கோவி, ஆத்திகமும் நாத்திகமும் நீங்கள் வரையறுத்திருப்பது போல அத்தனை எளிது என்று சொல்ல முடியாது. உங்கள் வரையறைப்படி ஆத்திகம் என்பது கடவுளை நம்புவது. நாத்திகம் என்பது கடவுளை நம்பாமல் இருப்பது.
செல்வன் சொன்ன எடுத்துக்காட்டும் சிந்திக்கத் தக்கதே. நேற்று உண்மை என்று அறிவு நம்பியது இன்று உண்மையல்ல. முதல்முதலில் அணுவின் அமைப்பு என்று அறிவியல் நிரூபித்தது சரியென்றுதானே நம்பப்பட்டது. ஆனால் இன்றைய நிலை. நடுவில் அணுவின் அமைப்பு மாறுபட்டது என்று எத்தனை முறை நிரூபிக்கப்பட்டு விட்டது.
ஆக ஒரு மனிதனால் முழுமையான பகுத்தறிவாளனாகவோ இறைநம்பிக்கையாளனாகவோ இருத்தல் இயலாது. அப்படி ஆகும் நாளில் அவன் பகுத்தவாளனாகும் இறைநம்பிக்கையாளனாகவும் இருப்பான்.
பகுத்தறிவு மதமாகுமா? உண்மையான இறைநம்பிக்கை எப்படி தீதற்றதோ அப்படியே உண்மையான பகுத்தறிவு மதமாகாது. ஆனால்....இன்றைக்கு மதங்களால் தீமைகளும் உண்டாகிறது போல பகுத்தறிவுப் பாசறை என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் மதமாகத்ட்தான் செயல்படுகிறார்கள் என்றே நாம் நம்புகிறேன். ஒரு எதிர்ப்பைக் கூட நாகரீகமாகக் காட்டத் தெரியாத நிலையில் மதங்களும் பகுத்தறிவுகளும் அவைகளின் தேவைகளிலிருந்து விலகி விலகிப் போய்க் கொண்டேயிருக்கின்றன. குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்வது என்னைப் பொறுத்த வரையில் நகைப்பிற்குரியது. மதச்சார்புள்ள சர்வமதக் கட்சிகளுக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கும் வேறுபாடு ஒன்றும் கிடையாது என்பது என் கருத்து.
கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டாரும் இறைநம்பிக்கையற்றவராக இருந்தார். ஆனால் அவர் கொஞ்சமேனும் பகுத்தறிவோடு இருந்தார். அதாவது உலகாதயம். ஒரு நூலே எழுதியிருக்கிறார். பெயர் மறந்து போய் விட்டது.
மொத்தத்தில் அடுத்தவரை மதித்து, அடுத்தவரை இழிவாக நினைக்காமல் கருத்து வேறுபாடு இருந்தாலும் நட்பு வேறுபாடு பாராட்டாமல் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் எந்த மதமானாலும் எந்தக் கொள்கையானாலும் வீண்தான்.
உண்மைதான். வெளிப்படையாகப் பேசிப் பழக வேண்டும். இது திடீரென்று வருவது மிகக் கடினம். சிறுவயதிலிருந்தே குழந்தைகளோடு நெருக்கமாகப் பழக வேண்டும். குறிப்பாக உங்கள் குழந்தையை நீங்களோ அல்லது உங்கள் குழந்தை உங்களையோ ஓடி வந்து அணைத்துக் கொள்ளும் அன்பான நெருக்கம் கண்டிப்பாக இருந்தாலே போதும். சரிதானா எஸ்.கே?
இந்தச் சடங்கு தேவையில்லை என்பதே என் கருத்து. பிள்ளைகள் விரும்புவார்கள் என்று நான் கருதவில்லை. ஊர்ப்புறங்களில் ஒருவேளை இருக்கலாம். ஆனாலும் தவிர்க்கப்பட வேண்டியது.
யோகன் ஐயா சொல்வது போல சடங்கும் மொய்யும் விட்டதைப் பிடிப்பதுதானே.
உளவியல் பாதிப்பெல்லாம் வராமலிருக்க...பிள்ளைகளைக் கொண்டாட்டமாக வெளியில் கூட்டிச் செல்லலாம். அல்லது சும்மா விருந்தாளிகளை அழைக்கலாம். சடங்குகள் செய்யாமல் கூடிக் கொண்டாடுவது போல. அடுத்த தலைமுறை அதையும் குறைத்துக் கொள்ளலாம். தவறில்லை.
// 2) பெரிய டேமேஜரும்,பெரும்பாலான இனிப்புகளின் அடிப்படையுமான நம்ம ராஜீயின் படைப்புகள் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிவலம் வரவிருக்கின்றன.தெலுங்கில் வரவிருக்கும் இந்தத் தொடர் ப்ளேக் மாரியம்மனைப் பற்றி இருக்கலாம் என்று நெம்பத்தந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
அட முருகா! இதென்ன கூத்து...பொன்ஸ் தேவ் அவசரப்படாதீங்க. இதுல ஏதோ உள்குத்திருக்குன்னு நெனைக்கிறேன். மாரியம்மன் தமிழ்ப் பெயர். அத வெச்சுச் சுந்தரத் தெலுங்கினில் வசனம் நான் எழுதுனா மொத்த ஆந்திரம் ஆத்திரம் ஆகி என்னைத் தேடி வந்து அடிப்பாங்க.
லாஜிக்கலா நான் ரெண்டு கேள்வி கேக்குறேன்.
1. இனிப்புகளுக்கு அடிப்படை சர்க்கரையா, வெல்லமா, ஜிராவா? எல்லா இனிப்பும் இனிப்பல்ல ஜிரா கலந்த இனிப்பே இனிப்புன்னு சொல்ல முடியாதே. ஆக இதுல வெல்லமும் சேரலாம் இல்லியா?
2. என்.டி.ராமராவ் தான் கிருஷ்ணரா ராமரா நடிச்சிருக்காரு. அதான் ரமணா ரகுநாதா பாற்கடல் வாசா ஜானகி நேசான்னு பாட்டு வேற போட்டிருக்காரு. அப்ப அவரு ராவுன்னு தெரிஞ்சி போச்சு. அந்த வெல்ல ராவ் யாருன்னு நம்ம எல்லாரும் கண்டுபிடிக்கனும்.
ஜோசப் சார் எனக்குப் பட்டினத்தடிகள் வாழ்க்கை நினைவிற்கு வருகிறது. பல் துலக்குவது முத்துப் பொடி. வாய் கழுவப் பன்னீர். வேளைக்கு அறுசுவை உணவுகள். வாதுமைப் பருப்பை அரைத்துப் பன்னீரில் வெல்லமும் கலந்து பிசைந்து அதனை உருட்டி நெய்யில் பொரித்தெடுத்து மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் தங்கத் தட்டில் உண்ணக்கூடிய அளவிற்குச் செல்வம். அரிசி மூட்டிகள் வந்தால் வைக்க இடமில்லையெனில் வைரமூட்டைகளை வீதிக்கனுப்பும் பெருந்தனம். அவருக்கு ஒரு நாள் ஈசன் உணர்வித்தான். "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே" என்று மகன் வாயினிற் சொல்லச் சொல்லி.
அதற்குப் பிறகு அவர் பட்டினத்தாராக மாறினார். அவருடைய நிலையைக் கண்டு சோழனிடம் போய்ச் சொன்னார்கள். சோழன் வெகுண்டான். நாட்டின் பெருஞ் செல்வந்தன் இப்படி ஆவதா என்று!
கோயில் மண்டபத்தில் உட்கார்ந்திருந்த அவரிடம் நேரடியாக வந்து நின்றான். இப்படி ஆனதால் என்ன பயன் என்றும் கேட்டான். அப்பொழுது அடியவர் சொன்னார். "வழக்கமாக மன்னன் உன்னைப் பார்க்கையில் நீ அமர்ந்திருக்க பிறகே நான் அமரும் நிலை. ஆனால் இன்று நான் அமர்ந்திருக்க நீ நின்று கொண்டிருக்கும் நிலை." என்றாராம்.
இன்னுமொன்று சுப்பையா அவர்கள் சொன்னது போல ஆறடி கூடக் கிடையாது. பொசுக்கி சாம்பலாக்கி (நீறு) விடுவார்கள். அதனால்தான் திருநீறு பூசும் வழக்கமே. திருநீறு பூசுகையில் நிலையாமையே உண்மை என உணர வேண்டும். அதுதான் தத்துவம்.
அந்த மைனாவை இந்தப் பாடு படுத்தீருக்கீங்க. மைனாப்பட கைப்ஸ்னு ஒரு பட்டம் ஒங்களுக்கு. வெச்சுக்கோங்க. :-)
மால்குடி டேசா? சுதர்சனன் விட்டா தொடரே எழுதுவாரு....சின்னப்புள்ளைல ஒரு டீவி தொடர் வரும்....science fiction...பசங்களா இருப்பாங்க....எதிர்காலத்துக்குப் போறது...அது இதுன்னு வரும்...பேரு தெரியலை. அதே போல ஏமமாலினி நடிச்ச நூப்புரு. இந்த ரெண்டுக்கும் டீவீடீ, வீசிடி கெடைக்குங்களா? அப்படியே fairy tale theatresன்னு ஞாயித்துக்கெழம போடுவாங்களே...அதுக்கும் வேணும்.
பெரும்பாலான இன்றைய கவிஞர்களைப் பற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கவிதை. யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். கவிஞர்கள் நமது இலக்கிய ஆதாரமான மரபின் மீதும் பார்வை திரும்ப வேண்டும் என்று எழுதியது.
உரைநடையினை உடைத்துப் போட்டு உடைப்பெடுக்கிறதே தன் கவிதையென்பார் ஓசையில்லாமல் ஓசை நயத்தையும் அழிப்பார் அசைகளைப் பாடல்களில் வேர் நுனியோடு அசைத்தறுத்தெடுப்பார் சீர்களைக் கவிதையில் சீர் குலைத்து விட்டு சீர்மை மிகு பாடலென்பார் வெண்பாவில் ஒன்றேனும் எழுதியிராமல் பெண் பாவை அங்கத்தையே பெரும்பாலும் தங்கமாய்ச் சொல்லிக் கவி சமைப்பார் ஆசிரியர் மேல் என்ன சினமோ ஆசிரியப்பாவின் இலக்கணம் தெரியாமல் பிலாக்கணமாய் வரிகளைத் தொகுப்பார் உவமையையும் உருவகத்தையும் உருத் தெரியாதமற் சிதைத்திருப்பார் எளிமை என்பார் அழகு என்பார் அருமை என்பார் இதுவே புதுமையும் என்பார் ஒரு பாவுக்கேனும் இலக்கணம் தெரியாதெனவுரையார் வினவிப் பாருங்களேன் போடா பழைய பஞ்சாங்கமேயென பொரித்தெடுப்பார் - அவரே இருபத்தோறாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிஞர்!
இன்றைக்குப் பிரபலமான பெரும் புதுக்கவிஞர்கள் எல்லாரும் மரபும் அறிந்தவர்கள் என்பதைப் பெரும்பாலானோர் மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கே இந்தக் கவிதை.
முருகா! கேட்கவே வருத்தமாக இருக்கிறது. பிள்ளை வளர்ப்பில் ஏற்பட்ட சிறு தவறு எப்படிப்பட்ட விரிசலை உண்டாக்கியிருக்கிறது....ஆண்டவன் அருளால்...தப்பிப் பிழைத்து நிம்மதியாக இருக்க ஒரு இடம் கிடைத்திருக்கிறதே...
// ஒரு பின்குறிப்பு: கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் ஒரு முடிவெடுக்கிறேன் - எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!! //
ஏங்க? புதுப்படம் போடப் போறீங்களா? அதுவும் கலர்ப் படமா!
1. நாம் இருவர் (1947) - இதுதான் என்று நினைக்கிறேன்.
2. அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்
3. தெரியலையே...
4. நல்லதோர் வீணை செய்தே, தீர்த்தக்கரையினிலே - வறுமையின் நிறம் சிகப்பு - மெல்லிசை மன்னர் சிந்து நதியின் மிசை நிலவினிலே - மெல்லிசை மன்னர் வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் - மெல்லிசை மன்னர் - கௌரி கல்யாணம் இன்னொரு பாட்டு கூட மெல்லிசை மன்னர் இசையில் இருக்கு. பி.சுசீலா பாடியது....நினைவுக்கு வர மாட்டேங்குது.
சொல்ல வல்லாயோ கிளியோ சொல்ல நீ வல்லாயோ வல்ல வேல் முருகன் - இளையராஜா - வரலட்சுமி பாடியது - கவரிமான் பாரதி - எல்லாரும் சொல்லீட்டாங்க ஏ.ஆர்.ரகுமான் - சுட்டும் விழிச்சுடர்தான்
5. இயற்றலும் ஈட்டலும்னு நெனைக்கிறேன்
6. பாடல்கள் 1. காற்றுக்கென்ன வேலி - மெல்லிசை மன்னர், கவியரசர், எஸ்.ஜானகி 2. மலர்ந்தும் மலராத - டீ.எம்.எஸ், பி.சுசீலா, மெல்லிசை மன்னர், கவியரசர் 3. புது வெள்ளை மழை - உன்னி மேனன், சுஜாதா - ரோஜா 4. அண்ணே அண்ணே சிப்பாயண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சுண்ணே 5. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் 6. என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு 7. புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது 9. பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
//அப்புறம்..படமெல்லாம் தெளிவா நல்லாயிருக்கு. என்ன கேமரா? எத்தன பிக்செல்?// நன்றி. Canon Digital Ixus 750. 7.1 Mega Pixel. //
பிரமாதம் மைனைப்பட கைப்சே!
// //எங்காபீஸ்லயும் போகா கெடைக்கும் காலைல. வாங்கிச் சாப்பிடுவாங்க. நமக்கு சாதா தோசை வித்தவுட் ஆயில்தான்.// போகாவும் வயித்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத ஆகாரம் தாங்க. இந்தூர்ல இருந்த ஒன்னரை வருஷம் போகா சாப்பிட்டுத் தான் உயிர் வாழ்ந்தேன். //
அப்படியா? நான் இன்னமும் போகப் பக்கம் போகா ஜிரா-தான்.
// //அந்த மைனாவை இந்தப் பாடு படுத்தீருக்கீங்க. மைனாப்பட கைப்ஸ்னு ஒரு பட்டம் ஒங்களுக்கு. வெச்சுக்கோங்க. :-)// ஆஹா :). தங்கள் சித்தம் என் பாக்கியம். //
மேல பாருங்க...ரெண்டு வாட்டி அந்தப் பேர வெச்சி ஒங்களக் கூப்பிட்டிருக்கேன்.
// //சின்னப்புள்ளைல ஒரு டீவி தொடர் வரும்....science fiction...பசங்களா இருப்பாங்க....எதிர்காலத்துக்குப் போறது...அது இதுன்னு வரும்...பேரு தெரியலை. // அந்த தொடர் பேரு இந்திரதனுஷ். ரொம்ப நல்லாருக்கும். எனக்கும் ரொம்ப புடிச்ச தொடர் அது.//
அதானய்யா...இந்திரதனுசு...சொல்லீட்டீரே....ஒம்ம அறிவும் அழகும்....அடடா! அப்படியே கன்னி வேட்டை படத்துல வர்ர கமலப் போலவே இருக்கு :-)
// //அதே போல ஏமமாலினி நடிச்ச நூப்புரு. இந்த ரெண்டுக்கும் டீவீடீ, வீசிடி கெடைக்குங்களா? அப்படியே fairy tale theatresன்னு ஞாயித்துக்கெழம போடுவாங்களே...அதுக்கும் வேணும்// கூகிளில் தேடிப் பார்த்தேன். மத்ததைப் பத்தி தெரியலை. ஆனா ஃபேரி டேல் தியேட்டர் டிவிடி அமேசான்.காம் தளத்தில் கிடைக்கிறது. //
ஐயா.....அந்த லிங்க்கக் குடுங்கையா....எங்க பய ஒருத்தன் அடுத்த மாசம் அமெரிக்காவுல இருந்து வர்ரான்...அவங்கிட்ட வாங்கியாரச் சொல்லனும். லிங்க்கு..லிங்க்கு.
நூபுர் நாடகத்துல எல்லாம் இந்திதான் பேசுவாங்க. நமக்கு ஒன்னும் புரியாது. ஆனா நடுநடுவுல ஏமமாலினி "அம்மா உப்புமா கொண்டா"...."ஐயோ கீழு விழுந்திருச்சு பாரு"ன்னு எண்ணி ஒரே ஒரு வசனம் ஒவ்வொரு எபிசோடுலயும் பேசுவாரு. அதுக்காக் காத்திருந்து பாப்பேன்.
// விருப்பமும் எமதன்று செயலும் எமதன்று நெருநல் இருந்தார் இன்றில்லை எனும் பெருமை உடைத்தாம் உலகில் செய்யும் கருமமும் அவனே காரணமும் அவனே //
அனைத்தும் அவனே அனைத்திலும் அவனே ஆயினும் காலைப் பொழுதில் பல் துலக்கத் தொடங்கி முடிக்குமுன்னே காப்பி குடிப்பீரோ! குளியலைத் தொடங்கி முடிக்குமுன்னே ஆடை புனைவீரோ! முதலில் தொட்டதைப் பாதியில் விட்டதை முடித்து வைப்பதை உமக்கும் அவன் சொல்லட்டும்!
நம்ம மாதவன் எப்ப கண்ணாடி போட்டார்? இதுவரை தெரியாதே? //
குமரன் அந்தக் கண்ணாடியோட அமைப்பைப் பாருங்க...மாறுபட்ட விதமில்லையா.....எப்படியிருக்கும்னு ஆசையா வாங்குனது....ஆனா கண்ணாடி முகத்தோற்றத்தையே மாத்தீருது. பெங்களூர்ல பஸ்சுல ஆபீசுக்கும் போகையில வெயில்ல கண் கூசுது. சென்னையில இருக்குற டாலர்ஸ் அண்டு பவுண்ட்ஸ்ல நல்ல கலர் கண்ணாடிக இருக்கு. அடுத்த வாட்டி போகும் போது வாங்கனும்.
அதுவுமில்லாம மூனு நாளும் தொடர் அலைச்சல். அளவுக்கு அதிகமாவே சாப்பாடு...அதுவும் கூட தோற்ற மாற்றத்துக்குக் காரணமா இருக்கலாம்.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ரவி. மகிழ்ச்சியிலெல்லாம் பெரிய மகிழ்ச்சி அடுத்தவரை மகிழ்த்திப் பார்ப்பதுதான். அதுவும் தீபவொளித் திருநாளில் நீங்கள் செய்திருப்பது மிகுந்த சிறப்பு. பண்டிகை என்பது இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. இருப்பவர்கள் என்றால் பணம் மற்றும் உறவு. இல்லாதவர்களுக்கும் உண்டு என்று நிரூபித்திருக்கின்றீர்கள். இது தொடர வேண்டும். கண்டிப்பாக. என்னுடைய உளங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்.
விஜயகாந்த் இவ்வளவு ஓட்டுகள் வாங்குவார்னு நெனைச்சே பாக்கலை. அவர் அரசியலுக்கு வர்ரதும் வராததும் அவருடைய விருப்பம். ஆனால் அரசியல்ல நிலைக்கிறது மக்களோட விருப்பம். அந்த விருப்பம் பொதுவா எல்லாருக்கும் இல்லைன்னாலும் கொஞ்ச பேருக்கு இருக்குறது தேர்தல் முடிவுகள்ள தெரியுது. போகப் போக என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்! நடக்க நடக்க பாப்போம். பெரிய கட்சியா இவரால வளர முடியுங்குறத இன்னமும் என்னால நினைக்க முடியலை. அதிமுக கூட்டணிக்கு நல்ல தண்டனை கொடுத்தாச்சு. அடுத்து திமுக கூட்டணிக்கும் குடுக்கனும். I couldnt support DMK just because I dont support ADMK.
இரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது. நீங்க சொன்னதுதான். அது குழலிக்கும் ஜிராவுக்கும் கூடப் பொருந்தும். ஆகையால வெறும் பத்திரிகை ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது ரொம்ப நாளைக்கு ஓடாது. திமுக, அதிமுக...இந்த ரெண்டுமே ஆதரவு எதிர்ப்பு ரெண்டையும் பாத்து தோத்து ஜெயிச்சி வந்திருக்கு.
விஜயகாந்த்தின் அரசியல் தப்புன்னு சொல்லலாம். ஆனால் அரசியல் பிரவேசமே தப்புன்னு சொல்லக் கூடாது. ஆனா உங்களுடைய கடந்த சில விஜயகாந்த் பதிவுகள் படிக்கிறப்போ அவர் மேல உங்களுக்கு ஒரு வெறுப்பு இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. அப்படியிருந்தால் அது உங்கள் விருப்பம். தொப்புள்ள பம்பரம் விட்டவங்க அரசியலுக்கு வரலாமான்னு கேக்குறது சரியென்று தோன்றவில்லை. அரசியலமைப்புன்னு பாத்தா அது எல்லா இந்தியக் குடிமகன்களுக்கும் எழுத்தளவிலாவது அந்த உரிமையைக் குடுத்திருக்கிறது. அதை நாம் மறுக்கக் கூடாது.
தொப்புளில் பம்பரம் விட்டால் என்ன? ரெண்டு திருமணம் செய்தவர், கற்பழித்தவர், திரைப்படத்தில் கதாநாயகிகளின் கைகளைப் பிசைந்தவர், நடிகையாக வந்து ஆடியவர், திருடியவர், ஜாதிப் பெயர் சொல்லிக் கட்சி வைத்திருபப்வர் இவர்களெல்லாம் வருகையில் இவரும் வரலாம். ஆனால் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது அவரவர் நடவடிக்கையைப் பொருத்தே இருக்க வேண்டும்.
என்னுடைய ஆதரவு இன்றைய திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயகாந்த் இவர்கள் மூவருக்கும் இல்லை. என்னோட ஆதரவு எங்கிட்டெயே இருக்கு. யாராவது வேணும்னா சொல்லுங்க. :-)
இனிய தீபாவளி வாழ்த்துகள் உஷா. இந்த முறை நீங்கள் என்ன பலகாரம் செய்தீர்கள்? கோதுமை அல்வாவா? அதிரச உளுந்து வடையா?
அதிரசம்ங்குற பேர்லயே இருக்குது அதோட ருசி. ஊர்ப்பக்கம் சுடுவாங்க.சிறுசு. நடுத்தரம். பெருசு. ஓட்ட போட்டது. போடாததுன்னு. தீபாவளிக்குன்னே உள்ள பண்டம் அது. உள்ள மெத்துன்னு இருக்கனும். தொலி தனியா வரனும். அதுதான் சிறப்பான அதிரசம். கிராண்டு ஸ்வீட்சில் கிடைக்கிறதே. நானும் முன்பெல்லாம் சென்னைக்குப் போகும் பொழுதெல்லாம் வாங்குவேன். இப்பொழுது இனிப்புகளையே குறைத்து விட்டதால்....அதிரசமும் குறைந்தது.
// பத்திரிக்கைகளும் சில பதிவர்களும் விஜயகாந்த் ஊழலுக்கு எதிரி(ஆனால் ஓட்டு போட மட்டும் அவங்க கட்சிக்காரங்க காசு தருவாங்க), சாதிக்கு எதிரி(ஆனால் 14பேர் விஜயகாந்தின் நாயக்கர் சாதிக் காரங்க மாவட்ட செயலாளரா இருப்பாங்க) என்று அள்ளிவிட்டுக்கொண்டிருப்பதை போல நானும் செய்யாமல் அவரின் செயல்களை விமர்சிக்கிறேன், அது தனிப்பட்ட வெறுப்பு என்றால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை, //
எனக்கு அப்படித் தோன்றுகிறது. அதனால்தான் அப்படிச் சொன்னேன். நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் சரி. இந்தக் காரணங்களின் படிப் பார்த்தால் எந்த அரசியல் கட்சியும் தப்பாதே! எல்லாக் கட்சியையும் இழுத்து மூட வேண்டியதுதான். பாமக, அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் உட்பட. ஆனாலும் நீங்கள் ரெட்டை மாட்டு வண்டியில் பொதுவாக ஒரு மாட்டையே அடிப்பது போன்ற தோற்றம் இருப்பதால் எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். திமுக வன்முறைப் பதிவில் கூட இந்த அளவிற்கு காரம் இருக்கவில்லை. அங்கேயும் சொன்னேன். எல்லாக் கட்சியும் அப்படித்தாங்க. திமுக மட்டும் விலக்கா என்று. இங்கேயும் அப்படித்தான் சொல்கிறேன்.
// ஆனாலும் ரஜினிகாந்த்தா விஜயகாந்தா என்றால் நான் விஜயகாந்தின் பக்கமே இருப்பேன் ரஜினியைவிட விஜயகாந்த் ஆபாத்தானவர் அல்ல என்று நான் கருதுகிறேன்., நான் அளித்த தகவல்களில் என் விமர்சனத்தில் எங்கே தவறு என்று சொல்லுங்கள் நான் ஒத்துக்கொள்கிறேன். //
சரி எது தப்பு எதுன்னு நான் சொல்றது சரியா இருக்குமா தப்பா இருக்குமான்னு தெரியலையே. எல்லாம் தெரியும்னு நெனச்சா இதுதான் சரி...அதுதான் சரின்னு சொல்லலாம். தப்பு கண்டுபிடிக்கிறதுக்காக உங்க பதிவைப் படிக்கலைங்க. என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரிஞ்சிக்கிட்டு அதுக்குத் தொடர்பான என்னுடைய கருத்தைச் சொல்லத்தான் நான் வந்தேன். நமக்கெதுக்குங்க...நான் சரி நீ தப்பு விவகாரமெல்லாம்.
அடடா! இதுவும் இப்படியா! இப்ப என்னதான் செய்றது........பேசாம அந்தக் காலம் போல சோத்து மூட்டையக் கட்டிக்கிட்டு நடந்து போக வேண்டியதுதான்......இன்னும் அம்பது வருசத்துல அதுதான் வரப்போகுதுன்னு நெனைக்கிறேன்.
உண்மைதான் ஜோசப் சார். விலைமாது ஒருத்தியின் மீது கல்லெறிந்தவர்களுக்கு ஏசுபிரான் சொன்ன நல்மொழி அனைவருக்கும் பொருந்தும். நம்முடைய விபச்சாரத்தனம் நமக்குத் தெரியாமையால் அடுத்தவர் மீது கல்லெறிந்து கொண்டேயிருக்கிறோம். இது மாற வேண்டும். கண்டிப்பாக மாற வேண்டும்.
சுந்தர் அருமையான பாட்டு. என்னைப் பொறுத்தவரையில் அந்தப் பாடலைக் கமர்ஷியலாகப் பார்க்கவில்லை. உணர்வுகள் எழுவது அப்படியுந்தானே. இதே மாதிரி வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஒரு காட்சி வரும். ஆனால் அதையும் கமர்ஷியல் வரிசையில் சேர்க்க முடியாது. கமர்ஷியல்கள் இல்லாத படங்கள் தமிழில் ஆங்காங்கே உண்டு. இப்பொழுது மிகவும் குறைந்து விட்டது.
// பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - பாவத்துடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம் //
குமரன் இங்கு ஒரு ஐயம். பாவத்துடன் கூடிய பக்தியா? அப்படியென்றால் பாவமில்லாமலும் பக்தி இருக்குமா? (இதற்கு என்னிடம் ஒரு எளிய விடை உள்ளது. நீங்கள் அதைச் சொல்கின்றீர்களா என்று பார்க்கிறேன்.) ;-)
கந்த கோட்டம். நமக்கெல்லாம் சொந்த கோட்டம். சென்னையில் வடபழநிக்குப் பலமுறை போயிருக்கிறேன். இந்தப் பக்கம் திருப்போரூரும் அந்தப் பக்கம் திருத்தணியும் கூட பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் கந்த கோட்டம்? யாரிடம் கேட்டாலும் விடை கிடைக்கவில்லை. பாரீஸ் போய் போகனும்..எங்கயோ இடுக்குல இருக்குன்னு மட்டுமே சொல்லக் கேட்டேன்.
ஒரு நாள் மைத்துனனுடன் பைக்கில் ஏறிக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டோம். குறுகலான சந்து பொந்துகள். ஆனால் அதற்குள் ஒரு அழகிய கோட்டம். கோயிலுக்குள் நல்லதொரு தெப்பம். அதுவும் தூய்மையாக. வள்ளலார் வணங்கிய அந்தத் திருக்கோயிலில் நானும் முருகனை வணங்கினேன். மகிழ்ந்தேன்.
அடுத்து நேரம் கிடைத்தால் மீண்டும் செல்ல வேண்டும். முருகனடியவர்கள் ஒருமுறையாவது செல்ல வேண்டிய திருக்கோயில் அது.
சஷ்டி நாளன்று இந்தப் பதிவு தந்து உளத்தின் குளத்தில் வள்ளலாரின் ஞானமழை பொழிந்தமைக்கு நன்றி.
when the going gets tough, the tough gets going என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதன்படி வேறுவழியே இல்லை என்று நினைத்த பொழுதிலும் எப்படியாவது ஒரு வழி கண்டுபிடிக்கவே வேண்டும் என்ற வேகம் வரும். அந்த வேகத்தில்தான் அதுவரை பயன்படாதவை கூடச் சிறப்பாகப் பயன்படும். அதுதான் இங்கும் நடந்திருக்கிறது. அதை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
ஐயோ! கொடுமையே! இப்படியெல்லாமா இவருக்கு ஆக வேண்டும். இவர்கள் எல்லாரும் பெற்றவர்களா! சீச்சீ! தானாடாவிட்டாலும் சதையாடும் என்பார்கள். அந்த ஒரு பவுண்டு சதையும் இதயம் இவர்களுக்கு வைக்க மறந்தானே ஆண்டவன்!
இராகவன், பாவத்துடன் இல்லாத பக்தியென்றால் புண்ணியத்துடன் கூடிய பக்தி தானே?! :-) //
:-))))))))) குமரன் உங்கள் விடையைப் படித்து புன்முறுவலோடு சிரிப்பும் வந்தது. என்னைச் சிரிக்க வைத்த புண்ணியம் உம்மைச் சேர்வதாக.
பாவம் என்பதற்கு புண்ணியத்தின் எதிர்ப்பதம் என்ற பொருளில் நான் கேட்கவில்லை. பாவம் என்ற உண்மையான பொருளிலேயே நான் கேட்டேன். அதென்ன பாவத்துடன் கூடிய பக்தி என்று? பாவம் இல்லாமல் பத்தி உண்டா என்பது என் கேள்வி.
ஆனால் நீங்கள் வேறொரு அழகான நகைச்சுவைக் கோணத்திலும் சிந்தித்திருக்கின்றீர்கள். :-) தி.ரா.ச கூட பாவத்தை பாவமாய் ராகவன் எடுத்துக் கொண்டான் என நினைத்து விட்டார் போலும். :-)
நீங்கள் பாவம் என்ற சொல்லிற்கு மாற்றாக உணர்ச்சி அல்லது உணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் தெளிவாக எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று சொல்ல வந்தேன். உணர்வு பெருகிய பக்தி...பக்தி என்பதே அன்புதானே...உணர்வு பெருகிய அன்பிற்கான லிங்கம் என்று பொருள் சொன்னால் இன்னும் எளிமையாக அனைவரையும் அடையும் என்ற கருத்தில் நான் சொல்ல வந்தேன்.
குமரன்...நீங்கள் இடையோடு சடையனை இணைத்திருக்கிறீர்கள். முன்பு கடவுளும் காதலும் கருத்தினில் ஒன்று என்று முடியும் ஆசிரியப்பா எழுதினேன். அதை இடுவதற்காக தேடித் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. ஆகையால் இனியும் காலந்தாழாது பின்னூட்டம் இடுகிறேன்.
அந்தக் கவித கெடைச்சா கண்டிப்பாப் போடுறேங்க.
ஆனா ஒங்க கவிதைல பொருட் குற்றம் இருக்கே......அவளோட இடைய ஏன் எல்லாரும் பாக்குறாங்க? கடவுள் எல்லாருக்கும் பொது. அந்தப் பொண்ணோட இடை? தெரிஞ்சிக்கிறதுக்குக் கேக்குறேனய்யா!
கொத்சு...எனக்கு ஒரு சந்தேகம்...இந்தப் பதிவை ஏற்கனவே படிச்சிப் பின்னூட்டம் போட்ட மாதிரி "நெஞ்சம் மறப்பதில்லை"! என்ன நடக்குதுன்னு உண்மையச் சொல்லீருங்க. இது ஏற்கனவே போட்டதுன்னா....என்னோட பின்னூட்டம் எங்க? யாருக்கு பயந்துக்கிட்டு என்னோட பின்னூட்டத்த அழிச்சீங்க? உண்மையச் சொல்லீருங்க.
வாங்க ராம். உங்களைச் சந்திச்சதுல மகிழ்ச்சி. அன்னைக்கு சந்திப்பு இருக்குங்குற வெவரமே எனக்குத் தெரியாது. ஆகையால எனக்கு அது ஆச்சரிய சந்திப்புதான்.
உண்மைதான்.....லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நாந்தான் ஜிரான்னு உறுதி படுத்துறதுக்குள்ள ஒரு வழி ஆச்சுது. கடைசியா நம்பீட்டாங்க. கண்ணாடி முகத்துக்கு இவ்வளவு பெரிய மாறுபாடு கொடுக்கும்னு இப்பத்தான் புரிஞ்சது.
// வெட்டிப்பயல் said... // G.Ragavan said... படத்துல வெத்தலையப் போட்டேண்டி பாட்டும் மை நேம் இஸ் பில்லா பாட்டும் இருக்கா?
எல்.ஆர்.ஈஸ்வரி பாடுன...நினைத்தாலே இனிக்கும் சுகங்கள் ஷிக்கு ஷிக்கு ஷிக்குன்னு ஒரு பாட்டு வருமே...அது இருக்கா? // வெத்தலைய போட்டேண்டிதான் பயங்கர பாப்புளரான பாட்டு... "காய் கே பானு பனராஸ்"னு வரும். புது டான்லையும் இந்த பாட்டு இருக்கு. ////
இருக்கா.......ம்ம்ம்ம்....அடி மாமா மக ரதியே ஏஞ் சீனிச்சக்கரக் கிளியே....விறுவிறுப்பு இருந்தாச் சரி
// நினைத்தாலே இனிக்கும் பாட்டும் நல்ல ஃபேமஸான பாட்டுதான் "ஏ மேரா தில்"னு வரும். புது படத்துல இந்த பாட்டுக்கு கரினா வராங்க...
மை நேம் இஸ் பில்லாவும் இருக்கு... ஆனா அந்த அளவுக்கு இல்லை ;) //
அந்தப் பாட்டுகள்ளாம் காலத்தை வென்ற இசைக்காவியங்கள்....ஷிக்கு ஷிக்கு ஷிக்கு ஷிக்கெல்லாம் அப்படியே சதக் சதக்குன்னு கத்தி மாதிரி எறங்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தியில ஜுக்கா ஜூக்கா ஜூக்கான்னு முயற்சி செஞ்சாங்க.
// //பில்லா பாத்துட்டு அமிதாப் நடிச்ச டானே நல்லாயிருக்கலையே...ஷாருக்கான் நடிச்சத என்ன சொல்ல! சரி...நேரம் கெடச்சா பாக்கலாம்னு நெனைக்கிறேன். // இது உங்களுக்கு பிடிக்கறதுக்கு வாய்ப்பு குறைவு... உங்களை பார்த்தா ரொம்ப அமைதியா தெரியுது... போட்டோவை வைத்து சொல்றேன் ;) ////
என்னப்பா அப்படி எடை போட்டுட்ட.......நம்ம டேஸ்ட்டே தனி டேஸ்ட்டுதான்.
மிகவும் நல்ல பாடல் தி.ரா.ச. பாபநாசம் சிவனின் பாடல்கள் ஒவ்வொன்றும் எளிய தமிழில் சிறப்பாக இருக்கும். இதைப் பாடியவரும் சொற்களின் அழகைக் குலைக்காமல் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.
கொத்ஸ், "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்கிறார் வள்ளுவர். எதையெல்லாம் நீங்கினோமோ அதெல்லாம் நமக்குத் துன்பம் தராதாம். இப்பொழுதூ நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நமது பிறப்பு. அதனால்தான் "பிறவாத வரம் வேண்டும்" என்கிறார்கள் பெரியோர்கள். பிறவா இறவாப் பெம்மான்களான சிவனும் அவன் மகனும் அந்தப் பெருமையை நமக்களிக்க வல்லார் எனச் சைவம் சொல்கிறது.
பிறப்பு என்பது வேதனையோடுதான் தொடங்குகிறது. பத்து மாத இருட்டறை அடைப்பு. அங்கேயே கழித்தல். பிறக்கும் பொழுதும் குறுகிய வழியில் நெருக்கிப் பிறத்தல். பிறந்ததும் அழுகைதான். அப்படி அழுவதால் மூச்சு சீராகிறது என்று மருத்துவம் கூறுகிறது. சரி. அழுவதற்கு பதிலாக சிரிப்பதனால் மூச்சு சீராகிறது என்று இருந்திருக்கலாமே! இல்லையே! ஆகையால் முதலிலேயே கோணல். பிறகென்ன முற்றும் கோணல்தான்.
இப்பொழுது புரிகிறதா? பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டிய காரணம்?
ஒன்று புரிகிறது சிறில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. மதம். மொழி. நாடு என்று. இதில் ஒன்றுக்காக மற்ற அனைத்தையும் தியாகம் செய்யவும் தயங்காத கடமை வீரர்கள் அவர்கள். அடுத்தவன் தப்பு செய்யும் பொழுது அது இனிக்கிறது. ஆனால் வேண்டப்பட்டவர் செய்யும் பொழுது அதை மறைக்க எலும்பில்லா நாக்கு எல்லாப் பக்கமும் புரள்கிறது. வாழ்க மக்கள். வாழ்க உலகு. மனித குலத்திற்கு அழிவு மனிதனால்தான்.
(சரி...இப்படித் திரட்டிப் பதிவுகளா போட்டுக்கிட்டிருந்தா எப்படி? வழக்கமான சிறில் பதிவுகள் எங்கே? எங்கே? எங்கே?)
பாமக எதிர்க்கட்டியாகச் செயல்படப் போவதால் திமுக சிறுபான்மை அரசிற்கு ஆபத்து வருமென்று நினைக்கவில்லை. காங்கிரஸ் இன்னமும் திமுகவுடனேயே இருக்கிறது என நினைக்கிறேன்.
இப்பொழுது அவசரப்பட்டு ராமதாஸ் ஜெயலலிதாவோடு போவார் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் அதனால் அவருக்கு எந்த நன்மையும் இப்பொழுதைக்கு இல்லை. ஏனென்றால் அடுத்து எந்தத் தேர்தலும் அருகில் இல்லை. ஆகையால் அடுத்த தேர்தல் வருவதற்குள் ராமதாஸைப் பொருத்த வரையில் திமுக திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் திருந்தாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படிப் போவது திமுகவிற்கு நல்லதல்ல.
எப்படியோ...அதிமுகவை விரட்டியாச்சு...அடுத்து திமுகவைத்தான் விரட்டனும். எத்தனை நாள் இவங்க ரெண்டு பேருமே உக்காந்து உக்காந்து திம்பாங்க. அடுத்த ஆளு வந்து கொஞ்சம் தின்னுக்கிறட்டும்.
ஆனால் பெல்ஜியத்தில் வேறொரு அனுபவம். நான் தங்கியிருந்த வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு இலங்கைத் தமிழர் வீடு இருந்தது. அங்கே எனக்குத் தமிழ்ப்படங்கள் கிடைக்கும். அந்த வீட்டுப் பையன் என்னோடு நன்றாகப் பழகுவான். புதிதாக வந்திருக்கும் கேசட்டுகளை எடுத்துத் தருவான்.
பாரீசில் நடந்து போகையில் என்னுடைய நெற்றியில் எழுதி ஒட்டியிருப்பதைப் பார்த்து விட்டு "நீங்க தமிழா"ன்னு கண்டுபிடிச்சு வந்தார் ஒரு நண்பர். அவர் பெயர் வெங்கடேஷ். இப்பொழுது எங்கிருக்கிறாரோ. ரயில் சினேகம் போல ஆகிவிட்டது.
அதே பாரீசில் ஈபில் டவரில் எங்களைப் பார்த்து விட்டு ஒரு இஸ்ரேலியத் தம்பதிகள் ரொம்பவும் சந்தோசப் பட்டார்கள். எங்களோடு படமெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். இண்டியன்ஸ் இண்டியன்ஸ் என்று பெருமைப்பட்டார்கள். அமிதாப் பச்சனும் ஹேமாமாலினியும் நன்றாக இருக்கிறார்களா என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டதை தர்மேந்திராவிடமும் ஜெயாபாதுரியிடமும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தோம்.
அந்தப் பெண்ணின் தாத்தா பாட்டிகள் இந்தியாவில் இருந்தார்களாம். அந்தப் பெண்ணும் இந்தியாவில் மிகச்சிறிய வயதில் இருந்தார்களாம். அந்தப் பாசம்.
கோவி.கண்ணன் கருத்தத வழி மொழிகிறேன். ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி பாமகவைச் சுமந்தது தவறல்ல. பாமக மாறியதுதான் தவறு என்று சொல்லும் கருத்து ஏற்புடையதன்று. பேரம் எங்க படியுதோ...அங்கதான் கூட்டணி. இது திமுக அதிமுக ரெண்டுக்கும் பொருந்தும்.
இப்பொழுது பாமக விடும் அறிக்கைகளால் ஒன்றும் நேர்ந்து விடாது. குடுக்க வேண்டிய சூடான அறிக்கையைக் குடுத்து கவனத்தைத் திருப்பியாச்சு. இனிமே அமைதிதான் என்று நினைக்கிறேன். அதைத்தான் பாமகவும் திமுகவும் விரும்பும்.
என்னுடைய வாழ்த்துகள் உஷா. எழுத்து என்பது அலுக்குமா என்று தெரியவில்லை. எழுத்து என்பது சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது. அலுப்பது கடினம்தான். எழுத்து சலிப்பது எழுதும் அளவுக்கு சிந்தனை சிறக்காத பொழுது என்று நினைக்கிறேன்.
பிரபா, இந்தப் படத்தின் பாடலை...கங்கே கங்கே பாட்டுதான் தொலைக்காட்சியில் பார்த்தேன். மிகவும் மாறுபட்ட பாடல். பிடித்ததா பிடிக்கலையா என்றே உறுதியாகச் சொல்ல முடியாத பாடல். சேனலை மாற்றத் தோணியும் பார்த்துக் கொண்டிருப்பேன். பிறகு படக்கென்று மாற்றி விடுவேன். ஏனென்று இப்பொழுது புரிகிறது. :-))))
மலையாளத்திலும் இப்பொழுது ஓரிரண்டு படங்கள்தான் இப்படி வருகின்றன. நம்மைப் பார்த்துக் கெட்டுப் போய் விட்டார்கள் அவர்களும்.
மனச்சிதைவு நோய் பற்றி தமிழிலும் ஒரு அருமையான படமுண்டு. அக்கினி சாட்சி. அதை ஏற்றுக் கொள்வது பெரும்பாலானோர்க்கு மிகக் கடினம். அழகான பாட்டுகளும் உண்டு. கனாக்காணும் கண்கள் மெல்ல பாட்டு கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
கீழ்வானம் சிவக்கும் என்றொரு படம். அதில் ஒரு நோய் வரும். லிம்ஃபோசர்கோமா (lymphosarcoma) என்று. அப்படியொன்று இருக்கிறதா என்று நெட்டில் தேடினேன். படத்தில் சொல்வது போலவே அது பெருங்கொடிய நோய் என்று தெரிந்தது. அது போல நீங்களும் தேடியிருக்கின்றீர்கள். :-)
வலி........மிகக் கொடுமையானது. உடலுக்கு வலித்தாலும் மனதுக்கு வலித்தாலும் அது கொடுமைதான். அதைப் பெரும்பாலானோர் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார்கள் என்ற நிலையில் வலியை மறைப்பது என்பது காகிதத்தில் நெருப்பைப் பொட்டலம் கட்டுவது போல. காகிதத்தையும் பொசுக்கிக் காட்டிக் கொடுத்து விடும்.
குழந்தைகள் சொல்லும். "அம்மா கீழ விழுந்துட்டேன்." கீழே விழுகையில் அது அவமானமாகக் கருதி அதைத் தனக்குள்ளே பூட்டி வைத்திராமல் எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்று அம்மாவிடம் சொல்லும். சொல்லி முடித்த பிறகு ஒரு சின்ன நிம்மதி. அந்த சமயத்தில் குழந்தைக்குக் காது குடுத்துக் கேட்டாலே நல்லது.
அந்த வலியைத்தான் உங்கள் எழுத்தில் காண்கிறேன். தாங்கிக்கொண்ட முட்களை ஒவ்வொன்றாக எடுத்து எறிகின்றீர்கள். நல்லது. முட்களை எடுத்தெறியுங்கள் முதலில். முட்களாகப் போடுகிறாயே என்று கேள்வி எழுவதால் முட்களை எடுக்காமல் இருந்து விடாதீர்கள். தைத்த முட்களைப் பிடுங்காவிடில் சீழ்தான் கோர்க்கும். ஆகையால் முட்கள் தீரும் வரையில் காத்திருக்கிறோம்.
முத்துக்குமரன் சொல்வதும் சரிதான். சொல்லாமல் சொல்வதும் ஒரு கலை. அதுவும் விரைவில் உங்களுக்குப் பழகும் என்று நம்புகிறேன். என்னுடைய வாழ்த்துகள்.
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அனைவரையும் வாழ்த்திய கோவியாருக்கும் நன்றி பல.
என்னுடைய நன்றியை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன். தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை போல. சரியாக வரவில்லை. http://gragavan.blogspot.com/2006/10/blog-post_31.html
கோவியாரே...அடுத்த முறை நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
268 comments:
«Oldest ‹Older 201 – 268 of 268http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_116113752513402139.html
கோவி, ஆத்திகமும் நாத்திகமும் நீங்கள் வரையறுத்திருப்பது போல அத்தனை எளிது என்று சொல்ல முடியாது. உங்கள் வரையறைப்படி ஆத்திகம் என்பது கடவுளை நம்புவது. நாத்திகம் என்பது கடவுளை நம்பாமல் இருப்பது.
செல்வன் சொன்ன எடுத்துக்காட்டும் சிந்திக்கத் தக்கதே. நேற்று உண்மை என்று அறிவு நம்பியது இன்று உண்மையல்ல. முதல்முதலில் அணுவின் அமைப்பு என்று அறிவியல் நிரூபித்தது சரியென்றுதானே நம்பப்பட்டது. ஆனால் இன்றைய நிலை. நடுவில் அணுவின் அமைப்பு மாறுபட்டது என்று எத்தனை முறை நிரூபிக்கப்பட்டு விட்டது.
ஆக ஒரு மனிதனால் முழுமையான பகுத்தறிவாளனாகவோ இறைநம்பிக்கையாளனாகவோ இருத்தல் இயலாது. அப்படி ஆகும் நாளில் அவன் பகுத்தவாளனாகும் இறைநம்பிக்கையாளனாகவும் இருப்பான்.
பகுத்தறிவு மதமாகுமா? உண்மையான இறைநம்பிக்கை எப்படி தீதற்றதோ அப்படியே உண்மையான பகுத்தறிவு மதமாகாது. ஆனால்....இன்றைக்கு மதங்களால் தீமைகளும் உண்டாகிறது போல பகுத்தறிவுப் பாசறை என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் மதமாகத்ட்தான் செயல்படுகிறார்கள் என்றே நாம் நம்புகிறேன். ஒரு எதிர்ப்பைக் கூட நாகரீகமாகக் காட்டத் தெரியாத நிலையில் மதங்களும் பகுத்தறிவுகளும் அவைகளின் தேவைகளிலிருந்து விலகி விலகிப் போய்க் கொண்டேயிருக்கின்றன. குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்வது என்னைப் பொறுத்த வரையில் நகைப்பிற்குரியது. மதச்சார்புள்ள சர்வமதக் கட்சிகளுக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கும் வேறுபாடு ஒன்றும் கிடையாது என்பது என் கருத்து.
கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டாரும் இறைநம்பிக்கையற்றவராக இருந்தார். ஆனால் அவர் கொஞ்சமேனும் பகுத்தறிவோடு இருந்தார். அதாவது உலகாதயம். ஒரு நூலே எழுதியிருக்கிறார். பெயர் மறந்து போய் விட்டது.
மொத்தத்தில் அடுத்தவரை மதித்து, அடுத்தவரை இழிவாக நினைக்காமல் கருத்து வேறுபாடு இருந்தாலும் நட்பு வேறுபாடு பாராட்டாமல் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் எந்த மதமானாலும் எந்தக் கொள்கையானாலும் வீண்தான்.
http://kasadara.blogspot.com/2006/10/14.html
உண்மைதான். வெளிப்படையாகப் பேசிப் பழக வேண்டும். இது திடீரென்று வருவது மிகக் கடினம். சிறுவயதிலிருந்தே குழந்தைகளோடு நெருக்கமாகப் பழக வேண்டும். குறிப்பாக உங்கள் குழந்தையை நீங்களோ அல்லது உங்கள் குழந்தை உங்களையோ ஓடி வந்து அணைத்துக் கொள்ளும் அன்பான நெருக்கம் கண்டிப்பாக இருந்தாலே போதும். சரிதானா எஸ்.கே?
http://manaosai.blogspot.com/2006/10/blog-post_116109393829923910.html
இந்தச் சடங்கு தேவையில்லை என்பதே என் கருத்து. பிள்ளைகள் விரும்புவார்கள் என்று நான் கருதவில்லை. ஊர்ப்புறங்களில் ஒருவேளை இருக்கலாம். ஆனாலும் தவிர்க்கப்பட வேண்டியது.
யோகன் ஐயா சொல்வது போல சடங்கும் மொய்யும் விட்டதைப் பிடிப்பதுதானே.
உளவியல் பாதிப்பெல்லாம் வராமலிருக்க...பிள்ளைகளைக் கொண்டாட்டமாக வெளியில் கூட்டிச் செல்லலாம். அல்லது சும்மா விருந்தாளிகளை அழைக்கலாம். சடங்குகள் செய்யாமல் கூடிக் கொண்டாடுவது போல. அடுத்த தலைமுறை அதையும் குறைத்துக் கொள்ளலாம். தவறில்லை.
http://konjamkonjam.blogspot.com/2006/10/2.html
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
2. உன்னை நானறிவேன்
4. உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால்
5. தண்ணித்தொட்டி தேடி வந்த
6. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
7. புத்தம் புது பூமி வேண்டும்
8. உனக்கென்ன மேலே நின்றாய்
10. கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
http://konjamkonjam.blogspot.com/2006/10/2.html
பாட்டுகள் மட்டும் சொன்னேன். இன்னும் கூடக் கொஞ்ச தகவல்கள் உங்களுக்கு. எல்லாமே எனக்கும் பிடிச்ச பாடுங்கதான். உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்.
1. யாதும் ஊரே யாவரும் கேளிர் - மெல்லிசை மன்னர், நினைத்தாலே இனிக்கும், பி.சுசீலா, எஸ்.பீ.பி, கவியரசர்
2. உன்னை நானறிவேன் - இசைஞானி, வாலி, எஸ்.ஜானகி, குணா
4. உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் - திரையிசைத்திலகம், கவியரசர், டீ.எம்.எஸ், வேட்டைக்காரன்
5. தண்ணித்தொட்டி தேடி வந்த - இசைஞானி, வைரமுத்து, ஏசுதாஸ், சிந்துபைரவி
6. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - மெல்லிசை மன்னர், கவியரசர், டீ.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, ஆலயமணி
7. புத்தம் புது பூமி வேண்டும் - இசைப்புயல், வைரமுத்து, சித்ரா, திருடா திருடா
8. உனக்கென்ன மேலே நின்றாய் - மெல்லிசை மன்னர், வாலி, எஸ்.பீ.பி, சிம்லா ஸ்பெஷல்
10. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - மெல்லிசை மன்னர், வாலி, டீ.எம்.எஸ், படகோட்டி
http://konjamkonjam.blogspot.com/2006/10/1.html
// 2) பெரிய டேமேஜரும்,பெரும்பாலான இனிப்புகளின் அடிப்படையுமான நம்ம ராஜீயின் படைப்புகள் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிவலம் வரவிருக்கின்றன.தெலுங்கில் வரவிருக்கும் இந்தத் தொடர் ப்ளேக் மாரியம்மனைப் பற்றி இருக்கலாம் என்று நெம்பத்தந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
"....ரமணா...ரகுநாதா...பாற்கடல் வாசா...ஜானகி நேசா...." //
// பொன்ஸ் said...
2. ஜி ரா, அவுனா?!! ம்ம்ம்.. கலக்குங்க!!! //
// தேவ் | Dev said...
2. வாழ்த்துக்கள் ஜிரா //
அட முருகா! இதென்ன கூத்து...பொன்ஸ் தேவ் அவசரப்படாதீங்க. இதுல ஏதோ உள்குத்திருக்குன்னு நெனைக்கிறேன். மாரியம்மன் தமிழ்ப் பெயர். அத வெச்சுச் சுந்தரத் தெலுங்கினில் வசனம் நான் எழுதுனா மொத்த ஆந்திரம் ஆத்திரம் ஆகி என்னைத் தேடி வந்து அடிப்பாங்க.
லாஜிக்கலா நான் ரெண்டு கேள்வி கேக்குறேன்.
1. இனிப்புகளுக்கு அடிப்படை சர்க்கரையா, வெல்லமா, ஜிராவா? எல்லா இனிப்பும் இனிப்பல்ல ஜிரா கலந்த இனிப்பே இனிப்புன்னு சொல்ல முடியாதே. ஆக இதுல வெல்லமும் சேரலாம் இல்லியா?
2. என்.டி.ராமராவ் தான் கிருஷ்ணரா ராமரா நடிச்சிருக்காரு. அதான் ரமணா ரகுநாதா பாற்கடல் வாசா ஜானகி நேசான்னு பாட்டு வேற போட்டிருக்காரு. அப்ப அவரு ராவுன்னு தெரிஞ்சி போச்சு. அந்த வெல்ல ராவ் யாருன்னு நம்ம எல்லாரும் கண்டுபிடிக்கனும்.
http://konjamkonjam.blogspot.com/2006/10/2.html
மூணாவது பாட்டு "புது ரோட்டுலதான்" பாட்டா?
http://gragavancomments.blogspot.com/2006/09/2006.html
ஜோசப் சார் எனக்குப் பட்டினத்தடிகள் வாழ்க்கை நினைவிற்கு வருகிறது. பல் துலக்குவது முத்துப் பொடி. வாய் கழுவப் பன்னீர். வேளைக்கு அறுசுவை உணவுகள். வாதுமைப் பருப்பை அரைத்துப் பன்னீரில் வெல்லமும் கலந்து பிசைந்து அதனை உருட்டி நெய்யில் பொரித்தெடுத்து மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் தங்கத் தட்டில் உண்ணக்கூடிய அளவிற்குச் செல்வம். அரிசி மூட்டிகள் வந்தால் வைக்க இடமில்லையெனில் வைரமூட்டைகளை வீதிக்கனுப்பும் பெருந்தனம். அவருக்கு ஒரு நாள் ஈசன் உணர்வித்தான். "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே" என்று மகன் வாயினிற் சொல்லச் சொல்லி.
அதற்குப் பிறகு அவர் பட்டினத்தாராக மாறினார். அவருடைய நிலையைக் கண்டு சோழனிடம் போய்ச் சொன்னார்கள். சோழன் வெகுண்டான். நாட்டின் பெருஞ் செல்வந்தன் இப்படி ஆவதா என்று!
கோயில் மண்டபத்தில் உட்கார்ந்திருந்த அவரிடம் நேரடியாக வந்து நின்றான். இப்படி ஆனதால் என்ன பயன் என்றும் கேட்டான். அப்பொழுது அடியவர் சொன்னார். "வழக்கமாக மன்னன் உன்னைப் பார்க்கையில் நீ அமர்ந்திருக்க பிறகே நான் அமரும் நிலை. ஆனால் இன்று நான் அமர்ந்திருக்க நீ நின்று கொண்டிருக்கும் நிலை." என்றாராம்.
http://gragavancomments.blogspot.com/2006/09/2006.html
இன்னுமொன்று சுப்பையா அவர்கள் சொன்னது போல ஆறடி கூடக் கிடையாது. பொசுக்கி சாம்பலாக்கி (நீறு) விடுவார்கள். அதனால்தான் திருநீறு பூசும் வழக்கமே. திருநீறு பூசுகையில் நிலையாமையே உண்மை என உணர வேண்டும். அதுதான் தத்துவம்.
http://sethukal.blogspot.com/2006/10/blog-post_18.html
நல்லாயிருக்குய்யா கத. அடுத்த பாகத்துக்கு ரொம்ப ஆவலாக் காத்திருக்கேன்.
நெறைய சசுபெனுசுகள உள்ள பொதிச்சிருக்கீங்க....எப்படி எடுத்து விடுறீங்கன்னு பாப்போம்.
http://koodal1.blogspot.com/2006/10/blog-post_16.html
வாழ்த்தெனச் செப்ப
வாயுண்டு
உளமும் உண்டு
உளமுண்டு செப்பிய
முந்தியன முடித்திட
வழி செய்தால்
பிந்தியன நன்றாகும்!
விருப்பம் உமது!
செயலும் உமது!
http://kaipullai.blogspot.com/2006/10/blog-post_19.html
முதல்ல தீபாவளி நல்வாழ்த்துகள்.
அப்புறம்..படமெல்லாம் தெளிவா நல்லாயிருக்கு. என்ன கேமரா? எத்தன பிக்செல்?
எங்காபீஸ்லயும் போகா கெடைக்கும் காலைல. வாங்கிச் சாப்பிடுவாங்க. நமக்கு சாதா தோசை வித்தவுட் ஆயில்தான்.
அந்த மைனாவை இந்தப் பாடு படுத்தீருக்கீங்க. மைனாப்பட கைப்ஸ்னு ஒரு பட்டம் ஒங்களுக்கு. வெச்சுக்கோங்க. :-)
மால்குடி டேசா? சுதர்சனன் விட்டா தொடரே எழுதுவாரு....சின்னப்புள்ளைல ஒரு டீவி தொடர் வரும்....science fiction...பசங்களா இருப்பாங்க....எதிர்காலத்துக்குப் போறது...அது இதுன்னு வரும்...பேரு தெரியலை. அதே போல ஏமமாலினி நடிச்ச நூப்புரு. இந்த ரெண்டுக்கும் டீவீடீ, வீசிடி கெடைக்குங்களா? அப்படியே fairy tale theatresன்னு ஞாயித்துக்கெழம போடுவாங்களே...அதுக்கும் வேணும்.
http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_19.html
பெரும்பாலான இன்றைய கவிஞர்களைப் பற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கவிதை. யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். கவிஞர்கள் நமது இலக்கிய ஆதாரமான மரபின் மீதும் பார்வை திரும்ப வேண்டும் என்று எழுதியது.
உரைநடையினை
உடைத்துப் போட்டு
உடைப்பெடுக்கிறதே
தன் கவிதையென்பார்
ஓசையில்லாமல்
ஓசை நயத்தையும் அழிப்பார்
அசைகளைப் பாடல்களில்
வேர் நுனியோடு
அசைத்தறுத்தெடுப்பார்
சீர்களைக் கவிதையில்
சீர் குலைத்து விட்டு
சீர்மை மிகு பாடலென்பார்
வெண்பாவில்
ஒன்றேனும் எழுதியிராமல்
பெண் பாவை
அங்கத்தையே பெரும்பாலும்
தங்கமாய்ச் சொல்லிக்
கவி சமைப்பார்
ஆசிரியர் மேல்
என்ன சினமோ
ஆசிரியப்பாவின்
இலக்கணம் தெரியாமல்
பிலாக்கணமாய்
வரிகளைத் தொகுப்பார்
உவமையையும்
உருவகத்தையும்
உருத் தெரியாதமற்
சிதைத்திருப்பார்
எளிமை என்பார்
அழகு என்பார்
அருமை என்பார்
இதுவே புதுமையும் என்பார்
ஒரு பாவுக்கேனும்
இலக்கணம் தெரியாதெனவுரையார்
வினவிப் பாருங்களேன்
போடா பழைய பஞ்சாங்கமேயென
பொரித்தெடுப்பார் - அவரே
இருபத்தோறாம் நூற்றாண்டில்
தமிழ்க் கவிஞர்!
இன்றைக்குப் பிரபலமான பெரும் புதுக்கவிஞர்கள் எல்லாரும் மரபும் அறிந்தவர்கள் என்பதைப் பெரும்பாலானோர் மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கே இந்தக் கவிதை.
http://ennulagam.blogspot.com/2006/10/8.html
முருகா! கேட்கவே வருத்தமாக இருக்கிறது. பிள்ளை வளர்ப்பில் ஏற்பட்ட சிறு தவறு எப்படிப்பட்ட விரிசலை உண்டாக்கியிருக்கிறது....ஆண்டவன் அருளால்...தப்பிப் பிழைத்து நிம்மதியாக இருக்க ஒரு இடம் கிடைத்திருக்கிறதே...
http://balabharathi.blogspot.com/2006/10/blog-post_116123190818167410.html
சென்னையில மழையா! என்னங்க இது....பெங்களூர்ல மழையே இல்லங்க....
சரி...சென்னையில ஒழுங்கா மழ பேஞ்சா எனக்கும் சந்தோசந்தான். அப்படியே பெங்களூர்லயும் ரெண்டு பேஞ்சிக்கிறட்டும்.
வீடியோவ வீட்டுல போய்ப் பாக்குறேன்.
http://dharumi.blogspot.com/2006/10/181-bloggers-meet-at-madurai-2.html
// ஒரு பின்குறிப்பு:
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் ஒரு முடிவெடுக்கிறேன் - எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!! //
ஏங்க? புதுப்படம் போடப் போறீங்களா? அதுவும் கலர்ப் படமா!
http://poonspakkangkal.blogspot.com/2006/10/blog-post_17.html
ரொம்பவே க்யூட். அழகுதான் போங்க.
அப்புறம் இந்த டெம்பிளேட்டு..........
http://konjamkonjam.blogspot.com/2006/10/3.html
1. நாம் இருவர் (1947) - இதுதான் என்று நினைக்கிறேன்.
2. அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்
3. தெரியலையே...
4. நல்லதோர் வீணை செய்தே, தீர்த்தக்கரையினிலே - வறுமையின் நிறம் சிகப்பு - மெல்லிசை மன்னர்
சிந்து நதியின் மிசை நிலவினிலே - மெல்லிசை மன்னர்
வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் - மெல்லிசை மன்னர் - கௌரி கல்யாணம்
இன்னொரு பாட்டு கூட மெல்லிசை மன்னர் இசையில் இருக்கு. பி.சுசீலா பாடியது....நினைவுக்கு வர மாட்டேங்குது.
சொல்ல வல்லாயோ கிளியோ சொல்ல நீ வல்லாயோ வல்ல வேல் முருகன் - இளையராஜா - வரலட்சுமி பாடியது - கவரிமான்
பாரதி - எல்லாரும் சொல்லீட்டாங்க
ஏ.ஆர்.ரகுமான் - சுட்டும் விழிச்சுடர்தான்
5. இயற்றலும் ஈட்டலும்னு நெனைக்கிறேன்
6. பாடல்கள்
1. காற்றுக்கென்ன வேலி - மெல்லிசை மன்னர், கவியரசர், எஸ்.ஜானகி
2. மலர்ந்தும் மலராத - டீ.எம்.எஸ், பி.சுசீலா, மெல்லிசை மன்னர், கவியரசர்
3. புது வெள்ளை மழை - உன்னி மேனன், சுஜாதா - ரோஜா
4. அண்ணே அண்ணே சிப்பாயண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சுண்ணே
5. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
6. என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
7. புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
9. பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
http://vedhagamam.blogspot.com/2006/10/blog-post_23.html
இதத்தான ஓவ்வொரு ஊர்லயும் சொல்லீருக்காங்க. ஆனா யாரு கேக்கா? அவன் கருத்து நம்ம கருத்தோட ஒத்துப் போகலைன்னா அவன் விரோதியாகிப் போறானே இப்பல்லாம். அவன எப்படியாவது மட்டந்தட்டி நம்ம கருத்துதான் சரியின்னு மண்டையில ஓங்கிக் குட்டிச் சொல்லீட்டு...அவனப் பேச விடாமச் செஞ்சிட்டா.......ஒரு சந்தோசம் வரும் பாருங்க...அது நீங்க சொல்ற வழியில வராதே. :-(
http://balabharathi.blogspot.com/2006/10/7.html
மௌனம் என்பது
சம்மதத்தின் அறிகுறி
பொருள் சொன்னது
இன்னமும் சம்மதம் கிடைக்காதவன்
http://kaipullai.blogspot.com/2006/10/blog-post_19.html
// //மால்குடி டேலைப் பத்தி சுதர்சன் கோபாலைக் கேட்டா கரீட்டா சொல்லுவாரு.//
என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே? //
பண்ணீட்டாலும்............ஒடனே நாலு பதிவு போட்டுறப் போறீரா என்ன?
// //G.Ragavan said...
மால்குடி டேசா? சுதர்சனன் விட்டா தொடரே எழுதுவாரு//
எய்யா...எழுத சோம்பேறித்தனப்பட்டு கிட்டு ஓமப்பொடியைச் சுத்தீட்டு இருக்கேன்;தொடர எல்லாம் எழுதச் சொன்னா எப்பிடி?? //
அப்ப நீங்க எழுதிக்கிட்டிருக்குற பெங்களூர் பிறந்த கதை தொடரை எப்போ வலையேற்றம் செய்யப் போறீங்க? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...சொல்லீருக்கக் கூடாதுல்ல... :-)
http://kaipullai.blogspot.com/2006/10/blog-post_19.html
// October 20, 2006 12:23 PM
கைப்புள்ள said...
//அப்புறம்..படமெல்லாம் தெளிவா நல்லாயிருக்கு. என்ன கேமரா? எத்தன பிக்செல்?//
நன்றி. Canon Digital Ixus 750. 7.1 Mega Pixel. //
பிரமாதம் மைனைப்பட கைப்சே!
// //எங்காபீஸ்லயும் போகா கெடைக்கும் காலைல. வாங்கிச் சாப்பிடுவாங்க. நமக்கு சாதா தோசை வித்தவுட் ஆயில்தான்.//
போகாவும் வயித்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத ஆகாரம் தாங்க. இந்தூர்ல இருந்த ஒன்னரை வருஷம் போகா சாப்பிட்டுத் தான் உயிர் வாழ்ந்தேன். //
அப்படியா? நான் இன்னமும் போகப் பக்கம் போகா ஜிரா-தான்.
// //அந்த மைனாவை இந்தப் பாடு படுத்தீருக்கீங்க. மைனாப்பட கைப்ஸ்னு ஒரு பட்டம் ஒங்களுக்கு. வெச்சுக்கோங்க. :-)//
ஆஹா :). தங்கள் சித்தம் என் பாக்கியம். //
மேல பாருங்க...ரெண்டு வாட்டி அந்தப் பேர வெச்சி ஒங்களக் கூப்பிட்டிருக்கேன்.
// //சின்னப்புள்ளைல ஒரு டீவி தொடர் வரும்....science fiction...பசங்களா இருப்பாங்க....எதிர்காலத்துக்குப் போறது...அது இதுன்னு வரும்...பேரு தெரியலை. //
அந்த தொடர் பேரு இந்திரதனுஷ். ரொம்ப நல்லாருக்கும். எனக்கும் ரொம்ப புடிச்ச தொடர் அது.//
அதானய்யா...இந்திரதனுசு...சொல்லீட்டீரே....ஒம்ம அறிவும் அழகும்....அடடா! அப்படியே கன்னி வேட்டை படத்துல வர்ர கமலப் போலவே இருக்கு :-)
// //அதே போல ஏமமாலினி நடிச்ச நூப்புரு. இந்த ரெண்டுக்கும் டீவீடீ, வீசிடி கெடைக்குங்களா? அப்படியே fairy tale theatresன்னு ஞாயித்துக்கெழம போடுவாங்களே...அதுக்கும் வேணும்//
கூகிளில் தேடிப் பார்த்தேன். மத்ததைப் பத்தி தெரியலை. ஆனா ஃபேரி டேல் தியேட்டர் டிவிடி அமேசான்.காம் தளத்தில் கிடைக்கிறது. //
ஐயா.....அந்த லிங்க்கக் குடுங்கையா....எங்க பய ஒருத்தன் அடுத்த மாசம் அமெரிக்காவுல இருந்து வர்ரான்...அவங்கிட்ட வாங்கியாரச் சொல்லனும். லிங்க்கு..லிங்க்கு.
நூபுர் நாடகத்துல எல்லாம் இந்திதான் பேசுவாங்க. நமக்கு ஒன்னும் புரியாது. ஆனா நடுநடுவுல ஏமமாலினி "அம்மா உப்புமா கொண்டா"...."ஐயோ கீழு விழுந்திருச்சு பாரு"ன்னு எண்ணி ஒரே ஒரு வசனம் ஒவ்வொரு எபிசோடுலயும் பேசுவாரு. அதுக்காக் காத்திருந்து பாப்பேன்.
http://koodal1.blogspot.com/2006/10/blog-post_16.html
// விருப்பமும் எமதன்று
செயலும் எமதன்று
நெருநல் இருந்தார்
இன்றில்லை எனும்
பெருமை உடைத்தாம்
உலகில் செய்யும்
கருமமும் அவனே
காரணமும் அவனே //
அனைத்தும் அவனே
அனைத்திலும் அவனே
ஆயினும் காலைப் பொழுதில்
பல் துலக்கத் தொடங்கி
முடிக்குமுன்னே காப்பி குடிப்பீரோ!
குளியலைத் தொடங்கி
முடிக்குமுன்னே ஆடை புனைவீரோ!
முதலில் தொட்டதைப்
பாதியில் விட்டதை
முடித்து வைப்பதை
உமக்கும் அவன் சொல்லட்டும்!
http://koodal1.blogspot.com/2006/10/blog-post_16.html
// குமரன் அய்யா,எஸ் கே அய்யா,ராகவன் அய்யா,மற்றும் KRS அய்யா,
நீங்கள் அனைவரும் இங்கு உரையாடுவதை படித்து சுவைக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்த இறைவனுக்கு நன்றி.
பாலா //
அய்யாவா? ஐயோ! ஏன் பாலா? :-)))))))))))))))
http://thulasidhalam.blogspot.com/2006/10/t-d-2.html
// இவுங்க மூணுபேரைப் பத்துன ஒரு உண்மை: (ஜவ்வரிப்) பாயாசம் பிடிக்காது. //
என்னது ஜவ்வரிசிப் பாயாசம் பிடிக்காதா!!!!!!! இவங்க பாக்க வேண்டிய படம் டௌரி கல்யாணம். கிஷ்மூவோட...முந்திரிப்பருப்பு முழுசு முழுசா போட்ட ஜவ்வரிசிப் பாயாசம்........
டீச்சர்....மூனுநாள் ஊர்சுற்றல்ல இருந்ததால பள்ளிகூடத்துக்கு வரமுடியலை. தீபாவளிக்குப் பள்ளிகூடம் லீவுன்னு ஊருக்குப் போயிட்டேன் டீச்சர்.
http://dharumi.blogspot.com/2006/10/183-bloggers-meet-at-madurai-3.html
// குமரன் (Kumaran) said...
நம்ம மாதவன் எப்ப கண்ணாடி போட்டார்? இதுவரை தெரியாதே? //
குமரன் அந்தக் கண்ணாடியோட அமைப்பைப் பாருங்க...மாறுபட்ட விதமில்லையா.....எப்படியிருக்கும்னு ஆசையா வாங்குனது....ஆனா கண்ணாடி முகத்தோற்றத்தையே மாத்தீருது. பெங்களூர்ல பஸ்சுல ஆபீசுக்கும் போகையில வெயில்ல கண் கூசுது. சென்னையில இருக்குற டாலர்ஸ் அண்டு பவுண்ட்ஸ்ல நல்ல கலர் கண்ணாடிக இருக்கு. அடுத்த வாட்டி போகும் போது வாங்கனும்.
அதுவுமில்லாம மூனு நாளும் தொடர் அலைச்சல். அளவுக்கு அதிகமாவே சாப்பாடு...அதுவும் கூட தோற்ற மாற்றத்துக்குக் காரணமா இருக்கலாம்.
http://madhavipanthal.blogspot.com/2006/10/blog-post_21.html
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ரவி. மகிழ்ச்சியிலெல்லாம் பெரிய மகிழ்ச்சி அடுத்தவரை மகிழ்த்திப் பார்ப்பதுதான். அதுவும் தீபவொளித் திருநாளில் நீங்கள் செய்திருப்பது மிகுந்த சிறப்பு. பண்டிகை என்பது இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. இருப்பவர்கள் என்றால் பணம் மற்றும் உறவு. இல்லாதவர்களுக்கும் உண்டு என்று நிரூபித்திருக்கின்றீர்கள். இது தொடர வேண்டும். கண்டிப்பாக. என்னுடைய உளங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்.
http://dharumi.blogspot.com/2006/10/183-bloggers-meet-at-madurai-3.html
// Muse (# 5279076) said...
மீசையில்லாத ராகவனை முதலில் கண்டறிய இயலவில்லை. மீசையில்லாமலும் ஜம்மென்று இருக்கிறார். //
ஐயோ மூஸ், என்னைய மீசையோட எப்ப பாத்தீங்க? மீசையோட எம்முகம் எப்படியிருக்கும்னு எனக்கே மறந்து போச்சே!
// Dharumi said...
ஜிரா,
//மூனு நாளும் தொடர் அலைச்சல். அளவுக்கு அதிகமாவே சாப்பாடு...//
அப்படியிருந்தும் நீங்க எப்படி சார், இப்படி இருக்கீங்க? (அப்டின்னு கேக்கணும?) :) //
எப்படீங்க? என்ன சொல்ல வர்ரீங்கன்னே புரியலையே! தெளிவாச் சொல்லுங்க சாலமன் பாப்பையா சார்...நோ நோ தருமி சார். புதுப் போட்டோவுல சா.பா மாதிரியே இருக்கீங்க?
http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_25.html
விஜயகாந்த் இவ்வளவு ஓட்டுகள் வாங்குவார்னு நெனைச்சே பாக்கலை. அவர் அரசியலுக்கு வர்ரதும் வராததும் அவருடைய விருப்பம். ஆனால் அரசியல்ல நிலைக்கிறது மக்களோட விருப்பம். அந்த விருப்பம் பொதுவா எல்லாருக்கும் இல்லைன்னாலும் கொஞ்ச பேருக்கு இருக்குறது தேர்தல் முடிவுகள்ள தெரியுது. போகப் போக என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்! நடக்க நடக்க பாப்போம். பெரிய கட்சியா இவரால வளர முடியுங்குறத இன்னமும் என்னால நினைக்க முடியலை. அதிமுக கூட்டணிக்கு நல்ல தண்டனை கொடுத்தாச்சு. அடுத்து திமுக கூட்டணிக்கும் குடுக்கனும். I couldnt support DMK just because I dont support ADMK.
இரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது. நீங்க சொன்னதுதான். அது குழலிக்கும் ஜிராவுக்கும் கூடப் பொருந்தும். ஆகையால வெறும் பத்திரிகை ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது ரொம்ப நாளைக்கு ஓடாது. திமுக, அதிமுக...இந்த ரெண்டுமே ஆதரவு எதிர்ப்பு ரெண்டையும் பாத்து தோத்து ஜெயிச்சி வந்திருக்கு.
விஜயகாந்த்தின் அரசியல் தப்புன்னு சொல்லலாம். ஆனால் அரசியல் பிரவேசமே தப்புன்னு சொல்லக் கூடாது. ஆனா உங்களுடைய கடந்த சில விஜயகாந்த் பதிவுகள் படிக்கிறப்போ அவர் மேல உங்களுக்கு ஒரு வெறுப்பு இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. அப்படியிருந்தால் அது உங்கள் விருப்பம். தொப்புள்ள பம்பரம் விட்டவங்க அரசியலுக்கு வரலாமான்னு கேக்குறது சரியென்று தோன்றவில்லை. அரசியலமைப்புன்னு பாத்தா அது எல்லா இந்தியக் குடிமகன்களுக்கும் எழுத்தளவிலாவது அந்த உரிமையைக் குடுத்திருக்கிறது. அதை நாம் மறுக்கக் கூடாது.
தொப்புளில் பம்பரம் விட்டால் என்ன? ரெண்டு திருமணம் செய்தவர், கற்பழித்தவர், திரைப்படத்தில் கதாநாயகிகளின் கைகளைப் பிசைந்தவர், நடிகையாக வந்து ஆடியவர், திருடியவர், ஜாதிப் பெயர் சொல்லிக் கட்சி வைத்திருபப்வர் இவர்களெல்லாம் வருகையில் இவரும் வரலாம். ஆனால் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது அவரவர் நடவடிக்கையைப் பொருத்தே இருக்க வேண்டும்.
என்னுடைய ஆதரவு இன்றைய திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயகாந்த் இவர்கள் மூவருக்கும் இல்லை. என்னோட ஆதரவு எங்கிட்டெயே இருக்கு. யாராவது வேணும்னா சொல்லுங்க. :-)
என்னோட சாதி, மதம், ஊரு, ஒறவு, தொழில், ரசனை உள்ளவங்களா இருந்தாச் சரி. குறிப்பா நெறைய கத புத்தகம் படிக்கிறவங்களா இருந்தாச் சரி. என்னுடைய இரத்தமும் அடர்த்தியானதுதான். :-)))))))
http://dharumi.blogspot.com/2006/10/184-bloggers-meet-at-madurai-4.html
அக்கிரமம். அநியாயம்...அநீதி....எங்கே என் பக்கத்திலிருந்து பொவொண்ட்டோ பாட்டில்? அதைப் படத்தில் காணோமே!
நண்பர்களுடனான சந்திப்பு மிகவும் அருமை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்று மட்டும் இப்பொழுது தோன்றுகிறது.
அப்புறம்...அந்த அதிரசம்...அடடா! ஊர்ப்பக்கத்து அதிரசம்...உள்ள மெத்துமெத்துன்னு மேல தொலி மட்டும் மெல்லிசா...அடடா! நல்ல வேள நான் கெளம்புறதுக்கு முன்னாடியே கிடைச்சிருச்சி. :-)
http://nunippul.blogspot.com/2006/10/blog-post_116140515078420759.html
இனிய தீபாவளி வாழ்த்துகள் உஷா. இந்த முறை நீங்கள் என்ன பலகாரம் செய்தீர்கள்? கோதுமை அல்வாவா? அதிரச உளுந்து வடையா?
அதிரசம்ங்குற பேர்லயே இருக்குது அதோட ருசி. ஊர்ப்பக்கம் சுடுவாங்க.சிறுசு. நடுத்தரம். பெருசு. ஓட்ட போட்டது. போடாததுன்னு. தீபாவளிக்குன்னே உள்ள பண்டம் அது. உள்ள மெத்துன்னு இருக்கனும். தொலி தனியா வரனும். அதுதான் சிறப்பான அதிரசம். கிராண்டு ஸ்வீட்சில் கிடைக்கிறதே. நானும் முன்பெல்லாம் சென்னைக்குப் போகும் பொழுதெல்லாம் வாங்குவேன். இப்பொழுது இனிப்புகளையே குறைத்து விட்டதால்....அதிரசமும் குறைந்தது.
http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_25.html
// பத்திரிக்கைகளும் சில பதிவர்களும் விஜயகாந்த் ஊழலுக்கு எதிரி(ஆனால் ஓட்டு போட மட்டும் அவங்க கட்சிக்காரங்க காசு தருவாங்க), சாதிக்கு எதிரி(ஆனால் 14பேர் விஜயகாந்தின் நாயக்கர் சாதிக் காரங்க மாவட்ட செயலாளரா இருப்பாங்க) என்று அள்ளிவிட்டுக்கொண்டிருப்பதை போல நானும் செய்யாமல் அவரின் செயல்களை விமர்சிக்கிறேன், அது தனிப்பட்ட வெறுப்பு என்றால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை, //
எனக்கு அப்படித் தோன்றுகிறது. அதனால்தான் அப்படிச் சொன்னேன். நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் சரி. இந்தக் காரணங்களின் படிப் பார்த்தால் எந்த அரசியல் கட்சியும் தப்பாதே! எல்லாக் கட்சியையும் இழுத்து மூட வேண்டியதுதான். பாமக, அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் உட்பட. ஆனாலும் நீங்கள் ரெட்டை மாட்டு வண்டியில் பொதுவாக ஒரு மாட்டையே அடிப்பது போன்ற தோற்றம் இருப்பதால் எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். திமுக வன்முறைப் பதிவில் கூட இந்த அளவிற்கு காரம் இருக்கவில்லை. அங்கேயும் சொன்னேன். எல்லாக் கட்சியும் அப்படித்தாங்க. திமுக மட்டும் விலக்கா என்று. இங்கேயும் அப்படித்தான் சொல்கிறேன்.
// ஆனாலும் ரஜினிகாந்த்தா விஜயகாந்தா என்றால் நான் விஜயகாந்தின் பக்கமே இருப்பேன் ரஜினியைவிட விஜயகாந்த் ஆபாத்தானவர் அல்ல என்று நான் கருதுகிறேன்., நான் அளித்த தகவல்களில் என் விமர்சனத்தில் எங்கே தவறு என்று சொல்லுங்கள் நான் ஒத்துக்கொள்கிறேன். //
சரி எது தப்பு எதுன்னு நான் சொல்றது சரியா இருக்குமா தப்பா இருக்குமான்னு தெரியலையே. எல்லாம் தெரியும்னு நெனச்சா இதுதான் சரி...அதுதான் சரின்னு சொல்லலாம். தப்பு கண்டுபிடிக்கிறதுக்காக உங்க பதிவைப் படிக்கலைங்க. என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரிஞ்சிக்கிட்டு அதுக்குத் தொடர்பான என்னுடைய கருத்தைச் சொல்லத்தான் நான் வந்தேன். நமக்கெதுக்குங்க...நான் சரி நீ தப்பு விவகாரமெல்லாம்.
http://vavaasangam.blogspot.com/2006/10/2.html
ஹி ஹி மொத பெஞ்சுல உக்காந்து நிம்மதியா தூங்குனீங்களா!!!!!!! நானும் அப்படித்தான். பெரும்பாலும் மொத பெஞ்சு பசங்க நல்ல பசங்க. அதுக்கேத்த மாதிரி அமைதியா இருப்போம். அதுனால நெறைய நன்மைங்க இருக்குல்ல.
காந்தி...உப்புச்சத்தியாகிரகம்....கலெக்ட்டர்....ரசித்தேன்.
http://kelpidi.blogspot.com/2006/10/blog-post.html
இந்தப் படத்தில் எனக்கு இந்தப் பாடலை விட மற்ற பாடல்கள் எல்லாம் மிகவும் பிடிக்கும்.
இந்தக் குடிக்காதே...கொல்லாதே..தின்னாதே...கடிக்காதே இதெல்லாம் வைரமுத்து ஸ்பெஷல்.
இந்தப் பாடலில்......தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்......இந்த வரிகளைக் கேட்கையில்...அடடா! தேவதை சோப்புப் போட்டுக் குளிக்கிறதில்லை போல...இல்லைன்னா...அவ்வளவு சோப்பக் குடிச்சதுக்கு வயித்தக் கலக்கியிருக்க வேண்டாமான்னு தோணும்.
http://kalaaythal.blogspot.com/2006/10/015.html
ஹா ஹா ஹா
நீண்டது என்பது
குறுகும் பொழுது
வெண்மையின் நிறம்
கருமையாகும் தூரப் புள்ளியில்
அதிநவீன மின்சார ரயிலின்
மேல் மாடியில்
நான்கு வீடுகள் வாடகைக்கு!
இந்தக் கவிதையை நானும் கவிஞருக்குச் சொல்லிக் காட்ட விரும்புகிறேன்.
http://muruganarul.blogspot.com/2006/10/011.html
தேடிப்பிடித்து பாட்டுக்குத் தக்க படம் போட்டிருக்கின்றீர்களா சிபி :-)
மிகவும் அருமையான பாடல். இந்தப் பாடலுக்கு இசையமைத்ததும் டீ.எம்.சௌந்தரராஜன் அவர்கள்தான்.
http://aaththigam.blogspot.com/2006/10/13.html
சஷ்டிக்குத் தக்க பாட்டொன்று எஸ்.கேயிடமிருந்து. மிகுந்த மகிழ்ச்சி.
அப்படியிப்படி என்று கந்தன் கதையைக் கணுப்போலச் சொல்லி விட்டீர்களே! :-) விரித்தும் சொல்லுங்களேன். கேட்கிறோம். (ஆசை பேராசையில்லை என்று தெரியும்)
இந்தப் புதுக்கவிதை போல விளக்கம் சொல்லும் முறைமையும் சுவையாக இருக்கிறது.
கந்தப் பெருமான் நமக்கெல்லாம் சொந்தப் பெருமான். அவனருளால் உலகம் உய்ய வணங்குகிறேன்.
http://elavasam.blogspot.com/2006/10/blog-post_24.html
அடடா! இதுவும் இப்படியா! இப்ப என்னதான் செய்றது........பேசாம அந்தக் காலம் போல சோத்து மூட்டையக் கட்டிக்கிட்டு நடந்து போக வேண்டியதுதான்......இன்னும் அம்பது வருசத்துல அதுதான் வரப்போகுதுன்னு நெனைக்கிறேன்.
http://thulasidhalam.blogspot.com/2006/10/t-d-3.html
டீச்சர்........டேபிள்ள வெச்சிருக்குற ஐட்டங்களைப் பாத்தா கோயில் மடப்பள்ளி ஐட்டங்கள் போலத் தெரியலையே...ஏதோ ஆஸ்த்திரேலியா சரவணபவன்ல சாப்பிட்ட மாதிரி இருக்குது.
அது சரி.......அத்தன முருகன்களைப் பாத்தீங்களே.....போட்டோ பிடிச்சிட்டு வந்திருக்கப் படாதா? ஏதோ மாணவன் சந்தோசப்பட்டிருப்பானே....
ஆண்டாளுக்குத் தனிக் கோயிலா...சூப்பர். ஆண்டள் திருக்கோயில் பாத்தாலே...திருப்பாவை ஒன்னு ரெண்டாவது நமக்குப் பாடீரனும். குரல் பிரமாதமில்லைன்னாலும்...ஒரு ஆர்வந்தான். ஆண்டளம்மா கோவிச்சிக்கிறமாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்.
என்னது...வாழப்பழத்துக்கு வெல சொல்றாங்களா...வாழத் தோட்டத்துக்கு வெல சொல்றாங்களா! வாழப்பழம் அந்தூரு வியாபாரிகளை வாழ வெக்கிற பழம் போல இருக்குது.
http://balabharathi.blogspot.com/2006/10/blog-post_25.html
ஈ புக்கு கொசு புக்கெல்லாம் சரி...அப்படியே படிச்சு ஒரு திறனாய்வும் போட்ட என்னவாம் யெஸ்பா?
http://vedhagamam.blogspot.com/2006/10/blog-post_26.html
உண்மைதான் ஜோசப் சார். விலைமாது ஒருத்தியின் மீது கல்லெறிந்தவர்களுக்கு ஏசுபிரான் சொன்ன நல்மொழி அனைவருக்கும் பொருந்தும். நம்முடைய விபச்சாரத்தனம் நமக்குத் தெரியாமையால் அடுத்தவர் மீது கல்லெறிந்து கொண்டேயிருக்கிறோம். இது மாற வேண்டும். கண்டிப்பாக மாற வேண்டும்.
http://myspb.blogspot.com/2006/10/blog-post_20.html
சுந்தர் அருமையான பாட்டு. என்னைப் பொறுத்தவரையில் அந்தப் பாடலைக் கமர்ஷியலாகப் பார்க்கவில்லை. உணர்வுகள் எழுவது அப்படியுந்தானே. இதே மாதிரி வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஒரு காட்சி வரும். ஆனால் அதையும் கமர்ஷியல் வரிசையில் சேர்க்க முடியாது. கமர்ஷியல்கள் இல்லாத படங்கள் தமிழில் ஆங்காங்கே உண்டு. இப்பொழுது மிகவும் குறைந்து விட்டது.
http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_23.html
படத்துல வெத்தலையப் போட்டேண்டி பாட்டும் மை நேம் இஸ் பில்லா பாட்டும் இருக்கா?
எல்.ஆர்.ஈஸ்வரி பாடுன...நினைத்தாலே இனிக்கும் சுகங்கள் ஷிக்கு ஷிக்கு ஷிக்குன்னு ஒரு பாட்டு வருமே...அது இருக்கா?
பில்லா பாத்துட்டு அமிதாப் நடிச்ச டானே நல்லாயிருக்கலையே...ஷாருக்கான் நடிச்சத என்ன சொல்ல! சரி...நேரம் கெடச்சா பாக்கலாம்னு நெனைக்கிறேன்.
http://lingastakam.blogspot.com/2006/10/6-7.html
// பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - பாவத்துடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம் //
குமரன் இங்கு ஒரு ஐயம். பாவத்துடன் கூடிய பக்தியா? அப்படியென்றால் பாவமில்லாமலும் பக்தி இருக்குமா? (இதற்கு என்னிடம் ஒரு எளிய விடை உள்ளது. நீங்கள் அதைச் சொல்கின்றீர்களா என்று பார்க்கிறேன்.) ;-)
http://madhavipanthal.blogspot.com/2006/10/blog-post_26.html
கந்த கோட்டம். நமக்கெல்லாம் சொந்த கோட்டம். சென்னையில் வடபழநிக்குப் பலமுறை போயிருக்கிறேன். இந்தப் பக்கம் திருப்போரூரும் அந்தப் பக்கம் திருத்தணியும் கூட பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் கந்த கோட்டம்? யாரிடம் கேட்டாலும் விடை கிடைக்கவில்லை. பாரீஸ் போய் போகனும்..எங்கயோ இடுக்குல இருக்குன்னு மட்டுமே சொல்லக் கேட்டேன்.
ஒரு நாள் மைத்துனனுடன் பைக்கில் ஏறிக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டோம். குறுகலான சந்து பொந்துகள். ஆனால் அதற்குள் ஒரு அழகிய கோட்டம். கோயிலுக்குள் நல்லதொரு தெப்பம். அதுவும் தூய்மையாக. வள்ளலார் வணங்கிய அந்தத் திருக்கோயிலில் நானும் முருகனை வணங்கினேன். மகிழ்ந்தேன்.
அடுத்து நேரம் கிடைத்தால் மீண்டும் செல்ல வேண்டும். முருகனடியவர்கள் ஒருமுறையாவது செல்ல வேண்டிய திருக்கோயில் அது.
சஷ்டி நாளன்று இந்தப் பதிவு தந்து உளத்தின் குளத்தில் வள்ளலாரின் ஞானமழை பொழிந்தமைக்கு நன்றி.
http://agiilankanavu.blogspot.com/2006/10/blog-post_25.html
when the going gets tough, the tough gets going என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதன்படி வேறுவழியே இல்லை என்று நினைத்த பொழுதிலும் எப்படியாவது ஒரு வழி கண்டுபிடிக்கவே வேண்டும் என்ற வேகம் வரும். அந்த வேகத்தில்தான் அதுவரை பயன்படாதவை கூடச் சிறப்பாகப் பயன்படும். அதுதான் இங்கும் நடந்திருக்கிறது. அதை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
சைக்கிள் டயர் பக்கத்தில் அமர்ந்திருப்பது நீங்களா?
http://ennulagam.blogspot.com/2006/10/9.html
ஐயோ! கொடுமையே! இப்படியெல்லாமா இவருக்கு ஆக வேண்டும். இவர்கள் எல்லாரும் பெற்றவர்களா! சீச்சீ! தானாடாவிட்டாலும் சதையாடும் என்பார்கள். அந்த ஒரு பவுண்டு சதையும் இதயம் இவர்களுக்கு வைக்க மறந்தானே ஆண்டவன்!
http://lingastakam.blogspot.com/2006/10/6-7.html
// குமரன் (Kumaran) said...
இராகவன், பாவத்துடன் இல்லாத பக்தியென்றால் புண்ணியத்துடன் கூடிய பக்தி தானே?! :-) //
:-))))))))) குமரன் உங்கள் விடையைப் படித்து புன்முறுவலோடு சிரிப்பும் வந்தது. என்னைச் சிரிக்க வைத்த புண்ணியம் உம்மைச் சேர்வதாக.
பாவம் என்பதற்கு புண்ணியத்தின் எதிர்ப்பதம் என்ற பொருளில் நான் கேட்கவில்லை. பாவம் என்ற உண்மையான பொருளிலேயே நான் கேட்டேன். அதென்ன பாவத்துடன் கூடிய பக்தி என்று? பாவம் இல்லாமல் பத்தி உண்டா என்பது என் கேள்வி.
ஆனால் நீங்கள் வேறொரு அழகான நகைச்சுவைக் கோணத்திலும் சிந்தித்திருக்கின்றீர்கள். :-) தி.ரா.ச கூட பாவத்தை பாவமாய் ராகவன் எடுத்துக் கொண்டான் என நினைத்து விட்டார் போலும். :-)
நீங்கள் பாவம் என்ற சொல்லிற்கு மாற்றாக உணர்ச்சி அல்லது உணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் தெளிவாக எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று சொல்ல வந்தேன். உணர்வு பெருகிய பக்தி...பக்தி என்பதே அன்புதானே...உணர்வு பெருகிய அன்பிற்கான லிங்கம் என்று பொருள் சொன்னால் இன்னும் எளிமையாக அனைவரையும் அடையும் என்ற கருத்தில் நான் சொல்ல வந்தேன்.
http://koodal1.blogspot.com/2006/10/blog-post_25.html
குமரன்...நீங்கள் இடையோடு சடையனை இணைத்திருக்கிறீர்கள். முன்பு கடவுளும் காதலும் கருத்தினில் ஒன்று என்று முடியும் ஆசிரியப்பா எழுதினேன். அதை இடுவதற்காக தேடித் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. ஆகையால் இனியும் காலந்தாழாது பின்னூட்டம் இடுகிறேன்.
அந்தக் கவித கெடைச்சா கண்டிப்பாப் போடுறேங்க.
ஆனா ஒங்க கவிதைல பொருட் குற்றம் இருக்கே......அவளோட இடைய ஏன் எல்லாரும் பாக்குறாங்க? கடவுள் எல்லாருக்கும் பொது. அந்தப் பொண்ணோட இடை? தெரிஞ்சிக்கிறதுக்குக் கேக்குறேனய்யா!
http://wikipasanga.blogspot.com/2006/10/blog-post.html
கொத்சு...எனக்கு ஒரு சந்தேகம்...இந்தப் பதிவை ஏற்கனவே படிச்சிப் பின்னூட்டம் போட்ட மாதிரி "நெஞ்சம் மறப்பதில்லை"! என்ன நடக்குதுன்னு உண்மையச் சொல்லீருங்க. இது ஏற்கனவே போட்டதுன்னா....என்னோட பின்னூட்டம் எங்க? யாருக்கு பயந்துக்கிட்டு என்னோட பின்னூட்டத்த அழிச்சீங்க? உண்மையச் சொல்லீருங்க.
http://raamcm.blogspot.com/2006/10/blog-post_27.html
வாங்க ராம். உங்களைச் சந்திச்சதுல மகிழ்ச்சி. அன்னைக்கு சந்திப்பு இருக்குங்குற வெவரமே எனக்குத் தெரியாது. ஆகையால எனக்கு அது ஆச்சரிய சந்திப்புதான்.
உண்மைதான்.....லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நாந்தான் ஜிரான்னு உறுதி படுத்துறதுக்குள்ள ஒரு வழி ஆச்சுது. கடைசியா நம்பீட்டாங்க. கண்ணாடி முகத்துக்கு இவ்வளவு பெரிய மாறுபாடு கொடுக்கும்னு இப்பத்தான் புரிஞ்சது.
http://wikipasanga.blogspot.com/2006/10/blog-post_116187747453981720.html
எய்யா.............என்னது இது..........நாலு நாள் வெளியூர் போயிட்டு வந்தா........இப்படியெல்லாம் ஆயிருக்கே! என்ன வெவரம்?
http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_20.html
இதுதான் அந்த தீபாவளி வாழ்த்துப் பதிவா! நல்லா வந்திருக்கு. பதிவுல இருக்குறதத்தான் நானும் செஞ்சேன். :-)
// வெட்டிப்பயல் said...
// G.Ragavan said...
படத்துல வெத்தலையப் போட்டேண்டி பாட்டும் மை நேம் இஸ் பில்லா பாட்டும் இருக்கா?
எல்.ஆர்.ஈஸ்வரி பாடுன...நினைத்தாலே இனிக்கும் சுகங்கள் ஷிக்கு ஷிக்கு ஷிக்குன்னு ஒரு பாட்டு வருமே...அது இருக்கா?
//
வெத்தலைய போட்டேண்டிதான் பயங்கர பாப்புளரான பாட்டு... "காய் கே பானு பனராஸ்"னு வரும். புது டான்லையும் இந்த பாட்டு இருக்கு. ////
இருக்கா.......ம்ம்ம்ம்....அடி மாமா மக ரதியே ஏஞ் சீனிச்சக்கரக் கிளியே....விறுவிறுப்பு இருந்தாச் சரி
// நினைத்தாலே இனிக்கும் பாட்டும் நல்ல ஃபேமஸான பாட்டுதான் "ஏ மேரா தில்"னு வரும். புது படத்துல இந்த பாட்டுக்கு கரினா வராங்க...
மை நேம் இஸ் பில்லாவும் இருக்கு... ஆனா அந்த அளவுக்கு இல்லை ;) //
அந்தப் பாட்டுகள்ளாம் காலத்தை வென்ற இசைக்காவியங்கள்....ஷிக்கு ஷிக்கு ஷிக்கு ஷிக்கெல்லாம் அப்படியே சதக் சதக்குன்னு கத்தி மாதிரி எறங்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தியில ஜுக்கா ஜூக்கா ஜூக்கான்னு முயற்சி செஞ்சாங்க.
// //பில்லா பாத்துட்டு அமிதாப் நடிச்ச டானே நல்லாயிருக்கலையே...ஷாருக்கான் நடிச்சத என்ன சொல்ல! சரி...நேரம் கெடச்சா பாக்கலாம்னு நெனைக்கிறேன். //
இது உங்களுக்கு பிடிக்கறதுக்கு வாய்ப்பு குறைவு... உங்களை பார்த்தா ரொம்ப அமைதியா தெரியுது... போட்டோவை வைத்து சொல்றேன் ;) ////
என்னப்பா அப்படி எடை போட்டுட்ட.......நம்ம டேஸ்ட்டே தனி டேஸ்ட்டுதான்.
http://trc108umablogspotcom.blogspot.com/2006/10/blog-post.html
மிகவும் நல்ல பாடல் தி.ரா.ச. பாபநாசம் சிவனின் பாடல்கள் ஒவ்வொன்றும் எளிய தமிழில் சிறப்பாக இருக்கும். இதைப் பாடியவரும் சொற்களின் அழகைக் குலைக்காமல் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.
கொத்ஸ், "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்கிறார் வள்ளுவர். எதையெல்லாம் நீங்கினோமோ அதெல்லாம் நமக்குத் துன்பம் தராதாம். இப்பொழுதூ நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நமது பிறப்பு. அதனால்தான் "பிறவாத வரம் வேண்டும்" என்கிறார்கள் பெரியோர்கள். பிறவா இறவாப் பெம்மான்களான சிவனும் அவன் மகனும் அந்தப் பெருமையை நமக்களிக்க வல்லார் எனச் சைவம் சொல்கிறது.
பிறப்பு என்பது வேதனையோடுதான் தொடங்குகிறது. பத்து மாத இருட்டறை அடைப்பு. அங்கேயே கழித்தல். பிறக்கும் பொழுதும் குறுகிய வழியில் நெருக்கிப் பிறத்தல். பிறந்ததும் அழுகைதான். அப்படி அழுவதால் மூச்சு சீராகிறது என்று மருத்துவம் கூறுகிறது. சரி. அழுவதற்கு பதிலாக சிரிப்பதனால் மூச்சு சீராகிறது என்று இருந்திருக்கலாமே! இல்லையே! ஆகையால் முதலிலேயே கோணல். பிறகென்ன முற்றும் கோணல்தான்.
இப்பொழுது புரிகிறதா? பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டிய காரணம்?
http://theyn.blogspot.com/2006/10/blog-post_116017075313200990.html
ஒன்று புரிகிறது சிறில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. மதம். மொழி. நாடு என்று. இதில் ஒன்றுக்காக மற்ற அனைத்தையும் தியாகம் செய்யவும் தயங்காத கடமை வீரர்கள் அவர்கள். அடுத்தவன் தப்பு செய்யும் பொழுது அது இனிக்கிறது. ஆனால் வேண்டப்பட்டவர் செய்யும் பொழுது அதை மறைக்க எலும்பில்லா நாக்கு எல்லாப் பக்கமும் புரள்கிறது. வாழ்க மக்கள். வாழ்க உலகு. மனித குலத்திற்கு அழிவு மனிதனால்தான்.
(சரி...இப்படித் திரட்டிப் பதிவுகளா போட்டுக்கிட்டிருந்தா எப்படி? வழக்கமான சிறில் பதிவுகள் எங்கே? எங்கே? எங்கே?)
http://elavasam.blogspot.com/2006/10/blog-post_116209175975582540.html
ஓகோ! அப்படியா! அப்ப நான் திங்கக்கெழமை வந்தே பின்னூட்டம் போட்டுக்கிறேன். :-)
http://lingastakam.blogspot.com/2006/10/8.html
வடமொழிக் குவியல் கொண்டு சிவனைத் தொழுதழுகும் கவிதைக்குப் பொருள் சொல்லிப் பாங்காய் சிறப்பித்த குமரனுக்கு எனது வாழ்த்துகள்.
ஒரு ஐயப்பாடு........அசுரகுருவும் சிவனடியவர்தானே....அவரும் பூசித்தார் என்பதும் பெருமைதானே. சுக்கிராச்சாரியார் விடுபட்ட காரணம் யாதாயிருக்கும்?
http://lingastakam.blogspot.com/2006/10/8.html
// குமரன் (Kumaran) said...
பூக்குவியல் என்றாற்போல் வடமொழிக் குவியல் என்றீர்களோ இராகவன்? //
ஆம் குமரன்.
// அசுரகுரு விடுபடவில்லை இராகவன். முன்பே சித்த சுராசுர வந்தித லிங்கம் என்று சொல்லியிருக்கிறதே. அதிலேயே அசுரகுருவையும் சேர்த்துவிட்டார் போலும் பாடலாசிரியர். //
ஓ அப்படி அவர் உள்ளே வருகிறாரா. சரி.
http://idlyvadai.blogspot.com/2006/10/blog-post_5963.html
பாமக எதிர்க்கட்டியாகச் செயல்படப் போவதால் திமுக சிறுபான்மை அரசிற்கு ஆபத்து வருமென்று நினைக்கவில்லை. காங்கிரஸ் இன்னமும் திமுகவுடனேயே இருக்கிறது என நினைக்கிறேன்.
இப்பொழுது அவசரப்பட்டு ராமதாஸ் ஜெயலலிதாவோடு போவார் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் அதனால் அவருக்கு எந்த நன்மையும் இப்பொழுதைக்கு இல்லை. ஏனென்றால் அடுத்து எந்தத் தேர்தலும் அருகில் இல்லை. ஆகையால் அடுத்த தேர்தல் வருவதற்குள் ராமதாஸைப் பொருத்த வரையில் திமுக திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் திருந்தாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படிப் போவது திமுகவிற்கு நல்லதல்ல.
எப்படியோ...அதிமுகவை விரட்டியாச்சு...அடுத்து திமுகவைத்தான் விரட்டனும். எத்தனை நாள் இவங்க ரெண்டு பேருமே உக்காந்து உக்காந்து திம்பாங்க. அடுத்த ஆளு வந்து கொஞ்சம் தின்னுக்கிறட்டும்.
http://wikipasanga.blogspot.com/2006/10/blog-post_30.html
ஒந்து தினா ராத்ரியலி
கண்டே கனசொந்து
பண்ண பண்ணதா பெளக்கலி கண்டே
திவ்யக ரூப ஒந்து
===========================
விரஹா நூறு நூறு தரஹா
விரஹா ப்ரேம காவ்யதா கஹி பரஹா
===========================
கற்பூரத கொம்பே நானு
மிஞ்ச்சண்த்தே பளி பந்தே நீனு
நின்ன ப்ரேம ஜ்வாலே
ஹோகி நன்ன மேலே
கரகி கரகி நீறாதே நானே
============================
மெல்லுசிரி சவி கானா
யதே ஜல்லனே ஹூவின பாணா
============================
எந்தெந்தோ நின்னது மறது நானிரலாரே
=============================
ஜனரிந்த நானு மேலே பந்தே
ஜனரெல்லா நன்ன தேவரந்தே
=============================
நாவாடுவ நொடியே கன்னட நொடி
நாயிருவா நாடிது கந்தத குடி
கந்தத குடிசி கந்தத குடிவி
ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹே ஹே ஹே
(நனகு ஈத்தரா மாடியிருவ ஈ விக்கிப்பசங்களனு சும்னே பிடபாரது. ஒதே கொடலே பேக்கு.)
http://dharumi.blogspot.com/2006/10/185.html
அமெரிக்காவில நானும் இந்த நிலையைப் பார்த்ததுண்டு.
ஆனால் பெல்ஜியத்தில் வேறொரு அனுபவம். நான் தங்கியிருந்த வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு இலங்கைத் தமிழர் வீடு இருந்தது. அங்கே எனக்குத் தமிழ்ப்படங்கள் கிடைக்கும். அந்த வீட்டுப் பையன் என்னோடு நன்றாகப் பழகுவான். புதிதாக வந்திருக்கும் கேசட்டுகளை எடுத்துத் தருவான்.
பாரீசில் நடந்து போகையில் என்னுடைய நெற்றியில் எழுதி ஒட்டியிருப்பதைப் பார்த்து விட்டு "நீங்க தமிழா"ன்னு கண்டுபிடிச்சு வந்தார் ஒரு நண்பர். அவர் பெயர் வெங்கடேஷ். இப்பொழுது எங்கிருக்கிறாரோ. ரயில் சினேகம் போல ஆகிவிட்டது.
அதே பாரீசில் ஈபில் டவரில் எங்களைப் பார்த்து விட்டு ஒரு இஸ்ரேலியத் தம்பதிகள் ரொம்பவும் சந்தோசப் பட்டார்கள். எங்களோடு படமெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். இண்டியன்ஸ் இண்டியன்ஸ் என்று பெருமைப்பட்டார்கள். அமிதாப் பச்சனும் ஹேமாமாலினியும் நன்றாக இருக்கிறார்களா என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டதை தர்மேந்திராவிடமும் ஜெயாபாதுரியிடமும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தோம்.
அந்தப் பெண்ணின் தாத்தா பாட்டிகள் இந்தியாவில் இருந்தார்களாம். அந்தப் பெண்ணும் இந்தியாவில் மிகச்சிறிய வயதில் இருந்தார்களாம். அந்தப் பாசம்.
http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_30.html
நல்லதொரு ஆய்வு.
கோவி.கண்ணன் கருத்தத வழி மொழிகிறேன். ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி பாமகவைச் சுமந்தது தவறல்ல. பாமக மாறியதுதான் தவறு என்று சொல்லும் கருத்து ஏற்புடையதன்று. பேரம் எங்க படியுதோ...அங்கதான் கூட்டணி. இது திமுக அதிமுக ரெண்டுக்கும் பொருந்தும்.
இப்பொழுது பாமக விடும் அறிக்கைகளால் ஒன்றும் நேர்ந்து விடாது. குடுக்க வேண்டிய சூடான அறிக்கையைக் குடுத்து கவனத்தைத் திருப்பியாச்சு. இனிமே அமைதிதான் என்று நினைக்கிறேன். அதைத்தான் பாமகவும் திமுகவும் விரும்பும்.
http://tsivaram.blogspot.com/2006/10/blog-post_30.html
வாழ்த்துகள் சிவா. இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.
http://nunippul.blogspot.com/2006/10/blog-post_29.html
என்னுடைய வாழ்த்துகள் உஷா. எழுத்து என்பது அலுக்குமா என்று தெரியவில்லை. எழுத்து என்பது சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது. அலுப்பது கடினம்தான். எழுத்து சலிப்பது எழுதும் அளவுக்கு சிந்தனை சிறக்காத பொழுது என்று நினைக்கிறேன்.
பர்பி நல்லாயிருக்கு. பாக்கவே வெளுவெளுன்னு. வடையும்தான். கொத்தமத்தி பச்சைப் பச்சையா அழகாத் தெரியுது. எனக்குக் கீரைகள் நெறையப் போட்டிருந்தா ரொம்பப் பிடிக்கும். கொத்துமல்லிக்குப் பதில் தண்டுக்கீரையும் போட்டுச் செய்யலாம். இஞ்சி பத்தி பெரிய விவாதமே நடந்திருக்கு. இஞ்சிக்குப் பதிலா பெருங்காயம் போட்டுக்கிறது நல்லது.
http://kanapraba.blogspot.com/2006/10/blog-post_29.html
பிரபா, இந்தப் படத்தின் பாடலை...கங்கே கங்கே பாட்டுதான் தொலைக்காட்சியில் பார்த்தேன். மிகவும் மாறுபட்ட பாடல். பிடித்ததா பிடிக்கலையா என்றே உறுதியாகச் சொல்ல முடியாத பாடல். சேனலை மாற்றத் தோணியும் பார்த்துக் கொண்டிருப்பேன். பிறகு படக்கென்று மாற்றி விடுவேன். ஏனென்று இப்பொழுது புரிகிறது. :-))))
மலையாளத்திலும் இப்பொழுது ஓரிரண்டு படங்கள்தான் இப்படி வருகின்றன. நம்மைப் பார்த்துக் கெட்டுப் போய் விட்டார்கள் அவர்களும்.
மனச்சிதைவு நோய் பற்றி தமிழிலும் ஒரு அருமையான படமுண்டு. அக்கினி சாட்சி. அதை ஏற்றுக் கொள்வது பெரும்பாலானோர்க்கு மிகக் கடினம். அழகான பாட்டுகளும் உண்டு. கனாக்காணும் கண்கள் மெல்ல பாட்டு கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
கீழ்வானம் சிவக்கும் என்றொரு படம். அதில் ஒரு நோய் வரும். லிம்ஃபோசர்கோமா (lymphosarcoma) என்று. அப்படியொன்று இருக்கிறதா என்று நெட்டில் தேடினேன். படத்தில் சொல்வது போலவே அது பெருங்கொடிய நோய் என்று தெரிந்தது. அது போல நீங்களும் தேடியிருக்கின்றீர்கள். :-)
http://livingsmile.blogspot.com/2006/10/blog-post_116219529430354274.html
வலி........மிகக் கொடுமையானது. உடலுக்கு வலித்தாலும் மனதுக்கு வலித்தாலும் அது கொடுமைதான். அதைப் பெரும்பாலானோர் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார்கள் என்ற நிலையில் வலியை மறைப்பது என்பது காகிதத்தில் நெருப்பைப் பொட்டலம் கட்டுவது போல. காகிதத்தையும் பொசுக்கிக் காட்டிக் கொடுத்து விடும்.
குழந்தைகள் சொல்லும். "அம்மா கீழ விழுந்துட்டேன்." கீழே விழுகையில் அது அவமானமாகக் கருதி அதைத் தனக்குள்ளே பூட்டி வைத்திராமல் எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்று அம்மாவிடம் சொல்லும். சொல்லி முடித்த பிறகு ஒரு சின்ன நிம்மதி. அந்த சமயத்தில் குழந்தைக்குக் காது குடுத்துக் கேட்டாலே நல்லது.
அந்த வலியைத்தான் உங்கள் எழுத்தில் காண்கிறேன். தாங்கிக்கொண்ட முட்களை ஒவ்வொன்றாக எடுத்து எறிகின்றீர்கள். நல்லது. முட்களை எடுத்தெறியுங்கள் முதலில். முட்களாகப் போடுகிறாயே என்று கேள்வி எழுவதால் முட்களை எடுக்காமல் இருந்து விடாதீர்கள். தைத்த முட்களைப் பிடுங்காவிடில் சீழ்தான் கோர்க்கும். ஆகையால் முட்கள் தீரும் வரையில் காத்திருக்கிறோம்.
முத்துக்குமரன் சொல்வதும் சரிதான். சொல்லாமல் சொல்வதும் ஒரு கலை. அதுவும் விரைவில் உங்களுக்குப் பழகும் என்று நம்புகிறேன். என்னுடைய வாழ்த்துகள்.
http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_116226097100205584.html
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அனைவரையும் வாழ்த்திய கோவியாருக்கும் நன்றி பல.
என்னுடைய நன்றியை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன். தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை போல. சரியாக வரவில்லை.
http://gragavan.blogspot.com/2006/10/blog-post_31.html

Post a Comment