திய நட்பினர் சேர்ந்தே இருப்பர்.

பொருந்தாமப் போனாத்தான் குழப்பம்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/08/186/

அந்தகக் கவி வீரராகவர். பிறவியிலேயே இவருக்குக் கண்பார்வை கிடையாதாம். எல்லாரையும் போல எழுதிப் படிக்கவில்லை. ஆசிரியர் சொல்லச் சொல்லச் செவியில் கேட்டுப் படித்தாராம்.

இச்செவியில் கேட்டு அச்செவியில் விடும் மாணவராய் பலர் இருக்க, இரு செவியில் கேட்டு உச்சிக்குத் தமிழை ஏற்றிய வீரராகவரைப் புகழாது இருக்க முடியவில்லை.

பிற்காலப் புலவர்களில் இவர், காளமேகம், பொய்யாமொழி, காளமேகம், சொக்கநாதப் புலவர் (பலபட்டைச் சொக்கநாதப் புலவர்), இரட்டைப் புலவர்கள் ஆகியோர்கள் நினைவு கொள்ளத்தக்கவர்கள். யாரேனும் விடுபட்டுப் போயிருந்தால் அது என் அறியாமை. மன்னிக்க.

இவர் மேல் பொறாமை கொண்ட புலவர்கள் இவர் அரசவைக்கு வரும் வழியில் திரைச்சீலை வைத்ததாகவும். குறிப்பால் மாணவர் கூற செய்யுள் பாடி திரை எரிந்ததாகவும் சொல்வார்கள்.

இவருடைய பாடல்களையும் படிக்க வேண்டும். சிலேடையிலும் இவர் எழுதியிருக்கிறார் என்று இன்று அறிந்தேன்.

இந்தப் பாடலில் சிலைடையைக் காட்டிலும் நான் ரசித்தது ஒன்றுண்டு. :) ஆம். அந்தப் பாணியின் மறுமொழிகள்.

பாணன் பாடிப் பரிசு பெறப் போயிருக்கிறான். ஏதேனும் வந்தால் நல்லது என்று அவளுக்கும் ஒரு எதிர்பார்ப்பு.

வந்தவன் யானை என்று வேறுவேறு விதமாகச் சொல்கிறான். அவள் எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறாள்?

சந்தனம்
தங்கம்
கரும்பு
எருமைக்கடா
கம்பமாவு

இதில் தங்கத்திற்கு அவள் கூறும் மறுமொழி என்ன? ”யாம் வாழ்ந்தேம்”. அப்பாடா பொழச்சோம்டா சாமி. இனிக் கவலையே இல்ல. அப்படியான ஒரு மகிழ்ச்சி பொங்கும் மறுமொழி.

கம்பமா என்று நினைக்கும் பொழுது “நல்களியாம்” என்றாள். சரி. ஒரு வேளைச் சாப்பாட்டுக்காச்சும் ஆச்சே என்ற எண்ணம்.

மற்றவைகளுக்கு என்ன சொல்கிறாள்?

சந்தனம் - பூசும்
கரும்பு - தின்னும்
எருமைக்கடா - உழும்

ஒருமையில் வருகிறது மறுமொழிகள். :) ஒரு எரிச்சல். ஓ சந்தனமா குடுத்தான்... பூசிக்கோ. ( நல்லவேளை, குடி என்று சொல்லவில்லை).
கரும்பா, நீயே தின்னு. எருமைக்கடா வாங்கீட்டு வந்திருக்க. போய் வயல்ல உழு. ஒரு எருமைமாடு வாங்கீட்டு வந்திருந்தா பால் வித்துப் பொழச்சிருக்கலாம்.

தன்னுடைய எரிச்சலை அழகாக வெளிப்படுத்துகிறாள் அந்தப் பாணி.

யானை என்று தெரிந்ததும் கலங்கிப் போகிறாள். இரண்டு வயிறுகளுக்குச் சோறு போடுவதே பெரும்பாடு. இதில் யானை வேறா?

யானையை எங்கு விற்பது? யார் வாங்குவார்கள்? கொடுத்தவனிடம்தான் விற்க வேண்டும். விற்றார்களா என்று தெரியவில்லை. :) கற்பனைக் கவிதை என்பதால் நமக்குப் பிடித்த முடிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/09/187/

திருமுருகாற்றுப்படை. ஆகா! நேத்துதான் பாதிமதிநதி திருப்புகழுக்குச் சிறிய விளக்கம் எழுதுனேன். இன்னைக்கு உங்க பதிவில் முருகாற்றுப்படையிலிருந்து சில வரிகள்.

முருகாற்றுப்படையே ஒரு ஆன்மீக நூல். அதுலயும் சொல்நயமும் பொருள்நயமும் உள்ள அழகான குட்டிக் கவிதைய எடுத்துப் பதிவு போட்டிருக்கீங்களே. அருமையோ அருமை. :)

பாட்டின் பொருள் ஓரளவுக்குப் புரியுது. என்ன.. பிரிச்சுப் பிரிச்சுப் படிக்க வேண்டியிருக்கு :)

இரு சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரை துஞ்சி

ஒரு ஐயம். முள்+தாள் முட்டாள் ஆகாதா? முள் தைக்கும் காடு முட்டைக்கும் காடு ஆனதே. இதை விட இன்னொரு ஐயம். தாமரைப் பூவுல முள்ளுண்டா? :)

வண்டு வந்துச்சு. தாமரை மலரில் தேன் குடிச்சுத் தூங்கீருச்சு. காலைல எந்திருச்சு நெய்தல் மலர்ல போய் தேன் குடிச்சுச்சு. கிட்டத்தட்ட தாமரைப்பூவை ஒரு லாட்ஜ் ஆக்கியிருக்கு இந்த வண்டு. தங்குன எடத்துலயே சாப்பாடு. அடேங்கப்பா.
இந்த அழகை ரசிக்கிறது ஒரு புறம் இருக்க... இன்னும் சிலவற்றை உற்று நோக்க வேண்டியிருக்கிறது.

தாமரை பூத்திருக்குன்னு சொல்றாரே நக்கீரர். எங்க பூத்திருக்காம்? குளத்துலயா? ஏரியிலயா? கண்மாயிலா? மதகுலயா? இல்ல. வயல்ல. இரு சேற்று - இருண்ட நிறமுடைய சேற்றில் செந்தாமரை மலர்ந்திருக்கிறது. அதுவும் வயல் சேற்றில். வயல்ல பயிரே ஒழுங்கா முளைக்காத இன்னைக்கு வயல்ல தாமரை முளைச்சதுன்னு நெனைச்சுப் பாக்குறப்போ நீர்வளமும் நிலவளமும் எவ்வளவு சிறப்பா இருந்திருக்கனும்.

அட. இந்த மாதிரி வயல்ல பூக்கள் பூக்குறத நான் நாலஞ்சு வயசு இருக்குறப்போ எங்க ஊர் வயல்ல பாத்திருக்கேன். வாய்க்கால் ஓரமா டிசம்பர் பூக்களும், மஞ்சள் கனகாம்பரமும் கல்வாழையும் நெறைய பூத்திருந்தது. ம்ம்ம்.. அது ஒரு காலம். இன்னைக்குப் போனா... வேண்டாம் விடுங்க. அப்போ ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி எப்படியிருந்திருக்கனும்!

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/09/187/

இந்தப் பாட்டில் இன்னொரு கவியழகு உண்டு. சட்டென்று தோன்றியது. சரியாக இருக்குமோ என்று தோன்றியது. பொருத்தமென்றால் சம்மதம் கொடு முருகா என்று மனதுக்குள் நினைத்தேன். டீவியில் உடனே கவுண்டமணி முருகா முருகா முருகா என்று கத்தினார். ஆகையால் இதை முருகனின் விருப்பம் என்றே எடுத்துக் கொண்டு கூறுகிறேன்.

திருப்பரங்குன்றம் மலையானாலும் குறிஞ்சி நிலமல்ல. அது மருத நிலம். ஆகையால்தான் வயல் அழகைப் பற்றிப் பாடுகிறார் நக்கீரர்.

இரு சேற்று அகல் வயல் விரிந்த என்றுதானே இன்றைய பாவின் வரிகளும் வருகின்றன. மருத நிலத்தின் மலர் தாமரை. ஆக வண்டு மருத நிலத்து மலரான தாமரையில் அமர்ந்து உண்டு உறங்கி எழுந்திருக்கிறது.

அடுத்து எங்கே போகிறது? கள் கமழ் நெய்தல் ஊதி - அதாவது நெய்தல் மலருக்குப் போகிறது. நெய்தல் மலர் நெய்தல் நிலத்திற்குரிய மலர் என்று பெயரைப் பார்த்தாலே சொல்லி விடலாம்.

ஆற்றுப்படை வீடுகளில் திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) நெய்தல் நிலம்.
இன்றைய பாவின் தொடர்பு வரிகள் முடிந்ததும் நக்கீரர் அடுத்து பாடுவது திருச்சீரலைவாய்.
திருப்பரங்குன்றம் - தாமரை
வண்டு - நக்கீரர்
திருச்சீரலைவாய் - நெய்தல்

திருப்பரங்குன்றின் பெருமைகளைச் சொல்லிக் களித்தேன். அடுத்து திருச்செந்தூரின் பெருமைகளைச் சொல்லப் போகிறேன் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே தாமரையில் தங்கிய வண்டு நெய்தலுக்குப் போவதைக் கூறினார் போலும்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/12/190/

திருக்கடைக்காப்பு. இதுதான் திருஞானசம்பந்தர் அருளிய நூல். அப்பர் பாடிய தேவாரம் பெரும் சிறப்புப் பெற்று, பிற்காலத்தில் தொகுக்கப்படும் பொழுது ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடியவை கூடத் தேவாரம் என்றே தொகுக்கப்பட்டன. சுந்தரர் பாடியது திருப்பாட்டு.

சரி. பாட்டுக்கு வருவோம். ஒரு சின்னப் பையன் பாடுற பாட்டா இது?

எல்லாரும் நிலா நிலா ஓடி வா பாடுன வயசுல “தோடுடைய செவியன்”னு பாடியிருக்கும் பையன்.

இப்பல்லாம் கோயிலுக்குப் போனா அந்தப் பரிகாரம், இந்தப் பரிகாரம், பணம் கட்டுனா ஒவ்வொரு ஆண்டும் வீட்டுக்குத் திருநீறு வரும் (ஒருதடவ வரும். அப்புறம் வராது). லட்சார்ச்சனை பண்ணனும். திருக்கல்யாணம் பண்ணனும். இப்பிடியெல்லாம் பண்ணா பாவமெல்லாம் போய் புண்ணியம் வரும்னுதான் நாம கேக்குறோம்.

ஆனா இந்தப் பையன் அப்படியே மாத்திச் சொல்றாரு. கொளத்த வெட்டு. ஏரியத் தூர் வாரு. பசுஞ்சோலைகளை உருவாக்கு. இவரு உண்மையிலேயே பக்தியாளரா? இல்ல சமூக சேவகரா?

இந்தப் பாட்டுல மட்டுமில்ல. இன்னொரு பாட்டுல நாள்/கோள்/சோதிடம் ஆகியவைகளைப் போட்டு உடைக்கிறாரு.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார்க்கு மிகவே

என்னடா இது! நாளும் கோளும் இவ்வளவுதானா? உயர் நீதிமன்றத்துல தப்பாத் தீர்ப்பானா உச்சநீதி மன்றத்துல கேக்குற மாதிரி, ஆண்டவன் இருக்குறப்போ அனைத்தும் அவனே!

இதெல்லாம் அப்பரோட பழகுனதுல வந்த எண்ணங்கள் போல. வயசான காலத்துல அந்தப் பெரியவரு உழவாரப்பணி செஞ்சாரு. அது போல மக்கள் பயனுள்ள தொண்டு செய்யனுங்குறதுக்காகத்தான் கொளம் வெட்டச் சொல்றது. சோலை அமைக்கச் சொல்றது.

பக்தருக்கு இணையான சொல் அன்பர்னு என்.சொக்கன் அழகா எடுத்துக்காட்டுகளோடு சொல்லீருந்தாரு.

பக்திங்குற சொல்லுக்கு இணையான சொல் எது? அன்பு எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனா பழைய நூல்கள்ள கலை என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வடகலை தென்கலை கேள்விப்பட்டிருப்பீங்க. அதில் இருக்கும் கலை குறிப்பது பக்திதான்.

என்னது? எச்சக்கலைன்னு ஒன்னு இருக்கா? அதுல வர்ர கலையும் பக்திதான். எச்சில் செயல்களில் பக்தி வைப்பது எச்சக்கலை. :)

இதுக்கு ஒரேயொரு ஆதாரத்தை மட்டும் சொல்றேன். சுந்தரமூர்த்தி நாயனார் தெரியுமில்லையா. அவர் கண்ணப்பனைப் பாடும் போது கலைமலி கண்ணப்பர் என்று பாடுகிறார்.

கண்ணப்பர் என்ன ஆட்டம், பாட்டம், ஓவியம், லொட்டு, லொசுக்குன்னு 64 கலைகளையுமா படிச்சாரு? வேடன் தான். ஆனா வேட்டைல ரொம்பப் பெரிய ஆளா? அதுல பெரிய ஆளா இருந்தாலும் அதனாலயா அவருடைய புகழ் அறியப்படுது?

இல்லை. ஆண்டவன் மேல் வைத்த தூய அன்பு. அதான் கலைமலி கண்ணப்பன். பக்தி அவர்கிட்ட மலிஞ்சிருந்திருக்கு. அதாவது அன்பு மட்டுந்தான். அதுனாலதான காலால மிதிச்சிக்கிட்டு கண்ணப் பிடிங்கி வெச்சாரு. நம்மள்ளாம் நைவேத்யம்னா மூடியத் தொறந்து காமிச்சிட்டு வந்துர்ரோமே. ஒரு வாய் சாப்பாட்டை ஆண்டவன் சாப்புடுவார்னு உண்மையிலேயே நம்புனா, தட்டை அங்கயே வெச்சுட்டு வரனுமா இல்லையா?

அடுத்து நீங்க இலக்கியங்களப் படிக்கும் போது கலைங்குற சொல் எங்கல்லாம் வருதுன்னு பாருங்க. அதுக்குப் பொருளா பக்தின்னு நெனச்சா பொருத்தாமாயிருக்கான்னு பாருங்க. அதுக்காக நடனக்கலைன்னு வர்ர இடத்துல அந்தப் பொருளை வைக்காதீங்க. :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/01/blog-post_13.html

வணக்கம் டீச்சர். நலம் நலமறிய ஆவல். :)

ஒங்க பதிவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு. ரீடர்ல போட்டு வெச்சிருக்கேன். நடுநடுல வேல வந்ததால ஒழுங்காப் பாக்கலை.

இன்னைக்கு வந்து பாத்தா கஜகஜன்னு (கஜம் ஒங்களுக்குப் பிடிச்சதுதானே) பதிவுகளா போட்டிருக்கீங்க. :)

பப்புன்னா எண்ணெய்ல பொரிக்க மாட்டாங்களா! அதுக்குள்ள அத்தன துணித்துணியா எப்படி பிரிஞ்சி வருது?

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/15/193/

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

உழவு என்ற தொழிலுக்கே ஒரு அதிகாரம் எழுதியிருக்கிறார் வள்ளுவர் என்றால் அதன் பெருமையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உழுது உண்டு வாழ்ந்தாதான் வாழ்க்கை.

இன்றைய சூழ்நிலையில உழவுத்தொழிலுக்கு மதிப்பு குறைவு. மீண்டும் உழவுத்தொழில் நமது நாட்டிலும் உலகத்திலும் நன்னிலையையும் முன்னிலையையும் அடைந்து சிறக்க ஆண்டவனை வணங்கி வேண்டுகிறேன்.

பி.கு - வள்ளுவர் குறள் எழுதுறப்போ மூன்று பாலா பிரிச்சாரே தவிர, ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பேர் வைக்கலைன்னு யாருக்கெல்லாம் தெரியும்? :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/17/195/

கந்தபுராணத்தில் சில பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை.

1. தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
2. ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
3. முழுமதியன்ன ஆறுமுகங்களும் முன்னான்காகும் விழிகளின் அருளும்
4. கோலமாமஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னை
5. மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி

இந்தப் பாடல்கள் அவ்வளவு பிடித்தம். நெருக்கம். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு விதத்துல சிறப்பு. எடுத்து விளக்குனா ஒரு நாளாகும்.

இன்று ஒங்க பிறந்தநாள். அந்த நாளில் நாம் எல்லாருக்கும் கடவுளான முருகப் பெருமான் பாடலைப் பதிந்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

கண்ணீர் இனிக்கும் என்று காட்டிய பெருமான் அவன். எப்படியோ உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது முருகா என்னும் பெரும் பெயர். சங்ககாலத்திலேயே பெரும் பெயர். நக்கீரரும் கடுவன் இளவெயினாரும் ஒத்துக்கொண்ட தமிழரின் அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக.

ஏவரும் - எல்லாரும். ஐயமே வேண்டாம். எவரும் சொல்லிப் பாருங்க. சட்டுன்னு புரியும்.

இந்தப் பாட்டில் ஒரு சிறப்பு உண்டு. என்னன்னு கேக்குறீங்களா?

சேவலும் மயிலும் யாரு? சூரந்தானே? அவன் முருகனோட சண்டை போட்டானே.

இருந்தாலும் முருகா போற்றின்னு சொல்லீட்டு சேவலும் மயிலும் போற்றி!

வேற எங்க இருக்கு இப்பிடி? ஏன் இங்க மட்டும் இப்பிடி?

சண்டை நடக்குது. சூரன் உறுமிக்கிட்டு வாரான். யார்ரா அந்தப் பொடிப்பையன்னு. வந்து பாத்தா முருகன் நிக்கிறாரு. எப்படி?

முழுமதியன்ன ஆறுமுகங்களோடு. முருகனோட முகம் குளுகுளுன்னு நிலா மாதிரி இருக்கு. cool dude மாதிரியா சண்டைக்கு வர்ரது? சூரனுக்குத்தான் முருகன் மேல ஆத்திரம். ஆனா முருகனுக்கு சூரன் மேல ஆத்திரம் இல்லை.

எல்லாருக்கும் கடவுளாச்சே. எதுக்குறவனுக்கும் கடவுள்தானே. அதைத்தான் முருகன் என்னும் பெரும் கருத்து நிரூபித்தது.

முழுமுதல் முருகா போற்றி
கருத்தினில் கந்தா போற்றி
வெற்றியின் வேலா போற்றி
குறையிலாக் குமரா போற்றி

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/18/196/

கம்பன் கவியமுதம் அள்ளிப் பருக யாருக்குத்தான் விருப்பமிருக்காது.

ஐம்பெருங்காப்பியங்களுக்குப் பின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த காப்பியமல்லவா. அதுதான் காத்திருந்த தமிழ் தன்னுடைய கவிச்சுவையெல்லாம் கம்பன் வழியாக எழுதிக் கொண்டது போலும்.

கம்பன் காப்பியத்தில் ஒவ்வொரு பாத்திரமும் ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உரியவை.

ஆழ்ந்து படித்தால் பொதுவாக இராமாயணக் கதைகளில் பெரியவர்கள் நமக்குச் சொல்லாதவைகள் புரியும்.

கம்பன் எதையும் மறைக்கவில்லை. ஆனால் கம்பன் சொன்னான் என்பதுதான் மறைக்கப்பட்டது. சரி. போகட்டும்.

பாவிற்கு வருவோம்.

இதில் மொத்தம் மூன்று பாத்திரங்கள் வருகின்றன. ஒன்று பேசுகின்ற பாத்திரம். இன்னொன்று பேசப்படுவது. மற்றொன்று பேசுவதைக் கேட்கும் பாத்திரம்.

பேசுவது அனுமன். கதையில் அனுமனின் பாத்திரம் ஒரு தொண்டன் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. சூரியனிடம் கற்றான் என்றெல்லாம் இருந்தாலும் கடைசியில் ஒரு தொண்டனாக அறியப்படுகின்றான்.

நன்றாக பார்த்தால் அனுமன் இந்தக்கால அரசியல் தொண்டனின் நிலையைச் சரியாகப் பிரதிபலிக்கிறான். அந்த அளவிற்கு ஒப்பிடுவதற்குச் சான்றுகளைத் தருகிறான் கம்பன்.

தன் வலிமை தனக்கே தெரியாதவன். தலைவனுக்கே எல்லாம் செய்கிறான். அதிலேயே இன்பம் காண்கிறான். தனக்கென ஒன்றுமில்லை. தலைவனுக்கு ஒன்று என்றால் சண்டையிலும் இறங்குகிறான். இதுதான் அனுமன். இதுதான் இன்றைய அரசியல் தொண்டனின் நிலையும் ஆகும்.

போர் முடிஞ்சது. இராவணன் போயாச்சு. வீடணனுக்குப் பட்டம் கட்டியாச்சு. அனுமன் போய் சீதையக் கூப்புடப் போறான். போர் முடிஞ்சதுல சீதைக்கு மகிழ்ச்சி. அப்ப அனுமன் சொல்றான், “அம்மா, இந்த அரக்கிகள்தானே ஒங்களைத் துன்புறுத்துனாங்க. திரிசடையத் தவிர மத்தவங்களையெல்லாம் கொன்னுர்ரேன்.”
திரிசடையாள் எம்மோய்
மனவினில் சுடர் மாமுக மாட்சியாள்
தனை ஒழித்து இவ் அரக்கியர் தங்களை
வினையினின் சுட வேண்டுவன் யான் என்றான்

இதை ஏன் அனுமன் சொல்ல வேண்டும்? அதுவும் வீடணன் அரசனாக இருக்கும் ஒரு நாட்டில்? நன்றாக யோசித்துப் பார்த்தால் இதைச் சொல்வதன் மூலம் சீதையை மகிழ்ச்சிப் படுத்த விரும்புகிறான் என்று மட்டுமே தோன்றுகிறது. பெண் என்பதால் தாடகையை வதைக்க யோசித்த தலைவனுடைய தொண்டன் காவல் பெண்டிரைக் கொல்வேன் என உரைத்த திறம் அவனுடைய தொண்டரடித்தன்மையை மட்டுமே காட்டுகிறது.

கண்டேன் சீதையை என்றவந்தான். கடலைத் தவ்விக் கடந்தவன். என்னென்னவோ பெரியவைகள் செய்தவன் சிறியது சொல்லிய காட்சி இது.

அத்தோட காட்சி முடியலை. ”வள் உகிரால் பிளந்து, இரை செய்வேன், மறலிக்கு, இனி”ன்னும் சொல்றான். கை நகத்தாலாயே இவங்களைப் பிளந்து கொன்னு எமனுக்கு இரையாக்குவேன்னும் சொல்றான்.

அப்புறம் சீதை தடுத்தப்புறம் அடங்குறான்.

நல்லா காட்சிப்படுத்திப் பாருங்க. அப்படியே இன்றைய அரசியல்/சினிமா தொண்டன் காட்சிக்கு வருவான்.

இதிலிருந்து கம்பன் என்ன சொல்ல வர்ரான்? ஒருவன் மிகப்பெரிய அறிஞனாக இருந்தாலும் தலைவனே எல்லாம் என்று அடிப்பொடித் தொண்டனாகி விட்டால் அவன் சறுக்குவதற்கு வாய்ப்புண்டு என்றே கூற வருகின்றான்.

என்னவோ தெரியலை. யுத்தகாண்டத்துல அதுவரைக்கும் ஒழுங்காப் பேசுன பாத்திரங்கள் நிலைமாறி உளறுகின்றன.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/21/199/

நல்ல பாட்டு. இதுக்குள்ள நெறைய மெல்லிய உணர்வுகள் இருக்கு. :)

தலைவி என்ன சொல்றா?

என்னை உரையலென் பேருரையல் ஊருரையல்
அன்னையும் இன்னள் எனஉரையல், பின்னையும்
........................... பெருமாற்கென்
கண்படா ஆறே உரை

இதுதான? இப்பிடிப் பிரிச்சுப் பாப்போமே

என்னை உரை அல் என் பேர் உரை அல் ஊர் உரை அல்
அன்னையும் இன்னள் என உரை அல் பின்னையும்
.............................. பெருமாற்கென்
கண்படா ஆறே உரை.

இதையா உரையா மாத்திப் பாக்கலாம்.

என்னைப் பற்றிச் சொல். இல்லை என் பெயரைச் சொல். இல்லை என் ஊரைச் சொல். இல்லை அன்னை அடைத்து வைப்பதைச் சொல். இல்லை பாண்டியப் பெருமானுக்கென்று தூங்காமல் தவிப்பதைச் சொல்.

இப்படியும் சொல்லலாம்ல?

எல்லாமே சொல்லச் சொல்றா தலைவி. காதல்ல வேண்டாம்னா வேணும்னுதானே பொருள். :)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/01/blog-post_20.html

ஒங்க தொடர்களைப் படிச்சு ரொம்ப நாளாச்சு. தொடருங்க. தொடருங்க.

கப்பலை ஏன் நிறுத்தி வெச்சுட்டாங்களாம்?

கப்பல்ல இண்டெர்நெட் இருந்திருந்தா நெறையத் தமிழ்ப்படம் பாத்திருக்கலாம். சரவணனுக்குச் சொல்லீருங்க. :)

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2012/01/blog-post_21.html

ஆர்.வி.உதயகுமார் படங்களில் உரிமைகீதம் பார்த்ததில்லை. புதிய வானம் படத்தைச் சிறுவனாக பார்த்த நினைவிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் அம்சலேகா இளையராஜா எம்.எஸ்.வி எல்லாம் தெரியாத காலகட்டம்.

நீங்கள் சொன்னது போல கிழக்கு வாசல்தான் உதயகுமாரின் படங்களிலேயே மிகச்சிறப்பாக ஓடியது என்று நானும் சொல்வேன். படம் வந்த போது பார்த்ததில்லை. சென்னைத் தொலைக்காட்சி ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் பாடல்கள் பார்த்திருக்கிறேன். அதிலும் கூண்டுக்குள் இருந்து ரேவதி வெளியே தப்பித்து ஓடிவர... நகைகள் ஒவ்வொன்றாய் கழண்டு விழ.. அந்தப் பின்னணி இசை சொர்க்கம். முழுப்பாட்டையும் கேட்க வேண்டியதில்லை. அவ்வளவு திருப்தி.

சின்னக்கவுண்டர்.. இசைப்புயல் வீசத்தொடங்கியதையும் மீறி வெற்றி பெற்ற படம் என்று நினைக்கிறேன். பிடித்த பாடல் கேசட் என்று எனக்குப் புரிதல் கொஞ்சம் வந்திருந்த வயது. ரோஜா படம் செய்த மாயம் அது. அப்போதுதான் ஒரு படாலை யார் பாடியிருக்கிறார் என்றெல்லாம் கேசட்டுகளில் என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தேன். முத்துமணிமாலை பாட்டு இசையரசி பாடியிருக்கிறார் என்றே தெரியாமல் அப்படி ரசித்திருக்கிறேன். பின்னாளில் தெரிந்த பிறகு மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.

சிங்காரவேலன் வந்த போதெல்லாம் தீவிர ரகுமான் விசிறியாகிவிட்டிருந்தேன். ஆனாலும் சிங்காரவேலனில் தூது செல்வதாரடி பாடலும் போட்டு வைத்த காதல் திட்டம் பாடலும் அவ்வளவு பிடிக்கும்.

காலவோட்டம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தையும் நிலமையையும் கொடுக்கிறது. அதற்கு உதயகுமாரும் விதிவிலக்கல்ல.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/01/blog-post_20.html

// ஐயோ அந்தக்காலத்துலே ஏது இந்த இண்டர்நெட்டும் தமிழ்மணமும்?

சினிமாவெல்லாம் இப்ப சமீபகாலமாத்தானே இணையத்தில் இந்தப்போடு போடுது, இல்லீங்களா?

செல்ஃபோனே அப்போ ஒரு பெரிய செங்கல் சைஸுலே இருந்துச்சே:-))))) //

ஆகா கொசுவத்தியா :) நீங்க சுருள் சுருள் டிரிங் டிரிங்னு சொன்னப்பவே சுதாரிச்சிருக்கனும். :)

சரி. கதையத் தொடருங்க :)

இன்னொரு கேள்வி. வேர்டுபிரஸ் ஐடி வெச்சி பிளாக்ஸ்பாட்டுல எப்படிப் பின்னூட்டம் போடுறது?

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/23/201/

திருமழிசை – சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் வழியில் இருப்பது. ஒவ்வொரு முறையும் அந்தச் சாலையில் செல்லும் பொழுது திருமழிசையாழ்வார் பாடிய, வணங்கிய, மங்களாசாசனம் செய்த கோயில் தெரிகிறதா என்று தேடுவேன். என் கண்ணில் சிவன் கோயில்தான் மாட்டும். அதுதான் சாலை மேல் இருக்கிறது.

திருவாலங்காடும் அருகில்தான் இருக்கிறது. காரைக்கால் அம்மையார் பாடிய இடம். உயிரடங்கி உணர்வடங்காப் பேய்களுக்கும் வாழ்வு காட்டிய அம்மைக்கு ஈசன் கயிலை காட்டிய ஊர்.

பக்தி இலக்கியங்களின் காலம் என்று சொல்லப்படுகின்ற, அதாவது வைதீக மத மறுமலர்ச்சிக் காலம் தொடங்கியது தொண்டை நாட்டிலே என்றே சொல்லலாம். ஓரளவு அதுதான் உண்மையும் கூட. பல்லவப் பேரரசும் அதற்கு ஒரு காரணம்.

தொண்டை இருப்பதே இறைத் தொண்டை பாடத்தான் என்று தொண்டை நாட்டில் பக்தி ஆட்சி செலுத்திய காலகட்டம்.

இந்தத் திருமழிசையில் துணைநகரம் அமைக்கப் போவதாக இன்றைய அரசு கூறியிருக்கிறது. பார்க்கலாம்.

சிறிய தவறு. மன்னிக்க.

தொண்டை இருப்பதே இறைத்தொண்டைப் பாடத்தான் – எனப் படிக்கவும்

சரி. இந்தப் பாடலுக்கு வருவோம்.

இந்தப் பாடலில் ஆழ்வார் செய்ய முற்படுவது என்ன? இறைவனை விளக்க முற்படுகிறார். முடியுமா? சொல்லில் முடியுமா? சொல்லத்தான் முடியுமா? ஆழ்வார் மட்டுமல்ல நாயன்மார்களும், அருணகிரிநாதரும் இதைச் செய்ய முயன்றிருக்கிறார்கள்.

முடியாது என்று தெரிந்த ஒன்றை எப்படி முடியும் என்று விளக்குவது?

கடவுள் எங்கெல்லாம் இருக்காருன்னு கேட்டா, வீட்டுல இருக்காரு. சொவத்துல இருக்காரு. கதவுல இருக்காரு. தட்டுல இருக்காரு. சோத்துல இருக்காரு. கொழம்புல இருக்காரு. கொழம்புல இருக்குற காய்ல இருக்காரு. இப்பிடி அடுக்கிக்கிட்டே போகனும். அந்தப் பட்டியல் எவ்வளவு பெருசாயிருக்கும்?!?! அடேங்கப்பா!

ஆனா எல்லாத்தையும் கடந்து எல்லாத்துக்கும் உள்ளும் இருக்காரு கடவுள்ன்னு சொன்னா சுருக்கமா இருக்கும்ல. அது மாதிரியான முயற்சிதான் இந்த மாதிரி விளக்கங்கள். தெரிஞ்சத வெச்சி தெரியாததைப் புரிய வைக்கிறது.

ஆணோ, பெண்ணோ, நல்லவனோ, கெட்டவனோ, திங்குற சோறோ, அதிலிருக்கும் சுவையோ, கேட்கும் ஒலியோ உணர்வோ, இல்லை மாயையோ… எல்லாம் நீதானப்பா.

இதே மாதிரி அருணகிரி பாடுனதுதான் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் பாட்டு.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/23/201/

திடீரென்று தோன்றியது. திருமால் பெருமை படத்தில் விட்டுணுசித்தராக நடித்த சிவாஜி உருகிப் பேசினால் எப்படியிருக்குமென்று ஒரு வசனநடை.

மாதவா கேசவா அச்சுதா
கண் கொண்டு பூக்கண்டேன்
கொய்துணக்குக் கொடுத்திட மனம் கொண்டேன்
அன்பெனும் விழி நோக்கப் புரிதல் கொண்டேன்
செழித்து வளர்ந்த பசுஞ்செடி உன் யாக்கை
நீண்டிருக்கும் கிளைகள் நின் திருக்கரங்கள்
மொட்டுகள் வெண்சங்கம்
மலர்ந்தவையோ பொற்றட்டம் (பொன்+தட்டம் = சக்கரம்)
கொத்தென நின்றவை உன் திருமுடியே
மொத்தமாய் மண்ணில் வேர் பாய்தவை திருவடியே
உனைக் கொய்து உனக்கிட்டு உனை வணங்கி உன்னருள் பெற என்னால் ஆகுமோ!
பார்க்காத பார் புகழும் திருமாலே – உன்
பேர் சொல்லி வாழ்கிறேன் - எப்பொழுதும்
நான் பிழைப்பதுன் திருவருளாலே!

தேசிகனின் வலைத்தளத்திற்கு சுட்டி கொடுத்தமைக்கு நன்றி. வலைப்பூவில் இருந்த காலத்தில் அவருடன் தொடர்பு இருந்தது. வெளிநாட்டுப் பயணம் அது இது என்று ஆயிரம் காரணங்களோடு தொடராமல் போனது. அவர் எழுதிய பெண்களூர் கட்டுரை மிக அழகான கட்டுரை. இன்னும் பெங்களூரில்தான் இருக்கிறார் என நினைக்கிறேன்.

சுஜாதாவின் திருமழிசை ஆழ்வார் பற்றிய கட்டுரையை அந்தச் சுட்டியில் படிக்க நேர்ந்தது. பொதுவாகவே வலைத்தளங்களில் நாயன்மார்கள்தான் பிணக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஆழ்வார்கள் எழுதியதில்லை என்று சாதித்தவர்களும் உண்டு. வைணவப் பாடல்களில் திருப்பாவை நீங்கலாக எதிலும் பழக்கம் இல்லாததால் அந்தக் கருத்தை மறுத்துக் கூறவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாத நிலை. ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்த பிறகுதான் முதலாழ்வார் காலகட்டத்திலேயே பிணக்குப் பாடல்கள் இருந்திருக்கின்றன என்று.

நாயன்மார்களும் பிணக்குப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். மறுப்பதிற்கில்லை. ஆனால் பொதுவாகவே பிணக்குப் பாடுவது இரு பக்கங்களிலும் வழக்கமாக இருந்திருக்கிறது என்றே புரிகிறது.

இதோ சுஜாதா எடுத்துக் காட்டும் திருமழிசை ஆழ்வார் பாடிய இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம்.
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பின்-வெறியான
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலாம் இன்று
மாலவனை வணங்காதார் ஈனவர் என்கிறார். அது சமணரோ பௌத்தரோ சிவனடியாரோ.. யாரோ. இது போன்ற பாடல்களைச் சைவத்திலும் காணலாம். இதை திருமழிசை ஆழ்வாரை குறைத்துச் சொல்வதற்காகச் சொல்லவில்லை. இந்தப் பிணக்குகள் ஒரு காலகட்டத்தில் மலிந்திருந்தது என்பதற்காகச் சொன்னேன். காரணம் இந்தப் பாடல்கள் காலத்தின் கண்ணாடி. ஒரு காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படியிருந்தது என்பதை இலக்கியங்களிலிருந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

வள்ளுவரும் அதைத்தானே சொல்கிறார். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்.
இன்றும் சிலருடைய மனதில் இத்தகைய பிணக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. படிப்பது ராமாயணம். இடிப்பது திருமால் கோயில் என்பார்களே. அது போல.

திருமழிசை ஆழ்வார் பாடிய நல்ல பாடல்கள் நிறைய உள்ளன. அவைகளை நாம் முன்னிறுத்தி ரசிப்போம்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/01/2.html

இந்தப் பதிவு எனக்குக் கொசுவத்தி சுத்துது. :)

ஒரு வாட்டி அமெரிக்கா போயிருந்தப்போ ... அமெரிக்கா ஒரு வாட்டிதானே போயிருக்கேன். ஹிஹி.

போனது ஜெர்மன் டவுன். ஐரோப்பாவைப் பாத்த கண்ணுக்கு அமெரிக்கா பிடிக்கலை. பெரிய பட்டிக்காடு மாதிரி இருக்கு. கடைல கெடச்சத வெச்சு ஏதோ சமைச்சு ஏதோ சாப்டுக்கிட்டிருந்தேன். கார் வேணுமாம் அங்கெல்லாம். நான் போனதோ 50 நாளைக்குதான்.

அப்ப ஆபீஸ்ல ஹேமான்னு ஒருத்தங்க அறிமுகம் ஆனாங்க. நண்பர்கள் நாலு பேர வீட்டுக்குச் சாப்பிடக் கூப்டாங்க.

போனா... வத்தக்கொழம்பு, சாம்பாரு, ரசம், சோறு, கூட்டு, பொரியல், தயிர், ஊறுகாய். எனக்குக் கண்ணெல்லாம் தண்ணி.

அவங்களே அதெல்லாம் அடிக்கடி பண்றதில்லையாம். சின்னப்பசங்க. அமெரிக்கர்களாகவே வளர்ராங்க. அதுனால நம்மூர்ச் சாப்பாடெல்லாம் இந்த மாதிரி எப்பயாச்சுந்தான்.

போறப்போ அவங்க வீட்டுக்காரர் தேடியெடுத்து ஒரு பழைய அம்புலிமாமா குடுத்தாரு. மறக்கவே முடியாது. :)

G.Ragavan said...

http://amas32.posterous.com/96417107

எதிர்பார்ப்புகள் மாறிக்கிட்டேயிருக்குல்ல.

நீங்க சிவசங்கரி எழுதிய பாலங்கள் நாவல் படிச்சுப் பாருங்க. ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையாக பெண்களின் திருமணம் எப்படி நடக்கிறது என்பதைச் சொல்லியிருப்பார். அந்தத் திருமணமே கேள்விக்குறியாகும் போது ஒவ்வொரு தலைமுறையும் எப்படிச் சமாளித்தது என்று போகும். பாட்டி-மகள்-பேத்தி என்று மூன்று தலைமுறைக் கதை.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/01/3.html

என்னமா நெனவு வெச்சிருக்கீங்க. வீட்டுல வல்லாரைத் தோட்டம் இருக்கா? :)

எரியுற வீட்டுல பிடுங்குற மட்டும் லாபம்னு அந்த அடகுக் கடைக்காரர் நெனச்சிருப்பாரு. அந்த டிவி இன்னும் நல்லா வேலை செய்யுதே. சப்பான் சாமானாச்சே.

G.Ragavan said...

http://radiospathy.wordpress.com/2012/01/28/manoj/

இந்த மல்லிகைப் பூவுக்குக் கல்யாணம் - இந்தப் பாட்டுதான் முதல்ல வந்தது. இசையரசியின் இனிய குரலில். என்ன படம் இது?

செந்தூரப் பூவே என்று சசிரேகாவின் அழகான குரல் தொடங்குவது அட்டகாசம்.

இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக வரட்டும்.

இந்த மனோஜ்-கியான் ஒலிப்பதிவைக் கொடுத்தமைக்கு நன்றி :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/28/206/

இந்தப் பா இன்று காலையில் ஒரு இனிய அதிர்ச்சியாகவே வந்திருக்கிறது. அதற்குக் காரணம், இந்தப் பாடல் பள்ளிப் பாடத்தில் இருந்தது. ஆனால் மனப்பாடப்பாடல் கிடையாது. இலக்கணம் படிக்கும் பொழுது இலக்கணப் புத்தகத்தில் சில எடுத்துக்காட்டுகள் இருக்கும். அவைகளைப் பயன்படுத்தாமல் உரிச்சொல் தொடருக்குத் தடமருப்பு என்று செய்யுளில் இருந்தே எடுத்துப் பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரிச் செய்கைகளால் தமிழாசிரியர் சௌந்தரா கைலாசம் எழுதிய பாடலை என்னையே வகுப்பெடுக்கச் சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்படிப் பல நினைவுகளைத் தூண்டி விடும் இந்தப் பாடலை இன்று பதிவிட்டமைக்கு நன்றி. சில நினைவுகளை நினைப்பதே சுகம். :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/28/206/

இந்தப் பாட்டுக்கு விளக்கம் சொல்லும் போது பல செய்திகளைக் கவனிக்க வேண்டியிருக்கு. சொல்ல வேண்டியிருக்கு. நான் உக்காந்து பெரிய பின்னூட்டமா அடிச்சிக்கிட்டேயிருந்தேன். எழுதி முடிச்சதும் லேப்டாப் கிராஷ் ஆயிருச்சு. எழுதுனது வீணாப் போச்சேன்னு நெனச்சேன். சரி. திரும்ப எழுதலாம்னு முடிவு பண்ணி லேப்டாப்பைத் தொடக்கி பயர்பாக்ஸைத் தொடங்குனா 365பா வலைப்பக்கமும் அதுக்கு நான் எழுதி வச்சிருந்த பின்னூட்டமும் அப்படியே இருக்கு.

ஒரு தமிழ்த்தொண்டில் என் பிணக்கை நுழைத்த குற்றத்தை முருகன் நினைவுபடுத்தி இனிமேல் அப்படிச் செய்யாமல் தொடர்கன்னு பின்னூட்டத்தைக் காப்பாத்திக் குடுத்ததாவே எனக்குத் தோணுச்சு. எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு. பொறுப்பது உன் கடன். முருகா.

சரி நம்ம பாவுக்கு வருவோம்.

பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு வரலாற்றுத் தகவல். அது முடிஞ்சதும் அடுத்த பின்னூட்டத்துல பாவின் விளக்கத்தைப் பார்க்கலாம்.

பாட்டு எப்படித் தொடங்குது? தட மருப்பு எருமை.

மாடுகளை நல்லாப் பாத்தவங்களுக்குத் தெரியும். ஆவுக்கும் காளைக்கும் கொம்பு மேல பாத்து வளரும். ஆனா எருமைக்கு? ஒரு மாதிரி கட்டாணிமுட்டாணியா அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு (அல்லது) தட்டையா பக்கவாட்டுல போகும். கொம்ப மட்டும் வெச்சே அது எருமைன்னு சொல்லீரலாம். அதுனாலதான் தட மருப்பு எருமை.

இதச் சொல்லும் போது ஒரு வரலாற்று நிகழ்ச்சியைச் சொல்லியே ஆகனும். கிருஷ்ணதேவராயர் கிட்ட வேலை பார்த்தவர் அரியநாத முதலியார். அந்தப் பக்கமெல்லாம் துர்க்கையம்மனுக்கு எருமைக் கிடா பலி குடுப்பது வழக்கம். அரசரும் ஒரு நல்ல எருமைக் கெடாவை நேந்து விட்டிருக்காரு. ஆனா பலிபீடத்துக்கு வரும் போதுதான் பிரச்சனை புரியுது. கொம்பு வளைஞ்சு லேசா கழுத்தை மறைச்சாப்புல இருக்கு. இப்பக் கிருஷ்ணதேவ ராயரு வெட்டனும். ஒழுங்கா வெட்டீட்டா நல்லது. இல்லைன்னா அது அபசகுணமா கருதப்படும்.

அப்ப அரியநாதமுதலியார் ஒரு திட்டம் சொல்றாரு. எருமைக்கு முன்னாடி சின்னதாக் குழிதோண்டி அதுக்குள்ள புல்லப் போடச் சொல்றாரு. இப்ப எருமை நல்லாக் குனிஞ்சு புல்லத் திங்குது. கழுத்தை நல்லாத் தெளிவாக் காட்டிக்கிட்டு. அப்புறமென்ன பலி பிரமாதமா கொடுத்தாச்சு. இந்த அரியநாத முதலியார்தான் விசுவநாத நாயக்கரோடு சேந்து தமிழ்நாட்டுக்கு வந்து அமைச்சரா இருந்தாரு. அறுபத்துநான்கு பாளையங்களாப் பிரிச்சுப் பாளையக்காரர்கள் கிட்ட கொடுத்து ஒரு அமைதியான சூழலை திரும்பக் கொண்டு வந்ததுக்கு இவரும் காரணம்னு சொல்வாங்க.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/28/206/

இந்தப் பாடலோட துறை விளக்கத்தைப் பாத்தா ஒரு உண்மை புரியும். அதாங்க.. தலைவனும் தலைவியும் எதுக்காக சண்டை போட்டாங்கன்னு தெரியும். தலைவன் போகக் கூடாத எடத்துக்குப் போயிட்டு வந்திருக்கான். அதான் தலைவிக்கு ஆத்திரம். அதுல உண்டானதுதான் சண்டை.

முன்னாடியெல்லாம் ஒருத்தர் செல்வந்தரான்னு எப்படி முடிவு செய்வாங்க தெரியுமா? எத்தன மாடு இருக்குங்குறத வெச்சுத்தான். அதுனாலயே மாடுங்குற சொல் செல்வம் என்னும் பொருளிலும்ம் வழங்கப்பட்டது.

எடுத்துக்காட்டு வேணுமா? :)

கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை

திருக்குறள்தான். இதுல வரும் மாடல்ல என்னும் சொற்றொடர் செல்வத்தைதான் குறிக்கிறது.
அப்படீன்னா, செல்வம் = மாடு = வளமை

ஒரு மொழியின் தொடக்கம் வளமையா இருக்கனுமில்லையா. அதான் தமிழ் அகரத்துல தொடங்குது. “அ” எழுத்தைப் பக்கவாட்டுல பாருங்க. ஒரு மாட்டின் முகம் தெரியுதா? இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு விளக்கம் இருக்குன்னு சொல்றாங்க.

சரி. இதை ஏன் இப்பச் சொன்னேன்னு கேக்குறீங்களா? பாட்டோட முதல் ரெண்டு வரிகள் மறைமுகமாச் சொல்ற சேதியே இதுதான். தலைவனும் தலைவியும் நல்ல செல்வந்தர்கள். வசதியான வீட்டில் இருக்கிறவர்கள்.

தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண் தகு நல் இல்
இந்த ரெண்டு வரிக்குள்ள புலவர் என்னென்ன விவரங்கள் சொல்றாரு தெரியுமா?

காண் தகு நல் இல் - வீட்டப் பாத்தாலே பளிச்சுன்னு இருக்கனும். இந்த வரியில் ஒவ்வொரு சொல்லிலும் சில எழுத்துகளைச் சேக்குறேன். அதோட பொருள் படக்குன்னு புரிஞ்சிரும்.
காண் தகு நல் இல்
காணத் தகுந்த நல்ல இல்லம்

இவ்வளவுதாங்க பொருள். எல்லாமே நமக்குத் தெரிஞ்ச சொற்கள்.

இந்தப் பாட்டில் வரும் தலைவன் தலைவியின் வீடுதான் அந்த இல்லம். தலைவி அவ்வளவு அருமையா வீட்டை வெச்சிருக்கா. என்னது? தலைவன் என்ன செஞ்சானா? காசு குடுத்ததோட சரி. அப்புறந்தான் போகக்கூடாத எடத்துக்குப் போயிர்ரானே. அதுனாலதானே சண்டை. இந்தத் தலைவனா வீட்டை பளிச்சுன்னு வெச்சுக்க உதவுவான்?!

தடமருப்பு எருமை - வளைந்த கொம்புகளை உடைய எருமை
மட நடைக் குழவி தூண் தொறும் யாத்த - இந்த வரிக்குள்ளேயும் சேதி ஒளிஞ்சிருக்கு.
மட நடைக் குழவின்னா என்ன? நடைன்னா நடக்குறது. மட நடைன்னா? மடத்தனமா நடக்குறதா? ஆமா. நடக்கத் தெரியாம தத்தக்கா பித்தக்கான்னு நடக்குறதுதான் மடநடை. யார் அப்படி நடக்குறாங்க? எருமைக் குழவி. அதாவது எருமைக் கன்னுக்குட்டி.

அது ஏன் அப்படி நடக்குது? ஏன்னா அது புதுசா ஈன்ற கன்று. அதுனால அப்படி நடக்குது. கொஞ்சம் பழகுனா நடை வந்துரும். ஆனா புதுக்கன்று உதறலோடதான் நடக்கும். அதுனால அதை மாட்டுக்குப் பக்கத்துலயே கட்டாம, பாதுகாப்பாத் தூண்ல கட்டிப் போட்டிருப்பாங்க. வீட்டுக்கு உள்ள இருக்கும் தூண்ல கட்டமாட்டாங்க. முன் வாசல்லயே தூண்கள் இருக்கும். தொழுவத்திலும் தூண்கள் இருக்கும். அதுல கட்டிப் போட்டிருப்பாங்க.

அப்படி எத்தன கன்றுக்குட்டி இருக்கு? தூண் தொறும் கட்டி வெச்சிருக்காங்க. ஒவ்வொரு தூண்லயும் ஒவ்வொரு கன்னுக்குட்டி. ஒரே நேரத்துல இத்தனை கன்றுகள் ஈன்றெடுக்கனும்னா மாடுகள் நெறைய இருக்கனும். இருக்கு. அவ்வளவு வசதியான வீடு.

இன்னொன்னு கவனிக்கனும். தூண் தொறும் யாத்த. கம்பு நட்டியெல்லாம் கட்டிப் போடலை. தூணே கட்டியிருக்காங்க. அதாவது கட்டப்பட்ட வீடு. கட்டப்பட்ட தொழுவம். அதுலயிருந்து அந்த வீட்டோட வளமையைப் புரிஞ்சிக்கலாம்.

இப்ப அந்த வரியைப் படிச்சுப் பாருங்க. நல்ல வசதியான வீடுன்னு புரியும்.
தடமருப்பு எருமை மடநடைக் குழவி தூண் தொறும் யாத்த

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/28/206/

இந்தப் பாட்டின் பொதுப்பொருளை நாகா மிக அழகாகச் சொல்லி விட்டார். என்ன பொருள்? கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை. எதனால்? கணவன் பரத்தை வீட்டுக்குப் போய் வந்தான். சரி. அப்புறம் என்ன ஆச்சு. அந்நேரம் பாத்து வீட்டுக்கு விருந்தாளி வந்தாச்சு. ஆகா! நல்ல நேரம் பாத்து வந்திருப்பாங்களோ!

ஆனா அது நல்ல நேரந்தான். ஏன்னா. வீட்டுக்கு வந்த விருந்தினரை விருந்தோம்பல் செய்யனுமே. அது பெருமையாச்சே. அதுனால சண்டைய சட்டுன்னு மறந்துட்டு தலைவி விருந்தாளிகளுக்குச் சமைக்கப் போறா.

இதுல யாருக்கு லாபம்? தலைவனுக்குதான். சண்டை முடிஞ்சிருச்சே. அதான் அவளோட இந்த உயர்வான விருந்தோம்பல் பண்பைப் பாராட்டுறான்.
அதுல அங்கங்க சிலபல தகவல்கள்.

தலைவியை விளக்கும் வரியில் பாட வேறுபாடு ஒன்றும் உண்டு. பாட வேறுபாடுன்னா என்னதா? அதாவது ஒருத்தர் ஒரு பாட்டை ஓலையில எழுதுறாரு. திருக்குறள்னே வெச்சுக்குவோமே. ஆதிபகலன் முதற்றே உலகுன்னு எழுதுறாரு. இன்னொருத்தர் கொஞ்ச நாள் கழிச்சு அந்த ஓலையைப் படியெடுக்குறாரு. கையெழுத்து கொஞ்சம் முன்னப் பின்னதான் இருக்கு. ஆதிபகலன் என்பதை ஆதிபகவன் என்று பிரதி எடுத்து விட்டார். கொஞ்ச நாள் கழிச்சி இந்த ரெண்டு ஓலையுமே ஒருத்தருக்குக் கிடைக்குது. ஒன்னுல ஆதிபகலன். இன்னொன்னுல ஆதிபகவன். இதுக்குதான் பாட வேறுபாடு அல்லது பாடபேதம்னு பேர்.

இந்தப் பாட்டுல அப்படி என்ன பாட வேறுபாடு இருக்குன்னு கேக்குறீங்களா?
கொடும் குழை பெய்த செழும் செய் பேழை
இதுதானே பாட்டோட மூன்றாவது வரி.
இன்னொரு ஓலையில் இப்பிடி இருந்திருக்கு.
கொடும் குழை பெய்த செழும் செய் பேதை
ரெண்டையும் வெச்சிப் பொருள் சொல்லலாம். பாட்டோட மையக் கருத்து மாறாது. ஆனா ஓலையாராய்ச்சி செய்றவங்க இந்த மாதிரி வேறுபாடுகள் இருக்குன்னு சொல்லீருவாங்க.

நல்ல பண்புள்ள அந்தத் தலைவி ஒரு அரிய பேழைதான். அதே நேரத்தில் கணவனோடு இந்த மாதிரி சண்டை போட வேண்டி வருவதனால் பேதையும்தான். :)

அதே போல வாழை ஈர்ந்தடிங்குறதும் ஒரு நல்ல வழக்கம். இளம் வாழையிலைன்னா அப்படியே போடலாம். கொஞ்சம் பெரிய இலைன்னா நடுவுல இருக்கும் தண்டு தடியா இருக்கும். அடிப்பக்கமா அந்தத் தண்டப் பாதியா வெட்டீட்டா சாப்பிட வசதியா இருக்கும். இதை எங்க ஊர்கள்ள செஞ்சி பாத்திருக்கேன். சாப்பாட்டுக்கடைகள்ளயே இலை போடாத இந்தக் காலத்துல இத எங்க பாக்குறது?!

G.Ragavan said...

http://nchokkan.wordpress.com/2012/01/28/anmlfarm/

தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்றாலே கொஞ்சம் பயம்தான். கடைசியாகப் படித்தது தகழியின் செம்மீன். மிக நல்ல நடை.

பஞ்சரமேர் பாகான் என்ற வங்க மொழிப் படத்தைத் தமிழில் நாவல் வடிவில் எழுத வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. அடுத்து அதை எடுக்க வேண்டும். நினைவூட்டியமைக்கு நன்றி.

தேவதைக் கதைகளுக்குள் நாட்டு நடப்பை மறைத்துக் கொடுப்பது ரொம்பவும் சிரமமான வேலை.

இரண்டு எடுத்துக் காட்டுகள் எனக்குத் தெரிந்து இருக்கின்றன. மிகப் பிரபலமான லார்டு ஆஃப் தி ரிங்ஸ் கதை உலகப்போர் பிரச்சனையை மையமாக வைத்துத்தான் எழுதப்பட்டதாம். அதை முதலில் படிக்கும் போது எனக்கும் தெரியவில்லை. பின்னால் தெரிந்ததும் கதையில் யார் எந்தப் பாத்திரம் என்றுதான் மூளை சிந்தித்தது. ஹாரி பாட்டரில் ஒரு சில பகுதிகள் நாஜிகளின் கொடுமையை வைத்து எழுதப்பட்டதாக ஜே.கே.ரௌலிங் கூறியிருக்கிறார்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/29/207/

இன்றைய பாவைப் படிச்சதும் ஒரு நெருடல். ஒரு வருத்தம். அப்படியே கொஞ்சம் நிம்மதி.

ஒரு பகை. ஒரு போர். ஒரு முடிவு. ஒருவனுக்குத் தோல்வி. இன்னொருவனுக்கு வெற்றி.

பொதுவாவே விலங்கினங்களில் இருந்து வரும் வழக்கம் என்னன்னா தோல்வியடைஞ்ச விலங்கோட குட்டிகளையும் கொன்று விடுவது. அதே விலங்கு மனநிலைதான் சோழன் கிள்ளி வளவன் மனநிலையும். தோற்றுப்போன மலையமான் மகன்களைக் கொல்ல முயற்சி. அதுவும் எப்படி? ஊரைக் கூட்டிப் பொதுவில் யானையை ஏவி விட்டுக் கொல்லும் திட்டம். கொடூரத் திட்டம்.

அந்தக் கொடுமையைக் கண் கொண்டு பார்க்க கிள்ளி வளவனும் அங்கிருக்கிறான். அப்போது அவன் மனநிலை வெறியோடுதான் இருக்கும்.

அப்படி வெறியோடு இருப்பவனிடம் போய் யார் எடுத்துச் சொல்றது?

சொன்னாலும் கேட்க வேண்டுமே?

நல்ல வேளை. அங்கு கோவூர்க் கிழார் இருந்திருக்கிறார்.

அவரும் போய் எடுத்ததுமே “அடேய் மடையா, நிறுத்து உன் கொடுமையை”ன்னு சொல்லியிருந்தா என்னவாயிருக்கும்?! அப்பப்பா!

சிலப்பதிகாரத்துல பாத்தா, கண்ணகி எடுத்ததுமே “தேரா மன்னா செப்புவதுடையோய்”னுதான் பேசுறா. ஏன்னா பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் அமைதியாச் சொன்னதைக் கேக்கும் மனநிலையில் இருந்தான்.

ஆனா கிள்ளி வளவன்?

அப்படிப் பட்டவன் மனநிலையை மாத்ததும்னா என்ன செய்யனும்?

மொதல்ல அவனைப் புகழ்ந்து ரெண்டொரு பேச்சு பேசுனா என்னன்னு திரும்பிப் பாப்பான். தன்னுடைய பெருமைக் கேட்டு ஒரு மிதப்புல இருக்குறவன் கிட்ட மெதுவா உண்மையப் புரிய வைக்கனும். அது புரியுற சமயத்துல, “இந்தப்பா, இப்பிடி நல்லது செய்ற வாய்ப்பு ஒனக்கிருக்கு. செய்றதும் செய்யாததும் உன் விருப்பம்”னு சொன்னா எல்லாம் நல்லபடி முடியும் வாய்ப்பிருக்கு.

அதத்தான் கோவூர் கிழார் சொல்றாரு.

நீ எப்பேர்ப்பட்ட வம்சம்
ஒங்க தாத்தனுக்குத் தாத்தன் எவ்ளோ பெரிய ஆளு
புறாவைக் காப்பாத்த தன்னோட சதையைக் கொடுத்தவரு
அத்தோட இன்னும் எத்தனையோ பேருக்கு உதவி பண்ணீருக்காரு
அப்பேர்ப்பட்ட குடும்பத்துல பொறந்த பெருமை உனக்குண்டு.

இதக் கேட்டதுமே கிள்ளி வளவனுக்குத் தன்னோட பெருமைய நெனச்சு ஒரு மெதப்பு வந்திருக்கும்.

அப்ப அந்தக் கொழந்தைகளோட நிலமைய எடுத்துச் சொல்றாரு
பாருப்பா.. கொல்றதுக்கு யானை வந்துருக்கு
அதுவரைக்கும் பயந்திருந்த கொழந்தைகள்
யானையப் பாத்ததும் பயத்து மறந்து சிரிக்குது
அவ்வளவு வெகுளியான சின்னக் கொழந்தைகள்
இந்தக் கொழந்தைகள் சாகனுமா?
சரி. சொன்னதச் சொல்லீட்டேன்.
உனக்கு விருப்பமானதச் செய்.

அவ்வளவுதான். அதுக்கப்புறம் கிள்ளி வளவன் கொழந்தைகளை விட்டுர்ரான்.

புலவர்கள் காசுக்காகப் பாடியிருக்காங்க. உண்மைதான். ஆனா புலவர்கள் காசுக்காக மட்டுமே பாடியவர்களாக இருந்ததில்லை. அந்த நிலமையும் பிற்காலத்தில் வந்தது. ஆனால் சங்ககாலத்தில் காசுக்காக மட்டுமே புலவர்கள் கூவவில்லை என்பதுதான் உண்மை.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/29/207/

இந்தப் பாட்டுல ரெண்டு எடத்துல புன் என்கிற சொல் வந்திருக்குது. புண் தெரியும். அதென்ன புன்?

இப்பவும் நாம இந்தப் புன்னைப் பயன்படுத்துறோம். எங்கயா? புன்னகை. அதுல வருதே புன்.

நகை - சிரிப்பு
புன்னகை - மெல்லிசாச் சிரிக்கிறது.

அப்போ புன்னுக்கு என்ன பொருள்? மெலிவது.

சரி. பாட்டுல எந்த மாதிரிப் பயன்படுத்தீருக்காரு புலவர்னு பாப்போம்.

புலன் உழுது உண்மார் புன்கண்

இந்த வரி ரொம்பவும் அருமையான வரி.

புலன் - அறிவு
புலன் உழுது உண்மார் - அறிவை உழுது உண்கின்றவர்கள்
நிலத்தை உழுகின்றவன் உழவன்
அறிவை உழுகின்றவன் புலவன்

புலன் உழுது உண்மார் புன்கண் = புலவர்கள் புன்கண்

அறிவை உழுது வாழ்கின்ற புலவர்கள் வாழ்க்கை மற்றவர்களை விட வளமை மெலிந்தே காணப்படும்.

புலவர்களுக்கு அந்த வறுமை (மெலிவு) வரும் பொழுது என்பதுதான் “புலன் உழுது உண்மார் புன்கண்” என்ற வரிக்குப் பொருள்.

இன்னொரு புன் இருக்கே. அதென்ன?

புன்தலைச் சிறாஅர்

சிறாஅர் = சிறார்
தலை தலைதான்.
புன்தலை - மென்மையான, மெலிந்த, பிஞ்சுத்தன்மையை உடைய தலை. அதாவது உறுதியில்லாத எளிதில் உடைந்து போகக்கூடியத் தலை.

இப்பப் புன் என்ற சொல்லுக்குப் பொருள் புரிஞ்சிருக்கும்.

இன்னொரு சொல்லையும் சொல்லி முடிச்சுக்கிறேன்.

நீ வேட்டது செய்ம்மே

பாட்டோட கடைசி வரி. செய்ம்மே-ன்னா செஞ்சுக்கோ. நீன்னா நீ. இது ரெண்டும் புரிஞ்சிருச்சு. அதென்ன வேட்டது? வேண்டியதைச் செய்னு நாகா சொல்லீருக்காரு. அதுவும் சரிதான். இந்தச் சொல்லோட வேர்ச்சொல்லைப் பாத்தா எளிமையாப் புரியும்.

வேட்கை என்பதுதான் வேர்ச்சொல். வேட்கைன்னா விருப்பம். வேட்டது - விரும்பியது.

விரும்பியது போலச் செய்னு சொல்லிக் கோவூர்க் கிழார் முடிக்கிறார்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/30/208/

திருநாவுக்கரசர். சொல்லவே இனிமையான பெயர். திரு நாவுக்கு அரசர்.

சைவத்துல பாத்தா சமயக்குரவர் நால்வர். மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், மற்றும் சுந்தரர்.

இதுல நாவுக்கரசரைத் தவிர எல்லாருக்கும் ரெண்டு பேருதான். இயற்பெயர் ஒன்னு. பட்டப்பெயர் ஒன்னு.
மாணிக்கவாசகர் - திருவாதவூரார்
ஆளுடைப்பிள்ளையார் - திருஞானசம்பந்தர்
நம்பி ஆரூரன் - சுந்தரர்

ஆனா திருநாவுக்கரசருக்கு மட்டும் நாலு பேர்கள். இது பெருமையான்னு கேக்குறத விட, செய்தின்னு புரிஞ்சிக்கோங்க.
பிறக்கும் போது அவருக்கு வெச்ச பேர் மருள் நீக்கியார்.
அப்புறம் சமண சமயத்துக்கு மாறி பாடலிபுத்திரம் வரைக்கும் போய் புத்தர்களை வாதில் வென்றதால் தருமசேனன் என்று பட்டப் பெயர். சமண புத்தச் சண்டையும் அப்ப இருந்திருக்கு.
சூலைநோயால் ஈசன் ஆட்கொண்ட பிறகு திருநாவுக்கரர் என்றும் அப்பர் என்றும் பெயர்கள்.

இதுல ஒன்னு கவனிக்கனும்.
அந்தச் சிவனையே “அப்பன் நீ அம்மை நீ”ன்னுதான் தேவாரத்துல நாவுக்கரசர் பாடியிருக்காரு. நாமும் அப்படித்தான் பாடுறோம். ஆனா நாவுக்கரசரை அப்பர்னு மதிப்போட அழைக்கிறோம்.

தொண்டு ஒருவருக்குப் பெற்றுத் தரும் சிறப்பு அது.

அதுவுமில்லாம இந்த நாலு பேர்லயும் ரொம்ப வயசு வரைக்கும் இருந்தவர் திருநாவுக்கரசர்தான். மாணிக்கவாசகர் 32ல் இறையடி சேர்ந்தார்.
திருஞான சம்பந்தர் கல்யாணத்தன்னைக்கே குடும்பத்தோட காணாமப் போனார்.
சுந்தரரும் இளம் வயசுலயே கைலாயம் சேர்ந்தார்.

இப்படி நிறைய வகைல மத்த சமயக்குரவர்களை விட ரொம்பவும் வேறுபடுகிறார் திருநாவுக்கரசர்.

இவரு சமணரா இருந்து சைவரா மாறுனப்போவும் நிம்மதியா இருக்க விட்டாங்களா? மதம் மாறீட்டாருன்னு மகேந்திரப் பல்லவனை ஏவி அவரைச் சுண்ணாம்புக்காளவாயில் இட்டாங்க. கல்லில் கட்டிக் கடலில் போட்டாங்க. நஞ்சு குடுத்தாங்க. ரெண்டு பக்கமும் அடி வாங்கிய மத்தளம் திருநாவுக்கரசர்.

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/30/208/

இன்றைய பாட்டுக்கு வருவோம். ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க. நல்ல கேள்வி. எல்லார் மனசிலும் வர வேண்டிய கேள்வி. எனக்கும் அடிக்கடி வரும் கேள்வி.

ஆண்டவன் தான் எல்லாத்துக்கும் காரணமா? நமக்குன்னு ஒன்னும் கெடையாதா? அப்போ நல்லது கெட்டதுக்கெல்லாம் ஆண்டவன் தானே பொருப்பு. நம்ம ஏன் அதுக்கான பலனை அனுபவிக்கனும்?

இந்தக் கேள்விகளுக்கு விடை இருக்கா? தெரியாதுங்குறதுதான் சரியான விடைன்னு நான் நினைக்கிறேன்.

அதச் சொல்ல முடியாமத்தான் “கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்”னு பெரியவங்க சொல்லி வெச்சாங்களோ!

இதப் பத்திய எண்ண ஓட்டங்களைத் தட்டி விட்டேன். அதுல தோணுனத இங்க சொல்றேன். தப்பிருந்தா பொறுத்துக் கொள்க.

ஒரு உண்மையச் சொல்றேன். அது சரியான்னு யோசிச்சுப் பாருங்க.

நம்ம உணர்ச்சிகளையே நம்மால் சரியாச் சொல்ல முடியாது. இதுதான் அந்த உண்மை.

ஒரு கெட்ட செய்தியைக் கேட்டதும் “இதயத்தில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது”ன்னு சொல்றோம். அது உண்மையா? இல்லையே. நம்முடைய சாதாரண உணர்ச்சியை அப்படியே உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லி விளக்கும் திறம் நமக்கில்லை.

இது நம்மளுடைய குறைபாடு. இந்தக் குறைபாடு இருக்குறப்போ ஆண்டவனின் செயல்களைப் புரிஞ்சிக்க முடியுமா? புரிஞ்சாலும் சொல்ல முடியுமா? சொன்னாலும் கேக்குறவங்களுக்குப் புரியுமா?

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/01/30/208/


இந்த மாடோட உலகம் எவ்வளவு பெருசு? அதைக் கட்டிப் போட்டிருக்கும் எடந்தான் அதோட உலகம். ஒரு குறிப்பிட்ட எடத்துக்குள்ள அதைக் கட்டியிருக்குற கயிறோட நீளத்தப் பொருத்து நடந்துக்கலாம். அவ்வளவுதான். வீட்டுக்குக் காள மாடு வரும். அதுக்கு வைக்கோல் வைக்கனும்னு எல்லாம் பசுவுக்குக் கவலை இல்லை. கட்டிப் போடப்பட்டிருக்கும் தொழுவத்தைத் தாண்டி மாடுகளால் சிந்திக்க முடியவில்லை.

நம்மளும் அந்த மாடு மாதிரிதான். நமக்குன்னு சில உறவுகள். சில அதுகள். சில இதுகள். அதுக்குள்ள யே சுத்திச் சுத்தி வர்ரோம். இத்தனைக்கும் நமக்கெல்லாம் ஆறறிவுன்னு பெருமை வேற.

கட்டப்பட்டிருக்கும் மாட்டோட கயிறு அந்து போகுது. இப்ப அது இன்னும் நாலஞ்சு எடங்கள் சுத்திப் பாக்கலாம். நம்மளும் பந்தபாசக் கயிறை அத்து விட்டா கொஞ்சம் சுத்திப் பாக்கலாம். ஆனாலும் எல்லாத்தையும் பாக்க முடியாது.

அப்படி அந்தத் தொழுவத்திலேயே மாடு இன்பமா இருக்குற மாதிரி நாம் இருக்கோம். அந்த நேரத்தில் அனுபவிக்கும் இன்பம் துன்பம் எல்லாம் உண்மை. அதுனால நாமளும் அதுதான் நம்முடையதுன்னு அதுக்குள்ள இருக்கோம்.

நம்ம மண்டைக்கு இவ்வளவுதான் புரியுது. இவ்வளவு புரிஞ்சதை வெச்சி என்ன செய்யலாம். நல்லவனா இருக்க முயற்சி செய்யலாம். நல்லவனாகவும் இருக்கலாம்.

இதுக்கு மேல நாம தெரிஞ்சிக்கனும்னா நம்ம(மாடு) தொழுவத்தை விட்டு வெளிய வரனும். ஆனா அது எல்லாருக்கும் தேவையில்லை.

இன்னும் எளிமையாப் பாப்போம். தொழுவத்துல நல்லா வசதியா இருந்த மாடு ஊரெல்லாம் சுத்தீட்டு திரும்பத் தொழுவத்துக்கே வருது. அப்ப அதுக்குக் கொஞ்சம் அறிவு விரிவடைஞ்சிருக்கு. அப்பப் பால் கறக்க முதலாளி வர்ராரு. தனக்கு சாப்பாடு போட்டு, தங்க எடம் கொடுத்த முதலாளி மேல மாட்டுக்கு மிகுந்த நன்றி. உடனே அந்த மாடு தன்னோட மாட்டு மொழியில் இப்படிப் பாடுது.
வைக்கோல் இட்டால் எம் மாடு தின்னா மாடே
கழுநீர் ஊற்றினால் எம் மாடு குடியா மாடே
மேய்த்து வித்தால் எம் மாடு மேயா மாடே
பால் கறந்தால் எம் மாடு சுரக்கா மாடே
ஏரில் பூட்டுவித்தால் எம் மாடு உழா மாடே (இது காளை மாட்டுக்கான வரி)
தொழுவத்தில் கட்டாவிடில் யார் கட்டுவரே!

இதைத்தானே மாடு பாட முடியும். இந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம். வைக்கோல் போடுறது, பால் கறக்குறது மட்டுந்தான் முதலாளியோட வேலையா? இல்லையே. மாட்டுக்குத் தெரியாத புரியாத நிறைய விஷயங்கள் முதலாளி கிட்ட இருக்கு. அது போல ஆண்டவன் கிட்ட நாம் புரிந்து கொள்ள முடியாதவை நிறையவே உண்டு.

ஆகையால ஆண்டவனைப் புரிஞ்சிக்கிறதை விட தொண்டு செய்வதையும் நல்லறத்தோடு வாழ்வதையும் புரிஞ்சிக்கனும்.

என்னடா, மாட்டுப் பாட்டு எழுதீட்டானேன்னு யாரும் சண்டைக்கு வராதீங்க. அப்பர் மேல் எனக்கு மதிப்பும் அன்பும் உண்டு. ஆனால் இறைவன் மிகப் பெரியவன். எவ்வளவு கேட்டாலும் முழுதும் விளங்காது. எவ்வளவு சொன்னாலும் முழுதும் முடியாது..

இதுனாலதான் கிருஷ்ணர் ஏசுநாதர் போன்ற கடவுள்களை மேய்ப்பர்களாக உருவகப்படுத்துகிறார்கள்.

கவியரசர் கண்ணதாசன் ஒரு அருமையான பாடல் எழுதியிருக்காரு. அதுக்கு நடுவுல சில வரிகள்.
மேய்ப்பவன் அவனே
ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னன் அவனே
மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரிமாதா தேவமகனைக் காப்பது எப்படியோ
தேவதூதன் நம்மையெல்லாம் காப்பது அப்படியே

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/02/blog-post.html

டீச்சர், கப்பல் கவுந்த மாதிரி ஏன் கன்னத்துல கை வெச்சிருக்கன்னு கேக்குறதும் ரொம்பப் பழைய வழக்கம்.

அதுக்குக் காரணம் நல்ல நிலையில் இயங்கும் கப்பல் என்பதே ஒரு பெரிய சொத்து. அது ஏற்றிச் செல்லும் பொருள்களின் அளவும் நிறைய. இன்னைக்கும் கப்பலை விடப் பெரிய வண்டி சரக்கு ஏத்தீட்டுப் போக இல்லையே. கப்பல்தானே.

அதுனாலதான் கப்பல் தரை தட்டுவதும் கவிழ்வதும் அவ்வளவு பெரிய துயரங்கள்.

முந்தியெல்லாம் மரக்கப்பல்கள்தானே. யோசிச்சுப் பாருங்க. அதுலதான் மக்கள் உலகம் சுத்தியிருக்காங்க. உண்மையிலேயே துணிச்சல்காரங்கதான். அவங்களைப் பாராட்டாம இருக்க முடியலை.

இந்தத் தொடர் முடிஞ்சது. அடுத்த தொடர் எப்போ? :) நம்ம கதை நமக்கு ஆகனும்ல.

G.Ragavan said...

http://kavinaya.blogspot.com/2012/02/blog-post.html

குட்டிக் கதை. அழகான கதை. நல்ல கருத்து. :)

தெய்வம் தொழாள்னு வள்ளுவப் பெருமாள் சொன்னது இதுதானோ!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2012/02/blog-post_10.html

என்ன அழகு! பழங்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் அழகுதான்.

ராஸ்பெர்ரியின் சிவப்பு நிறம் ஒரு மாணிக்கக்கல்லைப் போல இருக்கிறது. லேசான புளிப்பும் தித்திப்பும் கலந்து சுவை தரும்.

ஐஸ் கேக்கு எல்லாமே அட்டகாசமா இருக்கு.

அந்த மஃபினை அப்படியே எடுத்துச் சாப்டனும் போல இருக்கு. எல்லாரும் இதைச் சொல்வாங்க. :)

சரி. ஒங்களுக்கு நளி பட்டம் வேணுமா? பீமி பட்டம் வேணுமா? சொல்லுங்க :)

G.Ragavan said...

http://365paa.wordpress.com/2012/02/14/223/

அனைவருக்கும் காதலர்நாள் நல்வாழ்த்துகள். :)

குறுந்தொகையில் ஒரு அட்டகாசமான பாடல் காதலர் நாளில் :)

உலகக் காதலர்கள் சார்பாக நாகாவிற்கு பாராட்டுகள்.

இந்தப் பாடலைப் பார்க்கும் முன் வைரமுத்து அவர்களின் பாடல் வரி ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடங்கிவிடும்
வேதம் புதிது படத்திலுள்ள கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல்தான் இது.

இந்த வரிகள் எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டதோ அந்தச் சூழ்நிலையில்தான் இந்தக் குறுந்தொகைப் பாடலும் எழுதப்பட்டது.

காதலர் கண்டனர். காதல் பெருகி இருவரும் ஒருவரையொருவர் கொண்டனர்.

அப்படிக் கொள்ளும் போது வராத தவிப்பு கொண்ட பிறகு வருகின்றது. அதுவும் பெண்ணுக்கு.

அந்த அச்சத்தைப் போக்குவதற்காகக் காதலன் சொன்னதே இந்தக் குறுந்தொகைப் பாட்டு.

“பெண்ணே, நன்றாக நினைத்துப் பார். நாம் ஒருவரையொருவர் எந்த வகையிலும் முன்னம் அறியாதவர்கள். அப்படியிருந்தும் இன்று நாம் காதலராகிக் கூடிக் களிக்கிறோம். இந்தச் சேர்க்கை ஏதோ ஒரு பொருட்டால் உண்டானது. அப்படியே இது தொடரும்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ? என் தாயும் (யாய்) உன் தாயும் (ஞாய்) ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா? இல்லை.
# இருவரும் ஊர்த் தோழிகளா?
# அல்லது ஒரே அலுவலகத்தில் வேலை செய்கின்றவர்களா?
# ஒரே மகளிர் மன்றத்தில் இருப்பவர்களா?
# ஒரே பேருந்தில் செல்கின்றவர்களா?
# ஒரே கோயிலில் கும்பிடுகின்றவர்களா?
# ஒரே கடையில் சேலை எடுப்பவர்களா?
# ஒரே பொற்கொல்லனிடம் நகை செய்கின்றவர்களா?
# அரிசியும் பருப்பும் ஒரே கடையில் வாங்குகின்றவர்களா?
# விஜய் தொலைக்காட்சியில் நீயா நானாவில் எதிரெதிர் அணியில் கூட இருந்ததில்லை.
# ஜெயா தொலைக்காட்சியில் ஜாக்பாட் நிகழ்ச்சியில் ஒரே அணியிலும் இருந்ததில்லை.

இப்படி எதுவுமே இல்லை. இனிமேல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டால்தான் அவர்கள் முதல் சந்திப்பு நிகழ முடியும்.

தாய்மார்கள்தான் இப்படி. தந்தையர் எப்படி?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

என் தந்தையும் (எந்தை) உன் தந்தையும் (நுந்தை = நும்+தந்தை) எந்த வழியில் உறவானவர்கள்?
# மாமனா? மச்சானா?
# திருட்டுச் சுருட்டைப் பள்ளியில் ஒன்றாகப் புகைத்தவர்களா?
# ரதிநிர்வேதம் படத்தை ஒரே அரங்கில் ஒன்றாகப் பார்த்தவர்களா?
# சைக்கிள் போட்டியில் ஒருவரையொருவர் முந்தப் பார்த்தவர்களா?
# ஒரே தாளை இரண்டாகக் கிழித்து ராக்கெட் செய்து பெண்கள் பக்கம் விட்டவர்களா?
# ஒரே பெண் காவலரிடம் பெண்களைக் கேலி செய்ததற்காக அடி வாங்கியவர்களா?
# ஒரே டீக்கடையில் கூட்டமாகக் கூடிக் கதையடித்தவர்களா?
# அல்லது பக்கத்துப் பக்கத்து வீட்டு மனைகளையாவது வாங்கியவர்களா?
# சச்சின் நூறாவது சதமடிக்க ஒரே கோயிலாவது/தெய்வத்தையாவது கும்பிட்டவர்களா?
# முதல்நாள் முதற்காட்சியில் பிடித்த நடிகன் படத்தை ஒன்றாகப் பார்த்தவர்களா?

எதுவும் இல்லை. எந்த உறவும் இல்லாத இவர்களுக்கு நாம்தான் உறவு உண்டாக்க வேண்டும்.

சரி. இவர்கள்தான் இப்படி. நாம் இருவரும் எப்படி?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?
# ஒரே தெருவில் வளர்தோமா?
# ஒரே ஊரில் பிறந்தோமோ?
# ஒரே பள்ளியில் சேர்ந்தோமா?
# ஒரே கல்லூரியில் படித்தோமா?
# ஒரே திரையரங்கில் ஒரே படத்தைப் பார்த்தோமா?
# ஒரே பூங்காவில் விடியலில் ஓடினோமா?
# ஒரே ஆற்றங்கரையில் நீராடினோமா?

இப்படி எதுவுமே இல்லை.

நாம்தாம் எப்படிச் சந்தித்துக் கொண்டோம்? ஏதோ நான் அந்தப் பக்கம் வந்தேன். நீயும் அந்தப் பக்கம் வந்தாய்.

நானும் பார்த்தேன். நீயும் பார்த்தாய். விழியால் பார்த்தோம். ஆனால் மனமும் கரமும் முந்திக்கொண்டன.

எது நம்மை ஒரே நேரத்தில் ஒரே இடத்திற்கு வரச் செய்து சேர்த்து வைத்ததோ அதுதான் இந்த மண்ணையும் மழையையும் சேர்த்து வைத்தது.

எங்கோ தொலைவில் இருக்கிறது கடல்
எங்கோ உயரத்தில் இருக்கிறது மேகம் - இருந்தாலும்
இங்கே இருக்கும் இடத்தில்
மேகம் வழியாக மழையாகப் பெய்கிறது கடல்நீர்
செம்மண் நிலத்தில் பெய்யும் தூய மழைநீர், மண்ணோடு கலந்து இணைந்து அதன் நிறத்தையும் சுவையையும் தன்னோடு பெற்றது. அதைப் பிரிக்க முடியுமா? அப்படித்தான் நாமும். அச்சம் தவிர்.”

செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

பி.கு இது கார்காலத்திற்கு மட்டுமே. கார் முடிந்து வேர் வரை வெயில் அடிக்கும் போது கலந்த நீரை மட்டும் ஆவியாக்கி விடும் வெப்பம்.

அன்புடன்,
ஜிரா

«Oldest ‹Older   1 – 200 of 211   Newer› Newest»