Thursday, April 03, 2008

என்னுடைய பின்னூட்டங்கள் - ஏப்ரல் 2008

ஏப்ரல் 2008ல் மற்ற வலைப்பூக்களில் நானிடும் பின்னூட்டங்கள் இங்கு சேமிக்கப்படும்.

அன்புடன்,
கோ.இராகவன்

45 comments:

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/04/blog-post_03.html

பதிவுல நெறைய சொல்லீருக்காரு ரவி. ஆனா அதுல பலது நடந்த நினைவே இல்லை. அவரு அறிவுசால் பெருந்தகை. ஆற்றல் மிகு இருகை. ஆகையால அவருக்குத் தெரிஞ்சிருக்கலாம். கோயிலுக்குப் போனோம். சாமி கும்பிட்டோம். பிரசாதம் வாங்கித் தின்னோம். சரவணபவன் போனோம். இதான் நடந்தது.

ஆனா என்ன... அங்கயும் வந்து பெருமாளுக்குப் பண்ற மாதிரி பண்றாங்க.... எங்கம்மா லட்சுமிதா மேல உக்காந்துக்கிட்டு முருகனைப் பாத்துக்கிறா.... ஆஞ்சநேயரு இங்கயும் இருக்காரு... தமிழ் இங்க ஓரத்துல ஒலிக்குது.. முடுக்குல ஒலிக்குது.. அங்க வந்திருந்தா தமிழ் உள்ளயே ஒலிச்சிருக்கும்னு வைணவப் புகழ் பாடிக்கிட்டிருந்தாரு. ஒன்னு புரிஞ்சது.... அடுத்த வாட்டி நாங்க ரெண்டு பேரும் ஏதாச்சும் ஒரு கோயிலுக்குப் போனா... ரெண்டு பேர்ல ஒருத்தர் கொலைகாரர் ஆகுறதுக்கான வாய்ப்பு எச்சகச்சமா இருக்கு.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2008/04/blog-post.html

சங்கச் சிங்கம் தேவைச் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி என்பதை பேராவலோடும் பேரின்பத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன். கரைபுரண்டு ஓடும் அவரது கற்பனை வெள்ளத்திற்கு கரைகட்டிச் சரியான வழியில் திருப்பி விட்டதன் பலனாக என்னுடைய கண்களில் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய பொழுது என்னுடைய டிஷ்யூ பேப்பரையே எனக்கே எடுத்துத் தந்த வள்ளல் மகாபிரபு ஆன்மீகச் சூறாவளி சண்மதச் செல்வராகிய கே.ஆர்.எஸ் அவர்களையும் சந்தித்தேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/04/blog-post_03.html


// "வடபழனி சென்றேன்! ஜிராவை வென்றேன்!" //

ரவி கிட்ட பேசுனதுல மெயில் அனுப்புனதுல சாட்டுனதுல ஒன்னு புரிஞ்சது. நான் தோத்து அவரு வெல்றதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்காரு. என் கூட போட்டி போடுறதா நெனச்சிக்கிட்டு வெற்றிக் கனியைப் பறிக்கப் படாத பாடு படுறாரு. நாந்தான் ஒதுங்கிட்டேன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாரு. :D

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2008/04/blog-post.html

// இலவசக்கொத்தனார் said...

நல்லா மொக்கை போடறீங்கப்பா!!

4:33 PM, April 03, 2008
Blogger தேவ் | Dev said...

சரித்திரம் படைக்கும் இந்த சந்திப்பை மொக்கை என்று வர்ணிப்பதா? கொத்ஸ் என்னக் கொடுமை இது? ஆன்மீக தளபதி சிரிப்பு சித்தன் கே.ஆர்.எஸ் டாஸ்க் போர்ஸ் உங்கள் மீது எந்த நேரமும் பாயலாம் பார்த்து இருங்கள்....

தலீவரே அப்புறம் உங்களைப் பத்தி மகிழ்ச்சியானச் செயதி கொடுத்ததும் அவரே தான்....:-))))//

ஆமா ஆமா ஆமா :)

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2008/04/blog-post.html


// Sridhar Narayanan said...
//மாதவி பந்தல்காரரு லேசா மேடி மாதிரி இருக்கரதை //

'மேடி' மாதிரியா? இவர வில்லன் ரேஞ்சுக்கு மலேசிய மாரியாத்தா படம் போட்டிருந்தாங்களே பாக்கலயா? :-))

வெயிட் பண்ணிப் பாப்போம் எப்படி பொருந்தி வர்றார்னு...//

ஸ்ரீதர்... சந்தேகமே வேண்டாம். நல்லாவே பொருந்துவார். அவரோட திறமை உங்களுக்குத் தெரியலை. கதாநாயகியா யாருமே வேண்டாம்னு சொல்லி அவரே கதாநாயகியகவும் நடிச்சி உலகசாதனை செய்யப் போறத நெனச்சுப் பாரு!!!!!!!!!!!! அவரு திறமை உலகப் பிரசித்தம்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/04/blog-post_03.html


// // துளசி கோபால் said...

தமிழ்க்கடவுள்ன்னு சொன்னதும் பதிவில் தமிழ் துள்ளி விளையாடுது!!!! //

ஹி ஹி ஆமா டீச்சர். அதான் தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானின் தமிழருள். :)

// அங்கே ஒரு இடத்தில் சுற்றிலும் கண்ணாடிகள் வச்சு, ஆறுமுகன் விக்கிரகம் இருக்குமே அது இன்னும் இருக்கா? //

இருக்குது டீச்சர். ஆனா முந்தி மாதிரி சுத்தி வர முடியாது. வெளிய இருந்தே கும்பிட்டுட்டுப் போயிறனும். ஆனா கோயில் குடமுழுக்கு ஆகி இப்ப நல்லா வெச்சிருக்காங்க. உள்ள நுழையும் போதே தானா கால் கழுவத் தண்ணி ஓடுது. சொவத்துல கறைகள் இல்லை. எங்க விழுந்து கும்பிடனும்னு தெளிவாப் படம் போட்டு வெச்சிருக்காங்க.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/04/blog-post_03.html

// SP.VR. SUBBIAH said...
ஆமா, ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு வாட்டியாவது ‘அரோஹரா''
சொன்னீங்களா இல்லியா? //

நான் சொன்னேன். அவருதான் கோவிந்தா கோவிந்தான்னு சொன்னாரு :)

// கானா பிரபா said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்,
வடபழனியில் சுற்றித் திரிவது இன்னொரு விஜய், அஜித், சூர்யாவாக வர வேண்டும் என்பதற்காகவா? //

என்ன பிரபா.. கே.ஆர்.எஸ் பத்தித் தெரியாமப் பேசீட்டீங்களே.. இந்தப் பதிவைப் பாருங்க. அவரு எந்த ரேஞ்சுக்குப் போறாருன்னு ஒங்களுக்குப் புரியும்.
http://chennaicutchery.blogspot.com/2008/04/blog-post.html

// Blogger அரை பிளேடு said...
ஆமா கோவிலில் புளியோதரை சாப்பிட்டீங்களா :) //

அதையேன் கேக்குறீங்க.... வடபழநி புளியோதரையெல்லாம் கட்டாந்தரை. திருவரங்கத்து வைணவப் புளியோதரையே புளியோதரைன்னு சொல்லி வேண்டாம்னு கே.ஆர்.எஸ் மறுத்துட்டாரு. தான் வாங்குன பிரசாதத்தையே வேண்டாம்னு குடுத்துட்டாரு. அப்புறமா நாந்தான் வற்புறுத்தி அவருக்கும் கொஞ்சம் பிரசாதம் குடுத்து திங்க வெச்சேன்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/04/blog-post_03.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
நான் தோத்து அவரு வெல்றதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்காரு//

ஆகா...இது வேறயா!
குஞ்சு மிதித்து கோழிக்கு அடிபடுமா? //

ஆக மொத்தத்துல மிதிப்பீங்கன்னு ஒத்துக்கிறீங்க. நீங்க குஞ்சாக்கும். நான் கோழியாக்கும். கோழிக் கொழம்பு வேணும்னு வீட்டுல கேட்டீங்களா என்ன? ;)

// ஜிராவை வென்றேன்-ன்னா...
மனத்தை வென்றேன், உள்ளத்தைக் கவர்ந்தேன்-ன்னு எல்லாம் சொல்லுறதில்லியா...//

என்னோட உள்ளத்தையெல்லாம் நீங்க கவரலை. அதுக்கு ஸ்பெசிவிகேஷனே வேற. :D

// தம்மிற் தம் மக்கள்-ன்னு எல்லாம் சொல்லுறதில்லையா... //

நான் சொல்றதில்ல. உங்களைப் போல ஆன்ற சான்றோர்களும் பெருந்தகைச் செம்மல்களும் சொல்லுவாங்களோ என்னவோ!

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/04/blog-post_03.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஒன்னு புரிஞ்சது.... அடுத்த வாட்டி நாங்க ரெண்டு பேரும் ஏதாச்சும் ஒரு கோயிலுக்குப் போனா... ரெண்டு பேர்ல ஒருத்தர் கொலைகாரர் ஆகுறதுக்கான வாய்ப்பு எச்சகச்சமா இருக்கு//

ஆமா...
கோயிலில் நடக்கும் பல அல்லவைகளைக் கொலை செய்து, நல்லவைகளை நிலை செய்து...
அதைச் சொல்லுறாரு எங்க ஜிரா! //

நல்லாவே பூசி மெழுகுறீங்க ;) இந்த டெக்னாலஜி ஆப்பு கே.ஆர்.எஸ்சை எப்பிடியாச்சும் கத்துக்கிறனுமப்போய்! :D

// //ஆனா என்ன... அங்கயும் வந்து பெருமாளுக்குப் பண்ற மாதிரி பண்றாங்க....//

அதாச்சும் என் ஜிரா கிட்ட ஒரு விசேசம் என்னான்னா இரு பொருட்களின் தொடர்பைப் பேசினாக் கோச்சிக்கிறது போல ஒரு ஆக்ட் கொடுப்பாரு! //

நோ ஆக்டிங். :) தொடர்பை நீங்க பேசலை ;)

// ஒரே பொருள் மட்டும் தான் பேசணும்! பால்-னா பால் மட்டும் தான்! அதுல சர்க்கரை கலக்காதே! குங்குமப்பூ கலக்காதே-ன்னு கலக்குவாரு! :-) //

ஆமா பால் வெச்சிருந்தா அதுல குங்குமப் பூவைக் கலக்கீட்டு இது குங்குமப் பூ பால். ஆதியிலிருந்தே இது குங்குமப் பூ பாலாவே இருந்துச்சுன்னு சொல்லி குங்குமப் பூப்பாலை சங்கத்தமிழ் மகளிர் குடிச்சிருக்காங்க. அதுல இருந்தே பால் தனியா குடிக்கப்படலைன்னு புரிஞ்சிக்கோங்க. குங்குமப் பூ இருந்தாதான் பாலுன்னு சொல்வீங்க. அதையும் நாங்க கேக்கனும். :)

// முருகப் பெருமானின் திருக்கை வேலுக்கு நடந்த திருமுழுக்கைக் கண்டு..ஆகா இது மறவர் மரபு-ன்னு மட்டும் மொட்டையா சொல்லிட்டு நான் நிறுத்தி இருக்கணும்!

ஆனா...
மறவர் மரபு, சக்கரத்துக்கும் இவ்வாறே செய்யறாங்க, என்ன ஒரு ஒற்றுமை-ன்னு சொன்னேன் பாருங்க!
ஜிரா செவந்து போய் என் காதைத் திருக, லேது லேது, காது காது என்று என் காதும் சிவந்தது! :-) //

எச்சூஸ்மீ. நோ பொய் சொல்லிங். வேலுக்கு நீராட்டு நடந்தப்போ "பெருமாள் கோயில்ல சக்கரத்துக்குப் பண்ற மாதிரியே பண்றாங்க"ன்னு சொன்னீங்க.

அதையாரு கேட்டா...இங்க வந்து ஏன் அதையெல்லாம் சொல்றீங்கன்னு கேட்டேன்.

ஒடனே ஒரு வக்கனம் காமிச்சிட்டு அமைதியாயிட்டீங்க. அஞ்சு நிமிசங் கழிச்சி.... மறவன் குறவன்னு விளக்கத்தை எடுத்தீங்க. இப்ப என்னடான்னா எடுத்ததுமே வீரர் வழக்கம்னு சொன்னதாகவும்.. அதோட நிறுத்தாம ஒப்பிட்டதால நான் கோவிச்சிக்கிட்டதாகவும் சொல்றீங்க. டூ மச் கே.ஆர்.எஸ்.

சில்க் ஸ்மிதா மாதிரி முருகன் இடுப்பு இருக்குன்னு பதிவுல எழுதுவேன்னு சொன்னீங்களே... அதை ஏன் எழுதலை? ;)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/04/blog-post_03.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அங்கே ஒரு இடத்தில் சுற்றிலும் கண்ணாடிகள் வச்சு, ஆறுமுகன் விக்கிரகம் இருக்குமே அது இன்னும் இருக்கா?//

இருக்கு டீச்சர். பதிவிலும் சொல்லி இருக்கேன் பாருங்க.
ஜிரா சொல்லாம விட்ட மேலதிக தகவல்: அங்க தான் தீர்த்தமும் கொடுக்கறாங்க :-)) //

இத நேர்ல எங்கிட்ட சொல்றப்போ "பெருமாள் கோயில் மாதிரி"ன்னும் சேத்துச் சொன்னீங்க. :)

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2008/04/blog-post.html

// தேவ் | Dev said...

//தஞ்சாவூரான் said...

//சிக்கன் க்ராசன்ட்டும் உள்ளே போய்//

எப்பிடி இருந்துச்சு? கேள்விப்பட்டதே இல்லையே? :) சிக்கன உள்ளே வச்சு க்ரொசான்ட் (வி)ராப் மாதிரியா?//

வாங்க தஞ்சாவூரான் சாப்பிட வரைக்கும் வச்சு பார்த்தா.. ஒரு நீள பன்னுக்குள்ளே கொஞ்சம் சிக்கனை ஒளிச்சு வச்சு கொடுக்குற ஐட்டம் தான் க்ராசய்ன்ட் அப்படிங்கறது என் சிற்றறிவுக்கு எட்டிய பதில் :-)

இந்த க்ராய்சன்ட் பற்றி மேல் விபரங்களை நம்ம வலையுலக சமையல் திலகம் ஜி.ரா வழங்குவார் .. வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்... //

வழங்கீருவோம். க்ராய்சான் அப்படீங்குறது பிரஞ்சு வகை பிரட்டு. ஒரு மாதிரி முக்கோணம் போல இருக்கும். வழக்கமா பிரஞ்சு க்ராய்சான்கள்ல உள்ள ஒன்னுமே இருக்காது. அந்த ஒன்னுமே இல்லாததுல கொஞ்சோல எதையாச்சும் திணிச்சி (அல்லது ஒளிச்சி வெச்சி)க் குடுக்குறதுதான் சிக்கன் க்ராய்சான்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/04/blog-post_03.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
ராகவன் & ரவி
உங்க ரெண்டு பேருக்கும் என்ன சண்டை?//

சண்டையா? அப்படீன்னா?
நானும் ஜிராவும் ஒன்னுக்குள்ள ஒன்னு! கண்ணுக்குள்ள கண்ணு! தெரிஞ்சிக்கோங்க! //

ஆகா! அப்படியா! இது எனக்குத் தெரியாதே. மொதல்லயே சொல்லீருக்கக் கூடாது!!!!!

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நான் சொன்னேன். அவருதான் கோவிந்தா கோவிந்தான்னு சொன்னாரு :)//

அடப்பாவி!
நான் கோ.விந்தா-ன்னா சொன்னேன்?
கோ.ராகவா-ன்னுல்ல சொன்னேன்! :-)//

அப்படி வாங்க வழிக்கு. கோ.ராகவான்னு சொன்னீங்களா! அரோகரான்னு சொன்னேன்னு நீங்க பொய் சொன்னத நீங்களே ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. இப்பிடியே மத்த உண்மைகளையும் வெளிப்படையா ஒத்துக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வடபழநி புளியோதரையெல்லாம் கட்டாந்தரை. திருவரங்கத்து வைணவப் புளியோதரையே புளியோதரைன்னு //

அடப்பாவி! :-)//

உண்மையச் சொல்லீட்டேன்னு சிரிக்கிறீங்க. வெக்கப்படாதீங்க :) இன்னும் பலப்பல உண்மைகள் இருக்கு. எல்லாம் வெளிய வரும்.

// //தான் வாங்குன பிரசாதத்தையே வேண்டாம்னு குடுத்துட்டாரு. அப்புறமா நாந்தான் வற்புறுத்தி //

பொய்! பொய்!
வாங்குன பிரசாதத்தை நான் அம்மா கையில் கொடுத்தேன்! அம்மா எனக்குக் கையில் கொடுத்தாங்க!//

அப்படிச் சொல்லுங்க. ஆகா வாங்குன பிரசாதத்தை கையில வெச்சுக்கக் கூடப் பிடிக்காம யார் கிட்ட குடுக்கலாம்னு யோசிச்சீங்க. அப்ப நான் அம்மா கைல குடுக்கப் போறப்ப தடுத்து நீங்க குடுத்தீங்க. ;) அதையும் சொல்லுங்களேன். அதை மட்டும் ஏன் விடுறீங்க? :D

// இந்த ஜிராப் பையன் கிட்டயும் கொஞ்சம் கொடுங்க-ன்னு கையை நீட்டினேன்! அவரு போடா ஒனக்கெல்லாம் குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு!
இதப் பார்த்து விட்டு அம்மா தான் நான் தரேன்பா-ன்னு இன்னொரு முறை கொடுத்தாங்க! //

பிரசாதம்னு வாங்குன எல்லாருக்கும் நான் குடுத்தேன். ;)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/04/blog-post_03.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அதுல இருந்தே பால் தனியா குடிக்கப்படலைன்னு புரிஞ்சிக்கோங்க. குங்குமப் பூ இருந்தாதான் பாலுன்னு சொல்வீங்க//

இது வேறயா?
பாலும் தனி தான்! சர்க்கரையும் தனி தான்! ரெண்டுமே ஆதியில் இருந்தே இருக்கு தான்! பசுவிருந்தா பாலிருக்கும்! கரும்பிருந்தா சர்க்கரை இருக்கும்! ஆனா இரண்டும் சேரும் போது பாலும் இனிக்கு! சர்க்கரையும் இனிக்கு!

அதை விட்டுப்போட்டு பால் மட்டும் தான் தமிழ் இனிப்பு! சர்க்கரை தமிழ்த் திணிப்பு-ன்னு ஜல்லி அடிப்பீங்க பாருங்க! அங்க தான் காமெடியே! :-) //

எச்சூஸ்மீ. யூ ஆர் ராங்கு. வெல்லம் போட்டாத்தான் தமிழ்ப் பாலு. ஜீனி போட்டா இங்கிலீசு பாலுன்னு சொல்றோம்யா.

ஆனா உங்க காமெடி பெருங்காமெடி. நாங்கள்ளாம் பால்ல குங்குமப்பூ போட்டிருக்குன்னா.. நீங்க குங்குமப்பூவுல பாலக் கலந்திருக்குன்னு சொல்றவங்களாச்சே.

// இரண்டுமே தனித் தனியே இனிப்பென்றாலும், இரண்டும் சேர்த்துக் குடிப்பதே தமிழ் வழக்கம்! அதில் ஏன் உமக்கு வீண் தயக்கம்? //

நான் எதை விரும்பிக் குடிக்கிறேன் என்பதை நான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அல்ல.

அது மட்டுமின்றி கலப்பது அல்ல உங்கள் எண்ணம். கலந்த பிறகு உங்களதை முன் வைப்பது. ஆகையால்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.

// (ஆனா அபிசேகம் பண்ண பாலை கையில் ஊத்தும் போது மட்டும், அட இதுல கொஞ்சம் சக்கரை போட்டுக் குடுத்தாக் கொறைஞ்சாப் போயிருவீங்க-ன்னு எங்க ஜிரா கேப்பாராம்! :-)) //

அதென்ன ஒங்க ஜிரா? ஜிரான்னு சொல்லுங்க போதும்.

// //சில்க் ஸ்மிதா மாதிரி முருகன் இடுப்பு இருக்குன்னு பதிவுல எழுதுவேன்னு சொன்னீங்களே... அதை ஏன் எழுதலை? ;)//

அ(ட)ப்பாவி!
சில்க் ஸ்மிதா-ன்னு யாரு சொல்லி இருப்பாய்ங்க-ன்னு டோட்டல் பதிவுலகத்துக்கே தெரியும்!//

ஹே... இங்க பாருங்கப்பா புனிதபிம்பம். சில்க் சுமிதான்னா ஒங்களுக்கு இளப்பமாயிருச்சுல்ல.....

// சீவீயார் முதற்கொண்டு, கானா பிரபா இடைக்கொண்டு, வெட்டி கடைக்கொண்டு அத்தனை பேரும் சாட்சி சொல்ல வாங்கப்பு!//

வாங்க வாங்க.... நல்லா யோசிச்சுச் சொல்லுங்க. ஜிரா முருகன் கோயில்ல இருந்தாலும் சில்க் சுமிதான்னு சொல்ல யோசிச்சிருக்க மாட்டான். சொன்னாலும் சொன்னேன்னு சொல்லவும் தயங்கீருக்க மாட்டான். ஆனா... ஆன்மீகச் சூறாவளியாகிய கே.ஆர்.எஸ் எப்படி?

G.Ragavan said...

http://selventhiran.blogspot.com/2008/04/blog-post.html

அந்தப் பேச்சைக் கேட்டப்போ தோணுனது இதுதான். :) ஆனா இதுல ஒரு நுண்ணரசியல் இருக்குறதாத்தான் படுது. ஏன்னா... காவிரிப் பிரச்சனை எம்.ஜி.ஆர் காலத்துல வெளிய வராம இருந்துச்சு. அதுக்கு அவரு தனிப்பட்ட நட்பு விவகாரங்கள் மூலமாவே பேசித் தீத்திருப்பாரோ... விஷயம் வெளிய தெரிஞ்சாத்தானே... ரெண்டு பக்கமும் அரசியல்வாதிங்க பேசுனாத்தானே பிரச்சனை பெருசாகும்!

இது ஊகந்தான்...எம்.ஜி.ஆர் காலத்துல என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியாது.

G.Ragavan said...

http://rathnesh.blogspot.com/2008/04/socalled.html

ரத்தேன் உங்கள் பதிவைப் படித்தேன்.எல்லாரும் நீங்கள் எழுதிய சொற்களைப் பிடித்துக் கொண்டு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நீங்கள் சொல்ல வந்த பொருளைப் புரிந்து கொண்டேன். சுருங்கச் சொன்னால்...

வெட்டியா பேசிக்கிட்டிருக்காத... வேலையப் பாரு...

how hard your work is not a matter... how smart your work is the matter

இதுல நம்ம இன்னும் கீழதான் இருக்கோம். இதுதானே நீங்க சொல்ல வந்தது?

G.Ragavan said...

http://rishansharif.blogspot.com/2008/04/blog-post_06.html

பாக்கவே பயமாருக்கு. எனக்கெல்லாம் ஊசி போட்டுக்கிறதுக்குக் கூடப் பயம். ஆனா இவங்க கூசாம ஒடம்பெல்லாம் குத்தி வெச்சிருக்காங்க.

ஆனா ஒரு விஷயம் நீங்க புரிஞ்சிக்கனும். நம்மூர்லயும் குத்திக்கிறாங்களே.. காது மூக்குன்னு. இது அதுல அளவுல கூடீருக்கு. ரொம்பவே.

G.Ragavan said...

http://govikannan.blogspot.com/2008/04/blog-post_817.html

தமிழக முதல்வர் கருணாநிதியின் செயல் எவ்வளவு சரியானது என்று சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் இதைப் பெரிய அறிவுப்பூர்வமான முடிவு என்றெல்லாம் உணர்ச்சிவசப்படவும் முடியவில்லை. இனிமேல் பாருங்கள். கர்நாடகத் தேர்தலில் ஓட்டு வாங்கப் போடும் கோஷம் என்னவாக இருக்கும் தெரியுமா? "நாங்கள் பதவிக்கு வந்தால்....ஒகேனக்கல்லை கர்நாடகத்தோடு இணைப்போம்." இதுதான். அதுவும் அங்க நல்லா விக்கும். உண்மையிலேயே கொஞ்சம் முன்னாடியே யோசிச்சிருந்து தள்ளிப் போட்டிருந்தா அறிவுப்பூர்வமான அணுகுமுறைன்னு உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம்.

G.Ragavan said...

இயல்பான முடிவு. நல்ல நடை. ஆசை எழும் பொழுது ஆவலுக்குத் தடையேது!

G.Ragavan said...

http://vanusuya.blogspot.com/2008/04/blog-post.html

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.

நீங்கதான் இந்த வார நட்சத்திரமா... வாங்க வாங்க...

மாமல்லபுரத்துக் கற்கோயில்களின் அழகைச் சொல்லிக்கிட்டே போகலாம். சமீபத்துல அங்க ஒரு முருகங்கோயிலைத் தோண்டி எடுத்தாங்களாமே... அதோட போட்டோ கெடைச்சாலும் போடுங்க. :)

G.Ragavan said...

http://vanusuya.blogspot.com/2008/04/blog-post_08.html

அதாவதுங்க... பதவிக்கு வந்தா தப்பு பண்றவந்தான் இப்ப சாதாரண மனிதன். ஆகையால பதவில இருக்குறவன் தப்பு பண்றான். கீழ மாறுனா மேல மாறும். அதுவரைக்கும் ஊழல் வாழ்க.

G.Ragavan said...

http://vanusuya.blogspot.com/2008/04/blog-post.html

அடடே! இது கைலாசநாதர் கோயிலா? மாமல்லபுரம்னுல்ல நெனச்சிட்டேன். அடடா! காஞ்சியில இப்பிடியொரு கோயில் இருக்கா! ம்ம்ம்..

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2008/04/blog-post_09.html

வல்லிம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீடு வாழவும் பீடு வாழவும் முருகப்பெருமானை வணங்குகிறேன்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2008/04/pit.html

இது ராயல் ராமா! பெரிய ஆளாத் தெரியுறான். பள்ளிக்கூடப் பயலாட்டாம் இருந்த சின்னப் பையனை பெங்களூரு எவ்வளவு கெடுத்து வெச்சிருக்கு.. அடக்கொடுமையே!

// இரண்டுமே இதில் இல்லை!
எனினும் உங்களுக்கு உறுத்தலாய்ப் பட்டு விட்டதால், இப்போதே இரண்டாம் படத்தைப் பதிவில் இருந்து நீக்குகிறேன்!
உங்களுக்கு உறுத்தலாய் அமைந்ததற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! //

அடிச்சிட்டு அஞ்சு ரூவா குடுக்குறீங்க போல! :D

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=377

ஆகா... ஒரு கவிஞன் உதயமாகிறான்... :) மரியாதையில்லாம றான்னு சொன்னதுக்குக் கோவிச்சுக்கிறாதீங்க :) இதெல்லாம் கவிதைல ஜகஜம்.

ஒரு பாடலை உருவாக்குவது என்பது மிகக் கடினம். அதைச் சிறந்த வகையில் உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. பாடல்ல அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லத் தோணலை. ஏன்னா பாட்டு எழுதுறதே ஒரு முயற்சி. அதப் பாராட்டுறதுதான் சரின்னு தோணுது.

G.Ragavan said...

http://videospathy.blogspot.com/2008/04/blog-post.html

அருமையான பாடல். வழிப்பாடல்கள் அத்தனையையும் விட மூலமே முன்னால் நிற்கிறது. நல்ல பாடலை நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள்.

G.Ragavan said...

http://isaiarasi.blogspot.com/2008/04/blog-post.html

மிகவும் நல்ல பாடல். கேட்க இனிமையாக இருக்கிறது. குரலில் உணர்ச்சியையும் அழகையும் கலந்து மிக அருமையாக பாடியிருக்கின்றார்கள். படம் எப்படியோ தெரியவில்லை.. ஆனால் பாடல் மிக அருமை.

G.Ragavan said...

http://sirumuyarchi.blogspot.com/2008/04/blog-post_12.html

இதை அறிமுகப் படுத்தியதிற்கு நன்றி. இப்பவே இறக்குமதி செஞ்சுர்ரேன்.

G.Ragavan said...

http://sirippu.wordpress.com/2008/03/11/indego_child/

நடந்து கொண்டிருக்கும் இந்தக் கலியுகத்தில் என்னுடைய கருத்துப்படி அடுத்து இறைத்தூதராக வருகின்றவர் ஒரு பெண்ணாக அல்லவா இருக்க வேண்டும். ஆனால் இவன் பையனாக இருக்கிறானே! ஒன்று இந்தப் பையன் பொய் சொல்கிறான். அல்லது இந்தப் பையன் பையனல்ல பெண். :D

G.Ragavan said...

http://vellithirai.blogspot.com/2008/04/20-04-2008.html

1. அம்மா வந்தாச்சு (குஷ்பூ, பாக்யராஜ்)
2. பாட்டி சொல்லைத் தட்டாதே
3. இதுவும் தெரிஞ்ச படந்தான். படக்குன்னு பேரு நினைவுக்கு வரலை. நிழல்கள் ரவி, சரண்யா, ஐஸ்வர்யா எல்லாம் உண்டு.
4. இதுல முரளி கூட உண்டு. படம் பேரு நினைவுக்கு வரலையே. கருப்பு நிலான்னு பாட்டு கூட உண்டே...
5. அத்தமக ரத்தினமே
6.
7. என் தங்கை கல்யாணி
8. மாமன் மகள்
9. என் அண்ணன்
10. பட்டுக்கோட்டை பெரியப்பா

G.Ragavan said...

http://myspb.blogspot.com/2008/04/blog-post_17.html

அடா அடா அடா என்ன பாட்டு என்ன பாட்டு.... உள்ளபடிக்குச் சொன்னா முக்கல் முனகல் பாடல்களில் இளையராஜாவை விட டி.ஆர் பிரபலம் அப்படீங்குறது என் கருத்து. :) இன்னும் நெறையப் பாட்டுக இருக்கேய்யா... எடுத்து விடுங்க.

இந்தப் பாட்டு எனக்கும் பிடிக்கும். கேக்கத் தொடங்குன ஒரு நிமிசத்துக்கு எந்தா மொழின்னு புரியாம எல்லாரும் முழிக்க வேண்டியிருக்கும். ராக்கால வேளையிலேன்னு எஸ்.ஜானகி தொடங்குறப்பத்தான்.. ஆகா தமிழுன்னு தெரியும். நல்ல பாட்டுங்க. :) சிரிப்புக்காகன்னு இல்லை...முழுப்பாட்டையுமே ரசிக்கலாம். :D

G.Ragavan said...

http://enularalkal.blogspot.com/2008/04/blog-post_15.html

இந்தப் படத்தில் மூலத்தை நானும் தெலுங்கில் பார்த்துள்ளேன். நல்ல படத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்ததிற்கு இயக்குனருக்குப் பாராட்டுகள்.

ஜெராக்ஸ் மிஷின் இயக்குனராக ராஜாவும் நடிகராக ரவியும் மாறிக்கொண்டேயிருப்பது நல்லதல்ல.

மற்றபடி இந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல மாறுதலான படம் என்பதில் ஐயமில்லை.

தெலுங்கிலும் ஜெனிலியாதான். பிரகாஷ்ராஜேதான். அம்மாவாக வருவது ஜெயசுதா. தமிழில் கீதா. கோட்டா சீனிவாசராவின் பாத்திரத்தில் ஷியாஷி ஷிண்டே.

G.Ragavan said...

http://ammanchi.blogspot.com/2008/04/utith-narayan.html

உதித் நாராயண் தமிழை உதுத்த நாராயண். அவரு பாடலைன்னு இந்த இசையமைப்பாளர்களுக்கு வருத்தமோ வருத்தம் போல. கூப்டு நம்ம உயிரை வாங்குறாங்க.

// வெட்டிப்பயல் said...

//"காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!"//

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க???

அவர் "பர்வாயில்லய்"னு தானே பாடினார்... //

ஓ அப்படியா... நாங்கூட அந்தப் பொண்ணு முகத்துல பருவாயில்லைன்னு பாடுனாருன்னுல்ல நெனச்சேன்...

// Manoj said...

எம்.எஸ்.வி-ய வெச்சு, ஒழுங்கா உச்சரிக்கர வரைக்கும் காத திருகிட்டே சொல்லலாம். //

மனோஜ், எம்.எஸ்.வி தமிழ் வராதுங்குற ஒரே காரணத்துனாலயே லதா மங்கேஷ்கரைத் தமிழில் பாட வைக்கலையாம். உச்சரிப்பு வராதுன்னு சொல்லீட்டாராம். அதே மாதிரி கண்டசாலாவை "உலகே மாயம் வாழ்வே மாயம்"னு பாட வெச்சாரு. அவரு வால்வே மாயம்னு பாடுனதால அடுத்தடுத்து வாய்ப்புக் குடுக்கலையாம். இது விஷயமா தொடக்ககாலத்துல ஏசுதாஸ் கிட்டயும் சண்டை போட்டிருக்காராம். அது சரி.... மலையாளியாப் பொறந்திருந்தாலும் தமிழுக்கு அவரு எந்தக் குறையும் வைக்கலை. தமிழ் நாட்டுலயே பொறந்தவங்கதானே தமிழுக்கு குறை வைக்கிறதெல்லாம்.

G.Ragavan said...

http://kadalaiyur.blogspot.com/2008/04/305.html

// Indian said...

It is a copy of 'bruce almighty' //

இதைக் காப்பீன்னு சொல்ல முடியாது. இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம்.

படம் பாக்கனும்னு ஆசையாத்தான் இருக்கு.

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/03/10.html

// குமரன் (Kumaran) said...

இராகவன்,

உங்களுக்கு வந்த ஐயம் எனக்கும் இந்தப் பாட்டைப் படித்தவுடன் வந்தது. இது வரை நெடியோன் என்றாலே மாயோன் என்று மட்டும் தானே எண்ணிக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தப் பாடலைப் பார்த்தவுடன் நெடியவர்கள் எல்லோரையும் நெடியோன் என்று குறித்திருக்கிறார்கள்; மாயோனுக்கு மட்டுமே விதப்பான பெயர் இல்லை போலிருக்கிறது என்று தோன்றியது. அதனால் அதிகம் ஆராயாமல் விட்டுவிட்டேன்.

இப்போது நீங்களும் இந்த ஐயத்தை எழுப்பிய பின்னர் கொஞ்சம் தேடிப் பார்த்தேன். அகப்பட்டவை இவை: //

ம்ம்ம்.. அப்ப நெடியோன்னா குறிப்பிட்ட ஒருத்தரை மட்டுமில்லாம நெறையப் பேரைக் குறிக்கவும் செய்யுதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். :)

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2008/04/12.html

// அறையும் பொறையும் அணந்த தலைய //

இந்த வரிகளுக்குப் பொருள் என்ன குமரன்?

// எண்ணாட்டிங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பிற்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே" //

தேர் வண் பாரி தண் பறம்பு நாடே... இதுல தண் அப்படீங்குறதுக்கு என்ன பொருள். தன் என்று வந்திருக்க வேண்டுமோ? அல்லது தண் என்பது குளுமை என்ற பொருளில் வந்திருக்குமோ. சரி.. இதுல முல்லை எங்க வந்திருக்கு?

G.Ragavan said...

http://majinnah.blogspot.com/2008/04/blog-post_18.html

நண்பரே, உங்கள் தகவல்களையும் கருத்துகளையும் படித்தேன். :)

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=417

:) நல்ல நகைச்சுவை உணர்வுக்கு அரசு.

மனநோயாளிகள்....ம்ம்ம்.... மனம்னா என்ன? அதுல நோய் வரும்னா? எப்படி வரும்? அந்த நோய்க்கு என்ன மருந்து? என்னது குமுதம் படிக்கனுமா? என்னது... வெசத்தைக் கொடிய விசத்தால எடுக்கனுமா.. அப்பச்சரிதான். :)

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2008/04/291.html

பாட்டி பேத்தி எல்லாரும் நல்லாருக்கட்டும் முருகா.

இங்கல்லாம் வயதானவங்களுக்கு இருக்குற மனவலிமையே தனி. ஒரு டச்சுக்காரர் கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். கூட வேலை பார்க்கிற நண்பர்தான். அம்மா அப்பா வர்ராங்கன்னு சொல்றப்போ.. அவங்களுக்கு வயசு ஆயிருச்சு.. அதுனால பாத்துக் கூட்டீடு வரனும்னு சொன்னேன். என்ன வயசுன்னு கேட்டாங்க. அம்மாவுக்கு 57ன்னு சொன்னேன். ஆன்னுட்டாரு. 57வயசுதானா. அப்ப இன்னும் வயசாகலைன்னு சொல்லுன்னு சொன்னாரு. இங்கல்லாம் 60-65க்கு மேலதான் வயசாச்சுன்னே சொல்வாங்க. அத்தோட 70-80 வயசானவங்க கூட தனியா வெளிய போறது..பஸ்ல போறதுன்னு நம்பிக்கையோட இருக்காங்க.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2008/04/blog-post_9414.html

// சிவிஆர் - எத்தனை கோணம் எத்தனை பார்வை (காமிராக் கோணங்களை அடிக்கடி மாற்றுவதால்) //

ஆகா..... காமிரா கவிஞருக்கு ஏத்த பேருதான்...

// வெட்டிப்பயல் - அம்மா நானா ஓ தமிழ அம்மாயி - Amma Naana O Tamila Ammai (தொடர்ந்து தெலுங்குப்பட மேட்டர் கொடுப்பதால்) //

ஆட்டாடிஸ்தா-ன்னு இப்ப ஒரு படம் வந்துருக்கு. அதுவும் பொருத்தமாவே இருக்கும்.

// இளா - சங்கமம் அல்லது விவசாயி (இதற்கு விளக்கம் தேவையா) //

ரெண்டுமே பொருத்தம்....

// இராம் - மதுரைக்காரத் தம்பி or மதுர (வைகைப்பதிவுக்காரர்) or பாய்ஸ் (வா வா சங்கத்துத் தூண்களில் ஒன்று) //

மதுரை வீரன் கூடப் பொருத்தமா இருக்குமே ;)

// ஆயில்யன் - தினமும் என்னைக் கவனி ( சராசரியாக ஒவ்வொரு நாளும் பதிவுத் தீனி கொடுப்பதால்) //

பெர்பெக்ட்டோ

// ஜி.ராகவன் - ஜகன் மோகினி ( தங்க மரம் என்ற வெற்றிகரமான மர்மம் பிளஸ் மாயாஜாலத் தொடர் கொடுப்பதால்) //

வெற்றிகரமானங்குறது எல்லாம் டூ மச்சு. :)

// கொழுவி - நான் அவன் இல்லை ( ;-) விளக்கம் கிடையாது) //

விளக்க முடியாதுங்குறீங்களா? :)

// தல கோபி - எல்லாமே என் ராசா தான் ( ஆனந்த விகடனில் இருந்து பழைய பேப்பர் வரை இளையராஜா மேட்டர் தேடிப் படிப்பதால்) //

ராசாவின் மனசிலே
ராசா ராசாதான்
இந்தப் படங்களும் ஆகுமான்னு பாருங்க

// கும்மி பதிவர்கள் - கும்மிப்பாட்டு (விளக்கம் தேவையா?) //

இதுக்கே கும்மிகள் நெறையுமே :)


// கண்ணபிரான் ரவிசங்கர் - கிருஷ்ண லீலை ( கிருஷ்ணபகவானின் ஜாதகத்தையே கையில் வைத்திருப்பவர்) //

திருமால் பெருமை - மாலுக்கே மால் வெட்டும் திறமையுள்ளவர்
திருமலைத் தெய்வம் - திருப்பதியில் முக்கால் மணிநேரம் சாமி கும்பிட்ட பெருமைக்குரிய ஒரே ஆள்
சுப்ரபாதம் - இதுக்கு ஒரு வலைப்பூவே ஆரம்பிச்சாரே...நாங்கூட அங்க போய் சண்டையெல்லாம் போட்டிருக்கேன்
வா கண்ணா வா - இவரு கூப்டா கண்ணனே வருவாருல்ல...

// துர்கா - துர்கா ( இந்தப்படத்தில் அப்பாவிச் சிறுமியுடன் கூடவே நட்போடு நாய், குரங்கு எல்லாம் நடித்திருக்கும்) //

அப்ப நாய் யாரு? குரங்கு யாரு? தெளிவா புரியுறாப்புல சொல்லுங்க..

//.:: மை ஃபிரண்ட் ::. - Aata மற்றும் Chukkallo Chandrudu ( சித்து நடித்த இந்த இரண்டு தெலுங்குப்படங்களையும் ஜெயம் ரவி இன்னும் வாங்கல) //

ஹி ஹி ரொம்பச் சரியாச் சொன்னீங்க...

// அமீரகப் பதிவர்கள் கூட்டு - பாலைவன ரோஜாக்கள் //

பாலைவனப் பறவைகளும் பொருத்தமாவெ இருக்கும்.

G.Ragavan said...

http://radiospathy.blogspot.com/2008/04/blog-post_25.html

வாழ்த்துகள் நித்யா பாலாஜி. ஆறும் அருமையானவை.

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... இளையராஜா என்கின்ற சங்கீத மேகம் இசைத்தேனைச் சிறப்பாகவே சிந்தியிருக்கிறது.

நானே நானா யாரோதானா என்று பாடிய வாணி ஜெயராமுக்குக் கிடைத்தது அந்த ஆண்டின் சிறந்த பாடகிக்கான தமிழக அரசு விருது. ஆறு பாடல்களிலும் என்னுடைய கருத்தில் முதன்மையானது இந்தப் பாடலே என்பேன்.

நான் ஏரிக்கரை மேலிந்து எட்டுக்கட்டிப் பாடும் பொழுது என்று ஏசுதாஸ் பாடும் பொழுதே இனிமை நிறைந்து விடுகிறது. என்னுடைய மனங்கவர்ந்த இன்னொரு அற்புதமான பாடல்.

சுந்தரி கண்ணால் ஒரு சேதியல்ல... பல சேதி சொல்லத் தூண்டும் பாடல் இது.

நினைத்து நினைத்து பாடலும் சிறப்பான பாடலே.

G.Ragavan said...

http://manjoorraja.blogspot.com/2008/04/blog-post.html

குழந்தைன்னாலே குதூகலம். ஆகையால ரெண்டாவது படம் அழகா இருந்தாலும் என்னோட கருத்துப்படி போட்டிக்கு இல்லை.

மொதப்படம் போட்டிக்குப் பொருத்தமா இருக்கு. வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=420

தேவையில்லை சிறில். இப்ப தாய்ய்மொழின்னா என்ன? அம்மா பேசுற மொழிதானே? அந்த அம்மாவே யார்னு தெரியாதவங்களுக்கு என்னது தாய்மொழி..எது தாய்மதம்னு சொல்ல முடியும்? நான் சொன்ன தெலுங்குக் குடும்பத்துல அம்மா பேசுன மொழி தெலுங்குதானே..அப்புறம் எப்படி பேரப்பிள்ளைங்க சர்ட்டிபிகேட் தமிழாச்சு? ஆக ஒருவன் எதை தன்னுடைய மொழியென்றோ மதமென்றோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறானோ அதுதான் அவனுடைய மொழி அல்லது மதம்.

இப்படி வைத்துக் கொள்வோம். ஒருவேளை ஒருவன் ஒரு மதத்தில் பிறந்து அவனே விரும்பி வேறொரு மதத்திற்கு மாறி... பிறகு திரும்பவும் பழைய மதத்திற்கே போகிறான் என்றால் வேண்டுமானால் தாய்மதம் திரும்புகிறான் என்று சொல்லலாம்.

ஆகக்க்கூடி.... வயது வந்த ஒருத்தர் சுய நினைவோடும் விருப்பத்தோடும் தான் இன்ன மதத்தான் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால்... முதன்முதலில் அப்படி அடையாளப் படுத்தும் மதத்தை வேண்டுமானால் தாய்மதம் எனலாம்.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=420

// பாரதத்தின் பெருமை என்பது ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி பாஞ்சாலியின் நாகரீகம். இந்த நாகரீகத்தை ஏற்றுக்கொன்டோர் எத்தனை பேர். சூதாட்டமும் காம விளையாட்டுக்களும் நிகழ்ந்தாக கூறும் மகா பாரத்ததை பார்ப்பனர்களை தவிர வேறு யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த அழங்கோல தகாத உறவா திராவிட சமுதாயத்தில் இருந்தது. //

கழுகு, நான் உங்க பின்னூட்டத்தை பெண்ணீய வழியில் எதிர்க்கிறேன். ஐவருக்குப் பத்தினி பாஞ்சாலி என்பதெல்லாம் சரி. கற்பு என்றால் இருப்பாலாருக்கும் பொதுவாக வைத்த ஏதாவது ஒரு மானமுள்ள மதத்தைக் காட்டுங்களேன். எல்லா மதங்களும் இந்த விஷயத்தில் ஒரு ஆண் ஏன் பல பெண்களை மணக்கலாம் என்பதற்கு பலப்பல காரணங்களைக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் எந்த மதமும் நடுநிலையானதில்லை.

G.Ragavan said...

http://cyrilalex.com/?p=420

நன்றி லக்கி. இஸ்லாம் முன்னிறுத்தும் கைம்பெண் மறுமண உரிமை மிகவும் வரவேற்கப் படுவது. ஏற்றுக்கோள்ளப்பட வேண்டியது.

ஆனா நான் கேட்ட கேள்வியே அதில்லையே. ஒரே நேரத்துல ஒருத்தன் ஒன்னுக்கு மேல கட்டிக்கிறதும் வச்சிக்கிறதுக்கும் சமூகத்துல அனுமதிக்கிற மதங்கள்…அதே பெண்ணுக்கு வர்ரப்போ மட்டும்… அது கூடாதுன்னு நூறு விளக்கங்களை வெச்சு…ஆண் மட்டும் ஏன் வெச்சிக்கிறலாம்னு ஆயிரம் வெளக்கங்களை வெக்குதேய்யா…. எந்த மதத்துல இது இல்லைங்குறீங்க?

G.Ragavan said...

http://naachiyaar.blogspot.com/2008/05/blog-post.html

கழுகு கழுகோட சண்டை போடுதா... ஆகா... சாலை விளக்குகள் தொங்குறதும் வித்தியாசமா இருக்கு. மிச்சப் படங்களையும் போடுங்க. பார்த்து ரசிக்கிறோம்.