Thursday, November 30, 2006

என்னுடைய பின்னூட்டங்கள் - டிசம்பர் 2006

டிசம்பர் 2006ல் மற்ற வலைப்பூக்களில் நானிட்ட பின்னூட்டங்கள் இங்கு திரட்டப்படும்.

213 comments:

«Oldest   ‹Older   201 – 213 of 213
G.Ragavan said...

http://kaipullai.blogspot.com/2006/12/blog-post_28.html

இப்படிப் படங்காட்டிக் காட்டி...ராசஸ்தானுக்கும் டூர் போடச் சொல்லித் தூண்டுறீகளேய்யா!

அந்த சோடியானைச் சவாரி படத்தைப் பொன்சுக்கு அனுப்பீட்டீங்களா? ஆனைகள் நலச்சங்கத்தை இப்ப அவங்கதான் நடத்துறாங்களாம்.

வடக்கத்திக்காரங்களுக்குச் சிலேபின்னா உயிரு. மொச்சு மொச்சுன்னு அதப் பிச்சுப் பிச்சு தின்னே பசியத் தீத்துக்குருவாங்களோன்னு நெனைக்க வைக்கிற அளவுக்குத் திம்பாங்க. இதே மாதிரி நம்ம தமிழர்களைப் பற்றி ஒரு பெங்காலி கமெண்ட்டு...கூப் பாத் காபி. ரொம்ப அரிசிச் சோறு சாப்பிடுவாங்களாம். :-)

அந்தக் குதிரை செஞ்சிருக்குற வேலையப் பாத்தீங்களா! அடடா! என்னடா தும்பிக்கை மாதிரி இருக்கேன்னு பாத்தேன். இப்பத்தான் வெவரம் புரியுது. குதிரையானை படத்தையும் பொன்சுக்கு அனுப்பீருங்க.

ராசஸ்தான்ல என்ன பிரச்சனைன்னா..அவங்க சாப்பாடு...நெய் ரொம்ப இருக்கும். அதே போல சைவச் சாப்பாடுதான் கெடைக்கும். எப்படி கைப்புள்ள சமாளிச்சீங்க?

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/17.html

பஞ்சவர்ணக்கிளி படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் கவியரசரின் பாடலை இசையரசி பாடியது. மிகவும் அருமையான பாடல்.

அதுல பாருங்க..கண்ணன் மட்டும் கண்ணத்திலே முத்தம் கொடுக்கன்னு சொல்லீட்டு...மெல்லிய குரல்ல முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்கன்னு வரும். அடடா!

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/12/blog-post_26.html

துரைப்பாண்டி எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். மனதைக் கனக்க வைக்கும் மோசமான(!) கதை. :-)

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/12/blog-post_27.html

:-))))))))))))))))))))))))

உண்மைதான் சிறில்..எத்தனையெத்தனை மெயில்கள். அவைகளை உண்மை என்று நினைத்துக் கொண்டு..அடடா!

பெங்களூரில் ஒரு கொடுமை நடந்தது. அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர். சீமென்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணின் கணவருக்கு ரத்தத்தில் ஏதோ கோளாறு என்று....அது தொடர்பான தகவல்களையும் மருத்துவ முறைகளையும் கேட்டு. அதற்கு ஒரு எண் கொடுக்கப்பட்டிருந்தது. மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. பிரச்சனையென்னவென்றால் உண்மையிலே அந்த எண்ணும் மின்னஞ்சலும் ஒரு பெண்ணும் அந்தக் கம்பெனியில் உண்டு. ஆனால் அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. அந்தப் பெண்ணுக்குத் தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் நிறைய வந்து...அந்தப் பெண் மிகவும் பாதிக்கப்பட்டார். கடைசியில் கம்பெனியில் வேறொரு தொலைபேசி எண்ணும் மின்னஞ்சலும் கொடுத்தார்கள்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/12/1.html

இந்தக் கதையை நான் கேள்விப்பட்டதில்லையே. தொடரட்டும். சுவாரசியமாக இருக்கிறது.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/12/blog-post_28.html

கொடூரம். மிகக் கொடூரம். ஒரு சிறுவனைக் கொலை செய்ய எப்படி மனம் வந்ததோ..பாவிகள். தசரதன் பெற்ற சாபத்தை உமக்கும் கொடுக்கலாம்...நீ செய்த தவறுக்கு உன் பிள்ளையை ஏன்? கொலைபாதகர்களே உங்களுக்குப் பிள்ளையே பிறக்காமல் போகட்டும்.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/12/blog-post_28.html

புத்தகங்களைப் பரிசளிப்பது நல்ல பழக்கம். உண்மையிலேயே நல்ல புத்தகங்களாகப் பரிசளிப்பார்களானால் கண்டிப்பாக வரவேற்கத்தக்கது.

G.Ragavan said...

http://valai.blogspirit.com/archive/2006/12/28/guinness.html

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

பழுத்த பழம் என்பார் வாரியார். அதாவது வயது முதிர முதிர உண்மையிலேயே பழுத்த பழமாக இருப்பவர் அழகு. அதனால்தான் சில வயதானவர்கள் மிக அழகாக இருக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் அவர் வெம்பல் எனலாமாம். அப்படியில்லாமல் ஒரு பழுத்த பழத்தின் அழகைக் கொண்டு வந்திருக்கிறார் உங்கள் சகோதரர். மிகச் சிறப்பு.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2006/12/blog-post_26.html

கொஞ்ச நாளாவே தமிழ்ப் படங்களப் பாக்குற புண்ணான வாய்ப்புகள் நம்மளத் தேடித் தேடித் தொறத்துது. ஒங்களுக்குத் திருவிளையாடல் ஆரம்பம்னா எனக்குப் பொய்யும் சிவப்பதிகாரமும். :-(((((

G.Ragavan said...

http://arutperungo.blogspot.com/2006/12/blog-post_22.html

ஏனிந்தச் சோகம்?
முட்டிடலாமோ
வேதனையின் வேகம்?
அணைத்த பின்னும்
தொடர்வதுதானே
காதலின் யாகம்! ;-)

உயிருக்கு உருவமிருந்தால் காதலியைப் போல இருக்கும்னு சொல்ற கற்பனை மிக அழகு. ரசித்தேன்.

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2006/12/blog-post_25.html

// குமரன் (Kumaran) said...
அடுத்த முறை சன் டிவியில் திருமால் பெருமை போடும் போது இந்தப் பாடலைக் கவனித்துக் கேட்கவேண்டும். இசையரசி என்று நீங்கள் சொன்னது பி.சுசீலாவையா எம்.எஸ்.எஸ் ஆ? //

என்னைப் பொருத்த வரையில் இசையரசி என்றால் அது பி.சுசீலாதான். அவருக்குத்தான் அந்த இடம். எத்தனையெத்தனை பாடல்களை உணர்ச்சி ததும்பப் பாடிய இசைத்தேவி அவர். தமிழுக்கும் அமுதென்று பேர் என்று அவர் பாடுகையிலேயே அதற்குப் பொருள் தெரிந்து விடுகிறதே. வைகறைப் பொழுதில் விழித்தேன் அந்த வடிவேல் முருகனை நினைத்தேன் என்று பாடும் பொழுது ஓம் சரவணபவாய நம ஓம் என்ற மந்திரம் நெஞ்சில் எழுகிறதே. இதோ இங்கே குறிப்பிட்டுள்ள கண்ணன் பாட்டும்...அடடா! இசையரசி எந்நாளும் நீயே உனக்கொரு இணையாரம்மா? எல்லோரும் இசைப்பது இசையாகுமா!

// யாருக்குத் தெரியும்? மயிலாரும் முருகதாசரும் ஒரே ஆளாகக் கூட இருக்க வாய்ப்புண்டு. இந்த இணைய உலகில் எது வேண்டுமானாலும் நடக்கும். :-) //

நடக்கும் நடக்கும். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..யார் அறிவார்?

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-12.html

சார்...தெலுங்குப் படத்துல எல்லாம்...ஆய் ஊய்னு கத்திக்கிட்டு கத்தி கபடா எல்லாம் வெச்சுக்கிட்டு "சம்ப்பேஸ்தான்ரா"ன்னு கத்துறாங்க. கத்தியால குத்துறாங்க. நீங்க போனப்போ அப்படி ஒன்னும் நடக்கலைன்னு நீங்க இப்ப பதிவு போடுறதுல இருந்து தெரியுது. ஆனா...என்ன நடந்துச்சு? அதச் சொல்லுங்க.

G.Ragavan said...

http://oagaisblog.blogspot.com/2006/12/blog-post_19.html

ஓகை, சரித்திரக் கதை படித்து எத்தனை நாட்களாயிற்று. மிகவும் ரசித்தேன். அதிலும் அந்தத் தலைப்பு. மிகக் குறும்பு.

வசனங்களும் குறுகுறுப்புத்தான். தச்சராஜன் மகன் தச்சேந்திரன் என்று இராராஜனிடம் சொல்லும் துணிவு. :-)
முருகன் அருளால் எல்லாம் நல்லபடி முடிந்த இனிமை. ஆகா.

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

«Oldest ‹Older   201 – 213 of 213   Newer› Newest»