Tuesday, October 31, 2006

என்னுடைய பின்னூட்டங்கள் - நவம்பர் 2006

நவம்பர் 2006ல் மற்ற வலைப்பூக்களில் நானிட்ட பின்னூட்டங்கள் இங்கு திரட்டப்படும்.

இப்படிக்கு,
கோ.இராகவன்

259 comments:

1 – 200 of 259   Newer›   Newest»
G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/11/blog-post_01.html

போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துகள் லக்கிலுக்.

அடுத்து கொடுத்திருக்கும் தலைப்பு நன்றாக இருக்கிறது. மக்களின் படைப்புகளைப் படித்து மகிழக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/10/blog-post_31.html

நல்ல திட்டமாகத்தான் தெரிகிறது. ஆனால் அதன் நடைமுறைச் சிக்கல்கள் பயன்பாட்டில்தான் தெரியவரும். அதற்கு முதலில் மக்களைக் இந்த மாதிரி குறுஞ்செய்திகளுக்குப் பழக்க வேண்டும். பிறகு உண்மையிலேயே ஆபத்துச் செய்தி வருகையில் விரைவாகப் புரிந்து கொள்ளப்படும். முயற்சி நல்ல முயற்சி. ஆகையால் திருவினையாக்க விரும்புவோம்.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2006/10/blog-post_29.html

நம்மளையும் அப்படியேக் கூட்டீட்டுப் போனாப்புல இருந்துச்சு.

வடக்குல இன்னும் பல எடங்கள் பாக்கனும். நீங்க இருக்குறப்பவே அங்க ஒரு வாட்டி போயிட்டு வந்திட்டாக் கூட வசதிதான்.

ஒரு நல்லதொரு பயணக்கட்டுரை படிச்ச திருப்திதான் போங்க.

// கோமுக் என்ற பெயரைக் கேட்டதும் பள்ளியில் படித்த ஆபுத்திரன்(மணிமேகலையின் மகன்) கதை நினைவுக்கு வந்தது. சாவகம்(அக்காலத்து ஜாவா) செல்லும் வழியில் மணிபல்லவம் என்ற தீவில் தவறுதலாக இறங்கி விடும் ஆபுத்திரன், "கோமுகி" என்னும் ஆற்றில் அமுதசுரபி பாத்திரத்தை எறிந்து விட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்ததாகப் படித்த நினைவு. //

யய்யா இதெல்லாம் நல்லா நெனவிருக்குது போல. பிரமாதம். பிரமாதம். இதுல பாருங்க....ஆபுத்திரன் விட்டுட்டுப் போன அமுதசுரபிதான் பின்னால மணிமேகலை கைக்கு வந்துச்சு.

G.Ragavan said...

http://tsivaram.blogspot.com/2006/10/blog-post_31.html

வேட்டையாடு விளையாடு மட்டும் பாத்தேன். மத்ததெல்லாம் ம்ஹூம். தூத்துக்குடீன்னு பேரு இருந்துமே பாக்கலையே. அதென்ன தூத்துக்குடித் தமிழ நெல்லைத் தமிழ்னு எழுதுறது. ரெண்டுக்கும் வேறுபாடுக இருக்கு. அடிநாதம் ஒன்னாயிருந்தாலும் ராகம் வேறவேற.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/10/blog-post_31.html

ஹேலோவீன்....எனக்கும் பிடித்த பண்டிகைதான். அடுத்த ஆண்டு கொண்டாடலாம் என்று இருக்கிறேன். :-) இந்தியாவில் இதெல்லாம் ஆகுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

எந்தவொரு பண்டிகையும் காலப்போக்கில் அதன் தன்மை மாறும். என்னதான் சொல்லியோ செய்தோ மாற்றாமல் வைத்திருந்தால் மொத்தமாய் மாறிவிடும்.

// துளசி கோபால் said...
இதுக்கு மஞ்சள் பூசணிதானே பயன் படுத்தறாங்க. போட்டும். நல்ல வேளை வெள்ளைப்பூசணி இல்லை.
அது கிடைச்சாத்தான் சாம்பார், மோர்குழம்பு, கூட்டுன்னு ஜமாய்ச்சுருவேனே. //

டீச்சர். தமிழில் பூசணிக்காய் என்றாலே மஞ்சள் நிறத்தில் இருப்பதுதான். வெள்ளைப் பூசணிக்காய் என்று நீங்கள் குறிப்பிடுவது தமிழில் தடியங்காய் எனப்படும். இன்றைக்குப் பலர் தடியங்காயைப் பூசணிக்காய் என்றும் அல்லது சாம்பல் பூசணியென்றும் சொல்லி விட்டு உண்மையான பூசணிக்காய்க்கு மஞ்சள் பூசணி என்று பெயர் வைத்து விட்டார்கள். கொடுமை. கொடுமை. பூசணிக்காய் நலச்சங்கத்தின் தலைவர் என்ற முறையில் இதை எதிர்த்துப் பல காய்கறிக்கடைகளில் குரல் கொடுத்திருக்கிறேன் என்பதை மிகத்தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வாழ்க பூசணி. வளர்க அதன் புகழ்.

// வெட்டிப்பயல் said...
நானும் இப்ப அதுக்குதான் எங்க மேனஜர் வீட்டுக்கு போயிட்டு வந்தேன்!!!

வீட்டின் லானில் நெருப்பு வைத்து அதில் marsh mellows கொளுத்தி அதை பிஸ்கெட் துண்டிகளின் நடுவில் வைத்து கொடுத்தார். //

யாருப்பா அவரு?

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2006/11/172.html

காரமடை காரமடைன்னு சொல்றீங்களே. அங்கே பெருமாளுக்குக் காரம்+அடைதான் படையலா? :-)

கோவையின் மெல்லிய காத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.

கோவை வரை சென்று விட்டு மருதமலை செல்லாமல் வந்தமைக்கு இராமநாதனைக் கடுமையாக் கண்டிக்கிறேன். அன்னபூர்ணாவைப் பற்றி ஒன்றும் சொல்லாமைக்கு மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இலந்தவடை வாங்கித் திங்காமைக்கு மிகமிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

G.Ragavan said...

http://balaji_ammu.blogspot.com/2006/10/6.html

இது கிசுகிசு வகைக் கதையா? அல்லது உண்மை நிகழ்வை மறைபொருளாய்ச் சொல்வதா? ஆனால் புரிகிறது என்றே நினைக்கிறேன். புரிந்து விட்டது என்றே நினைக்கிறேன். :-)

G.Ragavan said...

மிகவும் நல்லதொரு பதிவு. தேவையானதாய்...கருத்து மிகுந்ததாய்....சீர்மை பொருந்தியதாய்...ஒரு மருத்துவத்தாய்(தந்தை) தந்த பதிவுத் தொடர் இது. கண்டிபாக அனைவர்க்கும் இது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. தொடரைத் தந்த திருப்புகழ்த் திரு எஸ்.கே-யிற்கு எனது வாழ்த்துகள்.

இதுபோன்ற மருத்துவமும் உளவியலும் சந்திக்கும் நல்ல தகவல்களை இன்னமும் தரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

G.Ragavan said...

http://eenpaarvaiyil.blogspot.com/2006/11/50.html

வணக்கம் முத்துக்குமரன். நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். :-)

ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஸ்வர்ண கர்நாடக, ஆந்திரா, (கேரளாவில் நடந்ததா என்று தெரியவில்லை) தொடர்ந்து பொன்விழாத் தமிழகம். அனைத்து மாநில மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இந்தியத் துணணக்கண்டம் மட்டுமல்ல....தமிழகமும் பன்முகத்தன்மை கொண்டது. பொதுமைப்படுத்துதல் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு விதமாக நடக்கிறது என்றால் அதே விதமாகவே உலகெலாம் நடக்கிறது என்பது என் கருத்து. பொதுவாகவே இது மதங்களின் பெயரில் நடக்கிறது என்றே நினைக்கிறேன். இது தவறு என்பதுதான் எனது கருத்தும். நீங்களும் அதே கருத்துதான் கொண்டிருக்கின்றீர்கள் என நினைக்கிறேன்.

எந்தவொரு பொதுமைப் படுத்துதலும் வெற்றி பெறாது. கண்டிப்பாகத் தோல்வியில்தான் முடியும். அதுதான் இயற்கை.

கருநாடகத்தைப் பற்றி நீங்கள் சொன்னது முழுவதும் உண்மையல்ல என்பது எனது கருத்து. உண்மைகளும் இல்லாமல் இல்லை.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/10/012.html

கருணைநிதி என்று பார்த்ததும் ஏதேனும் அரசியல் பதிவோ என நினைத்தேன். நல்லவேளை. :-)

பாபநாசம் சிவன் கிருதிகளைப் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். கா வா வா போன்ற சில பாடல்களைக் கேட்டுள்ளேன். இந்தப் பாடல் இப்பொழுதுதான்.

மொத்த வரிகளிலேயே மூன்று வரிகள்தான் தமிழில் பயின்று வருகிறது. வடமொழிப் பழக்கம் அவருக்கு மிகச் சிறப்பாக உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வல்லிக்கு ஏற்பட்ட ஐயம் எனக்கும் எழுந்துள்ளது. அதென்ன ராமதாசன் பணியும் குஹா? அது அவரைக் குறிக்குமா என்று தெரியவில்லை. தி.ரா.ச-விற்கு சிவனின் கிருதிகளில் நல்ல பழக்கமுண்டு. அவரைக் கேட்டால் தெரியலாம்.

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/11/blog-post_03.html

உங்கள் அருமை நண்பர் லட்சுமி நாராயணனுக்கும் அவர்தம் துணைவியார் வளர்மதிக்கும் என்னுடைய வாழ்த்துகள். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்.

சரி முத்து...நீங்க எப்போ?

G.Ragavan said...

http://shylajan.blogspot.com/2006/11/blog-post.html

ஆகா....இலவசம் அதற்குள் கிடைத்து விட்டதே. நல்ல கதி ஷைலஜா. உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பது எத்துணை பெரிய உண்மை. முருகா!

உலகம் முழுதும் அன்பு மயமாய் விளங்க இறைவனை வேண்டுகிறேன். ஏனென்றால் அன்பு வாழ வைக்கும். எதிர்பார்த்த திருப்பமேயென்றாலும் உங்கள் கதைக் கரு என்னை மிகவும் நெகிழ வைத்து விட்டது.

G.Ragavan said...

http://kathalregai.blogspot.com/2006/11/blog-post.html

நண்பரே...என்றைக்கு மதம் என்பது மனிதனை விடவும் இறைவனை விடவும் பெரியது என்று ஆகிவிட்டதோ...அப்பொழுதே பிரச்சனைகள் உண்டாகும். என்னுடைய கருத்தைக் கேட்டால்...எல்லாரும் கறைகையர்கள்தான். ஆனால் தாம் ஒழுக்கம் என்று சொல்லிக் கொள்வதில் அனைவருக்கும் பேரானந்தம். அதை விடப் பேரனாந்தம் அடுத்தவன் ஒழுங்கீனம் என்று சொல்லிக் கொள்வதில்.

G.Ragavan said...

http://avigalulagam.blogspot.com/2006/11/6.html

இதான் எலவசமா! லெக்பீஸ் ரொம்பப் பெருசா இருக்குது....இப்படி வியாபாரம் செஞ்சா...ஒங்கள ஆவியுலகத்துல இருந்து மனித உலகத்துக்குத் தொரத்தி விட்டுருவாங்க. அப்புறம் ரொம்பக் கஷ்டப் படனும். அதவிட வியாபாரத்த ஒழுங்காக் கவனிக்கறது நல்லது. புரிஞ்சதா?

G.Ragavan said...

http://piditthathu.blogspot.com/2006/11/2006.html

இதென்ன கொடுமை. இன்னமும் இந்தப் பைத்தியக்காரத்தனங்கள் இருக்கின்றனவே. அரசாங்கம் என்னதான் செய்கிறது? மனிதர்களே...திருந்துங்கள். இல்லையெனில் திருத்தப்படுவீர்கள். ஜாதி மத வேறுபாடுகள் ஒழிய நாமாவது எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதெப்படி மதத்தால் மொழியால் இனத்தால் தம்மை விடத் தாழ்ந்தவர் உண்டு என்று நினைக்கத் தோன்றுகிறது...ச்சே!

G.Ragavan said...

http://sinthipoma.blogspot.com/2006/11/blog-post_116248550085089960.html

பட் பட் பட் பட் பட்

நாந்தான் கை தட்டுகிறேன். கடைசி வரியில் வைத்தீர்களே ஒரு சவுக்கடி. பிரமாதம். சலவை செய்த மூளையோடு சொரணை தொலைத்த தோலும் உண்டுதானே.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/11/blog-post.html

இலகுவாய் வசமாகும் இலவசமோ! இல்லையில்லை. இலவசம் என்று எதுவுமே இல்லை. இந்தத் தமிழ்மணமும் வலைப்பூக்களுக்கும் கொண்டு வந்து தரும் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உங்களது நேரமும் நட்பும் உறவும். பண்டமாற்றுதான் எஸ்.கே. சண்டைகள் வரும். சச்சரவுகளும் வரும். நல்ல நட்பு மட்டும் நீண்டு நிலைக்கும். இதுதான் உண்மை. என்றைக்கும் முருகனருள் முன்னிற்கும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/11/blog-post.html

ம்ம்ம்....ஆர்க்குட்டக் கண்டு பிடிச்சாலும் பிடிச்சான் கூகிள்காரன். நீங்கள்ளாம் பின்றீங்க போல. கூகிளாண்டவர் கோவிச்சிக்கிறப் போராரு.

அது சரி...இத்தன ஸ்கார்ப்ஸ் எப்படிக் கெடைச்சது ;-) அதையும் துணிச்சலா சொல்லி ஒப்புக்கிறனும் வெட்டி.

G.Ragavan said...

http://sinthipoma.blogspot.com/2006/11/blog-post_03.html

என்னது 2048ல மீன் கெடைக்காதா! சரி...அப்ப எழுவது வயசாயிரும். இருந்தாப் பாத்துக்கலாம்.

ஆனா மீன் இல்லாம எப்படிங்க இருக்கீறது. சீலா, எறா, சொறா, நெத்திலி, ஜிலேபிக் கெண்டை, கெண்டை, வெறால்........இன்னும் என்னென்னமோ இருக்கே.

G.Ragavan said...

http://manimalar.blogspot.com/2006/11/blog-post.html

இந்தப் பழக்கம் நிச்சயம் மாற வேண்டும். தான் அறியாதவொன்றைக் குழந்தை மேல் திணிப்பது தவறே. பால்ய விவாகம் மட்டுமல்ல பால்ய துறவரங்களும் தவறே. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கண்டிப்பாகப் பொருந்தும். நல்ல கல்வி என்பதெல்லாம் இருக்கட்டும். குழந்தை குழந்தையாகப் பெற்றோருடன் இருக்கமுடியாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா. நிச்சயமாக இதில் பெருமை இல்லை.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/11/blog-post.html

:-)))))))))) சிறில்..சிறில்..சிறில்...இந்த வேளையில சிரிக்க வெக்கிறீங்களே...ராத்திரி பையன் தனியாச் சிரிக்கிறானேன்னு ஏதாவது நெனச்சிறப் போறாங்க.

நல்லா எழுதீருக்கீங்க சிறில். மிகவும் ரசித்தேன். இப்படி எழுதுவதால் புனிதம் ஒன்றும் கெட்டுப் போய்விடாது. மிக நல்ல முயற்சி.

ஒரு ஆத்மா வந்தா இன்னொன்னு இலவசம் சரி. லேசாச் சொல்லீட்டீங்க. ஆனா அதுக்குள்ள ஏதோ பெரிய தத்துவமே உக்காந்திருக்கிற மாதிரி இருக்கு. யோசிக்கிறேன். யோசிக்கிறேன். யோசிக்கிறேன். (எக்கோ)

G.Ragavan said...

http://kaalangkal.blogspot.com/2006/11/blog-post_116243666121097380.html

கோவி, உங்களுக்குப் பிடித்த முடிவை எடுக்க உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் முடிவு உங்களுக்கு நன்மையைச் செய்யுமானால் அது நன்றே. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். என்றாவது நீங்கள் திரும்பி வந்தால் வாழ்த்த மனதை இப்பொழுதே ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம்.

G.Ragavan said...

http://nigalvukal.blogspot.com/2006/11/blog-post.html

// ENNAR said...
பாலிருக்கும் பசியிருக்காத
பஞ்சணையிருக்கம் தூக்கமிருக்காது
இது தான் இயற்கை //


// சிவமுருகன் said...
என்னார் ஐயா,
சரியாக சொன்னீர்கள். அதனால் தான் அதை இறைவனிடம் இலவசமாக கேட்டேன். //

பாலுக்குள்ளே வெண்ணையுண்டு
கடையத் தெரிந்தவனுக்கு அது இலவசம்
விறகுக்குள்ளே நெருப்பும் உண்டு
கடையத் தெரிந்தவனுக்கு அது இலவசம்
படுக்கைக்குள்ளே உறக்கம் உண்டு
தூங்கக் கொண்டவனுக்கு அது இலவசம்
உழைப்பிற்குள்ளே வெற்றி உண்டு
முனைந்தவனுக்கே அது இலவசம்

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2006/11/blog-post.html

:-) என்ன குமரன் யாரையோ தாக்குறாப்புல இருக்கு.

ஜிரா வந்துட்டு தமிழ்ச் செய்யுள் சொல்லலைன்னா எப்படி? "தீதும் நன்றும் பிறர் தர வாரா" நீங்க சொன்ன கதையோட கரு இதுதான? இந்தச் சங்கப் பாட்டுக்கு விளக்கம் கேக்காதீங்க. விளக்கம் வேணும்னா நாமக்கலார் என்று அழைக்கப்படும் புறாக்கறி..சச்ச..புறாவுக்குக் கறி தந்த...இல்ல இல்ல...புறாவைக் காப்பாற்ற கறி தந்த சிபியார் எனும் கேளிரைக் கேளீர்.

(ஆனாலும் இப்படி உள்குத்தோட பதிவு போட என்ன துணிச்சல் உங்களுக்கு!)

G.Ragavan said...

http://etamil.blogspot.com/2006/11/kalki-cartoon.html

எனக்குத் தெரிந்து கல்கியில் தீவிர ஜெயலலிதா எதிர்ப்புக் கார்டூன்களையும் பார்த்திருக்கிறேன். இன்னமும் சொல்லப் போனால் ஜெயேந்திரர் பற்றி மற்ற பத்திரிகைகள் புலனாய்வு செய்து வெளியிட்ட விவரங்களுக்கு முன்பே நாகரீகமாக கல்கியும் வெளியிட்டது. அதையே ஆதாரமாகக் குறிப்பிட்டு ஜெயேந்திரர் கைதை நியாயப்படுத்தி சன் டீவியில் பேசினார்கள்.

நூற்றுக்கு நூறு நடுநிலைமை என்பது மிகக்கடினம். ஆனால் முடிந்தவரையில் மற்ற பத்திரிகைகளை விட நடுநிலமையாகவே இருந்திருப்பதாக நான் கருதுகிறேன். சமீபத்தில் கல்கி படிப்பதில்லையால்...அதன் இப்பொழுதைய போக்கு எனக்குத் தெரியாது.

குழலி, கருணாநிதி எதிர்ப்பு என்பதே ஒருவரின் நடுநிலமையைக் கேள்விக்குள்ளாக்குமெனில் அந்தக் கேள்வியே நடுநிலமையற்றது. தேர்தல் காலந்தொட்டு இந்தக் கருத்தை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஜெயலலிதா எவ்வாறு அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியவரோ...அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாதவர் கருணாநிதி. ஜெயை அகற்றக் கருணாநிதியைக் கொண்டு வருவதும் ஜெயே தொடர்வதும் என்னைப் பொறுத்தவரை ஒன்றுதான். இவர்கள் இருவரும் தின்று தீர்த்தது போதும்...அடுத்தவனும் கொஞ்சம் தின்று விட்டுப் போகட்டும் என்பதே இன்றைய நிலை. கருணாநிதி வந்த பிறகு இலவசத் திட்டங்கள்தான் சிறப்பாகப் போகிறதே தவிர கீரிப்பட்டி பாப்பாப்பட்டி இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பாமா விஜயப் பெருமை மட்டும் பேசுகிறார். ஜெயலலிதாவைக் கேட்கவே வேண்டாம். இன்னும் அவர் திருந்தவில்லை என்பது தெரிகிறது. சென்ற வார பழைய கல்கியொன்றைப் பார்க்க நேர்ந்தது. எடுத்துப் புரட்டினால் விஜயகாந்த் பற்றி ஜெயலலிதா புலம்பியதைக் கிண்டலடித்து அதிமுக மூழ்கும் கப்பல் என்று எழுதிய கார்ட்டூன்.

ஏன் சொல்ல வருகிறேன் என்றால் ஒவ்வொரு முறையும் முன்பு என்ன செய்தாய் என்று கேட்பது தகாது. முன்பு தவறே செய்திருந்தாலும் அவன் இப்பொழுது திருந்தியிருந்தால்? முன்பு தவறு செய்ததனால் அவன் எதுவுமே சொல்லக்கூடாது என்று ஆகிவிடுமே. ஆகையால் சொன்ன கருத்து சரியா தவறா என்று மட்டும் பார்த்தாலே போதும். பிரச்சனைகள் பல தீர்ந்து போகும்.

G.Ragavan said...

http://muttom.blogspot.com/2006/01/xiv.html

// ஜோ / Joe said...
//குண்டான மொழு மொழு வாத்தியாருக்கு பெயர் 'தக்காளி'//
இவர் என் ஆசிரியரும் கூட. //

இந்த விளையாட்டுக்கு நான் வரலை. ரெண்டு பேரும் ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சீங்களாக்கும். ம்ம்ம்ம்......

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2006/11/blog-post_02.html

மதுமிதா....நான் கூட படித்து முடித்ததும் கதையோ என்று நினைத்தேன். பின்னூட்டங்களைப் படிக்கையில் தெரிந்தது இது நிகழ்வு என்று. மேலே சென்று பட்டையைப் பார்த்தால் அனுபவம்/நிகழ்வுகள் என்று இருந்தது. இந்தக் கதையையும் நிகழ்வுகளையும் சுவைபடச் சொல்வதில் இரண்டுக்கும் வேறுபாடுகள் குறைந்து கொண்டே வருகின்றன என்றே நான் சொல்வேன். குறிப்பாக வலைப்பூக்களில்.

நல்லதொரு கட்டுரை. வெற்றி பெற வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2006/10/blog-post_31.html

உண்மைதான் குமரன். ஒன்று சொல்லப்படுகிறதென்னால்...அதைச் சொல்கிறவர்...அவரது பின்புலன்கள்...சொல்கின்ற பொழுது நமது மனநிலை...இன்னும் நிறைய காரணிகள் புரிதலைக் கட்டுப்படுத்துகின்றன. இதில் ஐயமில்லை.

அது சரி. சொல்லொரு சொல்லில் போட வேண்டிய பதிவு இது. பாருங்க...கீழ ரெண்டு ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழாக்கம் கொடுத்திருக்கீங்க.

G.Ragavan said...

http://nigalvukal.blogspot.com/2006/11/blog-post.html

// கடைந்தாலும், குடைந்தாலும், கொண்டாலும், முனைந்தாலும்
"இலவசம்" எப்படி சாத்தியம் அதற்க்கான ஒரு விலை ஆகி விடுகிறதே? //

அதைத்தான் நானும் சொல்கிறேன் சிவமுருகன். இலவசமாய் எந்த இலவசமும் கிடைப்பதில்லை என்று. உட்பொருள் அதே!

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/t-d-6.html

துளசீ
நீ ஏனிப்படி
ஆஸ்திரேலியா சென்று
ஞானப்பழம் உண்டாய்

பழம் நீயம்மா
ஞானப் பழம் நீயம்மா
தமிழ் மணப் பழம் நீயம்மா

சபை தன்னில்
தமிழ்மணச் சபை தன்னில்
உறவோடு பொருள் கூறும்
பழம் நீயம்மா ஞானப் பழம் நீயம்மா!

வெட்டிடவும் கத்தி
அதில் போகும் துட்டு
அறியாத துளசியா நீ
எத்தனையே பெட்டி
வாங்கினாலும் வெட்டி
தெரியாத துளசியா நீ

ஏறு பிளேன் ஏறு
நீயுசிலாந்தை நாடு
ஏற்றுக் கொள்ளும்
கூட்டிச் செல்வார்
கோபாலுடன் ஓடி வா நீ!!!!!!!!!!!!!!!!!!!

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/11/013.html

ஜகனமனைத்தையும் மோகனப்படுத்தும் பாடலொன்றைத் தீந்தமிழில் எழுதிக் கந்தன் திருவடிகளில் அர்ப்பணித்திருக்கின்றீர்கள் சிபியாரே....மிகச் சிறப்பு. தொழுகைகளில் எல்லாம் சிறந்த தொழுகை நம் சொற்களால் நம் விருப்பப்படி இறைவனோடு பேசுவதும் பாடுவதும்தான். அந்த வகையில் உங்கள் பணியும் நல்ல தொழுகைதான். அடுத்த பாடலை நான் எழுத முயல்கிறேன்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/blog-post.html

சரி...இந்தப் படமெல்லாம் எடுத்தது யாரு? ஸ்வீட்ஸ் எல்லாம் வெள்ளித்தாள் போட்டிருக்கே...அப்ப நான் சாப்பிட மாட்டேன். அதுனால அத்தன ஸ்வீட்சையும் உங்களுக்கே விட்டுக் கொடுத்திர்ரேன். :-)

மோனா ரெயிலா...2015ல சென்னையில வரப் போகுதாம். தெரியுமா...அப்ப நானும் எடுத்துக்கிறேன் போட்டோ! (2015ல வந்துரும்ல? இதுவே லேட்டுதான்.)

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/blog-post.html

சரி...இந்தப் படமெல்லாம் எடுத்தது யாரு? ஸ்வீட்ஸ் எல்லாம் வெள்ளித்தாள் போட்டிருக்கே...அப்ப நான் சாப்பிட மாட்டேன். அதுனால அத்தன ஸ்வீட்சையும் உங்களுக்கே விட்டுக் கொடுத்திர்ரேன். :-)

மோனா ரெயிலா...2015ல சென்னையில வரப் போகுதாம். தெரியுமா...அப்ப நானும் எடுத்துக்கிறேன் போட்டோ! (2015ல வந்துரும்ல? இதுவே லேட்டுதான்.)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/11/blog-post_05.html

// குமரன் (Kumaran) said...
நீங்க அந்த இரவிசங்கர்கிட்ட கேட்க நினைச்சதை நம்ம வலைப்பூ இரவிசங்கர்கிட்ட கேக்கலாமே?! ஓ. இராகவன்கிட்ட கேட்டீங்களோ? :-) //

என்னைய வம்புல மாட்டி விடுறதுல அவ்வளவு சந்தோசம். :-)

// //
நீங்க அந்த இரவிசங்கர்கிட்ட கேட்க நினைச்சதை நம்ம வலைப்பூ இரவிசங்கர்கிட்ட கேக்கலாமே?! ஓ. இராகவன்கிட்ட கேட்டீங்களோ? :-)
//
அந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தானாக தெரிய ஆரம்பித்துவிட்டது...

குமரன் உங்களுக்கு தெரியாததில்லை... உலகத்தில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் விடை நம் உள்ளேயே உள்ளது. சரியாக சிந்தித்தால் விடை கிடைக்கும்... //

பாத்தீங்களா குமரன். அவருக்கே எல்லாம் தெரிய ஆரமிச்சிருச்சாம். அப்ப வெட்டியானந்தாவாயிட்டாருன்னு நெனைக்கிறேன்.

வெட்டி, ஆம்ஸ்டர்டாமிலிருந்து பிளைட் பிடித்து இந்தியா வந்து கொண்டிருந்தேன். 2000ல். அப்பொழுது பக்கத்து சீட்டில் ஒரு ஜெர்மன் பெண். 20-22 இருக்கும். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் பெண் அவருடைய குருவைப் பார்க்க இந்தியாவுக்குப் போகிறதாகச் சொன்னார்.

யாரந்த குரு என்று கேட்டேன். ரவிஷங்கர் என்று சொன்னார். ஓகோ சிதார் படிக்கிற பெண் போலன்னு..இசையில ஆர்வமுண்டா...பண்டிட் ரவிஷங்கர் பெரிய இசைமேதைன்னு எடுத்து விட்டேன்.

அப்புறம்தான் தெரிஞ்சது அவங்க சொல்ற ரவிசங்கர் வேறன்னு. எனக்கு அவரு யாருன்னே தெரியலை. சாரி...நான் கேள்விப்பட்டதில்லைன்னு சொன்னேன். என்னைய ஒரு மாதிரி பாத்ததோட சரி. எங்கிட்டப் பேசவேயில்லை. :-(

இந்த ட்ரெயினிங் போக மாட்டேன்னு ஆபீஸ்ல சொல்லீட்டேன். சாப்பாட்டுல கை வெக்கிறாங்களாம்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/11/blog-post_03.html

பொன்ஸ்....இப்பத்தான் படித்தேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

பொறாமை என்று அந்தப் பெண்ணின் கருத்தை ஊதித் தள்ளிவிட முடியாது. அந்தப் பெண் செய்ததே சரி என்று நான் சொல்வேன்.

இதே போல இரண்டு நண்பர்கள் இருந்து ஒரு நண்பன் சாதியை உயர்த்திச் சொல்ல....சாதியால் பல கொடுமைகள் பட்ட இன்னொரு நண்பன் காதில் விழுந்தால் அந்த இன்னொருவன் என்ன முடிவு எடுப்பான்? கண்ணாடியில் விழுந்த கீறல் கீறலே! ஒட்ட வைத்தாலும் வடு தெரியும்.

வரதட்சனை என்ற கொடுமை கண்டிப்பாக ஒழியத்தான் வேண்டும். ஆனால் இன்று அதுவே ஒரு பாஷன் போல மாறி வருவதுதான் வேதனை. குடுக்க முடியுது..குடுக்குறாங்கன்னு எளிமையாச் சொல்லீட்டுப் போயிர்ராங்க.

வலைப்பூ படிக்கும் நண்பர்களே. திருமணம் செய்யப் போகிறீர்களா? தயவுசெய்து வரதட்சணை கேட்காதீர்கள். அதனால் பாதிக்கப்பட்ட பலருக்காக நான் உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2006/11/5.html

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

என்னோட வலைப்பூவும் லிஸ்ட்டில் இருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது என்னை இன்னும் பொறுப்போடு இருக்கச் சொல்கிறது. நன்றி.

G.Ragavan said...

http://umakathir.blogspot.com/2006/11/blog-post.html

ம்ம்ம்....ஒரு சாண் வயிறு...அது படுத்தும் பாடுகள்தான் எத்தனையெத்தனை!

G.Ragavan said...

http://kathalregai.blogspot.com/2006/11/blog-post_05.html

மிக நல்ல கருத்துகள். இறை நம்பிக்கையை விட மதம் என்று பெரிதாகப் படுகிறதோ...அன்றே பிரச்சனைகள் எழுந்து நடுநிலமை சீர்குலைந்து போகும். என்னைப் பொருத்த வரையும் இன்றைக்கு உலகில் உள்ள எந்த ஒரு மதமும் நடுநிலை மதமல்ல. ஆனால் எல்லாரும் அப்படித்தான் சொல்லிக்கொள்வார்கள். அத்தோடு அடுத்தவன் அப்படியில்லை என்றும் சொல்லிக்கொள்வார்கள்.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/11/blog-post.html

நானும் படம் நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். ஈ என்றதும் FLY ஆங்கிலப்படத்தின் தழுவலாக இருக்குமோ என நினைத்தேன். ஆனால் அப்படியில்லை போலிருக்கிறது. காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் பார்த்த வரையில் எல்லாருமே நன்றாகச் செய்திருக்கிறார்கள். படம் பார்க்க வேண்டும்.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/11/blog-post_04.html

ஒங்க கண்ணுல வந்து மாட்டுது பாருங்க... :-) நல்லவேளை கேமிரா இருந்தது. இத ஒங்க ஊர் பேப்பர்ல போட்டு அந்தாளு யாருன்னு கண்டுபிடிச்சி...தமிழ் கூறும் வலைப்பூவுலகத்துக்கு அடையாளம் காட்டீரலாமே! :-)

ஆனா ஓவியங்கள் நல்ல முயற்சி.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2006/11/186-ii.html

:-) என்ன தருமி....ரொம்ப ஆவேசமா இருக்குறாப்புல இருக்கு. என்ன செய்றது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டுன்னு எழுதியிருக்காரே கவியரவர். (நான் கவியரசர்னு இவர் ஒருத்தரத்தான் சொல்றது).

G.Ragavan said...

http://kalaignarkarunanidhi.blogspot.com/2006/11/blog-post.html

என்ன சொல்ல வருகிறார் கருணாநிதி? அவருடைய ஆட்சிக்கு இப்பொழுது ஆபத்தா? எதனால் அப்படி?

முதல்பாதி சமூகநீதி. ஏற்றுக்கொள்ள வேண்டிய நியாயமான கருத்துதான்.

ஆனால் அப்படிச் செய்தால் ஆட்சி போகுமென்று சொல்வது எதனால் என்று புரியவில்லையே.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/11/blog-post_04.html

தண்ணீர் என்பது பக்தரின் கண்ணீர் போக்கும் நன்னீராகுமானால் அதைத் தருவதுதானே இறைவன் முறை. அதைத்தான் இறைவன் செய்திருக்கிறான்.

தாத்தா என அழைத்து இனிமேல் இங்கிருந்தே தண்ணீர் தா தா எனச் சொன்ன தாதாவின் கதை அழகுறச் சொன்ன ரவிக்கு வாழ்த்துகள்.

அந்தப் பொன்வாவி படம் கிராபிக்ஸ் போல உள்ளதே?

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/11/blog-post.html

குமரன், சேணம் என்பது எதைக் குறிக்கும்? குதிரைக்குச் சேணம் கட்டுவார்கள் அல்லவா. அந்தச் சேணம் அதன் பார்வை சிதறாது தெளிவான பாதையில் கொண்டு செல்லும். அதுபோல நமது வாழ்வில் நல்ல வழியைக் காட்டி (அதுதான் மதியைத் தருவது நீறு)...அந்த நல்ல வழியிலேயே தொடர்ந்து செல்லும் ஆற்றலைத் (சேணம் தருவது நீறு) தருவது நீறு. இப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

எளிய அழகிய விளக்கம்.

G.Ragavan said...

http://nambharathi.blogspot.com/2006/11/1-2.html

மிக அருமை. மிக அருமை. மிக அருமை.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/11/013.html

// ramachandranusha said...
பித்தானந்தா படத்தைப் பார்த்து ஓடோடி வந்தெனே தவிர, நான் என்ன ஜிராவா, முருகன் படத்தைப்
பார்த்து பக்தி பெருக்கடித்து வர ;-) //

ஐயகோ! இதைக் கேட்பார் இல்லையா! என்னை எவ்வளவு குறைவாக உஷா எடை போட்டு விட்டார். படம் பார்த்தால் மட்டும்தானா உஷா...முருகா என்ற பேரைக் கேட்ட மாத்திரத்திலேயே...கேட்பதென்ன கேட்பது....தூக்கத்திலும் கூட நினைத்த பொழுதிலேயே பத்தி பெருகி உருகி வெள்ளமாக ஓடுமே....ம்ம்ம்ம்...தின்னாத்தான தெரியும் கருவாட்டு ருசி. :-)))

G.Ragavan said...

http://podhuppaattu.blogspot.com/2006/11/12.html

அருமையான விளக்கம்.

திருட்டுகளில் கூட நல்ல திருட்டுகள் உண்டு என்று இந்தப் பாடல் வழியாகத் தெரிகிறது.

செம்மான் மகள் என்பதற்கு இரண்டு விளக்கங்கள் சொல்லலாம். ஒன்று நீங்கள் சொன்னது. இன்னொன்று செம்மான் என்று நம்பிராஜனைச் சிறப்பித்துச் சொல்வது. குறிஞ்சித் தலைவன் அவன். செம்மைப் பண்புகள் மிகுந்த அந்தச் செம்மான் மகளான வள்ளியைத் திருடும் திருடன் பெம்மான் முருகன்.

சும்மா இரு என்பது உலகின் சிறந்த உபதேசம். சும்மாயிருக்க முடியாததால்தான் உலகில் பல பிரச்சனைகள். அப்படிச் சும்மா இருப்பதே சுகம். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு வீட்டில் வெட்டியாக சும்மாயிருப்பது சுகம் என்று சொல்வார்கள் சோறு கண்ட இடமே சுகம் கண்டவர்கள். :-)

G.Ragavan said...

http://shylajan.blogspot.com/2006/11/blog-post_06.html

அடடே! இது போட்டிக் கவிதையா! ம்ம்ம்....என்னென்னவோ சொல்றீங்க. இலவசத்துல இத்தன வகையிருக்குதா என்ன!

என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://muthuvintamil.blogspot.com/2006/11/blog-post.html

முத்து, கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சேர்ந்தே நான் எதிர்ப்பது உங்களுக்கும் தெரியும். ஆனாலும் கருணாநிதியின் சில திட்டங்கள் என்னையும் கவர்ந்தவை.

ஜெயலலிதா என்ன முயற்சி செய்தும் அழிக்க முடியாத மினிபஸ் திட்டம். இது ஒரு மிகச்சிறந்த திட்டம் என்பதில் ஐயமில்லை.

அதேபோல உழவர் சந்தைத் திட்டம். இது பின்னாளில் வீணாய்ப் போனதை நினைத்து இன்னும் வருத்தப்படுகிறேன்.

G.Ragavan said...

http://thamizhblog.blogspot.com/2006/11/45.html

மயூரேசன்....ஏம்ப்பா இப்பிடி...போனவாட்டி விடுதலையிலயும் என்னைய கண்கலங்க வெச்ச. இதுலயும் இப்படி. இந்த வாட்டியும் என்னோட வாக்கு உனக்குண்டு. :-) என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இயல்பாய் நிகழ்வுகளைக் கொண்டு வரும் உனது எழுத்துகளில் நல்ல வளம் உள்ளது. இன்னும் சிறப்பாக முயன்றால் தமிழெழுத்தில் தனியிடம் கிடைக்கலாம். என்னுடைய வாழ்த்துகள்.

தூத்துக்குடி திருநவேலிப் பக்கத்தில் ஜீனி என்போம்.

G.Ragavan said...

http://muthuvintamil.blogspot.com/2006/11/blog-post.html

G.Ragavan said...
// முத்து(தமிழினி) said...
ராகவன்,

கலைஞரையும் ஜெயலலிதாவையும் சேர்ந்தே எதிர்க்க காரணம் தெரிந்துக்கொள்ளலாமா? //

முத்து, ஜெயலலிதாவிற்கோ அதிமுகவிற்கோ ஒரு தேர்தலில் கூட ஓட்டுப் போட்டதில்லை. ஆனால் இந்தத் தேர்தலில்தான் யாருக்கும் ஓட்டுப் போடாமல் இருக்க வேண்டியதாயிற்று. அவருடைய அரசியல் நடவடிக்கைகள் இனியும் அவர் யாரையும் விட விதிவிலக்கானவர் இல்லை என்று நினைக்க வைத்தது. அதனால்தான். என்னுடைய கருத்துகள் சரியென்று நான் வாதிடவில்லை. ஆனால் என்னுடைய கருத்து என்னுடையதே. ஜெயலலிதாவை நான் எதிர்ப்பதால் கருணாநிதியை ஆதரிக்க முடியாது.

// உழவர் சந்தை திட்டம் அதிமுகவினால் சீரழிக்கப்பட்டது என்கிறீர்களா? //

ஆமாம். அதிமுகவினர் என்பதை விட ஜெயலலிதா அரசு என்று சொல்வேன். நன்றாக வந்திருக்க வேண்டிய திட்டம்.

G.Ragavan said...

http://muthuvintamil.blogspot.com/2006/11/blog-post.html

// ஜோ / Joe said...
//முத்து, கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சேர்ந்தே நான் எதிர்ப்பது உங்களுக்கும் தெரியும். //
ராகவன்,
நீங்கள் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் எதிர்ப்பது சரியே .ஆனால் உங்கள் ஒப்பிட்டால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மதிப்பெண் பெறுகிறார்கள் என்றால் ,நீங்கள் பல காரணிகளை ,பல அரசியல் உள்ளடக்கங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. //

ஜோ, இருக்கலாம். நானொன்றும் அரசியலைக் கரைத்துக் குடித்தவன் இல்லையே. இருந்திருந்தால் முத்துவைப் போல நானும் நாலு பதிவுகள் போட்டிருக்க மாட்டேனா. அரசியல் என்று வருகையில் நான் ஒரு பார்வையாளி. அவ்வளவுதான். அந்த வகையில்தான் என்னுடைய கருத்துகள் வரும்.

இருவரும் சமமான மதிப்பெண்ணா என்று எனக்குத் தெரியாது. 1286676565698778 ஐ விட 1286676565696778 சிறியதுதான். ஆனால் இரண்டும் பெரியதுதான் என்பது என் கருத்து. கருணாநிதி நல்லது செய்வதாகத் தோன்றினால் ஆதரிப்பதில் எனக்கு வெட்கமில்லை. இது யாருக்கும் பொருந்தும்.

G.Ragavan said...

http://bhaarathi.net/sundara/?p=293

தங்கள் தந்தையின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

இது போன்ற சடங்குகளில் எனக்கும் நம்பிக்கையில்லை. இதைச் செய்தே ஆகவேண்டும் என்ற குடும்பப் பிடிவாதத்தை உடைப்பது மிக எளிதன்று. அந்த வகையில் நீங்கள் செய்திருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும் அவர் நடந்து கொண்ட முறை மிகத்தவறானது என்பதில் மறுகருத்தில்லை. அடுத்த முறை வேறு நல்லதிற்கோ கெட்டதிற்கோ இது போன்ற சடங்குகளை நீங்கள் முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

நல்லவர்கள் கெட்டவர்கள் எங்கும் உண்டு. நீங்கள் சந்தித்தவர் எந்த வகை என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2006/11/blog-post.html

செய்தி உண்மையாயிருந்தாலும் என்ன தவறு. நல்ல நடிகன் எந்த வேடமும் செய்ய வேண்டும். சிறந்த கதாநாயகனாக இருந்த பொழுதில்தான் நடிகர் திலகம் அந்த நாள் படத்தில் வில்லனாக நடித்தார் என்பதையும் நினைக்க வேண்டும். புகழொடு இருந்த பொழுதே அவரால் அப்படி முடியுமானால்....ரஜினி ஏன் நடிக்கக் கூடாது?

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2006/11/blog-post_04.html

ஒரு லேசான கேள்வி...ஆனா அதுக்குள்ள எவ்வளவு தகவல்கள். அடேங்கப்பா...கொத்ஸ் நல்லா தேடிக் கண்டு பிடிச்சிருக்கீரய்யா.

ரங்கா சொன்ன தகவலும் எனக்குப் புதிதே.

அது சரி...ஏரோப்பிளேன்லா கியரே இல்லைங்குறப்போ....ரிவர்ஸ் கியர் மட்டும் ஏனாம்?

G.Ragavan said...

http://imsai.blogspot.com/2006/11/5.html

// ஆனால் அந்த டிச்சி மூஞ்சு //

இந்த டிச்சி அல்லது டிச்சுங்குற சொல்லாடல கரூர்ல இருந்தப்பதான் மொதல்ல கேட்டேன். சாக்கடைன்னு தூத்துக்குடியில சொல்லிப் பழகியிருந்த எனக்கு டிச்சுன்னா மொதல்ல புரியலை. அப்புறந்தான் சாக்கடைன்னு புரிஞ்சது. சாக்கடைன்னு சொல்ல மாட்டீங்களான்னு கேட்டா, "இல்ல. டிச்சும்போம்"ன்னு சொல்லீட்டாங்க.

G.Ragavan said...

http://trc108umablogspotcom.blogspot.com/2006/11/blog-post_06.html

நன்றி நன்றி நன்றி

கந்தவேள் புகழைப் பேசுவதும் நினைப்பதும் இன்பமென்றால் பாட்டாகப் பாடுவதும் பேரின்பம். அருமையான இன்னிசைப் பாடலை அறிமுகம் செய்த தி.ரா.சவிற்கு நன்றி பல.

பாடலின் ஒவ்வொரு வரியும் சொல்லும் எழுத்தும் ரசித்து ருசித்துப் படித்தேன். நீங்கள் குறிப்பிட்ட படி ஆறுபடை வீடுகளையும் ஒரு பாட்டில் கொண்டு வந்த திறம் சிறப்பு.

மயூரபரி என்ற புகழ்ச்சொல்லிற்கு வந்ததும்...சட்டென்று அநுபூதி நினைவிற்கு வந்தது. ஆடும்பரி என்றுதானே அநுபூதியே தொடங்குகிறது.

எந்தவேளையும் நினைக்காவிடினும் கந்தவேளை அவன் நினைவு தந்தவேளைகளில் எல்லாம் நினைத்து மகிழ்வது உண்மைதான். ஷண்முகச் செல்வர் என்று மரியாதை ஏன்? ஷண்முகச் செல்வன் என்றே சொல்லுங்கள். கந்தன் பெயரோடு எந்தன் பெயரும் சொல்லப்படுமானால் எனக்குப் பேரின்பமே. அது முருகன் அருளே.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/11/blog-post_03.html

:-))))))

வக்கனையாய்ச் சாப்பிடுவதில் நமக்கு நிகர் நாமேதான். தேங்காய்த் துவையலும் சாம்பாரும் இருந்தாலும் இட்டிலிக்கும் தோசைக்கும் வெங்காயச் சட்டினிக்கும் பொடிக்கும் ஆலாய்ப் பறக்குமே நாக்கு...ஆகா...அப்புறம் என்னத்த டயட்டிங் பண்றது.

உஷா, ஓட்ஸ் பயன்படுத்துங்க. நல்ல கொழுப்பெதிரி அது.

G.Ragavan said...

http://piditthathu.blogspot.com/2006/11/blog-post.html

மராட்டிய அரசின் போக்கைப் பிற்போக்குவாதிகள்தான் பாராட்ட முடியும். சமூகநீதி என்ற முகத்திரைக்குள் மறைந்து கொண்ட இந்த அரசியல்வியாபாரிகளுக்குச் சவுக்கடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேண்டும்.

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/11/blog-post.html

// இராகவன் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போது சக்ரவர்த்தி திருமகன் நினைவிற்கு வருகிறானே. //

என்ன குமரன் இது! எல்லாரும் முருகன் நினைவுக்கு வருகிறான் என்கிறார்கள். நீங்கள் மாற்றிச் சொல்கின்றீர்களே :-))))))))))))))))

// குமரன் (Kumaran) said...
தங்கள் விளக்கத்திற்கு நன்றி இராகவன். சேணம் என்றால் குதிரையின் மேல் அமர்வதற்காக இடப்பட்டிருக்கும் ஆசனம் இல்லையா? //

குமரன். நான் குழம்பி விட்டேன். நீங்கள் சொன்ன பிறகுதான் நான் செய்த தவறு தெரிந்தது. சேண் விளங்கு அவிர் ஒளி என்கிறது திருமுருகாற்றுப்படை. சேண் என்பது தொலைவு என்றும் கொள்ளலாம். உயர்ந்தது என்றால் உயரத்தில் உள்ளது என்று மட்டும் பொருள் அல்லவே. அது போல சேண் என்ற சொல்லுக்குத் தொலைவு என்று பொருள் இருந்தாலும் உயர்ந்தது என்றும் பொருள் கொள்வது சரி. சேண் விளங்கு அவிர் ஒளி இப்பொழுது புரிந்திருக்கு. அந்தச் சேணை இங்கே கொண்டு வந்தால் சேணம் தருவது நீறு என்பதற்கு உயர்வு தருவது நீறு என்று பொருள் கொள்வது மிகப் பொருந்தும்.

(குதிரைக்குக் கண்ணுல கட்டுறது என்ன?)

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/11/blog-post.html

அது போல மாணம் என்பது மாண்பைக் குறிக்கும் என்று நினைக்கிறேன். மாண்பு தகைவது நீறு என்பதும் பொருத்தமாக இருக்கிறதே.

G.Ragavan said...

http://livingsmile.blogspot.com/2006/11/blog-post.html

இந்தக் கவிதையோடு ஒவ்வொருவரும் தம்மைப் பொருத்திப் பார்க்கலாம். அப்படிப் பொருத்தம். ஒரு சாண் வயிறுதான். ஆனால் அதனால்தான் உலகத்தில் அனைத்தும் நடக்கிறதே. அதுதான் இது.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2006/11/blog-post.html

ஜோ, அமைதியாக ஜெபிப்பது என்பது எல்லா மதங்களிலும் சொல்லியிருப்பதுதான். "சும்மா இரு சொல்லற" இதுதான் அருணகிரிக்கு உபதேசமே. அது ஒரு வகைச் செபம்.

இன்னொன்று கூடிச் செய்வது. ஒத்த எண்ணமுடைய பலர் கூடும் பொழுது அங்கு எழும் உணர்ச்சி அலைகளின் பெருக்கு. அதுதான் திருவிழாக்களில் நடப்பது. சஷ்டியாகட்டும். மாதா கோயில் தேரோட்டமாகட்டும். ஹஜ் பயணமாகட்டும்.

ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் சிலவைகள் இவைகள் இரண்டிலுமே வராது.

தூத்துக்குடியில் நான் இருந்த வரை....இந்த நோட்டீஸ் பழக்கங்கள்..ஸ்பீக்கர் பழக்கங்கள் எல்லாம் பார்த்ததேயில்லை. ஆனால் மற்ற ஊர்களுக்குப் போகும் பொழுதுதான் இதெல்லாம் தெரிந்தது. நம்ம ஊருல இப்படிச் செய்ய மாட்டேங்குறாங்களே...இங்கெல்லாம் இப்படிச் செய்றாங்களேன்னு. பிறகுதான் எனக்குக் கொஞ்சம் விவரம் புரியத் தொடங்குச்சு.

இதுபோல பிட் நோட்டீஸ் அடிக்கிறதும் விநியோகம் பண்றதும் சரியல்ல என்றே படுகிறது. we should carry ourselves as examples for others to follow என்பதுதான் சரியான வழிமுறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது அனைவருக்கும் பொருந்தும்.

என்னைப் பொருத்தவரை...நமக்கு விரும்பிய தெய்வத்தை (அல்லது தெய்வ வடிவத்தை) நமக்கு விரும்பிய முறையில் வணங்குதல் சரியே. அடுத்தவர் நம்பிக்கையை மதித்து நடக்க வேண்டும். அப்படிச் செய்யாவிடில் என்னதான் தொழுதும் பயனிலை.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2006/11/blog-post.html

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கண்ணதாசனின் மொழிபெயர்ப்பின் ஆங்கில ஆக்கத்தை புதிய ஏற்பாட்டில் படித்தேன். சரியா? கொஞ்சம் படித்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://muthuvintamil.blogspot.com/2006/11/blog-post_08.html

ஓ பெங்களூர் இல்லையா? சென்னையா? நல்லது. எண்ணம் போல வண்ணம் அமைக. என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/11/blog-post.html

// குமரன் (Kumaran) said...
இராகவன் என்றால் எனக்கு மாமனும் மருகனும் இருவருமே நினைவிற்கு வருகிறார்கள் இராகவன். உண்மையைச் சொன்னால் மருகன் மேல் கொஞ்சம் பொறாமையே வந்துவிடும் போலிருக்கிறது - உங்களின் முருகன் அன்பு அந்த அளவிற்கு இருக்கிறது. :-) //

பொறாமை ஏன் குமரன். கொடுக்கக் குறையாமல் இருப்பது அன்பு ஒன்றுதான். கொடுக்கக் கொடுக்கப் பெருகவும் செய்கிறது. பிறகு கொடுப்பதில் என்ன குறை. குமரன் உங்கள் பெயரிலேயே இருக்கிறானே. பிறகென்ன!

// விளக்கத்திற்கும் திருத்தங்களுக்கும் மிக்க நன்றி இராகவன். சேண் என்றும் மாண் என்றும் இருந்திருந்தால் குழம்பியிருக்க மாட்டேன் என்று நினைக்கிரேன். சேணம், மாணம் என்றதால் கேள்விப்படவில்லை.

ஒரே நேரத்தில எப்படி நீங்க ரெண்டு பேருமே அதே விளக்கத்துடன் ஏறக்குறைய அதே சொற்களுடன் சொன்னீர்கள்? :-) //

ஆமாம் குமரன். ஜெயஸ்ரீ இன்னமும் சிறப்பாக பல எடுத்துக்காட்டுகள் தந்திருக்கிறார்களே.

G.Ragavan said...

http://etamil.blogspot.com/2006/11/blog-post.html

ஐயோஓஓஓஓஓஒ........என்னோட லேப்டாப் எல்லாம் டாக்ஸ் எச்சி பண்ணீருச்சி...... :-((((((((((((((((

(சோறு கொழம்பெல்லாம் வேண்டாம். வெயிட் போடும். டிரை ரொட்டி சப்ஜி இருந்தா குடுங்க)

G.Ragavan said...

http://penathal.blogspot.com/2006/11/05-nov-06.html

அம்மாவுக்கு என்ன ஆச்சென்று சொன்னதுமே ஊகிக்க முடிந்த முடிவுதான் என்றாலும் ரசித்த கதை. ஊகித்த முடிவுதான் வரவேண்டும் என்ற விருப்பம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை சுரேஷ்.

போட்டியில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_07.html

நல்ல கதை யெஸ்பா. கோட்டி முத்துவின் ஆன்மா அமைதி பெற்றிருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு சிறிய கருத்து. திருத்தத்திற்காக இல்லை. சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால் உரிமையோடு சொல்கிறேன். ஏனென்றால் இதே போல நீங்கள் எனக்கும் சொல்லத்தானே வேண்டும். கோட்டி முத்துவின் இறப்பு முதலிலும் சீரியல் பல்ப்பு கேட்பது இரண்டாவதாகவும் சொல்லப்பட்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

G.Ragavan said...

http://thekkikattan.blogspot.com/2006/11/blog-post_07.html

விலங்குகள் பத்தி இருக்கும்னு நெனச்சு வரலை. உண்மையிலேயே காட்டுக்குள்ள கசமுசன்னுதான் வந்தேன். it shd be nice. நிச்சயமா நல்லாத்தான் இருக்கனும்.

ஆனாலும் ஏமாத்தம்தான். இருந்தாலும் வரையாடுகள் படம் போட்டதால ஒரு திருப்தி. :-)

G.Ragavan said...

http://thekkikattan.blogspot.com/2006/11/blog-post_07.html

Thekkikattan said...
ஜி. ரா,

விலங்குகள் பத்தி இருக்கும்னு நெனச்சு வரலை. உண்மையிலேயே காட்டுக்குள்ள கசமுசன்னுதான் வந்தேன்.//

முருகா! நீங்களுமா :-))

எனவே வந்திட்டு வரையாடுகள் (அப்பாடா, இந்த பேரு மறந்து போயி இருந்தது, நீங்க வந்து எடுத்துக் கொடுத்ததிற்கு ரொம்ப நன்றிங்க, ஜிரா) படத்தை மட்டும் பார்த்திட்டு போயிட்டீங்களா, அப்போ, படிக்கலயா :-)

G.Ragavan said...

http://athusari.blogspot.com/2006/11/blog-post.html

பர்தா அணிவதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வரவில்லை. அது அவரவர் விருப்பம்.


ஆனால் பார்த்தீர்களா? நீங்கள் சொன்ன மூன்றிலும் தவறு செய்தவர்கள் ஆண்களாகவே இருக்கின்றார்களே! அவர்கள் திருந்த வேண்டும் என்று முனைப்பதே சிறந்தது. பாடப் பாட ரோகம். மூட மூட ரோகம் என்பது முதுமொழி.

கருத்தைப் பதிய வேண்டும் என்று தோன்றியது. விவாதத்திற்கல்ல. நன்றி.

G.Ragavan said...

http://vaanamaeellai.blogspot.com/2006/11/blog-post_08.html

ஒரு + போட்டாச்சு :-)

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_08.html

யெஸ்பா பொதுவில் உலகளாவிய அளவில் அடுத்த மதத்தைக் குறை காட்டியே ஒவ்வொரு மதமும் வளர்கிறது. அப்படியிருக்க இது போன்ற நிகழ்வுகள் வியப்பளிப்பதில்லை. ஆனால் வருத்தமளிக்கின்றன.

இது இன்றைய நிலையில் எல்லா மதத்திலும் நடக்கிறது என்பது மிகப்பெரிய உண்மை. ஆனால் எல்லாரும் தாம் நல்லவன் என்றும் அடுத்தவன் கெட்டவன் என்றும் சொல்ல வருவார்கள்.

தொடக்கி வைத்தது யாரென்று பார்த்தால் எல்லார் கைகளிலும் கறையிருக்கும். அதுதான் நிதர்சனம். நீங்கள் இந்தப் பாக்கம் பார்த்திருக்கிறீர்கள். தெரிகிறது. மறுபக்கங்கள் எப்படி என்று உங்களுக்கு நேரடி அனுபவம் இல்லை. அவ்வளவுதான் வேறுபாடு.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2006/11/1.html

எனக்கும் ஓ நெகட்டிவ்தான் பிளட் குரூப்.

நீங்க சொல்ற பிரச்சனை ஓ- உள்ளவங்களுக்கு மட்டுந்தானா? இல்லை ஏ,பி,ஏபி- உள்ளவங்களுக்கும் வருமா?

G.Ragavan said...

http://arutperungo.blogspot.com/2006/05/2_27.html

ஆகாகா நல்லா பொலம்பித் தள்ளீருக்கீங்க? இந்தப் பொண்ணுதானா நீங்க சொன்ன அந்தப் பொண்ணு? ;-) ஒங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாததெல்லாம் சரியா வருதே. சரி இல்லாத கடவுளுக்கு ஏன் பொறாமை வரனும்? ;-) ஒருவேளை இப்படியிருக்கலாம்.

"அன்பே கடவுள் இல்லையென்று நேற்று வரை நினைத்திருந்தேன். அந்த உண்மையும் பொய்யானது. நீ கும்பிடுகிறாய் என்று தெரிந்ததும் இல்லாத கடவுளும் கூட வந்துவிட்டாரே!" :-)

G.Ragavan said...

http://trc108umablogspotcom.blogspot.com/2006/11/6.html

அகத்தியர் அருவி நானும் போயிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச இடங்களில் இதுவும் ஒன்று. சின்ன அருவிதான். ஆனால் சுகமான அருவி. இப்பத் தட்டியெல்லாம் போட்டிருக்காங்க. ஆனா முந்தி கெடையாது.

அங்க மலையில படியாப் போய் ஒரு கோயில் வருமே...கோயில் பக்கத்துல சுத்தி மலை. மலைக்கும் கோயிலுக்கும் நடுவுல ஒரு மடு. அந்த ஃபோட்டோ எடுக்கலையா?

G.Ragavan said...

http://thiruvaasakam.blogspot.com/2006/02/9.html

என்னார், தொழுத கையுள்ளும் படையொடுங்கலாம். ஆனால் எல்லாத் தொழுகையும் படையொடுங்குக் கையல்லவே!

G.Ragavan said...

http://sivavakkiyar.blogspot.com/2006/04/34.html

ஞானவெட்டியான் ஐயா. இந்த உள்ளே தேடுறது ரொம்பவும் சிறப்பானது. இது பெரும்பாலும் ஆன்மிகத் தேடல் இல்லாத கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தேவையில்லாதது. நம்பினால்தானே கடவுள். இப்படித்தான் என்று அன்போடு நம்பும் பொழுது அப்படியே வராதா கடவுள்! கண்டிப்பாக வரும்.

நீங்கள் சொல்லும் இந்தச் சிவவாக்கியர் பாடலின் படித்தானோ வள்ளலார் கண்ணாடியில் கடவுளைக் கண்டமை?

G.Ragavan said...

http://gpost.blogspot.com/2006/11/blog-post_08.html

முதல் பத்திடத்தில் வந்த அனைவருக்கும் வாழ்த்துகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.

// luckylook said...
மாரி மாரிஅடிக்குது மாரிஇன்னிக்காவது குளிடாசோமாரி(குறிப்பு : மாரி என்றாலும் மழை என்றே பொருள். மாரி என இந்த மரபுக் கவிதையை முடித்திருப்பதால் இதையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்) //

லக்கிலுக் ஒரு சின்ன ஐயம். மரபூன்னு சொல்லீட்டதால வந்த ஐயம். இது எந்தப் பா? சித்தப்பான்னு சொல்லீராதீங்க :-)

மொதல் ரெண்டு மாரிக்கும் பொருள் என்ன? மாறி மாறின்னு இருந்திருக்கனுமோ? ஒருவேளை ஒவ்வொரு மாரிக்கும் வெவ்வேற பொருள் இருக்கா?

G.Ragavan said...

http://njaanamuththukkal.blogspot.com/2006/06/57.html

கணவனும் மனைவியும் சிவசிந்தனையும் கூட முடியுமா! முயன்றால் முடியாயதில்லைதான். சித்திரமும் கைப்பழக்கம்தானே!

G.Ragavan said...

http://athusari.blogspot.com/2006/11/blog-post.html

அந்தப் பரிசு எனக்கே :-) தவறைக் கண்டு பிடித்து விட்டேன். பாடப் பாட வருவது ராகம். ரோகமல்ல. :-))))))

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_10.html

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு இனிதே நிறைவேற எனது வாழ்த்துகள். (யாருப்பா...அங்க....யெஸ்பா-வை பெங்களூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணுங்கப்பா)

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/11/2006.html

இப்படியெல்லாம் கண்டு பிடிக்கிறாங்களா? ஒரு ஆறு வருசத்துக்கு முன்னாடி சப்பான் கண்டுபிடிப்புகள்னு ஒரு மெயில் வந்துச்சு (இப்பல்லாம் எனக்கு பார்வேர்டு மெயில்கள் வர்ரதில்லை. எல்லாருக்கும் அப்படித்தானா?) அதுல இந்த மாதிரி நெறைய இருந்துச்சு. லிப்ஸ்டிக் மாதிரியே சீஸ்...அப்படியே பிரட்ல தடவிக்கலாம். கைல ஒட்டாது. இன்னும் நெறைய இருந்தது. ஆனா அதுல எதுவுமே உலகம் முழுசும் பரவலை. எத்தனையோ வெளிவந்தாலும் ஒரு சிலதுதான் புகழடையுது. இல்லையா சிறில்?

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2006/11/rh-factor-addendum.html

எனக்கொரு சந்தேகம். முந்தியெல்லாம் இரத்தத்தோட வகை தெரியாமத்தான இருந்துச்சு. அப்பயும் இந்தப் பிரச்சனை இருந்திருக்கனும்தானே. ஆனா அப்பக் காரணம் தெரியாட்டியும் இதே விளைவுகள் உலகம் முழுக்க இருந்திருக்கனுமே. பத்து சதவீதத்துக்கும் குறைவான பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதால இது பெரிசா வெளிய வரலையோ! blue babyன்னு பாடத்துல படிச்ச நெனவு இருக்கு. அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/11/2_09.html

1 இ) வாரியார்

2 இ) வீணை - வீணைக் கொடியுடைய வேந்தனே.....மறக்க முடியுமா இந்தப் பாடலை

3 ஈ) துவாரகை.......அவதார புருஷன்னு கேள்வியிலேயே குறிப்பிருக்கே


4 ஈ) தேரழுந்தூர் (கம்பன் பிறந்த ஊர்)...திருவரங்கத்தில் அரங்கேற்றந்தான்


5 இ) வசிட்டர்.....கோசலையே பாடியிருந்தா மம சுப்ரஜா ராம பூர்வான்னு பாடியிருக்க மாட்டாங்களா?

6 ஆ) நிகும்பலை - நிகும்பலாதேவிக்கு யாகம் செய்தான். ஆனால் இராமயணம் அவளைப் பேய் என்கிறது. இது மிகவும் தவறான கருத்து.

7 இ) பினாகம் - பினாகபாணி என்ற பெயர் மறக்குமா?

8 ஈ) நளன்-நீலன்

9 இ) சுசேணன் - இவரு குரங்கு ஸ்பெஷலிஸ்ட்டுன்னு நெனைக்கிறேன்

10 அ) மதுராந்தகம் ...ஏரி காத்த ராமரு கோயில்னு ஒன்னு இருக்கே! அதா?

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2006/11/1.html

// மணியன் said...
இது என்ன, நானும் O-ve தான். O -ve இருந்தால் தமிழ்பதிவர்களாகும் வாய்ப்பு அதிகமோ ;)) //

மணியன் same sweet எங்க? :-)

// சுரேஷ் (penathal Suresh) said...
ஜிரா, ஒரு பிரபல டாக்டர் இந்தக்குழப்பங்களைத் தீர்க்க வந்துகிட்டே இருக்கார். வெயிட்டீஸ்! //

வந்துட்டாரே பெனாத்ஸ். அதையும் படிச்சிட்டேனே!!!!!!!!!!

// கைப்புள்ள said...
ஓ நெகட்டிவ் கெடைக்கறதுக்கு ரொம்ப கஷ்டமான குரூப்னு கேள்வி பட்டுருக்கேன். இங்கே வந்து பாத்தா வலைப்பதிவாளர் ஆகனும்னா ஓ நெகட்டிவ் வேணும்னு சொல்ற அளவுக்குக் கொட்டிக் கெடக்குதேய்யா? ஒரு பதிவுக்கு வர கமெண்டுகள்லேயே இத்தனை ஓ நெகட்டிவ் குரூப் கொண்டவர்களா? எல்லாரோட பேரும் ஊரும் வாங்கி வச்சிக்கங்க கொத்ஸ். எப்பவாச்சும் உபயோகப்படும்.
:) //

கைப்ஸ்...உண்மையிலேயே ஓ நெகட்டிவ் அரிய வகைதான். நானும் மணியனும் கீதாவும்தானே ஓ நெகட்டிவ் என்று சொல்லியிருக்கிறோம். முன்பெல்லாம் இரத்ததானம் செய்வேன். ஆனால் சொரியாசிஸ் வந்ததில் இருந்து இரத்ததானம் செய்வதில்லை.

G.Ragavan said...

http://gragavancomments.blogspot.com/2006/10/2006.html

தருமி சார், உங்களுடைய பதிவும் எண்ணமும் தவறில்லாதது. நடுநிலையானது என்றே நம்புகிறேன். எந்த மதத்தின் சார்பாகவும் நீங்கள் இதை எழுதவில்லை என்பது எனக்குப் புரிகிறது. சரியான பதிவே. சமீபகாலத்தில் ஜோவும் நீங்களும் சரியான நடுநிலைப் பதிவுகளைப் போட்டிருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன். இருவருக்கும் நன்றி.

எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். அந்த வினைதான் இன்று நாம் பார்த்துக் கொண்டிருப்பது என்று நானும் நினைக்கிறேன்.

// பெரும்பான்மை இந்துச் சிறுவர்களுக்கு சமயக் கல்வி என்று ஏதேனும் உண்டா? இல்லையென்று நினைக்கிறேன். ஆனால் அவர்களிடம் மத நல்லிணக்கம் என்பதை விடவும், மதங்களைத் தாண்டி நட்பு பாராட்டுவது அவர்களுக்கு எளிது. //

என்னுடைய மதம் இந்து என்று சான்றிதழ் சொல்கிறது. அப்படிச் சொல்லிக் கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. எந்தச் சமயக் கல்வியும் எனக்கு இருந்ததில்லை. எந்தக் கிருத்துவ இஸ்லாமிய வீட்டிலும் சாப்பிடுவதற்கும்...ஏன் எந்த மதத்தார் வீட்டிலும் அன்போடு கொடுக்கப்படும் உணவை உண்பதில் எனக்குத் தயக்கமில்லை. அவர்கள் மத அடையாளமிட்ட பொருள் பரிசாகக் கிடைத்தால் அதை எனது வீட்டில் வைத்துக் கொள்ளத் தயக்கமில்லை. என்னிடம் புதிய ஏற்பாட்டின் ஆங்கில வடிவமும் திருக்குரானின் தமிழ் வடிவமும் உள்ளது. அவர்களது சமயத்தை அங்கீகரிப்பதிலும் எனக்கு வருத்தமில்லை. ஆனால் என்னுடைய பழக்கத்தை அவர்கள் ஏற்காது போனால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் சிரமமில்லை. எனக்குத் தெரிந்து இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பாலானோர் இப்படித்தான் என்று நினைக்கிறேன்.

// அதற்குப் பதிலாக, சமயக் கல்வி பெறும் சிறுவர்களுக்கு அந்தக் கல்வியே மனத்துக்குள் ஒரு சுமையாய் இறங்கி, மதங்களைத் தாண்ட முடியாதவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது என்பதைத்தான் நான் அழுத்தமாய் கூற முற்பட்டுள்ளேன். //

அப்படித்தான் நானும் நினைக்கிறேன். என்னுடைய வீட்டில் சாப்பிடக் கூட மறுத்த மாற்று மத நண்பர்கள் உண்டு. வழிபாட்டு முறைகளைக் கிண்டலடித்தவர்களும் குறை சொன்னவர்களும் உண்டு. ஆனால் மற்ற மதங்களில் பெரும்பான்மையினர் இப்படித்தானா என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் நான் சந்தித்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இப்படித்தான். அதனால் என்ன...அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன. நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன். அத்தோடு நானும் நானாகவே இருக்கிறேன். இருப்பேன்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2006/11/187-catch-22.html

// செந்தில் குமரன் said...
இந்து மதம் எதோ புனிதமான மதம் என்பது போல பேச இடம் கொடுத்து விட்டீர்களே :-((((((. //

செந்தில், இந்த உலகில் எந்த மதமும் புனிதமானதல்ல. இதை எந்த மதவாதியும் ஏற்கார்.

இந்து மதத்தில் உள்ள மிகப் பெரிய கொடுமை சாதீயம். அதை யாரும் மறுப்பதிற்கில்லை. நிதர்சனமான உண்மைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதே நேரத்தில் இன்றைய இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இருந்தால் அதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். தவறில்லை. தருமி எடுத்துக்கொண்டிருப்பது ஒரு கருத்து. அந்த ஒரு கருத்தளவிலேயே அவர் ஒப்பீடு செய்திருக்கிறார். அவ்வளவுதான். சாதீயம் என்று பேசினால் அதில் இங்கே உள்ளதனைத்தும் அவரும் சொல்வார். நானும் ஒத்துக்கொள்வேன். இந்து மதத்தில் கெட்டது மட்டுமே உள்ளது நம்புவதும் ஏமாற்றுத்தனமே என்பது என் கருத்து. நல்லது கெட்டது எங்கும் உண்டு. நல்லதை ஏற்று அல்லதை ஒதுக்கத்தான் வேண்டும்.

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html

இளையராஜா என்ன சொன்னார் என்பதையே யோசித்துப் பார்க்காமல்...அல்லது தெரிந்து கொள்ளாமல் பிரபலமில்லாத ஒரு அரசியல்வாதியின் பேச்சை வைத்துக் கொண்டு முடிவுக்கு வருவதில் நமக்கு நிகர் நாமேதான்.

பெரியார் படத்திற்கு இசையமைப்பதோ மறுப்பதோ இளையராஜாவின் உரிமை. என்ன காரணங்களுக்காக அவர் மறுத்தாலும் அது அவருடையது. அதற்காக அவரைக் கீழ்த்தனமாகப் பேசுவதை விடக் கீழ்த்தனமான செய்கை இருக்க முடியாது.

இப்பொழுதெல்லாம் தன்னோடு கருத்துக்கு ஒருவர் ஒத்துவராவிட்டால் அவரைக் கீழ்த்தரமாகப் பேசுவதே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலை மாறவேண்டும். எதிர்க்கருத்துடையவன் எதிரி என்ற நிலமை மாறியே தீர வேண்டும். மக்களே கொஞ்சம் மூளையையும் பயன்படுத்துங்கள்.

பெரியாரின் சாதி எதிர்ப்புக் கொள்கையில் எனக்கு முழுச் சம்மதமுண்டு. ஆனால் இறையெதிர்ப்புக் கொள்கையில் சம்மதமில்லை. அந்த வகையில் கூட இளையராஜா மறுத்திருக்கலாமே!

ஜோ, நீங்கள் கூடவா இவ்வளவு அவசரப்பட்டு பின்னூட்டம் இடுவது! வேண்டாம் ஜோ.

G.Ragavan said...

http://rozavasanth.blogspot.com/2006/11/blog-post_116315380916230076.html

ரோசாவசந்த், இளையராஜா "நேத்து ராத்திரி யம்மா"விலும் "போற்றிப் பாடடி பொண்ணே"யிலும் தவறு செய்ததாகவே வைத்துக் கொள்வோம். அவர் திருந்தியிருக்கக் கூடாதா?

நேற்றை விட இன்று ஒருவனுக்கு அறிவு கூடுவதும் அல்லது குறைவதும் நடக்கக் கூடாததா? முடியாததா?

உங்களது கருத்துகளின் படி பத்து வருடத்துக்கு முந்திய இளையராஜாவும் இன்றைய இளையராஜாவும் ஒன்று. அல்லது தவறு செய்தவன் தவறு மட்டுமே செய்ய வேண்டும்.

ம்ம்ம்ம்...என்னவோ போங்கள். கண்டுகொள்ளாமல் விடப்பட வேண்டிய ஒன்றைப் பெரிதாக்கி வளர்த்து விடுகின்றீர்கள். அப்படியே ஆகட்டும்.

இளையராஜாவின் இசையில்லாவிட்டால் பெரியார் படம் சிறக்காதா என்ன? அடுத்த ஆளைப் பார்ப்பதை விட்டு விட்டு.....காரியத்தை முடிப்பதை விட.....செருப்பைத் தூக்குவது எளிதாக இருக்கிறது! ம்ம்ம்.

G.Ragavan said...

http://rozavasanth.blogspot.com/2006/11/blog-post_116315380916230076.html

இன்னொரு விஷயம். சொல்வது சரியோ தவறோ....தன்னுடைய கருத்தைத் தன்னுடைய பெயரைப் போட்டுக் கொண்டு சொன்ன இளையராஜாவிடம் கூட கொஞ்சம் நேர்மை உண்டு. அந்த வகையில் பார்த்தால் அந்த நேர்மை உங்களிடமும் இல்லை. நீங்களும் இரட்டைக் கொள்கைக்குள் சிக்கியவர்தான். மன்னித்துக் கொள்ளுங்கள் இப்படிச் சொல்வதற்கு. பொதுவில் விமர்சகர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். அதை எடுத்துக்காட்டி உங்களுக்கு அது பொருந்துவதைச் சொல்வதே என் நோக்கம். உங்களைப் புண்படுத்துவது அல்ல.

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2006/11/blog-post.html

வாழ்க வளமுடன். இதெல்லாம் ஒங்கூருக்கு வந்தன்னைக்குச் சொல்லாதீங்க. இப்பச் சொல்லுங்க. :-((((((((((((((((

G.Ragavan said...

http://penathal.blogspot.com/2006/11/11nov-06.html

இதத்தான் நானும் சொல்றேன். அவர் என்ன சொன்னார்னு தெரிஞ்சிக்காமலே ரெண்டு பதிவுகள். அவரைத் திட்டிப் பல பின்னூட்டங்கள். அதை எடுத்துச் சொன்னா சாமாதன இம்சைகள்னு பட்டம் வேற. அவர் ஒரு இசையமைப்பாளர். இசையில அவர் கிட்ட கூடக் கொறச்சலாயிருக்குன்னு விமர்சனம் பண்றது சரியாயிருக்கும். ஒருவர் எல்லாத் துறையிலயும் அறிவாளியா இருக்க முடியாது. அவர் எடுத்த முடிவு சரி அல்லது தப்பு என்பதல்ல வாதம். அவரிடம் இசையை மட்டும் எதிர்பாருங்கள் என்பதே வாதம்.

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2006/09/blog-post.html

படம் பாத்தாச்சா! ரொம்ப லேட்டு போலத் தெரியுது!!!!!!!!!

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html

// முத்து(தமிழினி) said...
(நடுவில் சர்வ சமாதானவாதிகளின் இம்சை வேறு) //

அதான முத்து. சமாதானம் வர விடலாமா! :-)))))))))))


// Sivabalan said...
ராகவன், //தன்னோடு கருத்துக்கு ஒருவர் ஒத்துவராவிட்டால் அவரைக் கீழ்த்தரமாகப் பேசுவதே // நீங்கள் சொல்லும் கருத்து இரு தரப்பினருக்கும் பொருந்தும்! //

நிச்சயமாக சிவபாலன். இது இரு தரப்பினருக்கும் பொருந்தும். கொஞ்சம் அறிவோடு சிந்திக்கிறோம் என்று நினைக்கின்றவர்களாவது இதிலிருந்து வெளியே வரவேண்டும். இல்லையென்றால் இருதரப்பிற்கும் வேறுபாடே இல்லாமல் போய் விடும்.

// ஜோ / Joe said...
இது தான் இளையராஜா சொன்னதென்றால் இதில் எந்த தவறும் இல்லை .இங்கே நடந்த விவாதம் இளையராஜா சொன்னதாக இல கணேசன் சொன்னது உண்மையாக இருந்தால் என்னும் அடிப்படையுல் நடைபெற்றது என நம்புகிறேன் . அந்த வகையிலே என் கருத்தை சொன்னேன் .

ராகவன் இதை புரிந்து கொள்வார் என நம்புகிறேன் . //

ஜோ, உங்களது நடுநிலமை பல பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் நான் அறிந்ததே. முழுமையாக தெரியாத ஒரு செய்தியை வைத்து....அதுவும் ஒரு அரசியல்வாதியின் சொற்களை வைத்து அவசரப்பட்டு விட்டீர்களே என்பதுதான் என் வருத்தம். மற்றபடி ஜோ அதே பழைய ஜோதான். :-)

========================================

////// //But my life is total contrast to the ideas and thoughts of Periyar.///////

சிவபாலன்: இதுக்கு அர்த்தம் எப்படி எடுத்துக் கொள்வது? இந்த ஐடியாலஜியினால் தான் இசைக்க மறுக்கிறேன் என்கிறார்.
இதனால் தொழிலுக்கு நீதி பயக்க முடியாது என்கிறார்?

இதை தான் நான் குற்றம் சாட்டுகிறேன்.
அவ்வளவே.
ராகவன், நீங்க இதற்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் கொடுங்க..



கண்ணபிரான் ரவி: சிவபாலன்,
எடுத்துக்காட்டுக்காகச் சொல்கிறேன்; வாழ்ந்து மறைந்த ஆன்மிகப் பெரியவர் (எம்மதம் ஆயினும் சரி) ஒருவரின் படத்துக்குத் தாங்கள் பாடல் எழுத வேண்டும் என்று கவியரசர் வைரமுத்து அவர்களைக் கேட்டு,
அவரும் தான் எழுதுவது அவ்வளவு சரியாக இராது என்று சொன்னால்,
அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வோம்? //

சிவபாலன், மேலே ஆதிரை குறிப்பிட்டிருக்கும் செய்தியைப் பாருங்கள். புதிய தகவல்கள் தெரிய வருகின்றன. கடவுள் இல்லை என்று இசையமைக்க மறுத்திருப்பதாகம் தெரிய வருகிறது. சரி.அதெல்லாம் போகட்டும். பெரியாரின் பல கொள்கைகளில் சிலவற்றிற்கு உடன்படுவதும் சிலவற்றிற்கு உடன்படாததும் தவறா? சாதீய எதிர்ப்பும் கடவுள் எதிர்ப்பும் குழப்பிக் கொள்ளப்படக் கூடாது. சமூக நீதி பற்றிய கருத்துகள் எனக்கு முழுமையான ஏற்புடையவையே. ஆனால் இறைமறுப்பும் தமிழ்மொழி பற்றிய கருத்துகளுக்கும் ஏற்பில்லை. அப்படி ஏற்காமல் இருப்பதும் ஏற்பதும் அவரவர் உரிமை. மதம் மட்டுமல்ல மொழி மட்டுமல்ல கருத்துகளும் திணிக்கப்படக் கூடாது.

தன்னை ஆன்மீகவாதியாக நினைத்துக் கொள்ளும் ஒருவர் எப்படி கடவுள் இல்லை என்று பாட முடியும். இல்லை பாடினாலும் அது எந்த அளவிற்கு ஒத்துப் போகும்? வெறும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது சிவபாலன். ஏனென்றால் எல்லாருக்கும் தான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லும் திறமை கிடையாது. ஆகையால் நாம் பல கோணங்களிலும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இப்படி வைத்துக் கொள்வோம். ஜிராவிற்குக் கோடிக் கணக்கில் மில்லியன் ட்ரில்லியன் கணக்கில் பணம் கிடைக்கிறது. அருணகிரிநாதரை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க விரும்புகிறார். ஜிராவிற்கு அப்துல் ரகுமான் மற்றும் மு.மேத்தா மேல் அபிமானம் உண்டு. ஆகையால் அவரிடம் போய் பாடல் எழுதித் தரக் கேட்டு அவர்கள் இருவரும் மறுத்தா ஜிரா என்ன செய்ய வேண்டும்? கிட்டத்தட்ட இதே நிலை. அருணகிரியைப் படித்தவர்களுக்கு அவர் கருத்துகள் தெரிந்திருக்கும். ஆக தவறாக எதுவும் சொல்ல வேண்டியில்லாத நிலையிலேயே இவர்கள் இருவரும் மறுப்பதற்கு வேறுகாரணிகள் இருப்பது தெளிவல்லவா. ஆக...வெறும் சொற்களை மடக்கி நீட்டிப் பொருள் கொண்டு வீண் பாய்ச்சல் செய்வது தேவையற்றது.

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி அடுத்து வேலையைப் பார்ப்பதே சிறந்தது. அதை விடுத்து.......அடப் போங்க சிவபாலன். இப்பல்லாம் இதையே பல பதிவுகள்ள சொல்ல வேண்டியிருக்கு. பலருக்கும் சண்டை போடத்தான் பிடிச்சிருக்கு. :-(

G.Ragavan said...

http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html

// // நானும் தெரிந்து கொள்கிறேன் யார் யார் புனித பிம்பம் என்று.
//

குமரன்,

மறைமுக சொல்லவில்லை, பலரும் பயன்படுத்தும் சொல்லாடல் தான். திராவிட ராஸ்கல், திராவகம், வந்தேறிகள், நடுநிலை வாந்தி என்பது போல் இடத்துக்கு தக்கவாறு பயன்படுத்துகிறார்கள். 'புனித பிம்பம்' என்ற வார்த்தை என்னையும் குறிக்கும் சில இடங்களில்.

பட்டமெல்லாம் சிறப்பு தகுதியின் அடிப்படையில் தற்காலிமாக வழங்கப்படுவது. பெயர் குறிப்பிட்டு பட்டயமாக எழுதி தரச்சொன்னால் எப்படி ? அப்பறம் அந்த பட்டம் தங்களுக்கே உரித்தது என்று உரிமை கோரல் வந்துவிடாதா ?

அடைமொழி சொனால் அனுபவிக்கனும் ஆராயக் கூடாது
:) //

கோவி, இப்பொழுதெல்லாம் இரண்டு விதமான புனிதபிம்பங்கள் இருக்கின்றன. இந்தப் பதிவிலும் கூட. ஒன்று ஆரிய புனித பிம்பங்கள். மற்றொன்று திராவிட புனித பிம்பங்கள். நானும் அடைமொழிதான் சொல்கிறேன். ஆராயாதீர்கள். :-) நானும் ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன்.

G.Ragavan said...

http://rozavasanth.blogspot.com/2006/11/blog-post_116315380916230076.html

// ROSAVASANTH said...
கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டதால் மீதி பின்னூட்டங்கள் நாளை.

ஜி.ராகவன், இந்த பக்கம் வந்தால், அது என்ன இரட்டை கொள்கை, அதை எப்படி விமர்சகர்கள் செய்கிறார்கள்,எனக்கு அது எப்படி பொருந்துகிறது என்று விளக்கவும். நன்றி! //

இந்தப் பதிவு பற்றிய கருத்தைச் சொல்லி விட்டேன். இளையராஜாவிடம் இசையை மட்டும் எதிர்பாருங்கள். அதைத் தவிர அவருக்கு எதுவும் சரியாக வராது. ஆன்மீகத்திலும் அவர் இன்னும் தெளிவற்ற நிலையில்தான் இருக்கிறார் என்பது என் கருத்து.

உங்கள் கருத்துக்கு வருகிறேன். நீங்கள் ரோசாவசந்த். நீங்கள் ரோசாவசந்த் மட்டும்தானா? அப்படியில்லாமல் வேறு யாராகவேனும் இருந்தால் ரோசாவசந்த் என்று உங்களைத் தெரிந்தவர்க்கெல்லாம் நீங்கள் அந்த இன்னொரு யார் என்று தெரியுமா? அல்லது அந்த இன்னொரு யாரென்று உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் நீங்கள் ரோசாவசந்த் என்று தெரியுமா? இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் ரோசாவசந்த். தன்னை மறைத்துக் கொண்டு விமர்சனம் சொல்வது மிக எளிது. இதுதான் என் கருத்து. இதில் உங்களுக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் எனக்குக் கவலையில்லை. நன்றி.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/11/blog-post_11.html

இத்தன புத்தகம் படிச்சு இத்தன நாடகம் பாக்குறீங்க. எப்படி முடியுது?

இந்த நலுங்குமாவு பேர இப்பத்தான் கேள்விப்படுறேன்.

ரெண்டு கேள்விகளும் பேத்தல். ரெண்டு விடைகளும் மகாபேத்தல்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/11/blog-post_10.html

வாழ்த்துகள் சிறில். கவிதை நன்றாக இருக்கிறது. பரிசு வியப்பானதல்ல. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/11/2_09.html

// 4 ஈ) தேரழுந்தூர் (கம்பன் பிறந்த ஊர்)...திருவரங்கத்தில் அரங்கேற்றந்தான் //

ரவி.....உங்கள் கேள்வியினை இராமகாதை எழுதிய ஊர் என்று தவறாக எண்ணிக் கொண்டேன். ஆனால் அப்படித்தான் பார்த்த நினைவு. ஆகையால்தால் அரங்கேற்றம் செய்தது திருவரங்கம்னு விடையிலயும் சொல்லியிருக்கேனே. கேள்வியப் பின்னால் மாற்றவில்லையே?! ;-)

// குமரன் (Kumaran) said...
பாலாஜி. நீங்கள் சொன்னது போல் இராவனின் மம சுப்ரஜா ராம புன்னகையை வரவழைத்தது. மகிழ்ச்சி. :-) //

எதனால் என்றும் விளக்கமாகச் சொல்லுங்கள் குமரன். :-)

// அடுத்தப் பதிவு முருகனுக்கா? இராகவன் 10/10. இப்போதே போட்டுக் கொள்ளுங்கள். :-) //

ஆகா வம்புக்கு இழுக்கின்றீர்களே குமரன். முருகனை முழுதுணர நான் அருணகிரியா? வாரியாரா? என்னால் முடிந்ததைச் செய்து முடிவை முருகனிடம் விட்டு விடுகிறேன். முருகன் பதிவென்றால் குமரந்தானே வெல்லவது!

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2006/11/2.html

நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். எல்லாருக்கும் நிச்சயம் தெரிய வேண்டிய தகவல்கள்.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2006/11/blog-post.html

கூவின பூங்குயில்
கூவின கோழி
குருகுகள் இயம்பின
விளம்பின சங்கம்
யாவரும் அறிவரியா
கைப்புள்ள பள்ளி எழுந்தருளாயே!

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/11/blog-post_116319380541060051.html

அப்பப்பா..........தர்பூசணியில் இத்தனை வேலைப்பாடுகள். வெட்டித் திங்கிற பழத்துல அழகான வேலைப்பாடுகள். சூப்பர்.

G.Ragavan said...

http://shylajan.blogspot.com/2006/11/blog-post_08.html

நல்ல பா. இதுதான் போட்டிக்கு வந்திருக்கும் முதல் மரபுப்பா என நினைக்கிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

// அச்சச்சோ நீக்கி விடாதீர்கள்!
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி", என்ற ஆண்டாள் பாசுரம் பாருங்கள்!
அதில்,
"குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின் கையில் வேல் போற்றி" என்று வேல்கையன் வேலவனாகவே, கண்ணனைப் பாடுகிறாள்!

அதனால ஷைலஜா ஜி, மாத்தாதீங்க ஜி, அப்படியே இருக்கட்டும் ஜி, அச்சா ஜி! :-))) //

மாலவனை வேலவனாக்குவதில் ரவிக்கு அத்தனை மகிழ்ச்சி. உங்கள் விருப்பம் போலவே ஆகுக. "விகட சக்கரத் தாமரை நாயகன்" தம்பிதானே வேலவன். :-) ஆகையால் பிழையில்லை.

ஷைலஜா "கூர்வேல்க் கொடுந் தொழிலன் நந்தகோபன்" என்றுதானே ஆண்டாள் பாடுகிறார். ரவி எடுத்தாண்ட வேலும் ஆண்டாள் சொன்ன வேலே. வேறெந்த ஆழ்வாரும் வைணவரும் வேலவன் என்று கரியனைப் பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆண்டாள் பழந்தமிழ்ப் பெண். ஆகையால் வேல் என்பது காக்கும் கருவி என்ற வகையில் பாடியிருப்பார். ஆனால் வேலவன் என்பது முருகனுக்கான பெயர் என்பதால் பிற்காலத்தில் அந்தப் பதத்தை மற்ற தெய்வங்களுக்குப் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஏன்? இன்று மாலவன் என்றும் வேலவன் என்றும் சொல்லப்படும் தெய்வங்கள் ஒரே தெய்வமாகக் கூட இருந்திருக்கலாம். காலப்போக்கில் மாறியிருக்கலாம்.

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/11/blog-post_10.html

அப்பாடியோவ்..........கின்னஸ் பரிசு தேவைதான். சரி...இதுக்குக் குட்டி மான் எதுவும் உண்டா?

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2006/11/condom-condemn.html

சில விஷயங்களைப் பேசாமல் இருப்பது புனிதம் என்ற தவறான எண்ணம் இருப்பதும் தவறுதான். மூடமூடத்தான் ரோகம்.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/11/blog-post_11.html

// ramachandranusha said...
ராகவா, இனிமேல் பதிவை ஒழுங்கா படிக்காம பின்னுட்டம் விட்டால், ஒரு பிழைக்கு பத்து பின்னுட்டம் பைன் :-)
டிரெய்லர்/ விளம்பரம் காட்டுகிறார்களே என்ன கதை என்றல்லவா கேட்டு இருக்கிறேன்? சீரியல் எல்லாம் பார்க்கும்
அளவிற்க்கு பூமாதேவிக்கு இணையான பொறுமை எனக்கு இல்லையப்பா!
பிறகு, சும்மா எப்பொழுதும் சீரியசாய் இருக்க முடியுமா? சில சமயம் பேத்தல், அபத்தம் போன்றவையும் வாழ்க்கைக்கு சுவைக் கொடுக்கும். //

சரி. இதோ பைன் பின்னூட்டம். :-)

பூமாதேவிக்கே பொறுமை அப்பப்பப் போகுதாம். ஏதேதோ நெலநடுக்கம். சுனாமின்னு சொல்றாங்களே.

நலுங்கு தமிழோ தெலுங்கோ...ஆனா தமிழ்நாட்டுல ரொம்பப் பாப்புலர். என்னோட BIL கூட அந்த சோப்புப் போடுறாரு. நாம வழக்கம் போல மெடிமிக்ஸ்தான். இதுக்கு எதுவும் விளம்பரம் வருதா என்ன?

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2006/11/blog-post_116315717051680815.html

ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ
:-)

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/11/blog-post_12.html

முத்துக்குமரன், சாதீய ஒழிப்பில் பெரியாரின் பங்கு மிகமுக்கியமானது. மறுக்க முடியாதது. அது தொடர்பாக அவரை நான் மதிக்கிறேன். பெரியாருக்குப் பிறகு அவரது கருத்துகளைக் கொண்டு செல்ல சிறந்த முனைவர்கள் இல்லை என்பதும் எனது கருத்து. இந்த நிலையும் மாற வேண்டும்.

புரோகிதத்தைக் கடவுள் நம்பிக்கையற்ற பெரியார் எதிர்த்தார் என்று அவர் மேல் குற்றமாயச் சொல்கிறவர்களுக்கு ஒரு செய்தி. அவர் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கை நிறைந்த விவேகானந்தரும், அருணகிரியும் தேவாரம் பாடிய மூவரும் இன்னும் பலரும் எதிர்த்திருக்கிறார்கள். மக்கள் இன்னமும் அதில் ஆர்வம் செலுத்துவது வருந்தத்தக்கதே!

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/11/blog-post_12.html

முத்துக்குமரன், கருத்தைப் பற்றி போன பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். கவிதைக்கு வருவோம். இந்தக் கருத்தைக் கவிதைக்கு மட்டும் கொள்ளவும்.

என்னாச்சு முத்து? உங்கள் கவிதைகள் சிறுத்திருந்தாலும் சுறுசுறுப்பாய் இருக்குமே! ஏதோ குறைகிறது இந்தக் கவிதையில். பகைவர் கடும்பாறை கண்டா நடுங்குவார்கள். இப்பொழுதுதான் பெரியார் இல்லை என்பதால் அப்படிச் சொன்னீர்களா என்ன? இல்லை வேறு ஏதேனும் கருத்தை வைத்துச் சொன்னீர்களா?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/11/1.html

தொடருமா! தொடர்கதையா! வெட்டிப்பயலா! நடக்கட்டும் நடக்கட்டும்.

நல்லதொரு சந்திப்புதான். என்ன ஆச்சோ தெரியலையே! காத்திருக்கேன்.

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/11/blog-post_116329866235431909.html

// இவ்வளவு பெருமையும் உடையது திருவாலவாயாம் மதுரையம்பதி வாழும் மீனாட்சி சுந்தரேசனின் மடைப்பள்ளித் திருநீறே. //

மடப்பள்ளியில் திரூன் கிடைக்கும். திருநீறுமா? :-) உண்மைதான். அடுப்பில் வெந்ததும் நீறுதானே.

குமரன் ஒரு சிறு குறிப்பு. ஒரு வரிக்குப் பொருள் சொல்கையில் அது அதற்கு முன்னும் பின்னும் உள்ள வரிகளோடு கொண்ட தொடர்பையும் கவனிப்பது சிறந்தது. குறிப்பாக அந்தமாவது நீறு என்ற வரி அதற்கு முந்திய வரியோடு தொடர்ந்தது. இப்பொழுது நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/11/blog-post_116330299958758728.html

நல்ல விளக்கம் குமரன். மிகவும் எளிய வரிகள்.

// குறும்பன் said...
"திருவாலவாயான் திருநீறே" அல்லது "திரு ஆலவாயான் திருநீறே" வா? //

குறும்பன். இரண்டும் ஒன்றேதான். திரு ஆலவாய் என்பது புணர்ச்சி விதியின்படி திருவாலவாய் என்று வரும்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2006/11/blog-post_13.html

ஊரக்கூட்டி மானத்த வாங்கியாச்சா! சந்தோசமா? சாப்பிட்டதெல்லாம் செமிச்சிருக்குமே இப்போ! நல்லாயிருமய்யா! நல்லாயிரும்!

// ராசா (Raasa) said...

ஓமப்பொடி எப்பவும் கரெக்ட் தான் :) //

என்ன ராசா! அப்ப ஜிரா எப்பவும் தப்பூங்குறீங்களா :-((((((((

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2006/11/blog-post_13.html

// முத்துகுமரன் said...
ஆமாம்பா ஆமாம்....

படைப்பாளியாக பாக்யராஜ் தோற்ற இடம் அது :-)

பாலகுமாரனுக்கு அது ஒரு வகையில் அவமதிப்பே...//

புரியலையேய்யா முத்துக்குமரா! படம் தோல்வியா? நான் வெற்றிப்படம்னே நெனச்சிக்கிட்டிருக்கேன். சரி. இதுல அவமதிப்பு வந்தது எப்படி? எதனால?

G.Ragavan said...

http://gragavancomments.blogspot.com/2006/10/2006.html

// முத்துகுமரன் said...
ஆமாம்பா ஆமாம்....

படைப்பாளியாக பாக்யராஜ் தோற்ற இடம் அது :-)

பாலகுமாரனுக்கு அது ஒரு வகையில் அவமதிப்பே...//

புரியலையேய்யா முத்துக்குமரா! படம் தோல்வியா? நான் வெற்றிப்படம்னே நெனச்சிக்கிட்டிருக்கேன். சரி. இதுல அவமதிப்பு வந்தது எப்படி? எதனால?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/11/2_09.html

// குமரன் (Kumaran) said...
இரவி என்று சொல்ல நினைத்து பாலாஜி என்று சொல்லிவிட்டேன். மன்னிக்கவும். அதே போல் இராகவனை இராவன என்றாக்கிவிட்டேன். மன்னிக்கவும். //

நான் மன்னிக்க வேண்டியதில்லை குமரன். எனக்குப் பிடித்த சிவனடியவன் பெயரைத்தானே சொல்லியிருக்கின்றீர்கள். :-)

// குமரன் (Kumaran) said...
சொன்ன சொல் மாறாத மாண்பு மிக்கவரிடம் என்ன கேள்வி கேட்டீர்கள் இராகவன்? இது அடுக்குமா? 'நானே தான் ஆயிடுக' என்று அவரும் நீங்கள் செய்த தவறை தன் மேல் ஏற்றிக் கொள்வார். ஆனால் மற்ற எல்லாருமே திருவரங்கம் என்றே சொல்லியிருக்கிறோம் பாருங்கள். நான் படிக்கும் போது தெளிவாக 'அரங்கேற்றிய' என்றே இருந்தது. //

:-) குமரன் நான் ரவியைக் குற்றமுரைக்கவில்லை. கிண்டல் கேள்விதானே அது. என் கண்ணில் ஏனப்படி விழுந்தது என்று தெரியவில்லை. இறையருள் அப்படிப் போல இருக்கிறது. இராகவனைப் பிடித்தவர்களுக்கு அது சரியாக விழுந்திருக்கிறது. குமரனைப் பிடித்தவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவ்வளவுதான்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இதோ 'நானே தான் ஆயிடுக' - ஏற்றுக் கொண்டேன் குமரன் :-))
தேரழுந்தூர் option குழப்புவதற்கே என்றே கொடுக்கப்பட்டது! குழப்பத்துக்கே குழப்பமா? :-))

"ராகவன்", ஜி.ராகவனிடம் போய்ச் சேர வேண்டும் என்று இருக்கிறது பாத்தீங்களா, குமரன்? :-)

ஜிரா, பரிசு கிடைத்ததா? //

தேரெழுந்தூரைக் குழப்பக் கொடுத்தாலும் நான் கேள்வியையே சரியாகப் பார்க்கவில்லை போலும். எல்லாரும் சரியாயச் செய்திருக்க நான் தவறினேன் என்பதுதானே மெய்.

பரிசு கிடைத்தது. அன்போடு கொடுத்ததைப் பெற்றுக் கொள்வதே மாண்பு. பெற்றுக் கொண்டேன்.

அடுத்த பதிவு எங்கே? எங்கே? காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/blog-post_13.html

வாழ்த்துகள் டீச்சர். நட்சத்திரம் ஒரு முறைதானா வரும்? திரும்பத் திரும்ப வரும் என்பதை நிரூபிக்கும் முகமாக மீண்டும் மீண்டும் நட்சத்திரமாகியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://eenpaarvaiyil.blogspot.com/2006/11/blog-post_13.html

// ஆனால் அவர் மறுத்ததற்கு காரணம் பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றால் இசையில் ஞானியாக இருந்தாலும் வாழ்வியலில் அவர் பூஜ்ஜியம் என்றே காட்டுகிறது. //

பூஜ்ஜியமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் குறைவாக இருக்கும் என்றே நினைக்கிறேன். ஆன்மீகத்திலும் அவர் சற்றுக் குழப்பவாதிதான். அவர் ஒரு இசையமைப்பாளர். நல்ல இசையை எதிர்பார்க்கலாம். வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும். நடிகனை நடிகனாக மட்டும் பார்க்க வேண்டியது போல இசையமைப்பாளரையும் அப்படியே பார்க்க வேண்டியுள்ளது. அவருடைய மற்ற கருத்துகள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

// இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல //

பெரியாரியவாதிகள் மட்டுமல்ல. பெரியாரைத் தெரியாமல் இருந்தாலும் மக்களிடையே பாகுபாடு இருக்கக்கூடாது என்று கருதுகின்றவாதிகளின் ஆதரவும் அவருக்குக் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் சொன்னது போல நிச்சயமாக எந்த அரசியல்வாதியும் அல்ல.

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/11/blog-post_12.html

// முத்துகுமரன் said...
ராகவன் கவிதைக்கு விளக்கம் சொன்னால் அது கவிதை இல்லை என்றூ நினைப்பவன் நான். //

கரும்பாறை - காரணத்துடனே பயன்படுத்தி இருக்கிறேன். நேரான அர்த்தம் தாண்டியும் அதனுள் இருக்கிறது செய்தி. செய்தியை நேரடியாக சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால் கவிதை எதற்கு.//

சரிதான் முத்துக்குமரன். ஆனால் பிரச்சனையே கவிதை புரியவில்லை என்பதுதானே. புரியாமல் போகுமானால் கவிதை எதற்கு? புரியும் விதமாக இருந்திருந்தால் நான் ஏன் கேட்கப் போகிறேன் முத்து. :-)

// உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ராகவன். மத்த கவிதை எல்லாம் சுறுசுறுப்பா இருக்குனு சொல்லீட்டீங்களே :-) //

பின்னே. உள்ளதை உள்ளதென்று சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. கருத்தை விடுங்கள். வழக்காம உங்கள் கவிதைகளில் சொல்ல வந்த கருத்தைத் தெளிவாகச் சொல்லும் வன்மை இருக்கும். அது கண்டிப்பாகப் பாராட்டுக்குரியதே.

G.Ragavan said...

http://eenpaarvaiyil.blogspot.com/2006/11/blog-post_13.html

// அப்போ பெரியாரிய வாதிகள் மக்களிடையே பாகுபாடு இருக்கவேண்டும் என்பவர்களா?:)) //

அப்படியில்லை முத்துக்குமரன். பெரியாரைப் பற்றி நான் அறிந்தது மிகக்குறைவே. பெரியாரியவாதி மட்டுமே பாகுபாடு பார்க்காதவன் என்ற தொனியில் நீங்கள் சொன்ன கருத்தை மாற்றியிருக்கிறேன். பெரியாரைப் பற்றி தெரியாவிடினும் சிலபலர் பாகுபாடு பாராதாராக இருப்பார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன். என்னைப் பெரியாரியவாதி என்று சொல்லிக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் நான் சாதீய, மதப் பாகுபாடுகளைப் பார்க்கின்றவனும் அல்லன். மத நம்பிக்கையை விட கடவுள் நம்பிக்கை பெரிதென்று எண்ணுகின்றவன். என்னைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதற்காகச் சொன்னது. பெரியாரின் பெயரைச் சொன்னால் மட்டுமே பாகுபாடுபாராதவன் என்று சொல்ல முடியாது என்பதற்காகக் குறிப்பிட்டது அது.

G.Ragavan said...

http://gpost.blogspot.com/2006/11/blog-post_13.html

கௌதம், நல்லதொரு தகவல். ஒரு பழைய பத்திரிகையாளரின் ஒரு பழக்கத்தை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். சிறுகதை போல. மிகவும் ரசித்தேன். கோர்வை அருமை. சமயத்தில் நல்ல எழுத்துகளைப் படிக்கையில் இப்படித்தான் பரவசம் வந்து தொலைக்கிறது. :-)

நம்பர் ஒன் பத்திரிகையா.....விகடனை வேண்டுமானால் சொல்லலாம். குங்குமம் சுமார்தான். ஆனாலும் கலைமகளை மறக்க முடியவில்லை. :-(

G.Ragavan said...

http://ezhila.blogspot.com/2006/11/blog-post_12.html

பைத்தியக்காரத்தனமான கருத்துகள். இவரையெல்லாம் என்னதான் சொல்வது!!!! சமயங்களில் தருமி சொல்வது போல மதங்களே கூடாது என்று கூடச் சொல்லி விடலாம் போல.

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_13.html

உண்மைதான் ஜோசப் சார். அதனால்தான் நம்மூரிலும் செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லி வைத்தார்கள். அந்தச் செய்கைகளின் விளைவே நன்மையும் தீமையும். அதனால்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா!

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/11/blog-post_12.html

// முத்துகுமரன் said...
பழஞ்செய்யுள்களுக்கு இனிய தமிழில் விளக்கஞ் சொல்லிவரும் உங்களுக்கு நான் தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் சொல்வது சரியாக வருமா. சூரியனுக்கு நெருப்பை காட்டலாமா?:-) //

ம்ம்ம்..சொல்ல மாட்டேங்குறத இப்படியும் சொல்லலாம் போல. :-(

// குமரன் (Kumaran) said...
இராகவன். எளிய கவிதை தானே இது. நன்றாகப் புரிகிறதே. //

அது சரி. முத்துக்குமரன் கவிதைக்குக் குமரன் சாட்சி. :-) நான் மட்டுந்தான் மடையன் போல!

G.Ragavan said...

http://eenpaarvaiyil.blogspot.com/2006/11/blog-post_13.html

// முத்துகுமரன் said...
//அப்படியில்லை முத்துக்குமரன்.//
அது முத்து தமிழினி ராகவன். அப்புறம்
முத்துவும் முத்து தமிழினியும் ஒன்னுன்னு அறிவிச்சிட போறாங்க:-). பயமாகீதுபா:-) //

ஓ முத்து தமிழினியா அது. :-) மன்னிச்சுக்கோங்க முத்து தமிழினி. முத்துன்னு பாத்ததும் அடுத்து குமரனோன்னு நெனச்சுச் சொல்லீட்டேன்.

G.Ragavan said...

http://rozavasanth.blogspot.com/2006/11/blog-post_116315380916230076.html

// ROSAVASANTH said...
ஜி.ராகவன், சரி, இனிமேல் எதையும் எழுதும் முன்பு, வாசிக்கும் அனைவருக்கும் என் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், CV, சம்பள விவரம், என் அப்பாவின் பயோடெட்டா எல்லாமும் தரமுயற்சிக்கிறேன். அதே நேரம் பதிவு எழுதிய உடன் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து என் ஆஃபிஸில் வேலை செய்பவர்கள், உறவினர்கள், எல்லாவகை நண்பர்கள், துணைவியின் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கு ஒரு காப்பி அனுப்பி விடுகிறேன். அவ்வளுவுதூரம் நேர்மையை காப்பாற்றி உங்களுளிடம் பேர் வாங்கவேண்டுமா என்று மட்டும் ஒரு கேள்வியிருக்கிறது. அந்த கேள்விக்கு பதில் கிடைத்தவுடன் நிச்சயம்! நன்றி! //

:-)))))))))))))))))

என்னிடம் நீங்கள் கண்டிப்பாக பெயர் வாங்க வேண்டியதில்லை ரோசாவசந்த். உங்களிடம் பெயர் வாங்க வேண்டிய நிலைக்கு இளையராஜா வந்து விட்டதை எடுத்துச் சொன்னேன். அவ்வளவே.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/11/2_09.html

// வெட்டிப்பயல் said...
//நான் மன்னிக்க வேண்டியதில்லை குமரன். எனக்குப் பிடித்த சிவனடியவன் பெயரைத்தானே சொல்லியிருக்கின்றீர்கள். :-)//
பிடித்த சிவனடியாரா?
அடுத்தவன் மனைவிய தூக்கிட்டு வர அவருக்கு சிவன் குடியிருந்த மனசுல எப்படிங்க இடம் வந்துச்சு? உண்மையான பக்தினா எங்க அனுமன், பிரகலாதனை பாருங்க ஜி.ரா. :-) //

பிரகலாதனா! குலம் கெடுத்த கோடாரிக் காம்பல்லவா அது ;-) அனுமந்தானே....ம்ம்ம்....சூரியனைப் பழமென நினைத்த அறியாக் குழந்தை. அவர்களோடா இராவணனை ஒப்பிடுவது. சங்கராபரணம் என்னும் புதிய இராகத்தையே உருவாக்கிய இராக-வன் அவன். :-) ஏதோ...அவன் தம்பி சரியில்லை. பாவம் வீழ்ந்து பட்டான்.

// பத்து தலைகளை கொய்து இறைவனை வணங்கி வரம் வாங்கி வருவதைவிட எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறை சேவை செய்வதுதான் உயர்ந்தது என்பது தாங்கள் அறியாததா? //

தலைகளைக் கொய்தாலும் பாதகமில்லை...ஆண்டவனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தானே. அவன் பெருமை பெரிதல்லவா! தந்தையைக் கொன்றா அவன் பக்தன் பட்டம் பெற வேண்டும்! அப்படிப்பட்ட பட்டம் வேண்டியதில்லைதான்.

// //இராகவனைப் பிடித்தவர்களுக்கு அது சரியாக விழுந்திருக்கிறது. குமரனைப் பிடித்தவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.//
குமரனே ராகவன் பக்தன் போலிருக்கே... 10/10 வாங்கிட்டாரே.. அதை வெச்சி சொன்னேன் ;)
அப்படி பார்க்கும் போது உங்களுக்கும் இராகவனுடைய அருள் கிடைக்கும். அனுமனை வணங்குபவர்களுக்கு இராமன் அருள் கிடைப்பதை போல :-)

அதனால்தான் நீங்க தப்பா பதில் சொல்லியும் உங்களுக்கு பரிசு கிடைச்சிருக்கு... //

இராகவனுக்கே இராகவன் அருளா! கந்தரநுபூதி வேண்டுகிறவன் வேறெதிலும் அறிவைச் செலுத்துவரோ! :-) ரவி அன்போடு கொடுத்த பரிசை ஏற்றுக்கொள்வதுதான் முறை என்று நல்ல முறை பார்க்கும் பண்பை எனக்கும் முருகன் வழங்கியிருக்கிறான். அதைப் பணிவு என்று நினைத்தால் துணிவுதான் உமக்கு!

// அப்பறம் இராகவன் என்ற பேருக்கு என்ன அர்த்தம் என்று குமரனும், இரவியும், இராகவனும் சொன்னால் இந்த எளியவன் மிகவும் மகிழ்வேன்...

மூணு பேருமே சொன்னா நல்லா இருக்கும் :-) //

இராகத்தில் வன்மையானவன் இராகவன் என்பது நான் சொல்லும் பொருள். மற்றவரும் பொருளுரைக்கட்டும்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/11/2_09.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// G.Ragavan said...
இராகவனைப் பிடித்தவர்களுக்கு அது சரியாக விழுந்திருக்கிறது. குமரனைப் பிடித்தவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவ்வளவுதான்//

ஜிரா, இதுக்கு என்ன சொல்லறீங்கன்னு பாக்கலாம் :-))
இராகவனைப் பிடித்து, குமரனையும் பிடித்து,
குமரனின் சிரிப்பில் குழந்தைக் கண்ணனைக் காண்போரின் நிலை என்னவோ? :-))) //

நல்ல கேள்வி ரவி. ஆனால் குழந்தைகளை விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டாமே. குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதே சிறப்பு. ;-)

G.Ragavan said...

http://siththam.blogspot.com/2006/11/blog-post_07.html

திருமால், சிறுகதை நன்றாக வந்திருக்கு. நல்ல முடிவு. பல பொழுதுகளில் இதை நாமும் செய்திருக்கிறோம் என்றே நினைக்கிறேன். உங்கள் எழுத்து இன்னும் மெருகேற எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/11/2_09.html

//// வெட்டிப்பயல் said...
//பிரகலாதனா! குலம் கெடுத்த கோடாரிக் காம்பல்லவா அது ;-) //
குலம் கெடுத்த கோடாரி காம்பா? பிரகலாதனா? ஐயா, அசுரர் குலத்தில் பிறந்த தெய்வக்குழந்தை அல்லவா அவன். பரம்பொருளிடம் சரணடந்தவனை மானிட பந்தங்களால் கட்டுப்படுத்த முடியாது ஜி.ரா.

தந்தையே ஆனாலும் தவறு செய்வதை சுட்டிக்காட்டியவன்... அவன் மனம் பரம்பொருளை தவிர வேறு எதிலும் நிலைக்கவில்லை. //

இதென்ன கொடுமை. அசுரர் குலம் தெய்வத்தன்மையற்றது என்கின்றீரா? தெய்வங்களில் உயர்வு தாழ்வு பாரா நீர், மனிதர்களில் குலத்தால் வருவதே குணம் என்கிறீரா? மிகத் தவறு. மிகத் தவறு. உண்மையிலேயே பிரகலாதன் கதை எப்படியிருந்திருக்கும்? தங்கப்பதக்கம் கதை போல. ஆனால் தங்கப் பதக்கத்தில் அப்பன் ஜெயித்தான். இங்கு மகன். வென்றவன் எழுதும் வரலாறில் தோற்றவன் கெட்டவந்தானே.

//// ஆமாம் ஞானத்தில் சூரியனை போன்றவன் (சூரியனிடம் பாடம் பயின்றவன்)... சக்தியில் வாயுவை ஒத்தவன். பக்தியில் ஈடு இணையற்றவன். //
அவர்களோடா இராவணனை ஒப்பிடுவது. சங்கராபரணம் என்னும் புதிய இராகத்தையே உருவாக்கிய இராக-வன் அவன். :-) ஏதோ...அவன் தம்பி சரியில்லை. பாவம் வீழ்ந்து பட்டான்.//
ஐயய்யோ ஜி,ரா, கனவிலும் நினைக்க வேண்டாம், அடுத்தவன் மனைவியை சண்டாள நினைத்தவனுடன் பக்தியின் இலக்கணங்களாக திகழ்பவர்களை ஒப்பிடுவேன் என்று? //

நாடி வந்த பெண்ணை மூக்கறுப்பது மட்டும் நல்ல செயலா? அடுத்தவன் மனைவியைக் கவர்ந்தான். மறுக்கவில்லை. ஆநிரை கவர்தலுக்கு ஒப்பானது அது. ஆனால் அவள் கடைசி வரை சீதையாகத்தான் இருந்தாள். உடனே சாபக் கதையைக் கொண்டு வராதீர்கள். காமா துரா ந பய ந லஜ்ஜா. காமம் பொங்கி வழிகையில் எல்லா அச்சமும் நாணமும் போகும். ஆனாலும் அவனைத் தடுத்து நின்றது பண்பு.

இன்னொன்றும் சொல்கிறேன். எல்லாரும் இராமாயணத்தை வைத்துத்தான் பேசுகிறீர்கள். ஆனால் இராவணனைப் பற்றிய பல செய்திகள் மறைந்து விட்டனவோ என்று எனக்கு ஐயமுண்டு. பல சிவன் கோயில்களில் இராவணனுக்குச் சிறப்பான இடமுண்டு. எல்லோராவில் இருக்கும் கைலாசநாதர் கோயில். இது தென்னிந்தயக் கட்டடக்கலையின் படி எழுந்த கோயில். பார்த்ததுமே கண்டுபிடித்து விடலாம். அந்தக் கோயிலின் பழமையை நான் சொல்ல வேண்டியதில்லை. அங்கு இராவணனைச் சிறப்பித்திருக்கிறார்கள். மதுரையில். திருவானைக்காவலில். இன்னும் பலப்பலச் சிவன் கோயில்களில்.

//// தம்பி சரியில்லைதான்... அதனால்தான் எடுத்து சொல்லாமல் உயிரைவிட்டான். கும்பகர்ணனைத்தானே சொல்கிறீர்கள். விபீஷ்ணன் எடுத்து சொல்லியே கேக்காதவன் கும்பகர்ணன் சொல்லி கேட்டிருப்பானா?

பெண்ணாசை பிடித்தவனுக்கு யார் சொன்னாலும் எதுவும் கேட்காது ஜி.ரா? //

கும்பகர்ணனையா சரியில்லை என்பது!!!! அவனும் அண்ணனுக்குப் புத்தி சொன்னவந்தான். ஆனாலும் போரிட்டான். ஏன் தெரியுமா? செஞ்சோற்றுக்கடன். உயிர் போகும் என்று தெரிந்தே போரிட்டானாம். அத்தனை உத்தமனாக வீடணன் இருந்திருந்தால் ஒதுங்கியிருந்திருக்க வேண்டியதுதானே. ஏன் போய் அங்கு சரணடைய வேண்டும். அவனை இராவணன் நாகரீகமாகத்தானே ஒதுக்கி வைத்தான். அண்ணன் எப்பொழுது சாவான் என்று காத்துக் கொண்டிருந்தான் போல.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/11/2_09.html

//// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//G.Ragavan said...
இராகத்தில் வன்மையானவன் இராகவன் என்பது நான் சொல்லும் பொருள். மற்றவரும் பொருளுரைக்கட்டும்//

அப்போ இராகவேந்திரன்?
இராகத்தில் வன்மையானவர் எல்லாருக்கும் இந்திரன்-ஆ :-)) //

நான் சொல்வது Ragavanக்கு. நீங்கள் சொல்வது Raghavanக்கு. இரண்டு வெவ்வேறுதானே?

// மென்மையே உருவான தாங்களா வன்மையான ராகத்துக்கு அதிபதி? நம்ப முடியவில்லையே! பாலாஜி நீங்க நம்பறீங்களா? :-) //

வன்மையான இராகமல்ல. இராகத்தில் வன்மையானவன். வன்மையானவன் என்றால் சிறந்தவன் என்று பொருள்.

// வயசுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று எனக்கு சொல்லிய ஜி.ராவா இங்கு இதை சொல்வது?

குழந்தைகளும் வளர வேண்டாமா ஜி.ரா? //

எல்லாக் குழந்தையும் குழந்தையல்ல சான்றோர்க்கு
உய்தார் குழந்தையே குழந்தை

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/blog-post_116348747420602126.html

என்ன டீச்சர் இது....நட்சத்திர வாரத்துல போட்டியா?

சரி. அது வாதுமைக் கன்று.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/blog-post_14.html

டீச்சர்...பந்தியில மொதப் பரிமாறல் வாங்குனப்புறம் எந்திரிச்சா போயிர்ரோம். ரெண்டாவது மூனாவதுன்னு வாங்குறதில்லையா. சில பேரு ரெண்டாவது மூனாவது பந்தீன்னு சிறப்பாச் செய்வாங்க. அப்படியிருக்குறப்போ நீங்க வெளுத்துக் கட்டுங்க.

G.Ragavan said...

http://kadalganesan.blogspot.com/2006/11/top-10.html

வாழ்த்துகள் கடல் கணேசன். உங்களது எழுத்தும் நடையும் கருத்தும் இந்த இடத்தைக் கொடுத்திருக்கிறது என்றால் வியப்பில்லை. மென்மேலும் சிறப்பாக எழுதிப் புகழ் பெற எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://paraasaran.blogspot.com/2006/11/5.html

மிக அருமையான விளக்கம். கந்தரநுபூதியில் ஆழ ஆழ இன்பந்தான். கந்தரநுபூதிக்கு http://iniyathu.blogspot.com என்ற வலைத்தளத்தில் நானும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கையில் வந்து பார்க்கவும். நன்றி.

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2006/11/blog-post.html

உதய், உங்க பாட்டுல ஒரேயொரு வரி மட்டும் நான் கூடச் சேத்துக்கிறேன். சரியா?

உன் முடிக்கற்றைகள்
விசிறியாய்...
உன் நினைவுகள்
தலையணையாய்...
உன் வார்த்தைகள்
தாலாட்டாய்...
உன் சிரிப்புகள்
போர்வையாய்...
ராட்சசி,
நானெப்படி உறங்குவேன்
நீயில்லாமல்??? :-)

G.Ragavan said...

http://thoughtsintamil.blogspot.com/2006/11/blog-post_14.html

பத்ரி, சனிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல இருக்கிறேன். சென்ற முறை சில புத்தகங்களை வாங்க முடியவில்லை. கண்டிப்பாக கிழக்குப் புத்தகக் கடையில் உங்களைச் சந்திக்கிறேன்.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/blog-post_15.html

எங்கூர்ல காப்பிச்செடி வேற மாதிரி இருக்கும். இது நியூசிக்காப்பீன்னு நெனைக்கிறேன். குடிச்சா லேசாக் கிக்கு வருவாம். இந்தியக் காப்பியில கிக்கு இருக்காது. :-)))))

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2006/11/blog-post.html

// அனுசுயா said...
நல்ல கவிதை உதய். அது கூட நம்ம ஜிரா ஒரு வரி சேர்த்து ரொம்ப அழகாகிட்டாரு. //

ஹி ஹி டேங்க்ஸு அனுசுயா

// Udhayakumar said...
தலை இருக்குறப்போ வால் ஆடக்கூடாதுன்னு சொன்னா எங்களுக்கெல்லாம் புரியறதே இல்லை... //

இதுல யாரு தலை? யாரு வாலு? தலையிருக்க வாலாடி யாரு?

// அப்பன் முருகன் அருளால் வந்த கவிதை மாதிரி தெரியலையே... ஜிரா, என்ன நடக்குது??? //

முருகா....முருகன் அருளாலதான் இதுவும் வந்தது உதய். அனேகமா அவர் வள்ளியோட பிக்னிக் போயிருந்த பொழுது அருளீருப்பாருன்னு நெனைக்கிறேன். :-)

// வெட்டி, என் பிரச்சினை தூக்கம்.. ஜிரா வோட பிரச்சினைய முதல்ல பாருங்க...//

உதய், அது உம்ம பிரச்சனை. உம்ம பிரச்சனையை விளக்கமா எடுத்துக் குடுத்தேன். "பல்லு இருக்குறவன் எப்பவும் பட்டாணி திங்கலாம்னு" நம்மளப் பத்தி இளவஞ்சியானந்தா சொல்லும் போது நீங்களுந்தான கூட இருந்தீங்க.

// ஷைலஜா said...
விசிறி தலையணை தாலாட்டு போர்வை!
ம்ம்..உறக்கத்துக்குத் தேவையான எல்லாம் கிடைத்தும் தூக்கம் வர்லேன்னுமட்டும் நீங்க சொன்னீங்க..ஜிரா உண்மையை சொன்னார். யார்மனசுல யாரு?:) //

ஆகா நீங்களும் கெளம்பீட்டீங்களா ஷைலஜா. யார் மனசுல யாருன்னு கேக்கக் கூடாது. யார் மனசுல யாராருன்னு கேக்கனும். :-)

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2006/11/blog-post_116357814748526483.html

ஆரியக் கூத்துங்குறது இப்ப நீங்க செய்றதுதானா?

கேழ்வரக எங்கூருல கேப்பைம்போம். கரூரு பக்கத்துல கேவுரு கேவுரும்பாங்க. பெரிய ஊர்கள்ள ஸ்டைலா ராகீம்பாங்க.

கேழ்வரகு ஒடம்புக்கு ரொம்ப நல்லது. இப்பவும் கருநாடகாவுல ராகி மொத்தே திங்குறாங்களே. நாமதான் விட்டுட்டோம்.

எங்க தாத்தா பாட்டிகள் அப்பா அம்மா எல்லாம் கேழ்வரகு கம்பு சாப்பிட்டிருக்காங்க. அரிசிக்கு மாறுனது நீங்க சொல்ற 1960கள்ள தான்.

கேப்பைய ருசியாச் சாப்பிடனும்னா தோசை சுட்டுக்கலாம். உளுந்த மட்டும் தனியா ஊற வெச்சி அரச்சிக்கனும். அதுல கேப்பை மாவைக் கலந்து வெச்சிரனும். அடுத்த நாள் காலைல சூப்பரா அதுல கேப்பை தோசை சுடலாம்.

சின்னப்பிள்ளைங்களுக்கு எப்படிக் குடுக்கனும்னா...கேப்பைய ஊறவெச்சுக்கனும். அத ஒரல்ல போட்டு ஆட்டிப் பாலெடுக்கனும். அந்தக் கேப்பைப் பாலச் சட்டியில ஊத்தி இளஞ்சூட்டுல காச்சனும். அதுல பாலும் சேத்துக்கனும். நல்லா நீர்க்கஞ்சியா இருக்கும். அதுல ஜீனியோ வெல்லமோ போட்டுக் குடுத்தா நல்லது. ரொம்ப நல்லது.

எல்லாஞ் சரி...இந்த ஆரியப் பதிவுக்கு நானும் ஓமப்பொடியுந்தான் காரணம்னு சொல்லாம விட்டுட்டீங்களே.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/11/blog-post_15.html

தேவி எங்க? தேவியோட அம்மாவைக் கட்டிப் போட்டது யாரு? இந்த மாதிரி famous five பாத்திரங்களை வெச்சி முந்தி ரத்னபாலா, அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், பொம்மைல படிச்ச கதைகள் நல்லா நினைவுக்கு வருது. நல்லாயிருக்கு கதை. தொடரட்டும் இதமாக.

G.Ragavan said...

http://rozavasanth.blogspot.com/2006/11/blog-post_116315380916230076.html

ஜோ, பார்த்தீர்களா? அவசரப்படாதீர்கள் என்று சொன்னது எவ்வளவு சரியாகப் போயிற்று. அவசரப்பட்டு முடிவெடுப்பது இப்படித்தான் முடியும். நான் உத்தமன் என்று சொல்லிக் கொள்ள வரவில்லை. ஆனாலும் கொஞ்சம் பொறுமை நமக்கெல்லாம் அவசியமாகிறது. முழு விவரம் தெரியுமுன்னமே...நமக்கு அந்தக் குறிப்பிட்ட நபர் மேலுள்ள தனிப்பட்ட வெறுப்பு அவரைத் தாளிக்க வைக்கிறது.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/11/2_09.html

நண்பர்களே, முதலில் விவாதம் விளையாட்டாய்ச் செல்கிறது என்று நினைத்தே பிரகலாதனையும் அனுமனையும் பற்றிக் கிண்டல் தொனியில் (கிண்டலாக அல்ல) சொன்னேன். எல்லாரும் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் குமரனும் அப்படி எடுத்துக்கொள்ளவில்லை என்பதிலிருந்து தவறு என் மீதே என்று புரிகிறது. கருத்து வேறுபாடுகள் எத்தனை இருந்தாலும் நாகரீகமாகப் பேச வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் விளையாட்டுக்குக் கூட அப்படியில்லாமல் இருக்கக் கூடாது என்று இப்பொழுதுதான் புரிகிறது. அதுவும் கடவுள் நம்பிக்கை தொடர்பாக. யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்க.

சூரனைப் பற்றி வெட்டி கேட்ட கேள்விக்கு மட்டும் விடை சொல்லி நான் முடித்துக் கொள்கிறேன்.

வெட்டி, சூரன் நல்லவனே. இல்லையென்றால் வேண்டித் தவமிருந்த அவனுக்கு அத்தனை வரங்களும் வசதிகளும் ஈசன் வழங்கியிருப்பாரா? அவனிடம் இருந்த ஒரே குற்றம் நன்றி மறந்தது. தேவர்களைச் சிறையிட்டதைக் கூட தவறு என்று கந்தபுராணம் சொல்லவில்லை. ஏனென்றால் அது தேவர்களுக்கான தண்டனை என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் விடுவிக்கச் சொல்லிக் கட்டளை வந்த பின்னும் விடுவிக்காத ஆணவ மலந்தான் கெடுதி. அதையும் போக்குகிறார் முருகன். அதனால்தான் முருகனைக் கும்பிடுகிற அத்தனை பேரும் சூரனைச் சேவலும் மயிலுமாய் வணங்குகிறார்கள். மூவிரு முகங்கள் போற்றி என்று தொடங்குகின்ற கச்சியப்பரும் சேவலும் மயிலும் போற்றி என்றுதான் தொடர்கிறார்.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2006/11/blog-post_14.html

ஆயர் குல மணி விளக்கே
வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே
கானத்தில் உயிரனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா
தானே உலகாகித் தனக்குள்ளே தானடங்கி
மானக் குலமாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்று உன் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுவேன் நம்பிப் பரந்தாமா
உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!

இது கண்ணதாசன் வரிகள். நான் மனமொப்பிப் பாடுவது. இந்தப் பதிவைப் படித்ததும் நினைவிற்கு வந்தது இதுவே.

அது சரி. அங்கங்க எழுத்துப் பிழைகள் இருக்கு பாருங்க. சீறும் சிறப்பு. பல இடங்கள்ள ஒற்று விட்டுப் போயிருக்கிறது. புணர்ச்சி விதிகள் பின்பற்றப்படவில்லை. ஒரு எகா மட்டும் குடுக்கிறேன்.

தமிழ் சங்கம் - தமிழ்ச் சங்கம்
பழம் செய்தி - பழஞ் செய்தி

G.Ragavan said...

http://arutperungo.blogspot.com/2006/11/blog-post_116343218907006193.html

:-))))) நல்லாயிருக்குது கவிதைக் கதையும் அதிலுள்ள காதலும். ரசித்தேன்.

காப்பியும் டீயும் மறுத்துப் பாலைப் பருகுவதற்கு அருட்பெருங்கோவிற்கான காரணம் இதுதானா? ;-) அன்பால் முத்தம் தரப் பால் வேண்டும்தானே!

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2006/11/blog-post_15.html

பாவங்களில் பெரிய பாவம் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பது. ஏசுபிரானின் பொன்மொழி அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியதும் செயலில் காட்ட வேண்டியதும் ஆகும். குழந்தைகள் வருங்காலம். வருங்காலம் சிறப்பாக குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க வேண்டும். மிகவும் நல்ல பதிவு.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/11/2_09.html

ஞானவெட்டியான் ஐயா...விளையாட்டு வினையானது. இனிமேல் நா காக்கிறேன். சமயத்தில் இடித்துரைத்தமைக்கு நன்றி.

ரவி, குமரன், உங்கள் புரிதலுக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

ரவி....இருக்குறதெல்லாம் இருக்கட்டும். அடுத்த புதிரா புனிதமா எங்க?

G.Ragavan said...

http://pillaitamil.blogspot.com/2006/11/blog-post_116346647959164712.html

பிள்ளைத் தமிழ். சிற்றிலியக்கம் என்றாலும் குழந்தைகளுக்கானது என்பதாலேயே பேரிலக்கியம். ஆண்டவனையே குழந்தையாக்கித் தாயாய்ப் பாடி வளர்க்கும் பிள்ளைத் தமிழுக்கு இணை பிள்ளைத் தமிழே!

குமரகுருபரரைப் பற்றிச் சொல்ல வேண்டுமா! செந்திலாண்டவன் அருளால் பேசும் திறமை பெற்று பேச்சோடு மூச்சும் தமிழாய்த் தோன்றி கந்தர் கலிவெண்பா கொடுத்த ஞானக்குழந்தை அவர். "பூமேவு செங்கமலப் புத்தேளும்" என்று முருகன் காட்டிய பூவை வைத்தே பாவைத் துவக்கியவர். அவர் அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் வரக் காத்திருக்கிறேன்.

வண்டாற் குழற்கண்ணி
மலையத்துவசன் பெற்ற
மாமதுரை இளங்குயிலே வருகவே
தண்ணாறும் மரகதப் பூமேனியைத்
தென்றலில் தாலாட்டும் சீமாட்டி வருகவே
தடங்கண்கள் இமையாதே
தனையனைக் காத்தருள்
தவத்தின் தவப்பயனே வருகவே வருகவே!

இரண்டு நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருந்த அடியார் பகழிக் கூத்தர். அவரை வைத்துக் கதை சொல்ல உள்ளத்தில் அத்தனை கற்பனை. இங்கு வந்தால் அவரே. முருகன் எண்ணம் அதுதான் போலும். விரைவில் கதையில் கொண்டு வர முயல்கிறேன்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/11/blog-post_16.html

தொடரும்னு போட்டிருந்ததே. ஒரு பத்து இருவது பதிவு ஓடும்னா நெனச்சா...ரெண்டாவது பதிவுலயே நிறைவுப் பகுதீன்னு போடுறீங்களே! நியாயமா!

சீரகமிட்டாய் துப்பறிதல்னு கோகுலம் பூந்தளிர் மாதிரி இருந்தாலும் மொத அத்தியாயம் நல்லாயிருந்தது.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/plane-train.html

நல்ல வித்தியாசமா இருக்கு. ஒரு டிரெயினுக்குள்ளேயே நடக்குற கதை. மதராஸ் டூ பாண்டிச்சேரியும் இப்படிக் கதைதான். என்ன நம்ம சண்டைகளும் பாட்டும் வெச்சிருப்போம். அவங்க வெக்கலை. அவங்க ரசன அவ்வளவுதான். மன்னிச்சு விட்டுருங்க.

அந்த குண்டு பொம்பளை கிட்ட வேலை செய்ற பையன் தன்னோட காதலி தன்னையே தேடுறான்னு தெரிஞ்சதும் ஒரு கனவு டூயட்டு போட்டிருக்கலாம். டிரெயின்ல ஒரு திருடன் வர்ரதும். அந்த மொரட்டுப் பையன் சண்டை போடுறதும்னு ஒரு சண்டைக் காட்சி. வடிவேலுவை டிரெயினுக்குள்ள விசிடி விக்கிற ஆளா வெச்சிக் கொஞ்சம் காமெடி. ம்ம்ம்...கற்பனை பிச்சுக்கிட்டு போகுது. இந்த அளவுக்கு அவங்களுக்கு யோசனை போகலையே.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/blog-post_16.html

டீச்சர், டௌரி கல்யாணத்தைப் பத்தி நானும் ஸ்ரீராமன் ஸ்ரீதேவின்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். நீங்க கூட அதுல வந்து முழுசு முழுசா முந்திரிப்பருப்பு போட்ட ஜவ்வரிசிப் பாயசத்தை நினைவு படுத்துனீங்களே. :-)

அதென்ன அத்தன அடுக்கு. அத்தன வகை. ஆகாகா...பாக்கவே ஜொள்ளுன்னு இருக்கே.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2006/11/blog-post_16.html

யோவ் என்னய்யா சொல்றீரு...அப்ப இன்னைக்கு எனக்கு நீர் போட்ட ரெண்டு பின்னூட்டமும் ஹேக்கரோட பின்னூட்டமா? அப்புறம் இந்தப் பதிவு எப்படி வந்துச்சு? இல்ல...இதுவும் ஹேக்கரோட பதிவா! ஓமாயணா! ஓமாயணா!

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_116367302219403631.html

யெஸ்பா....வருத்தப்படாதீங்க. ஒங்களத் தள்ளி உக்காரச் சொல்ற அந்த ரேட்பாய் யாருன்னு சொல்லுங்க? பொரி வெச்சிருவோம். சீச்சீ பொறி வெச்சிருவோம். :-)))))

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2006/11/cm.html

CMஏ மலையாளத்தப் பாத்து காப்பி. ஸ்டாலினாவது கொஞ்சம் ஒரிஜினாலிட்டி. ஆனா ஸ்டாலின் நல்லாப் போகலைன்னு அந்தூர்க்காரங்க சொல்றாங்களேய்யா! எதிர்பார்த்த வெற்றி இல்லைன்னும் மார்ஜின் கொறைச்சல்னும் பேசிக்கிறாங்களே!

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/11/usha-style.html

ஐயோ.......இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம். என்னுடைய பெங்களூர் மாமா ஒரு கன்னடர். அவருடைய வீட்டில்தான் நான் முதலில் தங்கியிருந்தேன். அவரது உறவினர் ஒருவர் பெங்களூருக்கு வந்திருந்தார். அவர் அரசாங்கப் பணியாளி. எல்லாரும் வேலை நிறுத்தம் செய்திருந்தார்கள். அப்பொழுது எஸ்மா போட்டு அரசாங்கம் அனைவரையும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த அழைத்திருந்தது.

நான் உள்ளே ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு என்னுடைய மாமா பையனிடம் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் தமிழ், கன்னடம், இந்தி, இங்கிலீஷ் எல்லாம் பேசுறவன். "எஸ்மா போட்டாச்சுன்னு அவரு வந்திருக்காரு. இல்லைன்னா அரசாங்கம் கடுமையா நடவடிக்கை எடுக்கும்னு"

அது அவர் காதுல தெள்ளத் தெளிவா விழுந்துருச்சு. உள்ள வந்து கொஞ்ச நேரம் அவங்க பக்கத்து நியாயங்களை எனக்குப் பாடம் சொன்னாரு.

இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் நீங்க என்ன நினைச்சீங்களோ...அத அன்னைக்கு நான் நெனச்சேன்.

G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2006/11/blog-post_16.html

என்ன அக்குரமம் இது. பெயருலயே கைப்புள்ளன்னு இருக்குற உங்களை அங்கிள்னு சொன்ன அந்தச் சின்னப் பையனை மன்னிச்சு விட்டுறலாம். போனாப் போகுது சின்னப் பையந்தானே :-) ஒங்களுக்கெல்லாம் வயசே ஆகாதுய்யா. என்றுமே நீர் கைப்பிள்ளை.

எனக்கும் காதுல போன வெச்சிக்கிட்டே வண்டி ஓட்டுறது பிடிக்காது. அப்படி யாராவது செஞ்சா வேணுக்குன்னே அவங்க பக்கத்துல பைக்ல போயி ஹார்ன் பயங்கரமா அடிப்பேன். வண்டியோட்டும் போது மொபைல் பேசுறது தப்பு. தப்பு. தப்பு. வயசானாலும்..ஆகலைன்னாலும்...தப்பு தப்பு தப்பு.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/11/blog-post_16.html

ஆ நலுகுரு படம் குறித்து நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய தெலுகு நண்பர் மிகவும் ரசித்துச் சொன்ன படம் அது. என்னையும் அழைத்தார். நாந்தான் தமிழ்ப் படத்துக்கே யோசிச்சி யோசிச்சி போறவன். தெலுங்குப் படத்துக்குப் போயிருவேனா.

சரி. இன்னொரு விஷயம். இந்தப் படம் ஒரு தமிழ்ப் படத்தோட இன்ஸ்பிரேஷனாத்தான் இருக்கனும். அந்தப் படத்தோட பேர் முதல்தேதின்னு நினைக்கிறேன். நடிகர் திலகம் நடித்த படம். பிழியப் பிழிய அழ வைத்த படங்களில் அதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். சிவாஜியின் மகளை ஒருவன் பலாத்காரம் செய்ய வருவான். ஆனால் அவரோ ஆவி. ஒன்றும் செய்ய முடியாது. ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டே ஓடி வருவார். கையாகாதத்தனம் என்பது எவ்வளவு கொடுமை என்று அந்த ஒரு காட்சி பேசும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/11/blog-post_14.html

:-))))))))))))))))))))

வெட்டி, எனக்கு ஒரு நிமிசம் பேச்சே வரலை. நாம நாலஞ்சு பிளாகு வெச்சிருக்கோமே....அது மட்டுமில்லாம இன்னுஞ் சிலதுல பங்காளியா வேற இருக்கோமே.........அதுக்கெல்லாம் எவ்வளவு வருமோன்னு நெனைக்கும் போதே கிறுகிறுன்னுச்சு. படமெல்லாம் போட்டதுக்கு வேற காசு குடுக்கனுமோன்னு தெரியலையேன்னு நெனச்சேன். ஒன்னுமில்லாத விஷயத்த...அதான் ஊருக்குப் போறதையே மூனு பதிவாச் சொல்ற பதிவுக் கயமைத்தனத்துக்கு என்ன வெலையோன்னு நடுங்கினேன். நல்லவேளை...எல்லாம் கோழி செஞ்ச வேலை. பேசாமக் கோழிய பிரியாணி போட்டிர வேண்டியதுதான்னு நெனைக்கிறேன்.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2006/03/blog-post_27.html

மிகவும் அருமையான பாடல். இசைஞானிக்கும் மெல்லிசை மன்னருக்கும் உள்ள நட்பு எல்லாருக்கும் தெரிந்ததே. இந்தப் பாடலைக் கேட்டு விட்டு மெல்லிசை மன்னர் சொன்னாராம். "இந்தப் பாட்டுக்கு மெட்டுப் போட்டு பாட்டு எழுதுனாங்களா? இல்ல பாட்டெழுதி மெட்டுப் போட்டாங்களா" மிக அருமையான பாடல். எனக்கும் மிகவும் பிடிக்கும்.

G.Ragavan said...

http://thoughtsintamil.blogspot.com/2006/11/blog-post_14.html

மௌல்ஸ் நேரம் முடிவு செய்யவில்லை. நாளைக்குதான் முடிவு செய்ய வேண்டும். அனேகமாக மதிய உணவு பொழுதில் இருக்கும்.

G.Ragavan said...

http://soundparty.blogspot.com/2006/11/blog-post.html

// Udhayakumar said...
//"பல்லு இருக்குறவன் எப்பவும் பட்டாணி திங்கலாம்னு" நம்மளப் பத்தி இளவஞ்சியானந்தா சொல்லும் போது நீங்களுந்தான கூட இருந்தீங்க.//

ஆமாங்க, வாத்தி எப்போ ரிட்டர்ன்... மெயிலும் இல்ல ஒன்னும் இல்லை. என்ன ஆனாருன்னு கூட தெரியலை. // //

வாத்தி நல்லாயிருக்காரு. இன்னைக்கு ஆபீஸ் சாட்டுல பிடிச்சேன். ரொம்ப வேலையாம்.

என்ன..எப்ப வர்ராரா? என்னவோ அமெரிக்கா போனவங்கள்ளாம் வந்துட்ட மாதிரியும்....ஐரோப்பா போனவங்க மட்டும் சீக்கிரமே திரும்பீர்ர மாதிரியும்.....

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2006/11/kaatruveli-reader-views.html

பாபா, நல்லதொரு பதிவு. அமைதியான மதுமிதாவிற்குள் இவ்வளவு அதிர்வுகள் இருக்கின்றன என்று இப்பொழுதுதான்...ரொம்பவும் தாமதமாக...better late than never...புரிந்து கொண்டேன்.

மதுமிதா, இன்னும் நிறைய சாதித்துப் பேரும் புகழும் பெற எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2006/11/blog-post_16.html

எல்லாரும் சொல்லீட்டாங்க மதுமிதா. வழிமொழியிறதத் தவிர எனக்கு வேற வழியில்லை :-)

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/11/blog-post_16.html

"தேனொழுகு செந்தமிழ்க் கனியைப் பிழிந்து தெளிந்திட எடுத்த ரசமே" என்று சீர்காழியார் குரலில் டி.ஆர்.பாப்பா அவர்களின் இசையில் ஒரு பாடல் உண்டு. அதைத்தான் நினைவு கூற வைக்கிறது இந்தப் பாடல். கே.பி.எஸ் அம்மையின் அருங்குரலும் கே.வி.எம்மின் நல்லிசையும் கவியரசரின் தீந்தமிழும் கூடிப் பிறந்த ஒரு சிறந்த பாடல். முருகன் அடியவர் அனைவரும் உருகிக் கேட்கும் சிறந்த பாடல். நினைவில் கொடுத்தமைக்கு நன்றி குமரன்.

G.Ragavan said...

http://eelabarathi-1.blogspot.com/2006/11/blog-post_17.html

ஒரு அரசியல்வாதியாக எவ்வளவு சிறந்தவர் என்று வைகோவைப் பற்றி கருத்துச் சொல்வது இப்பொழுது மிகக் கடினம். ஆனாலும் அவர் முதலில் இருந்தே இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக இருக்கிறார். இந்த விஷயத்தில் வைகோவை நானும் நம்புகிறேன். அவரைக் கைது செய்திருப்பது தவறே.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2006/11/blog-post_116315717051680815.html

// இலவசக்கொத்தனார் said...
////ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ//
மயிலாரே நெறைய டே வந்து இருக்கு. ஒரு நாள்தானே அவருக்கு பொறந்தநாளு, எதுக்கு இத்தனை டே?//

இளா, அவரு ஒரு வார்த்தை எழுதினாலும் அதுல 1000 அர்த்தம் இருக்கும். இங்க பாருங்க, என் கண்ணுல பட்டது...

அதாவது Happy Birth'Day''டே' அப்படின்னு அனைவரும் வாழ்த்து சொல்லக்கூடிய 'Day' என்பதைத்தான் அவரு "ஹேப்பி பேர்த் டே டே டே டூ யூ" அப்படின்னு சொல்லி இருக்காரு. என்ன இருந்தாலும் எங்க ஊரு ஆள் இல்லையா, 'டே' போடாம பேச முடியாது பாருங்க.

(உஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடா. ஜிரா கிட்ட நல்ல பேர் எடுக்க எவ்வளவு சிரமப் பட வேண்டியிருக்கு பாருங்க.) //

கொத்ஸ்....தொண்டைய அடைக்குது. சந்தோசம். ரொம்ப சந்தோசம். என்னைய ரொம்பவே சரியாப் புரிஞ்சிக்கிட்டீங்களே...கொத்தனார் என்பது கொத்து அனார்னு இன்னைக்குத்தான எனக்குத் தெரிஞ்சது. அனார்னா இந்தியில மாதுளை. கொத்ஸ் இந்தப் பட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/11/blog-post.html

இம்சை அரசனை இம்சைப் படுத்திய அந்த 25ம் இம்சை அரசன் யாருய்யா? அவரக் கூட்டீட்டு வந்து முதல்ல வெந்நீலயும் தண்ணீலயும் மாறீ மாறீ முக்கி எடுங்க.

சப்டைட்டிலுக்குத் தமிழ்ல துணைவசனம்னு சொல்லலாம். இல்லைன்னா உதவி வரிகள்னு சொல்லலாம். விளக்கவரி இன்னும் பொருத்தமா இருக்கும்னு தோணுது.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/11/2.html

அப்படிப் போடுங்க வெட்டி. பதிலுக்குப் பதிலா. முக்தா சீனிவாசரு படத்துல இப்படித்தான் ஏட்டிக்குப் போட்டியா இருக்கும். அந்தப் பையலும் சரியாத்தான் சொல்லீருக்கான். இந்தப் பிள்ளையும் சரியாத்தான் சொல்லீருக்கு. என்னாகுமோ! என்னாகும்! காதல் வரும். வந்துதானே ஆகனும்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/11/152.html

தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழ வா என்றது
தேடினேன் வந்தது

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/11/015.html

பாபநாசம் சிவனின் பாடல்களை தி.ரா.சவிடம் கேட்டிருந்தேன். குமரனே தருகிறார். அதுவும் முருகனருளில். சுவைத்து ரசிக்கிறேன்.

// Johan-Paris said...
அன்புக் குமரன்!
மிக அருமையான பதிவு;அடிக்கடி இப்படிப் போடவும்.சுதாவின் இனிமையான குரல்;ஒர் முழுமையான குழு(இந்நாளின் அருகிக்கொண்டு போகும் விடயம்) வின் கச்சேரி கேட்பதே சுகம். ஒளிப்பதிவும் அருமை!!!
நன்றி ;நன்றி
யோகன் பாரிஸ் //

யோகன் ஐயா, அடுத்த பாடலுக்குக் கொஞ்சம் காத்திருங்கள். ஒரு சிறப்பு விருந்து காத்திருக்கிறது. :-)

G.Ragavan said...

http://verygoodmorning.blogspot.com/2006/11/blog-post_116361653246238992.html

பொதுவாகவே இந்திய ஆன்மீகத்தில் (இந்தியாவில் உருவான பல ஆன்மீகக் கருத்துகளில்) இறைவனை எங்கேயோ தேட வேண்டாம். ஏனென்றால் கடந்தும் உள்ளும் இருப்பதை உள்ளும் பார்க்கலாம் என்பதுதான் அடிப்படைக் கருத்து. அந்தக் கருத்தை ஒட்டி இறைவனை நம்மை நெருக்கியே நினைக்கும் வகையில்தான் சிலை வடிவ வழிபாடுகளும் (சிலை வழிபாடு அல்ல) பூஜை முறைகளும் உருவாயின. எப்படிப் பூஜை செய்வது என்பது வேறுபட்டாலும் பூஜை செய்வது என்பது ஒன்றாக இருந்திருக்கிறது. இருக்கிறது.

அப்படியொரு நெருக்கும் வழிபாட்டு முறைதான் திருப்பள்ளியெழுச்சி. ஏன் இது தேவை?

இறைச் சிந்தனை என்பது எந்த வேளையும் இருக்க வேண்டும் என்பது ஒரு கருத்து. அடிக்கடி நினைப்பது என்பது ஒரு கருத்து. ஆனால் விடியலில் நாம் துயில் எழுகையில் இறைவனை நினைக்க வேண்டும் என்ற நல்ல கருத்தின் அடிப்படையில் உருவான ஒரு முறைதான் திருப்பள்ளியெழுச்சி.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு சொல்கிறேன். கண்ணன் என் காதலன். காதலி. வேலைக்காரன். தந்தை. தாய். குழந்தை. என்றெல்லாம் சொல்லும் பொழுது இறைவனே நமது வாழ்வு. இறைவனே நமது செல்வம். இறைவனே நமது துயில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். துயில் என்று நினைக்கையில் எழுதலும் வேண்டும். அப்படித்தான் திருப்பள்ளியெழுச்சி பாடுவது நடக்கிறது. சுருங்கச் சொன்னால் இறைவனை எங்கோ தேடாமல் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தேடுவதில் இதுவும் ஒரு முறை.

பிரதிவாதி பயங்கரம் இன்னொருவருக்கும் அடைப்பெயர். P.B.Srinivas.

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/blog-post_18.html

ஹரிதாஸ்...மூனு தீபாவளிக்கு ஓடுன படமாமே.....நானும் படம் பார்த்திருக்கேன். காதல், காமம், கடவுள், நகைச்சுவை எல்லாம் கலந்த கதம்பம் இந்தப் படம்.

பண்டரிபாயை அப்படிப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

ஆனாலும் மன்மத லீலையை வென்றார் உண்டோ பாட்டு சூப்பர்தான். அதிலும் அந்த ரம்பா...ஸ்வாமி....டி.ஆர்.ராஜகுமாரி அன்றைய பலருடைய தூக்கத்தைக் கெடுத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

இவருடைய தம்பி டி.ஆர்.ராமண்ணா பின்னாளில் இயக்குனராகவும் புகழ் பெற்றவர். பிற்காலத்தில் கிட்டத்தட்ட துறவு நிலையில் இருந்த டி.ஆர்.ராஜகுமாரி நன்றாகவும் சமைப்பாராம். அவருடைய வெங்காய கத்தரிக்காய் குழம்புக்கு பல திரைப்புள்ளிகள் விரும்பிகளாய் இருந்தார்களாம்.

இந்தக் கதை ஏதோ வடக்கத்திய பக்திக் கதையாம். ஸ்ரீமகா பக்த விஜயம்னு நெனைக்கிறேன். அந்தப் புத்தகத்துல இருந்து எடுக்கப்பட்ட கதையென்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2006/11/blog-post.html

மாம்பழம்...ஆகா..நினைக்க நினைக்க இனிக்கும் முக்கனிகளில் முதற்கனி.

நீங்கள் சாப்பிடுவது போலச் சாப்பிடுவது எனக்கும் பிடிக்கும். நன்றாக உள்ளங்கையில் வைத்துக் கசக்கிக் கொண்டு ஒரு முனையில் கடித்துச் சுர்ரென்று உறிஞ்சி...பிறகு மாங்கொட்டையை வெளியே எடுத்து...அடடா! சுகமோ சுகம்.

நீங்கள் சொல்லும் கருத்தக் கொழும்பாம் இந்தியாவில் எப்படி அழைக்கப்படுகிறதென்று தெரியவில்லை. சப்பட்டைதான் நீங்கள் சொல்லும் வண்டு துழைக்கும் பழம். மல்கோவா என்ற பச்சைத்தொலிப் பழமும் சுவையானது. இனிப்புக் குறைவான கிளிமூக்கு. சின்னஞ்சிரிதான பச்சரிசி. இன்னும் கொஞ்சம் இருக்கின்றன. பெயர்கள் நினைவில்லை.

மாங்காய் என்றால் அதைக் கீறித் துண்டாக்கி உப்பும் மிளகாய்ப் பொடியும் கலந்து தொட்டுக்கொண்டு நரிச்நரிச்சென்று பல்கூசத் தின்பதும் சுகம்.

மாங்காய்த் துவையல், மாங்காய்க் குழம்பு, மாங்காய் ரசம், மாங்காய்ச் சோறு, மாங்காய்ப் பச்சடி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நீங்கள் சொன்ன பிறகு மாம்பழப் பிட்டும் உண்ண ஆசை பெருகுகிறது.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2006/11/blog-post_116315717051680815.html

// இலவசக்கொத்தனார் said...
அண்ணா ஜிரா,

நான் தப்பா ஒண்ணும் சொல்லலையே. உங்க பதிலையும் பட்டத்தையும் பாத்தா பயமா இருக்கே.
//கொத்ஸ் இந்தப் பட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.//
அதிலும் பின்நவீனத்துவ பிதாமகர் நீங்க இப்படி எல்லாம் ஸ்டேட்மெண்ட் விட்டா என்ன செய்யறது. இதுல எவ்வளவு உகு இருக்கோ தெரியலையே. சொக்கா.....

ஒண்ணுமே புரியலையே, பயமா இருக்கே...... //

ஆகா கொத்தனாரே! ஜிரா கொடுப்பது பட்டமாகும். ஆனால் மட்டமாகுமா? அனார் என்றால் என்ன? மாதுளம். கொத்து அனார் என்றால் கொத்துக்கொத்தாக மாதுளங்கள் நினைத்து நினைத்து மகிழும் நபர் என்று பொருள். இப்படிப் பெருமைக்குரிய பட்டத்தைச் சூட்டிக்கொள்ளும் சிறப்புத் தகுதியும் திறமையும் உம்மையன்றி வெறொருவர் கொள்ளலாகும் என்று நான் நினைத்திருந்தால் அந்தப் பட்டத்தை உங்களுக்குக் கொடுத்திருப்பேனா என்று நீங்களே சற்று சிந்தித்துப் பார்த்தால் பட்டத்தை உளமுவந்து ஏற்றுக் கொள்வீர்கள்.

G.Ragavan said...

http://idlyvadai.blogspot.com/2006/11/blog-post_19.html

விக்கியின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். இது உண்மையிலேயே வியப்பளிக்கக் கூடிய விரைவுச் செயல் என்றாலும் மற்றவர்களைப் போல வியக்கவும் பாராட்டவும் முடியவில்லை. தன்னுடைய அடையாளம் வெளியே தெரியக் கூடாது. ஆனால் அடுத்தவர் அடையாளங்களோடு விளையாடுவேன் என்பது நல்ல கருத்தாகத் தெரியவில்லை. இட்லி வடை, இந்தக் கருத்தோடு உங்களுக்கு ஏற்புண்டோ இல்லையோ...சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். யெஸ்பா கேட்டுக் கொண்டதற்கிணங்க புகைப்படங்களை எடுத்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/11/blog-post_20.html

ம்ம்ம்..மற்ற வலைப்பூக்களில் விடுபட்ட பல தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள். :-)

// இதுவரை வலைப்பதிவாளர் சந்திப்புகளில் வருகைப்பதிவேடு இருந்ததில்லை. முதன்முறையாக இந்த சந்திப்பில் வருகை பதிவேடு வைக்கப்பட்டிருந்தது. சந்திப்புகள் முறையாக நடக்கத் தொடங்குகிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.* //

ஒரு சிறிய திருத்தம். முறையாக நடக்கத் தொடங்குகிறது என்று இல்லை. மாறாக முறைப்படுத்தப் படுகிறது என்று சொல்லலாம்.

// சீரியஸான சந்திப்புக்கு நடுவே ஜோக்கர் மாதிரி இட்லிவடையின் பிரதிநிதி ஒருவர் உள்ளே புகுந்து புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினார். தன்னை வாசகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் உடனடியாக எஸ்கேப் ஆகி இட்லிவடைக்கு படங்களை மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இட்லிவடை இந்த முறைகேடான பேப்பரஸி வேலைக்காக மன்னிப்போ அல்லது தகுந்த விளக்கமோ தரும் வரை இட்லிவடை பதிவுகளில் பின்னூட்டம் இடாமல் புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்திருக்கிறேன்.* //

இதற்கு எனது கண்டனங்களை இட்லி வடையின் பதிவில் தெரிவித்திருக்கிறேன்.

கதை தொடர்பான பலருடைய விளக்கங்கள் உண்மையில் சுவையாக இல்லை.

அடுத்த சந்திப்பில் நானும் கலந்து கொள்ள முயல்கிறேன்.

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post.html

அடடே! நம்ம அருள்தானா இந்த வார நட்சத்திரம். ஆவல் கூடுதப்போய். நல்லா கலக்கோ கலக்குன்னு கலக்கனும். தொறந்திருக்குற கதவு வழியா லேசா மழைச்சாரல் அடிக்கனும். சரியா?

படமெல்லாம் கேக்குறாரு ஓமப்பொடி...கொஞ்சம் கண்ணுல காட்டுறது.

இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://varappu.blogspot.com/2006/11/1.html

காதல் கவிதைகளா எழுதித் தள்றீரு..ம்ம்....ஜூனியர் வெவசாயி வந்தப்புறமும் காதல் கவிதை எழுதுறது வீட்டுல தெரியுமா? ;-)

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/11/blog-post_116399371786151515.html

ஆகா...குமரன்...வாயைக் கிண்டுறீங்களே...ஆனாலும் வாயை மூடிக்கிறேன். :-)

பராவணம், தராவணம் ஆகியவற்றிற்கு விளக்கம் சரிதானா குமரன்? ஏதோ குறைவது போலத் தெரிகிறது.

G.Ragavan said...

http://thiruneeru.blogspot.com/2006/11/blog-post_19.html

குமரன், உங்கள் விளக்கத்தைப் படித்ததும் மனதில் தோன்றியதெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு பின்னூட்டமிட வந்தால் நான் நினைத்ததை ஞானவெட்டியான் ஐயா மிகவும் சிறப்பாகவே சொல்லி விட்டார்.

மூன்று என்பது கோட்டைகள் என்றும் கொள்ளலாம் என்றாலும் சைவத்தில் அழிய வேண்டிய மூன்று என்பது மும்மலங்களையே குறிக்கும்.

பாக்கியம் என்பது பேறு. அத்தோடு வீட்டைச் சேருங்கள்.

துயிலைத் தடுப்பது நீறு. இதற்கு யோகன் ஐயா மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார். நான் இன்னமும் விளக்கமாகச் சொல்கிறேன். கெடுநீரார் காமக்கலன்கள் எவை? நெடுநீர் மறவி மடிதுயில் இவை நான்கும் கெடுநீரார் காமக்கலம். இங்கே துயில் என்பது இறப்பையும் குறிப்பதில்லை. வழக்கமான தூக்கத்தையும் குறிப்பதில்லை. புரிந்ததுதானே?

சுத்தத்திற்கு உங்கள் விளக்கம் சரியே. ஆனால் உளத்தூய்மை என்று வெளிப்படையாகக் குறியாது விட்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2006/11/blog-post_18.html

நல்ல தகவல்தான் கொத்ஸ். மைக்ரோவேவில் வெறுந்தண்ணி வெக்கக்கூடாது மட்டுமில்லை...முட்டையையும் அப்படியே வெக்கக் கூடாது. வெச்சா...படார்தான். அப்புறம் மைக்ரோவேவைத் கழுவ வேண்டியதுதான்.

அதே போல உருளைக் கெழங்கையும் அப்படியே வைக்கக் கூடாது. வெச்சா? அத வெச்சு அடுத்தவங்க மண்டைய ஒடைக்கலாம்.

G.Ragavan said...

http://suttapons.blogspot.com/2006/11/blog-post_19.html

சென்னை கூட்டம் சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. நல்ல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.

ஜோசப் சார் குறிப்பிட்ட கருத்து..அதாவது மும்பையைப் போல் நாமும் தமிழ் வலைப்பதிவுகளைப் பதிந்து கொள்வது. இது நிச்சயம் செயல்படுத்த வேண்டும். இதை யெஸ்பா முன்னெடுத்துச் செய்ய வேண்டும். கண்டிப்பாக நாங்கள் தோள் கொடுத்து உடன் வருவோம். இப்படிப் பதிந்து கொள்வது நிச்சயமாக பலவிதங்களில் உதவியாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்.

அதே போல ஒரு வலைப்பூவில் என்ன எழுதலாம் என்பதை எழுதுகிறவர்தான் முடிவு செய்ய வேண்டும். பின்னூட்டத்திற்காகவோ பகிர்தலுக்காகவோ..அல்லது வேறெதெர்காகவோ...அவரவர் எழுத்துக்கு அவரவரே பொறுப்பு.

அடுத்த சந்திப்பிற்கு நிச்சயமாக வரவேண்டும் என்ற ஆவலை இந்தச் சந்திப்பு உருவாக்கி விட்டது என்பது உண்மைதான்.

சாதீயம் என்று வந்தாலே...சண்டையும் சச்சரவும் வரத்தான் செய்யும். அடுத்த முறை மதயீயத்தையும் காய்ச்சி ஊற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

G.Ragavan said...

http://dharumi.blogspot.com/2006/11/187-catch-22.html

// ஆயினும் எனக்கு ஒரு பயம். ஆபிரஹாமிய மதத்தினரின் higher decibels இப்போதைக்கு என்னைப் பொருத்தவரை 'இந்துக்களாக இல்லாத இந்துக்களையும்' (!?) உள்ளே இழுத்துவிடுமோ என்ற பயத்தைச் சொல்லவே இந்தப் பதிவே எழுதினேன். //

தருமி என்னுடைய அச்சமும் அதுதான். :-( ஆனால் அது தவிர்க்கப்பட முடியாதது போலத் தோன்றுகிறது.

G.Ragavan said...

http://espradeep.blogspot.com/2006/11/blog-post.html

மிகவும் நல்ல முயற்சி செய்திருக்கிறீர்கள் பிரதீப். இன்னும் சிறப்பாக முயன்றால் இன்னமும் சிறப்பாக உங்களுக்கு வரும். எனது வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://arvindneela.blogspot.com/2006/11/blog-post_116394924661930759.html

மிகவும் அருமையானதொரு பதிவு. ஆழ்ந்த அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட முத்து.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_21.html

முகமறைப்பு என்பதை நேரடி மொழி பெயர்க்காமல் அதன் உண்மையான பொருளை எடுத்துக் கொண்டு என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்.

இந்த பெயர் போடாமல் எழுதுவது என்பது தன்னுடைய அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத சூழலில் இருப்பவர்களுக்கானது. ஆனால் லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற தோழிகளும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் சிறப்பையும் பார்க்கிறோம்.

பெயரைப் போடாமல் எழுதுவது தவறு என்பதில்லை. ஆனால் பெயரைப் போட்டுக் கொண்டோ.. போடாமலோ... தவறாக எழுதுவது கண்டிப்பாகத் தவறு. கருத்து வேறுபாட்டு விவாதம் என்பதைத் தாண்டித் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதும் நிறைய காண்கிறோம். பெயரைப் போட்டுக் கொண்டும் செய்கிறார்கள். போடாமலும் செய்கிறார்கள். இது கண்டிப்பாக மாற வேண்டும்.

யார் சொல்கிறார்கள் என்று பாராமல் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்பது நல்ல கருத்தே. அதே நேரத்தில் பெயரைப் போட்டுக் கொள்ளாமல் எழுதுகிற எல்லாரும் நல்லதைச் சொல்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது.

அதே நேரத்தில் விவாதத் தளத்தை நாகரீகமாகக் கொண்டு செல்லும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_21.html

அடடே! அவ்வளவு எழுதீட்டு தீர்ப்பே சொல்லலையே.

முகம் காட்டாமல் எழுதுவது குற்றம் ஆகாது. ஆனால் அந்த வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்துவது குற்றமே ஆகும்.

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_21.html

உங்கள் தோழியும் தோழனும் மட்டுமல்ல..அவரது தாயும் சிறந்த முறையில் வாழ்க்கையைப் புரிந்து கொண்டிருக்கிறார். அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நம்பிக்கைகளையெல்லாம் தாண்டியும் ஒரு இல்லறம் நல்லறமாக நடக்க முடியும் என்ற இந்த எடுத்துக்காட்டு பல்கிப் பெருகிட எனது விருப்பங்கள். வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://enkathaiulagam.blogspot.com/2006/11/144.html

ஜோசப் சார்...நடுவுல கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேல இந்தக் கதைய விட்டுட்டேன். இனிமே தொடர்ந்து படிக்கிறேன். :-)

G.Ragavan said...

http://kalaaythal.blogspot.com/2006/11/019.html

ஐயோ..ஐயோ...ஐயகோ! இப்படி ஒரு விளக்கம் இதுவரைக்கும் நான் கேட்டதில்லை. ஆனாலும் நல்லாயிருக்குதுங்க. அந்தக் காலத்துல ஆமையப் புழுக்கி உண்ட வழக்கமும் இருந்திருக்காம். அதுக்குக் கூட வீட்டுக்குள்ள நொழஞ்ச ஆமையப் பிடிக்காம இருந்திருக்காங்கன்னா...என்ன சோம்பேறியா இருந்திருப்பாங்க.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/11/blog-post_21.html

வெட்டி, இது உண்மையிலேயே சீரிய பதிவா..இல்லை ஏதேனும் கிண்டல் பதிவா?

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/blog-post_20.html

டீச்சர், உங்களோட ரெண்டாவது நட்சத்திர வாரமும் நல்லபடியாவே போச்சு. மகசூல் பிரமாதமா இருந்தத நீங்களே சொல்லீட்டீங்க. அப்புறமென்ன...வெளுத்துக் கட்டுங்க....

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_22.html

அருள்...நீங்கள் என்ன குறிப்பிட்டிருக்கின்றீர்களோ...அதுதான் சாதி ஒழிப்பு. சாதி, இனம், மொழி, மதம், நாடு, நிறம், பாலியல் விருப்பம்...இன்னும் பல காரணங்களினால் மனிதன் வேறுபட்டு குழுவாவது தவிர்க்க முடியாயது. ஆனால் அந்தத் தவிர்க்க முடியாத சூழலில் வேறுபாடு பாராமை மிகத் தேவை. தன்னை விட ஒருவன் வேறுபட்டிருப்பதாலேயே அவன் தாழ்ந்தவனாகி விட முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதுதான் உண்மையான சாதி ஒழிப்பு.

சாதி மட்டுமே வேறுபாடுகளைக் கொண்டு வருவதில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் இந்தியாவில் சாதி மிகப் பெரிய வேறுபாட்டிற்குக் காரணமாக இருந்திருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத கருத்து.

கண்டு முட்டு மற்றும் கேட்டு முட்டு என்ற பதங்கள் பழந்தமிழில் உண்டு. அதாவது சைவரைக் கண்டால் தீட்டு. சைவச் சொற்களைக் கேட்டால் தீட்டு என்று ஒரு வழக்கம் இருந்தது. சைவத்தை எடுத்து விடுவோம். பொதுவில் எதையும் கண்டாலும் கேட்டாலும் தீட்டு வரக்கூடாது. ஒரு இஸ்லாமியனோ கிருத்துவனோ கண் முன்னே போனாலோ..அந்தக் கருத்தைக் கேட்க நேர்ந்தாலோ முட்டு வரக்கூடாது. அதே போல ஒரு இஸ்லாமியருக்கோ கிருத்தவருக்கோ திருநீறும் பொட்டும் வைத்துக் கொண்டு செல்கின்றவரைக் கண்டாலோ கேட்டாலோ முட்டு வரக்கூடாது. இன்னும் பல தளங்களில் இந்த முட்டுகளைச் சொல்லலாம்.

இந்த வேறுபாடுகளைக் களைய ஒரு வழிதான் இருக்கிறது. நாம் நாமாக வாழ்ந்து அடுத்தவரை அவர் விருப்பப்படியே வாழ விடுவது. அதே சமயத்தில் வேறுபாடு பார்க்கப் பட்டால்...அது யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது. அதற்கு எத்தனை பேர் ஆயத்தம் என்பதுதான் விடையில்லாத மிகப் பெரிய கேள்வி இப்பொழுது!

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_22.html

மற்றொரு தகவல். பிறப்பினால் சொல்லப்படும் இந்தச் சாதீய வேறுபாடுகள் ஒழிய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் இந்த ஒரு வேறுபாடு மட்டும் ஒழிய வேண்டும் என்று நினைப்பதும் நேர்மையின்மையே.

G.Ragavan said...

http://podhuppaattu.blogspot.com/2006/11/13.html

நல்லதொரு விளக்கம் இராமநாதன். குருவைக் கொண்டு இறைவனை அறிவதால் குருவே இறைவன் அல்ல. ஆனால் இறைவன் குருவின் வழியாக அருள்வதும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னது போல...2X2=4 என்பது போல இறைவனை அடைய வாய்ப்பாடு இல்லை. எண்களைச் சொல்லித் தருவார் ஆசான். அதற்கு மேல் ஆண்டவனே சொல்லித் தரவேண்டும். தருவான்.

அநுபூதிச் செய்யுட்களைப் படிப்பதும் அதன் பொருளைப் பிறர் சொல்லக் கேட்பதும் எத்தனையின்பம். ஆகா!

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_22.html

யெஸ்பா...காய்க்கின்ற மரத்தில்தானே கல்லடி விழுகிறது. நீங்கள் முன்னின்று நடத்துவதால் என்னைப் போன்றவர்களுக்கு எழுந்த நல்ல நம்பிக்கை. அது கானல் நீராகப் போய் விட விடாதீர்கள் யெஸ்பா. யார் இழுக்கிறார்கள் என்று தேர் பார்ப்பதில்லைதான். தேரில் பூவைப் போட்டாலும் புல்லைப் போட்டாலும் கல்லைப் போட்டாலும் வாங்கிக் கொள்கிறது. ஆனால் நிற்பதில்லை. நீரும் நிற்பதற்கில்லை. இது தொடர வேண்டும். தொடரத்தான் வேண்டும் என்று உரிமையோடு உங்களைக் கண்டித்துக் கேட்டுக் கொள்கிறேன். :-) (ஒழுங்கா சொன்ன பேச்சு கேளுங்க யெஸ்பா...இல்லைன்னா...அடுத்து நான் சென்னைக்கு வரைல வூடு கட்ட வேண்டியிருக்கும்)

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_22.html

// அருள் குமார் said...
//தன்னை விட ஒருவன் வேறுபட்டிருப்பதாலேயே அவன் தாழ்ந்தவனாகி விட முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். //
இதை அனைவரும் உணரும்பட்சத்தில் சாதி தேவையே இல்லை ராகவன். ஆனால் இன்றைய நிலை அப்படியா இருக்கிறது.//

அப்படியில்லை என்பதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன் அருள். அனைவரும் உணர வேண்டும் என்பது எனது விருப்பம். அதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

// பாதிக்கப்படுபவர்கள் நான் குறிப்பிட்டுள்ளபடி ஒன்றினைவதில் தவறேதும் இருக்கிறதா என்ன? //

அதிலும் தவறில்லை. நான் சாதி வேறுபாடுகள் பார்ப்பது கண்டிப்பாக ஒழிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். இந்த வேறுபாடு பார்ப்பது சாதியையும் தாண்டிச் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஆனால் சாதி வேறுபாடுகளோடே நாம் இன்னும் சண்டை போட வேண்டியிருக்கிறது என்பதும் உண்மையின் ஒரு பகுதியே.

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2006/11/blog-post_22.html

மிகவும் அருமையான பாடல் ரவீ. மெல்லிசை மன்னர் இசைதானே? இந்தப் படத்தில் சிரஞ்சீவி வில்லன். இந்தக் கதையை நான் நாவலாகப் படித்திருக்கிறேன். புத்தகத்தில் கதை அமெரிக்காவில் நடக்கும். படத்தில் பிரான்சு.

இதே படத்தில் எஸ்.பி.பியின் தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை தோளில் சாய்ந்தது பெண்பிள்ளை என்ற பாடலும் நன்றாக இருக்கும்.

«Oldest ‹Older   1 – 200 of 259   Newer› Newest»