Thursday, November 30, 2006

என்னுடைய பின்னூட்டங்கள் - டிசம்பர் 2006

டிசம்பர் 2006ல் மற்ற வலைப்பூக்களில் நானிட்ட பின்னூட்டங்கள் இங்கு திரட்டப்படும்.

213 comments:

1 – 200 of 213   Newer›   Newest»
G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/11/33.html

ஐயோ...படிக்கும் போது நவரச உணர்ச்சிகளும் தோணுதுங்க.

// அரசியல்வாதிகளால் எழுதப்படும் பதிவுகளை 24% பேர் தொடர்ந்து படிக்கிறார்களாம். (நம்ம ஊர் கரை வேட்டிங்க யாராவது வலைப்பூவில் எழுதி தமிழைப் பாதுகாக்கறாங்களா?) //

ஏற்கனவே அரசியல் சண்டைகளும் மதச் சண்டைகளும் நாறிக்கிட்டு இருக்கு. அரசியல் ஆர்வலர்கள் இருக்கும் போதே இப்படீன்னா...அரசியல்வாதிகளும் வந்து தொலைஞ்சா என்னாகும்! இலவசப் பின்னூட்டம் தரும் வாக்குறுதிகளும்...தன்னால்தான் வலைப்பூக்களில் பின்னூட்டம் அதிகரித்தது...அடுத்தவர் வந்ததும் குறைந்து விட்டது என்ற வாதங்களும் பிரமாதமாக இருக்கும். அடுத்தவர் எத்தனை வலைப்பூ வைத்திருக்கிறார்....அதுல எத்தனை பினாமி பேர்ல இருக்கு...(இதெல்லாம் ஏற்கனவே நடக்குதாம்)..இதெல்லாம் வெளிய வரும். தேவையா கொத்சு.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/12/blog-post.html

யெஸ்பா நல்லதொரு பதிவு. விபச்சாரம்...என்றதுமே அடிக்க வரும் புனிதர்களுக்கு நடுவில் நிலமையைத் தெளிவாகப் புரிந்து (என்னுடைய கருத்துப்படி) பதிவிட்டமைக்கு நன்றி.

// இன்னமும் குடும்பமுறைமையை விடாமல் பேணி வருகின்ற இந்தியா போன்ற நாடுகள் எப்படி எட்ய்ஸில் முன்னுக்கு வருகின்றன.எனபதே தெரியவில்லை. //

அகிலன், குடும்ப அமைப்பு என்பது நான்கு சுவர்களுக்கும் நான்கு பேர்கள் சேர்ந்து வசிப்பதல்ல. உடலளவில் நெருக்கம் இருந்தாலும் பெரும்பாலும் மனதளவில் ஒரு விலக்கு இருப்பதாகவே கருதுகிறேன். நல்ல அன்பான பாசமான குடும்பங்களும் நிறைய உள்ளன. மறுப்பதற்கில்லை. பிள்ளைகளோடு நிறைய நேரம் செலவழியுங்கள். கொண்டாடுங்கள். அது ஒன்றுதான் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும்.

அதுவுமில்லாது இட்டிலி பிடிக்கவில்லையென்றால் தோசை கொடுப்பதல்ல நமது பண்பாடு. இட்டிலி இல்லையேன் பட்டினி (சொல்ல வருவது புரிகிறது என நினைக்கிறேன்.) என்ற நிலையில் இதெல்லாம் ரொம்பவும் சகஜம்.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2006/11/2006.html

என்னோட ஓட்டும் சூரியாவுக்கு. இந்த வருசம் வரலாறு படத்துல மட்டும் அஜீத் நடிச்சிருந்தாரு.

G.Ragavan said...

http://surveysan.blogspot.com/2006/11/blog-post_27.html

அடடே! பெண்களே வெட்கப் பட வேண்டியது கட்டிலில் மட்டுந்தான். இவங்க சொல்றாங்கன்னு...ரோட்டுல வெக்கப்படுக்கிட்டே போனா...கதை கந்தலாயிரும். :-))))

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பெல்லாம் இன்னமும் தூக்கீட்டுத் திரியனுமா பெண்கள்? ஆண்களிடம் பெண்களுக்குப் பிடிச்சதென்னன்னு ஒரு சர்வே போடாதீங்க. அவங்க சொல்ற மாதிரியெல்லாம் நடந்துக்குறது கஷ்டம்.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2006/10/blog-post_26.html

ஒரு சின்ன ரகசியம் சொல்றேன் கேட்டுக்கோங்க. இந்த பாஸ்தாவை நம்மூரு ஸ்டைல்லயும் செய்யலாம். பாஸ்தாவை வேக மட்டும் வெச்சுக்கோங்க. அதுல பூண்டுக் கொழம்பு ஊத்திக் கொழப்பிச் சாப்பிட்டால்...அடடா!

அதே போல தேங்காயத் துருவிக்கோங்க. கொஞ்சம் நெய்ய வாணலில காய வெச்சி...முந்திரி, திராட்சை, மிளகாய் வத்தல் கிள்ளிப் போட்டு வதக்கி...தேங்காத் துருவல் போட்டு வதக்கி...உப்புப் போட்டு பாஸ்தாவோட கலந்துக்கனும். அத்தோட எலுமிச்சங்காய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட்டா...அடடா!

G.Ragavan said...

http://koodal1.blogspot.com/2006/11/blog-post_29.html

கலைவாணர் என்று அழகாய்த் தமிழில் சொல்ல வேண்டியதுதானே குமரன். பெயரைத் தமிழ்லில் முதலெழுத்தை ஆங்கிலத்திலும் வைக்கும் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும்.

// சிவமுருகன் said...
ஒரே "K" மயமாக இருக்'கே'

SK
GK (கோவி.கண்ணன்)
K (குமரன்)
KRS (கண்ணபிரான்)
IK (இலவச கொத்தனார்)

ok ok. //

சிவமுருகன்...வருத்தம் வேண்டாம். ராவா ஜிரா வந்தாச்சு ;-)

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2006/11/blog-post_17.html

1. உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளுவோம்
இல்லாயின் இல்லென்று வான் செல்குவோம்

இதை எழுதியது யாரு? இந்த வரிகள்ள சொல்ல வர்ர மறைவான உட்கருத்து என்ன?

2. Scarlet O Hara யாரு?

3. Secret Gardenக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

4. மெல்லிசை மன்னர் இசையில் இசைஞானி பாடிய பாடல்கள் எவை?

இவ்வளவுதாங்க கேள்விகள். விடைகள் இருக்குதா?

G.Ragavan said...

http://jokeparty.blogspot.com/2006/12/blog-post_01.html

என்னங்க இது..ஜோக் பார்ட்டீன்னு பேரு வெச்சிக்கிட்டு இவ்வளவு சீரியசா சொல்றீங்க. நீங்க சொல்றதுல உண்மையில்லாம இல்லை. வெள்ளையருக்கு எதிரான விடுதலைப் போர்னு எடுத்துக்கிட்டாலும்....அது திருமலை மன்னன் காலத்துலயே நடந்துருச்சி. திருச்செந்தூர் கோயிலுக்குள்ள டச்சுக்காரன் போயி உக்காந்துகிட்டு அதுதான் அவங்க கோட்டைன்னு அழிச்சாட்டியம் செஞ்சாங்களே...அப்புறம் செலையத் தூக்கீட்டு ஓடுனது...அதப் போய்க் கொண்டாந்தது. அந்த முருகன் செலைய எடுக்க உதவியதுல தூத்துக்குடியைச் சேர்ந்த சூசை என்கிற கிருத்துவர் செய்த உதவியும் மிகப்பெரியது.

சரி...ஆங்கிலேயருக்கு எதிரானதுன்னு எடுத்துக்கிட்டாலும்...பூலித்தேவன் மொதல்ல...முதற் போரில அவனுக்குத்தான் வெற்றி. ரெண்டாவது போர்ல வெள்ளைக்காரனோடு கூட்டுச் சேந்து பூலித்தேவனைத் தோக்கடிச்சான் கான் சாகிப் மருதநாயகம். அடுத்தது கட்டபொம்மன். மருது சகோதரர்கள்...இன்னும் எத்தனையெத்தனை...அப்புறந்தானய்யா சிப்பாய் கலகமே!

// Anonymous said...
இதன்படி பார்த்தால் அலெக்சாண்டருக்கு எதிரான போர் கூட சொல்லலாமே?....ஆனா நீங்க சொன்ன காலகட்டத்தில் இந்தியா என்பதற்க்கான வரைபடமோ அல்லது சரியான எல்லைக்கோடுகளோ இல்லையே? //

இது ஏற்புடைய வாதம் அல்ல. அப்படியானால் அறுவது ஆண்டுகளுக்கு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் பழக்க வழக்கங்கள் இந்தியப் பழக்க வழக்கங்கள் இல்லையா. வெள்ளைக்காரன் வந்து ஒரு கோடு போட்டதும் ஒரே நாளில் அனைவரும் இந்தியர்களாகி விட்டார்களா என்ன?

G.Ragavan said...

http://thamizhblog.blogspot.com/2006/12/49-harry-potter.html

என்னது! சிங்களத்துலயா? நல்லது.

தமிழில் மொழி பெயர்க்கனுமா...பெயர்த்தாலும் நான் படிக்க மாட்டேன். இந்தப் புத்தகத்தின் ஆங்கில மூலத்தைப் படித்த, படிக்கிற எனக்கு...தமிழாக்கம் அத்துணை சுவையாக இராது.

G.Ragavan said...

http://sinnakuddy1.blogspot.com/2006/11/blog-post_30.html

நெஞ்சை ஏதோ அழுத்துவது போன்ற உணர்வு...

G.Ragavan said...

http://ariviyalaanmeekam.blogspot.com/2006/12/10.html

கண்டுபிடிச்சிட்டேன் கண்டுபிடிச்சிட்டேன் :-)

G.Ragavan said...

http://thoduvanamnamullathil.blogspot.com/2006/12/blog-post.html

இதக் கன்னடத்துக்காரங்க சாபூதானா கிச்சடின்னு சொல்றாங்க. விழுக்கு விழுக்குன்னு ஒரு மாதிரி திங்குறதுக்கும் நல்லாயிருக்கும்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2006/12/175.html

சிறப்பு இராமநாதன். கார்த்திகை மாதத்தில் அறுபடை வீடுகளின் கோபுரங்களையும் போடுங்களேன்.

திருவானைக்காவலில் அன்னையைக் கண்டேன் கண்டேன் கண்டு கொண்டேயிருந்தேன். இமைக்க முடியவில்லை. இமை இயங்க முடியவில்லை. அத்தனை ஈர்ப்பு. காணக் கண்கொள்ளாக் காட்சி. இன்றும் நினைக்க நினைக்க இனிமை.

G.Ragavan said...

http://cdjm.blogspot.com/2006/12/blog-post.html

நடிகர் திலகத்திற்கு இணை அவர்தான். அவர் மிகப் பெரிய விருதுகளுக்குப் பொருத்தமானவர். நல்ல விருதுகள் அவரைத் தேடி வந்தன. அரசியல் விருதுகள் காலந்தாழ்ந்து வந்த விருந்துகள்.

ஷெவாலியே விருது கமலுக்கு வழங்கப்படுவதும் சரியே. கமலுக்குக் குடுப்பதால் நடிகர் திலகத்திற்குக் குறைவு வந்திடாது. திரையுலகில் நடிகர் திலகத்திற்குப் பிறகு பன்முனை நடிப்பைக் காட்டியவர் அவர். கவனம் அங்கிங்கு சிதறியிருந்தாலும் விருதுக்கு அவர் பொருப்பானவரே. அவருக்குக் கொடுப்பதும் மகிழ்ச்சியே. இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் என்றே விரும்புகிறேன்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-1.html

வாங்க சார் வாங்க...நீங்க திரும்பவும் திரும்பிப் பாக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி. இனிமே ஒரே கொண்டாட்டந்தான்.

சென்னையில தண்ணிப் பிரச்சனை உண்டுதாங்க. ஆனா கடந்த ரெண்டு வருசமா ஒழுங்கா தண்ணி வருது. நல்லபடி மழ பேஞ்சு நல்லாயிருக்கனும்னு ஆண்டவன நான் வேண்டிக்கிறேன்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-2.html

ம்ம்ம்ம்...படாதபாடு பட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க. கொடுமைதான். ஆனா இதுலயிருந்து கண்டிப்பா தப்பிச்சிருப்பீங்க. அதையும் கேக்கக் காத்திருக்கிறோம்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_116531659151324853.html

யெஸ்பான்னுதான் நாங்க சொல்வோம். நீங்க என்ன பாலபாரதீன்னு நீட்டி மொழக்குறீங்களே! யெஸ்பாவின் கவிதைத் தொகுப்பு பற்றிச் சொல்லியமைக்கு நன்றி.

அவரை நானும் சந்தித்திருக்கிறேன். நல்ல மனிதர். எங்கூர்ப்பக்கத்துப் பேச்சு. எனக்கு ஊர்ப்பக்கமே போயிட்ட உணர்வு. வந்த சந்தோசத்தை மறச்சுக்கிட்டு நீங்க எந்தூருன்னு கேட்டேன். மக்கா நாம ராமேசொரம்னாரு.

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2006/12/blog-post.html

என்று விட்ட தொடர்...அது தொடர இத்தனை நாட்கள் ஆகி விட்டதே! ஆயினும் தொடரட்டும்.

சிற்றஞ்சிறு காலை என்று தலைப்பு இருந்திருக்க வேண்டும் குமரன். அந்த இடைவெளி கண்டிப்பாக வேண்டும்.

கருப்பு, சின்னஞ்சிறு என்று சொல்வதும் சரி. ஆனால் பழந்தமிழில் சின்ன இல்லை. சிறியதான் இருந்தது. சங்க நூல்கள் மட்டுமல்ல காப்பியங்களும் பதிகங்களும் சிறியதைத்தான் பயன்படுத்தியிருக்கின்றன. சின்னஞ்சிறு என்பதும் சரியே. அது பிற்காலப் பழக்கம் என்றே எனக்குத் தோன்றுகிறது. பாரதி சொல்லியிருக்கிறாரே "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்று. பழைய இலக்கியங்களில் சின்ன படித்த நினைவில்லை. தமிழிலக்கியம் தெரிந்தவர் யாரேனும் சொல்லுங்களேன்.

G.Ragavan said...

http://gpost.blogspot.com/2006/12/blog-post_05.html

சூப்பரு. நல்ல கருத்து. ஆமா...ஒங்கள வெச்சுப் படமெடுத்த அந்த இயக்குனரு யாரு? ;-)

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/12/100.html

வாழ்த்துகள் முத்துக்குமரன். நூறாவது பதிவு சிறப்பான பதிவுதான். அது சொல்லும் கருத்துகளோடு முழுக்க உடன்படுகிறேன்.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/12/164.html

நல்ல பாடல். இதப் பாடியது திருச்சியா? சீர்காழியா?

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-3.html

ம்ம்ம்ம்....இத்தனை வருடம் கூட அனுபவம் இருப்பதால் மட்டும் ஒருவர் அனைத்தும் அறிந்தவராக முடியாது. நீண்ட அனுபவம் மட்டுமே பெரிது என்றால் நாம் ஆமைகளிடமும் திமிங்கிலங்களிடமும்தான் கருத்து கேட்க வேண்டியிருக்கும்.

ம்ம்ம்...அடுத்து என்ன ஆச்சோ!

G.Ragavan said...

http://priyan4u.blogspot.com/2006/12/blog-post_116531911669649419.html

:-) இளமைத் துள்ளலோடு கவிதைகள்...ரசித்தேன்.

G.Ragavan said...

http://kuttapusky.blogspot.com/2006/11/1.html

கச்சேரிகளில் தமிழ்ப்பாட்டு நிறைய பாட வேண்டுமமென்பதும் பலருடைய விருப்பம். ஆனால் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்பதே உண்மை. அண்ணாமலையாரும் கல்க்கியும் பெரு முயற்சி எடுத்தார்கள். ஆனால் நிலமை இன்னும் மாற வேண்டும்.

பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரி ஒன்று பெங்களூரில் கேட்க நேர்ந்தது. எல்லாம் தெலுங்கு கன்னட கீர்த்தனைகள். கர்நாடகத்தில் பாடுவதால் சரி. ஆனால் அருகிலிருந்த நண்பன் அவரது உச்சரிப்புப் பிழைகளை அடுக்கிக் கொண்டே வந்து....இந்தத் தமிழ்நாட்டுப் பாடகர்களே இப்படித்தான் என்று சலித்துக் கொண்டான். ஏன் ஒழுங்காகப் பாட மாட்டேன் என்கிறார்கள் என்று வருந்தினான். சஞ்சய் சுப்பிரமணியம் கச்சேரியிலும் இதே நிலை. தெலுங்கு கன்னட கீர்த்தனைகளிலும் உச்சரிப்புப் பிழை இருக்கிறது என்றே தெரிய வருகிறது. அதுதான் உண்மை நிலை போலும். ஜெயகாந்தனுடைய அகவை விழாவில்...அவர் பெயரென்ன...சுதா ரகுநாதன் கச்சேரி நடந்தது. அத்தனையும் தமிழ்ப்பாட்டுகள். நன்றாகப் பாடினார். மிகவும் ரசித்தேன். பாரதியார் பாடல்கள் மட்டுமல்ல. முத்துத்தாண்டவப் பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார் என்று கதம்பம். இதை அடிக்கடி பாடலாகாதா என்று ஏங்காமல் இருக்க முடியவில்லை.

மீண்டும் ஒரு தமிழிசை எழுச்சி வேண்டும். அது நடுநிலையானவரிடம் இருந்து வர வேண்டும். வரும்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_06.html

:-)))))))))))))))))))

எங்க வீட்டுலயும் தேங்கா பொறுக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. அதே நேரத்தில அந்தக் கோயில் பொங்கலும் புளியோதரையும் தயிர்ச்சோறும். அடடடா!

தூத்துக்குடிப் புதுக்கிராமத்துப் பிள்ளையார் கோயில்ல பெரிய பண்டிகை இருந்தா ஒரு சாம்பார்ச் சோறு குடுப்பாங்க. கொஞ்சம் நெறையவே இருக்கும். வீட்டுல இது மாதிரி ஏன் செய்ய மாட்டேங்குறாங்கன்னு ஏங்க வைக்கும். அதோட ருசியோட ஒரு பகுதிய பெங்களூர் எம்.டி.ஆர்ல ருசிச்சேன். அதே மாதிரி தூத்துக்குடி பழைய ஹார்பர் எதுக்க இருக்குற சின்ன மதச்சார்பற்ற பிள்ளையார் கோயில்...அங்க கிருத்துவர்களும் பூஜைக்குக் குடுப்பாங்க. கோயிலுக்கு வர மாட்டாங்க. ஆனா கட்டளைக்குன்னு ஒரு தொகை குடுப்பாங்க. அங்க ஒரு பொங்கலும் புளியோதரையும் போடுவாங்க...ஆகா! ஆகாகா!

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2006/12/2006.html

நல்ல திறனாய்வு. மேலோட்டமானது என்றாலும் நல்லதைச் சொல்லும் பதிவு என்று பாராட்ட வேண்டும்.

இன்னொரு குழுப்பதிவைச் சொல்லியே ஆக வேண்டும். முருகனருள் (muruganarul.blogspot.com) என்ற பெயரில் சிபி, எஸ்.கே, குமரன் மற்றும் நான் ஆகியோர் இணைந்து முருகன் பாடல்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். முதலில் எழுத்து வடிவில் கொடுத்தோம். பிறகு ஒலியையும் இணைத்தோம். கடந்த முறை இன்னும் ஒரு புதுமையான் நான் எழுதிய முருகன் கவிதைக்கு ஜெயஸ்ரீ அவர்கள் மெட்டிட்டு பாடி இணைத்தோம். அதற்குப் பின்னணி இசைக்கோர்ப்பு எதுவும் செய்யவில்லை. ஒருவேளை நாளை அதுவும் நடக்கலாம். முருகனருள் இருந்தால். இதில் முருகனை முன்னிறுத்தி மட்டுமே பதிவுகள். அடுத்தவரிடம் குற்றம் கண்டுபிடித்துப் பதிவிடுவதையோ பின்னூட்டமிடுவதையோ தவிர்க்கிறோம்.

G.Ragavan said...

http://nunippul.blogspot.com/2006/12/blog-post.html

வாழ்த்துகள் உஷா. கலைமகள் பத்திரிகையின் தரம் நிரந்தரம். விளம்பரங்களிலும் வண்ணப்புகைப்படங்களிலும் இலவசங்களிலும் ஆழ்ந்து போன இன்றைய தமிழ்ப் பத்திரிகை உலகத்தில் நீண்ட காலமாக நிலைத்து வரும் இதழ் கலைமகள். அது பெங்களூரில் கிடைப்பதில்லை என்பது வருத்தமே. சந்தா கெட்டினால் அனுப்புவார்கள் என்றால் நானும் வாங்கத் தயார்தான். அப்படி ஒரு பத்திரிகையில் நீங்கள் பரிசு பெற்றிருப்பது மிகச் சிறப்பு. என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள். தலைப்பு பழைய எம்பது சினிமாத் தலைப்பு போல இருந்தாலும் கதை புதுமையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஞானபீடம், சாகித்ய அகாடமி, நோபல் என்றெல்லாம் காதில் விழுகின்றன. எழுத்து வியாபாரி ஆவதற்கு வசதியாக உங்களுக்குத் தள்ளுவண்டி கிடைத்திருக்கிறது. வியாபாரம் முன்னேறி டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைக்க வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://rozavasanth.blogspot.com/2006/12/blog-post.html

வணக்கம் ரோசாவசந்த். உங்கள் முடிவு உங்களுக்கானது. அது உங்களுக்கு நல்லவிதமாகப் பயனாகவே விரும்புகிறேன்.

பெரியாரும் ஒரு மனிதர்தானே. அவரும் தவறியிருக்கலாம். அவருடைய கருத்தில் நல்லதை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அல்லது என்று தோன்றினால் விலக்குவதில் தவறில்லை. அவர் ஒரு தவறு செய்து விட்டார் என்பதற்காக தவறுகள் அனைத்தையும் சப்பைக்கட்டுவது ஏற்க முடியாது. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும். இதற்கு எதிரான எவரும் தவறானவரே.

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2006/11/blog-post_17.html

முருகன் இட்லிக் கடையில கிடைக்கிற அந்த வெங்காய ஊத்தப்பத்துக்கு இணையா இன்னொரு ஊத்தப்பம் இல்லைன்னு உறுதியாச் சொல்லலாம். அது சரி...மதுரைக் கோனார் கறிதோசையை விட்டுட்டியே ராம்.

அப்புறம் பெல் ஓட்டல் கிளை தொறந்திருக்காங்க. சிவகாசிக்காரங்கதான். இப்ப மதுரைல தொறந்திருக்காங்க. தள்ளுவண்டிய நம்ம டேபிள் பக்கத்துல வந்து அங்கயே ஆம்லெட் போட்டுத் தருவாங்க. அன்னைக்கு மதுரைச் சந்திப்புக்கு வரும் முன்னாடி அங்க வெட்டீட்டுதான் வந்தேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post.html

இதென்ன படங்களைத் திட்டி எழுதுற வாரமா? இப்பத்தான் நானும் பிரதீப்பும் சிவப்பதிகாரத்தை ஒரு பிடி பிடிச்சோம். நீ ஸ்டேட் விட்டு ஸ்டேட் தெலுங்கு படத்தக் கிண்டலடிக்கிற. என்ன நடக்குதோ! ஏடு கொண்டலவாடா பாலாஜி!

அதிலோக சுந்தரி ஜெகதேக வீருடு பாத்தாச்சா? பம்பலக்கடி ஜம்ப்பா?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/6.html

என்னது அண்ணா மேம்பாலம் பக்கத்துல சரவணபவன் கிளையா? அதுக்குப் பேரு ஸ்வாதீசா? எங்கப்பா இருக்கு அது? நான் கேளிப்பட்டதேயில்லையே! கதைக்காக நீயா எழுதிக்கிட்டியா!

கமல் ரஜினி சண்டைல...வேட்டையாடு விளையாடு படத்துல கமல் பேரு ராகவன். சிவாஜி படத்துல ரஜினி பேரு ராகவனான்னு கேட்டிருக்கலாம். தீபாவால பேசவே முடியாமப் போயிருக்கும்.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2006/12/blog-post.html

நவரசம்னாலே எனக்குத் தில்லானா மோகனாம்பாள் படந்தான் நினைவுக்கு வரும். அதுல மறைந்திருந்து பார்க்கும் பாட்டுல,
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும்-னு வரும் போது பத்மினி நவரசத்தையும் காட்டுவாங்க. அப்பப்பா!
தமிழ்மண எழுத்துப் பேரொளியாக மாறீட்டீங்க நீங்க. :-)

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/12/happy-birthday.html

திருமங்கையாழார் பற்றி நானும் படித்தும் படத்தில் பார்த்தும் இருக்கிறேன். அவர் பிறந்த விண்மீன் திருக்கார்த்திகை என்று தெரியாது.

நல்லதொரு பாவைச் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லியிருக்கிறீர்கள். சிறப்பு.

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது பலிக்கும்
என்ற கவியரசரின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/12/blog-post.html

கார்த்திகைத் திருநாளில் தீபவொளி பொலிந்து உலகம் உய்ய இறைவனை வணங்குகிறேன்.

தீபமங்கல ஜோதீ நமோ நம என்ற திருப்புகழ் வரிகளை இங்கு நண்பர்களும் அன்பர்களும் எடுத்தாண்டிருக்கிறார்கள். மிகச்சிறப்பு. பழநித் திருப்புகழ் வரி. செஞ்சுருட்டி ராகத்தில் பாடச் சுகமானதும் கூட.

நீங்கள் குறிப்பிட்ட தசாவதாரம் படத்தை நானும் பார்த்திருக்கிறேன். படத்தில் பல இடங்களில் கதை மாற்றங்கள் நிறைய. ஆகையால் நிறைவான படமாக எனக்கு அது தோன்றவில்லை. அதை விட ஏ.பி.நாகராஜனின் திருமால் பெருமையும் திருமலைத் தெய்வமும் நன்றாக இருக்கும். பாடல்களும்தான்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/6.html

//// வெட்டிப்பயல் said...
//G.Ragavan said...
என்னது அண்ணா மேம்பாலம் பக்கத்துல சரவணபவன் கிளையா? அதுக்குப் பேரு ஸ்வாதீசா? எங்கப்பா இருக்கு அது? நான் கேளிப்பட்டதேயில்லையே! கதைக்காக நீயா எழுதிக்கிட்டியா!
//
இல்லைங்க... நல்லா தெரியும்
ஆயிரம் விளக்கு மசூதி பின்னாடி, சத்யம் தியேட்டர் பக்கம்

நல்லா விசாரிச்சுதாங்க எழுதினேன்...
இல்லைனா கதைக்கான களமா பெங்களூரையே வெச்சிருப்போமில்ல.
(அட்ரஸ் வேணும்னா செந்திலை கேட்டு கொள்ளவும் ;)) //

அடடா! பாலாஜி...சத்யம் தேட்டருக்கும் அண்ணா மேம்பாலமும் எவ்வளவு பக்கத்துல தெரியுமா? இதுல...அந்த சத்யம் தேட்டர் பக்கத்துலயே ஒரு மேம்பாலம் இருக்குது தெரியுமா? செந்தில் தப்பாத்தான் சொல்லீருக்கனும். சரவணா பாஸ்ட் புட் கமலா தேட்டர் வளாகத்துல இருக்குது. அதுவும் அண்ணா சாலை. ஆனா அந்த எடத்துல மத்துரா ஓட்டல் நல்ல பிரபலம்.

// //
கமல் ரஜினி சண்டைல...வேட்டையாடு விளையாடு படத்துல கமல் பேரு ராகவன். சிவாஜி படத்துல ரஜினி பேரு ராகவனான்னு கேட்டிருக்கலாம். தீபாவால பேசவே முடியாமப் போயிருக்கும்.
//
பாலாஜியா இருந்தா விவரமா கேட்டுருப்பான். அருணுக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தல ;) //

அதெல்லாம் சரிதான். ஆனாலும் விவரம் தெரிஞ்ச பாலாஜி...நடுவுல ராகவன்னு ஒரு வரி எழுதீருக்கலாம். சரி. போகட்டும். :-(

G.Ragavan said...

http://valai.blogspirit.com/archive/2006/12/07/சிவப்பதிகாரம்-விமர்சனம்.html

ஐயகோ! இதென்ன சோதனை! யாரந்த மனோஜ்? கரு.பழநியப்பனுக்கு மாமனா மச்சானா? மனோஜுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாரா? ஜிம்முக்குப் போக ட்ராக் சூட் வாங்கிக் கொடுத்தாரா! மனோஜரே! உமக்கு உள்ளம் என்று ஒன்று இல்லாமல் போனதா! இப்படி நீர் ரசித்துப் பார்த்திருப்பதை நினைக்கும் பொழுது...நீர் பார்க்கும் முதல் படமே இதுதான் என்று தோன்றுகிறது. ஆண்டவன் உங்களைக் காக்கட்டும்.

சிந்தாநதி...கவுத்துட்டீகளே!!!!!!!!!!!! இந்த விமர்சனத்தப் படிச்சிட்டு மக்கள் படத்தப் பாத்துத் தொலைக்கப் போறாங்கய்யா!

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_116541791631437218.html

என்னது எப்பவும் பர்ஸ்ட் ரேங்க் எடுக்குற ராகவனா? அது வேற ராகவனா இருக்கும். நானில்லை. நானில்லை.

உங்கள் நண்பர் எழில் உங்களுக்குக் கண்டிப்பாகத் திரும்பக் கிடைப்பார். எனக்கும் ஒரு நண்பன் உண்டு. சக்திவேல் என்று பெயர். அமெரிக்காவில் இருக்கிறான். ஆனால் அவனோடு தொடர்பு மிகமிகக் குறைந்து விட்டது. வீடு பால் காய்ச்சியதைக் கூட அவனிடம் சொல்லவில்லை. சொல்லக்கூடாது என்று எந்தக் காரணமும் இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு ஈகோ. (very bad ragavan). அப்படியே இடைவெளி விழுந்து விட்டது. வீட்டுத் தொலைபேசி எண் இருக்கிறது. ஒரு நாள் அழைத்தேன். ஒரு வருடம் முன்பு. தூங்கிக் கொண்டிருந்தான். பிறகு பேசுகிறேன் என்று வைத்து விட்டேன். அதற்குப் பிறகு அழைக்கவேயில்லை. உங்கள் பதிவைப் படித்ததும் அவனை அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த வாரயிறுதியில் அவனை அழைக்கிறேன்.

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2006/12/blog-post.html

// மதுமிதா said...
ஜீரா எனக்கும்தான். பத்மினி பத்தி தனியா பத்து பதிவு போடலாம். படம் எப்போ மாத்தினீங்க. எங்க எடுத்தது.//

இப்பதான் பெங்களூர் புத்தகக் கண்காட்சி சமயத்துல எடுத்தது. ரெண்டு மூனு வாரமிருக்கும். ஆனா அதுக்கடுத்து இன்னைக்கும் படம் மாத்தியாச்சே. :-)

/////"தமிழ்மண எழுத்துப் பேரொளி"///

வேறு யாருக்காவது போக வேண்டியது இங்கே வந்துருச்சா:-) //

இல்ல. இது உங்களுக்குன்னே கிண்டுனது...இல்ல இல்ல..உங்களுக்குன்னே குடுத்தது

// சின்ன நட்சத்திரமா கூட மினுங்க முடியல. ஒருவேளை 'ட்யூப் லைட்'
என்பதை பேரொளின்னு ஜூம் போட்டு சொல்லிட்டீங்களோ.

ஜீரா, துளசி உள்குத்து எதுவும் இல்லையே:-) //

அதெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க இந்தப் பட்டத்தத் துணிஞ்சு ஒங்க பேரோட போட்டுக்குங்க.

G.Ragavan said...

http://sivamurugan.blogspot.com/2006/12/blog-post.html

சிவமுருகன் அந்தப் படத்தை தற்செயலா டீவியில பார்க்க நேர்ந்தது. வரிசையா சேனல் மாத்திக்கிட்டிருந்தப்ப தெலுங்குல மீனாட்சியம்மன் கோயிலும் தமிழும் வருதேன்னு பாத்தா இப்பிடி ஒரு கூத்து.

படத்துல சரிதாவும் பிரகாஷ்ராஜும் மதுரக்காரங்க. அதுனால அவங்க தமிழத் தெலுங்கு மாதிரி பேசுவாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் வில்லன்க.

கோயிலுக்கும் செட்டுக்கும் மொதல்ல வித்யாசம் தெரியலை. ஆனா ஏதோ உறுத்த நல்லா கூர்ந்து கவனிச்சப்போ வித்யாசம் தெரிஞ்சது. அதுல ஹீரோவும் வில்லனும் பொற்றாமரைக் குளத்துக்குள்ள மூழ்கிச் சண்டை போடுற மாதிரி அபத்தங்கள்ளாம் உண்டு. அப்படி மூழ்கும் போது பெரிய பொற்றாமரை ஒன்னு தண்ணிக்குள்ள இருக்கும். கோயிலுக்குள்ள கத்தி கபடாவோட ஆளுங்க வந்து வம்பு செய்றதெல்லாம் படத்துல வரும். படம்....அபத்தக்களஞ்சியம். ஆனாலும் மதுரை வர்ரதாலையும் கோயில் வர்ரதாலயும் பாத்தோம். ஆனா படம் தெலுங்குல ஹிட்டாத்தான் இருக்கனும்.

G.Ragavan said...

http://ukumar.blogspot.com/2006/12/blog-post_116544896785151073.html

கவுண்டமணி செந்தில் ஜோடியைப் பிடிக்காம இருக்குமா?

செந்திலோட மொதப் படம் பொய்சாட்சீன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். அப்பாவியா இருப்பாரு. அவர பாக்கியராஜ் கூட்டிக்கிட்டு போய் ஓட்டல்ல நல்லா சாப்பிட்டுட்டு ஓடீருவாரு. இவரு மாட்டிக்கிட்டு அடி வாங்குவாரு. அப்பயே அவருக்கு அடி வாங்குற யோகம்.

ராமன் எத்தனை ராமனடி படத்துலயே (சிவாஜி, கே.ஆர்.விஜயா) கவுண்டமணி வருவாரு. பஸ் டிரைவரா.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/7.html

வெட்டி......உன்னோட மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டிருக்க....இப்பிடி மொதமொதலா வண்டீல போறவங்கள ஆக்சிடெண்டு செஞ்சிட்டியே....பாவம்....இதெல்லாம் ரொம்பத் தப்பு. இவ்வளவ்வு சோகமால்லாம் வெட்டி எழுதக் கூடாது. சந்தோஷமா இருந்தாத்தான் படிப்போம். :-(

பெசண்ட் நகர் பீச் சரி. பக்கத்துல அஷ்டலட்சுமி கோயிலும் சரி...பக்கத்துல இருக்குற அறுபடை முருகன் கோயில விட்டுட்டியேப்பா! பக்கத்துலயே முருகன் இட்லிக் கடை இருக்கு. அங்க டின்னர் போடலாம்னு சொல்லீருக்கலாம். 23C? அது பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகாது. அதுவுமில்லாம ஈவினிங் ஸ்நாக்ஸ்தான் சாப்பிடுவாங்க. டின்னர் இல்லை. ;-) நீ மட்டும் அவங்கள ஆக்சிடெண்ட் பண்ணலாமா? அதான் உன்னய இப்பிடி மடக்கி மடக்கி கேள்வி கேக்குறேன். பதில் சொல்லு.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2006/12/215.html

செல்வன்...என்னுடைய நீண்ட நாள் ஆற்றாமைகளில் ஒன்று இந்தத் தமிழிசை. சென்னையில் நான்கு மாதங்கள் இருக்க நேர்ந்தது. அந்த நான்கு மாதங்களில் தமிழ்ப் பாட்டுக் கச்சேரி கேட்க நான் சினிமாக் கச்சேரிகளுக்குத்தான் போய்ச் சேர வேண்டியிருந்தது என்பதே உண்மை. சினிமாப் பாடல்கள் தமிழில் இருப்பதால்தான் இந்த அளவிற்குப் புகழ் அடைகின்றன. நான் வேறு மொழிப் பாட்டுகளை வெறுப்பவன் அல்லன். என்னிடம் கன்னட, தெலுங்கு, மலையாள, பெங்காலிப் பாட்டுகளும் இருக்கின்றன. அவைகளையும் கேட்பேன். ஆனால் தமிழும் எனக்கு வேண்டும். நிறைய வேண்டும். தருவார் யார்? யானைப்பசி தமிழுக்கு. கிடைக்கும் சோளப்பொரி போதுமா?

முருகன் காப்பான். கண்டிப்பாக. அதற்கு நாம் செய்வது என்ன? திருப்பாவையிலும், தேவாரத்திலும், திருப்புகழிலும், சிலப்பதிகாரத்திலும், பாரதியின் பாவேந்தரின் எழுத்துகளிலும், நாமக்கல் கவிஞர், முத்துத் தாண்டவப் பிள்ளை, அருணாச்சல ரெட்டியார், எத்தனையெத்தனை...அள்ளக் குறையாத வெள்ளம் இருக்கையில் அதே குட்டையில் குளிக்க வேண்டுமா!

டீ.எம்.எஸ், சூலமங்கலம், சீர்காழி, பித்துக்குளி, வீரமணி, பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் முன்பு பக்திப் பாடல்கள் பாடியவர்கள். அவர்கள் பாட்டு இன்றும் நிலைத்திருக்கிறதே. அவர்களை விடவா நீங்கள் புகழ் பெற்று விட்டீர்கள்? பாடகர்களே....பாரம்பரிய இசை புத்துணர்ச்சி பெற வேண்டிய பொழுது வந்து விட்டது. நீங்கள் மாறுங்கள். இல்லையேல் உங்களுக்கு நன்றல்ல.

சரி. நீங்கள் பாடுங்கள். பாடாமல் போங்கள். தமிழர்களே...தமிழ் தாய்மொழியாக இல்லாவிட்டாலும் தமிழுணர்வு கொண்டவர்களே...அடுத்தவர்களை வசவு சொல்லிக் கொண்டிருப்பதை விட ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? வலைப்பூவில் இருந்தே தொடங்குவோம். ஆக்கபூர்வமாகச் செய்யலாம். வாருங்கள். சமீபத்தில் ஒரு பாடல் நான் எழுதி ஷைலஜா அவர்கள் பாடி வலைப்பூவேற்றினோம். எந்த இசைக்கோர்ப்பும் இல்லாமல். இவ்வளவுதான் நாங்கள் இரண்டு பேர் சேர்ந்து செய்ய முடிந்தது. நாம் அனைவரும் சேர்ந்தால்? சேர்வோமா?

G.Ragavan said...

http://valai.blogspirit.com/archive/2006/12/07/சிவப்பதிகாரம்-விமர்சனம்.html


இன்னொரு தகவல் சொல்றேன் குறிச்சிக்கோங்க. கண்ணதாசன் பதிப்பகம் மதுரைக் கிளைன்னு காட்டுறாங்க. ஆனா அது சென்னை அலுவலகம். தி.நகரில் இருக்கிறது. வெளியே காட்டும் போது நடேசன் பூங்கா வேறு தெளிவாகத் தெரிகிறது. மதுரையில கண்ணதாசன் பதிப்பகமே இல்லை. ம்ம்ம்...இப்பிடியெல்லாம் குத்தம் கண்டுபிடிக்கிறோம் பாத்தீங்களா? இப்படித்தான் வேட்டையாடு வெளையாடு படத்துல வாஷிங்டன் ஏர்ப்போட்டக் காட்டி நியூயார்க்குன்னு எழுத்துப் போடுறாங்க. அதையும் கண்டுபிடிச்சிட்டோம்ல.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_07.html

வில்லன் முறைப்பெண் கதாநாயகி. வில்லன் கதாநாயகனின் தங்கையைக் கெடுத்து விடுவார். கடைசியில் வில்லனுக்கும் கதாநாயகனின் தங்கைக்கும் திருமணம் நடக்கும். கதாநாயகனும் கதாநாயகியும் திருமணம் செய்து கொள்வார்கள்.

ஊர்ப்பக்கத்துக் கிழவி பாத்திரங்கள் எப்பொழுதும் பழமொழி சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

சுட்டதைப் பார்த்து யாராவது குறுக்கே பாய்வது. குண்டை விட இவர்கள் வேகமாகப் பாய்வார்கள்.

படத்தின் கடைசிக் காட்சியைத் தவிர படம் முழுக்க கதாநாயகனைத் துன்பம் துரத்தும். கடைசிக் காட்சியில் மட்டுமே வில்லனைத் துன்பம் துரத்தும்.

மாயாஜாலப் படமென்றால் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமைன்னு யாராவது கவர்ச்சி ஆட்டம் ஆடனும். சித்திரகுப்தன் எப்போதும் காமெடியந்தான்.

கதாநாயகின் தலையில் பத்து முழம் மல்லிகைப் பூவை கதாநாயகன் அப்படி வைத்ததுமே பூ நன்றாக நின்று கொள்ளும். அதே போல பொட்டு. கதாநாயகியோ நாயகனோ வைத்தால் வட்டமாக இருக்கும்.

G.Ragavan said...

http://www.desikan.com/blogcms/?item=168&cmt=31

தேசிகன், உங்கள் அம்மா செய்தது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது. தாய்மொழியைப் பள்ளியில் வழக்கமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்தியை நீங்கள் வெளியில் படித்திருக்கலாமே? யாரும் தடுத்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்தியோ வேறெந்த மொழியோ படிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. வேறு வாய்ப்புகளை இந்தி படிக்க வேண்டும் என்று நினைத்த உங்கள் தந்தை ஏற்படுத்தித்தரவில்லை என்பதே உண்மை.

இந்தி மட்டுமல்ல வேறெந்த மொழியும் தெரிந்திருப்பது நன்றே. தமிழ்நாட்டை விட்டு வெளியே போனால் கட்டாயம் இந்தி தேவை என்பது மாயை என்றே நான் நினைக்கிறேன். எனக்கு இந்தி தெரியாது. அது எனக்கு ஃப்ரெஞ்சு தெரியாது என்ற அளவில்தான் நான் நான் எடுத்துக் கொள்கிறேன்.

அலுவலகத்தில் இந்தியில் பேசுகையில் நீங்கள் தனியராக இருந்தால் நீங்கள் அவர்களை அணுகும் முறையில் ஏதோ பிரச்சனை. எனக்கு வங்க நண்பர்கள் நிறைய. அதுவும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் எனக்கு வங்க மொழி தெரியாது. பிரச்சனையை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதிலேயே பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/6.html

// Senthil Kumar S P said...
//அடடா! பாலாஜி...சத்யம் தேட்டருக்கும் அண்ணா மேம்பாலமும் எவ்வளவு பக்கத்துல தெரியுமா? இதுல...அந்த சத்யம் தேட்டர் பக்கத்துலயே ஒரு மேம்பாலம் இருக்குது தெரியுமா? செந்தில் தப்பாத்தான் சொல்லீருக்கனும். சரவணா பாஸ்ட் புட் கமலா தேட்டர் வளாகத்துல இருக்குது. அதுவும் அண்ணா சாலை. ஆனா அந்த எடத்துல மத்துரா ஓட்டல் நல்ல பிரபலம்.//

Kamala Theater is in Vadapalani. You have Confused a lot. When you are travelling in Anna Salai towards Flyover, After TVS stop the White's road comes first, then comes the Peters road. a Fly over is there in Peters road. The Hotel is there as soon as you take the left at Peters road from the Anna salai. If you still confused

Click this Link
http://wikimapia.org/#y=13055326&x=80256119&z=18& //

யாரு செந்தில்குமாரா! ம்ம்ம்....சாந்தித் தேட்டர கமலான்னு வாய் தவறிச் சொல்லீட்டேன். ஒடனே என்னைய கொழப்பவாதி ஆக்கப் பாக்குறீங்க போல இருக்கு. இப்பத்தான் எனக்கும் நினைவு வருது. சத்யம் பிளைஓவர் ஏறும் முன்னாடி வலப்பக்கம் ஒரு சரவணபவன் புதுசா இருக்கு. பாத்திருக்கேன். ஆனா அதை ஆயிரம் விளக்குச் சரவணபவன்னு சொல்லீருக்கனும். அண்ணா மேம்பாலச் சரவணபவன்னா எப்படி? அண்ணா மேம்பாலம்னாலே உட்லண்ட்ஸ் டிரைவ் இன் தான். இல்லைன்னா இஸ்பஹானி.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/7.html

// வெட்டிப்பயல் said...
இன்னும் சோகமே வரலையே...
கதையோட தலைப்பை படித்த பின்பும் கதை யூகிக்க முடியவில்லையா? ;) //

அந்த அளவுக்கு அறிவிருந்தா நான் ஏன் இப்படியிருக்கேன் :-(

// //பெசண்ட் நகர் பீச் சரி. பக்கத்துல அஷ்டலட்சுமி கோயிலும் சரி...பக்கத்துல இருக்குற அறுபடை முருகன் கோயில விட்டுட்டியேப்பா!
//
அதுக்கு வேணும்னா நம்ம அடுத்த கதை நாயகன் ராகவனை போக சொல்லலாம் ;) //

என்னது...ராகவனா? டி.சி.பி ராகவனா? தேர்தல் கமிஷனர் ராகவனா?


//// பக்கத்துலயே முருகன் இட்லிக் கடை இருக்கு. அங்க டின்னர் போடலாம்னு சொல்லீருக்கலாம்.
//
ஆக்சிடெண்ட் ஆனதுக்கப்பறம் யார் இப்ப சாப்பிட போறா? //

ஒரு நல்ல கடையில சாப்பிடக் கூடாதே....பக்கத்துலயே டாலர் ஷாப் இருக்கு. எதையெடுத்தாலும் 49 ரூவா 99ரூவான்னு இருக்கும். கொஞ்சம் அப்படித் திரும்பி வந்தா பொன்னுச்சாமி. நெத்திலி வறுவல் பிரமாதமா இருக்கும்.

//// 23C? அது பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகாது
//
23C பெசண்ட் நகர் போகும்.
நேத்து நீங்க சொன்னதும் தப்புனு செந்தில் போன பார்ட்ல சென்னை மேப் லிங்க் கொடுத்திருக்கார்.//

பெசண்ட் நகர்..இந்தக் கடைசீல இருந்து அந்தக் கடைசீ வரைக்கும் இருக்கு. நான் என்ன சொன்னேன். பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகாதுன்னுதானே சொன்னேன். ;-) மேப் போட்டவர இப்பக் கூப்புடு.

// 25 வருஷம் சென்னைல இருந்த எனக்கு தெரியாதானும் சொல்றார். விவரம் தெரிஞ்சவங்க யாரையாவது கேட்டு சொல்லுங்க...//

25 வருசம் சென்னையில இருக்குறதுல பெரிய விஷயமில்லை. ஆனா எவ்வளவு விவரம் தெரியுதுங்குறதுதான் முக்கியம். காமராஜர் அரங்கம், அலையன்ஸ் பிரான்சே, நேரு உள்விளையாட்டு அரங்கமெல்லாம் போனதுண்டான்னு சென்னைச் செந்தமிழன் செந்தில் கிட்ட கேளு.

// நானா ஆக்ஸிடெண்ட் செஞ்சேன்... ராமா!!! //

ஓ ராமாதான் ஆக்சிடெண்ட் செஞ்சாரா? அவரு நல்ல டிரைவர் இல்ல போலிருக்கே!

G.Ragavan said...

http://oorodi.blogspot.com/2006/12/blog-post_116551133786904798.html

கந்தபுராணம் நான் ஆங்காங்கு படித்ததோடு சரி...

திகட சக்கரச் செம்முகம் பாடலும்

தீயவை புரிந்தாரேனும் பாடலும்

துயில ஓருருவம் துஞ்சி என்ற பாடலும்

ஏலவார் குழல் இறைவிக்கும் பாடலும்

கோலமா மஞ்ஞை தன்னில் பாடலும் மட்டுமே தெரியும். இன்னும் ஆழ வேண்டும். அந்த ஆவலைத் தூண்டுகிறது உங்களது இந்தப் பதிவு.

எஸ்.கேயின் இனிய திருப்புகழ் பதிவுகளும் என்னைக் கவர்ந்தவை.

G.Ragavan said...

http://holyox.blogspot.com/2006/12/215.html

// இளையராஜா திரையுலகிற்கு வருவதற்கு முன் தமிழக இளைஞர்கள் அனைவரும் இந்திப் பாடல்களில் தங்கள் ரசனையை
அடகு வைத்திருந்தார்களே அதற்கு என்ன காரணம் என்பதை சற்று யோசிப்பீர்களா? இந்தி நமக்கு தற்காலிகத் தாய்மொழியோ? //

இது ஏற்கவே முடியாத கருத்து. இளையராஜாவின் காலத்தில்தான் டிங்கு டாங்கு டிங் ஏக் தோ தீன், ஹவ்வா ஹவ்வா பாட்டுகள் ஹிட்டாக இருந்தன. இசைஞானியின் வரவிற்கு முன்னால் மெல்லிசை மன்னரின் இசையரசாங்கத்துப் பாடல்கள் இன்றைக்கும் நிலைத்திருப்பவை. இந்திப் பாடல்கள் ஒவ்வொரு பொழுதிலும் கேட்டு ரசிப்பதற்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இன்றைக்கும் கூட.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/7.html

// வெட்டிப்பயல் said...
அதுவும் சரிதான்... வெட்டி அளவுக்கு யோசிச்சா நீங்க உங்க ரேஞ்சுல இருந்து குறைஞ்சிடுவீங்க.. நீங்க உயரத்திலே இருங்க ;) //

இதுக்கு ஒரு பதிலும் சொல்ல முடியாது.

////என்னது...ராகவனா? டி.சி.பி ராகவனா? தேர்தல் கமிஷனர் ராகவனா?//
ரெண்டு பேர பத்தியும் மகரந்தம்ல எழுதினாரே அந்த ராகவன் ;) //

ஓ அவரா! அவரு ரொம்பவும் ராங்கி பிடிச்ச ஆளு. அவர வெச்சல்லாம் கத எழுதாத.

//// ஒரு நல்ல கடையில சாப்பிடக் கூடாதே....பக்கத்துலயே டாலர் ஷாப் இருக்கு. எதையெடுத்தாலும் 49 ரூவா 99ரூவான்னு இருக்கும். கொஞ்சம் அப்படித் திரும்பி வந்தா பொன்னுச்சாமி. நெத்திலி வறுவல் பிரமாதமா இருக்கும்.//
ஹிம்... நோட் பண்ணிக்கிறேன் :-) //

இப்பிடி வெவரம் எங்கிட்டக் கேட்டாச் சொல்வேன். அத விட்டுக்கிட்டு செந்தில் தனான்னு கேட்டுக்கிட்டு.

// //பெசண்ட் நகர்..இந்தக் கடைசீல இருந்து அந்தக் கடைசீ வரைக்கும் இருக்கு. நான் என்ன சொன்னேன். பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகாதுன்னுதானே சொன்னேன். ;-) மேப் போட்டவர இப்பக் கூப்புடு.//
அது வரைக்கும் தான் பஸ் போகும். மணல்குள்ள பஸ் போகாதுனு சொல்ல சொல்லி சொல்றாரு... தனா விழுந்து விழுந்து சிரிக்கிறான்... அதுக்கு மேல போகனும்னா நடந்துதான் போகனும்...
இது வரைக்கும் நீங்க பெசண்ட் நகர் பீச்சிக்கே போயிருக்க மாட்டீங்கனு சொல்றான். பஸ்ஸ மட்டும் பாத்துட்டு ஓவரா பேச வேணாம்னு சொல்லறான் :-) //

யாரு தனாவா? தனாவா அப்படிச் சொன்னது? இல்ல நீயா சொல்றியா? பெசண்ட் நகர் பீச்சுக்கு எந்த பஸ்சும் போகாது. பெசண்ட் நகர் பஸ்செல்லாம் பஸ்ஸ்டாண்டோட நின்னுரும். அங்கிருந்து நடந்து பக்கத்துல இருக்குற பீச்சுக்குப் போனா கருவாட்டு மணத்தோடதான் காதலிக்கனும். பெசண்ட் நகர் பீச் என்று வழங்கப் படுவது...பீச்சின் நுழைவு தொடங்கி Planet Yumm வரைக்குந்தான். இண்டு இடுக்கு முண்டு முடுக்குன்னு பீச்சு மகாபலிபுரத்தத் தாண்டி கன்னியாகுமரி வரைக்கும் ஓடுது. விட்டா அதெல்லாம் பெசண்ட் நகர் பீச்சுன்னு சொல்வீங்க போலிருக்கே!

////காமராஜர் அரங்கம், அலையன்ஸ் பிரான்சே, நேரு உள்விளையாட்டு அரங்கமெல்லாம் போனதுண்டான்னு சென்னைச் செந்தமிழன் செந்தில் கிட்ட கேளு.//

இந்த மூணு இடத்துக்கும் போயிருக்காராம். இந்த இடத்துக்கு மட்டும் போயிட்டு ஓவரா பேச வேணாம்னு சொல்லறாரு. //

ஓவரா! நானா! நானா! ஆழ்வார்ப்பேட்டை coffee world தெரியுமா? dollors and pounds தெரியுமா? அதோட புது showroom எங்க இருக்கு தெரியுமா? fashion folks தெரியுமா? சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள்ள இருக்குற பிரஸ்டீஜியஸ் கிரிக்கெட் கிளப் போனதுண்டா? அங்க பாப்புலர் டிரிங் என்னன்னு தெரியுமா? எந்தப் புத்தகம் வேணும்னாலும் தி.நகர்ல எங்க கிடைக்கும் தெரியுமா? வானதி பதிப்பகம், கண்ணதாசன் பதிப்பகம், பழநியப்பா பிரதர்ஸ், அல்லயன்ஸ் பதிப்பகம், இதெல்லாம் தெரியுமா? சஞ்சீவினி எதுக்கு பாப்புலர் தெரியுமா? இன்னும் நெறைய தெரியுமா இருக்கு....மொதல்ல இதுக்கு பதில் சொல்லட்டும்.

// உங்களுக்கு பெங்களூர்ல லக்கசந்திரா, கொணப்பனக்ரஹாரா தெரியுமானு தனா கேக்கறான். //

அது சரி..கோனேன அக்ரஹாரா தெரியுமா? பூப்பசந்திரா தெரியுமா? தொட்டபொம்சந்திரா தெரியுமா? அஷ்வத்நகர் தெரியுமா? கங்கனஹள்ளிக்கும் கங்காநகருக்கும் என்ன வேறுபாடு தெரியுமா? தரளபாலகேந்திரா எங்கயிருக்கு தெரியுமா? பெங்களூர்ல ஒரு மீனாட்சியம்மன் கோயில் இருக்கு. அது எங்கன்னு தெரியுமா?

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/12/3_07.html

1 ஆ) ஆதி சங்கரர்
2 அ) கிருத்திகை
3 அ) குன்றுதோறாடல்
4 இ) கதிர்காமம்
5 ஈ) சுப்ரமண்யா
6 இ) தேவராய சுவாமிகள்
7 இ) சிக்கல்
8 அஜமுகி
9 ஆ) கந்தபுராணம்
10 ஆ) அக்னி

அமெரிக்க பொழுதுல போட்டா மொதல்ல குமரந்தான் சொல்வாரு. இந்திய பொழுதுல போட்டா நான் சொல்வேன்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_116556296466953582.html

லக்கிலுக்கிற்கு எனது வாழ்த்துகள். சந்தனமுல்லை மற்றும் பத்மா கிஷோருக்கு எனது வாழ்த்துகள். பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

லக்கிலுக் விஜயகாந்தையே ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது ஒரு ஓட்டல் என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அதற்கு அங்கேயே பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் முடிவுகள் வந்ததால் இங்கேயே சொல்கிறேன்.

காஷ்மீர், பாகிஸ்தான் தீவிரவாதிகள் கேப்படனுடன் தமிழில் பேசுவார்கள் என்று ஒரு ஓட்டல் இருந்தது. சமீபத்தில் மைசூரில் பிடிபட்ட மூன்று தீவிரவாதிகளுக்குத் தமிழும் தெலுங்கும் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்ததாம். ஆனால் கர்நாடகாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கன்னடம் சொல்லிக் கொடுத்து அனுப்பியிருந்தால்..ஊர் அது இது என்று மாட்டிக் கொள்ள நேரிடும் என்று தமிழும் தெலுங்கும். அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டவர் தமிழ்நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர் என்று நினைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வீடு வாடகைக்கு விடுவது குறித்து மிகவும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பெங்களூரில் எங்கள் அப்பார்ட்மெண்ட்டிலும் இருப்போர் தகவல்களும் புகைப்படமும் திரட்டி அதை அப்பார்ட்மெண்ட் அசோசியேசன் வைத்திருக்கும் வகை செய்து கொண்டிருக்கிறோம். சமயத்தில் கிண்டல் உண்மையாகும் பொழுது வியப்புதான் ஏற்படுகிறது என்பதற்காக இந்தச் செய்தியைச் சொல்ல விரும்பினேன்.

G.Ragavan said...

http://www.desikan.com/blogcms/?item=168&cmt=34

// [20] from: Sathish KumarHello Desikan sir,

I am also in the same situation. My managers speak to me in Hindi. I stop them and I tell them that I dont know hindi. Then they speak to me in English. but next time when they call me, the forget that I am aware of hindi and speak to me in Hindi again. My managers are Tamilians from Delhi. They laugh at me when I tell them, I dont know hindi. I have joined
"Diploma in Spoken Hindi" conducted by SBIOA Chennai. Its a 6 month course conducted in 6 cities in tamilnadu. The course fee is 600/- (Inclusive of Lunch). Classes are starting in January 2007. I hope this should help me. //

சதீஷ், நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் அதுவும் மென்பொருள் நிறுவனம் என்றால் உங்கள் அலுவலக மொழி ஆங்கிலமாக மட்டுமே இருக்கும். சில அலுவலகங்களில் ஜப்பான், ஃப்ரெஞ்சு, ஜெர்மன் படிக்க வேண்டியிருக்கும். உங்கள் மேனேஜரின் செயல் நியாயமற்றது. உங்களுக்கு இந்தி தெரியாது என்று சிரிக்கின்றார்கள் என்றால் அது அவர்களது மூடத்தனத்தைக் காட்டுகிறது. நீங்கள் உங்கள் HRடம் புகார் சொல்லலாம். நாளைக்கு மராட்டி பேசும் மேனேஜரிடம் வேலை பார்த்தால் மராட்டி படிப்பீர்களா? இந்தியைப் படிப்பதில் தவறில்லை. ஆனால் இந்தி படித்தால்தான் பிழைக்க முடியும் என்பது மாயை. தேவைப்பட்டால் எளிதாகக் கற்றுக்கொள்ள வழிமுறைகள் உள்ளன.

சிலர் சொல்வது போல ஏதோ தமிழர்கள் இந்தியே கற்க முடியாமல் போய் விட்டதாகப் புலம்புவதும் அறியாமையே. இந்தி படிப்பதற்கு எத்தனை டியூஷன் செண்டர்கள் உள்ளன. இந்தி பிரச்சார சபா நன்றாகவே இயங்கி வருகிறது. அங்கு போய் படித்துக் கொள்ளலாமே! அடுத்த மாநிலத்திற்குப் போனால் உப்பு புளி மிளகாய் வாங்கத்தானே தேவைப்படுகிறது. அதை இந்த வகையில் கற்றால் போதும். அவனவன் ஃப்ரெஞ்சு ஜெர்மனியையே ரெண்டு மூனு மாத crash courseல் முடிக்கிறான். அதை விடுத்து இந்தியை இரண்டு வயதிலிருந்தேதான் படித்தால்தான் உயிர் நிலைக்கும் என்ற வகையில் பேசுவதும் ஜல்லியடித்தல்தான்.

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_116556296466953582.html

//// luckylook said...
//லக்கிலுக் விஜயகாந்தையே ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது ஒரு ஓட்டல் என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அதற்கு அங்கேயே பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் முடிவுகள் வந்ததால் இங்கேயே சொல்கிறேன்.//

ஜீரா!

இனிமேலாவது கண்ணாடியைக் கழட்டிப் போட்டு விட்டுப் பாருங்கள். நான் பரிசுபெறும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து வந்து குறை கண்டுபிடிப்பதே உங்கள் வாடிக்கையாகி விட்டது. (தடாலடிப் போட்டி ஒன்றிலும் கூட) //

ஐயோ லக்கி லுக்...மன்னித்துக்கொள்ளுங்கள். ஸ்மைலி போடாமல் சொன்னது தவறாகப் போய் விட்டது. ஜாலியான பதிவு என்பதால் சற்று ஜாலியான சொற்களைப் பயன்படுத்தினேன். அது வேறு மாதிரி எடுத்துக்கொள்ளப்பட்டது. எந்தக் காரணமும் சொல்ல விரும்பவில்லை. மன்னிப்பை மட்டும் கோருகிறேன். (நான் கண்ணாடி போடுறேன்னு ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? எனக்கு சின்ன வயசுல இருந்தே அந்த வருத்தம் உண்டு. அதுனாலதான் காண்டாக்ஸ் போட்டுக்கிறது. :-) )

// காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு தமிழ் தெரிவது பற்றி நான் ஓட்டவில்லை. யாரோ ஒரு அன்பர் ஓட்டினார். //

சரியாப் பாக்காம சொல்லீட்டேனோ. தப்புதாங்க. மன்னிச்சிருங்க.

// Anonymous said...
சரியா சொன்னீங்க லக்கி.

இந்த ராகவன் நல்லவன், நடுநிலை முகமூடி போட்டு எத்தனை காலத்துக்கு தான் ஏமாத்திக்கிட்டு இருக்க போறாரு. //

அனானி நண்பரே. நடுநிலைமை என்பதே ஒரு மாயை. என்னைப் போய் நடுநிலை என்று நினைத்தீர்களே. எனக்குத் தெரிஞ்சதே கொஞ்சம். அதை வைத்து பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். மத்தபடி ஏமாத்துற எண்ணமெல்லாம் ஒன்னும் கிடையாது. அதே போல என்னை நல்லவன் என்று எண்ண வேண்டாம். நான் செய்யும் தவறுகள் எனக்குத் தெரியும். நானும் ஒரு சராசரி மனிதந்தான். நிறைகளும் குறைகளும் உண்டு. தவறுகளும் செய்வதுண்டு. அது புரிந்தால் திருத்திக் கொள்வதும் உண்டு.

G.Ragavan said...

http://kanapraba.blogspot.com/2006/12/blog-post.html

பிரபா ஓராண்டாயிற்றா! பாருங்கள் பொழுதோடியதே தெரியவில்லை. உங்கள் பதிவுகளில் பெரும்பான்மையானவற்றைப் படித்திருக்கிறேன். ஒன்றிரண்டு விடுபட்டும் விட்டன. அவைகளையும் படிக்கிறேன். உங்கள் எழுத்தையும் அதில் எது வலு சேர்க்கிறது என்பதையும் நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். எல்லாரும் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் பல சிறப்பான பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்த்து வாழ்த்துகிறேன். வாழ்க வளர்க. நம்முடைய கனவு நினைவில் இருக்கிறதுதானே? ;-) அது நினைவாகும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையில் நான். ஆண்டவனை வேண்டியபடி.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/11/14.html

அறுவர் பயந்த அறுந்தவச் செல்வன் குறித்து கதிர்மலைநாதன் அருளிய பொருள்மிகு பாடலிற்குத் தகுமிகு உரை செயும் எஸ்.கேவிற்கு நன்றி பல.

திருமகள் உலவும் இருபுய முராரி என்ற தொடக்க வரியே அழகிய கவிதை. பாடல் முழுவதும் அது தொடர்கிறது. ரசித்து ரசித்து ருசித்தாலும் பசித்தல் குறையாது உள்ளத்தில் வசித்தல் செய் தலைவன் புகழ் மகிழ்த்துகிறது.

மணிதரளம் வீசி அணியருவி சூழ என்ற வரியை மிகவும் ரசித்தேன். அருவி இழிகிறது. அது நீராகவா இழிகிறது? இல்லை...வழியெங்கும் மின்னும் மணியும் மினுக்கும் முத்துமாய்த் தள்ளிக் கொண்டு வந்து இழிகிறது. அப்படி மலையிலிருந்து கீழே இறங்குகையில் மணிகளும் தரளங்களும் உதறி வீசப்படுகின்றன. அந்தச் சிறப்பான கதிர்காமம். முருகா! அங்குன்னைத் தரிசிக்கும் நாள் எந்நாளோ?

//அரவுபிறை வாரி விரவுசடை வேணி //

ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புணைந்த பெருமான்....இதுவும் அருணகிரிதானே! ஒன்றையே வெவ்வேறு விதமாய்ச் சொல்வதில் அருணகிரிக்கு நிகர் அவரேதான்.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2006/12/174.html

இராமநாதன்...இந்தப் படமெல்லாம் நீங்களே எடுத்ததா? நல்லாவே வந்திருக்கு.

// ramachandranusha said...
ருஷ்யாக்காரரே, படம் ஓ.கே. ஆனா அது என்ன ஆரம்பத்துல ஓரே தத்துவ விசாரணை. இதுக்குத்தான் ஜிராமாதிரி ஆளுங்கக்கூட அதிக நட்புக்கூடாதுன்னு சொல்லுவது :-))))))))))) //

ஆகா...உஷா....இதெல்லாம் நாயமா? நான் சரக்கே இல்லாம ஒன்னுமில்லாத விரிச்சி எழுதுறேன்னு நீங்கதான் சொன்னீங்க. அதான்...தீபாவளிக்கு ஊருக்குப் போன பதிவைச் சொல்றேன். இங்க என்னடான்னா தத்துவ விசாரணை என் தலைமேல நடக்குது!

G.Ragavan said...

http://podhuppaattu.blogspot.com/2006/11/13.html

// குருவிற்கு தரவேண்டிய மரியாதையை குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் கடவுள் என்று உயர்த்துதல் வேண்டாம் என்கிறேன். நம் வாழ்வில் அன்னைக்கென்று ஒரு ஸ்தானம். தந்தைக்கென்று ஒரு ஸ்தானம். அதே போல குருவுக்கென்று ஒரு உயர்ந்த ஸ்தானம் உள்ளது. எத்தகைய நல்ல அன்னையாக இருந்தாலும் தந்தையாக முடியாது. தந்தையும் அன்னையாக முடியாது. ஒரு குரு எத்தகைய மேன்மையுடையவராக இருந்தாலும் நம் தாயாக முடியாது. தந்தையாக முடியாது. ஆனால் 'எந்தாயும் எனக்கருட்தந்தையுமாகி' 'குருவுமாகி வந்தருள' வல்லான் கந்தன் ஒருவன் தானே? இதில் இருவேறு கருத்தும் இருக்கிறதா குமரன்? //

அருமை. அருமை. மிக அருமை. இராமநாதன் தஞ்சை உங்களுக்கு நெஞ்சை நிறைக்கும் தமிழை நிறையவே தருகிறது என்று நினைக்கிறேன். மிகச்சிறப்பான விளக்கம். முருகன் அருள் உங்களைச் சேரட்டும்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/12/3_07.html

1 திருச்செந்தூர் முருகனை வேண்டிப், பன்னீர் இலை விபூதியால் தன் வயிற்று வலி தீர்ந்து, சுப்ரமண்ய புஜங்கம் என்ற நூலைப் பாடிய அடியவர் யார்?
ஆ) ஆதி சங்கரர்

திருச்செந்தூர் என்றாலே குமரகுருபரரும் அருணகிரிநாதரும் நினைவிற்கு வராமல் இரார். ஊமைக்குழந்தையாய் இருந்த் கந்தன் அருளால் தமிழ்வாய் பெற்றார் குமரகுருபரர். பூவைக்காட்டிக் குழந்தை ஒன்று இதென்ன என்று கேட்க ஊமைக்குருபரன் "பூமேவு செங்கமலப் புத்தேளும்" என்று பா ஒலித்தார். அருணகிரியோ முருகனின் திருநடனக் காட்சியைக் கண்டு குளிர்ந்த இடம் திருச்செந்தூர். "தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்" என்று திருப்புகழ் பொழிய முருகனின் திருநடனம் நடைபெற்ற இடம் திருச்செந்தில். அங்கு சங்கரர் சென்றிருந்த பொழுது கப்பெனப் பற்றியது வயிறு. அந்தச் சூடு தணித்துப் பாடு பெற்றான் முருகன். இதே நிகழ்வு பகழிக்கூத்தருக்கும் நடந்தது. அவரும் முருகன் மேல் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் பொழிந்தார். ஆனால் கேள்வியில் சுப்ரமணிய புஜங்கம் என்றிருப்பதால் அது சங்கரரைக் குறிக்கும்.

2 முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமாகக் கருதப்படுவது எது?
இந்தக் கேள்வி எவ்வளவு ஏற்றுக் கொள்ள முடியுமென்று தெரியவில்லை. சைவ சித்தாந்தத்தின் படி விலக்கப்பட வேண்டிய கேள்வி. பிறவா இறவாப் பெம்மாம் முருகன். அவதாரம் என்றும் சொல்ல முடியாது. "ஒரு திரு முருகன் உதித்தனன் உலகம் உய்ய" இதுதான் கச்சியப்பர் வாக்கு. ஏற்கனவே இருந்த சூரியன் அடுத்த நாள் மீண்டும் உதிப்பது போல ஏற்கனவே சிவமாய் இருந்தது முருகனாய் உதித்தது. வைகாசி விசாகம் என்பது பின்னாளைய வழக்கு என்று கொண்டால், "அறுவர் பயந்த அருந்தவச் செல்வ" என்ற நக்கீரன் எழுத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி அறுவர் பயந்த செல்வராயின் வைகாசி விசாகம் அவதாரமீனாவது எங்ஙனம்! ஈசன் திருவாக்கிலும் கார்த்திகைப் பெண்டிரே முதல் மதிப்பிற்கு உரியவர்.

3 முருகனின் ஐந்தாம் படை வீடாக நக்கீரர் குறிப்பிடுவது எது?
குன்று தோன்றுமிடமெல்லாம் குமரன் திருநடம் புரியுமிடம் என்பதே தமிழ் வழக்கு. அப்படிக் குன்றெழுந்த இடமெல்லாம் குமரனெழுந்த இடமாகக் கருதிச் செய்ததுதான் குன்றுதோறாடல். அதில் தணிகையும் ஒன்று. அறுபடை வீட்டை முருகன் தங்கியிருந்த படைவீடுகள் என்று சொல்வது பெரும் பிழை. ஆற்றுப்படை வீடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்வு சிறக்க முருகனிடத்தில் நம்மை ஆற்றுப்படுத்தும் இந்த அறுபடைவீடுகள்.

4 இலங்கையில் முருக பக்தி அதிகம். அங்கு உள்ள ஒரு முருகன் திருத்தலத்தில் இந்துக்கள், பெளத்தர்கள், மற்றும் இஸ்லாமியர் ஆகியோர் தம் தம் கடவுளாகவே கருதி வழிபடுகின்றனர். எந்தத் தலம்?
கதிர்காமம். இது இன்று தன்னியல்பு சிதைந்து தமிழர் வணங்க அஞ்சுவதாய் ஆனதாக அறிகிறோம். வருத்தம் தரும் செய்திதான். தேயோ என்ற பெயரில் முருகனை பௌத்தக் கடவுளாக்கி வணங்குகிறார்கள்.
5
பொதுவாக அம்மன் கோவில்களில் புற்று இருக்கும். ஆனால் இங்கு முருகன் கோவிலில் புற்று, அதுவும் கருவறைக்கு உள்ளேயே உள்ளது. அந்த மண்ணையே நீறு போல் பிரசாதமாகவும் தருகின்றனர். எங்கு?
இதற்குச் சரியான விடை காட்டி சுப்பிரமணியா என்பதே. பெங்களூரிலிருந்து அறுவது கிலோ மீட்டர் தொலைவில் மலைகளுக்கு நடுவில் எழில் கொஞ்ச இருக்கும் தலம். இங்கு புற்று மண் பிரசாதம் உண்டு. பெங்களூரிலிருந்து பலமுறை பைக்கில் நான் சென்று வரும் கோயில்களில் இதுவும் ஒன்று. இயற்கை எழில் மிகுந்த பகுதி.

6 இன்று மிகப் பிரபலமாகப் பாடப்படும் கந்த சஷ்டிக் கவசத்தை எழுதியது யார்? 6
தேவராயசுவாமிகள். ஆறு படை வீடுகளுக்கும் எழுதியிருக்கிறார். இன்றைக்கும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய இசைக்கோர்வைக்கு மாற்று கிடையாது.

7 தாயிடம் வேல் வாங்கிச் சூரனை அழித்தான் முருகன். கந்த சஷ்டி விழாவில், இந்த வேல் வாங்கும் போது, சக்தி வேலின் வீரியத்தால், முருகனின் திருமேனி வியர்த்து தெப்பமாய் நனைந்து விடும்! அர்ச்சகர்களும் துணியால் துடைத்துப் பிழிவர்! எந்தத் தலம்?
சிக்கல் அனைத்தும் தீர்க்கும் சிக்கல்தான் அந்த ஊர்.

8 இராமாயணத்தில் இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனக
அதே போல் முருகனின் கதையில் சூரபத்மன், சிங்கமுகன், தாருகன், _____? (இந்தக் கேள்விக்கு நோ சாய்ஸ்)
அஜமுகி. அஜம் என்றால் ஆடு. சூர்ப்பனகையின் மூக்கு அறுபட்டதில் பிரச்சனை எழுந்ததென்றால் இங்கு அஜமுகியின் கை.

9 முருகனே வந்து நூல் ஆதாரம் காட்டி, அரங்கேற்றத்துக்கு உதவி செய்த நூல் எது?
கந்தபுராணம். திகழ் தசக்கரம் என்பது திகட சக்கரமாக எப்படி வரும் என்பதற்கு வீரசோழியம் என்ற இலக்கண நூலிலிருந்து மேற்கோள் காட்டி அரங்கேற்றம் செய்ய உதவினார் முருகன் என்று வரலாறு.

10 ஈசனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறையும் தாங்கிய முதல் அன்பர் யார்?
இதில் அக்கினியையும் சொல்லலாம். வாயுவையும் சொல்லலாம். இருவரும் பெற்றதாகவே சொல்கிறது கந்தபுராணம்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/12/3_07.html

// 8 அசமுகி (அஜமுகி)சூரனின் தங்கை; இந்திராணியைக் கவர்ந்து, அவள் அண்ணனுக்குக் கொடுக்க எண்ணுகிறாள். அப்போது இந்திராணியின் காவல் பூத கணங்களால் கை அறு படுகிறாள்; ஆட்டுத் தலை இவளுக்கு உண்டு. //

காவல் பூதகணங்களால் அல்ல. மகாகாளர் அவரது கையை வெட்டுகிறார். அத்தோடு ஆட்டுத்தலை என்று வெளிப்படையாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சிங்கமுகாசுரன் என்பதால் சிங்கம் போன்ற முகம் என்று சொல்வதும் தவறு என்றே தோன்றுகிறது. சிங்கமுகன் மாபெரும் அறிவாளி. முதலும் முடிவும் தெரிந்துதான் போருக்குப் போகிறான்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2006/12/blog-post.html

டண்டணக்கா டணக்கு
ஜிஞ்சினுக்கா ஜினுக்கு
என் ப்ரோகிராம வைரஸ் கடிச்சிருச்சுப்பா...ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்னு ஒர்த்தர் வெட்டியா அழுகுறாரு. அவரையும் நேர்முகத் தேர்வுக்கு வரச்சொல்லுங்க.

G.Ragavan said...

http://priyan4u.blogspot.com/2006/12/blog-post_08.html

அருமை ப்ரியன். மூன்றாம் கவிதை மிகச் சிறப்பு. ரெண்டாவது முறை படித்ததும் புரிந்தது. முதல் முறை படித்துப் புரியாத பொழுதும் இரண்டாம் முறை படிக்க வைத்தது கவிதையின் வெற்றி.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/11/14.html

// ஜெயஸ்ரீ said...
இவ்வளவு அழகாக நீங்கள் சொன்ன பிறகு நான் வேறென்ன சொல்ல , என்று தோன்றுவதால் நானும் அருணகிரியார் போல "சும்மா இரு சொல்லற" என்று இருந்துவிடுகிறேன். ))//

என்ன ஜெயஸ்ரீ இது! சும்மா இரு சொல்லறச் சொல்லும் சொல்அறந்தனைப் புகழச் சொல்லறச் சும்மா இரலாமோ!

G.Ragavan said...

http://saathveegan.blogspot.com/2006/12/blog-post_05.html

உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் சாத்வீகன்.

// Vajra said...
सात्वीगन्,
தமிழுக்குப் பதிலாக ஹிந்தியைப் படிக்கவேண்டியதில்லை. ஹிந்தியையே படிக்கக் கூடாது என்று தடுக்க யாருக்கும் உரிமையில்லை, எந்த அரசுக்கும் உரிமையில்லை என்பதே என் கருத்து. //

இப்பொழுது அரசு தடுக்கிறதா என்ன? கன்னடம், மராட்டி, தெலுங்கு, மலையாளம், உருது படிக்கவும் அரசாங்கம் தடுக்கிறது என்றால் இந்தி படிக்கவும் அரசாங்கம் தடுக்கிறது எனலாம்.

// பள்ளியில் இந்தியை விருப்பப் பாடமாக வைக்கலாம். தமிழும் ஆங்கிலமும் கட்டாய பாடம். french, sanskrit பதிலாக ஹிந்தியை வைக்கலாம். //

ஃப்ரெஞ்சும் வடமொழியும் சொல்லித் தரும் பள்ளிகளில் இந்தியும் இருக்கிறது என்பதே உண்மை.

// Why give an option over tamil ? Give option over other languages.

தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் ஹிந்தி வாடையே தெரியாமல் வளர்ந்து கடைசியில் திக்கித் திணறி ஆங்கிலத்தில் தஞ்சம் புகுவது நன்றாகவா இருக்கிறது. ? //

பிதற்றல். இந்தி வாடை அடிக்காமல் சோறு இறங்காமல் யாரும் கிடக்கவில்லை.

இந்தி படிப்பது தவறென்று சொல்லவில்லை. இந்தி தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. வஜ்ரா இந்தியை எங்கே படித்தீர்கள்? அரசாங்கம் தடுத்ததால் நீங்கள் படிக்காமல் போய் விட்டீர்களா? அவனவன் வெளிநாட்டு மொழிகளையே மூன்று நான்கு மாத கிராஷ் கோர்சில் படிக்கிறான். அப்படியிருக்க ஒரு ஊரில் வேலைக்குப் போனல் மட்டுமே உதவக் கூடிய ஒரு மொழியை சிறு வயதிலிருந்து தாய்மொழியோடு பிசைந்து பிசைந்து விழுங்க வேண்டும் என்பது மூடத்தனம்.

G.Ragavan said...

// நாமக்கல் சிபி said...
என்ன இது! இன்னும் இராகவனைக் காணவில்லை? //

வந்தேன். வந்தேன். இன்றே கண்டேன்.

சாத்வீகன்...சென்னையில் இன்னும் சில முருகன் கோயில்கள் இருக்கின்றன. அவைகளில் மிகச்சிறப்புடைத்தது திருப்போரூர் முருகன் கோயில். பழைய கோயில். மிகப் பழைய கோயில். பெரிய திருவுருவோடு தேய்ந்த பழங்காலச் சிற்பமானாலும் தேயாத அருளோடு காத்து நிற்கிறான் கந்தன். முருகனடியவர்கள் கண்டிப்பாகச் சென்று வரவேண்டிய கோயில். பழைய மகாபலிபுரச் சாலையில் அமைந்துள்ளது.

வடபழநி கோயிலை உருவாக்கியவர் ஒரு சித்தர். பெயர் நினைவில்லை. பழநி சென்று கொண்டு வந்த முருகனின் ஆண்டித் திருப்படத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார். அவர் அங்கேயே இறையடி சேர்ந்தார். அந்த இடமும் இன்றைய வடபழநி கோயில் வளாகத்துக்குள்ளேயே உள்ளது.

தேனாம்பேட்டை முருகன் சினிமா முருகன். தமிழ்சினிமாவில் பெரும்பாலும் தேனாம்பட்டை பாலதண்டாயுதபாணியைத்தான் காட்டுவார்கள். இல்லையென்றால் குன்றத்தூர் மலைப்படிகளைக் காட்டுவார்கள்.

வள்ளலாரும் கந்தகோட்டமும் பிரிக்க முடியுமா? கந்தகோட்டத் தலம் ஓங்கு கந்தவேளே!

அறுபடை முருகன் கோயிலும் அழகு. அந்தந்தக் கோயில் வடிவில் உள்ளன. அந்தந்தத் தலத்துத் திருப்புகழும் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் பழமுதிர்ச்சோலை என்ற பெயரில் வேலாயுதம் மட்டும் வைத்திருக்கிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. பழமுதிர்ச்சோலையில் முருகன் கோயில் இருப்பதை மறந்தார்களோ!

// நாமக்கல் சிபி said...
என்ன இது! இன்னும் இராகவனைக் காணவில்லை? //

வந்தேன். வந்தேன். இன்றே கண்டேன்.

சாத்வீகன்...சென்னையில் இன்னும் சில முருகன் கோயில்கள் இருக்கின்றன. அவைகளில் மிகச்சிறப்புடைத்தது திருப்போரூர் முருகன் கோயில். பழைய கோயில். மிகப் பழைய கோயில். பெரிய திருவுருவோடு தேய்ந்த பழங்காலச் சிற்பமானாலும் தேயாத அருளோடு காத்து நிற்கிறான் கந்தன். முருகனடியவர்கள் கண்டிப்பாகச் சென்று வரவேண்டிய கோயில். பழைய மகாபலிபுரச் சாலையில் அமைந்துள்ளது.

G.Ragavan said...

http://oorodi.blogspot.com/2006/12/blog-post_02.html

முருகா முருகா முருகா!

தமிழ் இனிமையென்றால்...அந்த இனிமையைக் கொண்டு வாழ்வில் இனிமை கூட்டும் வள்ளற் பெருமான் வேலவனைப் பாடுவதும் படிப்பதும் கேட்பதும் எத்துணை இனிமை.

G.Ragavan said...

http://pillaitamil.blogspot.com/2006/12/20.html

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை அருளில் இசை சிறந்தோங்கட்டும். இந்தச் சிறுவனின் வாசிப்பில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அது திறமையாக வளர வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

http://raamcm.blogspot.com/2006/11/blog-post_17.html

// வாங்க ஜிரா..

அது உண்மைதான்... அடுத்த தடவை ஊருப்பக்கம் வர்றேப்பா ஒரு கொரலு குடுங்க.. நானும் வர்றேன் சேர்ந்து போய் சாப்பிடலாம்.... :) //

போயிருவோம். ஆனா நீங்க பெங்களூருல இருக்கீகளே!

// //அது சரி...மதுரைக் கோனார் கறிதோசையை விட்டுட்டியே ராம்.//

என்னங்க போனப்பதிவே படிக்கமேதான் அதிலே பின்னூட்டம் போட்டிங்களா???? :-((( //

அழாதீக ராமு. போன பதிவுக்கும் இந்தப் பதிவுக்கும் எடவெளி கூடிருச்சா அதான் இப்பிடி. மாப்பு மன்னிப்பு மாதாங்கோயில்பட்டி இனிப்பு. :-)

G.Ragavan said...

http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_11.html

இது வலைப்பூவை விட்டு வெளியேறும் காலம் போல இருக்கிறது. ரெண்டு வாரமா அதுதான் நடக்குது.

எந்த முடிவு எடுத்தாலும் அது உங்களுக்கு நல்ல முடிவாக எடுத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதோ பெரிய திட்டம் இருக்கும் போலத் தெரிகிறது. உங்கள் எண்ணம் போல வண்ணம் அமையட்டும். என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/12/125.html

பாரதி செய்த தமிழ்ச் சமுதாயப் புரட்சி பாராட்டுக்குரியது என்றால் மிகையில்லை. அவன் செய்யத் தொடங்கினான். பிறகு அதற்கு வலு சேர்ந்தது. அவனை நிச்சயம் நினைவு கூறத்தான் வேண்டும்.

// அவன் சொன்ன அற்புதமான சமத்துவ கருத்துகளுக்கு வால் பிடிப்பது தங்களின் அறியாமை. திருமூலரும் சாத்திரங்களை வைதார் என்று தெரிந்தால் நீங்கள் அவருக்கும் காவடி எடுப்பீர்கள். உங்கள் குறிக்கோள் உங்கள் மனச்சாக்கடைக்கு வடிகாலே. //

அனானி, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்றே புரியவில்லை. அற்புதமான கருத்து என்கிறீர்கள். ஆனால் வால் பிடிக்கக் கூடாது என்கிறீர்கள். அற்புதமான கருத்து என்றால் அதற்கு வால் பிடிப்பதில் என்ன கேடு கெட்டத்தனம் வந்து விடப் போகிறது.

திருமூலரும் சாத்திரம் சொல்லியிருக்கிறார். எல்லா ஆன்றோர்களும் சாத்திரம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பாரதியின் இந்தக் கவிதை சொல்ல வருவது வேறு. சாதிக்கொரு நீதி என்று சாத்திரம் சொல்லுமானால் அது சாத்திரமல்ல என்றுதான். திருமூலர் சாதிக்கொரு நீதி சொல்லியிருக்கிறாரா என்ன? நட்ட கல்லைச் சிவம் என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு திருமூலர் உருவ வழிபாட்டை எதிர்த்தார் என்று சிலர் அவசரக்கருத்து சொல்வார்கள். அடுத்த வரிகளையும் அடுத்த பாக்களையும் வசதியாக மறந்து விடுவார்கள். அது போல நீங்களும் எதுவும் சொல்லப் போகின்றீர்களா? இருந்தால் சொல்லவும். தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

G.Ragavan said...

http://saathveegan.blogspot.com/2006/12/blog-post_02.html

// குமரன் (Kumaran) said...
இராகவன். அந்தக் காலத்தில் பழமுதிர்ச்சோலையில் வேல் மட்டுமே வழிபாட்டில் இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது காரணமாக இருக்குமோ? //

// சாத்வீகன் said...
இராகவன்
குமரன்

நானும் பழமுதிர்ச்சோலையில் வேலே மூலவராய் வழிபாட்டில் இருந்தது என்று படித்துள்ளேன். //

திருமுருகாற்றுப்படையைத் தடவிப் பார்க்கிறேன். குறிஞ்சிமலைக் கிழவோனை வேல் வடிவத்தில் வணங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கோயில் இருந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலும் பழமுதிர்ச்சோலை கோயில் வருகிறது. சிலம்பாறும் வருகிறது. ஆனால் அப்பொழுது "புண்ணிய சரவணம் பொருதுவீராயின்" அதாவது சரவணப் பொய்கையில் நீராடுவீராயின் நல்லது நடக்கும் என்று ஒருவர் சொல்கிறார். ஆனால் கவுந்தியடிகள் அதைத் தடுத்து சமணக் கருத்துகள் சொல்கிறார். ஆனால் பின்னாளில் கோவலன் இறந்து மதுரை எரிந்தபின்..அன்று தடுத்ததை எண்ணி மனம் நொந்து வடக்கிருந்து உயிர் துறக்கிறார்.

எனக்குத் தெரிந்து கதிர்காமத்தில் வேல் வணக்கம் உண்டு. கோயில்பட்டி கதிரேசன் கோயிலில் வேல் வணக்கம் உண்டு. வேறெங்கு என்று தெரியவில்லையே. உலக வரலாறு என்ன சொல்கிறதென்றால் வேல்தான் முதலில் கண்டுபிடிக்கப் பட்ட ஆயுதமாம்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/8.html

நான்கு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நான் விபத்துக்குள்ளானது பற்றியும் வலைப்பூவில் சொல்லியிருந்தேன். அப்பொழுதும் ஹெல்மெட் என்னைக் காப்பாற்றியது. விழுந்த பொழுது என்னுடைய பின்னந்தலை சாலையோரத்தில் இடித்தது. அந்த இடத்தில் மண்ணரித்து சாலையும் சேதமாக இருந்தது. ஆனால் ஹெல்மெட்டில் பட்டதால் தப்பித்தேன். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கண்டிப்பாக அணியுங்கள்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-4.html

நம்முடைய பிரச்சனையை நாமே தீர்த்துக் கொள்வதுதான் சரி என்று தோன்றுகிறது. சாட்சிக்காரன் காலில் விழுறத விட சண்டைக்காரன் காலில் விழுறது மேல்ங்குறது இதுதான்னு நெனைக்கிறேன். எப்படியோ...ஒங்க பிரச்சனை ஓஞ்சது நல்லதுதான்.

G.Ragavan said...

http://balabharathi.blogspot.com/2006/12/125.html

// ராகவனுக்கு தமிழ் படிப்பதில் பிரச்சனையா? நான் திருமூலர் சாத்திரம் சொல்லியிருக்கிறார் என்று சொல்லவில்லையே. சாத்திரத்தை வைதார் என்று சொன்னேனே? //

தவறு என் மீதுதான். வைதார் என்பதை வைத்தார் என்று படித்து விட்டேன். மன்னிக்கவும்.

// சாத்திரத்தை எல்லோரும் சொல்லியிருக்கிறார்களா? தங்கள் "உண்மை" கேலியாக இருக்கிறது. அப்படியானால், அப்புறம் அதெல்லாம் எப்படி சாத்திரமாகும்?

புரியாமல் மேலே நீங்கள் நீட்டியிருப்பது தேவையற்றது. //

சாத்திரம் என்று நான் சொன்னது பின்பற்றக் கூடிய கருத்துகள். அந்த வகையில் எந்த அறிஞரும் சாத்திரம் சொன்னவர்தான். திருமூலரும் சாத்திரம் சொன்னார். ஆனால் ஒரு சாத்திரம் அல்லதைச் செய்யுமாயின் அதைச் சாடல் தவறில்லை என்றே சொல்வேன். இந்த இடத்தில் சாதியைப் பொருத்து நீதி என்று ஒரு சாத்திரம் இருக்குமானால் அது தவறு என்பதுதான் கருத்து. அதற்காக பாரதி சொல்லும் ஆன்மீக உணர்வைப் புரிந்தால்தான் அடுத்த கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்ன நியதி? வாழைத்தண்டைப் பொரியல் வைக்காமல் வாழையிலையில் எப்படிச் சாப்பிடப் போவது என்பது போல் இருக்கிறது. மன்னிக்கவும். கொஞ்சம் நீட்டி முழக்கி விட்டேன்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/1.html

மிகவும் அருமையான பாடல். சீர்காழியின் கணீர்க் குரல் உள்ளமும் உயிரும் நிறைக்கிறது.

நல்ல திட்டம். கண்ணன் பாக்களைத் தொகுக்கும் முயற்சி. இந்த முயற்சி சிறப்புற்று வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/1.html

ஆன்மீகக் கூட்டத்தில் வெட்டிப் பயலும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய வாழ்த்துகள் வெட்டி.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/12/blog-post_10.html

தமிழ் பிழைக்க உழைத்தவன் பாரதி. அவன் பிறந்த நாளில் அவனை நினைவு கூறும் வகையில் ஒரு அருமையான பதிவிட்டமை நன்று.

வாழியென்றே துதிப்போம் பராசக்தி வாழியென்றே துதிப்போம்.

கண்ணனைச் சொல்கையில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இது.

காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே
கனியிலே இனிப்பதென்ன கண்ணபெருமானே
நோயிலே துடிப்பதென்ன கண்ணபெருமானே
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ணபெருமானே

G.Ragavan said...

http://vasanthanin.blogspot.com/2006/11/blog-post.html

ஈழத்தமிழர்கள் தங்கள் மொழியையும் இலக்கிய ஆர்வத்தையும் வற்றாது பற்றிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த மகிழ்ச்சி அனைத்திலும் பரவி விரவி அவர்கள் நிம்மதி கொள்ள இறைவனை வேண்டுகிறேன்.

வலைப்பூக்களில் பின்நவீனத்துவம் மிகவும் கிண்டலடிக்கப் பட்ட ஒன்று. ஆனால் அதற்கு இன்னமும் எனக்குப் பொருள் தெரியவில்லை. பின் நவீனத்துவம் என்றால் என்ன?

G.Ragavan said...

http://pangaali.blogspot.com/2006/12/1.html

மாப்பு மன்னிப்பு மாதங்கோயில்பட்டி இனிப்பு!!!!!

அட தெரியலைங்குறத அப்படிச் சொல்றேங்க.

G.Ragavan said...

http://pithatralgal.blogspot.com/2006/12/161.html

படதி படபடாய படதி படாத பாடாய!

புரியலையா? இதுதான் பெங்குயின் பாஷை. பொருள் தெரியனும்னா துளசி டீச்சருக்கு அனுப்பி அங்கயிருக்குற பெங்குயின்கள் கிட்ட கேக்கச் சொல்லுங்க. :-)

G.Ragavan said...

http://johan-paris.blogspot.com/2006/12/blog-post_07.html

ஐயா...இந்தப் பதிவு எப்பொழுதிட்டது? இத்துணை நாள் பாராமல் போனேனே!

தமிழைப் பாலக்கி, அதன் இனிமையைத் தேனாக்கி, இரண்டையும் கலந்து ஊனாக்கி உவட்டாமல் ஊட்டும் அருந்தமிழ்ப் பாக்களை படிக்கப் படிக்க மலரும் பூக்களை மணமும் குணமும் பாராதாருக்கும் தமிழன் என்று பெயருண்டு என்பதே உண்மை. தமிழா...பண்டு மொழி என்று சொல்லில் பெருமை கூட்டல் போதுமா...அந்தப் பண்டும் பண்டு என்று சுவைத்துப் பார்த்தல் வேண்டாமா! வா...தமிழ்க்கடல் காத்திருக்கிறது. நீதான் ஓடம். பயணம் செல். தரளம் நிரம்பக் கிட்டும். நீயே தரளமாவாய். வா!

G.Ragavan said...

http://jeeno.blogspot.com/2006/12/1953.html

எனக்கு மிகவும் பிடித்த படம். மிகமிகப் பிடித்த படம்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2006/12/blog-post_11.html

படம் பாத்துட்டீங்களா? நான் அடுத்த வாரம் பாக்கலாமான்னு யோசிக்கிறேன்.

கடைசிப் படம்..பசுபதியும் பாண்டியம்மாளும் ஜூஸ் குடிக்கிற எடத்தப் பாத்தா விருதுநகரு மாதிரி இருக்கு!

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-5.html

பாம்பா பழுதான்னு தெரியாம பழுதுன்னு தூக்கிச் சொமக்குறத விட பாம்புன்னு ஒதுங்கிப் போறது மேல்னு சொல்றீங்க. உண்மைதான். வங்கிகளில் மட்டுமல்லாமல் மென்பொருட் துறையிலும் நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்டு. எடுத்து விட்டா ஊரு நாறீரும். அதுனால அமைதியா இருக்கேன். அல்லது இருக்கோம்.

G.Ragavan said...

http://vivasaayi.blogspot.com/2006/12/blog.html

யோவ்...என்னய்யா இது? என்ன நெனைக்கிறீர்? இருங்க ஒங்களுக்கு போனு போடுறேன். அசினும் நயனதாராவும் பாவனாவும் வீட்டுக்கு வந்ததும் இந்தப் போடு போடுறீங்களே!

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/3.html

ஆகா. குமரன் தொடங்கி விட்டார். பாமாலைகளைக் கண்ணனுக்குப் பூமாலைகளாக் சூட்டி அழகு செய்யும் கலியுக ஆண்டாள்களுக்குக் கண்ணன் அருள் கிட்டாமல் போகாது. வாழ்க வளர்க.

குமரன், ஒரு வேண்டுகோள்...நீங்களே பாடல்களையும் புனைந்தால் இன்னும் மகிழ்வோம். பிறகு, ஆழ்வார்ப் பாசுரங்களும் திருப்பாவைப் பூக்களும் கூடக் கிடைக்குமானால் மெத்த மகிழ்ச்சி.

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2006/12/blog-post_10.html

எல்லாரும் சொல்லி விட்டார்கள். நானும் சொல்லி விடுகிறேன். கண்ணன் வடிவாகவே சுதாமர் தோன்றியதால் அவரை உள்ளே விட்டனர் என்ற செய்தி எனக்கும் புதியதே.

குசேலன் என்ற பெயருக்குப் பொருள் என்ன?

அது சரி. வியாசர் இங்கு எங்கு வந்தார்?

கோதைக்கும் குசேலனுக்கும் என்ன தொடர்பென்று அறியக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://vavaasangam.blogspot.com/2006/12/blog-post_10.html

விக்கிப் பசங்கள ஆளையே காணோம்னு பேசிக்கிறாங்க. என்னடான்னு பாத்தா...இதாங் காரணமா? பாவம்யா அவங்க. ரொம்பப் பாவம்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/12/blog-post_11.html

என்னதான் சொன்னாலும் எம்.எஸ் அவர்களின் சுப்ரபாதம் இல்லாத வீடுண்டா! நான் சிறுவயதில் இருந்த பொழுது அந்தப் பாடலைத் தமிழில் அவர் பாடி வெளிவந்தது. அதுவும் சிறப்பே. முன்பொரு பொழுது எம்.எஸ் அவர்களின் ஒலிப்பேழை ஒன்று வெளிவந்திருந்தது. அதில் தமிழ்ப் பாடல்களாக இருந்தனவென்று வாங்கினேன். அத்தனையும் அருந்தமிழ்ப் பாக்கள். கைத்தல நிறைகனி என்று திருப்புகழே முதல் பாடல். வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி என்று அடுத்து சிலப்பதிகாரப் பாடல். நெஞ்சுக்கு நீதியும் என்ற பாடல். கடைசியாக மீரா படத்தில் அவர் பாடிய காற்றினிலே வரும் கீதம். அது ஒரு அருமையான பாடற்றொகுப்பு. திருப்புகழோ அநுபூதியோ...இவர் குரலில் கேட்கும் வாய்ப்பு கிட்டுமா?

G.Ragavan said...

http://thulasidhalam.blogspot.com/2006/12/blog-post.html

இனிய கிருத்துமஸ் திருவிழா வாழ்த்துகள் டீச்சர். அடுத்த வருசம் கண்டிப்பா வந்துரனும். சொல்லீட்டேன்.

என்னவோ கொஞ்ச நாளா ஒங்க வலைப்பக்கமே வராத மாதிரி ஒரு எண்ணம் இன்னைக்கு. உங்க பதிவைத் தமிழ்மணத்துல பாத்த நினைவும் இல்லை. சரி. தமிழ்மணத்துல இருந்தாதான் பாக்கனுமான்னு நேராவே வந்துட்டேன். :-) வந்ததுக்கு வஞ்சகமில்லாம நல்ல பதிவு. டீச்சர், படங்கள்ள சேலை கெட்டிக்கிட்டு வெள்ளைக்காரங்க உக்காந்திருக்காங்களே. அவங்க யாரு?

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/11/blog-post_30.html

ஐயா....இந்தப் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு போல. சரியாப் பாக்காம விட்டுட்டேன்.

தமிழில குறுஞ்செய்தியா...நல்லதுதான். ஆனா இங்கிலீசு மாதிரி r u there? shal v meet 2maro?ன்னு எழுத முடியாதே?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/8.html

// வெட்டிப்பயல் said...
//G.Ragavan said...
என்னுடைய பின்னந்தலை சாலையோரத்தில் இடித்தது. அந்த இடத்தில் மண்ணரித்து சாலையும் சேதமாக இருந்தது. ஆனால் ஹெல்மெட்டில் பட்டதால் தப்பித்தேன். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கண்டிப்பாக அணியுங்கள். //
ஆஹா.. நல்ல வேளை.

நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு... //

வெட்டி...அது மட்டுமல்ல...விழுந்ததும் எனக்கு சட்டுன்னு ஒரு அதிர்ச்சி...ஒடனே சுத்திக் கூட்டம் கூடீட்டாங்க. கூட்டத்துல ஒருத்தரு சொன்னாரு. "பெத்தவங்க செஞ்ச புண்ணியம். ஒன்னோட தலைக்கு நாலு இஞ்சுல ஒரு பஸ் போச்சு." கேட்ட எனக்கு திக்குன்னு இருந்தாலும் சுதாரிச்சிக்கிட்டேன். என்னோட அப்பாவையும் அம்மாவையும் அன்னைக்குப் பாத்த அளவுக்கு கவலையா நான் வேறென்னைக்கும் பாத்த நினைவில்லை. கதையில சொல்லியிருக்கியே மலர் மருத்துவமனை...அங்கதான் என்னையக் கூட்டீட்டுப் போனாங்க. ஆக்சிடெண்ட்டுக்குன்னு ஒரு வார்டு இருக்கு. அங்க ஒருத்தர் லேசா சிராய்ப்போட உக்காந்திருந்தாரு. அவர விட எனக்கு நல்ல அடி. திடீர்னு ஒரு சத்தம். உள்ள ஒருத்தரக் கொண்டாராங்க. பைக்தான். ஆனால் லாடி இடிச்சிருக்கு. ஹெல்மெட் இல்லை. அவருக்கு எங்கெங்க அடிபட்டுச்சுன்னு எனக்குத் தெரியாது. நடுவுல தெர போட்டிருந்தாங்க. அவரோட ஓலம்...அப்பப்பா! எனக்குள்ள சில்லுன்னு ஒரு இது வந்துச்சு. மாடிக்கு எக்ஸ்ரே எடுக்கக் கூட்டீட்டுப் போனாங்க. அங்க ஒருத்தர ஆப்ரேஷனுக்கு உள்ள கொண்டு போறாங்க. அது வரைக்கும் சும்மா இருந்த அவரோட பொண்ணு நானா நானான்னு அழத் தொடங்குனாங்க. போதும் சாமி போதும். சித்தார்த்தன் புத்தனா மாறுனதுக்குக் காரணங்கள் இல்லாம இல்லை.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/2.html

ஒரு உண்மை சொல்கிறேன். இந்தப் பாடலை முதலில் திரையில் பயன்படுத்தியர் இசைஞானிதான். எஸ்.ஜானகி பாடிய பாடல் அது. தொடுப்பு கிடைக்கவில்லை. அதுவும் இளையராஜாவின் தொடக்ககாலப் பாடல். கிடைத்தால் எனக்கும் கொடுக்கவும்.

ரவி, எங்கே பிடித்தீர்கள் இந்தப் படத்தை...கொள்ளையழகு...தமிழ்த்தாயின் தவச்செல்வி ஆண்டாளம்மாவின் காதல் ததும்பித் ததும்பிக் கண்ணன் மேல் பரவக் காணும் அரிய வதனம். உங்கள் அனுமதியின்றி சேமித்துக் கொண்டேன்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடும் இன்பம் ஓங்குக.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/2.html

குமரன்...இந்த ஓவியந்தானா...நீங்கள் சொன்ன அந்த ஓவியம். புரிந்தேன். :-)

G.Ragavan said...

http://shylajan.blogspot.com/2006/12/blog-post.html

நல்லவேளை...கனவுன்னு சொன்னீங்க. ஒரு நிமிசம் நான் பதறிப் போய்ட்டேன். ஒடனே போன் போட்டு எப்படி இப்படி எழுதப் போச்சுன்னு கேக்க இருந்தேன். கனவாக்க்கித் தப்பிச்சீங்க.

வள்ளுவரு என்ன சொல்றார்னா...அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ். அந்த வகையில உப்புப் போட்ட காப்பியும் அந்த அப்பாக்கு நல்லாத்தான் இருந்திருக்கனும்.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/12/2006.html

நல்லதொரு ஆய்வு. தனியொருவராக சாதிக்க முடியாததை குழுவாகச் சாதிக்க முடிகிற பொழுது...இந்தக் குழுச்சேர்க்கை இயல்பானதே.

சொல் ஒரு சொல் நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியதும்..படுத்தி வருவதும் உண்மைதான். இன்னும் நிறைய செய்வோம். வேலைப்பளுவின் காரணமாக சற்றுத் தொய்வு. விரைவில் சுறுசுறுப்பாவோம்.

முருகனருள் நன்றாகவே செல்கிறது. பலர் கூடி இழுக்கும் தேர் அது. இன்னும் சிறப்பாகச் செய்ய முருகனருள் கிட்டும் என்றே நம்புகிறோம்.

தமிழ்ச்சங்கம்...சற்று ஒழுங்கு படுத்தப் பட வேண்டியுள்ளது. அதற்காக வழிமுறைகளை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். புத்தாண்டில் புதுப் பொலிவில் தமிழ்சங்கம் சிறப்பாகப் பணியாற்றும் என்று அதோடு தொடர்புடைய நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/12/blog-post_12.html

கனிமொழி மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது நிதர்சனம். ஒப்புக்கொள்ளப்பட வேண்டியது. ஆனாலும் இன்னும் சிலர் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழரைப் பற்றி பேசினாலே அவர்களையும் புலிகளாக்கவே முயற்சிக்கின்றனர். மிகவும் தவறானது அது. கருணாநிதியிடம் நான் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். இன்றைய நிலையில் இந்தியத் தளபதி இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கச் சம்மதிக்கும் வெட்கக் கேடான நிலைதான் இருக்கிறது. இதுவும் மாற வேண்டும். இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்குமானால் அது இந்தியாவிற்கு ஆபத்தே.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/9.html

என்னய்யா இது...போன வாரம் தீபாவோட அம்மா அழுதாங்க..இந்த வாட்டி கார்த்திக். ஏன்? ராஜிக்கு வேற எடத்துல மாப்பிள்ளை பாத்துட்டாங்களா? அதுக்காக மூசுமூசுன்னு உக்காந்து அழுகுறதா? இதில்லைன்னா இன்னொன்னு.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-6.html

என்னங்க இது...நீங்க எது செஞ்சாலும் வில்லங்கமா முடியுது. என்னதான் நடந்துச்சு?

கருப்பசாமியை வெள்ளையப்பனா மாத்த பலவழிகள் இருக்குதாம். சென்னையில அடையாறுல ஒரு ஓட்டல் இருக்குது. அங்க எனக்குத் தெரிஞ்சி யாரும் உள்ள நொழஞ்சு கூடப் பாத்ததில்லை. ஆனா ரொம்ப வருசமா ஓடிக்கிட்டிருக்குது. அது எப்படி ஓடுதுன்னு பேசிக்கிட்டிருக்கிறப்போதான் கருப்பசாமியை வெள்ளையப்பனா மாத்துற பாக்டரி அதுன்னு சொன்னாங்க.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/11/blog-post_30.html

// இலவசக்கொத்தனார் said...
//இந்தப் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு போல. சரியாப் பாக்காம விட்டுட்டேன்.//

ஒவ்வொரு முறை ஒரு பதிவு போடும் போதும் உங்களுக்கு தனி மடல் அனுப்பறேனே. அது வரதில்லையா? அல்லது வந்தவுடன் நேரா குப்பைத்தொட்டிக்குள்ளாற முத்துக்குளிக்கப் போகுதா? :)) //

ஐயா...இப்பிடிக் கோவிச்சுக்கிறப்படாது. மயிலார் பல சமயங்களில் நம்ம மெயிலாரை ஐஜாக்கீர்ராறோன்னு ஒரு ஐயம். ஹி ஹி. இனிமே ஒழுங்காப் பாக்குறோமய்யா. முத்துக்குளிக்கிறது மஞ்சக்குளிக்கிறது பத்தியெல்லாம் ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சது? :-)

// தமிழில் குறுஞ்செய்தி கூட பக்கம் பக்கமாத்தான் எழுதணும் போல. :) //

அதுலயும் நம்மளப் போல ஆட்கள்னா கேக்கவே வேண்டாம்.

G.Ragavan said...

http://saathveegan.blogspot.com/2006/12/blog-post_116581589177178322.html

எங்க அம்மாப்பாட்டி (அதாவது அம்மாவின் அம்மா) நிறைய கதை சொல்வார்கள். அப்படிக் கேட்ட கதைகளில் இதுவும் ஒன்று. ஒரே வித்தியாசம் அத்திரிபாஞ்சாவுக்குப் பதிலா அத்திரிபான்ஸ்கோல். அப்படீன்னா என்னன்னு கேட்டேன். பாட்டிக்கும் தெரியலை. எனக்கும் தெரியாது.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/1.html

// வெட்டிப்பயல் said:

மிக்க நன்றி ஜி.ரா...
நம்மால் இயன்ற வரை செய்யலாமே என்றுதான் சேர்ந்துவிட்டேன்...
தேவையான சமயத்தில் வந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில்!!! //

என்னுடைய உதவியா! முருகனருளால் ஆனதைச் செய்வேன்.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/12/blog-post_14.html

வர்ர ஞாயிறா? நாலு மணியா? சென்னையா? தியாகராய நகரா? பனகல் பூங்காவா? சரி. வந்துட்டாப் போச்சு. :-)

G.Ragavan said...

http://vettiyaan.blogspot.com/2006/12/blog-post.html

வலைப்பூ மக்களிடையே ஓரளவு நட்பும் உதவும் பண்பும் பரவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. காலத்தினால் அவர்கள் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது என்று நீங்கள் நன்றி கூறியதும் மிகப் பொருந்தும். வாழ்க வளர்க.

G.Ragavan said...

http://muthukumaran1980.blogspot.com/2006/12/blog-post_14.html

உங்களது கருத்தைத் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பங்களிப்பு.

G.Ragavan said...

http://penathal.blogspot.com/2006/12/2006.html

ஒன்னும் வரலையேய்யா!

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2006/12/023.html

உரிச்சொற்றொடர். முன்பு படித்தது. இன்றைக்குச் சால தெலுங்கிலும் நனி மலையாளத்திலும் பயின்றுவருகிறது என்று நினைக்கிறேன்.

விக்கிபீடியாவில் இந்த இலக்கணம் கிடைக்கிறது.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D

இங்கே நண்பர்கள் அவரவர்கள் அறிந்த கவித்தொடர்களையும் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. "சால தவமுடைய மேலோர்" என்று எங்கோ படித்த நினைவு வருகிறது.

G.Ragavan said...

http://solorusol.blogspot.com/2006/11/022.html

// கோபிநாத் said...
இராகவன் சார்,
அருமையான பதிவு..
திருவிளையாடல் படம் பார்க்கும் போது இப்படி ஒரு அருமையான கருத்து உள்ளது என்று தொரியாது. இப்போது தான் புரிந்தது.

நன்றி...நன்றி... //

கோபிநாத், இப்ப தெரிஞ்சிருச்சு பாத்தீங்களா? அந்தப் படம் எப்ப வந்தது? 66,67ன்னு நெனைக்கிறேன். ஆனா இன்னைக்கும் ஒரு பிரபலமான படமா இருக்குது. கிட்டத்தட்ட நாப்பது வருடங்கள் கழிச்சும். அந்தப் படத்துல இன்னும் சில சங்கப்பாடல்கள் எல்லாம் வசனமா வரும். "அங்கம் புளுதி பட அரிவாளில் நெய் பூசி, பங்கப் பட இரண்டு கால் பரப்பி சங்கதனைக் கீர் கீர் என்று அரியும் நக்கீரன்" அப்படீங்குற பாட்டும் வரும்.


// johan-paris said...
ராகவா!
திருவிளையாடல் படத்தில் காட்சியில் இச்சம்பவம் வந்தாலும்; அதற்கு இவ்வளவு விளக்கம் இருக்குதென்பது தெரியவில்லை.
அப்போ கொங்குநாட்டுத் தமிழ் தேன் என்கிறீர்கள்!!!
யோகன் பாரிஸ் //

பொதுவாகவே ஏ.பி.நாகராஜன் படங்களில் தமிழ்ச் செய்யுட்களை மிகவும் அழகாகப் பயன்படுத்தியிருப்பார். மிகச் சிறப்பாக. அதே போல ஔவையார் படத்தில் நல்ல பாக்கள் கிடைக்கும். தெனாலிராமன் என்ற படம். கருணாநிதி அவர்கள் வசனம். அதிலும் நல்ல செய்யுட் பொருள் வசங்களும் கிடைக்கும். தேடித் தேடித்தான் வண்டுகளுக்குக் கொங்கு கிடைக்கிறது. :-)

கொங்கு நாடு மலைவளம் மிகுந்த நாடு என்பதைக் குறிக்க இப்படிச் சொல்லப்பட்டது.

G.Ragavan said...

http://www.desikan.com/blogcms/?item=170

பாலத் திரட்டித் தந்தீர்கள் சென்ற முறை. திரட்டிய பாலை தணல்மேல் உருளியில் உருட்டித் தருகிறேன் என்கிறீர்கள் நீங்கள். மறுக்க நாங்கள் மூடர்களா? காத்திருக்கிறோம்.

G.Ragavan said...

http://konjamkonjam.blogspot.com/2006/12/blog-post_18.html

1. குயிலே குயிலே பூங்குயிலே
ஆண்பாவம், சித்ரா, மலேசியா

2. இயற்கை என்னும் இளையகன்னி
இசையரசி, பாலு, மெல்லிசை மன்னர், கவியரசர், சாந்தி நிலையம்

3. பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
ஏசுதாஸ், வைரமுத்து, இசைஞானி, பாலச்சந்தர், சிந்துபைரவி

4. பாட்டு தொடக்கம் நினைவுக்கு வரலையே....லைலா நடிச்சது...நந்தா...யுவன் சங்கர்ராஜா

5. மன்னிக்க வேண்டுகிறேன் உங்கள் ஆசையைத் தூண்டுகிறேன்
ஏழிசை வேந்தர், இசையரசி, கவியரசர், மெல்லிசை மன்னர், இருமலர்கள்

7. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
கவியரசர், மெல்லிசை மன்னர், பாடும் நிலா, எஸ்.ஜானகி, வறுமையின் நிறம் சிகப்பு

9. நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
இசையரசி, மெல்லிசை மன்னர், கவியரசர், நெஞ்சம் மறப்பதில்லை, ஸ்ரீதர்

10. என்னம்மா கண்ணு சௌக்கியமா
பாடும் நிலா, மலேசியா, இசைஞானி, மிஸ்டர் பாரத்

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_18.html

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இன்று போல் என்றும் வாழ்க. மிகச் சரியானதொரு பொழுதில் நட்சத்திரமாகியிருக்கிறாய். இது உனக்கு நல்லதே. நல்ல பதிவுகளைக் கொடுத்து நல்ல பெயர் எடுக்க என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_18.html

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இன்று போல் என்றும் வாழ்க. மிகச் சரியானதொரு பொழுதில் நட்சத்திரமாகியிருக்கிறாய். இது உனக்கு நல்லதே. நல்ல பதிவுகளைக் கொடுத்து நல்ல பெயர் எடுக்க என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/10.html

மொதல்ல கார்த்திக் செஞ்சதே தப்பு. ராஜியும் அவங்க வீட்டுல சொன்னப்புறம்...கார்த்திக் அவங்க வீட்டுல சொல்லி...பேசிச் சம்மதிக்க வெச்சு..கூட்டீட்டுப் போயிருக்கனும். அதையும் செய்யலை. இவரே பெரிய இவர் மாதிரிப் போய் மெரட்டல் வாங்கீட்டு வந்திருக்கான். குறைந்த பட்சம்...ஒரு டேப்பு ரிக்கார்டர சட்டைக்குள்ள வெச்சுக் கொண்டு போயி...அவங்க பேசுனத ரெக்கார்டு செஞ்சிட்டு வரக் கூடாதா? ம்ம்ம்...காதலிக்க மட்டுந் தெரியுது. அத எப்படி வெற்றியாக்குறதுன்னு தெரியலை. சமைக்கத் தெரியும். ஆனா திங்கத் தெரியாதுங்குற கதையா இருக்குது!

சரி..அடுத்தென்ன...வீட்ட விட்டு ஓடி வந்து கல்யாணந்தான். வேறென்ன நடக்க முடியும். சினிமாவுலதான் இவ வீட்டுக்கு அவனும்..அவன் வீட்டுக்கு இவளும் போய் சமாதானப் படுத்த முடியும்.

ம்ம்ம்...என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-7.html

முருகா! என்னத்தச் சொல்றது...என்னைக்கும் நம்ம வரம்புக்குள்ள இருக்கனும். அதே நேரத்துல வரம்ப மீறுனமும்னு நெனைக்கும் பொழுது நாலும் பாத்துத்தான் செய்யனும். அதையும் மீறிச் செய்யும் போது...என்ன நடந்தாலும் ஏத்துக்கனும். வேற என்னதான் செய்றது?

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_116644942234802420.html

இந்தக் கேள்வியத்தான் கடந்த ஒரு மாதமா நான் மனசுக்குள்ள கேட்டுக்கிட்டிருக்குறது. உண்மையிலேயே இந்தியா ஒளிரலைன்னுதான் நான் சொல்வேன். வளர்ச்சி இருக்குது. இல்லாம இல்ல. ஆனா சமச்சீரான வளர்ச்சி இல்லை. அதற்குக் காரணம் இந்திய அரசாங்கந்தான். இன்னைக்குத் தொழில் வளர்ச்சின்னு அவங்க காலரத் தூக்கி விட்டுக்க முடியாது. அது பணக்காரங்களாலையும் எப்படியாவது பிழைச்சாகனுமேன்னு உழைச்ச படிச்சவங்களாலையும் வந்தது. மத்தபடி எந்த அரசாங்கமும் அதுக்கு உரிமை கொண்டாட முடியாது. அதுவுமில்லாம தொழில்துறை இந்தியாவின் உள்கட்டமைப்பைச் சார்ந்து இல்லாம வெளிநாட்டைச் சார்ந்தே இருக்கு. இது பெரிய தவறு. இந்தியாவுக்கு இது ரொம்பவுமே தாமதமாப் புரியப் போகுதுன்னு நெனைக்கிறேன். இந்தியப் பொருளாதாரம் இந்தியாவை மையப்படுத்தித்தான் வளரனும். அதுதான் நின்னு நிலைக்கும். ஆனால் அந்த அளவுக்குத் திட்டம் போட்டுச் செயல்படுத்துற மனப்பக்குவம் இன்றைய நிலையில எந்த இந்திய அரசியல்வாதிக்கும் கிடையாது. மக்களுக்கும் அது பத்திக் கவலையில்லை. மதம், மொழின்னு கவலைப்பட எவ்வளவோ இருக்கும் பொழுது...இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/7.html

அருமையான பாடல். சந்த நயம் மிகுந்து சிறப்பாக அமைந்திருக்கிறது. சாத்வீகன், சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_116644942234802420.html

// பாலாஜி
ஆன்மீகம் ஆகட்டும், சமுதாயம் ஆகட்டும், நையாண்டிக் கதைகள் ஆகட்டும், எதுவா இருந்தாலும் கேள்விய மட்டும் இப்படி அடுக்குறீங்களே! (சரி தானே ஜிரா?:-) //

ரவி...அதெல்லாம்...அப்படியே வர்ரது. ஒன்னும் செய்ய முடியாது. ஊரு பேரப் பாத்தீங்கள்ள ;-)

G.Ragavan said...

http://verygoodmorning.blogspot.com/2006/12/blog-post_15.html

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் திருப்பாவைப் பாக்கள் உள்ளத்தில் மலர்ந்து பூக்களாகி மணம் பரப்புவது மகிழ்ச்சி. ஆண்டாள்....திருக்கால்களால் திருவில்லி தாண்டாள். மற்றவரைக் கண்ணால் தூண்டாள். கண்ணனையன்றி வேண்டாள். ஆனாலும் உலகையே ஆளும் ஆண்டவனை ஆண்டாள். அந்தப் பாக்களை எத்தனை படித்தாலும் தமிழ் கற்றவர் இன்புறுவரெம்பாவாய்! வாழ்க. வளர்க.

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2006/12/176.html

zen காரில் அந்த மஞ்சள் நிறம் இருக்கிறதே...அடடா! பார்க்கப் பார்க்கப் பரவசம். புது மாடல் வருதுன்னு சொன்னாங்க. வந்துருச்சு போல. ரொம்ப வருத்தப்பட்டு நீங்க எழுதீருக்கிறதப் பாத்தா உங்க வருத்தம் புரியுது. வருத்தப்படாதீங்க. இதுவும் ஓடும்.

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2006/12/rtp.html

ராகம் தானமா தாளமா? தாளம் என்றே பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். தெலுங்கு வாடைக்காரர்கள் தானம் என்றும் கன்னட மலையாளிகள் தாளமென்றும் வழங்கும் இம்மூன்றுக்கும் விளக்கம் சொல்லியிருக்கின்றீர்கள். அது சரி...அனுபல்லவி பத்திச் சொல்லலையே ஹி ஹி

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/12/1.html

படமும் போட்டாச்சு...தகவலும் போட்டாச்சு...இன்னும் ஒவ்வொன்னாப் பாத்துப் படிக்கனும். மொத்தத்தில் சந்திப்பு சிறப்பாக நடந்தது.

G.Ragavan said...

http://tamilnathy.blogspot.com/2006/12/blog-post_17.html

உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கின்றீர்கள். உங்களைப் பதிவர் வட்டத்தில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

ஈழத்தமிழர் பிரச்சனை இன்னும் எங்கு செல்லுமோ தெரியவில்லை. கைகளைக் குவித்துக் கடவுளை வேண்டியபடி நாங்கள். அதுதான் இன்றைக்குச் செய்து கொண்டிருப்பது. :-( அதற்காக தமிழ்ச் சகோதரர்கள் மன்னிக்க.

G.Ragavan said...

http://ssankar.blogspot.com/2006/12/blog-post.html

வாங்க சங்கர். உங்களையும் சந்திச்சதுல மகிழ்ச்சி. மொதப் பதிவு நீங்கதான் போல. :-)

G.Ragavan said...

http://sivagnanamji.blogspot.com/2006/12/12-17-06.html

சிவஞானம் சார்....ஒரு தலைமை ஆசிரியர் முன்னாடி நின்னு ரொம்ப வருசமாச்சு. அந்தக் குறை நேத்து தீந்திருச்சு. :-) ஒவ்வொரு பேச்சையும் கவனிச்சுப் பேச வேண்டியதாப் போச்சே! :-)

புதுமையோ பழமையோ தலமைக்கு அது அவசியந்தான்னு நெனைக்கிறேன். இல்லைன்னா நம்மூர்ல மை விற்பனை இவ்வளவு நல்லா நடக்குமா!

G.Ragavan said...

http://etamil.blogspot.com/2006/12/tamil-blogs-2006.html

இந்தப் பதிவு தமிழ் வலைப்பூக்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய மகரந்தத்தையும் இங்கே மணம் பரப்ப விட்டமைக்கு நன்றி.

G.Ragavan said...

http://poonspakkangkal.blogspot.com/2006/12/3.html

எல்லாஞ் சரிதான். தலைப்பு -2ன்னுல்ல இருந்திருக்கனும். 3ன்னு இருக்கே?

அது சரி....ஆனை மயிலை மிதிக்க வந்ததையும் மயில் ஜிவ்வென்று எஸ்கேப் ஆகிப் பறந்ததையும் விட்டு விட்டீர்களே!

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_116644950730253989.html

இந்த வாரம் முழுக்க கவுண்டர் இந்த வேலையப் பாக்கப் போறாரா! சூப்பர். அவருக்கு அஜிஸ்டெண்டு வேணுமப்பா...செந்தில்ஜியையும் உள்ள கொண்டு வாங்க. அப்பத்தான கலக்கல் பயங்கரமா இருக்கும்.

இந்த பேட்டிகள்ள...பெனாத்தல் சொன்ன ராமநாராயணனை உள்ள இழுத்து விடனும். அப்படியே வைரமுத்து, இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான்களையும் இழுத்து விடுங்க. இசைன்னா நமக்கு ரொம்பப் பிடிக்குமுங்க.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_19.html

ம்ம்ம்....இது மிகவும் சிக்கலான சமாச்சாரம். அதிலும் உணர்வுகளோடு தொடர்புள்ளது. ஆனாலும் முடிந்தவரை இந்த மாதிரி உடலுறுப்பு தானம் செய்யப்படுவது நல்லது. பெங்களூரில் ராஜ்குமார் இறந்த பின் அவரது கண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தச் செய்திக்குப் பின்னர் பெங்களூரில் கண்தானம் பெருகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

G.Ragavan said...

http://piditthathu.blogspot.com/2006/12/blog-post_18.html

சென்னைவாசின்னு சொல்றீங்களே...எத்தன வாட்டி வாசிக்கனும்? அதச் சொல்லலையே!!!!

வார்ப்புரு நல்லாருக்கு. ததுன்னு போட்டு கருப்பண்ணசாமியின் அழகு முகத்தை மறைத்த உம்மை என்ன செய்வது!!!!!!!!!!

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/12/018.html

பாரதி முருகனைப் பற்றி அருமையான பாடல்கள் பாடியிருக்கின்றார். இந்தப் பாட்டு. சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ என்ற பாடல். பிறகு முருகனையும் வள்ளியையும் வைத்து ஒரு வசனகவிதை. பெயர் மறந்து விட்டது. இந்தப் பாடல் மிகவும் சுறுசுறுப்பாக சந்த நயத்தோடு காவடி எடுப்பவர்கள் பாடச் சிறந்தது.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/11.html

இதான் முடிவா...இதான் முடிவா...இதுதான் முடிவா!!!! சரி. சரி. சரி.

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2006/12/blog-post.html

தொடக்கமே நாந்தானா! கிட்டத்தட்ட பத்து மாதங்கள். அப்பொழுதும் மொட்டை. இப்பொழுதும் மொட்டை. பதிவுக்குப் பொருத்தமா :-)

கையில வெச்சிருந்த புத்தகம்....பஸ்சுல வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் படிக்க.

அன்றைக்குப் பேசியவைகளை இன்னும் நினைவு வெச்சிருக்கீங்களே. சூப்பர் நினைவாற்றல்.

நான் சொன்ன அந்த வங்க மொழிப்படம் பஞ்சரமேர் பாகான். பஞ்சரத்தின் தோட்டம் என்று பெயர். மிகச்சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. அடுத்து பெங்களூர் வருகையில் சொல்லுங்கள். ஒரு காப்பி போட்டு விடலாம்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2006/12/blog-post_19.html

தேவு...இதுதான் சிவாஜி படமா? ம்ம்ம்...ஷங்கர் தன்னோட தெறமையெல்லாம் காட்டுறாருன்னு நெனைக்கிறேன். படத்த நம்பிப் பாக்கலாம் போலத் தெரியுது.

G.Ragavan said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/12/blog-post.html

அடடே!

G.Ragavan said...

http://madhumithaa.blogspot.com/2006/12/blog-post_17.html

இப்படி நடக்குமா! நடக்குமா! நடக்குமா! நடக்கலாம். நடக்கலாம். நடக்கலாம். அப்படித்தான் தோணுது.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/12/blog-post_19.html

நல்லதொரு திறனாய்வு. இன்றைய நிலையில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் என்பது ஒப்புக்குச் சப்பாணி என்று கொண்டு வந்த பெருமை மம்தாவையே சாரும். அடிபட்டு வாழ்க்கையில் இந்த நிலைக்கு வந்தவர். இடதுசாரிக் கோட்டைதான் வங்கம். ஆனால் அந்த நிலமை மாறிக் கொண்டேயிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. எனக்கு வங்க நண்பர்கள் நிறைய. அவர்களின் சார்பு நிலையும் மாறிக் கொண்டே வருவதை உணர்கிறேன்.

G.Ragavan said...

http://thamizsangam.blogspot.com/2006/12/blog-post.html

அருமையான பாடல்கள் சிறில். இரண்டு பாடல்களிலும் உள்ள கருத்துச் செறிவைப் பாருங்கள்.

முதல் பாடலில் ஔவை குறிப்பிட்ட ஒன்று குறைந்தாலும் வாழ்வு மாறிப் போய் விடுவதைக் கவனியுங்கள். அப்பப்பா...அத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்டவனுக்கு முன்னால் ஒரு கிழவி துணிந்து இதைச் சொல்லியிருக்கிறாள் என்றால்..அவள் வாழ்க்கையை எவ்வளவு நுணுக்கமாக அனுபவித்திருக்க வேண்டும். அடடா!

G.Ragavan said...

http://etamil.blogspot.com/2006/12/tamiloviam-gragavan.html

நன்றி பாலா. வாய்ப்பிற்கு நன்றி. இப்பொழுதுதான் ஒரு பதிவு போட்டேன். :-) அது இங்கே. நீங்கள் மிகச் சிறப்பாகத் தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.

http://gragavan.blogspot.com/2006/12/blog-post_19.html

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/12/1.html

தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். தாமதமாக வந்தாலும் தா-மதமாக வந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. :-)

மாணிக்கவாசகர் என்னும் திருவாதவூராரின் திருவாசகத்துக்கு உருகிய உள்ளங்கள் திருவெம்பாவையைப் பருகின. மருகின. அந்தப் பாவைக்கு விளக்கமாக நீங்கள் இடும் தமிழ்க் கவிதைகள் படிக்கக் கிடைத்தது நல்ல வாய்ப்பு. விட முடியுமா?

நமக்குப் பிடித்த ஒன்றைப் பற்றிப் பேசுவதும் கேட்பதும் எவ்வளவு இன்பம். குறிப்பிட்ட திரைப்படத்தையோ புத்தகத்தையோ பற்றி மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கிறோம். அதுவும் உணர்வு மயங்கி முழு ஈடுபாட்டோடு. இந்த மதுரைப் பெண்களும் அப்படித்தான். ஆலவாயண்ணலை நினைத்து நினைத்து அவர் புகழைக் கேட்டும் நினைத்தும் பேசியும் உருகி மகிழ்கிறார்கள். அந்த மகிழ்ச்சி இன்னொருத்தி காதில் எட்டவில்லையே என்று வியந்து துவக்குகிறார்கள் திருவெம்பாவையை. தூங்கிய பாவை நான். எழுப்பிய பாவை எஸ்.கே. :-)

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/12/2.html

வெளியே கடுங்குளிர். பனி மூட்டம் வேறு. படுக்கையும் சுற்றிய போர்வையும் சுகம் சுகம் என்று எழவொட்டாமல் சுகிக்கின்றன. ஆனாலும் எழ வேண்டும் என்ற ஆவலில் நேற்றே தோழியரிடம் சொல்லியாகி விட்டது. அவர்கள் வந்து எழுப்புகிறார்கள். ஆனாலும் ஓரிருமுறை மறுத்து விட்டு பிறகுதான் எழ முடிகிறது. அலாரம் வைத்தாலும் அதைத் தட்டித் தூங்குவது போலத் தோழியர்க்குக் காரணம் சொல்கிறாள். ஆனால் அவர்களும் விடவில்லை. ஈசன் திருவடி புகழ்ந்து அவளது தூக்கத்தை விரட்ட படாதபாடு படுகிறார்கள்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/12/3.html

பத்து குணங்கள் என்னவென்று நானே கேட்க இருந்தேன். வந்து பார்த்தால்..நீங்களே அனைத்தையும் எழுதியிருக்கின்றீர்கள். சிறப்பு. மிகச் சிறப்பு.
இந்தப் பத்தில் எத்தனை நமக்கு என நினைத்துப் பார்த்தேன். ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. :-( அவற்றில் ஒன்றையாவது ஆண்டவன் அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத்தான் முடியும்.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/12/4.html

ஒண்ணித்திலநகை...என்ன அருமையான சொற்றொடர். நித்திலம் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒரு திரைப்பாடலில் கூட "நீலக்கடல் கொண்ட நித்திலமே" என்று வரும். இன்றைக்கு நித்திலங்கள் குறைந்து போயின. திரைப்பாடல்களில் தமிழே குறைந்த பொழுது நித்திலங்கள் குறைவதில் வியப்பென்ன.

சில சமயங்களில் வீட்டில் விசேஷம் இருந்தால் காலையில் எழுந்திருத்துக் கிளம்ப வேண்டியிருக்கும். அப்பொழுது எழுப்பினால்...அவங்க எந்திரிச்சாச்சா..இவங்க எந்திரிச்சாச்சான்னு கேள்வி எழுப்புவோம். எல்லாரும் எந்திரிச்சிக் கெளம்பியாச்சு. நீதான் மிச்சம்னு சொல்லி எழுப்புவாங்க. அந்த நிகழ்வைக் கவிதையில் கொண்டு வந்துள்ளார் திருவாதவூரார். வாழ்க்கையை வாழ்ந்த ஊரார்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-8.html

ஆகா! குத்தம் கண்டுபிடிச்சவனையே குத்தத்தைச் சரி செய்ய வெச்சுட்டாங்களா!

முந்தி நீதின்னு சிவாஜி நடிச்ச படம் ஒன்னு வந்துச்சு. அதுல சிவாஜி லாரி டிரைவர். அவரு விபத்துல ஒருத்தர் இறந்துருவாரு. அவரு குடும்பத்தக் காப்பாத்துற பொருப்பு சிவாஜிக்கு வரும். மொதல்ல வெறுப்போட போறவரு..அப்புறம் அவங்க வெறுப்பையும் மாத்தி அந்தக் குடும்பத்தோடயே ஒன்னாயிருவாரு. அது மாதிரி ஆச்சோ உங்க நெலமை?

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/5.html

செம்பவழ வாய் திறந்து....அம்மா எனவா?
வெண்ணய் உண்ணவா?
மண்ணை உண்ணவா?
உலகைக் காட்டவா?
மறைகள் சொல்லவா?
என்றெல்லாம் கண்ணனைக் கேட்க வைக்காமல் என்னென்ன செய்ய வேண்டுமென்று நீங்களே சொல்லி விட்டீர்கள். :-)

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/5.html

செம்பவழ வாய் திறந்து....அம்மா எனவா?
வெண்ணய் உண்ணவா?
மண்ணை உண்ணவா?
உலகைக் காட்டவா?
மறைகள் சொல்லவா?
என்றெல்லாம் கண்ணனைக் கேட்க வைக்காமல் என்னென்ன செய்ய வேண்டுமென்று நீங்களே சொல்லி விட்டீர்கள். :-)

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/6.html

இன்று போய் நாளை வா என்று தெய்வம் சொன்னதாகக் கருதுகிறவர்களுக்கு நாளை என்பதை அவன் கண்டான் என்பதும் உண்மைதானே ;-)

இறைவனே அனைத்தும் அறிய வல்லான். நாம் எவ்வளவு அறிந்தாலும் மெய்யறிவோடு ஒப்பிடுகையில் அதெல்லாம் அறியாமைதான்.

G.Ragavan said...

http://ulaathal.blogspot.com/2006/12/blog-post.html

// அடுத்தமுறை பெங்களூர் வரும்போது ஜி.ரா "பஞ்சமா பாதகன்" படத்தை காப்பி செய்யும்போது எனக்கு ஒரு காப்பி கொடுப்பாரா என்றும்,//

ரவி, உங்களுக்கு நான் பஞ்சமா பாதகன் குடுத்தால் அது திருநெல்வேலிக்கே அல்வா போல அல்லவா :-))))) அந்தப் பாதகத்தை நான் செய்ய மாட்டேன். ஹா ஹா

// சிடியை காப்பி செய்வது காப்பிரைட் சட்டப்படி குற்றம் என்றும் இங்கே பதிந்து வைக்கிறேன்...//

காப்பி ரைட்டுங்குறீங்களா? சரி..இன்னைக்கே ஒரு காப்பி குடிச்சிர்ரேன். சரிதானா?

G.Ragavan said...

http://valaippadhivu.blogspot.com/2006/12/177.html

இராமநாதன், இதில் திருட்டு ஒரு பிரச்சனையென்றால் விலை மற்றொரு பிரச்சனை. அளவுக்கு மீறி விலை போகும் பொழுது எப்படியாவது கொள்ளையாகும்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்கிறேன். சென்னையில் இப்பொழுது சங்கரா ஹாலில் ஆடியோ வீடியோ எக்சிபிஷன் நடக்கிறது. அங்கு தமிழ் விசிடிகளும் டிவிடிகளும் நல்ல விலைக்குக் கிடைத்தன. பழைய நடுத்தர டிவிடிகள் 50,70 என்ற விலையில் இருந்தன. அதே நேரத்தில் ஒரு சில படங்கள்..நினைத்தாலே இனிக்கும் டிவிடியின் விலை கிட்டத்தட்ட 200ச் சொச்சம். எப்படி அதை வாங்குவது? 70களிலும் 80களிலும் வந்த படங்கள் ஒரிஜினலாக இருந்தால் 100 ரூபாய்க்குக் கிடைக்கும் என்றால் கூட ஒரிஜினல் வாங்குகிறவர் எண்ணிக்கை கூடும். ஆனால் கடையில் சென்று பாருங்கள். 400, 500 என்று விலை இருக்கும். பேராசை. அதே நேரத்தில் தெலுங்கிலும் இந்தியிலும் பழைய படங்கள் என்றால்...பழசென்ன..புதுப்பட ஒரிஜினல் டிவிடியே அதிகபட்சமாக 100-150க்குள் கிடைத்து விடுகிறது. அப்புறம் ஏன் டூப்ளிகேட் வாங்க வேண்டும்.

என்னிடம் இருக்கும் 95%க்கும் மேற்பட்ட டிவிடிகளும் விசிடிகளும் ஒரிஜினலே. ஆனாலும் ஒரிஜினல் விற்பனையாளர்களின் அடாவடியையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/12/blog-post_20.html

இதெல்லாம் அரசியல்ல சகஜமுங்க...எல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தான். இதுக்கெல்லாம் ஆச்சிரியப் படுறதும் அதிர்ச்சி அடையறதும்..மகிழ்ச்சி அடையறதும்...நின்னு போய் ரொம்ப நாளாச்சி. எல்லாரும் நல்லாயிருக்கட்டும்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006_12_01_vettipaiyal_archive.html#116659037425768379

வெட்டி....முதலில் உன் பெயரை மாற்று. சொல்ல வந்த கருத்திலாகட்டும்...சொல்லும் விதத்திலாகட்டும்...என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

முருகா! கற்றது கைமண்ணளவு. (இது எனக்கு).

பெரியாரின் கொள்கைகள் என்று நான் புத்தகம் படித்ததில்லை. ஆனால் சிலச்சில கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையிலும் தமிழ்க் கொள்கையிலும் எனக்கு மறுப்பு உண்டு. ஆனால் சமூக நீதிக் கருத்துகளிலும் பெண்ணுரிமைக் கருத்துகளிலும் மிகுந்த ஒப்புதல் உண்டு. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும். முடிந்து போயிற்று விஷயம் அத்தோடு.

இன்றைக்கு ஜிரா விரும்பினாலும் அறுபடை வீட்டில் எந்த வீட்டிலும் முருகனுக்குப் பூசனை செய்ய முடியாது. பாலாஜியும் திருப்பதி பாலாஜியைப் பார்த்ததுமே ஜருகண்டி ஜருகண்டிதான். இந்த நிலையும் மாறத்தான் அவர் பாடுபட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அவரும் மனிதர்தான். தவறுகள் செய்திருக்கலாம். சமீபத்தில் கீழ்வெண்மணி படுகொலை பற்றி ரோசாவசந்த் பதிவிட்டிருந்தாரே. அதற்காக அவர் சொல்லும் எல்லாமும் தவறு என்று சொல்வது மூடத்தனம்.

இன்றைய நிலையில் பெரியார் எதிர்ப்பு என்பதும் ஆதரவு என்பதும் buzz words. இருவருமே அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

G.Ragavan said...

http://aaththigam.blogspot.com/2006/12/6.html

SK, இந்தப் பாவையிலுள்ள நென்னலை என்ற சொல் எனக்குக் கன்னடத்தையும் தெலுங்கையும் நினைவு படுத்துகிறது. நின்னே என்று கன்னடத்திலும் நின்னா என்று தெலுங்கிலும் வழங்கப்படும் நேற்றின் தொடக்கம் இங்கிருக்கிறதா! நென்னலை விட்டு விட்டோம் நாம். ஆனாலும் நினைவு படுத்துகிறது திருவெம்பாவை.

இந்தப் பாவையில் வரும் பாவையின் பார்வையில் நாமெல்லாருமே அகப்பட்டிருப்போம். நானே செய்றேன்னு சொல்லீட்டு....அவங்க வந்து சொல்ற வரைக்கும் மறந்து போய் இருக்கிறது. இறைவா...அந்த நிலையிலிருந்து காப்பாற்று. சொல்லிய சொல்லும் செய்த செயலும் மறவாது...நன்றாய் இருக்க அருள்வாய்!

G.Ragavan said...

http://madippakkam.blogspot.com/2006/11/blog-post_29.html

முதலில் ஒரு முடிவு எடுத்து அதைச் செயல் படுத்த விரும்புகிறீர்கள். அதற்கு எனது வாழ்த்துகள்.

எல்லாருக்கும் நல்லவனாக இருப்பது நடவாது. ஆனால் தனிநபர்த்தாக்குதல் இல்லாமல் கருத்துப் பரிமாற்றம் செய்யலாம். கருத்து மோதலும் செய்யலாம். அதில் தவறேயில்லை. அந்த வகையில் இது நல்ல முடிவே. எந்தக் கருத்தையும் சரி அல்லது தவறு என்று சொல்ல உரிமை நமக்குள்ளது. ஆனால் அதை நாகரீகமாகச் சொல்வது என்று சொல்வார்கள். அவ்வளவுதாங்க. முடிஞ்சது பிரச்சனை. உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/12/blog-post_116613610803507719.html

பார்த்தேன் ரசித்தேன் விழுந்தே சிரித்தேன்
இதைத்தான் நகைச்சுவையென நினைத்தேன் :-)))))

கடவுளைக் காட்டி பயமுறுத்தாம இருக்குறதே பெரிய விஷயம். ஒலகமே அப்படியிருக்குற சூழ்நிலையில் இதெல்லாம் சரிதான்.

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/12/blog-post_19.html

ரவி, நீங்கள் குறிப்பிட்டுள்ள அஞ்சிலே பாடலை எனக்கும் கம்பராமாயணத்தில் பார்த்த நினைவுள்ளது. ஆனால் தொடக்கத்திலா இடையிலா என்று தெரியவில்லை. இது இடைச்செருகல். கம்பர் எழுதியதேயில்லை என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்கிறார்.

யார் எழுதியதோ...நல்லதொரு தமிழ்ப் பாடல். அனுமனை வணங்குகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அருமையான துதி.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_116659037425768379.html

// சுப்பு said...
// முருகா! கற்றது கைமண்ணளவு //

சிவபெருமானுக்கு முருகன் என்றொரு மகன் இருப்பதாக எனது வட இந்திய நண்பர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார். நான் விசாரித்த வகையில் அனைத்து வட இந்தியரும் முருகக் கடவுள் சிவனின் மைந்தன் என்று ஒப்புக் கொள்ளவில்லை - இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. //

:-) அதற்குக் காரணம் மிக எளிது. முருகன் தமிழ்க் கடவுள். அவ்வளவுதான் விஷயம். இன்னும் விளக்கமாக நான் சொன்னால்....சண்டைதான் நடக்கும். :-) ஆரிய திராவிடக் கலப்பில் பல மாறின. தென்னாடுடைய சிவனும் ருத்ரனும் ஒன்றானார்கள். இன்னமும் சைவ சித்தாந்தம் சிவனை மும்மூர்த்திகளில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. ருத்திரந்தான் மும்மூர்த்திகளில் ஒருவன். இவர்கள் மூவருக்கும் மேலான தேவாதி தேவன் சிவன் என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது. அதே போல மாயனும் விஷ்ணுவும் ஒன்றாகிப் போனார்கள். இன்றைக்கு மாயன் என்ற பெயர்பயன்பாடு கூட மிகக் குறைவுதான். ஆனால் முருகன் மட்டும்...எத்தனை பெயர்கள் கருத்துகள் வந்து சேர்ந்தாலும் அத்தனையையும் சேர்த்துக்கொண்டு இன்னமும் முருகன் என்ற பெயரோடு இருக்கிறானே..தமிழ்க் கடவுள்...அவனை வடவரோ...கிழக்கரோ..யார் ஏற்றால் என்ன...மறுத்தால் என்ன. அனைவரையும் ஏற்பது அவன் கருணை.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/8.html

குமரன், இந்தப் பாடலைப் படிக்கையில் பாவையின் நினைவு வராமல் இல்லை. :-) நல்ல பாடல்.

நீங்கள் சொல்வது உண்மைதான். கண்ணனைத்தான் மழையாகக் காண்கிறாள் ஆண்டாள். இதோ சென்ற ஆண்டு நானிட்ட விளக்கம்.

http://iniyathu.blogspot.com/2005/12/blog-post_18.html

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழி உள்புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிந்தேலோர் எம்பாவாய்

நோன்பைச் சொல்லி அதன் பெருமையைச் சொல்லி அதன் முறைமைகளைச் சொல்லி அதன் பலன்களையும் சொல்லியாகி விட்டது. இப்பொழுது நோன்பைத் துவக்கலாம். அப்படி நோன்பைத் துவக்கவும் தொடரவும் இறைவன் அருள் வேண்டும். அதை வேண்டுவோம் முதலில்.

கண்ணனே! கடலுக்கும் மழைக்கும் மன்னனே! நீ எங்களை எதற்கும் கை விடாதே. நாங்கள் நோன்பு துவக்குகிறோம். உன்னருளின்றி ஒன்றும் ஆகாது. துவங்கும் நோன்பும் தூய்மையாகத் துவங்க வேண்டும். உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவதும் நீர். உடலைத் தூய்மைப் படுத்துவதும் நீர். எங்களைக் காக்க நீரே வரவேண்டும் நீராகவும் வரவேண்டும்.

எப்படித் தெரியுமா? ஆழமான ஆழியில் நிறைந்து ததும்பும் உப்புதல் கொண்ட நீரை முகந்து உப்புதல் கொண்டு இடியிடித்துக் கொண்டு விண்ணில் ஏறிடும் மேகங்கள். ஊழி முதல்வனான உந்தன் மேனி போலவே கருத்து விண்ணை மறைத்து நிற்கும் அந்த மேகங்கள். விரிந்த (பாழியம்) தோள்களை உடைய பற்பனாபன் கையில் இருக்கும் சக்கரத்தினைப் போல மின்னிடும் அந்த மேகங்கள். ஓவென்று மங்கலமாய் ஒலிக்கும் உனது கைச் சங்கைப் போல அதிர்ந்திடும் அந்த மேகங்கள்.

(கண்ணனின் கரிய மேனியைப் பாடாத தமிழ்ப் புலவன் யார்? சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடுகிறார். "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" சைவ மரபில் பிறந்த அவரும் கரியவனைப் பாடியிருக்கிறார். வைணவ மரபில் வந்த பகழிக்கூத்தர் முருகனைப் பாடியது போல. சமய மயக்கம் கூடாது என்பதே இதன் பொருள்.)

மின்னியும் அதிர்ந்தும் நின்று விடாமலும் காலம் தாழ்த்தாமலும் உனது கையிலிருக்கும் சார்ங்கம் என்ற வில்லிலிருந்து பொழியப்படும் இடைவிடாத அம்புகளைப் போல சரஞ்சரமாய் மழை பெய்து இந்த உலகத்தில் நாங்கள் அனைவரும் வாழ்ந்திடும் வகை செய்வாய். அப்பொழுதான் நீர்வளம் பெருகி இந்த மார்கழி மாதத்தில் நாங்கள் நீராடித் தூய்மையாவாய் எம்பாவாய்!

(இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உண்டு. நோக்குமிடமெங்கும் இறைவனைக் கண்டவள் கேட்கும் ஒலியெல்லாம் இறைவனைக் கேட்டாள். இறைவன் புலன்களுக்கு எட்டான் என எப்படிச் சொல்வது? பார்க்கும் பார்வை. கேட்கும் ஒலி. நுகரும் நாற்றம். உணரும் தீண்டல். பேசும் மொழி என்று ஐந்து புலன்களின் வழியாகவும் நாம் உணர்ந்து கொண்டிருப்பது இறைவன் கருணையல்லவா. ஆகையால்தான் மழை மேகங்களைப் பார்த்ததும் இடியிடித்து மின்னியதும் கண்ணன் நினைவில் ஆழ்கின்றார். அதனால்தான் வைணவ அடியவர்களை ஆழ்வார் என்பர். கரிய மேகத்தைப் பார்த்தால் கண்ணனின் கரிய மேனி நினைவில் வருகிறது. இடிக்கும் ஒலியில் கண்ணனின் கைச்சங்கின் ஒலி எழுகிறது. மின்னுகின்ற மின்னல் திருமால் கைச் சக்கரம் போலத் தெரிகிறது. பொழியும் சர மழையில் சார்ங்க வில்லின் அம்பு மழை தெரிகின்றது. அதுதான் அன்பு மழைபெயனப் பெய்கிறது ஆண்டாளுக்கு.)

அன்புடன்,
கோ.இராகவன்

G.Ragavan said...

http://etamil.blogspot.com/2006/12/blog-post_21.html

பிரபா சொல்வது சரிதான். மலேசிய பத்துமலைத் தைப்பூசத்தைப் படமாக்கி வந்து..கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஓடும் அளவிற்குக் கொண்டு வந்து...மெல்லிசை மன்னரிடமும் கவியரசரிடமும் கொடுத்து அங்கு ஒரு பாடலைப் போடச் சொன்னாராம். படக்காட்சியோ ஒரு குறிப்பிட்ட கோர்வைக்குத் திட்டமிட்டு எடுக்கப்படாதது. அப்பொழுது உருவான பாடல்தான் பத்துமலைத் திரு முத்துக்குமரனை என்ற பாடல்.

சீர்காழியின் குரலில் முதலில் பாடல் துவங்கும். பிறகு தென்னை கனிந்தொரு தேங்காய் கொடுத்தது சக்தியின் முருகனுக்கே. அதை இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே என்று தொடர்வார் டி.எம்.எஸ். அதைத்தொடர்ந்து தேங்காய் உடைக்கும் காட்சி வரும். பாடலின் இசை அதற்குப் பொருத்தமாக இருக்கும். அதற்குப் பிறகு "வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா" என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டைத் தொடருவார். அதற்குப் பின்னர் "பத்தினி இருவரை விட்டு விட்டு" என்று மெல்லிசை மன்னர் பாடுவார். அடுத்து "கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் ஒன்று" என்று இசையரசியின் குரல் தொடரும். "கோடிக் கணக்கில் பணம் கொடுத்தான்" என்று அடுத்தது பாடியது பெங்களூர் ரமணி அம்மாள். பிறகு எல்லாரும் சேர்ந்து பாட்டை முடித்து வைப்பார்கள். மிகப் பெரிய பாடல் அது.

இந்தப் படத்தின் மற்ற பாடல்களும் அருமையே. "வருவான் வடிவேலன்" என்று வாணி ஜெயராம் பாடல். "ஜாய் புல் சிங்கப்பூர்" என்று இசையரசியும் பாலுவும். "பாரு பாரு சாமி இவ பழைய குறத்தி" என்று எல்.ஆர்.ஈஸ்வரியும் இசையரசியும். "சத்தியத் திருக்கோலம்" என்று டி.எம்.எஸ் மற்றும் வாணி ஜெயராம்.

இந்தப் படத்திற்காக தமிழக அரசின் விருது மெல்லிசை மன்னருக்குக் கிடைத்தது. 79லோ 80லோ வந்த திரைப்படம் என நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-9.html

ம்ம்ம்..ரொம்பவும் அறத்துன்பந்தான். தவறு நம்ம மேலதான்னா...அத ஒத்துக்கனும். வீண் வம்பு பிடிக்கிறத விட சமாதனம் செஞ்சிக்கிறதுதான் அப்ப நீங்க இருந்த நிலமைல சரீன்னு தோணுது. என்ன செஞ்சீங்களோ? அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_22.html

ம்ம்ம்...யோசித்துத்தான் எழுதியிருக்கிறாய். சிவாஜி நடித்ததற்காக கர்ணனை நல்லவனாகக் காட்டி விட்டார்கள் சரி. டி.வி மகாபாரதத்தில் என்ன சிவாஜியா நடித்தார்? ;-)

கர்ணன் குற்றமற்றவன் என்று சொல்ல முடியாது. ஆனால் அவன் செய்தது சரியே. ஒரு விதத்தில் திரவுபதியும் கர்ணனும் ஒன்று. சபைக்கு நடுவில் இருவருமே அவமானப் படுத்தப்பட்டார்கள். இவளுக்கு பெண் என்பதால் அந்த அவமானம். அவனுக்கு பிறப்பால் அவமானம். இரண்டு அவமானங்களுமே மிகத் தவறு. திரவுபதையால் எப்படி கௌரவர்களை மன்னிக்க முடியாதோ..முடியவில்லையோ...அதே போல கர்ணனாலும் பாண்டவர்களை மன்னிக்க முடியாது...ஆனாலும் மன்னிக்கிறான் அன்னைக்காக. அந்த மன்னிப்புக்குத் தண்டனையாக நண்பனுக்காக தன்னுடைய உயிரையே கொடுக்கிறான். திரவுபதிக்கு அவமானம் ஒருமுறைதான். கர்ணனுக்குப் பலமுறை. குறிப்பாகப் பாண்டவர்களால் ஒருமுறை. திரவுபதையால் ஒருமுறை. சுயம்வரத்தில் அழைப்பும் விடுத்து விட்டு தேரோட்டி மகன் என்று அவமானப்படுத்துகிறாள். அவையில் பாஞ்சாலியைக் கர்ணன் அவமானப்படுத்தியது தவறென்றால் கர்ணனைப் பாஞ்சாலி அவமானப் படுத்தியதும் தவறுதான். ஆக கர்ணன் கெட்டவனென்றால் பாஞ்சாலியும் கெட்டவள்தான். தருமனும் அயோக்கியந்தான்.

கர்ணன் ஒரு மனிதன். வீரன். தானன். அதை மீறி அவனை யாரும் புகழ்வதில்லை. ஆகையால்தான் அவன் பாஞ்சாலியைப் பேசியதைப் பலர் கண்டுகொள்வதேயில்லை. ஆனால் தவறுகள் பல செய்தும் யுதிர்ஷ்டனை தருமன் எனச் சொல்வதைப் போல பிழை ஏதுமில்லை. ஆகையால்தான் இன்னமும் தருமன் பலர் வாயில் விழுந்து எழுந்து கொண்டிருக்கிறான். ஆகையால் கர்ணனை நல்லவன் அல்ல என்று கூடச் சொல்வது அபத்தமாகிறது.

அடுத்த பட்டம் யாருக்கு என்று ஒரு வாதம் வருகிறது. ஒரு கொலைக் குற்றத்திற்கு தண்டனை வழங்க வேண்டும். நால்வரைப் பிடித்து வந்திருக்கிறார்கள். வெவ்வேறு வருணங்களிலிருந்து. துரியோதனன் அனைவருக்கும் ஒரே தண்டனை வழங்குகிறான். ஆனால் தருமன் சாதியைப் பொருத்து தண்டனை வழங்குகிறான். மேல் வருணக்காரனுக்குத் தண்டனையை தான் வழங்காமல் அந்தப் பொருப்பைக் கிருபாச்சாரியாரிடம் ஒப்படைக்கிறான். அதைக் கண்டு குலகுரு கிருபாச்சாரியார் மகிழ்கிறார். இதுதான் தருமதருமனின் சட்டம்.

சரி. போர் மூளாமல் இருக்க வழி கேட்கிறானே கண்ணன்...அப்பொழுது சகதேவன் என்ன சொல்கிறான்? கர்ணனை அரசனாக்கி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்கிறான். அதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை கண்ணன்? கர்ணனுக்கு என்றால் துரியன் மறுப்பானா? எடுக்கவோ கோர்க்கவோ என்றவனா கர்ணனுக்குப் பட்டமென்றால் மறுப்பான்? பிரச்சனை என்ன தெரியுமா? கர்ணனுக்குப் பட்டத்தைக் கொடுத்தால் அதை அவன் வைத்துக் கொள்ள மாட்டான். ஊர் நடுவே பிறப்பைச் சொல்லி அசிங்கப் படுத்திய அயோக்கியர்களுக்கு முன்னே தனக்கு ஒரு நட்பும், நாடும், செல்வமும் கொடுத்து வாழ்வித்தானே...அவனுக்குக் கொடுத்திருப்பான். நன்றி மறவாமை. குந்தி பெற்ற ஒரே ஒரு உத்தமன் அவன். அவனைப் பிழை சொல்லல் பொறாது.

கண்ணன் நல்லவனோ கெட்டவனோ....கர்ணன் கெட்டவனில்லை. முழு நாடும் தனக்குத்தான் உரிமையுள்ளது என்று தெரிந்த பின்னும் உயிரை விட்ட உத்தமன். மாண்டது அண்ணன் என்று தெரிந்த பிறகாவது போரை நிறுத்தி ஒதுங்கியிருக்கலாம் தருமன். விட்டதா பதவி ஆசை? தொடர்ந்தது போர். கிடைத்தது நாற்காலி. ரத்தப் பளபளப்பில்.

கர்ணனைக் காந்தாரி சபித்ததும் தகும். பெற்ற வயிறு. இந்த நிலை குந்திக்கு நேர்ந்திருந்தாலும் சபித்திருப்பாள். ஐயமில்லை.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_22.html

// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதியுள்ளீர்.//

உணர்ச்சி கொந்தளித்ததா என்று தெரியவில்லை. ஆனால் உணர்ந்து சொல்லியதுதான்.

// கண்ணன் கர்ணனை பார்த்து அவன் அரசனாக ஒப்புக்கொண்டாள் அவனையே அரனாக்கிவிடுவதாகவே சொன்னான். ஆனால் கர்ணனே இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை...//

கண்ணன் யாரய்யா அரசு தருவதற்கு? அரசு தரும் உரிமை கண்ணனுக்கு இருந்தால் அதை தருமனுக்குத் தந்திருக்கலாமே? பிறகு ஏன் போர்? அரசு பதவிக்குப் போட்டி தருமனுக்கும் துரியனுக்கும். இவர்கள் இருவரிடமும் சொல்லி ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தால் அது நேர்மை எனலாம். அதை விடுத்து அவனிடம் ரகசியம் பேசினால்....தன்னுடைய பிறப்பு குறித்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் ஒருவன் என்ன முடிவெடுக்க முடியும்!

// அவன் கடனாளி.... கடனாளி என்றுமே நண்பனாகிவிட முடியாது. //

துரியனுக்கும் கர்ணனுக்கும் உள்ள உறவு கடனாளி உறவு என்றால் பாஞ்சாலிக்கும் கண்ணனுக்கும் உள்ள உறவும் கடனாளி உறவுதான். மானம் போன பொழுது உதவியது கடன் கொடுப்பது போல என்றால் அந்த வகையில் (எந்தக் காரணமானால் என்ன) கண்ணனும் துரியனும் கூட ஒரு நிறையாகி விடுவார்கள்.

// நீங்க ஒருவரிடம் கடன் வாங்கியதால் அவரின் எதிரியை கொல்வது நியாயமாகிவிடாது ஜி.ரா...//

போர்க்களத்தில் எதிரியைக் கொல்வது நியாயம் என்று அர்ஜுனனுக்கு உரைத்தது சரியென்றால் அது கர்ணனுக்கும் சரியே. அவன் பாண்டவர்களில் யாரையும் கொல்லவில்லை. கொல்ல விடாமல் வரமும் வாங்கியாகி விட்டதே. ஐந்து பிள்ளைகள் பிழைக்க வரம் வாங்கிய குந்தி ஆறாவது..அல்ல...மூத்த பிள்ளை பிழைக்க வரம் வாங்காமல் போனாளே....அல்லது தன் மகந்தான் கர்ணன் என்று தெரிந்தும்...தருமனிடம் போய்...மகனே அவன் உன் அண்ணன் என்று சொல்லாமல்...முதலில் கர்ணனிடம் போய் வரம் வாங்கத்தானே அவளுக்கும் தெரிந்திருக்கிறது.

// மிச்சத்தை நாளை வந்து சொல்கிறேன்... //
சொச்சத்தை நீ மிச்சத்தைச் சொன்ன பிறகு சொல்கிறேன்.

G.Ragavan said...

http://suttapons.blogspot.com/2006/12/blog-post_22.html

அதெல்லாம் சரி...இப்ப பீடாவுக்கு..இல்ல..பீட்டாவுக்கு மாறனும்னா என்ன செய்யனும்னு சொல்லுங்க.

(துளசி டீச்சர் நம்பி ஒப்படைச்ச ஆனைகளுக்கு இந்த நிலமை ஆச்சுதே...பாவம்..)

G.Ragavan said...

http://gpost.blogspot.com/2006/12/blog-post_22.html

உங்கள் எண்ணம் போல வண்ணம் அமைந்து சிறக்க எனது வாழ்த்துகள். வாழ்க. வளர்க.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_22.html

// குமரன் (Kumaran) said...
நல்ல கட்டுரை பாலாஜி. நீங்களும் இராகவனும் பேசிக்கொள்வதை ஒதுங்கி நின்று பார்க்கலாம் என்று தான் எண்ணுகிறேன். ஆனால் பாழும் மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறதே. அதனால் சில வார்த்தைகளே சொல்லி விலகிக் கொள்கிறேன். பின்னர் நீங்கள் பேசிக் கொள்ளுங்கள். //

குமரன்...என்ன இது? என்னை நீர் அறிவீர். உம்மை நான் அறிவேன். நம்மை வெட்டி அறிவான். அப்படியிருக்க...நாம் ஆயிரம் கருத்துச் சண்டையிட்டாலும்....அது கருத்தோடு மட்டுந்தான் என்பதும் அறிந்தும் ஒதுங்கலாமா?

இங்கு பல கருத்துகள் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. பாரதத்திலும் பல இடைச் செருகல்கள் உண்டு என்றும்...பலவிதங்கள் உண்டு என்றும் தெரிகிறது. மூலத்தை நான் படித்ததில்லை. ஆகையால் நான் தெரிந்து கொண்டதில் கூட்டல் குறைத்தல் இருக்கலாம். நான் அறிந்தவைகளைக் கொண்டேதானே நாம் பேச முடியும்.

பாரதத்தையோ கந்தபுராணத்தையோ அப்படியே ஏற்றுக் கொண்டால் அதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமேயில்லை. ஆனால் ஒவ்வொரு பாத்திரத்திலும் நம்மை நிறுத்தி...அந்த நிலையில் என்ன செய்திருப்போம் என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பது என் வழக்கம். முன்பு திரவுபதையாளும் கண்ணகியாளும் சந்தித்துப் பேசிக் கொள்வது..மன்னிக்க சீதையாளும் கண்ணகியாளும்...ஒரு கற்பனை எழுதினேன். ஆனால் அதை நான் எங்கும் பதிக்கவில்லை. அது முழுக்க முழுக்க கற்பனை. ஒரு பெண்..இப்படிப் பட்ட சூழ்நிலையில் என்ன நினைத்திருப்பாள் என்று கற்பித்து எழுதியது. அந்த வகையில்தான் நான் இங்கு எடுத்து வைக்கும் வாதங்களும்.

கண்ணன் செய்தது சரியா தவறா என்பதை விட கர்ணன் செய்தது சரியா தவறா என்பதைத்தான் நான் ஆராய்ந்தேன்.

நீங்கள் சொன்னது போல நானறிந்த பாரதத்திலும் கண்ணன் உட்பட அனைவருமே பழுப்புப் பாத்திரங்கள்தான். ஆகையால்தான் போரில் வென்றாலும் தருமனுக்குத் தோல்விதான். கண்ணன் குலமே அழியக் கண்டான். அதை முழுதும் ஒத்துக் கொள்கிறேன்.

என்னுடைய வாதங்களைப் பார்த்தீர்களானால் ஒரு வாழ்க்கை முறையில் கர்ணனைச் சுற்றியுள்ளவர்கள் செய்த தவறுகளை மட்டுமே நான் காட்டியிருக்கிறேன். ஒரு தாயாகக் குந்தி தோற்றதும்...அண்ணன் இறந்தான் என்று தெரிந்தும் போரைக் கொண்டு சென்ற யுதிர்ஷ்டனைத் தருமன் என்பதும் தகாது என்பது என் வாதம். கண்ணன் கடவுள் என்று சொல்லி விட்டால் எதையும் கேள்வி கேட்க முடியாது.

நால்வகை மக்களுக்கு நால்வகைத் தண்டனை என்று தெரியும். ஆனால் நீங்கள் சொல்லியபடித்தான் தண்டனையா என்று தெரியாது. அப்படியே இருந்தாலும்....நான்கு மடங்கு தண்டனை என்று முடிவு செய்து விட்டு அதை வழங்குவதை மட்டும் ஏன் கிருபரிடம் தர வேண்டும்? அரசன் பொது என்றால் அவனே அனைவருக்கும் வழங்கியிருக்க வேண்டும். இந்தத் திரியில் இது பிரச்சனையல்ல என்பதால் இதை இப்பொழுது விட்டு விடலாம்.

கர்ணனை சுயம்வரத்திற்கு அழைக்காதது உண்மையென்றால்..அப்படி அழைக்காததும் குற்றமே. தேரோட்டி மகன் அரசுக்கு வந்தும் அவனை அரசனாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில்தான் இருந்திருக்கிறார்கள் தருமத்தின் பக்கம் நின்றவர்கள்.

இந்தக் கருத்துகளைச் சொன்னது கர்ணன் எவ்வளவு வஞ்சிக்கப் பட்டவன் என்றும்...அத்தனை வஞ்சனையிலும் அவன் எவ்வளவு நியாயமாக நடந்து கொண்டான் என்பதைச் சொல்லிக் காட்டவுமே. அதுதான் என் கருத்து.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_22.html

// ஜெயஸ்ரீ said...
பேர் மட்டும் எதுக்கு வெட்டிபயல் னு வெச்சிருக்கீங்க ? )))) //

நல்லாக் கேளுங்க ஜெயஸ்ரீ. இதத்தான் நானும் கேக்குறேன். :-)

// கண்ணன் அரசை தர இயலாது. தருமனின் குணம் அவனுக்கு தெரியும். உண்மையை தருமனிடம் சொல்லியிருந்தால் அவன் கர்ணனையே அரசனாக்கியிருப்பான். அதற்காகவே அவர் அவ்வாறு சொன்னார். //

வெட்டி, இங்குதான் நான் ஒன்றை நினைக்கிறேன். துரியனுக்குக் கர்ணனே பட்டத்திற்குரியவன் என்று தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பான்! ஊகங்கள்தான் நம்மால் கொள்ள முடியும். :-( ஆனால் துரியனும் கர்ணனுக்கே விட்டுக் கொடுத்திருப்பான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

// பாஞ்சாலி கண்ணனுக்கு தங்கை முறை ஆகிறாள் என்பது உங்களுக்கு தெரியாதா? மேலும் அவள் கண்ணனை தெய்வமாக எண்ணியே அங்கு விளிக்கிறாள். அது பக்தைக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பு. பாஞ்சாலி ஆடை களையும் போதும் அவள் கையினால் ஆடையை பற்றி கண்ணா, கண்ணா என்று அழைக்கும் போது அவன் வரவில்லை. கண்ணனை நினைத்துறுகி அவள் கையை மேலே தூக்கி அவனை சரணாகதி அடையும் போதே அங்கு அவன் வருகிறான். //

அதை ஒத்துக் கொள்கிறேன் வெட்டி. ஆனால் விளித்தால்தான் தெய்வமே வந்தது. விளிக்காமல் வந்தவன் துரியன். ஆகையால் அவனுக்காக கர்ணன் செய்தவைகள் அந்தப் பாத்திரத்தின் பார்வையில் சரியே.

// சரி... நீங்க சொல்ற மாதிரி பார்த்தால் நீங்க எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தருகிறீர்கள் (என்று வைத்துக்கொள்வோம்). ஒரு பெரிய தாதா அவனுக்கு தெரிந்தவனுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறானென்றால் நீங்களும், அந்த தாதாவும் ஒன்று என்று சொல்லலாமா? //

நானும் தாதாவும் ஒன்று அல்ல. ஆனால் ஒரே நிறை. அதாவது எனக்கும் உனக்கும் உள்ள உறவுமுறையும், தாதாவிற்கும் அன்னாருக்கும் உள்ள உறவுமுறையும் ஒன்றாகும். நீ என்னை நினைப்பது போல...தாதாவை அன்னார் நினைப்பார். இதுதான் நான் சொல்ல வந்தது.

// வாதம் செய்யலாம் ஜி.ரா, விதாண்டாவாதம் கூடாது... //

ஜிராவும் மனிதந்தானே :-) வெட்டி என்று பெயர் வைத்துக் கொண்டு சுட்டித்தனமாகப் பேசும் திறமை எனக்கில்லையே!

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_22.html

// வெட்டிப்பயல் said...
சரி ஜி.ரா,
இவ்வளவு விதண்டாவாதம் செய்யும் நீங்கள் இதற்கு பதில் சொல்லிவிட்டு உங்கள் வாதங்களை தொடருங்கள்...

1. உலகை (பூமி) ஆளும் உரிமையை உங்களுக்கு தருகிறோம் அல்லது முருகனின் பாதத்தில் செருப்பில் கோடியில் ஒரு துகலாக இருக்கும் நிலையை அளிக்கிறோம். இரண்டில் எது வேண்டுமென்று கேட்டால் உங்களுக்கு எது வேண்டுமென்று சொல்வீர்கள். (மூன்றாவது சாய்ஸ் இல்லை) //

நான் என்ன சொல்வேன் என்பதை அறிந்தே கேள்வியைத் தொடுக்கிறாய். :-) விடையை நான் சொல்லவும் வேண்டுமா! "காலெந்தன் தலை சூடி மீட்சி என்றான்" என்று நான் எழுத்திலாவது இன்பம் கொள்வது தெரியாததா!

கண்ணனை நான் வணங்கேன் என நீ நினைத்துக் கொண்டிருப்பது தவறு. திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் "பாம்பால் உததி தனைக் கடந்து படரும் கொடுங்கார் சொரி மழைக்குப் பரிய வரையைக் குடை கவித்துக் காம்பால் இசையின் றொணியழைத்துத் தமறும் காளிந்திக் கரையின் நிரை பின்னே நடந்த கண்ணன் மருகா!!!!!!!!!!!!!!!!!!!!!!" என்று உருகுகின்றவனும் நானே. "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே" என்று இளங்கோ சொல்லிக் கொடுத்து பாடம் கேட்டவனும் நானே. "ஞான மலர்க் கண்ணா...ஆயர் குல மணிவிளக்கே...வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே..." என்றும் "கோபியரே கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே" என்றும் கண்ணதாசன் வரிகளில் களிப்பவனும் நானே. கந்தபுராணத்தில் முருகனை மனிதனாக்கி அவன் செயல்கள் சரியென்று உணர்ந்துதானப்பா நான் அமைதியடைந்தேன். அந்த வகையில்தான் என்னுடைய வாதங்கள் இங்கும் அமைகின்றன. தெய்வம் என்று நினைத்து விட்டால்..அதற்கு மேல் வாதமேயில்லை. அதற்காகத்தான் என் வாதங்கள். நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_22.html

ஜெயஸ்ரீ, உங்கள் விளக்கம் மிக அருமை. மிகமிக ரசித்தேன்.

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/2006/12/018.html

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
//வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை//
இதன் பின்னுள்ள கதை என்னவோ? //

ஆறுமுகச் செல்வன் ஆறுமதச் செல்வனுக்குச் சொல்வனோ! :-) என்ன ரவி எனக்குத் தெரியுமா என்றுதானே சோதிக்கின்றீர்கள்?

போரில் கடலாய் நிறைந்தான் சூரன். அவனை வற்றியதைத்தான் இப்படிச் சொல்கிறார் பாரதி.

// சாத்வீகன் said...
ஜிரா
பாரதியின் வசன கவிதை காற்று தனில் முருகனும் வள்ளியும் கதை மாந்தர் பெயர் மட்டுமே. காற்றின் சிறப்பு கூற வந்த வசன கவிதை அது.//

சரியாகச் சொன்னீர்கள் சாத்வீகன். இப்பொழுது நினைவு வந்து விட்டது.

அது சரி...யாரேனும் கவரிமான் படத்தில் வரலட்சுமி பாடிய சொல்ல வல்லாயோ கிளியே பாடல் குடுக்க முடியுமா?

// ஆமாம் ஜிரா!
காவடிச் சிந்து தான்!
எம்.எஸ் பாடுவது காவடிச் சிந்தில் இல்லை என்றாலும் அதுவும் இனிக்கிறது!

காவடிச் சிந்தில் "பச்சைக் கலை மயில் ஆட்டம்; புகழ் பாடும் அடியவர் கூட்டம்" என்ற மெட்டில் வரும்! //

அதுவும் காவடிச் சிந்துதான் ரவி. :-)

G.Ragavan said...

http://etamil.blogspot.com/2006/12/tamil-blogs-2006.html

// Boston Bala said...
@ஜிரா

சிறந்த பயணப் பதிவு என்று தங்களை வகை செய்யலாமா என்று யோசிக்க வைக்குமளவு விரிவாகவும் சுவாரசியமாகவும் சொன்னவை. //

ஹி ஹி..நீங்க சொல்ல வர்ரது புரியுது.

// சும்மா ஒரு குழந்தைக்காக (அதாவது ஜஸ்ட் கிட்டிங்): அதிக வலைப்பதிவுகள் துவக்கியது யார்?? நீங்களா? kannabiran, RAVI SHANKAR (KRS)-ஆ!? //

நாங்க ரெண்டு பேருமே இல்லை. அந்தப் பெருமை குமரனுக்குத்தான். :-)

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_22.html

// கர்ணனை பரமாத்வாக நினைத்தால் உங்கள் மனதில் இவ்வளவு கேள்விகள் எழாது ஜி.ரா.

நம்பிக்கையின்மையே இந்த கேள்விகளின் காரணங்கள்!!! //

வெட்டி, அதைத்தான் நானும் சொல்கிறேன். எந்தப் பாத்திரத்தையும் தெய்வம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் கேள்விகளுக்கே இடமில்லை. அந்தக் கருத்தில்தான் நாம் மாறுபடுகிறோம். அவ்வளவுதான்.

ஓகை, சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள். ரசித்தேன்.

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_23.html

நன்றி வெட்டி. என்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்தமைக்கு. வாழ்க வளமுடன்.

என் கொங்கை நின் அன்பர் கதை எனக்கும் மிகவும் பிடித்த கதை. காளமேகத்தின் கதையைச் சற்று வித்தியாசமாகச் சொன்னது.

G.Ragavan said...

http://elavasam.blogspot.com/2006/12/bye-bye-brothers-and-sisters.html

வாழ்க வளமுடன். நல்லபடியாச் சுத்தீட்டு வாங்க. எஞ்சாய்..........அடுத்த ஆண்டு சந்திப்போம். இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/13.html

மிகவும் அருமையான பாடல். சீர்காழியின் வெங்கலக் குரலும் மெல்லிசை மன்னரின் அற்புதயிசையும் கவியரசரின் கவிச்சாரமும் கூடிய தெள்ளமுது.

கீதையைப் பற்றி நான் அறிந்தது ஒன்றுமில்லை. ஆகையால் அதை நல்லதென்று பாராட்டவோ அல்லதென்று விலக்கவோ எனக்குத் தகுதியில்லை.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/14.html

மிகவும் நல்ல பாடல். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் கவியரசரின் பாடல்.

இந்தப் பாடலோடு தொடர்புடைய என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியை இங்கு கொடுத்திருக்கிறேன்.
http://gragavan.blogspot.com/2005/11/blog-post_113290519477808163.html

G.Ragavan said...

http://madhavipanthal.blogspot.com/2006/12/blog-post_24.html

கண்ணனோ கர்த்தனோ கந்தனோ...அவரவர் வழியை அவரவர் மதித்து நடந்தாலே போதும். உலகம் அமைதியுறும்.

தேம்பாவணியில் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். தேவ மைந்தன் பிறந்த பொழுது "குகை செய் இன்பெழக் கோலமிட்டு ஒத்ததே!" இது பள்ளியில் படித்த வரி. இன்னமும் நினைவிருக்கிறது.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/10.html

எனக்கு மிகவும் பிடித்த பாடல். அடிக்கடி கேட்டு ரசிக்கும் பக்திப் பாடல்களில் இதுவும் ஒன்று. மிகச் சிறப்பு. கேட்க மட்டுமல்ல. பார்க்கவுந்தான். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமையாக இருக்கும்.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/10_21.html

மிகவும் நல்ல பாடல். ஏழாவது மனிதன் பாடல் நன்றாக இருந்தாலும்...எனக்குத் திருமால் பெருமை பாடல் மிகவும் பிடிக்கும். ஆண்டாளே பாடுவது போல படம் பிடித்திருப்பார்கள்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/12/blog-post_24.html

வாழ்த்துகள் சிறில். கிருஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த நட்சத்திர வாரம் ஒங்களுக்குக் கிருஸ்துமஸ் பரிசுதான். இந்த வாரம் இனிய வாரமாக அமைய என்னுடைய வாழ்த்துகள்.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2006/12/blog-post_12.html

நீங்களும் பெங்களூரா? வாங்க வாங்க வெல்கம் டு பெங்களூரு.

G.Ragavan said...

http://karikaalan.blogspot.com/2006/12/blog-post_24.html

மிகவும் நல்ல பாடல்.

G.Ragavan said...

http://vedhagamam.blogspot.com/2006/12/blog-post_25.html

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள். தேவ மைந்தன் பிறந்தநாளில் இனிமையும் இன்பமும் பொங்கி உலகம் செழிக்கட்டும்.

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்
நல்ல மனிதரின் நடுவே குழந்தை வடிவம் பெறுகிறான்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே குழந்தையாகிறான்
மேய்ப்பவன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவமைந்தன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
இது வானகம் பாடிய முதல் பாடல்

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2006/12/blog-post_26.html

குழலி, சென்ற வாரயிறுதியில் சென்னை சென்றிருந்த பொழுது இந்த நிகழ்ச்சிக்கான சுவரொட்டியைக் கண்டேன். மிகவும் மகிழ்ந்தேன். இது ஒரு நல்ல முடிவு. அதனால் தொடங்கிய நல்ல தொடக்கம். இந்த விஷயத்தில் ராமதாஸ் செயல்படுத்தும் முறை சிறப்பு. வேறுபல சமயங்களில் அவரது செயல்பாட்டு முறையில் அதிருப்தி இருந்தாலும் அதற்காக இந்த முறையை நான் பாராட்டாமல் போனால் அது தவறாகிவிடும். ராமதாசின் இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவும் கேட்கவும் கொடுத்து வைக்கவில்லை. ஒலி/ஒளிப்பேழை வெளியிடுவார்களேயானால் சிறப்பாக இருக்கும். பாடிய அனைவருமே இசை வல்லுனர்கள்தான். இவர்களின் பண் தேர்வும் மிகச் சிறப்பு.

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2006/12/blog-post_26.html

// ராகவன் அய்யா,

ஏற்றுக் கொள்ளவேண்டிய கருத்து.ஆனால் மருத்துவர் அய்யா கட்சியில் பங்க் குமார் போன்றவர்கள் இருப்பதும்,அவர் கட்சி அடி தடியில் இறங்குவதும் அவரின் நோக்கத்திற்கும்,அணுகுமுறைக்கும் மாசு கற்பிக்கிறது.
ஒன்று மட்டும் சொல்லலாம்.தி மு க வை பார்க்கும் போது மருத்துவரின் அரசியல் பண்பாடு/நாகரீகம்/ streets ahead. //

பாலா, இங்கே ராமதாசின் அரசியல் பண்பாடு நாகரீகம் ஆகியவைகளைப் பற்றி யார் பேசினார்கள்? தமிழிசை தொடர்பாக அவர் எடுத்துள்ள சில நடவடிக்களைப் பாராட்டுவதற்குத் தடையில்லை என்று நினைக்கிறேன். ஒருவரிடம் நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். அல்லதை விலக்கி நல்லதைக் கொண்டால்..கொள்வதைப் பொறுத்து நல்லது பெருகும். அதை விடுத்து..அவர் அரசியல் சரியில்லை என்பதால் அவர் எதைச் செய்தாலும் எதிர்ப்பது தவறு. குஷ்பூ விஷயத்திலும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கின்ற விஷயத்திலும் ராமதாசின் நடவடிக்கையை நான் எதிர்த்தேன். அவர் மேற்கொள்ளும் வழிமுறை தவறு என்று பட்டது. ஆனால் இன்று தமிழிசையைப் பொருத்தவரை சரியான நடவடிக்கை என்றே தோன்றுகிறது. ஒருவேளை இன்றைய நமது ஊக்குவிப்பு நல்லதாகவே முடியலாம்.

(எல்லாஞ் சரி...அதென்ன ஐயா? நான் ஃபோட்டோ போட்டுதான எழுதுறேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) :-)

G.Ragavan said...

http://kuzhali.blogspot.com/2006/12/blog-post_26.html

// குழலி நீங்க முந்தைய பதிவில் பேரிகைமுழக்கக் கொம்பும், பறை என்கிற முழுக்க முழுக்க தமிழிசை(?)க் கருவிகள் மட்டுமே இசைத்து இசைமீட்பு என்று குறிப்பிட்டு இருந்ததற்கும், இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகள் பாரம்பர்ய சங்கீத இசைக்கருவிகளாகவே இருக்கிறது!
இனிமையான இசைக்கு , தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு, இன்னின்ன இசைக்கருவிகள்தான் என்கிற வரையறை அதன் வீச்சை சுருக்கிட்டுவிடும் சாத்தியம் உள்ளது! //

தவறில்லை. அழிந்த இசைக்கருவிகளை மீட்க வேண்டியுள்ளது என்பது உண்மையே. இது ஒரு தொடக்கமே. இன்னும் சிறப்பாகச் செய்தால் ஒவ்வொன்றாக வென்றெடுக்கலாம்.

// மற்றபடி சபாக்களைச் சாடுவது பயன் தராது. இம்மாதிரி பொங்குதமிழ் இசைக்கு வெகுஜன ரசிப்பு இருப்பது வியாபார ரீதியான இசைத்தட்டுகள் விற்பனை வெற்றியானால் இம்மாதிரி நிகழ்வுகள் டிஸம்பரில் மட்டுமே நடக்கவேண்டும் என்கிற வரையறையைத் தாண்டி தமிழகத்தில் அடிக்கடி எல்லா மாதங்களிலும் நடக்கும் விருப்ப நிகழ்வாகும்! //

முதலில்...தமிழிசையும் உண்டு என்று நிரூபிக்க வேண்டிய நிலை. பாரதியையும் பாரதிதானையும் தாண்டியும் தமிழிசை இருக்கிறது என்பதையும் நிரூபிக்க வேண்டிய நிலை. பொதுமக்களிடம் இதைக் கொண்டு செல்ல வேண்டிய கடமை. இன்னும் நிறைய நிறைய இருக்கிறது. ஆன்மீகத்தை விலக்கித் தமிழிசை இருக்க முடியாது. திருக்கோயில்களில் தமிழிசைக் கச்சேரிகளை நடத்த வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகத்திலிருந்து மற்ற தளங்களுக்கும் செல்லலாம்.

G.Ragavan said...

http://chennaicutchery.blogspot.com/2006/12/blog-post_25.html

நீங்க இப்பிடிச் சொல்றீங்க. படம் பாத்த நண்பனை இன்னமும் நிதானத்துக்குக் கொண்டு வரமுடியலை. பார்த்துட்டு நேத்து லீவுக்கும் ஆபீஸ் போய்ட்டான். அதே நெனைவாவே இருக்கு ராகவன்னு கதறி அழுகுறான். :-(( ரொம்பச் சங்கடமாப் போச்சு.

நானும் ரெண்டொரு சீன்கள் டிவியில பாத்தேன். உண்மையிலேயே தாங்க முடியலைங்க. ஒருவேளை சினிமாவை ரசிக்கிறதுக்குன்னு இருக்குற திறமை அல்லது சினிமை (ஆண்மை பெண்மை மாதிரி) நமக்கில்லையோ!

G.Ragavan said...

http://arul76.blogspot.com/2006/12/1.html

இடிந்தாலும் அழகுதான். படங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. எங்க ஊர்ப் பக்கத்திலும் விவசாயம் குறைந்து பலர் அருப்புக்கோட்டை மில்லுக்கும் கோயில்பட்டி மில்லுக்கும் வேலைக்குப் போகிறார்கள். வருந்தத் தக்க நிகழ்வுதான்.

செங்காந்தள் மலரோடு செம்மார்ந்த குழலாட என்ற கவியரசரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நான் அவனில்லை என்ற படத்தில் வரும் "ராதா காதல் வராதா" என்ற மெல்லிசை மன்னரின் பாடல் வரிகள் அவை.

G.Ragavan said...

http://araiblade.blogspot.com/2006/12/blog-post_21.html

// குமரன் (Kumaran) said...
அரைபிளேடு. இன்னாபா இப்டி சொல்லீட்ட? இராகவன், இராகவன்னு ஒரு டாப் டக்கர் சூப்பர் ஸ்டார் ஆன்மிகப்பதிவர் இருக்காரே. தெலவாதா? அவுருக்கு இன்னும் கண்ணாலம் ஆகலியேப்பா. ஆன்மிகப்பதிவர்கள்லேயே அவர் தான் நம்பர் ஒன். //

என்ன குமரன் இது...அதெப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றீங்க? ;-)

// அரை பிளேடு said...
வாங்க குமரன்

கல்யாணம் ஆகாத ஆன்மிக பதிவரா..
ஆச்சர்யமா இருக்கே..
காதல் தோல்வியா இருக்குமோ... :)) //

அரைபிளேடு நம்மகிட்டயெல்லாம் காதல் தோல்விகளா இருக்குமோன்னு கேக்கனும். :-))

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2006/12/blog-post_24.html

மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணையின் திறம் கண்டேன்

பச்சை நிறம் திருமேனி
பவழ நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்
வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2006/12/blog-post_25.html

ஞானமலர்கண்ணா
ஆயர்குல மணி விளக்கே
வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே
கானத்தில் உயிரினத்தைக் கட்டுவிக்கும் கண்ணா..........
தானே உலகாகித் தனக்குள்ளே தானடங்கி
மானக் குலமாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்று உன் மலர்த்தாள் கரம் பற்றி நானும் தொழுவேன் நம்பிப் பரந்தாமா
உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!
================================
கண்ட இடம் எல்லாம் கண்ணனிடம்
மனம் செல்லக் கண்டேனடி தோழி
கள்வன் அவனென்று அறிந்த பின்னும்
நெஞ்சம் விரும்பிடவும் கொண்டேனடி
பாடலை நான் பாட அவன் குரலில் கேட்டேன்
நாட்டியம் நானாட அவன் அசைவைக் கண்டேன்
ஓவியம் நான் தீட்ட அவன் திறமை கண்டேன்
கேட்டிடும் ஓசையெல்லாம் அவன் குரலே
(கண்ட இடமெல்லாம்

G.Ragavan said...

http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_26.html

வாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க.

G.Ragavan said...

http://araiblade.blogspot.com/2006/12/blog-post_21.html

// அரை பிளேடு said...
வாங்க ராகவன்
உங்க தலைய கொஞ்சம் உருட்டிட்டோம்..

நாட்டுல பட்டினத்தாரு, பர்த்ருஹரின்னு பட்டு தெரிஞ்சவங்க பல பேரு.

நீங்க ஒரு ஞானசம்பந்தன், பிரகலாதன், துருவன், மார்க்கண்டேயன் மாதிரி இருப்பீங்க அப்பிடின்னு பார்த்தா இப்பிடி கவுத்திட்டீங்களே..

:)) //

அரைபிளேடு...ரொம்ப எதிர்பாத்துட்டீங்க போல. நான் அருணகிரிக்கடியவன். :-)

G.Ragavan said...

http://muruganarul.blogspot.com/

மிகவும் நல்லதொரு காவடிச் சிந்து. இதை இயற்றிய அண்ணாமலை ரெட்டியாரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.

அவர் வாழ்ந்த வீடு கழுகுமலையில் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் சிறப்பான பராமரிப்பு இன்றி.

G.Ragavan said...

http://kannansongs.blogspot.com/2006/12/16.html

நல்லதொரு பாடல். இந்தப் பாடலைக் கேட்டுப் பார்க்கும் பொழுது ஒன்று புரியும். டி.எம்.எஸ் குரலை வீணை போல வைத்துப் பாடுவார். அது அவரது குரல் வளத்தைப் பெருக்கியிருக்கிறது என்றால் மிகையில்லை.

இதே போல கிருஷ்ணகானம்-2ல் தேவதாருவே காமதேனுவே என்ற பாடலும் சிறப்பு. கிருஷ்ணகானம்-2ல் மெல்லிசை மன்னர் இசையில் இசைஞானி ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

G.Ragavan said...

http://suttapons.blogspot.com/2006/12/blog-post_25.html

ஐ....சுட்டிக்குப் பதிலா ஆனைக் குட்டி வருது....

பீடாவுக்கு மாறச் சொல்லி என்னையும் கேட்டுச்சு...சரீன்னு சுச்ச அமுக்குனேன். அட ஆண்டவா...சொல் ஒரு சொல்..முருகனருள்..எல்லாத்துல இருந்தும் என்னைய வெளியேத்தீட்டு..ஒங்க வலைப்பூ ரொம்பப் பெருசு. நெறைய பின்னூட்டம் இருக்கு. கடைசியா பாத்துக்கலாம்னு திட்டீட்டாங்க. :-(((((((((((((

G.Ragavan said...

http://ennulagam.blogspot.com/2006/12/ii-11.html

அனுபவம் அனுபவந்தான் இல்ல. அவர் ஒங்களுக்கு அப்படிச் சொன்னது சரீன்னுதான் தோணுது. காரணம்...கொடுக்க வேண்டிய தகவலைக் கொடுக்காம இருக்குறது மட்டுமல்ல..அளவுக்கு அதிகமாகக் கொடுக்குறதும் தப்புத்தானாம்.

G.Ragavan said...

http://imsaiarasi.blogspot.com/2006/12/blog-post_5214.html

// என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என் கல்யாணத்தன்னைக்கு வந்து என் வீட்டுக்காரருக்காக கூட்டு பிரார்த்தனை பண்ண போறதா சொல்லுவாங்க. அவ்ளோ பாசக்கார புள்ளைங்க.//

இப்படிப் பட்ட ஆருயிர் நண்பர்கள் கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிருக்கனும்.

// இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல....... //

நாளைக்கு உங்ககூட உக்காந்து சாப்பிடப் போறவங்கள நெனச்சேன்..ம்ம்ம்..பாவம்.

G.Ragavan said...

http://kaalangkal.blogspot.com/2006/12/blog-post_27.html

அடடா! பின்னூட்டத்துல படம் போடச் சொல்லிக் கொடுத்ததோட...போட்டும் காட்டுறீங்களே..அடடா! :-)

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2006/12/blog-post_25.html

// குமரன் (Kumaran) said...
இது எந்தப் பாடலில் வருகிறது இராகவன்? படித்ததில்லை இதுவரை. //

முதல்பாட்டு கண்ணதாசன் எழுதியது. திருமால் பெருமைக்காக. அடுத்த பாட்டு முருகதாசன் எழுதியது. குமரன் பதிவுக்காக.

G.Ragavan said...

http://godhaitamil.blogspot.com/2006/12/blog-post_25.html

// குமரன் (Kumaran) said...
முதல் பாடல் எந்த இடத்தில் வரும் இராகவன். இதுவரை கேட்டதாக நினைவில்லை. //

ஹரி ஹரி கோகுல ரமணா என்று டி.எம்.எஸ் மற்றும் டி.எல்.மகராஜன் (குட்டி பத்மினிக்காக) பாடுகையில் ஆண்டாள் வளர்ந்து விடுவார். அப்பொழுது கே.ஆர். விஜயாவிற்காக முதலில் இசையரசியின் குரலில் இந்தப் பாடலைப் பாடி...பிறகு ஹரி ஹரி கோகுல ரமணா என்று தொடர்வார். மிகவும் அருமையான பாடல்.

// இரண்டாவது பாடலை எழுதிய முருகதாசருக்கு என் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள். அவர் மயிலாருக்கு நண்பரா? //

என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். மயிலாருக்கு நெருங்கிய உறவு என்று பேசிக்கொள்கிறார்கள்.

G.Ragavan said...

http://theyn.blogspot.com/2006/06/blog-post_28.html

சிறில்...வாழ்க்கை எப்பொழுது இனிக்குமென்றால்...உப்பைத் தின்ற பின்னர்தான். ஏனென்றால் உப்புக்கரித்து மறத்துப் போன நாக்கில் வெல்லப்பாகு விழுகையில்தான்..சின்ன இனிப்பையும் ரசிக்கும் பக்குவம் வருகிறது. சின்ன என்ற சொல்வது...அணுஅணுவாக ரசிப்பதை. இனிப்பையே தின்றவர்களுக்கு இனிப்பின் சுவை அத்துணை தெரிவதில்லை. வாழ்க்கையில் முன்னுக்கு வந்த நீங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இறைவன் அருளால் சிறந்து வாழ்க.

மெழுகுவர்த்தி ஏற்றி வைப்போம்
அன்னையவள் கோயிலிலே
உருகியோடும் துன்பமெல்லாம்
மேரியன்னை அருளினிலே

துள்ளும் அலை தவழ்ந்து வரும்
கப்பல் கொடியும் சாட்சி சொல்லும்
தேவனுக்கும் ஓத வரும்
மக்கள் வெள்ளம் தேடி வரும் (மெழுகுவர்த்தி

இந்தப் பாடல் உங்களுக்காக. குறைகள் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். :-)

G.Ragavan said...

http://wikipasanga.blogspot.com/2006/12/blog-post_116701608589297617.html

அடேங்கப்பா..காமிராவ எங்க வெச்சான்னு அத்தனவாட்டி யோசிச்சிருப்பேன். இந்தாருக்கு சூக்குமம். சிலபல சமயங்கள்ள புலியோ சிங்கமோ மானையோ மாட்டையோ தொரத்தத் தொடங்குறதுல இருந்து அடிச்சு கழுத்தக் கடிச்சு புவ்வா சாப்பிடற வரைக்கும் எடுக்குராங்களே...அதெல்லாம் எவ்வளவு கஷ்டம்...அந்தப் பக்கம் ஓடுற சிங்கம்மா இந்தப் பக்கம் திரும்பீட்டாங்கன்னா....அப்பப்பா!

«Oldest ‹Older   1 – 200 of 213   Newer› Newest»